அத்தியாயம் 26: ஒன்று உண்மையானது

கார் ஸ்டார்ட் ஆன சப்தத்தில் சுயநினைவுக்கு வந்த சக்தி விஷாலை பார்த்து

“ஏய் வி!
என்ன நீ ஓட்ட போறியா?”

“ம்…ஆமாம்.
ஏன்?
நான் ஒட்ட கூடாதா?”

“இல்ல சாவி…எப்படி?”

“என்கிட்ட சாவி எப்படி வந்ததுன்னு கேட்க வர அது தானே!”

“ஆமாம்.”

“ஜேம்ஸ் பேசிட்டு போனதுலேந்து நீ பிரமை பிடித்தவ போல இருந்த.
ஜேம்ஸ் வேற நம்மளை அங்கே இருக்க வேண்டாம்ன்னு உடனே கிளம்பி வீட்டுக்கு போக சொன்னான்.
நான் திரும்பி உன்னைப் பார்த்தா நீ இந்த உலகத்துலயே இல்ல.
என்ன பண்ணுவேன்?
உன் கையிலிருந்த சாவியை எடுத்தேன்.
உன்னை அப்படியே கை தாங்கலா கூட்டிண்டு வந்து காருக்குள்ள உட்கார வச்சேன்.
இதோ வண்டிய ஸாடார்ட் பண்ணினேன்‌.
எங்கயோ இருந்த நீ இதோ இப்ப இங்க இந்த உலகத்துக்கே வந்துட்ட.
சரி இப்போ நாம உன் வீட்டுக்கு போகலாமா?”

“ஓ எஸ் போகலாம்.
ஆனா மணி இப்போ ஒன்றரை ஆகுது.
பேசாம லீ கார்னர் ல போய் லஞ்ச் சாப்டுட்டு அப்படியே ஆஃபிஸ் ல தலையை காட்டிட்டு வரட்டுமா வி!”

“ஹலோ! இன்னைக்கு லீவ் சொல்லிருக்க ஞாபகமிருக்கா?”

“ஆமாம். நல்லாவே ஞாபகமிருக்கு.
ஆனா ஜேம்ஸ் மத்தியானம் ஆஃபிஸ் வரேன்னு சொன்னதா கேட்டுது.
ஆனா ஏதோ கிணத்துக் குள்ளேந்து கேட்டுது.”

“அவன் அப்படி தான் சொன்னான்.
தெளிவா தான் சொன்னான்.
ஆனா நீ ஏதோ சிந்தனையில் ஆழமா மூழ்கி இருந்ததால உனக்கு அப்படி கேட்டிருக்கு.”

“சரி சரி நான் சொன்னா மாதிரி பண்ணலாமா?”

“எல்லாம் சரி.
எனக்கும் ஆஃபிஸ்னு ஒண்ணு இருக்கு அது தெரியுமா உனக்கு.”

“இருக்கு உனக்கு! ஆஹா ஹ ஆஹா!
என்ன ஒரு வார்த்தை ஜாலம்.”

“தி விளையாடாதே.”

“சரி சரி நீ பாரிஸுக்கு கிளம்பு‌.
உன்னை யாரு இங்க இருக்க சொன்னா?”

“சொல்ல மாட்ட நீ.
பாவமே இவளை சுத்தி ஏதேதோ நடக்குதேன்னு… கூடவே இருந்ததுக்கு இப்படியா சொல்லுவா?”

“இதுல என்ன தப்பு வி.
உனக்கு ஆஃபிஸ் இருக்கு உண்மை தான்.
நீ போய் தான் ஆகனும் அதுவும் உண்மைதான்.
அப்போ போன்னு தானே சொல்ல முடியும்.
போகாத என்கூடவே இருன்னா சொல்ல முடியும்!”

“ஆங்…ஏன் அது மாதிரி சொன்னா என்ன கொறஞ்சிடுமாம் மகாராணிக்கு?”

