திறமையும் துணையும்

திறமை தன் வலிமையை அறியும்,
துணை நின்றவர்களின் அருமையையும் உணரும்.
தனித்தே வீரநடை போடவும் அதற்குத் தெரியும்.
துணையோடு நடந்தால் இன்னும் வெகுதூரம்
செல்லலாம் என்பதையும் நன்கறியும்.

அதனால், திறமை துணை வேண்டிக் கரம் நீட்டும்போது,
அந்தக் கரத்தைப் பற்றிய சிலர்,
எல்லாம் தங்களால்தான் என்றும்,
தாங்கள் இல்லையென்றால் இந்தப் பயணமே
சாத்தியமாகியிருக்காது என்றும் எண்ணிவிடுகிறார்கள்.

அந்த எண்ணம் அவர்களின்
குரலிலும் செயலிலும் வெளிப்படும்போது,
உறவில் மரியாதை குறைகிறது.
கைகோர்த்தவர்களுக்கிடையே
மெல்ல ஓர் இடைவெளி உருவாகிறது..

உதவி செய்தவர் மனத்தில் பணிவும்,
உதவி பெற்றவர் மனத்தில் நன்றியும்,
இருவரின் பேச்சிலும் செயலிலும் மரியாதையும் இருந்தால்,
வெற்றி வந்த பிறகும்
கைகோர்த்த உறவு நிலைக்கும்.
– நா. பார்வதி
#Maisaaral #PesumMai #ThigazhyaTheatre #பணிவும்_நன்றியும் #பரஸ்பரமரியாதை #கூட்டுமுயற்சி #தமிழ்சிந்தனைகள்

Leave a Reply