ராசாமணி வீட்டு வாசலில் இரண்டு வேன்கள் வந்து நின்றது. அனைவரும் சாப்பிட்டு வீட்டை சுத்தம் செய்து விட்டு கிளம்பினர். பெண்கள் எல்லாரும் ஒரு வேனிலும் ஆண்கள் எல்லாரும் ஒரு வேனிலும் என்று அமரச் சொன்னார்கள். அப்போது நவீன்

“பெரியப்பா லேடிஸ் மட்டும் ஒரு வண்டியில் வேண்டாம் நாம யாராவது ரெண்டு மூணு பேரும் அவா வண்டியில்  போவோம். ஃபார் சேஃப்டி”

“ஓகே! ஓகே! நவீன் உனக்கு உன் ஆத்துக்காரிக் கூட போகணும் அவ்வளவு தானே சரி வா நாம ரெண்டு பேருமே இந்த வண்டில பொம்மனாட்டிகளுக்குத் துணையா போகலாம்”

“அச்சச்சோ பெரியப்பா அதுக்காக நான் சொல்லலை. நீங்க வேற யார வேணும்னாலும் உங்க கூட வரச் சொல்லிக்கோங்கோ நான் அந்த வண்டிலயே வந்துக்கறேன்”

என்று நவீன் சொன்னதைக் கேட்டதும் மிருதுளா தன் மனதில் 

“எனக்கு இங்க இருக்கிறவாள்ல இரண்டு மூணு பேரை தான் தெரியும் உங்க அம்மாவும் எனக்கு மத்தவாள இன்ட்ரொ பண்ணி வைக்க மாட்டா. என் கூட உட்காரவும் மாட்டா. நீங்க வரேன்னு சொன்னதும் சந்தோஷமா இருந்தது ஆனா இப்போ இப்படி பல்டி அடிக்கறேளே நவீ. ப்ளீஸ் இந்த வேன்லயே வாங்கோளேன். கடவுளே நவீயை இந்த வேன்லயே வர வைப்பா”

என வேண்டிக் கொண்டிருக்கையில் சொர்ணம் அத்தை 

“என்ன மிருது உன்ன விட்டு பிரிஞ்சிருக்க மனசில்லாம நம்ம கூடவே வந்துட்டான் உன் ஆத்துக் காரன்?”

“அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை அத்தை.”

“அப்படியா? அடிப் பொண்ணே நாங்களும் உன் வயசைத் தாண்டி வந்தவா தான்”

நவீனும், ராசாமணியும் தங்கள் வீட்டுப் பெண்களின் பாதுகாப்புக்காக அவர்களுடன் அவர்கள் வேனிலே ஏறி அமர்ந்தனர். ஒருவழியாக இரண்டு வேன்களும் திருக்கடையூரை நோக்கி பயணிக்கத் துவங்கியது. வண்டி நகர்ந்து ஒரு ஒன்றரை மணி நேரமானதும் மிருதுளாவிற்கு வாந்தி வர அதை சொன்னால் வண்டியை நிறுத்த வேண்டி வரும் மேலும் அனைவருக்கும் நேரம் வீணாகி விடுமே என்று அடக்கிக் கொண்டிருந்தாள். இரண்டரை மணி நேரமானதும் வண்டியை ஒரு டிக்கடை முன் நிறுத்தினார் டிரைவர். பிரயாணம் செய்பவர்களில் பாதிப் பேர் வயதானவர்கள் என்பதால் மூன்று மணி நேரம் அமர்ந்தே வந்ததில் கை கால் எல்லாம் வலிக்க ஆரம்பித்தது. வண்டி நின்றதுமே எவ்லாரும்  இறங்கி சற்று நேரம் நின்றிக் கொண்டிருந்தனர். மிருதுளாவும் வேகமாக இறங்கி வேனின் பின் பக்கமாகச் செல்வதைப் பார்த்த நவீன் அவளை கூப்பிட்டுக் கொண்டே பின்னால் சென்றான். அவள் ஒரு மரத்தின் கீழ் வாந்தி எடுத்ததைப் பார்த்த அத்தை லக்ஷ்மி நவீன் பின்னால் தண்ணீர் பாட்டிலுடன் சென்றார். 

நவீனும் அத்தையும் மிருதுளாவின் அருகில் சென்றதும் நவீன் அத்தையிடமிருந்த தண்ணீர் பாட்டிலை மிருதுளாவிடம் கொடுத்தான். அவளும் அதை வாங்கிக் கொண்டு வாயை நன்றாக கொப்பளித்து, முகத்தையும் அலம்பிக் கொண்டாள். மூவருமாக வேனிற்கு திரும்பி நடந்து வரும்போது

“ஏன்மா மிருது ஏழு மாசமாக போறதே நீ என்னத்துக்கு இப்படி வந்த? பேசாம ஆத்துலயே ரெஸ்ட் எடுத்துண்டிருக்க வேண்டியது தானே”

“இல்ல அத்தை பரவாயில்லை. பெரியவா ஆசிர்வாதம் கிடைக்க நானும் என் குழந்தையும் புண்ணியம் பண்ணிருக்கணும்.”

அவர்கள் வேன் அருகே வந்ததும் அனைத்துச் சொந்தங்களும் அத்தை சொன்னதையே சொன்னார்கள்.

தன் அதிகார வர்க புகுந்த வீட்டின் கட்டளைப்படி நடக்க வேண்டியதால் வந்தேன் என்பதை வெளியே யாரிடமும் ஏன் தன் தாயிடம் கூட சொல்லாமல் அவர்களை விட்டுக் கொடுக்காமல் பேசி சமாளித்தாள் மிருதுளா. அது அத்தனையையும் கேட்டுக் கொண்டு மட்டுமமே இருந்தனர் நவீனும் அவன் பெற்றோரும், தம்பிகளும்.

அனைவரும் வேனில் மீண்டும் ஏறினர். பயணம் தொடர்ந்தது. சொர்ணம் அத்தை சும்மா இல்லாமல்

“ஏய் பர்வதம் மிருதுளாவை ஆத்துலேயே விட்டுட்டு வந்திருக்கலாமோனோ!! பாவம் என்னத்துக்கு அவள இந்த மாதிரி நேரத்துல இப்படி அலக்கழிக்கணும்”

“என்னமோ நான் அவளை பஸ்ஸுல வர வெச்சா மாதிரின்னா சொல்லறேங்கள்?. ஜம்மன்னு சொகுசா நமக்குன்னு இருக்கற வேன்ல நம்ம கூட தானே வரா இதுல என்ன அலக்கழிப்பு இருக்குன்னு எனக்குப் புரியலை”

“ஆமா உன் கிட்ட போய்ச் சொன்னேன் பாரு என்ன சொல்லணும்.”

“ஆமாம் ஆமாம்”

“ஏன்டா நவீன் நீயாவது உன் ஆத்துக்காரியை ஆத்துலயே விட்டுட்டு வந்திருக்கலாமோனோ?” 

“செஞ்சிருக்கலாம் அத்தை ஆனா அவ மட்டும் தனியா இருக்கணுமேன்னு தான் யோசிச்சோம்…”

“ஏன் அவ அம்மா ஆத்துல விட்டுட்டு வந்திருக்கலாமே டா!”

“அவ வந்ததுனாலன்னு இப்போ உங்களுக்கென்ன? மொதல்ல அதச் சொல்லுங்கோ”

“அவ வரதுனால எனக்கு ஒண்ணுமில்லை பர்வதம். பாவம் வயத்துல புள்ளைய வச்சுண்டு இப்படி கஷ்டப்பட்டு உட்கார்ந்துண்டு வரணுமேன்னு தான் சொன்னேன் மா”

“அத்தை ப்ளீஸ் விடுங்கோ. எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை இதோ இன்னுமொரு அரை மணி நேரத்துல திருகடையூர் வந்திடுமே அப்புறம் என்ன அங்கப் போய் ரெஸ்ட் எடுத்துண்ட்டா போச்சு”

“ஏதோ என் மனசுல பட்டதைச் சொன்னேன்டி மா”

என்று சொர்ணம் அத்தையும், கூட இருந்த சொந்தங்களின் குரல்களும் மிருதுளாவிற்காகவும் அவள் வயிற்றில் வளரும் சிசுவிற்காகவும் ஒலித்தும் அவர்கள் எவரின் குரலையும் துளிக் கூட மதிக்கவில்லை பர்வதம். ஆனால் மிருதுளாவிற்கு தனக்காக ஒலித்த அவர்களின் குரல் மகிழ்ச்சியைத் தந்தது. மிருதுளாவிற்காகவும் அவர்கள் வீட்டின் அடுத்தத் தலைமுறையின் முதல் வாரிசுக்காகவும் நவீன் வீட்டினர் இவைகளை எல்லாம் யோசித்திருக்க வேண்டும். என்னச் செய்ய மிருதுளா அவஸ்தைப் படட்டும் என்று நினைப்பவர்களிடம் வேறெதை எதிர்பார்க்கக்கூடும். 

திருகடையூரிலுள்ள ஒரு கல்யாண மண்டபத்தின் முன் இரண்டு வேன்களும் நின்றது. அனைவரும் இறங்கி அவரவர் சாமான்களைத் தூக்கிக் கொண்டு உள்ளேச் சென்றனர். ஈஸ்வரன் பர்வதம் மட்டும் ஜம்பமாக கை வீசிக் கொண்டுச் சென்றனர் ஏனெனில் அவர்கள் பைகளையும் சேர்த்துத்  தூக்கி வந்தது நவீன், ப்ரவின் மற்றும் பவின். 

உள்ளேச் சென்றதும் அவரவர் ஒவ்வொரு அறைக்குள் சென்றனர். மிருதுளாவும் நவீன் பின்னாலேயேச் சென்றாள். அவர்கள் குடும்பத்திற்கு ஒரு அறைக் கொடுக்கப்பட்டிருந்தது. அதனுள் சென்றதும் நவீன் மற்றும் அவன் தம்பிகள் பைகளை எல்லாம் ஒரு மூலையில் வைத்து விட்டு வெளியேச் சென்றனர் அப்போது நவீன் மிருதுளாவிடம்

“மிருது நீ பேசமா இங்கயே ரெஸ்ட் எடுத்துக்கோ சரியா. இந்தா தண்ணி பாட்டில் வச்சுக்கோ” 

“ஓகே நவீ நான் கொஞ்ச நேரம் படுத்துக்கறேன்”

“ஓகே. அவள பாத்துக்கோங்கோ”

என்று தன் பெற்றோரிடம் கூறிவிட்டு நவீன் வெளியேச் சென்றதும் மிருதுளா மெல்ல தரையில் ஒரு பெட்ஷிட் விரித்துப் படுத்துக் கொண்டாள். அவள் படுத்துக் கொள்ளும் வரை சும்மா இருந்துவிட்டு அவள் படுத்ததும்…

“என்னதிது வந்த இடத்தில் இப்படியா படக்குன்னு படுத்துக்கறது? என்ன படுத்துண்டு ரெஸ்ட் எடுக்கவா வந்திருக்கோம். எல்லாரும் அங்க அவாஅவா பெட்டியை எல்லாம் ரூம்ல வச்சுட்டு ஒண்ணா உட்கார்ந்து பேசிண்டிருக்கா அங்க வராம இங்க படுத்துண்டா எப்படி? அதுவும் அப்பா உட்கார்ந்திருக்காளேன்னு கூட மரியாதை இல்லாம இது என்ன பழக்கமோ? ஏன்னா வாங்கோ நாம போய் எல்லாரோடையும் உட்கார்ந்து பேசுவோம் இங்க நம்மள விட வயசுல மூத்தவா எல்லாம் இருக்கா அவா படுத்துக்கட்டும் நாம போவோம் வாங்கோ” 

என்று கூறிவிட்டு பர்வதமும் ஈஸ்வரனும் மிருதுளாவின் பதிலுக்குக் கூட காத்திராமல் ரூமை விட்டு வெளியே சென்று அனைவருடன் பேசலானார்கள். 

பர்வதம் சொல்லிச் சென்றதை கேட்டதும் மிருதுளா தன் வயிற்றை தடவிக்கொண்டே தன் பிள்ளையுடன் பேசினாள்

“செல்லம் என்னாட இது அம்மா என்னமா தப்புப் பண்ணிட்டேன். படுத்தது தப்பா? பாப்பாக்காக தானே அம்மா படுத்துகிட்டேன். நாம வந்திருக்கவே கூடாது பேசாம வீட்டிலயே இருந்திருக்கலாம். அம்மாவும் கஷ்டபட்டு உன்னையும் கஷ்டப்படுத்தி ச்சே…பரவாயில்லை கண்ணு நாளைக்கு நம்மள ஒரு நல்ல தாத்தாவும் பாட்டியும் ஆசிர்வாதம் பண்ணுவா அது தான் நீ நல்லபடியா இந்த பூமில வாழறதுக்கு வேண்டியதில் முக்கியமானது அதுனால கொஞ்சம் பொறுத்துப்போம் கண்ணுக்குட்டி. சரியா. சமத்துப் பாப்பா”

“ஏய் மிருது யார் கிட்ட பேசிண்டிருக்க?  அப்பா அம்மா எங்க?”

“அவா ரெண்டு பேரும் வெளில உட்கார்ந்து பேசிண்டிருப்பா..நீங்க பார்க்கலையா?”

“இல்லையே!!! வெளியே எல்லாரும் ஹோட்டல்ல மத்தியச் சாப்பாடு சாப்ட்டுட்டு அப்படியே கோவிலுக்கு நடந்துப் போகப்போறா . மே பி அந்தக் கூட்டத்துல இருந்திருக்கலாம் நான் பார்க்கலை. உன்னை காணலை அது தான் பார்க்க வந்தேன். நீ தனியா பேசிண்டிருக்க?”

“நான் தனியா எல்லாம் பேசலை என் குழந்தைக் கூடப் பேசிண்டிருந்தேன். நீங்க சாப்டலையா? கோவிலுக்கு போகலையா? கோவில் தூரமா இருக்கா என்ன?”

“ஓ!!! வயத்துக்குள்ள இருக்குற குட்டி இப்பவே அம்மாவோட பேச ஆரம்பிச்சாச்சா? இல்ல மிருது கிட்டக்க தான். உன்னால முடியும்னா வா போயிட்டு வருவோம் இல்லாட்டிப் பரவாயில்லை நான் உனக்கு சாப்பாடு எடுத்துண்டு வரேன் அன்ட் கோவிலுக்கு நாளைக்கு காலைல போகலாம்”

“இல்லப்பா நான் மெதுவா நடந்து வரேன். வாங்கோ போகலாம்”

இருவருமாக ஹோட்டலுக்குச் சென்றனர். அங்கே அனைவரும் வரிசையாக அமர்ந்திருந்தனர். நவீன் தன் அம்மாவிடம்…

“நீங்க எல்லாரும் சாப்பிட வரும்போது மிருதுவையும் கூட அழைச்சிண்டு வந்திருக்கலாமில்லையா? நான் போய் கூட்டிண்டு வரலைன்னா அவ பாட்டுக்கு தனியா அங்கேயே இருந்திருப்பா” 

“அவதான் படுத்துக்கணும்ன்னு படுத்துண்டுட்டாளே அப்புறம் எப்படி வரச்சொல்லறது?”

“டேய் நவீன் நான் கூட உன் அம்மாட்ட கேட்டேன். உன் புள்ளையும் மாட்டுப் பொண்ணும் சாப்பிட வரலையான்னு. அதுக்கு மிருதுளா தூங்கிண்டிருக்கான்னும் அவளுக்கு துணைக்கு நீ உட்கார்ந்திருக்கன்னும்  இல்லையா சொன்னா. ஏன் டி பர்வதம் அப்படித் தானே சொன்னாய் நீ”

“ஆமாம் நான் பார்க்கும் போது அவ தூங்கிண்டு தான் இருந்தா. அவ்வளவு தான் எனக்குத் தெரியும். எங்க கிட்ட ஏதாவது சொல்லிட்டுச் செஞ்சா தானே எங்களுக்கும் ஏதாவது தெரியும்”

“சரி சரி அத்தை சாப்பாடு எப்படி இருக்கு? சாப்ட்டதும் கோவிலுக்கு போறோமாமே?”

“ஆமாம் மிருது. ஆனா கோவில் நடை தொறக்க இன்னும் ஒன்றரை மணி நேரமிருக்கே”

“எல்லாரும் சாப்ட்டு போக நேரம் சரியா இருக்கும் அத்தை”

“சரி சரி இப்படியே பேசிண்டே இருக்காம போய் ரெண்டு பேரும் சாப்பிடுங்கோ. போங்கோ”

“ஓகே அத்தை”

இருவருமாக சாப்பிட்டு பின் மெதுவாக நடந்து கோவிலுக்குச் சென்று கடவுளை நன்றாக வேண்டிக்கொண்டு அனைவருடனும் பேசிக் கொண்டே திரும்பி மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர். 

மறுநாள் காலை அறுபதாம் கல்யாணம் பார்த்து தம்பதிகளிடம் வயதில் சிறியவர்கள் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்கள். பெரியவர்கள் தம்பதிகளை ஆசிர்வாதம் செய்தார்கள். நவீனும் மிருதுளாவும் அவர்கள் காலில் விழுந்து நமஸ்காரம் செய்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர். மதியம் கல்யாண சாப்பாடு ஆனதும் மீண்டும் அனைவரும் வேனில் ஏறினர். வேன் ராசாமணி வீட்டை நோக்கி புறப்பட்டது. அனைவரும் உண்ட மயக்கத்தில் கண் அசந்தனர். சற்று நேரத்தில் டமால் என்று பலத்த சத்தம் கேட்டு விழித்துக் கொண்டவர்களுக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. பெண்களும், நவீனும், ராசாமணியும் சென்ற வேன் விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த கிராமத்திலிருந்த அனைவரும் வேனை சூழ்ந்தனர்.

தொடரும்….

சிறிது நேரம் ப்ரவின் மற்றும் பவினுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு மாடிக்குச் சென்று உடையை மாற்றிக்கொண்டு கீழே வந்தாள் மிருதுளா. அவள் வந்தமர்ந்ததும் ப்ரவின்..

“மன்னி டின்னர் என்னப் பண்ணப் போறேங்கள்?”

“ஓ! இரு ப்ரவின் நான் போய் மாவு இருக்கான்னு பார்க்கறேன். இருந்ததுன்னா தோசையோ இட்டிலியோ சாப்பிடலாம்”

அமர்ந்தவள் மீண்டும் மெதுவாக எழுந்துக் கூறிக்கொண்டே ஃப்ரிஜைத் திறந்தாள். அதில் கொஞ்சம் பச்சைமிளகாய், ஒரு துண்டு இஞ்சி மற்றும் இரண்டு தக்காளி மட்டுமே இருந்ததைப் பார்த்ததும் மிருதுளா ப்ரவினிடம்

“மாவு இல்லையே ப்ரவின். சரி உப்புமா பண்ணட்டுமா?”

“உப்புமா வா? மன்னி ப்ளீஸ் அது மட்டும் வேண்டாமே”

“சரி இரு கிட்சனில் போய் பார்த்து டிசைட் பண்ணறேன்”

“என்ன மன்னி? டிசைட் பண்ணினேளா?”

“ஓ எஸ். டின்னர் பண்ணவும் ஆரம்பிச்சாச்சு. இன்னும் பத்து நிமிஷத்துல சுடச்சுடப்  பரிமாறப்படும்”

“என்ன பண்ணறேங்கள்?”

“பூரி மசால் பண்ணிண்டிருக்கேன். நீ போய் கொஞ்சம் கொள்ளப்பக்கத்திலேருந்து கருவேப்பிலை பறிச்சுண்டு வாயேன் ப்ளீஸ்”

“இதோ கொண்டு வரேன்”

மிருதுளா ப்ரவின், பவின், நவீன் மூவருக்கும் புரி மசால் பரிமாறினாள். மூவரும் ரசித்து உண்டனர்.  பர்வதம் இருந்திருந்தால் பூரி எல்லாம் செய்தும் தந்திருக்க மாட்டாள், செய்யவும் விட்டிருக்க மாட்டாள். தற்காலிகமாக கிடைத்த சுதந்திரத்தை பயன்படுத்தி தனக்கு பிடித்ததை செய்து அனைவருக்கும் கொடுத்து தானும் உண்டு மகிழ்ந்தாள் மிருதுளா.

ஒவ்வொரு நாள் இரவும் சிறுநீர் கழிப்பதற்கு மாடியிலிருந்து கீழே வீட்டிற்கு வெளியே உள்ள கழிப்பறைக்கு இருட்டில் இறங்கி வரவேண்டும் நவீனும் மிருதுளாவும். திருமணமான புதிதில் மிருதுளா இருட்டில் படி  இறங்கி  வந்ததற்கும் இப்போது வாயும் வயிறுமாக கீழே இறங்கி வருவதற்கும் நிறைய வித்தியாசமுள்ளது.  

அன்றிரவு மிருதுளாவிற்கு கழிப்பறை போக  வேண்டியிருந்ததால் எழுந்து நவீனைப் பார்த்தாள் நவீன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். அவள் தனியாக இருட்டில் மாடிப் படி இறங்கி போக பயந்து நவீனை துணைக்கு கூட்டிச்செல்ல எழுப்பினாள். ஆனால் அவன் அசையக்கூட இல்லை. அவள் இருட்டில் வெளியே போக பயந்து அடக்கிக் கொண்டு மீண்டும் படுத்துக் கொண்டாள். அவளுக்கு உறக்கம் வரவில்லை. மீண்டும் ஒரு முறை நவீனை  எழுப்பிப் பார்த்தாள். அவனும் விருட்டென எழுந்து

“என்ன மிருது என்ன ஆச்சு? என்ன வேணும்?”

“நவீ சாரி. என் கூட கீழ வரைக்கும் வரேளா? ப்ளீஸ். எனக்கு டாய்லெட் போகணும் ஆனா இருட்ல படி இறங்கிப் போக பயமா இருக்கு”

“அட மிருது இதுக்கு ஏன் ப்ளீஸ் எல்லாம் சொல்லிண்டு. நான் தான் என்ன வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் எழுப்பச் சொல்லிருக்கேனே. சரி சரி வா”

“நீங்க டார்ச் அடிச்சுண்டே முன்னாடி போங்கோ நான் உங்க தோளைப் பிடிச்சுண்டே பின்னாடி வரேன்”

என்று ஒரு கையால் நவீனின் தோளைப் பிடித்துக்கொண்டு, மறுகையால் தன் வயிற்றையும் பிடித்துக் கொண்டு மெதுவாக இறங்கினாள் மிருதுளா.  அவ்வளவு நேரம் சிறுநீரை அடக்கிக் கொண்டதனால் வயிற்றில் வலி ஏற்பட வயிற்றை பிடித்துக் கொண்டிருந்தாள். கீழே இறங்கி வந்த வேலையை முடித்ததும் மீண்டும் மேலே ஏறிப் போக வேண்டுமே என்றிருந்தது மிருதுளாவிற்கு. கீழேயே படுத்துக் கொள்ளலாம் என்றால் ப்ரவின் பவின் படுத்திருக்கிறார்கள், மேலும் அவர்கள் கதவை உள் தாழ்ப்பாளிட்டுக் கொண்டு உறங்குகிறார்கள். வேறு வழியின்றி மீண்டும் நவீனின் தோளைப் பிடித்துக் கொண்டு படிகளில் ஏறி தங்கள் அறைக்குள் சென்று படுத்துறங்கினாள். 

காலை விடிந்ததும் மிருதுளா எழுந்து நவீனையும் எழுப்பிவிட்டு இருவருமாக கீழே இறங்கிச் சென்றனர். நால்வருக்கும் காபிப் போட்டாள் மிருதுளா. பின் நால்வரும் அமர்ந்து முன் நாள் இரவு செய்த பூரியில் மீதமிருந்த நான்கை நால்வரும் பகிர்ந்து காபியுடன் உண்டனர். 

“என்ன டிபன் செய்யட்டும் மக்களே?”

“உன் இஷ்டம் மிருது”

“இல்ல மன்னி நம்மள குளிச்சிட்டு காபி மட்டும் குடிச்சிட்டு டிபனுக்கு பெரியப்பா ஆத்துக்கு வரச்சொன்னா அப்பாவும் அம்மாவும் ” 

“ஓ! அப்படியா!. பரவாயில்லை ப்ரவின் உன் கிட்டயாவது எல்லாம் சொல்லிட்டுப் போயிருக்காளே அதுவரைக்கும் சந்தோஷம் தான். இதை நீ நேத்து சாயந்தரமே சொல்லியிருக்கலாம் இல்லையா!! நான் இன்னும் ஒரு அரைமணிநேரம் தூங்கிருப்பேனே”

“நான் மறந்துட்டேன் மன்னி”

“ஓ! அப்படியா சரி சரி. அப்போ ஒவ்வொருத்தரா குளிக்கத் தொடங்குங்கோ அப்பத்தான் டைமுக்கு பெரியப்பா ஆத்துக்கு போக முடியும். இன்னும் ஏதாவது இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் சொல்ல மறந்திருந்தா இப்பவே சொல்லிடு ப்ரவின்”

நால்வரும் குளித்து ரெடி ஆனதும் வீட்டைப் பூட்டி நடந்து பஸ் ஸ்டாப் சென்று பஸ்ஸைப் பிடித்து ஒரு மணி நேரத்தில் ராசாமணி வீட்டிலிருந்தார்கள். அனைவரும் நவீனையும் மிருதுளாவையும் வரவேற்று அமர்ந்துப் பேச ஆரம்பித்தனர். மிருதுளாவிற்கு பசி வயிற்றைக் கிள்ளியது. அங்கு அனைவரும் டிபன் சாப்பிட்டாகி விட்டதுப் போல மிருதுளாவிற்கு தோன்றியது. ஏனென்றால் அனைவரும் கிளம்புவதற்கு தயாராகிக் கொண்டிருந்தனர். நவீனை கூப்பிட்டு பார்த்தாள் அவன் அங்கிருந்தவர்களுடன் பேச்சில் மூழ்கியிருந்தான். 

மிருதுளாவிற்கு பசி அதிகமாகிக் கொண்டேயிருந்தது…தன் மாமியாரிடம் கேட்டால் அதை வைத்தே தனக்கு ஆப்பு வைத்துவிடுவாள் என்ற பயம் ஒரு பக்கம் டிபன் சாப்பிடாமல் எப்படி பிரயாணம் செய்ய போகிறோம் என்ற பதற்றம் மறுபக்கம் என்று தனியாக தவித்துக் கொண்டிருக்கையில் அவள் தோளைப்  பின்னாலிருந்து யாரோ தட்டினார்கள் யாரென்றுத் திரும்பிப் பார்த்தாள் சொர்ணம் அத்தை நின்றிருந்தார்..

“என்ன மிருது? எப்படி இருக்க? உன் கொழந்த என்னச் சொல்லறது? எப்படி இருக்காம்?”

“நல்லா இருக்கேன் அத்தை. நீங்க எப்படி இருக்கேங்கள்? கொழந்தையும் நன்னா இருக்கு”

“நான் நல்லா இருக்கேம்மா. எனக்கென்ன? என்ன வயிறு தள்ளவேயில்லையே!! பர்வதம் ஆறரை மாசம் ஆச்சுன்னா”

“ஆமாம் அத்தை ஆறு மாசமாயாச்சு”

“அப்போ புள்ள தான் பொறக்கப் போறான்னு நேக்கு தோணறது”

“எல்லாரும் அப்படித் தான் சொல்லறா அத்தை. ஆனா எங்களுக்கு பொண்ணு தான் வேணும். பார்ப்போம்”

“சரி சரி நானும் போய் கிளம்பட்டும் நீ ஏன் நின்னுன்டு இருக்க அப்படிப் போய் அந்த சேர்ல உட்கார்ந்துக்கோ போ”

என்று சொல்லிவிட்டுச் சென்றாள் சொர்ணம் அத்தை. அவர் பேச்சைத் தட்ட விரும்பாத மிருதுளாச் சென்று அமர்ந்தாள். ஜன்னல் வழியாக ஈஸ்வரன் மெதுவாக பேசும் சப்தம் கேட்டது. மிருதுளா திரும்பிப் பார்த்தாள் ஜன்னலுக்கு மறுபுறம் ஈஸ்வரனும் ப்ரவினும் பேசிக்கொண்டிருந்தனர். 

“உன் மன்னி நேத்து நைட்டு என்னடா டின்னர் செஞ்சா?”

“பூரி மசால் பா”

“ஆஹா எனக்குப் பிடிச்சது ஆச்சே. பேசாம நானும் உங்கக் கூடவே காலை ல வந்திருக்கலாம். நேத்து நைட்டு இங்கே உப்புமா, இட்டிலி தேங்காய் சட்னி அவ்வளவுதான்” 

“சரி அப்பா காலைல டிபனுக்கு இங்க வரச் சொன்னயே அதுனால மன்னிட்ட டிபன் செய்ய வேண்டாம்ன்னு சொல்லிட்டேன் ஆனா என்ன இங்க எல்லாரும் சாப்ட்டாச்சா என்ன? எனக்கு பசிக்கறதுப்பா”

என்று ப்ரவின் கூறியதைக் கேட்டதும் மிருதுளாவின் மனமும் அதையே கூறியது. அதற்கு ஈஸ்வரனின் பதிலை ஆவளுடன் எதிர்ப்பார்த்திருந்தாள்..

“இங்க காலை ல பொங்கல் இட்டிலி வடை சட்னி சாம்பார் போட்டா. அது சீக்கிரம் தீந்துடுத்து. அதனால மீதமிருக்கறவாளுக்கு மறுபடியும் ஆர்டர் கொடுத்திருக்கா ஆனா இன்னமும் வரக்காணும்”

இதைக் கேட்டதும் மிருதுளாவிற்கு பாதி வயிறு நிறம்பியதுப் போல இருந்தது. சற்று நேரத்தில் ஆர்டர் கொடுத்த டிபன் வந்தது. மிருதுளா வேகமாகச் சென்றாள். ஆனால் சாப்பிடாத ஆண்களை முதலில் அமரச்சொன்னார்கள்.  வரிசையாக அனைவரும் அமர்ந்தனர் அதில் நவீனும் ஒருவன். மிருதுளா நிலைமை அறிந்தும் அவனுக்கு அவள் முதலில் சாப்பிட வேண்டும் என்று தோணாதது மிருதுளாவிற்கு மனவேதனை அளித்தது.  அவள் தயக்கத்துடன் நின்றிருந்ததைப் பார்த்த சொர்ணம் அத்தை அவளருகே வந்து

“ஏய் பொண்ணே நீ சாப்ட்டயோ?”

“இல்ல அத்தை. இன்னும் சாப்பிடலை”

“மொதல்ல நீ போய் உட்காரு. வாயும் வயிறுமா இருக்க நேரத்துக்கு சாப்பிடண்டாமோ.”

“பரவாயில்லை அத்தை அங்க எல்லாரும் உட்கார்ந்துட்டா. நான் அடுத்தப் பந்தில உட்கார்ந்துக்கறேன்”

“நீ வா என் கூட. அங்கப் பாரு உன் புருஷன் உட்கார்ந்திருக்கறத. டேய் நவீன் உன் பொன்டாட்டி சாப்பிடறது தானே முக்கியம் அவளை விட்டுட்டு நீ ஜம்முன்னு உட்கார்ந்திருக்க? மணி என்ன ஆச்சு?”

“அவ அப்பறமா… சாப்பிடாத பொம்மனாட்டிகள் கூட சேர்ந்து சாப்ட்டுப்பா விடுங்கோ. அதுக்காக ஏன் அவன சொல்லறேங்கள். மாவு வச்சுட்டுத் தான் வந்தேன் அதை சுட்டு சாப்ட்டுட்டு வந்திருக்கலாமோனோ. வந்தெடத்துல எல்லாம் டைமுக்கு கிடைக்குமா என்ன கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கத் தான் வேணும். அவளும் எப்போ தான் இதெல்லாம் கத்துப்பா?” 

பர்வதம் இதைச் சொன்னதும் மிருதுளாவிற்கு தூக்கி வாரிப்போட்டது. இல்லாத மாவில் எப்படி எதைச் சுட்டு சாப்பிடுவது ?!! மாவு வைக்கவில்லை என்ற உண்மை தெரிந்தும் நவீன், ப்ரவின், பவின் ஒன்றுமே கூறாமல் அவர்கள் உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். சொர்ணம் அத்தை மிருதுளாவின் கையைப் பிடித்து ஒரு இடத்தில் அமரச் செய்து தன் தங்கையிடம்

“ஏய் லக்ஷ்மி மிருதுளாவுக்கு இலையைப் போடு. டிபன் பரிமாறு. மாசமான பொண்ணுக்கு குடுக்காம வேற யாருக்கு!!! வாயும் வயிறுமா இருக்கற பொண்ண இவ்வளவு நேரம் காக்க வச்சதே தப்பு இதுல இன்னும் காக்க வச்சா பாவம் தான் வந்து சேரும். மிருதுளா நீ நிதானமா சாப்பிடு சரியா”

மிருதுளாவிற்கு அப்பாடா என்றிருந்தது மனதில். அவளுக்கு அந்த அம்பாளே சொர்ணம் அத்தை வடிவில் வந்ததாக தோன்றியது. பொறுமையாக சாப்பிட்டு மெதுவாக எழுந்துச் சென்று இலையைப் போட்டு கையை அலம்பி விட்டு வந்தாள். அடுத்தப் பந்திக்கு மீதமிருந்த பெண்கள் அமர்ந்திருந்தனர். உடனே அங்குச் சென்று அவர்களுக்கு பரிமாற முற்பட்டபோது மீண்டும் சொர்ணம் அத்தை தடுக்க அதற்கு பர்வதம்…

“என்னத்துக்கு அவளுக்கு இவ்வளோ சப்போர்ட் பண்ணறேங்கள்ன்னு எனக்குத் தெரியலை. ஏன் இந்த வேலையை அவ செஞ்சா உங்களுக்கு  என்ன?”

“பர்வதம் உன் மாட்டுப் பொண்ணு மாசமா இருக்கா அது உனக்கு ஞாபகம் இருக்கா? அதுவும் இல்லாம இங்க இத்தனைப் பேர் இருக்கும் போது அவ தான் செய்யணும்னு இல்லை புரியறதா. இது மனிதாபிமானம்னு கூடச் சொல்லுவா”

என்றதும் பர்வதம் கப்சிப் ஆனாள். மாசமாக இருக்கும் தன் மருமகளை பார்த்துக் கவனித்துக் கொள்ள வேண்டிய இடத்திலிருக்கும் நான்கு பிள்ளைகளைப் பெற்ற மகராசிக்கு இன்னொருத்தர் சொல்லிப் புரிய வைக்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பர்வதம் போல் வேண்டுமென்றே சமயம் கிடைக்கும் போதெல்லாம் தன் வெறுப்பை சொல்லிலும், செயலிலும் காண்பித்து பழிதீர்த்துக் கொள்ளும் பெண்டிருக்கு சொர்ணம் அத்தைப் போன்றவர்கள் நன்றாக உறைக்கும் படி சொன்னால் தான் அந்த நேரத்திலாவது அடங்குவார்கள். 

குஜராத்தில் நவீன் மிருதுளாவை கவனித்துக் கொண்டது போல இப்போது கவனிக்கத் தவறுவது சரியா? ஏன் அதையே மீண்டும் செய்கிறான்? இதனால் மிருதுளா மனதில் என்ன நினைக்கிறாள்? 

தொடரும்……

பத்தாம் தேதி காலை நவீன் எழுந்துப் பார்த்தான் கடிகாரம் ஏழு மணி காட்டியது பக்கத்தில் மிருதுளா நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள். அவளைப் பார்த்துக் கொண்டே தன் மனதில்…

“பாவம் குஜராத்தில் தூங்கினது அதுக்கப்புறம் இன்னைக்கு தான் ஏழு மணி ஆகியும் தூங்க முடியறது. தூங்கட்டும்”

என்று அவளை எழுப்பாமல் மெதுவாக கதவைத் திறந்து வெளியேச் சென்றான் நவீன். 

“குட் மார்னிங் மாப்பிள்ளை. மிருது இன்னும் தூங்கறாளா?”

“ஆமாம் நல்லா அசந்து தூங்கறா. அதுனால தான் எழுப்பாம வந்துட்டேன். நான் போய் ப்ரஷ் பண்ணிட்டு வந்துடறேன்”

“சரி சரி தூங்கட்டும். அவளா எழுந்திரிக்கும் போது எழுந்துக்கட்டும். நீங்க பல் தேய்ச்சுட்டு வாங்கோ உங்களுக்கு காபி போட்டுத் தர்றேன்”

தன் மனைவி மீது இந்த அக்கறை ஏன் அவன் வீட்டில் மிருதுளாவை தூங்கவிடாமல் செய்தபோது வரவில்லை? பொண்டாட்டி தாசன் என்ற பெயர் வைத்து விடுவார்கள் என்று சுயநலமாக சிந்தித்தானா? இல்லை மனைவிக்கு கெட்டப் பெயர் வந்துவிடும் என்ற எண்ணமா? இங்கே அவளை தூங்க விட்டால் அவனுக்கும் பாதிப்பில்லை மிருதுளாவிற்கும் பாதிப்பில்லை அதனால் வந்த அக்கறையா? இது பெரும்பாலும் எல்லா திருமணமான ஆண்களுக்குள்ளும் இருக்கும் பாரபட்சமே. குடும்ப பொறுப்புடன் வளர்ந்த நவீனால் தன் பெற்றோரிடம்  அவர்கள் தவறை சுட்டிக் காட்டி புரிய வைக்கவும் முடியவில்லை அதே நேரம் மனைவி கஷ்டப்படுவதையும் தவிர்க்க முடியவில்லை. 

தவறு செய்தால் அதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டு மீண்டும் அதை செய்யாதிருக்கும் நற்பண்பையும், தவறு யார் செய்தாலும் தட்டிக் கேட்க வேண்டும் என்னும் தைரியத்தையும் நம் பிள்ளைகளுக்கு சிறுவயது முதலே சொல்லி வளர்க்க வேண்டும். பெரியவர்கள் தவறே செய்வதில்லை என்பது போல ஒரு பிம்பத்தை கொடுக்கக் கூடாது. பெற்றவர்கள் சில முறை பிள்ளைகளை தவறாக புரிந்துக் கொண்டு திட்டவோ / அடிக்கவோ செய்து விடுகிறார்கள், ஆனால் பிள்ளைகள் மீது தவறில்லை பெற்றவர்கள் தவறாக புரிந்துக் கொண்டு திட்டவோ / அடிக்கவோ செய்து விட்டார்கள் என்று தெரியவரும் போது எத்தனை அப்பாக்கள் / அம்மாக்கள் பிள்ளைகளிடம்(சிறு பிள்ளையானாலும்) மன்னிப்பு கேட்கிறார்கள்? 

இந்த உலகில் தவறு செய்யாத மனிதர்கள் என்று யாருமே இல்லை.  பிள்ளைகள் தவறு செய்தால் பெற்றவர்கள் திருத்துவது போல பெற்றவர்கள் தவறிழைத்தால் அதை பிள்ளைகளும் எடுத்துரைக்கலாம் என்ற சுதந்திரத்தை பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும்.   அப்படி இல்லாமல் நாங்கள் பெற்றவர்கள் நாங்கள் தவறே செய்யமாட்டோம். எங்களுக்குதான் எல்லாம் தெரியும் பிள்ளைகளாகிய நீங்கள் எங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று ஆதிக்கத்தை காட்டும் பெற்றவர்களின் திருமணமான மகன்களின் வாழ்க்கை இருதலைக் கொள்ளியினுள் எறும்பாக தான் இருக்கிறது. 

நவீனுக்கு இதுவரை அப்படி ஒரு எறும்பின் நிலை வராததற்கு காரணம் மிருதுளாவின் நற்குணம் ஆகும். அவள் நவீனின் நிலைமையைப் புரிந்து நடந்துக் கொள்வதால், பலகாலமாக ஒரு தலையில் உள்ள கொள்ளியின் வெட்பத்திலிருந்து தப்பித்துக் கொள்ள குளிர்ந்த வாழை மரமான மறுதலையின் குளிர்ச்சியை நாடலானான். இது மனித இயல்பாகும்.

நவீனுக்கு மிருதுளாவின் பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகள் மீதும் தன் மீதும் காட்டும் அன்பு, பாசம், அக்கறை எல்லாம் அவன் அதுவரை கண்டிராதது, அனுபவிக்காதது என்பதால் அது அவனுக்கு மிகவும் ஆனந்தத்தையும் மனமகிழ்ச்சியையும் தந்தது. குஜராத்திற்கு மிருதுளா குடும்பத்தினர் வந்திருந்த போதே பரிந்துக் கொண்டிருந்தாலும் அப்பொழுது ஆபிஸ், வகுப்பு என்று ஓடிக் கொண்டிருந்ததால் முழுமையாக அவர்களின் அன்பை உணர்வதற்கு நேரமில்லாமல் போனது. ஆனால் இம்முறை முழுமையாக இரண்டு நாட்கள் அவர்களுடன் இருந்ததில் பெற்றவர்களின் உண்மையான அன்பு, பாசம் பற்றி  நன்றாக புரிந்துக் கொண்டான் நவீன்.

காபியைக் குடித்துக்கொண்டே தினத்தந்தி, தினமலர் பேப்பரை படித்து முடித்தான். அப்போது ராமானுஜம்…

“உங்களுக்கு இங்கிலிஷ் நியூஸ் பேப்பர் போடச் சொன்னேன்…பேப்பர் காரன் மறந்துட்டானாம்”

“அதுனால என்ன இப்போ.  நான் தினத்தந்தி, தினமலர் பேப்பர்களும் படிப்பேன்.”

இவ்வாறு இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது மிருதுளா எழுந்து வந்தவள் தன் அம்மாவிடம்…

“அம்மா மணி ஏழரை ஆச்சு!!! என்னை எழுப்பிருக்கலாமே மா”

“அதுனால என்ன மிருது. நோக்கு ஒண்ணு தெரியுமோ கர்ப்பிணி பொண்களை தூங்கும் போது தொந்தரவு செய்யப்படாதுன்னு சொல்லுவா. அவா நல்லா தூங்கும் போது எழுப்பவும் கூடாது தெரியுமோ?”

“அப்படியா?”

“ஆமாம் அதுனால தான் உன்னை நாங்க எழுப்பலை. சரி போய் ப்ரஷ் பண்யுட்டு வா உனக்கும் காபி போட்டுத் தர்றேன்”

“நவீ நீங்க காபி குடிச்சாச்சா?”

“ஓ! எஸ் மீ டன்”

பின் ஒருவர் பின் ஒருவராக குளித்து விட்டு வந்ததும் சூடாக டிபன் சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்ததும் மிருதுளா தனது பொருட்களை எல்லாம் பேக் செய்ய ஆரம்பித்தாள். அப்போது அம்புஜம்…

“ஏண்டி மிருது நீங்க இன்னும் ஒரு ரெண்டு நாளாவது இருந்துட்டுப் போங்கோளேன் டி. இந்த தீபாவளி கொண்டாட்டத்துல உங்களை எங்களால சரியா கவனிச்சுக்க முடியாம போயிடுத்து. எனக்கும் என் பொண்ணுக்கு பிடிச்சதெல்லாம் செய்து கொடுக்கணும்ன்னு ஆசை இருக்காதா மா”

“அம்மா நீ சொல்லறதெல்லாம் சரி தான். ஒரு விஷேசம் அடெண்ட் பண்ணத்  தானே நாங்க போறோம். அது முடிஞ்சதும் நாங்க இங்கே வந்து ஒரு வாரம் தங்கறோம்ன்னு சொன்னேனே. ஆமாம் நீ எங்களை என்ன கவனிக்கலைன்னு சொல்லற? எங்களை சூப்பரா கவனிச்சிண்டேங்கள் தெரியுமா. எனக்கும் இங்கேயே இருக்கணும்னு தான் ஆசையா இருக்கு. ம்… என்ன பண்ண மா. இன்னும் இரண்டு நாள்ல வந்துடுவோம் சரியா”

“சரி சரி பத்திரமா போயிட்டு வாங்கோ. நீ முந்தி மாதிரி தனி ஆள் இல்ல மிருது ஞாபகம் வச்சுக்கோ. சர்வ ஜாக்கிரதையா இரு சரியா. நீ பேக் பண்ணு நான் போய் மத்தியான சாப்பாட்டை தயார் பண்ணட்டும்” 

மிருதுளா எல்லாவற்றையும் பேக் செய்து நவீனை அழைத்து பேக்கை ஹாலில் வைக்கச் சொல்லிவிட்டு சற்று நேரம் படுத்துக் கொண்டாள். நவீனும் வேனுவும் டிவியில் “சீக்ரெட்ஸ் ஆஃப் தி ஓஷன்” என்று  கடலுக்கடியில் உயிர் வாழும் உயிரினங்களைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போது …

“அத்திம்பேர் மிருதுக்கா இந்த ப்ரோக்ராம் பார்க்கவே மாட்டா தெரியுமா?”

“அப்படியா! ஏன் நல்லா தானே இருக்கு”

“இதுன்னு இல்ல அதிம்பேர் அவ இந்த மாதிரி ஃபிஷ், ஆக்டோபஸ், ஸ்நேக்ஸ் பத்தின எந்த ப்ரோக்ராமும் பார்க்க மாட்டா. நான் ஒரு தடவை அவளை கம்பல் பண்ணி பார்க்க வச்சேன் ரெண்டு நாள்  அவ சாப்பிடவே இல்லை. நைன்த் ஸ்டாண்டர்ட் ல அவ க்ளாஸுக்கு பக்கத்துல தான் கெம்மிஸ்ட்ரி லாப் இருந்தது எங்க ஸ்கூல்ல. அதுல இருந்து வந்த ஸ்மெல் பிடிக்காததால் தான் அவ சயின்ஸ் குரூப்பே எடுக்க மாட்டேன்னுட்டா”

“ஓ!! இதெல்லாம் எனக்கு மிருதுவ பத்திய புது இன்ஃபோ வேனு.”

“நீங்க இங்கயே எங்க கூட ஒரு வாரம் இருந்தேங்கள்னா நான் நிறைய இன்ஃபோ தருவேன். நீங்க தான் எல்லாத்தையும் மிஸ் பண்ணப்போறேங்கள்” 

“அது தான் டூ டேஸ் ல மறுபடியும் வருவோமில்லையா அப்போ கேட்டுக்கறேன்”

“ஓகே அத்திம்பேர் ஷுவரா சொல்லறேன்”

சற்று நேரம் படுத்திருந்த மிருதுளா மீண்டும் தூங்கிப் போனதைப் பார்த்த வேனு அம்புஜத்திடம்

“என்னமா மிருதுகா எழுந்துண்டதே லேட்டு !! மறுபடியும் தூங்கறா!!!. இப்படி எல்லாம் தூங்க மாட்டாளே அவ. அவளுக்கு என்ன ஆச்சு?”

“டேய் வேனு இந்த மாதிரி நேரத்துல தூக்கம் தான் வரும். நல்லா நிம்மதியா தூங்கணும். நல்லா சத்தான சாப்பாடா சாப்பிடணும் அப்பத் தானே குட்டிப் பாப்பா ஹெல்த்தியா பொறக்கும்.”

மத்திய உணவு தயார் ஆனதும் எல்லாவற்றையும் ஹாலில் கொண்டு வந்து வைத்தாள் அம்புஜம். ராமானுஜம், நவீன், வேனு மூவருமாக அமர்ந்து சாப்பிட்டனர். அவர்களுக்கு அம்புஜம் பரிமாறினாள். மிருதுளா தூங்கி எழுந்தாள். தன் அம்மா சமைத்த சாப்பாட்டின் மணம் அவளை தூண்டில் போட்டு ஹாலுக்கு இழுத்து வந்தது. 

“ஹலோ என்ன எல்லாரும் என்ன விட்டுட்டு சாப்பிடறேங்கள்”

“நீ நல்லா தூங்கிண்டிருந்த மிருது அதுனால நாங்க சாப்பிட ஆரம்பிச்சுட்டோம். வா வந்து ஜாயின் பண்ணிக்கோ”

“பரவாயில்லை நவீ. சும்மா தான் கேட்டேன். நீங்க மூணு பேரும் சாப்பிடுங்கோ நான் அம்மா கூட சாப்ட்டுக்கறேன். அதுக்குள்ள நான் போய் முகம் கை கால் அலம்பிட்டு நம்ம ஆத்துக்குப் போக ரெடியாகி வந்துடறேன்”

என்று மிருதுளா கிளம்பி வந்து தன் தாயுடன் அமர்ந்து சாப்பாட்டை ரசித்து ருசித்து சாப்பிடலானாள். அவளுக்கு நன்றாக தெரியும் அங்கே போனால் வெறும் ரசம் சாதம் தான் கிடைக்குமென்று. சாப்பிட்டு முடித்ததும் அந்த பாத்திரங்களை எல்லாம் எடுத்து அடுப்படியில் வைக்க முற்பட்ட மிருதுளாவை அம்புஜம் தடுத்து..

“மிருது நீ சாப்ட்டாச்சோனோ போய் அங்க பேசாம உட்காரு. நானும் அப்பாவும் பார்த்துக்கறோம்”

 என்று சொல்லிக் கொண்டே அனைத்தையும் பாத்திரம் மாற்றி வைத்து சாபப்பிட்ட இடத்தைச் சுத்தம் செய்து முடித்தாள் அம்புஜம். 

சற்று நேரம் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் 

“மிருது கிளம்பலாமா?”

“மாப்ள இப்போ வெயில் அடிக்கறது. சித்த வெயில் தாழ காபி குடிச்சிட்டு கிளம்புங்கோளேன்”

“சரி அப்போ ஒரு அஞ்சு மணிக்கு கிளம்பலாம் மிருது”

என்று நவீன் சொன்னதும் மிருதுளாவின் மனதில் ஏதோ ஐந்து மாதம் தங்கி விட்டு போவது போல ஒரு மகிழ்ச்சிப் பொங்கியது. 

“ஓகே நவீ. அப்பா அஞ்சு மணிக்கு அந்த ஆட்டோக் காரரை வரச்சொல்லிடுப்பா.”

ராமானுஜமும் அட்டோ ஸ்டாண்டிற்கு ஃபோன் போட்டு ஆட்டோ காரர் செந்திலை ஐந்து மணிக்கு வரச்சொன்னார். அனைவருமாக குடும்பக் கதைகளைப் பேசிக்கொண்டிருந்தனர். மூன்று மணியளவில் ஃபோன் பெல் அடித்தது. வேனு ஃபோனை அட்டெண்ட் செய்தான்..

“ஹலோ நான் ஈஸ்வரன் பேசறேன் நவீன் இருக்கானா? அவன்ட்ட பேசணும்”

“ஹலோ மாமா நான் வேனு பேசறேன். இதோ அத்திம்பேர்ட்ட குடுக்கறேன்”

ரிசீவரை ஒரு கையால் மூடியப் படி நவீனிடம் 

“அத்திம்பேர் உங்க அப்பா உங்கள்ட்ட பேசணுமாம்”

என்று கூறிக் கொடுத்தான்

“ஹலோ நவீன் பேசறேன்”

“என்ன மணி மூணு ஆச்சு இன்னும் நீங்க ரெண்டு பேரும் அங்கிருந்து கிளம்பாம என்ன பண்ணிண்டிருக்கேங்கள்?”

“வெயில் தாழ கிளம்பலாம்ன்னு இருக்கோம். அஞ்சு மணிக்கு கிளம்பி வந்துடுவோம்”

“சரி சரி சட்டு புட்டுன்னு கிளம்பி வரப்பாருங்கோ. நான் ஃபோனை வைக்கறேன்”

“ஃபோன்ல அப்பா என்னச் சொன்னார் நவீ?”

“மணி ஆச்சே ஏன் இன்னும் வரலைன்னு கேட்டா. நான் அஞ்சு மணிக்கு கிளம்பி வருவோம்ன்னு சொன்னேன். சரின்னு வச்சுட்டா”

“ஓ ! ஓகே ஓகே”

மணி நாலு அடித்ததும் அம்புஜம் எழுந்து அடுப்படிக்குச் சென்று காபி டிக்காக்ஷன் போட்டு,  தங்கள் மகளுக்குப் பிடித்த  வெங்காய தூள் பக்கோடா செய்வதற்காக வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி எல்லாவற்றையும் பொடிப் பொடியாக நறுக்கியதும் ராமானுஜத்தை அழைத்து பக்கோடா போடச்சொல்லிவிட்டு அனைவருக்கும் காபி போட்டாள். இருபது நிமிடங்களில் சுடச்சுட வெங்காய தூள் பக்கோடாவும் சூடான பில்டர் காபியும் பிள்ளைகளுக்கு செய்துக் கொடுத்தனர். அதைப் பார்த்ததும் மிருதுளா

“அய்யா வெங்காய பக்கோடா. மை ஃபேவரைட். சூப்பர் அம்மா அன்ட் அப்பா.”

“சாப்பிடு மிருது உனக்கு பிடிக்குமேன்னு தான் செய்தோம். மாப்ள உங்களுக்கு பிடிச்சிருக்கா?” 

“பிடிச்சிருக்காவா!!!! பக்கோடா சூப்பரா இருக்கு”

நவீனும் மிருதுளாவும் மாலை சிற்றுண்டியை முடித்துவிட்டு அங்கிருந்து ஆட்டோவில் பஸ் ஸ்டாப் வந்திறங்கி பஸ்ஸில் ஏறி அவர்கள் ஊருக்குச் சென்றனர். இருவரும் நவீன் வீட்டிற்குள் நுழையும் போது மணி ஆறு அடித்தது. வீட்டில் ப்ரவின் மற்றும் பவின் மட்டும் இருந்தனர்.  

“அப்பா அம்மா எங்க ப்ரவின்? நீங்க மட்டும் இருக்கேங்கள்! அவா கடைக்கு எங்கயாவது போயிருக்காளா?”

“இல்லை மன்னி அவா ரெண்டு பேரும் ராசாமணி பெரியப்பா ஆத்துக்கு போயிருக்கா நம்ம நாலு பேரையும் நாளைக்கு காலை ல ஏழு மணிக்கு அங்க வரச் சொல்லிருக்கா.”

“நவீ நீங்க அப்பாட்ட பேசும்போது இதப்பத்தி உங்க கிட்ட சொன்னாரா?”

“இல்லையே ஒண்ணுமே சொல்லையே”

“அண்ணாட்ட பேசிட்டு ஃபோனை வச்சதும் கிளம்பி போயிட்டா மன்னி”

“அப்போ எனக்கு ஃபோன் போட்டப்போதே அவா கிளம்பியாச்சா? அதை ஏன் என் கிட்ட சொல்லலை?”

“விடுங்கோ நவீ அது தான் ப்ரவின் கிட்ட சொல்லி நம்மகிட்ட சொல்ல சொல்லிருக்கா இல்லையா அப்புறம் என்ன?” 

என்று மிருதுளா சாதாரணமாக எடுத்துக் கொண்டாலும் மூத்த தம்பதியர் செய்தது தவறே.

நவீனிடம் ஃபோன் போட்டு இன்னுமா கிளம்பவில்லை என்று கேட்கத் தெரிந்த ஈஸ்வரனுக்கு ஏன் தாங்கள்  ராசாமணி வீட்டிற்கு செல்வதை சொல்ல தோணவில்லை! நாங்கள் பெற்றவர்கள் அதனால் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று எண்ணினாரோ என்னவோ? அப்படி எண்ணக்கூடிய ஆசாமி தானே அவர். இவர்கள் பிள்ளைகளின் மனமறிந்து நடந்துக்கொள்ளாமல், பெற்றவர்கள் என்ற அதிகாரத்தை நிலைநாட்டுகிறார்கள். இவர்களைப் போலவே நவீனும் மிருதுளாவும் இவர்களுக்குச் சொல்லாமல் இப்படி ஏதாவது செய்தால்? 

தொடரும்….

