பொய்யிலே தேன் குழைத்து, சொல்லுக்குச் சொல் இனிக்கப் பேசி, சிலர் பிழைக்கிறார்கள். தேனீ கொட்டும்வரை, அந்தத் தித்திப்பே உண்மையென்று சிலர் தேனில் திளைக்கிறார்கள்.
சொல்லின் சுவையைத் தாண்டி, சொல்பவரின் நோக்கத்தைப் பார்த்தால்…
காரியம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று எண்ணுபவர், கேட்பவருக்குக் கசந்தாலும் உண்மையைச் சொல்வார்.
எப்படியாவது தன் காரியம் நடக்க வேண்டும் என்று எண்ணுபவர், கேட்பவருக்கு இனிக்கும்படி பொய்யில் தேன் கலந்து சொல்வார். – நா. பார்வதி #சொல்லின்சுவை #உண்மையும்பொய்யும் #சிந்திக்கசிலவரிகள் #Maisaaral #pesummai #thigazhyatheatre
எலிகள் வாழ்ந்து வந்த ஒரு வீட்டில், பல ஆண்டுகளாக ஒரு பூனை ஆட்சி செய்து வந்தது. சில அதிருப்திகள் இருந்தாலும்,
“இது தான் நிலைத்தன்மை… குறை இருந்தாலும் பழக்கமான பூனை ஆட்சியே நல்லது!”
நல்லது பத்து கெட்டது நாலுன்னு கணக்கு கூட்டி கழிச்சு பார்த்ததுல… பூனை ஆட்சியே தேவலாம் என்று சில எலிகள் தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டிருந்தன.
ஆனால் காலம் மாறியதும்,
“மாற்றம் வேண்டும்!” என்ற கோஷம் எழுப்பப்பட்டது.
உடனே பலவற்றை ஆராய்ந்து பேச்சுவார்த்தையை மேற்கொண்ட எலிகள்,
“பூனை ஆட்சி முடிவுக்கு வரவேண்டும்!”
“ஒவ்வொரு எலிக்கும் பாதுகாப்பு வேண்டும்!”
“கஷ்டப்படாமல் இஷ்டம் போல் இலவச தீனி – எப்போதும் வேண்டும்!”
அப்போது எல்லா எலிகளும் ஒரு புதிய ஆசையை பகிர்ந்து கொண்டன:
“பூனை வேண்டாம் ஆனால் ஒரு புதிய அமைப்பு வேண்டும்! பூனைக்கு எலிப்பொறியே தேவலாம்!”
என்று சொல்லி முடித்ததும்…அந்த நேரம் பார்த்து, அவற்றின் கிரக தேவதை,
“ததாஸ்து!”
என்றவுடன், பூனை மறைந்து, அதன் இடத்தில்… பளபளக்கும் பெரிய எலிப்பொறி தோன்றியது. அதன் வாயிலில் ஒரு பெரிய வடையும் ஜொலித்தது.
அதைப் பார்த்த எலிகள் மகிழ்ச்சியில் ஆடிப்போயின:
“மாற்றம் வந்துவிட்டது!”
“ஆசை நிறைவேறி விட்டது!”
“பாதுகாப்பும் + சாப்பாடும்! ஆஹா டபுள் பெனிபிட்!”
என்று கொண்டாடிக் கொண்டு கூட்டமாக ஓடின.
அடுத்த கணம் “டக்!”, எல்லா எலிகளும் பொறியில் சிக்கிக் கொண்டன.
அப்போது தான் உண்மை புரிந்தது:
“அய்யோ! பூனை இருந்தபோது ஓடிச்செல்ல வாய்ப்பு இருந்தது…”
“ஆனால் இப்போது! இருந்த இடத்தில் இருந்துக்கொண்டே நம்மை காவு வாங்கும் இந்த பொறிக்குள் அதன் பளபளப்பை மட்டுமே பார்த்து! வடைக்கு ஆசைப்பட்டு…நாமே வந்து மாட்டிக் கொண்டுவிட்டோமே!” என்று.
அந்த நேரத்தில் கிரக தேவதை தோன்றி சிரித்தபடி சொன்னாள்:
“நீங்கள் கேட்டது மாற்றம் தான்… நல்ல மாற்றமா கெட்ட மாற்றமா என்று கேட்கவே இல்லை. பூனைக்கு பதில் பொறி கேட்டீர்கள். கேட்டதை தந்தோம். தேர்வு உங்களுடையது. விளைவும் உங்களுக்கே.”
அவள் மறைந்ததும், பொறிக்குள் அகப்பட்ட அனைத்து எலிகளும் செய்வதறியாது அமைதியாக இருந்தன. சில மணி நேரம் கழித்து, ஒரு எலி மெதுவாக சொன்னது:
தவறு என்பது தெரியாமல் செய்வது தப்பு என்பது தெரிந்து செய்வது தவறு செய்தவன் திருந்த வேண்டும் தப்பு செய்தவன் வருந்த வேண்டும் அவ்வாறு திருந்தவோ /வருந்தவோ செய்யாது செய்த தவற்றை/ தப்பை எவரேனும் எடுத்துரைக்கும் போது அதை நியாயப் படுத்த பல யுக்திகளை கையாள்வது தன்னை தானே ஏமாற்றிக் கொள்வதற்கு சமமாகும் மீண்டும் அதே தவறு/தப்பு தொடர்ந்திடும்.
