
“உண்மையை உரக்கச் சொல்!”
என்கிறார்கள்.
உரக்கச் சொன்னதும்,
“பேசத் தெரியாதவர்!”
என்கிறார்கள்.
பொய்யிலே தேன் குழைத்து,
சொல்லுக்குச் சொல் இனிக்கப் பேசி,
சிலர் பிழைக்கிறார்கள்.
தேனீ கொட்டும்வரை,
அந்தத் தித்திப்பே உண்மையென்று
சிலர் தேனில் திளைக்கிறார்கள்.
சொல்லின் சுவையைத் தாண்டி,
சொல்பவரின் நோக்கத்தைப் பார்த்தால்…
காரியம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று எண்ணுபவர்,
கேட்பவருக்குக் கசந்தாலும்
உண்மையைச் சொல்வார்.
எப்படியாவது தன் காரியம் நடக்க வேண்டும் என்று எண்ணுபவர்,
கேட்பவருக்கு இனிக்கும்படி
பொய்யில் தேன் கலந்து சொல்வார்.
– நா. பார்வதி
#சொல்லின்சுவை #உண்மையும்பொய்யும் #சிந்திக்கசிலவரிகள் #Maisaaral #pesummai #thigazhyatheatre