விடியற்காலை சூரியன் எழுவதற்கு முன்னதாகவே அம்புஜம் எழுந்து குளித்துவிட்டு டேப்ரிக்கார்டரில் சுப்பரபாதத்தை போட்டுவிட்டு ராமானுஜம் குளித்து வருவதற்குள் ஒரு பலகையில் மாக்கோலம் இட்டு, நல்லெண்ணையில் மிளகு, அரிசி போட்டு காய்ச்சி, அதை இருக்கைப் பலகைக்கு அருகில் வைத்து, விளக்கேற்ற எல்லா ஏற்பாடுகளும் செய்து, புதுத்துணிகளை தாம்பாளத்தில் வைத்துவிட்டு, மகன், மகள், மருமகன் ஆகியோரை எழுப்பினாள் அம்புஜம். மிருதுளாவும், நவீனும், வேனுவும் எழுந்து பல் துலக்கி விட்டு வந்ததும் முதலில் மாப்பிள்ளை நவீனை பலகையில் அமரச்செய்து தலையில் எண்ணெய் ஊற்றி தேய்த்தாள் அம்புஜம், அடுத்து மிருதுளா பின் வேனு என மூவருக்கும் எண்ணெய் தேய்க்கும் சடங்கு நிறைவாக நடைப்பெற்றது. எண்ணெய் தேய்த்ததும் ஒருவர் பின் ஒருவராக குளிக்கச் சென்றனர். குளித்து வெளியே வந்து சாமி கும்பிட்டு பின் அம்புஜம் மற்றும் ராமானுஜம் காலில்  விழுந்து நமஸ்காரம் செய்து அவர்கள்  வாங்கி வைத்திருந்த புத்தாடைகளை பெற்று அதை அணிந்துக் கொண்டனர். அனைவருக்கும் சுட சுட ஆவி பறக்கும் பில்டர் காபியை கொடுத்தாள் அம்புஜம். காபி அருந்தியதும் வேனு நவீனிடம்

“அத்திம்பேர் வாங்கோ நாம போய் அந்த பத்தாயிரம்வாலாவை வெடிப்போம்”

“சரி வா போகலாம். மிருது நீயும் வந்துப் பாரேன்”

“ஓ வரேன் ஆனா நான் திண்ணையிலே இருக்கேன் நீங்க ரெண்டு பேருமா வெடிங்கோ”

அவர்கள் வெளியே சென்று பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தார்கள். அந்த நேரம் அனைவருக்கும் காலை டிஃபன் இட்டிலி, வெண்பொங்கல், சக்கரைப் பொங்கல், மெதுவடை, சட்னி, சாம்பார் எல்லாம் தயார் செய்தார்கள் அம்புஜமும் ராமானுஜமும். பட்டாசு வெடித்து முடித்து விட்டு வீட்டினுள் வந்து கை, கால் எல்லாம் நன்றாக கழுவி பின் வரிசையாக காலை உணவருந்த அமர்ந்தார்கள் நவீன், மிருதுளா மற்றும் வேனு. அம்புஜமும், ராமானுஜமும் பிள்ளைகளுக்கு பரிமாறி அவர்கள் உண்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர்.  பிள்ளைகள் மூவரும் சாப்பிட்டப் பின்னர் ராமானுஜமும் அம்புஜமும் சாப்பிட்டனர். 

பின் பாத்திரங்களை எல்லாம் தேய்த்துக் கொண்டிருக்கும் போது வயிறு வலிக்க உடனே டாய்லெட் சென்று பார்த்தாள் அம்புஜம். அவள் அவளின்  மெனோபாஸின் முந்தைய நிலையில் இருந்ததால் மாதவிடாய் இந்த நாள் என்று குறிப்பிட்டு சொல்லமுடியாமல் எப்போது வேண்டுமானாலும் வந்துவிடும் என்றிருக்க, தன் மகள் மருமகனின் தலைதீபாவளி அன்று வந்ததும் அவள் சற்று பதற்றமடைந்தாள் ஏனெனில் அன்றைக்கு அவளுக்கு நிறைய வேலைகள் இருந்தது. அவை அனைத்தையும் அவளே செய்யவேண்டியும் இருக்க சற்று தலைச் சுற்றியது அம்புஜத்திற்கு. சிறிது நேரம் உள்ரூமில் சுவற்றில் சாய்ந்து காலை நீட்டிக்கொண்டு அமர்ந்தாள். 

ஹாலில் நவீன், மிருதுளா, வேனு மற்றும் ராமானுஜம் பேசிக்கொண்டிருந்தனர். அங்கே தனது அம்மாவை காணாமல் மிருதுளா

“அம்மா எங்க காணம்?”

“அவ பாத்திரம் தேய்ச்சிண்டிருந்தா. அப்பறம் எங்க போணான்னு தெரியலையே. அந்த ரூம்ல பாரு மிருது” 

என்றார் ராமானுஜம். மிருதுளா உள் ரூமிற்குள் சென்று தன் தாய் சுவற்றில் சாய்ந்தப் படி தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து தரையில் தலையணையை வைத்து அதில் மெதுவாக அம்புஜத்தைப் படுக்கச் செய்யும் பொழுது விருட்டென்று எழுந்த அம்புஜம்…

“ஆஹ்ங் ஆஹ்ங்.. எழுந்துட்டேன் இதோ வரேன்”

“அம்மா யாரும் உன்னை கூப்பிடலை படுத்து தூங்கிக்கோ”

“இல்ல மிருது எனக்கு வேலையிருக்கு”

“பரவாயில்லை கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்பறமா செஞ்சுக்கோ மா.”

“இல்ல மா இதோ வரேன்”

“சொன்னா கேட்க மாட்டியே. ஏன் ரொம்ப டல்லா இருக்க மா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை மா. நேத்தேலிருந்து சரியா தூங்கலை அதுதான்”

 உண்மையான பிரச்சினையை சொன்னால் மகளும் சங்கடப்படுவாள் என்று சொல்லாமல் மறைத்தாள் அம்புஜம். மீண்டும் அவளது வேலைகளை தொடர்ந்தாள். மத்திய உணவிற்கு சாம்பார், ரசம், அவியல், உருளை ஃப்ரை, பீன்ஸ் உசிலி, வாழக்காய் சிப்ஸ், பாயசம், மசால் வடை, இஞ்சிப்புளி, அப்பளம், வடாம் என்று ஒரு கல்யாண சாப்பாடே தயார் செய்தாள். ராமானுஜம் அவ்வப்போது காய்கறிகளை நறுக்கிக் கொடுத்தும், வடையை சுட்டெடுக்கவும் உதவிச் செய்தார். கடைசியாக குக்கரில் சாதம் வைத்து சமையல் ஒரு பதினொன்றரை மணிக்கெல்லாம் தயார் ஆனதும் அக்கடான்னு உள்ரூமில் சென்று படுத்துக்கொண்டாள் அம்புஜம். 

தன் தாய் அடிக்கடி சென்று சோர்வாக படுத்துக் கொள்வதை கவனித்த மிருதுளா மீண்டும் சென்று 

“அம்மா ஏதாவது பிரச்சினையா? நீ இப்படி அடிக்கடி சோர்ந்து போற டைப் இல்லையே”

“ஒண்ணுமில்லை மா. கொஞ்சம் டையர்டா இருக்கு அவ்வளவு தான். வா வந்து உட்காரு மிருது”

மிருதுளா மெல்ல அமர முயற்சிக்கும்  போது வாசலில் ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டது. ஹாலில் இருந்து  ராமானுஜம் 

“வாங்கோ வாங்கோ ஹாப்பி தீபாவளி”

என்று சத்தமாக வரவேற்க. அம்புஜம் மிருதுளாவிடம்…

“யாரு வந்திருக்கா மிருது? உங்க அப்பா பலம்மா வரவேற்கறா!”

“இரு பார்த்துட்டு வரேன்.”

எட்டிப் பார்த்த மிருதுளாவின் முகம் வாடியது. பின் தன் அம்மாவிடம்

“அம்மா என் மாமியார், மாமனார், ப்ரவின் அன்ட் பவின் வந்திருக்கா”

“ஓ !! அப்படியா!!! அவா வர்றதா நீங்க எங்கள்ட்ட சொல்லவே இல்லையேடி”

“எங்களுக்கே தெரியாது”

“சரி சரி வா அவாள வரவேற்போம்”

“வாங்கோ வாங்கோ பர்வதம் மாமி அன்ட் மாமா ஹாப்பி தீபாவளி. வாப்பா ப்ரவின், பவின்”

அனைவரும் வந்து ஹாலில் அமர்ந்து பேசலானார்கள். அப்பொழுது வேனு பவினையும், ப்ரவினையும் பட்டாசு வெடிக்க வெளியே அழைத்துச் சென்றான். அம்புஜம் அனைவருக்கும் எலும்மிச்சை ஜூஸ் போட்டு மிருதுளாவிடம் அனைவருக்கும் கொடுக்கச் சொன்னாள். அப்போது பர்வதம் 

“என்னது?”

“லெமன் ஜூஸ் மா. எடுத்துக்கோங்கோ”

“இந்த தனுப்பு காலத்துல லெமன் ஜூஸ்ஸா எனக்கு வேண்டாம் மா”

என்று வழக்கமான நசுங்கல் வேலையை ஆரம்பித்தாள். 

“மாமி சாரி. உங்களுக்கு என்ன வேணும்ன்னு சொல்லுங்கோ உடனே செய்து தர்றேன்”

“எனக்கு டி போதும்”

“இதோ ஒரு நொடியில் டி போட்டு தந்துட்டா போச்சு”

“என்ன சாப்பிடற நேரத்துல டி வேண்டிருக்கு?” என்றார் ஈஸ்வரன்

“இல்லை பரவாயில்லை இதோ போட்டுக் கொண்டுண்டு வரேன்.”

என்று அடுப்படிக்குள் சென்று தனது வயிறு வலியையும் காட்டிக் கொள்ளாமல் டி போட்டுக் கொண்டே மிருதுளாவை உள்ளே அழைத்தாள் அம்புஜம். 

“என்னடி மிருது இவாளும் சாப்பிட வர்றப் போறான்னு  சொல்லாமல் இப்படி வந்து நிக்கறா? நான் நம்ம அஞ்சு பேருக்கு தானே சமைச்சிருக்கேன். மறுபடியும் குக்கர்ல சாதம் வச்சிடுறேன். ஆனா மத்ததெல்லாம் பத்தும்மான்னு கொஞ்சம் பாரேன் மா” 

“நான் என்னப் பண்ணுவேன் மா. எங்க கிட்டயும் ஒண்ணுமே சொல்லலை. இப்படி திடுதிப்புன்னு வந்திருக்கா. ஓகே ஓகே நீ செய்திருப்பதெல்லாம் பத்தும்மா நீ கவலைப் படாதே.”

என்று மெதுவாக அம்புஜமும் மிருதுளாவும் பேசிக்கொண்டிருக்கையில்…

“என்ன அம்மாவும் பொண்ணுமா குசு குசுன்னு பேசிண்டிருக்கேங்கள் அடுப்படில?” என்று கேட்டுக்கொண்டே அடுப்படிக்குள் நுழைந்த பர்வதத்திடம் அம்புஜம் ஒரு தம்பளர் டியை கொடுத்து…

“ஒண்ணுமில்லை மாமி சாப்பாடெல்லாம் ரெடின்னும் எல்லாம் போதுமான்னும், டேஸ்ட் பார்க்கவும் மிருதுளாட்ட சொல்லிண்டிருந்தேன். அவளும் எல்லாம் போதும் நல்லாயிருக்குன்னு சொல்லிண்டிருந்தா நீங்க வந்துட்டேங்கள்”

“என்ன சபெஷல் உங்க பொண்ணு மாப்பிள்ளை தலைதீபாவளிக்கு?”

“காலை ல எங்க அம்மா பஞ்சு மாறி இட்டிலி, பொங்கல், வடை, சாம்பார் சட்னி எல்லாம் பண்ணினா அன்ட் லஞ்சுக்கு ஃபுல் கல்யாண மெனுவ தனியாளா செய்திருக்கா.”

என்று ஊருக்கு வந்த நாள் முதல் வெறும் ரசம் சாதமும், தொட்டுக்க ஒண்ணுமில்லாத கல்லு இட்டிலியும் மட்டுமே செய்துத் தந்த பர்வதத்திடம் கூறினாள் மிருதுளா. 

“ஓ! ஆமாம் ஆமாம் காலைல சாம்பார் வச்சுட்டா அதே மத்தியானத்துக்கும் ஆச்சே இல்லையா மாமி”

 என்று பர்வதம் கூறியதும் மிருதுளா வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு 

“அப்படி இல்லை காலைல டிஃபனுக்கு டிஃபன் சாம்பாரும் மத்தியானத்துக்கு சாப்பாட்டு சாம்பாரும் என ரெண்டு வகை சாம்பார் செஞ்சிருக்கா என் அம்மா. ஏன்னா எனக்கு டிஃபன் சாம்பாரை சாதத்தில் பிசைந்து சாப்பிடப் பிடிக்காது.”

இவ்வாறு மாமியார் விஷத்தைக் கக்க அதை மிருதுளா தடுக்க என உரையாடிக் கொண்டிருக்கையில் அம்புஜத்திற்கு டாய்லெட் போக வேண்டியிருக்க மிருதுளாவின் கையை பிடித்து அழுத்தி அமைதியாகும் படி செய்கைக் காட்டிவிட்டு பர்வதத்திடம்

“மாமி கொழந்தைகள் எப்பவாவது தான் வர்றா அப்போ அவாளுக்கு பிடிச்சதை எல்லாம் செய்துக் கொடுக்க தானே அம்மாக்களுக்கு தோணும் இல்லையா சொல்லுங்கோ.”

“ஆமாம் ஆமாம்” என்று அலுத்துக் கொண்டாள் பர்வதம். 

“நீங்க ஹால்ல இல்லாட்டி ரூம்ல உட்கார்ந்து பேசிண்டிருங்கோ இதோ நான் டாய்லெட் போயிட்டு வந்துடறேன். மாமிய கூட்டிண்டுப் போமா மிருது”

என்று வேகமாக சென்றாள் அம்புஜம். பாவம் அவள் அவசரம் மற்றும் அவள் படும் அவஸ்தை அவளுக்குத் தானே தெரியும். 

மிருதுளா தன் மாமியாரை உள்ரூமிற்குள் அழைத்துச் சென்று ஒரு பாயை விரித்து அமரச் சொன்னாள். பர்வதம் அமர்ந்துக் கொண்டே..

“உனக்கும் நவீனுக்கும் தலைதீபாவளிக்கு என்ன செஞ்சா உன் அப்பா அம்மா? நீ நைட்டில இருக்க நவீன் என்னடான்னா ஒரு டிஷர்ட்டும் ஷார்ட்ஸும் போட்டுண்டிருக்கானே”

“காலை ல இருந்து பத்து மணி வரைக்கும் புது டிரஸ் தான் போட்டுண்டிருந்தோம். கொஞ்ச முன்னாடி தான் மாத்தினோம். இதோ இந்த புடவையும், ஷர்ட்டும் பேன்ட்டும் தான் என் அப்பா அம்மா எங்களுக்கு தந்தா. ஈவினிங்க்கு வேற டிரஸ் வாங்கியிருக்காளாம். அதுவுமில்லாம வேற ஏதோ ஒரு சர்ப்ரைஸும் இருக்குன்னு சொல்லிருக்கா அது என்னன்னு தெரியலை”

“என்னத்துக்கு ரெண்டு டிரஸ் எடுத்திருக்கா?”

“அதை அவாகிட்ட தான் கேட்கணும் மா”

என்று மிருதுளா சொல்லிக் கொண்டிருக்கும் போது அதைக் கேட்டுக்கொண்டே அம்புஜம் உள்ளே நுழைந்தாள்.

“அது ஒண்ணுமில்லை மாமி கடைக்கு போனபோது ஒரு டிரஸ் எடுக்கத் தான் போனோம் ஆனா அங்க எங்களுக்கு ரெண்டும் பிடிச்சதுனால ரெண்டையுமே வாங்கிண்டு வந்துட்டோம். அந்த சர்ப்ரைஸ் கிஃப்ட்ட சாயந்தரம் இவாகிட்ட கொடுக்கலாம்ன்னு இருந்தோம்…சரி இப்போ நீங்களும் இருக்கேங்கள் இப்பவே குடுத்துட்டாப் போச்சு. என்ன சொல்லறேங்கள் மாமி?”

“ஆமாம் ஆமாம் இப்போ குடுதேங்கள்ன்னா நாங்களும் என்னது அதுன்னு தெரிஞ்சுப்போம்”

“இல்லாட்டினாலும் நானும் நவீனும்  ஆத்துக்கு வந்து காம்மிச்சிருப்போமே மா”

“சரி சரி …இந்தா மிருது இது உனக்கு, அது மாப்பிள்ளைக்கு.. நீயே கொண்டு போய் அவர்கிட்ட குடு”

“என்னது மா இது? சரி இரு நான் நவீகிட்டயும் குடுத்துட்டு ரெண்டு பேரும் ஒண்ணா ஓபன் செஞ்சுப் பார்க்கறோம்”

“நவீ , நவீ… இந்தாங்கோ இது உங்களுக்காக உங்க மாமனார் மாமியாரின் தீபாவளி கிஃப்ட். இது என்னோடது. ரெண்டு பேருமா திறந்துப் பார்ப்போமா”

“இப்பவே வா. சரி ஓகே நீயே பிரிச்சுக் காட்டு”

“வாவ் லவ்லி!!! உங்களுக்கு கோல்ட் ப்ரேஸ்லெட் நவீ. வாவ் !!! எனக்கு தோடு. ரொம்ப அழகா இருக்குமா. இந்தாங்கோ அப்பா அம்மா பாருங்கோ”

என்று மிருதுளா இரண்டையும் ஈஸ்வரன் கையில் கொடுத்தாள். ஈஸ்வரன் வாங்கியதும் அதைப் பார்க்காமல் பர்வதத்திடம் கொடுத்தார். ஆனால் பர்வதம் கை தவறியது போல நடித்து இரண்டு டப்பாக்களையும் கீழே போட்டாள். உடனே அம்புஜம் அதை எடுத்து மறுபடியும் பர்வதத்திடம் கொடுத்தாள். அதை பார்த்தும் பார்க்காதது போல மிருதுளாவிடமே கொடுத்தாள் பர்வதம். மிருதுளா அதை வாங்கி பீரோவில் வைத்து விட்டு ஹாலுக்கு வந்து அமர்ந்தாள்.

“சரி எல்லாருமா பேசிண்டே இருந்தா எப்படி சாப்பிடண்டாமா!! வாங்கோ உட்காருங்கோ. மொதல்ல ஈஸ்வரன் மாமா, பர்வதம் மாமி, ப்ரவின், பவின், மிருதுளா, மாப்பிள்ளை உட்காருங்கோ.” 

என்றாள் அம்புஜம்

“இல்லை ராமானுஜம் மாமா அவாகூட உட்காரட்டும் நானும் நீங்களும் அப்பறமா சாப்பிடுவோமே”

“பர்வதம் மாமி நீங்க மாமாவோட உட்காருங்கோ ப்ளீஸ் நாங்க மூணு பேரும் லேட்டா தான் காலைல டிஃபன் சாப்பிட்டோம் அதுனால எங்களுக்கு இப்போ பசியில்லை அதுதான் சொன்னேன்”

“பர்வதம் ஆவா தான் சொல்லறா இல்லையா வா வந்து உட்காரு” என்று ஈஸ்வரன் சொன்னதும் அமர்ந்தாள் பர்வதம்.

அம்புஜத்தால் குனிந்து பரிமாற முடியாததால் அவள் ஒவ்வொரு பொருளாக எடுத்துக் கொடுக்க ராமானுஜமும், வேனுவும் பரிமாறினார்கள். அனைவரும் சாப்பிட்டு எழுந்தப் பின்னர் அவர்களுக்கு வெற்றிலைப் பாக்கு தாம்பூலம் கொடுத்தார் ராமானுஜம். பின்பு அவர்கள் மூவரும் அமர்ந்து சாப்பிட்டார்கள். 

ராமானுஜமும் அம்புஜமும் சாப்பிட்டு எழுந்ததும்…ஈஸ்வரன்

“சரி மாமா நாங்க கிளம்பறோம். சாப்பாடு சூப்பரா இருந்தது மாமி.”

“தாங்க்ஸ் மாமா. ஏன் சாயந்தரமா வெயில் தாழ கிளம்பலாமே ஏன் இந்த வெயில்ல கிளம்பறேங்கள்?”

“இல்ல என் தம்பி ஆத்துக்கும் என் மச்சினர் ஆத்துக்கும் நாங்க போகணும் அதுதான் கிளம்பறோம் மாமி”

“ஓ !! அப்படியா சரி மாமி. ஒரு நிமிஷம் இருங்கோ”

என்று உள்ளேச் சென்று மிருதுளாவிடம் பீரோவைத் திறந்து அதன் உள்ளிருந்த  புடவை,  ப்ளௌஸ் பிட், வேஷ்டி, துண்டை எடுத்து ஒரு தாம்பாளத்தில் அதோடு வெற்றிலை பாக்கு, பழம், பூ வைத்து அவளின் மாமனார் மாமியாரிடம் கொடுக்கச் சொன்னாள் அம்புஜம். ப்ரவின் மற்றும் பவினுக்கு ஆளுக்கு ஐநூறு ரூபாய் கொடுத்து வேண்டியதை வாங்கிக்கச் சொன்னார்கள். பின் ஈஸ்வரன் குடும்பம் கிளம்பும் போது நவீனிடம்….

“நாளைக்கு சாயந்திரம் ரெண்டு பேரும் வந்திடுங்கோ சரியா” 

என்று சொன்னார் ஈஸ்வரன் அதற்கு நவீன்

“ஆங் ஆங் அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் நீங்க எல்லாரும் பத்திரமா ஆத்துக்கு போங்கோ. பை”

அவர்களுக்கு ஆட்டோவை வரவழைத்தார்  ராமானுஜம். அதில் ஏறிச் சென்றனர் நவீன் குடும்பத்தினர். அவர்களை வழியனுப்பி வைத்தப்பின் மிருதுளா குடும்பத்தினர் வீட்டினுள் வந்தனர். அனைவரும் சற்று நேரம் உறங்கப் படுத்துக்கொண்னர். வேனுவும் நவீனும் தொலைக்காட்சியில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தனர். 

மாலை நான்கு மணிக்கு அம்புஜம் எழுந்து காபி டிக்காக்ஷன் போட்டு அனைவருக்கும் காபியும் கீரை வடையும் செய்து கொடுத்தாள். மிருதுளா நன்றாக உறங்கிக் கொண்டிருந்ததால் அவளை எழுப்பவில்லை. ஐந்து மணி அளவில் மிருதுளா எழுந்தாள். அவள் ஃப்ரெஷ்ஷாகி வருவதற்குள் அவளுக்கும் காபி அன்ட் வடையை எடுத்து வைத்தாள் அம்புஜம். அன்று மாலை புதுத்துணி உடுத்தி அனைவரும் கோவிலுக்குச் சென்று வந்ததும் மீண்டும் வேனுவும் நவீனுமாக பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். ராமானுஜம், அம்புஜம், மிருதுளா மூவரும் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டும் அக்கம் பக்கத்தினருடன் பேசிக் கொண்டுமிருந்தனர்.  ராமானுஜத்தின் தம்பி ராமநாதன் அவர் மனைவி குழந்தையுடன் பைக்கில் வந்திறங்கினார். 

“வாங்கோ வாங்கோ ஹாப்பி தீபாவளி” என்றாள் அம்புஜம்.

“வாங்கோ சித்தப்பா அன்ட் சித்தி. வாடி வாண்டு” என்றாள் மிருதுளா

“வா வா ராமநாதா. வாம்மா” என்றார் ராமானுஜம்

அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் அம்புஜம் அனைவருக்கும் காபி போட்டு பட்சணங்களுடன் கொடுத்தாள். அப்போது ராமநாதனின் மனைவி அம்புஜத்திடம்…

“மன்னி நம்ம மிருதுக்கு என்ன ஒரு ஆறு மாசம் ஆகிருக்குமா?”

“ஆமாம் ஏன் கேட்கற”

“இல்லை ஆறு மாசமாகியும் அவள் இன்னமும் முந்தித்ததை விட ரொம்ப ஸிலிம்மா அழகா இருக்கா. வயிறு தெரியவேயில்லையே.”

“அதுக்கு இப்போ உனக்கென ம்மா”

“இல்ல மன்னி வயிறு இன்னமும் பெரிசாகலைன்னா…. அப்போ மிருதுக்கு ஆண் குழந்தைத் தான்ன்னு சொல்ல வரேன். “

“சித்தி எங்களுக்கு பொண்ணு தான் வேணும்”

“உன்னப் பார்த்தா எனக்கென்னவோ ஆண் குழந்தைன்னு தான் தோனறது மிருது”

“சரி சரி ஆணோ பொண்ணோ நல்லபடியா ஆரோக்கியமா பொறக்கட்டும்”

“சரி மன்னி நாங்க கிளம்பறோம் இன்னும் சில ஃப்ரெண்ட்ஸ் ஆத்துக்கெல்லாம் போகவேண்டியிருக்கு”

“சரி இந்தா இந்த பட்சணங்களை எல்லாம் பேக் பண்ணிருக்கேன். எடுத்துக்கோ”

“தாங்க்ஸ் மன்னி அப்போ நாங்க வரோம் மிருதுளா, மாப்ள அன்ட் வேனு”

என்று வந்து சிறிது நேரம் பேசிவிட்டுச் சென்றனர் ராமநாதன் குடும்பத்தினர். அவர்கள் சென்றதும் இரவு உணவு அருந்தியப் பின் அம்புஜம் மிருதுளாவையும், மாப்பிள்ளையையும், வேனுவையும் கிழக்குப் பார்த்து உட்காரச் சொல்லி ராமானுஜத்திடம் சுத்திப் போடச் சொன்னாள். அவரும் அவர்களுக்கு சுத்திப்போட்டார். பின்னர் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு படுக்கலானார்கள். 

நவீன், மிருதுளாவின் தலை தீபாவளி சிறப்பாக நடந்தேறியது. தலைதீபாவளிக்கு இரண்டே நாள் மட்டும்  சென்று வர அனுமதிக் கொடுத்துவிட்டு அதில் பாதி நாள் அவர்களும் வந்திருந்தார்கள் நமது கெட்டிக்கார மூத்த தம்பதியர்.  அம்புஜம் தனது பிரச்சினையை வெளிக்காட்டிக் கொள்ளாமலே அனைவருக்கும் அனைத்தையும் செய்து முடித்து இரவு படுத்ததும் உறங்கிப் போனாள். பிள்ளைகளுக்காக வாழும் பெற்றவர்கள் ஆயிற்றே!!! 

தொடரும்…..

எட்டாம் தேதி காலை மிருதுளா வேக வேகமாக எல்லா வேலைகளையும் செய்து முடித்தாள். தன் பெற்றோர் வீட்டுக்கு தலைதீபாவளிக்காக செல்ல தேவையான துணிமணிகளை ஒரு பேக்கில் பேக் செய்து வைத்தாள். நவீன் குளித்து விட்டு ரூமிற்குள் வந்தான்.

“என்ன மிருது பேக்கிங் எல்லாம் ஆச்சா?”

“எஸ் எல்லாத்தையும் பேக் பண்ணிட்டேன். இதோ இதெல்லாம் நம்ம அப்பா, அம்மா, ப்ரவின், பவினுக்காக தீபாவளிக்கு வாங்கினது. இதை கீழே போய் எல்லாருக்கும் கொடுத்துட்டு தீபாவளி விஷ் பண்ணிட்டு அப்படியே சாப்டுட்டு கிளம்ப வேண்டியது தான். நாம ஒரு வாரம் தங்க வேண்டிய டிரெஸ் எடுத்து வச்சிருக்கேன். ஒரு வாரம் தங்கப் போறோமில்லையா?”

“ஆமாம் ஒன் வீக் தான் தங்கப் போறதா ப்ளான் பண்ணினோம். ஏன் உனக்கு டவுட்டு?”

“ஆமாம் ஆமாம் நாம தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னாடியே போறதாக் கூட தான் ப்ளான் பண்ணினோம் ஆனா அது நடக்கலையே அதுனால தான் கேட்டேன்”

“ஓ!!! கம் ஆன் மிருது. நாம ஒரு வாரம் உங்க ஆத்துல தங்கிட்டு தான் வரப்போறோம்”

என்று பேசிவிட்டு இருவருமாக பைகளுடன் கீழே வந்தார்கள். 

“அப்பா, அம்மா, ப்ரவின் அன்ட் பவின் எல்லாரும் வாங்கோ”

“என்ன அண்ணா?”

“மிருதுளா அதை எல்லாம் பேக்கிலிருந்து வெளிய எடுத்துத் தா”

“இந்தாங்கோ நவீ. அப்பா அம்மாட்ட கொடுத்து ஆசிர்வாதம் வாங்கிப்போம் ஃபர்ஸ்ட்”

“ரெண்டு பேரும் இப்படி வாங்கோ. இந்தாங்கோ எங்களுடைய தீபாவளி கிஃப்ட். ஹாப்பி தீபாவளி. எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்கோ”

என பெற்றோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர் நவீனும், மிருதுளாவும். 

“அம்மா உங்களுக்கு புடவைப் பிடிச்சிருக்கான்னு பார்த்து சொல்லுங்கோ”

“டேய் ப்ரவின் அன்ட் பவின் இந்தாங்கோ உங்களோட தீபாவளி கிஃப்ட் ஃப்ரம் அஸ். பார்த்து பிடிச்சிருக்கான்னு சொல்லுங்கடா எல்லாமே உங்க மன்னி செலக்சன்”

“சூப்பரா இருக்கு அண்ணா” என்றான் பவின். 

“நல்லாருக்கு ஆனா எனக்கும் பவினுக்கு எடுத்த கலர்லயே இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்” என ப்ரவின் கூற

“டேய் ரெண்டு பேரோடதும் ஒரே டிஸைன் தான் கலர் தான் வேற வேற வேணும்ன்னா நீங்க ரெண்டு பேரும் மாத்திக்கோங்கோ. ஒரே கலர் ல வாங்கிருந்தா யூனிஃபார்ம் மாதிரி இருக்குமேன்னுட்டு தான் ஒரே டிசைன்ல டிஃப்ரென்ட் கலர்ஸ் வாங்கினோம். ஈவன் ஃபார் வேனு இதே தான் வாங்கிருக்கோம்”

“எங்க காமிங்கோ மன்னி”

மிருதுளா அவள் பெற்றோருக்கும் தம்பிக்கும் எடுத்த தீபாவளி ஆடைகளை காண்பித்தாள். பர்வதம் வேகமாக அம்புஜத்திற்கு வாங்கிய புடவையைப் பார்த்தாள்…

“அம்மா ரெண்டு பேரோட புடவையும் ஒரே டிசைன் தான்”

“ஆமாம் ஆமாம் ஒரே டிசைன் தான். இந்த கலர் என்னோட புடவை கலரை விட கொஞ்சம் நல்லாருக்கு அதுதான் பார்த்தேன்.”

“சரி அப்போ இதை நீங்க வச்சுக்கோங்கோ அதை என் அம்மாக்கு கொடுத்துக்கறேன்”

“இல்ல அந்த கலர் என்கிட்ட இல்லை அதுதான் சொன்னேன்”

“பரவாயில்லை இதை வச்சுண்ட்டு அதை தாங்கோ”

ஆக பர்வதம் தன் புடவையை மிருதுளாவிடம் கொடுத்து அம்புஜத்துக்கு வாங்கிய புடவையை தனக்கென வாங்கிக்கொண்டாள். 

அனைவருமாக அமர்ந்து மத்திய உணவான ரசம் சாதம் மற்றும் பொறியலை அருந்தினர். பின் ஒரு மூன்று மணியளவில் நவீனும் மிருதுளாவும் மிருதுளா வீட்டிற்குச் செல்ல புறப்பட்டப் போது ஈஸ்வரன் அவர்களிடம்…

“நவீன் நாளைக்கு தீபாவளி முடிச்சிட்டு நீங்க ரெண்டு பேரும் நாளன்னைக்கு சாயந்தரம் இங்க வந்துடணும் சரியா”

“ஆனா நாங்க ஒரு வாரம் தங்கிட்டுத் தான் போகணும்ன்னு மிருது அப்பா அம்மா சொன்னா அதுவுமில்லாம மிருதுக்கும் அவா ஆத்துல இருக்கணும்னு இருக்கு அதுதான்…”

“அது எல்லாம் சரி தான் ஆனா பதினொன்னாம் தேதி காலைல நம்ம லீலாவதி மாமி அன்ட் சந்திரசேகர் மாமாவோட சஷ்ட்டியப்தபூர்த்திக்கு எல்லாருமா திருக்கடையூருக்கு மூன்று வேன்ல போறோம். விஷேஷம் பண்ணண்டாம் தேதி ஆனா எல்லாரையும் பதினொன்னாம் தேதியே அங்க கூட்டிண்டு போறதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணிருக்கா ஸோ நாமளும் போகணும். அதுனால தான் உங்களை பத்தாம் தேதியே திரும்பி வரச்சொல்லறேன் புரிஞ்சுதா?”

“அதுக்கு பெரியவா நீங்க ரெண்டு பேரு மட்டும் போயிட்டு வந்தா போறாதா? நாங்களும் வரணுமா என்ன?”

“வரணும். நீங்களும் வருவேங்கள்ன்னு அவா கிட்ட சொல்லியாச்சு”

இவர்களிடம் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதை உணர்ந்தாள் மிருதுளா. இப்படியே பேசிக்கொண்டிருப்பதை விடுத்து தன் வீட்டுக்காவது சீக்கிரம் போகலாம் என்றெண்ணி…

“சரி சரி நாங்க ஒரு வாரம் தங்கலை பத்தாம் தேதி சாயந்தரம் வந்திடறோம். இப்போ நாங்க கிளம்பறோம் பை. கிளம்பலாமா நவீ ப்ளீஸ்”

“சரி நாங்க போயிட்டு வரோம்”

“ஞாபகம் இருக்கட்டும் பத்தாம் தேதி சாயந்தரம் வந்திடணும்”

“சரி சரி ஓகே”

என்று அங்கிருந்து கிளம்பினால் போதும் என நவீனும் மிருதுளாவும் பஸ்ஸை பிடிக்க பஸ் ஸ்டாப்புக்கு நடந்தனர். அப்போது…

“என்ன நவீ நான் சந்தேகப் பட்டது சரிதானே? ஏன் இவாளுக்கு அப்படி ஒரு விஷேஷமிருக்கு.. அதுக்கு எல்லாருமா போகணும்ன்னு முன்னாடியே தெரியாதா என்ன? ஆமாம் யாரு அந்த லீலாவதி மாமி அன்ட் சந்தரசேகர் மாமா?” 

“அவா எங்க பெரியப்பாவோட பால்ய சிநேகிதர் எங்க எல்லாருக்கும் ரொம்ப பரிச்சயமானவா. மும்பய் ல செட்டில் ஆகிருக்கா.”

“அப்போ அவா நம்ம சொந்தக்காராக் கூட  கிடையாது. சரி நேத்தே இதப் பத்தி பேசிருக்கலாமில்லையா?  இப்போ நாம எங்காத்துக்கு கிளம்பும் போது தான் இதை டிஸ்கஸ் பண்ணணுமா?”

“ஓகே அதுதான் கிளம்பிட்டோமே விடு விடு. பண்ணண்டாம் தேதி விஷேஷம் முடிந்து வந்ததும் நாம் உங்க ஆத்துக்கு போய் ஒரு வாரம் இருந்துட்டு அப்புறம் நான் ஊருக்கு கிளம்பறேன் சரியா”

“பார்ப்போம்! பார்ப்போம்! என்ன எல்லாம் நாம நினைக்கறா மாதிரியா நடக்கறது. பஸ் வந்துடுத்து வாங்கோ சீக்கிரம் ஏறி எங்காத்துக்கு  போயிடலாம் இல்லாட்டி பின்னாடியே கூப்பிட வந்திடுவா” 

என முனகிக் கொண்டே பஸ்ஸில் ஏறினாள் மிருதுளா. இருவருமாக மிருதுளா வீட்டிற்கு அவர்கள் ஊர் வரை பஸ்ஸில் சென்று பின்  பஸ்ஸ்டாண்டிலிருந்து ஆட்டோ வைத்துக் கொண்டு சென்றனர். ஆட்டோ வீட்டு வாசலில் நின்றது நவீன் இறங்கி காசு கொடுத்துக் கொண்டிருந்தான் வீட்டினுளிருந்து…

“வாங்கோ வாங்கோ மிருது அன்ட் மாப்ளை வாங்கோ. என்னடா டைம் ஆகிண்டே இருக்கே இன்னமும் இவாள காணலையேன்னு யோசிச்சிண்டிருந்தோம்”

என அம்புஜமும், ராமானுஜமும் மகிழ்ச்சியுடன் வாசலில் வந்து இருவரையும் வீட்டினுள் அழைத்துச் சென்றனர். 

“அம்மா இந்தா எங்க ஊரு சுவீட்ஸ் அன்ட் காரம். உனக்கு பிடிக்காது ஆனா அப்பாக்கும் வேனுக்கும் பிடிக்குமே”

இருவருக்கும் தீபாவளி பட்சணங்கள் மற்றும் பஜ்ஜி, வடை சட்னி என பல வகையான மாலைச் சிற்றுண்டி  கொடுத்து சாப்பிடச் சொன்னார்கள். மிருதுளாவிற்கு ஒரே குஷியாக இருந்தது ஏனெனில் பல மாதங்களுக்குப் பின் அவ்வளவு வகையான ஸ்னாக்ஸ் ஒரே நேரத்தில் அவள் முன் வைக்கப்பட்டது. அதை இருவரும் ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கையிலே சுட சுட காபியை கொண்டு வந்துக் கொடுத்தாள் அம்புஜம்.

“அம்மா சூப்பர் மா. எவ்வளவு நாள் கழிச்சு இதெல்லாம் சாப்படறேன் தெரியுமா!!! எல்லாமே டேஸ்டியா இருக்கு. தாங்க்ஸ் மா”

“என்னத்துக்கு தாங்க்ஸ் எல்லாம் சொல்லிண்டிருக்க இப்போ. மாப்ளைக்கு எல்லாம் பிடிச்சிருக்கா? பஜ்ஜி தவிர எல்லாத்தையும் நான் பண்ணிணேன் பஜ்ஜி மட்டும் அவர் செய்தார்.”

“ஓ !!!எல்லாமே சூப்பர் டேஸ்டியா இருக்கு. என் வயிறு ஃபுல்லாகிடுத்து. காபி சூப்பரா இருக்கு”

“எங்களுக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு”

“அம்மா இந்தா உனக்காக நாங்க வாங்கிண்டு வந்த தீபாவளி கிஃப்ட். அப்பா இது உனக்கு. பிரிச்சுப் பார்த்து பிடிச்சிருக்கான்னு சொல்லுங்கோ”

“சூப்பரா இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உங்களுக்கு? சொல்லுங்கோ கொழந்தைகள் ஆசையா வாங்கிண்டு வந்துருக்காளோனோ”

“எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. தாங்கஸ் மாப்ள அன்ட் மிருது”

“என்னத்துக்கு தாங்கஸ் எல்லாம் ….ஆமாம் வேனு எங்க காணலை”

“அவன் அவனோட ஃப்ரெண்ட்ஸ் ஆத்துக்கெல்லாம் பட்சணம் கொடுத்துட்டு அப்படியே தீபாவளி வாழ்த்து சொல்லிட்டு வர்றதுக்காக போயிருக்கான். அவன் கிளம்பிப் போயி ரொம்ப நேரமாயாச்சு. இதோ வந்துட்டான்”

“ஹலோ மிருதுக்கா அன்ட் அத்திம்பேர் வெல்கம்”

“ஹாய் வேனு எப்படி இருக்க?”

“நான் நல்லா இருக்கேன் அத்திம்பேர்”

“என்ன மிருதுக்கா… எனக்கு நீ கல்யாணமாகி போனதுலேருந்து சரி போர் அடிக்கறது”

“அப்படியா டா. அப்போ என்னை ரொம்ப மிஸ் பண்ணிணயோ”

“ஆமாம் சண்டை போட ஆளில்லாமல் ரொம்ப மிஸ் பண்ணினேன் தான்”

“போடா”

“சரி வாங்கோ பட்டாசு வைக்கலாம். மிருதுக்கா வழக்கம் போல உனக்கு கம்பித்திரி, புஸ்வானம், சங்குசக்கரம் எல்லாம் அப்பா வாங்கி வச்சிருக்கா. வா போயி அதெல்லாம் வைக்கலாம்”

“டேய் நீயும் உட்கார்ந்து ஸ்னாக்ஸ் சாப்பிடு அப்புறம் போகலாம்” 

“இதெல்லாம் தான் நேத்தேலிருந்து சாப்பிடறேன். ஆனா பஜ்ஜி ஈஸ் நியூ ஸோ அத மட்டும் சாப்பிடறேன்”

அனைவருமாக பட்டாசு வெடித்து சந்தோஷமாக அன்றைய மாலைப் பொழுதை கழித்தனர். அன்று இரவு உணவிற்கு இட்டிலி சாம்பார் சட்டினி கேசரி செய்திருந்தாள் அம்புஜம். அனைவருமாக அமர்ந்து ரசித்து உண்டு மகிழ்ந்தனர். பின் அவர்கள் வீட்டிலிருக்கும் ஒரே ஒரு அறையை மிருதுளாவிற்கும் நவீனுக்கும் கொடுத்துவிட்டு அம்புஜம், ராமானுஜம் மற்றும் வேனு ஹாலில் படுத்துக் கொள்ள பாய்களை விரித்தனர் அப்போது குட் நைட் சொல்ல வந்த மிருதுளாவிடம் அம்புஜம்

“மிருது ஒரு வாரம் தங்கற மாதிரி தானே வந்திருக்கேங்கள்!!! ஏன்னா நீ ஒரு சின்ன பேக்கோட தான் வந்திருக்க அதுனால கேட்கறேன்”

“இல்ல மா நாங்க நாளன்னைக்கு சாயந்தரம் கிளம்பணும்”

“ஏன் நாங்க தான் உங்க மாமனார் மாமியார்ட்ட அன்னைக்கே சொன்னோமே”

“அதெல்லாம் அப்படித் தான் நாங்க நாளன்னைக்கு போயிட்டு பண்ணிரெண்டாம் தேதி திரும்பி வந்து ஒரு வாரம் தங்கறோம் சரியா”

“ஏன் அப்படி? என்னவோ ஏதோ எங்களுக்கு நீங்க ரெண்டு பேரும் எங்களோட ஒரு வாரமாவது இருக்கணும்ன்னு ஆசையா இருக்கு மிருது” 

“எங்களுக்கும் தான் ஆசையா இருக்கு என்ன செய்ய பார்ப்போம்”

“சரி நீ போய் தூங்கு காலை ல சீக்கிரம் எழுந்திரிக்கணும். குட் நைட்”

“குட் நைட் அம்மா, அப்பா அன்ட் வேனு”

தொடரும்…..

மூன்று நாட்களில் அதாவது நவம்பர் ஒன்பதாம் தேதி தீபாவளி. மிருதுளாவின் பெற்றோர் சந்தோஷத்துடன்  நவீன் மிருதுளா ஊருக்கு வந்த அடுத்த நாள் அவர்கள் வீட்டுக்குச் சென்று தலைதீபாவளிக்கு முறையாக அழைப்பு விடுத்தனர். 

“எங்க பொண்ணையும் மாப்பிள்ளையையும் ஏழாம் தேதியே அதாவது நாளைக்கே தலைதீபாவளிக்கு அனுப்பி வச்சிடுங்கோ மாமா” என்று பூ பழ தட்டுடன் கூறினார்கள் ராமானுஜம் தம்பதியர்.

“அப்படியா!!! அவா ரெண்டு பேரும் எட்டாம் தேதி இங்க மத்தியம் சாப்ட்டுட்டு உங்க ஆத்துக்கு வருவா” என்று ஏழாம் தேதி அனுப்ப விரும்பாததை ஈஸ்வரன் மறைமுகமாக கூறியதும் ராமானுஜமும் அம்புஜமும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு பின் மிருதுளாவையும் மாப்பிள்ளையையும் பார்த்தனர். மிருதுளா ஒன்றும் கூற முடியாமல் நின்றிருந்தாள். நவீன் தலையை குனிந்து நின்றிருந்தான். 

“சரி நாங்க அப்ப கிளம்பறோம் …வரோம்”

“இருங்கோ இதோ காபி போட்டுடறேன்”

“இல்ல மாமி எங்களுக்கு நிறைய வேலையிருக்கு. அம்பு கிளம்பலாமா”

“நாங்க போயிட்டு வரோம் மாமி. வரோம்மா மிருது. அப்போ எட்டாம் தேதியே வாங்கோ மாப்பிள்ளை”

என்று சந்தோஷத்துடன் வந்தவர்கள் மனவேதனை மற்றும் அவமானத்துடன் திருப்பிச் சென்றார்கள். மிருதுளாவிற்கு மிகவும் சங்கடமாக இருந்ததது. அவள் பெற்றோர் சென்றதும் நேராக மாடிக்குச் சென்று அவளது கோபத்தை அடக்க முயற்சித்துக் கொண்டிருக்கையில் நவீன் ரூமிற்குள் நுழைந்தான்.

“ஹேய் மிருது ஏன் இங்க வந்து இப்படி உட்கார்ந்துண்டிருக்க? என்ன ஆச்சு?”

“ப்ளீஸ் லீவ் மீ அலோன் நவீ”

“ஏய் வாட் ஹாப்பென்ட் மிருது?”

“உங்களுக்கு என்ன நடந்ததுன்னு புரியலையா இல்லை புரியாத மாதிரி நடிக்கறேங்களா நவீ?”

“சீரியஸ்ஸா புரியலை நீ ஏன் இப்படி வந்து உட்கார்ந்திருக்க”

“ஓ!! சூப்பர் நவீ!!! சூப்பர்!!! எங்க அப்பா அம்மா நம்மள நம்ம தலைதீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னாடி வரச்சொன்னதுக்கு ஒண்ணு …இல்லை அவாள முந்தின நாள் தான் அனுப்ப முடியும்னோ ….இல்ல ரெண்டு நாள் முன்னாடி எல்லாம் அனுப்ப முடியாதுன்னோ சொல்லிருக்கணும் அத விட்டுட்டு அதென்ன அப்படி ஒரு பதில் கொடுக்கறா உங்க அப்பா. அதுல தான் என்ன ஒரு அதிகாரம்!!! எவ்வளவு ஆசையா சந்தோஷமா என் அப்பா அம்மா வந்தா அவாள எப்ப வந்தாலும் சங்கடப்படுத்தி அனுப்பறதே வேலையா வச்சிருக்கா உங்க அப்பாவும் அம்மாவும். இது உங்களுக்குப் புரியலைன்னு சொல்லறேங்கள்”

“ஓ!! அதுவா… நானும் கவனிச்சேன். அப்பா அப்படி பேசினதுக்கு நான் என்ன பண்ணுவேன் மிருது”

“ஏன் அப்படி பேசறேங்கள்ன்னு கேட்க தோணலையா நவீ உங்களுக்கு??”

“அவா அப்படி தான் !!!என்ன பண்ண?”

“சரி இதே மாதிரி என் அப்பா உங்க அப்பாகிட்ட பேசியிருந்தா இதே மாதிரி தான் சொல்லிருப்பேங்களா நவீ?”

“ஜஸ்ட் லீவ் இட் மிருது”

“எப்படி!!! எப்படி!!! ஜஸ்ட் லீவ் இட் டா!!!!”

“உங்க அப்பா அப்படி எல்லாம் பேச மாட்டார்”

“ஆமாம் எங்க அப்பா அம்மா மரியாதை தெரிஞ்சவா அதுனால அப்படி எல்லாம் பேச மாட்டா தான் ஆனா அதுக்காக ….உங்களை கல்யாணம் பண்ணிண்டு வந்த நாள் முதலா எப்ப அவா வந்தாலும் நொடுக்குன்னு ஏதாவது சொல்லறதே பொழப்பா வச்சிருந்தா எவ்வளவு நாள் தான் நானும் பொறுத்துக்கறது? என்னைத் தான் எப்ப பாரு நாக்குல விஷத்த வச்சுண்டு கொட்டிண்டே இருக்கான்னா என் பேரன்ட்ஸையும் அதே மாதிரி தான் பேசறா. என் மேலேயோ இல்ல என் பேரன்ட்ஸ் மேலயோ ஏதாவது தப்பிருக்கா?? பின்ன ஏன் எங்கள கண்டாளே இப்படி விஷத்த கக்கறா?”

என்று அத்தனை நாள் ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தாள் மிருதுளா. குட்ட குட்ட குனிந்துக்கொண்டேயிருந்தால் குட்டுபவர்கள் இன்னும் பலமாகத் தான் குட்ட நினைப்பார்களே தவிர குட்டுவதை ஒருபோதும் நிறுத்த மாட்டார்கள். 

 நவீன் மௌனம் காத்தான். ஏனெனில் மிருதுளா கேட்டதில் நியாயமிருந்தது. அவன் தன் அப்பாவிடம் கேட்காதது தவறே. பல குடும்பங்களில் அவர்கள் அப்படித் தான், அவர்களிடம் பேச முடியாது பேசி பிரயோஜனமில்லை என்று எண்ணி விலகுவதால் அதைச் செய்பவர்கள் ஏதோ அவர்களுக்கு பயந்து தான் எவரும் எதிர்த்து பேசவில்லை என்றெண்ணி மீண்டும் அதே மாதிரியான பேச்சையும் திமிரு தனத்தையும் தொடர்வார்களேயின்றி ஒருநாளும் திருந்த மாட்டார்கள். அது போல தான் இங்கேயும் நடக்கிறது. 

உண்மையில் தங்கள் பிள்ளைகள் நன்றாக சந்தோஷமாக வாழவேண்டும் என்றெண்ணும் பெற்றவர்கள் இப்படி கிடைக்கும் சந்தர்பங்களில் எல்லாம் வம்பு வளர்க்க மாட்டார்கள். 

“ப்ளீஸ் நீங்க கீழ போங்கோ நவீ. நான் என்னை நானே கொஞ்சம் ஆசுவாசப்படுத்திண்டுட்டு வரேன்.  உங்களால அவாள்ட்ட கேட்டக முடியாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்..”

“சரி விடு மிருது. கண்ணைத் துடைச்சுக்கோ. இதுக்கெல்லாமா அழுவுறது? பார்த்துக்கலாம் வா”

“இதுக்காக மட்டுமில்ல நவீ நான் இந்த ஆத்துக்கு காலடி வச்ச நாள் முதலா இதைத் தான் அனுபவிச்சிண்டிருக்கேன். நீங்க போங்கோ நான் வரேன்”

நவீன் கீழேச் சென்றான்.

“என்னவாம் உன் பொண்டாட்டிக்கு? ஏன் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணறா?” 

என்று ஈஸ்வரன் கேட்டதுக்கு “நாங்கள் எங்கள் ரூமில் மாடியில் கதவு சாத்திக்கொண்டு பேசியது எப்படி உங்களுக்கு தெரிந்தது” என்று கேட்காமல் நவீன் அவரை ஒரு பார்வைப் பார்த்திவிட்டு ஃப்ரிட்ஜிலிருந்து ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து மடக் மடக்கென்று குடித்துவிட்டு டிவியை ஆன் செய்து பார்க்கலானான். 

சற்று நேரததில் மிருதுளா கீழே வந்தாள். நவீன் டிவி பார்த்துக் கொண்டும் மற்றவர்கள் ஏதோ வேண்டாதவர்கள் தங்கள் வீட்டில் அமர்ந்திருப்பது போல நடந்துக்கொண்டனர். இப்படிப்பட்ட சூழல் தன் குழந்தைக்கு சரியில்லை என்றெண்ணி அவள் ப்ரவின் மற்றும் பவினுடன் பேச்சுக்கொடுத்தாள்.

“ஹே ப்ரவின் அன்ட் பவின் உங்க காலேஜ் எல்லாம் எப்படி போறது?”

“நல்லா தான் போறது” என்றான் ப்ரவின்

“பவின் உனக்கு”

“ம்..ம்… நல்லாருக்கு”

“சரி நீ குஜராத் ல இருந்து வந்த கதை எல்லாம் உன் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொன்னயா? எல்லாரும் என்ன சொன்னா?”

“ஒண்ணும் சொல்லலை”

என்று இருவருமே ஓரிரு வார்த்தைகளில் பதிலளிக்க அதற்கு மேல் பேச்சைத் தொடர விரும்பாத மிருதுளா நவீனுடன் சேர்ந்து டிவி பார்த்தாள். அவளுக்கு ஏதோ காற்றுப் புகாத ஒரு கூண்டில் அடைப்பட்டிருப்பது போல இறுக்கமாக இருந்தது. சாப்பிட்டப்பின்னர் மிருதுளா பாத்திரங்களை எல்லாம் எடுத்து வைத்து விட்டு இடத்தை சுத்தம் செய்த பின் சற்று நேரம் உறங்க வேண்டும் போல் தோண கீழே உள்ள ரூமிற்குள் சென்று பார்த்தாள் அங்கே ஈஸ்வரன் படுத்திருந்தார். ஹாலில் படுக்கலாமென்று வந்து பார்த்தாள் அங்கு பர்வதம், ப்ரவின் மற்றும் பவின் படுத்திருந்தனர் நவீன் சேரில் அமர்ந்து புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தான். 

மிருதுளா சற்று நேரம் கதவோரமாக அமர்ந்திருந்து விட்டு தூக்கம் சொக்க ஆரம்பித்ததும் மெல்ல எழுந்து மாடி ரூமிற்குச் சென்றாள். நவீன் மிருதுளா மாடிக்கு போவதைப் பார்த்தான். அவள் சென்ற கொஞ்ச நேரத்தில் அவனும் மாடிக்குச் சென்றுப் பார்த்தான் அவள் படுத்திருந்தாள். 

“என்ன மிருது தூக்கம் வர்றதா?”

“ஆமாம் நவீ சொக்கறது. இந்த வெயில் ல மாடி ஏறி வரவேண்டாமே கீழேயே படுத்துக்கலாம்னு பார்த்தேன் இடமில்லை அதுனால தான் இங்கயே வந்து படுத்துட்டேன்”

“ஏன் கீழ உள் ரூமுல படுத்திருக்கலாமே”

“அங்க அப்பா படுத்திருக்கார். சரி நான் கொஞ்ச நேரமாவது தூங்கறேன்”

“நான் மட்டும் என்னப் பண்ணப்போறேன். இரு கதவை தாப்பா போட்டுட்டு வரேன்”

இருவரும் உறங்கினர். மாலை ஐந்து மணியானதும் டர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று பழையப்படி பெல் சத்தம் கேட்டு பதறி அடித்துக்கொண்டு எழுந்தாள் மிருதுளா. அவள் எழுந்த வேகத்தைப் பார்த்ததும் நவீன் அவளை தட்டிக்கொடுத்து …

“ஒண்ணுமில்லை மிருது பெல்லு சத்தம்  தான். பயப்படாதே ஒண்ணுமில்லை. இந்தா இந்த தண்ணியைக் குடி. இவாள…. நீ நிதானமா கீழ வா”

கீழே கோபத்துடன் வந்தான் நவீன். 

“யாரு அந்த பெல்லை அடித்தது”

“ஏன்!!!! நான் தான். விளக்கேத்த நேரமாச்சு இன்னுமா தூங்குவா? அதுதான் கூப்பிட்டேன்.” என்று நக்கலாக சொன்னாள் பர்வதம்

“இனி நாங்க மாடில இருந்தா யாரும் இந்த பெல்லை அடிச்சுக் கூப்பிடக்கூடாது‌”

“பின்ன உன் பொண்டாட்டி எப்ப பாரு மாடிலேயே இருந்தா ஒவ்வொரு தடவையும் ஏறி வந்து கூப்பிடவா முடியும்”

“இந்த பெல் இருந்தா தானே அடிப்பேங்கள்”

என்று கிடுகிடுவென மாடிக்குச் சென்று அந்த பெல்லை கழற்றி பரணில் வைத்தான் நவீன். போன முறையே செய்திருக்க வேண்டும். அப்போது மிருதுளா மட்டுமே ஆனால் இப்போது உறங்குவது தன் பிள்ளையும்மல்லவா அது தான் கழற்ற வைத்திருக்க வேண்டும். 

“சரி பெல்லை கழற்றிட்ட இப்போ உன் பொண்டாட்டியை கீழ வரச்சொல்லு” என்றாள் பர்வதம். தன் மகனின் மனைவிக்கு மிருதுளா என்ற பெயர் இருப்பதே மறந்துவிட்டாள் போல தோன்றுகிறது. நவீன் மேலே ஏற துவங்கும் போது மிருதுளா கீழே இறங்கிக் கொண்டிருந்தாள். 

மாசமாயிருக்கும் மருமகளுக்கு கீழே படுக்க இடம் கொடுக்க மனமில்லை, இவர்களுக்கு மேலே ஏறி கூப்பிட கஷ்டமாக இருக்கிறதாம் ஆனால் மாசமான மருமகள் டாய்லெட் போவதற்கும் படுத்துக்கொள்வதற்கும் ஏறி இறங்க வேண்டுமாம். 

மிருதுளா கீழே வந்ததும் நேராகா பாத்ரூம் சென்று ஃப்ரெஷ்ஷாகி வந்து விபூதி குங்குமம் இட்டுக்கொண்டு காபி போட அடுப்படிக்குள் சென்றாள். அப்போது பர்வதம்…

“இப்படி தான் குஜராத்ல விளக்கேதும் ஏத்தாம தூங்கிண்டே கிடப்பயா?”

மிருதுளாவிற்கு கோபம் வந்ததால் புத்தி வேலை செய்யவில்லை அதனால் திருப்பி சரியான பதிலளிக்க முடியாமல் வேகமாக அடுத்த விஷ அம்பு பரவதம் நாவிலிருந்து வெளி வருவதற்குள் காபியைப் போட்டுக்கொண்டு வெளியே அமர்ந்திருந்த நவீனுக்கு ஒரு தம்ளர் கொடுத்து தானும் குடித்துவிட்டு இருவரின் தம்பளரையும் பாத்திரங்கள் தேய்க்க போடுமிடத்தில் குனிந்து போட்டுக்கொண்டிருக்கையில் ஹாலிலிருந்து பர்வதம் …

“அப்படியே அங்க கிடக்குற பாத்திரங்களை எல்லாம் தேய்ச்சு வச்சிடு”

மிருதுளாவும் இருக்கைப் பலகையை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்து தேய்க்கலானாள். அதைப் பார்த்த நவீன்..

