ஏர்போர்ட்டில் காத்திருந்த நவீன் மிருதுளாவின் கண்கள் வெளியே வருவோரை எல்லாம் வழியிலிருந்து நகர்த்தி தங்கள் மகளின் வருகையைப் பார்த்திருந்தன. சிறிது நேரமாகியும் சக்தி வராததால் இருவரும் பதற்றமானார்கள். உடனே நவீன் சக்தியை அவள் கைப்பேசியில் அழைத்தான். அப்போது மிருதுளா அவனைத் தள்ளிக்கொண்டு முன்னே சென்றாள். அவளைப் பார்த்துக் கொண்டே திரும்பிய நவீன் சக்தியைப் பார்த்ததும் ஓடிச் சென்று அவளை கட்டியணைத்துக் கொண்டான். சக்தியும் தன் அம்மாவையும் அப்பாவையும் இறுக்கி அணைத்துக் கொண்டு..
“ஐ மிஸ் யூ போத் வெரி மச்.”
“என்னடி சக்தி இப்படி இளைச்சுப் போயிருக்க?”
“ம்…அதுதான் பதினைந்து நாள் இருக்கப் போறேனே”
“அதுக்கு?”
“நீ அத சாப்புடு இத சாப்புடுனுட்டு ஏத்தி விட்டிடுவியேமா!!
அப்புறம் என்ன?”
“ம்…சரி சரி கார்ல ஏறு சக்தி.
உங்க அம்மாவை விட்டா இங்கேயே நின்னுண்டு பேசிண்டே இருப்பா.
மிருது வண்டில ஏறுமா”
என்று மூவரும் காரில் ஏறி வீட்டிற்குச் சென்றனர்.
“சக்தி நீ போய் குளிச்சிட்டு வா.
அதுக்குள்ள நான் இட்டிலி வைச்சுடறேன்.”
“சரி மா. இதோ அஞ்சே நிமிஷத்துல வந்துடறேன்.
பொங்கல், வடை அன்ட் சாம்பார் வாசம் தூக்கறது.”
“போமா போய் குளிச்சிட்டு வாடா”
“அப்பா அந்த குட்டி வடையை மட்டும் எடுத்து ஊட்டிவிடேன். நான் போய் குளிச்சிட்டு வந்து மிச்சத்தை சாப்பிட்டுக்கறேன்”
“ம்….இந்தா ஆ காட்டு. ஓடு ஓடு குளிச்சிட்டு வா. நாங்களும் உன் கூட சாப்பிடறதுக்காகக் காத்திருக்கோம்.”
“ஓ!! நீங்களும் இன்னும் சாப்பிடலையா. அச்சச்சோ. அப்போ இரு ஜஸ்ட் டூ மினிட்ஸ் ல குளிச்சிட்டு வந்துடறேன்”
சக்தி குளித்து வந்ததும் மூவருமாக அமர்ந்து உணவை ரசித்து ருசித்து உண்டனர். சக்திக்கோ அம்மா கையால் சாப்பிட்டு நான்கு மாதங்களானது, நவீன் மிருதுளாவுக்கோ தங்கள் மகளின்றி சாப்பிட பிடிக்காது போய் நான்கு மாதங்களானது. ஆக மூவருமே நான்கு மாதங்களுக்குப் பிறகு அன்று தான் நன்றாக உண்டனர். பின் சற்று நேரம் கல்லூரிக் கதைகள் பேசிவிட்டு உறங்கச் சென்றனர். சக்தி வீட்டிலிருந்த பதினைந்து நாட்களையும் தன் அப்பா அம்மாவுடன் மிகவும் மகிழ்ச்சியாக கழித்ததில் பதினைந்து நாள் முடியப் போகிறது என்று வந்ததும் அவளை கவலை தொற்றிக் கொண்டது. மிருதுளா வழக்கம் போல அவளுக்கான பருப்புப்பொடி, கருவேப்பிலைப் பொடி, கொத்தமல்லிப் பொடி, ஊறுகாய், தக்காளி தொக்கு, முறுக்கு, பக்கோடா, ஸ்வீட்ஸ் என எல்லாம் சக்தி ஊருக்குக் கிளம்புவதற்கு ஒரு நாள் முன் செய்து பேக்கிங்கிற்கு தயாராக வைத்தாள். நவீனும் சக்தியுமாக அன்றிரவு அனைத்தையும் பேக் செய்தனர். மீண்டும் லண்டனுக்கு பயணிக்க ஆயத்தம் ஆனாள் சக்தி.
மறுநாள் விடியற் காலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து சக்தி கையில் கட்டிக் கொண்டு போவதற்காக இட்டிலி, வெங்காயச் சட்டினி, சப்பாத்தி, புளியோதரை எல்லாம் செய்து அவற்றை ஆற வைத்தாள். நவீன் ஐந்து மணிக்கு எழுந்து வந்து மிருதுளா செய்து வைத்திருந்ததை பேக் செய்து வைத்தான். பின் சக்தியை ஐந்தே முக்கால் மணிக்கு எழுப்பி விட்டான். சக்தியும் எழுந்து கிடுகிடுவென குளித்து கிளப்பி ஹாலுக்கு வந்து சாப்பாட்டுப் பேக்கிங்கைப் பார்த்து
“அம்மா இதெல்லாம் என்ன? நான் எங்க வைச்சுப்பேன்?”
“இது இட்டிலி அன்ட் சட்னி, இதுல சப்பாத்தி இருக்கு தக்காளித் தொக்கு தொட்டுண்டு சாப்ட்டுக்கோ, இது புளியோதரை.”
“அம்மா…இதெல்லாம் நான் இன்னைக்கே எப்படி சாப்டுவேன். அப்போ ஃப்ளைட்ல தர சாப்பாட்டை என்ன பண்ணுவேன்”
“சரி அப்போ இதை எல்லாம் உன் ரூமுக்குப் போனதும் ஃப்ரிட்ஜில வச்சுடு. இரண்டு நாளைக்கு ஆச்சு.”
“அப்போ நேத்து என்னென்னவோ கட்டிக் குடுத்தியே அதெல்லாம் என்ன?”
“அதெல்லாம் தொக்கும், ஊறுகாயும், ஸ்னாக்ஸும். அது மூணு மாசம் வரைக்கும் கெட்டுப்போகாது. இது ஜஸ்ட் ஃபார் டூ டேஸ். நீ போய் செட்டில் ஆகற வரைக்கும்…சாப்பாட்டுக்காக வெளியில போக வேண்டாம் பாரு அதுக்காக”
“அதெல்லாம் சரி…இப்போ இதெல்லாம் எங்க வச்சுப்பேன்?”
“சக்தி உன் ஹான்ட் லக்கேஜ்ல இடம் விட்டு வச்சிருக்கேன் பாரு அதுல வச்சுக்கோ. சரி மிருது நானும் குளிச்சிட்டு வந்தாச்சு. நீ போய் குளிச்சிட்டு வந்துடு ஏர்போர்ட் போகணும் நாழியாகறது பாரு.”
என்று மிருதுளா குளிக்கப் போனதும் நவீனும் சக்தியுமாக அவளது ஹான்ட் லக்கேஜ்ஜை பேக் செய்து ஏர்போர்ட் செல்ல தயாரானார்கள். மிருதுளா குளித்து ரெடியாகி வந்து சுவாமிக்கு விளக்கேற்றி நன்றாக வேண்டிக்கொண்டு சக்திக்கு விபூதி இட்டு விட்டாள். சக்தியும் சாமி கும்பிட்டுக் கொண்டப்பின் மூவரும் ஆளுக்கொரு பெட்டி எடுத்துக் கொண்டு கார் பார்க்கிங் சென்று அங்கிருந்து தங்கள் காரில் ஏர்போர்ட் சென்றனர். அங்கே செக் இன் முடிந்ததும் சக்தி உள்ளே போகாமல் தயங்கி தயங்கி நவீனையும் மிருதுளாவையுமே பார்த்துக் கொண்டு மெல்ல மெல்ல அடியெடுத்துச் சென்றதைப் பார்த்த நவீன் அவளை தங்களிடம் வரும் படிச் சொன்னான். உடனே ஓடி வந்தாள் சக்தி
“கண்ணா என்ன ஆச்சு? ஏன் செக்யூரிட்டி செக்கிங் போக உனக்கு இவ்வளவு தயக்கம்?”
“அப்பா அம்மா எனக்கு ஏதோ மாதிரி இருக்கு. ஐ திங்….”
“சரி அப்படீன்னா நீ போக வேண்டாம். எங்களோட ஆத்துக்கு வந்துடு”
“அம்மா என்னம்மா சொல்லற? எனக்கு படிக்க போகணும் ஆனா உங்க ரெண்டு பேரையும் நான் ரொம்ப மிஸ் பண்ணுவேனேன்னு கஷ்டமா இருக்கு…அதுதான் யோசிக்கறேன்…நீ என்னடான்னா ஆத்துக்குப் போகலாம்னு சொல்லறயே!!”
“இங்க பாரு சக்தி அப்படித்தான் இருக்கும் ஆனா என்ன பண்ண படிப்பும் முக்கியம் தானே. போடா கண்ணா போய் நல்லபடியா படிப்ப முடிச்சிட்டு வா. இதோ பாரு ஒரு செமஸ்டர் முடிஞ்சாச்சு இன்னும் ஒரு அஞ்சு தானே…அதுவுமில்லாம ஒவ்வொரு செமஸ்டர் முடிஞ்சிட்டும் நீ ஆத்துக்கு வரப்போற அப்புறம் என்ன? இன்னும் ஜஸ்ட் ஒரு நாலே மாசம் தானே. கண்ணைத் தொடச்சிண்டு போய் படிக்கற வேலையைப்பாரு”
“ஓகே அம்மா. நீ சொல்லறதும் கரெக்ட் தான். சரி சரி. நான் போயிட்டு வர்றேன் அப்பா அன்ட் அம்மா. பை. லவ் யூ போத். டேக் கேர்”
“வீ டூ லவ் யூ கண்ணா. யூ டூ டேக் கேர். பை பை”
என்று கூறி சக்தியை தேத்தி அனுப்பிய மிருதுளா …சக்தி தன் கண்ணிலிருந்து மறையும் வரை அவள் சென்ற வழியையேப் பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்ணிலிருந்து கண்ணீர் உருண்டோடியதை கவனித்த நவீன்
“ஏய் மிருது என்ன இது மறுபடியுமா? சக்திக்கு அவ்வளவு எடுத்துச் சொல்லிட்டு நீயே அழலாமா?”
“நான் அம்மாவாச்சே நவீன். அவளுக்கு தைரியம் சொல்வது என் கடமையாச்சே. ஆனா அவளைப் பிரியும்போது ஏதோ உள்ளப் பண்ணறதுப்பா.”
“இட்ஸ் ஓகே. அவ இன்னும் நாலே மாசத்துல திரும்பி வந்து நம்ம கூட டைம் ஸ்பெண்ட் பண்ணப் போறா அப்புறமென்ன. கண்ணைத் தொடச்சுக்கோ. வா நாம ஆத்துக்குப் போகலாம்.”
என்று சக்திக்கு ஆறுதல் சொல்லி அனுப்பிவைத்த மிருதுளாவுக்கு நவீன் ஆறுதல் சொல்லி வீட்டிற்கு அழைத்துச் சென்றான். வீட்டிற்குச் சென்றதும் மிருதுளா நவீனிடம்
“சரி சக்தி அவ பாட்டுக்கு வந்தா இருந்தா இதா இப்போ ஊருக்கும் கிளம்பி போயிட்டா. இனி நான் என்னப் பண்ணுவேன்?”
“ம்…
உன் வேலையை விடும்போது இந்த யோசனை இருக்கலையா?
உனக்கு யாரு நாலு நாலு மாசம் மட்டும் வேலைத் தருவா?
பேசமா உன்னோட வொர்க் ஃப்ரம் ஹோம் வேலையிருக்கு இல்ல அதைப் பாரு.”
“நவீன் எனக்கொரு யோசனை சொல்லவா”
“ம்…சொல்லு மிருது”
“நாமளே ஒரு பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணினா என்ன?”
“என்னது?”
“அதுதான் இங்க பிஸினஸ் தொடங்கறது ரொம்ப ஈஸியாமே. டாக்யூமென்ட்ஸ் எல்லாம் ஒங்கா சப்மிட் பண்ணினா லைசென்ஸ் உடனே கிடைச்சிடுமாமே! நியூஸ் பேப்பர்ல படிச்சேன்.”
“அதெல்லாம் சரி தான் மிருது.
ஆனா நான் என் வேலையை விடவேண்டியிருக்கும்.
ஏன்னா நான் என் வேலையையும் பார்த்துண்டு பிஸினஸும் பண்ணக் கூடாது.
எத்திக்கலி இட்ஸ் ராங்.
அதுவுமில்லாம பிஸினஸ் ஆரம்பிச்சா ஸ்டார்ட்டிங்ல வீ வில் நாட் கெட் ரெகுலர் இன்கம்.
அப்புறம் எப்படி நம்ம சக்திப் படிப்புக்கு பணம் கட்டுவோம்?
அப்படியே ஆரம்பிச்சாலும் என்ன பிஸஸ் பண்ணறது?”
“கன்சல்டன்சி ஃபேர்ம் தான். நான் அக்கௌன்ட்டிங் பார்த்துக்கறேன். நீங்க உங்களோட லீகல் பார்த்துக்கோங்கோ. என்ன சொல்லறேங்கள்?”
“நல்லா தான் இருக்கு.
நம்ம சக்தி படிப்பு முடிஞ்சிட்டு ஆரம்பிக்கலாம்.
நானும் அதுக்குள்ள அதுக்கு வேண்டிய டீட்டேயில்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணிக்கறேன்.
ஆனா இப்போதைக்கு வேண்டாம் மிருது.
ஒரு இரண்டரை வருஷம் கழிச்சு பார்ப்போம்”
“ம்…அதுவும் கரெக்ட் தான் நவீ.
நம்ம பொண்ணு படிப்பு தான் முக்கியம்.
அவ படிப்பு முடிச்சதும் ஆரம்பிச்சுக்கலாம்.”
என்று அவளின் எண்ணத்தை மீண்டும் மூட்டைக் கட்டி பரணில் போட்டாள் மிருதுளா. பின் இரண்டரை வருடங்களும் நான்கு மாதத்திற்கு ஒரு முறை என சக்தியின் வரவு, மகிழ்ச்சியான தருணங்கள், மீண்டும் சக்தியின் புறப்பாடு, சாப்பாடு, ஸ்னாக்ஸ், ஊறுகாய், பொடிகள் கட்டுவது, மீண்டும் கண்ணீர், மீண்டும் வரவு …மீண்டும் பிரிவு என்று முடிந்து சக்தி குவைத்துக்கே திரும்பி வந்தாள். ஆனால் வந்தவள் அவளுக்கு யூரோப்பில் மேல் படிப்புப்புக்காக அட்மிஷன் கிடைத்துள்ளதாகவும் அதுவும் ஃபுல் ஸ்காலர்ஷிப்பில் கிடைத்துள்ளதாகவும், தான் அடுத்த மூன்று மாதங்களில் அங்கு சென்று அந்த கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்புவதாகவும் கூறினாள். அவள் கூறியதில் பெருமையடைந்தனர் நவீனும் மிருதுளாவும். ஆனால் மனதோரத்தில் மீண்டும் தங்கள் மகளைப் பிரிந்திருக்க வேண்டுமே என்ற எண்ணமும் தோன்றியது. ஆனால் சக்தியின் இளங்கலைப் படிப்பு அவர்கள் இருவருக்கும் நம்பிக்கையை அளித்தது. மன தைரியத்தை வளர்க்க ஏதுவாக இருந்தது. தங்கள் மகள் திருமணமாகிச் சென்றால் எப்படியும் தாங்கள் இருவரும் தனிமையில் தான் இருக்க வேண்டும் என்பதை தங்களுக்குள் சொல்லிக் கொண்டு அவர்களை அவர்களே தேத்திக் கொண்டனர்.
சக்தி தனது முதுகலைப் பட்டப்படிப்பிற்காக யூரோப்பிற்குச் சென்றாள். அவளுக்காக இனி நவீன் எந்த வித செலவும் செய்ய வேண்டிய அவசியமில்லாது போனது. ஏனெனில் அவளுக்கு படிப்பு செலவு, தங்குவதற்கான செலவு மற்றும் ஸ்டைஃபன்ட் எனப்படும் உதிவித் தொகை என எல்லாம் கிடைத்தது. அவள் யூரோப்புக்குப் புறப்பட்டுச் சென்றதும் மிருதுளா நவீனிடம் மீண்டும் பிஸினஸ் ஆரம்பிப்பதைப் பற்றி பேசினாள். அதற்கு நவீன்
“மிருது நாம லைசென்ஸ் க்கு அப்ளைப் பண்ணலாம்.
ஆனா நான் இப்போதைக்கு வேலையை விட மாட்டேன்.
நீ தான் பிஸினஸைப் பார்த்துக்கணும். நானும் அப்பப்போ ஹெல்ப் பண்ணறேன். லீட்ஸ் தர்றேன்.
என்னால முழுசா அதுல இப்போ இறங்க முடியாது.
என்ன சொல்லற?”
“ம்…
ஓகே நவீன்.
நான் பார்த்துக்கறேன்”
“மிருது இது நீ போன வேலைகள் மாதிரி இல்ல…
வேண்டாம்னா விட்டுட்டு வர்றதுக்கு…
ஒரு லைசென்ஸ் எடுக்கவே அஞ்சு ஆறு லட்சமாகும்…
நன்னா யோசிச்சு சொல்லு”
“நான் இந்த இரண்டரை வருஷமா நல்லா யோசிச்சாச்சுப் பா.
நிச்சயம் நான் நல்லா பண்ணுவேன்.
நீங்க லைசென்ஸ் க்கு அப்ளை பண்ணுங்கோ.”
“நீ தான் உன் பெயர்ல தான் பண்ணணும்.”
“ஓ!! ஓகே சரி நாளைக்கு புதன் கிழமை. நாளைக்கே பண்ணிடுவோம்”
“அது என்ன!
நாளை என்ன ஸ்பெஷாலிட்டி?”
“பொன் கிடைச்சாலும் புதன் கிடைக்காதுனு சொல்லிக் கேள்விப் பட்டிருக்கேன்.
அதுதான் சொன்னேன்.”
“ம்…
ஓகே.
அப்போ நாளைக்கே அப்ளைப் பண்ணிடலாம்.
ஸோ மிருது பெரிய பிஸினஸ் மாக்னெட்டாகப் போறா!”
“பார்ப்போம்.
எல்லாம் அந்த கடவுளோட அனுகிரகம் இருந்தா நல்லப்படியா தான் நடக்கும்.”
“சரி உன் பிஸினஸுக்கு என்னப் பெயர் வைக்கப் போற மிருது?
ஏன்னா நாளைக்கு அப்ளை பண்ணும் போது மூணு பெயர்களைக் கொடுக்கணும்.
அதுல ஒன்னைத் தான் அவா அப்ரூவ் பண்ணுவா”
“ஆங்…
அதெல்லாம் யோசிச்சு வச்சிருக்கேன் நவீ.
உத்கிருஅஷ்ட் க்ளோபல் சொல்யூஷன்ஸ்
விவக்தி க்ளோபல் சொல்யூஷன்ஸ்
தக்க்ஷக் க்ளோபல் சொல்யூஷன்ஸ்
எப்படி?”
“அட…
சூப்பர் மிருது.
இதெல்லாம் எப்ப யோசிச்சு வச்ச?”
“இரண்டரை வருஷமா யோசிச்சு வச்சிருக்கேன் நவீ.”
“பார்ப்போம்.
இதில் எதை அப்ரூவ் பண்ணறான்னு?”
என்று அவர்கள் பேசிக்கொண்டது போலவே மறுநாள் புதன்கிழமை பிஸ்னஸ் லைசென்ஸ் க்கு அப்ளை செய்தனர். மளமளவென வேலைகளும் நடந்தன. லைசென்ஸும் கிடைத்தது.
“ஹேய் நவீ.
இன்னைக்கு எனக்கு ஈமெயில் வந்தது. நம்ம கன்சல்டன்சி ஃபேர்முக்கு அப்ரூவான பெயர் “விவக்தி க்ளோபல் சொல்யூஷன்ஸ்”.”
“சூப்பர் மிருது.
கங்ராட்ஸ்.
எப்பேலேந்து வேலைகளைத் துவங்கப் போற?”
“முதல்ல இந்த லைசென்ஸ் வச்சு பேங்க் அக்கவுண்ட் ஓபன் பண்ணணும். அதுக்கப்புறம் மெல்ல வேலைகளை ஆரம்பிக்கணும் நவீ”
“சூப்பர்.
பேங்க் அக்கவுண்ட் ஓபனிங்குக்கு பிஸினஸ் ப்ளான் எல்லாம் ரெடியா வச்சிருக்கனு சொல்லு.”
“எஸ் எஸ்…
கொஞ்சம் இருங்கோ.
ம்…
இந்தாங்கோ.
படிச்சுப் பார்த்துட்டு ஏதாவது கரெக்ஷன்ஸ் இருந்தா சொல்லுங்கோ.”
“ம்…ம்…
வாவ்.
பக்காவா எழுதியிருக்க மிருது.
இதை எல்லாம் பார்த்தா…
நீ பிஸினஸ் உமன் ஆகனும்ங்கறதுக்காக தான் கடவுள் உன்னை எந்த வேலையிலலேயும் இருக்க விடலைப் போல.”
“இருக்கலாம்.
இது தான் எனக்கானதுப் போல!”
“கலக்கு கலக்கு மிருது.
நானும் உனக்கு லீட்ஸ் தர்றேன்.”
“நானும் என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கேட்டு ரெண்டு மூணு அக்கவுண்ட்டிங் அன்ட் ஆடிட்டிங் ஃபேர்ம்ஸ் கூட அக்ரிமெண்ட் போட ஏற்பாடு செய்திருக்கேன் நவீ”
“சூப்பர். சூப்பர்.
மிருது இன்னும் கொஞ்ச நாள்ல நான் என் வேலையை விட்டுட்டு உன் ஃபேர்ம்லேயே ஜாயின் பண்ணிடறேன்.”
“என்னோட ஃபேர்ம் பிக்கப் ஆகற வரைக்கும் நீங்க உங்க வேலையை விட வேண்டாம் நவீ.
எப்போ நல்லா வளர்ந்து ரெகுலர் இன்கம் வர்றதோ…
அப்போ நீங்க உங்க வேலையை விட்டுட்டு வாங்கோ…
நான் உங்களுக்கு வேலை தர்றேன்.”
“ம்….
ஓகே மேடம்”
“ஏய் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் பா”
“நானும் தான் விளையாட்டுச் சொன்னேன்”
“ஏய்!!!
ஹா! ஹா! ஹா! ஹா!”
நவீனும் மிருதுளாவும் ஒரு சின்ன ஆபீஸ் ரூம் ஒன்றை வாடகைக்கு எடுத்தனர். நல்ல நாள் பார்த்து தன் பிஸினஸை துவங்கினாள் மிருதுளா. முதலில் ஒன்றிரண்டு வேலை ஆர்டர்களே வந்தன. அவற்றை நல்லப் படியாக முடித்துக் கொடுத்ததில் மீண்டும் ஒன்று வந்தது. இப்படியே இரண்டு மூன்றானது மூன்று ஐந்தானது. ஐந்து பத்தானது. பத்து இருபது வேலைகளுக்கான ஆர்டர்களானது. இரண்டு வருடத்தில் சக்தி தன் முதுகலைப் பட்டப் படிப்பை முடித்து யூரோப்பிலேயே பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்தாள். மிருதுளா தனது பிசினஸில் மும்முரமானாள். வேலைக்கான ஆர்டர்கள் பெருகி மாத வருமானம் வர ஆரம்பித்ததும் நவீன் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு மிருதுளாவுடன் இணைந்து அவனது லீகல் வேலைகளுக்கான ஆர்டர்களையும் எடுத்துச் செய்ய ஆரம்பித்தான். இருவரும் ராப்பகலாக கடினமாக உழைத்தார்கள்.
அவர்கள் உதவிக்காக இரண்டு நபர்களை வேலைக்குச் சேர்த்தனர். பின்பு அதே ஆபீஸையும் அதன் பக்கத்து கடையையும் சேர்த்து லீசுக்கு எடுத்து…தங்கள் ஆபீஸை விரிவுப் படுத்தி இன்னும் ஐந்து நபர்களுக்கு வேலைக் கொடுத்தனர். இப்படியே அவர்களின் பிஸினஸ் விரிவடைந்தது. பேரும், புகழும், நன்மதிப்பும் சம்பாதித்தனர். ஐந்தாண்டுகள் கடுமையாக உழைத்ததில் மிருதுளாவுக்கு அந்த ஆண்டிற்கான சிறந்த பிஸினஸ் உமன் என்ற அவார்டும் கிடைத்தது. அவர்கள் வாழ்க்கையில் எல்லா வளங்களுடனும் நிறைவாக வாழ்ந்தனர்.
மிருதுளாவும் நவீனும் அவர்கள் வாழ்க்கையை பூஜ்யத்திலிருந்து தான் ஆரம்பித்தனர். நவீன் பெரிய பணக்காரனாக இல்லாவிட்டாலும் கொஞ்சமாவது சேர்த்து வைத்துக் கொண்டு தான் திருமணம் முடித்திருப்பார் என்ற எண்ணத்தில் தங்கள் மகளை தாரவாத்துக் கொடுத்தனர் அம்புஜமும் ராமானுஜமும். பிறந்த வீட்டில் ராணிப் போல் வாழ்ந்த மிருதுளா புகுந்த வீட்டில் படாத கஷ்டங்களுமில்லை, அவமானங்களுக்கும் அளவில்லை. ஆனால் அனைத்தையும் பொறுமையாக இருந்து தன் கனவனையே தானாக அனைத்தையும் புரிந்துக் கொள்ள வைத்தாள்.
“ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது” என்ற பழமொழிபோல மிருதுளா சொல்லிக் கொடுத்து நவீனைப் புரிந்துக் கொள்ள வைப்பதைவிட அவனையே தானாக புரிந்துக் கொள்ள வைத்தால் தான் அவனுள் நேரும் மாற்றம் உண்மையானதாகவும் நிரந்தரமானதாகவும் இருக்கும் என்றெண்ணி அவள் நடந்துக் கொண்டது அவளுக்கு சில காலம் வேதனைகளையும், வலிகளையும் தந்திருக்கலாம் ஆனால் அவை அணைத்தும் அவள் தாங்கிக்கொள்ளக் கூடிய வயதிலேயே வந்து கடந்து சென்று விட்டன. ஒரு பெண்ணிற்கு எந்த வயதில் மன நிம்மதியும், அமைதியும் தேவையோ அந்த வயதில் மிருதுளாவுக்கு அவை மிகுதியாகவே கிடைத்தது.
திருமணமான புதிதில் நவீன் தனக்காக தன் தாய் தந்தையிடம் பேசாது இருந்ததில் மனவருத்தமிருந்தாலும் நவீனின் நிலைமையையும் புரிந்துக் கொண்டு அதைப் பெரிதாக்காது நடந்துக் கொண்டதினால் நவீனும் அவளை நன்றாக புரிந்துக் கொண்டு பின்னாலில் அவளுக்கு நல்ல துணையாக மாறினான்.
மிருதுளா திருமணமானது முதல் தன் புகுந்த வீட்டினரை மதித்து நடந்துக்கொண்டது, அவர்களை அரவணைத்துச் சென்றது, அவர்கள் அவமானப்படுத்தினாலும் அவர்களை விடாது தங்களுடன் வைத்துக் கொள்ள முயன்றது, அதற்காக பலமுறை தோற்றுப் போனது என தொடர்ந்து வட்டமடித்துக் கொண்டிருந்த அவளின் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் அதில் எந்த வித முன்னேற்றமுமின்றி ஆனதில் அவள் மிகவும் வருத்தமடைந்தாள். ஆனால் இனி அவர்களுக்காக வருந்தியோ வேதனைப்பட்டோ ஒன்றும் ஆகப் போவதில்லை என்று ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து அன்று முதல் அவர்களை எல்லாம் தன்னுளிருந்தும் தன்னிடமிருந்தும் தள்ளி வைத்துவிட்டு அவள் அவளுக்காகவும் அவளின் கனவன் மகளுக்காகவும் மட்டுமே வாழத் துவங்கினாள். அப்படி அவள் வாழத் துவங்கியதிலிருந்து அவள் வாழ்க்கை ஏறுமுகமாக தான் இருந்தது.
ஒரு பெண்ணிற்கு பொறுமை மிக மிக அவசியமான அணிகலனாகும். அதை மட்டும் அவள் அணிந்துக் கொண்டால் அவளை விட வலிமை வாய்ந்தவர்கள் இந்த பூமியில் எவரும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் தன் பொறுமைக்கும் ஒரு எல்லையை வகுத்துக் கொள்பவளும் அவளே! தனது பொறுமை என்று மற்றவர்களால் உபயோகித்துக் கொள்ளப் படுகிறதோ அன்று அதை உடைத்தெறியும் பெண்ணிற்கு இணையானவரும் இந்த பூமியில் இருக்க வாய்ப்பில்லை.
நல்லவர்களை சீண்டிக்கொண்டே இருந்தால் அவர்கள் பொறுமையின் எல்லை வரை பொறுத்திருப்பார்கள். எப்போது அப்படி சீண்டிப் பார்ப்பவர்கள் அதைத் தாண்டுகிறார்களோ அன்று அவள் அவர்களை பழிவாங்கவோ அல்லது சண்டையிடவோ செய்யாது அவர்களிடமிருந்து… அவர்கள் கண்ணிற்குக் கூட தெரியாத உயரத்திற்கு பறந்துச் சென்றிடுவாள். இதுவே வலிமையான பெண்ணினத்தின் குணம்.
எப்போதும் நாம் நமக்காக எல்லா நேரங்களிலும், எல்லாவற்றிற்கும் சண்டையிட வேண்டுமென்ற அவசியமில்லை. ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்டு “சூஸ் யுவர் பேட்டில் வைஸ்லீ”. அதாவது உனக்கான போர், யுதம் அல்லது சண்டை எதுவானாலும் அதை தேர்ந்தெடுப்பதில் புத்திசாலியாக இரு என்பது அதன் அர்த்தமாகும். நாம் ஒரு பிச்சினையை சந்திக்கும் பொழுது அதற்காக நாம் பொங்கி எழ வேண்டுமா? திருப்பி சண்டையிட வேண்டுமா? என்றெல்லாம் யோசிக்க வேண்டும். சிலருடன் பேசி நியாயத்தை நிலை நாட்டலாம், சிலருடன் சண்டையிட்டு நியாயத்தை நிலை நாட்டலாம் ஆனால் பல நேரங்களில் நமது நியாயத்தை நிலையாட்டிக் கொள்ளவும் நமது மன அமைதிக்காகவும் சிலரிடமிருந்து விலகிச் செல்வதே சிறந்த வழி. அதைத் தேர்ந்தெடுத்த மிருதுளா விட்டுக்கொடுத்து அனுசரித்து இளிச்சவாய் என்ற பெயரெடுத்தாலும் அவளின் பொறுமைக்கு கிடைத்தப் பரிசு தான் அவளின் கனவனும், மகளும், மனநிம்மதியும், அவளின் உயர்வும் ஆகும்.
விட்டுக்கொடுப்பவர் என்றுமே கெட்டுப்போவதில்லை. அதே போல விட்டு விலகுபவர்களும் கெட்டுப் போவதில்லை என்பதற்கு மிருதுளாவே சிறந்த உதாரணமாவாள். பெரியவர்கள் பெரியவர்களாக நடந்துக் கொண்டால் சிறியவர்களும் அதற்கு தகுந்தாற் போல அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அளிப்பார்கள். ஒருவருக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் நாம் நடந்துக் கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது. அவற்றை உருட்டி மிரட்டி எல்லாம் பெற முடியாது. அப்படியே பெற்றுக் கொண்டாலும் அது நிலைக்காது. உண்மை, நேர்மை, பொறுமை, ஒழுக்கம் இவை ஒருவரிடமிருந்தால் அவர்களின் வெற்றி மற்றவர்களை வாய்பிளக்கச் செய்யும். அதுவே மிருதுளாவின் வாழ்விலும் நடந்தது. அன்று அவளைத் தூற்றியவர்களிடமும் விமர்சித்தவர்களிடமும் சண்டையிட்டு நேரத்தை வீணடிக்காது மேலே மேலே உயரப் பறந்துச் சென்றாள். அவளின் வளர்ச்சியைக் கண்டு அன்று அவளைத் தூற்றியவர்களையும், விமர்சித்தவர்களையும் இன்று அதற்காக வருத்தமடையச் செய்தாள் மிருதுளா.
பர்வதீஸ்வரன் படைப்பே அப்படி இருந்ததால் மிருதுளா அல்ல மற்ற எவராலும் புரிய வைக்கவோ மாற்றவோ முடியாது போனது. அவர்கள் அப்படித்தான் என்று அனைவரும் அவர்களிடமிருந்து ஒதுங்கிச் சென்றனர்.
அவர்களின் வாரிசுகளாவது திருந்த முயற்சிக்கலாம். ஏனெனில் அவர்களுக்கு இன்னும் வாழ்க்கை இருக்கிறதே!! திருந்துவார்களா? காலம் தான் அதற்கு பதிலளிக்கும்.
ஆணுக்கு பெண் சமம் என்பதை நிரூபிப்பதில் பல பெண்கள் போராடுகிறார்கள். ஆனால் உண்மையில் ஆணைவிட பெண்ணே சிறந்தவள் என்பதை அறியாது போராடிவருகின்றனர். பெண் தன்மேம்பாடு பெறுதல் பற்றி இப்போது பல இடங்களில் பேசிக்கொண்டும், விவாதித்துக் கொண்டும் இருக்கின்றனர். இவற்றை எல்லாம் விடுத்து பெண்களே நீங்கள் நீங்களாகவே இருங்கள். ஒரு பெண் தன்மேம்பாடு பெறுவதற்காக ஏன் போரட்டமோ அல்லது ஊடகங்களிலோ போட்டு விவாதிக்க வேண்டும். ஒவ்வொரு பெண்ணும் தன்னைத் தானே மேம்படுத்திக் கொண்டு… எப்படி எந்த வித சத்தமுமின்றி ஒரு சிறிய செடி பெரிய விருட்சமாகி அனைவருக்கும் பலன் அளிக்கிறதோ அதே போல நமது வளர்ச்சி சத்தமின்றி இருக்கட்டும் அதன் வெற்றி உலகமெங்கும் பறைசாற்றட்டும்.
மிருதுளாவின் வாழ்விலும் இதுதான் நடந்துள்ளது.
கடவுள் ஒருவருக்கு நிறைய கஷ்டங்களும் வேதனைகளும் கொடுப்பது அவரை சோதித்துப் பார்க்கவே. அவரின் சோதனையில் ஒருவர் வெற்றியடைந்தால் அதற்கு கடவுள் கொடுக்கும் பரிசை எவராலும் அவரிடமிருந்து தட்டிச் செல்ல முடியாது. அதுபோல தான் மிருதுளாவிற்கு கடவுள் கொடுத்த சோதனைகளில் எல்லாம் அவள் தேர்ச்சிப் பெற்றதால் அவளுக்கு பொன், பொருளோட நிறுத்திடாது மன அமைதியையும், ஆரோக்கியத்தையும் சேர்த்து அளிக்கொடுத்திருக்கிறார். மிருதுளா என்ன ஆனாள் என்று இன்றுவரை படித்துவந்த நமக்கு இப்போது புரிந்திருக்குமே!!
முற்றும்
🙏நன்றி🙏
இதுவரை மிருதுளா என்ன ஆனாள் என்ற இந்த தொடரைப் படித்து ஆதரவளித்து வந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இனி சக்தியின் பயணம் தொடரும்.
மிருதுளா என்ன ஆனாள்?
அத்தியாயம் 109: நூறு நாள் வேலை
மெல்ல சக்தியின் அறைக்குச் சென்றுப் பார்த்தான் நவீன். அங்கே சக்தியின் கட்டிலில் அமர்ந்துக் கொண்டு அழுதுக் கொண்டிருந்தாள் மிருதுளா. அதைப் பார்த்ததும் வேகமாகச் சென்று மிருதுளாவிடம்…
“ஏய் மிருது என்ன ஆச்சு?
ஏன் இப்படி அழுதுண்டிருக்க?
இங்க பாரு மிருது.
ஏன்னு சொல்லு அப்போ தானே நான் என்ன செய்யணும்னு எனக்கும் தெரியும். ப்ளீஸ் அழுகையை நிறுத்திட்டு விஷயத்தை சொல்லு மிருது.”
என்று நவீன் கூறியும் விடாது அழுதுக் கொண்டிருந்தாள் மிருதுளா. அவள் அருகிலேயே அவளின் அழுகை நிற்கும் வரை அமர்ந்திருந்தான் நவீன். வெகுநேரத்திற்குப் பின் மிருதுளா தன்னைத்தானே சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டு நவீனைப் பார்த்து
“ஆம் சாரிப்பா.
என்னால அழுகையை கன்ட்ரோல் பண்ண முடியலை அதுதான் அழுது தீர்த்துட்டேன்”
என்று கூறிக்கொண்டே இருக்கும் பொழுது அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தோடியது. அதைத் துடைத்துக் கொண்டே நவீன் அவளிடம்
“நீ எதுக்கு இப்போ இப்படி விக்கி விக்கி அழுத?”
“ம்….”
“என்ன மிருது?
ஏன்? பதில் சொல்லு!
நம்ம சக்தி ரூமுல உட்கார்ந்துண்டு ஏன் அழுதுண்டிருக்க?
சக்தி ஞாபகம் வந்துடுத்தா?”
என்று நவீன் கேட்டதும் அவள் கண்களில் கண்ணீர் காட்டாறு போல பெருக்கெடுத்தோடியது. அதை அடக்க முயன்றும் முடியாது அழுது கொண்டே…
“ஆமாம் நவீ.
எனக்கு அவ அம்மான்னு கூப்பிடறா மாதிரியே இருக்கு.
அவ ரூமை அடிக்கடி எட்டிப் பார்த்துண்டே இருக்கேன்.
எனக்கு அவ ஞாபகமாவே இருக்குப்பா. ரொம்ப கஷ்டமா இருக்கு”
“என்ன மிருது இது!!
அன்னைக்கு எனக்கு தைரியம் சொல்லிட்டு இப்ப என்னடான்னா நீ இப்படி அழுதுண்டிருக்க?
நம்ம சக்தி எங்க போயிருக்கா?
படிக்கத் தானே!!
அது தான் அவ வர்ற டிசம்பர் மாசம் வின்டர் லீவுக்கு வந்திடுவாளே!
அப்புறம் என்ன?
நீ அங்கிருந்து கிளம்பும் போது உனக்கு இருந்த மன திடத்தைப் பார்த்து நானே அசந்து நின்னேன்…
ஆனா நீ என்னடான்னா…
அசடு மாதிரி இப்படி அழுதுண்டிருக்கயே!”
“அழுதா அசடா?
அன்னைக்கு நீங்களே ரொம்ப டவுனா இருந்தேங்கள்.
அந்த நேரத்துல நானும் அப்படி இருந்திருந்தா அப்புறம் நம்மளை தேத்தறதுக்கு யாரு இருக்கா?
அதுனால தான் நான் ஸ்ட்ராங்கா இருந்தா மாதிரி காட்டிண்டு உங்களைத் தேத்தினேன்.
ஆனா இங்க வந்ததுக்கப்புறமா என்னால அவ இல்லாத இந்த வீட்டை நினைச்சுக் கூட பார்க்க முடியலை நவீ!
அது தான் அழுதுட்டேன்”
“இட்ஸ் ஓகே மிருது.
சரி முழுசா அழுது முடிச்சாச்சா?
இப்போ சொல்லறேன் நன்னா கேட்டுக்கோ மிருது.
நீ என்னோட முன்னேற்றத்துக்காகவும் நம்ம பொண்ணுக்காவும் உன்னோட வேலை, விருப்பங்கள், ஆசைகள், திறமைகள் எல்லாத்தையும் இத்தனை வருஷங்களா மூட்டைக் கட்டி பரண் மேல போட்டு வைத்திருந்ததை தூசி தட்டி எடுத்து அதுல உன் நேரத்தை செலவிட ஆரம்பி.
இனி நீ உனக்காக வாழ ஆரம்பி.
அதுக்கு என்னாலானதை நான் உனக்குச் செய்யறேன்.
நம்ம பொண்ணு அவ வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சுட்டா.
இனியும் நீ அவளை நினைச்சுண்டு கவலைப் பட வேண்டிய அவசியமே இல்லை.
பதினெட்டு வயசுல தானே ஒரு டிஸிஷன் எடுத்து வெளிநாட்டுல போய் தனியா இருந்து படிக்கப் போயிருக்காங்கறது சாதாரண விஷயமில்லை!!
இதை நான் உனக்கு சொல்லணும்னும் இல்லை.
இத்தனை வருஷமா நம்மக்கூடவே இருந்த நம்ம பொண்ணு சடன்னா ஒரு நாள் நம்மைவிட்டு இவ்வளவு தூரம் போனா அவ என்ன செய்வா?
தனியா இருப்பாளா?
பசிச்சா என்ன சாப்பிடப் போறா? அவளுக்குப் பிடிச்சது அங்கே கிடைக்குமா?
அப்படியே கிடைச்சாலும் அதை வாங்கி சாப்பிடுவாளா இல்லை காசாகுமேனுட்டு சாப்பிடாம இருப்பாளா?
அப்படிங்கற கவலையெல்லாம் வர தான் செய்யும். என்ன பண்ண?
நாம பெத்தவாளாச்சே! ஆனா இது எல்லாமே அவ நல்லதுக்கு தான்னு நினைச்சுப்போம்.
இந்த எக்ஸ்பீரியன்ஸ் அவளை இன்னும் ஸ்ட்ராங்கான பெண்ணா மாத்தும்.
ஸோ நீ உன் பொண்ணை சூப்பரா வளர்த்திருக்க மிருது.
அதுக்காக நீ சந்தோஷப்படணும் பெருமைப்படணுமே தவிர இப்படி விக்கி விக்கி அழப்படாது.
புரியறதா!! சரி வா நாம இப்படியே நடந்துப் போய் நம்மளோட ஃபேவரைட் ஷாப்ல போய் ஆளுக்கொரு சமோசா சாப்டுட்டு அப்படியே ஈவினிங் டீயும் குடிச்சுட்டு வரலாம்.
கம் ஆன் கெட் அப் அன்ட் கெட் ரெடி மை டியர் வைஃப்.”
“நவீ வேண்டாம்…
நம்ம சக்திக்கு அந்த கடை சமோசான்னா ரொம்ப பிடிக்கும்.
அவளுக்கு அங்க அதெல்லாம் சாப்பிட கிடைக்காத போது நாம எப்படி இங்கே சாப்பிடறது?”
“அச்சச்சோ!!!
அப்படீன்னா சக்தி வந்ததுக்கப்புறம் தான் சமோசாவா?”
“எஸ்.
நான் உங்க கூட கடைக்கு வர்றேன் ஆனா சமோசா சாப்பிட மாட்டேன்.
நீங்க சாப்பிட்டுக்கோங்கோ.
நான் டீ மட்டும் குடிக்கறேன்.”
“நமக்கும் இந்த சமோசாவுக்கும் நம்ம லைஃப் ஆரம்பிச்சதுலேந்து டிஷ்யூம் டிஷ்யூமா தான் இருக்கு!!
அது ஏன்னே தெரியலை மிருது!! என்னோட போன ஜென்மத்துல யாருக்கோ சமோசா வாங்கித் தரமா இருந்ததில் அவா விட்ட சாபம் போல எனக்கு தோனறது!!!
டீ மட்டும் குடிக்க எதுக்கு அங்க போகணும்?
இரு நான் சூப்பர் மசாலா டீ வச்சுக் கொண்டு வர்றேன்.
அதுக்குள்ள நீ போய் ஃபேஸ் வாஷ் பண்ணி ஃப்ரெஷ்ஷா வா பார்ப்போம். போ போ போ”
“ம்..ஓகே. தாங்ஸ்ப்பா”
“எதுக்கு? நான் இன்னும் டீ வைக்கவேயில்லையே…
அதுக்குள்ளேயே தாங்ஸ் சொல்லற”
“டீக்கு இல்லப்பா…
அதைவிட நீங்க ஸ்டாங்கா குடுக்கற சப்போர்ட்டுக்கு சொன்னேன்”
“அதுக்கா!! ஆமாம்.
நம்ம லைஃபோட ஆரம்பத்துல எனக்கு நீ செஞ்சதை நான் உனக்கு இதுவரை செய்யாததை இப்பவாவது செய்யணுமில்லையா அதுனால தான் இன்னேலேந்து ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். எப்படி?”
“எனக்கான உங்க சப்போர்ட்டை என்னை தேவையில்லாம பேசறவாகிட்டேயும், அடுமாண்டு பழி போடறவாகிட்டேயும் திருப்பிப் பேசறதுல காமிங்கோ.
அது தான் எனக்கு உண்மையான சந்தோஷத்தைத் தரும்.
இப்போ இந்த டீயை நானே போட்டுத்தறேன் நகருங்கோ.”
“என்ன மிருது அன்னைக்கு ஹோட்டல்ல என்னென்னமோ வீர வசனங்கள் எல்லாம் பேசின…
நானும் விசிலெல்லாம் அடிச்சேன்…
ஆனா இப்ப என்னடான்னா மறுபடியும் அந்த கூட்டத்தைப்பத்திப் பேசற!!”
“நவீ நான் அன்னைக்கு ஹோட்டல்ல சொன்னது சொன்னது தான் அதுல எந்த வித மாற்றமும் இல்லை.
ஆனாலும் நம்ம கூட்டம் சும்மா இருக்குமா.
அங்கேந்தும் இங்கேந்தும் அம்புகளை ஏவி விடுவாளே!!
அதைப் பத்தி சொன்னேன்”
“ம்…அதுவும் சரி தான்.
இனி எதைப் பத்தியும் நீ கவலைப்படாதே எல்லாரையும் அன்ட் எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்.
ஓகே. டீ கொதிச்சிடுத்து…”
“ம்….இத்தனை வருஷமா நீங்க டீ போட்டுத் தந்தா மாதிரி சொல்லறேங்கள்…
எனக்கும் தெரியும் டீ கொதிக்கறதுனுட்டு. நகருங்கோ டம்பளர் எடுக்கணும்.”
என்று இருவருமாக பேசிக்கொண்டே டீ போட்டு இரண்டு டம்பளர்களில் ஊற்றி எடுத்துக் கொண்டு ஹால் சோஃபாவில் அமர்ந்தனர்.
“நவீ நாளையிலேந்து நீங்க வேலைக்குப் போயிடுவேங்கள்.
நம்ம சக்தியும் இங்க இல்ல எனக்கு ரொம்ப போர் அடிக்கும் அதுனால நான் ஏதாவது வேலைக்கு டிரைப் பண்ணவா?”
“அதுதான் நீ வீட்டிலிருந்தே அந்த அட்மிஷன் சென்டருக்கு வேலைப் பார்க்கறயே மிருது.”
“அது என்னப்பா ஜஸ்ட் இரண்டு மணி நேர வேலை தான்.
ஆனா அதுக்கப்பறம்?
முன்னாடின்னா சக்தி ஸ்கூலேந்து வருவா அவளுக்கு டிபன் செய்யணும். அப்புறம் ஸ்னாக்ஸ் செய்யணும்னு இருந்தேன் இப்போ அதெல்லாம் இல்லையே! அதுதான் கேட்டேன்”
“உனக்கு விருப்பம்னா தாராளமா போ மிருது. நான் ஒரு ஐடியா குடுக்கட்டா”
“என்ன அது?”
“பேசாம நீ சின்னதா வீட்டிலிருந்தே அந்த சென்டருக்குப் பண்ணிக் கொடுத்திண்டிருக்கறதை அவா ஆஃபீஸ்லேயே போய் முழு நேர பணியாளரா ஆயிடேன்.
என்ன சொல்லற?”
“ம்…நல்ல ஐடியா.
நான் இப்பவே ஈமெயில் போட்டுக் கேட்கறேன்”
என்று உடனே வேலைக் கேட்டு மின்னஞ்சல் அனுப்பினாள் மிருதுளா. இரண்டு நாட்கள் கழித்து அவளை நேர்காணலுக்கு வரும்படி மின்னஞ்சலில் அழைப்பு வந்தது. உடனே மிருதுளா சந்தோஷமானாள். அந்த நேர்காணலுக்கான நாள் வந்தது. என்ன தான் முன்பு ஐந்தாறு வருடங்கள் வேலைப்பார்த்திருந்தாலும் இடையே பத்து வருட காலம் இடைவெளி இருந்ததால் சற்று பதற்றமாகவே இருந்தாள் மிருதுளா. நவீன் அவளின் பதற்றத்தைப் போக்க வேண்டி
“இங்கே பாரு மிருது நமக்கு இப்போ இந்த வேலைக் கிடைச்சா தான் ஆச்சுன்னுட்டு இல்லை.
ஸோ ரிலாக்ஸா இன்டர்வியூவை அட்டென்ட் பண்ணு சரியா. அதுவுமில்லாம நீ குவாலிட்டி வொர்க் பண்ணுவனு அவாளுக்கு தெரிஞ்சதுனால தானே இந்த இன்டர்வியூவுக்கே கூப்பிட்டிருக்கா.
ஸோ எந்த வித டென்ஷனுமில்லாம அட்டென்ட் பண்ணு சரியா”
“என்ன தான் சொன்னாலும் ஒரு வித பதற்றம் இருக்கத்தான் செய்யறது நவீ”
“சரி நான் இங்கே ரிசப்ஷனில் உட்கார்ந்துண்டிருக்கேன் நீ போய் இன்டர்வியூ அட்டென்ட் பண்ணிட்டு வா. ஓகே.
ஆல் தி பெஸ்ட்”
என்று நவீன் அவளை அந்த அலுவலகத்தில் விட்டுவிட்டு அவள் இன்டர்வியூ முடித்து வரும் வரை காத்திருந்தான். ஒவ்வொரு முறை லிஃப்ட்டின் கதவு திறக்கும் போதெல்லாம் மிருதுளா வருவாள் என்று எண்ணி எட்டி எட்டிப் பார்த்தான் நவீன். ஒரு மணி நேரத்திற்கு பிறகு மிருதுளா கீழே ரிசப்ஷனுக்கு வந்தாள். நவீன் லிஃப்ட்டைப் பார்த்துப் பார்த்து அசந்துப் போய் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான். அவன் முன் போய் நின்றாள் மிருதுளா. அவளைப் பார்த்ததும் நவீன் தான் அமர்ந்திருந்த சோஃபாவிலிருந்து எழுந்து
“ஹேய் மிருது.
இன்டர்வியூ முடிஞ்சுதா?
நீ வருவ வருவேன்னு லிஃப்ட் டோர் ஒவ்வொரு தடவை திறக்கும் போதும் பார்த்துப் பார்த்து அலுத்துப் போய் இப்ப தான் இந்த புக்கைப் படிக்க ஆரம்பிச்சேன்…
நீ வந்து நிக்கற…
இப்படின்னு தெரிஞ்சிருந்தா …
நான் இந்த புக்கை அப்பவே படிச்சிருப்பேன்….
ஓகே ஓகே ஜோக்ஸ் அபார்ட்…
இன்டர்வியூ எப்படிப் போச்சு?
உன் முகத்தைப் பார்த்தா சக்ஸ்ஸன்னு தான் தோனறது…
அதைப் பத்தி சொல்லு”
“எஸ் யூ ஆர் ரைட். எனக்கு வேலைக் கிடைச்சிடுத்து.
இந்தாங்கோ அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்.
மாசம் மூவாயிரத்து ஐநூறு தினார் சம்பளம்.
ஆம் ஸோ ஹாப்பி நவீ.
இதை நான் உடனே நம்ம சக்தி கிட்ட சொல்லணும்”
“வாவ்!! தட்ஸ் க்ரேட் மிருது.
மாசம் மூவாயிரத்து ஐநூறு தினார்ன்னா நம்ம இந்தியா காசுக்கு கிட்டத்தட்ட மாதம் எட்டு லட்சம் மிருது.
கலக்கிட்டப் போ”
“என்னப்பா நீங்க வாங்கறதுல இது வெறும் அஞ்சோ ஆறோ பர்சன்ட் தானே”
“அதை விடு மிருது.
இத்தனை வருஷங்கள் க்யாப் விட்டுட்டும் நீ இன்டர்வியூ அட்டெனட் பண்ணி அதுல ஆஃபரும் வாங்கிருக்க…
இது பெரிய விஷயம் மா.
சக்திகிட்ட அவ இன்னைக்கு நைட் நமக்கு கால் பண்ணுவால அப்போ சொல்லுவோம்.
சரி சரி டிரீட் எங்க?”
“ம்….மொதோ மாசம் சம்பளம் வாங்கினதுக்கு அப்புறமா தர்றேன்”
“ஓகே மேடம்.
ஜாய்னிங் டேட் என்ன?”
“வர ஞாயிற்றுக்கிழமை ஜாயின் பண்ண சொல்லிருக்கா நவீ”
“சூப்பர்.
நாம இப்போ வீட்டுக்குப் போகலாமா?”
“ஓ எஸ் போகலாம்.
நவீ வீட்டுக்கு போற வழியில் ஸ்டார்பக்ஸ்ல ஒரு காப்பசீனோ காஃபி குடிச்சிட்டுப் போகலாமா ?”
“வித் எக்ஸ்ட்ரா ஷாட் அன்ட் எக்ஸ்ட்ரா ஹாட் ரைட்டா மேடம்”
“எஸ் சார்.”
“ஓகே டன்.”
என்று இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முதல் பத்து வருடங்களுக்குப் பின் மீண்டும் வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள் மிருதுளா. முதல் நாள் நவீன் அவளை அவளது ஆஃபீஸில் டிராப் செய்தான். அடுத்த நாள் முதல் அவள் மெட்ரோவில் செல்ல ஆரம்பித்தாள். இப்படியே நான்கு மாதங்களும் இருவரும் வேலை, வீடு, இரவில் சக்தியுடன் ஃபோனில் அரட்டை என ஓடிக் கொண்டிருந்தது. டிசம்பர் மாதம் வந்தது சக்தி லீவுக்கு ஊருக்கு வருவதற்காக நவீன் டிக்கெட் புக் செய்தான். அப்போது மிருதுளா நவீனிடம்
“நவீ நம்ம சக்தி வரும்போது நான் ஆத்துல இருக்க வேண்டாமா.
நான் வேலைக்கு போயிட்டா அவ லோன்லியா ஃபீல் ஆகமாட்டாளா?”
“அதெல்லாம் ஆக மாட்டா மிருது. அதுவுமில்லாம அவ வந்து இருக்கப் போறது வெறும் பதினைந்து நாட்கள் தான்”
“அதுதான் சொல்லறேன் அவ நம்ம கூட இருக்கப் போற அந்த பதினைந்து நாட்களும் நான் அவகூடவே இருக்கணும், அவளுக்குப் பிடிச்சதை எல்லாம் சமைச்சுக் குடுக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு”
“அதுக்கு!!”
“நான் வேலையை விட்டுடவா?”
“உனக்கென்ன ஆச்சு மிருது?
இதுக்காக யாராவது வேலையை விடுவாளா?
லீவு கேட்டுப் பாரு.”
“ஓ!! ஆமாம் இல்ல.
சப்போஸ் லீவு தரல்லைன்னா?”
“அதைப் பத்தி அப்புறம் பார்த்துப்போம். முதலில் லீவு கேளு”
“ம்…ஓகே.”
மறுநாள் ஆஃபீஸுக்கு சென்றதுமே தன் மேலாளரிடம் சென்று விவரத்தைக் கூறி லீவு கேட்டாள் மிருதுளா. அவர் அவளிடம்
“பதினைந்து நாளெல்லாம் லீவு குடுக்க முடியாதுமா.
நீங்க இன்னும் உங்க ப்ரொபேஷன் பீரியட்ல தான் இருக்கீங்க.
வேணும்னா ஒரு வீக்கென்ட்டை ஒட்டி மூனு நாள் தர்றேன் அவ்வளவு தான் என்னால தரமுடியும்.”
“ம்…சார் ப்ளீஸ் கொஞ்சம் டிரைப் பண்ணுங்க சார்.
நம்ம ஹெட்டுட்டப் பேசிப் பாருங்க சார்.”
“எனக்குத் தெரிந்து அவர் குடுக்க மாட்டார்.
இருந்தாலும் கேட்டுப் பார்க்கறேன். ஆனா நிச்சயம் கிடைக்கும்னு நம்ப வேண்டாம்”
என்று மேலாளர் கூறியதும் மிருதுளா சோர்ந்துப் போய் அவள் இருக்கையில் அமர்ந்து வேலையை செய்ய ஆரம்பித்தாள். சக்தி வருவதற்கு நான்கே நாள் இருந்தது. அதுவரை அவளின் லீவைப் பற்றி அவளது மேலாளர் ஏதும் சொல்லாததால் அவள் மீண்டும் அவரிடம் அதைப் பற்றிப் பேச அவரது கேபினுக்குச் சென்று…
“சார் என் லீவு பத்தி நம்ம ஹெட்டுகிட்டப் பேசறேன்னு சொன்னீங்களே.
அவர் என்ன சொன்னார்?”
“நான் தான் அன்னைக்கே சொன்னேனே. அவர் தரமாட்டார்னு.
அதே தான் இன்னைக்கும்.
அவர் ப்ரொபேஷன்ல இருக்குற ஊழியருக்கு…
அதாவது உங்களுக்கு அவ்வளவு நாளெல்லாம் லீவு கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டார்மா. அதுவுமில்லாம நான் தர்றேன்னு சொன்ன அந்த மூணு நாள் லீவையும் குடுக்கக்கூடாதுன்னும் சொல்லிட்டார். அதுனால என்னாலயும் உங்களுக்கு அந்த மூணு நாள் லீவு தரமுடியாது”
“ஓ!!! அப்படியா. அப்போ நான் ஒரு முடிவு எடுக்கணும்.”
“என்ன சொன்னீங்க?”
“இல்ல நான் நம்ம ஹெட்டுட்டயே பேசிக்கறேன்”
“ஓகே! ஆல் தி பெஸ்ட்”
“தாங்ஸ்”
என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று தன் இருக்கையில் அமர்ந்து ஏதோ யோசனையில் மூழ்கினாள் மிருதுளா. ப்ராக்டிக்காலட்டிக்கும் பாசத்துக்கும் இடையே சிக்கித் தவித்தாள் …அவளுக்குள் இவை இரண்டுக்கும் இடையே பெரிய பட்டி மன்றமே நடந்துக் கொண்டிருந்ததால் அவள் தன் வேலையில் கவனம் செலுத்த முடியாது தவித்தாள். வேகமாக எழுந்துச் சென்று தன் குழுவின் ஹெட் என்றழைக்கப்படும் தலைவரிடம் சென்று அவர் அறையின் கதவைத் தட்டி…
“மே ஐ கம் இன் சார்”
“எஸ் கம் இன்”
என்றதும் உள்ளேச் சென்ற மிருதுளா முன் தன் ஹெட் உட்பட ஆறு பேர் அமர்ந்திருந்ததைப் பார்த்ததும் தான் பேச வந்ததை அப்படியே விழுங்கிவிட்டு செய்வதறியாது நின்றவளிடம்…
“எஸ் மிஸஸ் மிருதுளா.”
“ம்…ஐ நீட் டூ டாக் டு யூ சார்.”
“நான் ஒரு மீட்டிங்ல இருக்கேன். ஷால் வீ டாக் ஆஃப்டர் ஒன் ஆர்…சே….ஒன்னோக்ளாக்”
“இட்ஸ் ஓகே சார். ஐ வில் வெயிட் அன்ட் கம் அட் ஒன் சார். தாங்யூ”
என்று கூறிவிட்டு அங்கிருந்து வந்து தனது இருக்கையில் அமர்ந்து மணி ஒன்றாவதற்காக காத்திருந்தாள். தன் கைக்கடிகாரத்தில் சரியாக ஒரு மணியானதும் எழுந்து அவர் அறைக்குச் சென்றாள். மீண்டும் கதவைத் தட்டி உள்ளே சென்றாள். அங்கே அவர் மட்டும் அமர்ந்திருந்தார். மிருதுளா உள்ளே வந்ததும் அவளிடம்
“உட்காருங்க மிஸஸ் மிருதுளா நவீன்.”
“தாங்ஸ் சார்”
“ம்…என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்திருக்கீங்க?”
“அது வந்து …சார்…வந்து”
என்று பேச வந்ததைப் பேசாது தயங்கியவளிடம்
“என்ன உங்க லீவு விஷயமாவா?”
“ஆமாம் சார்.
எங்க பொண்ணு நாலு மாசம் கழிச்சு எங்க வீட்டுக்கு வர போறா சார்.
அதுவும் வெறும் பதினைந்து நாட்களுக்கு தான் சார்.
அதுனால தான் நான் லீவு கேட்டேன்”
“அதெல்லாம் சரி தான்.
ஆனா இந்த ஆஃபீஸ் ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன் படி ப்ரொபேஷன்ல இருக்குற ஊழியர்களுக்கு லீவே குடுக்கக்கூடாதுன்னு தான் இருக்கே!! அதுக்கு நான் என்ன செய்வேன் சொல்லுங்க.”
“ஸோ இதுக்கு வேற வழியே இல்லையா சார்”
“ம்.ஹூம். எனக்குத் தெரிஞ்சு இல்ல. ஆம் சாரி.”
என்று இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது சைலென்ட் மோடில் வைத்திருந்த மிருதுளாவின் ஃபோன் வைப்ரேட் ஆனது. அவள் தன் ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்தாள். பின் எழுந்து தன் ஹெட்டிடம்
“தென் சார்….ஐ வில் ஹாவ் டூ ரிசைன் மை ஜாப்.”
“வாட்?”
“எஸ் சார் எனக்கு இதைத் தவிர வேறு வழி தெரியலை.”
“இங்க பாருங்க மிருதுளா.
நீங்க போய் உங்க சீட்டுல உட்கார்ந்து ஒரு தடவைக்கு பத்துத்தடவை நல்லா யோசிங்க.
அப்புறமா என்ன சொல்லணுமோ அதை சொல்லுங்க சரியா”
“இல்ல சார் இதுல யோசிக்க ஒன்னுமே இல்ல சார்.
நான் மறுபடியும் வொர் ஃப்ரம் ஹோம் மாட்யூலுக்கே போயிடறேன் சார்.”
“ஆனா அதுல இப்ப நீங்க வாங்கற சம்பளத்துல பாதிக்கும் கம்மியா தான் கிடைக்கும்”
“இட்ஸ் ஓகே சார்.
எனக்கு அது போதும்.
நான் என் பொண்ணுக் கூட இருக்கணும் தட் இஸ் மோர் இம்பார்ட்டன்ட் ஃபார் மீ சார்.”
“யுவர் டாட்டர் இஸ் லக்கி டூ ஹாவ் யூ ஆஸ் ஹெர் மதர்.
அப்போ இது தான் உங்க முடிவா?”
“எஸ் சார்.
என்னோட முடிவுல நான் தெளிவா இருக்கேன் சார்.
ஆக்சுவலி அப்படி ஒரு பொண்ணு கிடைக்க நான் தான் குடுத்துவச்சிருக்கணும் சார்.”
“ஓகே தென்.
ஒரு ரெஸிக்னேஷன் லெட்டர் எழுதிக் கொடுத்திடுங்க.
நீங்க இந்த மாசம் இன்னையோட சேர்த்து பதினோரு நாள் ஆஃபீஸ் வந்திருக்கீங்க ஸோ அதுக்கு உண்டான சம்பளத்தை நம்ம அக்கௌன்டன்ட்ட வாங்கிக்கோங்க நான் அவர்கிட்ட ஃபோன்ல சொல்லிடறேன்.
மீண்டும் ஆன்லைன்லயே உங்க வேலையைத் தெடருங்கள்.”
“தாங்யூ சோ மச் சார். ஷுவர் சார். பை”
“ம்….பை.”
என்று அவருடன் பேசி முடித்து அந்த அறையை விட்டு வந்ததும் மிருதுளாவுக்கு ஏதோ சாதிச்சதுப் போல உணர்ந்தாள். வேகமாக தன் க்யூபிக்கலுக்குச் சென்று தனது பொருட்களை எல்லாம் பேக் செய்து வைத்தப் பின் அக்கௌன்ட்டென்ட்டிடம் சென்று கணக்கை சரி பார்த்து அதற்கான காசோலையைப் பெற்றுக் கொண்டு அங்கு அவளுடன் வேலைப் பார்த்தவர்களிடம் சொல்லிக் கொண்டுவிட்டு சரியாக மாலை ஐந்து மணிக்கெல்லாம் மெட்ரோ ஸ்டேஷன் சென்று டிரெயினைப் பிடித்து வீட்டுக்குச் சென்றாள். மாலை ஐந்தரை மணியானதும் வழக்கம் போல நவீன் வீட்டுக்கு வந்து கதவில் சாவியைப் போட்டுத் திறக்க முயற்சிக்கும் முன் கதவைத் திறந்தாள் மிருதுளா. அவளை அந்நேரம் வீட்டில் பார்த்ததும் நவீன் ஆச்சர்யத்தில்
“மிருது என்ன இந்த நேரத்துல நீ இங்க இருக்க!!!.
எப்பவும் ஆறு மணிக்கு தானே வருவ?”
“உள்ள வாங்கோப்பா நான் சொல்லறேன்”
என்று கூறி நவீன் வீட்டினுள் வந்ததும் கதவை சாற்றிவிட்டு அடுப்படிக்குச் சென்று ஒரு டிரேவில் இரண்டு கப் காஃபி மற்றும் இரண்டு சமோசா வைத்து ஹாலுக்கு எடுத்து வந்து நவீன் ஃப்ரெஷ்ஷாகி வரும்வரைக் காத்திருந்தாள் மிருதுளா. நவீன் வந்தான் சமோசாவை வலது கையிலும் காஃபி கப்பை இடது கையிலும் எடுத்து எடுத்துக் கொண்டே
“என்ன மிருது நான் கேட்டதுக்கு பதிலே சொல்லலையே நீ!!”
என்று சமோசாவை முதலில் சாப்பிட்டான். அப்போது மிருதுளா மெல்ல தயங்கி தயங்கி அவனிடம்
“நவீ நான் ஒண்ணு செஞ்சுட்டு வந்திருக்கேன்…
அதைச் சொன்னா நீங்க கோபப்படக்கூடாது சரியா”
“நான் என்னைக்கு எதுக்கு உன் கிட்ட கோபப்பட்டிருக்கேன் மிருது. சும்மா சொல்லு”
“நான் என் வேலையை ரிசைன் பண்ணிட்டேன்”
“என்னது ரிசைன் பண்ணிட்டேன்னு சொன்னயா!!
இல்ல பண்ணட்டுமானு சொன்னயா!!!”
என்று கேட்டுக் கொண்டே தன் கைகளிலிருந்த கப்பையும் சமோசாவையும் டிரேயில் வைத்துவிட்டு மிருதுளாவைப் பார்த்தான் அவளின் பதிலிளுக்காக…
“இல்ல நவீ…
ரிசைன் பண்ணிட்டேன்னு தான் சொன்னேன்.
சாரி. நான் எங்க ஹெட்டுட்ட எவ்வளவோ கேட்டுப் பார்த்தேன் ஆனா அவர் லீவு தரவே முடியாதுன்னுட்டார்.
எனக்கு வேற வழித் தெரியலை அதுனால உடனே ரெஸிக்னேஷன் லெட்டரைக் குடுத்துட்டு இந்த மாசம் நான் வேலைக்குப் போன இந்த பதினோரு நாள் சம்பள செக்கையும் வாங்கிண்டு வந்துட்டேன்.”
“என்ன மிருது சொல்லற?
மாசம் எட்டு லட்சம் சம்பாதிச்சிண்டிருந்ததையா இவ்வளவு ஈஸியா விட்டுட்டு வந்திருக்க?”
“மாசம் மூவாயிரத்து ஐநூறை தான் விட்டுட்டு வந்திருக்கேன் நவீ.
எனக்குப் பணத்தை விட என் பொண்ணுக் கூட இருக்கறது, அவ கூட டைம் ஸ்பென்ட் பண்ணறது தான் முக்கியமாவும் ஆசையாவும் இருந்தது அதுனால தான் இப்படிச் செஞ்சேன்.
அவ கல்யாணம் பண்ணிண்டு போயிட்டான்னா அப்புறம் அவளைப் பார்க்கக் கூட நாம பல பேர்ட்ட பர்மிஷன்கேட்க வேண்டி வரலாம். இல்ல அவளே கூட அவ லைஃப்ல பிஸியாகிடலாம் இல்லையா.
அதுனால இப்போ கிடைக்கற இந்த நேரங்களை மிஸ் பண்ண நான் தயாரா இல்லை நவீ”
“ம்….ஓகே! உன் இஷ்டம்.”
“ஆனா நான் சக்திக்காக தான் வேலையை விட்டேன்னுட்டு அவ வந்தா சொல்லக் கூடாது சொல்லிட்டேன்.”
“உத்தரவு மேடம்.”
தன் மகளுடன் இருக்க வேண்டும் என்று தன் வேலையை வேண்டாம் என்று தள்ளி வைத்த மிருதுளா சக்தியின் வரவுக்காக அவளுக்கு மிகவும் பிடித்த முறுக்கு, ரிப்பன் பக்கோடா, சுவீட் எல்லாம் செய்து வைத்தாள். நான்கு மாதங்கள் காத்திருந்த மிருதுளாவும் நவீனும் ஏர்போர்ட்டில் தங்கள் மகளின் வரவுக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.
தொடரும்….
அத்தியாயம் 108: மண்மணம்
ஈஸ்வரன் வீட்டிலிருந்து ஹோட்டல் ரூமிற்கு திரும்பி சென்றனர் நவீன், மிருதுளா மற்றும் சக்தி. மிருதுளா அவளின் அப்பா அம்மா தங்கியிருந்த அறைக்குச் சென்று
“அப்பா அம்மா நீங்க ரெண்டு பேரும் டின்னர் சாப்டேங்களா?”
“ஆங் நாங்க சாப்டாச்சு. இங்கேயே ரெஸ்டாரண்ட் ல ஆர்டர் செஞ்சு சாப்டுட்டோம். நீங்க மூணு பேரும் சாப்டாச்சா?”
“ஆங் நாங்க சாப்டாச்சு. சரி… அது கேட்டுட்டு போக தான் வந்தேன்.
சரி நீங்க தூங்குங்கோ. நானும் போய் தூங்கட்டும்.
நாளைக்கு காலையில ஒரு ஆறு மணிக்கெல்லாம் ரெடியாகி எல்லா கோவில்களுக்கும் போயிட்டு அப்படியே சென்னை போயிடலாம் சரியா”
“ஓகே மிருது நாங்க ரெடியா இருக்கோம். குட் நைட் போய் தூங்கு”
மிருதுளா அவர்கள் அறைக்கு வந்துப் பார்த்தாள்
“என்னப்பா அதுக்குள்ள சக்தி தூங்கிட்டாளா?”
“ஆமாம்… காலையிலேந்து டிராவல் பண்ணிருக்கா இல்லையா…அதுதான் தூங்கிட்டா போல.
என்ன உன் மச்சினன் உன்னை மதிச்சு நாளைக்கு காதுக்குத்துக்கு கூப்பிட்டிருக்கான்…
நீ என்னடான்னா வரலைன்னு சொல்லிட்டப் போல!!!”
“ஏன் உங்களுக்கு போகணும்னா நாம போயிட்டு வரலாமே!!
எப்பவும் நான் மட்டுமே தான் குத்திக்கறேன்.
ஒரு தடவை நீங்களும் குத்திக்கோங்கோ …காத..!!”
“எனக்கும் அந்த குடும்பத்துக்கும் உறவு விட்டுப் போய் ரொம்ப வருஷங்களாயாச்சு…
உனக்கு தானே அவா எல்லாம் சொந்தம். அதுதான் உன் கிட்ட கேட்டேன்.
எனக்கு தெரியாம எவ்வளவோ காது குத்திருக்கா நான் இல்லன்னு சொல்லலை …
ஆனா என்னைக்கு எனக்கு தெரிஞ்சே காது குதத்தினாளோ அன்னேலேந்து நான் உஷாராகிட்டேன்.
நானா அங்க போகணும்னு சொன்னேன்!! நானா அவாளை டிரிப்புக்கு கூட்டிண்டு போகணும்னு சொன்னேன்?
இல்ல நானா வாட்ச், வைர மூக்குத்தி அப்புறம் என்ன அது ..
ஆங் ஜர்கான் தோடு அன்ட் டேப்லெட் வேற….
ம்… என்ன ஆச்சு காலையில நீ அவாளுக்கு கொடுத்தது மாலையில் கை மாறிடுத்து பார்த்தே இல்ல!!.”
“ஆமாம் நவீ. எனக்கு அதுல ரொம்ப கோவம் தான்.”
“இதுக்குத் தான் பெரியவா சொல்லி வச்சிருக்கா….
தானமானாலும், பரிசானாலும், உதவியானாலும் அதோட மதிப்பு தெரிஞ்சவாளுக்கு மட்டும் தான் இதெல்லாம் செய்யணும்னு.
அதை விட்டுட்டு கண்டவாளுக்கெல்லாம் செஞ்சா அது இப்படி தான் கை மாறும். கொடுத்தவாளையே வேதனையும் பட வைக்கு.”
“ம்…உண்மை தான்.
நான் ஒத்துக்கறேன்.
இனிமே இவாளுக்கு எல்லாம் எதுவுமே வாங்கிக் குடுக்க மாட்டேன்.
இதுவே கடைசி நவீ.”
“ம்…பார்ப்போம் பார்ப்போம்.”
“இல்ல நவீ…இவ்வளவு வருஷங்களா நானும் விட்டுக் கொடுத்து வந்ததில் அவா கொஞ்சமாவது மாறியிருப்பானு நினைச்சேன்.
இல்லை துளி கூட அவா மாறலை. இன்னமும் அவா மனசுல அதே வஞ்சத்தோட தான் இருக்கா.
நீங்க எப்பவும் சொல்லறா மாதிரி இவா எல்லாம் எப்போதும் திருந்த மாட்டானு நான் நல்லா புரிஞ்சுண்டுட்டேன்.
இனி நீங்க பார்க்கப் போறது வேற வேற வேற மாதிரியான மிருதுளாவ.”
“டைலாக் எல்லாம் சூப்பர் தான். கை தட்டி விசிலடிக்கணும் போல தான் இருக்கு…”
“ஏன் இழுக்கறேங்கள் நவீ… சொல்ல வந்ததை சொல்லிடுங்கோ”
“இல்ல உன் பேச்சு …
அவா உன் முன்னாடி நல்லவா மாதிரி நடந்துண்டாலே காணாம போயிடுமேன்னு சொல்ல வந்தேன்.”
“இனி அது மாதிரி எல்லாம் நடக்கவே நடக்காது நவீ.
மதியாதார் வாசல் மிதியாதேன்னு சொல்லுவா…
அது மூனாம் மனுஷாலுக்கு தான்னு இவ்வளவு நாளா நினைச்சுண்டிருந்தேன். ஆனால் அது பெத்தவாளானாலும், கூடப் பிறந்தவாளானாலும் பொருந்தும்னு இப்போ தான் உணர்ந்தேன்.
என்னை பாடாப்படுத்தினா, உங்களை மதிக்கறதே இல்லை, இன்னமும் என்னைப் படுத்திண்டு தான் இருக்கா. அவாளோட படுத்துற ஸ்டைல் அதாவது பாங்கு இருக்கே அதை இந்த பதினேழு வருஷமா அப்படியே ஒரே மாதிரி தான் ஃபாலோ பண்ணிண்டு வரா .
இதுல என்னன்னா அதெல்லாம் நான் புரிஞ்சுக்காததால தான் அவாளுக்கு திருப்பி பேச மாட்டேங்கறேன்…
இல்ல திருப்பி எதுவும் செய்ய மாட்டேங்கறேன்ங்கறது அவாளோட நெனப்பு…
ஆனா உண்மையில் சொல்லப் போனா நான் இத்தனை வருஷங்களா அவாளுக்கு வாய்ப்புகளைக் கொடுத்துண்டே வந்திருக்கேன்…
ஏதாவது ஒரு வாய்புல அல்லது சந்தர்பத்துல எப்பயாவது…
மனசுக்குள்ளயாவது…
“ச்சே இந்த பொண்ணை நாம என்ன பாடுபடுத்தியிருக்கோம்!! ஆனாலும் அவ ஒரு வார்த்தைக்கூட மரியாதைக் குறைவாவோ இல்ல திருப்பி அவமானப்படுத்தவோ இல்ல பேசவோ கூட செய்ய மாட்டேங்கறாளே…
எங்களுக்கு எப்போதும் நல்லதே தானே செஞ்சிண்டிருக்கா…” ன்னு ஒரு மூலையில நினைச்சிருந்தான்னா ஒருவேளை திருந்தி இருக்கலாம்!!!
ஆனா இவா நீங்க சொல்லறா மாதிரி ஜென்மத்துக்கும் திருந்த மாட்டானு எனக்கு நல்லாவே தெரிஞ்சுடுத்து. எனக்கு அவா கிட்ட ஒரே ஒரு எதிர்பார்ப்பு தான் இருந்தது.
அதை அவா உடைச்சு சுக்கு நூறாக்கிட்டா ஸோ இனிமேல் எனக்கு எந்த வித எதிர் பார்ப்பும் இல்லை பந்தமும் இல்லை. நான் படிச்சது கான்வென்ட்டா அங்கே ஸ்கூல் சுவற்றில் எழுதியிருந்தது என் மனசுலப் பதிஞ்சிடுத்து “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு” னுட்டு போட்டிருந்தது…
அதை செய்யப் போய் நல்லா ரெண்டு கன்னத்துலேயும் மாறி மாறி வாங்கிண்டதுக்கப்புறமா தான் புத்தி வந்திருக்கு அதெல்லாம் கடவுள் அவதாரங்களால தான் முடியும் நான் வெறும் சாதாரணமான மனுஷி தானே. என்ன பண்ண?
ஒரு நாள் ஃபேஸ்புக்ல ஒண்ணு படிச்சேன்…”நீ எவ்வளவு பொறுத்துக் கொள்கிறாய் என்பதில் தான் அடுத்தவர் உன்னிடம் எப்படி நடந்துக் கொள்கிறார்கள் என்பதும் அடங்கும். ஆகையால் உன் பொறுமையை எப்போது முறித்திறிய வேண்டுமென்பது உன்னிடம் தான் உள்ளது. கவனமாக இரு” னுட்டு எனக்காகவே போட்டா மாதிரி இருந்தது அந்த போஸ்ட்.
நான் நிறைய யோசிச்சாச்சு ….
இவாளுக்கு நான் என்ன தான் நல்லது நினைச்சாலும் சரி செஞ்சாலும் சரி என்னை கெட்டவள்ன்னு தான் முத்திரைக் குத்தப்போறா …
அப்புறமும் நான் ஏன் இவாளுக்கு நல்லவளா இருக்கணும்? சொல்லுங்கோ!!”
“மிருது!!! நீ ஒண்ணு அந்த எக்ஸ்ட்ரீமுக்கு போற இல்லாட்டி இந்த எக்ஸ்ட்ரீமுக்கு வர…
நீ சொல்லறதெல்லாமே வெரி வெரி கரெக்ட் தான்…
ஆனா நீ கடைசியா சொன்ன பாரு இவாளுக்கு ஏன் நீ நல்லவளா இருக்கணும்னு….
அது தான் எனக்கு பயத்தைக் குடுக்கறது”
“இதுல என்ன பயப்படறதுக்கு இருக்கு நவீ”
“இல்ல நீயும் அவாளை மாதிரியே மாறப்போறயோன்னு தான்….
நீ நல்லவள்.
நல்லவளாகவே இரு.
ஆனா அவாகிட்ட வேண்டாம் அவ்வளவு தான் நான் சொல்வேன்…
ஆனா நீ ஏன் அவாகிட்ட கெட்டவளாக
நடந்துக்கணும்?”
“ச்சே ச்சே!!! நவீ நீங்க தப்பா எடுத்துண்டுட்டேங்கள்.
நான் கெட்டவளா ஆவேன்னும் சொல்லலை…
இனி அவாளுக்கு கெட்டதை செய்யவேன்னும் சொல்லலை…
அது என்னால முடியாததும் கூட…
நான் என்ன சொல்ல வந்தேன்னா நல்லது செய்து கெட்டவளாகறதை விட எதுவும் செய்யாமலிருந்தே கெட்டவளா இருந்துடறேனேனு சொல்ல வந்தேன்….
அப்படி இருந்தா எனக்கும் மனசு வலிக்காதில்லையா!!
ஆமாம்…நாம இப்படி எப்போதும் நல்லதையே செஞ்சுட்டு கடைசியில அவா அவாளோட குணத்தைக் காட்டினா அப்புறம் நமக்கு வலி ரொம்ப இருக்குமில்லையா…
அதே நாம எதுவுமே பண்ணாம இருந்துட்டு அவா அப்படியெல்லாம் பண்ணியிருந்தா நமக்கு வலியே இருந்திருக்காதுன்னு சொல்ல வந்தேன்.”
“ஓ!! அப்படி!! ஓகே ஓகே!!
நான் நினைச்சேன் அடிப்பட்டு அடிப்பட்டு ஒரேயடியா நல்லவளேந்து அப்படியே கெட்டவளாகிடுவியோன்னு!!
அதுதானே!
நீ சொன்னா மாதிரி உன்னால அது முடியாது தான்.
ஆனாலும் அவா உன்னை அப்படி மாத்திட்டாளோன்னு கொஞ்சம் பயந்துட்டேன் அவ்வளவு தான்”
“அப்படி இல்லை நவீ…
ஆனாலும் அவா என்னை மாத்ததான் செய்திருக்கா.
வெறும் பச்ச மண்ணாட்டம் உங்காத்துக்குள்ள வந்தேன்…
அங்கேயே வேரூன்றிய மரமாட்டம் நீங்களும், உங்களை இறுக்க பிடித்திருக்கும் வளமையான மண் போலவும் இருக்கலாம்னு நினைச்சேன். நீங்க சொன்னா மாதிரி இந்த மண்ணை எல்லாருமா போட்டு அடிச்சு, மிதிச்சு, சுட்டு, அதில் துப்பி எல்லாமே செஞ்சா, செஞ்சுண்டுமிருக்கா.
கணவன்ங்கற செடியை பிடிச்சுண்டு அவரையும் வளமாக்கி நாமளும் வளமாகலாம்னு தான் வந்தது மண்ணுங்கற மனைவி.
ஆனால் அந்த கணவன் அந்த மண் தன்னை வந்து பிடித்துக் கொண்ட புதிதில் எல்லாருமா தூற்றி பாடாய்ப் படுத்தும் போது அவர் கண் பார்க்கவில்லை, காது கேட்கவில்லை, வாய் பேசவில்லை, மூலை செயலிழந்து போனதால் தான் மண் எவ்வளவு வளத்தை அள்ளிக் கொடுத்தாலும் இன்னமும் தூற்றப் பட்டுக்கொண்டே இருக்கு…
கணவன்ங்கற செடி எப்போது அந்த மனைவிங்கற மண்ணோடு சேர்ந்தானோ அப்போதே அவர்களைச் சுற்றி வளர்ந்த பழி, பொய், திமிர், படுத்தல்கள், இகழ்ச்சி, அவமரியாதை போன்று (அவன் வீட்டினுள்) முளைத்த புல்லுருவிகளை எல்லாம் வெட்டி எறிந்திருந்தால் அந்த மண்ணை எவரும் தூற்றியிருக்க மாட்டார்கள்.
தூற்றவும் யோசித்திருப்பார்கள். ஏனெனில் தாங்கள் புல்லுருவிகளானால் வெட்டி எறியப்படுவோம் என்பதை உணர்ந்திருப்பார்கள்.
ஆனால் அந்த செடி அதை செய்யாது அது பாட்டுக்கு தானாக மண்ணின் வளங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு பெரிய விருட்சமானது.
அப்போது அந்த விருட்சம் தங்களுக்கு இனி தீனி போடாது என்றுணர்ந்த புல்லுருவிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து முன்பு மண்ணை தாக்கியது போலவே அந்த விருட்சத்தை தாக்கியது.
அப்போது தான் விருட்சம் அதன் வலியையும் வேதனையையும் உணர்ந்து இனி அங்கே இருந்தால் நாம் வளர முடியாது என்ற முடிவுக்கு வந்தது.
உடனே அந்த இடத்திலிருந்து தனது மண்ணோடு வேறு இடம் சென்றது. அன்று முதல் அந்த விருட்சம் தான் செடியாக இருந்த இடத்தையே மறந்துப் போனது.
ஆனால் மண் அன்றும் மண் தான் இன்றும் மண் தான்.
செடி விருட்சமானதும் மண்ணிடம் தன்னையும் மணலாக மாறச்சொல்லி வற்புறுத்தியது….
மண்ணும் மணலாகியிருந்தால் அப்படியே சர்ரென்று சருக்கி எங்காவது தப்பித்திருக்கலாம் …
ஆனால் விருட்சத்துக்கு தெரியாது இந்த மண் மணலானால்…
தான் அதில் அப்படி கம்பீரமாக நிற்க முடியாதென்பது.
ஆகையால் தான் மண் மணலாகாமல் இவ்வளவு நாட்கள் அனைத்தையும் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்தது.
மண்ணில் விதையைத் தவிர வேறு எது வீழ்ந்தாலும் அவற்றை மட்க வைத்துவிடும்.
அது போல தான் திருமணம் என்ற விதையை இந்த மண்ணில் விதைத்ததால் அந்த விதை வளரும் பருவத்திலேயே அதனோடு சேர்ந்து அந்த மண்ணில் விளைந்த புல்லுருவிகளில் நல்லவைகளை விட்டுவிட்டு தேவையில்லாதவைகளை மட்கச் செய்தது அந்த மண்.
அப்படி மண் மட்கச் செய்துக் கொண்டிருந்ததிலே அதுவும் சோர்ந்துப் போய்விட்டது…
இனி அதனால் அதற்கு மேல் எந்த புல்லுருவிகளையும் மட்கச் செய்ய முடியாது என்றானதும் மணல்சாரி மண்ணாக மாற முடிவெடுத்துள்ளது. அதாவது விருட்சம் பாதிக்காதவாறு மண்ணாகவும் மற்றவை எதுவாக இருந்தாலும் அவைகளுக்கு மணல்சாரி மண்ணாக இருந்து நம்முள் தங்க விடாது சருக்கிக் கொண்டே போகப் போகிறாள் இந்த புது வகையான மணல்சாரி மண்ணான உங்கள் மனைவி மிருதுளா.”
“அப்பப்பா!!! மிருது கலக்கிட்ட போ…
நீ சொன்னது அத்தனையும் உண்மை. நான் ஆரம்பத்துல கொஞ்சம் அவாளை லூசா விட்டுட்டேன்…
அப்பா அம்மா தானேனுட்டு கொஞ்சம் விட்டது தப்புதான்.
ஆரம்பத்துலேயே கடிவாளத்தைப் போட்டிருந்தா குதிரைகள் சரியா ஓடியிருக்கும் மண்ணுக்கும் பாதிப்பு வந்திருக்காது….
ஆனால் அந்த குதிரைகளுக்கு அவ்வப்போது கடிவாளத்தைப் போட்டுண்டு தான் இருந்தேன்….
ஒரு கட்டத்துல அதுகள் அதுக்கெல்லாம் அடங்காததுகள்னு தெரிஞ்சுடுத்து…
அதுனால தான் நான் பேசாம இருந்துட்டேன்…
அது உன்னை இவ்வளவு தூரம் பாதிச்சிருக்கும்னு நான் நினைச்சுக் கூடப் பார்க்கலை.
சாரி மிருது.”
“இட்ஸ் ஓகே நவீ.
நீங்களும் அப்போ திருமணம்ங்கறதுல நான் எப்படி புது மண்ணாக இருந்தேனோ அதே போல நீங்களும் புது விதையாகத் தானே இருந்தேங்கள்.
நீங்களும் சுற்று சூழல்களை புரிஞ்சிண்டு வேரூன்றி வளர்றதுக்கு கொஞ்சம் வருஷம் எடுத்தது…
அதை அவா எல்லாருமா யூஸ் பண்ணிண்டுட்டா அவ்வளவு தான். ‘மண்ணுங்கிறது காலுக்குக் கீழே சும்மா கிடக்குற தூசி’ ன்னுதான் பெரும்பானவாளோட நினைப்பு. அப்படித்தான் உங்க ஆத்துலேயும் நினைச்சிருக்கா.
ஆனா அதுனால தான் அதில் விதைத்த திருமணம்ங்கற விதை
இன்று விருட்சமாக வளர்ந்து தனக்கும் தன்னை வளமாக வளரச்செய்த மண்ணுக்கும் அவர்களின் சின்ன செடிக்கும் பாதுகாப்பாக இருக்குங்கறதை அவாளால ஏத்துக்க முடியாதைக்கு தான் அவா இப்படி கிடைக்குற சந்தர்ப்பங்களில் எல்லாம் என்னை படுத்திண்டிருக்கா.
ஆனா இனி அவாளுக்கெல்லாம் டாட்டா பை பை சொல்லிட்டு என்னோடிருக்கும் விருட்சத்தையும், செடியையும் பத்திரமாக பார்த்துக் கொண்டு நானும் வளமாக வாழப் போகிறேன்.
டாட்”
“வாவ்!!! வாவ்!!! வாவ்!!! மிருது ஆசம். சூப்பர் இப்போ அடிக்கறேன் பாரு விசில்.”
“அச்சச்சோ!! பேசாம இருங்கோப்பா குழந்தை எழுந்துக்கப் போறா.
அப்புறம் ஹோட்டல் ஸ்டாஃப் யாராவது என்ன ஏதுன்னு கேட்டுண்டு வந்திடப் போறா”
“ஓகே !! ஓகே!! ஓகே!! ஆனா ஒண்ணு உன்கிட்ட நான் சொல்லியே ஆகணும் மிருது.”
“என்னது நவீ?”
“நீ இவ்வளவு பொறுமையா இருந்ததால தான் என்னால அவாளை எல்லாம் நல்லாவே புரிஞ்சுக்க முடிஞ்சுது.”
“என் பொறுமை எப்படி உங்களுக்கு அவாளை புரிய வச்சுது? புரியலையே நவீ!”
“அதாவது அவா அப்படி உன்னைப் படுத்தின போதெல்லாம் நீ அமைதியா ஏதும் திருப்பி சண்டை போடாமலும், திருப்பி பேச்சுக்குப் பேச்சு பேசாமலும் இருந்ததால் தான் எனக்கு தப்பு யார் சைடுல இருக்குனு தெரிஞ்சுக்க முடிஞ்சுது.”
“ம்…ஹூம்…ப்ளீஸ் எக்ஸ்ப்ளேயின் நவீ”
“சப்போஸ் நீயும் அவாகிட்ட எகிறிண்டு போயிருந்தேனா அப்புறம் சண்டை பெருசாகியிருக்கும்.
அப்போ அந்த சண்டையை நிறுத்தறதுல தான் என் கவனம் போயிருக்குமே தவிர தப்பு யார் பண்ணிருப்பானு யோசிச்சிருக்கக் கூட மாட்டேன்.
ஆனா நீ அமைதியா பொறுமையா இருந்ததால ஐ காட் எ க்ளியர் பிக்சர் ஆஃப் எவ்ரிதிங்”
“ஓ!!! அப்படி சொல்லறேளா!!! ஓகே!! இப்போ புரியறது.
எல்லா நேரங்களிலேயும் நாம திருப்பி பேசணும்னு இல்ல நவீ.
அதே போல எல்லா சண்டைகளிலும், போராட்டங்களிலும் நாம கலந்துக்கணும்னும் இல்லை.
நமது சண்டைகளையும், பேச்சையும், போராட்டங்களையும் எப்போ நம்ம எதிராளி கேட்பார்கள், புரிந்து கொள்வார்கள்னு தோனறதோ அப்போ போதும்.
இல்லாட்டி அப்படியே நகர்ந்துப் போயிடறது தான் நம்ம மனநிம்மதிக்கு நல்லது.
எப்பவுமே கத்திண்டும் சண்டைப் போட்டுண்டும், எல்லாத்துக்கும் போராடிண்டும் இருந்தா குடும்பம் நல்லாவா இருக்கும்?
அதுவுமில்லாமல் பொறுத்தார் பூமி ஆள்வார்னு சொல்லுவா இல்லையா அது போல என்னோட இந்த பதினேழு வருடப் பொறுமை எனக்கு இனி நான் வாழப் போற இருபது, முப்பது அல்லது ஐம்பது வருஷங்களை நிம்மதியாக இருக்கச் செய்யப் போறது.
இது என்னோட ஸ்ட்ரேடர்ஜீன்னு சொன்னாலும் ஐ வில் நாட் கேர் அபௌட் இட்.
ஏன்னா நான் அவாகிட்டேந்து எல்லாம் ஒதுங்கினாலும் அவாளுக்கு என்கிட்ட வந்து ஏன் இப்படி பண்ணறனு கேட்க இனி எந்த வாயுமில்லை.
அப்படியே கேட்டுண்டு வந்தாலும் என் விருட்சம் அவாளை எல்லாம் பிடித்து ஒரு ஆட்டு ஆட்டிடாது?”
“ஓ!! ஷுவர்.
நோ டவுட் அபௌட் இட்.
நிச்சயமா.
இனி இந்த விருட்சம் இருக்கும் காலம் வரைக்கும் அதுக்கு சொந்தம், பந்தம் எல்லாமே இந்த பொறுமையான பூமா தேவியும் அவளின் அழகிய இளவரசியும் தான்.
வேறு எவருமில்லை.
வேறு எவரும் இனி நம்மை வீழ்த்தும் எண்ணத்திலோ இல்ல
நமக்கு தீங்கு விளைவிக்கும் எண்ணத்திலோ இல்ல
நம்மளை அவமானப்படுத்தும் விதத்திலோ ஏதாவது செஞ்சான்னா அவாளை எல்லாம் பிடித்து நொறுக்கிடுவேன்.
கவலையில்லாமல் நிம்மதியா படுத்துத் தூங்கு மிருது.
டைம் என்ன ஆயிடுத்து பாரு”
“ஓ மை காட்!!! இட்ஸ் டுவெல்வோ க்ளாக்!!! சரி சரி சரி படுங்கோ தூங்குவோம். நாளைக்கு காலையில என் அப்பா அம்மா ஆறு மணிக்கெல்லாம் ரெடியாகி வந்து காலிங் பெல் அடிக்கப்போறா நாம தூங்கிண்டு இருக்கப் போறோம்…குட் நைட் நவீ.”
“குட் நைட் மிருது”
மறுநாள் விடிந்ததும் அனைவரும் எழுந்து கோவில்களுக்கெல்லாம் சென்று விட்டு சென்னையை சென்றடைந்தனர்.
அங்கே சில நாட்கள் தங்கிவிட்டு ஜூலைப் பத்தாம் தேதி குவைத்துக்கு திரும்பினர் நவீன் குடும்பத்தினர்.
சக்தி நன்றாக படித்து ப்ளஸ்டூ தேர்வில் அவளின் பள்ளியிலேயே இரண்டாவதாக நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்று லண்டனில் சென்று படிக்க வேண்டும் என்ற அவளின் கனவும் நெனவானது.
அவளை நவீனும் மிருதுளாவும் லண்டனுக்கு கல்லூரியில் விட்டு வரச் சென்றனர்.
அவளை அங்கே விட்டுவிட்டு ஊருக்கு திரும்பும் நாளன்று நவீனால் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது தவித்தான்.
ஆனால் சக்தி முன் அழுதால் அவளின் தன்னம்பிக்கையை உடைத்துவிடுவோமோ என்றெண்ணி எப்படியோ மிகவும் கஷ்டப்பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
சக்திக்கும் அழுகை அவள் கண்களில் கண்ணீராக எட்டிப்பார்த்தது உடனே மிருதுளா அவளைக் கட்டியணைத்துக் கொண்டு
“இது உன்னுடைய கனவு இல்லையா.”
“ஆமாம்”
“இதுக்காக நீ கஷ்டப்பட்டு படிச்சு இங்க வந்திருக்க?”
“ஆமாம்மா”
“நாற்பதாயிரம் பேர் அப்பளைப் பண்ணி அதுல மூவாயிரம் பேர் தான் தேர்வாகியிருக்கா அதுல நீயும் ஒருத்தி இல்லையா”
“ஆமாம்மா”
“நாங்க உன்னை நினைத்து மிகவும் சந்தோஷப்படறோம்.
உன் அப்பா அம்மான்னு சொல்லிக்கறதுல எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு.
அதை நீ எங்களுக்குத் தந்திருக்க சக்திமா.
இனி உன் ஆசைகள், உன் கனவுகள் அதையெல்லாம் தேடிப் போ கண்டுபிடி வாழ்க்கையை சுவாரஸ்யமா வாழக்கத்துக்கோ…
அழதே கண்ணா.
உனகாக நாங்க ரெண்டு பேரு எப்பவுமே இருப்போம்.
சரியா.
ஆர் யூ ஓகே நவ்.
இல்லாட்டி வா எங்களோடவே திரும்பி குவைத்துக்கே வந்துடு”
“ம்…ம்….அப்புறம் எதுக்கு இவ்வளவு என்ட்ரன்ஸ் எக்ஸாம் எல்லாம் எழுதினேனாம்”
“ம்…தெரியறதுல்ல…
அப்போ ஒழுங்கா இங்கு இருந்து உன் படிப்பை முடிச்சிட்டு ஊருக்கு வா.
சரியா.
எப்படியும் நாலு மாசத்துக்கு ஒரு தடவை வரலாமே அப்புறமென்ன.
ஓகே சியர்அப் மை பேபி.”
“இப்போ பாருமா.
அம்மா அன்ட் அப்பா பத்திரமா குதைத் போயிட்டு வாங்கோ.
நான் நல்லா படிச்சுட்டு ஊருக்கு வர்றேன். இந்த டிசம்பரில் பார்ப்போம் பை.
எனக்கு கிளாஸுக்கு நேரமாச்சு பை பை. பைப்பா”
என்று நவீனையும் மிருதுளாவையும் இறுக்கக் கட்டிக்கொண்டு முத்தமிட்டு அவளின் கனவுகளுக்குப் பின்னால். சென்றாள் சக்தி.
ஹுத்ரோ ஏர்போர்ட்டில் நவீன் பாத்ரூமுக்குள் அடிக்கடிச் சென்று அழுதுவிட்டு வந்தான். அவர்களின் ஃப்ளைட்டுக்காக அமர்ந்திருந்த போது
“நவீ என்னது இது இப்படி அழுதுண்டே இருக்கேங்கள்.
நம்ம சக்தி இவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சு இந்த காலேஜ்ல சேர்ந்திருக்கா.
அவளே தன்னம்பிக்கையோட எவ்வளவு தெளிவா முடிவெடுத்து வந்திருக்கா…
அவ்வளவு நல்லா அவளை வளர்த்திருக்கோம் நாம…
அதை எல்லாம் நினைச்சுப் பெருமைப் படுவேங்களா அதை விட்டுட்டு அழுதுண்டே இருக்கேங்களே!!”
“அழுதேனா இல்லையே”
“ம்…உங்க முகமே காட்டிக் கொடுக்கறதே”
“இல்ல மிருது …பதினெட்டு வருஷமா நம்ம கூடவே இருந்துட்டு இப்போ திடீன்னு அவ பாட்டுக்கு கிளம்பி லண்டன் வந்துட்டா…
நாம குவைத்துல என்ன பண்ணப்போறோம்?”
“இது நல்லா இருக்கே!!!
அதுக்காக அவளை நம்ம கூடவே வச்சுக்க முடியுமா சொல்லுங்கோ.
அவளைப் பெத்தோம் சந்தோஷமா நல்லபடியா வளர்த்தாச்சு.
இப்போ அவ அவளோட கனவுகளைத் தேடி போக ஆரம்பிச்சுட்டா…
இனி நாம நம்மளால ஆன ஹெல்ப்பை மட்டும் பண்ணிண்டு பேசாம நாம இருக்கற இடத்துல இருந்துக்க வேண்டியது தான்.
எனக்கும் வருத்தமா தான் இருக்கு ஆனாலும் ப்ராக்டிக்கலாவும் யோசிக்கணும் இல்லையா நவீ.
உங்க பொண்ணை படிக்க காலேஜ்லுல விடறதுக்கே உங்களுக்கு இவ்வளவு கஷ்டமா இருக்கே…
அப்போ இருபத்தி இரண்டு வருஷமா என்னை பார்த்து பார்த்து வளர்த்த என் பேரன்ட்ஸை கல்யாணம்ங்கற பேர்ல ஒரே நாள்ல எல்லாத்தையும் விட்டுட்டு உங்காத்துக்கு வந்தேனே அப்போ எங்க அப்பா அம்மாக்கு எப்படி இருந்திருக்கும்!!”
“எஸ் எஸ்…எனக்கு புரியறது ஆனாலும் மனசு கேட்கமாட்டேங்கறது மிருது.”
“இட்ஸ் ஓகே நவீ.
உங்களுக்கு நான் எனக்கு நீங்கள்…
இனி அவ்வளவு தான்.
சக்தியை நாம் எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக் கூடாது.
அவள் அவளின் கனவுகளை தேடி பிடித்து வரட்டும்.”
என்று நவீனின் தோளில் சாய்ந்துக் கொண்டே சொன்ன மிருதுளாவின் தோள்களில் தன் கையைப் போட்டு அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். ஃப்ளைட் ஏறினர். எப்போதும் மூவராக பயணித்தவர்களில் ஒருவருக்கு சிறகு முளைத்து தானாகவே பறக்க ஆரம்பித்து விட்டதால்
இன்று இருவரானார்கள்.
குவைத்தில் அவர்கள் வீட்டுக்கு ஒன்றரை நாள் பயணம் முடித்து வந்து சேர்ந்தனர். வந்ததும் சக்திக்கு கால் செய்து பேசினார்கள் நவீனும் மிருதுளாவும். தன் அப்பா அம்மாவிடமிருந்து கால் வந்ததும் மகிழ்ச்சியடைந்தாள் சக்தி.
மறுநாள் விடுமுறை என்பதால் நவீன் வீட்டிலேயே இருந்தான். காலை எழுந்ததும் வீட்டில் சக்தி இல்லாதது அவர்களுக்கு ஏதோ ஒன்றைத் தொலைத்ததுப் போலவே தோன்றியது.
மிருதுளா காலை டிபனை செய்யணுமே என்பது போல செய்தாள். அதை சாப்பிடனுமே என்பது போல இருவரும் ஒரே ஒரு இட்டிலி மட்டும் சாப்பிட்டு எழுந்தனர். இரண்டு மூன்ளு நாட்களாக தூங்காத நவீன் அன்று மத்தியம் சோஃபாவில் படுத்தப் படியே தூங்கிப் போனான்.
சற்று நேரத்தில் அது அவனுக்கு அசௌகரியமாக இருக்கவே பெட்டில் படுக்கலாமென்று எழுந்து தன் அறைக்குச் சென்றான். அப்போது சக்தி அறையிலிருந்து அழுகைக் குரல் கேட்டது. சக்தி அறையிலிருந்து எப்படி அழுகைக் குரல் கேட்கிறது என்ற ஆச்சர்யத்தோடு அங்குச் சென்றுப் பார்த்தான்.
தொடரும்….
அத்தியாயம் 107: மூணாரும் மூட் அவுட்டும்!
ஐவரும் சென்னையிலிருந்து கிளம்பி நான்கு மணிநேரம் காரில் பயணம் செய்து ஈஸ்வரன் வீட்டுக்குச் சென்றனர். அங்கே அவர்கள் தன்னிடம் சொன்னது போல வருவார்களா அல்லது நவீன் சொன்னது போல கடைசி நேரத்தில் வரவில்லை என்று சொல்லிவிடுவார்களா!!! அங்கே கஜேஸ்வின் இருப்பார்களா? இருந்தால் என்ன செய்வது என்று மனதில் பல குழப்பங்களுடன் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினாள் மிருதுளா. கதவைத் திறந்தார் ஈஸ்வரன்
“ம்….வா வா. எங்கே உன் அம்மா, அப்பா, நவீன் எல்லாரும்”
“அவா கீழே கார்ல உட்கார்ந்திருக்காப்பா. உங்களை அழைச்சுண்டு போக தான் நான் வந்திருக்கேன். இப்போ கிளம்பினா தான் சாயந்தரத்துக்குள்ள முன்னார் போய் சேர முடியும்.”
“ஓ!! அப்படியா. சரி சரி சரி. நாங்களும் ரெடியா தான் இருக்கோம். கதவைப் பூட்டிட்டு கிளம்ப வேண்டியதுதான். வா போகலாம்”
“அம்மா அந்த பேக் தாங்கோ நான் தூக்கிண்டு போறேன். நீங்க ரெண்டு பேரும் கதவைப் பூட்டிட்டு வாங்கோ”
என்று அவர்களின் வருகையை நவீனிடம் கூற வேகவேகமாக இரண்டாவது தளத்திலிருந்து மாடிப்படிகளில் இறங்கிச் சென்றாள் மிருதுளா. கீழே சென்றதும் நவீன் அவள் கையிலிருந்த பையை கவனிக்காமல் அவள் மட்டும் வருவதைப் பார்த்து
“என்ன மிருது நான் சொன்னது தானே நடந்தது!! சரி சரி வா நீ வந்து கார்ல
ஏறு நாம போவோம்”
“இல்லை நவீ அவா ரெண்டு பேரும் நம்ம கூட வரா. இதோ அவா பை. ம்…இதோ வந்துட்டா. வாங்கோ வண்டியில் ஏறுங்கோ”
என்றதும் ஈஸ்வரன் நேராகச் சென்று டிரைவர் பக்கத்தில் முன் இருக்கையில் அமர்ந்துக் கொண்டார். பர்வதம், அம்புஜம், ராமானுஜம் மூன்று பேர் அமரக்கூடிய நடு இருக்கையில் அமர்ந்துக் கொண்டனர். நவீன், மிருதுளா மற்றும் சக்தி பின்னால் இருந்த மூன்று பேர் அமரக்கூடிய இருக்கையில் அமர்ந்துக் கொண்டனர். அனைவரும் காரில் ஏறியதும் அம்புஜம் பர்வதீஸ்வரனிடம்
“எப்படி இருக்கேங்கள் மாமா அன்ட் மாமி? கடைசியா நாம வேனு கல்யாணத்துல பார்த்தது இல்லையா”
“ஆமாம். நாங்க நல்லா இருக்கோம். நீங்க எப்படி இருக்கேங்கள். வேனு மாட்டுப்பொண்ணு எல்லாரும் எப்படி இருக்கா?”
“எல்லாரும் நன்னா இருக்கா மாமி.”
என்று கொஞ்ச நேரம் குசலம் விசாரித்து விட்டு பின் பொதுவான சில விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்த போது வண்டி ஓர் ஹோட்டலின் வாசலில் நின்றது. அனைவரும் இறங்கி காலை உணவை உண்டபின் மீண்டும் கார் முன்னாரை நோக்கிச் சென்றது. அதிகாலை எழுந்ததாலும் காலை உணவாக வெண்பொங்கல் உண்டதாலும் ஈஸ்வரனைத் தவிர அனைவரும் நன்றாக உறங்கிப் போனார்கள். ஒரு ஐந்து மணிநேரம் ஆனதும் முழித்துக் கொண்ட நவீன் டிரைவரிடம்
“அண்ணா எங்க வந்திருக்கோம்? இன்னும் எவ்வளவு நேரமாகும் அந்த ரிசார்ட்டுக்கு போக?”
“சார் கிட்டக்க வந்துட்டோம் சார். இன்னும் ஒரு ஒன்றரை மணி நேரம் தான் சார் அங்க ரீச்சாகிடுவோம்”
“ஓகே! ஓகே!”
என்று நவீனும் டிரைவருமாக பேசிக் கொண்டதில் அனைவரும் விழித்துக் கொண்டனர். அதைக் கேட்ட மிருதுளா நவீனிடம்
“அப்படிப் பார்த்தா நாம அங்க ரீச்சாக எப்படியும் இரண்டு இரண்டரை மணியாகிடுமே நவீ!!”
“ஆமாம்…ஆகலாம்”
“அப்போ வழியிலேயே எங்கயாவது லஞ்ச் முடிச்சுட்டு போகலாமா? எல்லாரும் வயசானவா ஸோ பசி தாங்க மாட்டா இல்லையா…இப்பவே மணி ஒன்னாச்சு”
“அப்படியா சரி டிரைவர் நல்ல வெஜ் ரெஸ்டாரண்ட்டா பார்த்து நிப்பாட்டுங்க சாப்டுட்டு போகலாம்”
என்றதும் வண்டி ஓர் ஹோட்டல் முன் நின்றது. அனைவரும் இறங்கி மத்திய சாப்பாடு சாப்பிட்டுவிட்டு மீண்டும் காரில் ஏறி பயணித்தனர். அப்போது அரசியல் மற்றும் சினிமா பிரமூகர்கள் என பேப்பரிலிருந்த விஷயங்களைப் பற்றி மும்முரமாக நான்கு பெரியவர்களும் பேசிக்கொண்டிருந்தனர். சக்தி தன் மொபைலில் ஏதோ விளையாடிக்கொண்டிருந்தாள். நவீனும் மிருதுளாவும் மாலை எல்லோருமாக எங்கு செல்லலாமென்று திட்டமிட்டுக் கொண்டிருந்தனர். வண்டி மூன்று மணிக்கு அவர்கள் புக் செய்திருந்த ரிசார்ட் முன் சென்று நின்றது. அனைவரும் இறங்கினர். வயதானவர்கள் நால்வரும் பாத்ரூம் எங்கிருக்கிறது என்று விசாரித்து அங்கே சென்றனர். மிருதுளாவும் நவீனும் செக் இன் செய்துக் கொண்டிருந்தனர். அப்போது மிருதுளா மூன்று அறைகளும் பக்கத்துப் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று கூறினாள். அவர்களும் அதுபடியே தருவதாக கூறினர். டிரைவர் அவர்கள் பைகளையும் பெட்டிகளையும் இறக்கி வைத்ததும் ரிசார்ட் ஊழியர்கள் அவற்றை ஒரு தள்ளு வண்டியில் வைத்து ரிசப்ஷனில் கொண்டு வைத்தனர். மூத்தவர்கள் வந்து ரிசப்ஷனில் அமர்ந்ததும் அனைவருக்கும் வெல்கம் டிரிங்க் எனப்படும் வரவேற்பு பானம் வழங்கப் பட்டது.
அதன்பின் அனைவரையும் அவரவர் அறைகளைக்கு அழைத்துச் சென்றனர் ரிசார்ட் ஊழியர்கள். மூவரின் அறைகளும் பக்கத்துப் பக்கத்தில் இருந்தது. மிருதுளா மூத்தவர்களிடம் ஐந்து மணிக்கு வெளியே செல்லவேண்டும் அதுவரை நன்றாக ஓய்வெடுங்கள் என்று கூறி அவர்களுக்கு அவர்களின் அறைகளை காண்பித்து எது எது எங்கெங்கு உள்ளது என்பதையும் சொல்லிக் கொடுத்து, ஏதாவது அவசரமென்றால் தன்னை எப்படி தொலைபேசியில் அழைப்பது என்பதையும் சொல்லி, சாப்பிட ஏதாவது தேவையென்றால் ரூம் சர்வீஸுக்கு எந்த எண்ணை அழுத்த வேண்டுமென்றும் விவரித்துவிட்டு தன் அறைக்குச் சென்றாள். அங்கே நவீன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். சக்தி டிவிப் பார்த்துக் கொண்டிருந்தாள். சக்தியையும் சற்று ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு மிருதுளாவும் சிறிது நேரம் கண் அசந்தாள்.
மாலை ஐந்தரை மணிக்கு அருகேயிருந்த ஒரு கோவிலுக்கு மட்டும் சென்று ரிசார்ட் திரும்பினர். ஏனெனில் அன்று மாலை ரிசார்ட்டில் ஏதோ விளையாட்டுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் இருப்பதாக தெரியவந்ததும் சீக்கிரம் ஒரு ஆறரை மணிக்கெல்லாம் திரும்பி வந்தனர். ஏழு மணிக்கு விளையாட்டுகளும் கலை நிகழ்ச்சிகளும் ஆரம்பமானது. ஈஸ்வரன் தன் ஃபோனில் படம் பிடித்துக் கொண்டும் பின் ஏதோ டைப் செய்துக் கொண்டுமிருந்ததை கவனித்தாள் மிருதுளா. எல்லா நிகழ்ச்சிகளும் முடிந்ததும் அனைவருக்கும் பஃபே முறையில் இரவு உணவு வழங்கப்பட்டது. அதில் இருநூறுக்கும் மேற்பட்ட உணவு வகைகள் வைக்கப் பட்டிருந்தது. அனைத்தையும் என்னென்ன என்பதை மூத்தவர்களுக்கு விவரித்தாள் மிருதுளா. பின் அனைவரும் தட்டை எடுத்துக் கொண்டு அவரவருக்கு வேண்டியதை எடுத்து உண்டு மகிழ்ந்தனர். பின் எல்லோருமாக சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு காலார நடந்து அவரவர் அறைகளுக்குச் சென்றனர்.
மிருதுளா, நவீன், சக்தி மூவரும் அவர்கள் அறைகளுக்குச் சென்றதும் சக்தி தன் பெற்றோரிடம்
“அப்பா அம்மா இன்னைக்கு என்ன டேட்?”
“ஜூன் ட்வென்டி செக்கண்ட் டி. அதுக்கென்ன?”
“அம்மா இன்னைக்கு என்னோட யூ.எஸ் என்ட்ரன்ஸ் எக்ஸாம் ரிசல்ட் வந்திருக்கும்”
“அமாம் சக்தி …நானும் மறந்தே போயிட்டேன் பாரேன்!! சரி சரி வா என் லேப்டாப்ல பார்ப்போம்”
“ம்…ஓகேப்பா.”
“சரி அதுக்கு உன் ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் மற்ற லாகின் டீட்டேய்ல்ஸ் எல்லாம் வேணுமே டா கண்ணா”
“எல்லாமே என் மொபைல்ல இருக்குப்பா. நீ அந்த பேஜ்ஜை ஓபன் பண்ணு நான் எல்லா டீட்டேய்ல்ஸும் தர்றேன்”
என்று மூவரும் ஆவலாக சக்தி எழுதிய ஒரு நுழைவுத் தேர்வின் முடிவுகளைப் பார்த்தனர். அதைப் பார்த்ததும் சக்தி ஐய்யா என்று சந்தோஷத்தில் குதித்தாள் நவீனும் மிருதுளாவும் அவளை கட்டியணைத்து முத்தமிட்டு வாழ்த்து சொன்னார்கள். பின் மிருதுளா தன் அம்மா அப்பா அறையின் தொலைபேசி எண்ணுக்கு கால் செய்து விஷயத்தை சொன்னாள். அவர்களும் மகிழ்ச்சியடைந்தனர். சக்தியிடம் பாராட்டுத் தெரிவிக்கும் படியும் காலையில் நேரில் தாங்கள் தெரிவிப்பதாகவும் சொல்லி ஃபோனை வைத்தனர். பின் தன் மாமனார் மாமியாருக்கு கால் செய்து அதே விஷயத்தை சொன்னாள்…அதற்கு ஃபோனை எடுத்த ஈஸ்வரன்
“ஓ!! அப்படியா. சரி சரி.”
என்று ஃபோனை வைத்தார். உடனே மிருதுளா முகம் மாறியதைக் கண்ட நவீன் அவளிடம்
“என்ன உன் மாமனார் வழக்கம் போல ஒண்ணுமே சொல்லாம ஃபோனை வச்சுட்டாரா?”
“ஒரு வேளை தூங்கிட்டாளோ என்னவோ? அதுனால கூட இருக்கலாம். அவா நாளைக்கு காலையில நம்ம சக்திக்கு விஷ் பண்ணுவா பாருங்கோ.”
“நீ எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்ட…எனக்கு தூக்கம் வர்றது….சக்தியும் தூங்கிட்டா…வா வந்து நீயும் தூங்கற வழியப்பாரு.”
என்று நவீன் சொன்னதும் சென்று படுத்துக் கொண்டு உறங்கிப் போனாள் மிருதுளா. மறுநாள் காலை எழுந்து தயாராகி அனைவரும் அந்த ரிசார்ட் ரெஸ்டாரண்ட்டில் ஒன்று கூடினர். அப்போது அம்புஜம் சக்தியைக் கட்டிக் கொண்டு
“வாழ்த்துகள் சக்தி. உன் அம்மா நேத்து நைட்டு ஃபோன் பண்ணி சொன்னா. நீ அந்த பரீட்சையில் 2400 க்கு 2370 எடுத்திருக்கயாமே ரொம்ப சந்தோஷமா இருக்குக் கண்ணா.”
ராமானுஜம் சக்தியை தட்டிக்கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார். ஆனால் பர்வதீஸ்வரன் கண்டுக் கொள்ளாதது போல நடந்துக் கொண்டனர். அது மிருதுளாவை மனதளவில் பாதித்தது ஆனாலும் அவள் அதைக் காட்டிக் கொள்ளாது இருந்துக் கொண்டாள். காலை உணவு உண்ட பின் வெளியே சுற்றிப் பார்க்க சென்றனர். அப்போது ஓரிடத்தில் மிருதுளாவை தனியாக அழைத்துச் சென்ற அம்புஜம் அவளிடம்
“ஏய் மிருது எங்க கிட்ட சக்தி பரீட்சை முடிவைப் பத்தி சொன்னதை நீ உன் மாமனார் மாமியார்ட்ட சொல்லலையா? நீ அவாகிட்டயும் சொல்லிருப்பனுட்டு தான் நாங்க பாட்டுக்கு குழந்தையை பாராட்டினோம்…அவா கோவிச்சுக்கப் போறாடி”
“அம்மா நான் உங்ககிட்ட என்ன சொன்னேனோ அதை அப்படியே அவாகிட்டயும் நேத்து நைட்டு சொன்னேன்.”
“ஓ!! அப்படீன்னா அவா நைட்டே பாராட்டிட்டாளோ? அதுதான் காலையில நாங்க குழந்தையைப் பாராட்டும் போது ஒண்ணும் சொல்லாமல் இருந்தாளா?”
“ம்..ம்…சரி சரி வா. அவா எல்லாரும் அங்க போயிட்டா பாரு.”
என்று தாயிடமும் அவர்களைப் பற்றி ஏதும் கூறாது தவிர்த்துவிட்டாள் மிருதுளா.
எல்லா சுற்றுலா தளங்களுக்கும் சென்று மத்திய உணவை ஒரு ஹோட்டலில் அனைவரும் அமர்ந்து அவரவர்களுக்கு வேண்டியதை ஆர்டர் கொடுத்துவிட்டு உணவுக்காக காத்துக் கொண்டிருக்கையில் அம்புஜத்தின் கைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வாட்ஸ்ஆப்பில் வந்தது. அதை எடுத்து என்னவென்று பார்த்தாள். அதில் வேனு தன் மனைவியுடன் எடுத்த படத்தை பகிர்ந்திருந்தான். அதைப் பார்த்ததும் அம்புஜத்துக்கு ஓரே சந்தோஷமானது. உடனே ராமானுஜத்திடமும் மிருதுளாவிடமும் காண்பித்தாள். அதைப் பார்த்த மிருதுளா நவீனிடம் காட்டிவிட்டு தன் அம்மாவிடம் கைபேசியைக் கொடுத்து
“அம்மா இந்த ஃபோட்டோவுல மகதி ரொம்ப அழகா இருக்காமா”
என்றதும் பர்வதத்திடம் கைபேசியிலிருந்த படத்தைக் காட்டினாள் அம்புஜம் அதற்கு பர்வதம் மெல்ல மிருதுளா காதில் மட்டும் விழும்படி
“ஆமாம் ஆமாம்…அவ அழகா இருக்கா அதுனால படத்துலயும் அழகா தெரியறா…நாம அழகா இருந்தா தானே படத்துலேயும் அழகா தெரிவோம்”
என்று குத்தலாக கூறினாள். மிருதுளாவுக்கு கோபம் வந்தது ஆனால் தான் அழைத்து வந்ததால் அவர்களிடம் பிரச்சினை ஏதும் செய்யாது நல்லபடியாக திருப்பிக் கொண்டு விடவேண்டும் என்ற எண்ணம் அவளை அதற்கு பதில் பேசவிடாமல் தடுத்தது. இதே போல அங்கிருந்த நான்கு நாட்களும் கிடைக்கும் சந்தர்பத்தில் எல்லாம் குத்தலாகவே பேசினாள் பர்வதம். அதை அனைத்தையும் வழக்கம் போல பொறுத்துக் கொண்டாள் மிருதுளா.
மூன்றாவது நாள் இரவு உணவு உண்டு முடித்தப்பின் அம்புஜமும் ராமானுஜமும் அவர்கள் அறைக்கு செல்ல வேண்டி மற்ற அனைவருக்கும் “பை பை” சொல்ல உடனே சக்தி மிருதுளாவிடம்
“அம்மா அம்மா நான் இன்னைக்கு அம்பு பாட்டிக்கூடப் படுத்துக்கறேன் மா”
“ம்…சரி சரி போ…அம்மா அவளை ரொம்ப நேரம் டிவி பார்க்க விடாதே.”
“சரி சரி நான் பார்த்துக்கறேன். நீ வாடி என் செல்லக் குட்டி நாம போகலாம். சரி மாமா அன்ட் மாமி நாங்க வர்றோம். குட் நைட்”
“அம்மா அன்ட் அப்பா நாளைக்கு காலையில எட்டு மணிக்கு உங்க பெட்டியெல்லாம் பேக் பண்ணிண்டு இதே ரெஸ்டாரண்ட்டுக்கு வந்திடுங்கோ. நாம ஒன்பது மணிக்கெல்லாம் இங்கேந்து கிளம்பணும் சரியா”
“ஓகே டன். வந்திடுவோம். குட் நைட்”
என்று கூறி அவர்கள் சென்றதும் தன் ரூமுக்கு செல்வதற்காக எழுந்த நவீனை சற்று நேரம் கூட அமர்ந்து விட்டு செல்வோம் என்று கூறி அமரவைத்து பர்வதம் ஈஸ்வரன் மிருதுளா மூவருமாக பேசிக்கொண்டிருந்தனர். நவீன் ஏதும் பேசாது அமர்ந்திருந்தான். அவன் அந்த மூன்று நாட்களிலுமே அவர்களுடன் ஏதும் பேசவில்லை. பர்வதீஸ்வரன் அங்கிருந்த மூன்று நாட்களிலும் கவினின் வீட்டு கிரகப்பிரவேசம் பற்றி எதுவுமே நவீனிடமோ மிருதுளாவிடமோ மூச்சுவிடாதிருந்தனர் . நவீனும் மிருதுளாவும் அதைப் பற்றி ஏதும் கேட்டுக்கொள்ளாது இருந்தனர். ஈஸ்வரன் தன் கைபேசியையே நோண்டிக் கொண்டிருந்தார். அப்போது அவர் தன் ஃபோனை மிருதுளாவிடம் கொடுத்து
“மிருதுளா இந்த பிச்சுமணி ஏதோ மெஸேஜ் அனுப்பிருக்கான்…அது ஒண்ணுமே புரியலை…சரியா தெரியலை… என்னன்னு படிச்சு சொல்லு”
என்று கூற மிருதுளாவும் அதை வாங்கிப் படித்தாள். அவளருகிலிருந்த நவீனும் அந்த குறுஞ்செய்தியைப் பார்த்தான். அதில் “கவின் வீட்டு கிரகப்பிரவேசத்தில் என்னால் கலந்துக் கொள்ள முடியாது போனதுக்கு மன்னிக்கவும். அவனிடம் எங்களின் வாழ்த்துகளையும் ஆசிர்வாதத்தையும் தெரிவிக்கவும்” என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. தன் மாமானாருக்கு ஆங்கிலம் படிக்கத் தெரியுமென்பது மிருதுளாவுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் அவர் அந்த விஷயத்தை இவர்களிடம் கன்வே செய்வதற்காக இப்படிச் செய்கிறார் என்பதை உணர்ந்த மிருதுளா அவரிடம்
“உங்க புள்ளைக்கு வாழ்த்தும் ஆசிர்வாதமும் தெரிவித்திருக்கார் பிச்சுமணி மாமா”
என்று பொதுவாக சொல்லி அவர் ஃபோனை அவர் கையிலேயே திருப்பிக் கொடுத்துத்தாள். அதற்கு மேல் அவரை அதைப் பற்றி பேச விடாமலிருக்கவும் அதைப் பற்றி கேட்க விரும்பாததாலும் சட்டென அவரிடம்
“ஆமாம்ப்பா நானும் வந்ததிலிருந்து பார்க்கறேன்…நீங்க ஃபோட்டோ எடுக்கறேங்கள் உடனே உங்க ஃபோனில் ஏதோ மெஸேஜ் டைப் பண்ணறேங்கள். அப்படி என்னதான் செய்யறேங்கள் எடுத்த ஃபோட்டோஸை?”
“அதுவா…அதெல்லாம் என் பசங்களுக்கும் என் மாட்டுப்பொண்களுக்கும் எல்லா இன்பஃர்மேஷன்ஸையும் உடனே உடனே அனுப்பணுமில்லையா அதுதான் அனுப்பறேன். வேற ஒண்ணுமில்லை”
“ஓ!!! அப்படியா!!! ஆனா இதுவரைக்கும் நவீனுக்கோ இல்ல எனக்கோ இது மாதிரியெல்லாம் டக்டக்குனு எந்த மெஸேஜும் …சாரி… சாரி… இன்பஃர்மேஷன்ஸும் நீங்க அனுப்பினதில்லையா அது தான் கேட்டேன்….சரி… அது என்ன உடனுக்குடன் அனுப்பவேண்டிய இன்பஃர்மேஷன்?”
“ம்…அது நாம போற இடங்கள் அதோட பேரு அங்க என்னென்ன இருக்கு? அதோட ஃபோட்டோஸ் அப்புறம் நாம எல்லாருமா எடுத்துண்ட ஃபோட்டோஸ் இதெல்லாம் தான் வேறென்ன…சரி சரி …எனக்குத் தூக்கம் வர்றது. நாங்க போய் படுத்துக்கறோம். காலையில எட்டு மணிக்கு ரெஸ்டாரண்ட்டில் சந்திக்கலாம். பை”
என்று கூறி அங்கிருந்து கிளம்பிச்சென்றனர் மூத்த தம்பதியர். அவர்கள் போன பின்னாலும் நவீனும் மிருதுளாவும் அங்கேயே சற்று நேரம் அமர்ந்திருந்தனர். அப்போது நவீன் மிருதுளாவிடம்
“பார்த்தயா உன் மாமனாரின் சாமர்த்தியத்தை…அவன்ட்ட ஏன்டா அழைக்கலைன்னு கேட்கத் துப்பில்லை, நம்ம கிட்ட சொல்ல திராணி இல்லை ஆனாலும் நாம தெரிஞ்சுக்கணுமாம் அவன் வீட்டு கிரகப்பிரவேசம் நல்லா நடந்ததுன்னு …எப்படி?”
“அதைவிட என்னை ஹிட் பண்ணினது வேற ஒரு டையலாக் தான் நவீ!!”
“இதைவிட வேற என்ன?”
“நீங்க அவர் அதை சொன்னதும் திருப்பி கேட்பேங்கள்னு நினைச்சேன். ஆனா நீங்க கேட்காததால நான் ஏதோ சொல்லி சமாளிக்க வேண்டியிருந்தது.”
“அப்படி என்ன சொன்னா? எனக்குப் புரியலை மிருது”
“என் பசங்களுக்கும் என் மாட்டுப்பொண்களுக்கும்னு சொன்னாரே கவனிச்சேங்களா? அப்படீன்னா நாங்க யாராம்ன்னு எனக்கு கேட்கத் தோணித்து…ஆனா அதைக் கேட்க போய் அப்புறம் அதுக்கு அவா கத்த ஆரம்பிச்சான்னா அப்புறம் எல்லாருக்கும் வந்த இடத்துல தர்மசங்கடமாகிடுமேனுட்டு பேசாம லைட்டா அதுக்கு திருப்பிக் கொடுத்துட்டு விட்டுட்டேன்”
“ம்…ம்…கவனிச்சேன்…எல்லாம் கவனிச்சேன். நீ இந்த ஒரு இடத்துல மட்டும் விட்டுக் கொடுக்கலைங்கறதையும் நான் மூணு நாளா கவனிச்சிண்டு தான் இருக்கேன் மிருது.”
“ம்…சரி சரி…அதை விடுங்கோ நம்ம சக்திக் குட்டி இப்படி ஃபுல் ஃபுல்லா மார்க் எடுத்திருக்காளே அவளுக்கு ஏதாவது கிஃப்ட் வாங்கிக் கொடுக்கணும்.”
“அவகிட்டயே அவளுக்கு என்ன வேணும்னு கேட்டு வாங்கிக் குடுப்போம்”
“அதுவுமில்லாம நாம உங்க அப்பா அம்மாவை வீட்டுல விட்டுட்டு ஒரு ஹோட்டல் புக் பண்ணி அங்கே அன்னைக்கு நைட்டு இருந்துட்டு மறுநாள் காலையில நாம அங்க ரெகுலரா போற கோவில்களுக்கெல்லாம் போயிட்டு சென்னைக்கு போவோம் நவீ…ப்ளீஸ்”
“ம்…சரி ஓகே. அப்படியே செய்யலாம். இப்போ போய் தூங்கலாமா!!!”
“ம்…ஓகே வாங்கோ. காலையில சீக்கிரமா எழுந்து எல்லாத்தையும் பேக் பண்ணணும் வேற…”
அவர்கள் முன்னாரிலிருந்து ஊருக்கு கிளம்பும் நாள் வந்தது. அன்று காலை எட்டு மணிக்கு அந்த ரிசார்ட் ரெஸ்டாரண்ட்டில் அனைவரும் அவரவர் பெட்டி மற்றும் பைகளுடன் கூடினர். காலை உணவை உண்டு முடித்ததும். மிருதுளா சக்தியிடம் ஏதோ சொன்னாள். உடனே சக்தி தன் ஈஸ்வரன் தாத்தாக்கும் பர்வதம் பாட்டிக்குமாக குவைத்திலிருந்து வாங்கி வந்த கிஃப்ட்ஸை அவரவரிடம் கொடுத்து
“தாத்தா அன்ட் பாட்டி எங்களோடு இந்த நான்கு நாட்கள் வந்திருந்து எங்களுடன் மகிழ்ச்சியாக இருந்தமைக்கு நன்றி”
என்றதும் ஈஸ்வரன் திருப்பி
“தாங்ஸ்” என்றார்
உடனே சக்தி
“தாத்தா அன்ட் பாட்டி பிரித்துப் பார்த்துப் பிடிச்சிருக்கானு சொல்லுங்கோ ப்ளீஸ்” என்றாள்
உடனே பரிசுப் பொருட்களை மூத்தவர்கள் பிரித்துப் பார்த்தனர். முதலில் ஈஸ்வரன் பிரித்துப் பார்த்தார் அதிலிருந்த வாட்ச்சையும் டேப்லெட்டையும் பார்த்துக் கொண்டிருக்கும் போது ராமானுஜம் தன்னிடமிருந்த புது டேப்லெட்டை எடுத்துக் காட்டி
“மாமா இங்கே பாருங்கோ எனக்கும் உங்களுக்கு வாங்கினா மாதிரியே ஒரு டேப்லெட் வாங்கித் தந்திருக்கா”
என்று காட்டியதும் அதை வாங்கிப் பார்த்த ஈஸ்வரன்
“அட ஆமாம் அதே தான். அப்போ வாட்ச் எங்கே?”
“அது ஆத்துல வச்சிருக்கேன். அதுவும் நாம ரெண்டு பேருக்கும் ஒண்ணே தான்’
“ஏய் பர்வதம் நீயும் திறயேன்டீ”
என்று ஈஸ்வரன் சொன்னதும் திறந்துப் பார்த்த பர்வதம்
“என்கிட்ட மூக்குத்தியும் தோடும் நிறைய இருக்கு…ம்…இதுவும் நல்லாதான் இருக்கு”
என்று கூறியதும் மிருதுளா சட்டென
“அம்மா உங்க கிட்ட நிறைய மூக்குத்தி அன்ட் தோடு இருக்கலாம்…ஆனா வைர மூக்குத்தி இருக்கா?”
“இல்லை”
“ஆங்!! இல்லையில்லையா…இன்னேலேந்து அதுவும் உங்ககிட்ட இருக்கு.”
என்று மிருதுளா கூறி முடித்ததும் அம்புஜம்
“ஆமாம் மாமி எனக்கும் இதே தோடு அன்ட் வைர மூக்குத்தி தான் இவா வாங்கித் தந்திருக்கா. பாருங்கோ நான் அதைத் தான் போட்டுண்டும் இருக்கேன்.”
என்று காண்பிக்க அதற்கு மிருதுளா
“ஆமாம் மா. எங்களுக்கு நீங்க நாலு பேருமே அப்பா அம்மா தான். அதுனால குடுக்கற கிஃப்ட்டுல கூட பேதமிருக்கக் கூடாதுங்கறது எங்களோட பாலிசி. உங்க ரெண்டு பேருக்காக நாங்க வாங்கிண்டு வந்த வைர மூக்குத்தியும் ஜர்கான் தோடும் தான் அது ரெண்டும்”
“என்னது வைர மூக்குத்தியா???”
என்று வாயைப் பிளந்தாள் பர்வதம்.
பின் அனைத்தையும் அவரவர் கைப்பையில் வைத்துக் கொண்டு அங்கிருந்து காரில் புறப்பட்டனர். மத்திய சாப்பாட்டையும் மாலை நேர சிற்றுண்டி மற்றும் காபியையும் ஹோட்டலில் அனைவருக்கும் வாங்கிக் கொடுத்துவிட்டு ஒரு ஐந்து மணி போல முதலில் ஈஸ்வரன் தம்பதியரை அவர்கள் வீட்டில் இறக்கி விட்டுவிட்டு அவர்களின் வழக்கமான கோவில்களுக்கெல்லாம் சென்று வரவேண்டி அங்கேயே ஒரு ஹோட்டலில் ரூம் போட்டு தங்கினார்கள். நவீனும் மிருதுளாவும் சக்தியுமாக அன்று மாலை ஒரு ஏழு மணிக்கு புறப்பட்டு ப்ரவீன் வீட்டுக்குச் சென்றனர். அங்கே துளசி இருக்கவில்லை. ப்ரவீன் வந்தவர்களிடம்
“வாங்கோ வாங்கோ அண்ணா அன்ட் மன்னி. வெல்கம் சக்தி”
“எப்படி இருக்கேங்கள்? எங்க துளசி குழந்தைகளை எல்லாம் காணம்? நீ மட்டும் இருக்க?”
“அவா எல்லாருமா துளசியோட அண்ணா ஆத்துக்கு போயிருக்கா மன்னி. அவா போய் ஒரு மூணு நாளாச்சு. நாளைக்கு வந்திடுவா. அப்புறம் டிரிப் எல்லாம் எப்படி இருந்தது?”
“சூப்பரா இருந்தது. இந்தா ப்ரவீன் குழந்தைகளுக்கும் உனக்கும் துளசிக்கும் எங்களோட ஒரு சின்ன அன்பளிப்பு.”
“ஓ!! தாங்ஸ் மன்னி. இருங்கோ குடிக்க தண்ணிக் கொண்டு வர்றேன். இவ்வளவு நேரம் நான் அப்பா அம்மா ஆத்துல தான் இருந்தேன். இப்போ தான் இங்கே வந்தேன். நீங்க கொஞ்சம் முன்னாடி வந்திருந்தேங்கள்னா நான் இங்கே இருந்திருக்க மாட்டேன். இந்தாங்கோ தண்ணி எடுத்துக்கோங்கோ”
என்று அவன் தண்ணீர் டம்பளரைக் கொடுக்கும் போது அவன் கையை கவனித்த மிருதுளாவுக்கு தூக்கி வாரிப் போட்டது. ஏனெனில் அவள் ஆசையாக ஈஸ்வரனுக்கு பரிசளித்த வாட்ச் ப்ரவீன் கையிலிருந்தது. தண்ணீர் குடித்துவிட்டு டம்பளரை ப்ரவீனிடம் திருப்பிக் கொடுத்ததும் அதை அடுப்படிக்குள் வைக்கச் சென்றான் ப்ரவீன். அப்போது மிருதுளா மெல்ல நவீனிடம் ப்ரவீனின் கையை கவனிக்கச் சொன்னாள். அவனும் பேச்சு வாக்கில் கவனித்தான். பின் நவீன் எழுந்து
“சரி டா நாழி ஆயிடுத்து நாங்க கிளம்பறோம்.”
“எங்க ? அப்பா அம்மா ஆத்துக்கு தானே நானும் வர்றேன்”
“இல்ல இல்ல நாங்க ஹோட்டலுக்கு டின்னர் சாப்பிடப் போறோம். எங்களோட வாயேன் நீயும் தனியா தானே இருக்க “
“சரி வரேன்.”
என்று நால்வரும் ஹோட்டலுக்குச் சென்று டின்னர் அருந்திக் கொண்டிருக்கும் போது ப்ரவீன் நவீனிடம்
“அண்ணா அப்போ நீங்க நாளைக்கு பவினோட புள்ளைக்கு முடியெறக்கி காதுக்குத்துற பங்ஷனுக்கும் வர்றேங்கள் தானே!!”
“என்னது அப்படி ஒரு பங்ஷன் நாளைக்கு நடக்கப் போறாதா என்ன?”
“ஆமாம். ஏன் அவன் உங்களுக்கு சொல்லலையா?”
“ம்…ம்….”
“அப்பா அம்மாவும் சொல்லலையா?”
“ம்..ம்..”
என்று இரண்டே சப்தத்தில் பதிலளித்தான் நவீன். பின் அங்கிருந்து ப்ரவீனை அவன் வீட்டில் விடச்சென்ற போது அவன்
“இல்ல அண்ணா என்னை அப்பா ஆத்துலேயே விட்டுவிடு. ஏன்னா காலையில சீக்கிரமா கிளம்பி போகணும். நான் எங்காத்துல இருந்தேன்னா அப்புறம் தூங்கிடுவேன்”
“சரி ப்ரவீன் அப்போ துளசி அந்த பங்ஷனுக்கு வரமாட்டாளா?”
“இல்ல மன்னி அவ வரலை. நான் மட்டும் தான் போகப் போறேன்”
என்று பேசிக்கொண்டே இருக்கும் போது ஈஸ்வரன் வீட்டு வாசலில் கார் நின்றது. ப்ரவீனை இறங்கச் சொன்னான் நவீன். அப்போது ப்ரவீன்
“வாங்கோ இவ்வளவு தூரம் வந்துட்டு உள்ள வராமல் போனா எப்படி வாங்கோ மன்னி வாண்ணா”
“சாயந்தரம் தானே டா வந்தோம்”
“சாயந்தரமும் நீ வாசலோட போயிட்டயாமே…வாண்ணா”
என்று ப்ரவீன் வற்புறுத்தியதால் மூவரும் இறங்கி வீட்டிற்குள் சென்றனர். அப்போது ஈஸ்வரன்
“நீங்க சென்னைக்கு போகலையா?”
“இல்லப்பா நாங்க நாளைக்கு கோவிலுக்கெல்லாம் போயிட்டு தான் சென்னைப் போவோம்”
என்று கூறிக்கொண்டே ப்ரவீன் கையைப் பார்த்தாள் மிருதுளா. அதை கவனித்த ஈஸ்வரன்
“ஓ!! அப்படியா…சரி சரி சரி…நீங்க குடுத்த வாட்ச் இவனுக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சுன்னு அவன் எடுத்துண்டுட்டான். டேப்லெட்டை நான் அவன் புள்ளைக்குக் கொடுத்துட்டேன்”
என்று சொன்னதும் மிருதுளா தனக்கு வந்த கோபத்தை அடக்கிக் கொண்டாள். அப்போது பர்வதம் ஈஸ்வரனிடம் ஏதோ சொல்ல உடனே அவர் தன் கைபேசியில் யாரிடமோ பேசி பின் தன் கைப்பேசியை நவீனிடம் கொடுத்துப் பேசச் சொன்னார். அதற்கு நவீன்
“யார் ஃபோன்ல? என் கிட்ட எதுக்கு குடுக்கற?”
“இந்தா பேசு பவின் தான். அவன் உன்கிட்ட ஏதோ சொல்லணுமாம்”
“ஹலோ!”
“அண்ணா எப்படி இருக்க? இந்தியா வந்திருக்கையாமே? சரி நாளைக்கு எங்க புள்ளைக்கு முடியெறக்கிக் காதுக் குத்தறோம் நீயும் மன்னியும் வந்திடுங்கோ. ஒரு நிமிஷம் மன்னிட்ட ஃபோனைக் குடு பவித்ரா பேசணுமாம்”
என்று சொல்ல வேண்டுமே என்பது போல பேசிய பவினிடம் வேறேதும் பேச விரும்பாத நவீன் ஃபோனை மிருதுளாவிடம் கொடுத்தான்.
“ஹலோ நான் மிருதுளா பேசறேன்”
“ஹாய் மன்னி நான் பவித்ரா பேசறேன். நாளைக்கு எங்க புள்ளைக்கு கோவில்ல வச்சு முடியிறக்கி காதுக்குத்தப் போறோம் நீங்க அவசியம் வரணும்.”
“ரொம்ப சந்தோஷம் பவித்ரா. ஆனா சாரி எங்களால வரமுடியாதுமா.”
“ஏன் மன்னி காலையில வந்துட்டு போயிடுங்கோளேன். ஒரு எட்டு மணிக்கெல்லாம் முடிஞ்சிடும்”
“இல்லமா இதை நீங்க முன்னாடியே சொல்லியிருந்தேங்கள்னா நிச்சயம் வந்திருப்போம். இப்படி வந்த இடத்துல சொன்னதால வரலைன்னு சொல்லறேன்னு நினைச்சுக்காத பவித்ரா…எங்களுக்கு இது சாயந்தரம் வரைக்கும் தெரியாதில்லையா அதுனால வேற ப்ளான் போட்டுட்டோம்… ஸோ நாங்க வரமுடியாதுமா. எங்களோட ஆசிர்வாதம் எப்போதும் குழந்தைகளுக்கு உண்டு.”
“அப்படியா சரி மன்னி. நீங்க ஃபோனை அப்பாட்டயே குடுங்கோ”
என்று வந்த இடத்தில் அழைக்கிறார்கள் என்பதை உணர்த்தும் படி பவினுக்கும் பவித்ராவுக்கும் நன்றாக பதிலடிக்கொடுத்தாள் மிருதுளா. ஈஸ்வரன் ஃபோனில் ஏதோ பேசிவிட்டு கட் செய்தபின் ஹாலுக்கு வந்து….
“அது ஒண்ணுமில்லை. நீங்கள் வரேங்கள்னு அவாளுக்கு தெரியாதோன்னோ அதுதான் முன்னாடியே சொல்லலையாம். நீங்க வர்றேங்கள்ன்னு சொல்லியிருந்தா நிச்சயம் கூப்பிட்டிருப்பாளாம்”
“ஏன் நாங்க சொல்லாம? உங்க கிட்ட தான் அப்பவே நான் ஸ்கைப்ல சொன்னேனே!!”
“என்கிட்ட இல்ல…அவாகிட்ட சொல்லலையோன்னோ!!! அதைச் சொல்லறேன்”
“ஓ!! அப்படீன்னா அவா யார் யார் விசேஷத்துக்கு வருவாளோ அவாளை மட்டும் தான் இன்வைட் பண்ணுவாளா? எல்லா சொந்த பந்தங்களையும் கூப்பிடமாட்டாளா? நல்லா இருக்கே இந்த சிஸ்டம் இல்ல நவீ.”
“அப்படி இல்ல”
“சரி நவீ நாழியாயிடுத்து நாம கிளம்பலாமா?”
“எங்கே கிளம்பறேங்கள் இங்கேயே இருக்கலாமே”
“இல்லப்பா என்னோட அப்பா அம்மா வேற இருக்கா”
“அதுனால என்ன? அவாளும் இங்கேயே வந்து தங்கட்டுமே”
“இல்லாட்டி …என் வீட்டில் யாருமே இல்லையே மன்னி அங்க வந்து தங்கிக்கோங்கோ. சரி… இப்போ உங்க அப்பா அம்மா எங்க?”
“நாங்க ஹோட்டல்ல ரூம் போட்டிருக்கோம். அங்கே தான் ஆவா இருக்கா. நாங்களும் இப்போ அங்கே தான் போகப் போறோம்.”
“என்னத்துக்கு அனாவசியமா ரூமெல்லாம் போட்டுண்டு.”
“சரி மிருது நாம போகலாம். நாங்க வர்றோம்”
என்று அவர்கள் போட்டுக்கொண்டிருந்த நாடகம் பிடிக்காத நவீன் வெடுக்கென கூறிவிட்டு மாடிப்படிகளில் வேகமாக இறங்கிச் சென்றான். மிருதுளாவும் அவர்களிடமிருந்து விடைப்பெற்றுக் கொண்டு நவீன் பின்னாடியே சக்தியை அழைத்துக் கொண்டுச் சென்றாள்.
தொடரும்….
அத்தியாயம் 106: பயணமும், பர்மிஷனும்
“நம்பினா நம்புங்கோ நம்பாட்டி போங்கோ!! எனக்கென்ன?”
“சரி நீ ஆரம்ப காலத்துலேயே எல்லாம் தெரிஞ்சுண்டுட்டன்னு வச்சுண்டா கூட ஏன் இத்தனை வருஷங்களா உன் எதிர்ப்பைக் காட்டலை? ஏன் மறுபடியும் மறுபடியும் அவாளை எல்லாம் தலையில தூக்கி வச்சுக்கற? இப்படி எல்லாம் செஞ்சா அவாளும் திருந்த மாட்டா …என்னாலையும் நம்ப முடியாது மிருது?”
“நவீ ….நமக்கு ஒருத்தா ஏதாவது தொல்லை, தொந்தரவு, அவமானம், இது மாதிரியெல்லாம் தொடர்ந்து செஞ்சுண்டே இருந்தானா அவாளுக்கு நம்மளைக் கண்டு பொறாமை அல்லது பயம் உள்ளவாளா தான் இருப்பா. இல்லைன்னா அடுத்தவர்களை துன்புறுத்தி அதில் மனமகிழ்வு காணறவாளா கூட இருக்கலாம். மொத்தத்தில் இந்த மூணு வகையில ஏதாவது ஒண்ணுல சேர்ந்தவாளா தான் இருப்பா. இந்த எண்ணங்கள் மனசுல வளர்ந்துண்டே போனா அவாளுக்கு காழ்ப்புணர்ச்சி தான் விருட்சமா வளரும். அப்படிப் பட்டவாளை நாம எதிர்த்து நிக்கவோ இல்ல பதிலுக்கு பதில் பேசவோ இல்லை அவாளைப் போலவே ஏதாவது பண்ணவோ செஞ்சோம்னா அப்புறம் அவாளோட அந்த குணத்தை நாமே விசிரியால வீசி கொழுந்து விட்டு எரிய வைக்கிறது போல ஆகிடாதோ!!! அது ஒரு பக்கம் இருக்கட்டும்….அப்படியே அவா செஞ்சதையே அவாளுக்கு நாம திருப்பி செஞ்சோம்னா அப்புறம் அவாளுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாம போயிடாதா? எனக்கு பேச தெரியாமையோ இல்ல பழிவாங்கத் தெரியாமையோ இல்ல ஆனா எதுக்குன்னு தான் விலகறேன்”
“ஆங் அதைத் தான் நானும் சொல்லறேன் விலகிடுன்னு.”
“ம்…என்னோட பொறுமைக்கும் எல்லைன்னு ஒண்ணு இருக்கும் இல்லையா அதுவரை நான் இப்படியே இருந்துடறேனே நவீ!!! கடவுள் படைப்பில் என்னோட டிசைன் இதுதானோ என்னவோ!!!! அதுவரை யாரு வேணும்னாலும் என்னை இளிச்சவாயின்னு நினைச்சாலும் சரி, பொழைக்கத் தெரியாதவள்ன்னு சொன்னாலும் சரி, இல்ல எனக்கு சூடு சொரனையே இல்லையான்னு கேட்டாலும் சரி… நான் இப்படித் தான். ஆனால் எப்போதுமே இப்படிதானானான்னு கேட்டா அதுக்கு காலமும் நேரமும் தான் பதில் சொல்லணும். நான் சொல்லறது சரி தானே நவீ”
“ம்….பார்ப்போம் உன் பொறுமைக்கு எது எல்லைன்னு”
“அம்மா எவ்வளவு நேரமா மா பேசுவ… பசிக்கறது மா. டின்னர் பண்ணலையா?”
“ஊப்ஸ்…சாரி டா கண்ணா. சப்ஜீ ரெடி… இதோ ஒரு அஞ்சே நிமிஷத்துல சப்பாத்திப் போட்டு தந்துடறேன் சரியா. ஓகே நவீ நான் போய் டின்னர் பண்ணட்டும்”
என்று மிருதுளா அவள் தரப்பு விளக்கத்தைக் கொடுத்து விட்டுச் சென்றாள். நவீன் குடும்பத்தினர் குவைத்துக்கு சென்று ஒரு வருடமானது. சக்தி பதினோராம் வகுப்பு முடித்துவிட்டு பல நுழைவுத் தேர்வுகளுக்கான வகுப்புகளுக்கு சென்றதோடு அந்த தேர்வுகளை எல்லாம் எழுதியும் முடித்தாள். அதில் ஒன்றில் நூற்றியிருபதுக்கு நூற்றிபத்தொன்பது மதிப்பெண்கள் எடுத்து அவளின் புகைப்படம் வலைத்தளத்தில் வந்தது. மற்றொரு பரீட்சையின் முடிவுகள் வர மூன்று மாதங்கள் இருந்தன. கோடைக்கால விடுமுறை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது இந்தியாவுக்கு சென்று வர திட்டமிட்டாள் மிருதுளா. அதை நவீனிடம் சொன்னதும்
“எதுக்கு மிருது இப்போ தானே நாம வேனுவோட கல்யாணத்துக்கு போயிட்டு வந்திருக்கோம்!!”
“இல்ல நவீ இந்த வருஷம் முடிஞ்சா அப்புறம் நம்ம சக்தி வெளிநாடுக்கு படிக்கப் போயிடுவா… அதுக்கப்புறம் எப்ப மறுபடியும் இந்தியாவுக்கு அவளால போக முடியுமோ? நமக்குத் தெரியாது. அதுனால இந்த லீவுல எல்லா கோவில்களுக்கும் போயிட்டு அப்படியே உங்க பேரன்ட்ஸ் அன்ட் என் பேரன்ட்ஸ், நாம மூணு பேருன்னு ஒரு குட்டி ட்ரிப் எங்கேயாவது போயிட்டு வரலாமே… என்ன சொல்லறேங்கள்?”
“ம்….உன் பொறுமைக்கு இன்னுமா எல்லை எங்க இருக்குன்னு உனக்கு கண்ணு தெரியலை”
“ப்ளீஸ் நவீ நம்ம சக்தியும் அவ தாத்தாப் பாட்டிகளோட ஒரு மூணு நாள் ஜாலியா இருக்கட்டுமே. அவாளுக்கும் வயசாகிண்டே போறது ஸோ எப்ப வேணும்னாலும் எது வேணும்னாலும் நடக்கலாம் இல்லையா?”
“ம்…..சரி சரி என்னவோ பண்ணு. ஆனா ஒண்ணு நிச்சயம் இதுக்கு நீ வருத்தப்பட தான் போற”
“ம்…பார்ப்போம் பார்ப்போம். சரி நாம சிம்லா போகலாமா?”
“ம்….ஆனா அவா நாலு பேரு நாம மூணு பேரு…ஃப்ளைட் டிக்கெட்ஸ் அன்ட் ஹோட்டல்…சாப்பாடு செலவுகள் எல்லாம் கூட்டிக் கழிச்சுப் பார்த்தா ரொம்ப ஜாஸ்த்தி ஆகிடாதா?”
“அப்படியா அப்போ ஒரு பெரிய கார் வச்சுண்டு எல்லாருமா முன்னார் போயிட்டு வரலாமா?”
“ம்…அது ஓகே!”
“சரி அப்போ அதுக்கு வேண்டிய ஏற்பாடுகளை எல்லாம் செய்யத் தொடங்கறேன். அதுக்கு முன்னாடி நம்ம பேரன்ட்ஸ் கிட்ட கால் பண்ணி சொல்லிடறேன்…சப்போஸ் உங்க அப்பா அம்மா வரலைன்னு சொல்லிட்டான்னா என்ன பண்ணறது? புக் பண்ணினது எல்லாம் வேஸ்ட் ஆகிடுமே?”
“அதெல்லாம் வருவா…அப்படியே வராட்டினா என்ன இப்போ அது தான் பெரியப்பா ஃபேமிலி, அத்தை ஃபேமிலி, சித்தப்பா ஃபேமிலினுட்டு பக்கத்துலேயே எல்லாரும் இருக்காளே அவா யாரையாவது கூட்டிண்டு போனா போறது.”
“ம்…அதுவும் நல்ல ஐடியா தான். அவாளும் எல்லாரும் வயசானவா தானே. சரி நான் வேலைகளில் இறங்கட்டும்”
என்று அன்று மாலையே மிருதுளா தன் பெற்றோருக்கு கால் செய்தாள்
“ஹலோ அம்மா நான் மிருது பேசறேன்”
“ஆங் சொல்லு மிருது. எப்படி இருக்க? மாப்ள எப்படி இருக்கார்? சக்திக் குட்டி எப்படி இருக்கா?”
“அம்மா ஸ்கைப்ல வா”
“ம்…சொல்லு மிருது”
“அம்மா நான் உன்னை ஸ்கைப்ல இரண்டு தடவை கூப்பிட்டேன் நீ எடுக்கலை அது தான் ஃபோன்ல கூப்பிட்டேன்…நீ என்னடான்னா ஸ்கைப்ல பேசறா மாதிரி நலம் விசாரிக்கறயே!!!”
“நீ ஸ்கைப்ல தான் கூப்பிட்டிருக்கன்னு நினைச்சுண்டு நான் பேச ஆரம்பிச்சேன். சாரி மிருது”
“இட்ஸ் ஓகே மா. சரி நாங்க சக்தியோட இந்த லீவுக்கு ஊருக்கு வரலாம்னு இருக்கோம்.”
“சூப்பர் சூப்பர் பேஷா வாங்கோ. உனக்குப் பிடித்த அப்பம்…மாப்ளைக்குப் பிடித்த முள்ளு முறுக்கு நம்ம சக்திக் குட்டிக்குப் பிடித்த ரிப்பன் பக்கோடா எல்லாம் செய்து வைக்கிறேன். எப்போ வர்றேங்கள்”
“நாங்க வர்ற ஜூன் இருபதாம் தேதி வந்துட்டு ஜூலை பத்தாம் தேதி கிளம்பிடுவோம். இந்த தடவை உங்க ரெண்டு பேரையும் ப்ளஸ் என் மாமனார் மாமியாரையும் கூட்டிண்டு ஒரு முன்னார் ட்ரிப் போகலாம்னு இருக்கோம். உங்களுக்கு வர சம்மதமா?”
“ஓ! இதெல்லாம் என்னத்துக்கு கேட்டுண்டு? நாங்க என்ன ஆஃபீஸுக்கா போகணும். சும்மா தானே உட்கார்ந்துண்டிருக்கோம். வான்னா வரப்போறோம்.”
“ஓகே மா. அப்படீன்னா நாங்க வந்துட்டு ஒரு இரண்டு நாள்ல அதாவது இருபத்திரெண்டாம் தேதி நாம முன்னாருக்குப் போயிட்டு நாலு நாள் அங்கே தங்கிட்டு வரலாம் சரியா. அதுக்கு வேண்டிய டிரெஸ்ஸை எடுத்து வச்சுக்கோங்கோ… அப்பா நீ எனக்கொரு ஹெல்ப் பண்ணணுமே!!”
“சொல்லு மிருது என்ன பண்ணணும்?”
“நாம நாலு …மூணு… ஏழு பேர் வசதியா உட்கார்ந்து முன்னார் போறா மாதிரி ஒரு வண்டி ஏற்பாடு பண்ணறையாப்பா?”
“ஓ பண்ணறேனே. டேட் எல்லாம் ஃபைனல் பண்ணிட்டயோனோ!! அதே டேட்டுக்கு சொல்லலாமில்லையா?”
“எஸ் அப்பா அதே டேட் தான் நோ சேஞ்ச் வண்டியை கன்ஃபார்ம் பண்ணிடூ. எவ்வளவு என்னங்கறதை சொல்லு நான் உனக்கு பணம் டிரான்ஸ்ஃபர் பண்ணிடறேன்”
“அதெல்லாம் ஒண்ணும் இப்போ குடுக்க வேண்டாம் மிருது. நாம ட்ரிப் போயிட்டு வந்து குடுத்தாப் போறும். கிளம்பற அன்னைக்கு அட்வான்ஸ் கேட்ப்பா அவ்வளவு தான். அப்போ தான் நீங்களே இங்க இருப்பேங்களே”
“ம்….அப்போ ஓகேப்பா. நீ வண்டியை புக் பண்ணிடு. சரி நான் வச்சுடவா. அடுத்து என் மாமனார் மாமியார்ட்ட கேட்கணும்”
“ஏன்டி மிருது அவா வருவாளாடி?”
“ஏன்ம்மா அப்படி கேட்குற?”
“இல்ல அவா வரணும்னு தான் ஆசைப்படுவா ஆனா அந்த குவைத் காரனும் காரியும் விடமாட்டேளே அதுதான் கேட்டேன்.”
“வந்தா சந்தோஷம். வரட்டும். இல்லாட்டி வேற யாராவது பெரியவாளை கூட்டிண்டு போக வேண்டியது தான்..சரி மா எனக்கு நிறைய வேலையிருக்கு வச்சுடவா”
அப்பாவிடம் சொல்லி காருக்கு ஏற்பாடு செய்தாள். பின் ஹாட்டல் புக்கிங் எல்லாம் நவீனும் மிருதுளாவுமாக செய்து முடித்தனர். பின் தன் மாமனாரை ஸ்கைப்பில் அழைக்க தயாரானவளிடம் நவீன்
“இங்கே பாரு மிருது …உங்க அப்பா அம்மா எந்த பந்தாவுமில்லாம உடனே ஓகே சொல்லிட்டா…ஆனா அங்கே அப்படி எல்லாம் சொல்லிட மாட்டாங்கறதை மனசுல நிறுத்திண்டு கால் பண்ணு சரியா!!”
“அவாளும் என் அப்பா அம்மா மாதிரி தானே நவீ…ரெண்டு பேருமா தனியா அங்கே இருக்கா. என்ன குழைந்தை ஸ்கூலுக்கு போகணும் இல்ல வேலைக்குப் போகணும்னு ஏதாவது இருக்கா என்ன?”
“பின்ன இல்லாமையா? அதுதான் மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ் ப்ரவீன் ஃபேமிலி அங்கேயே தானே இருக்கா நைட்டைத் தவிர…அதுனால சொன்னேன்”
“ம்..ம்..நான் பார்த்துக்கறேன்”
“அப்படியா மேடம்?அதை நானும் பார்க்கறேன்!!”
என்று நவீன் சொன்னதும் ஈஸ்வரனை ஸ்கைப்பில் அழைத்த மிருதுளா…
“ஹாய் அப்பா எப்படி இருக்கேங்கள் எல்லாரும்?”
“ம்…நாங்க நல்லா இருக்கோம் நீங்க எல்லாரும் எப்படி இருக்கேங்கள்? ரொம்ப மாசம் கழிச்சு கால் பண்ணிருக்கயே என்ன விஷயம்”
“நாங்களும் நல்லா இருக்கோம். சரி ஒரு முக்கியமான விஷயம் சொல்ல தான் கால் பண்ணினேன். “
“என்ன அது?”
“நாங்க இந்த சம்மர் லீவுக்கு ஊருக்கு வர்றதா இருக்கோம். அப்படியே உங்க ரெண்டு பேரையும் ப்ளஸ் என் அப்பா அம்மாவையும் கூட்டிண்டு முன்னார் வரை ஒரு ட்ரிப் போகலாம்னு இருக்கோம். நாங்க இந்த மாதம் இருபதாம் தேதி சென்னை வந்திடுவோம். இருபத்திரெண்டாம் தேதி ஊருக்கு வருவோம். அங்கேந்து கார்ல முன்னார் போயி ஒரு நாலு நாள் உங்களோட எல்லாம் இருந்து டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு வரலாம்னு இருக்கோம். என்ன சொல்லறேங்கள். ஜூன் இருப்பத்தி இரண்டாம் தேதிலேந்து இருபத்தி ஐந்தாம் தேதி வரை உங்களால் எங்க கூட வர முடியுமா?”
என்று மிருதுளா கேட்டதும் ஈஸ்வரனும் பர்வதமும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். அப்போது பர்வதம் ஈஸ்வரனிடம்
“வேற யாரு வர்றான்னு சொன்னா?”
“அவ அப்பா அம்மாவையும் நம்மளையும் கூட்டிண்டு போகறாளாம்”
என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டனர். அதைக் கேட்ட மிருதுளா சட்டென
“உங்களால வரமுடியாட்டிப் பரவாயில்ல விடுங்கோ. நோ கம்பல்ஷன். நாங்க எனி வே டிக்கெட், ஹோட்டல், கார் எல்லாம் புக் பண்ணியாச்சு. உங்களால வர முடியலைன்னா அப்புறம் வேற நம்மாத்தேந்து பெரியப்பாவையோ, சித்தப்பாவையோ இல்ல அத்தையை ஃபேமிலியையோ அழைச்சுண்டு போகலாம்னு நவீ சொன்னார்.”
“இல்ல அதுக்கில்ல…நாங்க கவின் கிட்ட ஒரு வார்த்தைக் கேட்கணும் அதுதான்!!”
“ஓ!! எஸ்!! தாராளமா கேளுங்கோ. எங்களோட வர்றதுக்கு உங்க ரெண்டாவது புள்ளையோட பர்மிஷன் வேணும்ன்னா… வாங்கிக்கோங்கோ அதுனால எங்களுக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லை.”
“இல்ல அதுக்கில்ல கவின் ஒரு வீடு வாங்கினானே ஞாபகமிருக்கா? பிச்சுமணி பொண்ணு கல்யாணத்தப்போ நானும் கஜேஸ்வரியுமா ரிஜிஸ்ட்ரேஷனுக்கு போனோமே!!”
“ஆங் ஞாபகமிருக்கு. அதுக்கும் நீங்க ட்ரிப் வர்றதுக்கும் என்ன சம்மந்தம்?”
“அவன் அந்த வீட்டு கிரகப்பிரவேசத்தை ஜூன் இருபதாம் தேதி வச்சிருக்கான்.”
என்று ஈஸ்வரன் சொன்னதும் சற்று வருத்தமான மிருதுளாவிடம் நவீன் கண்களாலேயே பார்த்தயா? என்று கேட்டான். உடனே சுதாரித்துக் கொண்ட மிருதுளா ஈஸ்வரனிடம்
“ஓ!! அப்படியா. இருக்கட்டுமே. அது இருபதாம் தேதி தானே நாங்க உங்களை வரச்சொல்லுறது இருபத்தி இரண்டாம் தேதியாச்சே.”
“நாங்க வர்றோம் …ஆனா ஒரு நாள் டைம் குடு நான் நாளைக்கு சொல்லறேன். எதுக்கும் அவன்ட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கறேன்”
“ம்…சரி நான் வச்சுடறேன். பை”
என்று பட்டென காலை முடித்த மிருதுளாவிடம் நவீன்
“கேட்டேல்ல!! இதை நான் எதிர்ப்பார்த்தேன். இவாளாவது உடனே சம்மதிக்கறதாவது.”
மிருதுளா அமைதியாக உட்கார்ந்திருந்ததைப் பாரத்த நவீன் அவளிடம்
“என்ன மிருது உன் பொறுமை அதோட எல்லையை கண்டுப் பிடிச்சுடுத்தா?”
“இல்ல நவீ…அதை விடுங்கோ. எனக்கென்னனா அவா ரெண்டு பேரும் எங்கெங்கயோ கவினோட பவினோட ப்ரவீனோட எல்லாம் போறா வரா… நம்மகிட்ட பர்மிஷனெல்லாம் கேட்க வேண்டாம்ப்பா …அட்லீஸ்ட் இன்பார்மாவது பண்ணிருக்காளா? ஆனா நாம கூப்பிட்டா எல்லார் கிட்டயும் பர்மிஷன் வாங்கணும்னு சொல்லறதைக் கேட்டதும் எனக்கு மனசுக்கு வருத்தமாயிடுத்து.”
“அவா தான் இன்னைக்கு உனக்கு ஒரு இன்பஃர்மேஷன் சொன்னாளே!! உன் மச்சினன் வீட்டுக்கு கிரகப்பிரவேசம் பண்ணப் போறான்னு…அது உன் காதுல விழலையா?”
“ம்…விழுந்தது. அது கவின் கஜேஸ்வரியோட வழக்கம் தானே நவீ. அதுனால எனக்கு அது பெரிசா படலை.”
“ஓ! ஒரு தடவை பட்ட அவமானம் மறுபடியும் பட்டா அது உனக்கு பெரிசா தெரியாதா?”
“இது என்ன இரண்டாவது தடவையா நவீ? கிட்டத் தட்ட அவா நடத்தின எல்லா விசேஷத்துக்கும் அப்படி தான் செஞ்சிருக்கா. ஏன் ஒரு விசேஷத்துக்கு நமக்கு பத்திரிகை அனுப்பாம இருந்ததை நாம கேட்டதுக்கு… உன் மாமனார் மாமியாருக்கு அனுப்பினோமேன்னு உங்க கிட்டயே திமிரா பேசினவா தானே!! என்ன எப்பவும் பத்திரிகை அனுப்பாட்டாலும் ஒரு வார்த்தை சொல்லவாவது செய்வா இந்த தடவை அதுவுமில்லை.”
“நான் பார்த்து வளர்ந்ததுகள் எல்லாம் இவ்வளவு திமிருல இருக்கும் போது நாம மட்டும் இறங்கி போகணும்னு நீ சொல்லறது சரியில்லை மிருது.”
“நவீ…நாம இறங்கிப் போறதுனால எப்பவுமே குறைஞ்சுப் போயிடமாட்டோம்…குறைஞ்சுப் போனதுமில்லை. நாம நல்லா தான் இருக்கோம். விட்டுக் கொடுத்தவா என்னைக்குமே கெட்டுப் போனதில்லைன்னு சொல்லுவா அதுபோல நாம மேல மேல நல்லா தான் ஆகிண்டிருக்கோம். ஸோ கவலைப் படாதீங்கோ”
“விட்டுக் கொடுத்துப் போகறதுன்னா அது டூ வேவா இருந்தா எல்லாருக்கும் அதில் சந்தோஷம் தான் ஆனா அது எப்பவுமே ஒன் வேவாவே இருந்தா அது விட்டுக் கொடுத்துப் போறவாளுக்கு சுமைதான் அதைப் புரிஞ்சுக்கோ மிருது.”
“எதையும் யார்கிட்டேயும் எதிர்ப்பார்த்து விட்டுக் கொடுக்கக் கூடாது நவீ.”
“சரி மா…இப்படியே பேசிண்டிருந்தன்னா ஒரு நாள் நீ பெரிய சாமியாரினி ஆயிடுவியோன்னு எனக்கு பயமா இருக்கு மிருது”
“ஹா! ஹா! ஹா!! ஹா!! நல்ல ஜோக் நவீ”
“என்னது ஜோக்கா!! சொல்லுவ சொல்லுவ…சொல்ல மாட்ட …சரி நாளைக்கு உன் மாமனார் என்ன சொல்லுவார்னு நினைக்கற?”
“அவா நிச்சியம் நம்ம கூட வருவா.”
“அது எப்படி அவ்வளவு உறுதியா சொல்லற மிருது?”
“ம்….அவாளும் அங்கே தனியாகத் தான் இருக்கா. உங்க தம்பி ப்ரவீன் மைசூருக்கு நம்மாத்துக்கு வந்திருந்த போது உங்க அம்மா ஃபோன்ல என்ன சொன்னா??”
“என்ன சொன்னா?”
“ப்ரவீனும் துளசியும் குழந்தைகளும் அங்கேயே ஒரு வாரம் இருக்கட்டும் நாங்களும் நிம்மதியா இங்கே இருக்கோம்னு சொன்னா இல்லையா அதை வைத்துத்தான் நான் சொல்லறேன். ஸோ அவாளுக்கும் ஒரு சேஞ்ச் தேவைப்படறது. அதுவுமில்லாம அவாளை வேற எந்த பசங்களும் எங்கேயும் அழைச்சுண்டு போனதில்லைங்கறதும் ஒரு முக்கியமான பாய்ண்ட்”
“ஆமாம் நீ இவ்வளவெல்லாம் யோசிச்சு எல்லாம் செய்…அவா அதையும் கெடுத்துக் குட்டிச்சுவறாக்கி…உன்னையே அவமானப்படுத்தவும் செய்வா”
“பார்ப்போம் நவீ.”
மறுநாள் மிருதுளாவை ஸ்கைப்பில் அழைத்தார் ஈஸ்வரன்
“ஹலோ”
“ஹலோ அப்பா. சொல்லுங்கோ. பர்மிஷன் வாங்க வேண்டிய இடத்திலெல்லாம் வாங்கியாச்சா? கிடைச்சுதா?”
“ஆங் கேட்டேன். கவின் சொல்லறான் நாங்க அவன் கூட கிரகப்பிரவேசத்துக்கு ட்ராவல் பண்ணிட்டு திரும்பி இருபத்தி ஒன்னாம் தேதிதான் வருவோமாம். ஸோ உடனே அடுத்த நாளே முன்னார் கிளம்பணும்னா கஷ்ட்டமில்லையான்னு கேட்கிறான்.”
“இட்ஸ் ஓகே அப்பா. அவன் கூட அவ்வளவு தூரம் கார்ல போய் கிரகப்பிரவேசம் அட்டெண்ட் பண்ணறது உங்களுக்கு களைப்பைக் குடுக்காது தான். புரியறது. சரி அப்போ நாங்க பெரியப்பா ஆர் அத்தைக் கிட்ட சொல்லி அவாளைக் கூட்டிண்டு போயிக்கறோம். இட்ஸ் ஓகே!!”
“அவா எல்லாம் என்னத்துக்கு?”
“இது நல்லாயிருக்கேப்பா…நாங்க ரூமுலேந்து எல்லாம் புக் பண்ணியாச்சே…அதை கேன்சல் பண்ணவும் முடியாது…அது சும்மா போறதுக்கு அட்லீஸ்ட் அவாளையாவது கூட்டிண்டு போவோம் இல்லையா. அவாளாவது சந்தோஷப்படுவா இல்ல”
“அவாளையும் கவின் அவனோட கிரகப்பிரவேசத்துக்கு அழைச்சிருக்கான். அவாளும் எங்களோட தான் வரப்போறா”
“ஸோ வாட்? அவாளுக்கும் எங்களோட வர்றதுக்கு உங்களை மாதிரி கஷ்டமாயிருந்தா வரமாட்டா இல்லைன்னா வருவா அவ்வளவு தானே. கேட்கறதுல எந்த தப்புமில்லையே!!! அதுவுமில்லாம என் அப்பா அம்மா சென்னையிலேந்து கார்ல டிராவல் பண்ணிண்டு நம்ம ஊருக்கு வந்து அங்கேந்து அதே கார்ல முன்னார் வரை உட்கார்ந்துண்டு தான் வரப்போறா…உங்களை விட அதிக நேரம் கார்ல அவா உட்காரணும் …அவாளும் வயசானவா தான்!”
என்று மிருதுளா சொன்னதும் பர்வதம் ஈஸ்வரன் பின்னாலிருந்து ஏதோ முனுமுனுத்தாள்…உடனே ஈஸ்வரன் மிருதுளாவிடம்
“பர்வதத்திற்கு வரணுமாம். அதுனால நாங்களே வர்றோம்”
“அப்படியா? உங்களுக்கு கஷ்டமாயிருக்காதே?”
“அதெல்லாம் ஒண்ணுமிருக்காது நாங்க பார்த்துக்கறோம். சரி நான் காலைக் கட் பண்ணவா?”
“ஓகே பா பை.”
என்று காலைத் துண்டித்ததும். அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த நவீன் மிருதுளாவிடம்
“பார்த்தியா மிருது. அடுத்தவா சந்தோஷமா இருப்பாளேனுட்டு இவா வரேன்னு சொன்னதை!!”
“எப்படியோ வரேன்னு சொல்லிட்டாயில்லையா. விடுங்கோ”
“எனக்கென்னவோ இப்போ நம்ம கிட்ட வரேன்னு சொன்னதுக்குப் பின்னாடியும் ஏதோ ஒரு ப்ளான் இருக்குமோன்னு டவுட் வர்றது”
“இதுல என்ன டவுட் நவீ?”
“ஆமாம் இப்போ வரலைன்னு சொன்னா நீ பாட்டுக்கு பெரியப்பா ஆர் சித்தப்பா ஆர் அத்தையை கூப்பிட்டுப்ப….அதே இப்போ வரோம்னு சொல்லிட்டு அங்கே போனதும் வரலைன்னு சொன்னா அப்போ எப்படி? யாரை? கூப்பிடுவ? என் யூகம் சரியா?”
“ம்…அப்படிப் பண்ணுவாளா என்ன?”
“எல்லாம் பண்ணுவா. தான் அனுபவிக்காத சந்தோஷம் வேற யாருமே அனுபவிக்கக் கூடாதுங்கற நல்ல எண்ணத்தின் பிரதிபலிப்பு தான் அது”
“எனக்கென்னவோ அப்படி தோனலை.”
“அப்படீன்னா உனக்கு என்ன தோணறதுனு சொல்லேன் கேட்ப்போம்”
“மே பீ….அவா எல்லாம் யாரு என் புள்ளை மாட்டுப்பொண்ணோட ஊர் சுத்த…அதுக்கு நாமளே போயிட்டு வந்திடலாம்னும் இருக்கலாமில்லையா!!”
“ம்..குட் கெஸ். நீ என்னைக்கு நல்லதோட மறுபக்கத்தைப் பத்தி பேசிருக்க? பார்ப்போம் பார்ப்போம்”
மிருதுளா சுற்றுலாவுக்கு வருகிறீர்களா என்று கேட்ட ஒரு கேள்விக்கு உடனே பதிலளித்த அம்புஜம் ராமானுஜத்தைப் பற்றி அன்றே மறந்தனர் நவீனும் மிருதுளாவும் ஆனால் அந்த கேள்வி கேட்டதற்கு இரண்டு நாட்கள் அவர்களைப் பற்றியே சிந்திக்கவும் பேசவும் வைத்தனர் பர்வதீஸ்வரன். இது போன்றவர்களைத் தான் ஆங்கிலத்தில் “manupulators” என்று கூறுவார்கள். அதாவது சூழ்ச்சித்திறன் மிக்கவர்கள் என்பார்கள். இப்படிப்பட்டவர்கள் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அல்லது சூழலாக இருந்தாலும் அவற்றை தங்களுக்கு ஏற்றார் போல, தங்களுக்கு சாதகமானதாக மாற்றிக் கொள்ள வல்லமைப் படைத்தவர்கள். அவ்வாறு செய்வதற்கு அவர்கள் எவரைப் பற்றியும் சிந்திக்காத சுயநலவாதிகளாகிறார்கள். அவர்களுக்கு அவர்கள் காரியம் தான் முக்கியம் என்று வாழ்வார்கள். இது போன்ற குணமுடையவர்கள் கல்லை மண்ணாகவும் மண்ணைக் கல்லாகவும், தண்ணீரைப் பாலாகவும் பாலை தண்ணீராகவும் அவர்களின் சூழ்ச்சித்திறனால் மாற்றி நம்பவைக்கும் ஆற்றல் மிகுந்தவர்கள்.
நவீன் குடும்பத்தினர் இந்தியாவிற்கு செல்லும் நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. மிருதுளா தன் அப்பாவுக்கும் மாமனாருக்கும் ஒரே மாதிரியான வாட்ச் மற்றும் கேம் விளையாடுவதற்காக ஒரே ப்ராண்ட் டேப்லெட்டும் ஆன்லைனில் வாங்கினாள். அம்மாக்கள் இருவருக்குமே ஒரே மாடல் வைர மூக்குத்தியும், ஜெர்கான் தோடும் வாங்கினாள். ஈஸ்வரன் வீட்டின் அருகேயே குடியிருப்பதால் ப்ரவீனுக்கும் துளசிக்குமாக கப்புள்ஸ் வாட்ச்சும் அவர்களின் பெண்ணிற்கு வைரத்தில் சிறிய தோடும், மகனுக்கு ஒரு ரிமோட்டில் பறக்கும் ஏரோப்ளேனும் வாங்கினாள். மற்ற அனைத்து சொந்தங்களுக்கும் ஒவ்வொன்றை வாங்கி பேக்கும் செய்து முடிதாள். சொந்த பந்தங்களுக்கான பரிசுப் பொருட்களே ஒரு பெரிய பெட்டி முழுவதும் இருந்தது.
இந்தியாவுக்கு புறப்படும் நாள் வந்தது. மூவருமாக இந்தியா செல்ல ஃப்ளைட் ஏறினர். விடியற்காலை நான்கு மணிக்கு சென்னை விமான நிலைத்திற்கு சென்று இறங்கினர். அங்கிருந்து ஒரு டாக்ஸிப் பிடித்து ராமானுஜம் அம்புஜம் வீட்டிற்குச் சென்றனர். அம்புஜமும் ராமானுஜமும் வீட்டின் வாசலிலேயே காத்திருந்தனர். டாக்ஸி வீட்டின் வாசலில் வந்து நின்றதும் ஓடிச்சென்று அம்புஜம் சக்தியைக் கட்டியணைத்துக் கொண்டு பேசலானாள். ராமானுஜம் நவீனுடன் சேர்ந்து பெட்டிகளை வீட்டினுள் எடுத்து வந்தார். அவர்கள் குளித்து வந்ததும் அவர்கள் மூவருக்கும் மிகவும் பிடித்த லெமன் சேவை, தேங்காய் சேவை, மெது வடை, தேங்காய் சட்னி, சாம்பார் எல்லாம் செய்து வைத்திருந்த அம்புஜமும் ராமானுஜமும் அவர்களுக்கு மாறி மாறி பரிமாறினார்கள். அப்போது நவீன்
“நீங்க ரெண்டு பேரும் எங்களோடவே சாப்பிடலாமே!”
“ஆமாம் மா. நாங்களே போட்டு சாப்ட்டுக்கறோம். நீங்களும் எங்களோட உட்கார்ந்து சாப்பிடுங்கோ”
“நீங்க மொதல்ல சாப்பிடுங்கோ நாங்க ரெண்டு பேருமா அப்புறமா சாப்ட்டுக்கறோம்”
“இதெல்லாம் செய்ய நீங்க ரெண்டு பேரும் நிச்சயம் நாலு மணிக்கு எழுந்துண்டிருப்பேங்கள்…இப்போ மணி ஏழாகறது. உங்களுக்கும் பசிக்குமில்லையா!! எல்லாத்தையும் இங்கே கொண்டு வந்து வச்சுட்டு எங்களோட சேர்ந்து சாப்பிடுங்கோ…எப்பவும் நீங்க ரெண்டு பேரும் மட்டும் தானே சாப்பிடறேங்கள்?”
“அதுக்கில்ல மிருது…”
“பாட்டி தாத்தா ரெண்டு பேரும் எங்க கூட சாப்பிடுங்கோ ப்ளீஸ்”
“சரிடி என் செல்லக் குட்டி….இதோ சாப்ட்டாப் போச்சு”
என்று அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். அப்போது மிருதுளா தன் அம்மாவிடம்
“ஏன் மா நாங்க சொன்னப்போ கேட்கலை…அதையே உன் பேத்தி சொன்னதும் சாப்பிடறேங்கள்?”
“ம்…பின்ன …பேத்தின்னா சும்மாவா. எங்க செல்லக்குட்டிமா சொன்னா எப்படி தட்டுவோம் சொல்லு”
“அப்போ உங்க பொண்ணை விட பேத்திதான் உங்களுக்கு பெரிசு இல்லையா?”
“இதுல உனக்கு சந்தேகம் வேறையா? சக்திக் குட்டி தான் எங்களுக்கு பெரிசு. இந்தாடிக் கண்ணா பாட்டிக்கிட்டேந்து ஒரு வாய்…சாப்டு”
“அம்மா இதெல்லாம் டூ மச்….நான் பதினொன்னாவது படிக்கும் போது எப்பயாவது எனக்கு ஊட்டிவிட்டிருக்கேங்களா மா?”
“நீ எங்க பொண்ணு ஆனா சக்திக் குட்டி எங்க பேத்தியாச்சே”
என்றதும் நவீனும் சக்தியுமாக மிருதுளாவைப் பார்த்து கிண்டல் செய்தனர். அதற்கு மிருதுளாவும் சிரிக்க அனைவரும் சிரித்துப் பேசிக்கொண்டே சாப்பிட்டு எழுந்தனர்.
மிருதுளா தன் அப்பாவுக்கும் அம்மாவுக்குமாக வாங்கி வந்த பரிசுப் பொருட்களை சக்தியிடம் கொடுத்துக் கொடுக்கச் சொன்னாள். அதைப் பார்த்ததும் இருவரும் மிகவும் சந்தோஷப்பட்டனர். அப்போது ராமானுஜம் மிருதுளாவிடம்
“என்னத்துக்கு இப்போ இந்த செலவெல்லாம் பண்ணின மிருது?”
“ஏன்ப்பா உனக்கு அந்த வாட்ச்சும் டேப்லெட்டும் பிடிக்கலையா?”
“அதுக்கில்ல மிருது. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இப்போ இந்த சுற்றுலா செலவு வேற இருக்கேன்னுட்டு கேட்டேன்”
“அச்சச்சோ!!! குழந்தைகள் ஆசையா வாங்கிண்டு வந்து தந்திருக்கா…பேசாம வாங்கிண்டு அவாளை ஆசிர்வாதம் பண்ணறதை விட்டுட்டு தேவையில்லாம பேசறேங்களே!!”
“அதுக்கில்ல அம்பு”
“இதோ பாருங்கோ உங்க ரெண்டு பேருக்கும் நாங்க ஆசையா வாங்கிண்டு வந்திருக்கோம்…நீங்க செலவைப் பத்தி எல்லாம் யோசிக்காதீங்கோ!!”
“ஓகே! மாப்ள இனி அதைப் பத்தி பேச மாட்டேன். சக்தி தாத்தாவுக்கு இந்த டேப்லெட்டில் பபுள்ஷூட் டவுன்லோடு பண்ணித் தாடி செல்லம்”
“பபுள்ஷூட் மட்டுமில்ல தாத்தா… உனக்கு நிறைய கேம்ஸ் டவுலோடு செய்துத் தரேன்…வா”
“சக்திக்குட்டி பாட்டிக்கும் அதே கேம்ஸ் எல்லாம் என் ஃபோன்ல டவுலோடு பண்ணித்தாடிக் கண்ணா”
“ஓகே! ரெண்டு பேரும் வாங்கோ நான் டவுனலோடு செஞ்சு அதை எப்படி விளையாடணும்னும் சொல்லித் தரேன்”
என்று மூவரும் ஒரு அறையில் மணிக்கணக்காக பிஸியானார்கள். மறுநாள் நவீன், மிருதுளா, சக்தி மூவரும் முன்னார் செல்வதற்கு அவரவர்களுக்கு தேவையான துணிமணிகளை பேக் செய்து முடித்ததும் மிருதுளா கீழே சென்று தன் அப்பா அம்மாவிடம்
“நீங்க எல்லாம் பேக் பண்ணியாச்சாமா?”
“ஓ! நாங்க நீங்க வர்றதுக்கு முன்னாடி நாள் தான் பேக் செஞ்சோம். சுவட்டர் எல்லாம் எடுத்துண்டிருக்கேளா?”
“என்னத்துக்கு அதெல்லாம்? வெய்யில் சுட்டெரிக்கறது…இதில் சுவட்டர் எல்லாமா…நீ வேற”
“அப்பா அங்கே குளிரா தான் இருக்கும். எதுக்கும் எடுத்து வச்சுக்கோங்கோளேன் நாமளா தூக்கிண்டு போகப் போறோம்? கார் தானே தூக்கிண்டு வரப்போறது?”
என்று பேசிக் கொண்டிருக்கும் போது மிருதுளாவின் இந்தியா நம்பருக்கு நவீனின் ஒண்ணு விட்ட தங்கையிடமிருந்து கால் வந்தது. உடனே எடுத்துப் பேசினாள் மிருதுளா.
“மன்னி எப்படி இருக்கேங்கள்? நவீன் அண்ணா, சக்தி எல்லாரும் எப்படி இருக்கா?”
“ம்…நாங்க நல்லா இருக்கோம் மா நீ எப்படி இருக்க? உன் நியூலி மேரிட் லைஃப் எல்லாம் எப்படி இருக்கு? சாரிமா எங்களால தான வரமுடியாம போச்சு. சரி நான் இந்தியாவுக்கு வந்திருக்கேன்னு உனக்கு யார் சொன்னா? கரெக்ட்டா கால் பண்ணறயே!!”
“ஆங் நான் நல்லா இருக்கேன் மன்னி. எங்கள் லைஃபும் நல்லா போயிண்டிருக்கு. ஈஸ்வரன் பெரியப்பா தான் நீங்க இருபதாம் தேதி வர்றதா சொன்னா. அதுதான் இன்னைக்கு கால் பண்ணினேன்”
“அப்படியா…சொல்லு சொல்லு. என்ன விஷயம்?”
“மன்னி இந்த கவின் அண்ணாவும் அந்த கஜேஸ்வரியும் பண்ணியிருக்கறதைப் பார்த்தேளா?”
“ஏன் அவா உனக்கென்ன பண்ணினா?”
“எனக்குன்னு இல்ல மன்னி ஈஸ்வரன் பெரியப்பா சைடுலேந்து யாரையுமே விசேஷத்துக்கு அழைக்கலை …இத்தகைக்கு நாங்க எல்லாரும் கவினுக்கு மட்டுமில்ல அந்த கஜேஸ்வரிக்கும் சொந்தம் வேற…அவா வீட்டுக் கிரகப்பிரவேசத்தை நேத்து நடத்திருக்காளே அதைத் தான் சொன்னேன்”
“ஓ!! அதையா!! ஆமாம் சொந்த அண்ணா மன்னி கிட்டயே சொல்லலையாம் இதுல உங்களை எல்லாம் அழைக்கலைன்னு நீ என் கிட்ட சொல்லற!!”
“அப்படியா உங்களையுமா அழைக்கலை?”
“அது …அவா வழக்கம் தான் மா. அதுனால எங்களுக்கு புதுசா படலை…ஆனா உங்களுக்கெல்லாம் இது தான் மொதோ தடவை போல அதுதான் இப்படி ஷாக் ஆகறேங்கள்.”
“இனி நாங்கஅவாளோட எந்த விசேஷத்துக்கும் போக கூடாதுன்னுட்டு முடிவெடுத்திருக்கோம் மன்னி”
“அது உங்க விருப்பம் மா. அதை நீ என் கிட்ட சொல்லணும்னு அவசியமில்லையே”
“அதுக்கில்ல மன்னி எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வர்றது. அதுதான் உங்களோட ஷேர் பண்ணிக்கலாம்னு ஃபோன் பண்ணினேன்…ஆனா உங்களையே கூப்பிடலைன்னு தெரிஞ்சதுக்கப்புறமா அவா மேலே இன்னும் வெறுப்பு தான் வர்றது. சரி மன்னி அண்ணா கிட்டேயும் சக்திக் கிட்டேயும் நான் கேட்டதா சொல்லிடுங்கோ. நான் வைக்கறேன் பை. நீங்க ஊருக்கு எப்போ கிளம்பறேங்கள்?”
“நாங்க வர்ற ஜூலை பத்தாம் தேதி கிளம்பிடுவோம் மா”
“அப்படியா அதுக்கு இடையில முடிஞ்சா ஆத்துக்கு வாங்கோ மன்னி.”
“நிச்சயம் ட்ரைப் பண்ணறோம் மா”
“ஓகே மன்னி பை வச்சுடவா. அப்புறமா உங்களுக்கு கால் பண்ணறேன்”
என்று அழைப்பைத் துண்டித்தாள் நவீனின் ஒண்ணு விட்ட தங்கை ராதிகா. மாடிக்ஙுச் சென்று நவீனிடம் ராதிகா சொன்னதை கூறினாள் மிருதுளா. அதைக் கேட்டதும் நவீன்
“பரவாயில்லையே மிருது நீயும் பேச கத்துண்டுட்டியே!! பலே!!! அந்த கூட்டம் ரொம்ப திமிருல ஆடுறா…பார்ப்போம்…எல்லாத்தையும் பொறுமையா தள்ளி நின்னுண்டு பார்ப்போம்”
இருபத்தி இரண்டாம் தேதியானது. நவீன், மிருதுளா, சக்தி, அம்புஜம், ராமானுஜம் ஐவரும் காலை நான்கு மணிக்கெல்லாம் தயாராகி காரில் ஏறி பர்வதீஸ்வரன் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
தொடரும்…..
அத்தியாயம் 105: சுபநிகழ்வு
கவின் கஜேஸ்வரியிடமிருந்து ஃபோன் கால் வருமென்று காத்திருந்த மிருதுளாவுக்கு எப்போதும் போல ஏமாற்றமே மிஞ்சியது. இரண்டு நாட்கள் ஆனதும் நவீன்
“என்ன மிருதுளா மேடம் உங்க மச்சினன் இன்னுமா ஃப்ரீ ஆகலை? நாம ஃபோன் பண்ணி ரெண்டு நாளாச்சே!!!”
“ம்….நான் என்ன பண்ணுவேன் நவீ? நிச்சயம் பண்ணுவான்னு எதிர்ப்பார்த்தேன் பண்ணலை…அவ்வளவு தான் விட்டுட்டேன். இனி என்னென்னைக்கும் எதுக்காகவும் பேசவோ, போகவோ மாட்டேன்”
“ம்…அதை தான் நான் ஆரம்பத்துலேந்து சொல்லிண்டிருக்கேன். எங்க கேட்ட?”
“நீங்க ஆம்பளப்பா எடுத்தோம் கவுத்தோம்னு முடிவெடுப்பேங்கள் ஆனா நான் அப்படி எடுக்க முடியுமா? அப்படியே நான் எடுக்கறதா இருந்தாலும் ஆரம்பத்துலேயே எடுத்திருக்கணும். அப்படி எடுத்திருந்தேன்னா குடும்பத்துல பிரிவு ஏற்பட்டிருக்கும்”
“இப்போ மட்டும் என்ன வாழறதாம்? நாம என்ன அவாளோட சந்தோஷமா அன்னியோன்யமா வா இருக்கோம் இல்ல அவா தான் எல்லாரும் அப்படி இருக்காளா? எனிவேஸ் இது நாள் வரை எல்லாருக்கும் நீ நல்லவளா இருந்தது எல்லாம் போதும் மிருது….அப்படி நீ நல்லவளா இருந்ததால… என்ன… உன்னை அவா யாராவது புரிஞ்சுண்டாளா? இல்லையே!!! உன்னோட இந்த நல்ல குணத்தை, உன்னோடு பொறுமையை, விட்டுக்கொடுக்கும் பண்பை எல்லாரும் இளிச்சவாயி, சூடு சுரனை இல்லாதவன்னு தான் நினைச்சிண்டிருப்பா!!! நினைக்கறது என்ன அதுனால தான் மேல மேல உன்னை ….ராதர்… நம்மை அவமானப்படுத்தி அதில் சந்தோஷம் அடையறா!!! எதுக்காக அப்படிப்பட்டவாளை நீ நினைக்கணும் சொல்லு!!!”
“ம்…பார்ப்போம் நவீ. என்னால சட்டுன்னு எல்லாம் மாற முடியாது ஆனா கொஞ்சம் கொஞ்சமா என்னை நான் மாத்திக்கறேன்.”
“தட்ஸ் குட். அது உனக்கும் நல்லது நம்மளுக்கும் நல்லது. நிச்சயமா ட்ரைப் பண்ணு”
“ஷுவர் நவீ. சரி நாம இன்னைக்கு சக்தியோட கிளாஸ் மடிஞ்சிட்டு…மூணு பேருமா எங்கேயாவது வெளியே போயிட்டு வருவோமா?”
“ஓ!! போகலாமே. அதுதான் நம்ம கார் வந்துடுத்தே!! அப்புறம் என்ன?”
என்று பேசிக்கொண்டது போலவே சக்தியின் கிளாஸ் முடிந்ததும் மூவருமாக வெளியே புது ஊரைச் சுற்றிப் பார்க்கச் சென்றனர். மாலை நேரம் முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு இரவு உணவை ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வந்து படுத்துறங்கினர்.
சக்தி வெளிநாட்டில் புது பள்ளியில் செட்டாவாளா!! அவளுக்கு பிடிக்குமா? நன்றாக இந்தியாவில் படித்ததுப் போலவே குவைத்திலும் படிப்பாளா? போன்ற பல கேள்விகள் மிருதுளா நவீன் இருவருக்குள்ளும் இருந்ததை ஒருவருக்கொருவர் பேசி பகிர்ந்துக் கொண்டனர். அப்போது சக்தியை கூப்பிட்டாள் மிருதுளா….சக்தி தன் அப்பா அம்மாவின் அறைக்குள் வந்ததும்
“ம்… என்னம்மா கூப்பிட்ட?”
“சக்திமா..உனக்கு உன் புது ஸ்கூல் பிடிச்சிருக்கா? டீச்சர்ஸ் எல்லாரையும் பிடிச்சிருக்கா? எப்படி பாடமெல்லாம் எடுக்கறா? புரியறதா?”
“அம்மா எனக்கு ஸ்கூல் பிடிச்சிருக்கு, டீச்சர்ஸையும் பிடிச்சிருக்கு, பாடமும் நல்லா டீச் பண்ணறா, எனக்கு ஃப்ரெண்ட்ஸும் கிடைச்சுட்டா….ஆர் யூ ஹாப்பி நவ்”
“ஏய் குட்டிமா….நான் ஹாப்பியா இருக்கறது இருக்கட்டும்…நீ ஹாப்பியா இருக்கியா? அது தான் எங்களுக்கு வேணும்”
“நான் ஹாப்பி தான்ம்மா”
“ஓகே டா கண்ணா நீ என்ன பண்ணிண்டிருந்தயோ அதை போய் கன்டின்யூ பண்ணிக்கோ போ”
“பாரேன்….ப்பா…கூப்பிட்டா…கேள்வி கேட்டா…போன்னுட்டா”
“நீ வாடி கண்ணா உனக்கு வேலை எதுவுமில்லாட்டி நாம ஒரு கேம் ஊனோ போடலாம்.”
“ஓகேப்பா. நான் ரெடி…அம்மா வாம்மா…அந்த துணியை அப்புறமா மடிச்சு வச்சுக்கோமா”
என்று சக்தி சொன்னதும் மகருதுளா அவள் வேலைகளை அப்படியே போட்டுவிட்டு அவளுடன் விளையாடச் சென்றாள் அதைப் பார்த்ததும் சக்தி….
“அம்மா ஐ ஆம் ஷாக்டு டூ சீ யூ கம்மிங் டூ ப்ளே வித் அஸ் இம்மீடியட்ளீ…!!!! வாவ்!!! அப்பா அம்மாவுக்கு ஏதோ ஆயிடுத்து”
“சரி சரி வாங்கோ வாங்கோ விளையாடலாம்…”
என்று மூவரும் ஊனோ விளையாட்டை விளையாடினர். பின் சக்தி அவளின் படிப்பைத் தொடர்ந்தாள். அப்போது நவீன் மிருதுளாவிடம்
“என்ன மிருது எப்பவுமே வேலையிருந்தா அதை எல்லாம் முடிச்சிட்டு தானே விளையாட வருவ!!! இன்னைக்கு என்ன சக்தி கூப்பிட்டதும் வேலையெல்லாம் அப்படியே போட்டுட்டு வந்துட்ட? எனக்கே ஆச்சர்யமா தான் இருந்தது”
“ஆமாம் நவீ….இன்னும் ரெண்டு வருஷம் தான் சக்தி நம்ம கூட இருப்பா…அதுக்கப்புறம் எங்கயாவது வெளிநாட்டுக்குப் படிக்கப் போயிடுவா….அப்புறம் அவ உலகமே வேறன்னு ஆகிடும்…..அதுக்கு பிறகு கல்யாணம் ….பின்ன அவ குடும்பம் குழந்தைன்னு இருப்பா….அதுதான் இப்பவே கிடைக்குற நேரத்தை எல்லாம் அவ கூடவே ஸ்பென்ட் பண்ணறேன்”
“ஓ!!! ஓகே ஓகே!!! அதுவும் கரெக்ட் தான் மிருது”
“நவீ நாம இன்னொரு குழந்தை பெத்துண்டிருக்கலாமோ!!”
“நோ !!நோ!! நோ!! மிருது என்னால அட் எ டைம் ரெண்டு குழந்தைகளை தான் சமாளிக்க முடியும்….மூணெல்லாம் நோ சான்ஸ் மா”
“என்னது ரெண்டு குழந்தைகளை சமாளிக்கறேங்களா!!!! அது எங்க அந்த ரெண்டாவது குழந்தை?”
“என்னோட மூத்த குழந்தை நீ அன்ட் ரெண்டாவது குழந்தை நம்ம சக்தி”
“ஆமாம்!! ஆமாம்!!!!”
“உண்மை தானே மிருது….”
என்று மூவரின் வாழ்க்கை மிகவும் அழகாகவும், அமைதியாகவும் சென்றுக் கொண்டிருந்தது. ஒரு நாள் அம்புஜத்திடமிருந்து வாட்ஸ்அப்பில் கால் வந்தது.
“ஹலோ மிருது நான் அம்மா பேசறேன்”
“ஆங் அம்மா சொல்லு…ஏன் வாய்ஸ் கால் பண்ணற? வீடியோ கால் பண்ண வேண்டியது தானே?”
“இரு இதை ஆஃப் பண்ணிட்டு மறுபடியும் உனக்கு கால் பண்ணறேன்.”
“ஆங் ….இப்போ ஓகே வா?”
“ம்…இப்போ ஓகே. சொல்லு என்னமா?”
“எல்லாம் நல்ல விஷயம் தான் மிருது. நம்ம வேனுவுக்கு ஒரு வரன் வந்திருக்கு. அவனுக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு.”
“யார் மூல்யமா வந்திருக்கா”
“எல்லாம் நம்ம தமிழ் மாட்ரிமோனி சைட் மூலமா தான் வந்திருக்கா.”
“அம்மா அப்போ நீ கட்டின காசு வீணாப் போகலை.”
“அது இருக்கட்டும் நான் சொல்ல வந்ததை சொல்லிடறேனே….அப்புறமா நீ பேசு…இல்லாட்டி நான் மறந்துடுவேன்”
“சரி ….சொல்லு…”
“பொண்ணோட அப்பா அம்மா பம்பாய்ல செட்டிலானவா. அவாளுக்கு சொந்த ஊரு மதுரையாம். பொண்ணு அமெரிக்கால படிக்கறா. பொண்ணு நம்ம வேனுவோட லண்டன் மூவ் பண்ணவும் தயாராம். வேனுவும் அவளோட பேசிட்டானாம். அவனுக்கும் ஓகேவாம் அது தான் இந்த இடத்தையே முடிக்கலாம்னுட்டு இருக்கேன்”
“சூப்பர் மா….எனக்கும் மகதியை ரொம்ப பிடிச்சிருக்குமா”
“ஆங்….நீ எங்கே அவளைப் பார்த்த?உனக்கும் பிடிச்சிருக்குன்னு சொல்ல? அதுவுமில்லாம அவ பேரை நான் இன்னும் சொல்லவேயில்லை ஆனா நீ கரெக்ட்டா சொல்லறையே எப்படி அது?”
“ஆங்….அது வந்து….அது…”
“மிருது என்ன சொல்ல வந்தயோ…அதை சொல்லு”
“அம்மா நான் அவளோட ஃபோன்ல பேசினேன் மா. நான், வேனு, மகதி மூணு பேருமா கான்ஃபரன்ஸ் கால் போட்டுப் போன வாரத்துக்கு முந்தின வாரம் பேசினோம் மா. போதுமா!!!”
“ஓ!!! அப்போ நீங்க மூணு பேருமா பேசி வச்சிண்டு தான் எங்ககிட்ட வந்தேங்களா?”
“இல்ல மா…நீங்க பேசிண்டதுக்கப்பறமா தான் நாங்க பேசிண்டோம். அதுக்கப்புறமா தான் உங்கிட்ட அவா ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு ஓகே சொன்னா புரிஞ்சுதா?”
“ஓ!!! சரி சரி சரி….என் மாட்டுப் பொண்ணு எப்படி பேசறா மிருது?”
“எல்லாரையும் போல வாயால தான் மா!!”
“ஜோக்காக்கும்????சொல்லுடி”
“நன்னா பேசறா”
“அது போதும் மிருது.”
“சரி எப்போ நிச்சயம் வச்சிருக்கேங்கள்? எப்போ கல்யாணம்? அந்த டேட்ஸ் எல்லாம் முன்னாடியே சொல்லிடுமா ஏன்னா நாங்க முன்னாடியே டிக்கெட் புக் பண்ணினா தான் எங்களுக்கு சீப்பா இருக்கும்”
“சரி டி. எங்களுக்கு அது தெரியாதா?”
“நிச்சயம் ஆன்லைன்ல தான்…ஏன்னா இப்போ ஒரு தடவை வந்துட்டு அப்புறமா மறுபடியும் எல்லாம் டிராவல் பண்ண ரெண்டு பேராலையும் முடியாதாம்….காசும் எக்கச்செக்கம் செலவாகுமாம்…அதுனால நிச்சயத்தை ஆன்லைன்ல வேனு லண்டன்லயும், மகதி அமெரிக்காவிலும் நாங்க சென்னையிலும், நீங்க குவைத்திலும், மகதியோட அப்பா அம்மா பம்பாயிலும் இருந்துண்டே ஸ்கைப்ல வர்ற வாரத்துக்கு அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இருபத்தி ஐந்தாம் தேதி நடக்கப் போறது. அவசியம் நீயும் மாப்பிள்ளையும் சக்தியும் அட்டென்ட் பண்ணணும்…மாப்பிள்ளை இருக்காறா?”
“ஆங்…இருக்கார்….இரு குடுக்கறேன்….நவீ நவீ…இந்தாங்கோ எஙக் அம்மா அப்பா பேசணுமாம். வேனுவுக்கு நிச்சயதார்த்தமாம் அதுக்கு உங்களையும் அழைக்கக் கூப்பிடறா”
“ஆங் சொல்லுங்கோ….நம்ம வேனுக்கு நிச்சியமாமே….கங்ராட்ஸ்….”
“ஆமாம் மாப்ள…வர்ற இருபத்தி அஞ்சாம் தேதி ஏதோ ஆன்லைன்லன்னு சொன்னான் வேனு…ஏதோ லிங்க் அனுப்புவானாம் நம்மளுக்கு. அதை க்ளிக் பண்ணினா எல்லாரும் எல்லாரையும் பார்க்கலாமாமே!!!”
“எது ? ஸ்கைப்லயா?”
“ஆங் அதே தான். அதெல்லாம் எனக்குத் தெரியாது…எல்லாம் அம்மாவும் புள்ளையுமா தான் அதை பத்தி பேசிப்பா. அவசியம் நீங்களும் அவன் அனுப்பற லிங்கைக் க்ளிக் பண்ணி அட்டென்ட பண்ணணும்னு கேட்டுக்கறோம்”
“நிச்சயமா நாங்க அட்டென்டன்ஸ் கொடுப்போம் கவலைப் படாதீங்கோ. சரி மிருது இந்தா நீ பேசிக்கோ எனக்கொரு கால் இருக்கு நான் வரட்டுமா”
“ஓகே மாப்ள வேலை தான் முக்கியம். நீங்க போயிட்டு வாங்கோ…இதை சொல்லத்தான் கூப்பிட்டோம்”
“ரொம்ப சந்தோஷம் நான் வேனுட்ட பேசறேன். சரி நீங்க மிருதுவோட பேசிண்டிருங்கோ நான் வரேன்…மிருது இந்தா”
“ம் ஓகே நவீ!! ம்…சொல்லுங்கோ மை டியர் பேரன்ட்ஸ்”
“அது சொல்லத்தான் ஃபோன் பண்ணினேன் மிருது. சக்தி குட்டி எப்படி இருக்கா? அவளுக்கு புது ஸ்கூல் எல்லாம் செட்டாச்சா?”
“ம்…அவ நல்லா செட்டில் ஆகிட்டாம்மா. சரி நிச்சியத்துக்கு உங்களுக்கு வேலை ஒண்ணுமில்லையா?”
“என்னத்த வேலையிருக்கு? கம்ப்யூட்டரை ஆன் செஞ்சுண்டு உட்காரணும் அது தான் வேலை”
“ஹா!ஹா!ஹா! ஆமாம் இல்ல…சரி வேற யாரை எல்லாம் இன்வைட் பண்ணப் போறேங்கள்?”
“எனக்கு என் சைடு ஆட்களை எல்லாம் கூப்பிடணும்னு ஆசையா தான் இருக்கு…அப்பாவுக்கும் அவா சைடு கூப்பிடணும்னு இருக்கு ஆனா வேனு இப்போ யார்கிட்டேயும் சொல்லிக்க வேண்டாம்னு சொல்லிட்டான். கல்யாணத்துக்கு எல்லாரையும் கூப்பிட்டுக்க சொல்லியிருக்கான்”
“சரி கல்யாண தேதி எப்போ?”
