சில அறைகள் வலிக்காது…அவை விழிக்க வைக்கும்!

வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ராகவனின் மகன் ராமு, வணிகம் மற்றும் மேலாண்மை படிப்பை முடித்து, பெரிய தொழில் நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் பணியாற்றி வந்தான்.

ராமுவின் கடின உழைப்பை அறிந்த ராகவன், தனியாக ஒரு தொழிலும் தொடங்கும் படி கூற அதற்கு ராமு…அது சம்பந்தமான படிப்பு படித்த தன்னை விட அப்பாவுக்கு என்ன தெரிந்துவிட போகிறது என்று அவரின் சொல்லை மதிக்காமல் அலட்சியம் செய்தான்.

ஒரு நாள் ராமு வேலை பார்த்து வந்த நிறுவனம் சில சிக்கல்களால் மூடப்பட்டது. செய்வதறியாது மனக்குழப்பத்துடன் வீடு திரும்பினான்.

அப்பாவின் மகிழ்ச்சி சிரிப்பொலியாக வாசலில் காலணிகளை கழற்றி வைத்துக்  கொண்டிருந்த ராமுவுக்கு கேட்டது.

ராமு வீட்டினுள் நுழைந்ததும், தெருமுனை பெட்டிக்கடை நடேசன் ஒரு சுவீட் டப்பாவை ராமுவிடம் நீட்டி…

“எல்லாம் உங்கப்பா தயவால் நடந்தது தம்பி. அவர் போல் ஒரு சிறந்த பிசினஸ் மேன் இல்லைன்னு கூட நான் சொல்லுவேன். எங்க கடைக்கு தினமும் வந்து பிசினஸ் சம்பந்தமான பல விஷயங்களையும் நுணுக்கங்களையும் பேச்சோடு பேச்சா சொல்லி கொடுத்ததுல… வர வெள்ளிக்கிழமை என்னோட புது சூப்பர் மார்க்கெட் திறப்பு விழாவுக்கு அப்பாவை தலைமை தாங்கி திறந்து வைக்கும்படி அழைக்க வந்திருக்கேன். சுவீட் எடுத்துக்கோங்க தம்பி.”

என்று சொன்னதும்…அனுபவ அறிவில் சிறந்த ராகவனை மதிக்காத மெத்த படிப்பு படித்த ராமுவின் கன்னத்தில் பளாரென்று ஓர் அறை விழுந்தது போல் இருந்தது.


♥️முற்றும்♥️
நா. பார்வதி

🎬 சினிமா, நாடகம், தொலைக்காட்சி போன்ற சக்திவாய்ந்த ஊடகங்கள்
கருத்துகளை விதைக்கவும், மாற்றங்களை உருவாக்கவும் வல்லமை கொண்டவை. அதே நேரம், கருத்து சொல்லுகிறோம் என்ற பெயரில்
❌ தவறான எண்ணங்கள் அல்லது 👶 குழந்தைகள் மற்றும் 👥 சமூகத்தைப் பாதிக்கக்கூடிய விஷயங்கள்
வெளிப்படுத்தப்படும் போது,
அவற்றை “போட்டி” என்ற பெயரில் 🌟 புகழ்ந்து, பாராட்டி 🏆, பரிசளித்து 🎁 ஊக்குவிப்பது நம்மை ஒரு கணம் சிந்திக்க வைக்க வேண்டிய விஷயமாகிறது.

இந்த உண்மையைச் சொன்னால்,
“பூமர்” 🌿,
“பழைய பஞ்சாங்கம்” 📜,
“பாராட்டத் மனமில்லாதவர்” 😐, “முற்போக்கு சிந்தனை இல்லாதவர்” 🤔
என்ற முத்திரைகள் உடனே குத்தப்படும்.

ஆனால் முகஸ்துதிக்காக 😏
“சோ ஸ்வீட்” 🍬, “க்யூட்” 😍,
“வாவ்” 😲, “ஆஹா” 😄, “ஓஹோ” 😮 என்று புகழ்ந்து தள்ளிவிட்டு,
பின்னால் சென்று
“இதெல்லாம் ஒரு சினிமாவா / நாடகமா / நிகழ்ச்சியா / போட்டியா!” 🎭
“இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ?” 🤷‍♂️
என்று சொல்லிக்கொள்பவர்களே,
இந்த நவநாகரீக சமுதாயத்தில் அறிவுஜீவிகள் 🧠 மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்களாக💡 கருதப்படுகின்றனர்.

🔥 “தீயது தீ போலப் பரவும்.
நல்லதும் நீர் போலப் பரவ வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது” 🌊

எனவே, இந்த சமூக ஊடகங்கள் நிறைந்த காலத்தில், நாம் எதைத் தேர்ந்தெடுக்கிறோம், எப்படி வெளிப்படுத்துகிறோம்,
எதைப் பரப்புகிறோம் என்பதில் நமக்குள்ள பொறுப்பை 📌
சிந்தித்து செயல்படுத்த வேண்டிய அவசியம் அத்தகைய சக்திவாய்ந்த ஊடகங்களை சேர்ந்த அனைவருக்கும் இருத்தல் வேண்டும்.

திரை 🎬 அல்லது மேடையை 🎭 விட,
வாழ்க்கையில் மேலே குறிப்பிட்டுள்ள அறிவுஜீவிகள் 🧠 மற்றும் முற்போக்குவாதிகளின் 💡 நடிப்புதான்
உண்மையில் அபாரம் 👏👏👏

தவறான கருத்துக்கு மன்னனே பரிசளிக்க இருந்த போதும்,
“குற்றம் குற்றமே” ⚖️ என்று
சிவபெருமானிடமே துணிந்து சொன்ன
நக்கீரர் 🏛️ இருந்த மண்ணில்…
இன்று
அத்தகைய நக்கீரர்கள் மறைந்துவிட்டனரா⁉️,
இல்லை
உண்மையைச் சொன்னால் சுட்டுப் பொசுக்கி விடும் 🔥
நெற்றிக்கண்கள் 👀👀👀👀
அதிகமாகிவிட்டனவா⁉️

💭 சிந்தனை செய் மனமே…

ஏதேதோ படங்கள் வெப் சீரிஸ்களை பற்றி எல்லாம் பரபரப்பான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது. ஆனால் உண்மையில், நல்ல படங்களும் வெப் சீரிஸ்களும் பற்றி ஏன் அதிகமாக சமூக வலைத்தளங்களில் எவ்வித பதிவுகளும் வலம் வருவதில்லை! என்ற கேள்வி என்னுள் எழுந்தது. ஒரு வேளை என் கண்ணில் அப்பேற்பட்ட கருத்துகளோ பதிவுகளோ தென்படவில்லையோ என்னவோ! என்ற பதிலும் தோன்றியது. அதன் விளைவு தான் இந்த பதிவு. என்னைப் போல் பதிவுகளை தவறவிட்டவர்களுக்காக (நல்ல வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களை பற்றிய பதிவு போட தவறியவர்களுக்காகவும்)  இதோ  “ராக்கெட் பாய்ஸ்” வெப் சீரிஸ் பற்றிய எனது கருத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Sony liv- இல் 2022 (சீசன் 1) மற்றும் 2023 (சீசன் 2) ஆம் ஆண்டுகளில் வெளிவந்த “ராக்கெட் பாய்ஸ்” என்னும் வெப் சீரிஸ் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படைப்பாகும். நமது இந்திய நடிகர் நடிகைகள் மற்றும் விளையாட்டு வீரர்களை பற்றிய படங்களை எல்லாம் விட… நம் நாட்டுக்கான முன்னேற்ற பாதையை வழிவகுத்து நம்மையும் நம் நாட்டையும் தலைநிமிர்ந்து நிற்க வைத்த நமது அறிவியலாளர்கள் /விஞ்ஞானிகள் பற்றிய முப்பது/ நாற்பது ஆண்டின் வரலாற்று சம்பவங்களை மிகவும் நேர்த்தியாக  விறுவிறுப்பு குறையாது இனிமையான (ரசிக்கும் வண்ணம்) பின்னணி இசையோடு கதைதயை நகர்த்தி நம்மை நம் இருக்கையோடு கட்டிப்போடுகின்றனர் நமது “ராக்கெட் பாய்ஸ்”.

இது விண்வெளி நாயகர்களின் வெறும் வரலாற்று கதை மட்டுமல்ல.  அறிவியல் தகவல்கள், அன்றைய அரசியல் தகவல்கள், எதிரி நாடுகளின் சூழ்ச்சிகள், அதற்கு பலியான நம்மவர்கள் என்று இந்த வெப் சீரிஸ் ஒரு தகவல் பெட்டகமாகவும் திகழ்கிறது.

அறிவால் ஒளிர்ந்த மகத்தான சிந்தனையாளர்களான மதிப்பிற்குரிய திரு. சி.வி. ராமன், திரு. ஹோமி ஜே. பாபா, திரு. விக்ரம் சாராபாய், திரு. சாந்தி ஸ்வரூப் பட்நாகர் மற்றும் நமது டாக்டர் திரு. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோர் தங்கள் வாழ்நாளை முழுவதுமாக அறிவியல் என்ற தங்கள் ஒரே விருப்பத் துறையின் மூலம் நாட்டை கட்டியெழுப்ப அர்ப்பணித்ததற்கான ஒரு பொருத்தமான மரியாதை அஞ்சலியாகவும் இந்த தொடர் அமைந்துள்ளது.

தங்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும், அது நட்பை ஒருபோதும் இழக்கச் செய்திடாது என்பதற்கு எடுத்துக்காட்டாகவும், சிறந்த நட்புக்கு இலக்கணமாகவும் திகழ்ந்த திரு. ஹாமி பாபா மற்றும் திரு. சாராபாய் நண்பர்களின் பாதை வெவ்வேறாக இருந்தாலும் பயணம் ஒன்றாகவே இருந்துள்ளது.

என்ன தான் இருவரும் வசதியான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்றாலும்,  லண்டன் கேம்ப்ரிட்ஜில் படித்தவர்கள் என்றாலும் இருவரின் கனவும் மெய்ப்பட, அவர்கள் பல தடைகளை எதிர்கொண்டும், பல ஆண்டுகள் பொறுமையுடன் காத்திருக்கவும் செய்துள்ளனர். அவரவர் பாதையில் பயணித்த போது எழுந்த தடைகளை இருவரும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருந்து அவற்றை கடந்து வந்ததை நாம் இந்த படைப்பின் மூலம் அறிய வரும் போது நம்மையும் அறியாமல் அவர்கள் நட்புக்கு நம் மனம் மணிமகுடம் சூட்டி மகிழ்கிறது.

பல தோல்விகளை சந்தித்தாலும் மனம் தளராமல் நமது நாட்டுக்காக மீண்டும் முயற்சித்த நமது அன்றைய அறிவியலாளர்கள்/அரசியல்வாதிகள்/ விஞ்ஞானிகளின் உடல் மற்றும் மனப்போராட்டங்களை வெளிப்படுத்தும் உணர்ச்சிப்பிரவாகம்.

ஒரு நல்ல நாடு/நல்ல வீடு எதுவானாலும் நன்றாக வளர்ந்து வருமே என்றால் அதை வீழ்த்த எதிரிகள் வலம் வரத்தான் செய்வார்கள். அவ்வாறு அப்போது (இப்போதும்) வலம் வந்த நம் அண்டை நாட்டு எதிரிகளையும் அமெரிக்க நாட்டையும் எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதையும், அதில் எப்படி வெற்றிக் கண்டார்கள் என்பதையும் பார்வையாளர்களான நம்மை நகத்தை கடித்துக்கொண்டு நாற்காலியின் முன் வந்து அமர்ந்து பார்க்கும் வண்ணம் காட்சிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

எட்டப்பன் ஒருவனால் உயிரிழக்கிறார் திரு. ஹோமி. அவர் உயிரிழந்தாலும் அவர் விதைத்தது அறுவடை செய்யப்படுகிறது. இந்தியா பலம் பொருந்திய நாடாக இன்றும் வலம் வருகிறது.
அதற்கு காரணமான நம் அறிவியலாளர்களையும் விஞ்ஞானிகளையும் என்றென்றும் கருத்தில் கொள்வோம். அவர்களையும் போற்றி வணங்குவோம்.

கட்டபொம்மன் வம்சாவளியினர் இருந்து வருவதை போலவே எட்டப்பனின் வம்சாவளியினரும் இன்னமும் இருந்து வருகிறார்கள்.

நம் நாட்டை பாதுகாப்பது ராணுவ வீரர்களின் கடமை மட்டுமல்ல அது இந்திய நாட்டின் பிரஜைகளான நமதும் ஆகும். கடமை உணர்ந்து செயல்படுவோம்.

நமது சுதந்திரத்திற்காக நம் முன்னோர்கள் சிந்திய வியர்வையும் உதிரமும் விலைமதிப்பில்லா பொக்கிஷம் என்பதை நாமும் நன்குணர்ந்து நமது சந்ததியினருக்கும் உணர்த்துவோம். நம் நாட்டை உயர்த்துவோம்.

முதல் அணுக்கரு உலை (nuclear reactor), முதல் ராக்கெட், முதல் தூர்தர்ஷன் நிகழ்ச்சி, முதல் ஆட்டம் பாம் என்ற நிகழ்வுகளை ஒன்றன் பின் ஒன்றாக கோர்த்து பின்னி அழகான மாலையாக நமது “ராக்கெட் பாய்ஸ்” க்கு சமர்ப்பித்துள்ள படக்குழுவினர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதில் நடித்துள்ள அனைத்து நடிகர் நடிகைகளும் அவரவர் கதாப்பத்திரமாகவே வாழ்ந்துள்ளனர் என்று தான் சொல்ல தோன்றுகிறது.

ஒளிப்பதிவாளரின் கைவண்ணம் ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலிக்கிறது.

அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

“ராக்கெட் பாய்ஸ்” – விண்வெளியை சென்றடைந்து விட்டாலும்,  வானிலும் நம் மனதிலும் இன்றும் ஒளிரும் விண்மீன்கள்.

நன்றி 🙏

நா. பார்வதி

Chapter 1: The Proud King Kaushika

In the ancient kingdom of Kanyakubja, there ruled a mighty monarch named Kaushika. He was tall, broad-shouldered, and carried himself with the pride of countless victories. His sword was feared across neighbouring lands, and his armies obeyed his word without question. To Kaushika, there was no power greater than the might of a king.

One day, while hunting in the forest, Kaushika and his retinue stumbled upon the quiet hermitage of the sage Vashishta. The air there was different—calm, serene, untouched by the noise of kingdoms and wars. The sage came forward with folded hands and a gentle smile, welcoming the king and his warriors as honoured guests.

Kaushika was curious. How could a hermit, with nothing but a simple hut and staff, offer hospitality to an entire army? Yet Vashishta did so with ease. Soon, Kaushika and his men were feasting as though in the halls of a palace, the food and drink appearing in endless supply.

The source of this miracle was revealed: Nandini, the divine cow, daughter of Kamadhenu. She could grant anything her master desired.

Kaushika’s eyes gleamed with desire.

Such a treasure is wasted in a hermitage. Give her to me, O Sage,” he demanded.

With her, I can feed my armies and expand my kingdom without limit.”

But Vashishta shook his head.

“She is not mine to give. Nandini belongs to this ashram, and here she shall stay.”

The refusal stung Kaushika’s pride. No one denied a king. And thus began the rivalry that would change the course of Kaushika’s life forever.

Chapter 2: The Humiliation at Vashishta’s Ashram

Kaushika’s desire for Nandini grew fierce. He stepped forward, his voice commanding,

“This cow is not fit for a hermit’s hut. She belongs in the royal stables of a king. Give her to me, Vashishta.”

But the sage stood calm and immovable. “She is not mine to give. Nandini belongs to this ashram. Her purpose is to serve dharma, not ambition.”

Kaushika’s pride boiled into anger. He ordered his soldiers to seize the cow. But Nandini, sensing her master’s distress, stamped her hooves and let out a cry that echoed across the heavens. From her breath, her tail, her body, there sprang forth a vast army of phantom warriors, armed and fierce, thundering upon Kaushika’s men.

The clash was swift. Kaushika’s proud soldiers, though seasoned in war, fell like dry leaves before the storm. The king himself stood helpless, forced to watch his mighty force crumble before the will of a cow and the calm strength of a sage.

Defeated, humiliated, and stripped of his pride, Kaushika left the ashram with his head bowed. That day he realized that spiritual power was greater than worldly might.

Chapter 3: The King Becomes an Ascetic

Defeat at Vashishta’s ashram haunted Kaushika’s heart. The echo of phantom warriors and the calm refusal of the sage burned deeper than any wound from battle. What worth was a crown if it could be humbled by a hermit’s cow?

One night, seated in his palace, Kaushika gazed at the jewelled crown resting on his throne. Its weight felt heavy, not with power, but with emptiness. He removed it, along with his sword, and laid them aside.

This throne binds me,” he thought, “but wisdom can free me.”

Resolute, he stepped out of his palace in the garb of a seeker, clad in simple robes, his only possession a staff. With each step away from the grandeur of his court, he walked closer to his true destiny.

From that day, Kaushika was no longer a king. He became Vishvamitra…Friend of the Universe—an ascetic whose fire of Tapasya (penance) would shake the heavens themselves.

Chapter 4: Menaka and Shakuntala

As the years passed, Vishvamitra’s penance blazed like fire. The gods grew uneasy. His power, born from silence and discipline, threatened even the heavens. Indra, king of the gods, resolved to break his meditation.

He summoned the celestial dancer Menaka, the most graceful among the apsaras.

“Distract him,” Indra commanded.

“Draw him away from his penance.”

Menaka descended to the forest where Vishvamitra meditated beneath ancient trees. The river rippled nearby, catching the glimmer of dawn. She danced with elegance, her anklets chiming, her beauty radiant as moonlight.

Vishvamitra opened his eyes. For a moment, his still heart stirred. Desire, long buried, rose like a tide. Menaka’s laughter was soft, her eyes inviting. The sage, though mighty in resolve, faltered. He lived with her, and from their union was born a daughter Shakuntala, destined to

be the mother of Bharata, after whom the land of India would one day be named.

But when Vishvamitra realized that his penance had been broken by design, sorrow and shame consumed him. His love for Menaka faded like mist. With iron will, he left her behind and returned to his path of austerity, fiercer than before.

Chapter 5: Wonders of Vishvamitra

Vishvamitra’s Tapasya deepened until even the gods trembled. His power, born from silence and sacrifice, rippled through the worlds. The once-proud king had become a sage whose could command the elements themselves.

When King Trishanku sought to ascend to heaven in his mortal body, the gods denied him. But Vishvamitra, moved by his plea, raised his hands in fiery determination. With sheer force of will, he created a new heaven, placing

Trishanku there forever suspended between earth and sky. The gods themselves watched in awe and fear.

It was also Vishvamitra who revealed the sacred Gayatri Mantra, a hymn to the Sun, destined to guide seekers of truth for millennia. Its syllables carried the radiance of divine light, a gift from the sage’s penance to humanity.

His meditation also brought him mastery over celestial weapons. Agni’s flames, Indra’s thunderbolt, Varuna’s waters all obeyed his command. Vishvamitra was no longer merely a man; he was a sage whose power rivalled the gods themselves.

Yet, for all his greatness, one thing still eluded him: the recognition of Brahmarishi, the highest title of a sage. And for that, he would need to conquer not heaven, nor earth but his own pride.

Chapter 6: The Final Test

Despite his great powers and wondrous deeds, Vishvamitra’s heart still yearned for one thing…the title of Brahmarishi, a recognition only Sage Vashishta could bestow. Yet his pride and temper kept him from attaining it.

Years passed into centuries. Vishvamitra’s hair grew white, his body frail, but his will never wavered. He faced trials of anger, humiliation, and temptation, each one stripping away his arrogance. At last, his spirit was no longer bound by ego.

One day, he came before Vashishta…not as a rival, not as a king, but as a humble seeker. Bowing low, he placed his forehead upon the ground. His voice trembled:

“I am but dust at your feet. Bless me, O Sage.”

Vashishta’s eyes softened. He saw not the proud king who once demanded Nandini, nor the fiery ascetic who shook the heavens, but a soul purified through struggle. Lifting his hand in blessing, Vashishta declared:

“You are no longer Kaushika, no longer merely Vishvamitra. Today, you are a Brahmarishi.”

In that moment, the forest filled with divine light. The heavens rejoiced. The warrior-king who once sought to conquer the world had finally conquered himself.

Chapter 7: Teacher of Princes

When at last he was recognized as a Brahmarishi, Vishvamitra turned his strength to guiding the next generation. His role was no longer to conquer, but to teach.

At the court of King Dasharatha of Ayodhya, Vishvamitra requested that the young princes Rama and Lakshmana accompany him to the forest. The king hesitated, fearing for their safety, but the sage assured him:

“In their youth lies great destiny. I will guide them, and they shall protect dharma.”

In the forest, Vishvamitra became their mentor. He taught them the secrets of divine weapons—the mantras that could summon arrows of fire, water, wind, and light. Under his guidance, Rama and Lakshmana grew into warriors whose strength was tempered with wisdom.

It was during these journeys that Rama first faced and defeated the demons who threatened Vedic rituals, laying the foundation for his greater battles ahead. Through Vishvamitra’s training, the princes learned not only the art of war but also the path of righteousness.

Thus, the sage who began as a king seeking power ended his journey as a teacher, shaping the future of an empire and preparing the guardians of dharma.

தி வைல்டு ரோபோட் (The Wild Robot), திரைப்படம் 2024 ஆம் ஆண்டு ட்ரீம் வர்க்ஸ் தயாரிப்பில் வெளியான ஒரு அற்புதமான அனிமேஷன் படைப்பாகும்‌. இத்திரைப்படம் திரு. பீட்டர் ப்ரௌன் என்பவர் எழுதிய கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளுக்கான படமென்று பலர் கூறி வருகின்றனர். ஆனால் இது அனைத்து வயதினருக்குமான திரைப்படமாகும். ஏனெனில் அது கற்றுத் தரும் பாடம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பொருந்தும்.

மனிதர்களுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்ட ரோபோட்களில் ஒன்று தான் ரோஸ் (Rozzum 7134), கதையின் நாயகி. ரோபோட்களை ஆர்டர் செய்தவருக்கு, அவைகளை கப்பலில் ஏற்றி அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் புயலில் சிக்கிய அந்த கப்பல் கவிழ்ந்து கடலில் மூழ்குகிறது. அதில் இருந்த நம்ம நாயகி ரோஸ் (Rozzum 7134) மட்டுமே பிழைத்து நீரில் மிதந்து ஆள் நடமாட்டம் இல்லாத ஓர் தீவை சென்றடைகிறாள். அந்த ரோபோட்டை அத்தீவில் இருந்த விலங்குகள் விசித்திரமாக பார்த்து, சுற்றி வந்து, அதன் மேல் ஏறி நின்று என்று விலங்குகளுக்கே உரித்தான சேஷ்டைகளை செய்து கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு பொத்தானை அழுத்த நம்ம நாயகி ரோஸ் விழித்துக் கொண்டு செயல்பட ஆரம்பிக்கும் அந்த நொடி முதல் படத்தின் இறுதி காட்சி வரை பார்வையாளர்களின் மனதை கவர்ந்திழுத்து தன்னுடனே பயணிக்க செய்திருப்பது சிறப்பு.  

மக்களிடம் மட்டுமே பேச தெரிந்த ரோஸ் விலங்குகளுடன் பேசி பழக தன்னை தானே அப்டேட் செய்து கொள்வதும், வனவிலங்குகளின் சம்பாஷணைகளை மொழிபெயர்ப்பு செய்து புரிந்துக் கொள்வதும் என பலவற்றை கற்றுக் கொண்டு அங்கிருக்கும் மிருகங்களுக்கு தன் சேவை தேவையில்லை என்பதை புரிந்துகொண்டதும்… தன்னை ஏற்றுமதி செய்தவரிடமே திரும்பி சென்றுவிட முடிவெடுத்து அவளை மீட்பதற்கான ட்ரான்ஸ்மிட்டரை செயல்படுத்த முயலும் போது பலத்த இடியுடன் கூடிய மழை பெய்ததில் மின்னல் தாக்கி ட்ரான்ஸ்மிட்டர் பழுதாகிறது. வேறு வழியின்றி மீண்டும் மிருகங்களிடம் செல்ல, அவளை கண்டதும் அனைத்து விலங்குகளும் பூதமென்றெண்ணி தெறித்து ஓட, செய்வதறியாது மழையில் நனைந்தபடி நின்றிருந்தவளின் முன்னே ஏதோ பொத்தென வந்து விழுகிறது. அது என்னவென்று அதன் அருகே சென்று பார்க்கிறாள். அது ஒரு பறவையின் கூடு. அதில், இறந்து போன ஒரு பறவையும் ஒரு முட்டையும் இருக்கிறது. அந்த பறவையின் முட்டையை தன் கையில் எடுத்து பார்க்கும் ரோஸ் அக்கணம் முதல் அந்த முட்டையை பாதுகாப்பதையும் அதை வளர்த்து ஆளாக்குவதையும் தனது கடமையாக எடுத்துக் கொண்டு அதற்கான அனைத்து திட்டங்களையும் வகுத்து செயலில் இறங்குகிறாள். அன்று முதல் ரோஸ் (Rozzum 7134) ஒரு இயந்திர தாயாக மாறி அந்த முட்டைக்குள் இருந்து வெளிவரும் வாத்தை இயக்கத் துவங்குகிறாள்.

ரோஸ் எவ்வாறு அந்த வாத்தை வளர்க்கிறாள்? அதற்கு வேறு ஏதாவது விலங்கு உதவுகிறதா? அந்த தீவில் இருந்த மற்ற மிருகங்கள் எப்படி ரோஸுடன் பழகுகின்றன. ரோஸ் (Rozzum 7134) வளர்க்கும் வாத்து தன் இயந்திர தாய் போலவே இயந்திரமாகிறதா? அதன் குடும்பத்துடன் சேர்க்கப்படுகிறாதா? குடும்பத்தோடு சேர்கிறதா? அதன் குடும்பத்தாரால் அது சேர்த்துக் கொள்ளப்படுகிறதா? போன்ற கேள்விகளுக்கான விடையாக நம் கண் முன்னே திரையில் விரியும் காட்சிகள் ஒவ்வொன்றும் நம்மை பிரம்மிக்க வைக்கிறது.

ரோஸ் (Rozzum 7134) அந்த தீவில் சந்திக்கும் சவால்கள், அதை அவள் எதிர்கொள்ளும் விதங்கள் பற்றியும் மேலும் அவள் அந்த தீவை விட்டு வெளியேறுகிறாளா இல்லை அந்த தீவையே தன் வீடாக மாற்றிக்கொள்கிறாளா என்பதை எல்லாம் திரைப்படத்தை பார்த்து ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மித்து மூழ்கி, யான் பெற்ற இன்பம் என் சமூக ஊடக நட்பூக்களும் பெற வேண்டும்.

கப்பல் கவிழ்ந்து கரை சேர்ந்தது
காட்டு விலங்குகள் நிறைந்திருந்தது
இடிப்பட்டு அடிப்பட்டு உணர்கிறது
இயந்திரத்துக்கும் இதயம் இருப்பது
பறவை ஒன்றை கண்டெடுக்கிறது
பற்று அதன் மேல் வைக்கிறது
கதையின் கரு பழையது
கதையை அறிவியல் புனைவாக அளித்திருப்பது புதியது
மனிதனின் சேவைக்காக உருவாக்கப்பட்ட இயந்திரம்
மனிதனை காட்டிலும் மனிதநேயத்தை உணர்விக்கும் மந்திரம்
இந்த திரைப்படம் – தி வைல்டு ரோபோட்❤️













சீசன் 1&2

சுழல் – தி வோர்டெக்ஸ் சீசன் 1 பார்வையாளர்களை சுழற்றியது போலவே தற்போது வெளிவந்துள்ள சுழல் – தி வோர்டெக்ஸ் சீசன் 2 பார்வையாளர்களை சுழற்றுவது நிச்சயம்.

முதல் சீசனான “சுழல்” பாலியல் வன்கொடுமைகள் பெரும்பாலும் நமக்கு நெருக்கமானவர்களால் தான் நடைப்பெறும் என்றும், அதனால் உறவினர்கள் தானே என்று குழந்தைகளை அவர்களிடம் அலட்சியமாக விட்டுவிட வேண்டாம் என்றும், எப்போதும் அவர்கள் மீது ஒரு கண் இருக்க வேண்டும் என்றும்,  அவ்வாறு இல்லாததால் நேரும் ஒரு பெண்ணின் இறப்பும் அதற்காக அவளைப் போலவே பாதித்த மற்றொரு பெண் வழங்கும் தண்டனையையும் ஒரு இன்வெஸ்டிகேஷன் சீரிஸாக மட்டுமின்றி அங்காளியின் மயானக் கொள்ளை பூஜை மற்றும் திருவிழாவையும் தெய்வ வழிபாட்டையும் இணைத்து மிக அழகாக கதையை சுவாரஸ்யம் குறையாது காட்சியாக்கப்பட்டிருந்த விதம் எட்டு எபிசோடுகளையும் பார்த்தாக வேண்டுமென்ற எண்ணத்தை பார்வையாளர்களுக்குள் எழச்செய்தது.

அதை போலவே…சொல்லப் போனால் அதைவிட இன்னும் விறுவிறுப்பாக யார்! யார்! என்றும் யாராக இருக்கக்கூடும் என்றும் பார்வையாளர்களை சக்கரை என்கிற இன்ஸ்பெக்டர் சக்ரவர்த்தியுடன் நம்மையும் தேட வைத்திருப்பது சிறப்பு. ஒரு கட்டத்தில் இவர் தான் என்று நாம் எண்ணிக் கொண்டு பார்த்தால் அவர் இல்லை என்று பதில் சொல்லும் அடுத்து வரும் எபிசோட். சரி கதை  எதைப் பற்றியது? நெறி தவறுதல் பற்றியதோ என்று நாம் நினைத்துப் பார்த்தோமேயானால் அடுத்த எபிசோடில் சைல்டு அப்யூஸ் பற்றியது என்று நம்மை சொல்ல வைக்கும். ஆனால் அதுக்கும் அடுத்த எபிசோட்  நம் எண்ணம் தவறு என்று கூறுவது போல் வேறொரு விஷயம் நம் கண்முன் காட்சியாக விரிந்து, அப்போ நாம நெனச்சது இல்லையா! என்று நம்மை நாமே கேட்க வைப்பதோடு என்னவாக இருக்கும் என்று யோசிக்கவும் வைக்கிறது. இறுதியில் கதையின் புதிர்களுக்கான விடைகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

சுழல் ஒன்றில் போலீசாரிடம் சரணடைந்து ஜெயிலில் இருக்கும் நந்தினியின் வழக்கில் இருந்து ஆரம்பிக்கிறது சுழல் 2.  அவர் விடுவிக்கப் படுவாரா இல்லையா என்பது ஒரு பக்கம் விறுவிறுப்பை ஏற்றும் அதே நேரம் அவரின் வழக்கை எடுத்து நடத்தும் வழக்கறிஞர் இறந்து விடுகிறார். அவரின் இறப்பு தற்கொலையா இல்லை கொலையா என்று தொடர்கிறது இரண்டாம் பாகம். மேலும் அவரை கொன்றதாக கூறி எட்டு பெண்கள் போலீசாரிடம் சரணடைகின்றனர். அவர்கள் யார்? ஏன் கொலையா! தற்கொலையா! என்ற ஒரு முடிவுக்கு வராத நிலையில் எட்டு பெண்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க வேண்டும்? முதல் பாகத்தில் வரும் நந்தினி கதாப்பாத்திரத்திற்கும் இரண்டாம் பாகத்தில் வரும் இந்த எட்டு பெண்களுக்கும் தொடர்பு இருக்கிறதா இல்லையா? இதில் யார் தான் வில்லன்?
என்று நாம் கேட்கும் அளவிற்கு மிகவும் நேர்த்தியாக பலரை நம் சந்தேக லிஸ்ட்டில் இடம்பெறச் செய்திருக்கும் கதாசிரியர்களுக்கும் இயக்குனர்களுக்கும் சபாஷ் சொல்லியே ஆக வேண்டும்.

சமூக அக்கரை கொண்ட கதைக்களத்தில் இந்த சீசனிலும் அஷ்ட காளி திருவிழா என்ற தெய்வ வழிபாட்டை கதையோடு இணைத்திருக்கும் விதமும், அவ்வப்போது விழா மூலம் பார்வையாளர்களுக்கு கதைக்கான குறிப்பு அளித்திருக்கும் பாணியும் அருமை.

இந்த வெப் சீரிஸின் பின்னணி இசையையும், பாடல்களையும் மிகவும் கச்சிதமாக பொருந்தச் செய்திருக்கும் இசையமைப்பாளரை பாராட்டியே ஆக வேண்டும். சில இடங்களில் இசை கதையாக ஒலிக்கிறது. டைட்டில் பாடலில் தொடங்கி பல இடங்களில் மிரட்டவும் செய்கிறது.

நடிகர்கள் தேர்வும் அவர்கள் அனைவரின் நடிப்பும் அபாரம். இரண்டாம் பாகத்தில் வரும் திரு லால் அவர்கள் மட்டும் எடுபடவில்லை என்று தோன்ற வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் பல இடங்களில் அவரின் வசன உச்சரிப்பு சரியில்லாததால் மீண்டும் ரீவைண்ட் செய்து பார்க்க வேண்டி இருக்கும். அது மட்டும் ஏதோ ஒரு எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வேகத்தடை போடுவது போல அமைந்துவிட்டது. தமிழில் நடிகர்களுக்கா பஞ்சம்🤔 நடிகர் திரு. பசுபதி அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

சமூக அக்கறை கொண்ட படமாக இருந்தாலும் எவ்வித தேவையற்ற முழக்கங்கள்/பிரசங்கங்கள் இன்றி, நீண்ட வீராவேசமான வசனங்கள் இன்றி, அறிவுரைகள் ஏதும் இன்றி,  நடப்பவைகளையோ அல்லது நடந்தவைகளையோ  பின்னணியில் விவரிக்கும் (இடைஞ்சலான) குரல் ஏதுமின்றி கதையோடு கதையாகவே பார்வையாளர்கள் மனதில் கடத்தி இருப்பது, ஓ போட வைக்கிறது.

கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் நாயகன் அந்தஸ்து கொடுத்தால் வெற்றி நிச்சயம் என்பதை இந்த வெப் சீரிஸ் உணர்த்தியுள்ளது.

சுழல் – தி வோர்டெக்ஸ் சீசன் 2 –
சுவாரஸ்யமான கதையால் சுழன்று பார்வையாளர்கள் மனதை வென்று
தன்னுள் இழுத்து செல்லும் சுழல்
சூப்பர்.

2024 ஆம் ஆண்டு வெளி வந்த 1000 பேபிஸ் (ஆயிரம் குழந்தைகள்) என்ற மலையாள வெப் சீரிஸின் சீசன் ஒன்று பற்றிய எனது கருத்துக்களை பகிர்ந்துள்ளேன். பிடித்திருந்தால் இந்த வெப் சீரிசை பார்க்கவும்.

முதல் மூன்று எபிசோட்களில் கதை எதை நோக்கி நகர்கிறது? அவற்றில் வரும் மனநிலை சரியில்லாத  மூதாட்டி சுவற்றில் என்ன எழுதுகிறார்? ஏன் எழுதுகிறார்? அந்த மூதாட்டியிடம் தான் கதை உள்ளது என்பது நமக்கு புரிந்தாலும்… அது என்ன கதை? அவருக்கு ஏன் குழந்தைகள் அழுகுரல் கேட்கிறது? அவர் உண்மையில் மனநிலை பாதிக்கப்பட்டவர் தானா? இல்லை அவ்வாறு நடிக்கிறாரா? போன்ற பல கேள்விகளை பார்வையாளர்கள் மனதில் எழ வைத்துள்ள கதாசிரியர்  நான்காவது எபிசோட் முதல் அதற்கான விடைகளை அந்த மூதாட்டி  தன் மகனுக்கு கறி விருந்து அளித்து அவன் உண்பதை பார்த்து ரசித்து விட்டு விளக்குகிறார்.

அதை கேட்ட அவர் மகன் சாப்பாட்டு தட்டை தட்டி விட்டு ஓடி அந்த மூதாட்டி அறைக்குள் சென்று சுவற்றில் அவள் வரிசையாக ஏதோ எழுதி வைத்திருந்ததில் வேக வேகமாக எதையோ தேடுகிறான். அப்போது டைனிங் அறையில் அமர்ந்திருந்த மூதாட்டி பலமாக சிரிக்கிறாள். அவளின் சிரிப்பொலி அவள் மகனை அவளிடம் அழைத்து வருகிறது. அங்கு வந்த மகன் அவளை ஓங்கி அடிக்கிறான். அவள் நாற்காலியில் அமர்ந்தபடியே தரையில் மல்லாந்து விழுகிறாள். அப்போதும் சிரிப்பதை அவள் நிறுத்தவில்லை. அவளின் தலைக்கு பின்னால் இருந்து ரத்தம் வழிந்தோடுகிறது.

அவள் மருத்துவமனையில் மருத்துவர் முன் தலையில் கட்டுடன் படுத்திருக்கிறாள். கண்களை மெல்ல திறந்து பார்த்தவள் தனக்கு சர்க்கிள் இன்ஸ்பெக்ட்டரையும் ஜூடிசியரியையும் காண வேண்டும் என்று கூறுகிறாள். பின் அங்கிருந்த ஒரு நர்சிடம் அவளின் பக்கத்து வீட்டு காரர்கள் பெயர்களை சொல்லி அவர்களை வரவழைக்கிறாள்.

சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மருத்துவமனை வந்து மூதாட்டியை சந்திக்கிறார். அப்போது அவள் ஒரு கவரை அவர் கையில் கொடுக்கிறாள். மற்றொன்றை ஜூடிசியரியின் ஆளிடம் கொடுக்கிறாள். அந்த கவரை முதலில் பிரித்து படிக்கும் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அதிர்ந்து போகிறார். உடனே அந்த ஏரியா எஸ்.பியிடம் விவரங்களை தெரிவித்து அந்த லெட்டரை கொடுக்கிறார். அதிர்ச்சியான எஸ்.பி அந்த லெட்டர் ஜூடிசியரியிடம் போகாது தடுக்க வேண்டுமென்று வேகமாக நீதிபதி அலுவலகத்துக்கு இருவரும் செல்கிறார்கள். ஆனால் அதற்குள் அந்த லெட்டர் அந்த நீதிபதியின் கையில் சென்றடைகிறது. வேறு வழியின்றி சர்க்கிள் இன்ஸ்பெக்ட்டரும் எஸ்.பியும் நீதிபதியிடம் கடிதத்தில் இருந்த விவரங்களை கூறுகின்றனர். நீதிபதிக்கு எழுதப்பட்டிருந்த கடிதத்திலும் அதே விவரங்கள் இருக்க, இருபது வருடங்களுக்கு முன் நடந்த அந்த க்ரைமின் விவரங்களை இப்போது வெளியிட்டால் அது சமூகத்தில் பெரியளவில் பலரின் வாழ்க்கையை பாதிக்கும் என்றும் அதை எதிர்கொள்வது மிகவும் கடினம் என்றும் யோசித்து மூவர் மட்டுமே அறிந்த அந்த உண்மையை அப்படியே மறைத்து விடுகின்றனர்.