“மிருது நீ வேணும்னா எழுந்திரி நான் தேய்க்கறேன். இப்படி கீழ உட்கார்ந்துண்டு தேய்க்கறதுனால வயிறு அமுங்கறது பாரு”

“ஆமா ஆமாம்….நான் நாலு புள்ளகள பெத்துருக்கேன்….என்னமோ உலகதிசம் பாரு” என்று பர்வதம் நவீன் மிருதுளாவிடம் பேசுவதைக் கேட்ட பர்வதம் சொல்ல..

“ஆனா எங்களுக்கு இது தான் ஃபர்ஸ்ட் குழந்தை” என்று நவீன் திருப்பிக் கூறியது வெடுக்கென்று உள்ளேச் சென்றாள் பர்வதம். 

“ஏன் பா ? விடுங்கோ இதோ எல்லாத்தையும் தேய்ச்சாச்சு.”

என்று மிருதுளாவே எல்லாத்தையும் தேய்த்துவிட்டு பலகையிலிருந்து எழ நவீனிடம் கைக் கொடுக்குமாறு கூற நவீனும் அவளுக்கு கைக் கொடுத்து எழுப்பிவிட்டான். 

“நவீ நாம ஒரு வாக் போகலாமா”

“ஓ எஸ், இரு வேலட்டை எடுத்துண்டு வரேன்”

நவீன் வந்ததும் மிருதுளா உள்ளேச் சென்று பர்வதத்திடம்

“அம்மா நாங்க ரெண்டு பேரும் ஒரு வாக் போயிட்டு வந்துடறோம்”

“ம்..ம்…ம்… ஆமாம் என்ன இது ஆறு மாசமாக போறது உனக்கு வயிறே காணம்”

“அப்படின்னா!!! எனக்கு நீங்க சொல்லறது புரியலை”

“இல்ல மாசமான மாதிரி இல்லையேன்னு சொல்லறேன்”

மிருதுளாவிற்கு மீண்டும் கோபம் வர

“சரி நாங்க வரோம்”

என்று கூறி நவீனுடன் வெளியேச் சென்றாள். 

தனக்கோ இல்லை தன்னை சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் தவறு நிகழ்ந்தால் தட்டிக் கேட்க வேண்டும் என்பதனால் தான் பாரதி “ரௌத்திரம் பழகு” என்று கூறியுள்ளார். எதிர்க்கும் துணிவின்றி தன் மனதிற்குள்  தனக்குத் தானே  நொந்துக்கொள்வதனால் வெளிப்படுவது ஆத்திரம் ..சினம்..கோபம். 

ஆத்திரம் அறிவற்றது என்பது மிருதுளாவிற்கு மிகவும் பொருத்தமான வாக்கியமாகும். பர்வதம் மிருதுளாவை இப்படி சீண்டிக் கொண்டே இருக்கும் போதெல்லாம் மிருதுளா கோபப்படாமல் இருந்தால் தான் அவள் மூளை விறுவிறுப்பாக வேலைச் செய்து பர்வதத்திற்கு சரியான பதிலடி கொடுக்க முடியும். இப்படி எதற்கெடுத்தாலும் கோபம் முந்திக்கொண்டால்… நஷ்டம் அவளின் உடம்பிற்கும் மனதுக்கும் தான் என்பதை மிருதுளா மட்டுமல்ல அவளைப் போன்ற பெண்கள் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டிய ஒன்றாகும். கோபம் கண்ணை மட்டும் மறைக்காது மூளையையும் செயலிழக்கச் செய்யும். மிருதுளா ஆத்திரம் தவிர்த்து “பாரதி” பெண்ணாக  விவேகத்துடன் கூடிய ரௌத்திரம் பழகியாக வேண்டும். 

தொடரும்……

வேறு வேலை பார்க்கும் நினைப்பை தற்காலிகமாக தள்ளி வைத்தனர் நவீனும் மிருதுளாவும். அவர்கள் தலைதீபாவளிக்காக ஊருக்குக் கிளம்பும் நாள் நெருங்கியது. மிருதுளா அனைத்தையும் பேக் செய்தாள் ஏனெனில் அவள் இனி மீண்டும் குஜராத்துக்கு குழந்தையுடன் தான் வருவது என்று இருவருமாக முடிவு செய்துள்ளனர். ஆகையால் அடுப்படி சாமான்கள் எல்லாவற்றையுமே காலி செய்து டப்பாக்கள் எல்லாவற்றையும் நன்றாக தேய்த்துக் கழுவி வெயிலில் வைத்து கார்டன் பாக்ஸில் போட்டு பேக் செய்து ஹாலின் ஒரு மூலையில் வைத்தாள். நவீனுக்கு காபி / டி போடுவதற்கு வேண்டியப் பாத்திரங்கள் மட்டுமே வெளியே இருந்தன. நவீன் அன்றைய கடைசி வகுப்பு முடிந்து வந்தான் 

“ஹே மிருது வா போய் டின்னர் சாப்ட்டுட்டு வருவோம்”

“ஓகே நான் ரெடி”

இருவரும் பேசிக்கொண்டே நடந்து சென்றனர். 

“நவீ நான் இல்லாம எட்டு மாசம் எப்படி இருப்பேங்கள்?”

“கஷ்டம் தான் ஆனா என்ன பண்ணறது இருந்துத்தானே ஆகணும் நம்ம ஜுனியரின் வரவுக்காக…ஆமாம் நீ இருந்துடுவயா?”

“எனக்கும் கஷ்டம் தான். ஆனா என்னை சுத்தி உங்க வீட்டு ஆட்கள் அன்ட் எங்க வீட்டு ஆட்கள்ன்னு இருந்துண்டே இருப்பாளே அதனால அவ்வளவா தெரியாதுன்னு நினைக்கறேன்..நீங்க தான் இங்க தனியா இருக்கணும் அதனால தான் கேட்டேன்” 

“ஆமாம். அன்ட் ஒன் மோர் திங் சொல்ல மறந்துட்டேன். எனக்கு இன்னும் இரண்டு மாசத்தில நம்ம சர்வீஸ் குவார்ட்டஸ் கிடைச்சிடும்ன்னு இன்னைக்கு தான் எனக்கு அதோட ஆர்டர் வந்தது. ஸோ.. நீ நம்ம குட்டியோட புது வீட்டுக்கு தான் வருவேங்கள்.”

“ஓ!! வாவ்!! சூப்பர் நவீ”

“எங்க இந்த கேம்பஸ்க்கு உள்ளயே வா?”

“அநேகமா அமாம். பார்ப்போம் வந்தா தான் தெரியும். அப்படி வந்ததுனா நான் ஷிப்டிங் வேலைல கொஞ்ச நாள் பிசியாகிடுவேன்”

“ஆமாம் நம்ம கிட்ட அப்படி என்ன பொருள் இருக்கு …பெரிய பொருட்கள்ன்னு சொல்லறதுக்கு

ஒரு ஃப்ரிட்ஜ், டிவி, கிரைண்டர், அடுப்பு, மிக்ஸி அவ்வளவு தான் அதுக்கு ரொம்ப நாள் எல்லாம் ஆகாது”

“பொருள் கம்மி தான் மிருது ஆனா அதை புது வீட்டில் செட் பண்ணணுமில்ல”

“ஓகே ஓகே”

டாபா வந்ததும் இருவரும் அவரவருக்கு வேண்டிய உணவை ஆர்டர் கொடுத்து சாப்பிட்டுக்கொண்டே பேசினர்..

“நம்ம ஷாப்பிங் போனப்போ வெளில சாப்ட்டது அதுக்கப்புறம் இப்போ தான் சாப்பிடறோம் இல்ல …”

“நவீ ஜஸ்ட் ரெண்டு வாரம் முன்னாடி தான் ஷாப்பிங்கும் போனோம் வெளிலயும் சாப்டோம். என்னமோ ரெண்டு மாசமானா மாதிரி சொல்லறேங்கள்”

“சரி பாப்பாக்கு நேம் டிசைட் பண்ணிட்டயா?”

“லிஸ்ட் ரெடி நீங்க தான் அந்த டிஸ்கஷனுக்கே வர்ற மாட்டேங்கறேங்களே”

“சரி சாப்பிட்டுட்டு போய் அத டிசைட்டு பண்ணறோம் ஓகே”

இருவரும் சாப்பிட்டப் பின் வீட்டிற்கு திரும்பி வந்து நவீன் சொன்னது போலவே அவர்களுக்கு பிறக்கப் போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று மாறி மாறி யோசித்து கடைசியா ஆண் பிள்ளைன்னா அஷ்வின், பெண் குழந்தைன்னா அஷ்வினி என்று முடிவெடுத்தப் பின் உறங்கப் படுத்துக்கொண்டனர்.

“நவீ நாம இப்போ ஊருக்கு போக வேணுமா? இங்கேயே இருந்துடறேனே”

“ஹேய் மிருது என்ன ஆச்சு?”

“எனக்கென்னவோ ஊருக்கு போறதுக்கு ஒரு மாதிரி பயமா இருக்கு நவீ”

“பயமா!!! என்னத்துக்கு பயப்படற? எல்லாம் நல்லபடியா நடக்கும். நீயும் நம்ம பாப்பாவும் சீக்கிரம் இங்க வந்திடுவேங்கள். நாம மூணு பேருமா ஜாலியா இருக்கப் போறோம். அதை எல்லாம் நினைச்சுண்டே இந்த எட்டு மாசத்தையும் ஒட்டிடுவேன். நீயும் அப்படியே நினைச்சுண்டு இரு. வேற எந்த வித பயமும் வேண்டாம் புரியறதா மிருது.”

“ம்….”

“என்ன வெறும் “ம்” மட்டும் சொல்லற?”

“வேற என்ன சொல்லணுமாம்?”

“அங் தட்ஸ் மை மிருது. அப்படி நீ பேசினா தான் எனக்கு பிடிச்சிருக்கு. தேவையில்லாத பயம் கவலை எல்லாத்தையும் தூக்கிப் போடு. பீ போல்டு மிருது.”

மிருதுளாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை நவீன் இரண்டு மூன்று முறை அழைத்தும் பதில் வராததால் அவளை உன்னித்து பார்த்தான். அவள் நன்றாக உறங்கியிருந்தாள். அவள் கன்னத்தை தட்டிக் கொடுத்து,  தலையை வருடிக் கொடுத்து, அவள் நெற்றியில் முத்தமிட்டு மனதில்…

“கடவுளே என் மிருதுவையும் எங்க குழந்தையையும் பத்திரமா என்கிட்ட திரும்பி வரவச்சுடுப்பா. அவளுக்கு எந்த வித கஷ்டமும் இல்லாம் பார்த்துக்கோப்பா”

என்று மனதார வேண்டிக்கொண்டு அவளை அணைத்துக்கொண்டு தூங்கலானான்.

மறுநாள் விடிந்தது. மிருதுளா எழுந்து காபி போட்டாள் இருவரும் அதை குடித்துவிட்டு வாசலில் சற்று நேரம் அமர்ந்திருந்தனர். அப்போது பக்கத்து வீட்டு லதா துணி காயப் போட்டுக்கொண்டிருந்தாள்.

“என்ன மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ் நவீன். இன்னைக்கு ஊருக்கு கிளம்பறீங்க இல்ல”

“ஆமாம் லதா அக்கா. அதுவுமில்லாம நான் திரும்பி வரும்போது நவீனுக்கு வீடு கிடைச்சிடுமாம் ஸோ அங்க தான் வருவேன். வந்ததும் உங்களை வந்து நிச்சயம் பார்ப்பேன் எங்க பாப்பாவோட”

“எங்க வீடு கிடைக்கும் நவீன்? ஓல்டு கேம்ப்பா இல்ல நியூ கேம்ப்பா?”

“தெரியலை அக்கா. அதுக்கு இன்னும் இரண்டு மாசமிருக்கு. பிப்ரவரி ல தான் கிடைக்கும்”

“ஓ ஓகே. மிருதுளா பத்திரமா ஊருக்கு போயிட்டு பிள்ளையும் கையுமா வா. சந்தோஷமா இரு. என்ன ஓகே வா”

“அம்மா இங்க வாயேன் இவ என்ன அடிக்கறா வந்து என்னனு கேளுமா”

“இதோ என் பிள்ளைகளின் அழைப்பு வந்தாச்சு. சரி மா நான் போய் என்னனு பார்க்கறேன் நீங்க என்ஜாய் அடுத்த ஜூன்ல உங்க வீட்டுலயும் ஒரு பிள்ள கத்துமில்ல”

“அம்மா.மா.மா..”

“இதோ வரேன் டா….சரி மிருதுளா அன்ட் நவீன் ஹாவ் அ சேஃப் ஜெர்னி…நான் உள்ள போறேன் இல்லாட்டி என்ன ஏலம் விட்டுடிடுவாங்க என் பசங்க”

“சரி அக்கா பை எட்டு மாசம் கழித்து பார்ப்போம்”

“பை மா”

இருவரும் குளித்து விட்டு ப்ரெட், பட்டர், ஜாம் சாப்பிட்டனர். மத்தியத்துக்கு நவீன் டாபாவிற்கு சென்று இருவருக்கும் குஜராத்தி ஃபுல் மீல்ஸ் வாங்கி வந்தான். இருவரும் நன்றாக சாப்பிட்டு டிவியில் திரைப்படம் பார்த்தார்கள். மாலை ஆனதும் ஊருக்கு கொண்டு போக வேண்டிய ஒரு பேக் மற்றும் இரண்டு  பெட்டிகளையும் வாசல் கதவுக்கு முன் வைத்தான் நவீன். மிருதுளா சாமிக்கு விளக்கேற்றி நல்லபடியா ஊருக்கு போயிட்டு வரணும்னு வேண்டிக்கொண்டாள். அன்றிரவுக்கு ரெயில்வே ஸ்டேஷனின் அருகிலிருந்த ஒரு டாபாவில் இரவுணவு அருந்தி விட்டு ரெயில் ஏறினார்கள் நவீனும் மிருதுளாவும். 

ஒன்றரை நாள் ரெயிலில் நவீன், மிருதுளா இருவருமாக பேசிக்கொண்டும் அக்கம்பக்கத்தில் அமர்ந்திருந்தவர்களுடன் நன்றாக பேசி அரட்டை அடித்துக்கொண்டும் ஊருக்கு வந்து சேர்ந்தனர். 

ரெயில் நிலையத்தில் நவீனின் தந்தை மற்றும் மிருதுளாவின் பெற்றோர்கள் இவர்களின் வருகைக்காக காத்திருந்தனர். இருவரும் ரெயிலிலிருந்து இறங்கியதும் அம்புஜம் மிருதுளாவை கட்டிக் கொண்டு தன் மகளுக்கு பிடித்த ஜாங்கிரி டப்பாவைக் கொடுத்தாள். பின் ராமானுஜமும் அம்புஜமும் மிருதுளா நவீனிடம் நலம் விசாரித்தனர். ஈஸ்வரன் நவீனிடம் “வாடா” என்று மட்டும் சொன்னார். அனைவருமாக ரெயிவே ஸ்டேஷன் வெளியே வந்ததும் அம்புஜமும் ராமானுஜமும் பஸ்ஸில் அவர்கள் வீட்டுக்குச் சென்றார்கள். ஈஸ்வரன், நவீன், மிருதுளா மூவரும் ஒரு டாக்ஸியில் பர்வதக்குடிலுக்கு சென்றனர்.

அவர்கள் வீட்டின் வாசலில் வந்தும் எவருமே வா என்று அழைக்க வாசல் கூட வரவில்லை. உள்ளே சென்றதும் தம்பிகள்

“ஹாய் அண்ணா” என்றும் பர்வதம் 

“ம்….ம்….வந்துட்டேளா!!! வா வா” என்றும்

ஏதோ வேண்டா வெறுப்பாக விரும்பாத விருந்தாளிகளை வரவேற்பது போல சொல்லிவிட்டு அவரவர் வேலைகளை பார்ப்பது போல பாவலா செய்தனர். அதை உணர்ந்த நவீன் மிருதுளாவிடம்…

“மிருது வா நம்ம மேலே ரூமுக்கு போகலாம்” 

“இருங்கோ நவீ இப்பதானே வந்திருக்கோம். முதல்ல அந்த பேக்கை தொறங்கோளேன் ப்ளீஸ்”

“இந்தா தொறந்தாச்சு”

மிருதுளா பேக்கிலிருந்து சுவீட் மற்றும் காரம் என ஒரு பெரிய பாக்ஸ் ஒன்றை பர்வதத்திடம் கொடுத்து…

“அம்மா இந்தாங்கோ குஜராத்தி சுவீட்ஸ் மற்றும் ஸ்னாக்ஸ்”

பர்வதம் அதை வாங்கி அவர்கள் ஹாலில் இருந்த கட்டில் மேல் வைத்து விட்டு இரவு சாப்பாட்டை எடுத்து வைக்கலானாள். 

நவீன் அந்த பேக்கிலிருந்த தனது உடையை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்கு சென்று குளித்துவிட்டு வந்தான். 

“மிருது நீ குளிக்கறதுக்கு முன்னாடி வெண்ணீறு வைச்சுக்கோ. தண்ணீ ரொம்ப ஜில்லின்னு இருக்கு”

“ஓகே நவீ” 

என்றதும் பாம்பு தன் தலையை விருட்டென திருப்பிப் பார்ப்பது போல மிருதுளாவை அடுப்படியிலிருந்து பார்த்தாள் பர்வதம். மிருதுளாவும் எழுந்து போய் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சூடு பண்ண அடுப்பில் வைத்தாள். அவளுக்கு பயங்கர அசதி ஆனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வெண்ணீறு கொதித்ததும் நவீனை கூப்பிட்டு அதை பக்கெட்டில் ஊற்றித் தரும்படி சொல்லி குளித்துவிட்டு வந்தாள். 

மகனும் மருமகளும் வருவார்கள், தனது மருமகள் தங்கள் குடும்பத்தின் அடுத்த தலைமுறையின் முதல் வாரிசை சுமந்து வருகிறாளே என்ற எந்த விதப் பாசமோ அன்போ துளி கூட இல்லாமல்….. வெண்ணீறும் போட்டு வைக்கவில்லை, சாப்பாடும் வெறும் ரசமும் ஒரு பொறியலும் மட்டும் செய்து வைத்திருந்தாள் பர்வதம். 

நான்கு மாதங்கள் பிரித்துவைத்து

வாழ்நாள் முழுவதும் பிரிந்திருக்க

பர்வதம் திட்டம் போட்டு வைத்து

அது நிறைவேறாமல் ஏமாந்திருக்க

அடுத்த சந்தர்ப்பமாக இந்த நேரத்தை

எண்ணி செயல்பட ஆரம்பித்துவிட்டாளோ!!

நவீன் மிருதுளா திருமணம் ஆனதும் அவர்களின் முதல் நான்கு மாதங்களை அவர்களிடமிருந்து களவாட நினைத்து தோற்றுப்போன பர்வதம் ஆட்டம் மீண்டும் ஆரம்பம்.

தொடரும்……

அந்த வார சனிக்கிழமை நவீன் மிருதுளா பேசிக் கொண்டது போலவே தீபாவளி ஷாப்பிங் செய்ய சென்றார்கள். கையிலிருந்த பணத்திற்கேற்ப இருவரின் பெற்றோருக்கும் ஒரே மாதிரியான புடவை, சட்டை, பேன்ட் பிட் வெவ்வேறு வண்ணங்களில் ஒரே விலையில் எடுத்தார்கள். பின் தம்பிகளுக்கு  ஆளுக்கு ஒரு சட்டை அன்ட்  டிஷர்ட் மற்றும் பேன்ட் பிட் என எடுத்து விட்டு அன்று மத்திய உணவிற்கு அந்த மார்க்கெட்டிலிருக்கும் ஃபேமஸ் லக்ஷ்மி டாபாவிற்குள் சென்று அமர்ந்து ஆர்டர் கொடுத்ததும்….

“நவீ நான் எடுத்திருக்கும் டிரெஸ் எல்லாம் உங்க ஆத்துல எல்லாருக்கும் பிடிக்கும் இல்ல. நல்லா இருக்கு தானே.”

“எல்லாத்தையும் பார்த்து பார்த்து எடுத்திருக்க அப்புறம் எப்படி நல்லா இல்லாம போயிடும் மிருது. எனக்கு நீ செலக்ட் பண்ணின எல்லா டிரெஸும் ரொம்ப பிடிச்சிருக்கு. நான் மட்டும் வந்திருந்தா இவ்வளவு கடை எல்லாம் ஏறி இறங்கிருக்க மாட்டேன். மொதோ கடையில என்ன இருக்கோ அதுலேந்து ஏதாவதை எடுத்துண்டு வந்திருப்பேன். நீ வயத்துல நம்ம பாப்பாவையும் வச்சுண்டு இந்த வெதர்ல அலைஞ்சு இதெல்லாம் வாங்கிருக்க.. உனக்கு அந்த டவுட்டே வேண்டாம். சரி சாப்பிடு”

“ஓகே இனிமே டவுட் பட மாட்டேன்”

“ஆமாம் எல்லாருக்கும் எடுத்த நமக்கு ஏன் ஒண்ணுமே எடுக்கலை?”

“எனக்கு கல்யாணத்துக்கு எடுத்த புடவைகளே புதுசா அப்படியே இருக்கு அதுனால எடுக்கலை. எங்க அப்பா அம்மா வேற ஜுன் மாசம் வந்தப்போ நமக்கு டிரெஸ் எடுத்துண்டு வந்தா இல்லையா அது வேற புதுசா அப்படியே இருக்கு அதனால தான் நமக்கு எடுக்கலை.”

“ஓ ஓகே”

“ஓ அப்ப நான் வேண்டாம்ன்னு சொன்னா அப்படியே ஓகேன்னு சொல்லி விட்டுவிடுவேங்கள் இல்ல. சரி சரி”

“ஹலோ மேடம் நான் ஃபர்ஸ்ட் கேட்டதே நமக்கு ஏன் எடுக்கலைன்னு தான். நீ சொன்னது எனக்கு கரெக்ட்டா பட்டுது அதனால ஓகே சொன்னேன். இப்போ இப்படி கேட்டா நான் என்ன சொல்லுவேன்? சரி வா சாப்பிட்டுட்டு போய் உனக்கும் ஒரு புடவை எடுத்துண்டு வருவோம்.”

“அய்ய ஒண்ணும் வேண்டாம்.  நம்ம கிட்ட இருக்கிற பணத்துக்கு இதோட நிறுத்திண்டோன்னா ஊருக்கு போற வரைக்கும் காசு இருக்கும் புரிஞ்சுதா புருஷா? ஆமாம் நான் ஒண்ணு உங்கள்ட்ட கேட்கணும்ன்னு ரொம்ப நாளா மனசில நினைச்சிண்டிருக்கேன்”

“என்ன கேளு!”

“இல்ல ஆத்துக்கு போயிட்டு கேட்கறேன். நான் மறந்துட்டேனா ஞாபகம் படுத்துங்கோ கேட்கறதுக்கு”

இருவருமாக பேசிக்கொண்டே சாப்பிட்டு பின் வீட்டிற்கு சென்றார்கள். காலை முதல் மதியம் மூன்று மணி வரை நடந்ததில் மிகவும் களைத்து போய் வீட்டிற்குள் வந்ததும் டிரெஸ் மாற்றிவிட்டு உடனே படுத்து தூங்கிவிட்டாள் மிருதுளா.

நவீன் வாங்கி வந்ததை எல்லாம் டேபிளில் அடுக்கி வைத்து விட்டு டிவியில் சத்தம் கம்மியாக வைத்து தரையில் படுத்து பார்த்துக் கொண்டே அப்படியே தூங்கிப்போனான். 

மாலை ஐந்து மணிக்கு மிருதுளா எழுந்துப் பார்த்தாள் டிவி ஒடிக்கொண்டிருந்தது. நவீன் தரையில் படுத்துறங்குவதை பார்த்து மெதுவாக கட்டிலிலிருந்து இறங்கி டிவியை ஆஃப் செய்துவிட்டு முகம், கை, கால் கழுவுவதற்கு பாத்ரூம் சென்றாள். அவள் பாத்ரூம் கதவை சாத்தும் சத்தம் கேட்டு எழுந்தான் நவீன். 

மிருதுளா ஃப்ரெஷாகி வந்து பார்த்தாள் நவீன் கண்களை விழித்துக்கொண்டு சும்மா படுத்திருந்தான். 

“எழுந்துண்டேளா. சரி போய் ஃப்ரெஷ்ஷாகி வாங்கோ அதுக்குள்ள நான் விளக்கேத்திட்டு காபி போட்டு தரேன்”

நவீனும் ஃப்ரெஷ்ஷாகி வந்து நெற்றியில் விபூதி பூசிக் கொண்டு விட்டு ஹாலில் அமர்ந்தான். மிருதுளாவும் இருவருக்கும் காபி போட்டுக் கொண்டு வந்து அமர்ந்தாள். 

“மிருது என்கிட்ட ஏதோ ஆத்துக்கு வந்ததுக்கப்பறம் கேட்கணும்னோ இல்ல சொல்லணும்ன்னோ ரெஸ்டாரன்ட்ல  சொன்ன ஆனா வந்ததும் தூங்கிட்ட!”

“ஆமாம் பா ரொம்ப டையர்டா இருந்தது அதுனால தான் படுத்ததும் தூங்கிட்டேன்”

“சரி இப்போ ஞாபகம் படுத்திட்டேனே சொல்லு”

“நான் சொல்லறதை தப்பா எடுத்துக்க கூடாது நம்மளோட நல்லதுக்கு தான் சொல்லறேன் அதுல உங்களுக்கு இஷ்டம் இல்லாட்டி நேரடியா சொல்லிடுங்கோ நான் எதுவும் தப்பா நினைச்சுக்க மாட்டேன்..இதுக்கு சரின்னு சொன்னா நான் சொல்ல வேண்டியதை சொல்லறேன்”

“அம்மாடி என்ன பீடிகை எல்லாம் ரொம்ப பலமா இருக்கே. சரி சரி சொல்லு “

“இந்த வேலையில் வரும் சம்பளம் நமக்கே பத்த மாட்டேங்கறது இல்லையா”

“ஆமாம்”

“இன்னும் அஞ்சு மாசத்துல நமக்குன்னு ஒரு குழந்தை வந்திடும் அன்ட் நம்ம ஃபேமிலி கொஞ்சம் பெரிசாகும் இல்லையா”

“ஆமாம் அதுக்கென்ன?”

“அப்போ செலவும் ஜாஸ்த்தியாகும். இந்த சம்பளம் எப்படி பத்தும். நம்ம லதா அக்காக்கு ஆர் நம்ம பல்பீருக்கு அப்புறம் உங்க நண்பர்கள் சதீஷ், ரமேஷ் இவா எல்லாருக்கும் வயல், வீடுன்னுட்டு ஒரு பேக்கப் இருக்கு அதுனால அவா சமாளிக்க முடியறது. ஆனா நமக்கு ஒண்ணுமில்லை இந்த மாத சம்பளத்தை நம்பி தான் இருக்கணும்”

“ஆமாம் யூ ஆர் ரைட்”

“நீங்களும் பத்து வருஷம் சம்பாதிச்சும் ஒரு வீடு வாசல் இல்லை …அது பரவாயில்லை”

“ஏன் இல்லை? இப்போ அப்பா அம்மா இருக்கறது நான் லோன் போட்டு வாங்கின வீடாக்கும்”

“அப்படியா?”

“ஆமாம்”

“சரி அது இருக்கட்டும். நீங்க இத்தனை வருஷமா சம்பாதிச்சது உங்கள் படிப்புக்கும், உங்கள் குடுப்பத்துக்கும், நம்ம கல்யாணத்துக்குமே செலவாயாச்சு. கையில் நையா பைசா கூட இல்லாம அடுத்த மாத சம்பளத்தை எதிர்ப்பாத்து தான் என்னை கல்யாணம் பண்ணி கூட கூட்டிண்டும் வந்தேங்கள்”

“ஆமாம். இது எல்லாம் தெரிந்த விஷயம் தானே மிருது. நானும் சொல்லிட்டேனே அதுக்கென்ன இப்போ?”

“இந்த வேலை நல்ல வேலை தான். நான் இல்லன்னு சொல்லலை. வீடு தர்றா, கேன்டீன் ஃபெசி‌லிட்டி இப்படி எல்லாமிருக்கு தான் ஆனா நம்ம எதிர்காலத்தை நினைச்சா எனக்கு கொஞ்சம் பயமா தான் இருக்கு.”

“சரி அதுக்கு என்ன பண்ணறது. கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம்”

“இல்ல நீங்க ஏன் வேற வேலைக்கு முயற்சி பண்ணக் கூடாது? இந்த வேலைல சேரும்போது வெறும் ப்ளஸ்டூ தான் படிச்சிருந்தேங்கள் சரி. ஆனா இப்போ தான் நீங்க இவ்வளவு படிச்சிருக்கேங்களே அப்புறமும் ஏன் வெளியே ட்ரை பண்ணக்கூடாதுன்னு எனக்கு தோனறது. அதை தான் உங்கள்ட்ட கேட்கணும் ன்னு இருந்தேன் கேட்டுட்டேன்”

“இங்க பாரு மிருது…நீ சொல்லறது எல்லாமே சென்ட் பெர்சன்ட் அக்செப்ட் பண்ணிக்கறேன். ஆனா நீ ஒண்ணு யோசிக்க தவறிட்ட.”

“என்ன அது?”

“நான் என் குடும்ப கஷ்டத்துக்காக தான் இந்த வேலையில் சேர்ந்தேன். இல்லன்னு சொல்லலை. ஆனா இப்போ பதினோரு வருஷம் சர்வீஸ் ஆயாச்சு இன்னும் பல்லை கடித்துக்கொண்டு ஒரு நாலு வருஷம் இங்கேயே வேலை செய்தால் லைஃப் லாங் பெனிஃபிட் கிடைக்கும் தெரியுமா”

“அது என்ன பெனிஃபிட்?”

“நான் சர்வீஸில் ஜாயின் பண்ணின புதுசுல எவ்வளவு அடி, பனிஷ்மென்ட் எல்லாம் வாங்கி கஷ்ட்டப்பட்டிருக்கேன் தெரியுமா!!! அப்படி கஷ்ட்டப்பட்டு பதினோரு வருஷம் முடிச்சாச்சு ஜஸ்ட் ஒரு நாலு வருஷம் கழிச்சு அதாவது பதினைந்து வருடம் சர்வீஸ் முடிச்சிட்டா நமக்கு லைஃப் லாங் கவர்மென்ட் பென்ஷன் வரும். இங்க அந்த பதினைந்து வருட சர்வீஸ் நமக்கு வாழ்நாள் முழுவதுக்கும் பாதுகாப்பு தரும் அதுனால தான் நானும் வெயிட் பண்ணறேன் அந்த வெயிட்டிங் டைம்ல என்னோட குவாலிஃபிக்கேஷன்ஸையும் இம்ப்ரூவ் பண்ணிண்டிருக்கேன் புரியறதா!?”

“ஓ அப்படி ஒண்ணு இருக்கா!!! சாரி எனக்கு அது தெரியாது. அப்படிப் பார்த்தா நீங்க சொல்லறதும் சரி தான். சரி அப்போ இன்னும் ஒரு நாலு வருஷம் வெயிட் பண்ணிட்டா போறது”

“தாங்க்ஸ் மிருது என்னோட கஷ்டத்தை உன் மீது சுமத்திட்டும் நீ எனக்காக யோசிக்கற அன்ட் விட்டுக் கொடுக்கற தாங்கிக்கவும் செய்ற.”

“இதெல்லாம் வார்த்தைல மட்டும் இருந்தா போதாது கணவா வாழ்க்கையிலும் என்றும் இருக்கணும் ஓகே”

“நிச்சயம் இருக்கும் மை லார்டு. சரி இப்போ நாம வாக் போகலாமா?”

தொடரும்….

ஞாயிற்றுக்கிழமை விடிந்ததும் வழக்கம் போல் அவரவர் வேலைகளை செய்தனர் நவீனும், மிருதுளாவும். 

“மிருது உன் பாடங்களை படிக்கறயா? அடுத்த மாசம் நீ பரீட்சை எழுத வேண்டும் ஞாபகமிருக்கா?”

“ஏன் பா அத இப்போ ஞாபகம் படுத்தினேங்கள்!!! சரி நாளையிலிருந்து சின்சியரா படிக்கறேன் போதுமா?”

“ஹலோ என்னமோ எனக்காக படிக்கிற மாதிரி சலிச்சுக்கற. அதெல்லாம் நல்லா எழுதுவ… ரிசல்ட்டை நினைக்காம உன் கடமையை செய். நான் பாஸ் ஆயிட்டேன் இன்னும் ஒரே ஒரு எக்ஸாம் தான் எனக்கிருக்கு பா”

“ஆமாம் எனக்கு தான் இன்னும் ரெண்டு இந்த நவம்பர்ல ஒண்ணும் அடுத்த மே மாசம் ஒண்ணுமிருக்கு.”

இப்படி அவர்கள் படிப்பை பற்றி பேசிக்கொண்டிருக்கட்டும்.

நாம ஒரு சிறிய ஃப்ளாஷ் பேக்குக்கு செல்வோமா. 

நேற்று நவீனிடம் செலவுக்கு எப்படி பணம் வந்தது? என்ற கேள்வியோடு தான் நேற்றைய பதிவை படித்து முடித்தோமில்லையா….அது எப்படி என்பதை தெரிந்துக் கொள்வோம் வாருங்கள்.

நவீன் குளிக்கச் சென்று வெகு நேரமானதில் மிருதுளாவிற்கு ஏதோ சரியாக படாததால்…கட்டிலில் அமர்ந்துக் கொண்டு  வெள்ளிக்கிழமை அன்று   நவீனின் நடவடிக்கைகள் மற்றும் சனிக்கிழமை காலை பிரட் பகோடா கேட்டபோது அவன் முழித்த முழி எல்லாவற்றையும் மனதில் அசைப்போட்டுப் பார்த்தாள். பின் அந்த மாதத்தின் செலவையும் ஓரளவு கணக்கிட்டும் பார்த்து நவீன் பணம் பற்றாக்குறை காரணமாக தான் அப்படி நடந்துக் கொண்டானோ என்ற எண்ணம் தோன்ற வேகமாக நவீனின் ஆபீஸ் பையிலிருந்து  அவன் வேலட்டை எடுத்துப் பார்த்தவள் அதிர்ச்சி ஆனாள். ஏனெனில் அவள் பார்த்தது வெரும் இரண்டு ரூபாய் ஐம்பது காசு மட்டுமே….

அப்போது அவளுக்கு நவீனின் சங்கடம் புரியவே மிகவும் வருத்தப்பட்டு அவளது கண்கள் கலங்கின. பின் வேலட்டை பையினுள்ளேயே வைத்துவிட்டு அவள் மனதில்…

“அச்சோ அவரிடம் பணமில்லை …ஆனால் நானோ அதை புரிந்து கொள்ளாமல் இந்த நேரம் பார்த்து அதை வாங்கித் தா இதை வாங்கித்தா என அவரை கஷ்டப்படுத்தி இருக்கேனே கடவுளே!!! அவர் எவ்வளவு வருத்தப்பட்டிருப்பார். ஏன் என்னிடம் அவர் சொல்லவில்லை? நான் கஷ்டப்படக்கூடாது என்று எண்ணி அவர் மிகவும் மனம் வருந்தியிருப்பார்.”

நவீன் பாத்ரூமிலிருந்து வெளியே வருவதற்குள் ஏதாவது செய்ய வேண்டும் என்றெண்ணி வேக வேகமாக எல்லா இடங்களிலும், டப்பாக்களிலும், ஆங்கரில் மாட்டியிருந்த  நவீனின் பான்ட் பாக்கெட்டுகள், நவீனின் ஆபீஸ் பேக் மற்றும் அவன் க்ளாஸுக்கு கொண்டு செல்லும் பேக் என எல்லாவற்றையும் அலசி எடுத்தாள் மிருதுளா. ஆனால் ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை. 

கடைசியாக அவர்கள் ஊரிலிருந்து கொண்டு வந்த பையையும் பார்த்துவிடலாம் என்று எடுத்து அதனுள் கையை விட்டு துழாவினாள். ஒரு சின்ன மனிப்பர்ஸ் கிடைத்தது. அது அவள் சிறுவயது முதல் ஆசையாக வைத்திருந்த து. வீட்டுக்கு வந்து விட்டு செல்லும் போது அன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் அந்த வீட்டு பிள்ளைகளிடம் காசு கொடுப்பது வழக்கம். அப்படி சேர்ந்த பைசாக்களை தன் தந்தையிடம் கொடுத்து நோட்டுகளாக மாற்றி அவளுக்கு மிகவும் பிடித்த மனிபர்ஸில் போட்டு அவளுடனே எடுத்து வந்ததை மீண்டும் எடுத்துப் பார்த்ததும் அவளுக்கு கடந்த கால நினைவுகள் எல்லாம் மலர்ந்தது. சட்டென அதிலிருந்து நிகழ்காலத்திற்கு வந்தவள் அதில் எவ்வளவு இருக்கு என்று பார்த்தாள். மூன்று ஐம்பது ரூபாய் நோட்டுகள் இருந்தது. அவள் மனம் மகிழ்ந்து அதை எடுத்துக்கொண்டு பையை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு…..யோசிக்கலானாள்…

“இதை நான் குடுத்ததாக இருக்கக் கூடாது ஏனெனில் அது நவீனை இன்னும் சங்கடப்பட வைக்கும். என்ன செய்வது”

என யோசித்து…நவீனிடமிருந்த இரண்டு ஜீன்ஸில் ஒன்று ஆங்கரில் மற்றொன்று பீரோவில் மடித்து வைக்கப்பட்டிருந்தது. மிருதுளா நவீனின் மடித்து வைத்திருந்த  ஜீன்ஸ் பாக்கெட்டில் பணத்தை வைத்து ஆங்கரில் இருந்த ஜீன்ஸை துவைக்க போட்டுவிட்டு குளியலறை கதவை தட்டினாள். நவீன் வெளியே வந்ததும்….

ஆங்கரில் ஜீன்ஸ் இல்லாததால் பீரோவில் மடித்து வைத்திருந்த ஜீன்ஸை எடுத்துப் போட்டுக்கொண்டான். அவனது பையிலிருந்த வேலட்டை ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் வைக்க முற்பட்டபோது ஏதோ பேப்பர் போல கையில் தடைப்பட்டது அதை எடுத்துப் பார்த்தான் மூன்று ஐம்பது ரூபாய் நோட்டுகள். மனதில் அளவில்லா மகிழ்ச்சிப் பொங்கியது. நேராக கடவுள் ஃபோட்டோவுக்கு முன் நின்று நன்றி தெரிவித்து….மனதில்

“ரொம்ப தாங்க்ஸ் கடவுளே!! என்ன பண்ணப் போறேனோ என்ற கவலை என்னை துளைத்தது. நல்ல வேளையாக என்றோ நான் ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் வைத்த காசு தக்க சமயத்தில் உதவப் போகிறது. நல்ல வேள மிருது அந்த ஜீன்ஸ தோய்க்க போட்டா…அதுனால தானே இந்த ஜீன்ஸ எடுத்தேன். எல்லாம் நல்லதுக்கே. இன்னைக்கு என் மிருதுக்கு அவ கேட்டதுக்கும் மேலயே ஏதாவது வாங்கிக்கொடுக்கணும். நல்ல வேள நான் அவசரப்பட்டு என்கிட்ட காசு இல்லாததை அவள்ட்ட சொல்லலை. சொல்லிருந்தா பாவம் அவளும் நான் பட்ட அதே மனவேதனை பட்டிருப்பா.”

இதற்கு பிறகு நடந்தவை எல்லாம் நமக்கு தெரியுமே…..இப்பொழுது ஞாயிற்றுக்கிழமைக்கு வருவோம்.

படிப்பைப் பற்றி பேசிக்கொண்டிருந்தவர்கள் டிவியில் திரைப்படம் பார்க்கலானார்கள். அது முடிந்ததும் மத்திய உணவு உண்டு படுத்துக்கொண்டே தீபாவளிக்கு என்னென்ன அவர்கள் பெற்றோர்களுக்கும், தம்பிகளுக்கும் வாங்க வேண்டும் என்றும் அதற்கு எவ்வளவு செலவாகுமென்றும் கணக்கிட்டு அடுத்த வாரம் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை அனைத்தையும் வாங்கி வைத்து விட வேண்டும் என முடிவெடுத்தனர். 

“அதெல்லாம் சரி மிருது நாளைக்கு ஸ்கேன் எடுக்க ஹாஸ்பிடல் போகணும்.”

“ஆமாம் போகணும். பாப்பா எப்படி இருக்கு என்ன பண்ணறதுன்னு பார்க்கணும்ன்னு ஆசையா இருக்கு. நீங்க ஆபீஸ் போகணுமே!!!! எப்படி நான் ஹாஸ்பிடல் போவேன்?”

“நீ ரெடியா இரு நான் ஆபீஸ்ல பர்மிஷன் போட்டுட்டு ஒரு பதினோரு மணிக்கு வந்து உன்னை கூட்டிண்டு போயிட்டு… முடிந்ததும் உன்னை ஆத்துல விட்டுட்டு ஆபீஸ் போயிக்கறேன் சரியா”

“ஓகே நான் ரெடியா இருக்கேன்”

அன்று மாலை இருவருமாக நடந்து சென்று டாபாவில் இரவு உணவருந்தி விட்டு வீட்டிற்கு வந்து…..

“நவீ உங்களுக்கு பையன் வேணுமா இல்லை பொண்ணு வேணுமா?”

“எந்த குழந்தையா இருந்தாலும் எனக்கு சந்தோஷம் தான் ஆனாலும் பொண்ணா இருந்தா நல்லாருக்கும்”

“எனக்கும் பொண்ணு தான் வேணும். சரி என்ன பெயர் வைக்கலாம்”

“அதெல்லாம் உன் டிப்பார்ட்மென்ட் மா….”

“அது என்ன என் டிப்பார்ட்மென்ட். …ஏன் உங்களுக்கு ஆசையா இல்லையா”

“ஒண்ணு பண்ணு உனக்கு நம்ம குழந்தைக்கு என்ன பெயர் வைக்கணும்ன்னு தோனறதோ அதை எல்லாம் ஒரு பேப்பர்ல எழுது அதுக்கப்பறம் நாம் ரெண்டு பேரும் உட்கார்ந்து டிஸ்கஸ் பண்ணி பையன்னா என்ன பெயர் பொண்ணுன்னா என்ன பெயர்ன்னு  இரண்டு பெயரை டிசைட் பண்ணலாம். என்ன சொல்லற?”

“ஓகே அது நல்ல ஐடியா. நாளைக்கே லிஸ்ட் ரெடி பண்ணிடறேன்.”

“சரி இப்போ தூங்குவோமா. நீ நல்லா தூங்கணும்ன்னு டாக்டர் சொல்லிருக்கா ஸோ இந்த டாப்பிக் நாளை தொடருவோம் இப்போ நிம்மதியா தூங்கு” 

என மிருதுளாவின் தலையை வருடிக்கொடுத்து முத்தமிட்டு குட் நைட் சென்னான் நவீன். 

ஆக இந்த காந்தி ஜெயந்தி விடுமுறை நாட்களில் முதல் இரண்டு நாட்கள் ஐந்து ரூபாயிலும் அடுத்த இரண்டு நாட்கள் நூற்றி ஐம்பது ரூபாயிலும் என முன் பாதி  இறுக்கமாகவும் பின் பாதி சற்றே ஏற்றமாகவும் இருந்தது.

மிருதுளா நவீனிடம் அது தான் வைத்த பணம் என்று சொல்லி அவனை சங்கடப்படுத்தாமல் நடந்துக்கொண்டதும், நவீன் தன் கர்ப்பிணி மனைவியிடம் தனது நிதி நிலைமையை சொல்லி கஷ்டப்படுத்த கூடாது என்று எண்ணியதும் அவர்களுக்கிடையே உள்ள புரிதலையும் ஒருவருக்கொருவர் அவர்களுக்குள்ளேயே நடத்திக் கொண்ட அன்பு போட்டி போல் நடந்தேறியது.

திங்கட்கிழமை விடிந்ததும் காலை எழுந்து காபி போட்டு, டிபன் செய்து, மத்திய உணவும் நவீன் ஆபீஸ் கிளம்புவதற்குள் தயார் செய்து வைத்தாள் மிருதுளா. 

நவீனும் சீக்கிரம் எழுந்து ஆபீஸுக்கு செல்ல தயாராகி ஏழு மணிக்கெல்லாம் டிபன் அருந்த அமர்ந்தான்…

“என்ன நவீன் இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் கிளம்பிட்டேங்கள் எப்பவும் எட்டு மணிக்கு தானே சாப்பிட வருவேங்கள்”

“இல்ல மிருது இன்னைக்கு பதினோரு மணி வரணும் இல்லையா அதுனால தான் சீக்கிரம் ஆபீஸுக்கு போறேன். சரி நீயும் சாப்பிடேன்”

“இல்ல பா எனக்கு ஒரு மாதிரி இருக்கு நான் அப்பறமா சாப்ட்டுக்கறேன். நீங்த சாப்பிட்டுட்டு கிளம்புங்கோ”

“அப்பறமா சாப்பிடணும் சரியா.”

“நிச்சயம் சாப்டறேன். எனக்காக இல்லாட்டினாலும் நம்ம குட்டிக்காக சாப்பிடுவேன் கவலைப் படாதீங்கோ.”

“சரி பதினோரு மணிக்கு ரெடியா இரு மறந்துடாதே.”

“மறக்கமாட்டேன் பா…நான் ரெடியா இருப்பேன்.”

“ஓகே பை நான் போயிட்டு வரேன்”

“பை நவீ. ஹாவ் அ நைஸ் டே”

நவீன் சீக்கிரம் ஆபீஸ் சென்று சம்பளத்தை வாங்கிவிட வேண்டும் என்ற அவசரத்தில் காலை ஏழரை மணிக்கெல்லாம்  நேராக அக்கௌன்ட்ஸ் டிப்பார்ட்மென்ட்டுக்குச் சென்று சம்பளத்தை வாங்கியதும் அவனுக்கு புத்துயிர் வந்தது போல் இருந்தது. ஆனால் அதற்கும் தலை தீபாவளி செலவு வாசலிலேயே காத்திருக்கிறதே என்ற நினைப்பு அவனை சற்று கலங்கச் செய்தாலும் கடவுள் இருக்கிறார் எல்லாம் அவர் பார்த்துக்கொள்வார் என்று மனதில் நினைத்துக்கொண்டு தனது இருக்கையில் சென்றமர்ந்து வேலையில் மூழ்கினான்.

அன்று ஸ்கேன் செய்து அவர்கள் குழந்தையின் அசைவுகளைப் பார்த்ததில் நவீனும் மிருதுளாவும் பெருமகிழிச்சியில் இருந்தார்கள். 

மிருதுளா …அவர்களின் நிதி நிலவரம் தெரிந்துக்கொண்டமையாலும் அடுத்த மாதம் பெரிய செலவுகள் இருப்பதாலும்…  மிகவும் சிக்கனமாக செலவுகளை செய்தாள். வெளியே சாப்பிடுவதை  முழுவதுமாக தவிர்த்தாள். அப்படியே ஏதாவது சாப்பிட தோன்றினாலும் இன்னும் ஒரு மாதம் தானே அங்கே போய் சாப்பிட்டுக்கலாம் என்று தன்னை தானே சமாதானம் செய்துக் கொண்டாள். 

பரஸ்பர அன்பும், விட்டுக்கொடுக்கும் பண்பும் இருந்தால் வாழ்க்கையில் எப்படி பட்ட கஷ்டத்தையும் சற்று வலியிருந்தாலும் அதை சந்தோஷமாக பொறுத்துக்கொண்டு எளிதாக தாண்டி விடலாம் என்பதற்கு இவர்களை ஓர் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். 

தொடரும்…..

சனிக்கிழமை விடிந்ததும் மிருதுளா சீக்கிரம் எழுந்து குளித்துவிட்டு அடுப்படியில் காபிக்கு டிக்காக்ஷன் போட்டுக்கொண்டிருந்தாள். நவீன் மெல்ல கண்களைக் கசக்கிக்கொண்டே  பக்கத்தில் திரும்பிப் பார்த்து மிருதுளாவை காணாததால் சட்டென எழுந்தான். அடுப்படியில் ஏதோ சத்தம் கேட்க..

“மிருது நீ அடுப்படிலயா இருக்க?”

“குட் மார்னிங் நவீ. ஆமாம் காபிக்கு டிக்காக்ஷன் போட்டுண்டு இருக்கேன்”

“குட் மார்னிங். என்ன இன்னைக்கு சீக்கிரம் எழுந்துண்டுட்ட!!!”

“ஏன் முன்னாடி எல்லாம் அப்படி தானே எழுந்துண்டிருந்ததேன்!!! இப்போ அம்மா வந்துட்டு போனதுக்கப்பறத்திலேருந்து தான் மெதுவா எழுந்துக்க ஆரம்பிச்சேன்…இப்போ பேக் டூ ரொட்டீன் அவ்வளவு தான்…சரி சரி போய் ப்ரஷ் பண்ணிட்டு வாங்கோ ரெண்டு பேருமா காபி குடிக்கலாம்” 

“ஓகே ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ் ல வந்துடறேன்”

இருவருமாக பேசிக் கொண்டே காபி குடித்துக் கொண்டிருக்கும் போது …

“நவீ நாம இன்னைக்கு ப்ரேக் ஃபாஸ்ட்டுக்கு ப்ரெட் பகோடா சாப்பிடலாமா??”

நவீன் திரு திருவென முழித்துக் கொண்டே என்ன சொல்வதென்று தெரியாமல் காபியை மிகவும் கஷ்ட்டப்பட்டு குடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த மிருதுளா….

“ஹலோ மிஸ்டர் நவீ … நான் ஏதாவது கேட்கக்கூடாதது கேட்டுட்டேனா என்ன?? அப்படி முழிச்சிண்டே காபியை குடிக்கறேங்கள்!!! காபி நல்லா இல்லையா? இல்ல ஏதோ நினைப்புல முழிக்கறேங்களா?”

“ச்சே ச்சே காபி ஆஸ்யூஷ்வல் சுப்பர் தான்”

“அப்புறம் என்னவாம்? உங்க முழியே சரியில்லையே!!!”

“இல்லை ஒண்ணுமில்லை மிருது‌. இரு நான் போய் குளிச்சிட்டு வந்துடறேன் இன்னுட்டு நாம ரெண்டு பேருமா போய் சாப்பிட்டுட்டு வரலாம் சரியா”

“ஓகே சீக்கிரம் குளிச்சிட்டு வாங்கோ. எனக்கு ரொம்ப பசிக்கறது.”

குளியலறையில் ஷவரை ஃபுல்லாக திறந்துக் கொண்டுவிட்டு அழுதான் நவீன். தனது குடும்பத்திற்காக பத்து வருடங்கள் சம்பாதித்துக் கொடுக்கும் போதெல்லாம் தனக்கென தன்னை நம்பி ஒரு பெண் வருவாள் அவளுக்காக இது செய் வேண்டும், அது செய்ய வேண்டும், அவளை அங்கு கூட்டிக்கொண்டு போக வேண்டும் இங்கு கூட்டிக்கொண்டு போக வேண்டும் என்றோ ஏன் ஹனிமூன் போக வேண்டுமென்று கூட நினைப்பில்லாமல் தனக்காக என்று ஒரு பைசா  சேர்த்து வைக்காததால் இன்று தன் கருவை சுமக்கும் தன் மனைவி ஆசைப்பட்டு கேட்கும் அதுவும் சின்ன சின்ன சாப்பாட்டு ஐட்டம்ஸ் கூட வாங்கிக்கொடுக்க முடியாமல் நிற்கின்றோமே என குலுங்கி குலுங்கி அழுது தீர்த்தான். 

பெற்றவர்களாவது பிள்ளையிடம் திருமணப்பேச்சு ஆரம்பித்ததும் சொல்லியிருக்க வேண்டும். நல்ல பெற்றவர்கள் என்றால் இந்த பேச்சுக்கே இடம் வைத்திருக்க மாட்டார்கள் ஆனால் நம்ம நாயகனை பெற்றவர்கள் அவற்றுக்கெல்லாம் விதிவிலக்கானவர்கள் ஆயிற்றே. நவீனின் திருமணத்திற்கு முன் அவனிடமிருந்து எவ்வளவு கறக்க முடியுமோ அவ்வளவையும் எடுத்துக்கொண்டும் அவன் திருமணத்திற்கு வந்த மொய் பணத்திலிருந்து கேட்டு வாங்கி வந்த மூவாயிரத்தையும் (பாவம் மகன் இத்தனை வருடங்களாக உழைத்து தந்திருக்கிறானே என்ற எண்ணம் துளி கூட இல்லாமல்) ஃபோன் போட்டு திரும்பப் பெற்றுக்கொண்ட பெருந்தன்மையான பெற்றவர்களிடம் நாம் எப்படி எதிர்பார்ப்பது?!!! சில குடும்பங்களில் மூத்த பிள்ளைகளாக பிறத்தல் சாபக்கேடு என்று பலர் சொல்லிக் கேட்டிருப்போம் இங்கே நம்ம நவீனுக்கு அதுவே நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது.

நவீன் குளிக்க போய் ரொம்ப நேரமானதும் மிருதுளா குளியலறை கதவைத் தட்டி…

“நவீ நவீ என்ன பண்ணறேங்கள்? ஏன் குளிச்சிட்டு வர்றதுக்கு இவ்வளவு நேரமாகறது? ப்ளீஸ் ஓபன் தி டோர் நவீ “

“ஹாங் இதோ ஆச்சு வந்துட்டேன். நீ ரெடியாகிடு”

“ஓகே ஓகே சீக்கிரம் வாங்கோ. என்ன ஆச்சு உங்களுக்கு? மொதல்ல வெளில வாங்கோ”

“இதோ இதோ வந்துட்டேன் போதுமா!!”

“ஏன் முகத்தை மறைச்சுக்கறேங்கள்?”

“இல்லையே தலையை துடைச்சுண்டேன் அதனால் உனக்கு அப்படி தோன்னறது.”

என்று தான் அழுததை தன் முகம் காட்டிக்கொடுத்திடக் கூடாதே என்ற அச்சத்தில் மிருதுளாவை நேருக்கு நேர் பார்ப்பதைத்  தவிர்த்துக் கொண்டே இருந்தான்.

“சரி நீ ரெடியா போகலாமா?”

“எங்க போறது நான் சாப்ட்டாச்சு. எனக்கு பயங்கர பசி …நீங்களும் உள்ள போனவர் வெளிலயே வரலை வெயிட் பண்ணி பார்த்தேன் அப்பறம் ரெண்டு தோசை சுட்டு சாப்பிட்டுட்டேன். உங்களுக்கும் நாலு தோசை வார்த்து வச்சிருக்கேன். இன்னும் வேணும்ன்னா சொல்லுங்கோ வார்த்துத் தரேன். மாவு, தோசைக் கல்லு எல்லாம் அப்படியே வச்சிருக்கேன். வாங்கோ சாப்பிடுங்கோ”

“ஸோ சாரி மிருது. ஐ ஃபீல் வெரி பேட் அபௌட் மைசெல்ஃப்”

“என்னத்துக்கு ??? குளிக்கறத்துக்கு இவ்வளவு நேரம் எடுத்துக்கிண்டதாலயா?!!! அப்படின்னா அக்செப்டெட். ஆனா எனக்கு ஒரு டௌட் நீங்க அவ்வளவு நேரம் பாத்ரூம்ல என்ன பண்ணிண்டிருந்தேங்கள்?”

“ப்ளீஸ் மிருது விளையாடாதே. ஆம் சீரியஸ்”

“பாத்ரூம்ல ஏதாவது மாயம் நடந்து உங்களை இப்படி சீரியஸ் ஆக்கிடுத்தா என்ன!!!! ஓகே!! ஓகே !! நோ மோர் கிண்டல்ஸ். நீங்க சாப்பிடுங்கோ. ஆமாம் கண்ணெல்லாம் ஏன் சிவந்திருக்கு?”

“அப்படியா எனக்கு அப்படி ஒண்ணும் தெரியலையே “

“அப்போ ஒண்ணு உங்க கண்ணுக்கு ஏதோ ப்ராப்ளம் இல்ல என் கண்ணுக்கு ஏதோ ப்ராப்ளம்.”

“ஏன் அப்படி சொல்லற?”