“பார்த்தையா ….பேச்சு சுவரஸ்யத்துல அதை சொல்ல மறந்தே போயிட்டேன்…அது வர்ற அக்டோபர் மாசம் பதினாறாம் தேதி முடிவு பண்ணிருக்கோம். நீ மாப்ள எல்லாரும் ஒரு மாசம் முன்னாடியே வந்திடணும்”
“அம்மா அம்மா….ஒரு மாசம் முன்னாடி எல்லாம் வர முடியாதுமா….சக்தி இந்த வருஷம் லெவென்த் மா….ஒரு வாரம் முன்னாடி நான் வரேன்…கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி நவீயும் சக்தியுமா வருவா சரியா”
“ம்…சரி உங்க வசதியைப் பார்த்துக் கோங்கோமா. வேற என்ன மிருது?”
“வேற ஒண்ணுமில்லைமா”
“சரி வச்சுடவா. சக்திக் குட்டி ஸ்கூலுக்கு போயிருப்பா….நாங்க வர்ற சனிக்கிழமை அவகிட்ட பேசறோம்ன்னு சொல்லு”
“ஓகே !! சொல்லறேன். பை”
“ம்…பை.. பை..மிருது…வச்சுடறேன்”
என்று ஃபோன் காலை துண்டித்தாள் அம்புஜம். நவீன் அவன் காலை முடித்து வரும் வரை மிருதுளா மீதமிருந்த வீட்டு வேலைகளை எல்லாம் முடித்தாள். நவீன் வந்ததும் அவனிடம் கல்யாண தேதியைச் சொல்லி டிக்கெட் புக் பண்ண வேண்டுமே என்று கூற அதற்கு நவீன்…
“ஒரு மாசம் முன்னாடி பண்ணினா போதும் மிருது. “
“அப்படியா!!! அப்போ விலை ஜாஸ்த்தியா இருக்காது?”
“அவ்வளவு வித்தியாசமிருக்காது”
“அப்போ ஓகே அப்புறமா பண்ணிக்கலாம்.”
ராமானுஜம் அம்புஜம் சொன்னது போலவே அனைவரும் ஸ்கைப்பில் ஒருவரையொருவர் பார்த்து அறிமுகப் படுத்திக் கொண்டனர். அதன் பின் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு ஒரு சாஸ்த்திரிகளை வைத்து சும்மா சிம்பிளாக ஒரு நிச்சியத்தை நடத்தி முடித்தனர். கல்யாண தேதி நெருங்கியது. அப்போது அம்புஜமும் ராமானுஜமுமாக புடவை, வேஷ்டி அங்கவஸ்திரம், பூ பழங்கள் வைத்த தாம்பாளத்தில் தங்கள் மகனின் கல்யாண பத்திரிகையையும் வைத்து தங்களின் முதல் சம்மந்திகளான ஈஸ்வரன் பர்வதம் வீட்டிற்குச் சென்று கொடுத்தனர். அவர்களும் அதை வாங்கிக் கொண்டு விவரங்களை கேட்டறிந்துக் கொண்டனர். நவீனின் தம்பிகளுக்கு அழைப்பு விடுத்தனர். கவினுக்கும் கஜேஸ்வரிக்கும் ஃபோனில் அழைப்பு விடுத்தனர். பின் அனைத்து சொந்த பந்தங்களுக்கும் நேரில் சென்று பத்திரிகை வைத்து அழைத்தனர்.
மிருதுளாவும் நவீனும் அனைவரையும் ஃபோனில் அழைத்து வேனுவின் திருபணத்திற்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் ஈஸ்வரன் பர்வதம் குடும்பத்தினரை இவர்கள் இருவரும் அழைக்கவில்லை. நவீன் தன் சித்தியை அழைப்பதற்காக ஃபோன் செய்தான்
“ஹலோ சித்தி எப்படி இருக்கேங்கள்?”
“நன்னா இருக்கோம் டா நவீன். நீங்க எல்லாரும் எப்படி இருக்கேங்கள்?”
“வீ ஆல் ஆர் டூயிங் குட் சித்தி.”
“சரி என் மச்சினனுக்கு வர்ற அக்டோபர் பதினாறாம் தேதி கல்யாணம். அதுக்கு இன்வைட் பண்ண தான் கால் பண்ணினேன்”
“உன் மாமனாரும் மாமியாருமா எங்களுக்கு நேத்தே கால் பண்ணி இன்வைட் பண்ணிட்டா. பத்திரிகையும் இன்னைக்கு கிடைச்சாச்சு”
“ஓ!! சூப்பர்”
“சரி நான் ஒண்ணு உன்ட்ட கேட்கணுமே!!”
“என்னது சித்தி?”
“உன் அப்பா என்னமோ அந்த கல்யாணத்துக்கு போக மாட்டேன்னு சொன்னாறாம்….அதுக்கு கவின் தான் அவரை சமாதப்படுத்தி போகும்படி சொல்லியிருக்கானாமே!!!!”
“சித்தி அது தான் உங்களுக்கு எல்லா செய்தியும் டான்னு வந்துடறதே…அப்புறம் ஏன் என்கிட்டேயும் போட்டு வாங்கப் பார்க்கறேங்கள்?”
“அதுக்கில்லடா….உனக்கு தெரிஞ்சிருக்கும்….இல்லன்னு சொல்லலை ….இருந்தாலும் கேட்கலாமேனுட்டு தான் கேட்டேன்”
“அதெல்லாம் நீங்க சொன்னவா கிட்டேயே போய் கேளுங்கோ சித்தி….என்னை விட்டு….விடுங்கோ.”
“சரி டா அதுக்கு ஏன் இப்படி பேசற…விடு …மிருது இருக்காளா”
“ஆங் …சித்தி நான் எல்லாத்தையும் கேட்டுண்டு தான் இருக்கேன்….ஃபோன் ஸ்பீக்கர்ல தான் இருக்கு….”
“ஓ!!!அப்படியா….அப்போ எல்லமும் கேட்டிருப்ப!!! சரி சரி நாங்க உன் தம்பி கல்யாணத்துக்கு வர நிச்சயம் டிரைப் பண்ணறோம் மா. சரி வச்சுடவா”
“சரி சித்தி பை.”
என்று ஃபோனை வைத்ததும் மிருதுளா நவீனைப் பார்த்தாள்
“ஏன் மிருது என்னை அப்படி பார்க்கறே?”
“இல்ல நம்மாத்த நமக்கப்புறமா மூணு கல்யாணம் நடந்தது…அதுக்கு கவினோட கல்யாணத்தை தவிர மீதி ரெண்டு கல்யாணத்துக்கும் எங்க அப்பா அம்மாவை முறைப்படி அழைக்காட்டாலும் எங்க அப்பா அம்மா ப்ரவீன் கல்யாணத்துக்கும் வந்தா…பவின் கல்யாணத்துக்கும் வந்தா….அப்படி விட்டுக் கொடுக்காம வந்த எங்க அப்பா அம்மா ஆத்துல மொதோ தடவையா ஒரு விசேஷம்ன்னு கூப்பிட்டா உங்க அப்பா அம்மா அதையும் வச்சு கேம் விளையாடப் பக்கறது ரொம்ப கேவலமா இருக்கு”
“ஆமாம் எனக்கும் அது ரொம்பவே தப்பா பட்டுது….மறுபடியும் சொல்லறேன் மிருது….அவா கிடைக்கிற க்யாப் எல்லாத்தையும் இப்படி தான் யூஸ் பண்ணிப்பா….இப்பவாவது புரிஞ்சுக்கோ!!!”
“ஆனா பார்த்தேங்களா நம்ம கவின் உங்த அப்பாவுக்கு எடுத்துச் சொல்லியிருக்கான்…”
“ஆமாம் ஆமாம் நீ தான் உன் மச்சினனை மெச்சிக்கணும்…”
“ஏன் நவீ அப்படி சொல்லறேங்கள்?”
“அவனும் அவன் ஆத்துக்காரியும் எங்கடா வம்பு கிடைக்கும்னே அலையறவா….அப்படிப்பட்டவா இப்படி ஒரு சான்ஸை விட்டுவிடுவாளா?…உன் மாமனார் போகலைன்னா ….பசங்க ரெண்டு பேரும் போகமாட்டா….இவனுக்கும் குவைத்திலிருந்து செலவழிச்சுண்டு போக இஷ்டமில்லை….ஆனா அங்க என்ன நடக்கறது ஏது நடக்கறதுனுட்டு தெரிஞ்சுக்காட்டி இவா தலை வெடிச்சிடுமே….அதுனால ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிக்கறா மாதிரி….ஒரு பக்கம் அப்பாவை நான் தான் சமாதனப்படுத்தி நவீன் மச்சினன் கல்யாணத்துக்கு போக வச்சேன்னும் சொல்லிக்கலாம்….சொல்லிக்கலாம் என்ன….அப்படி தான் சொல்லி பரப்பிருப்பா…இன்னொரு பக்கம் அதே அப்பா அம்மாவை வைத்து உன் தம்பி கல்யாணத்துல என்னென்ன எப்படி நடக்கறதுன்னு எல்லா விவரங்களும் தெரிஞ்சுக்கலாம்….எப்படி…அவன் அப்பா அம்மாவுக்கே தெரியாம அவாளை மெஸெஞ்சரா யூஸ் பண்ணிக்கறான்..நீ வேற!!!”
அக்டோபர் மாதம் பிறந்தது. வேனுவின் கல்யாணம் வந்தது. மிருதுளா கூறியது போலவே ஒரு வாரம் முன்னாடியே சென்றாள். நவீனும் சக்தியும் திருமணத்திற்கு ஒரு நாள் முன் சென்றனர். அனைத்து சொந்தங்களும் கூடியிருந்தனர். ஈஸ்வரனும் பர்வதமும் வந்திருந்தனர். மிருதுளா சென்று அவர்களை வரவேற்று முன் வரிசையில் அமர வைத்தாள். திருமணத்திற்கு நவீன் வீட்டு சைடிலிருந்து ஈஸ்வரனும் பர்வதமும் மட்டும் வந்திருந்தனர். கல்யாணம் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. பர்வதத்திற்கு தாம்பூலம், பட்சணங்கள் எல்லாம் கொடுத்து வாசல் வரைச் சென்று வழியனுப்பி வைத்தனர் அம்புஜமும் ராமானுஜமும். அப்போது பர்வதம் போகுற போக்கில் சும்மா போகாமல்
“என்ன அம்ஜம் மாமி? பையனும் மாட்டுப் பொண்ணும் அவா பாட்டுக்கு லண்டனோ அமெரிக்காவோ கிளம்பிப் போயிடுவா…அப்புறம் நீங்க ரெண்டு பேரும் மறுபடியும் தனியாத் தான் இருக்கணும்…இல்லையா?”
“அதுனால என்ன பர்வதம் மாமி? இதுக்கு முன்னாடி எங்க புள்ள படிக்கப் போன போதும் நாங்க ரெண்டு பேரு மட்டும் தானே இருந்தோம்…எங்களுக்கு அதில ஒரு கஷ்டமுமில்லை. குழந்தைகள் நிம்மதியா சந்தோஷமா இருந்தாலே நமக்கு ஒரு தெம்பு தானே!!! என்ன சொல்லுறேங்கள்?”
என்று தான் ஏற்றி விட நினைத்தது பலிக்கவில்லை என்றுணர்ந்ததும்
“ம்….ம்…நாங்க வர்றோம்”
என்று கூறிவிட்டுச் சென்றனர்.
நவீன் அவர்களுடன் பேசவேயில்லை. எல்லாம் முடிந்து வேனுவும் மகதியுமாக லண்டன் சென்றனர். நவீனும் மிருதுளாவும் சக்தியுமாக குவைத் சென்றனர். மீண்டும் சென்னையில் அம்புஜமும் ராமானுஜமும் தனியாக இருக்கலானார்கள்.
ஒரு நாள் நவீனின் சித்தி மீண்டும் கால் செய்தாள்….நம்பரைப் பார்த்ததும் நவீன் மிருதுளைவை அழைத்து….அடுத்த நியூஸ் வரப் போறது …பீ ரெடி மிருது…என்று கூறிக்கொண்டே ஃபோனை எடுத்து
“ஹலோ சித்தி எப்படி இருக்கேங்கள்?”
“நாங்க நல்லா இருக்கோம் நவீன். நீங்க எல்லாரும் எப்படி இருக்கேங்கள்? உன் மச்சினன் கல்யாணமெல்லாம் எப்படி நடந்தது? கல்யாணம் விசாரிக்க தான் கால் பண்ணினேன்”
“அப்படியா சித்தி? சரி சரி சரி….நாங்க நல்லா இருக்கோம். வேனுவோட கல்யாணம் நல்லபடியா நடந்தது. இருங்கோ இதோ மிருதுட்ட பேசுங்கோ’
“ஹலோ சித்தி சொல்லுங்கோ”
“ம்….மிருது நான் உன்கிட்ட ஒண்ணு கேட்கணுமே”
“கேளுங்கோ சித்தி”
“ஆமாம் உன் தம்பி கல்யாணம் பண்ணிண்டிருக்கறது மராட்டி பொண்ணாமே….அப்படியா? ஏன் மராட்டி பொண்ணை கல்யாணம் பண்ணிருக்கான்? லவ் மேரேஜோ!!!”
“ஹா!! ஹா!!! ஹா!!!”
“ஏய் மிருது என்னத்துக்கு இப்போ சிரிக்கிற?”
“சித்தி அவ மராட்டி இல்ல …அவா பூர்வீகமெல்லாமே மதுரை சித்தி. ஆனா சின்ன வயசுலேயே மகதியோட தாத்தா பாட்டியெல்லாம் பம்பாயில செட்டிலாகிட்டா. சரி….அவ மராட்டின்னு உங்களுக்கு யார் சொன்னா?”
“ம்…அது வந்து …எல்லாரும் தான் சொன்னா!!”
“சித்தி நம்மாத்து சைடுலேந்து எங்க மாமனார் மாமியார் மட்டும் தான் வந்திருந்தா…ஸோ சொல்லணும்னா அவா தான் உங்க கிட்ட அப்படி சொல்லிருக்கணும்…”
“ம்…சரி மிருதுளா. நான் ஃபோனை வைக்கறேன். அடுப்புல ஏதோ வச்சுட்டு வந்துட்டேன் போல…நான் போய் பார்க்கட்டும்…பை”
“ஓகே சித்தி பை”
என்று ஃபோனை வைத்ததும். மிருதாள நவீனிடம்
“நவீ …இந்த மாநிரி ஒரு பொய்யை யாருப்பா பரப்பிருப்பா?”
“உங்காத்து சைடுலேந்து யாராவது கேட்டுருந்தா….நாம …யாரா இருக்கும்னு யோசிக்கணும்…ஏன்னா எல்லாருமே கல்யாணத்துல இருந்தா….ஆனா என் வீட்டு சைடான …நம்ம ஆல் இந்தியா ரேடியோ சித்தி கேட்குறான்னா….அது ஒருத்தா மட்டும் தான் காரணமா இருக்க முடியும். என்ன முழிக்கற? வேற யாரு? எல்லாம் உன் மாமனாரும் மாமியாருமே தான்.”
“இவ்வளவு நாளா நம்மளை பத்தி தான் இல்லாததும் பொல்லாததும் பரப்பிண்டிருந்தா….இடையில் கொஞ்ச நாள் என் அம்மாவையும் அப்பாவையும் வறுத்தெடுத்தா….இப்போ என் தம்பியையும் விட்டுவைக்கமாட்டா போல!!!”
“விடு விடு மிருது….இதுக்கு தான் சொல்லறேன்….. இவாளுக்கெல்லாம் மரியாதை மதிப்பு குடுத்தா எடைக்கு ரெண்டு ஆடு கேட்குற கூட்டம்ன்னு…எங்க நீயும் புரிஞ்சுக்கலை உன் பேரன்ட்ஸும் புரிஞ்சுக்கலை”
“ம்….ம்….நான் புரிஞ்சுண்டு ரொம்ப வருஷம் ஆகறது நவீ”
“அப்படியா மிருது? நம்பிட்டேன்!!!!”
தொடரும்……
அத்தியாயம் 104: புதுமனை புகுதல்!
மறுநாள் காலை நவீன் ஆஃபீஸிலிருந்து அனுப்பப்பட்ட வீடு பார்த்துத் தரும் ஏஜேன்ட்டிடமிருந்து கால் வந்தது. அதை அட்டென்ட் செய்த நவீன் தனக்கு எந்த மாதிரி வீடு வேண்டும் என்பதையும் அவர்களின் பட்ஜெட்டையும் சொன்னான். ஏஜென்ட் அவர்களின் எதிர்ப்பார்ப்பு படியே வீடுகள் உள்ளதாக கூறி ஓர் இடத்தின் பெயரைச் சொல்லி அங்கு வரும் படி சொன்னான்.
காலையிலேயே எழுந்து தயாராகி இருந்தனர் நவீனும் மிருதுளாவும் சக்தியும். அவர்கள் எதிர்பார்த்த கால் வத்ததும் உடனே மூவரும் கிளம்பிச் சென்றனர். காலை உணவாக வெறும் ப்ரெட்டை சாப்பிட்டு விட்டு சென்றனர்.
வீட்டு ஏஜென்ட் இரண்டு மூன்று வீடுகளை கூட்டிச் சென்று காண்பித்தார். ஆனால் அவற்றில் எல்லாம் ஏதோ ஒரு குறையிருந்தது. அப்போது நவீன் அவரிடம் தனக்கு வீடு மெட்ரோ ஸ்டேஷன் அருகே இருக்கவேண்டும் என்று சொல்ல உடனே அவர்
“இதை நீங்க முன்னாடியே சொல்லியிருந்தீங்கன்னா….அப்பவே அது மாதிரி காண்பித்திருப்பேனே…சரி வாங்க …ஒரு அம்சமான வீடு நீங்க கேட்கிறா மாதிரி மெட்ரோ ஸ்டேஷனிலிருந்து பத்தடி தூரத்துல இருக்கு. வந்து பாருங்க பிடிச்சிருந்தா ப்ரொசீட் பண்ணலாம்”
என்று கூறி அவர் சொன்னது போலவே மெட்ரோ ஸ்டேஷனிலிருந்து பத்தடி தூரத்தில் இருந்த ஒரு அழகான அப்பார்ட்மெண்ட்ஸுக்கு அழைத்துச் சென்று அதில் ஒரு வீட்டைக் காண்பித்தார். அந்த வீட்டிற்குள் சென்றதுமே மிருதுளாவிற்கும் சக்திக்கும் மிகவும் பிடித்துப் போனது. நல்ல வெளிச்சம் ப்ளஸ் நல்ல வடிவமான வீடாக இருந்தது. அவர்கள் இருவருக்கும் பிடித்துப் போனதால் நவீன் மற்ற விவரங்களை எல்லாம் பேசி முடித்து பதினைந்தாம் தேதி முதல் வாடகைக்கு எடுத்துக் கொள்வதாக அக்ரிமென்ட் எல்லாம் கையெழுத்துப் போட்டு அட்வான்ஸ் கொடுத்து முடிவு செய்து அந்த ஆஃபீஸிலிருந்து வெளியே வந்ததும் சக்தி
“அப்பா எனக்கு ரொம்ப பசிக்குதுப்பா…அதைவிட ரொம்ப தாகமா இருக்குப்பா..”
“சக்திமா இங்க வெளியில எங்கயுமே சாப்பிடவோ, தண்ணி குடிக்கவோ கூடாதும்மா…கொஞ்சம் வெயிட் பண்ணு நாம ஒரு டாக்ஸிப் பிடித்து ரூமுக்கு போயிடுவோம். அங்கே போய் சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிடுவோம். சரியா”
“நவீ எனக்கே ரொம்ப தாகமா இருக்கு அவ சின்னப் பொண்ணுப்பா….தொண்டை வரண்டு போயிடுத்து. காலையில ஏழு மணிக்கு ப்ரெட் சாப்பிட்டு கிளம்பியது ….இப்போ மணி ரெண்டாச்சு… இதுவரைக்கும் ஒரு பொட்டு தண்ணிக் கூட நாக்குல படலை. ம்…வெளியில பப்ளிக்ல தானே தண்ணிக் குடிக்கக் கூடாது …ம்…..அதோ நம்ம அண்ணாச்சி ஹோட்டல் இருக்கே அதுக்குள்ளப் போய் தண்ணிக் குடிச்சிட்டு அப்படியே சாப்பாடு பார்சல் வாங்கிட்டு போவோமா?”
“ம்….சரி அவாளும் அளௌ பண்ண மாட்டான்னு நினைக்கிறேன்…சரி வாங்கோ போய் கேட்டுப் பார்ப்போம்”
என்று மூவரும் ஹோட்டல் சரவணபவனுக்குள் சென்றனர். உள்ளே அனைத்து சேர்களும் டேபில்களின் மேல் கமுத்தி வைக்கப் பட்டிருந்தது. நவீன் குடும்பத்துடன் உள்ளே சென்றதும் அங்கிருந்த ஊழியர் ஒருவர் நவீனிடம்
“சார் நோ சர்வீஸ். ஓன்லி ஆஃப்டர் செவென் ஓ க்ளாக்”
“நாங்க தமிழ் தான்ப்பா…எங்களுக்குத் தெரியும்ப்பா….பார்சல் வாங்க வந்திருக்கோம்.”
“அப்படியா சார். சாரி தெரியாம வந்திருக்கீங்கன்னு நினைச்சுத் தான் அப்படி சொன்னேன்…”
“இட்ஸ் ஓகேப்பா…சரி மூணு மீல்ஸ் பேக் பண்ணிக் குடுங்க”
“ஓகே சார். மூணு மீல்ஸ் பார்சல்…..ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க சார் இதோ தந்திடறேன்”
“சரிப்பா….ஆங்…ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா!!”
“என்ன சார்?”
“எங்க பொண்ணுக்கு ரொம்ப தாகமா இருக்குதாம். காலையிலிருந்து தண்ணியே குடிக்காம வெய்யில்ல சுத்திக்கிட்டிருக்கோம். எங்க கிட்ட தண்ணி பாட்டிலிருக்கு ….வெளியில குடிக்க முடியாது ….ஸோ இங்க கடைக்குள்ள கொஞ்சம் தண்ணி மட்டும் குடிச்சுக்கலாமா ப்ளீஸ்”
“ஐய்யோ சார்…அதெல்லாம் கூடாது சார் …அப்புறம் எங்க லைசென்ஸ் போயிடும். இல்ல சார் மன்னிச்சுக்கோங்க. அது மட்டும் முடியாது சார். இருங்க உங்க பார்சல் வேணும்ன்னா சீக்கிரமா தரச் சொல்லறேன். டேய் மூணு சாப்பாடு பார்ஸல் சீக்கிரம் ரெடி பண்ணு. ஆனா இந்த தண்ணிக் குடிக்கறதெல்லாம் பண்ணக் கூடாது சார். ரொம்ப சாரி சார்”
“இட்ஸ் ஓகே. சக்தி ஜஸ்ட் வெயிட் ஃபார் ஃப்யூ மினிட்ஸ்..நாம ஹோட்டலுக்குப் போயிடலாம்”
“இந்தாங்க சார் உங்க பார்சல்”
“ஓகே. தாங்ஸ்ங்க நாங்க வர்றோம்”
“ரொம்ப சாரி அன்ட் ரொம்ப நன்றி சார்”
“பரவாயில்லை.”
என்று கூறிவிட்டு ஹோட்டலுக்கு வெளியே வந்து ஒரு டாக்ஸியில் ஏறி ரூமிற்குச் சென்றனர். ரூமிற்குள் சென்றதும் முகம் கை கால் கழுவி விட்டு மூவரும் சாப்பிட அமர்ந்தனர். நன்றாக சாப்பிட்டனர். மிருதுளா மட்டும் சரியாக சாப்பிடவில்லை அதை கவனித்த நவீன் அவளிடம்
“ஏன் மிருது நீ சரியாவே சாப்பிடலை?”
“எனக்கு வெய்யில்ல நடந்ததால நல்லா தலை வலிக்கறது நவீ. அதுதான் சாப்பிட முடியலை. வாந்தி வர்றா மாதிரி இருக்கு.”
“சரி சரி எழுந்து போய் கை அலம்பிட்டு நீ போய் படுத்துக்கோ”
“ம்…ஓகே… “
என்று கூறி விட்டு பாத்ரூமிற்கு சென்றவள் வாந்தி எடுக்க ஆரம்பித்தாள். உடனே நவீனும் சக்தியுமாக சென்று பாத்ரூம் கதவைத் தட்டினர். சற்று நேரம் கழித்து கதவைத் திறந்தாள் மிருதுளா. அவள் மிகவும் சோர்ந்துப் போயிருந்தாள். நேராக பெட்ரூமிற்குச் சென்று படுத்துக் கொண்டாள். நவீனும் சக்தியும் சாப்பிட்டு விட்டு அவர்களும் வெய்யிலில் அலைந்ததில் ட்ரெயின் அவுட்டாகியிருந்ததால் பேசாமல் படுத்துறங்கினர். மாலை ஒரு ஆறு மணிக்கு எழுந்தான் நவீன். எழுந்ததும் மிருதுளாவைப் பார்த்தான். அவள் மெல்ல முனகிக்கொண்டே உறங்கிக்கொண்டிருந்தாள். அவளின் நெற்றியைத் தொட்டுப் பார்த்த நவீன் உடனே ஒரு பாராசிட்டமால் மாத்திரையை ஒரு கிளாஸ் தண்ணீருடன் எடுத்து வந்து மிருதுளாவை எழுப்பி
“மிருது மிருது….எழுந்து இந்த மாத்திரையை போட்டுக்கோ…உன் உடம் அனலாக் கொதிக்கறது. ப்ளீஸ் எழுந்துருமா”
“ஆங்….நவீ….எனக்கு ரொம்ப முடியலை நவீ”
“சரி இந்தா இந்த மாத்திரையைப் போட்டுண்டு தூங்கிக்கோ”
என்று நவீன் மாத்திரையை கொடுத்ததும் மிருதுளா அதை விழுங்கியதும் மீண்டும் சுருண்டுப் படுத்துக் கொண்டாள். நவீன் காஃபி போட்டுக் குடிப்பதற்காக கிட்சனுக்கு செல்லும் வழியில் சக்தியிடமும் காஃபி வேண்டுமா என்று கேட்பதற்காக அவளின் ரூம் கதவைத் தட்டினான். பதில் வராததால் உள்ளே சென்றுப் பார்த்தான். சக்தியும் முனகிக்கொண்டிருந்தாள். அவளுக்கும் நன்றாக ஜூரம் இருந்தது. அவளையும் எழுப்பி மாத்திரைக் கொடுத்து உறங்க வைத்து விட்டு வெளியே வந்து ஒரு கப் காபி போட்டுக் கொண்டு ஹாலில் அமர்ந்து குடித்துக் கொண்டே தன் மனதிற்குள்
“என்ன இது ரெண்டு பேருக்குமே நல்லா ஜூரம் அடிக்குதே…பேசாம ஹாஸ்பிடல் கூட்டிண்டு போக வேண்டியது தான்….நைட்டு ஏதாவது ரொம்ப ஆச்சுன்னா அப்புறம் என்கிட்ட காருக் கூட கிடையாது எப்படி இவா ரெண்டு பேரையும் கூட்டிண்டுப் போறது!!! அதுனால இப்பவே ரிசெப்ஷனில் சொல்லி ஒரு கார் புக் பண்ணித் தரச் சொல்லுவோம்…..”
என்று எண்ணிக் கொண்டே ரிசெப்ஷனுக்கு கால் செய்தான்
“ஹலோ ஆம் காலிங்க ஃப்ரம் ரூம் 2023..ப்ளீஸ் அரேஞ்ச் எ டாக்ஸி ஃபார் அஸ் டூ கோ டூ ஹாஸ்பிடல்…அன்ட் பை தி வே….விச் ஈஸ் தி பெஸ்ட் ஹாஸ்பிடல் நியர் பை…”
“வாட் ஹாப்பென்ட் சார்?”
“மை வைஃப் அன்ட் டாட்டர் போத் ஆர் ஹாவிங் ஃபீவர்.”
“ஓ!! ஆம் சோ சாரி அபௌட் தட் சார். ஓகே சார் வில் அரேஞ்ச் அன்ட் கிவ் யூ எ கால் சார்”
“ப்ளீஸ் மேக் இட் ஃபாஸ்ட். தாங்ஸ்”
என்று பேசி முடித்ததும் மிருதுளாவையும் சக்தியையும் எழுப்பி ஹாலில் அமரச் சொல்லிக் கொண்டேயிருக்கையில் கார் வந்து விட்டது என்று ரிசெப்ஷனிலிருந்து கால் வந்தது. உடனே இருவரையும் இறுக்கமாக பிடித்துக் கொண்டு லிஃப்ட்டில் ஏறி கீழேச் சென்றான். அப்போது இருவரும் அவனின் இரு தோள்களில் சாய்ந்துக் கொண்டனர். அவர்களை அப்படியே தாங்கிப் பிடித்துக் கொண்டு காரில் ஏற்றி ஆஸ்பிட்டல் சென்றான் நவீன். அங்கே சென்றபோது மணி ஆறரை. நவீன் இருவரையும் ஒரு சோஃபாவில் அமரச் செய்துவிட்டு ஹாஸ்பிடல் ரிசெப்ஷனுக்குச் சென்று முதலில் இருவர் பெயர்களையும் ரெஜிஸ்டர் செய்தான். அப்போது அங்கிருந்த ஆஸ்பிட்டல் ஊழியர் நவீனிடம்
“இப்போது அனைவரும் இஃப்தாருக்கு சென்றுள்ளனர். ஒரு அரைமணி நேரமாகும் வெயிட் பண்ணுங்கள்”
என்று சொல்லி நவீனுக்கும் அவன் குடும்பத்திற்கும் பேரிச்சம்பழம், காபி, பிஸ்கெட் எல்லாம் வழங்கப் பட்டது. அதில் நவீன் மட்டும் எடுத்து சாப்பிட்டான். மிருதுளாவும் பேருக்கு ஒரே ஒரு பேரிச்சம்பழத்தை மட்டும் எடுத்துக் கொண்டாள் ஆனால் சாப்பிடவில்லை. சக்தி தனக்கு எதுவும் வேண்டாமென சொல்லி நவீன் மீது சாய்ந்துக் கொண்டாள்.
சரியாக அந்த ஆஸ்பிட்டல் ஊழியர் சொன்னதுப் போலவே அரைமணி நேரத்தில் டாக்டர் ரூமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கே டாக்டர் இருவரையும் பரிசோதித்துப் பார்த்துக் கொண்டே நவீனிடம்
“நீங்க இந்த ஊருக்குப் புதுசா வந்திருக்கீங்களா?”
“ஆமாம் டாக்டர். இப்போ தான் ரீலொக்கேட் ஆகியிருக்கோம்”
“எங்கேந்து வந்திருக்கீங்க? இந்தியாவா?”
“எஸ் டாக்டர் இந்தியா தான்”
“இந்தியாவுல எங்கே?”
“மைசூர் டாக்டர்”
“ஆம் ஃப்ரம் இரான். ஆனா நான் இந்தியா போயிருக்கேன். டில்லி, பெங்களூர் பார்த்திருக்கேன்”
“ஓ!! தட்ஸ் க்ரேட்…டாக்டர் ஹவ் இஸ் மை வைஃப் அன்ட் டாட்டர்?”
“இவர்கள் இருவருக்குமே லைட்டாக வைரல் ஃபீவர் வந்திருக்கு. இட் வில் டேக் ஃபைவ் டேஸ் டூ கெட் க்யூர். நான் சில மெடிசின்ஸ் ப்ரிஸ்க்ரைப் பண்ணறேன் அதை மூன்று வேளையிலும் சாப்பிட்டதுக்கு அப்புறமா குடுங்க. தே வில் பி ஆல் ரைட் இன் ஃபைவ் டேஸ்”
“தாங்ஸ் டாக்டர்”
“டேக் கேர் ஆஃப் தெம். மே பீ திஸ் ஹீட் மே நாட் சூட்டெட் தெம். தே வில் கெட் யூஸ்டு இன் ஃப்யூ டேஸ். ஹாவ் எ நைஸ் ஈவ்னிங்”
“தாங்ஸ் அன்ட் யூ டூ டாக்டர். பை.”
என்று இருவரையும் மீண்டும் அணைத்தப்படி டாக்ஸிப் பிடித்து ரூமிற்கு அழைத்துச் சென்று அவர்களை படுக்க வைத்தான். பின் டின்னர் ஆர்டர் செய்துவிட்டு தன் உடைகளை மாற்றிக் கொண்டு ஹாலில் வந்தமர்ந்தான். சாப்பாடு வந்ததும் மிருதுளாவையும், சக்தியையும் எழுப்பி சாப்பிட வைத்து அவர்களுக்கு மாத்திரையைக் கொடுத்தான். இருவரும் கொஞ்சமாக சாப்பிட்டு பின் மாத்திரையைப் போட்டுக் கொண்டு போய் படுத்துறங்கினர். ஐந்து நாட்கள் இப்படியே இருந்தனர். நவீனும் அவனது ஆஃபீஸ் ஜாய்னிங் டேட்டை தள்ளிப் போட்டான்.
பதினைந்தாம் தேதி வந்தது. சக்திக்கு உடம்பு முழுவதுமாக சரியானது. அவர்கள் புது வீட்டிற்கு பால் காய்ச்சும் நாள் விடிந்ததும் கொஞ்சம் தேவலாமென்று இருந்த மிருதுளா ….தான் ஊரிலிருந்து தன்னுடனே எடுத்து வந்த ஒரு பாத்திரம், காமாட்சி விளக்கு, சிறிய எண்ணெய் பாட்டில், சாமி படங்கள் ஆகியவைகளை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு போற வழியிலிருந்த சூப்பர் மார்க்கெட்டில் ஒரு பாட்டில் பாலும், ஒரு பாக்கெட் சர்க்கரை, இருபத்தைந்து பேப்பர் கப்புகள் கொண்ட ஒரு பேக்கும், ஒரு ஹல்தீராம்ஸ் சோன்பப்டி டப்பா, ஒரு இன்டெக்ஷன் அடுப்பு என அனைத்தையும் வாங்கிக்கொண்டு வெளியே வந்ததும் …. அதனருகே இருந்த தமிழ் கடையைப் பார்த்தாள்…உடனே அந்த கடையினுள் சென்றாள்….அங்கே பூவைப் பார்த்ததும் அதையும் வாங்கிக் கொண்டு அவர்களின் புது வீட்டிற்குச் சென்றனர். அங்கே அனைத்தையும் வைத்து, சாமி படங்களுக்கு பூ மாலையிட்டு, விளக்கில் எண்ணெய் ஊற்றி, இன்டெக்ஷன் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி ரெடியாக வைத்துவிட்டு நல்ல நேரத்துக்காக காத்திருந்தனர். நல்ல நேரம் வந்ததும் விளக்கேற்றி, பால் காய்ச்சி மூவருமாக சாமியிடம் நன்றாக வேண்டிக்கொண்டு பின் காய்ச்சினப் பாலை மூன்று கப்பில் ஊற்றி குடித்தனர்.
பின் வீட்டை நன்றாக மீண்டும் சுற்றிப் பார்த்தனர். ஊரிலிருந்து பொருட்கள் வந்ததும் எது எது எங்கெங்கே வைக்கலாமென்று மிருதுளாவும் சக்தியுமாக டிஸ்கஸ் செய்துக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டே தரையில் அமர்ந்திருந்தான் நவீன். அதை கவனித்த மிருதுளா அவனிடம்
“என்ன நவீ எங்களையே அப்படிப் பார்த்துண்டிருக்கேங்கள்?”
“இல்ல போன நாலு நாளா நீங்க ரெண்டு பேரும் இருந்த இருப்பையும் இன்னைக்கு நீங்க பேசிண்டிருக்கறதையும் கம்பேர் பண்ணிப் பார்த்துண்டிருக்கேன்…..அப்பப்பா ரெண்டு பேரும் இப்படி பேசிண்டிருக்கலைன்னா என்னமோ மாதிரி இருக்கு…..ப்ளீஸ் இனிமேல் உடம்புக்கு முடியாம படுத்திடாதீங்கோ”
“என்னப்பா வேணும்னே நாங்க உடம்புக்கு வரவழைச்சுப் படுத்துண்டா மாதிரி சொல்லறேங்கள். நாங்க என்ன பண்ணுவோம்!!! வந்துடுத்து…சரி அதோட த்ருஷ்டி எல்லாம் கழிஞ்சுதுன்னு வச்சுக்க வேண்டியது தான்”
“ம்…அதுவும் சரி தான். சரி என்னைக்கு இந்த வீட்டுக்கு ஷிஃப்ட் பண்ணலாம்.?”
“இன்னைக்கு நைட்டு மட்டும் இங்கே தங்கிட்டு…அப்புறம் நம்ம பொருளெல்லாம் வந்ததுக்கப்புறமா இரண்டு, மூன்று நாளா வந்து எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணிட்டு வருவோம் என்ன சொல்லறேங்கள்?”
“ம்…எனக்கு ஓகே! சக்தி மா உனக்கு?”
“எனக்கும் ஓகே தான்….சரிமா அது என்ன இன்னிக்கு நைட்டு மட்டும் இங்கே இருக்கணும்னு சொல்லற? ஏன் நாம நம்ம திங்ஸ் எல்லாம் வந்ததுக்கப்புறமா வந்தா போதாதா?”
“இல்ல சக்தி. நாளையோட வைகாசி முடியறது அதுனால இன்னைக்கு இங்கே தங்கிட்டா நாம வைகாசியில ஷிஃப்ட் ஆனா மாதிரி அர்த்தம். ஸோ இதுக்கப்புறமா எப்போ வேணும்னாலும் நாம ஷிஃப்ட் பண்ணிக்கலாம். புரியறதா?”
“ம்…புரியறதுமா! ஆனா இதெல்லாம் வெளிநாட்டுக் காரா பார்க்கறதில்லையே!!! ஆனாலும் அவா எல்லாரும் நல்லா தானே இருக்கா?”
“அவாளும் பார்ப்பாளா இருக்கும் நமக்கு எப்படித் தெரியும்? நாம ஒரு விஷயத்தை வச்சுப் பார்க்கறோம்…அவா எதை வச்சுப் பார்ப்பாளோ!!! யார்கிட்டேயாவது விசாரிச்சா தெரிஞ்சுடப் போறது…”
“சரி ரெண்டு பேருமா இந்த ஆராய்ச்சியை அப்புறமா நிதானமா பண்ணிக்கோங்கோ….இப்ப வரேங்களா போய் டின்னர் சாப்டுட்டு வருவோம்”
“ம்…ஓகேப்பா…பட் திஸ் டைம் லெட் அஸ் கோ டூ அ நார்த் இந்தியன் ரெஸ்டாரன்ட் பா…நாலு நாளா வெறும் இட்டிலி, ரசம் சாதம்ன்னு சாப்பிட்டு போர் அடிச்சிடுத்துப்பா”
“ம்….அதுதான் நம்மளை நாலு நாள்ல குணமாக்கித்து சக்தி …அதை மறந்திடாதே”
“அப்படின்னா டாக்டர் தந்த மாத்திரை நம்மளை குணமாக்கலைன்னு சொல்லறையாமா?”
“ரெண்டும் தான்”
“அப்போ ரெண்டு பேருக்கும் எல்லாம் கரெக்ட்டான ஃபுட் ஆர்டர் செஞ்சு, அதை கட்டிலிலேயே கொண்டு வந்துக் குடுத்து, உங்களை சாப்பிட வச்சு, உங்களுக்கு கரெக்ட்டா மாத்திரைக் குடுத்த என்னால இல்லன்னு சொல்லறேங்கள் இல்ல”
“அய்யோ நவீ….அப்படி எப்படி நாங்க சொல்லுவோம்!! நீங்க இல்லைன்னா நாங்க இல்லை நவீ.”
“ஆமாம்மா அப்பா தான் எல்லாத்துக்குமே காரணம்….நம்மளை இங்கே இந்த நேரத்துல கூட்டிண்டு வந்தது…வெய்யிலில் அலைய விட்டது….அதுனால நமக்கு உடம்பு சரியில்லாம போனது, டாக்டர்ட்ட கூட்டிண்டு போனது…நம்மளை நல்லபடியா கவனிச்சுண்டதுன்னு எல்லாமே அப்பா தான்….ஓகே வாப்பா!!”
“இதுக்கு நீ சும்மா இருந்திருக்கலாம் சக்தி”
“சாரிப்பா …இட்ஸ் ஜஸ்ட் ஃபார் ஃபன்ப்பா”
“ம்..ம்…ஓகே ஓகே!!! சரி வாங்கோ வாங்கோ”
என்று வெளியே சென்று இரவு உணவு உண்டு வந்ததும் அவர்களின் புது வீட்டில் படுத்துறங்கினர். மறுநாள் காலை எழுந்ததும் முகத்தை மட்டும் அலம்பிக் கொண்டு டாக்ஸியில் ஹோட்டலுக்குச் சென்று ஃப்ரெஷ் ஆனார்கள். மிருதுளாவுக்கும் சக்திக்கும் குணமானதால் நவீன் அன்று முதல் வேலையில் சேர்ந்தான். மிருதுளாவும் சக்தியுமாக பக்கத்திலிருந்த சுப்பர் மார்க்கெட்டுக்குள் சென்று காய்கறிகள், சில மளிகை சாமான்கள் எல்லாம் வாங்கி வந்து …மிருதுளா சமைத்தாள்….சக்தி அவளுக்கு காய்களை அறிந்துக் கொடுத்து உதவினாள். சமையல் வேலைகள் முடிந்ததும் ரூம் க்ளீனிங்கிற்கு ஆட்களை வரச்சொல்லி ஃபோனில் ரிசெப்ஷனிஸ்ட்டிடம் சொன்னாள் மிருதுளா. ஏனெனில் அவர்கள் இருவரும் உடம்பு சரியில்லாமல் இருந்த நான்கு நாட்களும் நவீன் க்ளீங்கிற்கு ஆட்களை வரச் சொல்லவில்லை. ஆட்கள் வந்தனர்…ரூமை முழுவதுமாக சுத்தம் செய்தனர், பெட்ஷீட், பில்லோ கவர் என அனைத்தையும் மாற்றினர், பாத்ரூம் டாய்லெட் க்ளீன் செய்தனர். எல்லாம் முடிந்து அவர்கள் செல்லும் முன் மிருதுளா அவர்களுக்கு நன்றி தெரிவித்தாள். பின் நவீனுக்கு கால் செய்து மத்திய சாப்பாட்டிற்கு ரூமுக்கு வருமாறு சொன்னாள். அதற்கு நவீன்
“எப்படியும் ஆர்டர் பண்ணணும் மிருது… ஸோ…நீங்க உங்களுக்கு வேண்டியதை ஆர்டர் பண்ணி சாப்பிடுங்கோ. நான் எனக்கு வேண்டியதை ஆர்டர் செஞ்சு சாப்ட்டுக்கறேன்”
“இல்ல நவீ நீங்க வாங்கோ. நான் சமைச்சிருக்கேன். நாம மூணு பேருமா உட்கார்ந்து சாப்பிடுவோம்”
“என்னது சமைச்சியா? எப்படி? பொருள் ஒண்ணுமே நாம வாங்கலையே அப்புறம் எப்படி?”
“நீங்க வந்து சாப்டுட்டு போயிடுங்கோ. என்ன ரோட க்ராஸ் பண்ணணும் அவ்வளவு தானே நவீ”
“ஓகே…நான் இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்.”
என்று சொன்னதுப் போலவே ரூமுக்கு வந்தான் நவீன். உள்ளே நுழைந்ததும்
“ஆஹா ஆஹா!!! என்ன ஒரு ரசம் வாசம்….சூப்பர் மிருது….ஆமாம் என்ன இன்னைக்கு ரூமே பளிச்சுன்னு இருக்குறா மாதிரி தோணறதே!!!”
“ம்…ஆமாம் நவீ ..பளிச்சுன்னு தான் இருக்கு. ஏன்னா நான் ஹவுஸ் கீப்பிங்குக்கு கால் செஞ்சு வரச் சொல்லி க்ளீன் பண்ணிருக்கேன். சரி சரி வாங்கோ சாப்பிடலாம்”
என்று பத்து பதினைந்து நாட்களாக ஹோட்டல் சாப்பாட்டையே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் அன்று தான் வீட்டு சாப்பாட்டை சாப்பிட்டனர். சாப்பிட்டுக் கொண்டே நவீன் மிருதுளாவிடம் சமைப்பதற்கான பொருட்கள் எங்கிருந்து வந்தது என விசாரிக்க சக்தி நடந்ததைக் கூறி முடிக்கவும் அவர்கள் சாப்பிட்டு எழுந்திரிக்கவும் சரியாக இருந்தது. கடைசியில் மிருதுளா
“இங்க நம்ம ஊர் ஐட்டம்ஸ் எல்லாமே கிடைக்கறது நவீ.”
“சூப்பர் சாப்பாடு மிருது. தாங்ஸ்.”
“என்னத்துக்கு இப்போ தாங்ஸ்….சரி நம்ம பொருட்கள் எல்லாம் நாளைக்கு வந்திடும் இல்லையா?”
“எஸ் எஸ்…வந்திடும் அதை அவா நேரா நம்ம புது வீட்டுல கொண்டு இறக்கித் தந்திடுவா. நான் நாளைக்கு லீவு போட்டிருக்கேன்… அவா பத்து மணிக்கு டெலிவர் பண்ணிடுவோம்னு சொல்லிருக்கா ….ஸோ…. நாம காலையிலேயே அங்கே போயிடணும். சரி நான் ஆஃபீஸுக்கு போயிட்டு சாயந்தரமா வரேன் பை மிருது பை சக்தி.”
“பை நவீ”
“பைப்பா”
மறுநாள் காலையில் எழுந்து புறப்பட்டு அவர்கள் பார்த்து பால் காய்ச்சின வீட்டுக்குச் சென்றனர். பத்து மணிக்கு பொருட்கள் வீட்டிற்கு வந்தது. அதை வீட்டிற்குள் வைத்து அனைத்தையும் அன்பேக் செய்து விட்டுச் சென்றனர் பேக்ர்ஸ் அன்ட் மூவர்ஸ். அவர்கள் சென்றதும் ஒவ்வொன்றாக எங்கெங்கு வைக்க வேண்டுமென ப்ளான் செய்திருந்தார்களோ அந்தந்த இடங்களில் அனைத்துப் பொருட்களையும் மூவருமாக அடுக்கி வைத்தனர். இரண்டு நாட்கள் எடுக்கும் என நினைத்திருந்தாள் மிருதுளா…ஆனால் ஒரே நாளில் எல்லா வேலைகளும் முடிந்தன. உடனே மிருதுளா நவீனிடம்…
“நவீ நாம இன்னைக்கே ஹோட்டல காலி செய்து பெட்டிகளை எல்லாம் எடுத்துண்டு இங்கேயே வந்திடலாமே”
“மிருது நாம நாளைக்கு போய் மளிகை சாமான்கள் அன்ட் காய்கறிகள் எல்லாம் வாங்கிண்டு வந்து அதையும் அது அது இடத்துல வச்சுட்டு நாளை மறுநாள்லேந்து இங்க இருப்போமே….ஏன்னா நாளை மறு நாள் வீக்கெண்ட் ஸோ நான் லீவு போட வேண்டாம் அதுதான் சொன்னேன்”
“ஓகே நவீ அப்படியே செய்திடுவோம்”
என்று முடிவெடுத்து அதுபடியே மூவரும் அவர்கள் புது வீட்டில் செட்டில் ஆனார்கள். ஃபோன், டிவி கனெக்ஷன் வந்தது. நவீன் மெட்ரோவில் வேலைக்குச் சென்று…மத்தியம் ட்ரைவிங் லைசென்ஸுக்கா ட்ரைவிங் க்ளாஸ் இரண்டு மணிநேரம் போய்….பின் மீண்டும் ஆஃபீஸுக்கு வந்து வேலையைப் பார்த்துவிட்டு மாலை ஆறு மணிக்கு வீட்டுக்குச் சென்றான். அவர்கள் குடியிருந்த அப்பார்ட்மெண்ட்டிலேயே இந்தியர்கள் மற்றும் மற்ற நாட்டுக் காரர்களும் நண்பர்களாகக் கிடைத்தனர். ஒரே மாதத்தில் நவீனுக்கு லைசென்ஸ் கிடைத்தது. அதை சொன்னதும் நண்பர்களும் ஆஃபீஸ் காரர்களும் ஆச்சயமானார்கள்…. ஏனெனில் அங்கு அவ்வளவு எளிதில் லைசென்ஸ் கிடைத்திடாதாம். அதை நவீன் மிருதுளாவிடம் சொன்னதும் அவள்
“நமக்கு எல்லாம் நல்லதே நடக்கும் நவீ”
என்றாள். அதைக் கேட்டதும் நவீன்
“ஆமாம் மிருது. யூ ஆர் ரைட்”
“சரி அதெல்லாம் இருக்கட்டும் எப்போ கார் வாங்கப் போறேங்கள் நவீ?”
“வர்ற வீக்கென்ட் போய் புக் பண்ணிட வேண்டியது தான்”
அவர்கள் பேசிக்கொண்டது போலவே பெரிய செவன் சீட்டர் எஸ்.யூ.வி ஒன்றை புக் செய்துவிட்டு வந்தனர். அதுவரை வெய்யிலில் அலைந்தவர்கள் இனி வெய்யிலில் செல்ல வேண்டிய அவசியமின்றியானாது….கார் வந்தது…வசதியானது.
சக்திக்கு ஸ்கூல் திறந்தது. அவள் பள்ளியில் உலகிலுள்ள அனைத்து நாட்டைச் சேர்ந்த குழந்தைகளும் இருந்தனர். சக்திக்கு ஆரம்பத்தில் அனைவரோடும் மிங்கிள் ஆவதற்கு சற்று தயக்கமிருந்தாலும் இரண்டே மாதங்களில் நண்பர் பட்டாளம் பெருகியது. அவளும் நன்றாக புதுப் பள்ளியில் செட்டில் ஆனாள். இப்படியே அவர்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. அப்போது கவினின் மகன் உபநயனம் நடைப்பெறயிருந்த நாள் வந்தது. கஜேஸ்வின் இவர்கள் இந்தியாவில் இருந்தப் போது விவரம் தெறிந்துக் கொள்வதற்காக அழைத்தது தான் அதன் பின் எந்த வித அழைப்புமில்லை, ஃபோன் காலும் இல்லை, வழக்கம் போல பத்திரிகையும் இல்லை. ஆனால் அன்று மாலை மிருதுளா நவீனை கன்வின்ஸ் செய்து இருவருமாக இந்தியாவிலிருக்கும் கவினுக்கு அவன் குவைத் நம்பரில் கால் செய்தனர்….
“ஹலோ யார் பேசறது?”
“ஹலோ நான் நவீன் பேசறேன்”
“நான் பிஸியா இருக்கேன் அப்புறமா கால் பண்ணறேன்”
என்று முகத்தில் அறைந்தார் போல ஃபோனை வைத்தான் கவின். அதை கேட்டதும் மிருதுளா நவீனிடம்…
“ஆம் சாரி நவீன்…..இந்த சினிமா சீரியல்ல எல்லாம் வர்றா மாதிரி நாம நல்லதே செஞ்சா நமக்கு கெட்டது செஞ்சவா கூட திருந்திடுவான்னு தான் நான் இவ்வளவு நாளா எல்லாத்தையும் பொறுத்துண்டு இருந்தேன்….அதுனால தான்…அவா நம்மளை மதிக்காட்டாலும்… பத்திரிகை அனுப்பாட்டாலும் ….எப்பவுமே விசேஷங்களை அட்டென்ட் பண்ண உங்களையும் கன்வின்ஸ் பண்ணி அழைச்சுண்டு போயிருக்கேன்…இப்பவும் நாமளா ஃபோன் பண்ணி விஷ் பண்ணினா அவா திருந்துவான்னு நினைச்சேன்….நம்மளைப் புரிஞ்சுப்பான்னு நினைச்சேன்….அதுவுமில்லாம உங்களுக்குத் தெரியாம…..கவினோட ஃபேஸ் புக்குல அந்த குழந்தையோட உபநயனம் பத்திரிகையை போட்டிருந்தான்….அதைப் பார்த்து அந்த அட்ரெஸுக்கு நான் ஆன்லைன்ல கிஃப்ட் அனுப்பியிருக்கேன்…..ஆனா இப்படி மூஞ்சில அடிச்சா மாதிரி பண்ணுவான்னு சத்தியமா நான் நினைக்கலை நவீ…”
“நான் எதிர்பார்த்தது தான் மிருது …ஸோ….எனக்கிது ஷாக்காவே இல்ல…அவாகிட்டேந்து வேற எதை எதிர்ப்பார்க்கறது? உனக்காக உன் திருப்திக்காக பண்ணினேன் அவ்வளவு தான்….நீ சொன்னதெல்லாம் சினிமா சீரியல்கள்லே வேணும்னா நடக்கலாம் ஆனா ரியல் லைஃப்ல அது மாதிரி எல்லாம் நடக்கறது ரொம்ப ரேர் மிருது. நீ கிஃப்ட் அனுப்பினது….உன் எண்ணம் எல்லாமே சரி தான்….மனுஷான்னா இப்படி தான் இருக்கணும்….இதுல எந்த வித தப்புமில்ல ஆனா யாருக்கு? யார்கிட்ட? அது முக்கியமில்லையா? என்னையே இரண்டு லட்சம் தரலைன்னதும் தூக்கிப் போட்ட கூட்டம் அது மிருது. அவாளைப் பொறுத்த வரை பணம் தான் எல்லாம். அது தான் ஃபர்ஸ்ட் மத்ததெல்லாம் நெக்ஸ்ட்….”
“அதை செஞ்சதும் சொன்னதும் உங்க அப்பா அம்மா தானே நவீ….அவா காலமும் கம்மி தான் ….அவாளுக்கு அப்புறம் வாழப்போறது நாம எல்லாரும் தானே….”
“நீ சொல்லறது எல்லாமே லாஜிக்கலி வெரி கரெக்ட் ஆனா அங்கே அதெல்லாம் எடுப்படாதுன்னு நமக்கு தெரிஞ்சதுமே நான் மனசாலையும் உறவாலையும் அவாளை விட்டு விலகி பல வருஷமாகிடுத்து….நீ தான் அந்த ரியாலிட்டிய ஏத்துக்க மறுக்குற மிருது….நல்லா யோசிச்சுப் பாரு மிருது…உன்னையோ …இல்ல…. நம்மை அங்க யாராவது மதிக்கறாளா? நாம எப்படி இருக்கோம்னோ…இல்ல நம்ம சக்தி எப்படியிருக்கா என்னப் பண்ணறானோ என்னைக்காவது யாராவது கேட்டிருக்காளா? இவாலெல்லாம் திருந்துவான்னு நீயும் நம்பற பாரு….”
“நம்பிக்கை தானே வாழ்க்கை நவீ…பார்ப்போம் அதுதான் அப்புறமா கால் பண்ணறேன்னு சொல்லிருக்கானே!!!!”
“ஆமாம் ….ஆமாம்…சொல்லிக்க வேண்டியது தான்….ஃபோன் பக்கத்திலேயே இரு….கால் வந்திட கிந்திட போறது”
தொடரும்…….
அத்தியாயம் 103: எஸ்கலேட்டர்!!
குவைத் மண்ணில் தரையிறங்கியது விமானம். நவீன், மிருதுளா, சக்தி மூவரும் மூவாயிரத்தி ஐநூற்றி நாற்பத்தி ஓரு கிலோமீட்டர் பிரயாணம் செய்து குவைத் மண்ணில் கால் வைத்தனர். இமிக்ரேஷன் எல்லாம் முடிந்து தங்களின் பெட்டிகளையும் எடுத்துக் கொண்டு குவைத் ஏர்ப்போர்ட்டு வெளியே வந்தனர். மிருதுளா எதிர்ப்பார்த்த விஷயமான தன் மச்சினன் அவன் மனைவியின் வரவு …நவீன் சொன்னதுப் போலவே வெறும் நப்பாசையானது. ஆனால் நவீனின் பெயர் பலகைக் கொண்டு ஒருவர் காத்திருந்ததைப் பார்த்த நவீன் நேராக அவரை நோக்கி நடக்கலானான். அப்போது மிருதுளா நவீனிடம்
“இவர் யார் நவீ உங்க பெயர் எழுதியப் பலகையை வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்?”
“ம்….உன் மச்சினனும் ஓர்பிடியும் தான் நம்மளை ரிசீவ் பண்ணி அவா ஆத்துக்கு அழைச்சுண்டு வர்றதுக்காக அனுப்பிருக்கா போல!!”
“ஹேய் நவீ….விளையாடாதீங்கோ நவீ…..உங்களை நான் கிண்டல் பண்ணணும் ஆனா நீங்க பண்ணறா மாதிரி நானே வச்சுட்டேன். சரி சரி சொல்லுங்கோப்பா யார் இவர்.”
“இவரை அனுப்பியிருக்கறது என்னோட இங்கத்த ஆஃபீஸ் காரா தான் மிருது.”
“அப்போ உங்களுக்கு இங்க ஆள் நமக்காக வெயிட் பண்ணுவானு முன்னாடியே தெரியுமா?”
“ஆங்…தெரியுமே”
“அப்படீன்னா ஏன் நீங்க நேத்து நான் அப்படி சொல்லும் போதே இதைப் பத்தி சொல்லலை”
“நேத்து நீ எதை சொல்லும் போது நான் எதைப் பத்தி சொல்லலைன்னு சொல்லுற மிருது”
“ம்…..உங்க…சாரி …சாரி என் மச்சினனும் ஓர்பிடியும் ஏர்போர்ட் வருவான்னு சொன்னபோது ஏன் உங்க ஆஃபீஸ்லேந்து நம்மை பிக்கப் பண்ண ஆள் வருவானு சொல்லைலைன்னு கேட்டேன். புரியறதா!!”
“ம்…நல்லாவே புரியறது மிருது. இப்போ நீ கார்ல ஏறு. சக்தி மா ஏறு கண்ணா.”
“வாவ் !! அப்பா சூப்பர்”
“என்னடி சூப்பர் சக்தி”
“அம்மா நம்மளை பிக்கப் பண்ண வந்திருக்கும் காரைப் பாரும்மா….இட்ஸ் மெர்க் மா மெர்க்”
“அதுனால என்ன எல்லா காரும் நாலு சக்கரத்துல தானே ஓடும்!! இது மட்டும் என்ன ரெண்டு சக்கரத்துலயா ஓடப்போறது இவ்வளவு ஆச்சர்யப்படற!!”
“அம்மா உள்ளே உட்கார்ந்துப் பாரு யூ வில் ஃபீல் தி டிஃப்ரெனஸ்”
என்று சக்தி சொன்னதும் உள்ளே ஏறினாள் மிருதுளா.
“ம்…நல்ல சொகுசா தான் இருக்கு”
“நான் தான் சொன்னேன் இல்லமா”
“மிருது இது ரோட்டுல ஓடறா மாதிரியே இருக்காது. சரி சரி ரெண்டு பேரும் சீட் பெல்ட் போட்டுக்கோங்கோ. ஆல் ஓகே! லெட்ஸ் கோ டூ தி சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் நவ்”
“ஓகே சார்”
“ம்…நீ தான் ரொம்ப ஆசைப்பட்ட உன் சொந்தங்தள் எல்லாம் வருவானுட்டு அதை ஏன் அப்பவே நான் சொல்லி அதில் மண்ணைப் போடணும்னு தான் சொல்லலை போதுமா.”
“ம்….ம்….ஓகே !! ஓகே!!! நாம அந்த சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் போக எவ்வளவு நேரமாகும்?”
“இட் வில் டேக் பிஃப்டீன் மினிட்ஸ்”
“அவ்வளவு தானா?”
“ஆமாம் மிருது.”
மிருதுளாவும் சக்தியும் காரின் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டும் அதைப் பற்றி பேசிக் கொண்டும் இருந்தனர்.
இருவரும் அவரவர் முகநூல் பக்கத்தில் தாங்கள் நல்லபடியாக குவைத் வந்து சேர்ந்துவிட்டதாகவும்…இனி அதுவே அவர்கள் வசிக்கப் போகும் இடம் எனவும் ஏர்போர்ட்டில் எடுத்த ஃபோட்டோவைப் போட்டு பதிவிட்டனர். நவீன் வீட்டு அதிமேதாவிகளான எட்டுப் பேரைத் தவிர அனைத்து நண்பர்கள், சொந்தங்கள் எல்லாம் வாழ்த்துத் தெரிவித்தனர்.
கார் ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட் வாசலின் முன்னிருந்த பார்க்கிங்கில் நின்றது. மூவரும் இறங்கினர். டிரைவர் அவர்கள் பெட்டிகளை எடுத்து வெளியே வைப்பதற்கு முன்னதாகவே அந்த சர்வீஸ் அப்பார்ட்மெண்டிலிருந்து ஒருவர் டிராலியைக் கொண்டு வந்து பெட்டிகளை அதில் அடுக்கி வைத்து உள்ளே எடுத்துச் சென்றார். நவீன் மிருதுளாவையும் சக்தியையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான். உள்ளே சென்று தங்களது அப்பார்ட்மெண்ட்டைப் பார்த்ததும் மிருதுளா நவீனிடம்
“என்ன நவீ இது ஃபைவ் ஸ்டார் ப்ராப்பர்ட்டி மாதிரி இருக்கு!!”
“மாதிரி இல்ல மிருது. ஃபைவ் ஸ்டார் ப்ராப்பர்ட்டியே தான். அப்படிப் பட்ட வேலையும் அதுக்கு ஏத்த சம்பளமும் இப்படிப்பட்ட சௌகர்யமும் இல்லாட்டி நான் ஒத்துண்டிருக்க மாட்டேனே!!”
“சூப்பரா இருக்கு நவீ. நான் இதெல்லாம் கனவுல கூட நினைச்சுப் பார்த்ததில்லை. மெர்சிடீஸ் காரு…ஃபைவ் ஸ்டார் ப்ராப்பர்ட்டி…. இதெல்லாம் பார்க்கும் போது எனக்கு சந்தோஷமும் வர்றது அதே நேரம் கொஞ்சம் பயமும் வர்றது”
“சந்தோஷம் வர்றது ஓகே….ஆனா….ஏன் பயம் வர்றது மிருது.”
“எப்பவுமே நாம நம்ம வாழ்க்கையில ஒவ்வொரு படியா மேலே ஏறி வரும் போதெல்லாம் எனக்கு அப்படித் தான் தோனித்து, தோனறது….இனியும் தோனும் நவீ”
“அது தான ஏன்னு கேட்கிறேன் மிருது”
“நாம எஸ்கலேட்டர் ல ஏறும் போது எவ்வளவு ஜாக்கிரதையா நமது காலை எடுத்து வைத்து ஏறறோம் !!! ஏன் அப்படி?அது நம்மளை மேலே கூட்டிண்டு போகப் போறதுனு நம்பிக்கை இருந்தாலும் நாம அதுல காலை சர்வ ஜாக்கிரதையா தானே வைக்கறோம்!”
“ஏன்னா எங்கேயும் விழுந்துடக் கூடாதுங்கறதுனால அப்படி பண்ணறோம். ஆனா…அதுக்கும் நீ இப்ப சொன்னதுக்கும் என்ன சம்மந்தம்”
“இருக்கு நவீ. அதே போல வாழ்க்கைங்கற எஸ்கலேட்டர் நம்மை மேலே கூட்டிண்டு போகும்னு நம்பினாலும் நாம வைக்கற ஒவ்வொரு ஸ்டெப்புமே ஜாக்கிரதையா தான் வைக்கணும்….வைக்கறது மட்டுமில்ல பின்னாடி விழுந்துடாமலும் இருக்கணும். ஏறும்போது வலி இருக்காது… அப்படியே…இருந்தாலும் அது ஏறணும்ங்கற நினைப்புல நமக்குத் தெரியாது. ஆனால் விழுந்தாலோ அடி பலமா படும் இல்லையா. அதுனால ஏறும் போது நாம கீழே விழுந்திடாம இருக்கணுமே தாயினு எப்பவுமே ஒரு பயம்….பயம்னு சொல்ல முடியாது….ஒரு எச்சரிக்கை உணர்வு… எனக்கு…இருந்துண்டே தான் இருக்கும். அது குஜராத்லேந்து இப்போ இந்த குவைத் வரைக்கும் அதே எண்ணம் தான் எனகுள்ள இருக்கு. அந்த எண்ணமிருந்தால் நம்மளுக்கு அகங்காரமோ…பணம் வந்த திமிரோ என்னைக்கும் வராது. புரிஞ்சுதா!!”
“ஓ மை காட்!!! மிருது நீ இவ்வளவு எல்லாம் யோசிச்சா அப்புறம் கிடைச்ச லைஃபை உன்னால எஞ்சாய் பண்ண முடியாது”
“முடியும் நவீ. ஆனா எப்புவுமே என் மனசிலேந்து அந்த எண்ணம் மட்டும் அகலாது. அதுனால ஒவ்வொரு முறையும் நமக்கு நல்லது நடக்கும் போதும் அதை அனுபவிக்கறதுக்கு முன்னாடி அதை நமக்குக் கொடுத்த அந்த அம்பாளை வேண்டிண்டு தான் ப்ரொசீட் பண்ணுவேன்”
“எப்பலேந்து இப்படிப் பண்ணற மிருது?”
“அது நான் சொல்லுவேன் நீங்க வருத்தப் படக்கூடாது”
“அதெல்லாம் படமாட்டேன் சொல்லு.”
“நான் நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி எங்காத்துல ராணி மாதிரி இருந்தேன். எது கேட்டாலும் எங்கப்பா வாங்கித் தந்திடுவா. இல்லைங்கற வார்த்தையை நான் கேட்டதே இல்லை. என்னை யாருமே திட்டினதில்லை. நான் திட்டு வாங்கறா மாதிரி நடந்துண்டதுமில்லை. சமையல் செய்ததில்லை. துணி துவைத்ததில்லை. அப்படி இருந்துட்டு….நம்ம கல்யாணத்துக்கு அப்புறமா என் வாழ்க்கை அப்படியே தடம் மாறித்து. எதெல்லாம் இருந்ததோ கிடைத்ததோ அதெல்லாமே இல்லைன்னு ஆச்சு….அதுவரை கஷ்டம்ன்னா என்னென்னே தெரியாதிருந்த நான் கஷ்டத்துக்கு மேல கஷ்டத்தை மட்டுமே தான் சந்தித்தேன்….அதுவே என் வாழ்க்கையாகிடுத்தோனு கூட பல நாள் நினைச்சிருக்கேன். கல்யாணமான மறுநாளே அடுப்படிக்குள் தள்ளப் பட்டேன். என் அம்மா அப்பா கூட திட்டாத என்னை கண்டபடி வாயிலிட்டு வறுத்தெடுத்தனர் என் மாமியாரும் மாமனாரும். தேவையே இல்லாமல் உங்கள் தம்பிகளிடமெல்லாம் பேச்சு வாங்க வேண்டி வந்தது. அப்பவும் அந்த அம்பாள்ட்ட தான் என் மனக் கஷ்டங்களை சொல்லி அழுதேன். அதுக்கப்புறமா நம்ம வாழ்க்கை படிப்படியா உயர ஆரம்பித்ததும் தான் எனக்கு புரிந்தது என் அழுகை, வேண்டுதல் எல்லாம் அந்த அம்பாளுக்கு போய் சேர்ந்திருக்குணு. அதுக்கு அவள் குடுக்குற சன்மானம் தான் இந்த ஏற்றம் எல்லாமே. அதுனால அவளை எப்படி மறக்க முடியும். நம்ம வாழ்க்கையில எவ்வளவு ஏற்றங்கள் வந்தாலும் நான் இப்படி தான் இருப்பேன். என் மனசும் இப்படி தான் நினைக்கும். கல்யாணத்துக்கு முன்னாடி சந்தோஷமா… ஜாலியா… எஸ்கலேட்டர் மேல மட்டும் தான் கூட்டிண்டு போகும்னு நினைச்சு எந்தவிதத்திலும் எச்சரிக்கையாக இருக்காமல் ஏறிண்டே இருந்த என்னை கல்யாணம் அப்படீங்கற ஒரு விஷயம் சட்டென கீழே தள்ளி விட்டதும் ரொம்பவே தடுமாறிப் போனேன். அதிலிருந்து மெல்ல மெல்ல வெளிவந்து நாம வாழ்க்கையில உயர உயர தான் நிறைய புரிஞ்சுண்டேன்….பக்குவப்பட்டேன். இதுதான் என் எண்ணத்திற்கான விளக்கம் நவீ.”
“அம்மாடி இவ்வளவு வருஷங்களா இதை எல்லாம் நீ என்கிட்ட சொன்னதே இல்லையே!!!”
“நீங்க கேட்டதுமில்லையே”
“ம்…அதுவும் சரிதான். ஆம் சோ சாரி மிருது. இதை எல்லாம் நான் ஆரம்பத்துலேயே கேட்டிருக்கணும்….என்னோட தப்புத் தான்.”
“இட்ஸ் ஓகே நவீ. வாழ்க்கைங்கற அலைகள் நம்ம மேல மாத்தி மாத்தி அடிச்சிண்டிருந்ததுல …அதுலேந்து கடலுக்குள் மூழ்கிடாமல் தப்பிப்பதிலேயே நம்மளோட இந்த பதினாறு வருஷங்கள் போயிடுத்து. அதுல கூட நாம இப்போ நல்லாவே நீந்தக் கத்துண்டுட்டோம். அந்த அம்பாள் துணையிருக்க நாம எது வேணும்னாலும் சம்மாளிச்சிடுவோம். ஆம் சாரி இஃப் இட் ஹாட் டிஸ்டர்ப்டு யூ”
“இல்ல மிருது!!! இப்போ நீ மறுபடியும் ராணி தான் கவலைப் படாதே மிருது. நம்ம கல்யாணத்துக்கு அப்புறமா நீ தொலைத்தது அனைத்தையும் இனி உனக்கு நான் தருவேன் கவலை வேண்டாம் மகாராணி. சரி ….நம்ம யுவராணி என்ன பண்ணுறா?”
“ம்…..ஆமாம் நம்ம கதையில அவளை மறந்துட்டோமே…வாங்கோ என்ன பண்ணறான்னு பார்ப்போம்”
“ஏய் சக்தி என்ன படுத்துண்டு டிவி பார்க்கற? உன் ரூமெல்லாம் செட் பண்ணிருக்கலாமில்ல…”
“அம்மா இப்போ தானே வந்திருக்கோம் பண்ணறேன் மா”
“விடு மிருது. இப்போ செட் பண்ணி என்ன ஆகப் போறது? எப்படியும் ஒரு மாசத்துல வேற வீட்டுக்கு ஷிஃப்ட் பண்ணணுமே”
“அதுக்காக ஒரு மாசமும் பெட்டியைத் தொறந்து தொறந்து டிரெஸ் எடுத்துப் போட்டுப்பாளா?”
“அம்மா நான் பண்ணறேன் மா. எனக்குப் பசிக்கறது இப்போ.”
“ஓ!!! அதை மறந்துட்டேனே”
“என்னத்தை மறந்தேங்கள் நவீ”
“இது ரமலான் மாசம்”
“ஸோ!!”
“எங்கேயும் போய் சாப்பிட முடியாது. சாப்பிடவும் கூடாது. இங்கே இவா நோன்பு இருப்பா இல்ல…..அதை நான் மறந்தே போயிட்டேன்.”
“அப்போ சாப்பாடு இல்லையாப்பா?”
“இரு இரு சக்தி நான் ரிசப்ஷனுக்கு ஃபோன் போட்டுக் கேட்கறேன்”
நவீன் அவர்கள் தங்கியிருந்த அப்பார்ட்மெண்ட் ரிசப்ஷனுக்கு ஃபோன் போட்டுக் கேட்டான்.
“அப்பா என்ன சொன்னா?”
“நாம வெளியில எங்கேயும் போய் சாப்பிடக் கூடாதாம். ஈவன் தண்ணீ கூட குடிக்கக் கூடாதாம். எல்லா ஹோட்டலும் சாயந்தரம் ஏழு மணிக்கு தான் ஓப்பன் பண்ணுவாளாம்.”
“அப்படியா!!! அப்படீன்னா ஏழு மணிக்கு இன்னும் சிக்ஸ் அவர்ஸ் இருக்கேப்பா….!!!!”
“இரு கண்ணா…நான் முழுசாவே சொல்லி முடிக்கலையே…நாம வெளில போய் சாப்பிடக் கூடாது ஆனா ஹோட்டல்ல ஆர்டர் பண்ணி இங்கே வீட்டுக்குள்ள சாப்பிட்டுக்கலாமாம்.”
“அப்பாடி!!!! சாப்பிடறதுக்கு ஆறு மணி நேரம் வெயிட் பண்ணணுமோன்னு நான் பயந்தே போயிட்டேன்ப்பா”
“ஓகே என்ன வேணும்னு ரெண்டு பேரும் சொல்லுங்கோ நான் ஆர்டர் பண்ணிடறேன்.”
என்று நவீன் சொன்னதும் மிருதுளாவும் சக்தியுமாக தங்களுக்கு வேண்டியதை சொல்ல அதை ஆர்ட்ர் செய்து வரவழைத்து சாப்பிட்டனர். முன்தினம் இரவு நேர ஃப்ளைட் என்பதால் மூவரும் சரியாக தூங்காதிருந்தனர். மத்திய உணவு சாப்பிட்டதும் நன்றாக படுத்துறங்கினர்.
நவீன் மெல்ல எழுந்து கடிகாரத்தைப் பார்த்தான் அதில் மணி ஏழு என்றிருந்தது. திரும்பிப் பார்த்தான் மிருதுளா முழித்துக் கொண்டுப் படுத்திருந்தாள்
“என்ன மிருது நீ எப்போ எழுந்துண்ட? நான் நல்லா தூங்கிட்டேன்”
“நானும் தான் நவீ. நேத்து நைட்டு ஏர்ப்போட் அப்புறம் ஃப்ளைட்டுனு சரியாவே தூங்கலையா….அதுதான் படுத்ததும் தூங்கிட்டேன்….இப்பத்தான்.. நீங்க எழுந்துக்கறதுக்கு பத்து நிமிஷம் முன்னாடி தான் நானும் எழுந்துண்டேன். நீங்க நல்லா தூங்கிண்டிருந்தேள் ஸோ டிஸ்டர்ப் பண்ணலை. எழுந்து போய் சக்தியைப் பார்த்தேன்…அவளும் நல்லா தூங்கிண்டிருந்தா…அதுனால பேசாம நானும் வந்து படுத்துண்டுட்டேன்.”
“சரி நாம ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு கிளம்பி வெளியில போயி சுத்திப் பார்த்துட்டு அப்படியே டின்னர் சாப்டுட்டு வரலாமா?”
“இங்கே தானே இனி இருக்கப் போறோம்…இன்னைக்கே சுத்திப் பார்க்கணுமா என்ன?”
“என் ஆஃபிஸைக் காட்டறேன். எப்படியும் டின்னர் சாப்பிட வெளில போய் தானே ஆகணும் மிருது….சும்மா ஒரு வாக் போயிட்டு வருவோமே வாயேன்”
“ஓகே நவீ. நீங்க போய் உங்க பொண்ணை எழுப்புங்கோ நான் ரெடியாகி வந்துடறேன்.”
“சக்திக் கண்ணா எழுந்திரிமா…மணி ஏழாச்சு…”
“அப்பா இன்னும் கொஞ்ச நேரம்ப்பா ப்ளீஸ்”
“அடே….இது ஈவ்னிங் ஏழு மணி மா. எழுந்துரு நாம வெளில போய் டின்னர் சாப்டுட்டு வந்துட்டு தூங்கிக்கலாம். வா மா”
“சரிப்பா…அம்மா ரெடியாகிட்டாளா?”
“ரெடியாகிண்டேயிருக்கா.”
“சரிப்பா ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ். ஐ வில் பி ரெடி டூ”
என்று சக்தி சொன்னதும் நவீன் சென்று ரெடியாகினான். மிருதுளா நவீனிடம்
“என்ன உங்க பொண்ணு எழுந்துண்டுட்ட்ளா?”
“ஃபைவ் மினிட்ஸ் ல ரெடியாகிவேன்னு சொல்லிட்டுப் படுத்திருக்கா”
“அச்சோ நவீ….அவ அப்படியே தூங்கிடுவா….சரி சரி நீங்க ரெடி ஆகுங்கோ …நான் போய் அவளை எழுப்பி ரெடியாகச் சொல்லறேன்….ஃபைவ் மினிட்ஸ்னு சொன்னாளாம் இவரும் சரினுட்டு வந்தாராம்….நல்ல அப்பா நல்ல பொண்ணு”
என்று கூறிக்கொண்டே சென்று சக்தியை எழுப்பி ரெடியாகச் செய்தாள் மிருதுளா. பின் மூவருமாக கிளம்பி அவர்கள் அப்பார்ட்மெண்ட்டுக்கு வெளியே சென்றதும்
“அய்யோ!!! இது என்னப்பா சாயந்தரம் ஏட்டு மணியாச்சு ஆனாலும் நம்ம ஊரு மத்தியானம் மாதிரி சுடறது.”
“இங்கே அப்படி தான் மிருது. கார் வேணும் இல்லாட்டி இந்த சூட்டுல வெந்திடுவோம்”
“சரி கார் வாங்க வேண்டியது தானே நவீ”
“ம்…லைசன்ஸ் இல்லாம கார் தரமாட்டா மிருது”
“உங்க கிட்ட தான் லைசன்ஸ் இருக்கே நவீ. அது இல்லாமலா இந்தியால வண்டி ஓட்டினேங்கள்? என்னப்பா!!!”
“அந்த லைசன்ஸ் இங்கே செல்லாது மிருது. நான் மறுபடியும் இங்கே லைசன்ஸ் வாங்கினா தான் இங்கே வண்டி வாங்கவும் ஓட்டவும் முடியும்”
“ஓ!!! அப்படீன்னா இங்கே லைசன்ஸுக்கு அப்பளை பண்ணுங்கோ”
“ம்…பண்ணணும் மிருது. அது கிடைக்க லேட் ஆகும்னு எங்க ஆஃபிஸ்ல சொன்னா….பார்ப்போம் டிரைப் பண்ணுறேன்”
“அதெல்லாம் உங்களுக்கு கிடைச்சிடும் நவீ”
“எஸ் அப்பா உனக்கு ஈசியா கிடைச்சிடும்”
“என்னமோ ரொம்ப சுலபமா ரெண்டு பேரும் சொல்லிட்டேங்கள் பார்ப்போம். நாளைக்கு தான் அப்பளை பண்ணப் போறேன். சரி நாம நாளையிலேந்து வீடு வேற தேடத் தொடங்கணும்.”
“ஆமாம் நவீ….எனக்கு இந்த ஹோட்டல் ஸ்டே எல்லாம் சரி வராது. …..பிடிக்காது…ஏதோ ஒரு அஞ்சு நாள்னா சரி….ஒரு மாசமெல்லாம் டூ மச்ப்பா”
“ஏன் மா ஜாலியா இருப்பியா அதை விட்டுட்டு என்னமோ சொல்லுற”
“அப்படி சொல்லு சக்தி.”
“ஆமாம் உங்க ரெண்டு பேருக்கும் என்னப்பா….சரி நாம இங்கேயே இருந்துடலாம். ஒரு மாசம் கழிச்சே வேற வீட்டுக்கு போகலாம்…..ஆனா நம்ம இந்தியாலேந்து ஷிப் பண்ணிருக்கற பொருட்களெல்லாம் இன்னும் ஒரு பத்து நாள்ல வந்திடும் அதை எல்லாம் இங்கே இந்த அப்பார்ட்மெண்ட்லேயே டெலிவரி பண்ண சொல்லலாமா?”
“அதுக்கு தானே மிருது நாளையிலிருந்தே வீடு தேடலாம்னு சொன்னேன்”
“இல்லையே நீங்க உங்க பொண்ணு கூட சேர்ந்துண்டு ….ஏதோ சொன்னா மாதிரி இருந்ததே!!!”
“இல்லவே இல்லை மிருது….நான் எப்போதும் உன் பக்கம் தான்”
“அப்பா…..”
என்று சக்தி சொன்னதும் அவளிடம் கண்ணைக் காட்டினான் நவீன். இவ்வாறாக பேசிக் கொண்டே நடந்துச் சென்றனர். பிறகு ஒரு டாக்ஸிப் பிடித்து ஹோட்டல் சரவணபவனுக்கு சென்று இரவு உணவை உண்டு மகிழ்ந்தனர். மீண்டும் டாக்ஸியில் அவர்கள் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்ட்டுக்கு வந்தனர். சற்று நேரம் டிவிப் பார்க்க அமர்ந்ததில் சக்தி உறங்கிப் போனாள். அவளை எழுப்பி அவளது பெட்டில் சென்று படுக்க வைத்தாள் மிருதுளா. பின் நவீனும் மிருதுளாவும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மிருதுளா நவீனிடம்…..
“நவீ நான் ஒண்ணு சொல்லுவேன் திட்டக்கூடாது”
“ம்…என்ன மிருது சொல்லு…”
“அவா தான் நம்மை கூப்பிடலை போகட்டும் ….நாமும் போகாம இருக்கறது தப்பில்லையா!!!”
“என்ன வேதாளம் மறுபடியும் முருங்கைமரம் ஏறுது!!!”
“அதுக்கில்ல நவீ….நாம அவாகிட்ட எந்த ஹெல்ப்பும் கேட்கப் போறதில்லையே…சும்மா போய் பார்த்துட்டு வந்துடலாமே..
எதுக்கு பகைச்சிண்டிருக்கணும்”
“அவா தான் அட்ரெஸே தரலையே எங்கன்னு போவ மிருது?”
“அதுதான் ஃபோன் நம்பர் இருக்கே நவீ. ஒரு ஃபோன் போட்டு நாம வந்த விவரத்தை சொல்லி …வீட்டுக்கு வந்து பார்க்கறோம்னு சொல்லுவோம்”
“நாம இங்கே வர்றோம்ங்கறது அவாளுக்கு நல்லாவே தெரியும் இல்லையா…..நல்ல வெயில் காலத்தில், ரமலான் சமையத்தில் குவைத்தில் வந்திறங்கியிருக்கோம். இங்கே இந்த பீரியட்ல எவ்வளவு ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் இருக்கும்ன்னு அவாளுக்கு நல்லாவே தெரியும் தானே!!! அப்படி இருந்தும் நம்மளை வீட்டுக்கு வான்னு அழைக்காதவா வீட்டை நாம ஃபோன் பண்ணிக் கேட்டு அப்படி தெரிஞ்சுண்டு எதுக்கு போகணும்? அதுவுமில்லாம என்கிட்ட லைசென்ஸ் இல்லைன்னும்….வண்டி இல்லைன்னும் தெரிந்தும் ஏதாவது ஹெல்ப் வேணுமான்னு ஒரு ஃபார்மாலிடிக்கு கூட கேட்காத ஜன்மங்களை எதுக்கு போய் பார்க்கணும்? இந்த மாதிரி ஒரு சூழ்நிலை வரும்ன்னும் அதனால் நிச்சயம் கவினின் உதவி நமக்கு தேவைப்படும்னும் நினைச்சுத்தான் அவா நான் ஊர்ல இருக்கும்போது சொன்னேனே அதைப் போல எப்படியும் அவா கிட்ட உதவி கேட்டுப் போய் நிப்போம்ங்கற திமிரில் இருக்கா!!!! அவாகிட்ட நாம ஏன் போகணும் மிருது. அவா நம்மளை பகைச்சுக்கறோமேனு யோசிச்சாளா? அப்போ நாமளும் அதைப் பத்தி எல்லாம் சிந்திக்கக் கூட வேண்டாம் சரியா…அதுல எந்த வித தப்புமில்லை. இனி அந்த கூட்டத்தைப் பத்தின பேச்சே நமக்குள்ள வேண்டாம்…பேசாம நீ ஹாப்பியா இரு…நிம்மதியா இப்போ தூங்கு. என்னென்னைக்கும் நமக்கு நாம மூணு பேரு மட்டும் தான். அத்தோட ஃபுல் ஸ்டாப். ஓகே”
“என்னமோ சொல்லறேங்கள். இதெல்லாம் எங்கே போய் முடியப்போறதோ!!!”
“எல்லாம் சுபத்தில் தான் முடியும். நாளையிலிருந்து வீடு தேடும் படலம் அன்ட் லைசென்ஸ் ப்ராசஸ் எல்லாம் ஆரம்பிக்கப் போறது. நமக்கு நிறைய வேலைகள் காத்திண்டிருக்கு. ஸோ நல்லா தூங்கி ரெஸ்ட் எடு….குட் நைட் மிருது.”
“குட் நைட் நவீ!”
தொடரும்…..
அத்தியாயம் 102: புறப்பாடு!
வீட்டினுள் நுழைந்த ப்ரவீன்… நவீனையும் மிருதுளாவையும் பார்த்து
“வாங்கோ வாங்கோ எப்படி இருக்கேங்கள்?”
“நாங்க நல்லா இருக்கோம் நீங்க எல்லாரும் எப்படி இருக்கேங்கள்”
“நல்லா இருக்கோம் மன்னி.”
“என்ன துளசி உன் வேலையெல்லாம் எப்படி போயிண்டிருக்கு?”
“ஆங் நல்லா போயிண்டிருக்கு மன்னி.”
இவர்கள் நலம் விசாரித்துக் கொண்டிருக்கையில் பர்வதம் தன் பேத்தியை….ப்ரவினின் மகளை வாரி அணைத்து மடியில் அமரவைத்துக் கொண்டு….
“இவா குவைத்துக்கு போகப்போறா. அதை சொல்லத்தான் வந்திருக்கா”
என்று பரவீனிடம் சொன்னாள்.
“ஆமாம் ப்ரவின் நாங்க வர்ற பத்தாம் தேதி குவைத்துக்கு ஷிஃப்ட் பண்ணறோம். நீங்க அவசியம் ஒரு தடவை வாங்கோ”
“ஆங் ஷுவர் மன்னி….குழந்தைகள் கொஞ்சம் பெரிசானா தான் வரணும். அப்போ தானே அவாளுக்கும் பார்த்தது ஞாபகமிருக்கும்.”
“அதுவும் சரிதான். உங்களுக்கு எப்போ வரணும்னு தோணறதோ அப்போ வாங்கோ…அதுக்கு இப்பவே இன்வைட் பண்ணிட்டேன். ஓகே வா!!”
“அங்கே தான் ரெண்டு அண்ணன்கள் இருக்காளே !!! எங்கே வேணும்னாலும் போகலாமே…”
என்று நீங்கள் மட்டுமில்லை என்னோட புள்ளையும் அங்கே தான் இருக்கிறான் என்று குத்தலாக பேசிய பர்வதத்திடம் மிருதுளா
“ஆமாம் அம்மா நீங்க சொல்லறதும் கரெக்ட் தான்.”
என்று ஒத்துக் கொண்டதும் பர்வதத்தால் மேற்கொண்டு அந்த பேச்சைத் தொடர முடியாது சட்டென தன் பேத்தியிடம்
“இது யாரு குட்டி….இவா யாரு…சொல்லு சொல்லு…”
என்று மூன்று வயதே ஆன குழந்தையிடம் கேட்க அது வாயில் விரலை விட்டுக்கொண்டு நெளிந்து வளைந்தது…உடனே பர்வதம்
“இவளுக்கு மிருதுளா பெரியம்மான்னா பிடிக்கவே பிடிக்காது தெரியுமோ!!”
என்றதும் மிருதுளா நவீனைப் பார்த்தாள். பர்வதம் சும்மா இருக்காது மீண்டும்
“இல்லடா ப்ரவீன்..”
“ஆமாம் மன்னி அது என்னவோ ஏதோ தெரியல்லை அவ அப்படி தான் சொல்லிண்டிருக்கா”
“அவ அடிக்கடி சொல்லுவா ….எனக்கு மிருதுளா பெரியம்மாவை பிடிக்கவே பிடிக்காதுன்னுட்டு”
என்று கூறிவிட்டு சிரித்தாள் பர்வதம். மூன்று வயது குழந்தை அப்படி சொல்ல வாய்ப்பில்லை என்றாலும் அப்படியே அந்த குழந்தை சொல்லியிருந்தாலும் அதனிடம் அப்படி எல்லாம் சொல்லக்கூடாது என்று நல்லதை சொல்லிக்கொடுக்காது பெரியவர்களே அதை தட்டிக்கொடுப்பது போல சொல்லி சிரித்ததும் மிருதுளா
“ஏன் குட்டிமா உனக்கு பெரியம்மாவை பிடிக்காது? நான் அப்படி என்ன பண்ணினேன் உனக்கு என்னை பிடிக்காம போறதுக்கு? நீ பெரியம்மாவோட செல்லக்குட்டியாச்சே!!! ஆமா நீ என்ன பண்ணுவ குட்டிமா….பெரியவா பேசிக்கறதை கேட்டுத்தானே நீ சொல்லுற……மொதல்ல பெரியவா நீங்க இந்த மாதிரி பேச்செல்லாம் குழந்தைகள் பேசும் போது என்க்கரேஜ் பண்ணாம நல்லதை மட்டும் சொல்லிக் குடுங்கோ. இல்லாட்டி இது உங்களுக்கே வினையாகிடும்….சரி ப்ரவீன், துளசி நீங்க ஏன் இன்னும் டிரஸ் மாத்தாம உட்கார்ந்திண்டிருக்கேங்கள்? எங்கயாவது வெளியில போகணுமா?”
“இல்ல மன்னி நாங்க இப்போ தான் எங்காத்துலேந்து கிளம்பி இங்க வந்திருக்கோம்”
“புரியலையே !!! அப்படின்னா நீங்க இங்க அப்பா அம்மாவோட இல்லையா? தனியாவா இருக்கேங்கள்?”
“ஆமாம் மன்னி. எதுக்கு வீணா பிரச்சினைன்னு நாங்க இங்க கவின் வீட்டுலேந்து எங்க பையன் பொறந்தப்பவே தனியா போயிட்டோம்”
“ஸோ அப்பா அம்மா நீங்க எல்லாரும் ஒரே ஊருக்குள்ள இருந்தாலும் தனி தனியா தான் இருக்கேங்களா!!”
“ஆமாம்!!”
“குழந்தைகளை காலையில கொண்டு வந்து இங்கே விட்டுட்டு….காலை டிபனை இங்க சாப்ட்டிடுவா… மத்திய சாப்பாடு நான் ரெடி பண்ணி வச்சுடுவேன்… அதை டிபன் பாக்ஸ்ல கட்டிண்டு ரெண்டு பேரும் ஆஃபீஸ் போயிடுவா. சாயந்தரமா வந்து இங்கே டின்னர் சாப்பிட்டுவிட்டு குழந்தைகளை கூட்டிண்டு போயிடுவா.”
“ஓ!! ஓகே ஓகே!! நான் நீயும் துளசியும் அப்பா அம்மா கூடதான் இருக்கேங்கள்னு நினைச்சேன்…”
“சரி… மிருதுளா… அப்போ நீ சுமங்கலிப் பிரார்த்தனைக்கு இருக்க மாட்டியோ!!”
“ம்….எப்படி நாங்க தான் பத்தாம் தேதியே கிளம்பறோமே!”
“அப்போ குழந்தையோட பூணலுக்கு வந்துடுவேங்கள் தானே!”
“எப்படி மா இப்போ தான் போவோம் அதுக்குள்ள மறுபடியும் டிக்கெட் போட்டுண்டு வரது எல்லாம் கஷ்டம் தான். பார்ப்போம்”
என்று மிருதுளா சொல்லிக் கொண்டிருக்கும் போதே நவீன்
“மிருது நாம கிளம்பலாமா? நேரமாச்சு”
“ஆங் !! ஓகே நவீ. சரி மா, அப்பா, ப்ரவீன், துளசி அன்ட் குட்டீஸ் நாங்க போயிட்டு வர்றோம் பை.”
என்றதும் பர்வதம் உள்ளே சென்று குங்குமம் எடுத்து வந்து மிருதுளாவிடம் கொடுத்தாள். மிருதுளாவும் அதை நெற்றியில் இட்டுக்கொண்டு அங்கிருந்து நவீன், சக்தியுடன் கிளம்பி அவர்களின் ஒண்ணுவிட்ட அத்தை புதிதாக அந்த ஊருக்கு ஈஸ்வரன் வீட்டுக்கு பக்கத்திலேயே குடி வந்திருப்பதாக ஈஸ்வரன் சொன்னதனால் அவர்களையும் பார்த்துவிட்டு செல்லலாம் என்றெண்ணி அவர்கள் வீட்டுக்குச் சென்றனர். நவீனையும் மிருதுளாவையும் அத்தைப் பார்த்ததும்
“ஹேய் நவீன், மிருதுளா வாங்கோ வாங்கோ. ஹேய்!! இது உன் பொண்ணு சக்தி தானே!!”
“ஆமாம் அத்தை”
“எவ்வளவு கடகடன்னு வளந்துட்டா? நான் பார்க்கும் போது என்ன ஒரு ஆறு வயசிருக்கும் அவ்வளவு தான். இப்போ பாரு பெரிய பொண்ணா வந்திருக்கா…வாடா கண்ணா!!!”
“எப்படி இருக்கேங்கள் அத்தை? என்ன திடீன்னு இந்த ஊருக்கு குடி வந்திருக்கேங்கள்?”
“ஆமாம் பா வயசாயிடுத்து. பொண்ணுகள் ரெண்டும் வெளிநாட்டு ல இருக்குகள். சரி நாம கடைசி காலத்துல நம்ம சொந்தங்களுக்கு பக்கத்துல இருக்கலாமேனுட்டு இங்கே வந்துட்டோம்….இங்கே உங்க அப்பா அம்மா இருக்கா….அப்புறம் எங்காத்துக் காரரோட சொந்தங்கள் எல்லாம் இருக்கா…இப்படியே கோவில் குளம்ன்னு ஓடிண்டிருக்கு. ஆமாம் நீயும் ஏதோ வெளிநாட்டுக்குப் போறயாமே!!”
“ஆமாம் அத்தை வர்ற பத்தாம் தேதி குவைத்துக்குப் போறோம்.”
“ஆமாம் நீ இப்பதானே மைசூர்ல ஒரு வீடு வாங்கி குடியும் போன?”
“ஆமாம் அத்தை அங்கே குடி போய் ஒரு எட்டு மாசமாயாச்சு”
“சரி சென்னை வீட்டை என்ன பண்ணின?”
“அதுல தான் மிருதுவோட பேரன்ட்ஸ் இருக்காளே”
“இங்கே ஒரு வீடு வச்சிருந்த இல்ல?”
“அதை வித்துத்தான் சென்னையில வாங்கினேன் அத்தை”
“வீடு மேல வீடு வாங்கறேங்கள் ஆனா அதுல இருக்கக் குடுத்து வைக்கலையேப்பா!!”
என்று பர்வதம் டைலாக்கையே அத்தை சொன்னதும் அது எங்கிருந்து யார் சொல்லிப் பரப்பியிருப்பார்கள் என்பதை நன்கு உணர்ந்த நவீன் தன் அத்தையிடம்
“ஏன் இருக்காம அத்தை அது தான் எட்டு மாசமிருந்தாச்சே…அதுவுமில்லாம அத்தை எங்களுக்கு நாங்க வாங்கற ஒவ்வொரு வீடும் ஏற்றத்தை தான் தர்றது. மொதோ இங்கே வாங்கின அப்பார்ட்மெண்ட் எனக்கு ஒரு புது வேலை வாய்ப்பைத் தந்து மும்பாயிக்கு அனுப்பி வசதி வாய்ப்பை பெருக்கித்து….அப்புறம் சென்னை வீடு எங்களுக்கு அதை விட பெரிய வாய்ப்பை மைசூர்ல தந்து அங்க போக வச்சு எங்களோட வாழ்க்கைத் தரத்தை உயர்த்தித்து. இப்போ இதோ நாங்க வாங்கின மைசூர் வீடு எங்களுக்கு வெளிநாட்டு வாய்ப்பையே தந்திருக்கு. ஸோ எங்களைப் பொறுத்த வரை எங்களோட வீடு எங்களுக்கு மேன்மையை மட்டும் தான் தந்திருக்கு தந்துண்டும் இருக்கு. இதை எல்லாம் யாரும் உங்ககிட்ட சொல்லிருக்க மாட்டா ஏன்னா உங்ககிட்ட சொன்னவாளோட நோக்கமே வேறயா இருக்கும் போது எப்படி இந்த மாதிரி நல்லதை சொல்லுவா”
“ஆமாம் இல்லையா நீ சொல்லறதும் கரெக்ட் தான். உங்க ரெண்டு பேருக்கும் உங்க கிரகலட்சுமி நல்ல மேன்மையைத்தான் தர்றா. ரொம்ப சந்தோஷம் பா. நன்னா இருங்கோ. சாரிப்பா நானும் கொஞ்சம் யோசிச்சுப் பேசிருக்கணும்”
“அதெல்லாம் விடுங்கோ அத்தை சொல்லறவா அப்படி சொல்லிருப்பானு எங்களுக்கு நல்லாவே தெரியும். சரி அத்தை தாங்ஸ் ஃபார் தி காஃபி….நாங்க கிளம்பறோம்”
“ஏன்ப்பா இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போகலாமே”
“இல்ல அத்தை நாங்க இப்போ கிளம்பினா தான் நைட்டு ஒரு பதினோரு மணிக்காவது வீடு போய் சேர முடியும். அடுத்த தடவை வரும்போது வந்து சாப்டுட்டே போறோம் சரியா”
“ஓகேப்பா. பத்திரமா போயிட்டு வாங்கோ. ஹாவ் எ க்ரேட் லைஃப்.”
“தாங்ஸ் அத்தை பை”
என்று சொல்லிவிட்டு காரில் ஏறி அவர்கள் செல்ல வேண்டிய கோவில்களுக்கெல்லாம் சென்றுவிட்டு மைசூரை நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர். அப்போது மிருதுளா நவீனிடம்
“நவீ எனக்கொரு டவுட். கேட்கவா”
“ம்….கேளு மிருது”
“உங்க அம்மா அப்படி வீடு மேல வீடு வாங்கினாலும் அதுல இருக்க குடுப்பினை வேணும்னு சொல்லும் போது ஒண்ணுமே சொல்லாத நீங்கள் ஏன் அத்தை அதையே சொல்லும்போது சூப்பர் பதில் குடுத்தேங்கள்? அதை உங்க அம்மாகிட்டேயும் சொல்லிருந்தா அவாளும் வாயடைச்சுப் போயிருப்பா இல்ல!!!”
“அப்படி இல்ல மிருது. உன் மாமியார் வேணும்னே நாம சந்தோஷப்பட்டுடக் கூடாதுன்னே சொன்னா ஸோ அவகிட்ட சொல்லி ஒரு பிரயோஜனமுமில்ல. ஏன்னா தான் சொல்லறது தப்புன்னு தெரிஞ்சே தான் சொன்னா….ஆனா அத்தை அப்படி இல்ல இவா ஏத்திவிட்டு சொன்னா அதுனால அத்தைகிட்ட எக்ஸ்ப்ளேயின் பண்ணிச் சொன்னேன்…இனி அத்தை வில் நாட் ஸ்பெரெட் இட் ராங்லீ…”
“ம்…நீங்க சொல்லறது கரெக்ட் நவீ. இவா ஆரம்பத்துலேந்தே இப்படி தான் தப்பு தப்பா பரப்பி விடறா. நானே நிறைய தடவை இவா சொன்ன அதே டைலாக்கை அப்படியே நம்ம மத்த சொந்தக்காராளும் சொல்லிக் கேட்டிருக்கேன்….ஆனாலும் இதுவும் ஒரு டேலென்ட் தான் இல்ல நவீ….அது எப்படி!! தான் சொன்னதும்… சொல்ல நினைக்கறதும் …அச்சு அசல் மாறாம அடுத்தவாளை சொல்ல வைக்கறா? அதுக்கும் ஒரு திறமை வேணும்….ஆனா இதுல எனக்கு என்ன புரியலைன்னா….அது எப்படி மத்தவா இவா சொல்லுறதை அப்படியே கிளிப்பிள்ளை மாதிரி திருப்பி சொல்லுறா? அவா கொஞ்சம் கூடவா யோசிக்க மாட்டா? அதுதான் எனக்கு ஆச்சர்யமா இருக்கு நவீ!”
“இதுல ஆச்சர்யப்பட ஒண்ணுமேயில்லை மிருது. நீ சொன்னா மாதிரி சில பேர்ட்ட அவாளோட திறமையை வச்சுப் பேச வச்சிருப்பா ஆனா சில பேர் அவா சொல்ல வைக்கறா அது தப்புன்னு தெரிஞ்சாலும் வம்புக்குனு அதையே சொல்லுவா!!! அவ்வளவு தான்.”
“ம்….ஆமாம் ஆமாம்.”
“என்ன? நீ எதையோ யோசிச்சிண்டு வர்ற….என்னது?”
“அது ஒண்ணுமில்ல எல்லாம் இந்த ப்ரவீனையும் அவன் பேசினதையும் தான் யோசிச்சிண்டு வர்றேன்”
“என்னன்னு சொல்லு மிருது….சக்தியும் நல்லா தூங்கிட்டா…நீ பேசு”
“நாம குழந்தைக்கு முன்னாடி அடுத்தவாளை குற்றம் சொல்லி பேசக்கூடாதுன்னு நினைக்கறோம் ஆனா அவா சின்னக்குழந்தையை வச்சுக் கூட அவாளோட பாலிடிக்ஸை பண்ணறா….ம்….ஒரு பத்து வருஷம் முன்னாடி போயிப் பார்த்தேன்….அன்னைக்கு நான் எங்க அப்பா அம்மா ஆத்துக்கு அடிக்கடி போறதால உங்க அப்பா அம்மா கௌரவம் என்ன ஆகும்னும்….பாஸ்ட் ஈஸ் பாஸ்ட்டுன்னும் சொன்னவன்….இன்னைக்கு ஒரே ஊருக்குள்ள பெத்தவாளும் புள்ளையும் மாட்டுப்பொண்ணும் அடுத்தடுத்த தெருவுல குடியிருக்காளே ….இப்போ மட்டும் அவனோட அப்பா அம்மா கௌரவம் கொடிக் கட்டிப் பறக்கறதோன்னு யோசிச்சிண்டே வர்றேன்….அதை அவன்கிட்ட யாரு கேட்கறது?”
“அட ஆமாம் இல்ல….நீ சொல்லறதும் இஸ் எ வாலிட் பாயின்ட். இதை நீ அங்கேயே அவன்ட்ட கேட்டிருக்கணும் மிருது.”
“விடுங்கோப்பா….ஒரு சின்ன குழந்தையை வச்சு அவாளோட அத்திரத்தை தீர்த்துக்கறா…..அவாகிட்ட போய் என்னத்தை கேட்க…அதுக்கும் இதை விட அசிங்கமா ஏதாவது அந்த குழந்தையை வச்சே சொல்ல வச்சாலும் வைப்பா எதுக்கு நமக்கு…எப்பவும் நீங்க சொல்லறா மாதிரி…நாம நம்ம வேலையைப் பார்த்துட்டு போவோம்!”
என்று தெரிந்தே தவறிழைக்கும் ஈஸ்வரன், பர்வதம் மற்றும் அவர்கள் பிள்ளைகளிடம் பேசி ஏதும் ஆகப் போவதில்லை என்றெண்ணியே பல விஷயங்ககளை கேட்காமலேயே நவீனும் மிருதுளாவும் அவர்களுக்குள்ளேயே பேசிக்கொண்டனர். இரவு உணவை வழியிலிருந்த ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு பதினொன்றரை மணிக்கு மைசூர் வந்து சேர்ந்தனர். கதவை ராமானுஜம் திறந்து விட்டுவிட்டு சென்று அவரின் உறக்கத்தை தொடர்ந்தார். நவீன், மிருதுளா, சக்தி மூவரும் கொண்டு வந்த பையை ஹாலிலேயே வைத்து விட்டு அவரவர் அறைக்குச் சென்று தங்கள் உடைகளை மாற்றிக் கொண்டுப் படுத்துறங்கினர்.
குவைத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய அனைத்துப் பொருட்களும் பேக்கிங் செய்யப்பட்டு நவீனின் கம்பெனி ஏற்பாடு செய்திருந்த இன்டர்நேஷனல் பேக்கர்ஸ் அன்ட் மூவர்ஸ் எடுத்துச் சென்றனர். அவர்கள் சென்றதும் வீடு மறுபடியும் காலியாக இருந்தது. அம்புஜமும் மிருதுளாவுமாக முழுவீட்டையும் சுத்தமாக கூட்டித் துடைத்து பளிச்சென வைத்தனர். மறுநாள் காலை ஏழு மணிக்கு நவீன் ஏற்பாடு செய்திருந்த டிரைவர் வந்தார். அப்போது நவீனும் மிருதுளாவும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் முன்னாள் இரவு ஆஃபீஸ் ஃப்ரெண்ட்ஸ் கொடுத்த டின்னருக்குப் போய்விட்டு லேட்டாக வந்ததால் நன்றாக தூங்கட்டும் என்று விட்டுவிட்டனர் அம்புஜமும் ராமானுஜமும். இப்போது டிரைவர் வந்துள்ளதால் அவர்களை எழுப்பியாக வேண்டுமே என்று எண்ணிக்கொண்டே மாடிப்படி ஏறினார் ராமானுஜம்….அவர் எதிரே நவீனும் மிருதுளாவும் மாடியிலிருந்து இறங்கி வந்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து
“நீங்க சொன்ன டிரைவர் வந்திருக்கார். அது தான் உங்களை எழுப்ப வந்துண்டிருந்தேன்…நீங்களே எழுந்து வந்துட்டேங்கள்”
“ஆமாம் காலிங் பெல் சத்தம் கேட்டு தான் நாங்க எழுந்துண்டோம். நீங்க எங்களை கொஞ்சம் முன்னாடியே எழுப்பியிருக்கலாமே”
“இல்ல நீங்க மூணு பேருமே நேத்து நைட்டு ரொம்ப லேட்டா தான் வந்தேங்கள்…அதுதான் எழுப்பலை”
“நீங்க ரெண்டு பேரும் ரெடியாகிட்டேங்கள் போல”
“ஆமாம் டிரைவர் வந்ததும் நாங்களும் கிடுகிடுனு கிளம்பிட்டோம்.”
“சரி அம்மா அன்ட் அப்பா நாங்களும் இன்னைக்கு ஈவ்னிங் பெங்களூர் போயி அங்கேந்து குவைத் போயிட்டு வர்றோம். நீங்களும் பத்திரமா சென்னைக்கு போயிட்டு வாங்கோ. சென்னையில நம்மாத்துல சேர்ந்ததும் ஒரு கால் பண்ணிச் சொல்லுங்கோ. சரியா பத்திரம்”
“சரிமா மிருது. நீங்களும் நல்லபடியா குவைத் போய் சேர்ந்ததும் ஒரு ஃபோன் பண்ணிச் சொல்லுங்கோ. சூப்பரா வருவேங்கள் பாருங்கோ. எங்க ஆசிர்வாதம் எப்பவும் உங்களுக்கு உண்டு. வேனுக்கும் பொண்ணு பார்த்துண்டு இருக்கோம். ஏதாவது செட்டாச்சுன்னா உங்களுக்கு தான் மொதல்ல சொல்லுவோம் அவசியம் வரணும்”
“ஷுவரா வருவோம். நீங்க கவலைப்படாம போயிட்டு வாங்கோ…மிருது சக்தியை தாத்தா பாட்டி ஊருக்கு கிளம்பறான்னு எழுப்பு”
“இல்ல இல்ல வேண்டாம் மிருது. குழந்தை தூங்கட்டும். நாங்க போய் ஒரு எட்டுப் பார்த்துட்டு வந்துடறோம்”
என்று கூறிக்கொண்டே மாடி ஏறி சக்தி ரூமிற்குள் சென்று தாத்தாவும் பாட்டியும் அவளின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு முத்தமிட்டதும் சக்தி எழுந்துக் கொண்டாள்.
“தாத்தா பாட்டி என்ன காலையிலேயே ரெடியாகி இருக்கேங்கள் எங்கே போறேங்கள்?”
“ஆமாம் நீ பாட்டுக்கு இன்னைக்கு குவைத் போயிடுவ அப்புறம் நாங்க இங்க இருந்து என்ன பண்ணப் போறோம்!!! அதுதான் நாங்க சென்னைக்கு கிளம்பிட்டோம் கண்ணா.”
“ஓகே பாட்டி பை. இங்க வாங்கோ ரெண்டு பேரும் ….உம்ம்ம்ம்மா. நானும் ஊருக்குப் போயிட்டு வரேன் பாட்டி அன்ட் தாத்தா”
“சரிடி கண்ணு. நீ படுத்துத் தூங்கிக்கோ நாங்க போயிட்டு வர்றோம் டா செல்லம்.”
“இதோ நானும் ப்ரஷ் பண்ணிட்டு கீழே வர்றேன் பாட்டி.”
“சரி மா. நாங்க நீ கீழே வர்ற வரைக்கும் வெயிட் பண்ணறோம்”
என்று கூறிவிட்டு கீழே சென்று அனைவரும் சக்திக்காக காத்துக் கொண்டிருந்தனர். சக்தியும் ரொம்ப நேரமெடுக்காது சட்டென ப்ரெஷ் ஆகி கீழே வந்தாள். நவீன் தன் கார் சாவியை டிரைவரிடம் கொடுத்து பத்திரமாக ட்ரைவ் செய்து காரையும் தன் மாமனார் மாமியாரையும் சென்னையில் கொண்டு போய் சேர்த்திடுமாறு கூறி அம்புஜத்தையும் ராமானுஜத்தையும் காரில் அனுப்பி வைத்தனர் நவீனும் மிருதுளாவும். பின் வீட்டுக்குள் வந்து பார்த்த மிருதுளா..
“ஹேய் நவீ மை மாம் ஈஸ் க்ரேட்….”
“ஏன் என்ன செஞ்சிருக்கா?”
“இங்க பாருங்கோ இட்டிலி சுட்டு வச்சிருக்கா. மத்தியானத்துக்கு லெமன் ரைஸ் அன்ட் தயிர் சாதம் செய்து… எல்லாத்தையும் டிஸ்போஸபுள் டப்பாக்கள்ல வச்சுட்டு போயிருக்காப்பா!! என்கிட்ட இதெல்லாம் செய்யுறதா சொல்லவேயில்லை. எப்போ செஞ்சிருப்பா?”
“நாம மாடியில தூங்கிண்டிருந்தப்போ ….காலங்காத்தால ஒரு மூணு மணி இருக்கும் ஏதோ பாத்திரம் உருட்டுற சத்தம் கேட்டது…நான் எழுந்து டைம பார்த்தேன் …சரி யாராவது பக்கத்து வீட்டுக்காராளா இருக்கும்னு நினைச்சுண்டு மறுபடியும் படுத்து தூங்கிட்டேன். அப்போ அது நம்ம வீட்டுல தான் நடந்திருக்கு. அப்படீன்ன உன் அம்மா ராத்திரி ஃபுல்லா தூங்கலையா?”
“இருங்கோ அம்மாக்கு கால் பண்ணறேன்….ம்…ரிங் போறது….ஹலோ அம்மா தாங்யூ ஸோ மச் மா”
“என்னத்துக்கு தாங்ஸ் சொல்லற மிருது?”
“அம்மா டிபன் லஞ்ச் எல்லாம் பண்ணி வச்சிட்டு கிளம்பினதுக்கு. லவ் யூ மா.”
“ஆமாம் காரையும் எங்ககிட்ட கொடுத்தனுப்பிட்டேங்கள்….வெளியில போய் சாப்பிடறதாயிருந்தாலும் காரில்லாம எப்படி போவேங்கள்? அதுதான் எல்லாம் செஞ்சு நாங்களும் கையில கட்டிண்டு உங்களுக்கும் வச்சுட்டு கிளம்பினோம். எல்லா கிட்சன் சாமான்களையும் நேத்தே காலி பண்ணி வச்சுட்டேன். நீங்க மூணு பேரும் நல்லா சாப்டுட்டு ஊருக்கு கிளம்புங்கோ சரியா”
“சரிமா….நீங்களும் பத்திரமா போங்கோ. பை மா வச்சுடறேன்”
என்று ஃபோனை வைத்ததும் மூவருமாக காலை டிபனை சாப்பிட்டதும் மீதமிருந்த பேக்கிங்கையும் செய்து முடித்துவிட்டு குளித்து தயாராகி கீழே பெட்டிகளை எல்லாம் கொண்டு வந்து வைத்துவிட்டு …வீட்டின் எல்லா ஜன்னல்களையும் கதவுகளையும் சாத்தி பூட்டிவிட்டு வந்து அமர்ந்து அம்புஜம் செய்து வைத்திருந்த மத்திய சாப்பாட்டை சாப்பிட்டதும் அந்த தட்டுகள், டப்பாக்கள் அனைத்தையும் குப்பைப் பையில் போட்டு நன்றாக இறுக்கக்கட்டி சக்தியிடம் கொடுத்து தெரு முக்கிலிருக்கும் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு வருமாறு கூறினாள் மிருதுளா. சக்தியும் அது படி செய்து விட்டு அவளின் ஃப்ரெண்ட்ஸ்களிடம் தான் ஊருக்கு செல்லுவதாக சொல்லிவிட்டு வந்தாள். சக்தி வீட்டுக்கு வந்த சில மணி நேரத்தில் அந்த சொசைட்டியிலிருந்த பதினைந்து ஃபேமியிலிருந்து அனைவரும் நவீன் மிருதுளா சக்தியை வழியனுப்ப வந்தனர். நவீனின் ஆஃபீஸிலிருந்து கார் வந்தது. அனைவருமாக பெட்டிகளை காரில் ஏற்றினர். மிருதுளா பூஜை அறைக்குச் சென்று அம்பாளை நன்றாக வேண்டிக்கொண்டிருந்தாள் அப்போது நவீன் வாசலில் இருந்து
“மிருது நேரமாச்சு மா”
என்றதும் அங்கிருந்து எழுந்து வீட்டுச் சாவியை கையில் எடுத்துக் கொண்டு ஒரு முறை வீட்டை நன்றாக சுத்திப் பார்த்தாள். பின் மீண்டும் நவீன் குரல் குடுத்ததும் வேகமாக வெளியே சென்று கதவைப் பூட்டி சாவியை தன் கைப்பையில் போட்டுக்கொண்டு அங்கிருந்த அனைவரிடமும் சொல்லிக் கொண்டு …காரில் ஏறினாள். சக்தி முன்னதாகவே ஏறி அமர்ந்திருந்தாள். நவீனும் வீட்டை பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு காரில் ஏறினான். அனைவரும் கையசைத்து
“ஹாவ் எ சேஃப் ஜெர்னி மிஸ்டர் அன்ட் மிஸ்ஸர்ஸ் நவீன். சக்தி ஹாவ் ஃபன். பை பை. எஞ்சாய்”
என்று ஒருசேர கத்திச் சொன்னார்கள். நவீனும் மிருதுளாவும் சக்தியுமாக காரின் ஜன்னல் கன்னாடியை கீழே இறக்கி
“லவ் யூ ஆல். பை பை.”
என்று சொன்னதும் கார் மெல்ல நகர ஆரம்பித்தது. ஜன்னல் வழியே மிருதுளா தன் வீட்டையும் அங்கிருந்த தன் நண்பர்களையும் பார்த்துக் கொண்டே சென்றாள். அந்த சொசைட்டியின் கேட்டை தாண்டிய பின்னும் பின்னால் பார்த்துக் கொண்டிருந்த மிருதுளாவிடம் நவீன்
“மிருது ஜன்னல் கன்னாடியை மேலே ஏத்து. ஏசி வீணாகுது இல்ல.”
என்றதும் கன்னாடியை மேலே ஏற்றிவிட்டு முன்னால் பார்த்து நன்றாக அமர்ந்தாள்.
கார் நேராக பெங்களூர் ஏர்போர்ட் வாசலில் நின்றது. அதிலிருந்து இறங்கி பெட்டிகளை எல்லாம் டிராலியில் வைத்துவிட்டு கார் டிரைவருக்கு டிப்ஸ் கொடுத்து விட்டு உள்ளே சென்று எல்லா செக்கிங்கும் முடிந்துதும். அவர்கள் ஏற வேண்டிய ஃப்ளைட்டின் கேட்டுக்குச் சென்று அமர்ந்ததும் மிருதுளாவுக்கு அம்புஜத்திடமிருந்து கால் வந்தது.
“ஹலோ அம்மா நாங்க எல்லா செக்கிங்கும் முடிஞ்சு கேட்டுல வந்து உட்கார்ந்தாச்சு. இன்னும் ஒரு மணி நேரத்துல கிளம்பிடுவோம்”
“ரொம்ப நல்லது மா. நாங்களும் சென்னை வந்து சேர்ந்தாச்சு. அந்த டிரைவர் பையன் நல்ல பையன் மிருது. எங்களை பொறுப்பா பார்த்துண்டு பத்திரமா கொண்டு வந்து சேர்த்து…காரை கராஜ்ல வச்சுப் பூட்டி சாவியை தந்துட்டு அவனும் மைசூருக்கு பஸ்ஸில் கிளம்பிட்டான். அதை சொல்லத் தான் நான் ஃபோன் பண்ணினேன். சரி மா நீங்களும் பத்திரமா போயிட்டு வாங்கோ. பை வச்சுடறேன்”
“பை மா. நவீ அம்மா தான். அவாளும் சென்னை போய் சேர்ந்தாச்சாம். டிரைவர் உங்க காரை கராஜ்ல வச்சுப் பூட்டி சாவியை அப்பாட்ட குடுத்துட்டு அங்கேந்து மைசூருக்கு கிளம்பிட்டாராம்.”
“ஓகே….சரி வா போர்டிங் அனௌன்ஸ் பண்ணிட்டா….சக்தி வா கிளம்பலாம்”
என்று மூவரும் லைனில் நின்று வரிசைப்படி தங்கள் ஃப்ளைட்டில் ஏறி அவரவர் இருக்கையில் அமர்ந்துக் கொண்டனர். அப்போது மிருதுளா நவீனிடம்
“நாம இந்தியா மண்ணிலிருந்து இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவோம் இல்ல நவீ…இதுக்கு முன்னாடி நாம யூரோப்புக்கு ட்ரிப் போனபோது கூட எனக்கு எதுவும் வித்யாசமா இருக்கலை ஆனா இந்த தடவை மனசுக்குள்ள என்னமோ பண்ணறது நவீ”
“அது ஏன்னா போன தடவை நாம திரும்பி இங்கே வந்திடுவோம்னு நமக்கு நல்லா தெரியும் ஆனா இந்த தடவை நாம நம்ம வாழ்கையையே அங்க தான் வாழப்போறோனு தெரிஞ்சதால உனக்கு ஏதோ மாதிரி இருக்கு அவ்வளவு தான். டோன்ட் வரி வீ வில் பி ஹாப்பி. நமக்கு அந்த புது நாடு என்னனென்ன தர்றதுக்கு காத்திருக்கோ !!!!”
“ம்…எல்லாம் நல்லதே தான் தரும் நவீ. சரி இந்த கவினும் கஜேஸ்வரியும் நம்மள அவா ஆத்துக்கு வான்னு கூட கூப்பிடாம இருக்காளே நவீ!! நாம பின்ன எப்படி அவா ஆத்துக்கு போறது?”
“போக வேண்டாம். அவ்வளவு தான்….அவா நினைப்பு என்னென்னா…நவீனுக்கும் மிருதுளாவுக்கும் தானே இது புது நாடு நமக்கு இது பழைய நாடு தானே…ஸோ அவாளுக்கு ஏதாவது வேணும்னா நம்மகிட்ட தான் ஹெல்ப் கேட்டு வந்தாகணும்னு நினைச்சுண்டு திமிரா இருக்கா…..இருக்கட்டும் இருக்கட்டும்…நமக்கு இதுவரை அந்த கடவுள் தான் துணையா இருந்திருக்கார் இனியும் அவரே பார்த்துப்பார்….ஏன்!!! இவ்வளவு ஊருகளுக்கு நாம மாத்தலாகிண்டிருந்தப்போ எல்லாம் என்ன இவாளெல்லாமா வந்து ஹெல்ப் பண்ணினா…இல்ல நாம தான் யார்கிட்டயாவது ஹெல்ப் கேட்டுண்டு போனோமா? நாம பாட்டுக்கு நம்ம வேலையைப் பாரப்போம் மிருது”
“அதுவும் சரி தான் நவீ. ஆனாலும் எனக்கு ஒண்ணு தோனறது…சொல்லவா”
“என்னது சொல்லு”
“ஒரு வேளை நமக்கு சர்ப்ரைஸ் கொடுக்கறதுக்காக ஏர்போர்ட் வருவாளோ என்னவோ? அப்படி வந்தா நாம அவாகூட அவா ஆத்துக்கு போவோமா இல்ல நம்ம சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்டுக்கு போவோமா!!”
“ஹா!ஹா!ஹா!ஹா! இது வீண் நப்பாசையே தான். இன்னுமா அவாளை நம்புற. இதுல எங்க போறதுன்னு வேற கேட்குற….உன்னை நினைச்சா சிரிப்பு தான் வருது மிருது”
“பாருங்கோ வந்து நிக்கப் போறா….அந்த நேரத்துல எங்க போறதுன்னு நீங்க கன்ஃப்யூஸ் ஆக போறேங்கள்…”
“பாரக்கலாம் பார்க்கலாம்…..முதல்ல பெல்ட்டைப் போடு. சக்தி பெல்ட் போட்டுண்டுட்டியா மா”
“ஆங் போட்டுண்டுட்டேன் பா.”
“ஓகே !! அவர் ஃப்ளைட் இஸ் கோயிங் டூ டேக் ஆஃப் நவ்….அன்ட் அவர் லைஃப் டூ மை டியர் ஏஞ்சல்ஸ்”
என்று புது நாட்டில் புது அனுபவங்களையும், புது வாய்ப்புகளையும், புது நட்புகளையும் தேடி வானில் பறக்கத் துவங்கினர் மூவரும்.
மிருதுளா சொன்னதுப் போல் கவின் கஜேஸ்வரி அவர்களை அழைக்க ஏர்போர்ட் வருவார்களா? இல்லை அது நவீன் சொன்னது போல மிருதுளாவின் நப்பாசையா?
தொடரும்……
அத்தியாயம் 101: வாய்ப்பும்! வம்பும்!
சஸ்பென்ஸ் தாங்க முடியாது மிருதுளாவும் சக்தியும் நவீனிடம் கேட்க அவனோ சற்று நேரம் அவர்களுக்கு விளையாட்டுக் காட்ட…இருவரும் எழுந்துச் செல்ல முற்பட்டப் போது அவர்களைப் பிடித்து அமரச்செய்து
“ஓகே !! ஓகே!! சாரி மை டியர் கேர்ள்ஸ்”
“பின்ன என்ன நவீ எவ்வளவு நேரமா நாங்களும் என்ன? என்னனு கேட்டுக்கிட்டிருக்கறதாம்? அதுதான் எழுந்துப் போகப் பார்த்தோம். இப்பவாவது சொல்லுவேங்களா?”
“ம்…ஓகே. இன்னைக்கு என் கம்பெனி சி.இ.ஓ என்னுடன் பேசினார். அவருக்கு குவைத்தில் இருக்கும் எங்களோட ப்ராஞ்ச் ல புதுசா ஒரு டிவிஷன் ஓபன் பண்ணி அதை விரிவாக்கணுமாம். அதுனால என்னை குவைத்துக்கு வர முடியுமான்னு கேட்டார். நான் யோசிச்சு சொல்லறேன்னு சொல்லிருக்கேன். என் ஏஞ்சல்ஸ் நீங்க ரெண்டு பேரும் என்ன சொல்லறேங்கள்?”
“நல்ல நியூஸ் தான். ஆனா எப்படி உங்களை மட்டும் அங்கே வரச்சொல்லியிருக்காரா இல்லை ஃபேமிலியோடவா?”
“ஃபேமிலியோட ரீலொக்கேட் பண்ண விருப்பமான்னு தான் கேட்டார்.”
“ஓ! ஓகே!! ஆனா நம்ம சக்தி டென்த் முடிக்கணுமே!! எக்ஸாம்ஸ் வர்றதே”
“நான் மொதல்ல ஏப்ரல் மாசம் போயிட்டு ஒரு மாசத்துல மத்த எல்லா ஏற்பாடுகளும் பண்ணிட்டு வந்து உங்களைக் கூட்டிண்டுப் போறதுக்கு எப்படியும் ஜூன் ஜூலை ஆர் ஆகஸ்ட் ஆகிடும். அதுக்குள்ள நம்ம சக்தி எக்ஸாம் எழுதி சூப்பர் மார்க்கும் எடுத்திருப்பா”
“என்ன சக்தி அப்பா சொல்லறதைக் கேட்டே ல!! உனக்கு படிப்பை அங்கே போய் கன்டிண்யூ பண்ண ஓகே வா? இல்லாட்டினாலும் சொல்லு அம்மா உன் கூட உன் படிப்பு முடியுற வரைக்கும் இங்கேயே இருக்கேன். உன் படிப்பு முடிஞ்சிட்டு நாம அங்க போகலாம். என்ன சொல்லுற?”
“எனக்கு நோ ப்ராப்ளம் அம்மா. இவ்வளவு வருஷமா இந்தியாக்குள்ளேயே ஸ்கூல் மாத்தி மாத்திப் படிச்சிட்டிருந்தேன்… இப்ப..வெளிநாட்டுல போய் படிக்கப்போறேன். ஸோ எனக்கு ஒரு டிஃப்ரன்ஸும் இல்ல. ஐ ஆம் ஓகே வித் இட்”
“அதுதான் சக்தியே சொல்லியாச்சே அப்புறமும் எதை யோசிச்சிக்கிட்டிருக்க மிருது?”
“இல்ல நவீ இப்பத்தான் நாம நம்ம புது வீட்டுல வந்து ஒரு ஆறு மாசம் தான் ஆச்சு அதுக்குள்ள மறுபடியும் ஷிஃப்டிங்கான்னு யோசிச்சிட்டிருக்கேன்”
“முதல்ல நான் போய் ஒரு மாசம் இருந்துட்டு ஊர் எப்படின்னு பார்த்துட்டு வர்றேன். அப்புறமா ஷிஃப்டிங் பத்தி டிசைட் பண்ணலாம் ஓகே வா”
“ஓகே!! நவீ”
“அப்பா அப்போ என் போர்டு எக்ஸாம்ஸ் நடக்கும் போது நீ இங்க இருக்க மாட்டியா?”
“இருப்பேன் சக்தி. மார்ச் போயிட்டு ஏப்ரல் மிடில்ல வந்துடேவேன். என்ன ஃபர்ஸ்ட் டூ எக்ஸாம்ஸ்க்கு மட்டும் இருக்க மாட்டேன்.”
“அப்போ ஓகேப்பா”
“சரி மிருது…இந்த ஏரியாவுல இப்போதைக்கு நீங்க ரெண்டு பேரு மட்டும் தனியா இருக்கறதுங்கறது அவ்வளவா சேஃப் இல்ல ஸோ…”
“ஸோ?”
“உன் அப்பா அம்மாவை இங்கே கூட்டிண்டு வந்துடலாமா?”
“வேற யாரு வருவாளாம்? என் அப்பா அம்மா தான் அன்னேலேந்து இன்னே வரைக்கும் இந்த மாதிரி நேரத்துல எல்லாம் நமக்கு கைக் கொடுக்கறவா! ஹெல்ப்பு பண்ணிட்டு உங்க கூட்டத்துக்கிட்டேந்து கெட்டப் பெயரும் வாங்கிக்கறா.”
“அவா நம்க்கு பண்ணின, பண்ணற உதவி …நம்ம ரெண்டு பேருக்கும்… அந்த கடவுளுக்கும் தெரியும் அது போதும். மத்தவாளுக்கென்ன வாய் சும்மா இருக்கேன்னு இவாளைப் போட்டு மென்னுண்டிருக்கா. அதையெல்லாம் விட்டுத் தள்ளு மா”
“ஆமாம் நீங்க ரொம்ப ஈஸியா சொல்லிட்டேங்கள். சரி சரி நாம அப்போ அடுத்த வீக்கென்ட் போய் அப்பா அம்மாவைக் கூட்டிண்டு வருவோம்”
“நாளைக்கு ஃபோன் போட்டு அவாகிட்ட சொல்லிடு. ஆனா நாம அங்கே ஷிஃப்ட் ஆகப் போறதை நான் ஊர்லேந்து திரும்பி வந்துட்டு நாம சேர்ந்து முடிவு பண்ணிட்டு சொல்லிக்கலாம் சரியா”
“ஓகே நவீ டன். ஆமாம் நவீ நம்ம கவின் சாரும் கஜேஸ்வரி மேடமும் அங்கேத் தானே இருக்காங்க அவங்க கிட்ட நீங்க அங்க வர்றதை சொல்ல வேண்டாமா? அப்புறம் அதுக்கும் ஏதாவது சொல்லப் போறா!!”
“ஆமாம் ஆமாம் அவா இங்கே இருந்தப்போ நாம அவா ஆத்துக்கு போனதையே சொல்லிக் காட்டினக்கூட்டம் அது அங்கே நான் ஏனீ போகப் போறேன். எவாகிட்டேயும் இப்போ எதைப்பத்தியும் நானும் சொல்லமாட்டேன் நீயும் சொல்லிக்க வேண்டாம் புரியறதா?”
“ம்…ஓகே…என்னமோ போங்கோப்பா”
“நான் சொல்லறதைக் கேளு மிருது. இப்போ நாம அவாகிட்ட சொல்லிட்டு அங்க நான் என் ஆஃபீஸ் விஷயமா போயிட்டு வந்தா அதை அப்படியே டிவிஸ்ட் செய்து அவன் தான் எனக்கு அங்க வேலையே வாங்கிக் கொடுத்தான்னு எல்லார்கிட்டேயும் ஃபோன் போட்டுச் சொல்லுவா தெரியுமா?”
“அது எப்படி சொல்லுவா? நீங்க இங்க வேலைப்பார்த்த அதே கம்பெனில தானே அங்கேயும் வேலைப் பார்க்கப் போறேங்கள் அப்புறம் எப்படி அவு வாங்கிக் கொடுத்ததுன்னு சொல்லுவா?”
“மிருது நீ ப்ராக்ட்டிக்கல்லா பேசுற அதெல்லாம் அங்கே துளிக்கூட எடுப்படாது. அவா பொய்யை எப்படி அழகா உண்மை மாதிரியே பரப்புவான்னு மறந்துட்டயா?”
“ஆமாம் ஆமாம் நீங்க சொல்லறதும் உண்மை தான். இப்போதைக்கு நான் யார்கிட்டேயும் வாயைத் திறக்க மாட்டேன்ப்பா!!”
“அப்படியே இரு”
“நீங்க பத்திரமா போயிட்டு வாங்கோ அப்புறமா சொல்லிப்போம். ஆனா எனக்கு ஒரு டவுட்டு”
“என்ன?”
“அங்கே வச்சு அவா உங்களை எங்கேயாவது பார்த்துட்டான்னா? இல்லாட்டி ஏன் எங்காத்துக்கு வரலைன்னு அப்புறமா விஷயம் தெரிஞ்சுக் கேட்டான்னா”
“அதுக்கெல்லாம் சான்ஸே இல்ல மிருது. என் ஆஃபீஸ் எதிர்க்க இருக்குற ஹேட்டல் ல தான் நான் தங்கப் போறேன் ஸோ ஆஃபிஸ் விட்டா ரூம். ரூம் விட்டா ஆஃபீஸ்ன்னு இருப்பேன். இதுல எங்க அவாளைப் பார்க்கறது. வெளில எங்கேயாவது போனா தானே பார்ப்பேன். அதுவுமில்லாம அவா எந்த ஏரியாவுல இருக்கான்னு கூட நமக்குத் தெரியாது அப்புறம் எப்படி போறது? நீ அந்த கஜேஸ்வரி கிட்ட அவா குழந்தைக்கு பர்த்டே கிஃப்ட் அனுப்பறதுக்காக அவா வீட்டு அட்ரெஸ் கேட்டப்போ அவ குடுக்கலை இல்லையா விடு நமக்கு அவா அட்ரெஸ் தெரியாது ஸோ போகலை…ஆஸ் சிம்பிள் ஆஸ் தட்”
“ஓ ஆமாம் ஆமாம் யூ ஆர் ரைட்.”
அவர்கள் பேசிக்கொண்டதைப் போலவே அடுத்த வாரக் கடைசியில் சென்று அம்புஜத்தையும் ராமானுஜத்தையும் அழைத்து வந்தனர். மார்ச் இரண்டாவது வாரம் நவீன் கிளம்பி குவைத்துக்குச் சென்றான். ஏப்ரல் முதல் வாரத்தில் சக்தி இரண்டு பரீட்சையை எழுதினாள். இரண்டாவது வாரம் நவீன் சொன்னது போலவே மைசூருக்கு வந்து சேர்ந்தான். வந்த அடுத்த நாள் மிருதுளாவிடம்
“மிருது எனக்கென்னவோ நமக்கு அந்த ஊர் செட்டாகும்ன்னு தோணறது. நல்லா தான் இருந்தது அதுனால என் பாஸ் கிட்ட ஓகேன்னு சொல்லி விசா எல்லாம் பண்ணிட்டேன். சாரி உங்க ரெண்டு பேர் கிட்டேயும் கேட்காம பண்ணிட்டேன்”
உங்களுக்கு ஓகேன்னா எங்களுக்கும்உங்க வேலை வாய்ப்புகளுக்காக நானும் சக்தியும் எதையும் பொறுத்துப்போம். எப்படியும் அட்ஜஸ்ட் பண்ணிப்போம். அது தானே லைஃப். அப்போ நாம குவைத்துக்கு ஷிஃப்ட் ஆகப் போறோம். கன்ஃபார்ம் தானே? ஏன்னா என் அப்பா அம்மாகிட்ட சொல்லறதுக்காகக் கேட்கறேன்…நானும் இந்த ஒரு மாசமா சொல்லாம ரொம்ப சிரமப் பட்டுட்டேன். சொன்னா சந்தோஷப்படுவா.”
“ஓ! எஸ் மிருது. தாராளமா இப்போ சொல்லிக்கோ. அது தான் ஓகே பண்ணியாச்சே”
“நாளைக்கு காலையில சொல்லிடறேன். எனக்கு மனசுல ஒண்ணு தோணறது அது சரியா தப்பான்னு எனக்குத் தெரியலை. ஒரே குழப்பமா இருக்கு….ஒரு மனசு நான் அப்படி நினைக்கறது தப்புன்னு சொல்லறது இன்னொரு மனசு இல்லவே இல்லை நீயும் மனுஷி தானேன்னு சமாதானம் படுத்தறது நவீ”
“நீ அப்படி என்னத்தை நினைச்ச …உன் மனசு உன்னைப் படுத்தறதுக்கு?”
“உங்க தம்பி அந்த கவின் அன்னைக்கு எங்க அம்மா முன்னாடி உங்களுக்கு டெக்னிக்கல் ஸ்கில்ஸ் இல்ல அதுனால உங்களுக்கெல்லாம் அந்த ஊர்ல வேலைக் கிடைக்காதுன்னு சொன்னான் இல்லையா!”
“ஆமாம் சொன்னான் அதுக்கு ஏன் உன் மனசு உன்னைப் படுத்தணும்?”
“ஆனா அந்த ஆண்டவன் இப்போ நம்மளை அதே ஊருக்கு கூட்டிட்டுப்போறதை நினைச்சேனா…அதுதான் என்னோட ஒரு மனசு….பாருடா கவின் உங்க அண்ணன்…. எந்த வித டெக்னிக்கல் ஸ்கில்ஸ் இல்லன்னு நீ சொன்ன அதே நவீன் .…இப்போ உங்க ஊர்லயே வந்து வேலைப் பார்க்கப் போறார்ன்னு….சத்தமா சொல்லித்தா அதைக்கேட்ட என்னோட இன்னொரு மனசு வேண்டாம் மிருது அடக்கம் தான் இப்போ ரொம்ப முக்கியமானதுன்னு சொல்லி என்னை அடக்கிடுத்து”
“நீ நினைச்சது ஒண்ணும் தப்பிலை மிருது. நாமளும் மனுஷா தானே…இட்ஸ் ஓகே லீவ் இட். இதுக்கெல்லாம் இவ்வளவு யோசிச்சு உன்னை நீயே குழப்பிக்காதே சரியா”
“ம்…ஓகே நவீ. சரி நாம எப்ப கிளம்பணும் நம்மளோட இந்த வீட்டுப் பொருட்களையெல்லாம் என்னப் பண்ணப் போறோம்?”
“எல்லாத்தையும் வித்துட வேண்டியது தான்.”
“அச்சச்சோ!! எல்லாமே புதுசா வாங்கினது நவீ. இதை எல்லாம் இப்போ வித்தா பாதி காசு தான் கிடைக்கும்….அது வாங்கி ஆறு மாசமானாலும் சரி ஆறு வருஷமானாலும் சரி”
‘ஓ!! ஓகே அப்போ நாம நம்ம கூடவே எடுத்துண்டு போயிடலாம்.”
“அப்பாடி அதுக்கு எவ்வளவு ஆகுமோ?”
“அதைப் பத்தி நீ ஏன் கவலைப்படறாய்? எவ்வளவானாலும் அதை என் கம்பெனிப் பார்த்துக்கும். ஸோ டோன்ட் வரி மிருது. பீ கூல்”
“அப்படின்னா சரி. நாம உங்க ஃபேமிலி கிட்ட இந்த விஷயத்தை சொல்ல வேண்டாமா?”
“ம்…ம்…சொல்லிக்கலாம் சொல்லிக்கலாம். இப்போ வேண்டாம் ரெண்டு நாள் போகட்டும்”
மறுநாள் விடிந்ததும் நவீனும் சக்தியும் ஆஃபீஸ் ஸ்கூல் போனப் பின் தன் அப்பா அம்மாவிடம் விவரத்தைச் சொன்னாள். இருவரும் சந்தோஷமானார்கள். அப்போது அம்புஜம் அதுவரை மிருதுளாவிடம் சொல்லாததை சொன்னாள்….
“முதல்ல அந்த அம்பாளுக்குத் தான் நன்றி சொல்லணும் மிருது. இரு சுவாமி கிட்ட சொல்லிட்டு வர்றேன்.”
“சரிமா சொல்லிட்டு வா”
“மிருது இது நாள் வரைக்கும் என் மனசை அறுத்துண்டு இருந்த ஒரு விஷயத்தை இப்போ நான் உன்கிட்ட ஷேர் பண்ணலாம்னு இருக்கேன்”
“என்னமா அது?”
“பல வருஷத்துக்கு முன்னாடி ஒரு நாள் உன் மச்சினன் அந்த கவின் நம்ம நவீனை டெக்னிக்கல்…. என்னமோ இல்லை அதுனால அவருக்கெல்லாம் அங்க வேலைகிடைக்கச் சான்ஸே இல்லைன்னு என்னை வச்சுண்டே நக்கலா சொன்னான் இல்லையா…அது எனக்கு ரொம்ப சங்கடமா போயிடுத்து டி…அதை அவா அண்ணா தம்பிக்களுக்குள்ள சொல்லியிருக்கலாம் இல்லாட்டி நீங்க எல்லாருமா இருக்கும் போது கூட சொல்லியிருக்கலாம் ஆனா நான் அங்கே இருக்கும் போது அவரை அப்படி பேசினதும் ….நான் உடனே அந்த அம்பாள்ட்ட இப்படி ஏளனம் செய்யறவா முன்னாடி என் பொண்ணும் மாப்பிள்ளையும் அதே ஊர்ல போய் வேலைப் பார்க்கணும் தாயின்னு வேண்டின்டேன் தெரியுமா!! அதை உன்கிட்ட சொன்னா நீ சங்கடப்படுவியேன்னு தான் அப்போ அதை நான் உன் கிட்ட சொல்லலை. இப்போ அந்த அம்பாள் செய்திருக்கும் இந்த அதிசயத்தைப் பார்த்ததும் எனக்கு என்ன சொல்லறதுன்னு தெரியலைமா. நீ வந்து இப்போ இதைச் சொன்னதைக் கேட்டதும் அப்படியே புல்லரிச்சுப் போச்சு. நீங்க ரெண்டு பேரும் இன்னும் இன்னும் மேன்மேலும் நல்லா வருவேங்கள் பாரு. எங்க ஆசிர்வாதம் எப்பவுமே உங்க ரெண்டு பேருக்கும் உண்டு. சந்தோஷமா போயிட்டு வாங்கோ”
“ம்….உனக்குப் பட்டது போலவே தான் என் மனசிலேயும் அப்போ பட்டுது மா. கடவுள் இருக்கார் மா இருக்கார்.”
“சரி உங்க மாமனார் மாமியார் கிட்ட சொல்லியாச்சா? இதைக் கேட்டா அவாளும் சந்தோஷப்படுவாயில்லையா!!”
“ம்….ம்….சொல்லணும் சொல்லணும்”
“சரி அதுதான் மாப்பிள்ளை ஊர்லேந்து வந்துட்டாரே நாங்க சென்னைக்குப் போகலாமா?”
“ஏன்மா? என்ன அவசரம்? நாங்க இன்னும் இரண்டு மாசத்துல குவைத்துக்கு போயிடுவோம் அப்புறம் வருஷத்துக்கு ஒரு தடவைத் தான் பார்த்துக்க முடியும் ஸோ….இங்கேயே எங்கக் கூட இருந்துட்டு நாங்க ஊருக்குப் போற அன்னைக்கு எங்க கார்லேயே நீங்க சென்னைப் போயிடுங்கோ. அந்த காரை நீங்க யூஸ் பண்ணிக்கோங்கோ”
“யாரு ஓட்டறதாம்?”
“இங்கேந்து சென்னை போக நாங்க டிரைவர் ஏற்பாடு பண்ணறோம். அங்க லோக்கல் ல நீங்க ஏற்பாடு பண்ணிக்கோங்கோ”
“இவ்வளவு நல்ல வண்டியை டிரைவரை நம்பி எல்லாம் குடுக்கலாமா மிருது”
“உங்களால ஓட்ட முடியாது இல்ல அப்போ குடுத்துத்தான் ஆகணும். ஒண்ணும் ஆகாது மா. வண்டியை யூஸ் பண்ணாம வச்சிருந்தாலும் வேஸ்ட்டாகிடும்.”
“ஓ!! அப்படி வேற இருக்கா? பேசாம வித்திடுங்கோளேன்”
“பாதி காசுக் கூட கிடைக்காது மா. அதுக்கு நீங்க யூஸ் பண்ணிக்கோங்கோளேன்”
“ம்….பார்ப்போம் பார்ப்போம்”
“அதுக்கு பெட்ரோல் போடுற காசுல நாங்க நாலு மாசம் எலக்ட்ரிக் ட்ரெயின் ல போயிட்டு வருவோம் மிருது.”
“அப்பா…. என்னமோ பண்ணுங்கோ.”
அடுத்த நாள் சனிக்கிழமை என்பதால் அன்று அனைவருக்கும் கால் செய்து விஷயத்தை சொல்லலாமென்றிருந்தனர் நவீனும் மிருதுளாவும். அதுபடியே முதலில் ஈஸ்வரன் வீட்டுக்குக் கால் செய்தனர்.
“ஹலோ அப்பா நான் மிருது பேசறேன்”
“ஆங் நான் ஈஸ்வரன் பேசறேன் சொல்லு. எல்லாரும் எப்படி இருக்கேங்கள்?”
“நாங்க நல்லா இருக்கோம். ஒரு குட் நியூஸ் சொல்லத் தான் நாங்க கால் பண்ணினோம்ப்பா”
“அப்படியா என்னது?”
“நாங்க குவைத்துக்கு ஷிஃப்ட் பண்ணப்போறோம். நவீன் அங்கே ஜாப் ல ஜாயின் பண்ணப்போறார்.”
“ஓ!! அப்படியா…அதுதான் நீங்க ரொம்ப வருஷமா ட்ரை பண்ணினது தானே!! ஓகே ஓகே”
என்றதும் மிருதுளாவுக்கு கோபம் வந்தது. உடனே நவீன் ஈஸ்வரனிடம்
“நான் அங்கே ட்ரைப் பண்ணி போகலை!! நான் இப்போ வேலைப் பார்க்குற கம்பெனியே என்னை அங்கே அனுப்பறா. நாங்க ரொம்ப வருஷமா ட்ரைப் பண்ணறோம்னு உனக்கு யார் சொன்னா?”
“இல்லடா கவின் கிட்டக் கூட நீ சொல்லியிருந்தயே!!! அவன் தான் சொன்னான்.”
“ஆமாம் ஆமாம் அவன் அதுவும் சொல்லுவான்…அதுக்கு மேலேயும் சொல்லுவான். இந்த வேலையே அவன் தான் வாங்கிக் குடுத்தான்னும் சொல்லுவான் உன் புள்ளை….சரி நான் ஃபோனை வைக்கறேன்”
“ம்…இருங்கோ நவீ. என்கிட்டக் குடுங்கோ..அப்பா… அம்மாகிட்டேயும் குடுங்கோ சொல்லறேன்.”
“ம்…அவ இங்க இல்ல வெளியப் போயிருக்கா. சரி வச்சுடறேன்”
என்று ஃபோனைக் கட் செய்தார் ஈஸ்வரன். அதைக் கேட்டதும் நவீன் மிருதுளாவிடம்
“பார்த்தையா மிருது…மனசார ஒரு கங்க்ராட்ஸ் டான்னு கூட சொல்ல வாய் வரலைப் பார்த்தையா!!! என்னத்துக்கு அந்த லேடி கிட்ட பேசணும்னு சொல்லி அசிங்கப் பட்ட ?? உனக்கு தேவையா? இதுக்குத் தான் நான் சொன்னேன் இவா கிட்ட எல்லாம் ஒண்ணும் சொல்லிக்க வேண்டாம்னு…”
“சரி சரி விடுங்கோ நவீ…நாம நம்ம கடமையை சரியா செஞ்சிடுவோமே. நாம என்ன அவா வாழ்த்தணும்னு எதிர்ப்பார்த்தா விஷயத்தை சொன்னோம்?”
“ஏன் மா ஒரு நல்ல விஷயத்தை சொல்லும் போது எல்லாருமே வாழ்த்த தானே செய்வா…”
“சரி நாம அடுத்து உங்க தம்பிகள்ட்ட பேசலாம்”
“ஏன் அன்னைக்கு கிரகப்பிரவேசத்துக்கு கூப்பிடப்போய் ஒருத்தி ஃபோனை ஆன் பண்ணினது கூட தெரியாத மாதிரி திமிரா பேசினா…இன்னொருத்தன் ஃபோனையே எடுக்கலை..தேவையா நமக்கு? அதுதான் அவா அப்பா கிட்ட சொல்லியாச்சு இல்ல அவர் சொல்லிப்பார். அது போதும் விடு நாம நம்ம ஃப்ரெண்ட்ஸ் அன்ட் அதர் ரிலேட்டிவ்ஸ்க்கு சொல்லுவோம்.”
என்று எல்லோரிடமும் தாங்கள் வெளிநாட்டுக்கு செல்வதாச் சொல்லி முடித்ததும் நவீன்
“இங்க பாரு மிருது இந்த விஷயத்தையும் ஏதாவது வேற விதமா பரப்பி உன்னை நிம்மதியா இருக்க விடமா பண்ணுவா. ஸோ நீ கூலா இரு சரியா”
“ம்…ம்…ஓகே. ஆனா இந்த விஷயத்தை என்னப் பண்ணுவா? சொல்ல முடியாது இதையும் நீங்க சொல்லறா மாதிரி ஏதாவது சொல்லிப் பரப்பியிருப்பா இன்னேரம்”
“ஆங் அப்படி எதிர்ப்பார்த்துண்டே இரு அப்போ ஏமாற்றமே இருக்காது.”
சக்தி எல்லாப் பரீட்சைகளையும் முடித்து, அதில் தொன்னூற்றி ஐந்து சதவிகிதம் மார்க் எடுத்து பத்தாவது வகுப்பில் தேர்ச்சியானாள். புது நாட்டில் தன் அப்பா பார்த்து வைத்திருந்த ஐந்து பள்ளிகளிலும் அப்ளை செய்து, நேர்காணலில் பங்கெடுத்துப் பேசி… அனைத்திலிருந்தும் அவளுக்கு அட்மிஷன் கிடைத்தது. அதிலிருந்து அவளுக்குப் பிடித்தப் பள்ளிக்கூடத்தை அவளே தேர்வும் செய்தாள். ஆக பள்ளிக்கூட அட்மிஷன் எந்தவிதப் பிரச்சினையுமின்றி நடந்தது. அடுத்து தங்குவதற்கு வீடு…அதைப் பற்றி மிருதுளா கேட்டதற்கு நவீன்
“அதெல்லாம் நோ இஷ்ஷூஸ் மிருது. என் கம்பெனி ஒன் மந்த் சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் தந்திடுவா. அதுக்குள்ள நாம வீடுப் பார்த்துக்கலாம். அவாளும் ஹெல்ப் பண்ணுவா”
“ஓ!! அப்போ ஓகே”
ஒரு நாள் கஜேஸ்வரியிடமிருந்து வாட்ஸ்அப் கால் வந்தது. அதை அட்டென்ட் செய்தாள் மிருதுளா
“ஹலோ கஜேஸ்வரி எப்படி இருக்க? அட கவினும் இருக்கான்!! இன்னைக்கு லீவா?”
“இல்ல மன்னி இதோ கிளம்பிட்டேன். சரி உங்ககிட்ட பேசிட்டிப் போகலாமேனு வெயிட் பண்ணறேன்”
“அப்படியா என்ன விஷயம்?”
“எங்க பையனோட உபநயனம் வர்ற ஜூன் மாசம் 28 ஆம் தேதி வசாசிருக்கோம் அதுக்கு இன்வைட் பண்ணத் தான் கால் பண்ணினோம். பத்திரிகை எல்லாம் அடிச்சாச்சு. அதை எல்லாருக்கும் அனுப்பவும் ஆரம்பிச்சாச்சு.நவீன் கிட்ட அப்புறமா கால் பண்ணி சொல்லிக்கறேன்”
என்று கவின் சொல்லி முடிப்பதற்குள் கஜேஸ்வரி முந்திக்கொண்டு
“ஆமாம் மன்னி அப்புறமா கூப்பிடவே இல்லைன்னு யாரும் சொல்லிடக்கூடாது இல்லையா அதுதான் எல்லாரையும் கூப்பிட்டு சொல்லிடலாம்ன்னு தான் கால் பண்ண ஆரம்பிச்சிருக்கோம்.”
“கூப்பிடலைன்னா கூப்பிடலைன்னு தான் சொல்லுவா கஜேஸ்வரி. ஒருத்தரை நாம இன்வைட் பண்ணினா அவா ஏன் பண்ணலைன்னு சொல்லப்போறா? அப்படி எல்லாம் யாருமே சொல்ல மாட்டா….எஸ்பெஷலி நாங்க அப்படி சொன்னதில்லை சொல்லவும் மாட்டோம்”
“அய்யோ மன்னி நான் பொதுவா தான் சொன்னேன்”
“நான் பொதுவாவும் ப்ளஸ் எங்களையும் சேர்த்து தான் சொன்னேன்.”
“அந்த ஃபங்ஷன் முன்னாடி சுமங்கலிப் பிரார்த்தனை வைக்கலாம்னு இருக்கேன். நாங்க இந்தியாவுக்கு இரண்டு வாரம் முன்னாடி தான் வருவோம் …ஸோ..அது தான் ரெண்டு டேட் இருக்கு ஒண்ணு இருபத்தி இரண்டு இன்னொன்னு இருபத்தி ஆறு. உங்களுக்கு எது வசதியான தேதினு சொல்லுங்கோ அன்னைக்கே வச்சுக்கலாம்”
இதைக் கேட்டதும் மிருதுளா மனதிற்குள்
“என்னடா இது ….இது நாள் வரை ஏன் ஏதுனு கேட்கக்கூட ஆள்ளில்லாம இருந்தோம்...இப்போ என்னடான்னா என் வசதி எல்லாம் கேட்கிறாளே!!! இல்லை இதுல ஏதோ ஒண்ணு இருக்கு…உஷார் மிருது”
“மன்னி என்ன நான் பாட்டுக்கு கேட்டுண்டே இருக்கேன் நீங்க ஏதோ யோசனையில இருக்கீங்க?”
“ம்…ஆங்…ஆங்…எதுக்கு என் வசதி எல்லாம் பார்த்துண்டு!!! உங்களுக்கெல்லாம் எது வசதியோ அதை செய்ய வேண்டியது தானே….அது தானே உங்க வழக்கமும்.”
“இல்ல மன்னி இதுவரை நம்மாத்துல நடந்த சுமங்கலிப் பிரார்த்தனைக்கு உங்களால வரமுடியலை இல்லையா அது தான் இந்த தடவை உங்க டேட் எல்லாம் முடிஞ்சு நீங்க ஃப்ரீயா இருக்குற நாளா சொல்லுவீங்களேன்னு தான் இரண்டு டேட் சொன்னேன்.”
“அப்படி மாத்தி சொல்லாதே கஜேஸ்வரி. என்னால வர முடியாததால நான் வரமா இல்லை. என்னை வரவிடாம சில பேர் பார்த்துண்டா அதுனால தான் நான் அட்டென்ட் பண்ணலை. ஓகே….அதுனால எனக்கு ஒண்ணும் இல்லை ஆனா ஒரு சுமங்கலியை வரக்கூடாது என்று நினைத்து பண்ணினவாளுக்கு தான் அந்த மகாபாவம் போய் சேரும்!”
“சரி மன்னி இப்போ சொல்லுங்கோ இருபத்தி இரண்டா இல்ல இருபத்தி ஆறா?”
“நீ என்னவோ ரொம்ப வற்புறுத்தி கேட்கிறதால சொல்லறேன் ….இருபத்தி அஞ்சு எனக்கு டேட்… ஸோ இருபத்தி இரண்டு எனக்கு ஓகே போதுமா”
“அச்சச்சோ அப்படியா?”
“ஏன் என்னாச்சு?”
“இல்ல எனக்கு இருபத்தி இரண்டு டேட்….அது தான் யோசிக்கறேன்….அதுவுமில்லாம இருபத்தி ஆறு வச்சுண்டா விசேஷத்தை ஒட்டி வர்றதால எல்லாரும் இதுக்கும் வந்துட்டு அப்படியே விசேஷத்தையும் அட்டென்ட் பண்ணிட்டு போயிடுவாளேன்னு யோசிச்சோம்”
“இதுக்கு தான்… நான் முன்னாடியே சொன்னேன் உன் இஷ்டத்துக்கு வச்சுக்கோன்னு. சரி ரெண்டு தேதியை முடிவு பண்ணும் போது உனக்கு தெரியாதா இருபத்தி இரண்டு உனக்கு ஒத்து வராதுன்னு!!”
“தெரியும் மன்னி அது தான் என்ன பண்ணலாம்னு யோசிச்சிக்கிட்டிருக்கேன்”
“அப்போ எப்படி அன்ட் எதுக்கு என் கிட்ட ரெண்டு தேதியை எல்லாம் சொல்லி என்னமோ என் வசதிப்படி வைக்கறா மாதிரி எல்லாம் டிஸ்கஸ் பண்ணின? எப்படியும் எப்பவும் போல உன் வசதிப்படி நான் இல்லாத மாதிரி தான் வைக்கப் போற ….அதுக்கு எதுக்கு இவ்வளவு நேரம் வேஸ்ட் பண்ணின?”
“அய்யோ!! மன்னி இன்னும் நாங்க டிசைட் பண்ணலை.”
“ம்….நீ கேட்ட நான் சொல்லிட்டேன். இனி உன் இஷ்டம். சரி அதை விடு. உன் மாமா உன்கிட்ட நாங்க குவைத் ஷிஃப்ட் ஆகப் போறதைப் பத்தி சொன்றாரா?”
“இல்லையே !!!”
“என்னது இல்லையா?! நம்பறா மாதிரி இல்லையே கஜேஸ்வரி. உன் மாமா உன் கிட்ட எதையுமே சொல்லாம இருக்க மாட்டாரே!!”
“ஆங் ..ஆங் ….சொன்னா….சொன்னா! நாங்க கொஞ்சம் இந்த ஃபங்ஷன் வேலைகள்ல பிசியா …அது தான் ஞாபகமில்லை”
என்று கஜேஸ்வரி சொல்லி முடிக்கவும் கவின் டக்கென்று
“நவீன் இங்கே எந்த கம்பெனியில் ஜாயின் பண்ணப்போறான்?”
“அவர் இப்போ வேலைப் பார்க்கற கம்பெனியோட ப்ராஞ்ச் அங்கேயும் இருக்கு அதுல தான்.”
“ஓ !!! அப்போ விசா எல்லாம்”
“அவருக்கு கிடைச்சாச்சு. எங்களுக்கு டூரிஸ்ட் விசால அங்கே வந்துட்டு தான் டிப்பென்டன்ட் விசாக்கு மாத்தணும்”
“ஓ!! நவீனுக்கு விசா ஆயிடுத்தா? அப்படின்னா அவன் இங்கே வந்திருக்கணுமே”
“ஆமாம் ஒரு மாசம் அங்கே தான் இருந்தார்”
“அப்படியா!!! சொல்லவேயில்லையே!!”
“அதை நீ அவர்கிட்ட தான் கேட்கணும்”
“சரி அப்போ வீடெல்லாம் பார்த்தாச்சா?”
“இல்லை இல்லை…அங்க நாங்களும் வந்ததுக்கப்புறமா தான் பார்க்கணும்”
“ஓ! அப்போ இங்கே வந்ததும் தங்கறதுக்கு ஆஃபிஸே அக்காமடேஷன் தந்திடறாளோ”
“ஆமாம் ஒன் மந்த் ஒன் டவர்ஸ்ன்னு ஒரு சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் தந்திருக்கா. அதுக்குள்ள வீடு தேடணும். சரி நீங்க இருக்குற ஏரியா எது?”
“நாங்க ஏர்போர்ட் கிட்ட இருக்கோம். எங்காத்துலேந்து பார்த்தா ப்ளைட்ஸ் டேக் ஆஃப் லேண்டிங் எல்லாமே தெரியும்”
“அப்படின்னா ரொம்ப நாய்ஸியா இருக்குமோ”
“இல்ல பால்கனி கதவை திறந்தா நான் சவுண்டு வரும்…இல்லாட்டி எதுவும் கேட்காது. சக்திக்கு ஸ்கூல் பார்த்தாச்சா?”
“ஆங்!! அதெல்லாம் பார்த்து அட்மிஷனும் கிடைச்சாச்சு. நாங்க ஜூலை பத்தாம் தேதி கிளம்பலாம்னு இருக்கோம். இன்னும் டிக்கெட் புக் பண்ணலை. பார்ப்போம்”
“ம்…சரி மன்னி நான் வேலைக்கு போகணும் டைம் ஆயிடுத்து நீங்க கஜேஸ்வரிட்ட பேசிண்டிருங்கோ”
என்று அண்ணனுக்கு ஒரு வாழ்த்து சொல்லக்கூட மனமின்றி விவரங்களை மட்டும் சேகரித்துக் கொண்டதும் கிளம்பிவிட்டான் கவின். அவன் சென்றதும் கஜேஸ்வரி மிருதுளாவிடம்
“ஓ!! மன்னி நீங்க உங்க புது வீட்டுல இருக்கீங்க இல்ல…அதுதானே என்னடா பின்னாடி அந்த புத்தர் ஃபோட்டோவைப் பார்த்ததும் நினைச்சேன்…..சரி அப்படியே வீட்டை வீடியோவிலேயே சுத்திக் காட்டுங்கோ”
மிருதுளாவும் வீட்டை தன் கைபேசி மூலம் சுற்றிக் காண்பித்து வந்து சோஃபாவில் அமர்ந்தாள். அப்போது கஜேஸ்வரி
“ம்…மன்னி கடகடன்னு காமிச்சிட்டு வந்துட்டேங்கள். சரி மன்னி எனக்கு வேலையிருக்கு பை. அப்புறமா பேசறேன்”
என்று அவள் காரியம் முடிந்ததும் ஃபோனை வைத்தாள் கஜேஸ்வரி. கவின் கஜேஸ்வரி இருவருமே மிருதுளா அவர்கள் ஊருக்கு வருவதாக சொல்லியும் தங்கள் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைக்காதிருந்தனர். இப்படியும் சில மனிதர்கள்….கூடப்பிறந்தவர்கள்!!!!!
அன்று மாலை நவீன் வந்ததும் மிருதுளா கவின் கஜேஸ்வரியின் கால் பற்றிய விவரங்கள் அனைத்தையும் கூறி….
“நவீ அவா ஒரு வாழ்த்துக் கூட சொல்லலை. நான் இன்ன தேதிக்கு வருவோம்னு சொல்லியும் எங்க தங்கப் போறேங்கள்னு உங்க தம்பி கேட்டானே ஒழிய ஆத்துக்கு வாங்கோனு சொல்லலைப்பா. இது நாள் வரைக்கும் அவா நம்மளை அவா நடத்தின எந்த விசேஷத்துக்கும் மதிச்சு கூப்பிட்டதே இல்லை ஆனா இப்போ என்னடான்னா என்னோட வசதி எல்லாம் கேட்கறாளேன்னு நானும் அவ சொன்ன இரண்டு தேதில ஒண்ண சொன்னா உடனே அந்த இன்னொரு தேதி தான் அவளுக்கு வசதினு டக்குனு ப்ளேட்டை மாத்திட்டா தெரியுமா!!! என்னமோ எனக்கு முக்கியத்துவம் குடுக்கறா மாதிரி பேசிட்டு கடைசியில அவ டிசைட் பண்ணிருக்கறதை தான் சொன்னா தெரியுமா….அப்பப்பா என்னமா பேசறாப்பா!!!”
“மிருது உனக்கு இன்னமும் ஒரு விஷயம் புரியலை”
“அவா ஏன் நான் இருக்கும் போது கால் பண்ணாம…நான் ஆஃபீஸ் போன நேரமா பாத்து பேசிருக்கா? எல்லாம் வம்பு. நான் இருக்கும் போது பேசியிருந்தா இவ்வளவு விஷயங்களை அவாளால கலெக்ட் பண்ணிருக்க முடியாதே!!! அதுவுமில்லாம இது வரை நம்மை எதுக்குமே கால் பண்ணி இன்வைட் பண்ணாதவா திடீர்னு இப்படி பண்ணறான்னா!!!! ….திருந்திட்டான்னு எல்லாம் தப்புக் கணக்குப் போட்டுடக் கூடாது!!! எல்லாமே விஷயம் தெரிஞ்சுக்கறதுக்காக மட்டுமே. அதுனால தான் அவாளுக்கு வேண்டிய விஷயத்தை மட்டும் தெரிஞ்சுண்டதும் கிளம்பிட்டா. இனி இந்த விவரங்களை எல்லாம் வச்சுண்டு என்ன டிராமா போடப்போறாளோ!!!”
“அச்சச்சோ அப்போ நானா அவாகிட்ட சொல்லிருக்கக்கூடாதோ? சாரிப் பா”
“நீயா சொல்லாட்டாலும் அவா உன் கிட்டேந்து எப்படி கேட்டு வாங்கணுமோ அப்படி பேசி விவரத்தை வாங்கியிருப்பா. இன்னைக்கு அவாளோட கால் பர்பஸ்ஸே அதுதான். ஸோ நீ வருத்தப் படாதே. ஆனா இனி நல்லா உன் மனசுல ஒண்ணு வச்சுக்கோ எப்பவுமே இந்த ஆளுகள்ட்ட எல்லாத்தையும் விலாவாரியா சொல்லாதே. விஷயத்தை சொன்னா மாதிரியும் இருக்கணும் ஆனா சொல்லாத மாதிரியும் இருக்கணும்”
“அது எப்படி நவீ சொன்னா மாதிரியும் இருக்கணும் சொல்லாத மாதிரியும் இருக்கணும்”
“ஃபார் எக்ஸாம்பிள்….இன்னிக்கு நீயா சொல்லாட்டினாலும் அவாளா கேட்டிருப்பா அப்போ நீ ஆமாம் வர்றப்போறோம்னு மட்டும் சொல்லிட்டு மத்ததுக் கெல்லாம் எனக்கு தெரியாது அதை நீங்க நவீன்ட்ட தான் கேட்கணும்னு சொல்லியிருந்தேன்னா அங்கேயே கால் கட் ஆகியிருக்கும். ஸோ நீ நாம ஷிஃப்ட் ஆகறதை சொன்ன ஆனா ஃபுல் டிட்டேய்ல்ஸும் சொல்லலை இது மாதிரி தான். இன்னும் க்ளியரா சொல்லணும்னா உன் மச்சினன் அந்த கவின் எப்படி அவா இருக்கற இடத்தைப் பத்தி சொன்னான் ஆனா இடத்தின் பெயரை சொல்லலை இல்லையா அது மாதிரி….உன் ஓர்பிடி அந்த கஜேஸ்வரி எப்படி தேதி எல்லாம் சொல்லறா மாதிரி சொன்னா ஆனா கரெக்ட்டான தேதி இன்னமும் உனக்குத் தெரியலை அது மாதிரி….புரிஞ்சுதா?”
“ஆங்!!! புரிஞ்சுது நவீ. இனி நீங்க சொன்னா மாதிரியே நடந்துக்கறேன். இப்போ இருபத்தி ஆறாம் தேதி சுமங்கலிப் பிரார்த்தனை வச்சிண்டான்னா நான் இந்த தடவையும் அட்டென்ட் பண்ண முடியாதே நவீ”
“விடு மிருது அவா எல்லாம் நல்ல மனசோட எதுவுமே பண்ணறதில்லை அதுனால அதுல கலந்துக்காட்டாலும் தப்பில்லை. நீ மனசார வருஷத்துக்கு பதினைந்து சுமங்கலிகளுக்கு நவராத்திரி சமயத்துல செஞ்சிண்டு வர இல்ல அது போதும். அந்த அம்பாளின் ஆசிர்வாதம் நமக்கு எப்போதுமிருக்கும்.”
“ஓகே நவீ டன்”
“சரி இன்னைக்கு என் ஆஃபீஸ் டிராவல்ஸ்லேந்து ஃபோன் பண்ணினா அவா ஜூன் பத்தாம் தேதிக்கு டிக்கெட் புக் பண்ணிட்டாளாம். பேக்கிங்க்கு இன்ட்டர் நேஷனல் பேக்கர்ஸ் அன்ட் மூவர்ஸும் ஏற்பாடு பண்ணிட்டாளாம். அவா ஜூன் எட்டாம் தேதி வந்து எல்லாத்தையும் பேக் பண்ணி ஷிப் பண்ணிடுவா. நமக்கு குவைத்துல ஒரு மாசம் கழிச்சு தான் நம்ம பொருள் எல்லாம் வந்து சேரும்ன்னும் சொல்லிட்டா. ஸோ நமக்கு எக்ஸாக்ட்டா ஒரு மாசம் தான் இன்னும் இருக்கு”
“அச்சச்சோ ஜூலைப் பத்திலிருந்து ஜூன் பத்தாகிடுத்தா?”
“ஆமாம் மிருது”
“சரி அப்போ நம்ம பொருள் குவைத் வந்து சேரும் வரைக்கும் நாம எப்படி சமைக்கறது சாப்பிடறது?”
“அதுதான் சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் இருக்கே மிருது”
“ஓ!! சாரி மறந்துட்டேன். அப்படின்னா நாம கவின் புள்ளையோட விசேஷத்துக்கு இருக்க மாட்டோமா?”
“ம்..ஹூம் மாட்டோம். ஆமாம் நமக்கு தான் மொதோ பத்திரிகை வர்றப் போறது பாரு!!! அதெல்லாம் சும்மா மிருது எப்பவும் போல அவாளோட பத்திரிகை டிராமாவைப் போடப் போறா”
“அப்படி சொல்லாதீங்கோ நவீ…மனுஷான்னா மாறாமையே வா இருப்பா? நீங்க வேணும்னா பாருங்கோ நாம குவைத் போணோம்னா… நாம இருக்குற இடத்துத்துக்கு வந்து நம்மளை கூப்பிடுவா. நாமும் குழந்தையை ஆசிர்வாதம் பண்ணுவோம் பாருங்கோ.”
“அதெல்லாம் நடக்கவே நடக்காது மிருது. வீணா கற்பனை எல்லாம் பண்ணாதே. நாம நம்ம வேலையைப் பார்ப்போம்…நாம தங்கப் போற இடம் அவாளுக்கு தெரியாதே அப்புறம் எப்படி வருவா?”
“நான் சொல்லி இருக்கேன் நவீ.”
“சூப்பர் மிருது. குட் ஜாப். சரி சரி இனிமே இப்படி எல்லாத்தையுமே டிட்டேய்லா சொல்லிண்டிருக்காதே. நீ சொன்னாலும் அவா வரமாட்டா”
“பார்ப்போமே!! சரி நவீ நமக்கு இப்படி ஒரு சந்தோஷமான விஷயம் நடக்கப் போறது ஸோ நாம நம்ம பேரன்ட்ஸ் நாலு பேருக்கும் பட்டுப் புடவை அன்ட் வேஷ்டி சட்டை எடுத்துக் குடுத்து அவாகிட்ட ஆசிர்வாதம் வாங்கிண்டு தான் இங்கேந்து புறப்படணும்”
“இங்க பாரு மிருது உன் பேரன்ட்ஸுக்கு வேணும்னா எடுத்துக் குடு அவா உண்மையிலேயே சந்தோஷப்படுவா ஆனா என் பேரன்ட்ஸ் பார்த்தே இல்ல நல்ல விஷயம் சொன்னதுக்கே ஒரு வாழ்த்து இல்ல சந்தோஷப்படலை…நாம எப்போ எது எடுத்துக் குடுத்தாலும் அதுல ஏதாவது குத்தம் தான் சொல்லிருக்கா…ஏன்??… உன் மாமியார்ட்ட இன்னுமா உன் மாமனார் விஷயத்தை சொல்லிருக்க மாட்டார்…அவ ஒரு ஃபோன் போட்டு வாழ்த்திருக்கலாமில்லையா…..நீ உன் அப்பாகிட்ட மட்டும் ஏதாவது சொல்லிட்டு வச்சிருந்தா அதை உன் அப்பா உன் அம்மா கிட்ட சொன்னதும் உன் அம்மா உடனே உனக்கு ஃபோன் போட்டு விஷ் பண்ணிருக்க மாட்டா? ஆனா இங்கே பாரு!!”
“விடுங்கோ நவீ. அவா குணம் அது. அதுக்காக நாம ஏன் நம்ம குணத்தை மாத்திக்கணும்? நான் எப்பவுமே சொல்லறது தான் நவீ…நாம நம்ம கடமையைச் செய்வோம்.”
“ரொம்ப செஞ்சாச்சு மிருது.”
“ப்ளீஸ்ப்பா.”
“சரி சரி என்னமோ பண்ணு”
“நாம இந்த வீக்கென்ட் போய் எல்லாம் வாங்கிண்டு வருவோம் சரியா”
“ம்…ம்…ஓகே!
என்று இருவரும் பேசிவிட்டு உறங்கச் சென்றனர்.
அந்த வார இறுதியில் கடைக்குச் சென்று தங்கள் பெற்றவர்களுக்கு இரண்டுப் பட்டுப் புடவை மற்றும் இரண்டு வேஷ்டி சட்டை எல்லாம் எடுத்துக் கொண்டு தங்களுக்கு வேண்டிய உடைகளையும் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து காரிலிருந்து இறங்கியதும் அம்புஜத்தின் சமையல் வாசம் வாசல்வரை வந்தது. உடனே வேகமாக வீட்டினுள் சென்று கை கால் அலம்பி விட்டு சாப்பிட அமர்ந்தனர்.
அனைவரும் சாப்பிட்டு எழுந்ததும் மிருதுளாவும் அம்புஜமுமாக சப்பிட்ட இடத்தை எல்லாம் சுத்தம் செய்து விட்டு வந்து ஹாலில் அமர்ந்தனர். அப்போது மிருதுளா ஒரு பையை இழுத்து தன் பக்கத்தில் வைத்துக் கொண்டு அதிலிருந்து இரண்டு கவர்களை எடுத்து நவீனை தன் பக்கத்தில் வரவழைத்து அப்பா அம்மாவிடம் இருவருமாக கொடுத்து ஆசிர்வாதம் வாங்கினர். அதை வாங்கிக் கொண்ட அம்புஜமும் ராமானுஜமும்
“என்னது இது?”
“பிரிச்சுப் பாருங்கோ”
“அட பட்டுப் புடவையா? என்னத்துக்கு இப்போ?”
“சட்டை வேஷ்டி!! உங்களுக்கே இப்போ ஷிஃப்டிங் அது இதுனு எக்கச்செக்க செலவிருக்கு இதுல ஏன்ம்மா இதெல்லாம்?”
“அப்பா அதெல்லாம் என் கம்பெனி பார்த்துக்கும். எங்களுக்கு ஒரு செலவுமில்லை. உங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்கா?”
“ஓ! ரொம்ப பிடிச்சிருக்கு. எங்க குழந்தைகள் நீங்க வாங்கித் தந்தது பிடிக்காம போயுடுமா!”
“அது!”
“சரி மா நாங்க குவைத்துக்கு போறதுக்கு நாலு நாள் முன்னாடி ஒரே ஒரு நாள் நவீ ஊருக்குப் போயிட்டு எங்க மாமனார் மாமியார்கிட்டேயும் வாங்கின புடவையையும் வேஷ்டி சட்டையையும் குடுத்துட்டு அன்னைக்கு நைட்டே திரும்பி வந்திடறோம். நீங்க ரெண்டு பேரும் பத்திரமா இருந்துப்பேங்கள் இல்ல”
“ஓ!! தாராளமா போயிட்டு வாங்கோ நாங்க இருந்துப்போம். அதுதான் எங்களுக்கு இங்க ரெண்டு ஃப்ரெண்ட்ஸ் கிடைச்சுட்டாளே!! அதுவுமில்லாம காலையில போயிட்டு நைட்டு வந்திடப் போறேங்கள் அப்புறம் என்ன?”
“ஆங் !! நாங்க ஜூன் பத்தாம் தேதி காலையில அஞ்சு மணிக்கெல்லாம் கிளம்பி பெங்களூர் ஏர்போர்ட் போயிட்டு அங்கேந்து ப்ளைட் பிடிச்சுப் போகணும். உங்களுக்கு ஒன்பதாம் தேதி டிரைவர் ஏற்பாடு செய்திருக்கேன். அவர் வந்து உங்களை நம்ம காரிலேயே சென்னை கூட்டிண்டு போய் விட்டுவிடுவார்.”
“சரி மாப்ள.”
குவைத்துக்கு கிளம்பும் முன் ஊருக்குச் சென்றனர் நவீனும் மிருதுளாவும் சக்தியும். அங்கே ஈஸ்வரன் பர்வதத்திடம் வாங்கி வந்ததைக் கொடுத்து காலில் விழுந்து நமஸ்காரம் செய்தனர். அப்போது பர்வதம்
“சரி அப்போ அந்த மைசூர் வீட்டை என்னப் பண்ணப் போறேங்கள்?”
“அதைப் பூட்டிப் போட்டுட்டுப் போகப்போறோம்”
“வாடகைக்கு விட வேண்டியது தானே!”
“இல்லை இல்லை ஒரு தடவை வாடகைக்கு விட்டுட்டே படாத பாடு பட்டுட்டோம். போதும்ப்பா போதும்”
“வீடு மேல வீடு வாங்கினாலும் அதுல இருக்குற பாக்கியம் எல்லாருக்கும் கிடைக்கறதில்லை இல்லையா”
என்று பர்வதம் சொன்னதும் நவீனும் மிருதுளாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
அப்போது ப்ரவீனும் துளசியும் குழந்தைகளுடன் ஈஸ்வரன் வீட்டிற்குள் நுழைந்தனர்.
தொடரும்…..
அத்தியாயம் 100: ப்ரவீன் பிரவேசம்!
மைசூருக்கு வந்ததும் அவரவர் வேலைகளில் மூழ்கினர். மிருதுளா புது வீட்டின் மர வேலைகளை மேற்பார்வைப் பார்ப்பதில் மும்முரமானாள். வீட்டின் வேலைகள் எல்லாம் மளமளவென நடந்தேறியது. அவர்கள் திட்டமிட்டப்படியே செப்டெம்பர் மாதம் முதல் வாரத்திலிருந்த நல்ல நாளில் புது வீட்டிற்கு குடிப் போனார்கள். புது வீட்டில் அவர்கள் முதலில் வினாயகர் சதுர்த்தியை விமர்சையாக கொண்டாடினார்கள். நவீனுக்கும், சக்திக்கும் வழக்கமான ஆஃபீஸ், ஸ்கூல் வேலைகள் தான் இருந்தன. ஆனால் புது வீட்டிற்குள் சென்றதும் மிருதுளாவுக்கு வழக்கமான வீட்டு வேலைகளுடன் புது வீட்டில் பொருட்களை அது ..அது இடத்தில் அடுக்கி வைக்கும் வேலை இருந்ததால் அமர நேரமின்றி பம்பரமாக சுழன்றாள். அப்படி சுறுசுறுப்பாக வேலையைப் பார்த்ததில் மூன்றே நாட்களில் புது வீட்டில் வசதியாக செட் ஆனார்கள் மூவரும். அதன் பின் மிருதுளாவிற்கு வழக்கமான வீட்டு வேலைகளே இருந்தன. அவள் வீட்டு வேலைகளுக்கென்று வேலை ஆட்கள் வைக்காது அனைத்து வேலைகளையும் அவளே செய்து வந்தாள்.
அந்த சொசைட்டியில் முதன்முதலில் குடிப் போனவர்கள் நவீன் குடும்பத்தினரே! அவர்கள் அங்கு இயற்கையோடு ஒன்றி வாழ்வதை அவர்களின் வாட்ஸ்அப் குழுவில் போட்டதன் விளைவாக சிட்டியை விட்டுத் தள்ளி இருக்கிறதே என்றெண்ணி வராமலிருந்தவர்கள் கூட அடுத்தடுத்து அவரவர் வீடுகளுக்கு குடி வந்தனர். மொத்தம் இருநூறு வீடுகள் இருந்தன. அதில் ஒரு பதினைந்து வீடுகளில் ஆட்கள் குடி வந்தனர்.
அமைதியான நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர் நவீனும் மிருதுளாவும். பதினைந்து குடும்பங்களும் ஒருவரோடு ஒருவர் நல்ல நண்பர்களாயினர். ஜனவரி மாதம் வந்தது பொங்கலும் வந்தது மிருதுளாவுக்கு ஃபோனும் வந்தது ப்ரவீனிடமிருந்து
“ஹலோ மன்னி ஹாப்பி பொங்கல். எப்படி இருக்கேங்கள்?”
“ஆங் ஹாப்பி பொங்கல். நாங்க நல்லா இருக்கோம். நீங்க எல்லாரும் எப்படி இருக்கேங்கள்?”
“நல்லா இருக்கோம். மன்னி …துளசிக்கு வர்ற ரிப்பப்ளிக் டேயை ஒட்டி லீவு வர்றது அதுதான் கொஞ்சம் ரெஸ்ட்டா இருக்கட்டுமேன்னு உங்காத்துக்கு வரலாம்னு இருக்கோம். அப்படியே உங்க புது வீட்டையும் பார்த்தா மாதிரி இருக்கும் இல்லையா!! நீங்க ஆத்துல தானே இருப்பேங்கள்?”
“ஆங்…நாங்க ஆத்துல தான் இருப்போம். வாங்கோ வாங்கோ”
“ம்…சரி மன்னி அதைச் சொல்லத் தான் கால் பண்ணினேன். அண்ணாகிட்டேயும் சக்திக்கிட்டேயும் விசாரிச்சதா சொல்லிடுங்கோ. வச்சுடறேன்”
“ஆங் சரி. நீயும் அங்கே எல்லார்கிட்டேயும் நானும் விசாரிச்சதா சொல்லிடு”
என்று ஃபோனை வைத்ததும் நவீன் மிருதுளாவிடம்
“அவன் சொன்னதை கவனிச்சியா மிருது?”
“என்ன நவீ?”
“ரெஸ்ட்டுக்கு வர்றாளாம்…கேட்டியா அதை”
“ம்…ம்…கேட்டேன் கேட்டேன்….”
“ஏன் நீ அவ அம்மா? இல்ல இது அவ அம்மா வீடா? ரெஸ்ட் எடுக்க வர்றதுக்கு!”
“விடுங்கோப்பா.”
“நோ நோ …மிருது…நோ …டு நாட் என்கரேஜ் தீஸ் திங்க்ஸ். நீ அவன்கிட்ட உடனே நான் இப்போ கேட்டா மாதிரி கேட்டிருக்கணும்.”
“கேட்டிருக்கணும் தான்….அதுனால நமக்கு என்னப்பா கிடைக்கப் போறது….”
“அது என்ன அப்படி சொல்லறது? நீ என்ன அவளுக்கு வேலை செய்யணும்!! மகாராணி வந்து ரெஸ்ட் எடுப்பாளாமோ? ஏன் நீயும் தான் வேலைக்குப் போன….எங்க போய் ரெஸ்ட் எடுத்தயாம்”
“ம்….நானெல்லாம் முட்டாள்ப்பா…எனக்கு புருஷனை விட்டு ஒவ்வொண்ணுக்கும் பேச வைக்கத் தெரியலை. என்ன பண்ண சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். இதெல்லாம் கூட பரவாயில்லை ஆனா….விசேஷத்துக்கு வேணும்னே வராம ஆட்டிட்டிங் அது இதுன்னு இருந்துட்டு ரெஸ்ட் எடுக்க வரேன்னு சொல்லறது தான் எனக்கு வருத்தமா இருக்கு. ம்….என்ன பண்ண..? மனிதர்கள் பல விதம்”
“எத்தனை நாள் இருக்கப் போறாளோ தெரியலையே!!”
“என்னப்பா மிஞ்சிப் போனா இரண்டு நாள் அவ்வளவு தானே. வந்துட்டுப் போட்டும்”
“இதே மாதிரி எப்பவாவது நீ அவா ஆத்து ரெஸ்ட்டுக்கு வர்றேன்னு சொல்லிப்பாரு உடனே ஆடிட்டிங் வந்திடும்”
“அச்சச்சோ லீவ் இட் பா”
ப்ரவீனும் துளசியும் அவர்கள் பிள்ளைகளும் நவீன் வீட்டிற்கு பர்வதீஸ்வரன் வீட்டிலிருந்து கிளம்பினர். அவர்கள் காரில் கிளம்பிச் சென்றதும் ஈஸ்வரன் மிருதுளாவுக்கு கால் செய்தார்.
“ஹலோ!”
“ஹலோ அப்பா சொல்லுங்கோ”
“ப்ரவீனும் துளசியும் அவா கார்லேயே உங்காத்துக்கு வர இங்கேந்து புறப்பட்டுட்டா.”
“அப்படியா !! அப்போ எப்படியும் மத்தியானம் வந்துடுவா”
“ஆங் ஆமாம். இரு பர்வதம் பேசறா”
“ஹலோ எல்லாரும் எப்படி இருக்கேங்கள்? புது வீடெல்லாம் செட் ஆயாச்சா?”
“ம்….நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம். ஆங் புது வீடும் செட் ஆயாச்சு.”
“அப்பா சொன்னா இல்லையா ப்ரவீனும் துளசியும் அங்க வர்றதைப் பத்தி….”
“ஆங் ஆமாம்…ப்ரவீனும் அன்னைக்கே ஃபோன் போட்டுச் சொன்னானே”
“ஆமாம் ஆமாம்…அது ஒண்ணுமில்லை துளசிக்கு இந்த வருஷம் எடுக்காத லீவு ஒரு வாரம் பாக்கியிருக்கு அதுதான் குடியரசுத் தினத்தை ஒட்டி அந்த லீவையும் எடுத்துண்டு தான் அங்க வர்றா. எங்களுக்கும் ஒரு பத்து நாள் நிம்மதியா ஃப்ரீயா குழந்தைகளை கவனிச்சுக்கறதுலேந்து விடுப்பட்டிருக்கலாம்னு தான் நாங்களும் சரின்னு அவாளை போகச் சொன்னோம். அவா பத்து நாள் தங்கறதுக்கு தான் வர்றான்னு உன்கிட்ட சொல்லத்தான் ஃபோன் பண்ணினோம். சரி வச்சுடவா”
என்று ஃபோனை வைத்ததும் மிருதுளாவுக்கு கோபம் வந்தது. நவீன் ஆஃபீஸிலிருந்து வருவதற்குள் ப்ரவீன் துளசி வீட்டிற்கு வந்து விடுவார்களே என்று வேறு வழியில்லாமல் உடனே நவீனுக்கு ஃபோன் போட்டு விவரத்தைச் சொன்னாள். அதைக் கேட்டதும் நவீன்
“என்னமோ சொன்ன ரெண்டு நாளுக்கே தான் இருப்பானுட்டு!!”
“ரெண்டோ, பத்தோ இல்ல ஒரு மாசமோ அதைப் பத்தி எனக்கு கவலையில்லை ஆனா அது என்ன அதை ப்ரவீனோ துளசியோ நம்ம கிட்ட நேரடியா சொல்லாம உங்க அப்பா அம்மாவை சொல்ல வைக்கறது? வீட்டுக்கு வந்து தங்கறவா சொல்லணுமா இல்லையா? மாமியாரும் மாட்டுப்பொண்ணுமா ரெஸ்ட் எடுக்க நான் தான் கிடைச்சேனா? இந்த ஆட்டிட்யூடு தான் எனக்குப் பிடிக்கலை நவீ”
“நீ உன் மாமியார் மாமனார் ஃபோன் பண்ணினா மாதிரியே காட்டிக்காதே. எதுவும் சொல்லிக்காதே. அவாளா சொல்லட்டும் சரியா…நான் சொன்னதை நல்லா ஞாபகம் வச்சுக்கோ மிருது. சரி நான் ஒரு மீட்டிங்குக்கு போகணும் பை.”
“ஓகே பை நவீ. சாரி ஃபார் தி டிஸ்டர்பன்ஸ்”
“இட்ஸ் ஓகே!! நான் சொன்னதை மட்டும் மனசுல வச்சுக்கோ. மறுபடியும் ஏமாளியாகாதே மிருது”
“சரிப்பா பை. நீங்க மீட்டிங்குக்குப் போங்கோ”
என்று ஃபோனை வைத்ததும் கிடுகிடுவென பாக்கி சமையலை முடித்து, வீட்டை கூட்டித் துடைத்து குளித்து விட்டு வந்து குக்கரில் சாதம் வைத்தாள். குக்கர் ஆனதும் வீட்டின் காலிங் பெல் சப்தம் கேட்டது. சென்று கதவைத் திறந்தாள் மிருதுளா
“ஹலோ வாங்கோ வாங்கோ. ஏய் குட்டிஸ் எப்படி இருக்கேங்கள். உங்களுக்கும் ஸ்கூல் லீவா”
“இல்ல மன்னி அவாளுக்கு மூணு நாள் தான் லீவு…மேலே லீவு வேணும்னா போட்டாகணும்”
“ஓ!! அப்படியா. உட்காருங்கோ இதோ வர்றேன்……இந்தாங்கோ ஜூஸ் எடுத்துக்கோங்கோ”
“இந்த வீட்டுல செட்டில் ஆயாச்சுப் போல”
“ஆமாம் ப்ரவீன் ஒரு வழியா எல்லா வேலைகளையும் முடிச்சு செட்டில் ஆகிட்டோம்”
“சரி சரி சாப்பிட வாங்கோ. பசிக்கலையா?”
“இல்ல அண்ணாவும், சக்தியும் வந்திடட்டுமே”
“அவா எங்கேந்து வருவா? அவா ரெண்டு பேரும் சாயந்தரம் தான் வருவா. சக்தி ஸ்கூல் பஸ்ல ஐந்து மணிக்கும் நவீ ஒரு ஆறரை மணிக்கும் வருவார்.”
“அப்போ அவாளுக்கு லஞ்சு?”
“அதெல்லாம் காலையிலேயே கட்டிக் கொடுத்தனுப்பிடுவேன். லஞ்சு, ஸானாக்ஸ் எல்லாமே கொண்டு போயிடுவா. சரி சரி வாங்கோ நாம சாப்பிடலாம்”
என்று வந்தவர்களுக்குப் பரிமாறியப் பின் தானும் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டாள் மிருதுளா. அனைவரும் சாப்பிட்டதும் மிருதுளா அந்த இடத்தை சுத்தம் செய்தாள். துளசி ஏதோ ஹெல்ப் பண்ணுவது போல பாவனை மட்டும் செய்து விட்டு குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதுப போல அடுப்படியிலிருந்து கிளம்பி ஹாலில் சோஃபாவில் சென்று அமர்ந்துக் கொண்டாள். வேலைகளை முடித்துவிட்டு வந்த மிருதுளா ப்ரவீனிடம் விருந்தினர் அறையை காண்பித்து
“இது தான் கெஸ்ட்ரூம். நீங்க யூஸ் பண்ணிக்கலாம். அது ரெஸ்ட்ரூம். இந்த வார்ட்ரோப் எல்லாம் காலியா தான் இருக்கு நீங்கள் யூஸ் பண்ணிக்கலாம்”
என்று சொன்னதும் தங்கள் பைகளை எல்லாம் அங்குக் கொண்டு போய் வைத்து செட்டில் ஆனார்கள். மிருதுளா ஹாலில் அமர்ந்திருந்தாள். அந்த ரூமிற்குள் சென்றவர்கள் அறையின் கதவைத் தாழிட்டுக் கொண்டு அவர்களாகவே பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் ஏதோ ரிசார்ட்டிற்கு வந்தவர்கள் போலவும் மிருதுளா வேலை ஆள் போலவும் நடந்துக் கொண்டது மிருதுளாவிற்கு பிடிக்கவில்லை. அவளும் ஹாலில் அமர்ந்துக் கொண்டு தாழிட்ட கதவைத் திறந்து வந்தவர்கள் ஹாலுக்கு வந்து தன்னுடன் பேசுவார்கள் என்று காத்திருந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மாலை நாலரை மணிக்கு கதவைத் திறந்து வெளியே வந்த துளசி…மிருதுளாவிடம்
“மன்னி காபி இப்போ வைப்பேங்களா இல்லை அண்ணா வந்துட்டுத் தானா?”
“ஏன் உங்களுக்கு வேணுமா?”
“ஆமாம் மணி நாலரை ஆயிடுத்தே”
“ம்….சரி சரி இதோ வர்றேன்.”
என்று எழுந்துப் போய் அனைவருக்கும் காபியும், குழந்தைகளுக்கு பூஸ்ட்டும் போட்டுக் குடுத்தாள். அதை அவர்கள் அறைக்குள் எடுத்துச் சென்று மீண்டும் கதவடைத்தாள் துளசி. அதைப் பார்த்ததும் மிருதுளாவுக்கு இன்னும் கோபம் அதிகமானது. அதை அப்படியே அடக்கிக் கொண்டு தனது காபியை எடுத்துக் கொண்டு வந்து ஹாலில் அமர்ந்து அருந்தினாள். மணி ஐந்தடித்தது…மிருதுளா வாசலில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள். விருந்தினர் எங்கோ புறப்பட்டு வாசலுக்கு வந்து…
“என்ன மன்னி சக்தியை இன்னும் காணலை”
“வருவா ….இப்படி எப்பவாவது பத்து பதினைந்து நிமிஷம் லேட்டும் ஆகும். ஆமாம் நீங்க எல்லாரும் எங்கே கிளம்பியிருக்கேங்கள்?”
“சும்மா இந்த சொசைட்டியை சுத்திப் பார்த்துட்டு அப்படியே ரெண்டு ரவுண்டு அடிச்சுட்டு வரலாம்னு கிளம்பியிருக்கோம். இதுக்குள்ள பார்க் இருக்கா மன்னி?”
“ஓ!! சரி சரி. போயிட்டு வாங்கோ. ஆங் பார்க் இருக்கு. இப்படியே நடந்துப் போங்கோ அந்த கார்னர்ல பார்க் இருக்கு”
“சரி நாங்க போயிட்டு வந்திடறோம்”
“ம்…பத்திரம் இங்கே இன்னமும் சில வீட்டு வேலைகள் நடந்துண்டிருக்கு. குழந்தைகளை பத்திரமா கூட்டிண்டு போங்கோ”
“ம் ஓகே மன்னி. நாங்க பார்த்துக்கறோம்”
என்று கூறிவிட்டு வெளியே சென்றனர். மிருதுளா தண்ணீர் ஊற்றி விட்டு வீட்டினுள் சென்றுப் பார்த்தாள் விருந்தனர் அறையை ஏதோ ஹேட்டல்களில் சாத்தி வைத்துவிட்டுச் செல்வதைப் போல இழுத்துச் சாதனற்றிவிட்டு சென்றிருந்தனர் ப்ரவீனும் துளசியும். அதை பார்த்ததும் மனதில் புலம்பிக்கொண்டே இருந்தாள் மிருதுளா. சக்தியின் ஸ்கூல் பஸ் வந்தது. அவளுக்கு டிபன் பூஸ்ட் எல்லாம் கொடுத்தாள் அப்போது சக்தி
“அம்மா சித்தப்பா சித்தி எல்லாரும் வருவானு சொன்னயே…எங்கே அவா எல்லாரும்?”
“எல்லாம் வந்தாச்சு. வெளியே சுத்திப் பார்க்க போயிருக்கா”
“ஏன்மா அந்த ரூம் மூடியிருக்கு?”
“அதை அவாளுக்குக் கொடுத்தேன் அவா அப்படி மூடிட்டுப் போயிருக்கா”
“நம்ம வீட்டு ரூம் கதவை அவா ஏன் சாத்திட்டுப் போயிருக்கா?”
“அது உனக்கு தெரியறது ஆனா அவாளுக்குத் தெரியலையே…இதோ அப்பாவும் வந்துட்டா”
என்று நவீன் வந்ததும் அவனுக்கு காபியும் டிஃபனும் கொடுத்து விட்டு பேச ஆரம்பித்தாள் அதற்குள் வெளியே சென்ற ப்ரவீன் குடும்பம் திரும்பி வந்தனர். அவர்களைப் பார்த்ததும் நவீன்
“வாடா ப்ரவீன். வா வா.”
“ஆங் அண்ணா. எப்படி இருக்க?”
“நான் நல்லா இருக்கேன். உன் வேலை எல்லாம் எப்படி போறது?”
“எல்லாம் நல்லா போறதுண்ணா”
“ஏய் குட்டிப் பசங்களா எப்படிடா இருக்கேங்கள்?”
“ஏய் பெரியப்பா கேட்கறா இல்ல பதில் சொல்லுங்கோடா”
“ம் நல்லா இருக்கோம்”
என்று சற்று நேரம் பேசிவிட்டு அவர்கள் அறைக்குள் சென்ற கதவைத் தாழிட்டனர். அதைப் பார்த்த நவீன் மிருதுளாவிடம்
“என்ன இது அவா பாட்டுக்கு கதவை சாத்திண்டுட்டா”
“இப்படி தான் வந்ததுலேந்து இருக்கா. நான் பாட்டுக்கு ஹால்ல உட்கார்ந்துண்டு இருந்தேன்”
“ம்…..சரி நாளைக்கு எங்கப் போகலாம்?”
“மைசுரைச் சுத்திக் காமிக்கலாம். வேற எங்கப் போறது?”
“ஓகே.”
“சரி நான் போய் டின்னர் பண்ணட்டும்”
என்று கூறிவிட்டு எழுந்துச் சென்று அனைவருக்கும் தோசைச் சுட்டு சட்னி அரைத்து வைத்து நவீனையும் சக்தியையும் சாப்பிடக் கூப்பிட்டதும் விருந்தினர் அறைத் திறக்கப்பட்டது. அதிலிருந்து வந்த ப்ரவீன் குடும்பத்தினர் டின்னரை சாப்பிட்டனர். பின் அதிசயமாக சற்று நேரம் ஹால் சோஃபாவில் அமர்ந்தனர். அனைவரும் சாப்பிட்டதும் ப்ரவீன் நவீனிடம்
“அண்ணா உனக்கு சாட்டர்டே லீவு தானே?”
“ஆமாம் ஏன் கேட்குற?”
“இல்ல நாளைக்கு சாட்டர்டே ஆச்சே….”
“சரி அதுக்கு”
“எங்கேயாவது போகலாமான்னு ….”
“ஆங் போகலாமே! நான் வண்டி ஏற்பாடு செய்திருக்கேன் அதுல நாம எல்லாருமா போய் மைசூரைச் சுற்றிப் பார்த்துட்டு வருவோம்”
“ஓகே. எத்தனை மணிக்கு ரெடியாகணும்?”
“ஒரு ஒன்பது மணிக்கெல்லாம் கிளம்பினா தான் எல்லா இடத்தையும் கவர் பண்ணிட்டு வர முடியும்”
“ஓ! ஓகே ஓகே. சரி அப்போ போய் இப்போ தூங்கினா தான் காலையில சீக்கிரமா எழுந்துக்க முடியும். ஓகே குட் நைட் நாங்க போய் தூங்கறோம்”
“குட் நைட்”
“மன்னி குழந்தைகளுக்கு பால் வேணும்”
“அப்படியா? இரு வச்சுத் தர்றேன்.”
என்று வேலைகளை முடித்து அக்கடான்னு உட்கார்ந்த பின் மீண்டும் அடுப்படிக்குச் சென்று பால் வைத்துக் கொடுத்தாள் மிருதுளா. அவர்கள் உறங்கச் சென்றதும் சக்தி அவள் அறைக்குச் சென்றாள். நவீனும் மிருதுளாவும் அவர்கள் அறைக்குள் சென்றனர். அப்போது மிருதுளா நவீனிடம்….
“இங்க பாருங்கோ நவீன் இங்க தங்கப்போற நாட்களைப் பத்தி அவா எதுவுமே என்கிட்ட சொல்லலை. நானும் உங்க அப்பா அம்மா ஃபோன் பண்ணின விவரத்தை சொல்லலை. ஆனா என்னால இவாளுக்கு வேலை ஆள் மாதிரி இப்படி பத்து நாளைக்கெல்லாம் செஞ்சுக் குடுக்க முடியாது. அந்த துளசி ஒரு துரும்பக்கூட நகத்த மாட்டேங்கறா. நம்ம வீட்டுக்கே வந்துட்டு நம்ம ரூமுலயே இருந்துண்டு கும்மாளம் போடறா…வீட்டுக்கு சொந்தகாரியான நான் வேலைக்காரி மாதிரி ஹால்ல உட்கார்ந்திருந்தேன். ஏன்ப்பா ஒருத்தா வீட்டுக்குப் போனோம்னா அவாளோட உட்கார்ந்து பேசுவோமா? இல்ல நாம பாட்டுக்கு சாப்பிடற நேரத்துக்கு மட்டும் அட்டென்டன்ஸ் கொடுத்துட்டு ரூமுக்குள்ளப் போய் கதவை சாத்திப்போமா?”
“இங்க பாரு மிருது அவா எல்லாம் அப்படிதான். நீ அவளை வேலை வாங்கு. அவ என்ன அவ அம்மா வீட்டுக்கா வந்திருக்கா ஹாய்யா ரூமுக்குள்ள இருக்க!!”
“ஆமாம் அவ அம்மா வீட்டுக்குப் போனா கூட அவளால இப்படி இருக்க முடியாது நவீ. இதுல என்ன கூத்துன்னா…அவா சாயந்தரம் இந்த ஏரியாவை சுத்திப் பார்க்க வெளியில போனா… அப்போ அவா ரூம் கதவை சாத்திட்டுப்போயிருக்காப்பா”
“மிருது அவாளுக்கு செஞ்சுக்காட்டினனா உன்னை நல்லா யூஸ் பண்ணிக்குவா அதை ஞாபகம் வச்சுக்கோ. நாளைக்கும் அவா இங்கே தங்குறதைப் பத்தி ஏதும் பேசலைன்னா நானே கேட்கப் போறேன். சரி இப்போ படுத்து நல்லா தூங்கு”
அனைவரும் நன்றாக உறங்கினர். மறுநாள் காலை விடிந்ததும் வழக்கம் போல மிருதுளா எழுந்து காபி டிக்காக்ஷன் போட்டு வைத்துவிட்டு ஃப்ரெஷ் ஆகச் சென்று வந்து நவீனுக்கும் தனக்கும் காபிப் போட்டுக் கொண்டு வந்து அவர்கள் வாசல் தோட்டத்தின் திட்டில் அமர்ந்து அருந்தினர். பின் கிடுகிடுவென காலை டிஃபன் செய்து அவற்றை டைனிங் டேபிளில் வைத்துவிட்டுக் குளிக்கப் புறப்படும் போது மகாராணி துளசி அம்மையாரின் கணவர் ப்ரவீன் எழுந்து வந்து
“குட் மார்னிங் மன்னி. அண்ணா இன்னும் எழுந்துக்கலையா?”
“நாங்க எப்பவும் ஐந்தரை மணிக்கு எழுந்துப்போம். சரி துளசி எழுந்துக்கலையா?”
“அவ நல்லா தூங்கறா ….பாவம் அதுதான் தூங்கட்டும்னு விட்டுட்டேன்”
இதைக் கேட்டுக்கொண்டே வீட்டினுள் நுழைந்த நவீன்
“வெளில போகணும் ஞாபகம் இருக்கு இல்ல…மணி இப்பவே ஏழரை ஆயாச்சு”
“ஆங் அதெல்லாம் அவ எட்டரைக்கு எழுந்தாலும் ஒன்பது மணிக்கெல்லாம் ரெடியாகிடுவா…மன்னி காபி “
“இரு போட்டுத் தரேன்.”
என்று குளிக்கக் கிளம்பிய மிருதுளா ப்ரவீனுக்கு காபிப் போட்டுக் குடுத்துவிட்டுக் கிளம்பும் போது துளசி எழுந்து வந்து காபி கேட்டாள் அதற்கு மிருதுளா அவளிடம்
“துளசி காபி டிக்காக்ஷன் மேடை மேல இருக்கு. பால் ஃப்ரிட்ஜில் இருக்கு. கொஞ்சம் நீயே போட்டுண்டுடேன். நான் போய் குளிச்சிட்டு வந்துடறேன்”
என்று சொல்லிவிட்டு குளிக்கச் சென்றாள். அவள் குளித்து முடித்து வந்துப் பார்த்தாள் காபி போட்ட மாதிரியே இருக்கவில்லை. அனைவரும் குளித்து ரெடியாகி வந்ததும் அமர்ந்து டிஃபன் சாப்பிட்டனர். அப்போது ப்ரவீன் மிருதுளாவிடம்
“மன்னி….துளசிக்கு காலையில காபி குடிக்கலைன்னா தலை வலிக்கும்…அதுனால கொஞ்சம் காபி போட்டுக் குடுத்திடறேங்களா?”
“நான் தான் அவளைப் போட்டுக்கச் சொல்லிட்டுத் தானே குளிக்கப் போனேன்…ஏன் அவ போட்டுக்கலையா?”
“அவ போடலைப் போல அதுதான் டிபன் சாப்பிட்டதும் காபிக் குடிச்சிட்டா பரவாயில்லையா இருக்கும் இல்லாட்டி வண்டியில நாம போகும் போது தலைவலின்னு படுத்துவா”
என்றதும் மனதிற்குள் முனுமுனுத்துக் கொண்டே சென்று காபி போட்டு வந்து ப்ரவீனிடம் குடுத்தாள். அவன் அதை அவன் தர்மப்பத்தினியிடம் கொண்டுப் போய் குடுத்தான். மிருதுளா சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்து, அடுப்படியை சுத்தம் செய்துவிட்டு கிளம்பினாள். அவள் வேலைகளை முடிக்கும் வரை தன் அறையிலிருந்து வெளியே வராத துளசி மிருதுளா வேலைகளை முடித்துக் கிளம்பிவிட்டால் என்றதும் வந்து ஹாலில் அமர்ந்துக் கொண்டாள்.
நவீன் புக் செய்திருந்த வண்டி வந்தது. அனைவரும் அதில் ஏறி மைசூரைச் சுற்றி பார்க்கப் புறப்பட்டுச் சென்றனர். அன்று முழுவதும் ஊர் சுற்றி இரவு டின்னரையும் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்துக்கொண்டிருக்கும் போது நவீன் ப்ரவீனிடம்
“உனக்கு எவ்வளவு நாள் லீவு? உங்க ப்ளான் என்ன? ஏன்னா நான் அதுக்குத் தகுந்தா மாதிரி ஏற்பாடு பண்ணணும் அதுதான் கேட்டேன். ஏன்னா எனக்கு மன்டேலேந்து ஆஃபீஸ் இருக்கு சக்திக்கு ஸ்கூலுமிருக்கு அதுனால தான்…”
“நாங்க ஒரு ரெண்டு நாள் ப்ளான் தான் போட்டிருக்கோம். மன்டே கிளம்பி ஊருக்கு போற வழியில இருக்குற நம்ம ஒண்ணு விட்ட சித்தப்பா ஆத்துல ரெண்டு நாள் தங்கிட்டு புதன் கிழமை ஊருக்குப் போகலாம்னு இருக்கோம். எனிவே எனக்கும் துளசிக்கும் பத்து நாள் லீவு இருக்கு. பசங்களுக்கு தான் ஸ்கூல்ல லீவு போடணும்.”
“அப்படியா!! அப்போ மன்டே கிளம்பறேங்களா? நான் லீவு போட வேண்டாம் ….அப்பாடா!!! எனக்கு ஒரு இம்பார்ட்டென்ட் மீட்டிங் இருக்கு. ஸோ நான் அதை அட்டென்ட் பண்ணலாம்.”