அப்படி என்ன அந்த கடிதத்தில் அந்த மூதாட்டி எழுதியிருக்கிறார்? என்ற யோசனையில் அடுத்த எபிசோடை பார்த்தால் அதில் ஒரு நடிகையின் கொலை விசாரணை பற்றி நகர்கிறது கதை. இதற்கும் முதல் நான்கு எபிசோடுகளுக்குமான சம்மந்தம் என்ன? என்ற கேள்விக்கான விடை, அந்த நடிகையின் கொலையை விசாரணை செய்து அதில் வெற்றி காணும் ஆஜி குரியன் என்ற போலீஸ் அதிகாரி… நடிகையின் கணவனிடமிருந்து பெறும் வாக்குமூலத்தில் முளைக்கிறது.

அதிலிருந்து அன்று வரை அதாவது கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடங்களாக மூவரால் மூடி மறைக்கப்பட்ட அந்த மூதாட்டி கடிதத்தின் விவரங்கள் நான்காவதாக ஆஜி குரியனுக்கும் தெரிய வருகிறது.

நடிகையின் கொலைக்கும் மூதாட்டியின் கடிதத்திற்கும் லிங்க் உள்ளதா? அப்படி அந்த கடிதத்தில் என்ன தான் எழுதப்பட்டிருந்தது. எப்படி ஒரு நடிகையின் கொலை விசாரணை ஆஜியை மூதாட்டி கடிதத்தின் விவரங்களுக்கு அழைத்து செல்கிறது! போன்று பல திருப்பங்களை கொண்டு மிகவும் கவனமாக பின்னப்பட்டிருக்கும் கதைக்களம் நம்மை இருந்த இடத்தில் இருந்து எழவிடாது நம்மையும் விசாரணையில் இணைந்திருக்க செய்த அரௌஸ் இர்ஃபான் மற்றும் நஜீம் கோயா ஆகிய இரு திரைக் கதையாளர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும். 

இந்த வெப் சீரிசில் வரும் பல காட்சிகள் மறைமுகமாக பல விவரங்களை பார்வையாளர்களுக்கு எடுத்துரைக்கிறது. அதை புரிந்து கொள்பவர்கள் குறை கூறமாட்டார்கள். புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு எல்லாம் குறையே.

இதன் கிளைமாக்ஸ் கொஞ்சம் அவசர அவசரமாக எடுத்தது போல் இருந்தாலும் அது அடுத்த சீசனுக்கான லீட் என்று எடுத்துக் கொண்டால் அதுவும் சரியே என்று பார்வையாளர்களுக்கு புரியும்.

இதில் வரும் சில காட்சிகளுக்கான பதில் சீசன் இரண்டில் விளக்கம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூதாட்டி சாராவாக நீனா குப்தா, அவரின் சிறுவயது சாராவாக ராதா கோமதி, அவரின் மகனாக சஞ்ஜு  சிவராம் மற்றும் ஆஜி குரியனாக ரகுமான் என்று களை கட்டியுள்ளது இந்த 1000 பேபிஸ்.

விறுவிறுப்பான கதை மற்றும் திரைக்கதை, சிறப்பான நடிப்பு, காட்சி அமைப்புகள், லொகேஷன்ஸ் என்று அனைத்துமே இந்த வெப் சீரிஸின் ப்ளஸ்.

நிஜத்தில் இது சாத்தியமா? இது போல் நடக்கக் கூடுமா? என்றெல்லாம் ஆராயாமல் கதையை கதையாக கண்டு மகிழ ஆயிரம் பேபிஸ் ஓர் சிறந்த படைப்பாகும்.

1000 Babies – புனரபி ஜனனம், புனரபி மாற்றம்.

சற்று தாமதமான விமர்சனம் தான். என்ன செய்ய? எனக்கு இந்த படத்தை பார்க்கும் நேரமும் காலமும் நேற்று தான் கூடி வந்தது.  எனது பார்வையில் லப்பர் பந்து, உங்களை நோக்கி வீசி இருக்கிறேன், அது பவுண்ட்ரியா இல்லை அவுட்டா என்பது வாசகர்களான உங்கள் கையில்.

லப்பர் பந்து பலரை பள்ளி /கல்லூரி பருவத்திற்கு அழைத்துச் செல்வது நிச்சயம். பொதுவாக மாப்பிள்ளை வீட்டாருக்கும் பெண் வீட்டாருக்கும் இடையே முளைக்கும் வழக்கமான பிரச்சினைகளை தவிர்த்து ஒரு லப்பர் பந்து அவர்கள் திருமணத்திற்கு இடையூறாக புனையப்பட்டிருக்கும் கதை சற்றே வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.  கதையில் எவ்வித தொய்வின்றி நகர்த்திய விதம் இதம். இரு ஆண்களின் ஈகோ, விளையாட்டில் மட்டுமின்றி இருவர் வாழ்க்கையிலும் வினையை கொண்டு வந்து சேர்க்க இருக்கும்  தருணத்தில், சம்பந்தப்பட்ட இருவரையும் அதே விளையாட்டு ஒன்று சேர்த்து அவர்கள் வாழ்க்கையையும் அழகாக்குகிறது. இது தான் கதை சுருக்கம். ஆனால் இந்த இரு சம்பவத்திற்கிடையே உலா வரும் வண்ணமயமான காதல், நட்பு, கிராமத்து சூழலில் கிரிக்கெட், விளையாட்டில் பெண்களின் பங்கேற்பு, மாமியார் மருமகள் உறவு, கணவன் மனைவி உறவு,  சமத்துவம், அரசியல் என்று  அட்டவணை நீண்டுக் கொண்டே போனாலும் அவை அனைத்தையும் விளையாட்டு என்ற ஒரு புள்ளியில் இணைக்கும் கதை அருமை. அத்தகைய கதையை எழுதி இயக்கியுள்ள  திரு. தமிழரசன் பச்சைமுத்து அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

நடிப்பு பொறுத்தவரை அனைவருமே அவரவர் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர். அன்பு, யசோதை, துர்கா, கருப்பையா, காத்தாடி, பூமாலையின் தாய், கொழந்த ஆகிய கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர் நடிகைகளுக்கு பாராட்டுகள். அவர்கள் அனைவரும் அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர்.

அட்டக்கத்தி தினேஷ் இன்னும் கொஞ்சம் ஹோம் வர்க் செய்திருக்க வேண்டும் போல் படம் பார்க்கும்போது தோன்றுகிறது.  கெத்துக்கு கெத்து போதவில்லை. எனது பார்வையில் அன்பு தான் கெத்து.

சமீபத்தில் வெளிவந்த படங்கள் பலவற்றில் இசை பெரும் இரைச்சலாக இருந்து வரும் வேளையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள கதைக்கான இசையமைப்பு படம் முழுவதும் இதமாக ஒலிக்கிறது. இசையமைப்பாளர் திரு. ஷான் ரோல்டன் அவர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

கதையில் வரும் திருப்பம் மற்றும் முடிவு பார்வையாளர்களால் யூகிக்க கூடியதாக இருந்தாலும் நம்மை எழுந்து செல்ல விடாது முழு படத்தையும் பார்க்க வைத்திருப்பது சிறப்பு. கிராமத்து குசும்பு என்பதை கமெண்ட்டேடர்களின் கமெண்ட்ரி நிரூபித்திருக்கிறது. வேர்ல்டு கப் கமெண்ட்டேடர்களை விட மிகவும் கலகலப்பாக கமெண்ட்ரி செய்த கமெண்டேட்டர்களுக்கு பாராட்டுகள்.

பாரதியார் அன்றே சாதிகள் இல்லையடி பாப்பா என்றொரு பாட்டை பாடி எழுதியிருக்கிறார். ஆனாலும் ஏன் இப்போது வரும் திரைப்படங்கள் அனைத்திலும் இந்த சாதியை கோர்க்கிறார்கள்?  இயக்குனர் நினைத்திருந்தால் அதை தவிர்த்திருக்கலாம். மேலும் ஒவ்வொருவர் பலவற்றை கற்றுத் தேர்ந்து கஷ்டப்பட்டு முன்னுக்கு வர  துடித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஒருவர் விட்டுக் கொடுத்தால் தான் முன்னேற முடியும் என்றிருப்போருக்கு அந்த வெற்றி கிடைத்தும் பலனிருக்காது என்பது ஏன் புரியவில்லை.  விட்டுக்கொடுப்போர் கெட்டுப் போவதில்லை ஆனால் எல்லாவற்றிலும் எல்லாரும் விட்டுக் கொடுத்தால் தான் முன்னேறுவோம் என்ற தவறான கருத்தை பரப்புவதை தவிர்த்து, இனி வரும் படங்களில் நன்றாக படித்து தன் உழைப்பில் முன்னேறுவது எப்படி என்றும் அவ்வாறான முன்னேற்றமே தனக்கான அடையாளத்தை தரக்கூடியதாக இருக்கும் என்றும் காட்சிகளும் வசனங்களும் அமைத்தல் நன்று. இட ஒதுக்கீடு வேண்டுமென்று உரிமை குரல் கொடுப்போர், இனி எங்களுக்கு அது  வேண்டாம் நாங்களே அவ்விடத்தை எட்டிப் பிடிப்போம்  என்ற குரலையும் ஒலிக்கச் செய்தால் கூடுதல் சிறப்பு.

லப்பர் பந்து – வீசப்பட்ட விதம், ஏற்படுத்தும்
கார்க் பந்தின் தாக்கம்.

வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்ன விட்டு போகலன்னு நீலாம்பரி ’99 ல சொன்னது 2024 ல கூட நம்ம சூப்பர் ஸ்டாருக்கு பொருந்துகிறது. அதுனால தான் அவர் இன்னமும் சூப்பர் ஸ்டார். இத் திரைப்படத்திலும் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அவர் கனகச்சிதமாக செய்துள்ளார். அவரின் வயதுக்குரிய கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பது சிறப்பு. நடிப்பில் நிதானம், முதிர்ச்சி இரண்டையுமே மிக அழகாகவும் அளவாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார் நம்ம சூப்பர் ஸ்டார்.

மஞ்சு வாரியர் ரஜினி காம்போ நன்று. பகத் பாசில் மிக அழகாக அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கதாப்பாத்திரத்தில் பொருந்தி இருக்கும் விதம் பாராட்டுக்குரியது. ரஜினி பகத் காம்போவின் ஒரு காட்சியில் நம்மை இருவருமே கண்கலங்க வைக்கிறார்கள்.

ரோகிணி, ராணா, அபிராமி, கிஷோர், ரித்திகா, துஷாரா விஜயன், ரமேஷ் திலக் ஆகியோர் ஏற்று நடித்திருக்கும் கதாப்பாத்திரங்கள் மனதில் நிற்கும் வண்ணம் அமைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஏனோ அமிதாப் அவர்களின் கதாப்பாத்திரம் ஏற்புக்குரியதாக அமையவில்லை. அதற்கு டப்பிங் ஒரு முக்கிய/ பெரும் காரணம் என்றே படம் பார்த்த அனைவருக்கும் கூற தோன்றும் முதல் மற்றும் அப்பட்டமாக தெரியும் பெரிய குறை. அவர் திரைப்படத்தோடும் கதாப்பாத்திரத்தோடும்  ஒட்டவில்லை. தனித்தே இருக்கிறார்.

அனிருத் இசையில் மாற்றம் ஏதுமின்றி அதே ஒரே இசை தான் ஒலிக்கிறது. மனதில் நிற்கும் படி பாடல்கள் ஏதும் சரியாக அமைக்கவில்லை.  காட்சிக்கு தகுந்தாற் போல் இசையமைக்காது சூப்பர் ஸ்டாருக்காக மட்டுமே இசையமைத்திருப்பதால் திரைப்படத்தின் பின்னணி இசை வெறும் இரைச்சல்! பார்வையாளர்களுக்கு தரும் எரிச்சல்!. அனிருத் அவர்களின் அடுத்த படத்திலாவது இசையில் மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கையுடன் இருப்பவர்களில் நானும் ஒருத்தி. மொத்தத்தில் இத்திரைப்படத்தின் இசை – இம்சை.

என்கவுண்டர் நல்லதா கெட்டதா! இருக்கலாமா! இருக்கக்கூடாதா! இது தான் கதைச் சுருக்கம். இதை விளக்கும் விதமாக  மனிதாபிமானம், கார்ப்பரேட் மோசடி , தனி மனித உரிமை என பல விஷயங்களால் பின்னப்பட்டிருக்கும் கதை தான் “வேட்டையன்”.  முதல் பாதியில் கதை நகர்ந்த விதம் நம்முள்… அட என்னடா மறுபடியும் கற்பழிப்பு தான் கதைக்கான மோட்டிவா என்ற  அலுப்பு மனதில் எழும் தருணத்தில் சட்டென கதை களம் நம் நினைப்பை அப்படியே புரட்டிப்போடுகிறது.

போலீசுக்கு கொலைக்கான மோட்டிவ் வேணும் என்பதால் கற்பழிப்பு தான் சரியானதாக இருக்கும்  என்று  வில்லன் கூறும் போது, அட போலீசுக்கு மட்டுமில்லப்பா இப்போ வெளிவர பல படங்களின் கதைக்கான மோட்டிவே அதுவாகத்தான் இருக்கிறது என்ன செய்ய என்று நம்மை சொல்ல வைக்கும் விதம் அந்த வசனம் அமைந்திருக்கிறது. அது அமைந்ததா இல்லை அமைக்கப்பட்டதா! யாம் அறியோம் பராபரமே.

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் எஸ்.பி அதியன் (சூப்பர் ஸ்டார்) பல குற்றவாளிகளை குறிவைத்து  குழியில் விழவைக்கிறார். அதற்காக அவரின் தேடல்கள் மற்றும் அவர் அமைக்கும் வியூகம் ஆகியவைகளை சுருக்கமாக சில காட்சிகளில் புரிய வைத்து சட்டென கதைக்குள் பார்வையாளர்களின் கவனத்தை திருப்பி இருக்கிறார் இயக்குனர். மேலும் கதை ஒரு கோணத்தில் சென்று கொண்டிருக்கும் வேளையில் சட்டென கதையில் பெரும் திருப்பம் ஒன்றை கொடுத்து கதையை அப்படியே வேறு கோணத்தில் கொண்டு சென்று விறுவிறுப்பு குறையாமல் காட்சிகளை அமைத்திருக்கும் இயக்குனர் திரு. ஞானவேல் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

நடிப்பு பாதி ஹீரோயிசம் மீதி என்று கலந்து செய்த கலவை தான் அதியன் கதாப்பாத்திரம். யானைக்கும் அடி சறுக்கும் என்பதற்கு ஏற்றார் போல் நேர்மைக்கு பெயர் போன எஸ்.பி. அதியன் ஓரிடத்தில் தவறிழைத்து விடுகிறார். அது என்ன தவறு? ஏன் தவறானது? அதை எப்போது! எப்படி! யாரால் உணர்கிறார்? தவற்றை திருத்திக் கொள்ள அவர் எடுக்கும் நடவடிக்கை என்ன? போன்ற கேள்விகளின் பதில்களை தேடும் வேட்டையில் இறங்கி திரையரங்கம் சென்று திரையில் “வேட்டையன்” வேட்டையை கண்டு களியுங்கள்.

“வேட்டையன்” – துப்பாக்கியால் குற்றவாளிகளையும் நடிப்பால் ரசிகர்களின் மனதையும் வேட்டையாடும் வேட்டையன் நம் டிக்கெட் பணத்திற்கு பங்கம் விளைவிக்காதவன்.

Long ago, a Chola prince was riding his chariot through a temple town when he accidentally ran over a calf, causing its death. The grieving mother cow went to the royal court seeking justice and rang a bell meant for citizens to present their grievances to the king. Hearing the bell, the king came out and learned of the incident. While his courtiers offered various solutions to absolve the prince of his sin, the king sought true justice for the cow, who had lost her calf.

The only just solution, he concluded, was to have the prince suffer the same fate as the calf. The prince would be laid on the ground and run over by the chariot wheel, leading to his death. However, the courtiers couldn’t bring themselves to carry out the order. Overcome with grief but committed to justice, the king himself took control of the chariot and ran the wheel over his only son, killing him.

As the story goes, the gods, disguised as the cow and calf, appeared before the king, revealing their true forms and blessing him for his unwavering sense of dharma—not only for his human subjects but also for animals. The king’s profound commitment to justice earned him the title “Manuneethi Chola.”

This Chola ruler, believed to have lived around 250 B.C. in southern India, upheld the principle that no one is above the law and all are equal before it. His legacy has inspired Indian judges in delivering fair and final verdicts in complex cases—a far cry from the modern judicial system’s current direction.

The story of the most popular Chozha Ruler

The plot is based on the five volume  Historical Novel Ponniyin Selvan originally written by “Kalki Krishnamurthi” (between 1950 -1954) as one of the most popular and perhaps one of the largest Historical Work in Tamil Literature which later has been reproduced in several formats and media.

Ponniyin Selvan traces the story of the early days of the great Chozha King, Raja Raja Chozhan 1 (947 – 1014 CE) as the young Prince “Arulmozhi Varman”.

Kalki in his own unique way has portrayed the events of history during the Chozha Dynasty, considered as major, salient or main events, into a sensational and interesting literary novel in simple yet most enchanting way.

The 10 main characters that are displayed in our Golu as clay dolls with a backdrop depicting the Tanjore Big Temple Tower, Fort and the Palace Throne; definitely not the actual but with the intention to provide a resemblance of the original with the view to weave together the main theme of the story through these idols.

The dolls are from Giri traders, Chennai.

The National Reserve is situated in Rift Valley Province, Narok and Transmara Districts. The site adjoins the Serengeti National Park along the Kenya-Tanzania border, and is considered part of the same ecosystem.

The word “Masai” comes from the ‘Masai tribe’, nomadic inhabitants of the area and the word “Mara” is their word for ‘spotted’, referring to the ubiquitous flat topped acacia trees, shrubs and bushes that dot the landscape across most of the reserve.

The Masai speak the Maa language (ɔl Maa), a member of the Nilotic language family that is related to the Dinka, Kalenjin and Nuer languages. Except for some elders living in rural areas, most Maasai people speak the official languages of Kenya and Tanzania, Swahili and English.

The Masai Mara features a stunning kaleidoscope of wild and rugged landscapes, warm and welcoming people and an exciting array of creatures – big and small. World famous for hosting the epic Great Migration, the Masai Mara welcomes 1.5 million wildebeests onto its sprawling savannahs each July through October.

Mara has the largest number of savannah species in the world it has over, 650,000 gazelle, 62,000 buffalo, 64,100 impala, 61,200 Topi, 7,500 hartebeest, 7,100 giraffe, 3,000 eland and 4,000 elephant (Mara Research Station Report). There are particularly large numbers of Lion (Panthera leo) and Spotted Hyaena (Crocuta crocuta), cheetah (Acinonyx jubatus) and populations of the threatened black rhinoceros (Diceros bicornis) and African hunting dog (Lycaon pictus) As well as uncounted antelope, hippo, warthog, bush pig and giant forest hog (Lamphey and Reid 2004).

More than 500 bird species are known to occur, including 12 species of Cisticola and 53 birds of prey. Grassland birds are especially well represented.

The Masai Mara National Reserve and conservancies are brimming with life and offer safari travellers a wide variety of activities to choose from. Whether you take to the skies for a high-flying hot-air balloon adventure at sunrise or hit the road for a 4×4 safari, you’re sure to leave the Masai Mara with unforgettable experiences and lifelong memories.

Vastu Ganapathi is a specific form of lord Ganesha associated with Vastu Shastra, an ancient Indian system of architecture and design. In this form, Lord Ganesha is revered as the deity who brings blessings and ensures harmony and positive energy in the built environment. Lord Ganapathi is depicted with four hands, each holding a symbolic object representing his various powers and blessings. The presence of Lord Ganapathi in your home is believed to bring positivity, success, and harmony.

எவ்வித ஆர்ப்பாட்டமும், விளம்பரமும், சமூக ஊடக சிபாரிசுகளும், காசுக்கு கூவும் கூட்டங்களும் இன்றி அமைதியாக வெளிவந்துள்ள அற்புதமான திரைப்படம். ரொம்ப நாள் கழித்து தமிழில் வெளிவந்துள்ள நல்ல திரைப்படம். இது எங்கள் சொந்த கதை, எங்கள் சோகக்கதை உண்மைக் கதை, முடக்கப்பட்டவர்கள் கதை, அந்த கதை, இந்த கதை என்ற சில பொய்களின் கூச்சல் மற்றும் அற்ப பரபரப்புகளுக்கிடையே ஜமா ஜொலிக்கிறது.

இதிலும் ஏற்றத்தாழ்வுகள் சம்மந்தப்பட்ட காட்சிகள் இருந்தாலும் அதற்கு பதிலடியாக திறமையை முன்னிறுத்தி, அதற்கு முதலுரிமை கொடுத்து மிக அழகாக கதை நம் மனதை தொடும் விதம்  ஜமாவை படைத்துள்ளார் இயக்குனர் திரு பாரி இளவழகன்.

இக்கதையும் துரோகத்தை சார்ந்தது என்றாலும் அதற்காக அருவாள் அல்லது கத்தி கொண்டு சதக் சதக் என்று இரத்தம் தெறிக்கும் விதம் பழிவாங்கும் காட்சிகள் இன்றி, கலையை நன்கு பயின்று தன் திறமையால் ரத்தமின்றி, வீண் சத்தமின்றி தன் உரிமையை நிலைநிறுத்த கதாநாயகன் தேர்ந்தெடுக்கும் திறமை என்னும் ஆயுதம் அபாரம். அவ்வாறு நாம் நம் திறமையை வளர்த்துக் கொண்டு அதில் விஸ்வரூபம் எடுத்தால் அது நம்மை ஒடுக்குபவரை ஒதுங்கிக் கொள்ள வைக்கும் என்பதற்கு இப்படம் ஓர் சிறந்த உதாரணம்.

கல்யாணம் கதாப்பாத்திரத்தின் மூலம் நல்ல நடிப்பை மட்டுமின்றி இக்கால இளைஞர்களுக்கு நல்லதொரு பண்பை விதைத்து இருக்கிறார் இயக்குனர்.

நமக்கு ஒருவர் நம்பிக்கை துரோகம் செய்யும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்ற சாணக்கியர் நீதியை படமாக்கி உள்ளார் இயக்குனர்.  நமது தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, நம் வளங்களை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தி,  வஞ்சகத்தை விடுத்து நேர்மையைத் தேர்ந்தெடுத்து, மற்றவர்களை குறைத்து மதிப்பிடாது, துரோகத்தின் சவால்களை முறியடித்து வலிமையாகவும் புத்திசாலித்தனமாகவும்,  அதிலிருந்து வெளிவரலாம் (அது யாராக இருந்தாலும்) என்பதை ஜமா கதை நமக்கு உணர்த்துகிறது.

தாண்டவம் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள திரு சேத்தன் அவர்கள்  அமைதியாய் காய்களை நகற்றி ஆராவாரம் மற்றும் தேவையற்ற அலப்பறை இல்லா வில்லத்தனத்தை முகபாவத்திலும் பார்வையிலும் வசனம் பேசும் விதத்திலும்  தாண்டவம் ஆடியிருக்கிறார். கல்யாணத்தின் அம்மாவாக நடித்துள்ள நடிகையின் நடிப்பு பிரமாதம். ஜகாவாக திரையில் வலம் வந்த அம்மு அபிராமி நடிப்பும் நன்று.

வித்தை கற்றுக்கொடுத்தவரிடமே உன் வித்தையை காட்ட நினைத்தால் விடையின்றி இவ்வுலகிலிருந்து விடை பெறுவாய்  என்பதையும் எடுத்துரைக்கிறது இந்த ஜமா.

இந்த படத்தின் இசை அதற்கு பலம் சேர்த்துள்ளது என்று எவராலும் சொல்லாமல் இருக்க முடியாது. இப்படத்திற்கு நம் இசைஞானியை தவிற வேறு யார் இசை அமைத்து இருந்தாலும் அது எடுபடாது போய் இருக்கும்.

மிதமான இசை, காட்சிக்கு ஏற்றார் போல் இசை, உணர்வுகளை வெளிப்படுத்தும் இசை. அதிலும் இப்படத்தில் சோக காட்சிகளின் பின்னணியில் நம் இசைஞானியின் இசையிலும் இழைந்தோடிய சோகம் நம் மனதை உருக்கும். அது போல் இசைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று அவர் நினைத்திருந்தால் படம் முழுவதும் அவர் இசையை நிறைத்திருக்கலாம். ஆனால் அவர் கதைக்கும் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் இசை கதையோடு கைக்கோர்த்து கதையை குலைக்காமல் கதைக்கும் வாசனத்திற்கும் வழிவிட்டு பார்வையாளர்களின் செவிகளுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

மொத்தத்தில் அடிதடி, சண்டை, வெட்டு, குத்து, ஆசிட், இரத்தம், கற்பழிப்பு  போன்ற வழக்கமான காட்சிகளையும், காரணங்களையும் புறம் தள்ளிவிட்டு முன்னே தலை நிமிர்ந்து நடை போடும் ஜமா திரைப்பட குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கூத்தில் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்வது போலவே திரைக்கதையிலும் அமைத்திருப்பது சிறப்பு.

கதை, திரைக்கதை, இசை, நடிக்கர்கள், நடிப்பு, ஒளிப்பதிவு என அனைத்திலும் ஜமாய்த்திருக்கிறார்கள்.

ஜமா – ஜாலம்.

ஒரு காலத்தில் புது திரைப்படங்கள் வெளிவந்தால் ரசிகர்களிடம் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று அவர்களின் கருத்துகளையும் விமர்சன குழுவினரின் விமர்சனங்களையும் வைத்து எந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்றும், எது சிறந்தது என்றும் பத்திரிகைகள் அச்சிட்டு வந்தன. ஆனால் இப்போதோ ரிலீஸான  மூன்றே நாட்களில் இப்படத்தின் வசூல், ரிலீஸான இரண்டாவது நாள்  அப்படத்தின் வசூல் என்று நாட்கணக்கில் அப்போதும் வசூலை வைத்து திரைப்படத்தின் வெற்றியை நிர்ணயிக்கிறார்கள். ஏனெனில் மூன்று நாட்களுக்கு மேல் யாரும் எதுவும் கேட்க போவதில்லையே!

இதற்கான காரணம் என்னவாக இருக்கக்கூடும் என்று சற்றே யோசித்துப் பார்த்தோமேயானால், இன்றைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் வெளிவருவதற்குள்ளேயே படத்தைப் பற்றி ஆஹா ஓஹோ என்று அப்படக் குழுவினரே சிலாகித்து பேசிய நேர்காணல்கள் அல்லது பரபரப்புக்காக படத்தைப் பற்றி ஏதாவது ஒரு வதந்தியை கிளப்பிவிட்டு பல்வேறு பதிவுகளை சமூக ஊடகங்களில் உலாவரச் செய்து முதல் மூன்று நாட்களில் வசூல் பார்க்க எண்ணுவது நமக்கு புலப்படும். இல்லையெனில் மக்கள் யாரும் அவர்கள் படத்தை பார்க்க மாட்டார்கள் என்ற நினைப்பாகவும் இருக்கக்கூடும் .

ஏமாறுபவர்கள் உள்ள வரை இது போல் ஏமாற்றுபவர்கள் சிம்மாசனம் ஏறத் தான் செய்வார்கள்.

நூறு நாட்கள் ஓடிய திரைப்படங்களும், வருடக்கணக்கில் திரையிடப்பட்ட திரைப்படங்களும் தந்த தமிழ் திரையுலகம் இன்று பத்து நாட்கள் தாண்டுவதற்கே தத்தளிக்கிறது.

சமீப காலமாக தமிழகம் மற்றும் தமிழ் மக்களுக்கு ஏன் இவ்வளவு மோட்டிவேஷனல் மெஸேஜஸ்களும், பேச்சாளர்களும் தேவைப்படுகிறார்கள்! சிந்தியுங்கள். ஏன்? தமிழக மக்கள் மோட்டிவேடட்டாக இல்லை என்பதாலா இல்லை அந்த சாக்கில் மக்கள் மூளையை சலவை செய்வதற்காகவா? கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று எதிலும் கருத்து, எங்கும் கருத்து, எதற்கும் கருத்து! கருத்தோ கருத்து! என்று கருத்தை கூறு போட்டு விற்காத குறையாக பள்ளி மாறுவேட போட்டி தொடங்கி திரையுலகம் வரை ஏன் இப்படி கருத்து கந்தசாமிகள் நிரம்பி இருக்கின்றனர்! சிந்தியுங்கள்.

திரைப்படம் என்பது பொழுதுப்போக்கு அம்சமாக இருந்த வரை மேற்கூறியவாறு வருடக்கணக்கில் திரையிடப்பட்டு வந்தன. எப்போது திரைப்படத்தில் கருத்து திணிப்பு ஆரம்பித்ததோ அப்போதிலிருந்து அதன் முடிவை அதுவே தேட துவங்கிவிட்டது.  கருத்து கதையோடு ஒன்றி பார்வையாளர்களின் மனதிற்குள் கடத்த வேண்டும் அல்லாமல் தனித்து /எடுத்து சொல்லப்படுமேயெனில் அது கதைக்கும் அத்திரைப்படத்திற்கும் பெரிய சறுக்கலாகும்.

கருத்து மிகுதியாக உட்புகுந்ததால்
கதை குலைந்து போனது
கதை குலைந்ததால்
திரைப்படம் குலைந்து போனது
திரைபடங்கள் அடுத்தடுத்து குலைந்து போவதால்
தமிழ் திரையுலகமே குலைந்து போய் கொண்டிருக்கிறது.

ஜாதி, மதம், இனம், பழிக்குப்பழி வாங்குதல் போன்ற திரைப்படங்கள் 80 /90 களிலும் நிறைய வந்துள்ளன ஆனால் அவை அனைத்தும் பார்வையாளர்கள் முகம் சுளிக்கும் வண்ணம் திரைப்படமாக்கவில்லை. அலுத்து போகவும் வைக்கவில்லை.  ஆனால் இப்போதோ!

மாற்றம் ஒன்றே மாறாதது.
இதுவும் மாறும்.
திரையுலகம் மீட்டெடுக்கப்படும்.
நல்ல ஜனரஞ்சக திரைப்படங்கள் திரையிடப்படும்
என்ற நம்பிக்கையுடன் அக்காலத்திற்காக காத்திருப்போம்.

எதார்த்த சினிமாவை படைக்கிறோம் என்று
கற்பனை வளத்தை கொன்று நாள்தோறும் நடப்பதை சித்தரித்து காட்டுவதை விடுத்து,
எதிர்பாராத ஒர் கதை கொண்ட நல்ல சினிமாவை எதிர்பார்க்கும் ரசிகர்களில் ஒருத்தியாக நான்.
-நா. பார்வதி

வளைந்திருப்பதால் வளையல் என்றானதா!
இல்லை வளையாதிருப்பதால் வளையல் என்றானதா!
கையில் மாட்டும் வளையம் போல் இருப்பதால் வளையல் என்றானதோ!
எதுவாக இருந்தால் என்ன!
வளையல் கையில் வளைய வருவதே ஓர் அழகு
குந்தன் கற்கள் பதித்த வளையல் என்றால் பளபள
பட்டு நூல் வளையல் என்றால் வழவழ
தங்க வளையல் என்றால் தகதக
வைர வளையல் என்றால் ஜொலிஜொலிப்பு
கண்ணாடி வளையல் என்றால் கலகல
மொத்தத்தில்
வண்ணமையமான வகைவகையான வளையல்கள் அணிவதால்
பெண்களுக்கு ஓர் தனியழகு
அதுவே வளையல்களுக்கான தனி சிறப்பு.

இத்திரைப்படத்தை என்னமோ தெரியவில்லை பார்க்க வேண்டுமென்ற எண்ணம் கூட தோன்றவில்லை. மேலும்… கஷ்டப்பட்டு உழைத்த காசை  தியேட்டர் சென்று இப்படத்தை கண்டு வீணடிக்க என் மனம் ஏற்கவில்லை. ஓ.டி.டியில் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்து விட்டேன்.  போன ஞாயிற்றுக்கிழமை மதியம் இப்படத்தை பார்க்கலாமென்று அமர்ந்தேன். படம் ஆரம்பம் முதலே கதை & திரைக்கதை இயக்கம் எல்லாம் திரையில் சரிவர ஒட்டாதது போலவே இருந்தது. 

மிகவும் கஷ்டப்பட்டு ஒருவழியாக படத்தை பார்த்து விட்டேன். ஆனால் இப்படத்தைப் பற்றி என்ன எழுதுவது என்ற யோசனையில் மூழ்கினேன்.

எப்போதும் நல்ல திரைப்படங்களை தேர்வு செய்து பார்ப்பதும் அதிலிருக்கும் நல்லவற்றை எடுத்து காட்டி, குறைகளை மேலோட்டமாக விமர்சித்து எழுதுவதும் என்று இருந்த எனக்கு இப்படம் ஒரு சவாலாக இருந்தது. ஏனெனில் இப்படத்தை பற்றி எழுதுவதற்கு நல்லதா ஒரு விஷயம்…

எங்கே எங்கே எங்கே என்று தேடிப் பார்த்தேன் 

அது எங்கேயும் இல்ல! 

என்று நொந்து கொண்டது தான் மிச்சம். ஒரு திரைப்படம் எடுப்பது என்பது இமாலய சாதனை போன்றது என்று நமக்கு நன்றாக தெரிந்த விஷயம். ஆனால் அதற்கான எவ்வித முன்னேற்பாடுமின்றி ஏனோ தானோ என்று எடுத்தது போல் இருப்பது வருத்தம் தருகிறது. 

சில படங்களை நன்றாக எடுத்து பெயர் வாங்கி விட்டால்… எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எடுக்கலாம் அதை ரசிகர்கள் ஆதரிப்பார்கள் என்ற மிதப்பில் இருக்கும் அனைத்து கலைஞர்களுக்கும்  இப்படம் பெரும் ஏமாற்றத்தை தவிர வேறெதுவும் தராது என்பது உறுதி. இனி வரும் கலைஞர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை என்றும் எடுத்துக்கொள்ளலாம். 

பெரிய பட்ஜெட் படம், பெரிய நடிகர் பட்டாளம், ஆடம்பரம், விளம்பரம் என்று ஆர்ப்பாட்டம் செய்த படக்குழுவினர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்,

 “தயவுசெய்து ரசிகர்களை முட்டாள்கள் என எண்ணி விட வேண்டாமென்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.”

நாளைய இந்தியா இளைஞர்கள் கையில் என்று சொல்ல தொடங்கி பல ஆண்டுகள் ஆன போதிலும் இந்த படத்தில் அப்பேர்ப்பட்ட இளைஞர்கள் ஒரு முதியவரை தேடி செல்வது நெருடல். வயதானால் தொணதொணவென பேசிக் கொண்டிருப்பார்கள் என்ற உலகறிந்த உண்மையை படம் போட்டு காண்பித்திருக்கிறார்கள். 

ஒரு படத்தில் கருடபுராணம் இதில் வர்மம். 

கருடபுராணம் கலக்கல் 

வர்மம் வழுக்கல்

ஒரு படத்தில் “மே” இதில் “மியாவ்”

“மே” மாஸ்

“மியாவ்” மிஸ்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒலி மற்றும் ஒளிப்பதிவு, நடிப்பு, நடிகர்கள், ஒப்பனை, எடிட்டிங், பாடல்கள் என்று எடுத்துக் கொண்டோமேயானால்…

இசை வெறும் இரைச்சல்

தரும் பெரும் எரிச்சல்!

இயக்கத்தில் இல்லை இறுக்கம்

ஆதலால் பாதியில் எழுந்து போக வைக்கும்!

கதையும் திரைக்கதையும் பெரும் சொதப்பல்

மூழ்கியது இந்தியன் 2 கப்பல்!

நடிப்பிலும் நடிகர்களிடமும் ஏதோ ஒரு வகை குழப்பம் 

புது முக நடிகர்கள் போல் இருக்கும்! (உலக நாயகன் உட்பட)

இந்தியன் தாத்தா ஒப்பனை

ஒப்பவில்லை 

எதுவுமே சரியாக ஒட்டவில்லை!

கருத்து பெருத்துப்போச்சு

படம் சருகாச்சு 

இந்தியா திரும்பும் இந்தியன் தாத்தா சென்ட்ரலை மட்டும் தான் தாக்குவாரோ! ஏன் ஸ்டேட்டை விட்டுவிட்டார்? 

அவசரத்தில் சொல்லப்பட்ட கதை. 

அரைகுறையான திரைக்கதை.

பாதி படம் எடுத்து முடித்து பார்த்ததும்… இந்தியன் கம் பேக் என்று வரவைத்து தவறு செய்துவிட்டோமோ என்று எண்ணினார்களோ என்னவோ தெரியவில்லை அவர்களே இந்தியன் கோ பேக் என்றும் கூறி தங்களின் திரைப்படத்தின் விமர்சனத்தை படத்திலேயே காட்டிவிடும் நேர்மை மற்றும் தைரியத்திற்கு சல்யூட். 

சண்டை காட்சி மற்றும் மோனோ சைக்கிளிங் சீக்குவன்ஸ் எல்லாமே நம்மை பத்து வருடம் பின்நோக்கி  அழைத்து செல்வது உறுதி.  இவ்வளவையும் பார்த்து முடித்ததும் கடைசியில் இந்தியன் தாத்தா “ஐ வில் பி பேக்” என்று சொல்லி முடித்த விதம், 

“என்னது மறுபடியும் மொதல்லேந்தா! ஐயா சாமி போதும்டா சாமி. உங்க படத்துல சொன்னா மாதிரியே… ப்ளீஸ் கோ பேக்… அன்ட் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் நெவர் எவர் கம் பேக்” 

என்று படம் பார்ப்பவர்களை சொல்ல வைக்கும். 

இந்தியன் 2 – இம்மியளவும் ஏற்க முடியாத இம்சை அரசன். 

-நா. பார்வதி

ஆயிரம் கண்ணுடையாள் சமயபுரத்தாள். அத்தகைய அம்மன் கோவிலில் அராஜகம். அவள் கண்களுக்கு இவை தென்படவில்லையா? தர்ம தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் என்று இரு வழிகள் எல்லா கோவில்களிலும் இருக்கும் முறை. தர்ம தரிசன வரிசையில் கூட்டம் அதிகமாக இருந்தால் கட்டண தரிசனத்தை தேர்ந்தெடுப்பது  வழக்கம். அவ்வாறு கட்டணம் செலுத்தி முறையாக வரிசையில் சென்று கொண்டிருக்கும் போது…அம்பாள் நடைக்கு முன் ஒரு கதவு இருக்கும் (இது சமயபுரம் சென்று வருபவர்களுக்கு நன்றாக தெரியும்) அதற்கு சற்று முன்னே வலது புறம் வழியாக தடதடவென ஒரு ஐம்பது நபர்கள்  திடீரென எங்கள் வரிசையில் இடித்து பிடித்துக் கொண்டு நுழைந்தனர். அவர்களை அழைத்து வந்து ஒழுங்காக சென்று கொண்டிருந்த  வரிசையினூடே நுழைத்து விட்ட நபரிடம்,

“ஏன் இப்படி செய்யறீங்க நாங்க இத்தன மணி நேரமா நுழைவாசல்லேந்து வரிசையில நின்னுட்டு வரோம். இது என்ன புது வழி?”