“எனக்கு தெரியறது உங்களுக்கு தெரியலைன்னா அப்போ நம்ம ரெண்டு பேர்ல யாரோடோ ஒருவர் கண்ணுக்கு பிரச்சினை என்று தானே அர்த்தம்”

“அதெல்லாம் ஒண்ணுமே இல்ல. சரி கிளம்பு நாம கோவிலுக்கு போயிட்டு வருவோம்”

“ஓகே இதோ நான் ரெடியா தான் இருக்கேன். ஜஸ்ட் அந்த துப்பட்டாவ போட்டுண்டுட்டா போகலாம்”

நவீன் சாப்பிட்டதும் இருவருமாக அவர்கள் வீட்டுப் பக்கத்திலிருக்கும்  கோவிலுக்கு நடந்தே சென்றார்கள். நவீன் தனது மன பாரத்தை கடவுள் மேல் போட்டுவிட முடிவு செய்து தான் கோவிலுக்கு சென்றுள்ளான். அங்கே வாசலில் செருப்பை கழற்றி விட்டு உள்ளே நுழைய முற்படும் போது வாசலில் இருந்த பூக்காரம்மா மிருதுவை பார்த்து …

“இந்தாமா பூ வாங்கிக்கோங்க. அழகா மகாலட்சுமி மாதிரி இருக்கீங்க இந்தாங்க இந்த பூவையும் வச்சுக்கோங்க இன்னும் நல்லா இருப்பீங்க”

“பரவாயில்லை மா இன்னொரு நாளைக்கு வாங்கிக்கறேன்”

“ஹேய் மிருது ஏன்!! இப்பவே வாங்கிக்கோ. அவங்க தான் அவ்வளவு சொல்லறாங்கலே. நீங்க குடுங்கம்மா. இந்தா தலையில வச்சுக்கோ. அப்படியே சாமிக்கும் ரெண்டு முழம் குடுங்க”

என்று மிருதுளாவிற்கு பூ வாங்கிக்கொடுத்துவிட்டு சாமிக்கு உண்டான பூவை அர்ச்சகரிடம் கொடுத்து சாமி பெயருக்கே அர்ச்சனை செய்யுமாறு கூறி அர்ச்சனை செய்து விட்டு கொஞ்ச நேரம் கோவில் பிரகாரத்தில் அமர்ந்து விட்டு வெளியே வந்ததும் நவீன் மிருதுளாவைப் பார்த்து …

“அடுத்தது எங்கே போகலாம்ன்னு சொல்லு மிருது”

“என்ன அய்யா ரொம்ப சந்தோஷமான மூட்ல இருக்கேங்கள்!!! குளிக்க போகறதுக்கு முன்னாடி வேற மாதிரி இருந்தேங்கள் !! குளிச்சிட்டு வந்ததுக்கப்புறம் ஆளே வேற மாதிரி ஆயிட்டேங்களே என்ன விஷயம்? இதுல ஏதோ இருக்கு….பாத்ரூமுக்குள்ள ஏதாவது அதிசயம் நடந்துதா என்ன?”

“ஒண்ணுமில்லை மிருது. சரி நான் கேட்டதுக்கு நீ இன்னும் ஒண்ணும் சொல்லலையே!”

“உங்க இஷ்ட்டம். உங்களுக்கு எங்க போகணும்னு தோனறதோ அங்க போகலாம்.”

“அப்போ அக்ஷர்தாம் கோவில் போயி கொஞ்ச நேரம் அங்க இருந்துட்டு அப்படியே லஞ்சுக்கு புது டாபாவுக்கு போகலாம் சரியா”

“ஓகே!! என்ன இன்னிக்கு சார் கோவில் கோவிலா போலாம்ன்னு சொல்லுறீங்க. பக்தி முத்திருத்தோ. பாத்ரூமில் ஏதாவது ஞானம் பொறந்துடுத்தோ”

“ம்…ம்… அப்படின்னு வச்சுக்கோ”

இருவரும் அக்ஷர்தாம் கோவிலுக்குச் சென்று அங்கே சுவாமிநாராயணனை வணங்கிவிட்டு அந்த வளாகத்தின் அழகை மீண்டும் ரசித்தவண்ணம் அங்கேயே ரொம்ப நேரம் அமர்ந்து பின் அங்கிருந்து கிளம்பி சற்றே தொலைவிலிருந்த ஒரு குட்டி டாபாவின் முன் வண்டியை நிறுத்தினான் நவீன். 

“நவீ இது வீடு மாதிரி இருக்கு”

“இல்ல மிருது இது பார்க்க தான் வீடு மாதிரி சின்னதா இருக்கு உள்ளே வந்து பாரு”

உள்ளே நுழைந்ததும் குஜராத் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வண்ணம் அழகான புகைப்படங்கள் நிறைந்த சின்ன வரவேற்பறை இருந்தது. அங்கே இருவரையும் அமரச்செய்தார்கள். மஞ்சளை குழைத்தது போல ஒரு கின்னத்தினுள் ஒரு டூத் பிக் போன்ற குச்சியை விட்டு அதை அவர்களின் நெற்றியில் இட்டுவிட்டார்கள், வெல்கம் ட்ரிங் என்று கும்கும் தண்ணீர் கொடுக்கப்பட்டது. அங்கே பணிபுரிந்தவர்கள் அனைவரும் குஜராத்தின் பாரம்பரிய உடையையே அணிந்திருந்தனர். சிறுது நேரத்தில் ஒருவர் வந்து இருவரையும் உணவருந்த உள்ளே அழைத்துச் சென்றார். உள்ளே இருந்த அறை சிறியதாக இருந்தாலும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. தரையில் “பா” வடிவில் ஒரு பத்து பேர் அமர்ந்து சாப்பிடுவதற்கு ஏற்றார்போல் சிவப்பு நிற மெத்தை கை திண்டுகளுடன் வந்து அமருங்கள் என்று அழைப்பு விடுத்தது. அதன் முன் அழகாக ஓவியம் தீட்டப்பட்ட ஒரு பலகை இருந்தது. நவீனையும் மிருதுளாவையும் அமரச்சொன்னார்கள். 

இருவரும் அமர்ந்ததும் வட்டவடிவிலான பெரிய தட்டு அவர்கள் முன் வைக்கப்பட்டது. அதை பார்த்ததும் மிருதுளா நவீனிடம் …

“என்ன பா இவ்வளோ பெரிய தட்டு” 

என்று பஞ்சதந்திரத்தில் கமலிடம் தேவயானி கேட்டது போல கேட்க…

“சும்மா இரு மிருது. உன்னால முடிஞ்சதை சாப்பிடு போதும். அவாளும் கொஞ்சம் கொஞ்சம் தான் பரிமாறுவா பயப்படாதே”

எல்லாம் உண்ட பின் கடைசியில் மீட்டா பான் எனப்படும் பீடாவை போட்டுக்கொண்டு மத்திய உணவை முடித்தார்கள் நவீனும் மிருதுளாவும்.

வெளியே வந்ததும் …

“நீ நல்லா சாப்பிட்டயா மிருது. உனக்கு பிடிச்சிருந்ததா? திருப்தியா இருந்ததா இந்த ப்ளேஸ்?”

“ஹேய் நவீ தி லஞ்ச் வாஸ் எக்செலன்ட். ஐ லவ்டு இட். எவ்வளவு ஐட்டம்ஸ். சூப்பரா இருந்தது. என் வயிறு ரொம்ப ஃபுல்லாயிருக்கு. இன்னைக்கு நம்ம குழந்தைக்கும் சரியான ஹெவி சாப்பாடு தான் போங்கோ”

“ஆம் ஹாப்பி சீயிங் யூ ஹாப்பி லைக் திஸ்”

என்ற மனநிம்மதியுடன் வண்டியை ஸ்டார்ட் செய்தான் நவீன். அப்போது 

“நவீ அடுத்தது எங்கே.”

“எங்க போகணும்ன்னு நீ சொல்லு அங்கேயே நம் வண்டி போகும்”

“பேசாம ஆத்துக்கு போய் நல்லா ஒரு தூக்கம் போடணும் போல இருக்கு நவீ”

“ஓகே அப்போ ஆத்துக்கே போகலாம்.”

வீட்டிற்கு வந்து உடைகளை மாற்றி விட்டு இருவரும் பெட்டில் படுத்துக் கொண்டே பேசினார்கள்

“மிருது நீ சந்தோஷமா தானே இருக்க?”

“இதுல என்ன டௌட் உங்களுக்கு. நான் சந்தோஷமா தான் இருக்கேன்”

“அடுத்த மாசம் ஊருக்கு போகணுமே”

“ஆமாம் நமக்கு தலை தீபாவளி ஆச்சே போகாம எப்படி”

“அப்பறம் உன்னை அங்கேயே விட்டுட்டு வரணுமேன்னு நினைக்கிறப்போ எனக்கு ஏதோ மாதிரி இருக்கு மிருது”

“என்ன செய்ய நவீ. நம்ம குட்டி பாப்பா வ பத்திரமா இந்த பூமிக்கு கொண்டு வந்து நாமும் நம்ம குழந்தையும் ஜாலியா வாழ வேண்டாமா? அதுக்கு நான் அங்க இருந்தா தானே நல்லது”

“அதெல்லாம் புரியறது ஆனாலும்…சரி விடு ….ஊருக்கு போறதுக்கு என்னென்ன வாங்க வேண்டியிருக்கும்ன்னு ஒரு லிஸ்ட் போடு. அதை எல்லாம் இந்த மந்த் என்டில் வாங்கிடலாம்.”

என்று நவீன் பேசிக்கொண்டே இருக்கையில் மிருதுளா உறங்கிப்போனாள். அவளைப் பார்த்துக்கொண்டே 

“நீ என்னைக்கும் இப்படியே சந்தோஷமா நிம்மதியா இருக்கணும் மிருது அதுக்கு இன்னைக்கு அந்த கடவுள் எனக்கு உதவினமாதிரி என்றென்றும் உதவுனும்ன்னு தான் நான் இன்னைக்கு கோவில்ல அந்த ஆண்டவனிடம் வேண்டின்டேன்” 

என்று அவள் தலையை வருடி கொடுத்துவிட்டு அவனும் உண்ட மயக்கத்தில் உறங்கலானான். 

மாலை ஆறு மணி ஆனது. மிருதுளா எழுந்து பார்த்தாள் சற்று இருட்டாக இருக்கவும் மணி என்ன ஆச்சோ என்று கடிகாரத்தைப் பார்த்தாள் ….

“அச்சசோ!!”

என்று அவள் சொல்ல நவீன் விருட்டென எழுந்து

“என்ன ? என்ன ? என்ன ஆச்சு மிருது”

என்று கேட்க

“மணியை பாருங்கோ ஆறாச்சு. நாம ஏன் இவ்வளவு நேரம் தூங்கியிருக்கோம். சரி சரி நான் போய் மூஞ்சி கை கால் அலம்பிட்டு விளக்கேத்தட்டும். நீங்களும் எழுந்திரிங்கோ”

“சரி இட்ஸ் ஓகே!!! நிதானமா போ. அவசரம் வேண்டாம் பத்திரம்”

வேக வேகமாக முகம் கை கால் கழுவி விட்டு விளக்கை ஏற்றி பின் இருவருக்கும் காபி போட்டுக்கொண்டு வந்து ஹாலில் அமர்ந்தாள் மிருதுளா. 

“ஏன் காபி போட இவ்வளவு நேரம் மிருது?”

“காலையில டிபன் செய்தது, சாப்பிட்டது என கொஞ்ச பாத்திரம் சிங்க்ல கிடந்தது அதை எல்லாம் அப்படியே தேய்ச்சுட்டு அப்பறமா காபி போட்டேன் அதுதான் லேட் ஆயிடுத்து”

“சரி நைட்டுக்கு என்ன டின்னர் சாப்பிடலாம்?”

“அப்பா எனக்கு இன்னமும் வயிறு ஃபுல்லா இருக்கு. எனக்கெதுவும் வேண்டாம். உங்களுக்கு என்ன வேணுமோ கேளுங்கோ செய்துத்தறேன்”

“சரி வா நாம நம்ம பார்க் வரைக்கும் மெதுவா ஒரு வாக் போயிட்டு வருவோம்”

“எனக்கு மதியம் சாப்பிட்டே டையர்டு ஆயிட்டேன் நவீ. சோம்பலா இருக்கு”

“அதனால தான் வாக் போகலாம்னு கூப்பிடறேன். கொஞ்சம் சிரமம் பார்க்காம எழுந்து வா மிருது”

“சரி ஓகே போகலாம். இருங்கோ சல்வார் போட்டுண்டு வந்துடறேன்”

இருவருமாக கதவைப் பூட்டிவிட்டு வெளியே நடக்க ஆரம்பிக்கலாமென திரும்பும் போது ரம்யா சித்தி குடும்பத்தினர் நால்வரும் அவர்கள் காரில் வந்திறங்கினர். அவர்களைப் பார்த்ததும் நவீனும் மிருதுளாவும்…

“வாங்கோ வாங்கோ வாங்கோ”

என்று பூட்டின கதவை திறந்தான் நவீன்.

“என்ன வெளியே கிளம்பறேங்கள் போல …நாங்க வந்து டிஸ்டெர்ப் பண்ணிட்டோமோ” 

“ச்சே ச்சே அதெல்லாம் ஒண்ணுமில்லை சித்தி. நாங்க சும்மா ஒரு வாக் போகலாம்ன்னு கிளம்பினோம் அவ்வளவு தான். நீங்க வாங்கோ நாம உள்ள போகலாம்”

“இந்தா மிருது இத வாங்கிக்கோ”

“என்னது இது சித்தி இவ்வளோ பெரிய பை?”

“இதுல பழங்களும் சுவீட்ஸும் எல்லாமிருக்கு வச்சுக்கோ”

“ஓ!! தாங்க்ஸ் சித்தி”

“காந்தி ஜெயந்திக்கு மூணு நாள் லீவ என்ஜாய் பண்ணறேங்களா?”

“ஆமாம் சித்திப்பா இன்னைக்கு கூட காலை ல கோவிலுக்கெல்லாம் போயிட்டு அப்படியே நம்ம பப்பு டாபா ல சாப்ட்டுட்டு வந்து ஒரு தூக்கம் போட்டும் ஆயாச்சு.”

“ஓ!!!  பப்பு டாபா!!! நாங்களும் நேத்து அங்க தான் லஞ்ச்சுக்கு போனோம். அவன் டாபா எக்ஸ்க்ளூஸிவ்வா இருக்குமே. சாப்பாடும் ரொம்ப நல்லாயிருக்குமே. ஆதென்டிக் குஜராத்தி ஃபுட். என்னமா மிருது உனக்கு அந்த சாப்பாடு பிடிச்சிருந்துதா?”

“ரொம்ப பிடிச்சிருந்தது சித்தப்பா. சூப்பரா இருந்தது. நான் இதுவரைக்கும் அப்படி ஒரு இடத்திலோ இல்லை அப்படி ஒரு நார்த் இந்தியன் பாரம்பரியமான சாப்பாட்டையோ சாப்பிட்டதே இல்லை. இன்று தான் ஃபர்ஸ்ட் டைம் சாப்பிட்டேன்.”

என்று அனைவருடனும் பேசிக்கொண்டும் அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டும் அவர்களுக்கு டீ போட்டு கொண்டு வந்து கொடுத்தாள். அதை அருந்திய ரம்யா…

“ஹேய் மிருது சாய் சூப்பர்!! பக்கா நார்த் சாய் மாதிரியே போட்டிருக்க. வெரி டேஸ்டி”

“இங்க எனக்கொரு பஞ்சாபி லேடி ஃப்ரெண்ட் இருக்கா நவீனோட ஆபீஸ் ல வேலைப் பார்க்கறவரோட வைஃப்…அவா தான் சொல்லிக் கொடுத்தா”

“பரவாயில்லையே குட் குட் அப்படி தான் இருக்கணும்”

“மன்னி அப்போ நார்த் இந்தியன் டிஷும் பண்ண கத்துண்டேங்களா?”

“கொஞ்சம் தெரியும் ஆனா சீக்கிரம் கத்துண்டு டுவேன். நெக்ஸ்ட் டைம் நீங்க வரும் போது உங்களுக்கு ரொட்டி சப்ஜி எல்லாம் செய்துத்தருவேன் பாரு”

“சரி நீ எப்படி இருக்க? டாக்டர்ட்ட செக்கப்க்கெல்லாம் கரெக்டா போறயா? கொழந்தை எப்படி இருக்காம்?”

“ஆல் இஸ் வெல் சித்தி. என்ன கொஞ்சம் வாமிடிங் தான் ஜாஸ்த்தியா இருக்கு. தலைசுத்தல் கூட நின்னுடுத்து”

“அதெல்லாம் இன்னும் ஒரு ரெண்டு மாசத்தில நின்னுடும்.”

“சரி இருங்கோ நான் உங்களுக்கு டின்னர் ப்ரிப்பேர் பண்ணறேன். நீங்க எல்லாரும் சாப்ட்டுட்டு தான் போகணும்”

“என்னத்துக்கு உனக்கு சிரமம்மா. அதெல்லாம் வேண்டாம் நீ வந்து உட்கார்ந்து பேசு வா.”

“இல்ல இல்ல சித்தி. அதெல்லாம் முடியாது. அன்னைக்கே நீங்க வந்துட்டு உடனே கிளம்பிட்டேங்கள் ஆனா இன்னைக்கு சாப்ட்டு தான் போகணும்”

“சரி சரி ஓகே ஓகே”

அடுப்படிக்குள் சென்று உருளைக்கிழங்கை வேகப் போட்டுவிட்டு. பூரிக்கு மாவு பிசைந்து வைத்து விட்டு, மசாலா செய்வதற்கான அனைத்து பொருட்களையும் தயார் செய்து வைத்துக் கொண்டு, உருளை வெந்ததும் கிடு கிடுவென மசாலா செய்தாள். அதை ஒரு மூடியிட்டு மூடிவிட்டு. அடுப்பில் சட்டியில் எண்ணெய் வைத்துவிட்டு பூரி பரத்தலானாள்.  அப்போது ரம்யா உள்ளே வந்து …

“நான் வேணும்னா பரத்தித்தறேன் மிருது நீ எண்ணெயில் போட்டெடு இல்லை நீ பரத்தித் தா நான் போட்டெடுக்கறேன்”

“இல்ல சித்தி நானே செய்துக்கறேன் நீங்கள் அனைவருக்கும் பரிமாறுங்கோளேன் ப்ளீஸ்”

“ஓ! ஷுவர். நீ ஆச்சுன்னா சொல்லு நான் கொண்டு போய் அவாளுக்கெல்லாம் குடுக்கறேன் சரியா”

“டன் சித்தி தாங்க்ஸ்”

“என்னத்துக்கு தாங்கஸ் எல்லாம் மா”

ஒரு இருபது பூரிகள் சுட்டெடுத்ததும் ரம்யாவிடம் பரிமாறச் சொன்னாள் மிருதுளா. ரம்யாவும் அனைவருக்கும் தட்டில் பரிமாறினாள். நவீன், சித்தப்பா, இரண்டு பெண்கள் என அவர்கள் அனைவரும் சாப்பிட ஆரம்பித்தனர். 

“மன்னி ஆஸம் சப்ஜி. இட்ஸ் ரியலீ டேஸ்டி”

“ஆமாம் மா மிருதுளா இந்த பூரி மசால் சாப்பிடும் போது எனக்கு எங்க அம்மா செய்து தந்த பூரி மசால் சாப்பிடறமாதிரியே இருக்கு. என் பொண்ணு சொன்னது சென்ட் பெர்சன்ட் கரெட் தான்”

என்று அவர்கள் புகழ்ந்து சாப்பிட்டு எழுந்ததும் ரம்யாவும் மிருதுளாவும் சாப்பிட அமர்ந்தார்கள். 

“ரியலீ மிருது இந்த பூரி மசால் சூப்பரா செய்திருக்க மா. ஆமாம் பூரியை எப்படி இவ்வளவு த்தின்னா பரத்திருக்க எனக்கு தடி தடி யா இந்த ஊருல பண்ணறா மாதிரி தான் வரும்”

“எல்லாருமா ரொம்ப புகழறேங்கள் எனக்கு சங்கோஜமா இருக்கு”

“இதுல என்னதுக்கு சங்கோஜப் படணும். நீ சூப்பரா சமைச்சுக் காட்டிட்டல்ல இனி பாரு நாங்க அடிக்கடி வருவோம்”

“ஆனா சித்தி மிருது இந்த மாசம் மட்டும் தான் இங்கே இருப்பா. அடுத்த மாசம் நாங்க ஊருக்கு போயிடுவோமே”

“டேய் ஊருக்கு போயிட்டு குழந்தையோட இங்கே தானே டா வருவா அப்புறமென்ன…ஏன் உன் பொண்டாட்டிய வேலை வாங்கிடுவோமேன்னு பயமா உனக்கு”

“ச்சே ச்சே அவர் அப்படி சொல்லலை சித்தி”

“இங்கப் பார்டா இவள சொன்னா அவன் பதில் கொடுக்கறான்!!! அவனைச் சொன்னா இவள் பதில் தர்றா…ம் ….ம்…ஓகே !!! ஓகே ஜமாய்ங்கோ…அப்படித்தான் இருக்கணும். காட் பெலஸ் யூ போத்” 

என அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே சாப்பிட்டு விட்டு அந்த இடத்தையும் சுத்தம் செய்து முடித்து  ஹாலுக்கு வந்து அமர்ந்தாள் மிருதுளா. பின் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பலானார்கள் ரம்யா சித்தியும் அவர் குடும்பமும்.

அப்போது குங்குமம், ப்ளௌஸ் பிட், ஒரு வாழைப்பழம் எல்லாம் வைத்து கொடுத்தாள் மிருதுளா. 

“பரவாயில்லையே நம்ம வழக்கங்கள் எல்லாம் தெரிஞ்சுவச்சிண்டிருக்கயே குட் குட். தாங்க்ஸ் ஃபார் தி லவ்லி டின்னர் அன்ட் தாம்பூலம். குட் நைட் போத் ஆஃப் யூ. ஹாவ நைஸ் சிலீப். பை. டேய் மிருதுவ பத்திரமா பார்த்துக்கோடா நவீன்”

“ஷுவர் சித்தி”

“அவர் நல்லாதான் பார்த்துக்கறார் சித்தப்பா.”

“சந்தோஷம்மா. பை நாங்க வர்றோம்”

என்று அவர்கள் காரில் ஏறி சென்றதும் இருவருக்கும் ஒரு பெரிய அலை அடித்து ஓய்ந்தது போல இருந்தது. எதிர் பாராமல் வந்த விருந்தினருக்கு கிடு கிடுவென எல்லாவற்றையும் செய்ததால் சற்று தளர்ந்து போனாள் மிருதுளா. அவர்களை அனுப்பிவிட்டு வந்து படுத்துக்கொண்டவளைப் பார்த்து…

“என்ன மிருது டையர்டா இருக்கு சோம்பலா இருக்குன்னு சாயந்தரம் வாக் கூப்பிட்டப்போ சொல்லிட்டு சும்மா பம்பரமா சுத்தி இத்தனை பேருக்கும் டீ , டின்னர்ன்னு அசத்திட்டயே”

“அதுக்காக வந்தவாளுக்கு ஒண்ணும் குடுக்காமயா அனுப்பறது. இதோ இப்போ ரெஸ்ட் எடுத்துட்டா போறது.” 

“சரி நீ ரெஸ்ட் எடு நான் அந்த பாத்திரத்தை எல்லாம் தேய்ச்சு வச்சுட்டு வரேன் சரியா”

“அடுப்படிய சுத்தம் செய்துட்டேன் ஜஸ்ட் அந்த எண்ணெய் வச்ச சட்டியை மட்டும் தேய்ச்சுடுங்கோ அவ்வளவு தான். மத்ததை எல்லாம் நான் முடிச்சுட்டேன்”

நவீன் அந்த சட்டியை மட்டும் தேய்த்து விட்டு வந்து படுத்துக்கொண்டான். 

“நவீ தூக்கம் வரலையே ஏதாவது படம் பார்ப்போமா”

“ஓ எஸ் “

இருவருமாக டிவியை ஆன் செய்து திரைப்படம் பார்த்துவிட்டு நிம்மதியாக உறங்கச் சென்றனர். 

இரண்டு ரூபாய் ஐம்பது காசு மட்டுமே வைத்திருந்த நவீன் எப்படி பூ, ரெஸ்டாரன்ட் என செலவு செய்தான்? ஆனால் அந்த இரண்டு ரூபாய் ஐம்பது காசு அவனுக்கு அவனையே உணரச்செய்தது. எதையுமே ஒருவர் சொல்லிக்கொடுத்து உணர்வதை விட சுயமாக உணர்ந்தால் அது அப்படியே நிலைத்துவிடும். அப்படி ஒரு “self realization” எனப்படும் சுய உணர்தல் வந்துவிட்டால் அவரை எவராலும் எப்படியும் எந்த காலத்திலும் மாற்ற முடியாது. 

தொடரும்……

தனது அம்மா வந்திருந்து தன்னை நன்றாக கவனித்துக் கொண்டதில் சற்று சுகம் கண்டு விட்டாள் மிருதுளா. அவளை எந்த வேலையையும் செய்ய விடாமல் அனைத்தையும் அம்புஜமே பார்த்து பார்த்து ஒரு மாதம் முழுவதும் செய்து தந்து பழக்கமான பின் மீண்டும் தானே காலை முதல் இரவு வரை எல்லா வேலைகளையும் செய்ய வேண்டுமே அதுவும் அப்பப்போ புதிய விருந்தாளிகளான வாந்தியையும் தலைசுற்றலையும் வேற கவனித்துக்கொள்ள வேண்டுமே என்று மலைத்துப் போனாள். 

மறுநாள் காந்தி ஜெயந்தி என்பதாலும் அதனைத்தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்று கிழமை என்பதாலும் நவீனுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்க அவன்  மனைவிக்கு தன் மாமியார் அளவு இல்லாவிட்டாலும் தன்னால் முடிந்த, தெரிந்த உதவிகளைச் செய்து கொடுத்தான். அன்று காலை நவீன் இருவருக்கும் காபி போட்டு கொண்டு வந்து ஹாலில் அமர்ந்து மிருதுளாவுடன் சேர்ந்து அருந்தினான். பின் மிருதுளா காலை டிபன் செய்தாள் அதை இருவரும் உண்டனர் அதற்கு உபயோகித்த பாத்திரங்களை மிருதுளா நின்று கழுவிக்கொண்டிருக்கையில் நவீன் சென்று தான் செய்வதாக கூற அதற்கு…

“என்னால இப்போ முடியறது நானே பண்ணிடறேன். எனக்கு எப்போ முடியலையோ சொல்லறேன் அப்போ செய்து தாங்கோ போறும்”

“ஓகே”

என கூறிவிட்டு டிவியில் நியூஸ் பார்த்துக்கொண்டிருந்தான். அப்பொழுது வேகமாக அவனை கடந்து பாத்ரூமிற்கு சென்றாள் மிருதுளா அப்போதும் அவன் பாட்டுக்கு நியூஸையே மும்முரமாக பார்த்துக்கொண்டிருந்தான். மிருதுளா வாந்தி எடுத்துவிட்டு பாத்திரம் தேய்க்கும் வேலையை முடித்து விட்டு நவீன் அருகே வந்தமர்ந்து….

“ஏன் பா நான் வாந்தி எடுக்க உங்களை க்ராஸ் பண்ணி தானே போனேன்….வாந்தி எடுத்துட்டும் உங்களை க்ராஸ் பண்ணி தானே போய் பாத்திரத்தை எல்லாம் தேய்ச்சு வச்சேன்…இப்படி அசையாம ஆடாம நியூஸை பார்த்துண்டு உட்கார்ந்திருக்கேளே”

“என்ன செய்யணும்னு சொல்லற?”

“உங்க வைஃப் வாந்தியும் எடுத்துண்டு வேலையும் பார்க்கறாளேன்னு ஹெல்ப் பண்ணணும்னு தோணவேயில்லையா?”

“என்ன பேசற நீ? நான் ஹெல்ப் பண்ணறேன்னு வந்தப்போ… நீ எப்போ ஹெல்ப் வேணுமோ அப்போ சொல்லறேன்னு சொல்லிட்டு இப்போ இப்படி வந்து கேட்டா நான் என்னத்தை சொல்றது?”

“அப்படியே நான் சொன்னாலும் உங்க கண்ணுக்கு முன்னாடி நான் அவஸ்தை படறேன் அதை பார்த்துட்டும் நான் சொன்னா தான் செய்வேன் இருக்கேங்கள்….இட்ஸ் டூ மச்”

இப்படித் தான் பல தம்பதியர் இடையே பிரச்சினை என்பது நுழையும். ஆண்களிடம் எதைச் சொன்னாலும் அதை சொல்லும் பெண்கள் ஒரு அர்த்தத்தில் சொல்ல…ஆண்கள் அதற்கு வேறொரு அர்த்தம் எடுத்துக்கொள்ள…..இறுதியில் யார் சரியா சொன்னார் யார் சரியா சொல்லைன்னும், யார் சரியா புரிஞ்சிக் கிட்டாங்க யார் புரிஞ்சுக்கலைன்னும் உப்பு சப்பில்லாத இது போன்ற காரணங்களினாலேயே சண்டையிட்டு கொள்கிறார்கள். அதேபோல நவீன் மிருதுளாக்குள்ளும் சண்டை ஆரம்பிக்க…மீண்டும் வாந்தி வந்து பாத்ரூமிற்குச் சென்றாள் பின்னாலேயே நவீனும் சென்று அவள் நெற்றியைப் பிடித்துக் கொண்டான். அவள் வாந்தி எல்லாம் எடுத்து முடித்துவிட்டு தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கும் போது நவீன் குடிக்க தண்ணீர் கொடுத்தான் அதை வாங்கி குடித்து விட்டு…

“இப்போ செய்தேங்கள் இல்லையா இத மாதிரிதான் பார்த்து தானா உணர்ந்து செய்யணும்”

“இப்போ நீ என்கிட்ட பேசிண்டிருக்கும் சாரி பிஸியா சண்டைப் போட்டுண்டிருக்கும் போது பாதியிலேயே எழுந்து போனா !!! அதுனால தான் வந்தேன்”  

அந்த ஒன்றுமில்லாத பிரச்சினை என்று நவீன் எண்ணி அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே இப்படிச் சொல்ல அதைக் கேட்டதும்

“ஆமாம் ஆமாம் உங்க தப்ப மறைக்கறதுக்கு பேச்ச மாத்தறேங்களாக்கும்”

“சரி சரி …லெட்ஸ் ஜஸ் லீவ் இட். நான் போய் உனக்கு டீ போட்டு கொண்டு வரேன்”

என இரண்டு தம்பளர் டீயுடன் வந்து ஒன்றை மிருதுளாவிடம் கொடுத்ததும் அதை அவள் வாங்கிக் கொண்டு …

“இந்த டீக்கூட ஒரு பஞ்சாபி சமோசாவும் இருந்தா எவ்வளவு சூப்பரா இருக்கும்….இல்ல நவீ”

“அம்மா தான் உனக்கு பிடிச்ச முறுக்கு போளி அப்பம் எல்லாம் செஞ்சு வச்சுட்டுத்தானே போயிருக்கா அதை எடுத்துண்டு வரட்டுமா சாப்பிடுவோம்”

“இல்ல ப்பா இந்த டீக்கு சமோசா தான் மேட்ச்சா இருக்கும்”

“இப்பவா ஈவினிங் வாங்கித் தரேனே…”

“இப்போ டீயோட சாப்பிடணும்ன்னு கேட்டா ஈவினிங்ன்னு சொல்லறேங்கள்?”

“இல்ல மிருது இப்போ இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பாடு சாப்பிடுற நேரம் ஆகிடும் இப்போ போய் சமோசா சாப்டேனா அப்பறம் சாப்பாடு சரியா சாப்பிட மாட்ட அதனால சொன்னேன்” என்று தன்னிடமிருப்பது ஐந்தே ரூபாய் என்ற பதட்டத்தில் மிருதுளாவையே வேண்டாமென சொல்ல வைக்க முயறச்சித்தான் நவீன். 

“ஆமாம் நீங்க சொல்லறதும் சரிதான்…சரி எனக்கு ஒரு அப்பமும் ஒரு முறுக்கும் தாங்கோ”

“குட் கேர்ள்!!! இந்தா சாப்பிடு”

“ஆமா இத சாப்ட்டா மட்டும் மத்தியானம் சாப்பாடு சாப்ட முடியுமா என்ன? எங்கயோ எதோ இடிக்கறதே!!!”

“ஒண்ணும் எங்கேயும் இடிக்கலை ஒரு அப்பமும் ஒரு முறுக்கும் சாப்ட்டா தப்பில்லை. சமோசாவில் உள்ள உருளை ஸ்டஃபிங் ரொம்ப ஹெவி ஆகிடும் அதுனால தான் சொன்னேன்”

“ஓகே ஓகே நம்பிட்டேன் நம்பிட்டேன்” என சொன்னாலும் மிருதுளாவிற்கு நவீனின் பேச்சினால் ஏதோ அவன் தவிப்பது போல தோன்றியது அதே யோசனையிலிருந்தவளை 

“வரியா சன் டிவில காந்தி ஜெயந்தி சிறப்புத்திரைப்படம் பார்ப்போம்” 

“ஓ எஸ் பார்க்கலாமே”

“இரு நான் சாதம்  வச்சுட்டு, குழம்புப் பொறியல் எல்லாத்தையும் சூடு பண்ணிட்டு வந்திடறேன் சரியா”

“இப்பவே வா மணி என்ன பண்ணண்டு தானே ஆகறது”

“அம்மா தாயே நீ சடன்னா பசி பசின்னு சொல்ல ஆரம்பிப்பன்னு உன் அம்மா சொல்லிருக்கா அது போல ஏதாவது ஆச்சுன்னா அப்பறம் என்னால எல்லாம் உங்க அம்மா மாதிரி கிடு கிடுன்னு ஏதாவது செய்து தர முடியாது அதனால நான் அந்த வேலைகளை முடிச்சுட்டு ஒரு அரைமணிநேரத்துல வந்திடுவேன் அதுவரைக்கும் நீ டிவி பாரு”

“ஓகே டன்”

நவீன் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு வந்தமர்ந்து கொஞ்ச நேரம் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது மிருதுளா எழுந்து போய் சாப்பாட்டை கொண்டு வந்து ஹாலில் வைக்கத் துவங்கினாள் உடனே நவீனும் அவளுக்கு உதவி செய்ய பின் இருவருமாக அமர்ந்து படம் பார்த்துக் கொண்டே  உண்டனர்.

சாப்பிட்டப் பின் படம் பார்த்துக்கொண்டே மிருதுளா உறங்கிப் போனாள். அவள் உறங்குவதைப் பார்த்த நவீன் டிவியை ஆஃப் செய்துவிட்டு அவளை பார்த்தப்படி அவளருகே படுத்துக் கொண்டு …

“ரொம்ப சாரி மிருது நீ ஆசைப்பட்டு கேட்ட சமோசாவ கூட வாங்கிக் குடுக்க முடியாத நிலைமையில் நான் இப்போ இருக்கேன். யார் கிட்டேயும் கடனும் வாங்கக் கூடாதூனு சொல்லிட்ட இப்போ நான் என்ன பண்ணுவேன். இன்னும் இரண்டு நாள் ஆகுமே சம்பளம் வர அதுவரைக்கும் உன்னிடம் சொல்லி உன்னை வருத்தப்பட வைக்காமல் பார்த்துக்கணுமே!!! என்ன செய்யப் போறேனோ!!! தயவுசெய்து சாயந்தரம் சமோசாவை மறந்திடு மா ப்ளீஸ்” 

என்று மனதிற்குள் பேசிக்கொண்டே அவனும் உறங்கிப்போனான். 

மணி ஐந்தானது நவீன் சட்டென எழுந்துப் பார்த்தான் மிருதுளா நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். அவன் மெதுவாக எழுந்து போய் இருவருக்கும் டீ போட்டுக் கொண்டிருக்கையிலே மிருதுளா எழுந்து முகம் கை கால் அலம்பி சாமிக்கு விளக்கேற்றினாள். நவீன் அடுப்படியிலிருந்து டீயை எடுத்து வரும்போது மனதில் 

“மிருதுளா சமோசா கேட்டு விடக் கூடாதே ஆண்டவா” 

என்று வேண்டிக் கொண்டே வந்து அவளிடம் டீயை கொடுத்தான். அவளும் அதை வாங்கி எதுவும் சொல்லாமல் குடிக்கலானாள். அப்போது நவீன் பெருமூச்சு விட்டுக்கொண்டே 

“நன்றி கடவுளே”

என்று மனதிற்குள் கூறுவதாக எண்ணி வெளியே கேட்கும்படி முனுமுனுக்க உடனே மிருதுளா

“என்னத்துக்கு கடவுளுக்கு நன்றி இப்போ? டீயை குற்றம் குறையில்லாமல் குடிச்சதனால தானே”

“ஐய்யோ சமத்து!!! அதேதான் அதேதான்”

என சமாளித்துக் கொண்டிருக்கும் போதே 

அடுத்த பரீட்சை கேள்வி நவீனைப் பார்த்து பாய்ந்தது…

“சமோசா தான் வாங்கித் தரலை போகட்டும் விட்டுடறேன். ஆனா இப்போ நான் கேட்க போறதை நீங்க நிச்சயம் நிறைவேத்தனும் சரியா?”

“சமோசா வாங்கி தரமாட்டேன்னு சொல்லலையே ….சரி என்னது அது மிருது?”

“எங்க அம்மா வந்ததிலிருந்து எப்பவுமே சவுத் இந்தியன் சாப்பாடே ஒரு மாசமா சாப்படறேனா!!”

“அதுக்கு!!!”

“அதனால நாம இன்னைக்கு நைட் டின்னருக்கு ரோஹித் டாபா போய் ரொட்டியும் சப்ஜியும் சாப்பிடுவோமா?”

நவீனுக்கு தூக்கிவாரிப் போட்டது.

“இதுக்கு சமோசாவே பரவாயில்லைப் போல தெரியுதேன்னு அவன் மைன்ட் வாய்ஸ் சொல்ல”

“சரி நீ ஃபர்ஸ்ட் சமோசா தானே கேட்ட அத இன்னைக்கு சாப்பிடு நாளைக்கு டின்னருக்கு போகலாம் சரியா”

“ம்….ம்….ம்…நான் எது கேட்டாலும் நீங்க ஏன் அப்பறம் அப்பறம்ன்னு சொல்லறேங்கள் ? பைசா இல்லையா என்ன?”

“அதுக்கில்லை மிருது நீ மொதல்ல சமோசா தானே கேட்ட அதுனால சொன்னேன் வேற ஒண்ணுமில்லை. 

இப்போ !!என்ன!!! உனக்கு சமோசா சாப்பிடணும் போல இருக்கா இல்லையா அத சொல்லு முதல்ல”

என்று நவீன் கேட்டதும் சின்ன பிள்ளைகள் போல ஆமாம் இருக்கு என தலையசைத்தாள் மிருதுளா.

“சரி இரு நான் போய் வாங்கிண்டு வரேன்”

என்று டாபா சென்று ஒரே ஒரு சமோசாவை பேக் செய்து வாங்கிவந்தான். ஆக இப்போது அவனிடம் மீதமுள்ளது இரண்டு ரூபாய் ஐம்பது காசே. வீட்டிற்கு வரும் வழியெல்லாம் என்ன பண்ணுவது என்ற சிந்தனையிலேயே நடந்துச் சென்றான். வீட்டிற்குள் வந்ததும் கடையில் வாங்கியதை மிருதுளாவிடம் கொடுத்து விட்டு ஃப்ரிட்ஜில் இருந்து ஒரு பாட்டில் ஐஸ் தண்ணீர் எடுத்து குடித்துக் கொண்டிருக்கும் போது…மிருதுளா அதைத் தொறந்துப் பார்த்துவிட்டு…

“அச்சசோ!!” 

என்று கூற உடனே குடித்துக் கொண்டிருந்த தண்ணீரை …நவீன் சட்டென திரும்பிப் பார்த்ததில் அவன் முகத்தில் அவனே ஊற்றிக்கொள்ள அதைப்பார்த்த மிருதுளா சிரிக்க…

“என்ன ஆச்சு மிருது ஏன் அப்படி சொன்ன?”

“என்ன? நேத்து குல்ஃபியும் ஒண்ணு தான் வங்கினேங்கள் இன்னைக்கு சமோசாவும் ஒண்ணு தான் வாங்கிருக்கேங்கள் என்ன விஷயம்? ஏன் இன்னிக்கு உங்களுக்கு சமோசா சாப்பிடணும் போல தோணலையோ?”

“உண்மைய சொல்லணும்னா ….அது தான். எனக்கு வேண்டாம்ன்னு தோணித்து ஸோ வாங்கலை. ஆஸ் சிம்பிள் ஆஸ் தட்… நானா ப்ரெக்னன்ட்டா இருக்கேன்…நீ சாப்டு மிருது. எனக்கு வேணும்னா நான் வாங்கிண்டு வந்திருப்பேனே”

“சரி சரி இங்க வாங்கோ இதுல பாதியாவது நீங்க சாப்பிடுங்கோ. எனக்கு பாதிப் போறும்.”

“ஹலோ மறுபடியும் சொல்லறேன் எனக்கு வேண்டாம். எனக்கு வேணும்னா இரண்டு வாங்கிண்டு வந்திருப்பேன். உனக்கு பஞ்சாபி சமோசா எவ்வளவு பிடிக்கும்ன்னு தெரியும் பேசாம சாப்பிடு. அதுவுமில்லாம உன்னை கல்யாணம் பண்ணி இங்கே கூட்டிட்டு வரும்வரை நான் இதை எல்லாம் தான் சாப்பிட்டேன்”

“இல்லையே உங்க நண்பர்கள் எல்லாரும் அப்படி சொல்லலையே”

“எப்பவாவது வெளில வரும்போது போதுமா!! ஹாப்பியா!!! அந்த சமோசா ஆரிடப் போறது…பேசாம சாப்பிடு”

“சரி சமோசாவ வாங்கிக் கொடுத்துட்டு டின்னருக்கு கூட்டிண்டு போகாம இருந்துருவேங்களா நவீன்?”

இந்த கேள்விக்கு எப்படி பதில் சொல்வதென்பதறியாமல் சற்று மௌனம் காத்தப் பின் …

“இங்க பார் மிருது… நம்ம சவுத் இந்தியன் சாப்பாடு தான் பெஸ்ட் தெரியுமா!! அதுவும் ப்ரெக்னன்ட்டா இருக்குற நேரத்துல என்னத்துக்கு கடையில விக்கற சாப்பாடெல்லாம் வாங்கி சாப்பிடணும் அப்பறம் அதுனால எதாவது பியச்சனை ஆயிட்டா யாரு கஷ்ட்டப்படப்போறா நாம தானே….அது தேவையா?”

“எனக்கு ஒண்ணு புரியலை நவீ.”

“க்ளியரா சொன்னேனே அதுல என்ன உனக்கு புரியலை?”

“ப்ரெக்னன்சி கன்பார்ம் ஆன அன்னைக்கு வெளில தானே சாப்பிட்டோம் அப்ப ஏன் நீங்க இதெல்லாம் சொல்லலை.”

“அப்போ எனக்கு அவ்வளவா இதப் பத்தி எல்லாம் தெரியாதே அதனால கூட்டிண்டு போனேன்”

“சரி இப்போ எப்படி இதெல்லாம் தெரிஞ்சுது”

“என்னோட வேலை பார்க்கற கல்யாணமாகி கொழந்தைகள் இருக்கிற நண்பர்கள் சொல்லி கேட்டது”

“ஹா !!!ஹா !!!ஹா!!! நவீ சூப்பரா சமாளிக்க நினைக்கறேங்கள் ஆனா உங்களால முடியலையே அப்பறம் ஏன்?? உண்மையைச் சொல்லுங்கோ”

“நான் தான் சொல்லிட்டேனே ….வேற என்ன உண்மையை கேட்கற”

“உங்களோட கல்யாணமான நண்பர்கள் ல ஒருத்தர் தான் தமிழ் காரர். மத்தவா எல்லாரும் வடநாட்டுக் காரர்கள் அப்படி இருக்கும் போது அவாளே அவா ஊர் சாப்பாட்டை சாப்பிடக் கூடாதுன்னா சொல்லுவா”

“அவா சாப்பாட்ட ஹோட்டல்ல சாப்பிடக் கூடாதுன்னு தான் சொன்னா”

“சரி …எனக்கு உங்க பேச்சில் ஏதோ ஒரு தடுமாற்றம் தெரியறது. நீங்களா சொல்லும் வரை வெயிட் பண்ணறேன். அப்போ நைட்டு டின்னருக்கு தோசையும் வெங்காய சட்னியும் சாப்பிடலாமா?”

“தோசையை எப்படியாவது வார்த்துத் தந்திடுவேன் ஆனால் அந்த சட்னி எனக்கு பண்ணத் தெரியாதே”

“நீங்க ஒண்ணும் பண்ண வேண்டாம் நானே செய்யறேன். உங்கள்ட்ட கேட்டேன் அவ்வளவு தான்”

“ஓ எஸ் அப்படின்னா சரி அதையே சாப்பிடுவோம்” 

“நான் மத்தியானம் படம் பார்த்தேன் நீங்க சாதம் வச்சு எல்லாத்தையும் சூடு செய்து வச்சேங்கள் இப்போ நான் அடுப்படியில் தொசை அன்ட் சட்னி பண்ணப் போறேன் நீங்க டிவி பாருங்கோ”

“இப்பவே ஏன் மணி ஏழு தானே ஆகறது.”

“இப்ப வெங்கயத்தையும் தக்காளியையும் வதக்கி ஆரவச்சுட்டு வர்றேன் அப்பறம் ஒரு ஏழேகால் போல போய் அதை அரைச்சுட்டு அப்படியே தோசையும் வார்த்துடுவேன் ஆஸ் யூஷுவல் செவென் தர்ட்டிக்கு சாப்பிட்டுடலாம் சரியா”

“அப்படியா அப்போ ஓகே. ஏதாவது ஹெல்ப் வேணும்னா கூப்பிடு”

“ஷுவர் ஷுவர். நீங்க டிவி பாருங்கோ”

மிருதுளா சொன்னது போலவே ஏழரைக்கு டின்னர் தயார் செய்தாள் இருவரும் உண்டப் பின் அவரவர் படிப்புப் பற்றியும். மிருதுளா வயிற்றில் குழந்தையுடன் நவம்பரில் பரீட்சை எழுதப் போவது பற்றியும் ஒரு சின்ன வாக் போய் கொண்டே பேசிவிட்டு வீட்டிற்கு திருமபி வரும் போது குல்ஃபி காரன் வண்டி அவர்களை க்ராஸ் செய்யும் போது …

“சார்.. மேடம் ..குல்ஃபி சாப்பிடுங்க” என்று  குல்ஃபி விற்பவன் கூறியதும் நவீனுக்கு எங்கடா மிருதுளா கேட்டு தர்மசங்கடமாகிவிடுமோ என இதயதுடிப்பு அதிகரித்தது. ஆனால்

“இன்னைக்கு வேண்டாம் பா. கேட்டதுக்கு ரொம்ப நன்றி பா. நீ போய் உன் வியாபாரத்த கவனி”

“மிருது நீயா குல்ஃபி வேண்டாம்ன்னு சொல்லற?”

“ஆமாம் நவீ தினமும் குல்ஃபி சாப்பிட்டா நம்ம கொழந்தைக்கு எப்பவுமே ஜலதோஷம் பெர்மனெட்டா இருந்துடுத்துன்னா அதுனால தான் அப்படி சொன்னேன். இனி எனக்கு வாரத்துல ஒரு குல்ஃபி ஆர் நம்ம மார்கெட்ல கிடைக்கிற அந்த ஸ்வேர்ள் ஐஸ்கிரீம் வாங்கித் தாங்கோ போதும். டீல் ஓகே வா”

“அப்படி எல்லாம் ஒண்ணும் ஆகாது மிருது. சரி எனிவே ஆம் ஃபைன் வித் யுவர் டீல். டன். சரி …..குளிர் காலம் ஆரம்பிச்சாச்சு இனி நாம நைட் எல்லாம் வாக் வரக்கூடாது”

“காலையில் உங்களுக்கு ஆபிஸ் போகணும் சாயந்தரம் க்ளாஸ் அப்பறம் எப்போ போறதாம் நைட்டுதானே. டாக்டர் தினமும் வாக்கிங் தவறாம போக சொல்லிருக்காளே”

“ஆமாம் சரி இந்த மாசம் மட்டும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் க்ளாஸ் போறேன் என்ன சொல்லற”

“அதெல்லாம் வேண்டாம் நீங்க உங்க க்ளாஸுக்கு போங்கோ நான் மெதுவா நம்ம தெருவுலேயே நடக்கறேன். சரி கதவ தொறங்கோ ரெஸ்ட் ரூம் போகணும்”

நவீன் கதவைத் திறந்ததும் மிருதுளா நேராக ரெஸ்ட் ரூமிற்குள் சென்றாள். நவீன் கதவை தாழிட்டு விட்டு சாமி படம் முன்னால் நின்று 

“இன்று வந்த சமோசா அன்ட் ரொட்டி சப்ஜி என்ற கடலை தாண்ட உதவிட்ட ஆண்டவா. நேத்தும் இன்றும் ஐந்து ரூபாயில் மிருதுக்கு தெரியாமல் சமாளித்து விட்டேன். இனி இந்த சனி ஞாயிறு என்கிற மீதமிரண்டு நாளும் துணையா இருந்து காப்பாத்துங்கப்பா சாமி.”

என்று கைக்கூப்பி நின்றிருந்ததைப் பார்த்த மிருது 

“என்ன நவீ சாமிகிட்ட என்ன அப்படி ஒரு வேண்டுதல் அதுவும் இந்த நேரத்துல?”

“ஒண்ணுமில்லை எல்லாரையும் நல்ல படியா பார்த்துக்கோங்கோன்னு கேட்டுண்டேன். இரு வந்து விபூதி பூசி விடறேன் அப்பறம் போய் படுத்து தூங்கலாம்”

என மிருதுளாவுக்கு விபூதி பூசிவிட்டு தனக்கும் இட்டுக்கொண்ட பின் உறங்க படுத்துக் கொண்டனர். அப்போது நவீனின் மனது பேசிக்கொண்டே இருந்தது…

“சீக்கிரம் திங்கட்கிழமை வரக்கூடாதா? திங்கட்கிழமை விடிந்ததும் சீக்கிரம் ஆபிஸ் போய் மொதல்ல சம்பளத்தை வாங்கி அன்னைக்கே மிருதுவ கூட்டிண்டு டாபா ல போய் அவ ஆசப்பட்ட ரொட்டி சப்ஜி வாங்கிக் கொடுக்கணும்.”

“நவீ ஏதாவது சொன்னேங்களா என்ன?”

“இல்லையே!!! ஏன் கேட்கற?”

“இல்ல நீங்க ஏதோ கேட்டா மாதிரி இருந்தது அதுதான் கேட்டேன். சரி தூங்குங்கோ குட் நைட்” என்று அவன் நெற்றியில் முத்தமிட்டு தூங்கலானாள்.

“இதுக்கு மேல நாம நம்ம மனச பேசவிட்டா அப்பறம் எல்லாமே மிருதுக்கு கேட்கிற மாதிரி பேசிடப் போறேன். பேசாம தூங்கிடுவோம் அது தான் சேஃப்” 

என்று மனதில் நினைத்துக் கொண்டே அவனும் அவளுக்கு முத்தம் கொடுத்து குட் நைட் சொல்லிவிட்டு தூங்கலானான்.

தொடரும்…..

ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் ரெயில் ஏறிவிட்டாலும் தூங்கிப் போனால் பைகள் களவு போய்விடுமோ என்றும். பாத்ரூமுக்கு எப்படி பெட்டிகளை எல்லாம் நம்பி வைத்துவிட்டு போவது என்றும் எண்ணி அம்புஜம் பிராயணம் செய்த ஒன்றரை நாளும் தண்ணீர் குடிக்காமலும், உணவருந்தாமலும், தூங்காமலும் தன் மகளை பார்க்க போவதற்காக விரதம் மேற்கொண்டவள் போல் பயணித்தாள். முதல் முறை தனியாக பிரயாணம் மேற்கொள்ளும் அனைத்து பெண்களுக்கும் இருக்கும் பயமே அம்புஜத்திடமும் இருந்தது. அவளும் எல்லாரையும் போல காட்டிக்கொள்ளாமல் இருந்துக்கொண்டாள். எப்போடா திங்கட்கிழமை காலை வரும் என கை கடிகாரத்தின் முட்களை வேகமாக ஓடச் சொல்லி மனதில் வேண்டிக்கொண்டாள். ஒரு வழியாக ரெயில் குஜராத் ஸ்டேஷனில் வந்து நின்றது. அந்த ரெயில் பெட்டியிலிருந்து விடுப்பட்டு வீடு போய் சேர ஜன்னல் வழியாக அவள் கண்கள் தன் மகளையும் மாப்பிள்ளையும் தேடிக்கொண்டிருக்கையிலே பின்னாலிருந்து “அம்மா” என மிருதுளாவின் குரல் கேட்டதும் சட்டென திரும்பி தன் மகளை அணைத்துக் கொண்டு 

“அப்பாடா ஒரு வழியா பத்திரமா வந்து சேர்ந்துட்டேன்”

“ஏன் மா ரொம்ப பயந்துட்டயா?”

“ஏன் என்ன ஆச்சு?”

“அது ஒண்ணுமில்லை மிருது அன்ட் மாப்ள தனியா எங்கயுமே பிரயாணம் போனதில்லை அதுவும் இவ்வளவு தூரமெல்லாம் வந்ததே இல்லை அதனால் பதட்டமா இருந்தது இப்பவும் கொஞ்சம் இருக்கு.”

“சரி சரி ஆத்துக்கு போகலாம். மிருது நீ அம்மாவை கூட்டிண்டு முன்னால் போ நான் இந்த பெட்டி அன்ட் பேக் எல்லாம் எடுத்துண்டு பின்னாடியே வர்றேன்”

“நான் வேண்ணா பேக்கை எடுத்துக்கறேன் நீங்க பெட்டிய மட்டும் எடுத்துண்டு வாங்கோ”

“நீங்க மிருது கூட போங்கோ நான் பார்த்துக்கறேன்”

ரெயிலில் இருந்து வெளியே ப்ளாட்பாரம் வந்ததும் 

“நீங்க காபி இல்ல டீ ஏதாவது குடிக்கறேங்களா”

“எங்கம்மா குடிச்சிட்டாலும்”

“இல்ல மாப்ள ஒண்ணும் வேண்டாம் சீக்கிரம் வீட்டுக்கு போயிடுவோம் வாங்கோ”

அனைவருமாக ஒரு ஆட்டோவில் ஏறினர் வர வழியில் மிருதுளா 

“அம்மா நவீன் நீங்க எல்லாரும்  வர்றதுக்கு  முன்னாடி எழுதிய பரீட்சையை க்ளியர் செய்து விட்டார் இன்னும் ஒரே ஒரு பரீட்சை தான் பாக்கி இருக்கு”

“ஓ அப்படியா வாழ்த்துக்கள் மாப்ள. மிருது நீயும் அதே மாதிரி வர்ற நவம்பர் ல பரீட்சை எழுதி பாஸ் ஆகணும் சரியா”

என பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்ததும்….

“மிருதுளா அவர் ஆட்டோவை கட் செய்து வரட்டும் அதுக்குள்ள நீ கதவ தொறயேன்”

“என்னமா அவசரம்”

“ப்ளீஸ் மா”

“சரி சரி…நவீன் சாவியை தாங்கோ நாங்க ஆத்துக்குள்ள போறோம் நீங்க காசு கொடுத்துட்டு சாமான்களை எடுத்துண்டு வாங்கோ”

என மிருதுளா சாவியை வாங்கிக்கொண்டு கதவைத் திறந்ததும் அம்புஜம் வேகமாக பாத்ரூமிற்குள் சென்றாள்.

நவீன் பெட்டி பேக் எல்லாவற்றையும் வீட்டினுள் வைத்து விட்டு ஆபீஸ் சென்றான்.

சற்று நேரம் கழித்து பாத்ரூமிலிருந்து வெளியே வந்தாள் அம்புஜம்…

“அப்பாடி…”

“என்னமா ஏன் இப்படி சொல்லற”

“பின்ன ஒன்றரை நாளா டாய்லெட் போகாம இருந்தா வயிறு அழுத்தாதா. கல்லு மாதிரி ஆகிடுத்து என் தொப்பா. அது எவ்வளவு பெரிய சங்கடம் தெரியுமா?”

“ஏன் மா!!! நீ வந்த கம்ப்பார்ட்மென்ட்ல டாய்லெட் இல்லையா என்ன?”

“ம்….நக்கலா!!! எல்லாம் இருந்தது ஆனா பெட்டி பேக் எல்லாத்தையும் விட்டுட்டு போக பயமாயிருந்தது தெரியுமா. சரி சாப்ட ஏதாவது இருக்கா மிருது”

“என்னம்மா? ஏன் இப்படி? சாப்பிடவும் இல்லையா!!! சாப்பாடு எல்லாம் கட்டிண்டு தானே வண்டியே ஏறிருப்ப ….இதோ தோசை சுட்டுத்தறேன் சட்னி எல்லாம் ரெடி.”