என்றதும் துளசி ப்ரவீனைப் பார்த்தாள். உடனே அவன்
“மன்னி அப்பா அம்மா உங்களுக்கு நேத்து கால் பண்ணினாளா?”
“ஆமாம் பண்ணினா. அதுக்கென்ன?”
“இல்லை சும்மா தான் கேட்டேன்”
என்று மிருதுளாவுக்கு தங்கள் ப்ளான் முன்னதாகவே மூத்த தம்பதியர் மூலம் தெரியும் என்பதை அவளுக்கும் நவீனுக்கும் இந்த ஒயு கேள்விக் கொண்டு ஞாபகம் படுத்துவதாக எண்ணிக் கேட்டான் ப்ரவீன். அதற்கு பிடிக் கொடுக்காமல் பேசினர் நவீனும் மிருதுளாவும். வீடு வந்து சேர்ந்தனர். அனைவரும் அவரவர் அறைக்குச் சென்று உறங்கினர். மறுநாளும் இதே போல வெளியே சென்று சுற்றி சாப்பிட்டு இரவு வந்து உறங்கினர். திங்கட்கிழமை காலை ஏழரை மணிக்கெல்லாம் ரெடியாகி நவீனும் சக்தியும் ஆஃபீஸ் மற்றும் ஸ்கூலுக்கு கிளம்பிச் சென்றனர். மிருதுளா தன் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு குளித்து வந்தாள். அப்போது ஹாலில் அம்ர்ந்திருந்த துளசி ப்ரவீனிடம் மிருதுளா காதில் விழும்படி
“ஆமாம் இன்னைக்கு உங்க சித்தப்பா ஆத்துக்கு போகப் போறோம்னு சொன்னேங்களே அவாகிட்ட நாம வரோம்னு சொல்ல வேண்டாமா ? அவாளுக்கு ஃபோன் போட்டுச் சொல்லுங்கோ”
“அது தான் நான் பண்ணினேன் போக மாட்டேங்கறது”
என்று ஏதேதோ ஷோ போட்டுக்கொண்டிருந்தனர். அதை கண்டும் காணாததுப் போல அமர்ந்திருந்தாள் மிருதுளா. அவளிடம் ப்ரவீன்
“மன்னி உங்ககிட்ட சித்தப்பா நம்பர் இருக்கா?”
“ம்…இருக்கே….ஏன் கேட்குற”
“இல்ல நான் வச்சிருக்கற நம்பர் போகமாட்டேங்கறது”
“அப்படியா என்ன நம்பர் வச்சிருக்க சொல்லு..நான் செக் பண்ணறேன்”
நம்பரை ப்ரவீன் சொன்னதும் மிருதுளா
“ஆங் இதே நம்பர் தான் நானும் சேவ் பண்ணி வச்சிருக்கேன். ஏன் போக மாட்டேங்கறது?”
“தெரியலையே…”
“இரு நான் கால் செய்து பார்க்கறேன்…ஆங் ரிங் போறதே”
“அப்படியா குடுங்கோ பேசிடறேன்”
என சாமர்த்தியமாக மிருதுளாவையே கால் செய்ய வைத்து அவள் நம்பரிலிருந்தே அவன் சித்தப்பாவிடம் பேசினான்
“ஹலோ சித்தப்பா எப்படி இருக்கேங்கள்? நான் ப்ரவீன் பேசறேன்”
“ஹாய் நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க? என்ன இது மிருதுளா நம்பர்லேந்து பேசுற?”
“ஆமாம் நாங்க இங்க அண்ணா ஆத்துக்கு வந்திருக்கோம். அப்படியே உங்காத்துலேயும் தங்கலாம்னு யோசிக்கறோம்”
“அப்படியா எப்போ வர்றேங்கள்?”
“அநேகமா இன்னைக்கு வந்தாலும் வருவோம். நான் இங்கேந்து கிளம்பினதும் உங்களுக்கு கால் பண்ணறேன். ஓகே சித்தப்பா சித்தியை எல்லாம் கேட்டதா சொல்லுங்கோ. வச்சுடறேன் பை”
“பை டா. டேக் கேர். பத்திரமா வாங்கோ”
என்று ஃபோன் பேசி முடித்ததும் மிருதுளாவிடம் கொடுத்தான் ப்ரவீன். அப்போது மிருதுளா
“நீங்க அவா ஆத்துலேயும் தங்கிட்டுப் போற ப்ளன்ல தானே வந்திருப்பதா நேத்து சொன்னேங்கள் அப்போ அப்பவே அவாகிட்ட நீங்க சொல்லலையா?”
“இல்ல இப்போ தான் தோனித்து”
“எது அவாகிட்ட சொல்லணும்னா இல்ல அங்க போறதே வா?”
“இரண்டும்னு வச்சுக்கோங்கோளேன்”
என்று ப்ரவீன் சொன்னதும் மிருதுளாவுக்கு நவீன் சொன்ன அறிவுரை ஞாபகம் வந்தது. அதனால் அதற்கு மேல் ஒன்றுமே பேசாமல் அங்கிருந்து எழுந்து அடுப்படிக்குள் சென்றாள். அந்தப்புர வாயில் திறந்திருந்ததால் மிருதுளா அங்கு சென்று துளசியிடம்
“நீங்க மத்தியானம் சாப்டுட்டு தானே கிளம்புவேங்கள்? ஏன் கேட்கறேன்னா….அதுக்கு தகுந்தா மாதிரி குக்கர்ல சாதம் வைக்கணும்”
“எனக்கு தெரியலையே மன்னி…அவர்கிட்ட கேளுங்கோ”
என்று தனக்கு ஒன்றுமே தெரியாததுப் போல துளசி சொல்ல உடனே ஹாலுக்கு சென்று ப்ரவீனிடம் கேட்க வந்த மிருதுளா அங்கு ப்ரவீன் இல்லாததால் அவன் பேசும் குரல் வாசலில் இருந்து வர அங்கேச் சென்றாள். அவன் ஃபோனில் ஈஸ்வரனுடன் பேசிக்கொண்டிருந்தான் அதைக் கேட்டதும் ஷாக் ஆகி நின்றாள் மியுதுளா
“அப்பா என்ன நீ மன்னிகிட்ட நாங்க பத்து நாள் இருக்க வரோம்னு சொல்லலையா? அண்ணா என்னடான்னா நேத்து எப்போ கிளம்பறேங்கள்னு கேட்கறான்? நானும் இன்னைக்கு கிளம்பறேன்னு சொல்லிட்டேன். இப்போ நாங்க வேற வழியில்லாம சித்தப்பா ஆத்துக்கு போயி ஒருநாள் தங்கிட்டு ஊருக்கு வரணும். பாவம் துளசி பத்து நாள் நிம்மதியா இருக்கலாம்னா முடியலை. அவளுக்கும் கோபம் வராதா? என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ நீ மறுபடியும் மன்னிட்ட பேசு…நான் ஃபோனை வைக்கறேன்”
என்று ஃபோனை வைத்து திரும்பினான்…. மிருதுளா நின்றிருந்ததைப் பார்த்ததும்…
“மன்னி நீங்க எப்போ வந்தேங்கள்?”
“ஏன்ப்பா இது என் வீடு நான் எங்க வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் வருவேன் போவேன்”
“அதுக்கில்ல மன்னி…”
“சரி அதெல்லாம் விடு. நீங்க மத்தியானம் சாப்பிட்டுட்டு தானே கிளம்புவேங்கள்? துளசிகிட்ட கேட்டேன் …அவ தான் பாவமாச்சே!!! அவளுக்குத் தெரியாதுன்னுட்டா…அதுதான் உன் கிட்ட கேட்க வந்தேன் நீ யார் கூடயோ பேசிண்டிருந்த”
“ஆங் மன்னி சாப்டுட்டு தான் கிளம்புவோம்”
என்று அப்போதும் சமாளித்தானே தவிர அவன் ஸ்தானத்திலிருந்து இறங்கி வந்து ஈஸ்வரனிடம் சொன்னதை மிருதுளாவிடம் சொல்ல துணிச்சலின்றி தன் ரூமிற்குள் சென்றான் ஏனெனில் அவன் மிருதுளாவிடமும் நவீனிடமும் அவ்வளவு திமிராக பேசியவனாயிற்றே!!!
அவன் ரூமிற்குள் சென்ற சில நொடியில் ஈஸ்வரனிடமிருந்து மிருதுளாவுக்கு கால் வந்தது. அந்த கால் எதற்காக யார் சொல்லி வருகிறது என்பதை நன்கறிந்த மிருதுளா அட்டென்ட் செய்தாள்
“ஹலோ அப்பா சொல்லுங்கோ”
“ஆங் மிருதுளா எல்லாரும் என்ன பண்ணிண்டிருக்கேங்கள்?”
“நான் சமையல் வேலையில் இருக்கேன். நவீன் சக்தி ஆஃபீஸ் அன்ட் ஸ்கூல் போயிருகக்கா. ப்ரவீன் அன்ட் ஃபேமிலி கெஸ்ட் ரூமிலிருக்கா”
“எங்கேயும் வெளில எல்லாம் போலயோ?”
“ஓ!! வண்டி வச்சுண்டு மைசூர் ஃபுல்லா சுத்திப் பார்த்துட்டு வந்தாச்சு”
“அப்படியா. சரி அங்க நிறைய மால்ஸ் இருக்கே! சும்மா ஆத்துலேயே உட்கார்ந்திருக்காம ஏதாவது ஒரு மாலுக்கு போயிட்டு வாங்கோளேன்”
“நேத்து அதுக்கும் போயிட்டு வந்துட்டோம்ப்பா.”
“அதுனால என்ன இன்னைக்கு வேற மாலுக்கு போயிட்டு வரவேண்டியது தானே”
“நவீன் ஆஃபீஸ் போயிருக்காரே”
“நவீன இல்லாட்டி என்ன ப்ரவீன் தான் அவன் வண்டியில தானே வந்திருக்கான்! அவன்ட்ட சொன்னா உங்க எல்லாரையும் கூட்டிண்டு போகப் போறான்.”
“இல்லப்பா சக்திக்கு இன்னைக்கு ஹாஃப் டே தான் அதுனால அவ மூணு மணிக்கு வந்துடுவா. நாங்க இப்போ கிளம்பிப் போனா கூட வர்றதுக்கு எப்படியும் ஆறு மணி ஆகிடும். ஏன்னா ட்ராஃபிக் அப்படி. ஸோ சக்தி ஸ்கூலேந்து வரும்போது நான் வீட்டில் இருக்கணும்.”
“சரி சக்தி வந்துட்டு எல்லாருமா சாயந்தரமா போயிட்டு டின்னர் எல்லாம் வெளில சாப்டுட்டு வாங்கோ”
என்று விடாப்பிடியாக ப்ரவீன் துளசிக்கு பரிந்துப் பேசும் ஈஸ்வரனின் பேச்சு மிருதுளாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி அதற்கு மேல் பேச்சைத் தொடராமலிருக்க சட்டென
“அது எப்படிப் பா முடியும். அவா தான் இன்னைக்கு லஞ்ச் சாப்டுட்டு சித்தப்பா ஆத்துக்கு வர்றதா ஃபோன் போட்டுச் சொல்லிடானே ப்ரவீன். அப்புறம் எப்படி சாயந்தரமா போறது?”
“அது அவன் மறுபடியும் ஃபோன் போட்டு இன்னொரு நாள் வரதா சொன்னா போச்சு. இது என்ன பெரிய விஷயமா?”
“ஆனா அப்பா அவா எல்லாம் பேக் பண்ணி கிளம்ப ரெடி ஆயாச்சு. அதுவுமில்லாம சக்திக்கு மிட்டேர்ம் ஆரம்பிக்கப் போறது ஸோ அவளால வெளில எல்லாம் வர முடியாது. இந்த வருஷம் டென்த் இல்லையா. பார்ப்போம் அடுத்தத் தடவை ப்ரவீனும் துளசியும் வந்தா நம்மாத்துல பத்து நாள் தங்கிட்டுப் போட்டுமே யார் வேண்டாம்னா. இந்த தடவை அவாளுக்கும் ஏதோ வேலைப் போலிருக்கு அதுதான் ஜஸ்ட் டூ டேஸ் ப்ளான் பண்ணி வந்திருக்கா. சரிப்பா குக்கர் விசில் அடிச்சாச்சு நான் போய் ஆஃப் பண்ணிட்டு என் வேலையைப் பார்க்கணும் அவா மத்தியானம் கிளம்பறா இல்லையா! வச்சிடட்டுமா?”
என்று ஈஸ்வரன் குடும்பத்தில் மருமகளாக பதினாறு ஆண்டுகள் இருந்ததில் மிருதுளா கற்றுக் கொண்ட வித்தையை அவர்களிடமே காட்ட அதற்கு மேல் பேச முடியாது போய் ஃபோனை வைத்தார் ஈஸ்வரன். இங்கே ஃபோனை வைத்ததும் ப்ரவீன் ஃபோன் அடித்தது. அவன் அதை எடுத்துக் கொண்டு வாசலுக்கு சென்றுக் கொண்டிருக்கையில் மிருதுளா ப்ரவீனிடம்
“யாரு ப்ரவீன் அப்பாவா?”
“ஆங் …ஆமாம்.”
“பேசிட்டு வா எல்லாருமா சாப்பிடலாம் அப்பத் தான் நீங்க கிளம்ப சரியா இருக்கும்”
“ம்….ம்….”
என்று கூறிவிட்டு ஃபோனை அட்டென்ட் செய்தான் அங்கிருந்து ஈஸ்வரன்
“டேய் ப்ரவீன் நீ ஏன்டா இன்னைக்கே கிளம்பறதா சொன்ன? உன் மன்னி அதையே கெட்டியா பிடிச்சுண்டுட்டா…என்னால அதுக்கு மேல எதுவும் பேச முடியலை”
“சரி வை ஃபோனை”
என்று சலித்துக் கொண்டு ஃபோனை வைத்து விட்டு அவர்கள் ரூமிற்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான். மிருதுளா ஏதும் அறியாததுப் போல சமைத்ததை டைனிங் டேபிளில் வைத்து விட்டுச் சென்று சோஃபாவில் அமர்ந்து டிவிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மத்தியம் மணி ஒன்றரை ஆனது ஆனாலும் அவர்கள் அறை கதவு திறக்கவில்லை. மிருதுளாவுக்கோ நல்ல பசி எடுக்க ஆரம்பித்தது. ஒன்னேமுக்காலுக்கு கதவைத் திறந்து வெளியே பையுடன் வந்தான் ப்ரவீன். அவன் பின்னாலேயே கோபமாக முகத்தை வைத்துக் கொண்டு இன்னொரு பையுடன் வந்தாள் துளசி. அவர்களைப் பார்த்ததும் உள்ளே என்ன நடந்திருக்கும் என்பதை அறிந்த மிருதுளா அதைப் பற்றி ஏதும் கேட்காமல்
“அப்பாடா வந்துட்டேங்களா. வாங்கோ சாப்பிடலாம். எனக்கு நல்ல பசி. எப்போடா நீங்க வருவேங்கள்னு காத்துண்டே இருந்தேன்”
என்று அவர்களை அமரவைத்து சாப்பாடு பரிமாறினாள். அவர்களும் உர்ரென்று இருந்தனர். அதை கண்டுக் கொள்ளாத மிருதுளா ஒரு தட்டில் சாதத்தையும் குழம்பையும், பொறியலையும் போட்டுக் கொண்டு அமர்ந்து அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டாள். அனைவரும் சாப்பிட்டு எழுந்ததும் துளசிக்கு தாம்பூலம் கொடுத்து
“அடுத்தத் தடவை வரும் போது ஒரு பத்து நாள் இருந்துட்டுப் போறா மாதிரி வாங்கோ… இப்படி ரெண்டு நாளுக்கெல்லாம் வரப்டாது புரிஞ்சுதா”
என்ற மிருதுளா சொன்னதும் துளசி ப்ரவீனைப் பார்த்து ஒரு முறை முறைத்தாள். அவன் கிடுகிடுவென பெட்டிப் பைகளை எல்லாம் அவர்கள் காரில் ஏற்றினான்.
மிருதுளா அப்படி சொல்லியும் அவர்கள் உண்மையை சொல்லாது அவர்களின் ஈகோவால் கிளம்பினர். காரில் ஏறியதும் ப்ரவீன்
“அண்ணா, சக்திக் கிட்ட சொல்லிடுங்கோ”
“ஆங் சொல்லிடறேன் ப்ரவீன். நீங்க பத்திரமா போயிட்டு வாங்கோ. சேஃபா டிரைவ் பண்ணு”
“ஓகே. பை நாங்க போயிட்டு வரோம்”
“பை ப்ரவீன், பை துளசி, பை பை குட்டிஸ்”
“ஓகே மன்னி பை”
என்று துளசி சொல்ல குழந்தைகள் கையசைத்து பை சொல்ல ப்ரவீன் கார் ஸ்டார்ட் செய்து அங்கிருந்துப் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் சென்றதும் மிருதுளா வீட்டிற்குள் வந்து எல்லாத்தையும் ஒதுக்கி வைத்தாள். அவர்கள் தங்கியிருந்த அறையின் மெத்தையில் விரிக்கப்பட்டிருந்த பெட்ஷீட், தலையணை உறைகள் என அனைத்தையும் மாற்றினாள். எல்லா வேலைகளையும் முடித்து அமர்வதற்குள் சக்தி வந்தாள். அவளுக்கு டிபன் கொடுத்துவிட்டு சற்று நேரம் ஓய்வெடுத்தாள். மாலை நவீன் ஆஃபீஸிலிருந்து வந்ததும் காலையில் நடந்தவற்றை எல்லாம் விவரித்தாள். அதைக் கேட்டதும் நவீன்
“ஏன் தான் இப்படி எல்லாம் நடந்துக்கறாளோ அந்த கடவுளுக்குத் தான் வெளிச்சம். அவா யார்கிட்டேயுமே ஸ்ட்ரைட்ஃபார்வேர்டட்னஸ் சுத்தமா இல்லை. எல்லாத்தையும் ஒரு சூழ்ச்சியா செஞ்சே பழக்கப்படுத்திண்டுட்டா”
“இதுல எனக்கென்ன ஆச்சர்யம்னா உங்க அப்பா ப்ரவீனுக்காகவும் துளசிக்காகவும் ….அவாளை இங்க தங்க வைக்கறதுக்கு என் கிட்ட எப்படி எல்லாம் பேசினார் தெரியுமா? அதுவும் அவரோட கெத்தை விட்டுக் கொடுக்காம!!! அப்பப்பா!! ஏன் ப்ரவீனுக்கும் துளசிக்கும் வாயில்லையா? இல்ல ரெண்டு பேரும் சின்னப் பாப்பாக்களா? காலையில் அவன் உங்க அப்பாவுக்கு கால் பண்ணிப் பேசி ….பேசி என்ன…மிரட்டி வச்சதும் உடனே எனக்கு கால் வந்தது…..என்கிட்ட பேசி வச்சதும் உடனே அவனுக்கு கால்…என்னனு சொல்ல?”
“சரி அவாளை எல்லாம் விட்டுத்தள்ளு மிருது. நான் இன்னைக்கு ஒரு குட் நியூஸோட வந்திருக்கேன்.”
“அப்படியா! அது என்ன குட் நியூஸ் நவீ? அதைச் சொல்லுங்கோ.”
“கெஸ் வாட்?”
“என்ன ப்ரமோஷனா? இல்ல நியூ ஜாப் ஆஃபர் வந்திருக்கா? இல்ல இன்க்கிரிமென்ட் ஏதாவதா? இல்ல மறுபடியும் ஏதாவது ஃபாரின் ட்ரிப்பா? என்னனு சொல்லுங்கோளேன்…”
“ஆமாம் அப்பா என்ன அந்த குட் நியூஸ்? நோ மோர் சஸ்பென்ஸ்.. ப்ளீஸ் சொல்லுப்பா”
தொடரும்…….
அத்தியாயம் 99: பிச்சுமணி வீட்டு விசேஷம்
தங்கள் காரிலேயே திருமண மண்டபம் சென்றடைந்தனர் நவீனும் மிருதுளாவும். மாலை டிபன் சாப்பிட்டுவிட்டு மாப்பிள்ளை அழைப்பில் கலந்துக் கொள்ள மண்டபத்தின் முதல் தளத்திற்கு சென்றனர். அங்கே அனைத்து சொந்த பந்தங்களும் அமர்ந்திருந்தனர். மிருதுளாவின் கண்கள் தன் குடும்பத்தைத் தேடியது. ஆனால் ப்ரவீன் துளசி ஒரு மூலையிலும், பவின் பவித்ரா ஒரு மூலையிலும், கஜேஸ்வரி வழக்கம் போல அங்குமிங்குமாக ஏதோ வேலை செய்வது போல பரபரப்பாக நடந்துக் கொண்டிருந்தாள். மூத்த தம்பதியர் ஓர் இடத்திலுமாக அமர்ந்திருந்தனர். இதில் யார் அருகே சென்று அமர்வது என்ற குழப்பத்தில் மெல்ல நடந்துச் சென்றாள். நவீன் தன் பெரியப்பா அருகில் அமர்ந்து பேச்சில் மும்முரமானான். துளசி அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து வந்து மிருதுளாவோடு வந்துக் கொண்டிருந்த சக்தியைப் பார்த்து
“என்ன சக்தி எப்படி இருக்க? படிப்பெல்லாம் எப்படி போறது?”
“ஆங் நல்லா இருக்கேன் சித்தி. நல்லா படிக்கறேன்”
“மன்னி எப்படி இருக்கேங்கள்?”
“நல்லா இருக்கேன் துளசி. நீ எப்படி இருக்க? குழந்தைகள் எங்கே?”
“அவா எங்கேயாவது விளையாடிண்டு இருப்பா.”
“ஏன் எல்லாரும் ஒவ்வொரு மூலையில உட்கார்ந்திருக்கேங்கள்?”
“அதெல்லாம் அப்படித்தான் மன்னி.”
என்று இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே பவித்ரா வந்தாள்
“ஹாய் மிருதுளா மன்னி எப்படி இருக்கேங்கள்?”
“ஆங் நல்லா இருக்கேன். நீ பவின் குழந்தைகள் எல்லாம் எப்படி இருக்கேங்கள்?”
“நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம்.”
“மன்னி நீங்க உங்க புது வீட்டுக்கு மாறிட்டேங்களா?”
“இல்ல துளசி. வேலை நடக்கறது. இன்னும் ஒரு ரெண்டு வாரத்துல ஷிஃப்ட் பண்ணிடுவோம்.”
“சரி மன்னி நீங்க பேசிண்டிருங்கோ. நான் வரேன். அப்புறமா பேசுவோம்”
“சரி பவித்ரா அப்புறம் பார்ப்போம். வா துளசி உட்காரு”
“இல்ல மன்னி நானும் போய் என் புள்ளகள தேடி டிபன் சாப்பிட வைக்கணும். நானும் வரேன்”
“ஓகே போயிட்டு வா”
என்று கூறிவிட்டு விசேஷத்துக்கு வந்திருந்த மற்றவர்களிடமெல்லாம் நலம் வகசாரித்தப் பின் பெரியவர்களுக்காக சிறியவர் இறங்கி செல்வதில் தவறில்லை என்றெண்ணி ஈஸ்வரன் அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்று நலம் விசாரிக்கும் போது
“அப்பா எப்படி இருக்கேங்கள்?”
“ஆங் நல்லா இருக்கேன் மா. வா வா உட்காரு. எப்போ வந்தேங்கள்? நவீன் எங்கே?”
“அதோ அங்க உட்கார்ந்துண்டு பெரியப்பாவோட பேசிண்டிருக்கார்.”
“ஓ!! சரி சரி சரி. என்ன நீங்க உங்க புது வீட்டுக்கு குடிப் போயாச்சா?”
“இல்லப்பா. இரண்டு வாரம் கழிச்சு போவோம்.”
“உனக்கு தெரிஞ்சிருக்குமே.!”
“என்னதுப்பா?”
“எல்லாம் கவின் கஜேஸ்வரி வீடு விஷயம் தான்”
“ஆங் கஜேஸ்வரி ஃபோன் போட்டு சொன்னாப்பா. நீங்களும் அவளுமா நாளைக்கு போறேங்களாமே?”
“ஆமாம் ஆமாம்!! உங்க மைசூர் வீட்டைப் பார்த்துட்டு வந்ததுலேந்து பேயாட்டம் ஆடிட்டாமா கஜேஸ்வரி.”
என்று ஈஸ்வரன் முதல் முறையாக மனம் விட்டு பேச ஆரம்பித்தது மிருதுளாவுக்கு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தாலும் அதை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பமும் இருந்தது ஏனெனில் அவர்கள் கஜேஸ்வரி பிடியிலிருப்பவர்களாயிற்றே!! பவித்ராவிடம் வேண்டுமென்றே தன்னைப் பற்றி குற்றம் சொல்லச் சொல்லி மாமியாரிடமிருந்து போட்டு வாங்க செய்தவளாயிற்றே! அதே போல் இம்முறை மாமனாரை வைத்து ஏதோ செய்ய நினைக்கிறாளோ எதுவானாலும் தான் ஜாக்கிரதையாக இருந்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டே
“என்ன சொல்லறேங்கள்?”
“அட அமாம்மா…அவளால இப்போ என் மச்சினன் பிச்சுமணியோட எனக்கு மனஸ்தாபம் ஆகிடுத்து. மொதல்ல நானும் பர்வதமும் அவ கூட போறதாயிருந்தது. அப்புறமா சரி பர்வதமாவது அவ தம்பிப் பொண்ணுக் கல்யாணத்தை அட்டெண்ட் பண்ணட்டும்னு இருக்கச் சொல்லிட்டேன்…. நான் கூட சொன்னேன் ஏன் இப்போ அகலக்கால் வைக்கணும்னு. மைசூர்ல வாங்கின வீடே இன்னும் கைக்கு வந்தபாடில்லை..இதுல நாங்க இப்போ இருக்குற வீடும் ஏதோ ரோட்டு மேல வர்றதுன்னும் அதை இடிக்கணும்னும், கோவில் நிலம்னும் ஏதேதோ சொல்லறா…ஸோ இதுவும் பிரச்சினையில இருக்கு…இந்த நேரத்துல எதுக்கு இன்னொரு வீடுன்னு!! ஆனா கேட்கலையே!! என் வேலையை மட்டும் பார்த்துண்டு இருக்கச் சொல்லிட்டா”
“கவின் ஒண்ணும் சொல்லலையா?”
“அவனும் வேண்டாம்னு தான் சொன்னான். இவ விடலையே. அவளோட ஃப்ரெண்ட்ஸ், அவனோட ஃப்ரெண்ட்ஸ் னு எல்லார்கிட்டயும் ஏதேதோ பேசி அவாளை எல்லாம் கவின் கிட்ட பேச வச்சு வாங்க வச்சுட்டாளே!!! அவனும் அவளோட தொல்லை தாங்காம வாங்கிட்டான். ஆனா ரிஜிஸ்ட்ரேஷன் வரை லீவு எடுக்க முடியாதுனுட்டு புறப்பட்டு குவைத் போயிட்டான்.”
“சரி…ஏன் கஜேஸ்வரி அந்த வீட்டை வாங்க அவ்வளவு பிடிவாதம் பிடிச்சா?”
“ம்…உங்களுக்கு முன்னாடி மைசூர்ல வீடு வாங்கினாளாம் ஆனா நீங்க அதுக்கு அப்புறமா வாங்கி கிரகப்பிரவேசமும் செஞ்சு குடியும் போக போறேளாம்”
“அதுக்கு!”
“அவளும் கிரகப்பிரவேசம் பண்ணணுமாம். அதுவும் இந்த வருஷமே பண்ணணுமாம். அதுனால எண்பது சதவிகிதம் முடிஞ்ச வீட்டை வாங்கிருக்கா”
“ஓ!!! அப்படியா.”
என்று மிருதுளா வெளியே கூறினாலும் மனதிற்குள்
“ஏன் இப்போ உங்க மாட்டுப்பொண்ணுட்ட சொல்ல வேண்டியது தான்…. இங்க வந்தா நான் வச்சது தான் சட்டம்னு..”
என்று நினைத்ததை கேட்க வாய் வரை வந்தது…ஆனால் மீண்டும் அவள் மனது அவளிடம்
“அவரே வேதனையில பொலம்பறாரு…இப்போப் போய் ச்சே…கேட்கக் கூடாது. அது தப்பு”
என சொன்னதும் அப்படியே சொல்ல திறந்த வாயை இறுக்கமாக மூடிக்கொண்டாள். அப்போது ஈஸ்வரன்
“என்ன சொன்ன?”
“ஒண்ணும் சொல்லலையே!!”
“இல்லையே ஏதோ சொன்னா மாதிரி இருந்ததே!”
“இல்லைப்பா …சரி அவ யார்கிட்டேயும் சொல்லக் கூடாதுன்னு சொன்னாலே நீங்க பாட்டுக்கு இப்படி பொலம்பறேங்கள்?”
“ஆமாம்!! அவளுக்கு வேற வேலையில்லை…அவ கிடக்கா….அதுவுமில்லாம இங்க நாம மட்டும் தானே உட்கார்ந்துண்டிருக்கோம் ஸோ நோ ப்ராப்ளம்”
“அப்போ நீங்க யார்கிட்டேயும் உண்மையை சொல்லலை”
“இல்லை. எதுக்கு நமக்கு வம்புனுட்டு நான் பாட்டுக்கு இருக்கேன்”
இதைக் கேட்டதும் மிருதுளா மெல்ல தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள். பின்னாலிருந்து நவீன் அழைத்தான். உடனே தன் மாமனாரிடம்
“சரிப்பா நவீன் கூப்பிடறார் நான் போயிட்டு வரேன். நாங்க டின்னர் ஆனதும் ஹேட்டலுக்கு போயிடுவோம். நாளைக்குப் பார்ப்போம்”
“நாளைக்கு நான் தான் கஜேஸ்வரிக்கூட போகணுமே!!!”
“சாயந்தரம் நலங்குக்கு வந்திடுவேங்கள் இல்லையா”
“ஆங் வந்திடுவோம்னு நினைக்கறேன்…தெரியாதுமா”
“சரிப்பா பார்ப்போம்”
என்று கூறிவிட்டு நவீனிடம் சென்றாள். அங்கே நவீன் சில தூரத்து சொந்தங்களை அறிமுகம் செய்து வைத்தான். பின் அவன் அவர்களோடு பேசிக்கொண்டிருக்கையில் சக்தியும் மிருதுளாவும் அவன் அருகே அமர்ந்திருந்தனர். அதைப் பார்த்த கஜேஸ்வரி நேராக மிருதுளாவிடம் வந்து
“ஹலோ மன்னி எப்படி இருக்கேங்கள்? எப்போ வந்தேங்கள்?”
“நீ எப்பவும் போல பிஸியா அங்கேயும் இங்கேயுமாக மும்முரமா வேலைப் பார்த்துக் கொண்டிருந்தாயே அப்போதே வந்துட்டோம்.”
“ஆமாம் மன்னி அம்பிகா மாமி என்னைப் பிடிச்சுண்டுட்டா …என்னப் பண்ண? சரி மன்னி நான் இப்போ சாப்டுட்டு ஆத்துக்கு கிளம்பிடுவேன்..ஏன்னா நாளைக்கு விடியற் காலையில கிளம்பணும். நாங்க வாங்கப் போற அப்பார்ட்மெண்ட்… உங்க வீடு மாதிரி சிட்டி ஒதுக்குப் பறமா எல்லாம் இல்லை மதுரை சிட்டி சென்டர்ல இருக்கு. என் ஃப்ரெண்டும் அதுல வாங்கியிருக்கா.”
“யாரு அந்த மைசூர் வீட்டை வாங்கிட்டு ஆறே மாசத்துல கைமாத்திவிட்டவளா?”
“ச்சே ச்சே!! அவ இல்ல மன்னி இவ வேற ஒரு ஃப்ரெண்டு. அநேகமா இந்த வருஷத்துலேயே நாங்க ரெண்டு கிரகப்பிரவேசம் வைப்போம்னு நினைக்கறேன்”
“ரெண்டா?”
“அட ஆமாம் மன்னி ஒண்ணு மைசுர்ல இன்னொன்னு மதுரையில. நாங்க எல்லாம் ரெண்டு வீட்டுக்கும் ஒரே நேரத்துல கிரகப்பிரவேசம் பண்ணுவோம் மன்னி”
“ஆமாம் ஆமாம் செஞ்சாலும் ஆச்சர்யப்படறதுக்கு ஒண்ணுமில்லமா”
“சரி மன்னி வர்றேளா சாப்பிட?”
“இதோ நவீ பேசிட்டு வந்தா சாப்பிட கிளம்பணும். ஆமாம் ஏன் எல்லாரும் ஒவ்வொரு மூலையில உட்கார்ந்திருந்தேங்கள்? துளசிய கேட்டா அது அப்படித் தான்னு சொல்லறா…நீ சொல்லேன்”
“அவளைப் பத்தி மட்டும் என்கிட்ட பேசாதீங்கோ மன்னி. எனக்கு அவளைப் பார்த்தாளே பத்திண்டு வரும். அவளும் அவ பேச்சும். வேலைக்கு போறாளாம் வேலைக்கு!! மகாராணி….நீங்களும் தானே வேலைக்கு போனேங்கள் ….ஆனாலும் இவ ஆடுற ஆட்டம் ரொம்பத் தான்…அதெல்லாம் நீங்க வந்துப் பார்க்கணும் அப்போ தான் தெரியும்…சரி மன்னி நான் வரேன்”
என்று மிருதுளாவிடம் கூறிவிட்டு ஈஸ்வரனிடம்
“என்ன உட்கார்ந்துண்டே இருக்கேங்கள் மாமா? ம்…எழுந்து சாப்பிட்டுட்டு வாங்கோ ஆத்துக்கு போவோம். காலையில சீக்கிரம் கிளம்பணும் இல்லையா. ம்..ம்..வாங்கோ”
என்று கஜேஸ்வரி கூறியதும் பொட்டிப்பாம்பாக அவள் பின்னால் ஈஸ்வரன் சென்றதைப் பார்த்த மிருதுளாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
அன்றிரவு உணவருந்தியதும் நவீனும் மிருதுளாவும் அவர்கள் புக் செய்திருந்த ஹோட்டலுக்குச் சென்றனர். மிருதுளா ஈஸ்வரன் சொன்னதையும் கஜேஸ்வரியுடனும் துளசியுடனும் மற்ற சொந்தங்களுடனுமான பேச்சு வார்த்தைகளை நவீனுடன் பகிர்ந்தாள். அனைத்தையும் கேட்ட நவீன்
“இருக்கட்டும் இருக்கட்டும். ஒரு இடத்துல ரொம்ப ஆடினா இன்னொரு இடத்துல அடங்கித் தான் போகணும்னு சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன்…இப்போ கேட்டும் தெரிஞ்சுண்டுட்டேன். பேசாம வந்து படு மிருது.”
என்று சற்று நேரம் நடந்தவைகளைப் பற்றி பேசி விட்டு உறங்கினார்கள் மூவரும்.
மறுநாள் விடியற் காலையில் எழுந்து கல்யாணத்துக்கு ரெடியாகிச் சென்றனர். மண்டபம் சென்றதும் அனைவருடனும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்து விட்டு மணமக்களை வாழ்த்திப் பரிசளித்து சாப்பிடச் சென்றனர். அவர்களுடன் ப்ரவீன் துளசியும் சேர்ந்துச் சென்றனர். அப்போது நவீன்
“என்னடா ப்ரவீன் எப்படி இருக்க? எங்காத்து கிரகப்பிரவேசத்துக்கு ஏன் நீ வரலை?”
“ஆங் நல்லா இருக்கேன். அது துளசியோட ஆஃபீஸ் ல ஆடிட்டிங் இருந்தது அதுதான் லீவு கிடைக்கலை”
“ஜூன் மாசத்துல ஆடிட்டிங்கா சரி சரி நம்பிட்டேன் நம்பிட்டேன்”
“விடுங்கோளேன் நவீ….அவா வரலைன்னா அதுக்கு ஆயிரம் காரணமிருக்கும் அதை எல்லாம் உங்ககிட்ட சொல்லவா முடியும். நான் துளசி கிட்ட கேட்டேனா ஏன் வரலைன்னுட்டு….விடுவேங்களா…. நீ போப்பா ப்ரவீன் துளசி கிட்ட உட்கார்ந்து சாப்பிடு.”
என்று அவர்கள் வராததை தான் கேட்கக் கூட விரும்பவில்லை என்பதை நாசுக்காக உணர்த்தினாள் மிருதுளா. சாப்பிட்டதும் மண்டபத்தின் நடுவில் அமர்ந்து சித்தி சித்தப்பாக்கள், பெரியம்மா, பெரியப்பாக்களுடன் பேசிக்கொண்டிருந்தனர் நவீனும் மிருதுளாவும். பர்வதம் துளசியின் மகளையும் மகனையும் பார்த்துக் கொள்வதிலேயே முழுநேரமும் ஓரிடத்தில் உட்கார்ந்து பேசக்கூட முடியாது இருந்தாள். அதைப் பார்த்ததும் மிருதுளாவுக்கு நவீன் முன் தினம் இரவு சொன்னது ஞாபகம் வந்தது. பிச்சுமணி மாமாவும் அம்பிகா மாமியும் சற்று ஃப்ரீ ஆனார்கள் அப்போது நவீனும் மிருதுளாவும் மாமாவிடமும் மாமியிடமும் வாழ்த்துக்களைத் தெரிவித்து சற்று நேரம் பேசிக் கொண்டிருக்கையில் பர்வதம் ஏதோ சாப்பாட்டுப் பொருளை எடுத்து வந்து பிச்சுமணியிடம் நீட்டி சாப்பிடச்சொன்னாள் அதற்கு பிச்சுமணி பர்வதத்திடம் ஏதும் சொல்லாது வெடுக்கென முகத்தைத் திருப்பிக் கொண்டார். அதைப் பார்த்த மிருதுளா அதிர்ந்துப் போனாள். அவர்கள் பேசிவிட்டுச் சென்றதும் நவீனிடம்
“நீங்க உங்க மாமாவை கவனிச்சேங்களா நவீ!”
“ஏன் கேட்குற மிருது”
“மாமா உங்க அம்மாட்ட முகம் கொடுத்துப் பேசவேயில்லை”
“ஆங் ஆங் அதையா…கவனிச்சேன் கவனிச்சேன்”
“எப்படிப்பா ஆருயிர் தம்பி ஆச்சே அவர். அவா அக்காவை எப்படி இப்படின்னு எனக்கு ஷாக் ஆயிடுத்து”
“அவர் வீட்டுல ஆல்ரெடி அந்த லேடி பிரச்சினை பண்ணிருக்கா…இப்போ இந்ல கல்யாணத்துல என்னத்தைப் பண்ணிணாலோ என்னமோ…அதுதான் மாமா அப்படி பிஹேவ் பண்ணிருக்கார்”
“அது என்ன அந்த லேடின்னு!!!”
“சரிமா உன் மாமியார்…போதுமா”
என்று பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனது தெரியாது அமர்ந்திருந்தனர். அடுத்து நலங்கு ஆரம்பிக்க பத்து நிமிடங்கள் தான் இருப்பதாக சொல்லி அனைவரையும் அதற்கு தயாராகச் சொன்னார் பிச்சுமணி மாமா. உடனே எல்லோரும் எழுந்துச் சென்று கிளம்பினார்கள். நவீனும் மிருதுளாவும் அமர்ந்திருந்த இடத்திலேயே அமர்ந்திருந்தனர். அதை கவனித்த அம்பிகா மாமி மிருதுளாவிடம் வந்து
“ஏய் நவீன் மிருது ஏன் இங்கேயே உட்கார்ந்துண்டு இருக்கேங்கள்? போய் ரெடியாகுங்கோ”
“அதுதான் ரெடியா இருக்கோமே மாமி”
“என்னடி விளையாடறையா? டிரெஸ் மாத்தலையா?”
“இல்ல மாமி இப்படியே நலங்கு அட்டெண்ட பண்ணிட்டு ஊருக்கு கிளம்பலாம்னு இருக்கோம்”
“நீங்க ரெண்டு பேரும் வந்தது ரொம்ப சந்தோஷம் பா…நல்ல வேளை உனக்கு நாத்தனார்கள் இல்லை மிருது.…தப்பிச்ச…எனக்கு ஆறு பேரு நினைச்சுப் பாரு. நேத்தேலேந்து ஒரே பிரச்சினை சண்டை தான் போ…எப்படியாவது என் பொண்ணுக் கல்யாணம் நல்லபடியா நடந்தா போறும்னு ஆயிடுத்துமா”
“விடுங்கோ விடுங்கோ மாமி…எல்லாம் நல்லதுக்கே.”
“இப்படியே விட்டுக் கொடுத்துண்டே இருந்ததால தான் இவ்வளவு ஆட்டம் போட்டா தெரியுமா….அதெல்லாம் பெரிய கதை அப்புறமா ஆத்துக்கு வரும்போது சொல்லறேன். சரி நான் வரேன் மிருது”
“சரி மாமி போயிட்டு ரெடியாகி நலங்குக்கு வாங்கோ. எதுக்கும் டென்ஷன் ஆகாதீங்கோ”
என்று பேசி தன் மனக்குமுறலை மிருதுளாவிடம் பகிர்ந்துக் கொண்டு சென்றாள் அம்பிகா. அதை கவனித்த நவீன் மிருதுளாவிடம்
“என்ன மிருது இது….நேத்து உன் மாமானார் உன் கிட்டப் புலம்பினார்…இன்னைக்கு மாமி புலம்பிட்டுப் போறா….இவாளுக்கெல்லாம் என்ன ஆச்சு?”
“எவ்வளவு நாள் தான் எல்லாத்தையும் மனசுக்குள்ளேயே வச்சுப்பா நவீ…என்னைக்காவது யார்கிட்டயாவது சொல்லத்தான் தோணும். அது யாரா இருந்தாலும்…”
“ஆனா ஒண்ணு கவனிச்சயா?”
“என்ன?”
“மாமி புலம்பிட்டுப் போறா ஆனா இந்த சித்திகளும் பெரியம்மாக்களும் ஒண்ணுமே நடக்காதது போலவே இருக்காளே அது எப்படி?”
“ம்…படுத்தறவா அப்படித் தான் நடந்துக்குவா!! சாமர்த்தியம் போதாம படறவா தான் புலம்புவா. ஏன் நம்ம கூட்டமும் அப்படி தானே! செய்றதை எல்லாம் செவ்வெனே செய்திட்டு அதுக்கும் அவாளுக்கும் சம்மந்தமே இல்லாததுப் போல நடந்துண்டதில்லையா? இல்ல நடக்கறதில்லையா?”
“ஆமாம் ஆமாம்!!! சரி சரி எல்லாரும் நலங்குக்கு வர ஆரம்பிச்சிட்டா.. வா நாமளும் அடெண்ட் பண்ணிட்டு ஒரு ஏழு மணிக்கெல்லாம் கிளம்பிடலாம். சரியா”
“ஓகே டன்.”
நலங்கு தொடங்கிய சற்று நேரத்தில் கஜேஸ்வரியும் ஈஸ்வரனும் மண்டபத்துக்கு வந்தனர். மிருதுளாவும் துளசியும் ஒன்றாக அமர்ந்திருந்தனர். கஜேஸ்வரி நேராக மிருதுளாவின் வலதுபுறம் அமரந்து
“என்ன மன்னி எல்லாரும் எங்களைக் கேட்டாளா? நீங்க நான் சொன்ன மாதிரி தானே சொன்னேங்கள்?”
“யாருமே கேட்கலை கஜேஸ்வரி.”
“என்னது யாருமே கேட்கலையா?”
“ஆமாம். கடவுள் எங்களை பொய் சொல்ல வைக்கக்கூடாது என்பதாலோ என்னவோ எங்க கிட்ட உங்களைப் பத்தி யாருமே விசாரிக்கலைமா”
என்று மிருதுளா சொன்னதும் ஏதோ ப்ளானிங்கில் சொதப்பலாகிவிட்டதோ என்ற முகபாவனையுடன்
“சரி மன்னி நான் போய் டிபன் சாப்படுட்டு வந்திடறேன். சரி பசி”
“ம்…ஓகே”
என்றதும் கஜேஸ்வரி எழுந்து டைனிங் ஹாலுக்குச் சென்றாள். அப்போது துளசி மிருதுளாவிடம்
“மன்னி நீங்க ரிஜிஸ்ட்ரேஷன் பத்தி கேப்பேங்கள்னு தான் தயங்கி நின்னா கஜேஸ்வரி”
“அப்படியா! எனக்கு தோணலையே!! அதுவுமில்லாம நான் கேட்கப் போய் ..என்னால தான் எல்லாருக்கும் தெரியவந்ததுனு பிரச்சினையாகறதுக்கா….வேண்டாமா வேண்டவே வேண்டாம். நிறையப் பட்டாச்சு”
கீழே சாப்பிடச் சென்ற கஜேஸ்வரி மீண்டும் மேலே வந்தாள்
“என்ன கஜேஸ்வரி அதுக்குள்ள சாப்டுட்டயா?”
“ஆங் ஆச்சு மன்னி. நான் தான் சொன்னேனே சரிப் பசி. டிபன் போன வேகம் தெரியலை.”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் நவீனின் ஒண்ணு விட்ட சித்தப்பா மருமகள் வந்து பேச்சில் கலந்துக் கொண்டாள். அப்போது சம்மந்தமே இல்லாமல் திடீரென கஜேஸ்வரி மிருதுளாவிடம்
“மன்னி நீங்க ஏன் டையட்டிங் பண்ணக்கூடாது”
“ஏன் பண்ணணும்?”
“இல்ல கொஞ்சம் உடம்பு குறையுமேனுட்டு சொன்னேன்”
என்று கஜேஸ்வரி கூறியதும் மிருதுளாவுக்கு கோபம் தலைக்கேறியது. ஆனாலும் அதை அடக்கிக் கொண்டு சிரித்தப்படியே
“அதை நவீன் சொல்லட்டும். நான் செய்கிறேன். அவருக்கு நான் அழகாக தெரியும் பட்சத்தில் நான் ஏன் குறைக்கணும் ….அதுவுமில்லாம நான் உன்னை மாதிரி கல்யாணத்துக்கு முன்னாடி குச்சி மாதிரி இருந்துட்டு அதுக்கு அப்புறம் புஸ்ஸுனு ஆகலையே….எங்க கல்யாணத்துல எப்படி இருந்தேனோ அப்படியே தானே இருக்கேன்….என்ன கஜேஸ்வரி அப்படிதானே…துளசிக்குத் தெரியாது ஆனா நீ தான் எங்க கல்யாணத்துக்கும் வந்திருந்தயே…உனக்கு அது நல்லாவே தெரியுமே இல்லையா”
“ம்….ஆமாம் மன்னி… சரி இருங்கோ அந்த மாமிய விசாரிச்சுட்டு வந்துடறேன்”
என ஏதோ திட்டமிட்டு எதுவும் நடக்காமல் போனதில் குழம்பி ஏதாவது வம்பு வளர்க்க எண்ணி அதிலும் ஏமாற்றத்தையே சந்தித்து செய்வதறியாது அங்கிருந்து சென்றாள் கஜேஸ்வரி.
நலங்கு நல்லப்படியாக நடந்தேறியது. அன்றிரவு உணவை சாப்பிட்டுவிட்டு அனைவரிடமும் சொல்லிக் கொண்டு மைசூருக்குப் புறப்பட்டுச் சென்றனர் நவீனும் மிருதுளாவும்.
இந்த விசேஷத்தில் மிருதுளாவுக்கு பர்வதப் பஞ்ச் ஏதும் இல்லாமல் போனதற்கு துளசியின் இரண்டு குழந்தைகளே காரணமெனலாம் …..அதே நேரம் தனது அந்த உத்தமமான வேலை தனது மருமகள் கஜேஸ்வரி எடுத்துக் கொண்டதால் விலகியிருக்கலாம்….என்றும் நாம் எடுத்துக் கொள்ளலாம். கஜேஸ்வரியும் ஏதேதோ ப்ளான் செய்தும் எதுவும் மிருதுளாவிடம் பலிக்கவில்லை. கடவுள் இருக்காரு கஜேஸு என்பதே உங்கள் மைன்ட் வாயிஸாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.
தொடரும்…….
அத்தியாயம் 98: தன் வினை தன்னை சுடும்!
புது வீட்டில் நன்றாக உறங்கி விடியற் காலையில் எழுந்து மூவரும் காரில் ஏறி அவர்கள் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்ட்டுக்கு வந்து ஃப்ரெஷ் ஆகி காபி குடித்தனர். அன்று சனிக்கிழமை என்பதால் நவீனுக்கு ஆஃபீஸ் இல்லை. ஆனால் அனைவரும் வந்து தங்கியிருந்ததில் வீடு அலங்கோலமாக கிடந்தது. காலை டிபனை சாப்பிட்டதும் அனைத்தையும் சுத்தம் செய்தனர் நவீனும், மிருதுளாவும், சக்தியும். அதன் பின் சற்று நேரம் டிவி பார்த்தனர். மத்திய சாப்பாட்டிற்கு வெளியே சென்று வந்தனர். வந்ததும் நன்றாக உறங்கினர். இப்படியே சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை இரு தினமும் நன்றாக ஓய்வெடுத்தனர். இரண்டு நாள் ஓய்வு திங்கட்கிழமை காலை முதல் அவரவர் வேலைகளில் மும்முரமாக டானிக்காக இருந்தது.
அப்போது ஒரு நாள் குஜராத்திலிருந்து நவீனின் ஒண்ணு விட்ட சித்தப்பா நவீனுக்கும் மிருதுளாவுக்கு வாழ்த்து தெரிவிக்க கால் செய்தார். அதை நவீன் அடெண்ட் செய்தான். அவர் வழக்கமான வாழ்த்து தெரிவித்து, வீட்டைப் பற்றிய விசாரிப்புகளை கேட்டு மெல்ல
“நான் ஃபோட்டோ எல்லாம் பார்த்தேன். பரவாயில்லையே நிறைய பேர் வந்திருந்தா போல”
“ஆமாம் வந்திருந்தா அதை ஏன் இப்படி கேட்கறேங்கள் சித்தப்பா?”
“இல்லடா நவீன்…நாங்க வரலாம்னு இருந்தோம். உங்க அப்பாவுக்கு கால் பண்ணிப் பேசினோம். அப்போ உங்க அப்பாவும் அம்மாவும் தேவையில்லாம அலையாதீங்கோ அந்த விசேஷத்துக்கு யாருமே வரப்போறதில்லை நாங்களும் மிருதுளாவோட அப்பா அம்மாவும் மட்டும் தான் இருக்கப்போறோம்னும், உன் தம்பிகள் கூட அடெண்ட் பண்ணப் போறதில்லைன்னும் சொன்னாளா…அதுதான் சரி நீ உங்க பேரெண்ட்ஸை மட்டும் வச்சு பண்ணற ப்ளான்ல இருக்கயோன்னு தான் நாங்க வரலை”
“ஏன் சித்தப்பா அப்படி எங்க பேரெண்ட்ஸை மட்டும் வச்சுப் பண்ணறதா இருந்தா எதுக்கு உங்களுக்கெல்லாம் ஃபோன் பண்ணி இன்வைட் பண்ணிருப்பேனாம்?”
“டேய் நிஜமாடா உன் அப்பா அம்மா தான் கடைசி நிமிஷத்துல அவாளை மட்டும் வச்சுதான் நீங்க பண்ணப் போறதா இருக்கேங்கள்னு சொன்னாப்பா. நாங்க என்ன பர்வதம் அவளோட ரிலேஷன்ஸ் எல்லார்கிட்டேயும் அப்படிதான் சொல்லிருக்கா அதுனால தான் நாங்களும் வரலை. சாரி நவீன் நாங்க உன் கிட்ட ஃபோன் பண்ணிக் கேட்டிருக்கணும் போல!! இனி உன்கிட்டயே எதுவானாலும் கேட்டுக்கறோம். சரி வச்சுடவா”
“அதுதான் நல்லது சித்தப்பா. இனி எங்க சம்மந்தமான எல்லா விஷயத்துக்கும் தயவுசெய்து எங்கிட்டேயே கேளுங்கோ ப்ளீஸ். ஓகே பை”
என்று ஃபோனை வைத்ததும் நவீனும் மிருதுளாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அப்போது மிருதுளா
“ஒவ்வொரு விசேஷத்துக்கும் ஒவ்வொரு தினுசா ஏதாவது பண்ணறாளே!! என்னப் பண்ண?”
“ஒண்ணும் பண்ண முடியாது மிருது. தன்னாலும் திருந்தாது, சொன்னாலும் கேட்காது என்ன பண்ண? இப்ப இதைக் கேட்க போன பெரிய சண்டையாக்கிடுவா. விடு இதுவும் கடந்து போகும். இவாகிட்டேந்து விலகிடுவோம்னு சொன்னாலும் நீ கேட்க மாட்டேங்கற. இது மாதிரி சொந்தங்களை வாரி அணைச்சுக்காம தூரத்துல தள்ளி வைக்கிறதுதான் நம்ம மனநிம்மதிக்கு நல்லது தெரிஞ்சுக்கோ. ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் உனக்கு இது புரியும்”
“வேண்டாம்னு வைக்க ஒரு நிமிஷம் போதும் நவீ. ஆனா அப்புறம் வேணும்னாலும் எப்படி ஒருவரையொருவர் முகத்தைப் பார்க்கறது?”
“ம்…அதெல்லாம் அவா பார்த்துப்பா. இதை நான் உன்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கேன். ஏன் போன வருஷம் வந்து நம்மளை ஏமாத்திட்டும் இந்த வருஷம் வரலையா நம்ம வீட்டுல இருக்கலையா? திமிரா நடக்கலையா? அவா அவா பண்ணறதுக்கெல்லாம் கூலி கிடைக்கும். நம்மளை ஏமாத்தினதுக்கு கைமேல் கிடைச்சுது பார்த்த தானே!”
“அதைத் தான் நானும் சொல்லறேன் நவீ அவா அவா பண்ணறதுக்கு அந்த ஆண்டவன் கூலி குடுத்துப்பான். நாம ஏன் வீணா பேசாம இருந்தோ இல்ல விலகியிருந்தோ கெட்டபேரு வாங்கிக்கணும்.”
“ஆமாம் இப்போ மட்டும் என்ன வாழறதாம்?”
“சரி விடுங்கோ.”
மிருதுளா அவர்கள் வீட்டின் மரவேலைகளுக்காக இரண்டு மூன்று ஏஜென்சியை தேர்ந்தெடுத்து அவர்களிடம் வீட்டின் தரைதளத் திட்டம் எனப்படும் ஃப்ளோர் ப்ளானை மின்னஞ்சலில் அனுப்பி வைத்து அதற்கான வடிவமைப்பு படங்களை வரவழைத்து அதில் ஒன்றைத் தேர்வு செய்து அவர்களிடம் முன் பணம் செலுத்தி வேலையை ஆரம்பிக்கச் செய்தாள்.
அந்த வருடம் விடுமுறைக்கும் கவின் குடும்பத்தினர் நவீன் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் ஒரு நாள் முன் தினம் ஃபோன் போட்டு அடுத்த நாள் வருவதாக சொன்னார்கள் அதற்கு ஏதும் சொல்லாமல் சரி என்று மட்டுமே சொல்லி ஃபோனை வைத்தாள் மிருதுளா. அன்று மாலை நவீன் ஆஃபீஸிலிருந்து வந்ததும் விவரத்தை சொல்லி…
“எனக்கு அவாளைப் பார்த்தாளே நாம ஏமாந்தது தான் ஞாபகம் வரும் நவீ.”
“விடு விடு ஏமாத்தினது ஏமாத்தி அவா காரியத்தையும் சாதிச்சுட்டு போயிட்டா! இப்ப போய் அதை நாம கேட்கப் போனோம்னா …அப்படி எல்லாம் இல்லவே இல்லைன்னு அடிச்சு பேசுங்கள் என்னதுக்கு அதை அப்படியே மறந்திடுவோம். ஆனா இந்த தடவை அவா வீட்டை நாம பார்க்க போகக் கூடாது.”
“ஆனா அவா நம்மளை கூப்பிடுவாளே”
“அதை நான் பார்த்துக்கறேன். அதை நீ ஞாபகம் வச்சுக்கோ போறும்”
“ம்…ஓகே”
மறுநாள் சனிக்கிழமை என்பதால் சற்று தாமதமாக எழுந்து டிபன் செய்து சாப்பிட்டுவிட்டு அமர்ந்தனர் நவீன் மிருதுளா மற்றும் சக்தி. ஒரு பத்து நிமிடம் ஆனதும் மிருதுளா எழுந்து அடுப்படிக்குச் சென்று சமையல் வேலையில் மும்முரமானாள் ஏனெனில் மத்திய சாப்பாட்டிற்கு கவின் குடும்பம் வருவதாக சொல்லியிருந்தார்கள். அதே போல வந்தனர். அவர்களை வரவேற்று சாப்பாடு போட்டு அந்த பாத்திரங்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு ஹாலில் வந்தமர்ந்தாள் மிருதுளா. அங்கே கவின் நவீனிடம் அவர்கள் வீட்டின் வேலைகள் எவ்வளவு தூரம் நடந்துள்ளது என்பதை அந்த பில்டர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்த புகைப்படங்களைக் காண்பித்துக் கொண்டிருந்தான். மிருதுளா வந்ததும் கஜேஸ்வரி அவளிடமும் காட்டினாள். அதைப் பார்த்ததும் மிருதுளா
“அட டே! பேஷா இருக்கே. ரொம்ப நல்லா பண்ணியிருக்கா. பரவாயில்லை நீங்க இங்கே இல்லாட்டினாலும் வேலை மளமளவென நடந்திருக்கறதைப் பாரத்தா ரொம்ப சந்தோஷமா இருக்கு கஜேஸ்வரி”
“ஆமாம்! எங்களுக்கே ஆச்சர்யம்தான். சரி வந்தது வந்தாச்சு அப்படியே கிரகப்பிரவேசத்தையும் முடிச்சுடலாம்னு வந்திருக்கோம்”
“அப்படியா சூப்பர்.”
“இன்னைக்கு ஒரு நாலு மணிக்கு வீட்டைப் போய் பார்க்கலாம்னு இருக்கோம் நீங்களும் வர்றேங்களா?”
என்று கஜேஸ்வரி கேட்டதும் மிருதுளா நவீனைப் பார்த்தாள்
“இல்ல நாங்க வரலை. நாங்க எதுக்கு நீங்க ரெண்டு பேரும் மட்டும் போய் பார்த்துட்டு வாங்கோ… குழந்தைகள் இங்கேயே இருக்கட்டும்..நீங்க வர்றதுக்குள்ள நாங்க ரெடியா இருக்கோம் நாம ஏதாவது மாலுக்கு போயிட்டு அப்படியே டின்னர் சாப்பிட்டுட்டு வருவோம். என்ன சொல்லற கவின்?”
“இல்ல நவீன் நீங்களும் வந்தா நல்லாயிருக்குமேனு தான் சொன்னா கஜேஸ். சரி இப்படி பண்ணுவோம் நாம எல்லாருமா ரெடி ஆகி இங்கேந்து எங்க புது வீட்டைப் பார்த்துட்டு அப்படியே மாலுக்கு போகலாம் என்ன சொல்லறேங்கள்?”
“ம்….சரி அப்படியே செய்யலாம். அப்போ எல்லாரும் கிளம்புங்கோ”
என்று நவீன் சொன்னதும் அனைவரும் கிளம்ப ஆரம்பித்தனர். அப்போது மிருதுளா தன் அறையிலிருந்த நவீனிடம்
“என்னப்பா!! போகவேண்டாம்னு சொன்னேங்கள்! இப்போ நீங்களே கிளம்பவும் சொல்லறேங்கள்? எனக்கு ஒண்ணும் புரியலை”
“இப்போ உனக்குப் புரியாது. ஆனா அங்கே போனதும் புரிஞ்சுப்ப. நான் சொல்லறதை மட்டும் கேளு போதும்”
“ஓகே!”
அனைவரும் நவீன் காரில் ஏறிச் சென்றனர். அங்கே சென்றதும் கவின் குடும்பத்தினர் இறங்கினர். மிருதுளாவும் இறங்கப்போகும் போது நவீன் அவளிடம்
“மிருது இரு நாம வண்டியைப் பார்க் பண்ணிட்டு போவோம்”
“ஓ! ஓகே நவீ”
“கவின் நீங்க போயி பார்த்துட்டு வாங்கோ நாங்க வண்டியப் பார்க் பண்ணிட்டு வர்றோம். அநேகமா இங்க பார்க்கிங் கிடைக்காது. அப்படி கிடைக்கலைனா நாங்க இப்படியே ரௌண்ட் அடிச்சிண்டு இருக்கோம் நீங்க பார்த்து முடித்ததும் ஒரு கால் பண்ணு வந்திடறோம்”
“அப்படியா!! சரி ஓகே!”
என்று கூறி நவீன் அங்கிருந்து கிளம்பினான். அவன் சொன்னது போலவே பார்கிங் கிடைக்காமல் சுற்றிக் கொண்டிருந்தான். அப்போது மிருதுளா
“பலே! நவீ! தேறிட்டேங்கள்”
“பின்ன நம்மளை முட்டாளாக்க தயங்காத கூட்டத்திடம் நாமளும் இப்படித்தான் நடந்துக்கணும். நாம அவாளைக் கூட்டிண்டு வராம இல்லையே!! ஆனா நாம உள்ளே போகணுமா வேண்டாமா அப்படிங்கறது நம்ம இஷ்டம். அந்த கட்டிடத்தைப் பார்த்தா அவன் ஃபோட்டோல காண்பித்தா மாதிரி இல்லையே!! இது முடிய இன்னும் ஒரு வருஷம் ஆகுமே!”
“ஏன்ப்பா அப்படி சொல்லறேங்கள்? பாவம் அவாளும் உழைச்சக் காசைத் தானே போட்டு வாங்கியிருக்கா. அதெல்லாம் சீக்கிரம் முடிஞ்சிடும் பாருங்கோ”
என்று பேசிக்கொண்டிருக்கும் போதே கவினிடமிருந்து கால் வந்தது. அதைப் பார்த்த நவீன்
“என்ன இது இவ்வளவு சீக்கிரமா பார்த்து முடிச்சிட்டானா? ஹலோ சொல்லு கவின்”
“நவீன் வந்து எங்களைப் பிக்கப் பண்ணிக்கோ. நாங்க பார்த்தாச்சு”
“சரி கிவ் மி ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ் அன்ட் வீ வில் பி தேர்”
என்று சொன்னது போலவே வந்தனர் நவீனும் மிருதுளாவும். கவின் குடும்பத்தினர் வண்டியில் ஏறினார்கள். நவீன் கவினிடம்
“என்ன இவ்வளவு சீக்கிரம் பார்த்துட்டேங்கள்? நீ சொன்னதெல்லாம் செஞ்சிருக்கானா அந்த பில்டர்?”
“ம்..…ஒண்ணுமே பண்ணலை அவன். போன வருஷம் எப்படிப் பார்த்துட்டுப் போனோமோ அப்படியே தான் இருக்கு. கடுப்பாகிட்டோம். நல்லா சத்தம் போட்டுட்டு வந்தோம்”
“என்ன சொல்லுற கவின். நீ காண்பித்த ஃபோட்டோ ல முடிஞ்சா மாதிரி தானே இருந்தது”
“அது எங்க வீட்டு ஃபோட்டோவே இல்லை. அது வேற யாரோடோ வீட்டு ஃபோட்டோ. அந்த பில்டரோட வேற ஏதோ ப்ராஜெக்ட்டோட ஃபோட்டோவாம்”
“அதை ஏன் உங்க வீடுன்னு அனுப்பினாளாம்?”
“அது மாதிரி வேணும்னா எங்க வீட்டையும் பண்ணித் தருவான்னு சொல்லறதுக்காக அனுப்பினாளாம். அதுக்கு எக்ஸ்ட்ராவா பத்து லட்சம் ஆகுமாம். நான் அவன்ட்ட மொதல்ல வீட்டை முடிச்சுக் குடு அப்புறம் இதெல்லாம் பார்த்துப்போம்னு சொல்லிட்டேன். பாரப்போம் இன்னும் ஆறே மாசத்துல முடிச்சுத் தரதா சொல்லிருக்கான் பார்ப்போம். இதுல இந்த டிரிப்லேயே கிரகப்பிரவேசமெல்லாம் முடிச்சிடலாம்னு ப்ளான் போட்டுண்டு வந்தோம். எல்லாப் ப்ளானும் தொப்ளான் ஆயிடுத்து”
“சரி சரி விடு என்னப் பண்ண? சில சமயம் பில்டர்கள் இழுத்தடிப்பது சகஜம் தான். அதுதான் ஆறு மாசத்துல தர்றதா சொல்லியிருக்கான் இல்லையா அப்புறமென்ன? சரி உங்க ஃப்ரெண்டு யாரோ கூட இதுல வாங்கியிருக்கறதா சொன்னேங்களே அவா வீடு முடிஞ்சிடுத்தா?”
“அவ கெட்டிக்காரி நவீன். அவா வாங்கும்போது எங்ககிட்ட சொல்லி எங்களையும் வாங்க வச்சா ஆனா சத்தமே இல்லாமா ஆறு மாசம் முன்னாடியே அவா வீட்டை கை மாத்தி விட்டுட்டான்னா பாரேன். அவா பேச்சைக் கேட்டு இப்போ நாங்க தான் மாட்டிண்டு முழிக்கறோம்”
“சரி சரி டோன்ட் வரி. எல்லாம் நல்லதாவே நடக்கும். என்ன கொஞ்சம் கால தாமதமாகறது அவ்வளவு தானே”
“சரி நீங்க இங்கே மைசூர்ல வீடு வாங்கி கிரகப்பிரவேசம் பண்ணிணேங்களே… அது மைசூர்ல எங்க? அந்த வீடு முடிஞ்சாச்சா? நீங்க எப்போ குடி போகப் போறேங்கள்?”
“அது நம்ம ஊருக்கு போற வழில தான் இருக்கு சிட்டிய விட்டு தள்ளித்தான் இருக்கு. ஆங் பில்டிங் வேலை எல்லாம் முடிஞ்சாச்சு. இப்போ மர வேலைகள் நடந்துண்டு இருக்கு. அநேகமா நாங்க ஆகஸ்ட்டு கடைசியில புது வீட்டுக்கு ஷிஃப்ட் பண்ணுவோம்”
“ஓ! க்ரேட் பரவாயில்லையே நாங்க வாங்கினதுக்கப்பறமா ஒரு இரண்டு மாசம் கழிச்சுத்தானே வாங்கியிருப்பேங்கள்?”
“இல்ல கவின். நாங்க இப்போ தான் வாங்கினோம். எங்களோட இப்போ இருக்குற வீட்டோட ரென்டல் டாக்யுமெண்ட்டை ரின்யூ பண்ணும்போது தான் தோணித்து ஒரு வீடு வாங்கிடலாம்னு…ஏன்னா வாடகையே எக்கச்செக்கமா ஏத்திட்டா. அதுதான் ரீசன். நாங்க வாங்கி என்ன ஒரு நாலு மாசம் தான் ஆச்சு. நீங்க ஊருக்கு போகும் போது அப்படியே கூட்டிண்டு போயி காண்பிக்கறோம்”
“ஓ! அப்படியா? நாங்க நினைச்சோம் நாங்க போன வருஷம் வந்து வாங்கினதும் தான் நீங்களும் உடனே வாங்கிருப்பேங்கள்னு”
“இதுல எல்லாம் யாராவது போட்டிப் போடுவாளா கவின். வீ ஹாவ் எ வாலிட் ரீசன்”
“அய்யோ மன்னி!! நான் அப்படி சொல்லலை”
“நீ எப்படி சொன்னாலும் எங்க பதில் அதேதான். சரி மால் வந்திடுத்து எல்லாரும் இங்கேயே இறங்கிக்கோங்கோ நான் வண்டியைப் பார்கிங்ல போட்டுட்டு வரேன்”
என்று அனைவரும் இறங்கி மாலில் ஒரு நான்கு மணிநேரம் செலவழித்து சில டிரெஸ்ஸஸ் மற்றும் சில பொருட்களெல்லாம் வாங்கிக் கொண்டு இரவு உணவையும் அங்கேயே இருந்த ஃபுட் கோர்ட்டில் சாப்பிட்டு வீடு வந்து சேர்ந்தனர். மறுநாள் காலை காபிக் குடித்துக் கொண்டிருக்கும் போது கவின் நவீனிடம்
“சரி நவீன் நாங்க இன்னைக்கே கிளம்பறோம்”
“அட ஏன் என்னாச்சு?”
“இல்ல வீடு முடிஞ்சிருக்கும்….கிரகப்பிரவேசம் நடத்திடலாம்னு தான் நாங்க வந்தோம் ஆனா இப்ப தான் வீடு முடியவே ஆறு மாசமாகும்னு சொல்லிட்டாளே அதுனால நான் குவைத்துக்கு சீக்கிரமே போயிட்டு மறுபடியும் லீவு போட்டு வரணும். ஆனா கஜேஸும் குழந்தைகளும் அவா அம்மா ஆத்துல தான் ஒரு மாசத்துக்கு இருப்பா”
“ஓ! அப்படியா சரி. மிருது கவின் இன்னைக்கே கிளம்பறானாம்”
“ஆங் இப்போ தான் கஜேஸ்வரி சொன்னா. இதோ டிபன், சாப்பாடு எல்லாமே ரெடி அவா டிபன் சாப்டுட்டு சாப்பாடைக் கட்டிண்டு கிளம்பட்டும்”
“எதுக்கு மன்னி உங்களுக்கு சிரமம். பரவாயில்லை போற வழியில ஹோட்டல்ல சாப்பிட்டுக்கறோம்”
“எல்லாம் ஆயாச்சு கவின். எனக்கு இதில் ஒரு சிரமமும் இல்லை”
“சரி நாங்க எங்க கார்ல கிளம்புவோமே…. எப்படி உங்க வீட்டைப் பார்ப்பது?”
“அதுனால என்ன கஜேஸ்வரி? நீங்க வந்த கார்ல நீங்க வாங்கோ நாங்க எங்க கார்ல வர்றோம். எங்கக் காரை நீங்க ஃபாலோ பண்ணிண்டே வாங்கோ”
“ம்….ஓகே ஓகே”
என்று காலை உணவை சாப்பிட்டு, மத்திய சாப்பாட்டை கட்டிக்கொண்டு புறப்பட்டனர். அப்போது மிருதுளா குழந்தைகளை எல்லாம் நவீன் காரில் உட்கார வைத்து விட்டு கவின் கஜேஸ்வரிக் காரில் அமர்ந்துக் கொண்டாள். வீடு வரைப் பேசிக்கொண்டிருக்கலாமே என்ற எண்ணத்தில் ஏறிய மிருதுளாவுக்கு அவமானம் தான் மிஞ்சியது. அவள் பேச முற்பட்டப்போதெல்லாம் கவினும் கஜேஸ்வரியும் ஏதோ முக்கியமான விஷயம் பேசுவது போல பேசிக் கொண்டு மிருதுளாவை அவாயிட் செய்தனர். அதை உணர்ந்ததும் மிருதுளா தன் மனதில்
“ச்சீ ஏன் தான் இதுகளோட வந்தோமோ!! ஏதோ கொஞ்ச நேரம் பேசிண்டிருக்கலாமேனு வந்தா…ரொம்பத்தான் பண்ணறதுகள். நவீன் சாரி நீங்க சொன்னதையும் மீறி இதுகள் கூட வந்ததுக்கு எனக்கு நல்லா வேணும். சீக்கிரம் நம்ம வீடு வந்திடணுமே கடவுளே”
என்று எண்ணிக்கொண்டே அதன் பின் அவர்களுடன் ஏதும் பேசாதிருந்தாள். வீடு வந்ததும் வண்டியிலிருந்து இறங்கியதும் அதுவரை பேசாதிருந்த கஜேஸ்வரி மிருதுளாவிடம்
“ஓ! இது தானா உங்கள் புது வீடு. நல்லா பெரிசா இருக்கே”
என்று சொல்ல அது காதில் விழாததைப் போல வீட்டின் கதவைத் திறக்கச் சென்றாள் மிருதுளா. அவளின் முக வாட்டத்தைக் கண்ட நவீன் ஏதோ நடந்திருக்கிறது என்பதை உணர்ந்துக் கொண்டான் ஆனால் அப்போது ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை. வீட்டை சாவிப் போட்டு திறந்ததும் சந்திரமுகி படத்தில் ஜோதிகா சந்திரமுகியாக மாறி நகைகளைப் பார்ப்பது போல மிருதுளாவைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றாள் கஜேஸ்வரி. நவீன் மிருதுளா வருவதற்குள் அங்கேயும் இங்கேயுமாக சென்று சுற்றி சுற்றிப் பார்த்தார்கள். அப்போது கவினின் மகள் கஜேஸ்வயிடம்
“அம்மா இங்க பாரேன் உனக்கு பிடிச்சா மாதிரியே வீட்டுக்குள்ளேந்தே மாடிப்படியிருக்கு”
“அட ஆமாம்.”
என்று மேலேயும் சென்றுப் பார்த்தனர். அப்போது கவினின் எட்டு வயது மகன் ஓடி விளையாடிக்கொண்டே தன் அப்பாவிடம்
“அப்பா இந்த ஹவுஸ் பேலஸ் மாதிரி பெருசா இருக்கு இல்ல”
என்றுதும் கஜேஸ்வரி
“ஆமாம்! ஆமாம்! நல்லா சொல்லு உங்க அப்பாகிட்ட” என்றாள்.
முழு வீட்டையும் நன்றாக சுத்திப் பார்த்துவிட்டு கீழே வந்ததும் ஏதும் கூறாமல் நின்றனர். அப்போது கவின்
“கஜேஸ் கிளம்பலாமா? இப்போ கிளம்பினா தான் நைட்டு வீட்டுக்கு போய் சேர முடியும்”
“என்ன கவின் வீட்டைப் பார்த்து ஒண்ணுமே சொல்லலையே”
“ஆங் நல்லா இருக்கு நவீன். சரி நாங்க கிளம்பறோம்.”
என்று கூறிவிட்டு அவர்கள் காரில் ஏறி வயித்தெரிச்சலோடு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் கிளம்பியதும் வீட்டைப் பூட்டி சாவியை பர்ஸில் போட்டுக் கொண்டு நவீனும் மிருதுளாவும் சக்தியும் கிளம்பினாராகள். வண்டியில் அப்பார்ட்மெண்டுக்கு வந்துக் கொண்டிருக்கும் போது நவீன்
“என்ன மிருது மூட் அவுட்டாவே இருக்க? அவாளோட வரும் போது ஏதாவது சொன்னாலோ? காருலேந்து இறங்கியனதுலேந்து உர்ன்னே இருக்கியே”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை நவீ”
“இல்லையே ஏதோ இருக்கு. சும்மா சொல்லு மிருது”
“நீங்க சொன்னதைக் கேட்காமல் அவாளோட கார்ல வந்தது தப்பு தான். சாரி”
“ஹலோ என்ன ஆச்சு? எதுக்கு இப்போ சாரி எல்லாம் கேட்குற”
“அவா கார்ல வரும் போது நான் அவாளோட பேச ஆரம்பிக்கும் போதெல்லாம் என்னை அவாய்டு பண்ணறா மாதிரியே ரெண்டு பேரும் பேசிண்டே வந்தா. எனக்கு அந்த டிரைவர் முன்னாடி ரொம்ப அசிங்கமா போச்சு. அவா போன வருஷம் நம்க்கு பண்ணிணதுக்கு நாம தான் அவாளை அவாய்டு பண்ணிருக்கணும். இதுல வண்டிலேந்து இறங்கினதும் என்கிட்ட பேசறாளாம்!!! எனக்கு கோபம் வந்தது அதுதான் அதுக்கப்புறம் நான் பேசவேயில்லை.”
“இது மாதிரி எல்லாம் அதுகள் பண்ணும்னு எனக்கு தெரிஞ்சதுனால தான் உன்னை அவா கார்ல போக வேண்டாம்னு சொன்னேன். அவாளோட டிரெண்டே அதுதானே! அவா தப்பு பண்ணுவா, துரோகம் பண்ணுவா… அவாளால பாதிக்கப்பட்டவாகிட்டேயே திமிராவும் நடந்துப்பா… அதுகளே பொறாமையில வெந்துண்டிருக்குகள்.”
“அது எனக்கு நல்லா புரிஞ்சுது நவீ. இனி வரட்டும் நானும் அதுகளை அவாயிடு பண்ணறேன் பாருங்கோ”
“மிருது நீயா பேசற!.”
“என்னையும் பேச வைக்கறா நவீ!! நான் என்ன பண்ணுவேன்?”
“சரி சரி பீ கூல். இனி அடுத்த வருஷம் தான் வருவா சோ அப்போ பார்த்துக்கலாம்.”
என்று பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர். மறுநாள் ஆஃபீஸ் விட்டு வரும்போது அப்பார்ட்மெண்ட் கீழே கார் பார்க்கிங்கில் இருக்கும் போஸ்ட் பாக்ஸிலிருந்து ஒரு பத்திரிகை வந்திருப்பதாக எடுத்து வந்து மிருதுளாவிடம் கொடுத்தான் நவீன். அதைப் பிரித்துப் படித்துப் பார்த்து
“நவீ நம்ம பிச்சுமணி மாமாவோட பெரிய பொண்ணுக்கு கல்யாணமாம்.”
“அப்படியா? எப்போ?”
“வர்ற ஆகஸ்டு மாசம் இருபதாம் தேதி தான்”
“அட அந்த குட்டிப் பொண்ணுக்கு கல்யாணமா? சூப்பர்”
“அவளுக்கும் இருபத்தோரு வயசாயாச்சு நவீ. அப்படிப் பார்த்தா நீங்களும் இந்த குட்டிப் பொண்ணை தான் கல்யாணம் பண்ணிண்டிருக்கேங்கள்”
“ஓகே! மேடம் மன்னிக்கவும்”
“ச்சே! சும்மா கிண்டல் அடிச்சேன் நவீ. சரி நாம இந்த கல்யாணத்துக்கு போவோமில்லையா?”
“நிச்சயமா போகலாம் ஆனா அது நாம் வீடு ஷிஃப்ட் ஆகுற நாளோட க்ளாஷ் ஆகக் கூடாது”
“பார்ப்போம்!! அப்படின்னா நாம கார்லேயே போயிட்டு வந்திடுவோம்”
“ஓகே!”
நவீன் மிருதுளா வீட்டின் மர வேலைகள் கிடுகிடுவென நடந்தது. ஆனாலும் அவர் ஆகஸ்டு மாசம் குடி போக முடியாதவாறு சில வேலைகள் மீதமிருந்தன. ஆகையால் செப்டம்பர் முதல் வாரத்திலிருந்த நல்ல நாளை குறித்து வைத்து அன்று ஷிஃப்ட் செய்ய முடிவெடுத்தனர். அதற்கு முன் மாமா வீட்டுக் கல்யாணத்துக்கும் சென்று வரத் திட்டமிட்டனர்.
பிச்சுமணி மகள் திருமணத்திற்கு நான்கு நாட்களே இருக்கும் போது மிருதுளாவிற்கு ஒரு ஃபோன் கால் வந்தது. அதை எடுத்துப் பேசினாள்
“ஹலோ நான் மிருதுளா பேசறேன்”
“ஹலோ மன்னி நான் கஜேஸ்வரி பேசறேன்”
“ம்….ம்…சொல்லு.”
“மன்னி நாங்க இங்கே மதுரையில ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கிருக்கோம். உங்களுக்கு தான் முதல்ல ஃபோன் பண்ணி சொல்லறேன்”
“அப்படியா ரொம்ப சந்தோஷம்”
“கவின் நாளைக்கு ஊருக்குப் போயிடுவார்”
“ஓ! சரி பத்திரமா போயிட்டு வரச்சொல்லு. அப்போ மாமா பொண்ணு கல்யாணத்துக்கு கவின் இருக்கமாட்டானா”
“இல்ல மன்னி இருக்க மாட்டார். அதுதான் அந்த வீட்டோட ரிஜிஸாட்ரேஷன் மாமா பொண்ணு கல்யாணத்தன்னைக்கு வச்சிருக்கோம். அதுக்கு நம்ம மாமனாரை கூட்டிண்டு நான் மதுரைப் போகப் போறேன். நம்ம ஆத்துல எல்லார்ட்டேயும் ஃப்ரெண்டோட கல்யாணத்துக்காக போறோம்னு சொல்லச் சொல்லிருக்கோம். ஏன்னா பிச்சு மணி மாமா தப்பா எடுத்துக்கக் கூடாது பாருங்கோ. அதுனால நீங்க அவர் பொண்ணுக் கல்யாணத்துக்கு வந்தேங்கள்னா உங்க கிட்ட யாராவது நாங்க எங்கன்னு கேட்டா இதையே சொல்லுங்கோ. அதைச் சொல்லத்தான் ஃபோன் பண்ணினேன். நீங்க பாட்டுக்கு வீடு ரிஜிஸ்ட்ரேஷனுக்கு போயிருக்கறதா சொல்லடப் போறேள். அண்ணா கிட்டேயும் சொல்லிடுங்கோ”
“ஏன் இப்படி நம்ம குடும்பத்துல இருக்குற எல்லாரையும் பொய் சொல்ல வைக்குற? ஏன் உண்மையை சொன்னா என்னவாம்? இதுக்கு நம்ம மாமனாரும் மாமியாரும் ஒதுதுண்டுட்டாளா?”
“ஆங் ஆங் அதெல்லாம் கவின் சொல்லறா மாதிரி சொல்லி ஒத்துக்க வச்சுட்டார்.”
“பரவாயில்லையே கவின் கெட்டிக்காரன் தான். நவீன் டிரெயின் டிக்கெட் புக் பண்ணின டேட்டை மாத்தி சொன்னார்னு. அவர் பொய் சொல்லிட்டார்…அவர் கூட சேர்ந்து நானும் பொய் சொல்லிட்டேன்னு அரிச்சந்திரனும் சத்தியவதியும் மாதிரி ஒரு காலத்துல குதிச்சாளேன்னுட்டு தான் கேட்டேன்”
“அதெல்லாம் உங்க காலத்துலன்னு சொல்லுங்கோ! மாமா நீங்க தான் ஓட்ட வாயின்னும் உங்ககிட்ட மொதல்ல சொல்லிடுன்னும் சொன்னார். அதுதான் உங்ககிட்டேயும் சொல்லிட்டேன் அதுபடி நடந்துக்கோங்கோ. நாளைக்கு நானும் குழந்தைகளும் என் அம்மா ஆத்துக்குக் கிளம்பறோம். சரி மன்னி மாமா பொண்ணு மாப்பிள்ளை அழைப்பில் சந்திப்போம்”
“அதுதான் வரமாட்டேன்னு சொன்னியே”
“அய்யோ மன்னி மறுநாள் கல்யாணத்துக்கு தான் இருக்க மாட்டோம்”
“ஓ! ஓகே ஓகே!
அன்று மாலை நவீன் வந்ததும் விவரத்தை சொன்னாள் மிருதுளா. அதைக் கேட்டதும் நவீன்
“நீ ஏன் பேசாம ஓகேன்னு சொன்ன மிருது. இவ யாரு நம்ம யார்கிட்ட என்ன சொல்லணும்னு சொல்லறது? அப்படி நாம சொல்லிடுவோமோன்னு நினைச்சா நம்ம கிட்ட வீடு வாங்கிறுக்கறதைப் பத்தி சொல்லாமலேயே இருந்திருக்கலாமே! இல்ல இதுல ஏதோ இருக்கு. ஆமாம் உன்னை அப்படி கிண்டலா சொல்லிருக்கா உனக்கு கோபம் வரலை”
“வந்தது. ஆனா அப்படி சொல்லிருக்கறது உங்க அப்பான்னு இல்ல சொன்னா! அவளா சொல்லலையே!”
“யாரு கண்டா அவளோட நக்கலை அப்பா மேலே போட்டு சொன்னாலோ என்னவோ! ஏன்னா நீ அப்பாகிட்ட போய் கேட்கவா போற? இதுகள் ரெண்டும் ரொம்ப தான் துள்ளறதுகள். நானெல்லாம் இவாளோட இந்த பொய்யிக்கு துணைப் போக மாட்டேன். நானா போய் யாராகிட்டேயும் சொல்லமாட்டேன் அதே சமயம் என்கிட்ட யாராவது வந்து கேட்டா உண்மையை சொல்லாமல் இருக்கவும் மாட்டேன். ஆனா ஒண்ணு ஐ லைக் தட் அரிச்சந்திரன் அன்ட் சத்தியவதி எக்ஸாம்புள் யு கேவ். குட். சில நேரங்கள்ல நாமும் பேசித்தான் ஆகனும்ங்கறத புரிஞ்சிண்டியே அதுவரைக்கும் சந்தோஷம். பரவாயில்லை மிருது தேறிண்டே வந்துண்டிருக்க.”
பிச்சுமணி மாமா மகள் திருமணத்திற்கு முன் தினம் தங்கள் காரிலேயே புறப்பட்டுச் சென்றனர் நவீனும் மிருதுளாவும்.
அங்கே அவர்களுக்கு என்னனென்ன காத்திருக்கிறதோ? எதையெல்லாம் சந்திக்க நேரிடுமோ? சமாளிக்க வேண்டிவருமோ? எப்போதும் ஒரு விசேஷத்துக்கு சென்றால் தான் அவர்கள் மிருதுளாவுக்கும் நவீனுக்கும் வைத்துள்ள பாம் என்னவென்றே தெரியவரும். சில விசேஷங்களுக்கு பின்னால் தான் தாங்கள் தங்கள் குடும்பம் வைத்த பாம்மில் வெடித்து சிதறிய விவரமே தெரிய வரும் ஆனால் இந்த முறை பாம் என்னவென்று தெரிந்தே செல்கிறார்கள். அது ஒன்று தான் என்று நினைத்து அதற்கு தயாராக செல்லும் நவீன் மிருதுளாவைத் தாக்கப் போவது ஒன்று தானா இல்லை இரண்டு மூன்றுள்ளதா என்பதை பிச்சுமணி மகள் திருமணத்திற்கு வரும் செவ்வாய் கிழமை சென்று தெரிந்துக் கொள்ளலாம்.
தொடரும்…..
அத்தியாயம் 97: விசேஷமும்! வினையும்!
கிரகப்பிரவேச வேலைகளில் மும்முரமான நவீன் மிருதுளா அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்து விருந்தினர்களின் வருகையை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தனர். நவீனும் மிருதுளாவும் ஒரு பெரிய ஏழு சீட்டர் கார் ஏற்பாடு செய்திருந்தனர். அதில் மிருதுளா பெற்றவர்கள் அவர் ஆர்டர் கொடுத்திருந்த சீர் சாமான்களை வாங்கி வைத்துக் கொண்டு சென்னையிலிருந்து புறப்பட்டு அவர்கள் ஊருக்குச் சென்று அங்கிருந்து ஈஸ்வரன், பர்வதத்ததை ஏற்றிக் கொண்டு நால்வருமாக மைசூருக்கு கிரகப்பிரவேசத்தின் முதன் நாள் மாலை வந்து சேர்ந்தனர். அவர்கள் வந்ததும் காபி போட்டுக் கொடுத்தாள் மிருதுளா. பின் அவர்கள் குளித்து ஃப்ரெஷ் ஆனார்கள். அதற்குள் கடையில் ஆர்டர் செய்திருந்த டின்னர் வந்தது. அதைப் பார்த்ததும் ஈஸ்வரன்
“இது எதுக்கு இவ்வளவு வாங்கிருக்கேங்கள். நாம இருக்கறது ஏழே பேரு தானே”
“இல்லை பெரியப்பாவும் அவர் குடும்பமும் அன்ட் அக்கா அத்திம்பேர் குடும்பமும் வந்திண்டிருக்கா. அவாளுக்கும் சேர்த்துதான் இது.”
“ஒ!! அவா எல்லாரும் வர்றேன்னுட்டாளா என்ன?”
“வர்றேன்னும் சொன்னா. வந்துண்டுமிருக்கா.”
“ராசாமணியுமா வர்றான்?”
“ஏன்ப்பா துருவி துருவி கேட்கறேங்கள்? ஏன் யாரும் வர கூடாதுன்னா? இல்ல வரமாட்டான்னா?”
“இல்ல சும்மா தான் கேட்டேன்.”
“அப்பா அம்மா நீங்க எல்லாருமா இப்போ சாப்பிடறேங்களா? இல்ல அவா எல்லாரும் இன்னும் ஒரு ஹாஃப் அன் அவர்ல வந்துடுவா.. அவாளோட சாப்பிடறேங்களா?”
“அவா எல்லாரும் வரட்டும் மிருது எல்லாரோடயும் சேர்ந்தே சாப்பிடறோம்”
என்றனர் அம்புஜமும் ராமானுஜமும்
“இல்ல இல்ல வாங்கோ வாங்கோ நாம சாப்ட்டுடலாம்”
“இல்ல ஈஸ்வரன் மாமா நீங்க சாப்பிடுங்கோ நாங்க உங்காத்துக்காரா எல்லாரும் வந்துட்டே சாப்பிடறோம்”
“சரி அப்புறம் உங்க இஷ்டம். பர்வதம் வா சாப்பிடுவோம்”
என்று கூறி இருவரும் சாப்பிட்டு எழுந்ததும் ஈஸ்வரனின் சொந்தங்கள் அனைவரும் வந்தனர். அனைவரையும் வரவேற்று அமரவைத்து தண்ணீர் கொடுத்தனர் மிருதுளாவும், அம்புஜமும். வாங்கோ என்றழைத்து விட்டு வேறேதும் பேசாமல் உள்ளே சென்று படுத்துக் கொண்டனர் பர்வதீஸ்வரன் தம்பியர். இதை கவனித்த மிருதுளா நவீனிடம்
“பார்த்தேங்களா நம்ம ஆத்து விசேஷத்துக்கு வந்திருக்கா எல்லாரும் கொஞ்ச நேரம் கூட பேசாம படுத்துக்க போயிட்டாளே ரெண்டு பேரும்!! இதையே நாம செய்திருந்தா என்ன ஆகியிருக்கும்? நம்மளை அவமானப்படுத்திருக்க மாட்டா!”
“எனக்கென்னவோ விஷயம் வேறன்னு தோனறது! அவா வந்ததுலேந்து அவா பேச்சும் நடத்தையும் கேட்டதுலேயும் பார்த்துலேயும் …..நம்ம ஆத்து விசேஷத்துக்கு யாருமே வரமாட்டான்னு நினைச்சுண்டு வந்திருக்கா… ஆனா இவ்வளவு பேரு வந்ததில் ஸ்லைட்டா ஷாக் அடிச்சதுல என்ன பண்ணறதுனு தெரியாம போய் படுத்துண்டுட்டா”
“ஓ!! அப்படி கூட நினைப்பாளா என்ன?”
“எல்லாம் நினைக்குற கூட்டம் தான் மிருது. நாம இவ்வளவு பெரிய வீடெல்லாம் வாங்குவோம்னு நினைக்காததால… அந்த வயித்தெரிச்சல்ல இப்படி ஒரு புரளியை கிளப்பி விட திட்டம் போட்டு தான் அவாளோட எந்த புள்ளகளும் வராம இவா மட்டும் வந்திருப்பதற்கான காரணம். எங்கடா எல்லாரும் நம்ம கிட்ட வீட்டைப் பத்தி விசாரிச்சுட்டா?? அப்புறம் அவா மூத்தப் புள்ள கவினோட வீடு சின்னதுன்னு சொல்லிட்டா!!! அதுக்கு தான் எவரும் நம்ம கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்காம இருக்கணும்னு இவாளே எல்லார்ட்டேயும் ஏதாவது ஒரு பொய்யை சொல்லி பரப்பி அதனால தான் யாருமே கிரகப்பிரவேசம் அடென்ட் பண்ணலைன்னு கிளப்பி விடற திட்டத்தோட வந்திருக்கா!!! ஆனா இதுல டிவிஸ்ட் என்னென்னா இவா எல்லாரும் வருவான்னு அவா நினைச்சிருக்க மாட்டா அதுதோட ரியாக்ஷன் தான் இது. நீ ஒண்ணும் கண்டுக்காதே. வந்தவாளை கவனிப்போம் வா”
என்று அவர்களுக்குள் அடுப்படியில் பேசிக்கொண்டே சாப்பாட்டை பிரித்து வைத்தனர் நவீனும் மிருதுளாவும் அப்போது நவீனின் ஒண்ணு விட்ட அக்கா
“என்னடா நவீன் நீங்க பாட்டுக்கு அடுப்படியில இருக்கேங்கள்! என்ன நடக்கறது இங்கே”
“வாங்கோ அக்கா. இது தான் என் கிட்சன்.”
“ம்…நல்லா இருக்கு மிருதுளா. நீட்டா வச்சிருக்க”
“தாங்க்ஸ் அக்கா. இதோ நம்ம எல்லாருக்குமான டின்னரை பிரித்து அது அதுக்கான கரண்டிகளை போட்டு ரெடி பண்ணிண்டிருக்கோம் அவ்வளவு தான். இதோ ரெடி வாங்கோ எல்லாருமா சாப்பிடலாம்”
அனைவரும் வரிசையாக அமர்ந்தனர். இலைப் போட்டு சாப்பாடு ரவா கிச்சடி, இட்டிலி, சப்பாத்தி, குர்மா, தேங்காய் சட்னி, சாம்பார், ஜாங்கிரி என்று மிருதுளாவும் அம்புஜமும் பரிமாறினார்கள். எல்லோரும் சாப்பிட்டு எழுந்ததுக்குப் பிறகு அந்த இடத்தை எல்லாம் சுத்தம் செய்து விட்டு பின் மிருதுளாவும் அம்புஜமுமாக அமர்ந்து சாப்பிட்டனர். அப்போது மற்ற அனைவரும் நவீன், ராமானுஜத்துடன் பேசிக் கொண்டிருந்தனர். மிருதுளா சாப்பிட்டதும் அனைவருக்குமான பாய், பெட்ஷுட், தலையணை என எல்லாவற்றையும் எடுத்துக் கொடுத்தாள் அனைவரும் சற்று நேரம் பேசிவிட்டு வீட்டில் ஆங்காங்கே கிடைத்த இடத்தில் படுத்துறங்கினர்.
“அம்மா நீயும் போய் தூங்குமா. காலையிலேந்து வண்டில உட்கார்ந்து வந்திருக்க…இதெல்லாம் நான் ஒதுக்கிட்டு போய் படுத்துக்கறேன்”
“இல்ல டி மிருது நானும் கூட செஞ்சா சீக்கிரம் ஆகுமோன்னோ”
“சொன்னா கேட்க மாட்டியே! சரி ஆயாச்சு இப்போ போய் படுத்துக்கோ”
என்று எல்லோரும் உறங்கினர். மறுநாள் விடியற் காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து தயார் ஆகினர் நவீன், மிருதுளா, சக்தி, ராமானுஜம் மற்றும் அம்புஜம். மிருதுளா சக்திக்கு ஹார்லிக்ஸ் கலந்துக் குடுத்ததும், காபி டிக்காக்ஷன் போட்டு முதலில் எழுந்த நவீன், அம்புஜம், ராமானுஜத்துக்கும் தனக்கும் காபி போட்டுக் கொண்டு வந்து ஹாலில் அமர்ந்து அவர்களோடு குடித்தாள். அப்போது ஈஸ்வரனும் பர்வதமும் எழுந்து வந்தனர். அவர்களுக்கும் காபி போட்டுக் கொடுத்தாள் மிருதுளா. மற்ற அனைவருக்கும் காபி போட்டு ஒரு பெரிய ஃப்ளாஸ்க்கில் ஊற்றி வைத்து விட்டு கிரகப்பிரவேசத்துக்கு எடுத்துப் போக வேண்டிய பொருட்கள் வைத்திருந்த பைகளை எல்லாம் எடுத்து ஹாலின் ஒரு மூலையில் வைத்தாள். பர்வதீஸ்வரன் தம்பதியர் குளித்து ரெடியாகச் சென்றிருந்தனர் அப்போது அம்புஜத்திடம் மிருதுளா
“அம்மா இந்தா இந்த வீட்டுச் சாவி. கீழே நம்ம அப்பார்ட்மெண்ட் வாசல்ல வேன் காத்திண்டிருக்கு. இவா எல்லாரும் எழுந்து ரெடியானதும் காபிக் குடுத்துட்டு, கதவைப் பூட்டிட்டு வண்டில அழைச்சுண்டு வாங்கோ. நான் நவீன் நம்ம அப்பா சக்தி நாங்க நாலு பேருமா இப்போ எங்க கார்ல கிளம்பறோம் ஏன்னா அங்க போயி கோலம் போடணும் அன்ட் வாத்தியார்கள் வந்திடுவா சரியா!”
“ம்…சரி மிருது.”
“கிளம்பலாமா மிருது டைம் ஆகறது”
“இருங்கோ நவீ உங்க அப்பா அம்மாட்டேயும் சொல்லிட்டு வந்துடறேன்”
“அப்பா நீங்க குளிச்சிட்டு கிளம்பி எல்லார் கூடயும் வேன்ல வாங்கோ நாங்க இப்போ புது வீட்டுக்கு போகணும். அங்கே எங்களுக்கு கொஞ்சம் வேலையிருக்கு.”
“ம்…ம்..சரி சரி”
“மிருது மிருது டைம் ஆயாச்சு”
“இதோ வந்துட்டேன் நவீ. சரி பா வந்திடுங்கோ பை”
என்று அனைவரிடமும் கூறிவிட்டு புறப்பட்டு புது வீட்டிற்குச் சென்றனர். அங்கே தன் அப்பா அம்மா கொண்டு வந்த சீர் சாமான்கள் மற்றும் பால் காய்ச்ச வேண்டிய இன்டக்ஷன் அடுப்பு பாத்திரம் டம்பளர்கள் என எல்லா வற்றையும் அடுப்படி மேடையில் தயாராக எடுத்து வைத்து, வாசலில் கோலமிட்டு, வீட்டினுள் கோலமிட்டு, சாமிப் படங்களை சாமி அறையில் வைத்து பூ மாலை போட்டு குத்து விளக்கேற்றி வைத்து எழும்போல் சாஸ்த்திரிகள் வந்தனர். பின் அவர்களுக்கான பொருட்களை எல்லாம் எடுத்துக் கொடுத்தாள் மிருதுளா. அதுவரை வீட்டிலிருந்து எவரும் வராததால் அம்புஜத்திற்கு கால் செய்தாள் மிருதுளா
“அம்மா இங்க எல்லாம் ரெடி நீங்க எல்லாரும் ஏன் இன்னும் வரலை?”
“இதோ வந்துண்டே இருக்கோம் மிருது. உங்க சொசைட்டி கேட்டுக்குள்ள நுழையறோம்”
“ஓ!! ஓகே ஓகே வாங்கோ”
என்று ஃபோனை வைக்கவும் வேன் வந்து வீட்டு வாசலில் நிற்கவும் சரியாக இருந்தது. அனைவரும் வந்ததும் ஐந்தரை மணிக்கெல்லாம் தொடங்கியது கிரகப்பிரவேசம். இடையிடையே நவீன் மிருதுளாவின் நண்பர்கள் வந்துக் கலந்துக் கொண்டனர். அப்போது பர்வதத்தின் ஒண்ணு விட்ட தங்கையின் நவீனின் சித்தப்பா சித்தியின் மகனான ராமும் அவன் மனைவியுமாக வந்திருந்தனர்.
எல்லோருமாக இருந்து, பெரியவர்கள் ஆசிர்வாதத்துடன் இனிதே கிரகப்பிரவேசம் நடந்தேறியது. அனைவருக்கும் ஆர்டர் செய்யப்பட்ட இடத்திலிருந்து காலை உணவு வந்ததும் பரிமாறப்பட்டது. சாப்பாடு ஆனதும் பர்வதம் ராமிடம்
“என்ன ராம் நீ கிரகப்பிரவேசத்துக்கு வந்திருப்பது ஆச்சர்யம் தான்”
“இதுல உங்களுக்கு என்ன ஆச்சயம் பெரியம்மா?”
“இல்ல கவீனோட, ப்ரவீனோட, பவினோட வீட்டு கிரகப்பிரவேசமெல்லாம் நடந்தது அதுக்கெல்லாம் வரலையே அதுதான் கேட்டேன்”
“எங்காத்துக் கிரகப்பிரவேசத்துக்கு நவீனும் மிருதுளாவும் வந்திருந்தா அதுவுமில்லாம எங்களை நவீனும் மிருதுளாவும் அழைச்சா அதுனால வந்தோம்”
“ம்…ம்…”
என்று கூறிக்கொண்டே சாப்பிட்டு எழுந்தாள் பர்வதம். ராம் தனக்கு வேலையிருப்பதாக கூறி மத்திய சாப்பாட்டிற்கு கூட நிற்காமல் கிளம்பினான். நவீனும் அவர்கள் வந்ததற்கு மகிழ்ச்சி என்று கூறி தாம்பூலம் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். அவர்கள் சென்றதும் மற்ற உறவினர்கள் அனைவரையும் வீட்டைச் சுற்றிக் காண்பிக்க அழைத்துச் சென்றாள் மிருதுளா அப்போது அதில் சிலர் விலையைப் பற்றியும் இடத்தின் அளவு பற்றியும் கேட்க அதற்கு மிருதுளா
“இடம் ஒரு க்ரௌண்ட் அதுல நாலாயிரம் சதுரடி கட்டிடம். மொத்தம் எங்களுக்கு வீடு மட்டும் ஒரு கோடி ஆகியிருக்கு.”
என்றதும் பர்வதம் சும்மா இல்லாமல்
“என் ஒண்ணு விட்ட தங்கச்சி பையன் ராம் …இதோ இந்த கிரகப்பிரவேசத்துக்குக் கூட வந்திருந்தானே அவனும் மைசூர்ல வீடு வாங்கிருக்கான் சிட்டி சென்டர்ல நாலு கோடிக்கு”
என சம்மந்தமே இல்லாமல் சொன்னாள். அனைவரும் ஒருவரையொருவர் பாரத்துக் கொண்டனர் உடனே மிருதுளா…
“இதுக்கப்புரம் மர வேலைகள், லைட்டிங், ஃபால்ஸ் ஸீலிங் எல்லாமிருக்கு. ஸோ எப்படியும் ஒன்னேகால் கிட்ட வந்திடும்”
“ராமுக்கும் எல்லாம் சேர்த்து ஐந்து கோடியாச்சாம்”
இதைக் கேட்டதும் வந்திருந்ததில் ஒருவர் பர்வதத்திடம்
“என்ன பர்வதம் உனக்கு நவீன் ஒரு கோடிக்கு தான் வாங்கிருக்கான்னு வருத்தமா!!! இல்ல நவீன் வாங்கிருக்கறது ஒண்ணும் பெரிசில்ல உன் தங்கைப் புள்ள தான் ஒசத்தின்னு சொல்லவர்றயா!! புரியலையே!!!”
என்றதும் கப்சிப் ஆனாள் பர்வதம். வந்தவருக்கு புரியாமலிருக்கலாம் ஆனால் சொந்தகாரர்களுக்கும் மிருதுளாவுக்கும் நன்றாகவே புரிந்தது. நண்பர்கள் அனைவரும் காலை உணவருந்தி வீட்டைச்சுற்றிப் பார்த்துவிட்டு நவீனுக்கும் மிருதுளாவும் பாராட்டுத் தெரிவித்து பரிசளித்து விட்டுக் கிளம்பிச் சென்றனர்.
சொந்தக்காரர்களிடம் எவருக்கெல்லாம் மைசுரைச் சுற்றிப்பார்க்க விருப்பமுள்ளதோ அவர்களை வேனில் ஏறச்சொன்னான் நவீன். ஈஸ்வரனைத் தவிர அனைவரும் ஏறினார்கள். ஆர்டர் செய்யப்பட்டிருந்த மத்திய உணவு வருவதற்குள் முக்கியமாக பார்க்க வேண்டிய சில இடங்களை வேன் ட்ரைவரிடம் முன்னதாகவே சொல்லி வைத்திருந்தான் நவீன். அப்போது அம்புஜம் மிருதுளாவிடம்
“எல்லாத்தையும் ஓரளவுக்கு ஒதுக்கி வச்சிருக்கேன். நான் இருக்கணுமா இல்ல இவா கூட ஊரைச் சுத்திப் பார்த்துட்டு வரட்டுமா மிருது “
“அம்மா அப்பா ரெண்டு பேரும் போயிட்டு வாங்கோ. நான் பார்த்துக்கறேன்”
இடங்களைச் சுற்றிப்பார்க்க அனைவரும் வேனில் சென்றதும் நவீனும் மிருதுளாவும் சக்தியுமாக எல்லா இடத்தையும் ஒதுக்கி எல்லாப் பொருட்களையும் பைகளில் போட்டு கட்டி வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டியதை தனியாக வைத்து மற்றவைகளை அடுக்கி வைத்து என்று செய்து முடித்ததும் ஹாலில் வந்து அமர்ந்தனர். இவர்கள் செய்வதனைத்தையும் ஹாலில் அமர்ந்தவாறே பார்த்துக்கொண்டு மட்டுமிருந்தார் ஈஸ்வரன். அவர்கள் வந்து அமர்ந்ததும் மெல்ல ஆரம்பித்தார் ஈஸ்வரன்
“ஆமாம் இவாளை எல்லாம் நீங்க இன்வைட் பண்ணிருந்தேங்களா?”
“ஆமாம்! இது என்ன கேள்வி? இன்வைட் பண்ணாமலேயே வர்றதுக்கு இவா எல்லாரும் என்ன நவீனும் மிருதுளாவுமா?”
“அதுக்கில்ல இப்ப எல்லாம் சில பேரு பத்திரிகை கிடைச்சாலும் …கிடைக்கலைன்னு சொல்லறா.”
“அப்படியா அது யாருன்னு சொல்லேன் தெரிஞ்சுக்குவோம்”
“எல்லாம் நம்ம பிச்சுமணி பொண்டாட்டி உன் அம்பிகா மாமி தான்.”
“மாமியா!!! ச்சே ச்சே! இருக்காதுப்பா”
“அவளைப் பத்தி எல்லாம் உனக்கு தெரியாது. அவளை மாதிரி இருக்கறவா எல்லாம் பத்திரிகையை வாங்கி கிழிச்சு குப்பைத்தொட்டில போட்டுட்டு பத்திரிகையே வரலைன்னு சொல்லிடுவா தெரியுமா?”
“ச்சே ச்சே!! பத்திரிகையை யாராவது ஃபர்ஸ்ட்ஆஃப் ஆல் கிழிப்பாளா? இல்லப்பா நீங்க சொல்லறது ஒப்பலை”
“நானே என் கண்ணால பார்த்திருக்கேன்!”
“எதை? அம்பிகா மாமி பத்திரிகையை கிழிக்கறதையா?”
“இல்லடா அவா ஆத்து டஸ்ட்பின்ல பத்திரிகை கிடக்கறதை”
“நீ ஏன் அவா ஆத்து டஸ்ட்பின்னை போய் பார்த்த?”
“அடப் போடா இப்படி தான் எல்லாரும் பண்ணறாங்கறத புரிஞ்சுக்கத் தான் சொல்லறேன் நீ என்னடான்னா ஏட்டிக்குப் போட்டியா பேசற”
“சரி சரி மிருது ஃபோன் பேசப் போனயே யாரு ஃபோன்ல?”
“கேட்டரிங்காரா தான் நவீ. சாப்பாடு அனுப்பிட்டாளாம். இன்னும் ஒரு அரை மணிநேரத்துல இங்க வந்துடுமாம். அதை இன்ஃபார்ம் பண்ண தான் கால் பண்ணினா.”
“ஓ !! ஓகே ஓகே! டூர் போனவா வர்றதுக்கு இன்னும் மினிமம் ஒன் அவர் ஆகும்.”
“இப்ப என்ன அதுவரைக்கும் உட்காருவோம்”
“சரி நான் போய் கொஞ்சநேரம் அந்த ரூம்ல போய் படுத்துக்கறேன்”
“அப்பா நீங்க வீட்டை சுத்திப் பார்க்கலையே. வாங்கோ கூட்டிண்டு போய் காட்டறேன்”
“இல்ல பரவாயில்ல நான் போய் தூங்கறேன்”
“சரிப்பா அப்போ அங்க உங்களுக்கு விரிச்சு வைக்கறேன் வந்து படுத்துக்கோங்கோ”
என்று பாயை விரித்து படுத்துக்கச் சொன்னாள் மிருதுளா. அந்த அறையின் கதவை சாத்திவிட்டு மீண்டும் ஹாலுக்கு வந்தமர்ந்தாள்.
“நவீன் அது எப்படி பத்திரிகையை கிழிப்பா சொல்லுங்கோ. அப்பா சொல்லறது சரியில்லை”
“ம்…அவர் சொல்லறது எல்லாம் மிகச் சரியா தான் சொல்லறார் மிருது உனக்குத்தான் அதோட உள்ளர்த்தம் புரியலை”
“மாமி அப்படிப் பண்ணுவாளா? அவாளுக்கும் மூணு பொண்ணுகள் இருக்காளே!”
“மாமி எல்லாம் ஒண்ணும் பண்ணலை. நீ தான் அப்படி பண்ணியிருப்பன்னு உன் மாமனார் அம்பிகா மாமியை வைத்து எனக்குப் புரிய வைக்கறாராம். அது அவர் அந்த டாப்பிக்கை ஸ்டார்ட் பண்ணினதுமே நான் தெரிஞ்சுண்டுட்டேன்”
“என்னது நானா!! மாமியே அப்படி பண்ணமாட்டானு சொல்லறேன் இதுல நான் எப்படி பண்ணுவேன்”
“அதுதான் அவாளோட சாமர்த்தியம். பத்திரிகை அனுப்பாதது அவா தப்பு ஆனா அதையே எப்படி ட்விஸ்ட் பண்ணி உன் மேல பழியை போடறா பார்த்தயா? இதை சொல்லத்தான் அவர் மத்தவாளோட வெளில போகாம இங்க இருந்ததற்கான காரணம். அது நடக்கலைன்னு தெரிஞ்சதும் போய் படுத்தாச்சு”
“ஓ!!! அப்படியா!!! ச்சே நான் கூட அவர் சொல்லறதை நம்பியிருபபேன்”
“நான் நம்பவே மாட்டேன் மிருது.”
“நவீ எனக்கு ஒரு டவுட்டு. இவர் பத்திரிகையில் பெயர் அட்ரெஸ் மட்டும் தான் எழுதுவார் அதைப் போஸ்ட் பண்ணறது இவா கூடவே இருக்கும் ப்ரவீனா தான் இருக்கும். ஏன்னா இவர் மூன்றாவது மாடியிலிருந்து இறங்கி போய் போஸ்ட் பாக்ஸில் எல்லாம் போட மாட்டார்ன்னு நமக்கு நல்லாவே தெரியும்.”
“ஸோ?”
“ஸோ ஒரு வேளை இவர் பத்திரிகையை ஒழுங்கா போஸ்ட் பண்ணச் சொல்லி அதில் ப்ரவீன் ஏதாவது விளையாடறானா? ஏன்னா நாம இவா தான் அனுப்பலைன்னு நினைப்போம் இல்லையா!!! இந்த பதினைந்து வருட கல்யாண வாழ்க்கை என்னை பெரிய டிடெக்டிவ் ஏஜென்ட்டாவே மாத்திடும்ன்னு நினைக்கறேன்.”
“ஹா!!ஹா!!ஹா!! அதுக்கும் வாய்ப்பிருக்கலாம் மிருது. கான்ட் சே!! எல்லாம் ஒரே குட்டையில ஊரின மட்டைகள் தானே!”
“ஹலோ நீங்களும் அதே குட்டையில் ஊரினவர் தான்… அதை மறந்திடாதீங்கோ”
“நான் மறக்கலை மிருது. ஆனா அந்த குட்டையிலேந்து பதினாறு வயசுலுயே நான் வெளியே போயிட்டேன் அதுனால அதோட இம்பாக்ட் அவ்வளவா இல்லை”
“ம்….ம்….இருங்கோ ஏதோ கால் வர்றது…….கஜேஸ்வரி தான்….உஷ்…ஹலோ கஜேஸ்வரி சொல்லு எப்படி இருக்க? கொழந்தகள் எப்படி இருக்கா?”
“நாங்க நல்லா இருக்கோம். உங்க வீட்டு கிரகப்பிரவேசமெல்லாம் நல்லப் படிம
யா முடிஞ்சுதா?”
“ம்…எல்லாம் நல்லபடியா நடந்தது. அப்பாவைத் தவிர எல்லாருமா ஊரைச் சுத்திப் பார்க்க போயிருக்கா”
“எல்லாரும்னா?”
“எல்லாரும்னா எல்லாரும் தான் நம்ம சொந்தக்காரா தான்”
“அப்படி!! நம்ம சொந்தக்காரா வந்திருக்காளா?”
“ஆமாம்!! ஏன் அதை இவ்வளவு சந்தேகத்தோடு கேட்கற?”
“ம்…இல்ல இல்ல ஒண்ணுமில்ல சும்மா தான் கேட்டேன். சரி அண்ணா இருக்காளா கவின் பேசணுமாம்”
“ம்…இரு இதோ குடுக்கறேன்”
“ஹலோ கங்கிராட்ஸ் நவீன்”
“ஆங். தாங்க்ஸ்.”
“அப்பறம் விசேஷமெல்லாம் எப்படி நடந்தது?”
“எல்லாம் நல்லபடியா நடந்தது. ம்…சரி மத்தியானம் சாப்பாடு கொண்டு வந்திருக்கா நாங்க அங்க போகணும் வச்சுடட்டுமா? அப்புறமா பேசறேன்”
“ஏன் நவீ இப்படி பண்ணீனேங்கள்?”
“ம்….அவா பேசறதுலேந்து உனக்கு ஒண்ணுமே புரியலையா?”
“இதுல புரியாததுக்கு என்ன இருக்கு?”
“ம்…உனக்கு அப்புறமா விளக்கிச் சொல்லறேன்….சரி சரி நான் பொய் ஒண்ணும் சொல்லலை நிஜமாவே வண்டி வந்துடுத்து வா போய் சாப்பாட்டை வாங்கி உள்ளே வைப்போம்”
என்று சாப்பாட்டை அடுப்படிக்குள் வைக்கச் சொல்லிவிட்டு அனைவரும் வருவதற்காக காத்திருந்தனர். டூர் சென்ற அனைவரும் வந்தனர். எல்லோருமாக அமர்ந்து கேட்டரிங் ஆட்கள் பரிமாற வயிறார உண்டு மகிழ்ந்தனர். பின் அனைவருக்கும் தாம்பூலம், பட்சணங்கள், ரிட்டர்ன் கிஃப்ட் எல்லாம் கொடுத்து அனைவரையும் வேனில் ஏற்றிக்கொண்டு அவரவர் செல்ல வேண்டிய பஸ் நிலையத்திற்கு கொண்டு போய் விடும்படி வேன் டிரைவரிடம் சொல்லி விடைப்பெற்றுக் கொண்டனர் நவீனும் மிருதுளாவும்.
பர்வதம், ஈஸ்வரன், அம்புஜம், ராமானுஜம், சக்தி அனைவரையும் ஒரு காரில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு அங்கிருந்த வேலையாட்களுக்கெல்லாம் மீதமிருந்த சாப்பாட்டை பரிமாறி அவர்கள் சாப்பிட்டப் பின் கேட்டரிங் காரர்களுக்கு பணம் செட்டில் செய்து… வீட்டைச் பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றனர் நவீனும் மிருதாளாவும்.
அன்று இரவு ஈஸ்வரன் தம்பதியருக்கும் ராமானுஜம் தம்பதியருக்கும் டிரெயினில் செக்கண்ட் ஏசியில் டிக்கெட் புக் செய்திருந்தாள் மிருதுளா. அது படியே அவர்களுக்கு டின்னர் செய்து கொடுத்து. தாம்பூலம், பழங்கள், பட்சணங்கள் எல்லாம் கொடுத்து ரெயில்வே ஸ்டேஷன் சென்று அவர்களை ரெயிலில் ஏற்றி உட்கார வைத்து ரெயில் புறப்படும் வரை அங்கேயே இருந்து வழியனுப்பிவிட்டு அவர்களின் புது வீட்டிற்குச் சென்று படுத்துறங்கினர்.
தொடரும்……
அத்தியாயம் 96: சடங்கும்! சங்கடமும்!
சக்தி அழைத்ததும் விரைந்து சென்று பார்த்தாள் மிருதுளா. பாத்ரூமிலிருந்து சக்தி
“அம்மா…அம்மா… என் டிரெஸைப் பாருமா!”
என்று அழ ஆரம்பித்தாள். மிருதுளா தன் மகளைக் கட்டியணைத்துக் கொண்டே
“கவலைப் படாதே சக்தி. இதெல்லாம் எல்லா பொண்ணுகளுக்கும் நடக்குற நல்ல விஷயம் தான். இதோ பாட்டி, அம்மான்னு எல்லாருக்குமே நடந்தது நடக்கறது. இதுக்கெல்லாம் அழக்கூடாது. சந்தோஷமா இரு சரியா. இரு அம்மா இதோ வந்துடறேன். அம்மா பார்த்துக்கோ இதோ வந்துடறேன்”
என்று கூறி சக்திக்கு வேண்டியதை எல்லாம் எடுத்து வரச் சென்றாள் மிருதுளா. அப்போது அம்புஜம் சக்தியை தன் தோளில் சாய்த்துக் கொண்டு
“சக்தி கண்ணா ஒண்ணும் பயப்படாதே. அம்மா சொன்னா மாதிரி இதெல்லாம் எல்லாருக்கும் நடக்குற விஷயம் தான். நாம சாப்பிடறா மாதிரி, குளிக்கறா மாதிரி இதுவும் ரெகுலரா இனி உன் லைஃப்ல இருக்கும். பயப்படாதே சரியா. இப்போ என் சக்திக் குட்டி பெரிய பொண்ணாயிட்டாளே! பாட்டிக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குத் தெரியுமா!”
“பாட்டி நான் இதைப் பத்தி படிச்சிருக்கேன் ஆனா திடீர்னு பார்த்ததும் கொஞ்சம் பயந்துட்டேன் அவ்வளவு தான். நவ் ஐ ஆம் ஆல்ரைட்.”
பாட்டியும் பேத்தியுமாக பேசிக்கொண்டிருந்த நேரத்தில் மிருதுளா சக்திக்கு கொண்டு வந்த டிரெஸ், டவல் மற்றும் சானிட்டரி நாப்கின் எல்லாத்தையும் அவளிடம் குடுத்து குளித்துவிட்டு வரும்படி சொல்லி தன் அம்மாவை அங்கிருந்து அழைத்துக் கொண்டு ஹாலுக்கு வந்து சற்று நேரம் சோஃபாவில் அமர்ந்தாள். அப்போது வேனுவும் ராமானுஜமுமாக
“என்ன ஆச்சு காலையிலிருந்து அம்மாவும் பொண்ணுகளுமா அங்க ஓடறேங்கள் இங்க ஓடறேங்கள்? என்ன நடக்கறதுனு ரெண்டு பேருல யாராவது சொல்லுங்கோளேன்”
“நம்ம சக்தி குட்டி பெரிய மனுஷி ஆகிட்டா”
“அதுதான் எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை. சரி நான் நவீனுக்கு முதல்ல ஃபோன் போட்டு சொல்லட்டும்”
ஃபோனை எடுத்துக் கொண்டு பால்கனிக்கு சென்றாள் மிருதுளா. அப்போது அம்புஜம் ராமானுஜத்திடமும் வேனுவிடமும்
“நான் ரொம்ப கவலைப்பட்டேன்..என்னடா இந்த பொண்ணு இன்னமும் பெரியவளாகாமா இருக்காளேன்னு ஆனா நம்ம வேனு வர்றதுக்காகவே அவளுக்கு இதைத் தள்ளிப்போட்டிருக்கார் ஆண்டவன்னு இப்போ தான் புரியறது. சரி சரி நான் ஒரு லிஸ்ட் ரெடி பண்ணறேன் நாம போய் அதெல்லாம் வாங்கிண்டு வந்திடுவோம்.”
“அப்போ சக்திக் கூட யார் இருப்பா?”
“அதுதான் மிருதுளா இருக்காளே. நாம மூணு பேரு மட்டும் போய் சக்திக்கு புடவை, நகை சீர் சாமான்கள்னு எல்லாத்தையும் வாங்கிண்டு வந்திடுவோம். ரெண்டு பேரும் கிளம்புங்கோ”
“அம்மா நாங்க அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆகிடுவோம். மொதல்ல நீ போய் ரெடியாகி வா”
இவர்கள் பேசி முடிக்கும் போது மிருதுளா பால்கனியிலிருந்து உள்ளே வந்தாள்.
“என்னமா மாப்ள கிட்ட சொன்னையா? என்ன சொன்னார்?”
“அவர் உடனே கிளம்பி வர்றாராம் ப்பா”
“ஏம்மா அவருக்கே உடம்பு சரியில்லை இதுல காரை வேற நீ எடுத்துண்டு வந்துட்ட பின்ன அவர் எப்படி எதுல வருவார்”
“அப்பா பஸ் பிடிச்சு வந்துடறதா சொல்லிருக்கார்.”
“முடியாத நேரத்துல எதுக்கு இப்படி அலையணும்!! பேசாம இன்னைக்கு நைட்டு டிரெயின் பிடிச்சு நாளைக்கு காலையில வரச் சொல்லேன். இல்லாட்டி இரண்டு மூன்று பஸ் மாறி வரவேண்டியிருக்கும்”
“அதெல்லாம் அவர் பார்த்துப்பார் பா. அம்மா நீ என்ன ரெடியாகி இருக்க?”
“அதுவா நம்ம சக்திக் குட்டிக்கு தாத்தா பாட்டி தாய் மாமான்னு நாங்க சீர் செய்ய வேண்டாமா?”
“அதுக்கு?”
“நாங்க கடைவீதிப் போய் எல்லாத்தையும் வாங்கிண்டு வந்திடறோம். நீ சக்திக் கூடவே இரு. இதோ இந்த இடத்தில் அவள் குளிச்சு வந்ததும் உட்கார வை. அடுப்புல வத்தகுழம்பு வச்சிருக்கேன் பார்த்துக்கோ. நாங்க போயிட்டு சுருக்க வந்திடுவோம்”
“சரி சரி பத்திரமா போயிட்டு வாங்கோ”
“நாங்க வர்றதுக்குள்ள நீ உன் மாமனார் மாமியார் மச்சினன்கள் ஓர்பிடிகள் எல்லார் கிட்டேயும் விஷயத்தைச் சொல்லிடு”
“ஆங் ஆங் நான் பார்த்துக்கறேன்.”
என்று கூறிவிட்டு கடைவீதிக்கு சென்றனர் மிருதுளா வீட்டார். அப்போது சக்தி பாத்ரூமிலிருந்து வெளியே வந்தாள். அவளை அம்புஜம் சொன்ன இடத்தில் உட்கார வைத்து டிபன் செய்து கொடுத்து தட்டை வாங்கிக் கொண்டுச் சென்றாள். அப்போது சக்தி
“அம்மா நான் இங்கேயே தான் உட்காரணுமா? அந்த ரூமுக்கு போகக் கூடாதா?”
“ஆமாம் சக்தி நீ இங்கேயே தான் உட்காரணும் மூணு நாட்களுக்கு அதுக்கப்புறமா தலைக்கு தண்ணி ஊத்தி சில சடங்குகள் சம்பிரதாயங்கள் எல்லாம் செய்வா. அதெல்லாம் முடிஞ்சதும் நீ எப்பவும் போல இருக்கலாம்”
“அம்மா அப்போ ஒவ்வொரு மாசமும் இப்படி பண்ணுவேங்களா?”
“ஆங்!!! ஒவ்வொரு மாசமும் உனக்கு சடங்கு பண்ணினா என் அப்பாவும் தம்பியும் ஆண்டி ஆகிடுவா! இப்போ மட்டும் தான் செய்வா சக்தி அடுத்த மாசத்திலேந்து நீ விருப்பப்பட்டா தனியா இருக்கலாம் இல்லாட்டினாலும் நோ இஷுஸ். நானெல்லாம் தனியா எல்லாம் இருந்ததுமில்லை இருக்கறதுமில்லை. சரி இந்தா இந்த புக்கைப் படிச்சிண்டிரு நான் போய் உங்க பர்வதம் பாட்டிடேயும் உன் சித்திகள்ட்டேயும் ஃபோன் பண்ணி விவரத்தைச் சொல்லிட்டு வர்றேன்”
“அம்மா இதை எல்லாம் எதுக்கு மா எல்லார்ட்டேயும் சொல்லறேன்னு சொல்லற? அப்போ அவா எல்லாம் இங்கே வருவாளா?”
“சொல்லித்தான் ஆகணும் சக்தி இல்லாட்டி தப்பாகிடும். என்ன நீயும் உன் அப்பா மாதிரியே பேசுற?”
“ஆமாம் அவா வந்தா ஏதாவது உன்னை சொல்லுவா அப்புறம் நீ ரெண்டு நாளைக்கு சங்கடப்படுவ …அதுனால தான் கேட்டேன்….சரி அப்பாகிட்ட சொன்னையா?”
“ஆங்!! சொல்லாம இருப்பேனா? சொன்னதும் ஹீ வாஸ் ஸோ ஹாப்பி. உடனே புறப்பட்டு வர்றதா சொல்லிருக்கா. அநேகமா கிளம்பியிருப்பா. இந்தா ஃபோன் அப்பாட்ட பேசிட்டு தா”
“ஹலோ மிருது சொல்லு”
“ஹலோ அப்பா நான் சக்தி பேசறேன்”
“ஹேய் சக்திக் கண்ணா. அப்பா ஈஸ் ஃபீலிங் வெரி ஹாப்பி. நான் இங்கே கிளம்பிட்டேன் ஈவ்னிங் வந்திடுவேன். ஒண்ணும் பயப்படாதே அப்பா நான் இருக்கேன் சரியா”
“ம்…சரிப்பா. பத்திரமா வா.”
“சரி டா கண்ணா. வச்சுடட்டுமா. பை டேக் கேர்”
“பைப் பா”
என்று தன் தந்தையிடம் பேசியதில் அவர் சொன்ன அந்த வார்த்தை “நான் இருக்கிறேன்” என்பது சக்தியின் மனதில் பதிந்தது. ஃபோனை சக்தியிடமிருந்து வாங்கின மிருதுளா தன் மாமியாரிடமும் ஓர்பிடிகளிடமும் ஃபோனில் பேசி விவரத்தைச் சொன்னாள்.
சக்திக்கு தலைக்கு தண்ணீர் ஊற்றும் நாளன்று மிருதுளா குடும்பத்தினர் மற்றும் பர்வதம் ஈஸ்வரன் மட்டுமிருந்தனர். எல்லா சடங்கு சம்பிரதாயங்களும் முடிந்ததும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தியப் பின் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பர்வதம் சக்தியிடம்
“உனக்கென்ன சக்தி உன் மாமா லண்டனில் சம்பாதிக்கறான். உனக்கு என்ன வேணும்னாலும் வாங்கிக் கொடுத்திடுவான். கார்ன்னா கார், ஸ்கூட்டர்ன்னா ஸ்கூட்டர், டிரெஸ்ன்னா டிரெஸ்ஸு, வீடுன்னா வீடுன்னு நீ எது கேட்டாலும் உன்னைத் தேடி வந்திடும்.”
பேசியதை கேட்ட நவீன் பர்வதத்தை பார்த்து
“ஏன் இதெல்லாம் வாங்கிக் கொடுக்க நான் அவ அப்பா இல்லையா என்ன? எப்பப்பாரு அடுத்தவா கிட்டேருந்து வாங்கிக்கறதுலேயே குறி.”
“இதெல்லாம் சகஜமா சொல்லறது தானே இதுல என்ன தப்பு? இதுக்கு ஏன் இப்படி சொல்லறாய்?”
“எது சகஜமான பேச்சு? கொழந்த இப்போ நீ பெரியவளாயிருக்க பத்திரமா இரு, நல்லா சாப்பிடு, எதுக்கும் பயப்படாதேன்னு ஏதாவது சொன்னா அதுல எந்தவித தப்புமில்ல ஆனா உன் மாமாட்டேந்து உனக்கு அது கிடைக்கும் இது கிடைக்கும்ன்னு பேசறது தப்பு தான். எபபப்பாரு அடுத்தவாகிட்டேந்து என்னகிடைக்கும்னு மட்டும் பார்க்கறது மிகப் பெரிய தப்பு”
என்று நவீன் பேசியதும் அது எங்கடா பிரச்சினையில் முடிந்து விடுமோ என்றெண்ணி வேகவேகமாக மிருதுளா நவீனிடம்
“விடுங்கோப்பா இதுல என்ன தப்பிருக்கு. அம்மா எல்லா பாட்டிகளும் சொல்லறா மாதிரி சொன்னா அவ்வளவு தானே! அவா சொல்லிட்டா நம்ம சக்தி கேட்டுடப் போறாளா என்ன? இல்லை வேனுவ வாங்கித் தந்தா தான் ஆச்சுன்னு நாம சொல்லப் போறோமா?”
என்று பர்வதத்திற்கு பரிந்துப் பேசுவது போலவே பேசி அவளின் தவறையும் சுட்டிக்காட்டினாள் மிருதுளா. அவளின் புகுந்த வீட்டில் அவளுக்கு கிடைத்த அனுபவங்கள் அவளை இப்படி பேச வைத்திருக்கிறது. காலம், நேரம், மனிதர்கள்…அவர்களுடனான அனுபவங்கள் என பல நம் வாழ்கையில் கடந்து வந்தவை அனைத்தும் நம்மை நாமே எண்ணாத அளவுக்கு மாற்றிவிடும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்த இடத்தில் திகழ்கிறாள் மிருதுளா. அவள் சொன்னதைக் கேட்டதும் கப்சிப் ஆனாள் பர்வதம்.
எல்லாம் சிறப்பாக நடந்து முடிந்ததும் பர்வதமும் ஈஸ்வரனும் அவர்கள் வீட்டுக்குச் சென்றனர். ப்ரவீன் துளசி மட்டும் ஃபோனில் வாழ்த்துத் தெரிவித்தனர். இரண்டு நாள் தங்கி வேனுவைப் பார்க்க வந்த இடத்தில் ஐந்து நாட்கள் தங்க நேரிட்டது மிருதுளாவுக்கும் அவளின் குடும்பத்தினருக்கும் அளவில்லா மகிழ்ச்சியைத் தந்தது. வேனுவும் இருபது நாள் லீவில் வந்திருந்ததால் இந்த முறை மைசூர் போகமுடியாது போனது.
மைசுருக்கு திரும்பிச் சென்றனர் மிருதுளா, நவீன் மற்றும் சக்தி. வழக்கம் போல அவர்களின் இயல்பு வாழ்க்கையில் மூழ்கலானார்கள். அவர்கள் மைசூருக்கு வந்து ஒரு வருடம் முடிவுறும் வேளையில் அவர்களின் வீட்டு ஓனர் நவீனுக்கு கால் செய்து
“ஹலோ மிஸ்டர் நவீன் எப்படி இருக்கிறீர்கள்?”
“ஹலோ மிஸ்டர் ராவ் நல்லா இருக்கேன். என்ன திடீர்னு ஃபோன்?”
“அது ஒண்ணுமில்லை நீங்க எங்க வீட்டை வாடகைகக்கு எடுத்து ஒரு வருஷம் முடியப்போகுது அதுதான் அக்ரிமெண்ட் படி ரென்ட்டை ஏத்திருக்கேன். நெக்ஸ்ட் மந்த்திலிருந்து வாடகை ஐம்பதாயிரம்ன்னு இன்பார்ம் பண்ணத் தான் ஃபோன் பண்ணினேன். எப்படியும் எங்கள் ரென்ட்டல் ஏஜென்சியிலிருந்து உங்களுக்கு இன்ட்டிமேஷன் இமெயில் மற்றும் புது அக்ரிமெண்ட் வந்திடும். இருந்தாலும் நானே ஃபோனில் உங்ககிட்ட சொன்னா நல்லா இருக்கும்னு தான் ஃபோன் செய்தேன். அதுவுமில்லாம அடுத்த வருஷம் நாங்க சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கே வந்திடுவோம் அப்போ எங்களுக்கு நீங்க வீட்டைக் காலி செய்து தர வேண்டி இருக்கும் அதையும் இப்பவே உங்ககிட்ட சொல்லிட்டா நீங்க ஏதாவது ஏற்பாடு பண்ண சௌகர்யமா இருக்குமேனு சொல்லவும் தான் கால் பண்ணினேன். சொல்லிட்டேன். உங்களுக்கு ஏதாவது என்கிட்ட கேட்கணுமா? கேளுங்க”
“இல்லை மிஸ்டர் ராவ். எனக்கு கேட்க ஒண்ணுமில்லை. நீங்க இப்பவே இதை சொன்னதுக்கு ரொம்ப தாங்க்ஸ் நாங்களும் வேற வீடு பார்க்க வசதியா இருக்கும். டைமும் இருக்கு.”
“அப்படீன்னா சரி. நான் வச்சுடவா. டேக் கேர் பை.”
“பை”
என்று ஃபோனை வைத்ததும் மிருதுளாவிடம் விவரத்தைச் சொன்னான் நவீன் அதைக் கேட்டதும் மிருதுளா நவீனிடம்
“ஏன் நவீன் அப்போ மறுபடியும் அடுத்த வருடம் ஷிஃப்ட் பண்ணணுமா? சரி அந்த வீட்டு ஓனரும் இரண்டு வருஷத்துல வீட்டை மாத்த சொன்னா என்ன பண்ணுவோம்? அப்படீன்னா ஒவ்வொரு இரண்டாவது வருஷமும் வீடு மாத்தனுமா என்ன?”
“அப்படி இல்லை மிருது. இவா வெளிநாட்டில இருக்கா இப்போ இங்கேயே வந்துடப் போறா அதுனால வீட்டைக் கேட்கறா!; அடுத்து நாம பார்க்கற வீட்டு அக்ரிமெண்டில் மினிமம் ஐந்து வருஷம்னு ஒரு கண்டிஷன் போட்டிடணும்”
“நாம இனி இங்கேயே தானே செட்டில் ஆகப் போறோம் நவீ?”
“மோஸ்ட்டிலி எஸ் மிருது”
“அப்போ நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா?”
“என்ன ஐடியா சொல்லு!”
“நாம இந்த வருஷத்துலேந்து ஐம்பதாயிரம் ரென்ட் குடுக்கணும் இல்லையா”
“ஆமாம் அதுனால?”
“அதை அடுத்த வருஷம் மறுபடியும் ஏத்துவா இல்லையா…”
“ஆமாம் ஸோ?”
“ஸோ நான் என்ன சொல்ல வர்றேன்னா….நாம குடுக்கப் போற ஐம்பதாயிரமோ இல்லை அறுபதாயிரமோ ரென்ட்டை ஈ.எம்.ஐ ஆ மாத்திட்டோம்னா நாம அதுக்கப்புறம் ஷிஃப்ட்டிங்கே இருக்காதே! எப்படி?”
“வீடு வாங்கலாம்னு சொல்லறையா?”
“பின்ன ஈ.எம்.ஐ ன்னா அதுதானே நவீ”
“ஆனா நமக்கு அந்த ஜடியாவே இல்லையே”
“இதுவரை இல்லை ஆனா இனி இருந்தா தப்பேதுமில்லையே. யோசிச்சுப் பாருங்கோ. ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை வீடு மாத்திண்டு வாடகையா பணத்தை அள்ளிக் கொடுத்துண்டு இருக்கறதை விட அதே பணத்தை பாங்கில கொடுத்தா நமக்குன்னு சொந்த வீடாகும். இங்கே நமக்கொரு சொத்தாகும் இல்லையா”
“நல்ல யோசனை தான். சரி அப்போ வீடு பார்க்கத் துவங்கிட வேண்டியது தான்”
“ரியலீ!! சூப்பர் அப்போ இந்த வீக் என்டிலிருந்து வீடு பார்க்கத் துவங்குவோம்.”
என்று பேசிக்கொண்டப் படியே ஒவ்வொரு வார கடைசியிலும் ஒவ்வொரு ஏரியாவாக சென்று அங்குள்ள தனி வீடுகள், அப்பார்ட்மெண்ட்டுகள் என பார்க்கத்துவங்கினர் நவீனும் மிருதுளாவும்.
அவர்களின் மனம் போலவே அழகான கேட்டெட் கம்யூனிடியில் தனி வீடொன்று அமைந்தது. கிழக்குப் பார்த்த அந்த வீடு நவீனுக்கு மிகவும் பிடித்துப் போனது. அது காலி மனையாகத்தான் இருந்தது ஆனால் அந்த பில்டரிடம் பேசியதிலும், வீட்டின் வடிவமைப்பை கம்ப்யூட்டரில் பார்த்ததிலும், மேலும் அவர்களுக்கான மாற்றங்கள் கூட செய்து தரப்படும் என்று பில்டர் சொன்னதிலும், அந்த வீடு ஒரே வருடத்தில் முடித்துத் தருவதாக பில்டர் சொல்லிக் கேட்டதிலும் நவீன் மிருதுளாவின் மனம் நிறைந்தது. அதன் விலை சற்று அவர்களின் பட்ஜெட்டுக்கு அதிகமாக இருந்ததால் இருவரும் ஒரு முடிவுக்கு வர ஒரு மாத காலம் எடுத்துக் கொண்டனர். இறுதியில் மிருதுளா நவீனிடம்
“நவீன் உங்களுக்கும் எனக்கும் அந்த வீடு ரொம்ப பிடிச்சிப் போயிடுத்து. நம்ம சக்திக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. பேசாமா வாங்கிடலாமா? என்ன சொல்லறேங்கள்?”
“எல்லாம் சரி தான் ஆனா….ஒரு கோடின்னு சொல்லறானே!! அது நம்ம பட்ஜெட்டிலிருந்து இருபத்தைந்து லட்சம் ஜாஸ்த்தியாகறதே!!!”
“பரவாயில்லை நவீ. வாங்குவோம். நான் அதுக்கு தகுந்தா மாதிரி வீட்டு செலவுகள் மற்றவைகளை எல்லாம் பார்த்துக்கறேன்”
“அப்படிங்கறையா?”
“அப்பா அந்த ஹவுஸ் ரொம்ப அழகா வரும்ப்பா. மாடல் ஹவுஸே எவ்வளவு ஸ்பேஷியஸ்ஸா அழகா இருக்கு. ப்ளீஸ் பா வாங்கலாம்ப்பா”
“சரி என் சக்திக்கே பிடிச்சிருக்கு. அப்போ வாங்கிடுவோம்”
“ஏன் எனக்கு பிடிச்சிருந்தா வாங்க மாட்டேங்களாக்கும். உங்க பொண்ணுக்கு பிடிச்சிருந்தா தான் வாங்குவேங்களோ?”
“அச்சச்சோ சக்தி யாருக்கோ ஜே.ஜே ஆகறது கவனிச்சயா”
“ம்…ம்…கவனிச்சேன்ப்பா கவனிச்சேன்”
“ஹலோ சக்தி மேடம்… நம்ம வீட்டு ஃபினாஸ் மினிஸ்டர் அப்ரூவல் இல்லாம நீ ஒகே சொன்னாலும் உங்க அப்பா வாங்க முடியாதுமா அதைத் தெரிஞ்சுக்கோ’
“அப்பா யாருப்பா அந்த நம்ம வீட்டு ஃபினாஸ் மினிஸ்டர்? நான் இதுவரைப் பார்த்ததில்லையே”
“அடி… படவா…”
“ஓகே ஓகே அம்மா ஒத்துக்கறேன்! ரெண்டு மினிஸ்டருமா பேசி டிசிஷன் எடுங்கோ நான் போயி படிக்கறேன்.”
என்று சீரியஸான நேரத்தைக் கூட சற்று நேரம் சுவாரஸ்யமாக மாற்றினாள் சக்தி. அவள் சென்றதும் நவீன் மிருதுளாவிடம்
“சரி மிருது…சாரி சாரி நிதித்துறை அமைச்சரே!! என்ன செய்யலாமென்று சொல்லுங்கள்”
“அட போங்கோப்பா!!! நீங்களே டிசைட் பண்ணுங்கோ”
“நான் டிசைட் பண்ணினாலும் நீ தானே நான் கொண்டு வர்றதை வைத்து குடும்பம் நடத்தப் போறது. ஸோ நீ சொல்லு அதுபடியே நான் செய்யறேன்”
“அப்படின்னா சரி நாம அந்த வீட்டை வாங்கலாம் மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன். இப்போ என்ன சொல்லறேங்கள்?”
“அப்படியே ஆகட்டும் மகாராணி”
என்று நவீன் சொன்னதும் அதைக் கேட்ட சக்தி உள்ளேயிருந்து எட்டிப் பார்த்து
“அப்பா மந்திரிக்கு ப்ரொமோஷன் கிடைத்திருக்குப் போல”
என்றதும் மூவருமாக சிரித்து மகிழ்ந்தனர். அப்போது நவீன் சக்தி மற்றும் மிருதுளாவிடம்
“ஓகே! நம்ம டிஸிஷன் பாஸ் ஆனதால் நாம இன்னைக்கு வெளியில போய் டின்னர் சாப்பிடலாம் ரெண்டு பேரும் கிளம்புங்கோ”
மூவருமாக அன்றிரவு மைசூரில் புது வீடு வாங்க இருப்பதை எண்ணி மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
அவர்கள் பேசிக்கொண்டது போலவே அந்த மனையை வாங்கினார்கள். அதில் வீடு கட்டும் வேலையும் கிடு கிடுவென நடக்க ஆரம்பித்தது. வீடு கட்டத்துவங்கி சரியாக ஒரு வருடம் ஆக இரண்டு மாதங்கள் இருக்கும் போது வீட்டின் வேலைகளைப் பார்த்து இரண்டு மாதத்தில் அதாவது வைகாசியில் கிரகப்பிரவேசம் வைத்துக் கொள்ளலாமென்றும் அதன் பின் மர வேலைப்பாடுகளை தொடங்கி அது முடிந்ததும் செப்டம்பர் மாதம் புது வீட்டிற்கு குடி போகலாமென்றும் முடிவெடுத்தனர்.
அது படியே நவீனும் மிருதுளாவுமாக இருவீட்டாருக்கும் ஃபோன் செய்து விவரங்களைச் சொல்லி கிரகப்பிரவேசத்திற்கு அழைப்பு விடுத்தனர். முதலில் ஈஸ்வரன் பர்வதத்திற்கு கால் செய்தனர். ஃபோனை எடுத்தார் ஈஸ்வரன்
“ஹலோ அப்பா. நான் மிருதுளா பேசறேன்”
“ஆங். மிருதுளா சொல்லு. என்ன ஃபோனெல்லாம்?”
“ஒரு குட் நியூஸை உங்கக்கூட ஷேர் பண்ணத்தான் கால் பண்ணினோம்.”
“அப்படியா என்ன அந்த குட் நியூஸ்?”
“நாங்க இங்க மைசூர்ல ஒரு வீடு வாங்கியிருக்கோம் ப்பா. அதோட கிரகப்பிரவேசம் வர்ற வைகாசி மாசம் பத்தாம் தேதி வச்சிருக்கோம். இப்போ தான் எல்லாருக்கும் ஃபோன் பண்ணி சொல்லலாம்னு உங்கிட்டேந்து ஆரம்பிச்சிருக்கோம். பத்திரிகை எல்லாம் அடிக்கலை ஃபோன் இன்வைட் தான் பண்ணறோம்.”
“அப்படியா எங்க வாங்கிருக்கேங்கள்? எவ்வளவாச்சு?”
“இதோ நவீன் அந்த டீட்டேயில்ஸ் எல்லாம் சொல்லுவார்ப்பா”
“அது வந்து இங்க நாங்க இப்போ இருக்குற ஆத்துலேந்து கொஞ்ச தூரத்தில் தான் வாங்கிருக்கோம். நிலம் வீடு சேர்த்து ஒரு கோடி ஆகறது.”
“ஒரு கோடியா!!!!”
“ஆமாம். சரி நீங்க எல்லாரும் வந்திடுங்கோ. நாங்க வண்டி ஏதாவது ஏற்பாடு செய்ததும் உன்கிட்ட சொல்லறோம் அதுல வந்திடுங்கோ சரியா. நான் வச்சுடறேன்.பை”
என்று ஃபோனை வைத்ததும் அடுத்து ராமானுஜத்திற்கும் அம்புஜத்திற்கும் கால் செய்தனர்.
“ஹலோ அம்மா நான் மிருது பேசறேன்”
“ஹாய் மிருது எப்படி இருக்க? மாப்ள எப்படி இருக்கார்? சக்திக் குட்டி எப்படி இருக்கா?”
“அம்மா !!அம்மா!!! நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம். நாங்க இங்க ஒரு வீடு வாங்கியிர்க்கோம் அதோட கிரகப்பிரவேசத்தை வர்ற வைகாசி பத்தாம் தேதி வச்சிருக்கோம் அதைச் சொல்லி உங்களை ….”
அதைக் கேட்டதும் அம்புஜம் மிருதுளா பேச வந்ததை முழுவதுமாக சொல்ல விடாமல் குறுக்கிட்டு
“ரொம்ப சந்தோஷம் மா. உனக்கும் மாப்ளைக்கு கங்கிராட்ஸ். நாங்க நிச்சயமா வந்திடறோம்”
என்றாள். நவீனும் அவர்களிடம் அழைப்பு விடுத்தான். அதன் பின் வேனுவிடம் சொன்னார்கள். அதற்கு பிறகு கவினுக்கு ஃபோன் செய்து ஸ்பீக்கரில் போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தனர். அப்போது ஃபோனை எடுத்த கவின்
“ஹலோ கவினா நான் மிருதுளா பேசறேன்”
என்றதும் …
“ஹேய் கஜேஸ் மன்னி தான் ஃபோன் பண்ணிருக்கா பேசேன் நான் வண்டியைப் பார்க்கிங்ல் போட்டுட்டுப் பேசறேன்”
“நானெல்லாம் பேச மாட்டேன். வேணும்னா நீ பேசிக்கோ. அவாகிட்ட எல்லாம் எனக்கு பேச வேண்டாம்”
என்று ஃபோன் ஆன் ஆனது தெரியாது பேசினார்களா இல்லை தெரிந்தே பேசினார்களா என்பது கஜேஸ்வினுக்கும் அந்த ஆண்டவனுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியமாகும். ஆனால் அதை அனைத்தையும் கேட்டதில் சங்கடமானார்கள் நவீனும் மிருதுளாவும். இது அனைத்தும் வெறும் இரண்டே நிமிடங்களில் நடந்தவையே…உடனே கவின் காலில் வந்து
“மன்னி நான் டிரைவிங்ல இருக்கேன். அப்புறமா பேசட்டுமா?”
“ஓ!! அப்படியா சரி அப்போ கஜேஸ்வரிட்ட ஃபோனைக்குடேன்”
“அவ இப்போ என் கூட இல்லையே. அவ ஆத்துல இருக்கா. நான் வேணும்னா ஆத்துக்கு போயிட்டு உங்களுக்கு கால் பண்ணட்டுமா?”
என்று பொய்யை அவிழ்த்து விட்டான் கவின். அதுத் தெரிந்தும் காட்டிக் கொள்ளாத மிருதுளா ….அப்போது கால் ஐ கட் செய்யச் சொல்லி ஜாடைக்காட்டினான் நவீன்
“ஓ! அப்படியா! பரவாயில்லை கவின். இரு நவீன் ஏதோ சொல்லணுமாம். ஜஸ்ட் ஒரு ஒன் மினிட்”
என்றதும்
“ஹாய் கவின் நாங்க இங்கே மைசூர்ல ஒரு வீடு வாங்கியிருக்கோம் அதோட கிரகப்பிரவேசத்திற்கு இன்வைட்ப் பண்ண தான் கால் பண்ணினோம் வேற ஒண்ணுமில்லை. டிட்டேயில்ஸ் மிருது வாட்ஸ்ஆப்பில் அனுப்புவா. பை. ட்ரைவ் சேஃப்லீ.”
என்று கவினைப் பேச விடாது தான் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லி விட்டு காலை கட் செய்தான். அதைப் பார்த்த மிருதுளா
“என்ன நவீன் ஏதோ டீச்சர்ட்ட ஆன்ஸர் ஒப்பிக்கறா மாதிரி இப்படி சொல்லிட்டு வச்சிருக்கேங்கள்?”
“பின்ன அவா பேசினதுக்கு இப்படி தான் பேச முடியும். என்ன ஃபோன் ஆன் ஆனது கூடத் தெரியாமையா பேசினா!! அதெல்லாம் நல்லா தெரிஞ்சே தான் பேசிருக்கா. இருக்கட்டும் !!இருக்கட்டும்!! சரி அடுத்து யாரு?”
“நம்ம ப்ரவீன் அன்ட் பவின் தான்”
என்று ப்ரவீனிடம் பேசி விவரத்தைச் சொல்லி அழைத்ததற்கு அவன்
“இல்ல துளசிக்கு ஆஃபிஸ் ல வேலை அதிகமா இருக்கு அதுவுமில்லாம பசங்களுக்கு ஸ்கூல் திறக்கும் நேரம் அதுதான்….”
என்றிழுக்க உடனே மிருதுளா
“உங்க வசதியப் பார்த்துக்கோங்கோப்பா. வந்தா சந்தோஷம் அவ்வளவுதான்”
என்று ஃபோனை வைத்தனர். அடுத்து பவினுக்கு கால் செய்தனர். முதல் இரண்டு அனுபவத்திற்கு பிறகு அங்கே என்ன கிடைக்கப்போகிறதோ என்ற எண்ணத்தில் அமர்ந்திருந்தாள் மிருதுளா. பவின், பவித்ரா அவர்கள் ஃபோனை அட்டென்ட் கூட பண்ணவில்லை. அதனால் மற்ற சொந்தக்காரர்களுக்கெல்லாம் அழைப்பு விடுத்தனர் நவீனும் மிருதுளாவும்.
நவீனையும் மிருதுளாவையும் எந்த விசேஷத்திற்கும் சரியாக அழைக்காமலிருந்தவர்களை விட்டுக் கொடுக்காது தங்கள் வீட்டு விசேஷத்துக்கு எப்போதும் முறையாக அழைப்பு விடுத்து அவமானத்தையே சந்தித்தனர் நவீனும் மிருதுளாவும். ஆனால் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாது தங்களின் கடமையை சரிவரச் செய்ததாக எண்ணிக்கொண்டனர். அனைவரையும் அழைத்து முடித்ததும். மறுநாளிலிருந்து அதற்கான வேலைகளில் இறங்கினர் இருவரும்.
தொடரும்……
அத்தியாயம் 95: வேனுவின் வருகை
பவின் பவித்ரா வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு மூன்றே நாட்கள் தான் இருந்தன. அப்போது நவீனுக்கு நல்ல சளி ஜுரம் பிடித்து அவதிப்பட்டான். அன்று மாலை நவீனைக் கூட்டிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றாள் மிருதுளா. அங்கே நவீனுக்கு ப்ளட் டெஸ்ட் எல்லாம் எடுத்தனர். பின் டாக்டர் அவர்களிடம் நவீனுக்கு வந்திருப்பது வைரல் ஃபீவர் என்றும், ஐந்து நாட்களுக்கு இருக்கும் என்றும் கூறி மருந்து மாத்திரைகள் எழுதிக் குடுத்தார். அவர்களும் அவற்றை எல்லாம் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். இரண்டு நாட்கள் மருந்து மாத்திரை சாப்பிட்டும், மிருதுளா வைத்துக் கொடுத்த கஞ்சி, மிளகு ரசம் என்று சாப்பிட்டதில் நவீனின் உடம்பு சற்று தேறியது. அப்போது நவீன் மிருதுளாவிடம்
“நாளைக்கு பவின் வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு நாம வரமுடியாதுன்னு ஃபோன் பண்ணி சொல்லிட்டு அப்படியே டிக்கெட்டையும் கேன்சல் பண்ணிடு மிருது”
“எதுக்கு நவீ? உங்களுக்கும் சக்திக்கும் வேண்டியதெல்லாம் செய்து வச்சுட்டு நான் இன்னைக்கு நைட்டு போய் காலையில விசேஷத்தை அடெண்ட் பண்ணிட்டு மத்தியானம் டிரெயின் பிடிச்சு வந்துடறேன்.”
“சொன்ன கேட்க மாட்டியா மிருது!! அவமானப்படறது உனக்கு சந்தோஷத்தைத் தர்றது போல!! அதுதான் அதையே தேடி தேடிப் போற”
“அப்படி இல்ல நவீ. அதெல்லாம் சொன்னா உங்களுக்குப் புரியாது விடுங்கோ. சரி நான் பவித்ராட்ட ஃபோன் பண்ணி சொல்லறேன் …நான் மட்டும் தான் வரேன்னும், நேரா அவா ஆத்துக்கே வந்துடறேன்னும்.”
“என்னமோ பண்ணு. கடவுளே எனக்கு உடம்பு முடியாம செய்து அங்க போக வேண்டாம்னு சொல்லியும் நீ கேட்க மாட்டேங்கற இல்ல….அப்புறம் என் கிட்ட வந்து புலம்பக்கூடாது சொல்லிட்டேன்”
“சரி …சரி… ரிங் போறது கொஞ்ச நேரம் குவைட்டா இருங்கோ ப்ளீஸ். ஆங் பவித்ரா நான் மகருதுளா பேசறேன்”
“ஹலோ மன்னி சொல்லுங்கோ. இன்னைக்கு நைட் தானே அங்கேந்து கிளம்பறேங்கள்”
“ஆங்…ஆமாம். அதைப் பத்திப் பேச தான் ஃபோன் பண்ணினேன்”
“என்ன சொல்லுங்கோ”
“இங்கே நவீனுக்கு வைரல் ஃபீவர். இரண்டு நாள் ஆச்சு. இப்போ கொஞ்சம் பரவாயில்லை ஆனா டாக்டர் அவரை ட்ராவல் பண்ணக்கூடாதுனு சொல்லிட்டார். அதுனால அவர் வர முடியாது. அதுதான் நான் மட்டும் வரலாம்னு இருக்கேன்”
“ஓ! அப்படியா? ஓகே வாங்கோ”
“எதுக்கு நான் ஃபோன் பண்ணினேன்னா? நாங்க வர்றதா இருந்தப்போ நேரா எங்க சென்னை ஆத்துக்குப் போயிட்டு ஃப்ரெஷ் ஆகி அப்படியே உங்காத்து கிரகப்பிரவேசத்துக்கு வரலாம்னு ப்ளான் பண்ணிருந்தோம். ஆனா இப்போ நான் மட்டும் தனியா வரதுனால அங்க எல்லாம் போகாம நேரா உங்காத்துக்கே வரலாம்னு இருக்கேன். காலையில ஒரு நாலரை மணிக்கு டிரெயின் சென்னை ரீச் ஆகிடும் நான் ஆட்டோப் பிடிச்சு உங்காத்துக்கு ஒரு அஞ்சு மணிக்கெல்லாம் வந்திடுவேன் அதை உன் கிட்ட சொல்லத்தான் கூப்பிட்டேன்”
“ம்…அப்படியா? ஆனா மன்னி நாங்க எல்லாரும் அஞ்சு மணிக்கெல்லாம் புது வீட்டுக்குப் போயிடுவோமே!!”
“ஓ!! ஓ!! ஒருத்தர் கூட அப்போ ஆத்துல இருக்க மாட்டாளா?”
“இல்ல மன்னி யாருமே இருக்க மாட்டோம். ஆங்…இதோ வரேன். சரி மன்னி நான் ஃபோனை வைக்கறேன். எனக்கு வேலையிருக்கு”
என்று சரியான பதிலளிக்காமல் வெடுக்கென பேசிவிட்டு ஃபோன் காலைத் துண்டித்தாள் பவித்ரா. அவள் அப்படி பேசி வச்சதும் மிருதுளா முகம் வாடியது. அனைத்தையும் கேட்டும் பார்த்தும் கொண்டிருந்த நவீன் மிருதுளாவிடம்
“இது தேவையா? நீ சொல்லுற தனியா வருவன்னு ஆனா அவ பேச்சுக்காவது நீங்க வாங்கோ வேணும்னா யாரையாவது இங்க இருக்கச் சொல்லறேனு சொன்னாளா? இல்ல வேற ஏதாவது வழியாவது சொன்னாளா? மூஞ்சில அடிச்சா மாதிரி யாரும் இருக்க மாட்டோம்னு சொல்லிட்டு இப்படி வச்சுட்டாளே இதுக்கு அப்புறமும் நீ போகணுமா? ஒருத்தர் ஃபோன் பண்ணி வரேன்னு சொல்லும் போது அவாளை வாங்கோன்னு சொல்லி அவாளுக்கு ஏதாவது வழியில் ஹெல்ப் பண்ணணும்னு தோனறதா பாரு!!! இதே இடத்துல நீ இருந்துருந்தேனா என்ன பண்ணிருப்ப தெரியுமா? அவளை வரச்சொல்லிட்டு அவளுக்காக வீட்டில யாரையாவது இருக்க சொல்லி அவ வந்து ரெடியானதும் புது வீட்டுக்குக் கூட்டிண்டு வரச் சொல்லிருப்ப…கரெக்ட்டா!!”
“ஆமாம்….”
“என்ன ஆஆமாம்னு இழுக்கற?”
“நீங்க சொல்லறது எல்லாமே கரெக்ட்டு தான். சாரி! இப்ப என்ன பண்ணணும்னு சொல்லறேங்கள்”
“இப்ப இல்ல அவா வந்துட்டு போனதிலேந்தே சொல்லறேன் நாம போக வேண்டாம்னும், டிக்கெட்டை கேன்சல் பண்ணிடலாம்னும் எங்க கேட்ட? இப்பவாவது கேன்சல் பண்ணிட்டு வேற வேலையைப் பாரு. நான் கொஞ்ச நேரம் தூங்கறேன்”
“ம்….சரி நவீ. கேன்சல் பண்ணிடறேன்”
என்று தனது லேப்டாப்பை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டாள். அவள் அதின் உள் நுழைவதற்குள் நவீன் உறங்கிப் போனான். அவள் புக் செய்திருந்த டிக்கெட்டை கேன்சல் செய்து மடிக்கணினியை மூடி டேபிள் மீது வைத்து அந்த அறையின் கதவை மெல்ல சாத்தி விட்டு ஹாலுக்கு வந்தாள். பின் தனக்குள்
“நவீன் சொல்லறது எல்லாமே கரெக்ட்டா தான் இருக்கு !!ஆனா!!! அவரை மாதிரி ஏதும் பேசாம எதையும் கண்டுக்காம எப்படி இருக்கறது? என்ன அவர்கிட்டயா கேட்கப்போறா எல்லாரும் என்கிட்ட தானே கேட்பா!! அவருக்கென்ன? ஆனாலும் இந்த பவித்ரா பண்ணினது டூ மச் தான். பார்ப்போம் ! பார்ப்போம்! எல்லாரும் இவ்வளவு சமத்து சாமர்த்தியம் விட்டேத்தித்தனத்தோட எல்லாம் என்ன ஆகறான்னு? அது ஒண்ணுமே இல்லாத நாம என்ன ஆகறோம்னு?”
என்று பேசிக் கொண்டிருந்தாள் அப்போது நவீன் இருமும் சத்தம் கேட்டதும் வேகமாக எழுந்து ஒரு கிளாஸ் வெந்நீர் எடுத்துச் சென்றுக் குடுத்தாள். அப்போது நவீன்
“என்ன மிருது கேன்சல் பண்ணிட்டயா இல்ல இன்னமும் போகுற ஐடியால இருக்கயா?”
“நோ வே!! நவீ. எனக்கும் அவ பேசினது பிடிக்கலை. நீங்க சொன்னது தான் சரி. அதுனால கேன்சல் பண்ணிட்டேன்.”
“இது தான் எனக்குப் பிடிக்கலை.”
“என்னது வெந்நீரா?”
“ஜோக்கு!!! நான் முன்னாடி சொல்லும் போதே கேட்டு அதுபடி நீ கேன்சல் பண்ணிட்டு அவளுக்கு ஃபோன் பண்ணி வரமுடியாதுனு சொல்லியிருக்கலாம் இல்லையா? அதை விட்டுட்டு அவகிட்ட கேட்டு அதுக்கு அவ பெரிய இவ மாதிரி இப்படி சொல்லி….தேவையா இதெல்லாம்?”
“சரி சரி….தூங்கறதுக்கு முன்னாடியே இதை எல்லாம் சொல்லிட்டேங்கள்…அதுக்கு நானும் சாரி கேட்டுட்டேன். இப்போ எழுந்ததுக்கு அப்புறம் மறுபடியும் அதையே சொல்லறேங்களே நவீ. இனி உங்க ஃபேமிலியைப் பொருத்தவரை நீங்க என்ன சொன்னாலும் அது படியே நடந்துக்கறேன். ஓகே வா!. இவ்வளவு நேரமா அதைப் பத்தித் தான் யோசிச்சிண்டிருந்தேன். ”
“ம்..ம்…பார்ப்போம்”
“சரி கொஞ்சமா ரசம் சாதம் கரைச்சு எடுத்துண்டு வரவா”
“ம்…சரி மிருது.”
என்று நவீன் கூறியதும் மிருதுளா அவனுக்கு சாப்பாடு குடுத்து மத்தியம் சாப்பிடவேண்டிய மாத்திரைகளையும் கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டாள். நவீன் மாத்திரைகள் சாப்பிட்டதும் மீண்டும் உறங்கலானான். மாலை சக்தி ஸ்கூலில் இருந்து வருவதற்குள் அவளுக்கு டிபன் செய்து வைக்க துவங்கினாள். அந்த வேலை முடிந்ததும் அடுப்படியை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு வந்தமர்ந்தாள். அப்போது மிருதுளாவின் தம்பி வேனு லண்டனிலிருந்து கால் செய்தான். அவன் ஊருக்கு வரப்போவதாக கூறினான். மிருதுளாவுக்கு ஒரே குஷியானது. படிக்கச் சென்ற வேனு அங்கேயே வேலைப் பார்த்துக் கொண்டு தான் படிப்புக்கு பட்ட கடனை அடைத்து விட்டு பல ஆண்டுகளுக்கு பின் ஊருக்கு வருகிறான். அவன் பேசி முடித்து ஃபோனை வைத்ததும் தன் அம்மாவிற்கு ஃபோன் செய்து
“அம்மா இப்போ தான் வேனு ஃபோன் பண்ணினான். அவன் ஊருக்கு வரும் வியாழக்கிழமை வரானாம்.”
“ஆமாம் எங்கள்ட்டேயும் கொஞ்சம் முன்னாடி பேசினான் மிருது. அப்போ உன்கிட்டேயும் பேசப்போறதா சொன்னான். அவன் ஃபோனை வச்சதும் நான் உனக்கு ட்ரைப் பண்ணினேன் ஆனா என்கேஜ்டாவே இருந்தது…சரி நீங்க ரெண்டு பேரும் பேசிக்கறேங்கள்னு விட்டுட்டேன். சரி அவன் வரும் போது நீயும் வந்து ஒரு வாரம் இருந்துட்டுப் போயேன்”
“எங்க மா வர்றது!! சக்திக்கு பரீட்சை வர்றதே!! பாரப்போம். சரி உன்கிட்ட இன்னொன்னு கேட்கணுமே”
“என்னது கேட்கணும்?”
“உனக்கு பவின் ஆத்து கிரகப்பிரவேசப் பத்திரிகை வந்துதா?”
“ஆங் நேத்து வந்தது. பவின் ஃபோன்ல பேசினான்”
“என்ன சொன்னான்?”
“விசேஷத்துக்கு அழைச்சான் அப்புறம் அவன் சொன்னான்…அவா பத்திரிகை அனுப்பினாலாம் ஆனா நீ தான் பத்திரிகை வரலைன்னு சொன்னையாம் அதுனால தான் மறுபடியும் குரியர்ல அனுப்பினாளாம் ஆனாலும் உனக்கு வரலைன்னு சொன்னயாமே!! ஏன் எனக்கு நேத்தே வந்துடுத்தே”
“அமாம் அவன் சொன்னா அது உண்மையாகிடுமா!! அட போம்மா…. உனக்கு அனுப்பச் சொல்லி பவித்ரா அவ அப்பாகிட்ட ஃபோன்ல சொன்னா அதைக் கேட்டேன். எங்களுக்கெல்லாம் யாரும் ஒண்ணும் அனுப்பவுமில்லை தரவுமில்லை”
“ஏன்டி இவா இப்படி எல்லாம் பண்ணறா? ஒரு விசேஷம் நாள் கிழமைன்னா எல்லாருமா வந்திருந்து வாழ்த்தணும்னு நினைக்கவே மாட்டாளா?”
“அதெல்லாம விடு நீ என்ன போகப்போறயா?”
“நான் எங்கேந்து போறது?”
“ஏன் என்ன ஆச்சு?”
“உங்க அப்பாவோட ஒண்ணு விட்ட சித்தப்பாவோட புள்ள பைக் ஆக்சிடெண்ட்ல இறந்து போயிட்டானாம் நேத்து தான் ஃபோன் வந்தது. அவா ஃபோன் பண்ணி வச்சதும் பவின் ஃபோன் பண்ணினான். அவன் கிட்ட இந்த மாதிரி விஷயம் அதுனால நாங்க வர முடியாதுன்னு சொல்லிட்டோம். அவனும் சரின்னு சொல்லிட்டான்”
“ஓ!! அப்படியா!! இந்த விஷயத்தை நீ ஏன் நேத்தே எனக்கு சொல்லலை?”
“உனக்கு தெரிஞ்சு என்ன ஆகப்போறது! எதுக்கு உன்னையும் சங்கடப்பட வைக்கணும்னு தான் சொல்லலை”
“ம்…ஓகே !! பார்த்தயா அந்த கடவுளே நம்மளை அந்த விசேஷத்துக்கு போக விடாம பண்ணிட்டா?”
“ஏன் நீங்களும் போகலையா?”
“எங்கேந்து நவீனுக்கு வைரல் ஃபீவர். சரி நான் மட்டும் ஒரே நாள்ல வந்துட்டு திரும்பிடலாம்னு நினைச்சேன். ஆனா நம்மாத்துக்கு வந்துட்டு அங்கேந்து அவா புது வீடு இருக்கற இடத்துக்குப் போக ஒன் அவர் ஆகிடுமேன்னு நேரா அவா இப்போ இருக்குற வீட்டுக்கே வரேன்னு சொன்னேன் அதுக்கு அவா யாருமே அங்க இருக்க மாட்டாளாம். காலங்காத்தாலேயே கிளம்பி புது வீட்டுக்குப் போயிடுவாளாம். அப்புறம் நான் எங்க போய் குளிச்சு ரெடி ஆகுவேன்!! அதுனால போகலை.”
“அப்படியா!! சரி அதுவும் நல்லது தான் இந்த மாதிரி நேரத்துல நீ உன் ஆத்துக்காரரை அவனிச்சுண்டு அங்கேயே இரு.”
“ம்…சரி மா சக்தி ஸ்கூல்லேந்து வந்துட்டா நான் போய் அவளுக்கு டிபன் குடுக்கட்டும்.”
“ஏய் மிருது ஃபோனை சக்திக் கிட்ட குடுடி.”
“ம் சரி சரி…சக்தி இந்தா உன் அம்பு பாட்டி உன்கிட்ட பேசணுமாம். பேசிட்டு யூனிபார்ம் எல்லாம் மாத்திட்டு, முகம் கைக் கால் எல்லாம் அலம்பிட்டு டிபன் சாப்பிட வா”
“ம்..சரி சரி மா… ஹலோ பாட்டி”
“ஹலோ சக்தி மா எப்படி இருக்க?”
“நல்லாருக்கேன் பாட்டி. நீ எப்படி இருக்க? தாத்தா எப்படி இருக்கா?”
“நாங்க ரெண்டு பேரும் நன்னா இருக்கோம் டா தங்கம். உன் மாமா வேனு வர்ற வியாழக்கிழமை ஊருக்கு வர்றான். அம்மாவோட நீ இந்த வெள்ளிக்கிழமை நைட்டு கிளம்பி வர்றயா?”
“ஐய்யா ஜாலி ஜாலி. ம்…சரி பாட்டி அம்மாவோட வர்றேன்.”
“ஓகே டா தங்கம். நீ போய் ட்ரெஸ் எல்லாம் மாத்திட்டு டிபன் சாப்பிடு கண்ணா. பை “
“ஓகே பாட்டி பை பை”
என்று ஃபோனை வைத்ததும் சென்று யூனிபார்மை மாற்றி கைக் கால் அலம்பி விட்டு டைனிங் டேபிளுக்கு வந்து அமர்ந்து
“அம்மா வேனுமாமா வர்றாளாமே! பாட்டிச் சொன்னா”
“ஆமாம் சக்தி இந்த தர்ஸ்டே வர்றா.”
“அம்மா பாட்டி நம்மளை ஃப்ரைடே அங்க வரச்சொல்லிருக்கா”
“ஆமாம் என்கிட்டேயும் சொன்னா…உனக்கு அடுத்த வாரம் பரீட்சைத் தொடங்கப் போறதில்லையா அதுதான் யோசிச்சிண்டிருக்கேன்”
“அம்மா நான் படிச்சுக்கறேன். நாம இந்த ஃப்ரைடே போயிட்டு சன்டே ஈவ்னிங் வந்துடலாமே…எக்ஸாம் நெக்ஸ்ட் ஃப்ரைடே தான் ஆரம்பிக்கறது…ப்ளீஸ் மா”
“சரி சரி அப்பா எழுந்துக்கட்டும் கேட்கலாம்.”
என்று நவீன் எழும் வரை காத்திருந்து அவன் தூக்கத்திலிருந்து எழுந்ததும் மிருதுளாவும் சக்தியும் விவரத்தைச் சொல்லி போகலாமா வேண்டாமா என்று கேட்டனர். அதுக்கு நவீன் தான் மிகவும் வீக்காக இருப்பதாக சொன்னான். உடனே மிருதுளா
“உங்களை வரச்சொல்லலையே நாங்கள். எனக்குத் தெரியாதா உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு. நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்கோ நான் உங்களுக்கு வேண்டியதை எல்லாம் தோசை/இட்லி மாவு அரைத்து, வெங்காயச் சட்னி, கொத்துமல்லி சட்னி, ரசம், சாம்பார், பொறியல்கள்ன்னு எல்லாமே செய்து ஃப்ரிட்ஜில வச்சுட்டு போயிட்டு வரேன். என்ன சொல்லறேங்கள்?”
“ம்…சரி சரி பத்திரமா போயிட்டு சன்டே வந்திடுங்கோ.”
“ஓகே!! சக்தி டிரெஸெல்லாம் பேக் பண்ணுவோம் வா”
“அம்மா ரெண்டு நாள் தான் போகப்போறோம் அதுக்கெல்லாம் பேக்கிங் ஆ!!”
“மிருது வேனுவைக் கேட்டதா சொல்லு. நான் ஃபோன்ல அவன்ட்ட பேசறேன். பேசாம நீங்க ரெண்டு பேரும் வரும்போது அவனையும் கூட்டிண்டு வந்திடுங்கோளேன்”
“நல்ல ஐடியா தான் சொல்லிப் பார்க்கறேன்”
என்று பேசிக் கொண்டே ரொம்ப மாதங்களுக்குப் பின் தன் அம்மா வீட்டுக்கு மிருதுளா செல்லப் போவதை எண்ணி மகிழ்ச்சியிலிருந்தாள். அப்போது ஃபோன் அடித்தது. மிருதுளா எடுத்தாள்
“ஏய் மிருது எப்படி இருக்க? நவீன் எப்படி இருக்கான்? என்னமா நாங்க எல்லாம் டில்லிலேந்து சென்னைக்கு விசேஷத்தை அட்டெண்ட் பண்ண வந்திருக்கோம் நீங்க இதோ இருக்குற மைசூர்லேந்து வரலையே ஏன்? வந்திருந்தா உங்களையும் நாங்க பார்த்திருப்போமில்லையா?”
“ஹலோ சித்தி மெதுவா மெதுவா…இப்படி கேள்விகளா அடுக்கிண்டே போனேங்கள்னா எப்படி நாங்க பதில் சொல்லறது. நாங்க நல்லா இருக்கோம் சித்தி. அது தான் வந்தா எல்லாரையும் பார்க்கலாமேனு தான் நினைச்சோம் ஆனா என்னப் பண்ண சித்தி நவீனுக்கு உடம்புக்கு முடியாம போயிடுத்து. சரி நான் மட்டுமாவது வரலாம்னு பார்த்தா …அஞ்சு மணிக்கு தான் பவித்ரா ஆத்துக்கு வந்து சேர முடியும் அதுக்குள்ள அவா எல்லாரும் புது வீட்டுக்கு போயிடுவாளே!! அப்புறம் நான் எப்படி எங்கே குளிச்சு ரெடியாகறதுன்னு யோசிச்சு தான் சரின்னு டிக்கெட்டைக் கேன்சல் பண்ணினேன்! என்ன பண்ண?”
“அட நீ வேற எல்லாரும் பவித்ரா ஆத்துலேந்து கிரகப்பிரவேச வீட்டுக்கு கிளம்பினதே அஞ்சேமுக்கால் ஆறாயிடுத்து. அங்கே போனா வாத்தியார் வர்றதுக்கு லேட் அகி அப்புறம் ஒரு வழியா கிடுகிடுன்னு முடிச்சா. நீ வந்திருக்கலாமே மிருது.”
“ஓ!! அப்படியா!! சரி என்ன பண்ண விடுங்கோ சித்தி. ஏன் இப்போ நீங்க மைசூர் வந்தாலும் நாம சந்திச்சுக்கலாமே.”
“இல்ல மா நான் குழந்தைகளை சித்தப்பாட்ட விட்டுட்டு வந்திருக்கேன். இன்னிக்கு நைட்டே கிளம்பறேன். அடுத்தத் தடவைப் பார்ப்போம்”
“ஷுவர் சித்தி. அடுத்த ஏதாவது விசேஷத்துல சந்திக்கலாம் ஆர் நாங்க டில்லி வர்றோம்”
“தாராளமா வாங்கோ. யூ ஆர் மோஸ்ட் வெல்கம்.”
“ஹலோ சித்தி நான் நவீன் பேசறேன்”
“ஹேய் நவீன் மிருது சொன்னா. இப்போ எப்படி இருக்க?”
“இப்ப கொஞ்சம் பரவாயில்லை சித்தி. சித்தப்பாவையும் குழந்தைகளையும் கேட்டதா சொல்லுங்கோ”
“சரி டா சொல்லறேன் நீங்களும் பத்திரமா இருங்கோ நவீன் உடம்பைப் பார்த்துக்கோ. பை வச்சுடட்டுமா?”
“ஓகே!! சித்தி பை”
என்று ஃபோனை வைத்ததும் நவீன் மிருதுளாவிடம்
“பார்த்தயா சித்தி சொன்னதை அவா எத்தனை மணிக்கு கிளம்பியிருக்கான்னு!! இனியாவது அவாளை எல்லாம் கண்மூடித்தனமா நம்புறதை நிப்பாட்டு”
என்று மிருதுளா புரிந்துக் கொள்ளவில்லை என்றெண்ணி நவீன் சொல்ல அதற்கு மிருதுளா
“நவீன் கண்மூடித்தனமா எல்லாம் நான் நம்பலை. எனக்கும் புரியாம இல்ல. ஆனாலும் மனுஷா வேணும் இல்லையா”
“ஏன் அதே நினைப்பு அவாளுக்கிருந்ததா? இருந்திருந்தா அவா அப்படி நடந்திண்டிருப்பாளா? மறுபடியும் சொல்லறேன் ஜாக்கிரதையா இரு”
என்று கூறிவிட்டு சென்றான் நவீன். வெள்ளிக்கிழமை வந்தது. மிருதுளாவும் சக்தியுமாக ஊருக்குக் கிளம்பினார்கள். அப்போது நவீன்
“இங்கே பாரு மிருது நீ உங்காத்துக்கு மட்டும் போயிட்டு வா அவ்வளவு தான் சொல்லுவேன். சும்மா மாமனார் மாமியாருன்னுட்டு போனயோ”
“சரி சரி டென்ஷன் ஆகாதீங்கோ நாங்க போகலை.”
என்று கூறிவிட்டு தங்கள் காரிலேயே ஊருக்குச் சென்றனர். அங்கே வேனுவைப் பார்த்ததும் சந்தோஷத்தில் மிதந்தாள் மிருதுளா. வேனுவும் அத்துனை வருடங்கள் கழித்து தன் அக்காவையும் அவள் மகளையும் பார்த்ததில் அகமகிழ்ந்துப் போனான். வேனு தன் அக்காவுக்காவும், அத்திம்பேருக்காகவும், சக்திக்காகவும் வாங்கி வந்த பொருட்கள் அனைத்தையும் கொடுத்தான். பின் அனைவருமாக ஒன்றாக இரவு உணவு அருந்தியப் பின் வேனு தன் அத்திம்பேருக்கு ஃபோன் போட்டுப் பேசினான். அதன் பின் பழங்கதைகளை எல்லாம் பேசிக் கொண்டே உறங்கிப் போனார்கள். மறுநாள் காலை எழுந்ததும் அவரவர் வேலைகளில் மூழ்கினர். அன்று ஒன்பது மணி ஆகியும் சக்தி எழுந்திரிக்காமல் தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்த மிருதுளா தன் அம்மாவிடம்
“என்ன இன்னைக்கு என் பொண்ணு இவ்வளவு நேரம் தூங்கறா? இரு எழுப்பறேன் அவளை”
“விடேன்டி கொழந்த தூங்கட்டுமே”
“ம்…என்னையும் என் தம்பியையும் அந்த வயசுல இப்படி தூங்க விட்டேங்களா? காலங்காத்தால ஃபேனை ஆஃப் பண்ணிட்டுப் போனேங்களே!! அப்போ தோனலையோ கொழந்தகள் தூங்ட்டும்னு!!”
“அது தானே. சரியா சொன்ன மிருதுக்கா. எழுப்பிட்டு எழுந்திரிக்கலைன்னா ஃபேனை ஆஃப் பண்ணிடுவா இல்ல எனக்கும் ஞாபகம் இருக்கு.”
“நீங்கள் என் புள்ளகள். ஆனா இப்போ தூங்கறது என் பேத்தியாச்சே!!”
“பார்ரா!! இங்கே ஒரு பஞ்சாயத்தே போறதா இவ அசையாம தூங்கறதை. அடியே சக்தி எழுந்துக்கோ மணி ஒனப்தாகறது.”
என்று மிருதுளா இரண்டு முறை சொன்னதும் எழுந்தாள் சக்தி. படுக்கையிலிருந்து எழுந்து பாத்ரூமுக்குச் சென்றாள் அப்போது சக்தியின் டிரெஸில் லேசான ரத்தக் கறை இருந்ததைப் பார்த்த மிருதுளா வேகமாக அடுப்படியிலிருந்த தன் அம்மாவிடம் ஓடினாள்
“அம்மா அம்மா !! நம்ம சக்தி டிரெஸ்ல ரத்தக் கறை இருந்தது மா. நான் நினைக்கறேன்…”
என்று மிருதுளா தன் தாயிடம் சொல்லி முடிப்பதற்குள் சக்தி பாத்ரூமிலிருந்து
“அம்மா!! அம்மா!! அம்…மா… சீக்கிரம் இங்கே வாயேன்”
என்று அழைக்க மிருதுளா விரைந்து சென்றாள். அவள் பின்னாடியே அடுப்பை அனைத்து விட்டு அம்புஜமும் சென்றாள்.
தொடரும்……
அத்தியாயம் 94: பவின், பவித்ரா பத்திரிகை
தாங்கள் இரண்டாம் முறையாக ஏமாற்றப்பட்டதை மட்டுமே எண்ணிக்கொண்டிருக்காமல், ஏமாற்றியவர்களுக்கு இனி அப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்காதிருக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தனர் நவீனும் மிருதுளாவும்.
கவின் கஜேஸ்வரி மைசூருக்கு வந்து சென்று ஆறு மாதங்கள் ஆகின. ஒரு நாள் பவின் சென்னையில் வீடு வாங்கியிருப்பதாகவும் அதற்கு கிரகப்பிரவேசம் வைத்திருப்பதாகவும் ஃபோன் போட்டு சொன்னார்கள் பவினும் பவித்ராவும். அதைக் கேட்டதும் நவீனும் மிருதுளாவும் மிகவும் சந்தோஷப்பட்டனர். அவர்களை ஃபோனிலேயே வாழ்த்தினர். அப்போது பவின் பத்திரிகை அனுப்பவதாகவும் அண்ணா மன்னி அவசியம் வரவேண்டுமென்றும் அழைப்பு விடுத்தான். அவன் சொன்னதைக் கேட்டதும் ஆச்சர்யம் கலந்த சந்தோஷத்தில் இருந்தாள் மிருதுளா. அந்த ஃபோன் காலுக்குப் பிறகு பவித்ரா அடிக்கடி ஃபோனில் மிருதுளாவுடன் பேச ஆரம்பித்தாள். மிருதுளாவும் அன்று வரை ஏன் பேசவில்லை என்றோ, தனக்கு இரண்டு மன்னிகள் தான் என்று பவித்ரா சொன்னதையோ அவளிடம் கேட்காமலும் அப்படி ஒன்று நடந்தது என்றே இருவரும் காட்டிக் கொள்ளாமல் பழக ஆரம்பித்தனர். அப்போது பவித்ரா எந்த இரண்டு மன்னிகள் தான் தனக்கு இருக்கிறார்கள் என்று சொன்னாளோ அவர்களைப் பற்றியே கதை கதையாக தன் மன்னி என்றே அறியாத மிருதுளாவிடம் கூறினாள். கூறினாள் என்பதை விட புலம்பித் தள்ளினாள் என்பதே மிக பொருத்தமாகும்.
ஒரு நாள் அப்படி ஃபோன் பேசும் போது பவித்ரா மிருதுளாவிடம்
“மன்னி எங்க அப்பா உங்க கிட்ட ஏதோ கேட்கணுமாம் குடுக்கட்டுமா”
பவித்ராவின் அப்பா பவித்ராவைவிட புலம்ப ஆரம்பித்தார்
“ஏம்மா நீயே சொல்லுமா..சென்னையில நீங்களும் வீடு வாங்கிருக்கேங்கள் இல்லையா!! எந்த பில்டர் மா ஜன்னல்களுக்கு எல்லாம் க்ரில், வுடன் வார்ட்ரோப் எல்லாம் செஞ்சு தர்றா?”
“எல்லாத்துக்கும் தனியா பேமெண்ட் பண்ணினா அதெல்லாம் செஞ்சுத் தருவா!!”
“ம்…இதைத் தான் நானும் சொன்னேன் மா. ஆனா அந்த குவைத்துல ரெண்டு பேர் இருக்கா பாரு அவா தான் எல்லாத்துக்கும் காரணம்.”
“மாமா என்ன ஆச்சு? நீங்க சொல்லறது எனக்கு ஒண்ணுமே புரியலை”
“அவா ஆத்துக்காரர் மிஸ்டர் கவின் மைசூருல வாங்கியிருக்கற வீட்டில் இதெல்லாம் வச்சுத் தர்றானாம் பில்டர். அவன் ஈரோடு வீட்டிலும் அப்படித்தானாம். அதுக்கெல்லாம் தனியா பணம் குடுக்க வேண்டாமாம். வீட்டு விலையிலேயே எல்லாமும் அடக்கமாம்…அப்படீன்னு எங்க மாப்பிள்ளை பவின்ட்டயும் அவர் அப்பா அம்மாட்டையும் சொல்லி ஏத்திவிட்டுருக்கா. அவர் என்னடான்னா நான் தான் ஏதோ வீடு வாங்கத் தெரியாம வாங்கிருக்குற மாதிரி பேசறாரு”
விவகாரம் புரிந்த மிருதுளா இதில் தான் பேச ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து
“மாமா இதெல்லாம் நீங்களாச்சு அவாளாச்சு. என்கிட்ட ஏன் சொல்லறேங்கள். அவா அப்படி தான் நாங்களும் நிறையப் பட்டுட்டு தான் விலகி இருக்கோம். நீங்க ஏதோ கேட்கணும்னு சொன்னதா பவித்ரா சொன்னாளே என்னது அது? அதைக் கேளுங்கோ அவாளை எல்லாம் விடுங்கோ”
“ஆமாம் பார்த்தயா அதை மறந்துட்டேன். சரி நீங்க ரெண்டு கிரகப்பிரவேசம் செஞ்சிருக்கேங்களே உங்களுக்கு புடவை அப்புறம் வேஷ்டி சக்திக்கு டிரெஸ் எல்லாம் யார் எடுத்துத் தந்தா?”
“என்னோட அப்பா அம்மா தான் எடுத்துத் தந்தா மாமா. இதுல என்ன உங்களுக்கு சந்தேகம்?”
“கரெக்ட் யூ ஆர் வெரி கரெக்ட். அப்போ உங்க அப்பா அம்மாவுக்கு எதிர் மரியாதை யார் செஞ்சா? அதாவது அவாளுக்கு புடவை வேஷ்டி எல்லாம் யார் எடுத்துக் குடுத்தா?”
“நாங்க தான் மாமா இதுல என்ன?”
“நாங்க தான்னா உங்க மாமனார் மாமியாரா இல்ல நீயும் நவீனுமா?”
“மாமானார் மாமியாரா?!!! நீங்க வேற மாமா அவா எங்கேந்து எடுப்பா! இல்ல எடுத்திருக்கா? நானும் நவீனும் தான் எடுத்தோம். அதைத்தான் எங்க மாமனார் மாமியார்ட்ட குடுத்து என் அப்பா அம்மாவுக்கு எதிர் மரியாதை செய்ய வச்சோம். அவா பசங்களுக்கு கல்யாணம் கூட பண்ணி வைக்கலை. ஆளா மட்டும் தான் வந்து நிண்ணுண்டா இதுல அவா எங்கேந்து என் அப்பா அம்மாவுக்கு எதிர் மரியாதை எல்லாம் செய்யறது?”
“அது எப்படி மா உன் அப்பா அம்மா எல்லா சீரும் செய்யணும் ஆனா அவாளுக்கு நீங்களே தான் திருப்பி செய்யணுமா?”
“வேற வழி என்ன மாமா?”
“அதையே நாங்க எங்க பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் சீரு செய்யாம விட்டா உங்க மாமானார் மாமியார் விட்டிடுவாளா? சொல்லு?”
“நிச்சயம் விடமாட்டா. உங்க தலையை உருட்டு உருட்டுன்னு உருட்டிடுவா. இது தெரிஞ்சது தானே மாமா”
“அப்போ ஆவாளுக்குன்னா செய்யமாட்டா நாங்கன்னா மட்டும் செய்யணுமா?”
“அதை என்கிட்ட கேட்டு என்ன யூஸ் மாமா நீங்க அவா கிட்ட இல்லையா கேட்கணும்”
“எங்களுக்கு எதுக்கு எங்க மாப்பிள்ளையும் பொண்ணும் செலவழிச்சு எதிர் மரியாதை செய்யணும்ங்கறேன்?”
“மாமா எங்க மாமானார் மாமியாரால செய்ய முடியாதுங்கறது நாம எல்லாருக்குமே தெரிந்த விஷயம். பசங்களே அவா அவா கல்யாணத்தை அவா அவா சம்பாதிச்சு தான் செஞ்சுண்டா அதுவுமில்லாம நவீனையும் , கவினையும் படிக்கக் கூட வைக்கலை! அவா கிட்ட போய் இதை நீங்க தான் செய்யணும்னு நிலைமையை தெரிஞ்ச நாமளே எப்படி சொல்லறது?”
“ரைட் நீ சொல்லறது கரெக்ட். அவாளால செய்ய முடியாட்டி அவாளுக்கு அடுத்தப் படியா இருக்கறவா தானே செய்யணும். எதுக்கு என் மாப்பிள்ளையும் பொண்ணும் செய்யணும்ங்கறேன்?”
பவித்ராவின் தந்தை சுத்தி வளைத்து நவீன் மிருதுளா தான் செய்ய வேண்டுமென்பது போல பேச அதைப் புரிந்துக் கொண்ட மிருதுளா சட்டென அவரிடம்
“மாமா இவ்வளவெல்லாம் நானோ நவீனோ ஏன் என் அப்பா அம்மா கூட யோசிச்சதில்லை. எங்க மாமனார் மாமியார் நிலைமை புரிஞ்சிருந்ததால என் அப்பா அம்மாவும் அதை எல்லாம் பெரிசா எடுத்துக்கலை. இப்போ நீங்க சொல்லித் தான் இதை இவ்வளவு சீரியஸாக எடுத்துண்டிருக்க வேணுமோன்னு கூட நினைக்கத் தோனறது. அதுனால எங்க விசேஷத்துல இந்த பிரச்சினை எல்லாம் வரலை”
“அப்படி எல்லாம் விட்டுடக் கூடாது. நான் விட மாட்டேன்.”
“சரி மாமா அது உங்களுக்குள்ள. எனக்கு சக்தி ஸ்கூல்ல இருந்து வர்ற நேரமாச்சு. நான் டிபன் செய்யணும் ஃபோனை வச்சுடட்டுமா? நாளைக்கு பவித்ராட்ட பேசறேன்னு சொல்லிடுங்கோ. உங்களுக்கு எது சரின்னு படறதோ அதையே செஞ்சுக்கோங்கோ மாமா. நான் வச்சுடறேன் பை”
என்று ஃபோனை வைத்து விட்டு ஒரு பெருமூச்சு விட்டாள் மிருதுளா. பின் தனக்குத் தானே
“அம்மாடி எப்படி எல்லாம் கேட்கிறார். என் அப்பா அம்மாவும் இருக்காளே!!! அம்மா தாயே இப்படி எல்லாம் கூட யோசிப்பாளா!! அப்பப்பா”
என்று பேசிக்கொண்டே வேலையில் மும்முரமானாள். அன்று மாலை நவீன் வந்ததும் நடந்தவைகளை வழக்கம் போல ஒன்று விடாமல் கூறி முடித்தாள் மிருதுளா. அதை முழுவதுமாக கேட்டு முடித்த பின் நவீன்
“ஆமாம் என்னோட வீட்டையே தின்னுட்டு என்கிட்டயே ஏப்பம் விட்டுக் காட்டினவா!! இவரை எல்லாம் ஊதித் தள்ளிடுவா பாரு. ஆனாலும் அந்த மனுஷன் தன் பொண்ணை கல்யாணம் பண்ணிக் கொடுத்து இத்தனை வருஷத்துக்கு அப்புறம் அவா சம்மந்திகளுக்கு பதிலா நாம சீர் செய்யணும்னு சொல்ல எப்படி வாய் வந்தது?”
“அவர் டைரெக்ட்டா சொல்லலை நவீ”
“டைரெக்ட்டாவோ! இன்டைரெக்ட்டாவோ! அது எப்படி அவர் சொல்லலாம். ஏன் இதுக்கு முன்னாடி சீமந்தம் வளைகாப்பு பண்ணினா அப்போ நம்ம கிட்ட சொன்னாரா? இல்லை அதுக்கு அப்போ யார் சீர் செஞ்சாளாம்? இதை எல்லாம் நீ கேட்டிருக்கணும் மிருது. சும்மா விட்டிருக்கக் கூடாது”
“வேற வினையே வேண்டாம். யார் கண்டா நான் அப்படி கேட்கணும்னு தான் பேசினாளோ என்னவோ? அங்க நடக்கறது எதுவும் நம்ப நான் தயாரா இல்லைப்பா. ஏன்னா ஒரு நாள் ஃபோன்ல பேசும்போது இந்த பவித்ரா சொல்லறா ….அவளுக்கும் கஜேஸ்வரிக்கும் ஆகாதுன்னு உங்க அம்மாட்ட ரெண்டு பேருமா மாத்தி மாத்தி சொன்னாளாம். எதுக்குன்னு நான் கேட்டதுக்கு!! சொல்லறா….அப்படி அவா ரெண்டு பேரும் சொன்னா தான் உங்க அம்மா கஜேஸ்வரியைப் பத்தி பவித்ராட்டேயும், பவித்ரா பத்தி கஜேஸ்வரிட்டயும் அவாளோட உண்மையான அபிப்ராயத்தையும் ஏதாவது கம்ப்ளேயின்ட்டையும் இவா கிட்ட மனசு விட்டு சொல்லுவாளாம் அதை இவா ரெண்டு பேருமா டிஸ்கஸ் பண்ணிப்பாளாம்!! எப்படி இருக்கு பாருங்கோ? உங்க அம்மாவை இப்படி தான் முட்டாளாக்கணும். அவாளுக்கும் நல்லா வேணும். அதுனால இவா சொல்லறதை எல்லாம் நம்பி நான் பேச அது வேற விதமா போக…எதுக்கு? சொல்லறதை மட்டும் கேட்டுண்டேனா…நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்ப்பேன். அவர் சொல்லிட்டா நாம செய்யணும்னு ஒண்ணும் சட்டமில்லையே. நம்மளை மதிக்க மாட்டாளாம் ஆனா சீர் மட்டும் ப்ராம்ட்டா நாம செய்யணுமாக்கும். போதும் போதும் நாம செஞ்சதெல்லாம் போதும்ப்பா”
“பரவாயில்லையே மிருது !!தேறிட்ட!! எங்கடா நாமளே செய்திடுவோம்னு ஏதாவது சொல்லிடுவியோன்னும் அதுனால நமக்குள்ள பஞ்சாயத்து வந்திடுமோன்னு நினைச்சேன்…குட் இப்படியே இரு”
“அப்படி இருந்த என்னை இப்படி நினைக்க வச்சுட்டாளே நவீ!!! இதைத் தான் அடி மேல் அடி விழுந்தா அம்மியும் நகரும்ன்னு ஒரு பழமொழி சொல்லுவாளே அது போல!!”
என்று கூறிவிட்டு இரவு உணவு செய்ய அடுப்படிக்குள் சென்றாள்.
பவினின் கிரகப்பிரவேசமத்துக்கு செல்ல ட்ரெயினில் டிக்கெட் புக் செய்தனர் நவீனும் மிருதுளாவும். அவர்களின் கிரகப்பிரவேசத்திற்கு இரண்டே வாரங்கள் தான் இருந்தன. அப்போது ஒரு நாள் பவித்ரா மிருதுளாவுக்கு ஃபோன் செய்து
“ஹலோ மன்னி நாங்க மைசூருக்கு வர்றோம். எங்க கூட நம்ம மாமனார் மாமியாரும் வர்றா. அவா கூட எங்க ட்ரெயின் ல போனாலும் நான்ஏசி ல தான் டிராவல் பண்ணணும் என்ன பண்ண?”
“ஏன் அப்படி?”
“நம்ம மாமியாருக்கு தான் ஏசி வேண்டாமே அதுனால எல்லாருமே நான்ஏசில தான் எல்லா இடத்துக்கும் டிராவல் பண்ணிண்டிருக்கோம்ன்னா பார்த்துக்கோங்கோ. இப்போ மைசூருக்கும் அவா அம்மாக்காக நான்ஏசில தான் பவின் டிக்கெட் புக் பண்ணிருக்கார். என் பேச்செல்லாம் எடுபடுமா!! சொல்லுங்கோ. நான் என் பொண்ணை வச்சுண்டு நான்ஏசில டிராவல் பண்ணி பண்ணி கொசு எல்லாம் அவளை கடிச்சு ஒரே ராஷெஸ் ஆயிடுத்து. ஆனாலும் அவருக்கு அவர் அம்மாவின் சொல் தான் வேதவாக்கு.”
“அச்சச்சோ!! அது தான் கம்பளி குடுக்கறாளே அதைப் போர்த்திண்டு இருக்கலாமே!! ஒருத்தருக்காக நாலு பேரு நான்ஏசில டிராவல் பண்ணணுமா என்ன? இட்ஸ் டூ மச்”
“என்ன செய்ய !! அதெல்லாம் கேட்கவே கேட்காதீங்கோ”
“சரி சரி வாங்கோ வாங்கோ”
“எல்லாருக்கும் பத்திரிகை எல்லாம் அனுப்பியாச்சு மன்னி.”
“குட்.”
“சரி மன்னி வச்சுடறேன் மத்ததை நேர்ல பேசிப்போம் பை”
“ஓகே பை பவித்ரா”
என்று ஃபோனை வைத்தாள் மிருதுளா. அன்று மாலை நவீனிடம் பவித்ரா சொன்னதை சொல்லி…
“இதெல்லாம் டூ மச் இல்ல நவீ? ஆனாலும் உங்க அம்மா ரொம்ப தான் பண்ணறா”
“மிருது இவ்வளவு பட்டுட்டும் அவ சொல்லறதை நம்புறயே!!! உன்னை என்ன சொல்ல!!”
“ஏன் இதுல நம்பாம இருக்க என்ன இருக்கு?”
“அவ என்னமோ மாமியாருக்கு அடங்கின மாட்டுப்பொண் மாதிரி உன் கிட்ட நல்லாவே நடிச்சிருக்கா. அவ அப்பா கேட்ட கேள்வியை எல்லாம் கேட்டுட்டுமா அவளை நீ நம்புற!!! நீ வேணும்னா அவ வந்ததும் எல்லார் முன்னாடியும் கேளு அப்போ தெரியும் அவளோட வண்டவாளம்”
“அப்படியா சொல்லறேங்கள்!! அப்போ அவ என்கிட்ட பொய் சொல்லிருக்கானு சொல்லறேங்களா?”
“அப்படித் தான் எனக்கு தோனறது. நீ வேணும்னா அப்படி அட்ஜெஸ்ட் பண்ணிண்டிருப்ப!!! அவ எல்லாம் சான்ஸே இல்ல மிருது”
“உங்க அப்பா அம்மாவும் அவா கூட வர்றாளாம். வந்து மூணு நாள் தங்கப் போறாளாம்”
“இதுல ஏதோ இருக்கு ஆனா என்னன்னு தான் புரியலை. எதுக்கும் ஜாக்கிரதையா இருந்துப்போம். சரியா”
“பெத்தவாளும் கூடப்பிறந்தவாளும் நம்ம ஆத்துக்கு வந்தா சந்தோஷமா இருக்கணும் அதை விட்டுட்டு…. இப்படி நம்மளை நினைக்க வச்சுட்டாளே நவீ”
“என்ன பண்ண மிருது? நான் வாங்கிண்டு வந்த வரம் அப்படி”
“நாம நல்லதையே நினைப்போம். நமக்கு நல்லதே நடக்கும்”
“ம்…ம்… பார்ப்போம்”
இரண்டு நாட்களில் பவின், பவித்ரா, அனுஷா, ஈஸ்வரன், பர்வதம் ஆகியோர் டிரெயினில் வந்து இறங்கி டாக்ஸி பிடித்து நவீன் வீட்டிற்கு விடியற் காலையில் வந்து சேர்ந்தனர். அவர்களை வரவேற்று அவர்களுக்கு காபி போட்டுக் குடுத்தாள் மிருதுளா. அப்போது பர்வதம் ஒரு பையை மிருதுளாவிடம் கொடுத்தாள். அதில் கொஞ்சம் பழங்களும் சுவீட்டும் இருந்தது. அதை அடுப்படியில் வைத்து விட்டு மீண்டும் ஹாலுக்கு வந்து நவீன் சொன்னா மாதிரியே பவினிடம்
“ஏன் பவின் நான்ஏசில தானே வந்தேங்கள்”
“இல்லையே ஏசில தான் வந்தோம். எப்படி நாங்க நான்ஏசில வர்றது மன்னி?”
என்று பவினை முந்திக்கொண்டு பதிலளித்தாள் பவித்ரா. அவளின் பதிலைக் கேட்டு அதிர்ந்துப் போய் நவீனைப் பார்த்தாள் மிருதுளா. நவீன் தன் கண்களாலேயே “நான் சொன்னேன் இல்லையா” என்று சொல்ல …தான் மீண்டும் முட்டாளாக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாத மிருதுளா பவித்ராவிடம்
“என்னது ஏசியா? என்ன பவித்ரா அன்னைக்கு என்கிட்ட ஃபோன் ல என்னவோ மாமியாருக்கு ஏசி ஆகாது அதுனால எல்லா இடத்துக்கும் நான்ஏசி புக் பண்ணி தான் போக வேண்டிருக்குன்னும்…மைசூருக்கும் நான்ஏசி பெர்த்தில் தான் பவின் புக் பண்ணிருக்கார்ன்னும் சொன்னயே”
என்று சொன்னதும் பவின்
“இல்லையே நாங்க எல்லா இடத்துக்கும் ஏசில தான் டிராவல் பண்ணினோம்”
என்று கூறிக்கொண்டே என்ன நடக்கிறது என்பது போல முகத்தை சுளித்தவாரு பவித்ராவைப் பவின் பார்க்க உடனே பவித்ரா
“நானா சொன்னேன்!!! என்ன மன்னி நான் எதுக்கு அப்படி சொல்லப் போறேன்!!”
மிருதுளா மனதிற்குள் “அடிப் பாவி” என்று கூறிக்கொண்டே வெளியே பவித்ராவிடம்
“நீ சொன்னாய். அப்படி நான்ஏசிலயே டிராவல் பண்ணிணதால உன் பொண்ணுக்குக்கூட ராஷெஸ் வந்திடுத்துன்னு சொன்னயே!! இப்ப என்னமோ சொல்லாத மாதிரி நடந்துக்கற”
என்றதும் அதை கொஞ்சமும் காதில் விழாததுப் போல பவித்ரா சட்டென பவினிடம்
“பவின் நான் போய் அனுஷாவை குளிப்பாட்டிட்டு அப்படியே நானும் குளிச்சிட்டு ரெடி ஆகிடறேன் நாம போயிட்டு வந்திடலாம். மன்னி பாத்ரூம் எங்க இருக்கு”
என்றதும் மிருதுளாவுக்கு கோபம் வந்தது. ஆனாலும் அதை அடக்கிக் கொண்டு அங்கே என்று தன் கையை நீட்டிக் காட்டிவிட்டு அடுப்படிக்குள் சென்றாள். மற்ற அனைவரும் குளிக்க ஒவ்வொரு பாத்ரூமிற்குள் சென்றனர். அப்போது நவீன் மிருதுளா பின்னாடியே அடுப்படிக்குள் சென்றான். அவனைப் பார்த்ததும் மிருதுளா அவனிடம்
“நீங்க சொன்னது கரெக்ட் நவீ. எப்படி பொய் பேசறா அவ. அய்யோ அவகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும்ப்பா.!!! ச்சே இப்படியுமா பொய் சொல்லுவா”
“நான் சொன்னதை ஞாபகம் வச்சுக்கோ. என்நேரமும் எச்சரிக்கையா இருந்துக்கோ. அவ்வளவு தான்”
“ம்…ம்…ஆள் எப்படின்னு தெரிஞ்சுண்டுட்டேன் இல்லையா !!! இனி நான் பார்த்துக்கறேன். சரி லஞ்ச் ரெடி எல்லாத்தையும் டேஸ்ட் பார்த்துடுங்கோ. மத்தியானமா சாதம் மட்டும் வச்சா போதும். டிபனும் ரெடி ஆகிடும். நீங்களும் குளிச்சிட்டு வாங்கோ”
“ம்…சரி சரி …இனி எதுவும் அதைப் பத்தி நீ பேசிக்காத சரியா”
“என்ன மன்னி டிபன் பண்ணறேங்களா”
“ம்…ஆமாம். எல்லாம் ரெடி. நீங்க எல்லாரும் குளிச்சாச்சா?”
“நானும் அனுவும், மாமாவும், மாமியும் ரெடி. பவின் தான் குளிச்சிண்டிருக்கார்”
“ஆமாம் அப்பா அம்மான்னு கூப்பிடறதை விட்டுட்டு நீ ஏன் மாமா மாமின்னு கூப்பிடற?”
“எனக்கு என் அப்பா அம்மா தான்… அப்பா அம்மா… இவாளை எல்லாம் நான் அப்படி கூப்பிட மாட்டேன்.”
“ஓ!! சரி தான்!! சரி நம்ம சொந்தக்காரா எல்லாருக்கும் பத்திரிகை கொடுத்தாச்சா?”
“ம்..எல்லாருக்கும் போஸ்ட்ல அனுப்பியாச்சு மன்னி”
“ஃபோன் பண்ணி எல்லாரையும் இன்வைட் பண்ணியாச்சா?”
“நான் எங்காத்துக்காராள்ட்ட மட்டும் தான் பேசுவேன்… பேசினேன்.. இன்வைட்டும் பண்ணினேன். பவின் சைடு ஆட்களை எல்லாம் அவன் தான் கூப்பிட்டான். அவன் சைடு எல்லாம் நான் இன்வைட் பண்ணமாட்டேன்னு அவன்ட்ட சொல்லிட்டேன். அவன் வீட்டு சைடுலேந்து நான் இன்வைட் பண்ணிருக்கறது உங்களை மட்டும் தான் மன்னி”
“ஓ!!! அப்படியா!!! ரொம்ப பெரிய மனசு மா உனக்கு!! அப்போ பவின் உங்க ஆத்து மனுஷாளை இன்வைட் பண்ணலையோ!!”
“ம்…அது எப்படி மன்னி? அவன் கூப்பிடாமா எப்படி எங்காத்து மனுஷா வருவா? அவனும் தான் எங்காத்துக்காரளை இன்வைட் பண்ணினான்.”
“ம்…சூப்பர்!! சரி! சரி எங்கயோ கிளம்பணும்னு சொன்னயே எங்கே?”
“அதுவா எங்க சொந்தக்காரா அன்ட் ப்ரெண்ட்ஸ் நிறைய பேரு இங்க மைசூர்ல இருக்கா…அவாளுக்கெல்லாம் பத்திரிகை கொடுக்கணும் அதுதான் கிளம்பணும்னு சொன்னேன். அவா எல்லாரும் எங்காத்துல வந்து தங்குங்கோ! எங்காத்துல வந்து தங்குங்கோன்னு சொன்னா”
“போயிருக்கலாமே”
“இல்ல…பவின் தான் இங்க தங்கணும்ன்னு சொன்னான் அதுதான் வந்தோம்”
“ஓ!! ஓகே! ஓகே!”
