இரவு முழுவதும் வலி வந்து வந்து போக தூங்க முடியாமல் சிரமப்பட்டாள் மிருதுளா. டெலிவரிக்கு முன்  நவீனை ஒரு முறையாவது பார்த்துவிடமாட்டோமா என்ற ஏக்கம் அவளை வாட்டியது. இது எல்லாப் பெண்களுக்கும் வரக்கூடிய எண்ணமே. அதுவும் முதல் பிரசவம் என்பது மறுபிறப்பு போன்றதாயிற்றே. இதற்கிடையில் அவள் கண்முன் இரண்டு கர்ப்பிணிகள் வலியில் துடிப்பதையும், டாக்டர்கள் அங்கும் இங்குமாக நடந்துக் கொண்டே ஒரு பெண்ணிற்கு அபார்ட் ஆகிடிச்சு என்று பேசிக்கொண்டதையும் கேட்டதில் மிருதுளாவுக்கு பயம் அதிகமானது. பயம் அதிகமானதில் அவளின் இரத்தக் கொதிப்பும் அதிகரித்தது. அன்றிரவு சீக்கரம் கடந்து விடாதா என்ற எண்ணம் அவளை வாட்டியது. காலை ஆறு மணியானது மிருதுளாவுக்கு பிரசவம் பார்க்கும் டாக்டர் வந்தார். அவர்கள் மிருதுளாவிடம் சென்று


“என்னமா மிருதுளா? என்ன? நல்லா ஏசி ல அம்மாவும் பிள்ளையும் கம்முன்னு இருக்கீங்க. நேத்து உன் குழந்தை உள்ளேயிருந்து வெளிய வந்திடும் என்று பார்த்தா உன் வயித்துக் குள்ளயே சொகுசா இருக்குன்னு பேசாம இருகிறதோ? உங்க அம்புஜம் பாட்டி என்னடான்னா காலையில அஞ்சு மணிலேந்து கிரிக்கெட் ரன்னிங் கமெண்ட்ரி கேட்குறா மாதிரி என்னைப் பார்த்தாலே ஓடி வந்து கேட்குறாங்க!!!ஏய் குட்டி போதும் உன் அம்மா வயித்துல இருந்தது வா வா.”

என்று அவளின் வயிற்றை செல்லமாக தட்டி குழந்தையை அழைத்தார் டாக்டர். அதைப் பார்த்ததும் மிருதுளாவுக்கு சரிப்பு வர அதற்கு டாக்டர்

“உங்க அம்மாவுக்கு சிரிப்பப் பாருடா!!”

என மிருதுளாவுக்கு பிபி செக்கப் செய்தார். இரத்தக் கொதிப்பு நூற்றி எழுபதைத் தாண்டியது. உடனே டாக்டர் நர்ஸிடம் ஏதோ சொல்லிவிட்டு வெளியே வந்து அம்புஜத்தைக் கூப்பிட்டார். அவர் கூப்பிட்டதும் அம்புஜம், ராமானுஜம், நவீன், வேனு நால்வரும் சென்றனர். அவர்களிடம்

“மிருதுளாவுக்கு பிபி ரொம்ப ஹையா இருக்கு. ஒன் செவன்டியைத் தாண்டிடுச்சு. இனியும் காத்திருப்பது குழந்தைக்கும் தாயிக்கும் நல்லதில்லை. ஸோ சிசேரியன் பண்ணவேண்டியிருக்கலாம்ன்னு சொல்லிக்கறேன். பேயின் வரதுக்கு இன்ஜெக்ஷன் போட்டிருக்கேன். எனிவே இன்னும் ஒரு இரண்டு மணிநேரம் வெயிட் பண்ணிப் பார்ப்போம் அப்பவும் பிபி குறையாம பேயினும் வராம இருந்ததுனா அப்பறம் நமக்கு நோ அதர் ஆப்ஷன். இதை எக்ஸ்ப்ளேயின் பண்ணத் தான் உங்களை வரச்சொன்னேன். வலி வந்தாலும் சரி வராட்டாலும் சரி இதே பிபி ரீடிங் இருந்ததுன்னா நிச்சயம் எட்டு மணிக்கு ஆப்ரேஷன் செய்திடுவோம். எதற்கும் தயாராக இருங்க ப்ளீஸ்”

“டாக்டர் நான் மிருதுளாவைப் பார்க்கலாமா?” என்று நவீன் கேட்டான்

“இல்லை இப்போ அவங்களை அங்கிருந்து ஷிஃப்ட் பண்ண மாட்டோம். ஸப்போஸ் ஆப்ரேட் பண்ணணும்னு இருந்தா அவங்களை இந்த வழியே தான் ஆப்ரேஷன் தியேட்டருக்குக்  கூட்டிட்டுப் போவாங்க அப்போ நீங்க பார்க்கலாம்”

“தாங்கஸ் டாக்டர்”

என்னதான் முந்தின நாள் விட்டுவிட்டுச் சென்றாலும் நவீனின் மனதும் மிருதுளாவின் மனம் போலவே தன் மனைவியை ஒரு முறையாவது பார்த்திட மாட்டோமா என்றேங்கியது. ராமானுஜம் நவீனிடமும் வேனுவிடமும்..

“இந்தாங்கோ சாவி நீங்க ரெண்டு பேரும் ஆத்துக்குப் போய் குளிச்சுட்டு வாங்கோ. அதுதான் இரண்டு மணிநேரமாகும்ன்னு டாக்டர் சொல்லறாளே. இங்கே நாங்க ரெண்டு பேரும் இருக்கோம்”

இரவு முழுவதும் நவீனும், வேனுவும் ஹாஸ்பிடலிலேயே இருந்ததால் அவர்கள் வேகமாக வீட்டுக்குச் சென்றனர். இருவரும் குளித்து ரெடியாகிய பின் அருகில் இருந்த ஹோட்டலுக்குச் சென்று காலை உணவருந்திவிட்டு அம்புஜத்திற்கும் ராமானுஜத்திற்கும் வாங்கிக் கொண்டு  ஹாஸ்பிடல் சென்றனர்.

அம்புஜம் தனக்கு எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டு ஒரு பென்ச்சில் அமர்ந்து கண்களை மூடி அம்மனிடம் தன் பொண்ணும், பேரக் குழந்தையும் நல்லபடியா இருக்கணும்ன்னு வேண்டுக்கொண்டே இருந்தாள். ராமானுஜம் நவீனிடம்

“உங்க அப்பா அம்மாக்கு சொன்னேங்களா?”

“ஓ!! சொல்லலை மறந்துட்டேன். ஆனா அவா காலையில ஹாஸ்பிடல் வரதா சொல்லியிருக்கா. ஸோ அவா வந்துக்குவா”

“அப்போ சரி. மணி எட்டாக இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு. அதோ உங்க அப்பா அம்மா எல்லாரும் வந்துண்டிருக்காளே. வாங்கோ மாமா. வாங்கோ மாமி”

“என்ன குழந்தை பொறந்திருக்கு?”

“இன்னும் பொறக்கலை மாமி. எட்டு மணி வரை வெயிட் பண்ணிப் பார்க்கலாம்ன்னு சொல்லிருக்கா”

“விடியற் காலையிலேயே பொறந்திடும்ன்னு டாக்டர் சொன்னதா நவீன் நீ சொன்னயே!!”

“ஆமாம் சொன்னேன் ஆனா மிருதுக்கு வலி தொடர்ந்து வரலை விட்டு விட்டு வந்ததால இவ்வளவு நேரம் வெயிட் பண்ணிப் பார்க்கறா”

“ஆமாம் அம்புஜம் மாமி எங்கே? காணமே!!”

“மாமி அதோ அவ அங்க உட்கார்ந்துண்டு இருக்கா பாருங்கோ. நீங்களும் போய் அங்கே உட்கார்ந்துக்கோங்கோ. இன்னும் எட்டு நிமிஷமிருக்கு”

பர்வதம் அம்புஜத்தின் அருகே சென்று அமர்ந்தாள்‌. அவள் அமர்ந்ததுக் கூட தெரியாமல் அம்புஜம் வேண்டிக்கொண்டிருந்தாள். அப்போது பர்வதம்

“என்ன மாமி உட்கார்ந்துண்டே தூங்கறேங்களா?”

என அம்புஜத்தின் தோளில் கையை வைத்தாள். உடனே அம்புஜம் அப்போதுதான் சுயநினைவு வந்தவள் போல ஆங் ஆங் குழந்தைப் பொறந்தாச்சா?? என்று கேட்டாள். அதற்கு பர்வதம்


“மாமி தூங்கினதும் இல்லாம கனவு வேறயா!!! பேஷ்”

“வாங்கோ பர்வதம் மாமி நீங்க எப்போ வந்தேங்கள்? நான் தூங்கலை அம்பாளை வேண்டிண்டு இருந்தேன் அது தான் எதையுமே கவனிக்கலை மன்னிச்சுடுங்கோ”

வேனு வேகமாக ஓடி வந்து

“அம்மா அம்மா!! நம்ம மிருதுவ ஆப்ரேஷன் தியேட்டருக்குக் கூட்டிண்டு போகப் போறாளாம் வா மா வா”

என்று கூற அம்புஜம் உடனே எழுந்து வேகமாக நடந்தாள். பர்வதம் அவள் பின்னாலே சென்றுக் கொண்டே

“ஏன் ஆப்பரேஷன்? அப்போ சுகப் பிரசவமில்லையா?”

என்று கேட்டதும் அம்புஜம் சற்று பதற்றமடைந்தாலும் பர்வதத்திற்கு பதிலளிக்காமல் வேகமாக சென்றாள். லேபர் வார்டிலிருந்து மிருதுளாவை ஆப்ரேஷன் தியேட்டருக்கு கொண்டு செல்ல ஸ்ட்ரெச்சரில் லேபர் வார்டு முன் படுக்கவைத்திருந்ததை அனைவரும் தூரத்திலிருந்து பார்த்தனர். சற்று நேரத்தில் வார்டு பாய்ஸ் மிருதுளா படுத்திருந்த ஸ்ட்ரெச்சர் வண்டியை தள்ளிக் கொண்டே ஆப்ரேஷன் தியட்டரை நோக்கி வந்தனர். ஆப்ரேஷன் தியேட்டர் வராண்டாவில் வரிசையாக நின்றிருந்தனர் அவள் சொந்தங்கள். அந்த வண்டி அவர்களை நெருங்கியதும் அம்புஜமும், நவீனும் ஓடிச் சென்று அரை மயக்கத்திலிருந்த மிருதுளாவைப் பார்த்து நவீன்

“கவலைப் படாதே மிருது இன்னும் கொஞ்ச நேரம் தான் நமக்கு பாபா பொறந்திடும். நான் உனக்காகவும் பாபாக்காகவும் இங்கேயே இருப்பேன் சரியா. பி போல்டு.”

“மிருதுமா ஒண்ணுமில்லை டா கண்ணா. நீயும் குழந்தையுமா இன்னும் கொஞ்ச நேரத்துல வெளிய வந்திடுவேங்கள் சரியா. அம்மா உங்களுக்காக வேண்டிண்டே இருப்பேன். நாங்க எல்லாரும் இங்கே தான் இருக்கிறோம் பயப்படாதே”

என்று வண்டியுடனே நடந்துக் கொண்டே சொன்னார்கள். அரை மயக்கத்திலிருந்தாலும் நவீனைப் பார்த்ததில் மிருதுளாவுக்கு தெம்பு வந்தது. அவள் ஏதும் பேசாமல் அவர்களைப் பார்த்துக் கொண்டே சென்றாள். கதவு மூடப்பட்டது. சற்று நேரத்தில் எல்லாம் குழந்தையின் அழுகுரல் கேட்டது மிருதுளாவுக்கு. மயக்கத்திலும் தன் குழந்தையைப் பார்க்க ஆவாலாக இருந்தவளிடம் டாக்டர்

“மிருதுளா குட். உனக்கு அழகான பெண் குழந்தைப் பொறந்திருக்கு இதோப் பார் என்று காட்டினார்.”

குழந்தை சற்று மங்கலாக தான் தெரிந்தது மிருதுளாவிற்கு ஆனால் தன் வயிற்றினுள் பத்து மாதங்கள் உருண்டு பிரண்ட குழந்தையை ரத்தமும் சதையுமாக பார்த்ததில் அவள் வானில் மிதப்பதைப் போல உணர்ந்தாள். குழந்தையை குளிப்பாட்டி டவலில் சுற்றி முகம் மட்டும் தெரியும்படி வெளியே காத்திருந்த மிருதுளா சொந்தங்களுக்கு காட்டினார் நர்ஸ். அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளினர். நவீன் தன்னிடம் குழந்தையைத் தரும்படி கூற அதற்கு நர்ஸ்

“இல்ல சார் சிசேரியன்ங்கறதுனால குழந்தையை மூன்று நாட்கள் இன்க்யுபேட்டரில் வைக்கணும். அதுவுமில்லாம குழந்தைக்கு இன்ஃபெக்ஷன் ஆகக்கூடாதில்லையா!!! உங்களுக்கு காட்ட தான் கொண்டு வந்தேன்.”

என்று கூறி சற்று நேரம் காட்டிவிட்டு உள்ளே எடுத்துச் சென்றாள். அப்போது வேனு…

“அம்மா இன்க்யுபேட்டர்ல நிறைய குழந்தைகள் இருக்குமே நம்ம மிருதுக்கா பாப்பாவை மாத்திட மாட்டாளே!! அது வேற முட்ட முட்ட கண்ணை வச்சுட்டு முழிச்சு முழிச்சுப் பார்க்கறது.”

என்று சந்தோஷத்தில் அழுதுக் கொண்டிருந்த அம்புஜம்  நார்மலாக வேண்டி சொன்னான். அதைக் கேட்டதும் அனைவரும் சிரித்தனர். ராமானுஜம் உடனே சென்று ஒரு கிலோ சாக்லேட் வாங்கி வந்து அனைவருக்கும் கொடுத்தார். ஒரு அரை மணி நேரத்தில் மிருதுளாவை ஸ்ட்ரெச்சரில் வைத்து ஆப்ரேஷன் தியேட்டரிலிருந்து வார்டுக்கு கொண்டு செல்ல வண்டியைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்தனர் அப்போதும் அம்புஜமும், நவீன் வண்டியின் அருகில் சென்று நடந்துக் கொண்டே நவீன்

“மிருது கங்கிராட்ஸ் நமக்கு பொண்ணுப் பொறந்திருக்கா. குழந்தை நல்லா அழகா இருக்கு. முழிச்சு முழிச்சுப் எங்களை எல்லாரையும் பார்த்தா. நீ நிம்மதியா இரு ஓகே நான் இங்கேயே தான் இருப்பேன் எங்கேயும் போக மாட்டேன்”

என்றான் அப்போது வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்த வார்டு பாய் நவீனிடம்

“சார் அவங்க மயக்கத்துல இருக்காங்க. இன்னும் குறைந்தது மூணு மணி நேரமாகும் அவங்களுக்கு மயக்கம் தெளிய”

அதை கேட்டும் அம்புஜம் மிருதுளாவிடம்

“மிருதுமா குழந்தை அழகா இருக்கா. நிறைய முடியிருக்கு. நீங்க ரெண்டும் பேரும் ஆரோக்கியமா இருக்கேங்கள்னு டாக்டர் சொல்லிட்டா. நீ எதுக்கும் இனி கவலைப் படாதே சரியாமா”

என்று பேசி முடிக்கவும் வார்டுக்குள் வண்டி சென்றதும் அந்த அறையின் கண்ணாடிக் கதவு மூடப்பட்டது. மிருதுளாவை ஸ்ட்ரெச்சரிலிருந்து பெட்டிற்கு மாற்றி சலைன் ஏற்றினர். கண்ணாடி கதவு வழியாக நவீனும் அம்புஜமும் பார்த்துக் கொண்டே இருந்தனர். பின் இருவரும் மற்ற அனைவரும் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்து வாழ்த்துக்களைப் பறிமாறிக் கொண்டு விட்டு ராமானுஜம் வீட்டுக்கு சென்றனர். நவீனும் வேனுவும் மட்டும் ஹாஸ்பிடலிலேயே இருந்தனர்.

காலையிலிருந்து ஒன்றுமே சாப்பிடாத அம்புஜம் வீட்டிற்கு அனைவருமாக வந்ததும் எல்லோருக்கும் முதலில் டீப் போட்டுக் கொடுத்து தானும் ஒரு பெரிய டம்பளர் நிறைய டீயைக் குடித்தாள். பின் மடமடவென விருந்து சாப்பாடு சமைத்தாள். அனைவருக்கும் சாப்பாடு பறிமாறினாள். எல்லோரும் சாப்பிட்டதும் ஈஸ்வரனும் பர்வதமும் கிளம்புவதாக சொல்ல ராமானுஜம் ஆட்டோவை வரவழைத்தார். அவர்கள் இருவரும் அதில் ஏறி அவர்கள் வீட்டுக்குச் சென்றனர்.

ஹாஸ்பிடலில் நவீனிடம் நர்ஸ்..

“சார் நீங்க இனி இங்க இருக்க வேண்டிய அவசியமில்லை இனி நாளை மறுநாள் தான் உங்க வைஃப்பை நார்மல் வார்டுக்கு மாத்துவாங்க அதுவரை நீங்க அந்த கண்ணாடி கதவு வழியா தான் அவங்களைப் பார்க்க முடியும். ஸோ எதுக்கு சும்மா இங்கேயே இருக்கீங்க நீங்க ரெண்டு பேருமே வீட்டுக்குப் போகலாம்.”

“சிஸ்டர் அப்போ மிருதுக்கு சாப்பாடு?”

“மூணு நாளும் சலைன் தான் சாப்பாடு சார். அதுவரை சாப்பாடு கொடுக்கக் கூடாது. நார்மல் வார்டுக்கு மாத்தினதுக்கப்பறம் சாப்பாடு நீங்க கொண்டு வந்தும் கொடுக்கலாம் இல்லாட்டி ஹாஸ்பிடலேயும் எழுதிக் கொடுக்கலாம். நாங்களே டைமுக்குக் கொடுத்திடுவோம். நீங்க யோசிச்சு சொல்லுங்க. இதுக்கு மேல இங்க இருந்தீங்கன்னா அப்புறம் டாக்டர் எங்களைத் திட்டுவாங்க சார் ப்ளீஸ் கிளம்புங்க. மிருதுளாவை நாங்க பத்திரமா பார்த்துப்போம்”

என்று நர்ஸ் சொல்லிவிட்டுச் சென்றதும் மீண்டும் ஒரு முறை மிருதுளாவை கண்ணாடி கதவு வழியாக பார்த்தான் நவீன் அவள் அசையாமல் ஆடாமல் படுத்திருந்தாள். அவளை அப்படிப் பார்த்ததும் நவீனின் கண்களில் கண்ணீர் வழிந்தது. வேனு பின்னாலிருந்து “அதிம்பேர் கிளம்பலாமா” என்று கேட்டதும் கண்களை துடைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்ப மனசில்லாமல் வேனுவுடன் புறப்பட்டு வீட்டுக்குச் சென்றான் நவீன்.

அங்கே அம்புஜம் பேத்திப் பிறந்ததற்காக சமைத்த விருந்து சாப்பாட்டை இருவருக்கும் வாழை இலையில் பறிமாறினாள். நவீனுக்கு சாப்பாடு இறங்கவில்லை‌. ஏதோ சாப்பிடனுமே என்று சாப்பிட்டு எழுந்தான். அனைவரும் இரண்டு நாட்கள் அடைந்த பதற்றத்தில் சரியாக தூங்காததால் உணவருந்தியதும் படுத்துக் கொண்டனர். நன்றாக உறங்கினர். ஆனால் நவீனுக்கு உறக்கம் வரவில்லை அவன் மனம் முழுவதும் மிருதுளா தான் இருந்தாள். அவள் பேசிக் கேட்பதற்கும், அவளை நார்மலாக பார்ப்பதற்கும் காத்திருந்தான்.

தொடரும்……

மிருதுளா சில நாட்கள் தொலைத்த சந்தோஷம் அவள் மனதில் மீண்டும் மலர ஆரம்பித்தது. அவள் அப்பா ராமானுஜத்திற்கு இரண்டு பெட்ரூம் உள்ள குவார்ட்ஸ் கிடைத்ததும் அவர்கள் அந்த வீட்டுக்கு குடிப்போனார்கள். அந்த வீட்டில் மிருதுளாவுக்கும் அவள் அம்மாவுக்கும் ஒரு அறை, வேனுவுக்கும் ராமானுஜத்துக்கும் ஒரு அறை என்று எடுத்துக் கொண்டனர்.

ஒரு பெண்ணைத் திருமணம் செய்து மருமகளாக வீட்டுக்கு அழைத்துச் செல்லும் போது அவள் கணவனும் அவன் உறவுகளும் அவளுக்கு நம்பிக்கைக் கொடுக்கும் வண்ணம் நடந்துக் கொள்ள வேண்டும். புதிதாக குடும்பத்தில் வரும் பெண்ணிற்கு ..அந்த குடும்பம் அவளுக்கு மகிழ்வைத் தரவேண்டும். எந்த பெண்ணும் தன்னைத் தலையில் தூக்கிவைத்துக் கொள்ளவேண்டும் என்று எண்ணுவதில்லை. குறைந்த பட்சம் அவளை மனிதப் பிறவியாகவும், அவளை அவளாகவும் வாழவிட்டாலே எல்லா பெண்களும் புகுந்த வீட்டையும் தன் வீடாகத் தான் கருதுவாள். அதை விடுத்து… இந்த பர்வதீஸ்வரன் குடும்பம் போல் வீட்டுக்கு வந்த பெண்ணை ஏதோ தீண்டதகாதவள் போல் நடத்தியதால் மிருதுளா என்றில்லை அவள் இடத்தில் எந்த பெண் இருந்தாலும் அங்கிருந்து வெளியேற ஒரு சந்தர்ப் பத்துக்காக காத்துக் கொண்டு தான் இருப்பார்கள். நம்மால் சுதந்திரமாக சுவாசிக்க முடியாத ஒரு அறையிலிருந்து முதலில் வெளியேற நினைப்போமா? இல்லை மூச்சு முட்டினாலும் நமக்கு கிடைத்த இந்த அறைக்கு உள்ளேயே இருப்போம் என்று நினைப்போமா?

அந்த அறையில் ஒரு சிறிய ஜன்னல் இருந்தாலாவது அவள் சற்று நிம்மதி அடைவாள். அதற்குள்ளேயே எப்படியாவது வாழ்க்கையை ஓட்டிட எண்ணிடுவாள். ஆனால் எந்த வழியிலும் சுவாசிக்க முடியாமல் போனால்!! கிடைக்கும் முதல் வழியைத் தேர்ந்தெடுத்து தன்னை காப்பாற்றிக்கொள்ள தான் நினைபாள். இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பொருந்தும்.

இங்கே பர்வதீஸ்வரன் மிருதுளாவை சுவாசிக்க விடாமல் செய்ததின் விளைவு தான் ஆட்டோவில் ஏறி அந்த தெருவைத் தாண்டியதும் அவள் மனதில் எழுந்த மகிழ்ச்சிக்கு காரணம். ஆனால் பர்வதீஸ்வரனிடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியுமா? அவர்கள் என்றும் மிருதுளாவைத் தான் குறைக் கூறுவர் என்பது நாம் அறிந்ததே. இவர்கள் இப்படியே மாறாமல் இருந்தார்களே என்றால் அவர்கள் உருவாக்கும் அந்த அறையிலேயே அவர்கள் இன்றில்லை என்றாலும் என்றாவது தள்ளப்படுவார்கள்.

மிருதுளா வழக்கம் போல சத்தான ஆகாரம், மனநிம்மதி என்று ஒரு மாதத்தைக் கடந்தாள். குழந்தைப் பிறப்பதற்கு டாக்டர் குறித்துக் கொடுத்தது மார்ச் ஆறாம் தேதி என்பதால் மார்ச் நான்காம் தேதி இரவு நவீன் ஊரிலிருந்து வந்தான். ஐந்தாம் தேதி காலை சீக்கிரம் எழுந்து மிருதுளா வீட்டிற்குச் செல்ல புறப்பட்டுக் கொண்டிருந்தான். அப்போது ஈஸ்வரன்

“நாளைக்கு தானே டேட் கொடுத்திருக்கா. குழந்தைப் பொறந்தா ஃபோன் பண்ணுவா அப்போ போனா போதும். அதுவுமில்லாம இன்னைக்கு மத்தியானம் நம்ம கவின் குவைத்துலேந்து வர்றான் அதுனால நீ எங்கேயும் போக வேண்டாம்”

“அவன் எப்படியும் ஒரு மாசம் இருப்பானே!! நான் அப்புறமா வந்து அவனைப் பார்த்துக்கறேன்னு சொல்லு. இப்போ நான் மிருது ஆத்துக்குப் போகணும். பை நான் வர்றேன்”

என்று கூறி அங்கிருந்து புறப்பட்டான் நவீன். மேலே கூறியது போல அவனும் ஜன்னல் கூட இல்லா சுவாசம் முட்டும் அறையிலிருந்து வெளியேறினான். எந்த ஒரு வீட்டில் மருமகளை மதிக்கவில்லையோ அந்த வீட்டில் அவள் கணவனையும் அதாவது அவர்கள் மகனையும் மதிக்கமாட்டார்கள். இங்கே அதுதான் ஆரம்பத்திலிருந்து நடந்து வருகிறது.

தங்கள் மகனை மதிக்கும் பெற்றவர்கள் அவன் மனைவியையும் மதிப்பார்கள். இங்கே பர்வதீஸ்வரன் தங்கள் மகனையே மதிக்கவில்லை என்பது தான் நவீன் திருமணம் நிச்சயமானதிலிருந்தே நமக்கெல்லாம் நன்றாக தெரிந்ததாயிற்றே.

காலை டிபன் கூட சாப்பிடாமல் மிருதுளா வீட்டுக்கு வந்தான் நவீன். அவன் உள்ளே நுழைந்தபோது மிருதுளாவும் அவள் அம்மாவும் காலை டிபனை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். உடனே அம்புஜம் எழுந்துக் கொண்டாள். அதை பார்த்த நவீன்

“நீங்க உட்கார்ந்து சாப்பிடுங்கோ ப்ளீஸ். எங்க மிருது உன் அப்பாவையும் வேனுவையும் காணமே!!”

“அப்பாக்கு இன்னைக்கு டே ஷிஃப்ட் ஸோ அஞ்சு மணிக்கெல்லாம் போயிட்டா. வேனுக்கு லாப் இருக்குன்னு அவனும் ஆறு மணிக்கெல்லாம் கிளம்பிட்டான். சரி நீங்க எப்போ வந்தேங்கள்?”

“நான் நேத்து நைட் வந்தேன். காலையில எழுந்ததும் குளிச்சிட்டு நேரா இங்க வந்துட்டேன்”

“நீங்க ப்ரேக்ஃபாஸ்ட் சாப்டேளா?”

“ம்….”

“இந்தாங்கோ மாப்ள மிருதுவோட உட்கார்ந்து சாப்பிடுங்கோ.”

என்று ஒரு தட்டில் சுடச்சுட இட்டிலியும் சட்னியும் வைத்துக் கொடுத்தாள் அம்புஜம். நவீனுக்கும் நல்ல பசி. நன்றிச் சொல்லி அதை வாங்கி சாப்பிட்டான். அதற்கு அம்புஜம்

“எதுக்கு தாங்க்ஸ் எல்லாம் சொல்லறேங்கள். உங்க அம்மா கிட்டே தாங்க்ஸ் சொல்லுவேங்களா சொல்லுங்கோ”

“அதுக்கில்ல நான் சாப்பிடலைன்னு சொல்ல வர்றத்துக்குள்ளேயே நீங்க டிபனை கொண்டு வந்து தந்துட்டேங்களே அதுனால தான் சொன்னேன்.”

“காலையில எழுந்து குளிச்சதும் கிளம்பி வந்துட்டேன்னு சொன்னேங்களே அப்போ சாப்பிடலைன்னு தானே அர்த்தம். அதுனால தான் உடனே ஒரு ஏடு இட்டிலி வச்சுக் கொண்டு வந்தேன்.”

“ம்…நவீ இங்கே உனக்கு கேட்காமலே கிடைக்குது ஆனா அங்க எனக்கு கேட்டாலும் கிடைக்கலை கேட்கவும் முடியலை”

“ஏய் மிருது பேசாம சாப்பிடு டி”

“சரி மா சரி உன் மாப்ளயை ஒண்ணும் சொல்லலை”

இருவரும் சாப்பிட்டுவிட்டு சற்று நேரம் உள்ரூமில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அம்புஜம் மத்திய உணவு சமைத்துக் கொண்டிருந்தாள். நவீன் நான்காம் தேதி சரியாக உறங்காததாலும், நன்றாக காலை உணவு உண்டதாலும் மிருதுளாவுடன் பேசிக்கொண்டே உறங்கிப் போனான். மிருதுளாவும் அவனை தொந்தரவு செய்யாமல் அந்த அறையின் கதவை சாத்திவிட்டு வெளியே வந்து தனது ஜூஸைக் குடித்து விட்டு அம்மாவுக்கு சின்ன சின்ன உதவிகள் செய்தாள் அப்போது அம்புஜம்

“ஏய் மிருது நீ போய் உட்காருமா. உன் ஆத்துக்காரரோட போய் பேசிண்டிரு. இதோ சமையல் ரெடி ஆகிடுத்து‌. அப்பளம் மட்டும் தான் பொரிக்கணும்.”

“அம்மா மெதுவா பேசு நவீ தூங்கிண்டிருக்கார். அதுனால தான் அந்த ரூம் கதவை சாத்திட்டு இங்கே வந்தேன்”

“சரி நீ போய் டிவி பார்க்கவோ இல்ல புக்குப் படிக்கவோ செய் போ. இதோ இந்த அப்பளத்தைப் பொரித்துட்டு நானும் வர்றேன்”

மிருதுளா டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். நேரம் கிடுகிடுவென ஓடியது. மத்தியம் ஒன்றானது நவீன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். அம்புஜம் மிருதுளாவிடம்

“அவர் தூங்கட்டும் மிருது. எழுப்பாதே. அவர் எழுந்திரிக்கும் போது சாப்பிட்டுக்கட்டும். நீ வா சாப்பிடு.”

என்று மிருதுளாவுக்கு சாப்பாடு போட்டுக்கொண்டிருக்கும் போது நவீன் எழுந்து வந்து கடிகாரத்தைப் பார்த்தவன்

“ஓ!! டைம் ஒன்றரை ஆச்சு!!ஏய் மிருது எழுப்பியிருக்கலாம் இல்லையா!!”

“ஒரு மணிக்கு எழுப்பினேன் நவீ. நீங்க நல்லா தூங்கிண்டிருந்தேங்களா அதுனால டிஸ்டர்ப் பண்ணாம நாங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டோம். நீங்க ஃப்ரெஷ் ஆகிட்டு வந்து சாப்பிடுங்கோ.”

நவீனும் சாப்பிட்டுவிட்டு டிவிப் பார்த்தான். மத்தியம் இரண்டு மணி ஆனதும் ராமானுஜம் வந்தார். அவர் நவீனைப் பார்த்ததும்

“வாங்கோ மாப்ள வாங்கோ”

அனைவரும் அமர்ந்துப் பேசிக்கொண்டிருக்கும் போது ஆட்டோ ஒன்று அவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றது. யாரென்று எட்டிப் பார்த்த அம்புஜம்

“வாங்கோ வாங்கோ மாமி!! வா வா கவின்”

“கவினா?”

என்றால் மிருதுளா அதற்கு நவீன்

“ஆமாம் அவன் மத்தியானம் குவைத்திலிருந்து வரதா இருந்தது. நான் அதை உன்னிடம் சொல்ல மறந்துட்டேன்”

கவினை தனியாக அனுப்பாமல் கூடவே வந்தாள் பர்வதம். இருவரும் உள்ளே வந்ததும் கவின்

“நவீன் அன்ட் மன்னி கங்கிராஜுலேஷன்ஸ். நான் வர்றேன்னு சொல்லியும் ஒரு அரை நாள் வெயிட் பண்ணாம இங்கே உங்களைப் பார்க்க வரவச்சுட்டேங்களே எங்க நவீனை!!!”

என்று பர்வதீஸ்வரன் ஏற்றிக் கொடுத்தை அப்படியே சொன்னான் அவர்கள் புத்திரன் கவின். வந்தவர்களுக்கு சுவீட்டும் காரமும் காபியுடன் கொண்டு வந்துக் கொடுத்தாள் அம்புஜம். அதை அவர்கள் சாப்பிட்டுக் கொண்டு பேசிக்கொண்டிருக்கையில் மிருதுளா சட்டென்று

“ஆ!!! அம்மா!!! எனக்கு வயிறு வலிக்கறது மா”

என்று கத்தியதில் பதற்றமானாள் அம்புஜம். உடனே அவளிடம்

“சரி எழுந்துரு மிருது. ஏன்னா ஒரு ஆட்டோவை உடனே ஃபோன் பண்ணி வரச் சொல்லுங்கோ.”

ஹாஸ்பிடலுக்கு எடுத்துச் செல்ல வேண்டி தயாராக வைத்திருந்த பையை எடுத்துக் கொண்டாள் அம்புஜம் ஆட்டோ வந்தது மிருதுளாவும் அம்புஜமும் நவீனும் ஆட்டோவில் சென்றனர். ராமானுஜம் இன்னொரு ஆட்டோ வரவழைத்து அதில் கவினையும் பர்வதத்தையும் ஹாஸ்பிடல் அனுப்பி வைத்தார். பின் வீட்டுக் கதவைப் பூட்டிவிட்டு அவரது டி.வி.எஸ் 50 ல் அவரும் ஹாஸ்பிடல் சென்றார்.

மிருதுளாவை டாக்டர்ஸ் லேபர் வார்டுக்கு அழைத்துச் சென்றார்கள். வெளியே தவித்துக் கொண்டிருந்தனர் நவீனும் அம்புஜமும். கவினும் பர்வதமும் வந்து சேர்ந்தனர். கவினிடம் பர்வதம் ஏதோ முனுமுனுத்தாள். உடனே கவின் அவளிடம்

“நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றான்

சற்று நேரத்தில் டாக்டர் வெளியே வந்ததும் நவீன் சென்று மிருதுளாவைப் பற்றி விசாரித்தான் அதற்கு டாக்டர்

“கரெக்ட் டேட் தான். மிருதுளாவுக்கு வலி விட்டு விட்டு வருது. நாளைக்கு விடியற் காலைக்குள் குழந்தைப் பொறந்திடும். யாராவது ஒருத்தர் இங்கேயே இருக்கணும். ஏதாவது தேவைன்னா கூப்பிடுவதற்கு. மத்தவங்க எல்லாரும் வீட்டுக்குப் போயிடலாம்”

என்று சொல்லிவிட்டு சென்றார் டாக்டர். அவர் சொல்லி முடிக்கவும் ராமானுஜமும், பக்கத்துவீட்டு ராணியம்மா சொல்லி விவரமறிந்து வேனுவும் ஹாஸ்பிடல் வந்துச் சேர்ந்தனர். வேனு தன் அம்மாவிடம்

“அம்மா நம்ம மிருதுக்காவுக்கு குழந்தைப் பொறந்துடுத்தா?”

“இல்லை டா வேனு. நாளைக்கு விடியற் காலைக்குள்ள பொறந்திடும்னு சொல்லிட்டு டாக்டர் இப்போ தான் போனா”

“சரி நீங்க எல்லாரும் ஆத்துக்குப் போங்கோ நானும் அத்திம்ஸும் இருக்கோம்”

என்று வேனு சொன்னதும் பர்வதம் கவினிடம் கண்ணால் ஜாடைக்காட்ட உடனே நவீனை கவின் தனியாக அழைத்துச் சென்று

“நவீன் வா நாம ரெண்டு பேரும் டவுனுக்குப் போய் மன்னிக்கு கிஃப்ட் வாங்கிண்டு வருவோம்”

“இல்லை கவின் இந்த நேரத்துல எப்படி!!”

“அட அதுதான் மன்னியோட ஃபுல் ஃபேமிலியும் இருக்காளே ஒரு ரெண்டு மணி நேரத்துல நீ திரும்பி வந்துடலாமே!!! நாளைக்கு காலையில தானே டைம் கொடுத்திருக்கா”

“சரி இரு அவாகிட்ட சொல்லிட்டு வரேன்”

“அதெல்லாம் அம்மா சொல்லியாச்சு நீ வா”

என்று சொல்லி தன்னுடன் வெளியேக் கூட்டிச் சென்றான் கவின். பர்வதீஸவரனின் நரித்தனம் அனைத்தும் மிகுந்தவன் என்பதை நிரூபித்தான் கவின். நவீன் சொல்லிக்காமல் கவினுடன் சென்றதைப் பார்த்த மிருதுளா குடும்பத்தினர் அதிர்ந்துப் போனார்கள். அப்போது பர்வதம் மெல்ல அம்புஜத்திடம்

“சரி மாமி பசங்க வெளியே போயிட்டா நானும் கிளம்பறேன். குழந்தைப் பொறந்தா ஃபோன் போட்டுச் சொல்லுங்கோ வரோம்”

மாப்பிள்ளை தன் பொண்ணை விட்டுவிட்டு அக்கறையில்லாமல் தம்பியுடன் சென்றுவிட்டாரே என்ற கோபம் ஒருபுறமிருக்க இந்த பர்வதத்தின் பேச்சு அதை இன்னும் கிளறி விட… அந்த ஆத்திரத்தில் அம்புஜம்

“என்ன மாமி பேசறேங்கள்? அது என்ன குழந்தைப் பொறந்தான்னு இழுக்கறேங்கள்? உங்க புள்ளைய இந்த நேரத்துல் அவர் பொண்டாட்டியோட இருக்க சொல்லாம அனுப்பிட்டு இப்படி ஒரு பேச்சுப் பேச உங்களுக்கு எப்படி மனசு வர்றது?”

“அவன் போனா அதுக்கு நான் என்னப் பண்ணறது!! அவன் தம்பியை இத்தனை வருஷத்துக்கப்புறமா பார்க்கறான் அதுனால அவன்கூட பேசப் போயிருப்பான். நல்லா இருக்கே நீங்க சொல்லறது. உங்க பொண்ணுக்கு நாளைக்கு காலையில தான் டைம் கொடுத்திருக்கா அது வரைக்கு அவன் இங்க இருந்து என்னப் பண்ணப்போறான்?”

“மாமி நீங்க வேணும்னே எல்லாம் பண்ணறேங்கள்ன்னு எங்களுக்கு தெரியாம இல்ல.”

“சரி தெரிஞ்சா மட்டும் என்னவாம். சரி சரி நான் கிளம்பறேன்”

மிருதுளா பிரசவ நேரத்தில் நவீன் அவளருகில் இருக்கக் கூடாது என்று நினைத்தவள் தன் மகன் கவினை வைத்து நிறைவேற்றிக் கொண்ட பெருமிதத்தில் அங்கிருந்து சென்றாள் பர்வதம். அவள் சென்றதும் அம்புஜம்

“ச்சே என்ன ஜன்மமோ இந்த மாமி!!! சரி வேனு நீயும் அப்பாவும் இங்கேயே இருங்கோ நான் போயி டின்னர் பண்ணிட்டு வர்றேன்”

என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள் அம்புஜம். பிரசவ நேரத்திலும் மிருதுளாவுக்கு அவள் குடும்பத்தினரே அவளுக்குப் பக்கத் துணையாக நின்றனர்.

மாலை நான்கு மணிக்கு ஹாஸ்பிடலில் மிருதுளாவை சேர்த்துவிட்டு கிளம்பிய நவீன் இரவு பத்து மணிக்குத் தான் மீண்டும் ஹாஸ்பிடல் வந்தான். அப்போது ஹாஸ்பிடலில் மிருதுளாவின் அப்பா, அம்மா, தம்பி மூவரும் இருந்தனர். நவீனைப் பார்த்ததும் அம்புஜம்

“ஏன் மாப்ள உங்க வைஃபை டெலிவரிக்காக அட்மிட் பண்ணிட்டு அவ கூட இந்த நேரத்துல இருக்காம நீங்க இப்படிப் போனது நல்லா இல்லை. மிருதுக்கு வலி நின்னுடுத்துன்னு நார்மல் வார்டுக்கு மாத்தினா அப்போ அவ உங்களைத் தான் தேடினா தெரியுமா? எங்களால அவளை சமாளிக்க முடியாமல் நீங்க கிளம்பிப் போயிட்டேங்கள்ன்னு சொல்ல வேண்டியதாயிடுத்து.அதைக் கேட்டதும் என் பொண்ணு முகம் அப்படியே வாடிடுத்து. அதுவுமில்லாம அவ கவலை ஆனதுல அவ பிபி அதிகமாயிடுத்து. மறுபடியும் வலி வந்தது… லேபர் வார்டுக்கு ஷிஃப்ட் பண்ணிட்டா”

“இல்ல கவின் தான் ஏதோ கிஃப்ட் வாங்கலாம்ன்னு சொன்னான் அதுதான் போனேன் ஆனா இவ்வளவு லேட் ஆகும்ன்னு நான் நினைக்கலை. அவா நாளைக்கு காலையில போனா போதும்ன்னு தான் சொன்னா ஆனா நான் தான் இங்கேயே வந்துட்டேன்.”

“யார் என்ன சொன்னா என்ன? எதுக்குக் கூப்பிட்டா என்ன? தப்பா எடுத்துக்காதீங்கோ….நீங்க போனது தப்புதான்”

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது நர்ஸ் அங்கே வந்து

“இதோ பாருங்க மா இங்கே இப்படி இவ்வளவு பேரெல்லாம் இருக்கக் கூடாது. யாராவது ஒரு ஆண் மட்டும் தான் இருக்கணும்”

“சரிங்க நர்ஸ் நாங்க இதோ கிளம்பிடறோம்”

என்று நர்ஸிடம் கூறிய அம்புஜம் வேனுவையும் ராமானுஜத்தையும் பார்த்து

“நீங்க ரெண்டு பேரும் இங்க இருங்கோ நான் ஆத்துக்குப் போறேன். காலையில நாளு மணிக்கெல்லாம் வந்துடறேன். சரியா”

என கூற அதைக் கேட்ட நவீன்

“இல்லை நானும் வேனுவும் இருக்கோம் நீங்க ரெண்டு பேரும் ஆத்துக்குப் போங்கோ”

“இல்ல மாப்ள திடிர்னு உங்க ஆத்துலேந்து வந்து உங்களைக் கூட்டிண்டுப் போயிடுவா அப்புறம் பாவம் இந்த சின்னப் பையன் வேனு மட்டும் தனியா இருக்கணும். என்னத்துக்கு எங்க பொண்ணை நாங்களாவது பார்த்துக்கணுமில்லையா.”

“அதெல்லாம் எங்கேயும் போக மாட்டேன். கவலைப் படாதீங்கோ. நான் சாயந்தரம் போனது தப்புத் தான். மிருது என் ஃவைப். நான் பார்த்துக்கறேன் நீங்க கிளம்புங்கோ”

என்று ராமானுஜத்தையும் அம்புஜத்தையும் அங்கிருந்து கிளம்பச் செய்தான் நவீன். அம்புஜம் ராமானுஜத்துடன் வண்டியில் செல்லும் போது

“ஆமாம் ஆமாம் நம்ம மிருது இவர் ஃவைப்ன்னு இப்போ தான் தெரிஞ்சுதாக்கும். தம்பி கூப்பிட்டான்னா பொண்டாட்டிய விட்டுட்டு போயிடுவாரா? என்ன ஆளோ தெரியலை”

“விடு அம்புஜம் விடு. அவரை என்னச் சொல்லிக் கூடிண்டுப் போனாளோ அது நமக்குத் தெரியுமா?”

“என்ன சொன்னா என்ன? என்னைத் தான் நீங்க மிருது பொறக்கும் போது அம்போன்னு ஹாஸ்பிடல்ல விட்டுட்டு உங்க தங்கைய பார்க்க போனேங்கள்ன்னா என் பொண்ணுக்கும் அதே மாதிரி நடக்கறதேன்னு பார்க்கும் போது எனக்கு கோபம் கோபமா வர்றது.”

“இப்போ நம்ம கதை ரொம்ப அவசியம். விடு விடு. அதுதான் தப்புன்னு அவரே உணர்ந்துட்டார் இல்லையா.”

லேபர் வார்டில் மிருதுளாவுக்கு வலி விட்டு விட்டு வந்துக் கொண்டே இருந்தது. லேபர் வார்டுக்குள் செல்வதற்கு முன் ஒரு முறை நவீனைப் பார்க்க வேண்டும் என்ற அவளின் எண்ணம் நிறைவேறாமல் போனது அவளுக்கு மனவேதனையைக் கொடுத்ததில் அவளின் பிபி எகிறியது. உடனே நைட் டியூட்டி டாக்டர் நர்ஸிடம் மிருதுளாவை ஆப்பரேஷனுக்கும் தயாராக்கச் சொன்னார். மிருதுளாவுக்கு தலையை வாரி பின்னலிட்டு அதை முடிந்து விட்டு அவளை மீண்டும் லேபர் பெட்டில் படுக்க வைத்துவிட்டு

“இதோ பாருமா மிருதுளா பயப்படாதே!! உன் பயம் உன்னோட பிபியை ஏத்தி விடுது. அது உனக்கும் உன் குழந்தைக்கும் நல்லதில்லை. ரிலாக்ஸா இருமா ஒண்ணும் ஆகாது. லட்டு மாதிரி குழந்தைப் பொறக்க போவுது!! மனசை சந்தோஷமா வச்சுக்கோமா”

“சரி சிஸ்டர்”

என்று வெளியே கூறினாலும் அவள் மனதிற்குள் பெரிய போராட்டமே நடந்துக்கொண்டிருந்தது.

பர்வதத்தின் திட்டம் பலித்திருந்தாலும்…மிருதுளாவின் மனவலிமையை அதிகரிக்க உதவியாக இருக்கப் போகிறது என்பது தான் உண்மை.

பர்வதீஸ்வரன் திட்டம் தீட்டினாள்
மகனை அங்கிருக்க விடாமல் அழைத்துச் சென்றாள்
திரும்பி அனுப்பாமலிருக்க நினைத்தாள்
தீயவர்கள் தீட்டிடும் திட்டங்களின் ஆயுள் சில காலமே
அதில் வீழ்ந்தவர்கள் தெளிந்தால்
அனைத்திற்கும் முற்றுப்புள்ளியாகிடுமே.

தொடரும்…..

சீமந்தம் வளைகாப்பு முடிந்து அனைவரும் வீட்டிற்கு வந்து சேர்வதற்கு இரவானது. அன்றிரவுக்கு சாப்பாடு கட்டிக்கொண்டு வந்திருந்தனர். அதை உண்டபின் அவரவர் உறங்கச் சென்றனர். பின் வழக்கம் போல பர்வதத்தின் குத்தல் பேச்சு, கல்லு இட்டிலி, ரசம் சாதம், பாத்திரம் தேய்க்கல் என மூன்று நாட்கள் நகர்ந்தது. பதிமூன்றாம் தேதி மத்தியம் வழக்கம் போல் செக்கப்புக்கு மிருதுளாவை அழைத்துச்சென்று வந்தான் நவீன். அன்று மாலை மிருதுளா திடீரென வயிறு வலிக்கிறது என்று நவீனிடம் சொன்னாள். நவீனுக்கோ என்ன செய்ய வேண்டுமென்று தெரியாமல் தவித்தான். சற்று நேரத்தில் மிருதுளா வலி வலி என்று தவிக்க ஆரம்பித்தாள். வலியில் அவள் கண்களிலிருந்து கண்ணீர் வந்ததைப் பார்த்த நவீன் அவளின் வயிற்றில் எண்ணெய் ஊற்றி மெல்ல மசாஜ் செய்துக் கொடுத்துக் கொண்டிருக்கையில் மாடியில் காயப் போட்டிருந்த துணிகளை எடுக்க வந்தாள் பர்வதம். அவளைப் பார்த்ததும் நவீன்

“மிருதுளா வயிறு வலிக்கறதுன்னு துடிக்கறா கொஞ்சம் என்னன்னு பாரேன். டாக்டர்கிட்ட கூட்டிண்டு போகணுமான்னு சொல்லேன்”

என்று பதற்றத்தோடு கேட்டான். அதற்கு துளியும் பதற்றமில்லாமல், மிருதுளாவை அவள் அறையின் வாசலிலிருந்து எட்டிப் பார்த்த பர்வதம்

“அதெல்லாம் ஒண்ணும் தேவையில்லை ஏதாவது சூட்டு வலியா தான் இருக்கும் அதுக்காக ரொம்ப எல்லாம் காட்டிக்க வேண்டாம். கொஞ்சம் சுடு தண்ணி குடிக்கச் சொல்லு எல்லாம் தானா சரியாகிடும்”

என கூறிக்கொண்டே மாடியிலிருந்து கீழே இறங்கிச் சென்றாள். அவளின் இந்த அலட்சிய போக்கைக் கவனித்த நவீன் மிருதுளாவிடம்

“மிருது ஹாஸ்பிடல் போகலாம் வா.”

“இல்ல நவீ அம்மா தான் சுடு தண்ணி குடிச்சா சரியாகிடும்ன்னு சொல்லறாளே! ப்ளீஸ் எனக்கு ஒரு கிளாஸ் சுடு தண்ணி வச்சுக் கொண்டு வறேளா. நான் குடிச்சுப் பார்க்கறேன். அப்பவும் சரியாகலைன்னா அதுக்கப்புறம் ஹாஸ்பிடல் போவோம்”

“சரி இரு நான் போய் சுடுத் தண்ணி வச்சுக் கொண்டு வரேன்”

நவீன் கீழே வேகமாகச் சென்று அடுப்பில் தண்ணீர் கொதிக்க வைத்தான். அதிலிருந்து ஒரு கிளாஸ் எடுத்துக் கொண்டு மாடிக்கு போய் மிருதுளாவிடம் கொடுத்துக் குடிக்கச் சொன்னான். அவளும் குடித்தாள். சற்று நேரம் பொறுத்துப் பார்த்தாள் மிருதுளா ஆனாலும் வலி குறைந்த பாடில்லை. நவீன் அவளை அருகிலிருந்த ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றான். அந்த டாக்டர் மகப்பேறு மருத்துவர் அல்ல அவர் பொது மருத்துவர் ஆவார். அந்த டாக்டர் மிருதுளாவை சோதித்துப் பார்த்தார் பின் சில மருந்துகளை உடனே எடுத்துக் கொள்ளும்படி கூறினார். அப்போது நவீன் டாக்டரிடம்

“டாக்டர் மிருதுளாவுக்கு என்ன ஆச்சு? எதுவும் ப்ராப்ளம் இல்லையே!!”

“எனக்குத் தெரிந்து பெரிசா ஒன்றுமில்லை. இப்போ கொடுத்திருக்கும் மாத்திரையில் சரியாகிவிடும் அப்படி ஆகலைன்னா நீங்க அவங்க செக்கப் போற மகப்பேறு மருத்துவர் கிட்ட தாமதிக்காமல் கூட்டிட்டுப் போங்க சரியா.”

இருவரும் ஆட்டோவில் ஏறி மீண்டும் வீட்டிற்கு வந்தனர். மகனும் மருமகளும் ஹாஸ்பிடல் சென்று வந்துள்ளார்களே அவர்களிடம் என்ன ஆச்சு ஏதாச்சு என்று ஒன்றுமே விசாரிக்காமல் அவள் பாட்டுக்கு டிவிப் பார்த்துக் கொண்டிருந்தாள் பர்வதம். அதைப் பார்த்த நவீன்

“ச்சே!! நீ வா மிருதுளா நாம மாடிக்குப் போகலாம்”

என அவளை மெல்ல மாடிக்கு அழைத்துச் சென்றான். அப்போது மிருதுளா நவீனிடம்

“நான் கொஞ்ச நேரம் படுத்துக்கவா. டையர்டா இருக்கு”

“ஓ எஸ்! படுத்துக்கோ. இரு பாயை விரிக்கறேன். ம்…. இதுல படு”

“தாங்க்ஸ் நவீ. எனக்குத் தூக்கம் வருது நான் தூங்கிட்டேன்னா விளக்கேத்த நேரமாச்சுன்னா எழுப்பிடுங்கோ”

“என்னத்துக்கு? நிம்மதியா தூங்கு மிருது. நாளைக்கு நான் ஊருக்கு போகணுமேன்னு இருக்கு. உன்னை நாளைக்கு உங்க அம்மா ஆத்துல கொண்டு போய் விட்டுட்டு நான் ஊருக்குக் கிளம்பறேன். ஏன்னா இங்கே உனக்கு இது மாதிரி ஏதாவது வலி வந்ததுன்னா பார்த்துக்க யாரும் இல்லைங்கறத தான் பார்த்தோமே.”

“பரவாயில்லை நவீ. நாளைக்கு நல்ல நாள் இல்லைன்னு தானே பொங்கல் அன்னைக்கு அழைச்சுண்டு போக முடிவெடுத்தா அப்புறம் ஏன் அவசரப் படணும்? கவலைப்படாம நீங்க ஊருக்குப் போயிட்டு உங்க ஜூனியரைப் பார்க்க வாங்கோ. ஒரு நாள் தானே நான் அட்ஜஸ்ட் பண்ணிப்பேன். அப்படியே வலி வந்தாலும் என் அம்மாவுக்கு ஃபோன் போட்டு வரச்சொல்லி ஹாஸ்பிடல் போறேன் ஓகே வா!”

“நீ சொல்லற ஆனா எனக்கு டென்ஷனா இருக்கும்”

என்று கூறிக்கொண்டே மிருதுளாவைப் பார்த்தான். அவள் நன்றாக உறங்கிப் போனாள். அவளைத் தொந்தரவு செய்யாமல் அறையிலிருந்து வெளியே மொட்டைமாடியின் திட்டில் அமர்ந்துக் கொண்டே ஏதோ சிந்தனையில் மூழ்கியிருந்தான். மாலை விளக்கேற்றும் நேரமானதுக் கூட தெரியாமல் அதே இடத்தில் அமர்ந்திருந்தான். பவின் நவீனை சத்தமாக அழைத்துக் கொண்டே மாடி ஏறி வந்தான். அவனின் குரல் கேட்டதும் மெல்ல விழித்தாள் மிருதுளா. தன் பெயரை ஏலம் விடுவதுப் போல கத்திக் கொண்டே வந்த பவினின் வால்யூமைக் குறைக்கச் சொன்னான் நவீன். உடனே அவனும் மெதுவாக

“விளக்கேத்தற நேரமாச்சாம் மன்னி தூங்கிண்டிருந்தான்னா எழுப்பி விடச் சொன்னா அம்மா”

“சரி சரி அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்னு போய் சொல்லு”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே மிருதுளா எழுந்து தன் அறையை விட்டு வெளியே வந்து

“என்ன ஆச்சு ஏன் பவின் உங்க பேரை அப்படி கத்திக் கத்திக் கூப்பிட்டான்?”

“எழுந்துட்டயா மிருது? இவன் கத்தினதுல நீ எழுந்திடப் போறேன்னு தான் இவனை மெல்லப் பேசச் சொல்லிண்டிருந்தேன் நீயே எழுந்து வந்துட்ட!”

“நான் தான் விளக்கேற்ற நேரமானதும் என்னை எழுப்பிவிடச் சொல்லிட்டுத் தானே படுத்தேன். நீங்க செய்யலை ஆனா பவின் கரெக்டா எழுப்பிட்டான். தாங்கஸ் பவின்”

“பரவாயில்லை மன்னி. நான் கீழே போறேன்.”

அனைவரும் கீழே வந்தனர். மிருதுளா காபிப் போட்டு நவீனுக்கும் கொடுத்து தானும் குடித்தாள். பின் இருவரும் வாக்கிங் சென்று வந்து இரவு உணவான சாதத்தில் ரசத்தை ஊற்றி சாப்பிட்டதும் மாடிக்குச் சென்றனர். சற்று நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு படுத்துறங்கினர்.

நான்காவது நாள் அதாவது பதிநான்காம் தேதி வந்தது. அன்று விடிந்ததும் எழுந்து குளித்துவிட்டு இருவரும் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அமெரிக்காவிலிருந்து வந்திருந்த நவீனின் பெரியப்பா மகனான கிட்டுமணி நவீன் வீட்டுக்கு அனைவரையும் காண வந்திருந்தான். அவனை வரவேற்று காபிக் கொடுத்தாள் பர்வதம். கிட்டுமணி பர்வதத்திடம் ஒரு பையைக் கொடுத்து

“சித்தி இதில் எங்க ஊரு சாக்லெட்ஸ் இருக்கு இந்தாங்கோ ஃப்ரிட்ஜில் வச்சிடுங்கோ”

“ஓ!! அப்படியா! சரி சரி இதோ வச்சுடறேன்”

“என்ன நவீன் ஹவ் ஈஸ் யூவர் மேரேஜ் லைஃப்?”

“நல்லா போயிண்டிருக்கு கிட்டுமணி. இவ தான் என் தர்ம பத்தினி பேரு மிருதுளா.”

“ஹாய். ஆங் பத்திரிகையில பார்த்தேன்”

“நீ எப்படி இருக்க? உன் அமெரிக்க வாழ்க்கை எப்படி இருக்கு?”

“ஆல் இஸ் கோயிங் வெல் டில் நவ்”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் ஈஸ்வரன் ஹாலுக்கு வந்தார். உடனே கிட்டுமணி அவரிடம்

“என்ன சித்தப்பா எப்படி இருக்கேங்கள்?”

“நான் நல்லா இருக்கேன்டா அமெரிக்கா ரிட்டர்ன்”

“சரி நீ பேசிண்டிரு கிட்டுமணி நான் இன்னைக்கு மத்தியானம் குஜராத்துக்கு கிளம்பறேன் ஸோ போய் என் பெட்டியை பேக் பண்ணிட்டு வந்திடறேன். ஜஸ்ட் பத்து நிமிஷம்”

“நீ டில்லியில் அல்லவா இருந்த!!”

“இந்த வருஷம் தான் எனக்கு குஜராத் போஸ்டிங் ஆச்சு. ஸோ இன்னும் இரண்டு வருஷமாவது அங்க தான் இருப்போம்”

“ஓ! ஓகே ஓகே!! சரி டா நவீன் நீ போய் உன் வேலையைப் பாரு”

என்று அங்கிருந்து மிருதுளாவையும் அழைத்துக் கொண்டு மாடிக்குச் சென்றான் நவீன். அங்கே அவன் பெட்டியில் துணிமணிகளை அடுக்கிக் கொண்டே

“கிட்டுமணி நம்ம ரமணி பெரியம்மா புள்ளை. பிட்ஸ் பிலானி ல படிச்சிட்டு அமெரிக்கா போயிட்டான். எனக்கும் மெடிசின் படிக்கணும்ன்னு ஆசை இருந்தது.”

“படிச்சிருக்க வேண்டியது தானே நவீன்”

“ஆமாம் எங்கேந்து. அட போ மிருதுளா. இந்த படிப்பையே நான் எவ்வளவு கஷ்டப்பட்டு எவ்வளவு கஷ்டங்களுக்கு இடையில படிச்சிருக்கேன் தெரியுமா…இதுல எங்கேந்து மெடிசின் படிக்கறது? அந்த விஷயத்துல பெரியப்பா கிரேட் அவா பசங்களை எல்லாரையுமே நல்லா படிக்க வச்சிருக்கார். சரி சரி வா கீழே போகலாம்”

என்று கீழே வந்தவர்கள் சற்று நேரம் கிட்டுமணியுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவன்

“சரி நான் கிளம்பறேன்”

“என்னடா கிட்டு வந்ததும் கிளம்பறாய்? இருந்து சாப்டுட்டுப் போடா”

“இல்ல சித்தி நான் பிச்சுமணி மாமா ஆத்துக்கு லஞ்ச் சாப்பிட வரேன்னு சொல்லிருக்கேன். மாமி சமைச்சு வச்சு காத்திண்டிருப்பா. மாமாவும் வந்திருப்பார் நான் லேட் பண்ணாம டையத்துக்கு போணா தான் மாமாவோட கொஞ்ச நேரமாவது பேச முடியும் இல்லாட்டி அவர் கிளம்பி ஆபீஸ் போயிடுவார். நான் வரேன் டா நவீன்”

என கிட்டுமணி கிளம்பிய கொஞ்ச நேரத்தில் எல்லாம் நவீனும் சாப்பிட்டு விட்டு ஊருக்குக் கிளம்பினான். இந்த முறை அனைவர் முன்னிலும்

“மிருது இன்னைக்கு நைட்டு நீ மாடில தூங்க வேண்டாம். இங்கே ஹாலில் தூங்கு. டேய் பவின் நீ உள் ரூமுல தூங்கு சரியா. நாளைக்கு உன் அப்பா அம்மா வந்ததும் நீ அவாளோட போயிட்டு வா மிருது. நான் குழந்தைப் பொறந்ததும் வந்துடறேன்”

“சரி நவீன்”

“நான் போயிட்டு வரேன்”

என்று பொதுவாக சொல்லிவிட்டுக் கியம்பிச் சென்றான் நவீன். அவன் சென்றதும் மிருதுளா தனித்து நின்றாள். ஹாலில் போடப்பட்டிருந்த இரும்பு கட்டிலில் அமர்ந்தாள். பர்வதம் கட்டிலுக்கு எதிராக ஈஸிச் சேரில் அமர்ந்திருந்துக் கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். பவின், ப்ரவின் வெளியே நண்பர்கள் வீட்டுக்குச் சென்றனர். ஈஸ்வரன் வழக்கம் போல மத்திய உணவருந்தியதும் உள்ரூமில் படுத்துக்கொண்டார்.

சற்று நேரம் உட்கார்ந்திருந்த மிருதுளா மெல்ல எழுந்து உள் ரூமிற்குச் சென்று ஃப்ரிட்ஜைத் திறந்து கிட்டுமணி கொடுத்த சாக்லேட்டிலிருந்து ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து மீண்டும் கட்டிலில் உட்கார்ந்து அதன் மேல் பேப்பரை உரித்தாள். அதைப் பார்த்த பர்வதம்

“என்னது அது? என்னப் பண்ணற?”

“கிட்டுமணிக் கொடுத்த சாக்லேட் எடுத்து சாப்பிட அதோட பேப்பரை உரிக்கறேன் மா”

“எங்க இப்படி குடு”

என்று மிருதுளா எடுத்து வந்த சாக்லெட்டை அவள் வாயில் போடப் போகும் போது கேட்டாள் பர்வதம். உடனே மிருதுளா அதை தன் மாமியாரிடம் கொடுத்தாள். அதை வாஙகிய பர்வதம் அவள் வாயிற்குள் போட்டுக் கொண்டு..

“ம்‌…. நல்லா தான் இருக்கு. அமெரிக்கா சாக்லெட் அமெரிக்கா சாக்லெட் தான். நீ போய் உங்க அம்மா உன் சீமந்தத்துக்கு கொடுத்த சீர் பட்சணங்கள் இருக்கு இல்லையா அதை எடுத்து சாப்பிடு போ”

என கூறியதும் மிருதுளாவுக்கு சங்கடமானது. அவள் உள்ளேச் சென்று சீர் பட்சணங்களை எடுத்துக் கொண்டு வந்து ஹாலில் அமர்ந்து சாப்பிட்டாள். சாப்பிடும் போது

“ஆஹா !! நம்ம ஊரு பட்சணங்கள் நம்ம ஊரு பட்சணங்கள் தான் என்ன டேஸ்ட்டு என்ன டேஸ்ட்டு இதெல்லாம் வெளிநாட்டுல கிடைக்குமா?”

என பர்வதம் முன்னாலேயே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டே சொன்னாள். அதன் பின் மிருதுளா அந்த சாக்லெட்டில் இருந்து ஒரு பீஸ் கூட சாப்பிடவில்லை. மாசமான பெண்ணிற்கு அவள் கேட்டதை எல்லாம் செய்துக் கொடுக்க வேண்டும் என்பார்கள் …. கர்ப்பிணி சாப்பிடுவதை பார்க்கக் கூட சில வீடுகளில் அனுமதிக்க மாட்டார்கள்…ஆனால் இங்கே!!! ….செய்துக் கொடுக்க ஆளும் இல்லை அடுத்தவர் கொடுத்ததை சாப்பிட அனுமதிக்கவும் இல்லை!!! ஈஸ்வரன் பர்வதக் கோட்டையில் அந்த மாதிரியான நல்ல பழக்கவழக்கங்கள் எதுவும் கடைப்பிடிக்கப் படுவதில்லையே!!

அந்த அரை நாளை நல்லபடியாக எந்த வித பிரச்சினையுமின்றி கடத்தி அம்மா வீட்டுக்குச் சென்றிட வேண்டும் என்று மிருதுளா தன் மனதில் வேண்டிக்கொண்டாள். அவளிடம் எவரும் பேசவில்லை அவளும் அவர்களுடன் பேசவில்லை. மிருதுளாவிற்கு நவீன் இல்லாத அந்த அரை நாள் அந்த வீட்டில் ஏதோ ஒரு யுகத்தைக் கடப்பதுப் போல தோன்றியது. அன்றிரவு நவீன் சொன்னதுப் போலவே ஹாலில் படுப்பதற்காக அனைவரும் படுக்கும வரைக் காத்திருந்தாள். அனைவரும் அவரவர்கள் படுக்கும் இடத்தில் பாயை விரித்து படுக்கலானார்கள். அதைப் பார்த்த மிருதுளா பவினிடம்

“பவின் இன்னைக்கு மட்டும் உன் அண்ணா சொன்ன மாதிரி நீ உள்ரூமுல படுத்துக்கோயேன். ப்ளீஸ்.”

என்றதும் பவின் தன் பாயைச் சுருட்டிக் கொண்டு உள் ரூமிற்குச் சென்றுப் படுத்துக் கொண்டான். மிருதுளா மாடியிலிருந்து பாய் தலையணை எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு மெதுவாக படிகளில் இறங்கி வந்து ஹாலில் விரித்துப் படுத்துக் கொண்டாள். அப்போது பர்வதம்

“யாரு லைட்டை ஆஃப் பண்ணுவாளாம்”

என்று மனசாட்சியின்றி சொல்லிவிட்டு திரும்பிப் படுத்துக் கொண்டாள். மிருதுளா ப்ரவினைப் பார்த்தாள் அவன் எழுந்திரிக்கவில்லை. வேறு வழியின்றி தானே மெல்ல எழுந்து லைட்டை ஆஃப் செய்துவிட்டுப் படுத்துக் கொண்டாள்.

மறுநாள் தைப் பிறந்தது. பொங்கல் விழா அனைவருது இல்லங்களிலும் கோலாகலமாக கொண்டாடப் பட்டது. பர்வதமும் சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், வடை, சட்னி எல்லாம் வைத்துப் பூஜை செய்து ஈஸ்வரன், பவின், ப்ரவினுக்குக் கொடுத்தாள். அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் பர்வதம் அக்கா ரமணி ஆட்டோவில் வந்திறங்கினாள். வீட்டினுள் வந்தவளை வரவேற்றாள் பர்வதம்

“வா வா ரமணி ஹாப்பி பொங்கல். எங்க அத்திம்பேர் பசங்க எல்லாம்?”

“நான் காலையில பொங்கல் செய்து பூஜை எல்லாம் முடிச்சிட்டு எல்லாருக்கும் கொடுத்துட்டுதான் கிளம்பி வந்தேன். அவா எல்லாம் டிவி பார்த்துண்டிருக்கா. சாயந்தரமா வரோம்னு சொல்லிருக்கா. இங்கேயும பூஜை எல்லாம் ஆச்சுப் போலவே”

“ஆமாம் ரமணி இப்போ தான் ஆச்சு. இந்தா பொங்கல் சாப்பிடு”

“அச்சச்சோ பர்வதம் நான் நன்னா வயிறு முட்டச் சாப்டுட்டுத்தான் வந்திருக்கேன்”

“ப்ரசாதமா நினைச்சு சாப்பிடு இப்போ என்ன!”

“சரி ஒரே ஒரு ஸ்பூன் தா போதும். ஆங் அது போதும் தா…சூப்பரா இருக்குப் பர்வதம். என்னமா மிருது ஆத்துக்கு போற சந்தோஷம் உன் முகதுல பளிச்சிடறதே”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை பெரியம்மா”

“நவீன் ஊருக்கு நேத்து போயிருக்கான் இல்லையா!! இன்னைக்கு ஒரு நாள் கூட இருந்து பொங்கல் முடிஞ்சிட்டுப் போயிருக்கலாமே அவன்”

“இல்ல பெரியம்மா அப்புறம் குழந்தைப் பொறந்தா லீவு கிடைக்காது. அப்போ வேணுமேன்னு தான் கிளம்பிட்டார்.”

“ஓ!!! சரி சரி சரி”

சற்று நேரம் அமர்ந்து அனைவரும் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டே அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்தும் கொண்டிருந்தாள் மிருதுளா. ஆட்டோ வந்து நிற்கும் சப்தம் கேட்டதும் அவள் மனதில் விவரிக்க முடியாத மகிழ்ச்சிப் பொங்கியது. அவள் மனம் போலவே ஆட்டோவில் வந்திறங்கினர் அம்புஜமும் ராமானுஜமும். ரமணி அவர்களை வரவேற்றாள். அவர்கள் உள்ளே சென்றதும் ஒப்புக்காக பர்வதமும் ஈஸ்வரனும்

“வாங்கோ” என சொன்னார்கள்.

அம்புஜமும், ராமானுஜமும் பொங்கல் சீருடன் வந்திருந்தனர். வெங்கலத்தில் பொங்கல் பானை, பழங்கள், பூக்கள், சுவீட்ஸ், காரம் என பர்வதம் வீட்டு ஹாலில் அடுக்கி வைத்து

“மாமா மாமி எங்க பொண்ணுக்கு கொடுக்க வேண்டிய பொங்கல் சீரும் கொண்டு வந்துட்டோம். எடுத்து வச்சுக்கோங்கோ. இப்போ எங்க பொண்ணை அவ பிரசவத்துக்காக எங்காத்துக்கு அழைச்சுண்டுப் போக வந்திருக்கோம்.”

என்று அம்புஜம் சொல்லி முடித்ததும் ரமணி பர்வதத்திடம்

“அடே அப்பா. பர்வதம் உன் சம்மந்தி சீரா எவ்வளவு கொண்டு வந்திருக்கா!!! நிச்சயதார்த்தத்துக்கு வைக்கற மாதிரி இல்ல பொங்கலுக்கு சிரு செஞ்சிருக்கா!!!”

“எங்களுக்கு இருக்கறது ஒரு பொண்ணு தானே ரமணி மாமி. அவளுக்குச் செய்யாம வேற யாருக்கு செய்யப்போறோம் சொல்லுங்கோ”

“அது சரி தான்”

“காபி போடட்டுமா”

“என்ன கேட்டுண்டு போட்டுண்டு வா பர்வதம்” என்றாள் ரமணி அதற்கு அமபுஜம்

“இல்ல இல்ல பரவாயில்லை மாமி நாங்களும் பூஜை முடிச்சிட்டு பொங்கல் எல்லாம் சாப்டுட்டு தான் கிளம்பினோம் அதுனால ஒண்ணும் வேண்டாம்”

“சரி சரி. மிருது நீ உங்காத்துக்குப் போக துணிமணி எல்லாம் எடுத்து வச்சிட்டையா?”

“ஆங் நேத்தே வச்சாச்சுப் பெரியம்மா”

“அப்போ சரி. பர்வதம் நீ மிருது கையில் ஒரு டிபன் பாக்ஸ்ல கொஞ்சம் பொங்கலாவது வைத்துக் கொடுத்து வத்தும் வசையுமா போயி நல்லபடியா பெத்துப் புள்ளையோட வான்னு சொல்லிக் கொடுத்துட்டு கொஞ்சம் வேப்பிலையை அவள் தலையில வச்சுக் கொடு”

“நான் வேப்பிலைக்கு எங்க போவேனாம்”

“ஏன்டி பர்வதம் வேப்பிலைக்கா பஞ்சம் உங்க பக்கத்தாத்த இருக்கே போய் பறிச்சுண்டு வந்தா போறது”

“ரமணி மாமி அதெல்லாம் வேண்டாம் நானே எங்காத்தேந்து வேப்பிலைக் கொண்டு வந்திருக்கேன். அதை வச்சு விடறேன். மிருது இங்க வா.. திரும்பு”

“சரி வேப்பிலை நீங்களே கொண்டு வந்துட்டேங்கள் சரி வத்து பர்வதம் தானே கொடுக்கணும்.”

“ஆமாம் மாமி”

அனைவரும் பர்வதம் மிருதுளாவிடம் டிபன் பாக்ஸ் கொடுக்கக் காத்திருந்தனர் ஆனால் பர்வதம் உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்திரிக்காமலிருந்ததைப் பார்த்த அம்புஜம் மிருதுளாவைப் பார்த்து

“உன் பெட்டியெல்லாம் எங்கே இருக்கு மிருது?”

“மாடில இருக்குமா இதோப் போய் எடுத்துண்டு வரேன்”

“இரு இரு அப்பாவும் வருவா நீ எந்தப் பெட்டின்னு காட்டு போதும் அப்பா எடுத்தேண்டு கீழே வந்திடுவா சரியா”

“சரி மா. அப்பா வா” என்று அவள் எழுந்துச் செல்ல முற்பட்டபோது பர்வதம் அவளிடம்

“இதோ உங்க அப்பா அம்மா கொண்டு வந்த இந்த பானை, கரண்டி எல்லாத்தையும் மேலயே வச்சிட்டு உன் பொட்டியை எடுத்துண்டு வா”

என்றதும் ராமானுஜம் அவர் கொண்டு வந்த சீர் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு மாடிக்கு மிருதுளாவுடன் சென்றார். அங்கே பரணில் பாத்திரங்களை நியூஸ் பேப்பர் கொண்டு பொதிந்து வைத்தார். பின் பெட்டிகளை எடுத்துக் கொண்டு கீழே சென்றார். மிருதுளா பெட்டை சுருட்டி வைத்து அதை ஒரு போர்வையால் மூடி வைத்துவிட்டு அவள் பீரோவைப் பூட்டி சாவியை ஹான்ட்பேக்கில் போட்டுக் கொண்டு மெல்ல படிகளில் இறங்கி வந்தாள்.

அவள் வந்ததும் ராமானுஜம்

“சரி ஈஸ்வரன் மாமா அன்ட் பர்வதம் மாமி அப்போ நாங்க எங்க பொண்ணையும் கூட்டிண்டு கிளம்பறோம்”

“என்ன வந்ததும் கிளம்பறேங்கள் இருந்து சாப்டுட்டுப் போப்டாதோ!! என்ன பர்வதம் சொல்லு…சும்மா நிக்கறாய்?”

“அவாளுக்கு என்ன வேலையிருக்கோ என்னமோ” என்று பர்வதம் முனுமுனுக்க

“கரெக்டா சொன்னேங்கள் பர்வதம் மாமி. எனக்கு மத்தியானம் மூணு மணிக்கு ஆபீஸ் போகணும் அது தான் அவசரப் படறேன் இல்லாட்டி இருந்து சாப்பிட்டுட்டே கிளம்புவோம். அதுவுமில்லாம ஆட்டோ வெயிட்டிங்கில் இருக்கு அது தான்.”

“சரி சரி நல்லபடியா போயிட்டு புள்ளையப் பெத்துண்டு வாம்மா மிருது”

என்று கூறினாள் ரமணி. ஆனால் ஈஸ்வரனும் பர்வதமும் ஒன்றுமே கூறவில்லை. ரமணி இரண்டு மூன்று முறை சொல்லியும் பர்வதம் வேண்டுமென்றே மிருதுளா கையில் எதுவும் கொடுத்தனுப்பவுமில்லை தலையில் வேப்பிலையும் வைத்தனுப்பவில்லை.

மிருதுளா அவள் மாமனார் மாமியாரிடம்

“நான் போயிட்டு வரேன் ப்பா, வரேன் ம்மா”

என்றாள். அதற்கு இருவரும் “ம்
..ம்” என்று மட்டுமே சொன்னார்கள்.

அங்கிருந்து அம்புஜம், ராமானுஜம், மிருதுளா மூவரும் கிளம்பி வெளியே வந்தனர் ஆனால் அந்த வீட்டில் எவருமே வாசல் வரை கூட வரவில்லை. ரமணி மட்டும் வந்தாள். மூவரும் ஆட்டோவில் ஏறி அமர்ந்தனர். மிருதுளா ஆட்டோவுள்ளிருந்து போய்வருகிறேன் என்று ரமணியிடம் கூறிக் கையசைத்தாள். ரமணியும் கையசைத்து பை என்று சொல்லிவிட்டு வீட்டினுள் சென்றாள்.

ஆட்டோ பர்வதம் வீடிருந்தத் தெருவைத் தாண்டியதும் தான் ஏதோ தொலைத்தது மீண்டும் கிடைத்ததைப் போல உணர்ந்தாள் மிருதுளா.

தொடரும்…..




















வெளியே சென்ற மிருதுளாவும் நவீனும் ஒரு மணி நேரம் நடந்தனர் அப்போது நவீனிடம்

“எனக்கு ஏதோ தெரியாதவா ஆத்துல வந்து தங்கறா மாதிரி இருக்கு நவீ. என் வீடு என் மனுஷான்னு நான் மட்டும் நினைச்சா போதுமா? இங்கே இருக்கறவாளும் நினைச்சா தானே நல்லாயிருக்கும். நான் என்ன தப்பு செய்தேன் ஏன் அவா என்கிட்ட அப்படி நடந்துக்கறா?”

“அது ஒண்ணுமில்லை மிருது அவாளுக்கு நான் உன்னை கல்யாணம் பண்ணிண்டதுல இஷ்டமில்லை அதுதான் வேற ஒரு ரீஸனும் இல்லை”

“என்னது!!! என்ன சொல்லறேங்கள் நவீ? அவாளுக்குப் பிடிக்கலைன்னா அப்பறம் எப்படி என்னை கல்யாணம் பண்ணிண்டேங்கள்? நீங்க தான் அவா அவ்வளவு தப்பா பேசினபோதெல்லாம் ஒண்ணுமே திருப்பிப் பேசினது கூட கிடையாது அப்புறம் எப்படி அவா சொல் மீறி நம்ம கல்யாணம் நடந்தது? இட்ஸ் ஷாக்கிங் ஃபார் மீ!”

“எனக்கு உன்னைப் பிடிச்சிருந்தது கல்யாணம் பண்ணிண்டுட்டேன். உன்னை பெண் பார்த்து வந்ததுமே உன்னை வேண்டாம்ன்னு சொன்னா ஆனா எனக்கு அவா சொன்ன ரீஸன்ஸ் திருப்தியா இருக்கலை அதுனால நான் பிச்சுமணி மாமா கிட்ட அபிப்பிராயம் கேட்டேன் ஏன்னா அவரும் உங்காத்துக்கு வந்திருந்தார் இல்லையா. அவர் என்னிடம் ப்ரோஸீட் பண்ணச் சொன்னார். அதுக்கப்புறம் நான் வந்து பார்த்தேன் ரொம்ப பிடிச்சதுனால கல்யாணம் பண்ணிண்டேன்.”

“என்னை வேண்டாம்ன்னு சொன்னதுக்கு ரீஸன் சொன்னா?”

“அது தான் சொன்னேன் இல்லையா அது ப்ராப்பர் ரீஸன் இல்லன்னு அப்புறம் ஏன் நான் அதை உன்கிட்ட சொல்லணும். லீவ் இட்… எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு, உனக்கும் என்னைப் பிடிச்சிருக்கு இதுக்கு மேல என்ன வேணும் சொல்லு!! இனி நம்ம ஜுனியர் பத்தி மட்டும் யோசிப்போம் மிருது. இவாளோட இந்த டிராமா எல்லாம் நாம மூணு பேரும் குஜராத்துக்கு போயிட்டா முடிஞ்சிடும்.”

“மூணு பேரா? அது யாரு மூணாவது ஆள்?”

“நம்ம ஜுனியர் தான். வேற யாரு?”

“ஹா! ஹா! ஹா! தெரியும் சும்மா கேட்டேன்”

என்றுக் கூறிக்கொண்டே நவீனின் கையோடு தன் கை கோர்த்து நடக்கலானாள் மிருதுளா. நவீன் கூறிய விஷயங்களில்.. அவள் மனம் சந்தோஷத்தில் துள்ளியது. என்ன தான் மாமனார் மாமியார் கொடுமைகள் ஒரு பெண்ணிற்கு இருந்தாலும் தன் கணவன் தனக்காக இருக்கிறான் என்பதே அவள் அதனைத்தையும் கடந்துச் செல்ல ஓர் ஊன்றுகோல் போல் இருக்கும்.

மிருதுளாவின் மனம் நவீனின் ஆதரவான பேச்சின் சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது சட்டென அவள் நவீனிடம்

“இப்போ புரியறது உங்க பேரன்ட்ஸ் ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கறான்னு!!! அதுனால தான் அனைக்கு என்னை அப்படியே போயிடு எங்க புள்ளைக்கு நாங்க வேற கல்யாணம் பண்ணி வச்சுக்கறோம்ன்னு சொன்னாளா!!! ஓகே! ஓகே! நான் ஏதோ உங்க மேலே உள்ள பொஸஸிவ்னஸ் என்று நினைச்சேன்.”

“பொஸஸிவ் ஆ!!! யாரு அவாளா? என் மேலயா!!! நல்ல காமெடி. அதெல்லாம் அவாளுக்கு இல்லை மிருது.”

“இட்ஸ் ஓகே நவீ! ரீஸன் எதுவா இருந்தா என்ன? நீங்க இந்த மண்ணுல பிறப்பதற்கும், எனக்கு நீங்க கணவரா கிடைச்சதுக்கும் காரணமாக இருந்தவா அவா தானே!!! அதுனால் அவாளை நான் மன்னிச்சுடறேன். இங்க பாருங்கோ நவீ!! உங்களை அவாகிட்டே இருந்து பிரிச்சுக் கூட்டிண்டு போக நான் வரலை. நமக்கும் குடும்பம் வேணும். நம்ம குழந்தைக்கும் தாத்தா, பாட்டி, சித்தப்பா எல்லாரும் வேணும். அதுனால தான் இவா பேசறது, பண்ணறது எல்லாத்தையும் பொறுத்துக்கறேன். வில் கிவ் தெம் டைம் டூ டைஜஸ்ட் தி ஃபாக்ட் தட் ஐ ஆம் தெயர் டாட்டர் இன் லா அன்ட் இட் கெனாட் பீ சேஞ்சுடுன்னு. அதைப் புரிஞ்சுண்டுட்டான்னா மாற்றம் வரும்ன்னு நம்பறேன். நம்பிக்கைத் தானே வாழ்க்கை!.”

“ஹலோ மேடம்!! நான் பொறக்கறதுக்கு வேணும்னா அவா காரணமா இருக்கலாம் ஆனா உனக்கு கணவனானதுக்கு முழுக் காரணமும் நானே தான்.”

“ஓகே சார் ஜீ! ஓகே! ஒத்துக்கறேன். சரி சரி ஆத்துக்குப் போகலாம் நேரமாயாச்சு! போதும் நடந்தது.. வாங்கோ”

“ஓகே யுவர் ஆனர்”

“ஐய்யே!!! சரி சரி அப்படியே அந்த தெருவோட ட்ரன் பண்ணிடுவோம்”

இருவரும் பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர். நவீனும் மிருதுளாவும் உள்ளே நுழையும் பொழுது அனைவரும் உணவருந்திவிட்டு அவரவர் சாப்பிட்ட தட்டுகளை அலம்பி வைத்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்ததும் நவீன் பவினிடம்

“என்ன டா எல்லாரும் சாப்பிட்டாச்சா?”

“ஆங் சாப்டாச்சு”

“சரி மிருது நாமளும் சாப்பிட்டுட்டு மாடிக்கு போகலாம் வா. நீ ஏன் இப்போ ஒரு தடவை ஏறி, இறங்கி சாப்பிட வந்து மறுபடியும் ஏறணும்!! அதுக்கு சாப்டுட்டே போயிடலாம். உட்காரு வா”

என்றான். உடனே மிருதுளாவும் இரண்டு தட்டுகளை அலம்பி எடுத்து வந்து அமரும் போது

“அம்மா நீங்க சாப்ட்டாச்சா?”

“ம்..ம்..ஆச்சு ஆச்சு.”

“சரி மா. அப்போ நாங்க சாப்டுட்டு பாத்திரங்களை எல்லாம் ஒழிச்சுப் போட்டு தேய்ச்சு வச்சிடவா?”

“ம்…ம்”

என ம் வரிசையிலேயே பேசிவிட்டு உள் ரூமிற்குள் சென்றாள் பர்வதம். ஹாலில் பவினும், ப்ரவினும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். நவீனும் மிருதுளாவும் சாப்பிடுவதற்கு சாதத்தைப் பார்த்தனர்… குறைவாக இருந்தது. குழம்பு, பொறியலும் குறைவாக இருந்தது. இருப்பதை இருவரும் உண்டபின் மிருதுளா பாத்திரங்களை எல்லாம் போட்டு தேய்க்க ஆரம்பித்தாள். அப்போது நவீன் அவளுக்கு உதவி விட்டு உள்ரூமிற்குச் சென்று

“ரெண்டு பேர் எக்ஸ்ட்ரா இருக்கோம். கொஞ்சம் ஜாஸ்தி சமைச்சிருக்கலாம்.”

என்று கூறியதற்கு பர்வதம் ஈஸ்வரனைப் பார்த்தாள் அவ்வளவு தான் உடனே தன் தர்மபத்தினி மனமறிந்த அவர்…

“டையத்துக்கு சாப்பிட வரணும். அதுவுமில்லாம அவளும் சமைக்கலாமே”

இடையில் பர்வதம்

“வெளிய போனவா சாப்டுட்டு வந்தா எக்ஸ்ட்ரா செய்தது மிச்சமான வேஸ்ட் ஆகிடும். அதை கொட்டவா முடியும்?”

“இப்படி பத்தும் பத்தாம செய்றதுக்கு எக்ஸ்ட்ரா ஆச்சுன்னா கொட்ட வேண்டாம் ஆனா ஃப்ரிட்ஜில் வைக்கலாமே!”

“நாங்க பழையதெல்லாம் சாப்பிட மாட்டோம்”

இதற்குமேல் நவீன் பேச விரும்பவில்லை. இந்த பேச்சை வளர விட்டால் தேவையில்லாமல் பிரச்சினை பண்ணுவார்கள் என்பதை உணர்ந்தவன் சட்டென

“இன்னும் ஒரு அஞ்சு நாள் தான் அதுவரை கொஞ்சம் ஜாஸ்தி சமைக்க முடிஞ்சா பண்ணு இல்லாட்டி மிருதுவ பார்த்துக்கச் சொல்லிக்கறேன்”

என கூறிவிட்டு அங்கிருந்து வெளியே வந்தான் மிருதுளாவும் பாத்திரங்களை எல்லாம் தேய்த்து வைத்து விட்டு வந்தாள். அவளிடம்

“வேலை ஆச்சா மிருது”

“ஆங் ஆச்சு நவீ”

“சரி வா நாம மேல போகலாம்”

இருவரும் மாடியில் அவர்கள் ரூமிற்குச் சென்றனர். அங்கே மிருதுளாவிடம்

“இத்தனைப் பேர் இருக்கோமே கொஞ்சம் ஜாஸ்தியா எல்லாம் செஞ்சா தான் என்னவாம்?”

“பரவாயில்லை நவீ ஜஸ்ட் லீவ் இட். இன்னும் ஒரு அஞ்சு நாள் தானே அட்ஜெஸ்ட் பண்ணிண்டுட்டா போறது. அவா இதை ஒரு இஷ்ஷுவா ஆக்கணும்ன்னு நினைச்சுப் பண்ணறாளோ என்னவோ அது நமக்குத் தெரியாது ஆனா நாம அதற்கு இடம் கொடுக்காமல் இருந்திடுவோம். இப்போ என்ன நமக்கு சாப்பாடு இல்லைன்னு அவா சொல்லலையே!!! இருக்கறதை சாப்பிடுவோம் அவ்வளவு தான். நாம என்ன வாழ்நாள் முழுவதும் இங்கேயே இருக்கப் போறோமா என்ன? விடுங்கோப்பா லைட்டை ஆஃப் பண்ணிட்டுப் படுங்கோ”

நவீன் லைட்டை ஆஃப் பண்ணிவிட்டுப் படுத்தான் ஆனாலும் அவனுக்கு பர்வதம் செய்ததுப் பிடிக்கவில்லை. மிருதுளா வீட்டில் அவனையும் மிருதுளாவையும் எப்படி கவனித்தார்கள் என்பதை யோசித்துப் பார்த்தான். ஆனால் அவன் வீட்டிலோ அவனுக்கும் அவன் மனைவிக்கும் துளிக் கூட மரியாதை என்பதில்லை என்று எண்ணி தனக்குத் தானே நொந்துக் கொண்டான். அதை நினைத்துக் கொண்டே சற்று நேரம் புரண்டு படுத்து விட்டு பின் உறங்கிப்போனான்.

காலை விடிந்தது வழக்கம் போல எல்லா வேலைகளும் நடந்தது. இறுக்கமான சூழல் தொடர்ந்தது. ஆனால் மத்தியத்திற்கு மேல் சீமந்தத்திற்கு சொந்த பந்தங்களின் வருகை வீட்டில் கொஞ்சம் கலகலப்பை ஏற்படுத்தியது. மாலை அனைவரும் இரண்டு வேனிலும் ஏறி மண்டபத்திற்குச் சென்றனர். இவர்கள் சென்ற கொஞ்ச நேரத்தில் எல்லாம் மிருதுளா வீட்டாரும் வந்தனர். அனைவரும் ஒன்றாக அமர்ந்து மாலைச் சிற்றுண்டி அருந்தினார்கள். பின் மறுநாள் காலை ஃப்ங்ஷனுக்கு வேண்டியவைகளை ஏற்பாடு செய்யத் துவங்கினர் நவீன், மிருதுளா, அம்புஜம் மற்றும் ராமானுஜம். பர்வதமும் ஈஸ்வரனும் எதிலும் பட்டுக்காததுப் போல அவர்கள் சொந்தங்களை மட்டும் வரவேற்று அவர்களுடன் ஊரையாடிக் கொண்டிருந்தனர்.

அன்றிரவு அனைவரும் மண்டபத்தில் உணவருந்தியப் பின் படுத்துறங்கினர். காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து வளைகாப்பு சீமந்தம் சடங்குகள் துங்கின. உள்ளே ஏதோ வேலையாக இருந்த அம்புஜம் வருவதற்குள் பர்வதமும் அவள் கூடப்பிறந்தவர்களும் வளைகாப்பைத் துவங்கிவிட்டனர் . அப்போது நவீனின் சித்திப் பையனின் மனைவி அம்புஜத்திடம்

“மாமி நீங்க இல்லாமயே அங்க தொடங்கிட்டா. அவா எல்லாரும் அப்படி தான். இதை இப்படியே போட்டுட்டு போய் அங்க உங்க பொண்ணு வளைகாப்புல அம்மா நீங்க வளை போடண்டாமா கலந்துக்கோங்கோ போங்கோ.”

என்று கூற அம்புஜம் ரூமிலிருந்து தன் வேலையை செய்துக்கொண்டே எட்டிப்பார்த்து

“இதை தொடங்க எப்படியும் அரைமணி நேரமாகும்ன்னு பர்வதம் மாமி சொன்னாளே!! அதுனால தான் நான் இங்கே இந்த வேலையை அதுக்குள்ள முடிச்சிடலாம்ன்னு வந்தேன். அதுக்குள்ள தொடங்கிட்டாளா. சரி இதோ போறேன்”

வளைகாப்பு சீமந்தம் எல்லாம் நல்லப்படியாக முடிந்ததும். அனைவரும் வந்தவர்களை வரவேற்று அவர்களை சாப்பிட அழைத்துச் சென்று பின் வந்தவர்கள் அனைவரும் சாப்பிட்டுக் கிளம்பியதும் நெருங்கிய சொந்தங்கள் சிலரும் நவீன் வீட்டாரும் மிருதுளா வீட்டாரும் சேர்ந்து மத்திய உணவருந்தியதும் சற்று ஓய்வெடுத்தப் பின் மூன்று மணியளவில் பூச்சூடல் நடத்தி மிருதுளாவுக்கு த்ரிஷ்டி சுத்திப் போட்டனர். அத்துடன் அனைத்தும் முடிந்தது. மிருதுளா டையர்டாக இருப்பதாக கூறிப் படுத்துக்கொண்டாள் அப்போது அந்த அறையில் அம்புஜம் மிருதுளாவின் புடவைகள் ப்ளௌஸ் எல்லாவற்றையும் மடித்து அவள் பெட்டியில் அடுக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தாள், அங்கே பர்வதமும் அவள் பக்கத்து வீட்டு பர்வத ஜால்ராவும் அவர்கள் துணிமணிகளை மடித்துக் கொண்டிருந்தனர் அப்போது அந்த ஜால்ராவிடம் பர்வதம் ஏதோ கண்ஜாடைக் காட்ட உடனே ஜால்ரா இசைக்க ஆரம்பித்தது

“ஏன் அம்புஜம் மாமி உங்க பொண்ணுத் துணிகளை மட்டும் தான் மடிப்பீங்களா? உங்க மாப்பிள்ளை நவீனோட துணிகள் எல்லாம் இங்க கிடக்கே அதையும் சேர்த்து மடிச்சு வச்சுக்கோங்க”

“அதை பர்வதம் மாமி மடிப்பாங்கன்னு நினைச்சேன் அதுனால தான் மிருதுவோடத மட்டும் மடிச்சு வச்சேன்”

“நவீன் தான இப்போ உங்க மாப்பிள்ளையா மட்டும் தானே இருக்காரு அப்புறம் ஏன் பர்வதம் மாமி மடிச்சு வைக்கணும்?”

“இதெல்லாம் பேசறதுக்கு நீங்க யாருங்க? என் பொண்ணோட மாமியாரா? பக்கத்து வீட்டுக் காரங்கன்னா அந்த லிமிட்டோட இருந்துக்கோங்க அதுதான் உங்களுக்கு மரியாதை. ஏதோ நீங்க தான் நவீனோட அம்மா மாதிரி பேசரீங்க. என்ன பர்வதம் மாமி கண்டவாள பேச விட்டு வேடிக்கைப் பார்க்கறேளே நல்லாவாயிருக்கு?”

என்று ஆத்திரத்தில் பேச அதற்கு பர்வதம்..

“நான் ஒண்ணும் அவாகிட்ட எதுவும் கேட்கச் சொல்லலை. இங்கே நடக்தறதெல்லாம் அவாளும் பார்க்கறாயில்ல அது தான் கேட்கறா”

“அப்படியே கேட்டாலும் அதைப் பார்த்துண்டு நீங்க இப்படித் தான் சும்மா இருப்பேளா?”

“அம்மாடி என்ன பர்வதம் மாமி உங்க சம்மந்தி இப்படி எல்லாம் பேசுது!!! நீங்க ரொம்ப பாவம் மாமி. உங்களை நினைச்சா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அம்மாகாரியே இப்படி பேசுதுன்னா அப்போ நீங்க சொன்னது சரிதான். இந்த மிருதுளா எப்படிப் பேசிருப்பா?”

“மறுபடியும் சொல்லறேன் என் பொண்ணைப் பத்தியோ இல்லை அவ குடும்பத்தைப் பத்தியோ பேச உங்களுக்கு எந்த ரைட்ஸும் இல்லை. இதுக்கு மேல பேசினேங்கள் …”

என்று முடிப்பதற்குள் நவீன் உள்ளே வந்து

“என்ன என்ன சத்தம் இங்கே என்ன ஆச்சு”

“தம்பி நவீனு உன் மாமியார் காரி என்னமா பேசுதுப்பா உங்க அம்மா பாவம் ப்பா.”

“எதுவா இருந்தாலும் நாங்க பார்த்துக்கறோம். ஆமாம் நீங்க சாப்டாச்சா?”

“ஆங் சாப்டாச்சுப்பா ஏன் கேக்குற?”

“அப்போ இன்னும் அஞ்சு நிமிஷத்துல நம்ம ஊருக்கு பஸ் மண்டபம் வாசல்லேந்து இருக்கு. தாம்பூலம் வாங்கிட்டேங்களா இல்லைன்னா வாங்க நானே வாங்கித் தரேன்.”

“இங்கேந்து கிளம்புன்னு சொல்லற. பாவம் பர்வதம் மாமி நீங்க. இதுக்கு மேல நான் ஏன் இங்க இருக்கப் போறேன். கிளம்பறேன். வரேன் மாமி”

என்று அந்த அறையை விட்டு அவள் சென்றதும் அம்புஜம் நவீனைப் பார்த்து

“அவா தேவையில்லாம என்னையும் என் பொண்ணையும் அவமானப் படுத்தினா அதனால நானும்….”

“நீங்க எதுவும் எக்ஸ்ப்ளேயின் பண்ண வேண்டாம். எனக்கு அந்த லேடியைப் பத்தி நன்னாவே தெரியும். நீங்க உங்க வேலையைப் பாருங்கோ.”

என கூறி பர்வதத்தைப் பார்த்து ஒரு முறை முறைத்து விட்டுச் சென்றான் நவீன். அம்புஜத்திற்கு பர்வதம் அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறாள் என்பது நன்றாக புரிந்தது. அவர்கள் அனைத்தையும் அடுக்கி வைத்ததும் வெளியே வட்டமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அம்புஜம் அனைவர் முன்னிலையிலும் (என்னதான் இவர்களே ஏற்பாடு செய்திருந்தாலும் சம்மந்திகளை விட்டுக்கொடுக்காமல்)

“வளைகாப்பு சீமந்தம் எல்லாம் நல்லப்படியா நடந்தது. ரொம்ப சந்தோஷம். அப்புறம் நாங்க எங்க பொண்ணை எப்போ எங்காத்துக்கு அழைச்சிண்டுப் போறதுன்னும் சொல்லிட்டேங்கள்ன்னா நல்லா இருக்கும்”

என்று அனைவர் முன்னிலும் கேட்டது பர்வதத்திற்கு ஷாக் ஆனது. ஆமாம் தனியாக இதை கேட்டால் பிரச்சினை செய்வார்கள் என்பது நன்கறிந்ததே அது மிருதுளாவை மனதளவில் பாதிக்கும் அதை தவிர்ப்பதற்காகவே அம்புஜம் அப்படி கேட்டுதுப் போல தான் தோன்றுகிறது. சில நேரங்களில் சூட்சுமமாக நடக்கத் தெரியாதவர்கள் கூட ஒரு முறைப் பட்டால் தெரிந்துக் கொள்வதோடு அதற்கு ஏற்றார் போல் நடக்கவும் செய்கின்றனர். இந்த மாற்றம் பல பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி ஆகிறது. பர்வதம் அதற்கு அவள் சகோதரியான ரமணியிடம் ஏதோ முனு முனங்க உடனே அவள்

“இங்கே பாருங்கோ அம்புஜம் மாமி. எங்க பர்வதம் என்ன சொல்லறான்னா….இன்னைக்கு பத்து தேதி ஆச்சு, இன்னும் நாளு நாள்ல பொங்கல் வர்றது அதுனால அது முடிஞ்சிட்டு நல்ல நாள் பார்த்து நீங்க மிருதுளாவை உங்க ஆத்துக்கு பிரசவத்துக்கு கூட்டிண்டு போகலாம்”

“அதுக்கப்புறம் ஏன் நல்ல நாள் பார்க்கணும். பொங்கல் அன்னைக்கே மத்தியானம் வந்து கூட்டிண்டு வந்திடறோம்”

“அதுவும் சரிதான். என்ன பர்வதம் அவா சொல்லறதும் எனக்கு சரியா தான் படறது.. ஓகே தானே”

என்று சகோதரி கூறியது பர்வதத்திற்கு பிடிக்கவில்லை. அவள் மீண்டும் ஒரு டிராமாவுக்கு ஸ்க்ரிப்ட்டோடு காத்திருந்ததை அவளின் சகோதரியே கிழித்தெரிந்ததில் வருத்தம் கோபம் இருந்தாலும் சபையில் அவளால் காண்பிக்க முடியவில்லை ஆகையால் சரி என்று சம்மதித்தாள். உடனே அம்புஜம்

“அப்போ எல்லாம் நல்லபடியா பேசியாச்சு . அதுபடி நாங்க பொங்கல் அன்னைக்கு காலையில ராகு காலம் முடிஞ்சதும் வந்து எங்க மிருதுவ கூட்டுண்டு வந்திடறோம். ரமணிமாமி பேசாம நீங்களும் நாங்க மிருதுளாவை ஆத்துக்கு அழைச்சுண்டு வர வரும்போது பர்வதம் மாமி ஆத்துக்கே வந்திடுங்கோளேன்”

“ஓ! பேஷா வந்துடறேன். என்னடி பர்வதம் அப்போ இந்தப் பொங்கல் எங்களுக்கும் உங்காத்த தான் சரியா”

என்றதும் பர்வதத்திற்கு ஒன்றும் பேச முடியவில்லை. தலையை சரி என்று அசைத்தாள். அம்புஜம் மீண்டும் தாங்கள் கேவலப்படாமலிருக்க முன்னெச்சரிக்கையாக பர்வதத்தின் அக்கா ரமணியையும் அன்று வரச்சொல்லியிருக்கிறாள்.

மிருதுளா வீட்டார் அனைத்தையும் பேசி முடிவெடுத்ததும் மண்டபத்திலிருந்து கிளம்பி அவர்கள் வீட்டுக்குச் சென்றனர். நவீன் வீட்டாரும் புறப்பட்டனர். ஆனால் அவர்கள் வண்டியில் எடுத்து வைக்க வேண்டிய பெட்டியின் எண்ணிக்கை அதிகம் என்பதால் நவீன் மிருதுளாவை ரூமில் படுக்கச் சொல்லி பர்வதத்தையும் ஈஸ்வரனையும் அவளுக்கு துணையாக அமரச்சொல்லிவிட்டு தன் சகோதரன்களுடன் சேர்ந்து பெட்டிகளை எல்லாம் முதலில் மாடியிலிருந்து கீழே இறக்கிவைத்தான். பின் வண்டியில் ஏற்றினான். அந்த நேரத்தில் மிருதுளா சற்றுக் கண் அசந்தாள். அவளை அங்கேயே விட்டுவிட்டு நவீனுக்கே தெரியாமல் வண்டியில் ஏறி அமர்ந்துக் கொண்டனர் மூத்த தம்பதியர். இதற்கிடையில் மிருதுளா எழுந்துப் பார்த்தாள் மண்டபமே காலியாக இருந்தது. பதற்றமானாள். மெல்ல எழுந்து மாடியில் இருந்த எல்லா அறைகளிலும் பார்த்தாள். தன்னை விட்டுவிட்டுப் போய்விட்டார்களா என்று ஒரு நொடி யோசித்ததில் அவள் கண் கலங்கியது. உடனே

“மிருது மிருது” என நவீனின் குரல் கேட்டதும் கண்களைத் துடைத்துக் கொண்டு

“நவீ நான் இந்த ரூம்மில் இருக்கேன். இதோ வரேன்”

“உன்னை அங்க காணும்ன்னு பதறிப் போயிட்டேன்”

“நானும் தூங்கிட்டேன். எழுந்துப் பார்த்தா யாரையும் காணும் அதுதான் ஒவ்வொரு ரூமா தேடிண்டிருந்தேன். நீங்க வந்துட்டேங்கள். என்னை விட்டுட்டுப் போயிட்டேங்களோன்னு ஒரு செக்கனட் பயந்துட்டேன் தெரியுமா!”

“அது எப்படி நான் உன்னை விட்டுட்டுப் போவேன் மிருது. உன்னைப் பார்த்துக்கச் சொல்லி அவாளை உட்கார வச்சுட்டு வண்டியில பெட்டிகளை எல்லாம் ஏத்திட்டு சமையல் காராளுக்கு எக்ஸ்ட்ராவா ஒரு ஐநூறு ரூபாய் கொடுத்துட்டு வந்து பார்க்கறேன் அவா எல்லாரும் வண்டிக்குள்ள உட்கார்ந்திருக்கா!!! அப்போ உன்னை தேடினேன் நீ இருக்கலை!! எங்க நீன்னு கேட்டதுக்கு அவாளுக்கு தெரியாதுன்னு அலட்சியமா சொல்லிட்டு உட்கார்ந்திருந்தா!! அது தான் உடனே உன்னைத் தேடிண்டு வந்தேன். சரி படியில பார்த்து இறங்கு”

நவீனும் மிருதுளாவும் மெல்ல இறங்கி வந்து வண்டியில் ஏறினர். அப்போது பர்வதம்

“மேலேந்து கீழ வர்றதுக்கு இவ்வளவு நேரமா எடுத்துப்பா!! எவ்வளவு நேரம் வண்டிலயே காத்திருக்கறது”

அதை துளியும் பொருட்படுத்தவில்லை இளம் தம்பதியர். மாசமான பெண் என்று கூட பார்க்காமல் அவர்கள் இவ்வாறு செய்து அவர்களின் பாவ கணக்கில் இன்னுமொரு எண்ணைக் கூட்டிக் கொண்டனர் மூத்த தம்பதியர்.

தொடரும்….

அம்புஜம் என்ன தான் சமாதானம் சொன்னாலும் அன்று இரவு முழுவதும் மிருதுளாவின் மனம் கலங்கியது. அவள் மனம் அவளிடம்…

ஏன் ஃபைலை எடுத்துச் சென்றார்? யாருக்கு காட்டுவதற்கு? அதை ஏன் மறைத்து எடுத்துச் செல்ல வேண்டும்? இதில் பர்வதம் ஈஸ்வரனின் சூழ்ச்சி ஏதாவது உள்ளதா? எதற்காக இருக்கும்?

என்று பல கேள்விகளை ஒன்றின் பின் ஒன்றாக கேட்டதில் அவளுக்கு உறக்கம் வரவில்லை. விடியலுக்காக காத்திருந்தாள். காலையில் சீக்கிரம் எழுந்து குளித்து தயாராகி நவீனின் வரவுக்காக காத்திருந்தாள். அப்படி அவள் காத்திருந்தபோது அம்புஜத்திடம்…

“அம்மா இப்போ நான் அங்க நவீன் கூட போனேன்னா மறுபடியும் இங்க வர்றதுக்கு அவா ரெண்டு பேரும் என்னை அசிங்கமா பேச மாட்டாளே!!”

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது மிருது கவலைப் படாதே என்னதான் இருந்தாலும் அது உன் வீடு. என்னைக்கா இருந்தாலும் நீ அங்க தான் வாழ்ந்தாகணும். நீ நவீன் கூட போ வளைகாப்பு முடிஞ்சதும் உன்னை நாங்க எங்க கூடவே அழைச்சிண்டு வந்திடரோம் சரியா”

“இல்லம்மா எனக்கு அங்க போய் அவா முகத்தைப் பார்த்தாலே அவா பேசினதெல்லாம் ஞாபகம் வரும் அப்போ எப்படி அங்க சகஜமா இருக்க முடியும்?”

“அவா அப்படித் தான்னு மனசுல நினைச்சுக்கோ. நீ அவாளுக்காக அங்க போகலை உன் புருஷனுக்காக போறன்னு நெனச்சுண்டு போ. அதுவுமில்லாம தப்பு பண்ணினவா அவா நீயில்லையே!!! அவா பேசின பேச்சுக்கெல்லாம் அவா தான் உன்னை பார்க்க வெட்கப் படணும். ஆனால் அவா அப்படிப் பட்டவா கிடையாது அது உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும். அதை விட்டுவிடுவோம். உன்னை உன் ஆத்துக் காரர் கூட்டிண்டுப் போறார் நீ போற அவ்வளவு தான். சீமந்தம் வளைகாப்பு முடிஞ்சதும் நாங்க உன்னை எங்களோட கூட்டிண்டு வந்திடறோம். கவலைப் படாதே சரியா.

“சரி மா. ஆனா மறுபடியும் என்னைக் குத்தி குத்திப் பேசினானா!!”

“நீ கண்டுக்காதே. இப்படிப்பட்டவாகிட்ட நாம திருப்பிப் பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை. அப்படியே பேசினாலும் அவா பேச்சைத் திசைத் திருப்பி நம்மளையே அசிங்கப் படுத்தறா மாதிரி கத்து கத்துன்னு கத்துவா!! அதனால என்ன வேணும்னாலும் பேசிட்டுப் போட்டும் நீ காதுக் குடுத்துக் கூட கேட்காதே அதே சமயம் அவா பெரியவா அதுனால அதுக்கு தகுந்த மரியாதையை குடு. மத்ததை எல்லாம் அந்த அம்பாள் பார்த்துப்பா. சரியா.”

“ம்…ஓகே மா”

என்று வெளியே சென்னாலும் உள்ளுக்குள் அவர்கள் மீண்டும் ஒரு சண்டை போட்டிடுவார்களோ என்ற பயம் மிருதுளாவுக்கு இருக்கத் தான் செய்தது.

காலை ஒரு பதினோரு மணி அளவில் நவீன் வந்தான். அவன் வந்ததும் அவன் கையைப் பார்த்தாள் மிருதுளா. அவன் கொண்டுச் சென்ற ஃபைல் பேக் திருப்பி எடுத்து வந்திருந்தான். அந்த பையை எடுத்துச் சென்ற இடத்திலேயே மீண்டும் வைத்தான் நவீன். ஏன் எடுத்துச் சென்றான்? என்ற விவரங்கள் ஏதும் சொல்லவில்லை. பின் மிருதுளாவிடம்

“மிருது ஆர் யூ ரெடி? நாம கிளம்பலாமா”

“கிளம்பலாம் நவீ ஆனா நான் மறுபடியும் இங்கே வர்றதுக்கு உங்க அப்பா அம்மா கிட்ட அனாவசியமா தேவையில்லாத பேச்சுகள் வாங்க எனக்கு இஷ்டமில்லை. அதனால வளைகாப்பு முடிஞ்சதும் நீங்களே என்னை இங்க கொண்டு வந்து விட்டுட்டு தான் ஊருக்கு கிளம்பணும் அப்படின்னா நான் வர்றேன் இல்லாட்டி எனக்கும் என் குழந்தைக்கும் எதுவும் வேண்டாம். நாங்க இங்கேயே எந்த வித ஏச்சும், குத்தல் பேச்சும் இல்லாம நிம்மதியா இருந்திடறோம்.”

“யூ டோன்ட் வரி மிருது. போன தடவை மாதிரி இந்த தடவை அவாளை நம்பி தப்பு பண்ண மாட்டேன்.இந்த தடவை அவா உன்னை ஒண்ணும் சொல்லவும் மாட்டா நீ தைரியமா வரலாம்”

“ஓகே அப்போ கிளம்பலாம்”

“மணி ஆயிடுத்து இரண்டு பேரும் சாப்டுட்டே கிளம்பலாமே”

“சரி நாங்க ரெண்டு பேரும் சாப்டுட்டே கிளம்பறோம்”

“இதோ அஞ்சே நிமிஷம் மாப்ள எல்லாம் ரெடி. நீங்க ரெண்டு பேரும் உட்காருங்கோ நான் பறிமாறறேன்.”

“அம்மா நீயும் எங்க கூட உட்கார்ந்து சாப்பிடு மா மூணு பேருமா சாப்பிடலாம். அப்புறம் நீ மட்டும் தனியா உட்கார்ந்து சாப்பிடணும்”

“பரவாயில்லை மிருது. நான் அப்புறம் சாப்டுக்கறேன் நீங்க சாப்பிடுங்கோ”

என்று அம்புஜம் சாப்பாடு பரிமாற நவீனும் மிருதுளாவும் சாப்பிட்டனர். பின் இருவரும் புறப்பட்டனர். அப்போது அம்புஜம் நவீனிடம்

“பண்ணெண்டாம் தேதி மிருதுக்கு செக்கப் இருக்கு.”

“கவலை படாதீங்கோ நான் பதினான்காம் தேதி வரை லீவு போட்டிருக்கேன். நானே அவளை செக்கப்புக்கு கூட்டிண்டு வந்துடறேன்”

“ஹேய் நவீ ரியலீ!! சொல்லவே இல்லை”

“லீவு கிடைச்சுது வந்துட்டேன். ஆனா அப்புறம் இவ்வளவு நாள் கிடைக்குமான்னு தெரியாது. அதை அப்போ பார்த்துக் கொள்வோம். சரி கிளம்பலாமா?”

“ஓ எஸ் கிளம்பலாம். அம்மா நாங்க போயிட்டு வறோம் மா”

“நாங்க வறோம். மிருது அப்பாகிட்டயும் சொல்லிடுங்கோ”

இருவரும் ஆட்டோவில் ஏறி சென்றனர். அம்புஜம் மறுபடியும் அம்மன் படம் முன் நின்று தன் மகள் எந்தவித சிரமமுமின்றி வீட்டுக்கு வந்திடவேண்டும் என்று வேண்டிக் கொண்டாள்.

ராமானுஜமும் அம்புஜமும் நவீனிடம்…தங்கள் மகளை அவன் பெற்றோர் பேசியதையும் அதைக் கேட்கப் போண அவர்களை ஈஸ்வரன் பேசியப் பேச்சைப் பற்றியும் ஒன்றுமே கேட்கவில்லை. இவர்களின் இந்த குணம் மிருதுளாவிற்கு பலவீனமாகாதா? நவீனை இவர்கள் தட்டிக் கேட்டிருக்க வேண்டாமா?

ஆட்டோ பர்வதம் வீட்டு வாசலில் சென்று நின்றது. நவீன் ஆட்டோவிலிருந்து இறங்கி காசுக் கொடுத்து விட்டு மிருதுளாவை இறங்கச் சொன்னான். அவளும் இறங்கினாள். அவளுக்கு பழைய நினைவுகள் வந்து அடுத்த அடி எடுத்து வைக்கத் தயங்கினாள். நவீன் வீட்டின் கேட்டைத் திறந்து

“வா மிருது. ஏன் அங்கயே நிக்கற உள்ள வா”

என கூறியதும் விருப்பமில்லாமல் உள்ளே சென்றாள். ஈஸ்வரப்பர்வத கோட்டையில் மிருதுளாவின் மூன்றாவது பிரவேசம் இது.

அவளைப் பார்த்ததும் ஈஸ்வரன்

“வா வா”

என்று சொல்லிவிட்டு உள் ரூமிற்குள் சென்றார். பர்வதம் அது கூட சொல்லாமல் யாரோ வந்திருப்பது போல கண்டுக் கொள்ளாமல் படுத்திருந்தாள். மிருதுளாவுக்கு என்னச் செய்வது என்றே புரியாமல் நின்றிருந்தாள். ஏதோ வரக்கூடாத இடத்துக்கு வந்து மாட்டிக் கொண்டது போல அவள் மனம் படக் படக் படக் என்று அடித்தது. நவீன் அவளை அழைத்துக் கொண்டு மாடிக்குச் சென்றான். அங்கே அவளிடம்

“இங்க பாரு மிருது நீ இவாளோட இந்த டிரமாட்டிக் ஆக்ஷன்ஸை எல்லாம் கண்டுக்காதே. இன்னும் ஒரு அஞ்சு நாள் தானே. ஓகே வா”

“ம் ….ஓகே ….ஆனா நீங்க இன்னும்… ஏன் என் மெடிக்கல் ஃபைலை அங்கேருந்து எடுத்துண்டு வந்தேங்கள்ங்கறதை என்கிட்ட சொல்லவேயில்லையே!!! இப்பவாவது சொல்லுவேங்களா இல்லை அது சிதம்பர ரிகசியத்தைப் போல வச்சுக்கப் போறேளா?”

“ஹேய் மிருது அதில் அப்படி பெரிய விஷயம் ஒண்ணுமில்லை.”

“அப்போ கேட்டதும் சொல்லியிருக்கலாமே!! ஏன் சொல்லாமல் வந்தேங்கள்?”

“அப்போ நான் இரிட்டேட்ட்டா இருந்தேன் அதுனால எதுவும் சொல்லத் தோணலை அதுனால சொல்லலை”

“சரி இப்போவாவது சொல்லலாமில்லையா”

“இவா என்கிட்ட உன்னைப் பத்தி தப்புத்தப்பா சொன்னா. நீ ஏதோ உங்க அம்மா ஆத்துலேயே இருக்கறதுக்காக செக்கப்ன்னு பொய் சொல்லறதாவும் அதுக்கு உன் அம்மாவும் சேர்ந்துண்டு ரெண்டு பேருமா டிராமா போடறேங்கள்ன்னும் இன்னும் என்னென்னவோ சொன்னா அதை எல்லாம் கேட்டு நான் ரொம்ப இரிட்டேட் ஆகிட்டேன். அதுதான் அவாகிட்ட உன் ஃபைலை காமிச்சு அவா மூஞ்சில கறியப் பூசினேன். இதுக்குத் தான் அந்த ஃபைலை எடுத்துண்டு வந்தேன்”

“அப்படியா சொன்னா? சொல்லுவா சொல்லுவா அதுக்கு மேலேயும் சொல்லுவா இவா. சரி அவாதான் அப்படிக் கேட்டான்னா நீங்க ஏன் இப்படி செஞ்சேங்கள்? கேட்டவா கிட்ட திருப்பிக் கேட்க வேண்டியது தானே? நீங்க ஓழுங்கா பார்த்துண்டா அவ ஏன் அவ அம்மா ஆத்துக்குப் போகப் போறான்னு கேட்டிருக்க வேண்டியது தானே. அவா ரெண்டு பேரும் நடு ரோட்டில நின்னு பத்தாயிரம் ரூபாய் வாங்கிண்டுட்டு அதை அப்படியே உங்ககிட்ட இருந்து மறச்சாளோ அது மாதிரி எங்களை நினைச்சுண்டுட்டாளா? அதைப் பத்தி ஊர்லேந்து வந்ததும் கேட்டிருக்கணும்”

“மிருது உனக்குத் தான் அவாளைப் பத்தித் தெரியுமே. எது கேட்டாலும் ஒக்கே ஒக்கேன்னு கத்த ஆரம்பிச்சிடுவா. நாம சொல்லறதுக்கோ பேசறதுக்கோ அனுமதிச்சா தானே கேட்கவோ பேசவோ முடியும். இப்படிப்பட்டவாட்ட எவிடென்ஸோட ப்ரூவ் பண்ணினா வாயடச்சுப் போவா”

“இது நல்லா இருக்கே! அப்போ அவா என்ன வேணும்னாலும் பேசிக்கலாம், அநியாயம் பண்ணலாம், பழிப்போடலாம், பொய் சொல்லலாம் அதெல்லாம் தப்பில்லை ஆனா நாம நியாயமா ஏதாவது செய்தா அதை எவிடேன்ஸ் காட்டி நிருபிக்கணுமா? சூப்பர் நவீ! சூப்பர் !! இந்த கேவலமான காரியத்துக்கு நீங்களும் உடந்தை! பேஷ்!”

“அய்யோ மிருது உனக்கு எப்படிப் புரிய வைக்கறதுன்னு எனக்குத் தெரியலை. அவா பேச்சில இரிடேட் ஆகி தான் அப்படி செஞ்சேன். ஆம் சாரி ஃபார் தட்.”

“நீங்க என்ன சொன்னாலும் சரி என்னைப் பொறுத்த வரைக்கும் நீங்க செஞ்சது தப்பு. அவ்வளவு தப்புப் பண்ணிட்டும் கொஞ்சம் கூட பயமில்லாம அவா இவ்வளவு பேசறான்னா அதுக்கு நீங்க இப்படி அவாளை தட்டிக் கேட்காமல் குடுக்கிற இடம் தான் காரணம். அவா இனி திருந்தவே போறதில்லை.”

“நானும் அதுதான் சொல்லறேன் மிருது அவா திருந்தவே மாட்டா.”

“அவா திருந்தறா திருந்தாம போறா ஆனா நீங்க ஏன் அவாகிட்ட அவா செஞ்ச அட்டூழியங்களை பத்திக் கேட்கலை?”

“கேட்கலைன்னு உனக்கு எப்படித் தெரியும்? நான் கேட்டேன். வழக்கம் போல கத்தினா. நான் கேட்டும் பிரயோஜனமில்லாமல் போச்சு. அதுனால நான் பேசறதையே குறைச்சுண்டுட்டேன்.”

“என்னமோ போங்கோ! என்னமோ பண்ணுங்கோ.”

என்று கூறிக்கொண்டே படுத்திருந்தவள் உறங்கிப் போனாள். மாலை ஐந்து மணி ஆனதும் எழுந்து கீழே வந்து முகம் கை கால் அலம்பி விட்டு காபிப் போட அடுப்படிக்குச் சென்று இரண்டு காபிப் போட்டுக் கொண்டு ஹாலுக்கு வந்து ஒன்றை நவீனிடம் கொடுத்து விட்டு தன் காபி தம்பளருடன் கட்டிலில் அமர்ந்து காபியை அருந்தினாள் மிருதுளா.

நவீனும், மிருதுளாவும் ஹாலில் அமர்ந்திருந்தனர். குறுக்கும் நெடுக்குமாக ஈஸ்வரன், பவின், ப்ரவின் நடந்தனர் ஆனால் எவருமே இவர்களை கண்டுக் கொள்ளவில்லை. அப்படி இருவர் அமர்ந்திருப்பதே தெரியாதது போல நடந்துக் கொண்டனர். பர்வதம் வழக்கம் போல வாசலில் அக்கம் பக்கத்தினருடன் அரட்டை அடிக்க சென்று விட்டாள். இதை எல்லாம் பார்த்த மிருதுளா நவீனிடம் மெதுவாக

“இதுக்குத் தான் என்னை இங்கே கூட்டிண்டு வந்தேங்களா? ஏதோ யாரோ வீட்டில இருக்குற மாதிரி எனக்கு இருக்கு. எதுக்குடா இவா வந்தாங்குற மாதிரி அவா எல்லாரும் நடந்துக்கறத பார்த்தா எனக்கு கோபம் தான் வர்றது. ப்ளீஸ் வறேங்களா நாம வெளிய வாக்கிங் போயிட்டு வருவோம்”

“சரி போகலாம் வா”

என்று மிருதுளா நவீனைக் கூட்டிக்கொண்டு அந்த இறுக்கமான சூழலில் இருந்து சற்று நேரம் வெளியே செல்ல கிளம்பினர். அப்போதும் மிருதுளா ஈஸ்வரனிடமும் பர்வதத்திடமும் தாங்கள் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டுத் தான் சென்றாள்.

மிருதுளா அந்த வீட்டுக்கு திரும்பி வரவேண்டிய அவசியமே இல்லை ஏனெனில் ஈஸ்வரனும் பர்வதமும் மாசமான பெண்ணிற்கு வேண்டிய உணவளிக்காமலும், தூங்கவிடாமலும் துன்புறுத்தி, அம்மா வீட்டுக்குப் போக ஆசைப்பட்ட ஒரே காரணத்துக்காக அவளை அசிங்கப் படுத்திப் பேசி துரத்திவிடாத குறையாக வீட்டைவிட்டு அனுப்பினர் அன்று. நவீனும் அவன் பெற்றவர்களின் குணமறிந்து மிருதுளாவுக்கு பக்கபலமாக இருக்கிறான். இப்படி ஒரு சந்தர்ப்பம் திருமணமான பெண்ணிற்கு கிடைத்தால் முதலில் தன் புருஷனைக் கூட்டிக் கொண்டு வெளியேறிடுவாள். இல்லையெனில் ஒரு தென்றல் புயலாகி வருமே என்று புறப்பட்டிடுவாள். ஆனால் மிருதுளா இவ்விரண்டையுமே செய்யாமல் அனைத்தையும் தன் மனம் என்னும் பெட்டகத்திற்குள் போட்டு பூட்டி வைத்துக் கொண்டு பொறுமையாக இருந்தாள்.

சில நேரங்களில் சிலவற்றைப் பொறுத்துப் போவது வாழ்க்கையில் பல மாற்றங்களுக்கு வித்தாக அமைந்திடும். எப்போதும் எல்லாவற்றிற்கும் சண்டைப் போட்டால் அல்லது எதிர்த்துப் பேசினால், அதற்கு மரியாதை இல்லாமல் போய்விடும். அதற்காக பேசாமல் இருந்தாலும் மரியாதை இருக்காது. ஆகையால்

சொல்ல வேண்டியதைச் சொல்ல வேண்டியவர்களிடம், சொல்ல வேண்டிய நேரத்தில், சொல்ல வேண்டிய இடத்தில், சொல்ல வேண்டிய முறையில், சொன்னோமேயானால்

அதற்கு மரியாதை கிடைக்கிறதோ இல்லையோ ஆனால் நிச்சயம் அதற்கு பலன் கிடைக்கும்.

பொறுமைக்கு பூமாதேவியைச் சொல்வது வழக்கம் ஆனால் அந்த பூமா தேவியே தற்போது நாட்டிலும், வீட்டிலும் நடக்கும் அநியாயங்களைக் கண்டு பல ரூபங்களில் இயற்கைச் சீற்றங்களாக சீறவில்லையா? மிருதுளா சாதாரண பெண் அவளின் பொறுமைக்கும் எல்லை என்பது நிச்சயம் இருக்கும் ஆனால் அது எதுவரை? அவள் பொறுமையிழந்தால் என்ன நேர்ந்திடும்? எப்போது?

தொடரும்……

ஈஸ்வரனும் பர்வதமும் ஆட்டோவில் ஏறிச் சென்றதும் மிருதுளா அம்புஜத்தை திரும்பிப் பார்த்து

“நான் தான் சொன்னேன் இல்லையா அவா இங்க வரவேண்டாம் நீங்களே போய் பத்திரிகையை கொடுத்துட்டு வாங்கோன்னு. இப்பப்பாரு நான் நினைச்சா மாதிரியே நடந்தது”

“இப்போ என்ன நடந்தது மிருது. நாங்க போய் குடுத்திருந்தாலும் அந்த மாமி நிச்சயம் இதை எல்லாம் பார்க்க நம்மாத்துக்கு வந்திருப்பா. அவா என்ன வேணும்னாலும் சொல்லட்டும் அந்த புடவையை அந்த மாமிக்கு கண்டிப்பா குடுக்கமாட்டேன். அது உனக்குத்தான். கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாம தனக்கு தரச் சொல்லி கேட்டதோடு மட்டுமில்லாமல் வெடுக்கென புடவையை எடுத்து வச்சிண்டுட்டா பாரேன்…அப்போ எனக்கு சரி கோபம் வந்தது. வளைகாப்புக்குன்னு ஒரு புடவை தன் மாட்டுப்பொண்ணுக்கு எடுத்துக் குடுக்கத் துப்பில்லை இதுல எங்க பொண்ணு வளைகாப்புக்கு அவ மாமியாருக்கு.. சம்மந்தி கறுப்புப் புடவை குடுக்கணுமாக்கும். இதெல்லாம் வேற எந்த ஆத்துலையும் நடக்காதது. நமக்குன்னு வந்து வாச்சிருக்கற சம்மந்தி லட்சணத்தை எங்க போய் சொல்ல “

“அம்மா…. இப்போ என் சீமந்தத்துக்கும் எனக்கு பிடிச்சப் புடவையை கட்ட விடாம பண்ணிட்டா பாரு இதுக்குத்தான் அப்பவே சொன்னேன். நீ சும்மா இருந்திருந்தா கூட பேசாம போயிருப்பா”

“நான் என்னடி பண்ணினேன்”

“ம்…சும்மா இல்லாம இந்த புடவை எங்க மிருதுக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சுன்னு எல்லாம் ஏன் சொன்ன? அதுதான் அதை எடுத்து வச்சிண்டுட்டா தெரியுமா!!! எனக்கு எந்த விதத்திலும் நல்லது நடக்கக்கூடாது நல்லது கிடைக்கக்கூடாதுங்கறதுல தெளிவா இருக்கா என் மாமியார். இப்போ அவ நினைச்சதை சாதிச்சிட்டா பாரு. ஏன் மா இப்படி இருக்க?”

“நீ ஏன் கவலை படறாய் மிருது. அவாளால இப்போ உனக்கு ரெண்டு புடவையாக போறது அவ்வளவு தானே!! நாளைக்கே போய் இன்னொரு கறுப்புப் புடவை வாங்கிண்டு வரேன்”

“அம்மா உனக்கு நான் சொல்லறது புரியலை!!! நீ இன்னொரு புடவை எடுத்துத்தந்தாலும் என்னால எனக்குப் பிடிச்ச இந்த புடவையை ஃபங்ஷனில் கட்டிக்க முடியாது இல்லையா!!! அதை சொல்லறேன்”

“எனக்கு அந்த மாமியோட கேரக்டர் புரியாம இல்லை மிருது. எங்கடா வம்பை கிளப்பி விடலாம்ன்னு அலையறா. அவாகிட்ட போய் மல்லுக்கு நிக்க நம்மளால முடியுமா சொல்லு. போனா போறது அப்போ கட்டிக்காட்டா என்ன வேறொரு நாள் கட்டிக்கோ இப்ப என்ன அதுனால!!”

“என்னமோ போ மா!!”

நடந்ததை அம்பஜம் ராமானுஜத்திடம் கூறினாள். அதைக் கேட்டதும் ராமானுஜம்

“செலவு இழுத்துண்டே போறது. பார்த்து எடுத்துண்டு வா. வேற வழி”

மறுநாள் விடிந்ததும் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு அம்புஜம் கடைவீதிக்குச் சென்று காட்டனில் கறுப்பு நிறப்புடவையில் பழுப்பு நிற பார்டரில் ஜரிகை எம்ப்ராய்டரி போட்டப் புடவையை எடுத்துக் கொண்டு வந்தாள். அன்று மாலை டீ குடித்துக்கொண்டே அதைப் பார்த்ததும் மிருதுளா

“இதையும் உன் சம்மந்தியைக் கூப்பிட்டுக் காமிக்க வேண்டியது தானே..நானே ஃபோன் போட்டுக் குடுக்கவா”

“ஒரு தடவைப் பட்டாச்சு இனி அந்த தப்பைப் பண்ணவே மாட்டேன்டி மா”

என்று பேசிக்கொண்டிருக்கும் போதே ஃபோன் பெல் அடித்தது. அம்புஜம் ஃபோனை எடுத்து..

“ஹலோ நான் அம்புஜம் பேசறேன்”

“ஹலோ மாமி நான் தான் பர்வதம் பேசறேன்.”

“ம்..மாமி நீங்களா சொல்லுங்கோ என்ன திடீர்னு ஃபோன் பண்ணிருக்கேள்?”

“அது ஒண்ணுமில்லை நீங்க அந்த புடவையை மாத்தியாச்சான்னு கேட்க தான் ஃபோன் பண்ணினேன்”

“இல்ல மாமி மாத்தலை ஆனா அதுக்கு பதிலா இன்னொரு கறுப்புப் புடவையை எடுத்துண்டு வந்துட்டேன்.”

“அப்போ அந்த புடவையை என்னப் பண்ணப்போறேங்கள்?”

“அதை யாருக்கும் கொடுக்க வேண்டாம்ன்னு மிருதுளாவையே வச்சுக்கச் சொல்லிட்டார் அவ அப்பா. இப்போ பாருங்கோ மிருதுக்கு இரண்டு புடவை ஆகிடுத்து.”

“அப்படியா சரி நான் ஃபோனை வச்சுடறேன்”

என்று பட்டென்று வைத்துவிட்டாள் பர்வதம். ஃபோன் கட் ஆனதும் அம்புஜம் மிருதுளாவைப் பார்த்து

“எப்படி சமாளிச்சேன் பார்த்தயா!!”

“ஆமாம் !ஆமாம்! போமா!!”

நாட்கள் ஓடியது. எட்டாம் தேதி வரவிருந்த நவீன் ஏழாம் தேதி இரவே வந்துவிட்டான். அது மிருதுளாவுக்கு தெரியாது. அவளுக்கு சர்ப்ரைஸாக இருக்கட்டுமென்று ஒரு நாள் முன்னதாகவே வந்துள்ளான். நவீன் குளித்துவிட்டு டிரஸ் மாற்றிக் கொண்டு கீழே ஹாலுக்கு வந்ததும் அமைதி நிலவியது. உணவருந்தினான் பின் மாடிக்குச் சென்று படுத்துறங்கினான். அவனும் அவர்களுடன் ஒன்றுமே பேசவில்லை. மறுநாள் விடிந்தது குளித்துவிட்டு வேகவேகமாக மிருதுளாவைப் பார்க்க கிளம்பிக் கொண்டிருந்தவனிடம்

“எங்களுக்கு உன்னுடன் பேசவேண்டும்”

என்று மூத்த தம்பதியர் கூற அதற்கு நவீன்

“நான் சாயந்தரம் வந்ததுக்கப்பறமா பேசினா போறாதா?”

“இல்லை இப்பவே பேச வேண்டும்”

சரி என்று பேசினான். பேசி முடித்ததும் குழப்பமும், கோபமும் கலந்த முகத்துடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.

மிருதுளா வீட்டுக்கு ஆட்டோவில் சென்று இறங்கினான். அம்புஜம் மாவுமில்லுக்கு செல்லவேண்டி வெளியே வந்தவள் நவீன் ஆட்டோவில் வந்திறங்குவதைப் பார்த்ததும்

“வாங்கோ வாங்கோ!! ஏய் மிருது உன் ஆத்துக் காரர் வந்திருக்கார் மா. உட்காருங்கோ. நான் காபிப் போட்டுக் கொண்டு வரேன்”

என்று கூறிவிட்டு காபி போட அடுப்படிக்குள் சென்றாள். மிருதுளா தன் பெருத்த வயிற்றுடன் நடந்து ஹாலுக்கு வந்தாள். நவீனை அன்று காலை எதிர்பாராத மிருதுளாவுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. சந்தோஷத்தில் அவளுக்கு நவீனிடம் என்னப் பேசவேண்டும் என்றே தெரியாமல் அவனைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள். அவள் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்துக் கொண்டே இருந்தது. அதைப் பார்த்த நவீன் அவளிடம்

“ஏய் என்ன ஆச்சு மிருது? ஏன் இப்போ அழற?”

“ஒண்ணுமில்லை நவீ”

“இந்தாங்கோ காபி எடுத்துக் கோங்கோ. மிருது நான் இந்த அரிசியை மிஷின்ல போய் பொடிச்சிண்டு வர்றேன்‌. சமையல் எல்லாம் ரெடி. உனக்கு ஜூஸ் அன்ட் ஃப்ரூட்ஸ் எல்லாம் ஃப்ரிட்ஜில் வச்சிருக்கேன் எடுத்துக் குடி. “

என கூறி அங்கிருந்துச் சென்றாள் அம்புஜம். பின் நவீன் மிருதுளாவிடம்

“என்ன மிருது உன் வயிறு நான் ஊருக்குப் போகும் போது கூட இவ்வளவு பெரிசா இல்லை இப்போ என்னடான்னா இப்படி இருக்கு!”

“ம்…நம்ம குழந்தை வளர்ந்திருக்கான் இல்லையா!! அது தான் வயிறும் பெரிசா ஆகிருக்கு. சரி நீங்க எப்போ வந்தேங்கள்? என்கிட்ட இன்னைக்கு நைட் வரதா தானே சொன்னேங்கள் அப்பறம் எப்படி காலையில வந்திருக்கேங்கள்?”

“உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கத் தான். நான் நேத்து நைட்டே வந்துட்டேன். காலையில எழுந்ததுலேந்து உன்னைப் பார்க்கத்தான் வேக வேகமா கிளம்பி வந்தேன். ஆமா நீங்க எல்லாம் எங்க கிளம்பியிருக்கேங்கள்?”

“அம்மா மில்லுக்குப் போயிட்டு வந்ததும் சாப்டுட்டு ஹாஸ்பிடலுக்கு ரெகுலர் செக்கப்க்கு போகணும் அது தான் ரெண்டு பேரும் ரெடி ஆகியிருக்கோம்”

“ஓ!! அப்படியா அப்போ இன்னைக்கு செக்கப்க்கு நானே உன்னை கூட்டிண்டு போறேன்”

“ஓகே! அம்மாக்கும் கொஞ்சம் ரெஸ்ட் குடுத்தா மாதிரி இருக்கும். பாவம் எனக்காக என்னென்ன பண்ணறா தெரியுமா?சரி அதெல்லாம் விடுங்கோ. ஆமாம் நீங்க ஊருக்குப் போகும் போது உங்க அப்பாகிட்ட என்னைக் கொண்டு போய் எங்தாத்துல விடச் சொன்னேங்களா இல்லையா? உண்மையச் சொல்லுங்கோ”

“நான் சொன்னேன் மிருது. சொன்னதுக்கு சரின்னும் அப்பா சொன்னார். அதுக்கப்புறம் தான் உன்கிட்ட நான் தயாரா இருன்னு சொல்லிட்டுக் கிளம்பினேன் தெரியுமா”

“அப்பறம் ஏன் உங்க அப்பா நீங்க அப்படி எதுவுமே சொல்லிட்டு போகலைன்னு சொன்னா? நீங்க சொல்லறது உண்மையா இல்லை உங்க அப்பா சொல்லறது உண்மையா?”

“நான் சத்தியமா சொல்லிட்டுத்தான் கிளம்பினேன் அவா தான் தேவையில்லாம பிரச்சினை பண்ணனும்னு அப்படி செய்திருக்கா. அதுக்கு நான் நல்லா சொல்லி விட்டுட்டேன். அதை எல்லாம் விடு மிருது. இங்கே நீ நிம்மதியா இருக்கே இல்ல அது போறும்.”

“எங்க இருக்க விடறா உங்க அம்மா. நீங்க ஊருக்கு போனதுக்கப்புறம் இரண்டு தடவை வந்தா ஆனா என்னைப் பார்க்க வரலை அவா காரியத்துக்காக தான் வந்தா. சிறப்பா செஞ்சுட்டுப் போனா…சரி சரி அம்மா வந்துட்டா…இதைப் பத்தி அப்புறமா பேசலாம்..வா மா”

“இன்னைக்கு மாவு மில்லுல கூட்டம் ஜாஸ்தியா இருந்தது அது தான் லேட். சரி ஜூஸ் குடிச்சயா?”

“சாரி மா நவீ கூட பேசிண்டு இருந்ததுல மறந்துட்டேன்.”

“இரு எடுத்துண்டு வரேன்”

என்று கூறிக் கொண்டே உள்ளே சென்று ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து வந்து தன் மகளிடம் கொடுத்தாள். பின் நவீனிடம்

“எப்படி இருக்கேங்கள்? சாரி… மில்லுல கூட்டம் அதிகமாயிடும்ன்னு தான் அப்போவே கிளம்பி போயிட்டேன். நீங்க இன்னைக்கு நைட் வரதா தானே மிருது சொன்னா.”

“இல்ல நான் நேத்து நைட்டே வந்துட்டேன். அது தான் காலையிலேயே கிளம்பி இங்கே வந்துட்டேன்”

“சரி சரி நீங்களும் ஜூஸ் குடிக்கறேங்களா தரட்டுமா?”

“இல்ல இல்ல இப்போ தானே காபி குடிச்சேன் ஜூஸ் எல்லாம் இப்போ வேண்டாம்”

“அம்மா இன்னைக்கு செக்கப்க்கு நவீன் கூட்டிண்டு போறேன்னு சொல்லறார்”

“பேஷா ரெண்டு பேரும் சாப்டுட்டு போயிட்டு வாங்கோ. நான் அதுக்குள்ள சாயந்தரத்துக்கு டிபன் ஏதாவது செய்து வைக்கிறேன். வாங்கோ சாப்பிடலாம்”

என்று கூறிக்கொண்டே சாப்பாடு பரிமாறினாள் அம்புஜம். நவீனும் மிருதுளாவும் சாப்பிட்டப் பின் ஹாஸ்பிடல் போக கிளம்பினர் அப்போது அம்புஜம்

“மிருது உன் ஃபைல் எடுத்துண்டுட்டயா மா.”

“ஓ !! இதோ எடுத்துண்டுட்டேன் மா. நாங்க போயிட்டு வரோம்”

என்று ஆட்டோவில் ஏறினர் நவீனும், மிருதுளாவும். ஹாஸ்பிடல் சென்றுக் கொண்டிருக்கும் போது நவீன்

“இது என்ன ஃபைல் மிருது?”

“இதுல தான் என்னோட ஃபர்ஸ்ட் டே செக்கப்லேந்து எல்லா டிட்டேய்ல்ஸும் இருக்கு அது மட்டுமில்லாமல் இன்னைக்கு பண்ணப்போற செக்கப் ரிசல்ட்டையும் இதுல அட்டாச் பண்ணித்தருவா. இதை எடுத்துண்டு போகலைன்னா டாக்டர் செக்கப் பண்ணமாட்டா. நானும் அம்மாவும் ஒரு தடவை மறந்து ஆத்துலேயே வச்சுட்டு ஹாஸ்பிடல் போயிட்டோம் அப்புறம் அம்மா மட்டும் மறுபடியும் வந்து ஃபைலை எடுத்துண்டு வந்தா. அப்புறம் தான் டாக்டர் செக்கப்பே பண்ணினா தெரியுமா?”