“சொன்னாலும் சொல்லாட்டினாலும் அது தான் உண்மை. கட்டிண்டு வந்தேன் ஆனால் சாப்டலை,  தண்ணீக்கூட குடிக்கலை ஏன்னா ….சரி அத விடு ….குடு நானே சுட்டுக்கறேன். ஆமாம் மாப்ள எங்கே நீங்க ரெண்டு பேரும் சாப்ட்டாச்சா”

“அட பாவி அம்மாவே இப்படியா சாப்டாம வருவ !!! நீ மொதல்ல உட்கார்ந்து நிதானமா சாப்டு. இந்தா தோசையும் சட்னியும். நானே வார்த்துத்தறேன். நாங்க ரெண்டு பேரும் சாப்ட்டாச்சு. அவர் நம்மள ஆத்துல விட்டுட்டு ஆபீஸ் போயாச்சு”

அம்புஜம் சாப்பிட்டு முடித்ததும் இருவருமாக படுத்துக்கொண்டே பேசினார்கள். 

“ஏய் மிருது நீ என்ன இப்படி இளைச்சுப்போயிருக்க!!! சரியா சாப்பிடணும் மா. அப்போ தானே குழந்தை ஆரோக்கியமா பொறக்கும்”

“சாப்பிடவே பிடிக்க மாட்டேங்கறது எதை சாப்பிட்டாலும் வாமிட் வர்றது என்ன பண்ணுவேன்? 

“அப்படித்தான் இருக்கும் மிருது அதுக்கா சாப்பிடாம இருக்கக் கூடாது. வாமிட் வந்தா எடுத்துட்டு கொஞ்சம் நேரம் கழிச்சு சாப்பிடணும். உன் குழந்தைக்காக நீ சாப்பிட்டு தான் ஆகணும். டாக்டர் என்ன சொன்னா. கொழந்த எப்படி இருக்காம்?” 

“குழந்தை நல்லா இருக்காம். அடுத்த வாரம் செக்கப்புக்கு போகணும்.”

“நான் இருக்கப் போகும் இந்த ஒரு மாசமும் நான் சமைச்சு தர்றதை ஒழுங்க சாப்பிடணும். புரியறதா? உனக்கு என்னெல்லாம் சாப்பிடணும்ன்னு தோணறதோ கேளு செய்துத் தர்றேன்.”

“ஓகே அம்மா. அதெல்லாம் சரி. எப்படி அப்பாவும் வேனுவும் நீ இல்லாம இருக்கப் போறா? என்ன பண்ணுவா?”

“அவா ரெண்டு பேரும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கறோம்ன்னு சொன்னா மிருது. அப்பா பார்த்துப்பா …..பார்த்துப்பா என்ன பார்த்துண்டு தான் ஆகணும்”

என பேசிக்கொண்டே உறங்கிப் போனாள் அம்புஜம் அதைப் பார்த்த மிருதுளா அம்மாவின் தலையை தூக்கி தலையணையை வைத்து விட்டு….

“பாவம்!!! தூங்கறத பார்த்தா ஒன்றரை நாள் தூங்கிருக்கவும் மாட்டான்னு தான் தோணறது. தூங்கட்டும்”

என்று தானும் சற்று கண் அசந்தாள் மருதுளா. ரெயிலில் தூங்கிவிட்டதாக எண்ணி சட்டென எழுந்துப் பார்த்தாள் அம்புஜம். அருகில் மிருதுளா தூங்குவதைப் பார்த்ததும் தான் ஆசுவாசமானாள். பின்பு மணியைப் பார்த்தாள் மணி ஒன்று ஆகியிருந்தது. அடுப்படியில் சென்றுப் பார்த்தாள். மிருதுளா …குக்கரில் சாதமும், சாம்பாரும் பீன்ஸ் பொறியலும் செய்து வற்றல் வடாமும் வறுத்து வைத்திருந்தாள். அம்புஜம் சாம்பாரை மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு கொதி கொதிக்க வைத்து இறக்கி வைத்துவிட்டு ஹாலுக்கு வந்து பார்த்தாள் மிருதுளாவும் எழுந்து பாத்ரூம் சென்றிருந்தாள். அவளும் எழுந்து விட்டதால் அம்புஜம் சாப்பாட்டை ஹாலில் வைத்தாள். மிருதுளா வந்ததும்..

“வா வா மிருது மணி ஒன்றரை ஆயாச்சு சாப்பிடலாம் வா”

“அச்சோ சாப்பாடா !!! வேண்டாமே மா பாளீஸ்”

“அப்படி இருக்கக்கூடாதுன்னு காலை ல தானே சொன்னேன். வா வந்து உட்காரு”

மிருதுளாவும் அமர்ந்தாள் அம்புஜம் குக்கரைத் திறந்ததும் மிருதுளா பாத்ரூமிற்கு சென்று வாந்தி எடுத்தாள். உடனே அம்புஜம் குக்கரை அடுப்படியில் வைத்துவிட்டு சாதத்தை மட்டும் எடுத்து வந்து ஹாலில் வைத்தாள். வெளியே வந்த மிருதுளாவிடம் மீண்டும் சாப்பிடும் படி கூறினாள். குக்கர் அங்கில்லாததால் அவளுக்கு மீண்டும் வாந்தி வராமல் சாப்பிட்டாள். மகபேறு காலத்தில் சில பெண்களுக்கு சில வாசனைகள், சில சாப்பாட்டு வகைகளால் இப்படி வாந்தி வருவது சகஜமே ஆனால் அந்த நேரங்களில் அப்பெண்கள் ஓய்ந்து போவதனாலயே மீண்டும் ஏதாவது செய்து சாப்பிடுவதற்கு தயங்குகிறார்கள் அதனால் பல நேரம் சாப்பாட்டை தவிர்க்கவும் செய்கிறார்கள். அது போல் தான் நம்ம மிருதுளா இருந்து வருகிறாள். இனி அவள் அன்னையின் பராமரிப்பினால் அப்படி இருக்க மாட்டாள்…அம்புஜமும் அப்படி இருக்க விடமாட்டாள்.

ஆனால் இது போன்ற நேரங்களில் கணவன்மார்கள் அவர்கள் மனைவியைப் புரிந்துக்கொண்டு அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருதலே சிறந்தது அப்போது தான் தன் மனைவியின் வலியும் வேதனையும் புரிந்துக் கொள்வார்கள். மனைவியின் இன்பத்திலும் சந்தோஷத்திலும் மட்டுமே பங்கு போட்டுக்கொள்வதல்ல வாழ்க்கை. இங்கே நம்ம நவீன் என்னவானாலும் தனது மனைவியை தானே பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் ஆனால் விவரமாக தனது மாமியாரை வரவழைத்து தனது பங்களிப்பை சற்றே தளர்த்திக் கொண்டுள்ளான்.

அம்புஜமாவது வர மறுத்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் நவீனுக்கு மிருதுளா மேல் புரிதலும் அக்கரையும், பொறுப்பும் இன்னும் கூடியிருக்க ஏதுவாக இந்த சூழல் இருந்திருக்கலாம். ஆனால் பாவம் தாயுள்ளம் ஆயிற்றே மகள் வேதனைப் படுகிறாள் என்று கேட்டதும் தனக்கும் தன்னை சார்ந்த குடும்பத்தினருக்கும் இருந்த கஷ்டங்களை சமாளித்துக்கொண்டு உதவிக்கரம் நீட்டிவிட்டாள்.

தாய்மார்கள் என்றும் தங்கள் பிள்ளைகள் வேதனைப் படுவதை விரும்ப மாட்டார்கள். பர்வதம் போன்றவர்கள் சிலர் இதற்கு விதிவிலக்குகளே. அதற்காக எல்லா இடங்களிலும் அவர்கள் தாயுள்ளம் முந்திக் கொண்டால் சில சமயங்களில் அவர்கள் பிள்ளைகளுக்கு அது நன்மை பயக்காமல் போய்விடுவதும் உண்டு. 

ஒரு மாதம் அம்புஜம் அங்கிருந்து நன்றாக மிருதுளாவை கவனித்துக் கொண்டு அவள் கேட்டவைகளை எல்லாம் செய்து கொடுத்து அவளை நன்றாக தேற்றினாள். அந்த ஒரு மாதம் நவீன் அவன் வேலை, படிப்பு என இருந்து அப்பப்போ செக்கப்புக்கு மட்டும் கூட்டிச் சென்று வந்தான். காலையில் ஒரு வாக் நவீனுடன் பின்பு மாலையில் ஒரு வாக் அம்மாவுடன் என மிருதுளா மகிழ்ச்சியாக இருந்தாள். வந்ததிலிருந்து வீட்டிற்குள்ளேயே இருப்பதனால் சற்று வெளியே எங்காவது போய் வரலாம் என மிருதுளா கூறியதுக்கு அம்புஜம் மறுத்து விட்டாள். நாட்கள் கிடு கிடுவென ஓடி அம்புஜம் ஊருக்கு திரும்பிச் செல்ல வேண்டிய நாளான அக்டோபர் ஒன்றாம் தேதி வந்தது. 

அன்று இரவு ரெயில்வே ஸ்டேஷனில் நவீனிடம் …

“இந்த ஒரு மாசம் நான் என் பொண்ணை பார்த்துண்ட மாதிரியே நீங்களும் வரும் ஒன்றரை மாசம் பார்த்துக்கோங்கோ. அடுத்த மாசம் தீபாவளிக்கு வந்துடுவேங்களே அப்போ உங்க அம்மா நான் எல்லாரும் இருப்போமே நாங்க பார்த்துப்போம்”

“ஆமாம் ஆமாம் பார்த்துப்பா பார்த்துப்பா”

“என்னடி ஒரு மாதிரி சொல்லற ஏன் நான் உன்னை நல்லா பார்த்துக்கலையோ”

“அட க்ராஸ் டாக் உன்னை இல்ல.. சரி சரி வண்டில ஏறுமா…நான் உள்ளே வரலை …என்னால வேகமா எல்லாம் இறங்க முடியாது. நீ உள்ள போய் ஜன்னல் பக்கம் வா வண்டி கிளம்பும் வரை பேசலாம்”

“இந்த தடவை நீங்க எந்த கவலையுமில்லாமல் பாத்ரூம் போகலாம், தூங்கலாம் சரியா ….நான் இதோ உங்கள் பெட்டி , பேக் எல்லாத்தையும் இந்த சங்கிலி போட்டு கட்டி பூட்டிட்டேன் இந்தாங்கோ சாவி. நிம்மதியா போயிட்டு வாங்கோ. அடுத்த மாசம் பார்க்கலாம்”

என்று நவீன் கூறியதும் அம்புஜத்திற்கு வெட்கம் வர அதைப் பார்த்த மிருதுளா…

“அம்மா இதுல வெட்கப் பட ஒண்ணுமே இல்லை. அப்பா வேனு எல்லாரையும் கேட்டதா சொல்லு”

“ஆமாம் அவாள கேட்டதா சொல்லுங்கோ அன்ட் என்னோட தாங்க்ஸையும் சொல்லுங்கோ. நீங்க வந்ததுக்கும் ரொம்ப தாங்கஸ்”

“இதுக்கென்னதுக்கு தாங்கஸ் எல்லாம் சொல்லிண்டிருக்கேங்கள். என் பொண்ண பார்த்துக்க நான் வராமல் யார் வருவா…. விடுங்கோ..அச்சச்சோ மணி அடிச்சுட்டானே அப்போ வண்டி கிளம்பப்போறதே”

“ஆமாம் பின்ன நீ இப்படி ஜம்முன்னு வண்டிக்குள்ளேயும் நாங்க வெளில நின்னுண்டும் பேசிண்டே இருக்கவா இங்க வந்தோம்”

என்று மிருதுளா நகையாடினாலும் அவள் கண்களிலும் அம்புஜம் கண்களிலும் கட கடவென கண்ணீர் உருண்டோடியது.  

“மிருதுமா பார்த்து பத்திரமா இருந்துக்கோ. டைம்முக்கு சாப்பிடு. மாப்ள அவள நல்லா பார்த்துக்கோங்கோ.”

என்று ஜன்னல் வழியாக கூறிக்கொண்டிருக்கையிலே வண்டி சற்று வேகம் எடுத்தது…

“அம்மா நீயும் பத்திரமா போயிட்டு வா. நாங்க அப்பா கிட்ட ஃபோன் பண்ணிச் சொல்லிடறோம். வேனுவோ அப்பாவோ வந்து உன்னை ஸ்டேஷன்ல இருந்து கூட்டிண்டு போவா. நாங்க நாளான்னைக்கு ஃபோன் பண்ணி உன்ட்ட பேசறோம்”

ரெயில் வண்டி இன்னும் வேகம் பிடிக்க…

இருவர் கண்களிலும் கண்ணீர் வழிவதிலும் வேகம் கூடியது. 

“பை மிருது”

“பை அம்மா”

என்று அந்த ப்ளாட்பாரம் எல்லை வரைச் சென்று அங்கே இருந்த பெஞ்சில் அமர்ந்து ரெயில் சென்ற வழியையே பார்த்து அழதவாறு அமர்ந்தாள் மிருதுளா. நவீன் அவளருகே அமர்ந்து

“ஹலோ மேடம் ரெயில் போயாச்சு நாம ஆத்துக்கு கிளம்பலாமா இல்லை இங்கேயே உட்கார்ந்துக்கலாமா”

கண்கள் முழுவதும் கண்ணீருடன் நவீனைப் பார்த்து

“உங்களுக்கு கிண்டலா இருக்கு இல்ல!!”

“அப்படி இல்ல மிருது. அம்மா வந்தா.. உனக்கு நல்லா ஹெல்ஃப்புல்லா இருந்தா. உன்னை நல்லா பார்த்துண்டா எவ்வளவு நாள் தான் உன் கூட மட்டுமே இருப்பா சொல்லு அங்கே வேனுவும் அப்பாவும் உங்க அம்மாவுக்காக வெயிட் பண்ணிண்டிருக்க மாட்டாளா. அம்மா அவாளையும் பார்த்துக்கணுமில்லையா. புரிஞ்சுக்கோ மா. கண்ணைத் தொடச்சுக்கோ எழுந்திரு வா ஆத்துக்கு போகலாம்”

மிருதுளா கண்களை துடைத்துக் கொண்டு இருவருமாக அங்கிருந்து கிளம்பி ஆட்டோவில் வீட்டிற்குச் சென்றாலும் அவளின் உள்ளம் தன் அம்மாவை நினைத்து தேம்பியது. இது திருமணமாகி முதல் கருவுற்ற எல்லா மகள்களுக்கும் உள்ளதே.

அந்த மாதம் ரெயில்வே ஸ்டேஷனுக்கு நான்கு தடவை ஆட்டோவில் சென்று வந்தது,  மிருதுளாவை ஆட்டோவில் மூன்று முறை செக்கப்புக்கு கூட்டிச்சென்றது அவளுக்காக பழங்கள் காய்கறிகள் என அதிகமாக வாங்கியது என செலவு சற்று எகிறிபோனது. அக்டோபர் மாத சம்பளமும் (காந்தி ஜெயந்தி விடுமுறையினால்) வர இன்னும்  மூன்று நாட்கள் இருந்தது. கையில் வெரும் பத்து ரூபாய் தான் மீதமிருந்தது. நவீன் அவன் மனைவிக்காக மாமியார் கேட்டுக்கொண்ட காய்கறிகள் பழ வகைகள், தின்பண்டங்கள் செய்வதற்காக எண்ணெய் என கணக்குப் பார்க்காமல் வாங்கிப் போட்டான். சாப்பாடு செய்வதற்கான பொருட்கள் காய்கறிகள் எல்லாம் மீதம் இருந்தன. 

அவர்கள் வீட்டிற்கு வந்து கொஞ்ச நேரம் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது குல்ஃபி வண்டி சத்தம் கேட்டதும் மிருதுளா நவீனிடம் வாங்கித் தரச்சொல்ல நவீனும் ஒரே ஒரு குல்ஃபி வாங்கி வந்தான். அதைப் பார்த்த மிருதுளா…

“ஏய் நவீ என்ன ஒண்ணு தான் வாங்கிருக்கேங்கள்.”

“ஏன் உனக்கு ரெண்டு வேணுமா. சொல்லு நான் போய் வாங்கிண்டு வந்துடறேன் அவன் தெரு முனைவரை தான் போயிருப்பான்”

“எனக்கில்லை பா உங்களுக்காக தான் கேட்டேன்”

“எனக்கென்னவோ இன்னைக்கு குல்ஃபி சாப்பிடறா மாதிரி இல்ல மிருது அதுனால தான் வாங்கலை. நீ சாப்டு மா. ஏய் மிருது வீ டிட் அ ப்ளன்டர்!!!”

“என்ன சொல்லறேங்கள் குஃல்பி வாங்கினதில் என்ன ப்ளன்டர்?”

“அட அது இல்லை. ச்சே!!! நீயாவது ஞாபகம் படுத்திருக்க வேண்டாமா?”

“எதைப் பத்தி பேசறேங்கள்ன்னே எனக்கு தெரியலை அப்பறம் எப்படி ஞாபகம் படுத்துவேன்?”

“உங்க அம்மா கிட்ட ஒண்ணுமே வாங்கிக் குடுக்கலை”

“என்ன வாங்கி கொடுக்கறதா இருந்தேங்களாம்!”

“ஏய்!!! ப்ளீஸ் சீரியஸா பேசறேன். அட்லீஸ்ட் ஒரு சுவீட் பாக்ஸாவது வாங்கி குடுத்தனுப்பிருக்க வேண்டாமா?”

“ஓ!!! அமாம் நானும் மறந்தே போய்யிட்டேன். பரவாயில்லை விடுங்கோ என் ஃபேமிலி மெம்பர்ஸ் எதையும் எதிர் பார்த்து செய்யறவா கிடையாது…என் அப்பா அவர் தம்பியை படிக்க வச்சு வேலையும் வாங்கிக்கொடுத்தா ஆனா இதுவரைக்கும் எதுமே கேட்டதுமில்லை எதையுமே எதிர் பார்த்ததுமில்லை அதே போல தான் என் அம்மா வீட்டு ஆட்களுக்கும் எல்லாருக்கும் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பினால் மட்டுமே இரண்டு பேரும் செஞ்சா…இப்போ எனக்கு செய்யறா இது அதைவிட இரட்டிப்பு அன்பினால் “

“அவா எதிர் பார்ப்பான்னு இல்ல மிருது நாமளா வாங்கி குடுத்திருக்கனும்ன்னு சொல்லறேன்”

“நோ ப்ராப்ளம் நவீ. அம்மா, அப்பா அன்ட் வேனுவிடம் நான் ஃபோனில் பேசும் போது சாரி சொல்லிக்கறேன். அவா எல்லாம் எதுவுமே தப்பா நினைக்க மாட்டா…நீங்க கவலைப் படாதீங்கோ”

நவீனுக்கு அப்படி செய்ய தவறியதில் வருத்தமாகவே இருந்தது. ஆனால் ஞாபகம் இருந்திருந்தாலும் காசுக்கு எங்கே போயிருப்பான்? அதனாலோ என்னவோ கடவுள் அவனைமறக்கச் செய்துள்ளார் என்றே நாம் எடுத்துக்கொள்வோமே. ஒரு குல்ஃபியின் விலை ஐந்து ரூபாய். இரண்டு வாங்கினால் கையில் காசே இல்லாமல் போய்விடுமே என்று மிருதுளாவிற்கு மட்டும் வாங்கிக்கொடுத்தான் நவீன். இந்த நிலையில் எங்கிருந்து எப்படி சுவீட் வாங்கிருப்பானோ!!!! 

மிருதுளா குல்ஃபி சாப்பிட்டு விட்டு இருவரும் உறங்குவதற்காக படுத்துக்கொண்டனர். நவீன் அன்று முழுவதும் ஆபீஸ், க்ளாஸ், ரெயில்வே ஸ்டேஷன் என அலைந்ததில் படுத்ததும் தூங்கிப்போனான். மிருதுளாவிற்கு தன் அம்மாவின் நினைப்பினாலும், இனி எப்படி தன்னைத்தானே பார்த்துக்கொண்டு நவீனுக்கும் வேண்டியதை செய்ய போகிறோமோ என்ற எண்ணத்தினாலும்  ரொம்ப நேரம் புரண்டு புரண்டு படுத்தும் நான்கு முறை பாத்ரூம் சென்று வந்தும்… நள்ளிரவு தாண்டியே தூங்கினாள்.

மிருதுளா தன் அம்மா வந்ததினாலும் அவளின் உடல் அசதி, வாந்தி போன்ற உடல் உபாதைகளினாலும் அந்த மாத கணக்கு வழக்கில் துளியும் நாட்டம் காட்டாமல் இருந்ததாள். அவள் நவீனிடம் இருப்பது பத்து ரூபாய் தான் என்பதை அறியாதிருந்தாள். அதை நவீனும் அவளிடம் சொல்லி வருத்தப்பட வைக்க விரும்பவில்லை. ஆனால் மிருதுளாவிடம் சொல்லாமல் ஐந்தே ரூபாயில் எப்படி மீதமுள்ள மூன்று நாட்களை கடக்கப் போகிறான் நவீன்?

தொடரும்……

மனதில் வருத்தம், கண்களில் கண்ணீர் நடையில் வேகம் என சென்றுக் கொண்டிருந்த மிருதுளாவின் பின்னால் வேகமாக நடந்தும் ஓடியும் அவளை பிடிக்க சென்றான் நவீன்.  அவள் நேராக வீட்டின் வாசலில் சென்று அமர்ந்தாள். ஒரு இரண்டு நிமிடங்களில் நவீனும் வீட்டிற்கு வந்து சேரந்தான். வாசலில் அமர்ந்திருந்த மிருதுளாவிடம்..

“ஏய் என்ன மிருது இவ்வளவு வேகமா நடந்துண்டேயிருக்க. நான் வர்றேனா இல்லையான்னு கூட பார்க்காம நீ பாட்டுக்கு வந்துண்டிருக்க!! என்ன ஆச்சு ஏன் இப்போ உன் கண்லேருந்து கண்ணீர் வர்றது? சரி ஆத்துக்குள்ள ஃபர்ஸ்ட் வா.”

என்று கதவைத் திறந்தான் நவீன். மிருதுளா வேகமாக வீட்டினுள் நுழைந்து நேராக கட்டிலில் சென்று படுத்துக் கொண்டாள். என்ன நேர்ந்தது என்று புரியாமல் “என்ன ஆச்சு?” என்ற கேள்வியை அவளிடம் இரண்டு மூன்று முறை கேட்டும் பதில் இல்லாததால் நவீனும் பேசாமல் அவளருகே அமர்ந்தான்.  சிறுது நேரம் மௌனத்திற்கு பிறகு எழுந்து நவீனைப் பார்த்து …

“ஏன் நவீ நான் கன்சீவ் ஆனதில் உங்களுக்கு சந்தோஷம் தானே?”

“இது என்ன கேள்வி மிருது?”

“ப்ளீஸ் சொல்லுங்கோ”

“ஆஃப்கோர்ஸ் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் தான். நானும் அப்பா ஆக போறேன்னு எனக்கு சந்தோஷம் இருக்காதா என்ன! இப்போ ஏன் உனக்கு சடன்னா இப்படி ஒரு டவுட்டு”

“இல்ல இன்னிக்கு நான், நீங்க, என் பேரன்ட்ஸ் எல்லாருமே அந்த செய்திக்காக எதிர்ப்பார்த்து தெரிஞ்சதும் எவ்வளவு ஹாப்பியானோம் … இவ்வளவு ஏன் அதை சொல்லும் போது டாக்டரும் கூட எவ்வளவு சந்தோஷமா சொன்னா… எல்லாருக்கும் மகிழ்ச்சி கொடுத்த விஷயம் ஏன் உங்க ஆத்துல யாருக்குமே பிடிக்கலை?”

“ஆமாம் நானும் கவனிச்சேன் ஏதோ சொல்லனுமேன்னு “சந்தோஷம்ன்னு” சொன்னா…அதுக்கு நீ ஏன் கவலை படணும்? ஏன் கண்கலங்கின?”

“அதோட நிப்பாட்டிருந்தா எனக்கும் பெரிசா சங்கடம் இருந்திருக்காது ஆனா உங்க அம்மா வெடுக்குன்னு …”

“என்ன சொன்னா ? அதை தானே அப்போலேந்து கேட்டுண்டிருக்கேன்!”

“”என்னத்துக்கு  இவ்வளவு அவசர பட்டே” ன்னு கேக்கறா!!! எனக்கு எப்படி இருந்திருக்கும் சொல்லுங்கோ. எந்த ஒரு அப்பா அம்மாவும் அவா தாத்தா பாட்டி ஆக போறான்னா சந்தோஷமா தான் ஃபீல் பண்ணுவா ஆனா இவா என்னடான்னா என்னத்துக்குன்னு கேட்கறா. உங்க ரம்யா சித்திக் கூட நாம ஃபர்ஸ்ட் டைம் போனபோது ப்ளானிங் ன்னு எல்லாம் குழந்தைய தள்ளிப் போடாதீங்கோ மாக்ஸிமம் ஒரு ஆறு மாசம் நம்மளுக்குன்னு எடுத்தா போறும்ன்னு சொன்னா தெரியுமா!! உங்க அம்மாக்கு நான் பிடிக்காத மாட்டுப்பொண்ணாவே இருந்துட்டுப் போறேன் ஆனா எப்படி அவா பேரக் குழந்தை வரப்போறத கூட என்னை அசிங்க படுத்தவே யூஸ் பண்ணறா…ச்சீ …என்னை வந்த நாள்லேருந்து என்னென்னவோ சொல்லிருக்கா … நான் எதையாவது உங்ககிட்ட வந்து சொல்லிருக்கேனா? இல்லை அவா கிட்டதான் சண்டைக்கு போனேனா? இத என்னால தாங்க முடியலை…இப்படியுமா பழிவாங்கறதுக்காக பேசுவா? நான் அப்படி என்ன தான் அவாளுக்கு செய்துட்டேன்?  எனக்கு ஆற மாட்டேங்கறது!!!” 

“அது ஒண்ணுமில்லை நான் உன்னை கல்யாணம் பண்ணிண்டது அவாளுக்கு பிடிக்கலை. அவா உன்னை வேண்டாமன்னு சொல்லியும் நான் உன்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லி அத செய்தது அவாளுக்கு கோபம். சொன்னா சொல்லிட்டுப் போறா விட்டுத்தள்ளு மிருது. நாம சந்தோஷமா இருக்கோமா அது தான் முக்கியம் புரிஞ்சுதா!!”

“அதெல்லாம் உங்களுக்குள்ள அதுல என் தப்பு என்ன சொல்லுங்கோ? நாம என்ன லவ் பண்ணியா கல்யாணம் பண்ணிண்டோம்? என் மேல ஏன் அந்த வெறுப்ப கொட்டணும்? எப்படி அப்படி ஈசியா விட்டுட சொல்லறேங்கள் நவீ ? ஏதாவது மூணா மனுஷா சொல்லிருந்தா விட்டுடலாம் ஆனா சொன்னது உங்க அம்மா …இந்த வலி என் வாழ்நாள் முழுவதும் இருக்கும் நவீ”

“புரியறது மிருது சொல்லிட்டா இப்போ அள்ளவா முடியும்?”

“அவாளால அள்ளவும் முடியாது என்னால மறக்கவும் முடியாது. அவா சொல்படி நான் அவசரப்பட்டு  வந்த என் குழந்தையைப்  பத்தி இனி நான் அவா கிட்ட எதையுமே ஷேர் பண்ணமாட்டேன். நீங்களும் என்னை சொல்ல சொல்லி வற்புறுத்தக் கூடாது. ஓகே வா?”

“அவா அப்படி பேசி அவா உரிமைய இழந்துட்டா ஸோ நான் உன்னை வற்புறுத்த மாட்டேன். நீ மொதல்ல கண்ணை தொட மிருது. அழறத நிப்பாட்டு ப்ளீஸ்”

“ஓகே ஓகே”

வெளியே குல்ஃபி வண்டி மணி ஓசை கேட்டதும் …

“உன் ஃபேவரைட் வண்டி வந்துடுத்து மிருது. என் வீட்டு பெரிய குழந்தை அழறதேன்னு குல்ஃபிகாரன் நம்ம ஆத்து வாசலேருந்து நகராம இங்கேயே நிக்கறான் பாரேன் !!! நாம வாங்காம நகர மாட்டான் போல….இரு நான் போய் ரெண்டு குல்ஃபி வாங்கிண்டு வந்துடறேன்”

“இரண்டு கேசர் குல்ஃபி குடுப்பா. நாளைலேருந்து இப்படி இங்கேயே நின்னா நாங்க வாங்குவோம்ன்னு நினைக்காதே சரியா. வேணும்னா நாங்களே வாசலில் நிப்போம்.”

“இந்தா மிருது உனக்கு பிடிச்ச கேசர் குல்ஃபி”

“என்ன குல்ஃபி குடுத்து ஐஸ்ஸா!!!” 

“அச்சசோ அதெல்லாம் ஒண்ணுமில்லைமா… ஏதோ அவன் இந்த நேரம் பார்த்து வந்தான் …சரி உனக்கும் பிடிக்குமேனுட்டு வாங்கினேன். குல்ஃபி குடுத்து குழந்தை அழறத நிப்பாட்டலாமேன்னு ஒரு நல்ல எண்ணத்தில் தான் வாங்கினேன்”

“எந்த குழந்தை அழறதாம் இங்க?”

“ம்….என் மாமியார் அம்புஜத்தின் குழந்தை மிருது பாப்பா தான் வேற யாரு?”

“ம்…ம்… அப்படியா அப்போ இந்த பாப்பா சாப்பிட்ட குல்ஃபி ஐஸ் குச்சியை பாப்பாக்கிட்டேருந்து வாங்கிண்டு போய் டஸ்ட்பின்ல போடுங்கோ பார்ப்போம்” 

“போட்டுட்டா போச்சு!! அதுக்கு பாப்பா எனக்கு ஒரு உம்மா தருமாமே”

“ஐய்யே அதை எல்லாம் உன் பொண்டாட்டி மிருதுளான்னு இருக்கா ல அவகிட்ட கேளு போ போ”

ஹா! ஹா! ஹா! ஹா! ஹா! ஹா! 

என இருவருமாக சிரித்து நடந்ததை சற்று மறந்து உறங்கினார்கள். 

செவ்வாய்க்கிழமை விடிந்ததும் வழக்கம் போல் நவீன் ஆபீஸுக்கு கிளம்பினான். அப்போது மிருதுளா..

“என்னப்பா நீங்களும் ஆபீஸுக்கு போயிட்டா வீடே வெறுச்சோடி இருக்குமே”

“நல்லாருக்கே அதுக்காக நான் லீவெடுக்க முடியுமா பெண்ணே!!! சரி நீ ஒழுங்கா சாப்பிடு. மாத்திரையை கரெக்டா போட்டுக்கோ. நான் வரட்டுமா. நீ டிவி பாரு இல்லாட்டி உன் படிப்பை கன்டின்யூ பண்ணு. கீப் யுவர் செல்ஃப் பிசி. ஓகே வா. சிரிச்ச முகத்தோட வழியனுப்பு மிருது. இந்த உம்மு மூஞ்சி உனக்கு செட் ஆகலை”

“ஈ.ஈ.ஈ.ஈ.ஈ.ஈ போறுமா”

“அம்மாடியோ இது கொஞ்சம் ஓவரா இருக்கே”

“சரி சரி பத்திரமா ஆபீஸ் போயிட்டு வாங்கோ. பை நவீ”

“பை மிருது டேக் கேர்”

நவீன் ஆபீஸ் சென்றதும் கதவை தாழிட்டு உள்ளே வந்தவளுக்கு தனது அம்மா அப்பா தம்பிகள் எல்லாரும் அமர்ந்திருப்பது போல தோன்ற சற்று கண்ணில் கண்ணீர் வடிந்தது. வேகமாக அதை துடைத்துக்கொண்டு அடுப்படிக்குள் சென்று வேலைகளை முடித்து பின் குளித்து சற்று நேரம் படித்துக்கொண்டே உறங்கிப்போனாள். சட்டென பசியால் கண்விழித்து பார்த்தாள் மணி இரண்டாகியிருந்தது. மெல்ல கட்டிலில் இருந்து இறங்கி சென்று சாப்பாடு சாப்பிட்டு பின் டிவியை போட்டாள் அதில்  திரைப்படம் ஒடிக்கொண்டிருந்தது. அப்படியே தலையணையை தரையில் போட்டு படுத்தவாறே திரைப்படத்தைப் பார்த்து முடிக்கவும் மணி நாலாகவும் சரியாக இருக்க எழுந்து முகம் கை கால் கழுவி விளக்கேற்றி வாசல் கதவைத் திறந்து வைத்து வெளிய வாசல் படியிலிருந்து  கேட் வரை நடந்துக்கொண்டே நவீனுக்காக காத்திருந்தாள். அப்போது பக்கத்து வீட்டு லதா மிருதுளாவிடம்..

“என்ன மிருதுளா ஹஸ்பன்ட்டுக்காக வெயிடிங் ஆ!!”

“ஆமாம் லதா அக்கா.”

“என்ன முகமெல்லாம் பிரகாசமா இருக்கே. எனி குட் நியூஸ் மிருதுளா?”

“ஆமாம் லதா அக்கா  நான் கன்சீவ் ஆகிருக்கேன்”

“வாவ்!! வாழ்த்துக்கள்” 

“அம்மா அம்மா என்னோட ரெக்கார்ட் புக்க பார்த்தயா நான் டியூஷன் போறதுக்கு நேரமாச்சு”

“சரி மிருதுளா நாம அப்பறம் பேசலாம் அவன டியூனுக்கு அனுப்பனும் நான் வரேன். டேக் கேர்”

“ஓகே லதா அக்கா”

“ஹேய் மிருது வாசல்ல என்ன பண்ணிட்டு இருக்க?”

“உங்கள் வரவுக்காக தான் வெயிட்டிங்”

“இரு பைக்கை நிப்பாட்டிட்டு வந்துடறேன்”

“வாங்கோ. இந்தாங்கோ காபி. இன்னைக்கு ஏன் லேட்? க்ளாஸ் வேற போகணுமில்லையா!”

“ஆமாம் மிருது இன்னைக்கு கொஞ்சம் வர்க்லோடு அதிகம் அதுதான் லேட் ஆயிடுத்து. க்ளாஸுக்கும் நேரமாகிடுத்து. எப்பவும் போல காபி சூப்பர். நான் க்ளாஸுக்கு போயிட்டு வரேன் பத்திரமா இரு. பை”

“ஓகே பை”

க்ளாஸ் முடிந்து வந்ததும் இருவருமாக இரவுணவு உண்டபின் கணக்கு பார்க்க அமர்ந்தனர்‌. ஊரிலிருந்து வந்தவர்களை வெளியே கூட்டிக்கொண்டு சென்றது, சுற்றுலா ஏற்பாடு செய்தது,  அவர்களுக்கு டிரஸ் எடுத்துக்கொடுத்தது மற்றும் அவர்களுடன் வெளியே சாப்பிட்டது என எல்லாவற்றையும் கூட்டி அவற்றை கையிருந்த பணத்திலிருந்து கழித்தால் கையில் மீண்டும் ஐநூறே மிஞ்சியது. அதுவும் அது ஜூலை மாத ஆரம்பம் தான் ஆகியிருந்தது. 

ஒரு மாதம் அவர்கள் அந்த ஐநூறில் தான் குடும்பத்தை ஓட்ட வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கையிலே மிருதுளா அடுப்படிக்குள் சென்று ஒரு ஐநூறு ரூபாய் எடுத்து வந்தாள். எங்கிருந்து வந்தது அந்த ஐநூறு என நவீன் கேட்க அது தனது அப்பாவும் அம்மாவும் ஊருக்கு செல்லும்முன் வற்புறுத்தி அவள் கையில் திணித்த பணம் என்றும் அதை அஞ்சறைப் பெட்டியினுள் போட்டு வைத்தது ஞாபகம் வந்ததென்றும் கூறி நவீனிடம் கொடுத்து …

“மளிகை ஜாமான்கள் மீதமிருக்கு மாதாமாதம் வாங்குவது போல வாங்க வேண்டியிருக்காது. காய்கறிகள் அப்பா வாங்கி ஃப்ரிட்ஜில் வைத்தது ஒரு இரண்டு வாரததுக்கு வரும்… ஆக வெளியே செல்வது சாப்பிடுவதை மட்டும் அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்தால் போறும்… என்ன சொல்லறேங்கள் நவீ”

“ஓகே நீ சொன்னா அதுக்கு அப்பீலே கிடையாது மேடம். அப்படியே ஆகட்டும். ஆனா அதுக்காக உனக்கு ஏதாவது சாப்பிடனும்னு தோணித்துன்னா காசில்லையேன்னு எல்லாம் யோசிக்காம கேட்கனும் சரியா”

“ஷுவரா கேட்கறேன்”

ஜூலை மாதத்தை மிகவும் ஜாக்கிரதையாக செலவழித்து கழிக்க முடிவெடுத்து அதுபடியே நடந்துக்கொண்டனர் இருவரும். ஆகஸ்டு மாதம் வந்தது கையில் மீதமிருந்தது முன்னூறு ரூபாய். அந்த மாதம் சம்பளம்  எல்லா பிடிப்பும் போக ஐயாயிரம் வந்தது. ஆனால் அந்த மாதம் எல்லா மளிகையும் அரிசி உற்பட வாங்க வேண்டியிருந்தது. பால், காய்கறி, பழங்கள், என எல்லா செலவுகளும் போக கையிருப்பு அதே ஆயிரம் தான். அந்த மாதம் திருமணத்திற்கு பின் முதல் முறை இருபதாம் தேதி மிருதுளாவின் பிறந்தநாள் வந்தது. அதற்கு அவளுக்கு விலைவுயர்ந்த பரிசுப் பொருள் வாங்கிக்கொடுக்க மனமிருந்தும் பணமில்லாமல் போனது நவீனுக்கு.  அன்றைய தினம் அவளை கோவிலுக்கு கூட்டிச் சென்று தலைநிறைய பூ வாங்கிக் கொடுத்து வைத்துக்கொள்ளச் செய்து வீட்டுக்கு வந்ததும் அவளுக்கென அவளுக்கு பிடித்த ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் ஒரே ஒரு பீஸ் மட்டும் வாங்கிக்கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெறிவித்தான் நவீன்….மிருதுளாவும் மகிழ்ச்சியாக அதை கட் செய்து நவீனுக்கு ஒரு பீஸ் ஊட்டிவிட்டு தானும் சாப்பிட்டாள். அதைப் பார்த்த நவீன்…

“ஏன் ஒரே ஒரு பீஸ் கேக் தான் வாங்கிருக்கேங்கள்ன்னு கேட்க மாட்டியா மிருது. ஆர் யூ அப்செட் வித் மீ”

“நாட் அட் ஆல் நவீ. நம்ம நிதி நிலவரம் தெரிந்தும் நான் எப்படி அப்படி கேட்பேன்னு நீங்க நினைக்கலாம்?  உங்க கிட்ட நிறைய பணமிருந்து எனக்கு செய்யலைன்னா கேட்டிருப்பேன். நாம ரெண்டு பேருமா தானே வரவு செலவெல்லாம் பார்த்துக்கறோம் அப்புறம் என்ன கேள்வி இது”

“சரி சாரி”

“என்னது”

“ஓகே மை சாரி வாப்பஸ் வாங்கிக்கறேன். இப்போ நாம ரெண்டு பேருமா நம்ம கேன்டீன் பக்கத்துல இருக்கற டாபாக்கு போய் டின்னர் சாப்பிடலாம் வா”

“ஆர் யூ ஷுவர் அபௌட் ஹாவிங் டின்னர் அவுட் சைட்?  நவீ!!”

“அதுக்கு வேணும்ன்னு தான் நான் கேக்கை கட் ஷாட் பண்ணிட்டேன். வா போயிட்டு வந்துடலாம்”

இருவருமாக சென்று உணவருந்தியதும் நவீன் …

“ஹேய் மிருது உங்க அப்பா அம்மாட்ட பேசணுமா”

“பேசலாம் ஆனா”

“என்ன ஆனா. வா பேசிட்டே போகலாம். மீட்டர்ல ஒரு கண்ணு வச்சுக்கோ எழுபத்தி அஞ்சு ரூபாய் வரைக்கும் நோ ப்ராப்ளம்”

“எனக்கே வா…ஓகே ஓகே நான் பார்த்துக்கறேன்.”

என கூறி அந்த கண்ணாடி ரூமிற்குள் சென்று பேசலானாள். சரியா ஐம்பது ரூபாயை எட்டியதும் பை சொல்லி ஃபோனை கட் செய்து வெளியே வந்து…

“உங்களை விசாரிச்சதா சொல்ல சொன்னா”

“இன்னும் இருபத்தி அஞ்சு ரூபாய்க்கு பேசிருக்கலாமே ஏன் அவசரம் அவசரமா கட் பண்ணிட்ட?”

“என்னத்த அதே தான் …பத்திரமா இரு, ஒழுங்கா சாப்பிடு, உடம்பை பார்த்துக்கோ இப்போ நீ தனி ஆள்ளில்லை இரண்டு பேருக்கு சாப்பிடனும்ன்னு சொன்னா எல்லாரும் நல்லாயிருக்காலாம் நாமும் நல்லா இருக்கோம்ன்னு சொன்னேன் அவ்வளவு தான் மீதி நேர்ல பார்க்கும் போது பேசிக்க வேண்டியது தான்”

“ஓ ஓகே தென் வீட்டுக்கு போகலாமா?”

“எஸ் போகலாம்”

அன்றிரவு தூக்கத்தில் மிருதுளா எழுந்து நவீனிடம் சாதமும் அவியலும் வேணுமென்று சொல்ல நவீன் செய்வதறியாது மறுநாள் விடிந்ததும் செய்து தருவதாக சொல்லி தண்ணீர் குடிக்க வைத்து அவளை தூங்க வைத்தான். 

மறுநாள் காலை எழுந்து காபி குடித்ததும் வாந்தி எடுத்தாள் மிருதுளா. அதைப் பார்த்ததும் என்ன ஆச்சோ ஏதாச்சோ என்று பயந்துப் போனான் நவீன் அப்போது டாக்டர் சொன்னது அவனுக்கு ஞாபகம் வந்தது உடனே அவள் நெற்றியை பிடித்துக் கொண்டான். இதே போல் காலை காபி குடித்ததும், குக்கர் திறந்ததும் என ஒவ்வொரு முறையும் வாந்தி எடுத்து எடுத்து எதுவும் சரியாக சாப்பிடாமலானாள் மிருதுளா. மகப்பேறு காலத்தின் ஆரம்ப கால பிரச்சனைகளைப் பார்த்த நவீன் அதை தனது ரம்யா சித்தியிடம் கூற அவரும் மிருதுளாவிற்கு பிடித்த இனிப்பு பலகாரம் எது என்று நவீனிடம் கேட்டு அதேபோல தெறட்டிப்பால் செய்து எடுத்துக் கொண்டு மிருதுளாவை பார்க்க வந்தார். 

“ஹை ரம்யா சித்தி வாங்கோ வாங்கோ. எவ்வளவு நாளாச்சு உங்கள பார்த்து”

“ஹேய் மிருதுளா வாழ்த்துக்கள். அம்மா ஆக போற. நவீன் நேத்து ஃபோன் பண்ணிருந்தான். ஆமாம் நீ சரியாவே சாப்பிடறதில்லையாம். என்ன யாம்…பார்த்தாலே தெரியறதே..ஆளு பாதியாகிருக்க. இங்க பாரு மிருது வாந்தி எல்லாம் அப்படி தான் வரும் அதுக்காக சாப்பிடாம இருக்கக் கூடாது புரியறதா. நீ இப்படி இருந்தா பாவம் நவீனுக்கு எவ்வளவு கஷ்டம்…புரிஞச்சுக்கோமா”

“ஓகே சித்தி டிரை பண்ணறேன். காபி யா டீ யா எது போடட்டும்”

“ஒண்ணும் வேண்டாம் இதோ இந்த ஐஸ் வாட்டர் போறும். நான் கிளம்பறேன் என் பொண்ணுகளும், சித்தப்பாவும் வீட்டுக்கு வர்ற நேரமாச்சு மா. நான் வரட்டுமா. நவீன்ட்ட சொல்லு. இன்னொரு நாள் நாங்க எல்லோருமா வர்றோம். பை”

நவீன் தனது மாமியாரிடமும் மிருதுளா படும் பாட்டை ஃபோன் போட்டு சொல்ல அம்புஜத்திற்கு இருப்பு கொள்ளாமல் தனது கணவன் மற்றும் மகனிடம் ….தான் குஜராத் சென்று மிருதுளாவை ஒரு மாசம் பார்த்துக்கொண்டு அவளுக்கு வேண்டியதை செய்து கொடுத்துவிட்டு வருவதாகவும் அந்த ஒரு மாதம் கணவரும் மகனும் அட்ஜஸ்ட் செய்யுது கொள்ளமுடியுமா என்றும் கேட்டாள்.  அதற்கு வேனு..

“அம்மா நாங்க ரெண்டு பேரும் இருந்துப்போம் நீ போய் மிருதுக்காவுக்கு என்ன வேணுமோ செய்து கொடும்மா நாங்க எங்களைப் பார்த்துக்கறோம் என்னப்பா உனக்கும் ஓகே தானே?”

“எனக்கும் ஓகே தான். ஆனா அடுத்த மாசம் என்ன பண்ணுவா”

“இந்த மாசம் தான் வாந்தி எல்லாம் ரொம்ப இருக்கும் அடுத்த மாசத்துக்கு அடுத்த மாசம் தீபாவளிக்கு இங்க வந்துடுவாளே.”

“ஓ சரி சரி அப்போ எப்போ டிக்கெட் புக் பண்ணணும்?”

“வர்ற சனிக்கிழமை கிளம்பட்டுமா”

“சரி அப்போ சனிக்கிழமைக்கே புக் பண்ணிடுறேன். நாளைக்கு மாப்ளைக்கும் ஃபோன் போட்டு சொல்லிடறேன். நீ சம்மந்திட்ட சொல்லிடு”

“சரி அப்படியே செய்துடறேன். டேய் வேனு பத்திரமா இருடா. அவனுக்கு வேளா வேளைக்கு ஒழுங்கா சாப்பாடு கொடுங்கோ”

“அம்மா அதெல்லாம் நானும் அப்பாவும் பார்த்துக்கறோம். நீ நிம்மதி யா போய் அக்காவ பார்த்துக்கோ”

மறுநாள் காலை ராமானுஜம் நவீனின் ஆபீஸுக்கு ஃபோன் போட்டு உதவிக்கு அம்புஜம் புறப்பட்டு வருவதாக கூற அதற்கு நவீன் தனது நன்றியை தெரிவித்தான். அம்புஜம் பர்வததிற்கு ஃபோன் போட்டு தான் மீண்டும் குஜராத் செல்லவிருப்பதை கூற அதற்கு பர்வதம் ..

“இன்னும் ரெண்டே மாசம் கழிச்சா அவாளே வர்றப் போறா அப்புறம் என்னத்துக்கு இப்போ போறேங்கள்?”

“இல்ல மாமி மிருதுக்கு வாந்தி, தல சுத்தல் எல்லாம் ஜாஸ்த்தியா இருக்காம். சரியா சாப்ட மாட்டேங்கறாளாம். மாப்ளைக்கும் லீவு போட முடியலையாம். இந்த ஒரு மாசம் மட்டும் போய் பார்த்துண்டுட்டு வந்திடலாம்ன்னு இருக்கேன். பாவம் கொழந்தை எவ்வளவு கஷ்டப்படறாளோ.”

“அப்படி எதுவும் எங்ககிட்ட அவன் சொல்லலையே….சரி சரி நீங்க குஜராத் போயிட்டா அப்போ உங்காத்து மாமாவையும் வேனுவையும் யார் பார்த்துப்பா?”

“அவா ரெண்டு பேரையும்..அவாளே பார்த்துப்பா. ஒரு மாசம் தானே. நான் மிருது படற கஷ்டத்தை சொன்னதும் ரெண்டு பேருமே மொதல்ல போய் அவளப் பார்த்துக்கோன்னு தான் சொன்னா”

“ஓ அப்படியா. சரி எப்போ கி‌ளம்பறேங்கள்”

“வர்ற சனிக்கிழமை நைட். அதுதான் உங்ககிட்டயும் ஒரு வார்த்த சொல்லிடலாம்ன்னு ஃபோன் பண்ணினேன் மாமி. மாமா கிட்டயும் சொல்லிடுங்கோ.”

“சரி சரி போயிட்டு வாங்கோ உங்க பொண்ணாத்துக்கு. நான் ஃபோனை வச்சுடவா”

“சரி மாமி. உங்க புள்ளட்ட இல்ல மிருதுட்ட ஏதாவது சொல்லணுமா….”

என்று அம்புஜம் கேட்டதுக்கு பதில் ஏதும் கூறாமல் ஃபோனை கட் செய்தாள் பர்வதம். அதிலிருந்தே அம்புஜத்திற்கு புரிந்தது அவர்களுக்கு பிடிக்கவில்லை என்பது. ஆனால் அதை எல்லாம் பார்த்தால் தன் மகள் தான் கஷ்டப்படுவாள் என்று மனதில் எண்ணிக்கொண்டு ஃபோனை வைத்து விட்டு ஊருக்கு கிளம்ப தயார் ஆனாள். 

அன்று மாலை நவீன் ஆபீஸிலிருந்து வந்ததும் 

“மிருது….நீ சந்தோஷப் படறா மாதிரி ஒரு நியூஸ் கொண்டு வந்திருக்கேன்”

“என்னது நவீ?”

“வர்ற திங்கட்கிழமை காலை ல உன்ன பார்த்துக்க… உனக்கு பிடிச்சதெல்லாம் செய்து தர …ம்…ம்…நீ கேட்ட அவியல் செய்து தர உன் அம்மா இங்கே வரப் போறா”

“ஹேய் என்னப்பா சொல்லறேங்கள் நிஜமாவா!!”

“ஆமாம் இன்னைக்கு காலை ல உன் அப்பா ஃபோன் பண்ணிச் சொன்னார்”

“அப்போ அப்பாவையும் வேனுவையும் யார் பார்த்துப்பா? அம்மா இங்க வந்துட்டான்னா?”

“அவா ரெண்டு பேருமே அவாள பார்த்துக்கறோம்ன்னு சொல்லி உங்க அம்மாவை உனக்காக அனுப்பி வைக்கறா. தே ஆர் கிரேட்”

“ஒரு பக்கம் அம்மா வராளேன்னு சந்தோஷமா இருந்தாலும் …. அப்பாவையும் வேனுவையும் நினைச்சா பாவமாயிருக்கு”

“லெட்ஸ் வெயிட் ஃபார் மன்டே”

சனிக்கிழமை வந்தது அம்புஜத்தை ரெயிலில் ஏற்றி விட்டனர் ராமானுஜமும் வேனுவும். அதுவரை தனியாக எந்த வெளி மாநிலத்துக்கும் (வெளியூருக்கு கூட) பிரயாணம் செய்திராத அம்புஜம் ஏதோ பெண்ணை பார்க்க வேண்டும் அவளுக்கு பிடித்ததை எல்லாம் செய்துக் கொடுத்து அவளை தேற்ற வேண்டுமென்ற ஆசையில் ரெயில் ஏறிவிட்டாள். ரெயிலும் புறப்பட்டது. 

தொடரும்….

காலை சூரியனின் கதிர்களில் ஒன்று மிருதுளாவின் இமைகளை தட்டி திறந்து கண்களால் தன்னைப் பார்க்கும் படி மிகவும் தொந்தரவு செய்ய அவளும் அதிலிருந்து நகர்ந்து படுத்தும்போர்வையை கொண்டு முகத்தை மூடியும் உறக்கத்தை தொடர நினைத்து கடைசியில் சூரியக்கதிரிடம் தோற்றுப்போய் விழித்து கடிகாரத்தைப் பார்த்தாள். மணி எட்டு காட்டியது. விரைந்து எழுந்தாள். கட்டிலின் எதிரில் தரையில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த நவீனிடம்….

குட் மார்னிங் நவீ. என்னப்பா என்னை எழுப்பிருக்கலாம் இல்லையா!! மணி எட்டாச்சே

ஸோ வாட்? நீ நல்லா தூங்கிண்டிருந்த அதனால எழுப்பலை…இப்போ அப்படி சீக்கிரம் எழுந்து என்ன பண்ணணும் உனக்கு?”

இல்ல இவ்வளவு நேரம் தூங்கிட்டேனேன்னு இருக்கு

இட்ஸ் ஓகே மிருது. நீ போய் ப்ரஷ் பண்ணிட்டு வா காபி போட்டுத் தர்றேன்.

நீங்க குடிச்சாச்சா?”

ஓ! குடிச்சிட்டேன்

ப்ரஷ் செய்து முகம் கழுவி விட்டு டவலில் முகத்தைத் துடைத்துக் கொண்டே …

நவீ நீங்க எப்போ எழுந்துண்டேங்கள்?”

நான் ஒரு ஏழு மணிக்கு எழுந்து கொஞ்ச நேரம் சும்மா படுத்துண்டே இருந்துட்டு அப்பறம் ஏழரைக்கு கட்டிலை விட்டு இறங்கி ஃப்ரெஷ் ஆகி காபி போட்டு குடிச்சிட்டு நியூஸ் பேப்பர் படிக்க உட்கார்ந்தேன் நீ எழுந்துண்ட்ட. சரி சரி இந்தா என் காபி குடிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லு

என்னமோ ஃபர்ஸ்ட் டைம் போடறா மாதிரி கேட்கறேங்கள்!

ஒவ்வொரு தடவையும் கேட்டா என்ன தப்பு. ஏன் நீ சொல்ல மாட்டியா?”

ஓகே ஓகே!!! இருங்கோ குடிச்சுட்டு சொல்லறேன்

அப்படி வா வழிக்கு

சூப்பரா இருக்கு நவீ. தாங்க்ஸ்….ஊப்ஸ் தாங்க்ஸ் வாப்பஸ் வாங்கிக்கறேன்

சரி இன்னைக்கு நாம வெளில போகலாமா?”

எங்க போகணும். எனக்கு என்னவோ ரொம்ப சோம்பலா இருக்கு. இன்னைக்கு வேண்டாமே. சாயந்தரமா ஒரு வாக் போகலாம் என்ன சொல்லறேங்கள்?”

டன். காலை ல டிஃபன் என்ன?”

என் அம்மா இருந்திருந்தா இந்த நேரம் ப்ரேக் ஃபாஸ்ட் ரெடி ஆகிருக்கும்…ம்..‌என்ன பண்ண!! மாவு இருக்கு தோசை சுடவா? கொத்தமல்லி சட்னி ஃப்ரிட்ஜில் இருக்கு. அத தொட்டுண்டு சாப்பிடலாம்.

நான் சுட்டுத் தரட்டுமா தோசையை?”

நீங்க இதுக்கு முன்னாடி தோசை சுட்டுருக்கேங்களா?”

இல்லை

அப்போ ஏன் விஷப் பரீட்சை. எனக்கு பசி வேற அதனால நானே ரெண்டு பேருக்கும் தோசையை வார்த்து எடுத்துண்டு வரேன் அதுவரை நீங்க உங்க நியூஸ் பேப்பரை படிங்கோ..

மிருதுளா தோசையை வார்த்து தட்டிலிட்டு நவீனிடம் கொடுத்தாள். அவனும் செய்தித்தாள் படித்தவாறே தோசையை உண்டான். நான்கு சாப்பிட்டதும் போதும் என எழுந்து தட்டை அடுப்படியில் பாத்திரங்கள் கழுவும் தொட்டியில் போட போனபோது மிருதுளா அவனிடமிருந்து தட்டைவாங்கி அதில் அவளுக்கான மூன்று தோசையை சுட்டு போட்டுக் கொண்டு வந்து ஹாலில் அமர்ந்து சாப்பிடும் போது நவீன் அவளிடம்…

ஏய் மிருது தட்டை அலம்பி தந்திருப்பேன் ல.

ஏன் நீங்க சாப்ட்ட தட்டை அலம்பாம சாப்ட்டா என்ன ஆயிடுமாம்? அட போங்கோப்பா எனக்கு பாத்திரம் கழுவுவதில் ஒரு தட்டு குறையுமோ இல்லையோ அதுக்குத்தான்.

ஓகே

ஆமாம் தலையில ஏன் துண்டால முண்டாசு கட்டிருக்கேங்கள்? எழுந்ததும் பார்த்தேன் அப்பவே கேட்கனும்ன்னு நினைச்சேன் மறந்துட்டேன்

அது வந்து மிருது

ஏன் இழுக்கறேங்கள். என்ட்ட சொல்ல என்ன தயக்கம் உங்களுக்கு? சொல்லுங்கோ

நான் ஹேர் டிரான்ஸ்ப்ளான்ட் பண்ணிருக்கேன்னு உன்னை பொண் பார்க்க வந்த போதே சொன்னேன் இல்லையா?”

ஆமாம் ஆமாம் யூ நோ ஒன் திங் நவீ. நான் சொல்ல மறந்தே போயிட்டேன். ஒரு ஜோக்.