“சரி அப்படி நான் சொன்னா உனக்கு ஆஃபிஸ் போக வேண்டியதில்லையா.
அதுனால உனக்கு பிரச்சினை வராதா?”

“ம்….அது…”

“என்ன ம்…இழுவை! எனக்கு தெரியும் வி.
டயலாக்குக்காக வேணும்னா அப்படியெல்லாம் சொல்லிக்கலாம்.
ஆனால் பிராக்டிகல்லா யோசிச்சுப் பார்த்தா வேலை முக்கியம் தானே!
எனக்காக நீ இந்த இரண்டு நாள் என் கூடவே இருந்ததே எனக்கு பெரிய பலமா இருந்தது.
அதை வைத்தே வரும் நாளெல்லாம் ஓட்டிடுவேன்.
யூ டோண்ட் வரி வி.
நீ இப்பவே கூட லஞ்ச் முடிச்சிட்டு பாரிஸ் கிளம்பு.”

“ஆனா உன்னை எப்படி தனியா விட்டுட்டு…”

“ஹலோ சார்! நான் இத்தனை வருஷமா தனியா தானே இருந்தேன்.”

“ஆனா இத்தனை வருஷத்துல உனக்கு இப்படி ஏதாவது நடந்திருக்கா? இல்லையே!
அது தான் யோசனையாவே இருக்கு.”

“இட்ஸ் ஓகே வி.
இன்னைக்கு பாரிஸ் போ.
இன்னும் இரண்டு நாள்ல வீக் என்ட் வந்திடும் அப்புறமென்ன இந்க வந்துடு.
அப்போ உன் பேரன்ட்ஸ் கிட்டயும் டைம் வாங்கிண்டு வா.
நாம எல்லாரும் பேசலாம்.
என்ன சொல்லுற?”

“ம்…ஓகே தான்.
ஆனா நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் தி.”

“அதெல்லாம் இருப்பேன் வி.
நீ அதைப் பத்தி எல்லாம் கவலைப் படாம சாப்டுட்டு கிளம்பு.”

“ம்…ஓகே.”

“இதோ லீ கார்னர் வந்துட்டோம்.”

சக்தியும் விஷாலும் சேர்ந்து மத்திய உணவை உண்டு முடித்ததும் விஷால் அவன் காரை எடுத்துக் கொண்டு பாரிஸ் புறப்பட்டுச் சென்றான். சக்தி அவளது அலுவலகம் சென்று அவளின் மேலதிகாரியிடம் தனது நிலைமையை எடுத்துக் கூறினாள். அவரும் அவளை புரிந்துக் கொண்டு அவள் கேட்டது போலவே அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை அளித்தார். அவருக்கு நன்றி சொல்லி விட்டு வெளியே வந்தவள் நேராக ருத்ராவை வரவழைத்து அன்றைக்கு பாதியில் விட்ட மீட்டிங்கை தொடர்வதாக கூறி அனைவரையும் மீட்டிங் அறையில் கூடச் சொன்னாள். அப்போது ருத்ரா அன்று சிலர் லீவில் இருப்பதாகவும் அதனால் அடுத்த நாள் வைத்துக் கொள்ளலாமா என்று கேட்க அதற்கு சக்தி

“இல்ல ருத்ரா! நான் நாளைக்கும் நாளான்னைக்கும் லீவு கேட்டிருக்கேன். சோ ஆஃபிஸ் வரமாட்டேன்.
அதுதான் இன்னைக்கு முடிச்சிடலாம்ன்னு நினைச்சேன்…
சரி சரி நம்மளோட அந்த புது ரோபோ எந்த ஸ்டேஜ்ல இருக்கு?
அன்ட் அன்னைக்கு அந்த எம்.என்.எம் கம்பெனியோட நடந்த மீட்டிங்க்கு அப்புறம் அவங்க கிட்டேந்து எந்த ரெஸ்பான்ஸும் எனக்கு வரலையே!! அது என்ன ஆச்சுன்னு அவங்ககிட்ட கேட்டுட்டு அப்படியே அவங்கள ஈமெயில் பண்ண சொல்லு ருத்ரா.”