“மேடம் ஹாஸ்பிடல் வந்திருச்சு”

“அங் தாங்க்ஸ் அண்ணா. நவீ காசு கொடுங்கோ”

ஆட்டோ காரருக்கு காசு கொடுத்துட்டு ஹாஸ்பிடலுக்குள் சென்று ரெகுலர் செக்கப் முடிந்ததும் மிருதுளா கையிலிருந்த ஃபைலை நவீன் வாங்கி தன்னுடன் வைத்துக் கொண்டான். மீண்டும் ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்தனர். அம்புஜம் சுடச்சுட பஜ்ஜீ, அல்வா எல்லாம் செய்து வைத்திருந்தாள். வேனுவும், ராமானுஜமும் வந்தனர். அனைவரும் அமர்ந்து டிபனை சாப்பிட்டனர். அப்போது ராமானுஜம் நவீனிடம்

“இங்கே தானே இன்னைக்கு இருப்பேங்கள்?”

“இல்ல நான் கிளம்பணும் நாளைக்கு காலையில வந்து மிருதுவைக் கூட்டிண்டுப் போறேன்.”

“என்னத்துக்கு வீணா அங்கயும் இங்கயுமா அலைஞ்சிண்டு பேசாம இங்கயே இருந்துட்டு நாளைக்கு காலையில ரெண்டு பேருமா கிளம்புங்கோ”

“அது தானே!! அப்படியே செய்வோமே நவீ”

“இல்ல மிருது நான் என் ஃப்ரெண்டை பார்க்கப் போகணும் அதுதான்.”

“சரி சரி போயிட்டு வாங்கோ மாப்ள பரவாயில்லை”

“சரி நான் கிளம்பறேன். மிருது ஒரு கவரோ பேக்கோ தாயேன்”

“எதுக்கு நவீ”

“நீ தாயேன் ப்ளீஸ்”

மிருதுளா ஒரு பாலித்தீன் கவர் கொடுத்தாள். அதில் நவீன் ஹாஸ்பிடலில் இருந்தே தன் கையில் வைத்திருந்த ஃபைலைப் போட்டுக் கொண்டு கிளம்பினான். அதை கவனித்த மிருதுளா அவனிடம்

“என்னது அது என் மெடிக்ல் ஃபைலை எதுக்கு எடுத்துண்டு போறேங்கள்?”

“அது அது வந்து…”

“என்ன நவீ எனி ப்ராப்ளம் அகேயின்?”

“இல்ல மிருது நான் இதை இன்னிக்கு மட்டும் எடுத்துண்டு போயிட்டு நாளைக்கு வரும்போது கொண்டு வந்துடறேனே”

“நவீ இதை வச்சு என்னப் பண்ணப் போறேங்கள். அதுவுமில்லாமல் அதுல இருந்து ஏதாவது பேப்பர் தொலைஞ்சுதுன்னா டாக்டர் என்னைத் திட்டுவா.”

“நான் பத்திரமா திருப்பிக் கொண்டு வரேன். பை நான் கிளம்பறேன்”

என்று வேகவேகமாக அங்கிருந்து நவீன் கிளம்பிய விதம் மிருதுளாவிற்கு மனதில் ஏதோ தப்பா இருப்பதுப் போல தோன்றியது. நவீன் சென்றதும் கவலையாக இருந்த தன் மகளிடம் அம்புஜம்…

“மிருது ஏன் மா டல்லா இருக்க?”

“ஒண்ணுமில்லை மா”

“இல்ல நீ மாப்ள வந்துட்டுப் போனதிலிருந்து சரியில்லை. என்ன மறுபடியும் உன் மாமியார் காரி ஏதாவது பிரச்சினைக்கு வலை விரிச்சிட்டாளா?”

“இல்லமா.. அவர் என்னோட மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் இருக்குற ஃபைலை எடுத்துண்டு போயிருக்கார். அது ஏன்னு கேட்டதுக்கு …சம்மந்தமே இல்லாத பதில் சொல்லிட்டு அவசர அவசரமா புறப்பட்டுப் போயிட்டார்.”

“அது என்னத்துக்கு அவருக்கு? ஏதாவது ஆபிஸ்ல சப்மிட் பண்ணணுமா?”

“இல்லையே!!! அப்படி ஒண்ணும் எனக்குத் தெரிஞ்சு இல்லை. எனக்கென்னவோ இதுக்குப் பின்னாடி ஏதோ பெரிய பிரச்சினை இருக்கும்ன்னு தோணறது மா”

“இதோ பாரு மிருது பிரச்சினை வந்தா பார்த்துப்போம். அதுக்காக பிரச்சினை வந்திட போறதோன்னு நினைச்சுண்டு உன் உடம்பைக் கெடுத்துக்காதே. புரியறதா”

“ம்…ஓகே!”

என்று மிருதுளா தன் அம்மாவிடம் கூறினாலும் அவள் மனதில் ஏதோ தவறு நடக்கப் போகிறது என்ற எண்ணமே ஆக்கிரமித்திருந்தது.

அம்புஜம் அவர்கள் வீட்டில் மாட்டியிருந்த அம்மன் படத்தைப் பார்த்துக்கொண்டே தன் மனதில்

“அம்மா தாயே அந்த ஜெயேந்திரன் மாமா சொன்னது போலவே நடக்கறதே!! அந்த பர்வதம் மாமி எங்க பொண்ணை நிம்மதியா இருக்க விட மாட்டா போல இருக்கே!! அம்மா! தேவி! தாயே! நான் உன்னை நம்பித் தான் கள்ளம், கபடம், சூது, வாது இல்லாத என் பொண்ணை அந்த பையனுக்கு கட்டிக் கொடுத்தேன். என் பொண்ணு படற வேதனையை என்னால பார்க்க முடியலைமா!! ஏதாவது செய்து அவளுக்கு அமைதியான நிம்மதியான, வாழ்க்கையை குடும்மா தாயே.”

ராமானுஜத்தின் அலுவலகத்தில் வேலைப் பார்க்கும், பர்வதம் வாடகைக்கு இருந்த வீட்டின் பக்கத்து வீட்டில் குடியிருந்தவருமான நண்பர் ஜெயேந்திரன் மிருதுளா திருமணத்திற்கு முன் அவர்கள் வீட்டுக்கு வந்து சொன்னது இப்போது நடப்பவைகளுக்கு பொருத்தமாக உள்ளது. அவர் கூறியது போலவே பர்வதம் தன் மகன் மருமகளின் நிம்மதியை ஏதாவது ஒன்று மாற்றி ஒன்று செய்து குலைப்பதிலேயே குறியாக இருப்பது நடப்பதை எல்லாம் பார்த்தாலே புரிகிறதே!

தொடரும்……

ராமானுஜமும் அம்புஜமும் அவர்கள் டி.வி.எஸ் 50 யில் நவீன் வீட்டிற்குச் சென்றனர். அவர்கள் வீட்டு வாசலில் வண்டியை நிப்பாட்டி விட்டு கேட்டு வரைச் சென்றதும் அதை திறக்க சற்று யோசித்தார் ராமானுஜம். அதை கவனித்த அம்புஜம்

“இவ்வளவு தூரம் வந்துட்டோம் உள்ளே போறதுக்கு என்னத்துக்கு யோசிக்கறேங்கள். நாம பொண்ணப் பெத்தவா… வேற வழி! வாங்கோ”

என்று கேட்டைத் திறந்தாள். உடனே உள்ளேயிருந்து பர்வதம் எட்டிப் பார்த்து

“வாங்கோ வாங்கோ. உள்ளே வாங்கோ என்று வரவேற்றாள்”

அதைப் பார்த்ததும் மிருதுளா பெற்றவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. பர்வதம் யாரை வரவேற்கிறாள் என்று எட்டிப் பார்த்த ஈஸ்வரனும் வாய் முழுவதும் சிரிப்புடன் வரவேற்க ராமானுஜமும் அம்புஜமும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

இது தான் சாமர்த்தியவாதிகளின் இயல்பு. ஆம் இங்கு அன்று அசிங்கப்பட்டு அவமானப்பட்டு போனது மிருதுளாவின் பெற்றவர்கள் அதனால் அவர்களால் சகஜமாக பழக முடியாமல் தடுத்தது அவர்களின் வேதனையும், அவமானமும் ஆனால் அவமானப்படுத்தி அசிங்கப்படுத்திய ஈஸ்வரன் பர்வதம் இருவரும் ஒன்றுமே நடக்காதது போல வரவேற்றனர்.

அடித்தவனை விட அடி வாங்கியவனுக்குத்தானே வலி அதிமாக இருக்கும். அடித்தவனுக்கு சிரிக்க சொல்லியா கொடுக்க வேண்டும். மீண்டும் அடுத்தவர் உணர்வுகளை நாக்கு என்னும் சாட்டைக் கொண்டு விலாசி விளையாட ஆள் கிடைத்து விட்டனர் என்ற மகிழ்ச்சியின் வெளிபாடு என்பது பேச ஆரம்பித்தால் தானாக தெரிந்துவிடும். இது போன்றவர்கள் நாக்கு என்னும் ஒரு நச்சுயிரியை வைத்து அப்படியும் இப்படியுமாக பேசி எப்படியும் வாழ்வார்கள். ஆகையால் இவர்கள் நடந்தவைகளை மறந்தது போலவே நடந்துக்கொள்வதில் கெட்டிக்காரர்கள். இது போன்றவர்கள் அவர்கள் தவறுகளை உணர்வதென்பது என்றுமே நடந்திடாது ஒன்றாகும். இப்படிப்பட்டவர்களிடமிருந்து விலகி வாழ்வதே நல்லது.

அந்த காலத்தில் பெண்ணைப் பெற்றவர்கள் அனைவரும் கடந்து வந்த பாதையே அது. ராமானுஜமும் அம்புஜமும் ஏதோ தவறிழைத்தைப் போல தயங்கி தயங்கி தங்கள் மகளின் சீமந்தத்தைப் பற்றி பேச்சை ஆரம்பித்தனர். அதைக் கேட்டதும் ஈஸ்வரன்

“ஓ!! ஆமாம் அது வேற இருக்கு இல்ல? எப்போ வர்றது?”

என்று திமிராக கேட்க அதற்கு ராமானுஜம் பொறுமையாக

“அடுத்த வாரம் பத்தாம் தேதி நல்ல நாள்ன்னு குறிச்சுக் குடுத்திருக்கா. அது தான் அதைப் பத்தி உங்க கிட்ட பேசிட்டுப் போகலாம்ன்னு வந்திருக்கோம்”

“பேஷா பண்ணிடலாம். பத்திரிகை எனக்கு தெரிஞ்ச ப்ரஸ் ஒண்ணு இருக்கு அங்கே குடுத்திடுங்கோ. பத்திரிகை எழுதி வாங்கியாச்சா?”

“இதோ இருக்கு நீங்க படிச்சுட்டு எல்லாம் சரியான்னு சொல்லுங்கோ ப்ரிண்ட்டுக்கு கொடுத்திடலாம்”

என்று ராமானுஜம் ஒரு பேப்பரை ஈஸ்வரனிடம் கொடுத்தார். அதை வாங்கிப் படித்த ஈஸ்வரன் எல்லாம் சரியா இருக்குன்னு சொல்லும் போது பர்வதம் குறுக்கிட்டு

“பதினோரு நாள் தானே இருக்கு. எப்படி எல்லாருக்கும் பத்திரிகை போய் சேரும்?”

“கவலை வேண்டாம் மாமி நாம ஸ்பீடு போஸ்ட்ல அனுப்பிடலாம்”

என்றாள் அம்புஜம்.

ஈஸ்வரனும் பர்வதமும் செய்ய வேண்டியதை ராமானுஜமும் அம்புஜமும் செய்கிறார்களே என்ற எந்த வித கூச்சமும் இன்றி கேள்வி மேல கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தனர் மூத்த தம்பதியர். இடையிலே பர்வதம் அடுப்படிச் சென்று காபி போட்டு வந்து அவர்களிடம் கொடுத்துக் கொண்டே

“உங்க பொண்ணுக்கு கறுப்புப் புடவை எடுக்கணும் மறந்திடாதீங்கோ”

என்றாள். அதற்கு அம்புஜம்

“நிச்சயமா எடுப்போம் மாமி. அது மட்டுமில்லாமல் சீமந்தத்துக்கு பட்டுப் புடவையும் எடுக்கப் போறோம்”

என்றதும் கப்சிப் ஆனாள் பர்வதம். பின் ஈஸ்வரன்

“நவீனுக்கு சொல்லணுமே.”

“நாங்க நேத்தே மாப்பிள்ளைகிட்ட சொல்லியாச்சு அவரும் லீவு போட்டு வரேன்னு சொன்னார்.”

என்று அம்புஜம் தான் பேசியதை எதார்த்தமாக கூறியதும் பர்வதம்

“அப்போ எல்லாம் டிசைட் பண்ணிட்டு தான் எங்ககிட்ட ஒப்புக்கு சொல்ல வந்தேங்களாக்கும்”

“அச்சச்சோ மாமி….. ஆக்சுவலா இதை நீங்க தான் ஏற்பாடு பண்ணணும் அதுதான் நம்ம வழக்கம் ஆனா உங்ககிட்ட இருந்து எந்த வித தகவலும் வராததால தான் நாங்க பேச்சை ஆரம்பிக்க வேண்டியதா ஆயிடுத்து. ரெண்டு சைடும் பேசாம இருந்தா அப்புறம் ஒன்பதாம் மாசம் ஆரம்பிச்சுடும் அதுனால தான் வந்தோம்”

“நாங்க பண்ணணும்னு எங்களுக்கும் தெரியும் அதுக்கு உங்க பொண்ணு இங்க இருந்திருக்கணும்”

என மனசாட்சி இல்லாமல் கூறினாள் பர்வதம் அதைக் கேட்டதும்

“இங்கேயே நீங்க நல்லா பார்த்திண்டிருந்தா எங்களுக்கு ஏன் இந்த வீண் அலைச்சல் எல்லாம் சொல்லுங்கோ. இங்கேயிருந்து மிருது எங்காத்துக்கு வந்தப்போ அவளோட ஹெச் பி வெரும் எட்டு தான் இருந்தது டாக்டர் என்னைப் பிடிச்சுத் திட்டினா இப்போ பதிமூணு இருக்கு. இதுக்கு என்ன சொல்லறேங்கள்? மாமி பேசணும்னா நிறைய பேசலாம் ஆனா இப்போ நாங்க மிருதுவோட சீமந்தம் வளைகாப்பு பத்திதான் பேச வந்திருக்கோம் வேற எதுக்காகவும் நாங்க வரலை”

என்று மனதிலிருந்த ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தாள் அம்புஜம்.

“ஆமாம் !ஆமாம்! உங்க பொண்ணுக்கு முன்னாடியே என்னப் பிரச்சினை இருந்ததோ அதுனால கூட அப்படி ஆகிருக்கலாம் ஆனா பழியை எங்க மேல போட்டுப் பேசறேங்கள்?”

தங்கள் மருமகள் எப்படி இருக்கிறாள் என்று பேச்சுக்குக் கூட ஒரு வார்த்தைக் கேட்க தோன்றிடாத மூத்த தம்பதியர் பிரச்சினை பண்ணுவதற்காகவே பேசுவது போல தோன்றியதும் ராமானுஜம்

“சரி மாமா நீங்க சொன்ன ப்ரிண்டிங் ப்ரஸ்லேயே பத்திரிகை ப்ரிண்ட் பண்ண குடுத்துடறோம். பத்திரிகை வந்ததும் எடுத்துண்டு வந்து குடுக்கறோம். எனக்கு மத்தியானம் ஷிஃப்ட் இருக்கு இப்பவே மணி பண்ணண்டு ஆயிடுத்து அதுனால நாங்க உத்தரவு வாங்கிக்கறோம். கிளம்பலாமா அம்புஜம்”

என பிரச்சினையை வளரவிடாமல் வெட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள் ராமானுஜமும் அம்புஜமும். வண்டியில் வீட்டுக்கு வரும் வழியில் அம்புஜம் பின்னால் உட்கார்ந்துக் கொண்டு

“அந்த மாமிக்கு என்ன திமிரு பாருங்கோ!! இன்னமும் ஏதோ நம்ம பொண்ண நல்லா பார்த்துண்டா மாதிரியே பேசறா!!! தப்பெல்லாம் அவா பண்ணிட்டு நாம பண்ணினா மாதிரி என்ன அழகா பேசறா அவா ரெண்டு பேரும்.”

“சரி சரி நீ ஒழுங்கா பிடிச்சுண்டு உட்காரு. ஆடாதே. அவா அப்படி தான்னு உன்கிட்ட சொன்னேன் இல்லையா. பேசாம வா”

இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். ராமானுஜம் மத்திய சாப்பாடு சாப்பிட்டதும் கிளம்பி வேலைக்கு சென்றுவிட்டார். அம்புஜம் சீமந்தம் வளைகாப்புக்கு வேண்டிய சாமான்கள் லிஸ்ட் போட்டாள்.

மறுநாள் காலை அம்புஜம் காலை டிபன் மத்திய சாப்பாடு எல்லாம் தயார் செய்ததோடு மகளுக்கு வேண்டிய பழங்கள் நறுக்கி வைத்தாள், ஜுஸ் பிழிந்து ஃப்ரிட்ஜில் வைத்தாள். பின் இருவரும் நல்ல நேரம் பார்த்து ஈஸ்வரன் சொன்ன ப்ரஸுக்கு சென்று பத்திரிகை அடிக்க கொடுத்து எப்போது கிடைக்கும் என கேட்டனர். அன்று மாலை ஒரு ஆறு மணிக்கு தயாராகிவிடும் என்றும் இரவு எட்டு மணிக்குள் எப்போது வேண்டுமானாலும் வந்து வாங்கிக் கொல்லலாம் என்றும் கூறினார் ப்ரஸ் ஓனர். சரி என்று சொல்லிவிட்டு இருவரும் சீமந்தத்திற்கு மண்டபம் பார்த்து அட்வான்ஸ் கொடுத்து விட்டு, தாம்பூலத்துடன் குடுப்பதற்கு டப்பா ஒரு ஐம்பது வாங்கிக் கொண்டு ஆட்டோவில் பஸ்டாண்டு வரை வந்து பின் பஸ்ஸில் வீடு வந்து சேர்ந்தனர். அன்றும் மத்திய உணவருந்தியதும் வேலைக்குச் சென்றார் ராமானுஜம்.

அன்று மாலை அம்புஜமும் மிருதுளாவும் ஒரு கார் வைத்துக் கொண்டு டவுனுக்குச் சென்றனர். அந்த ப்ரிண்டிங் ப்ரஸிலிருந்து ப்ரிண்ட் பண்ணின பத்திரிகைகளை வாங்கி காரில் வைத்துவிட்டு வளையல் கடைக்குள் நுழைந்தனர். அங்கே அம்புஜம்

“மிருது உனக்கு பிடிச்ச கண்ணாடி வளையல்களை நீ செலக்ட் பண்ணு நான் ஃபங்ஷனுக்கு வர பொண்டுகளுக்கெல்லாம் வளை வாங்கறேன்”

“சரி மா”

என்று இருவரும் அவர்கள் வாங்கிய வளையல்கள் அடங்கிய அட்டைப் பெட்டியை அந்த கடைப் பையனையே தூக்கிக் கொண்டு வந்து காரில் வைத்து தரும்படி கேட்டுக்கொண்டனர். அந்த பையனும் காரில் வைத்துவிட்டு சென்றான். இருவரும் காரில் ஏறி அந்த டவுனிலிருந்த பெரிய ஜவுளி கடைமுன் இறங்கிக் கொண்டு வண்டியை ஓரமாக நிப்பாட்டச் சொல்லிவிட்டு கடையினுள் சென்றனர்.

அங்கே ஒரு கறுப்புப் புடவையில் மெல்லிய கோல்டு நூலில் எம்ப்ராய்டரி போட்டு அழகான புடவையைப் பார்த்ததும் மிருதுளாவுக்கு மிகவும் பிடித்துப்போக தன் அம்மாவிடம் அதை வாங்கச் சொன்னாள். அதன் விலையைப் பார்த்த அம்புஜம் …

“மிருது அப்பா என்கிட்ட மூவாயிரத்துக்கு பட்டுப்புடவையும், ஆயிரத்துக்குள்ள கறுப்புப் புடவையும் தான் எடுக்கச் சொல்லி பணம் குடுத்தணுப்பியிருக்காடி. இந்த புடவையே ஆயிரத்தி எண்ணூறுன்னு போட்டிருக்கே அப்போ எப்படி பட்டுப் புடவை எடுக்கறது?”

“அம்மா எனக்கு இந்த புடவை ரொம்ப பிடிச்சிருக்கு மா. இதையே எடுத்துக்கறேன். பட்டுப் புடவையையும் இதே ரேஞ்சில் எடுத்தா அப்பா குடுத்த பணத்துக்குள்ள அடங்கிடும்மா. நான் அதுக்கு தகுந்தா மாதிரி எடுத்துக்கறேன் போதுமா?”

“சரி சரி இந்த புடவை அழகா தான் இருக்கு …. எடுத்துக்கோ”

என்று கூறி மிருதுளாவுக்கு பிடித்த கறுப்பு நிறப் புடவையையும் இரண்டாயிரம் ரேஞ்சில் ஒரு பட்டுப் புடவையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்து மிருதுளாவுக்கு மிகவும் பிடித்த ஹோட்டலுக்கு டின்னர் சாப்பிடச் சென்றனர். அங்கே வேனு கூறியது போலவே காலேஜ் முடித்துவிட்டு லாப் அடெண்ட் பண்ணிவிட்டு நேராக அந்த ஹோட்டலுக்கு வந்து காத்திருந்தான். மூவரும் அமர்ந்து இரவு உணவருந்திவிட்டு காரில் வீடு வந்து சேர்ந்த கொஞ்ச நேரத்தில் எல்லாம் ராமானுஜமும் அவர் ஷிஃப்ட் முடிந்து வீடு வந்தார். அனைவருமாக அமர்ந்து வாங்கி வந்ததை எல்லாம் பார்த்தனர். அம்புஜம் ஒரு பேப்பரில் கணக்குப் போட்டு மீதிப் பணத்தை ராமானுஜத்திடம் கொடுத்து

“எல்லா செலவும் இதோ இந்த பேப்பர்ல எழுதியிருக்கேன். இந்தாங்கோ மீதிப் பணம். நாளைக்கு காலை ல நாம சம்மந்தி ஆத்துக்கு போய் அவாளுக்கு வேண்டியப் பத்திரிகையைக் குடுத்துட்டு வருவோம் என்ன சொல்லறேங்கள்?”

“முதல்ல நாளைக்கு அவாகிட்ட ஃபோன்ல பேசு எல்லாம் வாங்கியாச்சுன்னு சொல்லு அப்புறம் பத்திரிகை எவ்வளவு வேணும் அதை கொண்டு வந்து தரோம்ன்னு சொல்லு அவாளே கிளம்பி இங்கே வந்து பத்திரிகையை வாங்கிண்டு போவா வேணும்னா பாரு இது நிச்சயம் நடக்கும்”

“அது எப்படி நடக்கும்?”

“நீ நான் சொன்னா மாதிரி பண்ணு அப்புறம் நடக்கறதா இல்லையான்னு பார்த்துக்கலாம்”

“இல்ல… அதையும் ஏதாவது சண்டையா மாத்திடப் போறா!! பேசாம போய் கொடுத்துட்டு வந்திடுவோமே எவ்வளவு நேரமாக போறது?”

“நீ நான் சொன்னா மாதிரியே ஃபோனில் சொல்லு போறும் எல்லாம் ஆட்டோமேட்டிக்கா நடக்கும்”

“என்னமோ சொல்லறேங்கள் நானும் அதுபடி பண்ணறேன் பார்ப்போம் நடக்கறதான்னு!!!”

மறுநாள் விடிந்ததும் அவரவர் அவரவர்கள் வேலைகளில் மூழ்கினர். அம்புஜம் தன் வீட்டு வேலைகளை எல்லாம் முடித்ததும் ராமானுஜம் சொன்னது போலவே ஃபோன் போட்டு பர்வதத்திடம் சொல்லி எப்ப வரலாம் என்று கேட்க அதற்கு பர்வதம்

“புடவை எல்லாம் எடுத்தாச்சா?”

“எல்லாம் ஆச்சு மாமி நேத்து ஒரு கார் வச்சுண்டு போய் வாங்கிண்டு வந்துட்டோம். மிருதுக்கு ஒரு மூணு பவுன்ல தங்க வளை வாங்கிருக்கேன்”

“சரி நீங்க தான் ரெண்டு மூணு நாளா வெளியே போயிண்டும் வந்திண்டும் இருக்கேங்களே. கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கோ. சாப்டுட்டு நாங்களே அங்க வரோம். வந்து பத்திரிகையை வாங்கினா மாதிரியும் இருக்கும் அப்படியே நீங்க வாங்கினதெல்லாத்தையும் பார்த்தா மாதிரியும் இருக்கும் இல்லையா. என்ன நான் சொல்லறது?”

அம்புஜத்துக்கு ராமானுஜம் சொன்னதின் அர்த்தம் புரிந்ததும் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு.

“ஆங் …அதுவும் சரி தான் மாமி நீங்களே வாங்கோ. சரி மீதியை நேர்ல பேசிக்கலாமே ஃபோனை வச்சுடவா”

“ஆங் சரி வச்சுடுங்கோ நாங்க ரெண்டு பேருமா ஒரு மூணு மணிக்கு வரோம்”

என்று ஃபோனை துண்டித்ததும் அம்புஜம் மிருதுளாவிடம் நடந்ததைக் கூறி சிரித்தாள். அதற்கு மிருதுளா

“அம்மா அவா இங்க வர்றதே நாம வாங்கி இருக்கிற பொருட்களை எல்லாம் பார்க்கத் தான். பார்த்துட்டு சும்மா இருப்பான்னு மட்டும் நினைக்காதே!! நிச்சயம் ஏதாவது ஒரு குறை சொல்லுவா”

“குறை சொல்லறா மாதிரி நாங்க ஒண்ணுமே பண்ணலையே. எல்லாம் நிறைவா தானே பண்ணறோம்”

“என் கல்யாண கூறப் புடவையை கூட என் இஷ்டதத்துக்கு எடுக்க விடலை அவா…நீ வேணும்னா பாரு இங்க வந்தா ஏதாவது நொட்டு சொல்லத்தான் போறா”

“சரி சரி வா நாம ரெண்டு பேரும் சாப்பிடுவோம். அப்புறம் நான் கிட்சனை ஒதுக்கி வைக்கணும்.”

கடிகாரத்தில் மணி மூன்று அடித்தது. மிருதுளாவுக்கு அவள் வயிற்றில் மணி அடித்தது போல இருந்தது. ஏனெனில் பர்வதம் ஈஸ்வரன் வர போற நேரம் ஆனது. மூன்றரை மணிக்கு வீட்டு முன் ஆட்டோ வந்தது. மிருதுளா ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள் ஆட்டோவிலிருந்து ஈஸ்வரனும் பர்வதமும் இறங்கி கேட்டைத் திறந்து வந்தனர். அம்புஜம் அவர்களை வரவேற்று ஹாலில் அமர வைத்து தண்ணீர் கொண்டு வந்துக் கொடுத்தாள். மெல்ல மிருதுளா நடந்து ஹாலுக்கு வந்து

“வாங்கோ மா வாங்கோ பா”

என்று சொன்னாள். அதற்கு அவர்கள் தங்கள் தலையை மட்டும் ஆட்டினர். வேறெதுவும் பேசவில்லை. அம்புஜம் அவர்கள் வாங்கிய பொருட்களை எல்லாம் கொண்டு வந்து அவர்கள் முன் அடுக்கி வைத்தாள். அப்போது ஈஸ்வரன்

“அன்னைக்கு பத்திரிகை ப்ரூஃப் பார்க்க ஒரு பேப்பர் தங்தேங்கள் இல்லையா அதில் மண்டபம் பெயர் இருக்கலையே”

“ஆமாம் மாமா அப்போ ரெண்டு மண்டத்துல விசாரிச்சிருந்தோம் எதுன்னு முடிவு பண்ணலை அதுனால அதுல எழுதலை. இதோ இந்தாங்கோ பத்திரிகை. உங்களுக்கு எவ்வளவு வேணுமோ எடுத்துக் கோங்கோ”

பத்திரிகையை வாங்கிப் படித்த ஈஸ்வரன்

“இந்த மண்டபமா? இது ரொம்ப சின்னதா இருக்குமே? கொஞ்சம் பெரிய மண்டபம் பார்த்திருக்கலாம்”

“இல்ல… மாப்ள கிட்ட கேட்டோம் அவர் சொன்ன ரேஞ்சுக்கு இந்த மண்டபம் தான் கிடைச்சுது. இதுவும் நல்ல மண்டபம் தான் சென்ட்டரான ஏரியால இருக்கு. பஸ்டாண்டும் பக்கத்திலயே இருக்கு”

“சரி மாமி நீங்க எடுத்தப் புடவையை காமிங்கோ”

“இதோ இது தான் நாங்க மிருது வளைகாப்புக்கு எடுத்த தங்க வளையல்”

“நல்லா இருக்கு !! ஆனா மூணு பவுனுக்கு இது ரொம்ப மெலீசா இல்ல?”

“நான் தான் அப்படி இருக்கட்டும்ன்னு எடுக்கச் சொன்னேன் மாமி. அங்க மூணு பவுனுக்கெல்லாம் பட்ட பட்டையா பார்க்க ஆறு பவுனு மாதிரி எல்லாம் வளையல்கள் இருந்தது ஆனா அதெல்லாம் டெய்லி வேர்க்கு சரிவராது நெளிஞ்சுடும். அதுனால தான் மெலீசா இருந்தாலும் நல்லா கெட்டியா இருக்கட்டும்ன்னு இதை மிருதுகிட்ட வாங்கிக்க சொன்னேன். இதோ இந்த ரெண்டுப் புடவையும் தான் மிருதுக்கு எடுத்திருக்கேன். இது பட்டுப் புடவை, இது மசக்கைப் புடவை”

என்று கூறி இரண்டு புடவைகளையும் பர்வதத்திடம் கொடுத்தாள் அம்புஜம். அதைப் பிரித்துப் பார்த்த பர்வதம்.

“இதென்ன கறுப்புப் புடவை? இதுல கோல்டு கலர்ல லைன் எல்லாம் இருக்கே? வெரும் கறுப்புப் புடவைன்னா எடுக்கணும்!!”

“அது எப்படி மாமி வெரும் கறுப்புப் புடவை நல்லா இருக்காதே!!! இதுல லைட்டா தானே லைன்ஸ் இருக்கு அதுவுமில்லாம எங்க மிருதுக்கு இந்தப் புடவை ரொம்ப பிடிச்சிப் போச்சு பரவாயில்லை மாமி”

“இல்லை இல்லை ஃபுல் கறுப்புப் புடவை தான் எடுக்கணும் பார்டர் ல வேணும்னா லைட்டா ஏதாவது வேற கலர் இருக்கலாம் ஆனா இந்த புடவையை மசக்கப் புடவைன்னு சொல்லவே முடியாது”

“அச்சோ மாமி இதோட விலை ஆயிரத்தி எண்ணூறு ரூபாய். நாங்க பில்லையும் தூக்கிப்போட்டுட்டோம். இப்போ மாத்தவும் முடியாதே….அப்போ வேறொரு புடவை தான் மறுபடியும் எடுக்கணும்”

“அதுனால என்ன சுறுக்க டவுன் போய் எடுத்துண்டு வந்திடுங்கோ!! ஃபங்ஷனுக்கு இன்னும் அஞ்சு நாள் இருக்கே!!”

“அதுக்கில்ல !!அப்போ!!! எடுத்த இந்தப் புடவையை என்னப் பண்ணறது?”

“அதை எனக்குத் தந்திடுங்கோ”

என்று பர்வதம் கண் அடித்துக் கொண்டே அந்தப் புடவையை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டாள். அதைப் பார்த்ததும் மிருதுளாவுக்கு கோபம் வந்தது. அம்புஜம் தன் மகளுக்கு மிகவும் பிடித்துப் போனதால் எடுத்தப் புடவை என்று சொல்லியும் தனக்கு தரும்படி கேட்டதுடன் நிற்காமல் வெடுக்கென்று அந்த புடவையை பர்வதம் எடுத்துக்கொண்டது அம்புஜத்திற்கும் ஆத்திரம் வரவழைத்தது. உடனே சுதாரித்துக் கொண்டு

“இல்ல மாமி எங்களுக்கு ஏகப்பட்ட செலவாயிடுத்து இப்போ இன்னொரு புடவை எடுக்கணும்னு சொன்னா மிருது அப்பா என்ன சொல்லுவாறோ தெரியாது. அதுனால இந்த புடவையை எடுத்த கடையிலேயே குடுத்து மாத்திக்க முடியுமான்னு பார்க்கணும் அதுதான் யோசிக்கறேன்”

“நீங்க தான் பில்லை தூக்கிப் போட்டுட்டேங்களே அப்புறம் எப்படி கடைக்காரன் மாத்துவான்?”

“இல்லை நேத்து தானே எடுத்தோம். கொண்டு போய் கேட்டுப் பார்க்கறோம் அப்படி மாத்திக்க மாட்டோம்ன்னு சொன்னா அப்புறம் என்ன பண்ணலாம்ன்னு பார்ப்போம்.”

என்று மெல்ல அந்த புடவையை பர்வதத்திடமிருந்து வாங்கினாள் அம்புஜம். பின் அனைத்தையும் அடுக்கி எடுத்து வைத்து விட்டு, அவர்கள் இருவருக்கும் காபிப் போட்டு ஒரு தட்டில் மிக்ஸ்சரும் ஒரு ஜாங்கிரியும் வைத்துக் கொண்டு வந்து கொடுத்தாள். அவர்களும் சாப்பிட்டு காபிக் குடித்துவிட்டு வேண்டிய பத்திரிகைகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். அப்போது தாம்பூலத்தில் ஒரு புடவையும் ப்ளௌஸ் பிட்டும் வைத்து பர்வதத்திடம் கொடுத்தாள் அம்புஜம். பர்வதம் அதை வாங்கிக்கொண்டே…

“என்னத்துக்கு புடவை எல்லாம் வச்சுத் தறேங்கள்? குங்குமமே போதுமே!”

“அதுக்கில்லை மாமி நீங்க புடவைக் கேட்டும் கொடுக்காமல் அணுப்ப எனக்கு மனசு வரலை. அதுதான்… எடுத்துக்கோங்கோ”

“அப்படின்னா அந்த கறுப்புப் புடவையையே கொடுத்திருக்கலாமே”

பர்வதம் அந்த புடவை மீதே குறியாக இருந்தாள். அதற்கு அம்புஜம்

“இல்லை இல்லை மாமி கொடுத்திருக்கலாம் ஆனால் சுமங்கலிக்கு எப்படி கறுப்புப் புடவையை தாம்பூலத்துல வச்சு தர்றது சொல்லுங்கோ”

“ம்… சரி சரி…அப்போ நாங்க கிளம்பறோம்.”

என்று அந்த புடவை கிடைக்காததால் அரை மனதுடன் அங்கிருந்து புறப்பட்டாள் பர்வதம். இதற்கு என்ன பிரதிபலிப்பு இருக்கப் போகிறதோ பொறுத்திருந்து தான் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

ஆசை இருக்கலாம் அதில் தவறில்லை
பேராசை இருந்தால் அது எதையும் பார்ப்பதில்லை.

மிருதுளா வேகமாக ஆட்டோ ஸ்டாண்டுக்கு ஃபோன் போட்டு அவர்கள் செல்வதற்கு ஆட்டோவை சீக்கிரம் வரவழைத்தாள். இருவரும் அதில் ஏறி புறப்பட்டுச் சென்றனர்.

அவர்கள் சென்றதும் அம்புஜத்தை திரும்பிப் பார்த்தாள் மிருதுளா…

தொடரும்……

கோவிலுக்கு சென்று வந்ததும் அம்புஜம் மிருதுளாவுக்கு ஃப்ரெஷ் ஆப்பிள் ஜுஸ் கொடுத்தாள். பின் இருவருமாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் வேனு தன் சைக்கிளை நிப்பாட்டிவிட்டு வீட்டினுள் நுழைந்தான் அவன் கூடவே ராணி பேக்கரியின் ஹனி கேக் மற்றும் சமோசாவின் வாசம் மிருதுளாவின் மூக்கினுள் நுழைந்தது. வேனு வாங்கிவந்ததை தன் அக்காவிடம் கொடுத்து விட்டு

“இரு மிருதுக்கா நான் அஞ்சே நிமிஷத்துல ஃப்ரெஷ் ஆகிட்டு வந்திடறேன் ரெண்டு பேருமா சாப்பிடலாம்”

என்று கூறி மாற்று துணி எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் சென்றான். அம்புஜம் தன் மகனுக்கு ஹார்லிக்ஸ் போட்டு ஹாலுக்கு வந்து டேபிளில் வைத்து அதன் மேல் ஒரு தட்டை வைத்து விட்டு உள் ரூமுக்கு சென்று விட்டாள். ஏனெனில் அவளுக்கு சமோசா போன்ற மசாலா பொருட்களின் வாசம் பிடிக்காது.

வேனு வந்ததும் அக்காவும் தம்பியுமாக வாங்கி வந்ததை பிரிக்கும் போது ராமானுஜம் வந்தார். தன் ஹார்லிக்ஸ் தம்பளரை மூடியிருந்த தட்டில் தங்கள் அப்பாவுக்கு ஒரு கேக்கும் சமோசாவும் வைத்து விட்டு மீதத்தை இருவரும் உண்டு மகிழ்ந்தனர். அவர்கள் சாப்பிட்ட பின் ஹாலுக்கு வந்த அம்புஜம் வேனுவிடம்…

“டேய் வேனு இப்படி தினமும் இதெல்லாம் வாங்கிண்டு வராதேடா. உடம்புக்கு ஏதாவது வந்திட கின்திட போறது”

“அம்மா நான் எங்க தினமும் வாங்கிண்டு வரேன் இந்த வாரத்தில இது தான் ஃப்ர்ஸ்ட் டைம்”

“சரி சரி இனி வாரத்துல ஒரு நாள் மட்டும் வாங்கிண்டு வா. போதும்”

என்று அம்புஜம் சொன்னதுக்கு சரி என்று தலையசைத்த வேனு…ஈஸிசேரில் அமர்ந்து வயிற்றின் மேல் ரிமோட்டை வைத்து டிவி பார்த்துக் கொண்டிருந்த அக்காவின் வயிற்றையே உற்றுப் பார்த்தான். அதை கவனித்த அம்புஜம்

“டேய் வேனு என்னடா மிருது வயிறை வச்ச கண்ணு வாங்காம அப்படி பார்த்துண்டிருக்க..டேய் வேனு உன்னை தான்”

“ஹாங்!! ஹாங்!!! அம்மா உஷ்”

என்று தன் ஆள்காட்டி விரலை மூடிய தன் வாய் மீது வைத்து அமைதியாக இருக்கும் படி சொல்லிவிட்டு தன் அக்கா அமர்ந்திருந்த ஈஸிசேர் பக்கத்தில் அமர்ந்து ரிமோட்டை கையில் எடுத்தான் உடனே மிருதுளா எழுந்து நேராக அமர்ந்தாள் அதற்கு வேனு

“மிருதுக்கா எழுந்திரிக்காதே முன்னாடி உட்கார்ந்திருந்த மாதிரியே ரிலாக்ஸ்ஸா உட்காரு”

“ஏன் வேனு எதுக்கு?”

“உட்காரேன் ப்ளீஸ். அம்மா அன்ட் அப்பா இங்க வாங்கோ உங்க எல்லாருக்கும் ஒரு மேஜிக் செய்து காட்ட போறேன்”

என்று தன் அக்காவை ஈஸிசேரில் படுக்க வைத்து டிவி ரிமோட்டை அவள் வயிற்றின் மேல் வைத்தான்.

“எல்லாரும் கவனமா பாருங்கோ மாயமில்லே மந்திரமில்லே நான் மிருதுக்கா வயித்துல வச்சிருக்கும் இந்த டிவி ரிமோட் இன்னும் கொஞ்ச நேரத்துல அப்படியே ரவுண்ட் அடிக்கும் பாருங்கோ பாருங்கோ மக்களே நல்லா பாருங்கோ”

என்றதும் அம்புஜம் அவனிடம்

“ஆமாம் பெரிய வித்தை காட்டறான். டேய் குழந்தை வயத்துல நகரும் போது நீ வச்சு இருக்கும் ரிமோட்டும் நகரும் டா.”

“அம்மா அது எனக்கும் தெரியும் ஆனா அப்படி ஒரு அதிசயத்தை நான் இப்போ தானே பார்க்கறேன்”

“அது என்னமோ வாஸ்த்தவம் தான். சரி நீ பாரு நான் போய் டின்னர் ரெடி பண்ணட்டும். ரொம்ப நேரம் ரிமோட்டை வயத்து மேலே வைக்காதடா வேனு அப்புறம் பொறக்கப் போற குழந்தை எப்பப்பாரு டிவி பார்த்துண்டே இருக்கப் போறது”

“ஹா!ஹா! ஹா! அம்மா போ மா”

என்று டிவி ரிமோர்ட்டை தன் அக்கா வயிற்றில் வைத்து விளையாடிக் கொண்டிருந்த வேனுவைப் பார்த்து மிருதுளா சிரித்ததும் ரிமோட் கீழே விழுந்தது. அதை தன் கையால் கேட்ச் பிடித்தான் வேனு

“பார்த்தயா இது சூப்பர் கேம் மிருதுக்கா. ஐ லைக் இட்”

“போடா உனக்கு எது எதுல விளையாடணும்ன்னே இல்லையா”

“ப்ளீஸ் அக்கா உட்காறேன் இன்னும் ஒரு தடவை”

“டேய் வேனு எனக்கு டாய்லெட் போகணும்டா”

“ஓ!!! சாரி சாரி நீ போயிட்டு வா”

என்று மிருதுளாவுக்கு சந்தோஷமும் நிம்மதியுமாக டிசம்பர் மாதம் பறந்தது. ஜனவரியில் சீமந்தம் வளைகாப்பு செய்ய வேண்டும் ஆனால் அதைப் பற்றி நவீன் வீட்டார் ஒன்றுமே கூறாததால் அம்புஜம் தன் கணவரிடம்

“ஏன்னா அவா என்ன சீமந்தம் வளைகாப்பு நடத்தற எண்ணத்துல இருக்காளா இல்லையா. அதைப் பற்றி மூச்சு விட மாடேங்கறாளே. நாம போய் என்ன ஏதுன்னு கேட்டுட்டுட்டு வந்துடலாமா”

“என்னத்துக்கு நாம அங்க போய் அசிங்கப் படறத்துக்கா? போக எல்லாம் வேண்டாம் ஃபோன்ல கேளு போதும்”

“அது மரியாதையா இருக்காது”

“ஆமாம் அவா ரொம்ப மரியாதையா உங்கள நடத்தினாளாக்கும். போ மா மரியாதையாம் மரியாதை பேசாம அப்பா சொன்னா மாதிரி ஃபோன்ல கேளு போதும்.”

“அவா எப்படியோ இருந்துட்டு போகட்டும் மிருது. நாமும் அவாளை மாதிரியே செஞ்சா அப்புறம் அவாளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் சொல்லு! ஏன்னா பேசாமா நாம மாப்பிள்ளையிடம் ஒரு வார்த்தை கேட்டுண்டுட்டு அப்புறம் அவா ஆத்துக்கு போய் பேசிட்டு வரலாம் என்ன சொல்லறேங்கள்?”

“என்னமோ பண்ணு. அப்பறம் அங்க போயிட்டு அவா அப்படி பேசினா எங்களை இப்படி சொன்னான்னு எல்லாம் இங்க வந்து பிரச்சினை பண்ணக் கூடாது அப்படின்னா போகலாம்”

“சரி சரி …நீங்க உங்க சைட் க்ளியர் பண்ணிக்கறேங்கள். சுப்பர் போங்கோ. மிருது மா மாப்பிள்ளைக்கு ஃபோன் போட்டுக்குடேன்”

“அம்மா இப்போவே கேட்கணுமா? கொஞ்சம் பொறுமையா இரு. அவர் ஆபிஸ் வேலையில் பிஸியா இருப்பார். மத்தியானம் ஒரு இரண்டு மணிக்கு பண்ணலாம் அப்போ கொஞ்சம் ஃப்ரீயா இருப்பார்”

“சரி மா சரி மத்தியானமே பேசிக்கறேன். இப்போன்னா அப்பாவும் இருக்கா அதுனால சொன்னேன். மத்தியானம் அப்பா ஆபிஸ் போயிடுவா அது தான்…”

“நீ மட்டும் பேசினாலும் தப்பில்லை மா. அப்பா ஆபிஸ் போயிருக்கான்னு சொல்லு”

“ஓகே”

மத்தியம் இரண்டு மணி ஆனதும் நவீன் ஆபிஸ் நம்பருக்கு கால் செய்தாள் மிருதுளா. நவீன் அட்டெண்ட் செய்தான்

“ஹலோ ஆம் நவீன் ஹியர்”

“ஹலோ நவீ நான் மிருது பேசறேன்”

“ஹாய் மிருது எப்படி இருக்க? என்ன இந்த நேரத்துல கால் பண்ணிருக்க?”

“அம்மா உங்ககிட்ட என் வளைகாப்பு பத்தி ஏதோ பேசணுமாம் அதுதான் கால் பண்ணினேன். இருங்கோ நான் அம்மா கிட்ட ஃபோனைக் குடுக்கறேன்”

“ஹலோ மாப்ள நன்னா இருக்கேளா?”

“நல்லா இருக்கேன் நீங்க எல்லாரும் அங்க எப்படி இருக்கேங்கள்?”

“நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம் மாப்ள. அப்பறம் நம்ம மிருது வோட சீமந்தம் வளைகாப்பு பத்தி உங்க ஆத்தேந்து ஒரு தகவலும் வரலை நாள் வேற நெருங்கிண்டே இருக்கு இந்த மாசம் பண்ணலைன்னா ஒன்பதாவது மாசம் ஆரம்பிச்சிடும் அப்புறம் எப்போ பண்ணறது? அது தான் என்ன பண்ண போறேங்கள்ன்னு கேட்க தான் காலையிலேயே ஃபோன் பண்ணச் சொன்னேன் மிருது அப்பாவும் இருந்தார். அவரும் பேசிருப்பார். மிருது தான் நீங்க இந்த டைம்ல ஃப்ரீயா இருப்பேங்கள் ன்னு சொன்னா அது தான் இப்போ பண்ணினேன் ஆனா பாருங்கோ மிருது அப்பாக்கு இன்னைக்கு ரெண்டு டூ பத்து ஷிப்ட் அதனால அவர் பேச முடியலை தப்பா எடுத்துக்காதீங்கோ.”

“பரவாயில்லை இதுல என்ன தப்பா எடுத்துக்க? அவர் சொன்னா! என்ன நீங்க சொன்னா! என்ன இரண்டும் ஒண்ணுதானே. சரி இந்த சீமந்தம் வளைகாப்பு பத்தி என் பேரெண்ட்ஸ் இதுவரைக்கும் என்கிட்ட ஒண்ணுமே சொல்லலை இப்போ நீங்க சொல்லித் தான் எனக்கே தெரியறது. அதுக்கு என்ன பண்ணணும்?”

“சீமந்தம் வளைகாப்பு உங்க ஆத்த தான் பண்ணணும். நாங்க சீர் செய்யணும். இது தான் நம்ம வழக்கம்”

“ஓ அப்படியா? எப்போ வச்சுக்கணும்”

“அடுத்த வாரம் பத்தாம் தேதி சீமந்தம் பண்ண நல்ல நாள்ன்னு குறிச்சுக் குடுத்திருக்கா. நேத்திக்கு தான் குறிச்சு வாங்கிண்டு வந்தேன்”

“ஓ அப்போ நான் லீவ் போடணுமே”

“ஆமாம் பின்ன நீங்க இல்லாம எப்படி சீமந்தம் பண்ணறது மாப்ள”

“சரி நீங்க ஒண்ணு பண்ணுங்கோ அதுக்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் செய்திடுங்கோ எவ்வளவு ஆகறதோ அதை நான் வந்து கொடுத்துடறேன். நானும் ஒரு எட்டாந்தேதி போல வந்துட்டு பதினொன்றாம் தேதி கிளம்பறா மாதிரி வரேன்”

“மாப்ள நாங்க செய்றத பத்தி இல்ல. உங்க அப்பா அம்மா கிட்ட போய் பேசலாமான்னு?”

“அவாளுக்கு அக்கறை இருந்திருந்தா இதை அவாளே என்கிட்ட சொல்லிருப்பா ஆனா இது வரை ஒண்ணுமே சொல்லலை. நாங்க தான் பண்ணணும்ன்னு நீங்க சொல்லறேங்கள் அது அவாளுக்கும் தெறிஞ்சிருக்கும் இல்லையா!!! நீங்க வேணும்ன்னா போய் பேசிக்கோங்கோ. ஆனா தைவசெய்து எல்லா ஏற்பாடுகளையும் பண்ணிடுங்கோ ப்ளீஸ்”

“அச்சச்சோ என்னத்துக்கு ப்ளீஸ் எல்லாம் சொல்லறேங்கள் எங்க கொழந்தைகளுக்கு செய்யாமா வேற யாருக்கு செய்யப் போறோம். சரி மாப்ள நாங்க நாளைக்கே உங்க ஆத்துக்கு போய் பேசிட்டு உங்களுக்கு கால் பண்ணி சொல்லறோம். நீங்க மறந்திடாம லீவ் போட்டு வந்திடுங்கோ. வச்சுடவா”

“ஓகே. கொஞ்சம் மிருதுகிட்ட கொடுங்கோளேன்”

“ஓ!! சரி இதோ குடுக்கறேன். மிருது இந்தா உன் கிட்ட பேசணுமாம்”

“ஹலோ சொல்லுங்கோ நவீ”

“மிருது நான் இன்னைக்கே லீவ் அப்ளை பண்ணறேன். நான் எட்டாம் தேதி வந்துட்டு பதினொன்றாம் தேதி கிளம்பிடுவேன் ஏன்னா அப்போ தான் குழந்தை பிறந்ததுக்கப்புறமும் லீவு கிடைக்கும் சரியா. நீ உடம்ப பார்த்துக்கோ .”

“ஓகே நவீ. இன்னைக்கு செக்கப்க்கு போகணும். டாக்டர் என்ன சொல்லப் போறாளோ தெரியலை”

“ஓகே டேக் கேர். டாக்டர் என்ன சொன்னாங்கிறதை நான் நைட் பேசும்போது கேட்டுக்கறேன். பை மிருது. ஹாவ் எ நைஸ் ஈவ்னிங்”

“சரிப்பா பை யூ டூ டேக் கேர். ஐ வில் பி வெயிட்டிங் ஃபார் யூ. பை..பை”

என்று ஃபோனை வைத்ததும் ஆட்டோ வரவழைத்து தாயும் மகளும் ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டுச் சென்றனர். அங்கே மீண்டும் எல்லா டெஸ்ட்டும் மிருதுளாவுக்கு எடுக்கப்பட்டது. அம்புஜம் மிருதுளாவிடம்…

” இந்த தடவை டாக்டர் என்ன சொல்லப் போறாளோன்னு பக்கு பக்குன்னு இருக்குடி மிருது”

“என்னத்துக்கு மா பயப்படறாய். நீ கவனிச்சிண்டதுல நான் நல்லா இருக்கேன். நீ வேணும்னா பாரு நம்மளை டாக்டர் பாராட்டுவா”

“பாராட்டவெல்லாம் வேண்டாம் டி….உனக்கு எல்லாம் நார்மலா இருந்து நீயும் குழந்தையும் ஆரோகியமா இருக்கேங்கள்ன்னு சொன்னாலே போதும்”

இருவரும் பேசிக்கொண்டே இருக்கையில் நர்ஸ் மிருதுளா பெயரை சொல்லி டாக்டர் ரூமிற்கு அழைத்தார். மிருதுளாவும் எழுந்து சென்றாள். அவள் பின்னாலேயே அம்புஜமும் சென்றாள். டாக்டர் மிருதுளா சொன்னா மாதிரியே இருவரையும் பாராட்டினார். சிங்கிள் டிஜிட்டிலிருந்த ஹச். பி இப்போது 13.5 க்கு உயர்ந்துள்ளது மற்றும் அனைத்தும் நார்மலாக இருப்பதாகவும், தாயும் சேய்யும் ஆரோகியமாக இருக்கிறார்கள் என்று அவர் சொல்லி கேட்டதும் அம்புஜம் தன் மனதினுள்

“அம்மா தேவி தாயே ரொம்ப நன்றி மா”

ஹாஸ்பிடல் விசிட் முடிந்து வீட்டுக்கு வந்ததும் வழக்கம்போல அம்புஜம் தன் மகளை கவனிக்கத் துவங்கினாள். அன்றிரவு அம்புஜம் தன் கணவனிடம் மாப்பிள்ளை சொன்னவற்றை சொன்னாள். மறுநாள் விடிந்தது. ராமானுஜத்துக்கு மத்தியானம் தான் வேலைக்கு போக வேண்டியிருந்ததால் காலை ஒரு பத்து மணியளவில் நவீன் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

ஈஸ்வரனும் பர்வதமும் சீமந்தம் வளைகாப்பிற்கு தேதி குறித்து மிருதுளாவின் பெற்றவர்களை வந்து அழைக்க வேண்டும் ஆனால் இங்கோ..ஈஸ்வரனும் பர்வதமும் செய்ய வேண்டியதை இப்போது ராமானுஜமும் அம்புஜமும் செய்கின்றனர்.

பொறுப்பற்ற பெற்றவர்கள் தங்கள் பிள்ளையை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளார்கள் என்பதை விட அவமதித்துள்ளார்கள் என்பதே மிக பொருத்தமானதாகும்.

இதை சாக்காக வைத்து என்னென்ன செய்ய போகிறார்களோ மூத்த தம்பதியர்?

தொடரும்…….

பரீட்சைகள் முடிந்ததும் மிருதுளா தினமும் அவள் அம்மா சொல்படி குழந்தை ஆரோக்கியமாக பிறப்பதற்கு வேண்டிய அனைத்து சத்தான சாப்பாடு வகைகளையும், ஜுஸ், பழங்கள், மோர், பால் இடையிடையே அன்பான தம்பி ஆசையாக வாங்கி வந்த, அவளுக்கு மிகவும் பிடித்த சமோசா, கட்லெட், கேக் என அனைத்தையும் உட்கொண்டாள். மாலையில் பக்கத்திலிருக்கும் கோவில் வரை ஒரு நடை. இரவில் நவீனுடன் ஃபோனில் பத்து நிமிடம் பேசிவிட்டு (அதற்கு மேல் பேசினால் பைசா கூட ஆகிவிடுமே என்ற பயம் நவீனுக்கும் மிருதுளாவும் இருந்தது) தாயம் கார்ட்ஸ் விளையாட்டு, நடுநடுவே சொந்த பந்தங்களின் வரவு, அவர்களுடனான அரட்டை, அவர்கள் கொண்டு வந்து கொடுத்த பழங்கள், சுவீட்கள், என மன நிம்மதியுடன் மகழ்ச்சியுடனும் நாட்கள் கடந்தன.

ஒரு நாள் மத்தியம் ராமானுஜம் வீட்டு வாசல் முன் ஆட்டோ வந்து நின்றது. யார் வந்திருக்கிறார்கள் என்று ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள் மிருதுளா. ஆட்டோவிலிருந்து இறங்கியது பர்வதமும் அவள் பக்கத்து வீட்டு பாட்டியும். பர்வதத்தைக் கண்டதும் மிருதுளா பதற்றம் ஆனாள்‌. முகம் வியர்க்கத் துவங்கியது. ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தவளிடம் தரையில் படுத்திருந்த அம்புஜம்

“ஏய் மிருது நம்ம ஆத்துக்கா ஆட்டோ வந்திருக்கு? யாரு வந்திருக்கா மா?”

என்று கேட்டும் பதில் வராததால் தரையிலிருந்து எழுந்து மிருதுளா தோளைப் பிடித்து அவள் பக்கமாக திருப்பினாள் அம்புஜம். மிருதுளாவின் பதற்றம், முகத்தில் வியர்வையை கண்டு ..

“என்ன மிருதுமா ஏன் இப்படி பதற்றமா இருக்க? எப்படி வியர்க்கறது பாரு? இந்தா துண்டால முகத்தை தொடச்சுக்கோ. தள்ளு அப்படி நீ பார்த்து இவ்வளவு பதற்றம் ஆகுற மாதிரி யாரைப் பார்த்த இல்ல எதைப் பார்த்த? சித்த நகரு நான் பார்க்கட்டும்”

என்று மிருதுளாவை நகரச்செய்து அவர்கள் உள் ரூமின் சிறிய ஜன்னல் வழியாக பார்த்தாள் அம்புஜம். பர்வதம் ஆட்டோ காரருக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்தைப் பார்த்ததும் மிருதுளாவின் பதற்றத்தின் காரணம் புரிந்தது. உடனே மிருதுளாவிடம்…

“நீ எதுக்கும் பயப்படாதே மா அம்மா நான்
இருக்கேன் சரியா. நம்ம வீடு தேடி வரவாகிட்ட நாம மரியாதையா தான் நடந்துப்போம்.. அப்படிங்கறதை உங்க மாமியார் புரிஞ்சுக்கட்டும். இரு நான் போய் கதவை திறக்கட்டும்”

என்று ஹாலுக்குச் சென்றாள். அதற்குள் பர்வதம் கதவருகில் வந்து அழைப்பு மணியை அழுத்த விரலை அதன் அருகே கொண்டு செல்லும் போது கதவு திறக்கப்பட்டது. உள்ளிருந்து அம்புஜம் அவ்விருவரையும்

“வாங்கோ வாங்கோ உள்ளே வாங்கோ. உட்காருங்கோ. குடிக்கத் தண்ணி கொண்டு வரேன்”

என்று அடுப்படிக்கு சென்று ஃப்ரிட்ஜில் இருந்து ஒரு பாட்டில் ஐஸ் வாட்டர் எடுத்து இரண்டு எலும்மிச்சைப் பழத்தைப் பிழிந்து கொஞ்சம் சர்க்கரை ஒரு சிட்டிகை உப்புப் போட்டு சூப்பரான ஜுஸ் செய்து எடுத்து வந்து இருவரிடமும் கொடுத்து..

“இந்தாங்கோ வெயிலில் வந்திருக்கேங்கள் குடிங்கோ”

“பரவாயில்லையே தண்ணி கொண்டு வரேன்னு உள்ள போய் சட்டுன்னு ஜுஸ்ஸாவே கொண்டு வந்துட்டீங்களே”

என்றார் பர்வதம் கூட வந்த பாட்டி. அதற்கு அம்புஜம் பதிலளிப்பதற்கு முன் முந்திக் கொண்டு

“அவா ரெடிமேடா கிடைக்குமே தண்ணில கலந்துட்டா ஜுஸ் ஆகிடுமே அது மாதிரி ஏதாவது வச்சிருப்பா அது தான் சீக்கிரம் செய்து தந்துட்டா …இல்லையா மாமி”

என்று அம்புஜத்தைப் பாராட்டியதை விரும்பாமல் அவளாக ஒரு கதையை கட்ட நினைத்த பர்வதத்தைப் பார்த்து அம்புஜம்

“இல்ல மாமி இது ஃப்ரெஷ் லைம் ஜுஸ் தான். எங்காத்த தான் எலும்மிச்சை மரமே இருக்கே. நாங்க ஏன் ரெடிமேட் ஜுஸ்ஸெல்லாம் வாங்கணும்?”

“அது தானே நான் உள்ள வரும்போதே பார்த்தேன் வாசல்ல பெரிய எலும்மிச்சை மரம் முழுக்க காய்களோட இருக்கே”

என்றார் பாட்டி. இதற்கு மேல் இந்த பேச்சைத் தொடரக் கூடாது என்று எண்ணிய பர்வதம்

“ஆமாம் உங்க பொண்ணு எங்கே? அவளைப் பார்க்கணும்ன்னு பாட்டி ஆசைப் பட்டாங்க அது தான் கூட்டிண்டு வந்தேன்”

என்று தனக்கு அதில் விருப்பம் இல்லாதது போல கூற அதற்கு பாட்டி சும்மா இல்லாமல்

“ஏன் பர்வதம் மாமி அப்போ நீங்க உங்க மருமகள பார்க்க வரலையா? எனக்காக தான் வந்தீங்களா?”

“உங்களுக்காகவும் தான் வந்தேன்”

என்று இழுத்தாள் பர்வதம். அவள் எதை எண்ணி பாட்டியை கூட்டிக் கொண்டு வந்திருக்கிறாள் என்பதில் தான் அவளின் சூட்சுமம் இருக்கிறது. பாட்டியும் பர்வதமும் பேசிக் கொண்டிருக்கையில் அம்புஜம் மிருதுளாவை ஹாலுக்கு வரச் சொல்லி கூப்பிட்டாள். மிருதுளா வந்ததும் பர்வதம் அவளிடம்…

“என்ன இப்படி இளைச்சு துறும்பா ஆகிருக்க?”

என்று கேட்டதும் அம்புஜத்துக்கும் மிருதுளாவுக்கும் கோபம் வந்தது. ஆனால் அமைதியாக பதிலளித்தாள் மிருதுளா…

“இல்லையே!!! எங்க அக்கம் பக்கத்துல எல்லாரும் நான் இங்க வரும்போது எலும்பும் தோலுமா இருந்தேன்னும்… அம்மா ஆத்துக்கு வந்ததுக் கப்பறம் தான் கொஞ்சம் பூசின மாதிரி ஆகிருக்கேன்னு சொல்லறாளே. எப்பப்பாரு எதையாவது சாப்பிட அல்லது குடிக்கன்னு கொடுத்துண்டே இருக்கா எங்க அம்மா ஏன்னா நானும் என் குழந்தையும் ஆரோக்கியமா இருக்கணும்ன்னு இவ்வளவு மெனக்கடறா”

“அது தாம்மா அம்மாங்கறது. அம்மான்னா சும்மாவா?”

என்றாள் வீட்டுக்கு வந்த பாட்டி. பர்வதம் இப்படி ஒரு பதிலை மிருதுளாவிடமிருந்து எதிர்பார்க்காததால் சற்று அதிர்ச்சி அடைந்தாலும் உடனே சுதாரித்துக் கொண்டு…

“பின்ன அம்மான்னா இதெல்லாம் செய்யத் தான் வேணும்” என்றவளிடம் மிருதுளா..

“எல்லா அம்மாக்களும் அப்படி இருப்பதில்லை என்ன செய்ய?” என்று அலுத்துக் கொண்டே சொன்னாள்.

மாமியாரும் மருமகளும் மாற்றி மாற்றி பேசிக் கொண்டே போக, அதற்கு எப்படியாவது முற்றுப் புள்ளி வைக்க நினைத்த அம்புஜம் பாட்டியைப் பார்த்து

“உங்களுக்கு எத்தனை குழந்தைகள் அதைப் பற்றி சொல்லுங்கோ”

“எனக்கு ஒரு பிள்ளை ஒரு பொண்ணுமா. இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. புள்ளைக்கு இரண்டு பசங்க அதுல ஒண்ணு தான் பர்வதம் மாமி வீடே கதின்னு கிடக்கும். பொண்ணுக்கு ஒரு புள்ள.”

“ஓ அப்படியா!! பையனும் மாப்பிள்ளையும் என்ன செய்யறாங்க?”

“ரெண்டு பேரும் ஒரு ஹார்ட்வேர் கம்பெனியில வேலைப் பார்க்கிறாங்க மா. பையனும் மாப்பிள்ளையும் மட்டுமில்லமா என் மகளும் மருமகளும் ரெண்டு பேரும் வேலைக்கு போறாங்க. இந்த காலத்துல ஒருத்தர் சம்பாத்தியத்துல குடும்பம் ஓட்டறதுங்கறது கஷ்டம்ன்னு சொல்ல மாட்டேன் ஆனா பொண்ணுங்க படிச்சிட்டு எதுக்கு வீட்டில சும்மா சமையல், வீட்டுவேலைன்னு உட்கார்ந்திருக்கணும் அதுனால நான் தான் ரெண்டு பேரையுமே வேலைக்கு போங்கன்னு சொன்னேன்”

“பரவாயில்லைப் பாட்டி நீங்க சூப்பர். நீங்க சொல்லறதும் கரெக்ட் தான். அப்பா அம்மா கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறாங்க அப்புறம் ஏன் சும்மா வீட்டில இருக்கணும்? நல்ல வேலை கிடைத்தால் போகறது நல்லது தான் பாட்டி. நீங்க சொல்லறது மிகவும் சரியான விஷயம். ஆனா அதுக்கு வீட்டில இருக்கறவங்களோட ஒத்துழைப்பும் வேணுமே பாட்டி. இப்போ நீங்க என்கரேஜ் பண்ணுற மாதிரி எல்லா மாமியார் மாமனார்களும் செய்தா நல்லா தான் இருக்கும்.”

என்று பர்வதத்தைப் பார்த்துக் கொண்டே கூறினாள் மிருதுளா. மீண்டும் ஆரம்பித்தால் மிகவும் தர்மசங்கடம் ஆகிவிடும் என்று அம்புஜம் பாட்டியிடம்

“அப்போ உங்க பேரப் பசங்கள யாரு பார்த்துப் பாங்க?”

“நானும் என் புருஷனும் தான். எங்களுக்கு என்ன வேற வேலை இருக்கு. நான் காலையில எழுந்து காலை டிபன், மத்திய சாப்பாடு எல்லாம் செய்து வச்சிடுவேன் பையன், மருமக, பொண்ணு, மாப்பிள்ளை எல்லாரும் சாப்பிட்டு மத்தியத்துக்கு கட்டிக்கிட்டு கிளம்பிடுவாங்க அதுக்கப்புறம் நானும் என் கணவரும் குழந்தைகளுக்கு டிபன் ஊட்டிவிட்டுட்டு நாங்களும் சாப்பிடுவோம். பையனோட பெரிய பையனை ஸ்கூல் விட்டுட்டு வந்திடு வாரு என் வீட்டுக் காரர். அப்பறம் வேலை செய்ய ஒரு பொண்ணு வரும் அது வந்து வீட்டை எல்லாம் சுத்தம் செய்து பாத்திரத்தை எல்லாம் தேய்ச்சு, துணிகளை எல்லாம் அவங்க அவங்க ஊறப் போட்டுட்டு போயிடுவாங்க இந்த பொண்ணு எல்லாத்தையும் தோச்சு காய வச்சிட்டு கிளம்பிடும். அதுவரை பேரப்பசங்களோட விளையாடிட்டு மத்திய சாப்பாடு ஊட்டிவிட்டுட்டு எல்லாருமா கொஞ்ச நேரம் படுத்துக்குவோம். மூன்றரை மணிக்கு என் வீட்டுக் காரர் புறப்பட்டிருவாரு ஸ்கூலுக்கு பேரனை கூட்டிக்கிட்டு வரத்துக்கு. அந்த நேரத்துல நான் எழுந்து சாயந்திரம் லைட்டா டிபன் மற்றும் ராத்திரிக்கு ஏதாவது ஒரு கூட்டு மாதிரி பண்ணி சப்பாத்திக்கு மாவு பிசைந்து வச்சிடுவேன். பேரனை ஸ்கூலேந்து எங்க வீட்டுக்காரர் கூட்டிட்டு வந்ததும் அவனுக்கு டிரெஸ் மாத்திவிட்டுட்டு மத்த பேரன்களை எழுப்பி முகம் கை கால் எல்லாம் அலம்ப வைத்து பேரப்பிள்ளைகளோட நாங்க ரெண்டு பேரும் உட்கார்ந்து டிபன் சாப்பிட்டு பால் குடிச்சிட்டு கிளம்பி பக்கத்துல இருக்குற பார்க்ல போயி பசங்கள விளையாட விட்டுட்டு நாங்க ரெண்டு பேரும் அவங்களல பார்த்துக்கிட்டே அங்கேயே மெதுவா நடப்போம். ஒரு மணி நேரமானதும் வீட்டுக்கு வந்திடுவோம். பெரிய பேரன் தாத்தாவோட உட்கார்ந்துட்டு ஹோம்வர்க் செய்வான். நான் மற்ற மூணு பேரன்களோட கொஞ்ச நேரம் விளையாடுவேன். அதற்குள் அவங்க அவங்க அப்பா அம்மா வந்திடுவாங்க. பசங்களை அவங்க கிட்ட விட்டுட்டு நான் அவங்களுக்கு காபி போட்டு கொடுப்பேன் அப்புறம் சப்பாத்தி சுட்டு டப்பால போட்டு வச்சிடுவேன். நானும் அவரும் ஏழரை மணிக்கெல்லாம் சாப்பிட்ருவோம். ஒன்பது மணிக்கெல்லாம் படுத்திடுவோம். பசங்க அவங்களுக்கு இஷ்ட்டப்பட்ட நேரத்துல சாப்பிட்டுப்பாங்க தூங்கிப்பாங்க. இது தான் எங்க வீட்டுல தினசரி நடக்கறது. இதுக்கு எல்லாருமே பழகிட்டோம்”

“உங்க பொண்ணு உங்க வீட்டுல தான் இருக்காங்களா?”

“இல்ல மா அவ எங்க தெருவுக்கு அடுத்த தெருவுல குடியிருக்கா. தூங்கறதுக்கு மட்டும் தான் அவங்க வீட்டுக்கு போவாங்க மத்தப்படி பெரும்பாலும் எங்க வீட்டிலியே தான் இருப்பாங்க”

“அவங்க மாமியாரோ மாமனாரோ ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?”

“ஒண்ணும் சொல்ல மாட்டாங்க மா. தங்கமான மனுஷங்க. அவங்க ரெண்டு பேருமே ஊருல வயல் தோப்பு எல்லாத்தையும் பார்த்துகிட்டு இருக்காங்க. அவங்க தோட்டத்துல விளையும் அரிசி, பருப்பு, தேங்கா எல்லாம் எங்க வீட்டுக்கு வந்திடும். அவங்களும் அப்பப்போ வந்து பேரப் பிள்ளைகளோட இருந்துட்டு போவாங்க. ஏன்னா மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் அடிக்கடி லீவு கிடைக்காதில்ல….அப்படி லீவு கிடைக்கும் போதெல்லாம் அவங்க ஊருக்கு போயிடுவாங்க.”

இந்த பேச்சை இதற்கு மேல் வளர்க்க விருப்பமில்லாத பர்வதம் குறுக்கிட்டு

“இந்த வயசான காலத்துல உங்களை வேலை வாங்குறாங்க அது புரியாம நீங்க என்னடான்னா பெருமையா சொல்லிக்கறீங்க!”

“நம்ம புள்ளைங்கள நம்ம பார்த்துக்காம வேற யாரு பார்த்துப்பாங்க பர்வதம் மாமி. நம்ம புள்ளைங்களுக்குன்னா நமக்கு தெம்பு தானா வந்திடும். என்ன சமையல் வேலை மட்டும் தானே. மத்ததுக்கெல்லாம் ஆள் போட்டிருக்காங்களே அப்புறம் என்ன. நம்ம பேரப்பிள்ளைகளோட நேரம் செலவழிக்கறது அந்த ஆண்டவன் நமக்கு கொடுத்த பெரும் பாக்கியம் மாமி. நாளைக்கே மிருதுளா வேலைக்கு போனா நீங்களும் மாமாவும் உங்க புள்ள மருமகளுக்கு உதவ மாட்டீங்களா என்ன?”

“நீங்க ஏன் சொல்ல மாட்டீங்க!!! உங்களுக்கு ரெண்டு பசங்க தான் ஆனா எங்களுக்கு நாலு பச்ஙக இருக்காங்களே. சரி நீங்க எதுக்கு வந்தீங்க எதை பேசிகிட்டு இருக்கீங்க?”

“ஆமா ஆமா மறந்தே போயிட்டேன். மிருதுளா… நீ பர்வதம் மாமி வீட்டுல இருக்கும்போது நாங்க எல்லாரும் தீபாவளிக்கு ஊருக்கு போயிட்டோம் அப்புறம் பசங்க வேலைக்கு போகணும்ன்னு வந்துட்டாங்க ஆனா நானும் தாத்தாவும் ஊருலேயே பேரப்பசங்களோட கொஞ்ச நாள் இருந்துட்டோம். நேத்து தான் வந்தோம். அப்போ தான் தெரிஞ்சுது நீ மாசமாயிருக்கன்னு. அதுதான் கண்ணு உன்னை பாக்க ஓடி வந்தேன்.”

“ரொம்ப தாங்க்ஸ் பாட்டி. உங்களுக்கு தான் என் மேலே எவ்வளுவு பாசம்”

“அம்புஜம் மாமி உங்க பொண்ண நல்லா வளர்த்திருக்கீங்க. அவ பர்வதம் மாமி வீட்டுக்கு வந்ததிலிருந்து வீட்டு வாசலில் கூட நின்னு பார்த்ததில்லை. பர்வதம் மாமி விஷயத்தை சொன்னதுமே நானே உனக்காக அதிரசம் சுட்டேன் இந்தா வாங்கிக்கோ. இதுல பழம், பூ எல்லாம் நான் பஸ்டாண்ட்ல வாங்கினது இருக்கு இந்தா மா. உனக்கு என்ன பிடிக்கும்ன்னு மாமிகிட்ட கேட்டேன் அதுக்கு மாமி தெரியாதுன்னு சொன்னாங்க அதுனால எங்க வீட்டுல இருக்கறவங்களுக்கு பிடிச்சதை செய்து எடுத்து வந்தேன்”

“தாங்க்ஸ் பாட்டி. எதுவாயிருந்தா என்ன பாட்டி எனக்கு செய்து கொடுக்கணும்ன்னு உங்களுக்கு தோணிச்சே அதுவே எனக்கு சந்தோஷம் தான் பாட்டி”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் அம்புஜம் அவர்களுக்கு ஆப்பிள் வெட்டிக் கொடுத்தாள். காபி வைக்க எழுந்ததும் பாட்டி அம்புஜத்திடம்..

“அதெல்லாம் வேண்டாமா நாங்க கிளம்பறோம். மணி ஆகிடுச்சு. அதுதான் சூப்பர் லெமன் ஜுஸும், ஆப்பிளும் தந்தீங்களே அதுவே போதும். என் வீட்டுக்காரர் தனியா பேரப் பசங்கள சமாளிச்சுட்டு இருப்பார் பாவம். ஆமாம் இப்போ எப்படி திரும்பி போவோம் பர்வதம் மாமி?”

“இருங்கோ நான் ஆட்டோக்கு கால் பண்ணறேன். அஞ்சு நிமிஷத்துல ஆட்டோ வந்திடும்.”

என்று ஆட்டோ ஸ்டாண்டுக்கு ஃபோன் போட்டு ஆட்டோவை வரவழைத்தாள் மிருதுளா. அவர்களுக்கு தாம்பூலம் கொடுத்து வழியனுப்பி வைத்தாள் அம்புஜம்.

அவர்கள் ஆட்டோவில் ஏறிச் சென்றதும் வீட்டினுள் வந்தனர் அம்புஜமும், மிருதுளாவும். அப்போது மிருதுளா தன் தாயிடம்

“கேட்டயாமா நான் ரொம்ப மெலிஞ்சிட்டேனாம். கேட்டயா ….என்னமோ இவா ஆத்துல இருக்கும் போது அப்படியே வித விதமா சமைச்சு எனக்கு கொடுத்து தேத்தினா மாதிரியும், நான் இங்க வந்ததும் நீ ஒண்ணுமே தராம நான் இளைச்சுட்டா மாதிரியும் பேச்சப் பாரு பேச்ச….எனக்கு அப்படியே கோபம் கோபமா வந்தது மா”

“விடு மிருது அவாளைப் பற்றி நமக்கு தான் தெரியுமே. சொன்னா சொல்லிட்டுப் போறான்னு விட்டுத்தள்ளு. நீ இப்படி கோபப்பட்டேன்னா அப்புறம் உன் குழந்தையும் கோபக்காரனா பொறந்திடப் போறது. நிதானமா பொறுமையா அமைதியா இருமா.”

“நான் நிதானமா தானே பதில் சொன்னேன்”

“என்னத்துக்கு அந்த மாமிகிட்ட பேசப் போன. நீ பேசினாலும் விட்டாளா மேல மேல நம்மளை குத்தி குத்திதான் பேசினா. மூணாம் மனுஷா முன்னாடி தேவையா சொல்லு!!”

“போ மா ஒண்ணும் தப்பில்லைன்னு தான் எனக்கு தோணறது. பொறுமையா இரு பொறுமையா இருன்னு நீ சொன்னதால தான் நான் இவ்வளவு நாள் பொறுத்திருந்தேன் ஆனாலும் அவா அப்படியே தான் இருக்கா…. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் என்னை மட்டம் தட்டறதுலேயே இருக்கா”

“இருந்துட்டு போறா மா. விடு மிருது. நீ உன்னையும் உன் புருஷனையும் உனக்கு பொறக்கப் போற குழந்தையையும் நல்ல படியா பார்த்துக்கோ அது போதும். இவா எல்லாம் என்ன வேணும்னாலும் சொல்லிக்கட்டும் நீ உன் மனசாட்சிக்கு விரோதமா எதுவும் பண்ணாமல் அவாளுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்துண்டே இரு மீதியை அந்த அம்மன் பார்த்துப்பாள். ஆயிரம் கண்ணுடையாள் பார்வையிலிருந்து எவரும், எதுவும் தப்பாது மிருது. கவலையை விடு. வா நாம முகம் கை கால் அலம்பிட்டு கோவிலுக்கு அப்பாவும் வேனுவும் வரத்துக்குள்ள போயிட்டு வருவோம்.”

மாசமான மருமகள் குஜராத்திலிருந்து ஊருக்கு வந்ததிலிருந்து ஒன்றுமே செய்திடாத பர்வதம், இன்று வந்த போதும் ஒரு பூ கூட வாங்கிவரவில்லை. ஆனால் மிருதுளாவைப் பார்க்க வந்த பக்கத்து வீட்டு பாட்டி ஆசையாக அதிரசமும், பூவும் பழமும் வாங்கி வந்து கொடுத்துள்ளார். நாம் தினசரி பஸ்ஸில் பயணிக்கும் போதோ அல்லது ஏதாவது வாங்க க்யூவில் நிற்கும்போதோ ஒரு கர்ப்பிணி பெண் வந்தால் உடனே அவளுக்கு இடமளிப்போம் இல்லையா ? அது தானே மனிதாபிமானம். அப்படி செய்திடாதவர்களையும், இந்த பர்வதம் போன்றவர்களையும் எந்த இனத்தில் சேர்ப்பது? இந்த வருகைக்கு பின்னாலும் அவளின் திட்டம் நிச்சயம் இருக்கும். இது போன்றவர்கள் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கு பின்னாலும் ஏதாவது ஒரு சூழ்ச்சி மறைந்திருக்கும். அது என்ன என்பதை காலம் காட்டிக் கொடுக்காமல் போய்விடுமா என்ன?

தொடரும்….

“சரி சரி விடு மிருதுக்கா. இனி நிம்மதியா இங்க ஹாப்பியா இரு. அவாளை எல்லாம் மறந்துடு. உனக்கு நாளையிலிருந்து பரீட்சை ஆரம்பிக்கறது இல்ல!!! படிச்சிருக்கியா?”

“அதெல்லாம் குஜராத்ல இருக்கும் போதே படிச்சாச்சு”

“சரி சரி நான் போய் டிரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன்”

“மிருது நாளைக்கு பரீட்சைக்கு உன் கூட நானும் வரேன். நாம ஒரு கார் புக் பண்ணிண்டு போயிட்டு வந்திடலாம். நான் அப்பாக்கும் வேனுவுக்கும் வேண்டியதை சமைச்சு வச்சுட்டு உனக்கு ஜுஸ், பழங்கள் எல்லாம் எடுத்துண்டு வரேன். நீ நல்ல படியா பரீட்சையை எழுது சரியா. படிப்பு என்னென்னைக்கும் உனக்கு உதவும்.”

“சரி மா ஆனா எப்படி ஜுஸ் பழமெல்லாம் தருவ நான் எக்ஸாம் ஹாலுக்குள்ள போனா மூணு மணி நேரம் பரீட்சை முடிஞ்சதுக்கப்பறம் தான் வெளியவே வரமுடியும்!!!”

“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ கவலை படாமல் பரீட்சை எழுதிட்டு வா.”

மத்தியம் உணவருந்தியப் பின் தன் கணவர் நவீனுக்கு ஃபோன் போட்டு நடந்தவைகளை கூறினாள் மிருதுளா. அதை கேட்டும் எந்த விதமான ரியாக்ஷனும் காட்டவில்லை நவீன். சொன்ன மிருதுளாவிற்கு ஏன்டா சொன்னோம் என்றானது.

மிருதுளாவிடம் ஒன்றும் கூறவில்லை என்றாலும் அன்றிரவு நவீன் தன் பெற்றோரை ஃபோனில் அழைத்தான். ஃபோனை எடுத்தார் ஈஸ்வரன்..

“ஹலோ நான் நவீன் பேசறேன்”

“ம்.ம்…சொல்லு சொல்லு”

“ஆமாம் நான் தான் மிருதுவ அவா ஆத்துல நான் ஊருக்கு கிளம்பியதும் பவின் கிட்ட சொல்லி கொண்டு போய் விடச் சொல்லிட்டு தானே வந்தேன். அதை செய்யாம என்னத்துக்கு அவளை கண்டபடி பேசி அழ வச்சு அனுப்பியிருக்கேங்கள்? ஏன் இந்த தேவையில்லாத வேலை உங்களுக்கு?”

“ஆமா சும்மா சும்மா அம்மா அம்மா ன்னா எங்களுக்கு கோபம் வராதா?”

“இதை நான் அவளை கொண்டுப் போய் விட்டுட்டு வரச் சொல்லும் போதே சொல்லியிருக்க வேண்டியது தானே அப்போ பேசாம மண்டைய ஆட்டிட்டு அப்புறமா ஏன் அப்படி பிஹேவ் பண்ணிருக்கேங்கள்? அதுவுமில்லாம மருது என்னைக்கு அம்மா அம்மா ன்னு சொல்லிருக்கா ஏன் இப்படி எல்லாம் பொய் பேசற?”

“ஆமாம் வந்துட்டான் பேச…அங்க ஏத்திவிட்டதும் இங்க கொட்ட வந்துட்டான் பெரிய இவனாட்டம்”

“ச்சே…உங்களை எல்லாம் திருத்தவே முடியாது”

என்று கூறி ஃபோனை கட் செய்தான் நவீன். பின் தன் சித்தப்பாவிடம் நடந்ததைக் கூறி தன் கவலையை பகிர்ந்துக் கொண்டான்.

அன்றிரவு மிருதுளாவை ஃபோனில் அழைத்தான் நவீன்

“ஹலோ”

“ஹலோ சொல்லுங்கோ நவீ. ஹவ் வாஸ் தி டே? டின்னர் சாப்டேளா?”

“ஏய் நான் தான்னு எப்படி கண்டு பிடிச்ச?”

“நீங்க ஹலோ சொன்னதுமே தெரிஞ்சுண்டேன் நீங்க தான்னு”

“க்ரேட் பா. சரி நீ சாப்பிட்டயா?”

“ம்… சாப்டேன். நீங்க?”

“நம்ம டாபால தான் சாப்பிட்டுட்டு அப்படியே கால் பண்ண வந்துட்டேன். சரி நாளைக்கு உனக்கு எக்ஸாம் இல்ல. நல்ல படியா எழுது ஆல் தி பெஸ்ட் . அதை சொல்லத் தான் கூப்பிட்டேன். நீ நடந்ததை எல்லாம் மறந்துட்டு உன் படிப்பில கான்சென்ட்ரேட் பண்ணு. நம்ம குழந்தையையும் நல்லா பார்த்துக்கோ வேற யாரைப் பற்றியும் எந்த நினைப்பும் உனக்கு வேண்டாம்… புரிஞ்சுதா?”

“ஓகே நவீன். நீங்களும் நல்லபடியா இருங்கோ”

“சரி மிருது நான் வைக்கட்டுமா?”

“சரி நவீன் குட் நைட். ஹாவ் எ நைஸ் ஸ்லீப்”

“ஓகே மிருது குட் நைட் டு யூ டு. பை”

என்று ஃபோனை துண்டித்து காசு கொடுத்துவிட்டு தன் வீட்டுக்குச் சென்று படுத்துக் கொண்டு தன் பெற்றோர்களின் நடத்தையை எண்ணி மன வேதனையில் உறங்க முடியாமல் புரண்டு படுத்து அவனையும் அறியாது உறங்கிப் போனான் நவீன்.

மறுநாள் விடிந்ததும் எழுந்து சுறுசுறுப்பாக அனைத்து வீட்டு வேலைகளையும் முடித்தாள் அம்புஜம். மணி ஏழரை ஆனதும் மெதுவாக மிருதுளாவை எழுப்பி பரீட்சைக்கு தயாராகச் சொன்னாள். மிருதுளா எழுந்ததும் வேனு அவளிடம்…

“குட் மார்னிங் மிருதுக்கா. ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் எக்ஸாம். நான் காலேஜ் கிளம்பியாச்சு வரேன்”

“தாங்க்ஸ் வேனு. பத்திரமா காலேஜ் போயிட்டு வா”

“வரேன் மா பை”

என்று சொல்லி வேனு காலேஜ் சென்றான். மிருதுளாவும் நிதானமாக குளித்து கிளம்பினாள். அம்புஜம் தன் பெண்ணுக்கு வேண்டிய ஜுஸ், பழங்கள் மற்றும் சாப்பாடு கட்டிக் கொண்டு தயார் ஆனாள். எட்டரை மணிக்கு கார் வந்தது காலை டிபன் சாப்பிட்டப் பின் காரில் ஏறி அமர்ந்து பரீட்சை நடக்கும் காலேஜுக்கு பயணிக்கலானார்கள் அம்புஜமும் மிருதுளாவும். அப்போது மிருதுளா தன் அம்மாவிடம்

“ஏன் மா எக்ஸாம் பத்து மணிக்கு தான் நாம ஒன்பது மணிக்கு கிளம்பியிருந்தா போதும் ஏன் எட்டரைக்கெல்லாம் கிளம்பிட்டோம் எட்டம்பதுக்கு காலேஜ் ரீச் ஆகிடுவோமே”

“ஆமாம் நீ சொல்லறது சரி தான் நாளைலேந்து ஒன்பது மணிக்கு கிளம்புவோம். இன்னைக்கு நான் போய் உன்கூட எக்ஸாம் ஹால்ல உட்காரலாமா அப்பப்போ ஜுஸ் எல்லாம் குடுக்கலாமான்னு கேட்கணும், அதுக்கு பெர்மிஷன் வாங்கணும் அதுக்காக தான் சீக்கிரமே போறோம் புரிஞ்சுதா?”

“அம்மா அப்படி எல்லாம் விட மாட்டா மா”

“அதெல்லாம் விடுவா நீ வேணும்ன்னா பாரு.”

இருவரும் பேசிக் கொண்டே இருக்கும் போது அவர்கள் வந்த கார் டிரைவர் அம்புஜத்திடம்

“அம்மா காலேஜுக்கு வந்துட்டோம் உங்களை இங்கே எறக்கி விட்டுட்டு நான் வண்டியை வெளியிலே பார்க் பண்ணிடறேன். பரீட்சை முடிஞ்சதும் நான் வண்டியை எடுத்துகிட்டு உள்ளே வந்து உங்களை கூட்டிட்டு போறேன் சரியா”

“ஏன் இங்கயே எங்கயாவது பார்க் பண்ணக் கூடாதா? உனக்கு எப்படி பரீட்சை முடிஞ்சதுன்னு தெரியும். எங்களை தேட வச்சுடாதப்பா”

“உள்ளே நிப்பாட்ட விடமாட்டாங்க அம்மா. நான் கேட்ல விசாரிச்சிட்டு கரெக்ட்டா வந்து உங்களை வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் மா கவலை படாதீங்க”

“சரி பா. மிருது மொல்ல இறங்கு”

இருவரும் இறங்கியதும் நேராக காலேஜ் ஹெட்டை சந்தித்து நிலைமையை எடுத்துக் கூறி எப்படியோ ஒரு வழியாக தன் பெண்ணுக்கு பழம், ஜுஸ் எல்லாம் குடுக்க பெர்மிஷன் வாங்கி விட்டாள் அம்புஜம். அதன் பின் நேராக பரீட்சையை எழுத வேண்டிய ஹாலுக்குச் சென்றனர். அங்கே இருந்த எக்ஸாமினரிடம் ஹெட் கொடுத்தனுப்பிய ஒரு சீட்டை கொடுத்தாள் அம்புஜம். அதைப் பார்த்ததும் மிருதுளாவை ஒரு ஜன்னல் ஓரமிருக்கும் டெஸ்க் அன்ட் பென்ச்சில் பரீட்சை எழுத அமர வைத்து விட்டு அந்த ஜன்னலின் வெளிபுறம் அம்புஜத்திற்கு ஒரு சேர் போட்டு அமரச் சொன்னார். அம்புஜம் கொண்டு சென்ற அனைத்து சாமான்களையும் பரிசோதித்தப் பின்னரே அங்கு அமர அனுமதி வழங்கப் பட்டது.

பரீட்சைக் கான பெல் அடித்ததும் தன் குழந்தையை சுமந்துக் கொண்டு பரீட்சையை எழுதத் துவங்கினாள் மிருதுளா. தன் மகள் தன் பேரப்பிள்ளையை சுமந்துக் கொண்டிருப்பதால் அவளுக்காக வெளியே அமர்ந்து ஜுஸ் பிழிந்துக் கொண்டிருந்தாள் அம்புஜம். ஆக மூன்று தலைமுறையினரும் அங்கே பரீட்சை ஹாலில் அட்டென்டஸ் கொடுத்தனர். அதில் ஒருவர் மட்டும் சொகுசாக தன் தாய் வயிற்றில் இருந்துக் கொண்டு அனைத்தையும் கவனித்தது.

சரியாக பதினொரு மணிக்கு ஜன்னல் வழியாக தன் மகளுக்கு சாத்துக்குடி ஜுஸ் கொடுத்தாள் அம்புஜம். அதை வாங்கி குடித்து விட்டு மீண்டும் எழுதினாள் மிருதுளா. மீண்டும் ஒரு ஆரஞ்சு ஜுஸ் பண்ணிரெண்டரை மணிக்கு கொடுத்தாள். ஒரு மணிக்கு பரீட்சை முடிந்ததும் பேப்பரை எக்ஸாமினரிடம் கொடுத்தாள் மிருதுளா அப்போது அவளிடம் அந்த எக்ஸாமினர்…

“யூ ஆர் கிஃப்டெட் டூ ஹாவ் சச் எ வன்டர்ஃபுல் மாம். ஆல் தி பெஸ்ட் ஃபார் தி ரிமேய்னிங் எக்ஸாம்ஸ்”

“தாங்க் யூ சோ மச்”

என்று கூறிவிட்டு மெல்ல வெளியே வந்ததும் அம்புஜம் அவளிடம் ஒரு டப்பா நறுக்கிய பழங்களை கொடுத்து சாப்பிடச் சொல்லிக் கொடுத்தாள். அதற்கு மிருதுளா

“அம்மா இன்னும் இருபது நிமிஷத்துல ஆத்துக்கு போயிடுவோம் நான் சாப்பாடே டைரெட்டா சாப்பிடறேனே.”

“பரவாயில்லை இதை சாப்பிடு இன்னுட்டு கிளம்புவோம். அந்த டிரைவர் வேற வண்டியை எடுத்துண்டு வரணுமே.”

“சரி இரு நான் ரெஸ்ட்ரூம் போயிட்டு வரேன்”

“இரு இரு நானும் உன்னுடன் வரேன்.”

என்று இருவரும் சென்று வந்ததும். மிருதுளா பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் அம்புஜம் அவளிடம்

“பரீட்சை எப்படி எழுதி இருக்க மிருது?”

“நல்லா எழுதிருக்கேன் மா. சரி அதோ நம்ம வந்த கார் வர்றது. இந்தா எனக்கு போதும் வா போகலாம்”

“அவர் வெயிட் பண்ணுவார் இந்தா இதை நீ ஃபுல்லா சாப்பிடு மொதல்ல இன்னும் கொஞ்சம் தான் பாக்கி இருக்கு”

“அம்மா நீ டூ மச் பண்ணறமா…இந்த முடிச்சிட்டேன் போதுமா!! இப்போ இங்கேருந்து கிளம்பலாமா”

இருவரும் அவர்கள் வந்த காரில் ஏறி வீட்டுக்கு பயணிக்கும் போது

“ஓ எஸ். உனக்கு இதோட அருமை எல்லாம் இப்போ தெரியாது மிருது. புள்ள பொறந்ததுக் கப்புறமும் திடகாத்திரமா இருக்கணும்ன்னா இப்போ நல்லா சத்தானதா சாப்பிட்டா தான் உண்டு. இல்லாட்டி புள்ள பொறந்து ஒரு இரண்டு வருஷத்துலேயே பல பிரச்சினைகள் வந்துடும். இப்போ நீ சாப்பிடறது உன்னையும் உன் குழந்தையையும் பல வருஷங்கள் ஆரோக்கியமா வச்சுக்கும் தெரியுமா? அதுனால நான் சொல்லறதை கேட்டு அது படி எல்லாம் செய். என்ன இன்னும் ஒரு இரண்டரை இல்ல ஏறிப் போனா மூணு மாசம் தானே”

“சரி மா சரி அப்படியே பண்ணறேன்”

இருவரும் வீடு வந்து சேர்ந்ததும் டிரைவரிடம் காசு கொடுத்து விட்டு இறங்கி கதவைத் திறந்து உள்ளே சென்றனர். மிருதுளா உடைகளை மாற்றி முகம் கை கால் அலம்பி ஃப்ரெஷாகி வருவதற்குள் அம்புஜம் குக்கரில் சாதம் வைத்து விட்டு காலை வைத்த குழம்பு, பொறியல் எல்லாவற்றையும் சூடாக்கி வைத்து விட்டு அவளும் முகம் கை கால் அலம்பி வருவதற்குள் குக்கர் திறக்க தயாராக இருந்தது. இருவரும் அமர்ந்து மத்திய உணவை அருந்தி விட்டு சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அப்படியே உறங்கிப் போனார்கள். மாலை நான்கு மணி ஆனதும் அம்புஜம் எழுந்து மகனுக்கு வேண்டிய மாலை சிற்றுண்டியை தயார் செய்தாள். ஜந்தரை மணிக்கு வேனு வந்தான். அவன் வந்ததும் மிருதுளாவும் எழுந்துக் கொண்டாள். சற்று நேரத்தில் ராமானுஜமும் வீடு வந்தார் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மாலை சிற்றுண்டி அருந்தி காபியும் குடித்தார்கள். பின் இரவு ஏழரை மணிக்கு டிபன், எட்டரை மணிக்கு நவீனுடன் ஃபோன் கால் அன்ட் நைட் ஒன்பது மணிக்கு பால் அதற்கு பிறகு தாயம், கார்ட்ஸ் என பத்து மணிவரை விளையாடியதும் தூக்கம்.

இதே போல மிருதுளா மீதமுள்ள நான்கு பரீட்சைகளையும் எழுதி முடித்தாள். ஒரு தாய் தன் பிள்ளை பரீட்சை எழுதிப் பார்த்திருப்பாள், அதே போல சில தருணங்களில் ஒரு பிள்ளை தன் தாய் பரீட்சை எழுதியும் பார்த்திருக்கக்கூடும் ஆனால் இங்கு தாயினுள் பிள்ளை இருந்து தாயும் பிள்ளையும் சேரந்து பரீட்சை எழுதியுள்ளனர்.

கடைசி பரீட்சையை எழுதி முடித்து வீட்டுக்குத் திரும்பி வரும் போது தன் அம்மாவிடம்…

“அம்மா நல்ல வேளை நான் பரீட்சைக்கு முன்னாடி நம்ம ஆத்துக்கு வந்துட்டேன். இந்த நேரத்துல அங்க இருந்திருந்தேனா எனக்கு என்ன ஆகிருக்கும்ன்னு நினைச்சுப் பார்க்கவே பயமா இருக்கு. பசி பட்டினி ஒரு பக்கம், வீட்டு வேலைகள் ஒரு பக்கம் அட அதெல்லாம் கூட நான் சமாளிச்சிருப்பேன் ஆனா என் மாமியாரோட குத்தல் பேச்சிருக்கே!!! அது என்னை நிச்சயம் பரீட்சை எழுத விட்டிருக்காது மா. தாங்க்ஸ் மா”

“என்னத்துக்கு தாங்க்ஸ் எல்லாம் சொல்லற மிருது? இது என்னோட கடமை. அதுவுமில்லாம எனக்கு என் பேரக்குழந்தை ஆரோக்கியமா பொறக்கணும்முன்னு ஆசை இருக்காதா? எங்களுக்கு எங்க பொண்ணும் நல்லா இருக்கணும் எங்க பேர குழந்தையும் நல்ல படியா பொறக்கணும். எல்லாத்துக்கும் மேல பகவான் இருக்கான். அவனுக்கு தெரியும் நீ அங்க இருந்தா ரொம்ப கஷ்டம் படுவேனுட்டு அது தான் எங்ககிட்ட சரியான நேரத்துல கொண்டு வந்து சேர்த்துட்டான். நான் தினம் கும்பிடும் அந்த அம்மா பகவதி தாய் நம்மளை என்னைக்கும் கைவிட மாட்டா மிருது. சரி பரீட்சை எல்லாம் முடிஞ்சாச்சு அடுத்தது வளைகாப்பு பண்ணணும்.”

தொடரும்….

“நாங்கள் எங்க மாப்ள கிட்ட சொல்ல வேண்டாமா. அவர் கிட்ட சொல்லாம எப்படி உங்க கிட்ட வந்து நாங்க பேசறது? அவர் ஊருக்கு போய் சேர இரண்டு நாள் ஆனது அதுதான் நாங்க வர்றதுக்கும் இரண்டு நாள் எடுத்துண்டோம். அதுவுமில்லாமல் அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை நாங்களாவது கொடுக்க வேண்டாமா. அது எங்க வீடா இருந்தாலும் சரி, உங்க கோட்டையா இருந்தாலும் சரி இல்ல அவர் வீடா இருந்தாலும் சரி எப்பவும் எங்க மாப்ளைக்கு நாங்க மரியாதை கொடுப்போம்.”

“என்ன ரொம்ப ஓவரா பேசிண்டே போற? அப்படி மரியாதை கொடுக்கற குடும்பத்துக்கு பொண்ண ஏன் ஒழுங்கா வளர்க்க தெரியலையாம்?”

“மறுபடியும் சொல்லறேன் மரியாதை கொடுத்து பேசுங்கோ. ஏன் எங்க பொண்ண வளத்தினது ல என்ன தப்பு பண்ணிட்டோம் நாங்க?”

“எப்ப பாரு உன் மாப்ள கூட மாடியில ரூம்லயே கிடக்கா? அசிங்கமா இல்லை? எங்க புள்ளையை நிம்மதியாவே இருக்க விடமாட்டேங்கறா உங்க பொண்ணு. எப்ப பாரு அவன்ட்ட ரூம்ல சண்டை போட்டுண்டு அவனை ஏத்தி விட்டுண்டே இருக்கா …ச்சீ!”

“என்ன பேசறேங்கள் நீங்கள்? இப்படி பேச உங்களுக்கு அசிங்கமா தோணலை? கேட்க எங்களுக்கு அறுவறுப்பா இருக்கு ஆனாலும் பதில் சொல்லித் தானே ஆகணும். அவள் உங்க புள்ளையோட தானே ரூம்ல இருக்கா? இதுல என்ன தப்பு? அதுவுமில்லாம அவ புருஷனோட அவா ரூம்ல சண்டை போடறது கீழே இருக்கற உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது?”

“அதுதான் அவ கத்தற கத்தல் இந்த தெருவுக்கே கேட்கறதே இதுல கீழே இருக்குற எங்களுக்கு கேட்காதா என்ன”

“அப்படி உங்க புள்ளைய ஏத்தி விடறவளா எங்க பொண்ணு இருந்திருந்தா கத்தி ஊரைக்கூட்டியா பண்ணுவா? அதுவுமில்லாம அப்படி எங்க பொண்ணை நாங்க வளர்க்கலை. நாங்க கேட்டதுக்கு சரியான பதில் இன்னும் நீங்க சொல்லலையே!”

“சஷ்டியப்த பூர்த்தி விஷேசத்துக்கு கூட்டிண்டு போயிருக்கோமே!! போன இடத்துல மாமியாரோட இருக்காமா அது என்ன அவன் கூடவே ஒட்டிண்டு ஒட்டிண்டு இருக்கறது. அவன் கூடவே போறது வர்றது அப்புறம் மாமியாருக்கு என்ன மரியாதை?”

“என்ன பேசறேங்கள் நீங்கள்? தெரிஞ்சுதான் பேசறேங்களா? எங்க பொண்ணை உங்க புள்ளைக்கு எதுக்கு கல்யாணம் பண்ணி வச்சசோம்? மாமியாரோட இருக்கவா? சரி அப்படி அவ ஒண்ணும் உங்க கூட இருக்க மாட்டேன் சொல்லலியே. ஒரு மாசம் இருந்தா தானே!!! சின்னஞ் சிறிசுகள் ஏதோ சந்தோஷமா இருக்கட்டும்ன்னு விடாமா ஏன் இப்படி எல்லாம் தப்பு தப்பா கேவலமா பழி போடறேங்கள்? அப்படி அவா சந்தோஷமா இருக்கத் தானே நாம அவாளுக்கு கல்யாணம் பண்ணி வச்சோம்? நீங்க நல்லா அவளை பார்த்திருந்தா எதுக்கு எங்காத்துக்கு வரப் போறாளாம்?”

“ஏன் உன் பொண்ணை நாங்க தலையிலயா வச்சுக்கணும்? என்னத்த பாத்துக்கலையாம்?”

“எங்க பொண்ணை மாசமானவன்னு கூட பார்க்காம பட்டினி போட்டிருக்கேங்கள். வெறும் ரசம் சாதம் மட்டும் கொடுத்து அவளை என்ன நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுட்டேங்கள்ன்னு தெரியுமா? சத்தானதா சாப்பிட குடுக்கணும்ன்னு நாலு புள்ளகளை பெத்தவாளுக்கு தெரியாதா என்ன? அப்போ வேணும்ன்னே தானே அப்படி செய்திருக்கேங்கள்? அவளோட ஹெச் பி ரொம்ப கம்மியா இருக்காம். டாக்டர் என்னை திட்டறா!! இதுக்கு என்ன பதில் சொல்லப் போறேங்கள்?”

அதுவரை ஈஸ்வரனுக்கு கீ கொடுத்து ஆடவிட்டு நடப்பதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த பர்வதம்

“என்ன பார்த்துக்கலையாம் உங்க பொண்ணை. எங்களால முடிஞ்சதை தான் செய்ய முடியும். உங்க பொண்ணு ஒண்ணும் மஹாராணி இல்லை. நானும் பார்த்துண்டே இருக்கேன் ரொம்ப ஓவரா தான் பேசறேங்கள். எங்காத்துக் காரரை நேத்து மாடு முட்டி கீழே விழுந்து அடிப்பட்டும் உட்கார முடியாமல் உட்கார்ந்து பொறுமையா பதில் ஞொல்லிண்டிருக்கார் நீங்க எண்ணமோ எகுறறேங்கள்!! என்ன நினைச்சிண்டிருக்கேங்கள்?”

அதை கேட்டதும் அம்புஜம் தன் மனதில்

“நல்லா வேணும் எங்க பொண்ணை படுத்தின பாடுக்கும் பேசின பேச்சுக்கும் ஆண்டவன் சும்மா விட்டு விடுவாரா. கை மேல தண்டனை கிடைத்துமா இப்படி பேசறதுகள்”

என்று எண்ணிக்கொண்டே முனுகினாள். அதைக் கேட்ட ஈஸ்வரன்

“என்ன முனுகல் வேண்டிருக்கு?”

“என்னத்த முனுகி எண்ண ஆக போறது. ஏழு மாசமான பொண்ணை வேன் ல கூட்டிண்டு போயிருக்கேங்களே இது நியாயமா? அதுவும் அந்த வண்டி ஆக்ஸிடென்ட் ஆகியிருக்கு. அந்த ஆக்ஸிடென்ட் ல மிருதுக்கு ஏதாவது ஆகிருந்தா நீங்களா பதில் சொல்வேங்கள்?”

“அது தான் ஒண்ணும் ஆகலையே அப்புறம் ஏன் அந்த பேச்சு இப்போ”

என்று அலுத்துக் கொண்டே கூறினாள் பர்வதம்‌. அதைக் கேட்டதும் அம்புஜத்துக்கு கோபம் வர

“நல்லா இருக்கு நீங்க பேசறது ரொம்ப நல்லா இருக்கு மாமி. எதுவுமே ஆகலைன்னு ரொம்ப கவலைப் படறா மாதிரி இருக்கு நீங்க சொன்னது‌.”

“ம்…ம்…உங்க பொண்ணை கல்யாணம் ஆனதும் ஒரு நாலு மாசம் இங்கேயே இருந்துட்டு அப்புறமா போனால் போதும்ன்னு சொன்னோம் கேட்டாளா அவ!! அவனோடவே ஒட்டிண்டு கிளம்பிட்டாளே!! இது தான் நீ பொண்ணு வளர்த்த லட்சணமா?”

ஒரு வயசு பையன் உட்கார்ந்திருக்கான் என்ற உருத்தலே இல்லாமல் அசிங்க அசிங்கமா பேசிய ஈஸ்வரனின் பேச்சை அது வரை பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த வேனுக்கு மீண்டும் தன் அக்காவை கேவலமாக பேச ஆரம்பித்ததும் கோபம் வந்தது. உடனே எழுந்து அம்புஜத்திடம்

“அம்மா எழுந்திரு. இவாகிட்ட ஒரு நியாயமும் கிடைக்க போறதில்லை நம்ம மிருதுக்காவை அசிங்கப்படுத்தணும்னே கங்கனம் கட்டிண்டு பேசரவாகிட்ட இனியும் பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை கிளம்பு நாம போகலாம். உன்னையும் தான் பா ரெண்டு பேரும் எழுந்துருங்கோ”

“ஆமாம் வந்துட்டான் பெரிய மனுஷன். போ போ ரெண்டையும் கூட்டிண்டு இடத்தை காலி பண்ணு”

என்று திமிராக ஈஸ்வரன் கூறிய படியே உள் ரூமுக்குள் சென்று விட்டார் அதைப் பார்த்ததும் உடைந்து போனாள் அம்புஜம். ஒரு பொண்ணை பெத்து வளர்த்து ஆளாக்கி ஊர் மெச்ச கல்யாணம் பண்ணிக்கொடுத்து அனுப்பியதுக்கு கிடைத்த மரியாதையைப் பார்த்ததும் உடைந்துப் போய்…

“என்னடா வேனு இப்படி எல்லாம் பேசறா…” என்று கூறிக்கொண்டே அவள் கண்களில் கண்ணீர் தானாக வழிந்தது.

“அம்மா நீ எதுக்கு அழற?கண்ணை தொட முதல்ல. நம்ம மிருது ரொம்ப நல்லவ அவ மேல எந்த தப்புமே இல்லை. அவ இவாகிட்ட என்னென்ன பேச்சு வாங்கிருப்பான்னு இவா நம்மகூட பேசியது வச்சே தெரியறது. இனியும் இங்க இருக்க வேண்டாம் … எவ்வளவுதான் நீ கேட்டாலும் …நீ கேட்கிறதுக்கு பதில் இவாகிட்ட கிடைக்காது ஏன்னா அவாகிட்ட நியாயமில்லை அதுனால ப்ளீஸ் எழுந்து வா நாம் இங்கேருந்து உடனே போயிடலாம்”

அம்புஜத்தின் கையைப் பிடித்துக் கொண்டு இருவரும் அங்கிருந்து கிளம்பும் போது அதுவரை வாயைத் திறக்காத ராமானுஜம் அப்படியே அம்புஜம் வேனு பின்னால் சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் அதை விடுத்து பர்வதத்தைப் பார்த்து

“நாங்க மிருது கிட்ட பேசறோம்”

என்று சொன்னதுக்கு வேனுவுக்கும் அம்புஜத்துக்கும் கோபம் தலைக் கேறியது. உடனே வேனு ராமானுஜத்திடம்

“மிருதுக்கா கிட்ட பேச ஒண்ணுமில்லை நீ பேசாம வா”

என்று கூறி ஆட்டோவில் மூவருமாக ஏறி

“நேரா வீட்டுக்கு போங்க அண்ணா”

என்று வேனு ஆட்டோ டிரைவரிடம் சொல்ல அடுத்த அரைமணி நேரத்தில் அவர்கள் வீட்டைச் சென்றடைந்தனர்.
ஆட்டோவை காசு கொடுத்து கட் செய்து வீட்டிற்குள் சென்றதும் வேனு தன் தந்தையிடம்

“என்ன அப்பா நீ? என்ன புருஷன் நீ?? உன் பொண்டாட்டியையும் பொண்ணையும் அந்த கிழவன் மரியாதையே இல்லாம பேசறான்…நம்ம மிருதுக்காவை அசிங்கப் படுத்தி பேசறான் நீ வாயை மூடிண்டு உட்கார்ந்துண்டு இருக்க!!! உனக்கு கோபமே வரலையா? அடுமாண்டு பேசறான் அந்த ஆளு கேட்டுண்டு பேசாமா உட்கார்ந்துண்டு இருக்க!!! சரி பேசாம இருந்தல்ல அம்மா தானே அதுகளோட பேசினா அப்போ நீ என்ன பண்ணிருக்கணும் மூடிய வாயை மூடியப் படியே எங்களோட திரும்பி வந்திருக்கணும் அதை விட்டுட்டு அது என்ன கடைசியில ‘நாங்க மிருதுகிட்ட பேசறோம்ன்னு’ மிருதுக்காட்ட பேச என்ன இருக்கு. அதுகள் ரெண்டும் பேசின விதத்திலேந்தும் பேசின விஷயத்துலேந்துமா உனக்கு புரியலை தப்பு முழுசா அவா பக்கம் தான்னு!! அப்படியே தப்பு உன் பொண்ணுகிட்டயே இருந்தாலும் அவளை விட்டுக்கொடுக்காம பேசறவன் தான் நல்ல அப்பன். ஆனா நீ? உன் வைஃப்பை அவ இவன்னு பேசறான் அந்த ஆளு கேட்டுண்டு கல்லு மாதிரி எப்படி உன்னால இருக்க முடிஞ்சுது?”

“சரி உன் அம்மா பேசினாளே அவ கேட்டதுக்கு ஒழுங்கான பதில் வந்துதா அவாகிட்டேருந்து? வரலையில்ல… அதுகள் அப்படி தான் பேசும்ன்னு எனக்கு நல்லா தெரிஞ்சு போயிடுத்து. அதுகள்கிட்ட பேசி பிரயோஜனம் இல்லைன்னு தான் பேசாம இருந்தேன். நானும் பேசியிருந்தேன்னா அவா என்னையும் அசிங்க படுத்த தயங்க மாட்டா…அப்புறம் அங்க நம்ம குடும்பமே அசிங்கப் பட்டிருக்க வேண்டியது தான். சாரி கடைசியில நான் அப்படி சொல்லியிருக்க வேண்டியதில்லை தான் அது என் தப்பு தான்.”

“இப்போ மட்டும் என்ன நம்ம குடும்பம் அசிங்க படாம ரொம்ப மரியாதையாவா அவா நடத்தினா? சும்மா நீ பேசாததுக்கு சப்பக்கட்டு கட்டாதீங்கோ. நம்ம பொண்ணை எப்படி எல்லாம் பேசறா அதை கேட்டுண்டு எப்படி சும்மா இருக்க முடியும்?”

என்றாள் அம்புஜம்.

“சரி சும்மா இருக்காம நீ கேட்ட என்ன உனக்கு பதில் கிடைச்சுதா? அதில் திருப்தி‌ ஆச்சா? கடைசியில செய்ததை நாம அந்த ஆளு மரியாதை குறைவா பேச ஆரம்பிச்சதுமே செய்திருக்கணும்”

“அப்பா அப்போ செய்திருக்க வேண்டியது தானே. நீ எழுந்து எங்களையும் கூட்டிண்டு வெளியே வந்திருக்கலாமே!! ஏன் செய்யலை?”

“அதுவும் என் தப்பு தான். இவ்வளவு செலவு செஞ்சு கல்யாணம் பண்ணிக் கொடுத்ததுக்கு நல்லா கேட்டோம் டா… போதும் இனி அதுகள் கிட்ட நான் பேசமாட்டேன்”

“ஆமாம் இப்போ மட்டும் எங்க பேசினேங்களாம்?”

இவ்வாறு மாறி மாறி வேனுவும், ராமானுஜமும், அம்புஜமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைக் கேட்டுக் கொண்டி‌ருந்த மிருதுளாவுக்கு அங்கு ஏதோ தவறாக நடந்திருப்பது புரிந்தது ஆனால் என்ன என்று கேட்கலாம் என்றால் அவர்கள் மூவரும் பேச்சை நிறுத்தினால் தான் முடியும் என அமைதியாக காத்திருந்தாள். சற்று நேரத்தில் மூவரும் அமைதி ஆகினர்.

“சரி என்னோட பாஸ் டைம் முடிஞ்சிடுத்து நான் வேலைக்கு கிளம்பறேன். வர்றேன்”

என்று கூறி சென்றார் ராமானுஜம்.

பின் மிருதுளா மெதுவாக தன் அம்மாவிடம்

“அம்மா என்ன தான் மா நடந்தது? நீங்க மூணு பேரும் ஏன் மா இப்படி சண்டை போட்டுக்கறேங்கள்?”

இதை கேட்டுக் கொண்டிருந்த வேனு மிருதுளாவிடம்

“ம்… உன் மாமனாரை மாடு முட்டி கீழே தள்ளிவிட்டு அடி பட்டிருக்காம்” என்று கடுப்போடு சொன்னான். அதைக் கேட்டதும் மிருதுளா

“அச்சசோ!!! இப்போ எப்படி இருக்கார் அவர். காயம் ஒண்ணும் பலமாக இல்லையே!” என்று பதறிப் போய் கேட்டவளைக் கைக் காட்டி தன் தாயிடம்

“பார்த்தயா இது தான் நம்ம மிருது. இந்த விஷயத்தை சொன்னதும் பதறறா பாரு இந்த பொண்ணை எப்படி அவாளால அப்படி எல்லாம் பேச முடிஞ்சுது. நாம போணோமே அவா ஒரு வார்த்தை மிருது எப்படி இருக்கான்னு கேட்டாளா? இலையே!!”

“அந்த ஆளை மாடு இல்லை …வேண்டாம் அப்பறம் நான் ஏதாவது சொல்லிடப் போறேன். எனக்கு இன்னமும் ஆத்திரமும் ஆதங்கமும் அடங்கலை டா வேனு”

என்றாள் அம்புஜம்.

“என்ன தான் மா நடந்தது? மூணு பேர்ல யாராவது ஒருத்தராவது சொல்லுங்கோளேன் ப்ளீஸ்”

கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு நடந்தவற்றை கூறளானாள் அம்புஜம். அனைத்தையும் கூறி முடித்ததும் மிருதுளா

“இதுக்கு தான் நான் முன்னாடியே சொன்னேன் நீங்க அங்க போக வேண்டாம்ன்னு கேட்டேங்களா? அவா அப்படித் தான்”

“ஏன் மிருதுக்கா உன் கிட்டேயும் இப்படி தான் கீழ் தரமா பேசுவாளா?”

“என் மாமியார் எப்பவுமே என்னை குத்தம் சொல்லிண்டே மட்டம் தட்டிண்டே தான் இருப்பா ஆனா என் மாமனார் அப்படி எல்லாம் பேசுவார்ன்னு முந்தாநாள் தான் தெரிஞ்சுண்டேன்”

“சரி உன் மாமியார் அப்படி பேசும் போது நீ அப்படி எல்லாம் பேசாதீங்கோன்னு சொல்ல வேண்டியது தானே”

“ஒரு ரெண்டு தடவை சொல்லிருக்கேன் ஆனாலும் அப்படி தான் பேசுவா. அது அவாளோட சுபாவம்ன்னு விட்டுட்டேன்”

“சரி அவா அப்படி பேசியபோதெல்லாம் அத்திபேர் ஒண்ணுமே சொன்னதில்லையா?”

“சிலதை தான் அவர் முன்னாடி சொல்லுவா பலதை அவர் இல்லாத போது தான் சொல்லுவா. அவர் முன்னாடி அப்படி பேசினதுக்கு சில சமயம் நவீ திருப்பி சொல்லிருக்கார் ஆனா பல நேரம் கண்டுக்காம இருந்துடுவார்.”

“நீயாவது அத்திம்பேர்ட்ட சொல்லி உனக்காக பேச சொல்ல வேண்டியது தானே”

“எனக்கு தோணலை வேனு அதுவுமில்லாமல் ஒரே ஒரு தடவை அவராவே அப்படி அவர் அப்பாட்ட சொன்னதுக்கு எங்க மாமனார் அவர்ட்ட குதிச்சிருக்கார்.”

தொடரும்…‌

ஓவென்று அழுத மிருதுளாவை அம்புஜம் 

“ஏய் மிருது அழறதை நிப்பாட்டுமா. சொன்னா கேளுமா”

என்று சொல்ல ஃபோனிலிருந்த நவீனும்

“மிருது ஏன் அழற? என்ன ஆச்சு? ப்ளீஸ் ஸ்டாப் க்ரையிங் அன்ட் டெல் மீ வாட் ஹாப்பென்டு?”

உடனே கண்களை துடைத்துக் கொண்டு விக்கி விக்கி நடந்ததை தன் கணவனிடம் கூறினாள் மிருதுளா. அதை கேட்ட நவீன் 

“சரி விடு மிருது. நான் உன்னை உங்க அம்மா ஆத்துல விட்டுட்டு வந்திருக்கணும். அவாளை நம்பி தப்பு பண்ணிட்டேன். இனி நீ அங்கே போக வேண்டாம். நீ நிம்மதியா இங்கேயே இரு சரியா? நான் உனக்கு வாரத்துல சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் ஃபோன் பண்ணறேன்.”

“சரி நவீன். உங்களுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கப் போறான்னு உங்க அம்மா சொன்னாளே…நீங்க என்னை விட்டுட்டு அப்படி பண்ணிப்பேளா?”

என்று வெகுளிதனத்தோடு கேட்டவளிடம்

“அப்படி எதுவும் நடக்காது. நீ எதையும் நினைச்சுண்டு கவலை பட தேவையில்லை புரியறதா?”

“சரி நவீன் நீங்க எப்போ வீட்டுக்கு போய் சேர்ந்தேங்கள்? என்ன சாப்பிட்டேங்கள்?”

“நான் கொஞ்சம் முன்னாடி தான் வந்தேன். குளிச்சிட்டு டாபால சாப்டுட்டு தான் உனக்கு கால் பண்ணறேன்”

“சரி நவீன் என் அம்மா உங்ககிட்ட பேசணும்ன்னு சொல்லறா குடுக்கட்டுமா?”

“ம்…குடு மிருது”

“ஹலோ மாப்ள பிரயாணம் எல்லாம் சௌகர்யமா இருந்துதா?”

“ஆங் இருந்தது. சொல்லுங்கோ”

“நடந்தது எல்லாம் மிருதுளா உங்கிட்ட சொல்லியிருப்பா. எங்க பொண்ணை உங்களை நம்பி தானே அனுப்பினோம் அவளை இப்படி எல்லாம் கேவலமா நடத்திருக்காளே இது நியாயமா. பெத்தவா எங்களுக்கு இதை எல்லாம் கேட்கும் போது எப்படி இருக்கும் சொல்லுங்கோ…அதுவும் ஒண்ணும் தெரியாத எங்க பொண்ணை கேட்க ஆளில்லைன்னு நினைச்சுண்டுட்டாளோ நாங்க இருக்கோம். இப்படி மனசாட்சி இல்லாம நடந்திண்டிருக்காளே உங்களுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்ததுக்கு என் பொண்ணோட நிலைமை இதுதானா? இதெல்லாம் எதுவுமே சரியில்லை. எங்க பொண்ணை பட்டினிப் போட்டு வெறும் ரசம் ரசம் ன்னு கொடுத்து நல்லா வேலையும் வாங்கி, மாசமான பொண்ணை தூங்கவும் விடாமா படுத்தின பாடெல்லாம் இன்னைக்கு ஹாஸ்பிடல் ல எடுத்த டெஸ்ட் ல தெரிஞ்சுது. டாக்டர் என்னை திட்டறா!! இப்படியா மாசமான பொண்ணை பாத்துப்பா?”

“நான் அவாளை கொண்டு வந்து விட்டுட்டு போக தான் சொன்னேன் ஆனா அவா இப்படி எல்லாம் நடந்துப்பா பேசுவான்னு எனக்கு தெரியாது, நான் என்ன செய்வேன்?”

“சரி இது தெரியாதுன்னு சொல்லறேங்கள் ஓகே. ஆனா நீங்க அவளோட இருக்கும் போதே நிறைய விஷயங்கள் நடந்திருக்கே அதெல்லாம் ஏன் நீங்க கண்டுக்கலை? உங்க பொண்டாட்டியை இப்படி படுத்தும் போதும், பட்டினி போட்ட போதும், ஏழு மாச கர்ப்பிணியை வேன் ல யாரோடோ விஷேஷத்துக்கு கூட்டிண்டு போய் ஆக்ஸிடென்ட் ஆனபோது எல்லாம் அவ கூட தானே இருந்தேங்கள்!!! ஏன் அப்போவும் ஒண்ணுமே கேட்கலை நீங்கள்? உங்களை நம்பினதுக்கு நல்லா எங்க பொண்ணுக்கு  செஞ்சிருக்கேங்கள் மாப்ள செஞ்சிருக்கேங்கள். மிருது வ பெத்த எங்களுக்கு மனசு நிறைஞ்சிருக்கு.”

“ஓகே கவலை படாதீங்கோ நான் பார்த்துக்கறேன். மிருது ரிப்போர்ட்ஸ் ல என்ன ப்ராப்ளம்?”

“நீங்க தான் எங்க பொண்ணுக்கு நடந்த அத்தனையையும் பார்த்துண்டு தானே இருந்திருக்கேங்கள்!! இன்னமும் பார்க்கத்தான் போறேங்கள். நல்லா பாருங்கோ ஆனா நாங்க அவாளை விடப் போறதில்லை நாளைக்கு நாங்க மூணு பேருமா உங்க ஆத்துக்கு போய் உங்க அப்பா அம்மாட்ட ஏன் இப்படி எல்லாம் செய்தேங்கள்ன்னு கேட்க தான் போறோம். அவாளை விட மாட்டோம். ஆசை ஆசையா வளர்த்த எங்க பொண்ணை என்னெல்லாம் செய்திருக்கா என்னெல்லாம் பேசியிருக்கா!!! உங்களுக்கு எங்க வலி புரியாது… நாளை உங்களுக்கு பொண்ணு பொறந்து அதை கட்டிக் கொடுத்த இடத்துல இப்படி பண்ணினா புரியும்…ஆனா வேண்டாம் உங்களுக்கும் என் பொண்ணுக்கும் இப்படிப்பட்ட மனவேதனை வரவேண்டாம்ன்னு ஆண்டவனை வேண்டிக்கறேன். மிருதுவோட ஹெச் பி லெவெல்  ஒன்பது தான் இருக்காம். உடம்புல சத்தே இல்லையாம். இப்படியே இருந்தா டெலிவரி ரொம்ப சிக்கல் ஆகிடும்ன்னு எங்களை திட்டினா. இதுதான் நீங்களும் உங்க குடும்பமும் எங்க மிருதுவை பார்த்துண்ட லட்சணம்.”

என்று அம்புஜமும் அழுதாள். அதை கேட்ட நவீன்

“ஓகே ஓகே எல்லா தப்பையும் சரி செய்யறேன் நீங்களும் அழாதீங்கோ. இனி இப்படி நடக்காமல் நான் பார்த்துக்கறேன். மிருதுவை பாத்துக்கோங்கோ. நீங்க போய் அவாகிட்ட பேசறதுன்னா பேசிக்கோங்கோ அதில் எனக்கொன்றும் சொல்வதற்கு இல்லை. தப்பு செஞ்சிருக்கா நீங்க தட்டிக் கேட்கிறதுல எந்த தவறுமில்லை. சரி நான் இப்போ ஃபோனை வைக்கிறேன் நாளைக்கு மறுபடியும் கூப்பிடறேன்னு மிருதுகிட்ட சொல்லிடுங்கோ. பை”

என்று ஃபோனை துண்டித்தான் நவீன். ரிசீவரை வைத்து விட்டும் அழுதுகொண்டே இருந்தாள் அம்புஜம். அதைப் பார்த்த மிருதுளா….

“அம்மா ஏன் அழற ஏதாவது நவீன் சொல்லிட்டாரா?”

“அதெல்லாம் அவர் ஒண்ணும் சொல்லலை டி”

“அப்பறம் எதுக்கு மா அழுதுண்டிருக்க?” 

“ஒண்ணுமில்லை டா வேனு. சரி சரி நாளைக்கு நாம மூணு பேரும் போய் மிருது மாமனார் மாமியாரை நல்லா கேட்டுட்டு வரணும். நான் மாப்ள கிட்ட சொல்லிட்டேன்”

“சரி சரி போகலாம் இப்போ விளையாட்டை ஆரம்பிப்போமா?”

“எப்பவும் விளையாட்டு தானா டா உனக்கு?”

“அம்மா அதுக்காக எப்பவுமே நடந்ததை நினைச்சிண்டு அழுதுண்டே இருக்கணுமா? வா மா ஒரு கேம் தாயம் போட்டா எல்லாம் சரியாகிடும்”

என்று வேனு கூறி தன் அம்மா மற்றும் அக்காவின் மனதை இலகுவாக்கினான். அனைவரும் விளையாட்டு முடிந்ததும் படுத்து உறங்கச் சென்றனர். வேனு வழக்கம் போல சிங்கள் பெட்டில் படுத்துக்கொண்டான், ராமானுஜம் ஹாலில் படுத்துறங்கினார், அம்புஜமும்,  மிருதுளாவும் தரையில் பாய் விரித்துப் படுத்துக் கொண்டனர். வீடு மிகவும் சிறியதாக இருந்ததால் மிருதுளா கஷ்ட்டப் படுவதைப் பார்த்த அம்புஜம் தன் கணவரிடம் டபுள் பெட் ரூம் குவார்டஸ் எப்போது அளாட் ஆகும் என்று மறுநாள் காலை விடிந்ததும் ராமானுஜம் வேலைக்கு புறப்படும் போது கேட்டாள். அவரும் அப்ளை செய்திருப்பதாகவும் இன்னும் ஒரு மாதத்தில் கிடைத்துவிடும் என்றும் கூறி பத்து மணிக்கு இரண்டு மணி நேரம் பாஸ் போட்டு வருவதாகவும் சம்மந்தி வீட்டுக்கு சென்று வரலாம் என்றும் கூறிவிட்டு காலை ஷிப்ட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். 

காலை விடிந்ததிலிருந்து அம்புஜம் மிருதுளாவிடம் சொன்னது போலவே காபி, டிபன், ஜுஸ் எல்லாம் கொடுத்தாள். அன்று காலேஜ் லீவ் என்பதால் வேனு ஒன்பது மணிக்கு தான் எழுந்தான். அவன் எழுந்ததும் அம்புஜம் அவனிடம்…

“டேய் வேனு குளிச்சு ரெடியாகுடா அப்பா பத்து மணிக்கு பாஸ் போட்டு வர்றேன்னு சொல்லிருக்கா. நாம மூணு பேரும் அவா ஆத்துக்கு போயிட்டு வந்துடலாம்”

“சரி மா இதோ இப்பவே ரெடியாகி வந்துடறேன்”

“அம்மா கட்டாயம் நீங்க அங்க போய் கேட்கணுமா?”

“ஏம்மா மிருது அப்படி கேட்கிற? இப்போ விட்டோம்ன்னா அப்பறம் அவா ரொம்ப ஆட ஆரம்பிப்பா மா. அதுனால ஒரு எட்டு போய் கேட்டுட்டு வந்தா தான் அடுத்த தடவை இது மாதிரி உன்னை பேச கொஞ்சமாவது யோசிப்பா. ஆமா ஏன் நீ இப்படி கேட்ட?”

“இல்லை அவா எப்படி வேணும்னாலும் பேசக் கூடியவா…அதுனால உங்களையும் ஏதாவது அசிங்க படுத்திடுவாளோன்னு தோணறது அதுதான் கேட்டேன்”

“நீ ஒண்ணும் கவலைப் படாதே நாங்க பாத்துக்கறோம். உனக்கு இதோ பதினொன்றறை மணிக்கு குடிக்க வேண்டிய ஜுஸை ஃப்ரிட்ஜில் வச்சிருக்கேன் மறக்காம எடுத்துக் குடி. சமையல் எல்லாம் ரெடியா இருக்கு. நாங்க வந்திடுவோம் சப்போஸ் வர லேட்டாச்சுன்னா டைமுக்கு சாப்பிட்டு விடு. நானும் போய் கிளம்பட்டும்”

என்று கூறிவிட்டு கிளம்பியதும் ஆட்டோவுடன் வந்தார் ராமானுஜம். வீட்டினுள் வந்து தண்ணீர் அருந்தி விட்டு மூவரும் ஈஸ்வரன் பர்வதம் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் சென்றதும் மிருதுளா கடவுள் படங்களுக்கு முன் நின்றுக்கொண்டு..

“கடவுளே எனக்காக பேச போகும் என் அம்மா, அப்பா மற்றும் என் தம்பியை அவர்கள் அசிங்கப் படுத்தவோ, அவமானப் படுத்தவோ கூடாது நான் பட்ட அசிங்கங்களே போதும் சாமி. நீ தான் பார்த்துக்கணும்.”

என வேண்டிக்கொண்டு அங்கேயே அமர்ந்தாள். 

ஆட்டோ ஈஸ்வரன் வீட்டு வாசலில் சென்று நின்றது. மூவரும் இறங்கினர். ராமானுமஜம் ஆட்டோகாரரை அறை மணி நேரம் கழித்து அதே இடத்துக்கு வரும்படி சொல்லி அனுப்பினார். ஈஸ்வரன் வீட்டு கேட்டை திறந்தான் வேனு. கேட் திறக்கும் சப்தம் கேட்டு வீட்டினுள் இருந்து எட்டிப் பார்த்தாள் பர்வதம். அவர்கள் எதற்காக வந்திருப்பார்கள் என்பதை யூகித்து  உடனே தன் கணவரிடம் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லி ஹாலுக்கு அழைத்து வந்து….வருபவர்களை வேண்டா வெறுப்புடன்

“வாங்கோ” என்று ஒற்றைச் சொல்லில் நிறுத்திக் கொண்டாள் பர்வதம். உள்ளே சென்றவர்களை அமரச் சொன்னார் ஈஸ்வரன். மூவரும் அமர்ந்தனர்.  ராமானுஜம் குடும்பம் எதற்கு வந்திருக்கிறார்கள் என்பது ஈஸ்வரன் தம்பதியருக்கு நன்கு தெரிந்ததே அதே சமயம் எப்படி பேச்சை துவங்குவது என்ற தயக்கத்திலிருந்தனர் ராமானுஜம் குடும்பத்தினர். தவறிழைத்தவர்கள் எந்தவித மன உறுத்தல்களின்றி திமிராகவும் தட்டிக் கேட்க வந்தவர்கள் அதை எப்படி கேட்பது என்று தயங்கியதாலும் சற்று நேரம் மௌனம் நிலவியது. நால்வரையும் கவனித்த வேனு பேச்சை ஆரம்பிக்க முடிவு செய்து …

“எங்க பவின் அன்ட் ப்ரவீனை காணம்? இன்னைக்கு காலேஜ் எல்லாம் லீவ் ஆச்சே?”

“அவா பக்கத்துல இருக்கிற கிரௌண்ட் ல கிரிக்கெட் விளையாட போயிருக்கா”

என்றாள் பர்வதம். வந்தவர்களுக்கு தண்ணீர் கொடுக்காமல் தண்ணீர் வேண்டுமா என்று கேட்டாள் பர்வதம். அதற்கு அம்புஜம் வேண்டாம் என கூற அங்கேயே நின்றபடி வேறேதும் பேசாமல் வந்தவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஈஸ்வரனும் வந்தவர்கள் வாயை திறக்கட்டும் அப்புறம் வச்சுக்கலாம் என்பது போல அமர்ந்திருந்தார்.

ராமானுஜம் பேசுவார் என்று காத்திருந்த அம்புஜத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர் ஒன்றுமே பேசாமல் அமர்ந்திருந்தார்.  தன் மகளுக்காக தான் பேசினால் தான் ஆச்சு என்ற முடிவுக்கு வந்து பேச துங்கினாள் அம்புஜம்….

“மிருதுளா முந்தாநாள் அழுதுண்டே ஆத்துக்கு வந்தா. அதைப் பார்த்ததும் நான் பதறிப் போயிட்டேன். கொண்டு வந்து விட்ட பவின் கிட்ட கேட்டேன் அவனும் ஒழுங்கான பதில் சொல்லலை.  மிருதுளா ரொம்ப நேரம் அழுது முடிச்சதுக்கப்பறமா நடந்ததைச் சொன்னா?  மாசமான பொண்ணு தன் அம்மா வீட்டுக்கு போக நினைச்சது தப்பா? அம்மா கையால சாப்பிடணும்ன்னு தோணறது குற்றமா? எங்க பொண்ண உங்க புள்ளைக்கு கல்யாணம் பண்ணிக் கொடுத்த நாள்லேந்து முந்தாநாள் வரை அவ ஏதாவது மரியாதைக் குறைவாவோ, உங்க புள்ளையோட சரியா குடும்பம் நடத்தாமலோ, இல்லை உங்க வீட்டு வேலைகளை செய்ய மாட்டேன் என அடம்பிடிக்கவோ? இப்படி ஏதாவது தவறு அவ செஞ்சிருந்தா நீங்க சொல்லுங்கோ நாங்க அவளை கண்டிக்கறோம். நீங்க ஏன் அப்படி எல்லாம் பேசி எங்க பொண்ணை அழ வச்சு அனுப்பகயிருக்கேங்கள்? இதுக்காகவா எங்க பொண்ணை உங்க புள்ளைக்கு கல்யாணம் பண்ணி அனுப்பி வச்சோம்?”

என்று அம்புஜம் கேட்டு முடித்ததும் ஈஸ்வரன்

“என்ன? விட்டா கேள்வி மேல கேள்வி கேட்ப போல.”

“தயவுசெய்து செய்து மரியாதை கொடுத்து பேசுங்கோ இந்த ஒருமை ல பேசறதெல்லாம் சரியில்லை. நான் உங்க சம்மந்தி” என்றாள் அம்புஜம் 

“சம்….மந்தி பெரிய சம்…ம்..மந்தி உலகத்துல இல்லாத சம்மந்தி. சரி இதை கேட்கணும்ன்னா முந்தாநாளைக்கே வந்து கேட்டிருக்க வேண்டியது தானே எதுக்கு இரண்டு நாள் வெயிட் பண்ணி வந்து கேட்கிறேங்கள்?”

என்று மீண்டும் திமிருடன் கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் ஈஸ்வரன் கேட்க…அதற்கு அம்புஜம்….

தொடரும்….

மிருதுளா வீட்டிற்கு வந்த அடுத்த நாள் விடிந்தும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். ராமானுஜமும், வேனுவும் மெதுவாக கப்போர்ட்டை திறந்து துணி எடுத்துக் கொண்டு அந்த அறையின் கதவை மூடிவிட்டு குளித்து, டிபன் சாப்பிட்டு ஆபீஸுக்கும், காலேஜுக்கும் சென்றனர். வீடே அமைதியாக இருந்தது. மிருதுளா சட்டென விழித்து கடிகாரத்தைப் பார்த்தாள் மணி எட்டு என்று காட்டியது.  வேகமாக எழுந்து ஹாலுக்கு வந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த தன் அம்மாவிடம்

“என்ன மா மணி எட்டாச்சு ஏன் என்னை எழுப்பலை?”

“நீ நல்லா அசந்து தூங்கிண்டிருந்த மிருது அது தான் எழுப்பலை”

“சரி அப்பா, வேனு எல்லாரும் எங்க?”

“அப்பாக்கு இந்த வாரம் 6 டூ 2 ஷிப்ட் ஸோ காலை ல அஞ்சரைக்கு ஆபீஸ் போயிட்டா, வேனுக்கு இன்னைக்கு லாப் க்ளாஸ் இருக்குன்னு அவனும் ஏழு மணிக்கெல்லாம் காலேஜுக்கு கிளம்பி போயாச்சு.”

“ஓ!!! அப்படியா. சரி எப்படி பீரோவை திறந்து அவா டிரஸ் எடுத்தா நான் அங்கே தானே படுத்திருந்தேன்?”

“மெதுவா அவா அவா டிரஸை உன்னை தொந்தரவு செய்யாம எடுத்துண்டு வரச்சொன்னேன் அதே போல அவாளும் செய்தா. இன்னைக்கு அவா ரெண்டு பேரோட டிரஸ்ஸையும் ஹாலில் இருக்கும் இந்த ஷெல்ஃப் ல அடுக்கிக் கொடுக்கணும்”

“என்னால உங்களுக்கு ரொம்ப கஷ்ட்டமா மா?”

“கிடையவே கிடையாது மிருது மா. நான் அப்பா கிட்ட இரண்டு பெட்ரூம் குவார்ட்டர்ஸுக்கு அப்ளை பண்ண சொல்லிருக்கேன். அது கிடைச்சுதுன்னா நல்லா இருக்கும்.பார்ப்போம். சரி சரி அசடு மாதிரி எல்லாம் யோசிக்காம போய் ப்ரஷ் பண்ணிட்டு வா நான் உனக்கு டிபன் தர்றேன். என் பேரக் குழந்தை பாவமில்லையா”

“அம்மா நீ தான் ம்மா பேரக் குழந்தைன்னு முதன் முதல்ல சொல்லற. கேட்கவே நல்லா இருக்கு மா. சரி இரு நான் ஃப்ரெஷ் ஆகி வரேன்”

“வா வா மிருது வா உட்காரு இந்தா சூடான இட்டிலி, தேங்காய் சட்னி அன்ட் உன்னோட ஃபேவரைட் கொத்துமல்லி சட்னி. இதை சாப்பிட்டுண்டு இரு அம்மா உனக்கு காபி போட்டுண்டு வரேன். சரியா. நல்லா சாப்பிடணும். அம்மா தர்றதை எல்லாம் வேண்டாம்ன்னு சொல்லாம சமத்தா சாப்பிடணும் அப்போ தான் குழந்தை ஆரோக்கியமா பொறக்‌கும் புரிஞ்சுதா.”

“சரி மா முடிஞ்சதை சாப்பிடறேன்”

“இந்தா காபி. என்னது இது இரண்டு இட்லி தான் சாப்பிட்டிருக்க? இந்தா இன்னும் இரண்டு சாப்பிடு”

“அம்மா நான் அங்கே ஒரே ஒரு இட்லி தான் சாப்பிடுவேன். இங்கே இரண்டு சாப்பிட்டிருக்கேன். இன்னும் ஒண்ணு போதும் மா ப்ளீஸ் காபி வேற குடிக்கணும்”

“சரி இந்த ஒண்ணையும் சாப்பிடு. மிருது மா இன்னைக்கு மத்தியானம் லஞ்ச் சாப்பிட்டுட்டு நாம இரண்டு பேரும் ஹாஸ்பிடல் போய் உனக்கு ஃபுல் செக்கப் பண்ணிட்டு அப்படியே ப்ரெனென்ஸி அன்ட் டெலிவரி ஃபைல் ஓபன் பண்ணிட்டு வந்திடுவோம் சரியா. இதுவே லேட்டு இன்னும் டிலே பண்ண வேண்டாம் மா”

“சரி மா போகலாம். ஆனா நாம எப்படி போவோம்?”

“ஆட்டோ ல போயிட்டு வந்திடுவோம்”

“ஓகே மா. அப்பாடா சூப்பர் டிபன் மா. இந்த கொத்தமல்லி சட்னி நீ குஜராத்த ல செஞ்சு தந்து சாப்பிட்டது அதுக்கப்பறம் இன்னைக்கு தான் சாப்பிடறேன்.”

“திருப்தியா சாப்பிட்டயா? பேசாம காலை நீட்டிண்டு உன் பாட புஸ்தகத்தை எடுத்துப் படி இன்னும் இரண்டு நாள்ல எக்ஸாம் தொடங்க போறது ஞாபகம் இருக்கா?”