“என்ன மன்னி நம்பாத மாதிரியே பேசறேங்கள்”
“நம்பிட்டேம்மா நம்பிட்டேன். உன்னை நம்பாமலா. சரி சரி வா எல்லாருமா டிபன் சாப்பிடுங்கோ.”
என்று எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக டைனிங் டேபிளில் கொண்டு வைத்தாள் மிருதுளா. அத்தனை ஐட்டங்களையும் பார்த்த பவித்ரா மெல்ல மிருதுளாவிடம்
“ஏன் மன்னி இதுகளுக்கு போய் இவ்வளவு எல்லாம் செட்சிருக்கேங்கள்? நாலு இட்லி மட்டும் போட்டா போதாது!!”
என்று ஈஸ்வரனையும் பர்வதத்தையும் படு கேவலமாக பேசினாள் பவித்ரா.
“நான் எல்லாருக்காகவும் தான் செய்தேன் பவித்ரா. நீங்களும் அவா கூட தானே வந்திருக்கேங்கள்!!”
என்று தன் மாமனார் மாமியாரை விட்டுக்கொடுக்காமல் பேசினாள் மகருதுளா.
“அவா தான் எங்க கூட ஒட்டிண்டு வந்திருக்கா மன்னி”
“சரி சரி வா வா”
என்று அனைவருக்கும் பறிமாறினாள். அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஈஸ்வரன் தன் பேத்தி அனுஷாவிடம்
“பார்த்தயா அனு குட்டி உன் பெரியம்மா எவ்வளவு செஞ்சிருக்கானு. எல்லாம் உன் அப்பா அம்மா வந்திருக்கானு தான் செய்திருக்கா தெரியுமா”
என்று ஏதோ அவர்களுக்காக செய்யாததுப் போல குத்திப் பேச. அதைக் கேட்டதும் மிருதுளாவின் மனம் வேலைக்காரன் திரைப்படத்தில் ரஜினிகாந்த் தன் தாத்தாவை “கிழவா கிழவா” என்று சொல்வாரே அதே போல சொல்ல….மேலும்
“இதுக்கு முன்னாடி நீங்க வந்தப் போதெல்லாம் நல்லா தானே சமைத்துப் போட்டேன்….உங்களுக்கெல்லாம் பவித்ரா தான் சரி. அவ உங்களை நடத்தறது தான் கரெக்ட். இவ்வளவு ஆசையா செஞ்சுக் குடுத்தா…பேச்சப் பாரு பேச்சை”
என்று சொல்லிக்கொண்டே நல்லா வேணும் என்பது போல தலையை ஆட்டினாள். அதை கவனித்த பவித்ரா
“என்ன மன்னி தானா தலையை ஆட்டறேங்கள்”
“ம்…அது ஒண்ணுமில்லை பவித்ரா”
என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றாள். அப்போது பர்வதம் மருதுளாவை அழைத்து
“எனக்கு இது எதுவுமே வேண்டாம் ஒரு கிளாஸ் மோர் மட்டும் தா போதும்”
என்று மிருதுளா செய்து வைத்த எதையுமே சாப்பிடவில்லை. மிருதுளாவும் ஏன்? என்ன ஆயிற்று? என்று ஏதும் கேட்காமல் ஒரு கிளாஸ் மோர் மட்டும் கொடுத்துவிட்டு சக்தியை ஸ்கூலுக்கு அனுப்பி வைத்தாள். சற்று நேரத்தில் எல்லாம் பவினும், பவித்ராவும் கையில் ஒரு கட்டு பத்திரிகைகளுடன் புறப்பட்டு அனுவையும் கூட்டிக் கொண்டு சென்றனர். அவர்கள் சென்றதும் பர்வதமும் ஈஸ்வரனும் ஹாலில் டிவிப் பார்த்துக் கொண்டிருந்தனர். நவீன் மிருதுளாவை அவன் அறையிலிருந்து அழைத்தான்
“என்ன நவீ என்ன வேணும்?”
“இங்க வா மிருது. கவனிச்சயா?”
“என்னத்த?”
“அவா ரெண்டு பேரும் கை நிறைய பத்திரிகையை எடுத்துண்டு கிளம்பினதை”
“ஆமாம் பார்த்தேன்”
“நாம இங்க இருக்கோம். நம்ம ஆத்துக்கு வந்துருக்கா. நம்மாத்தேந்தே மத்தவாளுக்கெல்லாம் பத்திரிகை குடுக்க போயிருக்கா ஆனா நமக்கு ஒரு பத்திரிகை தரலைப் பாரு”
“விடுங்கோ கிளம்பறதுக்கு முன்னாடி தருவாளாருக்கும்.”
என்று கூறி விட்டு குக்கரில் சாதம் வைக்க அடுப்படிக்குச் சென்றாள்.
அன்று மத்தியம் உணவருந்த வீட்டிற்கு வந்தனர் பவினும் பவித்ராவும். அதன் பின் எங்கும் செல்லவில்லை. அன்றிரவு ஒன்பது மணிக்கெல்லாம் படுத்துறங்கச் சென்றனர் ஈஸ்வரனும் பர்வதமும். ஆனால் நவீன், பவீன், மிருதுளா, பவித்ரா நால்வருமாக பேசிக் கொண்டிருந்ததில் கவின் கஜேஸ்வரி, ப்ரவீன் துளசி பற்றி கதை கதையாக சொன்னார்கள் பவினும் பவித்ராவும். பவின் அதிகாரத்தினாலும் ப்ரவீன் பணத்தினாலும் பாடாய் படுத்தியுள்ளார்கள் என்று கூறினர். ப்ரவீன் பவினின் பைக்கை பவின் ஊருக்கு சென்றிருந்த சமயம் அவனுக்கே தெரியாமல் விற்று காசாக்கியிருக்கிறான் என்று கூறினார்கள். அதுவுமில்லாமல் பவின் தன் தந்தைக்கு அவர் செலவுக்காக குடுத்திருந்த ஏ.டி.எம் கார்டை ப்ரவீன் உபயோகித்திருக்கிறான் என்றும் அதைக் கேட்க போய் பெரிய சண்டையானது என்றும் கூறினர். அனைத்தையும் கேட்டுக் கொண்டு மட்டும் அமர்ந்திருந்தனர் நவீனும் மிருதுளாவும். அதில் ஒரு விஷயம் இருவருக்கும் ஒத்துப் போனது. அது என்னவென்றால்…நவீனை எப்படி குழந்தைப் பிறந்தவுடன் வேலையை விட்டு குவைத் வந்து வேலைத் தேடச் கவின் சொன்னானோ அதே போல பவினிடமும் அவன் குழந்தை அனு பிறந்தவுடன் வேலையைவிட்டு விட்டு குவைத் வரச் சொல்லியிருக்கிறான். பேசிப் பேசி மணி ஒன்று ஆனதும் எழுந்து உறங்கச் சென்றனர். நவீனும் மிருதுளாவும் சென்று படுத்துக் கொண்டதும் நவீன் மிருதுளாவிடம்
“எனக்கு தெரியாமா நான் வாங்கின அனைத்து வீட்டுப் பொருட்களையும் வித்தா அன்னைக்கு!!! இப்போ அதையே இவனுக்கு செஞ்சதும் என்னமா குதிக்கரான். அன்னைக்கு வீட்டு டாக்குமெண்ட்டை எடுத்து வராம சாமர்த்தியமா உள்ளயே இருந்தவன் இன்னைக்கு அவனுக்குன்னா என்னமா பேசறான். அவாளுக்கு வந்தா ரத்தம் அதே நமக்குன்னா தக்காளி சட்னி எப்படி இருக்கு பாரு மிருது. அந்த கவினுக்கு எவ்வளவு கெட்ட புத்தி பாரேன். அப்படி பவினுக்கு வேலை வாங்கிக் கொடுக்கணும்னா அவன் கல்யாணத்துக்கு முன்னாடியே வாங்கிக் குடுத்திருக்க வேண்டியது தானே!! அவன் படிப்பு முடிஞ்சிட்டு ஆறு மாசம் சும்மா தானே இருந்தான். அப்பெல்லாம் விட்டுட்டு கரெக்ட்டா குடும்பம் குழந்தைன்னு ஆனதுக்கப்புறமா ஒவ்வொருத்தர்ட்டயா வேலையை விட்டுட்டு வரச்சொல்லிருக்கான் பாரேன்!! ஏன் அந்த ப்ரவீன் சரியான வேலையில்லாம சுத்திண்டிருக்கானே அவனை கூப்பிட வேண்டியது தானே! அது சொல்ல மாட்டான்”
“சரி அப்படியே நீங்க வேலையை விட்டுட்டு அங்க போணா கவினுக்கு என்ன லாபம் நவீ?”
“லாபமெல்லாம் ஒண்ணுமில்லை மிருது. அவனைப் பொருத்தவரை அவனை விட வேற யாரும் இந்த ஃபேமிலியில முன்னுக்கு வந்திடக் கூடாதுன்னு ஒரு நல்ல எண்ணம் தான் என் நல்ல தம்பிக்கு.”
“ச்சே!!! இப்படியுமா நினைப்பா மனுஷா”
“நினைக்கறாளே மிருது. நினைக்கறாளே!!”
“சரி நாளைக்கு சாட்டர்டே தானே நாம எல்லாருமா ஃபன் வேர்ல்டு போயிட்டு வரலாமா! குழந்தைகளுக்கும் ஒரு சேஞ்ச்சா இருக்கும்”
“ம்…ம்..எல்லாரும் எழுந்துக்கறது பொறுத்துப் பார்ப்போம். இப்போ நீயும் தூங்கு. காலையிலேந்து வேலை மேல வேலை பார்த்துண்டே இருந்துருக்க. குட் நைட்”
“குட் நைட் நவீ”
மறுநாள் காலை ஏழு மணிக்கு தான் எழுந்தாள் மிருதுளா. ஹாலில் தன் மாமனாரும் மாமியாரும் அமர்ந்திருந்தனர். எழுந்ததும் நேராக அடுப்படிக்குச் சென்று காபி டிகாக்ஷன் போட்டுவிட்டு பாத்ரூமுக்கு சென்று ஃப்ரெஷ் ஆகி வந்து மாமனாருக்கும் மாமியாருக்கும் தனக்கும் காபி போட்டுக் கொண்டு வந்து அவர்களுக்கு கொடுத்துவிட்டு ஹாலில் அமர்ந்தாள். அப்போது பர்வதம்
“அப்பாக்கு காலையில் ஐந்து மணிக்கெல்லாம் காபி குடிச்சு பழக்கம். இங்கே இப்போ மணி ஏழரை ஆயாச்சு”
என்று சொன்னாள். அதற்கு “போட்டுக்க வேண்டியது தானே” என்று உதடு வரை பதில் வந்தாலும் பிரச்சினையை தவிர்க்க அதை அப்படியே விழுங்கிவிட்டு காதில் விழாதது போலவே அமர்ந்திருந்தாள். நவீன் எழுந்து வந்ததும் அவனுக்கும் காபி போட்டுக் கொடுத்தாள் மிருதுளா. அப்போது பவின் அவன் ரூமிலிருந்து அனுவை கொண்டு வந்து தன் அம்மாவிடம் விட்டுவிட்டு மீண்டும் ரூமிற்குள் சென்று கதவடைத்துக் கொண்டு உறங்கினான். பவித்ரா எழுந்து வரவேயில்லை. மிருதுளா குளித்துவிட்டு வந்து ப்ரேக்ஃபாஸ்ட் செய்ய ஆரம்பித்தாள் அப்போது அனுவுக்கு ஹார்லிக்ஸ் கலந்துக் கொடுத்தாள். அனு அதை தன் பெரியம்மாவிடமிருந்து வாங்கிக் கொண்டு நேராக தன் அப்பா அம்மா உறங்கிக் கொண்டிருக்கும் அறையை நோக்கிச் சென்றாள். அதை கவனித்த பர்வதம் வேகமாக சென்று அனுவை தடுத்து
“டி அனு அங்க உன் அம்மா தூங்கிண்டிருக்கா டி. அவாளை ஏன் எழுப்பப் போறாய்? இங்கே வா…ஏய் மிருது இவ அந்த ரூம் பக்கம் போகாம பார்த்துக்கோ”
என்று சொன்னதும் மிருதுளாவுக்கு முன் டார்ட்டாய்ஸ் சுருள் சுழல்வது போல காலச் சக்கரம் பின்நோக்கிச் சுழன்றது. அவளையும் நவீனையும் அவர்கள் ரூமில் காலிங் பெல் வைத்து எழுப்பியதும், பக்கத்து வீட்டுப் பையனை வைத்து எழுப்பியதும், வாயும் வயிறுமாக இருக்கும் போது கூட தூங்க விடாமல் பாடாய்ப்படுத்தியதும் என அனைத்தும் அவள் முன் படம் போல ஒடியது. அப்போது அவள் அடுப்பில் வைத்திருந்த தண்ணீர் பாத்திரத்தில் தண்ணீர் வற்றிப் போய் பாத்திரம் அடிப்பிடிப்பதுக் கூட தெரியாது பழைய சம்பவங்களில் மூழ்கியிருந்தாள் மிருதுளா. அங்கே நவீன் வந்து அடுப்பை ஆஃப் செய்து விட்டு மிருதுளாவை உலுக்கினான். சட்டென கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்துக்கு வந்த மிருதுளா நவீனிடம்
“பார்த்தேங்களா பவினுக்கும் பவித்ராவுக்கும் உங்க அம்மா காவல் இருக்கிறதை. இதுல என்னையும் சேர்த்து காவலிருக்கச் சொல்லறா!!! பல வருஷத்துக்கு முன்னாடி நம்மளை தூங்க விடாம எவ்வளவு தொந்தரவு செய்தா ஆனா இப்போ அவா தூங்கறதுக்கு இவாளே காவலிருக்கா. அதை நினைச்சேன் சிரிப்பு வந்துடுத்து. கடவுள் இருக்கார் நவீனு இருக்கார்”
“ஆமாம் மிருதுளா ஆமாம்”
என்று இருவரும் மெல்லிய குரலில் பேசிக் கொண்டு சிரித்துக் கொண்டனர். பவின் எட்டு மணிக்கு எழுந்து வந்தான் ஆனால் பவித்ரா ஒன்பது மணிவரை உறங்கிக் கொண்டிருந்தாள். ஈஸ்வரனோ பர்வதமோ ஒன்றுமே சொல்லாதிருந்ததைப் பார்த்து வியந்துப் போனாள் மிருதுளா. அன்று மத்தியம் அனைவருமாக ஃபன் வேர்ல்டு சென்று வந்தனர். அவர்கள் பத்திரிகை தருவார்கள் என்று காத்திருந்த மிருதுளா நவீனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர்கள் ஊருக்கு கிளம்புவதற்கு முன் தினம் மத்தியம் உணவருந்தியதும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது பொறுக்க முடியாது மிருதுளா பவினிடம்
“பவின் எங்களுக்கு பத்திரிகை அனுப்பறதா சொன்னேங்கள் ஆனா இன்னைக்கு வரை பத்திரிகை வரலையே….யூஷ்வலா இது கவின் கஜேஸ்வரியோட ஸ்டைல் ஆச்சே!!”
அதைக் கேட்டதும் பவின் ஈஸ்வரனைப் பார்த்தான் உடனே ஈஸ்வரன் பதற்றமாகி
“நான் உங்களுக்கும் உன் அப்பா அம்மாக்கும் போஸ்ட் பண்ணி இரண்டு வாரமாச்சே!! வந்திருக்கணுமே”
“வந்திருந்தால் ஏன்ப்பா வரலைன்னு சொல்லப் போறோம். அவாளுக்கும் வரலைன்னு போன வாரம் ஃபோனில் கேட்டப்போ சொன்னா”
என்று மிருதுளா சொன்னதும் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர் ஆனால் ஏதும் பேசவில்லை.
அன்று மாலை ஒரு ஷாப்பிங் மாலுக்குச் சென்றனர். அங்கே பர்வதம் தன் மத்த பேரன், பேத்திகளுக்கும், பக்கத்து வீட்டு பெண்ணிற்கும் என ஏதேதோ பொருட்கள், விளையாட்டு சாமான்கள் எல்லாம் வாங்கினாள். ஆனால் சக்திக்கு எதுவுமே வாங்கிவரவில்லை. பவித்ரா சில பொருட்கள் வாங்கியதும் அங்கிருந்த ஒரு ரெஸ்டாரன்ட்டுக்கு சென்றுக் கொண்டிருக்கும் போது பவித்ரா தன் அப்பாவுக்கு கால் செய்தாள்
“ஹலோ அப்பா….மன்னியோட பேரெண்ட்ஸ்க்கு பத்திரிகை போகலையாம். நீ இன்னொரு பத்திரிகை குரியர் பண்ணிடறயா”
என்று மிருதுளாவுக்கு கேட்பது போல பேசினாள். மிருதுளாவும் கேட்டும் கேட்காதது போல இருந்துக் கொண்டாள். அன்றிரவு அவர்கள் அனைவரும் அவரவர் பைகளை பேக் செய்துக் கொண்டிருந்தனர். அப்போது மிருதுளா பவின் பவித்ரா திருமணம் ஆன பின்னும், குழந்தையுடனும் முதன்முதலாக வீட்டுக்கு வந்திருப்பதால் அவர்களுக்கென்று புடவை, வேஷ்டி, குழந்தைக்கு டிரெஸ், தங்கத்தில் மோதிரம், தோடு, வெள்ளியில் கொலுசு என்று வாங்கி வைத்திருந்ததை அவர்களிடம் கொடுத்தால் அதையும் பேக் செய்துவிட வசதியாக இருக்குமே என்றெண்ணி நவீனையும் அழைத்துக் கொண்டு பவின் பவித்ரா தங்கியிருந்த ரூமிற்கு சென்றனர். அங்கே தரையில் அவர்கள் வீட்டுக் கிரகப்பிரவேசப் பத்திரிகைகள் கிடந்திருந்ததைப் பார்த்த நவீன் மிருதுளாவிடம் கண் ஜாடைக் காட்டி அதைப் பார்க்கச் சொன்னான். அவளும் அதைப் பார்த்தாள். இருவரும் அவர்களுக்கென்று வாங்கி வைத்திருந்ததை கொடுத்துனர். அந்த அறையிலிருந்து வெளியே வந்து மூத்த தம்பதிக்கு எடுத்து வைத்திருந்த புடவை வேஷ்டியை எடுத்து வர இருவரும் அவர்கள் அறைக்குள் சென்றனர். அப்போது மிருதுளா நவீனிடம்
“நாம செய்ய வேண்டியதை நாம செஞ்சாச்சு நவீ. அதை அவர்கள் கிஃப்ட்டாக எடுத்துக் கொண்டாலும் சரி இல்லை பவித்ரா அப்பா சொன்னது போல சீர் ஆக எடுத்துக் கொண்டாலும் சரி அது அவா இஷ்டம். என்ன சொல்லறேங்கள்”
“நீ திருந்திட்டன்னு நினைச்சேன். ம்…ஹும் ….நீ எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்ட மிருது. சரி வா உன் ஆசை மாமனாருக்கும் மாமியாருக்கும் எடுத்து வச்சிருக்கயே அதையும் குடுத்துட்டு வருவோம்”
என்று கூறிக் கொண்டே சென்று அவர்களுக்கும் கொடுத்தனர் அப்போது பர்வதம்
“எங்களுக்கு எதுக்கு இதெல்லாம்? அவா ரெண்டு பேரு தான் கல்யாணமாகிட்டு மொதோ தடவையா உங்காத்துக்கு வந்திருக்கா.”
“பரவாயில்லை மா எடுத்துக்கோங்கோ”
என்று குடுத்துவிட்டு அவர்கள் அறையிலிருந்து வெளியே வந்து ஹாலில் அமர்ந்தனர் நவீனும் மிருதுளாவும். அப்போது நவீன் மிருதுளாவிடம் மெதுவாக…
“அவ்வளவு பத்திரிகை வச்சிருக்கா….நீ பத்திரிகை வரலைன்னு சொன்னதுக்கப்புறமும் ஒண்ணு எடுத்து நமக்கு தரலாம் இல்லையா!! ஆனா தரலைப் பாரேன் மிருது”
“இருங்கோ நாளைக்கு காலையில தானே கிளம்பறா அதுவரை பொறுமையா இருங்கோளேன். அப்படி நம்ம ஆம் வரைக்கும் வந்துட்டு பத்திரிகை தராமா போவாளா!!! அதுவுமில்லாம பவித்ரா அவ அப்பாகிட்ட ஃபோன்ல நாம மால்ல இருக்கும் போது பேசினா…என் பேரண்ட்ஸுக்கு பத்திரிகையை குரியர் பண்ண சொல்லிருக்கா. அப்படின்னா நமக்கு இங்கேயே தந்திடலாம்னு தானே நினைச்சிருப்பா! அதுதான் பொறுமையா இருங்கோன்னு சொன்னேன்…சரி சரி அவா காதுல கேட்டுட போறது”
என்று இருவரும் பேச்சை நிறுத்திவிட்டு குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் பேக்கிங் முடித்ததும் ஹாலுக்கு வந்து சற்றுநேரம் பேசிவிட்டு படுத்துறங்கச் சென்றனர். அப்போது நவீன் தங்கள் அறைக்குள் சென்றதும் மிருதுளாவிடம்
“இனி எப்போ பத்திரிகை தரப்போறான். நாளைக்கு விடியற் காலையில டிரெயின்.”
“அச்சச்சோ விடுங்கோப்பா. தந்தா போவோம் இல்லாட்டி போவேண்டாம் அவ்வளவு தானே”
“ஆனா நீ அப்படி இருக்க மாட்டியே. உனக்கு அதைப் புரிய வைக்கத்தான் நான் இவ்வளவு போறாடுறேன்”
“எனக்கு எல்லாம் புரியறது நவீ. எதுவும் புரியாம ஆரம்பத்துல இருந்தேன் உண்மை தான். ஆனா இப்போ அப்படி இல்லை. சரி காலையில சீக்கிரம் எழுந்துக்கணும் தூங்குங்கோ குட் நைட்”
“குட் நைட் மிருது”
மறுநாள் காலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து அவல் உப்புமா செய்து அதை யூஸ் அன்ட் த்ரோ டப்பாக்களில் பேக் செய்து. அதற்கு தொட்டுக் கொள்ள கொத்துமல்லி துவையல் செய்து அதையும் தனிதனியாக பேக் செய்து ஒரு பையில் அடுக்கி அதை டைனிங் டேபிளில் வைத்து விட்டு அனைவருக்கும் காபிப் போட்டுக் குடுத்தாள் மிருதுளா. அனைவரும் காபியை குடித்து விட்டு ஒவ்வொருவராக குளித்து கிளம்பினர். அனைவரும் ரெடி ஆனதும் டாக்ஸியை வரவழைத்தான் நவீன். அப்போது அவர்கள் கையில்… தான் பேக் செய்து வைத்திருந்த காலை டிபனை பவித்ராவிடம் கொடுத்தாள் மிருதுளா. அவர்கள் கிளம்பி காரில் ஏறுவதற்கு முன் நவீனிடமும் மிருதுளாவிடமும்
“கிரகப்பிரவேசத்தில் சந்திப்போம். கட்டாயம் வந்திடுங்கள்”
என்று கொஞ்சமும் கூசாமல் சொல்லிவிட்டுச் சென்றனர். நவீனுக்கு சரி கோபம் வந்தது.
அவர்கள் அங்கிருந்த மூன்று நாட்களுமே பர்வதம் மிருதுளா செய்த எதையுமே சாப்பிடாமல் வெறும் மோர் தயிர் சாதம் மட்டுமே சாப்பிட்டாள். மிருதுளாவும் ஏதும் கேட்டுக்கொள்ளவில்லை. அவளுக்கோ பயம் இதைக் கேட்கப் போய் அதை வைத்து ஏதாவது பிரச்சினை வந்துவிடுமோ என்று எண்ணி கேட்பதைத் தவிர்த்து விட்டாள்.
அவர்களை அனுப்பிவிட்டு வீட்டிற்குள் வந்ததும் நவீன் மிருதுளாவிடம்
“என்ன திமிரு பாரு. நம்ம ஆத்துலேயே இருந்துண்டு, இங்கேந்து மத்த எல்லார் ஆத்துக்கும் பத்திரிகைகளை கொடுத்துட்டு…நமக்கு ஒரு பத்திரிகை குடுக்கணும்னு தோணலைப் பாரேன். ச்சே!! இவா பண்ணற ஒவ்வொன்னும் எனக்கு இவா மேல வெறுப்பை அதிக மாக்கிண்டே போறது. இது எங்க போய் முடியுமோ!!!”
“விடுங்கோ நவீன். இவா வந்ததோட நோக்கம் எனக்கு நேத்து நைட்டு தான் புரிஞ்சுது.”
“அது என்ன?”
“இப்போ நம்ம ஆத்துக்கு திடீர்னு இத்தனை நாள்…இத்தனை நாள் என்ன? வருஷமா வராதவா வந்தா இல்லையா!!! சும்மாவா வந்திருப்பா? ஊர்ல எல்லார் கிட்டேயும் சொல்லிட்டு வந்திருப்பா. அப்போ ஊர் காரா எல்லாம் என்ன நினைச்சுப்பா சரி அண்ணா மன்னிக்கும் பத்திரிகை வைக்கத் தான் போறான்னு நினைச்சுப்பா….நினைச்சுப்பா என்ன இவா அப்படி தான் சொல்லிட்டே வந்திருப்பா….ஆனா இங்கே வந்து நமக்கு பத்திரிகை தரமா போயிட்டா. அப்போ நாம நாளைக்கு பத்திரிகை தரலைன்னு சொன்னா யாராவது நம்புவாளா!!! இது தான் இவாளோட இந்த விஸிட்டின் இரகசியம்ன்னு எனக்குப் படறது. ஏன்னா இவா கல்யாணத்துக்கு பத்திரிகை வரலைன்னு சொன்னோமில்லையா அதுக்காக தான் நம்ம ஆத்துக்கே வந்துட்டும் நமக்கு வேணும்னே தராம போயிருக்கா….அதுல அவாளுக்கு ஒரு சந்தோஷம். இருந்துட்டு போட்டுமே”
“ஓ!!! ஆமாம்…யூ ஆர் ரைட். என்ன மாஸ்டர் ப்ளானிங்!!! பரவாயில்லை மிருது நீ அவாளோட ப்ளான் எல்லாத்தையும் க்ராக் பண்ணற..சூப்பர்”
“ஆமாம் பதினஞ்சு வருஷ எக்ஸ்பீரியன்ஸ் இல்லையா சும்மாவா!!”
“ஆனா இப்படி பண்ணின அவா விசேஷத்துக்கு நாம போக வேண்டாம் பேசாம டிக்கெட்டை கேன்சல் பண்ணிடு”
“வேண்டாம் நவீ. அதுதான் ஃபோன்ல கூப்பிட்டிருக்காளே அதுவுமில்லாம வீட்டுக்கு வந்தும் சொல்லிருக்கா. ஸோ நாம போயிட்டு வந்திடுவோம்.”
“ஆனா பத்திரிகை தரலைன்னு யார்கிட்டேயும் நாம சொல்லக் கூடாது. ஏன்னா நாம சொல்லணும்னு தான் அவா இதெல்லாம் பண்ணிருக்கா!! நாம மூச் விடக் கூடாது”
“ம்…ஓகே!! டன். ஆனா இப்படி சூழ்ச்சியும் வஞ்சமும் நிறைஞ்ச ஃபேமிலில என்னால ரொம்ப நாள் தாக்கு பிடிக்க முடியும்னு தோனலை நவீ.”
“எதுக்கு தாக்குப் பிடிக்கணும்? வேண்டாம்னு நாம ஒதுங்கிடுவோம்னு தானே நான் சொல்லிண்டே இருக்கேன். நீ தான் கேட்க மாட்டேங்கறாய்”
“ம்…பார்ப்போம் என் பொறுமைக்கு அந்த கடவுள் கொடுக்கும் டெஸ்ட்டா நினைச்சுக்கறேன்.”
நல்ல புகுந்த வீடு கிடைத்தாலும் திருமணமானதும் கணவனைத் தன் வசப்படுத்தி குடும்பத்தையே பாடாய் படுத்தும் கஜேஸ்வரி, பவித்ரா, துளசி போன்ற பல பெண்களுக்கு மத்தியில் மிருதுளாவைப் போல குடும்பம் வேண்டுமென்ற எண்ணமுடைய பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இங்கே நவீனே மிருதுளாவை அவன் குடும்பத்தினரிடமிருந்து விலகச் சொல்கிறான்!!! அவள் அதை செய்ய சிரமப்படவே வேண்டாம் ஆனாலும் அதை பதினைந்து வருடங்களாக அவர்களின் பல துன்புறுத்தல்களுக்கும், அவமானங்களுக்கும் ஆளானாலும் அவள் இதுவரை செய்யாதிருக்கிறாள். இவளைப் போன்ற பெண்களை ஏமாளிகள் என்று எண்ணிக் கொண்டு மேலும் மேலும் பாடாய்ப்படுத்தும் குடும்பத்தினரே இங்கு அதிகம் உள்ளனர். விட்டுக் கொடுப்பவர் என்றுமே கெட்டுப் போவதில்லை என்பார்கள் ஆனால் அது எப்போதும் ஒருவர் மட்டுமே செய்துக் கொண்டிருந்தால் அது நியாயமல்லவே!!
தொடரும்…..
அத்தியாயம் 93: பட்ஜெட்டும்! பின்னணியும்
கவின் முறைத்ததும் கஜேஸ்வரி
“இல்ல கவின் சும்மா தான் பேசினோம்”
என்று மழுப்ப நினைத்ததும் கவின் அவளிடம் “உஷ்” என்று கூறி அவளை மேலும் அது சம்மந்தமாக பேசாதிருக்கச் செய்தான்.
மறுநாள் கவினும் கஜேஸ்வரியும் குழந்தைகளும் ஊருக்குக் கிளம்பினர். அவர்களுக்கு சாப்பிடுவதற்கு சப்பாத்தி மற்றும் உருளை சப்ஜீ செய்து கொடுத்தனுப்பினாள் மிருதுளா. அவர்கள் சென்று ஒரு மாத காலம் கழித்து நவீனை சந்திக்க வந்தனர் அவன் சித்தப்பா மகன் ராம் குடும்பத்தினர். அவர்களை வரவேற்று அவர்களுக்கு விருந்து சமைத்துக் கொடுத்து உபசரித்தார்கள் நவீனும் மிருதுளாவும். அனைவரும் சாப்பிட்டப்பின் அமர்ந்து பேசலானார்கள். அப்போது ராம் நவீனிடம்
“நவீன் இது உனக்கு சம்மந்தமில்லாத விஷயம் தான் ஆனாலும் கேட்கறேன்”
“என்ன ராம் என்னன்னு சொல்லு”
“இல்ல இந்த கவின் என் வைஃப் மீராவோட அண்ணா மச்சினன் வீட்டைப் பார்த்தான். வாங்கறேன்னும் சொல்லியிருந்தான். அதுனால அவாளும் வேற யாருக்கும் குடுக்காம வச்சிருந்தா…அவன் வாங்கறானா இல்லையான்னு கேட்கலாம்ன்னு ஃபோன் பண்ணினா… அவன் குவைத் போயாச்சுன்னு சொல்லறா…அதுவுமில்லாம அவனால எங்க ஃபேமிலிக்குள்ள பெரிய குழப்பமாயிடுத்து”
“அவன் தான் இந்த தடவை வந்திருந்தப்போ வேற புது அப்பார்ட்மெண்ட் வாங்கிட்டானே. அதுக்கு அட்வான்ஸும் கொடுத்துட்டானே. அதை உன் கிட்ட அவன் சொல்லலையா?”
“இல்லையே!! அதுவுமில்லாம இவளோட அண்ணா மச்சினனோட ஃப்ரெண்டு தான் வீட்டை காட்டக் கூட்டிண்டு போயிருக்கார். அவர் கிட்ட அண்ணா மன்னின்னு யாரையோ அறிமுகப்படுத்திருக்கான். அது மட்டுமில்லாம டிஸிஷனை அண்ணா மன்னியே சொல்லுவான்னும் சொல்லிருக்கான். இவ அண்ணா மச்சினன் என்னடான்னா….நீங்க தான் அண்ணா மன்னி அவன் கூட வீட்டைப் பார்க்கப் போயிருக்கேங்களே அப்புறம் ஏன் ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறேங்கள்ன்னு எங்கள்ட்ட கேட்கறான். நாங்க போகவேயில்லைன்னு சொன்னா…இல்லை அவன் அண்ணா மன்னியோட தான் வந்தான் அவாகிட்ட கேட்டுக்கோங்கோன்னு சொன்னான்னான்னு அடிச்சு சொல்லறான். ஒரே குழப்பமாயிடுத்து. ஏன்டா இவனுக்கு அந்த வீட்டைப் பத்தி சொன்னோம்னு ஆயிடுத்து. என் மச்சினன் கிட்ட நாங்க அந்த வீட்டைப் பார்க்க போகலைப்பான்னு சொல்லி அவனை நம்ப வைக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுத்து. இவனுக்கு வீடு இருக்குன்னு சொல்ல போய் என் ஃபேமிலி ல பெரிய குழப்பமாயிடுத்து நவீன்”
“இரு!! இரு!! அன்னைக்கு கவின் எங்களை விழுந்து விழுந்து அந்த வீட்டைப் பார்க்க அழைச்சுண்டு போனது இதுக்குத் தானா? அட பாவி!!! நான் கூட ஏதோ அண்ணா ஆச்சேன்னு வரச்சொல்லறான்னுப் பார்த்தா!!! அவனோட டிராமால எனக்கேத் தெரியாம என்னை ப்ளே பண்ண வச்சிருக்கான் பாரேன்”
“என்ன சொல்லுற நவீன் எனக்கு புரியலை”
“ராம்…உன் வைஃப் மீராவோட அண்ணன் மச்சினன் சொல்லும் அந்த அண்ணா மன்னி ….வீட்டைப் பார்க்க கவின் அழைச்சுண்டு போன அண்ணா மன்னி நாங்க தான்….ஆனா அவன் அந்த ப்ரோக்கர்ட்ட….அதாவது உன் அண்ணன் மச்சினனின் ஃப்ரெண்ட்….இவா தான் இங்க இருக்கற அண்ணா மன்னினும், எதுவா இருந்தாலும் இவா சொல்லுவான்னும் சொல்லிட்டுத் தான் கிளம்பினான்….அப்போ கூட நான் அவன்ட்ட கேட்டேன் ஏன் என்ட்ட கேட்கச் சொல்லறன்னு….அதுக்கு அதெல்லாம் அப்படி தான்….ஏதாவது சொல்லிட்டு கிளம்பணுமேன்னு சொன்னான்….அப்பவே எனக்கு டவுட்டா தான் இருந்தது…ஆனா இப்படி எங்களை நீங்கன்னு அவாகிட்ட யூஸ் பண்ணிப்பான்னு சத்தியமா நினைக்கலை….இப்போ நினைச்சாக் கூட ….எங்களை எப்படி முட்டாளாக்கிருக்கான்….ச்சே!!! இவா எல்லாம் எப்பவுமே திருந்த மாட்டா!!”
“ஓ!! கதை அப்படிப் போறதா!! அப்போ உங்களை கூட்டிண்டு போயி நீங்க தான் நாங்கன்னு சொல்லி வீட்டைப் பார்த்துட்டு கம்முன்னு போயிருக்கான் பாரேன்!!! இதுல நீ மட்டுமில்ல நவீன் … நம்ம ரெண்டு பேரையும் முட்டாளாக்கிருக்கான். என்ன ஒரு ப்ளானிங் அன்ட் எக்ஸிக்யூஷன் பாரேன். இந்த பித்தலாட்டமெல்லாம் தெரியாமயே போயிடும்ன்னு நினைச்சான் போல….இனி எந்த மூஞ்சியை வச்சுண்டு என்கிட்ட வருவான்? ச்சே!!! இந்த ஆங்கிள்ல நான் யோசிக்கக்கூட இல்லை தெரியுமா!!! எப்படிடா என் அண்ணன் மச்சினன் அண்ணா மன்னி வந்தா வீடப் பார்த்தான்னு அடிச்சு சொல்லறான்னு எவ்வளவு கன்ஃப்யூஸ் ஆனோம் தெரியுமா!! நம்ம ரெண்டு பேரையும் வச்சு என்னமா கேம் ஆடிருக்கான். எதுக்காக இப்படிப் பண்ணினான்? நேராவே வீடு வேண்டாம்னு சொல்லிருந்தா ஆச்சே!!”
“அவாளுக்கு என்னைக்குமே நேர் வழி எதுலேயுமே கிடையாது. அதுவுமில்லாம அந்த வீடு எண்பது லட்சம்….அதை வேண்டாம்னு சொன்னா…நீங்க அவாகிட்ட அவ்வளவு பணமில்லைன்னு நினைச்சுட்டா…அவா இமேஜ் என்ன ஆகும்!!! அதுதான் இந்த மாதிரி எல்லாம் என்னத்த சொல்ல? கவலையே படாதே அவா வேற மூஞ்சியை வச்சுட்டு உன்கிட்ட மறுபடியும் அவா எந்த தப்புமே பண்ணாத மாதிரி வருவா”
“சரி அப்போ இந்த பித்தலாட்டமெல்லாம் நாம பேசினதுமே வெளிச்சத்துக்கு வந்துடுத்தே இப்போ அவன் இமேஜ் ஸ்பாயில் ஆகாமையா இருக்கு”
“நீ ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்க மாட்டேங்கற ராம். அவா இமேஜே பணம் தான் …இதெல்லாம் ஒண்ணுமே இல்லை. சரி… இப்படி பண்ணிட்டா…அது நமக்கு தெரியவும் வந்துடுத்து….இதை நீயோ நானோ வெளில ஒருத்தர் இல்ல ரெண்டு பேர்ட்ட சொல்லுவோமா? அவ்வளவு தானே…. எல்லார்கிட்டயும் சொல்லமாட்டோமே..ஆனா அவா இந்த நேரம் என்ன பண்ணிருப்பா தெரியுமா? எல்லார்ட்டையும் நாங்க ராம் சொந்தகாரா வீடு பார்த்தோம் அது அந்த விலைக்கு வொர்த்தில்லைன்னும் அதுனால தான் நாங்க வேண்டாம்னு சொல்லிட்டோம்ன்னும் ஊரே பரப்பியிருப்பா தெரியுமா!! ஏதோ அவாளுக்கு எண்பது லட்சத்துக்கு வீடு வாங்க வசதியிருக்குன்னும் ஆனா அந்த வீடு சரிவரலைன்னும் சொல்லியிருப்பான். வீடு வாங்க பட்ஜெட் எண்பது லட்சம்னு சொல்லிட்டு அதுல பாதி விலையிலுள்ள வீட்டை ஏன் வாங்குறன்னு நானே அவன்ட்ட கேட்டேனே. அதுக்கு சரியான பதில் சொல்லாம மழுப்பிட்டான்”
“அதுதானே எங்ககிட்டயும் அவன் பட்ஜெட் எண்பது லட்சம்னு தான் சொன்னான். அதுனால தான் நான் அந்த வீட்டையே காட்டச் சொன்னேன்…ஆனா…ஏன் அப்படி செய்தான்”
“நீங்க ரெண்டு பேரும் மண்டையை உடைச்சிக்குற அளவுக்கு அது ஒண்ணுமேயில்லை. நவீன் நாம சென்னையில வாங்கின வீடு எழுபது லட்சம் இல்லையா!”
“ஆமாம் அதுக்கும் இதுக்கும் என்ன?”
“அவா என்.ஆர்.ஐ வேற அப்போ அவா பட்ஜெட் எண்பது சொல்லிண்டா தானே நீங்க சொன்ன அவா இமேஜ் காக்கப்படும். அதே நாம எண்பதுக்கு வாங்கியிருந்தா அவா பட்ஜெட் தொண்ணூறு ஆர் ஒரு கோடின்னு சொல்லிருப்பா….நீங்க சொன்ன அதே லாஜிக் தான் நாம யாரையும் தேடிப் போய் எதையும் சொல்ல மாட்டோம் ஆனா அவா இதை ஊர் முழுக்க நாங்க தான் பணத்துல பெரியவான்னு தண்டோரா போட்டிருப்பா!!! இதுதான் பட்ஜெட் எண்பது லட்சத்தின் பின்னணி. புரியறதா? அவா எங்களை எதுக்குமே மதிச்சுக் கூப்பிட்டதில்லை…அப்படி இருக்கும் போது திடீர்னு வீடு பார்க்க ரொம்ப அக்கறையா அழைச்சப்போ எனக்கு சந்தேகமாவே இருந்தது. அப்போ நவீன்ட்ட இதுல ஏதோ இருக்குன்னு சொல்லி நாம போக வேண்டாம்னும் சொன்னேன். ஆனா கவின் நவீனை கம்பள் பண்ணினான் வேறு வழியில்லாம தான் நாங்க அவா கூட போனோம். இனியாவது நாம ஜாக்கிரதையா இருப்போம்.”
“அட ஆமாம் மிருது நீ சொல்லறதும் சரி தான். அன்னைக்கு நீ சொன்னதைக் கேட்டு அவா கூட போகாமலிருந்திருந்தா இப்போ இப்படி புலம்பிண்டு இருந்திருக்க வேண்டாம்.”
“அப்படி சொல்லாதீங்கோ. நாம போனதால தானே அவா இப்படி இம்பர்சோனேஷன் கூட பண்ணுவான்னு தெரிஞ்சுக்க முடிஞ்சுது. ஸோ நாம ஏமாந்ததைப் பத்தியே நினைச்சுண்டிருக்காம அதிலிருந்து கற்றுக் கொண்ட பாடமா இதை எடுத்துப்போமே!!”
“எஸ் யூ ஆர் கரெக்ட் மிருதுளா. அவா என்ன வேணுனாலும் செய்யக் கூடியவான்னு தெரிஞ்சுக்க தான் இந்த இன்சிடெண்ட் நடந்திருக்குப் போல.”
“ஆமாம். மீரா ப்ளீஸ் நீ உன் அண்ணாகிட்ட விவரமா சொல்லி எங்க மேல எந்த தப்பும் இல்லைன்னு சொல்லிடுமா.”
“ஐய்யோ மிருதுளா நீங்க ரெண்டு பேரும் பிக்சர்ல இருக்கேங்கள்னு இப்போ தானே எங்களுக்கே தெரிய வந்தது. யூ டோண்ட் வரி. நான் என் அண்ணாகிட்ட எக்ஸ்ப்ளேயின் பண்ணிக்கறேன். ராம் நாம இன்னைக்கு இங்க வந்தது நல்லாதா போச்சு”
“எங்களுக்கும் தான். இல்லாட்டி நாங்க எங்களுக்கு தெரியாமையே இந்த ஆள் மாறாட்ட மோசடியில் ஒரு அங்கமாகிருப்போம். நீங்க வந்து சொன்னதுக்கு ரொம்ப தாங்க்ஸ் ராம் அன்ட் மீரா”
“அப்பப்பா நடந்ததை எல்லாம் நினைச்சா தலை சுத்தறது. ஆனா எவ்வளவு சிம்புளா மனசுல எந்த வித உறுத்தலும் இல்லாம செஞ்சுட்டு போயிட்டா”
“இதெல்லாம் விட பல மடங்கு செஞ்சிருக்கா ராம். அதுனால தான் நாங்க ஒதுங்கியே இருக்கோம். ஆனா அதையும் அவாளுக்கு சாதகமா பயன்படுத்திண்டு ஏதோ நாங்க எதுவுமே செய்யாம தள்ளியிருக்கோம்னு பரப்பிண்டிருக்கா. என்னமோ பண்ணிக்கோங்கோன்னு விட்டுட்டேன். இவாளுக்கெல்லாம் பதிலுக்கு பதில் குடுக்கலாம் ஆனா பிரயோஜனம் இல்லை அது தான் பேசாம இருக்கேன். இப்போ இந்த விஷயத்தையே நாங்க கேட்கறோம்னு வச்சுக்கோயேன் எங்கிட்ட உங்க மேல பழிப் போட்டு பேசுவா….அதே மாதிரி நீங்க கேட்டேங்கள்னா உங்ககிட்ட எங்க மேல பழியைப் போட்டுப் பேசி அதையும் சமாளிச்சுடுவா. சமாளிக்கறதோட நிறுத்த மாட்டா டெல்லி, பாம்பே, சென்னை, கல்கத்தானு நம்ம சொந்தக்காரா எல்லார்ட்டயும் விதவிதமா கதைக்கட்டி பரப்பிடுவா. நாமே மறந்த விஷயத்தை நமக்கும் நடந்த சம்பவத்துக்கும் சம்மந்தமே இல்லாத நபர் திடீர்னு ஒரு நாள் ஏதாவது விசேஷத்துல பார்க்கும் போது நம்மகிட்ட அதைப் பத்தி நமக்கே தெரியாத ஒரு வெர்ஷன் சொல்லுவா அது தான் அவாளோட டேலண்ட்.”
“அவாளை எல்லாம் பாம்புன்னு தாண்டவும் முடியாது பழுதுன்னு மிதிக்கவும் முடியாது. ஒதுங்கிப் போறது தான் உத்தமம்”
“நீங்க ரெண்டு பேரும் என்னப் பாடுப்பட்டேங்கள்ன்னு எங்ககிட்ட சொல்லலை ஆனா உங்க ரெண்டு பேர் பேச்சிலிருந்தே நீங்க என்னப் பட்டிருப்பேங்கள்ன்னு புரிஞ்சுக்க முடியறது. இந்த ஒரு இன்சிடெண்ட் போதுமே அதை நாங்க புரிஞ்சுக்க. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இந்த ஒரு ஆள் மாறாட்ட மோசடிப் போறாதா அவா உங்களை என்னென்னப் பண்ணிருக்கக்கூடும்ன்னு நாங்க யூகிக்க!!! இனி நாங்க ஏமாற மாட்டோம்ப்பா…. அவாகிட்டயிருந்து விலகியே இருப்போம்.”
“சரி ராம் ரொம்ப லேட்டாயாச்சு. கிளம்பலாமா”
“எஸ் மீரா கிளம்பலாம். சரி நவீன் நாங்க கிளம்பறோம். தாங்க்ஸ் ஃபார் தி நைஸ் டின்னர் மிருதுளா. நீங்களும் எங்காத்துக்கு வாங்கோ.”
“ஷுவர் ராம் நாங்க வர்றோம். தாங்க்ஸ் ஃபார் கம்மிங்.”
“அச்சோ நீ வேற நவீன். இன்னைக்கு இங்க வந்ததால் என் குடும்பத்தில் ஒரு குழப்பம் தீர்ந்தது. சரி குட்நைட் நவீன் மிருதுளா. குட்நைட் சக்தி”
“பை டா பத்திரமா வண்டியை ஓட்டு”
“பை சித்தப்பா, சித்தி, பை மஞ்சு”
“பை சக்தி”
என்று ராம், மீரா அவர்கள் மகள் மஞ்சு சென்ற பின் மிருதுளா டைனிங் டேபிளை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். மீதமான சாப்பாட்டை கண்ணாடி டப்பாக்களில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டே நவீனிடம்
“பார்த்தேங்களா நவீ!!! எவ்வளவு பெரிய வேலைப் பண்ணிருக்கா இந்த கவினும் கஜேஸ்வரியும்!!! நம்ம ஆத்துல இருந்துண்டே நம்மளையே நம்மக்கு தெரியாமலேயே ஆள் மாறாட்டம் பண்ண வச்சிருக்கான்னா….சும்மா சொல்லக் கூடாதுப்பா தே போத் ஆர் வெரி டேலண்டெட் தான்”
“இதெல்லாம் டேலண்ட் இல்ல மிருது. இது பேரு பக்கா ஃப்ராடுத்தனம். நீ சொன்ன அந்த எண்பது லட்சத்துப் பின்னணி ரியலி குட். நான் கூட அதை நினைச்சுப் பார்க்கலை. அது உண்மை தான்.”
“இத்தனை வருஷமா நம்ம ஆட்களைப் பார்க்கறேன் பழகறேன் இல்லையா நவீ. இதுகூடவா புரிஞ்சுக்க முடியாது. இட்ஸ் வெரி சிம்பிள் நவீ. நாம அவா வீடு வாங்கினதும் வீடு வாங்கணும்னு உங்களுக்கும் சரி எனக்கும் சரி எப்ப தோணித்து? அந்த கஜேஸ்வரியும் அவ அம்மாவுமாவும் பேசின பேச்சைக் கேட்டுத்தானே நமக்குன்னு ஒரு வீடு வேணும்னு தேணித்து. அப்பவும் அவாகிட்ட நாம ஏன் அப்படி பேசினேங்கள்ன்னு மல்லுக்கு நிக்காம அவா சொன்னதிலிருந்த நல்லதை எடுத்துண்டு வீடு வாங்கினோம். நாம வாங்கினதும் உடனே அதே வருஷம் கவினும் ஈரோட்டில் மறுபடியும் ஒரு வீடு வாங்கினான். அடுத்து நாம அந்த வீட்டை வித்துட்டு சென்னையில் நமக்கு பிடித்த மாதிரி இருந்த ஒரு வீடு வாங்கினோம் டாக்ஸ் விழாமலிருக்க ரைட்டா….அதுக்கு அவா என்ன பண்ணினா உடனே அவசர அவசரமா இங்கே மைசூர்ல வந்து ஒரு வீட்டை வாங்கிருக்கா…இல்லையா.”
“ஹேய்!!! மிருது யூ ஆர் ரைட். அதே தான்”
“இருங்கோ நான் இன்னும் சொல்லி முடிக்கலை. இது நம்மளோட அனாலிசிஸ் நாம மட்டுமே பேசிப்போம் ஆனா அவா இந்த நேரம் ஊர் முழுக்க என்ன தண்டோரா போட்டிருப்பா தெரியுமா?”
“என்ன? தண்டோரா போட ஒண்ணுமில்லையே”
“ஏன் இல்லை. நம்மளோட அனாலிசிஸை அப்படியே உல்டா ஆக்கி. நாம தான் பொறாமை பிடித்து போட்டிக்கு வாங்கறதா ஊர் முழுக்க பரப்பியிருப்பா. இது தான் உங்க ஃபேமிலியோட ட்ரெண்டே. அவா செய்யுற தப்பு, அனியாயங்கள், அவாளுக்குள் இருக்கும் போட்டி பொறாமைன்னு எல்லாத்தையும் யாருக்கு செய்தாளோ / யார் மேலே வஞ்சமிருக்கோ அவா மேலேயே திருப்பி, ஊர் முழுக்கப் பரப்பி அதைப் பத்துப் பேரை சொல்ல வச்சு நியாயப்படுத்திடுவா தெரியுமா? இது நான் கல்யாணம் பண்ணிண்டு வந்த நாள்ளேந்து நடக்கற விஷயம் தான்.”
“நீ சொல்லறது சரிதான். ஒரு பொய்யைப் பத்துத் தடவைச் சொன்னா உண்மையாகிடும்ங்கறா மாதிரி இவா பத்துப் பேர்ட்ட பரப்பி அதை உண்மையாக்கப் பார்க்கறா. ஆமாம் இதை ஏன் நீ என்கிட்ட முன்னாடியே சொல்லலை?”
“என்னத்துக்கு அதைச் சொல்லி நமக்குள் பிரச்சினைன்னு தான் சொல்லலை. அப்படியே சொன்னாலும் நாம ரெண்டு பேரும் யார்கிட்டேயும் கேட்டுண்டோ இல்ல அவா செய்தது இது தான் அது இல்லன்னு சொல்லிண்டோ போப்போறதில்லை எக்ஸெப்ட் ஒன் ஆர் டூ பீப்புள் இல்லையா!!! ஆனா அவா செஞ்சது, செய்யறது, பேசினது, பேசறதுன்னு எல்லாத்தையும் அந்த ஆண்டவன் பார்த்துண்டு தான் இருக்கார். அந்த ஆயிரம் கண்ணுடையாள் கிட்டேயிருந்து தப்ப முடியுமா. நாம ஒண்ணுமே செய்ய வேண்டாம் அவ பார்த்துப்பா. நாம தள்ளி நின்னு பொறுமைக் காத்தாலே போதுமானது.”
“அதுவும் சரி தான். நாம நம்ம வேலையைப் பார்ப்போம். ஆனா ஒண்ணு அடுத்த வருஷம் லீவுக்கு இங்கே வருவான். அப்படி வந்து நம்மளை அவன் வீட்டைப் பார்க்கக் கூப்பிட்டா நாம போகக்கூடாது…போகவேக்கூடாது….சரியா”
“ம்…சரி நவீ.”
போட்டா போட்டிப் போட்டுக் கொண்டு வாழ்வது வாழ்க்கையல்ல
அது வியாபாரம்.
பொறாமை… பொருள் இழப்பை மட்டுமின்றி தன்னையும் இழக்கச் செய்திடும்.
போட்டி பொறாமை இரண்டுமிருந்தால் தீய வழியை தேர்ந்தெடுக்க வைக்கும்.
அந்த தீய வழியில் பயணிக்கும் போது வரும் இடையூறுகளை அகற்ற எதையும் செய்ய வைக்கும்.
புத்தியிலுள்ள நல்லவைகளை மழுங்கச் செய்திடும்
இறுதியில் அசிங்கத்தையும் அவமானத்தையும் பரிசளித்திடும்
போட்டிப் பொறாமை போன்ற தீய குணங்கள் என்றுமே நல்ல முடிவைக் எக்காலத்திலும் கொடுத்ததில்லை, கொடுப்பதுமில்லை, கொடுக்கப்போவதுமில்லை.
பட்டாலும் சிலர் அதை விடுவதாக இல்லை. மீண்டும் மீண்டும் முயற்சிப்பர். மீண்டும் மீண்டும் தோல்வியையேத் தழுவுவார்கள்.
எத்துனை முறை முயற்சித்தாலும் நல்லவர்களுக்கு அவர்களின் நல்ல எண்ணங்களும், செயல்களும், அந்த கடவுளும் துணையிருப்பார் என்பதை பொறாமை நிறைந்த மனதால் ஏற்க முடியாது. அதுவே அவர்கள் அடுத்தடுத்து எடுக்கும் தீய முயற்சிகளுக்கு காரணமும் ஆகிறது.
தொடரும்……
அத்தியாயம் 92: இடமாற்றம், விசேஷம், இம்சை!
நவீனும் மிருதுளாவும் ஆன்லைனில் மைசூரில் வீடு தேடுதலிலும், சக்திக்கு ஸ்கூல் தேடுவதிலும் மும்முரமாக இருந்தனர். நான்கு வீடுகள் மற்றும் இரண்டு ஸ்கூல் பிடித்திருந்தது. அவற்றில் ஏதேனும் ஒன்றை முடிவுப் பண்ண அவர்கள் மைசூர் சென்று வர வேண்டும் ஆனால் சக்திக்கு பரீட்சை நடந்துக்கொண்டிருந்தது. ஆகையால் மிருதுளா சக்தியோடு வீட்டிலேயே இருந்துக்கொண்டாள். அவர்களுக்கு துணையாக தன் மாமனார் மாமியாரை பம்பாய்க்கு வரவழைத்தான். அவர்கள் வந்ததும் அன்று இரவு கிளம்பி மைசூர் சென்றான் நவீன். ஹோட்டலில் தங்கினான். மறுநாள் காலை எழுந்து ரெடியாகி அந்த ஹோட்டலிலேயே காலை உணவை அருந்திவிட்டு… மிருதுளாவுக்கும் அவனுக்கும் பிடித்திருந்த வீடுகளையும், ஸ்கூலையும் பார்த்து வரப் புறப்பட்டுச் சென்றான். அவற்றில் ஒரு வீட்டையும் ஒரு ஸ்கூலையும் பார்த்து விசாரித்து தேர்ந்தெடுத்து முடிவெடுக்க ஒரு நாள் கேட்டு வந்தவன், அன்றிரவே மிருதுளாவிற்கு வீடியோ கால் செய்து விவரங்களைக் கூறி அவளின் விருப்பத்தையும் கேட்டான். அதற்கு மிருதுளா
“உங்களுக்கு பிடிச்சிருக்கு தானே அப்புறம் எதுக்கு ஒரு நாள் டைம் எல்லாம் கேட்டேங்கள் நவீ? நாளைக்கே வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்துடுங்கோ அன்ட் ஸ்கூல் அட்மிஷன் பார்ம் ஃப்ல்அப் பண்ணிக் குடுத்துட்டு வாங்கோ”
“நீ இதுதான் சொல்லுவன்னு தெரியும் இருந்தாலும் கேட்கணும்னு எனக்கு தோணித்து அதுதான் அவா கிட்ட ஒரு நாள் கேட்டேன். சரி அப்போ நாளைக்கே எல்லாம் முடிச்சுட்டு நைட்டே கிளம்பிடறேன்”
“ஓகே நவீ.”
“பை. குட் நைட். சக்தி கிட்ட ஃபோனைக் குடு”
“ம்…அவ அவளோட தாத்தா பாட்டிக்கூட ஊனோ விளையாடிண்டிருக்கா. இதோ கூப்படறேன்..சக்தி …சக்தி ….அப்பா பேசணுமாம். சீக்கிரம் வா”
“என்ன மா?”
“ம்….இந்தம்மா உன் அப்பா உன் கிட்ட பேசணுமாம் டி. பார்த்தேங்களா நவீ!!! சரி அவகிட்ட குடுக்கறேன் நீங்க பேசிட்டு வச்சுடுங்கோ. பை நவீ. குட் நைட். இந்தா சக்தி நீ பேசு”
“ஹலோ அப்பா எப்ப வருவப்பா?”
“நான் …டே ஆஃப்டர் டூமாரோ மார்னிங் நீ எழுந்துக்கறதுக்கு முன்னாடி வந்திடுவேன்.”
“சூப்பர்ப்பா. எனக்கு நியூ ஸ்கூல் பார்த்தாச்சாப்பா?”
“ம்….சரி என்ன எக்ஸாம்ஸ் வச்சுண்டு நீ விளையாடிண்டிருக்க?”
“அதுவா!!! நான் அப்பவே படிச்சு முடிச்சுட்டேன் ப்பா அதுதான் விளையாண்டேன். சரி என் நியூ ஸ்கூல் பத்தி சொல்லுப்பா”
“படிச்சுட்டேன்னா ஓகே! சூப்பர் இன்டர்நாஷ்னல் ஸ்கூல் பார்த்திருக்கேன். நாளைக்கு போய் அட்மிஷன் பார்ம் எல்லாம் ஃபில் பண்ணிக் கொடுத்துட்டு வரேன் சரியா. நீ போய் இப்போ உன் ஊனோ கேம்மை கன்டின்யூ பண்ணிக்கோ. பை கண்ணா. குட் நைட். லவ் யூ செல்லக்குட்டி”
“ஓகேப்பா. பை பை…குட் நைட். லவ் யூ டூ அப்பா. வச்சுடவா”
என்று ஃபோனை கட் செய்தாள் சக்தி. பின் தன் தாத்தா பாட்டியுடன் சேர்ந்து தன் விளையாட்டைத் தொடர்ந்து விளையாடியப்பின் அனைவரும் படுத்துறங்கினர்.
மறுநாள் தான் கன்பார்ம் செய்த வீடு மற்றும் ஸ்கூல் வேலைகளை முடித்து விட்டு ஹாட்டலைச் செக் அவுட் செய்து நேராக பெங்களூர் ஏர்போர்ட் சென்று அங்கிருந்து பம்பாய் சென்றான் நவீன்.
ஒரு மாத காலம் நோட்டிஸ் பீரியட் முடிந்ததும் அனைத்து செட்டில்மென்ட்டும் பெற்றுக் கொண்டு அனைவரும் பம்பாயிலிருந்து பறந்து பெங்களூர் வந்திறங்கினர். அங்கிருந்து ஆஃபீஸ் காரில் ஆஃபீஸ் கொடுத்திருந்த இரண்டு பெட்ரூம் சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்டுக்குச் சென்றனர். ராமானுஜமும், அம்புஜமும் அவர்களுடன் சென்றனர். நவீனுக்கு சனி ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் அனைவரையும் ஒரு கார் புக் செய்து அவன் பார்த்திருந்த புது வீட்டையும் சக்திக்கான ஸ்கூலையும் காண்பித்தான். அனைவருக்கும் இரண்டும் மிகவும் பிடித்துப் போனது. வீட்டுக்குத் தேவையானதை ஞாயிறு மாலை சென்று வாங்கினார்கள். சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்டில் இருந்துக் கொண்டே நவீன் வேலையில் ஜாயின் செயதான். அவர்களின் பொருள்கள் அகர்வால் மூவர்ஸ் மூலம் செவ்வாய் கிழமை காலை அவர்கள் புது வீட்டில் வந்திறங்கியது. நவீனுக்கு வேலை இருந்ததால் மிருதுளா அவள் பெற்றோருடன் டாக்ஸியில் சென்று அனைத்தையும் எங்கெங்கு வைக்க வேண்டுமோ அங்கங்கு வைத்து வீட்டை செட் செய்து வைத்து விட்டு அப்படியே சக்தியை அவள் புது ஸ்கூலில் இருந்து அழைத்துக் கொண்டு சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் வந்தார்கள். அன்று மாலை நவீன் ஆஃபீஸிலிருந்து வந்ததும் பொருட்கள் வந்ததா என்ன செய்தார்கள் என்று விசாரித்தான். அதற்கு மிருதுளா
“எல்லாம் செட் செய்து வச்சாச்சு நவீ. நாளைக்கே கூட குடிப் போயிடலாம் என்ன சொல்லறேங்கள். சக்தி ஸ்கூல் பஸ்ஸுக்கு மட்டும் அட்ரெஸ் சேஞ்ச் குடுக்கணும்.”
“அப்படியா!!! எப்படி பண்ணின?”
“அப்பா அம்மா உதவியோட தான் இல்லாட்டி இவ்வளவு சீக்கிரம் செய்து முடித்திருக்க முடியாது நவீ. வாங்கோளேன் டின்னர் சாப்டுட்டு ஒரு டவுன்டு போய் பார்த்துட்டு வரலாம்”
“ம்….ஓகே போயிட்டு வரலாம்”
என்று அன்று இரவு உணவருந்தியதும் மிருதுளா தன் அம்மாவிடம்
“அம்மா சக்தியைப் பார்த்துக்கோ நானும் நவீனும் புது வீட்டைப் பார்த்துட்டு வந்துடறோம். முடிஞ்சா நாளைக்கே ஷிஃப்ட் பண்ணிடலாம்”
“ஓகே மிருது நாங்க சக்தியைப் பார்த்துக்கறோம். ஆனா நாளைக்கு ஷிஃப்ட் பண்ண வேண்டாம். அடுத்த வியாழக்கிழமை நல்ல நாளா இருக்கு அன்னைக்கு காலையில பால் காய்ச்சிட்டு அங்கேயே அன்னேலேந்து இருந்துடலாம். அடுத்த வியாழக்கிழமை வரை இந்த சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் இருக்குமோனோ!!”
“அதெல்லாம் ஒரு மாசத்துக்கு குடுத்திருக்கா மா. நான் தான் சீக்கிரமா புது வீட்டுக்கு போயிட்டா சீக்கிரம் செட்டில் ஆகிடலாமேன்னு சொல்லறேன்”
“பின்ன என்ன அடுத்த வியாழக்கிழமை போவோமே மிருது”
“சரி மா. அப்படியே செய்வோம். என்ன இன்னுமொரு நாலஞ்சு நாள் தானே. சரி மா நாங்க போயிட்டு வந்துடறோம்”
என்று கூறிவிட்டு நவீனும் மிருதுளாவும் டாக்ஸி வரவழைத்து அதில் ஏறிச் சென்றனர். புது வீட்டின் கதவைத் திறந்ததும் அசந்து போனான் நவீன். ஏனெனில் எல்லாம் செட்டாகி அழகாக வைக்கப்பட்டிருந்தது. ஜன்னல்களுக்கு கர்ட்டன்ஸ் கூட போடப்பட்டிருந்தது. அவன் எல்லா அறைகளுக்கும் சென்றுப் பார்த்தான். ஹால், கிட்சன், மூன்று பெட்ரூம்கள் என்று எல்லா இடமும் அழகாக வைக்கப்பட்டிருந்தது. பின் ஹாலில் சோஃபாவில் அமர்ந்திருந்த மிருதுளாவிடம் வந்து
“ஹேய் உங்க மூணு பேருக்கும் சரி வேலை போல!!! இப்படி எல்லாத்தையும் செட் பண்ண எவ்வளவு நேரமாச்சு?”
“நாங்க பொருள் வந்ததும் இங்கு வந்தோம்…. என்ன ஒரு பதினோரு மணியிருக்கும். அப்புறம் ஒரு நாலுமணிக்கெல்லாம் வேலையை முடிச்சிட்டு சக்தியை அழைக்க அவ ஸ்கூலுக்குப் போயிட்டோம். அங்கேந்து அப்படியே சர்வீஸ் அபார்ட்மெண்ட் வந்து சேர்ந்தோம்”
“சூப்பர் மா. எனக்கு ஒரு வேலையுமே நீங்க வைக்கலை. கிரேட்”
“நீங்க தான் காலையில போனா சாயந்தரம் ஆறு மணி வரைக்கும் வேலைப் பார்க்கறேங்களே அதுக்கு மேலே இது வேற பார்க்கணுமா என்ன!!”
“இல்ல மிருது இருந்தாலும். முதல்ல உன் அப்பா அம்மாக்கு தாங்க்ஸ் சொல்லணும். சரி வா போவோம். வீட்டைப் பூட்டிட்டு வா”
என்று பேசிக்கொண்டே வீட்டைப் பூட்டிவிட்டு சர்வீஸ் அப்பார்ட்மெண்ட்டுக்கு இருவரும் சென்றனர்.
ஐந்து நாட்கள் கடந்தது. வியாழக்கிழமை வந்தது. அவர்கள் புது வீட்டில் பால் காய்ச்சி அக்கம் பக்கத்தினரை அழைத்து அவர்களுடன் அறிமுகமாகிக் கொண்டனர். சக்திக்கும் விளையாடுவதற்கு நிறைய குழந்தைகள் இருந்தன. ஒரு வாரம் ஓடியது. ஒரு நாள் அம்புஜம்
“மிருது நாங்க வந்து ஒரு மாசத்துக்கு மேல ஆகறது. வர்ற ஞாயிற்றுக்கிழமை நாங்க சென்னைக்குக் கிளம்பலாம்ன்னு இருக்கோம் என்ன சொல்லுற?”
“ஏன் மா அங்கே போய் என்னப் பண்ணப் போறேங்கள்? இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டுத் தான் போங்கோளேன்”
“இல்லமா அங்க எங்க செடி கொடிகள் எல்லாம் எப்படி இருக்கோ தெரியலை.”
“அதைத் தான் தோட்டக் கார பார்த்துப்பாளே அப்புறம் என்ன?”
“ம்..அவா வீட்டுக்கு முன்னாடி இருக்குற தோட்டத்தை மட்டும் தான் சுத்தம் செய்வா. வீட்டுக்கு பின்னாடி இருக்குற தோட்டத்தை நாம் தான் காசு கொடுத்து சுத்தம் செஞ்சுக்கணும். இந்த ஒரு மாசத்துல காடு மாதிரி எல்லாச் செடிகளும் வளர்ந்திருக்கும். ஏன்னா மழை நல்லா பெஞ்சிருக்கே!!”
“ம்….சரி சரி உங்க ரெண்டு பேருக்கும் இப்போ அங்க போகணும்ன்னு தோணியாச்சு. ஓகே நவீ கிட்ட சொல்லி டிக்கெட் புக் பண்ணச் சொல்லறேன். ஓகே வா!!”
“ஓகே மா. சக்தியை நினைச்சா தான் எனக்கு கஷ்டமா இருக்கு”
“எதுக்கு கஷ்டப்படணும் மா!! அவ பாட்டுக்கு ஸ்கூல் க்ளாஸ்னு பிஸி ஆகிடுவா. ஸோ கவலைப் படாம போயிட்டு வா. லீவு விட்டா நாங்க அவளைக் கூட்டிண்டு வரோம்.”
என்று பேசிக் கொண்டதுப் படியே ஞாயிற்றுக்கிழமை ட்ரெயினில் ராமானுஜத்தையும், அம்புஜத்தையும் ஏற்றி விட்டனர் நவீனும் மிருதுளாவும். சக்தி இரண்டு நாட்களுக்கு சற்று சோர்வாக இருந்தாலும் பாட்டியுடன் வீடியோ கால் பேசியதில் தெம்பானாள்.
எல்லாம் செட்டில் ஆகி ஒரு வழக்கமான வாழ்க்கைக்கு திரும்பினர். ஒரு நாள் அவர்கள் கொண்டு வந்து திறந்திடாத பையை திறந்து அதிலிருப்பவைகளை அடுக்கி வைக்க முற்பட்டாள் மிருதுளா. அப்போது அந்த பையிலிருந்து ப்ரவீன் வீட்டு கிரகப்பிரவேசப் பத்திரிகையைப் பார்த்தாள். அன்று மாலை நவீன் வந்ததும் அங்கு சென்று வருவதைப் பற்றி பேசினாள். அதற்கு நவீன்
“போகணுமா மிருது. இப்போ தான் ஒரு வழியா இங்க வந்து ஒரு ரொட்டீனுக்கு வந்திருக்கோம். மறுபடியும் டிராவல் பண்ணணுமா?”
“என்ன நவீ நாம என்ன நாடு விட்டு நாடா போகணும். காருல ஏறி அழுத்தினா அஞ்சு மணிநேரத்துல ரீச் ஆகிடுவோம். கிரகப்பிரவேசமும் ஞாயிற்றுக்கிழமை ல தான் வச்சிருக்கா. ஸோ காலையில போயிட்டு நைட்டு வந்திடலாம் என்ன சொல்லறேங்கள்?”
“எத்தனைத் தடவை பட்டாலும் நீ திருந்தவே மாட்டியா மிருது.”
“நீரடிச்சு நீர் விலகாதும்பா கேள்விப்பட்டிருக்கேளா? நாம இறங்கிப் போறதால ஒண்ணும் கெட்டுட மாட்டோம். நம்மளை மதிச்சுக் கூப்பிட்டிருக்கா போயிட்டு தான் வருவோமே”
“என்னமோ சொல்லற!!! பட் ஐ ஆம் நாட் கன்வின்ஸ்டு. அந்த பழமொழி எல்லாம் அவாளுக்கு பொருந்தாது மிருது. ம்…சரி நீ சொல்லறதால போயிட்டு வருவோம். எனக்கு சுத்தமா நம்பிக்கையில்லை ஆனா உனக்கிருக்குற நம்பிக்கையை நான் கெடுக்க விரும்பலை. ஸோ சாட்டர்டே ஈவினிங் போயிட்டு சன்டே மார்னிங் அன்டென்ட் பண்ணிட்டு சன்டே நைட் இங்க வந்துடணும் அப்போ தான் நான் மன்டே ஆஃபீஸ் போக முடியும். சக்தி ஸ்கூல் போக முடியும். ஒரே நாள்ல எல்லாம் போயிட்டு வர முடியாது”
“ஓ!!! சன்டே மார்னிங் இல்லையா!!! மறந்துட்டேன். சரி அப்படியே பண்ணுவோம்”
அவர்கள் பேசிக்கொண்டது படியே ப்ரவீன் வீட்டு விசேஷத்தை அட்டென்ட் செய்தனர் நவீனும் மிருதுளாவும். அங்கே அனைவரிடமும் அவர்கள் மைசூருக்கு மாற்றலாகி வந்ததைத் தெரிவித்து சிலருக்கு அட்ரெஸும் கொடுத்தனர். ஈஸ்வரனும், பர்வதமும் இவர்களுடன் பேசவேயில்லை. இவர்களும் அவர்களுடன் பேசவில்லை. மிருதுளா மட்டும் தன் மாமியாரிடம் நலம் விசாரித்தாள். அதற்கு பர்வதமும் நன்றாக இருப்பதாக கூறிவிட்டுச் சென்றாள். மதிய சாப்பாட்டானதும் அங்கிருந்து புறப்பட்டு மைசூர் வந்தனர். அன்றிரவு நவீனிடம் மிருதுளா
“ச்சே ஐ ஆம் ஸோ டிஸ்ஸப்பாயின்டெட் நவீ”
“ஏன் என்ன ஆச்சு?”
“நான் உங்களை கல்யாணம் பண்ணிண்டு வந்ததிலிருந்து நம்ம ஆத்துல அடென்ட் பண்ணின விசேஷங்கள் ஒவ்வொன்னுலேயும் என் பெயர் கொடிக் கட்டிப் பறக்கச் செய்வா என் மாமியார் ஆனா இது தான் முதல் விசேஷம் என் பெயர் கொடியில் ஏறவில்லை. அப்போ எனக்கு ஏமாற்றமா தானே இருக்கும்”
“ஆமாம் ஆமாம்!!!! நிச்சயமா இருக்கும்!!! ஏன் இதை இங்க வந்து கேட்குற மிருது? அதை அங்கேயே உன் மாமியார்கிட்டேயே கேட்டு க்ளாரிஃபைப் பண்ணிண்டிருக்கலாமே!!”
“ம்….குட் நைட். எனக்குத் தூக்கம் வர்றது”
என்று நவீனின் நக்கல் பேச்சுக்கு பதிலளிக்காமல் உறங்கினாள் மிருதுளா. அவர்கள் ஒவ்வொரு வார இறுதியிலும் மைசூருவில் இருக்கும் புது அப்பார்ட்மெண்ட்ஸ், வில்லா சொசைட்டி என்று பொழுதுப் போக்கிற்காக பார்த்து வந்தனர். இந்த நேரத்தில் ஒரு நாள் மிருதுளாவின் வாட்ஸ்அப் நம்பருக்கு கஜேஸ்வரி கால் செய்தாள். பவினின் திருமணத்திற்கு பின் அன்று தான் முதல் முறையாக கூப்பிட்டாள் கஜேஸ்வரி. மிருதுளா வழக்கமாக எல்லோரிடமும் பேசுவதைப் போலவே
“ஹலோ கஜேஸ்வரி எப்படி இருக்க? கவின் எப்படி இருக்கான்? குழந்தைகள் எப்படி இருக்கா?”
“எல்லாரும் நல்லா இருக்கோம் மன்னி. நாங்க இப்போ குவைத்திலிருந்து ஊருக்கு வந்திருக்கோம். வர்ற ஞாயிற்றுக்கிழமை மைசூர் வர்றதா இருக்கோம். அதுதான் சரி நீங்க அங்க தானே இருக்கேங்கள்ன்னு தான் கால் பண்ணினேன்”
“ஓ!! அப்படியா!! அப்போ நேரா ஆத்துக்கே வந்திடுங்கோ. எப்போ வரேங்கள்னு மட்டும் ….டைம் சொல்லிடு சரியா.”
“ஆங் சரி மன்னி. அப்போ வச்சுடறேன். நேர்ல பேசிக்கலாம்”
“ஓகே! பை! டேக் கேர்”
என்று ஃபோனை வத்தாள். அன்று மாலை நவீன் வீட்டுக்கு வந்ததும் கஜேஸ்வரியின் ஃபோன் கால் பற்றிச் சொன்னாள் மிருதுளா. அதைக் கேட்டதும் நவீன்
“என்ன திடிர்ன்னு ஃபோன், வரவு எல்லாம். அவன் தான் பெரிய இவன் மாதிரி பவின் கல்யாணத்துல இருந்தானே!!! இப்போ எதுக்கு இங்க வரானாம்? இதுல ஏதோ இருக்கு மிருது. அவா எல்லாம் சும்மா வர மாட்டா”
“என்னவா இருந்தா நமக்கென்ன நவீ? நம்மளை எதுவும் படுத்தாம இருந்தாலே போதாதா?”
“தெரியாது ….பார்ப்போம்”
ஞாயிற்றுக் கிழமை வந்தது. அன்று மதியம் கவின், கஜேஸ்வரி, அவர்களின் பிள்ளைகள் சௌபர்னிகா, ஆகாஷ் ஆகியோர் நவீன் வீட்டிற்கு வந்தனர். மிருதுளா நன்றாக சமைத்து வைத்திருந்தாள். அவர்களை வரவேற்று அனைவருமாக அமர்ந்து சாப்பிட்டனர். உணவருந்தியதும் கவின் நவீனிடம்
“நவீன் நாங்க இங்க இரண்டு அப்பார்ட்மென்ட் பார்த்திருக்கோம். ஒண்ணு பழைய அப்பார்ட்மெண்ட் ரீசேல் ப்ராப்பர்ட்டி நம்ம ஒண்ணுவிட்ட சித்தபா மகன் ராம் இருக்கானே அவனோட ஃப்ரெண்டோட ப்ராப்பர்ட்டி அது. மற்றொன்று அன்டர் கன்ஸ்ட்ரெக்ஷன்…இதுல கஜேஸ்வரி ஃப்ரெண்டு ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கிருக்கா.”
“எங்கே இங்க மைசூர்லயா?”
“ஆமாம்”
“எதுக்கு நீ மைசூர்ல இன்வெஸ்ட் பண்ணப் பார்க்குற?”
“அதுதான் நீயே சொல்லறையே இன்வெஸ்ட்மென்ட்டே தான்.”
“சரி அதுக்கு?”
“அதுதான் நாளைக்கு நீயும் மன்னியும் வந்து பார்த்து எது வாங்தறது நல்லதுன்னு சொன்னேங்கள்னா…”
“இங்கே பாரு கவின் கல்யாணம், நகை, வீடு இது மூணுலையும் நாமே தான் முடிவெடுக்கணும். இந்த மூணு விஷயத்துக்கு எப்போதுமே அடுத்தவாகிட்ட அபிப்பிராயம் கேட்கக் கூடாது. ஸோ நான் அபிப்பிராயம் சொல்லவும் விரும்பலை. ஐ ஆம் சாரி.”
“இல்ல பார்க்கறதுக்காவது வாங்கோளேன்”
“ம்….சரி வரோம்”
“நாளைக்கு முதல்ல அந்த ராம் சொன்ன வீட்டைப் பார்ப்போம். அதைக் காமிக்க ராம் ஃப்ரெண்டோட ப்ரோக்கர் வருவார். அப்புறமா புது பில்டிங்கைப் பார்க்கப் போவோம்”
“ம்…சரி சரி.”
அன்று மாலை அனைவரையும் பீட்சா சாப்பிட அழைத்துச் சென்றான் கவின். அனைவரும் டின்னருக்கு பீட்சா சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு வந்தனர். மறுநாள் விடிந்ததும் சக்தியை ஸ்கூலுக்கு அனுப்பிய பின் கிளம்பி வீடு பார்க்க அழைத்துச் சென்றான் நவீன். அவர்கள் சொந்தக்கார பையனான ராம் நவீனின் தம்பி ஆவான். கவினுக்கு அண்ணன் ஆவான். அந்த அப்பார்ட்மெண்ட் வாசலில் காரைப் பார்க் செய்து விட்டு வந்தான் நவீன் அப்போது கவின் யார் கூடயோ பேசிக் கொண்டிருந்தான். நவீன் அங்கே சென்றதும். பவின் அந்த நபரிடம்
“இவா தான் என் அண்ணா மன்னி. நவீன் இவர் தான் நேத்து நான் சொன்னேனே மிஸ்டர் வருண்.”
“ஆங்!! ஹாய் மிஸ்டர் வருண்”
என்று கைக்குலுக்கிக் கொண்ட பின் வீட்டைப் பார்க்கச் சென்றனர். கவினும் கஜேஸ்வரியும் சரியாகவே அந்த வீட்டைப் பார்க்கவில்லை ஏதோ பார்க்ணுமே என்று அவசர அவசரமாக பார்த்துவிட்டு அங்கிருந்து புரப்படும் போது அந்த ப்ரோக்கரிடம் கவின்
“நாங்க எங்க டிஸிஷனை அண்ணா கிட்ட சொல்லிடறோம் அவர் உங்களுக்குச் சொல்லுவார்”
என்று நவீனைக் காண்பித்துச் சொன்னான். அப்போது பேசாமலிருந்த நவீன் காரில் ஏறியதும்
“ஏன்டா நீ பாட்டுக்கு அண்ணா சொல்லுவார்ன்னு சொல்லற!!! நான் ஏன் சொல்லணும்?”
“அதெல்லாம் அப்படித் தான் விடு விடு. நீ ஒண்ணும் சொல்ல வேண்டியதில்லை நவீன்”
“அப்புறம் ஏன் அவர்கிட்ட அப்படிச் சொன்ன?”
“ஏதாவது சொல்லித் தானே அங்கேந்து கிளம்ப முடியும். அதுக்காக தான் சொன்னேன்.”
“என்னமோ போ”
என்று பேசிக்கொண்டே கவின் கூறிய புது பில்டிங்குக்கு முன் வண்டி நின்றது. ஓரமாக பார்க் செய்து விட்டு உள்ளே சென்றனர். அது ஒரு நாற்பது வீடுகள் கொண்ட அப்பார்ட்மெண்ட்ஸ். அந்த பில்டரிடம் கவின் நவீனை அறிமுகப்படுத்தாததால் தானாக தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான். அப்போது அவர் நவீனின் வேலை பற்றி எல்லாம் கேட்டு அது சம்மந்தமாக பேசி முடித்ததும் நவீன் அவரிடம்
“இங்க உங்க அப்பார்ட்மெண்ட் ல ஸ்குவேர் ஃபீட் என்ன விலை?”
என்று கேட்க உடனே அந்த பில்டர் நவீனிடம்
“உங்களுக்கு இங்க வேண்டாம் சார் எங்களோட வில்லா ப்ராப்ர்ட்டி பக்கத்துலேயே ஒண்ணு ரெடி ஆகிக்கிட்டிருக்கு அதை வேணும்னா பாருங்களேன்”
என்றதும் நவீன் பதிலளிப்பதற்கு முன் கவின் முந்திக் கொண்டு
“ஏன் எங்களிடம் அந்த ப்ராப்பர்ட்டிப் பத்தி ஒண்ணுமே சொல்லலையே நீங்க? ஏன் நாங்க எல்லாம் அங்க வாங்கக் கூடாதா? இல்லை வாங்க முடியாதுன்னு நினைச்சுட்டிங்களா?”
என்று அவன் கேட்ட விதத்திலிருந்து அவன் மனதிலிருந்த பொறாமை குணம் தலைத்தூக்கியதை உணர்ந்தாள் மிருதுளா. உடனே அந்த பில்டர் கவினிடம்
“அதுக்கில்ல சார்….நீங்க அப்பார்ட்மெண்ட் தான் வேணும்னு சொன்னதால இதைக் காண்பித்தோம். அவர் எதுவும் சொல்லாததால அந்த வில்லா ப்ராஜெக்ட்டையும் சொன்னேன் அவ்வளவு தான். இதுக்கு ஏன் நீங்க இவ்வளவு ஆவேசமா பேசறீங்கன்னு எனக்கு புரியலை.”
“ம்…ம்…..எங்க கிட்டேயும் பணமிருக்கு அதுவும் என். ஆர்.ஐ பணம் சார். எங்களுக்கும் அதை காமிச்சிருக்கலாம். பரவாயில்லை…சரி நாங்க பார்த்த வீட்டை மறுபடியும் பார்த்துட்டு வரோம்…நவீன் வர்றயா?”
“ம்…வரேன். ஓகே சார் நைஸ் மீட்டிங் யூ. நான் போய் பார்த்துட்டு வரேன்.”
“ப்ளஷர் இஸ் மைன் சார். போயிட்டு வாங்க.”
என்று பேசிவிட்டு வீட்டைப் பார்க்க அனைவரும் சென்றனர். அப்போது நவீன் கவினிடம்
“நீங்க ஏற்கனவே இந்த வீடைப் பார்த்திருக்கேங்களா?”
“ம்…ஆமாம் போன தடவை வந்தப்போ பார்த்திருக்கோம்…அப்போ நீங்க மைசூர் வரலை.”
“ஓ!! ஓகே. அப்போ இது தான்ன்னு டிசைட் பண்ணிட்டேங்கள்னா அப்புறம் ஏன் ராம் ஃப்ரெண்டோட வீட்டைப் பார்த்தேங்கள்?”
“அது….அது வந்து அவன் சொன்னதால பார்த்தோம். அதுவுமில்லாம ரெடி டூ மூவ் இன் வீடுன்னா ரென்ட்டுக்கு விடறது ஈஸி. இப்போ இந்த வீடுன்னா ரென்ட்டுக்கு விட இன்னும் ஒரு வருஷம் காத்திருக்கணும். பணம் வீணா தானே முடங்கும். அதுதான் எதுக்கும் அதையும் பார்த்திடலாம்ன்னு போனோம்.”
“ஓ! ஓகே.”
என்று அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். மிருதுளா காலையிலேயே சமைத்து வைத்து விட்டு தான் சென்றிருந்தாள். வீட்டுக்கு வந்ததும் குக்கரில் சாதம் மட்டும் வைத்துவிட்டு டிரெஸ் மாற்ற சென்றாள். அனைவரும் ப்ரெஷாகி வருவதற்குள் எல்லாம் ரெடி செய்தாள் மிருதுளா. அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். பின் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது கவினுக்கு ஃபோன் வந்தது. அதைப் பேசிவிட்டு வந்து
“கஜேஸ் அந்த பில்டர் என் டிமான்ட்ஸ் எல்லாத்துக்கும் ஒத்துண்டுட்டான். விலையும் நாம சொன்னதுக்கு வரான். டாக்குமெண்ட் ரெடியாம் கையெழுத்துப் போட்டு அட்வான்ஸ் குடுக்கறேங்களான்னு கேட்டு தான் ஃபோன் பண்ணினான்.”
“அப்புறம் என்ன குடுத்திடுங்கோ. அதுதான் என் ஃப்ரெண்டும் பாதி பணம் செட்டில் பண்ணிட்டாளே. பின்ன என்ன குடுத்துட்டு டாக்குமெண்ட் ல கையெழுத்துப் போட்டுட்டு வாங்கோ”
“அப்படி என்னாடா டிமாண்ட் பண்ணின?”
“அதுவா எல்லா பாத்ரூமுக்கும் ஷவர் என்க்ளோசர். மாடுலார் கிட்சன். அன்ட் ப்ரைஸ் அவன் சொன்னது ஐம்பத்ரெண்டு லட்சம் ஆனா நான் கேட்டது நாற்பத்தைந்து லட்சத்துக்கு. அதுக்கும் ஒத்துண்டுட்டான்”
“எப்படி எப்படி ஏழு லட்சத்தையும் குறைத்து எல்லாமும் செய்துத் தரேன்னும் சொல்லிருக்கானா? நல்லா விசாரிச்சயா?”
“எங்களுக்கு இவ்வளவு செய்து தரேன்னு சொன்னதுக்கப்புறமா தான் பணம் தருவேன்னு இல்ல சொல்லிருந்தேன். அதுவும் அட்வான்ஸ் மட்டுமே ஹாட் கேஷா இருபது லட்சம் தரேன்னு சொல்லிருக்கேன். இதை எல்லாம் இப்போ கஜேஸ் ஃப்ரெண்டுட்ட சொன்னா அவ்வளவு தான் . சரி நான் கிளம்பட்டும்”
என்று கஜேஸ்வரி சொன்னதுக்கு சரி என்று சொல்லி விட்டுப் புறப்பட்டான் கவின். அன்று நவீனுக்கு ஆஃபீஸ் வேலை நிமித்தமாக பெங்களூர் போக வேண்டியிருந்ததால் அவன் அவர்களிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினான். கவின் டாக்ஸி வைத்துக் கொண்டு மீண்டும் பில்டரை சந்திக்கச் சென்றான். அப்போது வீட்டில் குழந்தைகளுடன் இருந்தனர் மிருதுளாவும், கஜேஸ்வரியும். கஜேஸ்வரி மிருதுளாவிடம்
“மன்னி இப்போ இந்த வீட்டை வாங்கினோம்னா மாசம் இரண்டு லட்சம்ன்னு கொடுத்து ரெண்டே வருஷத்துல அடைச்சிடுவோம். எங்களுக்கு இந்த லோன் போடுற வேலையே இல்லை. அதுவுமில்லாம கவின் கெட்டிக்காரர் மன்னி. அண்ணா மாதிரி இல்லை. அடாவடியா பேரம் பேசுவார். பாருங்கோளேன் பேசி பேசி விலையையும் குறைச்சு வசதிகளையும் செய்ய வச்சுட்டார். அவர் எப்போதுமே இப்படி தான். எதற்கும் பேசாமல் ஒதுங்கி எல்லாம் அண்ணா மாதிரி போக மாட்டார்.”
என்று கம்பேரிஸன் மோட்டிலேயே பேசியஸமிருதுளாவை வெறுப்பேற்ற நினைத்த கஜேஸ்வரியிடம் மிருதுளா
“நல்லது தானே கஜேஸ்வரி. நம்ம கையில அஞ்சு விரலும் ஒரே மாதிரியா இருக்கு? ஒவ்வொண்ணும் ஒவ்வொரு மாதிரி.. ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு விசேஷம் இருக்கு. அது மாதிரி தான் மனுஷாலும். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு குணாதிசயங்கள் ஒவ்வொரு திறமையிருக்கு. அது போல கவினுக்கு இந்த திறமை அவ்வளவு தானே! நவீனுக்கு வேறு விதத்தில் திறமையிருக்கு. இந்த பூமில யாருமே எந்த திறமையுமே இல்லாம பொறக்கறதில்லை. கடவுள் அப்படி யாரையுமே படைக்கறதுமில்லை. இந்தா காபி எடுத்துக்கோ. குட்டீஸ் இந்தாங்கோ உங்களுக்கு பூஸ்ட்”
என்று கஜேஸ்வரிக்கு பதிலடி கொடுத்துக்கொண்டே அனைவருக்கும் காபியும் பூஸ்ட்டும் போட்டுக் கொண்டு வந்து அமர்ந்தாள். குழந்தைகள் மூவரும் உள் ரூமில் விளையாடிக் கொணடிருந்தனர். கஜேஸ்வரியின் முதல் திட்டமான “கம்பேர் அன்ட் இரிடேட்” வேலைக்கு ஆகவில்லை என்று அறிந்ததும் அடுத்த அஸ்த்திரத்தை எடுத்து பேசத் துவங்கினாள்..
“மன்னி ….ஊர்ல இருக்குற அந்த வீட்டை நாங்களும் வேண்டாம்ன்னு சொல்லிட்டோம். ஆனா மாமி தான் அதை வித்து பணத்தை நாலு பேருக்கும் குடுத்திடணும்ன்னு சொல்லிண்டிருக்கா….நான் சொல்லிட்டேன் அந்த பணத்தை மாமிட்டேந்து வாங்கி அதை அப்படியே யாருக்காவது தானமா கொடுத்திடனும்ன்னு. என்னத்துக்கு சிலரோட சாபத்தை எல்லாம் நாங்க சுமக்கணும்…அதுனால தான் அப்படி சொல்லிட்டேன்!! சரி தானே மன்னி”
என்று நவீன் மிருதுளாவையே குத்திப் பேசினாள் கஜேஸ்வரி. அதைக் கேட்டதும் கஜேஸ்வரியைப் பார்த்து மெல்லிதாக சிரித்தாள் மிருதுளா. அதை பார்த்த கஜேஸ்வரி மிருதுளாவிடம்
“என்ன மன்னி சிரிக்கறேங்கள்?”
“ஆமாம் வேறென்ன பண்ண? சரி அப்படி உங்களுக்கு”ம்” அந்த வீடு வேண்டாம்ன்னா அப்புறம் எதுக்கு அந்த பணத்தை உன் மாமிகிட்டேந்து வாங்கணும். அவா ஏதோ பண்ணிக்கட்டும்னு விட்டுட வேண்டியது தானே”
“ம்…அப்படி விட்டா மாமியே அமுக்கிண்ட்ருவா மன்னி. ஏற்கனவே உங்க பங்கை அமுக்கிக்குவா இதுல எங்களோடதையும் ஏன் குடுக்கணும்?”
“ஹா!!!ஹா!!!ஹா!!!”
“ஏன் மன்னி இப்படி சிரிக்கறேங்கள்?”
“இல்ல நீ பணத்தை அமுக்கிக்குவான்னு கவலைப்படறயே கஜேஸ்வரி!!!! ஆனா நவீன் பணம் போட்டு வாங்கின அந்த வீட்டையே அமுக்கிண்டிருக்காளேன்னு நினைச்சேன் சிரிப்பு வந்துடுத்து. சாரி.”
“மன்னி கவினும் அதுல காசுப் போட்டிருக்கார் மன்னி அதுக்கு அவர் எவிடன்ஸும் வச்சிருக்கார். அண்ணா குடுத்ததுக்கு ஏதாவது எவிடன்ஸ் வச்சிருந்தா காட்ட சொல்லுங்கோ”
“ஹலோ கஜேஸ்வரி…..தேவையே இல்லாம இப்போ எதுக்கு இந்த பழைய பேச்சு? நாங்க தான் வேண்டாம்னு ஒதுங்கிட்டோமே அப்புறமும் ஏன் நீ அதைப் பத்தியே பேசுற?”
“மன்னி பேச ஆரம்பிச்சாச்சு அப்போ பேசி முடிச்சிடுங்கோளேன். அண்ணா கிட்ட எவிடன்ஸ் இருக்கா?”
“ம்…..நான் சொல்லுவேன் அப்புறம் நீ வருத்தப்படக் கூடாது”
“பரவாயில்லை சொல்லுங்கோ”
“பெத்தவான்னு நம்பி தான் பணத்தைக் குடுத்திருக்கார். அப்படி பெத்தவாளை நம்பி குடுக்கும் போது புரோ நோட்ல கையெத்து வாங்கிண்டு எவிடன்ஸ் க்ரியேட் பண்ணி வச்சுக்கற அளவுக்கு கீழ்தரமானவர் இல்லை நவீன்.”
“என்ன மன்னி இப்படி சொல்லறேங்கள்?”
“பின்ன நீ தானே சொல்லுங்கோ சொல்லுங்கோன்னு சொன்ன…அது தான் சொன்னேன். சரி நீ இவ்வளவு கேட்கறையே…நான் ஒண்ணு உன்கிட்ட கேட்கறேன் அதுக்கு பதில் சொல்லு நீ. இவ்வளவு பேச்சுத்திறமை உள்ள கவின் ஏன் நவீன்ட்ட நேரா பேசாம மாமாகிட்ட அவனுக்கு வேணும்னா அவனைப் பேச சொல்லுன்னு சொல்லிருக்கான்!! இது நியாயமா?”
“ஐய்யோ மன்னி அவர் ஏதோ கோபத்துல ….”
“எல்லாருக்கும் கோபம் இருக்கு மா. அதுக்காக….சரி அதெல்லாம் விடு. நீங்க எவ்வளவோ செஞ்சிருக்கேங்கள்?? நாங்க ரெண்டு பேரும் உங்க யார்கிட்டேயும் அதையெல்லாம் பத்தி கேட்டதே இல்லை. ஏன் தெரியுமா? தெரியாமல் செய்யறவாட்ட கேட்கலாம் ஆனா நீங்க எல்லாரும் தெரிஞ்சே தான் எல்லாமும் செய்யறேங்கள் அதுனால கேட்டு பிரயோஜனம் இல்லைன்னு தான் நாங்க ரெண்டு பேரும் வாயைத் திறக்காமலிருக்கோம். நீ கொஞ்சம் முன்னாடி சொன்னயே அது மாதிரி பேச தெரியாம எல்லாம் இல்லவே இல்லை. நாங்களும் பேசுவோம்…. ஆனா எல்லாத்துக்கு எல்லா இடத்துலேயே சிலரைப் போல கத்த மாட்டோம். அதுதான் வித்தியாசம்…புரிஞ்சுதா…சரி சரி நான் போய் டின்னர் ரெடி பண்ணட்டும்”
என்று கஜேஸ்வரிக்கு சரியான பதிலடிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றாள். மிருதுளா இப்படி பேசுவாள் என்று எதிர்ப் பார்க்காத கஜேஸ்வரி அப்படியே திகைத்து அமர்ந்திருந்தாள். சற்று நேரத்தில் வீட்டின் காலிங் பெல் சத்தம் கேட்டதும் திகைப்பிலிருந்து வெளி வந்தாள் கஜேஸ்வரி.
“ம்…வா வா கவின். என்ன போன வேலை எல்லாம் நல்ல படியா நடந்துதா?”
“ஆங் நடந்தது மன்னி.”
“சரி டிரெஸ் மாத்திண்டு வா டிபன் ரெடி”
“ஒரு காஃபி தாங்கோளேன் ஃப்ர்ஸ்ட்”
“ஓகே”
என்று கூறிவிட்டு காபி போட சென்றாள் மிருதுளா. அனைத்தையும் அமர்ந்த இடத்திலிருந்தே எட்டிப் பார்த்து கேட்டுக் கொண்டிருந்த கஜேஸ்வரி எழுந்து அடுப்படிக்குச் சென்று
“மன்னி ஏதாவது ஹெல்ப் வேணுமா?”
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் மா. எல்லாம் ரெடி. இந்தா இந்த காபியை கவின்ட்டக் குடு”
என்று சொல்லித் திரும்பும் போது கவினே அடுப்படுக்குள் வந்தான். மிருதுளாவிடமிருந்து அவனே காபியை வாங்கிக் கொண்டு …அடுப்பு மேலிருந்த குக்கரைப் பார்த்து
“என்ன மன்னி ஃப்யூசுரா குக்கரா?”
“ஆங் ஆமாம் கவின்”
கவின் காபியை அங்கிருந்தபடியே அருந்தினான். அப்போது கஜேஸ்வரி கவினிடம்
“கவின் நானும் மன்னியும் ஊர்ல இருக்குற அந்த வீட்டைப் பத்தி தான் பேசிண்டிருந்தோம்”
இதைக் கேட்டதும் மிருதுளா உடனே
“பேசிண்டிருந்தோம் இல்லை கஜேஸ்வரி பேசிண்டிருந்த…அதுக்கு உனக்கு நான் பதில் கொடுத்தேன் அவ்வளவு தான்”
என்று கூறிவிட்டு ஹாலுக்குச் சென்றாள் மிருதுளா. அதைக் கேட்டதும் கவின் கஜேஸ்வரியை பார்த்து முறைத்தான்.
பலர் நம் வாழ்வில் இப்படித் தான் ஏதும் பேசாதவராக இருந்தால்… தவறாக அவர்களுக்கு பேசவே தெரியாது, எப்படி பேச வேண்டுமென்றும் தெரியாது அதனால் தான் விலகிப் போகிறார்கள் என்று அவர்களாக எண்ணிக் கொண்டு மேலும் மேலும் தங்களின் வாய் சாமர்த்தியத்தால் அவர்களை புண்படுத்துவார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. அப்படிப் பட்டவர்கள் பேச விரும்பாமலும் விலகிச் செல்லலாம் என்பதை அவர்கள் உணர்வதில்லை. எல்லா இடத்திலும் எல்லாவற்றிற்கும் நாம் பேச வேண்டுமென்பதில்லை. பேச வேண்டியதை பேச வேண்டிய நேரத்தில் பேசாமலிருக்கவும் கூடாது. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். அது போல மிருதுளாவுக்கு பேசத் தெரியாது என்றெண்ணி அவளை வேண்டுமென்றே வம்புக்கிழுத்த கஜேஸ்வரி நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டு வாயடைத்துப் போனாள்.
தொடரும்…..
அத்தியாயம் 91: அறியாததும் அறிந்தது!
பம்பாய் வந்து சேர்ந்ததும் வழக்கம் போல் ஆஃபீஸ், ஸ்கூல் என்று நவீனும், சக்தியும், சமையல் வீட்டு வேலைகள், சக்தியை க்ளாஸுக்கு அழைத்துப் போய் வருவது, அவளை ஹோம் வொர்க் செய்ய வைப்பது என்று மூவரும் அவரவர் தினசரி வேலைகளில் மூழ்கினர். மாதங்கள் கடந்தன. ஒரு நாள்…
நவீன் ஊரில் வாங்கி வித்த அப்பார்ட்மெண்ட்ஸ் பில்டர் தயானந்தன் நவீனை அவன் மொபைலில் கூப்பிட்டார். ஃபோன் ரொம்ப நேரம் அடித்து பின் தானாக நின்றது. நவீன் தனது ஆஃபீஸ் வேலையில் பிஸியாக இருந்ததால் அட்டென்ட் செய்யவில்லை. மத்திய சாப்பாட்டு ப்ரேக் சமயம் நவீனே அவரை கைப் பேசியில் அழைத்து
“ஹலோ மிஸ்டர். தயானந்தன் இப்போ பேசலாமா நீங்க ஃப்ரீயா?”
“ஆங் சொல்லுங்க மிஸ்டர் நவீன். எப்படி இருக்கீங்க?மேடம் பாப்பா எல்லாரும் எப்படி இருக்காங்க?”
“நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம். நீங்க எப்படி இருக்கீங்க? சாரி நான் ஒரு முக்கியமான மீட்டிங் ல இருந்தேன் அதுதான் உங்க ஃபோன் கால் அட்டென்ட் பண்ண முடியாம போச்சு”
“பரவாயில்லை நவீன்.”
“சொல்லுங்க என்ன விஷயமா கால் பண்ணிருந்தீங்க?”
“மிஸ்டர் ப்ரவீன்னு ஒருத்தர் வந்திருந்தார் நம்ம 2 பெட்ரூம் அப்பார்ட்மெண்ட் ஒண்ணு புக் செஞ்சுட்டு போயிருக்கார்.”
“ஓ!! சரி அதுக்கு எதுக்கு எனக்கு கால் பண்ணிருக்கீங்க சார்?”
“என்ன நவீன் உங்க தம்பின்னு சொன்னார். நீங்க முதல்ல வாங்கியிருந்ததால தான் வாங்க வந்ததாகவும் சொன்னாரே!!! அதுனால விலை கூட கொஞ்சம் குறைச்சுக்கிட்டேன்.”
“என்னது என் தம்பின்னு சொன்னாரா?”
“ஆமாம் மிஸ்டர் நவீன். அவர் அட்வான்ஸ் குடுத்ததோட சரி மற்ற பேமெண்ட்ஸ் லோன் போட்டுட்டு சொல்லறேன்னு சொன்னாரு ஒரு விவரமும் வரலை அதுதான் சரி உங்ககிட்ட கேட்டா ஏதாவது தெரிய வருமேன்னு கால் பண்ணினேன்.”
“என் தம்பிங்க யாரும் சமீபத்துல வீடு வாங்கினதா எனக்கு தெரியலையே. அதுவுமில்லாம நீங்க அவங்க அப்படி சொன்னபோதே எனக்கு கால் பண்ணிருந்தேங்கள்ன்னா கன்பார்ம் பண்ணிருப்பேன்”
“என்ன இப்போ ஒரு ஃபோன் போட்டு கேட்டுச் சொல்லுங்களேன்”
“இல்ல சார் அது நல்லா இருக்காது. நீங்களே கேளுங்களேன்”
“கேட்டுட்டேன் மிஸ்டர் நவீன் ஆனா இதோ தரேன் அதோ தரேன்ங்குறார் ஆனா பணம் வந்த பாடில்லை”
“மொதல்ல அது என் தம்பி தானான்னு தெரிஞ்சுக்கனுமே”
“உங்களுக்கு ப்ரவீன் தம்பி இருக்கார் தானே”
“இருக்கார் சார். ஆனா எல்லா ப்ரவீனும் என் தம்பி ஆகிட முடியுமா? சரி அவர் எங்கே வேலைப் பார்ப்பதாக சொன்னார்?”
“அது வந்து ஏதோ ஒரு இன்ஷுரன்ஸ் கம்பெனின்னு சொன்னார். ஆனா நான் அவரை நம்பி டீல் பேசலை அவர் வைஃப் போஸ்ட் ஆபீஸ் ல வேலைப் பார்க்கறாங்க அதுனாலயும் நீங்க என்னோட பழைய கஸ்டமர் அன்ட் பேமெண்ட் விஷயத்துல கரெக்ட்டான ஆளு அதுனால தான் சரி உங்க தம்பியும் அப்படி இருப்பார்ன்னு நினைச்சேன்”
“சார் அது என் தம்பியே தான். நான் அவங்க கிட்ட இதைப் பத்தி பேச முடியாது சார் ஏன்னா அவங்க வீடு வாங்கியிருக்கற விஷயமே இப்போ நீங்க சொல்லித் தான் எனக்கே தெரிய வந்தது. அதுனால இதுல எனக்காக நீங்க எதுவும் பண்ண வேண்டாம்ன்னு மட்டும் உங்க கிட்ட கேட்டுக்கறேன். சரி எனக்கு அடுத்த மீட்டிங்க்கு ஆள் வந்திட்டாங்க நான் வச்சுடறேன் சார். ஐ ஆம் எக்ஸ்ட்ரீமிலி சாரி. என்னால உங்களுக்கு இந்த விஷயத்துக்காக உதவி பண்ண முடியாம போனதுக்கு ரொம்ப வருத்தப்படுறேன்.”
“ஓகே மிஸ்டர் நவீன். உங்களை தொந்தரவு செஞ்சதுக்கு மன்னிச்சுடுங்க. அவங்க கிட்ட நானே பேசிக்கறேன். பை”
“தாங்க்ஸ் ஃபார் அன்டர்ஸ்டாண்டிங் மீ. பை”
என்று ஃபோனை வைத்ததும் அடுத்த மீட்டிங் அட்டெண்ட் செய்ய எழுந்துச் சென்றான். அன்றையே வேலை முடித்து வீட்டிற்கு வந்ததும் உர்ரென்று நவீன் இருந்ததைக் கவனித்த மிருதுளா அவன் ஃப்ரெஷாகி வந்ததும் சுடச்சுட ஒரு கப் பில்டர் காபி கொடுத்து
“என்ன நவீ இன்னை நாள் எப்படி இருந்தது?”
“ம்…ம்.…மீட்டிங் மாத்தி மீட்டிங். ஒரே ஹெக்டிக்கா இருந்தது”
“அது எப்பவுமிருப்பது தானே”
“என்ன சொல்லற மிருது?”
“இல்ல மீட்டிங்ஸ் எல்லாம் ரெகுலரா நடக்கறது தானே ஆனா இன்னைக்கு நீங்க ஒரு மாதிரி இரிட்டேட்டா இருக்குற மாதிரி எனக்கு தோனறது. அது தான் கேட்டேன்”
“ம்….ஆமாம் ஆமாம். நான் இரிட்டேட்டட்டா தான் இருக்கேன். என்னோட கூட்டத்தால”
“ஏன் அவா என்ன பண்ணினா இப்போ? அது தான் பவின் கல்யாணத்துக்கப்புறமா பேச்சு வார்த்தையே இல்லையே”
“அவான்னா அவா டைரெக்ட்டா எதுவும் பண்ணலை பேசலை ஆனா இன்னைக்கு நம்ம மொதல்ல வாங்கின அப்பார்ட்மெண்ட்ஸ் பில்டர் தயானந்தன் எனக்கு கால் பண்ணினார். இந்த ப்ரவீன் ஏதோ நம்ம வாங்கின அதே அப்பார்ட்மெண்டுல வீடு வாங்கிருக்குனாம். அதுக்கு என் பெயரை யூஸ் பண்ணிருக்கான். அட்வான்ஸும் கொடுத்திருக்கான் ஆனா அதுக்கப்புறம் ஒண்ணுமே சொல்லலையாம் அது தான் என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்க எனக்கு கால் பண்ணினார்.”
“இது நல்லா இருக்கே வீடு வாங்கினவன் ப்ரவீன். அவன் வாங்கியிருக்கறது கூட நமக்கு தெரியாது இந்த லட்சணத்துல என்ன ஆச்சுன்னு வாங்கினவன் கிட்ட கேட்காம உங்ககிட்ட கேட்டா எப்படி?”
“அதுதான் நானும் கேட்டேன். அப்போ அவர் என்கிட்ட உங்க தம்பி தானே சார்ன்னு சொன்னார். அதுவும் ஒரு நக்கலா …எனக்கு கோபம் வந்தது.”
“சரி இன்னுட்டு என்ன தான் சொன்னேங்கள்?”
“நான் சொல்லிட்டேன் இதுல நான் தலையிட மாட்டேன். நீங்களாச்சு ப்ரவீனாச்சுன்னு. அவன் என் பெயரைச் சொல்லி பேச வந்தப்பவே சொல்லிருக்கணும். அதை விட்டுட்டு இப்போ வந்து சொன்னா. அப்போ எல்லாம் சுமுகமா நடந்திருந்தா என் பெயரை யூஸ் பண்ணினது கூட நமக்கு தெரியாம போயிருக்கும்”
“நாம தான் அவாளுக்கே தூசு ஆச்சே அப்புறம் ஏன் தூசோட பெயரெல்லாம் யூஸ் பண்ணறாளாம்!!!”
“அதை எல்லாம் அங்கே கேட்க் முடியுமா? அப்படியே கேட்டாலும் எல்லாமும் சேர்ந்துண்டு ஒக்கே ஒக்கேன்னு கத்துங்கள். பொய் பொய்யா சொல்லி டாப்பிக்கை மாத்துங்கள். ஆனா இதுலேந்து ஒண்ணு தெரிஞ்சுக்க முடிஞ்சுது மிருது”
“என்னது நவீ?”
“நம்மளை என்ன தான் பாடாய்படுத்தினாலும் என் பெயர் கூட அவாளுக்கு உதவி தான் செய்யறது….என்ன பண்ண?”
“என்னமோ பண்ணிக்கட்டும் நவீ. தூசை கூட்டிக் கூட்டி மூலையில வச்சா அது ஒரு நாள் நிச்சயம் கோபுரமாகும். அப்போ அந்த தூசு என்னோடதாக்கும்ன்னு சொல்லிக்கற காலமும் வரும்…லெட்ஸ் வெயிட் அன்ட் வாட்ச்.”
“ம்… ம்… ஆனா என்ன தைரியம் பாரேன் நாம வேண்டாமாம் ஆனா நம்ம பேரு மட்டும் வேணுமாம் எப்படி இருக்கு பாரேன்”
“இவா பேரை எங்கயாவது யார்கிட்டயாவது சொல்லிண்டு ஏதாவது வேலையை நாம நடத்திண்டிருப்போமா?”
“ஆமாம் அப்படி எவன் பெயர் இருக்கு?”
“அப்படி சொல்லாதீங்கோ நவீ. இப்போ இல்லாட்டியும் எப்பவாவது வரலாம் இல்லையா. ஆனா எப்பவும் நாம எவர் பெயரையும் நம்ம நலனுக்கா உபயோகித்ததில்லை இனியும் உபயோகிக்க வேண்டாம். நமக்கு அந்த ஆண்டவன் இருக்கிறார். அவர் போதும்!! அவர் நாமம் சொன்னால் போதும். சரி சரி இதுக்காக நீங்க ஏன் அப்செட் ஆகனும். லீவ் இட்”
“இவாளுக்கெல்லாம் அப்பவும் நான் வேணும் இப்பவும் நான் வேணும் ஆனா மதிக்க மட்டும் மாட்டா”
“நவீ இவா எல்லாம் நம்மளை மதிக்காட்டா நமக்கொண்ணும் ஆகிடாது. கவலைப் படாதீங்கோ. உங்களுக்கு பிடிச்ச ஆறிலிருந்து அறுபது வரை படத்தோட க்ளைமாக்ஸ் நினைச்சுக்கோங்கோ அது தான் நடக்கப்போறது”
“அப்போ என்னை விட்டுட்டுப் போயிடுவியா நீ?”
“ம்…அது எப்படி போவேன்? இருந்து பாடாய் படுத்த இன்னும் எவ்வளவு இருக்கு!!! அதெல்லாம் யாரு பண்ணுவா? கவலைப்படாதீங்கோ நான் உங்க கூட நூறு வயசு வரை இருந்து படுத்தறேன் ஹாப்பியா?”
“டபுள் ஹாப்பி.”
“சரி நீங்க இந்த ஹாப்பி மூட்லயே இருங்கோ நான் போய் டின்னர் எடுத்து வைக்கறேன்”
“ஹாப்பி மூட்ல இருக்கச் சொல்லிட்டு உடனே ஷாக்கான நியூஸ் சொல்லறையே மிருது…இது உனக்கே நியாயமா சொல்லு”
“ஓ !! அப்படியா என்னோட டின்னர் உங்களுக்கு ஷாக்கான நியூஸா… ஓகே ஓகே அப்போ நானும் சக்தியும் மட்டும் சாப்டுக்கறோம் அய்யா ஹாப்பி மூட்லயே இருந்துக்கோங்கோ”
“டின்னருக்கு என்ன பண்ணிருக்க?”
“சொன்னா ஷாக் ஆக மாட்டேங்களே”
“ம்….அது நீ சொல்லறதைப் பொறுத்து”
“பார்ரா!!! சப்பாத்தியும், மட்டர் பன்னீர் சப்ஜியும், தால் தடுக்காவும் பண்ணிருக்கேன்!!! கேட்டதும் இன்னும் ஷாக் ஆகிருப்பேங்களே”
“இல்ல அவ்வளவு ஷாக் ஆகலை அதுனால நானும் சாப்பிடறேன்”
என்று வேடிக்கையாக பேசி நவீனின் மூடை மாற்றி மூவரும் மகிழ்ச்சியாக இரவுணவு அருந்தி, சற்று நேரம் சக்தியுடன் விளையாடிவிட்டு படுதுறங்கினர். நவீனின் மனதில் நெருடல் இருந்தாலும் அவனை அவனே மிருதுளா சொன்னதை எல்லாம் அசைப்போட்டுப் பார்த்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு உறங்கினான். மறுநாள் முதல் மீண்டும் அவரவர்களின் வேலையில் மூழ்கினர்.
ஒரு நாள் மாலை ப்ரவீன் நவீனின் வீட்டு நம்பருக்கு கால் செய்தான்.
“ஹலோ நவீன் ஹியர்”
“ஹலோ நான் ப்ரவீன் பேசறேன்”
“ம்….சொல்லு என்ன விஷயம்?”
“நாங்க ஒரு அப்பார்ட்மெண்ட் வாங்கிருக்கோம். அதுக்கு வர்ற தை மாசம் கிரகப் பிரவேசம் வச்சிருக்கோம். நீயும் மன்னியும் வரணும். பத்திரிகை அனுப்பியிருக்கேன். மூணு பேருமா வந்திடுங்கோ. மன்னி கிட்ட ஃபோனைக் குடேன் துளசி பேசணுமாம்”
“ஆங் ஆங் வெயிட் பண்ணு….மிருது மிருது இந்தா துளசி பேசறா”
“ஹலோ”
“ஹலோ மன்னி நான் துளசி பேசறேன்”
“ஆங் சொல்லு துளசி. நீங்க எல்லாரும் எப்படி இருக்கேங்கள்?”
“நாங்க நல்லா இருக்கோம் மன்னி. நீங்க எல்லாரும் எப்படி இருக்கேங்கள்?”
“நாங்களும் நால்லா இருக்கோம். தாங்க்ஸ். சரி சொல்லு என்ன பேசணும்னு சொன்ன?”
“நாங்க ஒரு வீடு வாங்கிருக்கோம் அதுக்கு கிரகப்பிரவேசம் வர்ற தை மாசம் பத்தாம் தேதி வச்சிருக்கோம் நீங்க அண்ணா சக்தி எல்லாரும் அவசியம் வரணும். பத்திரிகை அனுப்பிருக்கோம் வந்திடுங்கோ. அதைச் சொல்லத் தான் கால் பண்ணினோம். வச்சுடவா?”
“ம்…ம்…டிரைப் பண்ணறோம். ஓகே வச்சுடு…பை”
என்று ஃபோனை வச்சதும். மிருதுளா நவீனைப் பார்த்து
“நீங்க ஏதாவது கேட்டுடப் போறேங்களோன்னு பயந்துண்டு இருந்தேன்”
“என்னத்தை?”
“ம்…அந்த பில்டர் கால் பத்தி தான்.”
“ஆமாம் இனி கேட்டு என்ன ஆகப் போறது!!!”
“அதை நினைத்துத் தான் நீங்க எதுவும் கேட்டுடக்கூடாதேன்னு நினைச்சுண்டிருந்தேன்….அவா நமக்கு செய்றதை எல்லாம் சிறப்பா செஞ்சுடுவா ஆனா நாம கேட்டோம்ன்னா அப்புறம் எல்லா பழியும் நம்ம மேலேயே போட்டுவிடுவா. அதோட நிறுத்தாம ஊர் உலகத்துக்கெல்லாம் அது கை முளைச்சு கால் முளைச்சு பரவும் அது தான் யோசனையா இருந்தது”
“இது பாரு மிருது நான் அவா இப்படி எல்லாம் பண்ணுவாங்கற பயத்துல கேட்காம இல்ல. நியாயமா பார்த்தா அவனே என்கிட்ட சொல்லிருக்கணும் இல்லையா!! ஆனா அவன் பில்டர் கிட்ட பேசினது எதையுமே சொல்லலை அதுனால நானும் தெரியாத மாதிரியே கேட்டுண்டுட்டேன்.”
“ம்….ம்….இதுக்கு இப்படியும் ஒரு ஆங்கிள் இருக்கு இல்ல!!!”
“இருக்கு இருக்கு மிருது இருக்கு”
“சரி நாம கிரகப்பிரவேசத்துக்கு போறோமா ?”
“பார்ப்போம் பார்ப்போம். எனக்கு இன்னொரு நியூ ஜாப் ஆஃபர் கிடைக்கறா மாதிரி இருக்கு. அது கிடைச்சுதுனா ஷிஃப்டிங் அது இது எல்லாமிருக்கு. ஸோ லெட் அஸ் வெயிட் அன்ட் சீ”
“எது அந்த மைசூர் ஆஃபரா நவீ?”
“ஆமாம் மிருது அதே தான் ஆறு மாசம் கழிச்சு இப்போ தான் அந்த ஹெச் ஆர் முழிச்சிருக்கா போல நேத்து கால் பண்ணி…எல்லாம் கூடிவர்றதுனு சொன்னா…நாளைக்கு சொல்லுவா ஆர் ஆஃபர் லெட்டர் ஈமெயில் ல வரும்.”
“அப்பாடா அது கிடைக்கட்டும் நவீ. இந்த நார்த் எனக்கு பிடிக்கவேயில்லை. உங்க வேலைக்காக தான் நான் இங்கே இருக்கேன். எனக்கென்னவோ இங்கேந்து சீக்கிரம் சவுத் சைடு போனா போறும்ன்னு தோன ஆரம்பிச்சு பல மாசம் ஆச்சு….பல மாசம் ஆச்சு என்ன உங்களுக்கு அந்த கன்சல்டன்சி கால் வந்ததிலிருந்து தான்.”
“ஆனா பம்பாய் நார்த் இல்ல மிருது.”
“ரொம்ப முக்கியம். சரி இந்த வடநாட்டுக் காரா இருக்குற இடம்னு வச்சுக் கோங்கோ போதுமா!!”
“நாம ஆர்மில இருந்தப்போ நீ இப்படி நினைச்சதே இல்லையே ஏன் இப்போ மட்டும் இப்படி சொல்லற?”
“அப்போ நம்ம கேம்ப்ல இருந்த எல்லாருமே ரொம்ப நல்ல மனுஷாப்பா அதுனால தோனலை ஆனா இங்க அப்படி இல்லையே அதுதான் தோனறது”
‘ஆக்ச்சுவலி பம்பாய் எல்லாருக்கும் பிடிக்காது. அப்படி இந்த ஊரைப் பிடிச்சவா இங்கேந்து போக விரும்பமாட்டா தெரியுமா!!!”
“ஸோ நான் அப்போ அந்த முதல் ரகத்தை சேர்வ்தவள் என்ன பண்ண!!!”
மறுநாள் நவீன் எதிர் பாத்ததுப் போலவே ஜாப் ஆஃபர் லெட்டர் வந்தது. அதில் மாதம் ஏழு லட்சம் சம்பளம் என அச்சிடப்பட்டிருந்தது. அந்த லெட்டரை எடுத்துக் கொண்டு அன்று மாலை வீட்டுக்கு வந்தவன் மிருதுளாவிடம் அதைக் கொடுத்துவிட்டு முகம் கைக் கால் அலம்பி வரச் சென்றான். மிருதுளா அந்த கவரை அப்படியே சாமி அறையில் வைத்து பூஜித்து நன்றாக வேண்டிக்கொண்டு அதை எடுத்து படித்தாள். அதில் குறிப்பிட்டிருந்த சம்பளத்தைப் பார்த்ததும் அவளுக்கு பழைய ஞாபகம் எல்லாம் வந்தது. அவள் மாமியார் “இவன் படிச்சப் படிப்புக்கு என்ன ஏழாயிரம் கிடைக்குமா?? அது கிடைக்கறதே கஷ்டம்ன்னு” சொன்னது. அவர்கள் நாலாயிரம் சம்பளத்தில் குடும்பத்தை நடத்தியது. ஒரு சமோசா வாங்கக் கூட பத்து ரூபாய் இல்லாமல் இருந்தது. ஒவ்வொரு மாதத்தை நகர்த்த சிரமப்பட்டது என்று அனைத்து ஞாபகங்களும் வந்து அவள் கண்களை குளமாக்கியது. அவள் மீண்டும் அந்த கவரை சாமி முன் வைத்து …அவள் கண்களை மூடினாள் கண்ணீர் இரண்டு புறமும் கட்டுக்கடங்கா அருவி போல உருண்டோடியது. தன் மனதில் ஒடும் எண்ணங்களை அப்படியே கடவுளிடம் கூறினாள்…
“அம்மா தாயே நாங்க எங்கேந்து இப்போ எங்க வந்திருக்கோம் அதை நினைத்தா பிரம்மிப்பு கலந்த சந்தோஷமா தான் இருக்கு. இது எல்லாத்துக்கும் காரணம் நீ தான் மா. எங்காத்துக்காரரும் நானும் திறமைசாலிகளாக இருந்தாலும் அதை வெளிக் கொணர்ந்து எங்களை இவ்வளவு தூரம் வழி நடத்தியதும் நீ தான் தாயே…நாங்க என்னென்னைக்கும் உன் பாதம் சரணம் அம்மா. நாங்க எந்த உயரத்துக்குப் போனாலும் நாங்கள் எப்போதும் நாங்களாகவே இருக்க வேண்டும்மா. இந்த பணம் பதவி வீடு வாசல் எதுவும் எங்களை எந்த விதத்திலும் மாற்றிடாமல் காத்தருள்வாய் தாயே. வாழ்வில் இவ்வளவு நல்லவைகளை ….நல்ல உத்தியோகம், அழகான அறிவான குழந்தை, வீடு, வாசல், கார் என்று எங்களுக்கு வாரி வழங்கியுள்ளாய் இதை என்றென்றும் எங்கள் குணம் மாறாமலும் இந்த நிலை மாறாமலும் காத்தருளவேண்டும் அம்மா. தாயே அனைத்தும் உன் காலடியில் சமர்ப்பித்து விட்டேன். நீயே எங்களை இது வரை வழி நடத்தியுள்ளாய் இனியும் நாங்கள் உன் கரம் பிடித்தே உன்னைத் தொடர்ந்து வர அருள் புரிவாய் தாயே”
என்று வாய் விட்டு வேண்டிக் கொண்டிருந்ததை பொறுமையாக நின்று கேட்ட நவீன்
“கவலை வேண்டாம் மிருது. நாம எவருக்கும் மனசால கூட தீங்கோ இல்ல ஒரு கெட்டதோ செய்ததில்லை. யார் மனதும் புண்படும் படி நடந்துண்டதும் இல்லை அப்புறம் எப்படி அந்த கடவுள் நம்மளை கைவிடுவா. எல்லாம் நல்லதாகவே தான் நமக்கு நடந்திண்டிருக்கு இனியும் நடக்கும். கண்ணைத் தொடச்சுண்டு வா. நாம அடுத்த ஷிஃப்டிங் பத்தி டிஸ்கஸ் பண்ணணுமே!!”
என்று கூறிக்கொண்டே விபூதியை தன் நெற்றியில் இட்டுக்கொண்டு ஹாலுக்குச் சென்றான். மிருதுளாவும் தன் கண்களை துடைத்துக் கொண்டு சாமிக்கு நமஸ்காரம் செய்து விட்டு அந்த கவரை அங்கேயே வைத்து விட்டு அடுப்படிச் சென்று காபி போட்டுக் கொண்டு வந்து நவீனுக்கு கொடுத்தாள்.
“என்ன மிருது ஒரு காபி தானா?”
“எப்போலேந்து ரெண்டு காபி குடிக்க ஆரம்பிச்சேங்கள்?”
“இந்த ஒரு கப் காபி குடிக்கறதையே கட் பண்ணணும்ன்னு யோசிச்சிண்டிருக்கேன் இதுல ரெண்டா!!!! உனக்கு எடுத்துண்டு வரலையேன்னு கேட்டேன்”
“நான் இன்னைக்கு நாலரை மணிக்கெல்லாம் குடிச்சிட்டேன் நவீ அது தான் எனக்குப் போட்டுக்கலை”
“ஓ!! ஓகே ஓகே”
“சரி எப்போ ஷிஃப்ட் பண்ணப் போறோம்? எப்படி பண்ணப் போறோம்?”
“மொதல்ல வீடு பார்க்கணும். அப்புறம் தான் ஷிஃப்டிங் பண்ணறதைப் பத்தி யோசிக்கணும். அந்த ஆஃபீஸே ஏரியா அன்ட் வீடு பார்க்க ஹெல்ப் பண்ணுவாளாம். அதுவுமில்லாம நமக்கு ரீலொக்கேஷன் பெனிஃபிட்ஸ்னு வேற தனியா மூன்று லட்சம் தருவா. ஸோ ஷிஃப்டிங்க்கு, வீட்டு அட்வான்ஸ்க்கு எல்லாம் நாம செலவு செய்ய வேண்டாம். நம்ம மூணு பேருக்கும் பம்பாய் டூ பெங்களூர் ஏர் டிக்கெட் அன்ட் பெங்களூர் டூ மைசூர் கார் எல்லாம் அவாளே ஏற்பாடு பண்ணித் தருவா. ஸோ அவ்வளவா டென்ஷன் இருக்காதுன்னு நினைக்கறேன். ஷிஃப்டிங்க்கு அகர்வால் மூவர்ஸ் யூஸ் பண்ணிப்போம் என்ன சொல்லற?”
“அகர்வாலா அவன் ரொம்ப கேட்பானே? நாம ஹைதராபாத்லேந்து இங்க வர்றதுக்கே எவ்வளவு கேட்டான். அது ஜாஸ்த்தினு தானே நானும் என் அப்பா அம்மாவுமா எல்லா பேக்கிங்கும் செஞ்சு வண்டி மட்டும் புக் பண்ணிக் கொண்டு வந்தோம். மறந்துட்டேங்களா?”
“இப்போ தானே சொன்னேன் அதெல்லாம் கம்பெனி ஏத்துக்கும்னு அப்புறம் அவன் எவ்வளவு கேட்டா என்ன?”
“ஓ!! மறந்துட்டேன் சாரி”
“இட்ஸ் ஓகே.”
“நம்மளோட இந்த வளர்ச்சியை நினைச்சா எனக்கு பிரம்மிப்பா இருக்கு நவீ. எப்படி இருந்தோம் இப்போ எப்படி இருக்கோம்!!! அப்பப்பா புல்லரிக்கறது”
“என்னைக்கும் நாம பழசை மறக்காம இருந்தாலே நாம மேலே மேலே போனாலும் மனுஷாலாவே இருப்போம். எதற்காகவும் மாறமாட்டோம். …..இந்த விஷயம் தெரியத்தான் நான் நேத்து உன்னை வெயிட் பண்ணச் சொன்னேன். நான் நோட்டிஸ் குடுத்தாச்சு. ஸோ நெக்ஸ்ட் மந்த் வி ஹாவ் டூ மூவ் டூ மைசூர். மொதல்ல அந்த வேலைகளைப் பார்ப்போம். அங்க ஷிஃப்ட் ஆனதுக்கப்பறமா ப்ரவீன் வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு போகலாமா வேண்டாமான்னு டிசைட் பண்ணிக்கலாம் சரியா”
“ஓகே நவீ”
என்று பேசிக்கொண்டிருக்கும் போது ஃபோன் அடித்தது. அதை எடுத்தாள் மிருதுளா
“ஹலோ மிருதுளா ஹியர்”
“ஹலோ நான் தான் சித்தி பேசறேன் மிருதுளா”
என்று நவீனின் சித்தி கால் பண்ணினாள்.
“ஹலோ சித்தி எப்படி இருக்கேங்கள்? ஆத்துல சித்தப்பா, குழந்தைகள் எல்லாரும் எப்படி இருக்கா?”
“எல்லாரும் நன்னா இருக்கோம் மா. இப்போ தான் பவின் பவித்ரா சீமந்தத்தை லைவ்வா கம்ப்யூட்டர் ல பார்த்து முடித்தோம். இந்த தடவை போக முடியலை அதனால அவன் வீடியோ கால்ல வர்ற் சொன்னான். அதுதான் ஆன்லைன்ல அட்டென்ட் பண்ணினேன். நீங்கள் போயிருந்தேங்களா இல்லை நீங்களும் ஆன்லைன் தானா?”
“எங்களுக்கு எப்பவும் அந்த சைடுலேந்து எரர் மெஸேஜ் தான் சித்தி.😊”
“என்ன சொல்லுற மிருது?”
“அதை விடுங்கோ. இருங்கோ நான் நவீன் கிட்ட குடுக்கறேன்”
என்று கூறி நவீனிடம் ரிசீவரை கொடுத்தாள் மிருதுளா. அப்போது சித்தி நவீனிடமும் அதையே கேட்க. நவீன் மிருதுளா சொன்னது இதுக்குத் தானா என்று எண்ணிக் கொண்டு அவன் அதற்கு பதிலளிக்காமல் டாப்பிக்கை சித்தியின் மகள் படிப்புக்கு மாற்றி சற்று நேரம் பேசிவிட்டு ஃபோனை கட் செய்தான். பின் மிருதுளாவைப் பார்த்து
“பார்த்தயா உன் மச்சினனின் அழகை!!!
“ஏன் உங்க தம்பின்னு சொல்ல வேண்டியது தானே”
“ஆமாம் ஆமாம் தம்பி நீயும் நானும் தான் சொல்லிக்கணும். இரண்டாமத்தவனும் சீமந்தத்திற்கு நம்ம கிட்ட சொல்லலை நாலாமத்தவனும் சொல்லலை. இதை வச்சுப் பார்த்தா இரண்டு பேரும் ஏதோ சொல்லி வச்சுண்டு பண்ணறா மாதிரி இல்ல!!!”
“இதுல சொல்லி வச்சுக்க என்ன இருக்கு? கவின் செஞ்சதைப் பார்த்து இப்போ பவின் செய்யறான். ஆனா இந்த ப்ரவின் மட்டும் தான் நம்ம ரெண்டு பேரையும் ஒழுங்கா எல்லாத்துக்கும் அழைக்கறான். இந்த கவினும் பவினும் ஒண்ணு அழைக்கறதில்லை இல்லாட்டி கூப்டுவா ஆனா பத்திரிகை அனுப்பமாட்டா….என்னவோ போங்கோ!!! நீங்க எப்பவும் சொல்லறா மாதிரி நாம நம்ம வேலையைப் பார்ப்போம். கூப்பிட்டா போவோம் இல்லாட்டி விட்டுவிடுவோம்”
“அப்படி வா என் வழிக்கு”
என்ன தான் ப்ரவீன் பில்டரிடம் தன் அண்ணன் பெயரை உபயோகித்து பேசியதை நவீனிடம் சொல்லாமலிருந்தாலும், பவின் தன் மனைவியின் சீமந்தம் வளைகாப்பை தெரியப்படுத்தாமலிருந்தாலும்…. இந்த இரண்டு விஷயங்களையுமே கடவுள் நவீனுக்கும் மிருதுளாவுக்கும் தெரியப்படுத்தினார்.
நம்மிடமிருந்து எவரேனும் எதையாது நாம் அறியாதிருக்க வேண்டுமென்று மறைத்தாலும் அந்த விஷயம் நாம் அறிந்துக் கொண்டாக வேண்டுமெனில் அதை அந்த ஆண்டவன் ஏதாவது வழியில் நமக்கு தெரியப்படுத்துவார். அதன் மூலம் நமக்கு ஏதாவது ஒரு பாடத்தையும் புரிய வைப்பார். அவற்றை அறிந்துக் கொள்வதோடு இருந்திடாமல் அதன் பாடத்தையும் புரிந்துக் கொண்டோமே என்றால் நாம் கடவுளின் செல்லப் பிள்ளையாக என்றென்றும் இருக்கலாம்.
தொடரும்…..
அத்தியாயம் 90: தென்றல் புயலானது!
பவின் மிருதுளாவுடன் பேசி மூன்று நாட்களுக்கு பின் ஒரு நாள் மாலை நவீன் வீட்டு ஃபோனுக்கு கால் வந்தது. நவீன் ஏதோ ஆஃபீஸ் வேலையாக இருந்ததால் சக்தியை ஹோம் வொர்க் செய்ய வைத்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து எழுந்து மிருதுளா ஃபோனை அடென்ட் செய்தாள்.
“ஹலோ மிருதுளா ஹியர்”
“ஹலோ நான் ஈஸ்வரன் பேசறேன்”
என்றதும் நேராக ஃபோனை நவீன் இருந்த அறைக்கு எடுத்துச்சென்று வழக்கம் போல ஸ்பீக்கரில் போட்டுவிட்டாள்.
“ஆங் சொல்லுங்கோ பா”
“எல்லாரும் எப்படி இருக்கேங்கள்?”
“ஆங் நாங்க நல்லா இருக்கோம்.”
“சரி ஆத்துல சுமங்கலிப் பிரார்த்தனை அடுத்த மாதம் பதினொனாம் தேதி வச்சிருக்கோம். பவின் கல்யாணம் இருபதாம் தேதி. வந்துடுங்கோ”
“அழைச்சதுக்கு ரொம்ப நன்றி. நான் உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி கேட்கட்டுமா?”
“ம்…என்ன? கேளு”
“இதே மாதிரி எங்களுக்கு பவினின் நிச்சயதார்த்தம் தேதியையும் கரெக்ட்டா சொல்லியிருந்தா அவ்வளவு தூரம் வந்தும் மனசு கஷ்டத்தோட திரும்பி வந்திருக்க மாட்டோம் இல்லையா!! ஏன் நீங்க அப்படி அப்போ நடந்துக்கலை?”
“எல்லாம் நாங்க ஃபோன் பண்ணி சொன்னோம். நீங்க சரியா கேட்டுக்கலைன்னா நாங்க என்ன பண்ண?”
“சரி பா. நாங்க சரியா கேட்டுக்கலைன்னே வச்சுப்போம் ஆனா பவின் நிச்சயத்துக்கு நாங்க ரெண்டு பேரும் வரலையேன்னு நம்ம ஆத்தேந்து ஒருத்தர் கூட கேட்கலையே ஏன்? தப்பான தேதி சொன்னதால் எங்கேந்து வருவோம்ன்னு தெரிஞ்சதால கேட்கனும்ன்னு தோனலையோ!”
“எதுக்கு கேட்கணும் நீங்க திமிரெடுத்து வராமல் இருந்தா அதை எல்லாம் நாங்க ஏன் கேட்கணும்?”
“அப்பா நாங்க திமிரெடுத்து வரலையா இல்லை என்ன காரணத்தினால வரலைங்கறது எங்களுக்கும் தெரியும் அது உங்களுக்குமே நல்லாவே தெரியும். ஸோ ப்ளீஸ் ஸ்டாப் ப்ளேமிங் அஸ் லைக் திஸ்”
“ஏய் என்னடி விட்டா பெரிய இவ மாதிரி பேசிண்டே போற? நீ எல்லாம் யாருடி என்ன கேள்வி கேட்க? நீ என்ன பெரிய இவளோ? போடி சரிதான். நீ எல்லாம் என் கால் தூசுக்குக் கூட சமமில்லடி. அதுக்கும் கீழே எங்கேயோ கிடக்குற தூசு டி நீ. எங்களுக்கு நீ எல்லாம் ஒரு ஆளே இல்லடி. நீ பேசுறயா… ம்….நீயெல்லாம் வந்தா என்ன வராட்டி என்ன!!! யாருடி உங்களுக்காக இங்க காத்துக் கிடக்கறா…போடி”
என்று ஈஸ்வரன் சகட்டுமேனிக்கு மிருதுளாவை விலாசித் தள்ளியதைக் கேட்ட நவீன்
“இங்க பாரு மரியாதை குடுத்தா தான் உனக்கு அது திருப்பி கிடைக்கும் ஞாபகம் வச்சுக்கோ. என்ன நீ பாட்டுக்கு வாய்க்கு வந்த படி எல்லாம் பேசுற? நாங்க வந்தா என்ன வராட்டி என்னவா? அப்புறம் என்னத்துக்கு இப்போ கால் பண்ணி கூப்பிட்ட?”
“டேய்!!! நான் உன்னை சொல்லடா….அவ அம்மா காரி இருக்காளே அவ என்ன சொன்னா தெரியுமா….அவ பொண்ண ஒரு கீரகாரனுக்கு கட்டி வைப்பாளாம் டா”
தன்னை இழிவாக பேசிய போது அமைதியாக இருந்த மிருதுளா தன் தாயையும் மரியாதையின்றி ஈஸ்வரன் பேசியதைக் கேட்டதும்
“இதோ பாருங்கோ உங்களுக்கு என்னையே அப்படி பேச எந்த ரைட்ஸும் இல்லை. ஏதோ வயசானவர்ன்னு பல தடவையா உங்களோட இந்த மாதிரி அசிங்கமான பேச்சைப் போனா போறதுன்னு பொறுத்துண்டா இப்போ என் அம்மாவையும் அவ இவன்னு மரியாதை இல்லாம பேசறது நல்லா இல்லை. அப்படி பேச உங்களுக்கு என்ன உரிமையிருக்கு? அப்படி நான் உங்களுக்கெல்லாம் ஒரு தூசுன்னா அப்புறம் என்னத்துக்கு என்னை கூப்பிடறேங்கள்? அதுதான் உங்க வைஃப் இதுக்கு முன்னாடி நடந்த சுமங்கலிப் பிரார்த்தனைக்கும் தேதி எதுவுமே என்கிட்ட டிஸ்கஸ் பண்ணாம அவா இஷ்டத்துக்கு வச்சு நான் வரமுடியாதபடி பார்த்துண்டாளே….என்ன எதுவும் கேள்வி கேட்கலைன்னா எனக்கு எதுவும் தெரியாதா என்ன? மொதல்ல குடும்பத்தை கெடுக்கும் உங்க ஆத்துக்காரியை அடக்குங்கோ அப்போ நம்ம குடும்பம் தானா ஒத்துமையாகிடும். தப்பை எல்லாம் நீங்க ரெண்டு பேரும் செய்துட்டு என்னையும் என் அம்மாவையுமா குத்தம் சொல்லறேங்கள். என் பொறுமையை பத்து வருஷமா நீங்க எல்லாரும் சோதிச்சுட்டேங்கள். இனியும் இது மாதிரி என்கிட்ட பேசினேங்கள் அப்புறம் நடக்கறது வேற சொல்லிட்டேன்.”
“பேசுவ டி பேசுவ”
“சும்மா மறுபடியும் ஆரம்பிக்காதே பா. போதும் மிருது கேட்டதுல ஏதாவது தப்பிருக்கா? அவளும் எவ்வளவு தான் பொறுத்துப் போவா? முடிஞ்சா அவ கேட்டதுக்கு பதில் சொல்லு …தேவையில்லாத பொய்களை எல்லாம் சொல்லி டாப்பிக்கை மாத்தப் பார்க்காதே”
“போடா உனக்கெல்லாம் என்னடா பதில் சொல்ல வேண்டிருக்கு”
என்று அப்போதும் திமிர்த்தனமாக ஃபோனை துண்டித்தார் ஈஸ்வரன். அதை பார்த்ததும் நவீனுக்கும் கோபம் வந்தது. அவன் மீண்டும் ஈஸ்வரன் வீட்டிற்கு ஃபோன் போட முயற்சித்தப் போது மிருதுளா
“நவீ நீங்க கோபத்துல இருக்கேங்கள் நவீ இப்போ வேண்டாம் அப்புறம் உங்க அப்பா மாதிரியே நீங்களும் வார்த்தையை விட்டுட்டா அப்புறம் அள்ள முடியாது நவீ. ப்ளீஸ் நவீ வேண்டாம்”
“மிருது விடு. இன்னைக்கு ஒண்ணுல ரெண்டு பார்த்தே ஆகனும். அது என்ன பேசிண்டே இருக்கும் போது ஃபோனைக் கட் பண்ணறது? பதில் தெரியலைன்னா கட் பண்ணிடுவாளா! இதையே நாம செஞ்சா சும்மாவா இருப்பா. …..நீ பேசாம இரு”
என்று முதல் முறை டயல் செய்ததில் எவரும் ஃபோனை எடுக்கவில்லை. ஆகையால் மண்டும் டயல் செய்தான் ரிங் போனது…
“ஹலோ”
“ஹலோ நான் நவீன் பேசறேன். நீங்க யார் பேசறது?”
“நான் உன் அத்தைப் பேசறேன் நவீன்.”
“அத்தையா!!”
“ஆமாம் பா வசுந்தரா அத்தை தான் பேசறேன்”
“ஏன் நீங்க ஃபோனை எடுத்தேங்கள்?”
“யாருமே எடுக்கலை. ரொம்ப நேரமா அடிச்சுண்டே இருந்தது அதுனால எடுத்தேன்”
“சரி சரி உங்க அண்ணாட்ட ஃபோனை குடுங்கோ அத்தை. உங்ககிட்ட நான் அப்புறமா பேசறேன்”
“இதோ குடுக்கறேன்….ஈஸ்வரா….இந்தா நவீன் தான் பேசறான் ….பேசு”
“எனக்கு எவன் கிட்டேயும் பேச வேண்டாம்னு தானே ஃபோனை எடுக்கலை. நீயே பேசிக்கோ”
என்று பின்னாலிருந்து ஈஸ்வரன் சத்தம் போட்டது நவீனுக்கு கேட்டது உடனே நவீன் தன் அத்தையிடம்
“ஏன் அத்தை இவ்வளவு வயசாச்சே கொஞ்சமாவது அதுக்கு தகுந்தா மாதிரியா நடந்துக்கறா? அவா பேசினது எல்லாம் நீங்களும் கேட்டுண்டு தானே இருந்தேங்கள்!! இதெல்லாம் நல்லாவாயிருக்கு? திருந்தர வழிய பார்க்கச் சொல்லி உங்க அண்ணன் கிட்ட எடுத்துச் சொல்லுங்கோ நான் ஃபோனை வைக்கறேன்”
என்று கூறிவிட்டு ஃபோனை கட் செய்தான் நவீன்.
அன்றிரவு முழுவதும் இவர்களுக்காகவா வாழ்க்கையின் முக்கியமான பருவத்தை தொலைத்தேன் என மிகவும் வேதனைப் பட்டுக்கொண்டே இருந்தான் நவீன். சற்றே திரும்பிப் பார்த்தான் கண்கள் ஓரத்தில் கண்ணீரின் கறையுடன் படுத்துறங்கிக் கொண்டிருந்தாள் மிருதுளா. அவளைக்கட்டிக்கொண்டு படுத்திருந்தாள் சக்தி. அவர்களைப் பார்த்ததும் தன் கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே
“இனி நீங்கள் தான் எனக்கு எல்லாம். நான் நம்பியவர்கள் எனக்கு துரோகம் செய்ததோடு என்னை அவமானமும் படுத்திவிட்டனர். அதனால் இனி என்னை நம்பியிருக்கும் உங்களுக்காகவே தான் என் வாழ்க்கை. என் மீதுள்ள நம்பிக்கையில் நிம்மதியாக தூங்கும் இந்த இரு ஜீவன்கள் தான் இனி எனது எல்லாம்.”
என்று மனதில் கூறிக்கொண்டு மிருதுளாவையும் சக்தியையும் அணைத்துக் கொண்டே உறங்கினான் நவீன்.
நாட்கள் கடந்தன. பவினின் கல்யாண பத்திரிகை அவர்கள் வீட்டுப் பத்தியிகை ஒருவழியாக நவீனுக்கு வந்தது. கல்யாண தேதி நெருங்கிக் கொண்டிருந்தது.
“நவீ நான் ஒண்ணு சொல்லுவேன் நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது.”
“நீ என்ன சொல்லப் போறன்னு எனக்கு தெரியும் மிருது. வேண்டாம்”
“இல்ல நவீ பெரியவா என்ன சொன்னா என்ன? எப்படி நடந்தா என்ன நாம சரியா இருப்போமே. அதுவுமில்லாம அவா காலம் இன்னும் கொஞ்சம் தான் அதுக்கப்புறம் நாம நாலு பேரும் அவா அவா ஃபேமிலியும் தான் ஒன்னா இருக்கணும். இவாளால நாம பிரிஞ்சுடக் கூடாது. அதுனால தான் போயிட்டு பட்டும் படாம மூணாம் மனுஷா மாதிரி இருந்துட்டு வந்திடுவோம். அப்போ பவின் மனசுல இருக்குமில்லையா இவ்வளவு நடந்தும் நம்ம சொன்னதை மதிச்சு அண்ணாவும் மன்னியும் வந்திருக்கான்னு!! ஏன்னா அவனுக்கு நடந்தது எல்லாமே தெரியுமே. அந்த நினைப்பு இனிக்கு இல்லாட்டியும் என்னைக்காவது அவன் நம்மளை மதிக்க வைக்கும்ன்னு எனக்கு நம்பிக்கையிருக்கு. அதுவுமில்லாம இப்போ நாம போகலைன்னா!!! அப்புறம் இவ்வளவு கூப்பிட்டும் இந்த அண்ணாவும் மன்னியும் அப்பா அம்மா பண்ணினதுக்கு என் கல்யாணத்துக்கு வராம இருந்துட்டா பாருன்னு பதிஞ்சுடும். அது என்றென்றைக்கும் மாறாத வடு ஆகிடும். புரிஞ்சுக்கோங்கோ. இதுக்கப்புறம் நாம எதுக்கு அந்த பக்கம் போகணும் சொல்லுங்கோ. நாம அந்த ஃபேமிலியில வேற யாரோடையும் பேச வேண்டாம். என்ன சொல்லறேங்கள் நவீ?”
“ம்….. என்னென்னவோ சொல்லுற!!! ஆனா அவா இதுக்கெல்லாம் வொர்த்தான்னு எனக்கு தெரியலை. சரி உனக்காக போயிட்டு வரலாம். டிக்கெட் புக் பண்ணு”
“தாங்க்ஸ் நவீ. இப்போ உங்களுக்கு புரியாது. ஆனா காலம் புரிய வைக்கும். சரி நான் டிக்கெட் புக் பண்ணிடறேன். மத்தியானம் ரீச் ஆவோம். ஹோட்டல் ரூம் புக் பண்ணறேன். சாயந்தரம் மாப்பிள்ளை அழைப்பு அடென்ட் பண்ணுவோம், நைட்டு ரூமுக்கு வந்திடுவோம், காலையில கல்யாணத்தை அட்டென்ட் பண்ணிட்டு மத்தியானம் சாப்டுட்டு ரூமுக்கு வந்துடுவோம், சாயந்தரம் நலங்கு முடிச்சிட்டு ஊருக்கு கிளம்பிடுவோம். ஸோ நீங்க மூணு நாள் லீவு போட்டா போதும். என்ன சொல்லறேங்கள்?”
“ம்..ம்…ஓகே ஓகே”
என்று பட்டும் படாமல் பதலளித்தான் நவீன். அதுப் புரிந்தாலும் எப்படியாவது குடும்பத்துடன் ஒற்றுமையாக இருந்திட வேண்டுமென்ற எண்ணத்திலும், எதிர்காலத்தை எண்ணியும், பொருட்படுத்தாமல் ஃப்ளைட் அன்ட் ரூம் புக்கிங்கை செய்தாள்.
திருமண நாள் முன்தினம் மூவரும் புறப்பட்டு ஏர்போர்ட் சென்று அங்கிருந்து ஹோட்டலுக்குச் சென்றனர். மாலை டிரஸ் செய்துக்கொண்டு மூவரும் கல்யாண மண்டபத்தை காரில் சென்றடைந்தனர். அவர்கள் மண்டபத்திற்குள் நுழைவதற்கு செல்லும் போது, வாசலில் அமர்ந்திருந்த ப்ரவீனின் மாமனார் நவீன் மிருதுளாவைப் பார்த்து….
“என்ன இது தம்பிக் கல்யாணத்துக்கு வர நேரமா இது?”
என்று நக்கலாக கேட்க அதற்கு நவீன் பதிலளிக்க முயன்ற போது …அவன் ஏதாவது கோபத்தில் சொல்லிவிடப் போறானோ என்ற பயத்தில் அவனை அங்கிருந்து அழைத்துச் செல்ல ப்ரவீனின் மாமனார் பேச்சைப் புறக்கணித்து
“நீங்க வாங்கோ நவீ நாம எதுக்கு வந்தோமோ அதை மட்டும் பார்த்துட்டு போவோம். தேவை இல்லாத பேச்சுக்கெல்லாம் பதிலளிக்க வேண்டாம்.”
என கூறி நவீனின் கையை பிடித்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள் மிருதுளா. உள்ளே ரிசெப்ஷன் நடந்துக் கொண்டிருந்தது. அவர்கள் மூவரும் உள்ளே நுழைந்ததும் ஈஸ்வரன் குடு குடுவென வந்து நவீனை இழுத்துச் சென்று தனது கடைசி சம்மந்தியிடம்
“இவன் தான் என் மூத்தப் புள்ள நவீன். இவனுக்கு நிச்சயதார்த்தத்தப்போ முக்கியமான வேலை இருந்ததால தான் வரமுடியாம போச்சு.”
என்று நவீனை மட்டும் அறிமுகப் படுத்தினார். உடனே நவீன் அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு மிருதுளாவை அழைத்து அவளையும் தன் மகளையும் அறிமுகம் செய்து வைத்து விட்டு தனது சொந்தங்கள் அமர்ந்திருந்த இடத்தில் போய் ஒரு சேரை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தனர். அப்போது நவீனின் ஒண்ணு விட்ட அக்காவின் கணவர் நவீன் மிருதுளா அருகில் வந்து
“நடந்ததெல்லாம் கேள்விப்பட்டேன். அவ்வளவு நடந்தும் விட்டுக்கொடுக்காம வந்திருக்கேங்கள் பாரு யூ ஆர் சிம்பிளி க்ரேட். ரெண்டு பேரும் நன்னா இருப்பேங்கள்.”
என்று ஆசிர்வாதம் செய்து விட்டு சென்றார். மேடையில் ஈஸ்வரன் குடும்பத்தினர் அனைவரும் இருந்தனர். அதைப் பார்த்தப் போது நவீனின் தூரத்து சொந்தம் ஒருத்தர் மிருதுளாவிடம்
“ஏன்மா மிருதுளா நீயும நவீனும் ஏன் மேடைக்குப் போகலை?”
“இதோ போகப் போறோம் அத்திம்பேர். நவீன பேசிண்டிருக்கார். இப்போ விட்டா அப்புறம் எப்போ எல்லாரையும் இப்படி ஒண்ணா பாக்கக் கிடைக்கும்!!! அதுதான் பேசிண்டே இருக்கார்.”
என்று கூறி சமாளித்துக் கொண்டே இருக்கையில் அவளைப் பின்னாலிருந்து தோளில் தட்டி அழைத்தாள் கஜேஸ்வரி (முகம் கைக் கால் முழுவதும் காயங்களுடன்)
“ஹலோ மன்னி எப்படி இருக்கேங்கள்”
“ம்… நான் நல்லா இருக்கேன். ஆமாம் உனக்கு என்ன ஆச்சு? ஏன் நீயும் கவினும் இவ்வளவு காயங்களோடு இருக்கேங்கள்? வந்ததும் பார்த்தேன். சரி நீங்க எல்லாம் பிஸி பீஸ் ஆச்சே… ஸோ அப்புறமா கேட்டுக்கலாமேன்னு விட்டுட்டேன்”
“அதை ஏன் கேட்குறேங்கள் மன்னி!! நாங்க போன ஆட்டோ ஆக்ஸிடென்ட் ஆகி எங்க ரெண்டு பேருக்கும் செம அடி. நல்ல வேளை உள் காயங்கள் ஏதும் இல்லை. வெளில மட்டும் இந்த சிராய்ப்புகள். என்ன கல்யாண சமயத்துல முகமெல்லாம் இப்படி கீறிண்டு நிக்கறோமேனு தான் ஒரு வருத்தம். பவின் கல்யாண ஃபோட்டோல எல்லாம் இப்படி காயங்களோட தான் இருப்போம்.”
“அச்சச்சோ!!! இது எப்போ நடந்தது”
“இந்த கல்யாண வேலையா அலைஞ்சிண்டிருந்தோம் இல்லையா அப்போ தான் நடந்தது…”
என்று பேசிக்கொண்டிருக்கும் போது பின்னாலிருந்து கஜேஸ்வரியை அவள் அம்மா அழைக்க உடனே
“ஆங் வரேன் மா…சரி மன்னி நீங்க உட்காருங்கோ நான் போயிட்டு அப்புறமா வந்து பேசறேன். நிறைய பேச இருக்கு மன்னி. வரேன்”
“சரி சரி போயிட்டு வா”
என்று கஜேஸ்வரி சென்றதும் மிருதுளா நவீனிடம் மெதுவாக
“கேட்டேளா கஜேஸ்வரி சொன்னதை? பாவம் ரெண்டு பேருக்கும் இப்படியா ஆகனும்? எல்லாம் நேரம் தான்”
“நேரமில்லை மிருது நேரமில்லை!! நீ அன்னைக்கு சொன்னயே எல்லாத்தையும் ஆண்டவன் பார்த்துப்பான்னு ஞாபகமிருக்கா? அவர் பார்த்ததின் விளைவு தான் இது. கொஞ்ச நஞ்சமாவா ஆடினா? அப்பவும் அவன் வந்தானா பேச!!! அடிவாங்கியும் திருந்தலைப் பாரு “
“உஷ்…விடுங்கோ. பேசாம இருங்கோ ப்ளீஸ். என்ன இப்போ அவன் உங்க கூட பேசலையேன்னு கவலையாக்கும்”
“ஆமாம் ஆமாம்!!! எனக்கு வேறெதுவுமில்லைப் பாரு. சரி சரி சேஷு அத்திம்பேர் வரார்…வாங்கோ அத்திம்பேர்”
“என்னடா நவீன் அண்ணனா அங்க போய் மேடையில உட்காராம இப்படி கூட்டத்தோடு கூட்டமா உட்கார்ந்திண்டிருக்க?”
“அதுதான் மத்த அண்ணன்கள் எல்லாம் நிக்கறாளே அப்புறம் நான் வேற எதுக்கு அத்திம்பேர்”
“எல்லாம் கேள்விப் பட்டேன் டா. நீ தான் ஒரே ஆளு அப்போ உங்காத்துல உழைச்சுண்டு இருந்தவன். இது எங்க எல்லாருக்குமே தெரியும். வேற யாருமே வேலைக்கு எல்லாம் போகலைமா மிருது. இவன் ஒருத்தன் சம்பாத்தியத்துல தான் எல்லாரும் சாப்ட்டுண்டு இருந்தா. அப்போ நவீன் எலும்பும் தோலுமா தான் இருப்பான். உன் மாமனார் அப்போ மொடா குடியன். ஒரு நாள் குடிக்க காசில்லைன்னு தெரிஞ்சவாகிட்ட போயி மூத்த புள்ளை செத்துப் போயிட்டான் எடுத்துப் போட காசு இல்லைன்னு அழுது. அவாகிட்டேந்து காசு வாங்கிண்டு போய் குடிச்சவனாக்கும். ஏன்டா நவீன் நீ ஏன் அந்த வீட்டை விட்டுக் கொடுத்த? “
“அத்திம்பேர் அவாளே வச்சுக்கட்டும் ஆனா என்னைக்கிருந்தாலும் என்னோட கையெழுத்தில்லாம அவாளால அந்த வீட்டை விற்கவோ இல்லை மாத்திக்குடுக்கவோ முடியாது இல்லையா. அப்போ என்கிட்ட வந்து தானே ஆகனும். அப்போ பார்த்துக்கலாம்னு தான் விட்டுட்டேன்”
“ஓ!!! ஓ!!!! ஓகே ஓகே!! வா வா என் தர்ம பத்தினியே…என்னை அழைக்க ஆள் வந்தாச்சு நவீன்”
“என்ன நவீன் மிருதுளா எப்படி இருக்கேங்கள்? இது தான் உங்க பொண்ணா? என்ன பேரு”
“நாங்க நல்லா இருக்கோம் அக்கா. ஆமாம் அக்கா. இவ பேரு ….”
என்று மிருதுளா முடிப்பதற்குள்
“என் பேரு சக்தி”
“அட படு சுட்டிப் பொண்ணா இருக்காளே. நாம சாப்பிட போகலாமா. சரி மா நீங்க சாப்பிட வரலையா”
“நீங்க ரெண்டு பேரும் போங்கோ!! நாங்க சாப்பிட இன்னும் கொஞ்சம் நேரமாகும்”
“அப்படியா சரி அப்போ நாங்க சாப்பிடப் போறோம் ப்பா. எங்களுக்கு வயசாயிடுத்தே மாத்திரை போட்டுக்கணுமே. வரோம். அப்புறமா பேசலாம்”
“சரி அக்கா போயிட்டு வாங்கோ. பத்திரமா படில இறங்குங்கோ”
“தாங்க்ஸ் மா மிருது”
“சரி மிருது நாம ஏன் வெயிட் பண்ணிண்டு? நாமளும் சாப்டுட்டு ரூமுக்கு போகலாமே”
“இருங்கோ நம்மாத்துக் காரா எல்லாரும் போகும் போது நாமும் போவோம். ஏன் உங்களுக்கு பசிக்கறதா?”
“ஆமாம் நம்மாத்துக் காரா!!! பேசாம வா மிருது. சக்திக்கு பசிக்குமில்லையா”
என்று கூறி மூவரும் சாப்பிட சென்றனர். இரவு உணவு உண்டதும் அங்கிருந்து ரூமுக்கு புறப்படும் முன் யாரிடமாவது தெரிவித்து செல்ல வேண்டுமென்று மிருதுளா தேடிக்கொண்டிருக்கையில் கஜேஸ்வரி அங்கே வந்தாள் அவளிடம்
“கஜேஸ்வரி நாங்க போயிட்டு காலையில கல்யாணத்துக்கு வந்திடறோம் சரியா. யார்கிட்டயாவது சொல்லிட்டுக் கிளம்பலாமேன்னு தான் வெயிட் பண்ணிண்டிருந்தோம்”
“என்ன மன்னி கிளம்பறேளா? இருப்பேங்கள் உங்ககிட்ட நிறைய விஷயங்கள் பேசலாம்னு நினைச்சேனே!!”
“அதுதான் நாளைக்கு வருவோமே அப்போ பேசிப்போம். நாங்க வரோம்”
என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு ஹோட்டல் ரூமிற்குச் சென்றனர் நவீனும், மிருதுளாவும், சக்தியும்.
மறுநாள் விடிந்ததும் எழுந்து ரெடியாகி மிருதுளா ஒன்பது கஜம் புடவை கட்டிக்கொண்டு மண்டபம் சென்றனர். அங்கே போனால் எவரையுமே காணவில்லை மேடையில் சாஸ்த்திரிகள் வேதங்கள் ஓத அதை சொல்லிக்கொண்டிருந்தான் பவின். அவனருகே ஈஸ்வரனும் பர்வதமும் அமர்ந்திருந்தனர். மேடையில் அங்கும் இங்குமாக நடந்துக் கொண்டிருந்தார் பிச்சுமணி மாமா. வேறு எவருமே மண்டபத்தில் இருக்கவில்லை. நவீன் மிருதுளா உள்ளே நுழைந்ததைப் பார்த்த பிச்சுமணி மாமா நேராக நவீனிடம் வந்து
“பங்சுவாலிட்டினா அது நீங்க தான் டா. பர்ஃபெக்ட் டைம் ல வந்திருக்கேங்கள்.”
“ஏன் மாமா மத்தவா எல்லாம் எங்கே?”
“யாருமே இன்னும் ரெடி ஆகலைடா..நீங்க ரெண்டு பேரும் மேடைக்கு வாங்கோ”
“இல்லை மாமா நாங்க இங்க கீழயே உட்கார்ந்துக்கறோம்”
“வாடா மேல.”
என்று நவீனையும் மிருதுளாவையும் மேலே அழைத்தார் பிச்சுமணி. அவர்களும் சக்தியைக் கூட்டிக்கொண்டு மேடையில் நின்றனர். அப்போது அதுவரை அங்கெங்குமில்லாத கவின் எங்கிருந்தோ வந்தான். அவன் பின்னால் கஜேஸ்வரி கண்ணைக் கசக்கிக் கொண்டு அழுதவாறு வந்து நின்றாள். கொஞ்ச நேரத்தில் அனைவரும் வரத்துவங்கினர். மண்டபம் கல்யாணக் கலைக் கட்டியது. அன்று அந்த கல்யாணத்தில் ப்ரவீனும் துளசியும் தான் அங்கும் இங்குமாக அவர்கள் திருமணத்தில் எப்படி கஜேஸ்வின் நடந்துக் கொண்டார்களோ அதைப் போல பவின் கல்யாணத்தில் இவர்கள் கையே ஓங்கி இருந்ததை கவனித்தனர் நவீனும் மிருதுளாவும்.
ஊஞ்சல் நடைப்பெற்றது. அப்போது சாஸ்த்திரிகள் மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுப்பதற்கு முதலில் மாப்பிள்ளையின் தாயாரைக் கூப்பிட்டார். அவர் கொடுத்ததும் பர்வதத்திடம்
“மாமி உங்க மூத்த மாட்டுப் பொண்ணு அப்புறம் அடுத்த மாட்டுப்பொண்ணுன்னு குடுத்துட்டு அப்புறமா உங்காத்துக் காராளை குடுக்கச் சொல்லலாம்”
என்று கூறியதும் பர்வதம் சட்டென திரும்பி
“கஜேஸ்வரி வாத்தியார் சொன்னபடி செய்யுங்கோ ம் ….ம்…”
என்று கூறியதும் மிருதுளா இருக்க கஜேஸ்வரி தயங்கி நின்றாள். நவீனின் அத்தை மிருதுளாவிடம்
“மிருது இதை எல்லாம் விட்டுக் கொடுக்காதே போ”
என்று அவளை முன் தள்ள. வேளு வழியின்றி மிருதுளா சென்று பாலும் பழமும் கொடுத்தாள். அவளுக்குப் பின் கஜேஸ்வரி சென்றாள். அவள் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே பவின் பர்வதத்திடம்
“அம்மா துளசியும் ப்ரவீனும் எங்கே? துளசியை வரச்சொல்லு”
என்று கூறினான். அதைக் கேட்டதும் வேகவேகமாக வேண்டா வெறுப்பாக கொடுத்துவிட்டு மிருதுளா பின் சென்று நின்றாள் கஜேஸ்வரி. பின் அனைவரும் துளசி துளசி என்று அழைத்தப் பின் வந்தாள் மஹாராணி. வந்து அவள் பாலும் பழமும் கொடுத்தப் பின்பு மற்ற அனைவரும் கொடுத்தனர். அப்போது கஜேஸ்வரி மெல்ல மிருதுளாவிடம்
“மன்னி பார்த்தேளா? இப்போ இங்க எல்லாமே ப்ரவீனும் துளசியும் தான். அவா வச்சது தான் சட்டம். இங்க இந்த சடங்கிருக்குன்னு அவளுக்கு தெரியாதா அப்போ இங்கே இருந்திருக்கணுமா இல்லையா!! பெரிய இவ மாதிரி உள்ள இருந்துண்டு எப்படி கூப்பிட வைக்கறா பாருங்கோ. இந்த பவினும் துளசி துளசின்னுட்டு சகிக்கலை. ஏன் அவனுக்கு நம்ம ரெண்டு பேரையும் பார்த்தா மன்னிகளா தெரியலையா என்ன!!! பாரப்போம் பார்ப்போம் எல்லாம் எத்தனை நாள்ன்னு!! பவித்ரா வரட்டும் அப்புறம் உண்டு இந்த துளசிக்கு”
“சரி சரி விடு கஜேஸ்வரி!!”
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது போல நவீனுக்கும் மிருதுளாவுக்கும் கஜேஸ்வின் செய்தது இப்போது அவர்களுக்கே திரும்பியுள்ளது. அன்று நவீன் மிருதுளா அதைப் பற்றி எவரிடமும் மூச்சு விடவில்லை ஆனால் இன்றோ கஜேஸ்வின் அதை பெரிய விஷயமாக மாற்றி எல்லாவற்றிற்கும் பிரச்சினையை கிளப்பிக்கொண்டே இருந்தனர்.
கல்யாணம் நல்லபடியாக நடந்து முடிந்தது. கஜேஸ்வரியும் துளசியும் ஒன்பது கஜத்தை மாற்றிவிட்டு சுடிதாரில் வந்தனர். மிருதுளாவும் பையில் சுடிதார் எடுத்து வந்துள்ளாள் ஆனால் மாற்றுவதற்கு இடமில்லாமல் நின்றிருந்தாள் அப்போது கஜேஸ்வரியை அழைத்து
“கஜேஸ்வரி நானும் ட்ரெஸ் மாத்தனும். நம்மாத்து ரூம் எங்கருக்குன்னு சொல்லறையா”
“ரூம் அங்கிருக்கு மன்னி ஆனா அதைப் பூட்டிட்டு சாவியை எடுத்துண்டு இப்போ தான் எங்கயோ போனா அந்த துளசி. நீங்க அவகிட்ட தான் சாவியை கேட்டு வாங்கிக்கணும்.”
“அப்படியா. சரி. இங்கே காமென் பாத்ரூம் எங்கிருக்கு?”
“அதோ அந்த ஹான்ட் வாஷ் இடத்துக்குப் பக்கத்துல இருக்கு”
“சரி இரு நான் போய் புடவையை மாத்திண்டு வந்துடறேன்”
என்று அங்கு நவீனுடன் சென்றுப் பார்த்தாள் மிருதுளா ஆனால் அந்த இடம் மிகவும் மோசமாக இருந்ததால் அங்கிருந்து வந்தனர். மிருதுளா ஒரு ட்ரெஸ் மாத்த இடமில்லாமல் தவிப்பதைப் பார்த்த நவீன்
“ஏய் மிருது வா பேசாம ரூமுக்கே போய் மாத்திண்டு வந்திடுவோம்.”
“என்ன நவீன் இப்போ போனோம்ன்னா ட்ராஃபிக் ஜாஸ்த்தியா இருக்கும் போறதுக்கு ஒரு மணி நேரம் வர்றதுக்கு ஒரு மணி நேரமாகிடுமே. சாப்டுட்டு கிளம்பி போனோம்னா அப்புறம் சாயந்தரம் நலங்குக்கு வந்தா போதும்னு பார்த்தேன் இல்லாட்டி இப்போ ஒரு தடவை அப்புறம் ஒரு தடவைன்னு அலையணும். டைம் தான் வேஸ்ட்டாகும். ஒரு யூஸும் இருக்காது”
“ம்…அதுவும் சரிதான் சரி இரு எங்க அப்பா சைடு ஆளுகளுக்கு ரூம் குடுத்திருப்பா இல்ல அவாகிட்ட கேட்டுப் பார்க்கறேன்”
என்று தங்கள் வீட்டுக் கல்யாணத்துலேயே தங்களுக்கு உடை மாற்றக் கூட இடமில்லாமல் தவித்தனர் நவீனும் மிருதுளாவும். அப்போது நவீனின் பெரியப்பா மகன் தங்கள் ரூம் சாவியை குடுக்க வேகமாக சென்று உடையை மாற்றிக் கொண்டு வந்தனர் மூவரும். வெளியே வந்ததும் கஜேஸ்வரி
“அண்ணா மன்னி உங்களுக்கு சீர் செய்ய பொண்ணாத்த கூப்பிடறா. சீக்கிரம் வாங்கோ”
என்றழைக்க அதற்கு நவீன்
“ஆமாம் துணி மாத்தக் கூட ஒரு நல்ல ரெஸ்ட்ரூம் கூட இல்லையாம். இதுல சீராம் சீர்”
என்று முனுமுனுக்க அதற்கு கஜேஸ்வரி
“என்ன சொன்னேங்கள் அண்ணா?”
“அது ஒண்ணுமில்லை கஜேஸ்வரி நீ போ இதோ வந்துடறோம். ஏன் நவீ நீங்க சொன்னது மட்டும் அவ காதுல விழுந்திருந்தா!!! அவ்வளவு தான் அதை வச்சே இங்க ஒரு பெரிய பிரச்சினையை கிளப்பி விட்டிருப்பா…கொஞ்சம் பேசாம வாங்கோளேன் ப்ளீஸ்.”
என்று கூறிக் கொண்டே மூவருமாக மேடையிலிருந்த பவித்ராவின் குடும்பத்தினர் அளித்த சீரை வாங்கிக் கொண்டு கீழே வந்து அமர்ந்தனர். அப்போது கஜேஸ்வரி வேகமாக அவர்களிடம் வந்து
“உங்களுக்கு என்ன குடுத்திருக்கா மன்னி? காட்டுங்கோ”
என்று கேட்டு வாங்கிப் பார்த்து விட்டு
“இதே தான் எங்களுக்கும் தந்திருக்கா. இது நல்லாவா இருக்கு? இன்னும் கொஞ்சம் நல்லதா எடுத்திருக்கலாம். உங்களுக்கு ஒண்ணு தெரியுமா மன்னி….பவின் பவித்ராவோட நிச்சயதார்த்ததுக்கு புடவையை நாங்க எடுத்துக்கறோம்… பணம் மட்டும் நீங்க தந்தா போறும்ன்னு பவித்ராவோட அப்பா சொல்ல அதுக்கு பவினும் சரின்னு மண்டைய ஆட்டினான். அவாளும் புடவையை எடுத்துட்டு நிச்சயதார்த்தத்தப்போ எல்லாம் முடிந்ததும் புடவை பில்லை கவின் கிட்ட நீட்டிப் பணத்தைக் கேட்டார் பவித்ரா பெரியப்பா. கவினும் ஒரு ஆயிரம் இரண்டாயிரத்துக்குள்ள இருக்கும் தானே குடுத்துடலாம்னு பார்த்தா அதில் பத்தாயிரம்னு இருந்தது மன்னி. அதை அப்படியே மாமாகிட்ட கொடுத்து பணத்தைக் குடுக்கச் சொன்னார் கவின். அதுக்கு மாமி வானத்துக்கும் பூமிக்குமா குதிச்சாளே பார்க்கணும். ஆனா அதை எதையுமே சட்டைப் பண்ணாத பவின் ரூபாய் பத்தாயிரத்தை எடுத்து அவாகிட்ட குடுத்துட்டு மாமியையும் வாயை மூடிண்டு இருக்கச் சொல்லிட்டான். உங்க நிச்சயத்துக்கு என்ன ஒரு இருநூறு ரூபாய்க்கும் என் நிச்சயத்துக்கு ஒரு ஐநூறு ரூபாய்க்கும் தானே புடவை எடுத்தா? இது எந்த விதத்துல நியாயம் மன்னி. நம்மாத்துக் காராளும் அவா அவா சம்பாத்தியத்துல தானே கல்யாணம் பண்ணிண்டா!!! மாமா மாமியா செலவு செஞ்சா?”
“விடு கஜேஸ்வரி என் கல்யாணம் அப்போ இருநூறு இப்போத்த பத்தாயிரத்துக்கு சமம்மா. சரி அப்போ உனக்கு ஐநூறுக்கு எடுத்தாளே ….எடுத்தாளே என்ன நான் தான் எடுத்தேன் அறநூறு ரூபாய்க்கு ..அப்போ என்ன நான் கேள்வி கேட்டேனா. ஏன்னா விலைவாசி ஏறிண்டே போறதுமா. எங்க கல்யாணம் முடிஞ்சு என்ன மூணு வருஷம் கழிச்சு உங்க கல்யாணம் நடந்தது. அப்போத்த விலை வாசிக்கு அறுநூறு இப்போ அதுவே பத்து வருஷத்துல பல மடங்காயிருக்கு அவ்வளவு தான்.”
“என்னமோ மன்னி எனக்கு இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமே இல்லை. அவளுக்கு பத்தாயிரம்னா நம்ம எல்லாருக்கும் பத்தாயிரத்துக்கு எடுக்கணும் அவ்வளவு தான்”
“அதையும் அவாளா எடுக்கப் போறா? நம்ம ஆத்துக் காரா தானே எடுக்கணும். கவினை எடுக்கச் சொல்லு. உடுத்திக்கோ. எனக்கு இப்படி எல்லாம் ஒரு யோசனைக் கூட வரலை கஜேஸ்வரி”
“சரி சரி மன்னி வாங்கோ நாம சும்மா அங்கேயும் இங்கேயுமா மேடையிலே இரண்டு தடவை கீழே ரெண்டு தடவைன்னு நடந்துட்டு வருவோம்.”
“என்னத்துக்கு சும்மா நடக்கணும்?”
“மன்னி அப்போ தான் பார்க்கறவாளுக்கு நாம ஏதோ பிஸியா வேலை செய்யறா மாதிரி இருக்கும் வாங்கோ வாங்கோ…அப்புறம் நாளபின்ன யாரும் நாம ஒண்ணும் செய்யலைன்னு சொல்ல முடியாதில்லையா அதுக்குத் தான்.”
“அம்மா தாயே ஏதாவது வேலையிருந்தா தான் நான் வருவேன் இல்லாட்டி என்னால எல்லாம் அப்படி ஆக்டெல்லாம் பண்ண முடியாதும்மா”
“சரி நீங்க வரலைன்னா போங்கோ நான் போயிட்டு வரேன்”
என்று நடகத்தை வழக்கம் போல அறங்கேற்றினாள் கஜேஸ்வரி. அதைப் பார்த்த மிருதுளா நவீனிடம்
“என்னமா நடிக்கறா பா!!! ஏதோ எல்லாமே அவ தலைமேல தான்ங்கறா மாதிரியும் அங்கே பாருங்கோளேன்”
“அதெல்லாம் உனக்கு சுட்டுப் போட்டாலும் வராது மிருது. அதெல்லாம் சின்னதுலேந்து எல்லாத்தையும் பார்த்து வளர்ந்த டிக்கெட் அதுனால அவ இதுவும் செய்வள் இதுக்கு மேலேயும் செய்வள்”
மத்திய உணவருந்தியதும் ஹோட்டல் ரூமுக்குச் சென்று சற்று நேரம் உறங்கிவிட்டு மாலை நலங்குக்கு தயாராகி வந்தனர். வழக்கம் போல் அங்கு எவருமே இருக்கவில்லை. இவர்கள் சென்று அங்கிருந்த சில சொந்தங்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். நலங்கு துவங்கி சிறப்பாக நடந்து முடிந்தது. அப்போது அருகே இருக்கும் பெண் வீட்டிற்கு காரில் தம்பதிகளை பாலும் பழமும் குடுக்க அழைத்துச் செல்ல வேண்டுமென்றும் அதற்காக மாப்பிள்ளை வீட்டிலிருந்து யாராவது ஒரு தம்பதி வரவேண்டுமென்றும் கூற அங்கே ஒவருமே (ஈஸ்வரன் குடும்பத்தினர்) இல்லாமல் போக உடனே பவித்ராவின் பெரியப்பா நவீனைக் காட்டி இதோ மாப்பிள்ளையின் மூத்த அண்ணனும் மன்னியும் இருக்கிறார்களே என்று கூறி அவர்களை அழைக்க அப்போது பவின் குறுக்கிட்டு
“இல்லை இல்லை இருங்கோ ப்ரவீனுக்கும் துளசிக்கும் சொல்லி அனுப்பிருக்கேன் இதோ வந்துடுவா”
என்று கூறியதும் நவீனுக்கு கோபம் வந்து மிருதுளாவைப் பார்த்தான். சரி சரி என்று அவன் கையை வருடிக் கொடுத்து சமாதானமாக இருக்கச் சொன்னாள். அங்கே நவீனும் மிருதுளாவும் ஹோட்டலுக்கு சென்ற சமயத்தில் ப்ரவீனுக்கும் கவினுக்கும் ஏதோ வாக்குவாதமாகி அவர்கள் நலங்கு முழுவதும் உர் என்று இருந்தனர். ப்ரவீனும் துளசியும் வராததால் பவின் நவீனிடம் சென்று வரச் சொன்னான். அப்போது நவீன்
“ஏன் உன் அண்ணனும் மன்னியும் வரலையா?”
என்று கேட்டதும் மிருதுளா குறிக்கிட்டு
“சரி இப்போ என்ன நாங்க ரெண்டு பேரும் வரணும் அவ்வளவு தானே. வரோம்”
என்று கூறி பவினை அனுப்பிவிட்டு நவீனிடம்
“இது கேள்விக் கேட்குற நேரமில்லை நவீ. வாங்கோ பவித்ரா பெரியப்பா பெரியவர் கூப்பிட்ட மரியாதைக்கு ஒரு எட்டு போயிட்டு வந்துடுவோம்”
“ஏன் உன் மச்சினன் சொன்னது கேட்கலையோ”
“அவா குணம் தான் நமக்கு நல்லா தெரிஞ்சது தானே நவீ. பவித்ரா வீடு கிட்டக்க தானாம் போயிட்டு வந்துடலாம் வாங்கோ அதோ அவா கூப்பிடறா”
என்று நவீனை சமாதானப் படுத்தி தானும் சமாதானத்தையே விரும்பிச் சென்றாள் மிருதுளா.
பவின், பவித்ரா, மிருதுளா, நவீன் ஒரு காரில் ஏறிக் கொண்டனர். காரும் புறப்பட்டது. அப்போது மிருதுளா முதல் முறையாக பவித்ராவிடம்
“ஹாய் பவித்ரா.”
என்றாள். அதற்கு பவித்ரா ஏதும் தெரியாதது போல
“ஹாய். நீங்க பவினுக்கு என்ன வேணும்”
“நாங்க பவினோட அண்ணா மன்னி”
“அப்படியா!!!! எனக்கு தெரிந்ததெல்லாம் ரெண்டு மன்னிகளைத்தான்”
என்று திமிராக பதிலளிக்க உடனே முன் சீட்டில் அமர்ந்திருந்த நவீன் மிருதுளாவைப் பார்த்து தன் கண்களாலேயே “இதெல்லாம் உனக்கு தேவையா” என்று கேட்டு விட்டு நடந்தது எதுவுமே காதில் விழாததுப் போல ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்த பவினையும் பார்த்துவிட்டு திரும்பி உட்கார்ந்தான்.
அதற்கு பின் மிருதுளா பவித்ராவிடம் ஏதும் பேசவில்லை. சற்று நேரத்தில் பவித்ரா வீட்டு வாசலில் நின்றது கார்.
அனைவரும் இறங்கினர். ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றனர். அங்கே பவின் பவித்ராவுக்கு பாலும் பழமும் கொடுத்தப் பின் நவீனையும் மிருதுளாவையும் உட்கார வைத்து தாம்பூலம் கொடுத்தனர். பின் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு அங்கிருந்து மீண்டும் காரில் மண்டபம் வந்திறங்கினர். உடனே நவீனும் மிருதுளாவும் ஊருக்கு கிளம்புவதாக பவினிடம் கூறினர். அதைக் கேட்டுக் கொண்டிருந்த பர்வதம்
“துளசி துளசி அந்த பையை எடுத்துண்டு வந்து இவா கிட்ட குடு”
என்று கூறியும் துளசி வரவில்லை. அதற்காக எல்லாம் நிற்காமல் இருவரும் அங்கிருந்து கிளம்பினர்…..அப்போது துளசி பின்னாலிருந்து அழைத்து ஒரு பையை கொடுத்து
“மன்னி இதுல பவின் கல்யாண பட்சணங்கள் இருக்கு அன்ட் உங்களுக்கும் அண்ணாவுக்கும் எடுத்த டிரெஸிருக்கு. வாங்கிக்கோங்கோ”
“இல்லமா துளசி நாங்க இதுக்காக வரலை பரவாயில்லை. நாங்க வரோம்.”
“இல்ல மன்னி இது எல்லாருக்கும் குடுகுற தாம்பூலம் தானே இதை போய் வேண்டாம்னு சொல்லறேங்களே”
“ம்….சரி குடு. நாங்க வரோம்”
என்று மூணாம் மனிதர்களைப் போல வந்திருந்து வாழ்த்திவிட்டு அங்கிருந்து கிளம்பி ஹோட்டலை காலி செய்து பம்பாய் சென்றனர்.
இயற்கையே மனிதனின் செயல்களைக் கண்டு சீற்றம் கொள்ளும் போது….மிருதுளா மட்டும் எப்படி என்றுமே தென்றலாய் வீசிக்கொண்டே இருக்க முடியும்!!!! அவள் புயலாக சற்று நேரம் புரட்டி எடுத்தாலும் மீண்டும் அவளின் இயல்பான தென்றல் குணம் அவளை குடும்பத்துக்காக இறங்கி வரச் செய்தது.
விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை என்பார்கள். அது நவீன் மிருதுளா வாழ்வில் சரியாக தான் இருக்கிறது. ஆனால் எல்லாவற்றிற்கும் எல்லை உண்டு. அது நவீன் மிருதுளா விஷயத்தில் எது என்பதை பொறுத்திருந்துப் பார்ப்போம்.
தொடரும்……
அத்தியாயம் 89: பணமே பாசம்!!
மன பாரத்துடன் ஊரிலிருந்து சென்னைக்கு சென்றனர் நவீனும் மிருதுளாவும்.
நிச்சயதார்த்தம் நடந்த ஹோட்டலில் ரமணி பெரியம்மாவும் பெரியப்பாவும் நவீன் சொன்னது போலவே எவரிடமும் வாயை திறக்கவில்லை. அங்கு வந்திருந்த சொந்தங்கள் எல்லாம் நவீன் மிருதுளா வரவில்லையா என்று விசாரிக்க அதற்கு ஈஸ்வரன் குடும்பத்தினர்
“நாங்க சொல்லியாச்சு அவாளுக்கு என்னவோ வேலையிருக்காம் அதனால வரலை. நாங்க என்ன பண்ண?”
என்று கொஞ்சம் கூட மனசாட்சியில்லாமல் கூற அதற்கு ஒரு சொந்தம்
“நவீனுக்கு தானே வேலையிருக்கு உங்க மாட்டுப்பொண் வந்திருக்கலாமே”
என்று கேட்க அதற்கு பர்வதம்
“வந்திருக்கலாம் தான். ஆனா மனசு வேணுமே!!! அது தான் இல்லையே அங்க!!! நாங்க என்ன செய்யறது”
என்று வாய் கூசாமல் பதிலளிக்க. அதைப் பார்த்தும் கேட்டும் கொண்டிருந்த பெரியம்மா பெரியப்பாவிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. பெணின் அப்பா ஈஸ்வரனிடம்
“எங்க உங்க பெரிய புள்ளையும் மாட்டுப்பொண்ணையும் காணம்!”
என்று கேட்க அதற்கு ஈஸ்வரன் பதிலளிப்பதற்கு முன் முந்திக்கொண்டு சந்தர்ப்பத்தை தனக்காக்கிக் கொண்டான் கவின்
“அது அப்படி தான். அவன் எப்பவுமே இப்படி தான். குடும்பம்ன்னா அப்படி இப்படி எல்லாம் தானே இருப்பா. அது மாதிரி தான் எங்காத்துல அவனும்”
என்று பெரிய மனுஷன் மாதிரி தன் அண்ணனை அவமானப்படுத்த தனது பெற்றோரால் கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் லாவகமாக உபயோகித்துக் கொண்டான் நவீன் கூடப்பிறந்தவன். அதை ஆமோதிக்கும் வண்ணம் ஈஸ்வரனும்
“ஆமாம் நீங்களே பார்த்தேங்களே பொண் பார்க்கக் கூட எங்க கவினும் கஜேஸ்வரியும் தானே வந்தா!! அதே மாதிரி தான் எங்க ப்ரவின் விஷயத்துலேயும் இவா ரெண்டு பேரு தான் எல்லாம்”
என்று மனசாட்சி… என்ன.. மனசே இல்லாத மனிதர்களாக பேசினர் கவினும் ஈஸ்வரனும். ஏனெனில் ப்ரவீன், பவின் இருவருக்கும் பெண் பார்த்து முடித்து நிச்சயதார்த்தம் தேதி முடிவான பின்னரே நவீனுக்கு தெரியப்படுத்தப்பட்டது, பவினின் நிச்சயத்திற்கு வரவிடாமலே செய்தனர், ஆனால் இவர்கள் என்னவோ நவீனை முன்னதாகவே அழைத்ததுப் போலவும் அவர்கள் வராததுப் போலவும் பேசுவதைப் பார்த்தால் இதிகாச சகுனியும் கூனியும் தங்களுக்கு இணையானவர்களோ என்று எண்ணும் அளவிற்கு இருந்தது அவர்களின் பேச்சும் நடிப்பும். இவர்களின் டிராமா எவருக்கும் தெரியாது என்ற மிதப்பில் எல்லோரிடமும் ஒவ்வொரு கதையை அவிழ்த்து விட்டுக்கொண்டிருந்தனர் ஈஸ்வரன் குடும்பத்தினர். தவறு முழுக்க தங்கள் பக்கம் இருந்தாலும் சாமர்த்தியமாக பழியை நவீன் மிருதுளா மீது போட்டுவிட்டு அதையே பெரிய விஷயமாக அன்று அந்த நிகழ்ச்சி நடந்த ஹோட்டல் முழுவதும் பரப்பிவிட்டனர் பர்வதீஸ்வரனும் அவர்களின் புத்திரர்களும். இதைத் தான் ஒரு பொய்யை பத்து தடவை சொல்லி அதை உண்மையாக்குவது போல!!!!
இதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த நவீனின் பெரியப்பா எல்லாம் முடிந்தப் பின் ஈஸ்வரன் பர்வதத்திடம்
“நவீனும் மிருதுளாவும் இன்னைக்கு காலையில எங்காத்துக்கு வந்திருந்தா”
“ஓ! அப்படியா!! பாருங்கோ அப்போ இவ்வளவு தூரம் வந்தவாளுக்கு இங்க வர தெரியாம போயிடுத்தாக்கும்?”
“என்ன பேசறேங்கள் நாங்களும் அப்போலேந்து பார்த்துண்டு தான் இருக்கோம். என்னமோ தப்பெல்லாம் அவா மேல தான்னு சொல்லிண்டிருக்கேங்கள்!!! உண்மையிலே என்ன நடந்ததுன்னு எங்களுக்கு தெரியும். அது உங்களுக்கும் நல்லாவே தெரியும் அப்படி இருந்தும் ஏன் இப்படி எல்லாம் பொய் சொல்லிண்டு இருக்கேங்கள்? அந்த புள்ளையும் பொண்ணும் என்ன தப்பு பண்ணினா?”
“உங்களுக்கு என்ன தெரியுமோ தெரியாதோ அது எங்களுக்கு வேண்டாதது. நாங்க அழைச்சோம் அவா வரலை அவ்வளவு தான் விஷயம்”
“நீங்க அழைச்சேங்கள் இல்லைன்னு அவாளும் சொல்லலை ஆனா சரியான தேதியை சொல்லாம ஏன் தப்பான தேதியை சொல்லிருக்கேங்கள்?”
“யாரு தப்பான தேதியை சொன்னாளாம்? ஃபோன் செய்து விசேஷத்துக்கு அழைக்கறவா எதுக்கு தப்பான தேதியை சொல்லணுமாம்!!!”
“போதும் ஈஸ்வரா போதும். நீங்க தான் தப்பான தேதியை சொல்லி அவாளை வரவிடாம செய்துட்டு இப்போ இப்படி பேசறது நல்லாயில்லை…நல்லாவேயில்லை ஆமாம்”
“அப்படி தப்பான தேதியை சொல்லி அவாளை வரவிடாம செய்யறதுக்கு நாங்க அழைக்காமலே இருந்திருப்போமே!!! அது தோனலையா உங்களுக்கு? நாங்க எல்லாம் சரியா சொல்லித் தான் கூப்பிட்டோம் அவாளுக்கு வர இஷ்டமில்லைன்னா அதுக்கு நாங்க ஒண்ணும் பண்ண முடியாது”
“சரி நீங்க சொல்லற படியே எடுத்துண்டாலும் அப்படி வர இஷ்டமில்லாதவான்னா எதுக்கு இன்னைக்கு இந்த ஊருக்கு மும்பாயிலேந்து வரணுமாம்?”
“அதெல்லாம் நீங்க அவன்கிட்ட தான் கேட்கணும் பெரியப்பா. அதை ஏன் எங்க அப்பா அம்மாகிட்ட கேட்கறேங்கள். அதுதான் அவா சாமர்த்தியம். அப்பா நீ வா அவாளுக்கெல்லாம் பணம் செட்டில் பண்ணியாச்சு. நாம நம்ம பொருளெல்லாம் பேக் செய்து இன்னும் ஒன் அவர்ல ஹோட்டலை காலி செய்துக் குடுக்கணும்.”
என்று கூறி தங்கள் திட்டம் தெரிந்தவரிடமிருந்தும் சாமர்த்தியமாக பதிலளித்து நழுவிச் சென்றனர் ஈஸ்வரன் குடும்பத்தினர். மொத்தத்தில் நவீனும் மிருதுளாவும் அவ்வளவு தூரம் வந்துவிட்டுச் சென்றிருக்கிறார்களே!! அவர்கள் வீட்டு விசேஷத்தில் கலந்துக் கொள்ளவில்லையே என்ற எண்ணம் நவீன் குடும்பத்தினர் எவரிடமும் இல்லை.
அவர்கள் இருவரும் வரக்கூடாதென்று… காழ்ப்புணர்ச்சியில் கவினும் கஜேஸ்வரியும் இயக்கிய நாடகத்தில் சிறப்பாக பங்கேற்று தங்களின் வீண் கோபத்தையும் தீர்த்துக் கொண்டனர் பர்வதீஸ்வரன் தம்பதியர்.
ப்ரவீனின் திருமணத்தில் ஒரு விதமான நாடகம் நடத்தி சொந்தபந்தங்களிடம் நவீனும் மிருதுளாவும் எதுவுமே செய்யவில்லை எல்லாமும் இங்கே நாங்கள் தான் என்று பறைசாற்றிய கவினும் கஜேஸ்வரியும் இப்போது பவினின் திருமணத்தில் புது நாடகத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால் பவினின் அண்ணனும் மன்னியும் அவன் நிச்சயத்தார்த்தத்துக்கு வரமறுத்துள்ளனர் என்றும் அதற்கு மிருதுளா தான் காரணம் என்றும் அவனிடம் ஓதப்பட்டு அவனுக்கு நவீன் மீதும் மிருதுளா மீதும் கோபத்தை உசுப்பேற்றி உருவேற்றினர் பர்வதீஸ்வரனும், கஜேஸ்வினும். கஜேஸ்வின் செய்வதே தவறு இதில் இந்த பர்வதீஸ்வரன் அவர்களுடன் சேர்ந்து இப்படி பிள்ளைகளுக்குள்ளே பிரச்சினையையும் பிரிவினையையும் வரவழைப்பது என்பது முட்டாள்தனமானது.
கஜேஸ்வின்க்கு அந்த குடும்பத்தின் கன்ட்ரோல் தங்கள் கையில் தான் இருக்க வேண்டுமென்பதற்காக இத்தனையும் செய்கிறார்கள். அதற்கு ஒரே தடை தங்களுக்கு மூத்தவர்களான நவீனும் மிருதுளாவும் தான் ஆகையால் அவர்களை பர்வதீஸ்வரனுடன் சேர்ந்து அவர்களை வைத்தே மிகவும் அற்புதமாக காய்களை நகற்றி தங்களின் தடையை அகற்றி வருகின்றனர்.
இவை எதுவுமே தெரியாத நவீனும் மிருதுளாவும் சென்னையில் நிமம்தியாக மூன்று நாட்கள் இருந்து விட்டு பம்பாய் சென்றனர். மிருதுளா நவீனிடம்
“நவீ நான் ஒண்ணு சொல்லுவேன் கோபப்படக்கூடாது”
“என்ன மிருது?”
“நாம உங்காத்துக்கு ஃபோன் போட்டு ஏன் அப்படி செஞ்சான்னு கேட்க வேண்டாமா?”
“நீ ஏன் இப்படி இருக்க மிருது? சரி அவா யாராவது நமக்கு ஃபோன் செஞ்சு நாம ஏன் வரலைன்னு கேட்டாளா?”
“இல்லை.”
“அப்புறம் நாம ஏன் கேட்கணும்?”
“எனக்கு என்னவோ தோணித்து. இதுல யாரோ நமக்குள்ள விளையாடறா மாதிரி இருக்கு நவீ”
“யாரு வேணும்னாலும் விளையாடிக்கட்டும் மிருது. நம்ம லைஃப்பை நாம நிம்மதியாவும் சந்தோஷமாவும் வாழ்ந்துட்டு போவோம். அவாளையும் இவாளையும் பத்தி எல்லாம் யோசிக்கவே வேண்டாம். இனி எவாளுமில்லை அதை நன்னா மனசுல ஏத்திக்கோ. நம்ம சொந்தங்கள் யாராவது ஏதாவது விசேஷத்துக்கு கூப்பிட்டா அதை சரிப் பார்த்துக் கொண்டபின் போயிட்டு வருவோம் அவ்வளவு தான்”
“ம்….ஓகே நவீ”
சில நாட்கள் கடந்தன. ஒரு நாள் லட்சுமி அத்தை (கஜேஸ்வரியின் அம்மா) நவீனை ஃபோனில் அழைத்தாள்.
“ஹலோ நவீன் நல்லா இருக்கயா? மிருதுளா சக்தி எல்லாம் எப்படி இருக்கா?”
“எங்களுக்கென்ன அத்தை நாங்க நல்லா தான் இருக்கோம். என்ன திடீர்னு ஃபோன் எல்லாம்”
“நம்ம நாராயணனுக்கு கல்யாணம் கூடி வந்திருக்கு நவீ.”
“அப்படியா ரொம்ப சந்தோஷம் அத்தை.”
“அது தான் உங்களை எல்லாம் இன்வைட் பண்ணலாம்ன்னு கால் பண்ணினோம். பத்திரிகை அனுப்பியிருக்கோம். வர்ற தை மாசம் பதினெட்டாம் தேதி வச்சிருக்கோம். நீ உன் குடும்பத்தோட வரணும். இதோ அத்திம்பேர் பேசனுமாம் குடுக்கறேன்”
“ஆங் குடுங்கோ அத்தை”
“என்ன நவீன் எப்படி இருக்க?”
“நான் நல்லா இருக்கேன் அத்திம்பேர். நீங்க எப்படி இருக்கேங்கள்?”
“நானும் நல்லா இருக்கேன் பா. உன் அத்தை சொன்னா மாதிரி நாராயணன் கல்யாணத்துக்கு நீ உன் குடும்பத்தோடு வந்துடு சரியா. இதோ அத்தைட்ட குடுக்கறேன்.”
“நவீ மிருதுளாட்ட கொஞ்சம் ஃபோனைக் குடு”
“ஆங் இதோ குடுக்கறேன் அத்தை. மிருது இந்தா அத்தை உன்கிட்ட பேசணுமாம்”
“ஹலோ அத்தை சொல்லுங்கோ. எல்லாரும் எப்படி இருக்கேங்கள்?”
“நாங்க எல்லாரும் நன்னா இருக்கோம் மா. நவீன்ட்ட சொல்லிருக்கோம். நம்ம நாராயணனுக்கு கல்யாணம். நவீனோட அவசியம் வந்துடு சரியா. அதுக்கு தான் கால் பண்ணினோம். வந்துடுங்கோ. நான் வச்சுடட்டுமா?”
“ஆங் சரி அத்தை நாங்க எல்லாரையும் விசாரிச்சதா சொல்லிடுங்கோ”
“சொல்லிடறேன் மா பை”
“பை அத்தை”
“என்ன நவீன் இந்த கல்யாணத்துக்கு போறோமா?”
“ஏன் எப்பவும் டிக்கெட் புக் பண்ணவானு தானே கேட்ப இப்போ என்ன போறோம்னு கேட்கறாய்?”
“எல்லாம் அடிப்பட்டதுனால தான்”
“அடிப்பட்டும் திருந்த மாட்டேன்னு நினைச்சேன் பரவாயில்லை திருந்திட்ட சபாஷ். முதல்ல பத்திரிகை வரட்டும் அப்புறமா போறதைப் பத்தி யோசிப்போம்”
“ஓகே நவீ. யூ ஆர் ஆல்வேஸ் கரெக்ட்”
சில் நாட்களில் பத்திரிகை நவீன் வீட்டு போஸ்பாக்ஸில் இருந்தது. அதை எடுத்து வீட்டிற்கு வந்து மிருதுளாவிடம் கொடுத்தான் நவீன். அதைப் பார்த்ததும் மிருதுளா
“என்ன நவீ பத்திரிகை வந்திடுத்தே!! யூஷ்வலா கஜேஸ்வரி வீட்டு விசேஷத்துக்கு எங்க பேரன்ட்ஸுக்கு அனுப்பறது தானே அவா வழக்கம். நமக்கு அனுப்பிருக்கா அதிசயம் தான்”
“அது உன் மச்சின் கவின் கஜேஸ்வரி வீட்டுப் பழக்கம். அத்தை வீட்டுப் பழக்கமில்லையே”
“அதுவும் சரிதான். நாம போறோமா?”
“போகணுமா என்ன? பேசாம ஃபோன்ல விஷ் பண்ணினா போறாதா?”
“என்ன நவீ நாம இவ்வளவு தூரத்துல சொந்த பந்தம் எல்லாத்தையும் விட்டுட்டு இருக்கோம். இது மாதிரி விசேஷத்துக்கெல்லாம் போனாதானே எல்லாரையும் பார்க்க முடியும். அதுவும் எல்லாரையும் ஒரே இடத்துல!!”
“அப்படிங்கறயா!!! அப்போ சரி டிக்கெட் புக் பண்ணிடு. போயிட்டு வருவோம். நானும் லீவுக்கு அப்ளை பண்ணறேன். ஆனா அந்த கூட்டமும் வருமே”
“வந்தா வந்துட்டுப் போறா. நமக்கென்ன நவீ. நம்மளை அத்தை கூப்பிட்டிருக்கா நாம போறோம் அவ்வளவு தானே. அவளை நாம கண்டுக்க வேண்டாம்”
“ம்….பார்ப்போம் பார்ப்போம்”
என்று பேசிக்கொண்டதும் டிக்கெட் புக் செய்தாள் மிருதுளா. மூவருமாக ஈரோடு சென்றனர். அங்கே ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கினர். அன்று மாலை மாப்பிள்ளை அழைப்பு மற்றும் ரிசெப்ஷனில் பங்கெடுத்துக் கொள்வதற்காக ஹோட்டலில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். வாசலில் அமர்ந்திருந்த சொந்தங்கள் அனைவரும் நவீனையும் மிருதுளாவையும் வரவேற்றனர். இவர்கள் வருவதைப் பார்த்ததும் பர்வதம் ஈஸ்வரனைப் பார்க்க உடனே அவர் ரூமிற்குள் சென்று கதவடைத்துக் கொண்டார். பர்வதம் நேராக நவீனிடம் வந்து
“வா வா. வாங்கோ. எப்படி வந்தேங்கள்”
“நாங்க ட்ரெயின்ல வந்தோம் மா”
என்று மிருதுளா பதில் அளித்தாள். நவீன் மிருதுளாவிடம்
“மிருது நாம அத்தைப் புள்ளை கல்யாணத்தை அட்டென்ட் பண்ண தான் வந்திருக்கோம் அதை ஞாபகம் வச்சுக்கோ. வா போயி தம்பதிகளை வாழ்த்திட்டு வருவோம்”
என்று பர்வதத்திடம் பேச விருப்பமில்லை என்பதை மிருதுளாவிற்கு புரியும்படி சொல்லி அங்கிருந்து அவளை மேலும் ஏதும் பேச விடாமல் அழைத்துச் சென்றான். மிருதுளாவும் அவன் பின்னால் சென்றாள். கஜேஸ்வரி நேராக இவர்களிடம் வந்து
“வாங்கோ அண்ணா வாங்கோ மன்னி”
“ம்…ம்…”
என்று இரண்டே எழுத்தில் பதிலளித்தான் நவீன். ஆனால் மிருதுளாவோ
“கஜேஸ்வரி எப்படி இருக்க? கவின் எப்படி இருக்கான்? குட்டி எப்படி இருக்கா?”
“நாங்க எல்லாரும் நன்னா இருக்கோம் மன்னி. சரி அங்கே கூப்பிடறா. நான் போயி என்னன்னு பார்த்துட்டு வரேன். நீங்க உட்காருங்கோ”
என்று பேச்சை கட் பண்ணிவிட்டு சென்றாள் கஜேஸ்வரி. அதை கவனித்த நவீன் மிருதுளாவிடம்
“உனக்கு இது தேவையா? நான் எப்படி பதில் சொன்னேன் அது மாதிரி சொல்லிட்டு விட வேண்டியது தானே.”
“என்னப்பா எப்படி இருக்க என்னன்னு கேட்கறது தப்பா?”
“கேட்கறது தப்பில்லை ஆனா அதை யார்கிட்ட கேட்கறோம்ங்கறதை பொறுத்துத்தான் தப்பு சரி எல்லாம். அவ என்னவோ பெரிய இவ மாதிரி பேச்சைக் கட் பண்ணிட்டுப் போனா இல்ல”
“ம்….அப்படியா!! அவளை யாரோ கூப்பிடறான்னு இல்லையா சொல்லிட்டுப் போனா?”
“அப்படித்தான் ஏதாவது சொல்லி பேச்சைக் கட் பண்ணுவா மிருது. இது கூட புரியலையா உனக்கு?”
“இப்போ புரிஞ்சுண்டுட்டேன் நவீ”
“நாளைக்கு கல்யாணம் முடிஞ்சு கிளம்பற வரைக்கும் உன் கிட்ட பேசறவா கிட்ட மட்டும் நீ பேசு போதும். நீயா எல்லாம் பேசிண்டு போகாதே புரியறதா? அதுவும் நம்ம கூட்டத்துட்ட போகவே போகாதே”
“சரி நவீ”
திருமணத்தை முழுவதுமாக அட்டென்ட் செய்தனர். அந்த நிகழ்விலும் கவினும் கஜேஸ்வரியும் தான் எல்லாமும் என்பது போன்ற நாடகம் ஒரு பக்கமும் (அதற்கு அவள் குடும்பத்தில் கஜேஸ்வின்னால் ஒதுக்கப்பட்டவர்கள் கஜேஸ்வரியின் மூத்த அக்கா ரமாமணி குடும்பத்தினர்), அந்த விசேஷம் முழுவதும் ஈஸ்வரன்…நவீன் மிருதுளா இருக்கும் இடத்திற்கு வராது இருந்து ஏதோ நவீனும் மிருதுளாவும் தவறிழைத்தது போலவும் அதனால் அவர் கோபத்தில் இருப்பது போலவும் மறுபக்கம் ஒரு நாடகம் அரங்கேறியது. அதை எதையும் கண்டுக்கொள்ளாதது போல நவீனும், அது எதுவுமே புரிந்துக் கொள்ளாத மிருதுளாவும் மத்திய சாப்பாடு ஆனதும் தம்பதிகளுக்கு பரிசைக் கொடுத்து விட்டு தாம்பூலம் வாங்கிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு பம்பாய்க்கு சென்றனர்.
ஊருக்குச் சென்று வந்த துணிமணிகளை ட்ரைக்ளீனிங் போட்டு வாங்கி வைப்பதற்குள் நவீன் இன்னொரு பத்திரிகை போஸ்ட்பாக்ஸில் இருந்ததாகச் சொல்லி எடுத்து வந்து மிருதுளாவிடம் கொடுத்தான். அதைப் பார்த்ததும் மிருதுளா
“நவீ இது யாரோட கல்யாணப் பத்திரிகைன்னு தெரியலையா?”
“நான் பார்க்கலை மிருது. யாரோடது?”
“பவினோட கல்யாணப் பத்திரிகை தான் இது”
“அப்படியா. ஓகே ஓகே!!!”
“என்ன நவீ இப்படி சொல்லறேங்கள்!!”
“பின்ன என்ன சொல்லறது?”
“ஆனா இது நம்மாத்துப் பத்திரிகை இல்லை நவீ”
“என்ன சொல்லுற மிருது? பவினோட கல்யாணப் பத்திரிகைன்னு சொல்லற ஆனா நம்மாத்து பத்திரிகை இல்லைன்னும் சொல்லற. எனக்கு ஒண்ணுமே புரியலை இரு நான் ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன் அப்புறமா தெளிவா சொல்லு”
“சரி சரி வாங்கோ நானும் அதுக்குள்ள காபி போட்டுடறேன்”
“ம்…இப்போ சொல்லு”
“இந்தாங்கோ முதல்ல காபி எடுத்துக்கோங்கோ.”
“சரி எடுத்துண்டுட்டேன். எங்கே அந்த பத்திரிகையை தா படிக்கட்டும்”
“இந்தாங்கோ. நீங்களே பாருங்கோ”
“ஆமாம் இது பவினோட கல்யாணப் பத்திரிகை தானே!!”
“ஆனா இது நம்மாத்து பத்திரிகை கிடையாது நவீ. நல்லா பாருங்கோ இது பொண்ணாத்துக் காரா அடிச்சப் பத்திரிகை. இது பவின் கல்யாணம் பண்ணிக்கப் போற அந்த பொண்ணு பவித்ரா ஆத்த அடிச்ச பத்திரகை. அவா அனுப்பிருக்கா நமக்கு.”