என்று அனைவரும் கேள்வி எழுப்ப…  அழைத்து வந்த ஆசாமி அப்ஸ்காண்ட் ஆனார்‌. இடையில் வந்து நுழைந்த அந்த ஐம்பது நபர்களில் இரண்டு மூன்று பேர்

“நாங்களும் காசு கொடுத்து தான் வந்திருக்கோம்”

என்று குரல் உயர்த்தி கூற. அதற்கு எங்கள் பின்னால் இருந்தவர்

“அப்ப நாங்க என்ன சும்மாவா நின்னுட்டு வர்றோம். ஒரு கட்டண வரிசை தானே இருக்கு. இது என்ன சைடு கட்டண வரிசையா! கடவுள பாக்கறதுலேயும் குறுக்கு வழியா! அம்மா இதெல்லாம் நீயும் பாத்துட்டு தானே இருக்க” 

என்று கூற… அந்த லோக நாயகி முன் பெரிய வாக்குவாதம் நடைப்பெற்றது. இறுதியில் வரிசைனூடே நுழைந்தவர்களை  போகட்டும் என்று அனைவரும் விட்டுவிட அவர்களும் முன்னே சென்றனர். அம்பாள் கர்ப்பக் கிரக முன் வாசலின் வலது புறத்தில் இருந்து இன்னும் ஒரு பத்து நபர்களை அதே ஆசாமி எங்கள் வரிசையில் இணைத்து விட…முதலில் இணைந்த அந்த ஐம்பதில் பத்து பேர் அதை கடிந்து பேசி சப்தம் எழுப்ப. அதை பார்த்த எங்கள் வரிசையில் முதலில் கடிந்து பேசிய நபர் இப்போது சத்தமாக

“அம்மா தாயி நீ இருக்க மா. நீ இருக்க.” 

என்று கூற…இன்னொரு இளைஞர் அவருடன் சேர்ந்துக் கொண்டு 

“நம்மளுக்கு வந்தா தக்காளி சட்னி அவுங்களுக்கு வந்தா ரத்தம் போல!”

என்று கூறியதும் முதலில் எங்கள் வரிசையில் இணைந்த அந்த ஐம்பது நபர்களும் பேசாமல் அமைதியாக அவர்கள் முன் இணைந்து கொண்டவர்களுக்கு வழி விட்டனர்.

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்றொரு பழமொழி அந்த இடத்தில் பொய்யானது.

அங்கு நடந்தவைகளை கண்ட நாங்கள் அங்கிருந்த குருக்களிடம் புகார் அளிக்க. அவர்களோ யாமறியோம் பராபரமே என்று கைவிரிக்க. காவலாளிகளே இச்செயலை செய்வதால் அவர்களிடம் கூறி பயனில்லை என்றெண்ணி நாங்கள் கோவில் அலுவலகம் சென்று புகார் கொடுத்துவிட்டு வந்தோம். ஆனால் அடுத்த முறை சென்ற போதும் எவ்வித மாற்றமின்றி அதே கூற்று நடந்தேறியது!  இனி யாரிடம் புகார் கூறுவது என்று எங்களுக்கு தெரியவில்லை. தெரிந்தவர் சொல்லவும்.

சமயபுரம் கோவில் அதிகாரிகளே! நிர்வாகிகளே! தயவுசெய்து இது போன்றோர்களை கண்டித்து இனியும் இது போல் நடக்காது பார்த்துக் கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். வேண்டுமென்றால் தனவான்களுக்கென இன்னுமொரு கட்டண வரிசையை அமல் படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

மக்களே! கடவுளை காண்பதில் எதற்கு அவசரம். நின்று நிதானமாக சென்று தரிசனம் பெற்று வந்தால் தான் என்ன? உங்களுக்கு காசு கொடுத்த கடவுளை காசு கொடுத்து பாருங்கள் வேண்டாமென்று சொல்லவில்லை ஆனால் அதிலும் ஏன் ஒரு குறுக்கு வழியை தேர்ந்தெடுக்குறீர்கள்? அக்கோவிலில் பலர் அங்குமிங்குமாக ஐநூறு கொடுங்கள் ஆயிரம் கொடுங்கள் நாங்கள் உங்களை நேராக கற்ப்பகிரகத்துக்குள்ளேயே அழைத்து செல்கிறோம் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் கோவில் நிர்வாகம் மக்களுக்காக இரு வரிசைகளை தான் ஏற்படுத்தி வைத்துள்ளது. அதை தான் நாங்கள் பின்பற்றுவோம் என்ற முடிவை நாம் ஒவ்வொருவரும் எடுத்து அது படியே நடந்து வந்தால் இது போன்ற ஆசாமிகள் காணாமல் போய் விடுவர்.

அம்பாளை தரிசிக்க இடைத்தரகர்கள் எதற்கு? சிந்தியுங்கள் மக்களே!

-நா. பார்வதி

இத்திரைப்படத்தின் போஸ்டரில் ப்ரித்விராஜின் கெட்அப் பார்த்ததும் இப்படத்தை பார்த்தாக வேண்டுமென்ற எண்ணம் என்னுள் உதித்தது. அடுத்து வெளிவந்த டீசர் அதை மேலும் உறுதி செய்யும் விதம் அமைந்திருந்தது. நாம் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் அப்பறம் வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருக்கும் இல்லையா‌! அதனால் தான் என்னவோ இப்படத்தை பார்க்க நேரமும் காலமும் நேற்று தான் கூடி வந்தது. பார்த்து விட்டேன், ஆனால் இன்னும் அந்த திரைப்படத்தில் இருந்து என் மனம் வெளிவரவில்லை.  அத்தகைய ஓர் தாக்கத்தை என்னுள் ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை பார்க்கும் அனைவர் உள்ளத்திலும் இந்த உணர்வு உதிப்பது நிச்சயம்.

மலையாள எழுத்தாளர் திரு பென்யாமின் அவர்களின் நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில்
நஜீப் கதாப்பாத்திரத்திற்கு ப்ரித்விராஜை தேர்வு செய்த இயக்குனர் திரு. ப்ளெஸி அவர்களுக்கு எனது முதல் பாராட்டு. ஏனெனில் மனுஷன் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று தான் திரைப்படம் பார்ப்போருக்கு சொல்ல தோன்றும். 

திருமணமாகி இன்னும் சில மாதங்களில் அப்பாவாக இருக்கும் நஜீப் தனது மனைவி மற்றும் பிறக்க இருக்கும் குழந்தைக்கு வசதி வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென்று அங்கும் இங்கும் பணத்தை புரட்டி தங்கள் ஊர்க்காரர் ஒருவர் மூலம் ஒரு ஏஜெண்டிடம் கொடுத்து மனதில் பல கனவுகளுடன் சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.  நஜீப்பின் பக்கத்து ஊர் பையன்  ஹக்கீமும் இவருடன் சேர்ந்து பயணிக்கிறார்.

மலையாள மொழியைத் தவிர வேறெந்த மொழியும் தெரியாத நஜீப், அறைகுறை ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்த ஹக்கீம் ஆகிய இருவரும் சவுதி அரேபிய மண்ணில் கால் வைத்ததும் திரைப்படம் நம்மை பாலைவனத்திற்கு அழைத்து சென்று அங்கேயே நம்மை இரண்டரை மணிநேரம் கட்டிப்போட்டு விடும் கதைக்கு எனது இரண்டாவது பாராட்டு.

அந்நாடு நஜீப்பையும் ஹக்கீமையும் பிரித்து விட தவித்துப் போகிறார் நஜீப். ஓரே வேலைக்காக சவுதி சென்று இறங்கும் இவர்களை ஏன் பிரிக்கின்றனர்? யார் பிரிக்கிறார்கள்? எதற்காக? என்பதை படம் பார்த்து தெரிந்துக் கொள்வதே நன்று. மொழியும் தெரியாது தனித்து விடப்பட்ட நஜீப்பை சவுதி நாட்டை சேர்ந்த ஒருவர் ஓர் இடத்துக்கு அழைத்து செல்கிறார். அவ்விடத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நஜீப், தான் யாரென்றும் எதற்காக சவுதி வந்திருப்பதாகவும் மலையாளத்தில் விளக்க முயற்சிக்கிறார். ஆனால் அவையனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கின் சப்தம் போல் ஒலிக்க…விதி இது தான் என்று மதி சொன்னாலும் மனம் அதை கேட்காது அங்கிருந்து தப்பித்து செல்ல பல முயற்சிகளை மேற்கொள்ள வைக்கிறது. கடைசியில் அனைத்து முயற்சிகளும் மணலோடு மணலாக…விதி வென்றது.  அந்த வாழ்க்கையை ஏற்க விருப்பம் இல்லாவிட்டாலும் வேறு வழியின்றி மெல்ல ஏற்க துவங்கும் நேரத்தில் ஹக்கீமை காண நேர்கிறது.  அதிலிருந்து திரைப்படம் நம்மை ஒரு வகையான பதற்றத்திலேயே பயணிக்க வைக்கிறது.

பாலைவனத்தில் ஓர் சோலை வனம் போல் அவ்வப்போது சரியான தருணத்தில் வந்து மறையும் ஃப்ளாஷ்பேக் நஜீப்புக்கும் பார்வையாளர்களுக்கும் அழகான ஓர் காட்சி விருந்து எனலாம்.

தண்ணீரிலேயே வாழ்ந்த ஒருவர் தண்ணீரின்றி தவிக்கும் காட்சியமைப்புகளும் கதையின் ஓட்டமும் அருமை. 

இறுதியில் நஜீப்பும் ஹக்கீமும் தாய்நாட்டுக்கு திரும்பி வருகிறார்களா? பாலைவனத்தில் இருந்து வெளியேறுகிறார்களா? என்பதை விறுவிறுப்பாக விவரிக்கும் ஆடுஜீவிதம் எந்த ஒரு மனிதனும் கடந்து வரக்கூடாத ஓர் ஜீவிதம். ஆனால் கட்டாயம் அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டிய ஓர் மனிதரின் மறக்க முடியாத ஜீவிதம்.

ஆடுகளும், ஒட்டகங்களும் காட்டும் அன்பிலும் பாசத்திலும் பாதியாவது மனிதர்களுக்கு இருக்குமேயானால் மனிதம் பிழைத்திருக்க வாய்ப்பிருக்கும் என்பதை உணர்த்தும் திரைப்படம்.  நல்லுள்ளம் கொண்டர்களும், சுயநலவாதிகளும், தீயகுணமுடையவர்களும்  கலந்திருப்பது தான் நாடும் வீடும் என்பதை காட்சிகளின் மூலம் உணர வைத்துள்ளனர்.

பணம், பொருள், வசதி வாய்ப்பு இவைகளை வெளிநாடு சென்று ஏற்படுத்திக்கொண்டு ஓரிரு ஆண்டுகளில் ஊருக்கு திரும்பி விடலாம் என்று எண்ணி பயணிக்கும் விட்டில் பூச்சிகளுக்கான எச்சரிக்கை அறிவிப்பு இந்த படம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

நஜீப் என்ற மனிதர் கடந்து வந்த கடினமான பாதையை காட்சிகளாக்கி நம்மையும் அவருடன் பயணிக்க செய்துள்ளனர் படக்குழுவினர்.

ப்ரித்விராஜ் சுகுமாரன் அவர்களின் நடிப்பு திறமை இத்திரைப்படம் முழுவதும் ஜொலிக்கிறது.

இக்கதையில் அமலா பால் அவ்வப்போது வந்து மறையும் அழகிய மின்மினி பூச்சி. 

நஜீப்பின் அம்மா, ஹக்கீம், ஹக்கீமின் நண்பனாக வரும் இப்ராஹிம் கத்ரி மற்றும் சவுதி அரேபியர்கள் கஃபீல், ஜசர் ஆக நடித்துள்ளவர்கள், சிறிது நேரம் வலம் வந்தாலும் பெரிய தாக்கத்தை உருவாக்கும் ஹிந்தி காரர் என்று அனைவரும் அவரவர் பாத்திரத்தை சிறப்பாக செய்து படத்தில் நம்மோடு பயணிக்கின்றனர்.

ஜாதி, மதம், அடிதடி, வெட்டு, குத்து, ரத்தம், பழிக்குப்பழி என்று ரசிகர்களின் ரசனையை மாற்ற முயற்சிக்கும் விதம் சில காலங்களாக ஒரே பாதையில் பயணித்து வரும் இத்திரையுலகில்… நிறைய நிறை மற்றும் சில குறை என்று இரண்டையும் ஏந்தி திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் வலம் வரும் ஓர் திருப்புமுனை “ஆடு ஜீவிதம்”. இது போலும் படம் எடுக்கலாம், இதையும் ரசிகர்கள் ரசிப்பார்கள் /ஆதரிப்பார்கள் என்பதற்கு ஓர் சிறந்த உதாரணம் இத்திரைப்படம்.

“ஆடுஜீவிதம் – பார்வையாளர்கள் மனதை ஆட்டி வைக்கும் ஓர் மனிதனின் ஜீவிதம்.”

-நா. பார்வதி

ஒருத்தருக்கு உடம்பு சரியில்லாமல் போனது. அப்போது அவருடன் அதே அறையில் தங்கியிருந்த நபர் தானாகவே முன் வந்து டீ போட்டு கொடுக்கிறார். உடம்பு சரியில்லாத நபரும் அந்த டீயை வாங்கி குடித்து விட்டு தனது நன்றியை தெரிவித்து கொள்கிறார். அத்துடன் மனதார வாழ்த்தவும் செய்கிறார். இவை அனைத்தும் இவர்கள் இருவருக்குள் நடந்த விஷயம் மற்றும் அவர்கள் இருவர் மட்டுமே அறிந்த விஷயம்.

அந்த டீ போட்டு கொடுத்த நபர் அத்துடன் விட்டிருந்தால் அது உதவி செய்தவருக்கும் உதவி பெற்றவருக்கும் மனநிறைவை கொடுத்திருக்கும்.

ஆனால் உதவி செய்த நபரின் மன நிறைவு… அதை ஒரு நாலாயிரம் நபர்களிடம், இன்னாருக்கு உடல்நலம் சரியில்லாமல் போன காரணத்தினால்… அடுப்பு பத்த வைத்து ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து அது கொதித்ததும் அதில் இஞ்சி, ஏலக்காய், டீத்தூள் சேர்த்து அவையனைத்தும் நன்றாக கொதித்ததும் அதில் பால் மற்றும் சக்கரை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி வடிகட்டி ஒரு டம்பளரில் ஊற்றி அவருக்கு சூடான டீ போட்டுக் கொடுத்தேன் என்று சொல்லி கொள்வதில் தான் இருக்கிறது. இது தான் இந்த நவநாகரீக யுகத்தின் பெருந்தன்மை  மிகுந்த செயல்!

இவ்வாறான செயல் உதவி பெற்றவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் மேலும் உதவி புரிந்தவரின் உண்மையான மனநிலையை சமுதாயத்துக்கு எடுத்துக்காட்டும். 

நாம் செய்யும் உதவி மற்றவருக்கு உதவியாக இருக்க வேண்டுமே அன்றி உறுத்தலாக ஒரு போதும் இருந்துவிடக்கூடாது.

வேறு சிலர் தண்டோரா ஏதும் போடாது பல உதவிகளை செய்வார்கள் ஆனால் அவர்கள் உதவிய நபர் அவர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமென்று எண்ணுவார்கள். உதவி பெற்றவர் நன்றியுடன் இருக்கா விட்டால் அவ்வளவு தான் உதவி புரிந்தவரின் உண்மையான சுயரூபம் வெளிவரும். நான் அவ்வளவு செய்தேன் ஆனால் அவன் நன்றிக் கெட்டவன் என்றெல்லாம் தூற்றுவார்கள். புலம்புவார்கள். இதுவும் தவறே.

உன்னால் மட்டுமே இந்த நிலையை சரி செய்ய முடியும் அல்லது உன்னால் மட்டுமே இன்னாருக்கு உதவ முடியும் என்று நம்மை இயக்குபவர் நம்மை படைத்த அந்த பகவான். நம்மை உதவும் நிலையில்/உதவி பெறும் நிலையில் வைத்திருப்பதும் அவர் தான். அவர் தான் நம்மில் சிலரை உதவி செய்ய வைக்கிறார். அவ்வளவே! என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்தோமேயானால் நம்முள் இது போன்ற குணங்கள் ஒரு போதும் தலைதூக்காது.

வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்று நம் முன்னோர் சொன்னதில் இருக்கும் தத்துவம் இந்த சமூக ஊடக காலத்தில் மூழ்கி இருப்பவர்களுக்கு புரியுமா? இல்லை புரிந்தும் புரியாதது போல் இதெல்லாம் “சகஜமப்பான்னு” இருக்கிறார்களா!

“உதவி” ஓர் உன்னதமான சொல் மற்றும் செயல்.
ஊடகங்களால் “உதவி”கே உதவி தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது என்று தான் சொல்ல தோன்றுகிறது.

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
உண்மை, நீதி, நெறி, அறம் மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே..
“கடவுள்” இருக்கிறான் மறந்திடாதே.

படத்தின் தலைப்பை படித்ததும் ஏதோ ஒரு பக்திப் படமா இருக்குமோ என்று நினைத்துவிட வேண்டாம். இது முழுக்க முழுக்க நகைச்சுவையில் நம்மை மூழ்க செய்து வாய் விட்டு சிரிக்க வைக்கும் நல்ல திரைப்படம்.

பல த்ரில்லர், சஸ்பென்ஸ், சீரியஸ் மற்றும் ஆக்ஷன் படங்களில் பார்த்த ப்ரித்விராஜை இந்த படத்தில் அப்படியே ஒளித்து வைத்து அவரின் நகைச்சுவை நடிப்பு பக்கத்தை  வெளிச்சமிட்டு காட்டியுள்ளனர்.

முன் கோபியான கதாநாயகன் அனந்தன் (ப்ரித்விராஜ்) தன் மனைவி மற்றும் மகனை பிரிந்து தனித்து வாழ்ந்து வருகிறார் . அவர் பெற்றோர் அவரின் தங்கைக்கு திருமண ஏற்பாடுகளை செய்கின்றனர்.  துபாயில் பணிபுரியும் மாப்பிள்ளை விணுவுக்கும் (பாசில் ஜோசப்) மைத்துனர் அனந்தனுக்கும் இருக்கும் நட்பு மிக நெருக்கமானது! ஏனெனில் விணுவை அவனின் காதல் தோல்வியில் இருந்து  வெளி கொண்டு வந்தவர் ஆனந்தன் ஆவார். அதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட பாசப் பிணைப்பு படிக்கட்டு போல் அவர்களை அந்த பந்தத்தில் உயர் நிலைக்கு கொண்டு செல்கிறது. அதை அடுக்கடுக்கான நகைச்சுவை காட்சிகளாலும் வசனங்களாலும் நம்மை சிரிக்க வைத்தே புரிந்துக் கொள்ள வைத்துள்ளனர்.

மேலும் தனக்கு உதவிய அனந்தனுக்கு தானும் ஏதாவது உதவி புரிய வேண்டுமென்று எண்ணிய விணு துபாயில் இருந்து கொண்டே அனந்தனிடம் பேசி பேசியே பிரிந்திருந்த கணவன் மனைவியை சேர்த்து வைக்கிறான். அதிலும் காமெடியை தெரிக்க விட்டிருக்கின்றனர்.  அதை தொடர்ந்து வரும் காட்சியில் ப்ரித்விராஜ் ஒரு நொடி  மோகன்லாலை போல் பேசி நடித்திருப்பது அபாரம். இறுதி காட்சியில் குருவாயூரப்பன் டச் அற்புதம்.

திருமணத்திற்காக துபாயில் இருந்து கேரளாவுக்கு வந்து இறங்கும் விணு தன் முன்னாள் காதலியை தான் துளியும் நினைத்துப் பார்க்காத ஓர் இடத்தில், தருணத்தில் சந்திக்கிறான். எங்கே? ஏன்? எப்படி? அவன் திருமணம் நிச்சயித்த படி குருவாயூர் அம்பலநடையில் நடைபெறுகிறதா? அவர்கள் காதல் ஏன் முறிந்தது?  முதல் பாதியில் ஹீரோவாக வலம் வரும் ப்ரித்விராஜ் இரண்டாம் பாதியில் தலைகீழாக மாறுவது ஏன்? எதற்காக? போன்ற கேள்விகளுக்கான விடையை பல முன்னணி நடிகர் பட்டாளத்தை கொண்டு மிக அழகாக கோர்க்கப்பட்ட நகைச்சுவை கதையை, அற்புதமான காட்சி அமைப்பில், மிக நேர்த்தியான மாலையாக்கி…குருவாயூர் அம்பலநடையில்  மாலை சாற்றினான் விணு மாலை மாற்றினான் என்று பாட வைத்து இருக்கிறார்களா இல்லையா? என்பதை
திரைப்படம் பார்த்து,
வயிறு குலுங்க சிரித்து,
மகிழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள்.

“குருவாயூர் அம்பலநடையில்” – குதூகலம், கும்மாளம், கொண்டாட்டம்.

-நா. பார்வதி

அமேசான் பிரைமில் ஏதாவது நல்ல படம் இருந்தால் பார்க்கலாமே என்று ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே வந்ததில் “ரோஜர் பெடரர் – டுவல் பைனல் டேஸ்” என்ற ஆவணப்படம் ஒன்றின் போஸ்டரை பார்த்தேன். அட நம்ம ரோஜர் படத்தில் நடித்து இருக்கிறாரா! என்ற எண்ணம் தோன்றவே அந்த போஸ்டரை க்ளிக் செய்து அந்த ஆவணப்படம் எதைப்பற்றியது என்ற synopsis என்று சொல்லக்கூடிய ஆய்வு சுருக்கத்தை படித்துப் பார்த்தேன். பிடித்துப் போகவே அதை பார்க்கத் தொடங்கினேன். நான் பார்த்தது எனது பார்வையில்…இதோ உங்களுக்காக…

டென்னிஸ் கோர்ட்டில் ball boy என்றழைக்கப்படும் சிறுவனாக பந்துகளை எடுத்துக் போட்டுக் கொண்டிருந்த ரோஜர் பெடரர் ஜூனியர் சேம்பியன்ஷிப்பில் ஆரம்பித்து பின்னாளில் பெரிய டென்னிஸ் வீரராக உலகையே கலக்கி பல உள்ளங்களை வென்றவர், டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லண்டனில் லேவர் கோப்பைக்கான போட்டியின் போது உலகிற்கு அறிவித்தார். அத்தகைய ஓர் அறிவிப்புக்கு பன்னிரண்டு நாட்கள் முன் அவரின், அவர் குடும்பத்தினரின் மற்றும் நண்பர்களின் உணர்ச்சி பிரவாகம் தான் இந்த 127 நிமிட ஆவணப்படம், “ரோஜர் பெடரர் – டுவல் பைனல் டேஸ்”

ஒரு விளையாட்டு, தொழில், பயிற்சி இப்படி எதுவாக இருந்தாலும் அதில் தனது முழு கவனம், ஆற்றல், மூச்சுப் பேச்சு, ஊண்உறக்கம் என்றனைத்தையும் அதற்காகவே தியாகம் செய்து அதையே தனதாக்கிக் கொண்டு வாழ்ந்தவர் ஓர் நாள் அதிலிருந்து விலக வேண்டி வரும்போது… அந்த நபருக்குள் ஏற்படும் உணர்வலைகளின் தொகுப்பு இந்த ஆவணப்படம் எனலாம்.

இந்த படத்தை பார்த்தால் ரோஜர் சிறந்த விளையாட்டு வீரர் மட்டுமல்ல நல்ல சிறந்த மனிதர் என்பதும் அறியாத பலரும் அறிவர்‌.

பிஜார்ன் போர்க், மெக்கன்ரோ, ரஃபேல் நடால், முரே, ஜோவிக், என்று பல டென்னிஸ் ஜாம்பவான்கள் இப்படத்தில் அவரவர்களின் நினைவலைகளை மிக அழகாக பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.

டாக்ஷிடோவுடன் போட வேண்டிய சட்டையை ரோஜர் சூட்டுடன் அணிந்து வருவதை பிஜார்ன் சுட்டிக்காட்ட, ரோஜர் உடனே சென்று சட்டையை மாற்றுவது போன்ற காட்சிகள் மிக எதார்த்தமாக காட்சியாக்கப்பட்டுள்ளது.

நடால் மற்றும் ரோஜர் என்ற இரு வீரர்கள், நட்பு வேறு விளையாட்டு வேறு என்ற வேறுபாட்டை உலகிற்கு எடுத்துரைத்த தோடு… விளையாட்டில் எதிராளியாக இருந்தாலும் சிறந்த நண்பர்களாகவும் இருக்க முடியும் என்பதை நிரூபித்து, அவர்களின் அடுத்த தலைமுறையினருக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியுள்ளனர். வாழ்ந்தும் வருகின்றனர்.

பத்திரிகைக்கு பேட்டி கொடுக்கையிலும், அவர்கள் இருவருமாக இணைந்து ஆடிய இறுதி ஆட்டமான லேவர் கோப்பை விளையாட்டு முடிந்தவுடனும் நடால் அழுகிறார். இருவரும் நட்புக்கு சிறந்த இலக்கணம் ஆவர்.

அவர் ஏன் டென்னிஸ் விளையாட்டை விட்டு வெளியேறினார் என்பது நாம் பத்திரிகைகளில் படித்து தெரிந்துக் கொண்டவை தான் ஆனால் அத்தகைய ஒரு முடிவை எடுப்பதற்கும், அதை கடந்து வருவதற்கும். மீண்டும் விளையாட அவர் எடுத்த முயற்சிகளையும். அதற்கு உறுதுணையாக இருந்த குடும்பத்தினரையும், நண்பர்களையும் பற்றிய விரிவான மற்றும் சுவாரஸ்யமான படைப்பு தான் இந்த படம்.

ஆவணப்படம் என்று புறக்கணிகாது அனைவரும் காண வேண்டிய படம். ஏனெனில் அவ்வளவு அழகாக ரோஜரின் எண்ண ஓட்டங்களையும், அவரின் ஆரம்ப காலம் முதல் 2022 வரையிலான பல மேட்சுகளின் காட்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளனர். அவ்வாறு வழங்கிய விதம் பாராட்டுக்குரியதாகும்.

டென்னிஸ் என்றால் ரோஜர் பெடரர் என்றிருந்த உலகிற்கு இனி நான் இல்லை என்று கூறுவதற்கு அவர் எத்தனை நாட்கள் யோசித்து இருப்பார் என்பதை இந்த படம் பார்க்கும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் நிச்சயம் தோன்றும். அப்படி தோன்றிய சில மணித்துளிகளில் அவரின் அந்த செய்தியை அவர் வாசிக்க நாம் கேட்கும் போது நம் கண்களின் ஓரத்தில் கண்ணீர் உருண்டோடுவதை நம்மால் தவிர்க்க முடியாது.

இந்த படத்தில் ஒரு வரி வரும் “sportsman dies twice” அதாவது விளையாட்டு வீரர்களுக்கு இறப்பு என்பது இருமுறை வரக்கூடிய ஒன்று என்று. என்னைப் பொறுத்தவரை தான் விரும்பி ஏற்றுக்கொண்டு பயணிக்கும் எந்த துறையினருக்கும் இந்த வாசகம் பொருந்தும்.

ரோஜர் பெடரர் – டுவல் பைனல் டேஸ் – விளையாட்டில் இருந்து
விடை பெறுதல் விளையாடும்
விஷயமல்ல.
-நா. பார்வதி

நடிகனாக வேண்டுமென்ற ஓர் தந்தையின் நிறைவேறாத ஆசையை, அவர் தன் மகன் மூலம் நிறைவேற்றிக்கொள்ள நினைத்து சிறு வயது முதல் மகனின் மனதில் நடிப்பை விதைக்கிறார். அந்த பிஞ்சு மனதில் விதைத்த விதை மெல்ல வளர்ந்து விருட்சமாக, பல ஆசை, கனவு, லட்சியம் கொண்ட ஓர் இளைஞனை உருவாக்குகிறது. மகன் வெற்றியடைந்தால் அப்பாவும் வெற்றி பெற்றதற்கு சமம் என்றிருக்கும் சூழலில் மகன் வெற்றி பெறுகிறாரா? என்பது தான் “ஸ்டார்” திரைப்படத்தின் கதைச் சுருக்கம்.

இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் மிக அருமையாகவும் எதார்த்தமாகவும் நடித்துள்ளார்கள். கதாநாயகனின் தாய், அக்கா, மாமா, அப்பா, நண்பன் என அனைவரும் நாயகனுக்கு தோள் கொடுத்துள்ளனர். நாயகன் கலையின் (கவின்) நடிப்பு சிறப்பு. கதாநாயகிகள் இருவருமே படத்துடன்/கதையுடன் ஏனோ ஒட்டவில்லை.

கனவு கண்டால் மட்டும் வாய்ப்பு என்னும் கதவுகள் திறந்து விடாது
அதற்கான  கடும் உழைப்பு, முயற்சி, தேடல் இருந்தால் தான் நினைத்தது நடக்கக் கூடும் என்பதையும்,

அடுக்கடுக்கான தோல்விகளை எதிர் கொள்பவனால் தான் வெற்றியின் நுழைவாயிலை எட்டியாவது பார்க்க முடியும். ஏனெனில் தோல்விகள் அனைத்தும் முயற்சியின் விளைவுகள் என்பதையும்

வாழ்க்கையில் எவ்வித மாற்றங்கள் நேர்ந்தாலும் குறிக்கோள் மாறாது இருத்தலும் வெற்றிக்கான முயற்சிகளில் ஒன்று என்பதையும்

உணர்த்த முயன்ற “ஸ்டார்” வெற்றியின் வாசல் வரை சென்று யூ டர்ன் போட்டுள்ளார்.

ஏற்கனவே “முகவரி” ஸ்டார் ஆனதால் “ஸ்டார்” முகவரி இழக்கிறார்.

கதையை பல இடங்களில் கரைந்து போகவிடாமல்
தேவையற்ற காட்சிகளை கத்தரித்து
கதை கரு கலைந்து விடாது பார்த்து கொண்டிருந்தால்
பார்வையாளர்களுக்கு “எப்படாப்பா படம் முடியும்!” என்ற எண்ணம் தோன்றாது இருந்திருக்கக் கூடும்.

“ஸ்டார்” – வானில் மினுமினுக்க வேண்டிய நட்சத்திரம் சில மேகங்களால் மறைந்து விடுகிறது.
-நா. பார்வதி





சிறு வயது நந்தினி அழகில் மனதை மயக்கும் மோகினி

குந்தவை – அக நக அக நக முக நகையே!!

ஐஸ் – இந்த தடவை நடிப்பில் கொஞ்சம் நைஸ்!!

மதுராந்தகன் – மந்தம். மனிதர் இன்னும் கொஞ்சம் நன்றாக நடித்திருக்கலாம்.

செம்பியன் மாதேவி – இந்த காட்சிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் அனாயாசமாக நிற்கும் இறுதி காட்சி எடுபடவில்லை.

பூங்குழலி – அழகும் வீரமும் ஒருங்கே அமையப்பெற்றவள் ஆனால் படத்தில் ஒன்றை மட்டும் பிரதானப்படுத்தியது ஏனோ! அவள் சேந்தன் அமுதனிடம் ராணியாக வேண்டுமென்று சொல்வதை கல்கியின் கதையை படிக்காதவர்கள் மனதில் “ஓடக்கார பெண்ணிற்கு பேராசையை பாரு” என்ற எண்ணம் எழ வாய்ப்பிருக்கிறது. ஆனால் உண்மை அது அல்ல. அவளுக்கென்றொரு கதை இருக்கிறது அதற்கு திரையிடப்பட்டிருக்கிறது!

வந்தியதேவன் – வருத்தெடுத்தாலும் வந்து நிற்கும் வல்லவரையன்.

பார்த்திபேந்திர பல்லவன் – வந்தியதேவனும் ஆதித்த கரிகாலனுக்கு மிகவும் நெருக்கமானவன் என்று நன்கறிந்தும் திடிரென வல்லவரையன் மீது ஏன் பழிபோடுகிறார்! என்பதை கதை படித்தவர்கள் நன்கறிவார்கள். படம் பார்ப்பவர்கள் மனதில் கேள்வி எழ வாய்ப்புகள் அதிகம்.

ஆதித்த கரிகாலன் – விக்ரம் நடிப்பு அபாரம். ஆதித்த கரிகாலனாக அவரது கோபம், நக்கல், காதல், சங்கடம், தவிப்பு அனைத்தையுமே மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். திரையில் இவரின் இறப்பு பெரிய சொதப்பல் அப்பு!

அருள்மொழிவர்மன் – வாம்மா மின்னல் என்ற நகைச்சுவை காட்சியை போல் அவர் வரும் காட்சிகள் வேகமாக வந்து மறைந்தது. மனதில் நிற்க வில்லை. 

வானதி – அடிக்கடி மயங்கி விழும் கோழை பெண்ணான வானதியும் வீரம் மிகுந்தவள் ஆவாள் என்பதை திரைப்படம் காட்ட தவறியது ஏனோ! முதல் பாகத்தில் குந்தவையுடனே சுற்றிக் கொண்டிருந்த வானதி இரண்டாவது பாகத்தில் ஏன்? எப்படி? தனியாக இருக்கிறாள்?? என்ற கேள்வி திரைப்படம் பார்ப்போருக்கு எழலாம் ஆனால் கதை படித்தவருக்கு தான் விவரம் தெரியும்.

பழுவேட்டரையர்கள்  – வந்ததே சில காட்சிகள் தான். அதிலும் அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா? என்று பார்ப்போருக்கு குழப்பம் எழச் செய்கிறது திரைப்படம்.

கதையில் மாற்றம் ஏமாற்றம்!
காட்சிகள் பின்னப்பட்டதில் தடுமாற்றம்!
சில விவரங்கள் காட்சி ஆக்காததால் கதைப் படிக்காதவர்களுக்கு எழும் சந்தேகம்
அதனால் முடிவு குழப்பம்
கதை படிக்காதவர்கள் மனதில் எழும் பல கேள்விகளுக்கு பதில் இன்றி முடிந்த திரைப்படம்.

கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காது அதை ஏந்தி நடித்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலேயே முழு கவனம் செலுத்தியதால் கடைசியில் பூங்குழலி, சேந்தன் அமுதன், வானதி, அநிருத்தர், நம்பி ஆகிய கதாபாத்திரங்கள் வலுவிழந்து போயின.

இதை அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் என்று பாராது இயக்குனர் திரு மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் என்று வேண்டுமானால் பார்க்கலாம்.
ஆனால் மனதில் பல கேள்விகள் எழலாம்.
மீண்டும் கதையை தேடி செல்ல வேண்டி வரலாம்.
அமரர் கல்கியா இயக்குனர் மணியா என்ற குழப்பம் எழலாம்!

-நா. பார்வதி

நான் பகிர்ந்துள்ள கருத்துக்கள் அனைத்தும் நான் நேற்றுப் பார்த்த பொன்னியின் செல்வன் திரைப்படம் பற்றி என் மனதில் தோன்றிய எண்ணத்தின் வெளிப்பாடே.

இப்போ நாம திரு. மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் கதை மற்றும் கதாபாத்திரங்களுக்குள் செல்வோம்.
நான் முப்பதாம் தேதியிலிருந்து இந்த திரைபடத்தின் விமர்சனங்கள் எல்லாவற்றையும் படித்து வந்தேன். புத்தகம் வாசிக்காதவர்களுக்கு படம் புரியாது, குழப்பமாக இருக்கும் அப்படி இப்படி என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தவண்ணம் இருந்தது. ஆனால் உண்மையில் அப்படி எதுவுமே இல்லை. படம் நன்றாக தெளிவாக தான் எடுத்திருக்கிறார்கள். காட்சிகள் ஒவ்வொன்றும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருந்தது. வந்தியத்தேவனும், ஆழ்வார்கடியானும் மறைந்திருந்து சூழ்ச்சியை பார்க்கும் காட்சி புத்தகத்தில் வந்ததைப் போலவே காட்சியாக்கப்பட்டிருந்ததாக தான் நான் கருதுகிறேன். இது போல சில காட்சிகளை சொல்லலாம். ஆனால் என்றுமே புத்தகத்தில் வந்த ஒரு கதை திரைப்படமாக்கப்பட்டால் அதில் சில மாற்றங்கள் இருக்கத்தான் செய்யும். அவர்களே அதை பொறுப்பு துறப்பில் சுவாரஸ்யத்திற்காக சில காட்சிகளை மாற்றி அமைத்திருக்கிறோம் என்று எழுதிக் காட்டுகிறார்களே! அதற்கு பின்பும் நாம் கல்கியின் கதையை அப்படியே திரையில் எதிர்பார்ப்பது முறையல்ல.

இப்படி நமது சோழ வரலாற்றையே மறந்துப்போக கூடிய ஒரு சந்ததி உருவாகும் என்று அந்த பகவான் எண்ணியதாலோ என்னவோ அதை மறந்திடாது வாழ்ந்த மக்கள் இருந்த காலங்களில் எல்லாம் அதை பல முறை முயற்சித்தும் படமாக்க முடியாது போயிற்று போல!! என்று தான் நினைக்கத்தோன்றுகிறது. ஒரு திரைப்படம் நமது சோழ வரலாற்றின் மீது ஓர் ஈர்ப்பை இப்போதிருக்கும் சந்ததியினருக்குள் புகுத்தியுள்ளதை நான் வரவேற்கிறேன். அதுவும் தமிழர்கள் மட்டுமல்லாது உலகளவில் நமது சோழர்கள் பற்றி பறைசாற்றும் விதமாக இப்படம் அமைந்துள்ளது அம்மண்ணில் பிறந்த நமக்கும் பெருமை சேர்க்கத்தான் செய்கிறது.

இசை எடுபடவில்லை. ஓரிரு இடங்களைத் தவிர காட்சிகளுடன் சேர்ந்து பயணிக்காது அது பாட்டுக்கு தனி டிராக்கில் ஓடிக்கொண்டிருந்தது வருத்தத்தை அளிக்கிறது. இளையராஜா இசையமைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்குமோ என்ற யோசனையை வரவழைக்கிறது.

வசன உச்சரிப்பில் கவனம் செலுத்தாது சற்று வருத்தத்தை அளிக்கிறது. உதாரணத்திற்கு “சோழ நாடு” என்பதை சோள நாடு என்று உச்சரிப்பது கேட்போரை முகம் சுளிக்க வைக்கிறது.

திரைப்படத்தில் நடித்த ஆண் நடிகர்கள் தொன்னூற்று ஒன்பது சதவீதம் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல கச்சிதமாக இருந்தனர் ஆனால் வானதி, நந்தினி கதாபாத்திரத்திற்கு ஒட்டவே இல்லை.

ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக இருக்கலாம் ஆனால் நந்தினியாக அவர்களை மனம் ஏற்கவில்லை. ஏன்னெனில் அவர் ஒரு அழகு பதுமை போல வலம் வந்தாரே அன்றி திரு. மணிரத்னம் அவர்கள் வடிவமைத்த வில்லிக்கேத்த முகபாவங்கள் ஒன்றுமே திரையில் பிரதிபலிக்கவில்லை. அரியணையை பார்க்கும் காட்சியை தவிர வேறெந்த காட்சியிலும் அவர் நடிக்க முயற்சிக்கக்கூட இல்லை என்பது வேதனையளிக்கிறது.