“ஓ !!!ஆமாம் மா!!! சரி சரி நான் படிச்சுக்கறேன்”

என்று கூறிவிட்டு மிருதுளா அவள் பரீட்சைக் கான பாடங்களை படிக்கலானால். படித்துக் கொண்டே தூங்கிப் போனாள் மிருதுளா.  ஒரு பதினோரு மணி அளவில் விழித்து பாத்ரூம் சென்று வந்து மீண்டும் படிக்க அமர்ந்த மிருதுளாவுக்கு ஒரு க்ளாஸ் ஜுஸ் கொடுத்தாள் அம்புஜம். அதை வாங்கி குடித்த மிருதுளா 

“என்ன ஜுஸ் மா இது. இட்ஸ் டேஸ்டி.”

“இது காரட் ஜுஸ் வித் லமென் அன்ட் அ பின்ச் ஆஃப் சால்ட் அன்ட் சுகர்.”

“சூப்பரா இருக்குமா தாங்கயூ”

“என்னத்துக்கு தாங்க்ஸ் எல்லாம்? இந்தா இந்த ஒரு ஆப்பிளையும் சாப்பிடு”

மிருதுளா ஆப்பிளை சாப்பிட்டு ஒரு பதினைந்து நிமிடம் கழித்து குளித்துவிட்டு வந்தாள். ஒரு மணிக்கு சுட சுட சாதம் சாம்பார் மூன்று வகை பொறியல்கள் ஒரு க்ளாஸ் மோர் எல்லாம் கொடுத்து சாப்பிடச் சொன்னாள் அம்புஜம். அதைப் பார்த்ததும் 

“அம்மா இவ்வளவு நாளா வெறும் ரசம் மட்டுமே சாப்பிட்ட எனக்கு இப்படி சடன்னா இவ்வளவு சாப்பிட முடியாதம்மா”

“எவ்வளவு முடியறதோ அவ்வளவு சாப்பிடு போறும்”

“மோர் குடிச்சே ஆகணுமா?”

“உனக்கு மோர் தயிர் பிடிக்காதுன்னு எனக்கு நன்னா தெரியும் ஆனா இந்த நேரத்துல மோர் குடிக்கவாவது செய்யணும் உன் குழந்தைக்காக. அதுல பெருங்காயம், உப்பு, கொத்தமல்லி,  கருவேப்பிலை எல்லாம் போட்டிருக்கேன் ஒரே மடக்குல குடிச்சிடுமா பாப்பாக்காக”

“சரி சரி பாப்பா உனக்காக குடிக்கறேன்”

என்று தனக்கு பிடிக்காத மோரை தன் பிள்ளைக்காக குடிக்க ஆரம்பித்தாள் மிருதுளா. இருவரும் உணவருந்திய பின் ஹாஸ்பிடலுக்கு ஆட்டோவில் சென்றனர். அங்கே மிருதுளாவுக்கு எல்லா டெஸ்டுகளும் எடுக்கப்பட்டது. கடைசியாக அவளுக்கு மூன்றாவது மாதம் டெஸ்ட் எடுத்தது அதன் பின் அவள் டாக்டரிடம் செல்லவில்லை. ரிப்போர்ட்ஸ் வருவதற்காக ஒரு மணிநேரம் அங்கேயே அமர்ந்தனர் இருவரும் அப்போது அங்கே செக்கப்புக்கு வந்திருந்த மற்றப் கர்ப்பிணி பெண்களுடனும் அவரவர் அம்மாக்களுடனும் பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியாமல் இருந்தது அம்புஜத்துக்கும், மிருதுளாவுக்கும். லாபில் இருந்து மிருதுளா பெயரை கூப்பிட்டதும் அவள் வேகமாக எழுந்திருக்க, அதைப் பார்த்த ஒரு அம்மா

“ஏம்மா பொண்ணு இப்படி எல்லாம் சடால் ன்னு எழுந்திரிக்கக் கூடாது மா. மெதுவா தான் எழுந்திரிக்கணும் உட்காரணும் புரியுதா”

“சரி ஆன்டி அப்படியே செய்யறேன்”

என்று கூறிவிட்டு மெல்ல நடந்துச் சென்று ரிப்போர்ட்டை வாங்கிக் கொண்டு டாக்டரை பார்க்க சென்றனர் இருவரும். டாக்டர் மிருதுளாவின் ரிப்போர்ட்ஸை பார்த்ததும்

“என்ன மா இது ஹெச் பி வெறும் ஒன்பது தான் இருக்கு. சத்தே இல்லாம இருக்க? நீங்க இந்த பொண்ணோட அம்மாவா ?”

“ஆமாம் டாக்டர்”

“வாங்க உட்காருங்க. ஏன்மா மிருதுளா இரண்டு மாசம் முன்னாடி குஜராத்ல எடுத்த ரிப்போர்ட்ஸையும் பார்த்தேன் இப்போ இங்கே எடுத்த டெஸ்ட் ரிப்போர்ட்ஸையும் பார்த்தேன். மாஸிவ் டிஃப்ரென்ஸ் இருக்கே!!!! ஏன் மா உங்க பொண்ணு உடம்புல சத்தே இல்லாம இருக்கா? நல்லா… பழங்கள், காய்கறிகள் எல்லாம் குடுத்து சாப்பிட வைக்காம என்னமா பண்ணறீங்க? இப்படியே இந்த பொண்ணு இருந்தான்னா அப்பறம் டெலிவரி ரொம்ப சிக்கலாகிடும். நீங்களும் புள்ளைய பெத்தவங்க தானே?”

“இவ்வளவு நாளா அவ அவங்க மாமியார் வீட்டு ல இருந்தா டாக்டர். நேத்து தான் எங்க வீட்டுக்கு வந்திருக்கா. இனி நான் பத்திரமா நீங்க சொன்னா மாதிரியே பார்த்துக்கறேன் டாக்டர்.”

“ஏம்மா உங்க பொண்ணோட மாமியார் ரொம்ப கொடுமைகாரியோ?”

“ஏன் டாக்டர் அப்படி கேக்கறேங்கள்?”

“ஆமாம் மாசமா இருக்குற  பொண்ணை இப்படியா உடம்புல ஒண்ணுமில்லாம பண்ணுவாங்க? ரெண்டு மாசம் முன்னாடி எல்லாமே சரியா இருந்திருக்கு ஆனா இப்போ எல்லாமே டவுனா இருக்குன்னா அப்படி தானே எடுத்துக்கணும்”

“இனி எங்க வீட்டில தான் இருக்கப் போறா டாக்டர் அவளை இனி நான் பர்த்துக்கறேன். அடுத்த தடவை வரும் போது நல்லா தெம்பா ஆகிருப்பா டாக்டர் அதுக்கு நான் கியாரன்டி.”

“நான் சில டாப்லெட்ஸ் ப்ரிஸ்க்ரைப் பண்ணறேன் அதையும் சாப்பிடணும். என்ன மிருதுளா உன் அம்மா சொல்லறபடி டூ வீக்ஸ் ல அடுத்த செக்கப்புக்கு வரும் போது ஹெச் பி பண்ணண்டு காட்டணும் புரியுதா. அதுக்கு நீ நல்லா சாப்பிடணும். ஓகே லெட் அஸ் மீட் ஆஃப்டர் டூ வீக்ஸ் சேம் டே பை டேக் கேர்”

இருவரும் டாக்டர் ரூமிலிருந்து வெளியே வந்ததும் வேறு ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். வீட்டுக்கு வந்ததும் அம்புஜம் மிருதுளாவுக்கு ஜுஸ் கொடுத்தாள். பின் அவளைப் பார்த்து…

“டாக்டர் சொன்னதைக் கேட்ட இல்ல மிருது. இனி தினமும் காலை ல டிபன் முடிஞ்சதும் ஒரு பதினோரு மணிக்கு ஒரு பழம் அன்ட் வெஜிடபுள் ஜுஸ், மத்தியம் ஒரு மணிக்கு சத்தான சாப்பாடு வித் ஒரு க்ளாஸ் மோர், மூணு மணி அளவில் ஒரு க்ளாஸ் ஃபுரூட் ஜுஸ் நாலரைக்கு ஏதாவது ஒரு பழம், அஞ்சரைக்கு காபி ஆர் டீ வித் உனக்கு இஷ்டமான ஸ்னாக்ஸ், ஏழரைக்கு டிபன் அன்ட் ஒன்பது மணிக்கு சூடான மசாலா பால். இது தான் உன்னோட ரெகுலர் டயட் இந்த அம்மா தர்றபோறது. ஒழுங்கா சாப்பிடணும் புரியறதா?” 

“ஓகே டன். நான் மறுபடியும் அங்கே போக வேண்டாமில்லையா மா?”

“ஓண்ணும் வேண்டாம். உன்னை பார்த்துண்ட லட்சணம் தான் இன்னைக்கு ரிப்போர்ட்ஸ்லையும், டாக்டர் சொன்னதுலேந்தும் நல்லா புரியறதே அப்புறம் எப்படி உன்னை அங்கே அனுப்புவோம். நீ அந்த கவலை எல்லாம் இல்லாம நிம்மதியா சாப்பிட்டு, தூங்கி எக்ஸாம் எழுதி, எங்களோட ஜாலியா இரு அது போதும்.”

ஜுஸை குடித்துவிட்டு சற்று நேரம் படுத்துக் கொண்டாள் மிருதுளா. மணி நாலரை ஆனதும் ஒரு தட்டில் திராட்சை பழம் வைத்து சாப்பிடச் சொல்லிக் மிருதுளாவிடம் கொடுத்தாள் அம்புஜம். மிருதுளாவுக்கு டாக்டர் டெலிவரி கஷ்டமாகிடும் என்று சொன்னது அச்ரிரீ போல ஒலிக்க உடனே சாப்பிட்டாள். 

அப்போது வீட்டினுள் நுழைந்த ராமானுஜம் ஒரு கவரை மிருதுளாவிடம் கொடுத்து 

“இந்தா மிருது உனக்கு பிடித்த பலாபழம் சாப்பிடு”

என்று கொடுத்தார். 

மாலை ஐந்தரை மணிக்கு வேனு தன் அக்காவிடம் முன்தினம் சொன்னது போலவே அவளுக்கு பிடித்த சமோசாவும் கேக்கும் கல்லூரியிலிருந்து வரும் வழியில் நின்று வாங்கி வந்தான். அம்புஜம் இருவருக்கும் டீ வைத்துக் கொடுத்தாள். இருவரும் அமர்ந்து சாப்பிட்டனர். பின் வேனு அவனது பாடங்களில் மூழ்கினான். 

இவர்களின் அன்பைப் பார்த்து உணர்ந்துக் கொண்டிருந்த மிருதுளா கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. அதைப் பார்த்த அம்புஜம்

“ஏய் மிருது என்னத்துக்கு இப்போ அழறாய்?”

“இல்லமா…. என்னை துளியும் கண்டுக்காத, அசிங்க படுத்தி, தூங்க விடாம, பேச்சுக்கு பேச்சு விஷத்தைக் கக்கிய வீட்டிலிருந்து… இங்க வந்ததும்… இப்போ எனக்காக நீங்க ஒவ்வொருவரும் ஆசை ஆசையா ஒவ்வொன்று வாங்கித் தரும்போதும் செய்து தரும்போதும்…..அதை நினைத்தேன் அழுகை தானா வந்திடுத்து.”

“விடு விடு அதெல்லாம் மறந்துடு மிருது. இது பிடிச்சிருக்கா இதை அனுபவி அது போதும். நீ எவ்வளவுக்கெவ்வளவு சந்தோஷமா இருக்கயோ அவ்வளவுக்கவ்வளவு உன் குழந்தை ஆரோக்கியமா இருக்கும் தெரியுமா! சரி டிபன் சாப்பிட்டாச்சு…. இப்போ நாம ஒரு கேம் தாயம் போடுவோமா?”

“சரி வேனுவையும் அப்பாவையும் வரச்சொல்லு”

என்று பேசிக்கொண்டிருக்கும் போது டெலிபோன் மணி அடித்தது. அம்புஜம் 

“யார் இந்த நேரத்துல் கால் பண்ணறா? எடுங்கோளேன் நீங்க தான் ஃபோன் பக்கத்துல இருக்கேங்கள்” என்று ராமானுஜத்திடம் சொல்ல அவரும் ரிசீவரை எடுத்து ஹலோ என்று சொன்னார்….பின்னாலிருந்து அம்புஜம்

“யாருப்பா?”

அதற்கு ஒன்றும் பதில் சொல்லாமல் ராமானுஜம் மிருதுளாவை அழைத்தார். மிருதுளாவும் வந்தாள். ரிசீவரை மிருதுளாவிடம் கொடுத்து ….

“மாப்ள பேசறார் மிருது பேசு”

என்று சொன்னார். மிருதுளா ரிசீவரை வாங்கியதும் அங்கிருந்து நவீன்

“ஹாய் மிருது எப்படி இருக்க? நான் சொன்னா மாதிரி உன்னை பவின் கொண்டு வந்து விட்டானான்னு கன்பார்ம் பண்ணத்தான் கால் பண்ணினேன். என்ன ஹாப்பியா?”

என்றதும் மிருதுளா “ஓ” என்று அழ ஆரம்பித்தாள்.

தொடரும்…..

“அம்மா என்னம்மா அழுதுண்டே இருக்க? என்ன ஆச்சுன்னு சொல்லுமா”

என்று வேனு கேட்க கண்களை துடைத்துக் கொண்டு மிருதுளாவுக்கு நடந்த அனைத்தையும் தன் மகனிடம் கூறினாள் அம்புஜம். அதைக் கேட்ட வேனு 

“ச்சே என்னம்மா இப்படி எல்லாம் நம்ம மிருதுக்காவ பண்ணிருக்கா அன்ட் பேசிருக்கா!!! நீ அதிம்பேர்க்கு ஃபோன் போட்டு இவா இப்படி எல்லாம் பேசியிருப்பதை உடனே சொல்ல வேண்டியது தானே!! அதை விட்டுட்டு இப்படி அழுதுண்டிருக்க?”

“எப்படி சொல்லறது வேனு? அவர் இப்போ டிரெயின் ல குஜராத் போயிண்டிருப்பார். நாளன்னைக்கு காலையில தான் அவர் ஆபிஸுக்கு  ஃபோன் போட்டு சொல்ல முடியும். அதெல்லாம் தெரிஞ்சுதானே டா நம்ம பொண்ண இப்படி அசிங்கப் படுத்தி அனுப்பியிருக்குகள். அதுகளுக்கு நம்ம மிருது மாதிரி ஒரு பொண்ணு கிடைப்பாளாடா!!! சொல்லு. அப்படிப் பட்ட பொண்ணை பட்டினிப் போட்டு, தூங்க விடாம, பேசக்கூடாததை எல்லாம் மாசமா இருக்கான்னு கூட பார்க்காம பேசியிருக்குகளே அதுகள் எல்லாம் மனுஷ ஜன்மங்களாடா? பாவிகள்!! பாவிகள் !!! என் பொண்ணை கள்ளம் கபடமில்லாத பூ மாதிரி வளர்த்து இப்படி ஒரு கூட்டத்துல குடுத்ததுனால அவ இப்படி வாடி கசங்கிப் போய் வந்திருக்காளே டா வேனு !!! எனக்கு அதை நினைக்க நினைக்க அழுகை அழுகையா தான் வர்றது டா!! நான் என்ன செய்வேன்? கடவுளே நீ இருக்கறது உண்மைன்னா என் பொண்ணை படுத்தின பாவிகளை சும்மா விடாதே!! சும்மா விட்டுடாதே”

“அம்மா கூல் கூல். பொறுமையா இரு நீ சத்தமா பேசி அவளை எழுப்பிடப் போற. இந்தா தண்ணி குடி”

என்று ஒரு சொம்பில் தண்ணீர் கொடுத்தான் வேனு. அதை வாங்கிக் குடித்துப் பின் சற்று ஆசுவாசமானாள் அம்புஜம். மீண்டும் வேனு

“அம்மா நீ மத்தியானம் சாப்பிட்டயா?”

“எங்கேந்துடா எனக்கு சாப்பாடு இறங்கும். சரி சரி நீ காலேஜ்ல இருந்து வந்திருக்க, நீ போய் டிரஸ் மாத்திட்டு வா நான் அதுக்குள்ள உனக்கு டிபன் செய்து வைக்கறேன்”

“கண்ணை முதல தொடச்சுக்கோம்மா எல்லாத்துக்கும் சொல்யூஷன் இருக்கும் கவலைப்படாதே. சரி நான் போய் டிரஸ் மாத்திட்டு வர்றேன்”

“அவளை எழுப்பாதைக்கு மாத்திட்டு வாப்பா”

“சரி மா நான் பார்த்துக்கறேன்”

என்று மெதுவாக  மாற்றுத் துணியை எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்கு சென்று மாற்றிக் கொண்டு முகம் கை கால் அலம்பி விட்டு ஹாலுக்கு வந்து அமர்ந்தான் வேனு. அம்புஜம் அவனுக்கு சுட சுட இட்டிலியும் அதனுடன் தேங்காய் சட்னியும் கொடுத்தாள். அதை சாப்பிட்டுக் கொண்டே

“மிருதுக்கா நல்லா அசந்து தூங்கறா மா. அவள எந்த சப்தமும் எழுப்ப முடியாது அப்படி தூங்கறா”

“பாவம் டா வேனு. அந்த ராட்சசி நம்ம பொண்ண தூங்கவிடாம படுத்தி எடுத்திருக்கா டா. மஹா பாவி. நாளு புள்ளகளை பெத்தா மட்டும் அம்மா ஆகிடுவாளா அவள். அதுகளை பார்த்துப் பார்த்து வளர்த்திருந்தா தெரிஞ்சிருக்கும். அவா வீட்டு வாரிசை சுமந்திண்டிருக்கற நம்ம பொண்ணை அப்படியே போயிடு திரும்பி வந்திடாதேன்னு சொல்லியிருக்குகள் டா அந்த பாவிகள். அதுகளுக்கு மனசு இருக்க வேண்டிய இடத்துல கல்லைத் தான் வச்சுப் படைச்சிருக்கான் அந்த ஆண்டவன்”

“சரி சரி விடு விடு அவா தானே வந்திடாதேன்னு சொல்லி வாழ்த்தி அனுப்பிருக்கா இனி நம்ம மிருதுக்கா அங்க போக வேண்டாம் அவ்வளவு தான்”

“முதல்ல எனக்கு அவ புருஷன்ட்ட நல்லா கேட்கணும். அப்பாவோட வேலைப் பார்க்கும் அந்த மாமா அப்போவே சொன்னார் அந்த மாமி சரியில்லை உங்க பொண்ண நிம்மதியா வாழவிட மாட்டான்னு அது சரிதான் டா. ஆனா அப்பவும் நான் பையன் நல்லவன்னு அவர் சொன்னதால தான் கட்டிக் கொடுத்தேன். இப்போ அவர் பாட்டுக்கு பொண்டாட்டிய இப்படி பட்டதுகள்ட்ட விட்டுட்டு போயிருக்காரே அவர்ட்ட ஏன் இப்படி செய்தார்ன்னுட்டு கேட்கணும் டா வேனு”

“சரி மா அத்திம்பேர் என்ன பண்ணுவார்? அவர் நம்ம மிருதுவ அம்மா ஆத்துல விடச் சொல்லிட்டுத் தான் போயிருக்கார்ன்னு மிருது சொல்லறா!!! ஆனா அவர் அப்பாவும் அம்மாவும் இப்படி பண்ணிணதுக்கு அவர் என்னமா செய்வார்?”

“இது நல்லா இருக்கே!!! நம்ம பொண்ணை அவர் அப்பா அம்மாவை நம்பி நாம குடுக்கலை அவரை நம்பித்தான் குடுத்திருக்கோம் அப்போ அவர் கிட்ட தானே கேட்கமுடியும். ஏன் நம்ம மிருது கேட்டுண்ட மாதிரி அவர் ஊருக்கு கிளம்புறதுக்கு முன்னாடி அவளை நம்ம ஆத்துல அவரே கொண்டு வந்து விட்டுட்டுப் போயிருந்தா இதுக்கெல்லாம் வழி இவ்லாம போயிருக்கும்மோனோ… அதைத் தான் கேட்கப் போறேன்”

“நீ கேட்டுக்கோ ஆனா நாம மூணு பேருமா சேர்ந்து நம்ம மிருதுக்காவ படுத்தின, பேசின அத்திம்பேரோட அப்பா, அம்மா கிட்ட தான் கேள்விகள் கேட்கணும்.  அவா தானே தப்பு பண்ணிணவா அப்போ அவா கிட்ட தான் கேட்கணும். நாம நாளைக்கே போய் கேட்டுட்டு வந்திடுவோம்”

“இல்லடா அது சரி இல்லை முதல்ல நம்ம மிருது ஆத்துக்காரர் கிட்ட நடந்ததைச் சொல்லணும். அவர் கிட்டேயே நாம அவர் அப்பா அம்மா ட்ட கேட்கப் போறதையும் சொல்லிட்டு போய் கேட்போம்.”

“ஓகே அம்மா ஓகே”

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டே இட்டில சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மிருதுளா எழுந்து ஹாலுக்கு வருவதைப் பார்த்த வேனு. 

“ஹாய் மிருதுக்கா வா வா. இட்டிலி சாப்பிடறயா?”

“ஹாய் டா வேனு. எப்படி இருக்க? உன் காலேஜ் எல்லாம் எப்படி போறது?”

“அதுக்கென்ன ஜம்முனு போயிண்டிருக்கு. வா வந்து உட்காரு”

“நம்ம அம்மா சுடற பஞ்சு மாதிரி இட்டிலி சாப்பிட்டு எவ்வளவு நாள் ஆச்சு.”

“இரு மிருது உனக்கும் தட்டில் போட்டு கொண்டு வர்றேன்”

என்று அம்புஜம் ஒரு தட்டில் நான்க்கு இட்டிலியைப் போட்டு கொண்டு வந்து மிருதுளாவிடம் கொடுத்து சட்டினிப் பாத்திரத்தையும் பக்கத்தில் வைத்துக் கொடுத்தாள். வேனு சாப்பிட்டுக் கொண்டே…

“மிருதுக்கா உனக்கு நம்ம ஆத்துக்கு வரணும்னு தோணின உடனே அப்பாவுக்கோ இல்லை நம்ம ஆத்துக்கோ ஒரு ஃபோன் போட்டிருந்தா நாங்களே வந்து அழைச்சுண்டு வந்திருப்போம் இல்லையா? சரி விடு உன் இன் லாஸ் உன்னை அசிங்கப் படுத்தும் போது நீ ஏன் அவாகிட்ட கெஞ்சிண்டு எல்லாம் இருந்த? உன்னை அத்திம்பேர் நம்ம ஆத்துக்கு போகச் சொல்லிட்டார் அப்போ அவா கேவலமா பேச ஆரம்பிச்சதுமே நீ ஆத்துக்கு ஃபோன் பண்ணி “அம்மா என்னை உடனே வந்து கூட்டிண்டு போங்கோன்னு” சொல்லியிருந்தா நீயும் என் மருமானும் அவாகிட்ட தேவையில்லாததை எல்லாம் கேட்டிருக்க வேண்டாமில்லையா!!”

“ஆமாம் டா வேனு அதை செய்திருக்கலாம் டா. எனக்குத் தோணவேயில்லை ச்சே”

“சரி அது தான் தோணலை விடு. நீ படிச்சவ தானே அவாளை அவ்வளவு ஏன் பேச விட்ட? “

“டேய் அவா அப்படி எல்லாம் பேசப்போறன்னு எனக்கே என்ன ஜோசியமா தெரியும்? நானே அதிர்ச்சில இருந்தேன்”

“சரி அவா அப்படி பேச ஆரம்பிச்சதும் நீ பாட்டுக்கு உன் பையைத் தூக்கிட்டு வீட்டை விட்டு வெளியே வந்து பஸ்ஸுக்கு கூட வெயிட் பண்ணாம ஒரு ஆட்டோ பிடித்து நேரா இங்க வந்திருக்கலாம் இல்ல. அவா கிட்ட என்னத்துக்கு கொண்டு வந்து விடக் கெஞ்சியிருக்க?”

“ஆமாம் அதையாவது செய்திருக்கலாம். ஆனா நவீன் தான் பவின் கொண்டு போய் விடுவான்னு சொல்லிட்டுப் போயிருக்கார். அதுதான் அவா கிட்ட சொல்லி வெயிட் பண்ணினேன்”

“அய்யோ மிருதுக்கா அத்திம்பேர் சொன்ன மாதிரியா நடந்தது?”

“இல்லை”

“அப்புறம் என்னத்துக்கு அவர் சொன்னதைப் பிடிச்சுண்டு அங்க அவா பேசியதை எல்லாம் கேட்டுண்டு இருந்த?”

“ம் ….ம்….”

“சரி சரி அதெல்லாம் போகட்டும் விட்டுத்தள்ளு இனி இங்க நீ எங்களோட ஹாப்பியா இரு சரியா. நாளைக்கு நான் காலேஜ்லேந்து வரும்போது நம்ம ராணி பேக்கரிலேந்து உனக்குப் பிடிச்ச சமோசாவும், ஹனிகேக்கும் வாங்கிண்டு வர்றேன். நாம் தாயம், கார்ட்ஸ் எல்லாம் விளையாடலாம்”

“சூப்பர்!! ஜாலி!! ஜாலி!!! இரு இரு நான் சாப்பிட்ட தட்டைப் தேய்ச்சு வச்சுட்டு வந்துடறேன்”

“நீ அப்படியே போட்டுட்டு கையை கழுவிட்டு வாமா மிருது நான் பார்த்துக்தறேன்”

“அம்மா என்னமா இப்படி வெகுளியா இருக்கற நம்ம மிருதுக்காவை எப்படிமா அப்படி எல்லாம் அவாளால பேசவும் படுத்தவும் முடிஞ்சுது?”

“அதுதான்டா எனக்கும் கோவமா வருது. விடு அதுகளை அந்த ஆண்டவன் பார்த்துப் பார்”

“ஏன் மா அத்திம்பேர் கிட்ட மிருதுக்கா நடந்ததை சொன்னா அவர் கேள்வி கேட்பாரே அப்படின்னு அவாளுக்கு பயமிருக்காதா?”

“அவாளுக்கு அவா புள்ளை மேல மரியாதை இருந்திருந்தா இப்படி அவா நாட்டுப் பொண்ணை பேச தோணியிருக்குமா? சொல்லு”

“அதுவும் சரிதான். இதோ அப்பாவும் வந்துட்டா”

“ஆமாம் அவர்ட்ட சொன்னா மட்டும் என்னவாம்?”

அம்புஜமும், வேனுவும் மிருதுளாவுக்கு நடந்ததை ராமானுஜத்திடம் சொன்னார்கள். அதைக் கேட்ட ராமானுஜம்

“என்னைக்கு அவா வெள்ளி சாமான்களும், செயினும் எல்லாம் மூணாம் மனுஷனை விட்டு மாத்தி மாத்தி கேட்டாளோ அப்பவே எனக்கு அந்த ஃபேமிலியைப் பிடிக்கலை ஆனா மாப்பிள்ளை நல்லவரா இருக்காறேன்னு தான் ஓகே சொன்னோம். அதுக்கப்பறம் நடுரோடுன்னு கூட பாக்காம ரூபாய் பத்தாயிரத்தை கொடுத்தா தான் ஆச்சுன்னு பஸ் ஸ்டாப்புல வச்சு கேட்டாளோ அப்போ அந்த மாமா மாமி மேல இருந்த நல்ல அபிப்பிராயம் போயிடுத்து. இப்போ இது வேறயா?”

“என்ன இது வேறயான்னு இழுக்கறேங்கள்??” 

“அப்பா நாம மூணு பேரும் போய் ஏன் அப்படி செஞ்சா, பேசினான்னு நல்லா கேட்டுட்டு வரணும்”

“ஆமாம் அவாளை  சும்மா விடக்கூடாது”

“சரி இதுக்கு மாப்பிள்ளை என்ன சொல்லறாராம்?”

“அவருக்கு விஷயமே நாளன்னைக்கு தான் ஃபோன் போட்டு சொல்லணும் அதுவரைக்கும் தெரியாது.”

“இந்த விஷயம் தானே தெரியாது!! ஆனா பத்தாயிரம் வங்கினதுமா தெரியாது? அதை பத்தி கேட்டாராமா?”

“அப்பா அதுவும் என் மாமனார் மாமியாரோட வேலை தான். அவர் அப்படி பணம் ஏதும் கேட்கலையாம். அவருக்கே தெரியாம, அவர் கிட்ட சொல்லாம தான் நம்ம கிட்ட பொய் சொல்லி வாங்கிண்டிருக்கா”

“சரி அது தெரிஞ்சுண்டதுக்கப்பறமும் ஏன் அவர் அவா கிட்ட கேட்கலையாம்?”

“அது ….அது ….அது.. வந்து”

“என்னமா சொல்லு.”

“அது இல்லப்பா புள்ளகிட்ட பயமில்லாமல் அவர் பெயரைச் சொல்லியே நம்ம கிட்ட பொய் சொல்லி நம்மளை ஏமாத்தி பணம் வாங்கினவாட்ட கேட்டா மட்டும் உண்மையவா சொல்லப் போறான்னுட்டு அவர் சொன்னார் எனக்கும் அது சரின்னு பட்டுது அதுனால தான் அவரும் கேட்கலை நானும் அவரை கேட்கச சொல்லலை” 

“இது தான் விஷயம். புரியறதா?”

“என்ன சொல்ல வர்றேங்கள்ன்னு கொஞ்சம் தெளிவா தான் சொல்லுங்கோளேன்”

“அப்படியும் இப்படியும் எப்படியும் பேசி பொய் சொல்லறவா கிட்ட கேட்டா நியாயம் கிடைக்குமா? அதனால் தானே மாப்பிள்ளையும் கேட்டுட்டில்லை. இதுல நாம போய் கேட்டா மட்டும் அப்படியே மாரிடப் போறாளாக்கும்!”

“அவாளை மாத்த நாம யாரு ? நம்ம பொண்ணை படுத்தினதையும் பேசினதையும் நாம தான் கேட்டாகணும். இப்போ விட்டுட்டோம்ன்னா அவா இதுக்கு மேலயும் படுத்துவா”

“இதுக்கு மேல படுத்தறதுக்கு நம்ம பொண்ணு ஏன் அங்க போகணும். விடு அவ இங்கேயே இருந்துடட்டும்”

“என்ன பேசறேங்கள் அப்போ அவா கிட்ட எதுவுமே கேட்க வேண்டாம்ன்னு சொல்லறேங்களா. அப்படி என்னால இருக்க முடியாது. என் பொண்ண அவா என்னென்ன பேசிருக்கா தெரியுமா? நாம பெத்து இருபத்தி இரண்டு வருஷம் நல்லா பார்த்துப் பார்த்து வளர்த்து இது மாதிரி பேச்சும் ஏச்சும் கேட்கவா தடல் புடலா கல்யாணம் பண்ணி வச்சோம்? நாம் நாளன்னைக்கு காலையில் மாப்பிள்ளை கிட்ட பேசிட்டு அவா ஆத்துக்குப் போய் ஏன் என்னன்னு கேட்டுட்டு தான் வர்றோம். யார் வந்தாலும் வராட்டினாலும்  நான் போய் கேட்கத்தான் போறேன்.”

“சரி மா அதை நாளன்னைக்கு நாம மூணு பேருமா போய் கேட்போம். அப்பாவும் வருவா. இப்போ நாம ஒரு கேம் தாயம் போடுவோமா?” 

“ஓ எஸ் நான் ரெடி வாடா வேனு  அவா ரெண்டு பேரும் வர்றத்துக்குள்ள நாம காயின்ஸ் எல்லாம் எடுத்து வைப்போம்.”

“பாருங்கோ நம்ம பொண்ணை. எந்த வித சூது வாதும் தெரியாத பொண்ணா இருக்கிற இவளப் போய் அந்த பாவிகள்….”

“சரி போய் கேட்டுப் பார்ப்போம்”

தொடரும்…..

கண்களை தனது துப்பட்டாவால் எத்தனை முறைத் துடைத்தாலும் கண்ணீரை நிறுத்த முடியாமல் தவித்தாள். பெருத்த வயிறுடனும் கையில் ஒரு பையுடனும் கண்களில் நிற்காமல் வழிந்துக் கொண்டே இருக்கும் கண்ணீருடனும் பவின் பின்னாலேயே நடந்துச் சென்றாள் மிருதுளா. பஸ் நிலையத்தில் இருவரும் நின்றனர். அந்த நேரம் பார்த்து பஸ் வருவதற்கு நேரமாக,  தன் மனதில் 

“ஆண்டவா என் மனம் முழுவதும் ரணமாகி, கண்களில் கண்ணீர் பெருக இப்படி என்னை நிறுத்தி வேடிக்கைப் பார்ப்பதில் உனக்கென்ன அவ்வளவு ஆனந்தம்? தயவுசெய்து நான் என் வீட்டுக்குப் போக நீயும் தடை செய்யாதே!!! என் மீது எந்த தவறுமில்லை எனில் பஸ்ஸை உடனே அனுப்பி வை கடவுளே”

என்று அவள் கண்களை மூடிக் கொண்டு வேண்டி முடிக்கவும் பஸ்ஸின் ஹாரன் சப்தம் கேட்கவும் சரியாக இருந்தது. உடனே கடவுளுக்கு நன்றி கூறி பஸ்ஸில் ஏறினாள் மிருதுளா. ஒரு இருக்கையின் ஜன்னல் ஓரமாக மடியில் பையை வைத்துக் கொண்டு அமர்ந்தாள். அந்த இருக்கையின் அருகே இருந்த கம்பியைப் பிடித்துக் கொண்டு நின்றான் பவின். மிருதுளா அருகே ஒரு பாட்டி அமர்ந்தாள். பஸ் கிளம்பியது. 

அந்த பாட்டி மிருதுளாவையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் மிருதுளா தான் அமர்ந்திருப்பது பஸ் என்ற உணர்வு துளியுமின்றி நடந்ததை நினைத்தும், தன்னை இப்படி தனியாக தவிக்க விட்டுச் சென்ற நவீனை நினைத்தும் அழுதுக் கொண்டே வந்தாள். அன்று வரை அவளை அதுபோல இழிவாக எவருமே பேசியதில்லை என்பதால் அவள் அதிர்ச்சியிலும், வேதனையிலும் தவித்தாள். சீக்கிரம் வீடு சென்றுவிட மாட்டோமா என்று அவளின் மனம் படும் அவசரத்தில் அவளுக்கு அந்த பஸ் மிகவும் மெதுவாக செல்வதுப் போல தோன்றியது. 

சற்று நேரம் பார்த்த பாட்டி மிருதுளாவிடம்..

“என்ன தாயி நானும் அப்போலேந்து பார்த்துட்டே வர்றேன் நீ அழுதுகிட்ட வர்ற!!”

என்றாள். ஆனால் அது எதுவும் மிருதுளா காதில் விழவில்லை என்பதை அவள்  அசையாமல் கண்களிலிருந்து கண்ணீர் மட்டும் வழிய அமர்ந்திருந்தது  உணர்த்தியது. உடனே அந்த பாட்டி மிருதுளாவின் தோளைப் பிடித்தழுத்தினாள். அப்போது சுயநினைவுக்கு வந்தவள் ….

“இறங்கணுமா?? வந்தாச்சா??” 

என்று கேட்க அதற்கு பாட்டி

“என்னமா என்ன ஆச்சு உனக்கு? நீ எங்க இறங்கணும்?”

“நான் எங்க வீட்டுக்கு போகணும் பாட்டி. இல்ல இல்ல இங்க நான்  இறங்க வேண்டாம்”

“ஏன் இப்படி அழுதுகிட்டே வர்ற? புள்ளத்தாச்சி இப்படி அழலாமா? அது உன் குழந்தைய பாதிக்கும் இல்லையா? அழாத தாயி அழுகைய நிப்பாட்டு மா”

“தெரியும் பாட்டி ஆனா என்னால முடியலை அதுதான்”

“அட சொல்லிகிட்டே இருக்கேன் நீ அழுதுகிட்டே இருக்கயே”

“பாட்டி ப்ளீஸ் என்னை தொந்தரவு பண்ணாதீங்க.”

“அட என்னடா இது இந்த பொண்ணு அழுதுகிட்டே இருக்கு.”

மிருதுளா பவினைப் பார்த்து இறங்கணுமா என்று கேட்டதைப் பார்த்த பாட்டி பவின் பக்கம் திரும்பி…

“ஏன்ப்பா நீ இந்த புள்ளையோட தம்பியா?  வயித்துல புள்ளைய வச்சுகிட்டு இப்படி அழக்கூடாதுன்னு சொல்லுப்பா. பார்க்கவே பாவமா இருக்கு”

என்றாள் அதற்கு பவின் வெடுக்கென

“நீங்க உங்க வேலையப் பாருங்க”

என்றான். அதைக் கேட்ட பாட்டி 

“நான் என்ன இப்போ தப்பா சொல்லிப்புட்டேன் நீ இப்படி பேசுற?”

என்று கூறிக் கொண்டிருக்கும் போது முன்னாலிருந்து 

“அத்தை வாங்க நாம இறங்கணும். சீக்கிரம் வாங்க”

என்று ஒரு பெண் அழைக்க. 

“வந்துட்டேன் மருமவளே. இதோ வந்துட்டேன். பார்த்து கூட்டிட்டுப் போப்பா. இப்படி எல்லாம் கர்ப்பிணி பொண்ண அழவிடக்கூடாது. அழவிட்டவங்களுக்கு  மஹா பாவம் தான் வந்து சேரும்.  நான் வர்றேன் மா” 

“பாட்டிமா இறங்கறீங்களா பஸ்ஸ எடுக்க சொல்லட்டுமா”

என்றார் பஸ் கண்டக்டர்.  உடனே 

“இதோ இறங்கிட்டேன்ப் பா நீ பஸ்ஸ எடுக்கலாம்”

“ரை ரைட்” என்று கன்டக்டர் சொன்னதும் பஸ் மீண்டும் கிளம்பியது. 

வீட்டுக்கு வாழ வந்த மருமகளை பார்த்துக் கொள்ள வேண்டிய மூத்த தம்பதியர் அவளை பட்டினியிட்டு, அழவிட்டு, சாபமிட்டு, வீட்டை விட்டு துறத்தி விட்டுள்ள நிலையில், ஏதோ ஊர் பேர் தெரியாத ஒரு மூதாட்டி மிருதுளாவிற்கு ஆறுதல் சொல்லி பவினிடமும் அறிவுரைக் கூறிச் சென்றுள்ளார். இதிலிருந்து தெரிந்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால் வயதானால் மட்டும் பெரியவர்களாகி விட முடியாது. அவர்கள் நடந்துக் கொள்ளும் முறை அவர்கள் யார் என்பதை காட்டிவிடும். 

கர்ப்பிணி பெண்களுக்கு தங்கள் தாய் வீட்டிற்கு செல்ல வேண்டும், தாயுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றுவது இயல்பானதாகும். தாய் வீட்டில் கிடைக்கும் அதே பாசம், அன்பு, அக்கறை எல்லாம் புகுந்த வீட்டில் கிடைத்தாலும் தன் தாய் வீடு என்பது அந்த நேரத்தில் எல்லாப் பெண்களும் செல்ல விரும்பும் ஓரே இடமாக இருக்கும். அந்த விருப்பத்தை சொன்னதற்கு ஈஸ்வரனும் பர்வதமும் நடந்துக் கொண்ட விதம், பேசிய வார்த்தைகள் அனைத்தும் அவர்களை அவர்களே  சிறுமைப்படுத்திக் கொண்டனர் என்றால் மிகையாகாது.  

பஸ் நின்றது மிருதுளா மெல்ல இறங்கினாள். பவின் ஒரு ஆட்டோ பிடித்தான் இருவரும் அதில் ஏறினார்கள். வீட்டிலிருந்து அதுவரை இருவரும் ஒன்றுமே பேசிக் கொள்ளவில்லை. ஆட்டோ ராமானுஜம் வீட்டு வாசலில் நின்றதும் மிருதுளா வேகமாக இறங்கி வீட்டினுள் சென்றாள். பவின் ஆட்டோ டிரைவரிடம் சற்று வெயிட் பண்ண சொல்லிவிட்டு அவள் பின் சென்றான். 

கதவைத் தட்டினாள் மிருதுளா. அம்புஜம் கதவைத் திறந்தாள். 

“வா வா மிருது. வாப்பா பவின் “

“அம்மா அம்மா…….. மா…..”

என்று அழுதுக்கொண்டே உள் ரூமிற்குள் சென்றாள் மிருதுளா அவள் பின்னாலேயே அம்புஜம்

“ஏய் மிருது என்னமா? என்ன ஆச்சு? ஏன் அழற? என்னடி ஆச்சு? இந்த நேரத்துல இப்படி அழப்டாது மா!! அம்மாவ பாரு. ஐயோ கடவுளே ஏன் இந்த பொண்ணு இப்படி அழறா. ஒண்ணும் சொல்லவும் மாட்டேங்கறாளே”

என்று பரிதவித்தாள் அம்புஜம். தன் மகள் அழுவதைப் பார்த்த அம்புஜத்திற்கும் அழுகை வந்தது. மகள் ஒன்றும் சொல்லாமல் அழுதுக் கொண்டே இருப்பதைப் பற்றி அவள் கூட வந்த பவினிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ளலாம் என்று கண்களைத் துடைத்துக் கொண்டே  வேகமாக ஹாலுக்கு ஓடி வந்த அம்புஜம்..

“என்னப்பா பவின் என்ன ஆச்சு ஏன் என் பொண்ணு இப்படி அழறா? என்ன தான் நடந்தது? நீயாவது சொல்லுப்பா “

“ஆட்டோ வெயிடிங்கல இருக்கு. எனக்கொன்றும் தெரியாது. அப்பா தான் விட்டுட்டு வரச்சொன்னா. நான் போயிட்டு வர்றேன்”

என்று அவன் கிளம்ப முற்பட்ட போது அவனை வழிமறித்து 

“என்னப்பா இது ஒண்ணுமே சொல்லாமா என் பொண்ணை இப்படி அழ அழ விட்டுட்டு மட்டும் வரச்சொன்னாரா உங்க அப்பா”

“நான் வர்றேன்”

என்று ஏதும் கூறாமல் வந்த ஆட்டோவில் ஏறிச் சென்றான் பவின். அம்புஜம்  விஷயம் தெரியாமல் தவித்தாள். மீண்டும் மிருதுளாவிடம் சென்றாள். மிருதுளா அம்புஜம் மடியில் படுத்துக் கொண்டு அழுதால்.

“மிருது என்னதான்மா நடந்தது? ஏன்டா கண்ணு இப்படி அழற? அம்மாவுக்கு பயமா இருக்குமா. தயவுசெய்து அழுகையை நிப்பாட்டு மா. உன் வயித்துல இருக்குற பாப்பா பாவமில்லையா. நீ அழுதா அதுக்கும் வலிக்கும். அழுகையை நிப்பாட்டுமா.”

என்று அம்புஜம் சொன்னதும் சற்று அழுகையை நிப்பாட்டினாள் மிருதுளா ஆனால் அவ்வளவு நேரம் விக்கி விக்கி அழுததில் அவளுக்கு பேச்சு வரவில்லை. உடனே அம்புஜம் அடுப்படிச் சென்று ஜுஸ் போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள். நல்ல பசியிலிருந்த மிருதுளா அதை வாங்கிக் குடித்துவிட்டு இன்னுமொரு கிளாஸ் கிடைக்குமா என்றதும் அம்புஜம் 

“என்னமா இப்படி இவ்வளவு பசியோட இருக்க. இந்தா குடி”

என்று இன்மொரு கிளாஸ் ஜுஸ் குடுத்து மிருதுளா குடித்ததும் தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டாள். அப்போது மிருதுளா மெல்ல விக்கி விக்கி தனக்கு நடந்தது அனைத்தையும் கூறினாள். அதைக் கேட்டதும் அம்புஜத்திற்கு கோபம் வந்தது.  கோபத்தில் 

“எவ்வளவு எல்லாம் உன்னை படுத்திருக்கா? பேசிருக்கா!!! நீ தலைதீபாவளிக்கு வந்தப்போ கூட ஒண்ணுமே சொல்லலை. அப்போ கூட ஏதோ விஷேஷத்துக்கு போறோம்ன்னு தானே சொன்ன ஆனா என்னெல்லாம் நடந்திருக்கு!!!..அந்த ஆக்ஸிடென்டில் உனக்கு ஏதாவது ஆகிருந்தா!!! பகவானே!!! இவ்வளவு பண்ணிட்டும் துளி கூட கூச்சமே  இல்லாம உன்னை என்னெல்லாம் பேசியிருக்கா!!! உங்க ஆத்துக்காரர் செய்தது தப்பு. உன்னை கொண்டு வந்து விட்டுட்டுப் போயிருந்தா இதெல்லாம் நடந்திருக்குமா?”

“அவரைச் சொல்லாதே மா. அவர் சொல்லிட்டுத் தான் போயிருக்கார். இவா தான் இதை பயன்படுத்தி பழிவாங்கிட்டா. ஆனா அதுக்காக என்னை சாபம் கொடுத்து அனுப்பற மாதிரி நான் என்னமா தப்பு பண்ணிட்டேன்?” 

என்று கேட்டு அழ ஆரம்பித்தாள். உடனே அவள் கண்களை அம்புஜம் துடைத்து விட்டு 

“நீ எதையுமே மனசில போட்டு குழப்பிக்காதே. அவாளை நினைத்தோ இல்லை அவா பேசினதை நினைத்தோ நீ கவலையே படாதே. நான் பார்த்துக்கறேன். இனி நீ இங்கயே இரு அங்க இப்போதைக்கு போக வேண்டாம். நீ இங்க சந்தோஷமா இருக்கணும். உனக்கு பொறக்கப் போற பாப்பா ஆரோக்கியமா, அறிவாளியா, சமத்தா இருக்கணுமா வேண்டாமா?”

“ஆமாம் இருக்கணும் மா”

“அவா எல்லாரையும் தூக்கி பரண் ல போட்டுட்டு நிம்மதியா சந்தோஷமா இருக்கணும். அம்மா இருக்கேன் நான் உன்னை நல்லா பார்த்துக்கறேன். அப்பாவும் நானும் வேனுவும் அவாள பார்த்துக்கறோம். நீ இப்போ சாப்படறயா?”

இரண்டு கிளாஸ் ஜுஸ் குடித்தும் பசியிலிருந்த மிருதுளா

“சரி மா சாப்பிடறேன். எனக்கு பசிக்கிறது”

“இதோ எல்லாம் ரெடி மா. ஒரு நிமிஷம் குக்கர்ல ஆவி அடங்கட்டும் சாப்பாடு தர்றேன். நீ அதுவரைக்கும் படுத்துக்கோ.”

என்று சொல்லிக் கொண்டே அம்புஜம் அடுப்படிக்குள் சென்று குக்கரின் மேல் ஜில் தண்ணீரை ஊற்றி ஆவியை அடங்கச் செய்து ஒரு தட்டில் சுடச் சுட சாதத்தில் சாம்பார் ஊற்றி, பீன்ஸ் பொறியல் மற்றும் வெங்காய வடாம் வைத்து, ஒரு சொம்பு தண்ணீரும் எடுத்துக் கொண்டு ரூமிற்குள் படுத்திருந்த மிருதுளாவிற்கு கொடுத்தாள். மிருதுளா எழுந்து வேக வேகமாக சாப்பிட்டதைக் கண்ட அம்புஜத்திற்கு அவள் மகளின் பசிப் புரிந்தது. நிமிடத்தில் தட்டு காலியனதைப் பார்த்த அம்புஜம்

“ரசம் சாதம் கொஞ்சம் கொண்டு வர்றேன் அப்படியே உட்கார்ந்திரு மிருது”

“அம்மா ரசமா வேண்டாமா நான் அங்க அதைத் தவிர வேறெதுவுமே சாப்பிட்டதில்லை. அதையே சாப்பிட்டு சாப்பிட்டு அலுத்துப் போச்சு. எனக்கு மறுபடியும் சாம்பார் சாதமே தாம்மா”

“இதோ கொண்டு வர்றேன்”

என்று மீண்டும் சாம்பார் சாதமும் பொறியலும் வடாமும் கொண்டு வந்து கொடுத்தாள் அம்புஜம்.

நன்றாக வயிறு நிறைய சாப்பிட்டதும் மிருதுளாவிற்கு தூக்கம் வந்தது. தன் அம்மாவிடம்

“அம்மா நான் கொஞ்ச நேரம் தூங்கிக்கவா ப்ளீஸ்”

என்றாள். மிருதுளா நவீன் வீட்டில் தூங்கியதற்காக பல பேச்சுக்களுக்கும், ஏச்சுக்களுக்கும், கிண்டல்களுக்கும் ஆளானதில் அவள் மனம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. அதனால் தான் தன் தாய் வீட்டிலிருந்தும் தூங்குவதற்கு அனுமதி கேட்டாள் மிருதுளா. 

“என்னத்துக்கு பர்மிஷன் எல்லாம் கேட்டுண்டிருக்க மிருது நீ நிம்மதியா தூங்குமா”

என்று அந்த ரூமின் ஜன்னல்களின் திரைசீலையை போட்டுவிட்டாள் அம்புஜம். மிருதுளா தூங்கும் வரை அவளருகிலேயே இருந்துவிட்டு அவள் உறங்கியதும் மெல்ல எழுந்து அந்த அறையின் கதவை சாத்தி விட்டு ஹாலில் இருந்த பூஜை ஷெல்ஃப்பைப் பார்த்துக்கொண்டே அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தப் படி

“அம்மா தாயே நான் உன்னை நம்பி தானே என் பொண்ணை அந்த குடும்பத்திற்கு அனுப்பி வைத்தேன். இப்படி எங்க பொண்ண பட்டினிப் போட்டு,  வாயிக்கு வந்தபடி எல்லாம் பேசி இந்த சின்னப் பொண்ண படாதபாடு படுத்திருக்காளே!! இதெல்லாமே உன் முன்னாடி தானே நடந்திருக்கு? இது அத்தனைக்கும் நீ தான் மா பொறுப்பு நீ தான் பொறுப்பு சொல்லிட்டேன்”

என்று அழுதுக் கொண்டிருக்கையில் வேனு வீட்டினுள் நுழைந்தான். தன் தாய் அழுதுக் கொண்டிருப்பதைப் பார்த்தும்

“அம்மா ஏன்மா அழுதுண்டிருக்க? என்னமா ஆச்சு?”

“உஷ் ..உஷ் …மெதுவா பேசுடா வேனு”

“என்னமா ஏன் அழறன்னு கேட்டா!!! மெதுவா பேசுன்னு சொல்லற!!! சரி மெதுவா கேட்கறேன் என்னமா ஆச்சு”

“நம்ம மிருது அந்த ரூம்ல படுத்துத் தூங்கிண்டிருக்கா. அவளை தொந்தரவு செய்யாமல் டிரஸ் மாத்திண்டு வா. நாளைக்கு உன் டிரஸை எல்லாம் இங்கே அடுக்கித் தர்றேன் சரியா”

“மிருதுக்கா வந்திருக்காளா சூப்பர் சூப்பர். அது சரி அதுக்கு நீ ஏன் அழுதுண்டு இருக்க? ஏதாவது ப்ராப்ளமா?”

தொடரும்…..

அன்றிரவு மிருதுளா நவீனிடம் மத்தியம் வீட்டின் பின்புறம் நடந்ததைப் பார்த்ததில் தனக்கு குற்ற உணர்ச்சியாக இருப்பதாக கூறி, மாமியாரை தவறாக பேசியதற்கு மன்னிப்புக் கேட்டாள். நவீன் அவளிடம்

“விடு மிருது உன் மனசில் பட்டதை நீ சொன்ன அதுல தப்பு ஒன்றுமில்லை. வெளில சொல்லாம மனசுல வச்சுண்டு இருக்கறதுக்கு பதிலா உன்னை மாதிரி தோன்றதை வெளிய சொல்வது ஒரு வகையில் நல்லது தான். எனக்கு உன்னிடம் பிடித்தது எது தெரியுமா?”

“எது நவீ?”

“உன் எண்ணத்தை எதனால் மாத்திண்டேன்னு எனக்கு தெரியாது ஆனால் நீ நினைத்தது தவறாக இருக்குமோன்னு மன்னிப்பு கேட்ட பாரு அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மிருது”

“தாங்க் யூ நவீ. மத்தியானம் நான் தூங்கும்போது நீங்க மூணு பேரும் பின்னாடி பேசினது எனக்கு கேட்டு நான் எழுந்து பார்த்தேன். அப்போ அம்மா துணியை காயப் போட்டுண்டிருந்தா. அதப் பார்த்ததும் தான் எனக்கு உறுத்தலா இருந்தது.நான் தான் தப்பா நினைச்சுட்டேனோன்னு அதுதான் மன்னிப்புக் கேட்டேன்”

“குட் ஆல்வேஸ் பீ லைக் திஸ் மிருது என்னைக்கும் எதற்காகவும் மாறாதே சரியா”

“ஓகே இப்போ தூங்கலாமா! காலையில இருந்து செம வேலை. ரொம்ப டையர்டா இருக்கு”

“ஓகே ஓகே தூங்கலாம். யூ ஆர் ரைட்.”

என்று விளக்கை அனைத்துவிட்டு தூங்கப் படுத்துக் கொண்டார்கள். மிருதுளா படுத்ததும் தூங்கிவிட்டாள் ஆனால் நவீனால் தூங்க முடியவில்லை. அவன் மிருதுளா காலையில் தன்னிடம் சொன்னதையும் அதையே ஈஸ்வரன் கேட்டதையும் அதற்கான பதில் போல பர்வதம் செய்ததையும் எல்லாம் யோசித்துப் பார்த்ததில் அவனுக்கு எது உண்மை எது பொய், திட்டமா இல்லை எதேச்சையாக நடந்தேறியதா என்று குழப்பமாகவே இருந்ததால் தூக்கமின்றி புரண்டு புரண்டு படுத்தான் அப்போது அப்பாவியாக உறங்கும் தன் மனைவியைப் பார்த்துக் கொண்டே மனதில்

“இவளை அவா ஆத்துல கொண்டு போய் விட்டுட்டு வரச்சொல்லணும் அது தான் சரி. இங்கே இருந்தா…நானும் இல்லாமல் இவள் மிகவும் குழப்பத்திற்கு ஆளாவாள். நாளைக்கே அப்பாவிடம் சொல்லிடணும்…ம் அது தான் சரி”

என்று ஒரு முடிவு பிறந்ததும் தூக்கம் வருடியது, கண்களும் மூடியது. 

மறுநாள் விடிந்ததும் மிருதுளா அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து மெதுவாக கீழே இறங்கிச் சென்று வேலைகளை செய்யத் துவங்கினாள். அதைப் பார்த்த பர்வதம் சும்மா இருக்க முடியாமல்

“பரவாயில்லையே தானாவே எழுந்து வந்துட்டயே. நல்ல முன்னேற்றம் தான்”

என நக்கலடிக்க அதற்கு மிருதுளா

“என்னை குஜராத்துல யாரும் வந்து எழுப்பினதில்லையே நானே தான் எழுந்து எல்லா வேலைகளையும் செய்தேன். இங்கே நீங்க இருக்கேங்களேன்னு தான் கொஞ்சம் லதார்ஜிக்கா இருந்தேன் அதுதான் நேத்துலேந்து நீங்க இல்லன்னு ஆயிடுத்தில்லையா அதுதான் இன்னைக்கு நானே எழுந்து வந்தேன். தப்புன்னா சொல்லுங்கோ நான் மறுபடியும் போய் படுத்துக்கறேன். எனக்குத்தான் தூக்கம் எப்போ வேணும்னாலும் வருமே கரெக்ட் தானே மா”

என்று திருப்பி பேசாத மருமகள் இவ்வாறு நய்யாண்டி செய்ததும் பர்வதத்திற்கு பதில் சொல்ல முடியாமல் கோபம் தலைக்கேறியது. அந்த கோபத்தில்

“வர வர உனக்கு வாய் ரொம்ப நீளறது.”

“என்னம்மா நான் நடந்ததை தான் சொன்னேன் அதுக்கு ஏன் இப்படி சொல்லறேங்கள். சரி சரி காலங்காத்தால வேண்டாம் நாம அப்பறமா வச்சுப்போம். இருங்கோ சூடா காபி போட்டுத் தர்றேன்”

என்று பர்வதத்தின் கோபத்தையும் கையாள கற்றுக் கொண்டாள் மிருதுளா. முன் தினத்தைப் போலவே காலையில் அனைத்து வேலைகளையும் முடித்தவுடன் மாடிக்குச் சென்று படுத்துக் கொண்டதில் தூங்கிப் போனாள். மாலையில் மீண்டும் எல்லா வேலைகளையும் முடித்தப்பின் இரவு படுத்துறங்கச் சென்றாள் அங்கே நவீன் தனது துணிமணிகளை பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்ததும் மிருதுளா

“என்ன நவீ? நீங்க பாட்டுக்கு நாளைக்கு ஊருக்கு கிளம்பிடுவேங்கள் அப்போ நான் எப்போ? எப்படி? எங்காத்துக்கு போவேன். என்னை எங்காத்துல விட்டுட்டு ஊருக்கு கிளம்புங்கோன்னு சொன்னேன் இல்லையா? நாளைக்கு காலையில எட்டு மணிக்கு தானே டிரெயின்? என்னை ஒரு ஆறு மணிக்கெல்லாம் கூட்டிண்டு போய் எங்காத்துல விட்டுட்டு கிளம்புங்கோளேன் ப்ளீஸ் பா”

“மிருது …மிருது… ஏன் நீ இவ்வுளோ பயப்படற?”

“எனக்கென்னவோ எதுவும் சரியா படலை நவீ. ஏதோ ஒரு பதற்றமாவே இருக்கு. பசிச்சிண்டே வேற இருக்கு. தூங்கவும் முடியலை”

“நான் ஊருக்கு போறதுனால உனக்கு அப்படி தோணறது அவ்வளவு தான். எதுக்கும் பதற்றம் ஆகாதே. பொறுமையா ஹாண்டில் பண்ணு சரியா”

“அப்போ நான் இங்கேயே தான் இருக்கணுமா?”

“இல்லமா நான் அப்பாட்ட சொல்லிருக்கேன். நான் ஊருக்கு கிளம்பியதும் நீ ரெடி ஆகி உன் திங்ஸோட கீழே போ. உன்னை பவின் கொண்டு போய் உங்காத்துல விட்டுட்டு வருவான். ஓகே வா. ஹாப்பி”

“அப்படியா அப்போ சரி. அப்பாடா நாளையிலிருந்து நல்ல சாப்பாடு அன்ட் தூக்கம் கிடைக்கப் போறது குட்டிமா”

என்று தன் வயிற்றை தடவிக்கொடுத்தாள் மிருதுளா. அதைப் பார்த்த நவீன்

“ஐ திங் யுவர் ப்ராப்ளம் ஈஸ் சால்வ்டு நவ். ஹாப்பி?”

“தாங்க்ஸ் நவீ. ஐ லவ் யூ”

“பத்திரமா இரு இனி நான் நம்ம சீமந்தத்துக்கு தான் வருவேன். அதுக்கு இன்னும் எக்ஸாக்ட்டா ஒரு மாசமிருக்கு”

“ஓகே நான் பத்திரமா இருக்கேன். நீங்களும் ஒழுங்கா டையத்துக்கு சாப்பிடுங்கோ சரியா”

“நான் பார்த்துக்கறேன் நீ அதை நினைச்சுண்டு கவலைப் படாதே. சரி நேரமாகிண்டே இருக்கு நீ படுத்து தூங்கு நான் இதோ இதை முடிச்சிட்டு படுத்துக்கறேன்” 

“உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கே”

“என்னதது?”

“இதோ பருப்புப் பொடியும், கொத்தமல்லிப் பொடியும், எள்ளுப் பொடியும் செய்தேன் இதையும் பெட்டில வச்சுக்கோங்கோ. உங்களுக்கு பேக் பண்ணியது போக மீதியை பாட்டில்ல போட்டு அடுப்படில வச்சிருக்கேன்”

“ஏய் மிருது இதுதான் மத்தியனம் செஞ்சயா வீடே வாசமா இருந்தது தெரியுமா”

“ஆமாம் நீங்க சாதம் மட்டும் வச்சா போறும் இந்த பொடிகள் போட்டு பிசைந்து சாப்பிடலாம். உடம்புக்கும் நல்லது. இட்ஸ்  ஃபார் வீக் என்ட் ஓகே”

“டன் மேடம் டன். இதோ வச்சுண்டுட்டேன் போதுமா இப்போ நிம்மதியா தூங்கு. இதோ என் வேலையும் ஆச்சு. குட் நைட், ஹாவ் எ நைஸ் ஸ்லீப் மிருது.”

“குட் நைட் நவீ.”

இருவரும் படுத்துறங்கினர். 

காலை விடிந்தது. மிருதுளாவும் நவீனும் எழுந்து கீழே சென்றனர். பர்வதம் குளித்து தலையில் துண்டைக் கட்டிக்கொண்டு அடுப்படி இன்சார்ஜை மீண்டும் எடுத்துக் கொண்டாள். நவீன் மிருதுளா இருவரும் ஃப்ரெஷ்ஷாகி வந்ததும் காபி கொடுத்தாள் பர்வதம். அதை கையில் வாங்கிக் கொண்டு இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ஏனெனில் மிருதுளா அவர்கள் வீட்டுக்கு வந்த அடுத்த நாள் காலை மட்டுமே காபி போட்டுக் கொடுத்த பர்வதம் இத்தனை நாட்கள் கழித்து காபி போட்டுக் குடுத்தது அவர்களை ஆச்சர்யப்படச் செய்தது. இதிலிருந்து வெளிவருவதற்குள் அடுத்த ஆச்சர்யம் காத்திருந்தது. முதல் முறையாக பர்வதம் மிருதுளாவை பெயர் சொல்லி அழைத்தாள்

“மிருதுளா நீயும், நவீன் குளிச்சதும் குளிச்சிட்டு வந்துடு. அவன் கூடவே டிபன் சாப்டு சரியா” 

“சரிமா நானும் குளிச்சிட்டு வந்துடறேன்”

என்று கூறி மாற்றுத் துணியை எடுக்க மாடிக்குச் சென்றாள் மிருதுளா. அவள் பின்னாலேயே நவீனும் அவன் மாற்றுத் துணியையும் பெட்டியையும் எடுத்து வரச் சென்றான். மிருதுளா தன் வீட்டுக்கு எடுத்துச் செல்லவேண்டிய துணிமணிகளை ஒரு துணி பையில் போட்டுக் கொண்டிருந்தாள் அதைப் பார்த்த நவீன்

“என்ன மிருது இந்த பையில இருக்குற துணி போதுமா உனக்கு?”

“போதும் நவீ. என்னோட டிரஸ் நிறைய ஆத்துல இருக்கு. அதுவுமில்லாம என்னால இவ்வளவு தான் தூக்கிண்டு போக முடியும்”

“சரி சரி ஆமாம்!! என்ன இன்னைக்கு மேடம்க்கு காலையிலேந்து உபசரிப்பு பலம்மா இருக்கு?”

“ஆமாம் நவீ நீங்க கவனிச்சேங்களா? நானும் கவனிச்சேன். என்னை ஃபர்ஸ்ட் டைம் பெயர் சொல்லிக் கூப்பிட்டா தெரியுமா?”

“ஈஸ் இட்!! இதுவரைக்கும் உன்னை உன் பெயர் சொல்லிக் கூப்பிட்டதில்லையா?”

“ம்.ஹூம்..இல்லவே இல்லை” 

“சரி எல்லாம் நல்லபடியா இருந்தா நல்லது தானே”

“எஸ் நவீ. எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று நம்புவோம். சரி நீங்க குளிச்சிட்டு வாங்கோ இன்னுட்டு நான் வர்றேன். உங்களுக்கும் டைம் ஆகறதோன்னோ”

“ஓகே கீழே மெதுவா இறங்கி வா”

“சரி சரி நீங்க போங்கோ. நான் ஒரு பைவ் மினிட்ஸ் ல வந்துடறேன்”

இருவரும் குளித்ததும் ஒன்றாக அமர்ந்து டிபன் சாப்பிட்டனர். மணி ஏழானது. நவீன் பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான். மிருதுளாவிற்கு கண்களில் கண்ணீர் ததும்பியது. அதைப் பார்த்த நவீன் டோன்ட் வரி மிருது என்று கூறிவிட்டு ஆட்டோவில் ஏறிச் சென்றான். மிருதுளா வீட்டுக்கு அவளை அழைத்துச் செல்ல சொன்னதை ஒரு முறைகூட கீழே அவர்கள் முன் நவீன் சொல்லவில்லை. மிருதுளாவிற்கு செலவுக்கு பணமும் கொடுக்க மறந்தான் நவீன். 

அவன் ஆட்டோ சென்றதும் மிருதுளா சற்று நேரம் கீழே அமர்ந்திருந்தாள். எவருமே அவளிடம் பேசவில்லை. அப்படி ஒருத்தி வீட்டில் இருப்பதாகவே எவருக்கும் தெரியாததுப் போலவே நடந்துக் கொண்டனர். அவளாக பேச முற்பட்டப் போதும் பதிலளிக்காமல் முகத்தை திருப்பிக் கொண்டனர். அவர்களின் இந்த செயல்களைப் பார்த்ததும் மிருதுளாவிற்கு குழப்பமானது. காலையில் நன்றாக பேசிய மாமியார்,  நவீன் ஊருக்கு ஆட்டோவில் சென்றதும், வீட்டில் மாமியார் உட்பட அனைவரின் நடவடிக்கைகளும் மாறியது மிருதுளாவிற்கு பயத்தை உண்டுப் பண்ணியது. அவளும் வேறு வழியின்றி மாடிக்குச் சென்று தன் வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள்  என்று நவீன் சொன்னது படி தயாராகி பையை எடுத்துக் கொண்டு மாடி அறையைப் பூட்டிவிட்டு பையுடன் மெல்ல கீழே இறங்கி வந்தாள். 

ஹாலில் பையை வைத்துவிட்டு. ஆணியில் தங்கள் அறையின் சாவியை மாட்டிவிட்டு நேராக உள் ரூமில் சாமி வைத்திருக்கும் இடத்திற்கு சென்று சாமி கும்பிட்டு விபூதியை பூசிக் கொண்டு மீண்டும் ஹாலுக்கு வந்தவளிடம் பர்வதம்…

“என்னது இது பை? எங்க கிளம்பிட்ட?”

என்று கேட்டதும் மிருதுளாவிற்கு தலையில் இடி விழுந்தது போல இருந்தது. ஆனாலும் அதைக் காட்டிக் கொல்லாமல் 

“நவீன் தான்… அவர் ஊருக்கு கிளம்பினதும் என்னை கிளம்பி கீழே வரச் சொன்னார் மா அதுதான் வந்தேன். பவின் என்னை எங்காத்துக்கு கூட்டிண்டு போவான்னு நவீன் சொன்னார் அதுதான் கிளம்பி ரெடியா வந்திருக்கேன்”

“இப்போ என்னத்துக்கு உங்க ஆத்துக்கு போகணும்?”

“இல்லமா நவீன்ட்ட நான் சொன்னேன், அவர் தான் அப்பாட்ட பேசிருக்கேன், பவின் கொண்டு போய் விடுவான், நீ ரெடியாகி கீழே வந்தா போதும்ன்னு சொன்னார். இன்னைக்கு காலையில கூட சொன்னார் அதுதான் வந்தேன் மா”

“என்ன மறுபடியும் அதையே  சொல்லற!”

“நவீன் சொன்னதைத் தானே மா நான் சொல்ல முடியும்”

என்று மிருதுளா பர்வதம் இடையே நடந்துக் கொண்டிருந்த பேச்சு வார்த்தையை கேட்டுக் கொண்டே இருந்த ஈஸ்வரன் குரலை உயர்த்தி 

“நானும் பார்த்துண்டே இருக்கேன்… என்ன நவீன் சொன்னார் நவீன் சொன்னார்ன்னுட்டே இருக்க? எவனும் எதுவும் என் கிட்ட சொல்லலை. என்ன திமிரா?”

“இல்லப்பா அவர் உங்ககிட்ட சொல்லியதா….”

“வாயை மூடு!” என்று ஈஸ்வரன் அதட்டியதும் பயத்தில் அழலானாள் மிருதுளா

“என்ன அழுகை வேண்டியிருக்கு அழுகை? நவீன் சொன்னது  ஆட்டுக்குட்டி சொன்னதெல்லாம் இங்கே செல்லாது தெரிஞ்சுக்கோ. அவன் பேச்செல்லாம் குஜராத்தோட. இது என் வீடு டீ. இங்க நான் வச்சது தான் சட்டம் புரியறதா? புரியலைன்னா இனி புரிஞ்சுக்கோ”

“என்னப்பா என்னென்னவோ பேசறேங்கள்? என்னமோ மாதிரி பேசறேங்கள்?”

என்று பயத்துடனும், அழுகையுடனும் இருந்த மிருதுளா அங்கு நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பவினையும் ப்ரவினையும் பரிதாபமாக பார்த்தாள். அவர்களாவது ஈஸ்வரனை அவ்வாறு பேச வேண்டாமென்று சொல்வார்களா என்ற ஏக்கத்துடன் பார்த்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதைப் பார்த்த ஈஸ்வரன்

“என்னடி அங்க பார்வை. எவனும் வாயை தொறக்க மாட்டான். நான் தான் சொன்னேன் இல்லையா இது என் கோட்டை டி.  இங்கே நான் வச்சது தான் டி சட்டம்.  நான் சொல்லுற படிதான் இங்க எல்லாரும் நடப்பா நடக்கணும்.”

என்று மீண்டும் குரலை உயர்த்த நடுங்கினாள் மிருதளா. (வயிற்றில் குழந்தையுடன் இருப்பவளிடம் இப்படி கத்தி கூச்சலிட்டு மிரட்டினால் அது அந்த குழந்தையும் உள்ளேயிருந்து கேட்கும், அதையும் சேர்த்து துன்புறுத்துகிறார்கள் என்பது நான்கு பிள்ளைகளை பெற்றவயர்களுக்கு தெரியாதது இல்லை. வேண்டுமென்றே செய்பவர்களிடம் இதை எல்லாமா எதிர்பார்க்க முடியுமா!!!) அதே நடுக்கத்துடன் 

“சரி ப்பா இது உங்க வீடு தான். இங்க  நீங்க வச்சதே சட்டமாகவும் இருக்கட்டும். நான் இப்போ எங்காத்துக்கு போகணும். என்னை போக விடுங்கோளேன்”

இதைக் கேட்டதும் பர்வதம் 

“என்னடி அப்பாவையே எதிர்த்துப் பேசறயா. உனக்கு ரொம்ப தான்டி திமிரு. கல்யாணமானதும் இங்கயே மூணு மாசம் இருன்னு சொன்னதுக்கு இருக்காம ஓடின ல்ல  இப்போ இங்க தாண்டி இருந்தாகணும். இப்போ என்னடி பண்ணுவ?”

“நான் உங்க புள்ளக் கூட தானே போனேன் என்னமோ யார்கூடயோ போணா மாதிரி சொல்லறேங்களே இது நியாயமா?”

ஈஸ்வரன் குறுக்கிட்டு

“உனக்கு என்னடி அப்படி உன் அம்மாகாரிகிட்ட போணும்ன்னு? ஏன் இங்க இருக்க முடியாதோ? அப்படீன்னா என்னத்துக்குடி உன் அம்மாகாரி உன்னை கல்யாணம் பண்ணிக் குடுத்தா? அவ பக்கத்திலேயே படுத்துக்க வச்சுக்க வேண்டியது தானே?”

“ப்ளீஸ் என் அம்மாவ பத்தி இப்படி எல்லாம் பேசாதீங்கோ”

“ஆமா உன் அம்மா!!! நீ போடி! உன் அம்மாகிட்டயே போய் இருந்துடு. திரும்பி வராத. எங்க புள்ளைக்கு நூறு பேரு க்யூல இருக்காடி. நாங்க எங்க புள்ளைக்கு நல்லா வெள்ளையா இருக்கற பொண்ணா பார்த்து இன்னொரு கல்யாணம் பண்ணி வைச்சுக்கறோம். நீ போடி கருப்பி”

என்று விரல்களை சொடுக்கி பர்வதம் சொன்னதைக் கேட்டதும் மிருதுளாவிற்கு கோபம் வந்தது. வயிற்றில் பசியும் வந்தது.  அவர்கள் வேண்டுமென்றே பழிவாங்குகிறார்கள் என்பதை புரிந்துக் கொண்டாள்.  அவளுக்கு அப்போது அங்கிருந்து எப்படியாவது தப்பித்து சென்று விட வேண்டும் என்ற எண்ணமே தலையாயதாக இருந்ததால் உடனே பர்வதத்தைப் பார்த்து இரு கைகளையும் தலைக்கு மேல் கூப்பி

“நீங்க உங்க புள்ளைக்கு யாரை வேணும்னாலும் கட்டி வச்சுக் கோங்கோ ஆனா என்னை மட்டும் இப்போ எங்காத்துக்கு போக விடுங்கோ.”

“படிச்சவ தானே டி நீ? என்னத்துக்கு இப்போ அழுது சீன் போடற?” என்று கொஞ்சமும் மனசாட்சியின்றி கேட்ட ஈஸ்வரனைப் பார்த்து தன் கண்களைத் துடைத்துக் கொண்டே

“சரி நான் அழலை போதுமா. இப்போ நான் போகலாமா.”

என்றுதும் ஈஸ்வரன்

“உடம்பு ஃபுல்லா உனக்கு திமிரு டி. டேய் பவின் இத கொண்டு போய் அவா ஆத்துல தள்ளிட்டு வாடா.”

என்று ஏதையோ வீசி எரிந்துவிட்டு வரச்சொல்வதைப் போல ஈஸ்வரன் சொன்னதும் வேகமாக பையைத் தூக்கிக் கொண்டு கிளம்பினாள் மிருதுளா. 

 வீட்டின் வாசற்படியை மிருதுளா தாண்டும் போது ஈஸ்வரன் 

“அப்படியே போய் தொல திரும்பி வந்திடாதே போ போ” 

 என்று எதையோ விரட்டி அடிப்பதைப் போல சொன்னார். தன் குடும்பத்தின் முதல் வாரிசை சுமந்துக் கொண்டிருக்கும் மருமகளிடம் சொல்ல வேண்டியவையா இவை. பெரியவர்கள் ஆசிர்வாதம் செய்து அனுப்பிவைக்கவேண்டியதை விடுத்து சாபம் கொடுத்து அனுப்புகிறார்களே!!!!  மனம் இருக்க வேண்டிய இடத்தில் இவர்களுக்கு எதை வைத்துப் படைத்துள்ளானோ ஆண்டவன் தெரியவில்லை. 

மிருதுளா நினைத்திருந்தால் அவர்கள் போட்ட பொய் முடிச்சுக்கள் அவிழ்ந்ததை பற்றி கேள்வி மேல் கேள்வி கேட்டிருக்கலாம். ஆனால் அவள் அப்படி எதுவுமே செய்யவில்லை ஏனென்றால் அவற்றை நவீன் இல்லாத நேரத்தில் கேட்டால் மூத்த தம்பதியர் எப்படி வேண்டுமானுலும் திரித்து விட்டுவிடுவார்கள் என்றும் அதைப் பற்றி பேசும் போது சம்பந்தப்பட்ட நவீன் இருக்க வேண்டும் என்றும் நியாயமாக எண்ணியதால் அவள் வாயைத் திறக்கவில்லை. துளியும் நியாமில்லாமல் நடந்துக் கொள்ளும் மூத்த தம்பதியர் போல அவள் நடந்துக் கொள்ளாதது அவளின் பொறுமையான குணத்தின் வெளிப்பாடே.

மிருதுளாவை நவீன் திருமணம் செய்துக் கொண்டதே பிடிக்காதவர்கள் அவளை ஆரம்பத்தில் தங்களுடன் வைத்து சிறப்பாக செய்ய திட்டமிட்டு, அதிலிருந்தும் தப்பிய மிருதுளா கடைசியில் சிக்கிக் கொண்டாள் என்பதற்காக அவர்கள் மனதிலிருந்த வஞ்சம் அனைத்தையும் நஞ்சாக கக்கி தீர்த்துக் கொண்டனர். 

அவர்களுக்கு மாசமான மருமகளைப் பார்த்துக் கொள்ள முடியவில்லை. மிருதுளா வந்த நாளிலிருந்து இன்று வரை ஒரு பாயசம் கூட வைத்துக் கொடுக்க மனமில்லாத மாமியாரிடம் வேறெதை எதிர்பார்க்க முடியும். ஆமாம் பிள்ளைப் பெத்துக்க ஏன் அவசரப்பட்டாய் என்று கேட்ட உத்தமியாயிற்றே.  அப்பேர்ப்பட்டவளிடம் எதையுமே எதிர்பார்க்க முடியாதுதான். மேலும் அந்த பெண்ணிற்கு சரியான சாப்பாடும் குடுக்காமல், தூங்கவும் விடாமல் அலக்கழித்தார்கள். ஆனால் அவர்கள் சொன்னது அனைத்தையும் முகம் சுளிக்காமல் செய்தாள் மிருதுளா. 

நவீன் இல்லாத நேரத்தில் இப்படி இவர்கள் நடந்துக் கொண்டது சரியில்லை தான் ஆனால் ஏன் அப்படி நடந்துக் கொள்ள வேண்டும்? இதற்கு பின்னாலும் மூத்த தம்பதியர் ஏதாவது திட்டம் தீட்டிவைத்துள்ளார்களா? 

அந்த மிருகக் கூண்டிலிருந்து தப்பித்து பிழைத்தால் போதும் என்று தன் பையைத் தூக்கிக் கொண்டு, அழுது வீங்கிய முகத்துடனும், கண்ணில் கண்ணீருடன் வேகமாக வீட்டைவிட்டு வெளியேறினாள் மிருதுளா. அவர்கள் அவ்வளவு இழிவாக பேசியிருந்தாலும் மிருதுளா ஒரு வார்த்தைக் கூட தவறாகவோ மரியாதைக் குறைவாகவோ பேசவில்லை. அவளால் இதை மறக்க முடியுமா? எளிதில் மறக்கக்கூடியதா அவர்கள் பேசியவை?  அப்படிப்பட்ட பெண்ணையும் அவள் தாயையும் பழித்துப் பேசும் இவர்கள் என்ன ஆகிறார்கள் என்பதை காலம் நிச்சயம் வெளிச்சமிட்டு காட்டத்தான் போகிறது. 

தொடரும்…..

டக் டக் டக் டக் டக்!!! என்று கதவைத் தட்டும் சப்தம் கேட்க மிருதுளா மெல்ல எழுந்து கதவைத் திறந்தாள். பவின் நின்றிருந்தான். 

“குட் மார்னிங் பவின். என்ன இவ்வளோ காத்தால வந்து கதவைத் தட்டுற?”

“மன்னி அப்பா உங்களை உடனே கூட்டிண்டு வரச்சொன்னா. அது தான் உங்களை எழுப்பி கூட்டிண்டு போக வந்தேன்”

“என்ன ஆச்சு? நீ போ நான் வர்றேன்”

“அதெல்லாம் எனக்கு ஒண்ணும் தெரியாது ….கொஞ்சம் சீக்கிரம் கீழே வாங்கோ”

“இருப்பா நாங்க நைட் பண்ணண்டு மணிக்கு தான் வந்தோம். தூங்கும்போது ஒரு மணி ஆச்சு. கொஞ்ச நேரத்துல கீழே வர்றேன்னு அப்பாட்ட சொல்லு”

“இல்ல மன்னி உடனே வாங்கோ இல்லாட்டி அப்பா கோபப்படுவா”

“புரிஞ்சுக்க மாட்டேங்கறயே பவின். சரி வா “

நவீனாவது தூங்கட்டும் என்று கதவை சாத்திவிட்டு பவினுடன் கீழே போனாள் மிருதுளா. மாடிப்படி கீழேயே இருந்த பென்ச்சில் அமர்ந்திருந்தார் ஈஸ்வரன். பவினும் மிருதுளாவும் இறங்கி வருவதைப் பார்த்ததும்

“என்னடா இவ்வளவு நேரமா கீழே வர்றதுக்கு?”

“இல்லப்பா மன்னி தான் ….”

“என்னவாம் உன் மன்னிக்கு?”

“இதோ வந்துண்டே இருக்காப்பா”

“ஏன்ம்மா பெரியவா உடனே வான்னு சொல்லி அனுப்பினா கிடுகிடுவென வரண்டாமோ!!! அத விட்டுட்டு மசமசன்னு கேள்வி மேல கேள்வி கேட்டுண்டு இருக்க?”

“அதுக்கில்லப்பா நாங்க ஈரோட்டிலிருந்து வந்ததே ரொம்ப லேட்டு…”

“உங்கள யாரு லேட்டா வரச்சொன்னா? சரி சரி வந்து சட்டுபுட்டுன்னு எல்லாருக்கும் காபி போடு”

“ஏன் அம்மா இல்லையா? எங்கயாவது போயிருக்காளா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை அவ ஆத்துக்கு தூரம் அதனால செய்யமாட்டா. இன்னும் இரண்டு நாளைக்கு நீதான் காலை காபிலேந்து நைட்டு டின்னர் வரைக்கும் செய்யணும். புரிஞ்சுதா. போ போ போய் சீக்கிரம் காபியைப் போடு”

“என்னது ஆத்துக்கு தூரமா?”

“ஆமாம் ஏன் ஏதோ சந்தேகத்தோட கேட்கிற?”

“இல்லை சந்தேகமெல்லாம் இல்லை. சரி இதோ ஃப்ரெஷ்ஷாகிட்டு வந்து காபி போட்டுத் தர்றேன். ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்”

என்று கூறிவிட்டு பாத்ரூமிற்குள் சென்று தன் மனதினுள்

“போச்சு அப்போ இன்னும் ரெண்டு நாளைக்கு நான் என் வீட்டுக்கு போக முடியாது. சூப்பர். இப்படி ஆச்சுன்னா யாரென்ன பண்ண? என்னமோ நவீ சொன்னாரே …எல்லாம் பேசியாச்சு நிச்சயம் இன்னைக்கு போவோம்ன்னு …எழுந்து வரட்டும் கேட்கறேன்”

“என்ன பாத்ரூமுக்குள்ள பேச்சு சத்தம் கேட்கறது!!! அங்க யார்கிட்ட பேசிண்டிருக்க?”

என்று ஈஸ்வரன் வெளியே இருந்து குரல் கொடுக்க அப்போதுதான் அது அவளின் மைன்ட் வாய்ஸ் இல்ல நிஜமாகவே பேசியிருக்கிறாள் என்று புரிந்தது மிருதுளாவிற்கு உடனே டவலை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டே வெளியே வந்து 

“நான் பேசலை!!! உங்களுக்கு எப்படி பாத்ரூமிலிருந்து பேச்சு சத்தம் கேட்டிருக்கும்?”

“நீ பேசறா மாதிரி தான் கேட்டுது”

ஹாலுக்குள் சென்ற மிருதுளா பார்த்தது அவள் மாமியார் ஒரு மூலையில் அமர்ந்திருந்ததை. உடனே பர்வதத்திடம்

“நோ வரீஸ் மா. நான் பார்த்துக்கறேன். நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்கோ”

என கூறிக்கொண்டே அனைவருக்கும் காபி போட்டுக் கொடுத்தாள் மிருதுளா. தனது காபி தம்பளருடன் வந்து அமரும்போது நவீன் ஹாலினுள் நுழைந்தான். அவனுக்கு காபி போட எழமுயன்றாள் அப்போது நவீன்

“ஏய் மிருதுளா ஏன் இவ்வளவு சீக்கிரம் எழுந்துண்ட? எப்ப எழுந்த?”

“நான் அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்துண்டாச்சு”

“எதுக்கு அவ்வளவு சீக்கிரம்? அப்போ நீ ஒரு நாலு ஆர் அஞ்சு மணி நேரம் தான் தூங்கியிருக்க!!! அது எப்படி பத்தும்?”

அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் தனது காபியை நவீனுக்கு கொடுத்துவிட்டு தனக்கு மீண்டும் காபி போட்டுக் கொண்டு வந்து அமர்ந்ததும் ப்ரவின்

“மன்னி எனக்கு காலேஜ் போகணும் கொஞ்சம் சீக்கிரம் டிபன் பண்ணிடுங்கோ”

“சரி ப்ரவின். இதோ காபியை குடிச்சுட்டு பண்ணிடறேன்”

“ஏன் நீ பண்ணணும்?” 

அதற்கும் மிருதுளா பதில் கூறாமல் காபியை குடித்துவிட்டு இட்டிலியும் வெங்காய சட்டினியும் செய்தாள். டிபன் செய்துக் கொண்டே மத்திய சாப்பாடும் தயார் செய்தாள். அனைவருக்கும் ஏழரை மணிக்கெல்லாம் டிபன் பரிமாறப்பட்டது. பவினும் ப்ரவினும் டிபன் சாப்பிட்டு விட்டு மத்தியத்திற்கு லஞ்சும் கட்டிக் கொண்டு காலேஜுக்கு கிளம்பினர். பின் அடுப்படியை சுத்தம் செய்து பாத்திரங்களை எல்லாம் தேய்த்து வைத்து விட்டு ஹாலுக்குள் வந்தவளிடம் பர்வதம்…

“மத்தியானத்துக்கு என்ன பண்ணிருக்க? லெமன் ரைஸ்ஸா இல்ல தேங்காய் சாதமா இல்ல தயிர் சாதமா?”

“ஏன் அப்படி கேட்கறேங்கள்?”

“இல்ல டிபனும் செஞ்சு சாப்பாடும் செய்திருக்க… அப்போ ஏதாவது கலவ சாதமா தான் இருக்கும் அது தான் கேட்டேன்”

“முட்டைக் கோஸ் கூட்டும் கொத்தமல்லி துவயலும் செய்திருக்கேன்.”

“ஓ!! அப்படியா அப்போ ப்ரவினும் பவினும் அதைத் தான் கட்டிண்டு போயிருக்காளா?”

“ஆமாம் கூட்டு சாதமும் துவயலும் தான் கட்டிக் கொடுத்திருக்கேன். நம்ம மூணு பேருக்கு ஒரு பண்ணண்டு மணி போல சாதம் வைக்கறேன். எல்லா வேலையும் ஆயாச்சு. பஸ்ஸில் டிராவல் பண்ணி வந்ததில் ஒரே டையர்டா இருக்கு அதுவுமில்லாம தூக்கமும் சரியாகலை அதுனால நான் போய் கொஞ்ச நேரம் தூங்கிட்டு வர்றேன்”

என்றுக் கூறிக் கொண்டே மெல்ல மாடிப்படி ஏறும் போது கொள்ளப்பக்கம் பார்த்தாள் அங்கே தூரத்துணி காய வைக்கும் கொடியில் ஒரு துணி கூட காயவைக்கப் படவில்லை. இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன் சானிடரி நாப்கின் எல்லாம் புழக்கத்தில் இருக்கவில்லை. பெண்கள் காட்டன் துணிகளையே உபயோகப் படுத்தினார்கள். அதற்காக  தனி துணி காயப் போடும் கொடியையும் தங்கள் வீட்டின் பின்புறம் கட்டி வைத்திருப்பார்கள். மிருதுளா மாடிக்கு உறங்கச் செல்லும் போது மணி பத்தரை அதுவரை எந்த துணியும் தன் மாமியார் காய வைக்கவில்லை என்பது அவளின் மனதில் அதுவரை இல்லாத சந்தேகத்தை கிளப்பியது. அதை கேட்பதற்காக மீண்டும் கீழே போக வேண்டுமே, தூக்கம் வேற கண்ணை அசத்த அதுபற்றி தூங்கி எழுந்து விசாரித்துக் கொள்ளலாமென்று தங்கள் ரூமுக்குச் சென்று உறங்கினாள். 

மணி சரியாக பதினொன்றரை ஆனதும் நவீன் மிருதுளாவை எழுப்பினான். மிருதுளா நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். அவளை எழுப்ப மனமில்லாமல் கீழே வந்து அமர்ந்தான் அப்போது ஈஸ்வரன்..

“என்ன உன் பொண்டாட்டி எழுந்திரிக்கலையோ? அவ எப்ப எழுந்து எப்போ சாதம் வச்சு நாம சாப்பிடறதாம்?” 

என்று கேட்க அவரிடம் தன் மனைவிக்காக பேசாமல் மீண்டும் அவளை எழுப்புவதற்காக மாடிக்குச் சென்றான். அவன் சென்று கதவைத் திறந்ததும் மிருதுளா விழித்துக் கொண்டாள். அவளிடம் 

“கொஞ்சம் சீக்கிரமா கீழே வர்றியா சாதம் வைக்கலைன்னு கத்தறா”

அதற்கும் பதில் ஏதும் கூறாமல் மெல்ல எழுந்து படிகளில் இறங்கிக் கொண்டிருக்கும் போது அவள் பின்னாலிருந்து நவீன்

“ஏய் மிருது ஏன் காலைலேந்தே என்னை அவாய்டு பண்ணற?”

அவன் கேள்விக்கும் பதில் சொல்லாமல் கீழே இறங்கிச் சென்று குக்கரில் சாதம் வைத்தாள். ஒரு மணி அளவில் நவீனுக்கும் ஈஸ்வரனுக்கும் சாப்பாடு போட்டுவிட்டு தன் மாமியாருக்கும் சாப்பாடு கொடுத்துவிட்டு தானும் அமர்ந்து சாப்பிட்டாள். மீண்டும் பாத்திரங்களை எல்லாம் தேய்த்து வைத்து விட்டு மாடிக்குச் செல்லும் போது கொள்ளப்பக்கம் அந்த கொடியைப் பார்த்தாள் அப்போதும் அதில் எந்த துணியும் காயவில்லை. அப்போது அவளின் சந்தேகம் ஊர்ஜிதமானது. ரூமில் நவீன் வரவுக்காக காத்திருந்தாள். 

நவீன் ஒரு அரை மணி நேரம் கழித்து வந்தான். வந்தவன்

“என்ன மிருது தூங்கலையா?”

“எனக்கு உங்ககூட கொஞ்சம் பேசணும்”

“என்ன சொல்லு மிருது”

“நாம எப்போ எங்காத்துக்கு போக போறோம்? என்னமோ நேத்து சொன்னேங்களே எல்லாம் க்ளியரா பேசியாச்சு ஈரோட்டுலேந்து வந்ததும் காலைல கிளம்பிடலாம்ன்னு இப்போ மத்தியானம் ஆயாச்சு!!”

“மிருதுளா ஐ டின்ட் எக்ஸ்பெக்ட் திஸ் சிட்டுவேஷன்!! நான் என்ன பண்ணறது?”

“நான் தான் நேத்தே சொன்னேன் இல்லையா நாம போகமுடியாதுன்னு! இப்போ அது தானே நடந்திருக்கு. இதுக்கு நீங்க தான் எனக்கு பதில் சொல்லணும். நாளன்னைக்கு நீங்க ஊருக்கு கிளம்பிடுவேங்கள் நான் என்ன பண்ணுவேன் இங்க வந்து இவ்வளவு நாள் ஆகறதே யாருக்காவது என்னை ஹாஸ்பிடலுக்கு செக்கப்புக்கு கூட்டிண்டு போகணும்ன்னு தோனவாவது செஞ்சுதா? இப்படியே இங்கேயே இருந்தேன்னா நானும் என் குழந்தையும் ஒரு வழி ஆகிடுவோம் உங்களுக்கு பரவாயில்லையா?”

“என்ன மிருது இது? என்னவோ இன்னைக்கு வந்த சிட்டுவேஷன் ஏதோ ப்ளான் போட்டுருக்காங்கற மாதிரி இருக்கு நீ சொல்லறது”

“ஆமாம் இதுவும் உங்க பெத்தவாளோட அருமையான ப்ளான் தான்”

“என்ன ஆச்சு உனக்கு மிருது? நீயா பேசறது?”

“ஆமாம் நவீ நானே தான். என்னால இதுக்கு மேலேயும் பொறுமையா இருக்க  முடியலை!! உங்க அம்மா இன்னைக்கு சொல்லற ரீஸன் அப்பட்டமான பொய். சரி நான் ஒண்ணு கேட்கறேன். இதுக்கு முன்னாடி உங்க அம்மா ஆத்துக்கு தூரமாகும் போதெல்லாம் யார் காபி போட்டா? யார் சாப்பாடு சமைச்சா? அப்போ நான் இல்லாததால தெரிஞ்சுக்கறதுக்காக  கேட்கறேன்”

“அப்படி எல்லாம் எனக்கு தெரிந்து நான் இருந்த போதெல்லாம் இப்படி உட்கார்ந்ததில்லை”

“இல்லை ல இப்போ மட்டும் என்ன திடீர் மடி ஆச்சாரம் எல்லாம்? இதுலயே உங்களுக்கு புரியலை? இதை வச்சு மட்டும் நான் சொல்லலை இன்னும் ஒரு விஷயமிருக்கு அதை வச்சுத் தான் ஊர்ஜிதமா என்னால் சொல்ல முடியறது உங்க அம்மா பொய் சொல்லறான்னு”

“அது என்ன விஷயம்”

“உங்க அம்மா சானிடரி பேட்ஸ் யூஸ் பண்ணறவா இல்லை அப்போ துணி தான் யூஸ் பண்ணணும். ஆனா காலையிலேந்து இப்போ வரைக்கும் தூரத்துணி காய வைக்கிற கொடியில ஒரு துணிக் கூட காயறதை நான் பார்க்கலை. சரிப்பா  சானிடரி பேட் யூஸ் பண்ணினா கூட அதை போடும் பக்கட் வித் கவரும் “விச் ஐ வாஸ் யூஸிங் இம்மீடியட்லி ஆஃப்டர் அவர் மேரேஜ்” அதுவும் மூலையில் சும்மா தான் கிடக்கு. இதெல்லாம் வச்சுப் பார்த்தா எனக்கு இந்த வீட்ல ஏதோ பெரிசா நடக்கப்போறதுன்னு தான் தோன்றது. தயவுசெய்து என்னை எங்க ஆத்துல விட்டுட்டு நீங்க ஊருக்குப் போங்கோ ப்ளீஸ் நவீ”

“சரி சரி டென்ஷன் ஆகாதே அமைதியா இப்போ கொஞ்ச நேரம் தூங்கு.”

என்று மிருதுளாவைத் தூங்க சொல்லிவிட்டு நவீன் அவள் சொன்னதை எல்லாம் தன் மனதில் அசைப்போட்டுப் பார்த்தான். அப்போது மாடிப்படி கீழே இருந்து ஈஸ்வரன் 

“நவீன் நவீன்!! டேய் நவீன்”

என்று அழைக்கும் குரல் கேட்டது. எங்கடா மிருதுளாவை எழுப்பி விட்டுவிடுவார்களோ என்று எண்ணி வேகமாக ரூம் கதவை சாத்திவிட்டு கீழே சென்று

“ஏன் இப்படி கத்தறாய்”

“ஆமாம் நீ தான் பெல்லையும் கழட்டிட்ட பின்ன கத்தி தானே கூப்பிட முடியும்”

“சரி என்ன வேணும்? எதுக்காக கூப்பிட்ட?”

“என்னடா உன் பொண்டாட்டி ரொம்ப துள்ளறா? இதெல்லாம் தட்டி கேட்க மாட்டியா?”

“அவளை இன்னைக்கு அவா ஆத்துக்கு கூட்டிண்டு போறதா சொல்லியிருந்தோம் ஆனா போக முடியாம போயிடுத்து அதுதான் அவளுக்கு வருத்தம்.”

“அதுக்கு என்னெல்லாம் பேசறதுன்னு ஒரு வெவஸ்த்தை இல்ல?”

“ஆமாம் அவ என்னத்த பேசினான்னு நீ இப்போ இப்படி கேட்கிற?”

“ஆமாம் அவ பேசினது தான் இந்த தெருவுக்கே கேட்டிருக்குமே!! கீழே இருக்கற எங்களுக்கு கேட்காதா என்ன?”

“இல்லையே அவ அவ்வளவு சத்தமா எல்லாம் பேசலையே!!! மெதுவா தானே பேசினா அது எப்படி கீழே கேட்டிருக்கும்!!!”

” சரி சரி அத விடு பக்கத்தாத்து ரஞ்ஜனி மாமி இருக்கா இல்லையா அவாளுக்கு வாழையிலை வேணுமாம் கொஞ்சம் கொள்ளப்பக்கம் போய் ஒரு இரண்டு வாழையி லையை வெட்டிக் கொண்டு வந்து என்கிட்ட தாயேன். அதுக்குத்தான் உன்னை கூப்பிட்டேன்”

“லஞ்ச் எல்லாம் எல்லாரும் சாப்பிட்டிருப்பாளே இப்போ எதுக்கு வாழையிலை அவாளுக்கு?”

“ஏதோ கேட்டா தர்றேன்னுட்டேன் நீ போய் வெட்டிண்டு வா”

“சரி சரி இரு கத்தி எடுத்துண்டு போயிட்டு வர்றேன்”

“நானும் வரட்டுமா?”

“என்னத்துக்கு நானே போயிட்டு வர்றேன்”

“இல்ல இரு வர்றேன்”

அப்பாவும் பிள்ளையுமாக வீட்டின் பின்புறம் சென்றனர். நவீன் வாழையிலையை வெட்டிக் கொண்டிருக்கும் போது பர்வதம் அங்கே சென்று ஒரு துணியை அந்த கொடியில் காய வைத்தாள் அதை நவீன் கவனிக்காததால் தன் கணவரிடம்

“கொஞ்சம் நகந்துக் கோங்கோ மேல பட்டுடப் போறது” என்றாள் அதற்கு ஈஸ்வரன்

“சரி சரி ஓரமா போ” என்றார்

பர்வதம் குரல் கேட்டதும் நவீன் திரும்பிப் பார்த்தான் அவள் பின்னாலிருந்த கொடியில் திடிரென துணி இருந்தது. பர்வதம் ஈஸ்வரன் மற்றும் நவீனிடம்

“மாமி இலை வேண்டாம்ன்னுட்டா” 

“பின்ன ஏன் இப்போ இதை வெட்டினேனாம்? எப்ப சொன்னா?”

“நீங்க ரெண்டு பேரும் இலை வெட்ட வந்தப்போ தான் அவா புள்ளைய அனுப்பிச் சொன்னா”

“சரி இப்போ என்ன இந்த இலையை நாம நைட்டுக்கு யூஸ் பண்ணிண்டுட்டா போறது” என்று சமாளித்தார் ஈஸ்வரன்

நடந்தவைகளை மாடியிலிருந்து பார்த்துக் கொண்டே கீழே இறங்கி வந்தாள் மிருதுளா. இவர்கள் கொள்ளப்பக்கத்தில் செய்த பேச்சு சத்தம் மாடியில் உறங்கிக்கொண்டிருந்த மிருதுளாவை எழுப்பியது. அவள் கண்ட காட்சியை உண்மை என நம்பி தான் தவறாக எண்ணிவிட்டோமென மனதில் எண்ணி சங்கடப்பட்டாள். அதே நேரம் கீழே தன் தந்தையுடன் நடந்த பேச்சு வார்த்தைகளும் மற்றும் வீட்டின் பின்புறம் நடந்தேறியதையும் பார்த்த நவீன் மனதில் அப்போது தான் சந்தேகம் எழ ஆரம்பித்தது. 

மொத்தத்தில் நவீனையும் மிருதுளாவையும் நன்றாக குழப்பி அவர்களை ராமானுஜம், அம்புஜம் வீட்டிற்கு செல்ல விடாமல் செய்தனர் மூத்த தம்பதியர். மிருதுளாவும் நவீனும் இருவருமே சற்று சாந்தமான குணமும், சட்டென்று பெரியவர்களை எடுத்தெறிந்து பேசாத குணமும், மரியாதையுடன் நடந்துக் கொள்ளும் பாங்கும் இருந்ததால் இது பெரிதாகவில்லை. இதே இடத்தில் மிருதுளாவுக்கு பதில் ஒரு சமத்து சாமர்த்தியம் மிகுந்த பெண் இருந்திருந்தால் காட்சியே மாறியிருக்கும்.

மிருதுளாவின் வளர்ப்பு அப்படி. ஆனால் இந்த மாதிரியான வளர்ப்பு… சம்மந்தப் பட்ட பெண்ணை தான் மிகவும் பாதிக்கும் என்பதை புரிந்துக் கொள்ளாமல் தன் பெண் நல்லவளாக, பொறுமையில் பூமாதேவியாக, சமையலில் அன்னபூரணியாக இருக்க வேண்டும் என்று தான் அந்த காலத்தில் பெண் பிள்ளைகளை வளர்த்தனர் பெற்றோர்கள். 

நரிக்கூட்டத்தில் முயலாக இருந்தால் பிழைக்க முடியுமா? 

இந்த காலம் போலும் இல்லாமல் அந்த காலம் போலும் இல்லாமல் சுயமரியாதையின் முக்கியத்துவம் சொல்லி வளர்த்தல் வேண்டும். தேவையானதற்கு மட்டும் பொறுத்துப் போ எல்லாவற்றிற்கும் பொறுத்துப் போகாதே, எல்லாவற்றையும் குதர்க்கமாக எடுத்துக் கொண்டு வம்பு வளர்க்காதே, அதே நேரம் தப்பு உன்னிடமில்லை எனில் எதிர்க்கவும் தயங்காதே, குடும்பத்திற்கு என்றுமே முன்னுரிமைக் கொடு அதில் நீயும் அடங்குகிறாய் என்பதை மறவாதே என்று சொல்லி வளர்த்தல் வேண்டும். ஏனெனில் ஒரு பெண்ணின் வளர்ப்பு சரியாக இருந்தால் அடுத்த சந்ததி நன்றாக இருக்கும் என்பார்கள். 

ஆக இன்றும் நாளையும் மிருதுளாவால் அவள் வீட்டிற்கு போக முடியாமல் போனது… உண்மையிலேயே மிருதுளா முதலில் யூகித்ததுப் போல பர்வதத்தின் சூழ்ச்சியா இல்லை அவள் உறங்கும்போது வீட்டினுள் நடந்த பேச்சு வார்த்தை அறியாமல் இறுதியில் கண்ட காட்சியை வைத்து மட்டும் தன்னைத் தானே தவறிழைத்ததாக எண்ண வைத்த  சூழ்நிலையா?? 

தொடரும்….. 

மிருதுளா என்ன ஆனாள்? தொடர்கதை இன்று ஐம்பதாவது அத்தியாயத்தை எட்டியுள்ளது. இந்த  தொடரைத் தொடர்ந்து படித்து ஆதரவு அளித்து வரும் வாசகர் நல்லுள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்🙏 வாருங்கள் இப்பொழுது நமது மிருதுளாவின் ஈரோடு பயணம் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

ஈரோடு பஸ்டாண்ட் வந்ததும் நவீனும் மிருதுளாவும் பஸ்ஸிலிருந்து இறங்கி அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து லட்சுமி வீட்டைச் சென்றடைந்தனர். ஆட்டோகாரருக்கு பணம் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே வீட்டினுள்ளேயிருந்து லட்சுமி 

“வாங்கோ வாங்கோ நவீன் மிருதுளா. வாங்கோ”

என்று கூறிக்கொண்டே வாசலுக்கு வந்து அவர்களை வீட்டினுள் அழைத்துச் சென்றாள்.

“அத்தை எப்படி இருக்கேங்கள்?”

“இப்பத் தானே பார்த்துண்டோம் மிருதுளா. என்னமோ பார்த்து பல வருஷம் ஆனா மாதிரி கேட்கிற? நன்னா இருக்கேன். வா வா உள்ள வா. வாடா நவீன்”

“ஹாய் அத்திம்பேர் எப்படி இருக்கேங்கள்? எங்க? ஆத்துல யாரையுமே காணுமே!!”

“வாப்பா வா. நான் நன்னா இருக்கேன் நீ எப்படி இருக்க? வா மா மிருதுளா வா வா. எல்லாரும் அவா அவா வேலைய பார்க்கப் போயிருக்கா. நான் ரிட்டையர்டு அதனால வீட்டிலேயே இருக்கேன். எல்லாரும் சாயந்தரம் ஆறு மணிக்கு வந்துடுவா. இப்படி உட்காரு.”

என்று அத்திம்பேரும் நவீனும் அமர்ந்து வீட்டுக் கதை முதல் அரசியல் வரை அலச ஆரம்பித்தனர். மிருதுளா சற்று நேரம் அங்கு அமர்ந்திருந்து விட்டு மெல்ல எழுந்து லட்சுமியை அழைத்தவாரே அடுப்படிக்குள் சென்றாள்

“அத்தை அத்தை என்ன பண்ணறேங்கள். நான் வேணும்னா ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா?”

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் மா. எல்லாம் ஆயிடுத்து. அப்பளம் பொறிக்கறது மட்டும் பாக்கி இருந்தது அதையும் இதோ முடிச்சாச்சு. சாப்பிடறேங்களா ரெண்டு பேரும்?”

“டைம் ஆகலையே அத்தை. மணி பதினொன்னு தானே ஆகறது. நீங்க என்ன ப்ரேக் பாஸ்ட் சாப்பிட்டேங்கள்?”

“நாங்க ப்ரேக் பாஸ்ட் எல்லாம் சாப்பிட மாட்டோம்”

“அப்படின்னா இன்னமும் சாப்பிடாமயா இருக்கேங்கள்?”

“எங்காத்துல காலை ல எழுந்து ஃபுல் சமையல் செய்திடுவேன். பசங்க எல்லாரும் சாப்பிட்டுட்டு டிபன் பாக்ஸ்ல எடுத்துண்டும் போயிடுவா நானும் அத்திம்பேரும் இரண்டு காபி குடிப்போம். அப்புறம் ஒரு பத்தரை மணிக்கு சாப்பாடு சாப்டுட்டுவோம். மதியம் ஒரு மூணு மணிக்கு ஏதாவது டிபன் செஞ்சு காபி கூட எடுத்துப்போம். எல்லாருக்கும் டிபனை செய்தும் வச்சுடுவேன். பசங்க எல்லாரும் ஆறு ஆறரைக்கு வருவா எல்லாம் முகம் கை கால் கழுவிட்டு ஒண்ணா உட்கார்ந்து ஏழு மணிக்கு டிபன் சாப்பிடுவோம். ராத்திரி எல்லாருக்கும் ஒரு க்ளாஸ் பால் அதோட அடுப்படி கடை மூடப்படும்”

“ஓ!! ஓகே ஓகே. அப்படின்னா நீங்க ரெண்டு பேரும் இன்னும் சாப்பிடலை இல்லையா?”

“ஆமாம் ஆனா மூணு காபி ஆயாச்சு தெரியுமோ”

“அப்போ வாங்கோ எல்லாரும் சாப்ட்டிடலாம்”

“உங்களுக்கு டைம் ஆகலைன்னு சொன்னயே”

“இல்ல அத்தை பரவாயில்லை உங்க சமையல் வாசம் சாப்பிடு சாப்பிடுன்னு சொல்லறது. நான் எல்லாத்தையும் ஹால்ல கொண்டு போய் வைக்கட்டுமா?”

“சரி இந்தா இதெல்லாம் வரிசையா கொண்டுபோய் வை நானும் எடுத்துண்டு வரேன். ரெண்டு பேருமா செய்வோம்”

“என்ன அத்தை நிறைய ஐட்டம்ஸ் செய்திருக்கேங்கள் போல?”

“பின்ன நீங்க கல்யாணமானதுக்கப்பறம் மொதோ மொதோ வர்றேளே செய்யாமல் இருக்க முடியுமா! என்னத்த பெரிசா செய்துட்டேன் வழக்கமான சாம்பார், ரசம், பீன்ஸ் உசிலி, உருளை காரகறி, பூசணி கடலப்பருப்பு கூட்டு, பாயசம், வடை, அப்பளம், மோர் அவ்வளவு தான்.”

“சுப்பர் அத்தை. தாங்கஸ்”

“என்னத்துக்கு தாங்கஸ் எல்லாம் சொல்லிண்டிருக்க? சரி காலை ல உங்காத்துல என்ன டிபன் சாப்பிட்டேங்கள்? நேர்த்த சாப்பிட்டிருப்பேங்களே?”

“இட்டிலி தேங்காய் சட்னி. ஆமாம் அத்தை ஆறரை மணிக்கெல்லாம் சாப்பிட்டாச்சு”

“ஓ! பர்வதத்தோட வழக்கமான புளிக்காத கல்லு இட்டிலியா? அது கின்னுன்னு வயித்துல கிடக்குமே”

“நான் ஒண்ணு தான் சாப்பிட்டேன். அவ்வளவு தான் என்னால சாப்பிடவும் முடியும்”

“உங்க மாமியார் சுடற கல்லு இட்டிலில ஒண்ணு சாப்பிடறதே கஷ்டம் தான். பாவம் நீ. சரி இரு நான் போய் நவீனையும் அத்திம்பேரையும் சாப்பிட வரச்சொல்லறேன்”

நவீனும், அத்திம்பேரும் கை கால் கழுவிட்டு சாப்பிட வந்தமர்ந்தனர். அப்போது லட்சுமி

“மிருதுளா நீயும் நவீனோட சேர்ந்து உட்கார்ந்துக்கோ”

“பரவாயில்லை அத்தை அவா ரெண்டு பேரும் சாப்பிடட்டும் நாம ரெண்டு பேருமா சாப்ட்டுப்போம்”

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் நீ போய் அவன் பக்கத்துல உட்காரு போ”

“என்னத்துக்கு இப்படி பேசிண்டே இருக்கேங்கள் பேசாம நீங்களும் உட்காருங்கோ அத்தை அவா அவாளுக்கு வேண்டியதை அவா அவாளே போட்டுப்போம். எதுக்கு ஃபார்மாலிட்டிஸ் எல்லாம்.”

“அதுக்கில்லடா நவீன். சரி உங்களுக்கெல்லாம் ஃபர்ஸ்ட் பறிமாறிட்டு நானும் உட்காந்துக்கறேன் அதுக்கப்புறம் வேணுங்கறத அவா அவா எடுத்துக்கோங்கோ சரியா”

“ஓகே டன் அத்தை”

அனைவருமாக அமர்ந்து ரசித்து ருசித்து உண்டனர். சஷ்டியப்த பூர்த்தியில் சாப்பிட்டப் பின் அன்று தான் மீண்டும் நல்ல சாப்பாடு கிடைத்தது மிருதுளாவிற்கு. நிம்மதியாக சாப்பிட்டாள். அனைவரும் சாப்பிட்டு எழுந்ததும் மிருதுளா எல்லா பாத்திரங்களையும் உள்ளே கொண்டு போய் வைக்க உதவினாள் பின் சாப்பிட்ட இடத்தை நீர் தெளித்து சுத்தம் செய்தாள். நவீனும் அத்திம்பேரும் சாப்பிட வருவதற்கு முன் விட்ட அரசியல் நாட்டு நடப்பு பேச்சை மீண்டும் தொடர்ந்தனர். லட்சுமி மிருதுளாவிடம்…

“அடியே பொண்ணே நீ வா. இந்தா தலைகாணி சித்த இப்படி படுத்துக்கோ. நாலு மணி நேரம் பஸ்ஸுல உட்கார்ந்துண்டே வந்திருக்க இடுப்பு வலிக்கும். இந்தா வா நானும் படுத்துக்கறேன்”

“தாங்கஸ் அத்தை எனக்கு வலிக்க ஆரம்பிச்சுது அது தான் சுவற்றில் சாய்ந்து உட்கார டிரைப் பண்ணிண்டிருந்தேன்”

என்று கூறிக் கொண்டே இருவரும் படுத்துக் கொண்டனர். அப்பொழுது மிருதுளா 

“அத்தை நாங்க அடுத்த தடவை நவீன் ஊருக்கு வரும்போது உங்க ஆத்துக்கு வரலாம்ன்னு இருந்தோம் ஆனா நீங்க சொன்னதால உடனே கிளம்பி வந்தேட்டோம்”

“நானும் உங்களுக்கு டைம் கிடைக்கும் போது வருவேங்கள்ன்னு தான் வற்புறுத்தலை ஆனா உங்க மாமனார் தான் நான் அங்க வந்திருந்தப்போ நம்மாத்துல நான் மட்டும் தான் உங்களுக்கு விருந்து கொடுக்கலைன்னு சிரிச்சுண்டே சொன்னா. ஏன் அதை விட்டு வைக்கணும்ன்னு சரிப்பா ஈஸ்வரா உன் புள்ளையும் நாட்டுப்பொண்ணையும் எங்காத்துக்கு அவாளுக்கு எப்போ சௌகர்யமோ அப்போ வரச்சொல்லு விருந்து வச்சுட்டாப் போச்சுன்னு சொன்னதுக்கு நாளைக்கே அனுப்பி வச்சுட்டாப் போச்சுன்னு ஈஸ்வரன் சொல்லும்போது நான் எப்படி மறுத்து சொல்லறதுன்னு நானும் சரின்னு சொல்லிட்டேன் இதோ நீங்களும் வந்தாச்சு விருந்தும் ஆயாச்சு”

“ஓ!! அப்படியா ஓகே ஓகே. அத்தை சாரி அத்தை நீங்க அங்கிருந்து டிரால் பண்ணி வந்ததும் விருந்து தயார் செய்யறா மாதிரி ஆயிடுத்து”

“விடு விடு மிருதுளா. உன் மாமியார் உனக்கு விருந்து சாப்பாடு சமைச்சுத்தந்திருக்காளா? சொல்லு”

“ஆங்!!! செய்திருக்கா” என்று மாமியாரை விட்டுக் கொடுக்காமல் பேசினாள் மிருதுளா ஆனால் பர்வதத்தை அக்கு வேறு ஆணி வேறாக தெரிந்து வைத்திருந்த லட்சுமிக்கு தெரியாதா என்ன? 

“ஓ!! மாமியாரை விட்டுக் கொடுக்காமல் பேசறயாக்கும். பர்வதத்துக்கு இப்படி ஒரு நாட்டுப்பொண் அந்த கடவுளின் திருவிலையாடலே தனி தான் போ”

என்று கூறிக்கொண்டே திரும்பி மிருதுளாவைப் பார்த்தாள் லட்சுமி. அவள் நன்றாக உறக்கத்திலிருந்தாள். அவளை தொந்தரவு செய்யாமல் அத்துடன் பேச்சை நிப்பாட்டிவிட்டு லட்சுமியும் உறங்கினாள். அந்த நேரத்தில் தூங்குவது லட்சுமியின் வாடிக்கையான விஷயமே. மணி மூணு ஆனதும் எழுந்துக் கொண்டாள் லட்சுமி. மிருதுளா அப்பொழுதும் உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் உறங்கும் அறையின் கதவை மெல்ல சாத்திவிட்டு வெளியே வந்து பார்த்தாள் லட்சுமி. ஹாலில் நவீனும் தன் கணவனும் உறங்கிக் கொண்டிருந்தார்கள். 

முகம் கை கால் கழுவிக் கொண்டு தலையை வாரி பின்னலிட்டு, முகத்தில் பவுடர் பூசி குங்குமமிட்டு அடுப்படிக்குள் சென்றாள் லட்சுமி. அன்று மாலை டிபனுக்கு லெமன் சேவை, தேங்காய் சேவை, புளி சேவை செய்வதற்குண்டான சேவையை காலையிலேயே பிழிந்து வைத்திருந்தாள். தாளிக்க வேண்டியதை மட்டும் நறுக்கி தாளித்து மூன்று வகையான சேவைகளையும் தயார் செய்து தேங்காய் சட்னி அறைக்க மிக்ஸியை போட்டதும் ஹாலில் படுத்தகிருந்த ஆண்கள் இருவரும் எழுந்துக் கொண்டனர்.

இருவரும் ஃப்ரெஷ்ஷாகி  வந்து அமர்ந்தனர். அப்போது நவீன் 

“அத்தை மிருது எங்கே?”

“அவ தூங்கிண்டிருக்கா நவீன். நல்லா தூங்கட்டும்ன்னு நான் தான் அந்த ரூம் கதவை சாத்திட்டு வந்தேன்” 

“சரி மணி ஆகிடுத்து நான் போய் அவள எழுப்பட்டும்”

“வேண்டாம் நவீன் எழுப்பாதே. மாசமான பொண்கள் தூங்கும் போது எழுப்பப்டாது. அவாளா எழுந்திரிக்க விட்டுடணும். அங்க தூங்கறது உன் ஆத்துக்காரி மட்டுமில்லை உன் கொழந்தையும் தான். நீ போய் இப்போ மிருதுளாவை எழுப்பினனா உன் குழந்தையும் சட்டுன்னு எழுந்திரிக்க வேண்டியிருக்கும். விட்டிடு அவளே எழுந்து வரட்டும்”

“ஓ!! சரி அத்தை. என்ன செய்யறேங்கள்? என்னன்னமோ செய்து வச்சிருக்கேங்கள்?”

“ஓ! இதுவா!! ஈவினிங் டிபன் தான். மூணு வகை சேவை, சட்னி, கொஞ்சமா சுண்டல் காபிக் கூட சாப்பிட. இதோ காபி போட்டுண்டிருக்கேன் ஆனதும் எடுத்துண்டு ஹாலுக்கு வர்றேன். நீ போய் உட்கார்ந்துக்கோ”

“சரி அத்தை” என்று நவீன் திரும்பினான் மிருதுளா தான் படுத்திருந்த அறைக் கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தாள். 

“நவீன் நான் ரொம்ப நேரம் தூங்கிட்டேன்னு நினைக்கறேன். இருங்கோ நான் போய் ஃப்ரெஷ்ஷாகிட்டு வர்றேன்”

“பரவாயில்லை மிருது மெதுவா வா”

அனைவரும் ஒன்றாக அமர்ந்து சுண்டல் சாப்பிட்டுக் கொண்டே காபியையும் அருந்தினர். மணி அஞ்சானது 

“அத்தை அத்திம்பேர் மணி அஞ்சாச்சு நாங்க கிளம்பறோம்” 

“என்னதிது நவீன்? இன்னும் நீங்க பசங்கள பார்க்கலையே? அதுக்குள்ள கிளம்பறேங்கள்? இருங்கோ இன்னும் ஒரு மணி நேரத்துல எல்லாரும் வந்திடுவா”

“அதுக்கில்ல அத்தை இப்போ கிளம்பினா தான் ஒன்பது மணிக்காவது வீடு போய் சேருவோம் அத யோசிச்சு தான் சொன்னேன் அதுவுமில்லாமல் இப்போ நடந்த ஃபக்ஷன்ல அவா எல்லாரையும் மீட் பண்ணினோமே”

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே சுந்தரேசனும் கஜேஷ்வரியும் வீட்டினுள் நுழைந்தனர். 

“வாங்கோ வாங்கோ நவீன் அண்ணா அன்ட் மன்னி”

என்று இருவரும் சற்று நேரம் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கையில் லட்சுமியின் மூத்த மகன் நாராயணனும் வந்து ஜோதியில் ஐக்கியமாகி பேசிக்கொண்டிருந்ததில் நேரத்தை  கவனிக்க தவறிவிட்டான் நவீன். அவர்களின் சுவாரஸ்யமான பேச்சுக்கிடையில் லட்சுமி..

“சரி சரி இப்படி பேசிண்டே இருந்தா எப்படி? எல்லாரும் போய் முகம் கல கால் கழுவிட்டு வாங்கோ டிபன் சாப்பிடலாம்”

என்றதும் தான் கைக் கடிகாரத்தைப் பார்த்தான் நவீன். மணி ஏழு காட்டியது. உடனே

“சரி அத்தை நாங்களும் கிளம்பறோம் மணி ரொம்ப ஆயிடுத்து”

“என்னடா நவீன் கிளம்ப வேண்டாம்ன்னு சொல்லலை எல்லாருமா உட்கார்ந்து டிபன் சாப்ட்டுட்டு கிளம்புங்கோ இல்லாட்டி பயணத்தப்போ மிருதுளாக்கு பசிக்கும் பா.”

“சரி அத்தை சாப்டுட்டே கிளம்பறோம்”

என்று அனைவரும் ஒன்றாக அமர, லட்சுமி பறிமாற பேசிக் கொண்டே சாப்பிட்டு எழுந்தனர். நவீனும் மிருதுளாவும் கிளம்புவதற்கு முன் அத்தை அத்திம்பேர் காலில் விழுந்து நமஸ்காரம் செய்தனர். லட்சுமி அவர்களுக்கு தாம்பூலம் கொடுத்து அனுப்பிவைத்தாள். அவர்களும் ஆட்டோ பிடித்து பஸ்டாண்ட் வந்து பஸ்ஸில் ஏறினர். பஸ் சற்று தூரம் போனதும் மிருதுளா நவீனிடம்….

“எங்காத்துல தலைதீபாவளிக்கு நல்ல சாப்பாடு சாப்பிட்டதுக்கப்பறம் இன்னைக்குத் தான் நல்ல சாப்பாடு சாப்பிட்டேன். உங்க அத்தை நல்லா சமைக்கறா”

“ம்… ஆமாம் ஆமாம்”

“என்ன பதில் ஒரு மாதிரி வர்றது”

“ஒருமாதிரி எல்லாம் இல்லை அவா என்னைக்குமே நல்லா சமைப்பா. எங்க அப்பா சைட்ல எல்லாருமே நல்லா சமைப்பா”

“அப்போ அம்மா சைட்டுல …..ம் ..ம்..ம்..அன்டர்ஸ்ஸுட்டு”

“ஹலோ என்ன ஃபுல் கிண்டல் மூட்ல இருக்கப் போல தெரியறது”

“சரி அதை விடுங்கோ உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்”

“என்னது அது?”

“உங்க அத்தை ஒண்ணும் நம்மள வரச்சொல்லலை. உங்க அப்பா தான் அவாள்ட்ட நக்கலா சொல்லி நம்மள ஈரோட்டுக்கு அனுப்பிருக்கா. அதை அத்தை சொல்லி தான் எனக்கு தெரிய வந்தது”

என்று லட்சுமி அவளிடம் சொன்னதை அப்படியே நவீனிடம் சொல்லி முடித்தாள் மிருதுளா. அதற்கு நவீன்

“அப்படியா!!! அதுதானே என்னடா என்கிட்ட அப்படி சொல்லிட்டு வீட்டுக்கு வான்னும் சொல்லிருக்காளேன்னு நினைச்சேன். இதுலயும் என் பெற்றோர் திருவிளையாடலா!!! இவாள்ட்ட என்ன சொன்னாலும் கேட்கமாடேங்கறாளே”

“நீங்க அவா கேட்கற மாதிரி எனக்கு தெரிஞ்சு ஒண்ணுமே சொன்னதில்லை சும்மா என்கிட்ட அப்படி பேசாதீங்கோ”

“உனக்கு தெரியாது மிருது. நான் அவாகிட்ட இந்த மாதிரியான கிறுக்குத் தனமான வேலைகள் எல்லாம் செய்யாதீங்கோன்னு எத்தனை தடவ சொல்லிருக்கேன் தெரியுமா!”

“சரி சரி அதை விடுங்கோ. நாளைக்கு என்னை எங்காத்துல கொண்டு போய் விடறேங்கள் சரியா”

“ஷுவர் ஷுவர். நாம நாளைக்கு உங்க ஆத்துக்குப் போறோம். நான் உன்னை அங்கே விட்டுட்டு தான் ஊருக்கு கிளம்புவேன்”

“அது நடந்தா சந்தோஷம் தான். பார்ப்போம். எத்தனை மணிக்கு நாம வீட்டுக்கு போய் சேருவோம்?”

“எப்படியும் பதினொன்றரை ஆகிடும். நீ என் மேல் சாஞ்சுண்டு தூங்கிக்கோ மிருது”

“இல்ல நான் அத்தை ஆத்துல மதியானம் நல்லா தூங்கிருக்கேன்”

இவ்வாறு பேசிக் கொண்டே வந்ததில் நேரம் கிடுகிடுவென ஓடியது. இருவரும் வீட்டுக்கு வந்து, மாடிப்படி வீட்டின் வெளியே இர்ந்ததால் கீழே உறங்கிக் கொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்யாமல் மாடிக்குச் சென்று படுத்துறங்கும் போது மணி பண்ணி ரெண்டு. விடியற்காலை அஞசு மணிக்கெல்லாம் அவர்கள் ரூம் கதவு

 டக் டக் டக் டக்  என்று சப்தம் எழுப்பியது. ஈரோட்டிலிருந்து பஸ்ஸில் டிராவல் செய்து வந்து ஐந்து மணி நேரம் மட்டுமே உறங்கிய மிருதுளாவிற்கு அவள் அறை கதவின் சப்தம் இனிமையாகப் போகிறதா இல்லை இம்சையாகப் போகிறதா என்பதை கதவு திறந்ததும் தெரிந்துக் கொள்வோம்.

தொடரும்…. 

இரவு முழுவதும் வலியால் சரியாக தூங்காமல், அதிகாலை மூன்று மணிமுதலே நன்றாக உறங்க ஆரம்பித்தாள் மிருதுளா. மறுநாள் விடிந்ததும் காலை ஆறு மணிக்கு அவர்கள் ரூம் கதவை தட்டும் சத்தம் கேட்டது. நவீன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். மிருதுளா சத்தம் கேட்டதும் எழுந்துவிட்டாள். மெதுவாக படுக்கையிலிருந்து எழுந்து கதவைத் திறந்துப் பார்த்தாள். பக்கத்து வீட்டு ஆறு வயது குட்டிப் பையன் நின்றிருந்தான். அவனிடம் 

“ஹேய் குட்டி பையா நீயா கதவ தட்டினது? கொஞ்ச நாளா ஆள காணமேன்னு நினைச்சிட்டு இருந்தேன்”

“ஆமாம் அக்கா நான் தான் தட்டினேன். நானே எந்திரிச்சிட்டேன் ஆனா நீங்க இன்னுமா தூங்கிக்கிட்டு இருக்கீங்க?”

“ஆமாம் குட்டி நான் தூங்கிக்கிட்டிருந்தேன். அக்காவுக்கு உடம்பு சரியில்லையா அதுனால தூங்கிட்டேன். உனக்கு உடம்பு சரியில்லைன்னா நீ என்ன பண்ணுவ?”

“அம்மா மருந்து தந்து தூங்க வைப்பாங்க அக்கா”

“அதே தான் நானும் செய்திட்டிருந்தேன். சரி நீ எப்படி காலை ல வந்திருக்க? எங்க ரூம் கதவ தட்டவா வந்த?”

“இல்லை அக்கா பர்வதம் மாமி தான் என்னைக் கூப்பிட்டு நீ கூட சீக்கிரம் எந்திரிச்சிட்டே ஆனா மிருதுளா அக்கா இன்னும் தூங்கிட்டு இருக்கா நீ போய் அவங்களை கதவத் தட்டி எழுப்பி விட்டிட்டுவான்னு சொன்னாங்க. சரி அக்கா நான் குளிச்சிட்டு ஸ்கூலுக்கு கிளம்பணும் பை”

“சரி டா குட்டி நீ போய் ஸ்கூலுக்குக் கிளம்பற வேலைப் பாரு. ஹாவ் அ நைஸ் டே குட்டிப் பையா”

என்று அந்த சிறுவனை அனுப்பிவிட்டு திரும்பினாள் நவீன் உட்கார்ந்துக் கொண்டிருந்தான். அவனிடம் 

“யுவர் அம்மா ஸ்டார்டட் சென்டிங் தட் ஸ்மால் பாய் அகேயின். சரி அடுத்ததா யாரையாவது அனுப்பறதுக்குள்ள நான் கீழே போறேன் நீங்க வாங்கோ”

“மெதுவா படில இறங்கிப் போ மிருது. நான் அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன்”

“சரி சரி குட் மார்னிங்”

என்று கூறிவிட்டு மெதுவாக படியில் இறங்கிச் சென்று ஃப்ரெஷாகி அடுப்படிக்குள் காபி போட சென்றாள். ஹாலில் பர்வதம் அமர்ந்திருந்தாள். மிருதுளா இரண்டு காபி போட்டுக்கொண்டு ஹாலுக்கு வருவதற்குள் நவீன் ஃப்ரெஷாகி வந்தான். இருவரும் காபி அருந்திக் கொண்டிருக்கும் போது ஈஸ்வரன்…

“நவீன் காபி குடிச்சிட்டு டிபன் சாப்ட்டுட்டு ரெண்டு பேருமா ஈரோடுல இருக்குற லட்சுமி ஆத்துக்கு போயிட்டு வாங்கோ”

“ஆனா அத்தை நேத்து தானே இங்க வந்துட்டு போயிருக்கா!! உடனே நாங்க எதுக்கு அங்க போகணும்? அதுவுமில்லாம அவா எல்லாரையும் அறுபதாம் கல்யாண விஷேசத்துல பார்த்தாச்சு அப்புறம் ஏன் இப்போ நாங்க போகணும்? எனக்குப் புரியலை. அதுவும் இல்லாம நான் இன்னும் மூணு நாள்ல ஊருக்கு கிளம்பணும். ஆக்சுவலா இந்த வாரம் நாங்க மிருது ஆத்துல இருக்கறதா சொல்லியிருந்தோம் ஆனா இப்போ அதுல ரெண்டு நாள் போயாச்சு இப்போ ஈரோடு போயிட்டு வான்னா எப்படி?”

“உங்க கல்யாணம் முடிஞ்சதுக்கப்புறம் உங்களுக்கு நம்ம ஆத்து சைட்டுல அவ மட்டும் தான் இன்னும் விருந்து வைக்கலையாம். அதுக்குத் தான் வரச்சொல்லிருக்கா. நானும் வருவான்னு சொல்லிட்டேன். அதுனால போயிட்டு நாளைக்கு காலை ல திரும்பி வாங்கோ சரியா. வந்துட்டு இரண்டு நாள் மிருதுளா ஆத்துல போய் இருந்துட்டு வந்து ஊருக்கு கிளம்பிக்கோ” 

“இல்ல இப்ப தான் ஒரு வேன் டிரிப் போன டென்ஷன் குறைஞ்சுண்டிருக்கு, அதுக்குள்ள மறுபடியும் மிருதுளாவ கூட்டிண்டு பஸ்ல டிராவல் பண்ணணுமான்னு யோசிக்கறேன்!”

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது வள வளன்னு பேசாம சட்டு புட்டுன்னு கிளம்பி போயிட்டு வாங்கோ”

“ஆனா அத்தை எங்ககிட்ட அவா ஆத்துக்கு வாங்கோ னோ இல்ல விருந்துப் பத்தியோ ஒண்ணுமே சொல்லலையே”

“என் கிட்ட சொன்னா நானும் அனுப்பி வைக்கறேன்னு சொல்லியாச்சு. இதுக்கு மேல பேச்சை வளர்க்காமல் இருந்தால் நல்லது. ஒரு நாள் தானே போயிட்டு வாங்கோ. சொந்தங்கள் வேணும் புரிஞ்சுதா?”

“சரி சரி” என்று நவீன் மிருதுளாவிடம் ஒரு வார்த்தைக் கூட கேட்காமல் சொன்னது அவளுக்கு மிகவும் வேதனை அளித்தது. அன்று அவள் வீட்டிற்கு செல்ல ஆசையாக இருந்தாள் ஆனால் அதில் மண்ணை வாரிப் போட்டார்கள் மூத்த தம்பதியினர். என்னாட செய்வது என்ற யோசனையிலிருந்த மிருதுளாவிடம் பர்வதம்

“என்ன மசமசன்னு உட்கார்ந்துண்டே இருக்க அப்பா சொன்னது காதுல விழலையா? போ போ கிளம்பு. உன்கிட்ட தான் சொல்லறேன். என்ன உட்கார்ந்தே தூங்க ஆரம்பிச்சுட்டயா. சுத்தம்”

“ஹாங்! ஹாங்! இல்லை எனக்கு திருக்கடையூர் போயிட்டு வந்ததிலேயே இடுப்பும் வயிறும் நேத்து பயங்கரமா வலிச்சுது. இப்போ ஈரோடு போகணும்னா ..!!!”

“என்ன இழுக்கற? அதெல்லாம் இருக்கத்தான் செய்யும் அதுக்காக எங்கயுமே போகாம வராமயா இருப்பா? ம்..ம்..கிளம்பு கிளம்பு”

என்று கூறிவிட்டு டிபன் செய்ய அடுப்படிக்குள் சென்றாள் பர்வதம். அவ்வளவு பொய்யும், புரட்டும் சொல்லிவிட்டும் மூத்த தம்பதிகளின் அதிகாரத்தை பார்த்தால் தவறு நவீனிடம் தான் உள்ளது என்பதுபோலதான் நமக்கு தோன்றும். பொறுப்பில்லாத பெற்றவர்களிடம் நவீன் தட்டிக் கேட்க ஏன் தயங்க வேண்டும்? தன் மனைவி இரவு முழுவதும் உறங்க முடியாமல் அவஸ்த்தைப் பட்டாள் என்பதை அறிந்தும் எவ்வாறு ஈரோடு செல்ல சம்மதித்தான்? மூத்தது கோழை இளையது காளை என்ற பழமொழிக்கு ஏற்ப நவீனின் நடத்தை கோழைத் தனமாகத் தான் தெரிகிறது. பெரியவர்களுக்கு மரியாதை குடுக்க வேண்டியது மிக முக்கியமான பண்பானாலும் அது சம்பந்தப் பட்ட பெரியவர்களின் நடவடிக்கைகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பெரியவர்கள் என்றால் என்ன வேண்டுமாலும் சொல்லலாம் எப்படி வேண்டுமானாலும் நடந்துக் கொள்ளலாம் எவரும் தட்டிக் கேட்கக் கூடாதென்பதெல்லாம் பொறுப்பற்ற பெரியவர்களின் குணாதிசியங்கள் ஆகும். அதே பொறுப்பான பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளின் மனமறிந்தே நடப்பார்கள்.  நவீன் பேச்சுக்கே அங்கே மரியாதை இல்லாத போது நம்ம மிருதுளா சொன்னால் எடுபடவா போகிறது? அது தான் அவ்வளவு அதிகாரம் செலுத்துகிறாள் பர்வதம். வேறு வழியின்றி புறப்பட்டனர் நவீனும் மிருதுளாவும். 

மிருதுளா நவீனிடம் ஒன்றுமே பேசவில்லை. இருவரும் பஸ்ஸில் ஏறினார்கள். நவீன் மிருதுளாவிடம் தண்ணீர் வேண்டுமா என்றான் அதற்கும் அவளிடமிருந்து பதிலேதும் வரவில்லை என்றதுமே அவனுக்கு புரிந்துவிட்டது அவள் எதற்காக அப்படி நடந்துக் கொள்கிறாள் என்பது. சற்று நேரம் நவீனும் அமைதிக் காத்தான் பின் 

“மிருது அம் சாரி. உன்னை இப்படி மறுபடியும் பஸ்ல டிராவல் பண்ண வைக்கறது தப்புதான். ஆனா என்ன செய்ய சொல்லு. இப்படி போனாலாவது உனக்கு ஒருநாள் ரிலீஃப்ன்னு நினைத்து தான் கிளம்பினேன்”

மிருதுளாவிற்கு கோபம் தலைக்கேறியது ஆனாலும் அதை காட்டிக்கொள்ளாமல் தன்னைத் தானே அமைதிப் படுத்திக் கொண்டு 

“என்ன சொல்லறேங்கள் நவீன்? நமக்கு நம்ம வீட்டில் கிடைக்காத ரிலிஃப் வேறு எங்குச் சென்றாலும் கிடைக்காது. நீங்க உங்க அப்பாகிட்ட ஏன் எனக்காக /நமக்காக பேசவே மாட்டேங்கறேங்கள்? இன்னைக்கு எனக்கு ரொம்ப மனசு கஷ்டமாப் போச்சு தெரியுமா”

“எனக்குப் புரியறது மிருது ஆனா அவா நான் சொன்னா எதை கேட்டிருக்கா? அவா பிடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு தான் சொல்லிண்டே இருப்பா. தேர் இஸ் நோ யூஸ் இன் கெட்டிங் இன்டூ அன் ஆர்க்யூமென்ட் வித் தெம். அவா அப்படி தான். இதுல என்ன வேடிக்கை தெரியுமா?”

“இதுல என்ன வேடிக்கையாம்?”

“எங்க அப்பா ஏதோ சொந்தங்கள் வேணும்ன்னு சொல்லறாரே இதே சொந்தம் தான் அதாவது இதே அத்தை தான் அவர் குடிகாரரா இருக்கும் போது அவா ஆத்துக்கு போனா… என் புருஷன் கௌரவமான வாத்தியார் எங்க ஆத்துக் கெல்லாம் இப்படி குடிச்சிட்டு வராதேன்னு புடிச்சு வெளிய தள்ளி கதவ சாத்தினவா தெரியுமா?”

“அப்படியா அதை ஏன் அங்க சொல்லலையாம். என்கிட்ட சொல்லி என்ன பிரயோஜனம்? உங்க அப்பா சொல்லும் போதே சொல்லிருக்கணும். எப்போ எதை எங்க பேசணுமோ அதை அங்க பேசாம இருக்கறதும் தப்புத் தான் தெரியுமா”

“சரி சரி விடு மிருது. அவாள எல்லாம் திருத்த முடியாது. என்னச் செய்ய?”

“எனக்கு ஒரு டவுட்”

“என்னது. அவா அப்படி தான்னு சொன்னேனே அதுலயா”

“ச்சே அது இல்ல. லட்சுமி அத்தை என்னை வேறு எங்கேயும் டிராவல் பண்ணாமல் பேசாம வீட்டிலேயே ரெஸ்ட் எடு கொழந்தை பொறக்கற வரைக்கும்ன்னு சொன்னா அப்படிப் பட்டவா எப்படி இப்படி வரச்சொல்லிருப்பா?”

“ஏன் என்கிட்டயும் தான் சொன்னா உன்னை உங்க ஆத்துலயே கொண்டு போய் விட்டுடச் சொல்லி”

“அப்படியா ஏனாம்? நான் உங்க ஆத்துல இருந்தா அவாளுக்கு என்னவாம்?”

“அவாளுக்கு ஒண்ணுமில்லை நம்ம ஆத்துல இருந்தா நம்ம குழந்தைக்கு சத்தான ஆகாரமும் உனக்கு நிம்மதியான தூக்கமும் கிடைக்காதாம் அதுனால உன்னை உங்க அம்மா ஆத்துல விட்டுடச் சொன்னா”

“அது என்னவோ உண்மைத் தான். நானே உங்ககிட்ட அதப் பத்தி பேசணும்ன்னு இருந்தேன். நல்ல வேளை அத்தையும் சொல்லிருக்கா. ஆனா இதை நீங்க ஏன் அத்தை வந்துட்டு போண அன்னைக்கே சொல்லலை?”

“என்னமோ சொல்லணும்ன்னு தோனலை. அதுதான் இப்போ சொல்லிட்டேனே. சரி அத விடு நீ என்ன சொல்ல வந்தேன்னு மொதல்ல சொல்லு”

“அதுவா அது லட்சுமி அத்தை உங்ககிட்ட சொன்னது தான். நீங்க இன்னும் ஒரு மூணு நாள்ல ஊருக்குப் போயிடுவேங்கள் அதுக்கப்புறம் நான் உங்க ஆத்துல இருந்து என்னப் பண்ணுவேன்? அதுவுமில்லாம மாடிக்கு ராத்திரில தனியா ஏறி இறங்க எல்லாம் என்னால முடியாது. உங்க ஆத்துல உங்க அம்மா சத்தான சாப்பாடு சமைக்கவும் மாடேங்கறா என்னை சமைக்கவும் விடமாட்டேங்கறா. தூங்கவும் விடறதில்லை. அதுனால நீங்க ஊருக்கு போறதுக்கு ஒரு நாள் முன்னாடி என்னை எங்க ஆத்துல கொண்டு போய் விட்டுடறேங்களா?”

“அது தான் நாளைக்கு ஈரோட்ல இருந்து வந்ததும் உங்க ஆத்துக்கு தானே போகப் போறோம் பின்ன என்ன? உன்னை அங்கேயே விட்டுட்டு நான் ஊருக்கு போறேன்”

“ஆமாம் ஆமாம் போக விட்டுட்டாலும்”

“என்ன சொல்லற? எனக்கு கேட்கலை”

“ம்…ம்…பார்ப்போம் பார்போம் நளைக்கு நம்மள எங்க ஆத்துக்கு போக விட்டுட்டாலும்ன்னு சொன்னேன்”

“ஏன் அப்படி சொல்லற. அது தான் நேத்தே அதை பேசி முடிவெடுத்தாச்சே அப்புறமும் ஏன் உனக்கு சந்தேகம்”

“எனக்கு கொஞ்சம் கூட சந்தேகமே இல்வை நவீ.  நிச்சயமா சொல்லறேன் நாம நாளைக்கும் போக மாட்டோம்”

“இங்க பாரு மிருது அவா அப்படித் தான் ஆனா அது தான் எல்லாம் முடிவாயாச்சே அதுக்கப்புறம் அவா ஒண்ணும் செய்ய முடியாது. நீ நம்பு”

“இப்பவும் சொல்லறேன் நான் நம்பறேன் நாமள போக விட மாட்டா. சரி லட்சுமி அத்தை ஆத்துலேந்து எப்போ ரிட்டர்ன்?”