“புது ரோபோ பாராஜெக்ட் வேகமா நடந்துட்டு இருக்கு தி.
ஆனா அன்னைக்கு மீட்டிங்கில் நம்ம டீம் மேட்ஸ் ஏதோ டவுட் கேட்க வந்தாங்க இல்ல…
அப்ப கூட நீ அந்த விஷாலை பார்க்க போகணும்னும் நீ பார்த்துக்கறேன்னும் சொல்லிட்டு போனியே!
ஐ திங்க் அவங்களுக்கு நீ அதுக்கான விளக்கத்தை ஒரு ஈமெயிலா போட்டுட்டேன்னா அந்த ப்ராஸஸ் நிக்காம இருக்கும்.”

“ஆக்ச்சுவலி அன்னைக்கு அவங்க என்ன சொல்ல வறாங்கங்கறது எனக்கு புரிஞ்சிடிச்சு அதுனால தான் நான் அப்பறமா சொல்லறேன்னு சொல்லிட்டு வெளியே போனேன். அதுக்கான சல்யூஷனை அன்னைக்கே ஈமெயில் பண்ணிட்டேனே!”

“இல்ல தி.
நீ பண்ணலை.
அதுனால தான் அவங்க உன்கிட்டே ஈமெயில் வர வரைக்கும் அதுக்கு முன்னாடி ஸ்டெப் வரை ப்ராஸஸ் பண்ணிட்டிருக்காங்க.
நீ அதற்கான சல்யூஷனை அனுப்பிருந்தேன்னா அவங்க அதை இன்னேரம் இம்ப்ளிமென்ட் பண்ணிருப்பாங்க தி.”

“இல்லையே! இரு நான் செக் பண்ணறேன்.
ஊப்ஸ்!! நான் ஈமெயில் டைப் பண்ணிருக்கேன் ஆனா சென்டு பண்ணலை.
இதோ இப்பவே அனுப்பிடறேன்.
ஆங் டன்.
இந்த ஆராடர் டெலிவரி டேட் என்ன?”

“அடுத்த மாசம் இருப்பத்தி எட்டாம் தேதிக்குள்ள கவர்மென்ட்டுக்கு குடுக்கணும்.”

“அதுக்குள்ள முடிஞ்சிடுமில்ல ருத்ரா?”

“தி நீயா!!”

“வாட் டூ யூ மீன் பை நீயா?”

“இல்ல இத்தனை வருஷத்துல இது மாதிரி டவுட் ஃபுல்லா நீ எப்பவுமே இருந்ததில்லையே!
அதுதான் கேட்டேன்.
உனக்கு உடம்பு சரியில்லையா தி.
எனி ப்ராப்ளம்?”

“உடம்புக்கு ஒண்ணுமில்ல ருத்ரா.
ம்…சரி நான் ஈமெயில் அனுப்பிட்டேன்.
நம்ம டீமை முழு மூச்சோடு வேலையில் இறங்க சொல்லு.
வீ ஹாவ் டூ டெலிவர் இன் டைம்.
சோ இது சால்வுடு.
அந்த எம்.என்.எம் என்ன ஆச்சு?
அதைப் பத்தி ஒண்ணுமே நீ சொல்லலையே!”

“ஆங் அவங்கிட்ட இருந்து ஒரு ரெஸ்பான்ஸும் இல்ல தி.
நானும் நீ எதுவம் சொல்லாததால் ஃபாலோ அப் பண்ணலை.”

“என்ன ருத்ரா.
நான் தான் சொல்லலை.
அட்லீஸ்ட் நீயாவது என்னை கால் பண்ணி கேட்டிருக்கலாமில்ல!”

“சாரி தி.”

“சரி சரி இன்னைக்கே அவங்களுக்கு கால் பண்ணி பேசிட்டு அப்படியே ஈமெயிலும் போட்டு என்ன ஏதுன்னு விசாரிச்சு எனக்கு கால் பண்ணி சொல்லு”

“ஓகே தி.
டன்.”