துளியும் பாவம் இல்லா முகம் அது
அதில் வில்லத் தனத்தை நாம் எங்கு தேடுவது? (வாசமில்லா மலரிது பாடல் போல பாடித்தான் பாருங்களேன்😜)

பாண்டியனுடன் நந்தினியை பார்த்ததும் கரிகாலரின் நடிப்பு சபாஷ் போட வைக்கும் ஆனால் எந்த உணர்ச்சியும் இல்லாத நந்தினியின் நடிப்பு அந்த முழுக் காட்சியையும் நூலறுந்த காற்றாடி போல சுவாரஸ்யத்தை குன்றச் செய்துள்ளது.

நந்தினி வந்த காட்சிகள் எதுவுமே திரைப்படத்தின் மற்ற காட்சிகளோடு துளியும் ஒட்டவில்லை. அவர் வந்த காட்சிகளில் எல்லாம் ஏதோ ஒரு பெரிய குறை இருப்பதை படம் பார்ப்பவர்கள் நிச்சயம் உணர்வார்கள்.

பழுவேட்டரையர்கள் இருவருமே பக்காவாக பொருந்தி இருந்தனர். ஆனால் பெரிய பழுவேட்டரையர் நந்தினியை கட்டியணைக்கும் போது ஏதோ கடனே என்று செய்ததைப் போல் இருந்தது. அதில் உணர்ச்சி துளியும் இருக்கவில்லை.

ஆழ்வார்கடியான் நம்பியாக நடித்த ஜெயராம், சொல்லிக்கொடுத்தை அப்படியே செய்திருக்கிறார். அவர் நடை உடை பாவனை எல்லாமே நன்றாக இருந்தது. மேலும் அவர் நந்தினியிடம் ஒரு செய்தியை தனக்காக கூறும் படி வந்தியத்தேவனிடம் கூறுவதாக தான் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் அடுத்த காட்சியில் இருவரும் மீண்டும் சந்திக்கும் போது வந்தியத்தேவன் நம்பியிடம் ஓலைச்சுவடி பற்றி கேட்பான். அந்த இடம், காட்சி மற்றும் வசனத்தில் தவறு இருப்பதாக எனக்கு தோன்றியது. இதை மறுபடியும் பார்த்து தெளிவுபெற வேண்டுமென என் மனதின் எதிரொலி எனக்கு கேட்டது . பார்ப்போம் அதற்கான நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டியது தான். திரு. ஜெயராம் போன்ற சிறந்த நடிகரை இன்னும் நன்றாக உபயோகித்துக் கொண்டிருக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.

குந்தவையையும் அழகு பதுமையாகவே காட்டப்பட்டிருந்தாலும் ஆங்காங்கே நடிப்பும் எட்டிப்பார்க்க முயற்சித்துள்ளது என்பதில் மகிழ்ச்சியே. நந்தினி – குந்தவை சந்திப்பில் குந்தவைக்கே என் மதிப்பெண்கள். மேலும் குந்தவையாக நடித்தவர் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்ததாலோ என்னவோ கதாபாத்திரத்தோடு ஒத்துப் போகிறார். அந்த ஒற்றுதல் நந்தினியிடம் மிஸ்ஸிங்.

பூங்குழலியாக நடித்தவரும் நன்றாக நடித்துள்ளார்.

வந்தியத்தேவனாக கார்த்தி, கொடுத்த கதாபாத்திரத்திற்கேற்ப நன்றாக நடித்துள்ளார். ஆகவே குறை ஒன்றுமில்லை வந்தியத்தேவா. உன் புன்முறுவலும், கேலி, கிண்டலும் ரசிக்கும் படியாகவே இருந்தது.

ஆதித்த கரிகாலனாக நடித்த திரு விக்ரம் நடிப்பில் நம்மை சபாஷ் போட வைக்கிறார் என்றால் அது மிகையாகாது. நம்பி, அன்னியன், ரெமோ, கிருஷ்ணாவுக்கு இந்த கதாபாத்திரமும் மிகப் பொருத்தமாக இருந்தது. அவரும் அதற்கான நியாயத்தை நடிப்பின் மூலம் வழங்கியுள்ளார். ஆனால் அவர் முன்னாள் கதையை சொல்லும் போது தேவையில்லாமல் கேமிராவை ஆட்டோ ஆட்டென்று அட்டியதாக நான் உணர்ந்தேன். அதை தவிர்த்திருக்கலாமோ!!

இப்போது நமது ஹீரோகிட்ட வருவோம். பொன்னியின் செல்வரும் கைத்தட்டும் விதம் அவரது கதாபாத்திரத்தை நன்றாகவே செய்திருந்தார். சும்மா அவரைப் பார்த்ததால் சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம். உண்மையிலேயே அவர் வந்த காட்சிகளில் எல்லாம் அவரைச்சுற்றி பலர் இருந்தும் நம் கவனத்தை அவர் பக்கம் ஈர்த்துள்ளார்.

இதெல்லாம் சரிங்க இதுல ஹைலைட்டே எனக்கு வந்த சந்தேகம் தான். திரு. கல்கி அவர்கள் எழுதி நான் படித்த பொன்னியின் செல்வன் கதையில் வந்த நம்ம பொன்னியின் செல்வன் பெயர் அருள்மொழி வர்மன் என்று படித்ததாக தான் ஞாபகம். ஆனால் படத்திலும் சரி அதன் கீழே ஓடிக்கொண்டிருந்த ஆங்கில வசன வரிகளிலும் சரி அருள்மொழி என்று திரு. கல்கி அவர்கள் வைத்த பெயரை அருண்மொழி என்று தான் கூறுகிறார்கள் எழுதியும் காட்டுகிறார்கள்! அது ஏன்? என்று நான் எங்களுடன் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்த பொன்னியின் செல்வரிடமே இடைவேளை நேரத்தில் கேட்டேன். எனது அந்த கேள்வி சில மணித்துளிகள் அவருடன் உரையாட ஓர் நல்ல வாய்ப்பாக அமைந்தது. அதற்குள் திரையரங்கிற்கு அவர் வந்திருப்பதை அறிந்த பலர் புகைப்படம் எடுக்க கூடினர். உடனே நான் அவரைப் பார்த்து அத்துனை நேரம் என்னோடு உரையாடியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டு

“வேயிட்டிங் ஃபார் யூவர் என்ட்ரி” என்று நான் கூறியதும் உடனே அவர்

“இடைவேளை முடிந்ததும் நான் வருவேன் மிஸ் பண்ணாம பாருங்க” என்றார்.

அதற்கு நானும் “ஷுவர் ஷுவர்” என்று கூறிவிட்டு இருக்கையில் அமர்ந்தேன். ஆனால் அதன்பின் என் மனம் திரையில் இல்லை. என்னடா நாம படிச்சப்போ அருள்மொழி வர்மனா இருந்தவரு திரைபடத்துல நடிச்சதும் அருண்மொழி என்று மற்ற நடிகை நடிகர்களுக்கு இயக்குனர்கள் திரைப் பெயர் வைப்பதைப் போல செய்து விட்டாரோ இயக்குனர்!! என்ற எண்ணம் என்னை ஆட்கொண்டது. உடனே கூகுளில் தேடினேன். எல்லா இடங்களிலும் அருள்மொழி வர்மன் என்று தான் பதிவிடப்பட்டிருந்தது. அப்போது நான் படித்தது சரிதான் என்ற முடிவுக்கு வந்து திரையை நிமிர்ந்துப் பார்த்தால் அருள்மொழி மன்னிக்கவும் திரு மணிரத்னத்தின் அருண்மொழி வர்மன் வந்தியத்தேவனுடன் மும்முரமாக வாள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.

அதன் பின் முழு படத்தையும் பார்த்துவிட்டு ஜெயம் ரவி அவர்களுக்கு ஒரு தம்ஸ்அப் காட்டிவிட்டு திரையரங்கில் இருந்து வீட்டிற்கு வந்து சேரும் வரை என் கணவரிடம் அந்த பெயர் மாற்றத்தைப் பற்றியே புலம்பிக்கொண்டு வந்தேன்.

வீட்டிற்கு வந்ததும் கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் புத்தகத்தை எடுத்து பெயரை சரி பார்த்தேன். அப்பாடா நாம சரியாதான் கேட்டு இருக்கோம். ஆனால் இயக்குனர் ஏன் அப்படி அருண்மொழி என்று திரையில் கூறியிருக்கிறார் என்ற குழப்பம் எழ உடனே மீண்டும் கூகுள் பாட்டியிடம் கேள்வியை மாற்றிக் கேட்டேன் அவளோ “அருண்மொழி /அருள்மொழி பெயர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் இயக்குனர் மணிரத்னம்” என்ற தலைப்பை பளிச்சிட்டாள். ஓ!!! இது ஏற்கனவே கேட்கப்பட்டுவிட்டதா!!! நாம் தான் கவனிக்காம படிக்கத் தவறிட்டோமென்று எண்ணிக்கொண்டே… அப்படி அவர் என்ன தான் சொல்லி இருக்கிறார் என்று படித்துப் பார்த்தேன். அவர் எதோ சோழர் செப்புத்தகடில் அருண்மொழி வர்மன் என்று தான் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் தான் அவ்வாறு வைத்துள்ளார் என்றும் மேலும் அவர் அளித்த விளக்கத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர் என்றும் அதில் எழுதப்பட்டிருந்தது. இதை சரி பார்க்க என்னால் ரூபாய் நாற்பதாயிரம் செலவழித்துக்கொண்டு இந்தியா வந்து ஆராய்ச்சி செய்ய இப்போது தோதுபடாது🙂 அப்படியே வைத்துக்கொண்டோமே/ ஏற்றுக்கொண்டோமே என்றால் திரு. கல்கி அவர்கள் அருள்மொழி என்று எழுதியிருப்பது தவறா!!!! இல்லை அவர் கதையை அச்சடித்து புத்தகமாக தந்தவர்கள் மீது தவறா? இதை யாரிடம் கேட்பது? யாம் அறியோம் பராபரமே!!

இயக்குனரான அவர் அதற்கான என்ன விளக்கம் அளித்திருந்தாலும் சரி, திரு. கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் புதினக் கதா நாயகன், நான் படித்த அருள்மொழி வர்மன் என்ற பெயர் தான் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதுவே மனதிலும் நிலைத்திருக்கிறது. கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் அருள்மொழி வர்மன் வாழ்க வாழ்க!!

ஒரு திரைப்படம் எடுப்பது சாதாரண விஷயம் அல்ல என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதிலும் இது போன்ற கதைகளை திரைக்கு கொண்டு வருவதென்பது இமாலய முயற்சி. அதை நன்றாகவே செய்திருக்கிறார் இயக்குனர். அப்படிப்பட்ட முயற்சிக்கு பலே என்று தான் சொல்ல வைத்திருக்கிறது திரைப்படம்.

– நா. பார்வதி

தண்டட்டி அணிந்திருந்தவளுக்கு உரிமையானவன்
இறுதியில் அந்த தண்டட்டிக்காவது உரிமையாவான் என்று எண்ணினேன்!

ஆனால்,

அவன் ஆசைப் பட்ட அவள்
அவனிடமிருந்து பிரித்து இழுத்துச் செல்லப்படுகிறாள்!
அவள் ஆசைப்பட்டு கேட்டு,
முதலும் கடைசியுமாக அவன் அவளுக்கு வாங்கிக் கொடுத்த தண்டட்டியையும்
அவன் அவளுடனேயே அனுப்பி வைத்தான்.

தங்கத்தால் ஆனது தண்டட்டி
அதைக் கைப்பற்றிட அலைகிறது பிள்ளைகள் என்னும் கொள்ளைக் கூட்டமடி!
அதைப் பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்துதடி!

வழக்கமான காதல் கதையை உருக்கி, சற்று மெருகேற்றி
அதை தண்டட்டிக்குள் வைத்து வழங்கியிருக்கும் விதம் அழகோ அழகடி.

தண்டட்டி அதன் உலோக தன்மையில் மட்டுமன்றி
கதையிலும்
காட்சியமைப்புகளிலும்
சொக்க தங்கமடி❤️
– நா. பார்வதி

தீவிர ரஜினி ரசிகையான நான் எப்போதும் போலவே அவருக்காகவே/அவரை திரையில் பார்ப்பதற்காகவே இந்த படத்தை பார்க்க சென்றேன். அவரும் எப்போதும் போலவே என்னைப் போன்ற ரசிகர்/ரசிகைகளை ஏமாற்றவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆமாங்க யாரு வேணும்னாலும் என்ன வேணும்னாலும் சொல்லட்டும் இந்த வயசுலையும் அவரு திரையில் வந்தா அங்க வேற யாரையும் நம்ம கண் பார்க்காது. படம் ஆரம்பித்ததிலிருந்து முடியும் வரை விசில் சத்தமும், கைத்தட்டல்களும், தலைவா என்ற கோஷமும் தான் திரையரங்கம் முழுவதும் ஒலித்தது. என்னைப்  பொறுத்தவரை எழுபத்து ரெண்டு வயதிலும் இப்படி ஒரு வரவேற்பு, இனி எந்த நடிகருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை.

வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்னை விட்டு போகலன்னு நீலாம்பரி இருபத்தி நான்கு வருடங்களுக்கு முன்னால் சொன்னது இரண்டாயிரத்து இருபத்தி மூன்றாம் ஆண்டான இன்றும் இந்த படத்தில் அவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது.

சரி, இப்போ நம்ம இயக்குனர் திரு. நெல்சன் அவர்களின் ஜெயிலர் தியைப்படத்திற்கு வருவோம்.

இந்தப் படத்தில் ரஜினியின் ஆரம்ப காலத்திலிருந்து அவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரங்கள் பலவற்றின் பிரதிபலிப்பு இருக்கிறது. அபூர்வ ராகங்கள் படத்தில் கேட்டை திறந்துக் கொண்டு வரும் பாண்டியன், ஆறிலிருந்து அறுபது வரை சந்தானம், தம்பிக்கு எந்த ஊரு பாலு, அண்ணாமலை என அடுக்கிக்கொண்டே போகலாம்.

தாத்தாவும் பேரனுமாக அடிக்கும் லூட்டி காண்போரை ரசிக்க வைக்கிறது. பேரனாக நடிக்கும் சிறுவன் ரித்விக் மிக அருமையாக நடித்திருக்கிறார். இயக்குனர் சொல்லிக் கொடுத்ததை அப்படியே செய்திருக்கிறார்.

தனது மகன் இனி இல்லை என்று அறிந்த அந்த தருணம் தலைவர் நடிப்பு தனித்துவம். மேலும் அதனால் உறக்கமின்றி பழிவாங்க புறப்படும் அப்பா அபாரம். யோகிபாபுவுடனான  காம்பினேஷன் கலக்கல். இறுதியில் தப்பு யார் செஞ்சாலும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை எடுத்துரைக்கும் காட்சியில் அவரின் நடிப்பில், தான் செய்தது சரி என்றும் அதே நேரம் பாசத்தின் வெளிபாடும் கலந்து வெளிப்பட்டதும் அரங்கத்தில் கரகோஷம் அடங்கவே சற்று நேரம் எடுத்தது. 

அனிருத் இசை அரங்கை அதிர வைக்கிறது.

இடைவேளை வரை விருவிருவென நகர்ந்த படம் அதன் பின் சற்று இழுபறியாக இருக்கிறது என்பது எனது கருத்து. படத்தில் தலைவரின் ஃபிளாஷ் பேக் மிக அழகாகவும் சுருக்கமாகவும் காட்டப்பட்டிருக்கிறது.  ஃபிளாஷ் பேக்கில் ரஜினியின் மேக் கப் பிரமாதம்.

கதை என்னவோ மகனின் இழப்புக்கு பழிவாங்கும் தந்தையின் கதை போல் தான் நகரும். ஆனால் அதன் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் எதிர்பாராதது. அந்த ட்விஸ்ட்டை இன்னும் கொஞ்சம் ஆழமாக பதிய வைத்திருக்கலாம் ஆனால் அதை மேலோட்டமாக காண்பித்து முடித்து விட்டுவிட்டது ஏதோ கதையில் பெரும் தவறு போல் தோன்றுகிறது. மொத்தத்தில் கதையில் ஆங்காங்கே சில கேள்விகள் எழத்தான் செய்கிறது.

அனைத்து ஹீரோக்களையும் வைத்து படம் எடுக்கணும்…
ஆனா தனித்தனியா இல்ல ஒரே கதையில் எல்லாரும் வரணும் அப்படீங்கறத்துக்காகவே கதை பின்னப்பட்டிருக்கிறது அப்பட்டமாக தெரிகிறது. மார்வெல் படங்களில் வருவது போல…

திரு. ஜாக்கி ஸ்ராப், திரு. ஷிவ ராஜ்குமார் மற்றும் திரு. மோகன்லால் ஆகியோர் சிறிய வேடங்கள் ஏற்று நடித்திருந்தாலும் அவர்களுள் திரு. லால் தான் மனசில் நிற்கிறார்.

திரு. யோகிபாபு அவர்களின் நடிப்பு எதார்த்தம் மற்றும் எகத்தாளம்  நிறைந்ததாக இருக்கிறது. அவர் பாரதியார் சொன்னதாக சொல்வது காமெடியாக இருந்தாலும் அவரை எப்படி அப்படி சொல்ல விட்டார் இயக்குனர் என்று எண்ணி முடிக்கும் போது அதற்கு தக்க பதில் கொடுக்கிறார் தலைவர். அப்போது வாயை மூடும் யோகிபாபு அதன் பின் பாரதியை தொந்தரவு செய்யவில்லை.

வில்லனாக வரும் வர்மன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மலையாள நடிகர் திரு. வினாயகன் நடிப்பு சிறப்பு. தரமான வில்லன் தர்மம் கேட்டு பத்து ரூபாய் வாங்கி நிமிர்ந்து பார்க்கும் பார்வையில் வெளிப்படுத்தும் வஞ்சம் அபாரம்.

ஒரே ஒரு பாடலுக்காகவும், மூன்று சீன்களுக்காகவும் மட்டுமே வரும் தமன்னா அவருக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை குறையேதுமின்றி சிறப்பாக செய்துள்ளார். இருந்தும் பாவம் படத்தோடு ஒட்டவில்லை.

இங்கு நான் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு விஷயம் என்னன்னா…
இந்த படம் வெளிவருவதற்கு முன்னால் தமன்னா வரும் அந்த பாடல் “காவாலயா” பெரும் ஹிட் ஆச்சு இல்லையா. அப்போ ஒரு தோழர் அந்த பாடலையும் அதில் திரு ரஜினி அவர்களின் டான்ஸையும் கேலி செய்து ஒரு வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். ஆக்சுவலி ஏன் ரஜினி அப்படி ஒரு ஸ்டெப் போடுகிறார் என்றும் அந்த பாட்டில் ஏன் அவர் அப்படி ஒட்டாது இருக்கிறார் என்றும் படத்தைப் பார்த்தால் நமக்கு புரியும்.

ரம்யா கிருஷ்ணன் இன்னும் கொஞ்சம் நடித்திருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கு எப்படின்னு படம் பார்த்தவர்கள் பதிவிடுங்கள். வேற ஒன்னும் சொல்லுறதுக்கில்ல.

ரஜினியின் மகனாக நடித்திருக்கும் வசந்த் ரவியும் என்னைப் பொருத்தவரை அந்த கதாபாத்திரத்தில் ஒட்டவில்லை.

திரு சரவணன் மிக அனாயாசமாக அவர் கதாபாத்திரத்தை செய்திருக்கிறார். ஆனால் அவர் அந்த சிலை கடத்தல் கூட்டத்திற்கு கொடுக்கும் பில்ட் அப் கொஞ்சம் கதையிலும் இருந்திருக்கலாம். கதையை மேலோட்டமாக சொல்லியிருப்பது ஏற்றுக்கொள்ளும் படி இல்லை… சரி என்ன செய்ய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் நபர்களுக்கு முக்கியத்துவம் குடுக்க வேண்டுமெனில் சற்று கதையை மேலோட்டமாக தான் காட்ட முடியும் போல!

விடிவி கணேஷ் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை சரியாக செய்துள்ளார். ஆனால் அவர் வரும் இடத்தில் கதை தான் நம்பும் படி இல்லை. மேலும் ரஜினியின் குடும்பத்தினர் எந்த கேள்வியும் கேட்காது இருந்தது நம்முள் பல கேள்விகளை எழுப்புகிறது. நடந்தே பெங்களூர் சென்றுவிட்டதாக கூறுவதையும், வில்லன் வந்து கதவை தட்டி பத்து ரூபாய் பிட்சை கேட்டதையும்  எவ்வித கேள்வியும் எழுப்பாமல் சர்வசாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள்! இப்படியுமா இருப்பார்கள்!

படம் என்ன சொல்ல வருகிறது
மகனின் இழப்புக்கு பழிவாங்கும் தந்தையை பற்றியா
சிலை கடத்தல் கும்பல் பற்றியா
ஆந்திரா கோவிலில் இருக்கும் அந்த கிரீடத்தின் வரலாறு பற்றியா
பக்கத்து மாநிலங்களின் ஹீரோக்கள் பற்றியா
இல்லை ஜெயிலர் ஆக இருந்தால் அனைத்து பெரும் ரவுடிகளுடன் எளிதாக கனெக்ட் ஆக முடியும் என்பது பற்றியா?

மொத்தத்தில் திரு நெல்சன் எழுதி இயக்கிய ஜெயிலரிடம்
லாஜிக் இருக்கு ஆனா இல்ல!
கட்டாயம் மேஜிக் இருக்கு
அந்த மெஜிஷியன் நம்ம தலைவர் தான்.
ஏன்னா மூன்று மணிநேரம் போனதே தெரியலையே!

இது போல் இனி வரும் படங்களில் முக்கிய குணசித்திர கதாபாத்திரம் ஏற்று நடித்து அதில் இன்றைய இளைய தலைமுறை நடிகர்களுக்கும் வாய்ப்பளித்து அவர்களுடன் இணைந்து திரு அமிதாப் போல் நடித்து வந்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும்.

ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற ஐயம் இனி இயக்குனர்களுக்கு துளியும்  வேண்டாம். நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். தாத்தாவாக காண்பித்தும் ஏற்றுக் கொண்டு விட்டோமே பின்பு எதற்கு ஐயம்.
தாத்தா ஆனாலும் சரி கொள்ளு தாத்தா ஆனாலும் சரி தலைவர் எப்பவுமே தலைவர் தான். அவருக்கு நாங்க எப்பவுமே ரசிகர்கள் தான்.

ஜெயிலர் ஜெயிப்பார்.

-நா. பார்வதி

கணவன் இறந்த பிறகு நிலங்களை விற்று, ஊறுகாய் வியாபாரம் செய்து எப்படியாவது தனது ஒரே மகனை வளர்த்து ஆளாக்க அரும்பாடு படுகிறார் கண்ணம்மா.

அவளின் கஷ்டங்களை சிறிதும் புரிந்துக் கொள்ளாத / புரிந்துக் கொள்ள விரும்பாத மகனாக தனது மகன் இருந்தாலும்,
தாய்மை அவளை பாசம் என்னும் சிறைக்குள் அடைத்து வைக்கிறது.
பெற்றவளை தன் வீட்டு வேலைக்காரி என்று பள்ளி நண்பர்களிடம் கூறிய மகனையும் மன்னிக்க வைக்கிறது.
தன்னையும் தன் ஊறுகாய் வியாபாரத்தையும் மகன் வெறுத்தாலும் அவனை எவரிடமும் விட்டுக்கொடுக்காத தாயாக கண்ணம்மா.

வேதனைகளை மனம் என்னும் கூண்டுக்குள் போட்டு பூட்டி வைத்துக்கொண்டு வெளியே அப்பத்தாவாக கிராமத்தில் அனைவருக்கும் தன்னால் ஆன உதவிகளை செய்து வருகிறார்.

மகன் நன்றாக படித்து சென்னையில் பெரிய உத்தியோகத்தில் சேர்ந்து தன் தாயிடம் கூட சொல்லாமல் தன்னுடன் பணிபுரியும் ஒரு வடமாநில பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான்.

தனது மகன் மீது வைத்திருக்கும் பாசத்தால் எதிர்த்து ஏதும் பேசாது அதையும் ஏற்றுக் கொண்டு, பேரப்பிள்ளை பிறந்ததும் ஓடிச் சென்று குழந்தையை பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பியவள் அதன் பின் மகன் வீட்டிற்கு போகவில்லை. அவனும் தன் அம்மாவை வரச் சொல்லி அழைக்கவும் இல்லை.

ஊரில் யார் கேட்டாலும் மகன் ரொம்ப பிசி என்றும் தினமும் இரவில் ஃபோனில் தன்னுடன் பேசுவதாகவும் கூறி ஊர் வாயை அடைக்க அவள் பேசும்போது அவளின் மனம் அழுவதை நம்மால் உணரமுடிகிறது.

பின்ன ஊர்வசின்னா சும்மாவா. அவங்க நடிப்பு அப்படி.

இப்படியாக ஊருக்கு வேஷம் போட்டுக்கொண்டு உள்ளுக்குள் குமுறும் அப்பத்தாவை திடீரென சென்னைக்கு வரும்படி அழைக்கிறான் மகன்.

தனது ஊறுகாய் வியாபாரத்தை தனது தோழியிடம் விட்டுவிட்டு பத்து வருடங்கள் கழித்து
மகனையும், மருமகளையும், பேரப்பிள்ளையையும் காண போகும் ஆசையை, ஆவலை பலகாரங்களாகவும் ஊறுகாய்களாகவும் கட்டி சுமந்துக் கொண்டு செல்கிறாள் அப்பத்தா.

அங்கே சென்றதும் தான் அவளுக்கு தெரிய வருகிறது அவளை சென்னைக்கு மகன் அழைத்ததற்கான காரணம். அதிர்ந்து போகிறாள். ஆனாலும் அசரவில்லை.

மகனின் வீட்டிற்கும் அவன் வீட்டின் நாய்க்கும் காவலாளி ஆகிறாள் அப்பத்தா. அவளின் சிறு வயதில் அவளை நாய் கடித்ததால் நாய்கள் என்றாலே ஓட்டம் எடுக்கும் அப்பத்தா என்கிற கண்ணம்மா தன் மகன் வீட்டில் வளர்க்கப்படும் நாயுடன் தனியாக எப்படி இருக்கப் போகிறாள் என்பது தான் கதை.

அதை மிக சிறப்பாக கையாண்டு நகைச்சுவையோடு புதைந்து கிடந்த மனச் சுமையை கலந்து மனதில் பதிய வைத்திருக்கிறார்கள். எந்த நாயை கண்டு அப்பத்தா பயந்து ஓடினாளோ கடைசியில் அதுதான் அவளுடன் செல்கிறது.

சில அப்பார்ட்மெண்ட் நகைச்சுவை காட்சிகள் நமக்கு ஏற்கனவே ஒரு படத்தில் பரிட்சயமான காட்சிகள் தான்.
அதில் முதியவர் இதில் மூதாட்டி! பழைய வீட்டுக்கு அடிக்கப்பட்ட புதிய நிற சாயம் அவ்வளவே.

திரைப்படத்தில் நடித்த அனைவருமே கச்சிதமாக அவரவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்துக்கு ஏற்ப அளவாக நடித்து ரசிக்க வைத்துள்ளனர்.

கிராமத்து காட்சிகள் அனைத்தும் மலையாளப் படம் பார்க்கும் உணர்வை அளிக்கிறது. அதற்கு காரணம் இயக்குனர் பிரியதர்ஷன். இயற்கை நம்மை கண்ணில் ஒத்திக் கொள்ள வைக்கும் ஓவியமாக காட்சியளிக்கிறது.

நன்கு படித்து நல்ல வேலையில் இருக்கும் மகன் என்னத்தான் வெறுப்பு இருந்தாலும் பொதுவில் அப்படி நடந்துக் கொள்வாரா? ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு என்பது இந்த காட்சிக்கு கட்சிதமாக பொருந்தும். அது படிப்பு, பதவி, இடம், காலம் என எதுவும் பார்க்காது போல! என்று தான் நம்மை நினைக்க வைக்கிறது.

பாசம் வைத்தால் மோசம் போவோம் என்று ஒரு பேச்சு உண்டு.

ஆனால் தன்னலமற்ற உண்மையான பாசம்
என்றுமே மோசம் போகாது என்பதற்கு இந்த படம்
ஒரு சிறந்த உதாரணம்.

மகனுக்காக மெழுகு போல் உருகும்
அப்பத்தா அன்பின் அடையாளம்.

-நா. பார்வதி. பார்வதி



ஒரு கதை கதாநாயகனாக இருந்தால் அந்த திரைப்படம் மணிமகுடம் சூடும் என்பதை எடுத்துரைத்துள்ளார் “மகாராஜா”.

கதையை நகர்த்திய விதம், காட்சிகள் பின்னப்பட்ட விதம், அதை நூடுல்ஸ் போல் சிக்கல்கள் ஏதுமின்றி கோர்வையாக வழங்கிய விதம் என்று ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு குறையாமல் பார்வையாளர்களுக்கு விருந்தளித்துள்ளார் “மகாராஜா”.

“மகாராஜாவிடம்” நான் கொடுக்க நினைக்கும் மனு ஒன்று தான். அது என்னவென்றால் கதை நன்றாக நகர்ந்தாலும் காரணம் அதே பழைய பல்லவியாக இருப்பது சற்று வருத்தத்தை தருகிறது என்பதாகும். காரணத்தையும் மாற்றியமைத்து இருக்கலாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

ஒருவருக்கு குப்பையாக/தேவையற்றதாக தோன்றும் ஒரு பொருள் அல்லது விஷயம் வேறொருவருக்கு மிகவும் முக்கியமான பொக்கிஷமாக இருக்கக்கூடும் என்பதையும் “மகாராஜா” உணர்த்தியுள்ளார்.

விஜய் சேதுபதி என்றாலே வித்தியாசம். அவர் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.
பீட்சாவில் தொடங்கிய பயணம் அவரை மகாராஜாவாக மகுடம் சூட்டிக் கொள்ள வைத்ததிருப்பது அவர் தேர்ந்தெடுத்த கதைகள் என்பது எவராலும் மறுக்க முடியாததாகும்.

நடிகனை கொண்டாடுவதை விடுத்து
கதையை கொண்டாடினால் இன்னும் பல நல்ல திரைப்படங்களை திரையில் காணலாம்.

“மகாராஜா” மனம் என்னும் வனத்தின் அரிமா.
-நா‌. பார்வதி

மார்கழியில்
மலர் விழிகள் அயர்ந்தாலும்
மாதவனின் முக மலர்ச்சியில்
மயங்கிய கோபியர்கள்
மாதவனின் துயில் கலைக்க மனமின்றி
மயங்கி நின்றனர்.

எப்படி…

படித்தவர்களை விட படிக்காதவர்/ படிப்பை பாதியில் நிறுத்தியவர் தான் பெரிய தனவான்களாகியிருக்கிறார்கள் எனவே படிப்பு முக்கியமில்லை என்ற ஒன்றை பரப்பி வந்தனரோ!

அதே போல்…

காசு பணம் பதவி வீடு வாசல் இருந்து என்ன? ஒரு இயற்கை சீற்றத்தில் எல்லாம் போய்விடும் என்பதையும் பரப்பி வருகின்றனர்.

இவ்வாறான கருத்துகள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது.

படிப்பின்றி உயர்ந்தவர்கள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்காமல் இருக்கிறார்களா?

இல்லை இயற்கை சீற்றத்தில் எல்லாம் போய்விடும் என்பதற்காக பொன் பொருள் வீடு வாசல் என்று வாழாமல் இருக்கிறார்களா?

பின்பு எதற்கு இப்படி ஒரு கூற்று உலா வருகிறது?

தவறு என்பது தெரியாமல் செய்வது
தப்பு என்பது  தெரிந்து செய்வது
தவறு செய்தவன் திருந்த வேண்டும்
தப்பு செய்தவன் வருந்த வேண்டும்
அவ்வாறு திருந்தவோ /வருந்தவோ செய்யாது
செய்த தவற்றை/ தப்பை எவரேனும் எடுத்துரைக்கும் போது
அதை நியாயப் படுத்த பல யுக்திகளை கையாள்வது
தன்னை தானே ஏமாற்றிக் கொள்வதற்கு சமமாகும்
மீண்டும் அதே தவறு/தப்பு தொடர்ந்திடும்.

மனிதனாய் பார்த்து திருந்தாவிட்டால் /வருந்தாவிட்டால் தப்பும்/தவறும் தாண்டவம் ஆடும்🛑

இசைஞானி இளையராஜா அவர்களின் வயதோ எழுபத்து ஆறு
அவரின் இசையோ என்றும் பதினாறு

அன்பு, பாசம், காதல், அக்கறை, பொறுப்பு, ஒற்றுமை என்ற வகையிலும்

குரோதம், கோபம், துக்கம், பொறாமை, அதிர்ச்சி என்ற வகையிலும்

கிண்டல், கேலி, வம்பு, சண்டை, போட்டா போட்டி என்ற வகையிலும்

கும்மி, கதக், பரதம், குச்சிப்புடி, கதகளி, கரகம் என்ற வகையிலும்

அவர் இசையமைத்த பாடல்கள் ஆயிரம் ஆயிரம்
அவையனைத்தும் நம் மனதில் பிடித்தது நீங்கா இடம்

இசையே
இசைஞானி இசைத்ததால் தான்
இன்னிசை என்றானதோ!

இசைஞானி பாடியதால்
பாட்டும்
தென்மேற்கு பருவ காற்றாக வீசியதோ!

பூ மாலையே தோள் சேர வா
போன்ற பல பாடல்கள் நம் தோள்களை வருடி சென்ற இளம் தென்றல்

ஒரு பூங்காவனம் புதுமணம் போன்ற பல பாடல்கள் நம்மை அமர்த்தியது இசை என்னும் பூங்காவனத்தில்

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல,
ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது,‌
தென்றல் வந்து என்னை தொடும்,
சுந்தரி கண்ணால் ஒரு சேதி,
தூங்காத விழிகள் ரெண்டு,
தேனே தென்பாண்டி மீனே இசை தேனே,
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு,
வானிலே தேன்னிலா,
இது ஒரு பொன் மாலை பொழுது,
பூங்கதவே தாழ்திறவாய்,
கண்மணியே காதல் என்பது கற்பனையோ,
இளைய நிலா பொழிகிறது இதயம் வரை நனைகிறது,
வழிநெடுக காட்டு மல்லி
போன்ற பல ஆயிரம் பாடல்களின்
இசையால்
நம்மோடு என்றும் உறவாடும்
ஓர் ஞானி
நம் இசைஞானி அவர்கள்.

இசை, மொழி, குரல் ஒன்றென கலந்தால் அது பாட்டு
அத்தகைய பாட்டுக்கு ஓர் தலைவர் அவர்
மொழியின்றி, குரலின்றி
மௌன ராகம், புன்னகை மன்னன், நாயகன், அக்னி நட்சத்திரம், தளபதி போன்ற படங்களின்
பின்னணி இசையால் நம்மை கட்டிப்போட்டவர்.
இன்றும் நம்முள் பலரின் கைபேசியின் அழைப்பு ஒலியாக ஒலித்துக் கொண்டிருக்கச் செய்தவர்.

நம் மனதுக்கு மருந்தாக
நம் துக்கத்துக்கு துணையாக
நம் தூக்கத்துக்கு தூணாக
நம் மகிழ்ச்சிக்கு மத்தாப்பாக
நம் வீட்டு விஷேங்களுக்கு விருந்தாக
நம் நட்புக்கு நந்தவனமாக
நம் அன்புக்கு அரவணைப்பாக
அவர் இசை ஒலித்து கொண்டிருந்தது
ஒலித்து கொண்டிருக்கிறது
இந்த பிரபஞ்சம் உள்ள வரையில் இசைஞானியின் இசை எங்கும் என்றும் ஒலித்துக் கொண்டே தான் இருக்கும்.

வகை வகையாக ஆயிரம் இசை வந்தாலும்
இசைஞானியின் இசையை மறைக்கவும் முடியாது
மறக்கவும் முடியாது🛑

“நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்”

பழைய மொழி என்றாலும் இப்போது நம்மூர் உணவகங்களின் உணவுப்பட்டியல் அட்டையில்  முளைத்திருக்கும் இதன் வகைகளை பார்க்கும் போது “அட ஆமாம்” என்று தான் சொல்ல தோன்றுகிறது.

ஒரு பத்து வருடங்களுக்கு முன் தேங்காய் சட்டினி என்றால் அதில் தேங்காய், பொட்டுக்கடலை, பச்சைமிளகாய் மற்றும் உப்பு தான் இருந்தது. மெல்ல அதில் பூண்டு சேர்க்கப்பட்டது. இப்போது நம்மூரில் இருக்கும் பெரும்பாலான   உணவகங்களில் இந்த பூண்டு தேங்காய் சட்டினி தான் எல்லா பதார்த்தங்களுக்கும் பரிமாறப்படுகிறது. அதை நம்மவர்கள் பெருமிதத்தோடு ஏற்றுக்கொண்டு விட்டார்களா? இல்லை வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார்களா!

பின்பு மெல்ல வட இந்திய உணவான சென்னா மசாலா உள் நுழைந்தது. அதனை தொடர்ந்து சாட் ஐட்டம்ஸ், சப்ஜி, ரொட்டி, நான் வகைகள் என பின்னாளில் அதுவே நமது உணவகங்களின் உணவுப்பட்டியல் அட்டையை ஆக்கிரமிப்பு செய்தது. இப்போது உணவகங்கள் மட்டுமின்றி பல திருமண நிகழ்வுகளில் கூட இவைகளே வழங்கப்படுகிறது.

ஆனால் நாம் வட இந்தியாவிற்கு சென்றோமேயெனில் ஒரு சில நகரங்களை தவிர மற்ற எங்குமே நமது தென்னிந்திய உணவு கிடைப்பது மிக மிக அரிதான ஒன்றாகும். எங்கு சென்றாலும் அவர்கள் ஊர் பதார்த்தங்கள் தான் கிடைக்கும். அதே போல் அவர்கள் திருமண விழாக்களில் நமது தென்னிந்திய உணவு வகைகளை புகுத்தாது அவர்களின் பாரம்பரிய உணவு வகைகளையே இன்றளவும் வழங்கி வருகிறார்கள். அவ்வாறு அவர்களின் பாரம்பரிய உணவு வகைகளை வழங்குவதில் அவர்கள் யாரும் கௌரவ குறைச்சல் என்று எண்ணாததால் தான் இன்றளவும் மாறாமல் இருக்கிறார்களோ? சிந்திக்க வேண்டிய விஷயம்…

வட இந்திய உணவை தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன் இடம்பெற ஆரம்பித்த இந்த “காளான்”, தனது முதல் அடியை சூப்பில் இருந்து துவங்கியது. பின் அதற்கான தனி இடத்தை உணவகங்களின் உணவு பட்டியலில் பெற்றது. இப்போது எங்கும் “காளான்” எதிலும் “காளான்” என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது. சென்ற மாதம் நமது சென்னையில் பல கிளைகள் வைத்து இயங்கி வரும் பிரசித்தமான உணவகம் ஒன்றில் மத்திய உணவு உண்ண சென்றிருந்தோம். அனைவருக்கும் மீல்ஸ் ஆர்டர் செய்து காத்திருந்தோம். மீல்ஸ் வந்தது. அதில் ஒன்றில் இந்த மஷ்ரூம் எனப்படும் காளான் இருந்தது. உடனே அந்த ஹோட்டல் மேலாளரை அழைத்து “முதலில் தேங்காய் சட்டினியில் பூண்டு சேர்த்தீர்கள் , பின் வட இந்திய உணவுகளை திணித்தீர்கள் அவைகளை தட்டிக் கேட்காததால்  இந்த காளானை இணைக்க துவங்கியுள்ளீர்களா?” என்று  கேட்டதற்கு, “காளான் ஒரு வெஜிடபிள் என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது அதனால் தான் நாங்கள் உணவில் சேர்த்தோம்” என்றார்.

