ஒரு காலத்தில் விருது பெறுவது பெருமைக்குரியதாகக் கருதப்பட்டது…

இப்போது நடத்தப்படும் சில விருது வழங்கும் விழாக்களைப் பார்க்கும்போது… விருது கொடுப்பவர்கள் பெறுபவர்களைவிட அதிகமாகிவிட்டார்களோ என்ற கேள்வி எழுகிறது! 😊

திறமையாளர்கள், செல்வாக்கு மிக்கவர்கள், மக்கள் சேவை செய்பவர்கள், சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர்கள், தொழில்முனைவோர் எனப் பலரையும் “அங்கீகரிக்கிறோம்” என்ற பெயரில், மிட்டாய்களைப் போல விருதுகளை அள்ளிக் கொடுத்தால், அந்த அங்கீகாரத்தின் இனிப்பே கசந்துவிடாதோ?

திறமையைக் கொண்டாடுவது நோக்கமா? கூட்டத்தைச் சேர்ப்பதும், விளம்பரதாரர்களை ஈர்ப்பதும் நோக்கமா? 🤔

தகுதியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, செல்வாக்கும் வணிக நோக்கங்களும் முன்னிலை பெறும்போது, தகுதியைக் கௌரவிக்க வேண்டிய விருதுகளே கூட்டத்தை ஈர்க்கும் தூண்டில்களாகிவிடுகின்றன.

இதையெல்லாம் பார்த்து விருதுக்கே “நான் கௌரவத்தின் அடையாளமா… விழாவுக்கு வந்ததற்கான இலவசப் பரிசா?” 🏆 என்ற சந்தேகம் வந்துவிடும் போல…

விருதுகளால் திறமைக்கு மதிப்பு சேரட்டும். மறைமுக நோக்கங்களுக்காக விருதுகளின் மதிப்பைக் குறைக்க வேண்டாமே!

இல்லையெனில், நாளை விருதுகளுக்கே தேவைப்படும்…
தங்கள் மதிப்பை மீட்டெடுக்க ஓர் அங்கீகாரம்! 🏆
#maisaaral #விருதுகளின்மதிப்பு #திறமைக்குஅங்கீகாரம் #தகுதிக்குமரியாதை #சிந்திக்கவைக்கும் #சமூகநையாண்டி #AwardsOrMarketing #RecogniseRealTalent #MeritMatters #HonourTheHonour