என்ன சொல்லற மிருது

என் அம்மா என்ட்ட உங்க ஹேர் பத்தி கேட்டா. அவாளுக்கு என்னன்னு புரியாததால் அது என்னமோ பிரச்சினைன்னு நினைச்சுண்டு அதால எந்த பாதிப்பும் இல்லையேன்னு என்ட்ட கேட்டா பாருங்கோ!!! என்னால சிரிப்ப அடக்கிக்கவே முடியலை. அப்பறம் சொல்லிப் புரிய வைத்தேன்…சரி அதுக்கும் இந்த முண்டாசுக்கும் என்ன சம்மந்தம்

நான் அதை ரிமூவ் பண்ணி க்ளீன் பண்ணி வச்சிருக்கேன் அதனால தான் துண்டை முண்டாசு மாதிரி கட்டிண்டிருக்கேன்

ஓகே அதை என்ட்ட ஏன் மறைக்கணும்? தலையிலிருந்து அந்த துண்டை கழட்டுங்கோ நான் பார்க்கட்டும்.

மெல்ல மனதில் ஒரு வகையான தாழ்வு மனப்பான்மையோடு துண்டை எடுத்தான் நவீன். உச்சந்தலையில் முடியில்லாத நவீனை அன்று தான் பார்த்தாள் மிருதுளா. அவளுக்கு நவீனின் தயக்கம் எதனால் என்பது புரிந்தது. முதலில் அவனிடமிருந்து அந்த எண்ணத்தை துடைத்தெறிய முடிவெடுத்து எதுமே வித்தியாசமாக தெரியாதது போல …

இதுக்கு ஏன் பா துண்டெல்லாம் கட்டிண்டு. என்ன கேட்டா இனி அந்த ஆர்ட்டிபிஷியல் ஹேர் எல்லாம் வேண்டாம். இப்படியே இருங்கோ. நீங்க இப்படி இருக்கறதால எனக்கு எந்த விதத்திலும் சங்கடமோ, பிரச்சினையோ துளி கூட கிடையாது. நீங்க எதையும் மறைக்காம என்கிட்ட இந்த விஷயத்தை சொல்லி என் விருப்பத்தை கேட்ட உங்களோட நேர்மைக்கு  தான் உங்களை கல்யாணம் பண்ணிண்டேன். ஸோ இனி இது தேவையில்லை சரியா! எதுவாக இருந்தாலும் நான் இருக்கேன் உங்களோட.

எனக்கு தெரியும் ஆனாலும்…..

என்னதுக்கு ஆனாலும் எல்லாம்..இந்த டிரான்ஸ்ப்ளான்ட்டை எப்போ பண்ணிண்டேங்கள்?”

உன்ன பொண் பார்க்க வர்றத்துக்கு ஒரு ஆறு மாசம் முன்னாடி தான் பண்ணிண்டேன்

அப்புறமென்ன எனக்கே ப்ராப்ளம் இல்லங்கும் போது வேற யாருக்காக யோசிக்கறேங்கள்?”

இல்ல மிருது உனக்காக தான் யோசிச்சேன் இப்ப நீயே வேண்டாம்னு சொன்னதுக்கு அப்புறம் இனி இது எனக்கும் தேவையில்லை. லவ் யூ மிருது

ஐ லவ் யூ டூ நவீ

அன்று நவீனின் தாழ்வு மனப்பான்மை உடைந்து சில்லு சில்லாக சிதறிப் போனது. அதுவரை தன் மனைவி என்ன நினைப்பாள், எப்படி எடுத்துக்கொள்வாள் என்றெல்லாம் நான்கு மாதங்களாக அவன் மனதை அறுத்துக் கொண்டிருந்த விஷயத்தை மிருதுளா சட்டென சர்வசாதாரணமாக துடைத்தெறிந்தது நவீனுக்கு சற்று வியப்பாக இருந்தாலும் அவன் மனதில் மிருதுளா கோபுரமாக உயர்ந்து நின்றாள். 

தனது வாழ்க்கைத் துணையாக இருப்பவர் /ள் என்ன நினைப்பார்களோ? இதை சொன்னால் என்ன செய்வார்களோ? எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்றெல்லாம் தனக்குத்தானே எண்ணிக் கொண்டு பலர் பல விஷயங்களை மனம் விட்டு பேசாமலே இருப்பதற்கு ஒன்று அவரவர் அடுத்தவர் மீதுள்ள அச்சம் காரணமாக இருக்கும் மற்றொன்று அந்த கூடயிருப்பவர்களும் ஒரு காரணம் ஆவர். கூடயிருப்பவர் தங்களின் துணைக்கு நம்பிக்கைக் கொடுக்க வேண்டும். எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொள்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும். அந்த சூழலும் நம்பிக்கையும் இவர்களுக்குள் உருவாக நான்கு மாதங்கள் எடுத்துள்ளது. 

கணவன் மனைவி அவர்களுக்குள் ஒரு விஷயம் ஒத்துப் போய் ஒரு முடிவெடுத்து ஒன்றை செய்தாலும் சுற்றிலுமிருப்பவர்கள் சும்மா இருப்பார்களா!!! 

அன்று மாலை இருவருமாக பேசிக்கொண்டே வாக்கிங் சென்றனர். மிருதுளா நவீனிடம்…

நேத்து நாம ரெயில்வே ஸ்டேஷன்ல இருந்து திரும்பியதும் அப்பா அம்மாட்ட ஃபோன்ல பேசினேங்களே அவாள்ட்ட சொன்னேங்களா பசங்களையும் என் அப்பா அம்மாவையும் ரெயில் ஏத்தி விட்டாச்சுன்னு? நான் அதப்பத்தி கேட்கவே மறந்துட்டேன் இப்போ இந்த ஃபோன் பூத் பார்த்ததும் தான் ஞாபகம் வந்தது. என்ன சொன்னா அவா?”

ஒண்ணும் சொல்லலை. சரின்னு சொன்னா அவ்வளவு தான்

என்ன பத்தி ஒண்ணும் கேட்கலையா?”

அப்பா மட்டும் கேட்டா. அதுக்கு நல்லா இருக்கன்னு சொன்னேன். வேற ஒண்ணும் நானும் சொல்லலை அவாளும் கேட்கலை

என்று பேசிக்கொண்டே நடக்கையில் வழியில் எதிரே நவீனின் நண்பன் சதீஷ் நவீனைப் பார்த்து…

ஹேய் நவீன் என்ன மறுபடியும் பழைய ஹேர் ஸ்டைலுக்கு போயிட்ட?”

எனக்கு இந்த நவீனை தான் பிடிச்சிருக்குன்னு நான் சொன்னதும் என் நவீன் அவரை மாத்திக்கிட்டார். ஒல்ட் ஈஸ் கோல்டு இல்லையா  சதீஷ்

வாவ் சூப்பர் மிருதுளா. சாரி மா நான் வழக்கம் போல அவனை கலாய்ச்சிட்டேன்.

அதனால என்ன சதீஷ். நீங்க அவரோட நண்பர் உங்களுக்கில்லாத உரிமையா. ஆனா அது உங்களுக்குள்ள மட்டும் இருந்தா நல்லாயிருக்கும் அவ்வளவு தான்.

டேய் நவீன் யூ ஆர் லக்கி டா.  சரி அம்மா அப்பா தம்பிங்க எல்லாரும் ஊருக்கு போயாச்சா?”

நேத்து தான் ரெயில் ஏத்தி விட்டோம் சதீஷ். நாளைக்கு காலை ல ஊர் ல ரீச் ஆவாங்க. உன் சொந்தக்காரங்க எல்லாரும் எப்போ ஊருக்கு கிளம்பறாங்க?”

எல்லாரும் அடுத்த வெள்ளிகிழமை கிளம்பறாங்க நவீன். சரி என் வைஃப் சில மளிகை சாமான்கள் வாங்கிட்டு வர சொன்னா நான் பாட்டுக்கு உங்க கூட அரட்டை அடிச்சுக்கிட்டு இருக்கேன். ஓகே நீங்க என்ஜாய் பண்ணுங்க நான் கிளம்பறேன் பா. பை நவீன் அன்ட் மிருதுளா

பை டா சதீஷ்

பை சதீஷ்

மீண்டும் நடையை தொடர்ந்த போது நவீன் மிருதுளாவின் வலதுகையை தனது இடது கையால் கோர்துப் பிடித்துக் கொண்டான். மிருதுளாவும் நவீனின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு நடந்தாள். அன்றிரவு மன அமைதி, நிறைவு இருவருக்குள்ளும் நிறைந்திருந்தது. 

திங்கட்கிழமை காலை விடிந்ததும் எழுந்து குளித்து, டிஃபன் சாப்பிட்டு ஹாஸ்பிடல் சென்று வர  தயார் ஆனார்கள் நவீனும் மிருதுளாவும் ஆனால் மணியோ எட்டு தான் ஆகியிருந்தது. ஆனாலும் இருவரும் கிளம்பி ஹால்பிடலுக்கு எட்டரை மணிக்கெல்லாம் சென்றனர். டாக்டர் ஒன்பதரை மணிக்கு தான் வருவார்கள் என தெரிய வர சற்று மனம் தளர்ந்து போனாள் மிருதுளா. அவளின் முகம் வாடியதைக் கண்ட நவீன்…

மிருது இன்னும் ஒரு ஃபார்டிஃபைவ் மினிட்ஸ் தானே டோன்ட் வரி.

என கூறிக்கொண்டிருக்கையில் டாக்டர் ரூமிலிருந்து மிருதுளா நவீன் என்று நர்ஸ் கூப்பிட உடனே எழுந்து உள்ளே சென்றனர். 

நீங்க தான் மிருதுளா வா?”

ஆமாம் சிஸ்டர். டாக்டர் வந்தாச்சா?”

இல்லை மா இன்னும் ஒரு ஹாஃபனார் ல வந்திடு வாங்க. அவங்க வர்றத்துக்குள்ள நீங்க போய் இந்த டெஸ்டெல்லாம் குடுத்துட்டு வாங்க. டாக்டர் நேத்தே உங்களுக்கு இதெல்லாம் எழுதி வச்சிட்டாங்க.

ஓ அப்படியா. சரி சிஸ்டர் இதெல்லாம் குடுக்க எங்க போகணும்?”

இப்படியே நேரா போயிட்டு ரைட் எடுங்க அங்க லேப் எல்லாம் இருக்கு அங்க சொல்லுவாங்க

ஓகே சிஸ்டர் தாங்க்யூ

மிருதுளா நர்ஸ் சொன்ன மாதிரியே டாக்டர் எழதிக் கொடுத்த எல்லா டெஸ்டும் கொடுத்துவிட்டு வந்தமர்ந்தாள். அப்போது நவீன்…

எல்லாம் ஆச்சா மிருது?”

எஸ் நவீ ஆல் டன்

ஓகே குட். டீ குடிக்கறயா?”

வேண்டாம் பா.

டாக்டர் வந்தார். மிருதுளா டாக்டரைப் பார்த்து புன்னகைத்தாள். டாக்டரும் தலையசைத்து விட்டு அவர் ரூமுக்குள் சென்றார். மிருதுளாவிற்கு பின் வந்தவர்களை நர்ஸ் ஒவ்வொருவராக அழைக்க நவீனுக்கு சற்று நிதானம் இழந்து  நர்ஸிடம் கேட்டான்…

என்ன சிஸ்டர் இப்ப வந்தவங்களை எல்லாம் உள்ளே அனுப்பறீங்க. நாங்க இங்க கிட்ட தட்ட மூணு மணி நேரமா உட்கார்ந்துட்டிருக்கோம் என் மனைவியை கூப்பிடவே மாட்டேங்கறீங்க

சார் உங்க மனைவி ரிப்போர்ட்ஸ் காக வெயிட் பண்ணறோம்

என்று நர்ஸ் சொல்லிக்கொண்டிருக்கையிலே கம்பௌண்டர் வந்து ஒரு கவரை நர்ஸிடம் நீட்டினார். அதைப் பார்த்ததும் நர்ஸ் நவீனிடம்..

இதோ ரிப்போர்ட்ஸ் வந்தாச்சு ஒரு ஃபைவ் மினிட்ஸ் இருங்க. உள்ள இருக்குற பேஷன்ட் போனதும் உங்க மனைவியை கூப்பிடுவாங்க

அதே போல மிருதுளா பெயரை கூப்பிட இருவரும் டாக்டர் ரூமிற்குள் சென்று அமர்ந்து டாக்டரைப் பார்த்துக் கேட்க நவீன் முயற்சிக்கும் போது டாக்டர் உடனே..

வாழ்த்துக்கள் நவீன் அன்ட் மிருதுளா இட்ஸ் கன்பார்ம்டு. உங்க இருவருக்கும் பெற்றோர் பிரமோஷன் கிடைத்திருக்கிறது.

தாங்க்ஸ் டாக்டர்”  என நவீனும் மிருதுளாவும் ஒருமித்து சொன்னார்கள்.

எல்லா ரிப்போர்ட்ஸையும் பார்த்தேன். எவ்ரிதிங் ஈஸ் ஃபைன். சில வைட்டமின் டாப்லெட்ஸ் எழுதறேன் அதை மட்டும் எடுத்துக்கோங்க மிருதுளா. நல்லா சத்தான ஆகாரம் சாப்பிடனும் சரியா. டேக் கேர் ஆஃப் ஹெர் நவீன். இனி நீங்க எப்பப்போ செக்கப் வரணும்ங்கறத நர்ஸ் ஒரு அட்டவணை ல எழுதிக் கொடுப்பாங்க அந்த டேட்ஸ் ல தவறாம செக்கப்புக்கு வந்திடணும் சரியா. பி ஹாப்பி ஆல்வேஸ்

மீண்டும் நன்றியை தெரிவித்து நர்ஸிடம் டாக்டர் சொன்ன அட்டவணையை வாங்கிக் கொண்டு ஹாஸ்பிடல் விட்டு வெளியே வந்ததும் நவீன் மிருதுளாவை சற்று நேரம் வண்டிப் பக்கத்தில் நிற்க சொல்லிவிட்டு கடைக்குச் சென்று வந்தான். பின் இருவருமாக வீட்டிற்கு வந்தனர். வீட்டினுள் நுழைந்ததும் நவீன் மிருதுளாவைப் பார்த்து…

மிருது வீ ஆர் கோயிங் டு பி பேரன்ட்ஸ் சூன். இந்தா உனக்கு ரொம்ப பிடிச்ச காட்பெரிஸ் டையரிமில்க் சாக்லெட்.

ஓ ஸோ சுவீட் ஆஃப் யூ நவீ. ஆமாம் எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் அம்மாகிட்ட சொல்லனும் போல இருக்கு.

ஆனா அவா ஆத்துக்கு போய் சேர இன்னும் அரைமணி நேரமாகுமே. யூ டோன்ட் வரி இன்னைக்கு நான் ஆபீஸ் போகலை. ஒரு மணி நேரம் கழிச்சு ஃபோன் பூத் போய் எல்லாருக்கும் சொல்லலாம் ஓகே

ஓகே. சரி எனக்கு காலை ல இருந்து ஒரு மாதிரி டென்ஷன் ஆனது ரொம்ப அசதியாயிருக்கு நான் கொஞ்ச நேரம் தூங்கட்டுமா?”

இது என்ன கேள்வி மிருது? தூக்கம் வர்றதுன்னா தூங்கு. நான் சமையலை பார்த்துக்கறேன்

இல்லை ஒரு மணி நேரத்துல எழுப்பிடுங்கோ போய் ஃபோன் பண்ணி சொல்லிட்டு வரலாம்

ஓகே ஓகே இப்போ நிம்மதியா சந்தோஷமா தூங்கு

மிருதுளா நன்றாக உறங்கினாள். ஒரு மணி நேரமானதும் நவீன் அவளை எழுப்ப முயன்ற போது அவனுக்கு மனம் வரவில்லை சாதாரண நாட்களிலேயே அவளை தொந்தரவின்றி தூங்க விடும் நவீன் அன்று அவளா எழுந்திரிக்கும் போது எல்லாருக்கும் சொன்னால் போதும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் ஏனெனில் அவள் மட்டுமா உறங்குகிறாள் அவளுள் அவன் பிள்ளையும் அல்லவா உறங்குகிறது. அவளை எழுப்பினால் இருவரும் எழுந்திடுவார்களே என எண்ணி அவனும் அவளருகே படுத்துறங்கிப் போனான். நவீன் உறங்கின சில மணி நேரத்தில் மிருதுளா எழுந்தாள். 

பக்கத்தில் நவீன் உறங்குவதைப் பார்த்தாள். கடிகாரத்தையும் பார்த்தாள். மணி இரண்டாகியிருந்தது. டைமை பார்த்ததும் அவளுக்கு பசி எடுக்க நவீன் ஏதாவது சமைத்து வைத்திருக்கிறானா என்று பார்க்க மெல்ல கட்டிலிலிருந்து இறங்கும் போது நவீன் விழித்துக் கொண்டான். 

மிருது எங்க போற?”

மணி என்ன ஆச்சு தெரியுமா? ரெண்டு ஆச்சு. எனக்கு பசிக்கறது.

ஊப்ஸ்…. நானும் உன் கிட்ட படுத்துண்டு இவ்வளவு நேரம் தூங்கிட்டேன். நான் போய் டாபாலேந்து சாப்பாடு வாங்கிண்டு ஒரு பத்தே நிமிஷத்துல வந்துடறேன் இரு.

என்று கூறிக்கொண்டே கிளம்பி சென்றான் நவீன். அவன் சொன்னது போலவே பத்தே நிமிடத்தில் வராவிட்டாலும் சிறிது நேரத்தில் வந்தான். அவன் வருவதற்குள் மிருதுளா இரண்டு தட்டு, குடிக்க தண்ணீர், கரண்டிகள் என எல்லாவற்றையும் ஹாலில் எடுத்து வைத்திருந்தாள். சாப்பாட்டை வாங்கி வந்ததும் இருவரும் சாப்பிட்டார்கள். மிருதுளா பசி அடங்கியப் பின் நவீனிடம்…

நான் ஒரு மணி நேரத்துல எழுப்பச் சொன்னா நீங்களும் என் கூட நல்லா தூங்கிருக்கேங்கள். சரி வாங்கோ இப்ப போய் சொல்லிட்டு வருவோம்

இப்பவா வேண்டாம் மிருது. வெளில வெயில் கொளுத்தறது. சாயந்தரமா வாக் போவோமில்லையா அப்போ போய் சொல்லலாம் சரியா

ஓகே ஓகே!! உங்களுக்கு பொண்ணு வேணுமா இல்லை பையன் வேணுமா?”

உனக்கு என்ன குழந்தை வேணும் மிருது? எனக்கு பொண்ணு தான் வேணும்.

எனக்கும் பொண்ணு தான் வேணும் நவீ. உங்களுக்கு ஏன் பொண்ணு வேணும்னு சொல்லறேங்கள்

ஆமாம் எங்காத்துல எல்லாம் பசங்க தான் அதுனால நமக்கு பொண்ணு பொறக்கட்டுமேன்னு  ஒரு ஆசை. சரி உனக்கு ஏன் பொண்ணு வேணும்

ஏன்னா பொண்ணுகளுக்கு தான் அழகழகான டிரஸ் போட்டுப் பார்க்க முடியும் பசங்களுக்கு என்ன இருக்கு சொல்லுங்கோ

அடிப் பாவி டிரஸ் போட்டுப் பார்க்க பொண்ணு வேணுமா உனக்கு

ஆமாம். இதில எனக்கொன்னும் தப்பாவே தெரியலையே.

தப்புன்னு யார் சொன்னா? உன்னோட காரணம் கேட்க வேடிக்கையா இருக்கு

இப்படியே குழந்தைப் பற்றி பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியாமல் போனது இருவருக்கும். மாலை நேரமானதும் வழக்கம் போல காபி குடித்து, முகம் கை கால் கழுவி விட்டு சாமிக்கு விளக்கேற்றி கும்பிட்டு சற்று நேரம் வாசல் கதவை திறந்து வைத்து உட்கார்ந்தனர். மணி ஆறரை ஆனதும் மிருதுளா…

நவீன் ஃபோன் பண்ண போகலாமா ?”

ஓ போகலாமே.

ஃபோன் பூத்தை நெருங்கியதும் யார் இதை சொல்வது என்ற பேச்சு வார்த்தை வந்தது. அப்போது மிருதுளா…

நான் என் பேரன்ட்ஸ்ட்ட சொல்லிட்டு உங்க கிட்ட ஃபோனைத் தரேன். அதே போல நீங்க உங்க பேரன்ட்ஸ்ட்ட சொல்லுங்கோ இன்னுட்டு என்கிட்ட தாங்கோ நான் பேசறேன் டீல் ஓகே வா?”

ஓகே மா. வா வா

முதலில் மிருதுளா ஃபோன் பேச அவள் பெற்றோர் வீட்டு நம்பரை டையல் செய்தாள். முதல் ரிங்கிலேயே அம்புஜம் ஃபோனை எடுத்து…

ஹலோ நான் அம்புஜம் பேசறேன்

ஹலோ அம்மா …நான் மிருது பேசறேன்

சொல்லு மிருது உன் ஃபோனுக்காக தான் காலையில இருந்து இந்த ஃபோனையே பார்த்துண்டு இருக்கேன். டாக்டர்ட்ட போனேங்களா? டாக்டர் என்ன சொன்னா?”

அம்மா என்னை கொஞ்சம் பேச விடுமா. டாக்டர்ட்ட போனேன் அவா சில டெஸ்டெல்லாம் எடுத்துட்டு கன்பார்ம் பண்ணிட்டா. ஸோ நீ பாட்டியாக போற.

அம்மா தாயே நன்றி மா(என அம்மன் படத்தைப் பார்த்து சொன்னாள்) ரொம்ப சந்தோஷமா இருக்கு மிருது. நீ நல்லா சாப்டு உடம்பை பார்த்துக்கோ. சரி… மாப்ள பக்கத்துல  இருக்காரா?”

இதோ கொடுக்கறேன். நவீன் இந்தாங்கோ

ஹலோ நான் நவீன் பேசறேன்.

வாழ்த்துக்கள் அப்பா ஆக போறேங்கள். எங்களுக்கெல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம். மிருதுவ நல்லபடியா பார்த்துக்கோங்கோ. இருங்கோ எங்காத்துக்காரர்ட்ட கொடுக்கறேன்

வாழ்த்துக்கள் மாப்ள அன்ட் மிருது. ரொம்ப சந்தோஷம் அவள நல்லா பார்த்துக்கோங்கோ

ஷுவர் ஷுவர் நிச்சயமா. தாங்க்ஸ். உங்க எல்லாருக்கும் பிரயாணம் எல்லாம் சௌகர்யமா இருந்துதா?”

நாங்க நல்லா சௌகர்யமா வந்து சேர்ந்தோம். உங்க தம்பிகளை ஆத்துல விட்டுட்டு தான் நாங்க ஆத்துக்கு வந்தோம்

ஓகே நான் வச்சுடட்டுமா. இல்ல மிருது வ பேச சொல்லட்டுமா?”

பரவாயில்லை மாப்ள வச்சுடுங்கோ. பை குட் நைட். மிருதுட்டையும் சொல்லிடுங்கோ

நவீன் ஃபோனை வைத்து விட்டு மிருதுளாவிடம்…

உங்க அம்மா அன்ட் அப்பாக்கு என்ன ஒரு சந்தோஷம்

பின்ன இருக்காதா தாத்தா பாட்டின்னா சும்மாவா!!! உங்க பேரன்ட்ஸும் அப்படி தான் பேசுவா பாருங்கோ. அவாளுக்கும் ஃபோன் போடுங்கோ

நவீன் அவன்  பெற்றோர் வீட்டுக்கு ஃபோன் செய்தான். ஒரு அஞ்சு நிமிடம் கழித்து ஃபோனை எடுத்தார் ஈஸ்வரன்…

ஹலோ

ஹலோ நான் நவீன் பேசறேன்

ஹாங் நவீன் சொல்லு பவினும்ப்ரவினும் வந்தாச்சு

ஒகே. ஒரு குட் நியூஸ்.

என்னது?”

நீங்க தாத்தா பாட்டி ஆக போறேங்கள்

அப்படியா சந்தோஷம் இதோ பர்வதம் பேசணுமாம் குடுக்கறேன்.

ஹலோ

மிருதுளா பிரக்னென்ட் ஆகிருக்கா. நாங்க அப்பா அம்மா ஆக போறோம்.

ஓ சரி. மிருதுளாட்ட ஃபோனைக் குடு

நவீன் மிருதுளா பெற்றோரின் சந்தோஷம் தன் பெற்றோரிடமும் எதிர்ப்பார்த்து விஷயத்தை சொல்ல அதற்கு அவர்களின் சுரத்தில்லாத பேச்சு அவனுக்கு ஏன்டா சொன்னோம் என்பது போல அவன் மனம் நினைத்தது முகம் வாடி காட்டிக்கொடுத்ததை கவனித்த மிருதுளாஎன்ன ஆயிற்றுஎன்று சைகையில் கேட்க ஃபோனை அவளிடம் கொடுத்தான் நவீன். அவளும் வாங்கிக் கொண்டு..

ஹலோ நான் மிருதுளா பேசறேன்

நவீன் சொன்னான்….ஆமாம் அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்?”

என்று ஒரு மிரட்டல் துவனியில் கேட்க…

பால் பொங்கி வரும் வேளை கொஞ்சம் தண்ணீர் தெளித்து அதை பொங்க விடாமல் தடுப்பதுபோல பர்வததின் பேச்சு மிருதுளா மனதில் பொங்கி வழிந்த சந்தோஷத்தில் தண்ணீர் தெளித்தது போல் ஆக அவளின் முகம் சட்டென மாறியது. 

என்னமா கேட்டேங்கள்?”

இல்ல ஒரு ரெண்டு மூணு வருஷம் கழிச்சு ஆகிருக்கலாமேன்னு சொன்னேன்” 

எந்த ஒரு அப்பா அம்மாவும் தாத்தா பாட்டி ஆகிவிட்டனர் என தெரிந்தால் பேரானந்தம் கொள்வார்கள்.  அவர்கள் அப்பா அம்மா ஆனபோதிருந்த மகிழ்ச்சியை விட பாட்டி தாத்தா ஆனதில் தான் பெருமகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் இப்படி ஒரு ரியாக்ஷனை துளியும் எதிர் பார்க்காத மிருதுளாவின் மனம் வருந்தியது அதற்கு மேல் பேச்சைத் தொடர விரும்பாமல்…

சரி நான் நவீன்ட்ட குடுக்கறேன்

என்று சட்டென ஃபோனை மிருதுளா குடுத்ததிலிருந்தே நவீனுக்கு புரிந்துவிட்டது ஏதோ சரியில்லை என்பது அதனால் ஃபோனை அவளிடமிருந்து பெற்றதும்….

நான் நவீன் …சரி சரி நாங்க அப்புறமா பேசறோம் பை ” 

என ஃபோனை கட் செய்து நவீன் காசுக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது மிருதுளா வெளியே வந்து வீட்டிற்கு மெல்ல நடக்கலானாள். நவீன் வெளியே வந்து பார்த்ததும் மிருதுளாவை காணவில்லை என தேட பின் வீட்டிற்கு நடந்துச் சென்றுக் கொண்டிருப்பவளை நோக்கி வேகமாக அவள் பின்னால் சென்றான். 

தொடரும்….

 ஊருக்கு கிளம்ப மீதமிருந்த ஐந்து நாட்களும் பசங்க மூவரும் சுற்றுலா கதையையே மிருதுளாவிற்கும் நவீனிற்கும் விவரித்துக் கொண்டிருந்தனர்.  அம்புஜம் மகளுக்கு வேண்டிய புளி காய்ச்சல், ஊறுகாய்கள் என மகள் கேட்டுக்கொண்டதை எல்லாம் செய்து டப்பாக்களில் போட்டு வைப்பதில் மும்முரமாக இருந்தாள். நவீன் ஆபிஸ் க்ளாஸ் என்று ஓடிக்கொண்டே இருந்தான். ராமானுஜம் பக்கத்திலிருக்கும் கடைக்கு தினமும் சென்று அவருக்கு தெரிந்த ஹிந்தியில் பேசி காய்கறிகள், பழங்கள் என வாங்கி வந்து அதை அலம்பி வெட்டி காய்களை ஃப்ரிஜில் கவர்களில் போட்டும் பழங்களை அன்றன்றே நறுக்கி அனைவருக்கும் கொடுத்தார். இதனால் மிருதுளா தினமும் நிறைய பழங்கள் சாப்பிட்டு வந்தாள். 

வெள்ளிக்கிழமை நவீன் ஆபீஸுக்கு லீவுப் போட்டு காலை உணவருந்திய பின் அனைவரையும் அழைத்துக்கொண்டு பக்கத்திலிருக்கும் மார்க்கெட்டுக்கு சென்றனர் மிருதுளாவும் நவீனும். அங்கே ஒரு கடையினுள் சென்று மூன்று பசங்களிடமும் அவர்களுக்கு வேண்டிய டிரஸ் எடுத்துக்க சொன்னார்கள். அதில் வேனு ஒரு செட், பவின் ஒரு செட் என எடுத்துக்கொண்டனர் ஆனால் ப்ரவின் மட்டும் அனைத்து துணிகளையும் ஆராய்ந்து புரட்டிப்போட்டு இரண்டு செட் எடுத்து வந்தான். அதைப் பார்த்த மிருதுளா வேனுவிடமும் பவினிடமும் இன்னும் ஒரு செட் டிரஸ் எடுத்துக்கச் சொன்னாள் அதற்கு இருவரும் அவர்களுக்கு ஒரு செட் போதும் என்று கூற நவீன் பில் செட்டில் பண்ணி விட்டு 

அவரவர் துணிப் பையை அவரவரிடம் கொடுத்தான். கொஞ்ச நேரம் மற்ற கடைகளை எல்லாம் பார்த்துக் கொண்டே நடந்தவர்களை மற்றுமொரு கடைக்குள் நுழையச் சொன்னாள் மிருதுளா. அது புடவைக் கடை அதில் தனது அம்மாவை செலக்ட் செய்ய சொல்ல அதற்கு அம்புஜம் மறுக்க பின் மிருதுளாவே நல்ல  காட்டன் புடவை இரண்டு ஒரே மாதிரி டிசைன் ஆனால் கலர் வேறு வேறாக எடுத்து அதையும் பில் போட்டுப் பெற்றுக்கொண்டு பக்கத்துக் கடைக்குள் சென்றனர். அங்கிருந்து ஒரே மாதிரியான இரண்டு சட்டைகள் வெவ்வேறு நிறத்தில் எடுத்துக்கொண்டு பின் அங்கேயிருந்த டாபாவில் மத்திய உணவருந்தினர். அம்புஜத்திற்கு வெறும் சாதமும் தயிரும் மட்டும் வாங்கிக் கொடுத்தாள் மிருதுளா. அம்புஜம் அதற்கு தொட்டுக்கொள்ள அவள் செய்த ஊறுகாயிலிருந்து கொஞ்சத்தை ஒரு சின்ன டப்பாவில் போட்டு எடுத்து வந்திருந்தாள் அதைத் தொட்டுக்கொண்டு சாப்பிட அனைவரும் சிரித்துக்கொண்டே அவரவர் ஆர்டர் செய்ததை ரசித்து ருசித்து உண்டனர்.  சாப்பிட்டதுக்கு பில் செட்டில் செய்யும் போது வேனு..

அத்திம்ஸ் எங்க அம்மா சாப்பாட்டுக்கு தான் ஜாஸ்த்தி சார்ஜ் பண்ணிருப்பா பாருங்கோ

என கூறியதும் அனைவரும் சிரித்தனர். அப்போது ப்ரவின்…

மாமி ஸ்பெஷல் ஐட்டம் இல்லையா சாப்ட்டுருக்கா.

என்று கேலியும், கிண்டலும், சிரிப்புமாக அனைவரும் ஒரு ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தனர். சற்று நேரம் அவர்கள் வாங்கின டிரெஸ் எல்லாம் பார்த்தனர் பின் அவரவர் பெட்டியில் வைத்து அடுக்கத்துவங்கினர். அப்போது மிருதுளா ப்ரவினிடம் ஒரு பையை கொடுத்து அதையும் சேர்த்து பேக் பண்ண சொன்னாள் அதற்கு ப்ரவின்…

என்னது இது மன்னி?”

இது இந்த ஊரு ஸ்பெஷல் சுவீட்ஸ் மோஹன்தால் அன்ட் சூரத்தி காரி. இரண்டு சுவீட்டுமே சூப்பரா இருக்கும். அப்பறம் அம்மா அப்பாக்கு புடவை அன்ட் ஷர்ட் இருக்கு இதை எல்லாம் அம்மாட்ட குடுத்துடு

மிருதுக்கா சுவீட் ஒன்லீ ஃபார் மாமியாரா. எங்களுக்கு இல்லையா?”

இதோ இது உனக்கும் அப்பா அம்மாவுக்கும் வச்சுக்கோ இதையும் சேர்த்து பேக் பண்ணிடுமா. இருங்கோ அந்த சுவீட்ஸ் எப்படி இருக்கும்ன்னு தெரிஞ்சுக்க இதோ இந்த டப்பாவை திறங்கோ எல்லாருமா சாப்பிடலாம்” 

என்று கூறி சுவீட் டப்பாவை நவீனிடம் கொடுத்தாள் மிருதுளா. அதை வாங்கி திறந்து அனைவருக்கும் கொடுத்தான் நவீன். 

வாவ் சூப்பரா இருக்கு இந்த சுவீட் மிருதுக்கா

ஆமாம் மன்னி செம டேஸ்ட்டியா இருக்கு.” 

அம்மா நீயும் சாப்பிடலாம். இதில் எஸன்ஸ் எதுவுமில்லை.

சரி ஒரு சின்ன பீஸ் குடு சாப்ட்டு பார்க்கறேன்

நல்லாருக்கே இந்த சுவீட். நாம எப்பவும் சாப்டுற நம்ம ஊரு சுவீட்லேந்து ஒரு வித்தியாசமான சுவீட்டா இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.என்றார் ராமானுஜம்

அட ஆமாம் நல்லா தான் இருக்குஎன அம்புஜம் இன்னொரு பீஸ் கேட்டு வாங்கி சாப்பிட்டாள். 

ஊருக்கு போட்டுக்கொண்டு போக வேண்டிய டிரஸை மட்டும் வெளியே வைத்துவிட்டு மற்றவைகளை பெட்டிகளில் அடுக்கி எல்லா பேக்கிங்கையும் தயார் செய்து ஒரு ஓரத்தில் வரிசையாக பேக் மற்றும் பெட்டிகளை அடுக்கி வைத்து விட்டு இரவு உணவருந்தி விட்டு அனைவரும் எழுந்ததும் மிருதுளாவும் அம்புஜமும் சாப்பிட அமர்ந்தனர். அப்போது அம்புஜம்..

மிருது டைம்க்கு சாப்பிடு. நல்லா சாப்பிடு. உடம்ப பார்த்துக்கோ. திங்கட்கிழமை உன்ட்ட இருந்து வர போற நல்ல செய்திக்காக  நான் ஆவலா காத்துண்டிருப்பேன் மறக்காம ஃபோன் பண்ணிச் சொல்லு

அது என்ன திங்கட்கிழமை செய்தி மாமி?” என்று ப்ரவின் கேட்க உடனே நவீன்

அவா ஏதோ பேசிக்கறா உனக்கென்ன டா. நீ ஏன் அவா பேசறதுல உன் மூக்கை நுழைக்கற. பேசாம டிவியைப் பாரு” 

வெளியே ஏதோ மணி அடிக்கும் சத்தம் கேட்டதும் பவினும் வேனுவும் கதவைத்திறந்து பார்த்தனர். உள்ளே வந்து வேனு….

மணி சத்தம் வேற எதுவும் இல்லை குல்ஃபி வண்டி வந்திருக்கு. எல்லாரும் குல்ஃபி சாப்பிடலாமா? யார்யாருக்கு வேணும்ன்னு சொல்லுங்கோ

இந்தா டா வேனு. ஒரு பத்து வாங்கிண்டு வா. வேணுங்கறவா எடுத்துக்கட்டும் மீதியிருந்தா ஃப்ரிஜ்ல வச்சுக்கலாம்என்று ராமானுஜம் வேனுவிடம் காசு கொடுத்து அனுப்ப வேனுவும் தன் அப்பா சொன்னது போலவே பத்து வாங்கிவந்து அனைவருக்கும் கொடுத்தான். மீதமிருந்த அஞ்சு குல்ஃபியை ஃப்ரிஜில் வைத்துக்கொண்டே….

அம்மா அன்ட் மிருதுக்கா உங்க ரெண்டு பேரோடதும் சேர்த்து உள்ள வைக்கறேன். நீங்க சாப்ட்டுட்டு எடுத்துக்கோங்கோ

தாங்கஸ் டா வேனு. நாங்க அப்பறமா எடுத்துக்கறோம். அம்மா நீ எதுவும் நினைச்சு கவலைப் படாதே. நிச்சயம் ஃபோன் பண்ணறேன். என்ன நீங்க எல்லாரும் போயிட்டா வீடே வெறுச்சோடி இருக்கும்.

அதுக்கென்ன பண்ண முடியும் மா. அப்பாக்கு ஆபிஸ் போகணும். வேனுக்கு காலேஜ் போகணும். என்ன பண்ண!

இருவருமாக பேசிக்கொண்டே உணவருந்தி பின் குல்ஃபியை சாப்பிட்டுக்கொண்டிருக்கையில்….

மிருதுக்கா ஒரு கேம் கார்ட்ஸ் விளையாடலாமா

டேய் வேனு மணி ஒன்பதாச்சுடா

அம்மா நாளைக்கு இந்த நேரம் ரெயில்வே ஸ்டேஷன்ல இருப்போம். இன்னைக்கு மட்டும் ஒரு பத்து மணி வரைக்கும் விளையாடலாமே

சரி டா வேனு நான் வறேன்”  நவீன் சொல்ல

நாங்களும் வறோம்என்றனர் பவினும் ப்ரவினும்.

மெஜாரிட்டி ஆண்கள் பக்கம்  என்பதால் மிருதுளாவும் அம்புஜமும் வேறு வழியின்றி விளையாட சம்மதித்து அவர்களின் சீட்டாட்ட குழுவில் சேர்ந்துக்கொண்டனர். அனைவருமாக இரவு பத்து மணி வரை விளையாடிவிட்டு பின் உறங்க படுத்துக்கொண்டாலும் சில மணி நேரம் அரட்டை அடித்த பின்னரே உறங்கலானார்கள். 

மறுநாள் சனிக்கிழமை அன்று அம்புஜம் விருந்து சமையல் சமைத்தாள். சாம்பார், ரசம், அவியல், இரண்டு பொறியல், பாயசம் என அனைத்தும் சமைத்து ராமானுஜத்திடம் வாழை இலை வீட்டின் பின்னாலிருந்து வெட்டி வரச்சொல்லி அனைவருக்கும் வாழை இலைப் போட்டு சாப்பாடு பரிமாறினாள். அப்போது மிருதுளா…

என்ன மா இன்னைக்கு ஊருக்கு போற குஷி ல சும்மா சூப்பரா சமச்சிருக்க…இவ்வளவு ஐட்டம்ஸ் பண்ணிருக்க.

இல்லமா இன்னைக்கு போனா இனி எப்போ மறுபடியும் வர வாய்ப்பு கிடைக்கும்ன்னு தெரியலை அதுனால என் பொண்ணுக்கும் மாப்ளைக்கும் இப்படி சமைச்சேன் நல்லாருக்கில்லையா!!

சூப்பரா இருக்கு மாமி. நீங்க அண்ணா மன்னிக்கு மட்டும் சமச்சேங்கள்ன்னா ஏன் எங்களுக்கும் பரிமாறினேங்கள்என பவின் கேட்க

எல்லாருக்குமாக செய்தேன் போறுமா. நன்னாயிருக்கோனோ எல்லாரும் நல்லா சாப்டுங்கோ.

அனைவரும் சாப்பிட்டப்பின் சற்று நேரம் ஓய்வெடுத்தனர். மாலை நான்கு மணிக்கெல்லாம் காபி குடித்து விட்டு பிரயாணத்துக்கு வேண்டிய சாப்பாட்டை செய்து ஹாலில் கொண்டு வந்து வைத்தாள் அம்புஜம். அவற்றை ஐந்து ஐந்து பொட்டலங்களாக கட்டி, பாட்டில்களில் தண்ணீர் நிறப்பி, வடாமை ஒரு கவரில் போட்டு கட்டி, எல்லாவற்றையும் ஒரு கட்டப்பையில் அடுக்கி வைத்தார் ராமானுஜம். 

ஒருவர் பின் ஒருவராக குளித்து கிளம்ப சரியாக இருந்தது. நவீன் தனது நண்பன் ஓம்னி வேனை எடுத்து வந்து அதில் பெட்டிப் படுக்கைகள் என அனைத்து சாமான்களையும் ஏற்றினார்கள் பவின், ப்ரவின் மற்றும் வேனு. எல்லாரும் தயார் ஆனதும் வேனில் ஏறி ரெயில்வே ஸ்டேஷனை எழரை மணிக்கு சென்றடைந்தனர். அங்கே ஸ்டான்டில் வண்டியை பார்க் செய்து விட்டு அவரவர்  சாமான்களை அவரவர் தூக்கிக்கொண்டு அவர்கள் செல்லவிருக்கு ரெயில் நிற்கும் ப்ளாட்பாரத்திற்கு எட்டு மணிக்கு சென்றனர். அங்கே அவர்கள் ரெயில் நின்றுக்கொண்டிருந்தது. அதில் பொருட்களை ஏற்றி செட் செய்தப்பின் வண்டியிலிருந்து அனைவருமாக கீழே இறங்கி வண்டி கிளம்ப பதினைந்து நிமிடங்கள் இருப்பதால் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது மிருதுளா தனது அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு மௌனமாக இருந்தாள். அவள் கண்களில் கண்ணீர் மடை திறக்க காத்திருக்கும் நதி போல உருண்டோட காத்திருந்தது. அதை கவனித்த அம்புஜம் தன் மகளின் கையை தட்டிக் கொடுத்துக் கொண்டே ….

சரி மா… சரி ரெண்டு பேரும் நல்லா சந்தோஷமா இருங்கோ. மாப்ள எங்க பொண்ண நல்லா தான் பார்த்துக்கறேங்கள். இதே போல எப்பவும் அவள பார்த்துக்கோங்கோ. அவள சந்தோஷமா வச்சுக்கோங்கோ.” 

ரெயில் கிளம்ப போகிறது என்பதற்கான  சங்கு ஊத அனைவரும் வேகமாக ரெயிலில் ஏறி அவரவர் இருக்கையில் அமர்ந்ததும் ரெயில் மெல்ல நகர ஆரம்பித்தது….

பை அண்ணா மன்னி

அப்பா அம்மாவ கேட்டதா சொல்லுங்கோ பவின் அன்ட் ப்ரவின்என்றாள் மிருதுளா

பை மிருதுக்கா.. பை அத்திம்ஸ்” 

பை டா வேனு. டேக் கேர்.

அம்மா அம்மா அம்மா பை !! அப்பா பை!

பை மா மிருது. பை மாப்ளஎன்றாள் அம்புஜம் கண்ணில் கண்ணீரோடு

நாங்க போயிட்டு வறோம் மாப்ள. வறோம் மா மிருதுஎன்று கறகறத்த குரலில் சொன்னார் ராமானுஜம். 

ஓகே எந்த கவலையும் இல்லாம போயிட்டு வாங்கோஎன்றான் நவீன் தனது மாமனார் மற்றும் மாமியாரிடம்.

ரெயில் கொஞ்சம் வேகம் எடுக்க மெல்ல மிருதுளா கைகளிலிருந்து அவள் அம்மாவின் கை நழுவியது. அம்புஜம் முடிந்த வரை தனது கையை ஜன்னல் வெளியே விட்டு ஆட்டிக்கொண்டே சென்றாள். சிறிது நேரத்தில் கும்பலாக இரந்த அந்த ப்ளாட்பாரம் ஆள் நடமாட்டமில்லாமல் ஆனது. அதுவரை மிருதுளா அங்கேயே அமர்ந்து அழ அவளை சமாதானம் படுத்த மிகவும் சிரம பட்ட நவீன்….

மிருது எல்லாரும் போயாச்சு ப்ளாட்பாரமே காலியா இருக்கு. ரெயில் போய் இருபது நிமிஷமாச்சு. அது தான் இன்னும் மூணு மாசததுல நாமளே ஊருக்கு போக போறோமே அப்பறம் என்ன!! வா கண்ண தொடச்சுக்கோ. மணி வேற ஆகறது. நாம வந்த வண்டியை  திருப்பிக்குடுக்கனுமில்லையா. எழுந்திரி மிருது போகலாம்.

மிருதுளா சமாதானம் ஆகாவிட்டாலும் வீட்டுக்கு போயாக வேண்டுமே என்றோ!!! இல்லை தங்களுக்குதவிய நண்பனின் வண்டியை திருப்பி நேரத்துக்கு குடுக்க வேண்டுமென்றோ!! இரவுநேரம் வேற  ஆகிறதென்றோ!!!  ஏதோ ஒரு காரணத்தினாலோ அல்லது இவ்வனைத்து காரணத்தினாலோ சட்டென கண்களைத் துடைத்துக்கொண்டு நவீனுடன் வீட்டுக்கு புறப்பட்டாள் ஆனால் அவள் கண்கள் வற்றவில்லை அதில் கண்ணீர் பெருக்கெடுத்துக்கொண்டே தான் இருந்தது.

அவர்கள் கேம்ப்புக்குள் வந்ததும் நேராக வண்டியை நவீன் நண்பனிடம் ஒப்படைத்து விட்டு இருவருமாக நடந்து வீட்டுக்குச் செல்லும் போது …மிருதுளா …

இவா எல்லாரும் ஏன் வரணும், நாம எல்லாருமாக ஏன் அவ்வளவு ஜாலியா இருந்திருக்கனும் அப்பறம் ஏன் இப்படி நம்மள அம்போன்னு விட்டுட்டு அவா எல்லாரும் கிளம்பி போகணும்?”

அது தான் மா லைஃப் மிருது. இனி இப்படி தான் எப்பவாவது எல்லாருமா நம்மள பார்க்க, நம்மளோட இருக்க வருவா அப்புறம் கிளம்பி போவா. நீ அவா வந்துட்டு போற ஒவ்வொரு தடவையும் இப்படி தான் அழப்போறயா என்ன?” 

மனசு ரொம்ப சங்கடப்படறது நவீ. எனக்கு வீட்டுக்குள்ள போகவே என்னவோ மாதிரி இருக்கு. யாருமே இல்லாத வீடு போல தோணும்

மூணு வாரத்துக்கு முன்னாடி வரை நம்ம ரெண்டு பேரு மட்டும் தானே இருந்தோம் அப்போ பிடிச்சிருந்தது இல்ல அது மாதிரிதான் இப்போவும். இங்க பாரு மிருது யாரு வேணும்னாலும் நம்ம லைஃப் ல வரலாம் போகலாம் ஆனா கடைசி வரைக்கும் இனி நாம மட்டும் தான் புரியறதா?”

அதெல்லாம் புரியறது ஆனா மனசு அதை ஏத்துக்க மாட்டேங்கறது நவீ

இப்போ அப்படி தான் இருக்கும் இன்னும் சில வருஷம் போனா மனசு புரிஞ்சுக்கும் அதை ஏத்துக்கவும் செய்யும் அதுவரை கொஞ்சம் காத்திருக்க தான் வேணும். உன் மனசும் நானும்

ஆமாம் ஆமாம் பார்ப்போம் பார்ப்போம்

என்று கூறினாலும் அவள்  கண்களிலிருந்து கண்ணீர் பல நாட்களாக ஸ்டாக் வைத்திருந்தது போல பொல பொலவென உரண்டோடிக்கொண்டே தான் இருந்தது. அதை பார்த்த நவீன் மீண்டும்…

என்ன மிருது உனக்குள்ளேயே நிறைய உறுப்புகள் சரியான குவார்டினேஷனே இல்லாம இருக்கு !!!! வாய் பார்க்கலாம்ன்னு சொல்லறது ஆனா கண்ணு அதை ஏத்துக்காம நிக்காம மழை பொழிஞ்சிண்டே  இருக்கே. சரி மன்டே காலை ல டாக்டர்ட்ட போகணும் ஞாபகம் இருக்கா?” 

என்று பேச்சை திசைத் திருப்ப வீடும் வந்தது. வீட்டைத் திறந்தான் நவீன். இருவருமாக உள்ளே நுழைய மிருதுளாவிற்கு அவள் அப்பா அம்மா மற்றும் தம்பிகள் ஹாலில் உட்கார்ந்துக் கொண்டு இருப்பது போல தெரிய மீண்டும் அவள் கண் கலங்கினாள். ஆனாலும் அதை துடைத்துக் கொண்டே…

ஓ!!! நல்லா ஞாபகம் இருக்கே. ஐ ஆம் வேயிட்டிங் ஃபார் மன்டே நவீ” 

இருவரும் முகம் கை கால் அலம்பி விட்டு சற்று நேரம் டிவி பார்த்தப் பின் அம்புஜம் அவர்களுக்கும் சுட்டு வைத்திருந்த சப்பாத்தியையும் மசாலாவையும் சாப்பிட்டனர். அதே குல்ஃபி காரன் மணி அடிக்க அதைக் கேட்ட மிருதுளா…

ஹேய் நவீ நேத்து வேனு வாங்கின குல்ஃபி ப்ரிஜ்ல இருக்கு சாப்பிடலாமா!

ஓ எஸ்என கூறிக்கொண்டே ஃப்ரிஜை திறந்துப் பார்த்தான் நவீன் ஆனால் அதில் குல்ஃபி இருக்கவில்லை. 

அட இங்கே ஒரு குல்ஃபி கூட இல்லை மிருது எப்போ யாரு சாப்ட்டானே தெரியலையே நாமளும் இங்கே இருந்திருக்கோம் பாரேன்!

ஓ !!! ஆமாம் ஆமாம் இன்னைக்கு மத்தியானம் பசங்க சாப்ட்டா. சாரி நான் தான் மறந்துட்டேன்

சரி இரு நான் போய் ரெண்டு வாங்கிண்டு வரேன்

நவீன் குல்ஃபி வாங்கி வர… மிருதுளாவும் நவீனுமாக திரைப்படம் பார்த்துக்கொண்டே அதை உண்டு முடித்து பின் உறங்க படுத்துக்கொண்டனர். மிருதுளா திரும்பி படுத்துக் கொண்டு மெல்ல அழுவதை கவனித்த நவீன் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு ….

டோன்ட் வரி மிருது ஜஸ்ட் மூணு மாசம் தான் வீ வில் கோ தேர் அன்ட் பி வித் தெம். நீ சமாதானம் ஆயிட்டன்னு நினைச்சேன் மறுபடியும் ஆரம்பிக்கற. ப்ளீஸ் ஜஸ்ட் ரிலாக்ஸ் அன்ட் ஸ்லீப்.

என கூற மிருதுளாவும் கண்களைத் துடைத்துக்கொண்டு நவீனை கட்டிக்கொண்டு உறங்கினாள். 

ஆக மீதமிருந்த ஐந்து நாட்களும் விருந்தினருடன் சந்தோஷமாக கழித்ததாலும் ஸ்பெஷல் விருந்தினரான பவின் அன்ட் ப்ரவினும் ஏதும் அனாவசியமாக பேசாததினாலும் வாசகர்களாகிய நமக்கு சுவாரஸ்யம் கொஞ்சம் குறைந்தது போல இருந்தாலும்… உணர்ச்சிகள் பொங்கி வழிந்ததை நம்மால் உணர முடிந்தது இந்த வாரம்.  உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத சுமையாகிவிடும், ரசனை இல்லாமல் போய் விடும் பின் நல்லவை நமது கண்களுக்கு புலப்படாமல் இருந்துவிடும். நவீன் கூறியது போல திருமணம் என்ற பந்தம் ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் கடைசி வரை வரக்கூடிய ஒரே பந்தமாகும். 

இவர்களும் அது போலவே இருந்தால் நல்லது தான் இல்லையா

தொடரும்…….

பசங்க மூணு பேரும் டிரிப் போகும் போது வழியில் உண்பதற்கு சிப்ஸ் மற்றும் சில நொறுக்கு தீணிகளை கடையிலிருந்து வாங்கி வந்தனர். வீட்டில் இருந்துக்கொண்டு இது போன்ற தீணிகளை உண்பதற்கும் வெளியே சுற்றுலா போகும் போது உண்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என்பது பசங்களின் அபிப்பிராயம் மட்டுமில்லை நமக்கே அப்படிதான் இல்லையா நண்பர்களே.  ஆனால் அதை பார்த்த ராமானுஜம்…

ஏன்டா பசங்களா இங்க நம்ம ஊர்லேந்து கொண்டு வந்த நொறுக்கு தீணிகளே  இருக்கு இதில இன்னும் வேற வாங்கிண்டு வந்திருக்கேங்கள்! அதே போறாதோ?”

அப்பா அதையே தான் மூணு வாரமா சாப்பிட்டோம். ஒரு நாளைக்கு சேஞ் இருக்கட்டுமே

ஆமாம் மாமா வேனு சொல்லறா மாதிரி முறுக்கு, ரிப்பன் பக்கோடா, மிச்சர் சாப்ட்டு சாப்ட்டு போர் அடிச்சுப்போச்சு. எங்களுக்காக ஒரு நூறு ரூபாய் செலவழிக்க மாட்டேளா என்ன!

செலவழிக்கறத பத்தி நினைச்சிருந்தேனா வேனுட்ட காசு குடுத்தனுப்பியிருக்கவே மாட்டேனே!!! ஆத்துல பட்சணங்கள் இருக்கும் போது ஏன் வெளியே வாங்கினேங்கள் ன்னு தான் கேட்கறேன்….சாப்ட்டு அலுத்துப்போச்சுன்னு சொல்லறேங்கள் ஓகே ஒத்துக்கறேன். எங்களுக்கெல்லாம் கிடைச்சா மாதிரி வருஷத்துல ஒரு தடவை  மட்டுமே பட்சணம் செய்து கொடுத்தா அது அலுத்துப்போகாது அதவிட்டுட்டு எப்ப வேணுமோ அப்போ எல்லாம் கிடைச்சா இப்படிதான் இருக்கும். உங்கள சொல்லி தப்பே இல்லை.

அப்பா உங்க காலம் வேற. அப்போ எல்லாம் ஒரு குடும்பத்தில கொறஞ்சது ஏழு அல்லது எட்டு பேர் இருந்தேங்கள் அத்தனை பேருக்கும் அடிக்கடியா பட்சணங்கள் பண்ணித்தர முடியும்? அதனால வருஷத்துல ஒரு தடவை செஞ்சா …ஆனா இப்போ ஒரு குடும்பதுல நாலு பேரு தான் ஸோ எப்போ தோணறதோ அப்போ எல்லாம் செய்து சாப்படறா

அது வாஸ்தவம் தான்

சரி சரி எல்லாரும் சீக்கிரம் சாப்ட்டு தூங்கினாதானே நாளைக்கு காலங்காத்தால எழுந்துக்க முடியும். இப்படி பேசிண்டே இருந்தா அப்பறம் எல்லாருமா தூங்கிப் போயிடுவேங்கள் இல்லாட்டி ரெண்டு இடம் பார்த்ததும் டையர்டா ஆகிடுவேங்கள். அம்மா நீ இன்னும் கிட்சன்ல என்ன பண்ணிண்டிருக்காய்? உனக்கும் தான் சொல்லறேன்

இதோ ஆயிடுத்து வந்துடறேன். வந்தாச்சு போறுமா

என்ன மெனு கட்டிண்டு போற மா நீ

காலைக்கு இட்டிலியும் கொத்தமல்லி சட்னியும், மத்தியானத்துக்கு  புளியோதரையும் தயிர் சாதமும்வடாமும் கட்டிண்டிருக்கேன். எதுக்கும் எக்ஸ்ட்ராவா நாலு பொட்டலமும் எடுத்துண்டிருக்கேன்….இவாளுக்கு யாருக்காவது வேணும்னாலும் கொடுக்கலாமேன்னு…உங்களுக்கும் சட்னி சாதமெல்லாம் இருக்கு.  இட்டிலி மட்டும் காலைல வச்சுக்கோ. வடாம் அந்த நீல கலர் மூடி போட்ட டப்பால போட்டு வச்சிருக்கேன்.  ஒண்ணும் செஞ்சிண்டிருக்க வேண்டாம். காபி அன்ட் டீ மட்டும் போட்டுக்கோ போறும்.

அம்மா நீ என்னத்த கட்டிண்டிருக்கன்னு தானே மிருதுக்கா கேட்டா!!!! நீ என்னடான்னா எல்லாருக்கும் செய்து எடுத்துண்டு வர மாதிரி தெரியறது

டேய் அது தான் டா நம்ம அம்மா!!

மாமி நாங்க அவா தர்ற ரொட்டி சப்ஜீ எல்லாம் சாப்பிடுவோமே என்னத்துக்கு எங்களுக்கும் எடுத்துக்கறேங்கள்?”

சரி பா நீங்க எல்லாரும் அதையே சாப்டுங்கோ நான் இதை தான் சாப்பிடனும்னு யாரையும் வற்புறுத்தலையே. ஒரு வேள அது நல்லா இல்லாட்டி உங்கள எல்லாரையும் விட்டுட்டு நான் மட்டும் சாப்ட முடியுமா?”