“நாம ஒரு பதினோரு மணிக்கெல்லாம் ரீச் ஆகிடுவோம். லஞ்ச் சாப்பிடுவோம். ஈவ்னிங் காபி குடிச்சிட்டு ஒரு அஞ்சு மணிக்கு கிளம்பினோம்னா ராத்திரி எட்டு எட்டரைக்கெல்லாம் ஆத்துக்கு போயிடலாம்”

“ஓ! ஹோ! ஒரே நாள்ல எட்டு மணி நேரம் பஸ்ல டிரவல்லா நாளைக்கு எனக்கு முதுகு வலி கன்பார்ம்”

“நான் உனக்கு தைலம் தேய்ச்சுத் தரேன் கவலைப் படாதே”

“வலியைக் குடுத்துட்டு தைலம் தேய்ச்சுத் தர்றதுக்கு பதிலா வலியை குடுக்காமல் இருக்கலாமே”

“இனி எல்லாம் அப்படி தான். ஓகே வா”

“பார்ப்போம் பார்ப்போம்”

“என்ன நீ எதையுமே நம்பாத மாதிரியே சொல்லற?”

“இது வரைக்கும் நம்பற மாதிரி ஒண்ணுமே நடக்கலையே நான் என்ன பண்ணுவேன் நவீ”

“இனி நம்பு ..எல்லாம் நடக்கும். சரியா”

“நடக்கட்டும் நம்பறேன்”

“டன். நடக்கும் நீ நம்பத்தான் போற. சரி சரி பேசிண்டே வந்ததில் டைம் போணதே தெரியலை. இன்னும் ஒரு அரைமணி நேரத்துல நாம இறங்கணும்”

மூத்த தம்பதியான ஈஸ்வரனும் பர்வதமும் மிருதுளா வீட்டிற்கு போக இருந்த தங்கள் மகனையும் மருமகளையும்  இரண்டாவது தடவையாக லட்சுமியைக் கொண்டே மறைமுகமாக தடை செய்தனர். லட்சுமி வீட்டிலிருந்து திரும்பி வந்ததும் நவீன் சொன்னதைப் போல இருவரும் மிருதுளா வீட்டிற்கு செல்வார்களா? இல்லை அதற்கும் தடை தயாராக இருக்குமா பொருத்திருந்து பார்ப்போம்.

தொடரும்….

அவள் அறையில் நன்றாக உறங்கி எழுந்து கீழே வந்தாள் மிருதுளா. நேரம் மதியம் ஒன்று ஆகியிருந்தது. வீட்டில் அனைவரும் அமர்ந்து மத்திய சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.  மிருதுளா முகம் கழுவி விட்டு வீட்டினுள் நுழைந்தாள். உடனே பர்வதம்

“தூங்கியாச்சா! இப்போ என்ன? உட்கார்ந்து சாப்பிடவேண்டியது தானே. வா வா ஒரு தட்டெடுத்துண்டு உட்காரு”

என்று நக்கலாக கூற அதை வீட்டுக்கு வந்திருந்த லட்சுமி அத்தை கவனித்துக் கொண்டிருப்பதை உணர்ந்த மிருதுளாவிற்கு சற்று தர்மசங்கடமானது. ஆனாலும் அவள் ஏதும் ஏதிர்த்தோ இல்லை பர்வதம் கூறியது தவறோ என்று கூறாமல் அமைதியாக தன் தட்டில் சாதத்தைப் போட்டுக் கொண்டு அவியல் என்ற பெயரில் குர்மாவை கொஞ்சமாக பண்ணி வைத்திருந்த பர்வதத்திடம் மிருதுளா…

“அம்மா எல்லாரும் சாப்பிட்டாச்சா?

இதை நான் போட்டுக்கலாமா?”

“எல்லாரும் சாப்பிட்டாச்சு போட்டுக்கோ போட்டுக்கோ” 

என்று அந்த அவியல் என்கிற குர்மாவை டொங்கென்று மிருதுளா முன் வைத்து விட்டு பாத்திரங்களை தேய்க்கப் போட ஆரம்பித்தாள். வீட்டில் ஏழு பேருக்கு சமைக்காமல் எப்பொழுதம் நால்வராகிய ஈஸ்வரன், ப்ரவின், பவின் மற்றும் பர்வதத்திற்கு மட்டும் சமைப்பது போல வெறும் நான்கு பேருக்கு தான் சமைத்திருந்தாள் பர்வதம். அவளின் குணமே அது தானே. பத்தும் பத்தாமலும் செய்வதே அவளின் சமையல் சிக்கனம்.  

மிருதுளா அந்த அவியலை ஊற்றிச் சாப்பிடுவதற்காக பாத்திரத்தின் மூடியைத் திறந்தாள் அதில் அடியில் மிகவும் கொஞ்சமாக காய்கள் ஏதுமின்றி வெறும் அந்த குர்மாவின் தண்ணீர் மட்டுமே இருந்தது. அவளுக்கோ பசி பாவம் என்ன செய்வதென்று முழித்தாள்  பக்கத்திலிருந்த பாத்திரத்தின் மூடியைத் திறந்துப் பார்த்தாள் அதில் கொஞ்சம் ரசம் மீதமிருந்தது. அதை ஊற்றிக் கொண்டு தொட்டுக் கொள்ள காய் என்ன இருக்கு என்று தேடினாள். மிருதுளா படும் அவஸ்தையைப் பார்த்துக் கொண்டிருந்த லட்சுமி ..

“மிருதுளா பர்வதம் பண்ணின ரசத்துக்கு தொட்டுக்கத் தான் அந்த அவியல்! நீ தேடறது இல்லை”

என்று நாசுக்காக பொறியல் ஒன்றும் செய்யவில்லை என்பதைச் சுட்டிக் காட்டினாள். பாத்திரங்களை வெளியே தேய்க்கப் போட்டுவிட்டு வீட்டினுள் லட்சுமி சொல்வதைக் கேட்டுக் கொண்டே வந்த பர்வதம்..

“ரசம் சாதத்திற்கு அவியல் தொட்டுக்கறது தான் எங்க ஆத்து பழக்கம். அது அவளும் பழகிக்கட்டும்”

“அது சரி பர்வதம் அதுக்காக காயே இல்லாமல் வெறும் ரசம் சாதத்தையா புள்ளையாண்டு இருக்கறவளுக்கு கொடுப்பா?”

“அப்படின்னா டைத்துக்கு சாப்பிட வரணும். தூங்கிண்டே இருந்தா எப்படி?”

என்று மீண்டும் மிருதுளா துங்குவதைக் குத்திக் காட்டினாள் பர்வதம். லட்சுமியும் விட்டப் பாடில்லை.

“மாசமா இருந்தா தூக்கம் வர்றது சகஜம் தானே அதுக்காக பட்டினியா போடறது? நீ தான் நாலு புள்ளகளை பெத்தவளாச்சே உனக்குத் தெரியாதா என்ன?”

“யாரு? யாரை? இப்போ பட்டினிப் போட்டாளாம் இங்கே? என்னால முடிஞ்சதைத் தான் செய்துத் தருவேன் அது யாராக இருந்தாலும் சரி அதுக்கு மேலே விதவிதமா வேணும்ன்னா அவா அவா செஞ்சு சாப்பிட்டுக்கட்டுமே”

என்று பர்வதம் திமிராக பதிலளிக்க. இவளிடம் பேசி பிரயோஜனமில்லை என்று எண்ணி லட்சுமி.

“எனக்கென்ன நீயாச்சு உன் நாட்டுப்பொண்ணாச்சு. நீ ரசம் சாதமே சாப்பிட்டுக்கோமா”

வீட்டில் இவ்வளவு பேச்சு வார்த்தைகள் நடந்தும் அங்கிருந்த நான்கு ஆண்களில் ஒருவர் கூட லட்சுமி சொல்வதற்கோ இல்லை மிருதுளா சாப்பிட வெறும் ரசம் மட்டும் இருந்ததற்கோ வாயை திறக்கவில்லை அப்படி ஒரு செழிப்பான பர்வத ஆட்சி நடந்துக் கொண்டிருக்கிறது.

மிருதுளா அந்த கொஞ்சம் ரசம் சாதத்தை சாப்பிட்டு எழுந்து வெளிய அமர்ந்து தட்டைத் தேய்த்து வைத்துக் கொண்டிருக்கும் போது பர்வதம் அவளிடம்

“அங்க இருக்கிற எல்லாப் பாத்திரங்களையும் தேய்ச்சு வச்சுடு. உன் தட்டை மட்டும் தேய்ச்சு வச்சுட்டுப் போகாதே. நான் போய் காய வச்சிருக்கற எங்க துணிமணிகளை மாடிலேந்து எடுத்துண்டு வந்துடறேன்” 

என்று கூறி மாடிக்குச் சென்றாள்.  மிருதுளாவும் அங்கிருந்த அனைத்துப் பாத்திரங்களையும் தேய்த்துக் கொண்டிருந்தாள். உள் ரூமில் ஈஸ்வரன்  ப்ரவின், பவின் மூவரும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர். நவீன் ஹாலில் அமர்ந்திருந்தான். லட்சுமி அத்தை, மிருதுளா பர்வதத்திடம் படும் பாட்டைப் பார்த்து மெதுவாக நவீனின் அருகில் சென்று..

“நவீன் எனக்கு உன் கிட்ட ஒண்ணுச் சொல்லணும்னு தோனறது சொல்லலாமா?”

“என்ன அத்தை? எதுவானாலும் சொல்லுங்கோ”

“அது நம்ம மிருதுளாப் பத்தி தான் நவீன்”

“மிருதுளாவுக்கு என்ன அத்தை?”

“அந்த பொண்ணு உன் குழந்தைய சுமந்துண்டிருக்காப்பா அவளுக்கு நல்ல சத்தான ஆகாரமும் நிம்மதியான தூக்கமும் தான் இப்போ தேவை அதுனால நீ பேசாம மிருதுளாவ உன் மாமியார் ஆத்துல கொண்டு போய் விட்டுட்டு வந்திடு”

என்று பர்வதத்தையோ அவளின் சமையலையோ குற்றம் சொல்லாமல் மிருதுளாவைக் காப்பாற்ற ஒரு சிறு குறிப்பு மட்டும் கொடுத்தாள் லட்சுமி. 

“அப்படியா !! ஆக்சுவலா நாங்க இன்னைக்கு அங்க தான் போயிருக்கணும் நீங்க வந்திருக்கேங்களேன்னு எங்களை இங்க இருக்கச் சொன்னா அது தான் இருக்கோம். இல்லாட்டி காலையிலேயே கிளம்பிருப்போம்”

“அப்படியா ரொம்ப சந்தோஷம். நான் ராசாமணி ஆத்துலேந்து அப்படியே ஊருக்குப் போயிருப்பேன் ஆனா என்னை இங்க இன்னைக்கு வந்துட்டு தான் போகணும்ன்னு உன் அம்மா தான் நேத்து வற்புறுத்தினா அதுனால தான் நான் வந்தேன்”

என்று லட்சுமி நவீனிடம் சொன்னதும் பர்வதத்தின் குட்டு வெளிப்பட்டது. ஏனெனில் அவளுக்கு நன்றாக தெரியும் நவீனும் மிருதுளாவும் அன்று மிருதுளா வீட்டிற்கு கிளம்புவார்கள் என்பது அதைத் தடுப்பதற்கான வேலை தான் லட்சுமியை வரவழைத்திருப்பது.

“ஓ !! அப்படியா அது எனக்குத் தெரியாது அத்தை. இப்போ என்ன உங்கக் கூடவும் எங்களால இருக்க முடிஞ்சுதே அதுல எங்களுக்கும் சந்தோஷமே”

“அதெல்லாம் சரி கொஞ்சம் நான் சொன்னதையும் மனசுல வச்சுக்கோப்பா நவீன்”

என சொல்லி முடிப்பதற்குள் பர்வதம் துணிமணிகளுடன் வீட்டினுள் நுழைந்தாள்

“என்னத்தை சொன்னேங்கள் அவன் மனசுல வச்சுக்க?” 

“அது ஏதோ அத்தையும் மருமானுமா பேசிண்டோம் அதை விடு. சரி துணியை இப்படிப் போடு மடிப்போம்”

என்று லட்சுமி பேச்சைத் திசைத் திருப்பி, பர்வதத்துடன் சேர்ந்து துணிகளை மடித்து வைத்துக் கொண்டே

“சரி பர்வதம் நீ ரொம்ப வற்புறுத்தினதால நான் வந்தேன் உங்களோட  காலையிலேந்து இதோ இப்ப வரை இருந்தாச்சு. வெயில் தாழ நான் கிளம்பறேன் அப்போ தான் ராத்திரி ஒரு எட்டு மணிக்கெல்லாம் வீடு போய் சேரமுடியும்” 

“ஏன் வந்ததும் கிளம்பறேங்கள். இன்னுமொரு ரெண்டு மூணு நாள் இருந்துட்டுப் போறது”

“இல்ல மா கொழந்தகள் எல்லாரும் நேத்தே கிளம்பிப் போயாச்சு. இன்னைக்கு எப்படியோ அட்ஜஸ்ட் பண்ணிண்டு எல்லாம் காலேஜுக்கும் வேலைக்கும் போயிருப்பா நாளைக்கு வந்திடணும்ன்னு சொல்லித் தான் அனுப்பிருக்கா அதனால நான் சாயந்திரம் ஒரு நாலு நாலரைக்கு கிளம்பணும்”

“சரி அப்புறம் உங்க இஷ்டம்”

என்று அவர்கள் பேசி முடிக்கவும் மிருதுளா வேலைகளை முடித்து வீட்டு ஹாலுக்குள் நுழையவும் சரியாக இருந்தது. 

“வா மிருதுளா வேலை எல்லாம் ஆச்சா”

“ஆச்சு அத்தை”

“வா சித்த உட்காரு”

சிறிது நேரம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். பின் மணி நாலடித்ததும் லட்சுமி முகம் கை கால் அலம்பி விட்டு ஊருக்கு கிளம்பத் தயார் ஆகிக்கொண்டிருந்தாள் அப்போது மிருதுளா அனைவருக்கும் காபிப் போட்டுக் கொடுத்தாள். அதைக் குடித்து விட்டு லட்சுமி கிளம்பிச் சென்றாள். 

லட்சுமிக்கு இரண்டு மகள்கள் இரண்டு மகன்கள். மூத்த மகள் ரமாமணியை திருமணம் முடித்துக் கொடுத்து விட்டார். மகன் நாராயணன் ஒரு கம்ப்யூட்டர் சென்டர் மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார்.  சுந்தரேசன் காலேஜ் படித்துக் கொண்டிருந்தான். இரண்டாவது மகளான கஜேஷ்வரி அண்ணனோடு கடையில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தாள். லட்சுமிக்கு தனது இரண்டாவது மகளை பர்வதத்தின் இரண்டாவது மகனான குவைத்திலிருக்கும் கவினுக்கு கட்டிக் கொடுக்க எண்ணமிருந்தது. ஆனால் எவரிடமும் காட்டிக்கொள்ளாமல் வந்துப் போய் கொண்டு இருந்தாள். 

பவின் தங்கள் அத்தையை பஸ் ஸ்டாப் வரைச் சென்று ஊருக்கு பஸ் ஏற்றி விட்டு வந்தான். அன்றிரவு அனைவரும் மீண்டும் ரசம் சாதம் சாப்பிடும் போது…

“ஏன் இப்ப எல்லாம் எப்பவுமே ரசம் சாதமே தர்ற மா? சாம்பார் கூட வைக்க மாட்டேங்கறயே?” 

என்று பவின் கேட்க… அதற்கு ஈஸ்வரன் அதட்டல் துவணியில்..

“என்ன வாய் ரொம்ப நீளறது. போட்டதை சாப்பிட்டு பேசாம இருக்கணும் புரியறதா? இது எல்லாருக்கும் பொருந்தும்” 

என்று கூறியதும் பவின் கப்சிப்ன்னு சாப்பிட்டு எழுந்தான். லட்சுமி மத்தியம் பர்வதத்திடம் சொன்னதற்கான பதில் இரவு ஈஸ்வரனிடமிருந்து வருகிறதென்றால் என்னே ஒரு கம்யூனிகேஷன் சிஸ்டம் என்று தான் நினைக்கத் தோன்றும். ஆம் அவர்கள் வசிப்பதோ ஒரு சிறிய வீடு. அதற்குள் ஏழு பேர் இருக்கிறார்கள். நவீனும் மிருதுளாவும் தனியாக எது பேசினாலும் அது எல்லாருக்கும் தெரிந்துவிடும் ஆனால் மூத்த தம்பதி எப்போது எங்கே எப்படி கம்யூனிகேட் பண்ணிக் கொள்கிறார்கள் என்பது வியப்பான விஷயமே. வெளியே எங்கும் செல்வதுமில்லை. ஆங்கிலத்தில் ஒரு வாக்கியமுள்ளது “ப்ராக்டிஸ் மேக்ஸ் அ மேன் பர்ஃபெக்ட்” என்று அது போல ஈஸ்வரனை அவரது எக்ஸ்பீரியன்ஸ் மேய்டு ஹிம் பர்ஃபெக்ட் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. பயிற்சியாளர் பர்வதம் ஆச்சே!!!

அனைத்து வேலைகளும் முடிந்ததும் மிருதுளா மாடிக்குச் சென்றுப் படுத்துக் கொண்டாள். சிறிது நேரம் கழித்து நவீனும் மாடிக்கு வந்தான். மிருதுளா படுத்திருப்பதைப் பார்த்து

“என்ன மிருது தூங்கிட்டயா?”

“இல்ல நவீ. நேத்து ஆன டென்ஷன் இன்னைக்கு என்னை ரொம்ப அசத்தறது.  எனக்கென்னவோ வயிறு வேற வலிக்கறது. அதுதான் வந்துப் படுத்துண்டுட்டேன்.”

“என்ன வயிறு வலிக்கறதா? வா அப்போ உடனே ஹாஸ்பிடல் போகலாம்”

“இருங்கோ இன்னும் கொஞ்ச நேரம் கூட பார்ப்போம் வலி நிக்கலைன்னா அப்போ போகலாம்”

“விளையாடதே மிருது கிளம்பு. இரு நான் போய் கீழே சொல்லறேன்”

“வேண்டாம் நவீன் விடுங்கோ”

“இல்ல இல்ல நீ இரு இதோ வர்றேன்”

என்று நவீன் ரூமின் கதவைத் திறந்ததும் இருட்டில் யாரோ வேகமாக படிகளில் இறங்குவதைப் பார்த்த நவீனுக்கு பவின் போல தெரிந்தது உடனே

“ஏய் யாரு. டேய் பவின் இருட்டுல எங்க ரூம் முன்னாடி என்னடா பண்ணற”

என்று கேட்டுக் கொண்டே பவின் பின்னாடியேச் சென்றான் நவீன். வீட்டு வாசலில் வைத்து பவினின் டி ஷர்ட்டைப் பிடித்து 

“என்னடா ராத்திரி நேரத்துல மாடில பண்ணிண்டிருந்த?”

“சும்மா காத்து வாங்க வந்தேன்”

“காத்து வாங்க வந்தவன் ஏன் என்னைப் பார்த்ததும் ஓடிப் போன? கூப்பிட கூப்பிட காது கேக்காத மாதிரியே போனயே அது ஏன்?”

“எனக்கு கேட்கலை”

“ஓ!! உனக்கு கேட்கலை சரி உன் விஷயத்துக்கு அப்புறமா வர்றேன்…மிருதுக்கு வயிறு வலிக்கறதாம் வந்து என்னன்னு பார்க்கறயா?”

என்று பர்வதத்திடம் நவீன் கூற அதற்கு பர்வதம்…

“இப்போ என்ன வலியாம்? அதெல்லாம் ஒண்ணுமிருக்காது. வெறும் சூட்டு வலியா தான் இருக்கும். பேசாம தண்ணிக் குடிச்சிட்டுப் படுக்கச் சொல்லு”

“ஹாஸ்பிடல் போக வேண்டாமா?”

“அதெல்லாம் தேவையில்லை”

என்று மிருதுளாவைப் பார்க்காமலும் அவளின் பிரச்சினையை தெரிந்துக் கொள்ளாமலும் ஏதோ கேட்டதுக்கு பதில் சொல்ல வேண்டுமே என்று சொல்லிவிட்டு படுத்துக் கொண்டாள் பர்வதம். 

என்ன செய்வதென்று அறியாமல் மீண்டும் மாடிக்குச் சென்றான் நவீன். அங்கே வலியால் துடித்துக் கொண்டிருந்தாள் மிருதுளா. அவளிடம் பர்வதம் சொன்னதைச் சொன்னான். உடனே அவளும் தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடித்தாள் பின் தன் அம்மா அவளுக்குச் செய்த வைதியம் ஞாபகம் வர உடனே அங்கிருந்த சிறியப் டப்பாவை நவீனிடம் எடுத்துத்தரச் சொன்னாள். அதிலிருந்த நாமக்கட்டியை எடுத்து தண்ணீர் விட்டு அதை தொப்புளைச் சுற்றித் தடவி விட்டு கால் கட்டைவிரலில் தடவ முயன்ற போது நவீன் அவளிடமிருந்து வாங்கி அவனே தடவி விட்டான். 

தனிமையில் நவீனிடமிருந்து கிடைக்கும் அன்பும், பாசமும், அக்கறையும் தான் மிருதுளாவை பர்வதத்தின் ஏச்சுப் பேச்சுக்களின் போது அமைதியாக இருக்க செய்கிறதா? அது சரியான அணுகுமுறையா? அவள் நினைத்திருந்தாள் பர்வதம், ஈஸ்வரன் சொன்ன ப்ரேஸ்லெட், சம்பளம், பத்தாயிரம் ரூபாய் ஆகிய பொய்களுக்கு ஊருக்கு வந்ததும் அதை அவர்களிடம் கேட்டிருக்கலாம் ஆனால் அதற்கு சரியான பதில் கிடைக்காது என்பதை அவள் கொஞ்ச நாள் மூத்த தம்பதிகளுடன் இருந்ததிலிருந்தே நன்கு அறிந்து வைத்திருப்பதனால் கேட்கவில்லையோ!!! 

மூத்த தம்பதியினருக்கு அதைப் பற்றி எல்லாம் துளியும் கவலையில்லை. அவர்கள் அவ்வப்போது ஆங்காங்கே பொய்களை அளித்தெளிப்பதோடு சரி.  அதன் பின் விளைவுகளைப் பற்றிய நினைப்புக் கூட இல்லாத மனிதர்கள். அப்படிப் பட்டவர்களிடம் பேசினால் மட்டும் நியாயம் கிடைத்து விடவா போகிறது? என்று மிருதுளா நினைத்திருந்தாலும் அதில் தவறில்லை. இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். தெரிந்தே பொய் சொல்பவர்கள் தூங்குவதைப் போல நடிப்பவர்கள், அவர்களை எழுப்ப முடியாது. எழுப்ப முயற்ச்சிப்பவர்கள் முட்டாளாக்கப்படுவார்கள். இப்படிப் பட்டவர்களுக்குத் தான் கடவுளும் நல்ல மருமகள்களைக் கொடுப்பார். கடவுளின் கணக்கே தனிக்கணக்கு தான். ஆமாம் அவருக்கும் கொஞ்சம் என்டர்டெயின்மென்ட் வேண்டாமா என்ன? எல்லா வீடுகளிலும் “எங்கள் வீட்டில் எல்லா நாளும்” என்று பாட்டு ஒலித்தது என்றால் அவருக்கும் போர் அடிக்காதா?  நாம் தொலைக்காட்சியில் பார்ப்பது எடிட்டிங் செய்யப்பட்ட சீரியல்கள் ஆனால் ஆண்டவன் பார்த்துக் கொண்டிருப்பது கோடிக் கணக்கான லைவ் சீரியல்கள். 

தொடரும்….

வீட்டுப் பெண்களும், ராசாமணியும், நவீனும் வந்த வேன் விபத்துக்குள்ளானதும் அந்த கிராமத்து மக்கள் அனைவரும் வேனை சூழ்ந்துக் கொண்டு கத்தலானார்கள். வேனை கல்லும் கட்டையும் கொண்டு அடிக்கலானார்கள். வேனுக்குள் உள்ளவர்களுக்கு என்ன நடக்கிறது என்று ஒன்றும் புலப்படவில்லை. அனைவரும் பதற்றமானார்கள். எல்லாப் பெண்களும் மிருதுளா பத்திரமாக இருக்கிறாளா என்று தான் விசாரித்தனர் அவளை ஜன்னல் பக்கத்திலிருந்து எழுந்து நடுவில் அமரச் சொன்னார்கள் ஆனால் நடுவில் அமர்ந்திருந்த பர்வதம் ஜன்னலோரம் அமர மறுத்துவிட்டாள். மக்கள் வெளியே கொந்தளித்தனர் அனைவரையும் வேனிலிருந்து இறங்கச் சொல்லி வேனை கல்லால் அடித்தனர். இதைப் பார்த்த நவீன் மிருதுளாவை வேனின் தரையில் அமரச்செய்து தன் அத்தைகளையும் அக்காக்களையும் சுற்றி பார்த்துக்கச் சொல்லிவிட்டு டிரைவரிடம் விவரத்தைக் கேட்டான். 

“டிரைவர் என்ன ஆச்சு ஏன் இப்படி மக்கள் எல்லாருமா நம்ம வண்டி மேல கல் எறியிறாங்க? நீங்க ஏன் உள்ளயே உட்கார்ந்துட்டு இருக்கீங்க? வாங்க வெளியப் போய் என்ன ஏதுன்னு கேட்போம்”

“சார் …சார்…ஒரு தப்பு நடந்துப் போச்சு சார்”

“தப்பு நடந்திருக்குன்னு தெரியுதுப்பா அது என்னன்னு தான் கேட்கிறேன்”

“டேய் வெளில வாங்கடா.. வண்டியை விட்டு இறங்கி வாங்கடா! ரோடு என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா. இறங்குங்கடா”

என்று வெளியிலிருந்து மக்கள் கோஷம் போட நவீன்..

“டிரைவர் நீங்க சொன்னாத்தான் நான் இறங்கிப்  போய் அவங்ககிட்ட பேச முடியும்”

“சார் நான் வண்டிய ஒட்டிட்டே வந்தேன் அப்போ இரண்டு மாட்டை ஒட்டிட்டு ஒரு பையன் சட்டுன்னு க்ராஸ் பண்ணிட்டான் நான் பதறிப் போய் ப்ரேக்குக்கு பதிலா ஆக்ஸிலேட்டரை கொஞ்சம் அழுத்திட்டேன் ஆனா உடனே ப்ரேக்கும் போட்டுட்டேன் அதுக்குள்ள அந்த பையனையும் ஒரு மாட்டையும் இடிச்சிட்டேன் பையனுக்கு அடிப்பட்டிருக்கு அதோ அங்க உட்கார்ந்திருக்கான் பாருங்க, மாடு என்ன ஆச்சுன்னு தெரியலை அது நம்ம வண்டி முன்னாலேயே கிடக்கு.”

“சரி பெரியப்பா நீங்க எல்லாரும் பத்திரமா உள்ளேயே இருங்கோ நான் போய் என்ன ஏதுன்னு பேசிட்டு வரேன்”

நடப்பதை எல்லாம் பார்த்த மிருதுளா அதிர்ச்சியில் அப்படியே ஆடாமல் அசையாமல் அமர்ந்திருந்தால். சொர்ணம் அத்தை

“நவீன் பாத்துப்பா எல்லாரும் கட்டையும் கையுமா இருக்காப்பா”

நவீன் வண்டியை விட்டு கீழே இறங்கவும் பின்னால் ஆண்கள் வந்த மற்றொரு வேனும் அந்த இடம் வந்து சேர்ந்தது. நவீன் இறங்கியதும் கிராம மக்கள் நவீனின் சட்டைப் பிடித்தார்கள். அதற்கு நவீன் பொறுமையாக நின்று பதிலளித்துக் கொண்டிருக்கையில் வேனின்னுள்ளிருந்து மிருதுளா

“நவீ !நவீ! ப்ளீஸ் அவரை விட்டுடுங்கோ.”

என்று கத்த  வெளியே இருந்து சிலர் வேனினுள் எட்டிப்பார்த்தனர். உடனே சொர்ணம் அத்தை மிருதாளாவைக் காட்டி 

“அப்பா கர்ப்பிணிப் பொண்ணு குழந்தைகள், வயசானவா எல்லாம் இருக்காப்பா கொஞ்சம் புரிஞ்சுக்கோங்கோப்பா”

என்று சொல்ல உடனே அதிலிருந்த சிலர் வேனை ஓறங்கட்டச் சொன்னார்கள். உடனே ராசாமணி டிரைவரிடம் வண்டியை ஓரமாக நிப்பாட்டச் சொன்னார். டிரைவரும் நிப்பாட்டினார். பின் மக்கள் டிரைவரை வெளியே வரச்சொன்னார்கள். வெளியே இருந்து நவீனும் டிரைவரை வண்டியை விட்டு வெளியே வரச்சொல்ல டிரைவர் பயந்தப் படி இறங்கியதும் நான்கைந்து பேர் டிரைவரை அடிக்க… உடனே பின்னாலிருந்த வேனிலிருந்து ஆண்கள் அனைவரும் இறங்கி வந்து டிரைவரை அவர்களிடமிருந்து காப்பாற்றி. வாக்கு வாதம் முற்றியது.

ஆண்கள் வண்டியின் டிரைவர் அவர் வண்டியை ஓரமாக நிப்பாட்டிவிட்டு வந்து நடந்தது என்ன என்று விசாரிக்க …மாடு இறந்துவிட்டதாகவும், பையனுக்கு அடிப்பட்டிருப்பதாகவும் கூறி பணம் கேட்டுக்கொண்டிருந்தது தெரிய வந்தது. உடனே அவரது முதலாளிக்கு அருகிலிருந்த கடையிலிருந்து ஃபோன் போட்டுச் சொல்ல அவரும் உடனே கிளம்பி வந்தார். வந்தவர் அனைவரையும் வண்டியில் ஏறச்சொன்னார். பின் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே போலீஸ் காரர்கள் வந்திறங்கினர். 

காவல் துறையினர் வண்டியை பக்கத்திலிருக்கும் ஸ்டேஷனுக்கு தங்கள் பின்னால் வரும் படி சொல்லி விட்டு, அடிப்பட்ட பையனை ஆஸ்பத்திரியில் சேர்க்கச் சொல்லி, இறந்த மாட்டை ரோட்டின் ஓரமாக எடுத்துப் போடச்சொல்லிவிட்டு ஸ்டேஷனுக்குச் சென்றனர். 

அனைவரும் பதற்றத்திலிருந்தனர். ஆனால் நமது மூத்த தம்பதியினர் பர்வதமும்  ஈஸ்வரனும் மிருதுளா பத்திரமாக இருக்கிறாளா? என்று கேட்கவோ இல்லை அவளுக்கு ஆறுதல் சொல்லவோக் கூட தோணவில்லை. நவீனின் அத்தைகளும் அக்காக்களும் மிருதுளாவிடம்…

“மிருது நீ கவலைப் படாதே, பதற்றப் படாதே அது குழந்தையை பாதிக்கும்மா இந்தா தண்ணீக குடி”

என்று அவளுக்கு ஒன்றும் ஆகிவிடக் கூடாதென்பதில் அக்கறையுடன் இருந்தனர். பர்வதத்தின் அலட்சியமான போக்கைக் கண்டு சொர்ணம் 

“ஏய் பர்வதம் இதுக்குத் தான் எல்லோரும் கேட்டோம் ஏன் மாசமான பொண்ண இப்படி அலக்கழிக்கறன்னுட்டு. இப்போ புரிஞ்சுதா. இவளுக்கோ இல்ல வயத்துல இருக்குற கொழந்தைக்கோ ஏதாவது ஆகிருந்தா அந்தப் பாவம் நம்மளை சும்மா விடுமா சொல்லு.”

“இப்படி எல்லாம் நடக்கும்ன்னு ஜோசியமா தெரியும்? அது மட்டுமில்லாம இப்ப தான் ஒண்ணும் ஆகலையே அப்புறம் என்னத்துக்கு அதப் பத்தி பேசறேங்கள்?”

“அப்படியே ஆகிருந்தா மட்டும் நீ இதே மாதிரி பொறுப்பில்லாம தான் பேசிருப்பயா?”

“சொர்ணம் அக்கா அவ பேசிருந்தாலும் ஆச்சர்யப் படரத்துக்கு ஒண்ணுமில்லை”

இவர்கள் அனைவரும் இப்படிப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த ராசாமணி

“எல்லாரும் கொஞ்சம் அமைதியா வரேளா” 

என்று சொன்னதும் அனைவரும் பேசாமலிருந்தனர். காவல் நிலையமும் வந்து சேர்ந்தனர். போலீஸ் வண்டியிலிருந்து நவீன் இறங்கி மிருதுளா இருக்கும் வேன் அருகே வந்து

“யாரும் கீழே இறங்க வேண்டாம். ஜன்னல்லை க்ளோஸ் பண்ணிக்கோங்கோ. மிருதுளா பயப்படாதே ஒண்ணும் ஆகாது”

என்று சொல்லிவிட்டு காவல் நிலைத்துக்குள் ஆண்கள் அனைவரும் சென்றனர். அவர்கள் சென்று ஒன்றரை மணி நேரமானது. உள்ளே காரசாரமாக பேச்சு வார்த்தை நடந்துக் கொண்டிருந்தது. மிருதுளாவிற்கு பசி வயிற்றை கிள்ளியது. வெளியே சொல்லவும் முடியாமல் தவித்தாள். மாலை நாலரை மணிக்கு விபத்து நடந்தது,  ஜந்து மணிக்கு காவல் நிலையத்துக்குள் சென்றனர். மணி ஏழு ஆக ஐந்து நிமிடம் இருக்கும் போது வெளியே அனைவரும் வந்தனர். அவர்கள் அனைவரும் வருவதைப் பார்த்ததும் மிருதுளாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. எல்லோரும் வண்டியில் ஏறினார்கள் பெண்கள் இருந்த வண்டியை அந்த டிராவல்ஸ் முதலாளியே ஓட்டினார். 

மாலை ஐந்தரை மணிக்கெல்லாம் வீடு வந்து சேரவேண்டியவர்கள் இரவு எட்டு மணிக்கு தான் ராசாமணி வீட்டைச் சென்றடைந்தனர்.  அனைவரும் இறங்கியதும், ராசாமணி வீட்டின் அருகே இருந்த ஹோட்டலில் இரவு டிபன் ஆர்டர் செய்தார். டிபன் வருவதற்கு ஒரு மணி நேரமாகும் என்று வீட்டிற்கு வந்து ராசாமணி சொன்னதும் அனைவரும் முகம் கை கால் அலம்பி விட்டு அமர்ந்து பேசலானார்கள். அனைவரும் மத்தியம் பண்ணி ரெண்டு மணிக்கு சாப்பிட்டது. மிருதுளாவிற்கு மாலை ஐந்து மணிக்கெல்லாம் பசிக்கத் துவங்கிவிட்டது அதை அடக்கிக் கொண்டதில் தலைவலி வந்தது. மெதுவாக நவீனிடம் சொல்வதற்காக தவித்தாள். நவீன் வெளியே ப்ரவினுடன் நின்றுக்கொண்டிருந்ததைப் பார்த்ததும் வேகமாக அங்குச் சென்று நவீனிடம்..

“நவீன் எனக்கு பயங்கரமா பசிக்கறது அன்ட் தலைவலி வேற கொள்ளறது. ப்ளீஸ் ஏதாவது பண்ணுங்கோ. என்னால தாங்க முடியலை”

“சரி வா நாம பக்கத்துல இருக்கற ஹோட்டலுக்குப் போய் சாப்ட்டுட்டு வருவோம். டேய் ப்ரவின் நீ வரியா டா”

“இல்லை நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்கோ” 

என்றுச் சொல்லிவிட்டு நவீனும் மிருதுளாவும் வெளியேச் சென்றதும் ப்ரவின் தன் அம்மாவை தனியாக அழைத்து…

“அம்மா மன்னி பசிக்கறதுன்னு அண்ணாகிட்ட சொன்னா அதுனால அவா ரெண்டு பேருமா ஹோட்டலுக்குப் போயிருக்கா” 

என்று தன் கடமையை செவ்வனே நிறைவேற்றியப் பெருமிதத்தோடு உள்ளேச் சென்றான். 

நவீனும் மிருதுளாவும் ஹோட்டலுக்குச் சென்று அமர்ந்தனர். சர்வர் வந்து ஆர்டர் கேட்டதும் அவரிடம் மிருதுளா…

“இங்க என்ன ஆர்டர் பண்ணினா சீக்கிரம் கிடைக்கும்?”

“இட்டிலி, பொங்கல் …”

என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் அதை கொண்டு வரச் சொன்னாள் மிருதுளா. அவளின் இந்த நிலையைப் பார்த்துக் கொண்டிருந்த நவீன்..

“என்ன ஆச்சு மிருது ஏன் இவ்வளவு பதற்றம் அன்ட் அவசரப் படறாய்”

சர்வர் ஒரு ப்ளேட் சுடச்சுட இட்டிலியும், ஒரு ப்ளேட் பொங்கலையும் கொண்டு வந்து வைத்தார். அதில் இட்டிலியை உடனே சாப்பிடத் துவங்கினாள். சாப்பிட்டுக் கொண்டே

“நவீன் நீங்க ஏதும் ஆர்டர் பண்ணலையா? சாரிப்பா எனக்கு அஞ்சு மணிலேந்து சரிப் பசி. எப்படி உங்ககிட்ட சொல்லுவேன்? நீங்க அந்த ஆக்சிடென்ட் பிரச்சினை ல பிஸியா இருந்தேங்கள் அதுவுமில்லாம எல்லாருமே பதற்றத்துல இருந்தா. ஸோ யார்கிட்ட நான் சொல்வேன் சொல்லுங்கோ. பெரியப்பா வேற டிபன் வரத்துக்கு ஒரு மணி நேரமாகும்ன்னு சொல்லிட்டா. அது தான் உங்கள வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டேன்”

“இதெல்லாம் டிஸ்டர்பன்ஸா மிருது. சரி சரி பொறுமையா சாப்பிடு. வேற ஏதாவது வேணுமா” 

“சூடா காபி வேணும் நவீ”

“தம்பி ஒரு பொங்கல் அன்ட் இரண்டு பில்டர் காபி சூடா ஸ்ட்ராங்கா”

மிருதுளாவிற்கு சாப்பிட்டுப் பசி அடங்கியப் பின் தான் தனது மாமியார் நினைப்பு வந்தது. உடனே நவீனிடம்

“நவீ நாம வந்து இப்படி சாப்பிட்டதுக்கு அம்மாவோ அப்பாவோ திட்ட மாட்டாளே”

“என்னத்துக்கு திட்டுவா? அதெல்லாம் ஒண்ணும் சொல்ல மாட்டா வா நாம போகலாம்”

என்னத் தான் நவீன் அப்படிச் சொன்னாலும் மிருதுளாவிற்குள் ஒரு பயம் இருந்தது. அவளின் தலைவலி சாப்பிட்டு காபி குடித்ததும் மறைந்தது. இருவரும் ராசாமணி வீட்டிற்குள் நுழைந்ததும், அவர்கள் பின்னாலயே டிபனும் வந்தது. அனைவரும் சாப்பிட அமர்ந்தனர் அப்போது மிருதுளா பரிமாற முன்வந்ததும் வழக்கம் போல சொர்ணம் மற்றும் அவரின் மகள் மிருதுளாவை அமரச் சொன்னார்கள் அதற்கு மிருதுளா பதில் சொல்லுவதற்குள் …

“அவ நல்லா ஹோட்டல்ல சாப்ட்டுட்டு வந்திருக்கா. அவளுக்கு பதில் வேற யாரையாவது உட்காரச் சொல்லுங்கோ” 

என்று பர்வதம் குத்திப் பேச உடனே சொர்ணம் அத்தையிடம் மிருதுளா

“ஆமாம் அத்தை எனக்கு பயங்கரப் பசி தலைவலி அதுதான் நவீன் கூடப் போய் சாப்ட்டுட்டு வந்தேன் சாரி” 

“அடி அசடே இதுக்கெல்லாம் என்னத்துக்கு சாரி சொல்லிண்டு. இப்போ நீ ரெண்டு உயிர். அதெல்லாம் தப்பே இல்லை. நாங்கெல்லாம் உனக்கு எதுவும் ஆயிடக் கூடாதுன்னு எவ்வளவு வேண்டிண்டோம் தெரியுமா. இனி கொழந்தப் பொறக்கற வரைக்கும் எங்கேயுமே போகாத சரியா?”

“சரி அத்தை”

“நீ போய் உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்துக்கோ போ. நாங்கெல்லாம் பார்த்துக்கறோம்”

பர்வதம் எதை நினைத்துப் பேசினாலோ அது நிறைவேறவில்லை.

மிருதுளாவிற்கு பதில் நவீன் அனைவருக்கும் பரிமாறினான்.  அனைவரும் சாப்பிட்டதும் கிளம்ப முற்பட்டப் போது ராசாமணி நவீன் மற்றும் ஈஸ்வரனிடம்

“இந்த ராத்திரி நேரத்துல போகாதீங்கோப்பா. இப்பத் தான் மிருதுளா ஒரு பதற்றத்திலேந்து வெளிய வந்திருக்கா மறுபடியும் ஏதாவது ஆச்சுன்னா வேண்டாம்ப்பா காலை ல கிளம்புங்கோ”

பெரியப்பா சொல்வதிலும் நியாயம் இருப்பதை உணர்ந்த நவீன் தலை அசைக்க, ஈஸ்வரனும் வேறு வழியின்றி சரி என்று சொல்ல அனைவரும் அங்கேயே அன்றிரவு தங்கினார்கள். மறுநாள் விடிந்ததும் காபி குடித்து விட்டு இரண்டு ஆட்டோவில் ஏறி அவர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் நவீன் குடும்பத்தினர். 

அனைவரும் குளித்து ஃப்ரெஷ் ஆனதும் அமர்ந்துப் பேசிக் கொண்டிருக்கும் போது அவ்வளவு பெரிய விஷயம் நடந்து அனைவரும் தப்பித்தது மாசமான மிருதுளா வண்டியில் இருந்தது தான் காரணம் என்று  ராசாமணி சொன்னதாக ஈஸ்வரன் சொல்ல அதற்கு நவீன்

“அது உண்மை தான். அந்த கிராமத்துக் காரா அதுனால தான் நம்மள ஏழு மணிக்காவது விட்டா இல்லாட்டி விடிய விடிய பேச்சுவார்த்தை நடந்திருக்கும்.”

“சரி சரி எல்லாம் முடிஞ்சதைப் பத்தி என்ன பேச்சு வேண்டிருக்கு. உன் பொன்டாட்டிய ஏதாவது டிபன் பண்ணச் சொல்லு எனக்கு தலை வலிக்கறது”

மிருதுளா அனைவருக்கும் சப்பாத்தி மசால் செய்துக் கொடுத்து அவளும் சாப்பிட்டு, அடுப்படியை சுத்தம் செய்து, பாத்திரங்களைத் தேய்க்கப் போட்டு சற்று நேரம் ரெஸ்ட் எடுத்துவிட்டு வந்து தேய்ப்பதாக நவீனிடம் சொல்லி ஹாலில் ஒரு ஓரமாக படுத்துக் கொண்டாள்.

அவள் படுத்தக் கொஞ்ச நேரத்தில் லட்சுமி அத்தை அவர்கள் வீட்டுக்கு வந்தாள். உடனே மிருதுளா எழுந்துக் கொண்டு அவருக்கு டி போட்டுக் குடுத்து சிறிது நேரம் பேசிவிட்டு மாடிக்குச் சென்றுப் படுத்துக் கொண்டாள். முந்தின நாள் அவள் அடைந்த பதற்றம், பசி எல்லாமும் அவளை மிகவும் சோர்வடையச் செய்தது. அதனால் சற்று நேரம் படுத்து ரெஸ்ட் எடுக்கச் சென்றவள் நன்றாக உறங்கிப் போனாள்.

தொடரும்….

ராசாமணி வீட்டு வாசலில் இரண்டு வேன்கள் வந்து நின்றது. அனைவரும் சாப்பிட்டு வீட்டை சுத்தம் செய்து விட்டு கிளம்பினர். பெண்கள் எல்லாரும் ஒரு வேனிலும் ஆண்கள் எல்லாரும் ஒரு வேனிலும் என்று அமரச் சொன்னார்கள். அப்போது நவீன்

“பெரியப்பா லேடிஸ் மட்டும் ஒரு வண்டியில் வேண்டாம் நாம யாராவது ரெண்டு மூணு பேரும் அவா வண்டியில்  போவோம். ஃபார் சேஃப்டி”

“ஓகே! ஓகே! நவீன் உனக்கு உன் ஆத்துக்காரிக் கூட போகணும் அவ்வளவு தானே சரி வா நாம ரெண்டு பேருமே இந்த வண்டில பொம்மனாட்டிகளுக்குத் துணையா போகலாம்”

“அச்சச்சோ பெரியப்பா அதுக்காக நான் சொல்லலை. நீங்க வேற யார வேணும்னாலும் உங்க கூட வரச் சொல்லிக்கோங்கோ நான் அந்த வண்டிலயே வந்துக்கறேன்”

என்று நவீன் சொன்னதைக் கேட்டதும் மிருதுளா தன் மனதில் 

“எனக்கு இங்க இருக்கிறவாள்ல இரண்டு மூணு பேரை தான் தெரியும் உங்க அம்மாவும் எனக்கு மத்தவாள இன்ட்ரொ பண்ணி வைக்க மாட்டா. என் கூட உட்காரவும் மாட்டா. நீங்க வரேன்னு சொன்னதும் சந்தோஷமா இருந்தது ஆனா இப்போ இப்படி பல்டி அடிக்கறேளே நவீ. ப்ளீஸ் இந்த வேன்லயே வாங்கோளேன். கடவுளே நவீயை இந்த வேன்லயே வர வைப்பா”

என வேண்டிக் கொண்டிருக்கையில் சொர்ணம் அத்தை 

“என்ன மிருது உன்ன விட்டு பிரிஞ்சிருக்க மனசில்லாம நம்ம கூடவே வந்துட்டான் உன் ஆத்துக் காரன்?”

“அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை அத்தை.”

“அப்படியா? அடிப் பொண்ணே நாங்களும் உன் வயசைத் தாண்டி வந்தவா தான்”

நவீனும், ராசாமணியும் தங்கள் வீட்டுப் பெண்களின் பாதுகாப்புக்காக அவர்களுடன் அவர்கள் வேனிலே ஏறி அமர்ந்தனர். ஒருவழியாக இரண்டு வேன்களும் திருக்கடையூரை நோக்கி பயணிக்கத் துவங்கியது. வண்டி நகர்ந்து ஒரு ஒன்றரை மணி நேரமானதும் மிருதுளாவிற்கு வாந்தி வர அதை சொன்னால் வண்டியை நிறுத்த வேண்டி வரும் மேலும் அனைவருக்கும் நேரம் வீணாகி விடுமே என்று அடக்கிக் கொண்டிருந்தாள். இரண்டரை மணி நேரமானதும் வண்டியை ஒரு டிக்கடை முன் நிறுத்தினார் டிரைவர். பிரயாணம் செய்பவர்களில் பாதிப் பேர் வயதானவர்கள் என்பதால் மூன்று மணி நேரம் அமர்ந்தே வந்ததில் கை கால் எல்லாம் வலிக்க ஆரம்பித்தது. வண்டி நின்றதுமே எவ்லாரும்  இறங்கி சற்று நேரம் நின்றிக் கொண்டிருந்தனர். மிருதுளாவும் வேகமாக இறங்கி வேனின் பின் பக்கமாகச் செல்வதைப் பார்த்த நவீன் அவளை கூப்பிட்டுக் கொண்டே பின்னால் சென்றான். அவள் ஒரு மரத்தின் கீழ் வாந்தி எடுத்ததைப் பார்த்த அத்தை லக்ஷ்மி நவீன் பின்னால் தண்ணீர் பாட்டிலுடன் சென்றார். 

நவீனும் அத்தையும் மிருதுளாவின் அருகில் சென்றதும் நவீன் அத்தையிடமிருந்த தண்ணீர் பாட்டிலை மிருதுளாவிடம் கொடுத்தான். அவளும் அதை வாங்கிக் கொண்டு வாயை நன்றாக கொப்பளித்து, முகத்தையும் அலம்பிக் கொண்டாள். மூவருமாக வேனிற்கு திரும்பி நடந்து வரும்போது

“ஏன்மா மிருது ஏழு மாசமாக போறதே நீ என்னத்துக்கு இப்படி வந்த? பேசாம ஆத்துலயே ரெஸ்ட் எடுத்துண்டிருக்க வேண்டியது தானே”

“இல்ல அத்தை பரவாயில்லை. பெரியவா ஆசிர்வாதம் கிடைக்க நானும் என் குழந்தையும் புண்ணியம் பண்ணிருக்கணும்.”

அவர்கள் வேன் அருகே வந்ததும் அனைத்துச் சொந்தங்களும் அத்தை சொன்னதையே சொன்னார்கள்.

தன் அதிகார வர்க புகுந்த வீட்டின் கட்டளைப்படி நடக்க வேண்டியதால் வந்தேன் என்பதை வெளியே யாரிடமும் ஏன் தன் தாயிடம் கூட சொல்லாமல் அவர்களை விட்டுக் கொடுக்காமல் பேசி சமாளித்தாள் மிருதுளா. அது அத்தனையையும் கேட்டுக் கொண்டு மட்டுமமே இருந்தனர் நவீனும் அவன் பெற்றோரும், தம்பிகளும்.

அனைவரும் வேனில் மீண்டும் ஏறினர். பயணம் தொடர்ந்தது. சொர்ணம் அத்தை சும்மா இல்லாமல்

“ஏய் பர்வதம் மிருதுளாவை ஆத்துலேயே விட்டுட்டு வந்திருக்கலாமோனோ!! பாவம் என்னத்துக்கு அவள இந்த மாதிரி நேரத்துல இப்படி அலக்கழிக்கணும்”

“என்னமோ நான் அவளை பஸ்ஸுல வர வெச்சா மாதிரின்னா சொல்லறேங்கள்?. ஜம்மன்னு சொகுசா நமக்குன்னு இருக்கற வேன்ல நம்ம கூட தானே வரா இதுல என்ன அலக்கழிப்பு இருக்குன்னு எனக்குப் புரியலை”

“ஆமா உன் கிட்ட போய்ச் சொன்னேன் பாரு என்ன சொல்லணும்.”

“ஆமாம் ஆமாம்”

“ஏன்டா நவீன் நீயாவது உன் ஆத்துக்காரியை ஆத்துலயே விட்டுட்டு வந்திருக்கலாமோனோ?” 

“செஞ்சிருக்கலாம் அத்தை ஆனா அவ மட்டும் தனியா இருக்கணுமேன்னு தான் யோசிச்சோம்…”

“ஏன் அவ அம்மா ஆத்துல விட்டுட்டு வந்திருக்கலாமே டா!”

“அவ வந்ததுனாலன்னு இப்போ உங்களுக்கென்ன? மொதல்ல அதச் சொல்லுங்கோ”

“அவ வரதுனால எனக்கு ஒண்ணுமில்லை பர்வதம். பாவம் வயத்துல புள்ளைய வச்சுண்டு இப்படி கஷ்டப்பட்டு உட்கார்ந்துண்டு வரணுமேன்னு தான் சொன்னேன் மா”

“அத்தை ப்ளீஸ் விடுங்கோ. எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை இதோ இன்னுமொரு அரை மணி நேரத்துல திருகடையூர் வந்திடுமே அப்புறம் என்ன அங்கப் போய் ரெஸ்ட் எடுத்துண்ட்டா போச்சு”

“ஏதோ என் மனசுல பட்டதைச் சொன்னேன்டி மா”

என்று சொர்ணம் அத்தையும், கூட இருந்த சொந்தங்களின் குரல்களும் மிருதுளாவிற்காகவும் அவள் வயிற்றில் வளரும் சிசுவிற்காகவும் ஒலித்தும் அவர்கள் எவரின் குரலையும் துளிக் கூட மதிக்கவில்லை பர்வதம். ஆனால் மிருதுளாவிற்கு தனக்காக ஒலித்த அவர்களின் குரல் மகிழ்ச்சியைத் தந்தது. மிருதுளாவிற்காகவும் அவர்கள் வீட்டின் அடுத்தத் தலைமுறையின் முதல் வாரிசுக்காகவும் நவீன் வீட்டினர் இவைகளை எல்லாம் யோசித்திருக்க வேண்டும். என்னச் செய்ய மிருதுளா அவஸ்தைப் படட்டும் என்று நினைப்பவர்களிடம் வேறெதை எதிர்பார்க்கக்கூடும். 

திருகடையூரிலுள்ள ஒரு கல்யாண மண்டபத்தின் முன் இரண்டு வேன்களும் நின்றது. அனைவரும் இறங்கி அவரவர் சாமான்களைத் தூக்கிக் கொண்டு உள்ளேச் சென்றனர். ஈஸ்வரன் பர்வதம் மட்டும் ஜம்பமாக கை வீசிக் கொண்டுச் சென்றனர் ஏனெனில் அவர்கள் பைகளையும் சேர்த்துத்  தூக்கி வந்தது நவீன், ப்ரவின் மற்றும் பவின். 

உள்ளேச் சென்றதும் அவரவர் ஒவ்வொரு அறைக்குள் சென்றனர். மிருதுளாவும் நவீன் பின்னாலேயேச் சென்றாள். அவர்கள் குடும்பத்திற்கு ஒரு அறைக் கொடுக்கப்பட்டிருந்தது. அதனுள் சென்றதும் நவீன் மற்றும் அவன் தம்பிகள் பைகளை எல்லாம் ஒரு மூலையில் வைத்து விட்டு வெளியேச் சென்றனர் அப்போது நவீன் மிருதுளாவிடம்

“மிருது நீ பேசமா இங்கயே ரெஸ்ட் எடுத்துக்கோ சரியா. இந்தா தண்ணி பாட்டில் வச்சுக்கோ” 

“ஓகே நவீ நான் கொஞ்ச நேரம் படுத்துக்கறேன்”

“ஓகே. அவள பாத்துக்கோங்கோ”

என்று தன் பெற்றோரிடம் கூறிவிட்டு நவீன் வெளியேச் சென்றதும் மிருதுளா மெல்ல தரையில் ஒரு பெட்ஷிட் விரித்துப் படுத்துக் கொண்டாள். அவள் படுத்துக் கொள்ளும் வரை சும்மா இருந்துவிட்டு அவள் படுத்ததும்…

“என்னதிது வந்த இடத்தில் இப்படியா படக்குன்னு படுத்துக்கறது? என்ன படுத்துண்டு ரெஸ்ட் எடுக்கவா வந்திருக்கோம். எல்லாரும் அங்க அவாஅவா பெட்டியை எல்லாம் ரூம்ல வச்சுட்டு ஒண்ணா உட்கார்ந்து பேசிண்டிருக்கா அங்க வராம இங்க படுத்துண்டா எப்படி? அதுவும் அப்பா உட்கார்ந்திருக்காளேன்னு கூட மரியாதை இல்லாம இது என்ன பழக்கமோ? ஏன்னா வாங்கோ நாம போய் எல்லாரோடையும் உட்கார்ந்து பேசுவோம் இங்க நம்மள விட வயசுல மூத்தவா எல்லாம் இருக்கா அவா படுத்துக்கட்டும் நாம போவோம் வாங்கோ” 

என்று கூறிவிட்டு பர்வதமும் ஈஸ்வரனும் மிருதுளாவின் பதிலுக்குக் கூட காத்திராமல் ரூமை விட்டு வெளியே சென்று அனைவருடன் பேசலானார்கள். 

பர்வதம் சொல்லிச் சென்றதை கேட்டதும் மிருதுளா தன் வயிற்றை தடவிக்கொண்டே தன் பிள்ளையுடன் பேசினாள்

“செல்லம் என்னாட இது அம்மா என்னமா தப்புப் பண்ணிட்டேன். படுத்தது தப்பா? பாப்பாக்காக தானே அம்மா படுத்துகிட்டேன். நாம வந்திருக்கவே கூடாது பேசாம வீட்டிலயே இருந்திருக்கலாம். அம்மாவும் கஷ்டபட்டு உன்னையும் கஷ்டப்படுத்தி ச்சே…பரவாயில்லை கண்ணு நாளைக்கு நம்மள ஒரு நல்ல தாத்தாவும் பாட்டியும் ஆசிர்வாதம் பண்ணுவா அது தான் நீ நல்லபடியா இந்த பூமில வாழறதுக்கு வேண்டியதில் முக்கியமானது அதுனால கொஞ்சம் பொறுத்துப்போம் கண்ணுக்குட்டி. சரியா. சமத்துப் பாப்பா”

“ஏய் மிருது யார் கிட்ட பேசிண்டிருக்க?  அப்பா அம்மா எங்க?”

“அவா ரெண்டு பேரும் வெளில உட்கார்ந்து பேசிண்டிருப்பா..நீங்க பார்க்கலையா?”

“இல்லையே!!! வெளியே எல்லாரும் ஹோட்டல்ல மத்தியச் சாப்பாடு சாப்ட்டுட்டு அப்படியே கோவிலுக்கு நடந்துப் போகப்போறா . மே பி அந்தக் கூட்டத்துல இருந்திருக்கலாம் நான் பார்க்கலை. உன்னை காணலை அது தான் பார்க்க வந்தேன். நீ தனியா பேசிண்டிருக்க?”

“நான் தனியா எல்லாம் பேசலை என் குழந்தைக் கூடப் பேசிண்டிருந்தேன். நீங்க சாப்டலையா? கோவிலுக்கு போகலையா? கோவில் தூரமா இருக்கா என்ன?”

“ஓ!!! வயத்துக்குள்ள இருக்குற குட்டி இப்பவே அம்மாவோட பேச ஆரம்பிச்சாச்சா? இல்ல மிருது கிட்டக்க தான். உன்னால முடியும்னா வா போயிட்டு வருவோம் இல்லாட்டிப் பரவாயில்லை நான் உனக்கு சாப்பாடு எடுத்துண்டு வரேன் அன்ட் கோவிலுக்கு நாளைக்கு காலைல போகலாம்”

“இல்லப்பா நான் மெதுவா நடந்து வரேன். வாங்கோ போகலாம்”

இருவருமாக ஹோட்டலுக்குச் சென்றனர். அங்கே அனைவரும் வரிசையாக அமர்ந்திருந்தனர். நவீன் தன் அம்மாவிடம்…

“நீங்க எல்லாரும் சாப்பிட வரும்போது மிருதுவையும் கூட அழைச்சிண்டு வந்திருக்கலாமில்லையா? நான் போய் கூட்டிண்டு வரலைன்னா அவ பாட்டுக்கு தனியா அங்கேயே இருந்திருப்பா” 

“அவதான் படுத்துக்கணும்ன்னு படுத்துண்டுட்டாளே அப்புறம் எப்படி வரச்சொல்லறது?”

“டேய் நவீன் நான் கூட உன் அம்மாட்ட கேட்டேன். உன் புள்ளையும் மாட்டுப் பொண்ணும் சாப்பிட வரலையான்னு. அதுக்கு மிருதுளா தூங்கிண்டிருக்கான்னும் அவளுக்கு துணைக்கு நீ உட்கார்ந்திருக்கன்னும்  இல்லையா சொன்னா. ஏன் டி பர்வதம் அப்படித் தானே சொன்னாய் நீ”

“ஆமாம் நான் பார்க்கும் போது அவ தூங்கிண்டு தான் இருந்தா. அவ்வளவு தான் எனக்குத் தெரியும். எங்க கிட்ட ஏதாவது சொல்லிட்டுச் செஞ்சா தானே எங்களுக்கும் ஏதாவது தெரியும்”

“சரி சரி அத்தை சாப்பாடு எப்படி இருக்கு? சாப்ட்டதும் கோவிலுக்கு போறோமாமே?”

“ஆமாம் மிருது. ஆனா கோவில் நடை தொறக்க இன்னும் ஒன்றரை மணி நேரமிருக்கே”

“எல்லாரும் சாப்ட்டு போக நேரம் சரியா இருக்கும் அத்தை”

“சரி சரி இப்படியே பேசிண்டே இருக்காம போய் ரெண்டு பேரும் சாப்பிடுங்கோ. போங்கோ”

“ஓகே அத்தை”

இருவருமாக சாப்பிட்டு பின் மெதுவாக நடந்து கோவிலுக்குச் சென்று கடவுளை நன்றாக வேண்டிக்கொண்டு அனைவருடனும் பேசிக் கொண்டே திரும்பி மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர். 

மறுநாள் காலை அறுபதாம் கல்யாணம் பார்த்து தம்பதிகளிடம் வயதில் சிறியவர்கள் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்கள். பெரியவர்கள் தம்பதிகளை ஆசிர்வாதம் செய்தார்கள். நவீனும் மிருதுளாவும் அவர்கள் காலில் விழுந்து நமஸ்காரம் செய்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர். மதியம் கல்யாண சாப்பாடு ஆனதும் மீண்டும் அனைவரும் வேனில் ஏறினர். வேன் ராசாமணி வீட்டை நோக்கி புறப்பட்டது. அனைவரும் உண்ட மயக்கத்தில் கண் அசந்தனர். சற்று நேரத்தில் டமால் என்று பலத்த சத்தம் கேட்டு விழித்துக் கொண்டவர்களுக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. பெண்களும், நவீனும், ராசாமணியும் சென்ற வேன் விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த கிராமத்திலிருந்த அனைவரும் வேனை சூழ்ந்தனர்.

தொடரும்….

சிறிது நேரம் ப்ரவின் மற்றும் பவினுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு மாடிக்குச் சென்று உடையை மாற்றிக்கொண்டு கீழே வந்தாள் மிருதுளா. அவள் வந்தமர்ந்ததும் ப்ரவின்..

“மன்னி டின்னர் என்னப் பண்ணப் போறேங்கள்?”

“ஓ! இரு ப்ரவின் நான் போய் மாவு இருக்கான்னு பார்க்கறேன். இருந்ததுன்னா தோசையோ இட்டிலியோ சாப்பிடலாம்”

அமர்ந்தவள் மீண்டும் மெதுவாக எழுந்துக் கூறிக்கொண்டே ஃப்ரிஜைத் திறந்தாள். அதில் கொஞ்சம் பச்சைமிளகாய், ஒரு துண்டு இஞ்சி மற்றும் இரண்டு தக்காளி மட்டுமே இருந்ததைப் பார்த்ததும் மிருதுளா ப்ரவினிடம்

“மாவு இல்லையே ப்ரவின். சரி உப்புமா பண்ணட்டுமா?”

“உப்புமா வா? மன்னி ப்ளீஸ் அது மட்டும் வேண்டாமே”

“சரி இரு கிட்சனில் போய் பார்த்து டிசைட் பண்ணறேன்”

“என்ன மன்னி? டிசைட் பண்ணினேளா?”

“ஓ எஸ். டின்னர் பண்ணவும் ஆரம்பிச்சாச்சு. இன்னும் பத்து நிமிஷத்துல சுடச்சுடப்  பரிமாறப்படும்”

“என்ன பண்ணறேங்கள்?”

“பூரி மசால் பண்ணிண்டிருக்கேன். நீ போய் கொஞ்சம் கொள்ளப்பக்கத்திலேருந்து கருவேப்பிலை பறிச்சுண்டு வாயேன் ப்ளீஸ்”

“இதோ கொண்டு வரேன்”

மிருதுளா ப்ரவின், பவின், நவீன் மூவருக்கும் புரி மசால் பரிமாறினாள். மூவரும் ரசித்து உண்டனர்.  பர்வதம் இருந்திருந்தால் பூரி எல்லாம் செய்தும் தந்திருக்க மாட்டாள், செய்யவும் விட்டிருக்க மாட்டாள். தற்காலிகமாக கிடைத்த சுதந்திரத்தை பயன்படுத்தி தனக்கு பிடித்ததை செய்து அனைவருக்கும் கொடுத்து தானும் உண்டு மகிழ்ந்தாள் மிருதுளா.

ஒவ்வொரு நாள் இரவும் சிறுநீர் கழிப்பதற்கு மாடியிலிருந்து கீழே வீட்டிற்கு வெளியே உள்ள கழிப்பறைக்கு இருட்டில் இறங்கி வரவேண்டும் நவீனும் மிருதுளாவும். திருமணமான புதிதில் மிருதுளா இருட்டில் படி  இறங்கி  வந்ததற்கும் இப்போது வாயும் வயிறுமாக கீழே இறங்கி வருவதற்கும் நிறைய வித்தியாசமுள்ளது.  

அன்றிரவு மிருதுளாவிற்கு கழிப்பறை போக  வேண்டியிருந்ததால் எழுந்து நவீனைப் பார்த்தாள் நவீன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். அவள் தனியாக இருட்டில் மாடிப் படி இறங்கி போக பயந்து நவீனை துணைக்கு கூட்டிச்செல்ல எழுப்பினாள். ஆனால் அவன் அசையக்கூட இல்லை. அவள் இருட்டில் வெளியே போக பயந்து அடக்கிக் கொண்டு மீண்டும் படுத்துக் கொண்டாள். அவளுக்கு உறக்கம் வரவில்லை. மீண்டும் ஒரு முறை நவீனை  எழுப்பிப் பார்த்தாள். அவனும் விருட்டென எழுந்து

“என்ன மிருது என்ன ஆச்சு? என்ன வேணும்?”

“நவீ சாரி. என் கூட கீழ வரைக்கும் வரேளா? ப்ளீஸ். எனக்கு டாய்லெட் போகணும் ஆனா இருட்ல படி இறங்கிப் போக பயமா இருக்கு”

“அட மிருது இதுக்கு ஏன் ப்ளீஸ் எல்லாம் சொல்லிண்டு. நான் தான் என்ன வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் எழுப்பச் சொல்லிருக்கேனே. சரி சரி வா”

“நீங்க டார்ச் அடிச்சுண்டே முன்னாடி போங்கோ நான் உங்க தோளைப் பிடிச்சுண்டே பின்னாடி வரேன்”

என்று ஒரு கையால் நவீனின் தோளைப் பிடித்துக்கொண்டு, மறுகையால் தன் வயிற்றையும் பிடித்துக் கொண்டு மெதுவாக இறங்கினாள் மிருதுளா.  அவ்வளவு நேரம் சிறுநீரை அடக்கிக் கொண்டதனால் வயிற்றில் வலி ஏற்பட வயிற்றை பிடித்துக் கொண்டிருந்தாள். கீழே இறங்கி வந்த வேலையை முடித்ததும் மீண்டும் மேலே ஏறிப் போக வேண்டுமே என்றிருந்தது மிருதுளாவிற்கு. கீழேயே படுத்துக் கொள்ளலாம் என்றால் ப்ரவின் பவின் படுத்திருக்கிறார்கள், மேலும் அவர்கள் கதவை உள் தாழ்ப்பாளிட்டுக் கொண்டு உறங்குகிறார்கள். வேறு வழியின்றி மீண்டும் நவீனின் தோளைப் பிடித்துக் கொண்டு படிகளில் ஏறி தங்கள் அறைக்குள் சென்று படுத்துறங்கினாள். 

காலை விடிந்ததும் மிருதுளா எழுந்து நவீனையும் எழுப்பிவிட்டு இருவருமாக கீழே இறங்கிச் சென்றனர். நால்வருக்கும் காபிப் போட்டாள் மிருதுளா. பின் நால்வரும் அமர்ந்து முன் நாள் இரவு செய்த பூரியில் மீதமிருந்த நான்கை நால்வரும் பகிர்ந்து காபியுடன் உண்டனர். 

“என்ன டிபன் செய்யட்டும் மக்களே?”

“உன் இஷ்டம் மிருது”

“இல்ல மன்னி நம்மள குளிச்சிட்டு காபி மட்டும் குடிச்சிட்டு டிபனுக்கு பெரியப்பா ஆத்துக்கு வரச்சொன்னா அப்பாவும் அம்மாவும் ” 

“ஓ! அப்படியா!. பரவாயில்லை ப்ரவின் உன் கிட்டயாவது எல்லாம் சொல்லிட்டுப் போயிருக்காளே அதுவரைக்கும் சந்தோஷம் தான். இதை நீ நேத்து சாயந்தரமே சொல்லியிருக்கலாம் இல்லையா!! நான் இன்னும் ஒரு அரைமணிநேரம் தூங்கிருப்பேனே”

“நான் மறந்துட்டேன் மன்னி”

“ஓ! அப்படியா சரி சரி. அப்போ ஒவ்வொருத்தரா குளிக்கத் தொடங்குங்கோ அப்பத்தான் டைமுக்கு பெரியப்பா ஆத்துக்கு போக முடியும். இன்னும் ஏதாவது இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் சொல்ல மறந்திருந்தா இப்பவே சொல்லிடு ப்ரவின்”

நால்வரும் குளித்து ரெடி ஆனதும் வீட்டைப் பூட்டி நடந்து பஸ் ஸ்டாப் சென்று பஸ்ஸைப் பிடித்து ஒரு மணி நேரத்தில் ராசாமணி வீட்டிலிருந்தார்கள். அனைவரும் நவீனையும் மிருதுளாவையும் வரவேற்று அமர்ந்துப் பேச ஆரம்பித்தனர். மிருதுளாவிற்கு பசி வயிற்றைக் கிள்ளியது. அங்கு அனைவரும் டிபன் சாப்பிட்டாகி விட்டதுப் போல மிருதுளாவிற்கு தோன்றியது. ஏனென்றால் அனைவரும் கிளம்புவதற்கு தயாராகிக் கொண்டிருந்தனர். நவீனை கூப்பிட்டு பார்த்தாள் அவன் அங்கிருந்தவர்களுடன் பேச்சில் மூழ்கியிருந்தான். 

மிருதுளாவிற்கு பசி அதிகமாகிக் கொண்டேயிருந்தது…தன் மாமியாரிடம் கேட்டால் அதை வைத்தே தனக்கு ஆப்பு வைத்துவிடுவாள் என்ற பயம் ஒரு பக்கம் டிபன் சாப்பிடாமல் எப்படி பிரயாணம் செய்ய போகிறோம் என்ற பதற்றம் மறுபக்கம் என்று தனியாக தவித்துக் கொண்டிருக்கையில் அவள் தோளைப்  பின்னாலிருந்து யாரோ தட்டினார்கள் யாரென்றுத் திரும்பிப் பார்த்தாள் சொர்ணம் அத்தை நின்றிருந்தார்..

“என்ன மிருது? எப்படி இருக்க? உன் கொழந்த என்னச் சொல்லறது? எப்படி இருக்காம்?”

“நல்லா இருக்கேன் அத்தை. நீங்க எப்படி இருக்கேங்கள்? கொழந்தையும் நன்னா இருக்கு”

“நான் நல்லா இருக்கேம்மா. எனக்கென்ன? என்ன வயிறு தள்ளவேயில்லையே!! பர்வதம் ஆறரை மாசம் ஆச்சுன்னா”

“ஆமாம் அத்தை ஆறு மாசமாயாச்சு”

“அப்போ புள்ள தான் பொறக்கப் போறான்னு நேக்கு தோணறது”

“எல்லாரும் அப்படித் தான் சொல்லறா அத்தை. ஆனா எங்களுக்கு பொண்ணு தான் வேணும். பார்ப்போம்”

“சரி சரி நானும் போய் கிளம்பட்டும் நீ ஏன் நின்னுன்டு இருக்க அப்படிப் போய் அந்த சேர்ல உட்கார்ந்துக்கோ போ”

என்று சொல்லிவிட்டுச் சென்றாள் சொர்ணம் அத்தை. அவர் பேச்சைத் தட்ட விரும்பாத மிருதுளாச் சென்று அமர்ந்தாள். ஜன்னல் வழியாக ஈஸ்வரன் மெதுவாக பேசும் சப்தம் கேட்டது. மிருதுளா திரும்பிப் பார்த்தாள் ஜன்னலுக்கு மறுபுறம் ஈஸ்வரனும் ப்ரவினும் பேசிக்கொண்டிருந்தனர். 

“உன் மன்னி நேத்து நைட்டு என்னடா டின்னர் செஞ்சா?”

“பூரி மசால் பா”

“ஆஹா எனக்குப் பிடிச்சது ஆச்சே. பேசாம நானும் உங்கக் கூடவே காலை ல வந்திருக்கலாம். நேத்து நைட்டு இங்கே உப்புமா, இட்டிலி தேங்காய் சட்னி அவ்வளவுதான்” 

“சரி அப்பா காலைல டிபனுக்கு இங்க வரச் சொன்னயே அதுனால மன்னிட்ட டிபன் செய்ய வேண்டாம்ன்னு சொல்லிட்டேன் ஆனா என்ன இங்க எல்லாரும் சாப்ட்டாச்சா என்ன? எனக்கு பசிக்கறதுப்பா”

என்று ப்ரவின் கூறியதைக் கேட்டதும் மிருதுளாவின் மனமும் அதையே கூறியது. அதற்கு ஈஸ்வரனின் பதிலை ஆவளுடன் எதிர்ப்பார்த்திருந்தாள்..

“இங்க காலை ல பொங்கல் இட்டிலி வடை சட்னி சாம்பார் போட்டா. அது சீக்கிரம் தீந்துடுத்து. அதனால மீதமிருக்கறவாளுக்கு மறுபடியும் ஆர்டர் கொடுத்திருக்கா ஆனா இன்னமும் வரக்காணும்”

இதைக் கேட்டதும் மிருதுளாவிற்கு பாதி வயிறு நிறம்பியதுப் போல இருந்தது. சற்று நேரத்தில் ஆர்டர் கொடுத்த டிபன் வந்தது. மிருதுளா வேகமாகச் சென்றாள். ஆனால் சாப்பிடாத ஆண்களை முதலில் அமரச்சொன்னார்கள்.  வரிசையாக அனைவரும் அமர்ந்தனர் அதில் நவீனும் ஒருவன். மிருதுளா நிலைமை அறிந்தும் அவனுக்கு அவள் முதலில் சாப்பிட வேண்டும் என்று தோணாதது மிருதுளாவிற்கு மனவேதனை அளித்தது.  அவள் தயக்கத்துடன் நின்றிருந்ததைப் பார்த்த சொர்ணம் அத்தை அவளருகே வந்து

“ஏய் பொண்ணே நீ சாப்ட்டயோ?”

“இல்ல அத்தை. இன்னும் சாப்பிடலை”

“மொதல்ல நீ போய் உட்காரு. வாயும் வயிறுமா இருக்க நேரத்துக்கு சாப்பிடண்டாமோ.”

“பரவாயில்லை அத்தை அங்க எல்லாரும் உட்கார்ந்துட்டா. நான் அடுத்தப் பந்தில உட்கார்ந்துக்கறேன்”

“நீ வா என் கூட. அங்கப் பாரு உன் புருஷன் உட்கார்ந்திருக்கறத. டேய் நவீன் உன் பொன்டாட்டி சாப்பிடறது தானே முக்கியம் அவளை விட்டுட்டு நீ ஜம்முன்னு உட்கார்ந்திருக்க? மணி என்ன ஆச்சு?”

“அவ அப்பறமா… சாப்பிடாத பொம்மனாட்டிகள் கூட சேர்ந்து சாப்ட்டுப்பா விடுங்கோ. அதுக்காக ஏன் அவன சொல்லறேங்கள். மாவு வச்சுட்டுத் தான் வந்தேன் அதை சுட்டு சாப்ட்டுட்டு வந்திருக்கலாமோனோ. வந்தெடத்துல எல்லாம் டைமுக்கு கிடைக்குமா என்ன கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கத் தான் வேணும். அவளும் எப்போ தான் இதெல்லாம் கத்துப்பா?” 

பர்வதம் இதைச் சொன்னதும் மிருதுளாவிற்கு தூக்கி வாரிப்போட்டது. இல்லாத மாவில் எப்படி எதைச் சுட்டு சாப்பிடுவது ?!! மாவு வைக்கவில்லை என்ற உண்மை தெரிந்தும் நவீன், ப்ரவின், பவின் ஒன்றுமே கூறாமல் அவர்கள் உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். சொர்ணம் அத்தை மிருதுளாவின் கையைப் பிடித்து ஒரு இடத்தில் அமரச் செய்து தன் தங்கையிடம்

“ஏய் லக்ஷ்மி மிருதுளாவுக்கு இலையைப் போடு. டிபன் பரிமாறு. மாசமான பொண்ணுக்கு குடுக்காம வேற யாருக்கு!!! வாயும் வயிறுமா இருக்கற பொண்ண இவ்வளவு நேரம் காக்க வச்சதே தப்பு இதுல இன்னும் காக்க வச்சா பாவம் தான் வந்து சேரும். மிருதுளா நீ நிதானமா சாப்பிடு சரியா”

மிருதுளாவிற்கு அப்பாடா என்றிருந்தது மனதில். அவளுக்கு அந்த அம்பாளே சொர்ணம் அத்தை வடிவில் வந்ததாக தோன்றியது. பொறுமையாக சாப்பிட்டு மெதுவாக எழுந்துச் சென்று இலையைப் போட்டு கையை அலம்பி விட்டு வந்தாள். அடுத்தப் பந்திக்கு மீதமிருந்த பெண்கள் அமர்ந்திருந்தனர். உடனே அங்குச் சென்று அவர்களுக்கு பரிமாற முற்பட்டபோது மீண்டும் சொர்ணம் அத்தை தடுக்க அதற்கு பர்வதம்…

“என்னத்துக்கு அவளுக்கு இவ்வளோ சப்போர்ட் பண்ணறேங்கள்ன்னு எனக்குத் தெரியலை. ஏன் இந்த வேலையை அவ செஞ்சா உங்களுக்கு  என்ன?”

“பர்வதம் உன் மாட்டுப் பொண்ணு மாசமா இருக்கா அது உனக்கு ஞாபகம் இருக்கா? அதுவும் இல்லாம இங்க இத்தனைப் பேர் இருக்கும் போது அவ தான் செய்யணும்னு இல்லை புரியறதா. இது மனிதாபிமானம்னு கூடச் சொல்லுவா”

என்றதும் பர்வதம் கப்சிப் ஆனாள். மாசமாக இருக்கும் தன் மருமகளை பார்த்துக் கவனித்துக் கொள்ள வேண்டிய இடத்திலிருக்கும் நான்கு பிள்ளைகளைப் பெற்ற மகராசிக்கு இன்னொருத்தர் சொல்லிப் புரிய வைக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பர்வதம் போல் வேண்டுமென்றே சமயம் கிடைக்கும் போதெல்லாம் தன் வெறுப்பை சொல்லிலும், செயலிலும் காண்பித்து பழிதீர்த்துக் கொள்ளும் பெண்டிருக்கு சொர்ணம் அத்தைப் போன்றவர்கள் நன்றாக உறைக்கும் படி சொன்னால் தான் அந்த நேரத்திலாவது அடங்குவார்கள். 

குஜராத்தில் நவீன் மிருதுளாவை கவனித்துக் கொண்டது போல இப்போது கவனிக்கத் தவறுவது சரியா? ஏன் அதையே மீண்டும் செய்கிறான்? இதனால் மிருதுளா மனதில் என்ன நினைக்கிறாள்? 

தொடரும்……

பத்தாம் தேதி காலை நவீன் எழுந்துப் பார்த்தான் கடிகாரம் ஏழு மணி காட்டியது பக்கத்தில் மிருதுளா நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள். அவளைப் பார்த்துக் கொண்டே தன் மனதில்…

“பாவம் குஜராத்தில் தூங்கினது அதுக்கப்புறம் இன்னைக்கு தான் ஏழு மணி ஆகியும் தூங்க முடியறது. தூங்கட்டும்”

என்று அவளை எழுப்பாமல் மெதுவாக கதவைத் திறந்து வெளியேச் சென்றான் நவீன். 

“குட் மார்னிங் மாப்பிள்ளை. மிருது இன்னும் தூங்கறாளா?”

“ஆமாம் நல்லா அசந்து தூங்கறா. அதுனால தான் எழுப்பாம வந்துட்டேன். நான் போய் ப்ரஷ் பண்ணிட்டு வந்துடறேன்”

“சரி சரி தூங்கட்டும். அவளா எழுந்திரிக்கும் போது எழுந்துக்கட்டும். நீங்க பல் தேய்ச்சுட்டு வாங்கோ உங்களுக்கு காபி போட்டுத் தர்றேன்”

தன் மனைவி மீது இந்த அக்கறை ஏன் அவன் வீட்டில் மிருதுளாவை தூங்கவிடாமல் செய்தபோது வரவில்லை? பொண்டாட்டி தாசன் என்ற பெயர் வைத்து விடுவார்கள் என்று சுயநலமாக சிந்தித்தானா? இல்லை மனைவிக்கு கெட்டப் பெயர் வந்துவிடும் என்ற எண்ணமா? இங்கே அவளை தூங்க விட்டால் அவனுக்கும் பாதிப்பில்லை மிருதுளாவிற்கும் பாதிப்பில்லை அதனால் வந்த அக்கறையா? இது பெரும்பாலும் எல்லா திருமணமான ஆண்களுக்குள்ளும் இருக்கும் பாரபட்சமே. குடும்ப பொறுப்புடன் வளர்ந்த நவீனால் தன் பெற்றோரிடம்  அவர்கள் தவறை சுட்டிக் காட்டி புரிய வைக்கவும் முடியவில்லை அதே நேரம் மனைவி கஷ்டப்படுவதையும் தவிர்க்க முடியவில்லை. 

தவறு செய்தால் அதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டு மீண்டும் அதை செய்யாதிருக்கும் நற்பண்பையும், தவறு யார் செய்தாலும் தட்டிக் கேட்க வேண்டும் என்னும் தைரியத்தையும் நம் பிள்ளைகளுக்கு சிறுவயது முதலே சொல்லி வளர்க்க வேண்டும். பெரியவர்கள் தவறே செய்வதில்லை என்பது போல ஒரு பிம்பத்தை கொடுக்கக் கூடாது. பெற்றவர்கள் சில முறை பிள்ளைகளை தவறாக புரிந்துக் கொண்டு திட்டவோ / அடிக்கவோ செய்து விடுகிறார்கள், ஆனால் பிள்ளைகள் மீது தவறில்லை பெற்றவர்கள் தவறாக புரிந்துக் கொண்டு திட்டவோ / அடிக்கவோ செய்து விட்டார்கள் என்று தெரியவரும் போது எத்தனை அப்பாக்கள் / அம்மாக்கள் பிள்ளைகளிடம்(சிறு பிள்ளையானாலும்) மன்னிப்பு கேட்கிறார்கள்? 

இந்த உலகில் தவறு செய்யாத மனிதர்கள் என்று யாருமே இல்லை.  பிள்ளைகள் தவறு செய்தால் பெற்றவர்கள் திருத்துவது போல பெற்றவர்கள் தவறிழைத்தால் அதை பிள்ளைகளும் எடுத்துரைக்கலாம் என்ற சுதந்திரத்தை பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும்.   அப்படி இல்லாமல் நாங்கள் பெற்றவர்கள் நாங்கள் தவறே செய்யமாட்டோம். எங்களுக்குதான் எல்லாம் தெரியும் பிள்ளைகளாகிய நீங்கள் எங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று ஆதிக்கத்தை காட்டும் பெற்றவர்களின் திருமணமான மகன்களின் வாழ்க்கை இருதலைக் கொள்ளியினுள் எறும்பாக தான் இருக்கிறது. 

நவீனுக்கு இதுவரை அப்படி ஒரு எறும்பின் நிலை வராததற்கு காரணம் மிருதுளாவின் நற்குணம் ஆகும். அவள் நவீனின் நிலைமையைப் புரிந்து நடந்துக் கொள்வதால், பலகாலமாக ஒரு தலையில் உள்ள கொள்ளியின் வெட்பத்திலிருந்து தப்பித்துக் கொள்ள குளிர்ந்த வாழை மரமான மறுதலையின் குளிர்ச்சியை நாடலானான். இது மனித இயல்பாகும்.

நவீனுக்கு மிருதுளாவின் பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகள் மீதும் தன் மீதும் காட்டும் அன்பு, பாசம், அக்கறை எல்லாம் அவன் அதுவரை கண்டிராதது, அனுபவிக்காதது என்பதால் அது அவனுக்கு மிகவும் ஆனந்தத்தையும் மனமகிழ்ச்சியையும் தந்தது. குஜராத்திற்கு மிருதுளா குடும்பத்தினர் வந்திருந்த போதே பரிந்துக் கொண்டிருந்தாலும் அப்பொழுது ஆபிஸ், வகுப்பு என்று ஓடிக் கொண்டிருந்ததால் முழுமையாக அவர்களின் அன்பை உணர்வதற்கு நேரமில்லாமல் போனது. ஆனால் இம்முறை முழுமையாக இரண்டு நாட்கள் அவர்களுடன் இருந்ததில் பெற்றவர்களின் உண்மையான அன்பு, பாசம் பற்றி  நன்றாக புரிந்துக் கொண்டான் நவீன்.

காபியைக் குடித்துக்கொண்டே தினத்தந்தி, தினமலர் பேப்பரை படித்து முடித்தான். அப்போது ராமானுஜம்…

“உங்களுக்கு இங்கிலிஷ் நியூஸ் பேப்பர் போடச் சொன்னேன்…பேப்பர் காரன் மறந்துட்டானாம்”

“அதுனால என்ன இப்போ.  நான் தினத்தந்தி, தினமலர் பேப்பர்களும் படிப்பேன்.”

இவ்வாறு இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது மிருதுளா எழுந்து வந்தவள் தன் அம்மாவிடம்…

“அம்மா மணி ஏழரை ஆச்சு!!! என்னை எழுப்பிருக்கலாமே மா”

“அதுனால என்ன மிருது. நோக்கு ஒண்ணு தெரியுமோ கர்ப்பிணி பொண்களை தூங்கும் போது தொந்தரவு செய்யப்படாதுன்னு சொல்லுவா. அவா நல்லா தூங்கும் போது எழுப்பவும் கூடாது தெரியுமோ?”

“அப்படியா?”

“ஆமாம் அதுனால தான் உன்னை நாங்க எழுப்பலை. சரி போய் ப்ரஷ் பண்யுட்டு வா உனக்கும் காபி போட்டுத் தர்றேன்”

“நவீ நீங்க காபி குடிச்சாச்சா?”

“ஓ! எஸ் மீ டன்”

பின் ஒருவர் பின் ஒருவராக குளித்து விட்டு வந்ததும் சூடாக டிபன் சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்ததும் மிருதுளா தனது பொருட்களை எல்லாம் பேக் செய்ய ஆரம்பித்தாள். அப்போது அம்புஜம்…

“ஏண்டி மிருது நீங்க இன்னும் ஒரு ரெண்டு நாளாவது இருந்துட்டுப் போங்கோளேன் டி. இந்த தீபாவளி கொண்டாட்டத்துல உங்களை எங்களால சரியா கவனிச்சுக்க முடியாம போயிடுத்து. எனக்கும் என் பொண்ணுக்கு பிடிச்சதெல்லாம் செய்து கொடுக்கணும்ன்னு ஆசை இருக்காதா மா”

“அம்மா நீ சொல்லறதெல்லாம் சரி தான். ஒரு விஷேசம் அடெண்ட் பண்ணத்  தானே நாங்க போறோம். அது முடிஞ்சதும் நாங்க இங்கே வந்து ஒரு வாரம் தங்கறோம்ன்னு சொன்னேனே. ஆமாம் நீ எங்களை என்ன கவனிக்கலைன்னு சொல்லற? எங்களை சூப்பரா கவனிச்சிண்டேங்கள் தெரியுமா. எனக்கும் இங்கேயே இருக்கணும்னு தான் ஆசையா இருக்கு. ம்… என்ன பண்ண மா. இன்னும் இரண்டு நாள்ல வந்துடுவோம் சரியா”

“சரி சரி பத்திரமா போயிட்டு வாங்கோ. நீ முந்தி மாதிரி தனி ஆள் இல்ல மிருது ஞாபகம் வச்சுக்கோ. சர்வ ஜாக்கிரதையா இரு சரியா. நீ பேக் பண்ணு நான் போய் மத்தியான சாப்பாட்டை தயார் பண்ணட்டும்” 

மிருதுளா எல்லாவற்றையும் பேக் செய்து நவீனை அழைத்து பேக்கை ஹாலில் வைக்கச் சொல்லிவிட்டு சற்று நேரம் படுத்துக் கொண்டாள். நவீனும் வேனுவும் டிவியில் “சீக்ரெட்ஸ் ஆஃப் தி ஓஷன்” என்று  கடலுக்கடியில் உயிர் வாழும் உயிரினங்களைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போது …

“அத்திம்பேர் மிருதுக்கா இந்த ப்ரோக்ராம் பார்க்கவே மாட்டா தெரியுமா?”

“அப்படியா! ஏன் நல்லா தானே இருக்கு”

“இதுன்னு இல்ல அதிம்பேர் அவ இந்த மாதிரி ஃபிஷ், ஆக்டோபஸ், ஸ்நேக்ஸ் பத்தின எந்த ப்ரோக்ராமும் பார்க்க மாட்டா. நான் ஒரு தடவை அவளை கம்பல் பண்ணி பார்க்க வச்சேன் ரெண்டு நாள்  அவ சாப்பிடவே இல்லை. நைன்த் ஸ்டாண்டர்ட் ல அவ க்ளாஸுக்கு பக்கத்துல தான் கெம்மிஸ்ட்ரி லாப் இருந்தது எங்க ஸ்கூல்ல. அதுல இருந்து வந்த ஸ்மெல் பிடிக்காததால் தான் அவ சயின்ஸ் குரூப்பே எடுக்க மாட்டேன்னுட்டா”

“ஓ!! இதெல்லாம் எனக்கு மிருதுவ பத்திய புது இன்ஃபோ வேனு.”

“நீங்க இங்கயே எங்க கூட ஒரு வாரம் இருந்தேங்கள்னா நான் நிறைய இன்ஃபோ தருவேன். நீங்க தான் எல்லாத்தையும் மிஸ் பண்ணப்போறேங்கள்” 

“அது தான் டூ டேஸ் ல மறுபடியும் வருவோமில்லையா அப்போ கேட்டுக்கறேன்”

“ஓகே அத்திம்பேர் ஷுவரா சொல்லறேன்”

சற்று நேரம் படுத்திருந்த மிருதுளா மீண்டும் தூங்கிப் போனதைப் பார்த்த வேனு அம்புஜத்திடம்

“என்னமா மிருதுகா எழுந்துண்டதே லேட்டு !! மறுபடியும் தூங்கறா!!!. இப்படி எல்லாம் தூங்க மாட்டாளே அவ. அவளுக்கு என்ன ஆச்சு?”

“டேய் வேனு இந்த மாதிரி நேரத்துல தூக்கம் தான் வரும். நல்லா நிம்மதியா தூங்கணும். நல்லா சத்தான சாப்பாடா சாப்பிடணும் அப்பத் தானே குட்டிப் பாப்பா ஹெல்த்தியா பொறக்கும்.”

மத்திய உணவு தயார் ஆனதும் எல்லாவற்றையும் ஹாலில் கொண்டு வந்து வைத்தாள் அம்புஜம். ராமானுஜம், நவீன், வேனு மூவருமாக அமர்ந்து சாப்பிட்டனர். அவர்களுக்கு அம்புஜம் பரிமாறினாள். மிருதுளா தூங்கி எழுந்தாள். தன் அம்மா சமைத்த சாப்பாட்டின் மணம் அவளை தூண்டில் போட்டு ஹாலுக்கு இழுத்து வந்தது. 

“ஹலோ என்ன எல்லாரும் என்ன விட்டுட்டு சாப்பிடறேங்கள்”

“நீ நல்லா தூங்கிண்டிருந்த மிருது அதுனால நாங்க சாப்பிட ஆரம்பிச்சுட்டோம். வா வந்து ஜாயின் பண்ணிக்கோ”

“பரவாயில்லை நவீ. சும்மா தான் கேட்டேன். நீங்க மூணு பேரும் சாப்பிடுங்கோ நான் அம்மா கூட சாப்ட்டுக்கறேன். அதுக்குள்ள நான் போய் முகம் கை கால் அலம்பிட்டு நம்ம ஆத்துக்குப் போக ரெடியாகி வந்துடறேன்”

என்று மிருதுளா கிளம்பி வந்து தன் தாயுடன் அமர்ந்து சாப்பாட்டை ரசித்து ருசித்து சாப்பிடலானாள். அவளுக்கு நன்றாக தெரியும் அங்கே போனால் வெறும் ரசம் சாதம் தான் கிடைக்குமென்று. சாப்பிட்டு முடித்ததும் அந்த பாத்திரங்களை எல்லாம் எடுத்து அடுப்படியில் வைக்க முற்பட்ட மிருதுளாவை அம்புஜம் தடுத்து..

“மிருது நீ சாப்ட்டாச்சோனோ போய் அங்க பேசாம உட்காரு. நானும் அப்பாவும் பார்த்துக்கறோம்”

 என்று சொல்லிக் கொண்டே அனைத்தையும் பாத்திரம் மாற்றி வைத்து சாபப்பிட்ட இடத்தைச் சுத்தம் செய்து முடித்தாள் அம்புஜம். 

சற்று நேரம் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் 

“மிருது கிளம்பலாமா?”

“மாப்ள இப்போ வெயில் அடிக்கறது. சித்த வெயில் தாழ காபி குடிச்சிட்டு கிளம்புங்கோளேன்”

“சரி அப்போ ஒரு அஞ்சு மணிக்கு கிளம்பலாம் மிருது”

என்று நவீன் சொன்னதும் மிருதுளாவின் மனதில் ஏதோ ஐந்து மாதம் தங்கி விட்டு போவது போல ஒரு மகிழ்ச்சிப் பொங்கியது. 

“ஓகே நவீ. அப்பா அஞ்சு மணிக்கு அந்த ஆட்டோக் காரரை வரச்சொல்லிடுப்பா.”

ராமானுஜமும் அட்டோ ஸ்டாண்டிற்கு ஃபோன் போட்டு ஆட்டோ காரர் செந்திலை ஐந்து மணிக்கு வரச்சொன்னார். அனைவருமாக குடும்பக் கதைகளைப் பேசிக்கொண்டிருந்தனர். மூன்று மணியளவில் ஃபோன் பெல் அடித்தது. வேனு ஃபோனை அட்டெண்ட் செய்தான்..

“ஹலோ நான் ஈஸ்வரன் பேசறேன் நவீன் இருக்கானா? அவன்ட்ட பேசணும்”

“ஹலோ மாமா நான் வேனு பேசறேன். இதோ அத்திம்பேர்ட்ட குடுக்கறேன்”

ரிசீவரை ஒரு கையால் மூடியப் படி நவீனிடம் 

“அத்திம்பேர் உங்க அப்பா உங்கள்ட்ட பேசணுமாம்”

என்று கூறிக் கொடுத்தான்

“ஹலோ நவீன் பேசறேன்”

“என்ன மணி மூணு ஆச்சு இன்னும் நீங்க ரெண்டு பேரும் அங்கிருந்து கிளம்பாம என்ன பண்ணிண்டிருக்கேங்கள்?”

“வெயில் தாழ கிளம்பலாம்ன்னு இருக்கோம். அஞ்சு மணிக்கு கிளம்பி வந்துடுவோம்”

“சரி சரி சட்டு புட்டுன்னு கிளம்பி வரப்பாருங்கோ. நான் ஃபோனை வைக்கறேன்”

“ஃபோன்ல அப்பா என்னச் சொன்னார் நவீ?”

“மணி ஆச்சே ஏன் இன்னும் வரலைன்னு கேட்டா. நான் அஞ்சு மணிக்கு கிளம்பி வருவோம்ன்னு சொன்னேன். சரின்னு வச்சுட்டா”

“ஓ ! ஓகே ஓகே”

மணி நாலு அடித்ததும் அம்புஜம் எழுந்து அடுப்படிக்குச் சென்று காபி டிக்காக்ஷன் போட்டு,  தங்கள் மகளுக்குப் பிடித்த  வெங்காய தூள் பக்கோடா செய்வதற்காக வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி எல்லாவற்றையும் பொடிப் பொடியாக நறுக்கியதும் ராமானுஜத்தை அழைத்து பக்கோடா போடச்சொல்லிவிட்டு அனைவருக்கும் காபி போட்டாள். இருபது நிமிடங்களில் சுடச்சுட வெங்காய தூள் பக்கோடாவும் சூடான பில்டர் காபியும் பிள்ளைகளுக்கு செய்துக் கொடுத்தனர். அதைப் பார்த்ததும் மிருதுளா

“அய்யா வெங்காய பக்கோடா. மை ஃபேவரைட். சூப்பர் அம்மா அன்ட் அப்பா.”

“சாப்பிடு மிருது உனக்கு பிடிக்குமேன்னு தான் செய்தோம். மாப்ள உங்களுக்கு பிடிச்சிருக்கா?” 

“பிடிச்சிருக்காவா!!!! பக்கோடா சூப்பரா இருக்கு”

நவீனும் மிருதுளாவும் மாலை சிற்றுண்டியை முடித்துவிட்டு அங்கிருந்து ஆட்டோவில் பஸ் ஸ்டாப் வந்திறங்கி பஸ்ஸில் ஏறி அவர்கள் ஊருக்குச் சென்றனர். இருவரும் நவீன் வீட்டிற்குள் நுழையும் போது மணி ஆறு அடித்தது. வீட்டில் ப்ரவின் மற்றும் பவின் மட்டும் இருந்தனர்.  

“அப்பா அம்மா எங்க ப்ரவின்? நீங்க மட்டும் இருக்கேங்கள்! அவா கடைக்கு எங்கயாவது போயிருக்காளா?”

“இல்லை மன்னி அவா ரெண்டு பேரும் ராசாமணி பெரியப்பா ஆத்துக்கு போயிருக்கா நம்ம நாலு பேரையும் நாளைக்கு காலை ல ஏழு மணிக்கு அங்க வரச் சொல்லிருக்கா.”

“நவீ நீங்க அப்பாட்ட பேசும்போது இதப்பத்தி உங்க கிட்ட சொன்னாரா?”

“இல்லையே ஒண்ணுமே சொல்லையே”

“அண்ணாட்ட பேசிட்டு ஃபோனை வச்சதும் கிளம்பி போயிட்டா மன்னி”

“அப்போ எனக்கு ஃபோன் போட்டப்போதே அவா கிளம்பியாச்சா? அதை ஏன் என் கிட்ட சொல்லலை?”

“விடுங்கோ நவீ அது தான் ப்ரவின் கிட்ட சொல்லி நம்மகிட்ட சொல்ல சொல்லிருக்கா இல்லையா அப்புறம் என்ன?” 

என்று மிருதுளா சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும் மூத்த தம்பதியர் செய்தது தவறே.

நவீனிடம் ஃபோன் போட்டு இன்னுமா கிளம்பவில்லை என்று கேட்கத் தெரிந்த ஈஸ்வரனுக்கு ஏன் தாங்கள்  ராசாமணி வீட்டிற்கு செல்வதை சொல்ல தோணவில்லை! நாங்கள் பெற்றவர்கள் அதனால் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று எண்ணினாரோ என்னவோ? அப்படி எண்ணக்கூடிய ஆசாமி தானே அவர். இவர்கள் பிள்ளைகளின் மனமறிந்து நடந்துக்கொள்ளாமல், பெற்றவர்கள் என்ற அதிகாரத்தை நிலைநாட்டுகிறார்கள். இவர்களைப் போலவே நவீனும் மிருதுளாவும் இவர்களுக்குச் சொல்லாமல் இப்படி ஏதாவது செய்தால்? 

தொடரும்….

விடியற்காலை சூரியன் எழுவதற்கு முன்னதாகவே அம்புஜம் எழுந்து குளித்துவிட்டு டேப்ரிக்கார்டரில் சுப்பரபாதத்தை போட்டுவிட்டு ராமானுஜம் குளித்து வருவதற்குள் ஒரு பலகையில் மாக்கோலம் இட்டு, நல்லெண்ணையில் மிளகு, அரிசி போட்டு காய்ச்சி, அதை இருக்கைப் பலகைக்கு அருகில் வைத்து, விளக்கேற்ற எல்லா ஏற்பாடுகளும் செய்து, புதுத்துணிகளை தாம்பாளத்தில் வைத்துவிட்டு, மகன், மகள், மருமகன் ஆகியோரை எழுப்பினாள் அம்புஜம். மிருதுளாவும், நவீனும், வேனுவும் எழுந்து பல் துலக்கி விட்டு வந்ததும் முதலில் மாப்பிள்ளை நவீனை பலகையில் அமரச்செய்து தலையில் எண்ணெய் ஊற்றி தேய்த்தாள் அம்புஜம், அடுத்து மிருதுளா பின் வேனு என மூவருக்கும் எண்ணெய் தேய்க்கும் சடங்கு நிறைவாக நடைப்பெற்றது. எண்ணெய் தேய்த்ததும் ஒருவர் பின் ஒருவராக குளிக்கச் சென்றனர். குளித்து வெளியே வந்து சாமி கும்பிட்டு பின் அம்புஜம் மற்றும் ராமானுஜம் காலில்  விழுந்து நமஸ்காரம் செய்து அவர்கள்  வாங்கி வைத்திருந்த புத்தாடைகளை பெற்று அதை அணிந்துக் கொண்டனர். அனைவருக்கும் சுட சுட ஆவி பறக்கும் பில்டர் காபியை கொடுத்தாள் அம்புஜம். காபி அருந்தியதும் வேனு நவீனிடம்

“அத்திம்பேர் வாங்கோ நாம போய் அந்த பத்தாயிரம்வாலாவை வெடிப்போம்”

“சரி வா போகலாம். மிருது நீயும் வந்துப் பாரேன்”

“ஓ வரேன் ஆனா நான் திண்ணையிலே இருக்கேன் நீங்க ரெண்டு பேருமா வெடிங்கோ”

அவர்கள் வெளியே சென்று பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தார்கள். அந்த நேரம் அனைவருக்கும் காலை டிஃபன் இட்டிலி, வெண்பொங்கல், சக்கரைப் பொங்கல், மெதுவடை, சட்னி, சாம்பார் எல்லாம் தயார் செய்தார்கள் அம்புஜமும் ராமானுஜமும். பட்டாசு வெடித்து முடித்து விட்டு வீட்டினுள் வந்து கை, கால் எல்லாம் நன்றாக கழுவி பின் வரிசையாக காலை உணவருந்த அமர்ந்தார்கள் நவீன், மிருதுளா மற்றும் வேனு. அம்புஜமும், ராமானுஜமும் பிள்ளைகளுக்கு பரிமாறி அவர்கள் உண்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.  பிள்ளைகள் மூவரும் சாப்பிட்டப் பின்னர் ராமானுஜமும் அம்புஜமும் சாப்பிட்டனர். 

பின் பாத்திரங்களை எல்லாம் தேய்த்துக் கொண்டிருக்கும் போது வயிறு வலிக்க உடனே டாய்லெட் சென்று பார்த்தாள் அம்புஜம். அவள் அவளின்  மெனோபாஸின் முந்தைய நிலையில் இருந்ததால் மாதவிடாய் இந்த நாள் என்று குறிப்பிட்டு சொல்லமுடியாமல் எப்போது வேண்டுமானாலும் வந்துவிடும் என்றிருக்க, தன் மகள் மருமகனின் தலைதீபாவளி அன்று வந்ததும் அவள் சற்று பதற்றமடைந்தாள் ஏனெனில் அன்றைக்கு அவளுக்கு நிறைய வேலைகள் இருந்தது. அவை அனைத்தையும் அவளே செய்யவேண்டியும் இருக்க சற்று தலைச் சுற்றியது அம்புஜத்திற்கு. சிறிது நேரம் உள்ரூமில் சுவற்றில் சாய்ந்து காலை நீட்டிக்கொண்டு அமர்ந்தாள். 

ஹாலில் நவீன், மிருதுளா, வேனு மற்றும் ராமானுஜம் பேசிக்கொண்டிருந்தனர். அங்கே தனது அம்மாவை காணாமல் மிருதுளா

“அம்மா எங்க காணம்?”

“அவ பாத்திரம் தேய்ச்சிண்டிருந்தா. அப்பறம் எங்க போணான்னு தெரியலையே. அந்த ரூம்ல பாரு மிருது” 

என்றார் ராமானுஜம். மிருதுளா உள் ரூமிற்குள் சென்று தன் தாய் சுவற்றில் சாய்ந்தப் படி தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து தரையில் தலையணையை வைத்து அதில் மெதுவாக அம்புஜத்தைப் படுக்கச் செய்யும் பொழுது விருட்டென்று எழுந்த அம்புஜம்…

“ஆஹ்ங் ஆஹ்ங்.. எழுந்துட்டேன் இதோ வரேன்”

“அம்மா யாரும் உன்னை கூப்பிடலை படுத்து தூங்கிக்கோ”

“இல்ல மிருது எனக்கு வேலையிருக்கு”

“பரவாயில்லை கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்பறமா செஞ்சுக்கோ மா.”

“இல்ல மா இதோ வரேன்”

“சொன்னா கேட்க மாட்டியே. ஏன் ரொம்ப டல்லா இருக்க மா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை மா. நேத்தேலிருந்து சரியா தூங்கலை அதுதான்”

 உண்மையான பிரச்சினையை சொன்னால் மகளும் சங்கடப்படுவாள் என்று சொல்லாமல் மறைத்தாள் அம்புஜம். மீண்டும் அவளது வேலைகளை தொடர்ந்தாள். மத்திய உணவிற்கு சாம்பார், ரசம், அவியல், உருளை ஃப்ரை, பீன்ஸ் உசிலி, வாழக்காய் சிப்ஸ், பாயசம், மசால் வடை, இஞ்சிப்புளி, அப்பளம், வடாம் என்று ஒரு கல்யாண சாப்பாடே தயார் செய்தாள். ராமானுஜம் அவ்வப்போது காய்கறிகளை நறுக்கிக் கொடுத்தும், வடையை சுட்டெடுக்கவும் உதவிச் செய்தார். கடைசியாக குக்கரில் சாதம் வைத்து சமையல் ஒரு பதினொன்றரை மணிக்கெல்லாம் தயார் ஆனதும் அக்கடான்னு உள்ரூமில் சென்று படுத்துக்கொண்டாள் அம்புஜம். 

தன் தாய் அடிக்கடி சென்று சோர்வாக படுத்துக் கொள்வதை கவனித்த மிருதுளா மீண்டும் சென்று 

“அம்மா ஏதாவது பிரச்சினையா? நீ இப்படி அடிக்கடி சோர்ந்து போற டைப் இல்லையே”

“ஒண்ணுமில்லை மா. கொஞ்சம் டையர்டா இருக்கு அவ்வளவு தான். வா வந்து உட்காரு மிருது”

மிருதுளா மெல்ல அமர முயற்சிக்கும்  போது வாசலில் ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டது. ஹாலில் இருந்து  ராமானுஜம் 

“வாங்கோ வாங்கோ ஹாப்பி தீபாவளி”

என்று சத்தமாக வரவேற்க. அம்புஜம் மிருதுளாவிடம்…

“யாரு வந்திருக்கா மிருது? உங்க அப்பா பலம்மா வரவேற்கறா!”

“இரு பார்த்துட்டு வரேன்.”

எட்டிப் பார்த்த மிருதுளாவின் முகம் வாடியது. பின் தன் அம்மாவிடம்

“அம்மா என் மாமியார், மாமனார், ப்ரவின் அன்ட் பவின் வந்திருக்கா”

“ஓ !! அப்படியா!!! அவா வர்றதா நீங்க எங்கள்ட்ட சொல்லவே இல்லையேடி”

“எங்களுக்கே தெரியாது”

“சரி சரி வா அவாள வரவேற்போம்”

“வாங்கோ வாங்கோ பர்வதம் மாமி அன்ட் மாமா ஹாப்பி தீபாவளி. வாப்பா ப்ரவின், பவின்”

அனைவரும் வந்து ஹாலில் அமர்ந்து பேசலானார்கள். அப்பொழுது வேனு பவினையும், ப்ரவினையும் பட்டாசு வெடிக்க வெளியே அழைத்துச் சென்றான். அம்புஜம் அனைவருக்கும் எலும்மிச்சை ஜூஸ் போட்டு மிருதுளாவிடம் அனைவருக்கும் கொடுக்கச் சொன்னாள். அப்போது பர்வதம் 

“என்னது?”

“லெமன் ஜூஸ் மா. எடுத்துக்கோங்கோ”

“இந்த தனுப்பு காலத்துல லெமன் ஜூஸ்ஸா எனக்கு வேண்டாம் மா”

என்று வழக்கமான நசுங்கல் வேலையை ஆரம்பித்தாள். 

“மாமி சாரி. உங்களுக்கு என்ன வேணும்ன்னு சொல்லுங்கோ உடனே செய்து தர்றேன்”

“எனக்கு டி போதும்”

“இதோ ஒரு நொடியில் டி போட்டு தந்துட்டா போச்சு”

“என்ன சாப்பிடற நேரத்துல டி வேண்டிருக்கு?” என்றார் ஈஸ்வரன்

“இல்லை பரவாயில்லை இதோ போட்டுக் கொண்டுண்டு வரேன்.”

என்று அடுப்படிக்குள் சென்று தனது வயிறு வலியையும் காட்டிக் கொள்ளாமல் டி போட்டுக் கொண்டே மிருதுளாவை உள்ளே அழைத்தாள் அம்புஜம். 

“என்னடி மிருது இவாளும் சாப்பிட வர்றப் போறான்னு  சொல்லாமல் இப்படி வந்து நிக்கறா? நான் நம்ம அஞ்சு பேருக்கு தானே சமைச்சிருக்கேன். மறுபடியும் குக்கர்ல சாதம் வச்சிடுறேன். ஆனா மத்ததெல்லாம் பத்தும்மான்னு கொஞ்சம் பாரேன் மா” 

“நான் என்னப் பண்ணுவேன் மா. எங்க கிட்டயும் ஒண்ணுமே சொல்லலை. இப்படி திடுதிப்புன்னு வந்திருக்கா. ஓகே ஓகே நீ செய்திருப்பதெல்லாம் பத்தும்மா நீ கவலைப் படாதே.”

என்று மெதுவாக அம்புஜமும் மிருதுளாவும் பேசிக்கொண்டிருக்கையில்…

“என்ன அம்மாவும் பொண்ணுமா குசு குசுன்னு பேசிண்டிருக்கேங்கள் அடுப்படில?” என்று கேட்டுக்கொண்டே அடுப்படிக்குள் நுழைந்த பர்வதத்திடம் அம்புஜம் ஒரு தம்பளர் டியை கொடுத்து…

“ஒண்ணுமில்லை மாமி சாப்பாடெல்லாம் ரெடின்னும் எல்லாம் போதுமான்னும், டேஸ்ட் பார்க்கவும் மிருதுளாட்ட சொல்லிண்டிருந்தேன். அவளும் எல்லாம் போதும் நல்லாயிருக்குன்னு சொல்லிண்டிருந்தா நீங்க வந்துட்டேங்கள்”

“என்ன சபெஷல் உங்க பொண்ணு மாப்பிள்ளை தலைதீபாவளிக்கு?”

“காலை ல எங்க அம்மா பஞ்சு மாறி இட்டிலி, பொங்கல், வடை, சாம்பார் சட்னி எல்லாம் பண்ணினா அன்ட் லஞ்சுக்கு ஃபுல் கல்யாண மெனுவ தனியாளா செய்திருக்கா.”

என்று ஊருக்கு வந்த நாள் முதல் வெறும் ரசம் சாதமும், தொட்டுக்க ஒண்ணுமில்லாத கல்லு இட்டிலியும் மட்டுமே செய்துத் தந்த பர்வதத்திடம் கூறினாள் மிருதுளா. 

“ஓ! ஆமாம் ஆமாம் காலைல சாம்பார் வச்சுட்டா அதே மத்தியானத்துக்கும் ஆச்சே இல்லையா மாமி”

 என்று பர்வதம் கூறியதும் மிருதுளா வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு 

“அப்படி இல்லை காலைல டிஃபனுக்கு டிஃபன் சாம்பாரும் மத்தியானத்துக்கு சாப்பாட்டு சாம்பாரும் என ரெண்டு வகை சாம்பார் செஞ்சிருக்கா என் அம்மா. ஏன்னா எனக்கு டிஃபன் சாம்பாரை சாதத்தில் பிசைந்து சாப்பிடப் பிடிக்காது.”

இவ்வாறு மாமியார் விஷத்தைக் கக்க அதை மிருதுளா தடுக்க என உரையாடிக் கொண்டிருக்கையில் அம்புஜத்திற்கு டாய்லெட் போக வேண்டியிருக்க மிருதுளாவின் கையை பிடித்து அழுத்தி அமைதியாகும் படி செய்கைக் காட்டிவிட்டு பர்வதத்திடம்

“மாமி கொழந்தைகள் எப்பவாவது தான் வர்றா அப்போ அவாளுக்கு பிடிச்சதை எல்லாம் செய்துக் கொடுக்க தானே அம்மாக்களுக்கு தோணும் இல்லையா சொல்லுங்கோ.”

“ஆமாம் ஆமாம்” என்று அலுத்துக் கொண்டாள் பர்வதம். 

“நீங்க ஹால்ல இல்லாட்டி ரூம்ல உட்கார்ந்து பேசிண்டிருங்கோ இதோ நான் டாய்லெட் போயிட்டு வந்துடறேன். மாமிய கூட்டிண்டுப் போமா மிருது”

என்று வேகமாக சென்றாள் அம்புஜம். பாவம் அவள் அவசரம் மற்றும் அவள் படும் அவஸ்தை அவளுக்குத் தானே தெரியும். 

மிருதுளா தன் மாமியாரை உள்ரூமிற்குள் அழைத்துச் சென்று ஒரு பாயை விரித்து அமரச் சொன்னாள். பர்வதம் அமர்ந்துக் கொண்டே..

“உனக்கும் நவீனுக்கும் தலைதீபாவளிக்கு என்ன செஞ்சா உன் அப்பா அம்மா? நீ நைட்டில இருக்க நவீன் என்னடான்னா ஒரு டிஷர்ட்டும் ஷார்ட்ஸும் போட்டுண்டிருக்கானே”

“காலை ல இருந்து பத்து மணி வரைக்கும் புது டிரஸ் தான் போட்டுண்டிருந்தோம். கொஞ்ச முன்னாடி தான் மாத்தினோம். இதோ இந்த புடவையும், ஷர்ட்டும் பேன்ட்டும் தான் என் அப்பா அம்மா எங்களுக்கு தந்தா. ஈவினிங்க்கு வேற டிரஸ் வாங்கியிருக்காளாம். அதுவுமில்லாம வேற ஏதோ ஒரு சர்ப்ரைஸும் இருக்குன்னு சொல்லிருக்கா அது என்னன்னு தெரியலை”

“என்னத்துக்கு ரெண்டு டிரஸ் எடுத்திருக்கா?”

“அதை அவாகிட்ட தான் கேட்கணும் மா”

என்று மிருதுளா சொல்லிக் கொண்டிருக்கும் போது அதைக் கேட்டுக்கொண்டே அம்புஜம் உள்ளே நுழைந்தாள்.

“அது ஒண்ணுமில்லை மாமி கடைக்கு போனபோது ஒரு டிரஸ் எடுக்கத் தான் போனோம் ஆனா அங்க எங்களுக்கு ரெண்டும் பிடிச்சதுனால ரெண்டையுமே வாங்கிண்டு வந்துட்டோம். அந்த சர்ப்ரைஸ் கிஃப்ட்ட சாயந்தரம் இவாகிட்ட கொடுக்கலாம்ன்னு இருந்தோம்…சரி இப்போ நீங்களும் இருக்கேங்கள் இப்பவே குடுத்துட்டாப் போச்சு. என்ன சொல்லறேங்கள் மாமி?”

“ஆமாம் ஆமாம் இப்போ குடுதேங்கள்ன்னா நாங்களும் என்னது அதுன்னு தெரிஞ்சுப்போம்”

“இல்லாட்டினாலும் நானும் நவீனும்  ஆத்துக்கு வந்து காம்மிச்சிருப்போமே மா”

“சரி சரி …இந்தா மிருது இது உனக்கு, அது மாப்பிள்ளைக்கு.. நீயே கொண்டு போய் அவர்கிட்ட குடு”

“என்னது மா இது? சரி இரு நான் நவீகிட்டயும் குடுத்துட்டு ரெண்டு பேரும் ஒண்ணா ஓபன் செஞ்சுப் பார்க்கறோம்”

“நவீ , நவீ… இந்தாங்கோ இது உங்களுக்காக உங்க மாமனார் மாமியாரின் தீபாவளி கிஃப்ட். இது என்னோடது. ரெண்டு பேருமா திறந்துப் பார்ப்போமா”

“இப்பவே வா. சரி ஓகே நீயே பிரிச்சுக் காட்டு”

“வாவ் லவ்லி!!! உங்களுக்கு கோல்ட் ப்ரேஸ்லெட் நவீ. வாவ் !!! எனக்கு தோடு. ரொம்ப அழகா இருக்குமா. இந்தாங்கோ அப்பா அம்மா பாருங்கோ”

என்று மிருதுளா இரண்டையும் ஈஸ்வரன் கையில் கொடுத்தாள். ஈஸ்வரன் வாங்கியதும் அதைப் பார்க்காமல் பர்வதத்திடம் கொடுத்தார். ஆனால் பர்வதம் கை தவறியது போல நடித்து இரண்டு டப்பாக்களையும் கீழே போட்டாள். உடனே அம்புஜம் அதை எடுத்து மறுபடியும் பர்வதத்திடம் கொடுத்தாள். அதை பார்த்தும் பார்க்காதது போல மிருதுளாவிடமே கொடுத்தாள் பர்வதம். மிருதுளா அதை வாங்கி பீரோவில் வைத்து விட்டு ஹாலுக்கு வந்து அமர்ந்தாள்.

“சரி எல்லாருமா பேசிண்டே இருந்தா எப்படி சாப்பிடண்டாமா!! வாங்கோ உட்காருங்கோ. மொதல்ல ஈஸ்வரன் மாமா, பர்வதம் மாமி, ப்ரவின், பவின், மிருதுளா, மாப்பிள்ளை உட்காருங்கோ.” 

என்றாள் அம்புஜம்

“இல்லை ராமானுஜம் மாமா அவாகூட உட்காரட்டும் நானும் நீங்களும் அப்பறமா சாப்பிடுவோமே”

“பர்வதம் மாமி நீங்க மாமாவோட உட்காருங்கோ ப்ளீஸ் நாங்க மூணு பேரும் லேட்டா தான் காலைல டிஃபன் சாப்பிட்டோம் அதுனால எங்களுக்கு இப்போ பசியில்லை அதுதான் சொன்னேன்”

“பர்வதம் ஆவா தான் சொல்லறா இல்லையா வா வந்து உட்காரு” என்று ஈஸ்வரன் சொன்னதும் அமர்ந்தாள் பர்வதம்.

அம்புஜத்தால் குனிந்து பரிமாற முடியாததால் அவள் ஒவ்வொரு பொருளாக எடுத்துக் கொடுக்க ராமானுஜமும், வேனுவும் பரிமாறினார்கள். அனைவரும் சாப்பிட்டு எழுந்தப் பின்னர் அவர்களுக்கு வெற்றிலைப் பாக்கு தாம்பூலம் கொடுத்தார் ராமானுஜம். பின்பு அவர்கள் மூவரும் அமர்ந்து சாப்பிட்டார்கள். 

ராமானுஜமும் அம்புஜமும் சாப்பிட்டு எழுந்ததும்…ஈஸ்வரன்

“சரி மாமா நாங்க கிளம்பறோம். சாப்பாடு சூப்பரா இருந்தது மாமி.”

“தாங்க்ஸ் மாமா. ஏன் சாயந்தரமா வெயில் தாழ கிளம்பலாமே ஏன் இந்த வெயில்ல கிளம்பறேங்கள்?”

“இல்ல என் தம்பி ஆத்துக்கும் என் மச்சினர் ஆத்துக்கும் நாங்க போகணும் அதுதான் கிளம்பறோம் மாமி”

“ஓ !! அப்படியா சரி மாமி. ஒரு நிமிஷம் இருங்கோ”

என்று உள்ளேச் சென்று மிருதுளாவிடம் பீரோவைத் திறந்து அதன் உள்ளிருந்த  புடவை,  ப்ளௌஸ் பிட், வேஷ்டி, துண்டை எடுத்து ஒரு தாம்பாளத்தில் அதோடு வெற்றிலை பாக்கு, பழம், பூ வைத்து அவளின் மாமனார் மாமியாரிடம் கொடுக்கச் சொன்னாள் அம்புஜம். ப்ரவின் மற்றும் பவினுக்கு ஆளுக்கு ஐநூறு ரூபாய் கொடுத்து வேண்டியதை வாங்கிக்கச் சொன்னார்கள். பின் ஈஸ்வரன் குடும்பம் கிளம்பும் போது நவீனிடம்….

“நாளைக்கு சாயந்திரம் ரெண்டு பேரும் வந்திடுங்கோ சரியா” 

என்று சொன்னார் ஈஸ்வரன் அதற்கு நவீன்

“ஆங் ஆங் அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் நீங்க எல்லாரும் பத்திரமா ஆத்துக்கு போங்கோ. பை”

அவர்களுக்கு ஆட்டோவை வரவழைத்தார்  ராமானுஜம். அதில் ஏறிச் சென்றனர் நவீன் குடும்பத்தினர். அவர்களை வழியனுப்பி வைத்தப்பின் மிருதுளா குடும்பத்தினர் வீட்டினுள் வந்தனர். அனைவரும் சற்று நேரம் உறங்கப் படுத்துக்கொண்னர். வேனுவும் நவீனும் தொலைக்காட்சியில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தனர். 

மாலை நான்கு மணிக்கு அம்புஜம் எழுந்து காபி டிக்காக்ஷன் போட்டு அனைவருக்கும் காபியும் கீரை வடையும் செய்து கொடுத்தாள். மிருதுளா நன்றாக உறங்கிக் கொண்டிருந்ததால் அவளை எழுப்பவில்லை. ஐந்து மணி அளவில் மிருதுளா எழுந்தாள். அவள் ஃப்ரெஷ்ஷாகி வருவதற்குள் அவளுக்கும் காபி அன்ட் வடையை எடுத்து வைத்தாள் அம்புஜம். அன்று மாலை புதுத்துணி உடுத்தி அனைவரும் கோவிலுக்குச் சென்று வந்ததும் மீண்டும் வேனுவும் நவீனுமாக பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். ராமானுஜம், அம்புஜம், மிருதுளா மூவரும் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டும் அக்கம் பக்கத்தினருடன் பேசிக் கொண்டுமிருந்தனர்.  ராமானுஜத்தின் தம்பி ராமநாதன் அவர் மனைவி குழந்தையுடன் பைக்கில் வந்திறங்கினார். 

“வாங்கோ வாங்கோ ஹாப்பி தீபாவளி” என்றாள் அம்புஜம்.

“வாங்கோ சித்தப்பா அன்ட் சித்தி. வாடி வாண்டு” என்றாள் மிருதுளா

“வா வா ராமநாதா. வாம்மா” என்றார் ராமானுஜம்

அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் அம்புஜம் அனைவருக்கும் காபி போட்டு பட்சணங்களுடன் கொடுத்தாள். அப்போது ராமநாதனின் மனைவி அம்புஜத்திடம்…

“மன்னி நம்ம மிருதுக்கு என்ன ஒரு ஆறு மாசம் ஆகிருக்குமா?”

“ஆமாம் ஏன் கேட்கற”

“இல்லை ஆறு மாசமாகியும் அவள் இன்னமும் முந்தித்ததை விட ரொம்ப ஸிலிம்மா அழகா இருக்கா. வயிறு தெரியவேயில்லையே.”

“அதுக்கு இப்போ உனக்கென ம்மா”

“இல்ல மன்னி வயிறு இன்னமும் பெரிசாகலைன்னா…. அப்போ மிருதுக்கு ஆண் குழந்தைத் தான்ன்னு சொல்ல வரேன். “

“சித்தி எங்களுக்கு பொண்ணு தான் வேணும்”

“உன்னப் பார்த்தா எனக்கென்னவோ ஆண் குழந்தைன்னு தான் தோனறது மிருது”

“சரி சரி ஆணோ பொண்ணோ நல்லபடியா ஆரோக்கியமா பொறக்கட்டும்”

“சரி மன்னி நாங்க கிளம்பறோம் இன்னும் சில ஃப்ரெண்ட்ஸ் ஆத்துக்கெல்லாம் போகவேண்டியிருக்கு”

“சரி இந்தா இந்த பட்சணங்களை எல்லாம் பேக் பண்ணிருக்கேன். எடுத்துக்கோ”

“தாங்க்ஸ் மன்னி அப்போ நாங்க வரோம் மிருதுளா, மாப்ள அன்ட் வேனு”

என்று வந்து சிறிது நேரம் பேசிவிட்டுச் சென்றனர் ராமநாதன் குடும்பத்தினர். அவர்கள் சென்றதும் இரவு உணவு அருந்தியப் பின் அம்புஜம் மிருதுளாவையும், மாப்பிள்ளையையும், வேனுவையும் கிழக்குப் பார்த்து உட்காரச் சொல்லி ராமானுஜத்திடம் சுத்திப் போடச் சொன்னாள். அவரும் அவர்களுக்கு சுத்திப்போட்டார். பின்னர் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு படுக்கலானார்கள். 

நவீன், மிருதுளாவின் தலை தீபாவளி சிறப்பாக நடந்தேறியது. தலைதீபாவளிக்கு இரண்டே நாள் மட்டும்  சென்று வர அனுமதிக் கொடுத்துவிட்டு அதில் பாதி நாள் அவர்களும் வந்திருந்தார்கள் நமது கெட்டிக்கார மூத்த தம்பதியர்.  அம்புஜம் தனது பிரச்சினையை வெளிக்காட்டிக் கொள்ளாமலே அனைவருக்கும் அனைத்தையும் செய்து முடித்து இரவு படுத்ததும் உறங்கிப் போனாள். பிள்ளைகளுக்காக வாழும் பெற்றவர்கள் ஆயிற்றே!!! 

தொடரும்…..

எட்டாம் தேதி காலை மிருதுளா வேக வேகமாக எல்லா வேலைகளையும் செய்து முடித்தாள். தன் பெற்றோர் வீட்டுக்கு தலைதீபாவளிக்காக செல்ல தேவையான துணிமணிகளை ஒரு பேக்கில் பேக் செய்து வைத்தாள். நவீன் குளித்து விட்டு ரூமிற்குள் வந்தான்.

“என்ன மிருது பேக்கிங் எல்லாம் ஆச்சா?”

“எஸ் எல்லாத்தையும் பேக் பண்ணிட்டேன். இதோ இதெல்லாம் நம்ம அப்பா, அம்மா, ப்ரவின், பவினுக்காக தீபாவளிக்கு வாங்கினது. இதை கீழே போய் எல்லாருக்கும் கொடுத்துட்டு தீபாவளி விஷ் பண்ணிட்டு அப்படியே சாப்டுட்டு கிளம்ப வேண்டியது தான். நாம ஒரு வாரம் தங்க வேண்டிய டிரெஸ் எடுத்து வச்சிருக்கேன். ஒரு வாரம் தங்கப் போறோமில்லையா?”

“ஆமாம் ஒன் வீக் தான் தங்கப் போறதா ப்ளான் பண்ணினோம். ஏன் உனக்கு டவுட்டு?”

“ஆமாம் ஆமாம் நாம தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னாடியே போறதாக் கூட தான் ப்ளான் பண்ணினோம் ஆனா அது நடக்கலையே அதுனால தான் கேட்டேன்”

“ஓ!!! கம் ஆன் மிருது. நாம ஒரு வாரம் உங்க ஆத்துல தங்கிட்டு தான் வரப்போறோம்”

என்று பேசிவிட்டு இருவருமாக பைகளுடன் கீழே வந்தார்கள். 

“அப்பா, அம்மா, ப்ரவின் அன்ட் பவின் எல்லாரும் வாங்கோ”

“என்ன அண்ணா?”

“மிருதுளா அதை எல்லாம் பேக்கிலிருந்து வெளிய எடுத்துத் தா”

“இந்தாங்கோ நவீ. அப்பா அம்மாட்ட கொடுத்து ஆசிர்வாதம் வாங்கிப்போம் ஃபர்ஸ்ட்”

“ரெண்டு பேரும் இப்படி வாங்கோ. இந்தாங்கோ எங்களுடைய தீபாவளி கிஃப்ட். ஹாப்பி தீபாவளி. எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்கோ”

என பெற்றோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர் நவீனும், மிருதுளாவும். 

“அம்மா உங்களுக்கு புடவைப் பிடிச்சிருக்கான்னு பார்த்து சொல்லுங்கோ”

“டேய் ப்ரவின் அன்ட் பவின் இந்தாங்கோ உங்களோட தீபாவளி கிஃப்ட் ஃப்ரம் அஸ். பார்த்து பிடிச்சிருக்கான்னு சொல்லுங்கடா எல்லாமே உங்க மன்னி செலக்சன்”

“சூப்பரா இருக்கு அண்ணா” என்றான் பவின். 

“நல்லாருக்கு ஆனா எனக்கும் பவினுக்கு எடுத்த கலர்லயே இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்” என ப்ரவின் கூற

“டேய் ரெண்டு பேரோடதும் ஒரே டிஸைன் தான் கலர் தான் வேற வேற வேணும்ன்னா நீங்க ரெண்டு பேரும் மாத்திக்கோங்கோ. ஒரே கலர் ல வாங்கிருந்தா யூனிஃபார்ம் மாதிரி இருக்குமேன்னுட்டு தான் ஒரே டிசைன்ல டிஃப்ரென்ட் கலர்ஸ் வாங்கினோம். ஈவன் ஃபார் வேனு இதே தான் வாங்கிருக்கோம்”

“எங்க காமிங்கோ மன்னி”

மிருதுளா அவள் பெற்றோருக்கும் தம்பிக்கும் எடுத்த தீபாவளி ஆடைகளை காண்பித்தாள். பர்வதம் வேகமாக அம்புஜத்திற்கு வாங்கிய புடவையைப் பார்த்தாள்…

“அம்மா ரெண்டு பேரோட புடவையும் ஒரே டிசைன் தான்”

“ஆமாம் ஆமாம் ஒரே டிசைன் தான். இந்த கலர் என்னோட புடவை கலரை விட கொஞ்சம் நல்லாருக்கு அதுதான் பார்த்தேன்.”

“சரி அப்போ இதை நீங்க வச்சுக்கோங்கோ அதை என் அம்மாக்கு கொடுத்துக்கறேன்”

“இல்ல அந்த கலர் என்கிட்ட இல்லை அதுதான் சொன்னேன்”

“பரவாயில்லை இதை வச்சுண்ட்டு அதை தாங்கோ”

ஆக பர்வதம் தன் புடவையை மிருதுளாவிடம் கொடுத்து அம்புஜத்துக்கு வாங்கிய புடவையை தனக்கென வாங்கிக்கொண்டாள். 

அனைவருமாக அமர்ந்து மத்திய உணவான ரசம் சாதம் மற்றும் பொறியலை அருந்தினர். பின் ஒரு மூன்று மணியளவில் நவீனும் மிருதுளாவும் மிருதுளா வீட்டிற்குச் செல்ல புறப்பட்டப் போது ஈஸ்வரன் அவர்களிடம்…

“நவீன் நாளைக்கு தீபாவளி முடிச்சிட்டு நீங்க ரெண்டு பேரும் நாளன்னைக்கு சாயந்தரம் இங்க வந்துடணும் சரியா”

“ஆனா நாங்க ஒரு வாரம் தங்கிட்டுத் தான் போகணும்ன்னு மிருது அப்பா அம்மா சொன்னா அதுவுமில்லாம மிருதுக்கும் அவா ஆத்துல இருக்கணும்னு இருக்கு அதுதான்…”

“அது எல்லாம் சரி தான் ஆனா பதினொன்னாம் தேதி காலைல நம்ம லீலாவதி மாமி அன்ட் சந்திரசேகர் மாமாவோட சஷ்ட்டியப்தபூர்த்திக்கு எல்லாருமா திருக்கடையூருக்கு மூன்று வேன்ல போறோம். விஷேஷம் பண்ணண்டாம் தேதி ஆனா எல்லாரையும் பதினொன்னாம் தேதியே அங்க கூட்டிண்டு போறதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணிருக்கா ஸோ நாமளும் போகணும். அதுனால தான் உங்களை பத்தாம் தேதியே திரும்பி வரச்சொல்லறேன் புரிஞ்சுதா?”

“அதுக்கு பெரியவா நீங்க ரெண்டு பேரு மட்டும் போயிட்டு வந்தா போறாதா? நாங்களும் வரணுமா என்ன?”

“வரணும். நீங்களும் வருவேங்கள்ன்னு அவா கிட்ட சொல்லியாச்சு”

இவர்களிடம் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதை உணர்ந்தாள் மிருதுளா. இப்படியே பேசிக்கொண்டிருப்பதை விடுத்து தன் வீட்டுக்காவது சீக்கிரம் போகலாம் என்றெண்ணி…

“சரி சரி நாங்க ஒரு வாரம் தங்கலை பத்தாம் தேதி சாயந்தரம் வந்திடறோம். இப்போ நாங்க கிளம்பறோம் பை. கிளம்பலாமா நவீ ப்ளீஸ்”

“சரி நாங்க போயிட்டு வரோம்”

“ஞாபகம் இருக்கட்டும் பத்தாம் தேதி சாயந்தரம் வந்திடணும்”

“சரி சரி ஓகே”

என்று அங்கிருந்து கிளம்பினால் போதும் என நவீனும் மிருதுளாவும் பஸ்ஸை பிடிக்க பஸ் ஸ்டாப்புக்கு நடந்தனர். அப்போது…

“என்ன நவீ நான் சந்தேகப் பட்டது சரிதானே? ஏன் இவாளுக்கு அப்படி ஒரு விஷேஷமிருக்கு.. அதுக்கு எல்லாருமா போகணும்ன்னு முன்னாடியே தெரியாதா என்ன? ஆமாம் யாரு அந்த லீலாவதி மாமி அன்ட் சந்தரசேகர் மாமா?” 

“அவா எங்க பெரியப்பாவோட பால்ய சிநேகிதர் எங்க எல்லாருக்கும் ரொம்ப பரிச்சயமானவா. மும்பய் ல செட்டில் ஆகிருக்கா.”

“அப்போ அவா நம்ம சொந்தக்காராக் கூட  கிடையாது. சரி நேத்தே இதப் பத்தி பேசிருக்கலாமில்லையா?  இப்போ நாம எங்காத்துக்கு கிளம்பும் போது தான் இதை டிஸ்கஸ் பண்ணணுமா?”

“ஓகே அதுதான் கிளம்பிட்டோமே விடு விடு. பண்ணண்டாம் தேதி விஷேஷம் முடிந்து வந்ததும் நாம் உங்க ஆத்துக்கு போய் ஒரு வாரம் இருந்துட்டு அப்புறம் நான் ஊருக்கு கிளம்பறேன் சரியா”

“பார்ப்போம்! பார்ப்போம்! என்ன எல்லாம் நாம நினைக்கறா மாதிரியா நடக்கறது. பஸ் வந்துடுத்து வாங்கோ சீக்கிரம் ஏறி எங்காத்துக்கு  போயிடலாம் இல்லாட்டி பின்னாடியே கூப்பிட வந்திடுவா” 

என முனகிக் கொண்டே பஸ்ஸில் ஏறினாள் மிருதுளா. இருவருமாக மிருதுளா வீட்டிற்கு அவர்கள் ஊர் வரை பஸ்ஸில் சென்று பின்  பஸ்ஸ்டாண்டிலிருந்து ஆட்டோ வைத்துக் கொண்டு சென்றனர். ஆட்டோ வீட்டு வாசலில் நின்றது நவீன் இறங்கி காசு கொடுத்துக் கொண்டிருந்தான் வீட்டினுளிருந்து…

“வாங்கோ வாங்கோ மிருது அன்ட் மாப்ளை வாங்கோ. என்னடா டைம் ஆகிண்டே இருக்கே இன்னமும் இவாள காணலையேன்னு யோசிச்சிண்டிருந்தோம்”

என அம்புஜமும், ராமானுஜமும் மகிழ்ச்சியுடன் வாசலில் வந்து இருவரையும் வீட்டினுள் அழைத்துச் சென்றனர். 

“அம்மா இந்தா எங்க ஊரு சுவீட்ஸ் அன்ட் காரம். உனக்கு பிடிக்காது ஆனா அப்பாக்கும் வேனுக்கும் பிடிக்குமே”

இருவருக்கும் தீபாவளி பட்சணங்கள் மற்றும் பஜ்ஜி, வடை சட்னி என பல வகையான மாலைச் சிற்றுண்டி  கொடுத்து சாப்பிடச் சொன்னார்கள். மிருதுளாவிற்கு ஒரே குஷியாக இருந்தது ஏனெனில் பல மாதங்களுக்குப் பின் அவ்வளவு வகையான ஸ்னாக்ஸ் ஒரே நேரத்தில் அவள் முன் வைக்கப்பட்டது. அதை இருவரும் ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கையிலே சுட சுட காபியை கொண்டு வந்துக் கொடுத்தாள் அம்புஜம்.

“அம்மா சூப்பர் மா. எவ்வளவு நாள் கழிச்சு இதெல்லாம் சாப்படறேன் தெரியுமா!!! எல்லாமே டேஸ்டியா இருக்கு. தாங்க்ஸ் மா”

“என்னத்துக்கு தாங்க்ஸ் எல்லாம் சொல்லிண்டிருக்க இப்போ. மாப்ளைக்கு எல்லாம் பிடிச்சிருக்கா? பஜ்ஜி தவிர எல்லாத்தையும் நான் பண்ணிணேன் பஜ்ஜி மட்டும் அவர் செய்தார்.”

“ஓ !!!எல்லாமே சூப்பர் டேஸ்டியா இருக்கு. என் வயிறு ஃபுல்லாகிடுத்து. காபி சூப்பரா இருக்கு”

“எங்களுக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு”

“அம்மா இந்தா உனக்காக நாங்க வாங்கிண்டு வந்த தீபாவளி கிஃப்ட். அப்பா இது உனக்கு. பிரிச்சுப் பார்த்து பிடிச்சிருக்கான்னு சொல்லுங்கோ”

“சூப்பரா இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உங்களுக்கு? சொல்லுங்கோ கொழந்தைகள் ஆசையா வாங்கிண்டு வந்துருக்காளோனோ”

“எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. தாங்கஸ் மாப்ள அன்ட் மிருது”

“என்னத்துக்கு தாங்கஸ் எல்லாம் ….ஆமாம் வேனு எங்க காணலை”

“அவன் அவனோட ஃப்ரெண்ட்ஸ் ஆத்துக்கெல்லாம் பட்சணம் கொடுத்துட்டு அப்படியே தீபாவளி வாழ்த்து சொல்லிட்டு வர்றதுக்காக போயிருக்கான். அவன் கிளம்பிப் போயி ரொம்ப நேரமாயாச்சு. இதோ வந்துட்டான்”

“ஹலோ மிருதுக்கா அன்ட் அத்திம்பேர் வெல்கம்”

“ஹாய் வேனு எப்படி இருக்க?”

“நான் நல்லா இருக்கேன் அத்திம்பேர்”

“என்ன மிருதுக்கா… எனக்கு நீ கல்யாணமாகி போனதுலேருந்து சரி போர் அடிக்கறது”

“அப்படியா டா. அப்போ என்னை ரொம்ப மிஸ் பண்ணிணயோ”

“ஆமாம் சண்டை போட ஆளில்லாமல் ரொம்ப மிஸ் பண்ணினேன் தான்”

“போடா”

“சரி வாங்கோ பட்டாசு வைக்கலாம். மிருதுக்கா வழக்கம் போல உனக்கு கம்பித்திரி, புஸ்வானம், சங்குசக்கரம் எல்லாம் அப்பா வாங்கி வச்சிருக்கா. வா போயி அதெல்லாம் வைக்கலாம்”

“டேய் நீயும் உட்கார்ந்து ஸ்னாக்ஸ் சாப்பிடு அப்புறம் போகலாம்” 

“இதெல்லாம் தான் நேத்தேலிருந்து சாப்பிடறேன். ஆனா பஜ்ஜி ஈஸ் நியூ ஸோ அத மட்டும் சாப்பிடறேன்”

அனைவருமாக பட்டாசு வெடித்து சந்தோஷமாக அன்றைய மாலைப் பொழுதை கழித்தனர். அன்று இரவு உணவிற்கு இட்டிலி சாம்பார் சட்டினி கேசரி செய்திருந்தாள் அம்புஜம். அனைவருமாக அமர்ந்து ரசித்து உண்டு மகிழ்ந்தனர். பின் அவர்கள் வீட்டிலிருக்கும் ஒரே ஒரு அறையை மிருதுளாவிற்கும் நவீனுக்கும் கொடுத்துவிட்டு அம்புஜம், ராமானுஜம் மற்றும் வேனு ஹாலில் படுத்துக் கொள்ள பாய்களை விரித்தனர் அப்போது குட் நைட் சொல்ல வந்த மிருதுளாவிடம் அம்புஜம்

“மிருது ஒரு வாரம் தங்கற மாதிரி தானே வந்திருக்கேங்கள்!!! ஏன்னா நீ ஒரு சின்ன பேக்கோட தான் வந்திருக்க அதுனால கேட்கறேன்”

“இல்ல மா நாங்க நாளன்னைக்கு சாயந்தரம் கிளம்பணும்”

“ஏன் நாங்க தான் உங்க மாமனார் மாமியார்ட்ட அன்னைக்கே சொன்னோமே”

“அதெல்லாம் அப்படித் தான் நாங்க நாளன்னைக்கு போயிட்டு பண்ணிரெண்டாம் தேதி திரும்பி வந்து ஒரு வாரம் தங்கறோம் சரியா”

“ஏன் அப்படி? என்னவோ ஏதோ எங்களுக்கு நீங்க ரெண்டு பேரும் எங்களோட ஒரு வாரமாவது இருக்கணும்ன்னு ஆசையா இருக்கு மிருது” 

“எங்களுக்கும் தான் ஆசையா இருக்கு என்ன செய்ய பார்ப்போம்”

“சரி நீ போய் தூங்கு காலை ல சீக்கிரம் எழுந்திரிக்கணும். குட் நைட்”

“குட் நைட் அம்மா, அப்பா அன்ட் வேனு”

தொடரும்…..