இது என்ன அந்நியாயம்? இதை யாரும் கேட்கவில்லையா? பூண்டு, வட இந்திய உணவு, காளான் ஆகிய உணவு வகைகளை சாப்பிடக் கூடாது என்றோ அல்லது அவை உணவகங்களில் விற்பனை செய்யக்கூடாது என்றோ நான் கூறவில்லை. ஆனால் அவற்றை சேர்ப்பதற்கு முன் உணவருந்த வருபவர்களிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு பறிமாறலாமே என்று தான் சொல்ல விழைகிறேன்.

இன்னமும் நமது தென்னிந்திய பாரம்பரிய உணவு வகைகளை மதிப்பவர்களும், உண்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று அந்த மேலாளரிடம் சொல்லிவிட்டு உண்ணாமல் எழுந்து வந்தோம். இதை, பூண்டு உள் நுழைந்ததும் செய்திருக்க வேண்டுமோ? 

கண்ட இடத்தில் கண்டபடி வளர்ந்து வந்த காளானுக்கு கை கால் முளைக்கச் செய்து சமையலில் ஒரு அந்தஸ்த்தை கொடுத்து கௌவுரவப்படுத்தி வருகின்றனர் நம்ம ஊர் உணவகங்கள். காளான் வளரும் இடத்தை வைத்து அதற்கு வட இந்தியர்கள் வைத்திருக்கும் பெயர் “குக்குர்முத்தா” (இதன் அர்த்தம் தெரியாதவங்க கேட்டு தெரிஞ்சுக்கோங்க).

நமது நாட்டில் நல்ல‌ காய்கறிகளுக்கு பஞ்சம் வந்துவிட்டதா? இல்லை நம்மூர் காய்கறிகள் உண்டு அலுத்து விட்டதா? நாம் ஏன் நமது பாரம்பரிய உணவு முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்? இல்லை நமது பாரம்பரிய உணவு உட்கொள்வதை கௌரவ குறைச்சலாக நினைக்க வேண்டும்? 

பாரம்பரிய உணவுகளையும், முறைகளையும், கலாச்சாரத்தையும் மாற்றி அமைத்துக் கொள்ள முயன்றால் அங்குமில்லை இங்குமில்லை என்ற திரிசங்கு நிலைமை தான் உருவாகும்.(அது உருவாகி சில ஆண்டுகள் ஆகிவிட்டன என்று உங்கள் உள்ளக் குமுறல் கேட்கிறது) அதற்காக இவைகளை உண்ணக்கூடாது என்றோ இல்லை சுவைக்க கூடாதென்றோ நான் கூறவில்லை. அதை எல்லாருக்கும் திணிக்காதீர்கள் என்று தான் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அந்தந்த ஊர் அதன் சீதோஷ்ண நிலை எல்லாம் வைத்துதான் அந்தந்த ஊருக்கான உணவு பழக்கவழக்கங்களை நம் முன்னோர் வகுத்து வைத்துள்ளனர்.  நாகரீகம் என்ற பெயரில் முன்னோர் வாக்கு, முன்னோர் பழக்கவழக்கங்களை புறக்கணித்து விட்டு இப்போது குதிரைவாலி அரிசி, ராகி என்று கட்டிப்புறல்வதும் ஏனோ! அவற்றை விளம்பரபடுத்தி அதிலும் கலப்படம் செய்ய முயல்வதும் ஏனோ!

தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்ட இந்த “காளான்” நமது உணவகங்களை ஆக்கிரமிப்பு செய்திருப்பது நல்லதா?

வீட்டு உணவே மருந்து. அதை வீட்டில் சமைத்து உண்பதே அருமருந்து.

__________________________________________________________________

புதுமைப்பித்தன் கதைகள்
“செல்லம்மாள்”

கதையின் நாயகியான செல்லம்மாள் பெயரற்ற வெற்றுடம்பு ஆனதும்
உற்றார் உறவினருக்கு ஐநூறு மைல் தூரத்தில் தன்னந்தனியாக அவளின் உயிரற்ற உடலுடன் இருந்த
பிரமநாயகத்துக்கு வியர்வை மழை போல் மேனி முழுவதும் பொழிந்தது
அது பெருக்கெடுத்து ஏரியை உடைத்து பாய்ந்து வரும் ஆறாகவும் மாறியது
இருந்தாலும் அதை துடைத்துக் கொண்டு
சகதர்மிணியின் மரணப் பிரிவினால் நிலைகுலையாது
தன்னவளுக்கு அவளின் துன்பச் சுமையில் இருந்து விடுதலை கிடைத்ததை எண்ணி அவர் மனம் நிம்மதி பெருமூச்சு விட்டது.

அப்படி என்ன அவளின் துன்பச் சுமை? எதனால் அவர் அவ்வாறு எண்ணுகிறார்? என்பதை விளக்கும் கதை தான் செல்லம்மாள்.

அவ்வாறு எண்ணி நிம்மதியடைய பிரமநாயகம்  யோகியோ அல்லது போதி மரத்தடியின் ஞானியோ அல்ல
வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகளை கடந்து வந்ததில் அவருக்கு ஏற்பட்ட மன பக்குவம்
அவரை அந்நிலையிலும் நிலை குலையாமல் இருக்கச் செய்துள்ளது.

கதை மெல்ல பிரமநாயகத்தின் குடும்ப விவரங்களை விவரிக்கிறது.
குடும்பத்தில் நான்காவது பிள்ளையான பிரமநாயகம் படிப்பில் சுட்டி என துவங்கி அவரது பால்ய பருவத்தை சற்றே மேற்கோளிட்டு காட்டி அப்படியே செல்லம்மாளை கரம் பிடித்த நாளுக்கு நகர்கிறது.

திருமணமான சில நாட்களில் பிரமநாயகத்தின் தகப்பனார் இறைவனடி சேர்கிறார். சொத்தை  பங்குப்பிரித்தல் என எக்காலத்திலும் நடக்கக்கூடிய விஷயங்களை ஒரே பத்தியில் மிக அழகாக விளக்கி, அவர் செல்லம்மாளுடன் சென்னை வந்து சேர்ந்ததும் பிரமநாயகத்தின் பிறந்த வீட்டின் கதை அத்துடன் நிறைவுறுகிறது.

அதன் பின் பிரமநாயகம் செல்லம்மாள் தம்பதியரின் சென்னை வாழ்க்கை,  அதில் அவர்களுக்கு ஏற்படும் சங்கடங்கள்,  துன்பங்கள், ஏற்ற தாழ்வுகள் மற்றும் செல்லம்மாளின் வியாதி என அனைத்தும் ஒரு சேர அவர்களை அக்னி பரீட்சை செய்ததாக எழுத்தாளர் ஒவ்வொரு விஷயங்களையும் சம்பவங்களையும்  குறிப்பிட்டு இருப்பதை  வாசிக்க வாசிக்க  வாசகர்களும் அவ்விருவரின் உணர்வுகளை உணரும் விதமாக கதை இருக்கிறது.

அதனை தொடர்ந்து, நோய்வாய் பட்டிருக்கும் தன் மனைவியின் எண்ண ஓட்டங்கள் அவர்களுக்குள்ளே நடக்கும் பேச்சு வார்த்தைகள், கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் உபசரனைகள், கணவனுக்கு எதுவும் செய்ய முடியாது இப்படி நோய்வாய்ப்பட்டு கிடக்கிறோமே என்கிற செல்லம்மாளின் மனத்தவிப்பு, அதெல்லாம் ஒன்றுமே இல்லை உனக்கு நான் இருக்கிறேன் என்று அந்த கணவனின் கவனிப்பு வாசிப்பவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கும்.

பிரமநாயகத்தின் முதலாளி மற்றும் அவர் பிரமநாயகத்துக்கு செய்யும் உதவிகள் பற்றிய விவரங்களையும், மருத்துவர் வருகை, அந்த காலத்தில் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு எப்படி ஊசி போடுவார்கள் போன்ற தகவல்களையும் இக்கதை நமக்கு உரைக்கிறது.

செல்லம்மாள் என்ற பெண்ணை அக்னியை வலம் வந்து மண முடித்த நாளில் இருந்து அவள் தலைக்கு மேல் அக்னி விளகொன்று ஏற்றி வைத்து,
அவள் உயிருடன் இருந்த போதும் அவளுக்கான பணிவிடைகளை செய்த பிரமநாயகம் அவள் உயிரற்ற உடலுக்கும் செய்யவேண்டிய உன்னதமான பணிவிடைகளை செவ்வனே செய்து
அன்று வரை அனைத்தும் அவளென அவளுக்காக வாழ்ந்து
கதையின் தலைப்பையும்  செல்லம்மாளுக்கு தாரைவார்த்து கொடுத்தாலும்
வாசகர்கள் மனதில் பிரமநாயகம் தான் பிரம்மிப்பூட்டும் வகையில் இடம்பெற செய்துள்ளார் எழுத்தாளர்.

மேலும், ஒரு பெண்ணை  திருமணம் செய்து அவள் வாழ்வு நறுமணமாவதற்கு ஒவ்வொரு ஆணும் வெளியே அவர்கள் படும் பாட்டையும் அதை மனைவியிடம் வெளிப்படுத்திக் கொள்ளாது அவளை சந்தோஷமாக வைத்துக் கொள்ள நினைக்கும் அவர்களின் மனதையும்
அந்த பயணத்தில் அவர்களுக்கு ஏற்படும் ஏற்ற தாழ்வுகளையும்
அவற்றை எதிர்கொள்வதனால் அவர்கள் மனம் அடையும் பக்குவத்தையும்
அதனால் அவளுக்கு அவன் செய்யும் பணிவிடைகளையும்
அது அவளின் இறுதி காலம் வரை நிலைத்திருப்பதையும் மிக மிக அழகாக எழுதி சிறப்பான சிறுகதையாக நமக்கு வழங்கி நமது வாசிப்பை ஓர் உணர்வு பிரவாகமாக மாற்றும் நம் புதுமைப்பித்தன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் சமர்ப்பிக்கின்றேன்‌.

இந்த கதையை படிப்பவர்களின் கண்களில் ஒரு சொட்டு கண்ணீராவது நிச்சயம் வரும். இந்த காலத்து பிள்ளைகள் இதை படித்தல் நல்லது. ஏனெனில் இந்த கதை அவர் எழுதியது 1933 டூ 1948க்குள் இருக்கும். அந்த காலத்திலேயே ஒரு பெண்ணை/ மனைவியை எப்படி நடத்த வேண்டும் என்று சொல்லாமல் சொல்லும் கதை இது. இது நிச்சயம் அவர் அறிவுரையாக சொல்வது போல் கதைப் படித்த எனக்கு தெரியவில்லை. அந்த காலத்தில் இப்படித்தான் நடத்தியிருப்பார்கள் அதை பார்த்ததால் தான் அவர் இவ்வாறு எழுதி இருப்பார் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

இந்த காலத்திலும் அதாவது  2024 ல் கூட மனைவியை எப்படி நடத்த வேண்டும் பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்றெல்லாம் மேடைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. பகிர்ந்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் இந்த கதை எழுதி சுமார் 75 அல்லது 90 ஆண்டுகள் ஆகிறது. அப்போதே தன்னை நம்பி கரம் பிடித்தவளை
இயற்கை பிரிக்கும் வரையும்
அவளை
இயற்கையோடு இணைக்கும் வரையும்
அவளை மணமுடித்தவன் நடந்துக்கொள்ளும் பாங்கை மிக எளிய உரைநடையில் சில வர்ணனைகளுடன் ஓடைநீர் போல் அமைதியாக  அவ்வப்போது சில சலசலப்புடன் நகரும் கதை இது.

வாசித்தால் நேசிக்க வைக்கும்.
பாசத்தால் யோசிக்க வைக்கும்.
யோசித்தால் தற்கால நடப்புகளை எண்ணி வருந்த வைக்கும்.
வருந்தினால் மனம் திருந்த வைக்கும்.
திருந்தினால் வாழ்க்கையை சிறக்க வைக்கும்.

என்று புதுமைப்பித்தன்  கதைகள் என்ற நூலில் இருந்து  நான் படித்த செல்லம்மாள் என்ற கதையை பற்றிய என்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளேன்.  படித்து பிடித்திருந்தால் பகிர்ந்து கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்வது
உங்கள் சகோதரி நா. பார்வதி.
     

🙏நன்றி🙏

பலர் பலவிதமாக முகநூல் பற்றி தொடர்ந்து எழுதி /விவாதித்து / கருத்து தெரிவித்து வருகிறார்கள். முகநூல் பழக்கத்தால் பலர் வாழ்க்கையே மாறியுள்ளது என்றும், பலருக்கு தொழில் அபிவிருத்தி அடைந்திருக்கிறது என்றும், இதனால் சிலர் வாழ்க்கை வீணாகிறது என்றும் பல வகையான பதிவுகளை நாம் வாசிக்க நேர்கிறோம். அவை அனைத்தும் அவரவர் கோணத்தில் இருந்து பார்க்கும் போதும் சரி, படிக்கும் போதும் சரி நூறு சதவீதம் உண்மையாக தோன்றலாம். நியாயமாகவும் தோன்றலாம். நன்மையும் தீமையும் கலந்தது வாழ்க்கை மட்டுமல்ல முகநூலும் / சமூக ஊடகங்கள் அனைத்தும் தான். பிரித்தறிய தெரிந்தால் வாழ்க்கையும் முகநூலும் /சமூக ஊடகங்களும் சிறப்பானதாகவே அமையும். ஏன் நான் வாழ்க்கையையும் முகநூலையும் இணைத்து எழுதியுள்ளேன் என்பது உலகறிந்த விஷயம்!

அது ஒரு புறம் இருக்கட்டும். இப்போது இருக்கும் பல முகநூல் குழுமத்தில் ஏதாவது ஒரு தலைப்புக் கொடுத்து அதை ஒட்டி எழுதச் சொல்வது அல்லது ஏதாவது ஒரு கேள்வி கேட்டு அதற்கு விடையளிக்க சொல்வது மற்றும்  சினிமா/ சினிமா பாடல்கள் பற்றிய பல போட்டிகள் என களைகட்டி வருகிறது.

அதில் பலர் கலந்துக் கொண்டு பல பதில்களை அளித்து உற்சாகத்தோடு பங்கேற்கிறார்கள். ஆனால் ஒரு குழுவில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு வெகு சிலரே பதிலளித்துள்ளனர். ஏன் இதற்கு சிலர் மட்டும் பதிலளித்துள்ளனர்? என்ற கேள்வியை என் மனம் என்னிடம் கேட்டது.

மேலும் ஒருவர் அவரை நினைத்து அவரே பெருமை பட்டுக்கொண்ட தருணங்கள் /விஷயங்கள் என்று பலருக்கு பல இருக்கலாம். அவ்வாறு ஒருவர் அவரைப் பற்றியே பெருமை பட்டுக்கொள்வது சரியா? இல்லை தவறா? என்ற கேள்வி ஒரு குழுவில் “உங்களை நினைத்து நீங்களே பெருமைப்படும் ஒரு விஷயம் என்ன?” என்று கேட்டபோது என் மனதில் எழுந்தது. இதில் என்ன தவறு. நம் பெருமை நமக்கு அறியா விடில் பின் எவர் அறிவார் என்ற பதிலும் பட்டென உதித்தது.

நாம் செய்யும் ஒரு நற்செயல் அல்லது நாம் உரைக்கும் நற்சொல் நமக்கு ஒரு வகையான புத்துணர்ச்சி அளிக்கும். ஏதோ ஒரு உத்வேகம் தரும். இன்னும் இதே போல் நிறைய செய்ய வேண்டும் அல்லது பேச வேண்டுமென்று தோன்ற வைக்கும். தீயது மட்டும் போதை அல்ல நல்லதை செய்வதும்/நல்லவர்களாக இருப்பதும் ஒரு வகையான போதை தான். அதை நம் வாழ்வில் ஒரு முறை கடைப்பிடித்து விட்டால் அதன் பின் அது நம்மை தொடர்ந்து செய்ய தூண்டும் என்பது எனது கருத்து. இவ்வகையான போதை நம்மை மேம்படுத்துவதோடு நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் உதவியாக இருக்கும் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. அதுவே நல்லவற்றின் நற்பண்பு. மற்றவர்களுக்கு உதவி செய்யவும், மற்றவர்களை உயர்த்திப் பேசவும் தயக்கம் காட்டாத நாம்! (அதனைச் செய்யாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்களை விட்டுவிடுவோம்) ஏன் நமக்காக நாமே ஒரு விஷயத்தை செய்து கொள்வதற்கோ அல்லது நம்மை பற்றி நாமே உயர்வாக நினைப்பதற்கோ அல்லது  பேசுவதற்கோ மட்டும் அடுத்தவர்களிடம் அந்த பொறுப்பை ஒப்படைக்கின்றோம்! ஏனென்றால் அப்படி செய்தாலோ / பேசினாலோ நாலு பேர் நம்மை பற்றி என்ன சொல்லி விடுவார்களோ! நம்மைப் பற்றி அந்த நாலு பேர் தவறாக நினைத்து விடுவார்களோ போன்ற எண்ணங்கள் தான் நம்மை பற்றி நாமே சொல்லிக் கொள்ள விடாமல் தடுத்து விடுகிறது.

அப்படியே பேசி விட்டாலோ அல்லது எழுதி பதிவிட்டாலோ உடனே தற்பெருமை என்று சிலர் கூற வாய்ப்புகள் நிறைய இருக்கிறது (பல முகநூல் பக்கங்களில் எழுதப்படும்  பின்னூட்டங்களை படித்த அனுபவம்). அவர்களை சொல்லி தவறில்லை.
ஆனால் ஒருவரின் அருமை பெருமைகளை அவரவரே தெரிந்து வைத்து கொள்வதால் நம்மை நாமே அறிந்துக் கொள்வதற்கும், அதை எண்ணி மனமகிழ்வதற்குமான ஓர் நல்வாய்ப்பாகும் என்பதை மறுக்கலாகாது.  நம்மை பற்றி நாம் பெருமை படக்கூடிய விஷயங்களை நாமே அறிந்து வைத்துக் கொள்ளாமல் இருந்தால் எப்படி மற்றவர்கள் நம்மை பெருமை படுத்த வேண்டுமென்று நாம் எதிர்பார்க்க முடியும்!

ஒரு வேலைக்கான நேர்காணலில் உங்களை பற்றி சொல்லுங்கள் என்று கேட்டால் அவர் சொல்வார்… இல்லை இவர் சொல்வார்… அல்லது எனது அருமை பெருமைகளை என் நண்பனை வைத்து கூற வைக்கிறேன் என்ற பதில் உரைத்தால் வேலை கிடைக்குமா? அப்போது அந்த நாலு பேரை பற்றிய சிந்தனை ஏதுமின்றி கடகடவென நம்மைப் பற்றி நாமே பேசுவதில்லையா என்ன?

பெண்ணாக பிறந்ததற்கு எனக்குள் எப்போதுமே ஒரு பெருமை உண்டு. ஏதோ முன்பொரு ஜென்மத்தில் மாதவம் செய்ததால் கிடைத்த இந்த பிறப்பை எண்ணி பெருமை கொள்ளாமல் எப்படி இருப்பது! பொறந்தாலும் பொம்பிளையா பொறக்கக்கூடாது…அப்படின்னு எல்லாம் நான் பாடியதும் இல்லை இனி பாட போவதும்  இல்லை.

நல்லதை தட்டிக்கொடுத்து வளர்த்து, தீயதை தட்டி வைத்து ரூல்ஸ் ராமானுஜி /ஸ்ட்ரிக்ட் சிந்தாமணி (சிலர் கடுப்பில்/ சிலர் எரிச்சலில் / வெகு சிலரே ஆத்மார்த்தமாக கூறுவர்) என்ற பெயர் பெற்றதில்/பெறுவதில் எனக்கு பெருமை தான். வழவழ கொழ கொழ என்றெல்லாம் பேசியதில்லை அவ்வாறு பேசவும் வராது. முகஸ்துதி பாடி பழக்கமில்லை.  புறம் பேசுதல் அறவே பிடிக்காது. அதனாலேயே என்னிடம் பேச ஒன்றுமிருக்காது என்று பல பேர் நெருங்கி பழக மாட்டார்கள். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை மாறாக நான் வித்யாசமானவள் என்ற எண்ணம் தான் எனக்குள் தோன்றும். அதில் தவறென்ன இருக்கிறது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு என்னுடன் பொது விஷயங்கள் பேசுபவர்களோடு மட்டும் பேசி மகிழ்வேன்.

உள்ளதை உள்ளபடி சொல்வதில் சங்கடம் ஆயிரம் இருப்பினும் அப்படி சொல்லிவிட்டால் பிற்காலத்தில் பல சந்தர்ப்பங்களில் அவற்றை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை என்பதை பொய்யுரைக்கும் பலர் அறிந்திராத ரகசியம் என்றே சொல்ல வேண்டும்.

நம்மால் முடிந்த உதவியை செய்து வருவதையும், நல்லதை நாம் செய்தால் நம்மை நாமே தட்டிக் கொடுத்துக் கொள்வதையும், தவறிழைத்தால் (நாம் மனிதப்பிறவி தானே) எவ்வித கூச்சம் /கர்வம்/ தயக்கம் இன்றி அது யாராக இருந்தாலும் (வயதில் சிறியவராக இருந்தாலும்) மன்னிப்பு கேட்பதையும், நாம் நாமாக இருப்பதையும், வெற்றியையும் தோல்வியையும் சமமாக பாவித்து நடந்துக் கொள்வதையும், நமது பொறுமையையும் (இதெல்லாம் மனிதர்களிடமிருந்து மெல்ல மாய்ந்துக் கொண்டிருக்கும் நற்குணங்கள்) எண்ணி நம்மை நாமே ஏன் பெருமையாக எண்ணிக் கொள்ளக்கூடாது!

ஏனெனில் நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்வில் பல தோல்விகள், வெற்றிகள், துரோகங்கள் என கடந்து வந்து இருப்போம் இல்லையா! அப்படி கடந்து வந்த சிலவற்றை/ சிலரை பல முறை பொறுத்து கடந்து சென்றும் இருப்போம். நாட்டுக்கே எல்லை கோடு வகுத்து வைத்திருக்கும் போது நமது பொறுமைக்கும் எல்லை வகுத்துக் கொள்வதில் தவறேதும் இல்லை. அதை ஏதாவது ஒரு நிகழ்வு அல்லது யாராவது ஒருவர் தாண்ட நேர்ந்தால் அதன் பின் அந்த நிகழ்வு அல்லது அந்த மனிதரிடம் இருந்து எவ்வளவு விலகி நிற்க முடியுமோ அவ்வளவு மெல்ல விலகி சென்று விடுவதே நல்லது என்பது தான் எனது பாலிசி.

என்னைப் பொறுத்தவரை முதல் முறை செய்தால் அறியாமை, இரண்டாம் முறை செய்தால் தவறு, மூன்றாவது முறையும் அதையே செய்தால்/சொன்னால் அது தவறுக்கும் மேலே (வேண்டுமென்றே செய்வது). இது உண்மையா இல்லையா?

அவ்வாறு  பிரச்சினை வேண்டாம் என்று ஒதுங்கி செல்பவர்கள் பலரின் விமர்சனங்களுக்கு ஆளாவார்கள்.  அப்படி இருந்தால் நமக்கென நாலு பேர் இருக்க மாட்டார்கள் என்றும், நாம் தனித்து விடப்படுவோம் என்றெல்லாம் கூற பலர் இருப்பார்கள். 

அவ்வாறு சொல்பவர்களில் பலர் தனக்கென தனித் திறமையும், சிந்தனையும், கருத்தும் இருந்தாலும் ஒரு கொடி போல் அடுத்தவரை சார்ந்தே (அந்த நாலு பேருக்காக) அனைத்தையும் செய்வதால் தனி மரமாக வளர முடியாது கொடி போல் தனக்கு தேவையானவர்கள் மீது தொத்திக் கொண்டு படர்வதோடு, தனித்திருக்கும் மரத்தின் மீதும் படர்ந்து அதை வேரோடு சாய்க்க முயல்வர்.  அத்தகையோர் சொல்லை நாம் என்றுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

மேலும், யார் அந்த நாலு பேர்? நல்லது செய்தால் /பிரச்சினையை தவிர்க்க ஒதுங்கி செல்வதால் தனித்து விடப்படுவோமெனில் நான் தனித்து பயணிக்கவே விரும்புவேன். நீங்கள் எப்படி என்று பின்னூட்டம் இடுங்கள்?

“துஷ்டனைக் கண்டால் தூர விலகு” என்று நம் முன்னோர் கூறிய காலத்தில் துஷ்டர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்துள்ளனர். ஆனால் இப்போது!!!

நமது நல்ல குணங்கள் என நாம் பெருமைப்பட்டுக் கொள்வது நம்மை நாமே ஓரளவு அறிந்து வைத்துக் கொண்டுள்ளதற்கான சான்றாக தான் நான் கருதுகிறேன். இதில் தவறேதும் இருப்பின் நம்மைப் படைத்த அந்த கடவுள்/ நம்மைப் பெற்றெடுத்த நம் தாய் தந்தை/ நாம் பெற்ற நம் பிள்ளைகள்/ காலநேரம் / நம்மைச் சுற்றியுள்ள நல்லுள்ளங்கள் உணர்த்தினால் அல்லது எடுத்துரைத்தால் அவற்றை மறுபரிசீலனை செய்து இன்னும் நம்மை பற்றி நாம் அறிந்துக் கொண்டு, நம்மை நாம் நல்வழியில் செதுக்கிக் கொள்வோம்! நம்மை நினைத்து நாமே பெருமை பட வேண்டிய பட்டியலில் இணைத்தும் கொள்வோம்.😊

இவ்வாறு நாம் ஒவ்வொருவரும் அவரவரிடம் இருக்கக்கூடிய நல்லதை எண்ணி மார்தட்டிக் கொண்டும், தீயதை மாற்றி கொண்டும், நம்மை நாமே நல்வழி படுத்திக்கொண்டால் நம் வீடும் நாடும் சிறந்து விளங்கும். நம் வாழ்க்கை நம் கையில்.🙏

– நா. பார்வதி

மையின் சாரல்கள் வாசகர்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். எனது இந்த புத்தக வெளியீட்டு விழாவின் போதும், அதன் பின் குறுஞ்செய்தி மற்றும் கைப்பேசியில் என்னை அழைத்தும்,  “இழுக்கும் மாயோள்” அப்படின்னா என்ன? என்றும் அதை ஏன் கதைக்கு தலைப்பாக வைத்திருக்கிறீர்கள்? என்றும் சிலர் என்னிடம் கேட்ட கேள்வியை எனது முகநூல் நண்பர் ஒருவர் எனது முகநூல் பக்கத்தில் இன்று கேட்டுள்ளார். அது மட்டுமல்ல கதைக்கு ஏன் எழுத்தாளர் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்துள்ளார்? என்றும் எதனால் அப்படி ஒரு தலைப்பு வைத்திருக்கக் கூடும் என்றும் முனைவர் திரு. திருப்பூர் கிருஷ்ணன் அவர்களே கேள்வியும் கேட்டு அதற்கான பதிலும் சொல்லி, அதுவாக தான் இருக்கும் என்று நினைப்பதாக விழாவில் கூறினார். அவரது கணிப்பு சரி தான்.(பிழையாக வாய்ப்பு உண்டா என்ன?)  என்றாலும் அதற்கான விளக்கத்தை கொடுக்க வேண்டிய கடமை கதையை எழுதிய எனக்கு இருக்கிறதல்லவா. இதோ அதற்கான எனது விளக்கம்…

“இழுக்கும் மாயோள்” – மாயன், மாயோன் என்ற பெயர்கள் எல்லாம் கிருஷ்ணர், கண்ணன் அல்லது திருமாலை குறிக்கும் பெயர்கள் இல்லையா. இது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். எனது கதையில் மாயோன் செய்த மாயைகளை மாயோள் செய்கிறாள்‌. எனது நண்பரை போலவே மாயோள் ன்னா? அப்படின்னு  கேட்டவர்களும் உண்டு. மாயோள் என்றால் பெண், கருநிறமுடையவள் என்று பொருள்படும்.

அதாவது கருங்கல்லில் ஒளிந்திருக்கும் சிற்பத்தை வெளிக்கொண்டு வரும் வித்தகன் போல் வெளிவர முடியாதவாறு மறைந்திருக்கும்  உண்மையை/ ஓர் அழகிய சிற்பத்தை ஒரு புத்தகம் மூலம் வெளிக்கொண்டு வருவதே எனது மாயோள் செய்யும் மாயம்.
அவளின் மாயையில் வாசகர்கள் இழுத்துச் செல்லப்படுவது  நிச்சயம்.

கதைக்கு இந்த தலைப்பை தேர்ந்தெடுத்ததற்கான விளக்கத்தை விளக்கி அனைவருக்கும் புரிய வைத்திருக்கிறேன்
என்ற நம்பிக்கையில்
உங்கள் சகோதரி…
நா. பார்வதி
🙏நன்றி🙏

கடவுளின் அருள், பெரியவர்களின் ஆசி, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வாழ்த்து என அனைத்தும் ஒன்று சேர்ந்து “இழுக்கும் மாயோள்” புத்தக வெளியீட்டு விழாவை சிறப்புற செய்தது என்பதை எனது வலைத்தள வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயற்தமிழ், இசைத்தமிழ் மற்றும் நாடகத் தமிழ் என முத்தமிழும் ஒன்றாக இணைந்திருந்த மேடையில் நான் நின்று பேசுவதற்கே என்றோ எங்கோ மாதவம் செய்திருக்க வேண்டும். இதில் முத்தமிழின் முத்துக் கரங்களால் எனது புத்தகம் வெளியிடப்பட்டது என்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. இந்த விழா இவ்வளவு சிறப்பாக நடந்தேறியது என்றால் அதற்கான அனைத்து சிறப்புகளும் விழாவுக்கு வருகை தந்து புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றிய சிறப்பு விருந்தினர்களையே சேரும்.

கலைமாமணி திருமதி. பாரதி திருமகன், கல்லூரி முதல்வர் முனைவர் திரு. திருமகன், முனைவர் திரு. கலைமகன் மற்றும் அவர் குழுவினர் என அனைவரும் நிகழ்ச்சிக்கு வருகை தந்து, “இழுக்கும் மாயோள்” கதைக்கு ஓர் கதை இயற்றி, கதையில் வரும் கதாபாத்திரங்களில் திருமதி பாரதி திருமகன் அவர்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரத்தை விவரித்து, அதில் அவர் மனதை தொட்ட விஷயங்களையும், ரசித்த பக்கங்களையும், கதை சொல்லாமல் சொன்ன கருத்துக்களில் அவர் விரும்பிய கருத்துக்களையும் மிக அழகாக வில்லுப்பாட்டில் இசைத்து, பாடி, வாழ்த்தி பார்வையாளர்களை நெகிழ வைத்ததோடு, மகிழ்ச்சியில் என் கண்களையும் நனைய செய்தார்.

கலைமாமணி முனைவர் திரு. திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் கதையின் உரைநடை வடிவம் பற்றியும், கதையில் அவருக்கு மிகவும் பிடித்த வரிகளையும், கதையை முடித்திருந்த விதத்தையும், தலைப்பை பற்றியும் சில பிரபலமான சிறுகதைகளை அதற்கு எடுத்துக்காட்டாக கூறி, அத்துடன் சில விமர்சனங்களையும் எடுத்துரைத்து அனைவரும் ரசிக்கும் படியாக சிறப்புரையாற்றினார். இத்தகைய மேதையின் சொற்பொழிவுகளை நேரில் கேட்க வாய்ப்பு கிடைத்ததில்லை. ஆனால் சில மணி துளிகள் என்றாலும் அவரின் சிறப்புரையை அரங்கில் இருந்து கேட்கும் நல் வாய்ப்பு கிடைத்ததற்கும், எனது “இழுக்கும் மாயோள்” புத்தகத்திற்கு ஓர் சிறந்த மனிதரிடம் இருந்து சிறப்புரை கிடைத்ததற்கும், நானும் என் புத்தகமும் பாக்கியம் செய்திருக்கிறோம் என்று சொல்லிக் கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

நாடக எழுத்தாளர், இயக்குனர் தயாரிப்பாளர், கோமல் தியேட்டர் நிறுவனர் திருமதி. தாரிணி கோமல் அவர்கள், “இழுக்கும் மாயோள்” புத்தக வாசிப்பு அனுபவத்தை அனைவருடனும் பகிர்ந்துக் கொண்டார். புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்ததும் கீழே வைக்க விடாது முழுவதும் வாசிக்கச் செய்த கதையின் விறுவிறுப்பு தன்மையையும், கதையின் இறுதி ட்விஸ்ட் பற்றியும், அதில் வந்த கருப்பு நிற பட்டாம்பூச்சிகள் அன்று இரவு முழுதும் அவர் கனவில் வந்ததையும், இழுக்கும் மாயோள் கதை நல்ல வெப் சீரிஸ் எடுக்கத் தக்கதாக இருப்பதாகவும் கூறி வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியின் நெறியாளுநர் பொறுப்பை ஏற்று சிறப்பாக செய்து தந்தார் டாக்டர் திருமதி பிரபா குருமூர்த்தி. பல விருதுகளுக்கும் பட்டங்களுக்கும் சொந்தகாரரும், நமது கலைமாமணி திரு. டி. ஆர். மகாலிங்கம் ஐயா அவர்களின் பேத்தியுமான திருமதி பிரபா குருமூர்த்தி அவர்கள் நடத்தி வரும் சூரியா ஸ்கூல் ஆஃப் மியூசிக் (ஃபார் ஸ்பெஷலி ஏபுள்டு சில்ரன்) மாணவர்களின் மெல்லிசை நிகழ்ச்சியோடு இந்த புத்தக வெளியீட்டு விழா இனிதே நிறைவுற்றது.

முத்தமிழின் மூன்று முத்துக்கள்
மூன்று முத்துக்களின் முத்தான சிறப்புரைகள்
அரங்கு நிறைந்த பார்வையாளர்கள்
அவர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய தருணங்கள்
என அனைத்தும் சேர்ந்த அழகிய பூங்கொத்து
எனது “இழுக்கும் மாயோள்” புத்தக வெளியீடு.

எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.🙏

மண்ணின் தாகம்! வருணனின் தானம்.

இந்த மண்ணுக்கு ஏன் இவ்வளவு தாகம்?
அந்த வருணனுக்கு ஏன் இவ்வளவு பாசம்?

மண்ணின் தாகம்
வருணனின் பாசம்
மழை தானம்.

வருணன் மண்ணின் மீது கொண்ட அதீத அன்பை மழையாய் பொழிகிறார்.
அவர்களுக்குள் இருக்கும் பரஸ்பர அன்பு பரிமாற்றத்திற்கு பெரும் தடையாய் மனிதர்களை நினைக்கிறார்!

மண்ணின் தாகம்
வருணனின் தானம்
இடையில் இந்த ஜனம்!

ஏரி, குளம், குட்டை, மண் சாலை என அனைத்தும் ஆனது கான்கிரீட் நந்தவனம்!
மண்ணை தேடி அவர் செல்ல வேண்டி இருக்கிறது தொலைதூரம்!
அதனால் வருணன் மனதில் எழுந்தது கோபம்.

மண்ணின் தாகம்
வருணனின் தானம்
தடைகளால் எழுந்த கோபம்!

செல்லும் வழியெல்லாம் குப்பைக் கூடம்
மக்காத குப்பைகளும் அதில் அடக்கம்!
மண்ணின் தாகத்தை தணிக்க வருணன் செய்த பாச தானம்
தடையாக இருந்த கான்கிரீட் நந்தவனம்
குவியலாக இருந்த மக்காத குப்பைக் கூடம்
அடித்து சென்றார் அனைத்தையும்
அனைத்தும் குடியேறியது ஒவ்வொரு வீட்டின் நடுக்கூடம்.

மண்ணின் தாகம்
வருணனின் தானம்
பெருக்கெடுத்து ஓடும்!

நடு வீட்டிற்குள் நுழைந்தது மழைநீர் மற்றும் குப்பைக்கூடம்
மக்களின் ஐயோ அம்மா அலறல் சப்தம்
ஒலித்தது எட்டுத்திக்கும்
அதை கேட்டு கலங்கியது வருணனின் மனம்
உடனே அங்கிருந்து வெளியேற துடித்தது அவர் உள்ளம்
வேறு வழி ஏதும் இல்லாததால் கடல் மற்றும் கூவத்தில் ஆனார் ஐக்கியம்.

மண்ணின் தாகம்
வருணனின் தானம்
வீணாகிறது வருடாவருடம்!

இப்போது சேமித்து வைக்காத ஒவ்வொரு கனம்
அடுத்து வரும் கோடை காலம் தண்ணீருக்காக அண்டை நாட்டவரிடம்
கையேந்தும் நிலை உருவாகும்
திருந்தாத ஜனம்!
மண்ணும் மழையும் என்ன செய்ய முடியும்! பாவம்!

இயற்கையின் தானத்தை ஏற்று, மதித்து, பாதுக்காக்க தெரியாத மனிதம்!
நிலைமையை புரிந்துக்கொண்டு விழிப்பது எக்காலம்!

மண்ணின் தாகம்
வருணனின் பாசம்
மழை தானம்
வீணாய் போனது இப்போதும்.

ஜேம்ஸ் உடனான உரையாடலில் ரொம்பவே குழம்பி போன சக்தி எதை நம்புவது எதை நம்ப கூடாது என்று தவிப்புக்குள்ளானாள். அவள் குழம்பிப் போய் இருப்பதை அவளின் பதற்றத்தில் இருந்தே அறிந்துக் கொண்ட ஜேம்ஸ் அவளுக்கு தண்ணீர் எடுத்து வர அவர்கள் அமர்ந்திருந்த ஹாலின் இடது புறமாக இருந்த திறந்த சமையலறைக்குள் சென்று அங்கிருந்த ஃபிரிஜை திறந்து அதிலிருந்து ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்தான். அதன் அருகே இருந்த கண்ணாடி தம்பளர் ஒன்றை எடுத்து அதில் அவன் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை ஊற்றி அதை சக்திக்கு குடுக்க அடுப்படியில் இருந்து ஒரு அடி முன் வைத்தனுக்கு அடுப்படிக்கு அருகே மூடி இருந்த கதவின் வழியே ஏதோ சத்தம் கேட்டது போல் இருந்தது. உடனே நடையை நிறுத்தி உன்னிப்பாக கேட்டான். ஆனால் இம்முறை சற்று முன் அவனுக்கு கேட்ட சத்தம் ஏதும் கேட்கவில்லை. முகத்தில் சந்தேகத்துடனும், கையில் தண்ணீர் தம்பளருடனும் சக்தி முன் நின்ற ஜேம்ஸ் அவளிடம் தண்ணீரை எடுத்துக் கொள்ளும்படி கூறி நின்றான். சக்தியும் அவன் குடுத்த தண்ணீரை குடித்துவிட்டு அவனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டே அவனின் முகத்தைப் பார்த்தாள். அவனோ பின்னால் திரும்பி சமையலறையையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

“என்ன ஜேம்ஸ்.
ஏன் கிட்சனையே பார்த்துகிட்டு இருக்கீங்க?”