“ஆனா நம்ம ஆத்து மனுஷாளுக்கு நாம இருக்கறதே ஞாபகமிருக்காது”
“அப்படி அவாளுக்கு நம்மளை கூப்பிடுவதில் விருப்பம் இல்லைன்னா!!! நம்மளுக்கு அனுப்பச் சொல்லி பவித்ரா வீட்டுக்கு ஏன் நம்ம அட்ரெஸை கொடுக்கணும்?”
“அவாளோட இத்தனை வருஷமிருந்துமா உனக்கு புரியலை? அவா சைடு பர்ஃபெக்ட்ன்னு காமிச்சுக்க தான். அவா நம்மளை கூப்பிடாதது நமக்கு மட்டுமே தெரிந்த விஷயம். ஆனா ஊர்காராளையும், பொண்ணுவீட்டுக்காராளையும் பொறுத்தவரை நம்மளை இன்வைட் பண்ணிருக்கான்னு தானே அர்த்தமாகறது!!”
“ஓ!!!! ஆமாம் இல்ல. அப்போ நாம் அவா நம்மளை இன்வைட் பண்ணலன்னு சொன்னாலும் யாரும் நம்ப மாட்டா இல்ல !!! ஓ!! அதுக்குத் தானா”
“இன்வைட் எல்லாம் கூட வேண்டாம் மிருது. நம்மகிட்ட என்னைக்கு அவனுக்கு கல்யாணம்ன்னு சொல்லவாவது செய்தாளா அவா? இதுவரைக்கும் இல்லையே!!!”
“அதானே!!! ஏன் அந்த பவினுக்குக் கூட நம்மகிட்ட சொல்லணும்ன்னு தோனலைப் பாருங்கோ!”
“விடு விடு!!! என்ன வேணும்னாலும் பண்ணிக்கட்டும்”
“எல்லாத்தையும் அந்த ஆண்டவன் பார்த்துண்டு தானே இருக்கார் நவீ. அவர் பார்த்துப்பார்”
பவின் திருமணத்திற்கு ஒரு மாதம் முன் நவீன் ஆஃபீஸ் சென்றிருந்த வேளையில் வீட்டிற்கு ஃபோன் கால் வந்தது. அதை அட்டென்ட் செய்தாள் மிருதுளா
“ஹலோ மிருதுளா ஹியர்”
“ஹலோ மன்னி நான் பவின் பேசறேன்”
“ம்…சொல்லு பவின். என்ன விஷயம்?”
“மன்னி நீங்களும் அண்ணாவும் என் கல்யாணத்துக்கு அவசியம் வரணும். அடுத்த மாதம் இருபதாம் தேதி தான் கல்யாணம்.”
“ஆங் பவித்ரா ஆத்துலேந்து பத்திரிகை போன வாரமே எங்களுக்கு வந்தது. அது மூலமா தெரிஞ்சுண்டோம். சரி இப்போ சொல்லற நீ … உன் நிச்சயத்துக்கும் ஃபோன் பண்ணி சொல்லிருக்கலாம் இல்லையா? நாங்க ஊருக்கு வந்துட்டு திரும்பி வந்திருக்க மாட்டோமே”
“மன்னி நான் சொல்லுறேன்னு சொன்னேன் ஆனா அப்பாவும் அம்மாவும் தான் அவா சொல்லிட்டா அதுனால நான் ஒண்ணும் சொல்ல வேண்டாம்ன்னு சொன்னா…அதுதான் சரி அவாளே சொல்லிட்டாளேன்னு நான் சொல்லலை”
“சரி இப்போ எதுனால ஃபோன் போட்டுச் சொல்லற?”
“அப்பா அம்மா நீங்க என் நிச்சயதார்த்தத்துக்கு கூப்பிட்டுட்டும் வராததுனால கோபத்துல உங்க கிட்ட சொல்லிருக்க மாட்டளோன்னு தான் நான் ஃபோன் பண்ணினேன்”
“இங்க பாரு பவின் உங்க அப்பா அம்மா என்னையும் நவீனையும் எப்படி நடத்துவாங்கறது மத்தவாளைவிட உனக்கு நல்லாவே தெரியும். ஏன்னா நீ எல்லா இடத்துலேயும் எல்லாத் தருணத்திலேயும் இருந்திருக்க. உன் நிச்சயதார்த்த டேட்டை ஒரு நாள் தள்ளித்நான் எங்க கிட்ட சொன்னா உன் பேரன்ட்ஸ். அது உனக்கு தெரிஞ்சு நடந்ததா இல்லை தெரியாம நடந்ததான்னு எங்களுக்கு தெரியாது ஆனா நடந்தது. பின்ன எப்படி நாங்க வருவோம் சொல்லு”
“சரி மன்னி அதெல்லாம் விடுங்கோ நீங்களும் அண்ணவும் என் கல்யாணத்துக்கு நிச்சயம் வரேங்கள் அவ்வளவு தான். நானே கூபிடறேன்.”
“ம்…பார்க்கலாம் பவின். நவீன்ட்ட சொல்லிப் பார்க்கறேன். நீ ஈவ்னிங் நவீன் ஆத்துல இருக்கும் போது ஃபோன் பண்ணிருக்கலாம் இல்லையா!! இல்லாட்டி அவர் செல்லுக்கு கால் பண்ணிருக்கலாமே!!”
“நான் அண்ணா செல்லுக்கு ட்ரைப் பண்ணினேன் ஆனா ரெஸ்பான்ஸ் இல்ல அதுதான் வீட்டுக்குப் பண்ணினேன்”
“சரி சரி சொன்னதுக்கு ரொம்ப தாங்க்ஸ் பவின். நாங்க பேசிட்டு டிசைட் பண்ணறோம்.”
“நானே உங்களுக்கு இன்விடேஷன் அனுப்பறேன்”
“சரி வச்சுடட்டுமா. சக்தியை ஸ்கூல்லேந்து கூட்டிண்டு வர நேரமாச்சு”
“ம்…ஓகே மன்னி. நீங்க அண்ணாகிட்ட சொல்லி ரெண்டு பேருமா என் கல்யாணத்துக்கு கட்டாயம் வரணும். பை மன்னி”
“பை பவின்”
அன்று மாலை நவீன் ஆஃபீஸிலிருந்து வந்ததும் மிருதுளா பவின் ஃபோன் செய்த விவரத்தை சொன்னாள். அதைக் கேட்டதும் நவீன்
“ஓ!! அப்படியா”
“என்ன? ஓ! அப்படியான்னு கேட்கறேங்கள்.”
“ஏன் அந்த பெரிய மனுஷனால எனக்கு ஃபோன் போட்டு இதை சொல்ல முடியாதாமா?”
“அவன் முதல்ல உங்க செல்லுக்குத் தான் ட்ரைப் பண்ணினானாம். ரெஸ்பான்ஸ் இல்லாததால வீட்டுக்குப் பண்ணிருக்கான்”
“கால் பண்ணிருந்தாலும் என்கிட்ட இருந்து ரெஸ்பான்ஸ் வராதுன்னு தெரிஞ்சதனால தான் அவன் வீட்டுக்குக் கால் பண்ணி உன் கிட்ட பேசிருக்கான்”
“என்ன சொல்லறேங்கள் நவீ?”
“எவனும் என் செல்லுக்கு கால் பண்ணலைன்னு சொல்லறேன் மிருது”
“பின்ன ஏன் அப்படி என் கிட்ட சொன்னான்?”
“அவனுக்கு நாம அவன் கல்யாணத்துக்கு வரணும் அவ்வளவு தான். என் கிட்ட சொன்னா நான் கேள்வி மேல கேள்வி கேட்பேன். அதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. உன் கிட்ட எமோஷனல்லா பேசிட்டா போதும் நீ உடனே சரின்னு சொல்லிடுவ. அது தான் உன்கிட்ட பேசிருக்கான்…ஸோ சிம்பிள்”
“நானும் கேள்வி மேல கேள்வி கேட்டேன் நவீ. வரோம்ன்னு எல்லாம் நான் சொல்லலை. உங்ககிட்ட சொல்லறேன் பார்ப்போம்ன்னு தான் சொல்லிருக்கேன். நீங்க என்ன சொல்லறேங்கள்?”
“எனக்கு போக இஷ்டமில்லை”
“என்ன நவீ அவன்தான் அவ்வளவு தூரம் சொல்லிருக்கானே”
“அதுனால!!! நிச்சயத்துக்கு நடந்ததெல்லாம் மறந்துட்டயா?”
“மறக்கலை நவீ ஆனா அது அவனுக்கே கூட தெரியாம நடத்தியிருக்கலாம் இல்லையா. அவன் பேசினதிலிருந்து அப்படித்தான் எனக்குத் தோனறது”
“சரி அதுக்கு?”
“நாம போயிட்டு பட்டும் படாம இருந்துட்டு வந்திடலாமே. நம்மாத்த நம்ம ஜெனரேஷனோட கடைசிக் கல்யாணம் இல்லையா இது. இதுக்கப்புறம் நம்ம சக்திக் கல்யாணம் தான். அதுக்கு இன்னும் எவ்வளவு வருஷங்கள் இருக்கு!!!”
“ம்..ம்…பார்க்கலாம் பார்க்கலாம். இன்னும் ஒரு மாசமிருக்கே!!”
என்று கூறினான் நவீன். அதற்கு எதிர்ப்பேதும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்தாள் மிருதுளா ஏனெனில் நவீனின் மனக்கஷ்ட்டத்தை நன்கறிந்தவளாயிற்றே. நவீனே சொன்னால் பவினின் திருமணத்திற்கு செல்லலாம் என்று மனதில் நினைத்துக் கொண்டு தனது வேலையில் மூழ்கினாள் மிருதுளா.
வீட்டை வைத்து முதல் பிள்ளைக்கும் இரண்டாவது பிள்ளைக்கும் கிளப்பிவிட்டப் பிரச்சினை ப்ரவீன் திருமணத்தில் பிரதிபலிக்க…
இப்போது நிச்சயதார்த்தத்துக்கு வேண்டா அழைப்பு ஒன்றை விடுத்து முதல் பிள்ளைக்கும் நான்காவது பிள்ளைக்கும் பிரச்சினையை உண்டு பண்ணியிருக்கிறார்கள் மூத்த தம்பதியர்.
வீட்டைக் காரணமாக வைத்து முதல் பிள்ளையிடமும் இரண்டாவது பிள்ளையிடமும் இருவருக்கும் ஒருவருக்கொருவர் தெரியாமலேயே பணம் வாங்கியுள்ளனர் மூத்த தம்பதியர் . அவர்கள் இருவரும் சுமுகமாக பழகினால் இருவருமே கொடுத்தப் பணத்திற்கு கேள்வி கேட்பார்கள். ஆனால் இருவருக்குள்ளும் பிரச்சினையை கிளப்பி விட்டால்….எங்கிருந்து கேள்வி வரும். பணத்திற்கு முன் பிள்ளைப் பாசம் காணாமல் போனது. இரு கோடுகள் தத்துவத்தை அவர்களின் சுயநலத்திற்காக பிரயோகப் படுத்த இப்போது அது உருமாறி பலப் பிரச்சினைகளுக்கு வித்தாக அமைந்துள்ளது.
மூத்த தம்பதியர் பெற்றப் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் எதார்த்தமாக பேசிக்கொண்டால் அவர்களின் பல குட்டு வெளிப்பட்டு விடுமென்பதனாலேயே கவினுடன் சேர்ந்து அனைத்தையும் நடத்திக் கொண்டிருக்கின்றனர். கவினும் கஜேஸ்வரியும் அவர்களின் குணமறிந்து குடும்பத்தை அவர்கள் கன்ட்ரோலுக்கு கொண்டு வந்து அவர்களை வைத்தே ஆட்டிப் படைக்கின்றனர்.
பெற்றப் பிள்ளைகள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்று எண்ணும் பெற்றோர்களுக்கு மத்தியில் இப்படியும் சில சுயநலவாதிகள் இருக்கத்தான் செய்கின்றனர்!!!!
தொடரும்…..
அத்தியாயம் 88: வேண்டா அழைப்பு!
சக்தியின் பிறந்தநாளுக்கு மறுநாள் நவீனும் மிருதுளாவும் அவர்கள் சொன்ன அந்த ஆசிரமத்துக்கு சக்தியைக் கூட்டிக்கொண்டு சென்றனர். அங்கே இருந்த குழந்தைகளுக்கு சுவீட், கேக், பிஸ்கெட், சாக்லெட், சிப்ஸ், ஃப்ரூட்டி ஆகியவையை ஒரு கவரில் போட்டு ஒரு நூறு பாக்கெட்டுகள் எடுத்து வந்திருந்தனர். அவற்றை ஒவ்வொன்றாக அங்கிருக்கும் ஐம்பது குழந்தைகளுக்கு மூவருமாக அங்கே பணிப்புரியும் ஆட்களுடன் சேர்ந்து கொடுத்தனர். பின் சற்று நேரம் அந்த குழந்தைகளுக்கு பல விளையாட்டுகளை ஏற்பாடு செய்து சக்தியையும் அவர்களுடன் அதில் கலந்துக்கொள்ளச் செய்து அனைவருமாக விளையாடினர். அதன் பிறகு ஏற்பாடு செய்ப்பட்டிருந்த சாப்பாடு வந்ததும் அனைவருமாக அமர்ந்து ஒன்றாக சாப்பிட்டனர். மனத்திருப்தியுடன் சக்தியை அங்கிருந்த குழந்தைகளுக்கு பை பை சொல்ல சொல்லி இன்னும் சில நாட்களில் மீண்டும் அவர்களை சந்திப்பதாகவும் அவர்களுடன் விளையாடுவதாகவும் சொல்லிவிட்டு கிளம்பி அவர்கள் வீட்டிற்கு வந்தனர் மூவரும். வீட்டுக்கு வந்து ஃப்ரெஷ் ஆன பிறகு மிருதுளா சக்தியை மடியில் உட்கார வைத்துக் கொண்டு
“சக்தி மா பார்த்தே இல்ல அந்த குழந்தைகள் எவ்வளவு சந்தோஷப்பட்டாங்கன்னு!!”
“ஆமாம் அம்மா. நானும் ரொம்ப ஹாப்பியா இருந்தேன்”
“குட். இதையே நாம உன்னோட ஒவ்வொரு பர்த்டேக்கும் பண்ணலாமா? உனக்கும் உன் நண்பர்களுக்கெல்லாம் அப்பா அம்மா இருக்கோம். உங்க எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்குது இல்லையா”
“ஆமாம் மா”
“ஆனா அந்த குழந்தைகளுக்கு யாருமே இல்லை மா. அதுனால நாம உன் பிறந்த நாள், தீபாவளி, பொங்கல் ன்னு எல்லா விசேஷ நாள்களிலும் அங்கே போய் அந்த குழந்தைகளுக்கு ஏதாவது செய்து வருவோமா? உன் பிறந்த நாள் அன்னைக்கு ஒரு பாக்கெட் சாக்லெட் வாங்கித்தறோம் அதை ஸ்கூல்ல குடு. நீயும் பெரியப் பொண்ணா ஆகிண்டிருக்க ல ….இந்த மாதிரி செலிப்ரேஷஸ் எல்லாம் இனி நாம பண்ணாம …அந்த பணத்தை வைத்து இது மாதிரி மத்தவாளுக்கு ஹெல்ப் பண்ணலாமா? உனக்கு வேண்டாம்னா இப்போ பண்ணினா மாதிரியே உன் பர்த்டே மட்டும் செலிப்ரேட் பண்ணலாம் நோ இஷுஸ் அட் ஆல். நீயே டிசைட் பண்ணிச் சொல்லு சக்தி.”
“நோப் பா!!! நோ!!! எனக்கு இந்த மாதிரி செலிப்ரேஷன்ஸ் வேண்டாம். அம்மா சொன்னா மாதிரி என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் என்னைப் போலவே எல்லாமும் இருக்கு. ஆனா அந்த கிட்ஸ் பாவம்ப் பா. நாம அவங்களுக்கே ஏதாவது செய்வோம். அதை பண்ண ஐ ஆம் ஹாப்பிப் பா.”
“சமத்துக் குட்டி எங்க சக்தி. ஸோ சக்தியோட நெக்ஸ்ட் பர்த்டே அன்னைக்கு கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டுட்டு அந்த குழந்தைகளோட போய் டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு வருவோம் ஓகே வா”
“அம்மா என் ஃப்ரெண்ட்ஸுக்கு சாக்லெட்?”
“அது உண்டு மா. நிச்சயமா வாங்கித் தருவோம் சரியா. இப்போ நீ போய் விளையாடிக்கோ கண்ணா”
“ஓகே மா!! பை”
“ஆனா ஒன் அவர் தான் சக்தி!!! ஒன் அவர் முடிந்ததும் ஆத்துக்கு வந்திடணும் சரியா”
“ஓகே மா. நான் கரெக்ட்டா வந்திடுவேன்.”
என்று தங்கள் குழந்தைக்கு அடுத்த பிள்ளைகளின் கஷ்டத்தையும், அவர்களுக்கு உதவியதால் இவர்களுக்கு கிடைத்த ஆத்ம திருப்தியையும், மனமகிழ்ச்சியையும் எடுத்துரைத்து, சக்தியின் மனதில் தனது சக வயது குழந்தைகளுக்கும், மற்றவர்களுக்கும் உதவும் மனப்பான்மையை ஆழமாக விதைத்தனர் நவீனும் மிருதுளாவும். ஏனெனில் தனது மாமனார் மாமியாரின் சுயநலமான குணம், அடுத்தவர்கள் மனதைக் காயப்படுத்தும் குணம் ஆகியவை தன் பிள்ளைக்கு வந்து விடக்கூடாதென்பதில் அதிக கவனம் எடுத்துக் கொண்டாள் மிருதுளா.
மாதங்கள் பறந்தன. ஒரு நாள் ஈஸ்வரனிடமிருந்து ஃபோன் கால் வந்தது. அதை அடென்ட் செய்தாள் மிருதுளா.
“ஹலோ நான் ஈஸ்வரன் பேசறேன்.”
“ஆங் சொல்லுங்கோ பா. நான் மிருது பேசறேன். எப்படி இருக்கேங்கள்?”
“ம்..ம்…நாங்க நல்லா இருக்கோம். சரி பவினுக்கு பொண்ணுப் பார்த்தாச்சு. வர்ற ஆகஸ்டு ஒன்னாம் தேதி நிச்சயதார்த்தம் வந்திடுங்கோ. அதை சொல்லத்தான் கால் பண்ணினேன். நவீன்ட்டயும் சொல்லிடு. சரி பவினோட கல்யாண செலவுக்காக என் பெயர்ல இருக்கும் நிலத்தை விற்கலாம்ன்னு முடிவு பண்ணிருக்கோம். என்பதாயிரத்துக்கு கேட்கறா அது தான் குடுக்கலாமான்னு கேட்கவும் கால் பண்ணினேன். என்ன சொல்லறேங்கள்?”
“அப்படியா ரொம்ப சந்தோஷம். நிச்சயமா வந்திடறோம். அது உங்க பெயரில் இருக்கும் நிலம் அதை என்ன வேணும்னாலும் நீங்க செய்துக்கலாம். இதில் நாங்க சொல்ல என்ன இருக்கு?”
“இல்ல நவீன்ட்டயும் ஒரு வார்த்தை சொல்லிடலாம்ன்னு தான் இதை இப்போ சொன்னேன். நீயே சொல்லிடறயா?”
“ஸ்பீக்கர்ல தான் போட்டிருக்கேன் பா. அவரும் கேட்டுண்டு தான் இருக்கார்.”
“ஓ அப்படியா சரி சரி அப்போ சரி. நான் வச்சுடறேன். நீங்க வந்திடுங்கோ”
“ம்… சரி பா. பை”
என்று ஃபோனை வைத்ததும் மிருதுளா நவீனைப் பார்த்து
“என்னப்பா இது திருந்திட்டா போல தெரியறதே!!! அவா பெயரில் இருக்கும் நிலத்தை அவா புள்ளக் கல்யாண செலவுக்காக விக்கப்போறதை நம்ம கிட்ட எல்லாம் சொல்லறா….சொல்லறது என்ன பர்மிஷன் எல்லாம் கேட்கறா!!! எனக்கு ஆச்சர்யமா இருக்கு நவீ”
“இதுல நீ ஆச்சர்யப் படறதுக்கு ஒண்ணுமில்லை மிருது. மறுபடியும் கவின், ப்ரவீன் விஷயத்துல என்ன பண்ணினாலோ அதையே தான் இப்பவும் செய்திருக்கா….அது புரியலையா உனக்கு? எல்லாம் முடிவு பண்ணிட்டு ஒப்புக்கு சொல்லறா நீயும் என்னமோ இதை பெரிசா நினைச்சுண்டு …திருந்திட்டதா எல்லாம் ஏமாந்துடாதே!! என் வீட்டை ஏமாத்திட்டு ….பர்மிஷன் கேட்கிற ஆளுகளைப் பாரு!!! நானெல்லாம் என் கல்யாணத்துக்கு நானே சம்பாதிச்சதை தான் செலவு செய்தேன். அதுலேயும் நிறைய பணத்தை….பத்து ரூபாய் ஆகுற இடத்துல ஐம்பது ரூபாய் ஆச்சுன்னு சொல்லி ஏமாத்திட்டா!! இப்போ இவனுக்கு நிலத்தை வித்து கல்யாணத்துக்கு காசு குடுக்கறாளாக்கும்!!! பேஷ் பேஷ்!!! ஏன் அவனும் சம்பாதிக்கரானே அப்புறம் என்ன?”
“ஓ!! ஆமாம் நவீ. நீங்க சொல்லறதும் யோசிக்க வேண்டியது தான். இப்படி எல்லாம் அவா பண்ணறதைப் பார்க்கும் போது தான் எனக்கு நீங்க அவா புள்ளை தானான்னு சந்தேகத்தைக் கிளப்பறது. இல்லை ஒரு வேளை நீங்க அவா புள்ளையாவே இருந்தாலும்… அவாளைப் பொருத்த வரை நீங்க ஒரு சம்பாதித்து தரும் இயந்திரமாகத் தான் வச்சிருந்தாளோன்னும் நினைக்கத் தோனறது!!! அது எப்படிப்பா பத்து குழந்தைகள் பெத்திருந்தாலும் எல்லா குழந்தைகளையும் சமமாக தானே பார்க்கணும்? ஏன் இவ்வளவு வித்தியாசம் காட்டுறா? சரி அதெல்லாம் விடுங்கோ…அதை எல்லாம் யோசிக்க யோசிக்க நான் தான் குழம்பிப் போவேன்…இப்போ நாம பவின் நிச்சயத்துக்கு போகணும் இல்லையா… அதுக்கு இன்னும் ஒரு மாசம் கூட இல்லை!!! ஸோ டிக்கெட் எல்லாம் புக் பண்ணிடவா?”
“உனக்கு எவ்வளவு பட்டாலும் புத்தியே வராதா? பண்ணு பண்ணு”
என்று நவீன் கூறியதும் மிருதுளா ஒரு நாள் முன் அங்கு ரீச் ஆவது போல மூன்று டிக்கெட்டுகளை ரெயிலில் ஜூலை முப்பதாம் தேதிக்கு புக் செய்தாள். ஜுலை முப்பதாம் தேதி வந்தது. மூவரும் பவினின் நிச்சயதார்த்தத்திற்கு செல்ல ரெயிலில் புறப்பட்டுச் சென்றனர். முப்பத்தி ஒன்றாம் தேதி காலையில் ஊரைச் சென்றடைந்தனர். அங்கே அந்த வீட்டிற்கு செல்ல விருப்பமில்லாமல் அவர்கள் அப்பார்ட்மென்ட் காலியாக இருந்தமையால் அங்கேயே சென்று தங்கினர். குளித்து ஃப்ரெஷானப் பின் அருகே இருந்த ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு நடக்கும் தூரத்திலிருந்த நவீனின் ரமணிப் பெரியம்மா பெரியப்பா வீட்டிற்கு சென்றுவிட்டு ஈஸ்வரன் வீட்டிற்கு செல்லலாமென்று அங்கே சென்றனர். மூவரையும் பார்த்ததும் நவீனின் பெரியம்மாவும் பெரியப்பாவும் மிகவும் சந்தோஷப்பட்டனர். அவர்களை வீட்டினுள் அழைத்து அமரச்செய்து தண்ணீர் கொடுத்தனர். பின் நவீனின் பெரியப்பா நவீனிடம்
“எப்போ வந்தேங்கள்”
“இன்னைக்கு விடியற் காலையில தான் வந்தோம் பெரியப்பா. சரி எப்படியும் உங்க ஆத்த க்ராஸ் பண்ணித்தான் அங்கே போகணும் ஸோ முதலில் உங்களைப் பார்த்துட்டு அங்கே போகலாம்ன்னு தான் வந்திருக்கோம்”
“ரொம்ப சந்தோஷம் பா. என்ன சாயந்தரம் நிச்சயதார்த்ததை வச்சுண்டு நீங்க காலையில தான் வந்திறங்கிருக்கேங்கள்!!”
“நாளைக்கு சாயந்தரம் தானே பெரியப்பா அதுனால தான் இன்னைக்கு வந்தோம். ஒரு நாள் முன்னாடி வந்தா போறாதா என்ன? புள்ளை ஆத்துக் காரா தானே”
“நாளைக்கா!!! இல்லைடா… ஹோட்டல் அக்க்ஷயாவுல இன்னைக்கு சாயந்தரம் நடக்கப் போறது”
“என்னது இன்னைக்கா? எங்ககிட்ட ஒன்னாம் தேதின்னு சொன்னாலே”
“இல்லமா மிருது இன்னைக்கு தான். முப்பத்தி ஒன்னுன்னு சொன்னது உனக்கு ஒன்னுன்னு கேட்டுதோ!!”
“இல்லை பெரியப்பா நானும் கேட்டேனே ஒன்னாம் தேதின்னு தான் சொன்னா”
“ஏன் அப்படி சொன்னா? எங்களையும் மத்திய சாப்பாட்டுக்கு அங்க வரச்சொன்னா. நாங்க தான் சாயந்தரம் ஹோட்டலுக்கே நேரா வந்திடறோம்னு சொன்னோம். சரி நீங்க சாப்டேளா? ரமணி இவாளுக்கும் சாப்பாடு எடுத்து வை”
“இல்லப் பெரியப்பா பரவாயில்லை. நாங்க இங்க வரதுக்கு முன்னாடி தான் ஹோட்டல்ல சாப்டுட்டு வந்தோம். எங்களுக்கு பசிக்கலை.”
“ஏன் அப்படி பண்ணினேங்கள்? இங்கே வரேங்கள்ன்னா எதுக்கு ஹோட்டலுக்கு போனேங்கள்? நேரா ஆத்துக்கே வந்து சாப்பிட்டிருக்கலாமே?”
“எங்களுக்கு செம பசி பெரியப்பா அதுதான் சாப்டுட்டே வந்துட்டோம். சாரி. இல்லாட்டி இங்க வந்து தான் நிச்சயம் சாப்ட்டிருப்போம்”
“சரி அப்போ நீங்க இங்கேயே இருந்துட்டு நாம வேணும்னா சேர்ந்து ஒன்னா நிச்சயத்துக்கு போகலாமே!! என்ன சொல்லுற நவீன்?”
“இல்ல பெரியப்பா நீங்க போயிட்டு வாங்கோ. நாங்க வரலை”
“ஏன்ப்பா?”
“நாங்க வரவேண்டாம்ன்னு தானே தப்பான தேதியை சொல்லிருக்கா!! அப்புறம் எதுக்காக நாங்க வரணும். எல்லாம் அவா புள்ளகள் இருக்காளே அவா பார்த்துப்பா.”
“விடுப்பா!!! இதெல்லாம் பெரிசா எடுத்துக்காம வாப்பா”
“என்ன சொல்லறேங்கள் பெரியப்பா? இப்படி தான் கவின் கல்யாணத்துலேந்து நிறைய தடவை நாங்க மட்டுமே போகட்டும் பரவாயில்லை! போகட்டும் பரவாயில்லைன்னு நினைச்சு விட்டுக் கொடுத்து விட்டுக் கொடுத்து போனதால தான் இன்னைக்கு அதே மாதிரியே நடந்துக்கறா. ஒவ்வொரு கல்யாணத்துலேயும் ஒவ்வொரு டைப்பா ப்ளான் பண்ணி எங்களை அவமானப்படுத்திண்டே தான் இருக்கா. இந்த தடவை நாங்கள் இறங்கிப் போகப் போவதில்லை. நீங்க நாங்க வந்ததைப் பத்தி சொல்லாம… வேணும்னா இருந்துப் பாருங்கோ …மண்டபத்துல எல்லார்கிட்டயும் நாங்க அழைச்சோம் அவா தான் வரலைன்னு சொல்லி அங்கேயும் எங்களை அவமதிக்கத்தான் செய்வா!! சரி உங்க கிட்ட பொலம்பி என்ன ஆகப் போறது. நாங்க போயிட்டு வரோம். மிருது கிளம்பலாமா?”
“ச்சே!!! ஏன் இந்த பர்வதம் இப்படி எல்லாம் நடந்துக்கறாளோ!!! சரிப்பா நாங்களும் என்னதான் செய்யறது? உங்களுக்கு என்னத்தை சொல்லி சமாதானப்படுத்தறதுன்னு ஒண்ணும் புரியலைப்பா”
“பரவாயில்லை பெரியம்மா. நீங்க ஏன் வருத்தப்படுறேங்கள். நாங்க போயிட்டு வரோம்”
“இந்தா மிருது குங்குமம் எடுத்துக்கோ”
“எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்கோ பெரியப்பா அன்ட் பெரியம்மா”
“நன்னா இருங்கோப்பா. நாங்க போயிட்டு வந்து உங்களுக்கு சொல்லறோம்”
“வேண்டாம் பெரியம்மா. எங்களை மதிக்காதவாளைப் பத்தி எதுவும் நாங்க தெரிஞ்சுக்க விரும்பலை. வரோம்.”
என்று கூறிவிட்டு அவர்கள் அப்பார்ட்மெண்ட்டுக்கே திரும்பி சென்றார்கள் நவீனும் மிருதுளாவும். வீட்டிற்குள் நுழைந்ததும் மிருதுளா மொபைலுக்கு ஒரு கால் வந்தது. அது யாரென்று கூடப் பார்க்காமல் வேண்டா வெறுப்பாக அடென்ட் செய்தாள்
“ஹலோ”
“ஹலோ மிருது நான் அம்மா பேசறேன். என்ன உன் ஃபோன் ரெண்டு மூணு நாளா ரீச் ஆகவேயில்லை”
“நீயா!!! ஆமாம் மா …நாங்க டிராவல் பண்ணினதால டவர் இருந்திருக்காது. என்ன சொல்லு”
“நீங்களும் ஊருக்குத் தான் வந்திண்டிருப்பேங்கள்னு நினைச்சேன். நாங்க இன்னைக்கு நம்ம ஊருக்கு தான் வந்திண்டிருக்கோம். சாயந்தரம் பவின் நிச்சயதார்த்தம் அட்டென்ட் பண்ண தான் புறப்பட்டு வந்திண்டே இருக்கோம். அங்கே ஏற்பாடெல்லாம் தடபுடலா நடக்கறதா? ஹலோ!!! ஹலோ!!!! மிருது….ம்….போச்சு டவர் இல்லை. சரி டவர் வந்துட்டு பேசிப்போம்”
என்று அம்புஜம் ஃபோனை கட் செய்தாள்.
“ஹலோ !! ஹலோ!! அம்மா!! கேட்கறதா?…போச்சு கால் கட் ஆயிடுத்தே!!”
“என்ன ஆச்சு மிருது? யாரு ஃபோன் ல உன் அம்மா வா?”
“ஆமாம் நவீ! அவா பவின் நிச்சயத்துக்கு தான் வந்திண்டிருக்கான்னு சொன்னா. ஆனா அதுக்கப்புறம் சொன்னது எதுவுமே சரியா கேட்கலை. அவாளுக்காவது சரியான தேதி சொல்லிருப்பாளா இல்லை நமக்கு மாதிரி தப்பானதை சொல்லிருப்பாளா?”
“அதை உன் பேரண்ட்ஸ் வந்தாலோ இல்லை மறுபடியும் டவர் கிடைத்து பேசினாலோ தான் தெரிஞ்சுக்க முடியும். ஏன் நீ உன் அம்மா கிட்ட பேசலையா?”
“இல்லை நவீ நான் பேசியே ஒரு மாசத்துக்கு மேலே ஆயிடுத்து”
“அம்மா!! அப்பா !! சித்தப்பா நிச்சயத்துக்கு நான் இந்த டிரஸை போட்டுக்கட்டுமா?”
“சக்திமா நீ எந்த டிரஸ் வேணும்னாலும் போட்டுக்கலாம் கண்ணா. நாம நாளைக்கு சென்னைக்கு தாத்தா பாட்டி ஆத்துக்கு போகலாம் சரியா”
“அப்போ பவின் சித்தப்பா நிச்சயதார்த்தம்?”
“அதுக்கு நாம இப்போ போக முடியாது மா ரொம்ப தூரத்துல வச்சிருக்கா. நாம இப்போ கிளம்பினாலும் ரீச் ஆக முடியாது கண்ணா….பரவாயில்லை நாம வேற எங்காவது போயிட்டு வரலாம் சரியா”
“வேற எங்கே போகப் போறோம் மா?”
“சரி சரி ஈவ்னிங் நாம எங்கயாவது வெளியே போயிட்டு வருவோமா. அப்புறம் நைட் பஸ் பிடித்து சென்னை போயிடலாம்”
“நவீ ஆனா அப்பா அம்மா இங்கே வந்துண்டு இருக்காளே!!”
மீண்டும் மிருதுளாவுக்கு ஃபோன் கால் வந்தது. மிருதுளா எடுத்தாள்
“ஹலோ அம்மா சொல்லு”
“மிருது நாங்க ஊருக்கு வந்துட்டோம். நீங்க எங்கே இருக்கேங்கள்? நிச்சயம் நடக்குற ஹோட்டல்லயா? இல்ல ஆத்துலையா? நாங்க எங்கே வரணும்?”
“அம்மா நீ டிரெயின் ல வந்திருக்கயா?”
“இல்ல மிருது சென்னையிலிருந்து கார் வச்சுண்டு வந்திருக்கோம். இப்போ அந்த ஹோட்டலுக்கு வெளியே தான் வெயிட் பண்ணிண்டிருக்கோம்”
“அம்மா பேசாம ரெண்டு பேரும் எங்கேயும் போகாம நம்ம அப்பார்ட்மெண்ட்டுக்கு வாங்கோ”
“என்னடி மிருது சொல்லற? நிச்சயதார்த்தம் தொடங்க இன்னும் ஒரு மணி நேரம் தானே இருக்கு…இன்னுமா நீங்க இங்க வரலை?”
“அம்மா நான் சொல்லறதை மட்டும் கேளு ப்ளீஸ். நேரா நம்ம அப்பார்ட்மெண்ட்டுக்கு வாங்கோ எல்லாம் எக்ஸ்ப்ளேயின் பண்ணறேன்”
“சரி மா இதோ வரோம். டிரைவர் வண்டியை விஜயா அப்பார்ட்மெண்ட்டுக்கு விடுப்பா. ஏன்னா வழியை நீங்க சொல்லுங்கோ. முன்னாடி உட்கார்ந்துண்டு இருக்கேளே”
“ஏன் இப்போ அங்க போகச் சொல்லற? அப்போ நிச்சயதார்த்தம்?”
“என்ன விவரம்ன்னு தெரியலை. நம்ம மிருது தான் அங்கே வரச்சொன்னா. அங்க போய் விவரம் கேட்டுப்போம்”
“அப்போ அவா நிச்சயதார்த்தத்துக்கு வரலையா?”
“எனக்கும் ஒண்ணும் தெரியாது. அவாகிட்ட போய் கேட்டுப்போம். நீங்க வழியை சொல்லுங்கோ”
என்று ராமானுஜமும், அம்புஜமும் விஜயா அப்பார்ட்மெண்ட்ஸுக்கு வந்து சேர்ந்தனர். அங்கே மிருதுளா வீட்டுக்குச் சென்று காலிங் பெல்லை அழுத்தினர். மிருதுளா கதவைத் திறந்தாள். அம்புஜம் உள்ளே நுழைந்துக்கொண்டே
“ஏம்மா நீங்க இன்னும் கிளம்பாம இருக்கேங்கள்?”
“பாட்டி”
“சக்தி…வாடாக் கண்ணா”
“ஆமாம் அம்மா …உங்க கிட்ட என்னைக்கு நிச்சயதார்த்தம்ன்னு சொன்னா?”
“இன்னைக்குத் தான்னு ஃபோன்ல சொன்னா”
“பொண்ணு வீடு மெட்ராஸ் தானாம் ரமணி பெரியம்மா சொன்னா”
“அப்படியா!!”
“என்ன அப்படியான்னு வாயைப் பொளக்கற? அப்போ பேசறதுக்கு…பெண் பார்ப்பதற்கு எல்லாத்துக்கும் சென்னை வந்திருப்பா தானே!!! நீங்க மூத்த சம்மந்தி தானே? அவா ஊருக்கு திரும்பி போற வழிதானே நம்ம வீடு… ஏன் ஆத்துக்கு வந்து அழைக்கக்கூடாதா?”
“அதெல்லாம் நாம எதிர்ப்பார்க்கக் கூடாது மிருது. ஆரம்பத்திலிருந்தே நம்மளை அப்படி தானே நடத்தறா?”
“அப்புறம் ஏன் மா? எல்லா விசேஷத்துக்கும் செலவழிச்சுண்டு வரேங்கள்?”
“பொண்ணக் குடுத்திருக்கோம் இல்லையா மா”
“அதுனால? சரி அதெல்லாம் விட்டுவிடுவோம். உங்களுக்கு சரியான தேதியை சொன்ன அவா எங்களுக்கு ஏன் தப்பான தேதியை சொல்லணும்?”
“புரியலை மிருது!! என்ன சொல்லற?”
“எங்களுக்கு நாளைக்கு தான் நிச்சயதார்த்தம்ன்னு சொன்னா. அதுனால தான் நாங்க இன்னைக்கு காலையில வந்தோம். சரி அங்க போற வழில தானே பெரியப்பா பெரியம்மா இருக்கான்னு அவா ஆத்துக்கு போனோம் அங்க தான் விஷயமே தெரிஞ்சுது. ஏன் மா உனக்கு ப்ரவீன் கல்யாணத்துல அவா நடத்தின குழப்பத்தப்பவே எதா இருந்தாலும் என்கிட்ட சொல்லுன்னு சொல்லிருக்கேன் ல அப்புறம் ஏன் மா இதை நீ சொல்லலை?”
“என்ன மிருது பேசற ஒரு மாசம் முன்னாடி ஃபோன் பேசினப்பவே நான் சொன்னேனே உன் மாமனார் மாமியார் பவின் நிச்சயதார்த்தத்துக்கு அழைச்சிருக்கான்னு”
“அம்மா !!! அம்மா!!! அழைச்சிருக்கான்னு மட்டும் தானே மா சொன்ன!!! ஃபோன்லன்னு சொன்னயா? இல்ல டேட்டை சொன்னயா?”
“எனக்கு என்னடி உங்களுக்கு தப்பான டேட்டை சொல்லுவான்னு ஜோசியமா தெரியும்”
“அம்மா!!! இதுக்கு ஜோசியமெல்லாம் தெரிஞ்சிருக்க வேண்டாம். விஷயத்தை ஒழுங்கா சொன்னாலே போதும்”
“மிருது!!! மிருது!!! கம் ஆன்!! நீ ஏன் இவா கிட்ட பிரச்சினை பண்ணற? இவா என்ன பண்ணுவா? அதுதான் நிச்சயதார்த்தத்துக்கு அழைச்சிருக்கான்னு சொன்னா ல. அப்புறம்!!! அவா விளையாடின விளையாட்டுக்கு நீ ஏன் உன் பேரண்ட்ஸ்கிட்ட கேள்வி மேல கேள்வி கேட்குற? அவா சொல்லறா மாதிரி எங்காத்துக் காரா இப்படி எல்லாம் செய்வான்னு அவாளுக்கு எப்படி தெரியும்?? எங்காத்துக் காரா தான் புதுசு புதுசா தினுசு தினுசா இல்ல எல்லாம் செய்யறா? நாமே ஏமாந்திருக்கோம் அப்புறம் இவா என்ன பண்ணுவா?”
“சாரி மிருது நான் இனி எல்லாத்தையுமே சொல்லிடறேன் மா. இந்த தடவை மன்னிச்சுக்கோ”
“இனி என்ன இருக்கு? விடு விடு மா. நவீ சொல்லறா மாதிரி உங்ககிட்ட கோபப்பட்டு என்ன ஆகப் போறது? நானாவது உன்கிட்ட விவரமா கேட்டுண்டிருக்கணும். என் தப்பும் தான்”
“சரி மிருது நீ உன் அம்மாகிட்ட விவரமா கேட்டு…நமக்கு தப்பான தேதியை சொல்லிருக்கான்னு தெரிய வந்திருந்தா என்ன பண்ணிருப்ப?”
“இவ்வளவு தூரம் டிராவல் பண்ணாம இருந்திருக்கலாம் இல்லையா!!! டிராவல் செய்து வந்து அசிங்கப்படாம இருந்திருக்கலாமே!!”
“ம்….அது என்னவோ சரி தான். நமக்கும் செலவு மிச்சமாகிருக்கும்”
“சரி இப்போ நாங்க என்னப் பண்ணறது மாப்ள?”
“உங்களுக்கு என்ன பண்ணணும்னு தோனறதோ அதை பண்ணுங்கோ”
“அம்மா உன் மாப்பிள்ளையையும் பொண்ணையும் மதிக்காத இடத்துக்கு நீங்க மட்டும் போய் அந்த விசேஷத்தை அட்டென்ட் பண்ணப் போறேளா?”
“இல்லவே இல்லை உங்க ரெண்டு பேருக்காக தான் நாங்க அவா எங்களை அவமரியாதைப் பண்ணினாலும் விட்டுக் கொடுக்காம எல்லா விசேஷத்தையும் அட்டென்ட் பண்ணறோம். இப்போ உங்களையே வேண்டாம்ன்னு வச்சவா விசேஷத்துக்கு நாங்க ஏன் போகணும்? நாங்க போகலை. இங்கேயே இருந்துக்கறோம். ஆனா என்ன நாங்க அட்டென்ட் பண்ணிட்டு நைட் டின்னர் முடிச்சுட்டு உடனே திரும்பிடலாம்ன்னு தான் வந்திருக்கோம். டிரைவர் நைட்டுத் தங்குவாரான்னு தெரியலையே!!!”
“ஓ!! ஓ!!! இப்ப என்ன அவரை மட்டும் காரை எடுத்துண்டு திரும்பிப்போகச் சொல்லுப்பா”
“அதுக்கில்லை அவன் காலியா திரும்பினாலும் நாங்க டூ வேக்கு பணம் கொடுத்தாகணும்.”
“மிருது, மாப்ளை வந்தது வந்தாச்சு பேசாம நீங்களும் எங்களோட சென்னைக்கு வந்து ஒரு வாரம் தங்கிட்டு போங்கோளேன்”
“வரலாம்!!! ஆனா எங்களோட ரிட்டர்ன் டிக்கெட் இங்கேந்து தான் இருக்கு”
“மிருது லீவ் இட். அதை கேன்சல் பண்ணிடுவோம். பேசாம இவா கூடவே சென்னை போயிட்டு ஒரு இரண்டு நாள் இருந்துட்டு அங்கேந்தே பம்பாய் கிளம்புவோம்”
“அப்படிங்கறேங்களா? ஆனா உங்க ஆத்து மனுஷாகிட்ட இதைக் கேட்க வேண்டாமா?”
“கேட்டு?”
“அதுக்காக நாம அப்படியே விட்டுட்டு போனோம்னா அவா பழியை நம்ம மேல தான் போடுவா நவீ. ஏதோ நாம தான் வேணும்ன்னே வரலைன்னு சொல்லிடுவா”
“சொல்லிக்கட்டும் மிருது. என்னென்னவோ சொல்லிருக்கா!! செய்திருக்கா!!! அதோட இதுவும் சேரட்டும். கேட்டா ஒரு பிரயோஜனமும் இருக்கப் போறதில்லை!! பின்ன ஏன் நாம நம்ம எனர்ஜியை வேஸ்ட் பண்ணணும் சொல்லு”
“அதுவும் கரெக்ட் தான் நவீ. ஆனா என் மனசு ஆற மாட்டேங்கறது!! ஏன் இப்படி எல்லாம் பண்ணறாளோ!! சரி அப்படி நாம வரவேண்டாம்ன்னு நினைக்கறவா ஏன் கால் பண்ணி தப்பான டேட்டைச் சொல்லணும் அதுக்கு பதிலா சொல்லாமலே இருந்திருக்கலாமே!!”
“இங்கே தான் அவா ப்ளானை நீ புரிஞ்சுக்கலை மிருது. அவாகிட்ட நமக்கு ஃபோன் பண்ணின கால் ரிஜிஸ்டர் வச்சிருப்பா…ஸோ அவா நம்மளை கூப்பிட்டா அப்படீங்கறதுக்கு எவிடன்ஸ் இருக்கு ஆனா தப்பான தேதியை சொல்லி தான் நம்மகிட்ட விசேஷத்துக்கு அழைச்சான்னு ப்ரூவ் பண்ண நம்ம கிட்ட ஏது எவிடன்ஸ்? புரியறதா?”
“அச்சோ!!! அந்த வார்த்தையை கேட்டாலே ஆத்திரம் ஆத்திரமா வருது நவீ. சரிப்பா உங்க அப்பா தான் அப்படி தப்பா சொல்லிருந்தாலும் இந்த பவின் பையனுக்கு ஒண்ணு நமக்கு ஃபோன் பண்ணிச் சொல்லணும்ன்னு தோனலைப் பாருங்கோளேன்!! அதை நினைச்சா தான் எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு”
“விடு விடு எல்லாரும் வளர்ந்துட்டாமா!!! இருக்கட்டும் இருக்கட்டும். நீ ஏன் சங்கடப்படற? சரி நாம கிளம்பி சென்னை போகலாம். ரொம்ப லேட் ஆக்க வேண்டாம். வா எல்லாத்தையும் பேக் பண்ணி எடுத்துப்போம்”
“எங்களால இதெல்லாம் நம்பவே முடியலை!!! எப்படி எல்லாம் திட்டம் போட்டு இப்படி ஒவ்வொரு தடவையும் உங்க ரெண்டு பேரையும் பாடாப்படுத்தறாளே அவா!! இதை எல்லாம் பார்க்கும் போது எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு”
“என்னப் பண்ண மா? என்னப் பண்ண?”
“சரி மிருது எல்லாத்தையும் எடுத்துண்டாச்சு. கிளம்பலாமா?”
“நவீ சக்திக்கு பசிக்கும் பா. அதுவுமில்லாம அப்பா அம்மாக்கும் பசிக்கும். மத்தியானம் சாப்ட்டுட்டு வந்திருப்பா இப்போ மணி ஏழாச்சு”
“நாம போற வழியில இருக்குற ஹோட்டல்ல டின்னர் சாப்டுட்டு போவோம்”
என்று வீட்டைப் பூட்டி சாவியை மிருதுளா தன் கைப் பையில் போட்டுக் கொண்டு அனைவரும் காரில் ஏறி சென்னைக்கு புறப்பட்டனர். சென்னைக்கு போகும் வழியில் தான் பவினின் நிச்சயதார்த்தம் நடக்கும் ஹோட்டல் இருந்தது. அதன் அருகே செல்லும் போது நவீனும் மிருதுளாவும் அந்த ஹோட்டலையே பார்த்துக் கொண்டே சென்றனர். மிருதுளா கண்கள் ஓரத்தில் கண்ணீர் கசிந்தது. அதைப் பார்த்த நவீன் அவள் கண்களைத் துடைத்துக் கொண்டே தன் கண்களால் இவர்களுக்காக எல்லாம் அழாதே விட்டுத் தள்ளு என்று ஜாடைக்காட்ட அதைப் புரிந்துக் கொண்ட மிருதுளா நவீனிடம்
“என் கண்ணீர் அவாளை எண்ணி வரலை நவீ. உங்களைப் பார்த்துத்தான்… உங்களுக்காக தான் …என் மனசின் வலி கண்ணீரா வெளிய வர்றது”
தொடரும்…..
அத்தியாயம் 87: வீட்டுல விசேஷம்
ஃப்ளைட் பம்பாய் வந்திறங்கியது. நவீனும் மிருதுளாவும் அவர்களின் தினசரி வாழ்க்கை ஓட்டத்தை மேற்கொண்டனர். சக்தி படிப்பு, நாட்டியம், பாட்டு, ஓவியம், வயலின் என்று எல்லாவற்றையும் கற்றுத் தேர்ந்து வந்துக் கொண்டிருந்தாள். படிப்பிலும் முன்னணி மாணவியாக இருந்து வந்தாள்.
ப்ரவீனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக நவீனுக்கும் மிருதுளாவுக்கும் ஃபோன் போட்டுச் சொன்னான். அதற்கு தங்கள் வீட்டின் கிரகப்பிரவேசம் வருவதாகவும் அதற்கு வரும்போது குழந்தையை வந்து பார்ப்பதாகவும் நவீன் கூறினான். அந்த குழந்தைக்கும் கவினின் குழந்தைக்கு செய்தது போலவே பெரியப்பா பெரியம்மாவாக அவர்கள் வகை சீரை ஏற்பாடு செய்தனர். குழந்தைக்கு தங்கத்தில் வளையல், வெள்ளி அரைஞாண், தங்கத்தில் மோதிரம், வெள்ளி கொலுசு, டிரெஸ் என அனைத்தையும் வாங்கி வைத்தனர்.
நவீன் சென்னையில் வாங்கிய வீட்டிற்கு கிரகப்பிரவேசம் நாள் குறிக்கப்பட்டது. அதற்கு இருவீட்டார் பக்கத்திலிருந்து அனைத்து சொந்தங்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தனர் நவீனும் மிருதுளாவும். ஒரு வருட காலமாக பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்த பர்வதீஸ்வரன் தம்பதியருக்கு ஃபோன் போட்டு சொல்ல வேண்டுமென்று மிருதுளா ஆசைப்பட்டாள் ஆனால் நவீன் தன் தம்பி ப்ரவீன் அவர்கள் வீட்டுக்கு ஃபோனெல்லாம் பேசக்கூடாதென்று சொன்னதை ஞாபகப்படுத்தி வேண்டாமென்று கூற மிருதுளாவுக்கோ மனம் படக்படக் என அடித்துக் கொண்டது.
“அது எப்படி அவாகிட்ட சொல்லாம நாம ஒரு விசேஷத்தை நடத்தறது நவீ? அது நல்லா இருக்காதுப்பா”
“ஏன் அவா எல்லாத்தையும் நம்ம கிட்ட சொல்லறாளா என்ன? வீடு காலி பண்ணியபோது, பொருட்களை வித்தபோது, புது வீடு வாங்கினது, அதில் குடிபோனது, கஜேஸ்வரியின் சீமந்தம், ப்ரவீனின் விரதம் மற்றும் நாந்தின்னு அவா சொல்லாத லிஸ்ட் நீண்டுண்டே போறதே அது உனக்குத் தெரியலையா மிருது. அவாளுக்கு அது நல்லா இருக்கும் போது நமக்கும் இது நல்லா தான் இருக்கும். ஒண்ணும் வேண்டாம். அவா நமக்கு செஞ்சதையே அவாளுக்கு திருப்பி செய்யணும் அப்போ தான் அது அவாளுக்கு புரியும். சும்மா நாம மட்டும் பெரியவா பெரியவான்னு விட்டுக் கொடுத்துண்டே போனோம்னா அப்புறம் அது அவாளோட ரைட்டா நினைச்சுப்பா தெரியுமா. இந்த விஷயத்துல நான் சொல்லறதைக் கேளு மிருது.”
“உங்களுக்கென்ன நவீ !!! அப்படி நாம சொல்லலைன்னா அவா உங்களை ஒண்ணுமே சொல்ல மாட்டா ஆனா என் தலை டில்லி பாம்பே சென்னைன்னு உருளும். அதை கொஞ்சமாவது யோசிச்சுப் பார்த்திருந்தேங்கள்னா இப்படி பேச மாட்டேங்கள். அதுவுமில்லாம அவா செஞ்சதையே நாமும் திருப்பி செஞ்சா அப்புறம் அவாளுக்கும் நமக்கும் என்ன வித்யாசம் சொல்லுங்கோ. நம்ம மேல தப்பில்லாட்டா தான் அடுத்தவாளை குறை சொல்லும் யோகியதை நமக்கு உண்டு. அப்படி அதையே திருப்பி செஞ்சா அப்புறம் அவா பண்ணற தப்பையே தான் நாமும் செய்யப் போறோம் ஸோ தப்புக்கு தப்பு ஈக்குவல் பண்ணி டாலி பண்ண இது என்ன வணிகமா?”
“அதெல்லாம் சரி தான் மிருது. சரி அவா செய்யறதையே நாமும் செய்ய வேண்டாம் ன்னே வச்சுக்குவோம் அப்போ அவா திருந்திடப் போறாளா என்ன? எனக்கென்னவோ நீ அவா வாயிக்கு பயந்துண்டு ரொம்ப இடம் கொடுக்கறையோன்னு தோனறது. அதுனால அவா திருந்தப் போறதில்லை ஆனா நிச்சயம் உன்னோட இந்த குணத்தை அட்வான்டேஜா எடுத்துண்டு இன்னும் ஆடப் போற வேணும்னா பாரு”
“அவா திருந்தறாளோ இல்லையோ அதைப் பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்லை. அதுவுமில்லாம அவாளை திருத்த நான் யாரு? பயமெல்லாம் இல்லை ஆனா பெரியவாங்கற ஒரு மரியாதை தான். நாம நம்ம கடமையிலிருந்து தவற வேண்டாமே ப்ளீஸ்”
“ஃபோன் பண்ணக்கூடாது.”
“சரி சரி பண்ண மாட்டேன். ஆனா நாம தான் ஒரு வாரம் முன்னாடியே ஊருக்குப் போறோமே அப்போ நேரா போய் அழைச்சுடலாம்”
“நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் அப்புறம் உன் இஷ்டம். நிச்சியம் இதுக்கு நீ என் கிட்ட பொலம்பிண்டு தான் வரப் போற”
“வந்தா கேட்டுக்கோங்கோ. கேட்க மாட்டாளா”
“நீ பண்ணறது உனக்கே பைத்தியக் காரத்தனமா தெரியலை”
“தெரியறது!!! என்ன பண்ண ? உங்களைப் பெத்தவாளாயிட்டாளே!!”
“ஆமாம் ஆமாம் பெத்…தவா தான்”
கவின் கஜேஸ்வரி மீண்டும் குவைத்துக்கே சென்றுள்ளதால் அவர்களுக்கு ஃபோனில் அழைப்பு விடுத்தனர். என்ன தான் அவர்கள் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கும், சீமந்தத்திற்கும், அழைக்காவிட்டாலும் மிருதுளாவும் நவீனும் அவர்கள் இருவரையும் ஃபோனில் அழைத்ததோடு மின்னஞ்சலில் பத்திரிகையை அனுப்பியும் வைத்தனர். கிரகப்பிரவேசத்திற்கு ஒரு வாரம் முன்னதாகவே ஊருக்குச் சென்று அனைவருக்கும் துணிகள் எடுத்துக் கொண்டு அப்படியே பர்வதீஸ்வரன் வீட்டுக்குச் சென்றனர் நவீனும் மிருதுளாவும்.
“ஆங் வாங்கோ வாங்கோ.”
“அப்பா அன்ட் அம்மா எப்படி இருக்கேங்கள்?”
“நாங்க நல்லா இருக்கோம் நீங்க எப்படி இருக்கேங்கள்?”
“நாங்களும் நல்லா இருக்கோம் பா. இந்தாங்கோ இதுல உங்களுக்கு வேஷ்டி சட்டை அன்ட் அம்மா இந்தாங்கோ இதுல உங்களுக்கு பட்டுப்புடவை இருக்கு வாங்கிக்கோங்கோ”
“என்னத்துக்கு இப்போ இதெல்லாம்?”
“அப்பா நாங்க சென்னையில ஒரு வீடு வாங்கியிருக்கோம். அதுக்கு கிரகப்பிரவேசம் வர்ற வியாழக்கிழமை வச்சிருக்கோம். சாரி லாஸ்ட் மினிட்ல சொல்லறதுக்கு. நாங்க நாளைக்கு சென்னை போயிடுவோம் உங்களுக்கும் என் அப்பா அம்மாவுக்கும் சேர்த்து ஒரு வண்டி ஏற்பாடு பண்ணிருக்கோம் நீங்க ரெண்டு பேரும் வந்து நடத்திக் கொடுக்கணும்.”
“ம்..ம்.. வர்றோம். அப்போ இங்கே இருக்கற ஃப்ளாட் என்ன பண்ணப் போறேங்கள்?”
“அதை வித்துடலாம்ன்னு இருக்கோம்”
“ஏன் வாடகைக்கு ஆள் இருக்கா இல்லையா?”
“இருக்கா ஆனா அவா வீட்டை ரொம்ப மோசமா வச்சிருக்கா. அதுவுமில்லாம வீட்டை காலி பண்ணச் சொன்னா எங்க கிட்டயே சண்டைக்கு வர்றா. காலி பண்ணவும் மாட்டேங்கறா. அதுதான் பில்டர் கிட்டயே சொல்லிருக்கோம். அவர் குடி வச்ச ஆள் தானே ஸோ அவரே பேசி காலி பண்ண வைக்கறேன்னு சொன்னார். அதுக்கு தான் வெயிட்டிங்”
“ஓ!!! அப்படியா! சரி தான்”
ஈஸ்வரனும் மிருதுளாவும் பேசிக்கொண்டிருக்கும் போது காபி போட்டுக் கொண்டு வந்துக் கொடுத்தாள் பர்வதம். அப்போது மிருதுளா
“தாங்க்ஸ் மா. சரி எங்கே ப்ரவீனையும் துளசியையும், பவினையும் காணம்!!”
“ப்ரவீன், துளசி வேலைக்கு போயிருக்கா. பவின் வேலைக்குப் போயிருக்கான்”
“ஓ!! பவினுக்கு வேலைக் கிடைச்சாச்சா? சரி ப்ரவீனும் துளசியும் வேலைக்கு போயிருக்கான்னா அப்போ அவா குழந்தையை யாரு பார்த்துக்கறா?”
“ஆமாம் பவினும் வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டான். எங்க பேத்தியை வேற யாரு பார்த்துப்பா நாங்க தான் பார்த்துக்கறோம். சக்தி பாப்பாவைப் பார்க்க வர்றியா?”
“அப்படியா எங்க இருக்கா குழந்தை?”
“அதோ அந்த ரூமுல தான் தூங்கிண்டிருக்கா. வா வந்து பாரு”
குழந்தையைப் பார்த்துக் கொண்டும் அதனுடன் விளையாடிக் கொண்டுமிருந்ததில் நேரம் போனதே தெரியாமல் இருந்தது. நவீன் ஒரு வார்த்தைக் கூட பேசாமல் நியூஸ் பேப்பரை மட்டும் புரட்டிப் புரட்டிப் படித்துக் கொண்டே இருந்தான். அவன் பெற்றோரும் அவனுடன் பேசவில்லை. வேலை விட்டு வந்தனர் ப்ரவீனும் துளசியும். அவர்களிடம் குழந்தைக்கு வாங்கி வந்ததை கொடுத்து விட்டு அப்படியே கிரகப்பிரவேசத்திற்கு அழைப்பு விடுத்தனர். பின் அவர்களிடமிருந்து விடைப்பெற எழுந்தபோது பர்வதம்
“இருந்து டின்னர் சாப்டுட்டு போகலாமே”
“பரவாயில்லை மா நாங்க கிளம்பறோம் நாழி ஆயிடுத்து. எல்லாருக்கும் பை குட் நைட்”
என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினர். மறுநாள் சென்னைப் போய் அங்கிருக்கும் சொந்தங்களை எல்லாம் அழைத்தனர். கிரகப்பிரவேசம் நாள் வந்தது. அதற்கு முன்தினம் முதல் படு பிஸியாக கேட்டரிங், பூ, மாலை என்று ஒவ்வொன்றையும் ஏற்பாடு செய்வதற்காக அங்கும் இங்குமாக சென்று வந்ததில் பரப்பரப்பாக இருந்தனர் நவீனும் மிருதுளாவும். தங்கள் பெற்றோரின் வரவுக்காக காத்திருந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்கு காலதாமதமானது. உடனே தன் அம்மாவுக்கு கால் செய்தாள் மிருதுளா. அவள் அம்மாவும் தன் நோக்கியா 1100 கைப் பேசியை ஆன் செய்து
“ஹலோ யாரு? நான் அம்புஜம் பேசறேன்”
“அம்மா நான் மிருது பேசறேன். எங்கே இருக்கேங்கள்? ஏன் இன்னும் வரலை?”
“அதுவா அது சர்ப்ரைஸ். வந்துட்டு சொல்லறேன். இதோ சித்த இரு மா…ஏன்ப்பா டிரைவர் இன்னும் எவ்வளவு நேரமாகும் நாங்க சொன்ன அட்ரெஸுக்கு போக?”
“இதோ ரைட் எடுத்துட்டோம்மா இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல ரீச் ஆகிடுவோம்”
“மிருது இன்னும் பத்து…”
“ஆங் ஆங் கேட்டுது கேட்டுது. சரி சரி பத்திரமா வாங்கோ. நான் ஃபோனை வைக்கறேன்”
என்று ஃபோனை துண்டித்த சில நிமிடங்களில் கார் வந்து மிருதுளா நவீனின் புது வீட்டின் வாசலில் வந்து நின்றது. அவர்களை உள்ளே வரவேற்க வெளியே சென்று
“வாங்கோ வாங்கோ!! எல்லாரும் வாங்கோ. வா மா வா பா. ஏன் இவ்வளவு லேட்டு? ஒரு இரண்டு மணி நேரம் முன்னாடியே வந்திருக்கணுமே!!!என்ன எங்க மாமனாரை காணமே”
“அவர் பீரவீனோட வருவார். நான் மட்டும் உன் அப்பா அம்மா கூட வந்தேன்”
“ஓ!! அப்படியா. சரி சரி வாங்கோ வாங்கோ. இது தான் நாங்க வாங்கிய வீடு. இந்த பக்கத்து வீட்டில் தான் இன்னைக்கு நாம தங்கப் போறோம். டிரைவர் அந்த சாமான்களை எல்லாம் அந்த வீட்டில் வச்சுடுங்கோ ப்ளீஸ்.”
“இருப்பா தம்பி சித்த இரு. ஏன்னா அதை எல்லாம் எடுத்துண்டு வருவோம் வாங்கோ. ம்…இதை பிடிங்கோ. நான் இதை எடுத்துக்கறேன்”
“என்னது மா இதெல்லாம்?”
“சொல்லறேன் முதல்ல இந்த சீர் சாமான்கள் எல்லாம் எங்கே வைக்கட்டும்ன்னு சொல்லு மிருது”
“புது வீட்டுக்குள்ள சாமி படமெல்லாம் வச்சிருக்கேனே அதுக்கு முன்னாடி வை”
“சரி சரி டிரைவர் தம்பி இப்போ இந்த பெட்டியை எல்லாம் அந்த வீட்டில வச்சுடுப்பா”
என்று தாங்கள் வாங்கி வந்த சீர் சாமான்களை சாமி முன் வைத்தனர் ராமானுஜமும், அம்புஜமும். அவற்றைப் பார்த்த மிருதுளா
“என்னமா இதெல்லாம். இது என்ன சுவீட்டா? இப்படி வெத்திலைப் பாக்குப் போலவும், பழங்கள் போலவும் இருக்கு!! எவ்வளவு பூ, பழங்கள் எல்லாம் வாங்கிண்டு வந்திருக்கேங்கள் மா. எதுக்கு இவ்வளவெல்லாம்?”
“ஆமாம் அந்த இரண்டு தட்டு சுவீட்ஸ் தான் நான் சொன்ன சர்ப்ரைஸ். எப்படி இருக்கு? நம்ம ஏ2பி லே ஆர்டர் கொடுத்து செய்யச் சொல்லி வாங்கிண்டு வந்திருக்கோம். எல்லாம் இருக்கட்டும். எங்களுக்கும் எங்க பொண்ணு மாப்பிள்ளை வீடு வாங்கிருக்கான்னு சந்தோஷம் இருக்காதா! அதுதான் வாங்கிண்டு வந்திருக்கோம்.”
“உங்க அம்மா ஆர்டர் கொடுத்த கடையில தான் லேட் ஆயிடுத்து. அவன் எல்லாத்தையும் ரெடி பண்ணி தர்ற ரொம்ப டையம் எடுத்துட்டான். ஆனா ரொம்ப அழகா தான் இருக்கு. கடைக்காரன் சொன்னான் அந்த வெற்றிலைப் பாக்கு சுவீட்டை சாப்பிட்டா வெற்றிலைப் பாக்குப் போலவே இருக்கும்ன்னு. அந்த பழங்கள் போல இருக்கும் சுவீட் எல்லாம் அந்தந்த பழத்தோட டேஸ்ட்டே வருமாம். நாளைக்கு எல்லாம் முடிஞ்சுட்டு சாப்ட்டுப் பார்க்கணும்.”
“சாப்ட்டா போச்சு. சரி இன்னும் அப்பா ப்ரவீன் வரலையே”
“வருவா வருவா”
நவீன் மிருதுளாவைக் கூப்பிட்டு
“என்ன மிருது உன் மாமனார் வரலைப் போலவே”
“ப்ரவீனுடன் வருவார்ன்னு அம்மா சொன்னது உங்க காதுல விழலையோ”
“ஏன் நம்ம ஏற்பாடு பண்ணிண வண்டில வர்ற மாட்டாறோ”
“எதுல வந்தா என்ன வந்தா சந்தோஷம் தான்.”
என்று பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு மாருதி 800 கார் வந்து வீட்டு வாசலில் நின்றது. அதை ஒட்டிக்கொண்டு வந்தது ப்ரவீன். அதிலிருந்து குழந்தையுடன் துளசியும், ஈஸ்வரனும் இறங்கினர். மிருதுளா அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றாள். அப்போது நவீன் ப்ரவீனிடம்
“குட் குட் காரெல்லாம் வாங்கிருக்க போல”
“ஆமாம் நல்ல விலைக்கு வந்தது வாங்கிட்டேன்.”
“ரொம்ப சந்தோஷம் ப்ரவீன். கங்கிராட்ஸ்”
“தாங்க்ஸ் மன்னி. அதுதான் நாங்க எல்லாரும் பாண்டிச்சேரி போயிட்டு அப்படியே இங்க வந்தோம்”
“ஓ!! அப்படியா குட். சரி வாங்கோ எல்லாரும் சாப்பிடலாம். உங்களுக்காக தான் நாங்க வெயிட்டிங்”
“என்ன நாம மட்டும் தானா? வேற யாருமே காணமே”
“இல்லப்பா இப்போதைக்கு நாம மட்டும் தான் மத்தவா எல்லாரும் லோக்கல்ல தானே இருக்கா அதுனால காலையில வருவா”
“அப்படியா?”
என்று பேசிவிட்டு சாப்பிட்டு படுத்துறங்கினர். விடியற் காலையில் எழுந்து கிரகப்பிரவேசப் பூஜைக்கு வேண்டியதை எல்லாம் வாத்தியார்கள் ஒருபுறம் தயார் செய்துக கொண்டிருந்தனர். நவீனும் ரெடியாகிக் கொண்டிருந்தான். மிருதுளா சக்தியை ரெடி செய்து பின் தானும் ஒன்பது கஜம் கட்டிக் கொண்டு தயார் ஆகி புது வீட்டுக்குள் செல்ல மூவரும் முற்பட்டப் போது ஈஸ்வரன்
“பர்வதம் நீயும் அவா கூடவே புது வீட்டுக்குள்ள போ…மிருதுளா பர்வதத்தையும் கூட்டிண்டு உள்ள போங்கோ. புது வீட்டுக்குள்ள மூணு பேரா போகக்கூடாது.”
என்று நவீன், மிருதுளா, சக்தியுமாக செல்வதற்கு அப்படி ஈஸ்வரன் சொன்னதைக் கேட்டதும் மிருதுளாவுக்கு ஆத்திரம் வந்தது. அந்த கோபத்திலும் நிதானம் தவராது, மரியாதை குறையாமால் ஈஸ்வரனைப் பார்த்து
“அப்பா இது நாங்க வங்கின வீடு. நாங்க மூணு பேரா தான் வந்து வாங்கிருக்கோம். நாங்க மூணு பேரு தான் வாழப்போறோம். அதுனால மூணு பேரா உள்ள போனா எந்த தப்பும் இல்லை. எங்கக்கூட அந்த அம்பாளும் இருக்கா ஸோ நோ ப்ராப்ளம். அம்மா நீங்க உட்காந்துக்கோங்கோ. கூப்பிடும்போது வந்தா போதும்”
என்று கூறிவிட்டு உள்ளே சென்றனர்.
நவீனும் மிருதுளாவும் அழைப்பு விடுத்த அனைவரும் வந்திருந்தனர். கிரகப்பிரவேசம் விமர்சையாக நடந்தேறியது. வந்திருந்த அனைவரும் நவீனையும் மிருதுளாவையும் குழந்தை சக்தியையும் வாழ்த்தி சென்றனர். அன்று மத்தியம் சாப்பாடு முடிந்ததும் அனைவரும் அவரவர் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர். மிருதுளா அனைவருக்கும் பட்சணங்கள், பூ, பழம் என நிறைவாக செய்தாள். ப்ரவீனும் துளசியும் குழந்தையுடன் புறப்பட்டுச் சென்றனர். ஈஸ்வரன், பர்வதம், ராமானுஜம், அம்புஜம் அனைவரும் படுத்துறங்கினர். அப்போது நவீன் அவர்கள் செய்த ஏற்பாடுக்கெல்லாம் பணம் செட்டில் செய்தான். மிருதுளா அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து அவர்கள் பொருட்களை எல்லாம் எடுத்து வந்து புது வீட்டில் வைத்தாள். மாலை ஆனதும் காபிப் போட்டு பெற்றோர்களை எழுப்பினாள். அவர்கள் முன் அம்புஜம் வாங்கி வந்த சுவீட் மற்றும் கிரகப்பிரவேசம் பட்சணங்கள் எல்லாவற்றயும் வைத்தாள். அவர்கள் அதை எல்லாம் சாப்பிட்டனர். பின் முகம் கை கால் அலம்பி விட்டு ஊர்க்கு நவீன் மிருதுளா ஏற்பாடு செய்திருந்த வண்டியில் புறப்பட்டனர். அவர்கள் கையில் மிருதுளா தாம்பூலம் கொடுத்து அதோடு இரண்டு பைகளில் சுவீட் காரம் எல்லாம் கொடுத்தனுப்பினாள்.
அவர்கள் அந்தப் பக்கம் சென்றதும் நவீனும் மிருதுளாவும் அக்கடான்னு உட்கார்ந்து ஓய்வெடுத்தனர்.
கவினுக்கும் கஜேஸ்வரிக்கும் நவீனிடமோ அல்லது மிருதுளாவிடமோ ஒரு வாழ்த்து சொல்ல முடியவில்லை ஆனால் பர்வதீஸ்வரனுக்கு வீடியோ கால் போட்டு நடந்த விவரங்களை விசாரித்தனர் அப்போது மிருதுளா கொடுத்தனுப்பிய, அம்புஜம் வாங்கிய புதிய வகையான சுவீட்களை கஜேஸ்வரியிடமும் கவினிடமும் காண்பித்தாள் பர்வதம். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாததுப்போல பேசிவிட்டு வீடியோ காலை துண்டித்தனர் கவின் மற்றும் கஜேஸ்வரி.
மறுநாள் காலை விடிந்ததும் வீட்டை சுத்தம் செய்து விட்டு கதவைப் பூட்டிவிட்டு பம்பாயிக்கு புறப்பட்டுச் சென்றனர் நவீனும் மிருதுளாவும். பின் மூன்று மாதங்கள் கழிந்த பின் மிருதுளா அப்பாவின் ரிடையர்மென்ட்டுக்கு ஊருக்குச் சென்றனர். அந்த விசேஷம் நல்லபடியாக நடந்தேறியதும் அவர்கள் இருவரையும் சென்னை வீட்டிற்கு அழைத்து வந்து குடிவைத்தனர் நவீனும் மிருதாளாவும். அதை நவீனின் பெற்றவர்களிடமும் தெரிவித்தனர். அவர்களோடு ஒரு வாரம் இருந்துவிட்டு மீண்டும் பம்பாய் சென்றனர். தங்கள் பெண்ணும் மாப்பிள்ளையும் வாடகை வாங்க மறுத்ததினால் ராமானுஜமும் அம்புஜமும் நவீன் மிருதுளாவை வற்புறுத்தி அவர்கள் பெயரில் ஒரு பாலிசியை (வாடகைக்கு பதிலாக) போட்டு வந்தனர்.
இப்படியாக நவீனும் மிருதுளாவும் அவர்கள் உண்டு அவர்கள் வாழ்க்கை உண்டு என்றிருக்கும் போது ஒரு நாள் கஜேஸ்வரி மிருதுளாவை வீடியோ காலில் அழைத்தாள் மிருதுளாவும் சகஜமாக பேசினாள். அப்போது பேச்சோடு பேச்சாக கஜேஸ்வரி
“மன்னி உங்க வீட்டு கிரகப்பிரவேசம் எல்லாம் நல்லா நடந்துதாமே மாமா மாமி சொன்னா. ஏதோ புது வகையான சுவீடெல்லாம் உங்க அம்மா வாங்கிண்டு வந்தாளாமே!!! மாமி அதை காமிச்சு ரொம்ப தான் பீத்தின்டா….”
“ஓ!! அப்படியா!! அது முடிஞ்சு மூணு மாசம் ஆகறதே!!! இப்போ கால் பண்ணி அதைப் பத்தி பேசற?”
“நான் மறந்தே போயிட்டேன் மன்னி. இப்போ தான் ஞாபகம் வந்தது. என் தோழி ஒருத்தி இரண்டு நாள் முன்னாடி தான் சென்னையில வீடு வாங்கி கிரகப்பிரவேசம் பண்ணினா அப்போ தான் எனக்கும் உங்க வீடு ஞாபகம் வந்தது. அவ கெட்டிக் காரி மன்னி. அவளே கிரகப்பிரவேசத்துக்கு வேண்டிய சீர் சாமான்கள் எல்லாம் வாங்கிட்டு அதை அவ அம்மா அப்பாவை கொண்டு வர வச்சு ஏதோ அவ அப்பா அம்மா வே செய்த சீரு மாதிரி காம்மிச்சுண்டுட்டான்னா பாருங்கோளேன்!!!”
“கஜேஸ்வரி எனக்கு இந்த மாதிரி எல்லாம் பேசினா பிடிக்காது. நீ யாரை இப்போ சொல்லற?”
“அச்சோ மன்னி நான் உங்களை சொல்லலை பொதுவா தான் சொன்னேன்”
“நீ என்னையே சொன்னாலும் எனக்கு கவலையில்லை ஏன்னா நானும் நவீனும் அப்படிப் பட்டவா இல்லைன்னு எங்களுக்கும் அந்த ஆண்டவனுக்கும் நன்னாவே தெரியும். நானும் இப்படி குத்தியோ, குதர்க்கமாவோ இல்லை உதாரணம் காட்டியோ பேசனும்னா நிறைய பேசலாம் அவ்வளவு இருக்கு ஞாபகம் வச்சுண்டு இனி பொதுவா பேசு சரியா.”
“நீங்க தப்பா எடுத்துண்டுட்டேங்கள்ன்னு நினைக்கறேன். சரி மன்னி எனக்கு இன்னொரு கால் வர்றது அதை அடென்ட் பண்ணனும் வச்சுடட்டுமா? பை”
“ம்…ம்…பை பை.”
என்று ஃபோனை வச்சதும் மிருதுளா தனக்குள்
“பொதுவா சொல்ல வந்துட்டா பெரிய இவ மாதிரி. நான் இன்னமும் பழைய மிருதுன்னு நினைச்சுண்டுட்டா போல…இனி உருளைக்கு உப்பேரி உடனே கொடுக்கணும் இது மாதிரி அப்போ தான் அடங்குவா இவா எல்லாம். நவீ சொல்லறது கரெக்ட் தான்”
“என்ன உன் முனுமுனுப்புல என் பெயரும் அடிப்படறது!!!”
“அது மட்டும் தான் கேட்டுதாக்கும்”
“எல்லாம் கேட்டேன். நீ அவகிட்ட பேசது வெரி வெரி கரெக்ட். அது தான் பேசிட்டே இல்ல அப்புறம் ஏன் புலம்பற? அதை அதோட விட்டுட்டு அடுத்த வேலையைப் பாரு மிருது”
நவீனின் அறிவுரைப்படி அதை அன்றே மறந்து விட்டு சக்தியின் பிறந்தநாள் ஏற்பாடுகளில் மூழ்கினாள் மிருதுளா. சக்தியின் நண்பர்கள் அனைவரின் வீட்டிற்கும் ஃபோன் போட்டு அழைத்தாள். அனைவரும் வந்திருந்தனர். கேக் கட் செய்து சக்தியின் பத்தாவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அன்று சக்தியிடம் நவீனும் மிருதுளாவுமாக பேசினார்கள்
“சக்தி இது உன்னோட பத்தாவது பிறந்த நாள் இதை உன் நண்பர்களோட கொண்டாடியாச்சு. ஆர் யூ ஹாப்பி?”
“எஸ் அப்பா ஐ ஆம் வெரி ஹாப்பி”
“குட் மா. ஆனா உன்னைப் போல நிறைய குழந்தைகள் அப்பா அம்மா இல்லாம மூணு வேளை சாப்பிட வழியில்லாம ஆர்ஃபனேஜ்ல இருக்காங்க தெரியுமா?”
“ஏன் பா அவங்களுக்கு அப்பா அம்மா இல்லை? ஏன் அவங்க அங்க இருக்காங்க?”
“ஏன்னா சாமி அவங்க அப்பா அம்மாவை எல்லாம் கூட்டிட்டுப் போயிட்டாரு சக்திமா. அதுனால நாளைக்கு நாம அந்த மாதிரி ஒரு ஹோம்முக்கு போய் அவங்களோட சாப்பிட்டு, விளையாடி, அவங்களுக்கு கிஃப்ட் எல்லாம் கொடுத்து ஒரு ஹாஃப் அ டே ஸ்பென்ட் பண்ணிட்டு வரலாமா?”
“ஓகே மா. ஜாலியா இருக்கும்”
சக்தியின் பிறந்தநாளன்று துளசி மிருதுளாவிற்கு ஃபோன் செய்து சக்திக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லியதும். தான் இரண்டாது முறையாக கர்ப்பம் தரித்திருப்பதாக சொல்ல அதற்கு மிருதுளா வாழ்த்து தெரிவித்து
“நீ வேலையை கன்டின்யூ பண்ணப் போறியா துளசி?”
“ஆமாம் மன்னி. இவர் சம்பாத்தியம் எல்லாம் பத்தவே பத்தாது. அதுவுமில்லாமல் இவர் ஒரு வேலை ல ஒழுங்கா இருக்கவும் மாட்டேங்கரார்”
“அப்போ இரண்டு குட்டீஸையும் யாரு பார்த்துப்பா?”
“நம்ம மாமனார் மாமியார் தான வேற யாரு பார்த்துப்பாளாம்?”
“சுப்பர் அந்த பேரன் பேத்தியையாவது பார்த்துக்கட்டும். சந்தோஷம் தான்.”
“ஏன் மன்னி அப்படி சொல்லறேங்கள்? நீங்க சக்தியை நம்ம மாமியார்கிட்ட ஒட்டவே விடலை அது தான் அவாளால் பார்த்துக்க முடியாமல் போச்சு. நீங்க உங்க அம்மா கிட்ட தான் விட்டேங்கள் அப்புறம் இப்படி சொன்னா எப்படி?”
“இங்கே பாரு துளசி இதெல்லாம் உனக்கு தேவையில்லாத பேச்சு. நீ இந்த ஆத்துக்கு வர்றதுக்கு ஒன்பது வருஷம் முன்னாடி வந்தவ நான். அப்போ என்னென்ன நடந்ததுன்னு எல்லாம் உனக்கு தெரியாது. ஸோ யாராவது ஏதாவது சொன்னதெல்லாம் வச்சுண்டு இனி என் கிட்ட இப்படியெல்லாம் பேசிண்டு வராதே! உனக்கு நான் அப்போ நடந்ததை எல்லாம் எக்ஸ்ப்ளேயின் பண்ண வேண்டிய எந்த அவசியமுமில்லை. உன் அம்மாவால முடியாது அதுதான் நீ மாமியார்ட்ட விட்டிருக்கன்னு நான் சொன்னா உனக்கு கோபம் வரும்ல அது மாதிரி தான். ஒருத்தர் வாழ்க்கையில என்ன நடந்தது ஏது நடந்ததுன்னு முழுசா தெரியாம பேசிடக் கூடாது. இனி இப்படி பேசறதா இருந்தா எனக்கு நீ கால் பண்ண வேண்டியதேயில்லை புரிஞ்சுதா!”
“ஓகே மன்னி”
“தாங்கஸ் ஃபார் யுவர் விஷ்ஷஸ். நான் வச்சுடவா”
என்று ஃபோனை துண்டித்தாள் மிருதுளா. அன்று முதல் பர்வதீஸ்வரனின் தூதாகவும், ஒற்றனாகவும் உபயோகப்படுத்தப்பட்டாள் துளசி.
பிள்ளைக்கு சம்பாதிக்க வக்கில்லை என்றும் அதனால் தானும் வேலைக்கு போக வேண்டுமென்றும்…
மூத்த மருமகள் சொல்லாததை சொன்னதாக இட்டுக்கட்டி பர்வதம் கூறினாள் அன்று
அதையே சொல்லி சலித்துக் கொண்டாள் மூன்றாவது மருமகள் மிருதுளாவிடம் இன்று
மூத்த மகனின் குழந்தையைத் தொட்டுக் கூட தூக்க மனமில்லை பர்வதத்திற்கு அன்று
மூன்றாவது மகனின் குழந்தையை முழுநேரம் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது இன்று
பத்து வருடத்திற்கு முன் இருந்தது உடலில் பலம் ஆனால் பேத்திக்கு செய்வதற்கோ இல்லாமல் போனது மனம்
பத்து வருடத்திற்கு பின் இல்லை உடலில் பலம் ஆனால் பேத்தியை பார்த்துக் கொண்டுதான் ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளியது காலம்!!!!
தொடரும்…..
அத்தியாயம் 86: பர்வதத்தின் பொய் பல் இளித்தது!
பர்வதம் தான் கேட்கச் சொன்னாள் என்ற உண்மையை ரமணி போட்டுடைத்ததும் ஃபோனை வைத்து விட்டு தலையை தொங்கப் போட்டப்படி அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தார் ஈஸ்வரன். அவரிடம் பர்வதம்
“நான் சொல்லறதை நம்பாம இவா ரெண்டு பேரும் சொல்லறதை கேட்டு ஃபோன் போட்டேளே என்ன சொன்னா என் அக்கா? நான் சொல்லலைன்னு தானே சொன்னா? அதை கேட்டுத் தானே இப்படி உட்கார்ந்திருக்கேங்கள்? ம்…அதை இவாகிட்டயும் நல்லா கேட்கறா மாதிரி சொல்லுங்கோ”
“சும்மா இரு பர்வதம்”
“நான் ஏன் சும்மா இருக்கணும். என்னை வச்சுத்தானே இவ இப்படி சொல்லறா அப்புறம் எப்படி நான் சும்மா இருப்பேன்?”
“பர்வதம்….நீ தான் கேட்கச் சொன்னேன்னு உன் அக்காக்காரி சொல்லறா!! போதுமா!! அவ நான் கேட்டதுக்கு ஆமாம்ன்னு சொல்லிட்டு… ஏன் கேட்கறேங்கள்? எதுக்கு கேட்கறேங்கள்ன்னு கேட்கறா!!! நான் என்னத்தை சொல்ல? அதுதான் ஃபோனை வச்சுட்டேன். இப்போ கொஞ்சம் சும்மா இருக்கயா!!”
“பார்த்தேங்களா அப்பா நான் சொன்னது சரி தானே!!! கேட்டுக்கோங்கோ நவீ. ஏன் நான் அவ்வளவு ஊர்ஜிதமா சொன்னேன்னா ….அம்மா போய் ஒவ்வொருத்தர் கிட்டேயும் ஏதோ சொன்னதும் அவா நேரா என் கிட்ட வந்து அந்த கேள்வியை கேட்டா அப்பவே எனக்கு சந்தேகம் தான். ஏன் மா உங்களுக்கு உண்மையிலேயே என் மேல அக்கறை இருந்திருந்தா நீங்க நேரா என் கிட்ட இல்லையா வந்து கேட்டிருக்கணும். ஏன் அதை செய்யாம இப்படி ஒவ்வொருத்தரையா தூது அனுப்பினேங்கள்? அப்படி நீங்க அனுப்பியவா வந்து மாறி மாறி என் கிட்ட கேட்கும்போது எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? இல்லை அப்படி நான் ஃபீல் பண்ணணும்ன்னு தான் செஞ்சேங்களா? ஏன் இப்படி ஒவ்வொரு விசேஷத்துக்கும் என் பெயரை மண்டபமே ஒலிக்கச் செய்யறேங்கள்? அதுனால உங்களுக்கு என்ன சந்தோஷம் கிடைக்கறது? இனியும் இதே மாதிரி பண்ணிணேங்கள்னா அப்புறம் நான் இவ்வளவு பொறுமையா எல்லாம் ஹாண்டில் பண்ண மாட்டேன். நானும் எவ்வளவு தான் பொறுத்துப்பேன். என் பொறுமைக்கும் எல்லை உண்டு. தயவுசெய்து என்னை அந்த எல்லையை மீற வச்சுடாதீங்கோ. நீங்க என்னை எவ்வளவோ அசிங்கப் படுத்திருக்கேங்கள், அவமானப்படுத்திருக்கேங்கள், பாடா படுத்திருக்கேங்கள் ஆனா ஒரு தடவை கூட நான் உங்க கிட்ட மரியாதை குறைவாகவோ இல்லை திமிராகவோ நடந்துண்டதே இல்லை இது உங்களுக்கே நல்லா தெரியும். இதுவே லாஸ்ட்டா இருக்கட்டும். ப்ளீஸ் இது மாதிரி வேலையெல்லாம் நிறுத்திக்கோங்கோ. அப்பா இப்படி தான் நிறைய விஷயங்கள் நடந்திருக்கு ஆனா எனக்கு தான் எவிடன்ஸ் கொடுக்கணும்ன்னு தெரியாம போச்சு. அப்படி ஒரு குடும்ப வழக்கம் இருப்பதை உங்க புள்ளை தான் எங்களுக்கு நல்லா புரிய வச்சான். அதுதான் இதை எவிடன்ஸோட ப்ரூவ் பண்ணணும்னு வந்தேன். பண்ணிட்டேன். இனி இது நடக்காமல் பார்த்துக்க சொல்லுங்கோ.”
“என்ன விட்டா பேசிண்டே போற? நான் மறுபடியும் சொல்லறேன் நான் யாருகிட்டேயும் அப்படி கேட்கச் சொல்லி சொல்லவேயில்லை….நான் சொல்லறதை இவ பார்த்தாளாம் …அவா வந்து இவ கிட்ட கேட்டாளாம்…எனக்கு வேற வேலையில்லை பாரு”
“ஏய் பர்வதம் சும்மா இரு. உன் அக்கா சொல்லிட்டான்னு சொல்லறேன் அதுக்கப்புறமும் என்ன பேச்சு வேண்டிருக்கு?”
“ஆமாம் அக்…கா…..அவ யாரு சொல்லறதுக்கு? அவளுக்கு என் மேலே பொறாமை அதுதான் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி குடும்பத்துக்குள்ள குழப்பத்தை உண்டு பண்ணறா. அதுக்கு நான் ஏன் பேசாம இருக்கணும்?”
“அம்மா கொஞ்சமாவது நியாயமா பேசுங்கோ. இங்கே என்ன நடக்கறதுன்னு பெரியம்மாவுக்கு தெரியாது. அப்பா ஏன் அப்படி ஒரு கேள்வியை கேட்கிறார்ன்னும் அவாளுக்கு தெரியாது. ஆனா கேட்டதும் பளிச்சுன்னு பதில்….உண்மையான பதிலை நச்சுன்னு சொல்லிருக்கா….அவா நீங்க சொல்லறா மாதிரி எல்லாம் இருந்தா ஏன் எதுக்குன்னு கேட்டுட்டு தான் பதிலே சொல்லிருக்கணும் இல்லையா!!!”
“அதெல்லாம் இல்லை அவ பொறாமையில தான் அப்படி சொல்லிருக்கா”
“ம்…ம்…தூங்கறவாளை எழுப்பலாம் தூங்கற மாதிரி நடிக்கறவாளை எழுப்பறதுங்கறது நடக்காத காரியம். அப்படி உங்களை எழுப்பணும்ன்னு எனக்கு எந்த வித அவசியமும் இல்லை. நீங்க அப்படி எல்லார்கிட்டேயும் தேவையில்லாம தேவையில்லாத ஒரு விஷயத்தை சொல்லி பரப்பி விட்டேங்கள் னு எனக்கு தெரியும், அந்த கடவுளுக்கு தெரியும், ஏன் உங்களுக்கும் நல்லாவே தெரியும் ஆனா நீங்க ஒத்துக்க தயாரா இல்லை அவ்வளவு தான். ஒண்ணு மட்டும் சொல்லறேன்…தப்பு பண்ணறதுங்கறது மனுஷாளா பொறந்த எல்லாரும் செய்யறது தான் ஆனா அதை பாதிக்கப்பட்டவா சொல்லும் போது அதுவும் எவிடன்ஸோட சொல்லும்போது ஒத்துக்காட்டாலும் பரவாயில்லை அதை மறுபடியும் செய்யாதிருங்கோ. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் அப்புறம் உங்க இஷ்டம். எப்பவுமே உங்க இஷ்டத்துக்கு தானே நடக்கறேங்கள். நவீ நாம கிளம்பலாமா. நாங்க போயிட்டு வர்றோம்”
“ம் … கிளம்பலாம் மிருது.”
என்று அவ்வளவு பேச்சு வார்த்தை நடந்தும் ஏதும் பேசாமல்…பேச விருப்பமில்லாமல் ….மிருதுளா கிளம்பலாமா என்று கேட்டதும் அமர்ந்திருந்த நவீன் விருட்டென்று எழுந்து வேகமாக வெளியே சென்றான். அவனை ஆச்சர்யத்துடன் பார்த்தப்படியே பின்னால் சென்றாள் மிருதுளா. வெளியே வந்து பஸ்ஸுக்காக காத்திருந்த போது
“ஏன் நவீ அங்கே அவ்வளவு நடந்தது. நான் எவிடன்ஸோட ப்ரூவ் பண்ணியும் உங்க அம்மா தன்னோட ஸ்டேட்மென்ட்டிலிருந்து கடைசி வரை மாறவேயில்லை. உண்மையை சொன்ன பெரியம்மா… அவா அக்காவையே பொறாமைப் பிடிச்சவான்னு பட்டுன்னு சொல்லிட்டா!!! ஆனா நீங்க ஏன் ஒண்ணுமே சொல்லலை?”
“என்ன சொல்லணும்ன்னு எதிர்ப்பார்த்த?”
“ஏதாவது…ஏன் மா ஃபர்ஸ்ட் சொல்லவேயில்லைனு சொன்ன இப்போ பெரியம்மா உண்மையை சொல்லிட்டா இப்பவும் அதையே ஏன் சொல்லற? இனி இது மாதிரி எல்லாம் பண்ணாதே!! ஏதாவது சொல்லிருக்கலாமே…”
“ஹா…ஹா…..ஹா… மிருது நீ இவ்வளவு பேசி, ப்ரூவ் பண்ணி ஏதாவது நடந்துதா? தான் சொன்னதையே தானே சொல்லிண்டிருந்தா?”
“ஆனாலும் பெரியம்மாவையே அப்படி சொல்லிட்டாளே அப்பவாவது ஏதாவது சொல்லிருக்கலாமே”
“வீட்டை ஏமாத்தினவா, அதை கேட்கப் போன என்னை புள்ளைன்னு கூட பார்க்காம தூக்கிப் போட்டவா, வீட்டை விட்டு வெளியே துறத்தினவா, அவாகிட்ட நியாயத்தை எதிர்ப்பார்ப்பது நம்ம தப்புன்னு நான் புரிஞ்சுண்டு பல நாள் ஆச்சு. சுயநலம் ஓங்கி இருக்கும் இடத்தில் பேசி எந்த பிரயோஜனமும் இல்லை. அவாளோட சுயநலத்துக்காக யாரை வேணும்னாலும் தூக்கிப் போடுவா…யார் மேல வேணும்னாலும் பழி போடுவா. அப்போ வீட்டு விஷயத்துல நான் இப்போ இந்த விஷயத்துல தன்னைக் காப்பாத்திக்க பெரியம்மாவை பலி ஆக்கிருக்கா!!! அவ்வளவு தான். இதில் நான் என்ன பேச? இல்லை பேசினா தான் கேட்கப்போறாளா!!! அதுனால தான் நீ எப்படா அங்கிருந்து கிளம்புவன்னு வெயிட் பண்ணிண்டிருந்தேன்.”
“என்ன கொடுமை நவீ இது. உங்க பெத்தவா ஆத்துலேந்து சீக்கிரம் கிளம்புவோம்ன்னு நினைக்கிற அளவுக்கா நீங்க மாறிட்டேங்கள்?”
“வேற வழி. அவா அடிக்கற கூத்தெல்லாத்தையும் பார்க்க பார்க்க அப்படி தான் நினைக்கத் தோனறது. தோனறது என்ன நினைக்க வச்சுட்டா. அப்பா அம்மா வா என்னோட விளையாடவோ, பேசவோ, ஏதாவது செய்யவோ, இல்லை பொறுப்பா இருக்கவோ ….எதுவுமே பண்ணினதில்லை அட்லீஸ்ட் எனக்கு துரோகம் பண்ணாம இருந்திருந்தா கூட எனக்கு இப்படி தோனிருக்காது. ஆனா அதையும் செய்துட்டாளே!!! செஞ்சது மட்டுமில்லாம என்னை ….விடு மறுபடியும் எல்லாத்தையும் ஏன் பேசணும்? எனக்கு இவாகிட்ட இருந்த பந்தம் பாசம் எல்லாமே விட்டுப் போச்சு மிருது. மரியாதை இல்லை, அக்கறை இல்லை, பொறுப்பில்லை எதுவுமே இல்லை. அவா அவாளுக்காக மட்டுமே தான் வாழ்ந்திருக்கா, வாழ்ந்துண்டுமிருக்கா. உன்னைப் படுத்தும் போதெல்லாம் நான் ஏதோ மாமியார் தனத்தைக் காட்டத் தான் அப்படி நடந்துக்கறான்னும் போக போக சரி ஆகிடும்ன்னும் நினைச்சேன் ஆனா அது அப்படி இல்லைன்னு புரிஞ்சுண்டுட்டேன். அதுதான் விலகிட்டேன். உன்னையும் அதுக்குத்தான் கேட்க வேண்டாம்ன்னும் சொன்னேன். நீ தான் ப்ரூஃபோட சொல்லறேன்னு சொல்லிண்டு வந்தே என்ன ஆச்சு ப்ரூஃப் எல்லாத்தையும் பொறாமைங்கற ஒத்த வார்த்தையால ஊதித்தள்ளிட்டா பார்த்தே இல்ல….இதுல நான் ஏதாவது சொன்னா மட்டும் என்ன ஆகிடப் போறது? அதுக்கும் ஏதாவது ஒண்ணு ரெடியா வச்சிருப்பா. விடு மிருது அன்னைக்கு சொன்னது தான் இப்பவும் நாம நம்ம லைஃப் மட்டும் பார்த்துண்டு போயிண்டே இருப்போம்”
“அதெல்லாமே ஓகே தான் நவீ. ஆனா அப்படி எல்லாம் எப்படி ஒதுங்கி நாம வாழறது? அதுவுமில்லாம அப்படி எல்லாம் நம்மள நிம்மதியா இவா வாழ விட மாட்டா. குடும்பம்ன்னா எல்லாருமே நல்லவாளா இருக்க மாட்டா நவீ. நாம தான் ஆளுக்கு தகுந்தா மாதிரி இருந்துக்கணும். யாருமே இல்லாம எல்லாம் எப்படி இருக்கறது?”
“என்ன பேசற மிருது. குடும்பம்னா எல்லாருமே நல்லவாளா இருப்பான்னு எதிர்ப்பார்க்கலை ஆனா பெத்தவா நல்லவாளா இருக்கணுமில்லையா!!!இவாளை வேண்டாம்ன்னு வச்சா நமக்கு யாருமே இல்லாமயா போயிடுவா?”
“உங்களுக்கு இன்னமும் உங்க பேரன்ட்ஸோட ஸ்ட்ரெங்கத் தெரியலை. அவா அப்படி எல்லாரையும் நமக்கு அகெயின்ஸ்ட்டா மாத்திடுவா.”
“ஓ!!! ப்ளீஸ் மிருது. நீ அவாளால ரொம்ப பயந்திருக்கங்கறது நீ பேசறதுலேந்தே தெரியறது. அவா யார்கிட்ட வேணும்னாலும் என்ன வேணும்னாலும் சொல்லிக்கட்டுமே அதுனால நமக்கென்ன? நம்ம பக்கம் தான் நியாயமிருக்கு. அதை நாம யார்கிட்டேயும் ப்ரூவ் பண்ணணும்னு அவசியமே இல்லை. நம்ம கூட பழகி நம்மளை புரிஞ்சிண்டவா நம்மளோட இருந்தா போதும். அது நாலு பேர்னாலும் சரி நாப்பது பேர்னாலும் சரி. அப்படிப் பட்டவா நம்மக் கூட பேசினா போதும். அந்த கூட்டத்தின் பேச்சைக் கேட்டுண்டு நம்மளை எடப்போடறவா எல்லாம் நமக்குத் தேவையே இல்லை. அப்படிப் பட்டவா அவாளை மாதிரியே தான் இருப்பா. ஸோ அப்படிப் பட்டவாளைப் பத்தி எல்லாம் நாம கவலைப் பட வேண்டிய அவசியமில்லை. புரிஞ்சுதா. இதோ பஸ் வந்திடுத்து வா மொதல்ல இங்கேந்து கிளம்பலாம்”
இருவரும் அங்கிருந்து பஸ்ஸில் ஏறி மிருதுளா பெற்றவர்கள் வீட்டுக்கு வந்தனர். இரவு உணவை அருந்திவிட்டு அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது மிருதுளா அம்புஜத்திடம்
“ஏன் மா எப்போ வேனுட்ட பேசி முடிவெடுப்பேங்கள்? ஏன் கேட்கறேன்னா? நாங்க நாளைக்கு சென்னைப் போயிட்டு அந்த வீட்டை இன்னொரு தடவைப் பார்த்து அட்வான்ஸ் கொடுத்துட்டு பம்பாய் போகப் போறோம். அடுத்த ரெண்டு மூணு மாசத்துல லோன் சாங்க்ஷன் ஆகிடும் அப்புறம் வந்து ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணணும். அதுக்கப்பறம் ஒரு மூணு ஆர் நாலு மாசம் எடுப்பா வீட்டை ரெடிப் பண்ணி எங்களுக்கு கொடுக்க. ஸோ எப்படியும் இன்னும் ஒரு ஏழு எட்டு மாசம் ஆகிடும் அந்த வீடு எங்க கைக்கு வர்றதுக்கு. அதுக்கு அப்புறமா தான் கிரகப்பிரவேசம் பண்ணிட்டு …நீங்க அங்க ஷிஃப்ட் ஆகறேங்கள்ன்னா… இன்டிரியர்ஸ் பண்ணுவோம் இல்லாட்டி அப்படியே பூட்டி தான் வைக்கப் போறோம்.”
“ஆமாம் நீயும் நேத்தே இதை சொன்ன இப்பவும் சொல்லற…நானும் வேனுகிட்ட கேட்டுட்டு சொல்லறேன்னு சொன்னேனே தவிற உன் அப்பா கிட்ட கேட்கணும்ன்னு எனக்கு தோணலைப் பாரேன். நீங்க உன் மாமியார் ஆத்துக்குப் போயிருந்தப்போ அப்பாகிட்ட இதைப் பத்தி பேசினேன். அப்போ அப்பா ….என் வேலையை என்ன செய்வேன்னு கேட்டா. பாரேன் நான் கூட அதை யோசிக்கலை. அதுமில்லாம உன் மாமியார் மாமனார் என்ன சொல்லுவாளோ? அவாளால உனக்கு ஏதாவது பிரச்சினை இதுனால வந்துடப் போறது மிருது. அதுனால ….அப்பா வேண்டாம்ன்னு நினைக்கறா…இதை எப்படி உன் கிட்ட சொல்லறதுன்னு யோசிச்சிண்டிருந்தேன். இப்போ நீயே கேட்டதனால சொல்லிட்டேன் மா. என்ன சொல்லுற? பேசாம அவாளை அங்க போய் இருக்கச் சொல்லிக் கேட்டுப் பாரேன்”
“அம்மா அதெல்லாம் நீ வேணும்னா யோசிக்காம இருந்திருக்கலாம் ஆனா நான் யோசிச்சுதான் கேட்டேன். ஃபர்ஸ்ட் அப்பா அடுத்த வருஷம் ரிட்டயர் ஆகுறா, எங்களுக்கும் எட்டு மாசம் ஆகும் வீடு ரெடியாக. அதுனால நீங்க மூணு பேரும் விருப்பப்பட்டா ஷிஃப்ட் பண்ணலாம். நோ கம்பல்ஷன். எப்படியும் நீயும் அப்பாவும் ரிட்டயர்மென்ட்டுக்கு அப்பறம் குவார்ட்ர்ஸை காலி செய்து வாடகை வீட்டில் தானே குடியிருக்கணும்? அப்பா ரிட்டயர் ஆகறதுக்கும் எங்க வீடு ரெடி ஆகுறதுக்கும் சரியா இருக்கும். ஸோ அந்த ப்ராப்ளம் சால்வுடு. ரெண்டாவது எங்க மாமனார் மாமியார்….அவா நாங்க எது செஞ்சாலும் குற்றம் தான் சொல்லப் போறா. எதுவுமே இல்லாட்டிக் கூட ஏதாவது இட்டுக் கட்டி என்னை பத்தி பேசத்தான் போறா ஸோ அவாளைப் பத்தியும் நாம கவலைப்பட வேண்டியதில்லை. அதுவுமில்லாம இந்த ஐடியாவை தந்ததே நவீன் தான். என்னது என் மாமனார் மாமியாரை அங்க வந்து இருக்க சொல்லறதா?!!! வேற வினையே வேண்டாம்!!! நோ நோ!! அவாளை எல்லாம் நான் அங்க வந்து இருக்கச் சொல்ல மாட்டேன். நீங்கன்னா நாங்க சொல்லறதை கேட்பேங்கள். வீட்டை நல்ல படியா வச்சுப்பேங்கள். எதா இருந்தாலும் எங்க கிட்ட கேட்காம செய்ய மாட்டேங்கள். ஆனா அவா அப்படி எல்லாம் இல்லை. அவா இஷ்டத்துக்கு தான் நடப்பா. எங்க கிட்ட எதுவும் சொல்லவும் மாட்டா நாங்க எது சொன்னாலும் கேட்கவும் மாட்டா. எங்களுக்குத்தான் தலைவலியா முடியும். அதுவுமில்லாமல் அங்கேயும் எல்லார்கிட்டயும் என்னை அசிங்கப் படுத்துவா….எனக்கு தேவையா சொல்லு? உங்களுக்கு விருப்பம் இருந்தா எங்களுக்கு இந்த ஹெல்ப் பண்ணுங்கோ இல்லாட்டி விட்டுவிடுங்கோ”
“சரி மறுபடியும் அப்பா கிட்ட கேட்டுப் பார்க்கறேன்”
“என்னத்துக்கு நான் உன்கிட்ட சொல்லி… நீ அப்பா கிட்ட சொல்லி ….எல்லாம்!! அப்பா அப்பா கொஞ்சம் இங்க வாயேன். நவீ நீங்களும் வாங்கோளேன்”
“என்ன மிருது?”
“என்ன மா?”
என்று நவீனும், ராமானுஜமும் கேட்டுக் கொண்டே ரூமிற்குள் நுழைந்தனர். அவர்கள் பின்னாலேயே சக்தி பாப்பாவும் நுழைந்து
“அம்மா நீ ஏன் அப்பாவையும் தாத்தாவையும் மட்டும் கூப்பிட்ட?? நான் வரக்கூடாதா? நீ ஏன் என்னைக் கூப்பிடவே இல்லை?”
“வாடி கண்ணு நீ இல்லாமையா?”
“ஸீ பாட்டி தான் பெஸ்ட். என்னை எப்படி கூப்பிடறா பாரு”
“சரி அப்போ நீ உன் பாட்டிக் கூடவே இருந்துக்கறையா?”
“ம்…நோ மா…நீ தான் பெஸ்ட்”
“ஹாஹாஹா!!! அடி குட்டிமா டக்குன்னு மாறிட்டயே…”
“ஹலோ எங்களை என்னத்துக்கு கூப்பிட்டேங்கள்? பாட்டியும் அம்மாவும் பொண்ணுமா கொஞ்சிக்கறதை பார்க்கவா?”
“அச்சோ !!! பாருங்கோ அதை மறந்துட்டேன். நாம நேத்து பேசினது தான். நம்ம சென்னை வீட்டைப் பத்தி தான்.”
“அதுக்கென்ன இப்போ? அவா வேனுட்ட பேசிட்டு சொல்லறேன்னு சொல்லிருக்கான்னு சொன்னயே”
என்று நவீன் சொன்னதும் மிருதுளா தன் அப்பாவிடமும் நவீனிடமும் தன் அம்மாவோடு பேசியதை விவரித்தாள். அதைக் கேட்டதும் ராமானுஜம்
“சரி மா. உங்களுக்கு இதுனால எந்த பாதிப்பும் வராதுன்னா எனக்கு ஓகே தான். வேனுவையும் கேட்டுண்ட்டு சொல்லறோம்”
“நீங்க என் அப்பா அம்மா பத்தி எல்லாம் கவலைப் படாதீங்கோ. எங்களுக்காக உங்களால முடிஞ்சா இதை பண்ணுங்கோ”
“நிச்சயமா பண்ணறோம் மாப்ள ஆனா நீங்க வாடகை வாங்கிக்கணும்”
“ஓ!! அப்படியா!!! சரி அப்போ ஒரு இருபத்தைந்தாயிரம் தந்திடுங்கோ”
“நவீ!!!”
“இரு மிருது”
“அச்சோ அவ்வளவெல்லாம் எங்களால தரமுடியாது. எங்க புள்ளையும் அடுத்த வருஷம் தான் படிப்பை முடிச்சுட்டு வேலைக்கு போக ஆரம்பிப்பான்”
“அச்சோ அச்சோ அப்பா அவர் சும்மா நீ சொன்னதைக் கிண்டல் பண்ணறார். நீங்த அதெல்லாம் ஒண்ணும் தர வேண்டாம். எங்க வீட்டைப் பார்த்துண்டா போதும். சரியா”
“இல்லை இல்லை மிருது. சும்மா எல்லாம் நாங்க தங்க மாட்டோம். உன் அப்பா சொல்லறது தான் சரி. எங்களால முடிஞ்சதை நாங்க தர்றோம். நீங்க ரெண்டு பேரும் அதை ஏத்துண்டா தான் நாங்க உங்க ஆத்துல வந்து தங்க சம்மதிப்போம்.”
“சரி மா சரி. ஹா! ஹா! ஹ! மொதல்ல நாங்க அந்த வீட்டை வாங்குறோம் அதுக்கப்புறம் வாடகையை நிர்ணயம் பண்ணிட்டு சொல்லறோம். ஓகே வா. இப்போதைக்கு உங்களுக்கு அங்க வர இஷ்டமான்னு தான் எங்களுக்குத் தெரியணும் அவ்வளவு தான் “
“அப்படின்னா எங்களுக்கு ஓகே தான். வேனு என்ன சொல்லறான்னு கேட்டுண்டுட்டு முடிவை சொல்லறோம். அதுதான் இன்னும் நிறைய மாசம் இருக்கே”
“ஓகே. பேச்சு வார்த்தை சுபமாக முடிந்தது. அனைவரும் இப்போது உறங்கச் செல்லலாம்”
“நான் கொஞ்ச நேரம் டிவி பார்த்துட்டு வரேன் மிருது. நீங்க எல்லாரும் தூங்கிக்கோங்கோ. குட் நைட்”
“ஓகே குட் நைட். சக்தி வா பாட்டிப் பக்கத்துல தாச்சிக்கோ”
“தவுட்டுப் பொண்ணு கதை சொல்லணும் பாட்டி”
“சரிடி கண்ணு வா சொல்லறேன்”
“சக்தி நாளைக்கு ஊருக்கு போகணும். சீக்கிரம் தூங்குமா”
“அம்மா ஜஸ்ட் ஒரு கதை மட்டும் கேட்டுட்டு தூங்கிடறேன் மா”
“ஓகே !! ஒண்ணு தான். குட் கேர்ள்”
என்று நவீனைத் தவிர அனைவரும் படுத்துறங்கினர்.
மறுநாள் விடிந்ததும் மூவரும் கிளம்பி சென்னை சென்றனர். அங்கே அவர்கள் பார்த்து வைத்திருந்த வீட்டை மீண்டும் ஒரு முறை நன்றாக பார்த்துவிட்டு விலையை பேசி எழுபது லட்சத்துக்கு முடிவு செய்தனர். வீட்டுக்கு டோக்கன் அட்வான்ஸாக பதினைந்து லட்சத்தை கொடுத்து விட்டு அங்கிருந்து ஏர்போர்ட்டுக்கு சென்றனர். அவர்களின் ப்ளைட்டுக்காக காத்திருக்கும் நேரம் மிருதுளா நவீனிடம்
“நவீ எனக்கு சந்தோஷமா இருக்கு தெரியுமா. நான் வீடெல்லாம் ஆசைப்பட்டதே இல்லை. என்னைப் பொறுத்தவரை நம்ம சக்தி நல்லா படிக்கணும் பெரிய ஆளா வரணும்ன்னு தான் இன்னைக்கும் ஆசைப் படறேன். நாம இருந்த நிலைமையை நினைச்சுப் பார்த்தா நாம எல்லாம் இவ்வளவு விலைக்கு இப்படி எல்லாம் வீடு வாங்குவோம்ன்னு சத்தியமா கனவு கூட கண்டதில்லை. எல்லாமே அந்த கடவுளோட அருள் தான் நவீ.”
“கடவுள் எப்படி அருள் தருவார்?”
“புரியலை நவீ. என்ன சொல்ல வரேங்கள்?”
“நாம நல்ல மனசோட நல்ல வாழ்க்கையை…. யாரையும் ஏமாத்தாம, யாருக்கும் எந்த வித தீங்கும் மனசால கூட நினைக்காம, அடுத்தவாளைப் பார்த்து அதே மாதிரி நாமும் வாழணும்னு நினைக்காம, நாம உண்டு நம்ம வேலையுண்டுன்னு இருக்கறதால கடவுள் நமக்கு உதவரார்ன்னு சொல்ல வந்தேன். இப்போ புரியறதா? நம்ம சக்தியும் நல்லா படிச்சு பெரிய ஆளா வருவா அதையும் நாம பார்க்கத்தான் போறோம்.”
“ஓ! ஓகே!!! அப்படி!!! இப்போ புரியறது”
“சரி சரி போர்டிங் அனௌன்ஸ் பண்ணிட்டா வா வா போகலாம். சக்தி வாம்மா போதும் விளையாண்டது”
என்று தங்களின் ஆரம்ப காலகட்டத்தை மறந்திடாமல் அதை அசைப்போட்டுப் பார்த்தனர் நவீனும் மிருதுளாவும்.
ஜாயின் தி டாட்ஸ் எனப்படும் புள்ளிகளை இணைத்து ஓவியம் வரைதல் போல எல்லோர் வாழ்விலும் ஆரம்பப் புள்ளி என்ற ஒன்றிலிருந்து தான் அவரவர் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்கிறார்கள். அப்படி பயணிக்கும் போது பலர் தன்னிலை மாறாமல் பலவற்றை வெற்றிகரமாக கடந்து சென்று இலக்கை அடைகிறார்கள். ஆனால் சிலர் தன்னிலையை பயணத்தின் வேகத்திலும், பணத்தின் ஆதிக்கத்திலும், ஆரம்ப புள்ளையையும் மறந்து தங்களை மாற்றிக்கொண்டு சில சமயம் வெற்றியும் பல சமயங்களில் தோல்வியையும் தழுவுவது என்பது நிதர்சனமான உண்மையாகும்.
தொடக்கம் என்ற ஒன்று இருந்தால் தான் பயணம் என்பதை மேற்கொள்ள முடியும், பயணம் என்பதை மேற்கொண்டால் தான் சென்றடைய வேண்டிய இலக்கு என்பதை எட்ட முடியும். பர்வதீஸ்வரன் போன்ற பலர், வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்ததும் தொடக்கம் என்ற பழையதை எல்லாம் மறந்திடுவார்கள். பயணத்தையும் அடுத்தவர் மீதி சவாரி செய்து களித்திடுவார்கள். பயணம் முடிந்ததும் கழற்றியும் விடுவார்கள். அவர்களுக்கு ஏணியாக பலரை உபயோப்படுத்திவிட்டு அதில் ஏறி உயரத்தைத் தொட்டதும் ஏறி வந்த ஏணியை ஏறிய கால்களாலேயே எட்டி உதைத்திடுவார்கள். ஆனால் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் மட்டுமே அவர்கள் ஏறி வந்த ஏணியை என்றும் பத்திரப்படுத்திடுவார்கள், முடிந்தால் அவர்களும் மற்றவர்களுக்கு ஏணியாக இருக்க முயற்சிப்பார்கள்.
தொடக்கம் இனிதானதாக இல்லாவிட்டாலும் அதை என்றும் மறந்திடாமல் பயணத்தை இனிதாக்கிக்கொண்டு இலக்கை அடைந்திட ஓடிக் கொண்டிருக்கிறார்கள் நமது நாயகனும் நாயகியும்.
பம்பாயிக்கு ப்ளைட் டேக் ஆஃப் ஆனது.
தொடரும் ……
அத்தியாயம் 85: விசேஷம் விஷயமாச்சு
“நீ சொல்லறதும் வாஸ்த்தவம் தான். எனக்கே அவா பண்ணறதை எல்லாம் பார்த்தா அப்படித் தான் தோனறது. என்ன செய்ய மிருது? அவாளை நம்பினேன் ஆனா என்னை நல்லா யூஸ் பண்ணிண்டிருக்கா!!! அது புரிய எனக்கு தான் லேட் ஆச்சு. சரி சரி இனி அந்த கூட்டத்தைப் பத்தி நாம பேசவே வேண்டாம். நாம நம்ம வேலையைப் பார்த்துண்டு சந்தோஷமா இருக்கலாம்”
“எங்க இருக்க விடறா நவீ? யார்கிட்டயாவது எதையாவது சொல்லி கிளப்பி விட்டுண்டே தானே இருக்கா! நான் என்ன பாவம் செய்தேனோ!!! என்னை ஏன் தான் இப்படி வாயில போட்டு வறுத்தெடுக்கறாளோ? உங்களுக்கென்ன உங்களையா சொல்லறா இல்லை ஒரு விசேஷத்துக்கு போனா உங்ககிட்டயா கேட்கறா? எல்லாரும் என்னை தானே தொணச்சு எடுக்கறா? அவாளுக்கெல்லாம் நான் தானே பதில் சொல்ல வேண்டிருக்கு?”
“நீ ஏன் பதில் ஆர் எக்ஸ்ப்ளேயின் பண்ணிண்டு போற? சொன்னவா கிட்டயே போய் கேட்டுக்க சொல்லிட்டு நீ பாட்டுக்கு உன் பேச்சை கண்டின்யூ பண்ணு. அப்படி செஞ்சா மறுபடியும் உன் கிட்ட கேட்டுண்டு வரமாட்டா.”
“ம்… ம்… ட்ரை பண்ணறேன்”
நவீனுக்கு மீண்டும் பன்னாட்டு வங்கி ஒன்றில் மற்றுமொரு பதவி உயர்வுடன் பம்பாயில் வேலை கிடைத்தது. அவர்கள் ஹைதராபாத்திலிருந்து பம்பாயிக்கு குடிபுகுந்தனர். அங்கு இன்னும் வசதி வாய்ப்புகள் கூடியது. சக்தியை பெரிய பள்ளியில் சேர்த்தனர். மிருதுளாவும் சும்மா இருக்க விருப்பமில்லாமல் சம்பளம் குறைவானாலும் தன் இஷ்டப்பட்ட நேரத்துக்கு வேலை செய்துக் கொண்டும், சக்தியை பார்த்துக் கொண்டும், வீட்டு வேலைகளை செய்துக் கொண்டும் ஆன்லைனில் வேலைப் பார்த்து வந்தாள்.
நவீனின் பெரியப்பா மகனுக்கு திருமணம் என்று நவீனையும் மிருதுளாவையும் அழைத்திருந்தனர் பர்வதத்தின் அக்கா ரமணியும் அத்திம்பேரும். அந்த ஃபோன் கால் கட் ஆனதும் மிருதுளா நவீனிடம்
“நவீ நாம போகலாமா? நம்ம ப்ரவீன் கல்யாணத்துக்கு அப்புறம் ரொம்ப வருஷம் கழிச்சு நடக்குற விசேஷம் இது தான். போனா எல்லாரையும் பார்க்கலாம். என்ன சொல்லறேங்கள்?”
“ம்…ஓகே. போயிட்டு வருவோம். நான் ஃப்ளைட்டுல டிக்கெட் புக் பண்ணறேன்”
“ஆனா!!”
“என்ன ஆனா?”
“இல்ல நவீ…எனக்கு உங்க அம்மாவ நினைச்சா தான்….”
“நீ ஏன் நினைக்கற? நினைக்காதே”
“இல்ல ரொம்ப வருஷமா எந்த விசேஷமும் நடக்காததால …நான் அவ்வளவாக அவமானப்படாம இருந்துண்டு இருக்கேன் ….இப்போ நாம இந்த விசேஷத்துக்கு போனா என்னத்த செய்ய போறாளோ உங்க அம்மான்னு நினைச்சா கொஞ்சம் பயமா தான் இருக்கு”
“என்னத்தை செய்துடுவா மிருது! நீ அனாவசியமா பயப்படற அவ்வளவு தான் சொல்லமுடியும்.”
என்று நவீன் சொன்னாலும் ஒவ்வொரு விசேஷங்களிலும் மிருதுளாவுக்கு தன் மாமியாருடன் ஏற்பட்ட முன் அனுபவங்களால் மனதில் ஏதோ ஒரு வகையான பதற்றம் தொற்றிக் கொண்டது. அவள் தன் மனதிடம்
“விடு விடு எவ்வளவோ பார்த்தாச்சு இது என்ன பேசாம தூங்கு”
என்று வாய்விட்டு சொல்ல அதைக் கேட்ட நவீன்
“மிருது யாரை தூங்க சொல்லற?”
“ம்…நான் சொன்னது கேட்டுதா?”
“ஆமாம் நல்லா கேட்டுதே!! அதுனால தானே நான் உன்கிட்ட கேட்கறேன்”
“அது ஒண்ணுமில்லை நவீ நான் என் மனதுடன் பேசறேன்னு நினைச்சுண்டு சத்தமா பேசிட்டேன்….ஈ..ஈ..ஈ”
என்று அசடுவழிந்தாள். அதை பார்த்த நவீன்
“அச்சோ அச்சோ!!! சரி சரி இதோ டிக்கெட் புக் பண்ணிட்டேன். நாம அடுத்த மாசம் கல்யாணத்துக்கு ஊருக்கு போறோம்”
“பண்ணிட்டேளா? சரி சரி”
“என்ன மிருது ஊருக்கு போறோம்ன்னு சொல்லறேன் உன் முகத்தில் சந்தோஷத்தையே காணமே!!”
“ம்…அதெல்லாம் ஒண்ணுமில்லை நவீ. எனக்கும் சந்தோஷமா தான் இருக்கு”
என்று சொல்லி சமாளித்து விட்டு அடுப்படிக்குள் சென்றாள் மிருதுளா. என்ன தான் மனதில் தன் மாமியாரை நினைத்து ஒரு சிரிய அச்சம் இருந்தாலும் சொந்த பந்தங்களையும் தன் அப்பா அம்மாவையும் பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி அந்த நினைப்பை சற்று ஓரம்கட்டியது.
மிருதுளா நன்றாக மெலிந்திருந்தாள். அவளுக்கு எப்போதும் அசதியாகவே இருந்தது. இதை நவீனிடம் சொல்லி ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என்று முயற்சிக்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு வேலை வந்து தள்ளித்தள்ளி போனது. ஒரு நாள் ரொம்ப முடியாமல் போக உடனே ஹாஸ்பிடல் சென்றனர். அங்கு பல டெஸ்டுகள் எடுத்துப் பார்த்ததில் மிருதுளாவுக்கு தைராய்டு சுரப்பி அதிகமாக சுரப்பதாகவும் அது ஹைபர்தைராய்டிஸம் என்றும் கண்டறிந்து அதனால் தான் அவள் உடல் மெலிந்து இருக்கிறாள் என்றும் அதற்கான மாத்திரைகள் எழுதிக்கொடுக்கப்பட்டது. மிருதுளாவும் அந்த மாத்திரைகளை வாங்கிக்கொண்டு அவற்றை சரியாக சாப்பிட்டு வந்தாள்.
ஊருக்கு செல்லும் நாள் வந்தது. நவீன், மிருதுளா, சக்தி மூவரும் கிளம்பிச் சென்றனர். நேராக கல்யாண மண்டபத்துக்கே சென்றனர். அங்கு அனைத்து சொந்தங்களையும் இவர்கள் பார்த்து பேசி மகிழ்ந்தனர். அதே போல சொந்தங்களும் இவர்களுடன் பேசி மகிழ்ந்தனர் பர்வதீஸ்வரன் குடும்பத்தைத் தவிற. அவர்கள் ஆளுக்கொரு மூலையில் நின்றுக் கொண்டு நவீனையும் மிருதுளாவையும் முறைத்துப் பார்த்துக் கொண்டே தான் இருந்தனர். அதை கவனித்த மிருதுளா நவீனிடம்
“நவீன் நான் போய் உங்க அப்பா அம்மா கிட்ட மட்டும் பேசிட்டு வந்துடவா. பசங்க கிட்ட பேச மாட்டேன்”
“வேண்டாம் மிருது. சொன்னா கேளு. தப்பு பண்ணினவாளே அவ்வளவு திமிரா நம்ம கூட பேசாம இருக்கா…நாம எந்த தப்புமே பண்ணாதவா நாம ஏன் போய் பேசணும்? ஒண்ணும் வேண்டாம். நாம விசேஷத்தை அடென்ட் பண்ணுவோம் ஊருக்கு கிளம்புவோம். அதோட நிறுத்திப்போம்”
“இல்ல நவீ எல்லாரும் பார்க்கறா இல்லையா எனக்கு ஒரு மாதிரி அன்னீஸியா இருக்கு”
“அப்புறம் உன் இஷ்டம்”
இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் நவீனின் ஒண்ணு விட்ட அத்தை இவர்கள் அருகே வந்து
“என்ன நவீன் மிருதுளா எப்படி இருக்கேங்கள்?”
“ம்…நாங்க நல்லா இருக்கோம் அத்தை. நீங்க எப்படி இருக்கேங்கள்? கேசவன் எப்படி இருக்கான்?”
“எல்லாரும் நல்லா இருக்கோம் நவீன். சரி மிருதுளா நீ ஏன் ஆளு இளைச்சுப்போயிருக்க? ஏதாவது விசேஷமா?”
“அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை அத்தை”
“சரி சரி நான் போய் என் சிநேகிதிட்ட பேசட்டும். வரேன்.”
என்று கூறிவிட்டு சென்றதும் மிருதுளாவுக்கு மீண்டும் மனதில் ஒரு வகையான பதற்றம் ஒட்டிக் கொண்டது. பின் அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது நவீனின் சித்தி மிருதுளாவிடம்
“என்ன மிருது மாசமா இருக்கயா என்ன?”
“இல்லை சித்தி. ஏன் கேட்கறேங்கள்?”
“பார்த்தா அப்படி தெரிஞ்சுது அது தான் கேட்டேன். சரி சரி நீங்க நல்லா சாப்பிடுங்கோ. நான் அக்காவைப் பார்த்துட்டு வர்றேன்”
என்று அவரும் கேட்க வேண்டியதை கேட்டுவிட்டு வேகமாக அங்கிருந்து கிளம்பிச் சென்றார். சாப்பிட்டு கை கழுவுமிடத்தில் பர்வதம் வீட்டுப் பக்கத்து வீட்டு பெண்மணி மிருதுளாவிடம்
“என்ன மிருது எத்தனை மாசம் ஆகுது?”
“என்ன சொல்லறீங்க? எனக்குப் புரியலையே!!”
“அடே நீ மாசமா இருக்க இல்ல அதுதான் கேட்டேன்”
“நான் மாசமா இருக்கேன்னு உங்க கிட்ட யாரு சொன்னா?”
“எல்லாம் பர்வதம் மாமி தான்…எனக்கு வேற யாரு சொல்லப் போறா? சரி உடம்ப நல்லா பார்த்துக்கோ நான் வர்றேன்”
மிருதுளாவுக்கு அது தன் மாமியாரின் வேலை என்று நன்கு புரிந்துப் போனது. சாப்பிட்டுவிட்டு மண்டபத்தில் ஒரு மூலையில் நாற்காலியில் அமர்ந்துக் கொண்டு தன் சித்தப்பாவுடன் பேசிக் கொண்டிருந்த நவீனிடம் நேராக சென்று
“நவீ உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்”
என்றதும் நவீனின் சித்தப்பா
“போடா நவீ. போ…போ… என்னன்னு கேட்டுட்டு வா அப்புறமா நாம பேச்சை கன்டின்யூ பண்ணிப்போம்”
என்று சொன்னதும் அங்கிருந்து எழுந்து மிருதுளாவுடன் சற்றுத் தள்ளிச் சென்று
“என்ன மிருது?”
“நவீ உங்க அம்மா அவா ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டா”
“என்ன சொல்லற நீ? என்ன ஆட்டம்?” எனக்கு புரியறா மாதிரி சொல்லறையா”
“மண்டபத்துல ஒவ்வொருத்தரையா என்கிட்ட அனுப்பி நான் மாசமா இருக்கேனான்னு கேட்க வைக்கறா!!! நானும் வரவாகிட்ட எல்லாம் அப்படி எதுவுமில்லைன்னு சொல்லி சொல்லி….எனக்கு சங்கடமா இருக்கு தெரியுமா!!”
“ஏன் அப்படி கேட்கச் சொல்லறா?”
“ம்…அதை உங்க அம்மா கிட்ட தான் கேட்கணும். அப்படியே அவாளுக்கு கேட்கணும்ன்னா நேரா என் கிட்ட வந்து கேட்க வேண்டியது தானே ஏன் ஒவ்வொருத்தரையா அனுப்பி இப்படி கேட்கச் சொல்லறாளோ!!! இந்த விசேஷத்துக்கு வேற எந்த டாப்பிக்கும் கிடைக்கலைப் போல அதுதான் இந்த டெக்னிக்”
“இவாளை என்ன பண்ண சொல்லு”
“இதுக்குத் தான் நான் பயந்தேன். ஏதாவது செஞ்சு என்னை சங்கடப்படுத்தறது தான் அவா கோல்ன்னு எனக்கு தெரியும் ஆனா இப்படி எல்லாம் ….என் தலை எழுத்து”
“சரி சரி கண்டுக்காம விடு. பெரியம்மா வர்றா. வாங்கோ பெரியம்மா. வாழ்த்துகள் மூன்றாவது முறையா மாமியாரா ப்ரமோட் ஆகிட்டேங்கள்”
“அடப் போடா நவீன். என்ன ஆத்துக்காரரும் ஆத்துக்காரியுமா தனியா நிண்ணுண்டு பேசிண்டிருக்கேங்கள்? நான் டிஸ்டர்ப் பண்ணிட்டேனோ”
“ச்சே ச்சே அதெல்லாம் ஒண்ணுமில்லை பெரியம்மா சும்மா தான் பேசிண்டிருந்தோம்.”
“சரி தாம்பூலம் வாங்கிக்கோங்கோ. மிருது ஏதாவது விசேஷமா?”
“என்ன பெரியம்மா விசேஷத்துக்கு தானே வந்திருக்கோம் அப்புறம் இப்படி கேட்கறேங்களே”
“என்ன நக்கலாக்கும்….உனக்கு ஏதாவது விசேஷமான்னு கேட்டேன்”
“எங்கடா நீங்க மட்டும் இதை கேட்கலையேன்னு நினைச்சுண்டிருந்தேன்….நீங்களும் கேட்டுட்டேங்கள்….அதெல்லாம் ஒண்ணுமில்லை பெரியம்மா”
“ஏன் அப்படி சொல்லற? வேற யாரு கேட்டா?”
“யாரு கேட்கலைன்னு கேளுங்கோ பெரியம்மா. என்னைப் பார்த்தா அப்படியா தெரியறது? சரி இதை நீங்களா கேட்டேங்களா இல்லை யாராவது கேட்கச் சொல்லி கேட்டேங்களா?”
“எனக்கும் அப்படி ஒண்ணும் தெரியலைன்னு தான் உன் மாமியார்ட்ட சொன்னேன் ஆனாலும் உன் கிட்ட கேட்கச் சொன்னா கேட்டுட்டேன் மா.”
அவள் மேலும் பேசுவதற்குள் சாஸ்த்திரிகள்
“மாமி பருப்புத் தேங்காயை எடுத்து உள்ள வையுங்கோ. இங்க சித்த வர்றேளா”
“இதோ வந்துட்டேன் மாமா! சரி மிருது நவீன் இருந்துட்டு தானே போவேங்கள். நான் அப்புறமா வந்து உங்க கூட பேசறேன். இப்போ நான் அங்க போகலைன்னா பெரியப்பா கத்துவார். வர்றேன்”
என்று அவள் அங்கிருந்து போனதும் மிருதுளா நவீனிடம்
“பார்த்தேளா? இது தான் நான் இங்கே வந்ததிலிருந்து நடக்கறது. எத்தனைப் பேர் வந்து கேட்டாச்சு தெரியுமா. நான் பதில் சொல்லி பதில் சொல்லி இரிட்டேட் ஆகிட்டேன்.”
“ம்…புரியறது!! புரியறது!!”
என்று நவீன் சொன்னாலும் மிருதுளா மனம் ஆறவில்லை. விசேஷம் முடிந்ததும் அவரவர் வீட்டிற்கு அனைவரும் சென்றனர். நவீனும் மிருதுளாவும் அவர்கள் வாடகைக்கு விட்டிருந்த அப்பார்ட்மெண்ட்டை பார்த்து விட்டு
அப்படியே ராமானுஜம் வீட்டுக்குச் சென்றுக் கொண்டிருக்கையில் மிருதுளா நவீனிடம்
“என்ன நவீ நம்ம வீட்டை இவ்வளவு அசிங்கமா வச்சிருக்கா? நாம தான் அவ்வளவு கேபினட்ஸ் வார்டுரோப்ஸ் எல்லாம் செய்துக் கொடுத்திருக்கோமே அப்புறமா எதுக்கு ஏதோ ஒரு பலகையை எல்லாம் அடிச்சு வச்சிருக்கா?”
“ஆமாம் ஆமாம் நானும் பார்த்தேன்.”
“பேசாம நம்ம சென்னையில் அந்த கேட்டெட் கம்யூனிட்டியில் வீடு வாங்கினா அதை வாடகைக்கு விடக்கூடாது நவீன்.”
“அப்புறம் பூட்டி வைக்கவா வாங்கறோம். அப்படி பூட்டி வச்சா வீணா போயிடும் மிருது. வேணும்னா ஒண்ணு பண்ணலாம்.”
“என்ன அது நவீ?”
“பேசாம உங்க அப்பா அம்மாவை நம்ம சென்னை வீட்டுல போய் இருக்கச் சொன்னா என்ன?”
“அவாளா? அங்கேயா? இருப்பான்னு எனக்கு தோனலை. கேட்டுப் பார்க்கிறேன்.”
வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்ததும் அம்புஜத்திடம் மிருதுளா
“அம்மா என்ன மா வாடகைக்கு இருக்கறவா நம்ம வீட்டை பாழாக்கி வச்சுருக்கா? அவாளை காலி பண்ணச் சொல்லப்போறோம்.”
“ஏன்டி அவா தான் ஒழுங்கா வாடகை தர்றா இல்லையா அப்புறம் என்ன? வீட்டை சும்மா பூட்டிப் போட்டா வீணா போயிடும்மா”
“கிரகப்பிரவேசம் முடிச்ச புது வீட்டை வாடகைக்கு கொடுத்தா அவா அப்படி செய்து வச்சிருக்காளே மா…பார்க்க பார்க்க கோபமா வர்றது. அவா குடுக்கற வாடகை அவா காலி செய்ததுக்கப்புறம் அந்த வீட்டை சரி பண்ணக் கூட பத்தாது போல தெரியறது. சரி அதை விடு. நாங்க ஒரு வீடு சென்னையில பார்த்திருக்கோம். வாங்கலாம்ன்னு இருக்கோம். ஆனா அந்த வீட்டை வாடகைக்கு விடற ப்ளான் இந்த வீட்டைப் பார்த்ததுமே போச்சு. எங்களோட அந்த வீட்டில் நீங்க ரெண்டு பேரும் வந்திருக்கேங்களா? எங்களுக்கும் சென்னையிலிருந்து மறுபடியும் ஒரு அஞ்சு மணி நேரம் டிராவல் பண்ணிண்டு வர வேண்டாம். வேனுவும் சென்னை ஏர்போர்ட் வந்தா நேரா ஆத்துக்கு வந்திடலாம் என்ன சொல்லறேங்கள்?”
“நல்ல யோசனை தான். ஆனா வேனுகிட்டயும் கேட்கணுமே. நாங்க அவன்கிட்ட கலந்து பேசிட்டு சொல்லறோம் சரியா.”
“சரி மா நீங்க வேனுகிட்டயும் கேட்டுட்டே சொல்லுங்கோ அதுக்குள்ள நாங்க அந்த வீட்டோட ரிஜிஸ்ட்ரேஷன் எல்லாம் முடிச்சிடறோம். நாளைக்கு மறுநாள் அதையும் முடிச்சுட்டு அப்படியே அங்கிருந்தே நாங்க பம்பாய் போறோம். சரி நாளைக்கு எங்க மாமனார் மாமியார் ஆத்துக்கு போயிட்டு வரணும்”
“ஏன் எதுக்கு மிருது? அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்.”
“என்ன நவீ அது தப்பாயிடும். இவ்வளவு வருஷம் நாம இங்க வரலை அதுனால ஓகே ஆனா இப்போ இவ்வளவு தூரம் வந்துட்டு ….அது தப்பு. அதுவுமில்லாம எனக்கு உங்க அம்மாகிட்ட ஏன் அப்படி மண்டபம் பூரா அப்படி பரப்பினான்னும் கேட்கணும்”
“எனக்கென்னவோ வேண்டாம்ன்னு ஒதுங்கினது ஒதுங்கினதாகவே இருந்திடலாம்ன்னு தோனறது”
“எங்க ஒதுங்க விட்டா அப்பவும் ஆப்பர்ச்சுனிட்டி கிடைக்கும் போதெல்லாம் என்னை ஏதாவது பண்ணறாளே”
“விசேஷமென்றால் அங்கே தன் மாட்டுப் பொண் பத்தி தான் எல்லாரும் பேசணும்ன்னு நினைக்கறாளோ என்னவோ”
என்று கூறிக் கொண்டே மிருதுளாவைப் பார்த்துக் கண் அடித்தான் நவீன்.
“ஆமாம் ஆமாம்!!! நெனப்பு தான். நாளைக்கு போறோம் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா பேசறோம் வர்றோம். அவா தான் எவிடன்ஸ் ஃபேமிலி ஆச்சே இந்த தடவை எவிடன்ஸோட போய் பேசப்போறேன்”
“பார்ப்போம் பார்ப்போம்”
மறுநாள் இருவரும் பர்வதீஸ்வரன் வீட்டுக்குச் சென்றனர். ஈஸ்வரன் இவர்களைப் பார்த்ததும்
“ம்…ம்…வாங்கோ வாங்கோ. பர்வதம் காபி கொண்டு வா”
என்றார். இருவரும் அங்கிருந்த சேரில் அமர்ந்தனர். பர்வதமும் வந்தாள்.
“ம்.. வாங்கோ…காபி போட்டு எடுத்துண்டு வரேன்”
“அம்மா அம்மா காபி எல்லாம் வேண்டாம். இங்க வாங்கோ நான் உங்க கிட்ட ஒண்ணு கேட்கணும்”
“என்ன கேட்கணும்?”
நலமெல்லாம் விசாரித்தப்பின் மிருதுளா பர்வதத்திடம்
“ஏன் மா நான் மாசமா இருக்கேனா இல்லையான்னு உங்களுக்கு தெரிஞ்சுக்கணும்ன்னா நீங்க நேரா என் கிட்ட வந்து கேட்டிருக்க வேண்டியது தானே!!! ஏன் ஒவ்வொருத்தரையா அனுப்பி என்கிட்ட கேட்க வச்சேங்கள்? அது எனக்கு எவ்வளவு சங்கடத்தை தரும்ன்னு உங்களுக்கு புரியுதா இல்லையா?”
“எனக்கெதுக்கு நீ மாசமா இருக்கயா இல்லையான்னு தெரிஞ்சுக்கணும்? அப்படியே தெரிஞ்சுண்டாலும் எனக்கென்ன? நான் அப்படி நினைக்கவும் இல்லை, யாரையும் உன்கிட்ட கேட்கச் சொல்லி அனுப்பவுமில்லை. என்ன பிரச்சினை பண்ண வந்திருக்கியா?”
“அம்மா உங்களை ஏதாவது கேட்டாலே பிரச்சினை பண்ணத்தான் வந்திருக்கோம்ன்னு அர்த்தமா என்ன? இல்ல அப்படி பிரச்சினை பண்ணினா எனக்கென்ன சந்தோஷமா கிடைக்கப் போறது? நீங்க தான் கேட்க சொல்லி அனுப்பியிருக்கேங்கள்ன்னு என் கிட்ட கேட்டவாளே சொன்னா அதுக்கென்ன சொல்லப் போறேங்கள்?”
“இல்லவே இல்லை நான் யார்கிட்டேயும் அப்படி ஒண்ணும் கேட்கச் சொல்லை. எங்கே யார் அப்படி சொன்னான்னு செல்லுப் பார்ப்போம்”
“மண்டபத்துல இருந்த நம்ம சொந்தங்கள் எல்லாரும் தான் கேட்டா”
“இப்படி பொதுவா சொன்னா? எப்படி?”
“சரி நேராவே சொல்லறேன் உங்க அக்கா, தங்கை, ஒண்ணு விட்ட அத்தை, அவா பொண்ணுன்னு லிஸ்ட் நீண்டுண்டே போறது ….இவ்வளவு குறிப்பிட்டுச் சொன்னது போதுமா ?”
“நான் சொல்லவே இல்லை”
“அப்பா நீங்களாவது இதுக்கு ஒரு பதில் சொல்லுங்கோ”
என்றதும் ஈஸ்வரன் பர்வதத்திடம்
“இப்போ என்ன பர்வதம் உன் அக்காகிட்ட ஃபோன் போட்டு கேட்டுட்டா நீ சொல்லலைன்னு தெரிஞ்சுடப் போறது. அது தெரிஞ்சதுக்கப்புறமா இவாகிட்ட பேசிக்கறேன்”
“இல்ல இல்ல அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் நம்மாத்து விஷயத்தை எதுக்கு அவாகிட்ட எல்லாம் போய் கேட்டுண்டு வேற வேலையில்லை”
என்று பதறிப் போய் ஈஸ்வரனைத் தடுத்தாள் பர்வதம். ஆனால் மிருதுளா விட்டப் பாடில்லை. தன் மாமனாரிடம்
“அப்பா நீங்க கேளுங்கோ. அவா பதில் சொல்லட்டும் நானும் அப்புறமா பேசறேன்.”
என்றதும் ஈஸ்வரன் தன் மனைவி மீதிருந்த அபார நம்பிக்கையில் ரமணி வீட்டுக்கு ஃபோன் செய்தார். ரமணியின் வீட்டுக்காரர் ஃபோனை எடுக்க அவரிடம் ஈஸ்வரன்
“ரமணி கிட்ட ஃபோனை கொஞ்சம் கொடு. நான் அவகிட்ட ஒண்ணு கேட்டு க்ளாரிஃபை பண்ணிக்கணும் அதுக்குத் தான் ஃபோன் போட்டேன்”
ரமணியிடம் ஃபோனை கொடுத்தார் அவள் கணவர்.
“ரமணி இந்தா உனக்கு தான் ஃபோன். பர்வதம் ஆத்துக்காரர் ஈஸ்வரன் ஏதோ பேசணுமாம்”
“ஆங் குடுங்கோ. ஹலோ நான் ரமணி பேசறேன்”
“ஆமாம் ரமணி மண்டபத்துல பர்வதமா உன்கிட்ட மிருதுளா மாசமா இருக்காளான்னு கேட்கச் சொன்னா?”
“ஆமாம். பர்வதம் தான் கேட்கச்சொன்னா. ஏன்? எதுக்கு இதை இப்போ ஃபோன் போட்டு கேட்கறேங்கள்?”
“ஒண்ணுமில்லை நான் அப்புறமா பேசறேன். இப்போ ஃபோனை வச்சுடறேன்”
தொடரும்…..
அத்தியாயம் 84: எவிடன்ஸ்!
ஏற்கனவே அதிர்ச்சியிலும், ஆத்திரத்திலும், வேதனையிலும் இருந்த நவீன்… பிச்சுமணி பேசியதை கேட்டதும் அனைத்தும் ரெட்டிப்பானது. ஆனாலும் நிதானமாக
“மாமா நான் உங்ககிட்ட அந்த வீடு வாங்குவதற்காக கடன் வாங்கினேன் என்பதால் தான் உங்கள்ட்ட பேச சொன்னேன் ஏன்னா உங்களுக்கு எல்லா விவரங்களும் தெரியும். ஆனால் நான் வாங்கின வீட்டை பத்தி என்னைப் பெத்தவாகிட்ட நான் ஏன் பேசினேன்னு நீங்க கேட்கறதில எந்த நியாயமும் இல்லை. ஆவா க்ளியரா எல்லாம் ப்ளான் பண்ணி தான் செய்திருக்கா ஸோ யாரு பேசினாலும் நோ யூஸ். நான் மிருதுவ பிரசவம் முடிஞ்சு ஊருக்கு கூட்டிண்டு போறதுக்கு டேட் மாத்தி சொன்னதுக்கு உங்க அக்காவும் அத்திம்பேருமா என்ன குதி குதிச்சா தெரியுமா? அதுவும் நாங்க ஊருக்கு கிளம்புற நேரத்துல….இப்போ இவா பண்ணி வச்சிருக்கற வேலைக்கு நான் என்ன வேணும்னாலும் செய்யலாம்?இதுல அந்த கவின் வேற கூட்டு…ம்!!”
“அதுக்கில்லடா இப்போ பாரு கவினும் காசு போட்டிருக்கானாம். அவனை உன் கிட்ட பேச சொன்னேன். ஆனா அவன் என்ன சொல்லறான்னா….உனக்கு தான் அந்த வீடு தேவை அதனால் நீ தான் அவனை கால் பண்ணி பேசணுமாம். அவன் கால் பண்ண மாட்டானாம். அதுவுமில்லாம அவன் பர்வதத்திற்கு குடுத்த முப்பத்தி ஆராயிரம் ரூபாய்க்கு எவிடன்ஸ் வச்சிருக்கானாம். அதே போல நீ குடுத்த பணத்துக்கு ஏதாவது எவிடன்ஸ் வச்சிருக்கியான்னு கேட்க சொன்னான்”
“நல்லா இருக்கு மாமா!! ரொம்ப நல்லா இருக்கு. உங்களுக்கு தெரியாதா? நான் தான் அந்த வீட்டை வாங்கினேன்னு? உங்களை விட ஒரு எவிடன்ஸ் என்ன வேணுமாம்? அந்த வீடு வாங்கும் போது அவன் வேலையில சேரவேயில்லை அப்புறம் எப்படி எவிடன்ஸோட பணம் குடுத்தானாம்? அவன் தான் ஏதோ பெனாத்தரான்னா அதை கேட்டுட்டு என்கிட்ட அதை சொல்லறேங்களே உங்களை என்ன சொல்ல?”
“சரி டா அவன் வழிக்கே போய் தான் பாரேன். அதுல என்ன தப்பு? நீயே அவன்கிட்ட கால் பண்ணி பேசி க்ளியர் பண்ணிக்கோயேன்”
“மாமா வீடு வாங்கினது நான் மட்டும் தான் அப்போ எவனும் வேலைப் பார்க்கலை. அது உங்களுக்கும் நல்லாவே தெரியும். அதனால நான் எவன்கிட்டயும் பேச வேண்டிய அவசியம் இல்லை. ஐம்பத்தி ஐந்தாயிரம் மதிப்புள்ள வீட்டுக்கு அவரு முப்பத்தி ஆராயிரம் ரிஜிஸ்ட்ரேஷன் சார்ஜஸ் குடுத்திருக்கானாம்!!!! அதுக்கு ப்ரூஃப் வேற வச்சிருக்கானாம்!!!! இதை எல்லாம் கேட்கும் போதே உங்களுக்கு புரிஞ்சிருக்க வேண்டாமா மாமா எல்லாமே டிராமான்னு!!! அதுவுமில்லாம பெத்தவாளை நம்பி தான் நான் செய்தேன். அதனால் எதிர்காலத்தில் எவிடன்ஸ் தேவைப்படும்ன்னு நான் ப்ரோ நோட்ல எல்லாம் கையெழுத்து வாங்கிண்டு செய்யலை. அவ்வளவு எல்லாம் யோசிச்சு செய்திருந்தேன்னா இப்போ எவனும் நாக்கு மேல பல்ல போட்டு இவ்வளவு திமிரா எல்லாம் பேச முடிஞ்சிருக்காது. என்ன?? நீங்களும் எல்லா உண்மைகளும் தெரிஞ்சும் இப்படி பல்டி அடிச்சுட்டேங்களே மாமா!!!”
“அதுக்கு இல்லடா நவீன்…அவன் ப்ரூஃப் வச்சிருக்கேன்னு தீர்கமா சொல்லறான்டா. அதுதான் நீ பேசிட்டா க்ளியர் ஆகிடும்ன்னு நினைச்சேன்”
“இவ்வளவு தெரிஞ்சும் நீங்க இப்படி பேசறது எனக்கு ரொம்ப சங்கடத்தை கொடுக்கறது மாமா. அவன் எதுக்கு காசு கொடுத்தானோ? அதுவும் அவனுக்கு வேலை கிடைச்ச தேதியையும், வீடு வாங்கின தேதியையும் வச்சுப் பார்த்தாலே அதில் துளி கூட உண்மை இல்லை என்பது பேங்க் அதிகாரியான உங்களுக்கு தெரியாதா என்ன? அப்போ குடுக்கும் போதே ஏதோ திட்டத்தோட தானே எவிடன்ஸ் எல்லாம் க்ரியேட் பண்ணி வச்சிண்டு குடுத்திருக்கான். இவ்வளவும் புரிஞ்சும் நீங்க அவனை கால் பண்ண சொல்லறேங்கள்ன்னா…. சாரி மாமா…இது என் வீட்டுப் பிரச்சினை இனி நானே பார்த்துக்கறேன். இதில் இனி நீங்க அனாவசியமாக தலையிட வேண்டாம். நீங்க அவாளுக்காக பேச வந்து நம்ம ரிலேஷன்ஷிப்பை கெடுத்துக்காதீங்கோ ப்ளீஸ். எங்களுக்கு அந்த வீடு வேண்டாம் அவாளே வச்சுக்கட்டும். பெத்த புள்ளையை ஏமாத்தின பெருமை உங்க அக்கா அத்திம்பேருக்கே!!! அதுக்கு துணை நின்ற உங்க மருமகன்கள் கவின், ப்ரவின் பவினுக்கே!!! அந்த பெருமிதத்தோடு அவா உலா வரட்டும். இனி இதைப் பத்தி எவரும் எங்ககிட்ட பேசிண்டு வரவேண்டிய அவசியமில்லைன்னு அவர்களின் தூதாக வந்த நீங்களே சொல்லிடுங்கோ. இனி எனக்கு அவாளோட பேச இஷ்டமில்லை. நான் ஃபோனை வைக்கிறேன் பை குட் நைட்”
என்று கூறி உண்மை அறிந்தும் தனக்காக பேசாத மாமா தன் அக்காவுக்காகவும், கவினுக்காகவும் பரிந்து பேச வந்ததை விரும்பாத நவீன் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு பேசிவிட்டு ஃபோனை வைத்தான். அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த மிருதுளா நவீனிடம்….
“நீங்க சொன்னது கரெக்ட் நவீ. அந்த வீட்டை அவாளே வச்சுக்கட்டும். நமக்கு வேண்டாம். எங்க அம்மா சொன்னா மாதிரி நமக்கு அந்த அம்பாள் அதை விட பல மடங்கு வசதியான வீட்டைக் கொடுப்பாள். இனி இதைப் பத்தி நாம எவர்கிட்டேயும் பேச வேண்டாம். சரியா இப்போ நிம்மதியா தூங்குங்கோ”
“ம்…ம்….ம்…”
என்று கூறிவிட்டு தூங்கினான் நவீன். மறுநாள் இருவரும் சக்தியுடன் ஹைதராபாத் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மிருதுளா நவீனிடம்
“நவீ உங்க அப்பா அம்மாவுக்கு கால் பண்ணி ஊருக்கு கிளம்பறோம்ன்னு சொல்ல வேண்டாமா?”
“ஒண்ணும் வேண்டாம். நாம பண்ணறதுக்கெல்லாம் எவிடன்ஸ் வச்சுண்டு செய்ய நாம என்ன அந்த தந்திர நரிகளா? அந்த நரி கூட்டத்துக்கு இதுவரை குடுத்து வந்த மரியாதைப் போதும். என்னை ஏமாத்தியது கூட எனக்கு வலிக்கலை ஆனா ஆளாளுக்கு பேசறா பாரு அதை தான் என்னால் ஜீரணிச்சுக்கவே முடியலை. பேசாம வா நாம நம்ம பொழப்பை பார்க்கலாம். என்ன… என்னோட பத்து வருஷ உழைப்பை ஒரே நொடியில் ஒண்ணுமில்லாமல் வார்த்தைகளால் ஊதித் தள்ளிட்டா…ம்….சரி கிளம்பலாமா?”
என்று கூறி மூவரும் ஹைதராபாத் சென்றனர். பிச்சுமணியும் பர்வதத்திடமும், கவினிடமும் நவீன் கூறியதைக் கூறிவிட்டு இனி இந்த விஷயத்தில் தன்னை ஈடுப்படுத்த வேண்டாம் என்று சொல்லிவிட்டார். மறுநாள் காலை ஈஸ்வரன் நவீன் மிருதுளா வீட்டு நம்பருக்கு கால் செய்தார். இரண்டு ரீங் போனது. அடுப்படியிலிருந்து மிருதுளா நவீனிடம்
“நவீ கொஞ்சம் அந்த ஃபோனை எடுங்கோளேன். நான் மாவு அரைச்சுண்டு இருக்கேன்.”
“ம் ம்….ஓகே எடுத்துட்டேன். ஹலோ நான் நவீன் பேசறேன்”
“நான் தான் ஈஸ்வரன் பேசறேன்”
“ம்…ம்… என்ன”
“யாரு நவீ ஃபோன்ல?”
“அதுவா யாருமில்லை மிருது. நீ உன் வேலையைப் பாரு”
“இல்லை கவின்கிட்ட பேசினயா? அவன் என்ன சொன்னான்னு கேட்கத்தான்”
“ஏன் அவன் சொல்லலையோ? நீங்க எல்லாரும் ஒரு கட்சி தானே அப்புறம் எதுக்கு என்கிட்ட கேட்குற.”
“ஆமாடா நாங்கெல்லாம் ஒண்ணுதான் இப்போ அதுக்கு என்னங்குற?”
என்று ஃபோனிலேயே எகிர ஆரம்பித்தார் அதற்கு நவீனும் பதிலுக்கு
“இப்படி ஒரு வேலையை பண்ணிட்டும் கொஞ்சம் கூட கூச்சம், மனசாட்சின்னு எதுவுமே இல்லாம எப்படி உன்னால இப்படி எல்லாம் பேச முடியறது?”
“டேய் என்னடா நீ பெரிய இவனோ?”
“நான் பெரியவனே இல்லை!!! நான் ரொம்ப சாதாரணமான சின்னஞ்சிரியவன் தான்.”
என்று நவீன் பேசிக்கொண்டிருக்கும் போதே ஈஸ்வரன் ப்ரவீனிடம்…
“டேய் இதுக்கு தான் இவன்ட்ட எல்லாம் பேச மாட்டேன்னு சொன்னேன். இப்போ பாரு குதிக்கறான். அவன்ட்ட எல்லாம் நீயே பேசிக்கோ”
என்று ஃபோனை வீட்டுப் பெரிய மனுஷனான மூன்றாவது புள்ளையிடம் கொடுத்தார். ப்ரவீனும் இதுதான் சமயம் என்று தன் அண்ணன் என்ற மரியாதை துளிக் கூட இல்லாமல் ஃபோனில் நவீனிடம்
“இதோ பாரு அண்ணே இனி இங்கெல்லாம் இனிமேட்டு ஃபோன் பண்ணற வேலை எல்லாம் வச்சுக்காதே. நீ பேசினாலே அப்பா டென்ஷன் ஆகிடறா??? இனி இங்கே எப்போதும் நீ ஃபோன் பண்ண வேண்டாம்.”
என்று கூறியதும் மிருதுளா ப்ரவீனிடம்
“எப்படி எப்படி !!! யாரு யாரெல்லாம் பேசணும்ன்னு ஒரு வெவஸ்த்தை இல்லாம போச்சுப்பா. நீயெல்லாம் நவீன்ட்ட இப்படி பேசுறயே இதுக்கெல்லாம்….வேண்டாம் ஒண்ணு மட்டும் “
என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் ஃபோனை கட் செய்தான் ப்ரவீன். அன்று முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர்கள் எவருடனும் ஒட்டுமில்லை உறவுமில்லை என்றொரு வாழ்க்கையை வாழ்ந்தனர் நவீனும் மிருதுளாவும். மூத்த தம்பதியரும் அதைப் பற்றி எந்த வித கவலையுமின்றி அதையே சிறப்பான கன்டென்ட்டாக உபயோகித்து மிருதுளாவை பற்றி அவதூராக சொந்த பந்தங்களிடம் பரப்பிவிட்டனர். அதை பலர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை ஏனெனில் அவர்களுக்கு மூத்த தம்பதியரைப் பற்றியும் தெரியும், மிருதுளா, நவீன் பற்றியும் தெரியும். ஆனால் வம்புக்கென்றே தன் அக்காளுக்கு பரிந்துப் பேசிக்கொண்டு வந்தாள் பர்வதத்தின் தங்கை. அதுவும் ஃபோன் போட்டு….
“ஹலோ நவீன் நான் தான் சித்தி பேசறேன்”
“ம்… சொல்லுங்கோ சித்தி எப்படி இருக்கேங்கள்?”
“ம் நாங்க நல்லா இருக்கோம் இப்போ நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன் அதைப் பத்தி உன்கிட்டயும் மிருதுளா கிட்டயும் பேசத்தான் ஃபோன் போட்டேன்”
“ம்…சொல்லுங்கோ சித்தி”
“நீங்க ரெண்டு பேரும் பண்ணறது சரியா? சொல்லுங்கோ!!. அதுவும் மிருதுளா பேச்சைக்கேட்டுண்டு நீ இப்படி அப்பா அம்மாவோடயும் தம்பிகளோடையும் பேசாமலிருப்பது ரொம்ப பெரிய தப்புன்னு உனக்கு தெரியலையா?”
“ஹலோ!! ஹலோ!! சித்தி நீங்க ஒன் சைட் ஸ்டோரியை மட்டும் வச்சு எங்கள்ட்ட இப்படி பேசறது சரியில்லை. அதுவுமில்லாம நாங்க எதுவுமே யார்கிட்டயுமே சொல்லலைன்னா தப்பு எங்க மேல தான்னு நீங்களா நினைச்சுண்டு பேசறேங்களே இதுவும் தப்புதான். அவாளை மாதிரி நாங்க எல்லார்கிட்டேயும் எல்லாத்தையும் சொல்லிண்டு போணோம்ன்னா அவா யாருமே அவா முகத்தை வெளில காட்ட முடியாது அதை முதல்ல தெரிஞ்சுக்கோங்கோ. தயவுசெய்து நீங்க அந்த கூட்டத்துக்காக பேசி நம்ம உறவை முறிச்சுக்க வேண்டாம்ன்னு நினைக்கிறேன். அன்று அங்கு என்ன நடந்தது என்று எங்களுக்கும், உங்க அக்கா அத்திம்பேர் மற்றும் அவா பசங்களுக்கும் அந்த ஆண்டவனுக்கும் நல்லா தெரியும். என்னைப் பொறுத்த வரைக்கும் ஒருத்தரோட பணத்தை சுரண்டுறதை விட மாஹா பாவம் உழைப்பை சுரண்டுறது. அதை அந்த கூட்டம் செவ்வனே செய்துள்ளது. இனி நீங்க தயவுசெய்து அந்த கூட்டத்துக்காக எங்கிட்ட பேசிண்டு வராதீங்கோ ப்ளீஸ். அப்புறம் சொல்லுங்கோ சித்தப்பா குழந்தைகள் எல்லாரும் எப்படி இருக்கா?”
“என்னடா நவீன் இப்படி பட்டும் படாம பேசற?”
“சித்தி ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்கோ.”
“சரி டா. ஓகே. அப்ப நான் ஃபோனை வச்சுடறேன்”
“ஓகே சித்தி பை. தாங்க்ஸ் ஃபார் அண்டர்ஸ்டாண்டிங் அஸ்”
இவ்வாறு நவீனும் மிருதுளாவும் ஒதுங்கினாலும் சொந்த பந்தங்கள் ஒவ்வொருவராக கிளப்பி விட்டுக் கொண்டே இருந்தனர் மூத்த தம்பதியரும் அவர்களின் ஜெராக்ஸ் ஆனா கவினும் கஜேஸ்வரியும். ஆனால் ஒருவரிடமும் தங்களை நியாயப் படுத்திக் கொள்ள விரும்பாது அனைவரிடமும் ஒரே போல் பேசினார்கள் நவீனும் மிருதுளாவும். இந்த தொந்தரவு தொடர்ந்ததைப் பார்த்த மிருதுளா நவீனிடம்
“ஏன் நவீன் நீங்க உங்க அப்பா அம்மா புள்ளை தானா?”
“ஹா!! ஹா குட் கொஸ்டீன் மிருது”
“இல்லை ….கவின், ப்ரவின், பவினை விட்டுக் கொடுக்காத உங்க பேரண்ட்ஸ் ஏன் உங்களை மட்டும் இப்படி எல்லாம பாடாய் படுத்தறா? அவாளோட டிஃப்ரன்ஸ் இன் பிஹேவ்யர் பிட்வீன் யூ அன்ட் யுவர் ப்ரதர்ஸ் பார்த்தா உங்க அம்மா ஏதோ உங்களோட ஸ்டெப் மதரா இருப்பாளோன்னு கூட என்னை யோசிக்க வைக்கிறது. சாரி அபௌட் தட்”
தொடரும்…….
அத்தியாயம் 83: பிள்ளை மனம் பித்து!பெத்த மனம் கல்லு!
“என்ன ஆச்சு அத்தை?” என்று நவீன் கேட்டதற்கு அவன் அத்தை அவனிடம்
“உன் தம்பி அந்த கவின் இருக்கானே அவன் எங்களை உங்க அப்பாகிட்டயோ இல்லை உங்க அம்மா கிட்டயோ பேச விடலை. எங்களை எல்லாம் ஹாஸ்பிடலுக்கும் வரவேண்டாம்ன்னு சொல்லிட்டான். அங்க உங்க மாமா பிச்சு மணிக்கு மட்டும் தான் அனுமதி போல….அதுனால எனக்கு எந்த விவரமும் தெரியாதுப்பா”
“ஒ!! ஓ!!! அப்படியா!! சரி அத்தை அப்போ நானே அப்பாவுக்கு மறுபடியும் ஃபோன் பண்ணிப் பார்க்கறேன். வச்சுடட்டுமா?”
“நீ பண்ணிணாலும் அந்த கால் கவினுக்கு தான் போகும். அது மாதிரி தான் அவன் ஏதோ பண்ணி வச்சிருக்கான். ரொம்ப தான் பண்ணறாப்பா அவனும் அவன் பொண்டாட்டியும். சரி வச்சுடு பா. உனக்கு ஏதாவது தெரிஞ்சுதுனா எனக்கும் சொல்லுப்பா”
“ஓகே அத்தை நான் நிச்சயம் சொல்லறேன்”
என்று ஃபோனை வைத்ததும் அனைத்தையும் கேட்ட மிருதுளா நவீனிடம்
“ஏன் இந்த கவின் இப்படி எல்லாம் பண்ணறான்”
“அது ஒண்ணுமில்லை அவர் தான் பார்த்துக்கறாராம்….நான் காசு கொடுக்கலை இல்ல அதுதான்”
“உங்கிட்ட சரி ஆனா அத்தை கிட்ட எல்லாம் ஏன் அப்படி பண்ணறான்”
“எனக்கென்ன தெரியும் அவாளோட எல்லா ஆக்ஷன்ஸுக்கு பின்னாடியும் ஏதாவது பெரிய ப்ளான் இருக்கும். போக போக தெரியாமலா போயிடும்!!”
“என்னமோ போங்கோப்பா….என்ன குடும்பம் இதுன்னு எனக்கு ஒண்ணுமே புரியலை. ப்ரவின் கல்யாணத்துக்கு அடுத்த மாசம் போறோமே அப்போ நேர பார்த்து விசாரிச்சா போச்சு”
ப்ரவினின் திருமணம் நாள் நெருங்கியது. அவனின் திருமணநாள் முன்தினம் நவீனின் ஒண்ணுவிட்ட சித்தியின் பேத்திக்கு ஆயுஷ்ஹோமம் என்று ஒரு மண்டபத்துக்கு அழைத்திருந்தனர். நவீனையும் மிருதுளாவையும் அங்கேயே நேராக வரச்சொல்லியிருந்தனர் மூத்த தம்பதியர். ஆகையால் இருவரும் நேராக அந்த மண்டபத்துக்கே சென்றனர். அங்கு சென்ற பிறகு தான் இருவருக்கும் தெரியவந்தது அங்கு ஆயுஷ்ஹோமம் மட்டுமின்றி ப்ரவீனின் விரதமும் அங்கு தான் நடக்கிறதென்பது. இவர்கள் மண்டபத்தினுள் நுழைந்ததும் பர்வதம் எல்லார் முன்னிலையிலும் மிருதுளாவிடம்
“என்னது இது நாந்தியும் விரதமும் நடக்கபோறது நீ ஒன்பது கஜம் உடுத்தாம சாதா சாரி கட்டிண்டு வந்திருக்க?”
என்று கேட்டதும் அதிர்ந்து போனாள் மிருதுளா ஆனால் சட்டென்று அவள்
“நீங்க சொன்னா தானே தெரியும். நாங்க குழந்தையோட ஆயுஷ்ஹோமம்ன்னு தான் நினைச்சு வந்தோம். இப்போ நீங்க சொல்லி தான் எங்களுக்கு தெரியும் அப்புறம் எப்படி நான் ஒன்பது கஜத்தில் வருவேனாம்?”
“சரி சரி ஆத்துக்கு போய் ஒன்பது கஜம் கட்டிண்டு வா”
என்று பர்வதம் எல்லார் முன்னும் சொல்ல அதற்கு சொந்தங்கள் எல்லாம் மிருதுளாவிடம்
“அது எப்படி மிருதுளா உங்களுக்கு சொல்லாம இருப்பாளா? என்ன சொல்லுற? எதுவா இருந்தாலும் இந்த நேரத்துல வேண்டாம். நீ சுருக்கப் போய் புடவையை மாத்திண்டு வா”
“அய்யோ சித்தி, அத்தை சத்தியமா எனக்கும் நவீக்கும் இப்போ தான் தெரிய வந்தது. இப்போ என்ன? சாரியை மாத்திண்டு வரணும் அவ்வளவு தானே!”
என்று கூறி சக்தியை தூக்கிக் கொண்டு நவீனிடம் ஆட்டோ பிடிக்கச் சொல்லி இருவருமாக மிருதுளா அம்மா வீட்டுக்கு சென்றனர். அங்கே மிருதுளா பெற்றவர்கள் மண்டபத்துக்கு வருவதற்காக ரெடி ஆகிக் கொண்டிருந்தனர். வீட்டினுள் நுழைந்ததும் நவீனிடம் பட்டாசு போல வெடித்து சிதறினாள் மிருதுளா. நவீனும் தன் வீட்டார் செய்தது தவறு தான் என்றும் அதனால் வெட்கப் படுவதாகவும் கூறினான். விவரம் தெரியாத அம்புஜம் மிருதுளாவிடம் நடந்ததை விசாரித்தாள் அப்போது மிருதுளா மண்டபத்தில் நடந்தவற்றை கூறினாள் அதைக் கேட்டதும் அம்புஜம்
“என்ன சொல்லறேங்கள் ரெண்டு பேரும்? எங்க கிட்ட உங்க தம்பி கவினும் கஜேஸ்வரியுமா தான் வீட்டுக்கு வந்து ப்ரவீன் கல்யாணப் பத்திரிகை கொடுத்துட்டு இன்னைக்கு இருக்குற நாந்திக்கும், விரதத்துக்கும் அழைச்சுட்டு போனாளே !!! அப்புறம் ஏன் உங்க கிட்ட சொல்லலை?”
“ஏன் மா நீயாவது எனக்கு ஃபோன் போட்டு சொல்லிருக்கலாம் இல்ல”
“ஏன்டி எனக்கு என்ன ஜோசியமா தெரியும் அவா உங்க கிட்ட சொல்லலைன்னு!!”
“சரி சரி எல்லாம் எங்க தலை எழுத்து. வா வந்து எனக்கு ஒன்பது கஜம் கட்டி விடு”
என்று புடவையை மாற்றிக்கொண்டு மண்டபத்துக்கு நால்வருமாக சென்றனர். அங்கு சென்றதும் அனைவரின் பார்வையும் மிருதுளா மீது பாய்ந்தன. ஏதோ மிருதுளா தவறு செய்தது போல பார்க்கப்பட்டாள். அனைத்தையும் பொறுத்துக் கொண்டு செய்ய வேண்டியவைகளை எல்லாம் செய்து முடித்ததும் நேராக தன் மாமனாரிடம் சென்றாள் மிருதுளா. அவள் பின்னாலேயே சென்றான் நவீன். அங்கே தனியாக அமர்ந்திருந்த ஈஸ்வரனிடம் மிருதுளா
“ஏன்ப்பா இன்னைக்கு விரதமும் இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிருந்தா நாங்க அதுக்கு தயாரா வந்திருப்போமில்லையா? ஏன் சொல்லலை?”
“எனக்கு ஆப்பரேஷன் ஆனதால ஒண்ணுத்தலையும் நான் பட்டுக்கலை. எல்லாம் கவின் கஜேஸ்வரி தான். அதுனால என் கிட்ட கேட்டுட்டு நோ யூஸ்”
என்று பொறுப்பில்லாமல் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கவினும் கஜேஸ்வரியும் வந்தனர். கவின் நவீனிடம்
“உங்களுக்கு என்ன தெரிஞ்சுக்கணும்? இங்க வேண்டாம் அப்பா ரெஸ்ட் எடுக்கட்டும் அப்படி வாங்கோ”
என்று (பொறுப்பானவராம்….அனைவர் முன்னிலும் காட்டிக்கொள்ள)கூறி அழைத்துச் சென்றனர். அங்கே போனதும் நவீன் கவினிடம்
“எல்லாம் நீங்க தானே பண்ணறேங்கள்ன்னு …கிரியேட் ஆக்கிருக்கேங்கள் ….இருந்துட்டு போங்கோ ஆனா ஏன் எங்கிட்ட இன்னைக்கும் விஷேசம் இருக்குன்னு சொல்லலை?”
“சொன்னோமே!!! என்ன கஜேஸ் சொன்னோம் இல்லையா?”
“ஆமாம் கவின் சொன்னோம்”
“என்ன ரெண்டு பேருமா விளையாடறேங்களா?”
“இல்லை நவீன் அது தான் உன் மாமனார் மாமியார் வீட்டுக்கு போய் சொன்னோமே!!! அவா சொல்லலையா?”
“என் தம்பி விசேஷத்தை என்கிட்ட சொல்லாம அது என்ன மாமானார்ட்ட சொன்னேன்னு சொல்லற?”
“இல்ல நீங்க எல்லாம் ஒண்ணு தானேன்னு நினைச்சேன். “
என்று கவினும் கஜேஸ்வரியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு புன்னகைத்தனர். அதைப் பார்த்ததும் கோபம் கொண்ட மிருதுளா கவினிடம்
“ஓ!! கவின் உங்க குடும்ப பழக்கம் இது தானா எனக்கு தெரியாம போச்சு. பரவாயில்லை இப்போ தெரிஞ்சுண்டுட்டோம். இல்லையா நவீ !!! இனி நம்மாத்துல என்ன விசேஷம்னாலும் கவினோட மாமனார் மாமியார்கிட்ட சொன்னா போதும். சாரி கவின் எங்களுக்கு இந்த முறையெல்லாம் புதுசா …அதுதான் தெரியலை. எல்லாம் கஜேஸ்வரி வீட்டு பழக்கம் போல…சரி சரி இனி அப்படியே செய்துடறோம் என்ன நவீ”
“யூ ஆர் ரைட் மிருது. இனி அப்படியே செய்திடுவோம்”
“என்ன நவீன் மன்னி அப்படி சொல்லறா நீயும் அதை ஆமோதிக்கற?”
“நீங்க எல்லாரும் பண்ணறதைப் பார்த்தா ஆத்திரம் தான்டா வர்றது. உன்னை பத்தி எனக்கு நல்லாவே தெரியும்டா. ச்சே போங்கடா….வா மிருது நாம இங்கிருந்து போவோம்.”
என்று அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர் நவீனும், மிருதுளாவும். அன்று மாலை ரிசெப்ஷனுக்கு மண்டபம் சென்று எதிலும் பட்டுக்கொள்ளாமல் இரு நாற்காலியில் அமர்ந்துக் கொண்டனர். அங்கே கவின் கஜேஸ்வரியின் நாடகம் விமர்சையாக நடந்தேறிக் கொண்டிருந்தது. அவற்றையும் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த நவீன் மிருதுளாவிடம் கவின் வந்து
“உங்க ரெண்டு பேருக்கும் மேலே ரூம் போட்டிருக்கோம்”
“ஓ! அப்படியா!! நோ தாங்க்ஸ். நாங்க நைட்டு எங்காத்துக்கு போயிட்டு காலையில கல்யாணத்துக்கு வர்றோம்”
“அப்படியா!!! சரி”
என்று கூறிவிட்டு அவனின் நாடகத்தை தொடர்ந்தான். திருமணம் இனிதே நடந்தேறியது. நவீனும் மிருதுளாவுமாக ப்ரவினுக்கு ரூபாய் பத்தாயிரம் கொடுத்தனர். அவன் நேராக மொய் எழுதிய தன் மாமா அருகில் சென்று அமர்ந்து மொத்தம் எவ்வளவு மொய் வந்திருக்கு என்ற கணக்கை சரி பார்த்த பின் மொத்த பணத்தையும் அவனே எடுத்துக் கொண்டு அவன் பெட்டியில் வைத்துக் கொண்டான். அதை பார்த்த மிருதுளா நவீனிடம்..
“பார்த்தேங்களா உங்க ரெண்டாவது தம்பியை. மொய் பணம் உங்க அப்பா அம்மா கையில போனா ஒரு பைசா தேறாதுன்னு தெரிஞ்சுண்டு தாலிகட்டின கையோட வந்து மொத்தத்தையும் வாங்கி அவன் பெட்டிக்குள்ள வச்சிண்டுட்டான். நீங்க என்னடான்னா மொத்தத்தையும் உங்க அப்பா அம்மா கிட்ட கொடுத்துட்டு ஊருக்கு போக அவாகிட்ட காசு கேட்டுண்டு நின்னு அதை அவா திருப்பி கேட்டு வாங்கிண்டு அதுனால நாம கஷ்டப்பட்டு…ம்….”
“விடு விடு நான் அவாளை நம்பினேன் ஏமாந்தேன். நான் ஏமாந்ததை பார்த்து இவா எல்லாரும் உஷாராயிட்டா. என் தப்பு எனக்கு தெரியாம இல்லை”
ப்ரவின் திருமணம் முடிந்ததும் மரியாதை இல்லாத இடத்தில் இருக்க இஷ்டமில்லாமல் அடுத்த நாளே ஹைதராபாத் கிளம்பிச் சென்றனர் நவீனும் மிருதுளாவும்.
மாதங்கள் ஒடின. கஜேஸ்வரிக்கு சீமந்தம் வளைகாப்பு நடத்தினார்கள் ஆனால் நவீன் மிருதுளாவை அழைக்கவில்லை. அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக செய்தி வந்தது. அதே நேரம் ப்ரவினின் மனைவி துளசியின் சீமந்தம் வந்தது அதற்கு ப்ரவினும் துளசியும் நவீன் மிருதுளாவை அழைத்திருந்தார்கள். இருவரும் சக்தியுடன் சென்றிருந்த இடத்தில் கவின் கஜேஸ்வரியின் குழந்தைக்கு (அவர்கள் மதிக்காவிட்டாலும்) செய்ய வேண்டிய சீர் அனைத்தையும் செய்தனர். விசேஷம் முடிந்த அடுத்த நாள் காலை மூத்த தம்பதியர் வீட்டுக்கு சென்றனர் நவீனும் மிருதுளாவும். அங்கே துளசி பிரசவத்திற்கு தாய் வீடு செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள். கவினும் கஜேஸ்வரியும் குழந்தையுடன் கோவிலுக்கு சென்றிருப்பதாக ஈஸ்வரன் சொன்னார். பர்வதம் அடுப்படியில் மும்முரமாக ஏதோ செய்துக் கொண்டிருந்தாள். அதை கவனித்த மிருதுளா அடுப்படிக்குள் சென்று
“என்னமா ஏதோ மும்முரமா செஞ்சிண்டிருக்கேங்கள். வாசம் வாசல் வரை வர்றதே”
“இன்னைக்கு நம்ம துளசியை பிரசவத்துக்கு அவா ஆத்துக்கு அழைச்சுண்டு போக அவா அம்மா அப்பா எல்லாரும் வரா. எப்படி வெறுமனே அனுப்பறது. அது முறையில்லையே. அது தான் லெமன் சேவை, தேங்காய் சேவை, கேசரி, மெது வடை எல்லாம் பண்ணிருக்கேன். இதோ இந்த டப்பால பால்கோவா வச்சிருக்கேன் துளசி கையில குடுத்தனுப்பறதுக்கு…நம்மாத்து வாரிசை நல்லபடியா பெத்துண்டு வரணும் இல்லையா அதுக்குத் தான்”
என்று பர்வதம் சொல்லி முடித்ததும் மிருதுளா கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது அதை கவனித்த நவீன் அவள் தோளைப் பிடித்து அழுத்தி
“சரி மிருது நாம கிளம்பலாம்.”
“என்ன அவசரம் அவா எல்லாம் வந்துட்டு எல்லாரோடையும் சாப்டுட்டு போனா போதாதா. இருங்கோ”
“இல்ல இல்ல நீ உன் சம்மந்திகளை எல்லாம் கவனி நாங்க போயிட்டு சாயந்தரமா வர்றோம்”
என்று அங்கிருந்து கிளம்பிச்சென்றனர். ராமானுஜம் வீட்டுக்கு வந்ததும் மிருதுளா ஓவென்று அழுதாள். அதைப் பார்த்த அம்புஜம் என்ன என்று விசாரித்து விவரம் தெரிந்துக் கொண்டதும்…
“விடு மிருது…இதுக்கெல்லாமா அழறது. அந்த மாமி உன்னை வெறுப்பேத்தறதுக்காகவே சும்மா சொன்னாலும் சொல்லிருப்பா அதை போய் ….”
“இல்லமா அவா செஞ்சு வச்சதை எல்லாம் பார்த்தேன். அவா என்ன வேணும்னாலும் செய்து கொடுக்கட்டும் அதை நான் ஒண்ணுமே சொல்லலை. ஆனா நாம என்ன மா தப்பு பண்ணிணோம்? என்னையும் உங்களையும் எவ்வளவு அசிங்கப் படுத்தி அனுப்பினா…பெரியம்மா சொல்லியும் என்கிட்ட எதுவுமே கொடுத்தனுப்பலையே மா!!! அதெல்லாம் அவா பேச பேச என் கண் முன்னாடி படம் போல ஒடித்து தெரியுமா!!”
“சரி விடு நமக்கு அப்படி பண்ணிட்டா… என்ன பண்ண முடியும். விடு… அவாளுக்கு நம்ம சக்திக் குட்டிக்கு பண்ணற பாக்யத்தை அந்த அம்மன் கொடுக்கலைன்னு நினைச்சுப்போம். விட்டுத் தள்ளு. போய் முகத்தை அலம்பிண்டு வா”
“உன் அம்மா சொல்லறது தான் கரெக்ட் மிருது. விட்டுத் தள்ளு. சரி இன்னைக்கு சாயந்தரம் வீட்டுக்கு போய் அந்த வீடு மாட்டரை கேட்டுட்டு வந்திடுவோம் ஏன்னா இன்னைக்கு எல்லா பசங்களும் இருக்கா அது தான் பேசி முடிவெடுத்தடுலாம்ன்னு நினைக்கிறேன்.”
“அது நீங்க வாங்கின வீடு அதைப் பத்தி நீங்க உங்க அம்மா அப்பாட்ட தானே பேசணும் அதுக்கு என்னத்துக்கு தம்பிகள் எல்லாரும் இருக்கணும் நவீ?”
“ஆமாம் இப்போ அந்த வீடு என் அம்மா பேர்ல இருக்கு அதை எனக்கு எழுதிக் கொடுத்துட்டான்னா நாளைக்கு நான் ஏமாத்தி வாங்கிண்டேன்னு சொல்லிட்டான்னா? சொல்லிட்டானா என்ன? நிச்சயம் சொல்லக்கூடியவா தான். அதனால எல்லாரையும் வச்சுண்டே பேசிடலாம்ன்னு இருக்கேன்”
“ஆனாலும் நீங்க ரொம்ப தான் நம்பறேங்கள் நவீன். சரி போவோம்”
இருவரும் சக்தியை அம்புஜத்திடம் விட்டுவிட்டு மூத்த தம்பதியர் வீட்டுக்கு சென்றனர். அங்கே சென்ற பின் தான் தெரிய வந்தது கவினும் கஜேஸ்வரியும் கிளம்பி ஈரோடு சென்று விட்டனர் என்ற விவரம். ஆனாலும் மாமாவை நம்பி காலம் கடத்திய விஷயத்துக்கு முடிவு கட்டியே ஆக வேண்டுமென்ற எண்ணத்தில் காலை நடந்த சம்பவத்தினாலும், தொடர்ந்து நடந்த அவமானங்களாலும்
நவீன் சரியான கோபத்திலிருந்தான். அவனிடம் கோபப்படாமல் பக்குவமாக பேச சொன்னாள் மிருதுளா. அதற்கு நவீன்
தன் பெற்றவர்கள் மீதிருந்த அதிருப்தியையும் தாண்டி ஏதோ ஒரு நம்பிக்கை இருக்கப் போய் பேச்சை ஆரம்பித்தான்
“ஆமாம் இங்க வரதுக்கு முன்னாடி நாம எல்லாருமா இருந்தோமே ஒரு வீடு அது உங்களுக்கு ஞாபகமிருக்கா ?”
“ஏன் இல்லாம நல்லாவே ஞாபகமிருக்கே. அதுக்கென்ன இப்போ?”
“அதை வாடகைக்கு விட்டிருக்கேங்கள்!”
“ஆமாம் விட்டுருக்கோம்”
“அதை ஏன் என்கிட்ட சொல்லலை?”
“அதையெல்லாம் பத்தி பேச பொறுப்பா இருந்திருக்கணுமே!!”
“என்ன சொன்ன?? பொறுப்பப் பத்தி என்கிட்ட பேசறையா? யாருக்கு? எனக்கு பொறுப்பில்லையா?”
“இல்லடா….நீ பொறுப்பா தான் இருந்த ஆனா உன் கல்யாணத்துக்கப்புறமா தான் நீ பொறுப்பில்லாதவனாயிட்டயே”
“இல்ல அப்படி என்ன நான் பொறுப்பில்லாதவனாயிட்டேன்!! அதை நீ கண்ட!!”
“இவளை கட்டிண்டதுக்கப்புறமா நீ எங்களுக்குனு என்ன செஞ்ச? என்னத்த பார்த்துண்ட?”
“சரி இந்த பஞ்சாயத்தை இன்னொரு நாள் வச்சுப்போம். இப்போ நீ டாப்பிக்கை மாற்ற முயற்சிக்காதே. நான் கேட்ட கேள்விக்கு பதில். நான் பொறுப்பா இருந்தேனோ இல்லையோ ஆனா நான் வாங்கின வீட்டை காலி செய்யும் போதும் என்கிட்ட சொல்லலை. அந்த வீட்டுக்குன்னு நான் வாங்கிப் போட்ட டிவி, ஃப்ரிட்ஜ்ன்னு எல்லாத்தையும் வித்திருக்கேங்கள் அதையும் என்கிட்ட சொல்லலை. இப்போ வாடகைக்கு விட்டதும் சொல்லலை. அது ஏன்? அதுவுமில்லாம அந்த வீட்டை எனக்கே தெரியாமல் உன் பேர்ல ரிஜிஸ்டர் பண்ணிண்டிருக்க? என்கிட்ட ஏன் இதை எல்லாம் சொல்லலை?”
என்று நவீன் பாயின்ட் பாயின்டாக கேட்டதற்கு பதில் ஏதும் இல்லாது போனாலும் தன் கெத்தை விட்டுக் கொடுக்காமல் கால் மேல் கால் போட்டுக் கொண்டு பர்வதம் நவீனைப் பார்த்து
“என்னது நீ வாங்கின வீடா? அது எது?”
என்று ஒரு ஆட்டம் பாம் போட்டாள். அதைக் கேட்டதும் மிருதுளா நவீனைப் பார்த்தாள். நவீன் பர்வதத்திடம்
“நான் வாங்காம வேற யாரு வாங்கினாளாம்? என் கையிருப்பு போக மீதத்தை மாமாவிடம் கடனாக வாங்கி தானே அந்த வீட்டை வாங்கினேன். ஏன் உனக்கு ஞாபகமில்லையோ!!!”
“எந்த மாமன் கொடுத்தான்? எனக்கு எந்த மாமனும் கொடுத்ததா தெரியலை”
“ஓ!!! எந்த மாமனா!! கேட்ப …கேட்ப…சரி அது உனக்கு தெரியாதுன்னே வச்சுக்குவோம் அப்போ அந்த வீட்டை வாங்க ரூபாய் ஐம்பத்தி ஐந்தாயிரம் எங்கேந்து வந்தது? அப்போ பசங்க எல்லாரும் படிச்சுண்டு இருந்தா. எவனும் சம்பாதிக்க ஆரம்பிக்கலை பின்ன எங்கேருந்து வந்தது பணம்?”
“ம்…நீ வெறும் பதினஞ்சாயிரம் தான் தந்த ….மீதிக்கு அப்பா லோன் போட்டா அதுல தான் வாங்கினோம். அதுவுமில்லாம கவின் தான் இந்த வீட்டோட ரிஜிஸ்ட்ரேஷனுக்கு முப்பத்தி ஆறாயிரம் கொடுத்திருக்கான். அதுனால அவன் கிட்டேயும் கேட்டுதான் முடிவெடுக்க முடியும்”
“என்னது கவின் காசு போட்டானா? அப்போ கவின் கிட்ட சொல்லிருக்க ஆனா வீடு வாங்கின என்கிட்ட சொல்லணும்ன்னு உனக்கு தோணல இல்ல!! சரி எந்த ஊர்ல ஐம்பத்தைந்தாயிரம் விலையுள்ள வீட்டுக்கு முப்பத்தி ஆறாயிரம் ரிஜிட்ரேஷன் சார்ஜ்ஜஸ் வரும்?”
“அதெல்லாம் நீ ரிஜிஸ்ட்ரேஷன் ஆஃபிஸ்ல கேட்டுக்கோ. அந்த வீடு என் பெயருல தான் இருக்கும் என் காலத்துக்கப்புறம் நாலு பேருமா எடுத்துக்கோங்கோ”
என்று பொய் சொன்னாலும் திமிராகவே சொன்னாள் பர்வதம் அதைக் கேட்ட நவீன்
“ச்சே இப்படி வாய் கூசாம சொல்லுற!! சரி வேலையே இல்லாத அப்பாக்கு எந்த பாங்கு லோன் குடுத்தது?”
என்று தன் அப்பாவைப் பார்த்தான் நவீன். அதுவரை தலை குனிந்து அமைதியாக அமர்ந்திருந்த ஈஸ்வரன் ஏதும் பேசாமல் இருந்திருந்தால் கூட பரவாயில்லை ஆனால் அவர் தன் மனைவியை காப்பாத்த வேண்டியும், பிரச்சினையை திசை திருப்ப வேண்டியும் நவீனிடம்
“நீ என்னடா செஞ்ச. என் புள்ள அவன் தாண்டா. ஒரு லட்சம் செலவழிச்சு என்னை காப்பாதினான். அவன் தாண்டா என் புள்ள …நீ என் புள்ளையே இல்லடா. வீட்டை விட்டு வெளிய போடா”
என்று கூறியதைக் கேட்ட நவீன் “ச்சீ” என்ற முகபாவத்தோடு தான் ஏமாந்து விட்டதையும், தனது பத்து வருட காலத்தை இப்படிப்பட்ட குடும்பத்துக்காகவா தொலைத்தேன் என்றும் எண்ணி தலை குனிந்து அமர்ந்தான்.
ப்ரவீன் தன் அப்பாவிடம் “உஷ்” என்று சொல்லிவிட்டு…நவீனிடம்
“ஏன் அண்ணா பழசையெல்லாம் இப்போ பேசிண்டு வர்றே! அதுவுமில்லாம கவின் இல்லாத நேரத்துல இதை பத்தி பேசற!!.நீ கவின் இருக்கும் போது வந்து பேசு”
என்று கூறியதும் அதுவரை அமைதியாக இருந்த மிருதுளா எழுந்து தன் மாமனாரைப் பார்த்து
“இதுவரைக்கும் நான் பேசாம இருந்ததுக்கு காரணம் …எல்லாமே எங்க கல்யாணத்துக்கு முன்னாடி நடந்த விஷயங்கள் என்பதால் ஆனா ப்ரவீன் உனக்கும் இதுல பேச வாய்யில்லை ஆனா நீயெல்லாம் பேசும் போது நான் பேசறதுல தப்பேயில்லைன்னு தான் பேசறேன். நவீன் வாங்கின வீட்டைப் பத்தி அவர் என்னத்துக்கு கவின் கிட்ட பேசணும்? கொஞ்சமாவது நியாயம் வேண்டாமா? ஏன் பா அப்போ உங்களுக்கு லட்சம் ரூபாய் கொடுத்தா தான் புள்ளை இல்லாட்டி புள்ளை இல்லை அப்படி தானே!!”
“ஆமாம்! அவன் என் உயிரை காப்பாத்திருக்கான் இவன் என்னத்தை செஞ்சான்?”
“ஓ!!! இப்போ உங்க ரெண்டாவது புள்ளை உங்க உயிரை காப்பாத்தும் போது நீங்க நிதானத்துல இருந்ததால அப்படி சொல்லறேங்கள் ஆனா நீங்க நிதானமே இல்லாத காலம் ஒண்ணு இருந்தது ஞாபகமாவது இருக்கா?? அப்போ எத்தனை எத்தனை தடவை ரெயில்வே தண்டவாளத்திலிருந்தும், பஸ் ஸ்டாண்டிலிருந்தும் தூக்கிண்டு தோள்ல சுமந்துண்டு உங்களை காப்பாத்தி வீட்டுக்கு பத்திரமா கொண்டு வந்து சேர்திருப்பார் சொல்லுங்கோ!!! அப்போ இவர் அப்படி அங்கேருந்தும் இங்கேருந்தும் உங்களை காப்பாத்தாம விட்டிருந்தா உங்க மத்த புள்ளகள் கோடி கொடுத்தாலும் காப்பாத்த எங்க நீங்க இருந்திருப்பேங்கள்னு கொஞ்சம் மனிதாபிமானத்தோட யோசிச்சுப் பேசிருக்கலாம்….ஆமாம் நவீன் இளிச்சவாயி…நீங்க நிதானத்துல இல்லாத போது எல்லாம் ….எவருக்கும் ஷோ போடாம, ஊர் உலகத்துக்கு நான் தான் என் பெத்தவாளை பார்த்துக்கறேன்னு தம்பட்டம் அடிக்காம….உண்மையான பாசத்துல உங்களை காப்பாத்தினதுக்கு அவருக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.”
உடனே ப்ரவின் குறுக்கிட்டு
“இங்க பாருங்கோ மன்னி பாஸ்ட் இஸ் பாஸ்ட் அதை எல்லாம் என்னத்துக்கு இப்போ சொல்லிண்டிருக்கேங்கள்”
“ஓ!! அப்படியா சார். பாஸ்ட்டுன்னு ஒண்ணு இருந்தா தான்ப்பா ப்ரெஸண்ட்டுன்னு ஒண்ணு இருக்க முடியும். அதுவுமில்லாம உங்க அப்பா அம்மா தான் அப்படி பேசறானா உங்க ரெண்டு பேருக்கு கூடவா மனசாட்சி இல்ல!! இந்த மனுஷன் உங்களை மாதிரி காலேஜுக்கு போய் படிச்சாரா சொல்லுங்கோ!!! ஏன் போகலைன்னு உங்க எல்லாருக்குமே தெரிஞ்சது தானே!!!”
உடனே ஈஸ்வரன்
“டேய் பவின் அந்த டாக்யூமென்ட்டை எடுத்துண்டு வந்து இவாகிட்ட வீசி எறிடா…போடா போய் எடுத்துண்டு வா”
என்று பவினை நோக்கி ஈஸ்வரன் சொன்னாலும்…. பர்வதம் கண்ணசைத்ததும் உள்ளே செல்வது போல சென்று அங்கேயே இருந்துக் கொண்டான் பவின். கவின், ப்ரவின், பவின் வரை கண்டுள்ள அந்த வீட்டுப் பத்திரத்தை வீடு வாங்கிய நவீனிடம் ஒரு முறை கூட காட்டவில்லை. அவ்வளவு எடுத்து சொல்லியும் அடாவடியாகவே பேசினார்கள். மிருதுளா தலையை குனிந்து அமர்ந்திருந்த நவீனிடம் சென்று
“எழுந்திரிங்கோ நவீன். இனியும் நாம இங்க இருக்க வேண்டாம். நீங்களும் லட்சம் ரூபாய் கொடுங்கோ அப்போ தான் ஈஸ்வரன் பர்வதம் புள்ளை ஆக முடியும். பெத்த மனம் பித்து புள்ள மனம் கல்லுன்னு தான் நான் கேள்வி பட்டிருக்கேன் ஆனா இங்க எல்லாமே தலைகீழ்….என்ன செய்ய….வாங்கோ நாம இங்கிருந்து கிளம்பலாம்”
என்று நவீனை கூட்டிக்கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறினாள். நியாயத்தை நியாயமாக பேச வந்திருந்த நவீனையும் மிருதுளாவையும் அடுமாண்டு பேசி இருவரும் சொல்ல வந்ததை முழுவதுமாக சொல்லவிடாமல் துறத்தி விட்டனர் மூத்த தம்பதியர். நியாயம் என்றுமே அனாதை தான்!!
இருவரும் ராமானுஜம் வீட்டுக்கு வந்ததும் நவீனின் வாடியிருந்த முகத்தைப் பார்த்து ராமானுஜமும் அம்புஜமும் இருவரிடமும் விசாரித்தனர். தன் அப்பா அம்மாவிடம் நடந்தவற்றை சொன்னாள் மிருதுளா அதைக் கேட்டதும் அம்புஜம்
“என்னத்துக்கு நீங்க ரெண்டு பேரும் இப்படி கவலைப் பட்டு உட்கார்ந்திருக்கேங்கள். அம்மா அப்பாவை புள்ளை நம்பினதில் தப்பேதுமில்லை ஆனா அப்படி நம்பின புள்ளையை ஏமாத்தினதுக்கு அவா தான் அசிங்கப்படணும், வேதனைப் படணும், வெட்கப் படணும். நீங்க வேணும்னா பாருங்கோ அவா உங்களை ஒரு வீட்டை வச்சு ஏமாத்தினதுக்கு அந்த அம்பாள் உங்களுக்கு பத்து வீடு தருவாள். நிச்சயமா சாப்பிட்டிருக்க மாட்டேங்கள் போங்கோ ரெண்டு பேரும் முகம் கை கால் அலம்பிட்டு வாங்கோ தோசை வார்த்துத் தரேன். எழுந்துரு மிருது. நீதான் அவருக்கு தைரியம் சொல்லணும். நீயே இப்படி உட்கார்ந்தா எப்படி. போ மா போங்கோ மாப்ள”
என்றாலும் நவீனும் மிருதுளாவும் அங்கு நடந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவித்தனர். பெற்றவர்களை பிள்ளைகள் ஏமாற்றி கேள்விப் பட்டிருப்போம் ஆனால் இங்கே பெற்றவர்கள் தங்களை நம்பிய பிள்ளையை ஏமாற்றியிருப்பது சரியில்லை தான்!! ஆண்டவனின் படைப்புகளில் சில நேரம் சிலர் இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள்!!! இருவரும் சரியாக சாப்பிடாமல் எழுந்தனர். அப்போது நவீன் கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. நவீன் எடுக்காமல் படுத்திருந்தான். மிருதுளா எடுத்துப் பார்த்தாள்….”பிச்சுமணி மாமா” என்றிருந்தது. உடனே நவீனை உலுக்கி
“நவீன் உங்க மாமா தான் கால் பண்ணறார். இந்தாங்கோ பேசுங்கோ”
என்று கொடுத்ததும் நவீன் மொபைலை அழுத்தி
“ஹலோ நான் நவீன் பேசறேன். சொல்லுங்கோ மாமா”
“ஏன்டா …நான் தான் பக்குவமா பேசி ஏற்பாடு பண்ணறேன்னு சொல்லியிருந்தேன் ல அதுக்குள்ள ஏன்டா ரெண்டு பேருமா இப்படி செய்து வச்சிருக்கேங்கள்?”
தொடரும்….
அத்தியாயம் 82: நாடகம் ஆரம்பம்
கேட்டே தீருவேன் என்று நவீனும். கேட்டால் பிரச்சினை தான் வரும். தீர்வு கிடைக்காது என்று மிருதுளாவும் எண்ணிக் கொண்டு வீட்டுக்கு வந்துக் கொண்டிருக்கும் போது நவீன் மிருதுளாவிடம்
“ஏன் மிருதுளா நம்ம கேட்டா தானே பிரச்சினை பண்ணுவா. பேசாம பிச்சுமணி மாமாகிட்ட விவரத்தை சொல்லி அவரை பேச சொன்னா என்ன?”
“அது சரியா வராது நவீ”
“இல்லை இல்லை அது தான் சரி. வா நாம அடுத்த பஸ் ஸ்டாப்புல இறங்கி மாமா ஆத்துக்கு போயிட்டு அப்புறமா அந்த வீட்டுக்கு போகலாம்”
“நவீ சொன்னா கேளுங்கோ இதை நாம் தான் பேசி தீர்க்கணும். அந்த பாட்டி சொன்னா மாதிரி உங்க அம்மா தானே நீங்களே கேட்டுப் பாருங்கோ அதை விட்டுட்டு இதில் மாமாவை ஏன் இழுக்கணும்? ஏன் உங்களுக்கே நம்பிக்கை இல்லையா !!!”
“நீ வா மிருது நான் பார்த்துக்கறேன்.”
என்று அடுத்த ஸ்டாப்பில் இறங்கி பிச்சுமணி வீட்டுக்குச் சென்றனர் இருவரும் குழந்தை சக்தியுடன். அவர்களைப் பார்த்த பிச்சுமணி
“வாங்கோ வாங்கோ. வாடி சக்திக்குட்டி வாவா. வாடா நவீன். வாம்மா மிருதுளா. எப்போ ஊரில் இருந்து வந்தேங்கள்? பர்வதம் அக்கா நீங்க வந்திருப்பதைப் பத்தி ஒண்ணுமே சொல்லலையே!!! சரி அதை விடு எப்படி இருக்கேங்கள்? அம்பிகா யாரு வந்திருக்கா பாரு? வா வா”
“அடடே வா நவீன் வாம்மா மிருது. ஏய் உன் பொண்ணு நல்லா வளந்துட்டாடா நவீன். சரி என்ன சாப்பிடறேங்கள்?”
“ஒண்ணும் வேண்டாம் மாமி”
“இல்ல இல்ல இரு இரு”
என்று உள்ளே சென்று கையில் ஒரு தட்டுடன் வந்தாள் அம்பிகா. அதை நவீன் மிருதுளா இருவரிடமும் கொடுத்து
“நான் சுட்ட முறுக்கு. சாப்பிடேங்கோ நான் போய் காபி போட்டு எடுத்துண்டு வர்றேன். சக்திக்கு பால் தரட்டுமா?”
“ம்…ஓகே”
“சமத்து சரி வா”
என்று சக்தியை தூக்கிக் கொண்டு அடுப்படிக்குள் காபி போடச் சென்ற அம்பிகாவுக்கு பின்னாலேயே சென்றாள் மிருதுளா. அப்போது பிச்சுமணி நவீனிடம்
“என்னடா திடீர்ன்னு வந்திருக்க?”
“நான் புது வேலையில் உயர் பதவியில் ஹைதராபாத்தில் அடுத்த வாரம் சேரப்போறேன் அதுதான் பெரியவாகிட்ட எல்லாம் ஆசிர்வாதம் வாங்கிண்டு போக வந்தோம்.”
“அப்படியா சூப்பர் டா. கங்கிராட்ஸ்.”
“அது மட்டுமில்லை மாமா இன்னுமொரு முக்கியமான விஷயம் பத்தியும் உங்க கிட்ட பேசணும்”
“ம்…சொல்லு”
“எல்லாம் நான் வாங்கின வீடு பத்தி தான் மாமா?”
“எது அந்த அப்பார்ட்மெண்ட்டா?”
“இல்லை மாமா நான் முதல் முதலில் வாங்கின வீடு. நீங்க கூட பணம் கொடுத்து உதவினேங்களே அந்த வீட்டைப் பத்தி பேசணும்”
“அதுக்கு என்ன இப்போ?”
என்று பிச்சுமணி கேட்டதும் நடந்தவை அனைத்தையும் அம்பிகா போட்ட காபியை அவ்வப்போது குடித்துக் கொண்டே கூறி முடித்தான் நவீன். அதைக் கேட்டதும் பிச்சுமணி
“உன் பேருல இல்ல ரிஜிஸ்டர் பண்ண சொன்னேன்!!! ஏன் அக்கா அப்படி பண்ணிருக்கா?”
“அது தான் மாமா எனக்கு ஆத்திரமே. என் கிட்ட எதையுமே சொல்லாமல் எல்லாத்தையும் தன் இஷ்டத்துக்கே செய்திருக்கா பாருங்கோ. என்ன எனக்கு தெரியாமயே போயிடும்ன்னு நினைச்சா போல!!!”
என்று கூறி தானும் மிருதுளாவும் சேர்ந்தெடுத்த முடிவான அக்ரிமென்ட் முடிவை சொன்னதும் பிச்சுமணி
“இட்ஸ் ஏ குட் ஒன். ஆனா இதை எல்லாம் அவாளுக்கு முதலில் புரிய வைக்கணும். அதை மெதுவா தான் அவாகிட்ட பேசி புரிய வைக்க முடியும். அதுக்கு கொஞ்ச டைம் ஆகும். ஏன்னா திடுதிப்புன்னு இப்போ போய் நீ வீட்டை உன் பெயருக்கு மாத்தித் தர சொன்னேனா அதை அவா தப்பா தான் எடுத்துப்பா….”
“அதைத் தான் நானும் இவர்கிட்ட சொன்னேன் மாமா. ஆனா இவர் தான் ஆத்திரத்துல யோசிக்கறார்”
“நீ ஒண்ணு பண்ணு நவீன். இதை என்கிட்ட விடு நான் மெதுவா அக்காவுக்கு புரியும் படி சொல்லி சம்மதிக்க வைக்கறேன் சரியா. இப்போ நீங்க ரெண்டு பேருமே இதைப் பத்தி ஒண்ணும் பேசிக்காதீங்கோ. நீங்க ஊருக்கு போய் உன் புது வேலையில சேரு. நான் பேசிட்டு உனக்கு சொல்லறேன்”
என்று பிச்சுமணி நவீனிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது காபி குடித்த தம்பளர்களை அடுப்படிக்கு எடுத்து சென்ற அம்பிகா மிருதுளாவிடம்
“மிருது உங்க மாமா என்னைக்குமே உங்க மாமியாருக்கு தான் சப்போர்ட் பண்ணுவார் சொல்லிட்டேன். இவரை நம்பாதீங்கோ”
“ஐயோ மாமி அதை நீங்க சொல்லித்தான் எனக்கு தெரியணுமா என்ன? நானும் வேண்டாம்ன்னு நவீன் கிட்ட சொன்னேன் அவர் தான் நடந்தது எல்லாமே மாமாவுக்கு தெரியும் அவர் நியாயத்தைக் கேட்டா சரியா இருக்கும்ன்னு சொல்லி இங்கே வந்திருக்கார். “
“அவர் நியாயமானவர் தான் ஆனா உன் மாமியாரைப் பார்த்தா கப்சிப் தான்.. உன் மாமியாரால தான் நாங்க இப்படி எலியும் பூனையுமா வாழறோம். எங்களுக்கு கல்யாணமான புதுசுல எங்களை வாழவே விடாதவள் தான் உன் மாமியார். அவ வீட்டுக்கு வந்தா… என்கிட்ட எல்லாம் பேச மாட்டா நேரா தம்பியைக் கூட்டிண்டு மாடிக்கு போயிடுவா தெரியுமா!! என்னதான் மாய மந்திரம் போடுவாளோ தெரியாதுமா !! ஆனா அவ வந்துட்டு போணா இவர் என்கிட்டயும் என் குழந்தைகள் கிட்டேயும் சாமி ஆடிடுவார் அதுனாலயே அத்தை வர்றான்னா என் குழந்தைகள் பயப்படுங்கள் தெரியுமா.”
“ம்…..”
“அதுனால சுதாரிச்சு நடந்துக்கோங்கோ”
“மாமி அது எங்க கல்யாணத்துக்கு முன்னாடி நவீன் வாங்கின வீடு ஸோ அதை அவர் எப்படி டீல் பண்ணறாரோ பண்ணிக்கட்டும் அதில் நான் ஒண்ணும் சொல்லறதுக்கில்லை. அவரும் அவர் மாமாவைப் பத்தி தெரிஞ்சுக்கட்டுமே!! அதை நாம் ஏன் தடுக்கணும்”
“மிருது மிருது… கிளம்பலாமா நேரமாயிடுத்து”
“இருடா நவீன் இதோ தோசை வார்த்தேட்டேன் இருந்து எங்களோட சாப்டுட்டு கிளம்புங்கோ”
என்று அம்பிகா சொன்னதும் இருவரும் சாப்பிட்டு சக்தியையும் சாப்பிட வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள். வீட்டுக்கு வந்ததும் பர்வதம்
“வர்றதுக்கு ஏன் இவ்வளவு நேரம்? எங்க போயிருந்தேங்கள்? சொல்லிட்டு போறதில்லையா!!சாப்பிட்டேங்களா இல்லை ஏதாவது பண்ணணுமா?”
நவீன் ஏதும் பதில் சொல்லாமல் மிருதுளாவிடம்
“மிருது வா பேக் பண்ணுவோம் நாளைக்கு ஊருக்கு கிளம்பணுமில்லையா. சக்தி தூங்கி வழியறா பாரு!! நான் அவளை தூங்க வைக்கிறேன் குடு. நீ போய் டிரெஸ் மாத்திண்டு வா”
“என்ன நான் கேட்டுண்டிருக்கேன்!! அதுக்கு பதிலே காணம்”
“நாங்க சாப்பிட்டாச்சுமா”
“எங்க போயிருந்தேங்கள்?”
“பிச்சுமணி மாமா ஆத்துக்கு போயிருந்தோம்”
“ஓ!!! அங்க எதுக்கு இப்போ?”