மூன்று நாட்களில் அதாவது நவம்பர் ஒன்பதாம் தேதி தீபாவளி. மிருதுளாவின் பெற்றோர் சந்தோஷத்துடன்  நவீன் மிருதுளா ஊருக்கு வந்த அடுத்த நாள் அவர்கள் வீட்டுக்குச் சென்று தலைதீபாவளிக்கு முறையாக அழைப்பு விடுத்தனர். 

“எங்க பொண்ணையும் மாப்பிள்ளையையும் ஏழாம் தேதியே அதாவது நாளைக்கே தலைதீபாவளிக்கு அனுப்பி வச்சிடுங்கோ மாமா” என்று பூ பழ தட்டுடன் கூறினார்கள் ராமானுஜம் தம்பதியர்.

“அப்படியா!!! அவா ரெண்டு பேரும் எட்டாம் தேதி இங்க மத்தியம் சாப்ட்டுட்டு உங்க ஆத்துக்கு வருவா” என்று ஏழாம் தேதி அனுப்ப விரும்பாததை ஈஸ்வரன் மறைமுகமாக கூறியதும் ராமானுஜமும் அம்புஜமும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு பின் மிருதுளாவையும் மாப்பிள்ளையையும் பார்த்தனர். மிருதுளா ஒன்றும் கூற முடியாமல் நின்றிருந்தாள். நவீன் தலையை குனிந்து நின்றிருந்தான். 

“சரி நாங்க அப்ப கிளம்பறோம் …வரோம்”

“இருங்கோ இதோ காபி போட்டுடறேன்”

“இல்ல மாமி எங்களுக்கு நிறைய வேலையிருக்கு. அம்பு கிளம்பலாமா”

“நாங்க போயிட்டு வரோம் மாமி. வரோம்மா மிருது. அப்போ எட்டாம் தேதியே வாங்கோ மாப்பிள்ளை”

என்று சந்தோஷத்துடன் வந்தவர்கள் மனவேதனை மற்றும் அவமானத்துடன் திருப்பிச் சென்றார்கள். மிருதுளாவிற்கு மிகவும் சங்கடமாக இருந்ததது. அவள் பெற்றோர் சென்றதும் நேராக மாடிக்குச் சென்று அவளது கோபத்தை அடக்க முயற்சித்துக் கொண்டிருக்கையில் நவீன் ரூமிற்குள் நுழைந்தான்.

“ஹேய் மிருது ஏன் இங்க வந்து இப்படி உட்கார்ந்துண்டிருக்க? என்ன ஆச்சு?”

“ப்ளீஸ் லீவ் மீ அலோன் நவீ”

“ஏய் வாட் ஹாப்பென்ட் மிருது?”

“உங்களுக்கு என்ன நடந்ததுன்னு புரியலையா இல்லை புரியாத மாதிரி நடிக்கறேங்களா நவீ?”

“சீரியஸ்ஸா புரியலை நீ ஏன் இப்படி வந்து உட்கார்ந்திருக்க”

“ஓ!! சூப்பர் நவீ!!! சூப்பர்!!! எங்க அப்பா அம்மா நம்மள நம்ம தலைதீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னாடி வரச்சொன்னதுக்கு ஒண்ணு …இல்லை அவாள முந்தின நாள் தான் அனுப்ப முடியும்னோ ….இல்ல ரெண்டு நாள் முன்னாடி எல்லாம் அனுப்ப முடியாதுன்னோ சொல்லிருக்கணும் அத விட்டுட்டு அதென்ன அப்படி ஒரு பதில் கொடுக்கறா உங்க அப்பா. அதுல தான் என்ன ஒரு அதிகாரம்!!! எவ்வளவு ஆசையா சந்தோஷமா என் அப்பா அம்மா வந்தா அவாள எப்ப வந்தாலும் சங்கடப்படுத்தி அனுப்பறதே வேலையா வச்சிருக்கா உங்க அப்பாவும் அம்மாவும். இது உங்களுக்குப் புரியலைன்னு சொல்லறேங்கள்”

“ஓ!! அதுவா… நானும் கவனிச்சேன். அப்பா அப்படி பேசினதுக்கு நான் என்ன பண்ணுவேன் மிருது”

“ஏன் அப்படி பேசறேங்கள்ன்னு கேட்க தோணலையா நவீ உங்களுக்கு??”

“அவா அப்படி தான் !!!என்ன பண்ண?”

“சரி இதே மாதிரி என் அப்பா உங்க அப்பாகிட்ட பேசியிருந்தா இதே மாதிரி தான் சொல்லிருப்பேங்களா நவீ?”

“ஜஸ்ட் லீவ் இட் மிருது”

“எப்படி!!! எப்படி!!! ஜஸ்ட் லீவ் இட் டா!!!!”

“உங்க அப்பா அப்படி எல்லாம் பேச மாட்டார்”

“ஆமாம் எங்க அப்பா அம்மா மரியாதை தெரிஞ்சவா அதுனால அப்படி எல்லாம் பேச மாட்டா தான் ஆனா அதுக்காக ….உங்களை கல்யாணம் பண்ணிண்டு வந்த நாள் முதலா எப்ப அவா வந்தாலும் நொடுக்குன்னு ஏதாவது சொல்லறதே பொழப்பா வச்சிருந்தா எவ்வளவு நாள் தான் நானும் பொறுத்துக்கறது? என்னைத் தான் எப்ப பாரு நாக்குல விஷத்த வச்சுண்டு கொட்டிண்டே இருக்கான்னா என் பேரன்ட்ஸையும் அதே மாதிரி தான் பேசறா. என் மேலேயோ இல்ல என் பேரன்ட்ஸ் மேலயோ ஏதாவது தப்பிருக்கா?? பின்ன ஏன் எங்கள கண்டாளே இப்படி விஷத்த கக்கறா?”

என்று அத்தனை நாள் ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தாள் மிருதுளா. குட்ட குட்ட குனிந்துக்கொண்டேயிருந்தால் குட்டுபவர்கள் இன்னும் பலமாகத் தான் குட்ட நினைப்பார்களே தவிர குட்டுவதை ஒருபோதும் நிறுத்த மாட்டார்கள். 

 நவீன் மௌனம் காத்தான். ஏனெனில் மிருதுளா கேட்டதில் நியாயமிருந்தது. அவன் தன் அப்பாவிடம் கேட்காதது தவறே. பல குடும்பங்களில் அவர்கள் அப்படித் தான், அவர்களிடம் பேச முடியாது பேசி பிரயோஜனமில்லை என்று எண்ணி விலகுவதால் அதைச் செய்பவர்கள் ஏதோ அவர்களுக்கு பயந்து தான் எவரும் எதிர்த்து பேசவில்லை என்றெண்ணி மீண்டும் அதே மாதிரியான பேச்சையும் திமிரு தனத்தையும் தொடர்வார்களேயின்றி ஒருநாளும் திருந்த மாட்டார்கள். அது போல தான் இங்கேயும் நடக்கிறது. 

உண்மையில் தங்கள் பிள்ளைகள் நன்றாக சந்தோஷமாக வாழவேண்டும் என்றெண்ணும் பெற்றவர்கள் இப்படி கிடைக்கும் சந்தர்பங்களில் எல்லாம் வம்பு வளர்க்க மாட்டார்கள். 

“ப்ளீஸ் நீங்க கீழ போங்கோ நவீ. நான் என்னை நானே கொஞ்சம் ஆசுவாசப்படுத்திண்டுட்டு வரேன்.  உங்களால அவாள்ட்ட கேட்டக முடியாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்..”

“சரி விடு மிருது. கண்ணைத் துடைச்சுக்கோ. இதுக்கெல்லாமா அழுவுறது? பார்த்துக்கலாம் வா”

“இதுக்காக மட்டுமில்ல நவீ நான் இந்த ஆத்துக்கு காலடி வச்ச நாள் முதலா இதைத் தான் அனுபவிச்சிண்டிருக்கேன். நீங்க போங்கோ நான் வரேன்”

நவீன் கீழேச் சென்றான்.

“என்னவாம் உன் பொண்டாட்டிக்கு? ஏன் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணறா?” 

என்று ஈஸ்வரன் கேட்டதுக்கு “நாங்கள் எங்கள் ரூமில் மாடியில் கதவு சாத்திக்கொண்டு பேசியது எப்படி உங்களுக்கு தெரிந்தது” என்று கேட்காமல் நவீன் அவரை ஒரு பார்வைப் பார்த்திவிட்டு ஃப்ரிட்ஜிலிருந்து ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து மடக் மடக்கென்று குடித்துவிட்டு டிவியை ஆன் செய்து பார்க்கலானான். 

சற்று நேரததில் மிருதுளா கீழே வந்தாள். நவீன் டிவி பார்த்துக் கொண்டும் மற்றவர்கள் ஏதோ வேண்டாதவர்கள் தங்கள் வீட்டில் அமர்ந்திருப்பது போல நடந்துக்கொண்டனர். இப்படிப்பட்ட சூழல் தன் குழந்தைக்கு சரியில்லை என்றெண்ணி அவள் ப்ரவின் மற்றும் பவினுடன் பேச்சுக்கொடுத்தாள்.

“ஹே ப்ரவின் அன்ட் பவின் உங்க காலேஜ் எல்லாம் எப்படி போறது?”

“நல்லா தான் போறது” என்றான் ப்ரவின்

“பவின் உனக்கு”

“ம்..ம்… நல்லாருக்கு”

“சரி நீ குஜராத் ல இருந்து வந்த கதை எல்லாம் உன் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொன்னயா? எல்லாரும் என்ன சொன்னா?”

“ஒண்ணும் சொல்லலை”

என்று இருவருமே ஓரிரு வார்த்தைகளில் பதிலளிக்க அதற்கு மேல் பேச்சைத் தொடர விரும்பாத மிருதுளா நவீனுடன் சேர்ந்து டிவி பார்த்தாள். அவளுக்கு ஏதோ காற்றுப் புகாத ஒரு கூண்டில் அடைப்பட்டிருப்பது போல இறுக்கமாக இருந்தது. சாப்பிட்டப்பின்னர் மிருதுளா பாத்திரங்களை எல்லாம் எடுத்து வைத்து விட்டு இடத்தை சுத்தம் செய்த பின் சற்று நேரம் உறங்க வேண்டும் போல் தோண கீழே உள்ள ரூமிற்குள் சென்று பார்த்தாள் அங்கே ஈஸ்வரன் படுத்திருந்தார். ஹாலில் படுக்கலாமென்று வந்து பார்த்தாள் அங்கு பர்வதம், ப்ரவின் மற்றும் பவின் படுத்திருந்தனர் நவீன் சேரில் அமர்ந்து புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தான். 

மிருதுளா சற்று நேரம் கதவோரமாக அமர்ந்திருந்து விட்டு தூக்கம் சொக்க ஆரம்பித்ததும் மெல்ல எழுந்து மாடி ரூமிற்குச் சென்றாள். நவீன் மிருதுளா மாடிக்கு போவதைப் பார்த்தான். அவள் சென்ற கொஞ்ச நேரத்தில் அவனும் மாடிக்குச் சென்றுப் பார்த்தான் அவள் படுத்திருந்தாள். 

“என்ன மிருது தூக்கம் வர்றதா?”

“ஆமாம் நவீ சொக்கறது. இந்த வெயில் ல மாடி ஏறி வரவேண்டாமே கீழேயே படுத்துக்கலாம்னு பார்த்தேன் இடமில்லை அதுனால தான் இங்கயே வந்து படுத்துட்டேன்”

“ஏன் கீழ உள் ரூமுல படுத்திருக்கலாமே”

“அங்க அப்பா படுத்திருக்கார். சரி நான் கொஞ்ச நேரமாவது தூங்கறேன்”

“நான் மட்டும் என்னப் பண்ணப்போறேன். இரு கதவை தாப்பா போட்டுட்டு வரேன்”

இருவரும் உறங்கினர். மாலை ஐந்து மணியானதும் டர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று பழையப்படி பெல் சத்தம் கேட்டு பதறி அடித்துக்கொண்டு எழுந்தாள் மிருதுளா. அவள் எழுந்த வேகத்தைப் பார்த்ததும் நவீன் அவளை தட்டிக்கொடுத்து …

“ஒண்ணுமில்லை மிருது பெல்லு சத்தம்  தான். பயப்படாதே ஒண்ணுமில்லை. இந்தா இந்த தண்ணியைக் குடி. இவாள…. நீ நிதானமா கீழ வா”

கீழே கோபத்துடன் வந்தான் நவீன். 

“யாரு அந்த பெல்லை அடித்தது”

“ஏன்!!!! நான் தான். விளக்கேத்த நேரமாச்சு இன்னுமா தூங்குவா? அதுதான் கூப்பிட்டேன்.” என்று நக்கலாக சொன்னாள் பர்வதம்

“இனி நாங்க மாடில இருந்தா யாரும் இந்த பெல்லை அடிச்சுக் கூப்பிடக்கூடாது‌”

“பின்ன உன் பொண்டாட்டி எப்ப பாரு மாடிலேயே இருந்தா ஒவ்வொரு தடவையும் ஏறி வந்து கூப்பிடவா முடியும்”

“இந்த பெல் இருந்தா தானே அடிப்பேங்கள்”

என்று கிடுகிடுவென மாடிக்குச் சென்று அந்த பெல்லை கழற்றி பரணில் வைத்தான் நவீன். போன முறையே செய்திருக்க வேண்டும். அப்போது மிருதுளா மட்டுமே ஆனால் இப்போது உறங்குவது தன் பிள்ளையும்மல்லவா அது தான் கழற்ற வைத்திருக்க வேண்டும். 

“சரி பெல்லை கழற்றிட்ட இப்போ உன் பொண்டாட்டியை கீழ வரச்சொல்லு” என்றாள் பர்வதம். தன் மகனின் மனைவிக்கு மிருதுளா என்ற பெயர் இருப்பதே மறந்துவிட்டாள் போல தோன்றுகிறது. நவீன் மேலே ஏற துவங்கும் போது மிருதுளா கீழே இறங்கிக் கொண்டிருந்தாள். 

மாசமாயிருக்கும் மருமகளுக்கு கீழே படுக்க இடம் கொடுக்க மனமில்லை, இவர்களுக்கு மேலே ஏறி கூப்பிட கஷ்டமாக இருக்கிறதாம் ஆனால் மாசமான மருமகள் டாய்லெட் போவதற்கும் படுத்துக்கொள்வதற்கும் ஏறி இறங்க வேண்டுமாம். 

மிருதுளா கீழே வந்ததும் நேராகா பாத்ரூம் சென்று ஃப்ரெஷ்ஷாகி வந்து விபூதி குங்குமம் இட்டுக்கொண்டு காபி போட அடுப்படிக்குள் சென்றாள். அப்போது பர்வதம்…

“இப்படி தான் குஜராத்ல விளக்கேதும் ஏத்தாம தூங்கிண்டே கிடப்பயா?”

மிருதுளாவிற்கு கோபம் வந்ததால் புத்தி வேலை செய்யவில்லை அதனால் திருப்பி சரியான பதிலளிக்க முடியாமல் வேகமாக அடுத்த விஷ அம்பு பரவதம் நாவிலிருந்து வெளி வருவதற்குள் காபியைப் போட்டுக்கொண்டு வெளியே அமர்ந்திருந்த நவீனுக்கு ஒரு தம்ளர் கொடுத்து தானும் குடித்துவிட்டு இருவரின் தம்பளரையும் பாத்திரங்கள் தேய்க்க போடுமிடத்தில் குனிந்து போட்டுக்கொண்டிருக்கையில் ஹாலிலிருந்து பர்வதம் …

“அப்படியே அங்க கிடக்குற பாத்திரங்களை எல்லாம் தேய்ச்சு வச்சிடு”

மிருதுளாவும் இருக்கைப் பலகையை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்து தேய்க்கலானாள். அதைப் பார்த்த நவீன்..

“மிருது நீ வேணும்னா எழுந்திரி நான் தேய்க்கறேன். இப்படி கீழ உட்கார்ந்துண்டு தேய்க்கறதுனால வயிறு அமுங்கறது பாரு”

“ஆமா ஆமாம்….நான் நாலு புள்ளகள பெத்துருக்கேன்….என்னமோ உலகதிசம் பாரு” என்று பர்வதம் நவீன் மிருதுளாவிடம் பேசுவதைக் கேட்ட பர்வதம் சொல்ல..

“ஆனா எங்களுக்கு இது தான் ஃபர்ஸ்ட் குழந்தை” என்று நவீன் திருப்பிக் கூறியது வெடுக்கென்று உள்ளேச் சென்றாள் பர்வதம். 

“ஏன் பா ? விடுங்கோ இதோ எல்லாத்தையும் தேய்ச்சாச்சு.”

என்று மிருதுளாவே எல்லாத்தையும் தேய்த்துவிட்டு பலகையிலிருந்து எழ நவீனிடம் கைக் கொடுக்குமாறு கூற நவீனும் அவளுக்கு கைக் கொடுத்து எழுப்பிவிட்டான். 

“நவீ நாம ஒரு வாக் போகலாமா”

“ஓ எஸ், இரு வேலட்டை எடுத்துண்டு வரேன்”

நவீன் வந்ததும் மிருதுளா உள்ளேச் சென்று பர்வதத்திடம்

“அம்மா நாங்க ரெண்டு பேரும் ஒரு வாக் போயிட்டு வந்துடறோம்”

“ம்..ம்…ம்… ஆமாம் என்ன இது ஆறு மாசமாக போறது உனக்கு வயிறே காணம்”

“அப்படின்னா!!! எனக்கு நீங்க சொல்லறது புரியலை”

“இல்ல மாசமான மாதிரி இல்லையேன்னு சொல்லறேன்”

மிருதுளாவிற்கு மீண்டும் கோபம் வர

“சரி நாங்க வரோம்”

என்று கூறி நவீனுடன் வெளியேச் சென்றாள். 

தனக்கோ இல்லை தன்னை சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் தவறு நிகழ்ந்தால் தட்டிக் கேட்க வேண்டும் என்பதனால் தான் பாரதி “ரௌத்திரம் பழகு” என்று கூறியுள்ளார். எதிர்க்கும் துணிவின்றி தன் மனதிற்குள்  தனக்குத் தானே  நொந்துக்கொள்வதனால் வெளிப்படுவது ஆத்திரம் ..சினம்..கோபம். 

ஆத்திரம் அறிவற்றது என்பது மிருதுளாவிற்கு மிகவும் பொருத்தமான வாக்கியமாகும். பர்வதம் மிருதுளாவை இப்படி சீண்டிக் கொண்டே இருக்கும் போதெல்லாம் மிருதுளா கோபப்படாமல் இருந்தால் தான் அவள் மூளை விறுவிறுப்பாக வேலைச் செய்து பர்வதத்திற்கு சரியான பதிலடி கொடுக்க முடியும். இப்படி எதற்கெடுத்தாலும் கோபம் முந்திக்கொண்டால்… நஷ்டம் அவளின் உடம்பிற்கும் மனதுக்கும் தான் என்பதை மிருதுளா மட்டுமல்ல அவளைப் போன்ற பெண்கள் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டிய ஒன்றாகும். கோபம் கண்ணை மட்டும் மறைக்காது மூளையையும் செயலிழக்கச் செய்யும். மிருதுளா ஆத்திரம் தவிர்த்து “பாரதி” பெண்ணாக  விவேகத்துடன் கூடிய ரௌத்திரம் பழகியாக வேண்டும். 

தொடரும்……

வேறு வேலை பார்க்கும் நினைப்பை தற்காலிகமாக தள்ளி வைத்தனர் நவீனும் மிருதுளாவும். அவர்கள் தலைதீபாவளிக்காக ஊருக்குக் கிளம்பும் நாள் நெருங்கியது. மிருதுளா அனைத்தையும் பேக் செய்தாள் ஏனெனில் அவள் இனி மீண்டும் குஜராத்துக்கு குழந்தையுடன் தான் வருவது என்று இருவருமாக முடிவு செய்துள்ளனர். ஆகையால் அடுப்படி சாமான்கள் எல்லாவற்றையுமே காலி செய்து டப்பாக்கள் எல்லாவற்றையும் நன்றாக தேய்த்துக் கழுவி வெயிலில் வைத்து கார்டன் பாக்ஸில் போட்டு பேக் செய்து ஹாலின் ஒரு மூலையில் வைத்தாள். நவீனுக்கு காபி / டி போடுவதற்கு வேண்டியப் பாத்திரங்கள் மட்டுமே வெளியே இருந்தன. நவீன் அன்றைய கடைசி வகுப்பு முடிந்து வந்தான் 

“ஹே மிருது வா போய் டின்னர் சாப்ட்டுட்டு வருவோம்”

“ஓகே நான் ரெடி”

இருவரும் பேசிக்கொண்டே நடந்து சென்றனர். 

“நவீ நான் இல்லாம எட்டு மாசம் எப்படி இருப்பேங்கள்?”

“கஷ்டம் தான் ஆனா என்ன பண்ணறது இருந்துத்தானே ஆகணும் நம்ம ஜுனியரின் வரவுக்காக…ஆமாம் நீ இருந்துடுவயா?”

“எனக்கும் கஷ்டம் தான். ஆனா என்னை சுத்தி உங்க வீட்டு ஆட்கள் அன்ட் எங்க வீட்டு ஆட்கள்ன்னு இருந்துண்டே இருப்பாளே அதனால அவ்வளவா தெரியாதுன்னு நினைக்கறேன்..நீங்க தான் இங்க தனியா இருக்கணும் அதனால தான் கேட்டேன்” 

“ஆமாம். அன்ட் ஒன் மோர் திங் சொல்ல மறந்துட்டேன். எனக்கு இன்னும் இரண்டு மாசத்தில நம்ம சர்வீஸ் குவார்ட்டஸ் கிடைச்சிடும்ன்னு இன்னைக்கு தான் எனக்கு அதோட ஆர்டர் வந்தது. ஸோ.. நீ நம்ம குட்டியோட புது வீட்டுக்கு தான் வருவேங்கள்.”

“ஓ!! வாவ்!! சூப்பர் நவீ”

“எங்க இந்த கேம்பஸ்க்கு உள்ளயே வா?”

“அநேகமா அமாம். பார்ப்போம் வந்தா தான் தெரியும். அப்படி வந்ததுனா நான் ஷிப்டிங் வேலைல கொஞ்ச நாள் பிசியாகிடுவேன்”

“ஆமாம் நம்ம கிட்ட அப்படி என்ன பொருள் இருக்கு …பெரிய பொருட்கள்ன்னு சொல்லறதுக்கு

ஒரு ஃப்ரிட்ஜ், டிவி, கிரைண்டர், அடுப்பு, மிக்ஸி அவ்வளவு தான் அதுக்கு ரொம்ப நாள் எல்லாம் ஆகாது”

“பொருள் கம்மி தான் மிருது ஆனா அதை புது வீட்டில் செட் பண்ணணுமில்ல”

“ஓகே ஓகே”

டாபா வந்ததும் இருவரும் அவரவருக்கு வேண்டிய உணவை ஆர்டர் கொடுத்து சாப்பிட்டுக்கொண்டே பேசினர்..

“நம்ம ஷாப்பிங் போனப்போ வெளில சாப்ட்டது அதுக்கப்புறம் இப்போ தான் சாப்பிடறோம் இல்ல …”

“நவீ ஜஸ்ட் ரெண்டு வாரம் முன்னாடி தான் ஷாப்பிங்கும் போனோம் வெளிலயும் சாப்டோம். என்னமோ ரெண்டு மாசமானா மாதிரி சொல்லறேங்கள்”

“சரி பாப்பாக்கு நேம் டிசைட் பண்ணிட்டயா?”

“லிஸ்ட் ரெடி நீங்க தான் அந்த டிஸ்கஷனுக்கே வர்ற மாட்டேங்கறேங்களே”

“சரி சாப்பிட்டுட்டு போய் அத டிசைட்டு பண்ணறோம் ஓகே”

இருவரும் சாப்பிட்டப் பின் வீட்டிற்கு திரும்பி வந்து நவீன் சொன்னது போலவே அவர்களுக்கு பிறக்கப் போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று மாறி மாறி யோசித்து கடைசியா ஆண் பிள்ளைன்னா அஷ்வின், பெண் குழந்தைன்னா அஷ்வினி என்று முடிவெடுத்தப் பின் உறங்கப் படுத்துக்கொண்டனர்.

“நவீ நாம இப்போ ஊருக்கு போக வேணுமா? இங்கேயே இருந்துடறேனே”

“ஹேய் மிருது என்ன ஆச்சு?”

“எனக்கென்னவோ ஊருக்கு போறதுக்கு ஒரு மாதிரி பயமா இருக்கு நவீ”

“பயமா!!! என்னத்துக்கு பயப்படற? எல்லாம் நல்லபடியா நடக்கும். நீயும் நம்ம பாப்பாவும் சீக்கிரம் இங்க வந்திடுவேங்கள். நாம மூணு பேருமா ஜாலியா இருக்கப் போறோம். அதை எல்லாம் நினைச்சுண்டே இந்த எட்டு மாசத்தையும் ஒட்டிடுவேன். நீயும் அப்படியே நினைச்சுண்டு இரு. வேற எந்த வித பயமும் வேண்டாம் புரியறதா மிருது.”

“ம்….”

“என்ன வெறும் “ம்” மட்டும் சொல்லற?”

“வேற என்ன சொல்லணுமாம்?”

“அங் தட்ஸ் மை மிருது. அப்படி நீ பேசினா தான் எனக்கு பிடிச்சிருக்கு. தேவையில்லாத பயம் கவலை எல்லாத்தையும் தூக்கிப் போடு. பீ போல்டு மிருது.”

மிருதுளாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை நவீன் இரண்டு மூன்று முறை அழைத்தும் பதில் வராததால் அவளை உன்னித்து பார்த்தான். அவள் நன்றாக உறங்கியிருந்தாள். அவள் கன்னத்தை தட்டிக் கொடுத்து,  தலையை வருடிக் கொடுத்து, அவள் நெற்றியில் முத்தமிட்டு மனதில்…

“கடவுளே என் மிருதுவையும் எங்க குழந்தையையும் பத்திரமா என்கிட்ட திரும்பி வரவச்சுடுப்பா. அவளுக்கு எந்த வித கஷ்டமும் இல்லாம் பார்த்துக்கோப்பா”

என்று மனதார வேண்டிக்கொண்டு அவளை அணைத்துக்கொண்டு தூங்கலானான்.

மறுநாள் விடிந்தது. மிருதுளா எழுந்து காபி போட்டாள் இருவரும் அதை குடித்துவிட்டு வாசலில் சற்று நேரம் அமர்ந்திருந்தனர். அப்போது பக்கத்து வீட்டு லதா துணி காயப் போட்டுக்கொண்டிருந்தாள்.

“என்ன மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ் நவீன். இன்னைக்கு ஊருக்கு கிளம்பறீங்க இல்ல”

“ஆமாம் லதா அக்கா. அதுவுமில்லாம நான் திரும்பி வரும்போது நவீனுக்கு வீடு கிடைச்சிடுமாம் ஸோ அங்க தான் வருவேன். வந்ததும் உங்களை வந்து நிச்சயம் பார்ப்பேன் எங்க பாப்பாவோட”

“எங்க வீடு கிடைக்கும் நவீன்? ஓல்டு கேம்ப்பா இல்ல நியூ கேம்ப்பா?”

“தெரியலை அக்கா. அதுக்கு இன்னும் இரண்டு மாசமிருக்கு. பிப்ரவரி ல தான் கிடைக்கும்”

“ஓ ஓகே. மிருதுளா பத்திரமா ஊருக்கு போயிட்டு பிள்ளையும் கையுமா வா. சந்தோஷமா இரு. என்ன ஓகே வா”

“அம்மா இங்க வாயேன் இவ என்ன அடிக்கறா வந்து என்னனு கேளுமா”

“இதோ என் பிள்ளைகளின் அழைப்பு வந்தாச்சு. சரி மா நான் போய் என்னனு பார்க்கறேன் நீங்க என்ஜாய் அடுத்த ஜூன்ல உங்க வீட்டுலயும் ஒரு பிள்ள கத்துமில்ல”

“அம்மா.மா.மா..”

“இதோ வரேன் டா….சரி மிருதுளா அன்ட் நவீன் ஹாவ் அ சேஃப் ஜெர்னி…நான் உள்ள போறேன் இல்லாட்டி என்ன ஏலம் விட்டுடிடுவாங்க என் பசங்க”

“சரி அக்கா பை எட்டு மாசம் கழித்து பார்ப்போம்”

“பை மா”

இருவரும் குளித்து விட்டு ப்ரெட், பட்டர், ஜாம் சாப்பிட்டனர். மத்தியத்துக்கு நவீன் டாபாவிற்கு சென்று இருவருக்கும் குஜராத்தி ஃபுல் மீல்ஸ் வாங்கி வந்தான். இருவரும் நன்றாக சாப்பிட்டு டிவியில் திரைப்படம் பார்த்தார்கள். மாலை ஆனதும் ஊருக்கு கொண்டு போக வேண்டிய ஒரு பேக் மற்றும் இரண்டு  பெட்டிகளையும் வாசல் கதவுக்கு முன் வைத்தான் நவீன். மிருதுளா சாமிக்கு விளக்கேற்றி நல்லபடியா ஊருக்கு போயிட்டு வரணும்னு வேண்டிக்கொண்டாள். அன்றிரவுக்கு ரெயில்வே ஸ்டேஷனின் அருகிலிருந்த ஒரு டாபாவில் இரவுணவு அருந்தி விட்டு ரெயில் ஏறினார்கள் நவீனும் மிருதுளாவும். 

ஒன்றரை நாள் ரெயிலில் நவீன், மிருதுளா இருவருமாக பேசிக்கொண்டும் அக்கம்பக்கத்தில் அமர்ந்திருந்தவர்களுடன் நன்றாக பேசி அரட்டை அடித்துக்கொண்டும் ஊருக்கு வந்து சேர்ந்தனர். 

ரெயில் நிலையத்தில் நவீனின் தந்தை மற்றும் மிருதுளாவின் பெற்றோர்கள் இவர்களின் வருகைக்காக காத்திருந்தனர். இருவரும் ரெயிலிலிருந்து இறங்கியதும் அம்புஜம் மிருதுளாவை கட்டிக் கொண்டு தன் மகளுக்கு பிடித்த ஜாங்கிரி டப்பாவைக் கொடுத்தாள். பின் ராமானுஜமும் அம்புஜமும் மிருதுளா நவீனிடம் நலம் விசாரித்தனர். ஈஸ்வரன் நவீனிடம் “வாடா” என்று மட்டும் சொன்னார். அனைவருமாக ரெயிவே ஸ்டேஷன் வெளியே வந்ததும் அம்புஜமும் ராமானுஜமும் பஸ்ஸில் அவர்கள் வீட்டுக்குச் சென்றார்கள். ஈஸ்வரன், நவீன், மிருதுளா மூவரும் ஒரு டாக்ஸியில் பர்வதக்குடிலுக்கு சென்றனர்.

அவர்கள் வீட்டின் வாசலில் வந்தும் எவருமே வா என்று அழைக்க வாசல் கூட வரவில்லை. உள்ளே சென்றதும் தம்பிகள்

“ஹாய் அண்ணா” என்றும் பர்வதம் 

“ம்….ம்….வந்துட்டேளா!!! வா வா” என்றும்

ஏதோ வேண்டா வெறுப்பாக விரும்பாத விருந்தாளிகளை வரவேற்பது போல சொல்லிவிட்டு அவரவர் வேலைகளை பார்ப்பது போல பாவலா செய்தனர். அதை உணர்ந்த நவீன் மிருதுளாவிடம்…

“மிருது வா நம்ம மேலே ரூமுக்கு போகலாம்” 

“இருங்கோ நவீ இப்பதானே வந்திருக்கோம். முதல்ல அந்த பேக்கை தொறங்கோளேன் ப்ளீஸ்”

“இந்தா தொறந்தாச்சு”

மிருதுளா பேக்கிலிருந்து சுவீட் மற்றும் காரம் என ஒரு பெரிய பாக்ஸ் ஒன்றை பர்வதத்திடம் கொடுத்து…

“அம்மா இந்தாங்கோ குஜராத்தி சுவீட்ஸ் மற்றும் ஸ்னாக்ஸ்”

பர்வதம் அதை வாங்கி அவர்கள் ஹாலில் இருந்த கட்டில் மேல் வைத்து விட்டு இரவு சாப்பாட்டை எடுத்து வைக்கலானாள். 

நவீன் அந்த பேக்கிலிருந்த தனது உடையை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்கு சென்று குளித்துவிட்டு வந்தான். 

“மிருது நீ குளிக்கறதுக்கு முன்னாடி வெண்ணீறு வைச்சுக்கோ. தண்ணீ ரொம்ப ஜில்லின்னு இருக்கு”

“ஓகே நவீ” 

என்றதும் பாம்பு தன் தலையை விருட்டென திருப்பிப் பார்ப்பது போல மிருதுளாவை அடுப்படியிலிருந்து பார்த்தாள் பர்வதம். மிருதுளாவும் எழுந்து போய் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சூடு பண்ண அடுப்பில் வைத்தாள். அவளுக்கு பயங்கர அசதி ஆனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வெண்ணீறு கொதித்ததும் நவீனை கூப்பிட்டு அதை பக்கெட்டில் ஊற்றித் தரும்படி சொல்லி குளித்துவிட்டு வந்தாள். 

மகனும் மருமகளும் வருவார்கள், தனது மருமகள் தங்கள் குடும்பத்தின் அடுத்த தலைமுறையின் முதல் வாரிசை சுமந்து வருகிறாளே என்ற எந்த விதப் பாசமோ அன்போ துளி கூட இல்லாமல்….. வெண்ணீறும் போட்டு வைக்கவில்லை, சாப்பாடும் வெறும் ரசமும் ஒரு பொறியலும் மட்டும் செய்து வைத்திருந்தாள் பர்வதம். 

நான்கு மாதங்கள் பிரித்துவைத்து

வாழ்நாள் முழுவதும் பிரிந்திருக்க

பர்வதம் திட்டம் போட்டு வைத்து

அது நிறைவேறாமல் ஏமாந்திருக்க

அடுத்த சந்தர்ப்பமாக இந்த நேரத்தை

எண்ணி செயல்பட ஆரம்பித்துவிட்டாளோ!!

நவீன் மிருதுளா திருமணம் ஆனதும் அவர்களின் முதல் நான்கு மாதங்களை அவர்களிடமிருந்து களவாட நினைத்து தோற்றுப்போன பர்வதம் ஆட்டம் மீண்டும் ஆரம்பம்.

தொடரும்……

அந்த வார சனிக்கிழமை நவீன் மிருதுளா பேசிக் கொண்டது போலவே தீபாவளி ஷாப்பிங் செய்ய சென்றார்கள். கையிலிருந்த பணத்திற்கேற்ப இருவரின் பெற்றோருக்கும் ஒரே மாதிரியான புடவை, சட்டை, பேன்ட் பிட் வெவ்வேறு வண்ணங்களில் ஒரே விலையில் எடுத்தார்கள். பின் தம்பிகளுக்கு  ஆளுக்கு ஒரு சட்டை அன்ட்  டிஷர்ட் மற்றும் பேன்ட் பிட் என எடுத்து விட்டு அன்று மத்திய உணவிற்கு அந்த மார்க்கெட்டிலிருக்கும் ஃபேமஸ் லக்ஷ்மி டாபாவிற்குள் சென்று அமர்ந்து ஆர்டர் கொடுத்ததும்….

“நவீ நான் எடுத்திருக்கும் டிரெஸ் எல்லாம் உங்க ஆத்துல எல்லாருக்கும் பிடிக்கும் இல்ல. நல்லா இருக்கு தானே.”

“எல்லாத்தையும் பார்த்து பார்த்து எடுத்திருக்க அப்புறம் எப்படி நல்லா இல்லாம போயிடும் மிருது. எனக்கு நீ செலக்ட் பண்ணின எல்லா டிரெஸும் ரொம்ப பிடிச்சிருக்கு. நான் மட்டும் வந்திருந்தா இவ்வளவு கடை எல்லாம் ஏறி இறங்கிருக்க மாட்டேன். மொதோ கடையில என்ன இருக்கோ அதுலேந்து ஏதாவதை எடுத்துண்டு வந்திருப்பேன். நீ வயத்துல நம்ம பாப்பாவையும் வச்சுண்டு இந்த வெதர்ல அலைஞ்சு இதெல்லாம் வாங்கிருக்க.. உனக்கு அந்த டவுட்டே வேண்டாம். சரி சாப்பிடு”

“ஓகே இனிமே டவுட் பட மாட்டேன்”

“ஆமாம் எல்லாருக்கும் எடுத்த நமக்கு ஏன் ஒண்ணுமே எடுக்கலை?”

“எனக்கு கல்யாணத்துக்கு எடுத்த புடவைகளே புதுசா அப்படியே இருக்கு அதுனால எடுக்கலை. எங்க அப்பா அம்மா வேற ஜுன் மாசம் வந்தப்போ நமக்கு டிரெஸ் எடுத்துண்டு வந்தா இல்லையா அது வேற புதுசா அப்படியே இருக்கு அதனால தான் நமக்கு எடுக்கலை.”

“ஓ ஓகே”

“ஓ அப்ப நான் வேண்டாம்ன்னு சொன்னா அப்படியே ஓகேன்னு சொல்லி விட்டுவிடுவேங்கள் இல்ல. சரி சரி”

“ஹலோ மேடம் நான் ஃபர்ஸ்ட் கேட்டதே நமக்கு ஏன் எடுக்கலைன்னு தான். நீ சொன்னது எனக்கு கரெக்ட்டா பட்டுது அதனால ஓகே சொன்னேன். இப்போ இப்படி கேட்டா நான் என்ன சொல்லுவேன்? சரி வா சாப்பிட்டுட்டு போய் உனக்கும் ஒரு புடவை எடுத்துண்டு வருவோம்.”

“அய்ய ஒண்ணும் வேண்டாம்.  நம்ம கிட்ட இருக்கிற பணத்துக்கு இதோட நிறுத்திண்டோன்னா ஊருக்கு போற வரைக்கும் காசு இருக்கும் புரிஞ்சுதா புருஷா? ஆமாம் நான் ஒண்ணு உங்கள்ட்ட கேட்கணும்ன்னு ரொம்ப நாளா மனசில நினைச்சிண்டிருக்கேன்”

“என்ன கேளு!”

“இல்ல ஆத்துக்கு போயிட்டு கேட்கறேன். நான் மறந்துட்டேனா ஞாபகம் படுத்துங்கோ கேட்கறதுக்கு”

இருவருமாக பேசிக்கொண்டே சாப்பிட்டு பின் வீட்டிற்கு சென்றார்கள். காலை முதல் மதியம் மூன்று மணி வரை நடந்ததில் மிகவும் களைத்து போய் வீட்டிற்குள் வந்ததும் டிரெஸ் மாற்றிவிட்டு உடனே படுத்து தூங்கிவிட்டாள் மிருதுளா.

நவீன் வாங்கி வந்ததை எல்லாம் டேபிளில் அடுக்கி வைத்து விட்டு டிவியில் சத்தம் கம்மியாக வைத்து தரையில் படுத்து பார்த்துக் கொண்டே அப்படியே தூங்கிப்போனான். 

மாலை ஐந்து மணிக்கு மிருதுளா எழுந்துப் பார்த்தாள் டிவி ஒடிக்கொண்டிருந்தது. நவீன் தரையில் படுத்துறங்குவதை பார்த்து மெதுவாக கட்டிலிலிருந்து இறங்கி டிவியை ஆஃப் செய்துவிட்டு முகம், கை, கால் கழுவுவதற்கு பாத்ரூம் சென்றாள். அவள் பாத்ரூம் கதவை சாத்தும் சத்தம் கேட்டு எழுந்தான் நவீன். 

மிருதுளா ஃப்ரெஷாகி வந்து பார்த்தாள் நவீன் கண்களை விழித்துக்கொண்டு சும்மா படுத்திருந்தான். 

“எழுந்துண்டேளா. சரி போய் ஃப்ரெஷ்ஷாகி வாங்கோ அதுக்குள்ள நான் விளக்கேத்திட்டு காபி போட்டு தரேன்”

நவீனும் ஃப்ரெஷ்ஷாகி வந்து நெற்றியில் விபூதி பூசிக் கொண்டு விட்டு ஹாலில் அமர்ந்தான். மிருதுளாவும் இருவருக்கும் காபி போட்டுக் கொண்டு வந்து அமர்ந்தாள். 

“மிருது என்கிட்ட ஏதோ ஆத்துக்கு வந்ததுக்கப்பறம் கேட்கணும்னோ இல்ல சொல்லணும்ன்னோ ரெஸ்டாரன்ட்ல  சொன்ன ஆனா வந்ததும் தூங்கிட்ட!”

“ஆமாம் பா ரொம்ப டையர்டா இருந்தது அதுனால தான் படுத்ததும் தூங்கிட்டேன்”

“சரி இப்போ ஞாபகம் படுத்திட்டேனே சொல்லு”

“நான் சொல்லறதை தப்பா எடுத்துக்க கூடாது நம்மளோட நல்லதுக்கு தான் சொல்லறேன் அதுல உங்களுக்கு இஷ்டம் இல்லாட்டி நேரடியா சொல்லிடுங்கோ நான் எதுவும் தப்பா நினைச்சுக்க மாட்டேன்..இதுக்கு சரின்னு சொன்னா நான் சொல்ல வேண்டியதை சொல்லறேன்”

“அம்மாடி என்ன பீடிகை எல்லாம் ரொம்ப பலமா இருக்கே. சரி சரி சொல்லு “

“இந்த வேலையில் வரும் சம்பளம் நமக்கே பத்த மாட்டேங்கறது இல்லையா”

“ஆமாம்”

“இன்னும் அஞ்சு மாசத்துல நமக்குன்னு ஒரு குழந்தை வந்திடும் அன்ட் நம்ம ஃபேமிலி கொஞ்சம் பெரிசாகும் இல்லையா”

“ஆமாம் அதுக்கென்ன?”

“அப்போ செலவும் ஜாஸ்த்தியாகும். இந்த சம்பளம் எப்படி பத்தும். நம்ம லதா அக்காக்கு ஆர் நம்ம பல்பீருக்கு அப்புறம் உங்க நண்பர்கள் சதீஷ், ரமேஷ் இவா எல்லாருக்கும் வயல், வீடுன்னுட்டு ஒரு பேக்கப் இருக்கு அதுனால அவா சமாளிக்க முடியறது. ஆனா நமக்கு ஒண்ணுமில்லை இந்த மாத சம்பளத்தை நம்பி தான் இருக்கணும்”

“ஆமாம் யூ ஆர் ரைட்”

“நீங்களும் பத்து வருஷம் சம்பாதிச்சும் ஒரு வீடு வாசல் இல்லை …அது பரவாயில்லை”

“ஏன் இல்லை? இப்போ அப்பா அம்மா இருக்கறது நான் லோன் போட்டு வாங்கின வீடாக்கும்”

“அப்படியா?”

“ஆமாம்”

“சரி அது இருக்கட்டும். நீங்க இத்தனை வருஷமா சம்பாதிச்சது உங்கள் படிப்புக்கும், உங்கள் குடுப்பத்துக்கும், நம்ம கல்யாணத்துக்குமே செலவாயாச்சு. கையில் நையா பைசா கூட இல்லாம அடுத்த மாத சம்பளத்தை எதிர்ப்பாத்து தான் என்னை கல்யாணம் பண்ணி கூட கூட்டிண்டும் வந்தேங்கள்”

“ஆமாம். இது எல்லாம் தெரிந்த விஷயம் தானே மிருது. நானும் சொல்லிட்டேனே அதுக்கென்ன இப்போ?”

“இந்த வேலை நல்ல வேலை தான். நான் இல்லன்னு சொல்லலை. வீடு தர்றா, கேன்டீன் ஃபெசி‌லிட்டி இப்படி எல்லாமிருக்கு தான் ஆனா நம்ம எதிர்காலத்தை நினைச்சா எனக்கு கொஞ்சம் பயமா தான் இருக்கு.”

“சரி அதுக்கு என்ன பண்ணறது. கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம்”

“இல்ல நீங்க ஏன் வேற வேலைக்கு முயற்சி பண்ணக் கூடாது? இந்த வேலைல சேரும்போது வெறும் ப்ளஸ்டூ தான் படிச்சிருந்தேங்கள் சரி. ஆனா இப்போ தான் நீங்க இவ்வளவு படிச்சிருக்கேங்களே அப்புறமும் ஏன் வெளியே ட்ரை பண்ணக்கூடாதுன்னு எனக்கு தோனறது. அதை தான் உங்கள்ட்ட கேட்கணும் ன்னு இருந்தேன் கேட்டுட்டேன்”

“இங்க பாரு மிருது…நீ சொல்லறது எல்லாமே சென்ட் பெர்சன்ட் அக்செப்ட் பண்ணிக்கறேன். ஆனா நீ ஒண்ணு யோசிக்க தவறிட்ட.”

“என்ன அது?”

“நான் என் குடும்ப கஷ்டத்துக்காக தான் இந்த வேலையில் சேர்ந்தேன். இல்லன்னு சொல்லலை. ஆனா இப்போ பதினோரு வருஷம் சர்வீஸ் ஆயாச்சு இன்னும் பல்லை கடித்துக்கொண்டு ஒரு நாலு வருஷம் இங்கேயே வேலை செய்தால் லைஃப் லாங் பெனிஃபிட் கிடைக்கும் தெரியுமா”

“அது என்ன பெனிஃபிட்?”

“நான் சர்வீஸில் ஜாயின் பண்ணின புதுசுல எவ்வளவு அடி, பனிஷ்மென்ட் எல்லாம் வாங்கி கஷ்ட்டப்பட்டிருக்கேன் தெரியுமா!!! அப்படி கஷ்ட்டப்பட்டு பதினோரு வருஷம் முடிச்சாச்சு ஜஸ்ட் ஒரு நாலு வருஷம் கழிச்சு அதாவது பதினைந்து வருடம் சர்வீஸ் முடிச்சிட்டா நமக்கு லைஃப் லாங் கவர்மென்ட் பென்ஷன் வரும். இங்க அந்த பதினைந்து வருட சர்வீஸ் நமக்கு வாழ்நாள் முழுவதுக்கும் பாதுகாப்பு தரும் அதுனால தான் நானும் வெயிட் பண்ணறேன் அந்த வெயிட்டிங் டைம்ல என்னோட குவாலிஃபிக்கேஷன்ஸையும் இம்ப்ரூவ் பண்ணிண்டிருக்கேன் புரியறதா!?”

“ஓ அப்படி ஒண்ணு இருக்கா!!! சாரி எனக்கு அது தெரியாது. அப்படிப் பார்த்தா நீங்க சொல்லறதும் சரி தான். சரி அப்போ இன்னும் ஒரு நாலு வருஷம் வெயிட் பண்ணிட்டா போறது”

“தாங்க்ஸ் மிருது என்னோட கஷ்டத்தை உன் மீது சுமத்திட்டும் நீ எனக்காக யோசிக்கற அன்ட் விட்டுக் கொடுக்கற தாங்கிக்கவும் செய்ற.”

“இதெல்லாம் வார்த்தைல மட்டும் இருந்தா போதாது கணவா வாழ்க்கையிலும் என்றும் இருக்கணும் ஓகே”

“நிச்சயம் இருக்கும் மை லார்டு. சரி இப்போ நாம வாக் போகலாமா?”

தொடரும்….

ஞாயிற்றுக்கிழமை விடிந்ததும் வழக்கம் போல் அவரவர் வேலைகளை செய்தனர் நவீனும், மிருதுளாவும். 

“மிருது உன் பாடங்களை படிக்கறயா? அடுத்த மாசம் நீ பரீட்சை எழுத வேண்டும் ஞாபகமிருக்கா?”

“ஏன் பா அத இப்போ ஞாபகம் படுத்தினேங்கள்!!! சரி நாளையிலிருந்து சின்சியரா படிக்கறேன் போதுமா?”

“ஹலோ என்னமோ எனக்காக படிக்கிற மாதிரி சலிச்சுக்கற. அதெல்லாம் நல்லா எழுதுவ… ரிசல்ட்டை நினைக்காம உன் கடமையை செய். நான் பாஸ் ஆயிட்டேன் இன்னும் ஒரே ஒரு எக்ஸாம் தான் எனக்கிருக்கு பா”

“ஆமாம் எனக்கு தான் இன்னும் ரெண்டு இந்த நவம்பர்ல ஒண்ணும் அடுத்த மே மாசம் ஒண்ணுமிருக்கு.”

இப்படி அவர்கள் படிப்பை பற்றி பேசிக்கொண்டிருக்கட்டும்.

நாம ஒரு சிறிய ஃப்ளாஷ் பேக்குக்கு செல்வோமா. 

நேற்று நவீனிடம் செலவுக்கு எப்படி பணம் வந்தது? என்ற கேள்வியோடு தான் நேற்றைய பதிவை படித்து முடித்தோமில்லையா….அது எப்படி என்பதை தெரிந்துக் கொள்வோம் வாருங்கள்.

நவீன் குளிக்கச் சென்று வெகு நேரமானதில் மிருதுளாவிற்கு ஏதோ சரியாக படாததால்…கட்டிலில் அமர்ந்துக் கொண்டு  வெள்ளிக்கிழமை அன்று   நவீனின் நடவடிக்கைகள் மற்றும் சனிக்கிழமை காலை பிரட் பகோடா கேட்டபோது அவன் முழித்த முழி எல்லாவற்றையும் மனதில் அசைப்போட்டுப் பார்த்தாள். பின் அந்த மாதத்தின் செலவையும் ஓரளவு கணக்கிட்டும் பார்த்து நவீன் பணம் பற்றாக்குறை காரணமாக தான் அப்படி நடந்துக் கொண்டானோ என்ற எண்ணம் தோன்ற வேகமாக நவீனின் ஆபீஸ் பையிலிருந்து  அவன் வேலட்டை எடுத்துப் பார்த்தவள் அதிர்ச்சி ஆனாள். ஏனெனில் அவள் பார்த்தது வெரும் இரண்டு ரூபாய் ஐம்பது காசு மட்டுமே….

அப்போது அவளுக்கு நவீனின் சங்கடம் புரியவே மிகவும் வருத்தப்பட்டு அவளது கண்கள் கலங்கின. பின் வேலட்டை பையினுள்ளேயே வைத்துவிட்டு அவள் மனதில்…

“அச்சோ அவரிடம் பணமில்லை …ஆனால் நானோ அதை புரிந்து கொள்ளாமல் இந்த நேரம் பார்த்து அதை வாங்கித் தா இதை வாங்கித்தா என அவரை கஷ்டப்படுத்தி இருக்கேனே கடவுளே!!! அவர் எவ்வளவு வருத்தப்பட்டிருப்பார். ஏன் என்னிடம் அவர் சொல்லவில்லை? நான் கஷ்டப்படக்கூடாது என்று எண்ணி அவர் மிகவும் மனம் வருந்தியிருப்பார்.”

நவீன் பாத்ரூமிலிருந்து வெளியே வருவதற்குள் ஏதாவது செய்ய வேண்டும் என்றெண்ணி வேக வேகமாக எல்லா இடங்களிலும், டப்பாக்களிலும், ஆங்கரில் மாட்டியிருந்த  நவீனின் பான்ட் பாக்கெட்டுகள், நவீனின் ஆபீஸ் பேக் மற்றும் அவன் க்ளாஸுக்கு கொண்டு செல்லும் பேக் என எல்லாவற்றையும் அலசி எடுத்தாள் மிருதுளா. ஆனால் ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை. 

கடைசியாக அவர்கள் ஊரிலிருந்து கொண்டு வந்த பையையும் பார்த்துவிடலாம் என்று எடுத்து அதனுள் கையை விட்டு துழாவினாள். ஒரு சின்ன மனிப்பர்ஸ் கிடைத்தது. அது அவள் சிறுவயது முதல் ஆசையாக வைத்திருந்த து. வீட்டுக்கு வந்து விட்டு செல்லும் போது அன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் அந்த வீட்டு பிள்ளைகளிடம் காசு கொடுப்பது வழக்கம். அப்படி சேர்ந்த பைசாக்களை தன் தந்தையிடம் கொடுத்து நோட்டுகளாக மாற்றி அவளுக்கு மிகவும் பிடித்த மனிபர்ஸில் போட்டு அவளுடனே எடுத்து வந்ததை மீண்டும் எடுத்துப் பார்த்ததும் அவளுக்கு கடந்த கால நினைவுகள் எல்லாம் மலர்ந்தது. சட்டென அதிலிருந்து நிகழ்காலத்திற்கு வந்தவள் அதில் எவ்வளவு இருக்கு என்று பார்த்தாள். மூன்று ஐம்பது ரூபாய் நோட்டுகள் இருந்தது. அவள் மனம் மகிழ்ந்து அதை எடுத்துக்கொண்டு பையை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு…..யோசிக்கலானாள்…

“இதை நான் குடுத்ததாக இருக்கக் கூடாது ஏனெனில் அது நவீனை இன்னும் சங்கடப்பட வைக்கும். என்ன செய்வது”

என யோசித்து…நவீனிடமிருந்த இரண்டு ஜீன்ஸில் ஒன்று ஆங்கரில் மற்றொன்று பீரோவில் மடித்து வைக்கப்பட்டிருந்தது. மிருதுளா நவீனின் மடித்து வைத்திருந்த  ஜீன்ஸ் பாக்கெட்டில் பணத்தை வைத்து ஆங்கரில் இருந்த ஜீன்ஸை துவைக்க போட்டுவிட்டு குளியலறை கதவை தட்டினாள். நவீன் வெளியே வந்ததும்….

ஆங்கரில் ஜீன்ஸ் இல்லாததால் பீரோவில் மடித்து வைத்திருந்த ஜீன்ஸை எடுத்துப் போட்டுக்கொண்டான். அவனது பையிலிருந்த வேலட்டை ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் வைக்க முற்பட்டபோது ஏதோ பேப்பர் போல கையில் தடைப்பட்டது அதை எடுத்துப் பார்த்தான் மூன்று ஐம்பது ரூபாய் நோட்டுகள். மனதில் அளவில்லா மகிழ்ச்சிப் பொங்கியது. நேராக கடவுள் ஃபோட்டோவுக்கு முன் நின்று நன்றி தெரிவித்து….மனதில்

“ரொம்ப தாங்க்ஸ் கடவுளே!! என்ன பண்ணப் போறேனோ என்ற கவலை என்னை துளைத்தது. நல்ல வேளையாக என்றோ நான் ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் வைத்த காசு தக்க சமயத்தில் உதவப் போகிறது. நல்ல வேள மிருது அந்த ஜீன்ஸ தோய்க்க போட்டா…அதுனால தானே இந்த ஜீன்ஸ எடுத்தேன். எல்லாம் நல்லதுக்கே. இன்னைக்கு என் மிருதுக்கு அவ கேட்டதுக்கும் மேலயே ஏதாவது வாங்கிக்கொடுக்கணும். நல்ல வேள நான் அவசரப்பட்டு என்கிட்ட காசு இல்லாததை அவள்ட்ட சொல்லலை. சொல்லிருந்தா பாவம் அவளும் நான் பட்ட அதே மனவேதனை பட்டிருப்பா.”

இதற்கு பிறகு நடந்தவை எல்லாம் நமக்கு தெரியுமே…..இப்பொழுது ஞாயிற்றுக்கிழமைக்கு வருவோம்.

படிப்பைப் பற்றி பேசிக்கொண்டிருந்தவர்கள் டிவியில் திரைப்படம் பார்க்கலானார்கள். அது முடிந்ததும் மத்திய உணவு உண்டு படுத்துக்கொண்டே தீபாவளிக்கு என்னென்ன அவர்கள் பெற்றோர்களுக்கும், தம்பிகளுக்கும் வாங்க வேண்டும் என்றும் அதற்கு எவ்வளவு செலவாகுமென்றும் கணக்கிட்டு அடுத்த வாரம் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை அனைத்தையும் வாங்கி வைத்து விட வேண்டும் என முடிவெடுத்தனர். 

“அதெல்லாம் சரி மிருது நாளைக்கு ஸ்கேன் எடுக்க ஹாஸ்பிடல் போகணும்.”

“ஆமாம் போகணும். பாப்பா எப்படி இருக்கு என்ன பண்ணறதுன்னு பார்க்கணும்ன்னு ஆசையா இருக்கு. நீங்க ஆபீஸ் போகணுமே!!!! எப்படி நான் ஹாஸ்பிடல் போவேன்?”

“நீ ரெடியா இரு நான் ஆபீஸ்ல பர்மிஷன் போட்டுட்டு ஒரு பதினோரு மணிக்கு வந்து உன்னை கூட்டிண்டு போயிட்டு… முடிந்ததும் உன்னை ஆத்துல விட்டுட்டு ஆபீஸ் போயிக்கறேன் சரியா”

“ஓகே நான் ரெடியா இருக்கேன்”

அன்று மாலை இருவருமாக நடந்து சென்று டாபாவில் இரவு உணவருந்தி விட்டு வீட்டிற்கு வந்து…..

“நவீ உங்களுக்கு பையன் வேணுமா இல்லை பொண்ணு வேணுமா?”

“எந்த குழந்தையா இருந்தாலும் எனக்கு சந்தோஷம் தான் ஆனாலும் பொண்ணா இருந்தா நல்லாருக்கும்”

“எனக்கும் பொண்ணு தான் வேணும். சரி என்ன பெயர் வைக்கலாம்”

“அதெல்லாம் உன் டிப்பார்ட்மென்ட் மா….”

“அது என்ன என் டிப்பார்ட்மென்ட். …ஏன் உங்களுக்கு ஆசையா இல்லையா”

“ஒண்ணு பண்ணு உனக்கு நம்ம குழந்தைக்கு என்ன பெயர் வைக்கணும்ன்னு தோனறதோ அதை எல்லாம் ஒரு பேப்பர்ல எழுது அதுக்கப்பறம் நாம் ரெண்டு பேரும் உட்கார்ந்து டிஸ்கஸ் பண்ணி பையன்னா என்ன பெயர் பொண்ணுன்னா என்ன பெயர்ன்னு  இரண்டு பெயரை டிசைட் பண்ணலாம். என்ன சொல்லற?”

“ஓகே அது நல்ல ஐடியா. நாளைக்கே லிஸ்ட் ரெடி பண்ணிடறேன்.”

“சரி இப்போ தூங்குவோமா. நீ நல்லா தூங்கணும்ன்னு டாக்டர் சொல்லிருக்கா ஸோ இந்த டாப்பிக் நாளை தொடருவோம் இப்போ நிம்மதியா தூங்கு” 

என மிருதுளாவின் தலையை வருடிக்கொடுத்து முத்தமிட்டு குட் நைட் சென்னான் நவீன். 

ஆக இந்த காந்தி ஜெயந்தி விடுமுறை நாட்களில் முதல் இரண்டு நாட்கள் ஐந்து ரூபாயிலும் அடுத்த இரண்டு நாட்கள் நூற்றி ஐம்பது ரூபாயிலும் என முன் பாதி  இறுக்கமாகவும் பின் பாதி சற்றே ஏற்றமாகவும் இருந்தது.

மிருதுளா நவீனிடம் அது தான் வைத்த பணம் என்று சொல்லி அவனை சங்கடப்படுத்தாமல் நடந்துக்கொண்டதும், நவீன் தன் கர்ப்பிணி மனைவியிடம் தனது நிதி நிலைமையை சொல்லி கஷ்டப்படுத்த கூடாது என்று எண்ணியதும் அவர்களுக்கிடையே உள்ள புரிதலையும் ஒருவருக்கொருவர் அவர்களுக்குள்ளேயே நடத்திக் கொண்ட அன்பு போட்டி போல் நடந்தேறியது.

திங்கட்கிழமை விடிந்ததும் காலை எழுந்து காபி போட்டு, டிபன் செய்து, மத்திய உணவும் நவீன் ஆபீஸ் கிளம்புவதற்குள் தயார் செய்து வைத்தாள் மிருதுளா. 

நவீனும் சீக்கிரம் எழுந்து ஆபீஸுக்கு செல்ல தயாராகி ஏழு மணிக்கெல்லாம் டிபன் அருந்த அமர்ந்தான்…

“என்ன நவீன் இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்டேங்கள் எப்பவும் எட்டு மணிக்கு தானே சாப்பிட வருவேங்கள்”

“இல்ல மிருது இன்னைக்கு பதினோரு மணி வரணும் இல்லையா அதுனால தான் சீக்கிரம் ஆபீஸுக்கு போறேன். சரி நீயும் சாப்பிடேன்”

“இல்ல பா எனக்கு ஒரு மாதிரி இருக்கு நான் அப்பறமா சாப்ட்டுக்கறேன். நீங்த சாப்பிட்டுட்டு கிளம்புங்கோ”

“அப்பறமா சாப்பிடணும் சரியா.”

“நிச்சயம் சாப்டறேன். எனக்காக இல்லாட்டினாலும் நம்ம குட்டிக்காக சாப்பிடுவேன் கவலைப் படாதீங்கோ.”

“சரி பதினோரு மணிக்கு ரெடியா இரு மறந்துடாதே.”

“மறக்கமாட்டேன் பா…நான் ரெடியா இருப்பேன்.”

“ஓகே பை நான் போயிட்டு வரேன்”

“பை நவீ. ஹாவ் அ நைஸ் டே”

நவீன் சீக்கிரம் ஆபீஸ் சென்று சம்பளத்தை வாங்கிவிட வேண்டும் என்ற அவசரத்தில் காலை ஏழரை மணிக்கெல்லாம்  நேராக அக்கௌன்ட்ஸ் டிப்பார்ட்மென்ட்டுக்குச் சென்று சம்பளத்தை வாங்கியதும் அவனுக்கு புத்துயிர் வந்தது போல் இருந்தது. ஆனால் அதற்கும் தலை தீபாவளி செலவு வாசலிலேயே காத்திருக்கிறதே என்ற நினைப்பு அவனை சற்று கலங்கச் செய்தாலும் கடவுள் இருக்கிறார் எல்லாம் அவர் பார்த்துக்கொள்வார் என்று மனதில் நினைத்துக்கொண்டு தனது இருக்கையில் சென்றமர்ந்து வேலையில் மூழ்கினான்.

அன்று ஸ்கேன் செய்து அவர்கள் குழந்தையின் அசைவுகளைப் பார்த்ததில் நவீனும் மிருதுளாவும் பெருமகிழிச்சியில் இருந்தார்கள். 

மிருதுளா …அவர்களின் நிதி நிலவரம் தெரிந்துக்கொண்டமையாலும் அடுத்த மாதம் பெரிய செலவுகள் இருப்பதாலும்…  மிகவும் சிக்கனமாக செலவுகளை செய்தாள். வெளியே சாப்பிடுவதை  முழுவதுமாக தவிர்த்தாள். அப்படியே ஏதாவது சாப்பிட தோன்றினாலும் இன்னும் ஒரு மாதம் தானே அங்கே போய் சாப்பிட்டுக்கலாம் என்று தன்னை தானே சமாதானம் செய்துக் கொண்டாள். 

பரஸ்பர அன்பும், விட்டுக்கொடுக்கும் பண்பும் இருந்தால் வாழ்க்கையில் எப்படி பட்ட கஷ்டத்தையும் சற்று வலியிருந்தாலும் அதை சந்தோஷமாக பொறுத்துக்கொண்டு எளிதாக தாண்டி விடலாம் என்பதற்கு இவர்களை ஓர் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். 

தொடரும்…..

சனிக்கிழமை விடிந்ததும் மிருதுளா சீக்கிரம் எழுந்து குளித்துவிட்டு அடுப்படியில் காபிக்கு டிக்காக்ஷன் போட்டுக்கொண்டிருந்தாள். நவீன் மெல்ல கண்களைக் கசக்கிக்கொண்டே  பக்கத்தில் திரும்பிப் பார்த்து மிருதுளாவை காணாததால் சட்டென எழுந்தான். அடுப்படியில் ஏதோ சத்தம் கேட்க..

“மிருது நீ அடுப்படிலயா இருக்க?”

“குட் மார்னிங் நவீ. ஆமாம் காபிக்கு டிக்காக்ஷன் போட்டுண்டு இருக்கேன்”

“குட் மார்னிங். என்ன இன்னைக்கு சீக்கிரம் எழுந்துண்டுட்ட!!!”

“ஏன் முன்னாடி எல்லாம் அப்படி தானே எழுந்துண்டிருந்ததேன்!!! இப்போ அம்மா வந்துட்டு போனதுக்கப்பறத்திலேருந்து தான் மெதுவா எழுந்துக்க ஆரம்பிச்சேன்…இப்போ பேக் டூ ரொட்டீன் அவ்வளவு தான்…சரி சரி போய் ப்ரஷ் பண்ணிட்டு வாங்கோ ரெண்டு பேருமா காபி குடிக்கலாம்” 

“ஓகே ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ் ல வந்துடறேன்”

இருவருமாக பேசிக் கொண்டே காபி குடித்துக் கொண்டிருக்கும் போது …

“நவீ நாம இன்னைக்கு ப்ரேக் ஃபாஸ்ட்டுக்கு ப்ரெட் பகோடா சாப்பிடலாமா??”

நவீன் திரு திருவென முழித்துக் கொண்டே என்ன சொல்வதென்று தெரியாமல் காபியை மிகவும் கஷ்ட்டப்பட்டு குடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த மிருதுளா….

“ஹலோ மிஸ்டர் நவீ … நான் ஏதாவது கேட்கக்கூடாதது கேட்டுட்டேனா என்ன?? அப்படி முழிச்சிண்டே காபியை குடிக்கறேங்கள்!!! காபி நல்லா இல்லையா? இல்ல ஏதோ நினைப்புல முழிக்கறேங்களா?”

“ச்சே ச்சே காபி ஆஸ்யூஷ்வல் சுப்பர் தான்”

“அப்புறம் என்னவாம்? உங்க முழியே சரியில்லையே!!!”

“இல்லை ஒண்ணுமில்லை மிருது‌. இரு நான் போய் குளிச்சிட்டு வந்துடறேன் இன்னுட்டு நாம ரெண்டு பேருமா போய் சாப்பிட்டுட்டு வரலாம் சரியா”

“ஓகே சீக்கிரம் குளிச்சிட்டு வாங்கோ. எனக்கு ரொம்ப பசிக்கறது.”

குளியலறையில் ஷவரை ஃபுல்லாக திறந்துக் கொண்டுவிட்டு அழுதான் நவீன். தனது குடும்பத்திற்காக பத்து வருடங்கள் சம்பாதித்துக் கொடுக்கும் போதெல்லாம் தனக்கென தன்னை நம்பி ஒரு பெண் வருவாள் அவளுக்காக இது செய் வேண்டும், அது செய்ய வேண்டும், அவளை அங்கு கூட்டிக்கொண்டு போக வேண்டும் இங்கு கூட்டிக்கொண்டு போக வேண்டும் என்றோ ஏன் ஹனிமூன் போக வேண்டுமென்று கூட நினைப்பில்லாமல் தனக்காக என்று ஒரு பைசா  சேர்த்து வைக்காததால் இன்று தன் கருவை சுமக்கும் தன் மனைவி ஆசைப்பட்டு கேட்கும் அதுவும் சின்ன சின்ன சாப்பாட்டு ஐட்டம்ஸ் கூட வாங்கிக்கொடுக்க முடியாமல் நிற்கின்றோமே என குலுங்கி குலுங்கி அழுது தீர்த்தான். 

பெற்றவர்களாவது பிள்ளையிடம் திருமணப்பேச்சு ஆரம்பித்ததும் சொல்லியிருக்க வேண்டும். நல்ல பெற்றவர்கள் என்றால் இந்த பேச்சுக்கே இடம் வைத்திருக்க மாட்டார்கள் ஆனால் நம்ம நாயகனை பெற்றவர்கள் அவற்றுக்கெல்லாம் விதிவிலக்கானவர்கள் ஆயிற்றே. நவீனின் திருமணத்திற்கு முன் அவனிடமிருந்து எவ்வளவு கறக்க முடியுமோ அவ்வளவையும் எடுத்துக்கொண்டும் அவன் திருமணத்திற்கு வந்த மொய் பணத்திலிருந்து கேட்டு வாங்கி வந்த மூவாயிரத்தையும் (பாவம் மகன் இத்தனை வருடங்களாக உழைத்து தந்திருக்கிறானே என்ற எண்ணம் துளி கூட இல்லாமல்) ஃபோன் போட்டு திரும்பப் பெற்றுக்கொண்ட பெருந்தன்மையான பெற்றவர்களிடம் நாம் எப்படி எதிர்பார்ப்பது?!!! சில குடும்பங்களில் மூத்த பிள்ளைகளாக பிறத்தல் சாபக்கேடு என்று பலர் சொல்லிக் கேட்டிருப்போம் இங்கே நம்ம நவீனுக்கு அதுவே நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது.

நவீன் குளிக்க போய் ரொம்ப நேரமானதும் மிருதுளா குளியலறை கதவைத் தட்டி…

“நவீ நவீ என்ன பண்ணறேங்கள்? ஏன் குளிச்சிட்டு வர்றதுக்கு இவ்வளவு நேரமாகறது? ப்ளீஸ் ஓபன் தி டோர் நவீ “

“ஹாங் இதோ ஆச்சு வந்துட்டேன். நீ ரெடியாகிடு”

“ஓகே ஓகே சீக்கிரம் வாங்கோ. என்ன ஆச்சு உங்களுக்கு? மொதல்ல வெளில வாங்கோ”

“இதோ இதோ வந்துட்டேன் போதுமா!!”

“ஏன் முகத்தை மறைச்சுக்கறேங்கள்?”

“இல்லையே தலையை துடைச்சுண்டேன் அதனால் உனக்கு அப்படி தோன்னறது.”

என்று தான் அழுததை தன் முகம் காட்டிக்கொடுத்திடக் கூடாதே என்ற அச்சத்தில் மிருதுளாவை நேருக்கு நேர் பார்ப்பதைத்  தவிர்த்துக் கொண்டே இருந்தான்.

“சரி நீ ரெடியா போகலாமா?”

“எங்க போறது நான் சாப்ட்டாச்சு. எனக்கு பயங்கர பசி …நீங்களும் உள்ள போனவர் வெளிலயே வரலை வெயிட் பண்ணி பார்த்தேன் அப்பறம் ரெண்டு தோசை சுட்டு சாப்பிட்டுட்டேன். உங்களுக்கும் நாலு தோசை வார்த்து வச்சிருக்கேன். இன்னும் வேணும்ன்னா சொல்லுங்கோ வார்த்துத் தரேன். மாவு, தோசைக் கல்லு எல்லாம் அப்படியே வச்சிருக்கேன். வாங்கோ சாப்பிடுங்கோ”

“ஸோ சாரி மிருது. ஐ ஃபீல் வெரி பேட் அபௌட் மைசெல்ஃப்”

“என்னத்துக்கு ??? குளிக்கறத்துக்கு இவ்வளவு நேரம் எடுத்துக்கிண்டதாலயா?!!! அப்படின்னா அக்செப்டெட். ஆனா எனக்கு ஒரு டௌட் நீங்க அவ்வளவு நேரம் பாத்ரூம்ல என்ன பண்ணிண்டிருந்தேங்கள்?”

“ப்ளீஸ் மிருது விளையாடாதே. ஆம் சீரியஸ்”

“பாத்ரூம்ல ஏதாவது மாயம் நடந்து உங்களை இப்படி சீரியஸ் ஆக்கிடுத்தா என்ன!!!! ஓகே!! ஓகே !! நோ மோர் கிண்டல்ஸ். நீங்க சாப்பிடுங்கோ. ஆமாம் கண்ணெல்லாம் ஏன் சிவந்திருக்கு?”

“அப்படியா எனக்கு அப்படி ஒண்ணும் தெரியலையே “

“அப்போ ஒண்ணு உங்க கண்ணுக்கு ஏதோ ப்ராப்ளம் இல்ல என் கண்ணுக்கு ஏதோ ப்ராப்ளம்.”

“ஏன் அப்படி சொல்லற?”

“எனக்கு தெரியறது உங்களுக்கு தெரியலைன்னா அப்போ நம்ம ரெண்டு பேர்ல யாரோடோ ஒருவர் கண்ணுக்கு பிரச்சினை என்று தானே அர்த்தம்”

“அதெல்லாம் ஒண்ணுமே இல்ல. சரி கிளம்பு நாம கோவிலுக்கு போயிட்டு வருவோம்”

“ஓகே இதோ நான் ரெடியா தான் இருக்கேன். ஜஸ்ட் அந்த துப்பட்டாவ போட்டுண்டுட்டா போகலாம்”

நவீன் சாப்பிட்டதும் இருவருமாக அவர்கள் வீட்டுப் பக்கத்திலிருக்கும்  கோவிலுக்கு நடந்தே சென்றார்கள். நவீன் தனது மன பாரத்தை கடவுள் மேல் போட்டுவிட முடிவு செய்து தான் கோவிலுக்கு சென்றுள்ளான். அங்கே வாசலில் செருப்பை கழற்றி விட்டு உள்ளே நுழைய முற்படும் போது வாசலில் இருந்த பூக்காரம்மா மிருதுவை பார்த்து …

“இந்தாமா பூ வாங்கிக்கோங்க. அழகா மகாலட்சுமி மாதிரி இருக்கீங்க இந்தாங்க இந்த பூவையும் வச்சுக்கோங்க இன்னும் நல்லா இருப்பீங்க”

“பரவாயில்லை மா இன்னொரு நாளைக்கு வாங்கிக்கறேன்”

“ஹேய் மிருது ஏன்!! இப்பவே வாங்கிக்கோ. அவங்க தான் அவ்வளவு சொல்லறாங்கலே. நீங்க குடுங்கம்மா. இந்தா தலையில வச்சுக்கோ. அப்படியே சாமிக்கும் ரெண்டு முழம் குடுங்க”

என்று மிருதுளாவிற்கு பூ வாங்கிக்கொடுத்துவிட்டு சாமிக்கு உண்டான பூவை அர்ச்சகரிடம் கொடுத்து சாமி பெயருக்கே அர்ச்சனை செய்யுமாறு கூறி அர்ச்சனை செய்து விட்டு கொஞ்ச நேரம் கோவில் பிரகாரத்தில் அமர்ந்து விட்டு வெளியே வந்ததும் நவீன் மிருதுளாவைப் பார்த்து …

“அடுத்தது எங்கே போகலாம்ன்னு சொல்லு மிருது”

“என்ன அய்யா ரொம்ப சந்தோஷமான மூட்ல இருக்கேங்கள்!!! குளிக்க போகறதுக்கு முன்னாடி வேற மாதிரி இருந்தேங்கள் !! குளிச்சிட்டு வந்ததுக்கப்புறம் ஆளே வேற மாதிரி ஆயிட்டேங்களே என்ன விஷயம்? இதுல ஏதோ இருக்கு….பாத்ரூமுக்குள்ள ஏதாவது அதிசயம் நடந்துதா என்ன?”

“ஒண்ணுமில்லை மிருது. சரி நான் கேட்டதுக்கு நீ இன்னும் ஒண்ணும் சொல்லலையே!”

“உங்க இஷ்ட்டம். உங்களுக்கு எங்க போகணும்னு தோனறதோ அங்க போகலாம்.”

“அப்போ அக்ஷர்தாம் கோவில் போயி கொஞ்ச நேரம் அங்க இருந்துட்டு அப்படியே லஞ்சுக்கு புது டாபாவுக்கு போகலாம் சரியா”

“ஓகே!! என்ன இன்னிக்கு சார் கோவில் கோவிலா போலாம்ன்னு சொல்லுறீங்க. பக்தி முத்திருத்தோ. பாத்ரூமில் ஏதாவது ஞானம் பொறந்துடுத்தோ”

“ம்…ம்… அப்படின்னு வச்சுக்கோ”

இருவரும் அக்ஷர்தாம் கோவிலுக்குச் சென்று அங்கே சுவாமிநாராயணனை வணங்கிவிட்டு அந்த வளாகத்தின் அழகை மீண்டும் ரசித்தவண்ணம் அங்கேயே ரொம்ப நேரம் அமர்ந்து பின் அங்கிருந்து கிளம்பி சற்றே தொலைவிலிருந்த ஒரு குட்டி டாபாவின் முன் வண்டியை நிறுத்தினான் நவீன். 

“நவீ இது வீடு மாதிரி இருக்கு”

“இல்ல மிருது இது பார்க்க தான் வீடு மாதிரி சின்னதா இருக்கு உள்ளே வந்து பாரு”

உள்ளே நுழைந்ததும் குஜராத் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வண்ணம் அழகான புகைப்படங்கள் நிறைந்த சின்ன வரவேற்பறை இருந்தது. அங்கே இருவரையும் அமரச்செய்தார்கள். மஞ்சளை குழைத்தது போல ஒரு கின்னத்தினுள் ஒரு டூத் பிக் போன்ற குச்சியை விட்டு அதை அவர்களின் நெற்றியில் இட்டுவிட்டார்கள், வெல்கம் ட்ரிங் என்று கும்கும் தண்ணீர் கொடுக்கப்பட்டது. அங்கே பணிபுரிந்தவர்கள் அனைவரும் குஜராத்தின் பாரம்பரிய உடையையே அணிந்திருந்தனர். சிறுது நேரத்தில் ஒருவர் வந்து இருவரையும் உணவருந்த உள்ளே அழைத்துச் சென்றார். உள்ளே இருந்த அறை சிறியதாக இருந்தாலும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. தரையில் “பா” வடிவில் ஒரு பத்து பேர் அமர்ந்து சாப்பிடுவதற்கு ஏற்றார்போல் சிவப்பு நிற மெத்தை கை திண்டுகளுடன் வந்து அமருங்கள் என்று அழைப்பு விடுத்தது. அதன் முன் அழகாக ஓவியம் தீட்டப்பட்ட ஒரு பலகை இருந்தது. நவீனையும் மிருதுளாவையும் அமரச்சொன்னார்கள். 

இருவரும் அமர்ந்ததும் வட்டவடிவிலான பெரிய தட்டு அவர்கள் முன் வைக்கப்பட்டது. அதை பார்த்ததும் மிருதுளா நவீனிடம் …

“என்ன பா இவ்வளோ பெரிய தட்டு” 

என்று பஞ்சதந்திரத்தில் கமலிடம் தேவயானி கேட்டது போல கேட்க…

“சும்மா இரு மிருது. உன்னால முடிஞ்சதை சாப்பிடு போதும். அவாளும் கொஞ்சம் கொஞ்சம் தான் பரிமாறுவா பயப்படாதே”

எல்லாம் உண்ட பின் கடைசியில் மீட்டா பான் எனப்படும் பீடாவை போட்டுக்கொண்டு மத்திய உணவை முடித்தார்கள் நவீனும் மிருதுளாவும்.

வெளியே வந்ததும் …

“நீ நல்லா சாப்பிட்டயா மிருது. உனக்கு பிடிச்சிருந்ததா? திருப்தியா இருந்ததா இந்த ப்ளேஸ்?”

“ஹேய் நவீ தி லஞ்ச் வாஸ் எக்செலன்ட். ஐ லவ்டு இட். எவ்வளவு ஐட்டம்ஸ். சூப்பரா இருந்தது. என் வயிறு ரொம்ப ஃபுல்லாயிருக்கு. இன்னைக்கு நம்ம குழந்தைக்கும் சரியான ஹெவி சாப்பாடு தான் போங்கோ”

“ஆம் ஹாப்பி சீயிங் யூ ஹாப்பி லைக் திஸ்”

என்ற மனநிம்மதியுடன் வண்டியை ஸ்டார்ட் செய்தான் நவீன். அப்போது 

“நவீ அடுத்தது எங்கே.”

“எங்க போகணும்ன்னு நீ சொல்லு அங்கேயே நம் வண்டி போகும்”

“பேசாம ஆத்துக்கு போய் நல்லா ஒரு தூக்கம் போடணும் போல இருக்கு நவீ”

“ஓகே அப்போ ஆத்துக்கே போகலாம்.”

வீட்டிற்கு வந்து உடைகளை மாற்றி விட்டு இருவரும் பெட்டில் படுத்துக் கொண்டே பேசினார்கள்

“மிருது நீ சந்தோஷமா தானே இருக்க?”

“இதுல என்ன டௌட் உங்களுக்கு. நான் சந்தோஷமா தான் இருக்கேன்”

“அடுத்த மாசம் ஊருக்கு போகணுமே”

“ஆமாம் நமக்கு தலை தீபாவளி ஆச்சே போகாம எப்படி”

“அப்பறம் உன்னை அங்கேயே விட்டுட்டு வரணுமேன்னு நினைக்கிறப்போ எனக்கு ஏதோ மாதிரி இருக்கு மிருது”

“என்ன செய்ய நவீ. நம்ம குட்டி பாப்பா வ பத்திரமா இந்த பூமிக்கு கொண்டு வந்து நாமும் நம்ம குழந்தையும் ஜாலியா வாழ வேண்டாமா? அதுக்கு நான் அங்க இருந்தா தானே நல்லது”

“அதெல்லாம் புரியறது ஆனாலும்…சரி விடு ….ஊருக்கு போறதுக்கு என்னென்ன வாங்க வேண்டியிருக்கும்ன்னு ஒரு லிஸ்ட் போடு. அதை எல்லாம் இந்த மந்த் என்டில் வாங்கிடலாம்.”

என்று நவீன் பேசிக்கொண்டே இருக்கையில் மிருதுளா உறங்கிப்போனாள். அவளைப் பார்த்துக்கொண்டே 

“நீ என்னைக்கும் இப்படியே சந்தோஷமா நிம்மதியா இருக்கணும் மிருது அதுக்கு இன்னைக்கு அந்த கடவுள் எனக்கு உதவினமாதிரி என்றென்றும் உதவுனும்ன்னு தான் நான் இன்னைக்கு கோவில்ல அந்த ஆண்டவனிடம் வேண்டின்டேன்” 

என்று அவள் தலையை வருடி கொடுத்துவிட்டு அவனும் உண்ட மயக்கத்தில் உறங்கலானான். 

மாலை ஆறு மணி ஆனது. மிருதுளா எழுந்து பார்த்தாள் சற்று இருட்டாக இருக்கவும் மணி என்ன ஆச்சோ என்று கடிகாரத்தைப் பார்த்தாள் ….

“அச்சசோ!!”

என்று அவள் சொல்ல நவீன் விருட்டென எழுந்து

“என்ன ? என்ன ? என்ன ஆச்சு மிருது”

என்று கேட்க

“மணியை பாருங்கோ ஆறாச்சு. நாம ஏன் இவ்வளவு நேரம் தூங்கியிருக்கோம். சரி சரி நான் போய் மூஞ்சி கை கால் அலம்பிட்டு விளக்கேத்தட்டும். நீங்களும் எழுந்திரிங்கோ”

“சரி இட்ஸ் ஓகே!!! நிதானமா போ. அவசரம் வேண்டாம் பத்திரம்”

வேக வேகமாக முகம் கை கால் கழுவி விட்டு விளக்கை ஏற்றி பின் இருவருக்கும் காபி போட்டுக்கொண்டு வந்து ஹாலில் அமர்ந்தாள் மிருதுளா. 

“ஏன் காபி போட இவ்வளவு நேரம் மிருது?”

“காலையில டிபன் செய்தது, சாப்பிட்டது என கொஞ்ச பாத்திரம் சிங்க்ல கிடந்தது அதை எல்லாம் அப்படியே தேய்ச்சுட்டு அப்பறமா காபி போட்டேன் அதுதான் லேட் ஆயிடுத்து”

“சரி நைட்டுக்கு என்ன டின்னர் சாப்பிடலாம்?”

“அப்பா எனக்கு இன்னமும் வயிறு ஃபுல்லா இருக்கு. எனக்கெதுவும் வேண்டாம். உங்களுக்கு என்ன வேணுமோ கேளுங்கோ செய்துத்தறேன்”

“சரி வா நாம நம்ம பார்க் வரைக்கும் மெதுவா ஒரு வாக் போயிட்டு வருவோம்”

“எனக்கு மதியம் சாப்பிட்டே டையர்டு ஆயிட்டேன் நவீ. சோம்பலா இருக்கு”

“அதனால தான் வாக் போகலாம்னு கூப்பிடறேன். கொஞ்சம் சிரமம் பார்க்காம எழுந்து வா மிருது”

“சரி ஓகே போகலாம். இருங்கோ சல்வார் போட்டுண்டு வந்துடறேன்”

இருவருமாக கதவைப் பூட்டிவிட்டு வெளியே நடக்க ஆரம்பிக்கலாமென திரும்பும் போது ரம்யா சித்தி குடும்பத்தினர் நால்வரும் அவர்கள் காரில் வந்திறங்கினர். அவர்களைப் பார்த்ததும் நவீனும் மிருதுளாவும்…

“வாங்கோ வாங்கோ வாங்கோ”

என்று பூட்டின கதவை திறந்தான் நவீன்.

“என்ன வெளியே கிளம்பறேங்கள் போல …நாங்க வந்து டிஸ்டெர்ப் பண்ணிட்டோமோ” 

“ச்சே ச்சே அதெல்லாம் ஒண்ணுமில்லை சித்தி. நாங்க சும்மா ஒரு வாக் போகலாம்ன்னு கிளம்பினோம் அவ்வளவு தான். நீங்க வாங்கோ நாம உள்ள போகலாம்”

“இந்தா மிருது இத வாங்கிக்கோ”

“என்னது இது சித்தி இவ்வளோ பெரிய பை?”

“இதுல பழங்களும் சுவீட்ஸும் எல்லாமிருக்கு வச்சுக்கோ”

“ஓ!! தாங்க்ஸ் சித்தி”

“காந்தி ஜெயந்திக்கு மூணு நாள் லீவ என்ஜாய் பண்ணறேங்களா?”

“ஆமாம் சித்திப்பா இன்னைக்கு கூட காலை ல கோவிலுக்கெல்லாம் போயிட்டு அப்படியே நம்ம பப்பு டாபா ல சாப்ட்டுட்டு வந்து ஒரு தூக்கம் போட்டும் ஆயாச்சு.”

“ஓ!!!  பப்பு டாபா!!! நாங்களும் நேத்து அங்க தான் லஞ்ச்சுக்கு போனோம். அவன் டாபா எக்ஸ்க்ளூஸிவ்வா இருக்குமே. சாப்பாடும் ரொம்ப நல்லாயிருக்குமே. ஆதென்டிக் குஜராத்தி ஃபுட். என்னமா மிருது உனக்கு அந்த சாப்பாடு பிடிச்சிருந்துதா?”

“ரொம்ப பிடிச்சிருந்தது சித்தப்பா. சூப்பரா இருந்தது. நான் இதுவரைக்கும் அப்படி ஒரு இடத்திலோ இல்லை அப்படி ஒரு நார்த் இந்தியன் பாரம்பரியமான சாப்பாட்டையோ சாப்பிட்டதே இல்லை. இன்று தான் ஃபர்ஸ்ட் டைம் சாப்பிட்டேன்.”

என்று அனைவருடனும் பேசிக்கொண்டும் அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டும் அவர்களுக்கு டீ போட்டு கொண்டு வந்து கொடுத்தாள். அதை அருந்திய ரம்யா…

“ஹேய் மிருது சாய் சூப்பர்!! பக்கா நார்த் சாய் மாதிரியே போட்டிருக்க. வெரி டேஸ்டி”

“இங்க எனக்கொரு பஞ்சாபி லேடி ஃப்ரெண்ட் இருக்கா நவீனோட ஆபீஸ் ல வேலைப் பார்க்கறவரோட வைஃப்…அவா தான் சொல்லிக் கொடுத்தா”

“பரவாயில்லையே குட் குட் அப்படி தான் இருக்கணும்”

“மன்னி அப்போ நார்த் இந்தியன் டிஷும் பண்ண கத்துண்டேங்களா?”

“கொஞ்சம் தெரியும் ஆனா சீக்கிரம் கத்துண்டு டுவேன். நெக்ஸ்ட் டைம் நீங்க வரும் போது உங்களுக்கு ரொட்டி சப்ஜி எல்லாம் செய்துத்தருவேன் பாரு”

“சரி நீ எப்படி இருக்க? டாக்டர்ட்ட செக்கப்க்கெல்லாம் கரெக்டா போறயா? கொழந்தை எப்படி இருக்காம்?”

“ஆல் இஸ் வெல் சித்தி. என்ன கொஞ்சம் வாமிடிங் தான் ஜாஸ்த்தியா இருக்கு. தலைசுத்தல் கூட நின்னுடுத்து”

“அதெல்லாம் இன்னும் ஒரு ரெண்டு மாசத்தில நின்னுடும்.”

“சரி இருங்கோ நான் உங்களுக்கு டின்னர் ப்ரிப்பேர் பண்ணறேன். நீங்க எல்லாரும் சாப்ட்டுட்டு தான் போகணும்”

“என்னத்துக்கு உனக்கு சிரமம்மா. அதெல்லாம் வேண்டாம் நீ வந்து உட்கார்ந்து பேசு வா.”

“இல்ல இல்ல சித்தி. அதெல்லாம் முடியாது. அன்னைக்கே நீங்க வந்துட்டு உடனே கிளம்பிட்டேங்கள் ஆனா இன்னைக்கு சாப்ட்டு தான் போகணும்”

“சரி சரி ஓகே ஓகே”

அடுப்படிக்குள் சென்று உருளைக்கிழங்கை வேகப் போட்டுவிட்டு. பூரிக்கு மாவு பிசைந்து வைத்து விட்டு, மசாலா செய்வதற்கான அனைத்து பொருட்களையும் தயார் செய்து வைத்துக் கொண்டு, உருளை வெந்ததும் கிடு கிடுவென மசாலா செய்தாள். அதை ஒரு மூடியிட்டு மூடிவிட்டு. அடுப்பில் சட்டியில் எண்ணெய் வைத்துவிட்டு பூரி பரத்தலானாள்.  அப்போது ரம்யா உள்ளே வந்து …

“நான் வேணும்னா பரத்தித்தறேன் மிருது நீ எண்ணெயில் போட்டெடு இல்லை நீ பரத்தித் தா நான் போட்டெடுக்கறேன்”

“இல்ல சித்தி நானே செய்துக்கறேன் நீங்கள் அனைவருக்கும் பரிமாறுங்கோளேன் ப்ளீஸ்”

“ஓ! ஷுவர். நீ ஆச்சுன்னா சொல்லு நான் கொண்டு போய் அவாளுக்கெல்லாம் குடுக்கறேன் சரியா”

“டன் சித்தி தாங்க்ஸ்”

“என்னத்துக்கு தாங்கஸ் எல்லாம் மா”

ஒரு இருபது பூரிகள் சுட்டெடுத்ததும் ரம்யாவிடம் பரிமாறச் சொன்னாள் மிருதுளா. ரம்யாவும் அனைவருக்கும் தட்டில் பரிமாறினாள். நவீன், சித்தப்பா, இரண்டு பெண்கள் என அவர்கள் அனைவரும் சாப்பிட ஆரம்பித்தனர். 

“மன்னி ஆஸம் சப்ஜி. இட்ஸ் ரியலீ டேஸ்டி”

“ஆமாம் மா மிருதுளா இந்த பூரி மசால் சாப்பிடும் போது எனக்கு எங்க அம்மா செய்து தந்த பூரி மசால் சாப்பிடறமாதிரியே இருக்கு. என் பொண்ணு சொன்னது சென்ட் பெர்சன்ட் கரெட் தான்”

என்று அவர்கள் புகழ்ந்து சாப்பிட்டு எழுந்ததும் ரம்யாவும் மிருதுளாவும் சாப்பிட அமர்ந்தார்கள். 

“ரியலீ மிருது இந்த பூரி மசால் சூப்பரா செய்திருக்க மா. ஆமாம் பூரியை எப்படி இவ்வளவு த்தின்னா பரத்திருக்க எனக்கு தடி தடி யா இந்த ஊருல பண்ணறா மாதிரி தான் வரும்”

“எல்லாருமா ரொம்ப புகழறேங்கள் எனக்கு சங்கோஜமா இருக்கு”

“இதுல என்னதுக்கு சங்கோஜப் படணும். நீ சூப்பரா சமைச்சுக் காட்டிட்டல்ல இனி பாரு நாங்க அடிக்கடி வருவோம்”

“ஆனா சித்தி மிருது இந்த மாசம் மட்டும் தான் இங்கே இருப்பா. அடுத்த மாசம் நாங்க ஊருக்கு போயிடுவோமே”

“டேய் ஊருக்கு போயிட்டு குழந்தையோட இங்கே தானே டா வருவா அப்புறமென்ன…ஏன் உன் பொண்டாட்டிய வேலை வாங்கிடுவோமேன்னு பயமா உனக்கு”

“ச்சே ச்சே அவர் அப்படி சொல்லலை சித்தி”

“இங்கப் பார்டா இவள சொன்னா அவன் பதில் கொடுக்கறான்!!! அவனைச் சொன்னா இவள் பதில் தர்றா…ம் ….ம்…ஓகே !!! ஓகே ஜமாய்ங்கோ…அப்படித்தான் இருக்கணும். காட் பெலஸ் யூ போத்” 

என அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே சாப்பிட்டு விட்டு அந்த இடத்தையும் சுத்தம் செய்து முடித்து  ஹாலுக்கு வந்து அமர்ந்தாள் மிருதுளா. பின் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பலானார்கள் ரம்யா சித்தியும் அவர் குடும்பமும்.

அப்போது குங்குமம், ப்ளௌஸ் பிட், ஒரு வாழைப்பழம் எல்லாம் வைத்து கொடுத்தாள் மிருதுளா. 

“பரவாயில்லையே நம்ம வழக்கங்கள் எல்லாம் தெரிஞ்சுவச்சிண்டிருக்கயே குட் குட். தாங்க்ஸ் ஃபார் தி லவ்லி டின்னர் அன்ட் தாம்பூலம். குட் நைட் போத் ஆஃப் யூ. ஹாவ நைஸ் சிலீப். பை. டேய் மிருதுவ பத்திரமா பார்த்துக்கோடா நவீன்”

“ஷுவர் சித்தி”

“அவர் நல்லாதான் பார்த்துக்கறார் சித்தப்பா.”

“சந்தோஷம்மா. பை நாங்க வர்றோம்”

என்று அவர்கள் காரில் ஏறி சென்றதும் இருவருக்கும் ஒரு பெரிய அலை அடித்து ஓய்ந்தது போல இருந்தது. எதிர் பாராமல் வந்த விருந்தினருக்கு கிடு கிடுவென எல்லாவற்றையும் செய்ததால் சற்று தளர்ந்து போனாள் மிருதுளா. அவர்களை அனுப்பிவிட்டு வந்து படுத்துக்கொண்டவளைப் பார்த்து…

“என்ன மிருது டையர்டா இருக்கு சோம்பலா இருக்குன்னு சாயந்தரம் வாக் கூப்பிட்டப்போ சொல்லிட்டு சும்மா பம்பரமா சுத்தி இத்தனை பேருக்கும் டீ , டின்னர்ன்னு அசத்திட்டயே”

“அதுக்காக வந்தவாளுக்கு ஒண்ணும் குடுக்காமயா அனுப்பறது. இதோ இப்போ ரெஸ்ட் எடுத்துட்டா போறது.” 

“சரி நீ ரெஸ்ட் எடு நான் அந்த பாத்திரத்தை எல்லாம் தேய்ச்சு வச்சுட்டு வரேன் சரியா”

“அடுப்படிய சுத்தம் செய்துட்டேன் ஜஸ்ட் அந்த எண்ணெய் வச்ச சட்டியை மட்டும் தேய்ச்சுடுங்கோ அவ்வளவு தான். மத்ததை எல்லாம் நான் முடிச்சுட்டேன்”

நவீன் அந்த சட்டியை மட்டும் தேய்த்து விட்டு வந்து படுத்துக்கொண்டான். 

“நவீ தூக்கம் வரலையே ஏதாவது படம் பார்ப்போமா”

“ஓ எஸ் “

இருவருமாக டிவியை ஆன் செய்து திரைப்படம் பார்த்துவிட்டு நிம்மதியாக உறங்கச் சென்றனர். 

இரண்டு ரூபாய் ஐம்பது காசு மட்டுமே வைத்திருந்த நவீன் எப்படி பூ, ரெஸ்டாரன்ட் என செலவு செய்தான்? ஆனால் அந்த இரண்டு ரூபாய் ஐம்பது காசு அவனுக்கு அவனையே உணரச்செய்தது. எதையுமே ஒருவர் சொல்லிக்கொடுத்து உணர்வதை விட சுயமாக உணர்ந்தால் அது அப்படியே நிலைத்துவிடும். அப்படி ஒரு “self realization” எனப்படும் சுய உணர்தல் வந்துவிட்டால் அவரை எவராலும் எப்படியும் எந்த காலத்திலும் மாற்ற முடியாது. 

தொடரும்……

தனது அம்மா வந்திருந்து தன்னை நன்றாக கவனித்துக் கொண்டதில் சற்று சுகம் கண்டு விட்டாள் மிருதுளா. அவளை எந்த வேலையையும் செய்ய விடாமல் அனைத்தையும் அம்புஜமே பார்த்து பார்த்து ஒரு மாதம் முழுவதும் செய்து தந்து பழக்கமான பின் மீண்டும் தானே காலை முதல் இரவு வரை எல்லா வேலைகளையும் செய்ய வேண்டுமே அதுவும் அப்பப்போ புதிய விருந்தாளிகளான வாந்தியையும் தலைசுற்றலையும் வேற கவனித்துக்கொள்ள வேண்டுமே என்று மலைத்துப் போனாள். 

மறுநாள் காந்தி ஜெயந்தி என்பதாலும் அதனைத்தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்று கிழமை என்பதாலும் நவீனுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்க அவன்  மனைவிக்கு தன் மாமியார் அளவு இல்லாவிட்டாலும் தன்னால் முடிந்த, தெரிந்த உதவிகளைச் செய்து கொடுத்தான். அன்று காலை நவீன் இருவருக்கும் காபி போட்டு கொண்டு வந்து ஹாலில் அமர்ந்து மிருதுளாவுடன் சேர்ந்து அருந்தினான். பின் மிருதுளா காலை டிபன் செய்தாள் அதை இருவரும் உண்டனர் அதற்கு உபயோகித்த பாத்திரங்களை மிருதுளா நின்று கழுவிக்கொண்டிருக்கையில் நவீன் சென்று தான் செய்வதாக கூற அதற்கு…

“என்னால இப்போ முடியறது நானே பண்ணிடறேன். எனக்கு எப்போ முடியலையோ சொல்லறேன் அப்போ செய்து தாங்கோ போறும்”

“ஓகே”

என கூறிவிட்டு டிவியில் நியூஸ் பார்த்துக்கொண்டிருந்தான். அப்பொழுது வேகமாக அவனை கடந்து பாத்ரூமிற்கு சென்றாள் மிருதுளா அப்போதும் அவன் பாட்டுக்கு நியூஸையே மும்முரமாக பார்த்துக்கொண்டிருந்தான். மிருதுளா வாந்தி எடுத்துவிட்டு பாத்திரம் தேய்க்கும் வேலையை முடித்து விட்டு நவீன் அருகே வந்தமர்ந்து….

“ஏன் பா நான் வாந்தி எடுக்க உங்களை க்ராஸ் பண்ணி தானே போனேன்….வாந்தி எடுத்துட்டும் உங்களை க்ராஸ் பண்ணி தானே போய் பாத்திரத்தை எல்லாம் தேய்ச்சு வச்சேன்…இப்படி அசையாம ஆடாம நியூஸை பார்த்துண்டு உட்கார்ந்திருக்கேளே”

“என்ன செய்யணும்னு சொல்லற?”

“உங்க வைஃப் வாந்தியும் எடுத்துண்டு வேலையும் பார்க்கறாளேன்னு ஹெல்ப் பண்ணணும்னு தோணவேயில்லையா?”

“என்ன பேசற நீ? நான் ஹெல்ப் பண்ணறேன்னு வந்தப்போ… நீ எப்போ ஹெல்ப் வேணுமோ அப்போ சொல்லறேன்னு சொல்லிட்டு இப்போ இப்படி வந்து கேட்டா நான் என்னத்தை சொல்றது?”

“அப்படியே நான் சொன்னாலும் உங்க கண்ணுக்கு முன்னாடி நான் அவஸ்தை படறேன் அதை பார்த்துட்டும் நான் சொன்னா தான் செய்வேன் இருக்கேங்கள்….இட்ஸ் டூ மச்”

இப்படித் தான் பல தம்பதியர் இடையே பிரச்சினை என்பது நுழையும். ஆண்களிடம் எதைச் சொன்னாலும் அதை சொல்லும் பெண்கள் ஒரு அர்த்தத்தில் சொல்ல…ஆண்கள் அதற்கு வேறொரு அர்த்தம் எடுத்துக்கொள்ள…..இறுதியில் யார் சரியா சொன்னார் யார் சரியா சொல்லைன்னும், யார் சரியா புரிஞ்சிக் கிட்டாங்க யார் புரிஞ்சுக்கலைன்னும் உப்பு சப்பில்லாத இது போன்ற காரணங்களினாலேயே சண்டையிட்டு கொள்கிறார்கள். அதேபோல நவீன் மிருதுளாக்குள்ளும் சண்டை ஆரம்பிக்க…மீண்டும் வாந்தி வந்து பாத்ரூமிற்குச் சென்றாள் பின்னாலேயே நவீனும் சென்று அவள் நெற்றியைப் பிடித்துக் கொண்டான். அவள் வாந்தி எல்லாம் எடுத்து முடித்துவிட்டு தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கும் போது நவீன் குடிக்க தண்ணீர் கொடுத்தான் அதை வாங்கி குடித்து விட்டு…

“இப்போ செய்தேங்கள் இல்லையா இத மாதிரிதான் பார்த்து தானா உணர்ந்து செய்யணும்”

“இப்போ நீ என்கிட்ட பேசிண்டிருக்கும் சாரி பிஸியா சண்டைப் போட்டுண்டிருக்கும் போது பாதியிலேயே எழுந்து போனா !!! அதுனால தான் வந்தேன்”  

அந்த ஒன்றுமில்லாத பிரச்சினை என்று நவீன் எண்ணி அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே இப்படிச் சொல்ல அதைக் கேட்டதும்

“ஆமாம் ஆமாம் உங்க தப்ப மறைக்கறதுக்கு பேச்ச மாத்தறேங்களாக்கும்”

“சரி சரி …லெட்ஸ் ஜஸ் லீவ் இட். நான் போய் உனக்கு டீ போட்டு கொண்டு வரேன்”

என இரண்டு தம்பளர் டீயுடன் வந்து ஒன்றை மிருதுளாவிடம் கொடுத்ததும் அதை அவள் வாங்கிக் கொண்டு …

“இந்த டீக்கூட ஒரு பஞ்சாபி சமோசாவும் இருந்தா எவ்வளவு சூப்பரா இருக்கும்….இல்ல நவீ”

“அம்மா தான் உனக்கு பிடிச்ச முறுக்கு போளி அப்பம் எல்லாம் செஞ்சு வச்சுட்டுத்தானே போயிருக்கா அதை எடுத்துண்டு வரட்டுமா சாப்பிடுவோம்”

“இல்ல ப்பா இந்த டீக்கு சமோசா தான் மேட்ச்சா இருக்கும்”

“இப்பவா ஈவினிங் வாங்கித் தரேனே…”

“இப்போ டீயோட சாப்பிடணும்ன்னு கேட்டா ஈவினிங்ன்னு சொல்லறேங்கள்?”

“இல்ல மிருது இப்போ இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பாடு சாப்பிடுற நேரம் ஆகிடும் இப்போ போய் சமோசா சாப்டேனா அப்பறம் சாப்பாடு சரியா சாப்பிட மாட்ட அதனால சொன்னேன்” என்று தன்னிடமிருப்பது ஐந்தே ரூபாய் என்ற பதட்டத்தில் மிருதுளாவையே வேண்டாமென சொல்ல வைக்க முயறச்சித்தான் நவீன். 

“ஆமாம் நீங்க சொல்லறதும் சரிதான்…சரி எனக்கு ஒரு அப்பமும் ஒரு முறுக்கும் தாங்கோ”

“குட் கேர்ள்!!! இந்தா சாப்பிடு”

“ஆமா இத சாப்ட்டா மட்டும் மத்தியானம் சாப்பாடு சாப்ட முடியுமா என்ன? எங்கயோ எதோ இடிக்கறதே!!!”

“ஒண்ணும் எங்கேயும் இடிக்கலை ஒரு அப்பமும் ஒரு முறுக்கும் சாப்ட்டா தப்பில்லை. சமோசாவில் உள்ள உருளை ஸ்டஃபிங் ரொம்ப ஹெவி ஆகிடும் அதுனால தான் சொன்னேன்”

“ஓகே ஓகே நம்பிட்டேன் நம்பிட்டேன்” என சொன்னாலும் மிருதுளாவிற்கு நவீனின் பேச்சினால் ஏதோ அவன் தவிப்பது போல தோன்றியது அதே யோசனையிலிருந்தவளை 

“வரியா சன் டிவில காந்தி ஜெயந்தி சிறப்புத்திரைப்படம் பார்ப்போம்” 

“ஓ எஸ் பார்க்கலாமே”

“இரு நான் சாதம்  வச்சுட்டு, குழம்புப் பொறியல் எல்லாத்தையும் சூடு பண்ணிட்டு வந்திடறேன் சரியா”

“இப்பவே வா மணி என்ன பண்ணண்டு தானே ஆகறது”

“அம்மா தாயே நீ சடன்னா பசி பசின்னு சொல்ல ஆரம்பிப்பன்னு உன் அம்மா சொல்லிருக்கா அது போல ஏதாவது ஆச்சுன்னா அப்பறம் என்னால எல்லாம் உங்க அம்மா மாதிரி கிடு கிடுன்னு ஏதாவது செய்து தர முடியாது அதனால நான் அந்த வேலைகளை முடிச்சுட்டு ஒரு அரைமணிநேரத்துல வந்திடுவேன் அதுவரைக்கும் நீ டிவி பாரு”

“ஓகே டன்”

நவீன் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு வந்தமர்ந்து கொஞ்ச நேரம் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது மிருதுளா எழுந்து போய் சாப்பாட்டை கொண்டு வந்து ஹாலில் வைக்கத் துவங்கினாள் உடனே நவீனும் அவளுக்கு உதவி செய்ய பின் இருவருமாக அமர்ந்து படம் பார்த்துக் கொண்டே  உண்டனர்.

சாப்பிட்டப் பின் படம் பார்த்துக்கொண்டே மிருதுளா உறங்கிப் போனாள். அவள் உறங்குவதைப் பார்த்த நவீன் டிவியை ஆஃப் செய்துவிட்டு அவளை பார்த்தப்படி அவளருகே படுத்துக் கொண்டு …

“ரொம்ப சாரி மிருது நீ ஆசைப்பட்டு கேட்ட சமோசாவ கூட வாங்கிக் குடுக்க முடியாத நிலைமையில் நான் இப்போ இருக்கேன். யார் கிட்டேயும் கடனும் வாங்கக் கூடாதூனு சொல்லிட்ட இப்போ நான் என்ன பண்ணுவேன். இன்னும் இரண்டு நாள் ஆகுமே சம்பளம் வர அதுவரைக்கும் உன்னிடம் சொல்லி உன்னை வருத்தப்பட வைக்காமல் பார்த்துக்கணுமே!!! என்ன செய்யப் போறேனோ!!! தயவுசெய்து சாயந்தரம் சமோசாவை மறந்திடு மா ப்ளீஸ்” 

என்று மனதிற்குள் பேசிக்கொண்டே அவனும் உறங்கிப்போனான். 

மணி ஐந்தானது நவீன் சட்டென எழுந்துப் பார்த்தான் மிருதுளா நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். அவன் மெதுவாக எழுந்து போய் இருவருக்கும் டீ போட்டுக் கொண்டிருக்கையிலே மிருதுளா எழுந்து முகம் கை கால் அலம்பி சாமிக்கு விளக்கேற்றினாள். நவீன் அடுப்படியிலிருந்து டீயை எடுத்து வரும்போது மனதில் 

“மிருதுளா சமோசா கேட்டு விடக் கூடாதே ஆண்டவா” 

என்று வேண்டிக் கொண்டே வந்து அவளிடம் டீயை கொடுத்தான். அவளும் அதை வாங்கி எதுவும் சொல்லாமல் குடிக்கலானாள். அப்போது நவீன் பெருமூச்சு விட்டுக்கொண்டே 

“நன்றி கடவுளே”

என்று மனதிற்குள் கூறுவதாக எண்ணி வெளியே கேட்கும்படி முனுமுனுக்க உடனே மிருதுளா

“என்னத்துக்கு கடவுளுக்கு நன்றி இப்போ? டீயை குற்றம் குறையில்லாமல் குடிச்சதனால தானே”

“ஐய்யோ சமத்து!!! அதேதான் அதேதான்”

என சமாளித்துக் கொண்டிருக்கும் போதே 

அடுத்த பரீட்சை கேள்வி நவீனைப் பார்த்து பாய்ந்தது…

“சமோசா தான் வாங்கித் தரலை போகட்டும் விட்டுடறேன். ஆனா இப்போ நான் கேட்க போறதை நீங்க நிச்சயம் நிறைவேத்தனும் சரியா?”

“சமோசா வாங்கி தரமாட்டேன்னு சொல்லலையே ….சரி என்னது அது மிருது?”

“எங்க அம்மா வந்ததிலிருந்து எப்பவுமே சவுத் இந்தியன் சாப்பாடே ஒரு மாசமா சாப்படறேனா!!”

“அதுக்கு!!!”

“அதனால நாம இன்னைக்கு நைட் டின்னருக்கு ரோஹித் டாபா போய் ரொட்டியும் சப்ஜியும் சாப்பிடுவோமா?”

நவீனுக்கு தூக்கிவாரிப் போட்டது.

“இதுக்கு சமோசாவே பரவாயில்லைப் போல தெரியுதேன்னு அவன் மைன்ட் வாய்ஸ் சொல்ல”

“சரி நீ ஃபர்ஸ்ட் சமோசா தானே கேட்ட அத இன்னைக்கு சாப்பிடு நாளைக்கு டின்னருக்கு போகலாம் சரியா”

“ம்….ம்….ம்…நான் எது கேட்டாலும் நீங்க ஏன் அப்பறம் அப்பறம்ன்னு சொல்லறேங்கள் ? பைசா இல்லையா என்ன?”

“அதுக்கில்லை மிருது நீ மொதல்ல சமோசா தானே கேட்ட அதுனால சொன்னேன் வேற ஒண்ணுமில்லை. 

இப்போ !!என்ன!!! உனக்கு சமோசா சாப்பிடணும் போல இருக்கா இல்லையா அத சொல்லு முதல்ல”

என்று நவீன் கேட்டதும் சின்ன பிள்ளைகள் போல ஆமாம் இருக்கு என தலையசைத்தாள் மிருதுளா.

“சரி இரு நான் போய் வாங்கிண்டு வரேன்”

என்று டாபா சென்று ஒரே ஒரு சமோசாவை பேக் செய்து வாங்கிவந்தான். ஆக இப்போது அவனிடம் மீதமுள்ளது இரண்டு ரூபாய் ஐம்பது காசே. வீட்டிற்கு வரும் வழியெல்லாம் என்ன பண்ணுவது என்ற சிந்தனையிலேயே நடந்துச் சென்றான். வீட்டிற்குள் வந்ததும் கடையில் வாங்கியதை மிருதுளாவிடம் கொடுத்து விட்டு ஃப்ரிட்ஜில் இருந்து ஒரு பாட்டில் ஐஸ் தண்ணீர் எடுத்து குடித்துக் கொண்டிருக்கும் போது…மிருதுளா அதைத் தொறந்துப் பார்த்துவிட்டு…

“அச்சசோ!!” 

என்று கூற உடனே குடித்துக் கொண்டிருந்த தண்ணீரை …நவீன் சட்டென திரும்பிப் பார்த்ததில் அவன் முகத்தில் அவனே ஊற்றிக்கொள்ள அதைப்பார்த்த மிருதுளா சிரிக்க…

“என்ன ஆச்சு மிருது ஏன் அப்படி சொன்ன?”

“என்ன? நேத்து குல்ஃபியும் ஒண்ணு தான் வங்கினேங்கள் இன்னைக்கு சமோசாவும் ஒண்ணு தான் வாங்கிருக்கேங்கள் என்ன விஷயம்? ஏன் இன்னிக்கு உங்களுக்கு சமோசா சாப்பிடணும் போல தோணலையோ?”

“உண்மைய சொல்லணும்னா ….அது தான். எனக்கு வேண்டாம்ன்னு தோணித்து ஸோ வாங்கலை. ஆஸ் சிம்பிள் ஆஸ் தட்… நானா ப்ரெக்னன்ட்டா இருக்கேன்…நீ சாப்டு மிருது. எனக்கு வேணும்னா நான் வாங்கிண்டு வந்திருப்பேனே”

“சரி சரி இங்க வாங்கோ இதுல பாதியாவது நீங்க சாப்பிடுங்கோ. எனக்கு பாதிப் போறும்.”

“ஹலோ மறுபடியும் சொல்லறேன் எனக்கு வேண்டாம். எனக்கு வேணும்னா இரண்டு வாங்கிண்டு வந்திருப்பேன். உனக்கு பஞ்சாபி சமோசா எவ்வளவு பிடிக்கும்ன்னு தெரியும் பேசாம சாப்பிடு. அதுவுமில்லாம உன்னை கல்யாணம் பண்ணி இங்கே கூட்டிட்டு வரும்வரை நான் இதை எல்லாம் தான் சாப்பிட்டேன்”

“இல்லையே உங்க நண்பர்கள் எல்லாரும் அப்படி சொல்லலையே”

“எப்பவாவது வெளில வரும்போது போதுமா!! ஹாப்பியா!!! அந்த சமோசா ஆரிடப் போறது…பேசாம சாப்பிடு”

“சரி சமோசாவ வாங்கிக் கொடுத்துட்டு டின்னருக்கு கூட்டிண்டு போகாம இருந்துருவேங்களா நவீன்?”

இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்வதென்பதறியாமல் சற்று மௌனம் காத்தப் பின் …

“இங்க பார் மிருது… நம்ம சவுத் இந்தியன் சாப்பாடு தான் பெஸ்ட் தெரியுமா!! அதுவும் ப்ரெக்னன்ட்டா இருக்குற நேரத்துல என்னத்துக்கு கடையில விக்கற சாப்பாடெல்லாம் வாங்கி சாப்பிடணும் அப்பறம் அதுனால எதாவது பியச்சனை ஆயிட்டா யாரு கஷ்ட்டப்படப்போறா நாம தானே….அது தேவையா?”

“எனக்கு ஒண்ணு புரியலை நவீ.”

“க்ளியரா சொன்னேனே அதுல என்ன உனக்கு புரியலை?”

“ப்ரெக்னன்சி கன்பார்ம் ஆன அன்னைக்கு வெளில தானே சாப்பிட்டோம் அப்ப ஏன் நீங்க இதெல்லாம் சொல்லலை.”

“அப்போ எனக்கு அவ்வளவா இதப் பத்தி எல்லாம் தெரியாதே அதனால கூட்டிண்டு போனேன்”

“சரி இப்போ எப்படி இதெல்லாம் தெரிஞ்சுது”

“என்னோட வேலை பார்க்கற கல்யாணமாகி கொழந்தைகள் இருக்கிற நண்பர்கள் சொல்லி கேட்டது”

“ஹா !!!ஹா !!!ஹா!!! நவீ சூப்பரா சமாளிக்க நினைக்கறேங்கள் ஆனா உங்களால முடியலையே அப்பறம் ஏன்?? உண்மையைச் சொல்லுங்கோ”

“நான் தான் சொல்லிட்டேனே ….வேற என்ன உண்மையை கேட்கற”

“உங்களோட கல்யாணமான நண்பர்கள் ல ஒருத்தர் தான் தமிழ் காரர். மத்தவா எல்லாரும் வடநாட்டுக் காரர்கள் அப்படி இருக்கும் போது அவாளே அவா ஊர் சாப்பாட்டை சாப்பிடக் கூடாதுன்னா சொல்லுவா”

“அவா சாப்பாட்ட ஹோட்டல்ல சாப்பிடக் கூடாதுன்னு தான் சொன்னா”

“சரி …எனக்கு உங்க பேச்சில் ஏதோ ஒரு தடுமாற்றம் தெரியறது. நீங்களா சொல்லும் வரை வெயிட் பண்ணறேன். அப்போ நைட்டு டின்னருக்கு தோசையும் வெங்காய சட்னியும் சாப்பிடலாமா?”

“தோசையை எப்படியாவது வார்த்துத் தந்திடுவேன் ஆனால் அந்த சட்னி எனக்கு பண்ணத் தெரியாதே”

“நீங்க ஒண்ணும் பண்ண வேண்டாம் நானே செய்யறேன். உங்கள்ட்ட கேட்டேன் அவ்வளவு தான்”

“ஓ எஸ் அப்படின்னா சரி அதையே சாப்பிடுவோம்” 

“நான் மத்தியானம் படம் பார்த்தேன் நீங்க சாதம் வச்சு எல்லாத்தையும் சூடு செய்து வச்சேங்கள் இப்போ நான் அடுப்படியில் தொசை அன்ட் சட்னி பண்ணப் போறேன் நீங்க டிவி பாருங்கோ”

“இப்பவே ஏன் மணி ஏழு தானே ஆகறது.”

“இப்ப வெங்கயத்தையும் தக்காளியையும் வதக்கி ஆரவச்சுட்டு வர்றேன் அப்பறம் ஒரு ஏழேகால் போல போய் அதை அரைச்சுட்டு அப்படியே தோசையும் வார்த்துடுவேன் ஆஸ் யூஷுவல் செவென் தர்ட்டிக்கு சாப்பிட்டுடலாம் சரியா”

“அப்படியா அப்போ ஓகே. ஏதாவது ஹெல்ப் வேணும்னா கூப்பிடு”

“ஷுவர் ஷுவர். நீங்க டிவி பாருங்கோ”

மிருதுளா சொன்னது போலவே ஏழரைக்கு டின்னர் தயார் செய்தாள் இருவரும் உண்டப் பின் அவரவர் படிப்புப் பற்றியும். மிருதுளா வயிற்றில் குழந்தையுடன் நவம்பரில் பரீட்சை எழுதப் போவது பற்றியும் ஒரு சின்ன வாக் போய் கொண்டே பேசிவிட்டு வீட்டிற்கு திருமபி வரும் போது குல்ஃபி காரன் வண்டி அவர்களை க்ராஸ் செய்யும் போது …

“சார்.. மேடம் ..குல்ஃபி சாப்பிடுங்க” என்று  குல்ஃபி விற்பவன் கூறியதும் நவீனுக்கு எங்கடா மிருதுளா கேட்டு தர்மசங்கடமாகிவிடுமோ என இதயதுடிப்பு அதிகரித்தது. ஆனால்

“இன்னைக்கு வேண்டாம் பா. கேட்டதுக்கு ரொம்ப நன்றி பா. நீ போய் உன் வியாபாரத்த கவனி”

“மிருது நீயா குல்ஃபி வேண்டாம்ன்னு சொல்லற?”

“ஆமாம் நவீ தினமும் குல்ஃபி சாப்பிட்டா நம்ம கொழந்தைக்கு எப்பவுமே ஜலதோஷம் பெர்மனெட்டா இருந்துடுத்துன்னா அதுனால தான் அப்படி சொன்னேன். இனி எனக்கு வாரத்துல ஒரு குல்ஃபி ஆர் நம்ம மார்கெட்ல கிடைக்கிற அந்த ஸ்வேர்ள் ஐஸ்கிரீம் வாங்கித் தாங்கோ போதும். டீல் ஓகே வா”

“அப்படி எல்லாம் ஒண்ணும் ஆகாது மிருது. சரி எனிவே ஆம் ஃபைன் வித் யுவர் டீல். டன். சரி …..குளிர் காலம் ஆரம்பிச்சாச்சு இனி நாம நைட் எல்லாம் வாக் வரக்கூடாது”

“காலையில் உங்களுக்கு ஆபிஸ் போகணும் சாயந்தரம் க்ளாஸ் அப்பறம் எப்போ போறதாம் நைட்டுதானே. டாக்டர் தினமும் வாக்கிங் தவறாம போக சொல்லிருக்காளே”

“ஆமாம் சரி இந்த மாசம் மட்டும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் க்ளாஸ் போறேன் என்ன சொல்லற”

“அதெல்லாம் வேண்டாம் நீங்க உங்க க்ளாஸுக்கு போங்கோ நான் மெதுவா நம்ம தெருவுலேயே நடக்கறேன். சரி கதவ தொறங்கோ ரெஸ்ட் ரூம் போகணும்”

நவீன் கதவைத் திறந்ததும் மிருதுளா நேராக ரெஸ்ட் ரூமிற்குள் சென்றாள். நவீன் கதவை தாழிட்டு விட்டு சாமி படம் முன்னால் நின்று 

“இன்று வந்த சமோசா அன்ட் ரொட்டி சப்ஜி என்ற கடலை தாண்ட உதவிட்ட ஆண்டவா. நேத்தும் இன்றும் ஐந்து ரூபாயில் மிருதுக்கு தெரியாமல் சமாளித்து விட்டேன். இனி இந்த சனி ஞாயிறு என்கிற மீதமிரண்டு நாளும் துணையா இருந்து காப்பாத்துங்கப்பா சாமி.”

என்று கைக்கூப்பி நின்றிருந்ததைப் பார்த்த மிருது 

“என்ன நவீ சாமிகிட்ட என்ன அப்படி ஒரு வேண்டுதல் அதுவும் இந்த நேரத்துல?”

“ஒண்ணுமில்லை எல்லாரையும் நல்ல படியா பார்த்துக்கோங்கோன்னு கேட்டுண்டேன். இரு வந்து விபூதி பூசி விடறேன் அப்பறம் போய் படுத்து தூங்கலாம்”

என மிருதுளாவுக்கு விபூதி பூசிவிட்டு தனக்கும் இட்டுக்கொண்ட பின் உறங்க படுத்துக் கொண்டனர். அப்போது நவீனின் மனது பேசிக்கொண்டே இருந்தது…

“சீக்கிரம் திங்கட்கிழமை வரக்கூடாதா? திங்கட்கிழமை விடிந்ததும் சீக்கிரம் ஆபிஸ் போய் மொதல்ல சம்பளத்தை வாங்கி அன்னைக்கே மிருதுவ கூட்டிண்டு டாபா ல போய் அவ ஆசப்பட்ட ரொட்டி சப்ஜி வாங்கிக் கொடுக்கணும்.”

“நவீ ஏதாவது சொன்னேங்களா என்ன?”

“இல்லையே!!! ஏன் கேட்கற?”

“இல்ல நீங்க ஏதோ கேட்டா மாதிரி இருந்தது அதுதான் கேட்டேன். சரி தூங்குங்கோ குட் நைட்” என்று அவன் நெற்றியில் முத்தமிட்டு தூங்கலானாள்.

“இதுக்கு மேல நாம நம்ம மனச பேசவிட்டா அப்பறம் எல்லாமே மிருதுக்கு கேட்கிற மாதிரி பேசிடப் போறேன். பேசாம தூங்கிடுவோம் அது தான் சேஃப்” 

என்று மனதில் நினைத்துக் கொண்டே அவனும் அவளுக்கு முத்தம் கொடுத்து குட் நைட் சொல்லிவிட்டு தூங்கலானான்.

தொடரும்…..

ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் ரெயில் ஏறிவிட்டாலும் தூங்கிப் போனால் பைகள் களவு போய்விடுமோ என்றும். பாத்ரூமுக்கு எப்படி பெட்டிகளை எல்லாம் நம்பி வைத்துவிட்டு போவது என்றும் எண்ணி அம்புஜம் பிராயணம் செய்த ஒன்றரை நாளும் தண்ணீர் குடிக்காமலும், உணவருந்தாமலும், தூங்காமலும் தன் மகளை பார்க்க போவதற்காக விரதம் மேற்கொண்டவள் போல் பயணித்தாள். முதல் முறை தனியாக பிரயாணம் மேற்கொள்ளும் அனைத்து பெண்களுக்கும் இருக்கும் பயமே அம்புஜத்திடமும் இருந்தது. அவளும் எல்லாரையும் போல காட்டிக்கொள்ளாமல் இருந்துக்கொண்டாள். எப்போடா திங்கட்கிழமை காலை வரும் என கை கடிகாரத்தின் முட்களை வேகமாக ஓடச் சொல்லி மனதில் வேண்டிக்கொண்டாள். ஒரு வழியாக ரெயில் குஜராத் ஸ்டேஷனில் வந்து நின்றது. அந்த ரெயில் பெட்டியிலிருந்து விடுப்பட்டு வீடு போய் சேர ஜன்னல் வழியாக அவள் கண்கள் தன் மகளையும் மாப்பிள்ளையும் தேடிக்கொண்டிருக்கையிலே பின்னாலிருந்து “அம்மா” என மிருதுளாவின் குரல் கேட்டதும் சட்டென திரும்பி தன் மகளை அணைத்துக் கொண்டு 

“அப்பாடா ஒரு வழியா பத்திரமா வந்து சேர்ந்துட்டேன்”

“ஏன் மா ரொம்ப பயந்துட்டயா?”

“ஏன் என்ன ஆச்சு?”

“அது ஒண்ணுமில்லை மிருது அன்ட் மாப்ள தனியா எங்கயுமே பிரயாணம் போனதில்லை அதுவும் இவ்வளவு தூரமெல்லாம் வந்ததே இல்லை அதனால் பதட்டமா இருந்தது இப்பவும் கொஞ்சம் இருக்கு.”

“சரி சரி ஆத்துக்கு போகலாம். மிருது நீ அம்மாவை கூட்டிண்டு முன்னால் போ நான் இந்த பெட்டி அன்ட் பேக் எல்லாம் எடுத்துண்டு பின்னாடியே வர்றேன்”

“நான் வேண்ணா பேக்கை எடுத்துக்கறேன் நீங்க பெட்டிய மட்டும் எடுத்துண்டு வாங்கோ”

“நீங்க மிருது கூட போங்கோ நான் பார்த்துக்கறேன்”

ரெயிலில் இருந்து வெளியே ப்ளாட்பாரம் வந்ததும் 

“நீங்க காபி இல்ல டீ ஏதாவது குடிக்கறேங்களா”

“எங்கம்மா குடிச்சிட்டாலும்”

“இல்ல மாப்ள ஒண்ணும் வேண்டாம் சீக்கிரம் வீட்டுக்கு போயிடுவோம் வாங்கோ”

அனைவருமாக ஒரு ஆட்டோவில் ஏறினர் வர வழியில் மிருதுளா 

“அம்மா நவீன் நீங்க எல்லாரும்  வர்றதுக்கு  முன்னாடி எழுதிய பரீட்சையை க்ளியர் செய்து விட்டார் இன்னும் ஒரே ஒரு பரீட்சை தான் பாக்கி இருக்கு”

“ஓ அப்படியா வாழ்த்துக்கள் மாப்ள. மிருது நீயும் அதே மாதிரி வர்ற நவம்பர் ல பரீட்சை எழுதி பாஸ் ஆகணும் சரியா”

என பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்ததும்….

“மிருதுளா அவர் ஆட்டோவை கட் செய்து வரட்டும் அதுக்குள்ள நீ கதவ தொறயேன்”

“என்னமா அவசரம்”

“ப்ளீஸ் மா”

“சரி சரி…நவீன் சாவியை தாங்கோ நாங்க ஆத்துக்குள்ள போறோம் நீங்க காசு கொடுத்துட்டு சாமான்களை எடுத்துண்டு வாங்கோ”

என மிருதுளா சாவியை வாங்கிக்கொண்டு கதவைத் திறந்ததும் அம்புஜம் வேகமாக பாத்ரூமிற்குள் சென்றாள்.

நவீன் பெட்டி பேக் எல்லாவற்றையும் வீட்டினுள் வைத்து விட்டு ஆபீஸ் சென்றான்.

சற்று நேரம் கழித்து பாத்ரூமிலிருந்து வெளியே வந்தாள் அம்புஜம்…

“அப்பாடி…”

“என்னமா ஏன் இப்படி சொல்லற”

“பின்ன ஒன்றரை நாளா டாய்லெட் போகாம இருந்தா வயிறு அழுத்தாதா. கல்லு மாதிரி ஆகிடுத்து என் தொப்பா. அது எவ்வளவு பெரிய சங்கடம் தெரியுமா?”

“ஏன் மா!!! நீ வந்த கம்ப்பார்ட்மென்ட்ல டாய்லெட் இல்லையா என்ன?”

“ம்….நக்கலா!!! எல்லாம் இருந்தது ஆனா பெட்டி பேக் எல்லாத்தையும் விட்டுட்டு போக பயமாயிருந்தது தெரியுமா. சரி சாப்ட ஏதாவது இருக்கா மிருது”

“என்னம்மா? ஏன் இப்படி? சாப்பிடவும் இல்லையா!!! சாப்பாடு எல்லாம் கட்டிண்டு தானே வண்டியே ஏறிருப்ப ….இதோ தோசை சுட்டுத்தறேன் சட்னி எல்லாம் ரெடி.”

“சொன்னாலும் சொல்லாட்டினாலும் அது தான் உண்மை. கட்டிண்டு வந்தேன் ஆனால் சாப்டலை,  தண்ணீக்கூட குடிக்கலை ஏன்னா ….சரி அத விடு ….குடு நானே சுட்டுக்கறேன். ஆமாம் மாப்ள எங்கே நீங்க ரெண்டு பேரும் சாப்ட்டாச்சா”

“அட பாவி அம்மாவே இப்படியா சாப்டாம வருவ !!! நீ மொதல்ல உட்கார்ந்து நிதானமா சாப்டு. இந்தா தோசையும் சட்னியும். நானே வார்த்துத்தறேன். நாங்க ரெண்டு பேரும் சாப்ட்டாச்சு. அவர் நம்மள ஆத்துல விட்டுட்டு ஆபீஸ் போயாச்சு”

அம்புஜம் சாப்பிட்டு முடித்ததும் இருவருமாக படுத்துக்கொண்டே பேசினார்கள். 

“ஏய் மிருது நீ என்ன இப்படி இளைச்சுப்போயிருக்க!!! சரியா சாப்பிடணும் மா. அப்போ தானே குழந்தை ஆரோக்கியமா பொறக்கும்”

“சாப்பிடவே பிடிக்க மாட்டேங்கறது எதை சாப்பிட்டாலும் வாமிட் வர்றது என்ன பண்ணுவேன்? 

“அப்படித்தான் இருக்கும் மிருது அதுக்கா சாப்பிடாம இருக்கக் கூடாது. வாமிட் வந்தா எடுத்துட்டு கொஞ்சம் நேரம் கழிச்சு சாப்பிடணும். உன் குழந்தைக்காக நீ சாப்பிட்டு தான் ஆகணும். டாக்டர் என்ன சொன்னா. கொழந்த எப்படி இருக்காம்?” 

“குழந்தை நல்லா இருக்காம். அடுத்த வாரம் செக்கப்புக்கு போகணும்.”

“நான் இருக்கப் போகும் இந்த ஒரு மாசமும் நான் சமைச்சு தர்றதை ஒழுங்க சாப்பிடணும். புரியறதா? உனக்கு என்னெல்லாம் சாப்பிடணும்ன்னு தோணறதோ கேளு செய்துத் தர்றேன்.”

“ஓகே அம்மா. அதெல்லாம் சரி. எப்படி அப்பாவும் வேனுவும் நீ இல்லாம இருக்கப் போறா? என்ன பண்ணுவா?”

“அவா ரெண்டு பேரும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கறோம்ன்னு சொன்னா மிருது. அப்பா பார்த்துப்பா …..பார்த்துப்பா என்ன பார்த்துண்டு தான் ஆகணும்”

என பேசிக்கொண்டே உறங்கிப் போனாள் அம்புஜம் அதைப் பார்த்த மிருதுளா அம்மாவின் தலையை தூக்கி தலையணையை வைத்து விட்டு….

“பாவம்!!! தூங்கறத பார்த்தா ஒன்றரை நாள் தூங்கிருக்கவும் மாட்டான்னு தான் தோணறது. தூங்கட்டும்”

என்று தானும் சற்று கண் அசந்தாள் மருதுளா. ரெயிலில் தூங்கிவிட்டதாக எண்ணி சட்டென எழுந்துப் பார்த்தாள் அம்புஜம். அருகில் மிருதுளா தூங்குவதைப் பார்த்ததும் தான் ஆசுவாசமானாள். பின்பு மணியைப் பார்த்தாள் மணி ஒன்று ஆகியிருந்தது. அடுப்படியில் சென்றுப் பார்த்தாள். மிருதுளா …குக்கரில் சாதமும், சாம்பாரும் பீன்ஸ் பொறியலும் செய்து வற்றல் வடாமும் வறுத்து வைத்திருந்தாள். அம்புஜம் சாம்பாரை மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு கொதி கொதிக்க வைத்து இறக்கி வைத்துவிட்டு ஹாலுக்கு வந்து பார்த்தாள் மிருதுளாவும் எழுந்து பாத்ரூம் சென்றிருந்தாள். அவளும் எழுந்து விட்டதால் அம்புஜம் சாப்பாட்டை ஹாலில் வைத்தாள். மிருதுளா வந்ததும்..

“வா வா மிருது மணி ஒன்றரை ஆயாச்சு சாப்பிடலாம் வா”

“அச்சோ சாப்பாடா !!! வேண்டாமே மா பாளீஸ்”

“அப்படி இருக்கக்கூடாதுன்னு காலை ல தானே சொன்னேன். வா வந்து உட்காரு”

மிருதுளாவும் அமர்ந்தாள் அம்புஜம் குக்கரைத் திறந்ததும் மிருதுளா பாத்ரூமிற்கு சென்று வாந்தி எடுத்தாள். உடனே அம்புஜம் குக்கரை அடுப்படியில் வைத்துவிட்டு சாதத்தை மட்டும் எடுத்து வந்து ஹாலில் வைத்தாள். வெளியே வந்த மிருதுளாவிடம் மீண்டும் சாப்பிடும் படி கூறினாள். குக்கர் அங்கில்லாததால் அவளுக்கு மீண்டும் வாந்தி வராமல் சாப்பிட்டாள். மகபேறு காலத்தில் சில பெண்களுக்கு சில வாசனைகள், சில சாப்பாட்டு வகைகளால் இப்படி வாந்தி வருவது சகஜமே ஆனால் அந்த நேரங்களில் அப்பெண்கள் ஓய்ந்து போவதனாலயே மீண்டும் ஏதாவது செய்து சாப்பிடுவதற்கு தயங்குகிறார்கள் அதனால் பல நேரம் சாப்பாட்டை தவிர்க்கவும் செய்கிறார்கள். அது போல் தான் நம்ம மிருதுளா இருந்து வருகிறாள். இனி அவள் அன்னையின் பராமரிப்பினால் அப்படி இருக்க மாட்டாள்…அம்புஜமும் அப்படி இருக்க விடமாட்டாள்.

ஆனால் இது போன்ற நேரங்களில் கணவன்மார்கள் அவர்கள் மனைவியைப் புரிந்துக்கொண்டு அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருதலே சிறந்தது அப்போது தான் தன் மனைவியின் வலியும் வேதனையும் புரிந்துக் கொள்வார்கள். மனைவியின் இன்பத்திலும் சந்தோஷத்திலும் மட்டுமே பங்கு போட்டுக்கொள்வதல்ல வாழ்க்கை. இங்கே நம்ம நவீன் என்னவானாலும் தனது மனைவியை தானே பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் ஆனால் விவரமாக தனது மாமியாரை வரவழைத்து தனது பங்களிப்பை சற்றே தளர்த்திக் கொண்டுள்ளான்.

அம்புஜமாவது வர மறுத்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் நவீனுக்கு மிருதுளா மேல் புரிதலும் அக்கரையும், பொறுப்பும் இன்னும் கூடியிருக்க ஏதுவாக இந்த சூழல் இருந்திருக்கலாம். ஆனால் பாவம் தாயுள்ளம் ஆயிற்றே மகள் வேதனைப் படுகிறாள் என்று கேட்டதும் தனக்கும் தன்னை சார்ந்த குடும்பத்தினருக்கும் இருந்த கஷ்டங்களை சமாளித்துக்கொண்டு உதவிக்கரம் நீட்டிவிட்டாள்.

தாய்மார்கள் என்றும் தங்கள் பிள்ளைகள் வேதனைப் படுவதை விரும்ப மாட்டார்கள். பர்வதம் போன்றவர்கள் சிலர் இதற்கு விதிவிலக்குகளே. அதற்காக எல்லா இடங்களிலும் அவர்கள் தாயுள்ளம் முந்திக் கொண்டால் சில சமயங்களில் அவர்கள் பிள்ளைகளுக்கு அது நன்மை பயக்காமல் போய்விடுவதும் உண்டு. 

ஒரு மாதம் அம்புஜம் அங்கிருந்து நன்றாக மிருதுளாவை கவனித்துக் கொண்டு அவள் கேட்டவைகளை எல்லாம் செய்து கொடுத்து அவளை நன்றாக தேற்றினாள். அந்த ஒரு மாதம் நவீன் அவன் வேலை, படிப்பு என இருந்து அப்பப்போ செக்கப்புக்கு மட்டும் கூட்டிச் சென்று வந்தான். காலையில் ஒரு வாக் நவீனுடன் பின்பு மாலையில் ஒரு வாக் அம்மாவுடன் என மிருதுளா மகிழ்ச்சியாக இருந்தாள். வந்ததிலிருந்து வீட்டிற்குள்ளேயே இருப்பதனால் சற்று வெளியே எங்காவது போய் வரலாம் என மிருதுளா கூறியதுக்கு அம்புஜம் மறுத்து விட்டாள். நாட்கள் கிடு கிடுவென ஓடி அம்புஜம் ஊருக்கு திரும்பிச் செல்ல வேண்டிய நாளான அக்டோபர் ஒன்றாம் தேதி வந்தது. 

அன்று இரவு ரெயில்வே ஸ்டேஷனில் நவீனிடம் …

“இந்த ஒரு மாசம் நான் என் பொண்ணை பார்த்துண்ட மாதிரியே நீங்களும் வரும் ஒன்றரை மாசம் பார்த்துக்கோங்கோ. அடுத்த மாசம் தீபாவளிக்கு வந்துடுவேங்களே அப்போ உங்க அம்மா நான் எல்லாரும் இருப்போமே நாங்க பார்த்துப்போம்”

“ஆமாம் ஆமாம் பார்த்துப்பா பார்த்துப்பா”

“என்னடி ஒரு மாதிரி சொல்லற ஏன் நான் உன்னை நல்லா பார்த்துக்கலையோ”

“அட க்ராஸ் டாக் உன்னை இல்ல.. சரி சரி வண்டில ஏறுமா…நான் உள்ளே வரலை …என்னால வேகமா எல்லாம் இறங்க முடியாது. நீ உள்ள போய் ஜன்னல் பக்கம் வா வண்டி கிளம்பும் வரை பேசலாம்”

“இந்த தடவை நீங்க எந்த கவலையுமில்லாமல் பாத்ரூம் போகலாம், தூங்கலாம் சரியா ….நான் இதோ உங்கள் பெட்டி , பேக் எல்லாத்தையும் இந்த சங்கிலி போட்டு கட்டி பூட்டிட்டேன் இந்தாங்கோ சாவி. நிம்மதியா போயிட்டு வாங்கோ. அடுத்த மாசம் பார்க்கலாம்”

என்று நவீன் கூறியதும் அம்புஜத்திற்கு வெட்கம் வர அதைப் பார்த்த மிருதுளா…

“அம்மா இதுல வெட்கப் பட ஒண்ணுமே இல்லை. அப்பா வேனு எல்லாரையும் கேட்டதா சொல்லு”

“ஆமாம் அவாள கேட்டதா சொல்லுங்கோ அன்ட் என்னோட தாங்க்ஸையும் சொல்லுங்கோ. நீங்க வந்ததுக்கும் ரொம்ப தாங்கஸ்”

“இதுக்கென்னதுக்கு தாங்கஸ் எல்லாம் சொல்லிண்டிருக்கேங்கள். என் பொண்ண பார்த்துக்க நான் வராமல் யார் வருவா…. விடுங்கோ..அச்சச்சோ மணி அடிச்சுட்டானே அப்போ வண்டி கிளம்பப்போறதே”

“ஆமாம் பின்ன நீ இப்படி ஜம்முன்னு வண்டிக்குள்ளேயும் நாங்க வெளில நின்னுண்டும் பேசிண்டே இருக்கவா இங்க வந்தோம்”

என்று மிருதுளா நகையாடினாலும் அவள் கண்களிலும் அம்புஜம் கண்களிலும் கட கடவென கண்ணீர் உருண்டோடியது.  