ஆமாம் சாப்பிடனும். அவா தான் அவளோ பேசறா இல்லையா. அப்போ நீங்க உங்களுக்கு மட்டும் எடுத்துக்கணும் . கேட்டாலும் கொடுக்காதீங்கோ

டேய் பசங்களா நாளைக்கு சப்போஸ் அவா சாப்பாடு பிடிக்கலைன்னா அப்பறம் பட்டினியாதான் சுத்த வேண்டி வரும் அதனால பேசாம எங்க அம்மா எடுத்துக்கறதை எடுத்துக்கட்டும் வேணும்ன்னா சாப்பிடுங்கோ இல்லாட்டி அது கெட்டு ஒண்ணும் போகாது வந்துட்டு சாப்பிட்டுக்கோங்கோ

மிருதுக்கா நீ சொல்லறதும் கரெக்ட் தான் அம்மா நீ எடுத்துக்கறத எடுத்துக்கோ மா. நாங்க ஒண்ணுமே சொல்ல மாட்டோம் என்ன சொல்லறேங்கள் பவின் அன்ட் ப்ரவின்?”

ஆமாம் ஆமாம் மாமி நீங்க எடுத்துக்கறத எடுத்துக்கோங்கோ.

அது!!! எதையுமே பேசறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசுங்கப்பா..சரி சரி ஆல் ஆஃப் யூ குட் நைட்

குட் நைட்என எல்லாரும் கூறினர். 

யாராவது அலாரம் வச்சிருக்கேங்களா?” என்றான் ப்ரவின் 

என்னோட அலாரம் என் மண்டைக்குள்ள இருக்கு டான்னு எல்லாரையும் எழுப்பிடறேன் கவலை படாம தூங்குங்கோஎன்றார் ராமானுஜம்.

அவர் கூறியது போலவே மூன்று மணிக்கெல்லாம் எழுந்து அம்புஜத்தையும் எழுப்பி இருவரும் ஒருவர் பின் ஒருவராக குளித்து முடித்ததும் பசங்களை எழுப்பினார்கள். அவர்களும் ஒவ்வொருவராக குளித்து வந்ததும் நவீனும் மிருதுளாவும் எழுந்து பல் துலக்கி ஃப்ரெஷ் ஆகியதும் அனைவருக்கும் காபி போட்டுக் கொடுத்தாள் அம்புஜம். எல்லோருமாக குளித்து, காபி அருந்தி முடித்து கிளம்ப சரியாக மணி நாலரை ஆனது. பஸ்ஸில் ஏறுவதற்காக மெயின்கேட்டுக்கு நடக்கலானார்கள். அவர்களை வழியனுப்ப  நவீனும் மிருதுளாவும் வீட்டின் கதவை தாழிட்டு அவர்களுடன் கிளம்பினார்கள்.  கேட் ஐ சென்றடையும் போது மணி நாலே முக்கால். பஸ் காத்துக்கொண்டிருந்தது. இவர்கள் பஸ் ஸ்டாப் சென்றடைவும் நவீனின் நண்பன் சதீஷும் அவர் குடும்பத்தினருடன் அங்கு வரவும் சரியாக இருந்தது. நவீன் அவர்களை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தப் பின் தனது குடும்பத்தினரையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளும் படி சதீஷிடம் சொல்ல அவனும் நவீனிடம் அதை பற்றி எல்லாம் கவலையின்றி இருக்குமாறு சொல்லிக்கொண்டிருக்கையில் பஸ் டிரைவர் அனைவரையும் பஸ்ஸினுள் ஏறச் சொன்னார். எல்லோருமாக ஏறி அவரவருக்கு பிடித்த இடத்தில் அமர்ந்தனர். நவீனுக்கும் மிருதுளாவும் அனைவரும் டாட்டா காட்ட பஸ் புறப்பட்டுச் சென்றது. 

நவீனும் மிருதுளாவும் வீட்டை நோக்கி பேசிக்கொண்டே மெல்ல நடந்தார்கள். அப்போது நவீன்…

உனக்கு போக முடியலையேன்னு கவலையா மிருது?”

நோ நாட் அட் ஆல் நவீ. அதவிட முக்கியமான சந்தோஷத்துக்காக நான் காத்துண்டு இருக்கும் போது இதுக்கெல்லாம் கவலை ஏன் படணும்.  ஏன் உங்களுக்கு போயிருக்கலாம்ன்னு தோணறதோ?” 

நோ!! நோ !!! எனக்கு மூணு வாரத்துக்கப்பறம் இப்போ தான் என் வைஃப் கூட மட்டும் இருக்க டைம் கிடைச்சிருக்கு… இதை விட்டுட்டு நான் ஏன் போகணும்னு நினைக்கப்போறேன்

ஹேய் ஆமா இல்ல!!!! ஸோ இன்னைக்கு நாம மட்டும் தான் இருக்கப் போறோம். வாவ்!! இந்த மூணு வாரமா நாம விலகி இருந்தது ஏதோ பல வருஷம் பிரிஞ்சு இருந்த மாதிரி ஒரு ஃபீல்.

ஆமாம். ஸோ ட்ரூ. லெட் அஸ் செலிப்ரேட் திஸ் டே டுகெதர்.

டாக்டர் சொன்னது ஞாபகம் இருந்தா நல்லது

ஹேய் அதெல்லாம் நல்லாவே ஞாபகம் இருக்கு மேடம்.

எவ்வளவு ஆச்சர்யமா இருக்கு நமக்குள்ளேயிருந்து நமக்குன்னு ஒரு புது உயிர் உருவாகி அது இந்த பூமிக்கு வந்து நம்மை பார்த்து சிரித்து, அழுது, விளையாடி, வளர்ந்து !!! வாவ்!!! காட் ஈஸ் ரியலீ கிரேட் பா. என்ன அழகான ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதில் மனிதர்களை ஒரு இயந்திரம் போல படைத்து அவர்களுக்கு எல்லா வகையான உணர்வுகளும் கொடுத்து மெல்ல மெல்ல நம்மை பரமபதம் காய்கள் போல நகர்த்தி ஒரு அழகான ஆட்டம் ஆடுகிறார்? இல்ல!!!

ஏய் சூப்பர் எக்ப்ளநேஷன் ஃபார் காட்ஸ் க்ரியேஷன் மிருது!! ஆசம்!!!

என்னை புகழ்ந்தது போதும் ஆம் வந்தாச்சு கதவ தொறங்கோ!

உண்மையா மா. நீ கொடுத்த இந்த விரிவாக்கம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

இருவருமாக பல நாள் கழித்து அவர்களுக்கென்று கிடைத்த  தனிமையை அனுபவித்து பின் குளித்து காலை உணவு சாப்பிட அமர்ந்தனர். மிருதுளா சுட சுட ஆவி பறக்க இரு தட்டுகளில் நாலு நாலு இட்டிலியும் அவள் அம்மா செய்து வைத்திருந்த கொத்தமல்லி சட்டினியும் போட்டுக்கொண்டு ஹாலுக்கு வந்து ஒன்றை நவீனிடம் கொடுத்துவிட்டு மீண்டும் அடுப்படிக்குள் சென்று இட்டிலி வைத்திருந்த பாத்திரத்தை எடுத்து வந்து கீழே வைத்து விட்டு சாப்பிடலானாள். அப்போது நவீன்….

இட்டிலி செம சாஃப்ட்டா இருக்கு

ஹலோ இட்டிலினா சாஃப்ட்டா தான் இருக்கும்

எங்க ஆத்துல சாப்ட்டயே அது சாஃப்ட்டாவா இருந்தது. இவ்வளோ வருஷமா அது மாதிரி தான் நான் சாப்டிருக்கேன் ஆனா இது உண்மையாவே பஞ்சு மாதிரி இருக்கு மிருது.

உளுந்து அளவு கம்மியான இட்டிலி கல்லு மாதிரி தான் ஆகும். நம்ம ஆத்துல!!! அச்சோ!!! அந்த ஒரு இட்டிலய தேங்காய் சட்னில ஊர வச்சும் அது அப்படியே தான் இருந்தது. இப்படி பஞ்சு மாதிரி இட்டிலிய  நான் இருப்பத்திரண்டு வருஷமா சாப்பிட்டு கல்யாணத்துக்கப்பறம் உங்க அம்மா பண்ணின இட்லியோட ப்ரூசிலீ மாதிரி ஃபைட் பண்ணி ரொம்ப சிரமப்பட்டுப் போயிட்டேன் அத சாப்பிட. ஆனா அத சொன்னா உங்க அம்மா மனசு கஷ்ட்டப்படுமேன்னுட்டு சொல்லாம விட்டுட்டேன்

இது என்ன சட்டினி சொன்னா உங்க அம்மா?”

கொத்தமல்லி சட்டினி. ஏன் கேட்கறேங்கள்?”

இதுவும் ரொம்ப சூப்பரா இருக்கு. இது மாதிரி சட்னி நான் சாப்ட்டதே இல்லை. யூ அன்ட் வேனு ஆர் லக்கி

இதை என் அம்மா கேட்டா சந்தோஷப்படுவா. நான் உங்களுக்கு வித வித மா செய்துத்தறேன் யூ டோன்ட் வரி மை ஹப்பி. யூ டூ ஆர் லக்கி டூ ஹாவ் மீ…எப்புடி

நன்றி வைஃபி. ஷுவர் ஆம் நவ் லக்கி டூ. நீயும் சாப்பிடு

இதோ சாப்டுண்டே தானே பேசறேன்

உணவருந்திய பின் இருவருமாக டிவியில் ஒளிபரப்பான திரைப்படத்தைப் பார்த்தனர். வீட்டுக்கு டிவி வந்த நாளிலிருந்து அன்று தான் அவர்கள் கையில் ரிமோர்ட் கிடைத்துள்ளது. அதுவரை பவின் தான் எப்போழுதும் அதை வைத்திருந்தான். அவன் தூங்கும் போது தான் அது டிவி அருகே இருக்கும். அன்றிரவு ஒரு எட்டு மணி போல மீண்டும் ஒரு நடை நடந்து அந்த வளாகத்தின் கேட் அருகே சென்று அங்கேயே நடந்துக்கொண்டே டூர் போனவர்கள் திரும்பி வர காத்திருந்தனர். பஸ் சரியாக எட்டரை மணிக்கு வந்து சேர்ந்தது. அனைவரும் குஷியாக இறங்கினார்கள். பஸ்ஸினுள் ஒரே பேச்சு சத்தமும் சிரிப்பு சத்தமும் தான் கேட்டது. அனைவரும் இறங்கியதும் ஒன்றாக கோரஸாக டிரைவருக்கும் அவர் அஸிஸ்ட்டென்டுக்கும் நன்றி தெரிவித்தனர். சதீஷ் நவீனைப் பார்த்து…

நவீன் இதோ உன் குடும்பத்தினரை உன்ட்ட பத்திரமா ஒப்படைச்சிட்டேன் பா.

ஹேய் ரொம்ப ரொம்ப தாங்கஸ் டா

இதுக்கெல்லாம் எதுக்கு டா தாங்க்ஸ் சொல்லிகிட்டு. நான் சும்மா ஜோக் அடிச்சேன். ஆனா ஒரு விஷயம் உன்ட்ட சொல்லணும் நவீன். உன் இன் லாஸ் மூணு பேரும் ரொம்ப நல்லவங்க பா. யூ ஆர் ரியலி கிஃப்ட்டெட் டூ ஹாவ் தெம் இன் யூவர் லைஃப். உன் தம்பிகளும் நல்ல பசங்க தான் …..உண்மைய சொல்லனும்னா அவங்க கொஞ்சம் செல்ஃபிஷோன்னு மனசுக்கு படுதுப்பா. நாங்க எல்லாரும் சூப்பரா என்ஜாய் பண்ணினோம். அன்ட் மாமி செய்து கொண்டு வந்த சாஃப்ட் இட்டிலி அன்ட் அந்த சட்னி வாஸ் ஆசம். வீ ஆல் லவ்டு இட். சரி சரி நாம அடுத்த வாரம் ஆபீஸ்ல மிச்சத்த பேசிக்கலாம் இப்போ அவங்க கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிட்டு   நாங்க எங்க வீட்டுக்கு கிளம்பறோம் வா

என அனைவரும் ஒருவருக்கொருவர் பை சொல்லி விடைப்பெற்று அங்கிருந்து அவரவர் வீட்டிற்கு நடக்கலானார்கள். அப்போது நவீன் அம்புஜத்திடம்…

என்ன உங்க கொத்தமல்லி சட்னி செம ஃபேமஸ் ஆயிடுத்துப் போல

அப்படியா சொல்லறேங்கள்

ஆமாம் அத்திம்ஸ் காலை ல அவா பூரியும் சப்ஜியும் கொடுத்தா ஆனா நாலு நாலு தான் தந்தா ஸோ அம்மா கொண்டு வந்த இட்டிலியையும் சட்னியையும் எல்லாருமா ஷேர் பண்ணிண்டோம்.” 

நேத்து என்னவோ சில பேரு கிண்டல் அடிச்சா!!! அவா எல்லாம் எங்க போணா இப்போ?” என்று மிருதுளா கேட்க அதற்கு பவின்

அவாளும் லைன்ல நிண்ணு இட்டிலியும் சட்னியும் வாங்கி சாப்ட்டா

என்று சொல்ல அனைவரும் சிரிப்பு மழையில் நனைந்தனர்.

சரி அம்மா நீ கொண்டு போன சாப்பாட்டில் மிச்சமிருக்கா ஏன்னா அதை தானே நைட்க்கு எல்லாரும் சாப்பிடறதா சொன்னா!! அதுனால கேட்டேன்

ஒண்ணும் மிச்சமாகலை எல்லாம் தீர்ந்துடுத்து. அப்போ நைட்டுக்கு என்னவாக்கும் டின்னர்?”

மிருதுக்கா ஷால் வீ கோ டூ அவர் ரோஹித் டாபா?”

என்று வேனு கேட்டதும் மிருதுளா நவீனைப் பார்த்தாள் அவனும் சம்மதிக்க அனைவருமாக டாபா சென்றனர். அங்கே மிருது அம்புஜத்தைப் பார்த்தே…

அம்மா நீ என்னத சாப்பிடுவ?”

எனக்கு ஒண்ணும் வேண்டாம் மா. மத்தியானம் சாப்ட் புளிசாதமே எறுக்களிச்சிண்டிருக்கு.

மிருதுக்கா …இல்லாட்டி நம்ம அம்மா அப்படியே ரொட்டி சப்ஜீ எல்லாம் சாப்ட்ருவா பாரு…அட போ க்கா

அதுவும் சரிதான் டா வேனு

எனக்கு ஒரு லைம் சோடா கிடைக்குமா? அது மட்டும் போதும்” 

நிச்சயம் கிடைக்கும் இருங்கோ நான் ஆர்டர் பண்ணறேன்என நவீன் ஆர்டர் பண்ணிக் கொடுத்தான்.

அனைவரும் சென்று பார்த்த இடங்களைப் பற்றியும், பிரயாணம் பற்றியும் டாபாவில் பேச ஆரம்பித்து வீட்டிற்குச் சென்று உறங்கும் வரை அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்.  அப்போது மிருதுளா ப்ரவினிடம்….

என்ன ப்ரவின் இப்போ உன் நண்பர்கள்ட்ட சொல்லிக்க விஷயம் கிடைத்திருக்குமே. ஹாப்பியா

ஓ எஸ் !!! நிறையா பார்த்தேன் அன்ட் நிறையா விஷயங்கள்  இருக்கு சொல்ல

அப்பாடா ப்ரவின் இனி திருப்தியா ஊருக்கு கிளம்புவான்என்றான் நவீன்.

என்ன இன்றய டே என்ட் முடிவில் நான் தான் டாப்பிக் ஆஃப் டிஸ்கஷனா. பேசாம எல்லாரும் தூங்குங்கப்பா. குட் நைட்

தொடரும்…..

அம்புஜம், ராமானுஜம், வேனு, ப்ரவின் மற்றும் பவின் ஊருக்கு கிளம்புவதற்கு ஒன்பது நாட்களே இருந்தன. மிருதுளா பிரயாணம் செய்ய கூடாது என்பதால் நவீன் மற்ற அனைவரையும் அவன் நண்பன் குடும்பத்தினருடன் டூர் போய் வர புக் செய்து அதற்குண்டான ரசீதை எடுத்துக்கொண்டு அன்று மாலை ஆபீஸிலிருந்து வந்தான். வழக்கம் போல மலர்ந்த முகத்துடன் வாசல் கதவைத் திறந்து நவீனை வரவேற்று காபி கொடுத்தாள் மிருதுளா. பின் நவீன் அனைவரையும் பார்த்து…

உங்கள் அனைவருக்கும் ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்

என்ன அது நவீ?”

வாட்ஸ் தீ சர்ப்ரைஸ் அத்திம்ஸ்?”

என்னது அந்த சர்ப்ரைஸ் அண்ணா?”

நவீன் தனது ஈவினிங் க்ளாஸ் செல்வதற்கு தயாராகிக் கொண்டே ….

ஓ தெரிஞ்சுக்க  இவ்வளோ ஆர்வமா!!! அப்படீன்னா இப்போ சொல்லக் கூடாதே!! எல்லாரும் ஒன்பதரை மணி வரைக்கும் வேயிட் பண்ணுங்கோ…நான் க்ளாஸ் முடிச்சு வந்துட்டு சொல்லறேன். ஸோ ஸ்டே டூயூன்டு டூ நவீன் சேனல். வில் பீ பேக் பை நைன் தெர்ட்டி. பை ஆல்

என்று கூறி நவீன் பைக்கில் சென்றதும், வேனுவும் பவினும் மிருதுளாவைப் பார்த்து…

மிருதுக்கா என்ன சர்ப்ரைஸ் பத்தி அத்திம்ஸ் சொல்லறார்ன்னு எங்களுக்கு சொல்லேன்

எனக்கும் அது சர்ப்ரைஸ் தான் வேனு

மன்னி உங்கள்ட்ட அண்ணா நிச்சயம் சொல்லிருப்பா… என்னன்னு சொல்லுங்கோ

உங்க எல்லாரோடையும் தான் நானும் இங்கே இருக்கேன். அவர் ஆபீஸிலிருந்து வந்ததும் விஷயத்தை  எல்லாரிடமும் தான் சொன்னார். என்ட்ட தனியா ஏதாவது பேசினாரா சொல்லு…நானே அது என்னவா இருக்குன்னு யோசிச்சிண்டிருக்கேன்

எதுவா இருந்தா என்ன? க்ளாஸ் முடிச்சிட்டு வந்து அவரே சொல்லதான் போறார் அதுக்குள்ள நீங்க எல்லாரும் ஏன்தான் இப்படி யோசிச்சு குழம்பிக்கறேங்கள். மாப்ள வந்துட்டு சொல்வார். எல்லாரும் சித்த பொறுமையா இருங்கோளேன்” 

வந்துட்டாங்கப்பா வந்துட்டாங்க நவீன் சப்போர்ட்டர்ஸ். அப்படியே ஆகட்டும் தாயே. நாங்கள் அமைதியாக கார்ட்ஸ் விளையாட போகிறோம் தாங்களும் வருகிறீர்களா?”

நோ நோ நாங்க டிவி பார்க்க போறோம். இல்லையா வேனு அன்ட் பவின்?”

ஆமாம் ஆமாம் நோ கார்ட் கேம்

அட போங்கப்பா!!! நீங்க அந்த டிவியையே பாருங்கோ. அப்போ நான் போய் என்னோட புத்தகத்தை எடுத்து கொஞ்சமாவது படிக்கறேன். அம்மா நீ டின்னர் பண்ணிடுவியா இல்லாட்டி நான் ஒரு எட்டு மணிக்கு பண்ணறேன்

நீ உன் படிப்பைப் பாரு மிருது. நான் சமையலைப் பார்த்துக்கறேன்னு நேத்தே உன்ட்ட சொல்லிட்டேனே! அதுனால நீ அதைப் பத்தி எல்லாம் யோசிக்கவே வேண்டாம். இவா டிவி பார்க்கட்டும்

ஓகே அம்மா தாங்கஸ்

என்னத்துக்கு தாங்கஸ் எல்லாம் சொல்லிண்டு போடி

மிருதுளா முன் புத்தகம் இருந்தது ஆனால் அவள் புத்தியோ அந்த சர்ப்ரைஸ் என்னவாக இருக்கும் என்ற சிந்தனையில் மூழ்கியது. பவின், ப்ரவின், வேனு டிவி பார்த்துக்கொண்டிருந்தாலும் அவர்களுக்குள் நவீன் சொன்ன சர்ப்ரைஸ் என்னவாக இருக்கும்? இதுவாக இருக்குமோ? இல்லை அதுவாக இருக்குமோஎன்ற டிஸ்கஷனும் நடந்துக்கொண்டேதான் இருந்தது. இப்படி அனைவருக்கும் அது என்ன என்ற சிந்தனையில் மூன்றறை மணி‌ நேரம் போனதே தெரியவில்லை. நவீன் க்ளாஸ் முடித்து வீட்டிற்குள் நுழைந்தான். உடனே பவின்…

அண்ணா இப்போவாவது சொல்லேன் அது என்ன சர்ப்ரைஸ் ன்னு

இரு டா நான் டிரெஸ்ஸை மாத்திட்டு டின்னர் சாப்ட்டு வரேன். எனக்கு செம பசி

போ அண்ணா ரொம்பத்தான் பண்ணற….உன் சர்ப்ரைஸை நீயே வச்சுக்கோ” 

ஓகே …அப்போ திருப்பிக் குடுத்துட்டு நீங்க யாரும் வரலைன்னு சொல்லிடறேன்

எங்கே போகபோறோம்?” என ஆவலாக கேட்டான் ப்ரவின்

இருங்கோ பசங்களா இனி எங்கே போக போறார். நீங்க எல்லாரும் சாப்ட்டாச்சில்லையா இப்போ அவர் சாப்பிடட்டும் அப்பறம் கேட்டுப்போம் விஷயத்தைஎன்றாள் மிருதுளா

மன்னி ஆல்ரெடி மூணு மணி நேரம் வேயிட் பண்ணியாச்சு

மூணு மணி நேரம் வேயிட் பண்ணினேங்கள் இல்லையா இன்னும் ஒரு பதினைந்து நிமிஷம் சேர்த்து வேயிட் பண்ணுங்கோஎன நவீன் கூறிக்கொண்டே டிபனை சாப்பிடலானான். 

நவீன் சாப்பிட்டு விட்டு ஹாலில் வந்தமர்ந்து அனைவரையும் அழைத்து அமரச்சொல்லி….

என் நண்பன் சதீஷ் அவன் குடும்பத்திற்காக குஜராத் டூர் ஏஜென்சி ல ஒரு டூர் புக் பண்ணிருந்தான் அதில் டிக்கெட்ஸ் நல்ல ரேட்டில் கிடைத்தது. அதனால் அஞ்சு சீட் புக் பண்ணிருக்கேன். ஒரு நாள் டூர் டூ அஹமதாபாத், பதான் ஆகிய இடத்துக்கெல்லாம் கூட்டிண்டு போவா. காலை ல அஞ்சு மணிக்கு கிளம்பி நைட் எட்டு அல்லது ஒன்பது மணிக்கு திரும்பி கேம்ப்புக்குள்ள எல்லாரையும் விட்டுட்டு போயிடுவா. சாப்பாடு, டீ எல்லாம் அவாளே தருவா.  வர்ற சனிக்கிழமை புறப்பட தயாரா இருங்கோ. இதுதான் நான் சொன்ன சர்ப்ரைஸ். என்ன எல்லாருக்கும் ஓகே வா?”

சூப்பர் அண்ணா. அஞ்சு டிக்கெட் தானா!!!! ஆனா நம்ம ஏழு பேர் இருக்கோமே!!!என்று கேட்டான் பவின்

மிருதுக்கு உடம்பு சரியில்லை அதனால் அவள் டிராவல் பண்ணக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்கா. ஸோ நானும் மிருதுவும் வரலை நீங்க அஞ்சு பேரும் போயிட்டு வாங்கோ. சதீஷ் உங்களை நன்னா பார்த்துப்பான்

மாப்ள நீங்க எல்லாரோடையும் போயிட்டு வாங்கோ நான் மிருதுவோட இங்கே இருக்கேன்என்றாள் அம்புஜம்

நோ நோ அதெல்லாம் வேண்டம். என் ஆத்துக்காரியை நான் பார்த்துக்கறேன் நீங்க எல்லாரும் போய் எல்லா இடத்தையும் பார்த்துட்டு வாங்கோ. நாங்க இன்னும் ரெண்டு வருஷம் இங்க தானே இருப்போம் அப்பறமா போயிண்டா போச்சு. நீங்க எல்லாருமா ஒன்னா மறுபடியும் எப்போ வருவேங்கள்ன்னு உங்களுக்கே தெரியாது. அதுனால ஒண்ணும் சொல்லாம போயிட்டு என்ஜாய் பண்ணிட்டு வாங்கோ.

சரி அப்படியே பண்ணறோம்

அப்பாடா குஜராத் வந்து ஒண்ணுமே பார்க்காம ஊருக்கு கிளம்பப்போறேனேன்னு கவலையா இருந்தது. நல்ல வேளையா இந்த டிரிப் கிடைச்சிருக்கு. ஐ ஆம் ஹாப்பிஎன்று தனது மகிழ்ச்சியை சத்தமாக பகிர்ந்துக் கொண்டான் ப்ரவின்.

நீ பண்ணின காரியத்துக்கு உனக்கு டிக்கெட் எடுத்திருக்கக்கூடாது தான்…. பரவாயில்லை போயிட்டு வா. இனி அடுத்த தடவை இப்படி பண்ணாதே சரியா

ஓகே அண்ணா. இனிமேல் அப்படி பண்ண மாட்டேன்” 

ஓ !!! அப்போ இதெல்லாம் நம்ம ப்ரவினுகாக தானா!!!என்று கூறி கண்ணடித்தாள் மிருதுளா

ஆமாம் பையன் ஒண்ணுமே பார்க்கலையேன்னு ரொம்ப கவலைப் பட்டதைப் பார்த்து நான் கலங்கிட்டேன் தெரியுமா!!

அண்ணா அன்ட் மன்னி ப்ளீஸ் என்னை கிண்டல் பண்ணினது போதுமே. ஐ ஆம் சாரி ரிரிரிரி

அது!!! நல்ல புள்ளைக்கு அழகு

அம்மா உனக்கு சாப்பாடு நான் கட்டித் தரேன் கவலைப்படாதே

ஏன் மிருது அவாளே டிஃபன், சாப்பாடு அன்ட் டீ எல்லாம் தருவாளே. அப்பறம் என்னத்துக்கு கட்டிண்டு போகணும்??”

நவீ அதை அம்மா சாப்பிட மாட்டா. நிச்சயம் அதில் வெங்காயம், பூண்டு, மசாலா எல்லாம் இருக்கும்

ஆமாம் இருக்கும் அதுனால என்ன?”

அதெல்லாம் சாப்பட மாட்டா

ஓ!!! அப்படீன்னா கட்டிண்டு தான் போகணும்

நீ ஒண்ணும் செய்யண்டாம் மிருது நானே செஞ்சுண்டு உனக்கும் அவருக்கும் வச்சுட்டும் கிளம்பறேன். நீ அதெல்லாம் நினைச்சு கவலைப்படாதே சரியா. நீ நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ.

அம்மா ஒரு நாள் டூர் தான் மா. என்னமோ பத்து நாள் போற மாதிரி பேசற!!

அதுதானேஎன்றான் நவீன்

இவ்வாறு பேசிக்கொண்டே அந்த டூரில் எந்தெந்த இடங்களுக்கெல்லாம் கூட்டிச்செல்வார்கள் அங்கே எவை பார்க்க வேண்டிய முக்கியமானவை என்பதைப் பற்றி எல்லாம் உறையாடிக் கொண்டே அனைவரும் உறங்கலானார்கள்.

மறுநாள் விடிந்ததும் நவீன் ஆபீஸுக்கு சென்றான். மூன்று பசங்களும் எழுந்து குளித்து டிஃபன் சாப்பிட்டப் பின், ப்ரவின்..

மன்னி நானும் பவினும் அப்பா அம்மாக்கு ஃபோன் பண்ணிட்டு வரோம்.

நான் வரலை நீ போய் பண்ணிட்டு வா

டேய் பவின் நீயும் என்கூட வர அவ்வளவுதான்.

ஹேய் ப்ரவின் நானும் உங்க கூட வரேன். நான் மட்டும் இங்க உட்கார்ந்துண்டு என்ன பண்ண போறேன்? கம் லெட்ஸ் கோ

அதுக்கில்ல வேனு நாங்க எங்க பேரன்ட்ஸோட பேச போறோம்… அங்க நீ வந்து என்ன பண்ணுவ?”

நான் பாட்டுக்கு ஒரு சேர்ல உட்கார்ந்துக்கறேன். நீங்க பேசி முடிச்சிட்டு மறுபடியும் நாம திரும்பி வந்திடலாம்

இல்ல அது வந்து…என ப்ரவின் இழுக்கையில் சட்டென மிருதுளா‌….

ஹலோ ப்ரவின் இதுக்கு ஏன் இப்படி இழுக்கற.‌‌..‌ அன்னைக்கு நானும் என் பேரன்ட்ஸும் பேச வாக்கிங் போனப்போ தானும் வந்தே ஆவேன்னு பவின் சொன்னான். அதுக்கு நாங்க யாருமே வேண்டாம்னோ இல்ல இவ்வளவு எல்லாம் யோசிக்கலையே …கூட கூட்டிண்டு போனோமில்லையா பவின்?”

சரி சரி நீயும் வா வேனு போகலாம்

என வேண்டா வெறுப்பா சொன்னான் ப்ரவின். அதைக் கேட்ட வேனு..

பரவாயில்லை நீங்க ரெண்டு பேரும் ஏதோ ரகசியம் பேச போறேங்கள் போல அதுதான் நான் வர்றது ப்ரவினுக்கு பிடிக்கலை. நோ ப்ராப்ளம் நீங்களே போயிட்டு வாங்கோ. நான் இங்கேயே டிவி பார்த்துண்டிருக்கேன்

அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை வேனு. சரி பவின் வாயேன்டா…இதோ நாங்க ஒரு பத்து நிமிஷத்துல வந்திடறோம்

என்று கூறி வந்த நாளிலிருந்து அன்று தான் மிருதுளாவை அவள் குடும்பத்தினருடன் தனியாக விட்டனர் ப்ரவினும் பவினும். அதுவும் பத்து நிமிஷம். அவர்கள் இருவரும் வெளியே சென்றதும் அம்புஜம் மிருதுளாவிடம்….

இவா சாமர்த்தியமான பசங்கள் டீ மிருது. நம்மள பேசிக்க விடாம ஒருத்தன் மாத்தி ஒருத்தன் காவலுக்கு இருந்துட்டு இப்போ அவாளுக்குன்னா நம்ம வேனுவ கழட்டி விட்டுட்டு என்ன அழகா போறதுகள் பாரேன்!!!!  உன் மாமியார் இந்த பசங்கள இப்படி வேவு பாக்க அனுப்பினதால நமக்கு ஒரு பாதிப்பும் இல்லை ஆனா இதெல்லாம் அவாளுக்கே இதே பசங்களால திரும்பும் பார்த்துக்கோயேன்.

என்ன சொல்லற மா புரியும்படி சொல்லு

இன்னிக்கு நம்மள கவனிக்க இந்த புள்ளகள அனுப்பறாளே நாளைக்கு இவாளுக்கு கல்யாணமானா அவா பெத்தவா எப்படிப்பட்டவா எப்போ யாரை எங்க எதுக்கு அனுப்புவா என்பதெல்லாம் இந்த பசங்களுக்கு அத்துப் படியாயிருக்கும் ஸோ அதுக்கு ஏத்தாமாதிரி நடந்துக்கமாட்டாளோ!!!! அது ஏன் அந்த சமத்து மாமிக்கும் மாமாக்கும் தோனலை?”

ஓவர் சமத்தா இருந்தா ஏதாவது ஒரு இடத்தில் சறுக்கத்தான் செய்யும். இதிகாசத்ல கூட அதி சாமர்த்தியமாக தன்னை நினைச்சிண்ட எத்தனையோ அதிபுத்திசாலிகள் கடைசியில் அவா வெட்டின குழிக்குள்ளயே விழுந்து பொதஞ்சு போகலையா !!! அது மாதிரிதான் மா…விடு விடு ஃப்ரீயா விடு மம்மீ

நாம நாலு பேரும் கார்ட்ஸ் விளையாடலாமா? ” என்று மிருதுளா கேட்க

ஓ எஸ் நான் ரெடிஎன வேனு சொல்ல

நான்கு பேருமாக கார்ட்ஸ் விளையாட்டில் மூழ்கினர். ப்ரவினும் பவினும் வீட்டிலிருந்து ஃபோன் பேச வெளியே சென்று ஒரு மணி நேரமாகியும் அவர்கள் வராததால் மிருதுளா வேனுவைச் சென்று பார்த்து வரும் படி சொல்ல அதற்கு வேனு…

போ மிருதுக்கா. நான் வரேன்னு சொன்னப்போ அவளோ தயங்கினா இல்ல…இப்போ என்னத்துக்கு நான் அவாள தேடிண்டு போகணும். அதெல்லாம் வருவா வருவா

டேய் அவா தான் அப்படின்னா நாமளும் அப்படி இருக்கனும் ன்னு இல்லை டா. ப்ளீஸ் ஒரு எட்டுப் போய் பார்த்துட்டு வாடா வேனு.

சரி சரி போயிட்டு வரேன்

என்று வேனு கிளம்பி வெளியே செல்லவும் ப்ரவினும் பவினும் வீட்டு வாசலின் இரும்பு கேட் ஐ திறந்து உள்ளே வரவும் சரியாக இருந்தது. அவர்களைப் பார்த்ததும் வேனு திரும்பி வீட்டினுள் சென்று…

மிருதுக்கா அவா ரெண்டு பேரும் வந்தாச்சு

ஹேய் ப்ரவின் அன்ட் பவின் என்ன? பத்து நிமிஷத்துல வர்றதா சொல்லிட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வந்திருக்கேங்கள்!!! அப்படி என்னப்பா பேசினீங்க இவ்வளவு நேரமா? பணம் பத்தித்தா?”

அட போங்கோ மன்னி..அங்க ஏதோ லைன் ல ப்ராப்ளமாம் ஒரு இருபது நிமிஷத்துல சரியாயிடும்ன்னு வேயிட் பண்ண சொன்னா சரினுட்டு வேயிட் பண்ணறோம் பண்ணறோம் இன்னும் சரியாகலை அதுனால கிளம்பி வந்துட்டோம். நீங்க இந்த ஃப்ரிட்ஜ் வாங்கினதுக்கு பேசாம ஒரு ஃபோன் வாங்கிருக்கலாம்” 

மிருதுளா மனதிற்குள்கடவுள் இருக்கிறார் டாஎன்று ரஜினி ஸ்டைலில் சொல்ல அவளுக்கே சிரிப்பு வந்து அதை அடக்க முடியாமல் சிரித்துவிட அதைப் பார்த்த ப்ரவின்..

என்ன மன்னி நான் ஜோக்கா சொல்லறேன் !!! சிரிக்கறேங்கள்

ச்சே ச்சே நான் எதையோ நினைச்சேன் சிரிப்பு வந்துடுத்து…நீ சொன்னதுக்காக இல்லைப் பா…அதுவும் இல்லாம உனக்கு ஃபோன் வேணும்ன்னா உங்க அண்ணா கிட்ட கேளு அது தப்பே இல்ல ஆனா ஃப்ரிட்ஜுக்கு பதில் அத வாங்கிருக்கலாம் ன்னு எல்லாம் சொல்லாதே. எங்களுக்கு எது அத்தியாவசிய தேவையோ அதைத்தான் நாங்க வாங்குவோம். அதுவுமில்லாம அது என் அப்பா அம்மா எங்களுக்கு ஆசையா வாங்கித் தந்திருக்கறது அதை நீ இப்படி சொன்னது என் மனசுக்கு கஷ்ட்டமா இருக்கு.

நான் உங்க மனசு கஷ்டப்படறா மாதிரி எதுவும் சொல்லலைன்னு எனக்குப் படறது

அப்படியே இருக்கட்டும் நோ இஷுஸ். சரி எல்லாரும் சாப்பிட வாங்கோஎன அந்தப் பேச்சுக்கு அங்கேயே முற்றுப்புள்ளி வைத்தாள் மிருதுளா. எடுத்து சொல்லியும் தான் சொன்னதில் தவறு ஏதுமில்லை என்றெண்ணும் ப்ரவினிடம் எது சொன்னாலும் பிரயோஜனமில்லை என்பதை உணர்ந்ததால் அவன் நினைப்பை அவனிடமே விட்டுவிட்டு தனது அடுத்த வேலையில் இறங்கி அனைவருக்கும் அன்னம் பரிமாறினாள். 

உணவு உண்டபின் மிருதுளா அசந்து தூங்கலானாள். அப்போது டிவி ரிமோட்டை எடுத்து டிவியை ஆன் செய்யப் போன பவினிடம் அம்புஜம் மெல்லிய குரலில்….

பவின் வேண்டாம் பா. உங்க மன்னிக்கு உடம்பு சரியில்லை இல்லையா. அவள் நாம வந்ததிலிருந்து இன்னைக்கு  தான் மத்தியானம் தூங்கறா. நல்லா அசந்து தூங்கறா நீ டிவி போட்டு அவள எழுப்பிடாதப்பா.

என்ன மாமி இது…டிவி பார்க்கக் கூடாதா? பின்ன எதுக்கு டிவி

மெதுவா பேசேன் பவின்

இந்தாங்கோ உங்க டிவி ரிமோர்ட். நான் பார்க்கலை. போர் அடிக்கறதேன்னுட்டு ரிமோர்ட்டை எடுத்தேன்…இட்ஸ் ஓகே

அம்புஜத்திற்கு அப்பாடா தன் கர்ப்பிணி பெண்ணை டிவி சத்தத்திலிருந்து காப்பாத்தியது பெரிய சாதனைப் போல எண்ணி அன்று அந்த டிவியை வாங்காமல் இருந்திருந்தா இந்த பிரச்சினையை தவிர்த்திருக்கலாமோ என்றும் ஊருக்கு கிளம்புவதற்கு ஒரு நாள் முன்னாடி வாங்கிருந்தா போதுமோ என்றும் தோன்றியது. 

நவீன் ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வரும்வரை தூங்கினாள் மிருதுளா. நவீன் வருவதற்கு சற்று முன் எழுந்து முகம் கை கால் அலம்பி விளக்கேற்றி வாசலில் காத்திருந்தாள். நவீன் வந்ததும் குட் ஈவினிங் சொல்லிவிட்டு உள்ளே காபி போடச் சென்றாள். அவளைப் பார்த்துக் கொண்டே பின்னால் சென்ற நவீன் …

ஏய் மிருது உன் முகமெல்லாம் ஏன் வீங்கினா மாதிரி இருக்கு?”

அதுவா!! நான் ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு தான் மத்தியானம் நல்லா அசந்து  தூங்கிருக்கேன் அதுதான்னு நினைக்கறேன்

ஆமாம் அண்ணா நீ வர்றத்துக்கு ஒரு பத்து நிமிஷம் முன்னாடி தான் மன்னி எழுந்துண்டா. அவா தூங்கறதுனால என்னால டிவி கூட பார்க்க முடியலை. அம்புஜம் மாமி… மன்னி தூங்கறான்னுட்டு என்னை டிவி பார்க்கக்கூடாதுன்னுட்டா. ஒரே போர்!!

அதுக்கில்லை அவளே அசந்து தூங்கறா எங்கடா டிவி சத்தம் அவளை தூக்கத்திலிருந்து எழுப்பிடுமோன்னு தான் வேண்டாம்ன்னு சொன்னேன். இந்த மாதிரி இருக்கும் போது தூங்கினா எழுப்பப்படாதுன்னுட்டு சொல்லுவா அதுதான்…

அதுனால என்ன இட்ஸ் ஓகே. அவன் தான் ஏதோ சொல்லறானா நீங்களும் அதுக்கு விளக்கம் எல்லாம் கொடுத்துண்டு வரேளே!!!! ஒரு இரண்டு மணி நேரம் டிவி பார்க்கலைன்னா தான் என்ன? ஏன்டா பவின்?”

இரண்டு மணி நேரமில்லை நாலு மணி நேரம் !!!

இதைக்கேட்டதும் அம்புஜம் மனதிற்குள்

பாவி பாவி என் பொண்ணு தூங்கினத எல்லாம் கணக்கு போட்டுண்டு இருக்கானே. பகவானே நீ தான் என் பொண்ணா காத்து ரக்ஷிக்கணும்

சரி சரி விடுங்கோ விடுங்கோ நான் தூங்கினதுக்கெல்லாம் பஞ்சாயத்த கூட்டுவேங்களா என்ன?.. இந்தாங்கோ நவீ காபி. குடிச்சிட்டு இந்த பட்சணங்களை சாப்ட்டு நீங்க க்ளாஸுக்கு கிளம்புங்கோ

ஓகே எஜமானி மா

அன்று க்ளாஸுக்கு சென்று வந்து இரவு உணவருந்தி விட்டு அனைவருடனும் சற்று நேரம் உரையாடிய பின் ஒருவருக்கொருவர் குட் நைட் சொல்லி விட்டு உறக்கத்தில் ஆழ்ந்தனர்.

ஒருவரின் உண்மையான குணத்தை  திரையிட்டோ, அரிதாரம் பூசியோ 

பல நாள் மறைத்து வைக்க முடியாது

திரை ஒரு நாள் விலகும் போது

நரியின் சாயம் வெளுத்தது போல

அரிதாரமும் வெளுத்து போகும் போது

நிஜமான சுவரூபம் வெளிப்படும்.

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா…என்பதைப் போல கால் கொண்டு ஆடவேண்டிய பிள்ளைகளை நூல் கொண்டு ஆடும் பொம்மைகளாக ஊரிலிருந்து ஆட்டிவிக்கின்றனர் வித்தகர்களான மூத்த தம்பதியினர். அன்று பொம்மைகள் வித்தகர்களுடன் நூல் கொண்டு செய்தி பரிமாற்றம் பண்ண முடியாமல் தவிக்க சற்றே நூல் தளர பொம்மைகளின் உண்மையான நிறம், வடிவம் அனைத்தும் மெல்ல வெளிவர அதனால் சில பல சங்கடங்களும், பேச்சுவார்த்தைகளும், பஞ்சாயத்தும் நடைபெற அவை அனைத்துக்கும் நம்ம மிருதுளா  அன்றைய தினம் முற்றுபுள்ளி வைத்தாலும் இன்னும் எட்டு நாட்கள் உள்ளதே!!!! 

தொடரும்….

 இரவு எப்போது முடியுமோ !!! என்ற யோசனையில்  நவீன் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டே காலை பொழுது விடிவதற்காக காத்துக்கொண்டிருந்தான்.  இரவு முழுவதும் தூக்கமின்றி, காலையில் ஆதவனின் ஒரு தலை முடியான கதிர் வீச்சை கண்டதும் எழுந்து எவரையும் தொந்தரவு செய்யக்கூடாது என்ற எண்ணத்தில் மெதுவாக நடந்து  குளித்து முடித்து குளியலறையிலிருந்து வெளியே வந்ததும் மிருதுளா போடும் காபி வாசம் அவனை அடுப்படிக்கு இழுத்துச் சென்றது. அங்கே மிருதுளா காபி போட்டுக்கொண்டிருந்தாள். மெல்ல அவளருகே சென்று …

ஹாய் மிருது. குட் அன்ட் ஹாப்பி மார்னிங்.

குட் மார்னிங் நவீ.  காபி குடிச்சிட்டு தான் எப்பவும் குளிக்க போவேங்கள் ஆனா இன்னைக்கு என்ன!! சார் குளிச்சிட்டு காபிக்கு வந்திருக்கார்!!!

நான் நைட் ஃபுல்லா தூங்கவே இல்லை. அதுதான் சீக்கிரமா குளிச்சிட்டேன். ஆமாம் நீ ஏன் சீக்கிரம் எழுந்துண்ட?? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிருக்க வேண்டியதுதானே?”

உங்களுக்கு மட்டும் தான் தூக்கம் வரலைன்னு நீங்க நினைச்சுண்டா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?”

ஹேய் அப்போ நீயும் தூங்கலையா?”

ஆமாம். எனக்கு மட்டும் ஆசை, பதற்றம்  இல்லையா பின்ன?”

ஆனா டைம் ஆறு தான் ஆகறது இன்னும் மூன்று மணிநேரமிருக்கே. எப்போதும் போல இன்னைக்கு காபி சூப்பர்

இவர்கள் இருவரும் அடுப்படியில் உரையாட அதற்குள் அம்புஜமும் ராமானுஜமும் எழுந்து குளித்துவிட்டு அமர்ந்திருந்தனர். நவீன் காபியை ருசித்துக்கொண்டே ஹாலில் வந்ததும் தனது மாமனார் மாமியார் அமர்ந்திருப்பதைப் பார்த்து …

என்ன நீங்க ரெண்டு பேரும் இப்பவே குளிச்சிட்டேள். மிருது இவாளும் எழுந்துண்டுட்டா. இவாளுக்கும் காபி போட்டுண்டு வா

இல்லை பரவாயில்லை. நானே எங்களுக்கு போட்டுக்கறேன் மிருது. நீ போய் உட்கார்ந்து உன் காபியை குடி போ.  நீங்க ரெண்டு பேரும் மும்முரமா பேசிண்டிருந்தேங்களா… சரி…என்னத்துக்கு டிஸ்டேர்ப் பண்ணனும்னு நாங்க குளிச்சிட்டு வந்துட்டோம்

என கூறிக்கொண்டே இரண்டு காபி போட்டுக்கொண்டு ஹாலுக்கு வந்து ஒன்றை தன் கணவரிடம் கொடுத்துவிட்டு மற்றொரு காபி தம்பளருடன் அமர்ந்தாள் அம்புஜம். மிருதுளா அவர்களிடம் ..

அப்பா அம்மா நாம எல்லாருமா இன்னைக்கு ஒரு ஒன்பதரை மணிக்கு கேன்டீன் கடைக்கு போகணும் அதனால ரெடி ஆகிடுங்கோ. நீங்க எல்லாரும் கடையில் பொருட்களை பார்த்துண்டு இருங்கோ. நாங்க டாக்டர்ட்ட செக்கப்புக்கு போயிட்டு வந்திடரோம் அப்புறம் நீங்க பார்த்து வச்ச பொருளெல்லாம் வாங்கிண்டு ஆத்துக்கு வருவோம் ஓகே வா.

ஓகே மா.

யாருக்கு உடம்புக்கு என்ன? ஏன் டாக்டர்ட்ட போகணும்?”

நான் உங்களுக்கு அப்பறமா சொல்லறேன். எல்லாம் நல்லதுக்கு தான்

ஓகே

இவர்கள் அனைவருமாக காபி வித் மிருதுளா போல அமர்ந்து பேசி முடித்து கூட்டத்தைக் கலைக்கும் போது மணி எட்டானது. அதுவரை மிருதுளா படுத்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தாள். இப்படியே உட்கார்ந்திருந்தால் சரிவராது என்று கூறிக்கொண்டே  அம்புஜம் அனைவருக்கும் டிஃபன் செய்யத்துவங்கினாள். மிருதுளா குளித்து ரெடி ஆகிக்கொண்டிருந்தாள் நவீன் தம்பிகள் பவினையும் வேனுவையும் எழுப்பி கேன்டீன் செல்வதற்கு ரெடியாக சொன்னான். அனைவரும் காலை உணவருந்தியதும்  தயார் ஆனார்கள். நவீன் தனது பைக்கில் சென்று மெயின்ரோட்டிலிருந்து  ஒரு ஆட்டோவை அழைத்து வந்து…

மிருதுளா நீ வேனு, அப்பா, அம்மாவோட ஆட்டோல வா. நானும் பவினும் பைக்கல வரோம் சரியா

ஓகே அப்படியே ஆகட்டும் மை லார்ட்

விட்டு விடுவாரா நம்ம ஒற்றன் பவின்!!!

அண்ணா நான் ஆட்டோல வரேன் நீ வேனுவ பைக்ல கூட்டிண்டு வா

டேய் அவா ஆட்டோல வரட்டும்டா.

சரி..சரி விடுங்கோ இதுக்கு ஏன் தேவையில்லாம ஒரு ஆர்க்யூமென்ட். வேனு நீ அதிம்பேரோட பைக்ல வா. பவின் நீ எங்களோட ஆட்டோலயே வா.” 

அட்டோ அவர்களை  கேன்டீன் வளாகத்திற்குள் இறக்கி விட்டு பணத்தை வாங்கியதும் அங்கிருந்து கிளம்பியது. நவீன் பைக்கை ஸ்டான்டில் நிப்பாட்டி விட்டு வேனுவுடன் வந்து மற்றவர்களோடு சேர்ந்து கேன்டீனுக்குள் நுழைந்தான்‌. மிருதுளா காலையில் கூறியது போலவே அவர்களை அங்கே விட்டு விட்டு நவீனுடன் ஹாஸ்பிடல் சென்றாள். அவர்கள் செல்வதைப் பார்த்த பவின்…

அண்ணா, மன்னிஎன கூப்பிட அதற்கு அம்புஜம்…

மிருதுளாக்கு டாக்டர்ட்ட போணுமாம் அதுனால அவா ஹாஸ்பிடல் போறா பவின். அவா வர வரைக்கும் நாம இங்க இருக்குற பொருட்களைப் பார்ப்போம் வா

மன்னிக்கு என்ன ஆச்சு? அம்மாட்ட சொன்னாலா

ஒண்ணுமில்லை நேத்து கரை அணைல வாந்தி எடுத்தாளோனோ அதப் பத்தி தான் கேட்க போயிருக்கா. அதெல்லாம் உங்க அம்மாட்ட சொல்லுவா கவலைப்படாதே வா இந்த ஃப்ரிட்ஜ் நல்லா இருக்கான்னு சொல்லு

என்று ஒரு வழியாக பெருமூச்சு விட்டுக்கொண்டே பவினை கூட்டிச்சென்றாள் அம்புஜம். ஹாஸ்பிடலில் டென்ஷனாக அமர்ந்திருந்தனர் நவீனும் மிருதுளாவும். டாக்டர் ரூமிலிருந்துமிருதுளாஎன பெயர் கூப்பிடப்பட்டதும் …

எஸ் ஆம் ஹியர். மே ஐ கம் இன்

எஸ் கம்

தாங்யூ டாக்டர்

(டாக்டரும் மிருதுளாவும் ஹிந்தியில் உரையாடிதை எனது வாசகர்களுக்காக தமிழில் )

சொல்லுமா என்ன பிரச்சினை

பிரச்சினை ஒண்ணும் இல்லை டாக்டர். எனக்கு நாள் ஒரு மாசம் தள்ளி போயிருக்கு அது தான் டெஸ்ட் பண்ணிக்கலாம்னு வந்திருக்கேன்

ஓ ஓகே. நியூலி மாரிட்டா

எஸ் டாக்டர்

கல்யாணமாகி எவ்வளவு மாதம் ஆகிறது

நாலு மாசம் ஆகறது டாக்டர்

ஓகே உள்ள போய் படுங்க இதோ நான் வந்து டெஸ்ட் பண்ணறேன்

டாக்டர் மிருதுளாவை பரிசோதனை செய்தார் …பின் 

இட் ஈஸ் பிரக்னென்சீ பட் ஒரு நாற்ப்பத்தைந்து நாளாவது ஆகட்டும் அப்பறம் ஸ்கேன் செய்து கன்பார்ம் பண்ணறேன்

ஏன் டாக்டர் ஏதாவது ப்ராப்ளமா?”

நோ நோ அதெல்லாம் ஒண்ணுமில்லை. டு நாட் வரி. இன்னும் ஒரு பதினைந்து நாள் தானே இருக்கு. நீங்க மிருதுளாவை ஒரு டூ வீக்ஸ் கழிச்சு மறுபடியும் கூட்டிட்டு வாங்க சில டெஸ்டெல்லாம் எடுக்கணும். அதெல்லாம் எடுத்துட்டு அதோட ரிசல்ட்டை பார்த்துட்டு  சொல்லறேனே டில் தென் ப்ளீஸ் வேயிட். கீப் யுவர் செல்ஃப் ஹாப்பி மிருதுளா. ஓகே தென் வில் மீட் யூ ஆஃப்டர் டூ வீக்ஸ். டேக் கேர்

ஷுவர்…தாங்யூ டாக்டர். எஸ் ஐ வில்.

டாக்டர் ரூமிலிருந்து வெளியே வந்ததும் மிருதுளா கண்ணில் கண்ணீர் தேங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்த நவீன்….

ஏய் மிருது என்ன ஆச்சு

ஏதாவது ப்ராப்ளமா இருக்குமோ….அதுனால தான் வேயிட் பண்ண சொல்லறாளா டாக்டர். நான் டெஸ்டுக்கு போயிருந்தப்போ உங்க கிட்ட ஏதாவது சொன்னாலா

மிருது நீ ரொம்ப யோசிக்கற. என்கிட்ட நீ பிரக்னென்ட்ன்னு தான் சொன்னா. ஆனா கன்பார்ம் பண்ண இன்னும் டூ வீக்ஸ் வேயிட் பண்ண சொல்லிருக்கா அவ்வளவு தான். உன் முன்னாடி தானே கவலைப்படறதுக்கு ஒண்ணுமே இல்லை பீ ஹாப்பின்னு சொன்னா. கண்ண தொட மொதல்ல. கம் ஆன் சியர்அப் மிருது. வா அவா எல்லாரும் நமக்காக காத்துண்டு இருப்பா

நவீனின் பேச்சில் சற்று தெம்பாகி கண்களைத் துடைத்துக் கொண்டாள் மிருதுளா. பின் இருவருமாக கேன்டீனுக்குள் சென்றனர். அங்கே அம்புஜம் மிருதுளாவைப் பார்த்ததும் ஓடிச் சென்று ….

என்ன மா டாக்டர் என்ன சொன்னா

பிரக்னென்சி தானாம் ஆனா இன்னும் ரெண்டு வாரம் கழிச்சுத் தான் சில டெஸ்டுகள் எடுத்து கன்பார்ம் பண்ணுவேன்னு சொல்லிட்டா…ஏதோ நாற்பத்தைந்து நாள் ஆகணுமாமே அதுனாலன்னு சொல்லறா

ஓ !!! சரி சரி ரெண்டு வாரம் தானே. அதெல்லாம் ஓடிடும். அடுத்த சனிக்கிழமை வரைக்கும் நாங்க இருப்போமே அதுனால எல்லா வேலைகளையும் நாங்க பார்த்துப்போம் நீ நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ சரியா. எல்லாம் நல்லதாகவே நடக்கும். வா நாங்க உங்களுக்கு ரெண்டு மாடல் ஃப்ரிட்ஜும் டிவியும் செலக்ட் பண்ணிருக்கோம் அதில் எது உனக்கும் மாப்ளைக்கும் பிடிச்சிருக்கோ அதை பில் பண்ணலாம் வா

இதுதான் நாங்க செலக்ட் பண்ணிருக்கற இரண்டு பிராண்டு ப்ரிட்ஜ் அன்ட் டிவி. இதுல உங்களுக்கு எது பிடிச்சிருக்குன்னு சொல்லுங்கோ…இங்க நீங்க சொன்னா மாதிரி ரேட் எல்லாம் கம்மியா தான் இருக்கு.என ராமானுஜம் நவீனிடம் சொல்ல

தொன்னூறுகளில் பிரபலமான டிவியானஅக்கம்பக்கத்து வீட்டுக்கார்களின் பொறாமை, உரிமையாளரின் பெருமைஎன்ற வாசகத்துடன் சிரித்துக் கொண்டே நம்மை பார்க்கும் சிவப்பு கொம்பு மனிதன் உள்ள பிராண்ட் டிவியையும்நீர்ச்சுழி பிராண்ட் ஃப்ரிட்ஜையும் தேர்ந்தெடுத்தனர் நவீனும் மிருதுளாவும். நவீன் தனது மாமனாரிடம்….

இங்க எங்களுக்கு விலை கம்மியா தான் தருவா. உங்களுக்கு ஏதாவது வாங்கணும்னா வாங்கிக்கோங்கோ.

எங்களுக்கு ஒண்ணும் வேண்டாம். அப்படி வாங்கினாலும் எப்படி தூக்கிண்டு அவ்வளவு தூரம் பிரயாணம் பண்ணறது. அதெல்லாம் சிரமம்

ஓகே அப்போ இதை மட்டும் பில் பண்ணலாமா

ஆமாம். பண்ணலாம். இந்தாங்கோ பணம்

என்கூட பில்லிங் கவுன்டருக்கு  வாங்கோ நீங்களே உங்க கையால குடுங்கோ.

அனைவருமாக ஃப்ரிட்ஜ் மற்றும் டிவி ஆர்டர் கொடுத்துவிட்டு அருகிலிருந்த குட்டி கடையில் பிரெட் பக்கோடாவும் ஒரு டீயும் அருந்தினார்கள். அம்புஜம் டீ மட்டும் குடித்தாள். அங்கிருந்து மீண்டும் ஒரு ஆட்டோவில் அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு வேனுவுடன் பைக்கில் ஆட்டோ பின்னாலேயே சென்றான் நவீன். 