“நவீன் போகணும்ன்னு சொன்னார் போணோம். சரி நான் போய் டிரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வர்றேன்”
என்று கூறிவிட்டு சென்று மாற்றிவிட்டு வருவதற்குள் நவீன் சக்தியை தூங்கச் செய்தான். பின் இருவருமாக பெட்டிகளை பேக் செய்த பின் படுத்துறங்கினர். காலை விடிந்ததும் நவீன், மிருதுளா, சக்தி மூவருமாக ஹத்ராபாத்துக்கு மனதில் கலக்கத்துடன் புறப்பட்டுச் சென்றனர்.
நவீன் புது வேலையில் சேர்ந்தான். அவனது ஆறு மாத ப்ரொபேஷன் காலம் ஆரம்பமானது. இதே நேரத்தில் கவின் குவைத்தில் தனது வேலையை விட்டுவிட்டு தன் மாமனார் மாமியார் ஊரான ஈரோடுக்கே குடி வந்தான். அந்த விஷயத்தை அறிந்ததும் நவீன் காரணம் கேட்டதற்கு ஏதேதோ சொல்லி மழுப்பினான் கவின். அவனுக்கு சொல்ல விருப்பமில்லை என்பதை உணர்ந்த நவீன் அதற்கு மேல் அதைப் பற்றி எதுவுமே கேட்கவில்லை. நவீனும் மிருதுளாவும் ஹைதராபாத் சென்று மூன்று மாதங்கள் ஆனது. திடிரென ஒரு நாள் ஈஸ்வரனிடமிருந்து ஃபோன் வந்தது அதில் ப்ரவின் வேலையில் சேர்ந்து நான்கு வருடங்கள் ஆனதாகவும், அவனுக்கு பெண் பார்த்து விட்டதாகவும், நிச்சயதார்த்தம் அடுத்த மாதம் நடக்க போவதகவும் தகவல் சொன்னார். அதைக் கேட்டதும் மிருதுளா
அதிர்ச்சியானாள். பின் நவனிடம்
“ஏன் நவீ …ஏதோ மூணாம் மனுஷாள்ட்ட சொல்லறா மாதிரி தகவல் சொல்லறார்? எப்போ பொண்ணு பார்த்தா? எப்போ எல்லாம் ஓகே பண்ணினா? சரி அவா தான் சொல்லலை இந்த ப்ரவினாவது சொல்லி இருக்கலாம் இல்ல? ச்சே என்ன மனுஷாப்பா இவா எல்லாம்!!!”
” நாமன்னா அவ்வளவு எளக்காரம் அவாளுக்கு அதுதான்!! ஆமாம் வீட்டையே முழுங்கி ஏப்பம் விட்டுட்டிருக்கா அதுவே சொல்லலை இதை சொல்லிடுவாளாக்கும்.”
“அதுவும் சரி தான். ஆமா மாமா உங்க அம்மாகிட்டயும் அப்பாகிட்டயும் பேசினாரா?”
“தெரியலையே அவர்ட்ட இருந்து ஒரு நியூஸும் இல்லை”
என்னதான் மூத்த தம்பதியர் நவீனையும் மிருதுளாவையும் ஒதுக்கினாலும் அவர்கள் எதையுமே காட்டிக்கொள்ளாமல் ப்ரவினின் நிச்சயதார்த்தத்திற்கு லீவு போட்டு ஊருக்குச் சென்றனர். அங்கு சென்றதும் தான் இருவருக்கும் தெரிய வந்தது அங்கு பெண் பார்ப்பதிலிருந்து நிச்சயம் வரை அனைத்தும் மிஸ்டர் கவின் தலைமையில் நடந்தேறியுள்ளது என்பது. அதுவுமில்லாமல் கஜேஸ்வரி மாசமாக இருந்தாள். அதுவும் அப்போது தான் தெரிய வந்தது. தனக்கு ஏன் எல்லாம் தெரிவிக்காதிருந்தார்கள் என்றோ இல்லை தங்களை ஏன் மதிக்கவில்லை என்றோ ஏதும் கேட்காமல் ஜென்டிலாக வந்து விஷேஷத்தை அட்டென்ட் செய்து விட்டு சென்றனர். இவை எல்லாம் பிரச்சினை ஆக வேண்டுமென எண்ணி எவர் போட்ட திட்டமாக இருந்தாலும் நவீன், மிருதுளாவின் பெருந்தன்மையால் அவை அனைத்தும் தவிடுபொடி ஆனது. பின் மீண்டும் அவர்கள் வேலையில் மூழ்கினர். நிச்சயதார்த்தம் ஆனா அடுத்த மாதமே கவினிடமிருந்து நவீனுக்கு ஃபோன் வந்தது அதை அடென்ட் செய்தான் நவீன்
“ஹலோ சொல்லு கவின்”
“நவீன் அப்பாவுக்கு அப்பென்டிசைடீஸ் ஆப்பரேஷன் பண்ணணும்ன்னு டாக்டர்ஸ் சொல்லறா”
“சரி அதுக்கு?”
என்று பட்டும் படாமல் பதலளித்தான் நவீன். அதைக் கேட்டதும் மேலே என்ன சொல்ல வேண்டுமென அறியாது.. கவின்
“இல்ல உன் கிட்ட சொல்லணும் இல்லையா அது தான் ஃபோன் பண்ணினேன்”
“ஓ!!! அப்படியா!! சரி சொன்னதுக்கு ரொம்ந தாங்க்ஸ். எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு நான் போகணும். நான் உனக்கு அப்புறமா கால் பண்ணறேன்”
என்று ஃபோனை வைத்துவிட்டு தன் வேலையைப் பார்த்தான் நவீன். பட்டும் படாமலும் நவீன் பேசியதும் கவின் வீட்டிற்கு ஃபோன் செய்து மிருதுளாவிடம் விவரத்தை சொன்னான். அதைக் கேட்டதும் மிருதுளா
“அச்சச்சோ!!! என்ன திடீர்ன்னு இப்படி ஆகிருக்கு? அடுத்த மாசம் ப்ரவின் கல்யாணம் வேற இருக்கே? நீ நவீன்ட்ட சொன்னயோ”
“ம்…ம்…சொன்னேன். சரி மன்னி அதுக்கு ஹாஸ்பிடல் செலவு எல்லாம் கிட்டதட்ட ஒரு லட்சம் ஆகலாம்ன்னு சொல்லறா. அதுதான் நவீன்ட்ட சொல்லணும். நீங்க சொல்லிடுங்கோ”
என்று கூறி ஃபோனை வைத்தான் கவின். நவீன் ஆஃபீஸிலிருந்து வந்ததும் விஷயத்தை சொன்னாள் மிருதுளா அதைக் கேட்டதும் நவீன்
“எனக்கும் ஃபோன் பண்ணினான் ஆனா இந்த காசு விவரமெல்லாம் ஒண்ணும் சொல்லலை….எவ்வளவோ என்கிட்ட சொல்லாம பண்ணிருக்காளே அவா எல்லாருமா??? இப்போ இதை மட்டும் எதுக்கு என்கிட்ட சொல்லறாலாம்? அவனே பார்த்துக்க வேண்டியது தானே!!”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது நவீ. நீங்களாச்சு கவினாச்சு. அவன் சொன்னதை சொன்னேன் அவ்வளவு தான்”
மறுநாள் காலை நவீன் ஆஃபீஸ் புறப்படுவதற்கு முன் அவர்கள் வீட்டு நம்பருக்கு கால் செய்தான் கவின்
“ஹலோ நவீன் நான் கவின் பேசறேன்”
“ம்….சொல்லு”
“மன்னி கிட்ட நேத்து பேசினேன் சொன்னாளோ”
“ம்…சொன்னா சொன்னா அதுக்கென்ன இப்போ? அதுதான் நீங்க மூணு பசங்களும் சம்பாதிக்கறேங்களே!! சேர்ந்து செய்யுங்கோ. எல்லாத்தையும் நீங்களே தானே டிசைட் பண்ணிப்பேங்கள் அப்புறம் என்ன புதுசா என்கிட்ட எல்லாம் சொல்லறேங்கள்?”
“அதுக்கில்லை அடுத்த வாரம் ஆப்பரேஷன் வச்சிருக்கோம்ன்னு இன்ஃபார்ம் பண்ணவும். நீயும் மன்னியும் எப்போ வர்றேங்கள்ன்னு கேட்கவும் தான் ஃபோன் போட்டேன்”
“நாங்கள் வரமுடியாது. நான் என்னோட ப்ரொபேஷன் பீரியட்ல இருக்கேன். ப்ரவீன் நிச்சயதார்த்தத்துக்கே லீவு கிடைக்காம லாஸ் ஆஃப் பே போட்டு தான் வந்தேன் அதுவுமில்லாம சக்தி இப்போ தான் புது ஸ்கூல் போக ஆரம்பிச்சிருக்கா ஸோ உடனே எல்லாம் லீவு தரமாட்டா. அது தான் நீங்க மூணு பேரு இருக்கேங்களே பார்த்துக் கோங்கோ நான் ஃபோன் பண்ணி என்ன ஏதுன்னு கேட்டுக்கறேன்”
என்று நவீன் சொன்னதும் கவின் ஃபோனை வைத்துவிட்டான். அதை கேட்ட மிருதுளா நவீனிடம்
“ஏம்ப்பா இப்படி படக்குனு சொல்லிட்டேங்கள்?”
“நீ இதெல்லாம் கண்டுக்காத மிருது. இதை நான் டீல் பண்ணிக்கறேன்”
“நீங்க தான் பண்ணணும் சரி ஆனா அங்கே இப்போ என் தலையை தான் போட்டு ஆளாளுக்கு உருட்டுவா தெரியுமா”
“என்னமோ பண்ணட்டும். சரி நான் வேலைக்கு போயிட்டு வர்றேன்”
என்று கூறிவிட்டு சென்றான் நவீன். அவன் அவ்வாறு பேசியதை எண்ணி கவலைப்பட்டாள். அவள் ஆப்பரேஷனுக்கு முன் தினம் தன் மாமனார் மொபைலுக்கு கால் செய்தாள். ஃபோனை அடென்ட் செய்தது கவின் என்று தெரியாத மிருதுளா
“ஹலோ அப்பா நான் மிருது பேசறேன்”
“ஹலோ மன்னி நான் கவின்”
என்றதும் மிருதுளா மீண்டும் ஒரு முறை தன் மொபைலில் நம்பரை சரி பார்த்த பின்
“நான் அப்பாக்கு இல்லையா பண்ணினேன் நீ எடுக்கறாய்”
“அப்பாக்கு அனாவசியமான கால்ஸ் எல்லாம் வந்து டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு எல்லாம் எனக்கு ஃபார்வேர்டு ஆகுறா மாதிரி செய்திருக்கேன்”
“நாங்க கால் பண்ணிணாலுமா?”
“எல்லா காலஸும் தான்”
என்று திமிராக கவின் சொன்னதும் அதற்கு மேல் பேச விரும்பாத மிருதுளா ஃபோனை துண்டித்து விட்டு அருகில் அமர்ந்திருந்த நவீனைப் பார்த்தாள்.
“நான் தான் சொன்னேன் ல வேண்டாம்ன்னு …கேட்டயா….இப்போ இது உனக்கு தேவையா?”
“சரி அப்பா நம்பரை தானே அவனுக்கு ஃபார்வேர்டு ஆகுறா மாதிரி செய்திருக்கான் நான் உங்க அம்மாவுக்கு கால் பண்ணறேன்”
என்று கால் செய்தாள் ஆனால் அந்த நம்பரும் கவினுக்கே ஃபார்வேர்டு ஆகி அவனே அடென்ட் செய்தான். அதுத் தெரிந்ததும் அவள் கவினிடம்
“அப்பாக்கு ஏதோ காரணம் சொன்ன சரி ஆனா அம்மா நம்பரையும் ஏன் உனக்கே ஃபார்வேர்டு ஆகுறா மாதிரி பண்ணிண்டு இருக்க. அப்போ நாங்க எப்படி தான் அவாகிட்ட பேசறது?”
“அதெல்லாம் இப்போ பேச முடியாது. சாரி”
என்று கூறி நவீனையும் மிருதுளாவையும் பேச விடாமல் செய்தான் கவின். நவீன் ஊரிலிருந்த தன் வசுந்தரா அத்தைக்கு விவரம் தெரிந்துக் கொள்ள கால் செய்தான்.
“ஹலோ அத்தை நான் நவீன் பேசறேன். எங்க ஆத்துல யாருமே கால் அடென்ட் பண்ணமாட்டேங்கறா. நீங்களும் அங்க தானே இருக்கேங்கள் கொஞ்சம் அவாளை கால் பண்ணச் சொல்லறேங்களா”
“அதை ஏன்ப்பா கேட்குற நவீன்.”
“ஏன் அத்தை என்ன ஆச்சு?”
தொடரும்…….
அத்தியாயம் 81: கெட்டிக்காரியின் கெட்டிக்காரத்தனம்!
வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருக்க ஆரம்பித்தாள் மிருதுளா. சக்தியையும் நவீனையும் ஸ்கூலுக்கும் ஆஃபீஸுக்கும் அனுப்பி வைத்து விட்டு, வீட்டு வேலைகள் முடித்த பின் தன் கணவருக்கு வேறு வேலையை மும்முரமாக தேடுவதில் ஈடுபட்டாள். பல வேலைகளுக்கு அவளே நவீனின் ஈமெயில் மூலம் அப்ளை செய்தாள். இதன் மூலம் நவீனுக்கு பல இன்டர்வியூக்களுக்கு அழைப்பும் வந்தது. அவனும் சளைக்காமல் அவற்றை அட்டென்ட் செய்து வந்தான். ஒரு நாள் நவீன் அடென்ட் செய்த இன்டர்வியூவில் செலக்கட் ஆகி அவர்கள் இருவரும் சேர்ந்து சம்பாதித்தை நவீன் ஒருவனே சம்பாதிக்க ஆரம்பித்தான்.
வாழ்க்கை தரம் மெல்ல மெல்ல உயர்ந்தது. நவீனின் படிப்பு சம்பந்தமான வேலையை தேர்ந்தெடுப்பதிலும் அவற்றிற்கு விண்ணப்பிப்பதிலும் எந்த வித மாற்றமுமின்றி தொடர்ந்துக் கொண்டே இருந்தது. அவ்வப்போது மூத்த தம்பதியரும், ராமானுஜம் அம்புஜம் தம்பதியரும் வந்து போய் கொண்டிருந்துனர்.
சக்தி மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் நேரம் நவீனின் வேலை தேடலில் பெரும் திருப்பம் நேர்ந்தது. ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உயர் பதவியில் வேலை வாய்ப்பு கிடைத்தது. மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளமும் வழங்கப்பட்டது. வேலை ஹைதராபாத் என்பதால் நவீன் சற்று யோசித்தான். அதை கவனித்த மிருதுளா நவீனிடம்
“எதுக்கு இப்படி யோசிக்கறேங்கள்? நல்ல வேலை. நல்ல சம்பளம் அப்புறம் என்ன?”
“இல்லை மிருது. நாம ஜோத்பூரிலிருந்து வந்தே அஞ்சு வருஷம் தான் ஆகறது அதுக்குள்ள ஹைதராபாத் ஷிஃப்ட் பண்ணணுமேன்னு தான் யோசிக்கறேன். சக்தியோட படிப்பு, உன்னோட விருப்பம் எல்லாம் இருக்கே”
“நம்ம சக்தி என்ன பத்தாம் கிளாஸா படிக்கறா யோசிக்க!!! மூனாவது தானே படிக்கறா. குழந்தைகள் சீக்கிரம் அடாப்ட் ஆகிப்பா. ஸோ அதைப் பத்தி கவலை வேண்டாம். அவளை நான் பார்த்துக்கறேன். என்னுடைய விருப்பம் என் கணவர் அவரோட துறையில் நல்லா வரணும். இன்னும் பல உயர் பதவிகள் வகிக்கணும். நம்மளை ஏளனம் செய்தவர்கள் முன்னாடி நாம விஸ்வரூப வளர்ச்சி பெற்று சிறப்பா வாழ்ந்து காட்டணும். ஓகே வா!! இப்போ சொல்லுங்கோ ஷிஃப்ட் பண்ணலாமா வேண்டாமா!”
“உனக்கும் சக்திக்கும் ஓகேன்னா அப்புறம் நான் ஏன் யோசிக்கப் போறேன்? ஓகே தென் நாளைக்கே அந்த ஆஃபரை அக்செப்ட் பண்ணிடறேன் சரியா. சக்தி குட்டி நாம ஹைதராபாத் போக போறோம்”
“ஐய்யா ஜாலி ஜாலி. அப்பா அப்போ புது ஸ்கூல்ல என்னை சேர்க்கப் போறயா?”
“ஆமாம் குட்டிமா புது ஸ்கூல், புது யூனிஃபார்ம், புது ஃபெரன்ட்ஸ், புது டீச்சர்ஸ்…குட்டிமாக்கு ஓகே தானே? நாம போகலாமா?”
“ஓ!! போகலாம்ப்பா”
அன்று இரவு உணவருந்தியதும் வழக்கம் போல மிருதுளாவும் நவீனும் ஈமெயில்களை செக் செய்தனர். நவீனின் ஈமெயிலுக்கு வந்திருந்த இன்னுமொரு ஆஃபர் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மூன்று மாதுக்கு முன் நவீன் அடென்ட் செய்திருந்த எமிரேட்ஸ் நிறுவனம் நடத்திய இன்டர்வியூவில் தேர்வாகியிருப்பதாகவும், துபாயில் வேலை என்றும், ஃப்ளைட் டிக்கெட், இன்ஷுரன்ஸ், வீடு மற்றும் மாத சம்பளம் எட்டாயிரம் திர்ஹாம்ஸ் என்றும் அச்சிடப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் இருவருக்கும் மகிழ்ச்சி பொங்கியது. மிருதுளா நவீனிடம்
“ஹேய் நவீ வாழ்த்துகள் பா. சூப்பர்.”
“தாங்க்ஸ் மிருது ஆனா இப்போ வந்திருக்கே !! போன மாசம் வந்திருந்தா உடனே சரி சொல்லியிருக்கலாம் ஆனா இப்போ போய் அனுப்பிருக்காளே!!!
“அதனால் என்ன நவீ. நாம டிசைட் பண்ணுவோம்.”
“சரி உனக்கென்ன தோணுது நாம ஹைதராபாத் போகலாமா இல்லை துபாய் போகலாமா?”
“எனக்கு சில காரணங்களுக்காக துபாய் போகணும்ன்னு தோணுது”
“எனக்கும் புரியறது. ஆனா மிருது அங்க அவ்வளவு தூரம் போய் நம்மூர் காசுன்னு பார்த்தா என்பதாயிரம் தான் வருது ஆனா இங்க நம்ம ஹைதராபாத்தில் நமக்கு அதுக்கு மேலேயே சம்பளம் வருதே அப்புறம் எதுக்கு நாம கடல் தாண்டி போகணும் சொல்லு. ஹைதராபாத்தில் கிடைத்துள்ள வேலையை விட சம்பளம் அதிகமாக இருந்திருந்தால் யோசிச்சிருக்கலாம்…என்ன சொல்லுற”
“அதுவும் சரி தான். சும்மா வெளிநாட்டுல இருக்கோம்… அப்படீன்னு சொல்லிக்கறதுக்காக அவ்வளவு தூரம் போகவேண்டியதில்லை தான் ஆனா இப்படி யோசிச்சுப் பாருங்கோ ஒரு வேலை அங்கே சம்பள உயர்வு கொடுத்தா!!”
“உடனே எல்லாம கிடைக்காது மிருது. ஒரு இரண்டு மூன்று வருஷங்கள் ஆகும் அதுக்கு. என்னை பொருத்த வரை அது வேண்டாம்ன்னு வைக்கலாம்ன்னு தோணுது. உனக்கு போகணும்னு இருந்தா நான் அதை அக்செப்ட் பண்ணறேன் சரியா”
“இல்ல நவீ நீங்க சொல்லுறது தான் சரி. அதுபடியே செய்வோம். நாம ஹைதராபாத்தே போவோம். நீங்க இந்த இமெயிலுக்கு வேண்டாமென்று பதில் அனுப்பிடுங்கோ”
“சரி அனுப்பிடறேன். நீ போய் தூங்கு மிருது.”
என்று நவீன் சொன்னதும் மிருதுளா தூங்கப் படுத்துக் கொண்டாள். ஆனால் அவளால் தூங்க முடியவில்லை. நவீனும் இமெயில் அனுப்பிவிட்டு வந்து படுத்தான். மிருதுளா தூங்காததைப் பார்த்த அவன்
“என்ன மிருது தூக்கம் வரலையா?”
“ச்சே இந்த இமெயில் போன மாசம் வந்திருக்கக் கூடாது!!! கடவுள் நம்மளை வைத்து நல்லா விளையாடுறார் நவீ”
“எல்லாம் நல்லதுக்கே மிருது. இப்படி யோசியேன். இப்போ நமக்கு நல்லா தெரிஞ்சுடுத்து எனக்கு துபாயிலும் வேலை கிடைக்கும்ன்னு சரியா”
“ஆமாம் ஆமாம் அது உண்மை தான்”
“அதுவும் எந்த வித டெக்னிக்கல் நாளேட்ஜ் இல்லாமயே..”
“அதை சொல்லுங்கோ.”
“ஒரு மூணு இல்ல அஞ்சு வருஷம் போகட்டும் அப்புறமா மீண்டும் ட்ரை செய்வோம். அப்போ கிடைச்சா பார்ப்போம் என்ன சொல்லுற மிருது?”
“ஓகே நவீ. டன். குட் நைட்”
“குட் நைட் மிருது.”
என இருவரும் வெளிநாட்டில் வேலைப் பார்க்கும் வாய்ப்புக்கிடைத்தும் வேண்டாமென முடிவு செய்து ஹைதராபாத் செல்ல முடிவெடுத்தனர். அந்த வேலையில் சேருவதற்கு முன் பெற்றவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவதற்காக ஊருக்கு மூவருமாக சென்றனர். எப்போதும் போவது போலவே ராமானுஜம் அம்புஜம் வீட்டிற்கு சென்றனர். அங்கு இரண்டு நாட்கள் தங்கி அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு பின் மூத்த தம்பதியர் வீட்டிற்கு சென்றனர். அங்கேயும் இரண்டு நாட்கள் தங்கினார்கள். அப்போது மூத்த தம்பதியரின் முன்னாள் வசித்த வீட்டை (நவீன் வாங்கிய வீட்டை) பார்க்க சென்றனர் நவீனும் மிருதுளாவும்.
அங்கே நவீனின் நண்பன் வீட்டிற்கு முதலில் சென்றனர். நண்பன் விச்சு என்கிற விஸ்வநாதன் அவர்களை வரவேற்றான். அப்போது விச்சுவின் அம்மா அப்பா நவீனிடம்…
“வாப்பா நவீன் எப்படி இருக்க?”
“நல்லா இருக்கேன் மாமா அன்ட் மாமி. எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்கோ. இதோ இவ தான் என் பொண்ணு சக்தி”
“வாடி வாடி குட்டி”
“ஏம்ப்பா நவீன் உங்க அம்மா அப்பா எல்லாரும் எப்படி இருக்கா?”
“எல்லாரும் நல்லா இருக்கா மாமி. நீங்க எல்லாரும் ஒரே ஊருக்குள்ள இருந்துண்டு வெளியூர்லேந்து வந்திருக்குற என் கிட்ட கேட்கிறேங்களே மாமி”
“என்னப்பா பண்ணறது!!! உங்க அப்பா அம்மா இங்கேந்து உன் தம்பி வாங்கின அப்பார்ட்….மென்ட்டுக்கு போணதுக்கப்புறம் எங்க இந்த பக்கம் எல்லாம் வர்றா? ஒரு ஃபோன் கூட இல்லை. பெரிய ஆளாகிட்டா போல நாங்கள் எல்லாம் இன்னும் இதே கிராமத்துல அப்படியே தான் இருக்கோம்ப்பா. நீயாவது எங்களை எல்லாம் மறக்காம வந்து பார்த்தயே அதுவரைக்கும் சந்தோஷம் தான். இந்தா ஜுஸ் குடிங்கோ”
“தாங்க்ஸ் மாமி. நாங்க பொய் சொல்ல விரும்பலை. ஆக்சுவலா எங்க வீட்டைப் பார்க்கத் தான் வந்தோம் அதுக்கு முன்னாடி விச்சுவையும் உங்க எல்லாரையும் பார்த்துடலாம்ன்னு இங்க வந்தோம் மாமி.”
“பரவாயில்லைப்பா. ஆமாம் உங்க வீட்டை வாடகைக்கு விட்டிருக்காளே அப்புறம் எப்படி இப்போ பார்ப்பேங்கள். வாடகைக்கு இருக்கறவா ரெண்டு பேருமே வேலைக்கு போறவாளாச்சே. இப்போ இருக்க மாட்டாளே”
“என்னது வாடகைக்கு விட்டிருக்காளா?”
“ஆமாம் நவீன். உங்க அப்பா அம்மா இங்கேருந்து ஷிஃப்ட் ஆனதுமே வாடகைக்கு விட்டுட்டாளே!!! உனக்கு தெரியாதா? நீ வாங்கின வீட்டை உனக்கே தெரியாம வாடகைக்கும் விட்டுருக்காளா? உங்க அம்மா கெட்டிகாரி தான்ப்பா? ஆமாம் அந்த வீடாவது உன் பேரில் இருக்கா இல்லை அதையும் ….”
“இல்லை எனக்கு இந்த விஷயம் இப்போ நீங்க சொல்லி தான் தெரியும். அதுவுமில்லாம இந்த வீடுகளுக்கெல்லாம் பட்டா இல்லையே. அதுவுமில்லாம எங்க வீட்டை இன்னும் ரிஜிஸ்டரே பண்ணலை.”
“அட அட வாங்க வாங்க. நவீன்… உங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டு தாத்தா பாட்டி வந்திருக்கா பாரு”
“வாங்க தாத்தா, வாங்க பாட்டி. எப்படி இருக்கீங்க? உங்க பேரன் என்ன பண்ணறான்?”
“நல்லா இருக்கோம்ப்பா நவீன். நீ வந்திருக்கன்னு கேள்வி பட்டேன் அதுதான் வந்து பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தோம்ப்பா. எல்லாரும் எப்படி இருக்கீங்க? இது தான் உன் பொண்ணா? “
“நல்லா இருக்கோம் தாத்தா. ஆமாம் அவ பேரு சக்தி”
“என்ன மும்முரமா பேசிகிட்டு இருந்தீங்க?”
“அது ஒண்ணுமில்லை பாட்டி விச்சு அம்மா நம்ம வீட்டைப் பத்தி சொல்லிக்கிட்டிருந்தாங்க. அதை வாடகைக்கு விட்டிருக்காங்களாமே!”
“என்னப்பா உன் வீட்டை வாடகைக்கு விட்டது உனக்கு தெரியாத மாதிரி கேட்குற?”
“பாருங்க இந்த புள்ள எப்படி இருக்கான்னு. அதைப் பத்தி தான் பேசிகிட்டிருந்தோம். அது தான் கேட்டேன் வீடாவது உன் பெயர் ல இருக்கா இல்லை அதையும் உனக்கு தெரியாமையே ஏதாவது செய்துட்டாங்களான்னு”
“தாத்தா இவங்க வீடெல்லாம் ரிஜிஸ்டர் பண்ணிட்டாங்களாமே!! நம்ம தெரு வீடெல்லாம் இன்னும் ரிஜிஸ்டர் ஆகலை இல்லையா?”
“என்னப்பா நவீன் பேசுற?”
“ஏன் தாத்தா?”
“எங்க வீடு ரிஜிஸ்டர் ஆனதுமே உங்க வீட்டையும் ரிஜிஸ்டர் பண்ணணும்ன்னு உன் அம்மா என்கிட்ட சொல்லி அதுக்கு நாளெல்லாம் பார்த்து உன் அப்பா, தம்பின்னு யாரையும் அழைச்சுக்காம வந்து வீட்டை அவங்க பேர்ல ரிஜிஸ்டர் பண்ணிகிட்டாங்களே. என்னை தான் ரிஜிஸ்டர் ஆஃபீஸுக்கு கூட்டிகிட்டு போக சொன்னாங்க. அது முடிஞ்சு ஒரு ஏழு எட்டு வருஷம் ஆச்சே!!! நான் அவங்களை கூட்டிக்கிட்டு போனபோது கூட கேட்டேனே நவீன்ட்ட சொல்லிட்டேங்களான்னு !! அதுக்கு அவங்க எல்லார்கிட்டேயும் சொன்னதுக்கப்புறமா தான் ரிஜிஸ்டர் ஆஃபீஸுக்கே வந்தேன்னு இல்ல சொன்னாங்க!!! நீ என்னடான்னா இப்படி கேட்குற!!”
“என்னது ரிஜிஸ்டர் பண்ணிட்டாங்களா?”
“அட ஆமாம் பா. நான் தானே கூட்டிகிட்டு போனேன் எனக்கு தெரியாதா என்ன?”
“பார்த்தீங்களா இந்த புள்ள இப்படி இருக்கானே!!! அம்மா மிருது நீ தான் இவனை காப்பாத்தணும்.”
“எப்பவாவது இவர்கிட்ட சொல்லிருப்பாங்க…இவர் மறந்திருப்பார்ன்னு நினைக்கிறேன்.”
“இல்ல மிருது என் கிட்ட எதுவுமே சொல்லலை. இதெல்லாமே இப்போ தான் எனக்கு தெரிய வருது”
என்று மிருதுளா மூத்த தம்பியரை விட்டுக்கொடுக்காமல் பேசினாலும் நவீன் தன் ஏமாற்றத்தை வெளிப் படுத்தியதும் எவருக்கும் தெரியாதவாறு அவன் கையை பிடித்து அழுத்தி பேசாமல் இருக்கச் சொன்னாள். நவீனும் அதிர்ச்சியில் அமர்ந்திருந்தான். அப்போது மிருதுளா அவர்களிடம்
“சரி விச்சு, அம்மா அப்பா, பாட்டி தாத்தா நாங்க போய் அந்த வீட்டைப் பார்த்துட்டு அப்படியே ஊருக்கு கிளம்பறோம். வரட்டுமா!”
“நவீன் நீ ஒண்ணும் கவலைப் படாதேப்பா அம்மா தானே போய் கேளு!! கேட்டதும் உன் பெயருக்கு மாதத்திக் குடுத்துடப் போறாங்க அவ்வளவு தானே. போய் பேசுப்பா”
“சரி பாட்டி”
என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியே வந்ததும் விச்சு நவீனிடம்
“என்னடா நவீன் இதெல்லாம் உனக்கே தெரியாம நடத்தியிருக்காங்க உன் அம்மா. எதுக்கும் நீ அவங்க கிட்ட ஜாக்கிரதையா இருந்துக் கோடா!!”
என்று கூறி அவர்களை வழியனுப்பி விட்டு வீட்டினுள் சென்றான் விச்சு. நவீன் இடிந்து போய் மெல்ல மெல்ல அடியெடுத்து நடந்து அவன் முதன்முதலில் வாங்கிய வீட்டை வெளியிலிருந்து பார்த்தான். பின் மிருதுளாவிடம்…
“எப்படி ஏமாத்திருக்கா பாரேன் மிருது. இவாளை!!!”
“என்ன பண்ணப் போறேங்கள் நவீ?”
“இப்பவே போய் வீட்டை என் பேருக்கு மாத்திட்டு தான் நாம ஹைதராபாத் போறோம்”
“நவீ உங்க அம்மா நாலு புள்ளகளாச்சேன்னு பயத்துல அந்த வீட்டை தன் பேருல ரிஜிஸ்டர் பண்ணிருப்பான்னு நினைக்கிறேன்”
“ஏன் அதை என் கிட்ட சொல்லிட்டு பண்ணிருக்கலாமே….இரு இரு இரு….இப்போ தான் எனக்கு ஒரு விஷயமே ஞாபகத்துக்கு வர்றது”
“என்ன நவீ?”
“நான் வீட்டை வாங்க பிச்சுமணி மாமாகிட்ட பணம் கடனா வாங்கியிருந்தேன். அப்போ மாமா இந்த வீட்டை வாங்கின அன்னைக்கு ஹாலில் உட்கார்ந்துக் கொண்டு என் கிட்ட வீட்டை ரிஜிஸ்டர் பண்ண முடிந்ததும் என் பெயரில் பண்ணிக்கச் சொன்னா…அதுக்கு ரீஸனா…நாலு புள்ளகள் இருக்கா ஸோ அப்பா ஆர் அம்மா பேர்ல பண்ணினா நாளைக்கு பிரச்சினை வரலாம் அதுனால என் பேருலயே பண்ணிக்கச் சொன்னா….அப்போ என் அம்மா அங்கே இருந்தா. எல்லாத்தையும் கேட்டா ஆனா ஒண்ணுமே சொல்லலை. இவ்வளவும் தெரிஞ்சிருந்தும் இப்படி திருட்டுத்தனமா இந்த வேலையை செய்திருக்கா பாரேன்”
“சரி அதுக்கு இப்போ நாம என்ன பண்ணமுடியும் நவீ”
“நான் இந்த வீட்டை ரெனவேட் பண்ணப் போறேன். நாம வந்தா இனி இங்கேயே தங்கிக்கலாமில்லையா. வாடகைக்கு விட்டதைப் பத்தி மூச்சு விடலை பாரேன்”
“நவீன் நடக்கறதை பேசுங்கோ. இந்த வீட்டை ரெனவேட் பண்ணணும்னா எப்படியும் ஒரு அஞ்சு ஆறு லட்சம் ஆகும். இந்த வீடோ உங்க அம்மா பேருல இருக்குன்னு இப்போ தான் நமக்கே தெரிய வந்திருக்கு அப்படி இருக்கும் பட்சத்தில் நாம மேல அவ்வளவு செலவு செய்ய எனக்கு இஷ்டமில்லை. அதுவுமில்லாம வீடு தான் போச்சு மறுபடியும் அதுல செலவு செய்து தானம் பண்ண வேண்டாம்ன்னு நினைக்கறேன்”
“என்ன சொல்லுற மிருது. இது என்னோட முதல் சம்பாத்தியத்தில் வாங்கின வீடு தெரியுமா. இதை நான் அந்த பாட்டி சொன்னா மாதிரி என் பெயருக்கு மாற்றி தரச் சொல்லப் போறேன்”
“ஹா!!ஹா!!ஹா!!”
“என்ன சிரிக்கற மிருது?”
“பின்ன என்ன நவீ!!! முதல்ல உங்க அம்மா பாவம்ன்னு நினைச்சேன் ஆனா எப்போ நீங்க பிச்சுமணி மாமா சொன்னதையும் அதற்கு உங்க அம்மா ஒண்ணும் சொல்லாததையும் சொன்னேங்களோ அப்பவே நல்லா புரிஞ்சிடுத்து உங்க அம்மா பக்காவா ப்ளான் பண்ணி தான் எல்லாம் செய்திருக்கான்னு. அப்பப்பா இப்படி ஒரு தந்திரகாரியை எங்கேயுமே பார்க்க முடியாது போல!!! ஆனா இப்போ போய் நீங்க வீட்டை உங்க பேருக்கு மாத்தி எழுதித் தரச்சொன்னா அவா செய்ய மாட்டா… பிரச்சினை தான் வரும்.”
“அதுக்காக அப்படியே விட முடியுமா?”
“வேண்டாம் ஆனா இதுல உங்க அப்பா அன்ட் அம்மாவுக்கு எந்த பாதகமும் வராதபடி செய்ய வேண்டும். அதுக்கு அவா நாம சொல்லறதை காது கொடுத்து கேட்க வேண்டும்”
“என்ன சொல்ல வர மிருது. எனக்கு புரியலை”
“இங்க பாருங்கோ நவீ…சப்போஸ் உங்க அம்மா இன்செக்யூரிட்டி ஃபீலிங்கால அப்படி செய்திருந்தான்னா நாம செக்யூர்டு ஃபீல் கொடுப்போம். அப்போ செய்வான்னு நம்பறேன் அவ்வளவு தான்”
“அது என்ன செக்யூர்டு ஃபீல்?”
“அதாவது இந்த வீடு நீங்க முழு பணம் கொடுத்து வாங்கியது ஆனா உங்க அம்மா அவா பேருக்கு ரிஜிஸ்டர் பண்ணிண்டுட்டா சரியா ஸோ அது உங்க அம்மா பெயர்லேயே இருந்துட்டு போகட்டும், இந்த வாடகையும் அவாளே வச்சுக்கட்டும்…ஆனா உங்க அம்மா அப்பா காலத்துக்கு அப்புறம் அந்த வீடு உங்களுக்கு தான்னு ஒரு அக்ரிமென்ட் போட்டுண்ட்டா போறது. இது படி செய்தா உங்க அம்மாவையும் புண்படுத்தாமல் இருக்க முடியும் அதே சமயம் நீங்க வாங்கின உங்க முதல் வீடும் உங்க கிட்டேயே வந்திடும் என்ன சொல்லறேங்கள்? அதுக்கப்புறமா இதை ரினவேட் பண்ணலாம்”
“சூப்பர் ஐடியா மிருது. உன்னை என் அம்மா அப்பா அவ்வளவு படுத்தியிருந்தாலும் நீ அவாளுக்கு நல்லதே தான் நினைக்கற. யூ ஆர் க்ரேட் மிருது.”
“நீங்க பாராட்டுற அளவுக்கெல்லாம் நான் ஒண்ணும் பெரிசா செய்திடலை நவீ. நீங்க இப்போ செலவழிக்க இருக்கும் நம்ம பணமான ஐந்து லட்சத்தை காப்பாத்தியிருக்கேன் அவ்வளவு தான்”
“ஆனாலும் வீட்டை அவா பெயர்லேயே இருக்கட்டும்ன்னு சொன்னே இல்ல அது ரியலீ க்ரேட் தான்.”
“நவீ அதுலேயும் எந்த க்ரேட்னஸும் இல்லை. இந்த வீடு நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி வாங்கினது ஸோ அதுல என்னைவிட உங்களுக்கும், உங்க பேரன்ட்ஸுக்கும் தான் உரிமை அதிகம் அதனால் தான் அப்படி சொன்னேன். இதே நம்ம ரெண்டு பேருமா இப்போ வாங்கின வீடுன்னா நிச்சயம் அப்படி சொல்லியிருக்க மாட்டேன். அதுவுமில்லாம அப்பா வாங்கின முதல் வீடுன்னு நம்ம சக்திக்கு நாளைக்கு காட்டணும் இல்லையா அதுனாலயும் தான் அப்படி சொன்னேன். சரி சரி கிளம்பலாமா?”
“போகலாம் மிருது. முதல்ல போய் இதைப் பத்தி கேட்டாகணும்”
“கேளுங்கோ தப்பில்லை ஆனா எனக்கென்னவோ இவ்வளவு பண்ணியிருக்குற உங்க அம்மா ஒத்துக்க மாட்டான்னு தான் தோணறது…ஸோ டோன்ட் ஹாவ் ஹை ஹோப்”
“அவா பேருலையே தானே இருக்க போறது அதுனால சம்மதிப்பா சம்மதிப்பா”
“பார்ப்போம். அதையும் பார்க்கத் தானே போறோம்”
தொடரும்…….
அத்தியாயம் 80: இரவு பகலானது
நவீன், மிருதுளா, சக்தி மூவரும் பெங்களூரில் ஒரு சிறிய சிங்கிள் பெட்ரூம் வீட்டிற்கு குடி வந்தனர். அவர்களுடன் அம்புஜமும் ராமானுஜமும் ஒரு வாரம் அவர்களுடன் இருந்து மிருதுளா நவீன் இருவரும் அவரவர் வேலைகளை கவனிக்கும் நேரம் சக்தியை பார்த்துக் கொள்வதற்காக வந்திருந்தனர். சக்தியை புது ஸ்கூலில் சேர்த்தனர். வீட்டுக்கு வேண்டிய பொருட்கள் எல்லாம் வாங்கி வந்தனர். அவற்றை எல்லாம் அது அது இடத்தில் வைத்தனர் அம்புஜமும் ராமானுஜமும். சமையலை அம்புஜம் பார்த்துக் கொண்டாள். ஒரு வாரம் பறந்தது. ராமானுஜம் ஊருக்கு கிளம்பலாம் என்று அம்புஜத்திடம் சொல்ல அதற்கு
“ஏன்னா நீங்க கிளம்புங்கோ நான் இங்கேயே இந்த மாசம் இருந்துட்டு வர்றேனே. அதுதான் இப்போ வேனுவும் ஆத்துல இல்லையே. அவனும் மேல் படிப்புக்காக லண்டன் போயிருக்கானே. நீங்களும் உங்க வேலைக்கு போயிடுவேங்கள். நான் மட்டும் தனியா அங்க இருக்கறதுக்கு நம்ம சக்திக் குட்டியோட இங்க இருந்துட்டு வர்றேனே”
“ம்…நீ என்ன சொல்லுற மிருது? நீங்க என்ன சொல்லறேங்கள் மாப்ள?”
“எனக்கு சந்தோஷம் தான் பா”
“எங்களுக்கு ஓகே தான். ஆனா நீங்க எப்படி சம்மாளிப்பேங்கள்?”
“அதெல்லாம் நான் பார்த்துக்குவேன். அப்போ சரி நான் இன்னைக்கு நைட்டு பஸ்ஸில் கிளம்பறேன்”
“நான் உங்களை வந்து பஸ் ஏத்தி விட்டுட்டு வர்றேன்.”
அன்றிரவு உணவு அருந்தியதும் ராமானுஜத்தை பஸ் ஏத்திவிட்டு வந்தான் நவீன். மறுநாள் இருவருக்கும் வேலையில் சேர வேண்டிய முக்கியமான நாள் என்பதால் சீக்கிரம் படுத்துக் கொண்டனர். ஆனால் இருவருக்கும் ஒரே காரணத்தால் உறக்கம் வராமல் படுத்திருந்தனர். மிருதுளா மனதில் பதற்றம் இருந்துக் கொண்டே இருந்தது. அதற்கான காரணம் வேலையில் சேர்வதற்கு முன்னே ஹெச்.ஆர் மிருதுளாவிடம் அவளுக்கு கிடைக்கும் ப்ராஜெக்ட்டை பொருத்து தான் நைட் ஷிப்ட் ஆர் டே ஷிப்ட் என்பது டிசைட் ஆகும் என்றும் அது ஒரு மாத கால ட்ரெனிங் முடிந்து தான் தெரியுமென்றும் சொல்லி இருந்தார். அதை நவீனிடம் கூட கூறாமல் இருந்ததால் வந்த பதற்றம். நவீனிடமும் ஹெச்.ஆர் அதையே கூறியிருந்தார் அதை நவீனும் மிருதுளாவிடம் கூறாமல் இருந்தான். அதை எண்ணிக் கொண்டு அவனும் தூங்காமலிருந்தான். இருவரும் புரண்டு படுத்ததில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டதும்
“நவீ இன்னுமா தூங்கலை?”
“நீ ஏன் இன்னும் தூங்கலை மிருது?”
“அது வந்து…..நான் உங்க கிட்ட ஒண்ணு சொல்லாம மறைச்சுட்டேன். அதை சொன்னா நீங்க ஒத்துக்க மாட்டேங்களோ, அதுனால உங்க சர்வீஸை விட்டு வர மாட்டேங்களோன்னு நினைச்சு சொல்லலை. ஆனா அது என்னை பல நாளா தூங்க விடாம படுத்தறது. நாளைக்கு புது வேலையில் ஜாயின் பண்ணப் போறோம் அதுனால உங்கள்ட்ட சொல்லலாமா வேண்டாமான்னு யோசிச்சுண்டு இருந்தேனா தூக்கம் வரலை. சரி நீங்க ஏன் தூங்காம இருக்கேங்கள்”
“ம்….நீ எந்த விஷயத்தை என்கிட்ட சொல்லாம தவிக்கறயோ அதே விஷயம் தான் என்னையும் தூங்க விடாம பண்ணறது!”
“எந்த விஷயத்துக்காகன்னு நான் இன்னும் உங்ககிட்ட சொல்லவேயில்லையே”
“சொல்லணுமா என்ன? நைட் ஷிப்ட் வந்திடுமோன்னு தானே கவலைப்படுற!”
“அட ஆமாம் நவீ. யூ ஆர் க்ரேட் பா”
“இதுல க்ரேட்னஸ் ஒண்ணுமே இல்லை மிருது. நீயும் நானும் ஒண்ணா தானே இன்டர்வியூ அடென்ட் பண்ணினோம் அப்போ என் கிட்டேயும் தான் சொன்னா”
“ஓ!!! ஓகே ஓகே!! அப்போ நீங்க ஏன் என் கிட்ட சொல்லலை? நான் சொல்லாமல் இருந்த காரணத்தை சொல்லிட்டேன். ஆனா நீங்க ஏன் மறைச்சேங்கள்?”
“எனக்கு தெரியும் உன்கிட்டேயும் இதை சொல்லியிருப்பான்னு ஆனா நீ என்னிடம் சொல்லாத போது நான் புரிஞ்சுண்டுட்டேன் யூ ஆர் ஓகே வித் இட். நீயே நம்மளோட நல்லதுக்காக ஏத்துண்டதுக்கப்புறமா நான் அதை ஒரு பெரிய விஷயமா எடுத்துக்கக் கூடாதுன்னு தான் சொல்லலை மிருது.”
“பார்ப்போம் ஒரு மாசம் கழிச்சு தானே அதைப் பத்தி தெரியும். அப்போ பார்த்துக் கொள்வோம். அப்பாடா என் மனசை உருத்திண்டே இருந்த விஷயத்தை இறக்கி வச்சுட்டேன். இனி நிம்மதியா தூங்கறேன் நவீ. குட் நைட்”
“குட் நைட் மிருது”
என்று நவீன் சொன்னாலும் அவன் மனதில் ஒரு விதமான கலக்கம் இருந்துக் கொண்டேதான் இருந்தது. மிருதுளாவிற்கு நைட் ஷிப்ட் வந்தால் என்ன செய்வாளோ!! அவளால் முடியுமா? என்ற கவலைகள் அவனை தூங்கவிடாமல் செய்தது.
மறுநாள் விடிந்தது. அம்புஜம் விடியற் காலையில் எழுந்து காலை டிபன், மத்திய சாப்பாடு என அனைத்தையும் செய்து வைத்தாள். அதைப் பார்த்த மிருதுளா
“அம்மா சுப்பர் மா. எப்போ எழுந்துண்ட நீ?”
“நான் எப்பவும் போல விடியற் காலையிலேயே எழுந்துண்டேன் மிருது. சரி இங்க எல்லாமே வச்சிருக்கேன் நீங்க சாப்டுட்டு மத்தியானத்திற்கு வேண்டியதை டிபன் பாக்ஸில் கட்டிக்கோங்கோ. சக்திக்கு என்ன குடுக்கணுமோ அதை நானே பையில் போட்டு வச்சுட்டேன். அவளை ரெடி பண்ணி நீங்க ரெண்டு பேரும் கிளம்பறதுக்குள்ள ஸ்கூல்ல விட்டுட்டு வந்துடறேன்”
“அம்மா நீ சாப்பிட்டயா?”
“இதோ இவளை விட்டுட்டு வந்து சாப்பிட்டுக்கறேன்”
என்று சக்தியை வழக்கம் போல ரெடி செய்து ஸ்கூலில் விட்டு வரச் சென்றாள் அம்புஜம். அந்த நேரத்தில் மிருதுளாவும், நவீனும் ஆஃபீஸுக்கு கிளம்பினர். அவர்கள் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அம்புஜம் சக்தியை விட்யுவிட்டு வந்தாள்.
“என்ன மிருது நீங்க டிபன் பாக்ஸ் இன்னும் கட்டிக்கலயா?”
“அம்மா எங்களுக்கு சாப்பாடும் அவாளே தருவா மா. அதுனால நாங்க நைட் வந்து சாப்பிட்டுக்கறோம். சரியா”
“ஓ!! அப்படியா சரி.”
நவீனும் மிருதுளாவும் சாப்பிட்டு எழுந்ததும் அவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றது டாடா சூமோ வண்டி. உடனே அவர்கள் இருவரும் அம்புஜத்திற்கு பை சொல்லிவிட்டு வண்டியில் ஏறினார்கள். அவர்களுக்கு ஆபிஸில் ட்ரெயினிங் ஆரம்பமானது. காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை இருந்தது. ஒரு மாத காலம் முடிந்ததும் மீண்டும் ஒரு இன்டர்வியூ ஹெச். ஆரால் நடத்தப்பட்டு அவரவருக்கான பாராஜெக்ட் டீம் அறிமுகப் படுத்தப்பட்டது.
ஒரு மாத காலம் ஒன்றாக ஆபீஸ் சென்று வந்துக் கொண்டிருந்த நவீன் மிருதுளாவுக்கு அன்று பெரிய முடிவெடுக்க வேண்டிய நாளாக அமைந்தது. மிருதுளாவுக்கு வழங்கப்பட்ட ப்ராஜெக்ட் நைட் ஷிப்ட் வேலை என்றும் மாலை ஏழு மணி முதல் விடியற்காலை மூன்று மணி வரை என்றும் அறிவிக்கப்பட்டது. அதே நேரம் நவீனுக்கு வழங்கப்பட்ட ப்ராஜெக்ட் டே ஷிப்ட் வேலை காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை என்று அளிக்கப்பட்டது.
இருவரும் காரில் வீட்டிற்கு திரும்பி வரும்போது ஒன்றுமே பேசாமல் வந்தனர். வீட்டுக்குள் சென்று முகம் கை கால் அலம்பி அம்புஜம் செய்து வைத்திருந்த டிபனை சாப்பிட்டனர். அப்போது அம்புஜம்
“மிருது நான் ஊருக்கு கிளம்பட்டுமா? காலையில நீங்களே சக்தியை ஸ்கூல்ல விட்டுடலாம் சாயந்தரம் தான் என்ன பண்ணறதுன்னு தெரியலை”
“அம்மா இப்போ நிலைமையே வேற”
“என்ன ஆச்சு மிருது”
“அம்மா எங்களோட ட்ரெயினிங் இன்னையோட முடிஞ்சிடுத்து. வர திங்கட்கிழமை முதல் எனக்கு நைட் ஷிப்ட் நவீக்கு டே ஷிப்ட்”
“அச்சச்சோ இது என்னடி இப்படி. நீங்க புருஷன் பொண்டாட்டின்னு அவாளுக்கு தெரியாதா என்ன?”
“ஹா!ஹா!ஹா! அம்மா என்னோட சங்கடத்திலும் உன்னோட இந்த கேள்வி என்னை சிரிக்க வச்சுடுத்து. அப்படி எல்லாம் அவா யோசிக்க மாட்டா. நவீக்கு கிடைச்சிருக்குற ப்ராஜெக்ட்டும் எனக்கு கிடைச்சிருக்குற ப்ராஜெக்ட்டும் அப்படி என்ன பண்ண?”
“சரி நான் ஒண்ணு பண்ணறேன். இன்னைக்கு நைட் பஸ்ஸில் ஊருக்கு போயிட்டு அங்க வீட்டை சுத்தம் செய்துட்டு அப்பாக்கு ஏதாவது செய்து வச்சுட்டு ஞாயிற்றுக்கிழமை நைட் பஸ்ஸை பிடிச்சு திங்கள்கிழமை காலையில வந்துடறேன் என்ன சொல்லறேங்கள்!”
“அம்மா உனக்கு ஏன் மா வீண் சிரமம். அது தான் நவீன் டே ஷிப்ட் தானே அவர் காலையில சக்தியை ஸ்கூல்ல விட்டுட்டு வந்திடுவார் நான் சாயந்தரம் ஐந்து மணிக்கு தானே போகணும் அதுனால நான் போய் அவளை ஸ்கூல்லேந்து கூட்டிண்டு வந்திடுவேன். நீ போய் உன் வீட்டை பாரும்மா. சரியா”
“உங்களால முடியுமா மிருது?”
“அம்மா முடிஞ்சு தான் ஆகனும். எவ்வளவு நாள் தான் நீயும் எங்களுக்காக இங்கேயே இருப்ப? நாங்க பார்த்துக்கறோம் நீ கவலைப்படாம போயிட்டு வா”
என்று அம்புஜத்தை அன்றிரவு பஸ்ஸில் ஏற்றி விட்டனர் நவீனும் மிருதுளாவும். பின் வீட்டுக்கு வந்ததும் நவீன் மிருதுளாவிடம்
“ஏய் மிருது என்ன இது இப்படி ஆயிடுத்து?”
“ஆமாம் என்ன பண்ண நவீ?”
“நாம ரெண்டு பேரும் மீட் பண்ணிக்கறதே காலையில அன்ட் ஈவினிங் கொஞ்ச நேரம் தான் முடியும்”
“ஆமாம். அதுதான் வீக்கென்ட் டூ டேஸ் லீவிருக்கே நவீன்”
“இது சரியா வருமா மிருது?”
“எல்லாம் சரியா வரும் நவீ. அப்படி வராவிட்டால் அப்போ பார்த்துப்போம். ட்ரை பண்ணாமலே முடியுமா முடியாதான்னு என்னத்துக்கு யோசிச்சுண்டு நம்மளை நாமே குழப்பிக்கணும்”
“ம்….அதுவும் சரிதான். ஆனா உன்னால நைட் ஷிப்ட் பண்ண முடியுமா?”
“லெட் மீ ட்ரை நவீ”
“சரி பார்ப்போம்.”
என்று இருவருக்குள்ளும் சரிவருமா வராதா என்ற குழப்பங்களும், சந்தேங்கங்களும் இருந்தது. திங்கட்கிழமை காலை எழுந்து ப்ரேக் பாஸ்ட், லஞ்ச் என் அனைத்தையும் செய்து முடித்து சக்தியை எழுப்பி ஸ்கூலுக்கு செல்ல தயார் செய்தாள் மிருதுளா. நவீன் சக்தியை ஸ்கூலில் விட்டுவிட்டு வந்ததும் அவனுடய ஆபீஸ் கார் வந்தது அதில் ஏறுவதற்கு முன் மிருதுளாவிடம்
“மிருது நல்லா தூங்கிக்கோ. நைட் வேலை பார்க்கணும். சரியா”
“ஓகே நவீ. நீங்க போயிட்டு வாங்கோ”
என்று நவீனை வழியனுப்பி வைத்துவிட்டு வீட்டிற்குள் வந்து அடுப்படியை சுத்தம் செய்து வீட்டை சுத்தம் செய்து பின் சற்று நேரம் உறங்குவதற்காக படுத்துக் கொண்டாள் மிருதுளா. ஆனால் அவளுக்கு உறக்கம் வரவில்லை. அதனால் எழுந்து மாலை சிற்றுண்டி தயார் செய்து வைத்துவிட்டு சக்தியின் ஸ்கூலுக்கு சென்று அவளை வீட்டுக்கு அழைத்து வந்து அவளை குளிப்பாட்டி உடைகளை மாற்றி டிபன் ஊட்டிவிட்டப் பின் அவளுக்கான சிறிய விளையாட்டை சொல்லிக் கொடுத்து விளையாட வைத்துக் கொண்டே தனது வேலைக்கு கிளம்பினாள் மிருதுளா. அவள் ரெடியானதைப் பார்த்த சக்தி
“அம்மா நாம எங்க போறோம்?”
“நாம இல்லடா குட்டி அம்மா வேலைக்கு போகணுமில்லையா அதுக்குதான் கிளம்பியிருக்கேன்.”
“அப்போ நான்”
“அப்பா இப்போ வந்துடுவாளாம், சக்தி குட்டியை அப்பா பார்த்துப்பாளாம். சக்தி பாப்பா சம்மத்தா அப்பாவை படுத்தாம டின்னர் சாப்பிட்டு தூங்குவாளாம் காலையில நீ முழிக்கும் போது அம்மா சக்தி பாப்பா பக்கத்துல படுத்திருப்பேனாம். எப்படி மேஜிக்”
“ஐயா சுப்பர்”
மணி ஐந்தே முக்கால் ஆனதும் நவீனின் கார் வந்தது. அதிலிருந்து நவீன் இறங்கி வீட்டிற்குள் சென்று ஹாய் சொல்வதற்குள் மிருதுளாவிற்கு வண்டி வந்து வாசலில் நின்றது. உடனே மிருதுளா சக்திக்கும் நவீனுக்கு பை சொல்லிவிட்டு வண்டியில் ஏறி தனது முதல் நாள் நைட் ஷிப்ட் வேலைக்கு புறப்பட்டுச் சென்றாள்.
நவீன் சக்தியுடன் சற்று நேரம் விளையாடி, அவளின் ஸ்கூல் பாடங்களை சொல்லிக் கொடுத்து, ஹோம்வர்க் செய்ய வைத்து, இரவு உணவை சாப்பிட வைத்து, படுப்பதற்கு முன் ஒரு தம்பளர் பால் காய்ச்சி நன்றாக ஆத்தி அதை சக்திக்கு கொடுத்து அவளை தூங்க வைத்தான். பின் தானும் தூங்க முயற்சித்தான் ஆனால் முடியவில்லை. மிருதுளா பற்றிய கவலை அவனை தூங்க விடாமல் செய்தது. எழுந்து சென்று சற்று நேரம் டிவி பார்த்தான். கடிகாரத்தைப் பார்த்தான் மணி ஒன்று என காட்டியது. டிவியை ஆஃப் செய்து விட்டு சக்திப் பக்கத்திலேயே சென்று படுத்துக் கொண்டான். தன்னை அறியாமல் அசந்து போனான்.
சட்டென வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. விருட்டென்று எழுந்து வேகமாக சென்று கதவைத் திறந்தான். மிருதுளா நின்றிருந்தாள். அவளை உள்ளே வரச்சொல்லி கதவை சாத்திவிட்டு கடிகாரத்தைப் பார்த்தான் அது மணி நான்கு என்று காட்டியது. மிருதுளா தனது உடைகளை மாற்றிவிட்டு நேராக சக்தியின் அருகில் சென்று படுத்துக் கொண்டாள். நவீன் ஹால் லைட்டை ஆஃப் செய்து விட்டு வந்து படுத்துக் கொண்டான். மிருதுளாவிடம் வேலை எப்படி இருந்தது என்று கேட்டான் ஆனால் பதில் ஏதும் வரவில்லை. உடனே எழுந்து பார்த்தான். மிருதுளா நன்றாக அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அவளை தொந்தரவு செய்யாமல் அவனும் படுத்து நிம்மதியாக தூங்கலானான்.
எப்போதும் சீக்கிரம் எழுந்துக்கொள்ளும் மிருதுளா அன்று விடிந்தும் எழாமல் உறங்கிக் கொண்டிருந்தாள். நவீன் எழுந்து காபி போட்டு குடித்தான். சட்டென ஆறரை மணிக்கு எழுந்தாள் மிருதுளா. ஃப்ரெஷ் ஆகி காபி போட்டு குடித்தாள். அப்போது நவீன் அவளிடம்
“மிருது வேலை எப்படி இருக்கு?”
“நல்லா தான் இருக்கு நவீ. ஆனா என்ன பதினோரு மணிக்கு மேலே தூக்கம் தூக்கமா வந்தது. கொட்டாவி விட்டு விட்டு தலைவலி பிடிச்சிடுத்து அதுதான் வந்ததும் தூங்கிட்டேன். உங்களுக்கு வேலை எப்படி இருந்தது?”
“எனக்கும் நல்லா தான் இருந்தது. இங்க பாரு மிருது நைட் முழிச்சு வேலைப் பார்த்தா நிறைய ரிஸ்க் இருக்கு. நீ நாங்க ரெண்டு பேரும் ஸ்கூல் ஆபீஸ் போணதுக்கப்புறம் நல்லா தூங்கணும். அப்படி தூங்கலைன்னா அப்புறம் சுருண்டு விழுந்துடுவ புரியுதா!! சரி நான் குளிச்சிட்டு ஆபிஸுக்கு கிளம்பட்டும்”
என்று நவீன் சென்றதும் மிருதுளா டிபன், லஞ்ச் எல்லாம் செய்து வைத்து விட்டு சக்தியை ஸ்கூலுக்கு ரெடி ஆக்கினாள். நவீனும் சக்திமும் சென்றதும் மிருதுளா டிபன் சாப்பிட்டுவிட்டு நேராக சென்று படுத்துறங்கினாள். மதியம் இரண்டு மணிக்கு எழுந்து குளித்து மத்திய சாப்பாடு சாப்பிட்டு மாலை சிற்றுண்டி செய்துவிட்டு சக்தியை ஸ்கூலில் இருந்து அழைத்து வந்து வழக்கம் போல எல்லாம் நடந்தேறியது.
இப்படியே ஒரு வாரம் கடந்தது. மிருதுளா சரியாக தூங்காததால் அவளுக்கு உடம்புக்கு முடியாமல் ஆனது. அதை அம்புஜத்திடம் சொன்னதும் அவள் உடனே கிளம்பி வருவதாக சொன்னாள். அதற்கு மிருதுளா
“இரு மா எப்போ பார்த்தாலும் நீ தான் வந்து எங்களுக்கு ஹெல்ப் பண்ணற. இந்த தடவை எங்க மாமியார் மாமனாரிடம் கேட்கிறேன். இப்போதான் பவினும் ப்ரவினும் படிப்பை முடிச்சாச்சில்லையா… அவா வரலாமே. அதுவுமில்லாம நான் சொல்லலை கேட்கலைன்னு நாளைக்கு அதையும் குத்தமா சொல்லாம இருக்கணும் இல்லையா அதுக்காகவாவது கேட்டுப் பார்க்கறேன். அப்புறமா உன்கிட்ட நீ வருணுமா இல்லையான்னு சொல்லறேன். அனேகமா அவா வரமாட்டா நீ தான் மறுபடியும் வரவேண்டி இருக்கும்…பார்ப்போம்”
“சரி மிருது உங்க ரெண்டு பேருக்கும் எது சரின்னு படறதோ அதுபடியே செய்யுங்கோ. நான் வரணும்னாலும் வரேன். சனி ஞாயிறு இங்க வந்துட்டா போறது.”
“சரி மா நான் அவா கிட்ட பேசிட்டு உன்கிட்ட நீ வரணுமா வேண்டாமான்னு சொல்லறேன். இப்போ ஃபோனை வச்சுடவா?”
என்று கூறி வைத்ததும் நவீனும் மிருதுளாவும் மூத்த தம்பதியருக்கு ஃபோன் போட்டு பேசினார்கள். அப்போது மிருதுளா தன் நிலைமையை எடுத்துக் கூறி உதவி புரியுமாறு கேட்டாள் அதற்கு வழக்கம் போல மூத்த தம்பதியர் மறுத்து விட்டனர். ஃபோனை வைத்ததும் மிருதுளா நவீனிடம்
“இது என்ன நியாயம்!! எப்போ பார்த்தாலும் என் அம்மா தான் ஓடி ஓடி வர வேண்டியிருக்கு!!! முன்னாடி வேனுவையும் அப்பாவையும் விட்டுட்டு விட்டுட்டு வந்தா. இப்போ அப்பாவை விட்டுட்டு வரணும். அவா வரதே நம்மளுக்கு ஹெல்ப் பண்ண இதுல உங்க அம்மா அப்பா என்னடான்னா நம்ம சொந்தகாராகிட்ட எல்லாம் ஏதோ பொண்ணு மாப்பிள்ளை வீட்டிலேயே இருக்கான்னு பரப்பிண்டு இருக்கா. அவா எல்லாரும் என்னடான்னா என்கிட்ட ஃபோன்ல பேசும்போது “உங்க அம்மா இங்க இருக்காளா இல்ல அங்க இருக்காளான்னு” நக்கல் பேச்சை எல்லாம் கேட்க வேண்டியிருக்கு. இவாளால ஒரு சின்ன உபகாரம் கூட இல்ல ஆனா டன் கணக்குல உபதிரவம் கொடுக்கறா.”
“மிருது சொல்லறவா சொல்லிண்டு தான் இருப்பா…நான் எப்பவும் சொல்லறது தான். அதை சொன்னா உனக்கு கோபம் வரும்”
“வராதா பின்ன என்னையும், எனக்கு உதவுற என் குடும்பத்தையும் அசிங்கப் படுத்திண்டே இருந்தா விட்டுண்டே இருக்க முடியுமா சொல்லுங்கோ.”
“முடியாது தான் மிருது ஆனா அவாளை எல்லாம் நம்மால் திருத்த முடியாது மா. அவாளை திருத்த நினைக்குற நேரத்துல நாம நம்ம வேலையைப் பார்த்தா நாம முன்னேற்றம் அடையலாம்.”
“என்னமோ போங்கோ. ஆனா உங்க அப்பா அம்மா பண்ணறது சரியே இல்லை. ஆண்டவன் அவாளுக்கு தண்டனை தர்றான் ஆனாலும் அவாளுக்கு புரிய மாட்டேங்கறது. நான் உண்டாயிகருக்கேன்னு ஆசையா ஃபோன் போட்டு சொன்னபோது என்னத்துக்கு அவசரப்பட்டேன்னு முகதுல அறஞ்சது போல கேட்டு என் மனசை சங்கடப் படுத்தினா அதுக்கு தான் ஆண்டவன் இரண்டாவது புள்ளைக்கு குழந்தை பாக்கியத்தை தள்ளிப் போட்டுண்டே வர்றான். அதை உணர்ந்திருந்தானா இப்படி எல்லாம் பேச மாட்டா. எங்கே..என்னமோ…அவா அவா பண்ணுறது அவா அவா அனுபவிக்கதான் வேணும் அது நீங்களா இருந்தாலும், நானா இருந்தாலும் இல்ல அவாளா இருந்தாலும். சரி என் அம்மாட்ட ஃபோன் பண்ணி ஹெல்ப் கேட்கறேன். மறுபடியும் மறுபடியும் என் அம்மா அப்பாவையே தொந்தரவு செய்ய எனக்கு சங்கடமா இருக்கு. என்ன பண்ண?”
என்று மீண்டும் அம்புஜத்தின் உதவியை நாடினாள் மிருதுளா. அம்புஜமும் வந்திருந்து தன் பெண்ணையும், மாப்பிள்ளையையும், பேத்தியையும் நன்றாக கவனித்துக் கொண்டாள். வீட்டு வேலைக்கு ஒரு பெண்ணை நியமித்தாள் மிருதுளா. அவ்வப்போது ஊருக்கும் சென்று வந்தாள் அம்புஜம். வீட்டில் அம்புஜம் இருப்பதால் நிம்மதியாக வேலைக்கு சென்று வந்தனர் நவீனும், மிருதுளாவும்.
மாதங்கள் கடந்தன. ஒரு நாள் ஈஸ்வரனும் பர்வதமும் நவீன் வீட்டிற்கு வருவதாக ஃபோனில் சொன்னார்கள். அதைக் கேட்ட மிருதுளா அம்புஜத்திடம்
“அம்மா அவா வராலாம். நீ ஊருக்கு போயிட்டு வரியா?”
“அவா வந்தாலும் சக்தியை பார்த்துப்பாளா மிருது?”
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். அவா எல்லாம் நிச்சயம் பார்த்துக்க மாட்டா. உங்களுக்கு ஊருக்கு போகணும்னா போயிட்டு வாங்கோ. நாங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் லீவு போட்டு பார்த்துக்கறோம்.”
“நவீ அவா எவ்வளவு நாள் இருப்பான்னு நமக்கெப்படி தெரியும்”
“ஒரு வாரம்ன்னு சொன்னா”
“என்னத்துக்கு நீங்க லீவெல்லாம் போட்டுண்டு? பரவாயில்லை நானே இருக்கேன்”
“அம்மா நீ உன் பொண்ணுக்கும் பேத்திக்கும் செய்யலாம் ஆனா சம்மந்திகளுக்கெல்லாம் செய்யணும்னு ஒரு அவசியமுமில்லை. அவாளுக்கும் சக்தி பேத்தி தானே.”
“வேண்டாம் மிருது இது விதண்டாவாதம் பிடிக்கற நேரமில்லை. விடு விடு ஒரு வாரம் தானே”
என்று அம்புஜம் கூறினாலும் மிருதுளா மனம் ஆறவில்லை. எந்த விதத்திலும் உதவி புரியாது, தன் அம்மாவையே அவமானப் படுத்திய மூத்த தம்பதியருக்கு ஏன் தன் அம்மா செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவளுள் இருந்து படாய் படுத்தியது.
மூத்த தம்பதியர் வந்தனர். ஒரு வாரம் நன்றாக கால் மேல் கால் போட்டுக் கொண்டு எந்த வித உறுத்தலுமின்றி இருந்துவிட்டு சென்றனர். மிருதுளா தன் வேலையில் சிறப்பாக பணியாற்றியதற்கு ஸ்டார் பர்ஃபாமர் என்று ஸ்டாரும் சான்றிதழும் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் வாங்களானாள். சக்தி பாட்டு, வயலின், படிப்பு என எல்லாவற்றிலும் சிறந்தவளாக வலம் வந்தாள். பரிசுகளும், பாராட்டுகளும் குவிந்தன. ஆனால் மிருதுளாவால் மட்டும் பல ஸ்கூல் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ள முடியாமல் போனது. ஒரு வருடம் உருண்டோடியது. நவீனும் மிருதுளாவும் அவர்கள் ஊரில் ஒரு இரண்டு பெட்ரூம் அப்பார்ட்மென்ட் வாங்கினார்கள்.
மிருதுளாவுக்கு வைரல் ஃபீவர் வந்தது. ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டாள். உடல் நிலை மிகவும் பாதித்தது. ஒரு மாதம் வேலைக்கு செல்ல முடியாமல் போனது. டாக்டர் அவளை நைட் ஷிப்ட் போகக் கூடாது என்று கூறினார். உடல் நலமானதும் அவரின் ரிப்போர்ட்டை எடுத்துக் கொண்டு ஆஃபீஸ் சென்று தனக்கு டே ஷிப்ட் தரும்படி கேட்டுக்கொண்டாள். அவர்களும் மிருதுளாவுக்கு டே ஷிப்ட் கொடுத்தார்கள். இரண்டு மாதங்கள் கழிந்த பின் மீண்டும் மிருதுளாவுக்கு நைட் ஷிப்ட் வழங்கப்பட்டது. அதை தவிர்க்க எவ்வளவோ முயன்றும் முடியாமல் போக வேறு வழியின்றி வேலையை ராஜினாமா செய்தாள் மிருதுளா.
ஒரு வருட காலம் நவீனும் மிருதுளாவும் வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே சந்தித்துக்கொள்ளவும் பேசிக்கொள்ளவும் முடிந்த நிலைக்கும், தன் அம்மா அப்பாவின் பிரிவுக்கும் இன்று முற்றுப்புள்ளி வைத்தாள் மிருதுளா.
தொடரும்……
அத்தியாயம் 79: புதிய வாய்ப்பு
மூத்த தம்பதியரும், அம்புஜமும் ஜோத்பூரிலிருந்து அவரவர் ஊர்களுக்கு புறப்பட்டனர். அவர்களின் பயணத்திற்கு வேண்டிய உணவுகளை செய்து கொடுத்து, ஈஸ்வரனுக்கு சட்டை வேஷ்டியும், பர்வதத்திற்கும், அம்புஜத்திற்கும் ஒரே மாதிரி புடவை அவர்களுக்கு இஷ்டப்பட்ட நிறத்தில் எடுத்துக் கொடுத்து அவர்களை ரெயில்வே ஸ்டேஷன் வரை சென்று வழியனுப்பி வைத்தனர் நவீனும் மிருதுளாவும்.
அன்றிரவு மீண்டும் மிருதுளா நவீனிடம் வீ.ஆர்.எஸ் பற்றி பேச்சை ஆரம்பித்தாள். அதற்கு மீண்டும் அதே பதில் அளித்தான் நவீன். அதைக் கேட்ட மிருதுளா
“என்ன நவீன் நாம நாலு வருஷம் முன்னாடி பேசினதை மறந்துட்டேங்களா என்ன?”
“மறக்கலை மிருது. ஆனா யோசிக்கணும் இல்லையா!! இப்போ நமக்கு சக்தி வேற இருக்கா. அவளோட எதிர்காலம் நம்மளோட எதிர்காலம் எல்லாத்தைப் பத்தியும் யோசிக்கணுமில்லையா!!”
“யோசிச்சிண்டே இருந்தா போதாது நவீ. ஏதாவது ஸ்டெப் எடுக்கணும்”
“என்ன பண்ணணும்னு சொல்லற? இப்போ வேலையை விட்டுட்டா அடுத்த வேலை எப்போ கிடைக்குமோ!! அது வரைக்கும் என்ன பண்ணுவோம்? எனக்கு பி.எஃப் அது இதுன்னு ஒரு…. ஒரு லட்சம் ஆர் ஒன்றரை லட்சம் வரும் அதை வச்சுண்டு என்ன பண்ணப் போறோம்?”
“ஓகே!! இது தான் உங்க கவலையா!! சரி நாளையிலிருந்தே நான் ஏதாவது வேலைக்கு ட்ரை பண்ண ஆரம்பிக்கறேன். கிடைச்சா அப்புறம் பேசலாம் என்ன சொல்லறேங்கள்?”
“ம்…பார்க்கலாம்”
மறுநாள் மாலை கவினிடமிருந்து ஃபோன் வந்தது….டெக்னிக்கல் நாலேட்ஜ் இல்லாததால் நவீனுக்கு குவைத்தில் வேலை கிடைக்காது என்று சொன்னவன் திடீரென சொல்லி வைத்தார் போல நவீனிடம்
“நீ பேசாம வேலையை விட்டுட்டு இங்க குவைத் வந்து வேலை தேடேன்”
“என்ன பேசற டா? இதை நீ எனக்கு கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடி சொல்லியிருந்தேன்னா நிச்சயம் வந்திருப்பேன் இல்ல அட்லீஸ்ட் சக்தி பொறக்கறதுக்கு முன்னாடி சொல்லிருந்தேன்னா யோசிச்சிருப்பேன். அப்போ எல்லாம் விட்டுட்டு இப்போ இருக்கறதை விட்டுட்டு வந்து புதுசா தேடுன்னா எப்படி வருவேன்? நோ நோ அதெல்லாம் சரிபட்டு வராது கவின். எனிவே தாங்க்ஸ் அழைத்ததுக்கு”
“ஓகே!! இல்ல அங்க கம்மியான சம்பளத்துக்கு வேலைப் பார்த்துண்டு கஷ்டப்படுறயேன்னு சொன்னேன்”
“நான் கஷ்டப்படுறேன்னு உனக்கு யார் சொன்னா? நாங்க நல்லா தான் இருக்கோம். சரி எனக்கு ஷிப்ட்டுக்கு நேரமாச்சு வைக்கட்டுமா?”
“ஓகே! பை”
என்று ஃபோனை வைத்ததும் மிருதுளா யார் என்ன என்று விசாரித்தாள். நவீனும் கவின் சொன்னதை சொன்னான். அதை கேட்ட மிருதுளா
“ஏன் நவீ அவன் சொன்னதுல என்ன தப்பு? பேசாம அப்படி செஞ்சா என்ன?”
“விளையாடறயா மிருது. இருக்கறதை விட்டுட்டு பறக்கறதுக்கு ஆசைப்பட்டா இருக்கறதும் போயிடும்ன்னு உனக்கு தெரியாதா? அவன் சொல்லறான்னு நீயும் பேசுற பாரு. அவனைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். இருக்கறதையும் விட்டுட்டு நடு ரோட்டில நிக்கவைக்கப் பாக்குறான் அதுக்கு நீயும் ஆமோதிக்கறாய்?”
“என்ன சொல்லறேங்கள் நவீ!! அப்படி நினைத்தா அவன் சொல்லிருப்பான்?”
“இப்படி யோசித்துப் பார். என் மேலே ஆர் நம்ம மேல அவ்வளவு அக்கறை இருக்குன்னா அவன் என்ன சொல்லிருக்கணும்?”
“என்ன?”
“நீ வந்து இங்க ஏதாவது ட்ரை பண்ணு…கிடைச்சுதுன்னா அங்க உன் வேலையை விட்டுவிடுன்னு சொல்லியிருந்தா கூட நான் யோசிச்சிருப்பேன் ஆனா அவன் என்னை இந்த வேலையை விடச் சொல்லறதிலேயே குறியா இருக்கான். நல்ல எண்ணத்துல சொன்னா மாதிரி மனசுக்கு படலை…. அது எனக்குப் பிடிக்கலை அதுதான் அப்படி சொன்னேன்.”
“ஓகே!! நீங்க சொன்னா சரியா தான் இருக்கும். சரி நான் ஒரு அஞ்சு மல்டினாஷ்னல் கம்பெனிக்கு சென்னையிலும், பங்களூரிலும் அப்ளை பண்ணிருக்கேன். பார்ப்போம்”
ஒரு மாதம் கழித்து மிருதுளாவுக்கு ஒரு ஃபோன் கால் வந்தது. அதில்
“ஹலோ ஆம் ஐ ஸ்பீக்கிங் டூ மிஸ்.மிருதுளா”
“எஸ்”
என்று பேசத் துவங்கினாள். பேசி முடித்ததும் அவளுள் மகிழ்ச்சிப் பொங்கியது. வேலைக்கு சென்ற நவீன் வந்ததும் அவனிடம்
“நவீ ஒரு குட் நியூஸ். நான் உங்களுக்கு ஃபோன் பண்ணி சொல்லணும்னு நினைச்சேன் அப்புறம் நேர்ல சொல்லலாம்னு இவ்வளவு நேரம் வெயிட் பண்ணிண்டிருக்கேன்”
“என்னது அது மிருது?”
“எனக்கு பங்களூரில் அக்சென்சுவர் என்ற பஃர்மில் ஒரு ஜாப் ஆஃபர் வந்திருக்கு நவீ. ஒரு கன்சல்டன்சியிலிருந்து தான் ஃபோன் வந்தது. நெக்ஸ்ட் டூ நெக்ஸ்ட் வீக் சாட்டர்டே இன்டர்வியூக்கு வரச்சொல்லிருக்கா.”
“சூப்பர். குட் மிருது.”
“தாங்க்ஸ் நவீ ஆனா எப்படி போறதுன்னு தான் யோசனையா இருக்கு நவீ. ஸ்கூல்ல லீவ் தருவாளான்னு தெரியலையே”
“கேட்டுப் பாரு மிருது. ஒரு வாரம் லீவு கேளு”
“ஓகே …கேட்டுப் பார்க்கறேன்”
மிருதுளா விவரத்தை சொல்லி லீவு கேட்க முதலில் மறுக்கப்பட்டாலும் அவளின் இரண்டாவது வேண்டுகோளுக்கு செவி சாய்த்து வழங்கப்பட்டது. நவீனும் லீவு அப்ளை செய்தான். இருவரும் சக்தியை அழைத்துக் கொண்டு ஊருக்கு ராமானுஜம் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர். அங்கே சக்தியை அம்புஜத்திடம் விட்டுவிட்டு அன்றிரவே நவீனும் மிருதுளாவும் பஸ் ஏறி பங்களூருக்கு சென்றனர். மறுநாள் விடியற் காலை பங்களூர் மண்ணில் கால் வைத்தனர். அங்கே பஸ் ஸ்டாண்ட் அருகே இருந்த ஹோட்டலுக்குச் சென்று அங்கிருந்த பாத்ரூமில் பல் துலக்கி, முகம் , கை கால் அலம்பி, ப்ரெஷ் ஆகி வெளியே வந்து காலை டிபன் அருந்தினர் இருவரும். மிருதுளாவுக்கு இன்டர்வியூ காலை பதினோரு மணிக்கு என்பதால் அங்கிருந்து பஸ் பிடித்து லால்பாக் பார்க் சென்றனர். அங்கே சற்று நேரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மிருதுளா நவீனிடம்
“ஏன் நவீ இன்னைக்கு நான் அட்டென்ட் பண்ணப் போற கன்சல்டன்சி காரர்கள்ட்ட நீங்களும் இன்டர்வியூ அடென்ட் பண்ணலாமான்னு கேட்போமா?”
“நானா!!! உன்னை தேர்ந்தெடுத்திருக்குற வேலைக்கு என்னையும் எப்படி இன்டர்வியூ பண்ணுவா மிருது? உன் ப்ரொஃபைல் வேற என்னோடது வேறயாச்சே”
“அச்சோ நவீ!!! அது எனக்கு தெரியாதா!! உங்க ப்ரொஃபைலுக்கு ஏத்தா மாதிரி எதாவது இருக்கான்னு கேட்டுப் பார்த்தா தானே தெரியும்”
“கேட்கலாம். முதலில் நீ நல்ல படியா முடிச்சிட்டு வா. அப்புறம் என்னைப் பத்தி கேட்கலாம் சரியா”
“ம்…பார்ப்போம். நான் நிச்சயம் கேட்கத் தான் போறேன்”
“ஆனா நான் என்னோட எந்த டாக்குமெண்ட்ஸும் எடுத்துண்டு வரலையே”
“அதெல்லாம் பார்த்துப்போம்”
இவ்வாறு பேசிக்கொண்டேயிருந்ததில் நேரம் கடந்தது. மணி ஒன்பதரை ஆனது. அங்கிருந்து வெளியே வந்து பஸ் பிடித்து இன்டர்வியூ நடக்கவிருக்கும் இடத்துக்கு சரியாக பத்தரை மணிக்கு சென்றனர். அங்கே சென்றதும் மிருதுளா மட்டும் உள்ளே அனுமதிக்கப் பட்டாள். நவீன் வெளியே காத்திருக்கும் படி சொல்லப்பட்டது. அதற்கு நவீன் மிருதுளாவிடம்
“நான் அந்த மரத்தடியில் இருப்பேன் மிருது. நீ நல்லபடியா முடிச்சுட்டு வா. ஆல் தி பெஸ்ட்”
என்று சொல்லி மிருதுளாவை உள்ளே அனுப்பி வைத்தான். உள்ளே சென்றவள் நேராக சம்பந்தப் பட்டவரிடம் பேசி நவீனின் ப்ரொபைல் பற்றி விவரித்து…இவ்வளவு தூரம் வந்திருப்பதால் அவருக்கு ஏற்ற ஏதாவது வேலை இருக்கிறதா என்று விசாரித்தாள். அதற்கு அவளை இன்டர்வியூக்கு அழைத்தவர்
“ம்….நீங்க சொல்லற ப்ரொஃபைல் ஈஸ் இன்ட்ரெஸ்டிங். சரி அவரையும் வரச் சொல்லுங்க. அவரும் இன்டர்வியூ அட்டென்ட் பண்ணட்டும் அப்புறமா டிசைட் பண்ணலாம். ஓகே?”
“ஓகே. தாங்க்யூ சோ மச். நான் அவரையும் உள்ளே அழைத்து வருகிறேன்.”
என்று கூறி வெளியே சென்று நவீனிடம் உள்ளே நடந்ததை விவரித்து தன்னுடன் அழைத்துச் சென்றாள் மிருதுளா. இருவரும் அவரவருக்கான இன்டர்வியூவை அட்டென்ட் செய்தனர். மூன்று ரௌண்ட் நடந்தது. மூன்றிலுமே இருவரும் தேர்வானார்கள். மத்திய உணவுக்கான இடைவெளி விடப்பட்டது. உணவருந்தியதும் அவர்கள் அமர்ந்திருந்த இடத்திலேயே வரும்படி சொல்லப்பட்டது. நவீனும் மிருதுளாவும் மத்திய உணவு சாப்பிட பக்கத்தில் ஹோட்டல் இருக்கிறதா என்று விசாரித்து அங்கு சென்று உணவருந்தியதும் மீண்டும் அதே இடத்திற்கு சென்றனர். மூன்று ரௌண்ட்களிலும் தேர்வானவர்களை மட்டும் ஒரு அறையில் அமரவைத்து
“நீங்கள் அனைவரும் மூன்று சுற்றுகளிலும் தேர்ச்சி அடைந்துள்ளீர்கள். இன்னும் இரண்டு ரௌண்ட் உள்ளது. அது அக்சென்சுவர் ஹெச்.ஆர் டிப்பாட்மென்டில் இன்று மாலை நடக்கும். ஒரு ரௌண்ட் ஆப்ரேஷன்ஸ் ஹெட்டுடன். மற்றது ஹெச்.ஆர் பர்சனுடன். அந்த இரண்டிலும் தேர்ச்சி அடைந்தீர்கள் என்றால் உடனே அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் கையில் தந்திடுவார்கள். ஓகே! நீங்க உங்க ஓன் செலவுல தான் அவங்க ஆஃபீஸுக்கு போகணும். இப்போ டைம் இரண்டரை ஆகுது. நீங்க அங்கே ஒரு நாலரை மணிக்கு இருக்கணும் ஸோ இப்பவே கிளம்பி நேரா அங்க போங்க அங்கே எங்க கன்சல்டன்சி பர்சன் இருப்பாங்க, அவங்க உங்களை ரிசீவ் பண்ணி ஹெச்.ஆர் கிட்ட கூட்டிட்டு போவாங்க. இரண்டு ரௌண்ட்ஸையும் அட்டென்ட் பண்ணுங்க…அப்பாயின்ட்மென்ட் ஆர்டரோட வீட்டுக்கு போங்க சரியா. ஆல் தி பெஸ்ட் டூ யூ ஆல்”
என்று கன்சல்டன்சி ஹெட் பேசி முடித்ததும் நவீனும் மிருதுளாவும் வெளியே வந்து ஒரு ஆட்டோவை நிறுத்தி அக்சென்சுவர் ஆபீஸ் அட்ரெஸைக் காட்டி அங்கே செல்ல வேண்டுமென்றும் அதற்கு எவ்வளவு ஆகும் என்று கேட்டதுக்கு ஆட்டோ காரர் முன்னூறு ரூபாய் ஆகும் என்று கூறியதும் வேண்டாமென அனுப்பி விட்டனர். அப்போது அதே இன்டர்வியூவுக்கு வந்திருந்த இன்னும் மூன்று பேர் இவர்கள் அருகில் வந்தனர்.
“ஹாய் நாங்களும் அக்சென்சுவர் ஆபீஸுக்கு தான் போகணும்”
“ஹாய். ஆங் நீங்களும் எங்க கூட தானே உட்கார்ந்திருந்தேங்கள்”
“எஸ் எஸ். நாம அஞ்சு பேரு இருக்கோம் பேசாம ஒரு டாக்ஸி புக் பண்ணி அதுல போவாமா?”
என்று கூறியதும் நவீனும் மிருதுளாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அதை கவனித்த ஒருவர்
“நீங்க ஆட்டோ காரர் கிட்ட பேரம் பேசினதைப் பார்த்தோம். அவன் முன்னூறு கேட்டான் டாக்ஸி செவன் பிஃப்டி கேட்கிறான். நாம் அஞ்சு பேரும் ஸ்பிளிட் பண்ணினா ஆளுக்கு நூற்றி ஐம்பது தான் வரும். வாட் ஸே?”
என்றதும் மற்றவர்கள் சரி என்று சொல்ல…நவீனும் சரி என்று கூறினான். ஐவரும் காரில் சென்று இறங்கி அக்சென்சுவர் ஆபீஸுக்குள் சென்றனர். அந்த ஆபீஸின் பிரம்மாண்டமான வரவேற்பு அறையைப் பார்த்த நவீனும் மிருதுளாவும் அசந்து போனார்கள். அங்கே அவர்களை அமரவைத்தனர் கன்சல்டன்சி ஆட்கள். பின் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு இன்டர்வியூ நடந்தது. இரண்டு சுற்றும் முடிந்ததும் மீண்டும் அதே வரவேற்பு அறையில் அமரவைக்கப்பட்டனர். மணி ஆறரை ஆனது. நவீனும் மிருதுளாவும் ஊருக்கு திரும்பிச் செல்ல ஒன்பதரைக்கு பஸ் புக் செய்திருந்தனர். அதை நினைத்து இருவரும் பேசிக் கொண்டிருக்கையில் அக்சென்சுவர் ஹெச்.ஆரிலிருந்து ஒருவர் வந்து ஆஃபர் லெட்டர்ஸ் ரெடியாக இருப்பதாக கூறி அங்கிருந்த பதினைந்து பேர்களிலிருந்து எட்டு பேர்களை மட்டும் அழைத்துச் சென்றார். அதில் மிருதுளாவும் ஒருத்தி ஆவாள்.
உள்ளே ஒரு அறையில் அமரச்செய்து ஒவ்வொருவராக அழைத்து அவர்களுக்கான வேலை ஒப்பந்த படிவத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு ஆஃபர் லெட்டர்கள் வழங்கப்பட்டது. நவீனுக்கு கிடைக்கவில்லையே என்ற எண்ணம் தான் மிருதுளா மனம் முழுவதுமிருந்தது. அவள் ஆஃபர் லெட்டரை வாங்கிக் கொண்டு தயங்கி தயங்கி அங்கேயே நின்றாள் அதை கவனித்த ஹெச்.ஆர் அவளிடம்
“எஸ் மிஸ் மிருதுளா டூ யூ வான்ட் டூ ஸே சம்திங்”
“எஸ் மேம். என் கணவரும் அடென்ட் செய்தார் ஆனால் அவருக்கு ஏன் கிடைக்கவில்லை என்று நான் தெரிந்துக் கொள்ளலாமா? ப்ளீஸ்”
“யார் அது?”
“மிஸ்டர். நவீன்”
“ஓ!!! ஓகே ஓகே!!! அவர் இப்போது சர்வீஸில் இருக்கிறார் மேபி அதுனால கூட இருக்கலாம். ஆனா அவர் இன்டர்வியூ எல்லாம் நல்லா தான் பண்ணியிருக்கார். அவரை ரிஜக்ட் பண்ணலை வெயிட்டிங்கில் தான் போட்டிருக்கார் அந்த ப்ராஜெக்ட் மேனேஜர். ஸோ டோன்ட் வரி நிச்சயம் அவருக்கும் இங்கே வேலை கிடைக்கும். என்ன இட் மே டேக் டைம் அவ்வளவு தான்”
“எவ்வளவு நாட்கள் ஆகும் மேம்”
“மேபி டூ வீக்ஸ் ஆர் எ மந்த்”
“ஓகே மேம். தாங்க் யூ. ஹாவ் எ நைஸ் ஈவ்னிங்”
“தாங்க் யூ. யூ டூ ஹாவ் எ நைஸ் ஈவ்னிங் மிருதுளா. சீ யூ சூன் ஆஸ் அவர் ஸ்டாஃப்”
“ஷுவர் மேம். பை”
என்று சொல்லி வெளியே வந்து நவீனிடம் உள்ளே நடந்தவற்றை கூறினாள். அதற்கு நவீன்
“அவா அப்படி தான் சொல்லுவா மிருது. பார்ப்போம். சரி உன் ஆஃபர் லெட்டரை குடு பார்க்கட்டும்”
“இந்தாங்கோ நவீன்.”
“ஹேய் வாவ்!! மிருது உன் சம்பளம் எவ்வளவு தெரியுமா?”
“நான் பார்க்கலை நவீ. வாங்கிண்டு நேரா உங்ககிட்ட வந்துட்டேன். ஹெச். ஆர் ரௌண்ட் போது சொன்னா ஏதோ பதினைந்தாயிரம் தருவோம்ன்னு”
“பதினைந்து இல்ல மிருது பதினெட்டாயிரம் ப்ளஸ் பி.எஃப், டோர் பிக்கப் அன்ட் டிராப். சாப்பாடுன்னு எல்லாமே தராமா. சூப்பர் மிருது. கங்கிராட்ஸ்”
“தாங்க்ஸ் நவீ. உங்களுக்கும் கிடைச்சா அப்போ நம்ம சம்பளம் முப்பத்தி ஆறாயிடுமே!! வாவ். கடவுளே சீக்கிரம் நவீனுக்கும் ஆஃபர் லெட்டர் தரட்டும்”
“சரி பஸ்ஸுக்கு நேரமாச்சு கிளம்பலாமா?”
“எஸ் கிளம்பலாம் நவீ. எனக்கு காலையிலிருந்து ஒரே டென்ஷனா அதுல தலை வலிக்கறது பா. குத்தறது. பஸ் ஸ்டாண்ட் போற வழியில ஏதாவது டாக்டரைப் பார்த்துட்டு போவோமா ப்ளீஸ்”
“என்ன மெதுவா சொல்லற. சரி சரி வா கிளம்பலாம்.”
என்று மிருதுளாவுடன் ஆட்டோவில் ஏறி பக்கத்தில் ஏதாவது ஹாஸ்பிடல் இருந்தால் வேகமாக போகச் சொன்னான் நவீன். ஆட்டோ டிரைவரும் ஒரு ஹாஸ்பிடல் வாசலில் வண்டியை நிப்பாட்டினார். இருவரும் இறங்கனர். மிருதுளா வண்டியிலிருந்து இறங்கியதும் வாந்தி எடுக்கத் துவங்கினாள். உடனே அவளின் நெற்றியைப் பிடித்துக் கொண்டான் நவீன். ஆட்டோ டிரைவர் வாட்டர் பாட்டிலை நீட்டினார். வாயை கொப்பளித்துக் கொண்டு முகத்தை அலம்பிக் கொண்டு டாக்டரிடம் சென்றாள் மிருதுளா. டாக்டர் செக் செய்து விட்டு…சரியான தூக்கம் இல்லாததால் சாப்பிட்டது ஜீரணிக்கவில்லை அதுதான் தலைவலி வாந்தி எல்லாம் என்று கூறி ஒரு இன்ஜெக்ஷன் போட்டு மாத்திரையும் கொடுத்து அனுப்பினார்.
மீண்டும் அதே ஆட்டோவில் ஏறி பஸ் ஸ்டாண்டுக்கு சென்று அங்கு காலையில் டிபன் அருந்திய ஹோட்டலுக்கு சென்று இரவு உணவு அருந்தினர். மிருதுளா ஒரே ஒரு இட்டிலி மட்டும் மாத்திரை சாப்பிடுவதற்காக சாப்பிட்டு மாத்திரையையும் போட்டுக் கொண்டாள். பஸ்ஸில் ஏறி ஊருக்கு சென்றனர். ஒரு நாள் விடியற் காலையிலிருந்து இரவு வரை அலைச்சல், இன்டர்வியூ, டென்ஷன் என்று முடித்து வீடு வந்து சேர்ந்தனர் இருவரும்.
ஊரில் அனைவரிடமும் தனக்கு வேலைக் கிடைத்ததுப் பற்றி சொன்னாள் மிருதுளா. இரண்டு நாட்கள் ரெஸ்ட் எடுத்து விட்டு ஜோத்பூருக்கு புறப்பட்டுச் சென்றனர் நவீனும் மிருதுளாவும். மிருதுளாவுக்கு வேலையில் சேருவதற்கு இரண்டு மாத காலம் கொடுத்திருந்தனர்.
ஜோத்பூர் சென்றதும் மீண்டும் ஸ்கூல் வேலை, வீட்டு வேலை, சக்திக்கு பாடம் சொல்லிக் குடுப்பது, அவளுடன் விளையாடுவது என்றிருந்தாள் மிருதுளா. ஒரு நாள் நவீனிடம்
“நவீ நான் ஒண்ணு சொல்லுவேன் நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது”
“நீ சொல்லி நான் எதை தப்பா எடுத்திருக்கேன் மிருது? சொல்லு”
“எனக்கு வேலை கிடைச்சிருக்கு இன்னும் ஒன்றரை மாசத்துல ஜாயின் பண்ணணும்”
“ஆமாம் அது தெரிஞ்சது தானே. இதுல நான் தப்பா எடுத்துக்க என்ன இருக்கு?”
“இருங்கோ பா. நம்ம ரெண்டு பேர்ல ஒருத்தருக்கு வேலை கன்பார்மா இருக்கு ஸோ நீங்க ஏன் இந்த வேலையை விட்டுட்டு பங்களூரிலேயே வேற வேலையில் சேரக்கூடாது?”
“ம்….நல்ல யோசனை தான். நானும் வேலையை விட்டுட்டு உனக்கும் வேலையில்லைன்னா என்ன பண்ணறதுன்னு தான் இவ்வளவு நாளா தள்ளிப் போட்டுண்டே வந்தேன். சரி நாளைக்கே அப்ளை பண்ணறேன் ஓகே”
“சூப்பர் நவீ. தாங்க்ஸ்.”
“எதுக்கு தாங்க்ஸ் எல்லாம் மிருது. என்னோட நம்மளோட நல்லதுக்கு தானே சொல்லற அதுகூடவா எனக்கு புரியாது?”
மறுநாள் நவீன் அவனது ஆஃபீஸில் சர்வீஸிலிருந்து டிஸ்சார்ஜ் வேண்டுமென்று ஒரு காரணத்தைச் சொல்லி அப்ளை செய்தான். சர்வீஸிலிருந்து டிஸ்சார்ஜ் கிடைத்ததும். மிருதுளா ஆசிரியை மூவருமாக ஊருக்குச் சென்றனர். அங்கிருந்துக் கொண்டே வேலைகளுக்கு அப்ளை செய்தான் நவீன். ஒரு வாரம் அவனது அலுவலக பொறுப்புகளை ஒப்படைத்து பென்ஷனுக்கு உண்டான டாக்குமெண்ட்ஸ் வேலைகளுக்காக டில்லி வரைச் சென்றிருந்தான். அப்போது விஷயத்தை நவீனின் தந்தை தாயிடம் கூறினாள் மிருதுளா. அதைக் கேட்டதும் ஈஸ்வரன் ஒன்றும் சொல்லவில்லை ஆனால் பர்வதம்
“என்னது வேற வேலை தேடறானா? அவன் படிப்புக்கு என்ன ஒரு ஆராயிரமோ ஏழாயிரமோ தானே கிடைக்கும் அதுவும் இந்த ஊரில் எங்கே வேலை இருக்கு?”
“அம்மா அவர் இங்கே தேடலை பங்களூரிலே தேடுறார். சரி நான் ஃபோனை வச்சுடுறேன். நவீன் வந்ததும் நாங்க அங்க வரோம்”
என்று பர்வதத்தின் பேச்சு பிடிக்காமல் ஃபோனை வைத்துவிட்டு கண்களில் கண்ணீரோடு அப்படியே அமர்ந்திருந்தாள் மிருதுளா. அவளைப் பார்த்த அம்புஜம்
“ஏய் மிருது என்னமா ஆச்சு? ஏன் அழுதுண்டு இருக்க?”
“பாருமா எங்க மாமியார் பேசறதை!!!”
“என்ன சொன்னா? நீ அழறதுக்கு!!”
“நவீயை படிக்கவும் வைக்காம இப்போ எப்படி சொல்லறா பாறேன். நல்லா படிக்க வச்சிருந்தா அவர் நல்லா ஆகிருக்க மாட்டாரா என்ன? அவரே எப்படியோ அவ்வளவு கஷ்டத்துலேயும் இவ்வளவு படிச்சிருக்கார். படிக்க வைக்க துப்பில்லை இவா எல்லாம் பேச வந்திட்டா”
“என்னடி நீயே பேசிக்கற!”
“நவீன் படிப்புக்கு ஆறாயிரமோ ஏழாயிரமோ தான் கிடைக்குமாம்…அப்படீன்னு உன் சம்மந்தி சொல்லறா…போதுமா”
“நீ சொல்ல வேண்டியது தானே ….நீங்க படிக்க வச்சதுக்கு அவ்வளவு தான் கிடைக்கும் என்ன செய்யன்னு!!”
“அட போ மா!!! நீ வேற!!! அவாகிட்ட எல்லாம் எது பேசினாலும் பிரச்சினையில தான் கொண்டு போய் முடிப்பா. நானே அதுனால தான் வாய் குடுக்காம இத்தனை வருஷமா ஓட்டிண்டிருக்கேன்.”
“சரி சரி அதை எல்லாம் நினைச்சு கவலைப் படாதே மிருது. பெத்தவளே தன் பிள்ளையை அப்படி சொல்லியிருக்கக் கூடாது தான். ஆனா சொல்லிட்டா விடு. இதை எல்லாம் அந்த அம்மன் பார்த்துண்டு தானே இருக்கா. நீ வேணும்னா பாரு நம்ம நவீன் பெரிய ஆளா ஆகி ஏழாயிரம் என்ன அதைவிட பத்து மடங்கு சம்பாதிப்பார் பார்”
“ஆமாம் மா அவரை மட்டம் தட்டுற கூட்டத்துக்கு முன்னாடி அவரை பெரிய ஆளா ஆக்கிக் காட்டணும். அதுக்கு அந்த அம்மன் தான் துணை இருக்கணும்”
“பாரத்தை அவள் மேல் போட்டுட்டு உங்க வேலைகளில் மும்முரமாகுங்கோ எல்லாம் நல்லதே நடக்கும்”
என்ன தான் மாமனார் மாமியார் ஒன்றும் சொல்லாவிட்டாலும் நவீனுக்கு அங்கிருக்க சற்று உறுத்தலாகவே இருந்தது. டில்லியிலிருந்து வந்ததும் அவனுக்கு பங்களூர் கன்சல்டன்சியிலிருந்து ஃபோன் வந்தது. அதில் நவீனுக்கும் ஆர்டர் கன்பார்ம் ஆனதாகவும் அவனையும் மிருதுளாவுடன் வேலையில் சேரும் படியும் அதற்கான ஆஃபர் லெட்டரை வந்து வாங்கிக் கொள்ளும் படியும் கூறினர். அல்லது சேரும் நாளன்று பெற்றுக் கொள்ளலாம் என்றும் அந்த ஆஃபர் லெட்டரை ஈமெயிலில் அனுப்பி வைத்தது அந்த கன்சல்டன்சி. அதில் நவீனுக்கும் பதினெட்டாயிரம் சம்பளம் என்று அச்சிடப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் நவீனும், மிருதுளாவும் அவர்கள் வீட்டாரும் மகிழ்ச்சியானார்கள்.
அம்புஜம் இந்த செய்தியைக் கேட்டதும் விரைந்து சென்று அம்மனுக்கு விளக்கேற்றி மனமுருகி நன்றி சொல்லி தன் பிள்ளைகள் மென்மேலும் வாழ்வில் வளச்சியடைவேண்டும் எனவும் வேண்டிக் கொண்டாள்.
எல்லாம் சுபமே என்றெண்ணிக் கொண்டிருக்கையில் பங்களூரில் தன் நண்பன் மூலம் வீடு பார்த்தான் நவீன். அந்த வீட்டிற்கு ஐந்தாரம் வாடகை மற்றும் பத்து மாசம் அட்வான்ஸ் என்று தெரிந்ததும் மீண்டும் கவலையில் ஆழ்ந்தனர் நவீனும் மிருதுளாவும் ஏனெனில் அவர்களிடம் கையிருப்பு இருபத்தி ஐந்தாயிரம் தான் இருந்தது. நவீனுக்கு வர வேண்டிய பி.எஃப் தொகை இரண்டு மாதங்களுக்கு பிறகு தான் வரும்… அதற்குள் அட்வான்ஸ் குடுத்தாக வேண்டுமே என்று எண்ணிக் கொண்டிருக்கையில் மிருதுளா தன் அப்பாவிடம்
“அப்பா இந்த நகையை விற்று எனக்கு ஒரு ஐம்பதாயிரம் வாங்கித் தர முடியுமா?”
“எதுக்கு இப்போ நகை எல்லாம் விக்குற மிருது? இதை இப்போ வாங்கப் போணா எவ்வளவு ஆகும் தெரியுமா”
“தெரியும் ஆனா இப்போ எங்தளுக்கு பணம் தேவை அது தான்”
“எவ்வளவு தேவை?”
“பங்களூர் போய் செட்டில் ஆகணும் அதுக்கு வீட்டு அட்வான்ஸ் வாடகை, இங்கே இருந்து பொருட்கள் ஷிஃப்டிங்ன்னு ஒரு எழுபத்தைந்தாயிரம் தேவைப் படறது. எங்க கிட்ட இருபத்தைந்தாயிரம் இருக்கு. மீதிக்கு தான் இதை வித்தா ஐம்பது கிடைக்குமான்னு கேட்டேன்”
“அடிமாட்டு விலைக்கு எடுத்துப்பானே”
அப்பா மகள் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த அம்புஜம் தன் நகைகளைக் கொண்டு வந்து ராமானுஜத்திடம் கொடுத்து
“ஏய் மிருது உன் நகை எல்லாம் விற்க வேண்டாம். அடுத்தடுத்து உன் மச்சினன்கள் கல்யாணமெல்லாம் வரும் அப்போ மொட்ட கழுத்தோடவா நிப்ப…ஏன்னா உங்க கிட்ட பணமில்லையா?”
“என்கிட்ட ஒரு இருபதாயிரம் இருக்கு மீதி எல்லாம் ரொடேஷன்ல இருக்கே”
“சரி மீதம் முப்பதாயிரத்துக்கு இந்தாங்கோ என் நகையை வித்தோ இல்லை அடமானம் வச்சோ பண்ம் கொண்டு வாங்கோ. நம்ம பொண்ணுக்கு நாம செய்யாம வேற யாரு செய்வாளாம்!!”
என்று ராமானுஜமும் அம்புஜமுமாக சேர்ந்து ஐம்பதாயிரம் ஏற்பாடு செய்து கொடுத்தனர். அவர்களின் அன்பையும் பாசத்தையும் பார்த்ததும் நவீனுக்கு அவர்கள் மீதானா மதிப்பும் மரியாதையும் கூடியது. அன்று மிருதுளாவிடம்
“உன் அப்பா அன்ட் அம்மா ஆர் க்ரேட் மிருது. நம்ம மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கா”
“ஆமாம் நவீ. ஆனா ஒண்ணு அவா பணத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திருப்பிக் கொடுத்திடணும் புயிஞ்சுதா”
“கொடுத்திடலாம் மிருது…ஆனா ஏன் நீ அப்படி சொல்லுற?”
“என்னைக்குமே சொந்தக்காராகிட்ட கொடுக்கல் வாங்கல் வச்சுக்கக்கூடாதுன்னு எங்க அப்பா நான் சின்னதா இருந்ததிலிருந்து சொல்லிக் கேட்டிருக்கேன் அது தான்.”
“ஓ!! ஓகே டன். அப்போ இந்த வீக் என்ட் முதல் பங்களூர் வாசிகளாக போறோம்”
“எஸ் நவீ. சக்திக் குட்டிக்கு நல்ல ஸ்கூல் பார்க்கணுமே”
“நமக்கு வீடு பார்த்திருக்கோமே அதுக்கு பக்கத்திலேயே ஆர்மி ஸ்கூல் இருக்கு அங்கேயே சேர்த்துடலாம்.”
“ஓ!!! அப்படியா….அப்போ ஓகே!! என்ன சக்தி குட்டி புது ஸ்கூல் போக ரெடியா?”
ஐந்தாயிரம் சம்பளத்திலிருந்து படி படியாக உழைத்து, கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயண்படுத்திக் கொண்டு, ஏளனம், குத்தல் பேச்சுக்களுக்கெல்லாம் செவி சாய்க்காமல் நவீனும் மிருதுளாவும் இணைந்து வாழ்க்கையில் முன்னோக்கி நகர்ந்துக் கொண்டே இருக்கிறார்கள்.
தொடரும்…..
அத்தியாயம் 78: விசேஷம், விளக்கம், விருந்தோம்பல்
பிச்சுமணி மாமாவிடம் பேசி முடித்ததும் பைக்கில் வீட்டுக்கு கிளம்பினர் நவீனும் மிருதுளாவும். மறுநாள் விடியற்காலை நாலரை மணிக்கெல்லாம் எழுந்து ரெடியாகி ரம்யா சித்தி மகளின் திருமணத்திற்கு சென்றனர். அங்கே மூத்த தம்பதியர் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தனர். அதை எல்லாம் கண்டும் காணாது மற்ற அனைவருடனும் சந்தோஷமாக பேசி சிரித்துக் கொண்டிருந்தனர் நவீனும் மிருதுளாவும். திருமணம் இனிதே நடந்தேறியது. மத்திய உணவருந்த அனைவரும் சென்றனர். மண்டபத்தின் ஹாலின் ஒரு பகுதியில் தரையில்… மடியில் சக்தியுடன் தனியாக அமர்ந்திருந்தாள் மிருதுளா.
அங்கே வந்த பிச்சுமணி மனைவி அம்பிகா மிருதுளாவிடம்
“என்ன மிருது சாப்பிட போகலையா?”
“இல்ல மாமி. சக்தி தூங்கறா அதுதான் உட்கார்ந்துண்டிருக்கேன். நவீன் சாப்பிட்டு வந்து இவளை என்கிட்ட இருந்து வாங்கிண்டுட்டார்ன்னா நான் சாப்பிட போவேன். நீங்க சாப்ட்டாச்சா மாமி?”
“இன்னும் இல்லை மிருது. உன் மாமியார் மாமனார் தான் சாப்பிட்டுட்டு வந்தாச்சே அவாகிட்ட குழந்தையை குடுத்துட்டு நீயும் நவீனுடனே சாப்பிட போயிருக்கலாமில்லையா!!!”
“ம்….ம்….நவீன் வந்துடுவார் மாமி. அதுவுமில்லாம எனக்கு அவ்வளவா பசியில்லை. அவர் வந்ததுக்கப்புறமா போயிக்கறேன்”
“ம்…விட்டுக்கொடுக்க மாட்டியே!!! ஆனா அவா எல்லாம் அதற்கு வர்த்தே இல்லை”
“யாரு மாமி?”
“ம்…உன் மாமனார், மாமியார், மச்சினன் எல்லாரும் தான்”
“அவா வர்த்தோ இல்லையோ இது தான் நான். ஆமா நீங்க ஏன் அப்படி சொல்லறேங்கள்?”
“உன் மாமா நேத்து உங்க கிட்ட அவர் அக்காவுக்காக பரிஞ்சு பேச வந்திருப்பாரே!!”
“ஆமாம் பேசினார் அதுக்கென்ன மாமி?”
“அது அவரா வரலை தெரியுமா?”
“தெரியும் மாமி. யார் அவரை அனுப்பியிருப்பான்னு எனக்கும் நவீக்கும் நல்லாவே தெரியும். அது மட்டுமில்லாம அதை மாமாகிட்டயே சொன்னோம்”
“இந்த மனுஷனுக்கு என்னத்துக்கு இந்த வேலையெல்லாம் சொல்லு!!!”
“விடுங்கோ மாமி. மாமா ஏதோ அக்கா மேல உள்ள பாசத்தால் அப்படி பேசினார்.”
“ஹலோ உனக்கும் நவீனுக்கும் மாமா பேச வந்ததும் அதை பேச வைத்தது உன் மாமியார்ன்னு மட்டும் தான் தெரியும் ஆனா அங்க நடந்ததே வேற அது தெரியுமா?”
“அங்க நடந்தது எங்களுக்கு எப்படி மாமி தெரியும்?”
“நான் சொல்லறேன் கேட்டுக்கோ.”
“எனக்கு வேண்டாம் மாமி. அங்க அவா என்ன பேசியிருந்தாலும் அதை நான் தெரிஞ்சுக்க விரும்பலை விட்டுவிடுங்கோ”
“அடியே அசடு. நீ தெரிஞ்சுண்டா தான் யார் யார் எப்படின்னு உனக்கு புரிஞ்சுக்கவும் அது படி நடக்கவும் தெரியும்.”
“சரி சொல்லுங்கோ.”
“முந்தானாள் நைட்டு ரம்யா ஆத்து ஹாலில் ஒரு மாநாடே நடந்தது”
“ரம்யா சித்தி விட்டு ஹாலில் என்ன மாநாடு?”
“எல்லாம் உன்னையும் நவீனையும் பத்தின மாநாடு தான் அது.”
“என்னையும் நவீனையும் பத்தி பேச எதுக்கு மாநாடு எல்லாம். மாமாவும் அவாளும் தானே பேசியிருப்பா? மாமி மூணு பேர் சேர்ந்து பேசினா அது மாநாடாகிடுமா? என்ன மாமி!!!”
“மூணு பேரா!!! அது தான் இல்லை. அங்கே நம்ம குடும்பத்துல இருக்கிற உன் மாமியாரோட அக்கா, தங்கைகள் அவா அவா ஆத்துக்காரர்கள், கவின் கஜேஸ்வரி, நான் எங்காத்துக் காரர்ன்னு ஒரு படையே அங்க இருந்தோம். எல்லாரையும் அங்க கூடச் சொன்னது யார் தெரியுமோ?”
“யார் மாமி?”
“எல்லாம் உன் மச்சினன் கவின் தான்”
“அவன் எதுக்கு எல்லாரையும் அங்க ஆஜராகச் சொன்னான்?”
“அந்த கேள்வி எனக்கும் இருந்தது அவா சொல்லும்போது. அங்க போணதுக்கு அப்புறம் எல்லாம் புரிஞ்சுது. அவன் தான் பேச்சை ஆரம்பிச்சு வச்சான். உங்க ரெண்டு பேர்கிட்டேயும் உங்க மாமனார் மாமியாரைப் பத்தி பேசினானாமே!!!”
“என்ன பேசினானாம்?”
“கேளு நீ கதையை. அதுல அவன் புரிஞ்சுண்டது வரைக்கும் …நீங்க அவன் அப்பா அம்மாவை மதிக்கறதில்லையாம், மரியாதைக் கொடுக்கறதில்லையாம், உங்க பாத்திரங்கள் சீர் சாமான்கள் எல்லாத்தையும் உன் வீட்டுக்கே கொடுக்கறா மாதிரி கொடுத்துட்டு எடுத்துண்டு போயிட்டேங்களாம். அப்படி இப்படின்னு குற்றப்பத்திரிகை வாசிச்சான். அவன் முடிச்சதும் உன் மாமியார் மாமனார் வாசிச்சா”
“எல்லாருக்கும் முன்னாடியா இப்படி எல்லாம் பேசினா?”
“ஆமாம் மா. அதுனால தானே எனக்கு தெரிஞ்சுது. இல்லாட்டி எனக்கெப்படி தெரியும். உங்க மாமா அவர் அக்கா தங்கைகள் விஷயங்களை எல்லாம் என்கிட்ட மூச்சு விடமாட்டார்.”
“ம்…ம்…மாமா சொன்னார். ஆனா நடந்ததை எல்லாம் அவாளுக்கு சாதகமா தான் சொல்லிருக்கான்னு மாமா கேட்ட கேள்விகளிலிருந்து புரிஞ்சுண்டோம் அதற்கான விளக்கத்தை மாமாகிட்ட சொல்லியாச்சு மாமி. ஆனா இவா இப்படி எல்லார்கிட்டயும் சொல்லிருப்பானு சத்தியமா நான் எதிர் பார்க்கலை. எல்லாம் அந்த அம்மனுக்குத் தெரியும் அவ பார்த்துப்பா”
“உன்னையும், நவீனையும் பத்தின கதாகாலட்சேபமே நடந்தது.”
“அதைக் கேட்ட ஒருத்தரும் எங்க மாமனார் மாமியார்கிட்ட ஏன் இப்படி எல்லாரையும் வச்சுண்டு உன் புள்ளையையும் மாட்டுப்பொண்ணையும் பேசறன்னு கேட்கலையா?”
“இல்லையே. ஒருத்தரும் வாயைத் திறக்கலை. அவா ஏன் சொல்லப்போறா மிருது? அவாளுக்கெல்லாம் என்ன வந்தது? அப்படி எல்லார்கிட்டேயும் நம்ம புள்ளையைப் பத்தி சொல்லறோமேன்னு உன் மாமனார் மாமியாருக்கில்லையா தோணிருக்கணும்!!! சொல்லறவா வெட்கமில்லாம சொன்னா கேட்கிறவாளுக்கு என்ன அவா பாட்டுக்கு கேட்டுட்டு தான் போவா. ஆனா அதை எல்லாம் என்னால ஜீரணிச்சுக்கவே முடியலை அது தான் உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன். ஏன்னா நானும் உன் மாமியாரால ரொம்ப பட்டுட்டேன் மா. அவ அப்படி தான். அவளோட நிம்மதி சந்தோஷம் எல்லாமே அடுத்தவாள பிரிக்கறது, அடுத்தவா நிம்மதியை கெடுக்கறது எல்லாம் தான். அதை தட்டிக் கேட்க வேண்டிய உன் மாமனாரும் ஒத்தூதரார் பின்ன கேட்கவா வேணும் சொல்லு. என் மனசுல பட்டதையும், அங்க நான் பார்த்ததையும், கேட்டதையும் சொல்லிட்டேன். சரி வர்றயா சாப்பிட போகலாம். சக்தியை அப்படியே தூக்கிண்டு வாயேன் “
“இல்ல மாமி நவீ வந்திடட்டும் அப்புறம் நான் வர்றேன். நீங்க போய் சாப்பிடுங்கோ”
“ஓகே. நீ உங்க ஆத்துக்காரர் வந்துட்டே வா. நான் போறேன். ஹேய்!! இதோ நவீனே வந்துட்டானே. இப்போ வருவே இல்லையா!!”
“சரி மாமி. நீங்க டைனிங் ஹாலுக்கு போயிண்டே இருங்கோ நான் பின்னாடியே வர்றேன்”
“வா வா. நான் வெயிட் பண்ணறேன்.”
“நவீ இந்தாங்கோ சக்தியை வச்சுக்கோங்கோ. நான் மாமிகூட போய் சாப்பிட்டுட்டு இதோ வந்துடறேன்.”
“ஓகே மிருது. நீ போய் நிம்மதியா சாப்பிட்டுட்டு வா. நான் சக்தியைப் பார்த்துக்கறேன்.”
என்று நவீன் கூறியதும் அம்பிகாவுடன் சாப்பிடச் சென்றாள் மிருதுளா. அன்று காலை முதல் மாலை வரை மூத்த தம்பதியரும் அவர்கள் மகன் கவினும் அவன் மனைவியும் நவீன் மிருதுளாவுடன் பேசாமல் இருந்தனர். அதை பெரிதுப் படுத்தாமல்… அது அவரவர் விருப்பம் என்று விட்டு விட்டனர். மாலை நலங்கு நடந்தது. அதில் மிருதுளாவைப் பாட்டுப்பாடச் சொன்னார் ரம்யா சித்தி. உடனே எந்த தயக்கமுமின்றி “யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே” என்று பாடி முடித்ததும் மிருதுளாவை அனைவரும் பாராட்டினர். அதை கவனித்த கஜேஸ்வரி மிருதுளாவிடம்
“ஏன் மன்னி எங்க கல்யாணத்துல நீங்க பாடலை?”
“எனக்கு தோணலை கஜேஸ்வரி. சரி அது இருக்கட்டும் எப்போ நம்ம ஆத்துக்கு வரப்போறேங்கள்?”
“கவின் கிட்ட தான் கேட்கணும் மன்னி. நான் வர ரெடி தான் ஆனா அவர் மாமா மாமி பர்மிஷன் கொடுத்தா தான் வருவார்”
“யாரு? கவினா? அவன் அவா பர்மிஷனுக்கெல்லாம் வெயிட் பண்ணறவனா என்ன!!!!”
“அட ஆமாம் மன்னி.”
“சரி கஜேஸ்வரி நாங்க ஆத்துக்கு கிளம்பறோம். அனேகமா நவீன் கவின் கிட்ட ஆத்துக்கு வரச்சொல்லியிருப்பார். பார்த்துக்கோ முடிஞ்சா வந்துட்டுப் போங்கோ சரியா. நான் வரட்டுமா”
“சரி மன்னி. பை.”
என்று அங்கிருந்து எழுந்து மற்ற அனைவரிடமும் தாங்கள் கிளம்புவதாக கூறி, வீட்டுக்கு வந்து செல்லும்படி அழைப்பு விடுத்து விடைப் பெற்றுக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பிச் சென்றனர் நவீனும் மிருதுளாவும்.
வீட்டிற்கு வந்ததும் மிருதுளா நவீனிடம் அம்பிகா மாமி சொன்னதனைத்தையும் கூறினாள். அதைக் கேட்டதும் நவீன்
“நம்மளை அசிங்கப் படுத்தறதா நினைச்சுண்டு அவா தான் அசிங்கப் பட்டிருக்கா. விடு விடு இவாளெல்லாம் திருத்த முடியாது. என்ன வேணும்னாலும் சொல்லிண்டு நடக்கட்டும். நாம நம்ம வேலையைப் பார்த்துண்டு இருப்போம்.”
“ஆமாம் நீங்க வேறென்னத்தை சொல்லப் போறேங்கள்? அவா டார்கெட் நான் தானே. என்னை கேவலப் படுத்தறது தான் அவாளோட நோக்கமே”
“வேற என்ன சொல்ல முடியும் மிருது. அவாகிட்ட ஏன் அப்படி செஞ்சன்னு கேட்கணுமா?”
“கேட்டுட்டாலும் அப்படியே அன்பா கேட்டதுக்கு பதில் சொல்லிடவா போறா? அதையும் ஊதி பெரிசாக்கி சண்டைக்கு தான் வந்திருப்பா”
“தெரியறது இல்ல!! பின்ன! இது மாதிரி கேரக்டெர்ஸ்ஸை எல்லாம் இக்னோர் பண்ணிடறது தான் நம்ம லைஃப்புக்கு நல்லது. தே த்ரைவ் ஆன் டிராமா, ஆக்டிங், அன்ட் இன்ஃபர்மேஷன் தெரியுமா. அதுனால தான் ஒவ்வொரு தடவையும் நீ இவாளைப் பத்தியோ இல்லை அவா சொன்னதைப் பத்தியோ கவலைப் படும்போதெல்லாம் விட்டுவிடுன்னு சொல்லறேன் தெரியுமா!!”
“சரி சரி வேறென்ன பண்ணறது? குட் நைட் நவீன்.”
“குட் நைட் மிருது.”
மறுநாள் காலை நவீன் வீட்டிற்கு ஒரு ஃபோன் கால் வந்தது. அதில் கவின்
“ஹாய் நவீன் நாங்க எல்லாரும் உங்க ஆத்துக்கு மத்தியானம் இங்க சாப்டுட்டு வரலாம்ன்னு இருக்கோம். ஈஸ் இட் ஓகே?”
“ஓ எஸ் தாராளமா வாங்கோ.”
“சரி அப்போ மத்தியானத்துக்கு மேல பார்ப்போம் வச்சுடவா”
“ஓகே பை”
என்று கால் கட் ஆனதும் மிருதுளாவிடம் விவரத்தை கூறினான் நவீன். உடனே மிருதுளா ஈவினிங் என்ன ஸ்னாக்ஸ் செய்வதென்ற யோசனையில் மூழ்கியவள் சட்டென்று
“ஓகே! நவீ நான் சாயந்தரத்துக்கு கேசரி, மசால் வடை, தேங்காய் சட்னி அன்ட் ஃபில்டர் காஃபி செஞ்சுடறேன். என்ன சொல்லறேங்கள். யார் யார் வராலாம்?”
“அதெல்லாம் அவன் சொல்லலை நானும் கேட்கலை வந்ததும் பார்த்துக்கலாம். ஆமாம் நீ மாசமாகி உன் மாமியார் வீட்டுக்குப் போணயே உனக்கு ஏதாவது செய்து தந்தாளா? நீ மட்டும் ஏன் இப்படி இருக்க?”
“அது அவா குணம். இது என் குணம். விடுங்கோ விடுங்கோ”
கவின் கூறியது போலவே ஒரு வேனில் அனைவரும் வந்திறங்கினர். மூத்த தம்பதியர், கவின் கஜேஸ்வரி, பர்வதத்தின் அக்கா, தங்கைகள் அவர்களின் கணவர்கள் குழந்தைகள் என ஒரு இருபது பேர் வந்திருந்தனர். அனைவரையும் வீட்டினுள் அழைத்து அமரவைத்து பேசிக் கொண்டிருந்தனர் நவீனும் மிருதுளாவும். மூத்த தம்பதியர் அப்பொழுதும் ஏதும் பேசாமல் தங்கள் பேத்தியைக் கூட கொஞ்சாமல் அமர்ந்திருந்தனர். அனைவருக்கும் தட்டில் கேசரி, வடை, சட்னி போட்டு பரிமாறினாள் மிருதுளா. பின் ஃபில்டரிலிருந்து டிக்காக்ஷனை எடுத்து காபி போட்டு கொடுத்தாள். வந்திருந்தவர்களில் மூத்த தம்பதியரும் அவர்கள் வாரிசுகளும் தவிர மற்ற அனைவரும் மிருதுளாவை புகழ்ந்து தள்ளினர். எல்லாரும் சாப்பிட்டப் பின் ரம்யா வீட்டிற்கு கிளம்ப ஆயத்தம் ஆனார்கள். அப்போது வந்திருந்த அனைவருக்கும் தாம்பூலம் கொடுத்து, கவினும் கஜேஸ்வரியும் திருமணமான பின் அன்று தான் முதல் முறை வீட்டுக்கு வந்திருந்ததால் மிருதுளா தன்னிடம் வியாபாரத்துக்கிருந்த புடவை ஒன்றையும் நவீனிடமிருந்த புது வேஷ்டி அங்கவஸ்திரத்தையும் வைத்துக் கொடுத்தாள். அனைவரும் வந்த வேனில் ஏறிச் சென்றனர். அவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு வீட்டினுள் வந்ததும் மிருதுளா நவீனிடம்
“நாலு மணி நேரம் போணதே தெரியலை இல்ல நவீ.”
“ஆமாம் மிருது. ஆனா உனக்கு தான் செம வேலை ஆயிடுத்து.”
“எப்பவாவது தானே இப்படி எல்லாருமா வர்றா. இட்ஸ் ஓகே நவீ. வந்த எல்லாரும் நல்லா கலகலன்னு பேசினா உங்க ஃபேமிலியை தவிற”
“மிருது…”
“சரி சரி விட்டுடறேன்… விட்டுடறேன்”
நல்லபடியாக ரம்யா சித்தி மகள் திருமணமும் முடிந்தது சொந்தங்கள் அனைவரும் மிருதுளா நவீன் வீட்டிற்கும் வந்து சென்றனர்.
காலம் வேகமாக சுழன்றது. மிருதுளா வீட்டிலிருந்த படியே புடவை வியாபாரம், டியூஷன் என்று படி படியாக அங்கு பிரபலமாகி வரும் போது நவீனுக்கு ராஜஸ்தான் ஜோத்பூரில் போஸ்டிங் வந்தது. மூட்டையைக் கட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு ராஜஸ்தான் சென்றனர். அங்கே புடவை வியாபாரத்தை விடாமல் தொடர்ந்தாள் மிருதுளா. ஆனால் டியூஷன் எடுக்க வாய்ப்புக் கிடைக்காததால் அங்கிருந்த ஆரம்பப் பள்ளியில் ஆசிரியையாக சேர்ந்தாள். அதனால் அவளுக்கு நிறைய பெண்மணிகளுடன் பரிச்சயம் கிடைத்தது. வியாபாரமும் சற்று லாபகரமாக இருந்தது.
ஜோத்பூரில் ஆரம்பப் பள்ளியில் ஒரு வருடம் ஆசிரியையாக வேலைப் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே ப்ளஸ் ஒன் ப்ளஸ் டூ வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை என்ற விளம்பரம் பார்த்து அங்கே விண்ணப்பித்து அந்த வேலையில் நியமிக்கப்பட்டு சிறந்த ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டே புடவை வியாபாரத்தையும் செய்து வந்தாள். அங்கு பெரிய ஆஃபிஸர் மனைவிமார்களின் நட்பு கிடைக்க அவர்களிடம்… ஒரு சிறிய வீக் என்ட் புடவை மார்கெட் போல ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளில் போடுவதற்கு பர்மிஷன் வாங்கி அதுபடியே ஞாயிறு தோறும் புடவை வியாபாரத்தை தங்கள் கேம்புக்குள்ளே இருக்கும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் விற்பனை செய்து வந்தார்கள் நவீனும் மிருதுளாவும்.
இப்படியே அவர்கள் வாழ்க்கை சக்கரம் வேகமாக ஓடிக் கொண்டிருந்ததில் நவீன் தனது பதினைந்து வருட சர்வீஸ்(பென்ஷன் எளிஜிபுள்) முடித்தது மறந்து போனார்கள் இருவரும். சக்தியும் யூ கேஜி முடித்து ஃபர்ஸ்ட் ஸ்டான்டர்டு போயிருந்தாள்.
நவீனுக்கு ஈஸ்வரனிடமிருந்து ஃபோன் கால் வந்தது. அதில் அவர்கள் ஜோத்பூர் வருவதாக சொன்னார்கள். அதே சமயம் மிருதுளாவுக்கு அம்புஜத்திடமிருந்து ஃபோன் வந்தது. அதில் அவளும் ஜோத்பூர் வருவதற்கு ஆவலாக இருப்பதாகவும் எப்போது வரலாமென்றும் கேட்டாள். அதற்கு மிருதுளா எப்ப வேண்டுமானாலும் வரலாமென்று சொல்ல… அம்புஜம் அடுத்த வாரமே வருவதாக சொல்லி ஃபோனை வைத்தாள். அன்று மாலை நவீன் வீட்டிற்கு வந்ததும் தனக்கு வந்த ஃபோன் கால் விவரத்தைச் சொன்னான். அதைக் கேட்டதும் மிருதுளா
“வாட் எ கோ இன்ஸிடென்ஸ்!! என் அம்மாவும் அடுத்த வாரம் வர்றதா சொல்லி ஃபோன் பண்ணினா. சுப்பர், சுப்பர் அப்போ இந்த வருஷம் நம்ம சக்தி பர்த்டேக்கு ரெண்டு பாட்டிகளும் ஒரு தாத்தாவும் இருக்கப் போறா”
“சுப்பரா இல்லையான்னு எல்லாரும் வந்ததுக் கப்புறமா தான் தெரியும் மிருது. பார்ப்போம்”
அனைவரும் ஒருவருக்கொருவர் தெரியாமலே ஒன்றாக வந்திறங்கினர். அவர்களின் வருகையைப் பற்றி ஏதும் நவீனும் மிருதுளாவும் இரு தரப்பினருக்கும் சர்ப்ரைஸாக இருக்கட்டுமென்று கூறாமல் இருந்தனர்.
அனைவரையும் ஒரு வண்டி ஏற்பாடு செய்து ராஜஸ்தான் முழுவதும் சுற்றிப் பார்க்க அழைத்துச் சென்றனர் நவீனும் மிருதுளாவும். சுற்றுலா முடிந்து வீட்டுக்கு வந்ததும் மிருதுளா சக்தியின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடத்த ஏற்பாடுகளில் இறங்கினாள். வீட்டு வேலை, ஸ்கூல் வேலை, சக்தியை கவனித்துக் கொண்டும், பிறந்த நாள் விழா நடத்துவதற்கும் என ஓடிக் கொண்டிருந்தாள் மிருதுளா. அவளுக்கு உதவியாக அந்த நேரத்தில் கைக் கொடுத்தது அவள் அம்மா அம்புஜம் தான்.
சக்தியின் பிறந்த நாள் விழாவுக்கு மிருதுளா அவள் தோழிகள் மற்றும் அவள் பணியாற்றும் பள்ளியில் அவளுடன் வேலைப் பார்ப்பவர்கள் அக்கம்பக்கத்தினர் என் அனைவருக்கும் அழைப்பு விடுத்தாள். நவீன் தன்னுடன் வேலை பார்ப்பவர்களை அழைத்திருந்தான். அவர்கள் வீட்டின் மொட்டைமாடியில் ஷாமியானா பந்தல் போடப்பட்டது. தடபுடலாக சமையற் காரர்கள் வந்து அன்றைய இரவு விருந்துக்கு அனைத்தையும் தயார் செய்துக் கொண்டிருந்தனர். இதை எல்லாம் பார்த்த பர்வதம் அவளின் தங்கைக்கு ஃபோன் போட்டு பேசிக் கொண்டேயிருக்கையில்
“இங்கே இன்னைக்கு சக்திக்கு பிறந்தநாள். அதுனால பந்தல், விருந்துன்னு ஒரே அமர்க்களமா இருக்கு. தேவையே இல்லாம வீண் செலவு பண்ணறா இவா. பணத்தை தண்ணியா செலவழிக்கறா. ம்… என்ன சொல்ல? நாம சொன்னா கேட்கவா போறா?”
என்று பேசுவதைக் கேட்ட மிருதுளாவுக்கு கோபம் வந்தது. தன் மாமியார் ஃபோனை வைத்ததும். அவரிடம் நேராக சென்று
“பேத்திக்கு பிறந்த நாள் கொண்டறது உங்களுக்கு வீண் செலவா? அவ அப்பா அம்மா நாங்க ஓடியாடி சம்பாதிக்கறோம் கொண்டாடுறோம். எங்க குழந்தையோட பிறந்த நாளை நாங்க கொண்டாடாம வேற யாரு கொண்டாடுவா. ப்ளீஸ் இதை வீண் செலவுன்னு இனிமேட்டு சொல்லாதீங்கோ. முடிஞ்சா குழந்தையை ஆசிர்வாதம் பண்ணுங்கோ இல்லாட்டி இன்னிக்கு பேசமயாவது தயவுசெய்து இருங்கோ.”
என்று கூறிக்கொண்டிருக்கையில் சமையற்காரர் வந்து ஏதோ கேட்டதும் அங்கே சென்று மீண்டும் வேலையில் மூழ்கினாள் மிருதுளா.
அன்று மாலை சிறப்பாக சக்தியின் பிறந்த நாள் விழா நடந்து முடிந்தது. வந்திருந்த அனைவரும் குழந்தையை ஆசிர்வதித்து பரிசுப் பொருட்கள் கொடுத்து விருந்துண்டுச் சென்றனர். அப்போது நவீனின் நெருங்கிய நண்பர்களை வழியனுப்பி வைக்கும் போது அதில் ஒருவர் நவீனிடம்
“ஹேய் நவீன் நீயும் நானும் ஒன்னா தான் சர்வீஸ்ல சேர்ந்தோம் ஞாபகமிருக்கா?”
“ஓ எஸ் நல்லாவே ஞாபகம் இருக்கு நண்பா”
“போன மாசத்தோட நாம ஃபிஃப்டீன் இயிர்ஸ் கம்ளீட் பண்ணிட்டோம் மேன். வீ ஆர் நவ் எளிஜிபுள் ஃபார் பென்ஷன்”
“ஓ!!! எஸ்!!! ஆமா டா.”
இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த மிருதுளாவுக்கு நவீனும் அவளும் முன்பொரு நாள் பேசிக் கொண்டது ஞாபகம் வந்தது. அதைப் பற்றி நவீனிடம் அனைவரும் சென்றதும் பேசினாள். அதற்கு நவீன் யோசிக்க வேண்டும் என்று கூறிவிட்டு உறங்கிப் போணான். ஆனால் மிருதுளா தூக்கம் வராமல் புரண்டுப் புரண்டு படுத்தாள். மறுநாள் காலை விடிந்ததும் நவீனின் அப்பாவிடம்
நவீனுக்கு பதினைந்து வருடம் சர்வீஸ் முடிஞ்சிடுத்து அதுதான் வி.ஆர்.எஸ் வாங்கச் சொல்லறேன் கேட்க மாட்டேங்கறார் பா. அவரோட டேலன்ட்டுக்கு வெளியில் போனா பெஸ்ட்டா வருவார்ன்னு எனக்கு தோணறது. கொஞ்சம் நீங்களாவது சொல்லுங்கோளேன். “
“என்னது கவர்மென்ட் வேலையை விடச் சொல்லறயா? உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்”
என்று சொன்னதும் வாடிப் போனாள் மிருதுளா. அன்று மாலை பர்வதம் தன் தங்கைகளுக்கு ஃபோன் போட்டு மிருதுளா நவீனிடம் வேலையை விடச் சொல்லறான்னு சொல்ல ….அதற்கு சித்திகள் மாறி மாறி ஒரே அட்வைஸ் மழையை பொழிந்தனர். வெளில போணா வீட்டு வாடகையே வாங்கற சம்பளத்தை சாபிட்டு விடும், இங்கே இருக்கறா மாதிரி கேன்டீன் வசதி எல்லாம் வெளிலே கிடையாது. ஒவ்வொரு பொருள் என்ன விலை விக்கறது!!! அதுவுமில்லாம சக்திக்கு இது மாதிரி நல்ல ஸ்கூல் வெளில கிடைக்குமா அப்படியே கிடைத்தாலும் பணத்தைக் கொட்டிக் குடுக்க வேண்டியிருக்கும். நவீனுக்கு இந்த வேலை தான் சரி அப்படி இப்படின்னு சொன்னதை எல்லாம் கேட்டதில் மிருதுளாவின் காது வலித்தது. ஃபோனை வைத்துவிட்டு தன் மனதில் “இந்த அப்பாவிடம் சொன்னது தப்பா போச்சு. இவா எல்லாரும் ஊருக்கு போகட்டும் அப்புறமா நவீன்ட்ட இதைப் பத்தி பேசலாம்” என்று எண்ணிக் கொண்டே அவளது வேலைகளில் மூழ்கினாள் மிருதுளா.
தொடரும்……
அத்தியாயம் 77: விறு விறு வியாபாரமும்! வீண்பழி வேந்தர்களும்!
கையில் பத்துப் புடவைகளுடன் மனதில் புதிய கனவுகளுடன் குஜராத் சென்றாள் மிருதுளா. அக்கம் பக்கத்தினரிடம் தான் புடவை வியாபாரம் செய்வதாக தெரிவித்து நமது தென்னிந்திய புடவைகளின் சிறப்புகளை எடுத்துரைத்தாள். அவற்றை மாத தவணைக்கு தருவதாகவும் சொன்னாள். அனைவரும் மிருதுளா வீட்டுக்கு சென்று புடவைகளைப் பார்த்தனர். நன்றாக இருக்கிறது என்றும் கூறினர். ஆனால் ஒரு புடவைக் கூட வியாபாரம் ஆகவில்லை. அதனால் சற்று சோர்வடைந்தாலும் மீண்டும் ஒரு யோசனை செய்து அவர்கள் இருந்த கேம்பஸின் கம்யூனிட்டி சென்டரில் (அந்த யூனிட் ஹெட்டிடம் அனுமதிப் பெற்று) ஒரு பேப்பரில் தான் விற்பனை செய்யும் புடவைகளின் டிசைன்களுக்கு தானே ஒரு விளம்பரப்படம் வரைந்து அதை அங்கே ஒட்டினாள் மிருதுளா. இரண்டு நாட்கள் கடந்தன எவரும் வரவில்லை. மூன்றாவது நாள் நவீனின் நண்பரும் அவர் மனைவியும் நவீன் மிருதுளா வீட்டிற்கு வந்தனர்.
“ஹாய் ஹர்ஷா ப்ளீஸ் கம் இன்”
“நமஸ்தே பெஹன்”
“நமஸ்தே பையா”
“என்ன பக்கத்து கேம்பஸ் பீப்புள் எங்க கேம்பஸுக்கு வந்து இருக்கீங்க!!”
“அதுவும் ரொம்ப நாள் கழிச்சுன்னு சொல்லுங்கோ நவீன். இந்தாங்கோ உங்களுக்குப் பிடித்த சவுத் இந்தியன் ஃபில்டர் காபி. எடுத்துக்கோங்கோ”
“ம்…இப்போ சொல்லுங்கோ எப்படி இருக்கேங்கள்? பசங்க எப்படி இருக்கா?”
“எல்லாரும் நல்லா இருக்கோம் மிருது. நீங்க என்ன பிஸ்னஸ் உமன் ஆகிட்டிங்க?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை வீட்டில் சும்மா இருக்கறதுக்கு ஏதாவது பண்ணலாமேன்னு தான் ஆரம்பிச்சிருக்கேன்.”
“ஏன் உங்க வேலையை விட்டுட்டிங்க? நீங்க அப்படி ஒரு எம்.என்.ஸீ கம்பெனியில் வேலைப் பார்க்கும் போது எங்களுக்கெல்லாம் எவ்வளவு பெருமையா இருந்துச்சு தெரியுமா!! நம்ம கேம்புலேயே நீங்க ஒரு உமன் தான் அப்படி ஒரு வேலையை பார்த்தீங்க. ரியலீ யூ ஆர் க்ரேட் ன்னு நாங்க எல்லாருமே பேசிக்கிட்டோம்.”
“ஹே ஹர்ஷா அதுக்கு முன்னாடி ஷு காட் ஆன் ஆஃபர் இன் ஜு கேப்பிடல் வித் டிரேயினிங் ஃபார் சிக்ஸ் மந்த்ஸ் இன் அமெரிக்கா. ஷு ரெஃபூஸ்டு இட்”
“ஏன் சிஸ்டர்?”
“இல்ல பையா எனக்கு நவீயையும் எங்க பொண்ணு சக்தியையும் தனியா விட்டுட்டு போறதுக்கு மனசே வரலை அது தான் ரெஃப்யூஸ் பண்ணிட்டேன்.”
“அச்சச்சோ !! ஒரு ஆறு மாசம் தானே சிஸ்டர் நாங்க எல்லாரும் உங்க குழந்தையை பார்த்துக் கொண்டிருந்திருப்போமே!! நம்ம கேம்பஸிலிருந்து ஒரு பொண்ணு அமெரிக்கா போறான்னா நாங்க எல்லாருமா நிச்சயம் உங்களுக்கு ஹெல்ப் பண்ணிருப்போம். நவீன் நீ ஏன் அதை முன்னாடியே சொல்லலை?”
“அது அவளோட இஷ்டம். நான் என்ன சொல்ல இருக்கு ஹர்ஷா? சரி நீ சொல்லு “
“பையா இவரோட ஒண்ணு விட்ட சிஸ்டர் பொண்ணுக்கு விசேஷம் அதுக்கு அவங்களுக்கு இவர் புடவை எடுத்துக் குடுக்கணும் அதுதான் நம்ம மிருதுவோட விளம்பரம் பார்த்தேன் சரி உங்க கிட்டயே எடுக்கலாம்ன்னு வந்திருக்கோம்”
என்று ஹர்ஷா மனைவி கூறியதும் மிருதுளா முகம் பளிச்சிட்டது. அவள் உடனே அந்த புடவை பையை எடுத்து வந்து
“மிஸ்ஸர்ஸ் ஹர்ஷா இதோ பாருங்க இதெல்லாமே சவுத் இந்தியன் ஸ்பெஷல் சாரிஸ் இதோட பல்லுவைப் பாருங்க எவ்வளவு கிராண்டா இருக்குன்னு.”
“நல்லா இருக்கே!! எவ்வளவு மிருது?”
“₹ 750”
“சூப்பரா இருக்கு. ஆமாம் நீங்க இன்ஸ்டால்மென்ட் ல தர்றதா விளம்பரத்துல எழுதி இருந்ததே!”
“ஆமாம். த்ரீ ஆர் சிக்ஸ் மந்த்ஸ் இன்ஸ்டால்மென்ட்டில் எடுத்துக்கலாம்”
“ஹேய் ஹர்ஷ். எனக்கும் ஒண்ணு எடுத்துக்கவா?”
“பிடிச்சிருந்தா எடுத்துக்கோ.”
“ஓகே மிருது அப்போ நான் இந்த இரண்டு புடவையையும் எடுத்துக்கறேன். ஒரு புடவைக்கு இதோ பணம். இன்னொரு புடவைக்கு மூணு மாசமா தந்துடறேன்”
“நீங்க தான் எங்களோட சக்தி சாரீஸோட முதல் கஸ்டமர். தாங்க்யூ ஃபார் தி பர்சேஸ். உங்க நண்பர்களிடமெல்லாம் சொல்லுங்க ப்ளீஸ்”
“இந்தாங்க சிஸ்டர் அவ எடுத்த இன்னொரு புடவையோட காசும் வைச்சுக் கோங்க”
“இல்ல பையா அவங்க சொன்னா மாதிரியே மூணு மாசமா தந்தா போதும்”
“நோ நோ சிஸ்டர் நாங்க தான் ஃபர்ஸ்ட் கஸ்டமர்ன்னு சொல்லறீங்க அப்புறம் எப்படி நாங்க இன்ஸ்டால்மென்ட் ல வாங்கறது. நெக்ஸ்ட் டைம் வாங்கும் போது அப்படி வாங்கிக்கறோம் இப்போ இந்த பணத்தையும் வாங்கிக் கோங்க”
“தாங்க்ஸ் பையா”
“இட்ஸ் ஓகே மா. சரி நவீன் நாங்க இன்னொரு விஷயமாவும் பேச வந்திருக்கோம்”
“என்னது ஹர்ஷா?”
“அதுவும் நம்ம மிருதுளா சம்மந்தப்பட்டது தான். என் மூத்தப் பையன் ப்ளஸ் ஒன் காம்மர்ஸ் குரூப் படிக்கறான். அவனுக்கு டியூஷன் எடுக்கணும். நீ உன் வைஃப் பிகாம் கோல்டு மெடலிஸ்ட்ன்னு சொன்னது ஞாபகம் வந்தது அது தான் கேட்கலாமேன்னு…ஃபீஸ் எவ்வளுவுன்னும் சொன்னா டிசைட் பண்ண வசதியா இருக்கும். அவன் இப்போ ஒரு இடத்துல டியூஷன் போறான் ஆனா அவங்க நல்லா சொல்லித் தரமாட்டேங்கறாங்களாம். அதுவுமில்லாம அந்த இடம் ரொம்ப தூரத்துல வேற இருக்கு..என்ன சொல்லறேங்கள்?”
“ஓ!!! அப்படியா. என்ன சொல்லற மிருது?”
“பையா எனக்கு ஒரு டூ டேஸ் டைம் தர்றேங்களா நான் சொல்லறேன்.”
“ஓகே மா ஆனா நல்ல பதிலா சொல்லுமா. இன்னும் அவன் நண்பர்களும் வரலாம்”
“ஷுவர் பையா. நிச்சயம் ட்யூஷன் எடுக்கறேன். டைமிங் டிசைட் பண்ணதான் டூ டேஸ் கேட்கிறேன். நானும் நவீனும் டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்லறோம்”
“சரி மா. தாங்க்ஸ். நாங்க வந்த இரண்டு வேலைகளும் நல்ல படியா முடிஞ்சுது. எங்கடா இங்க இவளுக்கு புடவைப் பிடிக்கலேன்னா அப்புறம் டவுனுக்கு போகணுமேன்னு யோசிச்சுகிட்டு வந்தேன் நல்ல வேளை இங்கேயே இவளுக்கு பிடிச்ச மாதிரி கிடைச்சிடுச்சு”
“சாரீஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு மிருது. நான் எங்க கேம்பிலும் எல்லார்கிட்டயும் சொல்லறேன்.”
“தாங்க் யூ”
“சரி நாங்க அப்போ புறப்படறோம். பை நவீன் அன்ட் மிருதுளா.”
“பை பை ஹாவ் எ நைஸ் ஈவ்னிங்”
என்று வீட்டுக்கு வந்தவர்களை வழியனுப்பி விட்டு வீட்டினுள் வந்ததும் மிருதுளா நவீனிடம்
“வாவ்!!! நவீ நாம இரண்டு புடவைகளை விற்று விட்டோம். ஹேய்!!!”
“எஸ் !! எல்லாம் மெதுவா நடந்தாலும் நல்லபடியா நடக்கறது. சரி ஹர்ஷா சொன்ன டியூஷன் பத்தி நீ என்ன நினைக்கற?”
“எடுக்கலாம்ன்னு நினைக்கறேன். நீங்க என்ன சொல்லறேங்கள்?”
“உன் இஷ்டம் மிருது. உன்னால முடிஞ்சா தாராளமா பசங்களுக்கு சொல்லிக்குடு.”
“டியூஷன் டைமிங்க் ஈவினிங் ஒரு ஆறு மணி டூ ஏழு மணி ஃபிக்ஸ் பண்ணலாமா? ஏன்னா நீங்க ஃபைவ் தர்ட்டிக்கு வந்திடுவேங்கள். அதுக்குள்ள நான் நம்ம சக்திக்கு வேண்டியது ப்ளஸ் நமக்கு டின்னருக்கு எல்லாம் ரெடி செய்துடுவேன். டியூஷன் டைம்ல நீங்க சக்தியைக் கூட்டிண்டு பார்க்குக்கு போயிடுங்கோ. ஏழு மணிக்கு முடிச்சுட்டேன்னா…பசங்க போனதும் நம்ம நம்மளோட ரெகுலர் டைமான ஏழரைக்கு டின்னர் சாப்டிடலாம் என்ன சொல்லறேங்கள்?”
“ஓகே டன். ஆமாம் ஃபீஸ் எவ்வளவு சார்ஜ் பண்ணப் போற?”
“நாலு சப்ஜெக்ட்….ஸோ நாறூறு ரூபாய் வாங்கலாமா?”
“ஓகே அப்போ நான் ஹர்ஷா கிட்ட சொல்லிடவா?”
“எஸ் சொல்லிடுங்கோ நாளையிலிருந்து அவா பையனை வரச்சொல்லுங்கோ”
மறுநாள் பக்கத்து கேம்பிலிருந்து இரண்டு பெண்மணிகள் புடவைப் பார்க்க வந்திருந்தனர். அவர்கள் ஹர்ஷா வைஃப் சொல்லி வந்ததாக கூறியதும் அவர்களை உள்ளே அழைத்து அமர வைத்து புடவைகளைக் காட்டினாள் மிருதுளா. அவர்கள் ஆளுக்கு ஒரு புடவை என இரண்டு புடவைகளை ஒருவர் இன்ஸ்டால்மென்ட்டிலும் மற்றொருவர் உடனே காசைக் கொடுத்தும் வாங்கிக் கொண்டுச் சென்றனர்.
இவ்விருவர் மிருதுளா கேம்பிலிருக்கும் அவர்கள் நண்பர்கள் வீட்டுக்குச் சென்று புடவை வாங்கியதாக காட்ட அதில் நான்கு பெண்கள் அந்த புடவையைப் பார்த்துவிட்டு மிருதுளா வீட்டுக்கு வந்து அவர்களில் ஒரு பெண்மணி இரண்டு புடவையையும் மற்றவர்கள் ஆளுக்கு ஒரு புடவை என மொத்தம் ஐந்து புடவைகள் மிருதுளாவுக்கு விற்பனையானது.
கொண்டு வந்த பத்தில் ஒன்பது புடவைகள் விற்றுப் போயின. ஒன்று மீதமிருந்ததையும் வந்த பெண்மணிகளில் ஒருத்திக்கு இன்ஸ்டால்மென்ட்டில் தாங்க என்று கூறி அதையும் விற்றாள் மிருதுளா. கையில் ரொக்கமாக வந்த பணத்தில் தனது லாபத்தை கழித்துக் கொண்டு மீதத்தை அவள் புடவை வாங்கியவருக்கு கொடுக்கும் படி அம்புஜத்திற்கு மணியார்டர் செய்தாள். மேலும் புடவைகளை அனுப்பித்தரும்படியும் ஃபோனில் கூறினாள். அம்புஜம் தன் பக்கத்து வீட்டு பெண்ணிடம் மிருதுளா குடுக்கச் சொன்னதாக கூறி பணத்தைக் கொடுத்து விட்டு மேலும் புடவைகளை பார்ஸல் அனுப்பும்படி கூற அதற்கு அந்த பெண்
“அம்புஜம் அக்கா அதெல்லாம் எங்களால முடியாது. வந்து எடுததுட்டு போங்க. இல்லாட்டி இருங்க நாங்க மொத்தமா வாங்குற இடத்தோட அட்ரெஸ் தர்றேன்…நீங்களே அங்க போயி வேண்டியதை செலக்ட் பண்ணி வச்சீங்கன்னா அவங்க பார்சல் அனுப்பிடுவாங்க.”
“ஆனா அவங்க கிட்ட முதலில் ரொக்கமா பணத்தைக் குடுக்கணுமேமா? அது தான் யோசிக்கறேன்”
“இல்ல அக்கா மிருதுக்காக நான் அவங்ககிட்ட பேசறேன். நீங்க போங்க அவங்க க்ரெடிட்ல தருவாங்க.”
“ரொம்ப நன்றி மா. சரி நீ அவங்க கிட்ட பேசிடு நான் நாளைக்கே அங்க போறேன் சரியா. அப்போ நான் வர்றேன் மா”
என்று அந்த பெண் சொன்ன விவரங்களை மிருதுளாவிடம் ஃபோனில் சொன்னாள் அம்புஜம். அதைக் கேட்டதும் மிருதுளா
“வாவ்!! ஹோல்சேல் ஷாப் அட்ரெஸ் கொடுத்துட்டாளா!!!நான் தாங்க்ஸ் சொன்னேன்னு சொல்லுமா. உன்னால அந்த இடத்துக்கு போய் புடவைகளை செலக்ட் பண்ண முடியுமா மா?”
“நிச்சயம் முடியும் மிருதுளா. நீ அதைப் பத்தி எல்லாம் கவலைப் படாதே. நான் நாளைக்கே போய் செலக்ட் பண்ணி அவாகிட்ட அனுப்பச் சொல்லறேன் சரியா. சக்திக் கிட்ட ஃபோனைக் குடு கொஞ்சம் அவ குரலைக் கேட்டுட்டு ஃபோனை வச்சுடறேன்”
அம்புஜம் பக்கத்து வீட்டு பெண் கொடுத்த சேலம் அருகிலிருக்கும் அட்ரெஸுக்குச் சென்று புடவைகளை செலக்ட் செய்து அவர்களிடம் குஜராத்துக்கு அனுப்பி வைக்கச் சொல்லி விட்டு வீடு திரும்பினாள். தன் பெண்ணின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு சிரமங்கள் இருந்தாலும் அவ்வளவு தூரம் பஸ்ஸில் பிரயாணம் மேற்கொண்டாள் அம்புஜம்.
புடவைகள் ஒரு வாரத்தில் மிருதுளாவைச் சென்றடைந்தது. டியூஷனுக்கு ஒன்றிலிருந்து பத்து மாணவ மாணவிகள் ஆனார்கள். புடவை வியாபாரம் ஒருபக்கம், டியூஷன் ஒருபக்கம், வீட்டு வேலைகள் ஒருபக்கம், சக்திக்கு வேண்டியதனைத்தையும் ஒன்று விடாமலும் செய்துக் கொண்டு துருதுருவென பம்பரமாக சுழன்றாள் மிருதுளா.
அப்படி விறு விறுப்பாக வாழ்க்கைச் சென்றுக் கொண்டிருக்கும் சமயம் நவீனின் ரம்யா சித்தியின் மூத்த மகளின் திருமணம் வந்தது. அதற்கு ஈஸ்வரன் குடும்பத்தினர் அனைவரும் ஒரு வாரம் முன்னதாகவே வந்திருந்தனர். ஆனால் எவருமே மிருதுளா நவீன் வீட்டிற்கு வரவில்லை. அவர்கள் நேராக ரம்யா சித்தி வீட்டிற்கே சென்றனர். நவீனும் மிருதுளாவும் அது அவரவர் விருப்பம் என்று அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மேலும் அவர்களுக்கு அதைப் பற்றியெல்லாம் சிந்திக்க நேரமும் இருக்கவில்லை. குவைத்திலிருந்து கவினும் கஜேஸ்வரியும் வந்திருந்தனர். அவர்களும் நேராக ரம்யா சித்தி வீட்டுக்குத் தான் சென்றார்கள். அதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத நவீன் அன்ட் மிருதுளா. மாப்பிள்ளை அழைப்பிற்கு கிளம்பிச் சென்றனர். அங்கு தான் தங்கள் குடும்பத்தினரை சந்தித்துப் பேசினர் நவீனும் மிருதுளாவும். அப்போது மிருதுளா தன் மாமனாரிடம்
“ஏன் பா நம்ம ஆத்துக்கே வந்திருக்கலாமில்லையா?”
“ம்..ம்…நாங்க ஒரு வாரம் முன்னாடியே ரம்யா ஆத்துக்கு வந்துட்டோம்”
என்று சம்மந்தமில்லாமல் பதில் சொல்ல அதற்கு மேல் மிருதுளாவும் ஏதும் பேசாமல் அங்கிருந்துச் சென்று கவினிடம்
“ஹாய் கவின் அன்ட் கஜேஸ்வரி எப்படி இருக்கேங்கள்? உங்களைப் பார்த்து இரண்டு வருஷமாச்சு. என்ன கஜேஸ்வரி எனி குட் நியூஸ்?”
“இருந்தா சொல்லுவோம்.”
என்று வெடுக்கென பதில் வர மிருதுளாவுக்கு ஒரு மாதிரி ஆனது. அங்கிருந்தும் எழுந்துச் சென்று மற்ற சொந்த பந்தங்களுடன் கலகலப்பாக பேசிச் சிரித்துக் கொண்டிருந்தாள் மிருதுளாவும் நவீனும். மூத்த தம்பதியரும் கவினும் தூரத்திலிருந்து தங்களை கவனித்துக் கொண்டிருந்ததை உணர்ந்த மிருதுளாவுக்கு மனதில் சந்தேகம் எழுந்தது. அவர்களின் பரிமாற்றத்தில் வித்யாசமிருததை வைத்து அவர்கள் ஏதோ திட்டத்துடன் தான் வந்திருக்கிறார்கள் என்பதை மிருதுளாவால் உணர முடிந்தது.
அன்று இரவு உணவருந்தியதும் வீட்டுக்கு கிளம்புவதாகவும் மறுநாள் கல்யாணத்துக்கு விடியற் காலையில் வந்து விடுவதாகவும் ரம்யா சித்தியிடம் சொல்லிவிட்டு கிளம்பலாமென்று அவரைத் தேடினார்கள் நவீனும் மிருதுளாவும். ஆனால் மண்டபத்தில் எங்குமே ஈஸ்வரன் குடும்பத்தினரையும், பர்வதத்தின் அக்காள் தங்கைகளையும், தம்பியையும் காணவே இல்லை. மண்டபத்தின் வாசல் வரை சென்றவர்களை பின்னாலிருந்து அழைத்தார் பிச்சுமணி மாமா. அவரைப் பார்த்ததும் நவீன்
“எல்லாருமா சாப்பிட்டதும் எங்கே காணாமல் போயிட்டேங்கள்? உங்கள் எல்லாரையும் நாங்க தேடிணோம் அப்புறமா சரி லேட் ஆகறதேன்னு இப்போதான் கிளம்பினோம் நீங்க கூப்பிட்டேங்கள்”
“நாங்க எல்லாரும் தங்கறதுக்காக ரம்யா ஏற்பாடு செய்திருந்த அப்பார்ட்மெண்ட் டுல இருந்தோம். அது இதோ இந்த மண்டபத்துக்கு பக்கத்து பில்டிங் தான். சரி உங்க ரெண்டு பேர்கிட்டேயும் நான் கொஞ்சம் பேசணுமே”
என்று பிச்சுமணி சொல்லிக் கொண்டிருக்கும் போது தூரத்தில் கவின் நின்றுக் கொண்டு நவீன், மிருதுளா மற்றும் பிச்சுமணியையே கவனித்துக் கொண்டிருந்தான். அதுவரை அங்கு எவருமே இல்லாமல் இருந்தவர்கள் இப்போது பிச்சுமணி மாமா பேசவேண்டும் என்று வந்ததும் அவருக்கு பின்னாலேயே கவின் அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றிருந்ததையும் சட்டென அசைப் போட்டுப் பார்த்த மிருதுளாவின் மனம் அவளிடம்
“மிருது இதுல ஏதோ ஒரு விஷயமிருக்கு. உஷார் உஷார்”
என்று உணர்த்தியது. நவீன் தன் மாமாவிடம்
“ம்… என்ன விஷயம் மாமா நாளைக்கு பேசலாமா? ஏன்னா எங்களுக்கு இப்பவே லேட்டாகிடுத்து. சக்தி வேற தூங்கிட்டா.”
“இல்லடா இப்பவே பேசிடறேன். ஜஸ்ட் டென் மினிட்ஸ்”
“சரி சொல்லுங்கோ”
“அமாம் ஏன் நீங்க ரெண்டு பேரும் உன் அப்பா அம்மா ஆத்துக்கே போக மாட்டேங்கறேள்? எப்போ வந்தாலும் மிருதுளா அப்பா அம்மா ஆத்துக்கே போறேங்கள்”
“இதை யார் உங்ககிட்ட சொல்லி கேட்கச் சொன்னான்னு நான் தெரிஞ்சுக்கலாமா மாமா.”
“அதெல்லாம் எதுக்கு மிருது. நான் கேட்டதுக்கு பதில்”
“அதுக்கு பதில் சொல்லணுனா நான் ஃபுல் ஸ்டோரியையும் சொல்லணும் மாமா அதுக்கு ரொம்ப நேரமாகுமே”
“பரவாயில்லை சுருக்கமா சொல்லேன்”
“சரி சொல்லறேன் நல்லா கேட்டுக்கோங்கோ…கவின் வீடு வாங்கி கிரகப்பிரவேசம் பண்ணி அந்த வீட்டுக்கு இவர் அப்பா அம்மா பவின், ப்ரவின் எல்லாரும் பழைய வீட்டிலிருந்து கவின் வீட்டுக்கு மாறினா ஆனா வீடு வாங்கியதைப் பத்தி கவினோ, இவர் அப்பாவோ அம்மாவோ இவ்வளவு ஏன் ப்ரவின் பவின் கூட எங்க கிட்ட சொல்லலை இது தெரியுமா உங்களுக்கு? அப்புறம் எப்படி நாங்க அங்க போவோம்? அப்படியும் நாங்க அங்க போகாம வராம எல்லாம் இல்லை மாமா.”
“உனக்கு உங்க அப்பா சீர் கொடுத்த பாத்திரங்கள் பீரோ அது இதுன்னு எல்லாத்தையும் நீங்க ரெண்டு பேரும் அவாகிட்ட சொல்லாம கொள்ளாம வண்டி வச்சுண்டு உங்க அப்பா ஆத்துக்கு கொண்டு போனா அவாளால எப்படி அங்க இருக்க முடியும்? அக்கம் பக்கத்தினர் கேட்க மாட்டாளா? அதுனால தான் அவா வீடே மாறினா தெரியுமா?”
“ஹா!!! ஹா!! ஹா!!! மாமா மாமா ப்ளீஸ் அவா சொன்ன கதையெல்லாம் கேட்டுட்டு எங்ககிட்ட வந்து இப்படி கேட்கறேங்களே!!! உங்களுக்கு உங்க அக்காவை பத்தித் தெரியாம இருக்கலாம் ஆனா எனக்கு எங்க அம்மாவைப் பத்தி நல்லாவே தெரிஞ்சுடுத்து. ஸோ ப்ளீஸ் இந்த பேச்சை இத்தோடு விட்டு விடுங்கோ!”
“அது எப்படி டா உன்னால அப்படி சட்டுன்னு உங்க பொருளெல்லாம் உன் வீட்டிலிருந்து அப்பா அம்மா கிட்ட கூட சொல்லாமா வண்டி வச்சு எடுத்துண்டு போக முடிஞ்சுது?”
“மாமா ப்ளீஸ் நீங்க ஒரு பக்கம் கதையை மட்டும் கேட்டுட்டு அது உண்மையா இல்லையான்னு கூட தெரிஞ்சுக்காம எங்களை தப்பு செஞ்சவா மாதிரி இப்படி கேள்விக் கேட்கறது நல்லா இல்லை.”
“ஏம்மா மருது? நாளைக்கு உங்க வேனுவுக்கு கல்யாணமாகி அவனும் அவன் வைஃபும் நீங்க பண்ணின மாதிரி சொல்லாம கொள்ளாம அவா பொருளெல்லாம் எடுத்துண்டு போயிட்டு எப்பவாவது ஆத்துக்கு வந்துட்டுப் போணா எப்படி இருக்கும் உன் அப்பா அம்மாக்கு சொல்லு…”
“மாமா எங்க அப்பா அம்மா எங்காத்துக்கு வர்ற பொண்ணோட பொருட்களை எல்லாம் போட்டு உடைச்சு நசுக்கி நாசமாக்க மாட்டா உங்க அக்காவையும் அத்திம்பேரையும் போல. அதுவுமில்லாம ஆத்துக்கு வந்த பொண்ணு அம்மா வீட்டுக்கு போகணும்ன்னு சொன்னதுக்கு கண்டபடி பேசி துரத்தி விட மாட்டா, அதைத் தட்டிக் கேட்க வந்த அப்பா அம்மாட்டயும் காசை விட்டெரியறோம்ன்னு திமிரா பேச மாட்டா…மாசமான பொண்ண உங்க அக்காவை மாதிரி பட்டினிப் போட மாட்டா, அன்பா பார்த்துப்பா, பேத்தியை இதுவரை தொட்டுத் தூக்கிக் கொஞ்சாத உங்க அக்காவை மாதிரி எல்லாம் கல் நெஞ்சுக் காரா கிடையாது என் அப்பா அம்மா அதுனால வேனுவும் அவனுக்கு வர்ற மனைவியும் அப்படி எல்லாம் ஏதும் செய்ய மாட்டார்கள்”
“என்ன நீ என்னென்னமோ சொல்லுற?”
“மாமா நிறைய அட்டூழ்யம் செய்திருக்கா. அதெல்லாத்தையும் மறைச்சுட்டு அவாளுக்கு ஏத்தா மாதிரி பேசி உங்களை எங்ககிட்ட பேச அனுப்பிருக்கா. ஒண்ணு யோசிங்கோ அவா நேர்மையானவா, உத்தமர்கள்ன்னா அவாளே பேச வந்திருக்கலாமே என்னதுக்கு உங்களை விட்டு தேவையில்லாம பேச வைக்கணும் சொல்லுங்கோ”
“அது ஒண்ணுமில்லை நவீ கவின் கல்யாணத்துல ஒருவிதத்துல என்னை அவமானப்படுத்தியாச்சு இப்போ இதோ நான் அடென்ட் பண்ணும் இரண்டாவது விசேஷம் இதுலயும் ஏதாவது செய்து என்னை அவமானப்படுத்த தான் இந்த ஏற்பாடெல்லாம்.”
என்று பிச்சுமணியிடம் நடந்ததை அப்படியே விளக்கினாள் மிருதுளா. அதைக் கேட்டதும் பிச்சுமணி
“ஓ !!! இவ்வளவெல்லாம் நடந்திருக்கா?”
“மாமா நான் தான் ஃபர்ஸ்ட்டே சொன்னேனில்லையா!! வேண்டாம் விட்டுவிடுங்கோன்னு.”
“அவா பண்ணினது எல்லாமே தப்பு தான் டா அதை இல்லைன்னு மறுக்கவே முடியாது அதை ஒத்துக்கறேன் நவீன் ஆனா பேயானாலும் தாயில்லையாடா”
“பேய் தாய் கூட தன் பேய் பிள்ளைகளை ஒன்றும் செய்யாது மாமா மனுஷாளைத் தான் துன்புறுத்தும். இவாளை அந்த இனத்தோட இணைத்து பேய்களை அவமானப்படுத்தாதீங்கோ. அதுவுமில்லாம இப்போ என்ன ஆயிடுத்தாம் அவாளுக்கு. நாங்க ரெண்டு பேரும் என்ன மதிக்காம இருக்கோமா? மரியாதைத் தராம இருக்கோமா? பேசாம இருக்கோமா? இல்ல போக வரமா அவாளை மாதூரி இருக்கோமா? எங்களை அவமானப்படுத்த உங்களை கருவியா யூஸ் பண்ணறா அது உங்களுக்கா தெரியாட்டாலும் நாங்க அடிப்பட்டவா நாங்க சொல்லுறதையாவது கேட்டு பேசாம உங்க வேலையைப் பாருங்கோ மாமா ப்ளீஸ்”
“ஓகே !! அப்புறம் உங்க இஷ்டம். நான் வர்றேன். நீங்க ரெண்டு பேரும் பத்திரமா வீட்டுக்கு போங்கோ. பைக்கை மெதுவா ஓட்டுண்டு போடா நவீன்.”
பிச்சுமணியிடம் ஏதேதோ சொல்லி பேச அனுப்பிவிட்டனர் மூத்த தம்பதியர். பிச்சுமணியும் தன்
அக்கா அத்திம்பேர் உத்தமர்கள் என்றெண்ணி பேச போய்
நடந்தவைகளை அறிந்துக் கொண்டதும் அதிர்ச்சியில் உறைந்து போய்
செய்வதறியா அம்பு போல் ஏய்தவர்களிடமே திரும்பிச் சென்றார்.
தொடரும்……
அத்தியாயம் 76: விடாமுயற்சி
கதவைத் திறந்து உள்ளே சென்றதும் மிருதுளாவை உட்காரச் சொன்னார்கள். அவர்களிடம் மிருதுளா ஏதோ சொல்ல முற்பட்டப் போது அதை கவனிக்காத ஆஃபிசர் அவளிடம்
“ஹோப் நீங்க நல்ல முடிவை தான் எடுத்திருப்பீங்க. நீங்க கையெழுத்துப் போட்ட ஃபார்மை கொடுங்க. அதோட உங்ககிட்ட கேட்ட டாக்குமெண்ட்ஸையும் தாங்க”
“சார் ….அதுக்கு முன்னாடி எனக்கு கொஞ்சம் பேசணும்”
“ம்…சொல்லுங்க. உங்களுக்கு இந்த வேலையைப் பற்றி என்ன சந்தேகங்கள் இருந்தாலும் யூ ஆர் ஃப்ரீ டு ஆஸ்க். ப்ளீஸ் கோ அஹெட்”
“சார் எனக்கு வேலை பிடிச்சிருக்கு. நான் ஜாயின் பண்ணவும் ரெடி ஆனா இந்த அமெரிக்கா ட்ரேயினிங் மட்டும் எனக்கு கொஞ்சம் கஷ்டம் ஏன்னா எனக்கு ஒன் இயர் ஓல்ட் டாட்டர் இருக்கா”
“ஸோ…. வாட் ஆர் யூ ட்ரையிங் டு ஸே?”
“அந்த ட்ரேயினிங் மட்டும் ..…இஃப் ஐ கேன் டேக் இட் ஹியர்…இட் வில் பி ஹெஃபுல் ஃபார் மீ சார்”
“நோ வே மிஸ் மிருதுளா. அதுக்கு சான்ஸே இல்லை. நீங்க அங்க தான் போயாகணும். இங்க அவங்க வந்து சொல்லித் தரமாட்டாங்க. ஸோ இட்ஸ் அவுட் ஆஃப் ஈக்குவேஷன். வேற ஏதாவது கேட்கணுமா?”
“அப்படீன்னா….தென்…. ஐ மே நாட் பி ஏபில் டு ஜாயின் சார்.”
“வாட்? ஒன்பது ரௌண்ட் இன்டர்வியூ ல நல்லா பெர்ஃபார்ம் பண்ணிட்டு இப்போ ஏன் ஜஸ்ட் சிக்ஸ் மந்த்ஸுக்காக வித்ட்ரா பண்ணறீங்க?”
“சாரி சார் ஐ கெனாட் லீவ் மை டாட்டர் அன்ட் ஸ்டே தேர் ஃபார் சிக்ஸ் மந்த்ஸ். இட்ஸ் வெரி டிஃபிகல்ட் ஃபார் போத் ஆஃப் அஸ். சாரி ஃபார் வேஸ்டிங் யுவர் டைம்”
“கம் ஆன் மிஸ் மிருதுளா. யூ ஆர் ரெஃயூஸிங் எ கோல்டன் ஆபர்ச்சுனிட்டி. அது உங்களுக்கு புரியுதா?”
“எஸ் சார் எனக்கு நல்லாவே புரியுது. இரண்டு நாளா எனக்குள்ள இருந்த குழப்பங்கள் எல்லாம்…. இதோ வெளியில் அமர்ந்திருந்த அந்த அறை மணி நேரத்தில் தெளிந்தது. அந்த தெளிவைப் பெற நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். ப்ளீஸ் இந்தாங்க நீங்க கொடுத்த ஃபார்ம். வேற ஏதாவது ஜாப் ஆஃபர் வெளிநாடுக்குக் கெல்லாம் போக வேண்டி வராதபடி இருந்தா ஐ வுட் டெஃபனட்லி லவ் டு ஜாயின், பட் ஃபார் திஸ் ஐ ஆம் சாரி சார்”
“ஓகே!! இட்ஸ் யூவர் விஷ். எனி வேஸ் தாங்க்ஸ் ஃபார் கம்மிங் டவுன் டு இன்ஃபார்ம் அஸ். யூ மே டேக் எ லீவ் நவ். ஹாவ் எ க்ரேட் டே.”
“தாங்க்யூ ஸோ மச் சார். ஒன்ஸ் அகேயின் சாரி சார் அன்ட் தாங்க்ஸ் ஃபார் யுவர் டைம். ஹாவ் எ க்ரேட் டே டூ.”
என்று கூறிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்ததும் மிருதுளா மனம் மகிழ்ச்சி வெள்ளத்தில் துள்ளியது. அவள் கால்கள் வேகவேகமாக நடந்தும் ஓடியும் நவீன், சக்தி முன் நின்றது. இரண்டு நாளாக சோகமான முகத்துடனிருந்த மிருதுளாவின் முகத்தில் பளிச்சிட்ட ஆனந்தத்தைக் கண்டு
“என்ன மிருது ரொம்ப குஷியா இருக்கப் போல தெரியறதே!!”
“ஆமாம் நவீ ஆம் எக்ஸ்ட்ரீமிலி ஹாப்பி. வாடி என் சக்தி குட்டி”
என்று சக்தியிடம் சொன்னதும் அவளும் வேகவேகமாக அடி எடுத்து வைத்து தன் இரு கைகளையும் நீட்டிக் கொண்டே தன் அம்மாவை நோக்கிச் சென்றாள். சக்தியை இறுக்கி அணைத்துக் கொண்டாள் மிருதுளா. அதைக் கண்ட நவீன்
“சரி வீட்டுக்கு கிளம்பலாமா?”
“என்ன நவீ உள்ள என்ன நடந்ததுன்னு நீங்க எதுவுமே கேட்காம கிளம்பலாமான்னு சொல்லறேங்கள்!!”
“இட்ஸ் ஓகே மிருது. நான் எதிர் பார்த்தது தான். லீவ் இட். இதிலிருந்து நமக்கு ஒண்ணு தெரிய வந்தது என்னான்னா என் மிருது இந்த மாதிரி பெரிய மல்டிநேஷ்னல் கம்பெனியில ஒரு வேலைக்கு ஜாயின் பண்ணற அளவுக்கு புத்திசாலி அன்ட் திறமைசாலி. ஸோ நிச்சயம் அடுத்து உனக்கு பிடித்தது போலவே வேலை அமைய வாழ்த்துகள்.”
“ஹலோ நான் வேணடாம்ன்னு சொல்லிட்டுதான் வந்திருக்கேன்னு உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது?”
“அது தான் இரண்டு நாளா சோகமா இருந்த உன் முகம் இப்போ பிரகாசமா இருக்கே அதிலிருந்தே தெரியாதா என்ன? ஆனா ஒண்ணு மிருது…இதுக்கா என்னென்னைக்கும் நீ ரிக்ரெட்டா ஃபீல் பண்ண கூடாது சரியா!!”
“நிச்சயமா மாட்டேன் நவீ. ஆக்சுவலா நான் சரின்னு சொல்ல தான் போனேன் அப்புறம்….மேல அதோ தெரியறதே அந்த ஜன்னல்களே ஏதோ ஒண்ணுலேந்து தான் நான் உங்க ரெண்டு பேரையும் பார்த்தேன் ….என் மனசு வேண்டாம்ன்னு சொல்ல சொல்லித்து அதுனால சொல்லிட்டேன்”
“அதுக்கு அவா ஏதும் சொல்லலையா?”
“சொன்னா. ஒன்பது ரௌண்ட் இன்டர்வியூவை நல்லா பண்ணிட்டு ஏன் ஒரு ஆறு மாசத்துக்காக நல்ல ஆஃபரை அவாயிட் பண்ணறேங்கள்ன்னு சொன்னாரு. அவாளுக்கு தெரிஞ்சது அந்த ஆறு மாசம் தான் ஆனா நான் அடுத்த ரெண்டு வருஷத்தைப் பத்தி நல்லா யோசிச்சு தான் இந்த முடிவை எடுத்தேன்னு எப்படி சொல்லுவேன்…..அப்புறம் இட்ஸ் ஓகேன்னு சொல்லிட்டார். நானும் வந்துட்டேன்.”
“யாருக்கா இருந்தாலும் அப்படி தான் சொல்லத் தோணும் மிருது. க்ளியரிங் நைன் ரௌண்ட்ஸ் ஆஃப் இன்டர்வியூ இஸ் நாட் அன் ஈஸி திங் தெரியுமா.!!! இட்ஸ் ஓகே இதுவும் உனக்கு ஒரு நல்ல எக்ஸ்பீரியன்ஸ் தான். சரி வண்டில ஏறு ஆத்துக்கு போகலாம்”
“ம்…ஓகே…சரி ….சக்தி பழத்தை சாப்பிட்டாளா?”
“அவ பாதி சாப்பிட்டா மீதியை நான் சாப்பிட்டேன்”
“நான் செய்தது சரியா நவீ?”
“இரண்டு நாள் அக்செப்ட் பண்ணலாமா வேண்டாமான்னு டென்ஷன்ல இருந்த …இப்போ செய்தது தப்பா சரியான்னு எத்தனை நாள் இருக்கப் போற மிருது? இதுக்கு தான் சொன்னேன் ரிக்ரெட் பண்ணக் கூடாதுன்னு. இட்ஸ் ஓகே. மறுபடியும் ட்ரை பண்ணினா வேற ஏதாவது வேலை கிடைக்கும். டோன்ட் வரி சரியா. மத்ததெல்லாம் வீட்டுல போயிட்டு பேசிப்போமா.!!”
“ஓகே ஓகே. நீங்க வண்டி ஓட்டறதுல கவனம் செலுத்துங்கோ. நான் பேசலை. சக்தி குட்டி தூங்கிட்டா.”
பணக்கஷ்டம் இருந்தாலும் தன் கணவனையும் மகளையும் பிரிந்திருக்க முடியாமலும், இரண்டு வருடங்களுக்குள் வேலையை விட்டு நீங்க வேண்டி வந்தால் கட்டவேண்டிய பணத்தைப் பற்றியும் சிந்தித்து கிடைத்த வேலையை வேண்டாமென்று சொல்லிவிட்டாள் மிருதுளா.
மீண்டும் தன் தினசரி வேலைகளில் மூழ்கினாள். அதற்கு பின் நிறைய கம்பெனிகளில் அப்ளை செய்தாள். அதில் ஒன்றின் இன்டர்வியூவுக்கு சென்று வேலையும் கிடைத்தது. அதுவும் பன்நாட்டு நிறுவனத்தின் அகௌன்டிங் BPO வேலை தான். இதில் கான்ட்ராக்ட் இல்லை, அபராதமில்லை, வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயமில்லை என்றிருந்தாலும் நவீன் மிருதுளாவிற்கு வேறுவிதமான சிக்கல் முளைத்தது. நைட் ஷூப்ட் எனப்படும் அமெரிக்க நேரம் படி வேலை. அப்படி செய்ய வேண்டியிருந்ததால் மாலை ஆறு மணி முதல் விடியற்காலை மூன்று மணி வரையிலான வேலையாக இருந்தது. அதற்கு இருவருமாக யோசித்து, பண நெருக்கடியை சமாளிக்க வேறு வழியில்லாமல் மாதம் பத்தாயிரம் ரூபாய்க்கு வேலையில் சேர்ந்தாள் மிருதுளா.
அவர்கள் தங்கியிருந்த ஆர்மி குவார்ட்ஸ் முன் மிருதுளா வேலைக்கு சேர்ந்த நிறுவனத்தின் வண்டி மாலை நாலரை மணிக்கெல்லாம் வந்து நின்றது. மிருதுளாவும் அதில் ஏறி செல்ல ஆரம்பித்தாள். அதை கவனித்த அக்கம் பக்கத்தினர் நவீனிடம் என்ன ஏது என்று விசாரிக்க நவீனும் மிருதுளா செய்யும் வேலையைப் பற்றி விவரிக்க அதற்கு வயிற்றில் பல்லு முளைத்த ஒருவர்
“நவீன் சார் பரவாயில்லையே உங்க வைஃப் நம்ம எல்லாரையும் விட ஜாஸ்தி சம்பாதிக்கிறாங்களே. உங்க காட்டுல மழை தான் போங்க”
என்று சொல்லிச் சென்றார். நவீனும் சக்தியைக் கூட்டிக் கொண்டு வீட்டின் கதவைப் பூட்டி விட்டு வாக்கிங் சென்றான். இப்படியே அவர்கள் இருவருமாக காலையில் மிருதுளா சக்தியைப் பார்த்துக் கொண்டு விட்டு அவள் தூங்கும் போது தானும் தூங்கி மாலையில் வேலைக்கு சென்று வந்தாள், நவீன் காலையில் வேலைக்குச் சென்று வந்துவிட்டு மாலையிலிருந்து சக்தியைப் பார்த்துக் கொண்டான். மூன்று மாதங்கள் இப்படியே உருண்டோடின. மிருதுளாவுக்கு சரியான தூக்கமில்லாமலும், சாப்பாடு இல்லாமலும் இளைத்துப் போய் உடம்புக்கு முடியாமல் ஆனது. அவளுக்கு அந்த வேலையை விடவும் மனசில்லை.
உடனே தன் அம்மாவுக்கு ஃபோன் போட்டு உதவி கேட்டாள். வேனுவும் ராமானுஜமும் அம்புஜத்தை மிருதுளாவுக்கு உதவ அனுப்பி வைத்தனர். அம்புஜம் வந்ததும் மிருதுளாவுக்கு சந்தோஷம் மற்றும் நிம்மதியாக இருந்தது. இன்னும் மூன்று மாதங்கள் வேலைக்குச் சென்றாள். ஆறு மாதங்களின் முடிவில் நவீன் மிருதுளாவைக் கூப்பிட்டு
“மிருது எனக்கென்னவோ நாம தப்புப் பண்ணறோமோன்னு தோனறது!!”
“என்ன சொல்லறேங்கள் நவீ?”
“மிருது …பாவம் உன் அம்மா…இங்க வந்து மூணு மாசமா நமக்காக எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்யறா!!! அங்க உன் அப்பாவும் தம்பி தனியா கஷ்டப்படறா இல்லையா?”
“ஆமாம் நவீன். இட்ஸ் ட்ரூ. ஐ டூ ஃபீல் கில்ட்டி. என்னப் பண்ணறது?”
“பேசாம இந்த வேலையை விட்டுடேன். இப்போ வயசு ஸோ நைட் ஷிப்ட் எல்லாம் கஷ்டமா தெரியாது ஆனா இதோட இம்பாக்ட் எல்லாம் வயசான நிச்சயம் ஹெல்த் இஷூஸ் வரும். அதையும் நாம யோசிக்கணுமில்லையா!!!”
“எஸ் நீங்க சொல்லறதும் கரெக்ட் தான் நவீ. எனக்கும் நான் செல்ஃபிஷா இருக்கேனோன்னும், அப்பா வேனுக்கு துரோகம் செய்யறேனோனும் அடிக்கடி தோணறது. ஆனா இந்த வேலையையும் விட்டா அப்புறம் நாம என்ன செய்வோம்ன்னு நினைச்சா தான் ….!!!”
“அதை பத்தி எல்லாம் அப்புறமா யோசிச்சுக்கலாம் மிருது. ஆனா இப்போ யூ ஹாவ் டூ டிசைட். உன் அம்மா கெனாட் பி வித் யூ ஆல்வேஸ் இல்லையா? அப்போ அங்க உன் அப்பாவையும் வேனுவையும் யார் பார்த்துப்பா?”
“ஓகே நவீன் நீங்க சொன்னபடியே நான் நாளைக்கே என் வேலையை ரிசைன் பண்ணிடறேன். அம்மாவை நாமளே ஒரு டிவென்டி டேஸ் லீவு போட்டுண்டு போயி ஆத்துல விட்டுட்டு வருவோமா? உங்களுக்கு லீவு கிடைக்குமா?”
“ஓ தாராளமா கிடைக்கும். நான் இந்த வருஷம் அவ்வளவா லீவே எடுக்கலையே…ஊருக்கு போயிட்டு வருவோம். நமக்கும் ஒரு ப்ரேக் மாதிரி ஆச்சு.”
என்ன தான் அம்புஜம் ஒன்றும் சொல்லாமல் தன் பேத்தியைப் பார்த்துக் கொண்டும், நவீனுக்கும் மிருதுளாவுக்கும் சமைத்துக் கொடுத்துக் கொண்டும் இருந்தாலும் நவீன் மற்றும் மிருதுளாவின் மனது அதை ஏற்கவில்லை ஆகையால் அவர்களாக எப்போது குழந்தையை பார்த்துக் கொள்ள முடிகிறதோ அப்போது வேலைக்கு சென்றால் போதும் என்ற முடிவுக்கு வந்தனர். அதை அம்புஜத்திடம் தெரிவித்து அவளுடன் இவர்களும் சேர்ந்து ரெயிலில் ஊருக்குச் சென்றனர்.
ஊரில் இரண்டு வாரங்கள் ராமானுஜம் வீட்டில் தங்கியிருந்தனர் நவீனும் மிருதுளாவும். அப்போது அருகிலிருந்த வீட்டில் வசித்து வந்த பெண்மணி புடவை வியாபாரம் செய்து வருவதாக மிருதுளாவுக்கு தெரியவந்தது. அவர்கள் வீட்டுக்குச் சென்று விவரங்களை சேகரித்துக் கொண்டு வந்து அதை நவீனிடம் கூறி
“ஏன் நவீ நாம ஏன் இந்த சாரி பிஸ்னஸ் பண்ணிப் பார்க்கக் கூடாது? வெளியே எங்கேயும் வேலைக்கு போக வேண்டாம். என் அம்மாவையும் தொந்தரவு செய்ய வேண்டாம். வீட்டிலிருந்த படியே செய்யலாம். சக்தியையும் பார்த்துக்கலாம். என்ன சொல்லறேங்கள்?”
“நல்ல யோசனைதான். ஆனா அங்க தான் சூரத் சாரிஸ் ஃபேமஸா இருக்கே!! இது க்ளிக் ஆகுமா?”
“நவீ ….அங்கேயிருந்து சூரத் சாரிஸை இங்கே அம்மா அப்பா மூலமா விற்கலாம் அதே போல இங்கே இருந்து சவுத் இந்தியன் சாரிஸ்ன்னு அங்கே விற்கலாம். என்ன சொல்லறேங்கள். ஒரு ட்ரைக் கொடுத்துப் பார்ப்போமே…அதுதான் விக்காத சாரிஸை அவளே வாங்கிக்கறேன்னு சொல்லறாளே!!”
“அதுவும் சரிதான்!!”
“முதல்ல அவகிட்டேருந்து ஒரு பத்து சாரிஸ் மட்டும் எடுத்துண்டு போவோம்.”
“பத்தா? அதுக்கு எவ்வளவு ஆகும் மிருது?”
“நாம முன்னாடியே பணம் குடுக்க வேண்டாம். அவாளுக்கு வித்தப் புடைவையோட பணத்தை மட்டும் கொடுத்தால் போதும். விற்காத புடவையை திருப்பிக் கொடுத்துடணும் அவ்வளவு தான்.”
“சரி ஒரு பத்து புடவைகளை எடுத்துண்டு வா. அங்கே சேல்ஸ் பண்ணிப் பார்ப்போம். ட்ரைப் பண்ணறதுல தப்பே இல்லை.”
“சரி சரி நான் நாளைக்கே போய் பத்துப் புடவைகளை செலக்ட் பண்ணி எடுத்துண்டு வர்றேன்.”
புடவைகளை எடுத்துக் கொண்டு வந்து தன் பையில் அடுக்கிக் கொண்டாள் மிருதுளா. பின் ஒரு மூன்று நாட்கள் நவீனின் அப்பா அம்மாவோடு இருந்து விட்டு ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனர் நவீனும், மிருதுளாவும்.
முதல் வேலை கிடைத்தது கூடவே குழப்பத்தையும் விதைத்தது
வேண்டாம் என மனம் நினைத்தது
வேண்டும் என மூளை உரைத்தது
இறுதியில் மனமே வென்றது!!
இரண்டாவது வேலைக் கிடைத்தது
இரவுகள் பகலானது
அம்மாவின் தயவை எதிர்பார்க்க வைத்தது
ஆறு மாதங்கள் சாமாளித்தது
குற்ற உணர்ச்சியால் முடிவுக்கு வந்தது!!
வேலை போய் வியாபாரம் வந்தது
இருவருக்கும் அது புரிந்திருந்தாலும் புதிரானது
புதிருக்கான விடையைத் தேடி அவர்களின் பயணம் தொடர்ந்தது.
வியாபாரம் விருவிருப்பானதா? புடவைகள் விற்பனை ஆனதா?
தொடரும்…….
அத்தியாயம் 75: மனப்போராட்டம்!
சஷ்டியப்த பூர்த்தி முடிந்த ஒரு வாரத்தில் ஊருக்கு கிளம்பினர் ஈஸ்வரன், பர்வதம், பவின் மற்றும் அவன் நண்பன். அவர்கள் வந்து போனதில் கையிருப்பு பணம் முழுவதும் காலியானது நவீனுக்கு. மீண்டும் ஐநூறு ரூபாய்க்கே திரும்பினர் மிருதுளாவும் நவீனும். அப்போது நவீன் மிருதுளாவிடம்
“என்ன மிருது நான் சொன்னதைக் கேட்காம நீ பாட்டுக்கு அவாளுக்கு அறுபதாம் கல்யாணம் பண்ணி அதுக்கு புது புடவை வேஷ்டி சட்டை என சொலவு வச்சதோட இல்லாம என்னென்னவோ வாங்கி வேற குடுத்தனுப்பிருக்க!!! இப்போ பாரு நாம பேக் டூ ஸ்கூவேர் ஒன்”
“பரவாயில்லை நவீ. பணம் எப்ப வேணும்னாலும் சம்பாதிச்சுக்கலாம். ஆனா இந்த மாதிரி விசேஷங்கள் எல்லாம் அடிக்கடி வருமா? வராதில்லையா!!! அதுவுமில்லாம உங்க பேரன்ட்ஸும் சந்தோஷப் பட்டிருப்பா தானே ….அதுனால செலவைப் பத்தி கவலைப் படாதீங்கோ”
“நீதான் சொல்லிக்கணும். நாம எடுத்துக் கொடுத்த டிரஸ்லேந்து எதுலையுமே திருப்தி அடையாதவா!!! எங்கேருந்து சந்தோஷப் பட்டா? அதை நீ பார்த்த?”
“நம்மளால முடிஞ்சதை பண்ணிணோம் நமக்கு மனசுக்கு திருப்தியா இருக்கு அதோட விடுங்கோ. நாம சமாளிச்சுக்குவோம்”
“என்னமோ சொல்லுற பார்ப்போம்”
“நான் ஒண்ணு சொல்லறேன் அதுக்கு நீங்க ஃப்ராங்க்கா ரிப்ளை பண்ணணும் ஓகே வா?”
“என்ன சொல்லு”
“நான் வேலைக்கு போகட்டுமா?”
“தாராளமா போ மிருது ஆனா நம்ம சக்தியை யாரு பார்த்துப்பா?”
“அம்மா கிட்ட ஹெல்ப் கேட்கவா?”
“விளையாடறயா அம்மா இங்க வந்துட்டா பின்ன உன் அப்பாவையும் வேனுவையும் யார் பார்த்துப்பா?”
“சரி மொதல்ல நான் வேலைக்கு அப்ளை பண்ணறேன். கிடைக்கட்டும். அப்புறம் இதைப் பத்தி டிஸ்கஸ் பண்ணுவோம் சரியா”
“ஓகே! ஆனா நாம தான் மேனேஜ் பண்ணிக்கணும் மிருது. வீ ஷுட் நாட் டிஸ்டேர்ப் யுவர் பேரன்ட்ஸ்”
மிருதுளா வேலைத் தேடுவதில் மும்முரமானாள். தேட ஆரம்பித்த ஒரே மாதத்தில் அவளுக்கு வணிக நடைமுறை ஒப்பந்தசேவை எனப்படும் பன்நாட்டு BPO நிறுவனம் (இருபது வருடங்களுக்கு முன் அப்போது தான் புதிதாக இந்தியாவில் முளைக்க ஆரம்பித்தத் தருணம்) ஒன்றில் ஒன்பது ரௌண்ட் இன்டர்வியூவை வென்று மாதம் பண்ணிரெண்டாயிரம் சம்பளத்தில் வேலைக் கிடைத்தது. ஆனால் அதில் இரண்டு வருடக் காலம் ஒப்பந்தமும் மற்றும் அமெரிக்காவிற்கு ஆறு மாத காலம் டிரேயினிங் சென்று வரவேண்டும் எனவும், அப்படி இரண்டு வருடத்திற்குள் தானாக வேலையை விட நேர்ந்தால் இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அதற்கான கையெழுத்திட ஃபார்ம் கொடுக்கப்பட்டு, முடிவைத் தெரிவிக்க இரண்டு நாள் டைமும் கொடுக்கப்பட்டது. அதை சிறந்த வாய்ப்பாக கருதினர் நவீனும் மிருதுளாவும். ஆனால் சக்தியை யார் பார்த்துப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது!! குழந்தையை விட்டுவிட்டு எப்படி ஆறு மாத காலம் பிரிந்திருப்பது என்ற மனக் குழப்பம் என்று தடுமாறினாள் மிருதுளா. நவீன் அவளை சென்று வரும் படியும், சக்தியை தான் பார்த்துக் கொள்வதாகவும் கூறினான். மிருதுளா தன் அம்மாவிடம் கூறினாள். அம்புஜம் தன் கணவர் மற்றும் மகனிடம் கூறினாள் அதைக் கேட்ட வேனு அம்புஜத்திடம்
“அம்மா நல்ல ஆஃபர் இது. மிருதுவ சைன் பண்ணச் சொல்லு. சக்தியை நாம இங்க கூட்டிண்டு வந்து பார்த்துப்போம். என்ன ஒரு சிக்ஸ் மந்த்ஸ் தானே. பறந்திடும். நீ தான் மிருதுக்காவுக்கு தைரியம் சொல்லணும்”
அம்புஜமும் வேனுவும் ஃபோனில் மிருதுளாவிடம் இதைக் கூறினர்.
அடுத்து தன் மாமனார் மாமியாரிடம் ஃபோனில் தனக்கு வேலைக் கிடைத்ததைப் பற்றி கூறினாள் மிருதுளா. நல்லக் காலத்துலேயே நல்லது நினைக்காத மூத்த தம்பதியர் மேலும் மிருதுளாவைக் தங்கள் பேச்சால் குழப்பினர்.
“என்னது அமெரிக்கா போகணுமா? என்ன விளையாடறயா? அப்போ உன் குழந்தையையும் உன் புருஷனையும் அம்போன்னு விட்டுட்டு நீ மட்டும் போகப் போறயாக்கும்!!! நல்லா இருக்கு!!! முதல்ல பொண்ணா லட்சணமா உன் குழந்தையையும் புருஷனையும் பார்த்துக்கோ போதும். புருஷன் சம்பாதிச்சுண்டு வரதுக்கு தகுந்தா மாதிரி தான் ஆத்துக் காரி செலவழிக்கணும். அளவுக்கதிகமா ஆசைகளை வச்சுண்டா இப்படி தான் குடும்பத்தை விட்டுட்டு பணத்தைத் தேடி ஓடத்தோணும். அப்படியே வேலைக்குப் போறதா இருந்தா உள்ளூர்லயே தேடு அதை விட்டுட்டு வேற வேலையில்லை. ஊரு, நம்ம சொந்த பந்தங்கள் எல்லாம் இப்படி புள்ளையையும் புருஷனையும் விட்டுட்டு சம்பாதிக்க போனா சிரிப்பா. நாங்க சொன்னதை கொஞ்சமாவது யோசிச்சுப் பாரு”
என்று ஃபோனை வைத்தனர். பெரியவர்கள் என்ற மரியாதைக்கு சொல்லி அபிப்பிராயம் கேட்கப் போய் குழப்பத்தை மட்டுமே மனதில் சுமந்துக் கொண்டு ஹாலில் விளையாடிக் கொண்டிருந்த சக்தியைப் பார்த்த வண்ணம் கண்களில் மெலிதாக வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே அவளைத் தூக்கிக் கட்டி அணைத்துக் கொண்டாள்.
பெண்களாக பிறந்து விட்டால் மனம் ஒன்றும் மூளை ஒன்றுமாக கூறி அவர்களை குழப்பித் தள்ளும். அதிலும் திருமணமான பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம். மனம் வீட்டையும் மூளை வேலையையும் பார்க்கச் சொல்லி பாடாய்ப்படுத்திவிடும். திருமணமான ஆண்கள் வேலைக்கு போவதற்கும் திருமணமான பெண்கள் வேலைக்கு போவதற்கும் நிறைய வித்தியாசங்கள் அன்றிருந்தன. அப்போதெல்லாம் குழந்தைகளுக்கான டே கேர் வசதி எல்லாம் இருக்கவில்லை அப்படியே ஒன்றிரண்டு இருந்தாலும் அதற்கு காசுக் கொடுத்து கட்டுப்படி ஆகாத நிலைமை நிலவியது.
இன்றைய காலம் பெண்களுக்கு வரப்பிரசாதம் என்றாலும் இன்றும் பலப் பெண்கள் இந்த மன உளைச்சலுக்கு ஆளாவது சகஜமாகத் தான் இருந்து வருகிறது.
அந்த ஃபார்மோடு வீட்டுக்கு வந்ததிலிருந்து மிருதுளாவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. முழு நேரமும் யோசனையிலேயே இருந்தாள். அதைப் பார்த்த நவீன் அவளிடம்
“எதுக்கு உன்னை நீயே குழப்பிக்கற மிருது? ஜஸ்ட் சிக்ஸ் மந்த்ஸ் தானே!!! நாங்க எல்லாரும் இருக்கோம் நம்ம சக்தியை நாங்க பார்த்துக்கறோம். யூ டோண்ட் வரி. நீ கையெழுத்து போடு மிருது.”
“அதுக்கில்ல நவீ நான் எப்படி நம்ம சக்தியைப் பிரிஞ்சு இருப்பேன்? அதுவுமில்லாம உங்களுக்கு அடுத்த வருஷம் போஸ்டிங் வந்திடும். எந்த ஊருக்கு அனுப்பப் போறாளோ நெரியாது!!! அப்போ நான் இங்கேயும் நீங்க எங்கேயோ வேலைப் பார்க்கணுமே!!! அதை யோசிச்சேங்களா!! இல்ல அடுத்த வருஷமே ரிசைன் பண்ண வேண்டி வந்தா நாம இரண்டு லட்சம் பணம் கட்டணுமே அதுக்கு எங்க போவோம்? அதை யோசிக்க வேண்டாமா!!!”
“அதை எல்லாம் நடக்கும் போது பார்த்துப்போம் மிருது. இப்போ கிடைச்ச இந்த வாய்ப்பை ஏன் விடணும்?”
“அப்படியா சொல்லறேங்கள்?”
“அப்படி தான். இந்த காலத்துல பண்ணெண்டாயிரம் சம்பளம், அமெரிக்கா வாழ்க்கை!!!! வேண்டாம்னு சொல்ல எப்படி உனக்கு மனசு வருதுனே எனக்கு புரியலை!!! சப்போஸ் உனக்கு அமெரிக்காலேயே வேலை கொடுத்துட்டா கசக்கறதா என்ன? நீ அந்த ஃபாரமில் கையெழுத்துப் போட்டு நாளைக்கு குடுத்திடு மத்ததெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் புரியறதா?”
“ம்….ம்….”
என்று சொல்லித் தலையசைத்தாலும் அவள் மனதில் பெரும் போராட்டமே நடந்துக் கொண்டிருந்தது. அன்றிரவு முழுவதும் தூங்காமல் மனதில் தன் அம்மா, வேனு, நவீன், ஈஸ்வரன், பர்வதம் சொன்னவற்றை எல்லாம் அசைப் போட்டுக் கொண்டிருந்தாள். அவளுள் ஒரு பட்டிமன்றமே நடந்தது. விடிய விடிய தன் மனதில் நடந்த அந்த விவாதங்களின் முடிவை எடுத்தாள் மிருதுளா. தெளிவு பிறந்தது. ஃப்ரெஷ் ஆகி வந்து காபிப் போட்டுக் கொண்டு ஹாலில் உட்கார்ந்து மெல்ல ருசித்து அருந்தினாள். அப்போது நவீன் எழுந்து வந்து..
“என்ன மிருது இவ்வளோ சீக்கிரம் எழுந்துட்ட!!!”
“தூங்கினா தானே எழுந்துக்கறதுக்கு!!!”
“என்ன சொல்லுற? அப்போ நீ நைட் தூங்கவே இல்லையா?”
“ஹூம் …ஹூம்… தூக்கம் எப்படி வரும் நவீ?”
“நீ இன்னுமா அதே குழப்பதுல இருக்க?”
“இருக்காதா பின்ன?”
“ஒரு குழப்பமும் வேண்டாம் மிருது. நாங்க சொன்னதெல்லாம் தள்ளி வை. உன் மனசைக் கேள். அது சொல்லும் நீ என்ன செய்யணும்னு. அதுபடி செய். இட்ஸ் அப் டூ யூ. நீ சேரறேன்னு சொன்னாலும் சரி சேரமாட்டேன்னு சொன்னாலும் சரி ஐ வில் ரெஸ்பெக்ட் யூவர் டிஸிஷன் ஓகே!!! இரு நான் போய் ப்ரஷ் பண்ணிட்டு வர்றேன்”
நவீன் ப்ரெஷ் பண்ணிட்டு வந்ததும் மிருதுளா சூடான காபியைக் கொடுத்தாள். அவனும் அதைக் குடித்துக் கொண்டே பேப்பர் படித்தான். பின் மிருதுளாவிடம்….
“ஹேய் மிருது இன்னைக்கு நாம ப்ரேக்ஃபாஸ்ட் அந்த கம்பெனிக்கு போற வழியில இருக்குற டாபால சாப்பிடுவோமா? அப்படியே உன் டிஸிஷனை அவாகிட்ட சொல்லிட்டு வந்ததும் அங்கேயே லஞ்சும் சாப்டுட்டு வீட்டுக்கு வந்திடுவோம் என்ன சொல்லற?”
“என்ன நவீ நாம அன்னைக்கே இன்டர்வியூக்கு போனபோதே சாப்பாடு பழங்கள், காய்கள் எல்லாம் வாங்கிண்டு வந்ததிலேயே நூறு ரூபாய் போயிடுத்து இப்போ நம்ம கிட்ட இருக்கறதே நானூறு ரூபாய் தான் இதுல தான் இந்த மாசத்தையே ஓட்டணும். அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நான் இட்டிலி வச்சுடறேன். மத்தியத்துக்கும் சமச்சுடறேன். நிறைய டைமிருக்கே!!! எல்லாத்தையும் முடிச்சுட்டே கிளம்பலாம்”
அன்று நவீனுக்கு வலித்தது. ஆம் தன்னை நம்பி வந்தவளுக்கு இவ்வளவு கஷ்டம் கொடுக்கிறோமே என்று அவன் மனம் வருந்தியது. மிருதுளாவைத் திருமணம் செய்துக் கொள்வதற்கு முன் தனது முதல் பத்து வருட சம்பாத்தியத்தை தாய் தந்தை என்று நம்பி தன் படிப்புச் செலவு போக மீதம் அனைத்தையும் தனக்கென ஏதும் வைத்துக் கொள்ளாமல் கொடுத்ததால் இன்று தன் மனைவிக்கு ஒன்றும் செய்யமுடியாமல் போகிறதே என்று எண்ணி பெருமூச்சு விட்டான். பேங்க்கில் லோன் போட்டு வாங்கிய பைக்கின் ஈ.எம்.ஐ முடிவதற்கு இன்னும் ஒரு வருடம் மீதமிருந்தது. தன் பெற்றோர்கள் இருந்த வீட்டை விலைக்கு வாங்க எடுத்த லோனின் ஈ.எம்.ஐ முடியவும் ஆறு மாத காலம் மீதமிருந்தது. இதை எல்லாம் எண்ணிக்கொண்டே அமர்ந்திருந்தவனைத் தோளில் தட்டினாள் மருதுளா.
“ஆங் ஆங் ஏய் மிருது நீ குளிச்சாச்சா?”
“நான் குளிச்சு டிபன் ரெடி பண்ணி சாதம் வச்சு குழம்பும் வச்சாச்சு. நீங்க என்ன இந்த பேப்பர்லேயே மூழ்கிட்டேங்கள்? சரி சரி எழுந்து குளிச்சு ரெடி ஆகுங்கோ அதுக்குள்ள நான் கிட்சன் வேலைகளை முடிச்சுட்டு சக்தியை எழுப்பி ரெடி பண்ணறேன்.”
என்று மிருதுளா சொன்னதும் எழுந்து குளிக்கச் சென்றான் நவீன். அவன் குளித்து ரெடி ஆவதற்குள் மிருதுளா சொன்னது போலவே எல்லா வேலைகளையும் முடித்து சக்தியையும் எழுப்பி ப்ரஷ் செய்து உடம்பை ஈர டவலால் துடைத்து சுத்தம் செய்து அவளுக்கு டிபன் ஊட்டிவிட்டுக் கொண்டிருந்தாள். அதை முடித்ததும் அவளை விளையாட விட்டுவிட்டு அவளுக்கு வேண்டிய டிரஸ் மற்றும் டையப்பரையும், பழங்களை வெட்டி டப்பாவில் போட்டு வைத்திருந்ததையும், பிஸ்கெட் பாக்கெட்டையும், தண்ணீர் பாட்டிலும் என அனைத்தையும் ஒரு பேகில் போட்டு வைத்து விட்டு நவீனுடன் சேர்ந்து காலை உணவருந்தினாள்.
பிறகு சாமி கும்பிட்டு விட்டு அந்த கம்பேனிக்கு பைக்கில் புறப்பட்டுச் சென்றனர். மிருதுளா கேட்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளே சென்றாள். அங்கு அந்த கம்பேனி பார்க்கிங்கில் பைக்கை நிறுத்திவிட்டு வாசலில் இருந்த பெரிய ஆலமரத்தடியைச் சுற்றிப் போடப்பட்டிருந்த சிமெண்ட் மேடையின் மீது சக்தியை வைத்துக் கொண்டு அமர்ந்தான் நவீன்.