“மிருதுமா பார்த்து பத்திரமா இருந்துக்கோ. டைம்முக்கு சாப்பிடு. மாப்ள அவள நல்லா பார்த்துக்கோங்கோ.”

என்று ஜன்னல் வழியாக கூறிக்கொண்டிருக்கையிலே வண்டி சற்று வேகம் எடுத்தது…

“அம்மா நீயும் பத்திரமா போயிட்டு வா. நாங்க அப்பா கிட்ட ஃபோன் பண்ணிச் சொல்லிடறோம். வேனுவோ அப்பாவோ வந்து உன்னை ஸ்டேஷன்ல இருந்து கூட்டிண்டு போவா. நாங்க நாளான்னைக்கு ஃபோன் பண்ணி உன்ட்ட பேசறோம்”

ரெயில் வண்டி இன்னும் வேகம் பிடிக்க…

இருவர் கண்களிலும் கண்ணீர் வழிவதிலும் வேகம் கூடியது. 

“பை மிருது”

“பை அம்மா”

என்று அந்த ப்ளாட்பாரம் எல்லை வரைச் சென்று அங்கே இருந்த பெஞ்சில் அமர்ந்து ரெயில் சென்ற வழியையே பார்த்து அழதவாறு அமர்ந்தாள் மிருதுளா. நவீன் அவளருகே அமர்ந்து

“ஹலோ மேடம் ரெயில் போயாச்சு நாம ஆத்துக்கு கிளம்பலாமா இல்லை இங்கேயே உட்கார்ந்துக்கலாமா”

கண்கள் முழுவதும் கண்ணீருடன் நவீனைப் பார்த்து

“உங்களுக்கு கிண்டலா இருக்கு இல்ல!!”

“அப்படி இல்ல மிருது. அம்மா வந்தா.. உனக்கு நல்லா ஹெல்ஃப்புல்லா இருந்தா. உன்னை நல்லா பார்த்துண்டா எவ்வளவு நாள் தான் உன் கூட மட்டுமே இருப்பா சொல்லு அங்கே வேனுவும் அப்பாவும் உங்க அம்மாவுக்காக வெயிட் பண்ணிண்டிருக்க மாட்டாளா. அம்மா அவாளையும் பார்த்துக்கணுமில்லையா. புரிஞ்சுக்கோ மா. கண்ணைத் தொடச்சுக்கோ எழுந்திரு வா ஆத்துக்கு போகலாம்”

மிருதுளா கண்களை துடைத்துக் கொண்டு இருவருமாக அங்கிருந்து கிளம்பி ஆட்டோவில் வீட்டிற்குச் சென்றாலும் அவளின் உள்ளம் தன் அம்மாவை நினைத்து தேம்பியது. இது திருமணமாகி முதல் கருவுற்ற எல்லா மகள்களுக்கும் உள்ளதே.

அந்த மாதம் ரெயில்வே ஸ்டேஷனுக்கு நான்கு தடவை ஆட்டோவில் சென்று வந்தது,  மிருதுளாவை ஆட்டோவில் மூன்று முறை செக்கப்புக்கு கூட்டிச்சென்றது அவளுக்காக பழங்கள் காய்கறிகள் என அதிகமாக வாங்கியது என செலவு சற்று எகிறிபோனது. அக்டோபர் மாத சம்பளமும் (காந்தி ஜெயந்தி விடுமுறையினால்) வர இன்னும்  மூன்று நாட்கள் இருந்தது. கையில் வெரும் பத்து ரூபாய் தான் மீதமிருந்தது. நவீன் அவன் மனைவிக்காக மாமியார் கேட்டுக்கொண்ட காய்கறிகள் பழ வகைகள், தின்பண்டங்கள் செய்வதற்காக எண்ணெய் என கணக்குப் பார்க்காமல் வாங்கிப் போட்டான். சாப்பாடு செய்வதற்கான பொருட்கள் காய்கறிகள் எல்லாம் மீதம் இருந்தன. 

அவர்கள் வீட்டிற்கு வந்து கொஞ்ச நேரம் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது குல்ஃபி வண்டி சத்தம் கேட்டதும் மிருதுளா நவீனிடம் வாங்கித் தரச்சொல்ல நவீனும் ஒரே ஒரு குல்ஃபி வாங்கி வந்தான். அதைப் பார்த்த மிருதுளா…

“ஏய் நவீ என்ன ஒண்ணு தான் வாங்கிருக்கேங்கள்.”

“ஏன் உனக்கு ரெண்டு வேணுமா. சொல்லு நான் போய் வாங்கிண்டு வந்துடறேன் அவன் தெரு முனைவரை தான் போயிருப்பான்”

“எனக்கில்லை பா உங்களுக்காக தான் கேட்டேன்”

“எனக்கென்னவோ இன்னைக்கு குல்ஃபி சாப்பிடறா மாதிரி இல்ல மிருது அதுனால தான் வாங்கலை. நீ சாப்டு மா. ஏய் மிருது வீ டிட் அ ப்ளன்டர்!!!”

“என்ன சொல்லறேங்கள் குஃல்பி வாங்கினதில் என்ன ப்ளன்டர்?”

“அட அது இல்லை. ச்சே!!! நீயாவது ஞாபகம் படுத்திருக்க வேண்டாமா?”

“எதைப் பத்தி பேசறேங்கள்ன்னே எனக்கு தெரியலை அப்பறம் எப்படி ஞாபகம் படுத்துவேன்?”

“உங்க அம்மா கிட்ட ஒண்ணுமே வாங்கிக் குடுக்கலை”

“என்ன வாங்கி கொடுக்கறதா இருந்தேங்களாம்!”

“ஏய்!!! ப்ளீஸ் சீரியஸா பேசறேன். அட்லீஸ்ட் ஒரு சுவீட் பாக்ஸாவது வாங்கி குடுத்தனுப்பிருக்க வேண்டாமா?”

“ஓ!!! அமாம் நானும் மறந்தே போய்யிட்டேன். பரவாயில்லை விடுங்கோ என் ஃபேமிலி மெம்பர்ஸ் எதையும் எதிர் பார்த்து செய்யறவா கிடையாது…என் அப்பா அவர் தம்பியை படிக்க வச்சு வேலையும் வாங்கிக்கொடுத்தா ஆனா இதுவரைக்கும் எதுமே கேட்டதுமில்லை எதையுமே எதிர் பார்த்ததுமில்லை அதே போல தான் என் அம்மா வீட்டு ஆட்களுக்கும் எல்லாருக்கும் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பினால் மட்டுமே இரண்டு பேரும் செஞ்சா…இப்போ எனக்கு செய்யறா இது அதைவிட இரட்டிப்பு அன்பினால் “

“அவா எதிர் பார்ப்பான்னு இல்ல மிருது நாமளா வாங்கி குடுத்திருக்கனும்ன்னு சொல்லறேன்”

“நோ ப்ராப்ளம் நவீ. அம்மா, அப்பா அன்ட் வேனுவிடம் நான் ஃபோனில் பேசும் போது சாரி சொல்லிக்கறேன். அவா எல்லாம் எதுவுமே தப்பா நினைக்க மாட்டா…நீங்க கவலைப் படாதீங்கோ”

நவீனுக்கு அப்படி செய்ய தவறியதில் வருத்தமாகவே இருந்தது. ஆனால் ஞாபகம் இருந்திருந்தாலும் காசுக்கு எங்கே போயிருப்பான்? அதனாலோ என்னவோ கடவுள் அவனைமறக்கச் செய்துள்ளார் என்றே நாம் எடுத்துக்கொள்வோமே. ஒரு குல்ஃபியின் விலை ஐந்து ரூபாய். இரண்டு வாங்கினால் கையில் காசே இல்லாமல் போய்விடுமே என்று மிருதுளாவிற்கு மட்டும் வாங்கிக்கொடுத்தான் நவீன். இந்த நிலையில் எங்கிருந்து எப்படி சுவீட் வாங்கிருப்பானோ!!!! 

மிருதுளா குல்ஃபி சாப்பிட்டு விட்டு இருவரும் உறங்குவதற்காக படுத்துக்கொண்டனர். நவீன் அன்று முழுவதும் ஆபீஸ், க்ளாஸ், ரெயில்வே ஸ்டேஷன் என அலைந்ததில் படுத்ததும் தூங்கிப்போனான். மிருதுளாவிற்கு தன் அம்மாவின் நினைப்பினாலும், இனி எப்படி தன்னைத்தானே பார்த்துக்கொண்டு நவீனுக்கும் வேண்டியதை செய்ய போகிறோமோ என்ற எண்ணத்தினாலும்  ரொம்ப நேரம் புரண்டு புரண்டு படுத்தும் நான்கு முறை பாத்ரூம் சென்று வந்தும்… நள்ளிரவு தாண்டியே தூங்கினாள்.

மிருதுளா தன் அம்மா வந்ததினாலும் அவளின் உடல் அசதி, வாந்தி போன்ற உடல் உபாதைகளினாலும் அந்த மாத கணக்கு வழக்கில் துளியும் நாட்டம் காட்டாமல் இருந்ததாள். அவள் நவீனிடம் இருப்பது பத்து ரூபாய் தான் என்பதை அறியாதிருந்தாள். அதை நவீனும் அவளிடம் சொல்லி வருத்தப்பட வைக்க விரும்பவில்லை. ஆனால் மிருதுளாவிடம் சொல்லாமல் ஐந்தே ரூபாயில் எப்படி மீதமுள்ள மூன்று நாட்களை கடக்கப் போகிறான் நவீன்?

தொடரும்……

மனதில் வருத்தம், கண்களில் கண்ணீர் நடையில் வேகம் என சென்றுக் கொண்டிருந்த மிருதுளாவின் பின்னால் வேகமாக நடந்தும் ஓடியும் அவளை பிடிக்க சென்றான் நவீன்.  அவள் நேராக வீட்டின் வாசலில் சென்று அமர்ந்தாள். ஒரு இரண்டு நிமிடங்களில் நவீனும் வீட்டிற்கு வந்து சேரந்தான். வாசலில் அமர்ந்திருந்த மிருதுளாவிடம்..

“ஏய் என்ன மிருது இவ்வளவு வேகமா நடந்துண்டேயிருக்க. நான் வர்றேனா இல்லையான்னு கூட பார்க்காம நீ பாட்டுக்கு வந்துண்டிருக்க!! என்ன ஆச்சு ஏன் இப்போ உன் கண்லேருந்து கண்ணீர் வர்றது? சரி ஆத்துக்குள்ள ஃபர்ஸ்ட் வா.”

என்று கதவைத் திறந்தான் நவீன். மிருதுளா வேகமாக வீட்டினுள் நுழைந்து நேராக கட்டிலில் சென்று படுத்துக் கொண்டாள். என்ன நேர்ந்தது என்று புரியாமல் “என்ன ஆச்சு?” என்ற கேள்வியை அவளிடம் இரண்டு மூன்று முறை கேட்டும் பதில் இல்லாததால் நவீனும் பேசாமல் அவளருகே அமர்ந்தான்.  சிறுது நேரம் மௌனத்திற்கு பிறகு எழுந்து நவீனைப் பார்த்து …

“ஏன் நவீ நான் கன்சீவ் ஆனதில் உங்களுக்கு சந்தோஷம் தானே?”

“இது என்ன கேள்வி மிருது?”

“ப்ளீஸ் சொல்லுங்கோ”

“ஆஃப்கோர்ஸ் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் தான். நானும் அப்பா ஆக போறேன்னு எனக்கு சந்தோஷம் இருக்காதா என்ன! இப்போ ஏன் உனக்கு சடன்னா இப்படி ஒரு டவுட்டு”

“இல்ல இன்னிக்கு நான், நீங்க, என் பேரன்ட்ஸ் எல்லாருமே அந்த செய்திக்காக எதிர்ப்பார்த்து தெரிஞ்சதும் எவ்வளவு ஹாப்பியானோம் … இவ்வளவு ஏன் அதை சொல்லும் போது டாக்டரும் கூட எவ்வளவு சந்தோஷமா சொன்னா… எல்லாருக்கும் மகிழ்ச்சி கொடுத்த விஷயம் ஏன் உங்க ஆத்துல யாருக்குமே பிடிக்கலை?”

“ஆமாம் நானும் கவனிச்சேன் ஏதோ சொல்லனுமேன்னு “சந்தோஷம்ன்னு” சொன்னா…அதுக்கு நீ ஏன் கவலை படணும்? ஏன் கண்கலங்கின?”

“அதோட நிப்பாட்டிருந்தா எனக்கும் பெரிசா சங்கடம் இருந்திருக்காது ஆனா உங்க அம்மா வெடுக்குன்னு …”

“என்ன சொன்னா ? அதை தானே அப்போலேந்து கேட்டுண்டிருக்கேன்!”

“”என்னத்துக்கு  இவ்வளவு அவசர பட்டே” ன்னு கேக்கறா!!! எனக்கு எப்படி இருந்திருக்கும் சொல்லுங்கோ. எந்த ஒரு அப்பா அம்மாவும் அவா தாத்தா பாட்டி ஆக போறான்னா சந்தோஷமா தான் ஃபீல் பண்ணுவா ஆனா இவா என்னடான்னா என்னத்துக்குன்னு கேட்கறா. உங்க ரம்யா சித்திக் கூட நாம ஃபர்ஸ்ட் டைம் போனபோது ப்ளானிங் ன்னு எல்லாம் குழந்தைய தள்ளிப் போடாதீங்கோ மாக்ஸிமம் ஒரு ஆறு மாசம் நம்மளுக்குன்னு எடுத்தா போறும்ன்னு சொன்னா தெரியுமா!! உங்க அம்மாக்கு நான் பிடிக்காத மாட்டுப்பொண்ணாவே இருந்துட்டுப் போறேன் ஆனா எப்படி அவா பேரக் குழந்தை வரப்போறத கூட என்னை அசிங்க படுத்தவே யூஸ் பண்ணறா…ச்சீ …என்னை வந்த நாள்லேருந்து என்னென்னவோ சொல்லிருக்கா … நான் எதையாவது உங்ககிட்ட வந்து சொல்லிருக்கேனா? இல்லை அவா கிட்டதான் சண்டைக்கு போனேனா? இத என்னால தாங்க முடியலை…இப்படியுமா பழிவாங்கறதுக்காக பேசுவா? நான் அப்படி என்ன தான் அவாளுக்கு செய்துட்டேன்?  எனக்கு ஆற மாட்டேங்கறது!!!” 

“அது ஒண்ணுமில்லை நான் உன்னை கல்யாணம் பண்ணிண்டது அவாளுக்கு பிடிக்கலை. அவா உன்னை வேண்டாமன்னு சொல்லியும் நான் உன்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லி அத செய்தது அவாளுக்கு கோபம். சொன்னா சொல்லிட்டுப் போறா விட்டுத்தள்ளு மிருது. நாம சந்தோஷமா இருக்கோமா அது தான் முக்கியம் புரிஞ்சுதா!!”

“அதெல்லாம் உங்களுக்குள்ள அதுல என் தப்பு என்ன சொல்லுங்கோ? நாம என்ன லவ் பண்ணியா கல்யாணம் பண்ணிண்டோம்? என் மேல ஏன் அந்த வெறுப்ப கொட்டணும்? எப்படி அப்படி ஈசியா விட்டுட சொல்லறேங்கள் நவீ ? ஏதாவது மூணா மனுஷா சொல்லிருந்தா விட்டுடலாம் ஆனா சொன்னது உங்க அம்மா …இந்த வலி என் வாழ்நாள் முழுவதும் இருக்கும் நவீ”

“புரியறது மிருது சொல்லிட்டா இப்போ அள்ளவா முடியும்?”

“அவாளால அள்ளவும் முடியாது என்னால மறக்கவும் முடியாது. அவா சொல்படி நான் அவசரப்பட்டு  வந்த என் குழந்தையைப்  பத்தி இனி நான் அவா கிட்ட எதையுமே ஷேர் பண்ணமாட்டேன். நீங்களும் என்னை சொல்ல சொல்லி வற்புறுத்தக் கூடாது. ஓகே வா?”

“அவா அப்படி பேசி அவா உரிமைய இழந்துட்டா ஸோ நான் உன்னை வற்புறுத்த மாட்டேன். நீ மொதல்ல கண்ணை தொட மிருது. அழறத நிப்பாட்டு ப்ளீஸ்”

“ஓகே ஓகே”

வெளியே குல்ஃபி வண்டி மணி ஓசை கேட்டதும் …

“உன் ஃபேவரைட் வண்டி வந்துடுத்து மிருது. என் வீட்டு பெரிய குழந்தை அழறதேன்னு குல்ஃபிகாரன் நம்ம ஆத்து வாசலேருந்து நகராம இங்கேயே நிக்கறான் பாரேன் !!! நாம வாங்காம நகர மாட்டான் போல….இரு நான் போய் ரெண்டு குல்ஃபி வாங்கிண்டு வந்துடறேன்”

“இரண்டு கேசர் குல்ஃபி குடுப்பா. நாளைலேருந்து இப்படி இங்கேயே நின்னா நாங்க வாங்குவோம்ன்னு நினைக்காதே சரியா. வேணும்னா நாங்களே வாசலில் நிப்போம்.”

“இந்தா மிருது உனக்கு பிடிச்ச கேசர் குல்ஃபி”

“என்ன குல்ஃபி குடுத்து ஐஸ்ஸா!!!” 

“அச்சசோ அதெல்லாம் ஒண்ணுமில்லைமா… ஏதோ அவன் இந்த நேரம் பார்த்து வந்தான் …சரி உனக்கும் பிடிக்குமேனுட்டு வாங்கினேன். குல்ஃபி குடுத்து குழந்தை அழறத நிப்பாட்டலாமேன்னு ஒரு நல்ல எண்ணத்தில் தான் வாங்கினேன்”

“எந்த குழந்தை அழறதாம் இங்க?”

“ம்….என் மாமியார் அம்புஜத்தின் குழந்தை மிருது பாப்பா தான் வேற யாரு?”

“ம்…ம்… அப்படியா அப்போ இந்த பாப்பா சாப்பிட்ட குல்ஃபி ஐஸ் குச்சியை பாப்பாக்கிட்டேருந்து வாங்கிண்டு போய் டஸ்ட்பின்ல போடுங்கோ பார்ப்போம்” 

“போட்டுட்டா போச்சு!! அதுக்கு பாப்பா எனக்கு ஒரு உம்மா தருமாமே”

“ஐய்யே அதை எல்லாம் உன் பொண்டாட்டி மிருதுளான்னு இருக்கா ல அவகிட்ட கேளு போ போ”

ஹா! ஹா! ஹா! ஹா! ஹா! ஹா! 

என இருவருமாக சிரித்து நடந்ததை சற்று மறந்து உறங்கினார்கள். 

செவ்வாய்க்கிழமை விடிந்ததும் வழக்கம் போல் நவீன் ஆபீஸுக்கு கிளம்பினான். அப்போது மிருதுளா..

“என்னப்பா நீங்களும் ஆபீஸுக்கு போயிட்டா வீடே வெறுச்சோடி இருக்குமே”

“நல்லாருக்கே அதுக்காக நான் லீவெடுக்க முடியுமா பெண்ணே!!! சரி நீ ஒழுங்கா சாப்பிடு. மாத்திரையை கரெக்டா போட்டுக்கோ. நான் வரட்டுமா. நீ டிவி பாரு இல்லாட்டி உன் படிப்பை கன்டின்யூ பண்ணு. கீப் யுவர் செல்ஃப் பிசி. ஓகே வா. சிரிச்ச முகத்தோட வழியனுப்பு மிருது. இந்த உம்மு மூஞ்சி உனக்கு செட் ஆகலை”

“ஈ.ஈ.ஈ.ஈ.ஈ.ஈ போறுமா”

“அம்மாடியோ இது கொஞ்சம் ஓவரா இருக்கே”

“சரி சரி பத்திரமா ஆபீஸ் போயிட்டு வாங்கோ. பை நவீ”

“பை மிருது டேக் கேர்”

நவீன் ஆபீஸ் சென்றதும் கதவை தாழிட்டு உள்ளே வந்தவளுக்கு தனது அம்மா அப்பா தம்பிகள் எல்லாரும் அமர்ந்திருப்பது போல தோன்ற சற்று கண்ணில் கண்ணீர் வடிந்தது. வேகமாக அதை துடைத்துக்கொண்டு அடுப்படிக்குள் சென்று வேலைகளை முடித்து பின் குளித்து சற்று நேரம் படித்துக்கொண்டே உறங்கிப்போனாள். சட்டென பசியால் கண்விழித்து பார்த்தாள் மணி இரண்டாகியிருந்தது. மெல்ல கட்டிலில் இருந்து இறங்கி சென்று சாப்பாடு சாப்பிட்டு பின் டிவியை போட்டாள் அதில்  திரைப்படம் ஒடிக்கொண்டிருந்தது. அப்படியே தலையணையை தரையில் போட்டு படுத்தவாறே திரைப்படத்தைப் பார்த்து முடிக்கவும் மணி நாலாகவும் சரியாக இருக்க எழுந்து முகம் கை கால் கழுவி விளக்கேற்றி வாசல் கதவைத் திறந்து வைத்து வெளிய வாசல் படியிலிருந்து  கேட் வரை நடந்துக்கொண்டே நவீனுக்காக காத்திருந்தாள். அப்போது பக்கத்து வீட்டு லதா மிருதுளாவிடம்..

“என்ன மிருதுளா ஹஸ்பன்ட்டுக்காக வெயிடிங் ஆ!!”

“ஆமாம் லதா அக்கா.”

“என்ன முகமெல்லாம் பிரகாசமா இருக்கே. எனி குட் நியூஸ் மிருதுளா?”

“ஆமாம் லதா அக்கா  நான் கன்சீவ் ஆகிருக்கேன்”

“வாவ்!! வாழ்த்துக்கள்” 

“அம்மா அம்மா என்னோட ரெக்கார்ட் புக்க பார்த்தயா நான் டியூஷன் போறதுக்கு நேரமாச்சு”

“சரி மிருதுளா நாம அப்பறம் பேசலாம் அவன டியூனுக்கு அனுப்பனும் நான் வரேன். டேக் கேர்”

“ஓகே லதா அக்கா”

“ஹேய் மிருது வாசல்ல என்ன பண்ணிட்டு இருக்க?”

“உங்கள் வரவுக்காக தான் வெயிட்டிங்”

“இரு பைக்கை நிப்பாட்டிட்டு வந்துடறேன்”

“வாங்கோ. இந்தாங்கோ காபி. இன்னைக்கு ஏன் லேட்? க்ளாஸ் வேற போகணுமில்லையா!”

“ஆமாம் மிருது இன்னைக்கு கொஞ்சம் வர்க்லோடு அதிகம் அதுதான் லேட் ஆயிடுத்து. க்ளாஸுக்கும் நேரமாகிடுத்து. எப்பவும் போல காபி சூப்பர். நான் க்ளாஸுக்கு போயிட்டு வரேன் பத்திரமா இரு. பை”

“ஓகே பை”

க்ளாஸ் முடிந்து வந்ததும் இருவருமாக இரவுணவு உண்டபின் கணக்கு பார்க்க அமர்ந்தனர்‌. ஊரிலிருந்து வந்தவர்களை வெளியே கூட்டிக்கொண்டு சென்றது, சுற்றுலா ஏற்பாடு செய்தது,  அவர்களுக்கு டிரஸ் எடுத்துக்கொடுத்தது மற்றும் அவர்களுடன் வெளியே சாப்பிட்டது என எல்லாவற்றையும் கூட்டி அவற்றை கையிருந்த பணத்திலிருந்து கழித்தால் கையில் மீண்டும் ஐநூறே மிஞ்சியது. அதுவும் அது ஜூலை மாத ஆரம்பம் தான் ஆகியிருந்தது. 

ஒரு மாதம் அவர்கள் அந்த ஐநூறில் தான் குடும்பத்தை ஓட்ட வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கையிலே மிருதுளா அடுப்படிக்குள் சென்று ஒரு ஐநூறு ரூபாய் எடுத்து வந்தாள். எங்கிருந்து வந்தது அந்த ஐநூறு என நவீன் கேட்க அது தனது அப்பாவும் அம்மாவும் ஊருக்கு செல்லும்முன் வற்புறுத்தி அவள் கையில் திணித்த பணம் என்றும் அதை அஞ்சறைப் பெட்டியினுள் போட்டு வைத்தது ஞாபகம் வந்ததென்றும் கூறி நவீனிடம் கொடுத்து …

“மளிகை ஜாமான்கள் மீதமிருக்கு மாதாமாதம் வாங்குவது போல வாங்க வேண்டியிருக்காது. காய்கறிகள் அப்பா வாங்கி ஃப்ரிட்ஜில் வைத்தது ஒரு இரண்டு வாரததுக்கு வரும்… ஆக வெளியே செல்வது சாப்பிடுவதை மட்டும் அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்தால் போறும்… என்ன சொல்லறேங்கள் நவீ”

“ஓகே நீ சொன்னா அதுக்கு அப்பீலே கிடையாது மேடம். அப்படியே ஆகட்டும். ஆனா அதுக்காக உனக்கு ஏதாவது சாப்பிடனும்னு தோணித்துன்னா காசில்லையேன்னு எல்லாம் யோசிக்காம கேட்கனும் சரியா”

“ஷுவரா கேட்கறேன்”

ஜூலை மாதத்தை மிகவும் ஜாக்கிரதையாக செலவழித்து கழிக்க முடிவெடுத்து அதுபடியே நடந்துக்கொண்டனர் இருவரும். ஆகஸ்டு மாதம் வந்தது கையில் மீதமிருந்தது முன்னூறு ரூபாய். அந்த மாதம் சம்பளம்  எல்லா பிடிப்பும் போக ஐயாயிரம் வந்தது. ஆனால் அந்த மாதம் எல்லா மளிகையும் அரிசி உற்பட வாங்க வேண்டியிருந்தது. பால், காய்கறி, பழங்கள், என எல்லா செலவுகளும் போக கையிருப்பு அதே ஆயிரம் தான். அந்த மாதம் திருமணத்திற்கு பின் முதல் முறை இருபதாம் தேதி மிருதுளாவின் பிறந்தநாள் வந்தது. அதற்கு அவளுக்கு விலைவுயர்ந்த பரிசுப் பொருள் வாங்கிக்கொடுக்க மனமிருந்தும் பணமில்லாமல் போனது நவீனுக்கு.  அன்றைய தினம் அவளை கோவிலுக்கு கூட்டிச் சென்று தலைநிறைய பூ வாங்கிக் கொடுத்து வைத்துக்கொள்ளச் செய்து வீட்டுக்கு வந்ததும் அவளுக்கென அவளுக்கு பிடித்த ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் ஒரே ஒரு பீஸ் மட்டும் வாங்கிக்கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெறிவித்தான் நவீன்….மிருதுளாவும் மகிழ்ச்சியாக அதை கட் செய்து நவீனுக்கு ஒரு பீஸ் ஊட்டிவிட்டு தானும் சாப்பிட்டாள். அதைப் பார்த்த நவீன்…

“ஏன் ஒரே ஒரு பீஸ் கேக் தான் வாங்கிருக்கேங்கள்ன்னு கேட்க மாட்டியா மிருது. ஆர் யூ அப்செட் வித் மீ”

“நாட் அட் ஆல் நவீ. நம்ம நிதி நிலவரம் தெரிந்தும் நான் எப்படி அப்படி கேட்பேன்னு நீங்க நினைக்கலாம்?  உங்க கிட்ட நிறைய பணமிருந்து எனக்கு செய்யலைன்னா கேட்டிருப்பேன். நாம ரெண்டு பேருமா தானே வரவு செலவெல்லாம் பார்த்துக்கறோம் அப்புறம் என்ன கேள்வி இது”

“சரி சாரி”

“என்னது”

“ஓகே மை சாரி வாப்பஸ் வாங்கிக்கறேன். இப்போ நாம ரெண்டு பேருமா நம்ம கேன்டீன் பக்கத்துல இருக்கற டாபாக்கு போய் டின்னர் சாப்பிடலாம் வா”

“ஆர் யூ ஷுவர் அபௌட் ஹாவிங் டின்னர் அவுட் சைட்?  நவீ!!”

“அதுக்கு வேணும்ன்னு தான் நான் கேக்கை கட் ஷாட் பண்ணிட்டேன். வா போயிட்டு வந்துடலாம்”

இருவருமாக சென்று உணவருந்தியதும் நவீன் …

“ஹேய் மிருது உங்க அப்பா அம்மாட்ட பேசணுமா”

“பேசலாம் ஆனா”

“என்ன ஆனா. வா பேசிட்டே போகலாம். மீட்டர்ல ஒரு கண்ணு வச்சுக்கோ எழுபத்தி அஞ்சு ரூபாய் வரைக்கும் நோ ப்ராப்ளம்”

“எனக்கே வா…ஓகே ஓகே நான் பார்த்துக்கறேன்.”

என கூறி அந்த கண்ணாடி ரூமிற்குள் சென்று பேசலானாள். சரியா ஐம்பது ரூபாயை எட்டியதும் பை சொல்லி ஃபோனை கட் செய்து வெளியே வந்து…

“உங்களை விசாரிச்சதா சொல்ல சொன்னா”

“இன்னும் இருபத்தி அஞ்சு ரூபாய்க்கு பேசிருக்கலாமே ஏன் அவசரம் அவசரமா கட் பண்ணிட்ட?”

“என்னத்த அதே தான் …பத்திரமா இரு, ஒழுங்கா சாப்பிடு, உடம்பை பார்த்துக்கோ இப்போ நீ தனி ஆள்ளில்லை இரண்டு பேருக்கு சாப்பிடனும்ன்னு சொன்னா எல்லாரும் நல்லாயிருக்காலாம் நாமும் நல்லா இருக்கோம்ன்னு சொன்னேன் அவ்வளவு தான் மீதி நேர்ல பார்க்கும் போது பேசிக்க வேண்டியது தான்”

“ஓ ஓகே தென் வீட்டுக்கு போகலாமா?”

“எஸ் போகலாம்”

அன்றிரவு தூக்கத்தில் மிருதுளா எழுந்து நவீனிடம் சாதமும் அவியலும் வேணுமென்று சொல்ல நவீன் செய்வதறியாது மறுநாள் விடிந்ததும் செய்து தருவதாக சொல்லி தண்ணீர் குடிக்க வைத்து அவளை தூங்க வைத்தான். 

மறுநாள் காலை எழுந்து காபி குடித்ததும் வாந்தி எடுத்தாள் மிருதுளா. அதைப் பார்த்ததும் என்ன ஆச்சோ ஏதாச்சோ என்று பயந்துப் போனான் நவீன் அப்போது டாக்டர் சொன்னது அவனுக்கு ஞாபகம் வந்தது உடனே அவள் நெற்றியை பிடித்துக் கொண்டான். இதே போல் காலை காபி குடித்ததும், குக்கர் திறந்ததும் என ஒவ்வொரு முறையும் வாந்தி எடுத்து எடுத்து எதுவும் சரியாக சாப்பிடாமலானாள் மிருதுளா. மகப்பேறு காலத்தின் ஆரம்ப கால பிரச்சனைகளைப் பார்த்த நவீன் அதை தனது ரம்யா சித்தியிடம் கூற அவரும் மிருதுளாவிற்கு பிடித்த இனிப்பு பலகாரம் எது என்று நவீனிடம் கேட்டு அதேபோல தெறட்டிப்பால் செய்து எடுத்துக் கொண்டு மிருதுளாவை பார்க்க வந்தார். 

“ஹை ரம்யா சித்தி வாங்கோ வாங்கோ. எவ்வளவு நாளாச்சு உங்கள பார்த்து”

“ஹேய் மிருதுளா வாழ்த்துக்கள். அம்மா ஆக போற. நவீன் நேத்து ஃபோன் பண்ணிருந்தான். ஆமாம் நீ சரியாவே சாப்பிடறதில்லையாம். என்ன யாம்…பார்த்தாலே தெரியறதே..ஆளு பாதியாகிருக்க. இங்க பாரு மிருது வாந்தி எல்லாம் அப்படி தான் வரும் அதுக்காக சாப்பிடாம இருக்கக் கூடாது புரியறதா. நீ இப்படி இருந்தா பாவம் நவீனுக்கு எவ்வளவு கஷ்டம்…புரிஞச்சுக்கோமா”

“ஓகே சித்தி டிரை பண்ணறேன். காபி யா டீ யா எது போடட்டும்”

“ஒண்ணும் வேண்டாம் இதோ இந்த ஐஸ் வாட்டர் போறும். நான் கிளம்பறேன் என் பொண்ணுகளும், சித்தப்பாவும் வீட்டுக்கு வர்ற நேரமாச்சு மா. நான் வரட்டுமா. நவீன்ட்ட சொல்லு. இன்னொரு நாள் நாங்க எல்லோருமா வர்றோம். பை”

நவீன் தனது மாமியாரிடமும் மிருதுளா படும் பாட்டை ஃபோன் போட்டு சொல்ல அம்புஜத்திற்கு இருப்பு கொள்ளாமல் தனது கணவன் மற்றும் மகனிடம் ….தான் குஜராத் சென்று மிருதுளாவை ஒரு மாசம் பார்த்துக்கொண்டு அவளுக்கு வேண்டியதை செய்து கொடுத்துவிட்டு வருவதாகவும் அந்த ஒரு மாதம் கணவரும் மகனும் அட்ஜஸ்ட் செய்யுது கொள்ளமுடியுமா என்றும் கேட்டாள்.  அதற்கு வேனு..

“அம்மா நாங்க ரெண்டு பேரும் இருந்துப்போம் நீ போய் மிருதுக்காவுக்கு என்ன வேணுமோ செய்து கொடும்மா நாங்க எங்களைப் பார்த்துக்கறோம் என்னப்பா உனக்கும் ஓகே தானே?”

“எனக்கும் ஓகே தான். ஆனா அடுத்த மாசம் என்ன பண்ணுவா”

“இந்த மாசம் தான் வாந்தி எல்லாம் ரொம்ப இருக்கும் அடுத்த மாசத்துக்கு அடுத்த மாசம் தீபாவளிக்கு இங்க வந்துடுவாளே.”

“ஓ சரி சரி அப்போ எப்போ டிக்கெட் புக் பண்ணணும்?”

“வர்ற சனிக்கிழமை கிளம்பட்டுமா”

“சரி அப்போ சனிக்கிழமைக்கே புக் பண்ணிடுறேன். நாளைக்கு மாப்ளைக்கும் ஃபோன் போட்டு சொல்லிடறேன். நீ சம்மந்திட்ட சொல்லிடு”

“சரி அப்படியே செய்துடறேன். டேய் வேனு பத்திரமா இருடா. அவனுக்கு வேளா வேளைக்கு ஒழுங்கா சாப்பாடு கொடுங்கோ”

“அம்மா அதெல்லாம் நானும் அப்பாவும் பார்த்துக்கறோம். நீ நிம்மதி யா போய் அக்காவ பார்த்துக்கோ”

மறுநாள் காலை ராமானுஜம் நவீனின் ஆபீஸுக்கு ஃபோன் போட்டு உதவிக்கு அம்புஜம் புறப்பட்டு வருவதாக கூற அதற்கு நவீன் தனது நன்றியை தெரிவித்தான். அம்புஜம் பர்வததிற்கு ஃபோன் போட்டு தான் மீண்டும் குஜராத் செல்லவிருப்பதை கூற அதற்கு பர்வதம் ..

“இன்னும் ரெண்டே மாசம் கழிச்சா அவாளே வர்றப் போறா அப்புறம் என்னத்துக்கு இப்போ போறேங்கள்?”

“இல்ல மாமி மிருதுக்கு வாந்தி, தல சுத்தல் எல்லாம் ஜாஸ்த்தியா இருக்காம். சரியா சாப்ட மாட்டேங்கறாளாம். மாப்ளைக்கும் லீவு போட முடியலையாம். இந்த ஒரு மாசம் மட்டும் போய் பார்த்துண்டுட்டு வந்திடலாம்ன்னு இருக்கேன். பாவம் கொழந்தை எவ்வளவு கஷ்டப்படறாளோ.”

“அப்படி எதுவும் எங்ககிட்ட அவன் சொல்லலையே….சரி சரி நீங்க குஜராத் போயிட்டா அப்போ உங்காத்து மாமாவையும் வேனுவையும் யார் பார்த்துப்பா?”

“அவா ரெண்டு பேரையும்..அவாளே பார்த்துப்பா. ஒரு மாசம் தானே. நான் மிருது படற கஷ்டத்தை சொன்னதும் ரெண்டு பேருமே மொதல்ல போய் அவளப் பார்த்துக்கோன்னு தான் சொன்னா”

“ஓ அப்படியா. சரி எப்போ கி‌ளம்பறேங்கள்”

“வர்ற சனிக்கிழமை நைட். அதுதான் உங்ககிட்டயும் ஒரு வார்த்த சொல்லிடலாம்ன்னு ஃபோன் பண்ணினேன் மாமி. மாமா கிட்டயும் சொல்லிடுங்கோ.”

“சரி சரி போயிட்டு வாங்கோ உங்க பொண்ணாத்துக்கு. நான் ஃபோனை வச்சுடவா”

“சரி மாமி. உங்க புள்ளட்ட இல்ல மிருதுட்ட ஏதாவது சொல்லணுமா….”

என்று அம்புஜம் கேட்டதுக்கு பதில் ஏதும் கூறாமல் ஃபோனை கட் செய்தாள் பர்வதம். அதிலிருந்தே அம்புஜத்திற்கு புரிந்தது அவர்களுக்கு பிடிக்கவில்லை என்பது. ஆனால் அதை எல்லாம் பார்த்தால் தன் மகள் தான் கஷ்டப்படுவாள் என்று மனதில் எண்ணிக்கொண்டு ஃபோனை வைத்து விட்டு ஊருக்கு கிளம்ப தயார் ஆனாள். 

அன்று மாலை நவீன் ஆபீஸிலிருந்து வந்ததும் 

“மிருது….நீ சந்தோஷப் படறா மாதிரி ஒரு நியூஸ் கொண்டு வந்திருக்கேன்”

“என்னது நவீ?”

“வர்ற திங்கட்கிழமை காலை ல உன்ன பார்த்துக்க… உனக்கு பிடிச்சதெல்லாம் செய்து தர …ம்…ம்…நீ கேட்ட அவியல் செய்து தர உன் அம்மா இங்கே வரப் போறா”

“ஹேய் என்னப்பா சொல்லறேங்கள் நிஜமாவா!!”

“ஆமாம் இன்னைக்கு காலை ல உன் அப்பா ஃபோன் பண்ணிச் சொன்னார்”

“அப்போ அப்பாவையும் வேனுவையும் யார் பார்த்துப்பா? அம்மா இங்க வந்துட்டான்னா?”

“அவா ரெண்டு பேருமே அவாள பார்த்துக்கறோம்ன்னு சொல்லி உங்க அம்மாவை உனக்காக அனுப்பி வைக்கறா. தே ஆர் கிரேட்”

“ஒரு பக்கம் அம்மா வராளேன்னு சந்தோஷமா இருந்தாலும் …. அப்பாவையும் வேனுவையும் நினைச்சா பாவமாயிருக்கு”

“லெட்ஸ் வெயிட் ஃபார் மன்டே”

சனிக்கிழமை வந்தது அம்புஜத்தை ரெயிலில் ஏற்றி விட்டனர் ராமானுஜமும் வேனுவும். அதுவரை தனியாக எந்த வெளி மாநிலத்துக்கும் (வெளியூருக்கு கூட) பிரயாணம் செய்திராத அம்புஜம் ஏதோ பெண்ணை பார்க்க வேண்டும் அவளுக்கு பிடித்ததை எல்லாம் செய்துக் கொடுத்து அவளை தேற்ற வேண்டுமென்ற ஆசையில் ரெயில் ஏறிவிட்டாள். ரெயிலும் புறப்பட்டது. 

தொடரும்….

காலை சூரியனின் கதிர்களில் ஒன்று மிருதுளாவின் இமைகளை தட்டி திறந்து கண்களால் தன்னைப் பார்க்கும் படி மிகவும் தொந்தரவு செய்ய அவளும் அதிலிருந்து நகர்ந்து படுத்தும்போர்வையை கொண்டு முகத்தை மூடியும் உறக்கத்தை தொடர நினைத்து கடைசியில் சூரியக்கதிரிடம் தோற்றுப்போய் விழித்து கடிகாரத்தைப் பார்த்தாள். மணி எட்டு காட்டியது. விரைந்து எழுந்தாள். கட்டிலின் எதிரில் தரையில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த நவீனிடம்….

குட் மார்னிங் நவீ. என்னப்பா என்னை எழுப்பிருக்கலாம் இல்லையா!! மணி எட்டாச்சே

ஸோ வாட்? நீ நல்லா தூங்கிண்டிருந்த அதனால எழுப்பலை…இப்போ அப்படி சீக்கிரம் எழுந்து என்ன பண்ணணும் உனக்கு?”

இல்ல இவ்வளவு நேரம் தூங்கிட்டேனேன்னு இருக்கு

இட்ஸ் ஓகே மிருது. நீ போய் ப்ரஷ் பண்ணிட்டு வா காபி போட்டுத் தர்றேன்.

நீங்க குடிச்சாச்சா?”

ஓ! குடிச்சிட்டேன்

ப்ரஷ் செய்து முகம் கழுவி விட்டு டவலில் முகத்தைத் துடைத்துக் கொண்டே …

நவீ நீங்க எப்போ எழுந்துண்டேங்கள்?”

நான் ஒரு ஏழு மணிக்கு எழுந்து கொஞ்ச நேரம் சும்மா படுத்துண்டே இருந்துட்டு அப்பறம் ஏழரைக்கு கட்டிலை விட்டு இறங்கி ஃப்ரெஷ் ஆகி காபி போட்டு குடிச்சிட்டு நியூஸ் பேப்பர் படிக்க உட்கார்ந்தேன் நீ எழுந்துண்ட்ட. சரி சரி இந்தா என் காபி குடிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லு

என்னமோ ஃபர்ஸ்ட் டைம் போடறா மாதிரி கேட்கறேங்கள்!

ஒவ்வொரு தடவையும் கேட்டா என்ன தப்பு. ஏன் நீ சொல்ல மாட்டியா?”

ஓகே ஓகே!!! இருங்கோ குடிச்சுட்டு சொல்லறேன்

அப்படி வா வழிக்கு

சூப்பரா இருக்கு நவீ. தாங்க்ஸ்….ஊப்ஸ் தாங்க்ஸ் வாப்பஸ் வாங்கிக்கறேன்

சரி இன்னைக்கு நாம வெளில போகலாமா?”

எங்க போகணும். எனக்கு என்னவோ ரொம்ப சோம்பலா இருக்கு. இன்னைக்கு வேண்டாமே. சாயந்தரமா ஒரு வாக் போகலாம் என்ன சொல்லறேங்கள்?”

டன். காலை ல டிஃபன் என்ன?”

என் அம்மா இருந்திருந்தா இந்த நேரம் ப்ரேக் ஃபாஸ்ட் ரெடி ஆகிருக்கும்…ம்..‌என்ன பண்ண!! மாவு இருக்கு தோசை சுடவா? கொத்தமல்லி சட்னி ஃப்ரிட்ஜில் இருக்கு. அத தொட்டுண்டு சாப்பிடலாம்.

நான் சுட்டுத் தரட்டுமா தோசையை?”

நீங்க இதுக்கு முன்னாடி தோசை சுட்டுருக்கேங்களா?”

இல்லை

அப்போ ஏன் விஷப் பரீட்சை. எனக்கு பசி வேற அதனால நானே ரெண்டு பேருக்கும் தோசையை வார்த்து எடுத்துண்டு வரேன் அதுவரை நீங்க உங்க நியூஸ் பேப்பரை படிங்கோ..

மிருதுளா தோசையை வார்த்து தட்டிலிட்டு நவீனிடம் கொடுத்தாள். அவனும் செய்தித்தாள் படித்தவாறே தோசையை உண்டான். நான்கு சாப்பிட்டதும் போதும் என எழுந்து தட்டை அடுப்படியில் பாத்திரங்கள் கழுவும் தொட்டியில் போட போனபோது மிருதுளா அவனிடமிருந்து தட்டைவாங்கி அதில் அவளுக்கான மூன்று தோசையை சுட்டு போட்டுக் கொண்டு வந்து ஹாலில் அமர்ந்து சாப்பிடும் போது நவீன் அவளிடம்…

ஏய் மிருது தட்டை அலம்பி தந்திருப்பேன் ல.

ஏன் நீங்க சாப்ட்ட தட்டை அலம்பாம சாப்ட்டா என்ன ஆயிடுமாம்? அட போங்கோப்பா எனக்கு பாத்திரம் கழுவுவதில் ஒரு தட்டு குறையுமோ இல்லையோ அதுக்குத்தான்.

ஓகே

ஆமாம் தலையில ஏன் துண்டால முண்டாசு கட்டிருக்கேங்கள்? எழுந்ததும் பார்த்தேன் அப்பவே கேட்கனும்ன்னு நினைச்சேன் மறந்துட்டேன்

அது வந்து மிருது

ஏன் இழுக்கறேங்கள். என்ட்ட சொல்ல என்ன தயக்கம் உங்களுக்கு? சொல்லுங்கோ

நான் ஹேர் டிரான்ஸ்ப்ளான்ட் பண்ணிருக்கேன்னு உன்னை பொண் பார்க்க வந்த போதே சொன்னேன் இல்லையா?”

ஆமாம் ஆமாம் யூ நோ ஒன் திங் நவீ. நான் சொல்ல மறந்தே போயிட்டேன். ஒரு ஜோக்.

என்ன சொல்லற மிருது

என் அம்மா என்ட்ட உங்க ஹேர் பத்தி கேட்டா. அவாளுக்கு என்னன்னு புரியாததால் அது என்னமோ பிரச்சினைன்னு நினைச்சுண்டு அதால எந்த பாதிப்பும் இல்லையேன்னு என்ட்ட கேட்டா பாருங்கோ!!! என்னால சிரிப்ப அடக்கிக்கவே முடியலை. அப்பறம் சொல்லிப் புரிய வைத்தேன்…சரி அதுக்கும் இந்த முண்டாசுக்கும் என்ன சம்மந்தம்

நான் அதை ரிமூவ் பண்ணி க்ளீன் பண்ணி வச்சிருக்கேன் அதனால தான் துண்டை முண்டாசு மாதிரி கட்டிண்டிருக்கேன்

ஓகே அதை என்ட்ட ஏன் மறைக்கணும்? தலையிலிருந்து அந்த துண்டை கழட்டுங்கோ நான் பார்க்கட்டும்.

மெல்ல மனதில் ஒரு வகையான தாழ்வு மனப்பான்மையோடு துண்டை எடுத்தான் நவீன். உச்சந்தலையில் முடியில்லாத நவீனை அன்று தான் பார்த்தாள் மிருதுளா. அவளுக்கு நவீனின் தயக்கம் எதனால் என்பது புரிந்தது. முதலில் அவனிடமிருந்து அந்த எண்ணத்தை துடைத்தெறிய முடிவெடுத்து எதுமே வித்தியாசமாக தெரியாதது போல …

இதுக்கு ஏன் பா துண்டெல்லாம் கட்டிண்டு. என்ன கேட்டா இனி அந்த ஆர்ட்டிபிஷியல் ஹேர் எல்லாம் வேண்டாம். இப்படியே இருங்கோ. நீங்க இப்படி இருக்கறதால எனக்கு எந்த விதத்திலும் சங்கடமோ, பிரச்சினையோ துளி கூட கிடையாது. நீங்க எதையும் மறைக்காம என்கிட்ட இந்த விஷயத்தை சொல்லி என் விருப்பத்தை கேட்ட உங்களோட நேர்மைக்கு  தான் உங்களை கல்யாணம் பண்ணிண்டேன். ஸோ இனி இது தேவையில்லை சரியா! எதுவாக இருந்தாலும் நான் இருக்கேன் உங்களோட.

எனக்கு தெரியும் ஆனாலும்…..

என்னதுக்கு ஆனாலும் எல்லாம்..இந்த டிரான்ஸ்ப்ளான்ட்டை எப்போ பண்ணிண்டேங்கள்?”

உன்ன பொண் பார்க்க வர்றத்துக்கு ஒரு ஆறு மாசம் முன்னாடி தான் பண்ணிண்டேன்

அப்புறமென்ன எனக்கே ப்ராப்ளம் இல்லங்கும் போது வேற யாருக்காக யோசிக்கறேங்கள்?”

இல்ல மிருது உனக்காக தான் யோசிச்சேன் இப்ப நீயே வேண்டாம்னு சொன்னதுக்கு அப்புறம் இனி இது எனக்கும் தேவையில்லை. லவ் யூ மிருது

ஐ லவ் யூ டூ நவீ

அன்று நவீனின் தாழ்வு மனப்பான்மை உடைந்து சில்லு சில்லாக சிதறிப் போனது. அதுவரை தன் மனைவி என்ன நினைப்பாள், எப்படி எடுத்துக்கொள்வாள் என்றெல்லாம் நான்கு மாதங்களாக அவன் மனதை அறுத்துக் கொண்டிருந்த விஷயத்தை மிருதுளா சட்டென சர்வசாதாரணமாக துடைத்தெறிந்தது நவீனுக்கு சற்று வியப்பாக இருந்தாலும் அவன் மனதில் மிருதுளா கோபுரமாக உயர்ந்து நின்றாள். 

தனது வாழ்க்கைத் துணையாக இருப்பவர் /ள் என்ன நினைப்பார்களோ? இதை சொன்னால் என்ன செய்வார்களோ? எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்றெல்லாம் தனக்குத்தானே எண்ணிக் கொண்டு பலர் பல விஷயங்களை மனம் விட்டு பேசாமலே இருப்பதற்கு ஒன்று அவரவர் அடுத்தவர் மீதுள்ள அச்சம் காரணமாக இருக்கும் மற்றொன்று அந்த கூடயிருப்பவர்களும் ஒரு காரணம் ஆவர். கூடயிருப்பவர் தங்களின் துணைக்கு நம்பிக்கைக் கொடுக்க வேண்டும். எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொள்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும். அந்த சூழலும் நம்பிக்கையும் இவர்களுக்குள் உருவாக நான்கு மாதங்கள் எடுத்துள்ளது. 

கணவன் மனைவி அவர்களுக்குள் ஒரு விஷயம் ஒத்துப் போய் ஒரு முடிவெடுத்து ஒன்றை செய்தாலும் சுற்றிலுமிருப்பவர்கள் சும்மா இருப்பார்களா!!! 

அன்று மாலை இருவருமாக பேசிக்கொண்டே வாக்கிங் சென்றனர். மிருதுளா நவீனிடம்…

நேத்து நாம ரெயில்வே ஸ்டேஷன்ல இருந்து திரும்பியதும் அப்பா அம்மாட்ட ஃபோன்ல பேசினேங்களே அவாள்ட்ட சொன்னேங்களா பசங்களையும் என் அப்பா அம்மாவையும் ரெயில் ஏத்தி விட்டாச்சுன்னு? நான் அதப்பத்தி கேட்கவே மறந்துட்டேன் இப்போ இந்த ஃபோன் பூத் பார்த்ததும் தான் ஞாபகம் வந்தது. என்ன சொன்னா அவா?”

ஒண்ணும் சொல்லலை. சரின்னு சொன்னா அவ்வளவு தான்

என்ன பத்தி ஒண்ணும் கேட்கலையா?”

அப்பா மட்டும் கேட்டா. அதுக்கு நல்லா இருக்கன்னு சொன்னேன். வேற ஒண்ணும் நானும் சொல்லலை அவாளும் கேட்கலை

என்று பேசிக்கொண்டே நடக்கையில் வழியில் எதிரே நவீனின் நண்பன் சதீஷ் நவீனைப் பார்த்து…

ஹேய் நவீன் என்ன மறுபடியும் பழைய ஹேர் ஸ்டைலுக்கு போயிட்ட?”

எனக்கு இந்த நவீனை தான் பிடிச்சிருக்குன்னு நான் சொன்னதும் என் நவீன் அவரை மாத்திக்கிட்டார். ஒல்ட் ஈஸ் கோல்டு இல்லையா  சதீஷ்

வாவ் சூப்பர் மிருதுளா. சாரி மா நான் வழக்கம் போல அவனை கலாய்ச்சிட்டேன்.

அதனால என்ன சதீஷ். நீங்க அவரோட நண்பர் உங்களுக்கில்லாத உரிமையா. ஆனா அது உங்களுக்குள்ள மட்டும் இருந்தா நல்லாயிருக்கும் அவ்வளவு தான்.

டேய் நவீன் யூ ஆர் லக்கி டா.  சரி அம்மா அப்பா தம்பிங்க எல்லாரும் ஊருக்கு போயாச்சா?”

நேத்து தான் ரெயில் ஏத்தி விட்டோம் சதீஷ். நாளைக்கு காலை ல ஊர் ல ரீச் ஆவாங்க. உன் சொந்தக்காரங்க எல்லாரும் எப்போ ஊருக்கு கிளம்பறாங்க?”

எல்லாரும் அடுத்த வெள்ளிகிழமை கிளம்பறாங்க நவீன். சரி என் வைஃப் சில மளிகை சாமான்கள் வாங்கிட்டு வர சொன்னா நான் பாட்டுக்கு உங்க கூட அரட்டை அடிச்சுக்கிட்டு இருக்கேன். ஓகே நீங்க என்ஜாய் பண்ணுங்க நான் கிளம்பறேன் பா. பை நவீன் அன்ட் மிருதுளா

பை டா சதீஷ்

பை சதீஷ்

மீண்டும் நடையை தொடர்ந்த போது நவீன் மிருதுளாவின் வலதுகையை தனது இடது கையால் கோர்துப் பிடித்துக் கொண்டான். மிருதுளாவும் நவீனின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு நடந்தாள். அன்றிரவு மன அமைதி, நிறைவு இருவருக்குள்ளும் நிறைந்திருந்தது. 

திங்கட்கிழமை காலை விடிந்ததும் எழுந்து குளித்து, டிஃபன் சாப்பிட்டு ஹாஸ்பிடல் சென்று வர  தயார் ஆனார்கள் நவீனும் மிருதுளாவும் ஆனால் மணியோ எட்டு தான் ஆகியிருந்தது. ஆனாலும் இருவரும் கிளம்பி ஹால்பிடலுக்கு எட்டரை மணிக்கெல்லாம் சென்றனர். டாக்டர் ஒன்பதரை மணிக்கு தான் வருவார்கள் என தெரிய வர சற்று மனம் தளர்ந்து போனாள் மிருதுளா. அவளின் முகம் வாடியதைக் கண்ட நவீன்…

மிருது இன்னும் ஒரு ஃபார்டிஃபைவ் மினிட்ஸ் தானே டோன்ட் வரி.

என கூறிக்கொண்டிருக்கையில் டாக்டர் ரூமிலிருந்து மிருதுளா நவீன் என்று நர்ஸ் கூப்பிட உடனே எழுந்து உள்ளே சென்றனர். 

நீங்க தான் மிருதுளா வா?”

ஆமாம் சிஸ்டர். டாக்டர் வந்தாச்சா?”

இல்லை மா இன்னும் ஒரு ஹாஃபனார் ல வந்திடு வாங்க. அவங்க வர்றத்துக்குள்ள நீங்க போய் இந்த டெஸ்டெல்லாம் குடுத்துட்டு வாங்க. டாக்டர் நேத்தே உங்களுக்கு இதெல்லாம் எழுதி வச்சிட்டாங்க.

ஓ அப்படியா. சரி சிஸ்டர் இதெல்லாம் குடுக்க எங்க போகணும்?”

இப்படியே நேரா போயிட்டு ரைட் எடுங்க அங்க லேப் எல்லாம் இருக்கு அங்க சொல்லுவாங்க

ஓகே சிஸ்டர் தாங்க்யூ

மிருதுளா நர்ஸ் சொன்ன மாதிரியே டாக்டர் எழதிக் கொடுத்த எல்லா டெஸ்டும் கொடுத்துவிட்டு வந்தமர்ந்தாள். அப்போது நவீன்…

எல்லாம் ஆச்சா மிருது?”

எஸ் நவீ ஆல் டன்

ஓகே குட். டீ குடிக்கறயா?”

வேண்டாம் பா.

டாக்டர் வந்தார். மிருதுளா டாக்டரைப் பார்த்து புன்னகைத்தாள். டாக்டரும் தலையசைத்து விட்டு அவர் ரூமுக்குள் சென்றார். மிருதுளாவிற்கு பின் வந்தவர்களை நர்ஸ் ஒவ்வொருவராக அழைக்க நவீனுக்கு சற்று நிதானம் இழந்து  நர்ஸிடம் கேட்டான்…

என்ன சிஸ்டர் இப்ப வந்தவங்களை எல்லாம் உள்ளே அனுப்பறீங்க. நாங்க இங்க கிட்ட தட்ட மூணு மணி நேரமா உட்கார்ந்துட்டிருக்கோம் என் மனைவியை கூப்பிடவே மாட்டேங்கறீங்க

சார் உங்க மனைவி ரிப்போர்ட்ஸ் காக வெயிட் பண்ணறோம்

என்று நர்ஸ் சொல்லிக்கொண்டிருக்கையிலே கம்பௌண்டர் வந்து ஒரு கவரை நர்ஸிடம் நீட்டினார். அதைப் பார்த்ததும் நர்ஸ் நவீனிடம்..

இதோ ரிப்போர்ட்ஸ் வந்தாச்சு ஒரு ஃபைவ் மினிட்ஸ் இருங்க. உள்ள இருக்குற பேஷன்ட் போனதும் உங்க மனைவியை கூப்பிடுவாங்க

அதே போல மிருதுளா பெயரை கூப்பிட இருவரும் டாக்டர் ரூமிற்குள் சென்று அமர்ந்து டாக்டரைப் பார்த்துக் கேட்க நவீன் முயற்சிக்கும் போது டாக்டர் உடனே..

வாழ்த்துக்கள் நவீன் அன்ட் மிருதுளா இட்ஸ் கன்பார்ம்டு. உங்க இருவருக்கும் பெற்றோர் பிரமோஷன் கிடைத்திருக்கிறது.

தாங்க்ஸ் டாக்டர்”  என நவீனும் மிருதுளாவும் ஒருமித்து சொன்னார்கள்.

எல்லா ரிப்போர்ட்ஸையும் பார்த்தேன். எவ்ரிதிங் ஈஸ் ஃபைன். சில வைட்டமின் டாப்லெட்ஸ் எழுதறேன் அதை மட்டும் எடுத்துக்கோங்க மிருதுளா. நல்லா சத்தான ஆகாரம் சாப்பிடனும் சரியா. டேக் கேர் ஆஃப் ஹெர் நவீன். இனி நீங்க எப்பப்போ செக்கப் வரணும்ங்கறத நர்ஸ் ஒரு அட்டவணை ல எழுதிக் கொடுப்பாங்க அந்த டேட்ஸ் ல தவறாம செக்கப்புக்கு வந்திடணும் சரியா. பி ஹாப்பி ஆல்வேஸ்

மீண்டும் நன்றியை தெரிவித்து நர்ஸிடம் டாக்டர் சொன்ன அட்டவணையை வாங்கிக் கொண்டு ஹாஸ்பிடல் விட்டு வெளியே வந்ததும் நவீன் மிருதுளாவை சற்று நேரம் வண்டிப் பக்கத்தில் நிற்க சொல்லிவிட்டு கடைக்குச் சென்று வந்தான். பின் இருவருமாக வீட்டிற்கு வந்தனர். வீட்டினுள் நுழைந்ததும் நவீன் மிருதுளாவைப் பார்த்து…

மிருது வீ ஆர் கோயிங் டு பி பேரன்ட்ஸ் சூன். இந்தா உனக்கு ரொம்ப பிடிச்ச காட்பெரிஸ் டையரிமில்க் சாக்லெட்.

ஓ ஸோ சுவீட் ஆஃப் யூ நவீ. ஆமாம் எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் அம்மாகிட்ட சொல்லனும் போல இருக்கு.

ஆனா அவா ஆத்துக்கு போய் சேர இன்னும் அரைமணி நேரமாகுமே. யூ டோன்ட் வரி இன்னைக்கு நான் ஆபீஸ் போகலை. ஒரு மணி நேரம் கழிச்சு ஃபோன் பூத் போய் எல்லாருக்கும் சொல்லலாம் ஓகே

ஓகே. சரி எனக்கு காலை ல இருந்து ஒரு மாதிரி டென்ஷன் ஆனது ரொம்ப அசதியாயிருக்கு நான் கொஞ்ச நேரம் தூங்கட்டுமா?”

இது என்ன கேள்வி மிருது? தூக்கம் வர்றதுன்னா தூங்கு. நான் சமையலை பார்த்துக்கறேன்

இல்லை ஒரு மணி நேரத்துல எழுப்பிடுங்கோ போய் ஃபோன் பண்ணி சொல்லிட்டு வரலாம்

ஓகே ஓகே இப்போ நிம்மதியா சந்தோஷமா தூங்கு

மிருதுளா நன்றாக உறங்கினாள். ஒரு மணி நேரமானதும் நவீன் அவளை எழுப்ப முயன்ற போது அவனுக்கு மனம் வரவில்லை சாதாரண நாட்களிலேயே அவளை தொந்தரவின்றி தூங்க விடும் நவீன் அன்று அவளா எழுந்திரிக்கும் போது எல்லாருக்கும் சொன்னால் போதும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் ஏனெனில் அவள் மட்டுமா உறங்குகிறாள் அவளுள் அவன் பிள்ளையும் அல்லவா உறங்குகிறது. அவளை எழுப்பினால் இருவரும் எழுந்திடுவார்களே என எண்ணி அவனும் அவளருகே படுத்துறங்கிப் போனான். நவீன் உறங்கின சில மணி நேரத்தில் மிருதுளா எழுந்தாள். 

பக்கத்தில் நவீன் உறங்குவதைப் பார்த்தாள். கடிகாரத்தையும் பார்த்தாள். மணி இரண்டாகியிருந்தது. டைமை பார்த்ததும் அவளுக்கு பசி எடுக்க நவீன் ஏதாவது சமைத்து வைத்திருக்கிறானா என்று பார்க்க மெல்ல கட்டிலிலிருந்து இறங்கும் போது நவீன் விழித்துக் கொண்டான். 

மிருது எங்க போற?”

மணி என்ன ஆச்சு தெரியுமா? ரெண்டு ஆச்சு. எனக்கு பசிக்கறது.

ஊப்ஸ்…. நானும் உன் கிட்ட படுத்துண்டு இவ்வளவு நேரம் தூங்கிட்டேன். நான் போய் டாபாலேந்து சாப்பாடு வாங்கிண்டு ஒரு பத்தே நிமிஷத்துல வந்துடறேன் இரு.

என்று கூறிக்கொண்டே கிளம்பி சென்றான் நவீன். அவன் சொன்னது போலவே பத்தே நிமிடத்தில் வராவிட்டாலும் சிறிது நேரத்தில் வந்தான். அவன் வருவதற்குள் மிருதுளா இரண்டு தட்டு, குடிக்க தண்ணீர், கரண்டிகள் என எல்லாவற்றையும் ஹாலில் எடுத்து வைத்திருந்தாள். சாப்பாட்டை வாங்கி வந்ததும் இருவரும் சாப்பிட்டார்கள். மிருதுளா பசி அடங்கியப் பின் நவீனிடம்…

நான் ஒரு மணி நேரத்துல எழுப்பச் சொன்னா நீங்களும் என் கூட நல்லா தூங்கிருக்கேங்கள். சரி வாங்கோ இப்ப போய் சொல்லிட்டு வருவோம்

இப்பவா வேண்டாம் மிருது. வெளில வெயில் கொளுத்தறது. சாயந்தரமா வாக் போவோமில்லையா அப்போ போய் சொல்லலாம் சரியா

ஓகே ஓகே!! உங்களுக்கு பொண்ணு வேணுமா இல்லை பையன் வேணுமா?”

உனக்கு என்ன குழந்தை வேணும் மிருது? எனக்கு பொண்ணு தான் வேணும்.

எனக்கும் பொண்ணு தான் வேணும் நவீ. உங்களுக்கு ஏன் பொண்ணு வேணும்னு சொல்லறேங்கள்

ஆமாம் எங்காத்துல எல்லாம் பசங்க தான் அதுனால நமக்கு பொண்ணு பொறக்கட்டுமேன்னு  ஒரு ஆசை. சரி உனக்கு ஏன் பொண்ணு வேணும்

ஏன்னா பொண்ணுகளுக்கு தான் அழகழகான டிரஸ் போட்டுப் பார்க்க முடியும் பசங்களுக்கு என்ன இருக்கு சொல்லுங்கோ

அடிப் பாவி டிரஸ் போட்டுப் பார்க்க பொண்ணு வேணுமா உனக்கு

ஆமாம். இதில எனக்கொன்னும் தப்பாவே தெரியலையே.

தப்புன்னு யார் சொன்னா? உன்னோட காரணம் கேட்க வேடிக்கையா இருக்கு

இப்படியே குழந்தைப் பற்றி பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியாமல் போனது இருவருக்கும். மாலை நேரமானதும் வழக்கம் போல காபி குடித்து, முகம் கை கால் கழுவி விட்டு சாமிக்கு விளக்கேற்றி கும்பிட்டு சற்று நேரம் வாசல் கதவை திறந்து வைத்து உட்கார்ந்தனர். மணி ஆறரை ஆனதும் மிருதுளா…

நவீன் ஃபோன் பண்ண போகலாமா ?”

ஓ போகலாமே.

ஃபோன் பூத்தை நெருங்கியதும் யார் இதை சொல்வது என்ற பேச்சு வார்த்தை வந்தது. அப்போது மிருதுளா…

நான் என் பேரன்ட்ஸ்ட்ட சொல்லிட்டு உங்க கிட்ட ஃபோனைத் தரேன். அதே போல நீங்க உங்க பேரன்ட்ஸ்ட்ட சொல்லுங்கோ இன்னுட்டு என்கிட்ட தாங்கோ நான் பேசறேன் டீல் ஓகே வா?”

ஓகே மா. வா வா

முதலில் மிருதுளா ஃபோன் பேச அவள் பெற்றோர் வீட்டு நம்பரை டையல் செய்தாள். முதல் ரிங்கிலேயே அம்புஜம் ஃபோனை எடுத்து…

ஹலோ நான் அம்புஜம் பேசறேன்

ஹலோ அம்மா …நான் மிருது பேசறேன்

சொல்லு மிருது உன் ஃபோனுக்காக தான் காலையில இருந்து இந்த ஃபோனையே பார்த்துண்டு இருக்கேன். டாக்டர்ட்ட போனேங்களா? டாக்டர் என்ன சொன்னா?”

அம்மா என்னை கொஞ்சம் பேச விடுமா. டாக்டர்ட்ட போனேன் அவா சில டெஸ்டெல்லாம் எடுத்துட்டு கன்பார்ம் பண்ணிட்டா. ஸோ நீ பாட்டியாக போற.

அம்மா தாயே நன்றி மா(என அம்மன் படத்தைப் பார்த்து சொன்னாள்) ரொம்ப சந்தோஷமா இருக்கு மிருது. நீ நல்லா சாப்டு உடம்பை பார்த்துக்கோ. சரி… மாப்ள பக்கத்துல  இருக்காரா?”

இதோ கொடுக்கறேன். நவீன் இந்தாங்கோ

ஹலோ நான் நவீன் பேசறேன்.

வாழ்த்துக்கள் அப்பா ஆக போறேங்கள். எங்களுக்கெல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம். மிருதுவ நல்லபடியா பார்த்துக்கோங்கோ. இருங்கோ எங்காத்துக்காரர்ட்ட கொடுக்கறேன்

வாழ்த்துக்கள் மாப்ள அன்ட் மிருது. ரொம்ப சந்தோஷம் அவள நல்லா பார்த்துக்கோங்கோ

ஷுவர் ஷுவர் நிச்சயமா. தாங்க்ஸ். உங்க எல்லாருக்கும் பிரயாணம் எல்லாம் சௌகர்யமா இருந்துதா?”

நாங்க நல்லா சௌகர்யமா வந்து சேர்ந்தோம். உங்க தம்பிகளை ஆத்துல விட்டுட்டு தான் நாங்க ஆத்துக்கு வந்தோம்

ஓகே நான் வச்சுடட்டுமா. இல்ல மிருது வ பேச சொல்லட்டுமா?”

பரவாயில்லை மாப்ள வச்சுடுங்கோ. பை குட் நைட். மிருதுட்டையும் சொல்லிடுங்கோ

நவீன் ஃபோனை வைத்து விட்டு மிருதுளாவிடம்…

உங்க அம்மா அன்ட் அப்பாக்கு என்ன ஒரு சந்தோஷம்

பின்ன இருக்காதா தாத்தா பாட்டின்னா சும்மாவா!!! உங்க பேரன்ட்ஸும் அப்படி தான் பேசுவா பாருங்கோ. அவாளுக்கும் ஃபோன் போடுங்கோ

நவீன் அவன்  பெற்றோர் வீட்டுக்கு ஃபோன் செய்தான். ஒரு அஞ்சு நிமிடம் கழித்து ஃபோனை எடுத்தார் ஈஸ்வரன்…

ஹலோ

ஹலோ நான் நவீன் பேசறேன்

ஹாங் நவீன் சொல்லு பவினும்ப்ரவினும் வந்தாச்சு

ஒகே. ஒரு குட் நியூஸ்.

என்னது?”

நீங்க தாத்தா பாட்டி ஆக போறேங்கள்

அப்படியா சந்தோஷம் இதோ பர்வதம் பேசணுமாம் குடுக்கறேன்.

ஹலோ

மிருதுளா பிரக்னென்ட் ஆகிருக்கா. நாங்க அப்பா அம்மா ஆக போறோம்.

ஓ சரி. மிருதுளாட்ட ஃபோனைக் குடு

நவீன் மிருதுளா பெற்றோரின் சந்தோஷம் தன் பெற்றோரிடமும் எதிர்ப்பார்த்து விஷயத்தை சொல்ல அதற்கு அவர்களின் சுரத்தில்லாத பேச்சு அவனுக்கு ஏன்டா சொன்னோம் என்பது போல அவன் மனம் நினைத்தது முகம் வாடி காட்டிக்கொடுத்ததை கவனித்த மிருதுளாஎன்ன ஆயிற்றுஎன்று சைகையில் கேட்க ஃபோனை அவளிடம் கொடுத்தான் நவீன். அவளும் வாங்கிக் கொண்டு..

ஹலோ நான் மிருதுளா பேசறேன்

நவீன் சொன்னான்….ஆமாம் அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்?”

என்று ஒரு மிரட்டல் துவனியில் கேட்க…

பால் பொங்கி வரும் வேளை கொஞ்சம் தண்ணீர் தெளித்து அதை பொங்க விடாமல் தடுப்பதுபோல பர்வததின் பேச்சு மிருதுளா மனதில் பொங்கி வழிந்த சந்தோஷத்தில் தண்ணீர் தெளித்தது போல் ஆக அவளின் முகம் சட்டென மாறியது. 

என்னமா கேட்டேங்கள்?”

இல்ல ஒரு ரெண்டு மூணு வருஷம் கழிச்சு ஆகிருக்கலாமேன்னு சொன்னேன்” 

எந்த ஒரு அப்பா அம்மாவும் தாத்தா பாட்டி ஆகிவிட்டனர் என தெரிந்தால் பேரானந்தம் கொள்வார்கள்.  அவர்கள் அப்பா அம்மா ஆனபோதிருந்த மகிழ்ச்சியை விட பாட்டி தாத்தா ஆனதில் தான் பெருமகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் இப்படி ஒரு ரியாக்ஷனை துளியும் எதிர் பார்க்காத மிருதுளாவின் மனம் வருந்தியது அதற்கு மேல் பேச்சைத் தொடர விரும்பாமல்…

சரி நான் நவீன்ட்ட குடுக்கறேன்

என்று சட்டென ஃபோனை மிருதுளா குடுத்ததிலிருந்தே நவீனுக்கு புரிந்துவிட்டது ஏதோ சரியில்லை என்பது அதனால் ஃபோனை அவளிடமிருந்து பெற்றதும்….

நான் நவீன் …சரி சரி நாங்க அப்புறமா பேசறோம் பை ” 

என ஃபோனை கட் செய்து நவீன் காசுக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது மிருதுளா வெளியே வந்து வீட்டிற்கு மெல்ல நடக்கலானாள். நவீன் வெளியே வந்து பார்த்ததும் மிருதுளாவை காணவில்லை என தேட பின் வீட்டிற்கு நடந்துச் சென்றுக் கொண்டிருப்பவளை நோக்கி வேகமாக அவள் பின்னால் சென்றான். 

தொடரும்….

 ஊருக்கு கிளம்ப மீதமிருந்த ஐந்து நாட்களும் பசங்க மூவரும் சுற்றுலா கதையையே மிருதுளாவிற்கும் நவீனிற்கும் விவரித்துக் கொண்டிருந்தனர்.  அம்புஜம் மகளுக்கு வேண்டிய புளி காய்ச்சல், ஊறுகாய்கள் என மகள் கேட்டுக்கொண்டதை எல்லாம் செய்து டப்பாக்களில் போட்டு வைப்பதில் மும்முரமாக இருந்தாள். நவீன் ஆபிஸ் க்ளாஸ் என்று ஓடிக்கொண்டே இருந்தான். ராமானுஜம் பக்கத்திலிருக்கும் கடைக்கு தினமும் சென்று அவருக்கு தெரிந்த ஹிந்தியில் பேசி காய்கறிகள், பழங்கள் என வாங்கி வந்து அதை அலம்பி வெட்டி காய்களை ஃப்ரிஜில் கவர்களில் போட்டும் பழங்களை அன்றன்றே நறுக்கி அனைவருக்கும் கொடுத்தார். இதனால் மிருதுளா தினமும் நிறைய பழங்கள் சாப்பிட்டு வந்தாள். 

வெள்ளிக்கிழமை நவீன் ஆபீஸுக்கு லீவுப் போட்டு காலை உணவருந்திய பின் அனைவரையும் அழைத்துக்கொண்டு பக்கத்திலிருக்கும் மார்க்கெட்டுக்கு சென்றனர் மிருதுளாவும் நவீனும். அங்கே ஒரு கடையினுள் சென்று மூன்று பசங்களிடமும் அவர்களுக்கு வேண்டிய டிரஸ் எடுத்துக்க சொன்னார்கள். அதில் வேனு ஒரு செட், பவின் ஒரு செட் என எடுத்துக்கொண்டனர் ஆனால் ப்ரவின் மட்டும் அனைத்து துணிகளையும் ஆராய்ந்து புரட்டிப்போட்டு இரண்டு செட் எடுத்து வந்தான். அதைப் பார்த்த மிருதுளா வேனுவிடமும் பவினிடமும் இன்னும் ஒரு செட் டிரஸ் எடுத்துக்கச் சொன்னாள் அதற்கு இருவரும் அவர்களுக்கு ஒரு செட் போதும் என்று கூற நவீன் பில் செட்டில் பண்ணி விட்டு 

அவரவர் துணிப் பையை அவரவரிடம் கொடுத்தான். கொஞ்ச நேரம் மற்ற கடைகளை எல்லாம் பார்த்துக் கொண்டே நடந்தவர்களை மற்றுமொரு கடைக்குள் நுழையச் சொன்னாள் மிருதுளா. அது புடவைக் கடை அதில் தனது அம்மாவை செலக்ட் செய்ய சொல்ல அதற்கு அம்புஜம் மறுக்க பின் மிருதுளாவே நல்ல  காட்டன் புடவை இரண்டு ஒரே மாதிரி டிசைன் ஆனால் கலர் வேறு வேறாக எடுத்து அதையும் பில் போட்டுப் பெற்றுக்கொண்டு பக்கத்துக் கடைக்குள் சென்றனர். அங்கிருந்து ஒரே மாதிரியான இரண்டு சட்டைகள் வெவ்வேறு நிறத்தில் எடுத்துக்கொண்டு பின் அங்கேயிருந்த டாபாவில் மத்திய உணவருந்தினர். அம்புஜத்திற்கு வெறும் சாதமும் தயிரும் மட்டும் வாங்கிக் கொடுத்தாள் மிருதுளா. அம்புஜம் அதற்கு தொட்டுக்கொள்ள அவள் செய்த ஊறுகாயிலிருந்து கொஞ்சத்தை ஒரு சின்ன டப்பாவில் போட்டு எடுத்து வந்திருந்தாள் அதைத் தொட்டுக்கொண்டு சாப்பிட அனைவரும் சிரித்துக்கொண்டே அவரவர் ஆர்டர் செய்ததை ரசித்து ருசித்து உண்டனர்.  சாப்பிட்டதுக்கு பில் செட்டில் செய்யும் போது வேனு..

அத்திம்ஸ் எங்க அம்மா சாப்பாட்டுக்கு தான் ஜாஸ்த்தி சார்ஜ் பண்ணிருப்பா பாருங்கோ

என கூறியதும் அனைவரும் சிரித்தனர். அப்போது ப்ரவின்…

மாமி ஸ்பெஷல் ஐட்டம் இல்லையா சாப்ட்டுருக்கா.

என்று கேலியும், கிண்டலும், சிரிப்புமாக அனைவரும் ஒரு ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தனர். சற்று நேரம் அவர்கள் வாங்கின டிரெஸ் எல்லாம் பார்த்தனர் பின் அவரவர் பெட்டியில் வைத்து அடுக்கத்துவங்கினர். அப்போது மிருதுளா ப்ரவினிடம் ஒரு பையை கொடுத்து அதையும் சேர்த்து பேக் பண்ண சொன்னாள் அதற்கு ப்ரவின்…

என்னது இது மன்னி?”

இது இந்த ஊரு ஸ்பெஷல் சுவீட்ஸ் மோஹன்தால் அன்ட் சூரத்தி காரி. இரண்டு சுவீட்டுமே சூப்பரா இருக்கும். அப்பறம் அம்மா அப்பாக்கு புடவை அன்ட் ஷர்ட் இருக்கு இதை எல்லாம் அம்மாட்ட குடுத்துடு

மிருதுக்கா சுவீட் ஒன்லீ ஃபார் மாமியாரா. எங்களுக்கு இல்லையா?”

இதோ இது உனக்கும் அப்பா அம்மாவுக்கும் வச்சுக்கோ இதையும் சேர்த்து பேக் பண்ணிடுமா. இருங்கோ அந்த சுவீட்ஸ் எப்படி இருக்கும்ன்னு தெரிஞ்சுக்க இதோ இந்த டப்பாவை திறங்கோ எல்லாருமா சாப்பிடலாம்” 

என்று கூறி சுவீட் டப்பாவை நவீனிடம் கொடுத்தாள் மிருதுளா. அதை வாங்கி திறந்து அனைவருக்கும் கொடுத்தான் நவீன். 

வாவ் சூப்பரா இருக்கு இந்த சுவீட் மிருதுக்கா

ஆமாம் மன்னி செம டேஸ்ட்டியா இருக்கு.” 

அம்மா நீயும் சாப்பிடலாம். இதில் எஸன்ஸ் எதுவுமில்லை.

சரி ஒரு சின்ன பீஸ் குடு சாப்ட்டு பார்க்கறேன்

நல்லாருக்கே இந்த சுவீட். நாம எப்பவும் சாப்டுற நம்ம ஊரு சுவீட்லேந்து ஒரு வித்தியாசமான சுவீட்டா இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.என்றார் ராமானுஜம்

அட ஆமாம் நல்லா தான் இருக்குஎன அம்புஜம் இன்னொரு பீஸ் கேட்டு வாங்கி சாப்பிட்டாள். 

ஊருக்கு போட்டுக்கொண்டு போக வேண்டிய டிரஸை மட்டும் வெளியே வைத்துவிட்டு மற்றவைகளை பெட்டிகளில் அடுக்கி எல்லா பேக்கிங்கையும் தயார் செய்து ஒரு ஓரத்தில் வரிசையாக பேக் மற்றும் பெட்டிகளை அடுக்கி வைத்து விட்டு இரவு உணவருந்தி விட்டு அனைவரும் எழுந்ததும் மிருதுளாவும் அம்புஜமும் சாப்பிட அமர்ந்தனர். அப்போது அம்புஜம்..

மிருது டைம்க்கு சாப்பிடு. நல்லா சாப்பிடு. உடம்ப பார்த்துக்கோ. திங்கட்கிழமை உன்ட்ட இருந்து வர போற நல்ல செய்திக்காக  நான் ஆவலா காத்துண்டிருப்பேன் மறக்காம ஃபோன் பண்ணிச் சொல்லு

அது என்ன திங்கட்கிழமை செய்தி மாமி?” என்று ப்ரவின் கேட்க உடனே நவீன்

அவா ஏதோ பேசிக்கறா உனக்கென்ன டா. நீ ஏன் அவா பேசறதுல உன் மூக்கை நுழைக்கற. பேசாம டிவியைப் பாரு” 

வெளியே ஏதோ மணி அடிக்கும் சத்தம் கேட்டதும் பவினும் வேனுவும் கதவைத்திறந்து பார்த்தனர். உள்ளே வந்து வேனு….

மணி சத்தம் வேற எதுவும் இல்லை குல்ஃபி வண்டி வந்திருக்கு. எல்லாரும் குல்ஃபி சாப்பிடலாமா? யார்யாருக்கு வேணும்ன்னு சொல்லுங்கோ

இந்தா டா வேனு. ஒரு பத்து வாங்கிண்டு வா. வேணுங்கறவா எடுத்துக்கட்டும் மீதியிருந்தா ஃப்ரிஜ்ல வச்சுக்கலாம்என்று ராமானுஜம் வேனுவிடம் காசு கொடுத்து அனுப்ப வேனுவும் தன் அப்பா சொன்னது போலவே பத்து வாங்கிவந்து அனைவருக்கும் கொடுத்தான். மீதமிருந்த அஞ்சு குல்ஃபியை ஃப்ரிஜில் வைத்துக்கொண்டே….

அம்மா அன்ட் மிருதுக்கா உங்க ரெண்டு பேரோடதும் சேர்த்து உள்ள வைக்கறேன். நீங்க சாப்ட்டுட்டு எடுத்துக்கோங்கோ

தாங்கஸ் டா வேனு. நாங்க அப்பறமா எடுத்துக்கறோம். அம்மா நீ எதுவும் நினைச்சு கவலைப் படாதே. நிச்சயம் ஃபோன் பண்ணறேன். என்ன நீங்க எல்லாரும் போயிட்டா வீடே வெறுச்சோடி இருக்கும்.

அதுக்கென்ன பண்ண முடியும் மா. அப்பாக்கு ஆபிஸ் போகணும். வேனுக்கு காலேஜ் போகணும். என்ன பண்ண!

இருவருமாக பேசிக்கொண்டே உணவருந்தி பின் குல்ஃபியை சாப்பிட்டுக்கொண்டிருக்கையில்….

மிருதுக்கா ஒரு கேம் கார்ட்ஸ் விளையாடலாமா

டேய் வேனு மணி ஒன்பதாச்சுடா

அம்மா நாளைக்கு இந்த நேரம் ரெயில்வே ஸ்டேஷன்ல இருப்போம். இன்னைக்கு மட்டும் ஒரு பத்து மணி வரைக்கும் விளையாடலாமே

சரி டா வேனு நான் வறேன்”  நவீன் சொல்ல

நாங்களும் வறோம்என்றனர் பவினும் ப்ரவினும்.

மெஜாரிட்டி ஆண்கள் பக்கம்  என்பதால் மிருதுளாவும் அம்புஜமும் வேறு வழியின்றி விளையாட சம்மதித்து அவர்களின் சீட்டாட்ட குழுவில் சேர்ந்துக்கொண்டனர். அனைவருமாக இரவு பத்து மணி வரை விளையாடிவிட்டு பின் உறங்க படுத்துக்கொண்டாலும் சில மணி நேரம் அரட்டை அடித்த பின்னரே உறங்கலானார்கள். 

மறுநாள் சனிக்கிழமை அன்று அம்புஜம் விருந்து சமையல் சமைத்தாள். சாம்பார், ரசம், அவியல், இரண்டு பொறியல், பாயசம் என அனைத்தும் சமைத்து ராமானுஜத்திடம் வாழை இலை வீட்டின் பின்னாலிருந்து வெட்டி வரச்சொல்லி அனைவருக்கும் வாழை இலைப் போட்டு சாப்பாடு பரிமாறினாள். அப்போது மிருதுளா…

என்ன மா இன்னைக்கு ஊருக்கு போற குஷி ல சும்மா சூப்பரா சமச்சிருக்க…இவ்வளவு ஐட்டம்ஸ் பண்ணிருக்க.

இல்லமா இன்னைக்கு போனா இனி எப்போ மறுபடியும் வர வாய்ப்பு கிடைக்கும்ன்னு தெரியலை அதுனால என் பொண்ணுக்கும் மாப்ளைக்கும் இப்படி சமைச்சேன் நல்லாருக்கில்லையா!!

சூப்பரா இருக்கு மாமி. நீங்க அண்ணா மன்னிக்கு மட்டும் சமச்சேங்கள்ன்னா ஏன் எங்களுக்கும் பரிமாறினேங்கள்என பவின் கேட்க

எல்லாருக்குமாக செய்தேன் போறுமா. நன்னாயிருக்கோனோ எல்லாரும் நல்லா சாப்டுங்கோ.

அனைவரும் சாப்பிட்டப்பின் சற்று நேரம் ஓய்வெடுத்தனர். மாலை நான்கு மணிக்கெல்லாம் காபி குடித்து விட்டு பிரயாணத்துக்கு வேண்டிய சாப்பாட்டை செய்து ஹாலில் கொண்டு வந்து வைத்தாள் அம்புஜம். அவற்றை ஐந்து ஐந்து பொட்டலங்களாக கட்டி, பாட்டில்களில் தண்ணீர் நிறப்பி, வடாமை ஒரு கவரில் போட்டு கட்டி, எல்லாவற்றையும் ஒரு கட்டப்பையில் அடுக்கி வைத்தார் ராமானுஜம். 

ஒருவர் பின் ஒருவராக குளித்து கிளம்ப சரியாக இருந்தது. நவீன் தனது நண்பன் ஓம்னி வேனை எடுத்து வந்து அதில் பெட்டிப் படுக்கைகள் என அனைத்து சாமான்களையும் ஏற்றினார்கள் பவின், ப்ரவின் மற்றும் வேனு. எல்லாரும் தயார் ஆனதும் வேனில் ஏறி ரெயில்வே ஸ்டேஷனை எழரை மணிக்கு சென்றடைந்தனர். அங்கே ஸ்டான்டில் வண்டியை பார்க் செய்து விட்டு அவரவர்  சாமான்களை அவரவர் தூக்கிக்கொண்டு அவர்கள் செல்லவிருக்கு ரெயில் நிற்கும் ப்ளாட்பாரத்திற்கு எட்டு மணிக்கு சென்றனர். அங்கே அவர்கள் ரெயில் நின்றுக்கொண்டிருந்தது. அதில் பொருட்களை ஏற்றி செட் செய்தப்பின் வண்டியிலிருந்து அனைவருமாக கீழே இறங்கி வண்டி கிளம்ப பதினைந்து நிமிடங்கள் இருப்பதால் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது மிருதுளா தனது அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு மௌனமாக இருந்தாள். அவள் கண்களில் கண்ணீர் மடை திறக்க காத்திருக்கும் நதி போல உருண்டோட காத்திருந்தது. அதை கவனித்த அம்புஜம் தன் மகளின் கையை தட்டிக் கொடுத்துக் கொண்டே ….

சரி மா… சரி ரெண்டு பேரும் நல்லா சந்தோஷமா இருங்கோ. மாப்ள எங்க பொண்ண நல்லா தான் பார்த்துக்கறேங்கள். இதே போல எப்பவும் அவள பார்த்துக்கோங்கோ. அவள சந்தோஷமா வச்சுக்கோங்கோ.” 

ரெயில் கிளம்ப போகிறது என்பதற்கான  சங்கு ஊத அனைவரும் வேகமாக ரெயிலில் ஏறி அவரவர் இருக்கையில் அமர்ந்ததும் ரெயில் மெல்ல நகர ஆரம்பித்தது….

பை அண்ணா மன்னி

அப்பா அம்மாவ கேட்டதா சொல்லுங்கோ பவின் அன்ட் ப்ரவின்என்றாள் மிருதுளா

பை மிருதுக்கா.. பை அத்திம்ஸ்” 

பை டா வேனு. டேக் கேர்.

அம்மா அம்மா அம்மா பை !! அப்பா பை!

பை மா மிருது. பை மாப்ளஎன்றாள் அம்புஜம் கண்ணில் கண்ணீரோடு

நாங்க போயிட்டு வறோம் மாப்ள. வறோம் மா மிருதுஎன்று கறகறத்த குரலில் சொன்னார் ராமானுஜம். 

ஓகே எந்த கவலையும் இல்லாம போயிட்டு வாங்கோஎன்றான் நவீன் தனது மாமனார் மற்றும் மாமியாரிடம்.

ரெயில் கொஞ்சம் வேகம் எடுக்க மெல்ல மிருதுளா கைகளிலிருந்து அவள் அம்மாவின் கை நழுவியது. அம்புஜம் முடிந்த வரை தனது கையை ஜன்னல் வெளியே விட்டு ஆட்டிக்கொண்டே சென்றாள். சிறிது நேரத்தில் கும்பலாக இரந்த அந்த ப்ளாட்பாரம் ஆள் நடமாட்டமில்லாமல் ஆனது. அதுவரை மிருதுளா அங்கேயே அமர்ந்து அழ அவளை சமாதானம் படுத்த மிகவும் சிரம பட்ட நவீன்….

மிருது எல்லாரும் போயாச்சு ப்ளாட்பாரமே காலியா இருக்கு. ரெயில் போய் இருபது நிமிஷமாச்சு. அது தான் இன்னும் மூணு மாசததுல நாமளே ஊருக்கு போக போறோமே அப்பறம் என்ன!! வா கண்ண தொடச்சுக்கோ. மணி வேற ஆகறது. நாம வந்த வண்டியை  திருப்பிக்குடுக்கனுமில்லையா. எழுந்திரி மிருது போகலாம்.

மிருதுளா சமாதானம் ஆகாவிட்டாலும் வீட்டுக்கு போயாக வேண்டுமே என்றோ!!! இல்லை தங்களுக்குதவிய நண்பனின் வண்டியை திருப்பி நேரத்துக்கு குடுக்க வேண்டுமென்றோ!! இரவுநேரம் வேற  ஆகிறதென்றோ!!!  ஏதோ ஒரு காரணத்தினாலோ அல்லது இவ்வனைத்து காரணத்தினாலோ சட்டென கண்களைத் துடைத்துக்கொண்டு நவீனுடன் வீட்டுக்கு புறப்பட்டாள் ஆனால் அவள் கண்கள் வற்றவில்லை அதில் கண்ணீர் பெருக்கெடுத்துக்கொண்டே தான் இருந்தது.

அவர்கள் கேம்ப்புக்குள் வந்ததும் நேராக வண்டியை நவீன் நண்பனிடம் ஒப்படைத்து விட்டு இருவருமாக நடந்து வீட்டுக்குச் செல்லும் போது …மிருதுளா …

இவா எல்லாரும் ஏன் வரணும், நாம எல்லாருமாக ஏன் அவ்வளவு ஜாலியா இருந்திருக்கனும் அப்பறம் ஏன் இப்படி நம்மள அம்போன்னு விட்டுட்டு அவா எல்லாரும் கிளம்பி போகணும்?”

அது தான் மா லைஃப் மிருது. இனி இப்படி தான் எப்பவாவது எல்லாருமா நம்மள பார்க்க, நம்மளோட இருக்க வருவா அப்புறம் கிளம்பி போவா. நீ அவா வந்துட்டு போற ஒவ்வொரு தடவையும் இப்படி தான் அழப்போறயா என்ன?” 

மனசு ரொம்ப சங்கடப்படறது நவீ. எனக்கு வீட்டுக்குள்ள போகவே என்னவோ மாதிரி இருக்கு. யாருமே இல்லாத வீடு போல தோணும்

மூணு வாரத்துக்கு முன்னாடி வரை நம்ம ரெண்டு பேரு மட்டும் தானே இருந்தோம் அப்போ பிடிச்சிருந்தது இல்ல அது மாதிரிதான் இப்போவும். இங்க பாரு மிருது யாரு வேணும்னாலும் நம்ம லைஃப் ல வரலாம் போகலாம் ஆனா கடைசி வரைக்கும் இனி நாம மட்டும் தான் புரியறதா?”

அதெல்லாம் புரியறது ஆனா மனசு அதை ஏத்துக்க மாட்டேங்கறது நவீ

இப்போ அப்படி தான் இருக்கும் இன்னும் சில வருஷம் போனா மனசு புரிஞ்சுக்கும் அதை ஏத்துக்கவும் செய்யும் அதுவரை கொஞ்சம் காத்திருக்க தான் வேணும். உன் மனசும் நானும்

ஆமாம் ஆமாம் பார்ப்போம் பார்ப்போம்

என்று கூறினாலும் அவள்  கண்களிலிருந்து கண்ணீர் பல நாட்களாக ஸ்டாக் வைத்திருந்தது போல பொல பொலவென உரண்டோடிக்கொண்டே தான் இருந்தது. அதை பார்த்த நவீன் மீண்டும்…

என்ன மிருது உனக்குள்ளேயே நிறைய உறுப்புகள் சரியான குவார்டினேஷனே இல்லாம இருக்கு !!!! வாய் பார்க்கலாம்ன்னு சொல்லறது ஆனா கண்ணு அதை ஏத்துக்காம நிக்காம மழை பொழிஞ்சிண்டே  இருக்கே. சரி மன்டே காலை ல டாக்டர்ட்ட போகணும் ஞாபகம் இருக்கா?” 

என்று பேச்சை திசைத் திருப்ப வீடும் வந்தது. வீட்டைத் திறந்தான் நவீன். இருவருமாக உள்ளே நுழைய மிருதுளாவிற்கு அவள் அப்பா அம்மா மற்றும் தம்பிகள் ஹாலில் உட்கார்ந்துக் கொண்டு இருப்பது போல தெரிய மீண்டும் அவள் கண் கலங்கினாள். ஆனாலும் அதை துடைத்துக் கொண்டே…

ஓ!!! நல்லா ஞாபகம் இருக்கே. ஐ ஆம் வேயிட்டிங் ஃபார் மன்டே நவீ” 

இருவரும் முகம் கை கால் அலம்பி விட்டு சற்று நேரம் டிவி பார்த்தப் பின் அம்புஜம் அவர்களுக்கும் சுட்டு வைத்திருந்த சப்பாத்தியையும் மசாலாவையும் சாப்பிட்டனர். அதே குல்ஃபி காரன் மணி அடிக்க அதைக் கேட்ட மிருதுளா…

ஹேய் நவீ நேத்து வேனு வாங்கின குல்ஃபி ப்ரிஜ்ல இருக்கு சாப்பிடலாமா!

ஓ எஸ்என கூறிக்கொண்டே ஃப்ரிஜை திறந்துப் பார்த்தான் நவீன் ஆனால் அதில் குல்ஃபி இருக்கவில்லை. 

அட இங்கே ஒரு குல்ஃபி கூட இல்லை மிருது எப்போ யாரு சாப்ட்டானே தெரியலையே நாமளும் இங்கே இருந்திருக்கோம் பாரேன்!

ஓ !!! ஆமாம் ஆமாம் இன்னைக்கு மத்தியானம் பசங்க சாப்ட்டா. சாரி நான் தான் மறந்துட்டேன்

சரி இரு நான் போய் ரெண்டு வாங்கிண்டு வரேன்

நவீன் குல்ஃபி வாங்கி வர… மிருதுளாவும் நவீனுமாக திரைப்படம் பார்த்துக்கொண்டே அதை உண்டு முடித்து பின் உறங்க படுத்துக்கொண்டனர். மிருதுளா திரும்பி படுத்துக் கொண்டு மெல்ல அழுவதை கவனித்த நவீன் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு ….

டோன்ட் வரி மிருது ஜஸ்ட் மூணு மாசம் தான் வீ வில் கோ தேர் அன்ட் பி வித் தெம். நீ சமாதானம் ஆயிட்டன்னு நினைச்சேன் மறுபடியும் ஆரம்பிக்கற. ப்ளீஸ் ஜஸ்ட் ரிலாக்ஸ் அன்ட் ஸ்லீப்.

என கூற மிருதுளாவும் கண்களைத் துடைத்துக்கொண்டு நவீனை கட்டிக்கொண்டு உறங்கினாள். 

ஆக மீதமிருந்த ஐந்து நாட்களும் விருந்தினருடன் சந்தோஷமாக கழித்ததாலும் ஸ்பெஷல் விருந்தினரான பவின் அன்ட் ப்ரவினும் ஏதும் அனாவசியமாக பேசாததினாலும் வாசகர்களாகிய நமக்கு சுவாரஸ்யம் கொஞ்சம் குறைந்தது போல இருந்தாலும்… உணர்ச்சிகள் பொங்கி வழிந்ததை நம்மால் உணர முடிந்தது இந்த வாரம்.  உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத சுமையாகிவிடும், ரசனை இல்லாமல் போய் விடும் பின் நல்லவை நமது கண்களுக்கு புலப்படாமல் இருந்துவிடும். நவீன் கூறியது போல திருமணம் என்ற பந்தம் ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் கடைசி வரை வரக்கூடிய ஒரே பந்தமாகும். 

இவர்களும் அது போலவே இருந்தால் நல்லது தான் இல்லையா

தொடரும்…….

பசங்க மூணு பேரும் டிரிப் போகும் போது வழியில் உண்பதற்கு சிப்ஸ் மற்றும் சில நொறுக்கு தீணிகளை கடையிலிருந்து வாங்கி வந்தனர். வீட்டில் இருந்துக்கொண்டு இது போன்ற தீணிகளை உண்பதற்கும் வெளியே சுற்றுலா போகும் போது உண்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என்பது பசங்களின் அபிப்பிராயம் மட்டுமில்லை நமக்கே அப்படிதான் இல்லையா நண்பர்களே.  ஆனால் அதை பார்த்த ராமானுஜம்…

ஏன்டா பசங்களா இங்க நம்ம ஊர்லேந்து கொண்டு வந்த நொறுக்கு தீணிகளே  இருக்கு இதில இன்னும் வேற வாங்கிண்டு வந்திருக்கேங்கள்! அதே போறாதோ?”

அப்பா அதையே தான் மூணு வாரமா சாப்பிட்டோம். ஒரு நாளைக்கு சேஞ் இருக்கட்டுமே

ஆமாம் மாமா வேனு சொல்லறா மாதிரி முறுக்கு, ரிப்பன் பக்கோடா, மிச்சர் சாப்ட்டு சாப்ட்டு போர் அடிச்சுப்போச்சு. எங்களுக்காக ஒரு நூறு ரூபாய் செலவழிக்க மாட்டேளா என்ன!

செலவழிக்கறத பத்தி நினைச்சிருந்தேனா வேனுட்ட காசு குடுத்தனுப்பியிருக்கவே மாட்டேனே!!! ஆத்துல பட்சணங்கள் இருக்கும் போது ஏன் வெளியே வாங்கினேங்கள் ன்னு தான் கேட்கறேன்….சாப்ட்டு அலுத்துப்போச்சுன்னு சொல்லறேங்கள் ஓகே ஒத்துக்கறேன். எங்களுக்கெல்லாம் கிடைச்சா மாதிரி வருஷத்துல ஒரு தடவை  மட்டுமே பட்சணம் செய்து கொடுத்தா அது அலுத்துப்போகாது அதவிட்டுட்டு எப்ப வேணுமோ அப்போ எல்லாம் கிடைச்சா இப்படிதான் இருக்கும். உங்கள சொல்லி தப்பே இல்லை.

அப்பா உங்க காலம் வேற. அப்போ எல்லாம் ஒரு குடும்பத்தில கொறஞ்சது ஏழு அல்லது எட்டு பேர் இருந்தேங்கள் அத்தனை பேருக்கும் அடிக்கடியா பட்சணங்கள் பண்ணித்தர முடியும்? அதனால வருஷத்துல ஒரு தடவை செஞ்சா …ஆனா இப்போ ஒரு குடும்பதுல நாலு பேரு தான் ஸோ எப்போ தோணறதோ அப்போ எல்லாம் செய்து சாப்படறா

அது வாஸ்தவம் தான்

சரி சரி எல்லாரும் சீக்கிரம் சாப்ட்டு தூங்கினாதானே நாளைக்கு காலங்காத்தால எழுந்துக்க முடியும். இப்படி பேசிண்டே இருந்தா அப்பறம் எல்லாருமா தூங்கிப் போயிடுவேங்கள் இல்லாட்டி ரெண்டு இடம் பார்த்ததும் டையர்டா ஆகிடுவேங்கள். அம்மா நீ இன்னும் கிட்சன்ல என்ன பண்ணிண்டிருக்காய்? உனக்கும் தான் சொல்லறேன்

இதோ ஆயிடுத்து வந்துடறேன். வந்தாச்சு போறுமா

என்ன மெனு கட்டிண்டு போற மா நீ

காலைக்கு இட்டிலியும் கொத்தமல்லி சட்னியும், மத்தியானத்துக்கு  புளியோதரையும் தயிர் சாதமும்வடாமும் கட்டிண்டிருக்கேன். எதுக்கும் எக்ஸ்ட்ராவா நாலு பொட்டலமும் எடுத்துண்டிருக்கேன்….இவாளுக்கு யாருக்காவது வேணும்னாலும் கொடுக்கலாமேன்னு…உங்களுக்கும் சட்னி சாதமெல்லாம் இருக்கு.  இட்டிலி மட்டும் காலைல வச்சுக்கோ. வடாம் அந்த நீல கலர் மூடி போட்ட டப்பால போட்டு வச்சிருக்கேன்.  ஒண்ணும் செஞ்சிண்டிருக்க வேண்டாம். காபி அன்ட் டீ மட்டும் போட்டுக்கோ போறும்.

அம்மா நீ என்னத்த கட்டிண்டிருக்கன்னு தானே மிருதுக்கா கேட்டா!!!! நீ என்னடான்னா எல்லாருக்கும் செய்து எடுத்துண்டு வர மாதிரி தெரியறது

டேய் அது தான் டா நம்ம அம்மா!!

மாமி நாங்க அவா தர்ற ரொட்டி சப்ஜீ எல்லாம் சாப்பிடுவோமே என்னத்துக்கு எங்களுக்கும் எடுத்துக்கறேங்கள்?”

சரி பா நீங்க எல்லாரும் அதையே சாப்டுங்கோ நான் இதை தான் சாப்பிடனும்னு யாரையும் வற்புறுத்தலையே. ஒரு வேள அது நல்லா இல்லாட்டி உங்கள எல்லாரையும் விட்டுட்டு நான் மட்டும் சாப்ட முடியுமா?”

ஆமாம் சாப்பிடனும். அவா தான் அவளோ பேசறா இல்லையா. அப்போ நீங்க உங்களுக்கு மட்டும் எடுத்துக்கணும் . கேட்டாலும் கொடுக்காதீங்கோ

டேய் பசங்களா நாளைக்கு சப்போஸ் அவா சாப்பாடு பிடிக்கலைன்னா அப்பறம் பட்டினியாதான் சுத்த வேண்டி வரும் அதனால பேசாம எங்க அம்மா எடுத்துக்கறதை எடுத்துக்கட்டும் வேணும்ன்னா சாப்பிடுங்கோ இல்லாட்டி அது கெட்டு ஒண்ணும் போகாது வந்துட்டு சாப்பிட்டுக்கோங்கோ

மிருதுக்கா நீ சொல்லறதும் கரெக்ட் தான் அம்மா நீ எடுத்துக்கறத எடுத்துக்கோ மா. நாங்க ஒண்ணுமே சொல்ல மாட்டோம் என்ன சொல்லறேங்கள் பவின் அன்ட் ப்ரவின்?”

ஆமாம் ஆமாம் மாமி நீங்க எடுத்துக்கறத எடுத்துக்கோங்கோ.

அது!!! எதையுமே பேசறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசுங்கப்பா..சரி சரி ஆல் ஆஃப் யூ குட் நைட்

குட் நைட்என எல்லாரும் கூறினர். 

யாராவது அலாரம் வச்சிருக்கேங்களா?” என்றான் ப்ரவின் 

என்னோட அலாரம் என் மண்டைக்குள்ள இருக்கு டான்னு எல்லாரையும் எழுப்பிடறேன் கவலை படாம தூங்குங்கோஎன்றார் ராமானுஜம்.

அவர் கூறியது போலவே மூன்று மணிக்கெல்லாம் எழுந்து அம்புஜத்தையும் எழுப்பி இருவரும் ஒருவர் பின் ஒருவராக குளித்து முடித்ததும் பசங்களை எழுப்பினார்கள். அவர்களும் ஒவ்வொருவராக குளித்து வந்ததும் நவீனும் மிருதுளாவும் எழுந்து பல் துலக்கி ஃப்ரெஷ் ஆகியதும் அனைவருக்கும் காபி போட்டுக் கொடுத்தாள் அம்புஜம். எல்லோருமாக குளித்து, காபி அருந்தி முடித்து கிளம்ப சரியாக மணி நாலரை ஆனது. பஸ்ஸில் ஏறுவதற்காக மெயின்கேட்டுக்கு நடக்கலானார்கள். அவர்களை வழியனுப்ப  நவீனும் மிருதுளாவும் வீட்டின் கதவை தாழிட்டு அவர்களுடன் கிளம்பினார்கள்.  கேட் ஐ சென்றடையும் போது மணி நாலே முக்கால். பஸ் காத்துக்கொண்டிருந்தது. இவர்கள் பஸ் ஸ்டாப் சென்றடைவும் நவீனின் நண்பன் சதீஷும் அவர் குடும்பத்தினருடன் அங்கு வரவும் சரியாக இருந்தது. நவீன் அவர்களை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தப் பின் தனது குடும்பத்தினரையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளும் படி சதீஷிடம் சொல்ல அவனும் நவீனிடம் அதை பற்றி எல்லாம் கவலையின்றி இருக்குமாறு சொல்லிக்கொண்டிருக்கையில் பஸ் டிரைவர் அனைவரையும் பஸ்ஸினுள் ஏறச் சொன்னார். எல்லோருமாக ஏறி அவரவருக்கு பிடித்த இடத்தில் அமர்ந்தனர். நவீனுக்கும் மிருதுளாவும் அனைவரும் டாட்டா காட்ட பஸ் புறப்பட்டுச் சென்றது. 

நவீனும் மிருதுளாவும் வீட்டை நோக்கி பேசிக்கொண்டே மெல்ல நடந்தார்கள். அப்போது நவீன்…

உனக்கு போக முடியலையேன்னு கவலையா மிருது?”

நோ நாட் அட் ஆல் நவீ. அதவிட முக்கியமான சந்தோஷத்துக்காக நான் காத்துண்டு இருக்கும் போது இதுக்கெல்லாம் கவலை ஏன் படணும்.  ஏன் உங்களுக்கு போயிருக்கலாம்ன்னு தோணறதோ?” 

நோ!! நோ !!! எனக்கு மூணு வாரத்துக்கப்பறம் இப்போ தான் என் வைஃப் கூட மட்டும் இருக்க டைம் கிடைச்சிருக்கு… இதை விட்டுட்டு நான் ஏன் போகணும்னு நினைக்கப்போறேன்

ஹேய் ஆமா இல்ல!!!! ஸோ இன்னைக்கு நாம மட்டும் தான் இருக்கப் போறோம். வாவ்!! இந்த மூணு வாரமா நாம விலகி இருந்தது ஏதோ பல வருஷம் பிரிஞ்சு இருந்த மாதிரி ஒரு ஃபீல்.

ஆமாம். ஸோ ட்ரூ. லெட் அஸ் செலிப்ரேட் திஸ் டே டுகெதர்.

டாக்டர் சொன்னது ஞாபகம் இருந்தா நல்லது

ஹேய் அதெல்லாம் நல்லாவே ஞாபகம் இருக்கு மேடம்.

எவ்வளவு ஆச்சர்யமா இருக்கு நமக்குள்ளேயிருந்து நமக்குன்னு ஒரு புது உயிர் உருவாகி அது இந்த பூமிக்கு வந்து நம்மை பார்த்து சிரித்து, அழுது, விளையாடி, வளர்ந்து !!! வாவ்!!! காட் ஈஸ் ரியலீ கிரேட் பா. என்ன அழகான ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதில் மனிதர்களை ஒரு இயந்திரம் போல படைத்து அவர்களுக்கு எல்லா வகையான உணர்வுகளும் கொடுத்து மெல்ல மெல்ல நம்மை பரமபதம் காய்கள் போல நகர்த்தி ஒரு அழகான ஆட்டம் ஆடுகிறார்? இல்ல!!!

ஏய் சூப்பர் எக்ப்ளநேஷன் ஃபார் காட்ஸ் க்ரியேஷன் மிருது!! ஆசம்!!!

என்னை புகழ்ந்தது போதும் ஆம் வந்தாச்சு கதவ தொறங்கோ!

உண்மையா மா. நீ கொடுத்த இந்த விரிவாக்கம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

இருவருமாக பல நாள் கழித்து அவர்களுக்கென்று கிடைத்த  தனிமையை அனுபவித்து பின் குளித்து காலை உணவு சாப்பிட அமர்ந்தனர். மிருதுளா சுட சுட ஆவி பறக்க இரு தட்டுகளில் நாலு நாலு இட்டிலியும் அவள் அம்மா செய்து வைத்திருந்த கொத்தமல்லி சட்டினியும் போட்டுக்கொண்டு ஹாலுக்கு வந்து ஒன்றை நவீனிடம் கொடுத்துவிட்டு மீண்டும் அடுப்படிக்குள் சென்று இட்டிலி வைத்திருந்த பாத்திரத்தை எடுத்து வந்து கீழே வைத்து விட்டு சாப்பிடலானாள். அப்போது நவீன்….

இட்டிலி செம சாஃப்ட்டா இருக்கு

ஹலோ இட்டிலினா சாஃப்ட்டா தான் இருக்கும்

எங்க ஆத்துல சாப்ட்டயே அது சாஃப்ட்டாவா இருந்தது. இவ்வளோ வருஷமா அது மாதிரி தான் நான் சாப்டிருக்கேன் ஆனா இது உண்மையாவே பஞ்சு மாதிரி இருக்கு மிருது.

உளுந்து அளவு கம்மியான இட்டிலி கல்லு மாதிரி தான் ஆகும். நம்ம ஆத்துல!!! அச்சோ!!! அந்த ஒரு இட்டிலய தேங்காய் சட்னில ஊர வச்சும் அது அப்படியே தான் இருந்தது. இப்படி பஞ்சு மாதிரி இட்டிலிய  நான் இருப்பத்திரண்டு வருஷமா சாப்பிட்டு கல்யாணத்துக்கப்பறம் உங்க அம்மா பண்ணின இட்லியோட ப்ரூசிலீ மாதிரி ஃபைட் பண்ணி ரொம்ப சிரமப்பட்டுப் போயிட்டேன் அத சாப்பிட. ஆனா அத சொன்னா உங்க அம்மா மனசு கஷ்ட்டப்படுமேன்னுட்டு சொல்லாம விட்டுட்டேன்

இது என்ன சட்டினி சொன்னா உங்க அம்மா?”

கொத்தமல்லி சட்டினி. ஏன் கேட்கறேங்கள்?”

இதுவும் ரொம்ப சூப்பரா இருக்கு. இது மாதிரி சட்னி நான் சாப்ட்டதே இல்லை. யூ அன்ட் வேனு ஆர் லக்கி

இதை என் அம்மா கேட்டா சந்தோஷப்படுவா. நான் உங்களுக்கு வித வித மா செய்துத்தறேன் யூ டோன்ட் வரி மை ஹப்பி. யூ டூ ஆர் லக்கி டூ ஹாவ் மீ…எப்புடி

நன்றி வைஃபி. ஷுவர் ஆம் நவ் லக்கி டூ. நீயும் சாப்பிடு

இதோ சாப்டுண்டே தானே பேசறேன்

உணவருந்திய பின் இருவருமாக டிவியில் ஒளிபரப்பான திரைப்படத்தைப் பார்த்தனர். வீட்டுக்கு டிவி வந்த நாளிலிருந்து அன்று தான் அவர்கள் கையில் ரிமோர்ட் கிடைத்துள்ளது. அதுவரை பவின் தான் எப்போழுதும் அதை வைத்திருந்தான். அவன் தூங்கும் போது தான் அது டிவி அருகே இருக்கும். அன்றிரவு ஒரு எட்டு மணி போல மீண்டும் ஒரு நடை நடந்து அந்த வளாகத்தின் கேட் அருகே சென்று அங்கேயே நடந்துக்கொண்டே டூர் போனவர்கள் திரும்பி வர காத்திருந்தனர். பஸ் சரியாக எட்டரை மணிக்கு வந்து சேர்ந்தது. அனைவரும் குஷியாக இறங்கினார்கள். பஸ்ஸினுள் ஒரே பேச்சு சத்தமும் சிரிப்பு சத்தமும் தான் கேட்டது. அனைவரும் இறங்கியதும் ஒன்றாக கோரஸாக டிரைவருக்கும் அவர் அஸிஸ்ட்டென்டுக்கும் நன்றி தெரிவித்தனர். சதீஷ் நவீனைப் பார்த்து…

நவீன் இதோ உன் குடும்பத்தினரை உன்ட்ட பத்திரமா ஒப்படைச்சிட்டேன் பா.

ஹேய் ரொம்ப ரொம்ப தாங்கஸ் டா

இதுக்கெல்லாம் எதுக்கு டா தாங்க்ஸ் சொல்லிகிட்டு. நான் சும்மா ஜோக் அடிச்சேன். ஆனா ஒரு விஷயம் உன்ட்ட சொல்லணும் நவீன். உன் இன் லாஸ் மூணு பேரும் ரொம்ப நல்லவங்க பா. யூ ஆர் ரியலி கிஃப்ட்டெட் டூ ஹாவ் தெம் இன் யூவர் லைஃப். உன் தம்பிகளும் நல்ல பசங்க தான் …..உண்மைய சொல்லனும்னா அவங்க கொஞ்சம் செல்ஃபிஷோன்னு மனசுக்கு படுதுப்பா. நாங்க எல்லாரும் சூப்பரா என்ஜாய் பண்ணினோம். அன்ட் மாமி செய்து கொண்டு வந்த சாஃப்ட் இட்டிலி அன்ட் அந்த சட்னி வாஸ் ஆசம். வீ ஆல் லவ்டு இட். சரி சரி நாம அடுத்த வாரம் ஆபீஸ்ல மிச்சத்த பேசிக்கலாம் இப்போ அவங்க கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிட்டு   நாங்க எங்க வீட்டுக்கு கிளம்பறோம் வா

என அனைவரும் ஒருவருக்கொருவர் பை சொல்லி விடைப்பெற்று அங்கிருந்து அவரவர் வீட்டிற்கு நடக்கலானார்கள். அப்போது நவீன் அம்புஜத்திடம்…

என்ன உங்க கொத்தமல்லி சட்னி செம ஃபேமஸ் ஆயிடுத்துப் போல

அப்படியா சொல்லறேங்கள்

ஆமாம் அத்திம்ஸ் காலை ல அவா பூரியும் சப்ஜியும் கொடுத்தா ஆனா நாலு நாலு தான் தந்தா ஸோ அம்மா கொண்டு வந்த இட்டிலியையும் சட்னியையும் எல்லாருமா ஷேர் பண்ணிண்டோம்.” 

நேத்து என்னவோ சில பேரு கிண்டல் அடிச்சா!!! அவா எல்லாம் எங்க போணா இப்போ?” என்று மிருதுளா கேட்க அதற்கு பவின்

அவாளும் லைன்ல நிண்ணு இட்டிலியும் சட்னியும் வாங்கி சாப்ட்டா

என்று சொல்ல அனைவரும் சிரிப்பு மழையில் நனைந்தனர்.

சரி அம்மா நீ கொண்டு போன சாப்பாட்டில் மிச்சமிருக்கா ஏன்னா அதை தானே நைட்க்கு எல்லாரும் சாப்பிடறதா சொன்னா!! அதுனால கேட்டேன்

ஒண்ணும் மிச்சமாகலை எல்லாம் தீர்ந்துடுத்து. அப்போ நைட்டுக்கு என்னவாக்கும் டின்னர்?”

மிருதுக்கா ஷால் வீ கோ டூ அவர் ரோஹித் டாபா?”

என்று வேனு கேட்டதும் மிருதுளா நவீனைப் பார்த்தாள் அவனும் சம்மதிக்க அனைவருமாக டாபா சென்றனர். அங்கே மிருது அம்புஜத்தைப் பார்த்தே…

அம்மா நீ என்னத சாப்பிடுவ?”

எனக்கு ஒண்ணும் வேண்டாம் மா. மத்தியானம் சாப்ட் புளிசாதமே எறுக்களிச்சிண்டிருக்கு.

மிருதுக்கா …இல்லாட்டி நம்ம அம்மா அப்படியே ரொட்டி சப்ஜீ எல்லாம் சாப்ட்ருவா பாரு…அட போ க்கா

அதுவும் சரிதான் டா வேனு

எனக்கு ஒரு லைம் சோடா கிடைக்குமா? அது மட்டும் போதும்” 

நிச்சயம் கிடைக்கும் இருங்கோ நான் ஆர்டர் பண்ணறேன்என நவீன் ஆர்டர் பண்ணிக் கொடுத்தான்.

அனைவரும் சென்று பார்த்த இடங்களைப் பற்றியும், பிரயாணம் பற்றியும் டாபாவில் பேச ஆரம்பித்து வீட்டிற்குச் சென்று உறங்கும் வரை அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்.  அப்போது மிருதுளா ப்ரவினிடம்….

என்ன ப்ரவின் இப்போ உன் நண்பர்கள்ட்ட சொல்லிக்க விஷயம் கிடைத்திருக்குமே. ஹாப்பியா

ஓ எஸ் !!! நிறையா பார்த்தேன் அன்ட் நிறையா விஷயங்கள்  இருக்கு சொல்ல

அப்பாடா ப்ரவின் இனி திருப்தியா ஊருக்கு கிளம்புவான்என்றான் நவீன்.

என்ன இன்றய டே என்ட் முடிவில் நான் தான் டாப்பிக் ஆஃப் டிஸ்கஷனா. பேசாம எல்லாரும் தூங்குங்கப்பா. குட் நைட்

தொடரும்…..

அம்புஜம், ராமானுஜம், வேனு, ப்ரவின் மற்றும் பவின் ஊருக்கு கிளம்புவதற்கு ஒன்பது நாட்களே இருந்தன. மிருதுளா பிரயாணம் செய்ய கூடாது என்பதால் நவீன் மற்ற அனைவரையும் அவன் நண்பன் குடும்பத்தினருடன் டூர் போய் வர புக் செய்து அதற்குண்டான ரசீதை எடுத்துக்கொண்டு அன்று மாலை ஆபீஸிலிருந்து வந்தான். வழக்கம் போல மலர்ந்த முகத்துடன் வாசல் கதவைத் திறந்து நவீனை வரவேற்று காபி கொடுத்தாள் மிருதுளா. பின் நவீன் அனைவரையும் பார்த்து…

உங்கள் அனைவருக்கும் ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்

என்ன அது நவீ?”

வாட்ஸ் தீ சர்ப்ரைஸ் அத்திம்ஸ்?”

என்னது அந்த சர்ப்ரைஸ் அண்ணா?”

நவீன் தனது ஈவினிங் க்ளாஸ் செல்வதற்கு தயாராகிக் கொண்டே ….

ஓ தெரிஞ்சுக்க  இவ்வளோ ஆர்வமா!!! அப்படீன்னா இப்போ சொல்லக் கூடாதே!! எல்லாரும் ஒன்பதரை மணி வரைக்கும் வேயிட் பண்ணுங்கோ…நான் க்ளாஸ் முடிச்சு வந்துட்டு சொல்லறேன். ஸோ ஸ்டே டூயூன்டு டூ நவீன் சேனல். வில் பீ பேக் பை நைன் தெர்ட்டி. பை ஆல்

என்று கூறி நவீன் பைக்கில் சென்றதும், வேனுவும் பவினும் மிருதுளாவைப் பார்த்து…

மிருதுக்கா என்ன சர்ப்ரைஸ் பத்தி அத்திம்ஸ் சொல்லறார்ன்னு எங்களுக்கு சொல்லேன்

எனக்கும் அது சர்ப்ரைஸ் தான் வேனு

மன்னி உங்கள்ட்ட அண்ணா நிச்சயம் சொல்லிருப்பா… என்னன்னு சொல்லுங்கோ

உங்க எல்லாரோடையும் தான் நானும் இங்கே இருக்கேன். அவர் ஆபீஸிலிருந்து வந்ததும் விஷயத்தை  எல்லாரிடமும் தான் சொன்னார். என்ட்ட தனியா ஏதாவது பேசினாரா சொல்லு…நானே அது என்னவா இருக்குன்னு யோசிச்சிண்டிருக்கேன்

எதுவா இருந்தா என்ன? க்ளாஸ் முடிச்சிட்டு வந்து அவரே சொல்லதான் போறார் அதுக்குள்ள நீங்க எல்லாரும் ஏன்தான் இப்படி யோசிச்சு குழம்பிக்கறேங்கள். மாப்ள வந்துட்டு சொல்வார். எல்லாரும் சித்த பொறுமையா இருங்கோளேன்” 

வந்துட்டாங்கப்பா வந்துட்டாங்க நவீன் சப்போர்ட்டர்ஸ். அப்படியே ஆகட்டும் தாயே. நாங்கள் அமைதியாக கார்ட்ஸ் விளையாட போகிறோம் தாங்களும் வருகிறீர்களா?”

நோ நோ நாங்க டிவி பார்க்க போறோம். இல்லையா வேனு அன்ட் பவின்?”

ஆமாம் ஆமாம் நோ கார்ட் கேம்

அட போங்கப்பா!!! நீங்க அந்த டிவியையே பாருங்கோ. அப்போ நான் போய் என்னோட புத்தகத்தை எடுத்து கொஞ்சமாவது படிக்கறேன். அம்மா நீ டின்னர் பண்ணிடுவியா இல்லாட்டி நான் ஒரு எட்டு மணிக்கு பண்ணறேன்

நீ உன் படிப்பைப் பாரு மிருது. நான் சமையலைப் பார்த்துக்கறேன்னு நேத்தே உன்ட்ட சொல்லிட்டேனே! அதுனால நீ அதைப் பத்தி எல்லாம் யோசிக்கவே வேண்டாம். இவா டிவி பார்க்கட்டும்

ஓகே அம்மா தாங்கஸ்

என்னத்துக்கு தாங்கஸ் எல்லாம் சொல்லிண்டு போடி

மிருதுளா முன் புத்தகம் இருந்தது ஆனால் அவள் புத்தியோ அந்த சர்ப்ரைஸ் என்னவாக இருக்கும் என்ற சிந்தனையில் மூழ்கியது. பவின், ப்ரவின், வேனு டிவி பார்த்துக்கொண்டிருந்தாலும் அவர்களுக்குள் நவீன் சொன்ன சர்ப்ரைஸ் என்னவாக இருக்கும்? இதுவாக இருக்குமோ? இல்லை அதுவாக இருக்குமோஎன்ற டிஸ்கஷனும் நடந்துக்கொண்டேதான் இருந்தது. இப்படி அனைவருக்கும் அது என்ன என்ற சிந்தனையில் மூன்றறை மணி‌ நேரம் போனதே தெரியவில்லை. நவீன் க்ளாஸ் முடித்து வீட்டிற்குள் நுழைந்தான். உடனே பவின்…

அண்ணா இப்போவாவது சொல்லேன் அது என்ன சர்ப்ரைஸ் ன்னு

இரு டா நான் டிரெஸ்ஸை மாத்திட்டு டின்னர் சாப்ட்டு வரேன். எனக்கு செம பசி

போ அண்ணா ரொம்பத்தான் பண்ணற….உன் சர்ப்ரைஸை நீயே வச்சுக்கோ” 

ஓகே …அப்போ திருப்பிக் குடுத்துட்டு நீங்க யாரும் வரலைன்னு சொல்லிடறேன்

எங்கே போகபோறோம்?” என ஆவலாக கேட்டான் ப்ரவின்

இருங்கோ பசங்களா இனி எங்கே போக போறார். நீங்க எல்லாரும் சாப்ட்டாச்சில்லையா இப்போ அவர் சாப்பிடட்டும் அப்பறம் கேட்டுப்போம் விஷயத்தைஎன்றாள் மிருதுளா

மன்னி ஆல்ரெடி மூணு மணி நேரம் வேயிட் பண்ணியாச்சு

மூணு மணி நேரம் வேயிட் பண்ணினேங்கள் இல்லையா இன்னும் ஒரு பதினைந்து நிமிஷம் சேர்த்து வேயிட் பண்ணுங்கோஎன நவீன் கூறிக்கொண்டே டிபனை சாப்பிடலானான். 

நவீன் சாப்பிட்டு விட்டு ஹாலில் வந்தமர்ந்து அனைவரையும் அழைத்து அமரச்சொல்லி….

என் நண்பன் சதீஷ் அவன் குடும்பத்திற்காக குஜராத் டூர் ஏஜென்சி ல ஒரு டூர் புக் பண்ணிருந்தான் அதில் டிக்கெட்ஸ் நல்ல ரேட்டில் கிடைத்தது. அதனால் அஞ்சு சீட் புக் பண்ணிருக்கேன். ஒரு நாள் டூர் டூ அஹமதாபாத், பதான் ஆகிய இடத்துக்கெல்லாம் கூட்டிண்டு போவா. காலை ல அஞ்சு மணிக்கு கிளம்பி நைட் எட்டு அல்லது ஒன்பது மணிக்கு திரும்பி கேம்ப்புக்குள்ள எல்லாரையும் விட்டுட்டு போயிடுவா. சாப்பாடு, டீ எல்லாம் அவாளே தருவா.  வர்ற சனிக்கிழமை புறப்பட தயாரா இருங்கோ. இதுதான் நான் சொன்ன சர்ப்ரைஸ். என்ன எல்லாருக்கும் ஓகே வா?”

சூப்பர் அண்ணா. அஞ்சு டிக்கெட் தானா!!!! ஆனா நம்ம ஏழு பேர் இருக்கோமே!!!என்று கேட்டான் பவின்

மிருதுக்கு உடம்பு சரியில்லை அதனால் அவள் டிராவல் பண்ணக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்கா. ஸோ நானும் மிருதுவும் வரலை நீங்க அஞ்சு பேரும் போயிட்டு வாங்கோ. சதீஷ் உங்களை நன்னா பார்த்துப்பான்

மாப்ள நீங்க எல்லாரோடையும் போயிட்டு வாங்கோ நான் மிருதுவோட இங்கே இருக்கேன்என்றாள் அம்புஜம்

நோ நோ அதெல்லாம் வேண்டம். என் ஆத்துக்காரியை நான் பார்த்துக்கறேன் நீங்க எல்லாரும் போய் எல்லா இடத்தையும் பார்த்துட்டு வாங்கோ. நாங்க இன்னும் ரெண்டு வருஷம் இங்க தானே இருப்போம் அப்பறமா போயிண்டா போச்சு. நீங்க எல்லாருமா ஒன்னா மறுபடியும் எப்போ வருவேங்கள்ன்னு உங்களுக்கே தெரியாது. அதுனால ஒண்ணும் சொல்லாம போயிட்டு என்ஜாய் பண்ணிட்டு வாங்கோ.

சரி அப்படியே பண்ணறோம்

அப்பாடா குஜராத் வந்து ஒண்ணுமே பார்க்காம ஊருக்கு கிளம்பப்போறேனேன்னு கவலையா இருந்தது. நல்ல வேளையா இந்த டிரிப் கிடைச்சிருக்கு. ஐ ஆம் ஹாப்பிஎன்று தனது மகிழ்ச்சியை சத்தமாக பகிர்ந்துக் கொண்டான் ப்ரவின்.

நீ பண்ணின காரியத்துக்கு உனக்கு டிக்கெட் எடுத்திருக்கக்கூடாது தான்…. பரவாயில்லை போயிட்டு வா. இனி அடுத்த தடவை இப்படி பண்ணாதே சரியா

ஓகே அண்ணா. இனிமேல் அப்படி பண்ண மாட்டேன்” 

ஓ !!! அப்போ இதெல்லாம் நம்ம ப்ரவினுகாக தானா!!!என்று கூறி கண்ணடித்தாள் மிருதுளா

ஆமாம் பையன் ஒண்ணுமே பார்க்கலையேன்னு ரொம்ப கவலைப் பட்டதைப் பார்த்து நான் கலங்கிட்டேன் தெரியுமா!!

அண்ணா அன்ட் மன்னி ப்ளீஸ் என்னை கிண்டல் பண்ணினது போதுமே. ஐ ஆம் சாரி ரிரிரிரி

அது!!! நல்ல புள்ளைக்கு அழகு

அம்மா உனக்கு சாப்பாடு நான் கட்டித் தரேன் கவலைப்படாதே

ஏன் மிருது அவாளே டிஃபன், சாப்பாடு அன்ட் டீ எல்லாம் தருவாளே. அப்பறம் என்னத்துக்கு கட்டிண்டு போகணும்??”

நவீ அதை அம்மா சாப்பிட மாட்டா. நிச்சயம் அதில் வெங்காயம், பூண்டு, மசாலா எல்லாம் இருக்கும்

ஆமாம் இருக்கும் அதுனால என்ன?”

அதெல்லாம் சாப்பட மாட்டா

ஓ!!! அப்படீன்னா கட்டிண்டு தான் போகணும்

நீ ஒண்ணும் செய்யண்டாம் மிருது நானே செஞ்சுண்டு உனக்கும் அவருக்கும் வச்சுட்டும் கிளம்பறேன். நீ அதெல்லாம் நினைச்சு கவலைப்படாதே சரியா. நீ நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ.

அம்மா ஒரு நாள் டூர் தான் மா. என்னமோ பத்து நாள் போற மாதிரி பேசற!!

அதுதானேஎன்றான் நவீன்

இவ்வாறு பேசிக்கொண்டே அந்த டூரில் எந்தெந்த இடங்களுக்கெல்லாம் கூட்டிச்செல்வார்கள் அங்கே எவை பார்க்க வேண்டிய முக்கியமானவை என்பதைப் பற்றி எல்லாம் உறையாடிக் கொண்டே அனைவரும் உறங்கலானார்கள்.

மறுநாள் விடிந்ததும் நவீன் ஆபீஸுக்கு சென்றான். மூன்று பசங்களும் எழுந்து குளித்து டிஃபன் சாப்பிட்டப் பின், ப்ரவின்..

மன்னி நானும் பவினும் அப்பா அம்மாக்கு ஃபோன் பண்ணிட்டு வரோம்.

நான் வரலை நீ போய் பண்ணிட்டு வா

டேய் பவின் நீயும் என்கூட வர அவ்வளவுதான்.

ஹேய் ப்ரவின் நானும் உங்க கூட வரேன். நான் மட்டும் இங்க உட்கார்ந்துண்டு என்ன பண்ண போறேன்? கம் லெட்ஸ் கோ

அதுக்கில்ல வேனு நாங்க எங்க பேரன்ட்ஸோட பேச போறோம்… அங்க நீ வந்து என்ன பண்ணுவ?”

நான் பாட்டுக்கு ஒரு சேர்ல உட்கார்ந்துக்கறேன். நீங்க பேசி முடிச்சிட்டு மறுபடியும் நாம திரும்பி வந்திடலாம்

இல்ல அது வந்து…என ப்ரவின் இழுக்கையில் சட்டென மிருதுளா‌….

ஹலோ ப்ரவின் இதுக்கு ஏன் இப்படி இழுக்கற.‌‌..‌ அன்னைக்கு நானும் என் பேரன்ட்ஸும் பேச வாக்கிங் போனப்போ தானும் வந்தே ஆவேன்னு பவின் சொன்னான். அதுக்கு நாங்க யாருமே வேண்டாம்னோ இல்ல இவ்வளவு எல்லாம் யோசிக்கலையே …கூட கூட்டிண்டு போனோமில்லையா பவின்?”

சரி சரி நீயும் வா வேனு போகலாம்

என வேண்டா வெறுப்பா சொன்னான் ப்ரவின். அதைக் கேட்ட வேனு..

பரவாயில்லை நீங்க ரெண்டு பேரும் ஏதோ ரகசியம் பேச போறேங்கள் போல அதுதான் நான் வர்றது ப்ரவினுக்கு பிடிக்கலை. நோ ப்ராப்ளம் நீங்களே போயிட்டு வாங்கோ. நான் இங்கேயே டிவி பார்த்துண்டிருக்கேன்

அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை வேனு. சரி பவின் வாயேன்டா…இதோ நாங்க ஒரு பத்து நிமிஷத்துல வந்திடறோம்

என்று கூறி வந்த நாளிலிருந்து அன்று தான் மிருதுளாவை அவள் குடும்பத்தினருடன் தனியாக விட்டனர் ப்ரவினும் பவினும். அதுவும் பத்து நிமிஷம். அவர்கள் இருவரும் வெளியே சென்றதும் அம்புஜம் மிருதுளாவிடம்….

இவா சாமர்த்தியமான பசங்கள் டீ மிருது. நம்மள பேசிக்க விடாம ஒருத்தன் மாத்தி ஒருத்தன் காவலுக்கு இருந்துட்டு இப்போ அவாளுக்குன்னா நம்ம வேனுவ கழட்டி விட்டுட்டு என்ன அழகா போறதுகள் பாரேன்!!!!  உன் மாமியார் இந்த பசங்கள இப்படி வேவு பாக்க அனுப்பினதால நமக்கு ஒரு பாதிப்பும் இல்லை ஆனா இதெல்லாம் அவாளுக்கே இதே பசங்களால திரும்பும் பார்த்துக்கோயேன்.

என்ன சொல்லற மா புரியும்படி சொல்லு

இன்னிக்கு நம்மள கவனிக்க இந்த புள்ளகள அனுப்பறாளே நாளைக்கு இவாளுக்கு கல்யாணமானா அவா பெத்தவா எப்படிப்பட்டவா எப்போ யாரை எங்க எதுக்கு அனுப்புவா என்பதெல்லாம் இந்த பசங்களுக்கு அத்துப் படியாயிருக்கும் ஸோ அதுக்கு ஏத்தாமாதிரி நடந்துக்கமாட்டாளோ!!!! அது ஏன் அந்த சமத்து மாமிக்கும் மாமாக்கும் தோனலை?”

ஓவர் சமத்தா இருந்தா ஏதாவது ஒரு இடத்தில் சறுக்கத்தான் செய்யும். இதிகாசத்ல கூட அதி சாமர்த்தியமாக தன்னை நினைச்சிண்ட எத்தனையோ அதிபுத்திசாலிகள் கடைசியில் அவா வெட்டின குழிக்குள்ளயே விழுந்து பொதஞ்சு போகலையா !!! அது மாதிரிதான் மா…விடு விடு ஃப்ரீயா விடு மம்மீ

நாம நாலு பேரும் கார்ட்ஸ் விளையாடலாமா? ” என்று மிருதுளா கேட்க

ஓ எஸ் நான் ரெடிஎன வேனு சொல்ல

நான்கு பேருமாக கார்ட்ஸ் விளையாட்டில் மூழ்கினர். ப்ரவினும் பவினும் வீட்டிலிருந்து ஃபோன் பேச வெளியே சென்று ஒரு மணி நேரமாகியும் அவர்கள் வராததால் மிருதுளா வேனுவைச் சென்று பார்த்து வரும் படி சொல்ல அதற்கு வேனு…

போ மிருதுக்கா. நான் வரேன்னு சொன்னப்போ அவளோ தயங்கினா இல்ல…இப்போ என்னத்துக்கு நான் அவாள தேடிண்டு போகணும். அதெல்லாம் வருவா வருவா

டேய் அவா தான் அப்படின்னா நாமளும் அப்படி இருக்கனும் ன்னு இல்லை டா. ப்ளீஸ் ஒரு எட்டுப் போய் பார்த்துட்டு வாடா வேனு.

சரி சரி போயிட்டு வரேன்

என்று வேனு கிளம்பி வெளியே செல்லவும் ப்ரவினும் பவினும் வீட்டு வாசலின் இரும்பு கேட் ஐ திறந்து உள்ளே வரவும் சரியாக இருந்தது. அவர்களைப் பார்த்ததும் வேனு திரும்பி வீட்டினுள் சென்று…

மிருதுக்கா அவா ரெண்டு பேரும் வந்தாச்சு

ஹேய் ப்ரவின் அன்ட் பவின் என்ன? பத்து நிமிஷத்துல வர்றதா சொல்லிட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வந்திருக்கேங்கள்!!! அப்படி என்னப்பா பேசினீங்க இவ்வளவு நேரமா? பணம் பத்தித்தா?”

அட போங்கோ மன்னி..அங்க ஏதோ லைன் ல ப்ராப்ளமாம் ஒரு இருபது நிமிஷத்துல சரியாயிடும்ன்னு வேயிட் பண்ண சொன்னா சரினுட்டு வேயிட் பண்ணறோம் பண்ணறோம் இன்னும் சரியாகலை அதுனால கிளம்பி வந்துட்டோம். நீங்க இந்த ஃப்ரிட்ஜ் வாங்கினதுக்கு பேசாம ஒரு ஃபோன் வாங்கிருக்கலாம்” 

மிருதுளா மனதிற்குள்கடவுள் இருக்கிறார் டாஎன்று ரஜினி ஸ்டைலில் சொல்ல அவளுக்கே சிரிப்பு வந்து அதை அடக்க முடியாமல் சிரித்துவிட அதைப் பார்த்த ப்ரவின்..

என்ன மன்னி நான் ஜோக்கா சொல்லறேன் !!! சிரிக்கறேங்கள்

ச்சே ச்சே நான் எதையோ நினைச்சேன் சிரிப்பு வந்துடுத்து…நீ சொன்னதுக்காக இல்லைப் பா…அதுவும் இல்லாம உனக்கு ஃபோன் வேணும்ன்னா உங்க அண்ணா கிட்ட கேளு அது தப்பே இல்ல ஆனா ஃப்ரிட்ஜுக்கு பதில் அத வாங்கிருக்கலாம் ன்னு எல்லாம் சொல்லாதே. எங்களுக்கு எது அத்தியாவசிய தேவையோ அதைத்தான் நாங்க வாங்குவோம். அதுவுமில்லாம அது என் அப்பா அம்மா எங்களுக்கு ஆசையா வாங்கித் தந்திருக்கறது அதை நீ இப்படி சொன்னது என் மனசுக்கு கஷ்ட்டமா இருக்கு.

நான் உங்க மனசு கஷ்டப்படறா மாதிரி எதுவும் சொல்லலைன்னு எனக்குப் படறது

அப்படியே இருக்கட்டும் நோ இஷுஸ். சரி எல்லாரும் சாப்பிட வாங்கோஎன அந்தப் பேச்சுக்கு அங்கேயே முற்றுப்புள்ளி வைத்தாள் மிருதுளா. எடுத்து சொல்லியும் தான் சொன்னதில் தவறு ஏதுமில்லை என்றெண்ணும் ப்ரவினிடம் எது சொன்னாலும் பிரயோஜனமில்லை என்பதை உணர்ந்ததால் அவன் நினைப்பை அவனிடமே விட்டுவிட்டு தனது அடுத்த வேலையில் இறங்கி அனைவருக்கும் அன்னம் பரிமாறினாள். 

உணவு உண்டபின் மிருதுளா அசந்து தூங்கலானாள். அப்போது டிவி ரிமோட்டை எடுத்து டிவியை ஆன் செய்யப் போன பவினிடம் அம்புஜம் மெல்லிய குரலில்….

பவின் வேண்டாம் பா. உங்க மன்னிக்கு உடம்பு சரியில்லை இல்லையா. அவள் நாம வந்ததிலிருந்து இன்னைக்கு  தான் மத்தியானம் தூங்கறா. நல்லா அசந்து தூங்கறா நீ டிவி போட்டு அவள எழுப்பிடாதப்பா.