“இல்ல…”

“என்னாச்சு?”

“உங்க கிட்சன் பக்கத்துல ஒரு டோர் இருக்கே அது…”

“அது பேஸ்மென்ட் போறதுக்கான டோர்.
ஏன் அந்த டோர்க்கு என்ன?”

“அந்த டோர்க்கு ஒண்ணுமில்ல ஆனா அதுக்குள்ளேந்து ஏதோ சத்தம் வந்தா மாதிரி இருந்தது.
அது தான்… யோசனையா இருக்கு.”

“ஏதாவது டப்பா ஆர் தட்டுமுட்டு சாமான்கள் விழுந்திருக்கும்.
வேறென்ன!”

“இல்ல அந்த சத்தம் அப்படி பொருள் கீழ விழும் சத்தம் இல்ல.
யாரோ நாலஞ்சு பேரு பேசிக்கறா மாதிரி கேட்டுச்சு.”

“என்னது என் வீட்டு பேஸ்மென்ட்ல நாலஞ்சு பேரு பேசறா மாதிரி கேட்டுச்சா!!
ஹா! ஹா! ஹா!
என்ன சொல்லுறீங்க ஜேம்ஸ்.”

“அட ஆமாங்க.
சத்தியமா கேட்டுச்சு.
எதுக்கும் நான் போய் ஒரு எட்டு பார்த்துட்டு வந்திடவா?”

“இல்ல இல்ல.
அதெல்லாம் வேண்டாம்.”

“அதுக்கு எதுக்கு நீங்க இப்படி டென்ஷன் ஆகறீங்க?”

“டென்ஷன் எல்லாம் ஒண்ணுமில்ல…
அப்படியே நீங்க சொல்லுறது மாதிரி நாலஞ்சு பேரு பேஸ்மென்ட் இருக்காங்கன்னே வச்சுகிட்டாலும்…
அவங்க எப்படி அங்க போயிருப்பாங்க.
நாம் இரண்டு பேரும் இங்கயே தானே உட்கார்ந்திருக்கோம்.
நம்மள தாண்டி இதுவரை யாரும் போனதா எனக்கு தோனலை.
உங்களுக்கு?”

“விளையாடாதீங்க சக்தி.
மறுபடியும் உங்க கிட்ட நான் கேட்கிறேன்.
நீங்க எதையாவது என் கிட்டேந்து மறைக்கறீங்களா?”

“இல்ல இல்ல இல்லன்னு எவ்வளவு தடவ சொல்லுறது ஜேம்ஸ்.”

“சரி அப்படின்னா உங்க வீட்டு பேஸ்மென்ட்ட பார்க்க அனுமதி குடுங்க சக்தி.”

“ஜேம்ஸ் ஆல்ரெடி இன்னைக்கு நீங்க சொன்ன விஷயங்களும் நான் சொன்னதும்ன்னு ரொம்பவே குழம்பி போய் இருக்கேன்.
ப்ளீஸ் இதுல நீங்க இன்னும் ஏதாவது சொல்லி என்னை பயமுறுத்தாதீங்க.”

“ஓகே ஓகே.
உங்களுக்கு எப்போ தோணுதோ அப்போ ஒரு கால் செஞ்சு சொல்லுங்க.
சரியா.”

“நான் தான் ஒண்ணுமில்லன்னு சொல்லிட்டேனே!
மறுபடியும் சொல்லுங்கன்னா…
நான் என்னத்த சொல்ல?”

“என்ன சொல்லணும்னு தோணுதோ அதை.
சரி நான் இந்த சார்ல்ஸ் அன்ட் உங்க பக்கத்து வீட்டு விஷயங்களை நேருல சொல்லிட்டு போக தான் வந்தேன்.
சொல்லிட்டேன்.
மேலும் கூடுதல் தகவல்களை என்னை நம்பி என்னிடம் சொன்னதற்கு நன்றி.”

என்று கூறி சக்தியிடம் இருந்து விடைப்பெற்றுச் செல்ல இருந்த ஜேம்ஸுக்கு அவனின் கைபேசியில் ஒரு அழைப்பு வந்தது. கைபேசியை எடுத்து பார்த்தான். பார்த்ததும் அந்த அழைப்பை ஏற்று.

“அப்படியா!
சூப்பர்.
இதோ நான் உடனே வரேன்.”

என்று கூறிக்கொண்டே சக்தி வீட்டின் வாசற்கதவை திறந்தான். பின் அழைப்பை துண்டித்து விட்டு சக்தியிடம்

“சக்தி தாங்க்ஸ் ஃபார் யுவர் ஹாஸ்பிடாலிடி.
நான் இப்போ ஒரு முக்கியமான விஷயமா போகணும்.
சோ நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணுவோம்.
எங்க ஆளுங்க உங்க பக்கத்து வீட்டு சமாச்சாரத்தை பாரத்துப்பாங்க.
நீங்க இனி அதைப் பத்தி கவலை பட வேண்டாம்
டேக் கேர்.
பை.”

“பை ஜேம்ஸ்.
ஹாவ் எ நைஸ் டே.”

என்று சக்தி கூறியதும் அங்கிருந்து கிளம்பி தனது காரில் ஏறி அந்த தெரு முனையில் சர்ரென்று ஒரு யூ டர்ன் செய்து பறந்து சென்றான். ஜேம்ஸ் சென்றதும் வீட்டினுள் வந்து கதவை தாழிட்டு மீண்டும் சோஃபாவில் அமர்ந்தாள். தலையை அந்த சோபாவின் மேல் நன்றாக அழுத்தி சாய்த்துக் கொண்டு அமர்ந்த சக்தி,  ஜேம்ஸ், சார்ல்ஸ் மற்றும் பீட்டரை பத்தி சொன்னதையும் மிஸ்ஸர்ஸ் டேவிட் பத்தி சொன்னதையும் மேலும் அவர்கள் இருவரும் பேசிக் கொண்ட எல்லா விஷயங்களையும் மனதில் அசை போட்டுப் பார்த்தாள். சட்டென பேஸ்மென்ட்டில் இருந்து ஏதோ ஒரு சப்தம் கேட்க உடனே சோஃபாவில் இருந்தபடியே திரும்பிப் பார்த்தாள். சப்தம் ஏதும் அதன் பின் கேட்கவில்லை. மீண்டும் சோஃபாவில் சாய்ந்தாள். அவள் சோஃபாவில் படுத்த சில நொடிகளில் மீண்டும் பேஸ்மென்ட்டில் இருந்து சப்தம் வந்தது. விருட்டென எழுந்து சக்திக்கு பேஸ்மென்ட்டில் இருந்து ஏதோ சப்தம் வந்ததாக ஜேம்ஸ் கூறியது நினைவுக்கு வந்தது. உடனே எழுந்து

“ப்ளூ…இப்ப நீ வரலாம்.
ஏய் ப்ளூ அங்க என்னத்த உருட்டுற?
நீ அப்படி எல்லாம் சத்தம் குடுக்குறவன் இல்லையே!
சரி சரி வா வா.
உன்கிட்ட நிறைய விஷயம் சொல்லணும்.
ப்ளூ”

என்று ப்ளூவை அழைத்து விட்டு அதன் வரவுக்காக காத்திருந்தாள். ஆனால் அழைத்து சற்று நேரம் ஆகியும் ப்ளூ ஹாலுக்கு வரவில்லை. ப்ளூ மேலே வராததால் சக்தி பேஸ்மென்ட் செல்ல முடிவெடுத்து சோஃபாவில் இருந்து எழுந்து பேஸ்மென்ட் கதவை நோக்கி ப்ளூ அழைத்துக் கொண்டே நடக்கலானாள். அப்போது அவளுக்கு ஏதோ மனதில் ஒரு அச்சம் எழ

“ஏய் ப்ளூ.
வேண்டாம்.
விளையாடாத.
இப்போ நீ இங்க வரலைன்னா நான் அங்க வந்துடுவேன்.
ப்ளூ.”

என்று கூறிக்கொண்டே பேஸ்மென்ட் கதவருகில் சென்றவள் மனதில் ஏதோ ஒரு வகையான நடுக்கத்தை உணர்ந்தாள். மெல்ல வலது கையால் அந்த கதவின் கைப்பிடியை பிடித்தாள். அவள் வலது கை நடுங்கியது. அதை நிறுத்த இடது கையை வலது கை மேல் வைத்து அழுத்தினாள். அப்போதும் நடுக்கம் அடங்கவில்லை. பின் இரண்டு கைகளையும் கைப்பிடியிலிருந்து எடுத்து மீண்டும் ஒரு முறை ப்ளூவை அழைத்துப் பார்த்தாள். பதிலேதும் வராததால் கீழே சென்று விடலாமென்று மனதில் இருந்த பயத்தை ஒரு ஓரத்தில் தள்ளி வைத்து, தைரியத்தை கேடயமாக கொண்டு கதவை திறந்தாள் சக்தி.
ஒரே கும்மிருட்டாக இருந்தது. முதற்படியின் வலது புறம் இருந்த லைட் சுவிட்சை அழுத்தினாள். ஆனால் பேஸ்மென்ட் லைட் எரியவில்லை. சுவிட்சை நன்றாக அழுத்தி பார்த்தாள். அப்போதும் லைட் ஆன் ஆகவில்லை. இருட்டில் செல்ல மனமில்லாது அந்த அறையிலிருந்து வெளியே வந்து எமர்ஜென்சி லைட்டை எடுத்துக் கொண்டு மீண்டும் பேஸ்மன்ட்டிற்குள் செல்ல ப்ளூவை அழைத்துக் கொண்டே முதற்படியில் கால் பதித்தாள். அப்போதும் ப்ளூவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

சக்தி வீட்டு பேஸ்மென்ட்டுக்கு செல்ல இருந்த படிக்கட்டுகளோ பத்து
அவற்றில் மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்து
கை விளக்கு ஏந்திய காரிகை போல் படிகளில் இறங்கி சென்றாள்.

பேஸ்மென்ட்டில் ப்ளூ எப்போதும் அமர்ந்திருக்கும் சார்ஜிங் ஸ்டேஷன் அருகே சென்று பார்த்தவள் அதிர்ந்து போனாள். ஏனெனில் சார்ஜிங் ஸ்டேஷனில் ப்ளூ இருக்கவில்லை. உடனே கையில் இருந்த அந்த சிறிய விளக்கு கொண்டு சுற்றிப் பார்த்தாள். அவளால் ப்ளூவை பார்க்க முடியவில்லை.
உடனே ப்ளூ…ப்ளூ…ப்ளூ என்று மெதுவாக அழைத்தாள்.
அதற்கும் பதில் வரவில்லை.
தள்ளி வைத்த பயம் மீண்டும் வேதாளம் விக்கிரமாதித்தனை தொற்றிக்கொண்டது போல்  தொற்றிக் கொண்டது.
சட்டென பேஸ்மென்ட் லைட் ஆன் ஆனது. எதிர்பார்க்காது லைட் எரிந்ததால் பயத்தில் கையில் இருந்த எமர்ஜென்சி லைட்டை கீழே தரையில் போட்டாள்.

அந்த அறையின் விளக்கு எரிவதை உணர்ந்ததும் நன்றாக பேஸ்மென்ட்டை சுற்றிப் பார்த்தாள். எல்லா பொருட்களையும் நகர்த்தியும் பார்த்தாள். ஆனால் ப்ளூ அங்கு இருக்கவில்லை. பின் மீண்டும் அந்த படிக்கட்டுகளில் ஏறி வெளியே அடுப்படிக்கு பக்கத்தில் இருக்கும் அந்த பேஸ்மென்ட் கதவு வழியாக வெளியே வந்து அந்த அறையின் கதவை சும்மா சாற்றி வைத்துவிட்டு அடுப்படிக்குள் சென்று அங்கிருந்த கிரானைட் மேடையில் சாய்ந்து கொண்டு ப்ளூ எங்க போயிருக்கும் என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்தவளுக்கு சட்டென யாரோ பேஸ்மன்ட் படிக்கட்டுகளில் கடகடவென இறங்குவது போல் சப்தம் கேட்டதும் அடுப்படியில் இருந்தே எட்டி பார்த்தாள். பேஸ்மென்ட்டுக்கு செல்லும் கதவு திறந்துக் கிடந்ததை பார்த்து தனக்குதானே

“நான் அந்த கதவ சாத்திட்டு தானே வந்தேன்!
அப்புறம் எப்படி அது தொறந்து இருக்கு?”

என்று கூறிக்கொண்டே அந்த அறையின் வாசலுக்கு சென்றவள் உள்ளே செல்ல தயங்கி சற்று நேரம் வாசலிலேயே நின்றாள். பின் சென்று பார்த்துவிடலாம் என்று மனம் உரைத்ததை ஏற்று அதன் படியே மீண்டும் பேஸ்மென்ட்டுக்குள் நுழைந்தாள். படிக்கட்டுகளில் இறங்கி சென்றாள். அப்போது மீண்டும் அந்த அறையின் லைட் ஆஃப் ஆனது. அதே நேரம் அவள் காலடியில் எமர்ஜென்சி லைட் சர்… சர்… சர்… சரென ஆடிக்கொண்டிருந்தது. உடனே அதன் ஆட்டத்தை தனது காலால் நிறுத்தினாள். எமர்ஜென்சி லைட் ஆடுவது நின்றது. அதன் வெளிச்சம் நேராக ஓரிடத்தில் வீசியது. அந்த வெளிச்சம் சென்ற திசையிலேயே தனது பார்வையையும் வீசினாள் சக்தி. எமர்ஜென்சி லைட்டின் ஒளி சென்று முட்டி மோதி நின்றிருந்த இடத்தை சக்தியின் பார்வை சென்றடைந்ததும். அவள் அதிர்ச்சிக்குள்ளானாள்.

அதிர்ச்சியில் லைட்டை அழுத்திக் கொண்டிருந்த அவளின் கால் படிக்கட்டுகளை தேடி ஓட தயாரானதும் மீண்டும் அந்த லைட் சர்…சர்…சரென சப்தம் எழுப்பியது.
வேக வேகமாக படிக்கட்டுகளில் ஏறி பேஸ்மென்ட்டை விட்டு வெளியேறிய சக்தி அந்த அறையின் கதவை தாழிட்டு,  அதிலேயே சாய்ந்தபடி உடல் முழுவதும் பயத்தால் வியர்த்து விட, பதற்றத்தில் கை கால் நடுநடுங்க, தனக்கு தானே ஏதேதோ கேள்விகளை கேட்டுக்கொண்டு அந்த கதவில் மெல்ல வழுக்கிக்கொண்டே தரையில் அமர்ந்தாள்.

அப்படி பேஸ்மென்ட்டில் சக்தி பார்த்தது என்ன? அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது எது? பேஸ்மன்ட் சார்ஜிங் ஸ்டேஷனில் இருக்க வேண்டிய ப்ளூ எங்கே?

போன்ற கேள்விகளுக்கான பதில்?

தொடர்வாள்…








சக்தி மனதில் நடந்த பட்டி மன்றத்தின் முடிவு இப்போதைக்கு சொல்ல வேண்டாம் என்று தீர்ப்பானதும் அவள் அதை ஜேம்ஸிடம் இருந்து தப்பிக்க அவனிடம் குக்கீஸ் தட்டை நீட்டி மீண்டும் குக்கீஸ் எடுத்துக்க சொல்லி வலியுறுத்திக் கொண்டே,

“அது இருக்கட்டும் ஜேம்ஸ் அதை உங்ககிட்ட சொல்லாம வேற யார் கிட்ட சொல்லப்போறேன். சொல்லுங்க. சரி நீங்க மிஸ்ஸர்ஸ் டேவிட்டோட முதல் கணவர் அவங்களை உயிரோடு கொளுத்த முயற்சி செஞ்சிருக்கார்னு சொன்னீங்களே அது எப்போ நடந்த சம்பவம்?”

சக்தி அந்த பொக்கிஷம் விஷயத்தை தன்னிடமிருந்து மறைக்க நினைக்கிறாள் என்பதை புரிந்துக் கொண்ட ஜேம்ஸ் அவளை அவள் போக்கில் சென்று விஷயத்தை தெரிந்துக் கொள்ள முடிவெடுத்து,

“மொத்தத்துல அந்த பொக்கிஷம் என்னன்னு சொல்ல மாட்டீங்க.
ஆங்! சரி இப்போ அதை விட்டு விடுவோம். 
என்ன கேட்டீங்க சக்தி?
மிஸ்ஸர்ஸ் டேவிட் சம்பவம் எப்போ நடந்ததுன்னு தானே!
அது நடந்து ஒரு பத்து வருஷத்துக்கு மேல ஆச்சு.
ஏன்! நீங்க நியூஸ் பேப்பர்ல எல்லாம் பார்த்திருப்பீங்களே.”

“எங்கேந்து! நான் இந்த ஊருக்கு வந்தது எம்.எஸ் படிக்க.
அதுக்கப்புறம் வேலை.
அப்படி இப்படீன்னு பார்த்தா…
நான் இந்த ஊர்ல கடந்த அஞ்சாறு வருஷமா தானே இருக்கேன்”

“ம்…அப்போ உங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை.”

“ஏன் அப்படி அந்த மனுஷன் செஞ்சாறாம்?”

“சக்தி…அதுவும் அரசியல் தான்.”

“ஓ! சரி நேத்து அவங்க வீட்டு பின்வாசல் கதவு ஏன் தொறந்து இருந்துச்சு?
அதைப்பத்தி ஏதாவது தெரிஞ்சுதா?”

“ம்‌…அது அந்த வீட்டில் வேலை பாக்குற அந்த ஜான் பையனின் அஜாக்கிரதையால நடந்திருக்கு.”

“அப்படியா!
அவன் என்ன செஞ்சான்?”

“வேலையை முடிச்சிட்டு பின் வாசல் கதவை பூட்ட வந்தவனுக்கு அவன் கேர்ள் பிரெண்ட் கிட்டேந்து கால் வந்திருக்கு…
அய்யா அதுல முழுகி கதவை திறந்து போட்டுட்டு அப்படியே ஃபோன்ல பேசிகிட்டே அவன் கேர்ள் பிரெண்ட பார்க்க போயிருக்கான்.”

“அச்சச்சோ! அப்போ நான் கேட்ட அந்த சத்தம்?”

“வீட்டு கதவு திறந்து இருந்ததும், ஒரு பெரிய பூனை வீட்டுக்குள்ளே நுழைஞ்சிருக்கு…
அந்த நேரம் பார்த்து நீங்க வாசல் கதவை தட்ட…
அது பயந்து வந்த வழியே வெளியே ஓடிருக்கு.”

“சரி இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரிய வந்தது?”

“எல்லாம் மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டு பின் வீட்டு சிசிடிவி கேமரா மூலமா தான். அப்புறம் அந்த வேலைக்கார பையன பிடிச்சு விசாரிச்சிருக்காங்க.
உண்மை வெளிய வந்துது.”

“சூப்பர்.
நானும் எங்க ஓனர் கிட்ட சொல்லி சிசிடிவி பிக்ஸ் பண்ண சொல்லணும்.
எவ்வளவு ஹெல்ப் ஃபுல்லா இருக்கு பாருங்க.”

“அது என்னமோ உண்மை தாங்க.”

“சரி சரி பார்த்தீங்களா நான் கேட்ட கேள்விக்கு உங்களை பதில் சொல்ல விடாம அடுத்த கேள்வி கேட்க போய் மொதோ கேள்வி பதில் இல்லாம இருக்கு. அதையும் சொல்லிடுங்களேன் ப்ளீஸ்…”

“ஓ மிஸ்ஸர்ஸ் டேவிட் அன்ட் சார்ல்ஸ் விஷயமா!! அது தான் சொன்னேனே அதுவும் அரசியல் தான். ஆனா அதுலேந்து எப்படியோ தப்பிச்ச மிஸ்ஸர்ஸ் சார்ல்ஸ் பின்னாளில் டைவர்ஸ் வாங்கிட்டாங்க. அதுக்கப்புறம் தான் இப்போ அவங்களோட கணவரும் அவங்களோட கல்லூரி நண்பருமான மிஸ்டர் டேவிட்டை கல்யாணம் பண்ணிகிட்டிருக்காங்க.”

“அம்மாடியோ!
ஏதோ பெரிய இடம்ன்னு நாம நினைக்கிறோம் ஆனா அதுக்குள்ள இருக்கிறவங்களுக்கு தான் தெரியும் அது எப்படிப்பட்ட வாழ்க்கைன்னு இல்ல!”

“ஆமாம் சக்தி எல்லார் வாழ்க்கையும் அப்படி தான்.
வெளியே தெரியுறது உண்மையான வாழ்க்கை இல்ல.
அவங்கவங்க பணக்காரன், ஆரோக்கியமானவன், ஆசிர்வதிக்கப்பட்டவன்,  அன்பானவன், உதவிபுரிபவன் அப்படின்னு அழகு அழகான முகமூடிகளை போட்டுட்டு வலம் வந்துட்டு இருக்காங்க அவ்வளவு தான்.
எனக்குள்ள எவ்வளவு புதைந்து கிடக்குன்னு உங்களுக்கு தெரியாது. அதே போல் உங்களுக்குள்ள எவ்வளவு புதைந்திருக்குன்னு எனக்கு தெரியாது.  ஏன்னா நாம ரெண்டு பேருமே முகமூடி போட்டுட்டு தான் பழகறோம்.”

“ம்…ஒரு விதத்துல பார்த்தா நீங்க சொல்லறது சரிதான்.
ஆனா பொதாம் பொதுவா எல்லாரும்ன்னு நாம சொல்லிட முடியாது.
சொல்லவும் கூடாது.
நமக்குள்ளேயும் உண்மையான முகத்தோடு வாழறவங்க இன்னமும் இருக்கத்தான் செய்யுறாங்க.
சரி நீங்க சொன்ன விபத்து வருடம் அப்பறம் மிஸ்ஸர்ஸ் டேவிட்டுக்கும் அந்த சார்ல்ஸ்க்கும் நடந்த கல்யாணம் எல்லாத்தையும் வச்சுப் பார்த்தா அவன் தான் இவனா இருப்பானோன்னு எனக்கு தோணுது.”

“எவனா! எவன்?”

“என்ன நீங்களும் அதே கேள்வியை கேக்கறீங்க?”

“இல்ல புரியலை சக்தி.
நீங்க கேட்டத வச்சு தான் நான் கேட்டேன்.
வேற யாரு உங்ககிட்ட கேட்டா?”

“அது…அது வந்து.
ஆங்!
நான் கேட்டதையே நீங்களும் கேட்டவை தான் நான் அப்படி சொன்னேன்.”

“சரி இருக்கட்டும்.
இப்போ தெளிவா யார பத்தி சொன்னீங்கன்னு சொல்லுங்க.”

“எங்க காலேஜ் கடைசி நாள்ல நடந்த விஷயத்தை பத்தி சொன்னேன் இல்லையா!”

“ஆமாம் சொன்னீங்க.
அதுக்கு?”

“அதுல ப்ரொபஸர் சேவியர் செய்த அந்த மனிதன் போலவே இருக்கும் ரோபோ விஷயம் எனக்கும் பிஎச்டி மாணவனான பீட்டருக்கும் மட்டும் தான் தெரியும்ன்னும்.
அதை அவனோடதுன்னு சொல்லி அவன் உரிமை கொண்டாட, அதை தடுக்க நினைத்த ப்ரொபஸரை அன்று அந்த இரவு அந்த கோலத்திற்கு உள்ளாக்கியதும் அந்த பீட்டரும் அவன் அப்பாவின் அரசியல் பின்னணியும் தான்னு சொன்னேன் இல்லையா!”

“ம்…ஆமாம் சொன்னீங்க.
ஆங்! இருங்க இருங்க…
இப்போ நீங்க என்ன சொல்ல வரேங்க ன்னா…
அந்த பிஎச்டி மாணவன் பீட்டர்,
இந்த மிஸ்ஸர்ஸ் டேவிட்டுக்கும் அந்த அரசியல்வாதி சார்ல்ஸுக்கும் பொறந்த  மகனா இருப்பானோன்னு கேட்க வறீங்க சரியா!”

“ஆமாம்.
அதே தான்.
இதைத் தான் நேத்து ராத்திரிலேந்து எனக்குள்ளேயே கேட்டுட்டிருக்கேன்.”

“நீங்க நினைக்கிற மாதிரியே தான்.
இந்த சார்ல்ஸோட மகன் பீட்டரும் நீங்க படிச்சதா சொன்ன அதே கலேஜ்ல தான் படிச்சிருக்கான்.
சோ உங்க யூகம் சரிதான்.
ஆனா அதுக்கு நீங்க ஏன் பதற்றமாகணும்?”

“இல்ல…
ப்ரொபஸரை ஒரு வாரம் வச்சு துன்புறுத்தி,
அவருக்கிட்டேந்து என்னை பத்தி தெரிஞ்சுகிட்டு…”

“தெரிஞ்சுகிட்டு? என்ன சக்தி?”

“என்னை அன்னைக்கு கடத்திருப்பானோ?”

“அப்படிங்கறீங்களா?
ஆனா அவன் தான் ரெண்டு வருஷம் முன்னாடி நடந்த ஒரு கார் ஆக்ஸிடென்ட் ல பெராலிஸ் வந்து படுத்து படுக்கயாய் இருக்கான்.
அவனோட சிகிச்சைக்காக டாக்டர்ஸ் அன்ட் நர்ஸ் எல்லாரும் அவன் வீட்டோடு இருக்காங்க.
இந்த நிலையில் அவன் பண்ணிருக்க வாய்ப்பில்லன்னு சொல்ல முடியாது ஆனா வாய்ப்புகள் கம்மி.”

“ஓ! அதுனால தானா மிஸ்ஸர்ஸ் டேவிட்டோட பையன் இந்த ரெண்டு வருஷமா அவங்கள பார்க்க வரலையா?”

“இருக்கலாம்.”

“ஆனா…இவங்களும் மகனை பார்க்க போனதில்லையே!”

“அது ஏன் அவங்க தான் சொல்லணும்.
இல்லாட்டி…அந்த அரசியல் வாதி அவங்களை பார்க்க விடாமல் செய்திருக்கலாம்.”

“இருக்கும் இருக்கும்.
அந்த பீட்டர் என்னைவிட நாலு வயசு தான் பெரியவன்.
அவனுக்கு இப்படி ஆனது கொஞ்சம் வருத்தமா இருந்தாலும்…
அவன் எங்க ப்ரொபஸருக்கு செஞ்சதை நெனச்சா…
அவனுக்கு இது தேவை தான்னு மனசு சொல்லுது.
நானும் மனுஷி தானே!”

“ம்…புரியுது சக்தி.”

“இப்போ மிஸ்ஸர்ஸ் டேவிட்  எங்க தான் போயிருக்காங்க?
உங்களுக்கு தெரியுமா?”

“ஆமாம்.
ஏன் கேட்கறீங்க?”

“இல்ல…
அந்த சார்ல்ஸ் அன்ட் பீட்டர் சேர்ந்து அவங்கள ஏதாவது செய்துட்டாங்களோன்னு பயம் வருது. அதுதான் கேட்டேன்.”

“அவங்க இப்போ அவங்க மகனை பார்க்க தான் போயிருக்காங்க சக்தி.”

“ஆங்! அப்படியா!”

“ஆமாம்.”

“என்ன இத்தனை வருஷம் போகாதவங்க…
திடீர்ன்னு போயிருக்காங்க?
என்னவா இருக்கும்”

“அதை எல்லாம் நினைச்சு குழப்பமாகாதீங்க சக்தி.
நேத்து நியூஸ் பேப்பர் நீங்க படிக்கலையா?”

“எங்கேந்து.
இல்ல படிக்கலை.
ஏன்?”

“அதை படிச்சிருந்தா நீங்க இன்னும் குழம்பி போய் இருப்பீங்க.”

“அப்படியா? அப்படி என்ன நியூஸ் வந்தது.”

“அந்த சார்ல்ஸோட ஒரே  மகன்…
அதாவது சார்ல்ஸ் அன்ட் உங்க பக்கத்து வீட்டு பெண்மணி மிஸ்ஸர்ஸ் டேவிட்டுக்கு பொறந்த மகனான பீட்டரின் உயிர் ரெண்டு நாள் முன்னாடி அவன் உடலை விட்டு பிரிந்தது.”

“அச்சச்சோ! பீட்டர் இறந்துட்டானா?”

“எஸ் சக்தி.
அதுக்கு தான் மிஸ்ஸர்ஸ் டேவிட் அவசர அவசரமா யார்கிட்டேயும் சொல்லிக்காம போயிருக்காங்க.”

“ச்சே!
நான் ரொம்ப மோசம்.”

“ஏன் அப்படி?”

“பின்ன! அவங்க, அவங்க மகன் இறப்புக்கு போயிருக்காங்க…
ஆனா நான், எனக்கு இப்படி நடந்ததுக்கும் அவங்களுக்கும் தொடர்பு இருககுமோன்னு யோசிச்சேன்.
எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டேன்.
அவங்க வந்ததும் அவங்க கிட்ட மன்னிப்பு கேட்கணும்.”

“சரி யோசிச்சீங்க.
விடுங்க.
நாம யோசிக்கிறதுக்கெல்லாம் வருத்தப் படணும்னா…
நான் எவ்வளோ யோசிச்சிருப்பேன்…
எத்தனை பேரை சந்தேகப்பட்டிருப்பேன்.
அப்போ நான் எப்படி போய் அவங்க கிட்ட எல்லாம் மன்னிப்பு கேட்கறது! ம்…”

“அது உங்க தொழில்.
அதுல தப்பில்ல.
ஆனா நான் அப்படி இல்லையே!”

“அட போங்கங்க.”

“சரி அப்படிப்பார்த்தா…
உங்க சந்தேகம் தப்புன்னு ஆயிடுச்சு.
என் சந்தேகம் தப்புன்னு ஆகலை ஆனா சந்தேகப்பட்ட நபர் இப்போ உயிரோடு இல்ல.
அப்படின்னா என்னை கடத்தியது பீட்டர் தான்னும் அவன் இறந்துட்டான்னும் இந்த கேஸை முடிஞ்சிடுமா?”

“நான் சந்தேகப்பட்ட ருத்ரா இல்லன்னு ஊர்ஜிதம் ஆகிடுச்சு.
ஆனா இப்போ நீங்க சொன்ன சம்பவத்தை வச்சு இந்த கேஸை அப்படி எல்லாம் மூடிட முடியாது
ஏன்னா அந்த பையன் பெரிய அரசியல் புள்ளியின் மகன்.  அது பீட்டராக இருக்க வாய்ப்பிருந்தது.
ஆனா அவன் உயிரோடு இல்லைனாலும்…
அந்த டாக்டர் வசுந்தராவுக்கு என்ன ஆச்சு?
அந்த ரெண்டு நர்ஸுகளுக்கு ஏன் அப்படி நடந்தது?
இதுக்கெல்லாம் பதில் வேண்டாமா?
அதுக்கும் இறந்து போன பீட்டருக்கும் இல்ல அவன் அப்பனுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா?
இதெல்லாம் இருக்கு.
எல்லாத்துக்கும் மேல என் நண்பன் கட்டிக்க போற 
உங்களுக்காகவாவது அன்னைக்கு நடந்தது என்னன்னு கண்டு பிடிச்சே ஆகணும்.”

“ம்…அப்போ ருத்ராவும் இல்ல, மிஸ்ஸர்ஸ் டேவிட்டும் இல்ல, பீட்டரா இருக்க வாய்ப்பிருந்ததுன்னு சொல்லுறீங்க சரி.
ஆனா எங்க ஆஃபிஸ் கேன்டீன் ஸ்டாஃப் அந்த ஜானை விட்டுட்டேங்களே!”

“அவனை தேடிட்டு தான் இருக்கோம்.
நிச்சயம் எங்ககிட்ட மாட்டுவான்.”

“சரி…உங்க காலேஜ் கடைசி நாள் இரவு நடந்த சம்பவத்தை சொன்னீங்களே!  உங்க ப்ரொபஸர் சேவியரை அந்த நிலைமைக்கு தள்ளியது அந்த பீட்டர் தான்னு உங்களால தீர்க்கமா சொல்ல முடியுமா?
இல்ல அவனா இருந்திருக்க ஏதாவது க்ளூ ஆர் எவிடன்ஸ் உங்க கிட்ட இருக்கா?”

“ஆங்! அப்படி எதுவும் என்கிட்ட இல்லை.
எனக்கே அன்னைக்கு மிட் நைட்ல எங்க ப்ரொபஸர் சொன்னதுக்கு அப்புறம் தான் இதெல்லாம் தெரிய வந்துது.”

“சரி…
அதுக்கு முன்னாடி எப்பவாவது உங்க ப்ரொபஸருக்கும் அந்த பீட்டருக்கும் இந்த பேட்டென்ட் விஷயமா பிரச்சினை வந்திருக்கா?
அப்படி ஏதாவது உங்களுக்கு தெரியுமா?”

“இல்ல…
அப்படி எதுவும் அதுவரை நடந்ததா…
எந்த நியூஸும் வரலை.
எனக்கும் தெரியாது.
ஏன் அப்படி கேட்கறீங்க?”

“சோ…உங்க ப்ரொபஸருக்கு அப்படி ஆனது பீட்டரால தான்னு உங்களுக்கு உங்க ப்ரொபஸர் குத்துயிரும் குலையுயிருமா இருக்கும் போது உங்கிட்ட சொன்னது தான்.
இல்லையா!”

“எஸ். யூ ஆர் ரைட்.”

“அதுவரைக்கும் அந்த சேவியருக்கும் பீட்டருக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லைன்னும் நீங்க தான் சொன்னீங்க.
ஆனா எப்படி அன்னைக்கு திடீர்ன்னு உங்க ப்ரொபஸர் சொன்னதை மட்டும்  அப்படியே நம்பினீங்க?”

“நீங்க சொல்லுற மாதிரி அன்னைக்கு என் ப்ரொபஸர் சேவியர் சொல்லித் தான் தெரிஞ்சுக்கிட்டேன்.
அதுவுமில்லாம அந்த பீட்டர் பெரிய அரசியல்வாதி புள்ளை வேறயா அதுனால எல்லாத்தையும் மூடி மறச்சுட்டாங்களோன்னு நானே நெனச்சுக்கிட்டேன்.”

“ம்…இப்படி யோசிச்சு பாருங்க…”

“எப்படி?”

“பீட்டர் அரசியல்வாதி பையன் அப்படீங்கற விஷயத்தை ஏன் உங்க ப்ரொபஸர் யூஸ் பண்ணிருக்கக்கூடாது?”

“புரியலை ஜேம்ஸ்.
அவர் ஏன் அப்படி பீட்டர் பெயரை யூஸ் பண்ணணும்?
அதுவுமில்லாம அன்னைக்கு அவர உயிர் போற நிலைமைக்கு தள்ளியது யாரு?”

“அதோட உங்க கேள்விகளை நிப்பாட்டிடாதீங்க சக்தி.
அவர் ஏன் உங்களை கடைசியாக சந்திச்சதுக்கப்புறமா… விஷால் சொன்னதா நீங்க சொன்ன ஸ்டேட்மெண்ட் படி ஒரு வாரம் உயிரோடு இருந்திருக்கார்?
எங்க இருந்திருக்கார்?
ஒரு வாரம் தான் இருந்தாரா?
இல்ல இன்னமும் இருக்காறா?”

“அய்யோ! இது என்ன புது குழப்பம்.”

“இல்ல நீங்க கொஞ்சம் நல்லா யோசிச்சு பாருங்க சக்தி.
அன்னைக்கு நைட் உங்களை மயானத்துக்கு வரவைத்து உங்களை பதற்றமாக்கி, பீட்டர் பின்னணியை உபயோகப்படுத்தி அவர் சொன்னதை எல்லாம் உங்களை நம்பி வைத்திருக்கக் கூடாது?”

“பட் வை?!
நீங்க சொன்னா மாதிரியே வச்சுக்கிட்டாலும்…
பின்ன ஏன் அவரோட அந்த பொக்கிஷத்தை என்கிட்ட எடுத்துக்க சொல்லணும்.
அவரே வச்சிருக்கலாமே!
அந்த சம்பவத்துக்கு அப்புறம் அவர் உயிரோடு இருந்திருந்தா இல்ல இன்னமும் உயிரோடு இருக்கார்ன்னா…
ஏன் அதை தேடி அவர் வரலை?”

“ம்…நவ் யூ ஆர் கம்மிங் டூ தி பாயிண்ட்.
இப்போவாவது சொல்லுங்க அந்த பொக்கிஷம் என்னது?
அதை அவர் சொன்ன இடத்துக்கு போய் எடுத்தீங்களா?
இப்போ அது உங்ககிட்ட தான் இருக்கா?”

“அது…அது வந்து…அது…”

“சக்தி நீங்க இந்த விஷயத்துல என்னை நம்பித்தான் ஆகணும்.
அப்போ தான் ஏதாவது நான் செய்ய முடியும்.
நீங்க அன்னைக்கு இரவு நடந்ததா சொன்ன கதைப்படி அல்லது உங்க ப்ரொஃபசர் உங்கிட்ட சொன்னது படி பீட்டர்ன்னு எடுத்துக்கிட்டோம்ன்னா…
அதுக்கு எவிடன்ஸ்?
ஏன்னா
நீங்க காணாம போனது போலவே!
அதைப் பத்தியும் எந்த நியூஸும் வெளிவரவே இல்லையே!
இதுலேந்தே தெரியலையா?
என்னை பொறுத்தவரை…
எனனோட யூகப் படி அன்னைக்கு உங்க காலேஜ் கடைசி நாள் முதல் 
யாரோ…
எதுக்காகவோ…
உங்களை யூஸ் பண்ணிட்டு இருக்காங்க.
அந்த மர்ம நபர் யார்?
உங்களுக்கே தெரியாம நீங்க அந்த விஷியஸ் சர்க்கிளுக்குள்ள மாட்டிட்டு இருக்கீங்க.”

“இல்ல…இல்ல…இல்ல…
அப்படி எந்த விஷியஸ் சர்க்கிளுக்குள்ளேயும் நான் மாட்டிக்கவும் இல்ல.
அப்படி எல்லாம் மாட்டிக்கவும் மாட்டேன்.”

“ஓகே! ஓகே! ரிலாக்ஸ் சக்தி.
ரிலாக்ஸ்…

ஜேம்ஸ் சொன்னவற்றை எல்லாம் கேட்ட சக்தி நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் தவிப்புக்குள்ளானாள்.