உள்ளே சென்ற மிருதுளாவை ஓரிடத்தில் அமரச் செய்தனர். அப்போதும் அவள் மனம் முழுவதும் …..தான் இல்லாமல் நவீன், சக்தி என்ன செய்வார்கள்? எப்படி இருப்பார்கள் என்ற எண்ணமும், தான் இப்போது இந்த வேலையில் சேர்ந்தால் தன் குடும்பத்திலிருக்கும் பணப் பிரச்சினை தீருமே அதற்காகவாவது ஆறு மாசம் பல்லைக் கடித்துக் கொண்டு கடந்திடலாமா என்ற எண்ணமும் ஓடிக்கொண்டிருந்தது. அந்த சிந்தனைகளை மனதில் அசைப் போட்டுக் கொண்டே தான் அமர்ந்திருந்த இருக்கையின் வலது புறமிருந்த ஜன்னல் வழியாகப் பார்த்தாள். வெளியே மரத்தடியில் அமர்ந்திருந்த நவீனும் சக்தியும் தெரிந்தனர். அவர்களையே சற்று நேரம் பார்த்தவள் கண்கள் கலங்கியது. மீண்டும் குழப்பம் என்னும் வேதாளம் அவளைத் தொற்றிக் கொண்டது. அவள் பெயர் சொல்லி அழைக்கப்பட்டதும் மனதில் ஒரு குருக்ஷேத்திர போரை நடத்திக் கொண்டே சட்டென எழுந்து சென்று அந்த அறையின் கதவைத் தட்டி
“மே ஐ கம் இன்” என்றாள்.
தொடரும்…….
அத்தியாயம் 74: கல்யாணமாம் கல்யாணம்!!
நவீனும் மிருதுளாவும் ராமனுஜம் வீட்டில் ஒரு நாள் தங்கியப் பின் தங்கள் பெட்டிகளை ஈஸ்வரன் வீட்டில் விட்டுவிட்டு வந்ததால் மறுநாள் மீண்டும் ஈஸ்வரன் வீட்டுக்குச் சென்றனர். அங்கே கவினும் கஜேஸ்வரியும் எங்கோ கிளம்பிக்கொண்டிருந்தனர். நவீனும் மிருதுளாவும் உள்ளே நுழைந்ததும் ஈஸ்வரன்
“வாங்கோ வாங்கோ”
“நவீன் நல்ல வேளை நீ வந்த இல்லாட்டி நாங்க திரும்பி வரதுக்குள்ள நீங்க ரெண்டு பேரும் குஜராத்துக்கு கிளம்பியிருப்பேங்கள்.”
“அப்படியா!! நாங்க இன்னைக்கு நைட்டு கிளம்பறோமே!”
“நாங்களும் இன்னைக்கு நைட்டு எங்க ஹனிமூனுக்காக கேரளா பேக் வார்டர்ஸ் போறோம்”
“ஓ! அப்படியா!! சரி சரி எஞ்சாய்”
“நீயும் மன்னியும் ஹனிமூனுக்கெல்லாம் போகலை இல்ல”
“ஆமாம் நாங்க எங்கேயும் போகலை கவின்”
“இதெல்லாம் மிஸ் பண்ணலாமா நவீன். இனி கிடைக்குமா?”
என்று நவீனிடம் அக்கறையாக சொல்வதைப்போல குத்திப் பேசி நக்கலடித்தான் கவின். அதற்கு பதிலேதும் கூறாமல் அமைதியாக இருந்தான் நவீன். அனைத்தையும் கேட்டுக் கொண்டே பெட்டிக்குள் துணிமணிகளை அடுக்கிக் கொண்டிருந்த மிருதுளா கவினிடம்….
“வெளியூருக்குப் போனா தான் ஹனிமூன் போனதா அர்தமில்லை கவின் வீட்டிலேயே தனியாக தம்பதிகள் டைம் ஸ்பென்ட் செய்தாலும் …அது தான் அர்த்தம். அதுபடிப் பார்த்தா நாங்க நல்லாவே எஞ்சாய் பண்ணிருக்கோம் தெரியுமா!!”
“அது சரி தான் மன்னி. இப்போ நாங்களும் குவைத் போயிட்டா தனியா தான் இருப்போம் அது ஹனிமூன் ஆகிடுமா என்ன?”
வேண்டுமென்றே தேவையில்லாத பேச்சு வளர்வதை விரும்பாத மிருதுளா சட்டென
“சரி சரி கவின் உங்களுக்கு வாய்ப்பு கிடைச்சது போறேங்கள். எங்களுக்கு எப்போ வாய்ப்புக் கிடைக்குதோ அப்போ நாங்க போயிப்போம் போதுமா! உடனே உங்களுக்கு கிடைத்தது கொஞ்சம் காலதாமதமாக எங்களுக்கு கிடைக்கப் போறது அவ்வளவு தானே!!! என்ன நவீன் நான் சொல்லறது சரிதானே”
“எஸ் எஸ் வெரி வெரி கரெக்ட் மிருது”
“ஹா!! ஹா !! ஹா!! என்ன கரெக்ட் நவீன்? இப்போ போகாம அறுபதாம் கல்யாணம் முடிஞ்சா போவேங்கள்?”
“ஏன் போகக்கூடாதா என்ன? அப்போ தான் வாய்ப்புக் கிடைச்சுதுன்னா அப்போ போவோம். அது வரை அன்யோன்யமா வாழ்ந்திருக்கோம் அப்படிங்கறத செலிப்ரேட் பண்ண போவோம்”
“ஓகே ஓகே நீங்க அறுபாதம் கல்யாணம் முடிஞ்சிட்டே போங்கோ நாங்க இன்னைக்கு கிளம்பறோம்”
“ஓகே கவின் அன்ட் கஜேஸ்வரி எஞ்சாய் யுவர் ஹனிமூன் ட்ரிப்”
“தாங்கஸ் மன்னி. ஷுவர் வீ வில்”
“சரி நான் ஒன்னு உன் கிட்ட கேட்கலாமா கவின்? ரொம்ப நாளா கேட்கணும்ன்னு இருந்தேன்”
“ம்…கேளுங்கோ மன்னி”
“இந்த கேரளாக்காரா ஒருத்தர் கல்ஃபுக்கு போனா அவா சொந்தங்கள் எல்லாரையும் அங்க கூட்டிண்டு போயிடறா இல்லையா!!! அது மாதிரி நீ ஏன் பண்ணலை? நீ குவைத்துக்கு போயி மூன்று வருஷம் ஆச்சே!!”
“மன்னி அங்கே வேலைப் பார்க்கணும்ன்னா டெக்னிக்ல் நாலேட்ஜ் வேணும். அது நவீன் கிட்ட சுத்தமா இல்லையே அப்புறம் எப்படி ?? அங்க அக்கௌன்டன்ட்ஸுக்கு டிமான்ட் அதிகம். உங்களுக்கு நிறைய ஆஃபர்ஸ் கிடைக்கும் ஆனா நவீனுக்கு கஷ்டம் தான்”
“நான் இப்போ நவீனை ஏன் கூட்டிண்டு போகலைன்னு கேட்கவேயில்லையே!!! நம்ம ப்ரவின், பவின் இருக்காளே அவாளைக் கூட்டிண்டு போயிருக்கலாமே அவாளுக்கு நீ சொன்ன டெக்கினிக்ல் நாலேட்ஜ் இருக்கே!!!”
“ஆங் அவா ரெண்டு பேரும் படிப்பை முடிக்கட்டும் அப்புறம் பார்ப்போம்”
“அதுவும் சரிதான். அப்போ அடுத்த வருஷம் அவா ரெண்டு பேருக்கும் அங்கே வேலை கிடைச்சுடும்ன்னு சொல்லு”
“பார்ப்போம் மன்னி பார்ப்போம்!!!”
“சரி சரி நான் சக்திக்கு சாப்பாடு ஊட்டணும் நீங்க பேசிண்டு இருங்கோ நான் வரேன்”
என்று கவினின் கேலி நக்கல் பேச்சுக்கு பதிலடிக் கொடுத்தப் பின் உள்ரூமில் சக்திக்கு சாப்பாடு ஊட்டிவிடச் சென்றாள் மிருதுளா. அப்போது அங்கு வந்த நவீனிடம் மெதுவாக
“உங்களுக்கு டெக்னிக்கல் நாலேட்ஜ் இல்லாமல் போனதுக்கு இந்த குடும்பம் தான் காரணம். அவன் அப்படி சொல்லும் போது கேட்டுண்டு பேசாம உட்கார்ந்திருந்தா உங்க அப்பாவும் அம்மாவும். அவாளால தானே நீங்க பதினாறு வயசுலேயே வேலைக்குப் போக வேண்டியதாச்சு அதை எடுத்து சொல்லியிருக்கலாம் இல்லையா!!! நக்கலடிக்கறான்!!! ஏன் அவன் கல்யாணம் நம்ம கல்யாணம் மாதிரி நடக்கணும்னு தானே கண்டீஷன் எல்லாம் போட்டான்….அப்படியா நடந்தது. சாப்பாடு பத்தாம, கல்யாண பட்சணம்ன்னு ஒருத்தருக்கும் ஒண்ணும் தராம, தீஞ்ச பாயசம்ன்னு அவா கல்யாணம் நடந்த விதத்தை நமக்கு கேலிச் செய்ய எவ்வளவு நேரமாகும்!! நாம செய்தோமா? வேணும்னா பாருங்கோ நம்மளையும் அதே ஊர்ல கொண்டு போயி உட்கார வைப்பா அந்த அம்மன்.
“விடு மிருது அவன் கெடக்கான். மே பி அதை கிண்டலடித்திடுவோமோன்னு தான் அவன் முந்திக்கறான் போல!!! லெட்ஸ் ஜஸ்ட் லீவ் இட். நீ எல்லாத்தையும் பேக் பண்ணிட்டயா?”
“அதுவும் சரிதான். ஆங் பேக் பண்ணிட்டேன்.”
இரவு ஏழு மணிக்கு அனைவருமாக டிபன் அருந்தினர். கவினுக்கும் கஜேஸ்வரிக்கும் ட்ரெயின் எட்டரை மணிக்கென்பதால் என்பதால் அவர்கள் இருவரும் முதலில் கிளம்பிச் சென்றனர். நவீன் மிருதுளாவுக்கு பத்து மணிக்கென்பதால் அவர்கள் ஒன்பது மணிக்குக் கிளம்பிச் சென்றனர்.
ஒரு வருடம் ஆனது. ஈஸ்வரன் பர்வதம் பவின் மற்றும் அவன் நண்பன் என நால்வருமாக குஜராத் சென்றனர். மிருதுளா அவர்களை வரவேற்று நன்றாக கவனித்துக் கொண்டாள். தன்னைக் கொடுமைப் படுத்திய மாமியாரிடம் கூட தன்மையாக நடந்துக் கொண்டாள். அதை எல்லாம் பார்த்த நவீன் அவளிடம்
“என்ன மிருது உன் மாமியாரை ஒரு வேலை செய்ய விடாம எல்லாத்தையும் நீயே செய்யற?”
“இது நம்ம வீடு நவீ. நம்மாத்துக்கு யார் வந்தாலும் நாம அவாளை நல்லா பார்த்துக்கணும். அது தான் என் அம்மா எனக்கு அவா செயல் மூலமா சொல்லிக்கொடுத்தது. இது தான் நான். ஆத்துக்கு வரவா எதிரியாகவே இருந்தாலும் நாம நல்லா கவனிச்சுக்கணும்ங்கறது என்னோட பாலிசி.”
“சூப்பர் போ!!! சரி இந்த மாசம் செலவுக்கு காசு பத்துமா?”
“பத்தும் பத்தும் நான் சமாளிச்சுக்கறேன்”
என்று நவீன் வாங்கும் சம்பளத்தில் சிக்கனமாக வாழ்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் வேளையில் இப்படி குடும்பத்தினர் மட்டுமின்றி நண்பனையும் கூட்டிக் கொண்டு வந்திருக்கின்றனர் பர்வதீஸ்வரன். அன்று மாலை அனைவருமாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது ஈஸ்வரன்
“எனக்கு நாளன்னைக்கு அறுபது வயசாக போறது”
“அப்படியா சூப்பர் அப்பா. எனக்கு இது தெரியாது”
“மிருது நானே இப்போ தான் தெரிஞ்சுண்டேன்”
“கேக் வாங்கி வெட்டி செலிப்ரேட் பண்ணிடலாம் நவீ”
“இல்லை அதெல்லாம் வேண்டாம். எங்களுக்கு அறுபதாம் கல்யாணம் பண்ணி வையுங்கோ. ரம்யா ஃபேமிலியை இன்வைட் பண்ணுங்கோ அப்புறம் வேற யாராவது வரணும்னா அவாளையும் இன்வைட் பண்ணிக்கோங்கோ புரிஞ்சுதா.”
என்று ஒரு பெரிய செலவிற்கான குண்டைத் தூக்கிப் போட்டார் ஈஸ்வரன். அவர்கள் சும்மா வரவில்லை காரணமாகதான் வந்துள்ளனர் என்று அப்போது புரிந்துக் கொண்டனர் நவீனும் மிருதுளாவும். அன்றிரவு மிருதுளா நவீனிடம்
“இது என்ன நவீ புது செலவ இழுத்து விடறா?”
“விடு சொல்லிட்டுப் போறா. இவாளுக்கு ஊரைச் சுத்திக் காமிச்சு அங்க இங்கன்னு கூட்டிண்டு போனதிலேயே பைசா காலி இதுல எங்கேந்து அறுபதாம் கல்யாணம் பண்ணுவோம்? நாம ஒரு கேக் வாங்கிண்டு வந்து ஆத்துல வெட்டி செலிப்ரேட் பண்ணுவோம் போதும்”
“புள்ளகளை பெத்து வளர்த்து படிக்க வச்சு ஆளாக்கி அவாளுக்காகவே வாழ்ந்து, அவா சுக துக்கங்கள்ல பங்கெடுத்து இருக்கும் பெத்தவாளுக்காக புள்ளகளே விரும்பிப் பண்ணறது தான் அறுபதாம் கல்யாணம் ஆனா இங்க என்னடான்னா புள்ளகளுக்குன்னு ஒண்ணுமே செய்யமா , மூத்த புள்ளையை எவ்வோளோ படுத்த முடியுமோ அவளோ படுத்திட்டு அவன்கிட்டயே வந்து அறுபதாம் கல்யாணம் பண்ணி வைன்னு டிமாண்ட் பண்ணறா!!! அது தான் எனக்குப் பிடிக்கலை நவீ. வாய் விட்டுக் கேட்டுட்டா !!! நாம இதுக்கு மேலேயும் பண்ணாம இருக்கக் கூடாது.”
“அதுக்குன்னு!!!! என்ன பேசற மிருது? நம்மகிட்ட எங்கே காசு? எவ்வளவு செலவாகும் தெரியுமா?”
“நாம ஏன் மண்டபம் அது இதுன்னு போகணும். பேசாம நாளைக்கு நம்ம ஊரு முருகன் கோவிலிருக்கே அங்கே போயி விசாரிப்போம். அப்புறம் டிசைட் பண்ணுவோம்”
“எப்போ சொல்லறா பாரேன். நமக்கு டைமும் இல்லை”
“விடுங்கோ நாம நாளைக்கு கேட்டு விசாரிச்சுட்டு வந்து என்ன பண்ணலாம்ன்னு முடிவெடுப்போம்”
மறுநாள் நவீனும் மிருதுளாவும் சக்தியைக் கூட்டிக் கொண்டு விடியற் காலையிலேயே கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு கிளம்பிச் சென்றனர். அவர்கள் சென்றதும் பர்வதம் ஈஸ்வரனிடம்
“ஏன் நம்மளையும் கூட்டிண்டு போனா என்னவாம். அவா மட்டும் பைக்கில் போயிட்டா பாருங்கோ”
“இதோ நம்ம பவினும் அவன் ஃப்ரெண்டும் தூங்கிண்டிருக்கா!! அதுவுமில்லாம அவா ரெண்டு பேர்ன்னா பைக்குல போயிட்டு வந்திடுவா! நம்மளையும் கூட்டிண்டு போகணும்னா ஆட்டோ வரவழைக்கணும். இந்த நேரத்துல எங்கேந்து ஆட்டோ கிடைக்கும்? அதுனால அவா மட்டும் போயிருப்பா!! விடேன்”
நவீனும் மிருதுளாவும் கோவிலில் விசாரித்தனர். அங்கே அவர்கள் எழுநூற்றி ஐம்பது ரூபாய் முன்பணம் செலுத்தி அறுபதாம் கல்யாணத்தை அங்கு நடத்த ஏற்பாடு செய்துவிட்டு, அருகிலிருந்த தமிழ்காரர் துணிக் கடையிலிருந்து ஒரு புடவையும், வேஷ்டி அங்கவஸ்த்திரமும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தனர். வந்ததும் ஈஸ்வரனிடம் ஏற்பாடுகளை சொன்னார்கள். மறுநாள் காலை ஆறு மணிக்கெல்லாம் கோவிலில் இருக்க வேண்டுமென்றும் அதனால் அனைவரையும் தயாராக இருக்கும் படியும் சொல்லிவிட்டு ரம்யா சித்திக்கு ஃபோன் போட்டு அவர்களையும் கோவிலுக்கு வரும்படி அழைத்தனர் நவீனும் மிருதுளாவும். பின் மிருதுளா தன் மாமனார் மாமியாரிடம் அவர்களுக்காக வாங்கி வந்த புதுப் புடவை வேஷ்டியைக் கொடுத்து
“அம்மா அப்பா நீங்க இந்த புது டிரஸைத் தான் நாளைக்குப் போட்டுக்கணும்”
“இது என்ன காட்டன் புடவையா?”
“ஆமாம் மா”
“என்ன ஒரு நூறு ரூபாயாவது இருக்குமா?”
“ஆங் நூற்றி இருபத்தைந்து ரூபாய்”
என்று கூறிவிட்டு அடுப்படிக்குள் சென்றாள் மிருதுளா. தன் மனதில்
“இவாளுக்கு இதெல்லாம் நான் செய்யணும்னே அவசியமில்லை ஆனாலும் வயசானவா கேட்டுட்டாளேன்னு கையில பணமில்லாத நேரத்துலயும் கூட அட்ஜஸ்ட் பண்ணி எல்லாம் செய்தா….குத்தத்த பாரு!!! அம்மா தாயே நாங்க எங்களால முடிஞ்சதைப் பண்ணறோம் மா. இதுல ஏதாவது தவறிருந்தாலோ குற்றம் குறையிருந்தாலோ மன்னிச்சுடு மா”
என்று தனக்குத் தானே பேசிக் கொண்டே வேலையை செய்தாள். அப்போது அங்கு வந்த நவீன்
“ஏய் மிருது நாம ரம்யா சித்தி ஃபேமிலியையும் இன்வைட் பண்ணிட்டோம் அவாளுக்கு ப்ரேக் ஃபாஸ்ட்?”
“நான் காலையில வெண்பொங்கலும் இட்டிலியும் தேங்காய் சட்னியும் செய்துடறேன். கோவில்ல தான் சக்கரைப் பொங்கல் ஒரு பாத்திரம் தருவான்னு சொன்னாலே !! ஸோ இதெல்லாம் வச்சு மேனேஜ் பண்ணிடலாம் நவீ”
“ஏய் விளையாடறயா? மொத்தம் பத்து மெம்பர்களுக்கு செய்யணும்!! அதுக்கு நீ சீக்கிரம் எழுந்திரிக்கணுமே!!”
“ஆமாம் எழுந்திரிச்சாகணும். வேறு வழி. அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் நவீ”
அன்றிரவு அனைவரும் சீக்கிரம் தூங்கச் சென்றனர். மறுநாள் விடியற்காலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து அடுப்படியில் வேலையில் இறங்கினாள் மிருதுளா. அப்போது பர்வதம் அடுப்படி லைட் வெளிச்சத்தில் எழுந்து வந்து
“என்ன மணி மூணு தானே ஆகறது!! இப்போ இங்கே என்னப் பண்ணிண்டு இருக்க?”
“எல்லாருக்கும் காலை டிபன் ரெடி பண்ணிண்டிருக்கேன் மா”
“சரி சரி பண்ணு!! நான் போய் படுத்துக்கறேன். இந்ந கதவை சாத்திக்கோ வெளிச்சம் நேரா கண்ணுல படறது”
என்று அடுப்படி கதவைச் சாத்திவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டாள் பர்வதம். மிருதுளா அனைத்து செய்து தயாராக்கி விட்டு குளித்து கிளம்பினாள். நாலரை மணிக்கு அனைவரும் எழுந்தனர். மிருதுளா அனைவருக்கும் காபிப் போட்டுக் கொடுத்தாள். ஒருவர் பின் ஒருவராக அனைவரும் குளித்துக் கிளம்பினர். நவீன் பைக்கில் சென்று ஒரு ஆட்டோவை அழைத்து வந்தான். அதில் ஈஸ்வரன், பர்வதம், பவின் மற்றும் அவன் நண்பன் ஏறிச் சென்றனர். மிருதுளா சக்தியை குளிப்பாட்டி டிரஸ் போட்டுவிட்டு அவளைத் தூக்கிக் கொண்டு கதவை தாழிட்டு நவீனுடன் பைக்கில் கோவிலுக்குச் சென்றாள்.
அங்கே அனைத்தும் தயாராக வைத்து சாஸ்திரிகள் காத்திருந்தனர். ஈஸ்வரனையும் பர்வதத்தையும் அமரச் சொல்லி அறுபதாம் கல்யாணம் சிம்பிளாக கோவிலில் நடந்தேறியது. ரம்யா சித்திக் குடும்பத்தினரும் கலந்துக் கொண்டர். அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்ததும் பிரசாதமான சக்கரைப் பொங்கலை வாங்கிக்கொண்டு அனைவரும் வீட்டிற்கு வந்தனர். அங்கே எல்லோருக்கும் நவீனும் மிருதுளாவுமாக… மிருதுளா தயார் செய்து வைத்திருந்த வெண்பொங்கல், இட்டிலி, தேங்காய் சட்னி மற்றும் பிரசாதமான சக்கரைப் பொங்கல் பரிமாறினார்கள். அனைவரும் சாப்பிட்டதும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர் அப்போது ஈஸ்வரன் தன் மகன் மருமகளின் நிதி நிலவரம் அறியாதது போல
“என்னத்துக்கு ஆத்துல இப்படி கஷ்டப் பட்டுண்டு பேசாம ஏதாவது ஹேட்டல்ல ஏற்பாடு பண்ணிருக்கலாமே”
“ஏன் பா நான் செஞ்ச டிபன் நல்லா இருக்கலையா என்ன?”
“ஏய் மிருது கலக்கிட்ட போ. பர்வதம் அக்கா அத்திம்பேர் உங்க புள்ளையும் மாட்டுப்பொண்ணுமா உங்க அறுபதாம் கல்யாணத்தை ஜமாய்ச்சுட்டா!!! மிருது ஐ லைக் தி வெண்பொங்கல் வெரி மச் அன்ட் எப்படி இட்டிலியை அவ்வளவு சாஃப்ட்டா செஞ்சிருக்க? இந்த ஊர்ல ஹோட்டல்ல சாப்பிட்டிருந்தா இவ்வளவு ருசியான டிபன் நிச்சயம் கிடைச்சிருக்காது அத்திம்பேர்”
“தாங்க்ஸ் சித்தி”
அவர்கள் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது மதியம் சாப்பாடும் தயார் செய்தாள் மிருதுளா. அனைவரும் விருந்து சாப்பாடு சாப்பிட்டனர். மாலை காபி அருந்தியப் பின் ரம்யா சித்திக் குடும்பம் கிளம்பினர். அப்போது நவீனும் மிருதுளாவும் அவர்களுக்கு தாம்பூலம் கொடுத்து வழி அனுப்பிவைத்தனர்.
தனக்கும் தன் கணவருக்கும் தீங்கைத் தவிற வேறு ஏதும் செய்திடாத மாமனார் மாமியாருக்கு அவர்கள் மகனே வேண்டாமென்று சொன்ன போதும் மூத்த தம்பதியரின் சஷ்டியப்தபூர்த்தியை எடுத்து அவர்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக நடத்தி மகன் மருமகளின் கடமையிலிருந்து தவராதிருந்தனர் நவீனும் மிருதுளாவும்.
“தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்.”
என்ற திருக்குறளுக்கு ஏற்றார் போல வாழ்ந்திடாத பர்வதீஸ்வரனுக்கு அவர்களின் முன் ஜென்ம பலனால்
“மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்”
என்ற திருக்குறளுக்கு ஏற்றார் போல நவீன் தனது பண்ணிரெண்டு வயது முதல் செய்துக் கொண்டிருப்பதும் அதை தொடர்ந்திட மிருதுளா கைக் கொடுப்பதும் பொருத்தமாக இருக்கிறது என்று தான் சொல்லத் தோன்றுகிறது!!!!
தொடரும்……
அத்தியாயம் 73: கவின் கல்யாண வைபோகமே!!
அம்புஜம் குஜராத் வந்து ஒரு மாதமானது. அம்புஜமும் கிளம்பி ஊருக்குச் சென்றாள். நாட்கள் நகர்ந்தன. ஒரு நாள் ஈஸ்வரனிடமிருந்து நவீன் மிருதுளாவுக்கு ஃபோன் வந்தது.
“ஹலோ நான் ஈஸ்வரன் பேசறேன்”
“ஆங் சொல்லுங்கோ பா நான் மருது தான் பேசறேன்”
“நவீன் இல்லையா?”
“இருக்கார் பா குளிச்சிண்டிருக்கார்.”
“சரி சரி அடுத்த மாசம் கவினுக்கும், கஜேஸ்வரிக்கும் கல்யாணம் ஞாபகம் இருக்கா!!”
“ஏன் இல்லாம!!! நல்லா ஞாபகம் இருக்கு”
“சரி சரி அதுக்கு முன்னாடி ஆத்துல சுமங்கலிப் பிரார்த்தனையும் சமாராதனையும் பண்ணப்போறோம். அது கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடி வச்சிருக்கோம். நீ வரணும். புரிஞ்சுதா? சக்தி எப்படி இருக்கா? நவீன்ட்டயும் சொல்லிடு. வச்சுடறேன்”
“சக்தி நல்லா இருக்கா. சரி ப்பா…”
என்று சொல்லி முடிப்பதற்குள் ஈஸ்வரன் ஃபோனை வைத்துவிட்டார். ரிசீவரையே பார்த்துக்கொண்டிருந்த மிருதுளாவிடம் பாத்ரூமிலிருந்து வெளியே வந்த நவீன்
“ஏய் மிருது யாரு ஃபோன் ல? ஏன் ரிசீவரை கீழே வைக்காமல் பிடிச்சிண்டே இருக்காய்?”
என கையிலிருந்த ரிசீவரை வாங்கி வைத்துவிட்டு அவளை ஒரு உலுக்கு உலுக்கினான் நவீன்…
“ஆங் ஆங் என்ன நவீ?”
“நீ எங்கே இருக்க? ஃபோன்ல யாருன்னு கேட்டு பத்து நிமிஷமாச்சு!! அப்படியே சிலை மாதிரி நிக்கற?”
“உங்க அப்பா தான். அடுத்த மாசம் கவின் கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடி சுமங்கலிப் பிரார்த்தனை வச்சிருக்காளாம் அதுக்கு வரச்சொன்னா.”
“நீ எங்கன்னு போவ? அவா புது வீடு அட்ரஸ் இருக்கா? சரி ஃபோன் பண்ணினாலே அதை பத்தி சொன்னாளா? இல்ல அட்ரஸ் தான் கொடுத்தாளா?”
“அதெல்லாம் ஃபோன் போட்டுக் கேட்டுக்கலாம் விடுங்கோ”
“அப்போ அப்படி கேட்டுத் தெரிஞ்சிண்டு நாம அந்த கல்யாணத்துக்கு போகணுமா? நமக்கு இன்விடேஷனை கூட காமிக்கலையே!!”
“அதுக்கு தான் இன்னும் ஒரு மாசமிருக்கே அப்புறம் என்ன? அனுப்புவா!!! நாம போயிட்டு வருவோம். இதெல்லாம் பெரிசாக்க வேண்டாமே ப்ளீஸ் நவீ. அப்புறம் இதுக்கும் என் தலைதான் உருட்டப்படும்”
“என்னோட அபிப்பிராயத்தை சொன்னேன். இதுக்கு மீறியும் போனும்னா போகலாம் ஆனா …..சரி போவோம் போய் தான் பார்ப்போம்”
“என்ன ஆனா? ஆவன்னான்னுட்டு?”
“ஒண்ணுமில்லை போவோம் போவோம். சரி நீ ஏன் பிரமைப் பிடிதவள் போல ரிசீவரை வச்சுண்டு நிண்ணுண்டிருந்த”
“சக்தி எப்படி இருக்கான்னு கேட்டார். நான் பதில் சொல்லறதுக்கு முன்னாடியே ஃபோனை வச்சுட்டார். அதுவுமில்லாம சுமங்கலிப் பிரார்த்தனைக்கு அந்த தேதி எனக்கு சரி வருமா என்னோட நாள் ஏதாவது வருமான்னு ஒண்ணுமே கேட்காம இந்த தேதி வரணும்ன்னு மட்டும் சொல்லிட்டு வச்சுட்டாரா… அது தான் அந்த ஷாக் ல இருந்தேன்.”
“இன்னும் நிறைய இருக்கலாம் எதுக்கும் பி கேர் ஃபுல் மிருது”
“ஓகே ஓகே”
கவினின் கல்யாண தேதிக்கு ஒரு வாரம் முன்னதாகவே ஊருக்குச் சென்றனர் நவீனும் மிருதுளாவும். அவர்கள் எப்போது வீடு வாங்கினார்கள் என்றோ இல்லை எப்போது வீடு மாறி வந்தார்கள் என்றோ ஒன்றுமே கேட்கவில்லை நவீனும் மிருதுளாவும். கவின் மட்டும் நவீனிடம்
” நல்ல ஆஃபர் வந்ததுன்னு நம்ம பிச்சுமணி மாமா பாங்க்ல லோன் போட்டு இந்த அப்பார்ட்மெண்ட் வாங்கிட்டேன்.”
“ஓ அப்படியா. நல்லா இருக்கு”
என்று அத்துடன் நிறுத்திக் கொண்டான் நவீன்.
சுமங்கலிப் பிரார்த்தனை நாள் வந்தது. அன்று காலை வீட்டுச் சுமங்கலிப் பெண்கள் அனைவரும் குளித்து ஒன்பது கஜம் புடவை உடுத்திக் கொண்டனர். சுமங்கலிப் பிரார்த்தனை சிறப்பாக நடந்தேறியது. அப்போது அனைவரையும் சற்று வெளியே நிற்கச் செய்து சாமி இலையில் சாப்பாடு பரிமாறி விட்டு கதவைச் சாற்றி அவர்கள் வம்சத்தில் சுமங்கலிகளாக இறந்தவர்கள் பெயர்களை கைத் தட்டி அழைக்கச் சொன்னார் சாஸ்திரிகள். அப்போது பர்வதம் அவள் வீட்டுப் பக்கம் பெண்களின் பெயர்களைச் சொல்ல ஆரம்பித்தாள்….அதைக் கேட்ட நவீனின் அத்தை வாசலில் இருந்து
“ஏய் பர்வதம்!!! உன் ஆத்துக் காரர் பக்கம் சுமங்கலியா போனவாளை தான் அழைக்கணும். நீ யாரை அழைக்கறாய்?”
என்றதும். உடனே ஏதேதோ பெயர்களை முனுமுனுத்தாள் பர்வதம். அது காதில் விழாததால் மிருதுளா
“அம்மா என்ன பெயர் சொன்னேங்கள்? எனக்கு கேட்கலை.”
“எல்லாம் நான் சொல்லியாச்சு அது போதும். பேசாம இரு”
என்றதும் மிருதுளாவும் அமைதியாக தன் மனதில்
“அம்மா தாயே நடப்பதனைத்தையும் நீயே பார்த்துக் கொண்டிருக்கிறாய். எனக்கு சரியா புரியலை அதுனால சொல்ல முடியலை மன்னிச்சுக்கோமா. எங்காத்துல சுமங்கலியா போனவா இப்போ சாப்பிட வரப் போறவா ரூபத்தில வந்து சாப்பிட்டு எங்களை ஆசிர்வதிச்சிட்டு போகணும் மா..அதுக்கு நீ தான் அருள் புரியணும் மா”
என்று வேண்டிக் கொண்டாள். கதவைத் திறந்தாள் பர்வதம். ஒன்பது சுமங்கலிகள் வீட்டினுள் நுழைந்தனர். அவர்களை வரவேற்றார்கள் பர்வதமும் மிருதுளாவும். சாமிக்கு முன் போடப்பட்டிருந்த இலைகளில் அவர்களை வரிசையாக அமரச்செய்தனர். பின் தன் புடவையை சரி செய்துக் கொள்வதற்காக உள்ளே சென்றாள் பர்வதம். அப்போது சாஸ்திரிகள்
“எல்லாரும் சாப்பிட உட்கார்ந்தாச்சு. மாமி உங்க மூத்த மாட்டுப்பொண் எங்கே அவாளை முதலில் பரிமாறச் சொல்லுங்கோ”
என்றார். அதைக் கேட்டதும் மிருதுளா முன்னே செல்ல…பர்வதம் அவள் கையை பின்னாலிருந்து பிடித்து நிறுத்தி தன் நாத்தனாரை அனுப்பினாள். அவரும் பர்வதத்திடம் ஒன்றும் சொல்லாமல் பரிமாறச் சென்றார். அவரைப் பார்த்ததும் சாஸ்திரிகள்
“பர்வதம் மாமி மாட்டுப்பொண்ணா நீங்கள்?”
“இல்லை இல்லை நான் பர்வதத்தோட ஒண்ணு விட்ட நாத்தனார்”
“மாமியோட மூத்த புள்ளைக்கு கல்யாணமாச்சோன்னோ”
“ஆங் கல்யாணமாகி அவனுக்கு ஒரு பொண்ணுமிருக்கா”
“அப்போ நீங்க அதை கீழே வச்சுட்டு போய் மாமியோட மாட்டுப்பொண்ணை வரச்சொல்லுங்கோ. அவா தான் பரிமாறணும்”
என்றது வேகமாக உள்ளேச் சென்றாள். அனைத்தையும் கேட்ட மிருதுளா பர்வதத்தைப் பார்த்தாள் வேறு வழியில்லாமல் மிருதுளாவைப் பிடித்து நிறுத்திய கையை எடுத்து
“ம்..ம்.. போ போ”
என்றாள். மிருதுளாவும் அனைவரும் அமர்ந்திருந்த ஹாலுக்குச் சென்றாள் அவளிடம் சாஸ்திரிகள் பரிமாறச் சொன்னார் அதற்கு மிருதுளா
“சாரி மாமா கல்யாணத்துக்கு அப்புறம் நான் அட்டென்ட் பண்ணற முதல் சுமங்கலிப் பிரார்த்தனை இது. அதுனால எனக்கு எதைப் எப்படிப் பரிமாறணும்ன்னு தெரியாது”
“நீங்க கவலைப் படாதீங்கோ எல்லாம் கத்துக்கலாம். நான் சொல்ல சொல்ல ஒவ்வொன்னா எடுத்துண்டு வந்து என் இலையிலிருந்து ஆரம்பிச்சு எல்லார் இலைகளிலும் பரிமாறுங்கோ சரியா. இது ஒண்ணும் ராக்கெட் சையின்ஸ் இல்லை”
“ஓகே மாமா அது படியே செய்யறேன்”
“ஃபர்ஸ்ட் சுவீட் எடுத்துண்டு வந்து எல்லார் இலையிலேயும் வையுங்கோ”
என்று அவர் சொல்ல சொல்ல மிக நேர்த்தியாக சாப்பாடு பரிமாறி அசத்தினாள் மிருதுளா. அதை கவனித்த சாஸ்திரிகள் பர்வதத்திடம்
“மாமி உங்க மாட்டுப்பொண் நல்ல பொறுப்பானவள்ன்னு அவ சாப்பாடு பரிமாறும் போதே தெரிஞ்சுண்டுட்டோம். அட ஆமாம் மாமி கரெக்ட்டான அளவில் சிந்தாம சிதறாம செய்தா. சரி மாமி நாங்க உத்தரவு வாங்கிக்கறோம்”
“ம்…சரி”
என்று தான் நினைத்ததை நடத்த முடியாமல் போன கடுப்பில் இரு வார்த்தையில் முடித்தாள் பர்வதம். மறு நாள் சமாராதனையும் முடிந்தது. பர்வதத்தின் தங்கைகள் அனைவரும் கவினின் திருமணத்திற்கு வந்தனர்.
அன்றிரவு மிருதுளா சக்திக்கு பால் குடுப்பதற்காக ஃபிரிட்ஜைப் பார்த்தாள் அதில் பால் இருக்கவில்லை அப்போது அடுப்படியில் பர்வதம் ஏதோ செய்துக் கொண்டிருந்தாள் அங்கே சென்று…
“அம்மா பாலிருக்கா. சக்திக்கு குடுக்கணும். ஃப்ரிட்ஜில் பார்த்தேன் இருக்கலை”
“பால் எல்லாம் இல்லை. வந்த இடத்தில் அட்ஜெஸ்ட் பண்ணிண்டு இருக்கத் தெரியணும்”
என சலித்துக் கொண்டாள் பர்வதம். அதைக் கேட்டதும் மிருதுளா அங்கிருந்து ஹாலுக்கு வந்து சக்தியை தூங்க வைத்தாள். அப்போது நவீன் அங்கே வந்து மிருதுளாவிடம்
“என்ன சக்தியை தூங்க வைக்கிற!!! அவ பால் குடிச்சிட்டாளா?”
“இல்லை. நானும் என் பொண்ணும் வந்த இடத்துல அட்ஜெஸ்ட் பண்ணிக்கறோம். ஒரு நாள் பால் குடிக்கலைன்னா என்ன ஆயிடப் போறது?”
என்று மெல்லிய குரலில் சொன்னாள் மிருதுளா. அதைக் கேட்டதும் நவீன்
“என்ன ஆச்சு? ஏன் பால் இல்லையாமா? இத்தனைப் பேர் வர்றான்னு தெரியாது இவாளுக்கு. அதுக்கேத்தா மாதிரி வாங்கி வைக்க வேண்டாமா?”
“வேண்டாம் நவீ நீங்க ஏதாவது கேட்க போக அதையே ஊதிப் பெரிசாக்கி பிரச்சினை ஆக்கிடுவா…விட்டு விடுவோம். என்ன இன்னும் ஒரு மூணு நாள் தானே!”
“ம்…ம்…இதுக்கு தான் அன்னைக்கே பி கேர் ஃபுல்ன்னு சொன்னேன்”
இவர்கள் மெல்லப் பேசிக்கொண்டிருக்கும் போது பக்கத்து வீட்டில் தங்கியிருந்த பர்வதத்தின் தங்கை லலிதா ஹாலுக்குள் நுழைந்தாள்..
“என்ன நவீன் ரொமான்ஸா !!! மலரும் நினைவுகளா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லைச் சித்தி சும்மா பேசிண்டு இருந்தோம் அவ்வளவு தான்.”
“சக்தி தூங்கியாச்சா மா மிருது?”
“ஆங் தூங்கிட்டா சித்தி”
“இருங்கோ இதோ வர்றேன். நம்ம பர்வத அக்கா கிட்ட விச்சுக்கு பால் கேட்டிருந்தேன். காச்ச வச்சிருக்காளான்னு தெரியலை. அவள் அது கொடுக்காட்டி தூங்க மாட்டா தெரியுமோ!!! அதை எடுத்துண்டு அவகிட்ட குடுத்துட்டு நான் வந்து உங்க கூட பேசறேன் சரியா. எக்ஸ்க்யூஸ் மீ”
இதைக் கேட்டதும் மிருதுளா நவீனைப் பார்த்தாள். நவீன் சித்தி போன வழியையேப் பார்த்துக் கொண்டிருந்தான். அடுப்படியிலிருந்து பர்வதம் லலிதாவிடம்
“ஏய் லலிதா இந்தா உன் பொண்ணுக்கு பால் கேட்டயே வந்து எடுத்துக்கோ. கரெக்ட்டா ஒரு கிளாஸ் பால் தான் இருந்தது. இந்தா ஆறிடப் போறது போய் குழந்தைக்கு குடு”
என்று கொடுத்தாள். அதைப் பார்த்ததும் நவீன் கோபமாக எழந்து போய் கேட்க முயற்சித்தான் ஆனால் மிருதுளா அவனைத் தடுத்து நிறுத்தி
“வேண்டாம் நவீ. ஷீ இஸ் டூயிங் இட் பர்பஸ்ஃபுலி! ஜஸ்ட் இக்னோர் நவீ. நீங்க எனக்கு எப்பவும் சொல்லறதை இப்போ நான் உங்களுக்குச் சொல்லறேன். ப்ளீஸ். இப்போ வேண்டாம்”
“ச்சே…”
என்று தன் தலையில் அடித்துக் கொண்ட நவீன் மிருதுளாவிடம்
“நாளைக்கு காலையில நாம உங்க ஆத்துக்குப் போயிடுவோம். நாளை மறுநாள் காலையில தானே இவா பஸ்ஸில ஈரோடுக்கு கிளம்பறா அப்போ வருவோம் போதும். சரியா”
“ம்…சரி நவீ. ஆனா இந்த நேரத்துல அங்க போணோம்னா உங்க அப்பா அம்மா தேவையில்லாம எனக்கு தான் பெயர் கட்டுவா”
“அதை எல்லாம் நினைக்காத மிருது. இப்போ மட்டும் என்ன வாழறதாம். பேசாம நான் சொல்லறதைக் கேளு”
மறுநாள் விடிந்ததும் மிருதுளாவைக் கிளம்பச் சொன்னான் நவீன். மிருதுளாவும் கிளம்பி நின்றாள். அவர்கள் எங்கோ கிளம்பி நிற்கிறார்கள் என்பதை அறிந்த பர்வதம் ஈஸ்வரனிடம் ஏதோ காதில் ஓதினாள். உடனே ஈஸ்வரன் நவீனிடம்
“என்ன காலங்காத்தால ரெண்டு பேரும் எங்கயோ போறா மாதிரி ரெடியாகி நிக்கறேங்கள்?”
“ஆமாம் நாங்க வந்து ஒரு வாரமாச்சு இன்னும் மிருது ஆத்துக்குப் போகலை அது தான் ஒரு எட்டுப் போயிட்டு வந்துடலாம்ன்னு கிளம்பியிருக்கோம்.”
“அப்போ கவின் கல்யாண வேலை எல்லாம் யார் செய்வா?”
“யாரு செய்யணும்? அதுதான் இத்தனைப் பேர் இருக்காளே அவாளை வச்சு செஞ்சுக்கோங்கோ. மிருது வா நாம போகலாம்”
என்று நவீன் சொன்னதும் மிருதுளாவும் அவன் பின்னாலேயேச் சென்றாள். இருவரும் ஆட்டோப் பிடித்துச் சென்றனர். விவரத்தை ஈஸ்வரன் பர்வதத்திடம் சொன்னதும் அவள் வாயிக்கு அவல் போட்டதுப் போலானது.
கொழுந்தன் கல்யாணத்தை வச்சுண்டு அம்மா வீட்டுக்கு தன் பையனை இழுத்துண்டு போயிட்டா மிருதுளா என்று அங்கிருந்த சொந்த பந்தங்களிடமெல்லாம் மிருதுளாவைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பரப்பினாள் பர்வதம்.
கல்யாணத்துக்கு ஈரோடு செல்ல பஸ் ஏற்பாடு செய்திருந்தனர். அன்று விடியற் காலையில் நவீனும் மிருதுளாவும் வந்தனர். ஒரு ஒன்பது மணி அளவில் மிருதுளாவின் பெற்றோர்களும் வேனுவும் வந்தனர். அனைவருமாக பஸ்ஸில் ஏறி ஈரோடு சென்றடைந்தனர். அங்கே லட்சுமி வீட்டார் இவர்களை வரவேற்று அவரவர்களுக்கென ஒதுக்கப்பட்ட ரூம்களின் சாவிகளைக் கொடுத்தனர். பர்வதம், ஈஸ்வரன், கவின் ப்ரவின், பவின் ஆகியோருக்கு மண்டபத்திலேயே கொடுக்கப்பட்டது. ஆனால் நவீன், மிருதுளா மற்றும் அவள் பெற்றோருக்கென்று தனியாக மண்டபத்தின் அருகே இருந்த ஒரு வீட்டின் அறையைக் கொடுத்தனர். அந்த வீட்டில் நவீனின், சித்திகள் குடும்பங்களும், அத்தை, பெரியம்மா குடும்பங்களும் தங்கியிருந்தன. நவீனும் மிருதுளாவும் அந்த வீட்டிற்குள் நுழைந்தததும் லலிதா சித்தி
“ஏய் நவீன் என்னடா நீ இங்கே வர்ற!!! உனக்கு பர்வதம் அக்கா அத்திம்பேர் கூட ரூம் குடுக்கலையா?”
“ஏன் சித்தி நான் உங்க கூட எல்லாம் தங்கக் கூடாதா என்ன?”
“அதுக்கு இல்லடா… கல்யாண பையனோட அண்ணன் நீ உன்னையும் மூணாம் மனுஷா மாதிரி இங்க தங்க வச்சிருக்காளேன்னு கேட்டேன்”
“எல்லாம் அப்படி தான் சித்தி. சரி நாங்க எங்க ரூமுக்கு போறோம். ஈவினிங் மாப்பிள்ளை அழைப்பில் பார்ப்போம்”
என்று கூறி விட்டு அவர்கள் ரூமிற்குள் சென்றனர். அப்போது மிருதுளா நவீனிடம்
“உங்க லட்சுமி அத்தை ஃபேமிலி பண்ணறது சரியே இல்லை. உங்க சித்தி சொல்லுற மாதிரி தான் நம்மள நடத்தறா. இதை ஏன் உங்க அப்பா அம்மா கேட்கலை?”
“விடு விடு வரவே வேண்டாம்ன்னு சொன்னேன்!! நீ கேட்கலை இப்போ வந்துட்டு இப்படி எல்லாம் கேட்க வேண்டியிருக்கு. சரி சரி நாம ரெடி ஆகுவோம்.”
என அனைவரும் மாப்பிள்ளை அழைப்பிற்கு தயார் ஆனார்கள். நவீனும் மிருதுளாவும் தயாராகி மண்டபத்திற்கு சென்றனர். அங்கு எவருமே இருக்கவில்லை. ஈஸ்வரனும் பர்வதமும் மட்டும் வாசலில் நின்றிருந்தனர். நவீன் ஈஸ்வரனிடம் சென்று
“எங்கே யாரையுமே காணமே! நாலரை மணிக்கு தானே சொன்னா? கவின் எங்க?”
“நானே ஆத்திரத்துல இருக்கேன் டா”
“ஏன் என்ன ஆச்சு?” என்று கேட்டுக் கொண்டே வந்தாள் மிருதுளா.
“ஆமாம் நாலரைக்குன்னு தான் சொன்னா. ஆனா நாலு மணிக்கெல்லாம் ஆரம்பிச்சுட்டா..அதுவுமில்லாம எங்க கிட்ட எல்லாம் சொல்லாம எங்களுக்கு வெயிட் பண்ணாம கவினையும் கூட்டிண்டு அவா எல்லாருமா கோவிலுக்கு போயாச்சுன்னு கேட்டரிங் ஆளு சொல்லித் தான் எனக்கும் அம்மாவுக்குமே தெரிஞ்சுது. உங்க எல்லாரையும் அங்க தங்க வச்சுட்டு எங்களை மட்டும் இங்க இருக்கச் சொல்லிட்டு, உங்க கிட்ட எல்லாம் தப்பான நேரத்தை சொல்லிட்டு இப்போ எங்களையும் விட்டுட்டு கவினை மட்டும் கூட்டிண்டு எல்லாரும் போயாச்சு.”
மிருதுளா மனதில் அவளின் நிச்சயதார்த்தமும் அதில் தன் மாமியார் மாமனார் செய்த சூழ்ச்சியும் நினைவுக்கு வந்தது. ஆனாலும் அவள் ஈஸ்வரனிடம்
“சரி பா அதுக்காக இப்படி இங்கேயே வா நிக்கப் போறேங்கள்? வாங்கோ… நாம விசாரிச்சுண்டு அந்த கோவிலுக்கே போவோம்”
“இந்த கவினுக்காவது தோனவேண்டாம் அம்மா அப்பா காணலைன்னு தேடமாட்டானோ”
“அப்பா இப்படியே இங்க நிண்ணுண்டு பொலம்பறதால ஒண்ணும் ஆகப் போறதில்லை. வாங்கோ நாமளும் போவோம்”
“அது எப்படி அப்பா அம்மா இல்லாம அவா நிச்சயதார்த்ததை நடத்திடுவாளா என்ன?”
“அப்பா நீ இப்படி நினைச்சுண்டே இங்கேயே இருந்தேனா உன் தங்கை ஆத்துக் காரா அதையும் செஞ்சிடுவா!!”
என்று இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது லட்சுமியின் கடைசி மகனான சுந்தரேசன் வந்தான்.
“மாமா மாமி என்ன இங்கேயே இருக்கேங்கள். வாங்கோ கோவிலுக்கு உங்களை தான் சாஸ்திரிகள் தேடறா.”
“வாடா வா அதுதான் உங்க மாப்பிள்ளையை மட்டும் கூட்டிண்டு போயிட்டேங்களே அப்புறம் என்னத்துக்கு நாங்க? நீங்க அவனை மட்டும் வச்சுண்டு நிச்சயம் பண்ணிக்கோங்கோ”
“மாமா என்ன மாமா!!! ஏதோ ஒரு டென்ஷன்ல அப்படி ஆயிடுத்து. அது தான் உங்களை அழைச்சுண்டு போக நானே வந்திருக்கேனே ப்ளீஸ் பிரச்சினை பண்ணாம வாங்கோ!”
“ஆமாம் நீ ரொம்ப பெரிய மனுஷன். வந்துட்ட எங்களை கூப்பிட. யாருடா பிரச்சினைப் பண்ணறா? நீங்க எல்லாருமா தப்பான டைம் சொல்லிட்டு எங்களை எல்லாம் இங்கேயே விட்டுட்டு நீங்க கவினை மட்டும் கூட்டிண்டு போயிட்டு இப்போ வந்து நாங்க பிரச்சினை பண்ணாம வரணுமாமே!!! நல்லா இருக்குடா உங்க நியாயம்!!”
“மாமா இப்போ வரேங்கள் அவ்வளவு தான் சொல்லிப்புட்டேன். வாங்கோ வாங்கோ”
என்று சுந்தரேசன் சொன்னதும் ஈஸ்வரனும் பர்வதமும் கிளம்பிச் சென்றனர். அப்போது ஈஸ்வரன் நவீனிடம்
“டேய் நவீன் நீங்களும் எங்களோட வாங்கோ”
“இல்லை நீங்க போங்கோ நாங்க கொஞ்ச நேரம் கழித்து வர்றோம்”
என்று கூறி அங்கிருந்த அவர்கள் சொந்தக்காரர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர் நவீனும் மிருதுளாவும். பின் அனைவயுமாக நடந்து கோவிலுக்குச் சென்றனர். அங்கு நிச்சயதார்த்தம் நடந்தேறியது.
மறுநாள் காலை விரதம் நடந்தது அதன் பின் ஊஞ்சல் நிகழ்வு நிகழ்ந்தது அதில் பச்சைப் பொடிச் சுற்றுவதற்காக பர்வதம் சென்றாள் அப்போதா சாஸ்திரிகள் பர்வதத்திடம்
“மாமி உங்க மாட்டுப்பொண் எங்கே அவாளும் சுத்தணும். வரச்சொல்லுங்கோ”
என்றார். இந்த சடங்கில் தான் ஈடுபடுவது தன் மாமியாருக்குப் பிடிகாது என்று அறிந்த மிருதுளா ஓரமாக நின்றிருந்தாள். அப்போது பர்வதம் அவளைக் கூப்பிட்டாள். உடனே சென்றாள் மிருதுளா. அவளிடம் பர்வதம்
“இதுக்கு ஒன்பது கஜம் கட்டிக்கணும்ன்னு கூடவா தெரியாது?”
“சத்தியமா எனக்குத் தெரியாது மா. நீங்க சொல்லியிருந்தா கட்டிண்டிருப்பேனே. இப்போ என்ன நான் போயி ஒரு நிமிஷத்துல ஒன்பது கஜம் மாத்திண்டு வந்திடவா?”
“ஒண்ணும் வேணாம். உனக்காக எல்லாரும் வெயிட் பண்ணணுமாக்கும்!!”
என்று யார் மீதோ உள்ள கோபத்தை மிருதுளா மீதுக் காட்டி முனுமுனுத்துக் கொண்டே செய்தாள் பர்வதம். திருமணம் முடிந்தது. இரண்டு பந்தி முடிந்ததும் மூன்றாவது பந்தியில் ஈஸ்வரன், பர்வதம், நவீன், மிருதுளா, பவின், ப்ரவின், பர்வதத்தின் அக்கா ரமணி தங்கைகள் என ஆண்கள் எல்லோரும் ஒரு பக்கமாகவும் பெண்கள் ஒரு பக்கமாகவும் அமர்ந்தனர். சாப்பாடு பரிமாறப் பட்டது. சாப்பாடு நன்றாகவே இருக்கவில்லை அனைவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர். பாயசம் அடிப்பிடித்திருந்தது. அதை எல்லோரும் சொல்லிக் கொண்டனர். பர்வதம் குடித்துப் பார்த்து விட்டு அதைப் பரிமாறியவரை அழைத்தாள்.
“என்னது இது பாயசம் நல்லா அடிப்பிடிச்சிருக்கு!!! அதையே எங்களுக்கு கொடுத்திருக்கேங்கள்!!”
“மாமி எல்லாரும் சாப்பிட்டுட்டு சூப்பரா இருக்குன்னு சொல்லறா!!! நீங்க மட்டும் தான் இப்படி சொல்லறேங்கள். பிரச்சினை கிளப்பணும்ன்னே சொல்லறேங்கள் போல தோணறது!”
என்று பொறுப்பில்லாமல் திமிராகச் சொல்லிவிட்டுச் சென்றார் கேட்ஞரிங் ஆள். அதை பார்த்த அனைவரும் வாயடைத்துப் போனார்கள். ஈஸ்வரன் மட்டும் மரியாதை இல்லை மதிப்பில்லை என்று சத்தம் போட்டார். அதையும் எவரும் கண்டுக் கொள்ளவில்லை என்றதும் அடங்கிப் போனார். நடந்தவைகளை கவனித்துக் கொண்டிருந்த மிருதுளா அம்புஜத்திடம் மெதுவாக….
“கடவுள் இருக்கா மா. இருக்கா”
“ஏய் மிருது சும்மா இரு. இது தான் நேரமா உனக்கு சொல்லிக் காட்ட?”
“உன் கிட்ட தானே மா சொல்லறேன். அட போ மா. நான் பட்ட பாடு அப்படி”
என்று எப்படியோ கஷ்டப்பட்டு அந்த சாப்பாட்டை அனைவரும் சாப்பிட்டு எழுந்து. அதே பஸ்ஸில் ஊருக்குக் கிளம்பினர். கட்டு சாதக் கூடை என்று ஈஸ்வரன் குடும்பத்தினரான எட்டு பேருக்கு மட்டுமே அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் வீட்டில் பர்வதத்தின் தங்கைக் குடும்பத்தினர் அக்கா குடும்பத்தினர், தம்பி குடும்பத்தினர் என அனைவரும் இருந்தனர். வேறு வழியின்றி இட்டிலியை பாதி பாதியாக பிச்சுப் போட்டனர். எப்படியோ வந்ததை அனைவருக்கும் பரிமாறினர். ஆனால் எவருக்கும் வயிறு நிரம்பவில்லை.
“இது தான் உங்க லட்சுமி அத்தை பெண் கஜேஸ்வரி ராசியின் பலன் போல!! வீட்டிற்குள் வந்ததுமே சாப்பாடு பத்தும் பத்தாம ஆனது!!!”
என்று மிருதுளா நவீனிடம் கூறி புன்னகைத்தாள்
வேறு வழியில்லை என அனைவரும் சகித்துக் கொண்டனர். அன்று மாலை திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் அவரவர் வீடுகளுக்கு பஸ்ஸிலும், ட்ரெயினிலும் புறப்பட்டுச் சென்றனர். மறுநாள் காலை விடிந்தது அனைவரும் எழுந்து குளித்து டிபன் சாப்பிட்டு விட்டு வீட்டின் ஆண்கள் அனைவரும் ஹாலில் அமர்ந்து நடந்துக் கொண்டிருந்த கிரிக்கெட் மேட்ச் பேசிக் கொண்டிருந்தனர்.
உள் ரூமில் மிருதுளா சக்திக்கு டிபன் ஊட்டிக் கொண்டிருந்தாள். கஜேஸ்வரி அங்கு சென்று
“என்ன மன்னி சக்திக்கு சாப்பாடு ஊட்டறேளா?”
“ஆமாம் கஜேஸ்வரி. நீ சாப்பிட்டாச்சா?”
“ஆங் ஆச்சு மன்னி”
“உட்காரு ஏன் நிண்ணுண்டு இருக்க?”
என்று மிருதுளா சொன்னதும் அமர்ந்தாள் கஜேஸ்வரி. அப்போது மிருதுளா அவளிடம்
“கவின் குவைத்துக்கு கிளம்பும் போது உன்னையும் கூட்டிண்டு போறானா? இல்லை போயிட்டு வந்து கூட்டிண்டு போகப் போறானா?”
“இல்ல மன்னி அவர் என்னையும் கூட்டிண்டு தான் போக போறார். அதுக்கு தானே எட்டு மாசம் முன்னாடியே மேரேஜை ரிஜிஸ்டர் பண்ணினோம்.”
“ஓ!! ஓகே ஓகே. அப்புறம் சொல்லு. உனக்கு இது புது இடம் இல்லை. உங்க மாமா வீடு தானே!! அதுனால எப்படி இருக்குன்னு எல்லாம் கேட்க வேண்டிய அவசியமில்லை”
“ஆமாம் ஆமாம் மன்னி”
“பாரு… நீ வர்றதுக்குள்ளேயே எங்க கவின் உனக்காக வீடெல்லாம் வாங்கிட்டான்”
“ஆமாம் மன்னி. ஆனா என்ன வாங்கி என்ன?”
“ஏன் அலுத்துக்கற கஜேஸ்வரி?”
“பின்ன என்ன மன்னி. நாங்க பாட்டுக்கு குவைத் போயிடுவோம். அப்புறம் என் வீட்டில் அவா அவா வந்து வருஷத்துல ஒரு மாசம் டேரா போடுவா. நானா தங்கப் போறேன்”
“என்னது? நீ யாரைச் சொல்லுற? ப்ரவின், பவின், அப்பா, அம்மா இங்கேயே தான் இருக்கப்போறவா!!! வருஷத்துல ஒரு மாசம் லீவுப் போட்டு வர்றது நானும் நவீனும் தான் அப்போ நீ எங்களையா டேராப் போடுவான்னு சொல்லற?”
“அச்சச்சோ மன்னி இல்லை நான் பொதுவா சொன்னேன்”
“இல்லை கஜேஸ்வரி நீ பொதுவா எல்லாம் சொல்லலை ..குறிப்பிட்டுத் தான் சொன்னங்கறது எனக்குப் புரிஞ்சுடுத்துமா நல்லாவே புரிஞ்சுடுத்து”
“அய்யோ மன்னி நான் சொல்லாததை எல்லாம் இப்படி மாத்திப் பேசி பிரச்சினை உண்டாக்காதீங்கோ ப்ளீஸ்”
“நீ சொல்லறதைக் கேட்டா பிரச்சினை உண்டாக்குங்கோன்னு சொல்லறா மாதிரி இருக்கு. ஆனா நான் அப்படிப் பட்டவள் இல்லை. துஷ்டனைக் கண்டால் தூர விலகிடுவேன். சரியா. வாடி சக்திக் குட்டி நாம அம்பு பாட்டி ஆத்துக்கு போவோம்”
என்று சக்தியைத் தூக்கிக் கொண்டு நவீனிடம் நடந்தவைகளைக் கூறினாள் மிருதுளா. அதன் பின் இருவருமாக கிளம்பி ஈஸ்வரனிடம் சொல்லிவிட்டு ராமானுஜம் வீட்டிற்குச் சென்றனர்.
முதலில் திருமணமாகி மூத்த மருமகளாக வீட்டிற்கு வந்து அனைத்தையும் பொறுமையாக பொறுத்துக் கொண்டு (அதையும் பொறுத்துப் போக வேண்டிய அவசியமில்லை என்றாலும்) எதையுமே வெளிக்காட்டிக் கொள்ளாத ஒருத்தி….. அடுத்து வீட்டுக்கு வந்த மருமகள் / ஓர்பிடி சொன்ன வார்த்தையை பொறுத்துக் கொள்ளாது வீட்டை விட்டு வெளியேறினாள்.
மிருதுளா அதுவரைப் பொறுத்திருந்த தன் காரணம் அவர்கள் நவீனின் பெற்றவர்கள் என்பதால் ஆனால் இன்று அவள் வெளியேறியதின் காரணம் சுயமரியாதை.
தொடரும்……
அத்தியாயம் 72: ராசியின் இரகசியம்!!
டெம்ப்போவில் பொருட்களுடன் வந்திறங்கினர் ராமானுஜமும், வேனுவும். அவர்கள் பின்னாலேயே ஆட்டோவில் வந்தனர் நவீனும் மிருதுளாவும் குழந்தை சக்தியுடன். மூவருமாக பொட்களை எல்லாம் வீட்டிற்குள் கொண்டுச் சென்று வைத்தனர். மிருதுளா குழந்தையுடன் வீட்டினுள் சென்று அமர்ந்தாள். பொருட்களை வீட்டினுள் கொண்டுச் செல்லும் போது மிதியடி சறுக்கி விட்டுவிடக்கூடாது என்பதற்காக வெளியே சென்று வாசலில் இருந்த மிதியடியை எடுத்து திண்ணைத் திண்டின் மேல் போட்டாள் அம்புஜம். அக்கம் பக்கத்தினர் வண்டியிலிருந்து பொருட்கள் இறங்குவதைப் பார்த்ததும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தனர். அதில் அம்புஜத்தின் பக்கத்து வீட்டு சென்பகம் அவளிடம்
“என்ன மாமி நம்ம மிருது வந்திருக்கு போல”
“ஆமாம் வந்திருக்கா.”
“இல்ல என்ன ஊரையே காலி பண்ணிட்டு வந்துட்டாளாக்கும்”
“ஏன் அப்படி கேட்குற சென்பகம்?”
“சாமான் செட்டெல்லாம் வந்து இறங்குதேன்னு கேட்டேன்”
“அதுவா அவங்க வீட்டுல இடமில்லையாம் அதுனால இங்க கொண்டு வந்து வைக்க வந்திருக்காங்க”
“என்ன மாமி காமிடி பண்ணுறேங்களே!!! இங்க நம்ம வீடு என்ன நாலு ரூம் வீடா? இதுவும் சின்ன வீடுதானே இதுல எங்கேந்து வைப்பீங்க?”
“அதெல்லாம் உனக்கெதுக்கு? அது எங்க கவலை நாங்க பார்த்துக்கறோம். நீ போய் உன் புள்ளகளைப் பாரு போ”
“சொல்ல விருப்பமில்லைன்னா விடுங்க. சரி நான் வரேன்”
பேசிவிட்டு சென்பம் அவள் வீட்டினுள் சென்றாள். ராமானுஜம் வேன் காரருக்கு பணம் செட்டில் பண்ணிவிட்டு வந்தார். அம்புஜம் அனைவருக்கும் காபி போட்டுக் கொடுத்தாள். அப்போது ராமானுஜம்
“இவ்வளவு பாத்திரங்களிலும் நசுக்கெடுக்கணும்னா ….இதை எல்லாம் அப்போ நாம இதை வாங்கின காசை குடுக்க வேண்டியிருக்கும்”
“அப்பா நசுக்கெல்லாம் எடுக்க வேண்டாம். அப்படியே செலவழித்து எடுத்தாலும் அது புதுசாகாது. முக்கியமான பாத்திரங்களை மட்டும் சரி செய்துட்டு மத்தது எல்லாத்தையும் பாத்திரக்கடையில போட்டுட்டு அதுல வர பணத்துக்கு எதை வாங்க முடியுமோ அதை மட்டும் வாங்கிக்கறேன் என்ன செய்ய!!!”
“அப்படி செஞ்சா இப்போ இருக்கறதுல பாதி தான் வாங்க முடியும் மிருது. இதெல்லாம் நான் பல வருஷமா வாங்கி வாங்கி சேமிச்சது தெரியுமா. இப்போ விக்குற விலைவாசிக்கு பாதி சாமான் கூட கிடைக்குமான்னு தெரியலை”
“என்னமா பண்ணறது. இப்படியே வச்சுக்க முடியாது, நசுக்கெடுத்தா காசும் போகும் பாத்திரமும் நீங்க கொடுத்ததுப் போல ஆகாது அப்போ நான் சொன்ன வழிதான் சரியானது”
“ஆமாம். மிருது சொல்லறது தான் சரி. நீங்க என்ன சொல்லறேங்கள் மாப்ள?”
“நீங்க எது செய்தாலும் எனக்கு ஓகே தான். ஐ ஆம் ஸோ சாரி நடந்த விஷயங்களுக்கெல்லாம்.”
என கூறி மொட்டை மாடிக்குச் சென்றான் நவீன். பெற்றவர்கள் சரியாக இல்லாததால் பல பிள்ளைகள் இது போன்ற தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். பர்வதீஸ்வரன் இருவரும் மனசாட்சி இன்றி செய்த செயலுக்கும், பேசிய பேச்சிற்கும் வெட்கித் தலைக்குனிதவனாக நின்றான் நவீன். பெற்றவர்களுக்கு மனசாட்சி இல்லாவிட்டாலும் பாவம் பாட்டியிடம் வளர்ந்த நவீனுக்கு மனசாட்சி இருந்தது. அது அவனை வேதனையில் ஆழ்த்தியது.
மறுநாள் நவீனும், மிருதுளாவும் அங்கிருந்தே குஜராத் கிளம்பிச் சென்றனர். கவின் கஜேஸ்வரி திருமணத்திற்கு எட்டு மாதங்கள் இருந்தன. இரண்டு மாதங்களில் நவீன் தன் வீட்டுக்கு ஃபோன் கனெக்ஷன் வாங்கினான். புது ஃபோன் வந்ததும் மிருதுளா தன் அப்பா அம்மாவிடம் பேசி நம்பரைக் கொடுத்தாள். அடுத்து நவீன் வீட்டுக்குப் ஃபோன் செய்து தன் மாமனார் மாமியாரிடமும் நம்பரைக் கொடுத்தார்கள் நவீனும் மிருதுளாவும். ஆறு மாதங்கள் கடந்தன. மிருதுளாவுக்கு அம்மைப் போட்டது. நவீனுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் அருகே இருந்த தனது நண்பன் வீட்டுக்கு ஃபோன் போட்டுக் கேட்டான். நவீனின் நல்ல நேரம் நண்பனின் அம்மா அப்பா வீட்டிற்கு வந்திருந்தனர், உடனே அவர்களிடம் ஃபோனைக் கொடுத்து நவீனுக்கு உதவச் சொன்னான் நண்பன். பெரியவர்களாகிய அவர்களும் நவீனிடம் என்னென்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்ற விவரங்களைச் சொல்ல நவீனும் அது படியே செய்தான். ஆபிஸுக்கு ஒரு வாரம் லீவு போட்டான். சக்திக்கு பால் குடுக்க முடியாமல் படுத்துக் கிடந்தாள் மிருதுளா. நவீன் சக்திக்கு பாட்டிலில் பால் குடுக்க முயற்சித்தான் ஆனால் சக்தி அழுது ரகளை செய்தாள். அதைப் பார்த்த மிருதுளா கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. நவீன் சக்தியை சமாதானப் படுத்தி பாட்டில் பாலை குடிக்க வைத்து அவளைத் தூங்கச் செய்தான்.
நான்கு நாட்கள் நவீனுக்கு சரியான வேலை இருந்தது. காலையில் எழுந்து குளித்து வீட்டை சுத்தம் செய்து மஞ்சள் தண்ணீர் தெளித்து, மிருதுளா படுத்திருந்த வேப்பிலையை தினமும் மாற்றி, அவளுக்கு நீர் ஆகாரம் கொடுத்து, சக்தியையும் சமாளித்து என சிரமப்பட்டுக் கொண்டிருந்தான். ஐந்தாவது நாள் அம்மை முழுவதுமாக மிருதுளா உடம்பிலிருந்து இறங்கியிருந்தது. அன்று தலைக்கு தண்ணீர் ஊற்றலாம் என்று நண்பனின் அம்மா சொல்ல அதுபடியே மிருதுளாவை அமர வைத்து தலைக்கு தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டி பருத்தி ஆடைக் கொடுத்து அணிந்துக் கொள்ளச் செய்தான். மிருதுளா அசதியில் கண் அசந்துப் போனாள். நவீன் சக்திக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தபோது ஃபோன் வந்தது. மிருதுளா எழுந்து விடுவாளோ என்று உடனே ரிசீவரை எடுத்தான் நவீன்
“ஹலோ நான் நவீன் பேசறேன்”
“ஹலோ நான் அம்புஜம் பேசறேன். எப்படி இருக்கேங்கள்? மருதுளாவும் சக்தியும் எப்படி இருக்கா?”
எவருக்குமே மிருதுளாவின் நிலையை நவீன் கூறவில்லை. இப்போது அம்புஜம் கேட்டதும்
“ஆங் நாங்க நல்லா இருக்கோம். அவ தூங்கிண்டிருக்கா”
“என்ன மாப்ள உங்க குரலே சரியில்லையே!! இந்த நேரத்துல எல்லாம் மிருது தூங்க மாட்டாளே!!! என்ன ஆச்சு மாப்ள? எதுவா இருந்தாலும் சொல்லுங்கோ”
“அது அது வந்து!!! மிருதுக்கு அம்மை போட்டிருந்தது. இன்னைக்கு தலைக்கு தண்ணீ ஊத்தியாச்சு. ஆனா அவ ரொம்ப டையர்டா இருக்கா அதுதான் தூங்கறா”
“கடவுளே!! அம்மா தாயே!!!! நீங்க எப்படி அவளையும் குழந்தையையும் பார்த்துண்டேங்கள்? இன்னைக்கு எத்தனாவது நாள்?”
“அஞ்சாவது நாள். நீங்க பதட்டப் படாதீங்கோ இப்போ ஷீ இஸ் ப்ர்ஃபெக்ட்லீ ஆல்ரைட். ஜஸ்ட் டையர்டுனஸ் தான் இருக்கு”
“சரி மாப்ள நாளைக்கு உங்க தம்பி கவின் வாங்கின வீட்டுக்கு கிரகபிரவேசம். அதுக்கு போயிட்டு நைட்டு ட்ரெயின் பிடித்து நான் அங்க வரேன். நீங்க பாவம் ஒத்த ஆளா எப்படி சமாளிப்பேங்கள்?”
“என்னது கவின் வீடு வாங்கிருக்கானா?”
“ஆமாம். அந்த வீட்டுக்குத் தான் உங்த அப்பா அம்மா நாளையிலிருந்தே குடி போகப் போறாளாம். ஏன் உங்க ரெண்டு பேர்கிட்டேயும் அவா சொல்லலையா”
“சரி சரி அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். நீங்க வரணும்ன்னு இல்ல பார்த்துக் கோங்கோ”
“இல்ல இல்ல மிருது பயங்கறமா வீக்காகிடுவா ஸோ நான் வந்து அவளையும் பார்த்துண்டுட்டு அப்படியே என் பேத்திக் கூடவும் ஒரு மாசம் இருந்துட்டு வரேன்.”
“அப்பறம் உங்க இஷ்டம். நான் வச்சுடவா”
“சரி மாப்ள”
ஃபோனை வைத்ததும் அம்புஜம் நேராக பூஜை அறையிலிருந்த அம்மனிடம் சென்று கண்ணீர் மல்க தன் பெண்ணிற்காக வேண்டிக்கொண்டாள். பின் விவரத்தை ராமானுஜத்திடமும் வேனுவிடமும் கூறி மறுநாள் இரவு ட்ரெயினில் டிக்கெட் புக் செய்து வேண்டிய துணிமணிகளை எடுத்து வைத்துக் கொண்டாள். விடியற்காலையில் எழுந்து கவின் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு ராமானுஜமும் அம்புஜமும் சென்றனர். அங்கு அனைவருடனும் அமர்ந்திருந்தாலும் அம்புஜத்தின் மனம் முழுவதும் தன் பெண்ணிடமிருந்தது. அவளை எண்ணிக்கொண்டே அமர்ந்திருந்தவளிடம் பர்வதம்
“அம்புஜம் மாமி”
என அழைத்தும் காதில் விழாததால் சிலைப் போல அமர்ந்திருந்தவள் தோளைத் தட்டி கூப்பிட்டாள் பர்வதம். சட்டென சுயநினைவுக்கு வந்த அம்புஜம்
“ஆங் ஆங் மாமி சொல்லுங்கோ”
“என்ன மாமி பகல் கனவா? எப்போ உங்க பொண்ணு இதே மாதிரி வீடு வாங்கப் போறாங்கற யோசனையில இருக்கேளோ?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை மாமி. அவாஅவாளுக்கு நேரமும் காலமும் கூடி வந்தா வாங்கப் போறா! அதை பத்தி நான் ஏன் யோசிக்கப் போறேன்”
“பின்ன என்ன அப்படி ஆழ்ந்த சிந்தனையில இருந்தேங்களே!!”
“அது ஒண்ணுமில்ல மாமி. அதை விடுங்கோ”
என்று நல்ல விசேஷம் நடக்குமிடத்தில் தன் பெண்ணுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்ல விரும்பாத அம்புஜம் அமைதியாக இருந்தாள். பர்வதம் அம்புஜம் உரையாடலைக் கேட்டுக்கொண்டே வந்த லட்சுமி பர்வதத்திடம்
“பார்த்தயா பர்வதம். என் பொண்ணு ராசி அப்படி. அவளை நிச்சயம் செய்ததுமே வீடு வாசல் எல்லாம் வந்துடுத்துப் பார்த்தயா!! என் பொண்ணு ஜாதகத்துலயே இருக்கே அவ வாக்கப்பட்டுப் போகும் போது புத்தம் புது வீட்டுக்குள்ள தான் நுழைவான்னு இருக்கே!!! ஐம்பது பௌன் நகை கொண்டு வராட்டாலும் பாக்கியத்தை அளித்தரப் போறா பாரு!!!”
என்று அம்புஜத்தின் நிலைமை அறியாமல் பர்வதமும், லட்சுமியும் வேண்டுமென்றே அவளை சீண்டினார்கள். ஆனால் அம்புஜம் மனதில் அம்மனை மட்டுமே நினைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். விசேஷம் முடிந்தது. அனைவரும் சாப்பிட்டுக் கிளம்பினர். அப்போது அம்புஜம் பர்வதத்திடம் தான் குஜராத் செல்வதாக கூறினாள். அதைக் கேட்ட பரவதம்
“அப்படியா என்ன திடீர்னு”
“நம்ம மிருது உடம்புல அம்மா இறங்கிருக்கா. நேத்து தலைக்கு தண்ணீ ஊத்திருக்கா. அது தான் நான் இன்னைக்கு நைட்டு கிளம்பறேன்.”
“அம்மா போகக்கூடாதுன்னு சொல்லுவாளே”
“அது தான் தலைக்கு தண்ணீ ஊத்திட்டாளே அதுனால போகலாம்னு எங்க பக்கத்தாத்து பாட்டி சொன்னா அதுக்கப்புறம் தான் டிக்கெட் புக் பண்ணினோம்”
“எப்போ திரும்பி வருவேங்கள்?”
“ஒரு மாசம் தான் இருப்பேன். மிருதுக்கு தெம்பு வரவரைக்கும் தான் அப்புறம் வந்திடுவேன். சரி மாமி நாங்க கிளம்பறோம்”
என்று கூறி தாம்பூலம் வாங்கிக் கொண்டு கிளம்பினர் ராமானுஜமும் அம்புஜமும். வரும் வழியில் அம்புஜம்
“அந்த மாமிகிட்ட சொல்லறேனே மிருதுக்கு இப்படி இருக்குன்னு !!! அந்த மாமி அவ எப்படி இருக்கா என்ன ஏதுன்னு ஒண்ணுமே கேட்காம !! நான் எப்போ திரும்பி வருவேன்னு கேட்கறா!!! என்ன ஜென்மமோ”
“விடு விடு அவாளைப் பத்தி தான் நமக்கு நல்லா தெரிஞ்சது தானே. நீ போய் மிருதுவ நல்லா பார்த்துக்கோ”
அன்றிரவு அம்புஜத்தை குஜராத்துக்கு ட்ரெயின் ஏற்றி விட்டனர் ராமானுஜமும் வேனுவும்.
குஜராத் சென்று தன் பெண்ணையும் பேத்தியையும் மாப்பிள்ளையையும் நன்றாக கவனித்துக் கொண்டாள் அம்புஜம். மிருதுளா முழுவதுமாக குணமடைந்ததும் கவின் வீடு வாங்கியதைப் பற்றியும், கிரகப்பிரவேசம் பற்றியும், அங்கு நடந்த பேச்சு வார்த்தைகளையும், அவர்கள் அனைவரும் அந்த வீட்டுக்கே குடியேறியது பற்றியும் கூறினாள் அம்புஜம். அதை கேட்ட மிருதுளா நவீனிடம்
“என்னப்பா இவ்வளவு நடந்திருக்கு!!! உங்க கிட்டயாவது யாராவது சொன்னாலா? கவினாவது ஃபோன் போட்டு சொன்னானா?”
“இல்ல மிருது. என்கிட்ட யாருமே சொல்லலை. உங்க அப்பா அம்மா சொல்லித் தான் எனக்கே தெரிய வந்தது”
“சூப்பர் மா சூப்பர்! உங்க பொண்ணையும் மாப்ளையும் அழைக்காத விசேஷத்துக்கு நீங்க ஏன் போனேங்கள்?”
“ஏய் மிருது அவா செய்த தப்புக்கு உன் பேரன்ட்ஸ் கிட்ட ஏன் கோபப்படற? இவா என்ன செய்வா”
“எங்களுக்கு தெரியாது மிருது. முன்னாடி நாள் மாப்ள கிட்ட பேசும் போது கூட நாங்க உன்னைப் பத்திதான் பேசினோமே தவிற இதை பெரிசா பேசலை மா”
“நவீன் உங்களுக்கு கோபம் வரலை?”
“எதுக்கு கோபப் படணும்? அவா என்னைக் கூப்பிடாததுக்கும் என்கிட்ட சொல்லாததுக்கும் அவா தான் வெட்கப் படணும். நான் இனி அங்கப் போக மாட்டேன். என்கிட்ட அவா வீடு மாத்தின விஷயத்தைச் சொல்லலை அதுனால எனக்கு எங்க இருக்கானு தெரியாது ஸோ போக வேண்டிய அவசியமில்லை. ஆஸ் சிம்பிள் ஆஸ் தட். இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகி கோபப்பட்டு எதுக்கு நம்ம உடம்பைக் கெடுத்துக்கணும்”
என்று சொல்லிவிட்டு சக்தியைத் தூக்கிக் கொண்டு வெளியே வாக்கிங் சென்றான் நவீன். அவன் சென்றதும் அம்புஜம்
“இங்க பாரு மிருது ஆம்பளகள் அப்படித் தான் சொல்லுவா அதுக்காக போகாம வராம எல்லாம் இருக்காதே. நீ தான் அவருக்கு எடுத்து சொல்லணும். நீர் அடித்து நீர் விலகாது.”
“என்னமா பேசற? நவீ சொல்லறது தான் கரெக்ட். அதென்ன உங்கள்ட்ட சொல்லுவாளாம் ஆனா எங்க கிட்ட சொல்லமாட்டாளாமா!!!”
“மிருது அங்க என்ன சிட்டுவேஷனோ என்னவோ உனக்குத் தெரியுமா?”
“என்னவா இருந்தா என்னமா? எங்காத்துக்கு ஃபோன் வந்ததும் நாங்க ஃபோன் போட்டு பேசி நம்பர் கொடுத்தோம் தெரியுமா!!! ஒரு ஃபோன் போட்டு விஷயத்தைச் சொன்னா கொறஞ்சா போயிடுவா? என்கிட்ட வேண்டாமா நவீ கிட்டயாவது சொல்லிருக்கலாமில்லையா. இந்த நன்றிக் கெட்ட கூட்டத்துக்காக இந்த மனுஷன் தன்னோட பத்து வருஷத்தை தொலைச்சிருக்கார்”
“விடு விடு அவாளுக்கு தெரிந்தது அவ்வளவு தான். மாப்ள செய்த நல்லதுக்கு அவரும் நீயும் குழந்தையும் நல்லா இருப்பேங்கள்.”
பேசிக் கொண்டிருக்கும் போதே ஃபோன் மணி அடித்தது. மிருதுளா சென்று எடுத்தாள். மறுபக்கத்தில் ஈஸ்வரனின் ஒண்ணு விட்ட தங்கை மகள் பேசினாள். மிருதுளாவும் சகஜமாக பேசினாள். கவின் திருமணம் பற்றியப் பேச்சு வார்த்தை வந்தது அப்போது மறுபக்கத்திலிருந்து
“ஏய் மிருது உனக்கு ஒண்ணு தெரியுமா? நம்ம கஜேஸ்வரி கல்யாணமானதும் நவீன் வாங்கின அந்த பழைய வீட்டுக்குள் வரமேட்டேன்னும் புது வீட்டிற்கு தான் வருவேன்னு சொல்லி கவினை புது வீடு வாங்க வச்சு அதுல உங்க ஃபேமிலியவே ஷிஃப்ட் பண்ணிட்டாளாமே!!! நம்ம சொந்தங்களுக்குள்ள இப்போ இது தான் ஹாட் டாப்பிக் தெரியுமா!!”
“அப்படியா!!! எனக்குத் தெரியாது!”
“சரி மிருதுளா உன்கிட்ட நிறைய நேரம் பேசிட்டேன். கவின் கஜேஸ்வரி கல்யாணத்துல பார்ப்போம். நவீன் கிட்டயும் நாங்க கேட்டதா சொல்லிடு. பை”
என்று ஃபோனை வைத்ததும் மிருதுளா தன் அம்மாவைப் பார்த்து
“லட்சுமி அத்தை கவின் வீட்டு கிரகப்பிரவேசத்தப்போ என்ன சொன்னான்னு சொன்னம்மா?”
நவீன் குழந்தையுடன் வீட்டிற்குள் நுழைந்தான். அம்புஜம் மிருதுளாவிடம்
“அது எதுக்கு இப்போ?”
“நீ சொல்லேன் அப்புறம் நான் எதுக்குன்னு சொல்லறேன்”
“அவா பொண்ணோட ராசியாம், அவா பொண்ணு வந்த அதிர்ஷ்டமாம் அது தான் கவின் வீடு வாங்கியிருக்கானாம். அவா பொண்ணு கல்யாணமாகி வரும்போதே புது வீட்டுக்குள்ள தான் அடி எடுத்து வைப்பான்னு அவ ஜாதகத்திலேயே இருக்காம்”
“மண்ணாங்கட்டி!!!”
“ஏய் மிருது என்ன ஆச்சு?”
“நவீ இப்போ தான் நம்ம நம்மி பேசினா”
“ஓ அப்படியா!! அவா எல்லாரும் எப்படி இருக்காளாம்?”
“அவா எல்லாரும் நல்லா தான் இருக்கா. அவ ஒரு விஷயம் சொன்னாளே அதுல உங்க லட்சுமி அத்தை ஃபேமிலி எவ்வளோ பெரிய டிராமா ட்ரூப்ன்னு தெரிஞ்சுக்க முடிஞ்சுது நவீ”
“அது எனக்கு தெரிஞ்சது தானே!!! நீ அப்படி நினைக்குற மாதிரி என்ன சொன்னா நம்மி?”
என்று நவீன் கேட்டதும் மிருதுளா நிம்மி சொன்னதை கூறினாள். அதைக் கேட்டதும் அம்புஜம்
“அடக் கடவுளே!!!! அவாளே வீடு வாங்க வச்சுட்டு ….. கிரகப்பிரவேசத்தப்போ அந்த லட்சுமி மாமி என்னமோ அவ பொண்ணாலதான் வீடு வந்தது வாசல் வந்ததுன்னு அப்படி பேசினா!!!!”
“அதுனால தான் நான் அவாளல அப்படிச் சொன்னேன் புரியறதா?”
“மிருது நீ சொன்னதைக் கேட்டா செம மார்கெட்டிங் கிமிக்கா இருக்கே இது”
“நான் சொல்லலை நவீ உங்காத்து நிம்மி தான் சொன்னா”
” இன்னும் என்னென்ன ஸ்கில்ஸ் எல்லாம் வெளியே வருதுன்னு வெயிட் பண்ணிப் பார்ப்போம்”
“பார்த்துக்கோமா பார்த்துக்கோ அவா அவா பொண்ணுகளை எப்படி எல்லாம் ப்ரமோட் பண்ணிக்கறான்னு”
“விடு மிருது. எங்க பொண்ணை எல்லாம் எந்த விதத்திலும் நாங்க ப்ரமோட் செய்யணும்னு அவசியமில்லை. அவளுக்கு அந்த அம்பாள் துணையிருக்கா. எல்லாம் அவள் பார்த்துப்பா.”
“ம்..ம்..கதியற்றவாளுக்கு அம்பாளே துணை வேறு யாரிருக்கா?”
“அப்படியே நினைச்சுக்கோ. நீங்க ரெண்டு பேரும் செய்ய வேண்டியதை செஞ்சுண்டு உங்க வாழ்க்கையை பார்த்துண்டு இருங்கோ. யாரோ என்னமோ பண்ணிக்கறா அதை எல்லாம் கேட்டுக்கோ போதும். அதுவும் தானா இது மாதிரி தெரிய வந்தா !! நீயா எல்லாம் எதுவும் கேட்டுக்காத சரியா மிருது”
“ம் …ம் ….சரிமா!! சரி வாங்கோ டின்னர் சாப்பிடலாம்.”
முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா!!! தம்பி வீடு வாங்கியுள்ளான் அவனும் சொல்லவில்லை!!! நவீன் வாங்கிக் கொடுத்த வீட்டை காலி செய்து புதிய வீட்டிற்கு செல்லப் போகிறார்கள் அதையும் சொல்லவில்லை!! இது என்ன தெரியாமல் இருந்திடுமா என்ன? நவீன் மாமனார், மாமியார் சொல்ல மாட்டார்களா? அப்போது நவீன் தெரிந்துக் கொள்ள மாட்டானா? இல்லை வேண்டுமென்றே அவன் மாமனாரிடம் சொன்னால் அவனுக்கு போகிவிடுமே என்று சொல்லவில்லையா? எதுவாக இருந்தால் என்ன!!அந்த குடும்பம் இந்த நிலைமைக்கு வருவதற்கு பாடுபட்ட நவீனை மீண்டும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தி அவர்களின் பாவக் கணக்கில் வரவு வைத்துக் கொண்டனர் மூத்த தம்பதியர்.
தொடரும்…..
அத்தியாயம் 71: கல்யாணமானது!! சீர் தாய்வீட்டிற்கே சென்றது!!
நவீனும் மிருதுளாவும் ஈஸ்வரனை காண வந்த இடத்தில் தவளை நசுக்கிய பாத்திரங்களை பார்த்துவிட்டு குஜராத்துக்கு சென்றனர். திடிர் பயணத்தால் சற்று பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது நவீனுக்கு. அதை பொறுப்பாகவும் சிக்கனமாகவும் இருவரும் கையாண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி வரை ஒப்பேற்றினர். அப்போது மிருதுளா நவீனிடம்…
“இனி குழந்தை வளர வளர செலவு கூடிக்கிட்டே தான் போகும் நவீ. நாம என்ன பண்ணப் போறோம்?”
“கவலைப் படாதே மிருது. ஏதாவது வழிப் பிறக்கும்”
“எப்படிப்பா இங்க இருக்கிற வடநாட்டுக்காரா எல்லாரும் மூணு குழந்தைகள் நாலு குழந்தைகள்னு பெத்துண்டும் நல்லா சௌகர்யமா வாழ்ந்துண்டு இருக்கா!!! அவா ஆத்துக் காரர்களுக்கும் இதே சம்பளம் தானே!!! நம்ம ஊர் ஆட்களும் சில பேர் அப்படி தான் இருக்கா அது எப்படி!!! எனக்குள்ள இந்த சந்தேகம் இருந்துண்டே இருக்கு”
“இங்க பாரு மிருது…அவாளுக்கு ஒண்ணு அவா பூர்வீக சொத்து ஏதாவது இருக்கும், இல்லை கிராமத்துல விவசாயம் பண்ணிண்டிருப்பா, நம்ம கார்த்திக் வீட்டுக்கெல்லாம் அப்படி தான் ஊர்லேந்து வருஷத்துக்கு வேண்டிய அரிசி பருப்பு மிளகாய் எல்லாம் வந்திடும். அப்படி எதுவுமில்லாட்டாலும் அவா பதினாறு வயசுலேந்து சம்பாதிச்சது எல்லாம் அவாளே சேமிச்சு வச்சிருப்பா…அதுனால இப்போ இப்படி இருக்கா. ஆனா என் கதை தான் உனக்குத் தெரியுமே!!! எனக்கு ஊர்ல எதுவுமில்லை. நான் சம்பாதிச்சது எல்லாம் குடும்பத்துக்கும் என் படிப்புக்கும் நம்ம கல்யாணத்துக்கும் போயாச்சு. உன்னை கல்யாணம் பண்ணிண்டு வந்தப்போ நான் இருந்த நிலைமை உனக்கு நல்லாவே தெரிஞ்சது தானே!!அது தான் திடிர்னு ஏதாவது செலவு வந்தா நம்மளால சம்மாளிக்க கஷ்டமா இருக்கு. ஏதோ நீ பிரசவத்துக்கு உங்க அம்மா ஆத்துல ஒரு ஏழு மாசம் இருந்ததால கொஞ்சமாவது சேமிக்க முடிஞ்சுது.”
“நமக்குன்னு அந்த அம்பாள் என்ன வச்சிருக்காளோ அது தான் நமக்கு கிடைக்கும். பார்ப்போம் இன்னும் ஒரு மூணு வருஷம் தானே அதுக்கப்பறம் என்ன பண்ணறது டிசைட் பண்ணிப்போம். வாங்கோ சாப்பிடலாம்”
இரண்டு மாதங்கள் ஓடின. சக்தி ஸ்ரீயின் பிறந்த நாள் நெருங்கியது. அவளின் முதலாவது பிறந்த நாளன்று திருப்பதியில் மொட்டையடித்து காது குத்தி ஆயுஷ் ஹோமம் செய்ய திட்டமிட்டு அதை செயல் படுத்திட ஒரு வாரம் முன்னதாகவே மீண்டும் ஊருக்குச் சென்றனர் நவீனும் மிருதுளாவும். அங்கே சென்றதும் தான் தெரிந்தது கவினும் குவைத்திலிருந்து வந்திருந்தது. அவனைப் பார்த்ததும் நவீன்
“என்னடா கவின் திடீரென வந்திருக்க? எப்பவும் நீ ஜூன் ல தானே வருவ!!”
“இல்ல நவீ…”
“என்ன இழுக்கற?”
“நம்ம கவினுக்கும் கஜேஸ்வரிக்கும் அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் பண்ணப்போறோம் அதுதான் வந்திருக்கான்”
“ஓ!!!நிச்சயதார்தம் பண்ண முடிவே பண்ணியாச்சா!! சரி சரி!!! சக்தி ஸ்ரீ பிறந்த நாளுக்கு திருப்பதி போறதா இருக்கோம் எல்லாருக்கும் டிக்கெட் புக் பண்ணட்டுமா?”
“இல்லை இல்லை பசங்க மட்டும் தான் வர்றா நாங்க ரெண்டு பேரும் வரலை”
“ஏன் என்ன ஆச்சு? தாத்தா பாட்டியா உங்களுக்கு அட்டென்ட் பண்ணணும்னு தோனலையா?”
“அதுக்கில்லை இப்போ தான் ஆப்ரேஷன் ஆகிருக்கு அதுதான் யோசிக்கிறேன்”
“ஓ!!! சரி சரி அப்படீன்னா வேண்டாம். டேய் நீங்க எல்லாரும் வரேங்களா இல்லை உங்களுக்கும் வேலை ஏதுவது இருக்கா?”
“இல்லை நாங்க வர்றோம்”
என்றனர் பவினும், ப்ரவினும்
“நீ எப்படி கவின்? வருவயா?”
“ஷுவர் வர்றேன் நவீன்”
“சரி நானும் மிருதுளாவும் கடைவீதிக்குப் போய் குழந்தைக்கு வேண்டிய டிரஸ் எல்லாம் வாங்கிண்டு வந்திடறோம்”
“நவீன் நானும் உங்க கூட வரேன்”
“சரி வா கவின்”
மூவரும் குழந்தை சக்தியுடன் பஸ் ஸ்டாப்புக்கு நடந்துச் சென்றுக்கொண்டிருக்கும் போது நவீன் கவினிடம்
“ஏன் கவின் எப்படி உன் மேரேஜ் இப்படி சீக்கிரம் டிசைட் ஆச்சு? எனக்கு ஒரே குழப்பமாயிருக்கு. ஈரோட்ல ஆப்ரேஷன் இரண்டே மாசத்துல உனக்கும் அத்தைப் பொண்ணுக்கும் நிச்சயதார்த்தம்!!! என்ன ஏதாவது அக்ரிமென்ட்டா என்ன?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை. அப்பா சொன்னா சரின்னு ஓகே சொல்லிட்டேன்”
“நீ ஏதாவது டிமாண்ட் பண்ணினயா?”
“ச்சே சே அதெல்லாம் ஒண்ணுமே கேட்கலை ஆனா ஒண்ணே ஒண்ணு மட்டும் க்ளியரா சொல்லிட்டேன்..”
“என்ன அது?”
“என் கல்யாணத்தை நவீனோட கல்யாணம் மாதிரியே கிராண்டா பண்ணணும்னு ஸ்டிரிக்ட்டா சொல்லிட்டேன்”
இதைக் கேட்ட மிருதுளா கவினிடம்
“இது நியாயமே இல்லை கவின்”
“ஏன் நியாயமில்லை மன்னி?”
“எங்காத்துல நான் ஒரே பொண்ணு அதுனால செய்தா. ஆனா அவா ஆத்துல ரெண்டு பொண்கள்..அதுவுமில்லாம இரண்டாவது பொண்ணுக்கு எங்க கல்யாணம் மாதிரி பண்ணினா அவா மூத்த பொண்ணும் மாப்பிள்ளையும் கேட்க மாட்டாளா? அவாளுக்கு என்ன பதில் சொல்லுவா அத்தை ? அதை யோசிக்க வேண்டாமா?”
“அதெல்லாம் நான் யோசிக்க வேண்டிய அவசியமில்லை மன்னி. அம்மா உங்களுக்கு உங்க பேரன்ட்ஸ் போட்ட மாதிரியே நாற்பத்தைந்து பௌன் நகை போடணும்னு கேட்டா!!! நான் அப்படியா கேட்டேன்!!!”
“என்னது அம்மா அவாகிட்ட அப்படியா கேட்டா? அதுக்கு அவா ஒத்துண்டுட்டாளா?”
“இல்லை அவாளாள அவ்வளவெல்லாம் முடியாதுன்னுட்டா. அதுனால தான் நான் என்னோட டிமாண்டை சொன்னேன்”
இதற்கு மேல் கவினிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்று உணர்ந்த மிருதுளா பேசாமல் அவர்களுடன் பஸ்ஸில் சென்றாள். பஸ்ஸில் அமர்ந்துக் கொண்டே கவின் மிருதுளாவிடம்
“ஏன் மன்னி எங்களோட எல்லாம் நல்லா பேசறேங்களே அப்புறம் ஏன் அம்மாவோட மட்டும் சரியாவே பேச மாட்டேங்கறேங்கள்?”
“அப்படீன்னு யார் உன்கிட்ட சொன்னா கவின்”
“இல்ல நானா பார்த்ததை வைத்துதான் கேட்கறேன்”
“நீ எங்ககூட இருந்ததே மொத்தமா ஒரு வாரம் கூட கிடையாது அதுல உனக்கு தெரிஞ்சுடுத்தா!!! நம்பிட்டேன். இங்கே பாரு கவின் நான் எல்லார் கூடையும் பேசிண்டு தான் இருக்கேன் ஆனா இங்கே என்னென்ன நடக்கறதுன்னு முழுசா தெரிஞ்சுக்காம ஒரு சைட் மட்டும் விஷயத்தைக் கேட்டுட்டு இப்படி அடுத்தவா மேலே பழிப் போடக் கூடாது”
“சரி என்ன தான் அப்படி நடந்தது? சொல்லுங்கோ தெரிஞ்சுக்கறேன்”
மிருதுளா நடந்தவைகளை எல்லாம் விவரித்தாள். அதைக் கேட்டதும் கவின்
“ஓ!!! இவ்வளவு நடந்திருக்கா!!! நவீன் உன் மேல தான் எல்லா தப்பும் டா”
“அதை சொல்லு கவின்”
“நீ ஏன் அம்மா அப்பாவை தட்டிக் கேட்கலை?”
“நான் கேட்டேனா இல்லையான்னு எப்படி உனக்குத் தெரியும்?”
“கேட்டிருந்தா மறுபடியும் அதே மாதிரி பிஹேவியர் இருந்திருக்குமா?”
“அவா அப்படி தான்!!! அவாளை திருத்த முடியாது. அட்லீஸ்ட் என்னால முடியாது பா. பார்ப்போம் இதோ உனக்கும் கல்யாணம் ஆக போறது இல்லையா நீ யே தெரிஞ்சுப்ப”
“எனக்கு அந்த கவலை இல்லை நவீன்”
“ஏன் அப்படி சொல்லற?”
“ஆமாம் நான் கட்டிக்கப் போறது அப்பாவோட தங்கைப் பொண்ணு, அவளுக்கு எல்லாமே தெரியும், ஸோ ஷி வில் ஹான்டில் இட். அதுனால எனக்கு எந்தவித டென்ஷனுமில்லை பா”
“அதையும் பார்ப்போம் டா பார்ப்போம்”
என்று பஸ்ஸிலிருந்து கடைவீதி வரை பேசிக்கொண்டே சென்று வேலைகளை முடித்து விட்டு இரவு உணவை ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வீடு திரும்பினர்.
மறுநாள் நவீனும் மிருதுளாவும் கிளம்பி மிருதுளா வீட்டுக்குச் சென்றனர். மிருதுளாவின் அப்பா அம்மா மற்றும் வேனுவை திருப்பதிக்கு குழந்தையின் முதல் பிறந்த நாள் விழாவுக்கு வரவேற்றனர். அவர்களும் வருவதாக சொன்னார்கள். முறைப்படி ஈஸ்வரனும் பர்வதமும் அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் தான் கொம்பில் இருக்கிறார்களே!!! அன்று மத்தியம் உணவருந்தியதும் அங்கிருந்து கிளம்பி சென்று ரெயில் டிக்கெட் புக் செய்துவிட்டு வீட்டுக்குச் சென்றனர் நவீனும் மிருதுளாவும்.
நவீன் வீட்டிலிருந்து ராமானுஜத்துக்கு ஃபோன் போட்டு கிளம்ப வேண்டிய தேதியை சொல்லி அன்று நேராக ரெயில்வே ஸ்டேஷனுக்கு வந்துவிடுமாறு சொன்னான். ராமானுஜமும் அதுபடியே வந்துவிடுவதாக சொன்னார். இந்த உரையாடலை கேட்ட ஈஸ்வரன் நவீனிடம்
“அவ அப்பா அம்மா வர்றாளோ!!”
“ஆமாம் வர்றா. அதுக்கென்ன? வேனு தானே மாமா!!! அவன் மடியில தான் நம்ம சக்தியை உட்கார வைத்து மொட்டையும் அடிக்கணுமாம், காதும் குத்தணுமாமே!!!”
இதைக் கேட்டுக் கொண்டிருந்த பர்வதத்தின் முகம் மாறியதைக் கண்டாள் மிருதுளா. இதற்கு ஏதோ ஒரு தடையை பர்வதம் உருவாக்கப் போகிறாள் என்பது அவளுக்கு புரிந்தது. அது எதுவாக இருந்தாலும் சரி… இந்த முறை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டாள்.
திருப்பதி கிளம்பும் முன்தினம் இரவு அனைவரும் சாப்பிட்டப் பின் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பர்வதம் பவினிடம்
“இங்க பாரு பவின் நாளைக்கு திருப்பதில குழந்தையை உன் மடியில் தான் உட்கார வச்சு மொட்டை அடிக்கணும் காதும் குத்தணும் புரிஞ்சுதா”
“அது எப்படிமா மாமா மடியில உட்கார வச்சு தானே செய்வா இது என்ன புதுசா இருக்கு!!”
என்றாள் மிருதுளா. அதற்கு பர்வதம்
“இது தான் நம்மாத்து வழக்கம்”
“எனக்கு தெரிந்து எந்த வீடுகளிலும் மாமா இருக்கும் போது சித்தப்பாவை செய்யச் சொல்றதுன்னு ஒரு வழக்கத்தை நான் கேள்விப் பட்டதில்லை. சரி அப்படியே நம்மாத்து வழக்கமானாலும் கவின் தானே உட்காரணும் அது என்ன நீங்க பவினை சொல்லறேங்கள்??”
“எல்லாம் அப்படி தான். பவின் உனக்குப் புரிஞ்சுதுல்ல அது போதும். சரி எல்லாரும் தூங்க போங்கோ”
என திமிராக சொல்லி விட்டு படுத்துக்கொண்டாள் பர்வதம். அனைவரும் படுக்கச் சென்றனர். மாடியில் மிருதுளா நவீனிடம்
“அது எப்படி நவீ !!! என்ன நியாயமிருக்கு? எல்லார் ஆத்துலயும் மாமா மடியில் உட்கார வச்சுதான் பண்ணுவா. அப்படி மாமா இல்லாட்டின்னா தான் மத்தவா உட்காருவா!!! என் சக்தி ஸ்ரீக்கு வேனு இருக்கானே அப்புறம் எப்படி கவினை!!!! உங்க அம்மா ஆனாலும் ரொம்பத் தான் பண்ணறா!!! இந்த விசேஷத்தையும் ஸ்பாயில் பண்ண தான் இப்படி ஒண்ணு கிளப்பி விடறா!!”
“மிருது நீ ஏன் டென்ஷன் ஆகறாய்? ஜஸ் லீவ் இட். அவா சொல்லறதை சொல்லிண்டு இருக்கட்டும் நாம அங்க வேனுவையே உட்கார சொல்லுவோம் யூ டோன்ட் வரி அபௌட் ஆல் தீஸ் திங்ஸ். நிம்மதியா தூங்கு”
என்று நவீன் சொன்னாலும் மிருதுளாவுக்கு ஒரு வகையான பயம் தொற்றிக் கொண்டது. ஆம் அவள் கடந்து வந்த பாதை அப்படி. மறுநாள் விடிந்தது அனைவரும் திருப்பதிக்குப் புறப்பட்டனர். அங்கு சென்றதும் புக் செய்திருந்த ரூமில் கொண்டுச் சென்ற சாமான்களை வைத்துவிட்டு குழந்தைக்கு மொட்டையடிக்கச் சென்றனர். அங்கே சவரம் செய்பவர் குழந்தையின் மாமா எங்கே என்று கேட்டார். அப்போது வேனு செல்ல முற்பட்ட போது பவின் வழிமறித்து
“எங்க அம்மா என்னைதான் உட்காரச் சொல்லி இருக்கா. அது தான் எங்க வழக்கமாம்.”
என்று சொல்லிக் கொண்டு முன்வந்து சக்தியை தன்னிடம் தரச் சொன்னான். அப்போது கோபமடைந்த மிருதுளா
“இங்க பாரு பவின் சில சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் இன்னார் தான் செய்யணும்ன்னு இருக்கு அது உங்க அம்மாக்கு தெரியாம போனதால அதை எல்லாம் மாத்த முடியாது. நீயே பார்த்த இல்ல மொட்டை அடிப்பவரே குழந்தையோட மாமா எங்கேன்னு தானே கேட்டார்…சித்தப்பா எங்கேன்னா கேட்டார். இப்போவாவது புரிஞ்சுக்கோ. நீ நகரு மொதல்ல. டேய் வேனு வா”
என வேனுவின் கையைப் பிடித்து சக்தியை அவன் கையில் கொடுத்து அமரச் செய்து பாப்பாவுக்கு மொட்டை அடிக்க வைத்தாள் மிருதுளா. பின் அனைவரும் ரூமிற்குச் சென்று குளித்து ஃப்ரெஷ் ஆனதும் காதும் குத்தி ஆயுஷ் ஹோமமும் சிறப்பாக செய்து முடித்து பெருமாளின் தரிசனமும் கண்டு, தாயாரையும் சேவித்து விட்டு திருப்பதி லட்டுவுடன் வீடு திரும்பினார்கள்.
சற்று நேரம் ஓய்வெடுத்தனர். மறுநாள் காலை எழுந்து காபி குடித்து குளித்துவிட்டு மிருதுளா வீட்டுக்குக் கிளம்பினர் நவீனும் மிருதுளாவும் அப்போது ஈஸ்வரன்
“நாளைக்கு நம்ம கவினோட நிச்சயதார்த்தமிருக்கு இப்போ என்னத்துக்கு அங்கே போகணும்?”
“நாங்க போகணும். எங்களுக்கு வேலையிருக்கு. நீங்க கவினுக்கு நிச்சயதார்த்தமிருக்குன்னு நாங்க இங்க வந்தததுக்கப்புறம் தானே எங்ககிட்ட சொன்னேங்கள்!!! ஆனா இந்த வேலை நாங்க குஜராத்ல இருந்து கிளம்பும்போதே டிசைட் பண்ணினது. ஸோ நாங்க போயாகணும். சாரி. சாயந்தரம் வந்திடுவோம்”
என்று மிருதுளா பதலளித்து விட்டு இருவரும் விருட்டென்று வெளியே சென்றனர். அவர்கள் சென்றதும் ஈஸ்வரன் ராமானுஜத்துக்கு ஃபோன் போட்டார்
“ஹலோ நான் ஈஸ்வரன் பேசறேன்”
“ஆங் சொல்லுங்கோ மாமா நான் அம்புஜம் பேசறேன்.”
“மாமா ஆத்துல இல்லையா?”
“இல்லை அவருக்கு காலை ஷ்ப்ட்டு அதுனால ஆறு மணிக்கெல்லாம் வேலைக்கு போயிட்டார்”
“நேத்து தானே திருப்பதியிலிருந்து வந்தேங்கள்!! அதுக்குள்ள ரெஸ்ட்டில்லாம வேலைக்கும் போயிட்டாரா?”
“ஆமாம் மாமா அவர் அப்படி தான். அவருக்கு வேலைக்கு அப்புறம் தான் நாங்களேன்னா பார்த்துக் கோங்கோளேன்”
“சரி சரி நான் ஃபோன் பண்ணினது ஒரு நல்ல விஷயம் சொல்லறதுக்காக தான். அது என்னனென்னா நம்ம கவினுக்கு நாளைக்கு நிச்சயதார்த்தம் வச்சிருக்கோம். பொண்ணு என் தங்கை பொண்ணுதான். நீங்க மாமா வேனு எல்லாரும் வந்திடுங்கோ. இருங்கோ பர்வதம் பேசணுமாம் குடுக்கறேன்”
“ஹலோ அம்புஜம் மாமி எங்காத்து மாமா சொன்னா மாதிரி நாளைக்கு எல்லாரும் வந்திடுங்கோ. எங்க நாத்தனார் பொண்ணத் தான் கவினுக்கு பேசி முடிச்சிருக்கோம். என்ன தான் இருந்தாலும் சொந்தத்துல பொண்ணெடுத்தா தானே நம்மள பார்த்துப்பா அது தான் ஓகேன்னு சொல்லிட்டேன். இங்கே நிச்சயதார்த்த வேலைகள் தலைக்கு மேல கிடக்கு ஆனா உங்க பொண்ணும் மாப்பிள்ளையும் கிளம்பி அங்க உங்காத்துக்கு வந்திண்டு இருக்கா. மறக்காம அவாளையும் அழைச்சுண்டு வந்திடுங்கோ. நான் வச்சுடறேன்.”
என்று ஃபோனை அம்புஜத்திடமிருந்து பதில் வருவதற்குள் வைத்தாள் பர்வதம். அவள் ஃபோனை வைத்ததும் ஆட்டோவில் நவீனும் மிருதுளாவும் சக்தி பாப்பாவுடன் வந்திறங்கினர். அவர்களை வரவேற்று காபி டிபன் கொடுத்து சக்தியை மடியில் வைத்துக் கொண்டே
“ஏன் மிருது உங்காத்த கவினுக்கு நாளைக்கு நிச்சயதார்த்தமாமே!!!”
“உனக்கு யார் சொன்னா?”
“உங்க மாமனாரும் மாமியாரும் இப்போ தான் ஃபோன்ல சொன்னா. சரி அங்க நிச்சயதார்த்த வேலைகளை விட்டுட்டு நீங்க இப்போ இங்க ஏன் வந்தேங்கள்?”
“ஏன் ஆவா ஏதாவது குற்றமா சொன்னாளாக்கும்”
“அவா சொன்னாளோ இல்லையோ அது தப்பு தானே மா”
“அம்மா எங்களுக்கு அந்த விஷயத்தை நாங்க இங்க வந்ததுக்கப்புறம் தான் சொன்னா அது உனக்குத் தெரியாது. சரி அதெல்லாம் எங்க பாடு நாங்க பார்த்துக்கறோம். அப்பா வேனு எல்லாரும் எங்க காணம்”
“உங்க அப்பா டே ஷிப்ட் போயாச்சு. வேனு காலேஜ் போயிருக்கான். மத்தியானம் வரைக்கும் தான் காலேஜாம் ஒரு இரண்டு மணிக்கெல்லாம் வந்திடுவான்”
“அம்மா உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லத் தான் வந்திருக்கோம். இன்னும் இதைப் பத்தி என் மாமனார் மாமியார்ட்ட பேசலை.”
“என்ன மிருது!! என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சினையா?”
“ஆமாம் பிரச்சினை தான் மா”
என்று கூறிக்கொண்டே நவீனைப் பார்த்தாள் மிருதுளா அதை கவனித்த அம்புஜம்
“என்ன மாப்ள!! என்ன ஆச்சு இப்போ?”
“அது அது வந்து …..”
“அய்யோ ஏன் இப்படி என்னோட பிபியை ஏத்தறேங்கள் யாராவது ஒருத்தர் சொல்லுங்கோளேன்”
“சரி மா நானே சொல்லறேன். நீங்க எனக்கு கல்யாண சீரா கொடுத்த பாத்திரங்களில் நான் குஜராத் எடுத்துண்டு போன பாத்திரங்கள் தவிர மத்த எல்லாப் பாத்திரங்களும் நசுங்கி நெளிஞ்சு போயிருக்கு”
“என்ன சொல்லுற மிருது!!!! அதெல்லாத்தையும் அட்டப்பெட்டில போட்டு பேக் பண்ணி ஆத்து பரண் மேல வச்சுட்டுத்தானே குஜராத்துக்கே கிளம்பினேங்கள்!!! அப்புறம் எப்படி நசுங்கித்து நெளிஞ்சுது?”
அம்புஜம் கேட்டதற்கு மிருதுளா நடந்ததைச் சொன்னாள். அதைக் கேட்டதும் அம்புஜத்துக்கு தலை சுற்றுவது போல இருக்க பக்கத்திலிருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து மடக்மடக் என தண்ணீரைக் குடித்து விட்டு நவீனைப் பார்த்து
“என்ன இது மாப்ள!!! இது நியாயமா?”
“நியாயமே இல்லை தான்.”
“நியாயம் அநியாயம் அதை விடுங்கோ. மனசாட்சின்னு ஒண்ணு இருக்க வேண்டாமா? ஒரு பொண்ணைப் பெத்து வளர்த்து ஆளாக்கி அவளுக்கு இப்படி சீரெல்லாம் செஞ்சு அனுப்பினா அதை எல்லாம் இப்படியா நாசமாக்குவா? எங்க பொண்ணத்தான் பாடாபடுத்தறான்னா நாங்க கொடுத்த சீர் ஜாமானங்கள் மேலையுமா வன்மம். நாங்க என்ன அப்படி தப்பு பண்ணிட்டோம்? அந்த பாத்திரங்கள் எல்லாம் நாங்க எங்க பொண்ணுக்காக பார்த்து பார்த்து வாங்கி பல வருஷங்களா சேர்த்து வச்சு வந்ததாக்கும். அந்த மாதிரி பித்தளை வெங்கலப் பாத்திரங்கள் எல்லாம் இப்போ கடையில வாங்கப் போனா என்ன விலையாகும் தெரியுமா? நீங்க இதை பத்தி உங்க அப்பா அம்மாட்ட ஒண்ணுமே கேட்கலையா?”
“நாங்க பார்த்ததே அவரோட ஆப்ரேஷனுக்கு வந்தப்போ தான். அப்போ என்னத்த கேட்கறதன்னு ஊருக்குப் போயிட்டோம்”
“சரி இந்த நல்ல காரியத்தை எப்போ பண்ணினாலாம்?”
“அது எங்களுக்கு தெரியாது.”
“நிஜமாவே தவளையால தான் பாத்திரங்கள் கீழே விழுந்து இப்படி ஆகிருந்தா அதை உங்ககிட்ட ஃபோன் பண்ணிச் சொல்லிருக்கணுமில்லையா!!!”
“ஆமாம் சொல்லிருக்கணும்”
“ஏன் சொல்லலையாம்? இங்க பாருங்கோ மாப்ள அவா பண்ணினதுக்கு உங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்த நான் விரும்பலை ஆனா இதை அவாகிட்ட நாங்க கேட்கத்தான் போறோம். ஏன்னா அதெல்லாம் மிருது அப்பா கஷ்ட்டப்பட்டு வேர்வை சிந்தி சம்பாதிச்ச காசுல வாங்கினது. இவ்வளவும் பண்ணிட்டும் என்ன எகதாளமா ஃபோன்ல பேசறா அவா!!! நீங்க எங்களை தப்பா எடுத்துக்கக் கூடாது நாங்க உங்க அப்பா அம்மாவை இந்த விஷயத்துக்கு சும்மா விடப் போறதில்லை”
“சரி நீங்க தாராளமா கேளுங்கோ!!! தப்பு பண்ணினவா அவா அப்போ அவாளுக்கு இதெல்லாம் தேவைதான்.”
“ஆமாம் என்ன கேட்டு என்ன ஆகபோறது!!! வீணா போனது போனதுதானே.”
“சரி மா நாங்க மத்தியானம் சாப்டுட்டு சாயந்தரம் அங்கே போகணும். நீங்க நாளைக்கு மறுநாள் வந்து கேளுங்கோ. ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம்…அவாகிட்ட நியாயம் மட்டும் கிடைக்காது அதை எதிர்பார்க்காதே!! எங்களுக்கே அங்க மதிப்பில்லை அப்புறம் எங்கேந்து உங்களை மதிக்கப் போறா? அதுனால எதற்கும் தயாராக வாங்கோ. அவா எல்லாத்துக்கும் துணிஞ்சவாளா இருக்கா.”
மதியம் சாப்பிட்டு சற்று ஓய்வெடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி ஈஸ்வரக் கோட்டைக்குச் சென்றனர் நவீனும் மிருதுளாவும். ராமானுஜத்திடமும் வேனுவிடமும் விஷயத்தைக் கூறினாள் அம்புஜம் அதைக் கேட்ட ராமானுஜம் அதிர்ந்துப் போனார்.
ஈஸ்வரன் கோட்டையில் கவினின் நிச்சயதார்த்தத்தின்காக சொந்தங்கள் சிலர் வந்திருந்தனர். அதில் ஒருத்தியிடம் பர்வதம் கண்ணசைக்க உடனே அவள் மிருதுளாவிடம்
“என்னமா மூத்த மாட்டுப் பொண்ணு ஆத்துல விசேஷத்தை வச்சுண்டு அதுக்கு வேலையைப் பார்க்காம எங்க ஜோடியா போயிட்டு வறேங்களாம்”
“சித்தி அதுதான் ஜோடியா போயிட்டு வரோம்ன்னு தெரியறது தானே அப்புறம் என்ன கேள்வி. நிச்சயதார்த்தம் கவினுக்கு தானே!! எனக்கில்லையே!”
என்று நவீன் சொன்னதும் சலசலப்பு அடங்கியது. நவீனும் மிருதுளாவும் மாடிக்குச் சென்று உடையை மாற்றிக் கொண்டு கீழே வந்து அனைவருடன் பேசிக்கொண்டிருந்து விட்டு அனைவருக்கும் சாப்பாடு பரிமாறி இடத்தை எல்லாம் சுத்தம் செய்தப் பின் சக்தியைத் தூக்கிக் கொண்டு உறங்கச் சென்றாள் மிருதுளா.
மறுநாள் கவினின் நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடந்து முடிந்தது. லட்சுமி அத்தைக்கு முகமெல்லாம் பற்கள் பளிச்சிட்டது. நிச்சயதார்த்தம் முடிந்து விருந்து பரிமாறப் பட்டது. அதன் பின் ஒரு மூன்று மணியளவில் கவின், கஜேஸ்வரி, அவளின் அண்ணன், அவரின் நண்பர்கள் எல்லோரும் எங்கோ செல்வதற்கு கிளம்பினர். அப்போது கவின் நவீனையும் மிருதுளாவைம் கிளம்பச் சொன்னான் அதற்கு நவீன்
“எதுக்கு இப்போ எங்க ரெண்டு பேரையும் கிளம்பச் சொல்லுற கவின்?”
“நீங்க கிளம்பி வாங்கோ சொல்லறேன்”
இருவரும் கிளம்பி வந்தனர். அப்போது கவின்
“நாம இப்போ மேரேஜ் ரெஜிஸ்டர் ஆஃபிஸ் போறோம். வந்து வண்டியில ஏறுங்கோ ரெண்டு பேரும்”
“இப்போ தானே நிச்சயமே முடிஞ்சுது அதுக்குள்ளயே கல்யாணத்தை ரெஜிஸ்டர் பண்ணற. ஏன் இந்த அவசரம்?”
என்று நவீன் கேட்டுக் கொண்டிருக்கும் போது கஜேஸ்வரியின் அண்ணன் வந்து கவினிடம்
“என்ன கவின் போகலாம் நேரமாயிண்டே இருக்கு அப்புறம் ரெஜிஸ்ட்ரார் கிளம்பிடப் போறார்”
என்றதும் கவின் நவீனையும் மிருதுளாவையும் அவனுடன் அழைத்துச் சென்றான். மிருதுளா சக்தியைத் தூக்கிக் கொண்டு அவர்கள் பின்னால் சென்று வேனில் ஏறினாள். அவள் வேனினுள் சென்றதும் கவின் அவளை கஜேஸ்வரி அருகில் அமரச்சொன்னான் அதற்கு மிருதுளா
“நானா!!! எதுக்கு கவின்?நீ உட்காரு அதைத் தான் அவளும் விரும்புவா போ நீ போய் உட்காரு”
என்றாள் அதை மறுத்த கவின் மிருதுளாவை அமரச்செய்து விட்டு அவன் நவீனுடன் அமர்ந்தான். வேன் புறப்பட்டது அப்போது மிருதுளா கஜேஸ்வரியிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்தாள். அதே போல கவின் நவீனிடம்
“ஆமாம் நவீன் இப்போவே ரெஜிஸ்டர் பண்ணினாதான் அந்த சர்டிபிகேட் வைத்து நான் கஜேஸ்வரிக்கு விசா எடுக்க முடியும். கல்யாணம் முடிந்ததும் அவளைக் கூட்டிட்டு போகணும்ன்னு அவ சொல்லிட்டா. அப்படீன்னா இப்போவே ப்ராஸஸ் ஆரம்பிச்சாதான் உண்டு அதுனால தான் இப்படி பண்ணறேன்”
“அதெல்லாம் சரி முறையா கல்யாணம் உண்டா இல்லை அதுதான் ரெஜிஸ்டர் ஆயாச்சேன்னு விட்டுவிடுவீங்களா!!!”
“இல்ல இல்ல அது குறிச்ச தேதில நடக்கும். அதுல எந்த சேஞ்சும் இல்லை”
“உன் இஷ்டம் பா. இட்ஸ் யுவர் லைஃப்”
என்று இவர்கள் பேசி முடித்ததும். கஜேஸ்வரியின் அண்ணன் நாராயணனின் நண்பன் கஜேஸ்வரியிடம் தண்ணீர் பாட்டில் கொடுப்பது போல வந்து
“என்ன கஜேஸ்வரி உனக்கு நிச்சயமாயிடுச்சு இதோ ரெஜிஸ்டர் மேரேஜ் ஆக போவுது …இன்னமும் இங்கிதம் இல்லாம இப்படி ஒண்ணா கூட உட்கார வைக்க மாட்டேங்கறாங்க உங்க மாமா வீட்டுல”
என்று சொன்னதும் மிருதுளாவுக்கு கோபம் வந்தது. அவள் அங்கிருந்து எழுந்து
“கவின் நீயே வந்து உன் பொண்டாட்டி பக்கத்துல உட்காருப்பா. நான் அங்க வந்து உட்கார்ந்துக்கறேன்”
“இல்ல மன்னி நீங்களே உட்காருங்கோ பரவாயில்லை”
“வேண்டாம் பா எங்களுக்கும் இங்கிதம் எல்லாமிருக்கு. நான் உன்னை முன்னாடியே அங்க தானே உட்காரச் சொன்னேன்!!!! சரி சரி நீ போ பா. உனக்கு உன் பொண்டாட்டிக்கூட உட்காரணமோ இல்லை!!! எனக்கு என் புருஷனோட உட்காரணும் போதுமா.”
என்றதும் கவின் எழுந்து இடம் கொடுத்தான். அவனை நாரயணனின் நண்பன் பிடித்து கஜேஸ்வரி அருகில் அமர வைத்தான். நடந்தவைகளைப் பார்த்த நவீன் மிருதுளாவிடம்
“என்னாச்சு மிருது? நீ இப்படி எல்லாம் நடந்துக்க மாட்டியே!!! அங்க என்ன நடந்தது?”
மிருதுளா நடந்தவற்றைக் கூறினாள். உடனே நவீன்
“இரு அவன் யாரு இதெல்லாம் சொல்லறதுக்கு. அவன் என்ன நம்ம சொந்தக்காரனா!!! என்னன்னு கேட்டுட்டு வரேன்”
என்று எழுந்தவனின் கையைப் பிடித்து இழுத்து இருக்கையில் அமர வைத்தாள் மிருதுளா பின் நிதானித்துக் கொண்டு
“இங்க பாருங்கோ அந்த கோஷ்டி எல்லாம் ஒண்ணா சேர்ந்துண்டு தான் இப்படி எல்லாம் பண்ணறா. ஏன் அந்த ஆள் அப்படி சொல்லும் போது அந்த கஜேஸ்வரி வாயை திறக்கலை!!! அவன் சொல்வதை ஆமோதிக்கறா மாதிரி ஈ ன்னு இளிச்சுண்டு இருந்தா தெரியுமா!!! அதுவுமில்லாம நாராயணனும் பேசாம இருக்கார். விடுங்கோ என்னமோ கூத்தடிக்கட்டும். இதுக் கெல்லாம் உங்க தம்பியும் உடந்தைதானோன்னு எனக்கு தோனறது!!!! இப்படி லாஸ்ட் மினிட்ல நமக்கு சொன்னதுமில்லாம இப்படி எல்லாம பேச்சு வேற. சீக்கிரம் எல்லாத்தையும் முடிச்சிட்டு வீட்டுக்கு போனா போறும்ன்னு இருக்கு. வரும்போதே இப்படி !!! இனி இவ வந்தா எப்படியோ!!!! பார்ப்போம்”
என்று ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து முடித்ததும் வீட்டுக்குச் சென்றனர். மாலை ஒரு ஏழு மணியளவில் லட்சுமி வீட்டார் அனைவரும் அவர்கள் வந்த வேனில் ஏறிச் சென்றனர். அவர்கள் சென்றதும் மிருதுளா மாடிக்குச் சென்று சற்று நேரம் குழந்தையை பக்கத்தில் படுக்க வைத்துக் கொண்டு தானும் படுத்துக் கொண்டாள். சற்று நேரத்தில் கீழிருந்து நவீன் கூப்பிட்டான். எழுந்து கீழே வந்தாள். இரவு உணவு சாப்பிட்டனர். பின் அனைவரும் உறங்கச் சென்றனர்.
மறுநாள் விடிந்ததும் கவின் ஈரோடுக்கு கஜேஸ்வரியிடம் ஏதோ டாக்யுமெண்ட்ஸ் கலெக்ட் பண்ண வேண்டுமென்று கூறிவிட்டு கிளம்பிச் சென்றான். அவனுக்கு யாரிடமும் பர்மிஷன் கேட்க வேண்டிய அவசியமில்லை!!! ஏனெனில் அவன் சொந்த அத்தை மகளை கட்டிக் கொள்ளப் போவதால் அவனுக்கு முழு சுதந்திரம் போல!!!!
நவீனும் மிருதுளாவும் டிபன் சாப்பிட்டப்பின் பர்வதத்தையும், ஈஸ்வரனையும் ஹாலில் அமர வைத்து பேசலானான் நவீன்
“நாங்க எங்க ரூம்ல இருக்குற பரண்ல வச்சுட்டுப் போன பாத்திரங்கள் எல்லாமே நசுங்கி நெளிஞ்சு உடைஞ்சிருக்கு. அது எப்படி ஆச்சுன்னு ப்ரவின்ட்ட கேட்டா அவன் ஏதோ தவளை வந்தது அதை தட்டி விடப் போனதால பாத்திரங்கள் எல்லாம் கீழே விழுந்து அப்படி ஆயிடுத்துன்னு சொன்னான். ஏன்னா உனக்கு அப்போ ஆப்ரேஷன்னு சொல்லிண்டு ஈரோட்டுல இருந்த அதுனால அப்போ கேட்க வேண்டாம்ன்னு விட்டுட்டோம். ஃபோனில் கேட்க வேண்டிய விஷயமில்ல இதுன்னு ஃபோன்லையும் கேட்கலை. அதுக்கப்புறம் என் குழந்தையோட பொறந்த நாள் அப்புறம் கவினோட நிச்சயம்ன்னு வந்ததால அதெல்லாம் முடியட்டும்ன்னு வெயிட் பண்ணினோம். இப்போ சொல்லுங்கோ ஏன் எப்படி எப்போ இது நடந்தது?”
“என்ன சொல்லணும் நாங்க? என்ன ஏதோ விசாரணை மாதிரி கேட்கற?”
“எப்படி வேணும்னாலும் வச்சுக்கோங்கோ ஆனா எனக்கு பதில் இப்போ வரணும்”
“ஆமாம் பரண்ல ஒரே தவளையா இருந்தது பர்வதம் தான் பார்த்து அதை எல்லாம் தட்டி விடப் போய் எல்லாம் விழுந்திருக்கு. அதுக்கென்ன இப்போ”
“அதுக்கென்ன இப்போன்னு ரொம்ப சாதாரணமா கேட்கறேங்களே பா. அதை எல்லாம் வாங்க எங்க அப்பா அம்மா எவ்வளவு கஷ்டப் பட்டிருக்கான்னு எனக்குத் தான் தெரியும். இவ்வளோ பெரிய தப்பை பண்ணிட்டு எவ்வளவு சர்வசாதாரணமா சொல்லறேங்கள்”
“இப்ப என்ன பண்ணணும்னு சொல்லற அதுக்கு. ஏதோ கை தவறி எல்லாம் விழுந்துடுத்து. அதுக்கு நாங்க என்ன பண்ணுவோம்”
“நல்லா இருக்கு நவீ உங்க அப்பா அம்மா சொல்லறது. ரொம்ப நல்லா இருக்கு. நாளைக்கு பாம்பு வந்ததுன்னு பீரோவையும் நசுக்கி வைச்சுட்டு அதுனால என்ன இப்போன்னும் கேட்பா இவா!!!”
“என்ன உனக்கு ரொம்ப வாய் நீளறது. அடக்கிக்கோ சரியா”
என்றாள் பர்வதம். நவீனுக்கு கோபம் உச்சமானது அவன் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் இடையில் மிருதுளா பேசியதும் மிருதுளாவிடம் எகிறினார்கள் மூத்த தம்பதியர். அதை புரிந்துக் கொண்ட நவீன்
“மிருது யூ பீ குவயட். சரி நான் கேட்டதுக்கு பதில் எப்போ இது நடந்தது?”
“அது ஒரு ஆறு ஏழு மாசம் முன்னாடின்னு நினைக்கிறேன் இல்லையா பர்வதம்!!”
“ம் ம்…இருக்கும்”
“சரி இதுமாதிரி கீழே விழுந்து எல்லாம் நசுங்கிடுத்துன்னு ஏன் எனக்கு ஃபோன் போட்டு சொல்லலை?”
“என்னத்துக்கு சொல்லணும்? நீங்க வந்தா பார்த்துக்க போறேங்கள் தானே. எப்படி இப்போ பார்த்தேங்களோ அப்படி அதுனால எங்களுக்கு சொல்லணும்ன்னு தோனலை.”
“சபாஷ்!!! சூப்பர் பொறுப்பான பதில்”
“என்ன டா உன் பொண்டாட்டி ரொம்ப துள்ளறா?”
இப்படி பேசிக் கொண்டிருக்கும் போது அம்புஜமும் ராமானுஜமும் வந்தனர். அவர்களைப் பார்த்ததும் ஈஸ்வரன் நவீனிடம்
“என்ன பேச அடியாள் எல்லாம் வரச் சொல்லிருக்க போல!!!”
என்று சொல்ல நவீனுக்கு இன்னும் கோபம் வந்தது ஆனால் அதை அடக்கிக் கொண்டு தன் மாமனார் மாமியாரை வரவேற்று அமரச் சொன்னான். அவர்களிடம் மிருதுளா
“இவா செஞ்சதுக்கு துளியும் வருத்தப் படறா மாதிரி எனக்குத் தெரியலை மா. நீங்க பேசாம ஆத்துக்கு போயிடுங்கோ”
“என்ன மாமா மாப்ளையும் பொண்ணுமா நடந்ததைச் சொன்னா. ஏன் இப்படி பண்ணிருக்கேங்கள். எங்களுக்கு நீங்க ரெண்டு பேரும் பதில் சொல்லித் தான் ஆகணும்”
“அது தான் உங்க மாப்ள சொல்லிட்டானில்லையா அது தான் நடந்தது. அதுக்கு நாங்க என்னத்த சொல்லணும்?”
“மாமா உங்க வயசுக்கு இப்படி பொறுப்பில்லாம பதில் சொல்லறது நல்லா இல்லை. அந்த பாத்திரங்கள் எல்லாம் வாங்க நான் எவ்வளவு உழைச்சிருக்கேன்னு எங்களுக்குத்தான் தெரியும். அதுவுமில்லாம அதுல இருக்குற வெங்கலப் பாத்திரங்கள் எல்லாம் இப்போ வாங்கக் கூட கிடைக்காது. இப்போ அந்த பாத்திரங்களின் நசுக்கை எடுத்து சரி செய்ய வேற செலவாகும் தெரியுமா!!! செலவு ஒரு பக்கமிருந்தாலும் இனி அது புது பாத்திரமாகுமா?”
“எல்லாம் எல்லா இடத்துலையும் காசு கொடுத்தா கிடைக்கும். இப்போ என்ன நீங்க எல்லாருமா ரெவுண்டு கட்டிண்டு கேட்குற அளவுக்கு நாங்க என்ன பண்ணிட்டோமாம்!!! சரி நசுங்கின பாத்திரங்களுக்கெல்லாம் எவ்வளவு ஆகும்ன்னு ஒரு பேப்பர்ல எழுதி தாங்கோ அதுக்கு உண்டான காசை விட்டெரியறோம் எடுத்துண்டு போங்கோ”
என்று திமிறாக ஈஸ்வரன் சொன்னதைக் கேட்டதும் அம்புஜம்
“உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்து அவளை கட்டிக் கொடுத்த இடத்துல இப்படி அவா பண்ணிட்டு உங்ககிட்ட இப்போ நீங்க பேசினா மாதிரி பேசினா தான் உங்தளுக்கு எங்களோட வலிப் புரியும்.”
“எங்களுக்கு இப்படியொரு பொண்ணெல்லாம் இல்லை”
என்று பர்வதம் சொன்னதும் ராமானுஜத்துக்கு கோபம் வந்தது அவர் எழுந்து நவீனிடம்…
“இதுக்கு மேல இவாகிட்ட பேச எங்களுக்கு விருப்பமில்லை. உங்களை நம்பி தான் நாங்க எங்க பொண்ணையும், பொருளையும் கொடுத்தோம். நீங்க தான் இதுக்கு என்ன பண்ணலாம்ன்னு இப்போ சொல்லணும்”
நவீனுக்கும் அவனின் பெற்றவர்கள் மீது கோபம் கொந்தளித்துக் கொண்டிருந்தது அதை அடக்கிக் கொண்டு ராமானுஜத்திடம்
“இனியும் இவாளை நம்பி இங்கே எதையும் வைக்க வேண்டாம். நீங்க ஒரு வேன் ஏற்பாடு பண்ணிண்டு வாங்கோ நாம எல்லா பொருளையும் அதுல ஏத்தி உங்காத்துலேயே வச்சுட்டு நாங்க ஊருக்குப் போறோம்”
என்றதும் ஈஸ்வரன் வெடுக்கென்று எழுந்து
“அப்படியே அவா பொண்ணையும் சேர்த்து அதுல ஏத்தி அனுப்பு”
என்று சம்மந்தமில்லாமல் கூறிவிட்டு உள்ரூமிற்குள் சென்றார். அதைப் பார்த்த மிருதுளா தன் பெற்றவர்களிடம்
“அப்பா அவாளை விடு அவா அப்படி தான். நான் நிறைய பட்டுட்டேன். நீ நவீன் சொன்னா மாதிரி வேன் எடுத்துண்டு வாப்பா எல்லாத்தையும் நம்மாத்துலேயே வச்சுடறோம்”
“என்ன பேசறேங்கள் ரெண்டு பேருமா!!! நாங்க உங்களுக்கு கொடுத்தது நல்ல புது பாத்திரங்கள் ஆனா இப்போ நசுங்கினதையும் நெளிஞ்சதையும் என்னத்துக்கு திருப்பி எடுத்துண்டு போகணும். அதுதான் உன் மாமனார் காசை விட்டெரியறேன்னு சொன்னாரே தரச்சொல்லு”
“அப்பா அவர்ட்ட எங்க காசு? அதையும் உன் மாப்ள தான் தரணும். புள்ள கல்யாணத்துக்கே ஒண்ணும் செய்யாத ஆட்கள் விட்டெரிஞ்சிட்டாலும்….அட போப்பா. நான் தான் நேத்தே சொன்னேனே மா இங்க நியாயம் கிடைக்காது. அவமானம் தான் கிடைக்கும்ன்னு. சாயந்தரமா வண்டியை வரச்சொல்லு எல்லாத்தையும் போட்டுண்டு நாங்களும் வந்திடறோம்”
அன்று மாலை ராமானுஜம் வேனுடன் வந்தார். நவீனும் வேனுவும் ராமானுஜமுமாக மிருதுளா நவீனின் அனைத்துப் பொருட்களையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்றனர். மிருதுளா மனதில் ரணங்களுடனும், அவள் கொண்டு வந்த சீர் சாமான்கள் அனைத்தும் பலத்த காயங்களுடன் தாய் வீட்டிற்கே திரும்பிச் சென்றனர்.
செய்வதை எல்லாம் செய்து விட்டு
திமிராக பேசிவிட்டு
கேள்வி கேட்க வந்தவர்களை அவமானப் படுத்தி விட்டு
ரூமுக்குள் சென்று அடைந்துக் கொண்ட மூத்த தம்பதியர்
அவர்களின் பாவமூட்டையின் எடையை அதிகரித்துக் கொண்டுள்ளனர்.
தொடரும்…..
அத்தியாயம் 70: தவளை நசுக்கிய பாத்திரங்கள்
மிருதுளா பாட்டியை அழைத்து வருவதாக சொல்லி அங்கிருந்து கிளம்ப முற்பட்ட போது, தன் பேச்சுத் திறமையால் ஈஸ்வரனை உசுப்பேத்திவிட்டு அவளை அங்கிருந்து போக விடாமல் செய்தாள் பர்வதம். ஏனெனில் பாட்டியை மிருதுளா கூட்டிக் கொண்டு வந்தால் பர்வதத்தின் குட்டு வெளிப்பட்டுவிடுமே!!! எங்கடா மிருதுளா பாட்டியைக் கூட்டிக் கொண்டு வந்து சாட்சி சொல்ல வைத்திடுவாளோ என்றெண்ணி அவள் மீதும் அவள் அம்மா மீதும் அபாண்டமாக பழியைப் போட்டு பேசி மிருதுளாவுக்கு கோபம் வரவழைத்து பிரச்சினையை திசைத் திருப்பப் பார்த்தனர் பர்வதீஸ்வரன். அவர்களின் எண்ணப்படியே பொறுமையிழந்து தன் மரியாதையையும், தன் தாயின் மரியாதையையும் காக்க வேண்டி பேச்சுக்குப் பேச்சு பேச வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டாள் மிருதுளா. அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இறுதியில் மிருதுளா மீதே அனைத்து பழிகளையும் சாற்றி அவளைப் பேச வைத்து தன் மகனிடம் அவன் மனைவியின் லட்சணத்தைப் பற்றி எடுத்துறைத்தார் ஈஸ்வரன். அதுவரை அமைதியாக நடந்தவைகளைப் பார்த்துக் கொண்டு மட்டுமிருந்த நவீன்
“நீங்க ரெண்டு பேரும் பிரச்சினையை ஆரம்பிச்சது டிக்கெட் புக்கிங் டேட் பத்தித்தானே அப்புறம் ஏன் பக்கத்து வீட்டுப் பாட்டி எல்லாம் உள்ளே வந்தா? சரி.. ஆமாம்… நான் போன மாசமே டிக்கெட் புக் பண்ணிட்டேன். நான் தான் மிருதுளாட்ட இதைப் பத்தி எதுவும் உங்க கிட்ட சொல்ல வேண்டாம்னு சொல்லியிருந்தேன். இப்போ அதுக்கு என்ன?”
வீட்டில் ஏற்பட்ட சத்தத்தில் குழந்தை வீல் வீல் என அழுதது. மிருதுளா ஒருபக்கம் தன் மீது சாற்றப்பட்ட தவறான குற்றங்களை எண்ணிக் கண்களில் கண்ணீருடன் நின்றிருந்தாள். பொய்யை ஏக்கர் கணக்கில் தன் திருமணத்திற்கு முன்னும் பின்னும் ப்ளாட் போட்டு வித்த மூத்த தம்பதியர் நவீன் சொல்லாமல் மறைத்த ஒரு சின்ன விஷயத்துக்காக அவர்கள் கைக்குழந்தையுடன் ஊருக்கு கிளம்பும் போது பிரச்சினையை கிளப்பி அவர்களது நிம்மதியையும் குலைத்து கொண்டிருந்ததைப் பார்த்த மிருதுளாவுக்கு அவர்கள் சொன்ன பொய்களை பட்டியலிட்டு… அதை விட பெரிய பொய் ஒன்றும் நவீன் சொல்லவில்லை என்று சொல்லி பர்வதீஸ்வரன் வாயை அடைக்க துடித்தாள் ஆனால் அவள் மனம் அவளிடம்
“வேண்டாம் மிருதுளா வேண்டாம். இவர்களின் நாக்கு நரம்பில்லாதது எப்படி வேண்டுமானாலும் புரட்டிப் பேசக்கூடியது. மீண்டும் நீ அனைத்துக்கும் சாட்சி தேடிக்கொண்டா போக போகிறாய்? நீ தான் நவீனிடம் எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறாயே அவன் கேட்கட்டும். இது போன்றவர்களை கையும் களவுமாக பிடித்து தக்க சாட்சியம் மூலம் அம்பலப்படுத்த வேண்டும். அந்த நாள் நிச்சயம் வரும் அதுவரை அந்த அம்பாள் மீது பாரத்தைப்போட்டுட்டு உன் குழந்தையை தூக்கிக்கொள் போ”
என்றதும் ஓடிச் சென்று தன் மகளை தூக்கிக் கொண்டு சமாதானப்படுத்தினாள். நவீன் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் கோபப்பட்டு சட்டையை மாட்டிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார் ஈஸ்வரன். பர்வதம் நினைத்ததை நடத்தியத் திருப்தியில் உள்ரூமுக்குள் சென்றாள். மிருதுளா நவீனைப் பார்த்துக் கொண்டே தன் மனதிடம்
“நான் பர்வதம் ஈஸ்வரன் சொன்னது செய்தது எல்லாவற்றையும் நவீனிடம் கூறியும் ஏன் அவன் அதை எல்லாம் அவர்களிடம் கேட்கவில்லை? இப்படி இவனிருந்தால் இவர்கள் இன்னுமல்லவா ஆடுவார்கள். அம்மா தாயே எனக்கும் என் குழந்தைக்கும் நீ தான் துணை”
என வேண்டிக்கொண்டாள். அழுதக் குழந்தையின் பசியாற்றினாள். சக்தியும் பசியாறியதும் உறங்கிப் போனாள். மிருதுளாவுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. ஆனால் தன் மாமியார் ஒன்றுமே செய்து வைக்கவில்லை என்பதைப் புரிந்துக் கொண்டதால் பசியை அடக்கிக்கொண்டாள். ஈஸ்வரன் பர்வதத்தின் அபாண்டமான குற்றச்சாட்டுகள் அதை நிரூபிக்க போராடியது, குழந்தையின் அழுகை, வயிற்றுப் பசி, ஈஸ்வரனின் ஓங்கிய குரல், அதிர்ச்சி, அழுகை என எதிர்பார்க்காத நேரத்தில் அனைத்தும் ஒன்றாக தாக்க மிருதுளா துவண்டுப் போனாள். தலைவலியினால் துடித்தாள். அப்போது வீட்டின் வாசலில் கார் வந்து நிற்கும் சப்தம் பசிமயக்கத்திலிருந்த மிருதுளாவுக்கு அறைகுறையாக கேட்டது. மடியில் சக்தியுடன் மெல்ல உட்கார்ந்த படியே நகர்ந்துப் போய் பார்த்தாள். அம்புஜமும் ராமானுஜமும் காரிலிருந்து இறங்கி வந்தனர். அவர்களைப் பார்த்ததும் மிருதுளா ஓவென்று அழுதாள். அதைக் கண்ட அம்புஜத்தின் அடிவயிறு கலங்கியது. ஓடிச்சென்று சக்தியை தூக்கிக் கொண்டு தன் மகளிடம்
“மிருதுமா ஏன் மா அழற? என்ன மா ஆச்சு? எங்க யாரையுமே காணமே? மாப்ள என்ன நடந்தது?”
“நீங்க வாங்கோ நாம ஸ்டேஷனுக்கு கிளம்பலாம். நான் பெட்டியை எல்லாம் எடுத்து காரில் வைக்கறேன்”
என்றான் நவீன்.
“அந்த பெட்டியை என் கிட்ட தாங்கோ நான் தூக்கிண்டு வரேன்”
என்றார் ராமானுஜம்.
இருவரும் பெட்டிகளை காரில் வைத்ததும் …நவீன் வீட்டினுள் வந்து அம்புஜத்திடம்
“நீங்க மிருதுளாவை அழைச்சுண்டு கார்ல ஏறுங்கோ நானும் பின்னாடியே வர்றேன்”
என்று நவீன் சொன்னதும் மிருதுளா வெடுக்கென எழுந்து தன் குழந்தையுடன் வெளியே நின்ற காரினுள் சென்று அமர்ந்தாள். அவள் பின்னாலேயே நடந்தது என்னவாக இருக்கும்!! என்ற குழப்பத்திலேயே சென்றாள் அம்புஜம். இவை நடக்கும் வரை உள்ரூமிலிருந்து வெளியே வராத பர்வதம். அனைவரும் சென்று விட்டார்கள் என எண்ணி ரூமை விட்டு வெளியே வந்தவள் நவீன் கடைசியாக ஒரு பையைத் தூக்கிக் கொண்டு வாசலைத்தாண்டும் போது
“டிபன் சாப்டுட்டு போடா”
என அக்கறையுள்ளவள் போல கூறினாள். அவளைப் பார்த்து முறைத்து விட்டு
“ஒண்ணும் தேவையில்லை”
என்று கூறி திரும்பிப் பார்க்காமல் சென்று காரில் ஏறி காரை ஸ்டார்ட் பண்ணச் சொன்னான். டிரைவரும் வண்டியை ஸ்டார்ட் செய்து திருப்பினார். அப்போது மிருதுளா தன் பெற்றவர்களிடம்
“நாம் ரெயில்வே ஸ்டேஷன் போக வேண்டாம் நேரா நம்ம ஆத்துக்கு போவோம்”
“என்ன மிருது ஆச்சு? எவ்வளவு தடவைக் கேட்கறது? ஏன் இப்போ ஆத்துக்குப் போகணும். டிரேயினுக்கு இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்குமா!!!”
“அம்மா நான் இனி இவர் கூட வாழ விரும்பலை. அதனால நான் இவர் கூட குஜராத்துக்கு போக மாட்டேன். என்னை நம்மாத்துக்கே கூட்டிண்டு போங்கோ ப்ளீஸ்”
என்று அழுதுக்கொண்டே சொன்னாள். அதைக் கேட்டதும் நவீன்
“என்ன மிருது சொல்லற? வாட் ஹாப்பன்டு டூ யூ?”
“அம்மா எனக்கு இவர் வேண்டாம். நான் அவமானப்படுத்தப்படும்போதெல்லாம் எனக்காக வாயைத் திறந்து ஒரு வார்த்தைக்கூட பேசாத இவர் கூட வாழ மாட்டேன்”
“மிருது என்னை நீ புரிஞ்சிண்டது அவ்வளவு தானா!!! அவாகிட்ட பேசி ஒண்ணும் ஆகப் போறதில்லைன்னு உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும். நாம என்ன நியாயத்தைச் சொன்னாலும் அவா காதுல விழாது. வேணும்னே பிரச்சினையை கிளப்பறான்னு உனக்குப் புரியலையா? இந்த மாதிரி ஆளுகளை நாம கண்டுகாம ஒதுங்கிடணும். இவாள மாதிரி இருக்கறவாகிட்ட பேசியும் பிரயோஜனமில்லை. அவா பேசறது எல்லாம் பொய்யின்னு அவா பேசற விதத்திலிருந்தே தெரியாதா? அது தான் நான் ஒண்ணுமே பேசலை. தப்பு செய்தது அவா ரெண்டு பேரும் ஆனா தண்டனை எனக்கா? இதுல என்ன நியாயமிருக்கு?”
டிரைவர் ராமானுஜத்திடம்
“சார் இப்போ எங்க போகணும்? வீட்டுக்கா ஸ்டேஷனுக்கா?”
என்று கேட்க அதற்கு ராமானுஜம் நவீனையும் மிருதுளாவையும் பார்க்க நவீன்
“நீங்க நேரா ஸ்டேஷனுக்கே வண்டியை விடுங்க அண்ணா. அப்படியே போற வழியில இருக்குற நல்ல வெஜ்டேரியன் ஹோட்டலா பார்த்து நிப்பாட்டுங்க”
“ஏன் மாப்ள நீங்க ரெண்டு பேரும் இன்னும் சாப்பிடலையா?”
“ஆமாம் சாப்பிடலை”
“என்ன சொல்லறேங்கள் மாப்ள!!! பச்ச உடம்புக்காரியை இப்படியா பசியோடு இருக்க வைப்பேங்கள்?”
“ஆமாம் !!! அவா ஆத்துல அப்போ ஒரு மாதிரி இப்போ ஒரு மாதிரி ட்ரீட்மென்டெல்லாம் இல்லை மா எப்போதும் ஒரே மாதிரிதான் அன்னைக்கு வயத்துல புள்ளையோட இருந்தப்போவும் சரி இன்னைக்கு கைக்குழந்தையோடு இருக்கும் போதும் சரி பசியோடு துரத்தி விடறதுதான் அவா குடும்ப வழக்கம்.”
என்று மிருதுளா சொன்னதும் அம்புஜம் நவீனைப் பார்த்தாள். அவன்
“சாரி!!! நான் என்னப் பண்ணுவேன்? அதுதான் ஹோட்டலுக்குப் போயிட்டு ஸ்டேஷன் போவோம்ன்னு சொன்னேன்”
“உங்களை நம்பிதானே எங்க பொண்ணை உங்களுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தோம்…இப்படி எப்ப வந்தாலும் பசியும் பட்னியுமா அனுப்பறதும், அழ வைக்கறதும் நல்லாவா இருக்கு?”
என்று அம்புஜம் கூற. உடனே ராமானுஜம் அம்புஜத்தைப் பார்த்து
“ம்…ம்…சரி சரி அதெல்லாம் ஊருக்குப் போயிட்டு கேட்டுக்கலாமே!!! இப்போ இதோ ஹோட்டல் வந்தாச்சு இறங்குங்கோ.”
என்றதும் அனைவரும் இறங்கி ஹோட்டலுக்குள் சென்று அமர்ந்தனர். சர்வர் வந்து ராமானுஜமும் அம்புஜமும் ஒன்றும் வேண்டாம் என்றதால் நவீன் மிருதுளாவிடம் மட்டும் ஆர்டர் எடுத்துக் கொண்டு சென்றார். இருவரும் சாப்பிட்டதும் அனைவரும் மீண்டும் காரில் ஏறி ஸ்டேஷன் சென்றனர். அங்கே அவர்கள் செல்ல வேண்டிய ரெயில் ஃப்ளாட் பார்த்ததில் நின்றுக்கொண்டிருந்தது. அதில் வேகமாக நவீன், மிருதுளா, அம்புஜம் மூவரும் ஏறி அவர்களின் ரிசர்வ்டு இருக்கையில் அமர்ந்தனர். ராமானுஜம் நாலு தண்ணீர் பாட்டில்களை வாங்கி வந்து அம்புஜத்திடம் கொடுத்து உள்ளே பையில் வைத்துக் கொள்ளச் சொன்னார். அவரிடம் அம்புஜம்
“வேனுவை பத்திரமா பார்த்துக்கோங்கோ. நான் ஒரு ரெண்டு மாசத்துல வந்துடறேன். கொழந்த கழுத்து நின்னுடுத்துன்னா நம்ம மிருதுவே நல்லா பார்த்துப்பா அதுவரை தான் என் உதவி தேவைப்படும்.”
பேசிக்கொண்டிருக்கும் போதே ட்ரெயின் கிளம்புவதற்கான விசில் அடிக்கப்பட்டது. ராமானுஜத்திடம் மூவரும் கையசைத்து பை சொன்னார்கள் அதற்கு அவர்
“சரி சரி நான் பார்த்துக்கறேன். நீங்க பத்திரமா ஊருக்குப் போயிட்டு வாங்கோ. ஊர் போய் சேர்ந்ததும் ஒரு ஃபோன் பண்ணிச் சொல்லுங்கோ மாப்ள”
“நிச்சயமா உங்களுக்கு கால் பண்ணறேன். பை. நீங்கப் பார்த்து ஆத்துக்குப் போங்கோ”
அம்புஜமாவது மிருதுளாவிடம் நடந்ததைப் பற்றி கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம் ஏனெனில் அவள் தன் மகளுடனே பிரயாணம் செய்கிறாள். ஆனால் என்ன நடந்தது என்பதைப் பற்றி ஒன்றுமே தெரியாத புரியாத ராமானுஜம் அவர்கள் ட்ரெயின் அந்த ஸ்டேஷனிலிருந்து மறையும் வரை அங்கேயே நின்றிருந்து விட்டு மனதில் கவலையுடன் வீடு திரும்பினார்.
அம்புஜம் குழந்தை சக்தியை மிருதுளாவிடமிருந்து வாங்கிக் கொண்டு தன் பெர்த்தில் காலை நீட்டிக் கொண்டு அமர்ந்தாள். மிருதுளா கோபத்தில் தன் பெர்த்தில் அமர்ந்துக் கொண்டு ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டே மனதில் அழுதுக் கொண்டிருந்தாள். அப்போது நவீன் அவளருகில் சென்று அமர்ந்து
“எப்படி மிருது என்னை வேண்டாம்ன்னு சொன்ன? உன்னால அப்படி ….எப்படி சொல்ல முடிஞ்சுது? ஐ வாஸ் ஷாக்டு!!! நான் என்ன தப்புப் பண்ணினேன்? கம் ஆன் மிருது பேசு.”
மிருதுளா ஏதும் பதிலளிக்காமல் நவீனை ஒரு பார்வைப் பார்த்து விட்டு மீண்டும் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள். குஜராத் பயணம் முழுவதும் நவீனிடம் பேசாமல் பயணித்தாள்.
குஜராத்தில் புது வீட்டுக்கு முன் சென்று இறங்கினர். அம்புஜம் வீட்டினுள் சென்று ஆரத்தி கரைத்து வந்து அவர்களுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே போகச் சொன்னாள்.
பக்கத்து வீட்டிலிருந்த ஒரு பஞ்சாபி பெண் இவர்களுக்கு டீப் போட்டு, எடுத்து வந்து கொடுத்து விட்டு தன்னை மிருதுளாவிடம் அறிமுகம் செய்துக் கொண்டு சக்தியை கொஞ்சி விட்டுச் சென்றாள். இரண்டு நாட்கள் மிருதுளா நவீனிடம் பேசாமலிருந்தாள். பின் நவீன் அவளிடம்
“இங்கே பாரு மிருது நாம சொன்னா கேட்கறவாகிட்ட நாம ஏதாவது சொல்லலாம் இல்ல திட்டலாம். ஆனா அவா நாம சொல்லறதை கேட்கவும் மாட்டா அதுபடி நடக்கவும் மாட்டாங்கும் போது அங்கே பேசி என்ன ஆக போறது அதுனால தான் நான் பேசாம இருந்துட்டேன்.”
நவீன் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது என்ற எண்ணம்… நிதானமாகியதும் மிருதுளாவுக்கு தோன்ற மூன்றாவது நாள் நவீனுடன் பேச ஆரம்பித்தாள். இரண்டு மாதங்கள் உருண்டோடின அம்புஜமும் ஊருக்குச் சென்றாள்.
நவீன், மிருதுளா, சக்தி பாப்பா மூவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
டிசம்பர் மாதம் நவீனுக்கு திடீரென ஒரு ஃபோன் வந்தது. அதில் பேசிய ப்ரவீன் ஈஸ்வரனுக்கு மிகவும் உடம்பு சரியில்லை என்றும், ஆப்ரேஷன் செய்யப் போவதாகவும், அவர் ஈரோடுக்கு லட்சுமி அத்தையைப் பார்க்கப் போன இடத்தில் அப்படி ஆனது எனவும், அவர்கள் அனைவரும் ஈரோட்டில் இருப்பதாகவும் கூறி ஹாஸ்பிடல் அட்ரெஸைக் கொடுத்து நவீனை உடனே கிளம்பி வரச்சொன்னான்.
நவீனும், மிருதுளாவும் குழந்தையுடன் கிளம்பிச் சென்றனர். இரண்டு நாட்களில் அவர்கள் ஈரோடு சென்றுப் பார்த்தால் ஈஸ்வரனுக்கு ஆப்ரேஷன் முடிந்துவிட்டது என்று கூறினார்கள் லட்சுமியும் அவர் குடும்பமும். ஈஸ்வரனும் நன்றாக தெளிவாக இருந்தார். லட்சுமியும் அவள் குடும்பத்தில் அனைவரும் ஈஸ்வரனின் உடல்நிலையைப் பற்றி ஏதோ கதை சொல்வதைப் போல பெரிய பிரசங்கம் செய்தனர். அதுவுமில்லாமல் லட்சுமியின் மகன்கள் தான் ஈஸ்வரனை பெற்றப் பிள்ளைகளைப் போல பார்த்துக் கொண்டு அவ்வளவு பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்ததாகவும் கூறினர். நவீனுக்குள் ஒரு சந்தேகம் எழுந்தது. அது எப்படி தங்கையைப் பார்க்க வந்த இடத்தில் திடீரென உடம்பு சரியில்லாமல் ஆப்ரேஷன் வரை சென்றது என்றும் அவர்கள் கொடுத்த பிரசங்கமும், அவனை குழப்பத்தில் ஆழ்த்தியது. அவன் அதைப் பற்றி ப்ரவினிடம் கேட்டான் அதற்கு ப்ரவின்
“எனக்கும் ஒண்ணும் புரியலை அண்ணா. அப்பாவும் அம்மாவுமா ஈரோடுக்கு வந்தா அடுத்த நாளே நம்ம ஆத்துக்கு ஃபோன் போட்டு இப்போ உன் கிட்ட என்ன சொன்னேனோ அதையே தான் என்கிட்டேயும் சொன்னா. நானும் ஓடி வந்தேன். இதோ ஆப்ரேஷனும் ஆயாச்சுன்னா இன்னும் நாலு நாள்ல வீட்டுக்குப் போகலாம்ன்னு சொல்லிருக்கா”
நவீனுக்கு அவன் அத்தை குடும்பத்தினரின் பேச்சு நடவடிவடிக்கை எதுவும் பிடிக்கவில்லை. மேலும் அவன் அவசரமாக கிளம்பி வந்ததால் லீவுமில்லை ஆகையால் ஒரு நாள் ஈரோட்டில் இருந்து விட்டு மிருதுளா ஏதோ சின்ன குக்கரை பரண் மேலிருந்து எடுக்க வேண்டுமென்பதால் ஈஸ்வரன் கோட்டைக்கு பஸ்ஸில் திரும்பி வந்தனர்.
வந்ததும் உடைகளை மாற்றிக் கொண்டபின் சற்று நேரம் ப்ரவினுடன் பேசி விட்டு மாடிக்குச் சென்று பரண் மேலிருந்து குக்கரை எடுத்துக் கொடுத்தான். அதைப் பார்த்ததும் மிருதுளா
“அச்சச்சோ இது என்ன நவீ குக்கர் கீழே விழுந்தா மாதிரி நசுங்கி இருக்கு?”
“எங்கே குடு”
என்று பார்த்த நவீன் அதிர்ந்துப் போனான். மிருதுளா சொன்னா மாதிரி குக்கர் நசுங்கியிருந்தது. திருமணமானதும் மிருதுளா கொண்டு வந்த சீர் சாமான்களான பாத்திரங்களில் சிலவற்றை மட்டும் குஜராத்துக்கு எடுத்துச் சென்று மீதியை அட்டைப் பெட்டியில் போட்டு பேக் செய்து பரண் மீது வைத்துவிட்டு தான் இருவரும் குஜராத் சென்றார்கள். குக்கர் நசுங்கியிருப்பதைப் பார்த்த நவீன் மிருதுளாவிடம்
“மிருது நான் எல்லா அட்டைப் பெட்டியையும் கீழே இறக்கறேன். எதுக்கும் எல்லாத்தையும் செக் பண்ணிடுவோமா?”
“ஓகே நவீ”
எல்லா பெட்டிகளையும் கீழே இறக்கி வைத்தான் நவீன். பெட்டிகளை திறந்துப் பார்த்த நவீனும் மிருதுளாவும் அதிர்ந்துப் போனார்கள். ஏனெனில் அனைத்துப் சீர் பாத்திரங்களும் நசுங்கி நெளிந்து போயிருந்தன. வெங்கலம், பித்தளை, எவர்சில்வர் என அனைத்து பாத்திரங்களும் அடிவாங்கியிருந்தது. அதைப் பார்த்ததும் மிருதுளாவுக்கு அழுகையே வந்தது…நவீனிடம்
“என்ன நவீன் இது பரண் மேல டப்பாக்குள்ள இருந்த பாத்திரங்கள் எல்லாம் எப்படி நசுங்கியிருக்கு? இதெல்லாம் எங்க அப்பா அம்மா வாங்க எவ்வளவு செலவழிச்சா தெரியுமா? இதோ இந்த வெங்கலப் பாத்திரம் செட் இருக்கே இது எங்க அம்மாவுக்கு அவா அம்மா சீரா கொடுத்தது…எப்படி… இப்படி எல்லா பாத்திரமும் பாழாகிருக்கு?”
“இரு வர்றேன். டேய் ப்ரவின்..ப்ரவின் மேல வா கொஞ்சம்”
என்று கூப்பிட்டான். ப்ரவின் மாடிக்குச் சென்றான். அவனிடம் நவீன் நசுங்கி நெளிஞ்சு போன பாத்திரங்களைக் காட்டி
“இதெல்லாம் நான் மேலே வைக்கும் போது நல்லா தானே இருந்தது. எப்படி இப்படி ஆச்சு?”
“அது …அது… அது… வந்து அண்ணா”
“இழுக்காம நடந்ததைச் சொல்லு ப்ரவின்”
“அம்மா தான் அவா தலையில பரண் மேலேந்து தவளை விழுந்ததுன்னு சொல்லி பார்த்தாளாம். அப்போ பரண்ல ஒரே தவளைகளா இருந்ததாம். அந்த தவளைகளை துறத்தும் போது இந்த பெட்டிகள் எல்லாம் கீழே விழுந்துடுத்தாம்ன்னு சொல்லி என்னை தான் மேலே தூக்கி வைக்கக் கூப்பிட்டா நானும் மேலே வச்சேன். ஆனா இப்படி பாத்திரமெல்லாம் நசுங்கிருக்குன்னு எனக்குத் தெரியாது”
“என்ன சொல்லற ப்ரவின் அம்மா தள்ளி இந்த பெட்டிகளெல்லாம் கீழே விழுந்ததா!!! நம்பறா மாதிரி இல்லையே!! அதுவுமில்லாம ஏன் இதை என்கிட்ட சொல்லலை?”
“அய்யோ அண்ணா இது தான் நடந்தது. நான் கீழே போறேன். கதவு திறந்து கிடக்கு”
என்று கூறி அங்கிருந்து கீழே சென்றான் ப்ரவின். அப்போது மிருதுளா நவீனிடம்
“எங்கப்பா கஷ்டப்பட்டு இதெல்லாம் எனக்கு வாங்கிக் கொடுத்ததை இப்படிப் போட்டு நாசமாக்கியிருக்காளே இது நியாயமா சொல்லுங்கோ நவீன்”
“இல்லவே இல்லை மிருது. இதெல்லாம் அப்படியே மேல தூக்கி வச்சுடறேன். நாம அடுத்த மாசம் சக்தி பிறந்த நாளுக்கு திருப்பதி போக வருவோம் இல்ல அப்போ அவாகிட்ட கேட்கலாம். அதுவரைக்கும் பேசாம இருப்போம் சரியா”
“ம்…சரி நவீ”
அனைத்தையும் பரண் மீதே வைத்தான் நவீன். அடுத்த நாள் புறப்பட்டு குஜராத்துக்கு சென்றனர். ஈஸ்வரன் ஈரோட்டிலிருந்து தன் கோட்டைக்கே வந்தார். நாட்கள் கடந்தன.
ஒரு நாள் ஈஸ்வரன் நவீனுக்கு ஃபோன் செய்து கவினுக்கு தனது தங்கையின் மகளை கட்டி வைக்க போவதாக சொன்னதை மிருதுளாவிடம் சொன்னான் நவீன். அதைக் கேட்டதும் மிருதுளா
“எந்த அத்தை பொண்ணு நவீன்?”
“எல்லாம் அந்த லட்சுமி அத்தைப் பொண்ணு கஜேஸ்வரி தான்”
“அதுக்கு ஏன் இவ்வளவு அலுத்துக்கறேங்கள்?”
“ஆமாம் எங்க அப்பாக்கு அறிவே இல்லை. அவர் குடிச்சு கும்மாளம் போட்ட போது… இதே …அவர் தங்கை ஆத்துக்கு போனபோது அவரை இனி அங்கே எல்லாம் வராதேன்னும், அவா ஆத்துக்காகாரர் கௌரமானவர்ன்னும், இப்படி குடிச்சிட்டு வந்து அவர் கௌரவத்தைக் கெடுக்காதே போயிடுன்னும் வீட்டுக்கு வெளியே இழுத்துப் போட்டுட்டு கதவை சாத்தினா தெரியுமா!!! அதெல்லாம் மறந்துட்டு இப்போ ஏன் கௌரவமில்லாத எங்க குடும்பத்திலேயே சம்மந்தம் பண்ணணுமாம் அந்த கௌரவகாரிக்கு!!! அதுக்கு எங்க அப்பாவும் எல்லாத்தையும் மறந்துட்டு சம்மதிச்சிருக்கார் பாரேன்.”
“அப்போ அதெல்லாம் நடக்கும் போது உங்க அப்பா குடிபோதையிலிருந்ததால் அவருக்கு எதுமே தெரிய வாய்ப்பில்லையே!!! கூட இருந்த உங்களுக்கு தானே தெரியும். அப்புறம் அவரைத் திட்டி என்ன யூஸ்? நீங்க வேண்டாம்ன்னு சொல்ல வேண்டியது தானே”
“நான் சொல்லாம இருப்பேனா!! சொன்னேன். நான் மட்டுமில்ல ஈவன் ப்ரவின் கூட கவினுக்கு கஜேஸ்வரி வேண்டாம்ன்னு சொன்னானாமே!!”
“ப்ரவின் ஏன் வேண்டாம்ன்னு சொல்லணும்?”
“அவன் கொஞ்ச நாள் லட்சுமி அத்தை ஆத்துல இருந்து படிச்சான் இல்லையா அதுனால அவாளைப் பத்தி தெரிஞ்சிருக்கும் ஸோ சொல்லியிருப்பான்.”
“நீங்க ரெண்டு பேரும் சொல்லியுமா இந்த சம்மந்தத்தை ப்ரொஸீட் பண்ணப்போறா?”
“எஸ். எங்க அப்பாவுக்கு தங்கைப் பாசம் கண்ணை மறைக்கறது அதுவுமில்லாம இப்போ தான் கொஞ்ச நாள் முன்னாடி ஈரோடு போன இடத்துல உடம்பு சரியில்லாம போயி ஆப்ரேஷன் எல்லாம் பண்ணி அத்தைக் குடும்பம் தான் காப்பாத்தினாங்கறா மாதிரி எல்லாம் அரங்கேறியது!!! இப்போ சடன்னா கவினுக்கும் அத்தைப் பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணப் போறதா சொல்லறா!!! ஏதோ இடிக்கறா மாதிரி இல்ல!!!””
“சரி இதுக்கு உங்க அம்மா எப்படி சம்மதிச்சா?”
“தெரியலை அவா எல்லாருமா முடிவு பண்ணிட்டா. என்கிட்ட ஒப்புக்கு சொன்னா. நானும் சரின்னு சொல்லிட்டேன். நாம சக்தி பாப்பாவோட ஃபர்ஸ்ட் பர்த்டேக்கு ஊருக்குப் போறோமே அப்போ என்ன ஏதுன்னு கேட்டுத் தெரிஞ்சுக்குவோம்”
“இதை விசாரிக்க போயி… நம்ம பாத்திரங்கள் நசுங்கியதை கேட்காம விட்டுடாதீங்கோ”
தொடரும்……
அத்தியாயம் 69: போராட்டம் தொடர்ந்தது
மிருதுளா குழந்தை சக்தி ஸ்ரீயுடன் நிம்மதியாக தன் பெற்றோர் வீட்டிலிருந்தாள். நவீன் அவன் வேலையில் மும்முரமானான். வழக்கம் போல் தினமும் ஒரு ஃபோன் கால் டாபா சாப்பாடு என்று நாட்கள் ஓடின. ஒரு நாள் மிருதுளாவுக்கு ஃபோன் பேசும்போது
“ஹாய் மிருது ஒரு குட்நியூஸ்”
“என்னது நவீ?”
“எனக்கு குவார்ட்ஸ் அலாட் ஆயிருக்கு. அடுத்த வாரமே ஷிஃப்ட் பண்ணணும்”
“அச்சசோ உங்களால மட்டும் முடியுமா?”
‘செய்துத்தான் ஆகணும். நீயும் நம்ம சக்தியும் புது வீட்டுக்குத் தான் வருவேங்கள்.”
“சூப்பர். ஆனா பார்த்து பொறுமையா எல்லாத்தையும் பேக் பண்ணுங்கோ. எதையும் விட்டுடாதீங்கோ.”
“சரி சரி அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். சக்திக் குட்டிமா எப்படி இருக்கா?”
“நல்லா இருக்கா அவளுக்கென்ன ஜம் ஜம்முனு இருக்கா”
“சரி எப்போ நீங்க ரெண்டு பேரும் குஜராத் வர்றதா ப்ளான்?”
“மூணு மாசம் ஆகணும்ன்னு சொன்னா”
“அது தான் இரண்டு மாசம் முடியப்போறதே!! அப்போ அடுத்த மாசம் புக் டிரேயின் டிக்கெட் புக் பண்ணட்டுமா?”
“அதெல்லாம் சரி தான் ஆனா நம்ம கூட ஹெல்ப்புக்கு யார் வருவா?”
“யார் வரணும்?”
“உங்க அம்மா வருவாளா நவீ?”
“எனக்குத் தோணலை”
“அப்போ என் அம்மாட்ட கேட்டுப் பார்க்கறேன். ஃபர்ஸ்ட் உங்க அம்மாட்ட கேட்கறேன். என்ன சொல்லாறான்னு பார்த்துட்டு என் அம்மாட்ட கேட்கறேன்”
“ஓகே. பட் ஐ திங்க் யூ ஆர் வேஸ்டிங் டைம் ஆஸ்கிங் யூவர் மதர் இன் லா”
“நாளை பின்னே அவாளைக் கேட்காம என் அம்மாவைக் கூட்டிண்டு போயிட்டேன்னு பேச்சு வரக்கூடாதில்லையா!!! அதுனால ஒரு வார்த்தைக் கேட்டுண்டுடறேனே. “
“தென் யூவர் விஷ். சரி பில்லு மீட்டர் பறக்கறது. நான் வச்சுடட்டுமா”
“ஓகே நவீ பை. குட் நைட்”
“குட் நைட் மிருது”
மிருதுளா தன் குடும்பத்திடம் தங்களுக்கு புது குவார்ட்ஸ் அலாட்டான விஷயத்தைப் பற்றி பகிர்ந்துக் கொண்டாள். தன் அம்மாவிடம் தனக்கு ஹெல்ப்புக்கு வரமுடியுமா என்று கேட்டாள் அதற்கு அம்புஜம் சற்று யோசிக்க உடனே வேனு தன் அம்மாவிடம்
“அம்மா நீ என்னையும் அப்பாவையும் பத்தி யோசிக்காதே நாங்க இருந்துப்போம் நீ மிருதுக்காவுக்கு போய் ஹெல்ப் பண்ணிட்டு வா”
என்றான். அதைக் கேட்டதும் அம்புஜம் சரி என்று கூற அதற்கு மிருதுளா தன் மாமியாரிடம் காலையில் கேட்கப்போவதாக சொன்னதும் வேனு…
“மிருதுக்கா அந்த மாமி வரமாட்டா!!! அப்படியே வந்தாலும் குழந்தையை அவாளை நம்பி விடாதே!! ஹாஸ்பிடலேயே பச்சக் குழந்தைன்னு கூட பார்க்காம காதைப் பிடிச்சு திறுவினவாளாக்கும்!!! ஜாக்கிரதை!!”
“டேய் வேனு அப்படி எல்லாம் சொல்லாதே டா!!! எங்களை மாதிரி அவாளுக்கும் இவள் பேத்தி தானே டா”
“அம்மா அதை நான் இல்லைன்னு சொல்லலை ஆனா அவா செஞ்சது எந்த பாட்டியும் செய்யாத ஒண்ணு!!! அதைப் புரிஞ்சுக்கோ ஃபர்ஸ்ட்”
“ஆமாம் மா நம்ம வேனு சொல்லறதும் வாஸ்தவம் தான். பார்ப்போம் நாளைக்கு கேட்டா தெரிஞ்சுடும். அவா வரேன்னு சொன்னா அப்புறம் இதை எல்லாம் பத்தி யோசிச்சுக்கலாம். நான் சக்தி ஸ்ரீ தூங்கும் போதே தூங்கிக்கறேன். குட் நைட்”
மறுநாள் காலை குளித்து விட்டு, சாமியிடம் வேண்டிக்கொண்டு, டிபன் சாப்பிட்டு விட்டு, பர்வதத்திற்கு ஃபோன் செய்தாள் மிருதுளா. ஃபோனை எடுத்தாள் பர்வதம்
“ஹலோ”
“ஹலோ மா நான் மிருதுளா பேசறேன்”
“ம்…சொல்லு”
“எல்லாரும் எப்படி இருக்கேங்கள்? அப்பா எப்படி இருக்கா? பவின் அன்ட் ப்ரவின் எப்படி இருக்கா? அடுத்த மாசம் ஊருக்கு போகலாம்ன்னு இருக்கேன். அப்போ என் கூட நீங்களும் வர்றேளா?”
“அது இருக்கட்டும் நீயும் உன் குழந்தையுமா எப்போ இங்கே வர்றப் போறேங்கள்?”
“அதைப் பத்தி இன்னும் யோசிக்கலை”
“அதை தானே முதல்ல டிசைட் பண்ணிருக்கணும் அதுக்கப்பறம் தானே குஜராத் போறதைப் பத்தியே யோசிச்சிருக்கணும்?”
“அது சரி தான் மா ஊருக்குப் போறதுக்கு முன்னாடி அங்க வந்து இருந்துட்டுத்தான் கிளம்பணும். அது தான் அப்படி கிளம்பும் போது எங்க கூட நீங்க ஹெல்ப்புக்கு வர முடியுமா?”
“அதெல்லாம் என்னால முடியாது அப்பாவைப் பார்த்துக்க இங்க யாரிருக்கா? என்னால எல்லாம் வரமுடியாது”
“சரி மா அப்போ நான் என் அம்மாவைக் கூட்டிண்டு போறேன்”
“அது எப்படி!!! அப்போ உன் அப்பா தம்பி!!”
“அவா ரெண்டு பேரும் அட்ஜஸ்ட் பண்ணிக்கறோம்ன்னு சொல்லிட்டா”
“ஓ!! அப்போ அது எல்லாம் முடிவு பண்ணிட்டு ஒப்புக்கு என்கிட்ட கேட்கறயோ?”
“அப்படி இல்லமா நீங்க வரேன்னா இவா வரமாட்டா நீங்க முடியாதுன்னுட்டேங்கள்னா அப்போ இவாளாவது வருவாளான்னு நான் கேட்டு வச்சுக்க வேண்டாமா!!! அதுதான் கேட்டுண்டேன்”
“சரி சரி என்னமோ பண்ணு!! நான் ஃபோனை வச்சுடறேன்”
என்று தன் பேத்தியைப் பற்றியோ இல்லை தன் மருமகளைப் பற்றியோ எந்த நலனும் விசாரிக்காமல் ஃபோனை கட் செய்தாள் பர்வதம். அதை எதிர்பார்த்த மிருதுளா தன் மனதுக்குள்
“அப்பாடா வரலைன்னு சொல்லிட்டா. நிம்மதியா இருக்கு. அப்போ நம்ம அம்மாவை அழைச்சுண்டு போக வேண்டியதுதான்”
என நினைத்துக் கொண்டே ஹாலுக்கு சென்று தன் அம்மாவிடம்
“அம்மா நீதான் என் கூட வரணும். நான் எதிர்பார்த்த மாதிரியே அவா வர முடியாதுன்னு சொல்லிட்டா”
“இது என்னடி இப்படி சொல்லறா?”
“அப்பாவையும் பசங்களையும் விட்டுட்டு வரமுடியாதாம். அவாளைப் பார்த்துக்க யாருமில்லையாம்”
“இது நல்லா இருக்கே!! அப்போ உன் அப்பாவையும் தம்பியையும் பார்த்துக்க மட்டும் இங்க என்ன பத்துப் பேரா இருக்கா? நீ மாசமா இருக்கும் போதும் அவா வர முடியாதுன்னுட்டா!! அப்பாவும் வேனுவும் இரண்டு மாசம் அட்ஜஸ்ட் பண்ணிடா இப்பவும் அதே தான். ஆனா நாளைக்கு ஏதோ நான் தான் எப்பப்பாரு உன் கூட இருக்கறதா சொல்லுவா!!”
“அம்மா அவா அப்படித்தான் நான் என்ன செய்வேன் சொல்லு”
“அதுவும் வாஸ்தவம் தான். நீ என்ன பண்ணுவ? சரி சரி நானே வரறேன். என் பொண்ணுக்கும் பேத்திக்கும் நானும் வரமுடியாதுன்னு சொல்ல எனக்கு மனசு கேட்காது”
அன்றிரவு நவீன் ஃபோன் செய்த போது நடந்தவைகளை விவரமாக கூறி இறுதியில் தன் அம்மா தங்களுடன் வருவதாக கூறினாள் அப்போது நவீன்
“நான் தான் முன்னாடியே சொன்னேனில்லையா!!! சரி எந்த டேட்டுக்கு புக் பண்ணறது?”
“நவீ உங்க அம்மா சொல்லறா மாதிரி நானும் சக்தியும் முன்னாடியே எல்லாம் அங்கே நீங்க இல்லாம போய் இருக்க மாட்டோம் அதை இப்பவே க்ளியரா சொல்லிடறேன். ஏன்னா எனக்கு ஏற்பட்ட அனுபவம் அப்படிபட்டது!!! நீங்க அங்கே வர்ற அன்னைக்கு தான் நாங்களும் வருவோம். அதுக்கப்புறம் எவ்வளவு நாள் இருக்கணும்ன்னு நீங்க டிசைட் பண்ணிக்கோங்கோ”
“எஸ் வாட் யூ சே இஸ் கரெக்ட். ஐ அக்செப்ட் இட். எனக்கே அவா மேல நம்பிக்கை இல்லை ஸோ நான் வர்ற அன்னைக்கு ஈவினிங் நீ அங்க வந்தா போதும் அப்புறம் ஒரு மூணு நாள் இருப்போம் அப்புறம் கிளம்பிடுவோம். என்ன சொல்லுற?”
“ஓகே அது படியே புக் பண்ணிடுங்கோ”
“டன்.. ஆனா இதை எல்லாம் நீ என் பேரன்ட்ஸ் கிட்ட சொல்லாதே!!! அவாகிட்ட இப்ப இதெல்லாம் சொன்னா இதை வச்சே ஏதாவது பிரச்சினையை உருவாக்கிடுவா!! அதுனால எப்போ எப்படிச் சொல்லணுமோ அப்போ அப்படிச் சொல்லிக்கறேன் புரியறதா?”
“என்னமோ பண்ணுங்கோ!! எப்படியும் எல்லாத்துக்கும் என்னைத்தான் குற்றம் சொல்லப்போறா!!! தெரிஞ்சது தானே”
என்று பேசி முடித்து ஃபோனைக் கட் பண்ணியதும் நவீன் சொன்னது சற்று நெருடலாக இருக்க அன்றிரவு முழுவதும் உறக்கமின்றி தவித்தாள் மிருதுளா.
நவீன் மிருதுளாவிடம் அவன் வரும் அன்றைய தினம் மாலை அவன் வீட்டுக்குச் செல்லும் படி கூறியதை பர்வதத்திடம் தெரிவித்தாள் மிருதுளா. அதற்கு பர்வதத்திடமிருந்து எந்த வித ரியாக்ஷனும் வரவில்லை. வெரும் “ம்…ம்” மட்டும் பதிலாக வந்ததும் நவீன் ஏதாவது சொல்லியிருப்பார் என்று நினைத்துக் கொண்டாள் மிருதுளா. நாட்கள் ஓடின. நவீன் வரும் நாள் வந்தது.
மிருதுளாவையும் சக்தியையும் பர்வதம் ஈஸ்வரன் வீட்டுக்கு அனுப்பும் முன் குழந்தைக்காக வாங்கிய செயின், மோதிரம், கொலுசு, அரைஞாண் என்று அனைத்தையும் போட்டு அழகுப்பார்த்தார்கள் அம்புஜமும், ராமானுஜமும், வேனுவும். பின் அவர்கள் வீட்டுக்குச் செல்ல வாடகைக் காரை வரவழைத்து அதில் அனைவரும் ஏறிச் சென்றனர். மாலை ஆறரை மணிக்கு பர்வதம் வீட்டுக்குச் சென்றனர். காரில் சென்றுக் கொண்டிருக்கும் போது அம்புஜம் மிருதுளாவிடம்
“மிருது வண்டிலேந்து இறங்கினதும் வாசலில் நில்லு உங்க மாமியார் உனக்கும் குழந்தைக்கும் ஆரத்தி எடுத்ததுக்கப்புறம் தான் நீ ஆத்துக்குள்ளேயே போகணும் சரியா”
“யாரு என் மாமியார் எடுப்பாளா? அட போமா…சரி சரி நான் வெயிட் பண்ணறேன் ஆனா நீ அவாகிட்டேருந்து ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணற …ஏமாந்து தான் போகப்போற!!”
கார் பர்வதம் ஈஸ்வரன் கோட்டைமுன்(ஈஸ்வரன் அப்படிச் சொல்லித் தானே மிருதுளாவை திட்டித் துரத்தி விட்டனர்) நின்றது. அங்கே பர்வதம் அக்காள் ரமணியும் இருந்தார். உள்ளேருந்து எட்டிப் பார்த்தப் பர்வதம் மீண்டும் உள்ளே சென்றாள். அதைப் பார்த்த மிருதுளா தன் மாமியார் தனக்கில்லாவிட்டாலும் தன் பேத்திக்காக ஆரத்தி கரைக்கச் சென்றுள்ளார் என்று எண்ணி வாசலில் காத்திருந்தாள். எவருமே வரவில்லை. ரமணி உள்ளேருந்து வந்து வந்தவர்களை
“வாங்கோ வாங்கோ உள்ளே வாங்கோ”
என்றழைத்தார். அப்போது அவரிடம் அம்புஜம்
“என்ன ரமணி மாமி மொதோ மொதோ அவா குடும்ப வாரிசைத் தூக்கிண்டு ஆத்துக்கு வந்திருக்கா ஒரு ஆரத்திக் கூட எடுக்காம இப்படி கூப்பிடறேளே!!”
“என்னதுக்கு மாமி இப்போ வீண் பிரச்சினை. நான் பர்வதத்திடம் ஆரத்தி ரெடி பண்ணச் சொன்னேன்…அவ மறந்துட்டாளாம். பேசாம அப்படியே விடறதுதான் இப்போதைக்கு நல்லது மாமி. மிருதுளா நீ பகவானை நன்னா மனசுல வேண்டிண்டு குழந்தையோட உள்ளே வாமா”
என்று கூறியதும் மிருதுளா தன் அம்மாவைப் பார்த்து
“நான் தான் சொன்னேன்னே நீ ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணறேன்னு…அப்போ முறைச்சையே இப்போ என்ன சொல்லற?”
“இப்படியும் மனுஷா இருப்பானு இப்பத் தான் மா நானே தெரிஞ்சுக்கறேன். சரி சரி வா என்ன செய்ய”
என அனைவரும் உள்ளேச் சென்றதும் ஈஸ்வரன் அவர்களை “வாங்கோ வாங்கோ” என்று சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கு ரூமுக்குள் சென்று விட்டார். பர்வதம் வந்தவர்களிடம்
“காபி போடட்டுமா?”
“இல்லை மாமி காபி டிபன் எல்லாம் சாப்டுட்டு தான் ஆத்தேந்தே கிளம்பினோம். பரவாயில்லை”
குழந்தையை ரமணி சற்று நேரம் கொஞ்சினாள். பிறகு ஈஸ்வரன் சற்று நேரம் தரையில் படுக்க வைத்திருந்த சக்தியை கொஞ்சினார். வேறு எவரும் அந்த பச்சக் குழந்தையை தூக்கவோ கொஞ்சவோ செய்யவில்லை. மணி ஒரு ஏழரை ஆனதும் ராமானுஜம் அம்புஜத்திடம் கிளம்பலாமா என்று கேட்டார். அதைக் கேட்டதும் மிருதுளாவுக்கு ஏதோ ஒரு வகையான பதற்றம் தொற்றிக் கொண்டது உடனே அவள் அம்புஜத்திடம்
“அம்மா இன்னும் ஒரு மணி நேரத்துல நவீ வந்திடுவார் அதுவரைக்கும் இருந்துட்டுப் போங்கோளேன்”
“இல்ல மிருது அப்பா சொல்லறா மாதிரி நாங்க கிளம்பறோம். பர்வதம் மாமி, ரமணி மாமி நாங்க போயிட்டு வரோம். ஈஸ்வரன் மாமாட்டையும் சொல்லிடுங்கோ. மாமா ஏதோ வேலையா இருக்கார் போல”
“ம்..ம்..சரி”
என்ற பதிலுடன் வெளியே சென்றனர் மிருதுளாவின் குடும்பத்தினர். வாசல் வரைச் சென்ற மிருதுளா தன் அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு
“அம்மா நவீ வரும்வரை இருந்துட்டுப் போகலாம் இல்லையா. அவர் வரத்துக்கு இன்னும் ஒன் அவர் ஆகும் அதுவரைக்கும் நானும் என் பொண்ணும் அம்போன்னு உட்கார்ந்திருக்கணும். நீ பார்த்தே இல்ல. ப்ளீஸ் மா”
“இதோ பாரு மிருது இது உன் வீடு நீ ஜம்முனு இங்க இரு. யாருக்கும் பயப்படாதே. நீ தப்பு பண்ணாத வரை எவருக்கும் நீ பயப்படாம பேசு. நீயே பார்த்த தானே!!!ஏதோ வரக்கூடாதவா வந்திருக்கறா மாதிரியே எங்களை டிரீட் பண்ணறதை. இதுக்கப்புறமும் நாங்க ஏன் உட்காரணும் சொல்லு. அதுதான் நான் இன்னும் மூணு நாள்ல உன் கூட வரப்போறேனே பின்ன என்ன. எதற்கும் கவலைப் படாதே சரியா. உன்னையும் உன் குழந்தையையும் பத்திரமா பார்த்துக்கோ. பை மா மிருது”
என்று மதியாதவர் வீட்டில் தன் பெண்ணுக்காக சற்று நேரமிருந்துவிட்டு பேத்தியைப் பிரிய மனமில்லாமல் காரில் ஏறிச் சென்றனர் ராமானுஜமும், அம்புஜமும், வேனுவும். மிருதுளா அவர்களுக்கு பை சொல்லிவிட்டு வாசலிலேயே நின்றிருந்தாள். அவளைக் கண்ட பக்கத்து வீட்டுப் பெண்.
“ஹேய் மிருதுளா எப்போ வந்தே? பாப்பா எப்படி இருக்கு?”
“ஆங் இப்போ கொஞ்சம் முன்னாடி தான் வந்தேன். ம்…பாப்பா நல்லா இருக்கா”
“பாப்பாவைப் பார்க்க இதோ வரேன்”
என கூறி அக்கம் பக்கத்தினர் ஒரு நாலைந்து பெண்கள் வந்து குழந்தையைப் பார்த்து, சற்று நேரம் கொஞ்சினர். அதில் ஒருத்தி மிருதுளாவிடம்
“ஏன் மிருதுளா உன் பாப்பாவுக்கு ஆம்பள பேரு வச்சிருக்கையாமே!!”
“யாராவது பொண்ணுக்கு பையன் பேரு வைப்பாங்களாங்க?”
“அதுனால தான் நானும் கேட்கறேன்”
“ஏங்க சக்தி ஸ்ரீ பெயர் ஆண் குழந்தைப் பெயரா நீங்களே சொல்லுங்க”
“இல்லையே சக்தி அம்மனோட பெயராச்சே!!! ஏன் பர்வதம் மாமி நீ ஏன் பின்ன அப்படி சொன்னீங்க. உங்க மருமக அம்மன் பெயரை தானே வச்சிருக்கு.”
என்றதும் பர்வதம் முனுமுனுத்துக் கொண்டே உள்ளேச் சென்றாள். வந்தவர்கள் குழந்தையைக் கொஞ்சி விட்டுச்சென்றனர். அதில் சற்று நேரத்தைக் கழித்தாள் மிருதுளா.
அவர்கள் சென்றதும் பர்வதம் அனைவரையும் சாப்பிடக் கூப்பிட்டாள். அதே கூட்டு, ரசம் பொறியல் மதியம் செய்ததை சூடு செய்து சாதம் மட்டும் செய்திருந்தாள். ஈஸ்வரன், பவின், ப்ரவின் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்ததும் மிருதுளா குழந்தையைத் தூக்கிக் கொண்டு உள்ரூமில் ரமணி பெரியம்மாவுடன் அமர்ந்துப் பேசிக் கொண்டிருந்தாள் அப்போது ரமணியிடம்
“பெரியம்மா நீங்க சொல்லுங்கோ சக்தி ஸ்ரீ ங்கற பெயர் ஆண் குழந்தைப் பெயரா? ஏன் இப்படி என் குழந்தையையும் படுத்த ஆரம்பிக்கறான்னே தெரியலை!!”
“சரி சரி விடு மா மிருது. அவ அப்படி தான். என்ன செய்ய? தன்னாலும் தெரியாது!! சொன்னாலும் கேட்கமாட்டா? நவீன் வர்றதுக்கு நேரமாச்சு கண்ணைத் தொடச்சுக்கோ. அவன் வர்ற நேரத்துல என்னதுக்கு அழுதுண்டிருக்க?”
“மனசு வலிக்கறது பெரியம்மா. இவ்வளவு நாள் என்னை வாயில் போட்டு வறுத்தெடுத்தா. இப்போ இந்த பிஞ்சுக் குழந்தையை வறுக்க ஆரம்பிச்சிருக்கா. இரண்டே நாள் தானே ஓடிப் போயிடணும்”
“ம்…சரி சரி இதுனாலப் பிரச்சினை வேண்டாமே மிருது”
“அப்படி நினைச்சு ஒதுங்க ஒதுங்க அவா ரொம்ப பண்ணறா பெரியம்மா!! சரி சாரி உங்ககிட்ட சொல்லி புலம்பி உங்களையும் ஏன் கஷ்டப் படுத்தறேனோ தெரியலை. ஆட்டோ சத்தம் கேட்கறதே. நவீனா!!! சக்திக் குட்டி அப்பா வந்தாச்சுப் போலத் தெரியறது வா போய்ப் பார்ப்போம்”
என்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஹாலுக்குச் சென்றாள் மிருதுளா. ஆனால் நவீன் வரவில்லை. அது பக்கத்து வீட்டுக்கு வந்திருந்த ஆட்டோ. ஏமாந்துப் போன மிருதுளா குழந்தையை தரையில் ஒரு பெட்ஷீட் விரித்துப் படுக்க வைத்தாள். அப்போது ஈஸ்வரன், பவின், ப்ரவின் சாப்பிட்டு எழுந்ததும் பர்வதம் தன் அக்காள் ரமணியை சாப்பிட அழைத்தாள். ரமணி ஹாலுக்கு வந்து மிருதுளாவையும் அவர்களுடன் சாப்பிட அழைத்தாள். அதற்கு மிருதுளா தான் நவீனுடன் சாப்பிடுவதாக கூறினாள். பின் அக்காவும் தங்கையுமாக சாப்பிட்டு எழுந்தனர்.
அவர்கள் சாப்பிட்டு எழுந்ததும் நவீன் வந்தான். ஹாலில் படுத்திருந்த தன் குழந்தையை மூன்று மாதங்களுக்குப் பிறகு பார்த்ததும் சந்தோஷத்தில்
“ஹேய் சக்திக் குட்டி. ஏய் என்ன இது மிருது? நான் பார்த்துட்டுப் போகும் போது குட்டியா இத்தணுண்டு இருந்தது இப்போ என்ன இப்படி இருக்கா. “
“டேய் நவீ நீ பார்த்துட்டு போனது மூணு மாசம் முன்னாடி. குழந்தை வளராதாடா?”
“ஹாய் பெரியம்மா சாரி நான் உங்களை கவனிக்கலை. எப்படி இருக்கேங்கள்?”
“நான் நல்லா இருக்கேன் பா. சரி நீ போய் குளிச்சிட்டு வா. மிருது உன் கூட சாப்பிடுவதற்காகக் காத்துண்டிருக்கா.”
“நீங்க எல்லாரும் சாப்பிட்டாச்சா?”
“இப்பத்தான் நாங்க எல்லாரும் சாப்பிட்டு எழுந்தோம் நீ வந்த”
“என்னடா நவீன் எப்படி இருக்க?”
என்று உள்ரூமிலிருந்து வந்து ஈஸ்வரன் கேட்டார் அதற்கு நவீன்
“ஆங் நல்லா இருக்கேன். இதோ குளிச்சிட்டு வந்துடறேன்”
என வேகமாக குளித்துவிட்டு வந்ததும் தங்கள் பக்கத்திலேயே சக்தியைப் படுக்கப் போட்டுக் கொண்டு சாப்பிட அமர்ந்தனர். வழக்கம் போல பர்வதம் போதிய அளவு செய்யவில்லை என்பதை அறிந்த மிருதுளா நவீனுக்கு முதலிலேயே நிறையப் பரிமாறினாள். பின் இருந்ததைச் சாப்பிட்டு எழுந்தாள். குழந்தையைக் கண்ட சந்தோஷத்தில் நவீன் அதை எல்லாம் கவனிக்கவில்லை. மிருதுளாவும் அது தான் தன் மாமியாரின் குணமென்றுணர்ந்ததால் அதைப் பெரிதாக்கவும் இல்லை.
மறுநாள் காலை பெரியம்மாவை வீட்டில் கொண்டு போய் விட்டு வருவதற்கு நவீன் சென்றான். பவின், ப்ரவின் காலேஜ் சென்றனர். ஈஸ்வரன் டிபன் அருந்தியதும் உள்ரூமிற்குள் சென்று படுத்துக் கொண்டு புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். மிருதுளா குளிக்கச் செல்ல வேண்டும் என்பதால் குழந்தையை ஹாலில் படுக்க வைத்துவிட்டு கிட்சனிலிருந்த பர்வதத்திடம்
“அம்மா சக்தியைப் பார்த்துக் கோங்கோ. ஒரு நிமிஷத்துல குளிச்சிட்டு வந்துடறேன்”
என்று கூறி பாத்ரூமிற்குள் சென்று தன் துணிகளை அவிழ்த்து கதவின் மேல் போட்டள். அதை அடுப்படி ஜன்னலில் இருந்து பார்த்த பர்வதம் சத்தமாக
“ஏய் உன் குழந்தை அழறது வந்து என்னன்னு பாரு”
என்றாள். உடனே மிருதுளா கழற்றிய ஆடையை மீண்டும் போட்டுக் கொண்டு ஓடி வந்துப் பார்த்தாள்.. குழந்தை சமத்தாக படுத்துக் கொண்டு கால் கையை ஆட்டிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் மிருதுளா பர்வதத்திடம்
“எங்கமா அழறா? ப்ளீஸ் ஒரு நிமிஷம் இதோ வந்துடறேன்”
என்று கூறி மீண்டும் பாத்ரூம் சென்று வேக வேகமாக குளித்துக் கொண்டிருக்கும் போதே சக்தியின் அழுகுரல் கேட்டது. பாத்ரூமில் அவள் கழற்றிய துணிமணிகளை அப்படியே அங்கேயே போட்டுவிட்டு வேறு உடைகளை மாற்றிக் கொண்டு வெளியே ஓடி வந்தாள் மிருதுளா. ஹாலுக்குல் சென்றுப் பார்த்தாள் குழந்தை மலம் கழித்து அதிலேயே கை காலை அசைத்து உதவிக்காக அழுதுக் கொண்டிருந்தது. பர்வதம் அந்த குழந்தையின் அழுகுரல் கேட்காததைப் போலவே மரம் போல் அடுப்படி வாசலில் நின்றிருந்தாள். அதைப் பார்த்த மிருதுளாவுக்கு கோபம் வந்தது …குழந்தையை தூக்கி அலம்பி துடைத்து சுத்தம் செய்துக் கொண்டே பர்வதத்திடம் கோபமாக
“குழந்தை மலம் போயிட்டு அதுலேயே படுத்திண்டிருக்கு கொஞ்சம் நீங்க தூக்கி அலம்பி விட்டிருக்கலாம் இல்லையா மா!! நான் உங்ககிட்ட சொல்லிட்டுத்தானே குளிக்கப் போனேன்!! இப்படி அழறக் குழந்தையை மரம் மாதிரி நின்னுண்டு பார்த்துண்டு இருக்கேங்களே!!!”
கேட்டாள். அதற்கு பர்வதம்
“உன் குழந்தை நீ தான் பார்த்துக்கணும். எனக்கு அடுப்படில வேலையிருக்கு. நான் இந்த வேலை எல்லாம் பார்த்தா அப்புறம் யாரு சமைக்கறதாம்?”
“இதுக்கு என்ன ஒரு பத்து நிமிஷமாச்சா அந்த பத்து நிமிஷத்துல என்னத்த அப்படி சமையல் செய்துடப் போறேங்களாம்?…விடுங்கோ என் தப்பு தான். நவீன் வந்துட்டு நான் குளிக்கப் போயிருந்தா என் குழந்தை இப்படி கஷ்டப்பட்டிருக்க மாட்டா”
“உம் …ஹூம்…”
என்று கழுத்தை வெட்டிக் கொண்டுச் சென்றாள் பர்வதம். அவர்களின் அந்த ஒட்டுதல் இல்லாத பழக்கம் மிருதுளாவின் மனதில் சந்தேகத்தைக் கிளப்பியது.
“என்னத் தான் மருமகள் மேலே அல்லது மகன் மேலே கோபம் இருந்தாலும் அதெல்லாம் பேரக்குழந்தையைக் கண்டா மாயமா மறைந்திடும்ன்னு படிச்சிருக்கேன் சினிமாவுல பார்த்திருக்கேன் ஆனா இங்கே என்னடான்னா இப்பத் தான் இன்னும் உக்கிரமாகியிருக்கு”
என தனக்குத் தானே பேசிக் கொண்டே அந்த இடத்தைச் சுத்தம் செய்துவிட்டு தன் குழந்தையுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்ததில் பாத்ரூமில் கழற்றிப் போட்ட துணிமணியை மறந்துப் போனாள் மிருதுளா. அதை பார்த்த பர்வதம் ஹாலுக்கு வந்து மிருதுளாவிடம்…
“துணியை எல்லாம் பாத்ரூம்ல அப்படி அப்படியே கழட்டிப் போட்டா யாரு அதை எல்லாம் எடுத்து தோய்ப்பாளாம்? பாத்ரூமே அலங்கோலமா கிடக்கு”
அலுத்துக் கொண்டே சொல்ல அதற்கு மிருதுளா
“இந்த வேலையில அதை நான் மறந்தேப் போயிட்டேன் மா சாரி. இதோ போய் எடுத்துடறேன்”
என்று குழந்தையைப் படுக்க வைத்துவிட்டு பாத்ரூமுக்குச் சென்று நவீன் மற்றும் அவளின் துணிகளை ஊற வைத்து விட்டு வந்து மீண்டும் குழந்தையுடன் கொஞ்சிக் கொண்டிருக்கும் போது நவீன் வந்தான். அவனிடம் குழந்தையைப் பார்த்துக்கச் சொல்லிவிட்டு துணிகளை எல்லாம் தோய்த்து மாடிக்குச் சென்று காய வைத்துவிட்டு வந்தாள் மிருதுளா. இப்படியே மூன்று நாட்கள் ஓடியது. நான்காவது நாள் குஜராத்துக்கு கிளம்பும் நாள் அன்று காலை மும்முரமாக கிளம்பினர் நவீனும் மிருதுளாவும். குழந்தைக்கு வேண்டியதை எல்லாம் பார்த்துப் பார்த்து எடுத்து வைத்துக் கொண்டாள் மிருதுளா. பின் அவளும் கிளம்பி கீழே வந்தாள். நவீன் பெட்டிகளை எடுத்து வந்தான். இருவரும் டிபன் அருந்தியிருக்கவில்லை. அவர்கள் கிளம்ப ஒரு மணிநேரம் இருந்தது. ராமானுஜமும் அம்புஜமும் காரில் வருவதாகவும் அதே காரில் நவீனையும் மிருதுளாவையும் குழந்தையுடன் ரெயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்வதாகவும் ஃபோனில் முன்தினம் மாலை கூறியிருந்ததால் நவீனும் மிருதுளாவும் ரெடியாகிக் காத்திருந்தனர்.
அப்போது ஈஸ்வரன் நவீனிடம்
“நீ எங்க கிட்ட என்ன சொன்ன?”
“என்ன சொன்னேன்?”
“உனக்கு லீவு கிடைக்கலை…இப்போ விட்டா அப்புறம் உன்னால வந்து உன் பொண்டாட்டியையும் புள்ளையையும் கூட்டிண்டு போக முடியாதுன்னு தெரிஞ்சதும் திடுதிப்புன்னு டிக்கெட் புக் பண்ணினேன் அதுனால் நாளன்னைக்கு வருவேன்னு தானே ஃபோன்ல சொன்ன?”
“ஆமாம் அதுக்கென்ன இப்போ?”
“அப்புறம் எப்படி நீ திடுதிப்புன்னு வர்றது உன் பொண்டாட்டி ஆத்துல எலலாருக்கும் தெரிஞ்சிருக்கு அவாளும் கரெக்ட்டா வந்தாளாம்?”
மிருதுளா ஏற்கனவே சொன்னது நவீனுக்கு தெரியாததால் முழித்தான். அப்போது மிருதுளா தன் மாமனாரிடம்
“அவர் சொல்லாட்டா என்ன பா நான் தான் உங்ககிட்ட ஃபோன்ல சொன்னேனே”
“எப்போ சொன்ன நீ இங்க வர்றதுக்கு இரண்டு நாள் முன்னாடி தானே சொன்ன!!! ஆனா நீங்க ரெண்டு பேருமா சேர்ந்து நல்லா பொய் சொல்லிருக்கேங்கள்ன்னு நவீனோட பர்ஸுல இருந்த இந்த டிக்கெட் காட்டிக் கொடுத்துடுத்தே!!! இவன் போன மாசமே டிக்கெட் புக் பண்ணிருக்கான் அது உனக்கும் தெரிஞ்சிருக்கு ஆனா ரெண்டு பேரும் போன வாரம் தான் எங்க கிட்ட சொல்லிருக்கேங்கள்!!! இது என்ன பித்தலாட்டம்?”
“என் பர்ஸுலேந்து எல்லாத்தையும் திறந்து பார்த்தேயே அப்பவே கேட்கறதுக்கு என்னவாம் ஏன் கிளம்பும் போது கேட்கற?”
“ஆமாம் வந்துட்டான் சத்தியவான் கேள்விக் கேட்டுண்டு…போடா போடா!!! உன் பொண்டாட்டி உன்னை மதிக்கவேயில்லை அது தெரியுமா உனக்கு…அது தெரியாம வந்துட்டான் என்னைக் கேள்விக் கேட்க!!”
என்று கூறியதும் மிருதுளாவுக்கு கோபம் வந்தது உடனே அவள் தன் மாமனாரிடம்
“நான் என்ன உங்க புள்ளையை சாரி என் புருஷனை மதிக்காம நடந்துண்டேன். இது என்ன புது கதையா இருக்கு?”
“மிருது நீ சும்மா இரு. நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லு அப்புறம் இந்த விஷயத்தைப் பத்தி பேசலாம். நீ என் பர்ஸை எடுத்துப் பார்த்திருக்க ஏன் நீ அப்பவே கேட்கலை?”
ஆனால் நவீன் சொன்னதை காதில் வாங்காத மாதிரியே மிருதுளாவிடம் எகிறிக்கொண்டுப் போனார் ஈஸ்வரன்
“புது கதை இல்லமா…இது பல மாசத்தோட பழைய கதை. பர்வதம் பக்கத்து வீட்டுப் பாட்டியோட உன்னைப் பார்க்க வந்தப்போ நீ சொன்ன கதை”
“நான் என்ன அப்படி கதை சொன்னேன்?”
“ம்….நீ தான் சொன்னயேடி…..உன் புருஷனுக்கு சம்பாதிக்க வக்கில்லை அதுனால நீயும் வேலைக்கு போக தான் வேணும்ன்னு!!! பெரிசா அம்மையும் பொண்ணுமா அந்த பாட்டிக்கிட்ட அலுத்துக்கிண்டேங்களே டீ”
என்று பரவதம் நடக்காததை நடந்ததாக சொன்னதும் மிருதுளாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவள் அப்படியே அதிர்ச்சியில் உறைந்துப் போனாள். அவள் மீண்டும் சுயநினைவுக்கு வருவதற்குள் பர்வதம் இல்லாததையும் பொல்லாததையும் மிருதுளாவும் அவள் அம்மாவும் சொன்னதாக அடுக்கிக் கொண்டே செல்ல சட்டென சுயநினைவுக்கு வந்த மிருதுளா நவீனிடம்….
“நம்ம குழந்தை மேல சத்தியமா நானோ என் அம்மாவோ இவா ரெண்டு பேரும் சொல்லறது போல ஒரு வார்த்தைக்கூடச் சொல்லலை. என் புருஷனை நானே மூணாம் மனுஷாள்ட்ட விட்டுக் கொடுப்பேனா!!! இதை என்னால் நிரூபிக்க முடியும். இப்பவே நான் பக்கத்தாத்துப் பாட்டியை இங்கே கூட்டிண்டு வரேன் அவாகிட்ட நான் என்ன பேசினேன்…என் அம்மா என்ன பேசினா. அன்னைக்கு நாங்க மூணு பேருமா என்ன பேசினோம்ன்னு அவாகிட்டயே கேட்டுத் தெரிஞ்சுக்கோங்கோ!!!”