“எக்ஸ்க்யூஸ்மி தி.”

“எஸ் பீட்டர்.
ஓகே ருத்ரா நீ போய் நான் சொன்னதை எல்லாம் இன்னைக்கே முடிச்சிடு.
கம் இன் பீட்டர்”

“உங்களை பார்க்க ஜேம்ஸ்ன்னு ஒருத்தர் வந்திருக்கார்.”

“ஓ வந்துட்டாரா.
ஓகே அவரை என் கேபினுக்கு அழைச்சிட்டு வாங்க.”

“ஓகே. இதோ அழைச்சிட்டு வரேன்”

சிறிது நேரம் கழித்து பீட்டர் ஜேம்ஸை அழைத்துக் கொண்டு சக்தியின் கேபினுக்குள் வந்தான்.

“வாங்க ஜேம்ஸ் வாங்க வாங்க.
ஓகே பீட்டர் தாங்ஸ்.
யூ கேன் கேரி ஆன் வித் யுவர் வொர்க்.
ஏதாவது தேவைன்னா கூப்பிடுறேன்.”

“ஓகே தி.”

“ம்…சொல்லுங்க ஜேம்ஸ்.”

“நான் உங்க ஆஃபிஸ் சிசிடிவி ரிக்கார்டிங் எல்லாத்தையும் பார்க்கணும்னு சொல்லியிருந்தேனே.
பார்க்கலாமா?”

“ஓ ஷுவர்! வாங்க போகலாம்.”

என்று சக்தி சொன்னதும் இருவருமாக செக்யூரிட்டி அதிகாரியிடம் சென்றனர். அவரிடம் சக்தி ஒரு பேப்பரை காட்டியதும் அதை படித்த அந்த அதிகாரி அவர்களை சிசிடிவி ரிக்கார்டிங் அறைக்குள் அழைத்து சென்றார்.
அங்கே ஜேம்ஸ் அவரிடம் சக்தி பாரிஸ் கிளம்பி சென்ற நாளின் காலை முதல் மத்தியப் வரையிலான ரிக்கார்டிங் கை பார்க்க வேண்டுமென கூறினான். அதிகாரியும் அவரின் கீழ் வேலை பார்க்கும் மைக்கேலிடம் ஜேம்ஸ் கேட்டது போலவே அந்த ரிக்கார்டிங்கை காண்பிக்க சொன்னார். அதைப் பார்த்துவிட்டு அதன் ஒரு காபியை தனது மொபைலுக்கு அனுப்பி வைக்குமாறு கூறிவிட்டு அங்கிருந்து மீண்டும் சக்தியின் கேபினுக்கு வந்தனர் சக்தியும் ஜேம்ஸும். சக்திக்கு அதில் எதுவும் வித்தியாசமாக தெரியவில்லை.

“வாங்க ஜேம்ஸ்.
உட்காருங்க.
காஃபி ஆர் டீ?”

“காஃபி”

“ருத்ரா டூ காஃபி ப்ளீஸ்”

ருத்ரா ஆஃபிஸ் பாய் இடம் சொல்ல அவனும் இரண்டு காஃபி எடுத்துக் கொண்டு சக்தியின் அறைக்கு சென்று கதவை தட்டினான் அப்போது உள்ளிருந்து

“எஸ் கம் இன்.”

“காஃபி எடுத்துக்கோங்க ஜேம்ஸ்.
தாங்க்ஸ் டக்லஸ்.
ம்…சொல்லுங்க ஜேம்ஸ்…
இந்த சிசிடிவி ரிக்கார்டிங் பார்த்ததுல உங்களுக்கு ஏதாவது க்ளூ கிடைச்சுதா?”

“ஒண்ணு கன்பர்மா தெரியறது என்னனா நீங்க அன்னைக்கு… நீங்க சொன்னா மாதிரியே ஆஃபிஸ்லேந்து நீங்க சொன்ன டைமுக்கு கிளிம்பியிருக்கீங்க.”