தொடர்வாள்…

ஜேம்ஸுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதும் தனது படுக்கை அருகே இருந்த லைட் சுவிட்ச்சை ஆஃப் செய்துவிட்டு படுத்தாள் சக்தி.  பல விஷயங்கள் தற்செயலாக நடந்தது போல இருந்தாலும், அவற்றிற்கு பின் ஏதோ ஒரு வியூகம் பின்னப்பட்டு  கொண்டே வருவதை போலவும் அவள் மனம் நடந்த நிகழ்வுகளை எல்லாம் மீண்டும் மீண்டும் மனக்கண் முன் படம் போட்டு காட்டியதில், உறக்கம் வராமல் வலது புறம் இடது புறம் என புரண்டு புரண்டு படுத்தாள்.

அவ்வாறு தூக்கமின்றி புரளும் போது அவளுக்கு சட்டென மிஸ்ஸர்ஸ் டேவிட் மகன் பெயர் ஞாபகம் வந்தது. உடனே தனது மொபைலை எடுத்தாள். அதில் ஜேம்ஸிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியை திறந்து படித்தாள். மிஸ்ஸர்ஸ் டேவிட் விஷயங்கள் பெரிய லெவலில் இருப்பதாக குறிப்பிட்டிருந்த வரிகளை மீண்டும் ஒருமுறை வாசித்தாள். பின்பு

“அவன் தான் இவனா? அப்படின்னா மிஸ்ஸர்ஸ் டேவிட்டோட ஃபர்ஸ்ட் ஹஸ்பண்ட்? ஐயய்யோ! யோசிக்க யோசிக்க குழப்பம் அதிகமாகிட்டே போகுதே! ஆண்டவா அன்னைக்கு எனக்கு என்னதான் நடந்தது?”

என்று தனக்கு தானே  பேசிக்கொண்டாள். அதே சிந்தனைகளில் மூழ்கியவள் முத்தேதுமின்றி குழப்பம் என்னும் முட்டு சந்தில் மோதி நின்றாள். யோசித்து யோசித்து அவளுக்கே தெரியாது உறக்கம் என்னும் யோக நிலையை அடைந்தாள்.

மறுநாள் காலை விடிந்ததும்‌ வழக்கம் போல ப்ளூ அவளருகே வந்து அவளை எழுப்பியது. ஆனால் இந்த முறை அவள் டூ மின்ட்ஸ் என்று டைம் கேட்கவில்லை. மாறாக விருட்டென எழுந்து கொண்டு ப்ளூவை பார்த்து

“அவனா இவன்?”

என்று கேட்டாள். அதை கேட்ட ப்ளூ அவளையே உற்றுப் பார்த்து

“எவனா! எவன்?”

என்று கேட்டது. ப்ளூவின் பதிலை கேட்டு சக்தி சலித்துக் கொண்டே பாத்ரூமிற்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள். அதை பார்த்த ப்ளூ விடியற்காலையில் அவளின் சலிப்புக்கு காரணமறியாது விழித்தது. சக்தி வெளியே வந்து  ஏதாவது சொல்வாள் என்றெண்ணி சற்று நேரம் அங்கேயே நின்றிருந்தது. ஆனால் அவள் வரவில்லை என்றதும் பாத்ரூம் அருகே சென்று,  தான் கீழே செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றது.

சக்தியும் குளித்து ஃப்ரெஷ் ஆகி கீழே வந்தாள். அதைப் பார்த்த ப்ளூ அவளுக்கு என்ன ஆயிற்று என்று கேட்டது. அதற்கு அவள் ஒன்றுமில்லை என்ற பதிலை சொல்லிவிட்டு வழக்கமான ரெண்டு பிரட் டோஸ்ட் மற்றும் ஒரு கப் காபியுடன் வந்து டைனிங் டேபிளில் அமர்ந்தாள்.

சக்தி ஏதோ மனக்குழப்பத்தில் இருக்கிறாள் என்பதை உணர்ந்துக் கொண்ட ப்ளூ மெல்ல அவளருகே சென்று,

“தீ… தீ…
நீ ஏதோ குழப்பத்துல இருக்கன்னு எனக்கு தெரியுது.”

“சரி ஓகே! தெரிஞ்சுகிட்ட இல்ல. இப்போ என்ன அதுக்கு”

“இல்ல என் கிட்ட பகிர்ந்துக்குறதால   உன் குழப்பத்துக்கு ஒரு தெளிவு கிடைக்கும்…ன்னா 
என்கிட்ட சொல்லு நான் ஏதாவது சல்யூஷன் தர முடியுமா…ன்னு பார்க்கறேன்.”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல ப்ளூ.
ப்ளீஸ் லீவ் மி அலோன்.”

“ஓகே.
தென் இட்ஸ் அப் டூ யூ.
நான் வரேன்.”

“எங்க போற ப்ளூ.”

“இப்போ நீ தான் உன்னை தனியா விட சொன்ன…
அதுதான் நான் இங்கேந்து என்னோட சார்ஜிங் ஸ்டேஷனுக்கே போகலாம்னு கிளம்பிட்டேன்.”

“ம்‌…அதுவும் சரி தான்‌.
நானா கூப்பிடாத வரைக்கும் நீ இங்க வர வேண்டாம்.
அங்கேயே இரு ப்ளூ.
சரியா.”

“முன்னெல்லாம் எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுவ…
ஆனா இப்போ எல்லாம் என்னை போ போன்னு சொல்லுற!!”

“அது அப்படி இல்ல ப்ளூ.
எல்லாம் உன் நல்லதுக்கும்…
என்னோட நல்லதுக்கும் தான் அப்படி சொல்லறேன்.
ப்ளீஸ் புரிஞ்சுக்கோ ப்ளூ.
நான் ஆல்ரெடி ஏதேதோ நினைச்சுக்கிட்டு ரொம்ப குழம்பிப்போய் இருக்கேன்.
ப்ளீஸ் டிரை டூ அன்டர்ஸ்டான்ட் மி.”

“அச்சோ! தீ.
உன்ன நல்லா அன்டர்ஸ்டான்ட் பண்ணிருக்கறதால தான் நான் உன்கிட்ட அப்படி கேட்டேன்.”

“புரியுது ப்ளூ.
ஆனா அதுக்கான எக்ஸ்பிளநேஷன் குடுக்குற நிலைமையில இப்போ நான் இல்ல.
உன்கிட்ட எப்போ சொல்லணும்னு எனக்கு தோணுதோ அப்போ நிச்சயம் உன்கிட்ட நானே வந்து சொல்லுவேன்.
ஓகே வா.”

“ம்…சரி தீ.
நான் பேஸ்மென்ட் போறேன்.
நீ கூப்பிட்டா மட்டும் தான் வருவேன்.
பை.”

“குட் பாய் ப்ளூ.
ஐ லவ் யூ.
பை ஃபார் நவ்‌.”

என்று ப்ளூவை இறுக்க கட்டியணைத்துக் கொண்டு சக்தி கூறியதும். ப்ளூ அங்கிருந்து கிளம்பி சக்தி வீட்டு பேஸ்மென்ட்டில் இருக்கும் அதன் சார்ஜிங் ஸ்டேஷனில் சென்று செட்டில் ஆனது. இரவு சரியாக தூங்காத சக்தி, காலை உணவை அருந்தியதும் அப்படியே அந்த சோஃபாவில் படுத்துக் கொண்டே தனது மொபைலில் வந்த அவளது ஆஃபிஸ் ஈமெயில்களுக்கு பதிலளித்தாள். பின் அந்த சோஃபாவின் இருபுறமும் போடப்பட்டிருந்த சைட் டேபிளில்,  சக்தியின் தலைமாட்டில் இருந்த ஒரு ஃபோட்டோவை எடுத்துப் பார்த்தாள். அதில் அவள், நவீன் மற்றும் மிருதுளா இருந்தனர். அந்த புகைப்படம் போன வருடம் நவீனும் மிருதுளாவும் சக்தியை காண மெட்ஸ் வந்தபோது காத்தெட்ரெல் ஆஃப் செயின்ட் ஸ்டீஃபன் முன் நின்று எடுத்ததாகும். அந்த புகைப்படத்தை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு

“அப்பா அம்மா எனக்கென்ன நடக்கறதுன்னே புரியலை.
நான் எந்த தப்பும் செய்யலை.
நீங்க தான் எனக்கு துணையா இருக்கணும்.
இருப்பேங்கள்.”

என்று கூறிக்கொண்டே மெல்ல கண் அசந்தளாள். சற்று நேரத்தில் அவள் வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. ஆனால் அவள் எழவில்லை. மீண்டும் ஒலித்தது. அது சக்தியின் உறக்கத்தை கலைத்தது. உடனே எழுந்து வேகமாக வீட்டின் கதவை திறந்தாள்.

“ஹாய் சக்தி.
என்ன காலையிலே தூங்கறீங்களா?
சாரி நான் உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேனோ!”

என்று கேட்டுக் கொண்டே வாசலில் நின்றிருந்த ஜேம்ஸை வீட்டிற்குள் வரச் சொல்லி, அங்கே போடப்பட்டிருந்த சோஃபாவில் அமரச் சொன்ன சக்தி அங்கே அவள் உண்டும் குடித்தும் வைத்திருந்த தட்டு மற்றும் காபி கப்பை எடுத்து அடுப்படியில் வைத்துக் கொண்டே ஜேம்ஸிடம்

“ஜேம்ஸ் வாட் வுட் யூ லைக் டு ஹால்?
காபி, டீ ஆர் ஜூஸ்?”

“காபி வுட் டூ சக்தி.”

“ஜஸ்ட் டூ மினிட்ஸ்.”

என்று கூறியது போலவே இரண்டு நிமிடங்களில் கையில் ஒரு ட்ரேயில் ஒரு கப் காஃபி மற்றும் குக்கீஸுடன் வந்த சக்தி, அதை ஜேம்ஸ் முன் வைத்து,

” ம்…எடுத்துக்கோங்க ஜேம்ஸ்.”

என்றாள். ஜேம்ஸும் வலது கையில் ஒரு குக்கீஸையும் இடது கையில் காபி கப்பையும் எடுத்துக் கொண்டே

“உங்களுக்கு?”

“இப்போ தான் நான் குடிச்சேன்.
நீங்க வந்த போ தான் குடிச்ச காபி கப் அன்ட் டோஸ்ட் சாப்ட்ட ப்ளேட் எல்லாத்தையும் எடுத்துட்டு உள்ளே போனேன்.
நீங்க சாப்பிடுங்க.”

“ஓகே.
ம்…காஃபி இஸ் குட்.
குக்கீஸ் டூ.”

“தாங்க்ஸ் ஜேம்ஸ்.
நேத்து நைட் உங்க மெஸேஜ் படிச்சதுலேந்து எனக்கு தூக்கமே வரலை.
சொல்லப் போனா நான் நேத்து சரியாவே தூங்கலை.
அதுதான் இன்னைக்கு காலையிலேயே சோஃப்வுல சும்மா படுத்தேன்.
அப்படியே தூங்கிட்டேன்.”

“இல்ல சக்தி.
சில விஷயங்களை மஸேஜஸ் ல விவரிக்க முடியாது.
நேருல தான் சொல்ல முடியும்.
அப்படி சொல்லறது தான் நல்லதும் கூட.
அதுனால தான் நான் இப்போ வந்தேன்.
அதுவுமில்லாம நானும் நேத்து நைட் புல்லா சரியாவே தூங்கலன்னு வச்சுக்கோங்க!!”

“ஏன் ? இந்த கேஸ் பத்தி ரொம்ப நேரம் ஏதாவது யோசனையில இருந்தேங்களா?
இருக்கலாம்! இருந்திருக்கலாம் தான்!
ஏன்னா என்னை சுத்தி நடக்கறது என்னனென்னே தெரியாத எனக்கே தூக்கம் வராதப்போ…
அதை டீல் பண்ணற உங்களுக்கு எப்படி இருக்கும்.
புரியறது.”

“அச்சச்சோ! அதெல்லாம் ஒண்ணுமில்லங்க.
எல்லாம் நம்ம ருத்ராவால தாங்க.”

“என்னது ருத்ராவாலையா?”

“இல்ல இல்ல…
இந்த கேஸுக்கும் அவங்களுக்கும் எந்த கனக்ஷெனும் இல்லைங்கறது எனக்கு ஊர்ஜிதமாகிருச்சு.
ஏன்னா அவங்க வாங்கினதா சொன்ன அந்த ஜூஸ் ஷாப் அன்ட் அவங்கள விசாரிச்சு பார்த்ததுன்னு…
எல்லாத்தையும் கூட்டி கழிச்சுப் பார்த்ததுல தெரிஞ்சுது.”

“அப்புறம் ஏன் ருத்ராவாலன்னு சொன்னீங்க?”

“அது வந்து…
அவங்க நேத்து கால் பண்ணினாங்க.
அவங்க என்னங்க படு ஒப்பன் டைப் ஆ இருக்காங்க.
படபடபடன்னு அவங்க கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்ன்னு எல்லாத்தையும் ஒரே மூச்சுல சொல்லிட்டங்க.”

“அவ அப்படி தான்.
கொஞ்சம் வெகுளி வேற.
அவளோட இந்த குணத்த நிறைய பேர் யூஸ் பண்ணிருக்காங்க.
அவகிட்ட நான் நிறைய தடவை சொல்லிட்டேன்.
ஆனாலும் அவ கொஞ்சம் கூட தன்ன மாத்திக்கவே இல்ல.
ஆனா அடிப்படைல அவ தங்கமான பொண்ணு.
அதுனால தான் நீங்க என்கிட்ட அன்னைக்கு அவளை விசாரிக்கணும்ன்னு சொன்னப்போ நான் அவ செஞ்சிருக்க வாய்ப்பில்லைன்னு சொன்னேன்.
ஆனாலும் வசுவோட பேச்சு அன்ட் நடந்த சம்பவங்கள் எல்லாம் என்னையும் அவள சந்தேகப்பட வச்சுடுத்து.
என்ன செய்ய.
இப்போ நீங்க சொன்னதும் அவள்ட்ட மனசார மன்னிப்பு கேட்கணும்னு தோணறது.”

“உண்மை தான்.
அவங்க ரொம்பவே வெகுளியா இருக்காங்க.
ஆனா அவங்க கிட்ட பேசினது லேந்து அவங்களை நல்லா புரிஞ்சுக்க முடிஞ்சுது.”

“ப்ளீஸ் ஜேம்ஸ்.
அவளோட நல்ல ஃபிரெண்டா சொல்லறேன்.
உங்களுக்கு அவளை பிடிச்சிருந்தாலும் சரி பிடிக்காட்டாலும்  சரி…
எதுவானாலும் அவ கிட்ட சொல்லிடுங்க.
இல்லாட்டி அவ பாட்டுக்கு மனக்கோட்டை கட்ட ஆரம்பிச்சிடுவா.
இன்நேரம் ஆரம்பிச்சிருப்பா.”

“இல்ல இல்ல என்னோட விருப்பத்தை நேத்தே சொல்லிட்டேன்.”

“பரவாயில்லையே கண்டதும் காதல் ஆ.
பேஷ் பேஷ்.
அப்போ உங்க ரெண்டு பேர் கல்யாணத்தையும் எங்க கல்யாணத்தோட சேர்த்து நடந்திடுவோம்.
என்ன சொல்லுறீங்க?”

“எனக்கு ஓகே.
ஆனா ஒரே ஒரு கன்டீஷன்.”

“கன்டீஷனா!
அது என்ன?”

“உங்களோட இந்த கேஸ் முடிச்சிட்டு தான் கல்யாணம்.”

“டன். டீல்.
சரி மிஸ்ஸர்ஸ் டேவிட் விஷயம் ஏதோ பெரிய லெவல்ன்னு எல்லாம் எழுதி இருந்தீங்களே…
அது என்ன?
அவங்க வீட்டுக்கு பின் வாசல் வழியா நேத்து வந்துட்டு போனது யாரு?
ஏன் வந்தாங்க?”

“பாருங்க…
அதை பத்தி பேச வந்துட்டு…
நான் பாட்டுக்கு என் கதையை பேசிட்டே இருக்கேன்.”

“உங்க கதை மட்டுமில்ல.
என் தோழியோட கதையும் தான்.
அதுனால மன்னிப்போம் மறப்போம்.”

“அப்பா எவ்வளோ பெரிய மனசுங்க உங்களுக்கு.”

“நன்றி.
சரி இப்போ சொல்லுங்க”

“உங்க பக்கத்து வீட்டு பெண் அந்த மிஸ்ஸர்ஸ் டேவிட் அன்ட் அவங்களோட புருஷன் மிஸ்டர் டேவிட் அன்ட் அவங்களோட முன்னாள் புருஷன்னு எல்லாரோட  பேக்ரௌண்ட் செக் பண்ணினதுல…
அவங்க முன்னாள் புருஷன் வேற யாருமில்லை இந்த நாட்டோட பெரும் அரசியல் புள்ளி மிஸ்டர் சார்ல்ஸ் டிக்சன்னு தெரிய வந்திருக்கு.”

“ஓ! மை காட்!
நான் அவர பத்தி நியூஸ் பேப்பர்ல படிச்சிருக்கேன்.
ஆனா மிஸ்ஸர்ஸ் டேவிட் ஒரு நாள் கூட அவர் பத்தி சொன்னதில்லை.”

“எப்படி சொல்லுவாங்க சக்தி.
அந்த ஆளு பண்ணிண செயல் அப்படி.”

“அப்படி என்ன பண்ணிருக்காரு?”

“மிஸ்ஸர்ஸ் டேவிட்டை உயிரோடு கொளுத்த முயற்சி செஞ்சிருக்காருன்னா பாருங்களேன்.”

“மிஸ்ஸர்ஸ் டேவிட்டயா?
அவங்க தங்கமான மனுஷியாச்சே!
அவங்கள ஏன்?
எதுக்கு அப்படி செய்ய முயற்சி செஞ்சிருக்காரு?”

“அதை நான் சொல்லறேன்.
அதுக்கு முன்னாடி நீங்க என் கிட்ட ஏதோ சொல்லணும்னு மெஸேஜ் ல குறிப்பிட்டிருந்தீங்களே!
அது என்னன்னு சொல்லுங்களேன்.”

“அது…அது வந்து…”

“ஏன் இழுக்குறீங்க சக்தி?
எதுவானாலும் சொல்லுங்க.”

“இல்ல அது இந்த கேஸுக்கு யூஸ் ஆகுமான்னு தெரியலை.
ஆனாலும் அதை உங்ககிட்ட சொல்லிட சொல்லி விஷால் சொன்னான்.”

“சரி அப்படி என்ன அந்த விஷயம்ன்னு சொல்லுங்க.
அது இந்த கேஸுக்கு சம்பந்தப்பட்டதா இல்ல சம்பந்தபடுமான்னு எல்லாம் நான் தீர்மானிச்சுக்கிறேன்.”

என்று ஜேம்ஸ் கூறியதும் சக்தி படபடவென அவர்களின் காலேஜ் இறுதி நாளில் நடந்த சம்பவங்களை, விஷால்  பிரப்போஸ் பண்ணியதில் இருந்து ப்ரொஃபசர் சேவியரை பார்த்து பின் அங்கிருந்து கிளம்பி வந்தது வரைக்கும் சொல்லி முடித்தாள். அவளை இடைமறித்து பேசாது பொறுமையாக அனைத்தையும் கேட்ட ஜேம்ஸ் அவளிடம்,

“அப்போ…
அந்த ப்ரொஃபசர் சேவியர் இறந்துட்டாறா?”

“அப்படி தான் நான் நினைச்சு அங்கேந்து வேகவேகமா வந்துட்டேன்.
ஆனா அவர் நிஜமாவே இறந்துட்டாறா இல்லையான்னு எனக்கு தெரியாது.”

“சரி அவர் இறந்துட்டார்ன்னு எப்படி முடிவு செஞ்சீங்க?”

“பேசிட்டே இருந்தவரு சட்டுன்னு தலையை குனிந்துட்டார்.
நானும் அவரை எழுப்பிப் பார்த்தேன் ஆனா அவர் எழுந்துக்கல.
அதுனால இறந்துட்டார்ன்னு நினைச்சுட்டேன்.”

“அவர் மயக்கமடைந்திருக்கலாம் இல்லையா?
நீங்க அவர் ஹார்ட் பீட் ஆர் பல்ஸ் செக் பண்ணிருக்கலாமே!”

“செய்திருக்கலாம் தான்.
இப்போன்னா நிச்சயம் அதெல்லாம் செய்திருப்பேன்.
ஆனா அன்னைக்கு நான் இருந்த நிலைமை அப்படி.
அர்த்த ராத்திரி…
மயானம் வேற…
பயத்துல அங்கேந்து எப்படியாவது கிளம்பிடணும்ன்னு தான் தோணிச்சு.
நீங்க சொன்னா மாதிரி எல்லாம் செக் பண்ண தோணவே இல்ல.
என்ன பண்ண?”

“ம்…
உங்க சிட்டுவேஷன் அப்படி.
புரியுது‌…”

“அப்படின்னா அவர் உயிரோட தான் இருக்காறா?”

“இல்ல இல்ல…
இருக்கலாம்.
இல்லாமையும் இருக்கலாம்.”

“இல்லையே! இருங்க…இருங்க
இப்போ தான் எனக்கு ஒண்ணு ஞாபகம் வருது…
வி கிட்ட… இதை எல்லாம் சொன்னப்போ…
அவன் கூட ப்ரொபஸர் சேவியர் ஏதோ சூசைட் பண்ணிக்கிட்டதா கேள்வி பட்டேன்னு சொன்னான்.
அதுவும் நாங்க காலேஜ் முடிச்சு வெளிய வந்த ஒரு வாரத்துலன்னு சொன்னதா ஞாபகம்…
அப்படிப் பார்த்தா அவரை நான் சந்திச்சதுக்கு அப்புறமா ஒரு வாரம் உயிரோட இருந்திருக்காறா?”

“ஓ! அப்படியா!
சரி அதை விஷால் கிட்ட விசாரிச்சுக்கறேன்.
அந்த ப்ரொபஸர் சொன்ன அந்த பொக்கிஷம் இருந்த இடத்துக்கு நீங்க போய் பார்த்தீங்களா?
அது என்னது?”

“அது வந்து…அது…வந்து…”

“ஏன் சக்தி தயங்குறீங்க?”

என்று ஜேம்ஸ் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தயங்கிய சக்தி மனதிற்குள் அதை ஜேம்ஸிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற ஒரு பட்டிமன்றம் நடந்தேறியது.

பொக்கிஷம் பற்றிய ரகசியத்தை சொல்லலாமா! வேண்டாமா! என்ற மனப் பட்டிமன்றத்தின் முடிவைத் தேடி…

தொடர்வாள்…

அத்தியாயம் 31: அழைப்பு-இணைப்பு

ஜேம்ஸின் மொபைல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்ததால் டேவிட் வீட்டு விசாரணையில் முழுமனதோடு அவனால் ஈடுபட முடியாது போனது. அவன் உடனே அங்கு இருந்த அவன் டிப்பார்ட்மென்ட் ஆட்களிடம் சில விவரங்களை சேகரித்து அவனது மொபைலுக்கு அனுப்புமாறு உத்தரவு இட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.

ஜேம்ஸ் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதும் சக்தியும் அவள் வீட்டிற்குள் சென்று கதவை தாழ் இட்டாள். வீட்டினுள் நுழைந்த சக்தி முன், சுட சுட ஒரு கப் காபியுடன் வந்து நின்ற ப்ளூ, அதை அவளிடம் கொடுத்தது. அவளும் காபியை எடுத்துக் கொண்டு ப்ளூவிடம் நன்றி கூறி அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தாள்‌. அப்போது ப்ளூ அவளருகே சென்று
சக்தி ஏன் மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டு பின் வாசலுக்கு சென்றாள்?
அவளை பார்க்க வந்த நபர் யார்?
ஏன் டேவிட் வீட்டில் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது?
என்று பல கேள்விகளை கேட்டு பதிலுக்காக சக்தியை பார்த்து நின்றிருந்தது.

ப்ளூ கேட்ட கேள்விகளுக்கெல்லாம் இரண்டே வரிகளில் பதிலளித்தாள்.

“தோணிச்சு போனேன். கதவு தொறந்து இருந்துது…சோ… போலிஸை வர வச்சேன்.”

என்று கூறி குடித்த காபி கப்பை அங்கிருந்த காஃபி டேபிளில் வைத்து விட்டு தனது அறைக்கு செல்ல எழுந்தாள். அப்போது ப்ளூ மீண்டும் அவளிடம்,

“மிஸ்ஸர்ஸ் டேவிட் அவங்க வீட்டுல இல்லையே! அப்புறம் எப்படி கதவு தொறந்திருந்தது?”

“அதை கண்டு பிடிக்க தான் போலிஸ் கிட்ட சொல்லிருக்கேன். அவா கண்டுபிடிச்சுப்பா.”

“ஸோ… உன் கூட பேசிட்டு இருந்தது போலிஸா?”

“ஆமாம். சரி ப்ளூ நான் என் ரூமுக்கு போறேன். பை. ஐ வில் கம் ஃபார் டின்னர் அட் எய்ட். ஓகே.”

“ஓகே தீ. டேக் ரெஸ்ட்”

என்று ப்ளூ கூறியதும் சக்தி அவளது அறை கதவை மூடினாள். பின் உடைகளை மாற்றி ஃபிரெஷ் ஆனா பின் படுக்கையில் படுத்துக் கொண்டே தனது மொபைலை எடுத்து விஷாலுக்கு கால் செய்தாள். ஆனால் விஷால் எடுக்கவில்லை. மீண்டும் முயற்சித்தாள். கால் வாய்ஸ் மெயிலுக்கு சென்றது. உடனே தான் தான் அழைப்பதாகவும் அன்று நடந்த சிலவற்றை பற்றி பேச வேண்டுமென்றும், டைம் கிடைக்கும் போது திருப்பி அழைக்க சொல்லிவிட்டு வாய்ஸ் மெயிலை துண்டித்தாள்.  பின்பு சில ஆஃபிஸ் ஈமெயில்களுக்கு பதில் அனுப்பிவிட்டு அப்படியே சற்று அசந்து தூங்கிப் போனாள்.

அவள் வலதுபுறமாக திரும்பி படுத்திருந்த மெத்தையில் அவளின் இடுப்புக்கு அடியில் புஸ்… புஸ்…. புஸென அவளின் மொபைல் அதிர்ந்ததில் விருட்டென எழுந்து மொபைலை துழாவி தேடியெடுத்துப் பார்த்தாள். அவள் எதிர் பார்த்த கால் விஷால் இடமிருந்து ஆனால் அழைப்பு வந்ததோ அவள் பெற்றோரிடமிருந்து. கண்களை நன்றாக கசக்கி தூக்கத்தை கலைத்து கொண்டே அவளின் பெற்றோரை மொபைலில் வீடியோ காலில் அழைத்தாள். அவளின் அழைப்புக்காக காத்திருந்த நவீனம் மிருதுளாவும் உடனே வீடியோ காலில் இணைந்தனர்‌.

வழக்கமான நலம் விசாரிப்புகள் முடிந்ததும். கல்யாண தலைப்பை வாசிக்க ஆரம்பித்தனர் நவீன் மற்றும் மிருதுளா. அதை கேட்ட சக்தி அவர்களிடம்

“அப்பா அன்ட் அம்மா…கல்யாண விஷயத்துல ஏதாவது அப்டேட் இருந்தா நானே உங்களுக்கு சொல்லுவேன். சோ…நீங்க அதுக்காக கால் பண்ணி கேட்க வேண்டாம். ஓகே வா.”

“சரி மா. இனி நீயா சொல்லற வரைக்கும் நாங்க அதை பத்தி ஒன்னும் கேட்க மாட்டோம். போறுமா.”

“தாங்க்ஸ் மா.”

“அப்பறம் உங்க ஆஃபிஸ் ல, உன் பக்கத்து வீட்டு அம்மா மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டுல எல்லாம் என்ன விஷேஷங்கள்.”

“ஆங்! ஏன் கேட்கற அப்பா? உனக்கு பேச வேறெதுவும் இல்லையா “

“பின்ன என்ன நீ! நாங்க உன் கிட்ட வேற எதைப் பத்தி தான் பேசறது? உன் கல்யாணத்த பத்தி பேசக்கூடாதூன்னுட்ட!”

“அப்பா! ஓகே ஓகே! ஆஃபிஸ் வேலை எல்லாம் நல்லா போறது. அப்புறம் நம்ம  பக்கத்தாத்து மிஸ்டர் அன்ட் மிஸ்ஸர்ஸ் டேவிட் ரெண்டு பேருமே எங்கயோ ஊருக்கு போயிருக்கா.”

“இன்னைக்கு அவங்க வீட்டு கதவு கூட திறந்து கிடந்தது மிஸ்டர் நவீன். அப்போ நம்ம தீ தான் போலிஸுக்கு கால் செஞ்சு அவங்களை வர வச்சு இப்போ விசாரணை போயிட்டிருக்கு.”

உடனே காலை ம்யூட் செய்த சக்தி ப்ளூவைப் பார்த்து

“ஹே ப்ளூ இதை ஏன் இப்போ அவங்க கிட்ட சொன்ன?”

“ஏன் சொன்னா என்ன தீ?”

“அவங்க பயந்துட மாட்டாங்களா ப்ளூ!”

“ஹலோ! ஹலோ தீ! நீ இருக்கயா?”

“நவீ… ஒரு வேளை நம்ம இன்டர்நெட் கட் ஆகியிருக்கோ என்னவோ.”

ஃபோனை அன்மியூட் செய்த சக்தி

“ஆங்… அப்பா…அம்மா என் சைட்ல தான் ஏதோ ப்ராப்ளம். இப்போ சரி ஆயிடுத்து.”

“சரி கால் கட் ஆகறதுக்கு முன்னாடி ப்ளூ ஏதேதோ சொல்லித்தே! அங்க என்ன ஆச்சு? மிஸ்ஸர்ஸ் டேவிட்டும் அவ ஆத்துக்காரரும் நன்னா இருக்காளோனோ!”

“அதுதானே! அப்படி கேளுங்கோ நவீ. இவ என்னடான்னா அவா ஊருக்கு போயிருக்கான்னு சொன்னா… ஆனா ப்ளூ என்னடான்னா…”

“அம்மா! அம்மா! உடனே உன்னோட கற்பனா சக்தியை எல்லாம் இங்க கொண்டு வந்து உன்னையும் குழப்பி அப்பாவையும் குழப்பிடாதமா.”

“அப்படின்னா என்ன நடந்ததுன்னு சொல்லு.”

என்று மிருதுளா கேட்டதும் சக்தி அன்று மாலை ஆஃபிஸில் இருந்து வந்ததில் இருந்து அப்போது அவர்களுடன் போனில் பேசக் கொண்டிருந்தது வரை கூறி முடித்தாள். அதை முழுவதுமாக கேட்ட நவீன் மிருதுளா தம்பதியினர் அதிர்ச்சிக்குள்ளாகி ஏதும் பேசாது இருந்தனர். அப்போது சக்தி அவர்களிடம்

“அப்பா…அம்மா… இருக்கேங்களா? இப்போ உங்களுக்கு என்ன ஆச்சு?”

” ம்…இருக்கோம் இருக்கோம். ஏன் மா தீ…”

“சொல்லுப்பா”

“அந்த ஊரு நல்ல சேஃபான ஊருன்னு இல்ல நெனச்சேன்!”

“இப்போ என்ன ஆச்சுப்பா?”

“இப்படி எல்லாம் நடக்கறதே!”

“அப்பா…அது ஏன் நடந்ததுன்னு போலிஸ் விசாரிச்சு நாளைக்கு சொல்லிடுவாப்பா. சோ கவலை படாதே.”

“அது சரி டி. ஆனா நீ எப்படி போலிஸுக்கெல்லாம் ஃபோன் பண்ணி வர சொன்ன?”

“ஏன் மா. நான் சொல்லக் கூடாதுன்னு மெட்ஸ் கவர்மென்ட் ஏதாவது ரூல்ஸ் போட்டிருக்கா என்ன?”

“அதுக்கில்லடி…நாளை பின்ன அந்த திருடனுக்கு நீ தான் போலிஸுக்கு போனன்னு தெரிஞ்சுதுன்னா?”

“அம்மா கவலையே வேண்டாம் அந்த போலிஸ்காரர் ஜேம்ஸ் எனக்கு ரொம்ப நல்லா தெரிஞ்சவர் தான்.”

“என்னது! அது எப்படி போலிஸ்காரரை உனக்கு தெரிய வந்தது.”

பேச்சுவாக்கில் ஜேம்ஸ் பற்றி சக்தி கூறியதும் அதைப் பிடித்துக் கொண்டனர் நவீனும் மிருதுளாவும். தான் தேவையில்லாமல் ஜேம்ஸ் பெயரை கூறிவிட்டோமே என்று  எண்ணிய சக்தி சட்டென

“ஊப்ஸ்!…”

என்று தனக்குத் தானே சொல்லியதை கேட்ட நவீன் அவளிடம்

“ஹே தீ! நீ ஏதாவது எங்க கிட்டேந்து மறைக்கறீயா?”

“ஏன் பா அப்படி கேட்கற?”

“இல்ல இவ்வளவு வருஷமா நீ அங்க வேலைப் பாக்கற! ஆனா இப்போ நீ அந்த விஷாலை பார்க்க பாரிஸ் போனது லேந்து… அங்க என்ன நடக்கறதுன்னே எங்களுக்கு தெரிய மாட்டேங்கறது. ஏதேதோ நடக்கறதாகவும் நாங்க சங்கட படக்கூடாதூன்னுட்டு நீ எங்ககிட்ட எதுவும் சொல்ல மாட்டேங்கறதாகவும் சதா சர்வநேரமும் உன் அம்மாவோட புலம்பலை தான் கேட்டுண்டே இருக்கேன். இப்போ நீ சொன்னது எல்லாத்தையும் வச்சுப் பார்த்தா…அவ சொல்லறதுலேயும் ஏதோ இருக்கறா மாதிரின்னா இருக்கு!”

“அச்சோ! அப்பா. ஜேம்ஸ் என்னோடு புது ஃப்ரெண்டுப்பா.”

“அது எப்படி போலிஸ்காரர் உனக்கு ஃப்ரெண்ட் ஆனார்? நீ எதுக்காவது அவர் கிட்ட போயிருந்தா தானே உனக்கு அவரை தெரிய வாய்ப்பிருக்கு.”

“அது தானே! உன் அம்மா சொல்லறதும் சரிதானே!”

“சென்ட் பர்சன்ட் கரெக்ட் தான் மா. ஆனா நான் அவர்கிட்ட எதுக்கும் போகலை.”

“பின்ன எப்படி டி உனக்கு அவர் ஃப்ரெண்ட் ஆனார்?!”

“அம்மா…என்னை பேச விடுமா. அப்போ தானே நான் சொல்ல முடியும்.”

“ம்…சரி சொல்லு.”

“நீ முந்தி மாதிரி இல்லமா. உன் பொறுமை எல்லாம் எங்க போச்சு?”

“ம்…அதை எல்லாம் தோச்சு காயப்போட்டிருக்கேன் போதுமா.”

“ஹீ ஹீ ஹீ! உன் ஜோக்குக்கு சிரிச்சுட்டேன் ஓகே வா. சரி சரி ஜோக்ஸ் அப்பார்ட். ஜேம்ஸ் விஷாலோட ஃப்ரெண்ட்… சோ… அவர் எனக்கும் ஃப்ரெண்ட். தட்ஸ் ஆல்”

“இதை முன்னாடியே சொல்லிருக்கலாமே தீ மா”

“அப்பா எங்க நீங்க ரெண்டு பேரும் என்னை சொல்ல விட்டேங்கள்.”

“அவர் நம்ம ஊர் காரறா? இல்ல அந்த ஊர் காரறா?”

“அப்பா…அவர் நம்ம ஊர் காரர் ஆனா பொறந்து வளர்ந்தது எல்லாம் இந்த ஊர்ல தான். சோ… 95% இந்த ஊர் காரர் தான்.”

“சரி சரி எதுவா இருந்தா என்ன…எதுக்கும் நீ கொஞ்சம் அந்த போலிஸ் காரர்ட்டேந்து தள்ளியே இரு.”

“ஓகே மா. சரி நான் வச்சுடட்டுமா. வி கால் பண்ணறான்.”

“ஓகே டா. டேக் கேர். பை”

“பை ப்பா.”

“நாங்க சொன்னதெல்லாம் மனசுல வச்சுக்கோடி.”

“சரி மா. பை பை.”

“ம்…சரி பை.”

என்று பெற்றோரின் அழைப்பை துண்டித்து விட்டு விஷாலின் அழைப்பை ஏற்ற சக்தி அவனிடம் அன்று நடந்த விவரங்களை கூறி முடித்தாள். அவள் கூறியதனைத்தையும் கேட்டு முடித்த விஷால் சக்தியிடம்,

“தீ… ஜேம்ஸ் ஏன் அவன் கிட்டேந்து  எதையாவது மறைக்கிறியான்னு கேட்கணும்?”

“இது எல்லா போலிஸ் காராலும் கேட்கற வழக்கமான கேள்வி தானே வி.”

“தீ…நீ ஒண்ணு கவனிச்சியா?”

“என்னது வி”

“ஜேம்ஸ் கிட்ட நாம காலேஜ் லாஸ்ட் டே நடந்த விவரங்களை சொல்லாம விட்டுட்டோம்.”

“என்னது நீ என்னை ப்ரப்போஸ் பண்ணிணதையா?”

“இல்ல தீ. அதுக்கப்புறம் நீ வெளிய போனது. அந்த ப்ரொபஸர் சேவியரை பார்த்தது. உன் மொபைலை காரில் தொலைத்தது. இதெல்லாம் நீ ஜேம்ஸ் கிட்ட சொல்லலையே!”

“ஆனா…அதெல்லாம் எப்பவோ நடந்தது வி. அதை ஏன் நான் ஜேம்ஸ் கிட்ட இப்போ சொல்லணும்? அதுவுமில்லாம ப்ரொபஸர் இன்னும் இருக்காரா இல்லையான்னு கூட தெரியாது.”

“அதுனால என்ன தீ. எனக்கென்னவோ நீ ஜேம்ஸ் கிட்ட அன்னைக்கு நடந்தது எல்லாத்தையும் சொல்லிருக்கணும்ன்னு தோணறது.”

“ஆனா எனக்கென்னவோ அன்னைக்கு நடந்ததுக்கும் இப்போ நடக்கறதுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லைன்னு தான் தோணறது.”

“எதுக்கும் அதை அவன்ட்ட சொல்லிட்டா அவனும் ஏதாவது லிங்க் இருக்கான்னு விசாரிப்பான் இல்ல தீ.”

“ம்…அதை பத்தி விசாரிக்கணும்னா ஒண்ணு அவர் ப்ரொபஸர் சேவிரை மீட் பண்ணணும்… இல்லாட்டி… அந்த பீட்டரை மீட் பண்ணணும். இதுல ப்ரொபஸர் உயிரோட இருக்காரா இல்லையான்னு தெரியாது. அந்த பீட்டர் எங்க இருக்கான்னோ இல்ல இருக்கானா இல்லையான்னே தெரியாது. எப்படி? எதை? வச்சு ஜேம்ஸ் லிங்க் பண்ணுவார்?”

“ஏய் தீ! தட் இஸ் ஹிஸ் ஜாப். யார் கண்டா இதுவே கூட அவனுக்கு வேற ஏதாவது ஒரு நல்ல லீட் கிடைக்க வாய்ப்பா அமையலாம் இல்ல.”