என்ன மாமி இது…டிவி பார்க்கக் கூடாதா? பின்ன எதுக்கு டிவி

மெதுவா பேசேன் பவின்

இந்தாங்கோ உங்க டிவி ரிமோர்ட். நான் பார்க்கலை. போர் அடிக்கறதேன்னுட்டு ரிமோர்ட்டை எடுத்தேன்…இட்ஸ் ஓகே

அம்புஜத்திற்கு அப்பாடா தன் கர்ப்பிணி பெண்ணை டிவி சத்தத்திலிருந்து காப்பாத்தியது பெரிய சாதனைப் போல எண்ணி அன்று அந்த டிவியை வாங்காமல் இருந்திருந்தா இந்த பிரச்சினையை தவிர்த்திருக்கலாமோ என்றும் ஊருக்கு கிளம்புவதற்கு ஒரு நாள் முன்னாடி வாங்கிருந்தா போதுமோ என்றும் தோன்றியது. 

நவீன் ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வரும்வரை தூங்கினாள் மிருதுளா. நவீன் வருவதற்கு சற்று முன் எழுந்து முகம் கை கால் அலம்பி விளக்கேற்றி வாசலில் காத்திருந்தாள். நவீன் வந்ததும் குட் ஈவினிங் சொல்லிவிட்டு உள்ளே காபி போடச் சென்றாள். அவளைப் பார்த்துக் கொண்டே பின்னால் சென்ற நவீன் …

ஏய் மிருது உன் முகமெல்லாம் ஏன் வீங்கினா மாதிரி இருக்கு?”

அதுவா!! நான் ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு தான் மத்தியானம் நல்லா அசந்து  தூங்கிருக்கேன் அதுதான்னு நினைக்கறேன்

ஆமாம் அண்ணா நீ வர்றத்துக்கு ஒரு பத்து நிமிஷம் முன்னாடி தான் மன்னி எழுந்துண்டா. அவா தூங்கறதுனால என்னால டிவி கூட பார்க்க முடியலை. அம்புஜம் மாமி… மன்னி தூங்கறான்னுட்டு என்னை டிவி பார்க்கக்கூடாதுன்னுட்டா. ஒரே போர்!!

அதுக்கில்லை அவளே அசந்து தூங்கறா எங்கடா டிவி சத்தம் அவளை தூக்கத்திலிருந்து எழுப்பிடுமோன்னு தான் வேண்டாம்ன்னு சொன்னேன். இந்த மாதிரி இருக்கும் போது தூங்கினா எழுப்பப்படாதுன்னுட்டு சொல்லுவா அதுதான்…

அதுனால என்ன இட்ஸ் ஓகே. அவன் தான் ஏதோ சொல்லறானா நீங்களும் அதுக்கு விளக்கம் எல்லாம் கொடுத்துண்டு வரேளே!!!! ஒரு இரண்டு மணி நேரம் டிவி பார்க்கலைன்னா தான் என்ன? ஏன்டா பவின்?”

இரண்டு மணி நேரமில்லை நாலு மணி நேரம் !!!

இதைக்கேட்டதும் அம்புஜம் மனதிற்குள்

பாவி பாவி என் பொண்ணு தூங்கினத எல்லாம் கணக்கு போட்டுண்டு இருக்கானே. பகவானே நீ தான் என் பொண்ணா காத்து ரக்ஷிக்கணும்

சரி சரி விடுங்கோ விடுங்கோ நான் தூங்கினதுக்கெல்லாம் பஞ்சாயத்த கூட்டுவேங்களா என்ன?.. இந்தாங்கோ நவீ காபி. குடிச்சிட்டு இந்த பட்சணங்களை சாப்ட்டு நீங்க க்ளாஸுக்கு கிளம்புங்கோ

ஓகே எஜமானி மா

அன்று க்ளாஸுக்கு சென்று வந்து இரவு உணவருந்தி விட்டு அனைவருடனும் சற்று நேரம் உரையாடிய பின் ஒருவருக்கொருவர் குட் நைட் சொல்லி விட்டு உறக்கத்தில் ஆழ்ந்தனர்.

ஒருவரின் உண்மையான குணத்தை  திரையிட்டோ, அரிதாரம் பூசியோ 

பல நாள் மறைத்து வைக்க முடியாது

திரை ஒரு நாள் விலகும் போது

நரியின் சாயம் வெளுத்தது போல

அரிதாரமும் வெளுத்து போகும் போது

நிஜமான சுவரூபம் வெளிப்படும்.

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா…என்பதைப் போல கால் கொண்டு ஆடவேண்டிய பிள்ளைகளை நூல் கொண்டு ஆடும் பொம்மைகளாக ஊரிலிருந்து ஆட்டிவிக்கின்றனர் வித்தகர்களான மூத்த தம்பதியினர். அன்று பொம்மைகள் வித்தகர்களுடன் நூல் கொண்டு செய்தி பரிமாற்றம் பண்ண முடியாமல் தவிக்க சற்றே நூல் தளர பொம்மைகளின் உண்மையான நிறம், வடிவம் அனைத்தும் மெல்ல வெளிவர அதனால் சில பல சங்கடங்களும், பேச்சுவார்த்தைகளும், பஞ்சாயத்தும் நடைபெற அவை அனைத்துக்கும் நம்ம மிருதுளா  அன்றைய தினம் முற்றுபுள்ளி வைத்தாலும் இன்னும் எட்டு நாட்கள் உள்ளதே!!!! 

தொடரும்….

 இரவு எப்போது முடியுமோ !!! என்ற யோசனையில்  நவீன் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டே காலை பொழுது விடிவதற்காக காத்துக்கொண்டிருந்தான்.  இரவு முழுவதும் தூக்கமின்றி, காலையில் ஆதவனின் ஒரு தலை முடியான கதிர் வீச்சை கண்டதும் எழுந்து எவரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்ற எண்ணத்தில் மெதுவாக நடந்து  குளித்து முடித்து குளியலறையிலிருந்து வெளியே வந்ததும் மிருதுளா போடும் காபி வாசம் அவனை அடுப்படிக்கு இழுத்துச் சென்றது. அங்கே மிருதுளா காபி போட்டுக்கொண்டிருந்தாள். மெல்ல அவளருகே சென்று …

ஹாய் மிருது. குட் அன்ட் ஹாப்பி மார்னிங்.

குட் மார்னிங் நவீ.  காபி குடிச்சிட்டு தான் எப்பவும் குளிக்க போவேங்கள் ஆனா இன்னைக்கு என்ன!! சார் குளிச்சிட்டு காபிக்கு வந்திருக்கார்!!!

நான் நைட் ஃபுல்லா தூங்கவே இல்லை. அதுதான் சீக்கிரமா குளிச்சிட்டேன். ஆமாம் நீ ஏன் சீக்கிரம் எழுந்துண்ட?? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிருக்க வேண்டியதுதானே?”

உங்களுக்கு மட்டும் தான் தூக்கம் வரலைன்னு நீங்க நினைச்சுண்டா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?”

ஹேய் அப்போ நீயும் தூங்கலையா?”

ஆமாம். எனக்கு மட்டும் ஆசை, பதற்றம்  இல்லையா பின்ன?”

ஆனா டைம் ஆறு தான் ஆகறது இன்னும் மூன்று மணிநேரமிருக்கே. எப்போதும் போல இன்னைக்கு காபி சூப்பர்

இவர்கள் இருவரும் அடுப்படியில் உரையாட அதற்குள் அம்புஜமும் ராமானுஜமும் எழுந்து குளித்துவிட்டு அமர்ந்திருந்தனர். நவீன் காபியை ருசித்துக்கொண்டே ஹாலில் வந்ததும் தனது மாமனார் மாமியார் அமர்ந்திருப்பதைப் பார்த்து …

என்ன நீங்க ரெண்டு பேரும் இப்பவே குளிச்சிட்டேள். மிருது இவாளும் எழுந்துண்டுட்டா. இவாளுக்கும் காபி போட்டுண்டு வா

இல்லை பரவாயில்லை. நானே எங்களுக்கு போட்டுக்கறேன் மிருது. நீ போய் உட்கார்ந்து உன் காபியை குடி போ.  நீங்க ரெண்டு பேரும் மும்முரமா பேசிண்டிருந்தேங்களா… சரி…என்னத்துக்கு டிஸ்டேர்ப் பண்ணனும்னு நாங்க குளிச்சிட்டு வந்துட்டோம்

என கூறிக்கொண்டே இரண்டு காபி போட்டுக்கொண்டு ஹாலுக்கு வந்து ஒன்றை தன் கணவரிடம் கொடுத்துவிட்டு மற்றொரு காபி தம்பளருடன் அமர்ந்தாள் அம்புஜம். மிருதுளா அவர்களிடம் ..

அப்பா அம்மா நாம எல்லாருமா இன்னைக்கு ஒரு ஒன்பதரை மணிக்கு கேன்டீன் கடைக்கு போகணும் அதனால ரெடி ஆகிடுங்கோ. நீங்க எல்லாரும் கடையில் பொருட்களை பார்த்துண்டு இருங்கோ. நாங்க டாக்டர்ட்ட செக்கப்புக்கு போயிட்டு வந்திடரோம் அப்புறம் நீங்க பார்த்து வச்ச பொருளெல்லாம் வாங்கிண்டு ஆத்துக்கு வருவோம் ஓகே வா.

ஓகே மா.

யாருக்கு உடம்புக்கு என்ன? ஏன் டாக்டர்ட்ட போகணும்?”

நான் உங்களுக்கு அப்பறமா சொல்லறேன். எல்லாம் நல்லதுக்கு தான்

ஓகே

இவர்கள் அனைவருமாக காபி வித் மிருதுளா போல அமர்ந்து பேசி முடித்து கூட்டத்தைக் கலைக்கும் போது மணி எட்டானது. அதுவரை மிருதுளா படுத்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தாள். இப்படியே உட்கார்ந்திருந்தால் சரிவராது என்று கூறிக்கொண்டே  அம்புஜம் அனைவருக்கும் டிஃபன் செய்யத்துவங்கினாள். மிருதுளா குளித்து ரெடி ஆகிக்கொண்டிருந்தாள் நவீன் தம்பிகள் பவினையும் வேனுவையும் எழுப்பி கேன்டீன் செல்வதற்கு ரெடியாக சொன்னான். அனைவரும் காலை உணவருந்தியதும்  தயார் ஆனார்கள். நவீன் தனது பைக்கில் சென்று மெயின்ரோட்டிலிருந்து  ஒரு ஆட்டோவை அழைத்து வந்து…

மிருதுளா நீ வேனு, அப்பா, அம்மாவோட ஆட்டோல வா. நானும் பவினும் பைக்கல வரோம் சரியா

ஓகே அப்படியே ஆகட்டும் மை லார்ட்

விட்டு விடுவாரா நம்ம ஒற்றன் பவின்!!!

அண்ணா நான் ஆட்டோல வரேன் நீ வேனுவ பைக்ல கூட்டிண்டு வா

டேய் அவா ஆட்டோல வரட்டும்டா.

சரி..சரி விடுங்கோ இதுக்கு ஏன் தேவையில்லாம ஒரு ஆர்க்யூமென்ட். வேனு நீ அதிம்பேரோட பைக்ல வா. பவின் நீ எங்களோட ஆட்டோலயே வா.” 

அட்டோ அவர்களை  கேன்டீன் வளாகத்திற்குள் இறக்கி விட்டு பணத்தை வாங்கியதும் அங்கிருந்து கிளம்பியது. நவீன் பைக்கை ஸ்டான்டில் நிப்பாட்டி விட்டு வேனுவுடன் வந்து மற்றவர்களோடு சேர்ந்து கேன்டீனுக்குள் நுழைந்தான்‌. மிருதுளா காலையில் கூறியது போலவே அவர்களை அங்கே விட்டு விட்டு நவீனுடன் ஹாஸ்பிடல் சென்றாள். அவர்கள் செல்வதைப் பார்த்த பவின்…

அண்ணா, மன்னிஎன கூப்பிட அதற்கு அம்புஜம்…

மிருதுளாக்கு டாக்டர்ட்ட போணுமாம் அதுனால அவா ஹாஸ்பிடல் போறா பவின். அவா வர வரைக்கும் நாம இங்க இருக்குற பொருட்களைப் பார்ப்போம் வா

மன்னிக்கு என்ன ஆச்சு? அம்மாட்ட சொன்னாலா

ஒண்ணுமில்லை நேத்து கரை அணைல வாந்தி எடுத்தாளோனோ அதப் பத்தி தான் கேட்க போயிருக்கா. அதெல்லாம் உங்க அம்மாட்ட சொல்லுவா கவலைப்படாதே வா இந்த ஃப்ரிட்ஜ் நல்லா இருக்கான்னு சொல்லு

என்று ஒரு வழியாக பெருமூச்சு விட்டுக்கொண்டே பவினை கூட்டிச்சென்றாள் அம்புஜம். ஹாஸ்பிடலில் டென்ஷனாக அமர்ந்திருந்தனர் நவீனும் மிருதுளாவும். டாக்டர் ரூமிலிருந்துமிருதுளாஎன பெயர் கூப்பிடப்பட்டதும் …

எஸ் ஆம் ஹியர். மே ஐ கம் இன்

எஸ் கம்

தாங்யூ டாக்டர்

(டாக்டரும் மிருதுளாவும் ஹிந்தியில் உரையாடிதை எனது வாசகர்களுக்காக தமிழில் )

சொல்லுமா என்ன பிரச்சினை

பிரச்சினை ஒண்ணும் இல்லை டாக்டர். எனக்கு நாள் ஒரு மாசம் தள்ளி போயிருக்கு அது தான் டெஸ்ட் பண்ணிக்கலாம்னு வந்திருக்கேன்

ஓ ஓகே. நியூலி மாரிட்டா

எஸ் டாக்டர்

கல்யாணமாகி எவ்வளவு மாதம் ஆகிறது

நாலு மாசம் ஆகறது டாக்டர்

ஓகே உள்ள போய் படுங்க இதோ நான் வந்து டெஸ்ட் பண்ணறேன்

டாக்டர் மிருதுளாவை பரிசோதனை செய்தார் …பின் 

இட் ஈஸ் பிரக்னென்சீ பட் ஒரு நாற்ப்பத்தைந்து நாளாவது ஆகட்டும் அப்பறம் ஸ்கேன் செய்து கன்பார்ம் பண்ணறேன்

ஏன் டாக்டர் ஏதாவது ப்ராப்ளமா?”

நோ நோ அதெல்லாம் ஒண்ணுமில்லை. டு நாட் வரி. இன்னும் ஒரு பதினைந்து நாள் தானே இருக்கு. நீங்க மிருதுளாவை ஒரு டூ வீக்ஸ் கழிச்சு மறுபடியும் கூட்டிட்டு வாங்க சில டெஸ்டெல்லாம் எடுக்கணும். அதெல்லாம் எடுத்துட்டு அதோட ரிசல்ட்டை பார்த்துட்டு  சொல்லறேனே டில் தென் ப்ளீஸ் வேயிட். கீப் யுவர் செல்ஃப் ஹாப்பி மிருதுளா. ஓகே தென் வில் மீட் யூ ஆஃப்டர் டூ வீக்ஸ். டேக் கேர்

ஷுவர்…தாங்யூ டாக்டர். எஸ் ஐ வில்.

டாக்டர் ரூமிலிருந்து வெளியே வந்ததும் மிருதுளா கண்ணில் கண்ணீர் தேங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்த நவீன்….

ஏய் மிருது என்ன ஆச்சு

ஏதாவது ப்ராப்ளமா இருக்குமோ….அதுனால தான் வேயிட் பண்ண சொல்லறாளா டாக்டர். நான் டெஸ்டுக்கு போயிருந்தப்போ உங்க கிட்ட ஏதாவது சொன்னாலா

மிருது நீ ரொம்ப யோசிக்கற. என்கிட்ட நீ பிரக்னென்ட்ன்னு தான் சொன்னா. ஆனா கன்பார்ம் பண்ண இன்னும் டூ வீக்ஸ் வேயிட் பண்ண சொல்லிருக்கா அவ்வளவு தான். உன் முன்னாடி தானே கவலைப்படறதுக்கு ஒண்ணுமே இல்லை பீ ஹாப்பின்னு சொன்னா. கண்ண தொட மொதல்ல. கம் ஆன் சியர்அப் மிருது. வா அவா எல்லாரும் நமக்காக காத்துண்டு இருப்பா

நவீனின் பேச்சில் சற்று தெம்பாகி கண்களைத் துடைத்துக் கொண்டாள் மிருதுளா. பின் இருவருமாக கேன்டீனுக்குள் சென்றனர். அங்கே அம்புஜம் மிருதுளாவைப் பார்த்ததும் ஓடிச் சென்று ….

என்ன மா டாக்டர் என்ன சொன்னா

பிரக்னென்சி தானாம் ஆனா இன்னும் ரெண்டு வாரம் கழிச்சுத் தான் சில டெஸ்டுகள் எடுத்து கன்பார்ம் பண்ணுவேன்னு சொல்லிட்டா…ஏதோ நாற்பத்தைந்து நாள் ஆகணுமாமே அதுனாலன்னு சொல்லறா

ஓ !!! சரி சரி ரெண்டு வாரம் தானே. அதெல்லாம் ஓடிடும். அடுத்த சனிக்கிழமை வரைக்கும் நாங்க இருப்போமே அதுனால எல்லா வேலைகளையும் நாங்க பார்த்துப்போம் நீ நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ சரியா. எல்லாம் நல்லதாகவே நடக்கும். வா நாங்க உங்களுக்கு ரெண்டு மாடல் ஃப்ரிட்ஜும் டிவியும் செலக்ட் பண்ணிருக்கோம் அதில் எது உனக்கும் மாப்ளைக்கும் பிடிச்சிருக்கோ அதை பில் பண்ணலாம் வா

இதுதான் நாங்க செலக்ட் பண்ணிருக்கற இரண்டு பிராண்டு ப்ரிட்ஜ் அன்ட் டிவி. இதுல உங்களுக்கு எது பிடிச்சிருக்குன்னு சொல்லுங்கோ…இங்க நீங்க சொன்னா மாதிரி ரேட் எல்லாம் கம்மியா தான் இருக்கு.என ராமானுஜம் நவீனிடம் சொல்ல

தொன்னூறுகளில் பிரபலமான டிவியானஅக்கம்பக்கத்து வீட்டுக்கார்களின் பொறாமை, உரிமையாளரின் பெருமைஎன்ற வாசகத்துடன் சிரித்துக் கொண்டே நம்மை பார்க்கும் சிவப்பு கொம்பு மனிதன் உள்ள பிராண்ட் டிவியையும்நீர்ச்சுழி பிராண்ட் ஃப்ரிட்ஜையும் தேர்ந்தெடுத்தனர் நவீனும் மிருதுளாவும். நவீன் தனது மாமனாரிடம்….

இங்க எங்களுக்கு விலை கம்மியா தான் தருவா. உங்களுக்கு ஏதாவது வாங்கணும்னா வாங்கிக்கோங்கோ.

எங்களுக்கு ஒண்ணும் வேண்டாம். அப்படி வாங்கினாலும் எப்படி தூக்கிண்டு அவ்வளவு தூரம் பிரயாணம் பண்ணறது. அதெல்லாம் சிரமம்

ஓகே அப்போ இதை மட்டும் பில் பண்ணலாமா

ஆமாம். பண்ணலாம். இந்தாங்கோ பணம்

என்கூட பில்லிங் கவுன்டருக்கு  வாங்கோ நீங்களே உங்க கையால குடுங்கோ.

அனைவருமாக ஃப்ரிட்ஜ் மற்றும் டிவி ஆர்டர் கொடுத்துவிட்டு அருகிலிருந்த குட்டி கடையில் பிரெட் பக்கோடாவும் ஒரு டீயும் அருந்தினார்கள். அம்புஜம் டீ மட்டும் குடித்தாள். அங்கிருந்து மீண்டும் ஒரு ஆட்டோவில் அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு வேனுவுடன் பைக்கில் ஆட்டோ பின்னாலேயே சென்றான் நவீன். 

வீடு வந்து சேர்ந்ததும் ஆட்டோவை கட் செய்து விட்டு பார்த்தால் நம்ம ப்ரவின்… வீட்டு வாசலில் அமர்ந்திருந்தான். அவனை பார்த்ததும் மிருதுளா…

ஹலோ ப்ரவின் இப்பவாவது  உங்க சித்தி ஆத்துலேருந்து நம்ம ஆத்துக்கு வர மனசு வந்துதா

எங்க எல்லாருமா போயிட்டு வரேங்கள்?”

நாங்க எல்லாரும் கேன்டீனுக்கு போயிட்டு அப்படியே பிரெட் பகோடா அன்ட் டீ குடிச்சிட்டு வரோம்

என கூறிக்கொண்டே கதவைத் திறந்தாள் மிருதுளா. 

வா வா ப்ரவின். எல்லாரும் உள்ள வாங்கோ

ஹாய் ப்ரவின் வெல்கம் பேக்என்றான் வேனு.

என்ன ?? மன்னி நீங்கெல்லாம் கேன்டீனுக்கு போயிட்டு வர்றதா சொல்லறா ஆனா யாரு கையிலேயும் பையைக் காணமே

அவா வாங்கியிருக்கறது பையில அடங்காது வண்டில மத்தியானத்துக்கு மேல வரும்என்றான் பவின்

அப்படி என்ன வண்டில வர்றது

அதுவா அப்பாவும் அம்மாவும் ஃப்ரிட்ஜ் அன்ட் டிவி வாங்கியிருக்கா…என மிருதுளா முடிப்பதற்குள் ப்ரவின் முந்திக்கொண்டு…

என்னது டிவியும், ஃப்ரிட்ஜுமா!!! அதை எப்படி ஊருக்கு எடுத்துண்டு போவா

ஹலோ!!!  ப்ரவின் அது எங்க அக்காவுக்கும் அத்திம்ஸ்க்குமாக எங்க அப்பா அம்மா கிஃப்ட்டா வாங்கிக் குடுத்திருக்கா பிரதர்

ஓ!!! அப்படியா

அப்படி தான்

ஏன்டா ப்ரவின்! என்ன என்கிட்ட கூட சொல்லாம நீயா அதுவும் அங்க சித்தி ஆத்துல வச்சு அங்க தங்க போறதா சொல்லற….

ஆமாம் அண்ணா எனக்கு அன்னைக்கு காலை ல தான் தோனித்து சரின்னு டிரெஸெல்லாம் பாக் பண்ணிண்டுட்டேன்

அதெல்லாம் சரி …எல்லாரும் ஒன்னா தானே அவா ஆத்துக்கு  போனோம் அப்ப பஸ்ஸிலயாவது சொல்லிருக்கலாமில்லையா

நான் பவின்ட்ட சொன்னேனே…

ஓ!! இது பவின் சாருக்கும் தெரியுமா!!! ஆனா ஒண்ணுமே தெரியாத மாதிரி இருந்தானே

சரி சரி விடுங்கோ நவீன். ஆனா ப்ரவின் நீ எங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர்ட்ட சொல்லியிருக்கணும். பரவாயில்லை அடுத்த தடவை சொல்லிடு. ஹேய் பவின் !!! நீ வாயே தொறக்கலையே!!!! ப்ரவின் நீ சொல்லு எங்கெங்கே உன் சித்திப் பொண்ணுகளோட போன?”

பக்கத்துல இருந்த பார்க்குக்கு அப்பறம் அவா அப்பார்ட்மெண்ட் கீழே இருக்கற ஐஸ்கிரீம் ஷாப்புக்கு

அவ்வளவு தானா வேற எங்கயுமே போகலையா?”

வேற எங்க போகணும்?”

டேய் ப்ரவின் நாங்க எல்லாருமா சாப்பாடெல்லாம் கட்டிண்டு அத்திம்ஸோட நண்பன் கார்ல ஒரு நாலஞ்சு இடம் போயிட்டு வந்துட்டோம். செம ஜாலியா இருந்தது இல்ல பவின்

ஆமாம் ஆமாம்” 

என்ன ஆமாம்?? அண்ணா நான் வர்ற வரைக்கும் வேயிட் பண்ணிருக்கலாமில்ல

நான் அண்ணாட்ட சொன்னேன்என்றான் பவின். அதற்கு நவீன்…

ஏதோ அன்னைக்கு காலை ல தான் எனக்கு தோனித்து ஒரு டிரிப் போகலாம்னு உனக்கு தோனித்தே அதே மாதிரி….லீவு கேட்டேன் கிடைச்சுது கிளம்பிட்டோம். சிம்பிள்

என்ன அண்ணா ஊருக்கு போனதும் என் நண்பர்கள் குஜராத்ல என்ன பார்த்தன்னு கேட்டா நான் என்னத்த சொல்லுவேன்…இப்படி பண்ணிட்டியே

உன் சித்திப் பொண்ணுகள பார்த்தேன் அவா கூட பார்க்குக்கு போனேன் ஐஸ்கிரீம் சாப்பிட்டேன்னு சொல்லுஎன்றாள் மிருதுளா. 

என்ன கிண்டல் பண்ணறேங்களா? சித்தி ஆத்துக்கு ஒரு ஃபோன் பண்ணி சொல்லியிருந்தா நான் உடனே கிளம்பி வந்திருப்பேனே

எங்களுக்கு தோனலை ப்ரவின் வெரி சாரிஎன்றாள் மிருதுளா.

எவரிடமும் சொல்லாமல் தானே ஒரு முடிவெடுத்து அப்படி தங்கியது தவறு என்று உணர்ந்திருப்பானா ப்ரவின். பர்வதத்தின் மகனாயிற்றே நிச்சயம் அப்படி உணர வாய்ப்பேயில்லை. அது அவன் பேசும் விதத்திலிருந்தே வெளிப்படுகிறதே. 

அனைவருமாக மத்திய உணவு உண்டபின் படுத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்த போது வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டது நவீனுக்கு, உடனே எழுந்து திறந்தான். காலை ஆர்டர் கொடுத்த டிவி மற்றும் ஃப்ரிட்ஜ் வந்திருந்தது. எல்லாரும் எழுந்து அவற்றை அதற்குண்டான இடத்தில் வைக்க நகர்ந்துக் கொண்டனர். டெலிவரி கொடுத்துவிட்டு கையெழுத்து வாங்கிக்கொண்டு அவர்கள் சென்றதும், வேனுவும், நவீனும் அவற்றின் பேக்கிங்கை பிரித்து செட் செய்தார்கள். பவினும், ப்ரவினும் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர் ஆனால் உதவ முன்வரவில்லை. எல்லாம் முடித்தப் பின் பவின்…

அண்ணா கேபிள் கனெக்ஷென் கொடுக்க ஏற்பாடு பண்ணு.

சொல்லிருக்கேன். ஈவினிங் வந்து கனெக்ஷென் கொடுக்கறதா சொல்லிருக்கா பார்ப்போம்என கூறிக்கொண்டிருக்கும் போதேசாப்” “நவீன் சாப்என வாசலில் இருந்து குரல் கேட்டது. நவீன் எட்டிப்பார்த்து…

வாங்க வாங்க உங்களுக்கு நூறு ஆயிசு. இப்பத்தான் நீங்க ஈவினிங் வந்து கனெக்ட் பண்ணுவீங்கன்னு சொல்லிட்டிருந்தேன்….நீங்களே வந்திட்டீங்க

கேம்ப்க்குள்ள வண்டி வர்றத பார்த்தேன். உங்க வீட்டுக்கு தான் இருக்கும்ன்னு நினைத்தேன் சரி பார்த்திட்டு வந்திடுவோமேன்னு வந்தேன். இப்போ கனெஷென் கொடுக்கலாமா?”

ஓ ஷுவர் தாராளமா

டிவி கனெஷென் கொடுத்துவிட்டு அதற்குண்டான பணத்தையும் வாங்கிக்கொண்டு விடைப்பெற்றார் கேபிள்காரர்.அனைவருமாக அமர்ந்து டிவி பார்க்கலானார்கள். 

இரவு முழுவதும் உறக்கமின்றி ஆவலாக அனைவருடனும் சந்தோஷத்தைப் பகிரவும், அவர்களே மகிழ்ச்சியில் துள்ளவும் எதிர்ப்பார்த்து காத்திருந்த விஷயம் அவர்களை இன்னும் இரண்டு வாரத்திற்கு காக்கவைத்தது.

தொடரும்….

நிதானத்தை கடைப்பிடித்து சமாதானம் ஆனதால் மறுநாள் காலை மிருதுளா ஸ்பெஷல் பிரேக் பாஸ்ட் செய்து அசத்த அனைவரும் சூப்பர் என அன்றய தினம் பாராட்டுக்களுடன் துவங்கியது. நவீனும் அதற்கு பரிசாக  தனது ஆபீஸுக்கு லீவ் போட அனைவருமாக மத்திய சாப்பாடு கட்டிக்கொண்டு குஜராத்தை சுற்றிப் பார்க்க நவீனின் நண்பன் ஓம்னி வேனில் புறப்பட்டனர். நவீன் முன்னதாகவே தன் நண்பனிடம் தேவைப்படும்போது தரவேண்டும் என சொல்லியிருந்ததால் தான் இப்போது கேட்டதும் கிடைத்தது. 

அக்ஷர்தம் கோவில், மஹுடி ஜெயின் கோவில், தோலேஷ்வர் மஹாதேவ் கோவில் என மூன்று கோவில்களையும் பார்த்துவிட்டு கரை அணைக்கு வந்து சேரும் போது மணி மூன்று ஆனது. முதலில் அனைவருமாக ஓரிடத்தில் கொண்டுவந்த போர்வையை விரித்து அதில் உணவு கொண்டு வந்த டப்பாக்களை வைத்து அதை சுற்றி வட்டமாக அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டே சாப்பிட்டனர்.  உணவை உண்டதும் மிருதுளா வாந்தி எடுத்தாள். உடனே நவீன் என்ன ஆச்சு என்று பதற, அதெல்லாம் ஒண்ணுமில்லை என மிருதுளா கூற, உணவை அவ்வளவு நேரம் கழித்து சாப்பிட்டதனால் ஜீரணம் ஆகவில்லை அதுதான் என்று நவீனே சொல்ல அதற்கு மிருதுளா சிறு புன்னகையுடன் இருக்கலாம் என்று சொல்லிவிட்டு முகத்தை குளிர்ந்த நீரில் அலம்பி பின் அனைவருமாக  அணையின் அழகை ரசித்து அங்கிருந்து நாலரை மணிக்கு புறப்பட்டு வீட்டிற்கு ஐந்தரை மணிக்கு வந்து சேர்ந்தனர். 

எல்லோரையும் மற்றும்  கொண்டு சென்ற பொருட்களையும் வீட்டில் சேர்த்து விட்டு நவீன் அவன் நண்பனிடம் வண்டியை ஒப்படைத்துவிட்டு நன்றி தெரிவித்து, பெட்ரோல் டேங்க் ஃபுல்லாக்கி விட்டதாக கூறி சாவியைக் கொடுத்து சிறிது நேரம் அரட்டை அடித்துவிட்டு விடைப்பெற்றான். 

வீட்டிற்குள் நுழைந்ததும் நேராக முகம் கை கால் அலம்பி விட்டு ஹாலில் வந்து அமர்ந்தான். அம்புஜம் காபி போட்டு ஒரு தட்டில் பட்சணங்கள் வைத்து அனைவருக்கும் கொடுத்தாள். ராமானுஜமும் அம்புஜம் குஜராத் கோவில்களுக்கும் நம்மூர் கோவில்களுக்கும் உள்ள வித்யாசங்களை பட்டியலிட அதை கேட்டுக்கொண்டிருந்த வேனு 

ஏன் கரை டேம் பத்தி சொல்ல மாட்டேங்கறேங்கள்!!! இட் வாஸ் அ பியூட்டிஃபுல் ப்ளேஸ்.

நம்ம கல்லணை, முக்கம்பு, மேட்டூர் அணை பார்த்ததுக்கப்பறம் இது ஒண்ணும் அவ்வளவு விஷேசமா தெரியலை. ஆனா இந்த ஊர் கோவில் அமைப்பே வித்தியாசமாயிருக்கு…இது மாதிரி புத்தகத்தில பார்த்திருக்கேன் ஆனா இது தான் முதல் முறை நேரில் பார்க்கறேன்

அம்மா உனக்கு கோவில் வியப்பா தான் இருக்கும் ஏன்னா நீ அந்த மாதிரி கோவிலை இப்போ தான் பாக்கற

பவின் இவர்கள் பேசுவதனைத்தையும் உன்னித்து கவனித்திருந்ததைப் பார்த்த மிருதுளா அவனையும் அவர்களோடு பேச்சில் இழுக்க…

என்ன பவின் ரொம்ப அமைதியா இருக்க!!!  இன்னிக்கு போன இடமெல்லாம் உனக்கும் பிடிச்சிருந்தது தானே!!! நீயும் வேனுவும் ஒன்றாக சுத்தினேங்களே அப்போ எல்லாம் நல்லா தானே பேசிண்டிருந்த இப்போ ஆத்துக்கு வந்ததுக்கு அப்புறம் என்ன ஆச்சு?”

அது ஒண்ணுமில்லை மன்னி ….ப்ரவின் இதெல்லாம் மிஸ் பண்ணிட்டானேன்னு யோசிக்கறேன். அடுத்த வாரம் ஊருக்கு கிளம்பணும். அவன் எப்போ பார்க்கப் போறான் !!! அவன் வந்ததுக்கப்பறம் போயிருக்கலாமோன்னு  நினைச்சுண்டிருந்தேன்

ஆமாம் டா அவன் பாட்டுக்கு முன்னாடியே சொல்லாம அங்க உட்கார்ந்துக்குவானாம் அவனுக்காக நாம எல்லாரும் இரண்டு நாள் சும்மா இருந்திருக்கனுமாக்கும். அட போடா. அவன் நாளைக்கு காலை ல வரேன்னு சொல்லிருக்கானே பார்ப்போம் வரானான்னு

விடுங்கோ நவீன். ப்ரவின் அங்க இருக்கேன்னு சொன்னா அதுக்கு பவின் கிட்ட ஏன் இப்படி சாடறேள்?? என்ன பண்ண பவின் இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு நீங்க ஊருக்குப் போக அதுக்குள்ள நவீனுக்கு எப்போ லீவ் கிடைக்கறதோ அப்பதானே போக முடியும். ப்ரவின் அதை எல்லாம் யோசிக்காம அவனா டிசைட் பண்ணினா அதுக்காக நாம எல்லாரும் வேயிட் பண்ண முடியுமா சொல்லு. அது நியாயமா? அவன் அங்க போய் ரெண்டு நாள் இருக்கானே அவன் இப்படி ஃபீல் பண்ணிருந்தா அப்படி அங்க இருந்திருப்பானா சொல்லுஅவனும் இந்த ரெண்டு நாள்ல எங்கயாவது வெளிய போகாமலா இருக்கப்போறான்…ஸோ அத நினைச்சு நீ கவலைப்படாதே. ஓகே வா

குடித்த காபி தம்ளர்களை எல்லாம் வாங்கி தேய்க்க ஆரம்பித்தாள் அம்புஜம். அப்போது நவீன்..

ஏய் மிருது ஏன் உங்க அம்மாவ வேலை செய்யச் சொல்லிட்டு நீ உட்கார்ந்து அரட்டை அடிச்சிண்டிருக்க?”

அவ சொல்லலை நானே தான் பண்ணறேன். சும்மா எவ்வளவு நேரம் தான் உட்கார்ந்துண்டே இருக்கறது

போதுமா மாப்பிள்ளை சார்

உனக்கு ஜாலி தான்னு சொல்லு மை வைஃப்

அப்பா அம்மாட்ட  நம்ம கேன்டீனைப் பற்றி சொன்னதும் அவாளுக்கு பார்க்கணும்ன்னு சொல்லறா.  அங்கேருந்து நமக்கு டிவியும் ஃப்ரிட்ஜும் வாங்கி தரணுமாம் நீங்க என்ன சொல்லறேங்கள்?”

அதுதான் நாம மாசம் ஒரு பொருள் வாங்கலாம்ன்னு பேசிருக்கோமே

பார்த்தயா பா நான் சொன்னேன் இல்லையா

நீ என்ன சொன்னே

நானும் நம்ம டிசிஷனை சொன்னேன் ஆனா என் அம்மா தான் வாங்கி தந்தே ஆவோம்ன்னு ஒரே பிடியா இருக்கா!

ஆமாம் மாப்ள எங்களோட ஆசை அது. அந்த கடையில விலையும் மலிவா இருக்கும்ன்னு மிருது சொன்னா

அது கரெக்ட் தான் வெளியே விக்கறதவிட ரேட் கொஞ்சம் கம்மியா தான் இருக்கும் ஆனா நீங்க ஏன் வாங்கித் தரணும்ன்னு தான் எனக்கு புரியலை.

ஏதோ அம்புஜத்துக்கு அவ பொண்ணுக்கு வாங்கி கொடுக்கணும் ன்னு தோனிருக்கு, ஆசையும் பட்டுட்டா

ஏன் உங்களுக்கு வாங்கிக் கொடுக்கணும்ன்னு தோனலையோ!!!

எனக்கும் வாங்கிக் கொடுக்கணும்ன்னு இருக்கு

அவா தான் அவ்வளவு சொல்லறாளோனோ கூட்டிண்டு போவோமே.

கூட்டிண்டு போறதுல ஒரு கஷ்ட்டமும் இல்ல ஆனா இவா ஏன் இப்போ வீணா செலவழிக்க ஆசப்படறான்னுட்டு தான் யோசிக்கறேன்

அதெல்லாம் யோசிக்காதீங்கோ நாங்க எங்க பொண்ணுக்கு செய்யறது எப்படி வீண் செலவாகும்?”

ஓகே ! ஓகே! இந்த சனிக்கிழமை போகலாம். நீங்க உங்க பொண்ணுக்கு என்னென்ன வாங்கிக் கொடுக்கணுமோ வாங்கிக்குங்கோ.

இந்த விஷயத்துக்கு நமது நவீன் முடிவு எடுத்து அதை அறிவித்தும் விட்டார். ஆல் டிஸ்பேர்ஸ். அம்மா இன்னைக்கு டின்னர் நீ பண்றயா நானும் நவீனும் ஒரு வாக் போயிட்டு வரோம்

ஓ தாராளமா போயிட்டு வாங்கோ மா… நைட்டுக்கு நான் டிஃபன் செய்யறேன்

என்ன நவீன் வரேளா? போயிட்டு வருவோம்

நீ ரெடியாகு அதுவரைக்கும் நான் உட்கார்ந்துண்டிருக்கேன்

இல்லை டையர்டா இருக்குன்னா வேண்டாம்

டையர்டெல்லாம் இல்லை ஒரு வித லேஸினஸ் அவ்வளவுதான். எனக்கென்ன நான் இதோ இப்படியே வந்திடுவேன் நீ தான் சல்வார் மாத்தனும்…கோ அன்ட் கெட் ரெடி

நவீனும் மிருதுளாவும் மெல்ல நடக்கலானார்கள். அப்போது நவீன் …

என்ன மிருது என்கிட்ட என்ன ரகசியம் சொல்ல இந்த வாக்கிங்?”

ரகசியம் தான் ஆனா அது கன்பார்ம் ஆச்சுன்னா பரசியம் ஆகிடும்

அது என்ன அப்படி ஒரு விஷயம்?”

அம்மா முந்தாநாள் என்ட்ட ஒரு விஷயம் கேட்டா. நானும் அதுக்கு ஆமாம்ன்னு பதில் சொன்னேன் அதுக்கு உடனே டாக்டர்ட்ட செக்கப்புக்கு போக சொல்லறா. அத டிஸ்கஸ் பண்ண தான் இந்த வாக் போறுமா?”

என்னதிது எனக்கு ஒண்ணுமே புரியலை. உன் அம்மா உன்ட்ட என்ன கேட்டதுக்கு நீ ஆமாம்ன்ன!!!!

உங்களுக்கு புரியலையா? இல்லை புரியாத மாதிரி நடிக்கறேளா?”

சத்தியமா புரியலை மா

எங்க அம்மா என்கிட்ட நாள் தள்ளிப் போயிருக்கான்னு கேட்டா அதுக்கு நான் ஆமாம்ன்னு சொன்னேன்

என்னத்துக்கு நாள் தள்ளிப் போகணும்!! எந்த நாள்? அதுக்கு ஏன் டாக்டர்கிட்ட போகணுமாம்?”

நான் போன மாசம் ஒரு விஷயத்துக்காக அழுதேனே ஞாபகம் இருக்கா? உங்க நண்பன் ராமகிருஷ்ணனுக்கும் அவர் மனைவிக்கும் டிரீட் கொடுத்தோமே

ஆமாம் அது அவன் அப்பா ஆக போறதுக்காக கொடுத்தோம்…‌‌ஹேய்….வேயிட் …வேயிட்…வேயிட்….உண்மையாவா! அதனால் தான் மத்தியானம் வாமிட் பண்ணினயா?”

அது தானான்னு தெரிஞ்சுக்க டாக்டர்கிட்ட செக்கப் போனா தான் முடியும்

ஹேய் ….இதை ஏன் என்ட்ட முந்தாநாளே சொல்லலை

ஆமாம் !!! சார் ரொம்ப தான் முறுக்கிக்கிண்டு இருந்தேளே அப்புறம் எப்படி சொல்லுவேனாம்?”

அதுக்காக இப்படிப்பட்ட விஷயத்தை சொல்லாம இருப்பாளா!! அன்னைக்கே டாக்டர்ட்ட போயிருக்கலாமே

கொஞ்சமாவது நியாயமா நீங்க சொல்லறது? நான் என்தனை தடவ உங்கள்ட்ட இதை சொல்ல வந்தேன் ஆனா நீங்க தான் பேசவே இஷ்ட்டமில்லாத மாதிரி முகத்தைத் திருப்பிண்டேங்கள் அதுக்கு மேல நான் என்ன செய்வேன்? எப்படி சொல்வேன்

ஓகே அதெல்லாம் மறந்திடுவோம் நாம நாளைக்கே ஹாஸ்பிடல் போறோம் செக்கப் பண்ணறோம் சரியா.

அப்போ ஆபீஸ்

நாளைக்கும் சுட்டிப் போடறேன். நம்ம சதீஷ்கிட்ட நாளைக்கு என் ஷிப்ட்டையும் கொஞ்சம் சமாளிச்சுக்க சொல்லிட்டு அப்புறமா அவனுக்கு லீவ் வேணும்போது நான் ஹெல்ப் பண்ணிட்டா போச்சு. இதவிட முக்கியமானது என்ன இருக்கு. சரி உனக்கு என்ன வேணும் கேளு.

ஹலோ சார் கொஞ்சம் நிதானம். நாளைக்கு டாக்கடர் செக்கப் பண்ணிட்டு கன்பார்ம் பண்ணட்டும் அதுக்கப்புறம் இந்த கேள்விய கேளுங்கோ நானும் ஏதாவது கேட்கறேன்

ஏய் பி பாஸிட்டிவ் மிருது

ஐ ஆம் பாஸிட்டிவ் அட் தி சேம் டைம் பிராக்டிகல் டூ. ஸோ லெட்ஸ் கீப் அவர் ஃபிங்கர்ஸ் கிராஸ்டு. கடவுளிடம் விட்டு விடுவோம். நாம அப்பா அம்மா ஆகறதுக்கு நேரம் வந்தாச்சுன்னா ஆகுவோம்

இப்ப இவ்வளவு தெளிவா பேசற யாரோ தான் ஒரு மாசம் முன்னாடி குழந்தைப் போல குழந்தைக்காக அழுதாளாம். அவா இப்போ எங்க போனாளோ தெரியலை

என்ன கிண்டலா? எனக்கும் எல்லாம் புரிஞ்சுக்கறதுக்கும் தெரிஞ்சுக்கறதுக்கும் கொஞ்சம் டைம் எடுத்துண்டேன் அவ்வளவு தான் அதுக்காக….சரி… எங்க அப்பா அம்மா டிவி, ஃப்ரிஜ் வாங்கித் தர்றது உங்களுக்கு ஓகே வா? நானும் வேண்டாம்ன்னு சொல்லிப் பார்த்தேன் ஆனா எங்க அம்மா தான் வாங்கித் தந்தே ஆவோம்ன்னு சொல்லறா

யூ சீ மிருதுளா அவா உனக்கு ஆசையா செய்யணும்ன்னு நினைக்கறது எல்லாம் ஓகே ஆனா என்னத்துக்கு எல்லாம் வாங்கித் தரணும்ன்னு சொல்லறா? இப்போ தான் இங்க வந்ததற்கு செலவழிச்சிருப்பா ரெயில் டிக்கெட், வாங்கிண்டு வந்த பொருட்கள் எல்லாத்துக்கும். மறுபடியும் என்னத்துக்குன்னு தான் எனக்கு தோனித்து.

என் அம்மா அப்படி கட் அன்ட் ரைட்டா வாங்குவோம்ன்னு சொன்னதுல உங்களுக்கு வருத்தமிருக்கா?”

உன் அம்மாக்கு உன் மேல எவ்வளவு பிரியம்ன்னு தெரியறது ஆனா ….சரி விடு அவா ஆசை அவா செய்யட்டும்

என்ன விடு !!!

மறுபடியும் செலவைத்தான் சொல்ல வந்தேன் அதுனால தான் விடுன்னு சொல்லி நிறுத்திட்டேன். இங்க பார் மிருது உன் பேரன்ட்ஸ் உனக்கு செய்ய நினைக்கறதுல எனக்கு எந்த வருத்தமுமில்லை ஆனால் அது ஓவர் போர்ட் ஆகாமா இருக்கணும் அவ்வளவுதான்.

ஓகே நான் டிஸ்கஸ் பண்ண வேண்டியதெல்லாம் பண்ணியாச்சு. இப்போ ஆத்துக்கு போகலாமா?”

நீ சொன்ன முதல் ரகசியம் இன்னைக்கு என்ன தூங்க விடப்போறதில்லை. எப்படா விடியும்ன்னு காத்திண்டிருப்பேன்

ஓகே நவீன். நான் இரண்டு நாள் தூக்கம் இல்லாமல் புரண்டேன் இன்று உங்கள் டர்ன் என்ஜாய்.

என் பேரன்ட்ஸ்ட்டயும் சொல்லணுமே. வரியா அப்படியே ஃபோன் பண்ணிட்டு வருவோம்

ஃபோன் பண்ணிப் பேசலாம் ஆனா இந்த விஷயம் டாக்டர்கிட்ட கன்பார்ம் பண்ணினதுக்கு அப்புறம் சொன்னால் அவா தூக்கமும் கெடாது. அறைகுறையா கன்பார்ம் ஆகாம சொல்லி அவாளையும் ஏன் டென்ஷன்ல இருக்க வைக்கணும்!

அதுவும் சரிதான். சரி டுமாரோ ஃபர்ஸ்ட் வேலை டாக்டரிடம் செல்வது தான். நீ காலைல ரெடி ஆகிடு நாம போயிட்டு வந்திடலாம். ஓ !!! அதுனால தான் உங்க அம்மாவே எல்லா வேலையையும் இழுத்துப்போட்டுண்டு செய்யறாளா!!

ஆமாம்.  அம்மா என் முகத்தைப் பார்த்தே தெரிஞ்சுண்டு என்ட்ட கேட்டா தெரியுமா?…வேலை செய்யறது எல்லாம் பொண்ணுக்காக இல்ல வரப் போற பேரன் ஆர் பேத்திக்காக தான் அத தெரிஞ்சுக்கோங்கோ…ஜஸ்ட் கிட்டிங் நவீன்.

ஹா!!!ஹா!!அது என்னவோ கரெக்ட் தான். சரி அப்போ நாளைக்கே கேன்டீனுக்கும் போயிட்டு வந்துடலாம் ஏன்னா அதுவும் ஹாஸ்பிடலும் ஒரே இடத்தில் தான் இருக்கு.

என்ன எல்லாருமா ஹாஸ்பிடல் போறோமா!!!!

இல்ல மிருது அவா கேன்டீன் ல பொருட்களை எல்லாம் பார்த்துண்டு இருக்கட்டும் அதுக்குள்ள நாம டாக்டர்ட்ட போயிட்டு வந்திடுவோம் ஓகே வா?”

அப்போ நாளைக்கு அவாளையும் ரெடியாக சொல்லணும் இல்லையா?”

ஆமாம்

நாளைக்கு காலை ல எத்தனை மணிக்கு ஆத்துலேந்து கிளம்பணும்‌?”

ஒரு ஒன்பதரை மணிக்கு கிளம்பினா கரெக்ட்டா இருக்கும்

ஓகே நான் அவாகிட்ட சொல்லி ரெடியா இருக்கச் சொல்லிடறேன். இப்போ ஆத்துக்கு போகலாமா இல்லை ஊருக்கு அப்பா அம்மாகிட்ட பேசிட்டுப் போலாமா?”

இல்லை இன்னைக்கு வேண்டாம். விஷயம் கன்பார்ம் ஆனதுக்கப்புறமே கால் பண்ணிக்கலாம். இப்போ நேரா ஆத்துக்கு போகலாம்

இருவரும் வீட்டு வாசலில் வந்ததும் உள்ளே சிரிக்கும் சப்தம் வெளியே வாசலிலே கேட்டது. அதை கேட்ட நவீன்

என்ன மிருது நாம இருந்தா கப்சிப்ன்னு இருப்பா இப்ப என்ன இவ்வளவு சிரிப்பு!!!

ஹலோ!!! வந்த இரண்டு நாள் இப்படித்தான் இருந்தது அப்புறம் நம்ம பிரச்சினையால வீடே நிசப்தம் ஆனது. இப்போ பழைய மாதிரி ரிட்டர்ன் ஆகிருக்குன்னு நினைக்கறேன்….உள்ளே போய் விஷயத்தைக் கேட்டு ஜோதியில் நாமளும் ஐக்கியமாவோம் வாங்கோ

கதவைத் தட்டினாள் மிருதுளா. பவின் கதவைத் திறந்தான்…..

மாமி ….அண்ணாவும் மன்னியும் வந்தாச்சு

என்னடா பவின் வீட்டுக்குள்ள இருந்து சிரிப்பு சத்தம் அப்படி கேட்கறது

அதுவா நாங்க கார்ட்ஸ் விளையாடிண்டிருந்தோமா அப்போ நானும் வேனுவும்  ஜெயிச்சிண்டே இருந்தோமா!!! அது எப்படின்னு மாமாவும் மாமியும் கடைசியில கண்டுப் பிடிச்சுட்டா …ஸோ ஒரு ஆறு தடவை நாங்க அவாள ஏமாத்தி ஜெயிச்சது ஏழாவது தடவை தான் கண்டு பிடிச்சா அதுவும் வேனு சொன்னதால…அதுதான் ஒரே சிரிப்பா இருந்தது.” 

ஆமாம் நானும் பார்த்துண்டே இருந்தேன் அது எப்படி சொல்லி வச்சா மாதிரி அவன் ஒருதடவை ஜெயிக்கறான் அப்புறம் இவனொரு தடவை ஜெயிக்கறான் !!! நாங்க ரெண்டு பேரும் பேக்குகள் மாதிரி கார்ட்ஸை பிடிச்சுண்டு உட்காந்திருந்தோம்

அப்பா !!அப்பா!! ஓகே!! ஓகே !!! எனக்கு உங்களப் பார்த்தா பாவமா இருக்கப்போய் நான் சொன்னேனே தவிர நீ ஒண்ணும் கண்டுப் பிடிக்கலை

ஏய் நான் கவனிச்சேன்டா

சரிப்பா விடேன் ஏதோ சின்னப் பசங்க விடு விடு…நீங்கள் எல்லாரும் சாப்ட்டாச்சா??”

ஓ நாங்க எல்லாரும் சாப்ட்டாச்சு நீங்க ரெண்டு பேரும் தான் பாக்கி

என்னம்மா பண்ணிருக்க?”

பொடி அரிசி உப்புமாவும் தேங்காய் சட்டினியும்

சூப்பர்!!! நவீனுக்கு குடு. நான் போய் டிரஸ் மாத்திட்டு வரேன்

நீங்க எல்லாத்தையும் இங்க கொண்டு வந்து வையுங்கோ போதும் நாங்களே போட்டு சாப்ட்டுப்போம்

இல்லை பரவாயில்லை. நானே போடறேன்

வச்சுடேன் மா அவர் தான் சொல்லறார் இல்லையா. நாங்க சாப்ட்டுக்கறோம். நீ போய் இன்னொரு ரவுண்டு கார்ட் ல ஜெயிச்சிட்டு வா

ஹா !ஹா !!ஹா !!ஹா !!ஹா!!ஹா!!ஹா!!

அன்றைய தினம் மிருதுளாவிற்கு பாராட்டுக்களுடன் தொடங்கி சந்தோஷத்தில் முடிந்தது. 

ஒரு மாதம் முன்பு எந்த வரத்தை வேண்டி கவலைப்பட்டு அழுதாளோ

அந்த வரம் இப்போது கிடைக்கப்போகிறது எனும்போது  நிதானமாக இருந்து

மருத்துவரிடம் சென்று உறுதிப்படுத்திக்கொண்டு 

சந்தோஷிக்க காத்திருக்கிறாள்

நம்ம மிருதுளா. 

தொடரும்……

ரம்யா சித்தி வீட்டிலிருந்து வந்த பின் உறங்க போகும் வரை நவீனின் கோபத்தால் வீட்டினுள் ஒரு இறுக்கமான  சூழல் நிலவியது. நவீன்…பவின் மற்றும் வேனுவுடன் சற்று நேரம் பேசிவிட்டு பின் தூங்கலானான். மிருதுளாவிற்கு தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். அவள் மனதில் பல கேள்விகள் மீண்டும் மீண்டும் உதித்து அவளின் தூக்கத்தை துரத்தியடித்தது.

ஒரே மாதிரியான விஷயம் அதை ரம்யா சித்தி சொன்னால் ஜோக், நான் சொன்னால் பெரிய குற்றமா ? அது ஏன்? இதில் எந்த வித நியாயமும் இல்லையே? பெரியவர்கள் என்றால் எப்படி வேண்டுமானாலும் பேசலாமா? ஆனால் ரம்யா சித்தி போன முறை நான் சென்றபோது பழகியதுக்கும் இந்த முறை பழகியதிலும் நிறைய வேறுபாடு தெரிகிறதே? அது ஏன்? ஒரு வேளை ஊரிலிருக்கும் நம்ம மூத்த தம்பதிகளின் பங்கு இருக்குமோ? நிச்சயம் இருக்கும். ஏனெனில் போன சனிக்கிழமை அவர்களுடன் ஃபோனில் பேசிய போது ரம்யாட்ட பேசினோம்ன்னு சொல்லிவிட்டு உடனே பேச்சை மாற்றினார்களே!!!!… ரம்யா சித்தியின் இந்த மாற்றம் அப்படிதான் நினைக்க தோன்றுகிறது….அது எப்படி நான் நிம்மதியா சந்தோஷமா என் பெற்றோருடன் இருப்பது!! அது அவர்களைப் பொறுத்தவரை பெரிய தவறாயிற்றே. இதை நான் எப்படி நவீனுக்கு சொல்லிப் புரிய வைக்கப் போகிறேனோ !!!!அந்த அம்மன் தான் எனக்கு இதில் உதவி செய்யணும்….

என்று கடவுள் மீது பாரத்தை வைத்ததும் மெல்ல அவளது விழிகள் மூட, உறக்கம் தொற்றிக்கொண்டது. 

காலை கதிரவன் எழுந்து பல மணி நேரம் ஆகியும் மிருதுளா எழவில்லை. அம்புஜம் தன் மகளை தொந்தரவு செய்யாமல் அவளே டிக்காக்ஷன் போட்டு காபி வைத்து ராமானுஜத்துக்கும், நவீனுக்கும் கொடுத்து தானும் ஒரு தம்ளர் காபியுடன் ஹாலில் அமர்ந்தாள். மிருதுளா மெல்ல கண் விழித்துப் பார்த்தாள். அம்மா, அப்பா மற்றும் கணவர் மூவருமாக அமர்ந்து காபி அருந்துவதைப் பார்த்துவிட்டு சட்டென்று எழுந்து…

மணி என்ன ஆச்சு அம்மா

மணி ஏழாக போறது மிருது

ஓஹோ இவ்வளவு நேரம் தூங்கிட்டேனே!!! எழுப்பிருக்கலாம் இல்லையா” 

நீ நல்லா தூங்கிண்டிருந்த மா அது தான் எழுப்ப தோணலை..நீ போய் ப்ரஷ் பண்ணியுட்டு வா உனக்கும் காபி போட்டுத் தரேன்

ஓகே நீ போட்டு வை நான் இதோ அஞ்சே நிமிஷத்துல வந்துடுவேன்

என்று கூறிக்கொண்டே நவீனை ஒரு பார்வைப் பார்த்தாள் ஆனால் நவீன் அவளை கண்டுக் கொள்ளவில்லை. அதில் மிகவும் மனவேதனை அடைந்தாள் மிருதுளா. காபி குடித்துவிட்டு மடமடவென வேலையில் இறங்கினாள். காலை டிபன் செய்து மத்திய உணவு செய்து முடிப்பதற்குள் நவீன் ஆபீஸுக்கு ரெடி ஆகி விட்டான். அவன் அம்புஜத்திடம்..

எனக்கு டிபன் மட்டும் போதும். லஞ்ச் ஆபீஸ்ல சாப்பிட்டுக்கறேன் அவள அவசரப்படாம செய்யச் சொல்லுங்கோ

ஏன் அத என்கிட்ட சொல்ல மாட்டேங்களோ! இந்தாங்கோ டிபன். நீங்க உங்க மாமியார்கிட்ட சொன்ன மாதிரி மத்திய சாப்பாட்டை ஆபீஸ்ல ஒன்னும் சாப்பிட வேண்டாம் அதுவும் ரெடி இதோ டேபிள் மேல வச்சுருக்கேன் எடுத்துக்கோங்கோ..

நவீன் ஏதும் சொல்லாமல் டிஃபனை சாப்பிட்டுவிட்டு லஞ்ச் பாக்ஸை எடுத்துக்கொண்டு தன் மாமனார் மாமியாரிடம் மட்டும் சொல்லிவிட்டு தனது பைக்கில் ஆபீஸ் சென்றான். அதைப் பார்த்த மிருதுளாவுக்கு ஆத்திரம் வந்தது. அவள் கோபத்தில் இருப்பதை அறியாத அம்புஜம் அவளிடம்…

மிருது நீ நேத்து சும்மா இருந்திருந்தா மாப்பள உன்கிட்ட ஏன் இப்படி கோபப்படப் போறார்?”

என்ன அம்மா ஏதோ நான் தப்பு பண்ணின மாதிரி சொல்லற!!! உனக்கு அவா பேசினது சரின்னு பட்டுதா?”

நீ தப்பு பண்ணினேன்னு சொல்லலை மா.  அதே சமயம் அவா அப்போ அப்படி பேசினதும் தப்பு தான். அதுக்காக உடனே நீ திருப்பி பேசிருக்க வேண்டாம்….கொஞ்ச நேரம் கழிச்சு சொல்லிருக்கலாம் இல்லாட்டி அவாளுக்கு தெரிஞ்சது அவ்வளவு தான்னுட்டு நீ சும்மா இருந்திருக்கலாம்….அதனால நீங்க ரெண்டு பேரும் இப்படி முகத்தை திருப்பிண்டு இருக்கறது நல்லாவா இருக்கு சொல்லு

அம்மா நான் எந்த தப்பும் பண்ணலை….தப்பாவும் பேசலை. நவீனுக்கு அவா சித்தி என்னை சொல்லும் போது இனிச்சுதுல்ல அப்போ அவாள நான் சொல்லும்போது ஏன் கசந்துதாம்? சொல்லப்போனா அவர் தான் எனக்காக அவா சித்தி கிட்ட பேசிருக்கனும்.

சரி மா….அப்படியே இருக்கட்டுமே நீ தான் கொஞ்சம் விட்டுக் கொடுத்து போயேன்

விட்டுக் கொடுத்துன்னா !!!!என்ன சொல்ல வர இப்போ

நீ கொஞ்சம் இறங்கி போய் ஒரு சாரி கேட்டுடேன் அதுனால நீ ஒன்னும் கொறஞ்சுப் போயிடமாட்டாய்

அம்மா உனக்கு நிறைய விஷயம் தெரியாது …நான் நிறைய தடவை விட்டும் கொடுத்தாச்சு …இறங்கியும் போயாச்சு …இது எங்களுக்குள் நடப்பது அதை நானே பார்த்துக்கறேன். நீ தலையிடாதே சரியா.

இல்லடி … எங்களுக்கு இப்படி நீங்க பேசாம மூஞ்சிய திருப்பிண்டு போறதெல்லாம் பார்க்க பார்க்க மனசு கஷ்ட்டப்படறது மா

அம்மா இதுல மனசு கஷ்ட்டப்படற அளவுக்கு ஒன்னுமே இல்லை நான் பார்த்துக்கறேன். சரி …நீயும் அப்பாவும் எவ்வளவு சண்ட போட்டிருக்கேங்கள்? பேசாம எல்லாம் இருந்திருக்கேங்கள்!!! அப்போ நான் ஏதாவது சொன்னேனா?”

அடிப் போடி எங்க சண்டையும் உங்க பிரச்சினையும் ஒன்னா!!!” 

அதென்ன ஒங்களோட சண்ட எங்களோட சண்டைன்னு பிரிச்சுப் பேசற!!! சண்டைன்னா எல்லாமும் சண்டை தான்…சரி வேனுவும், பவினும் எழுந்துண்டு டுவா ஸோ இப்போதைக்கு இந்த சாப்ட்டரை கொஞ்சம் க்ளோஸ் பண்ணு.

ஓ ஆமாம் ஆமாம் பவின் இருக்கறத மறந்துட்டேன். அது என்னடி அந்த ப்ரவின் உங்க ரெண்டு பேர் கிட்டேயும் சொல்லாம அங்க வச்சு சொல்லறான்

அம்மா விடுமா அவா எல்லாம் அப்படி தான். அவரையும் என்னையும் எவ்வளவு மதிக்கறான்னு எனக்கு நல்லாவே தெரியும் நவீனும் இப்போ தெரிஞ்சுண்டிருப்பார்ன்னு நினைக்கறேன்

ஹாய் மிருதுக்கா குட் மார்னிங்

குட் மார்னிங் வேனு

அனைவருமாக முன் தினம் போலவே உணவருந்திய பின் சீட்டு கச்சேரியில் மூழ்கினர். மாலை ஐந்து மணிக்கு நவீன் வரவை நோக்கி காத்திருந்தாள் மிருதுளா. அன்று நவீன் ஐந்து பத்துக்கு தான் வந்தான். கதவு திறந்தே இருந்தது பவினும் வேனுவும் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். நவீன் வண்டியை நிப்பாட்டி விட்டு வீட்டினுள் நுழைந்தான்….

ஹாய் நவீன் குட் ஈவினிங். ஹவ் வாஸ் தி டேஎன்று மலர்ந்த முகத்துடன் கேட்டாள் மிருதுளா அதற்கு பதில் சொல்லாமல் வந்ததும் க்ளாஸுக்கு போவதாக சொல்லிவிட்டு டிரஸ் சேஞ்ச் பண்ணச் சென்றான். அதுக்குள் காபி போட்டு கொடுத்தாள். அதை குடித்து விட்டு மீண்டும் தனது மாமனார் மாமியாரிடம் மட்டும் சொல்லிக் கொண்டு கிளம்பிச் சென்றான். அப்போது மிருதுளாவுக்கு கவலையாக இருந்தாலும் ….மனதிற்குள் …..

போ போ எப்படியும் இங்க தானே வரணும். இன்னைக்கு இதுக்கு ஒரு ஃபுல் ஸ்டாப் வைக்கறேனா இல்லையான்னு பாரு”  என சபதம் எடுத்தாள். பிறகு வேனுவையும் பவினையும் வீட்டிலிருக்கச் சொல்லிவிட்டு தன் பெற்றோரை வாக்கிங் கூட்டிச் செல்ல தயார் ஆனாள்…

மன்னி இங்க டிவி இல்லை எங்களுக்கு போரடிக்கும். நாங்களும் உங்க கூடவே வரோமே

ஆமாம் மிருதுக்கா இங்க உட்கார்ந்துண்டு என்னப் பண்ணுவோம் சொல்லு

சரி சரி நீங்க பாட்டுக்கு நடங்கோ எங்கள தொந்தரவு செய்யக் கூடாது சரியா

ஓகே இதோ நாங்களும் ரெடி

மிருது நைட்டுக்கு என்ன டிஃபன் பண்ணப்போற ? ஒன்னும் நீ செய்தா மாதிரி தெரியலையே

உனக்கு சாதமிருக்கு. நாங்க டாபா ல சாப்பிட்டுட்டு நவீனுக்கும் வாங்கிண்டு வந்துட்டா போச்சு. என்ன பசங்களா டாபா ல சாப்பிடலாமா

ஓ எஸ்

என்று ஒருமித்து சொன்னார்கள் பவினும் வேனுவும். அதைக் கேட்ட மிருதுளா…

ஏன் டா பசங்களா என்னோட சமையல் உங்களுக்கு பிடிக்கலையா

அப்படி இல்ல மன்னி

அக்கா டாபா ல தர ரொட்டி சப்ஜீ எல்லாம் நம்ம ஊர்ல கிடைக்காது இல்லையா. அதுவும் இல்லாம இது எங்களுக்கு புது வகையான உணவு அதுனால தான் சொன்னோம். நீ சூப்பரா தான் சமைக்கற.  அடுத்த தடவை நாங்க வர்றத்துக்குள்ள இந்த நார்த் இந்தியன் குக்கிங் எல்லாம் கத்துக்கோ.

அப்படியே ஆகட்டும் தம்பிகளா. இப்போ எல்லாரும் வெளியே போங்கோ நான் கதவ பூட்டிட்டு வரேன்.

அனைவருமாக நடக்கலானார்கள். பவினையும் வேனுவையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு அம்மாவையும் பொண்ணையும் பின்னால் வரச்சொல்லிவிட்டு நடந்தார் ராமானுஜம். 

அதை கவனித்த அம்புஜம்…

அட உங்க அப்பா கூட என்னோட அவஸ்த்தைய புரிஞ்சிண்டு பசங்கள அவரோட கூட்டிண்டு முன்னாடி போயிட்டாரே!!! பரவாயில்லை  இன்னைக்கு குஜராத்துல மழை தான் போ

அவஸ்த்தையா அது என்னன்னு சொல்லேன் கேட்கறேன்

நேத்து கொள்ளப்பக்கத்துல கேட்டேனே அதேதான் நான் வேற என்னத்த புதுசா கேட்கப்போறேன்.

அம்மா மனுஷான்னா நிறை குறைகளோட தான் இருப்பா. என்ன என் மாமியாருக்கு ஏனோ என்ன கண்டாலே ஆக மாட்டேங்கறது. அதுனால நொடுக்கு நொடுக்குன்னு  ஏதாவது குறை சொல்லிண்டே தான் இருக்கா.

அதை நம்ம வேனு அப்பவே சரியா சொன்னான் தெரியுமோ !!!அது  என் மனச அரிச்சுண்டே இருந்தது. என் பொண்ணு என்ன கஷ்ட்டப் படறாளோ ன்னு பக் பக்ன்னு இருந்தது

அப்படி என்ன வேனு சொன்னான்!!! அத கேட்டு நீ சங்கடப் பட?”

அன்னைக்கு உங்க ஆத்துக்கு வந்தபோது அவன் கவனிச்சிருக்கான். அவன் சொன்னான் ….மிருதுக்கா மாமியாருக்கு நம்ம மிருதுவைப் பிடிக்கலைப் போல அதுதான் மிருதுக்கா என்ன சொன்னாலும் அதுக்கு ஜஸ்ட் ஆப்போஸிட்டா தான் பேசறான்னு

பரவாயில்லை மா அவனுக்கும் தெரிஞ்சிருக்கு பாரேன்!!!

அப்படின்னா!!!

அப்படின்னா அப்படி தான்…சரி அதெல்லாம் நீ மனசுல போட்டு குழப்பிக்காதே…அதுதான் நான் இங்க வந்துட்டேன் இல்லையா….ஆனா ஒரு விஷயம் மா ….என் சித்திகள் பேச்சையும் என் தோழி பேச்சையும் கேட்டு நான் அவர் கூட இங்க வந்தேனோ பொழச்சேன்… நீ சொன்னத கேட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கிண்டு அங்க இருந்திருந்தேன் என் வாழ்க்கையையே தொலைச்சிருப்பேன் தெரியுமா

எல்லாம் அந்த அம்பாள் செயல் மிருது நம்ம கையில என்ன இருக்குச் சொல்லு… உனக்கு அவர் தான்னு அம்பாளே பூ கொடுத்து உத்தரவு தந்தா…பின்ன எப்படி தப்பாகும்

அப்புறம் ஏன் உன் மனசு சங்கடப்பட்டுதாம்?”

நான் சாதாரண மனுஷி தானே மா.  பொண்ணுக்கு கஷ்டம்ன்னா அம்மாவோட மனசு பதறத்தான் செய்யும். அதை நீ அம்மா ஆகும் போது தெரிஞ்சுப்ப. சரி உன் முகத்தைப் பார்த்தா எனக்கென்னவோ….உனக்கு நாள் தள்ளிப் போயிருக்கா மிருது?”

ஆமாம் இந்த மாசம் இன்னும் ஆகலை

அப்போ உடனே டாக்டரைப் போய் பாரும்மா. அவர் கிட்ட சொல்லிக் கூட்டிண்டு போகச் சொல்லு

மொதல்ல இந்த ரம்யா சித்திப் பிரச்சினக்கு ஒரு முடிவு கட்டணும். அப்புறம் தான் என்னால மத்ததைப் பத்தி எல்லாம் யோசிக்க முடியும்.

அதெல்லாம் சரியாகும். நீ தேவையில்லாத கவலைகளை எல்லாம் மனசுல ஏத்திக்காத. நாளையிலேந்து நான் சமைக்கறேன். நீ நல்லா ரெஸ்ட் எடு.

அம்மா ரெஸ்ட் எடுக்கற அளவுக்கு நான் என்ன வேலை செய்தேனாம்

நாள் தள்ளி போயிருக்குன்னு சொல்லற அப்போ நீ நல்லா ரெஸ்ட் எடுக்கத் தான் வேணும்.  எனக்கு வந்து உன் முகத்தை பார்த்ததும் என் மனசுலப் பட்டது..அதுதான் கேட்டுட்டேன்.

பார்ப்போம் பார்ப்போம்என புன்னகைத்தாள் மிருதுளா.

இன்னும் எவ்வளவு நேரம் நடக்கப் போறோம் மன்னி? அண்ணா வர நேரமாச்சு

இதோ அத்திம்ஸே வர்றார். அவர் நம்மள பார்க்கலை. பவின் அவரை கூப்பிடேன்

அண்ணா ….நவீன் அண்ணா

நவீன் திரும்பிப் பார்த்து வண்டியை நிப்பாட்டி…

ஏய் எல்லாரும் எங்க போயிண்டிருக்கேங்கள்?”

அத்திம்பேர் நாங்க வாக்கிங் பண்ண ஆரம்பிச்சு இரண்டு மணிநேரமாகறது

அப்போ யாரும் இன்னும் சாப்பிடலயா?”

இதோ அப்படியே டாபாக்கு போகலாம்ன்னு மன்னி சொன்னா

ஓ அப்போ சரி வாங்கோ நானும் உங்களோடவே வரேன்

அனைவரும் டாபாவிற்குள் சென்று அமர்ந்தனர். அப்போது மிருதுளா நவீனிடம்…

அவா எல்லாரும் அந்த டேபிளில் ஒன்னா உட்காரட்டும் நாம ரெண்டு பேரும் நம்மளோட யூஷுவல் டூ சீட்டர் ல உட்காரலாம் ப்ளீஸ்

நவீன் மறுப்பேதும் சொல்லாமல் அமர்ந்தான். மற்றவர்களை அவர்களுக்கு வேண்டியதை ஆர்டர் செய்ய சொல்லிவிட்டு இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தனர். அப்போது பவின்…

அண்ணா நீங்க ரெண்டு பேரும் இன்னும் ஆர்டர் பண்ணலையே

பவின் அதை நாங்க பார்த்துக்கறோம் பா நீ சாப்பிடுப் பா. எங்களை கொஞ்ச நேரம் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் ப்ளீஸ்என்று சொல்லிவிட்டு நவீனைப் பார்த்து

என்ன உங்களுக்கு என் மேல இருக்கும் கோபம் இன்னும் குறையவில்லை யா? இல்லை குறையவே குறையாதா? எனக்கு இப்படி நீங்க முகத்தை திருப்பிண்டு போறதும் சொல்லிக்காம போறதும் எல்லாம் பிடிக்கலை

நீ நேத்து சித்தியை பேசினது தப்பு. பெரியவாள்ட்ட எப்படி நீ அப்படி பேசலாம்? எனக்கு அது பிடிக்கலை

சரி நான் பேசினது தப்பாவே இருந்துட்டுப் போட்டும். அவா பேசினது சரியா அத மட்டும் உங்க மனசாட்சிய கேட்டு சொல்லுங்கோ

அது அது …

என்ன அது அதுன்னு இழுக்கறேங்கள். பதில் சொல்லுங்கோ

இங்க பாரு மிருது …அவா பெரியவா அப்படித் தான் பேசுவா ஏன்னா அவா வளர்ந்த சூழல் அப்படி அதுக்காக நீயும் அப்படி பேசணுமா சொல்லு

உண்மைச் சொல்லனும்னா நான் தான் உங்க கிட்ட கோவிச்சிண்டுருக்கனும் தெரியுமா!!

நான் என்ன பண்ணினேன்

அவா பெரியவா அப்படி பேசறா ஆர் அப்படித்தான் பேசுவான்னு உங்களுக்கு தெரியும் போது நீங்க ஏன் எனக்காக பேசலை. நான் உங்க குடும்பத்துக்குள்ள வந்து பல வருஷம் ஆகலை நாலு மாசம் தான் ஆச்சு….அவா அப்படி சொன்னதும் நான் உங்களைத் தான் பார்த்தேன் நீங்க சிரிச்சிண்டிருந்தேங்கள் அதனால எனக்கு கோபம் வந்தது …அப்பவும் அதை அடக்கிண்டு நிதானமா தானே சொன்னேன். சரிப்பா தப்பா சொன்னேன்னே இருக்கட்டும் அதுக்கு உங்க சித்தி எல்லார் முன்னாடியும் அப்படி தான் வெடுக்குனு எழுந்து போவாளா? அவா சொல்லும் போது நான் எழுந்து போயிருந்தா !!! அப்பவும் என் மேல தான் பழி போடுவேங்கள் இல்லையா?”

இங்க பாரு மிருது அவா பேசினது சரின்னு நான் சொல்லலை

இது எப்போ உங்களுக்கு தெரிஞ்சுது? இப்போ நான் இவ்வளவு எடுத்துச் சொன்னதுக்கப்புறமா இல்லை நேத்து அங்கேயே வா

நேத்தே

சும்மா சொல்லாதீங்கோ நவீன்….அப்போ ஏன் என்ன மொறச்சுண்டே இருந்தேங்கள்? பஸ்ஸில சீட்டை ஏன் மாத்தினேங்கள்? காலையிலேந்து ஏன் முகம் கொடுத்துக்கூட பேசலை?”

அது ஐ டிடின்ட் எக்ஸ்பெக்ட் தட் ஃப்ரம் யூ!!! அதுனால தான் என்னால ஏத்துக்க முடியலை

ஐ டூ டிடின்ட் எக்ஸ்பெக்ட் தட் ஃப்ரம் யூ!!! அதுக்காக நான் அப்படியா நடந்துண்டேன்?”

சரி இப்போ என்ன சொல்ல வர நீ பேசினது தப்பில்லைங்கறயா?”

அப்படி தானே நீங்களே கொஞ்ச முன்னாடி சொன்னேங்கள்….ஓகே லெட் மீ ஃபினிஷ் திஸ் ப்ளேம் கேம். இங்க பாருங்கோ நவீன் பெரியவாளா இருந்தாலும் சரி சின்னவாளா இருந்தாளும் சரி தப்பா பேசினா தப்புதான்னு ஒன்னு நீங்க கேட்கணும் இல்லை என்னையாவது கேட்க விடனும். உங்க அம்மா என்னை என்னென்ன சொன்னா அதுவும் உங்க முன்னாடியே !!! நீங்க எனக்காக பேசுவேங்கள்ன்னு அங்க இருந்தவரைக்கும் காத்திருந்தேன்… அப்போ என்ன எனக்காக நீங்க பேசினேங்களா? இல்லையே !!!அதுக்கு நான் முகத்தை திருப்பிண்டேனா? இல்லையே !!! அப்படீன்னா நீங்க எனக்கு செய்யறது சரியில்லை. எனக்கு ஒரு டவுட்….உங்க ரம்யா சித்தி போன தடவை நம்ம கிட்ட அப்படி எதுமே பேசலையே!!! நல்லா தானே ஜென்டிலா பழகினா!!! இப்போ எங்க பேரன்ட்ஸோட போனப்போது ஏன் வித்தியாசமா பிஹேவ் பண்ணினா? என் அப்பா அம்மாவை ரம்யா சித்தி அவா ஆத்துக்கு இன்வைட் பண்ணினாளா

சீ எங்காத்துல நடந்தது நாம கல்யாணமாகி ஜஸ்ட் இரண்டு வாரம் தான் அங்கிருந்தோம். நீயும் என்கிட்ட எதுவும் தப்புன்னு சொல்லாததுனால எனக்கு எதுவும் தப்பாவே தெரியலை. ரம்யா சித்தி என்னிடம் இன்வைட் பண்ணலை. அவா என் பேரன்ட்ஸ்ட்ட சொல்லிருக்கா அவா தான் எனக்கு ஆபீஸுக்கு கால் பண்ணி சொன்னா.

நான் ஆத்துல நடந்தது எதையுமே உங்ககிட்ட கம்பளேயின்ட் பண்ணாததால உங்களுக்கு தப்பாவே படலைங்கறது என்னால நம்ப முடியலை பட் லெட்ஸ் லீவ் தட் தேர். இனி அங்க போகும் போது அப்படி நடந்தா! நடக்கும்… அப்போ உங்ககிட்ட நிச்சயம் சொல்லறேன் என்ன பண்ணறேங்கள்ன்னு அப்போ பார்ப்போம்….உங்க சித்திக்கு உங்க நம்பர் தெரியும் தானே அப்போ ஏன் உங்ககிட்ட சொல்லாம உங்க பேரன்ட்ஸ்ட்ட சொல்லிருக்கா? அதுவுமில்லாமல் அவாளுக்குள்ள என்ன டிஸ்கஷன் நடந்துதோ !!!!  சித்தியோட அந்த பிஹேவியர் மே பீ அதுனால கூட இருக்கலாம்ன்னு என்னோட யூகம். எது எப்படியோ இனி இப்படி பண்ணாதீங்கோ. நீங்க இப்படி செய்ததினால் என் பேரன்ட்ஸ் காட் வரீடு!!! தெரியுமா.

ஓ !!!!நான் அவ்வளவு எல்லாம் யோசிக்கலை இப்போ ஏதோ புரியறா மாதிரி இருக்கு. நான் உன் பேரன்ட்ஸ்கிட்ட நல்லா தானே பழகறேன்

என்கிட்ட மூஞ்சிய காட்டிட்டு அவாகிட்ட நல்லா பழகினா எப்படி அவா நிம்மதியா இருப்பா நவீன்…என்னை நினைச்சுத் தானே கவலைப்படுவா

ஓகே ஐ வில் பீ நார்மல் ஃப்ரம் நவ்” 

அப்பாடா நான் என்னுள் சபதம் எடுத்தேன்….இந்த பிரச்சினையை இன்றோடு முடிப்பேன்னு. தாங் காட் ஃபார் ஹெல்பிங் மீ

அன்று டாபா உணவால் வயிறு நிறைந்ததோ இல்லையோ ஆனால் மிருதுளாவுக்கும் அவள் பெற்றோருக்கும் அவர்கள் மனம் நிறைந்தது. மிருதுளா நிதானமாக யோசித்து கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கிடைத்தாக வேண்டுமென அவள் வலியுறுத்தவில்லை ஆனால் நவீனின் மனது பதில்களைத் தேட அவளது கேள்விகள் வித்தானது. 

சண்டையிட்டு மண்டையுடைத்துக்கொள்ளாமல்

டைவர்ஸ் கேட்டு கோர்ட் படி ஏறாமல்

தனக்குத் தானே கேள்விகளை கேட்டு அதற்கான பதில்களை தன் கணவனையே தேட வைக்க முயற்சிக்கும் மிருதுளாவை மனமாற வாழ்த்துவோமாக. பொறுமையும் நிதானமுமிருந்தால் நமது பேச்சு எங்கும் எடுப்படும் அல்லது எடுபட வைக்க முடியும் என்பதற்கு இவர்கள் வாழ்வின் இந்த நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இருபத்தி நான்கு மணி நேர கோபம்  உட்கார்ந்து பேசியதில் ஒரு மணி நேரத்தில் காணாமல் போனது. 

பெண்ணே நீ பூமாதேவி தான்

எல்லாவற்றுக்கும் பொறுத்துப் போவதற்காக அல்ல

எல்லாவற்றையும் பொறுமையோடு  கையாள்வற்காக

பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது பழைய மொழி அல்ல அது உண்மையானது. காலதாமதம் ஆகலாம் ஆனால் என்றுமே தவறாகாது.

பொறுமை, நிதானம் இரண்டும் நம் மூளையை சிறப்பாக இயக்க முக்கிய கருவிகளாகும்

பொறுமையுடன் நிதானமாக சிந்தித்து செயல் படுவோம். வெற்றி காண்போம். 

தொடரும்…..

மறுநாள் காலை கதிரவன் சோம்பல் முறித்து மெல்ல எழ ஆரம்பிக்கும் போதே அப்புஜமும், ராமானுஜமும் எழுந்து பல் துலக்கி, முகம் கை கால் அலம்பி பின் மற்றவர்கள் எழுந்திருக்கும் வரையில் அவர்களை தொந்தரவு செய்யாமல் மீண்டும் படுத்துக் கொண்டனர். அவர்கள் எழுந்து ஒரு மணி நேரம் கழித்து எழுந்தாள் மிருதுளா. எழுந்ததும் தனது அம்மாவையும் அப்பாவையும் பார்த்து….

நீங்க எழுந்துண்டாச்சா? எப்போ எழுந்தேங்கள்? ப்ரஷ் பண்ணிட்டேளா? ஆமாம் நீங்க தான் காலை ல அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்திரிக்கறவாளாச்சே…சரி இருங்கோ நான் போய் ப்ரஷ் பண்ணிட்டு காபி போட்டுத் தரேன்” 

சரி சரி அவாள டிஸ்டர்ப் பண்ணாம போயிட்டு வா

மிருதுளா டிகாக்ஷன் போட்டு சுட சுட ஃபில்டர் காபியை தனது பெற்றோருக்கு கொடுத்து தானும் குடிக்க அமர்ந்தாள். நவீன் எழுந்து ..

ஆஹா காபி வாசம் தூக்கறதே..என்னை தூக்கத்திலிருந்து எழுப்பிடுத்து. டைம் என்ன ஆச்சு மிருது?”

மணி ஆறரை ஆச்சு நவீன்

ஓ !!ஒரு ஃபைவ் மினிட்ஸ் எழுந்துடறேன்

ஏன்டீ மாப்பிள்ளையை தொந்தரவு செய்யற? அவர் தூங்கட்டுமே

அம்மா என்ன நீ என்னவோ நான் தான் அவரை எழுப்பினா மாதிரி சொல்லற!! என் காபி தான் எழுப்பித்து

நிஜமாவே காபி சூப்பரா இருக்கு மிருது

நன்றி தந்தையே

நவீன் எழுந்து ஆஃபிஸ் செல்ல தயாராகிக் கொண்டிருந்தான். ப்ரவின், பவின் மற்றும் வேனு நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். மிருதுளா அடுப்படியில் மும்முரமாக நவீனுக்கான காலை டிபன் மற்றும் மத்திய உணவை தயார் செய்துக் கொண்டிருந்தாள். அம்புஜமும், ராமானுஜமும் நவீன் குளித்தப் பின் ஒவ்வொருவராக சென்று குளித்துவிட்டு வந்தனர். அம்புஜம் குளித்துவிட்டு நேராக அடுப்படிக்கு சென்று..

ஏய் மிருதுளா நான் செய்யறேன் டீ. நீ அவர் ஆஃபிஸ் போறதுக்கு என்ன செய்யனுமோ அதை செய் போ

அம்மா அவருக்கு தான் செய்திண்டிருக்கேன். நீ இப்போ இடையில கடலடின்னு வராதே. ப்ளீஸ் மா

சரி சரி சித்த நகந்துக்கோ நான் வீட்டிக்கு பின்னாடி போய் பார்க்கட்டும். நேத்து சரியா பார்கலை

ம்…இதோ போ… என்னப் பா உனக்கும் கொள்ளப் பக்கம் போகனுமா?”

தாங்க் யூ

அம்புஜத்திடம் ராமானுஜம் அந்த ஏரியாவைப் பற்றி விரிவாக சொல்ல அதற்கு அம்புஜம்

என்னமோ ஃபுல்லா பார்த்தா மாதிரி சொல்லறேங்கள்

ஆமாம். நேத்து மத்தியானம் நீங்க எல்லாரும் தூங்கும் போது நான் ஒரு மணி நேரம் வெளியே போய் இந்த கேம்பஸை ஃபுல்லா சுத்திப் பாத்தேன்

என இருவருமாக அலவலாவிக் கொண்டிருக்கும் போது நவீன் கையில் ஹெல்மட்டுடன் வந்து…

ஓகே நான் ஆஃபிஸ் போயிட்டு வரேன். நீங்க எல்லாரும் இன்னைக்கு நல்லா ரெஸ்ட் எடுங்கோ நான் நாளைக்கு லீவ் கிடைக்கறதான்னு கேட்டுப் பார்க்கறேன்

சரி மாப்ள நீங்க போயிட்டு வாங்கோ. உங்களுக்கு லீவ் கிடைக்காட்டினாலும் பரவாயில்லை எங்களுக்கு எங்க பொண்ணோட இருந்தாலே போதும்.

அதுக்காக எங்கேயும் வரமாட்டேளா? ஃபர்ஸ்ட் டைம் குஜராத் வந்திருக்கேங்கள் சுத்திப் பார்க்க வேண்டாமா?”

அது தான் சனி ஞாயிறு இருக்கே அன்னைக்கு பார்த்துண்டா போறது

நான் லீவுக்கு டிரைப் பண்ணறேன் கிடைச்சா ஓகே இல்லாட்டி சனி அன்ட் ஞாயிறு தான் போகணும். கல்யாணத்துக்கே நிறைய லீவ் எடுத்துட்டேனா அதுதான்….

புரியறது மாப்ள. ஒரு பிரச்சனையும் இல்லை. நீங்க ஆஃபிஸ் போயிட்டு வாங்கோ

ஓகே பை….பை மிருது. பார்த்துக்கோ நான் ஈவ்னிங் அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடுவேன் எல்லாரும் ரெடியா இருங்கோ நாம எங்க சித்தி ஆத்துக்கு போயிட்டு வருவோம்

ஓகே எல்லாருமா எப்படி போவோம் நவீன்?”

இங்கேருந்து பஸ்ஸில போயிட்டு அங்கேருந்து ரெண்டு ஆட்டோ வச்சுண்டா போச்சு… அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ ரெடியாகி எல்லாரையும் ரெடியாக இருக்கச் சொல்லு ஓகே வா. சரி நேரமாகறது பை பை

என்று வண்டியை ஸ்டார்ட் செய்து ஆஃபிஸ் சென்றான் நவீன். அவனது லீவுகள் கல்யாணத்தினால் மட்டுமில்லை அதற்கு பிறகு மிருதுளா பைக்கிலிருந்து விழுந்த போதும் எடுத்ததனால் தான் இப்பொழுது லீவ் கிடைப்பது சிரமம் என்று சொல்ல முடியாமல் மழுப்பினர் நவீனும் மிருதுளாவும். 

நவீன் கிளம்பிச் சென்றதும் மிருதுளா குளித்து விட்டு பெற்றோருக்கும் தனக்கும் டிபன் கொண்டு வந்து ஹாலில் வைத்து மூவருமாக சாப்பிட ஆரம்பிக்கும் போது அம்புஜம் ….

மிருது மா நீ நல்லா இருக்கயா?”

என்னமா நேத்தே கேட்டுட்டியே மறுபடியும் ஏன் கேட்கற?”

இல்லமா நீ சந்தோஷமா இருக்கயா? உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே!

அம்மா நான் சந்தோஷமா இருக்கேன் எனக்கு எந்த வித பிரச்சனையும் இங்கு இல்லை. ஓகே வா நீ நிம்மதியா டிபனை சாப்பிடு

அதுக்கில்லடீ மாப்ள உன்ன நல்லா கவனிச்சுக்கறாரா?”

அவர் என்னை நல்லா தான் பார்த்துக்கறார் மா அதனால தானே சந்தோஷமா இருக்கேன்னு சொல்லறேன்

இல்லமா….

ஹாய் மன்னி குட் மார்னிங்! அண்ணா ஆஃபிஸ் போயாச்சா?”

ஹாய் ப்ரவின் குட் மார்னிங். ஆமாம் அவர் கிளம்பி ஒரு ஒன் ஹவர் ஆகறது. நீ ப்ரஷ் பண்ணிட்டு வா காபி போட்டுத் தரேன்

ஓகே மன்னி….மாமி ஏதோ கேட்டுண்டிருந்தாளே ….நீங்க கன்டின்யூ பன்னுங்கோ நான் ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்

அம்மா க்கு என்ன ஏதாவது கேட்டுண்டே தான் இருப்பா. நீ போயிட்டு வா.

என்று ப்ரவினை அனுப்பி விட்டு தனது தாயிடம் செய்கையில் பிறகு பேசலாம் என காட்டி விட்டு சாப்பிட்ட தட்டை தேய்த்து வைத்தாள். அடுத்தடுத்து பவின் மற்றும் வேனு எழுந்தனர். அவர்கள் அனைவருக்கும் காபி குடுத்த பின் அனைவரும் குளித்து விட்டு வந்து டிபன் அருந்தினர். மிருதுளா மத்திய சமையலும் செய்து முடித்துவிட்டதால் அனைவருமாக அமர்ந்து சீட்டு விளையாடினர். அம்புஜம் தன் மகளிடம் மனம் விட்டு பேச முடியாமல் அல்லாடினாள். அப்பொழுதுதான் அவள் ப்ரவின் மற்றும் பவினை ஏன் தங்களுடன் கூட்டி வந்தோம் என வருந்தினாள். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொண்டால் தன் மகளுக்கு கஷ்டமாகி விடுமே என அமைதியாக இருந்தாள். 

சீட்டு விளையாட்டு முடிந்தப் பின் வேனு பவினையும் ப்ரவினையும் கொஞ்ச நேரம் அப்படியே வெளியே போய் அந்த கேம்பஸை சுற்றி பார்க்க அழைத்தான். ஆனால் பவின் மட்டும் வேனுவுடன் போக தயார் ஆனான். அப்போது மிருதுளா…

ஏய் ப்ரவின் நீயும் வேனு, பவின் கூட வெளிய சும்மா போயிட்டுத் தான் வாயேன். இங்க நாங்க சாதம் வச்சுட்டு வீட்டை கூட்டி சுத்தம் செய்வோம். நீ உட்கார்ந்துண்டு என்னப் பண்ணப் போற. உனக்கு போர் அடிக்கும்.

இல்லை மன்னி ….பவின் மாத்திரம் போயிட்டு வரட்டும் நான் இங்கேயே இருக்கேன்

என்ன ப்ரவின் !!! நாங்க இங்க தங்க மலை ரகசியம் எதுவும் பேசப் போவதில்லை அதனால நீ எதையும் மிஸ் பண்ணமாட்ட அதுக்கு நான் கியாரண்டி. போயிட்டு வா

அச்சோ மன்னி அதெல்லாம் ஒன்றுமில்லை…ஐ மீன் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ன்னு சொல்லவந்தேன்

சரி அப்படியே இருக்கட்டும். டேய் வேனு நீயும் பவினும் போயிட்டு வாங்கோஎன ஒரு நக்கல் சிரிப்புடன் கூறினாள் மிருதுளா. வேனுவும் பவினும் சென்ற பிறகு அவள் சொன்னது போலவே பெட்டிகளை எல்லாம் ஒரு புறமாக அடுக்கி வீட்டை கூட்டிச் சுத்தம் செய்து பின் குக்கரில் சாதம் வைத்து விட்டு ஹாலில் வந்தமர்ந்தாள். அப்போது ராமானுஜம்…

நம்ம குவார்டர்ஸுக்கும் இந்த இடத்துக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. மளிகை ஜாமன் எல்லாம் எங்க வாங்குவேங்கள் மிருது ? கேம்புக்குள்ள ஒரு கடை பார்த்தேன் அங்கயா?”

இல்லைப் பா பாதி அங்க மீதி இவருக்கு கேன்டீன்னு இவாளுக்கு மாத்திரமான கடையிருக்கு அங்க வெளில விக்கறதவிட ரொம்ப கம்மியா இருக்கும் ஸோ அங்க வாங்குவோம்…அங்க தான் இந்த மிக்ஸி கிரைண்டர் எல்லாம் வாங்கினோம்” 

ஓ இதெல்லாம் கூட மலிவா கிடைக்குமா? அப்போ டிவி, ஃபிர்ஜ் எல்லாம் வாங்க வேண்டியது தானே.

வாங்குவோம் …மெது மெதுவா ஒவ்வொரு மாசம் ஒவ்வொன்னா வாங்கலாம்ன்னு இருக்கோம்.

சரி அப்போ டிவியும் ஃபிர்ஜும் நாங்க வாங்கித் தறோம். என்ன சொல்லறேங்கள் நாம வாங்கிக் கொடுக்கலாம் தானேஎன்று அம்புஜம் ராமானுஜத்தைப் பார்த்தாள்…

வாங்கிட்டா போறது அங்க எவ்வளவு கம்மியா கிடைக்கும் மிருது

அப்பா கவலை படாதே நீங்க ஒன்னும் வாங்கித் தர வேண்டாம்

நீ சும்மா இரு மிருது நாங்க தான் வாங்கித் தருவோம். மாப்ள கிட்ட எங்கள அந்த கடைக்கு வர சனிக்கிழமை கூட்டிண்டு போகச் சொல்லு போதும். என்ன யோசிச்சிண்டிருக்கேங்கள் சரின்னு சொல்லுங்கோ

சரி சரி வாங்கிடலாம்

இவர்கள் பேசுவதை உன்னித்து கவனித்துக் கொண்டிருந்தான் ப்ரவின்.

அதை உணர்ந்த அம்புஜம் தனது கணவரிடம்…

சரி நீங்க நம்ம ப்ரவின் கிட்ட பேசிண்டு இருங்கோ. நான் ஆத்துக்கு பின்னாடி என்னென்ன செடிகள் மரங்கள் எல்லாம் வச்சிருக்கான்னு பார்த்துட்டு வரேன்

அது தான் காலையிலேயே நாம ரெண்டு பேருமா பார்த்தோமே

நான் சரியா பாக்கலை அதனால மறுபடியும் போறேன் தப்பா?”

தப்பே இல்லம்மா நீ போ” 

அம்புஜம் வீட்டின் பின்புறம் சென்றதும் சிறிது நேரத்தில் ….

மிருது …மிருது இங்கே சித்த வாயேன்‌.

என்ன மா என்ன வேணும்?”

எழுந்து இங்க வாயேன்டீ இது என்ன செடி வச்சிருக்க?”

இதோ வந்துட்டேன்….சொல்லு எந்த செடியை கேக்கறாய். நான் எதுவும் வைக்கலை இந்த வீட்டு ஓனர் வச்சிருக்கறது

இங்க வாடி

என்ன மா இப்படி இழுக்கற.

அம்புஜம் கதவை சாத்திவிட்டு பேசலானாள்…

என்னடி உன் மச்சினர்கள் இங்கிதம் இல்லாம இப்படி இருக்கா. அவாளும் வரேன் சொன்னப்போ சரி நம்ம வேனு வோட சுத்த ஆசைப்பட்டு தான் சொல்லறான்னு கூட்டிண்டு வந்தா இங்க நாம பேசக் கூட முடியாத அளவுக்கு மாத்தி மாத்தி ஒருத்தன் காவலுக்கு இருக்கானே…இதை நான் கொஞ்சம் கூட எதிர்ப் பார்க்கலை

மிருதுளா புன்னகைத்தாள்…

என்னடி சிரிக்கற!!! நான் என் பொண்ணுட்ட அவா புக்காம் பத்தியும் என் பொண்ணு எப்படி இருக்கானுட்டும் கேட்டு தெரிஞ்சுக்க இப்படி ரகசிய மாநாடு போட வேண்டியிருக்கே!!

சரி நாளைக்கு சாயந்தரம் நாம ரெண்டு பேரும் வாக்கிங் போகலாம் அப்போ உனக்கு என்னனென்ன கேட்கனுமோ கேட்டுக்கோ சரியா. இப்போ உள்ள போகலாம் இல்லாட்டி….என்று மிருதுளா முடிப்பதற்குள்

மன்னி என்ன இவ்வளவு நேரமாவா அந்த செடியப் பத்தி சொல்லறேங்கள்!!! எனக்கு ஒரு கப் சாய் தறேளா ப்ளீஸ்” 

அது ஒன்னுமில்லை ப்ரவின் எங்க அம்மாவுக்கு எக்ஸ்ப்ளேயின் பண்ணிட்டிருந்தேன். இப்போ போய் சாய் கேட்கற சாப்பிட டைம் ஆகறதே!

ஓ அப்படியா ஓகே தென் வேனுவும் பவினும் வந்ததுக்கப்புறம் சாப்பாடே சாப்பிடலாம்” 

என்று கூறிக் கொண்டே உள்ளே சென்றான் அவன் பின்னாலே மிருதுளாவும் தனது தாயிடம் அமைதியாக இருக்கும் படி சொல்லிவிட்டுச் சென்றாள். வேனுவும் பவினும் வீட்டிற்கு திரும்பி வந்து அவர்கள் பார்த்ததை எல்லாம் ப்ரவினிடம் கூறினர். அப்போது மிருதுளா…

பார்த்தயா ப்ரவின் நீயும் அவாளோட போயிருந்தா இதெல்லாம் கேட்டுண்டில்லாம பார்த்துட்டே வந்திருக்கலாம். நீ எதையோ யோசிச்சுண்டு யூ மிஸ்டு இட். ஓகே எல்லாரும் கை அலம்பிட்டு சாப்பிட வாங்கோ

அனைவருமாக சாப்பிட்டப் பின் மீண்டும் சிறிது நேரம் சீட்டுக் கச்சேரியில் மூழ்கினர். மணி நாலானதும் அனைவருக்கும் காபி கொடுத்து விட்டு சித்தி வீட்டிற்கு போவதற்காக கிளம்பச் சொன்னாள். எல்லோரும் கிளம்பினர். மணி அஞ்சடித்ததும் நவீன் வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது. நவீன் வீட்டினுள் நுழைந்தான் அனைவரும் தயாராக இருப்பதைப் பார்த்து ….

ஓ எல்லாரும் ரெடியா இருக்கேங்களே…இதோ ஒரு ஃபைவ் மினிட்ஸ் ல நானும் டிரஸ் சேஞ்ச் பண்ணி ரெடி ஆகிடறேன்.

நவீன் டிரஸ் சேஞ்ச் செய்து வருவதற்குள் மிருதுளா ஒரு தட்டில் ஊரிலிருந்து வந்த பட்சணங்கள் கொஞ்சமும் சூடான ஒரு கப் காபியும் கொண்டு வந்து மேஜை மீது வைத்தாள். பின்பு பின் கதவு ஜன்னல் எல்லாவற்றையும் மூடினாள்‌. நவீன் அந்த பட்சணங்களில் கொஞ்சம் மட்டும் சாப்பிட்டு, காபியை குடித்து விட்டு ….

ஓகே கிளம்பலாமா?”

அனைவருமாக நவீன் காலையில் கூறியது போலவே பஸ்ஸில் சென்று பின் பஸ்டாப்பிலிருந்து இரண்டு ஆட்டோ வைத்து அவர்கள் சித்தி வீட்டைச் சென்றடைந்தனர். ரம்யா சித்தியும் சித்தப்பாவும் அவர்களை வரவேற்று சற்று நேரம் பேசிக் கொண்டிருக்கையில் ரம்யா சித்தி அம்புஜத்திடம்….

எங்க நவீன் உங்க மிருதுளாவ கட்டிண்டதுலேருந்து அவன் மிருதுதாசனாவே ஆயிட்டான். அவன் பேரே இனி மிருது தாசன்னு ஆக போறது ன்னா பாருங்கோளேன்

என்று குதர்க்கமாக பேசியதில் அம்புஜத்திற்கு எப்படி ரியாக்ட் பண்ணுவதென்றே தெரியாமல் அசடு வழிந்துக் கொண்டிருந்தாள் ….மற்றவர்கள் ஏதோ பெரிய ஜோக் கேட்டது போல சரித்துக் கொண்டிருந்தனர்…நவீன் உட்பட. அதைப் பார்த்த மிருதுளாவிற்கு சுர் என்று கோபம் தலைக்கேறியது ஆனாலும் நிதானமாக ரம்யா சித்தியைப் போலவே சிரித்துக் கொண்டே …

ஆமாம் ஆமாம் சித்தி எல்லாம் உங்க ஃபேமிலி டிரென்டு போல….என சிரித்தாள்

நீ என்ன சொல்ல வர மிருதுளா?”

அது ஒன்னுமில்லை சித்தி….சித்தப்பா எவ்வழியோ மகன் நவீனும் அவ்வழியே.  ரைட்டா. உங்க ஆத்துல ஒரு ரம்யா தாசன் போல எங்காத்துல மிருது தாசன் தட்ஸ் இட்” 

என மிருதுளா சொன்னதும் ரம்யா சித்தி சட்டென்று எழுந்து உள்ளே போனாள். அதை கவனித்த நவீன் மிருதுளாவை முறைத்தான். அதுவே மிருதுளாவை முதன்முதலாக நவீன் கோபமாக முறைத்துப் பார்த்தது. அதைப் பார்த்ததும் மிருதுளா தனக்குள்….

நான் என்ன தப்பா சொல்லிட்டேன் அவா மட்டும் அப்படி ஒரு ஜோக் என்ற பெயரில் என்னையும் என் பெற்றோரையும் அவமானப்படுத்தலாமாம் ஆனா நான்  அதையே சொன்னா ஏன் முறைக்கறாரோ தெரியலை” 

நவீனும் அங்கிருந்து எழுந்து உள்ளே தன் சித்தியிடம் பேச்சுக் கொடுக்கச் சென்றான். அவன் சித்தப்பா சற்று நேரத்தில் வருவதாக சொல்லி விட்டு வெளியே எங்கோ புறப்பட்டுச் சென்றார். ப்ரவினும், பவினும் அவர்கள் சித்தி மகள்களுடன் வெளியே மொட்டை மாடிக்குச் சென்றனர். ஹாலில் மிருதுளா குடும்பம் மட்டும் யாருமின்றி அமர்ந்திருந்தனர். வேனு தன் அக்காவிடம்….

என்ன மிருதுக்கா இப்படி நம்மள உட்கார வச்சிட்டு ஆளாளுக்கு போயிட்டா!!! பின்ன எதுக்கு நம்மள வரச்சொன்னாலாம்

இதைக் கேட்ட அம்புஜம்…

டேய் வேனு வாயை வச்சுண்டு கொஞ்ச நேரம் சும்மா இருடா. ஏண்டி மிருது நீ ஏன் அவாள்ட்ட அப்படி கேட்ட? பேசாம சிரிச்சிண்டு உட்கார்ந்திருக்க வேண்டியது தானே மா

அம்மா மிருதுக்கா ஒன்னுமே தப்பா சொல்லலையே. அத்திம்பேரோட சித்தி  செட் அ வெரி பேட் ஜோக்

சரி சரி இத விடுங்கோ. இங்க இப்போ இதப்பத்தி நாம பேச வேண்டாம். ஆத்துல போய் பேசிக்கலாம். நானே உள்ள போய் என்ன நடக்கறதுன்னு பார்த்துட்டு வரேன். நீங்க மூணு பேரும் இங்கயே இருங்கோ

என்ன சித்தி நான் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா?” 

நவீன் மீண்டும் அவளை முறைத்து விட்டு ஹாலுக்குச் சென்றான்.

இல்ல இல்ல எல்லாம் ரெடி. வாங்கோ எல்லாருமா சாப்பிடலாம்

அனைவருமாக இரவு உணவை உண்ட பின் அங்கிருந்து கிளம்பினார்கள். அப்போது ப்ரவின்…

ஓகே எல்லாருக்கும் பை. நான் இங்க சித்தி ஆத்துல இரண்டு நாள் தங்கிட்டு வரேன். நீங்க எல்லாரும் போயிட்டு வாங்கோ

என்ன சொல்லற ப்ரவின். உன் டிரெஸ் எல்லாம் வேண்டாமா!என கேட்டான் நவீன்

இதோ வேண்டிய டிரஸ் எல்லாம் எடுத்துண்டு வந்திருக்கேன் அண்ணா. வரும்போதே டிசைட் பண்ணி தான் வந்தேன்” 

மிருது உன்கிட்ட ப்ரவின் சொன்னானா?”

இல்லை எனக்கும் இப்போ அவன் சொல்லித் தான் தெரியறது

அப்போ ரெண்டு நாள் கழிச்சு நீயே பஸ்ஸு பிடிச்சு ஆத்துக்கு வந்திடு சரியா

ஓகே அண்ணா நான் பார்த்துக்கறேன்

இதுவே நவீனுக்கும் மிருதுளாவிற்கும் ப்ரவின் கொடுத்த மரியாதை!!!!!

ரம்யா குடும்பத்தினருக்கு பை சொல்லி விட்டு பஸ்ஸில் ஏறினர். பஸ் பயணத்தின் போது நவீன் மிருதுளாவிடம்…

நீ ஏன் என் சித்தியிடம் அப்படி சொன்ன?”

என்று கேட்டதும் மிருதுளா நவீனைப் பார்த்து…

இதே கேள்வியை உங்க சித்தியிடம் கேட்டிருக்க வேண்டியது தானே. கேட்டேங்களா?” 

என்றதும் சட்டென எழுந்து வேனுவை மிருதுளா பக்கத்தில் உட்காரச் சொல்லி விட்டு நவீன் பவின் அருகில் சென்று அமர்ந்தான். நடந்தவையை பார்த்த அம்புஜம் மனதிற்குள்….

அச்சோ இந்த பொண்ணு ஏன் அப்படி சொல்லனும் இப்போ மாப்ளயோட பிரச்சினை ஆகனும். அதுவும் நாங்க வந்த நேரமா இப்படியெல்லாம் நடக்கனும். அம்மா தாயே மாப்ளையோட கோபத்தை சீக்கிரம் தணித்துடுமா

அம்புஜம் தொன்னூறுகள் தாய் மார்களின் ஓர் எடுத்துக்காட்டு. இதே இந்த கால தாய்மார்கள் தங்கள் பெண் செய்தது தான் சரி என்று மாப்பிள்ளையிடமே சண்டையிடவும் தயங்க மாட்டார்கள். ஆனால் அன்றோ மாப்பிள்ளை முன் வருவதற்கே சங்கோஜப் படுவார்கள். தனது பெண் தனக்காக தன் தன்மானத்தைக் காக்க தன்மையாக திருப்பி பேசியதை ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால் அவளிடம் இப்படி ஏதாவது பேசி அவளின் தன்னம்பிக்கையை தளர்த்தாமல் இருந்தாலே நல்லது. 

நவீனின் இந்த திடீர் மாற்றம் மிருதுளாவை மட்டும் அல்ல நம்மையும் குழப்பம் என்ற குழியில் தள்ளியுள்ளது. மிருதுளா நவீனிடம் பஸ்ஸில் கேட்டது சரியா? நவீனின் கோபம் சரியானதா? அம்புஜத்தின் பரிதவிப்பு தேவையானதா

இதை எப்படி கையாளப் போகிறாள் மிருதுளா!!!!!

தொடரும்…..

தனது குடும்பத்தினரின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த மிருதுளா என்னனென்ன பொருட்கள் வாங்க வேண்டி வரும் என்று ஒரு லிஸ்ட் தயார் செய்தாள். அன்று மாலை நவீன் கிளாஸ் முடிந்து வந்து இருவரும் உணவருந்தியதும் அமர்ந்து அந்த லிஸ்ட்டில் உள்ள பொருட்களை எங்கே வாங்கலாம் எவ்வளவு ஆகும் என்று பட்ஜெட் போட்டனர். அப்போது மிருதுளா

சரி இந்த பொருட்களுக்கு ஒரு ஆயிரம் ரூபாய் தேவை. அப்புறம் இந்த மாத மளிகை ஜாமான்கள் வாங்கனும் அதுக்கு ஒரு இரண்டாயிரம் போயிடும், காய்கறிகளுக்கு ஒரு ஆயிரம், ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து அவாள கூட்டிண்டு வர்றதுக்கு கார் வைக்கனும் அதுக்கு ஒரு ஐநூறு, பால் + பெட்ரோல் + ஸ்நாக்ஸ் எல்லாமுமா ஒரு ஆயிரம்….ஸோ டோட்டல் இப்பவே ஐயாயிரத்தி ஐந்நூறு மீதமிருக்கறது ஐந்நூறு இதுல எப்படி நாம அவாள எல்லா இடத்துக்கும் சுத்திக்காட்ட கூடிண்டு போக முடியும்?”

மிருது நீ சொல்லற கணக்கில் எல்லாமே கொஞ்சம் ஜாஸ்தியா தான் சொல்லற அதனால பணம் இருக்கும். அப்படியே பத்தாட்டினா என் ஆஃபீஸில் அட்வான்ஸ் வாங்கறேன். என்ன அடுத்த மாதம் சம்பளம் குறைவா வரும். என்ன சொல்லற?”

ஆஃபிஸிலேருந்து அட்வான்ஸ் ன்னா ஓகே ஆனா யார்கிட்டேயும் கடன் வாங்க கூடாது சரியா

சரி மகாராணி. நீ இதெல்லாம் மனசுல போட்டுண்டு அவாளோட என்ஜாய் பண்ணாம இருக்காத. நான் பார்த்துக்கறேன். கவலைப் படாதே.

சரி உங்க பேரன்ட்ஸுக்கு அனுப்பவேண்டிய  மூவாயிரத்தை அனுப்பியாச்சா இல்லையா?”

அதெல்லாம் நீ சொன்ன மறுநாளே அனுப்பியாச்சு.

அவா எல்லாருமா என்னைக்கு எத்தர மணிக்கு வராநவீன்

அவா வர்ற ஞாயிற்றுக்கிழமை காலை ல எட்டு மணிக்கு ரெயில்வே ஸ்டேஷன் வந்து சேர்வார்கள் என பத்தாவது முறையாக அறிவிக்கிறேன்

ஓகே உங்களின் பத்தாவது தடவை அறிவிப்புக்கு நன்றி நன்றி நன்றி

இந்த வெள்ளிக்கிழமையும் கிளாஸுக்கு லீவ் போடட்டுமா?”

ஏன் ஏன்னத்துக்கு வேண்டாம். நீங்க கிளாஸுக்கு போயிட்டு வாங்கோ. எல்லாத்தையும் சனிக்கிழமை காலை ல ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுட்டு போய் வாங்கிண்டு வரலாம்.

அப்போ லஞ்ச் வெளிய சாப்பிடலாமா?”

ஏன் எதுக்கு நான் காலையில சீக்கிரம் எழுந்து மத்தியான சமையலையும் முடிச்சிடறேன். எல்லா பர்சேஸிங்கும் முடிச்சிட்டு ஆத்துக்கு வந்து சாப்பிடலாம் ஓகே வா?”

எனக்கு ஓகே மிருது

சனிக்கிழமை காலை மிருதுளா சீக்கிரமே எழுந்து காலை டிபன் மற்றும் மத்திய சாப்பாடு எல்லாம் செய்துவிட்டு குளித்து வெளியே செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள்.  அப்போது எழுந்த நவீனைப் பார்த்து…

என்ன நவீன் இன்னைக்கு வெளியே பொருளெல்லாம் வாங்க போகனும்னு தெரியாதா இப்படி தூங்கறேங்கள்!

ஏன் எழுப்பலை

நல்லா தூங்கிண்டிருந்தேங்கள் எழுப்ப மனசு வரலை

டைம் என்ன ஆச்சு?”

மணி ஒன்பதாகறது

என்ன ஒன்பது தானே ஆகறது கடைகள் பத்து மணிக்கு தான் ஓப்பன் பண்ணுவா ஸோ எனக்கு ஒரு மணிநேரமிருக்கே சட்டுன்னு ரெடி ஆயிடுவேன்

சரி சரி பேசிண்டே இருக்காம சீக்கிரம் கிளம்புங்கோ. டிபன் வேற சாப்பிடனும்

என் மிருது குட்டி ..சூடா ஒரு கப் காஃபி ரெடி பண்ணுவாளாம் நான் நிமிஷத்துல ப்ரஷ் பண்ணிட்டு வந்திடுவேனாம். மிருது காபி குடிச்சிட்டு, பேப்பரை ஒரு பொரட்டு பொரட்டிட்டு பின்ன குளிச்சி ரெடி ஆயிடுவேனாம்

இருவருமாக ஒருவழியாக வெளியே கிளம்பினர். மிருதுளா போட்ட லிஸ்ட் படி எல்லா பொருட்களையும் வாங்கினார்கள் ஆனால் எல்லாவற்றையும் பைக்கில் வைத்து கொண்டுவரமுடியாத காரணத்தினால் மிருதுளாவை எல்லா பொருட்களுடன் ஆட்டோவில் ஏற்றிவிட்டு பின்னாடியே பைக்கில் சென்றான் நவீன்.

வீட்டிற்கு வந்து மத்திய உணவருந்தியப்பின் சற்று ஓய்வெடுத்து விட்டு பின் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் அது அது இடத்தில் அடுக்கி வைத்து விட்டு மறுநாள் சமைக்கவேண்டிய காய்கறிகளை நறுக்கி வைத்தனர். அன்று மாலை பக்கத்திலிருக்கும் ஒரு பார்க்குக்கு சென்று சற்று நேரம் நடந்து பின் அங்குள்ள பென்ச்சில் அமர்ந்தனர். அப்பொழுதும் மிருதுளா ஏதோ யோசனையிலேயே இருந்ததைப் பார்த்த நவீன்…

என்ன யோசிக்கற மிருதுளா? நாளைக்கு உன் அப்பா, அம்மா, தம்பி எல்லாரும் வந்திடுவா அப்புறம் உனக்கு என்னோட பேசக் கூட நேரமிருக்காது…அத தானே யோசிச்சிண்டுருக்க

அட போ பா…நான் ஏன் அதையெல்லாம் யோசிக்கப்போறேன். தெரிஞ்ச விஷயத்தை எல்லாம் நான் யோசிக்க மாட்டேன். அப்படின்னா நீங்க ஏன் அதை யோசிக்கலையாம் உங்க தம்பிகளும் தானே வர்றா….எப்புடி

அடி பாவி!!! அப்போ வேற என்னத்த பத்தி அப்படி யோசனையாம்!

நாளைக்கு காலை ல எட்டு மணிக்கு வர்றான்னா நாம ஸ்டேஷனுக்கு ஏழரை க்கு போயாகனும் இல்லையா

ஆமாம் நாம ஆத்துல இருந்து  ஒரு ஏழேகாலுக்கு பஸ் ல கிளம்பினோம்ன்னா கரெக்ட்டா ஏழரைக்கு ஸ்டேஷன் ரீச் ஆகிடுவோம்.

ஓ ஏழேகாலுக்கெல்லாம் ரெடி ஆகனுமா? அப்போ நான் நாலரை மணிக்கு எழுந்திருக்கனுமே!!

ஏன் அவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்கனும்?”

அப்போ தானே காலை அன்ட் மத்திய  சமையல் வேலைகளை எல்லாம் முடிக்க முடியும்.

ஓ நீ அடுப்படிக்குள்ள இருக்கயா?…என் கூட பார்க்ல இருக்கேன்னு நினைச்சிண்டிருக்கேன்

என்னது!!! நாம பார்க் ல தானே இருக்கோம்

தெரியறது தானே அப்புறம் என்ன அடுப்படி சமையல்ன்னு அதையே நினைச்சிண்டிருக்க.

ஓகே மறுபடியும் பார்க்குக்கே வந்துட்டேன். சொல்லுங்கோ அவாள எங்கெல்லாம் கூட்டிண்டு போகபோறோம்.

அதெல்லாம் நான் ஏற்பாடு பண்ணிட்டேன். நீ கவலைப் படாதே

உங்க ஈவ்னிங் கிளாஸ் எப்படி போகபோறேங்கள்?” 

அவா இருக்கற வரைக்கும் டொக்கடிக்க வேண்டியது தான்.

நோ நோ நோ…அது மட்டும் கூடவே கூடாது. என்னைக்கெல்லாம் ஈவ்னிங் எங்கேயும் போற ப்ளான் இல்லையோ அன்னைக்கெல்லாம் கிளாஸ் அடென்ட் பண்ணுங்கோ..சரியா

உத்தரவு டிச்சர்.

சரி நேரமாயாச்சு ஆத்துக்கு போகலாமா?”

ஓ ஆமாம் இட்ஸ் செவன் தர்ட்டி. அப்படியே ஆத்துக்கு போற வழில நம்ம டாபா ல டின்னர் சாப்ட்டுட்டே போலாமா இல்லை ஏதாவது செய்து வச்சிருக்கயா?”

ஒன்னும் செய்து வைக்கலை. சாப்பிட்டுட்டே போகலாம்.

நவீனுக்கும் மிருதுளாவும் காலை முதல் மாலை வரை பர்ச்சேஸிங், வருபவர்கள் சௌகர்யமாக தங்குவதற்கான ஏற்பாடுகள், பார்க்கில் வாக்கிங் என சனிக்கிழமை விறுவிறுவென ஓடியதில் களைத்துப் போனார்கள். அன்றிரவு இருவருமே அசந்து உறங்கிப் போனார்கள். 

மிருதுளா சட்டென்று விழித்துப்பார்த்தாள் சூரியன் உதயமாகி பல மணி நேரமானது போல தோன்ற கிடுகிடுவென குளித்து ஃப்ரெஷ் ஆகி கடிகாரத்தைப் பார்த்தாள்….மணி ஆறு என்று அவள் பார்த்ததில் கடிகாரத்தின் இரு முட்களும் வெளியே வந்து அவளை சுறுக்கென குத்தியது போல 

ஓ! ஹோ!!என்றபடியே

நவீன் ஏய் நவீன் மணி ஆறாச்சுப்பா!!! எழுந்திறீங்கோ…இவ்வளவு லேட்டா எழுந்துண்டுட்டேனே

என பொலம்பிக்கொண்டே காபி டிக்காக்ஷன் போட்டுக்கொண்டே மளமளவென வேலையில் இறங்கினாள். மிருதுளா எழுப்பிய வேகத்தில் நவீன் எழுந்து 

என்னத்துக்கு இப்போ இவ்வளவு டென்ஷன் ஆகற மிருது இன்னும் ஒன்னேகால் மணி நேரமிருக்கு நாம கிளம்ப. அதுவரை என்ன முடியறதோ அதை செய் மீதியை வந்துட்டு செஞ்சுக்கலாம். காபி உண்டா?”

நவீன் கையில் சுடசுட காபி டம்ளரைக் குடுத்துக்கொண்டே…

ஆமாம் உங்களுக்கென்ன வந்தவாளோட அரட்டை அடிச்சிண்டு இருப்பேங்கள்‌

உனக்கென்ன ஆச்சு நீயும் ஜாயின் பண்ணிக்கோ

அதுக்குதான் என் வேலைகளை எல்லாம் இப்பவே முடிச்சிட்டா நானும் உங்களோட உட்கார்ந்து அவாளோட பேசலாமேன்னுட்டு இப்படி அவசர அவரமா செய்துண்டிருக்கேன். காபி குடிச்சாச்சில்லையா நீங்க போய் ரெடி ஆகுங்கோ…

என்று பேச்சைக்குறைக்க நவீனை அங்கிருந்து அனுப்பிவிட்டு கிடுகிடுவென காலை டிஃபனுக்கு இரவே ஊர வைத்த பருப்பு அரிசியை போட்டு அடைக்கு மாவறைத்து வைத்து, மத்தியத்துக்கு சாம்பார், ரசம், பொறியல் செய்து விட்டு ஸ்டேஷன் செல்வதற்கு புறப்பட்டாள். 

பரவாயில்லை மிருது வித்தின் ஒன் அவர் நீ இவ்வளவு செய்துட்டேயே. யூ ஆர் கிரேட்

என்ன புகழ்ந்தது போதும் நாம கிளம்பலாமா?” 

ஓகே நீ போ நான் கதவை பூட்டிட்டு வரேன்

இருவருமாக ஸ்டேஷனில் விருந்தினர்கள் வரும் கம்பார்ட்மென்ட் நிற்கும் இடத்தை  சென்றடையவும்  அவர்கள் வரும் ரெயில் அதற்குரிய பிளாட்பாரம் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. மூன்று மாதங்களுக்கு பிறகு தனது குடும்பத்தினரை பார்க்க போகும் மிருதுளாவின் மனது முழுவதும் மகிழ்ச்சி ஆக்கிரமித்திருந்தது. அதுவரை அவள் அவளின் குடும்பத்தை விட்டு இவ்வளவு நாட்கள் இருந்ததில்லை. 

நவீன் மிருதுளாவை அங்கேயே நிற்க சொல்லி விட்டு அந்த கம்பார்ட்மென்ட்டிற்குள் சென்றான். மிருதுளாவின் கண்கள் அந்த ரெயில் பெட்டியினுள் ஸ்கேன் செய்துக்கொண்டிருக்கையிலே….அவள் பின்னாலிருந்து…

ஹாய் மிருதுக்காஎன்றான் வேனு

ஹேய் மிருது எப்படி மா இருக்கஎன அவள் தாய் 

அவர்களை பாத்ததும் ஓவென்று அழத்துவங்கினாள் மிருதுளா. உடனே நவீன் அவளருகில் வந்து 

இட்ஸ் ஓகே ஏன் அழற இப்போ…எல்லாரும் உன்னையே பாக்கறா பாரு …கண்ண தொடச்சுக்கோ..

என்ன மிருதுக்கா இவன் வந்துட்டானேன்னு அழறயா என்ன?”

என்று வேனு கூறியதும் அனைவரும் சிரித்தனர் பின் தன்னை நிதானித்துக் கொண்டாள் மிருதுளா ..

சாரி உங்களை எல்லாரையும் பார்த்ததும் என்னமோ தெரியலை அழுகை வந்துடுத்து. வெல்கம் டூ குஜராத் அம்மா, அப்பா, வேனு, ப்ரவீன் அன்ட் பவின்

உன் சமையலை சாப்பிடப் போற  நாங்க இல்லையா அழனும் எங்களுக்காக நீ ஏன் அழுவற?”

டேய் வேனு வேனாம்டா

ச்சே ச்சே அப்படி எல்லாம் சொல்லாதே வேனு உங்க அக்கா சூப்பரா சமைக்கறா. நீயும் சாப்பிட்டதுக்கப்புறம் சொல்லு

சாப்பிட்டதுக்கப்புறம் சொல்றதுக்கு இருக்கனுமே!!

டேய் வேனு போதும் போதும் நிறுத்திக்கோஎன்று அம்புஜம் சொன்னதும் கப்சிப் ஆனான் வேனு.

நவீனின் நண்பனின் மாருதி ஓம்னி வேனில் அனைத்து லக்கேஜ்களுடன் எப்படியோ அட்ஜெஸ்ட் செய்து அனைவரும் அமர்ந்து  இப்படியே பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர். அதனால் புதுமண தம்பதியினருக்கு ஒரு முன்னூறு ரூபாய் மிச்சமானது. 

வீட்டைத் திறந்துக் கொண்டே அனைவரையும்வாங்கோ..வாங்கோ எல்லாரும் எங்காத்துக்குள்ள வாங்கோஎன்று கூறினாள். மிருதுளாவும்அம்புஜமும், ராமானுஜமும் முதலில் உள்ளே சென்றனர். மற்றவர்கள் பெட்டிப் படுக்கைகளை வண்டியிலிருந்து இறக்கி வீட்டினுள் எடுத்து வந்துக் கொண்டிருந்தனர். மிருதுளா அவள் பெற்றோரிடம்…

அம்மா அப்பா வீட்டை சுத்திப் பாருங்கோ அதுக்குள்ள உங்க எல்லாருக்கும் காபி போடறேன்

நீ தள்ளு மிருது நான் போடறேன்

அம்மா இப்போ நீ எங்காத்துக்கு வந்திருக்க ஸோ நான் தான் போடுவேன்…நீ போய் வீட்டைப் பாரு இல்லாட்டி ஹால் ல உட்காரு

வீடு நம்ம குவார்டர்ஸ் மாதிரிதான் இருக்குஎன்றார் ராமானுஜம்

இதுவும் எங்களோட குவார்டர்ஸ் தான். ஆனா இது எனக்கு அளாட் ஆன வீடு இல்லை. இதுக்குள்ள சேஃப்ட்டியா இருக்குமேன்னு தான் உள்ளயே  இருக்கோம். இன்னும் ஒரு ஆறு  இல்லை எட்டு மாசத்தில எனக்கு வீடு அளாட் ஆகிடும்என்று பதிலளித்தான் நவீன். 

லக்கேஜ் எல்லாம் ஹாலில் வைத்துவிட்டு அனைவருமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். மிருதுளா ஏழு காபி டம்பளர்களுடன் வந்து அனைவருக்கும் காபிக் கொடுத்துவிட்டு…

அம்மா என் காபி எப்படின்னு குடிச்சுப்பார்த்து சொல்லேன்” 

தாயல்லவா!!! மகள் சொன்னதும் குடித்துவிட்டு

சூப்பர் காபி மிருது. ரொம்ப நல்லா இருக்கு

மிருதுக்கா அம்மா உனக்கு ஜைன் சக் அடிப்பா இரு இரு இதோ நான் குடிச்சிட்டு உண்மையான ஒப்பீனியன் சொல்லறேன்..

சரிடா நீ குடிச்சிட்டு சொல்லு

.”ம்…ம்..ஆஹா நிஜமாவே சூப்பர் தான் மிருதுக்கா

வஷிஷ்ட்டர் வாயால் ப்ரம்மரிஷி. போதுமாடா!!

ஏய் மிருது அது என்ன வஷிஷ்ட்டர் வாயால்…..

அதுவா அதை அப்புறமா சொல்லறேன். ஹேய் ப்ரவீன் அன்ட் பவின் என்ன அமைதியா இருக்கேங்கள். உங்க மன்னி காபி எப்படி

சூப்பரா இருக்கு மன்னிஎன்றான் ப்ரவின்

ஓகே எல்லாரும் ஒவ்வொருத்தரா குளிச்சிட்டு வாங்கோ நான் அடை வார்த்துத் தறேன். நவீன் அவா எல்லாம் குளிச்சிட்டு வரட்டும் உங்களுக்கு ஃபர்ஸ்ட் டிஃபன் தரேன் வாங்கோ

அம்புஜம் முதலில் குளித்து விட்டு அடுப்படிக்குள் சென்று..

மிருது மா தாடி நான் அடை வார்க்கறேன்

அம்மா எத்தனத் தடவ சொல்லுவேன் …இந்தா புடி நீயும் போய் உட்கார்ந்து சாப்பிடு.

அனைவரும் குளித்து டிஃபன் அருந்தியப்பின் ஹாலில் வட்டமாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் அம்புஜம் மிருதுளாவையே பார்த்துக்கொண்டிருந்தாள். அதை கவனித்த மிருதுளா தன் அம்மாவிடம்…

என்ன மா வந்ததுலேருந்து என்னை அப்படிப் பார்க்கற

கல்யாணத்துக்கு முன்னாடி நீ இருந்ததையும் இப்ப நீ இப்படி பொருப்பான குடும்பஸ்த்தியா இருக்கறதையும் நினைச்சுப் பார்த்திண்டிருக்கேன்

அதெல்லாம் ஓகே நான் நல்லா இருக்கேன்னு சொல்லவரயா இல்லை…

நீ எவ்வளவு சமத்தா இருக்க…அதப் பார்த்து ரசிச்சிண்டிருக்கேன்

அப்போ சரி நீ நல்லா ரசிச்சிண்டே இரு. நான் போய் பாயசமும் வடையும் மட்டும் பாக்கி வச்சிருக்கேன் அதை செய்துட்டு வரேன்.

ராமானுஜம் …நவீனுக்கும் மிருதுளாவிற்குமாக கொண்டு வந்த டிரெஸ், பலகாரங்கள், பழங்கள், ஊறுகாய் பாட்டில்கள் என எல்லாவற்றையும் அட்டைப்பெட்டியிலிருந்து எடுத்து வெளியே வைத்தார். அதைப் பார்த்த நவீன்…

என்னது இது இவ்வளவு கொண்டு வந்திருக்கேங்கள்!!! ஏய் மிருது இதெல்லாம் எங்க வைக்க போறஎன்றான்.

அம்மா ஏதாவது வேலை செய்யனும்னா அதை எல்லாம் இங்க அடுப்படி ல கொண்டு வந்து அடுக்கேன்

ஓ பண்ணறேனே. எங்க அடுக்கனும்ன்னு சொல்லு அங்கேயே வச்சுடறேன்

இதோ இந்த ஷெல்ஃப் காலியாதான் இருக்கு இதுல அடுக்கிடூ

அம்புஜமும் மிருதுளாவும் அடுப்படியில் மும்முரமாக வேலையில் இறங்கினர். ராமானுஜம் தரையில் துண்டை விரித்து படுக்க அப்படியே அசந்துப்போனார். நவீன் பசங்களை கூட்டிக்கொண்டு வெளியே போவதாக மிருதுளாவிடம் சொல்லி விட்டு வேனு, ப்ரவின் அன்ட் பவினை அழைத்தான். அதற்கு பவின்…

இல்லண்ணா நான் வரலை. இங்கேயே இருக்கேன் நீங்க எல்லாரும் போயிட்டு வாங்கோஎன்று சொல்ல அதற்கு ப்ரவின் 

ஓகே பவின் இப்போ நீ இங்க இருந்துக்கோ அடுத்த தடவை இப்படி வெளியே போனா நீ அவா கூட போ சரியா

டேய் என்னடா பேசறேங்கள்? ஏன் ரெண்டு பேரும் வர்றத்துக்கு என்னவாம்!!!நான் என்ன உங்க ரெண்டு பேர் ல ஒருத்தரை தான் கூட்டிண்டு போவேன்னா சொல்லறேன்? அதென்ன இந்த தடவ நான் அடுத்த தடவ நீ அப்படீன்னு பேசிக்கறேங்கள். என்ன நடக்குது உங்ளுக்குள்ள?”

அது ஒன்னுமில்லண்ணா…நீ வா நாம போயிட்டு வரலாம் பவினுக்கு வரனும்ன்னு தோனலையாம்

என்ன டிஸ்கஷன் வெளியே போறோம்ன்னு சொல்லி பத்து நிமஷத்துக்கு மேல ஆச்சு ஆனா இன்னும் இங்கயே பேசிண்டிருக்கேங்கள். உங்க பேச்சு சத்தத்திலும் எங்க அப்பா எப்படி தான் இப்படி தூங்கறாரோ!!! என்ன ஆச்சு?”

அது ஒன்னுமில்லை மன்னி. பவினுக்கு வர தோனலையாம் அதைத்தான் ஏன்னு நவீன் அண்ணா கேட்டுண்டிருக்கா

ஏன் பா அவனுக்கு வரனும்ன்னு இல்லைன்னா விட வேண்டியது தானே..ஏன் இப்படி கம்ப்பல் பண்ணறேங்கள்? நீங்க எல்லாரும் போயிட்டு வாங்கோளேன்

நவீனுக்கு எடுத்துச்சொல்லி அவர்கள் வெளியே சென்றதும் கதவை சாத்தி விட்டு பவினிடம் சற்று படுத்து ஓய்வெடுக்க சொல்லி விட்டு அடுப்படிக்குள் சென்று சமையலைத் தொடர்ந்தாள். 

அன்று மத்தியம் வெளியே சென்றவர்கள் வந்ததும் அனைவருமாக அமர்ந்து மிருதுளா சமைத்த விருந்து சாப்பாட்டை ஒரு பிடி பிடித்தனர். மூன்று நாட்கள் கட்டு சாதம் சாப்பிட்ட வாய்க்கு விருந்து தேவாமிருதமாக இருந்தது. விருந்துண்ட மயக்கத்தில் அனைவரும் கண்ணசந்தனர். ராமானுஜம் காலை டிஃபன் சாப்பிட்டப் பின் ஒரு குட்டித்தூக்கம் போட்டதினால் அவருக்கு உறக்கம் வரவில்லை ஆகையால் கதவைத் திறந்து வெளியே பூட்டிவிட்டு அந்த கேம்ப்பை சுத்தி பார்க்க புறப்பட்டுச் சென்றார். முழுவதும் சுற்றிப் பார்த்தப் பின் தன் மகள் வீட்டுக்கு வந்து கதவைத் திறந்து பார்த்தார் அனைவரும் நல்ல உறக்கத்திலிருந்தனர். அவர்களை தொந்தரவு செய்யாமல் கிடைத்த இடத்தில் துண்டை விரித்து அவரும் படுத்துக் கொண்டார். 

அன்று மாலை காபி அருந்தியப் பின் அனைவரும் கிளம்பி நடந்து  பக்கத்திலிருந்த கோவிலுக்கு போய்விட்டு அப்படியே நவீன் மிருதுளா தினமும் வாக்கிங் போகும் பார்க்கில் சென்று சற்று நேரம் அமர்ந்து அரட்டை அடித்து விட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் அவர்களின் ஃபேமஸ் ரோஹித் டாபாவில் அம்புஜத்தைத் தவிற மற்ற அனைவரும் டின்னர் சாப்பிட்டு வீடு வந்து சேர்ந்தனர். வீட்டிற்கு வந்ததும் மிருதுளா தன் அம்மா கேட்டுக்கொண்டது படி சாதமும் தயிரும் கொடுத்து சாப்பிடச் சொன்னாள். அம்புஜமும் கொஞ்சமாக சாப்பிட்டாள். 

அனைவரும் வரிசையாக ஹாலில் படுத்தனர் அப்போது நவீன் 

டேய் பவின் ஈவ்னிங் எங்களோட வந்த இல்ல அதே மாதிரி காலை ல கூப்பிட்டப்போவும் வர்றதுக்கு என்னவாம்?”

அண்ணா ஈவ்னிங் எல்லாருமா போனோம் ல அப்போ நான் மட்டும் இங்கே இருந்து என்ன பண்ணுவேன் அதுனால வந்தேன்

ஓ சார் அப்படி வர்றீங்களா..ஓகே ஓகே

என்று நவீனுக்கு ஏதோ புரிந்ததுப் போல சொல்லி அத்துடன் பேச்சை நிறுத்திக்கொண்டான்.

மிருதுளா குடும்பத்தினரின் வருகையால்  மிருதுளாவும் நவீனும் சற்று பரபரப்புடன் இருந்தாலும், கொஞ்ச நாள் பிரிந்திருக்க வேண்டியிருந்தாலும் அவர்களுக்கு புத்துணர்வு அளித்தது. அம்புஜமும் ராமானுஜமும் அவர்களின் மகள் பொறுப்புடன் குடும்பம் நடத்தும் அழகைப் பார்த்ததில்  மனமகிழ்ந்தனர். மகள் மருமகன் வீட்டில் அவர்களின் முதல் நாள் இனிதே நிறைவுற்றது. 

ப்ரவின் அன்ட் பவின் மிருதுளா குடும்பத்தினருடன் வந்ததின் நோக்கத்தை முதல் நாளே நாம் தெரிந்துக்கொண்டோம் அல்லவா! பாவம் அவர்கள் வெறும் அம்புகள் தான். அவர்களை ஏய்தவர்கள் யாரென்று நமக்கு சொல்லியா புரியவேண்டும். 

அம்பு ஏய்து மிருங்களை கொன்று புசிப்பவன் வேடன்.

தங்களுக்கு வேண்டியவர்களை அம்புகளாக ஏய்து வம்புக்கு காத்திருப்பவர்கள் நமது இதிகாசத்தில் வரும் சகுனி / கூனி ஆவர்.

வேடனுக்கு வயிற்றுப் பசி.

சகுனி / கூனி களுக்கோ பழி/வம்பு பசி.

வேடன் பசி உண்டதும் அடங்கிவிடும்.

சகுனி/கூனி பசி அவர்கள் குறி வைத்தவர்கள் அழிந்தால் தான் அடங்கும்.

ஏய்தவர் எங்கோ இருக்க அம்பை நோவானேன்!!!! என்ற எண்ணத்தில் இருக்கிறாளா நம்ம மிருதுளா?

தொடரும்….

மகிழ்ச்சியாக மீதமிருந்த விடுமுறை நாட்களை நவீன், மிருதுளா இருவருமாக கழித்தனர். திங்கட்கிழமை வந்தது. நவீன் வேலையில் ஜாயின் பண்ணுவதற்காக கிளம்பிக்கொண்டிருந்தான். மிருதுளா அடுப்படியில் தன் கணவனுக்காக காலை உணவையும் மத்திய உணவையும் தயார் செய்வதில் மும்முரமாக இருந்தாள். இருவருமாக காலை உணவை ஒன்றாக அமர்ந்து அருந்தினர். பின் மத்தியத்திற்கு சாம்பார் சாதமும் பீன்ஸ் பொறியலும் வைத்திருப்பதாக சொல்லி அது எப்படி இருந்தது என்பதை மாலையில் சொல்ல வேண்டுமென கட்டளையிட்டு நவீன் கையில் கொடுத்தாள் மிருதுளா. அதற்கு நவீன்..

அப்படியே ஆகட்டும் தாயேஎன்று சொல்லி ஆஃபீஸுக்குச் சென்றான். நவீனை ஒரு வாரம் முன் பார்த்த நண்பர்கள் அன்று அவனைப்பார்த்து ….

அடே அப்பா ஒரே வாரத்தில் என்ன தேஜஸாயிட்ட நவீன்!!!!என்று அவனின் உள்ளத்திலிருந்த மகிழ்ச்சி முகத்தில் பளிச்சிட்டதைப் பார்த்துக் கேட்டனர். பல்பீர்…

ஹவ் ஈஸ் யுவர் வைஃப் நவீன்?…நானும் என் மனைவியும் உங்க வீட்டுக்கு வரலாமென நினைத்தோம்…அப்புறம் ஏன் நியூலி வெட்டெட் கப்புளை டிஸ்டர்ப் பண்ணனும்னு விட்டுட்டோம்….வில் கம் அன்ட் சீ ஹெர் திஸ் வீக் என்ட்

ஹவ் அபௌட் ஆல் ஆஃப் அஸ் கோ அன்ட் விஸிட் தெம் திஸ் வீக் என்ட்என்றார் மற்றொரு நண்பர். அதற்கு நவீன்..

ஓகே யாரெல்லாம் இந்த வீக் என்ட் வரீங்களோ தயவுசெய்து முன்னாடியே சொல்லிடுங்கப்பா..அட் லீஸ்ட் நாளைக்கு.

நவீனின் நெருங்கிய நண்பர்களில் பல்பீர் மட்டுமே திருமணமானவர்  ஆகையால் மீதி நால்வரும் ப்லபீருடன் கலந்து பேசி உடனே டிசிஷன் எடுத்து சனிகிழமை நவீன் வீட்டிற்கு வருவதாக கூறினர். நவீனும் எப்போ என்று மிருதுளாவைக்கேட்டு சொல்வதாக சொல்ல …அனைவரும்…

ஓ!!! ஹோ!!என ஒன்றாக கோஷமிட்டனர். 

நவீனை நண்பர்கள் மத்திய உணவருந்த மெஸ்ஸுக்கு கூப்பிட்டனர். மிருதுளா தனக்காக சமைத்துக் குடுத்தனுப்பியிருக்கிறாள் என்பதால் அவர்கள் அழைப்பை மறுத்துவிட்டான். பின்பு அவனது டிஃபன் பாக்ஸை திறந்து சாப்பிட்டான். மிருதுளா அன்புடன் கட்டிக்கொடுத்த அன்னம் அமிர்தமாக இருந்தது. அதை அவளிடம் சொல்ல மாலை நேரத்திற்காக காத்திருந்தான். 

கடிகாரம் நாலு நாப்பது காட்டியதும் தனது வேலை மேஜையை சுத்தமாக்கி விட்டு நண்பர்களுக்கு பை சொல்லிவிட்டு வேக வேக மாக வீட்டிற்குச் சென்று வீட்டின் கதவைத்தட்டினான். கதவை மிருதுளா திறந்ததும் ….