“அப்பாடா இப்பவாவது நம்பீனீங்களே.”

“இதுவரை உங்க கேஸ்ல இந்த ஒண்ணு மட்டும் தான் உண்மையா இருக்கு…”

“ஆங்…”

“இருங்க சக்தி. அதே நேரம் நீங்க அன்னைக்கு ஆஃபிஸ் கேண்டீன்ல சாப்பிட்ட போது உங்க பிரெண்ட் ஜூல்ஸ் குடுத்தான்னு சொன்னீங்களே அது அவங்க கேண்டீன்ல வாங்கினது இல்ல.”

“அப்படியா? இல்லையே ருத்ரா அதை எனக்காக வாங்கிண்டு வந்ததா தானே சொன்னா!”

“உங்களுக்காக தான் வாங்கிட்டு வந்திருக்காங்க.
அதுல எந்த வித மாற்றமும் இல்லை.
ஆனா அதை எங்கேந்து வாங்கிட்டு வந்தாங்கன்னு அவங்க கிட்ட தான் கேட்கணும்.”

“இல்ல ஜேம்ஸ் அந்த சாஃப்ட் ட்ரிங்க்ஸ் எங்க கேண்டீன்ல கிடைக்கறது தான்”

“இருக்கலாம் ஆனா அன்னைக்கு அவங்க அங்கேந்து வாங்கல.
வேறெங்கேந்தோ வாங்கிட்டு வந்து அங்க வாங்கினதா சொல்லிருக்காங்க.”

“அப்படியா? அது எப்படி உங்களுக்கு தெரியும்?”

“இதோ இப்போ பார்த்தோமே அந்த கேண்டீன் சிசிடிவி ல தான் தெரிஞ்சுது.
நீங்க வேற பக்கமா திரும்பி உட்கார்ந்திருந்தால் உங்களால அவங்க அங்கேந்து தான் வாங்கிட்டு வந்தாங்களான்னு தெரியாம போச்சு.”

“அப்படீன்னா அவ தான் எனக்கு அதுல ஏதாவது கலந்து குடுத்திருப்பாளா?ஆனா அவ ஏன் அப்படி செய்யணும்?”

“தீர்க்கமா சொல்ல முடியாது.
ஆனால் அவங்கள என் சஸ்பிஷன் லிஸ்ட்டில் சேர்த்துள்ளேன்.
நான் அவங்க கிட்ட தனியா பேசி விசாரிச்சுக்கறேன்.
நீங்க எதுவும் தெரிஞ்சா மாதிரி காட்டிக்க வேண்டாம்.”

“ம்…சரி.
அவளை இப்போ இங்க வர சொல்லவா?”

“இல்ல இல்ல நான் வெளியே போகும் போது பார்த்து பேசிக்கறேன்.”

“சரி நளினி விஷயம் என்ன ஆச்சு ஜேம்ஸ்?”

“அடாப்ஸி ரிப்போர்ட் வந்தா தான் தெரியும்.”

“அப்படியா! அது வறதுக்கு எவ்வளவு நேரமாகும்?”

“இருபத்தி நான்கு மணி நேரமாகும்.”

“ஓ! ஓகே ஓகே. சரி நீங்க டிராஃபிக் போலிஸ் டிப்பார்ட்மென்ட்டுலேந்து எனக்கு கால் பண்ணி அந்த நளினி சொன்னதெல்லாம் சரியான தகவல் தானான்னு கேட்டீங்களே ஏன்?”

“ஆங்!! ஆங்!! அது ஏன்னா! அந்த பொண்ணு சொன்ன நேரத்துல, அவ சொன்ன அந்த இடத்துல எதுவுமே நடக்கலை.
அப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கான எந்த வித அறிகுறியும் அந்த ஏரியாவில் இருக்கும் எந்த சிசிடிவிலேயும் பதிவாகலை.
அதுவுமில்லாம நான் தனிப்பட்ட முறையில் அந்த ஏரியா காரங்களையும் விசாரிச்சுப் பார்த்தேன்.
அதுல…”

“எக்ஸ்க்யூஸ்மி தி.
மே ஐ கம் இன்”

“ஆங்…ஒன் செகண்ட் ஜேம்ஸ்.
எஸ் கம் இன் ருத்ரா”

“தி….”