“ம்…சரி நான் இப்போ என்ன பண்ணனும்?”

“நாளைக்கு மொதோ வேலையா நீ ஜேம்ஸுக்கு கால் செஞ்சு நடந்ததை அவன்கிட்ட சொல்லிடு.”

“ஓகே. டன்.”

“என்ன தீ இது! நாம கல்யாணம் பண்ணிக்க போறவா மாதிரியா பேசிக்கறோம். ஏதோ டிடெக்டிவ்ஸ் டிஸ்கஷன் மாதிரின்னா இருக்கு.”

“ஹா…ஹா…ஹா… அப்படின்னா நான் நான்சி அன்ட் நீ ஷெர்லாக் ஓகே வா.”

“விளையாடாதே தீ.”

“சரி சரி…நீ உன் பேரன்ட்ஸ் கிட்ட பேசினியா? நான் எப்போ அவாள்ட்ட பேசறது?”

“ம்.‌.. நான் பேசினேன்.
நான் டே ஆஃப்டர் டுமாரோ மெட்ஸ் வரேன் இல்லையா…அப்போ நீயும் அவாள்ட்ட பேசலாம். ஓகே வா.”

“டபுள் ஓகே.
சரி சரி ரொம்ப நேரமாயிடுத்து வி.
நான் காலை கட் பண்ணட்டும்மா?”

“ம்… அதுக்குள்ளேயே வா.”

“அதுதான் நாளன்னைக்கு நீ இங்க வரப்போறயே பின்ன என்ன. அப்போ பேச மிச்சம் மீதி ஏதாவது வை. இப்போ பை.”

“சரி சரி உன்கிட்ட வேற எதை எதிர்ப்பார்க்கறது.”

“எல்லாத்தையும்… கல்யாணத்துக்கு அப்புறமா நீ எதிர்பார்க்காததையும்…”

“ஆமாம் இப்படி எல்லாம் பேசிட்டு வை. அப்புறம் எங்கேந்து நான் தூங்க.
சரி சரி பை ஃபார் நவ்”

என்று விஷால் கூறியதும் அழைப்பை துண்டித்தாள் சக்தி. பின் சற்று நேரம் அவனையும் அவன் கடைசியாக கூறியதையும் மனதில் அசைப்போட்ட சக்தி புன்னகைத்துக் கொண்டே மொபைலை பார்த்தாள். அதில் ஜேம்ஸிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்ததை அப்போது தான் கவனித்தாள். உடனே அதை திறந்து படித்தாள். அதில் மிஸ்ஸர்ஸ் டேவிட் பற்றி விஷயங்கள் பெரிய லெவலில் இருப்பதாகவும், அதைப் பற்றி டிஸ்கஸ் செய்யவும், அவர்கள் வீட்டிற்குள் வந்தது யார் என்ற விவரங்களை
கூறவும், மறுநாள் காலை அவள் வீட்டிற்கு வருவதாகவும்,  அவள் வீட்டில் இருப்பாளா என்றும் ஜேம்ஸ் கேட்டிருந்தான்.

அதைப் படித்ததும் சக்தி, தான் வீட்டில் இருப்பாள் என்றும் தனக்கும் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், தாராளமாக வரலாம் என்றும் ஜேம்ஸுக்கு குறுஞ்செய்தியில் அழைப்பு விடுத்தாள். 

உண்மையில் மிஸ்ஸர்ஸ் டேவிட் யார்?,
ஜேம்ஸின் அந்த ஒரு கேள்வி…,
சக்தி ஜேம்ஸிடம் கூற தவறியதாக விஷால் சுட்டிக்காட்டிய விஷயம்,
காலேஜ் கடைசி நாள் நடந்த சம்பவங்கள்,
சக்தியின் அந்த மர்ம இரவு சம்பவத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறதா? என்ற குழப்பத்தில்…

தொடர்வாள்….

காரை நிறுத்திவிட்டு அன்று ஆஃபிஸிற்கு வந்து ஜேம்ஸ் சொன்ன விஷயங்கள், சிசிடிவி விவரங்கள், ஒவ்வொரு சனிக்கிழமையும் வந்து செல்லும் அந்த டிரக் மற்றும் ஜான் ஆகிய விஷயங்களை மனமெனும் சிந்தனை குட்டையில் போட்டு குழப்பி, மூழ்கி மெல்ல அதில் தெளிவை தேடிக் கொண்டே வீட்டிற்குள் செல்ல மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்து சென்றவளுக்கு சட்டென பக்கத்து வீட்டு திண்ணையில்  மிஸ்ஸர்ஸ் டேவிட் அமர்ந்து அவளைப் பார்த்து கை அசைப்பது போல தோன்றியதும் குழப்பத்தில் இருந்த அவளின் முகம் பிரகாசமானது.

உடனே அவர் அருகே சென்றாள் சக்தி. ஆனால் அங்கு சென்றவள் வெறிச்சோடி கிடந்த திண்ணையைப் பார்த்ததும் கனவா! என்று  தனக்குத்தானே கூறிக்கொண்டே அவள் வீட்டுக்கு செல்ல திரும்பினாள். அப்போது மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டினுள் இருந்து ஏதோ கீழே விழுந்து உடையும் சப்தம் அவளுக்கு கேட்டது. சட்டென திரும்பி அவர் வீட்டின் கதவுக்கு முன் சென்று  கதவை தட்டினாள். பதிலேதும் இல்லாததால் அவர் வீட்டின் வலது புறம் தோட்டம் வழியாக சென்று அங்கிருந்த ஜன்னல் வழியே பார்க்க முயன்றால் ஆனால் அவளுக்கு ஒன்றும் சரிவர தெரியவில்லை. உடனே  வீட்டை சுற்றியுள்ள தோட்டத்தில் மெல்ல நடந்துக் கொண்டே வீட்டின்  பின்புறம் சென்று பார்த்தாள். வீட்டின் பின் பக்க கதவு பாதியாக திறந்திருந்தது. அதைப் பார்த்த சக்தி கதவின் அருகே சென்று மிஸ்ஸர்ஸ் டேவிட் பெயரை சொல்லி அழைத்தாள். அதற்கும் பதிலேதும் வரவில்லை.

சற்றே குழப்பமடைந்த சக்தி. மீண்டும் ஒருமுறை மிஸ்ஸர்ஸ் டேவிட் பெயரை உறக்க சொல்லி அழைத்தார். அப்போதும் பதில் வரவில்லை என்றதும்‌ செய்வதறியாது சற்று நேரம் தோட்டத்திலேயே அங்குமிங்குமாக பரிதவித்து நடந்தாள். பின் ஜேம்ஸுக்கு கால் செய்து விவரங்களை கூறி அவனை அங்கு வரச் சொன்னாள்.

ஜேம்ஸும் வருவதாக கூறி ஃபோனை வைத்தான். சக்தி அங்கிருந்து ஒரு அடி கூட நகராமல் மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டுத் தோட்டத்திலேயே நடந்துக் கொண்டிருந்தாள். அப்போது சக்தியின் அறையை சுத்தம் செய்துக் கொண்டிருந்த ப்ளூ மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டு தோட்டத்தில் சக்தி நிற்பது போல் தோன்ற, உடனே அந்த அறையின் ஜன்னல் அருகே சென்று நன்றாக பார்த்தது. அது சக்தியே தான் என்று தெரிந்ததும் மெல்ல ஜன்னலின் கண்ணாடி கதவைத் திறந்து சக்தியை அழைத்தது. அப்போது சக்தியின் மொபைல் ஒலிக்க உடனே அவள் அதை எடுத்து பேசிக் கொண்டே அந்த வீட்டின் முன் வாசலுக்கு சென்றாள்.

சக்திக்கு கால் வந்ததும் அவளை அழைக்க இருந்த ப்ளூ கப்சிப் ஆனது. ஆனால் சக்தி மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டு தோட்டத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று எண்ணிக்கொண்டே சக்தி வீட்டு ஹாலுக்கு வந்து மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டு முன் வாசலை பார்த்தது.

அங்கே சக்தி யாரோ ஒரு நபருடன் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த ப்ளூ, சக்தி ஏன் மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டு தோட்டத்திற்கு சென்றாள் என்ற சிந்தனையிலிருந்து வெளியே வந்து அவளுடன் பேசிக் கொண்டிருக்கும் நபர் யாராக இருக்கும் என்ற சிந்தனையில் மூழ்கியது.

மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டு வாசலில் நிற்பதாக ஜேம்ஸ் கால் செய்ததால் சக்தி அந்த வீட்டின் முன் வாசலுக்கு சென்று ஜேம்ஸை வரவேற்று நடந்ததை மீண்டும் ஒரு முறை விளக்கினாள். இருவரும் பேசிக்கொண்டே டேவிட் வீட்டு பின் பக்கம் சென்றதும் சக்தி திறந்திருந்த கதவை ஜேம்ஸிடம் காட்டினாள். அதைப் பார்த்த ஜேம்ஸ் அவளிடம்,

“நீங்க உள்ள போகலை இல்ல!”

“இல்ல ஜேம்ஸ். எனக்கு கொஞ்சம் பயமா இருந்தது அதுனால தான் உடனே உங்களை கூப்பிட்டேன்.”

“இங்க மிஸ்ஸர்ஸ் டேவிட் தவிர வேற யாரெல்லாம் இருக்காங்க?
இல்ல அவங்க இங்க இருந்த போ அவங்க கூட யாரெல்லாம் இருந்தாங்க?
அவங்க இந்த வீட்டுல எவ்வளவு வருஷமா இருக்காங்க?”

“இதோ இது தான் என் வீடு ஜேம்ஸ்.”

“ஓ! ஓகே!”

“நான் ருத்ராவை பிரிஞ்சு வீடு தேடிட்டிருந்தப்போ எனக்கு பிடிச்ச,
என் பட்ஜெட்க்கு கிடைச்ச வீடு இதுதான்.
நான் இங்க குடி வந்ததுலேந்து மிஸ்ஸர்ஸ் டேவிட் அன்ட் ஃபேமிலி இங்க தான் இருக்காங்க.
அவங்க கிட்ட பேசின போது தான் தெரிய வந்தது அவங்க இங்க இந்த வீட்டை வாங்கி இங்க ஷிப்ட் செஞ்சு பத்து வருஷத்துக்கு மேல ஆகுதுன்னு. நான் இந்த வீட்டுக்கு வந்து ரெண்டு வருஷமாச்சு.
சோ எப்படி பார்த்தாலும் அவங்க இங்க ஒரு பன்னிரண்டு வருஷமா இருக்காங்கன்னு நினைக்கிறேன்.”

“ஓ! ஓகே! அவங்க தனியா வா இருந்தாங்க?”

“இல்ல ஜேம்ஸ்.
அவங்க ஹஸ்பண்ட் மிஸ்டர் டேவிட்டும் அவங்க கூட இருந்தார்.
அதுமட்டும் இல்லாம அவங்க வீட்டுக்கு தினமும் ஜான்னு ஒரு பையன் வேலைக்கு வருவான்.
அவங்க ஊருக்கு போன விஷயத்தை கூட ஒரு நாள் இங்க இருந்த அந்த ஜான் தான் எனக்கு சொன்னான்.
இப்போ கூட நான் அவன் தான் இப்படி கதவ தொறந்து போட்டுட்டு உள்ள இருக்கான்னு நினைச்சேன்.
ஆனா அவனும் உள்ள இருக்கறா மாதிரி தெரியலை.”

“அவங்க இப்படி அடிக்கடி ஊருக்கு போவாங்களா?”

“நான் இங்க குடி வந்ததுலேந்து அவங்க வீட்டை விட்டு வேற எங்கேயுமே போனதில்லை.
மார்னிங் அன்ட் ஈவ்னிங் இந்த தெருவுல வாங்கிங் போவாங்க.
அதுவும் மிஸ்ஸர்ஸ் டேவிட் மட்டும் தான் போவாங்க.”

“என்ன சக்தி உங்களுக்கும் ஜான்ங்கற பேருக்கும் நிறைய சம்மந்தம் இருக்கும் போல?”

“ஏன் அப்படி சொல்லுறீங்க ஜேம்ஸ்?”

“இன்னைக்கு காலையிலேந்து இந்த பெயர் தானே ஆஃபிஸுலேந்து வீடு வரைக்கும் தொடர்ந்துட்டே வருது.
அது தான் அப்படி சொன்னேன்.”

“ம்…ஆமாம் இல்ல.!”

“ஆமாம் ஆ இல்லையா!”

“ஆமாம் ஜேம்ஸ்.
நீங்க சொல்லறதும் சரிதான்.”

“சரி அவங்க பசங்க எல்லாம்!”

“அவங்களுக்கும் டேவிட்டுக்கும் குழந்தைகள் இல்லை ஆனா மிஸ்ஸர்ஸ் டேவிட்டுக்கு ஒரு பையன் இருக்கார்ன்னு சொல்லிருக்காங்க. அவரு பேரு கூட பீட்டர்ன்னு சொன்னாங்க.”

“நீங்க அவங்க பையன் பீட்டரை பாத்திருக்கீங்களா?
அவரு கூட பேசியிருக்கீங்களா?”

“இல்லவே இல்லை?”

“ஏன் சக்தி?
ரெண்டு வருஷமா பக்கத்து வீட்டுல இருக்கீங்க. அவங்க பையனோட பேசினது இல்லைன்னு சொல்லுறீங்க!”

“ஆமாம்.
ஏன்னா மிஸ்ஸர்ஸ் டேவிட் பையன் இந்த ரெண்டு வருஷத்துல அவங்கள பார்க்க வந்ததே இல்லை.
அப்புறம் எப்படி நான் பார்ப்பேன் இல்ல பேசுவேன்.
ஆக்சுவலி அவங்களுக்கு அந்த வேதனை இருந்துட்டே தான் இருந்துது. அப்பப்போ அவங்க பேச்சுல அவங்க மனவலியை வெளிப்படுத்திருக்காங்க. இன்ஃபாக்ட் அவங்க படற வேதனையை பார்த்து தான் நான் என் பேரன்ட்ஸ்க்கு அடிக்கடி கால் பண்ணி பேசுவேன்.”

“ம்…என்ன பண்ண! இப்படி சில பிள்ளைகள்.
சரி சக்தி.
நீங்க இங்கயே இருங்க.
நான் உள்ள போய் பார்த்துட்டு வரேன்.”

“ஓகே ஜேம்ஸ்.”

என்று கூறிய சக்தி மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டு பின் வாசலிலேயே காத்திருந்தாள். அங்கு நடந்ததை ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டு இருந்த ப்ளூ, ஜேம்ஸ் டேவிட் வீட்டினுள் சென்றதும் மீண்டும் அவளை அழைத்து விசாரிக்க ஜன்னல் கண்ணாடிக் கதவை மெல்ல திறந்து

“தி…தி…”

என்று மெல்ல அழைத்தது. சக்திக்கும் ப்ளூவின் குரல் கேட்டது. உடனே அவளும் ப்ளூ பக்கமாக திரும்பினாள். அந்த நேரம் பார்த்து மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டினுள் இருந்து வெளியே வந்தான் ஜேம்ஸ். ஜேம்ஸை பார்த்ததும் சக்தி ப்ளூவிடம் ஏதோ கை அசைத்தாள். அதைப் பார்த்த ஜேம்ஸ் சட்டென சக்தி வீட்டை பார்த்தான். அப்போது ப்ளூ டக்கென்று மறைந்துக் கொண்டது. சக்தி பார்த்து கை அசைத்த திசையில் இருந்த அவள் வீட்டு ஜன்னல் பக்கம் பார்த்த ஜேம்ஸ், அங்கு யாரும் இல்லாததை கண்டு சக்தியிடம்,

“யாருக்கு கை அசைத்து காட்டுறீங்க சக்தி?”

“இல்லையே! யாருக்கும் நான் கை அசைத்து காட்டலயே!
நான் சும்மா என் கையை தலையில வச்சு யோசிச்சிட்டு இருந்தேன்.
நீங்க வந்தீங்க.”

“இல்லையே!
நான் வந்ததும் நீங்க உங்க வீட்டை பார்த்து யாருக்கோ கை அசைச்சீங்களே!
அசச்சா மாதிரி தான் இருந்துச்சு!
இருந்துச்சு என்ன இருந்துச்சு.
அசைச்சீங்க.”

“அச்சோ!
ஜேம்ஸ்!
என்னங்க?
என் வீட்டுல என்னைத் தவிர யாருமே இல்லை.
அப்படி இருக்கும் போது நான் யார்கிட்ட கை அசச்சுருப்பேன்?
சரி! சரி! அதுவா இப்போ முக்கியம்?
உள்ள யாராச்சும் இருக்காங்களா?”

“நீங்க ஏதாவது என் கிட்டேந்து மறைக்கறீங்களா சக்தி?”

“நான் ஏன் இல்ல என்னத்த மறைக்க போறேன் ஜேம்ஸ்!”

“இல்ல…நீங்க சொல்லற விஷயங்களை வச்சு தான் நான் இந்த கேஸை ப்ரொசீட் பண்ணனும்.
அதுதான் இன்னொரு தடவ கன்பார்ம் பண்ணிக்க கேட்டேன்.
ஏதாவது மறைக்கறீங்கன்னா இப்பவே சொல்லிடுங்க.
நான் இந்த கேஸுலேந்து விலகிக்குறேன்.”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை ஜேம்ஸ்.
இந்த கேஸுக்கு வேண்டிய எல்லா விஷயங்களையும் ஒண்ணு விடாம உங்க கிட்ட சொல்லிட்டேன்.
இனியும் ஏதாவது இருந்தா சொல்லிடறேன்.
ஏன் இதோ இப்போ இந்த மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டு விஷயத்தை நான் ஏன் உங்ககிட்ட சொல்லணும் சொல்லுங்க.
ஆனாலும் பார்த்ததும் மொதல்ல உங்களுக்கு தானே கால் பண்ணி சொன்னேன்.”

“அதெல்லாம் சரி தான் சக்தி.
ஆனாலும் என் மனசுக்குள்ள ஒரு நெருடல் என்னன்னா…
நீங்க முக்கியமான ஏதோ ஒண்ண அல்லது ஒரு விஷயத்தை என்கிட்ட சொல்ல விட்டுட்டேங்களோன்னு தோணிகிட்டே இருக்கு.
அதுனால கூட நாம நூடுல்ஸ் மாதிரி இதுல சிக்கிக்கிட்டு இருக்கோமோன்னு தோணுது.”

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல ஜேம்ஸ்.
இந்த கேஸுக்கு வேண்டிய எல்லா விவரங்களையும் நடந்த விஷயங்களையும் தெளிவா உங்க கிட்ட சொல்லிட்டேன்.
இப்போ நீங்க தான் சொல்லணும்.”

“நானா?
நான் என்ன சொல்லணும்?”

“மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டுக்குள்ள நீங்க தானே போயிட்டு வந்திருக்கீங்க?
அப்போ உள்ள என்ன இருக்குன்னு நீங்க தான் சொல்லணும்.”

“ஓ! அதுவா.
உள்ள யாருமில்லை.
யாரும் வந்துட்டு போனதுக்கான தடயமும் இல்ல.”

“அப்போ நான் என் காரை பார்க் பண்ணிட்டு வரும்போது கேட்ட சத்தம்?”

“மே பி யாராவது திருட வந்திருக்கலாம்.
நீங்க வந்ததைப் பார்த்து பின் வாசலால தப்பி ஓடி இருக்கலாம்.
ஆனா வீட்டுக்குள்ள எல்லாமே வச்சது வச்ச இடத்துல இருக்கறா மாதிரி தான் தெரியுது.
எதுக்கும் எங்க டிப்பார்ட்மென்ட் ஆளுங்கள வர சொல்லிருக்கேன்‌.
அவங்க வந்து கை ரேகை ஏதாவது கிடைக்குதான்னு பார்த்து சொல்லுவாங்க.
அது மட்டுமில்லாம! ஆங் இதோ வந்துட்டாங்க.
வாங்க வாங்க.
இவங்க தான் மிஸ் சக்தி.”

“ஹாய். ஹலோ”

“ஹாய்.”

“இவங்க தான் எனக்கு இன்ஃபார்ம் பண்ணினாங்க.
யூ கேரி ஆன் வித் யுவர் டியூட்டி.
சக்தி இதோ இவங்க ரெண்டு பேரு தான் இந்த வீட்டுக்கு காவலா நிப்பாங்க‌.
நாங்க மிஸ்ஸர்ஸ் டேவிட் அன்ட் மிஸ்டர் டேவிட்டை கான்ட்டாக்ட் செஞ்சு விவரங்களை சொல்லிக்கறோம்.
தாங்க்ஸ் ஃபார் யுவர் ஹெல்ப்.”

“யூ ஆர் வெல்கம்.
இட்ஸ் ஓகே ஜேம்ஸ்.
மிஸ்ஸர்ஸ் டேவிட் இஸ் லைக் மை மதர்.
அதுனால தான் நான் கொஞ்சம் பதற்றமாகி உங்களையும் இங்க வரவச்சுட்டேன்.
ஐ ஆம் சோ சாரி”

“இல்ல இல்ல உங்கள மாதிரி தான் எல்லாரும் போலிஸ் மேல நம்பிக்கை வச்சு இது போல அக்கம்பக்கத்துல ஏதாவது அசம்பாவிதம் நடந்தா உடனே எங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணனும்…
வாட் யூ டிட் இஸ் கரெக்ட்.
சோ நீங்க மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டிய அவசியமில்லை.
இனி எங்க ஆளுங்க பார்த்துப் பாங்க.
யூ கேன் காரி ஆன் வித் யுவர் வர்க்.”

“ம்…ஓகே.
என் வீட்டுக்கு வாங்களேன்.
காபி கூடிச்சிட்டு போகலாம்.”

“நோ! நோ! சக்தி.
இன்னொரு தடவ வரேன்.
நான் உடனே என் ஆஃபிஸுக்கு போகணும்‌.
கால் மேல கால் வந்துட்டே இருக்கு. இவங்க எல்லாரும் ஸ்பாட்டுக்கு வர்றதுக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.
அது தான் வந்துட்டாங்க இல்ல.
இனி அவங்க பாத்துப்பாங்க.
நான் கிளம்பறேன்.
டேக் கேர்.
பை.”

“பை ஜேம்ஸ்.
இட்ஸ் ஓகே நெக்ஸ்ட் டைம் கட்டாயம் வாங்க.
பை.”

என்று கூறி ஜேம்ஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றதும் சக்தி தனது வீட்டிற்குள் சென்றாள்.

பக்கத்து வீட்டு மிஸ்டர் அன்ட் மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டின் கதவு எப்படி/ஏன் திறந்துக் கிடந்தது?
யார் வந்திருப்பார்?
அவர்கள் வீட்டினுள் சக்தி கேட்ட சத்தம் எதனால் வந்தது?
போன்ற வினாக்களின் விடைகளை தேடி…

தொடர்வாள்…

சிசிடிவி அறைக்குள் சென்ற ஜேம்ஸ் அங்கிருந்த சூப்பர்வைசரிடம் கடந்த சனிக்கிழமை காலை முதல் மதியம் வரையிலான கேன்டீன் சம்மந்தப்பட்ட வீடியோக்களை போட்டுக் காட்ட சொன்னான். அவர்களும் அன்று பதிவான கேன்டீன் மற்றும் அதனை சுற்றியிருந்த பகுதிகளையும் போட்டுக் காட்டினார்கள். அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த ஜேம்ஸ் சட்டென ஓரிடத்தில் நிப்பாட்டி அதில் பதிவாகியிருந்த அந்த டிரக்குகள் இருப்பவரை ஜூம் செய்து காண்பிக்க சொன்னான். அந்த நபரை ஜூம் செய்ததும் சக்திப் பக்கம் திரும்பிய ஜேம்ஸ்

“என்ன சக்தி! இவர் தானே நீங்க வேலைக்கு சேர்த்துவிட்ட ஜான்?”

“ஆமாம்! இவரே தான். அது சரி இவர் தான் ஜானுன்னு நீங்க எப்படி

கரெக்ட்டா சொல்லுறீங்க?”

“அவரோட விவரங்களை கேன்டீன் ஊழியர்கள் ஃபைல பார்த்தேன்.”

“ஓ! ஓகே.”

“இந்த டிரக் எங்கேந்து வந்திருக்கு? அதுல என்ன இருந்தது ஆர் என்ன எடுத்துட்டு போறாங்கன்னு உங்க யாருக்காவது தெரியுமா?”

“இல்ல சார். எங்களுக்கு தெரியாது. நீங்க கேன்டீன் சூப்பர்வைசரை தான் கேட்கணும்.”

“சக்தி உங்களுக்கு ஏதாவது?”

“நோ ஜேம்ஸ். நோ”

“இந்த டிரக் உங்க கம்பெனியோடதா? இல்ல வெளியேந்து…வேற யாரோடதாவது வண்டியா?”

“அது…”

“இல்ல சார். இது ரெகுலரா உங்க கம்பெனிக்குள்ள வர வண்டியான்னு கேட்கறேன்.”

“எஸ் சார். இந்த டிரக் எவ்வரி சாட்டர்டே உள்ள வரும் மத்தியானம் வெளில போகும்.”

“ஒரே குறிப்பிட்ட நேரத்துல தான் வந்து போகுமா? இல்ல சனிக்கிழமை எப்ப வேணும்னாலும் வந்து போகுமா?”

“இல்ல இல்ல சார் ஒரே டைம் தான் ஃபாலோ பண்ணும். ஆனா போன சனிக்கிழமை மட்டும் சீக்கிரம் கிளம்பி வெளியே போயிருக்கு.”

“எவ்வளவு சீக்கிரம்?”

“எப்பவும் மத்தியானம் ஒரு மணிக்கு தான் வெளியே போகும். ஆனா போன சனிக்கிழமை மட்டும் பதினொன்னே காலுக்கு கிளம்பி வெளியே போய் இருக்கு சார்.”

“ம்…இன்டரெஸ்டிங். சரி சார். நீங்க ஒண்ணு பண்ணுங்க நான் சொன்ன ஃபுட்டேஜ் எல்லாத்தையும் எனக்கு இந்த நம்பர் ஆர் ஈமெயில் ஏதாவதுக்கு உடனே அனுப்பி வையுங்க.”

“நிச்சயமா சார். இதோ அனுப்பிடறேன்.”

“தாங்க்ஸ். சக்தி என் வேலை முடிஞ்சிடுச்சு  நாம போகலாமா?” 

“ஷுவர் ஜேம்ஸ்.”

“சக்தி நீங்க இனி அந்த ஜானை எங்க பார்த்தாலும் எனக்கு உடனே கால் பண்ணுங்க. நானும் அவன் ஃபைல்ல இருக்கற அட்ரெஸ்ஸுக்கு போய் பார்க்கறேன். நிச்சயம் அது தப்பான அட்ரெஸ்ஸா தான் இருக்கும்.”

“நோ நோ! எங்க ஆஃபிஸ்ல பேக் ரௌண்ட் செக்கிங் எல்லாம் பண்ணாம யாரையுமே வேலைக்கு எடுக்க மாட்டாங்க ஜேம்ஸ்”

“ம்…அப்படியா! அதையும் பார்ப்போம். சரி நீங்க உங்க வேலையை பார்க்கலாம் சக்தி. நான் கிளம்பறேன்.”

“அப்படின்னா ருத்ரா எதுவும் செய்யலை இல்லையா? அவ குடுத்த ஜூஸ்னால இல்ல தானே!”

“ம்…அப்படி இருக்கலாம். அப்படி இருக்க நிறைய வாய்ப்பு இருக்கு. எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க.”

“ம்…ஷுவர்.”

“குட். ஆமாம் சக்தி… உங்க செகரெட்ரி மிஸ் ருத்ரா அவங்களோட நீங்க ரூம்மெட்டா இருந்தப்போ அங்க நடந்த ஒரு இன்சிடென்ட் பத்தி சொன்னாங்க. அது நடந்ததுக்கப்புறமா தான் நீங்க தனியா ரூம் எடுத்து தங்க ஆரம்பிச்சீங்கன்னும் சொன்னாங்க. அது உண்மையா?”

“என்ன! அவ பாய் ஃப்ரெண்ட் விஷயமா?”

“ஆமாம் சக்தி. இல்ல வேறெதுவும் காரணம் இருக்கா?”

“வேறெதுவும் இல்ல ஜேம்ஸ். ஆனா அது ஒரு காரணம் போதாதா என்ன?”

“அதுக்காக உயிர் தோழியை பிரியறதுங்கறது ரொம்ப இல்ல!”

“உயிர் தோழியா இருந்தா என்ன இல்ல யாரா இருந்தா என்ன ஜேம்ஸ். பல தடவை சொல்லியும் அவங்களால நமக்கு ஏதாவது ஆபத்து வந்தா நாம விலகறது தானே நல்லது. அதைத் தான் நான் செஞ்சேன். ஆனாலும் அவளோட நான் இன்னமும் பேசிட்டு தானே இருக்கேன்.”

“அதுவும் சரிதான் சக்தி. ஆனாலும் நீங்க ரொம்ப ஸ்டிரிக்ட் ஆபிசர் போல. பாவம் என் பிரெண்ட் விஷால்‌. அவன் ஏதாவது ஒரு அழகான பொண்ண பார்த்தான் செத்தான் போலயே!”

“பார்க்கறது தப்பில்ல ஜேம்ஸ். வரம்பு மீற கூடாதுன்னு தான் நான் சொல்லறேன். ஏது உங்க நண்பனுக்கு ஏற்ற காவல்காரன் போல தெரியுது!”

“ஜஸ்ட் கிட்டிங். சரி சக்தி. நான் வரேன். பை டேக் கேர்.”

“பை ஜேம்ஸ்.”

என்று கூறி ஜேம்ஸ் சென்றதும் தனது கேபினுக்கு சென்றாள் சக்தி. அவள் சென்ற வழியில் குறுக்கே வந்த ருத்ரா சக்தியிடம்

“ஹாய் தி. மிஸ்டர் ஜேம்ஸ் மறுபடியும் வந்திருந்தார் போல!”

“ஆமாம். ஏன் உனக்கு தெரியும் தானே! அப்புறம் என்ன போல ன்னு இழுக்கற?”

“இல்ல கேட்டேன். அவர் எதுக்கு நம்ம கேன்டீனையே சுத்தி சுத்தி வரார்?”

“ம்…நம்ம கேன்டீன் காஃபி ரொம்ப நல்லாருக்காம் அதுதான்.”

“போ தி. விளையாடாதே!”

“ஹேய் ருத்ரா! இதுல விளையாட என்ன இருக்கு?”

“எனக்கென்னவோ அவர் என்னைப் பார்க்கத் தான் ரெண்டாவது தடவ வந்திருந்தார்ன்னு தோணுது”

“ஓ! அப்படியா? எத வச்சு நீ அப்படி சொல்லுற?”

“இப்போ கொஞ்சம் முன்னாடி… உன் கேபின் வாசல்ல உனக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தார் இல்ல…”

“ஆமாம். அதுனால உன்ன பார்க்க வந்தார்ன்னு நீ எடுத்துப்பியா?”

“இல்ல தி. அப்போ நான் நம்ம ரோமிகிட்ட ஒரு ஃபைல் குடுக்க வந்தேனா….”

“சரி வந்த…அதுக்கு ஏன் இவ்வளவு மெதுவா வர. கொஞ்சம் ஸ்பீட் அப்.”

“அப்போ அவரு என்னையே உத்துப் பார்த்து ரசிச்சிட்டிருந்தார் தெரியுமா!”

“அது தெரிஞ்சும் மேடம் ஏன் அவர் கிட்ட போய் கேட்கலை?”

“அவர் என்னை ரசிச்சதை நானும் ரசிச்சிட்டு இருந்தேன். அதுதான் கேட்க தோணலை. ஆனா அது ரொம்ப நேரம் நீடிக்கலை. அதுக்குள்ள நீ வந்து ஆட்டத்தை கலைச்சுட்ட”

“எதை உங்களுக்குள்ள நடந்த ரசிப்பு ஆட்டத்தையா?”

“உன்னை… நீ இருக்க பாரு. போய் வேலையை பாரு ருத்ரா. நானே பல டென்ஷன்ல இருக்கேன். இதுல நீ வேற! வா வா அந்த எம்.என்.எம் அனுபின ப்ரபோஸலை அனைலைஸ் செஞ்சு அவங்களுக்கு பதில் அனுப்புவோம்.”

“ஓகே மேடம் சக்தி.”

தன்னை சுற்றி ஏதேதோ நடந்தாலும், அவை எல்லாம் எதற்கு நடக்கிறது என்று அறிய முடியாவிட்டாலும் சக்தி அவளது வேலையில் மும்முரமாக இருந்தாள். அவள் கூறிய அந்த எம்.என்.எம் கம்பெனி அனுப்பின ஈமெயிலை படித்து அதை பற்றி தனது மேலதிகாரிக்கு ஒரு ஈமெயில் போட்டு. அதற்கான அனுமதி பெறுதல் போன்ற வேலைகளில் மூழ்கினாள். அன்று மாலை வேலை முடிந்ததும் வீட்டுக்கு செல்ல கார் பார்க்கிங் சென்றவளை தடுத்து நிறுத்திய ருத்ரா 

“ஹேய் தி. எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா?” 

என்று கேட்க அதற்கு சக்தி அவளை நோக்கி 

“முடியாது”

என்று கூறி தனது காரை நோக்கி நடந்த சக்தியை ருத்ரா மீண்டும் வழிமறித்து

“ப்ளீஸ் சக்தி. என்னனு கேட்காமலேயே இப்படி முடியாதுன்னு சொல்லுறே!”

“சரி சொல்லு.”

“எனக்கு அந்த ஜேம்ஸ் மொபைல் நம்பர் தர முடியுமா?”

“வாட்? அவர் நம்பர் உனக்கு எதுக்கு?”

“சும்மா…அவர் போலீஸா. ஏதாவது உதவி தேவைன்னா கேட்கலாம இல்ல. அதுக்கு தான்.”

“ம்…நம்பிட்டேன். நீ சொன்னதை அப்படியே நம்பிட்டேன். நீ மொதல்ல நகரு. நான் வீட்டுக்கு போகணும்.”

“ப்ளீஸ்! ப்ளீஸ்! ப்ளீஸ்! சக்தி”

“நோ வே ருத்ரா. நான் அவர்கிட்ட கேட்காம அவர் நம்பரை உனக்கு ஷேர் பண்ண முடியாது. ஐ ஆம் வெரி சாரி அபௌட் தட்.”

“சரி நீ அவர்கிட்ட கேட்டுட்டே ஷேர் பண்ணு.”

“சரி கேட்கறேன்.”

“எனக்காக இப்பவே கேளேன். ப்ளீஸ்”

“ம்… சரி இரு. கால் பண்ணறேன். ரிங் போவுது.”

“ம்…ம்…தாங்க்ஸ் சக்தி”

“இன்னும் அவர் என் கால் பிக்கப் கூட பண்ணலை அதுக்குள்ள எதுக்கு தாங்க்ஸ்? ஆங்…ஹலோ மிஸ்டர் ஜேம்ஸ்.”

“ஹாய் சக்தி. என்னாச்சு? அந்த ஜானை எங்கயாவது பார்த்தீங்களா? இல்ல அவன் உங்க ஆஃபிஸுக்கே மறுபடியும் வந்திருக்கானா?”

“ஜேம்ஸ் ஜேம்ஸ். திஸ் இஸ் நாட் அபௌட் தட்.”

“பின்ன என்ன சக்தி? வேற எதாவது க்ளூ கிடைச்சிருக்கா? இல்ல உங்களுக்கு வேற யார் மேலாவது சந்தேகம் வந்திருக்கா?”

“அச்சச்சோ ஜேம்ஸ். கேஸ் பத்தியே இல்ல!”

“அப்படின்னா விஷால் பத்தியா?”

“இல்ல ருத்ரா பத்தி.”

“என்னது ருத்ரா பத்தியா? அவங்களுக்கு என்ன?”

“அவளுக்கு உங்க மொபைல் நம்பர் வேணுமாம். என்னை நச்சரிச்சுட்டு இருக்கா. உங்க கிட்ட கேட்காம குடுக்க மாட்டேன்னு சொன்னேன். அதுக்கு உடனே உங்ககிட்ட கேட்டு தரச்சொல்லி என்னை வீட்டுக்கு போக விடாம தடுத்து நிறுத்தி வச்சிருக்கா.” 

“இதுல என்ன இருக்கு சக்தி. தாராளமா குடுங்க. அவங்களுக்கும் ஏதாவது அவசரம்ன்னா என்ன கூப்பிட வசதியா இருக்கும் இல்ல.”

“ஓ! ஹோ! அது சரி. அது சரி. இதோ இப்பவே குடுத்துடறேன். அவளுக்கும் உடனே அவசரம் வந்திடும் கூப்பிடுவா. சரியா. பை ஃபார் நவ்.”

“ஓகே. பை சக்தி.”

“ஏய் தி! என்ன சொன்னார்?”

“ம்… இந்தா இது தான் அவர் நம்பர்.”

“தாங்க்ஸ் தி. லவ் யூ”

“என்னை லவ் பண்ணவா ஜேம்ஸ் நம்பர் கேட்ட?”

“போ தி.”

“நான் போக தான் வந்தேன். நீ தான் என்ன போக விடாம வழிமறிச்சுட்டு நிக்கற. கொஞ்சம் நகர்ந்தேனா நான் கிளம்ப முடியும்.”

“ஊப்ஸ்! சாரி. ம்…இப்போ நீ தாராளமா போகலாம். பை பை தி. ஹாவ் எ நைஸ் ஈவ்னிங் தி.”

“ம்…ம்…சேம் டூ யூ டூ.” 

சக்தி கேஸில் விசாரணை நடத்த வந்த ஜேம்ஸுக்கும் அவன் சஸ்பிஷன் லிஸ்ட்டில் இருக்கும் ருத்ராவுக்கும் இடையே காதல் மொட்டு ஒன்று மலராக விரிய துவங்கியுள்ளது. சஸ்பிஷன் சஸ்பென்ஷன் ஆகி சந்தோஷத்தில் முடிய போகிறதா  இல்லை சஸ்பிஷன் சஸ்பென்ஸ் ஆகி சங்கடத்தில் முடிய போகிறதா! 

ருத்ராவிடம் இருந்த ஒருவழியாக தப்பித்து ஆஃபிஸில் இருந்து புறப்பட்ட சக்தி நேராக வீட்டுக்குச் சென்றாள். வீட்டுக்கு காரை ஓட்டிச் சென்றுக் கொண்டிருந்த போது அவள் மனதில் கேள்விகள் பல உதித்தது. அதற்கான விடைகளை அவள் மனம் தேடியலைய ஆரம்பித்தபோது அவள் எப்போதும் செல்லும் லீ கார்னர் ரெஸ்டாரன்ட்டை கடந்து சென்றாள். உடனே மனதில் உதித்த கேள்விகள் அனைத்தும் மறைந்து அவள் அந்த ஜானை  

முதன்முதலில் அங்கு பார்த்த நினைவுகள் நிழலாட துவங்கியது. அதை மனதில் ஆசைப் போட்டுக் கொண்டே சென்றவள் வீடை சென்றடைந்தாள்.  காரை பார்க்கிங்கில் நிறுத்தி விட்டு பார்க்கிங் கதவை மூடி நிமிர்ந்தவள் கண்கள் விரிந்து பிரகாசமானது.  

தொடர்வாள்…