ஹாய் நவீன். குட் ஈவ்னிங். ஹவ் வாஸ் தி டேஎன்றாள் 

நவீனுக்கு ஏதோ தேவ லோகத்தில் நுழைந்தது போல வீடே ஊதுவத்தி மணம் கமழ சுத்த பத்தமாக இருந்தது. மிருதுளாவும் லக்ஷ்ணமாக நெற்றியில் குங்குமம் விபூதியுடன் பளிச்சிட்டாள். நவீனால் அவளைப் பார்த்து பேசி பாராட்டக்கூட நேரமில்லாமல் கிடு கிடுவென ஈவினிங் கிளாஸுக்கு தயாராகிக்கொண்டே மத்திய உணவைப் பற்றியும் வீட்டை நேர்த்தியாக வைத்திருக்கும் அழகையும் வர்ணித்தான். மிருதுளா அவனுக்கு ஒரு தட்டில் நிலக்கடலை சுண்டலும் ஒரு கப் சூடான காபியும் கொடுத்தாள். சுண்டலை சாப்பிட்டு, காபியை குடித்து விட்டு ….

சூப்பர் மிருது…சரி நான் கிளம்பறேன் அன்ட் வில் பீ பேக் பை நைன் தர்ட்டி. பத்திரமா இரு. இங்க சேஃப் தான் ஸோ கவலை வேண்டாம். பை பை

என தனது பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பிச் சென்றான். மிருதுளாவும் பை சொல்லி விட்டு வீட்டினுள் சென்று காபி பாத்திரங்களை தேய்த்து வைத்துவிட்டு. இரவுக்கு மசால் செய்து, பூரிக்கு மாவு பிசைந்து வைத்துவிட்டு அவளின் புத்தகங்களை எடுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தாள். 

அன்று இரவு நவீன் சொன்னதைப் போலவே ஒன்பதரை மணிக்கு கதைவைத் தட்ட மிருதுளா திறந்தாள். உடைகளை மாற்றி சற்று ரிலாக்ஸாக அமர்ந்தான். 

ஏய் மிருது என்ன பண்ணற?”

தட்டில் சூடான பூரி மசாலை போட்டு நவீனிடம் கொடுத்தாள். 

ஓ வாவ்!!! மிருது இப்படியே நீ வித விதமா செய்து தந்து நானும் அளவு தெரியாம சாப்பிட்டு வேயிட் போடப் போறேன்

போட்டா என்னவாம்!! நல்லா தான் இருப்பேங்கள்

நான் நல்லா இருக்கறது இருக்கட்டும்….என்ன அப்பறம் வேயிட் குறைக்கனும்ன்னு மெடிக்கல் டெஸ்ட் ல சொல்லிடுவா…அது ஒரு பெரிய ப்ராஸஸ்…

ஓ அப்படி வேற இருக்கா?”

எஸ் எஸ்!! ஐ ஹாவ் டூ மேய்டேயின் மை வேயிட். சரி நீ சாப்ட்டயா?”

இதோ இத மட்டும் போட்டு எடுத்துட்டேனா ஆச்சு. நானும் சாப்பிடலாம்

வா வா !! உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்.

இதோ வந்துட்டேன். சொல்லுங்கோ

என் நண்பர்கள் ஒரு ஆறு பேரு வர சனிக்கிழமை நம்ம ஆத்துக்கு வரேன்ங்கறா எப்போ வரச்சொல்லலாம் நீயே சொல்லு அன்ட் உன்னால அத்தனைப் பேருக்கும் ஏதாவது சாப்பிட செய்ய முடியுமா இல்லை டாபாலேருந்து வாங்கிண்டு வரட்டுமா

என்னத்துக்கு வாங்கிண்டு வரனும்!!! நானே சமைக்கறேன் மத்திய சாப்பாட்டுக்கு வரச்சொல்லுங்கோ.

ஓகே சொல்லிடறேன். நான் இதை எல்லாம் எடுத்து ஒதுக்கி வைக்கறேன். நீ சாப்ட்டு அந்த தட்டை மட்டும் தேச்சுக்கோ. அதுக்குள்ள இதை எல்லாம் நானே தேச்சுட்டு வரேன்…அப்போ தான் நேரத்துக்கு தூங்க முடியும்என்று கண்ணடித்துக் கொண்டே சொன்னான் நவீன். 

நீ படிச்சியா? உனக்கு நேரமிருந்துதா? ஏன்னா நீ இதெல்லாம் பண்ணறதுக்கே டைம் ஆகிருக்குமே பின்ன எப்போ படிச்ச?? நாளையிலேருந்து இப்படி எல்லாம் டிஃபன் பண்ண வேண்டாம். மத்தியானம் செய்ததையே சாப்பிடலாம் சாதம் மட்டும் வச்சுண்டா போதும் என்ன சொல்லற? அப்போ தான் உனக்கும் படிக்க டைம் கிடைக்கும்

அதெல்லாம் இருக்கு நவீன்.  டிஃபன் நல்லா இருக்கா இல்லையா?”

நல்லா இல்லாம என்ன!!! சூப்பரா தான் இருக்கு. ஆனா உனக்கு தான் வேலை அதிகமாகும்ன்னு சொன்னேன்

நோ ப்ராப்ளம் …என்னால டிஃபன் செய்தும் தரமுடியும் என் படிப்பையும் படிச்சுக்க முடியும்

உனக்கு ஓகேன்னா தென் ஃபைன் கோ அஹெட். எனக்கும் வித விதமா டின்னர் கிடைச்சா வேண்டாம்ன்னா சொல்லப்போறேன். எனக்கு விவரம் தெரிஞ்ச வயசுலேருந்து இந்த வேலைக்கு சேர்ந்த வரைக்கும் தயிர் சாதம் தான் சாப்பாடு… பல நாட்கள் ல அதுவும் இருக்காது… அதுக்கப்புறம் இதோ எங்க மெஸ் சாப்பாடு தான். இப்போ நீ வந்ததுக்கப்பறம் தான் வித வித மா சாப்பிடறேன்

எங்காத்துல காலையிலும் மாலையிலும் டிஃபன் தான் மத்தியானம் மட்டும் தான் சாப்பாடு…நான் அதையே ஃபாலோ பண்ணட்டுமா இல்லை உங்களுக்கு ராத்திரி சாதம் வேணுமா?”

இல்லை உனக்கு கஷ்டமில்லை என்றால் டிஃபனே ஓகே தான்

டன். வர வெள்ளிக்கிழமை ஈவ்னிங் மார்கெட் போய் காய்கறிகள் எல்லாம் வாங்கிண்டு வருவோமா

ஓகே நான் அன்னைக்கு என் கிளாஸுக்கு சுட்டிப் போடறேன். நாம போய் வேண்டியதை எல்லாம் வாங்கிண்டு வருவோம். சரி இப்போ படுக்கலாமா. காலை ல சீக்கிரம் எழுந்திரிக்கனுமே!!

வெள்ளிக்கிழமை வந்தது. மார்கெட்டிலிருந்து வாங்கி வந்த காய்கறிகளை நறுக்கி வைத்துவிட்டு உறங்கினர் நவீனும் மிருதுளாவும். 

சனிக்கிழமை காலையில் சீக்கிரம் எழுந்து சமையலில் மும்மரமானாள் மிருதுளா. சாம்பார், ரசம், கூட்டு, பொறியல், பாயசம், வடை, அப்பளம் என ஃபுல் மீல்ஸ் தயார் செய்து அழகாக பரிமாறுவதற்கு தகுந்தாற்போல் வரிசையாக அடுப்படி மேடையில் அடுக்கி வைத்தாள். மத்தியம் பன்னிரெண்டு மணிக்கு நண்பர்கள் அனைவரும் வந்தனர். அவர்களை வரவேற்று அவர்களுக்கு ஜுஸ் கொடுத்து, குக்கரில் சாதம் வைத்து விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு வந்து ஹாலில் அமர்ந்தாள்‌. 

நவீனின் நண்பனான ஹரீஷ் என்பவர்…

நவீன் சரியான கஞ்சன்ங்க….எங்க மெஸ் சாப்பாட்ட முகம் சுளிக்காம சாப்பிடர ஒரே ஆள் இவன் தான். நாங்க எல்லாரும் பல நேரம் மெஸ் சாப்பட்டை குற்றம் சொல்லிட்டு வெளியே போய் சாப்பிடுவோம் ஆனா நவீன் மட்டும் தான் எங்களோட வராமா மெஸ் சாப்பாட்டை சாப்பிடுவான்

அதற்குகஞ்சன்ன்னு ஏன் சொல்லனும் சாப்பாட்டுக்கு மரியாதைக் குடுக்கறவர்ன்னு கூட சொல்லலாமே!என்று மிருதுளா சொன்னதும் நவீனின் முகம் மலர்ந்தது. அதை கேட்ட நண்பன் …

சூப்பர்ங்க அத அப்படியும் சொல்லலாம்” 

மற்ற நண்பர்கள் எல்லோருமாக

ஓய் அசடு வழியாதே டா…என்றதும் மிருதுளா..

தப்பா எடுத்துக்காதீங்க. உங்கள சங்கடப்படுத்தனும்ன்னு சொல்லலை

அச்சசோ சிஸ்டர் ஃப்ரீயா விடுங்க…நீங்க உங்க கணவருக்கு இதே போல சப்போர்டிவ்வா இருந்து எங்க நவீனை நல்லா பார்த்துக்கோங்க” 

அந்த கவலை இனி நண்பர்களான உங்களுக்கு வேண்டாம். நான் உங்க நவீனை நல்லா பார்த்துக்கறேன் இப்போ எல்லாரும் சாப்பிட வரீங்களா?”

அனைவரும் வரிசையாக அமர்ந்தனர். மிருதுளா வாழை இலையை போட்டாள். பின்பு பரிமாற துவங்கினாள். முதலில் சாப்பிட சற்று தயங்கிய நண்பர்கள்…ருசியாக இருக்கிறது என்றுணர்ந்ததும் வெளுத்துக்கட்டினார்கள். அனைவரும் சாப்பிட்டப் பின் சற்று நேரம் அமர்ந்து பின் கிளம்பளானார்கள். அப்போது அனைவரும் மிருதுளாவின் சாப்பாட்டை போற்றினர். பல்பீரின் மனைவி தான் உண்ட தென்னாட்டு சாம்பாரை கற்றுக்கொள்வற்காக ஒரு நாள் வருவதாக கூறினாள். வீட்டைவிட்டு வெளியே செல்வதற்கு முன் நண்பர்கள் ஒன்றாக…

யூ ஆர் அ லக்கி மேன் நவீன். எஞ்சாய்

என்று கூறி விடைப்பெற்றனர். அவர்கள் சென்ற பின் மிருதுளா நவீனைப் பார்த்து…

நிஜமா என் சமையல் நல்லா இருந்துதா நவீன். இல்லை இவா எல்லாரும் சும்மா சொல்லிட்டுப்போறாளா?”

நிஜமாவே ரொம்ப சூப்பரா சமச்சிருந்த மிருது. தாங்கஸ் ஃபார் தி லவ்லி லஞ்ச் மை வைஃப்….தாங்கஸ் சொல்லக்கூடாதுன்னு தான் சொல்லிருக்கேன் ஆனா நீ இன்னைக்கு சமையல் மட்டுமில்லை எனக்காக பேசினதிலும் நான் மகிழ்ச்சி அடைந்தேன்  அதனால் தான் சொன்னேன்

அதெல்லாம் சரி இப்போ வீட்டை சுத்தம் செய்ய எனக்கு ஹெல்ப் வேணுமே

அதனால் என்ன நான் செய்யறேன்

மூன்று மாதங்கள் காலையில் வேலை, மாலையில் படிப்பு, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியே சுற்றுவது என மகிழ்ச்சியாக உருண்டோடின. 

ஒரு சனிக்கிழமை மாலை நவீனின் நண்பன் ராமகிருஷ்ணனும் அவர் மனைவியும் வீட்டுக்கு வந்து ஒரு சுவீட் பாக்ஸை கொடுத்து தாங்கள் அப்பா அம்மா ஆக போவதாக சொல்ல அதைக் கேட்டு நவீனும் மிருதுளாவும் மகிழ்ச்சியில் அவர்களை வாழ்த்தி ஹோட்டலில் டின்னர் கொடுத்தனர். மறுநாள் மிருதுளா வருத்தமாக இருந்ததைப் பார்த்த நவீன்…

மிருது நீ ஏன் டல்லா இருக்க? என்ன ஆச்சு?”

நேத்து உங்க நண்பரும் மனைவியும் பட்ட சந்தோஷம் நமக்கு ஏன் இன்னும் வரலைன்னு ஒரே யோசனையா இருக்கு. நம்மளுக்கும் கல்யாணமாகி மூணு மாசமாயாச்சு ஆனா…என்று சொல்ல அவளின் கண்கள் இரண்டிலும் கண்ணீர் ததும்பி வழிய ஆரம்பித்தது

ஹேய் மிருதுளா !! என்ன அசடு மாதிரி இருக்க?? அதெல்லாம் நடக்கும் போது நடக்கும்…இதுக்கு நீ ஏன் இப்போ அழற?”

இல்லை எனக்கு ஏதாவது ப்ராப்ளம் இருக்குமோன்னு பயமாருக்கு

அட அசடே!!! நமக்கு கல்யாணமாகி மூணே மாசம் தான் ஆகறது மூணு வருஷம் ஆகலை.

என்று மிருதுளாவின் கண்களைத் துடைத்து விட்டு அவளை இறுக்கமாக தன்னோடு அணைத்துக்கொண்டான். 

ஒரு நாள் நவீன் ஆஃபீஸிலிருந்து வந்ததும் மிருதுளாவிடம் அவளது அப்பா, அம்மா, தம்பி… இருவரையும் காண அடுத்த வாரம் குஜராத் வருவதாக சொன்னான். அதைக் கேட்டதும் சந்தோஷத்தில் செய்வதறியாது துள்ளினாள் மிருதுளா. பின் நவீனிடம்…

நவீன் நாம இன்னும் ஒரு நாலு தலைகாணி, போர்வை, பாய் எல்லாம் வாங்கனும்.

ஓகே வாங்கிடலாம்

மறுநாள் காலை நவீன் ஆஃபீஸுக்கு ஈஸ்வரனிடமிருந்து  ஃபோன் கால் வந்தது. அதில் நவீனின் கடைசி இரண்டு தம்பிகளும் அவன் மாமனார் குடும்பத்தினருடன் வருவதாக கூறினார். அதைக் கேட்டதும் நவீன்…

அவா ஏன் இப்போ மிருதுளா ஃபேமிலியோட வரனும்? அவா ரெண்டு பேரும் டிசம்பர் லீவில் வரலாம் இல்லையா?” 

ஏன் இதில் உனக்கு என்ன கஷ்டம். உன் மாமனார் மாமியாரே ஒன்னும் சொல்லலை அப்புறம் என்ன?.. ப்ரவினுக்கும், பவினுக்கும் டிக்கெட் புக் பண்ணியாச்சு அவாளும் வராங்கறத இன்ஃபார்ம் பண்ண தான் ஃபோன் பண்ணினேன். பை

என நவீனையோ மிருதுளாவையோ பற்றி நலனேதும் விசாரிக்காமல் தான் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லிவிட்டு ஃபோன் கால் ஐ துண்டித்தார் நவீனின் தந்தை. இதை மிருதுளா எப்படி எடுத்துக்கொள்வாள் என்ற எண்ணத்திலேயே வீட்டிற்கு சென்று நடந்ததைக் கூறி மிருதுளாவையே பார்த்தான்…

ஓ!! ப்ரவின் அன்ட் பவினும் வராலா…சூப்பர் சூப்பர். அப்போ செம ஜாலியா இருக்கப்போறது.  இன்னும் சில பொருட்கள் எல்லாம் வாங்கனும் நவீன். நாம இந்த வீக் என்ட் போய் வேண்டியதை எல்லாம் வாங்கிண்டு வந்திடுவோம் ஓகே வா?”

என்று வெள்ளேந்தியாக பேசிய மிருதுளாவைப் பார்த்துக்கொண்டிருந்த நவீன் அப்பாடா என பெருமூச்சு விட்டான். அதை கவனித்த மிருதுளா…

ஏன் ஏதோ டென்ஷனா இருக்கேங்கள்?”

இதை சொன்னா நீ எப்படி எடுத்துப்பன்னு தான் டென்ஷன்

இத வேற எப்படி எடுத்துக்கனும்

ஒன்னுமில்லை மா ஒன்னுமில்லை என் டென்ஷன் எல்லாத்தையும் நீ போக்கிட்ட

நவீனுக்கே ஏதோ தவறாக தெரிந்த இந்த விஷயத்தில், மிருதுளாவிற்கு எந்த வித தவறும் தெரியவில்லை என்பதிலிருந்தே மிருதுளா வெள்ளேந்தியான நல்ல மனம் படைத்தவள் என்பதை நவீனும் நாமும் புரிந்துக்கொள்ளத் தான் இப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளார் அந்த கடவுள் என்று தான் எண்ணத் தோன்றுகிறது. 

மிருதுளா குடும்பத்தின் வரவுக்காக காத்திருப்போம்.

தொடரும்……

பணமில்லாதது ஒரு பிரச்சினை என்பதை விட நவீன் அப்படி ஒரு வார்த்தைக் கேட்டதில் மனமுடைந்த மிருதுளா அழுதுகொண்டே படுத்ததில் சற்று கண் அசந்துப்போனாள். டக்..டக்..டக் என கதவு தட்டும் சத்தம் அவளுக்கு எங்கோ தூரத்தில் கேட்பது போல இருந்தது. மீண்டும் பலமாக கதவைத் தட்டும் சத்தம் மிருதுளாவை சட்டென எழச்செய்தது. ஒரு நிமிடம் தான் எங்கிருக்கோம் என்பதை மறந்தவள் போல் சுற்றும் முற்றும் பார்த்தாள்….டக்டக்டக்டக்டக் …என இடைவிடாமல் கதவு தட்டும் சப்தம் அவளை சுயநினைவுக்கு கொண்டுவந்தது. ஓடிப்போய் கதவைத் திறந்தாள். தவிப்புடன் நின்றிருந்த நவீனைப்பார்த்தும் ஏதும் பேசாமல் உள்ளே சென்றாள். நவீன் கதவடைத்துக்கொண்டே ….

கதவ தொறக்க ஏன் இவ்வளவு நேரமாச்சு…நான் பயந்தேப் போயிட்டேன்

என்னத்துக்கு பயப்படனும்….கவலைப் படாதீங்கோ…என்னால இன்னும் எத்தனை பொய்களை எல்லாம் ஏத்துக்க முடியும் ங்கறத நானும் தெறிஞ்சிக்கற வரைக்கும் எதுவும் பண்ணிக்கவும் மாட்டேன்…எங்கேயும் போயிடவும் மாட்டேன்

கம் ஆன் மிருது…நானா உன்கிட்ட என் சம்பளத்தை அதிகமாக சொன்னேன்?”

அத விடுங்கோ உங்க பேரன்ட்ஸ் சொன்ன பொய்கள் ல அதுவும் ஒன்னுன்னு கணக்கில் வச்சுக்கலாம்.‌…ஆனா நீங்க எப்படி அப்படி ஒரு வார்த்தையை கேட்கலாம்? நான் தெரிஞ்சின்டத உங்கள்ட்ட கேட்டேன்..கொஞ்சம் என்னோட இடத்தில் இருந்து இந்த சிட்டுவேஷனை நினைச்சுப்பாருங்கோ ….உங்களுக்கு ஷாக்கிங்கா இருக்குமா! இருக்காதா? என்ட்ட நான் கேட்ட மாதிரி கேட்பேளா மாட்டேளா!!!??”

அப்படி உன் பேரன்ட்ஸ் ஏதையாவது என்ட்ட சொல்லி …அது உண்மை இல்லாட்டா …நான் உன்ட்ட அப்படி கேட்க மாட்டேன் ஏன்னா எனக்கு நீ சொல்லறது தான் முக்கியமே தவிர உன் அப்பா அம்மா சொல்லறது இல்லை.

ஆமாம் ஆமாம் அப்படி ஒன்னும் நடக்காத வரை இப்படி எல்லாம் ரொம்ப பெருந்தன்மையுடன் பேசலாம்….ஒரு தடவ தப்பாவோ இல்லை பொய்யோ சொன்னா தெரியாம பண்ணிட்டான்னு விடலாம் ஆனா இது வரிசையா ரயில் வண்டி மாதிரின்னா ஒவ்வொன்னா வர்ரது” 

ஓகே இப்போ என்ன தான் பண்ணறது. நான் என் சம்பளம் டிட்டேய்ல்ஸை சொல்லிட்டேன். நான் சொல்லறது தான் உண்மை. எனக்கு சம்பளம் இவ்வளவு தான் என்ன செய்லாம்ன்னு சொல்லு

இப்போ என்னத்த பண்ண!! அதுக்குள்ளயே அட்ஜஸ்ட் பண்ணிண்டு வாழ வேண்டியது தான். ஆனால் இதுவே கடைசி முறையா இருக்கட்டும்….நாம கையில ஒரு ரூபாய் இல்லாட்டியும் பரவாயில்லை, அதற்காக எவரிடமும் நீங்கள் இனி பணம் கேட்டு வாங்கக்கூடாது சரியா

சரி நிச்சயமா யாருகிட்டேயும் நான் பணம் கேட்டு வாங்க மாட்டேன்

தாங்கஸ் ….சரி சூட்டோட சூடா இன்னொரு விஷயமும் கேட்டுடவா?”

அம்மாடி இன்னொன்னா!!! அது என்ன அதையும் கேட்டுவிடு

நாம ஊருக்கு கிளம்பறதுக்கு முன்னாடி நாள் ஏன் உங்க அப்பா கிட்ட பணம் கேட்டுட்டிருந்தேங்கள் ங்கறதுக்கு எனக்கு பதில் கிடைச்சிடுத்து ஆனா நீங்க கேட்டும் அவர் தர்ரத்துக்கு ரொம்ப யோசிச்சா மாதிரி தெரிஞ்சுது அன்ட் அதுவும் இல்லாம அடுத்த மாசமே திருப்பி அனுப்பச் சொன்னாரே அதுக்கு நீங்களும் தலையை ஆட்டிண்டு இருந்தேங்களே அது ஏன் அன்ட் எப்படி அவர் அப்படி சொல்லும் போது பேசாம நின்னுண்டிருந்தேங்கள்

அது ….அவரிடம் பணம் இல்லையாம் அதனால வந்த மொய்ப் பணத்திலேருந்துதான் தந்தாராம் அதனால திருப்பி உடனே சம்பளம் வாங்கினதும் அனுப்பச் சொன்னா

அத அனுப்பிட்டேங்களா?”

இன்னும் இல்லை ….அத கேட்டு அவா நான் ஆஃபீஸ் ஜாயின் பண்ணின அன்னைக்கே எனக்கு ஃபோன் போட்டு சித்தப்பாட்ட இருந்து வாங்கின பணத்திலிருந்து உடனே அனுப்பச்சொல்லி கேட்டாச்சு…அனுப்பித்தரேன்னு சொல்லி கால் ஐ கட் செய்தேன்… நானே நீ விழுந்த டென்ஷன் ல இருந்தேன் இதுல இவா வேற எப்பவும் போல பணம் தா பணம் தா ன்னுட்டு….என் ஆபீஸுக்கு இன்னைக்கு காலை ல கூட கால் பண்ணிருக்கா என் நண்பன் கிட்ட அந்த மூவாயிரத்தை என்னை அனுப்பித்தர சொல்ல சொல்லிருக்கா…அவன் காலை ல நான் கடைக்கு சிப்ஸ் வாங்க போனப்போ என்ட்ட சொன்னான்…நான் அந்த கடுப்புல இருக்கும் போது தான் இந்த  சம்பளம் மேட்டர் பேச்சு வர டென்ஷன்ல அப்படி உன்கிட்ட கேட்டுட்டேன்

வேயிட் ! வேயிட் ! வேயிட்! ….சித்தப்பாட்ட நீங்க பணம் வாங்கினது எப்படி அவாளுக்கு தெரிஞ்சுது

என் சித்தி தான் சொல்லிருப்பா

அப்போ பணம் வாங்கிண்டு போனத சொன்ன சித்தி நான் கீழே விழுந்ததைச் சொல்லாமலா இருந்திருப்பா?!!!”

நான் சொல்ல வேண்டாம் ன்னு சொன்னேன் !!!! ஆனாலும்…. என் பணம்,.. நான் வாங்கினத ஃபோன் போட்டு சொல்லிருக்கான்னா…. நீ விழுந்ததையும்  சொல்லியிருக்கலாம்

ஆனா அன்னைக்கு ஆஃபீஸுக்கு ஃபோன் போட்டப்போ உங்க அப்பா அம்மா அதைப்பத்தி ஒன்னுமே கேட்கலை இல்லையா!!!

ஆமாம் ஒன்னுமே தெரியாதது போல தான் பேசினா

சரி… நீங்க ஏன் அந்த பணத்தை அனுப்பாம இருக்கேங்கள்

எனக்கு இருக்கும் டென்ஷன் ல  அனுப்ப மறந்துட்டேன்

இந்த தடவை இந்த பாலிசி பணம் வந்திருக்கு அனுப்பிடுங்கோ ஆனா அடுத்த தடவை கேட்டா என்ன பண்ணப் போறேங்கள் ?? 

நீங்க வாங்கறதே ஆறாயிரம் தான் இதுல நமக்கு வீடு அலாட் ஆகும் வரைக்கும் இந்த வீட்டுக்கு ஆயிரத்தி ஐநூறு ரூபாய் வாடகை குடுக்கனும். வீட்டு செலவுக்கு எப்படியும் மூவாயிரம் தேவை அது போக உங்க பைக் டியூ எழுநூத்தி ஐம்பது ரூபாய், பெட்ரோல் ஒரு முன்னூறு ரூபாய்…எங்கயாவது கூட்டிண்டு போனேள்ன்னா…உங்க படிப்புக்கு எப்படியும் ஆயிரம் தேவை ….எல்லாத்தையும் கூட்டினா ஆராயிரத்தி ஐநூறு வர்ரதே!!! சரி நான் நம்ம ஆத்து செலவ குறைச்சிண்டாலும் ஒரு ஆயிரம் ரூபாய் தான் கொறச்சுக்க முடியும் அப்படியானாலும் மீதம் ஐநூறு தானே வரும் ….இதுல உங்க அப்பா கேட்டா …எப்படி? எங்கேருந்து குடுக்கப்போறேங்கள்?”

இல்லன்னு சொல்லுவேன்…அது தான் பதினோரு வருஷமா குடுத்துண்டிருக்கேனே…அதுக்கு முன்னாடியும் ஸ்கூல் படிக்கும் போது கூட என்னால முடிஞ்ச வேலைகளை லீவ் நாட்கள் ல பார்த்து காசு குடுத்துண்டே தான் இருந்திருக்கேன் !!

ஆனா இப்போ தரமாட்டேன்னு சொன்னேங்கள்னா அந்த பழி என் மேல தான் விழும்….உண்டா இல்லையா?”

அது எப்படி உன்ன சொல்லுவா? நான் என் நிலைமையை எடுத்துச்சொல்லுவேன், எங்க அப்பாக்கு பென்ஷன் வேற வர்ரதுஅதுவும் இல்லாம இப்போ தான் கவின் குவைத் ல சம்பாதிக்கறானே அவன் பார்த்துக்கட்டுமே

நீங்க என்ன தான் சொன்னாலும் என்னை தான் குற்றம் சொல்லுவா…எங்கடான்னு காத்திருக்கறவா வாயிக்கு கரும்பு குடுக்கப் போறேங்கள் அத நன்னா மென்னு கடிச்சு துப்பப்போறா….எனக்கு இந்த டீட்டேயில்ஸ் அப்பவே தெரிஞ்சிருந்தா எங்க அப்பா குடுத்த பத்தாயிரத்தை தாங்கோன்னு கேட்டிருப்பேன்

ஹா !!ஹா !!ஹா!!!

என்ன சிரிக்கறேங்கள்? சிரிக்கறா மாதிரி நான் இப்போ என்ன சொல்லிட்டேன்

எனக்கே தெரியாம என் பெயரை யூஸ் பண்ணி உங்க அப்பாட்ட இருந்து பணம் வாங்கிருக்கா எந்த வித கூச்ச நாச்சமும் இல்லாம அப்படி இருக்கறவாள்ட்ட போய் நீ கேட்டு …அதுக்கு அவா அப்படியா நாங்க எதுவும் அப்படி வாங்கவே இல்லைன்னு சொன்னா….சொன்னா !!!என்ன !!!! இவ்வளவு செய்தவா சொல்லுவா அப்போ நீ என்ன பண்ண முடியும் மிருது வீணா உனக்கு தான் மனசு கஷ்டம்

ஓ அப்படி வேற சொல்லுவாலோ!!!! அந்த கடவுள் இருக்கார் …அவருக்குத் தெரியும்…..அப்படி எல்லாம் சொல்லி என்னை ஏமாத்தலாம் ஆனா அந்த ஆயிரம் கண்ணுடையாளை ஏமாத்த முடியாது

பிரேஸ்லெட் விஷயத்துலயும் என்ன தைரியமா நான் வாங்கினத கவின் வாங்கினதா உங்க கிட்ட சொல்லிருக்கா ….அப்படிப் பட்ட வா எப்படி வேணும்னாலும் பேசறவான்னு இன்னுமா உனக்கு புரியலை…நான் இது மாதிரி சில விஷயங்கள் பார்த்திருக்கேன்…கேட்டும் இருக்கேன்… அப்போ எல்லாம் அவா செஞ்சது என்னை பாதிச்சுது….ஆனா அதை எல்லாம் நான் பெரிசா எடுத்துக்கலை..அது தான் நான் செய்த தவறு…. 

ஃபார் எக்சாம்பிள்… நான் தஞ்சாவூர் போஸ்டிங்க ல இருந்தப்போ எனக்கு சம்பளம் ஆயிரத்தி இருநூறு தான்… அங்க ஒரு பட்டுப்புடவை வீவ் பண்ணும் ஃபேமிலி என் நண்பன் மூலம் எனக்கு தெரிய வந்தது, அதை நான் வீட்டில் சொன்னேன்…மறுநாள் என்னிடம் கூட சொல்லாமல் என் அம்மா அவ அக்கா ரமணி பெரியம்மாவுடன் அவர்கள் வீட்டுக்குப் போய் இரண்டு புடவை இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு எடுத்துக்கொண்டு காசை என்னிடம் வாங்கிக்கச் சொல்லிட்டு போயிக்கா…

சரி வாங்க வர்ரத தான் சொல்லலை அட்லீஸ்ட் வாங்கிருக்கேன்னாவது சொல்லிருக்கனுமா இல்லையா!!! அதுவும் சொல்லலை. எனக்கு என் நண்பன் மூலமா தான் தெரிஞ்சுது…கையில் காசு இல்லாத நேரத்துல இப்படிப் புடவை எடுக்கனுமா சொல்லு!!! அப்புறம் நான் கொஞ்சம் கொஞ்சமா அவாள்ட்ட கொடுத்து அந்த புடவைக்கடனை அடைத்தேன்! வீட்டுக்கு வந்து ஏன் அப்படி செஞ்சான்னு கேட்டதுக்கு அந்த புடவைகளை கொடுத்து போய் திருப்பிக்கொடுத்துக்கோன்னு திமிரா சொல்லிட்டு அவா பாட்டுக்கு அவா வேலையை பார்க்க போயிட்டா

சரி இதை இத்தோட விட்டு விடுவோம் அந்த ஆண்டவன் அவாளுக்கு அதுக்கு தகுந்த கூலி குடுப்பார். ஆனா இனி என்கிட்ட இருந்து எதையும் மறைக்காதீங்கோ…நானும் இனி எதையும் மறைக்க மாட்டேன்

ஷுவர் மிருது. வரியா நடந்துப் போய் நம்ம ரோஹித் டாபா ல ஒரு ஆலுடிக்கியும் சாய் யும் குடிச்சிட்டு வருவோம். உன்னால அவ்வளவு தூரம் நடக்க முடியுமா?”

ஓ எஸ் முடியும் ஆனா அழுது அழுது என் முகமெல்லாம் வீங்கிருக்கே!!!

பேஸ் வாஷ் பண்ணு சரியாயிடும்

ஓகே ஒரு பத்து நிமிஷத்துல ரெடி ஆயிடறேன்” 

இருவருமாக அமர்ந்து பேசி சமாதானம் ஆகி பின் மெல்ல நடந்து சென்று மாலை நேரத்தை இனிதே கழித்தனர். அன்று காலை மகிழ்ச்சியாக தொடங்கி…இடையில் நவீன் அவன் பெற்றோர்களின் ஃபோன் கால் லால் டென்ஷனாகி, விளக்கு தேய்க்க பூதம் கிளம்பியதைப்போல சம்பள விஷயம் கிளம்பி இருவருக்குள்ளும் வந்த சிறிது நேரப் பிரிவு அவர்களை அவர்களே நிதானித்துக் கொள்ள ஏதுவாக இருந்தது.  பின் இருவருமாக அமர்ந்து பேசியதில் தெளிவடைந்து ரோஹித் டாபா டீ அன்ட் ஆலுடிக்கியுடன் மீண்டும் சந்தோஷம் துளிர்விட ஆரம்பித்தது.

எந்தப் பிரச்சினையும் பத்து நிமிடம் உட்கார்ந்து பேசினால் சரியாகி விடும் என்பார்கள் ஆனால் அப்படி பேசுவதற்கு இரு தரப்பினரும் சம்மதிக்க வேண்டும், பேசும் மனநிலையில் இருக்க வேண்டும். நீ பெரியவானா !!! நான் பெரியவளா !!!என்று பட்டிமன்றத்திற்கு தயாராகக் கூடாது. அப்படியே ஒருவர் நினைத்தாலும் மற்றொருவர் விட்டுக்கொடுத்து இறங்கிப் பேச வேண்டும். அப்படி பட்ட பேச்சு வார்த்தையே வெற்றியைத் தரும்.

மிருதுளா நினைத்திருந்தால் நவீனை அவன் பெற்றோருடன் பல காரணங்களுக்காக சண்டையிட வைத்திருக்க முடியும் ஆனால் அவள் அதை விரும்பவில்லை. சண்டையிடுவது தான் அவள் நோக்கம் என்றால் அதை அவள் திருமணமான அடுத்த நாளிலிருந்தே செய்திருக்கலாமே. அவளைப் பொருத்த வரை நவீனை நடந்தவற்றை எல்லாம் சரிவர புரிந்துக்கொள்ள வைக்க வேண்டும் அவ்வளவு தான். ஏனெனில் அவன் சரியாக புரிந்துக்கொண்டாலே வாழ்க்கை இனிதாகும் என்று நம்பினாள். சின்ன சின்ன விஷயத்துக் கெல்லாம் புருஷனைத் தூண்டி விட்டு சண்டையிட வைக்கும் பெண்களுக்கிடையே மிருதுளா தனித்துவம் வாய்ந்தவளே.

நவீனைப் பெற்றவர்கள் அவனை பணத்திற்காக எல்லார் வீட்டு வாசலிலும் நிற்க வைத்தார்கள் ஆனால் அவன் கட்டிக்கொண்ட மனைவியோ சாப்பிடுவதற்கு வழி இல்லாவிட்டாலும் எவரிடமும் கையேந்தக் கூடாதென்கிறாள். இதைத் தான் என்னவென்று சொல்ல. இது தான் கடவுளின் விளையாட்டு. 

நவீனை அவன் திருமணத்திற்கு முன் எவ்வளவு அவமானங்கள், வேதனைகள், பணத்திற்காக பிச்சைக்காரரை போல் சொந்தக் காரர்கள் வீட்டின் வாசலில் அவனைப் பெற்றவர்கள் எனும் உறவு மூலம் நிற்க வைத்த கடவுள் இன்று அதை அப்படியே அழித்துவிட்டு புதுக் கணக்கை மனைவி எனும் உறவுக் கொண்டு எழுத ஆரம்பித்துள்ளார். இந்த கணக்குக்கு மறு கணக்கு  உண்டா !!! என்பதை போக போக படித்து தெரிந்துக்கொள்வோம்.

தொடரும்….

இரவு நன்றாக உறங்கி எழுந்தாள் மிருதுளா. நவீன் அடுப்படியில் ஏதோ செய்துக் கொண்டிருந்தான். மிருதுளா மெல்ல கட்டிலை விட்டு இறங்கிச் சென்று குளித்து ஃப்ரெஷாகி …

குட் மார்னிங் நவீ

ஹேய் குட் மார்னிங். இரு உனக்கு காபி தரேன் கொஞ்சம் வேயிட் பண்ணு….இதோ போட்டுண்டே இருக்கேன் …இதோ போட்டுட்டேன் …ஹியர் யூ கோ

வாவ்!!! சூப்பர் நவீ தாங்க்ஸ். ஓ ! ஓகே ஓகே என்னோட தாங்க்ஸ் வாப்பஸ் ப்ளீஸ்…ஹா ஹா ஹா

என சந்தோஷமாக ஆரம்பித்தது அன்றைய தினம். 

காயங்கள் எல்லாம் ஆறப்போறது அநேகமா எல்லாம் இன்னும் ஒரு நாள்ல காஞ்சிடும்ன்னு நினைக்கிறேன்…டாக்டர் சொன்ன மாதிரி ஒரு வாரமெல்லாம் ஆகாது

ஸோ வாட்? இன்னும் ஒரு மூணு நாள் ரெஸ்ட் எடு அவ்வளவு தானே. சரி இந்தா பிரெட் பட்டர் அன்ட் ஜாம். இதுதான் நம்ம பிரேக்ஃபாஸ்ட்.

நீங்க குளிச்சாச்சா?”

இல்லை இனி தான் போய் குளிக்கனும் நீ எழுந்திரிக்கறதுக்கு ஒரு பத்து நிமிஷம் முன்னாடி தான் நான் எழுந்துண்டேன்

சரி அப்போ நீங்க போய் குளிச்சிட்டு வாங்கோ நான் எல்லாத்துலயும் பட்டர் அன்ட் ஜாம் தடவி வைக்கறேன்

ஓகே ஒரு அஞ்சு நிமிஷத்தில் வந்திடறேன்

பிரெட் சாப்பிட்டுவிட்டு இருவருமாக

சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்கும் போதே மிருதுளா எடுத்துக்கொண்ட மாத்திரைகளினால் மீண்டும்  உறங்கிப்போனாள். நவீன் மெதுவாக எழுந்து அடுப்படிக்குச் சென்று கதவை தாழிட்டுக்கொண்டு  மத்தியத்துக்கு தால் மற்றும் சாதம் வைத்து, கடையிலிருந்து இரண்டு பாக்கெட் உருளைக்கிழங்கு சிப்ஸ் வாங்கிக்கொண்டு வந்து வைத்துவிட்டு தனது பாட புத்தகத்தில் முழ்கினான். 

ஒரு இரண்டு மணிநேரம் கழித்து எழுந்துப் பார்த்தாள் மிருதுளா…நவீன் மும்முரமாக படித்துக்கொண்டிருந்தான். அவனை தொந்தரவு செய்ய வேண்டாமென எண்ணி அமைதியாக அவனைப் பார்த்துக்கொண்டே படுக்கையை விட்டு எழாமலிருந்தாள். சற்று நேரம் கழித்து சட்டென்று திரும்பிப் பார்த்தான் நவீன்…

மிருது எழுந்துட்டயா !!! இரு இந்த சாப்ட்டரை மட்டும் முடிச்சுட்டு வந்துடறேன்.

நீங்க படிங்கோ. நான் பேசாம படுத்துக்கறேன்

அடுத்த வாரத்திலிருந்து நான் எவ்வெரி டே ஈவினிங் சி.ஏ கிளாஸுக்கு போகனும். எக்ஸாம் தேதி வேற நெருங்கறது. ஆமாம் நீ உன் எக்ஸாமை எப்ப எழுதப் போற?” 

நான் நவம்பர் ல போய் எழுதலாம்னு இருக்கேன். எப்படியும் தீபாவளிக்கு ஊருக்கு போக தான் வேணும் அப்படியே பரீட்சையையும் முடிச்சிட்டு வரலாம்னு இருக்கேன் என்ன சொல்லறேங்கள்?”

நல்ல ஐடியாவா தான் இருக்கு ஆனா அதுக்கு இன்னும் ஏழு மாசம் இருக்கு அப்போ பார்த்துப்போம். நான் ஈவினிங் கிளாஸ் போகணும்னு சொன்னேனே அதுக்கு உன்னிடமிருந்து ஒரு ரியாக்ஷனும் காணமே!!

என்னன்னு ரியாக்ட் பண்ணனும். கிளாஸ் இருக்குன்னா போய் தான் ஆகனும். ஆமாம் எவ்வளவு நேரமாகும் கிளாஸ் முடியறத்துக்கு?”

ஆஃபீஸ் முடிச்சிட்டு ஒரு ஐந்து மணிக்கு ஆத்துக்கு வந்துட்டு ஃப்ரெஷ் ஆகிட்டு ஆறு மணிக்கு கிளம்பினேனா ஒன்பது மணிக்கு முடியும் ஸோ ஒரு ஒன்பதரை மணிக்கு வந்திடுவேன்

அப்போ நான் அதுவரை என் படிப்பை படிக்கறேன்

ஸோ எவ்விரிடே ஈவ்னிங் எக்செப்ட் சனி அன்ட் ஞாயிறு சிக்ஸ் டூ நைன் படிப்புக்காக என்று வைத்திடுவோம்.

அப்படியே ஆகட்டும் மை லார்ட். பேசிண்டே இருக்கேங்களே!!! சீக்கிரம் படிச்சு முடிங்கோ

இதோ முடிச்சிட்டேன். ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்….ஆச்சு

ஓ டைம் ஒன்னாக போறது!! நீங்க படிங்கோ என்னால முடிஞ்சத நான் சமைக்கப் பார்க்கறேன். இப்போ அவ்வளவா வலியில்லை அன்ட் புண்களும் நல்லா ஆறியிருக்கு.

என்ன சமைக்கப் போற…அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்‌. நீ ரெஸ்ட் ரூம் போயிட்டு ஃப்ரெஷாகிட்டு வா நாம சாப்பிடலாம்.

என்ன இன்னைக்கும் டாபாலேருந்து வாங்கிண்டு வந்திருக்கேளா என்ன?”

நீ ரெஸ்ட் ரூம் போயிட்டு வா. உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு

மிருதுளா வேகமாக ஃப்ரெஷாகி ஹாலுக்கு வந்தாள். தரையில் குக்கர், இரண்டு சிப்ஸ் பாக்கெட், தயிர் டப்பா, பிரியா ஊறுகாய் பாட்டில், மூடியிட்டு ஒரு பாத்திரத்தில் தால், இரண்டு தட்டு எல்லாமிருந்தது.  அதைப்பார்த்த மிருது….

ஹேய் நவீ என்னது இதெல்லாம்!!! எப்படி !!! எனக்கு குக்கர் விசில் சத்தம் கூட கேட்கலையா இல்லை கேட்காத அளவுக்கு கும்பகர்ணி மாதிரி தூங்கிருக்கேனா?” 

எல்லாம் நீ சாப்பிட்ட மாத்திரையின் எஃபெக்ட் தான் நீ தூங்கினது. நான் அடுப்படி கதவை சாத்திண்டு இதெல்லாம் செய்தேன். எப்படி இருக்குன்னுட்டு நீ தான் சாப்பிட்டு சொல்லனும்

ஸோ நைஸ் ஆஃப் யூ கணவா. சரி வாங்கோ சாப்பிடலாம்.

இருவரும் சாப்பிட அமர்ந்தனர். சாப்பாட்டை ஒரு வாய் சாப்பிட்டு மிருதுளா…

ஆஹா !!!ஆஹா!!! சூப்பரா இருக்கு இந்த தால் அன்ட் ரைஸ் வித் ஊறுகாய் அன்ட் சிப்ஸ். கலக்கிட்டேங்கள் போங்கோ. சமைக்க தெரியாதுன்னுட்டு சூப்பரா சமச்சிருக்கேங்கள்!!!! இந்த… நல்லா படிக்கற பசங்கள் பரீட்சைக்கு முன்னாடி படிக்கவே இல்லைன்னு சொல்லுவாஆனா ஃபுல் மார்க் வாங்குவாளே அதே மாதிரி இருக்கு நீங்க அன்னைக்கு சொன்னதும் இன்னைக்கு ரிசல்ட்டும்

அட ஆமாம் நல்லா தான் செஞ்சிருக்கேன்!!! நீ சும்மா சொல்லறயோன்னு நினைச்சேன். பரவாயில்லை சாப்பிடற மாதிரி இருக்கு. மிருது நான் பாஸ் ஆயிட்டேன்

என்று இருவருமாக உணவருந்தியப்  பாத்திரங்களை எல்லாம் உள்ளே எடுத்து வைத்து விட்டு அந்த இடத்தை சுத்தம் செய்தார்கள். பின் மிருதுளாவின் மாத்திரைகளை கொடுத்து சாபப்பிடச் சொன்னான் நவீன்…

அச்சோ இந்த மாத்திரைகளைப் போட்டாலே தூக்கம் வந்திடுமே…கொஞ்சம் நேரம் கழிச்சு போட்டுக்கறேனே

இல்லை இல்லை சாப்பிட்டதும் போடனும்னு டாக்டர் சொல்லிருக்கா. ஒழுங்கா நீ மாத்திரைகளை சாப்பிட்டதால்தான் புண்ணெல்லாம் இவ்வளவு சீக்கிரம் ஆறியிருக்கு. இந்தா புடி சாப்டு

இன்னும் எவ்வளவு நாள் சாப்பிடனும் இந்த மாத்திரைகளை?”

நாளையோட முடிஞ்சிடும் அவ்வளவு தான்

அப்பாடா இன்னும் நாலு தடவ சாப்பிட்டா போதும்

பின்பு அவர்கள் வாழ்க்கை, படிப்புப் பற்றி 

பேசிக்கொண்டிருக்கையில் மிருதுளா மனதில் நவீன் அவன் சித்தப்பாவிடம் பணம் கேட்டு வாங்கியது ரியாலிட்டி ஷோ போல ஓட அதை அவனிடம் கேட்கலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருந்தவளைப் பார்த்து நவீன்…..

என்ன மிருது என்ன பலத்த யோசனைல இருக்க!! என்ன ஆச்சு” 

ஆங்…..ஆமாம் என் மனசுல நிறைய விஷயங்கள் உங்ககிட்ட கேட்கறதுக்கு இருக்கு அதில் முந்தாநாள் நடந்ததைப் பற்றி கேட்கலாமா!!

கேளு அதுக்கு ஏன் இவ்வளவு தயக்கம்?”

நீங்க தான் மாசம் பன்னிரெண்டாயிரம் சம்பாதிக்கறேங்களே அப்புறம் ஏன் உங்க சித்தப்பாக்கிட்ட பணம் கேட்டு வாங்கினேங்கள்? உங்கள்ட்ட பணமில்லையா?”

என்னது பன்னிரெண்டாயிரமா!!!! சரியா போச்சுப்போ

ஏன் அப்படி சொல்லறேங்கள்?”

உனக்கு யாரு நான் பன்னிரெண்டாயிரம் சம்பளம் வாங்கறேன்னு சொன்னது?”

உங்க அப்பா அம்மா தான் என் பேரன்ட்ஸ் கேட்டதுக்கு …பிடிப்பெல்லாம் போக கையில் பன்னிரெண்டாயிரம் வாங்கறான்னு சொன்னா …நானும் அதைக் கேட்டேன்…ஏன் அதுக்கென்ன இப்போ?”

இங்க பாரு மிருது என் அப்பா ஏன் அப்படி சொன்னானு எனக்குத் தெரியலை. உனக்கு தெரிஞ்சிண்டிருக்கனும்ன்னா நீ டைரெக்டா என்னிடம் கேட்டிருக்கனும்

சரி இப்போதாவது சொல்லுங்கோ…டைரெக்டா கேட்கறேன்…உங்கள் சம்பளம் எவ்வளவு?”

எனக்கு வீடு + கேன்டீன் சலுகை அது இல்லாம கிராஜுட்டி, பிஎஃப், எல்லா பிடிப்பும் போக பாங்கில் விழும் மாத சம்பளம் ஆறாயிரம் ரூபாய்.” 

என்னது!!!! இதை உங்க பேரன்ட்ஸ் எங்ககிட்ட டபுளாக சொல்லிருக்கா!!!!! அவாகிட்ட நீங்க வாங்கற சம்பளத்தை சரியா சொல்லலையா!

என் சம்பள விவரமெல்லாம் புள்ளிவிவரமாக அவாளுக்கு நல்லாவே தெரியும் ஆனாலும் ஏன் அப்படி சொல்லிருக்காங்கறது தான் தெரியலை

என்னவாயிருக்கும் ??? ஒருவேளை அவா நினைத்திருக்கலாம் ….எங்கடா ஆறாயிரம்ன்னு சொன்னா பொண்ணு தரமாட்டாளோன்னு அதனால பொய் சொல்லிருப்பான்னு நினைக்கறேன்!!!! சரி இப்போ உண்மை தெரிஞ்சுடுத்தே இப்போ நான் விட்டுப்போனா என்ன பண்ணுவா!!!

இங்க பாரு மிருது நான் உன்ட்ட சொல்லலை. அவா சொன்னதுக்காக என்னை விட்டுட்டு போவியா?”

கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாத்துக்கும் உங்க கிட்ட கேட்க முடியாது நவீ அதை நீங்க புரிஞ்சுக்கனும். உங்க பேரன்ட்ஸ் சொல்லறத தானே நாங்க நம்ப முடியும்…பிரேஸ்லெட் விஷயத்திலயும் இதே தான் நடந்தது. அவா ஒன்னு சொல்லிருக்கா ஆனா நீங்க ஒன்னு சொல்லறேங்கள்….பத்தாயிரம் நீங்க கேட்டதா சொல்லி தான் வாங்கினா ஆனா நீங்க கேட்கவேயில்லைன்னு சொல்லறேங்கள்… முன்னுக்கு பின் முரணாக இருக்கு அவா சொன்னதும் நீங்க சொல்றதும். எனக்கு ஒரே கன்ஃபூஷனா இருக்கு

அதுதான் நான் இப்போ சொல்லிட்டேனே இன்னமும் ஏன் குழப்பம்?”

சரி அத விடுங்கோ நீங்க ஏன் சித்தப்பாட்ட பணம் வாங்கினேங்கள் உங்கள் பணமெல்லாம் என்ன ஆச்சு??”

நான் சித்தப்பாட்ட ஒரு பாலிசி போட்டிருந்தேன் அது மெச்சூர்ட் ஆகி ஒரு மாசம் ஆச்சு ஆனா பணம் வரலை அதைத்தான் சித்தப்பா தன் கையிலிருந்து என்னிடம் கொடுத்துட்டு வரதை தான் எடுத்துக்கறதுக்காக ஃபார்ம்ல கையெழுத்து வாங்கிண்டார்

ஓ!! சாரி நான் தான் நீங்க அவர்கிட்டயும் பணம் கடனாகவோ இல்லை செலவுக்கு கேட்டு வாங்கவோ செய்யறேங்கள்ன்னு தப்பா நினைச்சுட்டேன்

நீ நினைச்சதுல பாதி கரெக்ட் தான்…அதாவது என் செலவுக்காக தான் நான் அவசரமாக அவர்கிட்ட இருந்து வாங்கினேன். ஆனா அது என் பணம் நான் கடனெல்லாம் வாங்கலை..புரியறதா?”

ஏன்? அந்த பணம் வந்தா தான் உங்களிடம் செலவுக்கு பணமிருக்கா என்ன!!! வேற பணம் ஏதும் இல்லையா!!! நீங்க தான் பதினாறு வயசுலேயே வேலை ல சேர்ந்தாச்சுன்னு சொன்னாலே…. பதினோரு வருஷம் சம்பாதிச்சதுல ஒரு ஐந்தாயிரம் கூடவா இல்லை

உண்மைய சொல்லனும்னா ….இல்லை மிருதுளா…என் அக்கௌன்ட் ல வெரும் நூறு ரூபாய் தான் இருக்கு.

என்ன சொல்லறேங்கள்

எஸ்….நான் பதினோரு வருடம் சம்பாதிச்சதில் படிச்சேன், என் குடும்பத்துக்கு கொடுத்தேன், மூன்று தம்பிகளை படிக்க வைத்தேன், வீடு வாங்கினேன், பைக் நம்ம நிச்சயத்துக்கு அப்புறம் தான் வாங்கினேன் அதோட ஈ.எம்.ஐ இன்னும் போயிட்டிருக்கு, நம்ம கல்யாணத்துக்கு ஐம்பதாயிரம் எங்க பேரன்ட்ஸ்ட்ட கொடுத்தேன் அது தவிர எப்படியும் இன்னும் ஒரு இருபதாயிரம் செலவாகியிருக்கு …. இது எல்லா செலவுகளும் போக நூறு தான் பாக்கி

அப்போ என்னை கல்யாணம் பண்ணிண்டு வரும் போது உங்க கையிருப்பு நூறு ரூபாய் தானா!!!

என்ன லட்சாதிபதியா இருப்பேன்னு நினைச்சயோ!!

லட்சாதிபதியா இருப்பேங்கள்ன்னும் நினைக்கலை இப்படி பிட்சாதிபதியா இருப்பேங்கள்ன்னும் நினைக்கலை

என்ன இப்படி எல்லாம் பேசற” 

பின்ன நீங்க அப்படி கேட்டா நானும் இப்படி தான் பதில் சொல்ல முடியும். உங்களை கல்யாணம் பண்ணி ஒரு மாதம் ஆயாச்சு என்னைக்காவது பணம் பற்றி பேசிருக்கேனாஇப்படி ஷாக் மேலே ஷாக்கா அடிச்சா வேற எப்படி பேசறது நவீ? இன்னும் என்னென்ன பொய்களோ!!! எத்தனைப் பொய்களோ!!! அந்த பகவதி தான் எனக்கு மனதைரியத்தைக் குடுக்கனும்

நவீன் சட்டென்று எழுந்து சட்டையை மாட்டிக்கொண்டு வெளியேச் சென்றான். மிருதுளாவும் சென்றுப் பார்த்தாள் அவன் தெரு முனையை கடப்பதைப் பார்த்துவிட்டு கதவடைத்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் முத்துக்கள் உருண்டோடின….உடல் வலிகள் ஒரு பக்கமிருக்க …ஏமாந்தது ஒரு வலி, கையில் பணமேயில்லாமல் வாழ்க்கை துவங்கியிருப்பது எதிர்காலத்தை இருட்டாக காட்டியதில் பெரும் வலியாக உருவெடுத்தது அவளது உள்ளத்தில். அவள் மனம் குழப்பத்தில் இருந்ததால் மாத்திரை உண்டும் உறக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.  

ஈஸ்வரன் பர்வதம் போட்ட முடிச்சுகள் பல 

அதில் இரண்டு அவிழ்ந்தாலும் பிரச்சினை பெரிதாகவில்லை

பிரேஸ்லெட் எனும் முதல் முடிச்சு அவிழ்ந்ததும்

நவீன் மனவருத்தமடைந்ததை உணர்ந்த மிருதுளா அவன் மீது வைத்த நம்பிக்கை அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

ரூபாய் பத்தாயிரம் எனும் இரண்டாம் முடிச்சு அவிழ்ந்ததும்

நவீன் தனது பெற்றோர்கள் இப்படி தனக்கே தெரியாமல் செய்திருக்கிறார்களே என்று வருந்த அதைப்பார்த்த மிருதுளா ரூபாய் பத்தாயிரத்தோட போச்சே என்று விட்ட பெருமூச்சில் அதுவும் காற்றோடு கறைந்து போனது.

ஆனால் இந்த மூன்றாவது முடிச்சான சம்பளம் எனும் பொய் முடிச்சவிழ்ந்ததில் இருவருமே குழம்பிப்போனார்கள். குழப்பத்திலிருந்தால் பேச்சைத் தவிர்த்தல் அல்லது சற்று நிதானமாகிக்கொண்டு பேசுவது சிறந்தது என்பதை நவீனும் மிருதுளாவும் மறந்திட பேச்சு முற்றி இறுதியில் மூத்த தம்பதியின் திட்டமே நடந்தேறியது. 

மிருதுளா சொன்ன மாதிரி பொண்ணு கொடுக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் சம்பளத்தை தவறாக ஈஸ்வரனும், பர்வதமும் சொல்லவில்லை வேண்டுமென்றே தான் பொய் சொல்லியிருக்கவேண்டும்…‌ஏனெனில் சம்பளம் பற்றிய பேச்சு வார்த்தை நிச்சயதார்த்தம் முடிந்து திருமண நாளுக்கு முஹூர்த்த பட்டுப்புடவை எடுக்க போனபோதுதான் ஹோட்டலில் வைத்து மிருதுளாவின் பெற்றோர்கள் கேட்டுள்ளனர்…. மேலும் மிருதுளா நவீன் திருமணத்தில் பர்வதத்துக்கும் ஈஸ்வரனுக்கும் துளிக்கூட இஷ்ட்டமில்லை என்பது நவீனிடம் மிருதுளாவை தவிர்க்க சொன்னதிலிருந்தே புரிகிறதே அப்படிப்பட்ட எண்ணமுடையவர் நிச்சயமாக சம்பளத்தைக் குறைத்துச் சொல்லி தடுக்க நினைத்திருப்பார்களே தவிர அதிகமாக சொல்லியிருக்க மாட்டார்கள். 

எப்படியோ திருமணம் வரை வந்துவிட்டதால் மிருதுளாவை தங்களுடனே வைத்துக்கொண்டு சில பல சகுனி, கூனி வேலைகளை செய்து அவர்களை சந்தோஷமாக வாழ விடாமல் பிரிக்க திட்டமிட்டிருந்ததாலும்…..அதையும் மீறி ஏதாவது நல்லது நடந்துவிட்டால் இது போல சில பொய்களாவது நிம்மதியைக் குலைக்கட்டும் என்றெண்ணி அவர்கள் பத்த வைத்த பல ஓல வெடிகளில் ஒன்று அவர்கள் நினைத்தது போலவே இன்று வெடித்துள்ளது. 

இந்த வெடி புஸ்ஸாக போகிறதா இல்லை வெடித்து சிதறப்போகிறா

தொடரும்.‌…….

பைக் வாங்கிய நாள்முதல் அவ்வளவு மெதுவாக நவீன் என்றுமே ஓட்டியதில்லை. முன்தினம் நடந்த விபத்து அவனை எச்சரிக்கையுடன் வண்டியை ஓட்ட வைத்தது. பத்திரமாக வீடு வந்து சேர்ந்தனர். மிருதுளா வண்டியிலிருந்து இறங்க மிகவும் கஷ்டப்படுவதைப்பார்த்த நவீன் அவளை அப்படியே உட்காரச் சொல்லிவிட்டு தான் முதலில் இறங்கி பின் ஒரு கையில் பைக்கைப் பிடித்துக்கொண்டு மறுகையை மிருதுளாவிடம் நீட்டினான். எப்படியோ சமாளித்து கொண்டு இறங்கினாள் ஆனால் வலியில் சற்று துடித்தாள். நவீன் பைக்கை நிறுத்திவிட்டு வீட்டின் கதவை திறந்து இருவருமாக உள்ளேச் சென்றனர். அப்போது தான் மிருதுளாவுக்கு ஞாபகம் வந்தது….

நவீ இன்னைக்கு நீங்க ஆஃபீஸ் ஜாயின் பண்ணனும்ன்னு சொல்லியிருந்தேங்கள். போக வேண்டாமா? இப்பவே பதினொரு மணி ஆச்சே!!! நீங்க போய் கிளம்பிக்கோங்கோ. நான் பார்த்துக்கொள்கிறேன்

என்ன விளையாடறயா!!! உன்ன இப்படி விட்டுட்டு நான் எப்படி போவேன்? ஒன்னுப் பண்ணறேன் பக்கத்து வீட்டு லதா அக்கா கிட்ட உன்னை பார்த்துக்க சொல்லிவிட்டு நான் ஆஃபிஸ் போய் ஒரு வாரம் லீவ் அப்பளைப் பண்ணிட்டு அப்படியே நமக்கு லஞ்ச் வாங்கிண்டு வரேன்

லதா அக்கவ எல்லாம் ஏன் தொந்தரவு செய்யணும்..பேசாம நீங்க போயிட்டு வாங்கோ நான் அது வரை தூங்கறேன். காலை ல போட்ட மாத்திரையால தூக்கம் தூக்கமா வருது. கதவைப்பூட்டி சாவியை எடுத்துண்டு போங்கோ

ஆர் யூ ஷுவர்? நான் போயிட்டு வர எப்படியும் ஒரு மூணு மணி நேரமாகும் பரவாயில்லையா!!! இருந்துப்பியா?”

நான் இருந்துப்பேன் நீங்க போயிட்டு வாங்கோ.

நவீன் குளித்துவிட்டு தனது யூனிஃபார்மை போட்டுக்கொண்டு கிளம்புவதற்குள் மிருதுளா உறங்கிப் போனாள். அவளைத் தொந்தரவு செய்யாமல் அங்கிருந்து நகர்ந்து மெதுவாக கதவைப்பூட்டி ஆபீஸுக்கு சென்றான். அவன் உடல் தான் அலுவலகத்தில் இருந்தது அவனது உள்ளம் வீட்டில் மிருதுளா என்னச் செய்வாள் தனியாக அதுவும் இந்த நேரத்தில் விட்டுவிட்டு வரவேண்டியது ஆயிற்றே என்று தவித்துக்கொண்டே இருந்தது. வேக வேகமாக லீவ் லெட்டர் எழுதி அதை தனது மேல் அதிகாரியிடம் கொடுத்துவிட்டு அவரது பதிலுக்காக டென்ஷனுடன் அவனது இருக்கையில் அமர்ந்திருந்தான். நேரம் வேற கிடுகிடுவென ஓடிக்கொண்டிருந்ததில் அவனது இதயத்துடிப்பும் அதற்கு போட்டிப்போட்டு துடித்துக்கொண்டிருக்க…அவனது அலுவலக நண்பர்கள் அவனைப்பார்த்து..‌

என்ன நவீன் மறுபடியும் லீவ் அப்ளை பண்ணிருக்க !!! என்ன புது மனைவியை விட்டு வர மனசு வரலையா?” என்று ஒருவர் கேட்க அதற்கு கல்யாணமாகாத மற்றொரு நண்பர்

ஓ!!! அப்போ நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா ஆஃபிஸுக்கே வரமாட்டேனே!என்று கூற அதற்கு பல்பீர் சிங்

ஆமாம் ஆமாம் எல்லாம் ஆரம்பத்துல அப்படி தான் இருக்கும்….ஒரு இரண்டு வருஷம் போட்டும் வீட்டை விட ஆஃபிஸ் சொர்கமா தெரியும்என்று பதிலளிக்க அதைக்கேட்ட மற்றொருவர்

என்ன பல்பீர் சார் உங்க வைஃப் கிட்ட இதை சொல்லட்டுமாஎன நக்கலடிக்க

ஏன் உனக்கு அந்த தேவையில்லாத வேலை. அவன் அவன் குடும்பத்தப் பாருங்கப்பாஎன பல்பீர் கூறிக்கொண்டிருக்கையில் அவர்களின் மேலதிகாரி வர அனைவரும் எழுந்து சல்யூட் செய்ய அவர் நேராக நவீனிடம் வந்து..

இதை நீ ஃபோனில் சொல்லியிருந்தாலே லீவ் கொடுத்திருப்பேனே எதற்காக உன் மனைவியை விட்டுவிட்டு வந்தாய். சாரி நான் மற்ற வேலைகளில் மும்முரமாக இருந்ததால் இப்போது தான் உன் லீவ் லெட்டரைப்பார்த்தேன். சரி நீ இப்போதே கிளம்பலாம். உன் லீவை அப்ரூவ் பண்ணிட்டேன். சென்று உன் மனைவியை நல்லா பார்த்துக்கோ. ஏதாவது உதவி வேணும்னா ஒரு ஃபோன் போடு ஓகே.” 

அவர் இதைக்கூறிவிட்டு அவர் அறைக்குள் சென்றதும் நவீனின் நண்பர்கள் அவனை சூழ்ந்துக்கொண்டனர். என்ன ஆச்சு ஏதாச்சு என விசாரித்தனர். நவீனும் நடந்தவற்றைக்கூறினான். அனைவரும் அவனை உடனே வீட்டுக்கு செல்லும்படி கூறினர். என்ன உதவி வேண்டுமானாலும் நண்பர்கள் இருக்கிறோம் என்று நம்பிக்கை கொடுத்து நவீனை அனுப்பி வைத்தனர். நவீன் நேராக அவர்கள் குவார்ட்ஸுக்குள் இருக்கும் ரோஹித் டாபா சென்று இரண்டு சாப்பாடு பார்சல் செய்ய ஆர்டர் கொடுத்துவிட்டு நின்றுக்கொண்டிருக்கையில் அவனுக்கு மிருதுளாவுடன் முன்தினம் காலைப் பேசியது கண்முன் திரைப்படம் போல் ஓடியது…. அவளுக்கு உடம்பு சரியில்லாமல் போனால்  என்று அவள் கூறியதும், தனக்கு சமைக்க தெரியாது என்பதும்,   ரோஹித் டாபாவிலிருந்து வாங்கி வருவதாக சொன்னதும்… அவளுக்கு ஏன் உடம்பு சரியில்லாமல் போகும் என்று கேட்டு பேச்சை திசைத்திருப்பியதும்… அதேபோல ஆகிவிட்டதே என்றெண்ணிக்கொண்டிருக்கையில்….சட்டென்று   

டாபாவில் வேலை செய்யும் பப்பு… அவனுக்கு மட்டுமே  ஓடிக்கொண்டிருந்த படத்திரை முன் வந்து நின்று…

சாப் !!!சாப்!!! நவீன் சாப் ஆப்கா பார்சல்

என கூற திரையிலிருந்து கண்களை அகற்றி பப்புவிடம் பணத்தைக்கொடுத்து விட்டு அங்கிருந்து வேகமாக வீட்டுக்கு வந்து கதவைத்திறந்துப்பார்த்தான்மிருதுளா நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். நவீன் தனது உடைகளை மாற்றிவிட்டு முகம் கை கால் அலம்பி விட்டு மிருதுளாவை எழுப்பலாமா வேண்டாமா என அவளைப்பார்த்துக்கொண்டே யோசித்தான்…. காலை ஒன்பது மணிக்கு சாப்பிட்டது அதுவும் ஒரே ஒரு சப்பாத்தி இப்போ மணி மூணு ஆகப்போகிறது என தனக்குத்தானே பேசிக்கொண்டிருக்கையில்…. முனகிக்கொண்டே எழுந்தாள் மிருதுளா. 

ரொம்ப வலிக்கறது. ஓ !!! வந்துட்டேளா!!! டைம் என்ன ஆகறது? எனக்கு ரொம்ப பசிக்கறதுஎன்றாள் 

இதோ டாபாவிலிருந்து ரொட்டி சப்ஜீ, தால் அன்ட் ரைஸ் வாங்கிண்டு வந்திருக்கேன் வா சாப்பிடலாம்என நவீன் கூப்பிட

இருங்கோ ரெஸ்ட்ரூம் போயிட்டு வரேன்

நான் வரட்டுமா ஹெல்ப் பண்ண?”

இல்லை நான் பார்த்துக்கறேன்

பின் இருவரும் உணவருந்த அமர்ந்தனர். அப்போது மிருதுளா சாப்பிட சிரமப் படுவதைப் பார்த்த நவீன் …

ஓ!!! இதனால தான் காலை ல ஒரே ஒரு சப்பாத்தியோட எழுந்துட்டயா!!!! விடு விடு நீ கையை எடு  நான் ஊட்டி விடறேன் நீ சாப்பிடு….என்று ஊட்ட

எனக்கு ரொட்டி போதும் ஹார்டாஆ இருக்கு

அப்போ இந்த தால் ரைஸ் சாப்பிடுஎன்று சாதத்தை ஊட்டிவிட்டான். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது…

ஏய் மிருது ஏன் கண் ல இருந்து கண்ணீர் வருது …ரொம்ப காரமா என்ன!!! இல்ல அழுவறையா? என்ன ஆச்சு

எனக்கு உடம்பு முடியாமல் போனபோதெல்லாம் என் அம்மா தான் சாப்பாடு ஊட்டிவிட்டிருக்கா அதுக்கப்புறம் நீங்க தான் ஊட்டி விடுறேங்கள்… அதனால ஏதோ உள்ள பண்ணித்து கண்ணுல இருந்து கண்ணீர் தானா வருது.

சாப்பாடு தான் காரமோன்னு நினைச்சுட்டேன்…இதுக்கெல்லாமா கண்ணுலேருந்து தண்ணீ வரும்

சரி எனக்கு ஊட்டின்டே இருக்கேங்களே உங்களுக்கு பசிக்கலையா!!! நீங்களும் சாப்பிடுங்கோ. இந்த காயமெல்லாம் எப்போதான் ஆறுமோன்னு இருக்கு. சரி உங்களுக்கு லீவு கிடைச்சுதா? எனக்கு போதும் பா நீங்க சாப்பிட ஆரமிங்கோ

போதுமா !!! ஓகே இதோ நானும் சாப்பிடறேன். எஸ்… எஸ் ….ஒரு வாரம் லீவு கிடைச்சிடுத்து.

வாவ் சூப்பர்..‌ஆனா நான் இப்படி காயங்களோட இருக்கேனே!!!

ஹலோ மேடம்!!! அதனால தான் லீவே குடுத்திருக்கா…சரி நீ மத்தியானம் சாப்பிட வேண்டிய மாத்திரை மருந்தெல்லாம் அங்க இருக்கு எடுத்து சாப்பிடு நான் இதை எல்லாம் குப்பை ல போட்டுட்டு இந்த இடத்தையும் தொடச்சுட்டு வரேன்

என்று கூறி வேலையில் மும்மரமானான் நவீன். மிருதுளா அவன் வேலை செய்வதைப்பார்த்து ….

சாரி என்னால உங்களுக்கு ஹெல்ப் எதுவும் பண்ண முடியலை

மேடம் அன்னைக்கே சொன்னேன் நமக்குள் நோ சாரி அன்ட் நோ தாங்க்ஸ் ன்னுட்டு….என்ன மறந்துப்போச்சா?”

ஓகே சார் ஓகே டன்

நவீனைப் பார்த்துக்கொண்டே மிருதுளா மனதில் …

பேச்சில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் பர்வதத்தின் மகனா இவன்!!!!என்று எண்ணியதில்… ஆச்சர்யம் அவளைத் தொற்றிக்கொண்டது.

மாலை காபி வைத்துக்கொடுத்து பரீட்சை எழுதி மதிபெண்களுக்காக காத்திருக்கும்  மாணவனைப் போல மிருதுளாவையேப் பார்த்துக்கொண்டிருந்தான் நவீன். அதை உணர்ந்த மிருதுளா….

என்ன ரிசல்ட்டுக்கு வேயிட்டிங்கா?” 

எஸ்…ஏன் அப்படி கேட்கிற?”

ஏன்னா எனக்கு அதோட அருமைப் புரியுமே, தெரியுமே அதனால தான் அப்படிக்கேட்டேன்

சரி எல்லாம் புரிஞ்சும் தெரிஞ்சும் என்ன பிரயோஜனம் ரிசல்ட் இன்னும் ரிலீஸ் ஆகலையே!!!

இந்தாங்கோ என் கப்

என்ன ஒன்னுமே சொல்லாம கப்பை கொடுத்துட்ட!!!

அச்சோ!!! அச்சோ!!! கப்பை பாருங்கோ அதுல காபி துளிக்கூட மீதி இல்லை. இதிலிருந்தே உங்களுக்கு தெரியலையா!!” 

என்ன தெரியணும் !!!! எதுவாக இருந்தாலும் நேரா சொல்லு எனக்கு ஒன்னும் புரியலை

கப்பில் ஒரு துளிக்கூட காபி மீதமில்லைன்னா அது சூப்பர்ன்னு அர்த்தம். நீங்க சூப்பரா காபி வைக்கிறேங்கள் ன்னு அர்த்தம். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு அர்த்தம்.

இப்படி சொல்லனுமே அப்போ தானே எனக்கு புரியும். காலி கப்பை கையில் கொடுத்துட்டு புரியலையான்னு கேட்டா எப்படி?? நான் எப்படி சன்டே நீ செய்த பொங்கலை சாப்பிட்டுட்டு சூப்பர்ன்னு சொன்னேன் !!! நானும் ஒன்னும் சொல்லாம காலி தட்டை நீட்டிட்டு பேசாம போயிருக்கனும் அப்போ தெரிஞ்சிண்டிருப்பயாக்கும்

ஓகே சார் இனி ரெண்டு பேருமே ஓப்பனா இருவருக்குமே புரியுறமாதிரி பாராட்டிக்குவோம் சரியா. என் நவீ போட்ட காபி சூப்பரோ சூப்பர்

ஆங் அது!!என்று நவீன் சொன்னதும் இருவருமாக சிரித்துக்கொண்டனர்.

நைட்டுக்கும் டாபாலேர்ந்தா வாங்கப் போறேங்கள்?”

ஆமாம். வேற என்னப் பண்ணுவேன். இன்னைக்கு மட்டும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ நாளை முதல் என் சமையல்

உங்களுக்கு சமைக்கத் தெரியாதுன்னு சொன்னேங்கள்!” 

தெரியாது தான். நீ சொல்லித்தா செய்யறேன்.” 

ஓகே டன் நாளைமுதல் இருவருமாக சமையல் பாடம் கத்துக்குவோம்

ஏன் !!!!நீ தான் நல்லா சமைக்கிறயே

உண்மைச் சொல்லனும்ன்னா நான் கல்யாணத்துக்கு முன்னாடி சமைச்சதே கிடையாது. தோசை, இட்டிலி சுடுவேன் அன்ட் தேங்கா சட்னி பண்ணிருக்கேன் அவ்வளவு தான்

அப்போ எப்படி கிச்சடி, பொங்கல், கேசரி எல்லாம் செஞ்ச? அதுவும் அவ்வளவு ருசியா

என் அம்மா செய்யறத பார்த்திருக்கேன் என்னவெல்லாம் போடணும்ன்னு தெரியும் அதனால செய்தேன். செய்ய தொடங்கறத்துக்கு முன்னாடி கடவுளிடம் வேண்டிப்பேன் …நான் செய்யறது நல்லப்படியா வரணுமே!!! என் சாப்பாட்டை சாப்பிடறவாளுக்கு அது பிடிக்கணுமே!!  ன்னு ஒரு ரிக்குவெஸ்ட் போட்டுட்டு செய்தேன் நல்லாவும் வந்தது.

ஓகே !!!!ஓகே!!! நாளைக்கு நானும் கடவுளிடம் ….நான் செய்யறது சாப்பிடறமாதிரி இருக்கனுமே…என் மிருதுவுக்குப் பிடிக்கணுமே ன்னு ஒரு ரிக்வெஸ்ட் அன்ட் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிச்சுட்டா போச்சு

அன்றிரவு உணவையும் டாபாவிலிருந்து வாங்கி வந்து இருவரும் அருந்தியப்பின் மிருதுளாவின் காயங்களுக்கு மருந்து தடவி விட்டு அவள் சாப்பிட வேண்டிய மாத்திரைகளை எடுத்துக்கொடுத்துவிட்டு படுக்கையின் நடுவில் ஒரு தலையணையை வைத்து மிருதுளாவைப் படுக்கச் சொன்னான் நவீன் …அதைப்பார்த்த மிருதுளா…

ஏன் நடுவில் புதிதாக தலையணைஎன அரை மயக்கத்தில் கேட்டாள்.

தூங்கும் போது தெரியாமல் உன் மீது  கால் ஆர் கையைப் போட்டுட்டேன்னா…உன் காயங்களில் பட்டு உனக்கு வலிக்குமே அதனால் தான் நடுவில் தலையணையை வைத்தேன்

ஸோ நைஸ் ஆஃப் யூர் மை புருஷா. குட் நைட்

குட் நைட் மிருது. ஐ லவ் யூ. நல்லா தூங்கி ரெஸ்ட் எடுஎன்று கூறிக்கொண்டே பார்த்தான் அவள் உறங்கியிருந்தாள்.

ஒருவரையொருவர் பரஸ்பரம் புரிந்துக்கொள்வதற்கு சந்தர்பங்களும் சூழ்நிலைகளும் மிக முக்கியமான இடம் வகிக்கிறது. அவை சரியாக அமைவதிலும், அவற்றை சரியாக உபயோகித்து புரிய வைப்பதிலும், புரிந்துக்கொள்வதிலும் தான் தம்பதிகளின் வாழ்க்கை அழகானதாகவும், ஆழமானதாகவும் உருவெடுத்து அவர்களின் உறவை பல ஆண்டுகளுக்கு அர்த்தமுள்ளதாக உயிர்ப்பித்திருக்க செய்கிறது. 

இந்த பைக் விபத்தும் நவீன் மிருதுளா ஆகிய இருவரின் புரிதலுக்கான வித்தாக தான் கடவுள் அமைத்திருக்க வேண்டும். இந்த சூழ்நிலை அவர்களுக்கு  நல்ல சந்தர்ப்பமாக அமைந்து அவர்களுக்குள் இருக்கும் அக்கறை, அன்பு, பாசம், அனுசரணை போன்ற குணாதிசயங்களை இருவருக்கும் புரியவைக்கப் போகிறதா? அவர்கள் அதை புரிந்துக் கொள்வார்களா

திருமண வாழ்க்கை என்ற செடியை,

அக்கறை, அன்பு, பாசம் எனும் வளமான மண்ணும், சூரிய ஒளியும், நீரும்,

கொண்டு பேணிக்காத்தால்,

காதல் எனும் அழகிய மலர் மலர்ந்திடாதா என்ன?

அதில் புரிதல் எனும் மதுரசம் தான் வழிந்திடாதா!

அந்த மதுரசத்தைப் பருகி இன்பம் எனும் வண்டுகள் தான் ஆடி களித்திடாதா!!!

தொடரும்…..

மிருதுளா முதல் முறையாக புடவைக்கட்டிக்கொண்டு பைக்கில் சென்றாள். அவள் புடவை தலைப்பை சரியாக பிடித்துக்கொள்ள முடியாமல் பிடித்துக்கொண்டதில் புடவைத் தலைப்பு  அதுவும் புது பட்டுப்புடவை வழ வழவென இருந்ததில் அவள் கையிலிருந்து நழுவியதை உணர்ந்ததும் சட்டென அதை பிடித்து வைக்க முற்பட்டு பைக்கிலிருந்து வழுக்கி கீழே விழுந்தாள். அவள் விழுந்ததும் புடவை தலைப்பின் குஞ்சம் ஃபுட் ஸ்டான்டில் மாட்டிக்கொண்டது. தன் மனைவி பின்னாடி வண்டியில் இருக்காளா இல்லையா என்று கூட கவனிக்காமல் நவீன் வண்டியை ஓட்ட பின்னால் ரோட்டில் ஃபுட் ஸ்டான்டில் மாட்டிக் கொண்டுள்ள புடவைத் தலைப்பை பிடித்துக்கொண்டுஐய்யோ அம்மா!!! மா!!! மா!!! நவீ!!! நவீ!!!! என்று கத்திக்கொண்டு சறுக்கிக்கொண்டே சென்றவளை ரோட்டோரம் இருந்தவர் பக்கத்து வண்டியில் பயணித்தவர்கள் என எல்லாரும் நவீனுக்கு கூச்சலிட்டு வண்டியை நிறுத்தச் சொல்ல 

ஏன் ரோட்டில் எல்லாரும் கையை காட்டி, நிறுத்தச்சொல்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டுவண்டியை நிறுத்தி திரும்பி பார்த்தான் மிருதுளா ரோட்டில் கிடந்தாள். ஓடிச்சென்றான் ….அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் அனைவரும் உதவ ஓடினார்கள். மிருதுளா கட்டியிருந்த ஆஃப் வைட் பட்டுப் புடவை முன்பக்கமாக ரோட்டில் உராய்ந்து கொண்டு வந்ததில் முழுவதும் ரத்தத்தால் சிவப்பு நிறமாக மாறியிருந்தது. மிருதுளாவை ஆட்டோவில் ஒரு பெண்மணியுடன் ஏற்றிவிட்டு அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி பின்னாலேயே பைக்கில் சென்றான் நவீன். அப்பொழுதும் பைக்கை விடவில்லை அவன். 

ஆஸ்பத்திரி சென்றடைந்ததும் உதவ வந்த பெண்மணி மிருதுளாவை தாங்கிப்பிடித்துக்கொண்டு உள்ளே அழைத்துச்சென்றாள். நவீன் பைக்கை ஸ்டான்டில் நிப்பாட்டி விட்டுதான் உள்ளே சென்றான். மிருதுளாவை ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்து டாக்டர் ரூமிற்குள் அழைத்து செல்வதைப்பார்த்து ஓடினான் வழியில் அவளுடன் வந்த பெண்மணியை நன்றி சொல்வதற்காக தேடினான் அவளை காணவில்லை. பின் டாக்டரிடம் போய் தான் யார் என்பதும் அட்மிட் ஆனவரின் பெயர் என்று சொல்ல முயன்றப்போது 

மிருதுளா உங்க மனைவியா?” என டாக்டர் கேட்க 

ஆமாம் டாக்டர்….மிருதுளா எப்படி இருக்கா டாக்டர்என்று கேட்டான் 

கொஞ்சம் வேயிட் பண்ணுங்க இப்போ தானே பேஷன்ட்டைப் பார்க்க போறேன்…நீங்க வெளியே இருங்க…நான் கூப்பிடும் போது வந்தா போதும்என டாக்டர் கூறியதும் 

ரூமுக்கு வெளியே நின்று உள்ளே என்ன செய்கிறார்கள் என தவித்துக்கொண்டிருந்தான் நவீன். சிறுது நேரத்தில் மிஸ்டர் நவீன் என்று டாக்டர் அழைக்க உள்ளே சென்று

என்ன ஆச்சு டாக்டர் அவ எப்படி இருக்கா?” 

இருங்க மிஸ்டர் நவீன். வண்டியிலிருந்து விழுந்து சுமார் ஒரு அரை கிலோமீட்டர் ரோட்டில் சறுக்கி வந்ததில் மார்பு, வயிறு, தொடை, கைகள், கால் முட்டி என எல்லா இடங்களிலும் அதிகமாக சிராய்ப்புகள் ஆகியிருக்கு மத்தபடி ஸ்கேன் அன்ட் எக்ஸ்ரே ரிப்போர்ட் வந்ததுக்கப்புறம் தான் உள்ள ஏதாவது பாதிப்பு இருக்காங்கறது தெரியும். ஒரு ஹாஃப் அன் ஆர் வேயிட் பண்ணுங்க தெரிஞ்சுடும். அவங்க காயங்களுக்கு மருந்து போட்டாச்சு, இன்ஜெக்ஷன் கொடுத்திருக்கோம், பேயின் கில்லரும் கொடுத்திருக்கோம் அதனால் டிரௌஸியா தான் இருப்பாங்க…. பின்னாடி வைஃப் இருக்காளா இல்லையான்னு கூட தெரியாமயா வண்டி ஓட்டு வீங்க? அது அவ்வளவு பிசியான ரோடு ….ஏதாவது வண்டி அவங்க மேல ஏறியிருந்தா என்னவாகியிருக்கும்? நல்ல வேளை இன்னிக்கு சன்டே. காட் ஈஸ் ரியலி கிரேட்.   நீங்க போய் அவங்களோட இருங்க ரிப்போர்ட் வந்ததும் கூப்பிடறேன்.

ஓகே டாக்டர். அவள் புடவைக்கட்டிக்கொண்டு பைக்கில் இன்றுதான் முதல் முறையாக பயணிக்கின்றாள். பட்டுப்புடவை வழுக்கி விட்டது என்று நினைக்கிறேன். ஷுவர் டாக்டர் இனி ஜாக்கிரதையாக இருக்கிறோம்.தாங்க் யூ டாக்டர்என்று கூறி அங்கிருந்து மிருதுளா இருந்த ரூமிற்குள் சென்றான். அழகாக பட்டுப்புடவையுடுத்தி கிளம்பிய தன் மனைவி உடம்பில் காயங்களுடன் படுத்துக்கிடப்பதைப்பார்த்து அதிர்ந்துப் போனான். 

மிருதுளா அரை மயக்கத்தில் மெல்ல கண்களைத் திறந்துப் பார்த்தாள். அவள் நகைகள் ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்து நவீனிடம் செய்கையில் கேட்க அவன் எல்லாம் பத்திரமாக தன்னிடம் இருப்பதாகவும் நிம்மதியாக உறங்கும்படி கூறினான். 

அன்று மிருதுளாவை ஆட்டோவில் கூட்டிவந்து ஆஸ்பத்திரியில் சேர்த்து சென்றவர் மிருதுளா வணங்கிய அந்த சமயபுரத்து அம்மனே என்றெண்ணி மனமுருகி நன்றிச்சொன்னாள் மிருதுளா. 

டாக்டர் நவீனை உள்ளே அழைத்தார். 

சொல்லுங்க டாக்டர்” 

எஸ் நவீன் எல்லா ரிப்போர்ட்ஸும் வந்தாச்சு அதை பார்க்கவும் செய்துட்டேன். நோ அதர் இஷூஸ். எவ்ரித்திங் இஸ் ஃபைன். அவங்க வயிற்றில் அதிகமாக சிராய்ப்புகள் இருந்ததனால் எனக்கு கொஞ்சம் கவலையாக இருந்தது‌ அது தான் ஸ்கேன் அன்ட் எக்ஸ்ரே எடுக்கச்சொன்னோம் வேற ஒன்னுமில்லை. இப்போ நீங்க அவங்களை வீட்டுக்கு கூட்டிட்டுப் போகலாம்‌. இந்த மெடிசின்ஸ் எல்லாம் மறக்காமல் கொடுங்க அப்போத்தான் காயங்கள் சீக்கிரம் ஆறும். எப்படியும் ஒரு பதினைந்து நாட்கள் எடுக்கும்.

ஓகே டாக்டர். நான் பார்த்துக்கறேன்

தனது பைக்கை ஸ்டான்டிலேயே விட்டுவிட்டு வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடித்து இருவரும் அதில் ஏறி நவீன் சித்தி வீடு பக்கத்திலிருந்ததால் அங்கே சென்றார்கள். சித்தி ரம்யா வீட்டு கதவைத் தட்டினான் நவீன். கதவு திறந்ததும் ரம்யா 

ஹாய் புது மண தம்பதியினரே வெல்கம்…ஹேய் மிருதுளா. என்ன!!!! உன் புடவை எல்லாம் ஒரே ரத்தக்கறையா இருக்கு? என்ன ஆச்சு? என்னடா ஆச்சு நவீன். வாங்கோ உள்ள வாங்கோ ஃபர்ஸ்ட்

நடந்தவற்றை நவீன் கூறினான். அதைக்கேட்டதும் அவன் சித்தியும் சித்தப்பாவும் அவனை திட்டினார்கள். 

ஆத்துக்காரி பின்னாடி இருக்காளா இல்லையான்னுட்டு கூட  தெரியாமலா வண்டி ஒட்டுவ!!!”  

சாரி சித்தி…சரி என் பைக் அந்த ஆஸ்பத்திரியிலேயே விட்டிருக்கேன். அதைப் நான் போய் எடுத்துண்டு வரேன். நீங்க மிருதுவை பார்த்துக்கோங்கோ இபோ வந்துடுவேன்” 

சரி சரி நீ வாம்மா நான் உனக்கு என்னோட நைட்டியை தரேன் மொதல்ல இந்த ரத்தக்கறை புடவையை மாத்திக்கோ வா

ஒரு பத்து நிமிடத்தில் பைக்குடன் வீடு திரும்பினான் நவீன். மிருதுளா புடவையை கழட்ட மிகவும் சிரமம் படுவதைப்பார்த்த ரம்யா அவளுக்கு புடவையை கழற்றி நைட்டியை மாற்ற உதவும்  போது மிருதுளாவின் காயங்களைப்பார்த்துவிட்டு வெளியே வந்து …

ஏன்டா நவீன் இப்படி காயங்களாகிருக்கு!!!! வயத்துல இப்படி சிராய்ஞ்சிருக்கு!!! உள்ள ஏதும் அடி படலையே?” 

இல்ல சித்தி…டாக்டருக்கும் அந்த சந்தேகம் வந்ததால எக்ஸ்ரே, ஸ்கேன் எல்லாம் எடுத்துப் பார்த்துட்டு ஒன்னுமில்லைன்னு தெரிஞ்சதுக்கப்புறம் தான் டிஸ்சார்ஜே பண்ணினா

அப்பாடா எல்லாம் அந்த தெய்வத்தின் அருள் தான்ம்பா!!! சரி நீயும் போய் உங்க சித்தப்பா வேஷ்டியை போட்டுண்டு வா. நான் ரெண்டு பேருக்கும் மொதல்ல சூடா காபி தரேன்

நவீனும், மிருதுளாவும் டிரஸ் மாத்தி கண்கொண்டு ஹாலில் வந்தமர்ந்தனர். அப்போ நவீன்

எங்க சித்தப்பா உங்க பொண்ணுகள் ராதா அன்ட் ரேவதியை காணமே!!

ரெண்டு பேரும் ஸ்பெஷல் க்ளாஸ் போயிருக்கா இப்போ வந்திடுவா

சொல்லிக்கொண்டிருக்கையிலே உள்ளே நுழைந்தனர் இரு பெண்களும்….

ஹாய் பையா!! ஹாய் மன்னி வெல்கம்” 

என்று கூறிக்கொண்டே ரேவதி நவீனின் மடியில் அமர்ந்தாள். மிருதுளாவிற்கு அது வித்யாசமாக பட்டது ஆனாலும் அவள் காட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் ரேவதி சின்ன குழந்தை அல்ல அவள் பத்தாம் வகுப்பு படிக்கும் இளம்பெண். ராதா காலேஜ் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள். மிருதுளா வளர்ந்த விதம் வேறு. வயதுக்கு வந்த பெண் அவள் வீட்டில் அவளது அப்பா, அண்ணன், தம்பிகளுடன் கூட இப்படி மடியில் அமர்ந்து தடவுவது கொஞ்சுவது என்பதெல்லாம் செய்யக் கூடாது என்றுதான் சொல்லி வளர்க்கப்பட்டிருக்கிறாள். அதனாலோ என்னமோ அவளுக்கு அப்படி தோன்றியது. பின்பு அனைவருமாக அமர்ந்து இரவு உணவு அருந்தினார்கள். மிருதுளாவால் தனது கைகளைத் தூக்கி உணவருந்த முடியாமல் சிரமப்பட்டாள். அதை யாரிடமும் சொல்லி அவர்களை தொந்தரவு செய்யவேண்டாமென எண்ணி தனக்கு உணவு வேண்டாம் என்றும் ஒரு கிலாஸ் பால் மட்டும் போதும் என்றாள். நவீனும் அவளின் கஷ்ட்டத்தை புரிந்துக்கொள்ளவில்லை. நவீன், மிருதுளா இருவருக்கும் ஒரு அறையை காட்டி அதில் படுத்துறங்கச்சொன்னாள் ரம்யா சித்தி. அப்போது நவீன் சித்தியிடம்

சித்தி இதை ஊர்ல யார்கிட்டேயும் சொல்லி அவாள பயப்பட வைக்க வேண்டாமென நான் நினைக்கிறேன் …ஸோ நீங்களும் ப்ளீஸ் நடந்ததை யாரிடமும் சொல்லிடாதீங்கோ

புரியுது நவீன் கவலைப்படாதே நான் சொல்லமாட்டேன். நீ போய் மிருதுளாவுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகள் எல்லாம் கொடுத்து அவளை தூங்கச் சொல்லு. குட் நைட்

நவீனும் குட் நைட் சொல்லிவிட்டு அவர்கள் அறையின் கதவை தாழிட்டான். மிருதுளா அவள் காயங்களுக்கு மருந்து தடவிக்கொண்டிருந்ததைப் பார்த்து மருந்தை அவளிடமிருந்து வாங்கி அவனே எல்லா இடங்களிலும் தடவி விட்டு அவள் இரவு எடுத்துக்கொள்ள வேண்டிய மாத்திரைகளையும் தண்ணீரும் கொடுத்து அவற்றை விழுங்கச் செய்து படுக்க வைத்து…

மிருது இந்த விஷயத்தை ஊர்ல உன் பேரன்ட்ஸ் அன்ட் மை பேரன்ட்ஸ் கிட்ட சொல்லி அவாள பயப்பட வைக்க வேண்டாம்னு நினைக்கிறேன்…நீ என்ன சொல்லுற??”

நீங்க உங்க சித்திகிட்டேயும் இதை தானே பேசினேங்கள்…அதை நானும் கேட்டேன். நீங்க சொல்லறதும் சரிதான் நானும் யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன். அப்படியே சொல்லனும்னாலும் நீங்கதான் எஸ்.டி.டி பூத்துக்கு கூட்டிட்டுப் போகணும் ஆர் லெட்டர் எழுதறதாயிருந்தாலும் நீங்க தான் எழுதித் தரணும் ….இந்த கையை வைத்துக்கொண்டு நான் எப்படி எழுத முடியும்…ஸோ கவலையை விடுங்கோ. எனக்கு தூக்கமா வருது நான் தூங்கறேன். குட் நைட்

என்று உண்ட மருந்துகளினால் கூறிய சில மணித்துளிகளில் உறங்கிப்போனாள். அவளை சிறிது நேரம் பார்த்துக்கொண்டே அமர்ந்தான் நவீன் பின் எழுந்து லைட்டை ஆஃப் செய்துவிட்டு படுத்தான் அன்று மாலை முழுவதும் ஆன பரபரப்பில் அவனும் அசந்து போய் உறங்கலானான். சட்டென்று ஏதோ முனகல் சத்தம் கேட்டெழுந்து பார்த்தான். அருகில் படுத்திருந்த மிருதுளா தான் தூக்கத்தில் வலியில் முனகிக்கொண்டே உறங்கிக்கொண்டிருந்தாள்.  

நவீனுக்கு என்ன செய்ய வேண்டும் என அறியாது எழுந்து அமர்ந்துக்கொண்டு அவளயே பார்த்துக்கொண்டிருந்தான். அவள் வலியில் ரொம்ப முனக ஆரம்பித்ததும் உடனே டாக்டர் சொன்ன அந்த பேயின் கில்லர் மாத்திரையை வலி வரும்போதெல்லாம் கொடுக்கச்சொன்னது நியாபகம் வர அதை எடுத்து மெல்ல மிருதுளாவை எழுப்பி கொடுத்தான். அந்த மாத்திரை சாப்பிட்ட சில மணி நேரத்தில் முனகல் நின்றது. அவளின் முனகல் நின்று அவள் நன்றாக மீண்டும் உறங்க ஆரம்பித்த பின்னரே நவீனும் உறங்கினான்.

காலை விடிந்தது. இரவு முழுவதும் சரியாக தூங்காததால் இருவரும் அசந்து தூங்கிப்போனார்கள். வெளிச்சம் கண்ணில் பட சட்டென கைகளில் இருந்த காயங்களை மறந்து கைகளை தரையில் ஊன்றி எழ முயன்று”  “அம்மாஎன்று சொல்லிக்கொண்டே கைகளை தரையிலிருந்து எடுத்தாள் மிருதுளா. இதைக்கேட்டெழுந்தான் நவீன்…

என்ன ஆச்சு மிருது!! ஏன் கத்தின?”

ஒன்னுமில்லை அடிப்பட்டதை மறந்து கையை தரையில் ஊனிட்டேன் வலிச்சுது அதுதான் கத்தினேன். சரி டைம் ரொம்ப ஆயிடுத்துன்னு நினைக்கிறேன் எழுந்துண்டு, என்னையும் எழுப்பி விடுங்கோ

நவீன் மிருதுளாவை எழுப்பிவிட்டு இருவருமாக வெளியே வந்தனர். மிருதுளா ரம்யா சித்தியிடம்…

சாரி சித்தி ரொம்ப நேரம் தூங்கிட்டோம். டைம் என்ன ஆச்சு?”

பரவாயில்லை மா. மணி எட்டு தான் ஆச்சு. நீயே இப்படி அடிப்பட்டுண்டு படுத்திருக்க வலில எப்படி தூக்கம் வந்திருக்கும். எனக்கு அது கூட புரிஞ்சுக்க முடியாதம்மா. சரி புது டூத் பிரஷ் வச்சிருக்கேன் போய் பல் தேச்சுட்டு வாங்கோ காபி தரேன்

ஓகே சித்தி. எங்க வச்சுருக்கேங்கள்?”

அந்த வாஷ் பேஸன் ஷெல்ஃப்ல இருக்கு எடுத்துக்கோங்கோ

இருவரும் பல் துலக்கி முகம் கழுவி ஃப்ரெஷ் ஆகி ஹாலுக்கு வந்தமர்ந்தனர். ரம்யா நான்கு கப் காபியுடன் வந்து நவீனுக்கும், மிருதுளாவுக்கும், தன் கணவருக்கும் கொடுத்துவிட்டு தானும் ஒரு கப் காபியுடன் அமர்ந்து…

நல்லா தூங்கினேங்களா?”

ஓ எஸ் ஆனா நடுவுல செம்மையா வலிச்சுது அப்போ நவீன் டாப்லெட் கொடுத்தார் அதை சாப்பிட்டதும் மறுபடியும் நல்லா தூங்கிட்டேன்

நிச்சயம் தூக்கத்துக்கு மாத்திரை கொடுத்திருப்பா. ஏன்னா இந்த மாதிரி அடிப்பட்டா தூக்கம் வராதுன்னுட்டு டாக்டருக்கு தெரியாதா

நவீன் அவன் சித்தப்பாவிடம் 

சித்தப்பா அந்த பணம் என்ன ஆச்சு? எனக்கு அது இப்போ கிடைச்சா ரொம்ப உதவியா இருக்கும். அதை நம்பி தான் அடுத்த சம்பள நாள் வரை இருக்கணும்.

அது வரத்துக்கு இன்னும் இரண்டு வாரமெடுக்குமே. சரி இரு நான் பணம் தரேன் அது வந்ததும் அதை நானே வைத்துக்கொள்கிறேன் அதுக்காக இந்த ஃபார்ம் ல நீ கையெழுத்து போட்டுத் தந்திடு

நீங்க இந்த வாரத்துல வந்திடும்ன்னு சொன்னேங்களே…அதுனால தான் கேட்டேன் ப்ளீஸ் டோன்ட் மிஸ்டேக் மீ.

ஆமாம் நானும் அப்படித்தான் நினைத்தேன் ஆனால் நடக்கலையே என்னச் செய்ய? சரி இந்தா பணம் அன்ட் ஃபார்ம்

என்று கொடுக்க அதை வாங்கிக்கொண்டு ஃப்ர்மில் கையெழுத்திட்டு கொடுத்தான் நவீன்.  

இவற்றைப் பார்த்த மிருதுளாவிற்கு நடப்பது எதுவுமே புரியவில்லை.ஏன் நவீன் எல்லோரிடமும் பணம் வாங்குகிறார் ??” அதைப் பற்றி வீட்டிற்கு சென்று நவீனிடம் கேட்டு தெரிந்துக்கொண்டாக வேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டாள்.

இருடா டிஃபன் பண்ணிடறேன் சாப்பிட்டுட்டு கிளம்புங்கோ” 

ஓகே சித்தி

சித்தி நாங்க உடுத்திண்ட உங்க நைட்டீ அன்ட் சித்தப்பா வேஷ்டீ எல்லாத்தையும் நான் எடுத்துண்டு போய் தோச்சு வைக்கறேன் நீங்க எங்காத்துக்கு வரும்போதோ இல்லை நாங்க இங்க வரும்போதோ கொடுக்கறோம் சரியா

ஆமாம் சரிதான் போவியா…அதெல்லாம் அப்படியே அந்த வாஷிங் மெஷின் பக்கத்துல போடு போறும் போ…சரி நீ இந்த ரத்தக்கறை படிந்த புடவையை கட்டிண்டு போகாதே. என்னோட சல்வார் தரேன் அத போட்டுண்டு போ சரியா

சரி சித்தி

நவீனும் மிருதுளாவும் சித்தி சித்தப்பாவுடன் காலை டிஃபன் அருந்திவிட்டு கிளம்பினார்கள் அப்போது ரம்யா…

டேய் நவீன் பார்த்து பத்திரமா கூட்டிண்டு போடா. அடிக்கடி பின்னாடி மிருதுளா இருக்காளான்னு செக் பண்ணிக்கோ

ஓகே சித்தி நாங்க போயிட்டு வரோம்

மிருதுளாவிற்கு பைக்கைப் பார்த்ததும் ஒரு வித பயம் தொற்றியது. ஆனாலும் வீட்டிற்கு போக வேண்டுமே என்றெண்ணி ஏறி ஒரு புறமாக அமர்ந்தாள். அதைப்பார்த்த நவீன்…

மிருது ப்ளீஸ் இரண்டு பக்கமாக கால்களைப் போட்டு உட்கார்ந்துண்டு என்னை பிடிச்சுக்கோ அப்போ கீழே விழ மாட்ட

அவளும் தலையசைத்து அவ்வாறே செய்ய முற்பட்டபோது அவளின் காயங்கள் அதற்கு தடையாக இருக்க இரண்டு புறமாக கால்களைப்போட்டு உட்கார்ந்து இரண்டு புறமுமிருந்த கைப்பிடிகளை பிடித்துக் கொள்ள முயன்று வலியால் முடியாமல்கடவுளே பத்திரமாக எங்களை வீட்டில் சேர்த்து விடுஎன்று வேண்டிக் கொண்டே பயணிக்கலானாள்.

அன்றுமுதல் பைக் பயணம் மிருதுளாவிற்கு பயப் பயணமானது. அந்த பயம் அவளைவிட்டு நீங்க சில நாட்கள் / மாதங்கள் / ஆண்டுகள் ஆகலாம்.

தொடரும் …..

ஞாயிறு காலை சூரியன் பார்வை படுவதற்கு முன்னதாகவே மிருதுளா எழுந்து குளித்து புத்தாடை அணிந்து நெய்வேத்தியத்திற்கு வெண்பொங்கலும், கேசரியும் செய்துக்கொண்டிருக்கையில் நவீன் எழுந்து ….

என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்துண்டு என்ன பண்ணற?”

நீங்க ஏன் இப்பவே எழுந்துண்டு வந்தேங்கள்?”

கிட்சனிலிருந்து வாசம் வந்து என்னை எழுப்பிடுத்து. சரி மறுபடியும் தூக்கம் வராது நான் போய் குளிச்சிட்டு வரேன்

ஓகே. நானும் அதுக்குள்ள இங்கத்த வேலைகளை முடிச்சிடுவேன்

நவீனுக்கு புது வேஷ்டி மற்றும் சட்டை எடுத்து கொடுத்து அணியச் சொல்ல அவனும் அதை அணிந்து வர இருவருமாக சேர்ந்து விளக்கை ஏற்றி பூஜை செய்தனர். அப்பொழுது மிருதுளா மனதில்…

அம்மா எங்களது இந்த புதிய வாழ்க்கை துவக்கம் நல்லதாகவும் இனி வரும் காலங்களிலும் நல்லபடியாக நாங்கள் வாழ்வதற்கும் நீயே துணை. உன் கால்லடியில் எங்கள் வாழ்க்கையை வைத்துவிட்டேன் தாயே. நல்லவற்றையே தந்தருள்வாயாக. ஏதாவது கஷ்டமென்றால் அதை தாங்கும் சக்தியையும் அதிலிருந்து மீண்டு வருவதற்கும் உன் அருள் வேண்டும் அம்மா சமயபுரத்தாயே நீயே துணைஎன்று கண்களை மூடி வேண்டிக்கொண்டிருந்ததைப் பார்த்த நவீன் 

என்ன மிருது சாமிகிட்ட பயங்கர வேண்டுதல் வச்சயே அது என்னதுன்னுட்டு நான் தெரிஞ்சுக்கலாமா?” 

ஓ எஸ் தாராளமா தெரிஞ்சுக்கலாமே. நம்ம வாழ்க்கை நல்லா இருக்கனும்னு வேண்டின்டேன்

அதுக்கு இவ்வளவு நேரமா!!

நீங்க என்ன வேண்டின்டேங்கள்

சாமி எல்லாம் நீயே! நல்லபடியா வச்சுக்கோன்னு ஷாட் அன்ட் சுவீட்டா ஒரு அப்பிளிக்கேஷன் போட்டுட்டேன் இனி எல்லாம் அவன் செயல்

சரி வாங்கோ டிபன் சாப்பிடலாம்” 

காலை உணவான வெண்பொங்கலையும் கேசரியையும் சாப்பிட அமர்ந்தனர். மிருதுளா நவீனுக்கு பரிமாறி அவனைப் பார்த்துக்கொண்டே பரீட்சை எழுதி மதிப்பெண்களுக்காக காத்திருக்கும் மாணவர் போல காத்திருந்தாள். 

சூப்பரா இருக்கு மிருது. ஆத்துல அன்னைக்கு நீ பண்ணின கிச்சடியும் சரி இன்னைக்கு இந்த பொங்கலும் கேசரியும் சரி எல்லாமே ருசியோ ருசி போ. ஆம் எ லக்கி ஃபெலோ. இன்னும் கொஞ்சம் போட்டுக்கறேன். ஆமாம் நீயும் சாப்பிட வேண்டியது தானே. ஏன் என்னையே பார்த்துண்டிருக்காய்?”

உங்களுக்கு பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சதும் எனக்கு வயிறு ரொம்பிடுத்து. தாங்க்ஸ் ஃபார் யுவர் அப்ரிசியேஷன்

ஹலோ இந்த தாங்க்ஸ் எல்லாம் வெளி ஆட்கள்கிட்ட வச்சுக்கோ நம்மளுக்குள்ள எல்லாம் நோ சாரி நோ தாங்க்ஸ் ஓகே. மொதல்ல நீயும் உட்கார்ந்து சாப்பிடு.

நவீனின் பேச்சு, பழக்கங்கள் எல்லாம் மிருதுளாவிற்கு மெல்ல மெல்ல அவன் மீது காதலை வரவைத்தது. அதே போல நவீனும் மிருதுளா மீது கொள்ளை ஆசையும் பிரியமும் வைத்திருந்தான்… ஆனாலும் இருவரின் மனதிலும் ஏதோ சில நெருடல்கள் இருந்து கொண்டு அதை முழுவதுமாக அனுபவிக்க தடுத்தது. 

மிருதுளாவிற்கு நவீனிடம் கேட்டு க்ளியர் பண்ணிக்கொள்ள  வேண்டிய விஷயங்கள் பல உள்ளது அவற்றை நவீனிடம் எப்படி கேட்பது? என்ன நினைப்பார்? வருத்தப்படுவாரா? சரியான பதில் கிடைக்குமா? என்பதனால் தயக்கம். நவீனுக்கு பிரேஸ்லெட் விஷயத்தில் ஒரு பொய்யை தனது பெற்றோர் சொல்லி தன்னை தாழ்த்தியதில் வருத்தம். இருவருமே அதை வெளிக்காட்டாமல் மனதினுள் பூட்டி வைத்தனர். 

இதுதான் நிச்சயிக்கப்பட்ட திருமணமத்தின் ஆரம்ப கால தயக்கங்களும் தவிப்புகளும். இவை அனைத்தும் சரியாக சில நாட்கள் / மாதங்கள் ஆகலாம். பல தம்பதிகளுக்கு சில வருடங்களும் ஆகலாம். சில தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்துக்கொள்ளாமலே போவதும் உண்டு.  அதனால் தான் திருமணமானதும் கணவன் மனைவி பிரிந்திருக்கக்கூடாது என்று பெரியவர்கள் கூறியுள்ளனர். இதில் நம்ம நவீன் மிருதுளா புரிதலுக்கு சில நாட்களாகபோகிறதா, மாதங்களாகபோகிறதா இல்லை வருடங்களாகப்போகிறதா!!!  பர்வதம் ஈஸ்வரன் சொன்னது போல மிருதுளா அவர்களுடனே இருந்திருந்தால் அவர்களுக்குள் புரிதலே வராதபடி செய்திருப்பார்கள் அந்த மூத்த தம்பதியர்.

நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில்

இரு மனங்கள் இணைவதில்

காலதாமதம் ஆவதில்

தவறேதுமில்லை! ஆனால்

இணையாமல் போனால்

அவர்கள் வாழ்க்கை மட்டுமல்லாமல்

இரு குடும்பத்தினரின் வாழ்க்கையும்

ஆட்டம் கண்டுவிடும்

அதிலிருந்து மீள்வதற்கு காலதாமதம் ஆகும்

பலரால் மீண்டு வந்து விடமுடியும்

சிலரால் முடியாமல் அவர்கள் வாழ்க்கை அழிந்துவிடும்.

திருமண வாழ்க்கையில் தம்பதிகளுக்குள் புரிதல் என்பது மனசு விட்டு பேசுவதனால் மட்டுமே வந்துவிடாது அது பல சந்தர்ப்ப சூழ்நிலைகளை சார்ந்தும் தான் ஏற்படும். அப்படிப்பட்ட சூழ்நிலைகள் நிறைய காத்திருக்கிறது நம்ம மிருதுளா நவீன் வாழ்க்கையில். அவர்கள் அவற்றை புரிந்துக்கொள்கிறார்களா என்பது தான் கேள்வி அதற்குண்டான பதிலைத்தேடி தான் நாம் அவர்கள் கதையை படிக்கின்றோம்.

மிருதுளா மந்திய சாப்பாட்டுக்கு ரசமும் உருளைக்கிழங்கு ஃப்ரையும் செய்ய முற்பட்டபோது…

மிருது மத்தியத்திற்கு வேணும்னா நம்ம கேம்ப்புக்குள்ளயே இருக்கிற வெஜ் டாபாலேருந்து லஞ்ச் வாங்கிண்டு வரேன்.

வேண்டாம் நவீ. வெளியே சாப்பிட்டு அலுத்துடுத்து. எனக்கு ரசம் சாதம் சாப்பிடனும் போல இருக்கு. அதுதான் செய்துண்டிருக்கேன். இதோ ரசமும் உருளை பொறியலும் ஆயாச்சு. சாதம் மட்டும் வச்சுட்டேன்னா வேலை ஆச்சு. நான் ஒன்னு கேட்கவா?” 

கேளு. என்ன?”

உங்களுக்கு சமைக்கத்தெரியுமா?”

நாட் அட் ஆல் மிருது. சின்ன வயசுலயே வேலைல சேர்ந்துட்டேன் அன்னேலேருந்து இன்னிக்கு நீ சமைச்சு தந்தது வரைக்கும் எனக்கு எங்க ஆர்மி மெஸ் சாப்பாடு தான் கைகுடுத்திருக்கு. மெஸ் இருந்ததால நான் சமைக்கனும்ங்கற அவசியம் வரலை அதனாலயோ என்னமோ அதை கத்துக்கணும்ன்னு தோணலை.

ஓ!!! அப்படியா? சரி சப்போஸ் எனக்கு உடம்புக்கு சரியில்லாமல் போச்சுன்னா?”

அப்போ இருக்கவே இருக்கு நம்ம ரோஹித் டாபா. அங்கிருந்து வாங்கி சாப்பிடுவோம் என்ன சொல்லற

அப்பவும் கத்துக்க மாட்டேங்கள்ங்கறது நல்லா புரியறது

அதெல்லாம் பார்த்துக்கலாம் இப்போ ஏன் உடம்பு முடியாமல் போறத பத்தி எல்லாம் பேசற. விடு வேற ஏதாவது பேசுவோம்

சாதம் ஆயாச்சு. சரி வாங்கோ நாம ஹாலுக்கு போவோம்

இந்த கோட் சூட்டை கவர்ல போட்டு வைக்கனும் இல்லைன்னா டஸ்ட் படியும்.  இப்போ சொல்லு நேத்திக்கு என்கிட்டே ஏதோ கேட்க வந்து கேட்காம விட்டுட்ட என்னதது?”

நம்ம ரிசப்ஷன் டிரஸ் தானே எஸ் எஸ் அப்படியே வையுங்கோ. சரி நேத்திக்கு கேட்க வந்தது இருக்கட்டும் இப்போ இந்த கோட் சூட்டை பார்த்ததும் இன்னொரு விஷயம் ஞாபகம் வருது கேட்கட்டுமா? கோபப்படாமல் பதில் சொல்லனும்

எனக்கு கோபமே வராது அதெல்லாம் ஒரு காலத்துல பயங்கரமா இருந்தது…இப்போ அப்படி இல்லை‌. அதனால கேளு

ஆமாம் நீங்கள் தான் சம்பாதிக்கறேங்கள் அதுவுமில்லாம வரதட்சணை ஏதும் வேண்டாம் என்றும் அதைப்பத்தி என் அப்பா மீண்டும் பேச ஆரம்பிச்சபோது எழுந்து வெளியே போனேங்களே

ஆமாம் நான் வேண்டாம்னு சொன்னதுக்கப்புறமும் உன் அப்பா அதைப்பத்தி மறுபடியும் பேசினார் அதுதான் போனேன்

ஓகே ஓகே நீங்க அன்னைக்கு சொன்னது செய்தது எல்லாம் சரிதான் ஆனா அதுக்கப்புறம் உங்க அப்பா அம்மாட்ட ஏன் ரிசப்ஷன் டிரஸ், ஷூ எல்லாம் வாங்க பணம் கேட்டிருக்கேங்கள்?”

என்ன சொல்லற நீ? நான் எப்போ அவாகிட்ட பணம் கேட்டேன்? எதுக்கு கேட்கனும்? நானே தான் எல்லாம் டில்லியில் எடுத்துண்டேன்

இதை கேட்டதும் மிருதுளாவிற்கு ஊருக்கு கிளம்புவதற்கு முன்தினம் நவீன் அவர் அப்பாவிடம் பணம் கேட்டு வாங்கியது நினைவுக்கு வந்தது. ஆனால் அதை இப்போது கேட்டால் தானும் குழம்பி நவீனையும் குழப்பிவிடுவோம் என்றெண்ணி அதை இன்னொரு நாள் கேட்கலாம் என்று முடிவு செய்து…அதுதான் சரி என தலையை அசைத்து….

என்ன சொல்லறேங்கள்? அப்போ நீங்க அவாகிட்ட டிரஸ் எடுக்க பணம் ஏதும் கேட்கலையா? ஆனா அவா ரெண்டு பேரும் நீங்க கேட்டதா சொல்லித்தான் எங்க அப்பாகிட்ட இருந்து ரூபாய் பத்தாயிரத்த பஸ் ஸ்டாப் ன்னு கூட பார்க்காம அங்கேயே குடுக்கச்சொல்லி வாங்கிண்டு தான் உங்க ஊர் பஸ்ஸிலயே ஏறினா. எங்க அப்பா கூட சாயந்தரம் ஆத்துக்கு வந்து தரேன்னு சொன்னதுக்கு, “இல்ல இப்பவே அவனுக்கு நாங்கள் மணி ஆர்டர் பண்ணனும்ன்னு சொன்னாலே!!!

என்னது பத்தாயிரமா!!! அப்படியா சொல்லி வாங்கினா? ஏன் உங்க அப்பா கொடுத்தா? என்ட்ட ஒரு வார்த்தை கேட்டுருக்கலாமோனோ!!! அந்த வெள்ளி சொம்பு, முகம் விஷயத்தில எப்படி நேரா வந்து பளிச்சுன்னு கேட்டா?”

என்ன சொல்லறேங்கள்? அது மூனாம் மனுஷர் வந்து கேட்டதால் என் அப்பா அம்மா நேரா கேட்டா, அதுவும் இல்லாம நீங்க அப்போ அங்க இருந்தேங்கள் அதனால க்ளியர் ஆச்சு ஆனா இது அப்படியில்லையே கேட்டது உங்க அப்பா அம்மா அவாள்ட்ட அப்படி எப்படி கேட்க முடியும்? அதுவும் நீங்க டில்லில இருந்தேங்கள்

ஒரு ஃபோன் பண்ணி கேட்டிருக்கலாமே

அந்த கொடுக்கல் வாங்கல் நடந்தப்போ நானும் அங்கிருந்தேன். எனக்கு உங்க மேல தான் கோபம் வந்தது. அன்னைக்கு நைட் நீங்க ஃபோன் பண்ணினேங்கள் அப்போ அதை சொல்லனும்ன்னு ஆரம்பிச்சேன் என் சித்தி தான்அதெல்லாம் ஃபோன் ல சொல்லக்கூடாது…இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் நேர்ல பேசரா மாதிரி வராது நீ ஏதாவது அவர்ட்ட இப்போ சொல்ல அத அவர் டில்லியிலிருந்து அவா பெத்தவாள்ட்ட கேட்க அவா உன்னை தப்பா நினைச்சுடுவான்னு சொன்னது ஞாபகம் வர அப்படியே சொல்ல வந்ததை விட்டுட்டேன். அதுக்கப்புறம் நான் அதை மறந்துட்டேன் இப்போ தான் ஞாபகம் வந்தது கேட்டேன்” 

ஓ மை காட்!!! என்கிட்ட எங்க அப்பா அம்மா உன் பேரன்ட்ஸ் கிட்டருந்து பணம் வாங்கியதா சொல்லவுமில்லை, தரவுமில்லை” 

அப்போ அந்த பத்தாயிரம் என்ன தான் ஆச்சு! எங்க போச்சு!!

தெரியலையே!!! ச்சே ஏன் இப்படி எல்லாம் பண்ணிருக்கா? சரி கல்யாணமானதுக்கப்புறமாவது ஆத்துல இருந்தப்போவே சொல்லிருந்தே னா நேரா கேட்டிருக்கலாமில்லையா?”

நானும் கல்யாண டென்ஷன் அன்ட் ஒருவித பயம் கலக்கம் எல்லாத்தோடையும் இருந்ததுனால மறந்துட்டேன்” 

என்னன்னு சொல்லுவேன் போ. பசிக்கறது சாப்பிடலாமா

மொத்தத்துல எங்க அப்பாவுக்கு பத்தாயிரம் நஷ்டம். சரி வாங்கோ சாப்பிடலாம்.

வரதட்சணை வேண்டாம் என நவீன் சொல்லியிருந்தாலும்

அவன் பெற்றோர் வேறு வழியில் அதைப் பெற்றுச் சென்றிருந்தாலும்

அதை மகனிடமிருந்து மறைத்திருந்தாலும் 

உண்மை மிருதுளா மூலம் வெளி வந்ததால்

பர்வதம் ஈஸ்வரன் போட்ட முடிச்சுகளில் இரண்டாவதும் அவிழ்ந்தது.

முடிச்சுகள் பல போட்டதால்

இருவரும் இணைந்தால்

ஒவ்வொன்றாக அவிழும் என்பதால்

மிருதுளாவை போகாமல் 

தடுத்துள்ளனர் மூத்த தம்பதியினரான பர்வதம் ஈஸ்வரன்

என்னதான் அவர்கள் முடிச்சுகள் போட்டிருந்தாலும் ஆண்டவன் முடிச்சு என்று ஒன்றிருப்பதை மறந்துவிட்டார்கள் போலும். அவர்கள் போட்ட முடிச்சு காலப்போக்கில் தளர தளர  மிருதுளாவிற்கும் நவீனுக்கும் ஆண்டவன் போட்ட முடிச்சு தளராமலிருக்க அவரே அருள் புரிய வேண்டும். 

இருவரும் உணவருந்தியதும் சற்று நேரம் ஓய்வெடுத்து விட்டு நவீனின் ஒன்னு விட்ட சித்தி வீட்டிற்கு கிளம்பலானார்கள். மிருதுளா பட்டுப்புடவையுடுத்தி தயார் ஆனாள். அவளைப்பார்த்த நவீன் 

ஏதோ குறையுதே

என்ன !! என்ன குறையறது? ஓ !! ஐ காட் இட். தலையில் பூ ரைட்டா?”

எஸ் ரைட். போற வழியில் பூக்கடை இருக்கு அங்க வாங்கிக்கலாம்

பூக்கடையில் வண்டியை நிறுத்தி பூ வாங்கிக்கொடுத்தான் நவீன். அதை தன் தலையில் சூடிக்கொண்டாள் மிருதுளா. இருவருமாக பைக்கில் மீண்டும் பயணத்தை தொடர்ந்த சில மணி நேரத்தில்ஐய்யோ அம்மாஎன்று ஒரு அலறல் சத்தம் …..

தொடரும்…….

காலை கதிரவன் கண்விழித்துப்பார்க்களானார்.  ஜன்னல்களுக்கு திரைச்சீலை இல்லாததால் அவரின் பார்வை மிருதுளாவை தூங்க விடாமல் எழச்செய்தது. எழுந்து நவீனைப்பார்த்தாள் அவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான். அவனை தொந்தரவு செய்யாமல் ஃப்ரெஷ்ஷாகி வந்து மெதுவாக கொண்டு வந்த அட்டைப்பெட்டிகள் மற்றும் சூட்கேஸ்களை திறந்து உள்ளிருந்த பொருட்கள் எல்லாவற்றையும் ஹாலில் பாத்திரங்கள், மளிகை, ஸ்நாக்ஸ், டிரஸ்ஸை, சாமி படங்கள் என பிரித்து அடுக்கி வைத்தாள். சாமி படங்களை எங்கே மாட்டுவது என்று சுற்றும் முற்றும் பார்த்து ஓர் இடத்தில் பேனாவால் குறியீடு  போட்டு வைத்தாள். 

ஒரு பேப்பரில் கடையில் வாங்க வேண்டிய டப்பாக்கள் (மளிகை சாமான்களைப் போட்டு வைக்க), பால் போன்றவைகளை லிஸ்ட் போட்டாள். டக்..டக்…டக்..டக் என கதவு தட்டும் சத்தம் கேட்டது. அச்சச்சோ இந்த சத்தம் நவீனின் தூக்கத்தை தொந்தரவு செய்யுமே என்ற எண்ணம் தோன்ற உடனே தாவி குதித்துக்கொண்டு இன்னும் ஒருமுறை தட்டுவதற்குள் கதவை திறந்தாள். நடுத்தர வயது பெண்மணி கையில் ஒரு டிரேவில் இரண்டு கப் டியுடன் நின்றுக்கொண்டிருந்தார். அந்த பெண்ணைப் பார்த்ததும் …

நீங்க தமிழா?”

ஆமாம். எங்க ஊரு திருநெல்வேலி. உங்க பக்கத்து வீடுதான். நீங்க வீட்டை இன்னும் செட் செய்திருக்க மாட்டிங்கன்னு தெரியும் அதுதான் காபி கொண்டு வந்தேன்

ஓ!! ரொம்ப நன்றிங்க. என் பெயர் மிருதுளா. உங்க பெயர் என்ன?”

என் பெயர் லதா. எதுக்குங்க தாங்க்ஸ் எல்லாம். நான் கல்யாணமாகி வந்த புதுசுல இப்படித்தான் எங்க அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க ஹெல்ப் பண்ணினாங்க. சரி சரி காபி ஆறிட போவுது குடிங்க. என் பசங்கள ஸ்கூலுக்கு கிளப்பனும். நீங்க மொதல்ல செட்டில் ஆகுங்க அப்புறம் பேசுவோம். சரியா மிருதுளா.

ஓகே பைஎன கதவை சாத்தி டிரேவுடன் திரும்பினாள் நவீன்தாங்க்ஸ்என்று கூறிக்கொண்டே ஒரு கப்பை எடுத்துக்கொண்டு…

ஹேய் எப்போ எழுந்தே நீ? எல்லாத்தையும் அடுக்கி வச்சுருக்கறத பார்த்தா நீ எழுந்துண்டு ஒரு ஒன் ஆர் ஆகிருக்குமே!! ஏன் என்னை எழுப்பலை

நீங்க எப்போ எழுந்தேங்கள்?”

நீ நம்ம பக்கத்தாத்து லதாவோடு இன்ட்ரோ ஸெஷன் நடத்தினியே அப்போவே எழுந்துட்டேன்

சரி சரி குளிச்சிட்டு வாங்கோ கடைக்கு போகணும் சில சாமான்கள் எல்லாம் வாங்கணும். இதோ லிஸ்ட் ரெடி. இன்னைக்கு போய் எல்லாத்தையும் வாங்கிண்டு வந்து எல்லாத்தையும் செட் பண்ணிட்டோம்ன்னா நாளைக்கு விளக்கு ஏற்றி சமையலை தொடங்கிடுவேன்

என்ன இவ்வளோ வேகமா இருக்க? நான் எல்லாம் கொஞ்சம் ஸ்லோ தான் மா.” 

எனக்கு பழைய நியூஸ் பேப்பர் வேணுமே. எங்கே கிடைக்கும்

என்னத்துக்கு?”

எல்லா செல்ஃப்லையும் விரிக்கத்தான்.

ஓகே நான் குளிச்சிட்டு போய் எடுத்துண்டு வரேன்.

எங்கேருந்து?”

என் நண்பர்கள் ரூமிலிருந்து தான்.

அந்த இடம் ரொம்ப தூரமா

இல்லை நடந்தே போயிட்டு வந்துடுவேன். ஒரு நாலு தெரு தள்ளி தான் இருக்கு

அப்படின்னா இப்பவே போயிட்டு வாங்கோளேன்‌. வந்துட்டு குளிச்சுக்கோங்கோ. ப்ளீஸ்…

சரி போயிட்டு வரேன்.

நவீன் வருவதற்குள் பக்கத்து வீட்டு டிரே, காபி கப் எல்லாவற்றையும் தேய்த்து அலம்பி வைத்தாள். நவீன் பேப்பர்களை மிருதுளாவிடம் கொடுத்துவிட்டு குளிக்கச்சென்றான். அவன் ரெடி ஆவதற்குள் துணிமணிகளை பீரோவில் அடுக்கி வைத்தாள். அடுப்படியில் எல்லா இடத்தையும் ஒரு துண்டு கொண்டு துடைத்து, படிகளில் எல்லாம் பேப்பரை விரித்து, பாத்திரங்களை எல்லாம் அடுக்கி வைத்தாள். நவீன் அனைத்தையும் பார்த்துவிட்டு..

அம்மாடி நீ என்ன சூப்பர் உமன்னா!!! அதுக்குள்ள எல்லாத்தையும் ஒதுக்கி வச்சிட்டயே!!!” 

இதை எல்லாம் செய்ய சூப்பர் உமன்னா இருக்கனும்ங்கற அவசியமில்லை எந்த எந்த வேலைகளை எப்போ செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும்ன்னு மனசுல கணக்கு போட்டு வேலைப் பார்த்தா சுலபமாக முடியும் அவ்வளவுதான்.

ஓ அப்படியா!!! இப்போ புரியுது நான் ஏன் ஃபாஸ்ட்டா செய்ய மாட்டேன்ங்கறது.

ஏன்

ஏன்னா நான் மாத்தமாட்டிக்கஸ்ல வீக் அதுதான்

அச்சோ கடி ஜோக். சரி சீக்கிரம் ரெடி ஆகுங்கோ. இன்னைக்கு பிரேக்ஃபாஸ்ட் எங்க? எனக்கு பசிக்கறது

இன்னைக்கு நாம கேண்டீனுக்கு தானே போறோம் அதுக்குப்பக்கத்திலயே ஒரு சின்ன வெஜ் ஹோட்டல் இருக்கு அங்கயே சாப்பிடலாம் சரியா.

நாங்கெல்லாம் கேண்டீனுக்கு போனா அங்கதான் சாப்பிடுவோம் அதுக்கு வெளியே இருக்கிற ஹோட்டல்களில் சாப்பிட மாட்டோம்

அம்மாடி உன் அறிவ பார்த்து அப்படியே புல்லரிச்சுடுத்து போ…அசடே இங்க கேண்டீன்னா சாப்பாடு தரும் இடமில்லை… நம்ம ஆளுகளுக்கு மலிவான விலையில் பொருட்கள் விற்கும் எ ஸ்மால் கடை மாதிரின்னு வச்சுக்கோயேன். வா பார்க்கத்தானே போற

ஓ… அப்படியா…சாரி எனக்கு அது தெரியாது….இந்த டிரே அன்ட் கப்பை லதா ஆத்துல குடுத்துட்டு வரேன் நீங்க கதவைப்பூட்டிட்டு ரெடியா இருங்கோ

ஓகே ஓகே போயிட்டு வா

பக்கத்துவீட்டு கதவை தட்டினாள் மிருதுளா. லதா அடுப்படியிலிருந்தே எட்டிப்பார்த்து…

வா வா மிருதுளா உள்ள வா

இல்ல நாங்க வெளில கிளம்பறோம். இன்னொரு நாள் வரேன். இதோ இதை குடுத்துட்டுப்போகலாமேன்னு வந்தேன்.

இது என்ன முறுக்கு, அதிரசமெல்லாம் வச்சிருக்க!

ஆமாம் எங்க கல்யாண பட்சணம். சாப்பிடுங்க நல்லாருக்கும்.

பைக் ஹான் சத்தம் கேட்டதும் மிருதுளா…

சரி நான் வரேன் அவர் தான் ஹான் அடிச்சுக்கூப்பிடறார். அப்புறம் பேசலாம். பை

ஓ கே மா பை.

இருவரும் கேண்டீன் பார்க்கிங்கில் வண்டியை நிப்பாட்டிவிட்டு காலை உணவருந்த ஹோட்டலுக்குள் சென்றனர். நவீன் ஒரு பிரெட் பக்கோடா அன்ட் ஒரு ஆலு பரோட்டா ஆர்டர் செய்தான். அதற்கு மிருதுளா….

இங்க இட்டிலி தோசை எல்லாம் இருக்காதா?…எப்படி எப்ப பார்த்தாலும் ரொட்டியவே சாப்பிடறாளோ தெரியலைப்பா.

நாம எப்படி எப்பப்பார்த்தாலும் இட்டிலி தோசை சாப்பிடறோமோ அப்படி தான் அவாளுக்கும்.

மொதல்ல எல்லாத்தையும் செட் செய்துட்டு இட்டிலி தோசைக்கு மாவு அறைத்து வைக்கணும்

உனக்கு தான் அறைக்க தெரியாதே பின்ன எப்படி!!!

உங்க அம்மா அன்னைக்கு செய்ததை எல்லாம் பார்த்து தெரிஞ்சுண்டேன். ஆமாம் அது என்ன பிரெட் பகோடா?”

இதோ வந்துடுத்தே இது தான் சாப்பிட்டுப்பார்த்து சொல்லு.

அப்பா சுட சுட இருக்கு. ம்…ம்…ம்…சூப்பரா இருக்கு. இது தான் ஃபர்ஸ்ட் டைம் இப்படி பிரெட் சாப்பிடறேன். இதுக்குள்ள ஆலு ஸ்டஃப் பண்ணிருக்காளோ.

எஸ் ஆலு தான். இதுலயே பன்னீர் பிரெட் பகோடாவும் இருக்கு. அடுத்த தடவை வாங்கித்தறேன்.

பரவாயில்லை எனக்கு இந்த ஊரு டிஷ் எல்லாம் கத்துக்கணும்னு ஆசையா இருக்கு.  இன்னும் ஒரு வருஷத்துல எல்லாம் கத்துண்டு ஆத்துலயே செய்து தறேனா இல்லையான்னு பாருங்கோ. சரி உங்க ஆத்துக்கு ஃபோன் பண்ணிச் சொல்லிட்டேளா நாம பத்திரமா வந்து சேர்ந்தாச்சுன்னு?”

ம் ம்..ம் அதெல்லாம் சொல்லியாச்சு. நீ உங்க அப்பா அம்மாட்ட பேசணுமா? இதோ இங்க ஒரு எஸ்.டி.டி பூத் இருக்கு. பேசறயா?”

ம். …பேசறேன்.

மிருதுளா வீட்டுக்கு ஃபோன் போட்டுக்குடுத்து 

 “எவ்வளவு ஆச்சுன்னுட்டு மேலே காட்டும் பார்த்து பேசுஎன்றான் நவீன். 

மிருதுளா அவள் அம்மா அப்பா மற்றும் தம்பியுடன் பேசிக்கொண்டே மேலே பார்த்தாள் அறுபது என்று காட்டியதும் அவசர அவசரமாக பை சொல்லி கால்லை கட் செய்தாள். இதைப்பார்த்த நவீன்…

ஏன் என்ன ஆச்சு? நூறு ருபாய் வரைக்கும் பேசிருக்க வேண்டியது தானே

அத நீங்க முன்னாடியே சொல்லிருக்கனும். இப்போ சொல்லறேங்கள்

ஹா! ஹா! ஹா! வா வா பொருட்களை வாங்குவோம் அப்புறமா வேணுனா நைட் பேசலாம். நம்ம கேம்ப்புக்குள்ளயே ஒரு எஸ்.டி.டி பூத் இருக்கு. ஓகே வா

 வேண்டிய பொருட்களை எல்லாம் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.  வீட்டில் முதலில் சாமி படங்களை சுவரில் ஆணி அடித்து மாட்டினார்கள். அதற்காக வாங்கி வந்த ஸ்டாண்டையும் ஃபிக்ஸ் செய்தான் நவீன். மிருதுளா எடுத்து வந்த எல்லா சாமி பொருட்களையும் அந்த ஸ்டாண்டில் அடுக்கி வைத்தாள். மளிகை ஜாமான்களை எல்லாம் டப்பாக்களில் இருவருமாக போட்டு அடுப்படியில் அடுக்கினர். அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர் வாங்குவதற்கு மிருதுளாவிடம் பணம் கொடுத்திருந்தார் ராமானுஜம். ஆனால் அதை அவர்கள் வாங்க மறந்ததால் மீண்டும் போக ஆயத்தம் ஆனார்கள். அப்பொழுது நவீன்…

ஏய் மிருது எப்படியும் மத்திய சாப்பாட்டுக்கு வெளியே தான் போகணும் அப்போவே போய் மிச்சத்த வாங்கிண்டு உன்னை ஆட்டோல ஏத்திவிட்டுட்டு பின்னாடியே நானும் பைக்ல வரேன் என்ன சொல்லுற….இல்லாட்டி இப்ப ஒரு தடவை அப்புறம் ஒருதடவைன்னுட்டு ரெண்டு மூணு டிரிப் அடிக்கனும்

ஓகே அதுவும் சரி தான் அப்படியே செய்வோம். ஆனா அதுக்கு இன்னும் ரெண்டு ஆர் மூணு மணிநேரமிருக்கே! அதுவரை என்ன செய்வோம்…என்ன மறுபடியும் படுத்துட்டேள்

ஆமாம் ..வா நீயும் வந்து படுத்துக்கோ.

மிருதுளாவிற்கு நவீனிடம் காசு இல்லாமல் போனது ஏன் என்ற நினைப்பு மனதிலிருந்ததை நவீனிடமே கேட்டாக வேண்டும் என்று எண்ணி ஆரம்பித்தாள்…

என் மனசுல ஒரு விஷயம் உருத்திண்டே இருக்கு அதை உங்கள்ட்ட கேட்கலாமா!!

கேளு..அதுக்கு ஏன் இழுக்கறாய்…?” 

இல்லை நீங்க ஏதாவது நினைச்சிட்டா…

ஏய் சொல்லுமாஎன்று கையை பிடித்திழுத்தான் நவீன், உடனே ஆ…என சத்தமிட்டாள் மிருதுளா. 

என்ன ஆச்சு ? ஏன் கத்தின?”

இந்த பிரேசிலட் கீரிடுத்து அதுதான் கத்தினேன். கழட்டி வைக்க மறந்துட்டேன்

ஏய் நானும் மறந்தே போயிட்டேன் பாரேன்!!!! உனக்கு இந்த பிரேசிலட் பிடிச்சிருக்கா? இதை கல்யாண நாள் அன்றைக்கே கேட்கனும்ன்னு நினைத்தேன் அந்த டென்ஷன்ல மறந்துட்டேன்.

நல்லா தான் இருக்கு ஏன் இதுக்கு என்ன ஸ்பெஷலாம்!!! ஓ!!! மச்சினர் வாங்கி தந்ததாச்சே அதனாலயா? நீங்கதான் எனக்கு ஒன்னுமே வாங்கித்தரலையே!!! அதுல எனக்கு கொஞ்சம் மன வருத்தம் தான்

ஹலோ என்ன சொல்லுற? எந்த மச்சினன் வாங்கினதுனு நினைச்சிண்டிருக்க? இது நான் உனக்காக கடை கடையா ஏறி பார்த்து வாங்கியது மா

என்ன சொல்லறேங்கள் எங்க ஃபேமிலி ஆட்கள்கிட்ட உங்க அம்மா தான் சொல்லிருக்கா!!! அவா என்கிட்ட சொன்னா

என்னத்த சொன்னா உன் மாமியார்

ஏன் உங்க அம்மான்னு சொல்லமாட்டேளோ!!!

இப்ப அதுதான் ரொம்ப முக்கியம் பாரு. மொதல்ல என்ன நடந்ததுனு சொல்லறயா

உங்க தம்பி கவின் குவைத்திலிருந்து அவன் மன்னிக்காக வாங்கிண்டு வந்ததுனு உங்க அம்மா சொன்னதால் நாங்கள் அனைவரும் அதை உண்மைன்னு நம்பி கல்யாணத்தன்னைக்கு மண்டபத்தில எல்லார்கிட்டயும் அதையே தான் சொன்னோம், அதுக்கு என் சித்திக்கூட சொன்னா தட் ஐ ஆம் லக்கின்னு. அப்போ என் தோழி காயத்திரி கூட கேட்டாஉன் மச்சினனே உனக்கு பிரேஸ்லட் எல்லாம் வாங்கித்தரார் உன்னவர் ஒன்னும் தரலையானுட்டு

ஆமாம் …ஆமாம் …அவன் ஒன்னும் வாங்கலை இது நான் வாங்கினது

இதை நீங்க ஏன் அப்பவே என் கிட்ட சொல்லலை?”

சரி விடு கல்யாண டென்ஷன்ல மறந்துட்டேன்… இப்போ தெரிஞ்சுண்டுட்ட ல அது போறும். நீ ஏதோ கேட்கணும்னு சொன்னயே என்னதது

இந்த பிரேஸ்லட் இஷ்ஷுல இனி அது வேறயா !!! வேண்டாம் பா வேண்டாம். நான் இன்னொரு நாள் கேட்கறேன்.

ஏன் அப்படி என்ன விஷயம் அது?”

இல்ல இல்ல விடுங்கோ…ஏன் உங்க அம்மா அப்போ அப்படி சொன்னா? நீங்க வாங்கினத கவின் வாங்கினதா ஏன் சொல்லனும்? அதுனால என்ன கிடைச்சது அவாளுக்கு?”

அதை நீ அவாகிட்ட தான் கேட்கனும். என்னிடம் கேட்டா!!

அப்பவே நீங்க என்னிடம் சொல்லிருந்தா நிச்சயமா கேட்டு இருப்பேன். இனியாவது எதுவும் மறக்காமல் சொல்லுங்கோ. சரி நேரமாயிடுத்து நாம போய் அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர், பெட், பில்லோ ரெண்டு எல்லாம் வாங்கிண்டு வரலாமா

ஓகே டன். சரி சரி போகலாம் வா

இருவரும் போய் வேண்டிய அனைத்தையும் வாங்கிக்கொண்டு வந்து எல்லாவற்றையும் அது அது இடத்தில் ஃபிக்ஸ் செய்தனர். இரண்டு கட்டில்கள் மட்டும் தான் குவார்டர்ஸில் தந்திருந்தார்கள் அதில் மெத்தைப்போட்டு புது பெட் ஷீட் விரித்து புது கவரிட்ட தலையணையை வைத்து விட்டு நவீனைப்பார்த்து…..

அப்பாடா எல்லாம் செட் பண்ணியாச்சு. நாளைக்கு காலைல சீக்கிரம் எழுந்து சுவாமிக்கு நெய்வேத்தியத்திற்கு கேசரி செய்து பூஜைப் பண்ணனும். அதுக்கப்புறம் என்னோட ரெகுலர் சமையலைத் தொடங்கனும்.

அதெல்லாம் ஓகே நாளைக்கு ஈவ்னிங் நாம ரெண்டு பேரும் என்னோட ஒன்னுவிட்ட சித்தி இங்க இருக்கா அவா ஆத்துக்கு டின்னருக்கு போகணும் சரியா

ஓ இங்கேயும் நம்ம சொந்த காரா இருக்காளா. சூப்பர். ஓ எஸ் போயிட்டு வரலாம்

நவீன்  போட்டதோ மூன்று முடிச்சு

அவன் பெற்றோர் போட்டதோ பல முடிச்சு

இன்று அதில் அவிழ்ந்தது ஒரு முடிச்சு

பிரேஸ்லட் என்னும் பொய் முடிச்சு…

நம்ம மிருதுளாவும் நவீனும் தனிக்குடித்தனம் தொடங்கிய இரண்டே நாளில் பர்வதம் ஈஸ்வரன் போட்ட முடிச்சுகளில் …பிரேஸ்லட் எனும் முதல் முடிச்சு அவிழ்ந்து இருவருக்கும் உண்மையை விளங்கச்செய்தது. இன்னும் எத்தனை முடிச்சுகள் வரிசையாக நம்ம மிருதுளா நவீன் மனம்விட்டுப் பேச ஆரம்பித்தால் அவிழப்போகிறதென்பதை வரும் நாட்களில் படித்து தெரிந்துக்கொள்வோம்.

தொடரும்……