“இதோ பாரு டீ ரொம்ப நடிக்காத!!! இப்போ போய் அவாகிட்ட இங்க நடந்ததை எல்லாம் சொல்லி எங்களை கேவலப்பட வைக்கத் தானே இதை செய்ய துடிக்கற?”
என்று பர்வதம் சொன்னதும் மிருதுளா கண்களிலிருந்து கடகடவென கண்ணீர் உருண்டோடியது. பாட்டியுடன் பர்வதம் தன் வீட்டுக்கு வந்த வருகையின் காரணம் இப்போது தெளிவாக புரிந்தது. உடனே அவள்
“அம்மா நீங்க எங்க மேல போடறது அபாண்டமான பழி. அதை நானோ இல்லை என் அம்மாவோ ஏத்துக்கணம்ன்னு இல்லை அதுனால ப்ரூவ் பண்ணிட்டா எல்லாருக்கும் நல்லதில்லையா?”
“இதோ ஆரம்பிச்சுட்டா கண்ணீர் நாடகத்தை!!! ஆமாம் அம்மாவும் பொண்ணும் அன்னைக்கு பேசி எங்க மானத்தை வாங்கினது பத்தாதுன்னு இன்னைக்கும் கிளம்பிட்டயா?”
“அப்பா ப்ளீஸ் அன்னைக்கு நீங்க அங்க இருக்கலை அதுனால ரெண்டு பக்கமும் விசாரிச்சு யாரு பக்கம் தப்பிருக்குன்னு தெரிஞ்சிண்டுட்டு பேசுங்கோ அது தான் பெரியவாளுக்கு அழகு…இருங்கோ நான் போய் பாட்டியை அழைச்சுண்டு வரேன்”
“நீ ஒண்ணும் யாரையும் இங்கே கூட்டிண்டு வரண்டாம். டேய் இப்போ புரிஞ்சுதாடா உன் பொண்டாட்டி லட்சணம்”
குழந்தையுடன் ஊருக்கு சந்தோஷமாக சென்றுவாருங்கள் என்று ஆசிர்வதித்து அனுப்பவேண்டிய பெற்றவர்கள் இருவருக்குள்ளும் பிரச்சினையை வரவழைத்து நிம்மியின்றி குழப்பியனுப்ப திட்டம் தீட்டி அதை செயல்படுத்தவும் செய்துள்ளனர். புலி பதுங்குவது பாய்வதற்கு தான் என்பார் அதுபோல மூன்று நாட்கள் உருமிக்கொண்டே இருந்த பர்வதமும் ஈஸ்வரனும் ஊருக்குக் கிளம்பியிருக்கும் மகனிடமும் மருமகளிடமும் மல்லுக்கு நின்று பொய்களை மூட்டையிலிருந்து அவிழ்த்து விட்டனர். இந்த பொய்களை நம்புவானா நவீன்? பாட்டியை அழைத்து வர மிருதுளாவை விட்டார்களா பர்வதீஸ்வரன்? மூத்த தம்பதியர் நினைத்தது பலிக்குமா?
தொடரும்…..
அத்தியாயம் 68: புண்ணியாஜனம், நாமகரணம்
மூன்று நாட்கள் கடந்தது. அன்று மாலை ஐந்து மணிக்கு மிருதுளாவையும் குழந்தையையும் நார்மல் வார்டுக்கு மாற்றப் போவதாக டாக்டர் காலையிலேயே சொல்லியிருந்தார். நவீன், அம்புஜம், ராமானுஜம் மூவரும் நான்கு மணிக்கெல்லாம் ஹாஸ்பிடல் சென்று காத்திருந்தனர். ஏனெனில் விஸிடிங் அவர்ஸ் ஐந்து மணிக்கு தான் ஆரம்பமாகும். மணி ஐந்தடித்ததும் மூவரும் வேகமாக மிருதுளாவைக் காணச் சென்றனர். அவர்கள் அங்கே மிருதுளா குழந்தையுடன் படுத்திருந்ததைப் பார்த்து அவளருகில் சென்றனர். மிருதுளாவும் அவர்களைப் பார்த்த மகிழ்ச்சியில் வாங்கோ வாங்கோ என்றழைத்தாள். அம்புஜம் மிருதுளாவிடம் நலன் விசாரித்து விட்டு குழந்தையைத் தூக்கிக் கொஞ்ச ஆரம்பித்தாள். நவீன் மிருதுளா அருகில் சென்று அவளின் வலது கையைப் பிடித்துக் கொண்டு தடவிக் கொடுத்து
“ரொம்ப பேயின் இருக்கா மிருது”
“பின்ன வலி இல்லாம குழந்தைப் பெத்துக்க முடியுமா நவீ. இட்ஸ் ஓகே கொஞ்ச நாள்ல இந்த வலி எல்லாம் காணாம போயிடும். நீங்க எப்படி இருக்கேங்கள்? மொதோ நாள் ஏன் என்னை விட்டுட்டுப் போனேங்கள்? நான் உங்களைப் பார்க்காம எவ்வளவு தவிச்சேன் தெரியுமா!!! அப்படி என்ன என் டெலிவரியை விட முக்கியமான வேலையாம்?”
“ஹேய் சாரி மிருது. ஏதோ புத்திக் கெட்டுப் போய் அப்படி நடந்துண்டுட்டேன். ஆனா நைட் பத்து மணிக்கெல்லாம் இங்கேயே வந்துட்டேன் தெரியுமா!!! நானும் உன்னை பார்க்க வெளியே தவிச்சுண்டு இருந்தேன். டாக்டர் கிட்ட உன்னைப் பார்க்கலாமான்னு கேட்டேன் அவங்க உன்னை ஆப்ரேஷன் தியேட்டருக்கு கூட்டிட்டுப் போகும்போது பார்த்துக்க சொல்லிட்டாங்க. ஆப்ரேஷன் முடிஞ்சு நம்ம குழந்தைய காட்டியதும் மனசுக்கு சந்தோஷமாச்சு ஆனா அதுக்கப்புறம் ஆடாம அசையாம கிடந்த உன்னைப் பார்த்ததும் நான் பயந்துட்டேன். இப்போ தான் என் உயிர் வந்தா மாதிரி இருக்கு தெரியுமா!!!!”
“ஆமாம் அப்போ போயிட்டு!!! இப்போ வந்து சூப்பரா கதைச் சொல்லறேங்களே”
“ஏய் உண்மைப் பா”
“சும்மா விளையாண்டேன் நவீ. ஏய் வேனு வா வா வா”
“ஹாய் மிருதுக்கா!! ஹாய் அத்திம்ஸ்!!! அம்மா குழந்தையை என் கிட்ட தாமா”
“முதல்ல இங்க உட்காரு. இந்தா குழந்தை. பத்திரம் வேனு. கழுத்துக்கு அடியில் ஒரு கையை வச்சுக்கோ”
“ஓகே மா!!!”
“டேய் வேனு நானே என் குழந்தையை தூக்க பயந்துண்டு சும்மா பார்த்துண்டு இருக்கேன்!!! நீ வந்ததும் ஏதோ பத்து குழந்தைகளைத் தூக்கிய அனுபவசாலி போல டபக்ன்னு தூக்கிண்டுட்டயே”
“அதெல்லாம் அப்படி தான் அத்திம்ஸ்...ஹேய் குட்டிப் பாப்பா”
“எங்கே என்கிட்ட தா நான் கொஞ்சம் தூக்கிப் பார்க்கட்டும்”
என்று நவீன் சொன்னதும் அம்புஜம் வேனுவிடமிருந்து குழந்தையை வாங்கி நவீனிடம் கொடுத்தாள். வேனு அன்று காலேஜ் முடிந்ததும் நேராக ஹாஸ்பிடலுக்கு குழந்தையைக் காண வந்துவிட்டான். சற்று நேரம் நவீன் வைத்துக் கொண்டதும் அம்புஜம்
“குழந்தையை மிருதுளா பக்கத்துல படுக்க வச்சிடுங்கோ ஏன்னா ரொம்ப நேரம் கையில வச்சிண்டோம்னா பிஞ்சு உடம்பில்லையா அதுனால குழந்தைக்கு வலிக்கும்”
நவீனும் தன் குழந்தையை மிருதுளா அருகில் படுக்க வைத்து பார்த்து மகிழ்ந்துக் கொண்டிருந்தான். அப்போது வேனு வீட்டுக்குச் செல்வதாக கூறி வீட்டுச் சாவியை ராமானுஜத்திடமிருந்து வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான். அவன் வெளியே சைக்கிளை எடுக்கச் சென்றுக்கொண்டிருக்கும் போது மிருதுளாவின் மாமனார் மாமியார் ஆட்டோவில் வந்திறங்குவதைப் பார்த்தான். உடனே
“வாங்கோ மாமா. வாங்கோ மாமி”
“என்ன வேனு உங்க அக்காவையும் அவள் குழந்தையையும் நார்மல் வார்டுக்கு ஷிஃப்ட் பண்ணிட்டாளா?”
“ஆங் பண்ணிட்டா மாமா.”
“எங்க இருக்கு அந்த வார்டு?”
“வாங்கோ நான் கூட்டிண்டுப் போறேன்.”
என்று இருவரையும் மிருதுளாவிடம் அழைத்துச் சென்றான். அவர்களைப் பார்த்ததும் மிருதுளா மெல்லிய புன்னகையுடன் வரவேற்றாள். வந்தவர்கள் அவளிடம் நலன் விசாரிக்கவில்லை. ஈஸ்வரன் குழந்தையை ஒரு முறைப் பார்த்துவிட்டு வெளியேச் சென்று அங்கிருந்த பென்ச்சில் அமர்ந்துக் கொண்டார். பர்வதம் குழந்தையை ரொம்ப அசால்டாக தூக்கினாள் அதைப் பார்த்த அம்புஜம்
“மாமி..மாமி…அது பிஞ்சுக் குழந்தை மாமி..மெதுவா தூக்குங்கோ”
“நான் நாலு புள்ளைகளைப் பெத்தவள். எனக்கு தெரியும்”
“மாமி ஆனா என் அக்காவுக்கு இது தான் மொதோ குழந்தை அதனால ப்ளீஸ் மெதுவா பார்த்து”
“ம்…ம்… எல்லாம் எனக்கும் தெரியும்”
என் பேரப்பிள்ளையை கவனமாக தூக்க எனக்குத் தெரியாதா என்று பர்வதம் கேட்டிருந்தா அதில் நியாயம் கடுகளவாவது இருந்திருக்கும் ஆனால் பிள்ளைகளைப் பெற்றதும்… பால் மணம் மாறாத குழந்தையை தன் மாமியாரிடம் விட்டுச் சென்று விட்டு இப்போ நான்கு பிள்ளைகளை வளர்த்தவள் என்று அவள் சொன்னதும் மிருதுளா நவீனைப் பார்த்தாள். உடனே நவீன்
“நீ நாலு புள்ளகள் பெத்தவள் தான் அதை யாரும் இங்கே மறுக்கலை அதுக்காக எங்க குழந்தையை இப்படி ரஃப்பா ஹாண்டில் பண்ணாதே”
என நவீன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே குழந்தையின் இடது காதை மடித்தாள், வலது காலை சடாரென தூக்கிப் பார்த்தாள். அதைப் பார்த்த வேனு
“மாமி ப்ளீஸ் குழந்தையை என்கிட்ட தந்திடுங்கோ. அது பச்சக் குழந்தை மாமி நீங்க பாட்டுக்கு காத பிடிச்சு திறுவறேங்கள், காலை படக்குன்னு தூக்கறேங்கள்”
“எல்லாம் சரியா இருக்கான்னு பார்க்க வேண்டாமா?”
“ஐய்யோ மாமி அதெல்லாம் டாக்டர்ஸ் பார்த்துட்டு தான் நார்மல் வார்டுக்கே அனுப்புவா. அப்படியே ஏதாவது இருந்தா டாக்டர்ஸ் சொல்லியிருப்பா. அம்மா நீ மாமிகிட்ட இருந்து பாப்பாவை வாங்கு”
என்று வேனு பேசியதைப் பார்த்த மிருதுளாவின் மனதில் சந்தோஷம் தாண்டவமாடியது. அம்புஜம் குழந்தையை பர்வதத்திடமிருந்து வாங்கி மிருதுளா அருகில் படுக்க வைத்தாள். குழந்தை வீல் வீல் என அழ ஆரம்பித்தது. பர்வதம் காதைத் திறுவியதில் வலித்ததோ என்னவோ பாவம் அந்த பிஞ்சுக் குழந்தைக்கு!!! அதன் அழுகை நர்ஸ் ரூம் வரை கேட்க உடனே நர்ஸ் ஓடி வந்து குழந்தையைத் தூக்கிப் பார்த்தாள். பின் மிருதுளாவைப் பார்த்து
“மிருதுளா விஸிடர்ஸ் வந்தாலும் குழந்தையை தூக்க விடாதே. ஏன் பாப்பா காது சிவந்திருக்கு?”
“அதுவா சிஸ்டர் இதோ இந்த மாமி தான் எல்லாம் சரியா இருக்கான்னு காதைத் திறுவி டெஸ்ட் பண்ணினாங்க”
“யாரு இவங்க? ஏன் அப்படி செய்ய விட்டிங்க?”
“சிஸ்டர் அவங்க என் அக்காவோட மாமியார்”
“ஏன்மா நீங்களும் புள்ளப் பெத்தவங்க தானே இப்படியா பிஞ்சுக் குழந்தையை காயப்படுத்துவீங்க? நாங்க அதெல்லாம் டெஸ்ட் பண்ணாமயா இப்படி நார்மல் வார்டுக்கு ஷிஃப்ட் பண்ணினோம். மிருதுளா இது மாதிரி எல்லாம் இனி நடக்காம பார்த்துக்கோ இது உன் குழந்தை புரியுதா”
என்று நர்ஸ் கூறிவிட்டுச் சென்றதும், பர்வதம் விருட்டென எழுந்து வெளியே அமர்ந்திருந்து ராமானுஜத்துடன் பேசிக்கொண்டிருந்த ஈஸ்வரனிடம்
“ம்…வாங்கோ நாம போகலாம். எனக்கே புள்ளையப் பார்த்துக்கறதைப் பத்தி மாறி மாறி கிளாஸ் எடுக்கறா!! அவாளாச்சு அவா புள்ளையாச்சு”
என தான் செய்த தவறை சொல்லாமல் அவர்கள் பேசியதைத் தவறென்று சொல்லி கோபித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர் பர்வதீஸ்வரன். பர்வதம் அப்படி சொல்லும் போது, ஈஸ்வரன் அவளிடம் அவர்கள் ஏன் அப்படி பேசினார்கள் என்று கேட்காமல் ஏதோ தன் மனைவிக்கு பெருத்த அவமானம் நேர்ததைப் போல் ராமானுஜத்தைப் பார்த்து முறைத்து விட்டு பர்வதம் பின்னாலேயே சென்றார். உடனே ராமானுஜம் உள்ளேச் சென்று
“ஏய் அம்புஜம் என்ன நடந்தது? ஏன் பர்வதம் மாமி கோபமா வெளியே போறா? அந்த மாமாவும் என்னைப் பார்த்து மொறச்சுட்டுப் போறார்!!! அப்படி என்னதான் நடந்தது?”
வேனு தன் அப்பாவிடம் விவரமாக நடந்தவைகளைக் கூறினான். அம்புஜம் நவீனிடம்
“இதோ பாருங்கோ மாப்ள இங்க நடந்தது எல்லாம் நீங்களும் பார்த்துண்டு தானே இருந்தேங்கள். நீங்க சொல்லுங்கோ எங்க மேல ஏதாவது தப்பிருக்கா?”
“நீங்க கவலைப் படாதீங்கோ. நீங்களும் வேனுவும் பேசியது தப்பேயில்லை. ஜஸ்ட் லீவ் இட்.”
நடந்தவைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மிருதுளாவுக்கு…. இதை வைத்து இனி என்ன பூகம்பத்தை உருவாக்கப் போகிறாளோ தன் மாமியார் என்ற எண்ணம் பயத்தை உண்டு பண்ணியது. அவளின் முகத்தில் பயம் பளிச்சிட்டது அதை கவனித்த அம்புஜம்
“மிருது நீ இதெல்லாம் மனசுல போட்டு உழப்பிக்காதே. நீ சந்தோஷமா இருக்க வேண்டியத் தருணம் இது. ஏன் உன் முகம் இப்படி இருக்கு? கவலைப் படாதே உனக்கு நாங்க எல்லாரும் இருக்கோம்”
என்று மிருதுளா கையைப்பிடித்துக் கொண்டாள். வேனு உடனே ஒரு ஜோக் சொல்லி தன் அக்காவின் பயத்தைப் போக்கினான். அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தனர் அப்போ நர்ஸ் வந்து
“உங்க விஸிட்டிங் அவர்ஸ் முடிஞ்சிரிச்சு ப்ளீஸ் எல்லாரும் கிளம்புங்க.”
என்றதும் அனைவரும் எழுந்து புறப்பட்டனர். அம்புஜம், ராமானுஜம், வேனு மூவரும் வெளியே சென்றதும் நவீன் மிருதுளா கையைப் பிடித்துக் கொண்டு
“எதுக்கும் பயப்படாதே நான் இருக்கிறேன். நாளைக்கு வந்து பார்க்கறேன். வரட்டுமா”
என சொல்லிவிட்டு குழந்தையை சற்று நேரம் பார்த்து பின் அங்கிருந்து செல்ல மனமில்லாமல் சென்றான். ஒன்பது நாட்களும் இது தொடர்ந்தது. ஒன்பதாவது நாள் மிருதுளாவை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தனர். புண்ணியாஜனம் செய்ய வேண்டி அதற்கான வேலைகளில் மும்முரமானார்கள் ராமானுஜமும் அம்புஜமும். நவீன் ஊருக்கு கிளம்ப ஐந்தே நாட்கள் இருந்ததால் புண்ணியாஜனத்தோடு தொட்டில்லிட்டு பெயரும் சூட்டிவிட எல்லா ஏற்பாடுகளும் செய்தனர் மிருதுளா பெற்றோர். அனைவருக்கும் அழைப்பு விடுத்தனர்.
இதற்கிடையில் நவீன் தன் துணிமணிகளை எடுத்து வர அவன் வீட்டுக்குச் சென்றான். அங்கே அவனிடம் பர்வதீஸ்வரன்… குழந்தைக்கு பாட்டிப் பெயர் தான் வைக்க வேண்டும் என்று கட்டளையிட அதற்கு நவீன் தன் மனைவியிடம் கலந்தாலோசிக்காமல் சொல்லமுடியாது என்று கூற!!! பெரிய போர்களமானது நவீன் வீடு. அதுவுமில்லாமல் குழந்தைக்கு கிஃப்ட் கொடுப்பதற்காக சில பொருட்கள் எல்லாம் வாங்கித் தரும்படியும் வற்புறுத்தினர். நவீனும் அவர்கள் கொடுத்த லிஸ்ட் படி எல்லாம் வாங்கிக் கொடுத்து விட்டு அங்கிருந்து மீண்டும் மிருதுளா வீட்டுக்கு வந்தான். அவனின் முகம் வாடியிருந்ததைப் பார்த்த மிருதுளா
“என்ன நவீன் ரொம்ப டையர்டா இருக்கா?”
“ம்… ஒண்ணுமில்லை மிருது. பாப்பாவைக் குடு”
தன் கோபம், வருத்தம் எல்லாவற்றையும் தன் குழந்தையைக் கொஞ்சியதில் பஞ்சாய் பறந்தது நவீனுக்கு. அன்று மாலை மிருதுளாவிடம் மெல்ல அந்த பெயர் பிரச்சினையைப் பற்றிச் சொன்னான். அதைக் கேட்டதும் மிருதுளா
“என்ன நவீன் நான் தான் பொண்ணு பொறந்தா இந்த பெயர் புள்ள பொறந்தா இந்த பெயர்ன்னு சொன்னேனில்லையா!!! அப்புறம் என்ன இது புதுஸா!!”
“இங்க பாரு மிருது அவா சொன்னதைச் சொன்னேன் அவ்வளவு தான். இட்ஸ் யுவர் விஷ்… ராதர் அவர் விஷ் தான் ஸோ நாம நம்ம குழந்தைக்கு நாம டிசைட் பண்ணி வச்சிருக்கறப் பெயரை தான் வைப்போம் சரியா”
“இது சரியான தீப்பு நாட்டாமை அவர்களே”
பதினோராவது நாள் புண்ணியாஜனம் வந்தது. ராமானுஜம், அம்புஜம் அழைப்புவிடுத்திருந்த அனைவரும் வந்தனர். அன்று நெருங்கிய சொந்தங்களை மட்டுமே அழைத்திருந்தனர். மறுநாள் குழந்தைக்கு நாமகரணம் செய்து தொட்டிலிட்டனர். அதற்கு அம்புஜமும் ராமானுஜமும் அனைவரையும் அழைத்திருந்தனர் . பர்வதம் தன் பக்கத்து வீட்டு சிறுவனைக் கூட்டிக் கொண்டு வந்திருந்தாள். அவள் அனைவர் முன்னிலையில் மிருதுளா கையில் ஒரு பையைக் கொடுத்து
“இந்தா இதில் குழந்தைக்கு வேண்டிய பவுடர், ஆயில் என எல்லாப் பொருட்களும் இருக்கு. குழந்தைக்காக நாங்க வாங்கிண்டு வந்தோம் உள்ளே வச்சுக்கோ”
என்று கொடுத்தாள். மிருதுளா நவீனிடம் கண்ணால் அது தான் அவன் வாங்கியதா என்று கேட்க அவனும் ஆம் என்று கண்ணசைத்தான். மிருதுளா அதை வாங்கி உள்ளே வைத்தாள். பர்வதமும் மிருதுளா பின்னாலேயே சென்று
“என்ன !! குழந்தைக்கு என் பெயர் தானே வைக்கப் போறேங்கள்?”
“மா. நானும் நவீனுமா பல நாட்கள் யோசித்து ஒரு பெயரை செலக்ட் பண்ணி வச்சிருக்கோம். அதைத் தான் வைக்கப் போறோம்”
“அப்போ என் பெயர் வைக்கப் போறதில்லை தானே….ம்…ம்..உன் இஷ்டத்துக்கு ஆடு”
என்று கூறி மிருதுளாவை சங்கடப்படுத்தினாள் பர்வதம். பெண் பார்க்கும் விசேஷத்திலிருந்து ஒவ்வொரு நல்ல நாட்களிலும் மிருதுளாவை நிம்மதி இழக்கச் செய்வதே குறிக்கோளாக கொண்டு அதை சிறப்பாக செயல்படுத்தியும் வந்தாள் பர்வதம்.
பூஜைகள் துவங்கின. குழந்தைக்கு என்ன பெயரோ அதை மூன்று முறை குழந்தைக்காதில் சொல்லும் படி சாஸ்த்திரிகள் சொல்ல நவீனும் மிருதுளாவுமாக சேர்ந்து சக்தி ஸ்ரீ, சக்தி ஸ்ரீ, சக்தி ஸ்ரீ என்று மூன்று முறை சொன்னார்கள். அதைக் கேட்டதும் பர்வதம் தன் சொந்தங்களிடம்
“பாருங்கோளேன் பொண் குழந்தைக்கு ஆம்பள பெயரை வைக்கிறா? நாம சொன்னா கேட்டாதானே!!!”
என்று சம்மந்தமே இல்லாமல் மெல்ல முனுமுத்துக் கொண்டே இருந்தாள். பின் குழந்தையைத் தொட்டிலில் படுக்க வைத்தனர் அப்போது பரவதம் குழந்தைக் கையில் தங்க வளையலை மாட்டிவிட்டாள். ஃபங்ஷன் நல்ல படியா முடிந்ததும். சாப்பாடு பந்தி ஆரம்பமானது. முதல் இரண்டு பந்தியிலேயே நவீனின் குடும்பத்தினர் சாப்பிட்டு எழுந்தனர். அதன் பின் மிருதுளா குடும்பத்தினர் சாப்பிட அமர்ந்தார்கள். அது தான் கடைசிப் பந்தி என்பதால் அம்புஜத்தையும் மிருதுளாவையும் அமரச்சொன்னார்கள் சொந்தங்கள். நவீன், வேனு, ராமானுஜமும் அந்த பந்தியில் அமர்ந்திருந்தனர். அதனால் குழந்தையைப் பார்த்துக்க வேண்டுமென்று மிருதுளாவை முதலில் சாப்பிட்டு வரும்படிச் சொன்னாள் அம்புஜம். அதைக் கேட்ட அம்புஜத்தின் ஓர்பிடி
“என்ன மன்னி? மிருதுளா மாமியார் சாப்டாச்சே அவாகிட்ட குழந்தையைப் பார்த்துக்கச் சொல்லிட்டு நீங்களும் எங்க கூடவே உட்கார்ந்து சாப்பிடுங்கோ வாங்கோ. மணி இப்பவே மூணாச்சு”
என்றாள். அதுவும் நல்ல யோசனை தான் என்று பர்வதத்திடம் சென்று
“மாமி குழந்தையைப் பார்த்துக்கோங்கோ நானும் மிருதுவும் சாப்பிட்டுட்டு வந்திடறோம். இப்பவே ரொம்ப நாழி ஆயிடுத்து”
“ம் ….ம்..”
என்று பர்வதம் சொன்னதும் அவளருகில் குழந்தையை படுக்க வைத்து விட்டு சாப்பிடச் சென்றாள் அம்புஜம். அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் பர்வதம் தன் பக்கத்து வீட்டு சிறுவனுடன் மாடிக்கு வந்து “கொஞ்சம் பாயசம் தாங்கோ” என்று வாங்கி அதை அந்த பையனுக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்ததும் மிருதுளா
“அம்மா இவா இங்க வந்துட்டா? அப்போ நம்ம சக்திக்கிட்ட யாரிருக்கா?”
என்று பதறியப் படி பாதி சாப்பாட்டிலிருந்து எழுந்து ஓடினார்கள் மிருதுளாவும் அம்புஜமும். அங்கு மற்ற அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். சக்தி மட்டும் தனியாக படுத்திருந்ததைப் பார்த்ததும் அவளைத் தூக்கிக் கொண்டு மாடிக்கு வந்தார்கள் அம்புஜமும் மிருதுளாவும். அங்கு பக்கத்து வீட்டுச் சிறுவனுக்கு பாயசம் ஊட்டிக்கொண்டிருந்த பர்வதத்திடம்
“ஏன் மாமி உங்களை நம்பி தானே குழந்தையை விட்டுட்டு நாங்க சாப்பிட வந்தோம். நீங்க என்னடான்னா குழந்தையை அம்போன்னு விட்டுட்டு இங்க வந்திருக்கேங்கள்?”
“எங்க பேரனாட்டாம் நாங்க வளர்க்கும் இவன் பாயசம் வேணும்ன்னு சொல்லும் போது நான் குடுக்க வேண்டாமா? அது தான் வந்தேன்”
“மாமி அங்க நீங்க விட்டுட்டு வந்தது உங்க பேத்தியை”
“அப்படியா!!! சரி சரி இதோ இவன் சாப்டுட்டான். வாடா கண்ணா நாம போவோம்”
என்று கொஞ்சம் கூட மனிதாபிமானமில்லாமல் பர்வதம் நடந்துக் கொண்டதை அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த அனைவரும் பார்த்து முகம் சுளித்தனர். நவீனுக்கு அவமானமாக இருந்தது. அம்புஜத்தின் ஓர்பிடி அவளிடம்
“என்ன மன்னி நம்ம மிருதுளா மாமியார் இப்படி இருக்கா? எப்படி மிருதுளா இவாகூட இருக்கா? சொந்த பேத்தியை பார்த்துக்காம பக்கத்து வீட்டுப் பையனை பேரன்னு சொல்லிண்டிருக்கா? இதெல்லாம் நீங்க தட்டிக் கேக்கறதில்லையா? இப்படியே இவாளை விட்டா அப்புறம் நம்ம மிருதுளாவை பாடா படுத்துவா மன்னி”
“விடு விடு…இன்னும் எத்தனை நாள்!! மிருதுளா பாட்டுக்கு அவ ஆத்துக்காரரோட குழந்தையைக் கூட்டிண்டு போயிடுவா. இவா கூடயா இருக்கப் போறா!!! பிரச்சினை வரணும்ன்னே பண்ணறவாகிட்ட இருந்து நாம பத்தடி விலகிப் போறது தான் நமக்கு நல்லது. இதைப் பத்தி இனி நீயும் பேசாத விட்டு விடு என்னமோ பண்ணிக்கட்டும் என்னவேணுமோ சொல்லிக்கட்டும்”
என்று கூறி தன் ஓர்பிடி வாயை அடைத்தாள் அம்புஜம். அனைவரும் மாலை காபி மற்றும் டிபன் அருந்தியதும் அவரவர் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர். அன்றிரவு மிருதுளாவுக்கும் குழந்தைக்கும் த்ருஷ்டிச் சுற்றிப் போட்டாள் அம்புஜம்.
நான்கு நாட்கள் ஓடின. நவீன் தன் குழந்தையையும் மனைவியையும் பிரிய மனமில்லாமல் குஜராத்துக்குக் கிளம்பிச் சென்றான்.
தொடரும்……
அத்தியாயம் 67: பிறந்தாள் மகள்
இரவு முழுவதும் வலி வந்து வந்து போக தூங்க முடியாமல் சிரமப்பட்டாள் மிருதுளா. டெலிவரிக்கு முன் நவீனை ஒரு முறையாவது பார்த்துவிடமாட்டோமா என்ற ஏக்கம் அவளை வாட்டியது. இது எல்லாப் பெண்களுக்கும் வரக்கூடிய எண்ணமே. அதுவும் முதல் பிரசவம் என்பது மறுபிறப்பு போன்றதாயிற்றே. இதற்கிடையில் அவள் கண்முன் இரண்டு கர்ப்பிணிகள் வலியில் துடிப்பதையும், டாக்டர்கள் அங்கும் இங்குமாக நடந்துக் கொண்டே ஒரு பெண்ணிற்கு அபார்ட் ஆகிடிச்சு என்று பேசிக்கொண்டதையும் கேட்டதில் மிருதுளாவுக்கு பயம் அதிகமானது. பயம் அதிகமானதில் அவளின் இரத்தக் கொதிப்பும் அதிகரித்தது. அன்றிரவு சீக்கரம் கடந்து விடாதா என்ற எண்ணம் அவளை வாட்டியது. காலை ஆறு மணியானது மிருதுளாவுக்கு பிரசவம் பார்க்கும் டாக்டர் வந்தார். அவர்கள் மிருதுளாவிடம் சென்று
“என்னமா மிருதுளா? என்ன? நல்லா ஏசி ல அம்மாவும் பிள்ளையும் கம்முன்னு இருக்கீங்க. நேத்து உன் குழந்தை உள்ளேயிருந்து வெளிய வந்திடும் என்று பார்த்தா உன் வயித்துக் குள்ளயே சொகுசா இருக்குன்னு பேசாம இருகிறதோ? உங்க அம்புஜம் பாட்டி என்னடான்னா காலையில அஞ்சு மணிலேந்து கிரிக்கெட் ரன்னிங் கமெண்ட்ரி கேட்குறா மாதிரி என்னைப் பார்த்தாலே ஓடி வந்து கேட்குறாங்க!!!ஏய் குட்டி போதும் உன் அம்மா வயித்துல இருந்தது வா வா.”
என்று அவளின் வயிற்றை செல்லமாக தட்டி குழந்தையை அழைத்தார் டாக்டர். அதைப் பார்த்ததும் மிருதுளாவுக்கு சரிப்பு வர அதற்கு டாக்டர்
“உங்க அம்மாவுக்கு சிரிப்பப் பாருடா!!”
என மிருதுளாவுக்கு பிபி செக்கப் செய்தார். இரத்தக் கொதிப்பு நூற்றி எழுபதைத் தாண்டியது. உடனே டாக்டர் நர்ஸிடம் ஏதோ சொல்லிவிட்டு வெளியே வந்து அம்புஜத்தைக் கூப்பிட்டார். அவர் கூப்பிட்டதும் அம்புஜம், ராமானுஜம், நவீன், வேனு நால்வரும் சென்றனர். அவர்களிடம்
“மிருதுளாவுக்கு பிபி ரொம்ப ஹையா இருக்கு. ஒன் செவன்டியைத் தாண்டிடுச்சு. இனியும் காத்திருப்பது குழந்தைக்கும் தாயிக்கும் நல்லதில்லை. ஸோ சிசேரியன் பண்ணவேண்டியிருக்கலாம்ன்னு சொல்லிக்கறேன். பேயின் வரதுக்கு இன்ஜெக்ஷன் போட்டிருக்கேன். எனிவே இன்னும் ஒரு இரண்டு மணிநேரம் வெயிட் பண்ணிப் பார்ப்போம் அப்பவும் பிபி குறையாம பேயினும் வராம இருந்ததுனா அப்பறம் நமக்கு நோ அதர் ஆப்ஷன். இதை எக்ஸ்ப்ளேயின் பண்ணத் தான் உங்களை வரச்சொன்னேன். வலி வந்தாலும் சரி வராட்டாலும் சரி இதே பிபி ரீடிங் இருந்ததுன்னா நிச்சயம் எட்டு மணிக்கு ஆப்ரேஷன் செய்திடுவோம். எதற்கும் தயாராக இருங்க ப்ளீஸ்”
“டாக்டர் நான் மிருதுளாவைப் பார்க்கலாமா?” என்று நவீன் கேட்டான்
“இல்லை இப்போ அவங்களை அங்கிருந்து ஷிஃப்ட் பண்ண மாட்டோம். ஸப்போஸ் ஆப்ரேட் பண்ணணும்னு இருந்தா அவங்களை இந்த வழியே தான் ஆப்ரேஷன் தியேட்டருக்குக் கூட்டிட்டுப் போவாங்க அப்போ நீங்க பார்க்கலாம்”
“தாங்கஸ் டாக்டர்”
என்னதான் முந்தின நாள் விட்டுவிட்டுச் சென்றாலும் நவீனின் மனதும் மிருதுளாவின் மனம் போலவே தன் மனைவியை ஒரு முறையாவது பார்த்திட மாட்டோமா என்றேங்கியது. ராமானுஜம் நவீனிடமும் வேனுவிடமும்..
“இந்தாங்கோ சாவி நீங்க ரெண்டு பேரும் ஆத்துக்குப் போய் குளிச்சுட்டு வாங்கோ. அதுதான் இரண்டு மணிநேரமாகும்ன்னு டாக்டர் சொல்லறாளே. இங்கே நாங்க ரெண்டு பேரும் இருக்கோம்”
இரவு முழுவதும் நவீனும், வேனுவும் ஹாஸ்பிடலிலேயே இருந்ததால் அவர்கள் வேகமாக வீட்டுக்குச் சென்றனர். இருவரும் குளித்து ரெடியாகிய பின் அருகில் இருந்த ஹோட்டலுக்குச் சென்று காலை உணவருந்திவிட்டு அம்புஜத்திற்கும் ராமானுஜத்திற்கும் வாங்கிக் கொண்டு ஹாஸ்பிடல் சென்றனர்.
அம்புஜம் தனக்கு எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டு ஒரு பென்ச்சில் அமர்ந்து கண்களை மூடி அம்மனிடம் தன் பொண்ணும், பேரக் குழந்தையும் நல்லபடியா இருக்கணும்ன்னு வேண்டுக்கொண்டே இருந்தாள். ராமானுஜம் நவீனிடம்
“உங்க அப்பா அம்மாக்கு சொன்னேங்களா?”
“ஓ!! சொல்லலை மறந்துட்டேன். ஆனா அவா காலையில ஹாஸ்பிடல் வரதா சொல்லியிருக்கா. ஸோ அவா வந்துக்குவா”
“அப்போ சரி. மணி எட்டாக இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு. அதோ உங்க அப்பா அம்மா எல்லாரும் வந்துண்டிருக்காளே. வாங்கோ மாமா. வாங்கோ மாமி”
“என்ன குழந்தை பொறந்திருக்கு?”
“இன்னும் பொறக்கலை மாமி. எட்டு மணி வரை வெயிட் பண்ணிப் பார்க்கலாம்ன்னு சொல்லிருக்கா”
“விடியற் காலையிலேயே பொறந்திடும்ன்னு டாக்டர் சொன்னதா நவீன் நீ சொன்னயே!!”
“ஆமாம் சொன்னேன் ஆனா மிருதுக்கு வலி தொடர்ந்து வரலை விட்டு விட்டு வந்ததால இவ்வளவு நேரம் வெயிட் பண்ணிப் பார்க்கறா”
“ஆமாம் அம்புஜம் மாமி எங்கே? காணமே!!”
“மாமி அதோ அவ அங்க உட்கார்ந்துண்டு இருக்கா பாருங்கோ. நீங்களும் போய் அங்கே உட்கார்ந்துக்கோங்கோ. இன்னும் எட்டு நிமிஷமிருக்கு”
பர்வதம் அம்புஜத்தின் அருகே சென்று அமர்ந்தாள். அவள் அமர்ந்ததுக் கூட தெரியாமல் அம்புஜம் வேண்டிக்கொண்டிருந்தாள். அப்போது பர்வதம்
“என்ன மாமி உட்கார்ந்துண்டே தூங்கறேங்களா?”
என அம்புஜத்தின் தோளில் கையை வைத்தாள். உடனே அம்புஜம் அப்போதுதான் சுயநினைவு வந்தவள் போல ஆங் ஆங் குழந்தைப் பொறந்தாச்சா?? என்று கேட்டாள். அதற்கு பர்வதம்
“மாமி தூங்கினதும் இல்லாம கனவு வேறயா!!! பேஷ்”
“வாங்கோ பர்வதம் மாமி நீங்க எப்போ வந்தேங்கள்? நான் தூங்கலை அம்பாளை வேண்டிண்டு இருந்தேன் அது தான் எதையுமே கவனிக்கலை மன்னிச்சுடுங்கோ”
வேனு வேகமாக ஓடி வந்து
“அம்மா அம்மா!! நம்ம மிருதுவ ஆப்ரேஷன் தியேட்டருக்குக் கூட்டிண்டு போகப் போறாளாம் வா மா வா”
என்று கூற அம்புஜம் உடனே எழுந்து வேகமாக நடந்தாள். பர்வதம் அவள் பின்னாலே சென்றுக் கொண்டே
“ஏன் ஆப்பரேஷன்? அப்போ சுகப் பிரசவமில்லையா?”
என்று கேட்டதும் அம்புஜம் சற்று பதற்றமடைந்தாலும் பர்வதத்திற்கு பதிலளிக்காமல் வேகமாக சென்றாள். லேபர் வார்டிலிருந்து மிருதுளாவை ஆப்ரேஷன் தியேட்டருக்கு கொண்டு செல்ல ஸ்ட்ரெச்சரில் லேபர் வார்டு முன் படுக்கவைத்திருந்ததை அனைவரும் தூரத்திலிருந்து பார்த்தனர். சற்று நேரத்தில் வார்டு பாய்ஸ் மிருதுளா படுத்திருந்த ஸ்ட்ரெச்சர் வண்டியை தள்ளிக் கொண்டே ஆப்ரேஷன் தியட்டரை நோக்கி வந்தனர். ஆப்ரேஷன் தியேட்டர் வராண்டாவில் வரிசையாக நின்றிருந்தனர் அவள் சொந்தங்கள். அந்த வண்டி அவர்களை நெருங்கியதும் அம்புஜமும், நவீனும் ஓடிச் சென்று அரை மயக்கத்திலிருந்த மிருதுளாவைப் பார்த்து நவீன்
“கவலைப் படாதே மிருது இன்னும் கொஞ்ச நேரம் தான் நமக்கு பாபா பொறந்திடும். நான் உனக்காகவும் பாபாக்காகவும் இங்கேயே இருப்பேன் சரியா. பி போல்டு.”
“மிருதுமா ஒண்ணுமில்லை டா கண்ணா. நீயும் குழந்தையுமா இன்னும் கொஞ்ச நேரத்துல வெளிய வந்திடுவேங்கள் சரியா. அம்மா உங்களுக்காக வேண்டிண்டே இருப்பேன். நாங்க எல்லாரும் இங்கே தான் இருக்கிறோம் பயப்படாதே”
என்று வண்டியுடனே நடந்துக் கொண்டே சொன்னார்கள். அரை மயக்கத்திலிருந்தாலும் நவீனைப் பார்த்ததில் மிருதுளாவுக்கு தெம்பு வந்தது. அவள் ஏதும் பேசாமல் அவர்களைப் பார்த்துக் கொண்டே சென்றாள். கதவு மூடப்பட்டது. சற்று நேரத்தில் எல்லாம் குழந்தையின் அழுகுரல் கேட்டது மிருதுளாவுக்கு. மயக்கத்திலும் தன் குழந்தையைப் பார்க்க ஆவாலாக இருந்தவளிடம் டாக்டர்
“மிருதுளா குட். உனக்கு அழகான பெண் குழந்தைப் பொறந்திருக்கு இதோப் பார் என்று காட்டினார்.”
குழந்தை சற்று மங்கலாக தான் தெரிந்தது மிருதுளாவிற்கு ஆனால் தன் வயிற்றினுள் பத்து மாதங்கள் உருண்டு பிரண்ட குழந்தையை ரத்தமும் சதையுமாக பார்த்ததில் அவள் வானில் மிதப்பதைப் போல உணர்ந்தாள். குழந்தையை குளிப்பாட்டி டவலில் சுற்றி முகம் மட்டும் தெரியும்படி வெளியே காத்திருந்த மிருதுளா சொந்தங்களுக்கு காட்டினார் நர்ஸ். அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளினர். நவீன் தன்னிடம் குழந்தையைத் தரும்படி கூற அதற்கு நர்ஸ்
“இல்ல சார் சிசேரியன்ங்கறதுனால குழந்தையை மூன்று நாட்கள் இன்க்யுபேட்டரில் வைக்கணும். அதுவுமில்லாம குழந்தைக்கு இன்ஃபெக்ஷன் ஆகக்கூடாதில்லையா!!! உங்களுக்கு காட்ட தான் கொண்டு வந்தேன்.”
என்று கூறி சற்று நேரம் காட்டிவிட்டு உள்ளே எடுத்துச் சென்றாள். அப்போது வேனு…
“அம்மா இன்க்யுபேட்டர்ல நிறைய குழந்தைகள் இருக்குமே நம்ம மிருதுக்கா பாப்பாவை மாத்திட மாட்டாளே!! அது வேற முட்ட முட்ட கண்ணை வச்சுட்டு முழிச்சு முழிச்சுப் பார்க்கறது.”
என்று சந்தோஷத்தில் அழுதுக் கொண்டிருந்த அம்புஜம் நார்மலாக வேண்டி சொன்னான். அதைக் கேட்டதும் அனைவரும் சிரித்தனர். ராமானுஜம் உடனே சென்று ஒரு கிலோ சாக்லேட் வாங்கி வந்து அனைவருக்கும் கொடுத்தார். ஒரு அரை மணி நேரத்தில் மிருதுளாவை ஸ்ட்ரெச்சரில் வைத்து ஆப்ரேஷன் தியேட்டரிலிருந்து வார்டுக்கு கொண்டு செல்ல வண்டியைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்தனர் அப்போதும் அம்புஜமும், நவீன் வண்டியின் அருகில் சென்று நடந்துக் கொண்டே நவீன்
“மிருது கங்கிராட்ஸ் நமக்கு பொண்ணுப் பொறந்திருக்கா. குழந்தை நல்லா அழகா இருக்கு. முழிச்சு முழிச்சுப் எங்களை எல்லாரையும் பார்த்தா. நீ நிம்மதியா இரு ஓகே நான் இங்கேயே தான் இருப்பேன் எங்கேயும் போக மாட்டேன்”
என்றான் அப்போது வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்த வார்டு பாய் நவீனிடம்
“சார் அவங்க மயக்கத்துல இருக்காங்க. இன்னும் குறைந்தது மூணு மணி நேரமாகும் அவங்களுக்கு மயக்கம் தெளிய”
அதை கேட்டும் அம்புஜம் மிருதுளாவிடம்
“மிருதுமா குழந்தை அழகா இருக்கா. நிறைய முடியிருக்கு. நீங்க ரெண்டும் பேரும் ஆரோக்கியமா இருக்கேங்கள்னு டாக்டர் சொல்லிட்டா. நீ எதுக்கும் இனி கவலைப் படாதே சரியாமா”
என்று பேசி முடிக்கவும் வார்டுக்குள் வண்டி சென்றதும் அந்த அறையின் கண்ணாடிக் கதவு மூடப்பட்டது. மிருதுளாவை ஸ்ட்ரெச்சரிலிருந்து பெட்டிற்கு மாற்றி சலைன் ஏற்றினர். கண்ணாடி கதவு வழியாக நவீனும் அம்புஜமும் பார்த்துக் கொண்டே இருந்தனர். பின் இருவரும் மற்ற அனைவரும் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்து வாழ்த்துக்களைப் பறிமாறிக் கொண்டு விட்டு ராமானுஜம் வீட்டுக்கு சென்றனர். நவீனும் வேனுவும் மட்டும் ஹாஸ்பிடலிலேயே இருந்தனர்.
காலையிலிருந்து ஒன்றுமே சாப்பிடாத அம்புஜம் வீட்டிற்கு அனைவருமாக வந்ததும் எல்லோருக்கும் முதலில் டீப் போட்டுக் கொடுத்து தானும் ஒரு பெரிய டம்பளர் நிறைய டீயைக் குடித்தாள். பின் மடமடவென விருந்து சாப்பாடு சமைத்தாள். அனைவருக்கும் சாப்பாடு பறிமாறினாள். எல்லோரும் சாப்பிட்டதும் ஈஸ்வரனும் பர்வதமும் கிளம்புவதாக சொல்ல ராமானுஜம் ஆட்டோவை வரவழைத்தார். அவர்கள் இருவரும் அதில் ஏறி அவர்கள் வீட்டுக்குச் சென்றனர்.
ஹாஸ்பிடலில் நவீனிடம் நர்ஸ்..
“சார் நீங்க இனி இங்க இருக்க வேண்டிய அவசியமில்லை இனி நாளை மறுநாள் தான் உங்க வைஃப்பை நார்மல் வார்டுக்கு மாத்துவாங்க அதுவரை நீங்க அந்த கண்ணாடி கதவு வழியா தான் அவங்களைப் பார்க்க முடியும். ஸோ எதுக்கு சும்மா இங்கேயே இருக்கீங்க நீங்க ரெண்டு பேருமே வீட்டுக்குப் போகலாம்.”
“சிஸ்டர் அப்போ மிருதுக்கு சாப்பாடு?”
“மூணு நாளும் சலைன் தான் சாப்பாடு சார். அதுவரை சாப்பாடு கொடுக்கக் கூடாது. நார்மல் வார்டுக்கு மாத்தினதுக்கப்பறம் சாப்பாடு நீங்க கொண்டு வந்தும் கொடுக்கலாம் இல்லாட்டி ஹாஸ்பிடலேயும் எழுதிக் கொடுக்கலாம். நாங்களே டைமுக்குக் கொடுத்திடுவோம். நீங்க யோசிச்சு சொல்லுங்க. இதுக்கு மேல இங்க இருந்தீங்கன்னா அப்புறம் டாக்டர் எங்களைத் திட்டுவாங்க சார் ப்ளீஸ் கிளம்புங்க. மிருதுளாவை நாங்க பத்திரமா பார்த்துப்போம்”
என்று நர்ஸ் சொல்லிவிட்டுச் சென்றதும் மீண்டும் ஒரு முறை மிருதுளாவை கண்ணாடி கதவு வழியாக பார்த்தான் நவீன் அவள் அசையாமல் ஆடாமல் படுத்திருந்தாள். அவளை அப்படிப் பார்த்ததும் நவீனின் கண்களில் கண்ணீர் வழிந்தது. வேனு பின்னாலிருந்து “அதிம்பேர் கிளம்பலாமா” என்று கேட்டதும் கண்களை துடைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்ப மனசில்லாமல் வேனுவுடன் புறப்பட்டு வீட்டுக்குச் சென்றான் நவீன்.
அங்கே அம்புஜம் பேத்திப் பிறந்ததற்காக சமைத்த விருந்து சாப்பாட்டை இருவருக்கும் வாழை இலையில் பறிமாறினாள். நவீனுக்கு சாப்பாடு இறங்கவில்லை. ஏதோ சாப்பிடனுமே என்று சாப்பிட்டு எழுந்தான். அனைவரும் இரண்டு நாட்கள் அடைந்த பதற்றத்தில் சரியாக தூங்காததால் உணவருந்தியதும் படுத்துக் கொண்டனர். நன்றாக உறங்கினர். ஆனால் நவீனுக்கு உறக்கம் வரவில்லை அவன் மனம் முழுவதும் மிருதுளா தான் இருந்தாள். அவள் பேசிக் கேட்பதற்கும், அவளை நார்மலாக பார்ப்பதற்கும் காத்திருந்தான்.
தொடரும்……
அத்தியாயம் 66: தாய்மையை நோக்கி…
மிருதுளா சில நாட்கள் தொலைத்த சந்தோஷம் அவள் மனதில் மீண்டும் மலர ஆரம்பித்தது. அவள் அப்பா ராமானுஜத்திற்கு இரண்டு பெட்ரூம் உள்ள குவார்ட்ஸ் கிடைத்ததும் அவர்கள் அந்த வீட்டுக்கு குடிப்போனார்கள். அந்த வீட்டில் மிருதுளாவுக்கும் அவள் அம்மாவுக்கும் ஒரு அறை, வேனுவுக்கும் ராமானுஜத்துக்கும் ஒரு அறை என்று எடுத்துக் கொண்டனர்.
ஒரு பெண்ணைத் திருமணம் செய்து மருமகளாக வீட்டுக்கு அழைத்துச் செல்லும் போது அவள் கணவனும் அவன் உறவுகளும் அவளுக்கு நம்பிக்கைக் கொடுக்கும் வண்ணம் நடந்துக் கொள்ள வேண்டும். புதிதாக குடும்பத்தில் வரும் பெண்ணிற்கு ..அந்த குடும்பம் அவளுக்கு மகிழ்வைத் தரவேண்டும். எந்த பெண்ணும் தன்னைத் தலையில் தூக்கிவைத்துக் கொள்ளவேண்டும் என்று எண்ணுவதில்லை. குறைந்த பட்சம் அவளை மனிதப் பிறவியாகவும், அவளை அவளாகவும் வாழவிட்டாலே எல்லா பெண்களும் புகுந்த வீட்டையும் தன் வீடாகத் தான் கருதுவாள். அதை விடுத்து… இந்த பர்வதீஸ்வரன் குடும்பம் போல் வீட்டுக்கு வந்த பெண்ணை ஏதோ தீண்டதகாதவள் போல் நடத்தியதால் மிருதுளா என்றில்லை அவள் இடத்தில் எந்த பெண் இருந்தாலும் அங்கிருந்து வெளியேற ஒரு சந்தர்ப் பத்துக்காக காத்துக் கொண்டு தான் இருப்பார்கள். நம்மால் சுதந்திரமாக சுவாசிக்க முடியாத ஒரு அறையிலிருந்து முதலில் வெளியேற நினைப்போமா? இல்லை மூச்சு முட்டினாலும் நமக்கு கிடைத்த இந்த அறைக்கு உள்ளேயே இருப்போம் என்று நினைப்போமா?
அந்த அறையில் ஒரு சிறிய ஜன்னல் இருந்தாலாவது அவள் சற்று நிம்மதி அடைவாள். அதற்குள்ளேயே எப்படியாவது வாழ்க்கையை ஓட்டிட எண்ணிடுவாள். ஆனால் எந்த வழியிலும் சுவாசிக்க முடியாமல் போனால்!! கிடைக்கும் முதல் வழியைத் தேர்ந்தெடுத்து தன்னை காப்பாற்றிக்கொள்ள தான் நினைபாள். இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பொருந்தும்.
இங்கே பர்வதீஸ்வரன் மிருதுளாவை சுவாசிக்க விடாமல் செய்ததின் விளைவு தான் ஆட்டோவில் ஏறி அந்த தெருவைத் தாண்டியதும் அவள் மனதில் எழுந்த மகிழ்ச்சிக்கு காரணம். ஆனால் பர்வதீஸ்வரனிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியுமா? அவர்கள் என்றும் மிருதுளாவைத் தான் குறைக் கூறுவர் என்பது நாம் அறிந்ததே. இவர்கள் இப்படியே மாறாமல் இருந்தார்களே என்றால் அவர்கள் உருவாக்கும் அந்த அறையிலேயே அவர்கள் இன்றில்லை என்றாலும் என்றாவது தள்ளப்படுவார்கள்.
மிருதுளா வழக்கம் போல சத்தான ஆகாரம், மனநிம்மதி என்று ஒரு மாதத்தைக் கடந்தாள். குழந்தைப் பிறப்பதற்கு டாக்டர் குறித்துக் கொடுத்தது மார்ச் ஆறாம் தேதி என்பதால் மார்ச் நான்காம் தேதி இரவு நவீன் ஊரிலிருந்து வந்தான். ஐந்தாம் தேதி காலை சீக்கிரம் எழுந்து மிருதுளா வீட்டிற்குச் செல்ல புறப்பட்டுக் கொண்டிருந்தான். அப்போது ஈஸ்வரன்
“நாளைக்கு தானே டேட் கொடுத்திருக்கா. குழந்தைப் பொறந்தா ஃபோன் பண்ணுவா அப்போ போனா போதும். அதுவுமில்லாம இன்னைக்கு மத்தியானம் நம்ம கவின் குவைத்துலேந்து வர்றான் அதுனால நீ எங்கேயும் போக வேண்டாம்”
“அவன் எப்படியும் ஒரு மாசம் இருப்பானே!! நான் அப்புறமா வந்து அவனைப் பார்த்துக்கறேன்னு சொல்லு. இப்போ நான் மிருது ஆத்துக்குப் போகணும். பை நான் வர்றேன்”
என்று கூறி அங்கிருந்து புறப்பட்டான் நவீன். மேலே கூறியது போல அவனும் ஜன்னல் கூட இல்லா சுவாசம் முட்டும் அறையிலிருந்து வெளியேறினான். எந்த ஒரு வீட்டில் மருமகளை மதிக்கவில்லையோ அந்த வீட்டில் அவள் கணவனையும் அதாவது அவர்கள் மகனையும் மதிக்கமாட்டார்கள். இங்கே அதுதான் ஆரம்பத்திலிருந்து நடந்து வருகிறது.
தங்கள் மகனை மதிக்கும் பெற்றவர்கள் அவன் மனைவியையும் மதிப்பார்கள். இங்கே பர்வதீஸ்வரன் தங்கள் மகனையே மதிக்கவில்லை என்பது தான் நவீன் திருமணம் நிச்சயமானதிலிருந்தே நமக்கெல்லாம் நன்றாக தெரிந்ததாயிற்றே.
காலை டிபன் கூட சாப்பிடாமல் மிருதுளா வீட்டுக்கு வந்தான் நவீன். அவன் உள்ளே நுழைந்தபோது மிருதுளாவும் அவள் அம்மாவும் காலை டிபனை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். உடனே அம்புஜம் எழுந்துக் கொண்டாள். அதை பார்த்த நவீன்
“நீங்க உட்கார்ந்து சாப்பிடுங்கோ ப்ளீஸ். எங்க மிருது உன் அப்பாவையும் வேனுவையும் காணமே!!”
“அப்பாக்கு இன்னைக்கு டே ஷிஃப்ட் ஸோ அஞ்சு மணிக்கெல்லாம் போயிட்டா. வேனுக்கு லாப் இருக்குன்னு அவனும் ஆறு மணிக்கெல்லாம் கிளம்பிட்டான். சரி நீங்க எப்போ வந்தேங்கள்?”
“நான் நேத்து நைட் வந்தேன். காலையில எழுந்ததும் குளிச்சிட்டு நேரா இங்க வந்துட்டேன்”
“நீங்க ப்ரேக்ஃபாஸ்ட் சாப்டேளா?”
“ம்….”
“இந்தாங்கோ மாப்ள மிருதுவோட உட்கார்ந்து சாப்பிடுங்கோ.”
என்று ஒரு தட்டில் சுடச்சுட இட்டிலியும் சட்னியும் வைத்துக் கொடுத்தாள் அம்புஜம். நவீனுக்கும் நல்ல பசி. நன்றிச் சொல்லி அதை வாங்கி சாப்பிட்டான். அதற்கு அம்புஜம்
“எதுக்கு தாங்க்ஸ் எல்லாம் சொல்லறேங்கள். உங்க அம்மா கிட்டே தாங்க்ஸ் சொல்லுவேங்களா சொல்லுங்கோ”
“அதுக்கில்ல நான் சாப்பிடலைன்னு சொல்ல வர்றத்துக்குள்ளேயே நீங்க டிபனை கொண்டு வந்து தந்துட்டேங்களே அதுனால தான் சொன்னேன்.”
“காலையில எழுந்து குளிச்சதும் கிளம்பி வந்துட்டேன்னு சொன்னேங்களே அப்போ சாப்பிடலைன்னு தானே அர்த்தம். அதுனால தான் உடனே ஒரு ஏடு இட்டிலி வச்சுக் கொண்டு வந்தேன்.”
“ம்…நவீ இங்கே உனக்கு கேட்காமலே கிடைக்குது ஆனா அங்க எனக்கு கேட்டாலும் கிடைக்கலை கேட்கவும் முடியலை”
“ஏய் மிருது பேசாம சாப்பிடு டி”
“சரி மா சரி உன் மாப்ளயை ஒண்ணும் சொல்லலை”
இருவரும் சாப்பிட்டுவிட்டு சற்று நேரம் உள்ரூமில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அம்புஜம் மத்திய உணவு சமைத்துக் கொண்டிருந்தாள். நவீன் நான்காம் தேதி சரியாக உறங்காததாலும், நன்றாக காலை உணவு உண்டதாலும் மிருதுளாவுடன் பேசிக்கொண்டே உறங்கிப் போனான். மிருதுளாவும் அவனை தொந்தரவு செய்யாமல் அந்த அறையின் கதவை சாத்திவிட்டு வெளியே வந்து தனது ஜூஸைக் குடித்து விட்டு அம்மாவுக்கு சின்ன சின்ன உதவிகள் செய்தாள் அப்போது அம்புஜம்
“ஏய் மிருது நீ போய் உட்காருமா. உன் ஆத்துக்காரரோட போய் பேசிண்டிரு. இதோ சமையல் ரெடி ஆகிடுத்து. அப்பளம் மட்டும் தான் பொரிக்கணும்.”
“அம்மா மெதுவா பேசு நவீ தூங்கிண்டிருக்கார். அதுனால தான் அந்த ரூம் கதவை சாத்திட்டு இங்கே வந்தேன்”
“சரி நீ போய் டிவி பார்க்கவோ இல்ல புக்குப் படிக்கவோ செய் போ. இதோ இந்த அப்பளத்தைப் பொரித்துட்டு நானும் வர்றேன்”
மிருதுளா டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். நேரம் கிடுகிடுவென ஓடியது. மத்தியம் ஒன்றானது நவீன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். அம்புஜம் மிருதுளாவிடம்
“அவர் தூங்கட்டும் மிருது. எழுப்பாதே. அவர் எழுந்திரிக்கும் போது சாப்பிட்டுக்கட்டும். நீ வா சாப்பிடு.”
என்று மிருதுளாவுக்கு சாப்பாடு போட்டுக்கொண்டிருக்கும் போது நவீன் எழுந்து வந்து கடிகாரத்தைப் பார்த்தவன்
“ஓ!! டைம் ஒன்றரை ஆச்சு!!ஏய் மிருது எழுப்பியிருக்கலாம் இல்லையா!!”
“ஒரு மணிக்கு எழுப்பினேன் நவீ. நீங்க நல்லா தூங்கிண்டிருந்தேங்களா அதுனால டிஸ்டர்ப் பண்ணாம நாங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டோம். நீங்க ஃப்ரெஷ் ஆகிட்டு வந்து சாப்பிடுங்கோ.”
நவீனும் சாப்பிட்டுவிட்டு டிவிப் பார்த்தான். மத்தியம் இரண்டு மணி ஆனதும் ராமானுஜம் வந்தார். அவர் நவீனைப் பார்த்ததும்
“வாங்கோ மாப்ள வாங்கோ”
அனைவரும் அமர்ந்துப் பேசிக்கொண்டிருக்கும் போது ஆட்டோ ஒன்று அவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றது. யாரென்று எட்டிப் பார்த்த அம்புஜம்
“வாங்கோ வாங்கோ மாமி!! வா வா கவின்”
“கவினா?”
என்றால் மிருதுளா அதற்கு நவீன்
“ஆமாம் அவன் மத்தியானம் குவைத்திலிருந்து வரதா இருந்தது. நான் அதை உன்னிடம் சொல்ல மறந்துட்டேன்”
கவினை தனியாக அனுப்பாமல் கூடவே வந்தாள் பர்வதம். இருவரும் உள்ளே வந்ததும் கவின்
“நவீன் அன்ட் மன்னி கங்கிராஜுலேஷன்ஸ். நான் வர்றேன்னு சொல்லியும் ஒரு அரை நாள் வெயிட் பண்ணாம இங்கே உங்களைப் பார்க்க வரவச்சுட்டேங்களே எங்க நவீனை!!!”
என்று பர்வதீஸ்வரன் ஏற்றிக் கொடுத்தை அப்படியே சொன்னான் அவர்கள் புத்திரன் கவின். வந்தவர்களுக்கு சுவீட்டும் காரமும் காபியுடன் கொண்டு வந்துக் கொடுத்தாள் அம்புஜம். அதை அவர்கள் சாப்பிட்டுக் கொண்டு பேசிக்கொண்டிருக்கையில் மிருதுளா சட்டென்று
“ஆ!!! அம்மா!!! எனக்கு வயிறு வலிக்கறது மா”
என்று கத்தியதில் பதற்றமானாள் அம்புஜம். உடனே அவளிடம்
“சரி எழுந்துரு மிருது. ஏன்னா ஒரு ஆட்டோவை உடனே ஃபோன் பண்ணி வரச் சொல்லுங்கோ.”
ஹாஸ்பிடலுக்கு எடுத்துச் செல்ல வேண்டி தயாராக வைத்திருந்த பையை எடுத்துக் கொண்டாள் அம்புஜம் ஆட்டோ வந்தது மிருதுளாவும் அம்புஜமும் நவீனும் ஆட்டோவில் சென்றனர். ராமானுஜம் இன்னொரு ஆட்டோ வரவழைத்து அதில் கவினையும் பர்வதத்தையும் ஹாஸ்பிடல் அனுப்பி வைத்தார். பின் வீட்டுக் கதவைப் பூட்டிவிட்டு அவரது டி.வி.எஸ் 50 ல் அவரும் ஹாஸ்பிடல் சென்றார்.
மிருதுளாவை டாக்டர்ஸ் லேபர் வார்டுக்கு அழைத்துச் சென்றார்கள். வெளியே தவித்துக் கொண்டிருந்தனர் நவீனும் அம்புஜமும். கவினும் பர்வதமும் வந்து சேர்ந்தனர். கவினிடம் பர்வதம் ஏதோ முனுமுனுத்தாள். உடனே கவின் அவளிடம்
“நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றான்
சற்று நேரத்தில் டாக்டர் வெளியே வந்ததும் நவீன் சென்று மிருதுளாவைப் பற்றி விசாரித்தான் அதற்கு டாக்டர்
“கரெக்ட் டேட் தான். மிருதுளாவுக்கு வலி விட்டு விட்டு வருது. நாளைக்கு விடியற் காலைக்குள் குழந்தைப் பொறந்திடும். யாராவது ஒருத்தர் இங்கேயே இருக்கணும். ஏதாவது தேவைன்னா கூப்பிடுவதற்கு. மத்தவங்க எல்லாரும் வீட்டுக்குப் போயிடலாம்”
என்று சொல்லிவிட்டு சென்றார் டாக்டர். அவர் சொல்லி முடிக்கவும் ராமானுஜமும், பக்கத்துவீட்டு ராணியம்மா சொல்லி விவரமறிந்து வேனுவும் ஹாஸ்பிடல் வந்துச் சேர்ந்தனர். வேனு தன் அம்மாவிடம்
“அம்மா நம்ம மிருதுக்காவுக்கு குழந்தைப் பொறந்துடுத்தா?”
“இல்லை டா வேனு. நாளைக்கு விடியற் காலைக்குள்ள பொறந்திடும்னு சொல்லிட்டு டாக்டர் இப்போ தான் போனா”
“சரி நீங்க எல்லாரும் ஆத்துக்குப் போங்கோ நானும் அத்திம்ஸும் இருக்கோம்”
என்று வேனு சொன்னதும் பர்வதம் கவினிடம் கண்ணால் ஜாடைக்காட்ட உடனே நவீனை கவின் தனியாக அழைத்துச் சென்று
“நவீன் வா நாம ரெண்டு பேரும் டவுனுக்குப் போய் மன்னிக்கு கிஃப்ட் வாங்கிண்டு வருவோம்”
“இல்லை கவின் இந்த நேரத்துல எப்படி!!”
“அட அதுதான் மன்னியோட ஃபுல் ஃபேமிலியும் இருக்காளே ஒரு ரெண்டு மணி நேரத்துல நீ திரும்பி வந்துடலாமே!!! நாளைக்கு காலையில தானே டைம் கொடுத்திருக்கா”
“சரி இரு அவாகிட்ட சொல்லிட்டு வரேன்”
“அதெல்லாம் அம்மா சொல்லியாச்சு நீ வா”
என்று சொல்லி தன்னுடன் வெளியேக் கூட்டிச் சென்றான் கவின். பர்வதீஸவரனின் நரித்தனம் அனைத்தும் மிகுந்தவன் என்பதை நிரூபித்தான் கவின். நவீன் சொல்லிக்காமல் கவினுடன் சென்றதைப் பார்த்த மிருதுளா குடும்பத்தினர் அதிர்ந்துப் போனார்கள். அப்போது பர்வதம் மெல்ல அம்புஜத்திடம்
“சரி மாமி பசங்க வெளியே போயிட்டா நானும் கிளம்பறேன். குழந்தைப் பொறந்தா ஃபோன் போட்டுச் சொல்லுங்கோ வரோம்”
மாப்பிள்ளை தன் பொண்ணை விட்டுவிட்டு அக்கறையில்லாமல் தம்பியுடன் சென்றுவிட்டாரே என்ற கோபம் ஒருபுறமிருக்க இந்த பர்வதத்தின் பேச்சு அதை இன்னும் கிளறி விட… அந்த ஆத்திரத்தில் அம்புஜம்
“என்ன மாமி பேசறேங்கள்? அது என்ன குழந்தைப் பொறந்தான்னு இழுக்கறேங்கள்? உங்க புள்ளைய இந்த நேரத்துல் அவர் பொண்டாட்டியோட இருக்க சொல்லாம அனுப்பிட்டு இப்படி ஒரு பேச்சுப் பேச உங்களுக்கு எப்படி மனசு வர்றது?”
“அவன் போனா அதுக்கு நான் என்னப் பண்ணறது!! அவன் தம்பியை இத்தனை வருஷத்துக்கப்புறமா பார்க்கறான் அதுனால அவன்கூட பேசப் போயிருப்பான். நல்லா இருக்கே நீங்க சொல்லறது. உங்க பொண்ணுக்கு நாளைக்கு காலையில தான் டைம் கொடுத்திருக்கா அது வரைக்கு அவன் இங்க இருந்து என்னப் பண்ணப்போறான்?”
“மாமி நீங்க வேணும்னே எல்லாம் பண்ணறேங்கள்ன்னு எங்களுக்கு தெரியாம இல்ல.”
“சரி தெரிஞ்சா மட்டும் என்னவாம். சரி சரி நான் கிளம்பறேன்”
மிருதுளா பிரசவ நேரத்தில் நவீன் அவளருகில் இருக்கக் கூடாது என்று நினைத்தவள் தன் மகன் கவினை வைத்து நிறைவேற்றிக் கொண்ட பெருமிதத்தில் அங்கிருந்து சென்றாள் பர்வதம். அவள் சென்றதும் அம்புஜம்
“ச்சே என்ன ஜன்மமோ இந்த மாமி!!! சரி வேனு நீயும் அப்பாவும் இங்கேயே இருங்கோ நான் போயி டின்னர் பண்ணிட்டு வர்றேன்”
என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள் அம்புஜம். பிரசவ நேரத்திலும் மிருதுளாவுக்கு அவள் குடும்பத்தினரே அவளுக்குப் பக்கத் துணையாக நின்றனர்.
மாலை நான்கு மணிக்கு ஹாஸ்பிடலில் மிருதுளாவை சேர்த்துவிட்டு கிளம்பிய நவீன் இரவு பத்து மணிக்குத் தான் மீண்டும் ஹாஸ்பிடல் வந்தான். அப்போது ஹாஸ்பிடலில் மிருதுளாவின் அப்பா, அம்மா, தம்பி மூவரும் இருந்தனர். நவீனைப் பார்த்ததும் அம்புஜம்
“ஏன் மாப்ள உங்க வைஃபை டெலிவரிக்காக அட்மிட் பண்ணிட்டு அவ கூட இந்த நேரத்துல இருக்காம நீங்க இப்படிப் போனது நல்லா இல்லை. மிருதுக்கு வலி நின்னுடுத்துன்னு நார்மல் வார்டுக்கு மாத்தினா அப்போ அவ உங்களைத் தான் தேடினா தெரியுமா? எங்களால அவளை சமாளிக்க முடியாமல் நீங்க கிளம்பிப் போயிட்டேங்கள்ன்னு சொல்ல வேண்டியதாயிடுத்து.அதைக் கேட்டதும் என் பொண்ணு முகம் அப்படியே வாடிடுத்து. அதுவுமில்லாம அவ கவலை ஆனதுல அவ பிபி அதிகமாயிடுத்து. மறுபடியும் வலி வந்தது… லேபர் வார்டுக்கு ஷிஃப்ட் பண்ணிட்டா”
“இல்ல கவின் தான் ஏதோ கிஃப்ட் வாங்கலாம்ன்னு சொன்னான் அதுதான் போனேன் ஆனா இவ்வளவு லேட் ஆகும்ன்னு நான் நினைக்கலை. அவா நாளைக்கு காலையில போனா போதும்ன்னு தான் சொன்னா ஆனா நான் தான் இங்கேயே வந்துட்டேன்.”
“யார் என்ன சொன்னா என்ன? எதுக்குக் கூப்பிட்டா என்ன? தப்பா எடுத்துக்காதீங்கோ….நீங்க போனது தப்புதான்”
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது நர்ஸ் அங்கே வந்து
“இதோ பாருங்க மா இங்கே இப்படி இவ்வளவு பேரெல்லாம் இருக்கக் கூடாது. யாராவது ஒரு ஆண் மட்டும் தான் இருக்கணும்”
“சரிங்க நர்ஸ் நாங்க இதோ கிளம்பிடறோம்”
என்று நர்ஸிடம் கூறிய அம்புஜம் வேனுவையும் ராமானுஜத்தையும் பார்த்து
“நீங்க ரெண்டு பேரும் இங்க இருங்கோ நான் ஆத்துக்குப் போறேன். காலையில நாளு மணிக்கெல்லாம் வந்துடறேன். சரியா”
என கூற அதைக் கேட்ட நவீன்
“இல்லை நானும் வேனுவும் இருக்கோம் நீங்க ரெண்டு பேரும் ஆத்துக்குப் போங்கோ”
“இல்ல மாப்ள திடிர்னு உங்க ஆத்துலேந்து வந்து உங்களைக் கூட்டிண்டுப் போயிடுவா அப்புறம் பாவம் இந்த சின்னப் பையன் வேனு மட்டும் தனியா இருக்கணும். என்னத்துக்கு எங்க பொண்ணை நாங்களாவது பார்த்துக்கணுமில்லையா.”
“அதெல்லாம் எங்கேயும் போக மாட்டேன். கவலைப் படாதீங்கோ. நான் சாயந்தரம் போனது தப்புத் தான். மிருது என் ஃவைப். நான் பார்த்துக்கறேன் நீங்க கிளம்புங்கோ”
என்று ராமானுஜத்தையும் அம்புஜத்தையும் அங்கிருந்து கிளம்பச் செய்தான் நவீன். அம்புஜம் ராமானுஜத்துடன் வண்டியில் செல்லும் போது
“ஆமாம் ஆமாம் நம்ம மிருது இவர் ஃவைப்ன்னு இப்போ தான் தெரிஞ்சுதாக்கும். தம்பி கூப்பிட்டான்னா பொண்டாட்டிய விட்டுட்டு போயிடுவாரா? என்ன ஆளோ தெரியலை”
“விடு அம்புஜம் விடு. அவரை என்னச் சொல்லிக் கூடிண்டுப் போனாளோ அது நமக்குத் தெரியுமா?”
“என்ன சொன்னா என்ன? என்னைத் தான் நீங்க மிருது பொறக்கும் போது அம்போன்னு ஹாஸ்பிடல்ல விட்டுட்டு உங்க தங்கைய பார்க்க போனேங்கள்ன்னா என் பொண்ணுக்கும் அதே மாதிரி நடக்கறதேன்னு பார்க்கும் போது எனக்கு கோபம் கோபமா வர்றது.”
“இப்போ நம்ம கதை ரொம்ப அவசியம். விடு விடு. அதுதான் தப்புன்னு அவரே உணர்ந்துட்டார் இல்லையா.”
லேபர் வார்டில் மிருதுளாவுக்கு வலி விட்டு விட்டு வந்துக் கொண்டே இருந்தது. லேபர் வார்டுக்குள் செல்வதற்கு முன் ஒரு முறை நவீனைப் பார்க்க வேண்டும் என்ற அவளின் எண்ணம் நிறைவேறாமல் போனது அவளுக்கு மனவேதனையைக் கொடுத்ததில் அவளின் பிபி எகிறியது. உடனே நைட் டியூட்டி டாக்டர் நர்ஸிடம் மிருதுளாவை ஆப்பரேஷனுக்கும் தயாராக்கச் சொன்னார். மிருதுளாவுக்கு தலையை வாரி பின்னலிட்டு அதை முடிந்து விட்டு அவளை மீண்டும் லேபர் பெட்டில் படுக்க வைத்துவிட்டு
“இதோ பாருமா மிருதுளா பயப்படாதே!! உன் பயம் உன்னோட பிபியை ஏத்தி விடுது. அது உனக்கும் உன் குழந்தைக்கும் நல்லதில்லை. ரிலாக்ஸா இருமா ஒண்ணும் ஆகாது. லட்டு மாதிரி குழந்தைப் பொறக்க போவுது!! மனசை சந்தோஷமா வச்சுக்கோமா”
“சரி சிஸ்டர்”
என்று வெளியே கூறினாலும் அவள் மனதிற்குள் பெரிய போராட்டமே நடந்துக்கொண்டிருந்தது.
பர்வதத்தின் திட்டம் பலித்திருந்தாலும்…மிருதுளாவின் மனவலிமையை அதிகரிக்க உதவியாக இருக்கப் போகிறது என்பது தான் உண்மை.
பர்வதீஸ்வரன் திட்டம் தீட்டினாள்
மகனை அங்கிருக்க விடாமல் அழைத்துச் சென்றாள்
திரும்பி அனுப்பாமலிருக்க நினைத்தாள்
தீயவர்கள் தீட்டிடும் திட்டங்களின் ஆயுள் சில காலமே
அதில் வீழ்ந்தவர்கள் தெளிந்தால்
அனைத்திற்கும் முற்றுப்புள்ளியாகிடுமே.
தொடரும்…..
அத்தியாயம் 65: கசப்பான இனிப்பு
சீமந்தம் வளைகாப்பு முடிந்து அனைவரும் வீட்டிற்கு வந்து சேர்வதற்கு இரவானது. அன்றிரவுக்கு சாப்பாடு கட்டிக்கொண்டு வந்திருந்தனர். அதை உண்டபின் அவரவர் உறங்கச் சென்றனர். பின் வழக்கம் போல பர்வதத்தின் குத்தல் பேச்சு, கல்லு இட்டிலி, ரசம் சாதம், பாத்திரம் தேய்க்கல் என மூன்று நாட்கள் நகர்ந்தது. பதிமூன்றாம் தேதி மத்தியம் வழக்கம் போல் செக்கப்புக்கு மிருதுளாவை அழைத்துச்சென்று வந்தான் நவீன். அன்று மாலை மிருதுளா திடீரென வயிறு வலிக்கிறது என்று நவீனிடம் சொன்னாள். நவீனுக்கோ என்ன செய்ய வேண்டுமென்று தெரியாமல் தவித்தான். சற்று நேரத்தில் மிருதுளா வலி வலி என்று தவிக்க ஆரம்பித்தாள். வலியில் அவள் கண்களிலிருந்து கண்ணீர் வந்ததைப் பார்த்த நவீன் அவளின் வயிற்றில் எண்ணெய் ஊற்றி மெல்ல மசாஜ் செய்துக் கொடுத்துக் கொண்டிருக்கையில் மாடியில் காயப் போட்டிருந்த துணிகளை எடுக்க வந்தாள் பர்வதம். அவளைப் பார்த்ததும் நவீன்
“மிருதுளா வயிறு வலிக்கறதுன்னு துடிக்கறா கொஞ்சம் என்னன்னு பாரேன். டாக்டர்கிட்ட கூட்டிண்டு போகணுமான்னு சொல்லேன்”
என்று பதற்றத்தோடு கேட்டான். அதற்கு துளியும் பதற்றமில்லாமல், மிருதுளாவை அவள் அறையின் வாசலிலிருந்து எட்டிப் பார்த்த பர்வதம்
“அதெல்லாம் ஒண்ணும் தேவையில்லை ஏதாவது சூட்டு வலியா தான் இருக்கும் அதுக்காக ரொம்ப எல்லாம் காட்டிக்க வேண்டாம். கொஞ்சம் சுடு தண்ணி குடிக்கச் சொல்லு எல்லாம் தானா சரியாகிடும்”
என கூறிக்கொண்டே மாடியிலிருந்து கீழே இறங்கிச் சென்றாள். அவளின் இந்த அலட்சிய போக்கைக் கவனித்த நவீன் மிருதுளாவிடம்
“மிருது ஹாஸ்பிடல் போகலாம் வா.”
“இல்ல நவீ அம்மா தான் சுடு தண்ணி குடிச்சா சரியாகிடும்ன்னு சொல்லறாளே! ப்ளீஸ் எனக்கு ஒரு கிளாஸ் சுடு தண்ணி வச்சுக் கொண்டு வறேளா. நான் குடிச்சுப் பார்க்கறேன். அப்பவும் சரியாகலைன்னா அதுக்கப்புறம் ஹாஸ்பிடல் போவோம்”
“சரி இரு நான் போய் சுடுத் தண்ணி வச்சுக் கொண்டு வரேன்”
நவீன் கீழே வேகமாகச் சென்று அடுப்பில் தண்ணீர் கொதிக்க வைத்தான். அதிலிருந்து ஒரு கிளாஸ் எடுத்துக் கொண்டு மாடிக்கு போய் மிருதுளாவிடம் கொடுத்துக் குடிக்கச் சொன்னான். அவளும் குடித்தாள். சற்று நேரம் பொறுத்துப் பார்த்தாள் மிருதுளா ஆனாலும் வலி குறைந்த பாடில்லை. நவீன் அவளை அருகிலிருந்த ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றான். அந்த டாக்டர் மகப்பேறு மருத்துவர் அல்ல அவர் பொது மருத்துவர் ஆவார். அந்த டாக்டர் மிருதுளாவை சோதித்துப் பார்த்தார் பின் சில மருந்துகளை உடனே எடுத்துக் கொள்ளும்படி கூறினார். அப்போது நவீன் டாக்டரிடம்
“டாக்டர் மிருதுளாவுக்கு என்ன ஆச்சு? எதுவும் ப்ராப்ளம் இல்லையே!!”
“எனக்குத் தெரிந்து பெரிசா ஒன்றுமில்லை. இப்போ கொடுத்திருக்கும் மாத்திரையில் சரியாகிவிடும் அப்படி ஆகலைன்னா நீங்க அவங்க செக்கப் போற மகப்பேறு மருத்துவர் கிட்ட தாமதிக்காமல் கூட்டிட்டுப் போங்க சரியா.”
இருவரும் ஆட்டோவில் ஏறி மீண்டும் வீட்டிற்கு வந்தனர். மகனும் மருமகளும் ஹாஸ்பிடல் சென்று வந்துள்ளார்களே அவர்களிடம் என்ன ஆச்சு ஏதாச்சு என்று ஒன்றுமே விசாரிக்காமல் அவள் பாட்டுக்கு டிவிப் பார்த்துக் கொண்டிருந்தாள் பர்வதம். அதைப் பார்த்த நவீன்
“ச்சே!! நீ வா மிருதுளா நாம மாடிக்குப் போகலாம்”
என அவளை மெல்ல மாடிக்கு அழைத்துச் சென்றான். அப்போது மிருதுளா நவீனிடம்
“நான் கொஞ்ச நேரம் படுத்துக்கவா. டையர்டா இருக்கு”
“ஓ எஸ்! படுத்துக்கோ. இரு பாயை விரிக்கறேன். ம்…. இதுல படு”
“தாங்க்ஸ் நவீ. எனக்குத் தூக்கம் வருது நான் தூங்கிட்டேன்னா விளக்கேத்த நேரமாச்சுன்னா எழுப்பிடுங்கோ”
“என்னத்துக்கு? நிம்மதியா தூங்கு மிருது. நாளைக்கு நான் ஊருக்கு போகணுமேன்னு இருக்கு. உன்னை நாளைக்கு உங்க அம்மா ஆத்துல கொண்டு போய் விட்டுட்டு நான் ஊருக்குக் கிளம்பறேன். ஏன்னா இங்கே உனக்கு இது மாதிரி ஏதாவது வலி வந்ததுன்னா பார்த்துக்க யாரும் இல்லைங்கறத தான் பார்த்தோமே.”
“பரவாயில்லை நவீ. நாளைக்கு நல்ல நாள் இல்லைன்னு தானே பொங்கல் அன்னைக்கு அழைச்சுண்டு போக முடிவெடுத்தா அப்புறம் ஏன் அவசரப் படணும்? கவலைப்படாம நீங்க ஊருக்குப் போயிட்டு உங்க ஜூனியரைப் பார்க்க வாங்கோ. ஒரு நாள் தானே நான் அட்ஜஸ்ட் பண்ணிப்பேன். அப்படியே வலி வந்தாலும் என் அம்மாவுக்கு ஃபோன் போட்டு வரச்சொல்லி ஹாஸ்பிடல் போறேன் ஓகே வா!”
“நீ சொல்லற ஆனா எனக்கு டென்ஷனா இருக்கும்”
என்று கூறிக்கொண்டே மிருதுளாவைப் பார்த்தான். அவள் நன்றாக உறங்கிப் போனாள். அவளைத் தொந்தரவு செய்யாமல் அறையிலிருந்து வெளியே மொட்டைமாடியின் திட்டில் அமர்ந்துக் கொண்டே ஏதோ சிந்தனையில் மூழ்கியிருந்தான். மாலை விளக்கேற்றும் நேரமானதுக் கூட தெரியாமல் அதே இடத்தில் அமர்ந்திருந்தான். பவின் நவீனை சத்தமாக அழைத்துக் கொண்டே மாடி ஏறி வந்தான். அவனின் குரல் கேட்டதும் மெல்ல விழித்தாள் மிருதுளா. தன் பெயரை ஏலம் விடுவதுப் போல கத்திக் கொண்டே வந்த பவினின் வால்யூமைக் குறைக்கச் சொன்னான் நவீன். உடனே அவனும் மெதுவாக
“விளக்கேத்தற நேரமாச்சாம் மன்னி தூங்கிண்டிருந்தான்னா எழுப்பி விடச் சொன்னா அம்மா”
“சரி சரி அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்னு போய் சொல்லு”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே மிருதுளா எழுந்து தன் அறையை விட்டு வெளியே வந்து
“என்ன ஆச்சு ஏன் பவின் உங்க பேரை அப்படி கத்திக் கத்திக் கூப்பிட்டான்?”
“எழுந்துட்டயா மிருது? இவன் கத்தினதுல நீ எழுந்திடப் போறேன்னு தான் இவனை மெல்லப் பேசச் சொல்லிண்டிருந்தேன் நீயே எழுந்து வந்துட்ட!”
“நான் தான் விளக்கேற்ற நேரமானதும் என்னை எழுப்பிவிடச் சொல்லிட்டுத் தானே படுத்தேன். நீங்க செய்யலை ஆனா பவின் கரெக்டா எழுப்பிட்டான். தாங்கஸ் பவின்”
“பரவாயில்லை மன்னி. நான் கீழே போறேன்.”
அனைவரும் கீழே வந்தனர். மிருதுளா காபிப் போட்டு நவீனுக்கும் கொடுத்து தானும் குடித்தாள். பின் இருவரும் வாக்கிங் சென்று வந்து இரவு உணவான சாதத்தில் ரசத்தை ஊற்றி சாப்பிட்டதும் மாடிக்குச் சென்றனர். சற்று நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு படுத்துறங்கினர்.
நான்காவது நாள் அதாவது பதிநான்காம் தேதி வந்தது. அன்று விடிந்ததும் எழுந்து குளித்துவிட்டு இருவரும் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அமெரிக்காவிலிருந்து வந்திருந்த நவீனின் பெரியப்பா மகனான கிட்டுமணி நவீன் வீட்டுக்கு அனைவரையும் காண வந்திருந்தான். அவனை வரவேற்று காபிக் கொடுத்தாள் பர்வதம். கிட்டுமணி பர்வதத்திடம் ஒரு பையைக் கொடுத்து
“சித்தி இதில் எங்க ஊரு சாக்லெட்ஸ் இருக்கு இந்தாங்கோ ஃப்ரிட்ஜில் வச்சிடுங்கோ”
“ஓ!! அப்படியா! சரி சரி இதோ வச்சுடறேன்”
“என்ன நவீன் ஹவ் ஈஸ் யூவர் மேரேஜ் லைஃப்?”
“நல்லா போயிண்டிருக்கு கிட்டுமணி. இவ தான் என் தர்ம பத்தினி பேரு மிருதுளா.”
“ஹாய். ஆங் பத்திரிகையில பார்த்தேன்”
“நீ எப்படி இருக்க? உன் அமெரிக்க வாழ்க்கை எப்படி இருக்கு?”
“ஆல் இஸ் கோயிங் வெல் டில் நவ்”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் ஈஸ்வரன் ஹாலுக்கு வந்தார். உடனே கிட்டுமணி அவரிடம்
“என்ன சித்தப்பா எப்படி இருக்கேங்கள்?”
“நான் நல்லா இருக்கேன்டா அமெரிக்கா ரிட்டர்ன்”
“சரி நீ பேசிண்டிரு கிட்டுமணி நான் இன்னைக்கு மத்தியானம் குஜராத்துக்கு கிளம்பறேன் ஸோ போய் என் பெட்டியை பேக் பண்ணிட்டு வந்திடறேன். ஜஸ்ட் பத்து நிமிஷம்”
“நீ டில்லியில் அல்லவா இருந்த!!”
“இந்த வருஷம் தான் எனக்கு குஜராத் போஸ்டிங் ஆச்சு. ஸோ இன்னும் இரண்டு வருஷமாவது அங்க தான் இருப்போம்”
“ஓ! ஓகே ஓகே!! சரி டா நவீன் நீ போய் உன் வேலையைப் பாரு”
என்று அங்கிருந்து மிருதுளாவையும் அழைத்துக் கொண்டு மாடிக்குச் சென்றான் நவீன். அங்கே அவன் பெட்டியில் துணிமணிகளை அடுக்கிக் கொண்டே
“கிட்டுமணி நம்ம ரமணி பெரியம்மா புள்ளை. பிட்ஸ் பிலானி ல படிச்சிட்டு அமெரிக்கா போயிட்டான். எனக்கும் மெடிசின் படிக்கணும்ன்னு ஆசை இருந்தது.”
“படிச்சிருக்க வேண்டியது தானே நவீன்”
“ஆமாம் எங்கேந்து. அட போ மிருதுளா. இந்த படிப்பையே நான் எவ்வளவு கஷ்டப்பட்டு எவ்வளவு கஷ்டங்களுக்கு இடையில படிச்சிருக்கேன் தெரியுமா…இதுல எங்கேந்து மெடிசின் படிக்கறது? அந்த விஷயத்துல பெரியப்பா கிரேட் அவா பசங்களை எல்லாரையுமே நல்லா படிக்க வச்சிருக்கார். சரி சரி வா கீழே போகலாம்”
என்று கீழே வந்தவர்கள் சற்று நேரம் கிட்டுமணியுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவன்
“சரி நான் கிளம்பறேன்”
“என்னடா கிட்டு வந்ததும் கிளம்பறாய்? இருந்து சாப்டுட்டுப் போடா”
“இல்ல சித்தி நான் பிச்சுமணி மாமா ஆத்துக்கு லஞ்ச் சாப்பிட வரேன்னு சொல்லிருக்கேன். மாமி சமைச்சு வச்சு காத்திண்டிருப்பா. மாமாவும் வந்திருப்பார் நான் லேட் பண்ணாம டையத்துக்கு போணா தான் மாமாவோட கொஞ்ச நேரமாவது பேச முடியும் இல்லாட்டி அவர் கிளம்பி ஆபீஸ் போயிடுவார். நான் வரேன் டா நவீன்”
என கிட்டுமணி கிளம்பிய கொஞ்ச நேரத்தில் எல்லாம் நவீனும் சாப்பிட்டு விட்டு ஊருக்குக் கிளம்பினான். இந்த முறை அனைவர் முன்னிலும்
“மிருது இன்னைக்கு நைட்டு நீ மாடில தூங்க வேண்டாம். இங்கே ஹாலில் தூங்கு. டேய் பவின் நீ உள் ரூமுல தூங்கு சரியா. நாளைக்கு உன் அப்பா அம்மா வந்ததும் நீ அவாளோட போயிட்டு வா மிருது. நான் குழந்தைப் பொறந்ததும் வந்துடறேன்”
“சரி நவீன்”
“நான் போயிட்டு வரேன்”
என்று பொதுவாக சொல்லிவிட்டுக் கியம்பிச் சென்றான் நவீன். அவன் சென்றதும் மிருதுளா தனித்து நின்றாள். ஹாலில் போடப்பட்டிருந்த இரும்பு கட்டிலில் அமர்ந்தாள். பர்வதம் கட்டிலுக்கு எதிராக ஈஸிச் சேரில் அமர்ந்திருந்துக் கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். பவின், ப்ரவின் வெளியே நண்பர்கள் வீட்டுக்குச் சென்றனர். ஈஸ்வரன் வழக்கம் போல மத்திய உணவருந்தியதும் உள்ரூமில் படுத்துக்கொண்டார்.
சற்று நேரம் உட்கார்ந்திருந்த மிருதுளா மெல்ல எழுந்து உள் ரூமிற்குச் சென்று ஃப்ரிட்ஜைத் திறந்து கிட்டுமணி கொடுத்த சாக்லேட்டிலிருந்து ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து மீண்டும் கட்டிலில் உட்கார்ந்து அதன் மேல் பேப்பரை உரித்தாள். அதைப் பார்த்த பர்வதம்
“என்னது அது? என்னப் பண்ணற?”
“கிட்டுமணிக் கொடுத்த சாக்லேட் எடுத்து சாப்பிட அதோட பேப்பரை உரிக்கறேன் மா”
“எங்க இப்படி குடு”
என்று மிருதுளா எடுத்து வந்த சாக்லெட்டை அவள் வாயில் போடப் போகும் போது கேட்டாள் பர்வதம். உடனே மிருதுளா அதை தன் மாமியாரிடம் கொடுத்தாள். அதை வாஙகிய பர்வதம் அவள் வாயிற்குள் போட்டுக் கொண்டு..
“ம்…. நல்லா தான் இருக்கு. அமெரிக்கா சாக்லெட் அமெரிக்கா சாக்லெட் தான். நீ போய் உங்க அம்மா உன் சீமந்தத்துக்கு கொடுத்த சீர் பட்சணங்கள் இருக்கு இல்லையா அதை எடுத்து சாப்பிடு போ”
என கூறியதும் மிருதுளாவுக்கு சங்கடமானது. அவள் உள்ளேச் சென்று சீர் பட்சணங்களை எடுத்துக் கொண்டு வந்து ஹாலில் அமர்ந்து சாப்பிட்டாள். சாப்பிடும் போது
“ஆஹா !! நம்ம ஊரு பட்சணங்கள் நம்ம ஊரு பட்சணங்கள் தான் என்ன டேஸ்ட்டு என்ன டேஸ்ட்டு இதெல்லாம் வெளிநாட்டுல கிடைக்குமா?”
என பர்வதம் முன்னாலேயே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டே சொன்னாள். அதன் பின் மிருதுளா அந்த சாக்லெட்டில் இருந்து ஒரு பீஸ் கூட சாப்பிடவில்லை. மாசமான பெண்ணிற்கு அவள் கேட்டதை எல்லாம் செய்துக் கொடுக்க வேண்டும் என்பார்கள் …. கர்ப்பிணி சாப்பிடுவதை பார்க்கக் கூட சில வீடுகளில் அனுமதிக்க மாட்டார்கள்…ஆனால் இங்கே!!! ….செய்துக் கொடுக்க ஆளும் இல்லை அடுத்தவர் கொடுத்ததை சாப்பிட அனுமதிக்கவும் இல்லை!!! ஈஸ்வரன் பர்வதக் கோட்டையில் அந்த மாதிரியான நல்ல பழக்கவழக்கங்கள் எதுவும் கடைப்பிடிக்கப் படுவதில்லையே!!
அந்த அரை நாளை நல்லபடியாக எந்த வித பிரச்சினையுமின்றி கடத்தி அம்மா வீட்டுக்குச் சென்றிட வேண்டும் என்று மிருதுளா தன் மனதில் வேண்டிக்கொண்டாள். அவளிடம் எவரும் பேசவில்லை அவளும் அவர்களுடன் பேசவில்லை. மிருதுளாவிற்கு நவீன் இல்லாத அந்த அரை நாள் அந்த வீட்டில் ஏதோ ஒரு யுகத்தைக் கடப்பதுப் போல தோன்றியது. அன்றிரவு நவீன் சொன்னதுப் போலவே ஹாலில் படுப்பதற்காக அனைவரும் படுக்கும வரைக் காத்திருந்தாள். அனைவரும் அவரவர்கள் படுக்கும் இடத்தில் பாயை விரித்து படுக்கலானார்கள். அதைப் பார்த்த மிருதுளா பவினிடம்
“பவின் இன்னைக்கு மட்டும் உன் அண்ணா சொன்ன மாதிரி நீ உள்ரூமுல படுத்துக்கோயேன். ப்ளீஸ்.”
என்றதும் பவின் தன் பாயைச் சுருட்டிக் கொண்டு உள் ரூமிற்குச் சென்றுப் படுத்துக் கொண்டான். மிருதுளா மாடியிலிருந்து பாய் தலையணை எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு மெதுவாக படிகளில் இறங்கி வந்து ஹாலில் விரித்துப் படுத்துக் கொண்டாள். அப்போது பர்வதம்
“யாரு லைட்டை ஆஃப் பண்ணுவாளாம்”
என்று மனசாட்சியின்றி சொல்லிவிட்டு திரும்பிப் படுத்துக் கொண்டாள். மிருதுளா ப்ரவினைப் பார்த்தாள் அவன் எழுந்திரிக்கவில்லை. வேறு வழியின்றி தானே மெல்ல எழுந்து லைட்டை ஆஃப் செய்துவிட்டுப் படுத்துக் கொண்டாள்.
மறுநாள் தைப் பிறந்தது. பொங்கல் விழா அனைவருது இல்லங்களிலும் கோலாகலமாக கொண்டாடப் பட்டது. பர்வதமும் சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், வடை, சட்னி எல்லாம் வைத்துப் பூஜை செய்து ஈஸ்வரன், பவின், ப்ரவினுக்குக் கொடுத்தாள். அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் பர்வதம் அக்கா ரமணி ஆட்டோவில் வந்திறங்கினாள். வீட்டினுள் வந்தவளை வரவேற்றாள் பர்வதம்
“வா வா ரமணி ஹாப்பி பொங்கல். எங்க அத்திம்பேர் பசங்க எல்லாம்?”
“நான் காலையில பொங்கல் செய்து பூஜை எல்லாம் முடிச்சிட்டு எல்லாருக்கும் கொடுத்துட்டுதான் கிளம்பி வந்தேன். அவா எல்லாம் டிவி பார்த்துண்டிருக்கா. சாயந்தரமா வரோம்னு சொல்லிருக்கா. இங்கேயும பூஜை எல்லாம் ஆச்சுப் போலவே”
“ஆமாம் ரமணி இப்போ தான் ஆச்சு. இந்தா பொங்கல் சாப்பிடு”
“அச்சச்சோ பர்வதம் நான் நன்னா வயிறு முட்டச் சாப்டுட்டுத்தான் வந்திருக்கேன்”
“ப்ரசாதமா நினைச்சு சாப்பிடு இப்போ என்ன!”
“சரி ஒரே ஒரு ஸ்பூன் தா போதும். ஆங் அது போதும் தா…சூப்பரா இருக்குப் பர்வதம். என்னமா மிருது ஆத்துக்கு போற சந்தோஷம் உன் முகதுல பளிச்சிடறதே”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை பெரியம்மா”
“நவீன் ஊருக்கு நேத்து போயிருக்கான் இல்லையா!! இன்னைக்கு ஒரு நாள் கூட இருந்து பொங்கல் முடிஞ்சிட்டுப் போயிருக்கலாமே அவன்”
“இல்ல பெரியம்மா அப்புறம் குழந்தைப் பொறந்தா லீவு கிடைக்காது. அப்போ வேணுமேன்னு தான் கிளம்பிட்டார்.”
“ஓ!!! சரி சரி சரி”
சற்று நேரம் அமர்ந்து அனைவரும் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டே அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்தும் கொண்டிருந்தாள் மிருதுளா. ஆட்டோ வந்து நிற்கும் சப்தம் கேட்டதும் அவள் மனதில் விவரிக்க முடியாத மகிழ்ச்சிப் பொங்கியது. அவள் மனம் போலவே ஆட்டோவில் வந்திறங்கினர் அம்புஜமும் ராமானுஜமும். ரமணி அவர்களை வரவேற்றாள். அவர்கள் உள்ளே சென்றதும் ஒப்புக்காக பர்வதமும் ஈஸ்வரனும்
“வாங்கோ” என சொன்னார்கள்.
அம்புஜமும், ராமானுஜமும் பொங்கல் சீருடன் வந்திருந்தனர். வெங்கலத்தில் பொங்கல் பானை, பழங்கள், பூக்கள், சுவீட்ஸ், காரம் என பர்வதம் வீட்டு ஹாலில் அடுக்கி வைத்து
“மாமா மாமி எங்க பொண்ணுக்கு கொடுக்க வேண்டிய பொங்கல் சீரும் கொண்டு வந்துட்டோம். எடுத்து வச்சுக்கோங்கோ. இப்போ எங்க பொண்ணை அவ பிரசவத்துக்காக எங்காத்துக்கு அழைச்சுண்டுப் போக வந்திருக்கோம்.”
என்று அம்புஜம் சொல்லி முடித்ததும் ரமணி பர்வதத்திடம்
“அடே அப்பா. பர்வதம் உன் சம்மந்தி சீரா எவ்வளவு கொண்டு வந்திருக்கா!!! நிச்சயதார்த்தத்துக்கு வைக்கற மாதிரி இல்ல பொங்கலுக்கு சிரு செஞ்சிருக்கா!!!”
“எங்களுக்கு இருக்கறது ஒரு பொண்ணு தானே ரமணி மாமி. அவளுக்குச் செய்யாம வேற யாருக்கு செய்யப்போறோம் சொல்லுங்கோ”
“அது சரி தான்”
“காபி போடட்டுமா”
“என்ன கேட்டுண்டு போட்டுண்டு வா பர்வதம்” என்றாள் ரமணி அதற்கு அமபுஜம்
“இல்ல இல்ல பரவாயில்லை மாமி நாங்களும் பூஜை முடிச்சிட்டு பொங்கல் எல்லாம் சாப்டுட்டு தான் கிளம்பினோம் அதுனால ஒண்ணும் வேண்டாம்”
“சரி சரி. மிருது நீ உங்காத்துக்குப் போக துணிமணி எல்லாம் எடுத்து வச்சிட்டையா?”
“ஆங் நேத்தே வச்சாச்சுப் பெரியம்மா”
“அப்போ சரி. பர்வதம் நீ மிருது கையில் ஒரு டிபன் பாக்ஸ்ல கொஞ்சம் பொங்கலாவது வைத்துக் கொடுத்து வத்தும் வசையுமா போயி நல்லபடியா பெத்துப் புள்ளையோட வான்னு சொல்லிக் கொடுத்துட்டு கொஞ்சம் வேப்பிலையை அவள் தலையில வச்சுக் கொடு”
“நான் வேப்பிலைக்கு எங்க போவேனாம்”
“ஏன்டி பர்வதம் வேப்பிலைக்கா பஞ்சம் உங்க பக்கத்தாத்த இருக்கே போய் பறிச்சுண்டு வந்தா போறது”
“ரமணி மாமி அதெல்லாம் வேண்டாம் நானே எங்காத்தேந்து வேப்பிலைக் கொண்டு வந்திருக்கேன். அதை வச்சு விடறேன். மிருது இங்க வா.. திரும்பு”
“சரி வேப்பிலை நீங்களே கொண்டு வந்துட்டேங்கள் சரி வத்து பர்வதம் தானே கொடுக்கணும்.”
“ஆமாம் மாமி”
அனைவரும் பர்வதம் மிருதுளாவிடம் டிபன் பாக்ஸ் கொடுக்கக் காத்திருந்தனர் ஆனால் பர்வதம் உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்திரிக்காமலிருந்ததைப் பார்த்த அம்புஜம் மிருதுளாவைப் பார்த்து
“உன் பெட்டியெல்லாம் எங்கே இருக்கு மிருது?”
“மாடில இருக்குமா இதோப் போய் எடுத்துண்டு வரேன்”
“இரு இரு அப்பாவும் வருவா நீ எந்தப் பெட்டின்னு காட்டு போதும் அப்பா எடுத்தேண்டு கீழே வந்திடுவா சரியா”
“சரி மா. அப்பா வா” என்று அவள் எழுந்துச் செல்ல முற்பட்டபோது பர்வதம் அவளிடம்
“இதோ உங்க அப்பா அம்மா கொண்டு வந்த இந்த பானை, கரண்டி எல்லாத்தையும் மேலயே வச்சிட்டு உன் பொட்டியை எடுத்துண்டு வா”
என்றதும் ராமானுஜம் அவர் கொண்டு வந்த சீர் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு மாடிக்கு மிருதுளாவுடன் சென்றார். அங்கே பரணில் பாத்திரங்களை நியூஸ் பேப்பர் கொண்டு பொதிந்து வைத்தார். பின் பெட்டிகளை எடுத்துக் கொண்டு கீழே சென்றார். மிருதுளா பெட்டை சுருட்டி வைத்து அதை ஒரு போர்வையால் மூடி வைத்துவிட்டு அவள் பீரோவைப் பூட்டி சாவியை ஹான்ட்பேக்கில் போட்டுக் கொண்டு மெல்ல படிகளில் இறங்கி வந்தாள்.
அவள் வந்ததும் ராமானுஜம்
“சரி ஈஸ்வரன் மாமா அன்ட் பர்வதம் மாமி அப்போ நாங்க எங்க பொண்ணையும் கூட்டிண்டு கிளம்பறோம்”
“என்ன வந்ததும் கிளம்பறேங்கள் இருந்து சாப்டுட்டுப் போப்டாதோ!! என்ன பர்வதம் சொல்லு…சும்மா நிக்கறாய்?”
“அவாளுக்கு என்ன வேலையிருக்கோ என்னமோ” என்று பர்வதம் முனுமுனுக்க
“கரெக்டா சொன்னேங்கள் பர்வதம் மாமி. எனக்கு மத்தியானம் மூணு மணிக்கு ஆபீஸ் போகணும் அது தான் அவசரப் படறேன் இல்லாட்டி இருந்து சாப்பிட்டுட்டே கிளம்புவோம். அதுவுமில்லாம ஆட்டோ வெயிட்டிங்கில் இருக்கு அது தான்.”
“சரி சரி நல்லபடியா போயிட்டு புள்ளையப் பெத்துண்டு வாம்மா மிருது”
என்று கூறினாள் ரமணி. ஆனால் ஈஸ்வரனும் பர்வதமும் ஒன்றுமே கூறவில்லை. ரமணி இரண்டு மூன்று முறை சொல்லியும் பர்வதம் வேண்டுமென்றே மிருதுளா கையில் எதுவும் கொடுத்தனுப்பவுமில்லை தலையில் வேப்பிலையும் வைத்தனுப்பவில்லை.
மிருதுளா அவள் மாமனார் மாமியாரிடம்
“நான் போயிட்டு வரேன் ப்பா, வரேன் ம்மா”
என்றாள். அதற்கு இருவரும் “ம்
..ம்” என்று மட்டுமே சொன்னார்கள்.
அங்கிருந்து அம்புஜம், ராமானுஜம், மிருதுளா மூவரும் கிளம்பி வெளியே வந்தனர் ஆனால் அந்த வீட்டில் எவருமே வாசல் வரை கூட வரவில்லை. ரமணி மட்டும் வந்தாள். மூவரும் ஆட்டோவில் ஏறி அமர்ந்தனர். மிருதுளா ஆட்டோவுள்ளிருந்து போய்வருகிறேன் என்று ரமணியிடம் கூறிக் கையசைத்தாள். ரமணியும் கையசைத்து பை என்று சொல்லிவிட்டு வீட்டினுள் சென்றாள்.
ஆட்டோ பர்வதம் வீடிருந்தத் தெருவைத் தாண்டியதும் தான் ஏதோ தொலைத்தது மீண்டும் கிடைத்ததைப் போல உணர்ந்தாள் மிருதுளா.
தொடரும்…..
அத்தியாயம் 64: சீமந்தம் வளைகாப்பு
வெளியே சென்ற மிருதுளாவும் நவீனும் ஒரு மணி நேரம் நடந்தனர் அப்போது நவீனிடம்
“எனக்கு ஏதோ தெரியாதவா ஆத்துல வந்து தங்கறா மாதிரி இருக்கு நவீ. என் வீடு என் மனுஷான்னு நான் மட்டும் நினைச்சா போதுமா? இங்கே இருக்கறவாளும் நினைச்சா தானே நல்லாயிருக்கும். நான் என்ன தப்பு செய்தேன் ஏன் அவா என்கிட்ட அப்படி நடந்துக்கறா?”
“அது ஒண்ணுமில்லை மிருது அவாளுக்கு நான் உன்னை கல்யாணம் பண்ணிண்டதுல இஷ்டமில்லை அதுதான் வேற ஒரு ரீஸனும் இல்லை”
“என்னது!!! என்ன சொல்லறேங்கள் நவீ? அவாளுக்குப் பிடிக்கலைன்னா அப்பறம் எப்படி என்னை கல்யாணம் பண்ணிண்டேங்கள்? நீங்க தான் அவா அவ்வளவு தப்பா பேசினபோதெல்லாம் ஒண்ணுமே திருப்பிப் பேசினது கூட கிடையாது அப்புறம் எப்படி அவா சொல் மீறி நம்ம கல்யாணம் நடந்தது? இட்ஸ் ஷாக்கிங் ஃபார் மீ!”
“எனக்கு உன்னைப் பிடிச்சிருந்தது கல்யாணம் பண்ணிண்டுட்டேன். உன்னை பெண் பார்த்து வந்ததுமே உன்னை வேண்டாம்ன்னு சொன்னா ஆனா எனக்கு அவா சொன்ன ரீஸன்ஸ் திருப்தியா இருக்கலை அதுனால நான் பிச்சுமணி மாமா கிட்ட அபிப்பிராயம் கேட்டேன் ஏன்னா அவரும் உங்காத்துக்கு வந்திருந்தார் இல்லையா. அவர் என்னிடம் ப்ரோஸீட் பண்ணச் சொன்னார். அதுக்கப்புறம் நான் வந்து பார்த்தேன் ரொம்ப பிடிச்சதுனால கல்யாணம் பண்ணிண்டேன்.”
“என்னை வேண்டாம்ன்னு சொன்னதுக்கு ரீஸன் சொன்னா?”
“அது தான் சொன்னேன் இல்லையா அது ப்ராப்பர் ரீஸன் இல்லன்னு அப்புறம் ஏன் நான் அதை உன்கிட்ட சொல்லணும். லீவ் இட்… எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு, உனக்கும் என்னைப் பிடிச்சிருக்கு இதுக்கு மேல என்ன வேணும் சொல்லு!! இனி நம்ம ஜுனியர் பத்தி மட்டும் யோசிப்போம் மிருது. இவாளோட இந்த டிராமா எல்லாம் நாம மூணு பேரும் குஜராத்துக்கு போயிட்டா முடிஞ்சிடும்.”
“மூணு பேரா? அது யாரு மூணாவது ஆள்?”
“நம்ம ஜுனியர் தான். வேற யாரு?”
“ஹா! ஹா! ஹா! தெரியும் சும்மா கேட்டேன்”
என்றுக் கூறிக்கொண்டே நவீனின் கையோடு தன் கை கோர்த்து நடக்கலானாள் மிருதுளா. நவீன் கூறிய விஷயங்களில்.. அவள் மனம் சந்தோஷத்தில் துள்ளியது. என்ன தான் மாமனார் மாமியார் கொடுமைகள் ஒரு பெண்ணிற்கு இருந்தாலும் தன் கணவன் தனக்காக இருக்கிறான் என்பதே அவள் அதனைத்தையும் கடந்துச் செல்ல ஓர் ஊன்றுகோல் போல் இருக்கும்.
மிருதுளாவின் மனம் நவீனின் ஆதரவான பேச்சின் சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது சட்டென அவள் நவீனிடம்
“இப்போ புரியறது உங்க பேரன்ட்ஸ் ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கறான்னு!!! அதுனால தான் அனைக்கு என்னை அப்படியே போயிடு எங்க புள்ளைக்கு நாங்க வேற கல்யாணம் பண்ணி வச்சுக்கறோம்ன்னு சொன்னாளா!!! ஓகே! ஓகே! நான் ஏதோ உங்க மேலே உள்ள பொஸஸிவ்னஸ் என்று நினைச்சேன்.”
“பொஸஸிவ் ஆ!!! யாரு அவாளா? என் மேலயா!!! நல்ல காமெடி. அதெல்லாம் அவாளுக்கு இல்லை மிருது.”
“இட்ஸ் ஓகே நவீ! ரீஸன் எதுவா இருந்தா என்ன? நீங்க இந்த மண்ணுல பிறப்பதற்கும், எனக்கு நீங்க கணவரா கிடைச்சதுக்கும் காரணமாக இருந்தவா அவா தானே!!! அதுனால் அவாளை நான் மன்னிச்சுடறேன். இங்க பாருங்கோ நவீ!! உங்களை அவாகிட்டே இருந்து பிரிச்சுக் கூட்டிண்டு போக நான் வரலை. நமக்கும் குடும்பம் வேணும். நம்ம குழந்தைக்கும் தாத்தா, பாட்டி, சித்தப்பா எல்லாரும் வேணும். அதுனால தான் இவா பேசறது, பண்ணறது எல்லாத்தையும் பொறுத்துக்கறேன். வில் கிவ் தெம் டைம் டூ டைஜஸ்ட் தி ஃபாக்ட் தட் ஐ ஆம் தெயர் டாட்டர் இன் லா அன்ட் இட் கெனாட் பீ சேஞ்சுடுன்னு. அதைப் புரிஞ்சுண்டுட்டான்னா மாற்றம் வரும்ன்னு நம்பறேன். நம்பிக்கைத் தானே வாழ்க்கை!.”
“ஹலோ மேடம்!! நான் பொறக்கறதுக்கு வேணும்னா அவா காரணமா இருக்கலாம் ஆனா உனக்கு கணவனானதுக்கு முழுக் காரணமும் நானே தான்.”
“ஓகே சார் ஜீ! ஓகே! ஒத்துக்கறேன். சரி சரி ஆத்துக்குப் போகலாம் நேரமாயாச்சு! போதும் நடந்தது.. வாங்கோ”
“ஓகே யுவர் ஆனர்”
“ஐய்யே!!! சரி சரி அப்படியே அந்த தெருவோட ட்ரன் பண்ணிடுவோம்”
இருவரும் பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர். நவீனும் மிருதுளாவும் உள்ளே நுழையும் பொழுது அனைவரும் உணவருந்திவிட்டு அவரவர் சாப்பிட்ட தட்டுகளை அலம்பி வைத்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்ததும் நவீன் பவினிடம்
“என்ன டா எல்லாரும் சாப்பிட்டாச்சா?”
“ஆங் சாப்டாச்சு”
“சரி மிருது நாமளும் சாப்பிட்டுட்டு மாடிக்கு போகலாம் வா. நீ ஏன் இப்போ ஒரு தடவை ஏறி, இறங்கி சாப்பிட வந்து மறுபடியும் ஏறணும்!! அதுக்கு சாப்டுட்டே போயிடலாம். உட்காரு வா”
என்றான். உடனே மிருதுளாவும் இரண்டு தட்டுகளை அலம்பி எடுத்து வந்து அமரும் போது
“அம்மா நீங்க சாப்ட்டாச்சா?”
“ம்..ம்..ஆச்சு ஆச்சு.”
“சரி மா. அப்போ நாங்க சாப்டுட்டு பாத்திரங்களை எல்லாம் ஒழிச்சுப் போட்டு தேய்ச்சு வச்சிடவா?”
“ம்…ம்”
என ம் வரிசையிலேயே பேசிவிட்டு உள் ரூமிற்குள் சென்றாள் பர்வதம். ஹாலில் பவினும், ப்ரவினும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். நவீனும் மிருதுளாவும் சாப்பிடுவதற்கு சாதத்தைப் பார்த்தனர்… குறைவாக இருந்தது. குழம்பு, பொறியலும் குறைவாக இருந்தது. இருப்பதை இருவரும் உண்டபின் மிருதுளா பாத்திரங்களை எல்லாம் போட்டு தேய்க்க ஆரம்பித்தாள். அப்போது நவீன் அவளுக்கு உதவி விட்டு உள்ரூமிற்குச் சென்று
“ரெண்டு பேர் எக்ஸ்ட்ரா இருக்கோம். கொஞ்சம் ஜாஸ்தி சமைச்சிருக்கலாம்.”
என்று கூறியதற்கு பர்வதம் ஈஸ்வரனைப் பார்த்தாள் அவ்வளவு தான் உடனே தன் தர்மபத்தினி மனமறிந்த அவர்…
“டையத்துக்கு சாப்பிட வரணும். அதுவுமில்லாம அவளும் சமைக்கலாமே”
இடையில் பர்வதம்
“வெளிய போனவா சாப்டுட்டு வந்தா எக்ஸ்ட்ரா செய்தது மிச்சமான வேஸ்ட் ஆகிடும். அதை கொட்டவா முடியும்?”
“இப்படி பத்தும் பத்தாம செய்றதுக்கு எக்ஸ்ட்ரா ஆச்சுன்னா கொட்ட வேண்டாம் ஆனா ஃப்ரிட்ஜில் வைக்கலாமே!”
“நாங்க பழையதெல்லாம் சாப்பிட மாட்டோம்”
இதற்குமேல் நவீன் பேச விரும்பவில்லை. இந்த பேச்சை வளர விட்டால் தேவையில்லாமல் பிரச்சினை பண்ணுவார்கள் என்பதை உணர்ந்தவன் சட்டென
“இன்னும் ஒரு அஞ்சு நாள் தான் அதுவரை கொஞ்சம் ஜாஸ்தி சமைக்க முடிஞ்சா பண்ணு இல்லாட்டி மிருதுவ பார்த்துக்கச் சொல்லிக்கறேன்”
என கூறிவிட்டு அங்கிருந்து வெளியே வந்தான் மிருதுளாவும் பாத்திரங்களை எல்லாம் தேய்த்து வைத்து விட்டு வந்தாள். அவளிடம்
“வேலை ஆச்சா மிருது”
“ஆங் ஆச்சு நவீ”
“சரி வா நாம மேல போகலாம்”
இருவரும் மாடியில் அவர்கள் ரூமிற்குச் சென்றனர். அங்கே மிருதுளாவிடம்
“இத்தனைப் பேர் இருக்கோமே கொஞ்சம் ஜாஸ்தியா எல்லாம் செஞ்சா தான் என்னவாம்?”
“பரவாயில்லை நவீ ஜஸ்ட் லீவ் இட். இன்னும் ஒரு அஞ்சு நாள் தானே அட்ஜெஸ்ட் பண்ணிண்டுட்டா போறது. அவா இதை ஒரு இஷ்ஷுவா ஆக்கணும்ன்னு நினைச்சுப் பண்ணறாளோ என்னவோ அது நமக்குத் தெரியாது ஆனா நாம அதற்கு இடம் கொடுக்காமல் இருந்திடுவோம். இப்போ என்ன நமக்கு சாப்பாடு இல்லைன்னு அவா சொல்லலையே!!! இருக்கறதை சாப்பிடுவோம் அவ்வளவு தான். நாம என்ன வாழ்நாள் முழுவதும் இங்கேயே இருக்கப் போறோமா என்ன? விடுங்கோப்பா லைட்டை ஆஃப் பண்ணிட்டுப் படுங்கோ”
நவீன் லைட்டை ஆஃப் பண்ணிவிட்டுப் படுத்தான் ஆனாலும் அவனுக்கு பர்வதம் செய்ததுப் பிடிக்கவில்லை. மிருதுளா வீட்டில் அவனையும் மிருதுளாவையும் எப்படி கவனித்தார்கள் என்பதை யோசித்துப் பார்த்தான். ஆனால் அவன் வீட்டிலோ அவனுக்கும் அவன் மனைவிக்கும் துளிக் கூட மரியாதை என்பதில்லை என்று எண்ணி தனக்குத் தானே நொந்துக் கொண்டான். அதை நினைத்துக் கொண்டே சற்று நேரம் புரண்டு படுத்து விட்டு பின் உறங்கிப்போனான்.
காலை விடிந்தது வழக்கம் போல எல்லா வேலைகளும் நடந்தது. இறுக்கமான சூழல் தொடர்ந்தது. ஆனால் மத்தியத்திற்கு மேல் சீமந்தத்திற்கு சொந்த பந்தங்களின் வருகை வீட்டில் கொஞ்சம் கலகலப்பை ஏற்படுத்தியது. மாலை அனைவரும் இரண்டு வேனிலும் ஏறி மண்டபத்திற்குச் சென்றனர். இவர்கள் சென்ற கொஞ்ச நேரத்தில் எல்லாம் மிருதுளா வீட்டாரும் வந்தனர். அனைவரும் ஒன்றாக அமர்ந்து மாலைச் சிற்றுண்டி அருந்தினார்கள். பின் மறுநாள் காலை ஃப்ங்ஷனுக்கு வேண்டியவைகளை ஏற்பாடு செய்யத் துவங்கினர் நவீன், மிருதுளா, அம்புஜம் மற்றும் ராமானுஜம். பர்வதமும் ஈஸ்வரனும் எதிலும் பட்டுக்காததுப் போல அவர்கள் சொந்தங்களை மட்டும் வரவேற்று அவர்களுடன் ஊரையாடிக் கொண்டிருந்தனர்.
அன்றிரவு அனைவரும் மண்டபத்தில் உணவருந்தியப் பின் படுத்துறங்கினர். காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து வளைகாப்பு சீமந்தம் சடங்குகள் துங்கின. உள்ளே ஏதோ வேலையாக இருந்த அம்புஜம் வருவதற்குள் பர்வதமும் அவள் கூடப்பிறந்தவர்களும் வளைகாப்பைத் துவங்கிவிட்டனர் . அப்போது நவீனின் சித்திப் பையனின் மனைவி அம்புஜத்திடம்
“மாமி நீங்க இல்லாமயே அங்க தொடங்கிட்டா. அவா எல்லாரும் அப்படி தான். இதை இப்படியே போட்டுட்டு போய் அங்க உங்க பொண்ணு வளைகாப்புல அம்மா நீங்க வளை போடண்டாமா கலந்துக்கோங்கோ போங்கோ.”
என்று கூற அம்புஜம் ரூமிலிருந்து தன் வேலையை செய்துக்கொண்டே எட்டிப்பார்த்து
“இதை தொடங்க எப்படியும் அரைமணி நேரமாகும்ன்னு பர்வதம் மாமி சொன்னாளே!! அதுனால தான் நான் இங்கே இந்த வேலையை அதுக்குள்ள முடிச்சிடலாம்ன்னு வந்தேன். அதுக்குள்ள தொடங்கிட்டாளா. சரி இதோ போறேன்”
வளைகாப்பு சீமந்தம் எல்லாம் நல்லப்படியாக முடிந்ததும். அனைவரும் வந்தவர்களை வரவேற்று அவர்களை சாப்பிட அழைத்துச் சென்று பின் வந்தவர்கள் அனைவரும் சாப்பிட்டுக் கிளம்பியதும் நெருங்கிய சொந்தங்கள் சிலரும் நவீன் வீட்டாரும் மிருதுளா வீட்டாரும் சேர்ந்து மத்திய உணவருந்தியதும் சற்று ஓய்வெடுத்தப் பின் மூன்று மணியளவில் பூச்சூடல் நடத்தி மிருதுளாவுக்கு த்ரிஷ்டி சுத்திப் போட்டனர். அத்துடன் அனைத்தும் முடிந்தது. மிருதுளா டையர்டாக இருப்பதாக கூறிப் படுத்துக்கொண்டாள் அப்போது அந்த அறையில் அம்புஜம் மிருதுளாவின் புடவைகள் ப்ளௌஸ் எல்லாவற்றையும் மடித்து அவள் பெட்டியில் அடுக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தாள், அங்கே பர்வதமும் அவள் பக்கத்து வீட்டு பர்வத ஜால்ராவும் அவர்கள் துணிமணிகளை மடித்துக் கொண்டிருந்தனர் அப்போது அந்த ஜால்ராவிடம் பர்வதம் ஏதோ கண்ஜாடைக் காட்ட உடனே ஜால்ரா இசைக்க ஆரம்பித்தது
“ஏன் அம்புஜம் மாமி உங்க பொண்ணுத் துணிகளை மட்டும் தான் மடிப்பீங்களா? உங்க மாப்பிள்ளை நவீனோட துணிகள் எல்லாம் இங்க கிடக்கே அதையும் சேர்த்து மடிச்சு வச்சுக்கோங்க”
“அதை பர்வதம் மாமி மடிப்பாங்கன்னு நினைச்சேன் அதுனால தான் மிருதுவோடத மட்டும் மடிச்சு வச்சேன்”
“நவீன் தான இப்போ உங்க மாப்பிள்ளையா மட்டும் தானே இருக்காரு அப்புறம் ஏன் பர்வதம் மாமி மடிச்சு வைக்கணும்?”
“இதெல்லாம் பேசறதுக்கு நீங்க யாருங்க? என் பொண்ணோட மாமியாரா? பக்கத்து வீட்டுக் காரங்கன்னா அந்த லிமிட்டோட இருந்துக்கோங்க அதுதான் உங்களுக்கு மரியாதை. ஏதோ நீங்க தான் நவீனோட அம்மா மாதிரி பேசரீங்க. என்ன பர்வதம் மாமி கண்டவாள பேச விட்டு வேடிக்கைப் பார்க்கறேளே நல்லாவாயிருக்கு?”
என்று ஆத்திரத்தில் பேச அதற்கு பர்வதம்..
“நான் ஒண்ணும் அவாகிட்ட எதுவும் கேட்கச் சொல்லலை. இங்கே நடக்தறதெல்லாம் அவாளும் பார்க்கறாயில்ல அது தான் கேட்கறா”
“அப்படியே கேட்டாலும் அதைப் பார்த்துண்டு நீங்க இப்படித் தான் சும்மா இருப்பேளா?”
“அம்மாடி என்ன பர்வதம் மாமி உங்க சம்மந்தி இப்படி எல்லாம் பேசுது!!! நீங்க ரொம்ப பாவம் மாமி. உங்களை நினைச்சா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அம்மாகாரியே இப்படி பேசுதுன்னா அப்போ நீங்க சொன்னது சரிதான். இந்த மிருதுளா எப்படிப் பேசிருப்பா?”
“மறுபடியும் சொல்லறேன் என் பொண்ணைப் பத்தியோ இல்லை அவ குடும்பத்தைப் பத்தியோ பேச உங்களுக்கு எந்த ரைட்ஸும் இல்லை. இதுக்கு மேல பேசினேங்கள் …”
என்று முடிப்பதற்குள் நவீன் உள்ளே வந்து
“என்ன என்ன சத்தம் இங்கே என்ன ஆச்சு”
“தம்பி நவீனு உன் மாமியார் காரி என்னமா பேசுதுப்பா உங்க அம்மா பாவம் ப்பா.”
“எதுவா இருந்தாலும் நாங்க பார்த்துக்கறோம். ஆமாம் நீங்க சாப்டாச்சா?”
“ஆங் சாப்டாச்சுப்பா ஏன் கேக்குற?”
“அப்போ இன்னும் அஞ்சு நிமிஷத்துல நம்ம ஊருக்கு பஸ் மண்டபம் வாசல்லேந்து இருக்கு. தாம்பூலம் வாங்கிட்டேங்களா இல்லைன்னா வாங்க நானே வாங்கித் தரேன்.”
“இங்கேந்து கிளம்புன்னு சொல்லற. பாவம் பர்வதம் மாமி நீங்க. இதுக்கு மேல நான் ஏன் இங்க இருக்கப் போறேன். கிளம்பறேன். வரேன் மாமி”
என்று அந்த அறையை விட்டு அவள் சென்றதும் அம்புஜம் நவீனைப் பார்த்து
“அவா தேவையில்லாம என்னையும் என் பொண்ணையும் அவமானப் படுத்தினா அதனால நானும்….”
“நீங்க எதுவும் எக்ஸ்ப்ளேயின் பண்ண வேண்டாம். எனக்கு அந்த லேடியைப் பத்தி நன்னாவே தெரியும். நீங்க உங்க வேலையைப் பாருங்கோ.”
என கூறி பர்வதத்தைப் பார்த்து ஒரு முறை முறைத்து விட்டுச் சென்றான் நவீன். அம்புஜத்திற்கு பர்வதம் அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறாள் என்பது நன்றாக புரிந்தது. அவர்கள் அனைத்தையும் அடுக்கி வைத்ததும் வெளியே வட்டமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அம்புஜம் அனைவர் முன்னிலையிலும் (என்னதான் இவர்களே ஏற்பாடு செய்திருந்தாலும் சம்மந்திகளை விட்டுக்கொடுக்காமல்)
“வளைகாப்பு சீமந்தம் எல்லாம் நல்லப்படியா நடந்தது. ரொம்ப சந்தோஷம். அப்புறம் நாங்க எங்க பொண்ணை எப்போ எங்காத்துக்கு அழைச்சிண்டுப் போறதுன்னும் சொல்லிட்டேங்கள்ன்னா நல்லா இருக்கும்”
என்று அனைவர் முன்னிலும் கேட்டது பர்வதத்திற்கு ஷாக் ஆனது. ஆமாம் தனியாக இதை கேட்டால் பிரச்சினை செய்வார்கள் என்பது நன்கறிந்ததே அது மிருதுளாவை மனதளவில் பாதிக்கும் அதை தவிர்ப்பதற்காகவே அம்புஜம் அப்படி கேட்டுதுப் போல தான் தோன்றுகிறது. சில நேரங்களில் சூட்சுமமாக நடக்கத் தெரியாதவர்கள் கூட ஒரு முறைப் பட்டால் தெரிந்துக் கொள்வதோடு அதற்கு ஏற்றார் போல் நடக்கவும் செய்கின்றனர். இந்த மாற்றம் பல பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி ஆகிறது. பர்வதம் அதற்கு அவள் சகோதரியான ரமணியிடம் ஏதோ முனு முனங்க உடனே அவள்
“இங்கே பாருங்கோ அம்புஜம் மாமி. எங்க பர்வதம் என்ன சொல்லறான்னா….இன்னைக்கு பத்து தேதி ஆச்சு, இன்னும் நாளு நாள்ல பொங்கல் வர்றது அதுனால அது முடிஞ்சிட்டு நல்ல நாள் பார்த்து நீங்க மிருதுளாவை உங்க ஆத்துக்கு பிரசவத்துக்கு கூட்டிண்டு போகலாம்”
“அதுக்கப்புறம் ஏன் நல்ல நாள் பார்க்கணும். பொங்கல் அன்னைக்கே மத்தியானம் வந்து கூட்டிண்டு வந்திடறோம்”
“அதுவும் சரிதான். என்ன பர்வதம் அவா சொல்லறதும் எனக்கு சரியா தான் படறது.. ஓகே தானே”
என்று சகோதரி கூறியது பர்வதத்திற்கு பிடிக்கவில்லை. அவள் மீண்டும் ஒரு டிராமாவுக்கு ஸ்க்ரிப்ட்டோடு காத்திருந்ததை அவளின் சகோதரியே கிழித்தெரிந்ததில் வருத்தம் கோபம் இருந்தாலும் சபையில் அவளால் காண்பிக்க முடியவில்லை ஆகையால் சரி என்று சம்மதித்தாள். உடனே அம்புஜம்
“அப்போ எல்லாம் நல்லபடியா பேசியாச்சு . அதுபடி நாங்க பொங்கல் அன்னைக்கு காலையில ராகு காலம் முடிஞ்சதும் வந்து எங்க மிருதுவ கூட்டுண்டு வந்திடறோம். ரமணிமாமி பேசாம நீங்களும் நாங்க மிருதுளாவை ஆத்துக்கு அழைச்சுண்டு வர வரும்போது பர்வதம் மாமி ஆத்துக்கே வந்திடுங்கோளேன்”
“ஓ! பேஷா வந்துடறேன். என்னடி பர்வதம் அப்போ இந்தப் பொங்கல் எங்களுக்கும் உங்காத்த தான் சரியா”
என்றதும் பர்வதத்திற்கு ஒன்றும் பேச முடியவில்லை. தலையை சரி என்று அசைத்தாள். அம்புஜம் மீண்டும் தாங்கள் கேவலப்படாமலிருக்க முன்னெச்சரிக்கையாக பர்வதத்தின் அக்கா ரமணியையும் அன்று வரச்சொல்லியிருக்கிறாள்.
மிருதுளா வீட்டார் அனைத்தையும் பேசி முடிவெடுத்ததும் மண்டபத்திலிருந்து கிளம்பி அவர்கள் வீட்டுக்குச் சென்றனர். நவீன் வீட்டாரும் புறப்பட்டனர். ஆனால் அவர்கள் வண்டியில் எடுத்து வைக்க வேண்டிய பெட்டியின் எண்ணிக்கை அதிகம் என்பதால் நவீன் மிருதுளாவை ரூமில் படுக்கச் சொல்லி பர்வதத்தையும் ஈஸ்வரனையும் அவளுக்கு துணையாக அமரச்சொல்லிவிட்டு தன் சகோதரன்களுடன் சேர்ந்து பெட்டிகளை எல்லாம் முதலில் மாடியிலிருந்து கீழே இறக்கிவைத்தான். பின் வண்டியில் ஏற்றினான். அந்த நேரத்தில் மிருதுளா சற்றுக் கண் அசந்தாள். அவளை அங்கேயே விட்டுவிட்டு நவீனுக்கே தெரியாமல் வண்டியில் ஏறி அமர்ந்துக் கொண்டனர் மூத்த தம்பதியர். இதற்கிடையில் மிருதுளா எழுந்துப் பார்த்தாள் மண்டபமே காலியாக இருந்தது. பதற்றமானாள். மெல்ல எழுந்து மாடியில் இருந்த எல்லா அறைகளிலும் பார்த்தாள். தன்னை விட்டுவிட்டுப் போய்விட்டார்களா என்று ஒரு நொடி யோசித்ததில் அவள் கண் கலங்கியது. உடனே
“மிருது மிருது” என நவீனின் குரல் கேட்டதும் கண்களைத் துடைத்துக் கொண்டு
“நவீ நான் இந்த ரூம்மில் இருக்கேன். இதோ வரேன்”
“உன்னை அங்க காணும்ன்னு பதறிப் போயிட்டேன்”
“நானும் தூங்கிட்டேன். எழுந்துப் பார்த்தா யாரையும் காணும் அதுதான் ஒவ்வொரு ரூமா தேடிண்டிருந்தேன். நீங்க வந்துட்டேங்கள். என்னை விட்டுட்டுப் போயிட்டேங்களோன்னு ஒரு செக்கனட் பயந்துட்டேன் தெரியுமா!”
“அது எப்படி நான் உன்னை விட்டுட்டுப் போவேன் மிருது. உன்னைப் பார்த்துக்கச் சொல்லி அவாளை உட்கார வச்சுட்டு வண்டியில பெட்டிகளை எல்லாம் ஏத்திட்டு சமையல் காராளுக்கு எக்ஸ்ட்ராவா ஒரு ஐநூறு ரூபாய் கொடுத்துட்டு வந்து பார்க்கறேன் அவா எல்லாரும் வண்டிக்குள்ள உட்கார்ந்திருக்கா!!! அப்போ உன்னை தேடினேன் நீ இருக்கலை!! எங்க நீன்னு கேட்டதுக்கு அவாளுக்கு தெரியாதுன்னு அலட்சியமா சொல்லிட்டு உட்கார்ந்திருந்தா!! அது தான் உடனே உன்னைத் தேடிண்டு வந்தேன். சரி படியில பார்த்து இறங்கு”
நவீனும் மிருதுளாவும் மெல்ல இறங்கி வந்து வண்டியில் ஏறினர். அப்போது பர்வதம்
“மேலேந்து கீழ வர்றதுக்கு இவ்வளவு நேரமா எடுத்துப்பா!! எவ்வளவு நேரம் வண்டிலயே காத்திருக்கறது”
அதை துளியும் பொருட்படுத்தவில்லை இளம் தம்பதியர். மாசமான பெண் என்று கூட பார்க்காமல் அவர்கள் இவ்வாறு செய்து அவர்களின் பாவ கணக்கில் இன்னுமொரு எண்ணைக் கூட்டிக் கொண்டனர் மூத்த தம்பதியர்.
தொடரும்….
அத்தியாயம் 63: மூன்றாம் பிரவேசம்
அம்புஜம் என்ன தான் சமாதானம் சொன்னாலும் அன்று இரவு முழுவதும் மிருதுளாவின் மனம் கலங்கியது. அவள் மனம் அவளிடம்…
ஏன் ஃபைலை எடுத்துச் சென்றார்? யாருக்கு காட்டுவதற்கு? அதை ஏன் மறைத்து எடுத்துச் செல்ல வேண்டும்? இதில் பர்வதம் ஈஸ்வரனின் சூழ்ச்சி ஏதாவது உள்ளதா? எதற்காக இருக்கும்?
என்று பல கேள்விகளை ஒன்றின் பின் ஒன்றாக கேட்டதில் அவளுக்கு உறக்கம் வரவில்லை. விடியலுக்காக காத்திருந்தாள். காலையில் சீக்கிரம் எழுந்து குளித்து தயாராகி நவீனின் வரவுக்காக காத்திருந்தாள். அப்படி அவள் காத்திருந்தபோது அம்புஜத்திடம்…
“அம்மா இப்போ நான் அங்க நவீன் கூட போனேன்னா மறுபடியும் இங்க வர்றதுக்கு அவா ரெண்டு பேரும் என்னை அசிங்கமா பேச மாட்டாளே!!”
“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது மிருது கவலைப் படாதே என்னதான் இருந்தாலும் அது உன் வீடு. என்னைக்கா இருந்தாலும் நீ அங்க தான் வாழ்ந்தாகணும். நீ நவீன் கூட போ வளைகாப்பு முடிஞ்சதும் உன்னை நாங்க எங்க கூடவே அழைச்சிண்டு வந்திடரோம் சரியா”
“இல்லம்மா எனக்கு அங்க போய் அவா முகத்தைப் பார்த்தாலே அவா பேசினதெல்லாம் ஞாபகம் வரும் அப்போ எப்படி அங்க சகஜமா இருக்க முடியும்?”
“அவா அப்படித் தான்னு மனசுல நினைச்சுக்கோ. நீ அவாளுக்காக அங்க போகலை உன் புருஷனுக்காக போறன்னு நெனச்சுண்டு போ. அதுவுமில்லாம தப்பு பண்ணினவா அவா நீயில்லையே!!! அவா பேசின பேச்சுக்கெல்லாம் அவா தான் உன்னை பார்க்க வெட்கப் படணும். ஆனால் அவா அப்படிப் பட்டவா கிடையாது அது உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும். அதை விட்டுவிடுவோம். உன்னை உன் ஆத்துக் காரர் கூட்டிண்டுப் போறார் நீ போற அவ்வளவு தான். சீமந்தம் வளைகாப்பு முடிஞ்சதும் நாங்க உன்னை எங்களோட கூட்டிண்டு வந்திடறோம். கவலைப் படாதே சரியா.
“சரி மா. ஆனா மறுபடியும் என்னைக் குத்தி குத்திப் பேசினானா!!”
“நீ கண்டுக்காதே. இப்படிப்பட்டவாகிட்ட நாம திருப்பிப் பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை. அப்படியே பேசினாலும் அவா பேச்சைத் திசைத் திருப்பி நம்மளையே அசிங்கப் படுத்தறா மாதிரி கத்து கத்துன்னு கத்துவா!! அதனால என்ன வேணும்னாலும் பேசிட்டுப் போட்டும் நீ காதுக் குடுத்துக் கூட கேட்காதே அதே சமயம் அவா பெரியவா அதுனால அதுக்கு தகுந்த மரியாதையை குடு. மத்ததை எல்லாம் அந்த அம்பாள் பார்த்துப்பா. சரியா.”
“ம்…ஓகே மா”
என்று வெளியே சென்னாலும் உள்ளுக்குள் அவர்கள் மீண்டும் ஒரு சண்டை போட்டிடுவார்களோ என்ற பயம் மிருதுளாவுக்கு இருக்கத் தான் செய்தது.
காலை ஒரு பதினோரு மணி அளவில் நவீன் வந்தான். அவன் வந்ததும் அவன் கையைப் பார்த்தாள் மிருதுளா. அவன் கொண்டுச் சென்ற ஃபைல் பேக் திருப்பி எடுத்து வந்திருந்தான். அந்த பையை எடுத்துச் சென்ற இடத்திலேயே மீண்டும் வைத்தான் நவீன். ஏன் எடுத்துச் சென்றான்? என்ற விவரங்கள் ஏதும் சொல்லவில்லை. பின் மிருதுளாவிடம்
“மிருது ஆர் யூ ரெடி? நாம கிளம்பலாமா”
“கிளம்பலாம் நவீ ஆனா நான் மறுபடியும் இங்கே வர்றதுக்கு உங்க அப்பா அம்மா கிட்ட அனாவசியமா தேவையில்லாத பேச்சுகள் வாங்க எனக்கு இஷ்டமில்லை. அதனால வளைகாப்பு முடிஞ்சதும் நீங்களே என்னை இங்க கொண்டு வந்து விட்டுட்டு தான் ஊருக்கு கிளம்பணும் அப்படின்னா நான் வர்றேன் இல்லாட்டி எனக்கும் என் குழந்தைக்கும் எதுவும் வேண்டாம். நாங்க இங்கேயே எந்த வித ஏச்சும், குத்தல் பேச்சும் இல்லாம நிம்மதியா இருந்திடறோம்.”
“யூ டோன்ட் வரி மிருது. போன தடவை மாதிரி இந்த தடவை அவாளை நம்பி தப்பு பண்ண மாட்டேன்.இந்த தடவை அவா உன்னை ஒண்ணும் சொல்லவும் மாட்டா நீ தைரியமா வரலாம்”
“ஓகே அப்போ கிளம்பலாம்”
“மணி ஆயிடுத்து இரண்டு பேரும் சாப்டுட்டே கிளம்பலாமே”
“சரி நாங்க ரெண்டு பேரும் சாப்டுட்டே கிளம்பறோம்”
“இதோ அஞ்சே நிமிஷம் மாப்ள எல்லாம் ரெடி. நீங்க ரெண்டு பேரும் உட்காருங்கோ நான் பறிமாறறேன்.”
“அம்மா நீயும் எங்க கூட உட்கார்ந்து சாப்பிடு மா மூணு பேருமா சாப்பிடலாம். அப்புறம் நீ மட்டும் தனியா உட்கார்ந்து சாப்பிடணும்”
“பரவாயில்லை மிருது. நான் அப்புறம் சாப்டுக்கறேன் நீங்க சாப்பிடுங்கோ”
என்று அம்புஜம் சாப்பாடு பரிமாற நவீனும் மிருதுளாவும் சாப்பிட்டனர். பின் இருவரும் புறப்பட்டனர். அப்போது அம்புஜம் நவீனிடம்
“பண்ணெண்டாம் தேதி மிருதுக்கு செக்கப் இருக்கு.”
“கவலை படாதீங்கோ நான் பதினான்காம் தேதி வரை லீவு போட்டிருக்கேன். நானே அவளை செக்கப்புக்கு கூட்டிண்டு வந்துடறேன்”
“ஹேய் நவீ ரியலீ!! சொல்லவே இல்லை”
“லீவு கிடைச்சுது வந்துட்டேன். ஆனா அப்புறம் இவ்வளவு நாள் கிடைக்குமான்னு தெரியாது. அதை அப்போ பார்த்துக் கொள்வோம். சரி கிளம்பலாமா?”
“ஓ எஸ் கிளம்பலாம். அம்மா நாங்க போயிட்டு வறோம் மா”
“நாங்க வறோம். மிருது அப்பாகிட்டயும் சொல்லிடுங்கோ”
இருவரும் ஆட்டோவில் ஏறி சென்றனர். அம்புஜம் மறுபடியும் அம்மன் படம் முன் நின்று தன் மகள் எந்தவித சிரமமுமின்றி வீட்டுக்கு வந்திடவேண்டும் என்று வேண்டிக் கொண்டாள்.
ராமானுஜமும் அம்புஜமும் நவீனிடம்…தங்கள் மகளை அவன் பெற்றோர் பேசியதையும் அதைக் கேட்கப் போண அவர்களை ஈஸ்வரன் பேசியப் பேச்சைப் பற்றியும் ஒன்றுமே கேட்கவில்லை. இவர்களின் இந்த குணம் மிருதுளாவிற்கு பலவீனமாகாதா? நவீனை இவர்கள் தட்டிக் கேட்டிருக்க வேண்டாமா?
ஆட்டோ பர்வதம் வீட்டு வாசலில் சென்று நின்றது. நவீன் ஆட்டோவிலிருந்து இறங்கி காசுக் கொடுத்து விட்டு மிருதுளாவை இறங்கச் சொன்னான். அவளும் இறங்கினாள். அவளுக்கு பழைய நினைவுகள் வந்து அடுத்த அடி எடுத்து வைக்கத் தயங்கினாள். நவீன் வீட்டின் கேட்டைத் திறந்து
“வா மிருது. ஏன் அங்கயே நிக்கற உள்ள வா”
என கூறியதும் விருப்பமில்லாமல் உள்ளே சென்றாள். ஈஸ்வரப்பர்வத கோட்டையில் மிருதுளாவின் மூன்றாவது பிரவேசம் இது.
அவளைப் பார்த்ததும் ஈஸ்வரன்
“வா வா”
என்று சொல்லிவிட்டு உள் ரூமிற்குள் சென்றார். பர்வதம் அது கூட சொல்லாமல் யாரோ வந்திருப்பது போல கண்டுக் கொள்ளாமல் படுத்திருந்தாள். மிருதுளாவுக்கு என்னச் செய்வது என்றே புரியாமல் நின்றிருந்தாள். ஏதோ வரக்கூடாத இடத்துக்கு வந்து மாட்டிக் கொண்டது போல அவள் மனம் படக் படக் படக் என்று அடித்தது. நவீன் அவளை அழைத்துக் கொண்டு மாடிக்குச் சென்றான். அங்கே அவளிடம்
“இங்க பாரு மிருது நீ இவாளோட இந்த டிரமாட்டிக் ஆக்ஷன்ஸை எல்லாம் கண்டுக்காதே. இன்னும் ஒரு அஞ்சு நாள் தானே. ஓகே வா”
“ம் ….ஓகே ….ஆனா நீங்க இன்னும்… ஏன் என் மெடிக்கல் ஃபைலை அங்கேருந்து எடுத்துண்டு வந்தேங்கள்ங்கறதை என்கிட்ட சொல்லவேயில்லையே!!! இப்பவாவது சொல்லுவேங்களா இல்லை அது சிதம்பர ரிகசியத்தைப் போல வச்சுக்கப் போறேளா?”
“ஹேய் மிருது அதில் அப்படி பெரிய விஷயம் ஒண்ணுமில்லை.”
“அப்போ கேட்டதும் சொல்லியிருக்கலாமே!! ஏன் சொல்லாமல் வந்தேங்கள்?”
“அப்போ நான் இரிட்டேட்ட்டா இருந்தேன் அதுனால எதுவும் சொல்லத் தோணலை அதுனால சொல்லலை”
“சரி இப்போவாவது சொல்லலாமில்லையா”
“இவா என்கிட்ட உன்னைப் பத்தி தப்புத்தப்பா சொன்னா. நீ ஏதோ உங்க அம்மா ஆத்துலேயே இருக்கறதுக்காக செக்கப்ன்னு பொய் சொல்லறதாவும் அதுக்கு உன் அம்மாவும் சேர்ந்துண்டு ரெண்டு பேருமா டிராமா போடறேங்கள்ன்னும் இன்னும் என்னென்னவோ சொன்னா அதை எல்லாம் கேட்டு நான் ரொம்ப இரிட்டேட் ஆகிட்டேன். அதுதான் அவாகிட்ட உன் ஃபைலை காமிச்சு அவா மூஞ்சில கறியப் பூசினேன். இதுக்குத் தான் அந்த ஃபைலை எடுத்துண்டு வந்தேன்”
“அப்படியா சொன்னா? சொல்லுவா சொல்லுவா அதுக்கு மேலேயும் சொல்லுவா இவா. சரி அவாதான் அப்படிக் கேட்டான்னா நீங்க ஏன் இப்படி செஞ்சேங்கள்? கேட்டவா கிட்ட திருப்பிக் கேட்க வேண்டியது தானே? நீங்க ஓழுங்கா பார்த்துண்டா அவ ஏன் அவ அம்மா ஆத்துக்குப் போகப் போறான்னு கேட்டிருக்க வேண்டியது தானே. அவா ரெண்டு பேரும் நடு ரோட்டில நின்னு பத்தாயிரம் ரூபாய் வாங்கிண்டுட்டு அதை அப்படியே உங்ககிட்ட இருந்து மறச்சாளோ அது மாதிரி எங்களை நினைச்சுண்டுட்டாளா? அதைப் பத்தி ஊர்லேந்து வந்ததும் கேட்டிருக்கணும்”
“மிருது உனக்குத் தான் அவாளைப் பத்தித் தெரியுமே. எது கேட்டாலும் ஒக்கே ஒக்கேன்னு கத்த ஆரம்பிச்சிடுவா. நாம சொல்லறதுக்கோ பேசறதுக்கோ அனுமதிச்சா தானே கேட்கவோ பேசவோ முடியும். இப்படிப்பட்டவாட்ட எவிடென்ஸோட ப்ரூவ் பண்ணினா வாயடச்சுப் போவா”
“இது நல்லா இருக்கே! அப்போ அவா என்ன வேணும்னாலும் பேசிக்கலாம், அநியாயம் பண்ணலாம், பழிப்போடலாம், பொய் சொல்லலாம் அதெல்லாம் தப்பில்லை ஆனா நாம நியாயமா ஏதாவது செய்தா அதை எவிடேன்ஸ் காட்டி நிருபிக்கணுமா? சூப்பர் நவீ! சூப்பர் !! இந்த கேவலமான காரியத்துக்கு நீங்களும் உடந்தை! பேஷ்!”
“அய்யோ மிருது உனக்கு எப்படிப் புரிய வைக்கறதுன்னு எனக்குத் தெரியலை. அவா பேச்சில இரிடேட் ஆகி தான் அப்படி செஞ்சேன். ஆம் சாரி ஃபார் தட்.”
“நீங்க என்ன சொன்னாலும் சரி என்னைப் பொறுத்த வரைக்கும் நீங்க செஞ்சது தப்பு. அவ்வளவு தப்புப் பண்ணிட்டும் கொஞ்சம் கூட பயமில்லாம அவா இவ்வளவு பேசறான்னா அதுக்கு நீங்க இப்படி அவாளை தட்டிக் கேட்காமல் குடுக்கிற இடம் தான் காரணம். அவா இனி திருந்தவே போறதில்லை.”
“நானும் அதுதான் சொல்லறேன் மிருது அவா திருந்தவே மாட்டா.”
“அவா திருந்தறா திருந்தாம போறா ஆனா நீங்க ஏன் அவாகிட்ட அவா செஞ்ச அட்டூழியங்களை பத்திக் கேட்கலை?”
“கேட்கலைன்னு உனக்கு எப்படித் தெரியும்? நான் கேட்டேன். வழக்கம் போல கத்தினா. நான் கேட்டும் பிரயோஜனமில்லாமல் போச்சு. அதுனால நான் பேசறதையே குறைச்சுண்டுட்டேன்.”
“என்னமோ போங்கோ! என்னமோ பண்ணுங்கோ.”
என்று கூறிக்கொண்டே படுத்திருந்தவள் உறங்கிப் போனாள். மாலை ஐந்து மணி ஆனதும் எழுந்து கீழே வந்து முகம் கை கால் அலம்பி விட்டு காபிப் போட அடுப்படிக்குச் சென்று இரண்டு காபிப் போட்டுக் கொண்டு ஹாலுக்கு வந்து ஒன்றை நவீனிடம் கொடுத்து விட்டு தன் காபி தம்பளருடன் கட்டிலில் அமர்ந்து காபியை அருந்தினாள் மிருதுளா.
நவீனும், மிருதுளாவும் ஹாலில் அமர்ந்திருந்தனர். குறுக்கும் நெடுக்குமாக ஈஸ்வரன், பவின், ப்ரவின் நடந்தனர் ஆனால் எவருமே இவர்களை கண்டுக் கொள்ளவில்லை. அப்படி இருவர் அமர்ந்திருப்பதே தெரியாதது போல நடந்துக் கொண்டனர். பர்வதம் வழக்கம் போல வாசலில் அக்கம் பக்கத்தினருடன் அரட்டை அடிக்க சென்று விட்டாள். இதை எல்லாம் பார்த்த மிருதுளா நவீனிடம் மெதுவாக
“இதுக்குத் தான் என்னை இங்கே கூட்டிண்டு வந்தேங்களா? ஏதோ யாரோ வீட்டில இருக்குற மாதிரி எனக்கு இருக்கு. எதுக்குடா இவா வந்தாங்குற மாதிரி அவா எல்லாரும் நடந்துக்கறத பார்த்தா எனக்கு கோபம் தான் வர்றது. ப்ளீஸ் வறேங்களா நாம வெளிய வாக்கிங் போயிட்டு வருவோம்”
“சரி போகலாம் வா”
என்று மிருதுளா நவீனைக் கூட்டிக்கொண்டு அந்த இறுக்கமான சூழலில் இருந்து சற்று நேரம் வெளியே செல்ல கிளம்பினர். அப்போதும் மிருதுளா ஈஸ்வரனிடமும் பர்வதத்திடமும் தாங்கள் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டுத் தான் சென்றாள்.
மிருதுளா அந்த வீட்டுக்கு திரும்பி வரவேண்டிய அவசியமே இல்லை ஏனெனில் ஈஸ்வரனும் பர்வதமும் மாசமான பெண்ணிற்கு வேண்டிய உணவளிக்காமலும், தூங்கவிடாமலும் துன்புறுத்தி, அம்மா வீட்டுக்குப் போக ஆசைப்பட்ட ஒரே காரணத்துக்காக அவளை அசிங்கப் படுத்திப் பேசி துரத்திவிடாத குறையாக வீட்டைவிட்டு அனுப்பினர் அன்று. நவீனும் அவன் பெற்றவர்களின் குணமறிந்து மிருதுளாவுக்கு பக்கபலமாக இருக்கிறான். இப்படி ஒரு சந்தர்ப்பம் திருமணமான பெண்ணிற்கு கிடைத்தால் முதலில் தன் புருஷனைக் கூட்டிக் கொண்டு வெளியேறிடுவாள். இல்லையெனில் ஒரு தென்றல் புயலாகி வருமே என்று புறப்பட்டிடுவாள். ஆனால் மிருதுளா இவ்விரண்டையுமே செய்யாமல் அனைத்தையும் தன் மனம் என்னும் பெட்டகத்திற்குள் போட்டு பூட்டி வைத்துக் கொண்டு பொறுமையாக இருந்தாள்.
சில நேரங்களில் சிலவற்றைப் பொறுத்துப் போவது வாழ்க்கையில் பல மாற்றங்களுக்கு வித்தாக அமைந்திடும். எப்போதும் எல்லாவற்றிற்கும் சண்டைப் போட்டால் அல்லது எதிர்த்துப் பேசினால், அதற்கு மரியாதை இல்லாமல் போய்விடும். அதற்காக பேசாமல் இருந்தாலும் மரியாதை இருக்காது. ஆகையால்
சொல்ல வேண்டியதைச் சொல்ல வேண்டியவர்களிடம், சொல்ல வேண்டிய நேரத்தில், சொல்ல வேண்டிய இடத்தில், சொல்ல வேண்டிய முறையில், சொன்னோமேயானால்
அதற்கு மரியாதை கிடைக்கிறதோ இல்லையோ ஆனால் நிச்சயம் அதற்கு பலன் கிடைக்கும்.
பொறுமைக்கு பூமாதேவியைச் சொல்வது வழக்கம் ஆனால் அந்த பூமா தேவியே தற்போது நாட்டிலும், வீட்டிலும் நடக்கும் அநியாயங்களைக் கண்டு பல ரூபங்களில் இயற்கைச் சீற்றங்களாக சீறவில்லையா? மிருதுளா சாதாரண பெண் அவளின் பொறுமைக்கும் எல்லை என்பது நிச்சயம் இருக்கும் ஆனால் அது எதுவரை? அவள் பொறுமையிழந்தால் என்ன நேர்ந்திடும்? எப்போது?
தொடரும்……
அத்தியாயம் 62: இரண்டு புடவை! ஒரு ஃபைல்!
ஈஸ்வரனும் பர்வதமும் ஆட்டோவில் ஏறிச் சென்றதும் மிருதுளா அம்புஜத்தை திரும்பிப் பார்த்து
“நான் தான் சொன்னேன் இல்லையா அவா இங்க வரவேண்டாம் நீங்களே போய் பத்திரிகையை கொடுத்துட்டு வாங்கோன்னு. இப்பப்பாரு நான் நினைச்சா மாதிரியே நடந்தது”
“இப்போ என்ன நடந்தது மிருது. நாங்க போய் குடுத்திருந்தாலும் அந்த மாமி நிச்சயம் இதை எல்லாம் பார்க்க நம்மாத்துக்கு வந்திருப்பா. அவா என்ன வேணும்னாலும் சொல்லட்டும் அந்த புடவையை அந்த மாமிக்கு கண்டிப்பா குடுக்கமாட்டேன். அது உனக்குத்தான். கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாம தனக்கு தரச் சொல்லி கேட்டதோடு மட்டுமில்லாமல் வெடுக்கென புடவையை எடுத்து வச்சிண்டுட்டா பாரேன்…அப்போ எனக்கு சரி கோபம் வந்தது. வளைகாப்புக்குன்னு ஒரு புடவை தன் மாட்டுப்பொண்ணுக்கு எடுத்துக் குடுக்கத் துப்பில்லை இதுல எங்க பொண்ணு வளைகாப்புக்கு அவ மாமியாருக்கு.. சம்மந்தி கறுப்புப் புடவை குடுக்கணுமாக்கும். இதெல்லாம் வேற எந்த ஆத்துலையும் நடக்காதது. நமக்குன்னு வந்து வாச்சிருக்கற சம்மந்தி லட்சணத்தை எங்க போய் சொல்ல “
“அம்மா…. இப்போ என் சீமந்தத்துக்கும் எனக்கு பிடிச்சப் புடவையை கட்ட விடாம பண்ணிட்டா பாரு இதுக்குத்தான் அப்பவே சொன்னேன். நீ சும்மா இருந்திருந்தா கூட பேசாம போயிருப்பா”
“நான் என்னடி பண்ணினேன்”
“ம்…சும்மா இல்லாம இந்த புடவை எங்க மிருதுக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சுன்னு எல்லாம் ஏன் சொன்ன? அதுதான் அதை எடுத்து வச்சிண்டுட்டா தெரியுமா!!! எனக்கு எந்த விதத்திலும் நல்லது நடக்கக்கூடாது நல்லது கிடைக்கக்கூடாதுங்கறதுல தெளிவா இருக்கா என் மாமியார். இப்போ அவ நினைச்சதை சாதிச்சிட்டா பாரு. ஏன் மா இப்படி இருக்க?”
“நீ ஏன் கவலை படறாய் மிருது. அவாளால இப்போ உனக்கு ரெண்டு புடவையாக போறது அவ்வளவு தானே!! நாளைக்கே போய் இன்னொரு கறுப்புப் புடவை வாங்கிண்டு வரேன்”
“அம்மா உனக்கு நான் சொல்லறது புரியலை!!! நீ இன்னொரு புடவை எடுத்துத்தந்தாலும் என்னால எனக்குப் பிடிச்ச இந்த புடவையை ஃபங்ஷனில் கட்டிக்க முடியாது இல்லையா!!! அதை சொல்லறேன்”
“எனக்கு அந்த மாமியோட கேரக்டர் புரியாம இல்லை மிருது. எங்கடா வம்பை கிளப்பி விடலாம்ன்னு அலையறா. அவாகிட்ட போய் மல்லுக்கு நிக்க நம்மளால முடியுமா சொல்லு. போனா போறது அப்போ கட்டிக்காட்டா என்ன வேறொரு நாள் கட்டிக்கோ இப்ப என்ன அதுனால!!”
“என்னமோ போ மா!!”
நடந்ததை அம்பஜம் ராமானுஜத்திடம் கூறினாள். அதைக் கேட்டதும் ராமானுஜம்
“செலவு இழுத்துண்டே போறது. பார்த்து எடுத்துண்டு வா. வேற வழி”
மறுநாள் விடிந்ததும் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு அம்புஜம் கடைவீதிக்குச் சென்று காட்டனில் கறுப்பு நிறப்புடவையில் பழுப்பு நிற பார்டரில் ஜரிகை எம்ப்ராய்டரி போட்டப் புடவையை எடுத்துக் கொண்டு வந்தாள். அன்று மாலை டீ குடித்துக்கொண்டே அதைப் பார்த்ததும் மிருதுளா
“இதையும் உன் சம்மந்தியைக் கூப்பிட்டுக் காமிக்க வேண்டியது தானே..நானே ஃபோன் போட்டுக் குடுக்கவா”
“ஒரு தடவைப் பட்டாச்சு இனி அந்த தப்பைப் பண்ணவே மாட்டேன்டி மா”
என்று பேசிக்கொண்டிருக்கும் போதே ஃபோன் பெல் அடித்தது. அம்புஜம் ஃபோனை எடுத்து..
“ஹலோ நான் அம்புஜம் பேசறேன்”
“ஹலோ மாமி நான் தான் பர்வதம் பேசறேன்.”
“ம்..மாமி நீங்களா சொல்லுங்கோ என்ன திடீர்னு ஃபோன் பண்ணிருக்கேள்?”
“அது ஒண்ணுமில்லை நீங்க அந்த புடவையை மாத்தியாச்சான்னு கேட்க தான் ஃபோன் பண்ணினேன்”
“இல்ல மாமி மாத்தலை ஆனா அதுக்கு பதிலா இன்னொரு கறுப்புப் புடவையை எடுத்துண்டு வந்துட்டேன்.”
“அப்போ அந்த புடவையை என்னப் பண்ணப்போறேங்கள்?”
“அதை யாருக்கும் கொடுக்க வேண்டாம்ன்னு மிருதுளாவையே வச்சுக்கச் சொல்லிட்டார் அவ அப்பா. இப்போ பாருங்கோ மிருதுக்கு இரண்டு புடவை ஆகிடுத்து.”
“அப்படியா சரி நான் ஃபோனை வச்சுடறேன்”
என்று பட்டென்று வைத்துவிட்டாள் பர்வதம். ஃபோன் கட் ஆனதும் அம்புஜம் மிருதுளாவைப் பார்த்து
“எப்படி சமாளிச்சேன் பார்த்தயா!!”
“ஆமாம் !ஆமாம்! போமா!!”
நாட்கள் ஓடியது. எட்டாம் தேதி வரவிருந்த நவீன் ஏழாம் தேதி இரவே வந்துவிட்டான். அது மிருதுளாவுக்கு தெரியாது. அவளுக்கு சர்ப்ரைஸாக இருக்கட்டுமென்று ஒரு நாள் முன்னதாகவே வந்துள்ளான். நவீன் குளித்துவிட்டு டிரஸ் மாற்றிக் கொண்டு கீழே ஹாலுக்கு வந்ததும் அமைதி நிலவியது. உணவருந்தினான் பின் மாடிக்குச் சென்று படுத்துறங்கினான். அவனும் அவர்களுடன் ஒன்றுமே பேசவில்லை. மறுநாள் விடிந்தது குளித்துவிட்டு வேகவேகமாக மிருதுளாவைப் பார்க்க கிளம்பிக் கொண்டிருந்தவனிடம்
“எங்களுக்கு உன்னுடன் பேசவேண்டும்”
என்று மூத்த தம்பதியர் கூற அதற்கு நவீன்
“நான் சாயந்தரம் வந்ததுக்கப்பறமா பேசினா போறாதா?”
“இல்லை இப்பவே பேச வேண்டும்”
சரி என்று பேசினான். பேசி முடித்ததும் குழப்பமும், கோபமும் கலந்த முகத்துடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.
மிருதுளா வீட்டுக்கு ஆட்டோவில் சென்று இறங்கினான். அம்புஜம் மாவுமில்லுக்கு செல்லவேண்டி வெளியே வந்தவள் நவீன் ஆட்டோவில் வந்திறங்குவதைப் பார்த்ததும்
“வாங்கோ வாங்கோ!! ஏய் மிருது உன் ஆத்துக் காரர் வந்திருக்கார் மா. உட்காருங்கோ. நான் காபிப் போட்டுக் கொண்டு வரேன்”
என்று கூறிவிட்டு காபி போட அடுப்படிக்குள் சென்றாள். மிருதுளா தன் பெருத்த வயிற்றுடன் நடந்து ஹாலுக்கு வந்தாள். நவீனை அன்று காலை எதிர்பாராத மிருதுளாவுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. சந்தோஷத்தில் அவளுக்கு நவீனிடம் என்னப் பேசவேண்டும் என்றே தெரியாமல் அவனைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள். அவள் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்துக் கொண்டே இருந்தது. அதைப் பார்த்த நவீன் அவளிடம்
“ஏய் என்ன ஆச்சு மிருது? ஏன் இப்போ அழற?”
“ஒண்ணுமில்லை நவீ”
“இந்தாங்கோ காபி எடுத்துக் கோங்கோ. மிருது நான் இந்த அரிசியை மிஷின்ல போய் பொடிச்சிண்டு வர்றேன். சமையல் எல்லாம் ரெடி. உனக்கு ஜூஸ் அன்ட் ஃப்ரூட்ஸ் எல்லாம் ஃப்ரிட்ஜில் வச்சிருக்கேன் எடுத்துக் குடி. “
என கூறி அங்கிருந்துச் சென்றாள் அம்புஜம். பின் நவீன் மிருதுளாவிடம்
“என்ன மிருது உன் வயிறு நான் ஊருக்குப் போகும் போது கூட இவ்வளவு பெரிசா இல்லை இப்போ என்னடான்னா இப்படி இருக்கு!”
“ம்…நம்ம குழந்தை வளர்ந்திருக்கான் இல்லையா!! அது தான் வயிறும் பெரிசா ஆகிருக்கு. சரி நீங்க எப்போ வந்தேங்கள்? என்கிட்ட இன்னைக்கு நைட் வரதா தானே சொன்னேங்கள் அப்பறம் எப்படி காலையில வந்திருக்கேங்கள்?”
“உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கத் தான். நான் நேத்து நைட்டே வந்துட்டேன். காலையில எழுந்ததுலேந்து உன்னைப் பார்க்கத்தான் வேக வேகமா கிளம்பி வந்தேன். ஆமா நீங்க எல்லாம் எங்க கிளம்பியிருக்கேங்கள்?”
“அம்மா மில்லுக்குப் போயிட்டு வந்ததும் சாப்டுட்டு ஹாஸ்பிடலுக்கு ரெகுலர் செக்கப்க்கு போகணும் அது தான் ரெண்டு பேரும் ரெடி ஆகியிருக்கோம்”
“ஓ!! அப்படியா அப்போ இன்னைக்கு செக்கப்க்கு நானே உன்னை கூட்டிண்டு போறேன்”
“ஓகே! அம்மாக்கும் கொஞ்சம் ரெஸ்ட் குடுத்தா மாதிரி இருக்கும். பாவம் எனக்காக என்னென்ன பண்ணறா தெரியுமா?சரி அதெல்லாம் விடுங்கோ. ஆமாம் நீங்க ஊருக்குப் போகும் போது உங்க அப்பாகிட்ட என்னைக் கொண்டு போய் எங்தாத்துல விடச் சொன்னேங்களா இல்லையா? உண்மையச் சொல்லுங்கோ”
“நான் சொன்னேன் மிருது. சொன்னதுக்கு சரின்னும் அப்பா சொன்னார். அதுக்கப்புறம் தான் உன்கிட்ட நான் தயாரா இருன்னு சொல்லிட்டுக் கிளம்பினேன் தெரியுமா”
“அப்பறம் ஏன் உங்க அப்பா நீங்க அப்படி எதுவுமே சொல்லிட்டு போகலைன்னு சொன்னா? நீங்க சொல்லறது உண்மையா இல்லை உங்க அப்பா சொல்லறது உண்மையா?”
“நான் சத்தியமா சொல்லிட்டுத்தான் கிளம்பினேன் அவா தான் தேவையில்லாம பிரச்சினை பண்ணனும்னு அப்படி செய்திருக்கா. அதுக்கு நான் நல்லா சொல்லி விட்டுட்டேன். அதை எல்லாம் விடு மிருது. இங்கே நீ நிம்மதியா இருக்கே இல்ல அது போறும்.”
“எங்க இருக்க விடறா உங்க அம்மா. நீங்க ஊருக்கு போனதுக்கப்புறம் இரண்டு தடவை வந்தா ஆனா என்னைப் பார்க்க வரலை அவா காரியத்துக்காக தான் வந்தா. சிறப்பா செஞ்சுட்டுப் போனா…சரி சரி அம்மா வந்துட்டா…இதைப் பத்தி அப்புறமா பேசலாம்..வா மா”
“இன்னைக்கு மாவு மில்லுல கூட்டம் ஜாஸ்தியா இருந்தது அது தான் லேட். சரி ஜூஸ் குடிச்சயா?”
“சாரி மா நவீ கூட பேசிண்டு இருந்ததுல மறந்துட்டேன்.”
“இரு எடுத்துண்டு வரேன்”
என்று கூறிக் கொண்டே உள்ளே சென்று ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து வந்து தன் மகளிடம் கொடுத்தாள். பின் நவீனிடம்
“எப்படி இருக்கேங்கள்? சாரி… மில்லுல கூட்டம் அதிகமாயிடும்ன்னு தான் அப்போவே கிளம்பி போயிட்டேன். நீங்க இன்னைக்கு நைட் வரதா தானே மிருது சொன்னா.”
“இல்ல நான் நேத்து நைட்டே வந்துட்டேன். அது தான் காலையிலேயே கிளம்பி இங்கே வந்துட்டேன்”
“சரி சரி நீங்களும் ஜூஸ் குடிக்கறேங்களா தரட்டுமா?”
“இல்ல இல்ல இப்போ தானே காபி குடிச்சேன் ஜூஸ் எல்லாம் இப்போ வேண்டாம்”
“அம்மா இன்னைக்கு செக்கப்க்கு நவீன் கூட்டிண்டு போறேன்னு சொல்லறார்”
“பேஷா ரெண்டு பேரும் சாப்டுட்டு போயிட்டு வாங்கோ. நான் அதுக்குள்ள சாயந்தரத்துக்கு டிபன் ஏதாவது செய்து வைக்கிறேன். வாங்கோ சாப்பிடலாம்”
என்று கூறிக்கொண்டே சாப்பாடு பரிமாறினாள் அம்புஜம். நவீனும் மிருதுளாவும் சாப்பிட்டப் பின் ஹாஸ்பிடல் போக கிளம்பினர் அப்போது அம்புஜம்
“மிருது உன் ஃபைல் எடுத்துண்டுட்டயா மா.”
“ஓ !! இதோ எடுத்துண்டுட்டேன் மா. நாங்க போயிட்டு வரோம்”
என்று ஆட்டோவில் ஏறினர் நவீனும், மிருதுளாவும். ஹாஸ்பிடல் சென்றுக் கொண்டிருக்கும் போது நவீன்
“இது என்ன ஃபைல் மிருது?”
“இதுல தான் என்னோட ஃபர்ஸ்ட் டே செக்கப்லேந்து எல்லா டிட்டேய்ல்ஸும் இருக்கு அது மட்டுமில்லாமல் இன்னைக்கு பண்ணப்போற செக்கப் ரிசல்ட்டையும் இதுல அட்டாச் பண்ணித்தருவா. இதை எடுத்துண்டு போகலைன்னா டாக்டர் செக்கப் பண்ணமாட்டா. நானும் அம்மாவும் ஒரு தடவை மறந்து ஆத்துலேயே வச்சுட்டு ஹாஸ்பிடல் போயிட்டோம் அப்புறம் அம்மா மட்டும் மறுபடியும் வந்து ஃபைலை எடுத்துண்டு வந்தா. அப்புறம் தான் டாக்டர் செக்கப்பே பண்ணினா தெரியுமா?”
“மேடம் ஹாஸ்பிடல் வந்திருச்சு”
“அங் தாங்க்ஸ் அண்ணா. நவீ காசு கொடுங்கோ”
ஆட்டோ காரருக்கு காசு கொடுத்துட்டு ஹாஸ்பிடலுக்குள் சென்று ரெகுலர் செக்கப் முடிந்ததும் மிருதுளா கையிலிருந்த ஃபைலை நவீன் வாங்கி தன்னுடன் வைத்துக் கொண்டான். மீண்டும் ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்தனர். அம்புஜம் சுடச்சுட பஜ்ஜீ, அல்வா எல்லாம் செய்து வைத்திருந்தாள். வேனுவும், ராமானுஜமும் வந்தனர். அனைவரும் அமர்ந்து டிபனை சாப்பிட்டனர். அப்போது ராமானுஜம் நவீனிடம்
“இங்கே தானே இன்னைக்கு இருப்பேங்கள்?”
“இல்ல நான் கிளம்பணும் நாளைக்கு காலையில வந்து மிருதுவைக் கூட்டிண்டுப் போறேன்.”
“என்னத்துக்கு வீணா அங்கயும் இங்கயுமா அலைஞ்சிண்டு பேசாம இங்கயே இருந்துட்டு நாளைக்கு காலையில ரெண்டு பேருமா கிளம்புங்கோ”
“அது தானே!! அப்படியே செய்வோமே நவீ”
“இல்ல மிருது நான் என் ஃப்ரெண்டை பார்க்கப் போகணும் அதுதான்.”
“சரி சரி போயிட்டு வாங்கோ மாப்ள பரவாயில்லை”
“சரி நான் கிளம்பறேன். மிருது ஒரு கவரோ பேக்கோ தாயேன்”
“எதுக்கு நவீ”
“நீ தாயேன் ப்ளீஸ்”
மிருதுளா ஒரு பாலித்தீன் கவர் கொடுத்தாள். அதில் நவீன் ஹாஸ்பிடலில் இருந்தே தன் கையில் வைத்திருந்த ஃபைலைப் போட்டுக் கொண்டு கிளம்பினான். அதை கவனித்த மிருதுளா அவனிடம்
“என்னது அது என் மெடிக்ல் ஃபைலை எதுக்கு எடுத்துண்டு போறேங்கள்?”
“அது அது வந்து…”
“என்ன நவீ எனி ப்ராப்ளம் அகேயின்?”
“இல்ல மிருது நான் இதை இன்னிக்கு மட்டும் எடுத்துண்டு போயிட்டு நாளைக்கு வரும்போது கொண்டு வந்துடறேனே”
“நவீ இதை வச்சு என்னப் பண்ணப் போறேங்கள். அதுவுமில்லாமல் அதுல இருந்து ஏதாவது பேப்பர் தொலைஞ்சுதுன்னா டாக்டர் என்னைத் திட்டுவா.”
“நான் பத்திரமா திருப்பிக் கொண்டு வரேன். பை நான் கிளம்பறேன்”
என்று வேகவேகமாக அங்கிருந்து நவீன் கிளம்பிய விதம் மிருதுளாவிற்கு மனதில் ஏதோ தப்பா இருப்பதுப் போல தோன்றியது. நவீன் சென்றதும் கவலையாக இருந்த தன் மகளிடம் அம்புஜம்…
“மிருது ஏன் மா டல்லா இருக்க?”
“ஒண்ணுமில்லை மா”
“இல்ல நீ மாப்ள வந்துட்டுப் போனதிலிருந்து சரியில்லை. என்ன மறுபடியும் உன் மாமியார் காரி ஏதாவது பிரச்சினைக்கு வலை விரிச்சிட்டாளா?”
“இல்லமா.. அவர் என்னோட மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் இருக்குற ஃபைலை எடுத்துண்டு போயிருக்கார். அது ஏன்னு கேட்டதுக்கு …சம்மந்தமே இல்லாத பதில் சொல்லிட்டு அவசர அவசரமா புறப்பட்டுப் போயிட்டார்.”
“அது என்னத்துக்கு அவருக்கு? ஏதாவது ஆபிஸ்ல சப்மிட் பண்ணணுமா?”
“இல்லையே!!! அப்படி ஒண்ணும் எனக்குத் தெரிஞ்சு இல்லை. எனக்கென்னவோ இதுக்குப் பின்னாடி ஏதோ பெரிய பிரச்சினை இருக்கும்ன்னு தோணறது மா”
“இதோ பாரு மிருது பிரச்சினை வந்தா பார்த்துப்போம். அதுக்காக பிரச்சினை வந்திட போறதோன்னு நினைச்சுண்டு உன் உடம்பைக் கெடுத்துக்காதே. புரியறதா”
“ம்…ஓகே!”
என்று மிருதுளா தன் அம்மாவிடம் கூறினாலும் அவள் மனதில் ஏதோ தவறு நடக்கப் போகிறது என்ற எண்ணமே ஆக்கிரமித்திருந்தது.
அம்புஜம் அவர்கள் வீட்டில் மாட்டியிருந்த அம்மன் படத்தைப் பார்த்துக்கொண்டே தன் மனதில்
“அம்மா தாயே அந்த ஜெயேந்திரன் மாமா சொன்னது போலவே நடக்கறதே!! அந்த பர்வதம் மாமி எங்க பொண்ணை நிம்மதியா இருக்க விட மாட்டா போல இருக்கே!! அம்மா! தேவி! தாயே! நான் உன்னை நம்பித் தான் கள்ளம், கபடம், சூது, வாது இல்லாத என் பொண்ணை அந்த பையனுக்கு கட்டிக் கொடுத்தேன். என் பொண்ணு படற வேதனையை என்னால பார்க்க முடியலைமா!! ஏதாவது செய்து அவளுக்கு அமைதியான நிம்மதியான, வாழ்க்கையை குடும்மா தாயே.”
ராமானுஜத்தின் அலுவலகத்தில் வேலைப் பார்க்கும், பர்வதம் வாடகைக்கு இருந்த வீட்டின் பக்கத்து வீட்டில் குடியிருந்தவருமான நண்பர் ஜெயேந்திரன் மிருதுளா திருமணத்திற்கு முன் அவர்கள் வீட்டுக்கு வந்து சொன்னது இப்போது நடப்பவைகளுக்கு பொருத்தமாக உள்ளது. அவர் கூறியது போலவே பர்வதம் தன் மகன் மருமகளின் நிம்மதியை ஏதாவது ஒன்று மாற்றி ஒன்று செய்து குலைப்பதிலேயே குறியாக இருப்பது நடப்பதை எல்லாம் பார்த்தாலே புரிகிறதே!
தொடரும்……
அத்தியாயம் 61: விடாது ஆசை!
ராமானுஜமும் அம்புஜமும் அவர்கள் டி.வி.எஸ் 50 யில் நவீன் வீட்டிற்குச் சென்றனர். அவர்கள் வீட்டு வாசலில் வண்டியை நிப்பாட்டி விட்டு கேட்டு வரைச் சென்றதும் அதை திறக்க சற்று யோசித்தார் ராமானுஜம். அதை கவனித்த அம்புஜம்
“இவ்வளவு தூரம் வந்துட்டோம் உள்ளே போறதுக்கு என்னத்துக்கு யோசிக்கறேங்கள். நாம பொண்ணப் பெத்தவா… வேற வழி! வாங்கோ”
என்று கேட்டைத் திறந்தாள். உடனே உள்ளேயிருந்து பர்வதம் எட்டிப் பார்த்து
“வாங்கோ வாங்கோ. உள்ளே வாங்கோ என்று வரவேற்றாள்”
அதைப் பார்த்ததும் மிருதுளா பெற்றவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. பர்வதம் யாரை வரவேற்கிறாள் என்று எட்டிப் பார்த்த ஈஸ்வரனும் வாய் முழுவதும் சிரிப்புடன் வரவேற்க ராமானுஜமும் அம்புஜமும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
இது தான் சாமர்த்தியவாதிகளின் இயல்பு. ஆம் இங்கு அன்று அசிங்கப்பட்டு அவமானப்பட்டு போனது மிருதுளாவின் பெற்றவர்கள் அதனால் அவர்களால் சகஜமாக பழக முடியாமல் தடுத்தது அவர்களின் வேதனையும், அவமானமும் ஆனால் அவமானப்படுத்தி அசிங்கப்படுத்திய ஈஸ்வரன் பர்வதம் இருவரும் ஒன்றுமே நடக்காதது போல வரவேற்றனர்.
அடித்தவனை விட அடி வாங்கியவனுக்குத்தானே வலி அதிமாக இருக்கும். அடித்தவனுக்கு சிரிக்க சொல்லியா கொடுக்க வேண்டும். மீண்டும் அடுத்தவர் உணர்வுகளை நாக்கு என்னும் சாட்டைக் கொண்டு விலாசி விளையாட ஆள் கிடைத்து விட்டனர் என்ற மகிழ்ச்சியின் வெளிபாடு என்பது பேச ஆரம்பித்தால் தானாக தெரிந்துவிடும். இது போன்றவர்கள் நாக்கு என்னும் ஒரு நச்சுயிரியை வைத்து அப்படியும் இப்படியுமாக பேசி எப்படியும் வாழ்வார்கள். ஆகையால் இவர்கள் நடந்தவைகளை மறந்தது போலவே நடந்துக்கொள்வதில் கெட்டிக்காரர்கள். இது போன்றவர்கள் அவர்கள் தவறுகளை உணர்வதென்பது என்றுமே நடந்திடாது ஒன்றாகும். இப்படிப்பட்டவர்களிடமிருந்து விலகி வாழ்வதே நல்லது.
அந்த காலத்தில் பெண்ணைப் பெற்றவர்கள் அனைவரும் கடந்து வந்த பாதையே அது. ராமானுஜமும் அம்புஜமும் ஏதோ தவறிழைத்தைப் போல தயங்கி தயங்கி தங்கள் மகளின் சீமந்தத்தைப் பற்றி பேச்சை ஆரம்பித்தனர். அதைக் கேட்டதும் ஈஸ்வரன்
“ஓ!! ஆமாம் அது வேற இருக்கு இல்ல? எப்போ வர்றது?”
என்று திமிராக கேட்க அதற்கு ராமானுஜம் பொறுமையாக
“அடுத்த வாரம் பத்தாம் தேதி நல்ல நாள்ன்னு குறிச்சுக் குடுத்திருக்கா. அது தான் அதைப் பத்தி உங்க கிட்ட பேசிட்டுப் போகலாம்ன்னு வந்திருக்கோம்”
“பேஷா பண்ணிடலாம். பத்திரிகை எனக்கு தெரிஞ்ச ப்ரஸ் ஒண்ணு இருக்கு அங்கே குடுத்திடுங்கோ. பத்திரிகை எழுதி வாங்கியாச்சா?”
“இதோ இருக்கு நீங்க படிச்சுட்டு எல்லாம் சரியான்னு சொல்லுங்கோ ப்ரிண்ட்டுக்கு கொடுத்திடலாம்”
என்று ராமானுஜம் ஒரு பேப்பரை ஈஸ்வரனிடம் கொடுத்தார். அதை வாங்கிப் படித்த ஈஸ்வரன் எல்லாம் சரியா இருக்குன்னு சொல்லும் போது பர்வதம் குறுக்கிட்டு
“பதினோரு நாள் தானே இருக்கு. எப்படி எல்லாருக்கும் பத்திரிகை போய் சேரும்?”
“கவலை வேண்டாம் மாமி நாம ஸ்பீடு போஸ்ட்ல அனுப்பிடலாம்”
என்றாள் அம்புஜம்.
ஈஸ்வரனும் பர்வதமும் செய்ய வேண்டியதை ராமானுஜமும் அம்புஜமும் செய்கிறார்களே என்ற எந்த வித கூச்சமும் இன்றி கேள்வி மேல கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தனர் மூத்த தம்பதியர். இடையிலே பர்வதம் அடுப்படிச் சென்று காபி போட்டு வந்து அவர்களிடம் கொடுத்துக் கொண்டே
“உங்க பொண்ணுக்கு கறுப்புப் புடவை எடுக்கணும் மறந்திடாதீங்கோ”
என்றாள். அதற்கு அம்புஜம்
“நிச்சயமா எடுப்போம் மாமி. அது மட்டுமில்லாமல் சீமந்தத்துக்கு பட்டுப் புடவையும் எடுக்கப் போறோம்”
என்றதும் கப்சிப் ஆனாள் பர்வதம். பின் ஈஸ்வரன்
“நவீனுக்கு சொல்லணுமே.”
“நாங்க நேத்தே மாப்பிள்ளைகிட்ட சொல்லியாச்சு அவரும் லீவு போட்டு வரேன்னு சொன்னார்.”
என்று அம்புஜம் தான் பேசியதை எதார்த்தமாக கூறியதும் பர்வதம்
“அப்போ எல்லாம் டிசைட் பண்ணிட்டு தான் எங்ககிட்ட ஒப்புக்கு சொல்ல வந்தேங்களாக்கும்”
“அச்சச்சோ மாமி….. ஆக்சுவலா இதை நீங்க தான் ஏற்பாடு பண்ணணும் அதுதான் நம்ம வழக்கம் ஆனா உங்ககிட்ட இருந்து எந்த வித தகவலும் வராததால தான் நாங்க பேச்சை ஆரம்பிக்க வேண்டியதா ஆயிடுத்து. ரெண்டு சைடும் பேசாம இருந்தா அப்புறம் ஒன்பதாம் மாசம் ஆரம்பிச்சுடும் அதுனால தான் வந்தோம்”
“நாங்க பண்ணணும்னு எங்களுக்கும் தெரியும் அதுக்கு உங்க பொண்ணு இங்க இருந்திருக்கணும்”
என மனசாட்சி இல்லாமல் கூறினாள் பர்வதம் அதைக் கேட்டதும்
“இங்கேயே நீங்க நல்லா பார்த்திண்டிருந்தா எங்களுக்கு ஏன் இந்த வீண் அலைச்சல் எல்லாம் சொல்லுங்கோ. இங்கேயிருந்து மிருது எங்காத்துக்கு வந்தப்போ அவளோட ஹெச் பி வெரும் எட்டு தான் இருந்தது டாக்டர் என்னைப் பிடிச்சுத் திட்டினா இப்போ பதிமூணு இருக்கு. இதுக்கு என்ன சொல்லறேங்கள்? மாமி பேசணும்னா நிறைய பேசலாம் ஆனா இப்போ நாங்க மிருதுவோட சீமந்தம் வளைகாப்பு பத்திதான் பேச வந்திருக்கோம் வேற எதுக்காகவும் நாங்க வரலை”
என்று மனதிலிருந்த ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தாள் அம்புஜம்.
“ஆமாம் !ஆமாம்! உங்க பொண்ணுக்கு முன்னாடியே என்னப் பிரச்சினை இருந்ததோ அதுனால கூட அப்படி ஆகிருக்கலாம் ஆனா பழியை எங்க மேல போட்டுப் பேசறேங்கள்?”
தங்கள் மருமகள் எப்படி இருக்கிறாள் என்று பேச்சுக்குக் கூட ஒரு வார்த்தைக் கேட்க தோன்றிடாத மூத்த தம்பதியர் பிரச்சினை பண்ணுவதற்காகவே பேசுவது போல தோன்றியதும் ராமானுஜம்
“சரி மாமா நீங்க சொன்ன ப்ரிண்டிங் ப்ரஸ்லேயே பத்திரிகை ப்ரிண்ட் பண்ண குடுத்துடறோம். பத்திரிகை வந்ததும் எடுத்துண்டு வந்து குடுக்கறோம். எனக்கு மத்தியானம் ஷிஃப்ட் இருக்கு இப்பவே மணி பண்ணண்டு ஆயிடுத்து அதுனால நாங்க உத்தரவு வாங்கிக்கறோம். கிளம்பலாமா அம்புஜம்”
என பிரச்சினையை வளரவிடாமல் வெட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள் ராமானுஜமும் அம்புஜமும். வண்டியில் வீட்டுக்கு வரும் வழியில் அம்புஜம் பின்னால் உட்கார்ந்துக் கொண்டு
“அந்த மாமிக்கு என்ன திமிரு பாருங்கோ!! இன்னமும் ஏதோ நம்ம பொண்ண நல்லா பார்த்துண்டா மாதிரியே பேசறா!!! தப்பெல்லாம் அவா பண்ணிட்டு நாம பண்ணினா மாதிரி என்ன அழகா பேசறா அவா ரெண்டு பேரும்.”
“சரி சரி நீ ஒழுங்கா பிடிச்சுண்டு உட்காரு. ஆடாதே. அவா அப்படி தான்னு உன்கிட்ட சொன்னேன் இல்லையா. பேசாம வா”
இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். ராமானுஜம் மத்திய சாப்பாடு சாப்பிட்டதும் கிளம்பி வேலைக்கு சென்றுவிட்டார். அம்புஜம் சீமந்தம் வளைகாப்புக்கு வேண்டிய சாமான்கள் லிஸ்ட் போட்டாள்.
மறுநாள் காலை அம்புஜம் காலை டிபன் மத்திய சாப்பாடு எல்லாம் தயார் செய்ததோடு மகளுக்கு வேண்டிய பழங்கள் நறுக்கி வைத்தாள், ஜுஸ் பிழிந்து ஃப்ரிட்ஜில் வைத்தாள். பின் இருவரும் நல்ல நேரம் பார்த்து ஈஸ்வரன் சொன்ன ப்ரஸுக்கு சென்று பத்திரிகை அடிக்க கொடுத்து எப்போது கிடைக்கும் என கேட்டனர். அன்று மாலை ஒரு ஆறு மணிக்கு தயாராகிவிடும் என்றும் இரவு எட்டு மணிக்குள் எப்போது வேண்டுமானாலும் வந்து வாங்கிக் கொல்லலாம் என்றும் கூறினார் ப்ரஸ் ஓனர். சரி என்று சொல்லிவிட்டு இருவரும் சீமந்தத்திற்கு மண்டபம் பார்த்து அட்வான்ஸ் கொடுத்து விட்டு, தாம்பூலத்துடன் குடுப்பதற்கு டப்பா ஒரு ஐம்பது வாங்கிக் கொண்டு ஆட்டோவில் பஸ்டாண்டு வரை வந்து பின் பஸ்ஸில் வீடு வந்து சேர்ந்தனர். அன்றும் மத்திய உணவருந்தியதும் வேலைக்குச் சென்றார் ராமானுஜம்.
அன்று மாலை அம்புஜமும் மிருதுளாவும் ஒரு கார் வைத்துக் கொண்டு டவுனுக்குச் சென்றனர். அந்த ப்ரிண்டிங் ப்ரஸிலிருந்து ப்ரிண்ட் பண்ணின பத்திரிகைகளை வாங்கி காரில் வைத்துவிட்டு வளையல் கடைக்குள் நுழைந்தனர். அங்கே அம்புஜம்
“மிருது உனக்கு பிடிச்ச கண்ணாடி வளையல்களை நீ செலக்ட் பண்ணு நான் ஃபங்ஷனுக்கு வர பொண்டுகளுக்கெல்லாம் வளை வாங்கறேன்”
“சரி மா”
என்று இருவரும் அவர்கள் வாங்கிய வளையல்கள் அடங்கிய அட்டைப் பெட்டியை அந்த கடைப் பையனையே தூக்கிக் கொண்டு வந்து காரில் வைத்து தரும்படி கேட்டுக்கொண்டனர். அந்த பையனும் காரில் வைத்துவிட்டு சென்றான். இருவரும் காரில் ஏறி அந்த டவுனிலிருந்த பெரிய ஜவுளி கடைமுன் இறங்கிக் கொண்டு வண்டியை ஓரமாக நிப்பாட்டச் சொல்லிவிட்டு கடையினுள் சென்றனர்.
அங்கே ஒரு கறுப்புப் புடவையில் மெல்லிய கோல்டு நூலில் எம்ப்ராய்டரி போட்டு அழகான புடவையைப் பார்த்ததும் மிருதுளாவுக்கு மிகவும் பிடித்துப்போக தன் அம்மாவிடம் அதை வாங்கச் சொன்னாள். அதன் விலையைப் பார்த்த அம்புஜம் …
“மிருது அப்பா என்கிட்ட மூவாயிரத்துக்கு பட்டுப்புடவையும், ஆயிரத்துக்குள்ள கறுப்புப் புடவையும் தான் எடுக்கச் சொல்லி பணம் குடுத்தணுப்பியிருக்காடி. இந்த புடவையே ஆயிரத்தி எண்ணூறுன்னு போட்டிருக்கே அப்போ எப்படி பட்டுப் புடவை எடுக்கறது?”
“அம்மா எனக்கு இந்த புடவை ரொம்ப பிடிச்சிருக்கு மா. இதையே எடுத்துக்கறேன். பட்டுப் புடவையையும் இதே ரேஞ்சில் எடுத்தா அப்பா குடுத்த பணத்துக்குள்ள அடங்கிடும்மா. நான் அதுக்கு தகுந்தா மாதிரி எடுத்துக்கறேன் போதுமா?”
“சரி சரி இந்த புடவை அழகா தான் இருக்கு …. எடுத்துக்கோ”
என்று கூறி மிருதுளாவுக்கு பிடித்த கறுப்பு நிறப் புடவையையும் இரண்டாயிரம் ரேஞ்சில் ஒரு பட்டுப் புடவையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்து மிருதுளாவுக்கு மிகவும் பிடித்த ஹோட்டலுக்கு டின்னர் சாப்பிடச் சென்றனர். அங்கே வேனு கூறியது போலவே காலேஜ் முடித்துவிட்டு லாப் அடெண்ட் பண்ணிவிட்டு நேராக அந்த ஹோட்டலுக்கு வந்து காத்திருந்தான். மூவரும் அமர்ந்து இரவு உணவருந்திவிட்டு காரில் வீடு வந்து சேர்ந்த கொஞ்ச நேரத்தில் எல்லாம் ராமானுஜமும் அவர் ஷிஃப்ட் முடிந்து வீடு வந்தார். அனைவருமாக அமர்ந்து வாங்கி வந்ததை எல்லாம் பார்த்தனர். அம்புஜம் ஒரு பேப்பரில் கணக்குப் போட்டு மீதிப் பணத்தை ராமானுஜத்திடம் கொடுத்து
“எல்லா செலவும் இதோ இந்த பேப்பர்ல எழுதியிருக்கேன். இந்தாங்கோ மீதிப் பணம். நாளைக்கு காலை ல நாம சம்மந்தி ஆத்துக்கு போய் அவாளுக்கு வேண்டியப் பத்திரிகையைக் குடுத்துட்டு வருவோம் என்ன சொல்லறேங்கள்?”
“முதல்ல நாளைக்கு அவாகிட்ட ஃபோன்ல பேசு எல்லாம் வாங்கியாச்சுன்னு சொல்லு அப்புறம் பத்திரிகை எவ்வளவு வேணும் அதை கொண்டு வந்து தரோம்ன்னு சொல்லு அவாளே கிளம்பி இங்கே வந்து பத்திரிகையை வாங்கிண்டு போவா வேணும்னா பாரு இது நிச்சயம் நடக்கும்”
“அது எப்படி நடக்கும்?”
“நீ நான் சொன்னா மாதிரி பண்ணு அப்புறம் நடக்கறதா இல்லையான்னு பார்த்துக்கலாம்”
“இல்ல… அதையும் ஏதாவது சண்டையா மாத்திடப் போறா!! பேசாம போய் கொடுத்துட்டு வந்திடுவோமே எவ்வளவு நேரமாக போறது?”
“நீ நான் சொன்னா மாதிரியே ஃபோனில் சொல்லு போறும் எல்லாம் ஆட்டோமேட்டிக்கா நடக்கும்”
“என்னமோ சொல்லறேங்கள் நானும் அதுபடி பண்ணறேன் பார்ப்போம் நடக்கறதான்னு!!!”
மறுநாள் விடிந்ததும் அவரவர் அவரவர்கள் வேலைகளில் மூழ்கினர். அம்புஜம் தன் வீட்டு வேலைகளை எல்லாம் முடித்ததும் ராமானுஜம் சொன்னது போலவே ஃபோன் போட்டு பர்வதத்திடம் சொல்லி எப்ப வரலாம் என்று கேட்க அதற்கு பர்வதம்
“புடவை எல்லாம் எடுத்தாச்சா?”
“எல்லாம் ஆச்சு மாமி நேத்து ஒரு கார் வச்சுண்டு போய் வாங்கிண்டு வந்துட்டோம். மிருதுக்கு ஒரு மூணு பவுன்ல தங்க வளை வாங்கிருக்கேன்”
“சரி நீங்க தான் ரெண்டு மூணு நாளா வெளியே போயிண்டும் வந்திண்டும் இருக்கேங்களே. கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கோ. சாப்டுட்டு நாங்களே அங்க வரோம். வந்து பத்திரிகையை வாங்கினா மாதிரியும் இருக்கும் அப்படியே நீங்க வாங்கினதெல்லாத்தையும் பார்த்தா மாதிரியும் இருக்கும் இல்லையா. என்ன நான் சொல்லறது?”
அம்புஜத்துக்கு ராமானுஜம் சொன்னதின் அர்த்தம் புரிந்ததும் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு.
“ஆங் …அதுவும் சரி தான் மாமி நீங்களே வாங்கோ. சரி மீதியை நேர்ல பேசிக்கலாமே ஃபோனை வச்சுடவா”
“ஆங் சரி வச்சுடுங்கோ நாங்க ரெண்டு பேருமா ஒரு மூணு மணிக்கு வரோம்”
என்று ஃபோனை துண்டித்ததும் அம்புஜம் மிருதுளாவிடம் நடந்ததைக் கூறி சிரித்தாள். அதற்கு மிருதுளா
“அம்மா அவா இங்க வர்றதே நாம வாங்கி இருக்கிற பொருட்களை எல்லாம் பார்க்கத் தான். பார்த்துட்டு சும்மா இருப்பான்னு மட்டும் நினைக்காதே!! நிச்சயம் ஏதாவது ஒரு குறை சொல்லுவா”
“குறை சொல்லறா மாதிரி நாங்க ஒண்ணுமே பண்ணலையே. எல்லாம் நிறைவா தானே பண்ணறோம்”
“என் கல்யாண கூறப் புடவையை கூட என் இஷ்டதத்துக்கு எடுக்க விடலை அவா…நீ வேணும்னா பாரு இங்க வந்தா ஏதாவது நொட்டு சொல்லத்தான் போறா”
“சரி சரி வா நாம ரெண்டு பேரும் சாப்பிடுவோம். அப்புறம் நான் கிட்சனை ஒதுக்கி வைக்கணும்.”
கடிகாரத்தில் மணி மூன்று அடித்தது. மிருதுளாவுக்கு அவள் வயிற்றில் மணி அடித்தது போல இருந்தது. ஏனெனில் பர்வதம் ஈஸ்வரன் வர போற நேரம் ஆனது. மூன்றரை மணிக்கு வீட்டு முன் ஆட்டோ வந்தது. மிருதுளா ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள் ஆட்டோவிலிருந்து ஈஸ்வரனும் பர்வதமும் இறங்கி கேட்டைத் திறந்து வந்தனர். அம்புஜம் அவர்களை வரவேற்று ஹாலில் அமர வைத்து தண்ணீர் கொண்டு வந்துக் கொடுத்தாள். மெல்ல மிருதுளா நடந்து ஹாலுக்கு வந்து
“வாங்கோ மா வாங்கோ பா”
என்று சொன்னாள். அதற்கு அவர்கள் தங்கள் தலையை மட்டும் ஆட்டினர். வேறெதுவும் பேசவில்லை. அம்புஜம் அவர்கள் வாங்கிய பொருட்களை எல்லாம் கொண்டு வந்து அவர்கள் முன் அடுக்கி வைத்தாள். அப்போது ஈஸ்வரன்
“அன்னைக்கு பத்திரிகை ப்ரூஃப் பார்க்க ஒரு பேப்பர் தங்தேங்கள் இல்லையா அதில் மண்டபம் பெயர் இருக்கலையே”
“ஆமாம் மாமா அப்போ ரெண்டு மண்டத்துல விசாரிச்சிருந்தோம் எதுன்னு முடிவு பண்ணலை அதுனால அதுல எழுதலை. இதோ இந்தாங்கோ பத்திரிகை. உங்களுக்கு எவ்வளவு வேணுமோ எடுத்துக் கோங்கோ”
பத்திரிகையை வாங்கிப் படித்த ஈஸ்வரன்
“இந்த மண்டபமா? இது ரொம்ப சின்னதா இருக்குமே? கொஞ்சம் பெரிய மண்டபம் பார்த்திருக்கலாம்”
“இல்ல… மாப்ள கிட்ட கேட்டோம் அவர் சொன்ன ரேஞ்சுக்கு இந்த மண்டபம் தான் கிடைச்சுது. இதுவும் நல்ல மண்டபம் தான் சென்ட்டரான ஏரியால இருக்கு. பஸ்டாண்டும் பக்கத்திலயே இருக்கு”
“சரி மாமி நீங்க எடுத்தப் புடவையை காமிங்கோ”
“இதோ இது தான் நாங்க மிருது வளைகாப்புக்கு எடுத்த தங்க வளையல்”
“நல்லா இருக்கு !! ஆனா மூணு பவுனுக்கு இது ரொம்ப மெலீசா இல்ல?”
“நான் தான் அப்படி இருக்கட்டும்ன்னு எடுக்கச் சொன்னேன் மாமி. அங்க மூணு பவுனுக்கெல்லாம் பட்ட பட்டையா பார்க்க ஆறு பவுனு மாதிரி எல்லாம் வளையல்கள் இருந்தது ஆனா அதெல்லாம் டெய்லி வேர்க்கு சரிவராது நெளிஞ்சுடும். அதுனால தான் மெலீசா இருந்தாலும் நல்லா கெட்டியா இருக்கட்டும்ன்னு இதை மிருதுகிட்ட வாங்கிக்க சொன்னேன். இதோ இந்த ரெண்டுப் புடவையும் தான் மிருதுக்கு எடுத்திருக்கேன். இது பட்டுப் புடவை, இது மசக்கைப் புடவை”
என்று கூறி இரண்டு புடவைகளையும் பர்வதத்திடம் கொடுத்தாள் அம்புஜம். அதைப் பிரித்துப் பார்த்த பர்வதம்.
“இதென்ன கறுப்புப் புடவை? இதுல கோல்டு கலர்ல லைன் எல்லாம் இருக்கே? வெரும் கறுப்புப் புடவைன்னா எடுக்கணும்!!”
“அது எப்படி மாமி வெரும் கறுப்புப் புடவை நல்லா இருக்காதே!!! இதுல லைட்டா தானே லைன்ஸ் இருக்கு அதுவுமில்லாம எங்க மிருதுக்கு இந்தப் புடவை ரொம்ப பிடிச்சிப் போச்சு பரவாயில்லை மாமி”
“இல்லை இல்லை ஃபுல் கறுப்புப் புடவை தான் எடுக்கணும் பார்டர் ல வேணும்னா லைட்டா ஏதாவது வேற கலர் இருக்கலாம் ஆனா இந்த புடவையை மசக்கப் புடவைன்னு சொல்லவே முடியாது”
“அச்சோ மாமி இதோட விலை ஆயிரத்தி எண்ணூறு ரூபாய். நாங்க பில்லையும் தூக்கிப்போட்டுட்டோம். இப்போ மாத்தவும் முடியாதே….அப்போ வேறொரு புடவை தான் மறுபடியும் எடுக்கணும்”
“அதுனால என்ன சுறுக்க டவுன் போய் எடுத்துண்டு வந்திடுங்கோ!! ஃபங்ஷனுக்கு இன்னும் அஞ்சு நாள் இருக்கே!!”
“அதுக்கில்ல !!அப்போ!!! எடுத்த இந்தப் புடவையை என்னப் பண்ணறது?”
“அதை எனக்குத் தந்திடுங்கோ”
என்று பர்வதம் கண் அடித்துக் கொண்டே அந்தப் புடவையை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டாள். அதைப் பார்த்ததும் மிருதுளாவுக்கு கோபம் வந்தது. அம்புஜம் தன் மகளுக்கு மிகவும் பிடித்துப் போனதால் எடுத்தப் புடவை என்று சொல்லியும் தனக்கு தரும்படி கேட்டதுடன் நிற்காமல் வெடுக்கென்று அந்த புடவையை பர்வதம் எடுத்துக்கொண்டது அம்புஜத்திற்கும் ஆத்திரம் வரவழைத்தது. உடனே சுதாரித்துக் கொண்டு
“இல்ல மாமி எங்களுக்கு ஏகப்பட்ட செலவாயிடுத்து இப்போ இன்னொரு புடவை எடுக்கணும்னு சொன்னா மிருது அப்பா என்ன சொல்லுவாறோ தெரியாது. அதுனால இந்த புடவையை எடுத்த கடையிலேயே குடுத்து மாத்திக்க முடியுமான்னு பார்க்கணும் அதுதான் யோசிக்கறேன்”
“நீங்க தான் பில்லை தூக்கிப் போட்டுட்டேங்களே அப்புறம் எப்படி கடைக்காரன் மாத்துவான்?”
“இல்லை நேத்து தானே எடுத்தோம். கொண்டு போய் கேட்டுப் பார்க்கறோம் அப்படி மாத்திக்க மாட்டோம்ன்னு சொன்னா அப்புறம் என்ன பண்ணலாம்ன்னு பார்ப்போம்.”
என்று மெல்ல அந்த புடவையை பர்வதத்திடமிருந்து வாங்கினாள் அம்புஜம். பின் அனைத்தையும் அடுக்கி எடுத்து வைத்து விட்டு, அவர்கள் இருவருக்கும் காபிப் போட்டு ஒரு தட்டில் மிக்ஸ்சரும் ஒரு ஜாங்கிரியும் வைத்துக் கொண்டு வந்து கொடுத்தாள். அவர்களும் சாப்பிட்டு காபிக் குடித்துவிட்டு வேண்டிய பத்திரிகைகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். அப்போது தாம்பூலத்தில் ஒரு புடவையும் ப்ளௌஸ் பிட்டும் வைத்து பர்வதத்திடம் கொடுத்தாள் அம்புஜம். பர்வதம் அதை வாங்கிக்கொண்டே…
“என்னத்துக்கு புடவை எல்லாம் வச்சுத் தறேங்கள்? குங்குமமே போதுமே!”
“அதுக்கில்லை மாமி நீங்க புடவைக் கேட்டும் கொடுக்காமல் அணுப்ப எனக்கு மனசு வரலை. அதுதான்… எடுத்துக்கோங்கோ”
“அப்படின்னா அந்த கறுப்புப் புடவையையே கொடுத்திருக்கலாமே”
பர்வதம் அந்த புடவை மீதே குறியாக இருந்தாள். அதற்கு அம்புஜம்
“இல்லை இல்லை மாமி கொடுத்திருக்கலாம் ஆனால் சுமங்கலிக்கு எப்படி கறுப்புப் புடவையை தாம்பூலத்துல வச்சு தர்றது சொல்லுங்கோ”
“ம்… சரி சரி…அப்போ நாங்க கிளம்பறோம்.”
என்று அந்த புடவை கிடைக்காததால் அரை மனதுடன் அங்கிருந்து புறப்பட்டாள் பர்வதம். இதற்கு என்ன பிரதிபலிப்பு இருக்கப் போகிறதோ பொறுத்திருந்து தான் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
ஆசை இருக்கலாம் அதில் தவறில்லை
பேராசை இருந்தால் அது எதையும் பார்ப்பதில்லை.
மிருதுளா வேகமாக ஆட்டோ ஸ்டாண்டுக்கு ஃபோன் போட்டு அவர்கள் செல்வதற்கு ஆட்டோவை சீக்கிரம் வரவழைத்தாள். இருவரும் அதில் ஏறி புறப்பட்டுச் சென்றனர்.
அவர்கள் சென்றதும் அம்புஜத்தை திரும்பிப் பார்த்தாள் மிருதுளா…
தொடரும்……