மனிதனாய் பார்த்து திருந்தாவிட்டால் /வருந்தாவிட்டால் தப்பும்/தவறும் தாண்டவம் ஆடும்🛑
அன்று வினாயகர் சதுர்த்தி. பாட்டி வள்ளியம்மை சுறுசுறுப்பாக பூஜைக்கு வேண்டிய கொழுக்கட்டை, வடை எல்லாம் செய்து கொண்டிருந்தார்.
மருமகள் ராணி வினாயகரை அலங்காரம் செய்து பின் சுவற்றில் ஹாப்பி பெர்த்டே அஞ்சு என்று ஒரு சுவரொட்டியை ஒட்டினாள். அன்று பாட்டியின் மூன்று வயது செல்லக்குட்டி பேத்தி அஞ்சனாவின் பிறந்தநாளுமாகும்.
ராணி: அம்மா அடுக்களையில் உங்கள் வேலை முடிந்ததா? நான் அஞ்சுக்கு கேக் பேக் பண்ணணும்…
ஆச்சு என்று சொல்லிக்கொண்டே செய்ததை எல்லாம் வினாயகருக்கு முன் வைத்து தனது கணவர், மகன், மருமகள், பேத்தி அஞ்சனா அனைவரையும் பூஜைக்கு அழைத்தார். பூஜை சிறப்பாக முடிந்தது.
அஞ்சனா: இதெல்லாம் என்ன பாட்டி?
பாட்டி: இன்னைக்கு பிள்ளையாருக்கும் பெர்த்டே ஆச்சே. மூத்த கடவுள் இல்லையா…அதனால இது பிள்ளையாருக்கு பூர்ணக்கொழுக்கட்டை, பிடிகொழுக்கட்டை அப்பறம் வடை.
ராணி : கேக் தயார். அஞ்சுமா கேக்கை வெட்ட வா மா.
எழுந்து வராமல் வருத்தமாக அமர்ந்திருந்தாள் அஞ்சனா. அனைவரும் ஏன் என்ன ஆச்சு என்று வினவினர்.
அஞ்சனா: பாட்டி நான் உன் கூட டூ!
பாட்டி: நான் என்ன செய்தேன் கண்ணா? ஏன் என் கூட அஞ்சுமா டூ விடரா?
அஞ்சனா: பி ஃபார் பிள்ளையார் ரைட்டா?
பாட்டி : சரிதான்.
அஞ்சனா: அ ஃபார் அஞ்சனா ரைட்டா?
பாட்டி : ரைட்டுதான்.
அஞ்சனா : பிள்ளையாருக்கு பூர்ணக்கொழுக்கட்டையும், பிடிகொழுக்கட்டையும், வடையும் செய்திருக்க பாட்டி அப்போ எனக்கு மட்டும் ஏன் கேக்?
பாட்டி: என் அஞ்சனா குட்டிக்கு வேற என்ன வேணும் சொல்லு உடனே செய்து தரேன்.
அஞ்சனா: எனக்கு ஆறின கொழுக்கட்டை யும், அடி கொழுக்கட்டையும் அன்ட்..அன்ட் அடையும் வேணும்.
அனைவரும் சிரித்தார்கள். பாட்டிக்கும் சிரிப்பு அடக்கமுடியலை ..ஆனாலும் அடுக்களைக்குள் சென்று தட்டு ஒன்றில் ஆறிப்போன பூரணக்கொழுக்கட்டையும், பிடிக்கொழுக்கட்டையை இரண்டாக வெட்டி அதில் ஒரு பாதியையும், வடையை நன்றாக கைகளினால் நசுக்கி அடைப்போல செய்து எடுத்து வந்து ….
பாட்டி: அ ஃபார் அஞ்சனா குட்டிக்கு பாட்டி செய்த ஆறின கொழுக்கட்டை, அடி கொழுக்கட்டை அன்ட் அடை தயார் ஆ காமி…
அஞ்சனா : சூப்பர் பாட்டி.
என்று உண்டு பின் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்கள்.
பிள்ளைகள் எப்பொழுது எதை கேட்ப்பார்கள் என்பது எவராலும் கணிக்க முடியாத ஒன்றாகும். ஆனால் அதை அழகாக குழந்தை மனம் கோணாமல் லாவகமாக கையாண்டு சாபாஷ் வாங்குவதில் பாட்டிகளை மிஞ்ச யாரும் இல்லை.
“அந்த வேலைகள் எல்லாம் இதுகிட்ட பலிக்குமா? கமிஷன் கேட்க வாயை திறந்ததும் வாயிக்குள்ளே போய் குரவலைல அது ஸ்டிக்கர் மாதிரி ஒட்டிக்கொண்டுதுனா அப்பறம் பிரித்தெடுக்கவே முடியாது”
“இத இப்படியும் சொல்லலாமில்ல சார்”
“எப்படி?”
“ஸ்டிக்கர் ஒட்டினவர்களுக்கு ஸ்டிக்கராலேயே அழிவு னு”
“ஹா ஹா ஹா !!!! சரி வண்டிய அப்படி லெஃப்ட் ல நிறுத்துப்பா. நான் இறங்கும் இடம் வந்துடுச்சு. நன்றி தம்பி உன் கூட பேசிட்டு வந்ததில் ஆட்டோ பயணத்தில் ஆடாமல் வந்ததுபோல இருந்தது”