“யூ டோண்ட் வரி ருத்ரா.
இவர் பேரு ஜேம்ஸ்.
என்னோட நண்பர்.
ஜேம்ஸ் இவங்க தான் ருத்ரா.
மை செகரெட்டரி.”

“ஹலோ மிஸ் ருத்ரா”

“ஹாய்”

“சரி என்ன விஷயம் ருத்ரா?”

“அந்த எம்.என்.எம் கம்பெனி உனக்கு அன்னைக்கே அவங்க ப்ரபோசல உன் ஈமெயிலுக்கு அனுப்பிட்டாங்களாம்.
உன் கிட்டேந்து தான் ரிப்ளை எதிர்பார்த்திட்டிருக்கறதா சொன்னாங்க.
அதை சொல்லி உனக்கு ஞாபக படுத்திட்டு போக தான் வந்தேன்.
நீயே அவங்களுக்கு ரிப்ளை பண்ணிடு சரியா.
ஓகே நான் என் சீட்டுக்கு போறேன்.
நைஸ் மீட்டிங் யூ மிஸ்டர் ஜேம்ஸ்.
ஹாவ் எ நைஸ் ஈவ்னிங்.”

“தாங்யூ மிஸ் ருத்ரா. விஷ் யூ தி சேம்.”

என்று சந்தேக கண்ணுடன் ருத்ராவைப் பார்த்த படி அமர்ந்திருந்த ஜேம்ஸை பார்த்து சக்தி தன் தொண்டையை சரி செய்துக் கொள்வது போல சப்தம் எழுப்பியதும் ஜேம்ஸ் அவளைப் பார்த்து

“ம்…என்ன சொன்னீங்க சக்தி?”

“நான் ஒண்ணுமே சொல்லலை ஜேம்ஸ்.
தொண்டை வரண்டு போன மாதிரி இருந்தது.
அதுதான் தண்ணி குடிச்சேன்.
நீங்க தான் ருத்ராவை வச்சக் கண்ணு வாங்காம பார்த்துட்டே இருந்தீங்க”

“இல்ல அவங்க கிட்ட ஏதோ ஒரு ரகசியமிருக்குன்னு என் மனசுக்கு படுது.
எதுக்கும் அவங்க மேல ஒரு கண்ணு வச்சுக்கறேன்.
நீங்களும் அவங்க கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.”

“எனக்கு தெரிஞ்சு அவ ரொம்ப நல்லவ தான்.
நான் ஜாக்கிரதையா இருக்கிறதெல்லாம் இருக்கட்டும்…
நீங்க அவளை பார்த்ததைப் பார்த்தா அவளை உங்க சந்தேக லிஸ்ட்டுல சேர்க்க பார்த்தா மாதிரி தெரியலையே!”

“அட போங்க சக்தி.
நீங்க வேற…
எப்ப விளையாடுறதுன்னு இல்ல.
சரி நம்ம பையன் விஷால் எங்க?
ஆளையே காணுமே!”

“ஹலோ ஜேம்ஸ் இது என்னோட ஆஃபிஸ்.
இங்க எப்படி அவனிருப்பான்.
அவன் கிளம்பி பாரிஸ் போயாச்சு.
நாளைக்கு மத்தியானமா வருவான்.”

“ம்…ஓகே ஓகே!”

ஜேம்ஸ் நளினி சொன்ன சம்பவத்தைப் பற்றி சக்தியிடம் விளக்கிக் கொண்டிருக்கையில் ருத்ரா உள்ளே நுழைந்து அவர்கள் பேச்சை திசை திருப்பி விட அந்த விஷயம் மீண்டும் தட்டிப் போனது.

தொடர்வாள்….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s