வீடு வந்து சேர்ந்ததும் ஆட்டோவை கட் செய்து விட்டு பார்த்தால் நம்ம ப்ரவின்… வீட்டு வாசலில் அமர்ந்திருந்தான். அவனை பார்த்ததும் மிருதுளா…

ஹலோ ப்ரவின் இப்பவாவது  உங்க சித்தி ஆத்துலேருந்து நம்ம ஆத்துக்கு வர மனசு வந்துதா

எங்க எல்லாருமா போயிட்டு வரேங்கள்?”

நாங்க எல்லாரும் கேன்டீனுக்கு போயிட்டு அப்படியே பிரெட் பகோடா அன்ட் டீ குடிச்சிட்டு வரோம்

என கூறிக்கொண்டே கதவைத் திறந்தாள் மிருதுளா. 

வா வா ப்ரவின். எல்லாரும் உள்ள வாங்கோ

ஹாய் ப்ரவின் வெல்கம் பேக்என்றான் வேனு.

என்ன ?? மன்னி நீங்கெல்லாம் கேன்டீனுக்கு போயிட்டு வர்றதா சொல்லறா ஆனா யாரு கையிலேயும் பையைக் காணமே

அவா வாங்கியிருக்கறது பையில அடங்காது வண்டில மத்தியானத்துக்கு மேல வரும்என்றான் பவின்

அப்படி என்ன வண்டில வர்றது

அதுவா அப்பாவும் அம்மாவும் ஃப்ரிட்ஜ் அன்ட் டிவி வாங்கியிருக்கா…என மிருதுளா முடிப்பதற்குள் ப்ரவின் முந்திக்கொண்டு…

என்னது டிவியும், ஃப்ரிட்ஜுமா!!! அதை எப்படி ஊருக்கு எடுத்துண்டு போவா

ஹலோ!!!  ப்ரவின் அது எங்க அக்காவுக்கும் அத்திம்ஸ்க்குமாக எங்க அப்பா அம்மா கிஃப்ட்டா வாங்கிக் குடுத்திருக்கா பிரதர்

ஓ!!! அப்படியா

அப்படி தான்

ஏன்டா ப்ரவின்! என்ன என்கிட்ட கூட சொல்லாம நீயா அதுவும் அங்க சித்தி ஆத்துல வச்சு அங்க தங்க போறதா சொல்லற….

ஆமாம் அண்ணா எனக்கு அன்னைக்கு காலை ல தான் தோனித்து சரின்னு டிரெஸெல்லாம் பாக் பண்ணிண்டுட்டேன்

அதெல்லாம் சரி …எல்லாரும் ஒன்னா தானே அவா ஆத்துக்கு  போனோம் அப்ப பஸ்ஸிலயாவது சொல்லிருக்கலாமில்லையா

நான் பவின்ட்ட சொன்னேனே…

ஓ!! இது பவின் சாருக்கும் தெரியுமா!!! ஆனா ஒண்ணுமே தெரியாத மாதிரி இருந்தானே

சரி சரி விடுங்கோ நவீன். ஆனா ப்ரவின் நீ எங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர்ட்ட சொல்லியிருக்கணும். பரவாயில்லை அடுத்த தடவை சொல்லிடு. ஹேய் பவின் !!! நீ வாயே தொறக்கலையே!!!! ப்ரவின் நீ சொல்லு எங்கெங்கே உன் சித்திப் பொண்ணுகளோட போன?”

பக்கத்துல இருந்த பார்க்குக்கு அப்பறம் அவா அப்பார்ட்மெண்ட் கீழே இருக்கற ஐஸ்கிரீம் ஷாப்புக்கு

அவ்வளவு தானா வேற எங்கயுமே போகலையா?”

வேற எங்க போகணும்?”

டேய் ப்ரவின் நாங்க எல்லாருமா சாப்பாடெல்லாம் கட்டிண்டு அத்திம்ஸோட நண்பன் கார்ல ஒரு நாலஞ்சு இடம் போயிட்டு வந்துட்டோம். செம ஜாலியா இருந்தது இல்ல பவின்

ஆமாம் ஆமாம்” 

என்ன ஆமாம்?? அண்ணா நான் வர்ற வரைக்கும் வேயிட் பண்ணிருக்கலாமில்ல

நான் அண்ணாட்ட சொன்னேன்என்றான் பவின். அதற்கு நவீன்…

ஏதோ அன்னைக்கு காலை ல தான் எனக்கு தோனித்து ஒரு டிரிப் போகலாம்னு உனக்கு தோனித்தே அதே மாதிரி….லீவு கேட்டேன் கிடைச்சுது கிளம்பிட்டோம். சிம்பிள்

என்ன அண்ணா ஊருக்கு போனதும் என் நண்பர்கள் குஜராத்ல என்ன பார்த்தன்னு கேட்டா நான் என்னத்த சொல்லுவேன்…இப்படி பண்ணிட்டியே

உன் சித்திப் பொண்ணுகள பார்த்தேன் அவா கூட பார்க்குக்கு போனேன் ஐஸ்கிரீம் சாப்பிட்டேன்னு சொல்லுஎன்றாள் மிருதுளா. 

என்ன கிண்டல் பண்ணறேங்களா? சித்தி ஆத்துக்கு ஒரு ஃபோன் பண்ணி சொல்லியிருந்தா நான் உடனே கிளம்பி வந்திருப்பேனே

எங்களுக்கு தோனலை ப்ரவின் வெரி சாரிஎன்றாள் மிருதுளா.

எவரிடமும் சொல்லாமல் தானே ஒரு முடிவெடுத்து அப்படி தங்கியது தவறு என்று உணர்ந்திருப்பானா ப்ரவின். பர்வதத்தின் மகனாயிற்றே நிச்சயம் அப்படி உணர வாய்ப்பேயில்லை. அது அவன் பேசும் விதத்திலிருந்தே வெளிப்படுகிறதே. 

அனைவருமாக மத்திய உணவு உண்டபின் படுத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்த போது வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டது நவீனுக்கு, உடனே எழுந்து திறந்தான். காலை ஆர்டர் கொடுத்த டிவி மற்றும் ஃப்ரிட்ஜ் வந்திருந்தது. எல்லாரும் எழுந்து அவற்றை அதற்குண்டான இடத்தில் வைக்க நகர்ந்துக் கொண்டனர். டெலிவரி கொடுத்துவிட்டு கையெழுத்து வாங்கிக்கொண்டு அவர்கள் சென்றதும், வேனுவும், நவீனும் அவற்றின் பேக்கிங்கை பிரித்து செட் செய்தார்கள். பவினும், ப்ரவினும் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர் ஆனால் உதவ முன்வரவில்லை. எல்லாம் முடித்தப் பின் பவின்…

அண்ணா கேபிள் கனெக்ஷென் கொடுக்க ஏற்பாடு பண்ணு.

சொல்லிருக்கேன். ஈவினிங் வந்து கனெக்ஷென் கொடுக்கறதா சொல்லிருக்கா பார்ப்போம்என கூறிக்கொண்டிருக்கும் போதேசாப்” “நவீன் சாப்என வாசலில் இருந்து குரல் கேட்டது. நவீன் எட்டிப்பார்த்து…

வாங்க வாங்க உங்களுக்கு நூறு ஆயிசு. இப்பத்தான் நீங்க ஈவினிங் வந்து கனெக்ட் பண்ணுவீங்கன்னு சொல்லிட்டிருந்தேன்….நீங்களே வந்திட்டீங்க

கேம்ப்க்குள்ள வண்டி வர்றத பார்த்தேன். உங்க வீட்டுக்கு தான் இருக்கும்ன்னு நினைத்தேன் சரி பார்த்திட்டு வந்திடுவோமேன்னு வந்தேன். இப்போ கனெஷென் கொடுக்கலாமா?”

ஓ ஷுவர் தாராளமா

டிவி கனெஷென் கொடுத்துவிட்டு அதற்குண்டான பணத்தையும் வாங்கிக்கொண்டு விடைப்பெற்றார் கேபிள்காரர்.அனைவருமாக அமர்ந்து டிவி பார்க்கலானார்கள். 

இரவு முழுவதும் உறக்கமின்றி ஆவலாக அனைவருடனும் சந்தோஷத்தைப் பகிரவும், அவர்களே மகிழ்ச்சியில் துள்ளவும் எதிர்ப்பார்த்து காத்திருந்த விஷயம் அவர்களை இன்னும் இரண்டு வாரத்திற்கு காக்கவைத்தது.

தொடரும்….

நிதானத்தை கடைப்பிடித்து சமாதானம் ஆனதால் மறுநாள் காலை மிருதுளா ஸ்பெஷல் பிரேக் பாஸ்ட் செய்து அசத்த அனைவரும் சூப்பர் என அன்றய தினம் பாராட்டுக்களுடன் துவங்கியது. நவீனும் அதற்கு பரிசாக  தனது ஆபீஸுக்கு லீவ் போட அனைவருமாக மத்திய சாப்பாடு கட்டிக்கொண்டு குஜராத்தை சுற்றிப் பார்க்க நவீனின் நண்பன் ஓம்னி வேனில் புறப்பட்டனர். நவீன் முன்னதாகவே தன் நண்பனிடம் தேவைப்படும்போது தரவேண்டும் என சொல்லியிருந்ததால் தான் இப்போது கேட்டதும் கிடைத்தது. 

அக்ஷர்தம் கோவில், மஹுடி ஜெயின் கோவில், தோலேஷ்வர் மஹாதேவ் கோவில் என மூன்று கோவில்களையும் பார்த்துவிட்டு கரை அணைக்கு வந்து சேரும் போது மணி மூன்று ஆனது. முதலில் அனைவருமாக ஓரிடத்தில் கொண்டுவந்த போர்வையை விரித்து அதில் உணவு கொண்டு வந்த டப்பாக்களை வைத்து அதை சுற்றி வட்டமாக அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டே சாப்பிட்டனர்.  உணவை உண்டதும் மிருதுளா வாந்தி எடுத்தாள். உடனே நவீன் என்ன ஆச்சு என்று பதற, அதெல்லாம் ஒண்ணுமில்லை என மிருதுளா கூற, உணவை அவ்வளவு நேரம் கழித்து சாப்பிட்டதனால் ஜீரணம் ஆகவில்லை அதுதான் என்று நவீனே சொல்ல அதற்கு மிருதுளா சிறு புன்னகையுடன் இருக்கலாம் என்று சொல்லிவிட்டு முகத்தை குளிர்ந்த நீரில் அலம்பி பின் அனைவருமாக  அணையின் அழகை ரசித்து அங்கிருந்து நாலரை மணிக்கு புறப்பட்டு வீட்டிற்கு ஐந்தரை மணிக்கு வந்து சேர்ந்தனர். 

எல்லோரையும் மற்றும்  கொண்டு சென்ற பொருட்களையும் வீட்டில் சேர்த்து விட்டு நவீன் அவன் நண்பனிடம் வண்டியை ஒப்படைத்துவிட்டு நன்றி தெரிவித்து, பெட்ரோல் டேங்க் ஃபுல்லாக்கி விட்டதாக கூறி சாவியைக் கொடுத்து சிறிது நேரம் அரட்டை அடித்துவிட்டு விடைப்பெற்றான். 

வீட்டிற்குள் நுழைந்ததும் நேராக முகம் கை கால் அலம்பி விட்டு ஹாலில் வந்து அமர்ந்தான். அம்புஜம் காபி போட்டு ஒரு தட்டில் பட்சணங்கள் வைத்து அனைவருக்கும் கொடுத்தாள். ராமானுஜமும் அம்புஜம் குஜராத் கோவில்களுக்கும் நம்மூர் கோவில்களுக்கும் உள்ள வித்யாசங்களை பட்டியலிட அதை கேட்டுக்கொண்டிருந்த வேனு 

ஏன் கரை டேம் பத்தி சொல்ல மாட்டேங்கறேங்கள்!!! இட் வாஸ் அ பியூட்டிஃபுல் ப்ளேஸ்.

நம்ம கல்லணை, முக்கம்பு, மேட்டூர் அணை பார்த்ததுக்கப்பறம் இது ஒண்ணும் அவ்வளவு விஷேசமா தெரியலை. ஆனா இந்த ஊர் கோவில் அமைப்பே வித்தியாசமாயிருக்கு…இது மாதிரி புத்தகத்தில பார்த்திருக்கேன் ஆனா இது தான் முதல் முறை நேரில் பார்க்கறேன்

அம்மா உனக்கு கோவில் வியப்பா தான் இருக்கும் ஏன்னா நீ அந்த மாதிரி கோவிலை இப்போ தான் பாக்கற

பவின் இவர்கள் பேசுவதனைத்தையும் உன்னித்து கவனித்திருந்ததைப் பார்த்த மிருதுளா அவனையும் அவர்களோடு பேச்சில் இழுக்க…

என்ன பவின் ரொம்ப அமைதியா இருக்க!!!  இன்னிக்கு போன இடமெல்லாம் உனக்கும் பிடிச்சிருந்தது தானே!!! நீயும் வேனுவும் ஒன்றாக சுத்தினேங்களே அப்போ எல்லாம் நல்லா தானே பேசிண்டிருந்த இப்போ ஆத்துக்கு வந்ததுக்கு அப்புறம் என்ன ஆச்சு?”

அது ஒண்ணுமில்லை மன்னி ….ப்ரவின் இதெல்லாம் மிஸ் பண்ணிட்டானேன்னு யோசிக்கறேன். அடுத்த வாரம் ஊருக்கு கிளம்பணும். அவன் எப்போ பார்க்கப் போறான் !!! அவன் வந்ததுக்கப்பறம் போயிருக்கலாமோன்னு  நினைச்சுண்டிருந்தேன்

ஆமாம் டா அவன் பாட்டுக்கு முன்னாடியே சொல்லாம அங்க உட்கார்ந்துக்குவானாம் அவனுக்காக நாம எல்லாரும் இரண்டு நாள் சும்மா இருந்திருக்கனுமாக்கும். அட போடா. அவன் நாளைக்கு காலை ல வரேன்னு சொல்லிருக்கானே பார்ப்போம் வரானான்னு

விடுங்கோ நவீன். ப்ரவின் அங்க இருக்கேன்னு சொன்னா அதுக்கு பவின் கிட்ட ஏன் இப்படி சாடறேள்?? என்ன பண்ண பவின் இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு நீங்க ஊருக்குப் போக அதுக்குள்ள நவீனுக்கு எப்போ லீவ் கிடைக்கறதோ அப்பதானே போக முடியும். ப்ரவின் அதை எல்லாம் யோசிக்காம அவனா டிசைட் பண்ணினா அதுக்காக நாம எல்லாரும் வேயிட் பண்ண முடியுமா சொல்லு. அது நியாயமா? அவன் அங்க போய் ரெண்டு நாள் இருக்கானே அவன் இப்படி ஃபீல் பண்ணிருந்தா அப்படி அங்க இருந்திருப்பானா சொல்லுஅவனும் இந்த ரெண்டு நாள்ல எங்கயாவது வெளிய போகாமலா இருக்கப்போறான்…ஸோ அத நினைச்சு நீ கவலைப்படாதே. ஓகே வா

குடித்த காபி தம்ளர்களை எல்லாம் வாங்கி தேய்க்க ஆரம்பித்தாள் அம்புஜம். அப்போது நவீன்..

ஏய் மிருது ஏன் உங்க அம்மாவ வேலை செய்யச் சொல்லிட்டு நீ உட்கார்ந்து அரட்டை அடிச்சிண்டிருக்க?”

அவ சொல்லலை நானே தான் பண்ணறேன். சும்மா எவ்வளவு நேரம் தான் உட்கார்ந்துண்டே இருக்கறது

போதுமா மாப்பிள்ளை சார்

உனக்கு ஜாலி தான்னு சொல்லு மை வைஃப்

அப்பா அம்மாட்ட  நம்ம கேன்டீனைப் பற்றி சொன்னதும் அவாளுக்கு பார்க்கணும்ன்னு சொல்லறா.  அங்கேருந்து நமக்கு டிவியும் ஃப்ரிட்ஜும் வாங்கி தரணுமாம் நீங்க என்ன சொல்லறேங்கள்?”

அதுதான் நாம மாசம் ஒரு பொருள் வாங்கலாம்ன்னு பேசிருக்கோமே

பார்த்தயா பா நான் சொன்னேன் இல்லையா

நீ என்ன சொன்னே

நானும் நம்ம டிசிஷனை சொன்னேன் ஆனா என் அம்மா தான் வாங்கி தந்தே ஆவோம்ன்னு ஒரே பிடியா இருக்கா!

ஆமாம் மாப்ள எங்களோட ஆசை அது. அந்த கடையில விலையும் மலிவா இருக்கும்ன்னு மிருது சொன்னா

அது கரெக்ட் தான் வெளியே விக்கறதவிட ரேட் கொஞ்சம் கம்மியா தான் இருக்கும் ஆனா நீங்க ஏன் வாங்கித் தரணும்ன்னு தான் எனக்கு புரியலை.

ஏதோ அம்புஜத்துக்கு அவ பொண்ணுக்கு வாங்கி கொடுக்கணும் ன்னு தோனிருக்கு, ஆசையும் பட்டுட்டா

ஏன் உங்களுக்கு வாங்கிக் கொடுக்கணும்ன்னு தோனலையோ!!!

எனக்கும் வாங்கிக் கொடுக்கணும்ன்னு இருக்கு

அவா தான் அவ்வளவு சொல்லறாளோனோ கூட்டிண்டு போவோமே.

கூட்டிண்டு போறதுல ஒரு கஷ்ட்டமும் இல்ல ஆனா இவா ஏன் இப்போ வீணா செலவழிக்க ஆசப்படறான்னுட்டு தான் யோசிக்கறேன்

அதெல்லாம் யோசிக்காதீங்கோ நாங்க எங்க பொண்ணுக்கு செய்யறது எப்படி வீண் செலவாகும்?”

ஓகே ! ஓகே! இந்த சனிக்கிழமை போகலாம். நீங்க உங்க பொண்ணுக்கு என்னென்ன வாங்கிக் கொடுக்கணுமோ வாங்கிக்குங்கோ.

இந்த விஷயத்துக்கு நமது நவீன் முடிவு எடுத்து அதை அறிவித்தும் விட்டார். ஆல் டிஸ்பேர்ஸ். அம்மா இன்னைக்கு டின்னர் நீ பண்றயா நானும் நவீனும் ஒரு வாக் போயிட்டு வரோம்

ஓ தாராளமா போயிட்டு வாங்கோ மா… நைட்டுக்கு நான் டிஃபன் செய்யறேன்

என்ன நவீன் வரேளா? போயிட்டு வருவோம்

நீ ரெடியாகு அதுவரைக்கும் நான் உட்கார்ந்துண்டிருக்கேன்

இல்லை டையர்டா இருக்குன்னா வேண்டாம்

டையர்டெல்லாம் இல்லை ஒரு வித லேஸினஸ் அவ்வளவுதான். எனக்கென்ன நான் இதோ இப்படியே வந்திடுவேன் நீ தான் சல்வார் மாத்தனும்…கோ அன்ட் கெட் ரெடி

நவீனும் மிருதுளாவும் மெல்ல நடக்கலானார்கள். அப்போது நவீன் …

என்ன மிருது என்கிட்ட என்ன ரகசியம் சொல்ல இந்த வாக்கிங்?”

ரகசியம் தான் ஆனா அது கன்பார்ம் ஆச்சுன்னா பரசியம் ஆகிடும்

அது என்ன அப்படி ஒரு விஷயம்?”

அம்மா முந்தாநாள் என்ட்ட ஒரு விஷயம் கேட்டா. நானும் அதுக்கு ஆமாம்ன்னு பதில் சொன்னேன் அதுக்கு உடனே டாக்டர்ட்ட செக்கப்புக்கு போக சொல்லறா. அத டிஸ்கஸ் பண்ண தான் இந்த வாக் போறுமா?”

என்னதிது எனக்கு ஒண்ணுமே புரியலை. உன் அம்மா உன்ட்ட என்ன கேட்டதுக்கு நீ ஆமாம்ன்ன!!!!

உங்களுக்கு புரியலையா? இல்லை புரியாத மாதிரி நடிக்கறேளா?”

சத்தியமா புரியலை மா

எங்க அம்மா என்கிட்ட நாள் தள்ளிப் போயிருக்கான்னு கேட்டா அதுக்கு நான் ஆமாம்ன்னு சொன்னேன்

என்னத்துக்கு நாள் தள்ளிப் போகணும்!! எந்த நாள்? அதுக்கு ஏன் டாக்டர்கிட்ட போகணுமாம்?”

நான் போன மாசம் ஒரு விஷயத்துக்காக அழுதேனே ஞாபகம் இருக்கா? உங்க நண்பன் ராமகிருஷ்ணனுக்கும் அவர் மனைவிக்கும் டிரீட் கொடுத்தோமே

ஆமாம் அது அவன் அப்பா ஆக போறதுக்காக கொடுத்தோம்…‌‌ஹேய்….வேயிட் …வேயிட்…வேயிட்….உண்மையாவா! அதனால் தான் மத்தியானம் வாமிட் பண்ணினயா?”

அது தானான்னு தெரிஞ்சுக்க டாக்டர்கிட்ட செக்கப் போனா தான் முடியும்

ஹேய் ….இதை ஏன் என்ட்ட முந்தாநாளே சொல்லலை

ஆமாம் !!! சார் ரொம்ப தான் முறுக்கிக்கிண்டு இருந்தேளே அப்புறம் எப்படி சொல்லுவேனாம்?”

அதுக்காக இப்படிப்பட்ட விஷயத்தை சொல்லாம இருப்பாளா!! அன்னைக்கே டாக்டர்ட்ட போயிருக்கலாமே

கொஞ்சமாவது நியாயமா நீங்க சொல்லறது? நான் என்தனை தடவ உங்கள்ட்ட இதை சொல்ல வந்தேன் ஆனா நீங்க தான் பேசவே இஷ்ட்டமில்லாத மாதிரி முகத்தைத் திருப்பிண்டேங்கள் அதுக்கு மேல நான் என்ன செய்வேன்? எப்படி சொல்வேன்

ஓகே அதெல்லாம் மறந்திடுவோம் நாம நாளைக்கே ஹாஸ்பிடல் போறோம் செக்கப் பண்ணறோம் சரியா.

அப்போ ஆபீஸ்

நாளைக்கும் சுட்டிப் போடறேன். நம்ம சதீஷ்கிட்ட நாளைக்கு என் ஷிப்ட்டையும் கொஞ்சம் சமாளிச்சுக்க சொல்லிட்டு அப்புறமா அவனுக்கு லீவ் வேணும்போது நான் ஹெல்ப் பண்ணிட்டா போச்சு. இதவிட முக்கியமானது என்ன இருக்கு. சரி உனக்கு என்ன வேணும் கேளு.

ஹலோ சார் கொஞ்சம் நிதானம். நாளைக்கு டாக்கடர் செக்கப் பண்ணிட்டு கன்பார்ம் பண்ணட்டும் அதுக்கப்புறம் இந்த கேள்விய கேளுங்கோ நானும் ஏதாவது கேட்கறேன்

ஏய் பி பாஸிட்டிவ் மிருது

ஐ ஆம் பாஸிட்டிவ் அட் தி சேம் டைம் பிராக்டிகல் டூ. ஸோ லெட்ஸ் கீப் அவர் ஃபிங்கர்ஸ் கிராஸ்டு. கடவுளிடம் விட்டு விடுவோம். நாம அப்பா அம்மா ஆகறதுக்கு நேரம் வந்தாச்சுன்னா ஆகுவோம்

இப்ப இவ்வளவு தெளிவா பேசற யாரோ தான் ஒரு மாசம் முன்னாடி குழந்தைப் போல குழந்தைக்காக அழுதாளாம். அவா இப்போ எங்க போனாளோ தெரியலை

என்ன கிண்டலா? எனக்கும் எல்லாம் புரிஞ்சுக்கறதுக்கும் தெரிஞ்சுக்கறதுக்கும் கொஞ்சம் டைம் எடுத்துண்டேன் அவ்வளவு தான் அதுக்காக….சரி… எங்க அப்பா அம்மா டிவி, ஃப்ரிஜ் வாங்கித் தர்றது உங்களுக்கு ஓகே வா? நானும் வேண்டாம்ன்னு சொல்லிப் பார்த்தேன் ஆனா எங்க அம்மா தான் வாங்கித் தந்தே ஆவோம்ன்னு சொல்லறா

யூ சீ மிருதுளா அவா உனக்கு ஆசையா செய்யணும்ன்னு நினைக்கறது எல்லாம் ஓகே ஆனா என்னத்துக்கு எல்லாம் வாங்கித் தரணும்ன்னு சொல்லறா? இப்போ தான் இங்க வந்ததற்கு செலவழிச்சிருப்பா ரெயில் டிக்கெட், வாங்கிண்டு வந்த பொருட்கள் எல்லாத்துக்கும். மறுபடியும் என்னத்துக்குன்னு தான் எனக்கு தோனித்து.

என் அம்மா அப்படி கட் அன்ட் ரைட்டா வாங்குவோம்ன்னு சொன்னதுல உங்களுக்கு வருத்தமிருக்கா?”

உன் அம்மாக்கு உன் மேல எவ்வளவு பிரியம்ன்னு தெரியறது ஆனா ….சரி விடு அவா ஆசை அவா செய்யட்டும்

என்ன விடு !!!

மறுபடியும் செலவைத்தான் சொல்ல வந்தேன் அதுனால தான் விடுன்னு சொல்லி நிறுத்திட்டேன். இங்க பார் மிருது உன் பேரன்ட்ஸ் உனக்கு செய்ய நினைக்கறதுல எனக்கு எந்த வருத்தமுமில்லை ஆனால் அது ஓவர் போர்ட் ஆகாமா இருக்கணும் அவ்வளவுதான்.

ஓகே நான் டிஸ்கஸ் பண்ண வேண்டியதெல்லாம் பண்ணியாச்சு. இப்போ ஆத்துக்கு போகலாமா?”

நீ சொன்ன முதல் ரகசியம் இன்னைக்கு என்ன தூங்க விடப்போறதில்லை. எப்படா விடியும்ன்னு காத்திண்டிருப்பேன்

ஓகே நவீன். நான் இரண்டு நாள் தூக்கம் இல்லாமல் புரண்டேன் இன்று உங்கள் டர்ன் என்ஜாய்.

என் பேரன்ட்ஸ்ட்டயும் சொல்லணுமே. வரியா அப்படியே ஃபோன் பண்ணிட்டு வருவோம்

ஃபோன் பண்ணிப் பேசலாம் ஆனா இந்த விஷயம் டாக்டர்கிட்ட கன்பார்ம் பண்ணினதுக்கு அப்புறம் சொன்னால் அவா தூக்கமும் கெடாது. அறைகுறையா கன்பார்ம் ஆகாம சொல்லி அவாளையும் ஏன் டென்ஷன்ல இருக்க வைக்கணும்!

அதுவும் சரிதான். சரி டுமாரோ ஃபர்ஸ்ட் வேலை டாக்டரிடம் செல்வது தான். நீ காலைல ரெடி ஆகிடு நாம போயிட்டு வந்திடலாம். ஓ !!! அதுனால தான் உங்க அம்மாவே எல்லா வேலையையும் இழுத்துப்போட்டுண்டு செய்யறாளா!!

ஆமாம்.  அம்மா என் முகத்தைப் பார்த்தே தெரிஞ்சுண்டு என்ட்ட கேட்டா தெரியுமா?…வேலை செய்யறது எல்லாம் பொண்ணுக்காக இல்ல வரப் போற பேரன் ஆர் பேத்திக்காக தான் அத தெரிஞ்சுக்கோங்கோ…ஜஸ்ட் கிட்டிங் நவீன்.

ஹா!!!ஹா!!அது என்னவோ கரெக்ட் தான். சரி அப்போ நாளைக்கே கேன்டீனுக்கும் போயிட்டு வந்துடலாம் ஏன்னா அதுவும் ஹாஸ்பிடலும் ஒரே இடத்தில் தான் இருக்கு.

என்ன எல்லாருமா ஹாஸ்பிடல் போறோமா!!!!

இல்ல மிருது அவா கேன்டீன் ல பொருட்களை எல்லாம் பார்த்துண்டு இருக்கட்டும் அதுக்குள்ள நாம டாக்டர்ட்ட போயிட்டு வந்திடுவோம் ஓகே வா?”

அப்போ நாளைக்கு அவாளையும் ரெடியாக சொல்லணும் இல்லையா?”

ஆமாம்

நாளைக்கு காலை ல எத்தனை மணிக்கு ஆத்துலேந்து கிளம்பணும்‌?”

ஒரு ஒன்பதரை மணிக்கு கிளம்பினா கரெக்ட்டா இருக்கும்

ஓகே நான் அவாகிட்ட சொல்லி ரெடியா இருக்கச் சொல்லிடறேன். இப்போ ஆத்துக்கு போகலாமா இல்லை ஊருக்கு அப்பா அம்மாகிட்ட பேசிட்டுப் போலாமா?”

இல்லை இன்னைக்கு வேண்டாம். விஷயம் கன்பார்ம் ஆனதுக்கப்புறமே கால் பண்ணிக்கலாம். இப்போ நேரா ஆத்துக்கு போகலாம்

இருவரும் வீட்டு வாசலில் வந்ததும் உள்ளே சிரிக்கும் சப்தம் வெளியே வாசலிலே கேட்டது. அதை கேட்ட நவீன்

என்ன மிருது நாம இருந்தா கப்சிப்ன்னு இருப்பா இப்ப என்ன இவ்வளவு சிரிப்பு!!!

ஹலோ!!! வந்த இரண்டு நாள் இப்படித்தான் இருந்தது அப்புறம் நம்ம பிரச்சினையால வீடே நிசப்தம் ஆனது. இப்போ பழைய மாதிரி ரிட்டர்ன் ஆகிருக்குன்னு நினைக்கறேன்….உள்ளே போய் விஷயத்தைக் கேட்டு ஜோதியில் நாமளும் ஐக்கியமாவோம் வாங்கோ

கதவைத் தட்டினாள் மிருதுளா. பவின் கதவைத் திறந்தான்…..

மாமி ….அண்ணாவும் மன்னியும் வந்தாச்சு

என்னடா பவின் வீட்டுக்குள்ள இருந்து சிரிப்பு சத்தம் அப்படி கேட்கறது

அதுவா நாங்க கார்ட்ஸ் விளையாடிண்டிருந்தோமா அப்போ நானும் வேனுவும்  ஜெயிச்சிண்டே இருந்தோமா!!! அது எப்படின்னு மாமாவும் மாமியும் கடைசியில கண்டுப் பிடிச்சுட்டா …ஸோ ஒரு ஆறு தடவை நாங்க அவாள ஏமாத்தி ஜெயிச்சது ஏழாவது தடவை தான் கண்டு பிடிச்சா அதுவும் வேனு சொன்னதால…அதுதான் ஒரே சிரிப்பா இருந்தது.” 

ஆமாம் நானும் பார்த்துண்டே இருந்தேன் அது எப்படி சொல்லி வச்சா மாதிரி அவன் ஒருதடவை ஜெயிக்கறான் அப்புறம் இவனொரு தடவை ஜெயிக்கறான் !!! நாங்க ரெண்டு பேரும் பேக்குகள் மாதிரி கார்ட்ஸை பிடிச்சுண்டு உட்காந்திருந்தோம்

அப்பா !!அப்பா!! ஓகே!! ஓகே !!! எனக்கு உங்களப் பார்த்தா பாவமா இருக்கப்போய் நான் சொன்னேனே தவிர நீ ஒண்ணும் கண்டுப் பிடிக்கலை

ஏய் நான் கவனிச்சேன்டா

சரிப்பா விடேன் ஏதோ சின்னப் பசங்க விடு விடு…நீங்கள் எல்லாரும் சாப்ட்டாச்சா??”

ஓ நாங்க எல்லாரும் சாப்ட்டாச்சு நீங்க ரெண்டு பேரும் தான் பாக்கி

என்னம்மா பண்ணிருக்க?”

பொடி அரிசி உப்புமாவும் தேங்காய் சட்டினியும்

சூப்பர்!!! நவீனுக்கு குடு. நான் போய் டிரஸ் மாத்திட்டு வரேன்

நீங்க எல்லாத்தையும் இங்க கொண்டு வந்து வையுங்கோ போதும் நாங்களே போட்டு சாப்ட்டுப்போம்

இல்லை பரவாயில்லை. நானே போடறேன்

வச்சுடேன் மா அவர் தான் சொல்லறார் இல்லையா. நாங்க சாப்ட்டுக்கறோம். நீ போய் இன்னொரு ரவுண்டு கார்ட் ல ஜெயிச்சிட்டு வா

ஹா !ஹா !!ஹா !!ஹா !!ஹா!!ஹா!!ஹா!!

அன்றைய தினம் மிருதுளாவிற்கு பாராட்டுக்களுடன் தொடங்கி சந்தோஷத்தில் முடிந்தது. 

ஒரு மாதம் முன்பு எந்த வரத்தை வேண்டி கவலைப்பட்டு அழுதாளோ

அந்த வரம் இப்போது கிடைக்கப்போகிறது எனும்போது  நிதானமாக இருந்து

மருத்துவரிடம் சென்று உறுதிப்படுத்திக்கொண்டு 

சந்தோஷிக்க காத்திருக்கிறாள்

நம்ம மிருதுளா. 

தொடரும்……

ரம்யா சித்தி வீட்டிலிருந்து வந்த பின் உறங்க போகும் வரை நவீனின் கோபத்தால் வீட்டினுள் ஒரு இறுக்கமான  சூழல் நிலவியது. நவீன்…பவின் மற்றும் வேனுவுடன் சற்று நேரம் பேசிவிட்டு பின் தூங்கலானான். மிருதுளாவிற்கு தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். அவள் மனதில் பல கேள்விகள் மீண்டும் மீண்டும் உதித்து அவளின் தூக்கத்தை துரத்தியடித்தது.

ஒரே மாதிரியான விஷயம் அதை ரம்யா சித்தி சொன்னால் ஜோக், நான் சொன்னால் பெரிய குற்றமா ? அது ஏன்? இதில் எந்த வித நியாயமும் இல்லையே? பெரியவர்கள் என்றால் எப்படி வேண்டுமானாலும் பேசலாமா? ஆனால் ரம்யா சித்தி போன முறை நான் சென்றபோது பழகியதுக்கும் இந்த முறை பழகியதிலும் நிறைய வேறுபாடு தெரிகிறதே? அது ஏன்? ஒரு வேளை ஊரிலிருக்கும் நம்ம மூத்த தம்பதிகளின் பங்கு இருக்குமோ? நிச்சயம் இருக்கும். ஏனெனில் போன சனிக்கிழமை அவர்களுடன் ஃபோனில் பேசிய போது ரம்யாட்ட பேசினோம்ன்னு சொல்லிவிட்டு உடனே பேச்சை மாற்றினார்களே!!!!… ரம்யா சித்தியின் இந்த மாற்றம் அப்படிதான் நினைக்க தோன்றுகிறது….அது எப்படி நான் நிம்மதியா சந்தோஷமா என் பெற்றோருடன் இருப்பது!! அது அவர்களைப் பொறுத்தவரை பெரிய தவறாயிற்றே. இதை நான் எப்படி நவீனுக்கு சொல்லிப் புரிய வைக்கப் போகிறேனோ !!!!அந்த அம்மன் தான் எனக்கு இதில் உதவி செய்யணும்….

என்று கடவுள் மீது பாரத்தை வைத்ததும் மெல்ல அவளது விழிகள் மூட, உறக்கம் தொற்றிக்கொண்டது. 

காலை கதிரவன் எழுந்து பல மணி நேரம் ஆகியும் மிருதுளா எழவில்லை. அம்புஜம் தன் மகளை தொந்தரவு செய்யாமல் அவளே டிக்காக்ஷன் போட்டு காபி வைத்து ராமானுஜத்துக்கும், நவீனுக்கும் கொடுத்து தானும் ஒரு தம்ளர் காபியுடன் ஹாலில் அமர்ந்தாள். மிருதுளா மெல்ல கண் விழித்துப் பார்த்தாள். அம்மா, அப்பா மற்றும் கணவர் மூவருமாக அமர்ந்து காபி அருந்துவதைப் பார்த்துவிட்டு சட்டென்று எழுந்து…

மணி என்ன ஆச்சு அம்மா

மணி ஏழாக போறது மிருது

ஓஹோ இவ்வளவு நேரம் தூங்கிட்டேனே!!! எழுப்பிருக்கலாம் இல்லையா” 

நீ நல்லா தூங்கிண்டிருந்த மா அது தான் எழுப்ப தோணலை..நீ போய் ப்ரஷ் பண்ணியுட்டு வா உனக்கும் காபி போட்டுத் தரேன்

ஓகே நீ போட்டு வை நான் இதோ அஞ்சே நிமிஷத்துல வந்துடுவேன்

என்று கூறிக்கொண்டே நவீனை ஒரு பார்வைப் பார்த்தாள் ஆனால் நவீன் அவளை கண்டுக் கொள்ளவில்லை. அதில் மிகவும் மனவேதனை அடைந்தாள் மிருதுளா. காபி குடித்துவிட்டு மடமடவென வேலையில் இறங்கினாள். காலை டிபன் செய்து மத்திய உணவு செய்து முடிப்பதற்குள் நவீன் ஆபீஸுக்கு ரெடி ஆகி விட்டான். அவன் அம்புஜத்திடம்..

எனக்கு டிபன் மட்டும் போதும். லஞ்ச் ஆபீஸ்ல சாப்பிட்டுக்கறேன் அவள அவசரப்படாம செய்யச் சொல்லுங்கோ

ஏன் அத என்கிட்ட சொல்ல மாட்டேங்களோ! இந்தாங்கோ டிபன். நீங்க உங்க மாமியார்கிட்ட சொன்ன மாதிரி மத்திய சாப்பாட்டை ஆபீஸ்ல ஒன்னும் சாப்பிட வேண்டாம் அதுவும் ரெடி இதோ டேபிள் மேல வச்சுருக்கேன் எடுத்துக்கோங்கோ..

நவீன் ஏதும் சொல்லாமல் டிஃபனை சாப்பிட்டுவிட்டு லஞ்ச் பாக்ஸை எடுத்துக்கொண்டு தன் மாமனார் மாமியாரிடம் மட்டும் சொல்லிவிட்டு தனது பைக்கில் ஆபீஸ் சென்றான். அதைப் பார்த்த மிருதுளாவுக்கு ஆத்திரம் வந்தது. அவள் கோபத்தில் இருப்பதை அறியாத அம்புஜம் அவளிடம்…

மிருது நீ நேத்து சும்மா இருந்திருந்தா மாப்பள உன்கிட்ட ஏன் இப்படி கோபப்படப் போறார்?”

என்ன அம்மா ஏதோ நான் தப்பு பண்ணின மாதிரி சொல்லற!!! உனக்கு அவா பேசினது சரின்னு பட்டுதா?”

நீ தப்பு பண்ணினேன்னு சொல்லலை மா.  அதே சமயம் அவா அப்போ அப்படி பேசினதும் தப்பு தான். அதுக்காக உடனே நீ திருப்பி பேசிருக்க வேண்டாம்….கொஞ்ச நேரம் கழிச்சு சொல்லிருக்கலாம் இல்லாட்டி அவாளுக்கு தெரிஞ்சது அவ்வளவு தான்னுட்டு நீ சும்மா இருந்திருக்கலாம்….அதனால நீங்க ரெண்டு பேரும் இப்படி முகத்தை திருப்பிண்டு இருக்கறது நல்லாவா இருக்கு சொல்லு

அம்மா நான் எந்த தப்பும் பண்ணலை….தப்பாவும் பேசலை. நவீனுக்கு அவா சித்தி என்னை சொல்லும் போது இனிச்சுதுல்ல அப்போ அவாள நான் சொல்லும்போது ஏன் கசந்துதாம்? சொல்லப்போனா அவர் தான் எனக்காக அவா சித்தி கிட்ட பேசிருக்கனும்.

சரி மா….அப்படியே இருக்கட்டுமே நீ தான் கொஞ்சம் விட்டுக் கொடுத்து போயேன்

விட்டுக் கொடுத்துன்னா !!!!என்ன சொல்ல வர இப்போ

நீ கொஞ்சம் இறங்கி போய் ஒரு சாரி கேட்டுடேன் அதுனால நீ ஒன்னும் கொறஞ்சுப் போயிடமாட்டாய்

அம்மா உனக்கு நிறைய விஷயம் தெரியாது …நான் நிறைய தடவை விட்டும் கொடுத்தாச்சு …இறங்கியும் போயாச்சு …இது எங்களுக்குள் நடப்பது அதை நானே பார்த்துக்கறேன். நீ தலையிடாதே சரியா.

இல்லடி … எங்களுக்கு இப்படி நீங்க பேசாம மூஞ்சிய திருப்பிண்டு போறதெல்லாம் பார்க்க பார்க்க மனசு கஷ்ட்டப்படறது மா

அம்மா இதுல மனசு கஷ்ட்டப்படற அளவுக்கு ஒன்னுமே இல்லை நான் பார்த்துக்கறேன். சரி …நீயும் அப்பாவும் எவ்வளவு சண்ட போட்டிருக்கேங்கள்? பேசாம எல்லாம் இருந்திருக்கேங்கள்!!! அப்போ நான் ஏதாவது சொன்னேனா?”

அடிப் போடி எங்க சண்டையும் உங்க பிரச்சினையும் ஒன்னா!!!” 

அதென்ன ஒங்களோட சண்ட எங்களோட சண்டைன்னு பிரிச்சுப் பேசற!!! சண்டைன்னா எல்லாமும் சண்டை தான்…சரி வேனுவும், பவினும் எழுந்துண்டு டுவா ஸோ இப்போதைக்கு இந்த சாப்ட்டரை கொஞ்சம் க்ளோஸ் பண்ணு.

ஓ ஆமாம் ஆமாம் பவின் இருக்கறத மறந்துட்டேன். அது என்னடி அந்த ப்ரவின் உங்க ரெண்டு பேர் கிட்டேயும் சொல்லாம அங்க வச்சு சொல்லறான்

அம்மா விடுமா அவா எல்லாம் அப்படி தான். அவரையும் என்னையும் எவ்வளவு மதிக்கறான்னு எனக்கு நல்லாவே தெரியும் நவீனும் இப்போ தெரிஞ்சுண்டிருப்பார்ன்னு நினைக்கறேன்

ஹாய் மிருதுக்கா குட் மார்னிங்

குட் மார்னிங் வேனு

அனைவருமாக முன் தினம் போலவே உணவருந்திய பின் சீட்டு கச்சேரியில் மூழ்கினர். மாலை ஐந்து மணிக்கு நவீன் வரவை நோக்கி காத்திருந்தாள் மிருதுளா. அன்று நவீன் ஐந்து பத்துக்கு தான் வந்தான். கதவு திறந்தே இருந்தது பவினும் வேனுவும் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். நவீன் வண்டியை நிப்பாட்டி விட்டு வீட்டினுள் நுழைந்தான்….

ஹாய் நவீன் குட் ஈவினிங். ஹவ் வாஸ் தி டேஎன்று மலர்ந்த முகத்துடன் கேட்டாள் மிருதுளா அதற்கு பதில் சொல்லாமல் வந்ததும் க்ளாஸுக்கு போவதாக சொல்லிவிட்டு டிரஸ் சேஞ்ச் பண்ணச் சென்றான். அதுக்குள் காபி போட்டு கொடுத்தாள். அதை குடித்து விட்டு மீண்டும் தனது மாமனார் மாமியாரிடம் மட்டும் சொல்லிக் கொண்டு கிளம்பிச் சென்றான். அப்போது மிருதுளாவுக்கு கவலையாக இருந்தாலும் ….மனதிற்குள் …..

போ போ எப்படியும் இங்க தானே வரணும். இன்னைக்கு இதுக்கு ஒரு ஃபுல் ஸ்டாப் வைக்கறேனா இல்லையான்னு பாரு”  என சபதம் எடுத்தாள். பிறகு வேனுவையும் பவினையும் வீட்டிலிருக்கச் சொல்லிவிட்டு தன் பெற்றோரை வாக்கிங் கூட்டிச் செல்ல தயார் ஆனாள்…

மன்னி இங்க டிவி இல்லை எங்களுக்கு போரடிக்கும். நாங்களும் உங்க கூடவே வரோமே

ஆமாம் மிருதுக்கா இங்க உட்கார்ந்துண்டு என்னப் பண்ணுவோம் சொல்லு

சரி சரி நீங்க பாட்டுக்கு நடங்கோ எங்கள தொந்தரவு செய்யக் கூடாது சரியா

ஓகே இதோ நாங்களும் ரெடி

மிருது நைட்டுக்கு என்ன டிஃபன் பண்ணப்போற ? ஒன்னும் நீ செய்தா மாதிரி தெரியலையே

உனக்கு சாதமிருக்கு. நாங்க டாபா ல சாப்பிட்டுட்டு நவீனுக்கும் வாங்கிண்டு வந்துட்டா போச்சு. என்ன பசங்களா டாபா ல சாப்பிடலாமா

ஓ எஸ்

என்று ஒருமித்து சொன்னார்கள் பவினும் வேனுவும். அதைக் கேட்ட மிருதுளா…

ஏன் டா பசங்களா என்னோட சமையல் உங்களுக்கு பிடிக்கலையா

அப்படி இல்ல மன்னி

அக்கா டாபா ல தர ரொட்டி சப்ஜீ எல்லாம் நம்ம ஊர்ல கிடைக்காது இல்லையா. அதுவும் இல்லாம இது எங்களுக்கு புது வகையான உணவு அதுனால தான் சொன்னோம். நீ சூப்பரா தான் சமைக்கற.  அடுத்த தடவை நாங்க வர்றத்துக்குள்ள இந்த நார்த் இந்தியன் குக்கிங் எல்லாம் கத்துக்கோ.

அப்படியே ஆகட்டும் தம்பிகளா. இப்போ எல்லாரும் வெளியே போங்கோ நான் கதவ பூட்டிட்டு வரேன்.

அனைவருமாக நடக்கலானார்கள். பவினையும் வேனுவையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு அம்மாவையும் பொண்ணையும் பின்னால் வரச்சொல்லிவிட்டு நடந்தார் ராமானுஜம். 

அதை கவனித்த அம்புஜம்…

அட உங்க அப்பா கூட என்னோட அவஸ்த்தைய புரிஞ்சிண்டு பசங்கள அவரோட கூட்டிண்டு முன்னாடி போயிட்டாரே!!! பரவாயில்லை  இன்னைக்கு குஜராத்துல மழை தான் போ

அவஸ்த்தையா அது என்னன்னு சொல்லேன் கேட்கறேன்

நேத்து கொள்ளப்பக்கத்துல கேட்டேனே அதேதான் நான் வேற என்னத்த புதுசா கேட்கப்போறேன்.

அம்மா மனுஷான்னா நிறை குறைகளோட தான் இருப்பா. என்ன என் மாமியாருக்கு ஏனோ என்ன கண்டாலே ஆக மாட்டேங்கறது. அதுனால நொடுக்கு நொடுக்குன்னு  ஏதாவது குறை சொல்லிண்டே தான் இருக்கா.

அதை நம்ம வேனு அப்பவே சரியா சொன்னான் தெரியுமோ !!!அது  என் மனச அரிச்சுண்டே இருந்தது. என் பொண்ணு என்ன கஷ்ட்டப் படறாளோ ன்னு பக் பக்ன்னு இருந்தது

அப்படி என்ன வேனு சொன்னான்!!! அத கேட்டு நீ சங்கடப் பட?”

அன்னைக்கு உங்க ஆத்துக்கு வந்தபோது அவன் கவனிச்சிருக்கான். அவன் சொன்னான் ….மிருதுக்கா மாமியாருக்கு நம்ம மிருதுவைப் பிடிக்கலைப் போல அதுதான் மிருதுக்கா என்ன சொன்னாலும் அதுக்கு ஜஸ்ட் ஆப்போஸிட்டா தான் பேசறான்னு

பரவாயில்லை மா அவனுக்கும் தெரிஞ்சிருக்கு பாரேன்!!!

அப்படின்னா!!!

அப்படின்னா அப்படி தான்…சரி அதெல்லாம் நீ மனசுல போட்டு குழப்பிக்காதே…அதுதான் நான் இங்க வந்துட்டேன் இல்லையா….ஆனா ஒரு விஷயம் மா ….என் சித்திகள் பேச்சையும் என் தோழி பேச்சையும் கேட்டு நான் அவர் கூட இங்க வந்தேனோ பொழச்சேன்… நீ சொன்னத கேட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கிண்டு அங்க இருந்திருந்தேன் என் வாழ்க்கையையே தொலைச்சிருப்பேன் தெரியுமா

எல்லாம் அந்த அம்பாள் செயல் மிருது நம்ம கையில என்ன இருக்குச் சொல்லு… உனக்கு அவர் தான்னு அம்பாளே பூ கொடுத்து உத்தரவு தந்தா…பின்ன எப்படி தப்பாகும்

அப்புறம் ஏன் உன் மனசு சங்கடப்பட்டுதாம்?”

நான் சாதாரண மனுஷி தானே மா.  பொண்ணுக்கு கஷ்டம்ன்னா அம்மாவோட மனசு பதறத்தான் செய்யும். அதை நீ அம்மா ஆகும் போது தெரிஞ்சுப்ப. சரி உன் முகத்தைப் பார்த்தா எனக்கென்னவோ….உனக்கு நாள் தள்ளிப் போயிருக்கா மிருது?”

ஆமாம் இந்த மாசம் இன்னும் ஆகலை

அப்போ உடனே டாக்டரைப் போய் பாரும்மா. அவர் கிட்ட சொல்லிக் கூட்டிண்டு போகச் சொல்லு

மொதல்ல இந்த ரம்யா சித்திப் பிரச்சினக்கு ஒரு முடிவு கட்டணும். அப்புறம் தான் என்னால மத்ததைப் பத்தி எல்லாம் யோசிக்க முடியும்.

அதெல்லாம் சரியாகும். நீ தேவையில்லாத கவலைகளை எல்லாம் மனசுல ஏத்திக்காத. நாளையிலேந்து நான் சமைக்கறேன். நீ நல்லா ரெஸ்ட் எடு.

அம்மா ரெஸ்ட் எடுக்கற அளவுக்கு நான் என்ன வேலை செய்தேனாம்

நாள் தள்ளி போயிருக்குன்னு சொல்லற அப்போ நீ நல்லா ரெஸ்ட் எடுக்கத் தான் வேணும்.  எனக்கு வந்து உன் முகத்தை பார்த்ததும் என் மனசுலப் பட்டது..அதுதான் கேட்டுட்டேன்.

பார்ப்போம் பார்ப்போம்என புன்னகைத்தாள் மிருதுளா.

இன்னும் எவ்வளவு நேரம் நடக்கப் போறோம் மன்னி? அண்ணா வர நேரமாச்சு

இதோ அத்திம்ஸே வர்றார். அவர் நம்மள பார்க்கலை. பவின் அவரை கூப்பிடேன்

அண்ணா ….நவீன் அண்ணா

நவீன் திரும்பிப் பார்த்து வண்டியை நிப்பாட்டி…

ஏய் எல்லாரும் எங்க போயிண்டிருக்கேங்கள்?”

அத்திம்பேர் நாங்க வாக்கிங் பண்ண ஆரம்பிச்சு இரண்டு மணிநேரமாகறது

அப்போ யாரும் இன்னும் சாப்பிடலயா?”

இதோ அப்படியே டாபாக்கு போகலாம்ன்னு மன்னி சொன்னா

ஓ அப்போ சரி வாங்கோ நானும் உங்களோடவே வரேன்

அனைவரும் டாபாவிற்குள் சென்று அமர்ந்தனர். அப்போது மிருதுளா நவீனிடம்…

அவா எல்லாரும் அந்த டேபிளில் ஒன்னா உட்காரட்டும் நாம ரெண்டு பேரும் நம்மளோட யூஷுவல் டூ சீட்டர் ல உட்காரலாம் ப்ளீஸ்

நவீன் மறுப்பேதும் சொல்லாமல் அமர்ந்தான். மற்றவர்களை அவர்களுக்கு வேண்டியதை ஆர்டர் செய்ய சொல்லிவிட்டு இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தனர். அப்போது பவின்…

அண்ணா நீங்க ரெண்டு பேரும் இன்னும் ஆர்டர் பண்ணலையே

பவின் அதை நாங்க பார்த்துக்கறோம் பா நீ சாப்பிடுப் பா. எங்களை கொஞ்ச நேரம் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் ப்ளீஸ்என்று சொல்லிவிட்டு நவீனைப் பார்த்து

என்ன உங்களுக்கு என் மேல இருக்கும் கோபம் இன்னும் குறையவில்லை யா? இல்லை குறையவே குறையாதா? எனக்கு இப்படி நீங்க முகத்தை திருப்பிண்டு போறதும் சொல்லிக்காம போறதும் எல்லாம் பிடிக்கலை

நீ நேத்து சித்தியை பேசினது தப்பு. பெரியவாள்ட்ட எப்படி நீ அப்படி பேசலாம்? எனக்கு அது பிடிக்கலை

சரி நான் பேசினது தப்பாவே இருந்துட்டுப் போட்டும். அவா பேசினது சரியா அத மட்டும் உங்க மனசாட்சிய கேட்டு சொல்லுங்கோ

அது அது …

என்ன அது அதுன்னு இழுக்கறேங்கள். பதில் சொல்லுங்கோ

இங்க பாரு மிருது …அவா பெரியவா அப்படித் தான் பேசுவா ஏன்னா அவா வளர்ந்த சூழல் அப்படி அதுக்காக நீயும் அப்படி பேசணுமா சொல்லு

உண்மைச் சொல்லனும்னா நான் தான் உங்க கிட்ட கோவிச்சிண்டுருக்கனும் தெரியுமா!!

நான் என்ன பண்ணினேன்

அவா பெரியவா அப்படி பேசறா ஆர் அப்படித்தான் பேசுவான்னு உங்களுக்கு தெரியும் போது நீங்க ஏன் எனக்காக பேசலை. நான் உங்க குடும்பத்துக்குள்ள வந்து பல வருஷம் ஆகலை நாலு மாசம் தான் ஆச்சு….அவா அப்படி சொன்னதும் நான் உங்களைத் தான் பார்த்தேன் நீங்க சிரிச்சிண்டிருந்தேங்கள் அதனால எனக்கு கோபம் வந்தது …அப்பவும் அதை அடக்கிண்டு நிதானமா தானே சொன்னேன். சரிப்பா தப்பா சொன்னேன்னே இருக்கட்டும் அதுக்கு உங்க சித்தி எல்லார் முன்னாடியும் அப்படி தான் வெடுக்குனு எழுந்து போவாளா? அவா சொல்லும் போது நான் எழுந்து போயிருந்தா !!! அப்பவும் என் மேல தான் பழி போடுவேங்கள் இல்லையா?”

இங்க பாரு மிருது அவா பேசினது சரின்னு நான் சொல்லலை

இது எப்போ உங்களுக்கு தெரிஞ்சுது? இப்போ நான் இவ்வளவு எடுத்துச் சொன்னதுக்கப்புறமா இல்லை நேத்து அங்கேயே வா

நேத்தே

சும்மா சொல்லாதீங்கோ நவீன்….அப்போ ஏன் என்ன மொறச்சுண்டே இருந்தேங்கள்? பஸ்ஸில சீட்டை ஏன் மாத்தினேங்கள்? காலையிலேந்து ஏன் முகம் கொடுத்துக்கூட பேசலை?”

அது ஐ டிடின்ட் எக்ஸ்பெக்ட் தட் ஃப்ரம் யூ!!! அதுனால தான் என்னால ஏத்துக்க முடியலை

ஐ டூ டிடின்ட் எக்ஸ்பெக்ட் தட் ஃப்ரம் யூ!!! அதுக்காக நான் அப்படியா நடந்துண்டேன்?”

சரி இப்போ என்ன சொல்ல வர நீ பேசினது தப்பில்லைங்கறயா?”

அப்படி தானே நீங்களே கொஞ்ச முன்னாடி சொன்னேங்கள்….ஓகே லெட் மீ ஃபினிஷ் திஸ் ப்ளேம் கேம். இங்க பாருங்கோ நவீன் பெரியவாளா இருந்தாலும் சரி சின்னவாளா இருந்தாளும் சரி தப்பா பேசினா தப்புதான்னு ஒன்னு நீங்க கேட்கணும் இல்லை என்னையாவது கேட்க விடனும். உங்க அம்மா என்னை என்னென்ன சொன்னா அதுவும் உங்க முன்னாடியே !!! நீங்க எனக்காக பேசுவேங்கள்ன்னு அங்க இருந்தவரைக்கும் காத்திருந்தேன்… அப்போ என்ன எனக்காக நீங்க பேசினேங்களா? இல்லையே !!!அதுக்கு நான் முகத்தை திருப்பிண்டேனா? இல்லையே !!! அப்படீன்னா நீங்க எனக்கு செய்யறது சரியில்லை. எனக்கு ஒரு டவுட்….உங்க ரம்யா சித்தி போன தடவை நம்ம கிட்ட அப்படி எதுமே பேசலையே!!! நல்லா தானே ஜென்டிலா பழகினா!!! இப்போ எங்க பேரன்ட்ஸோட போனப்போது ஏன் வித்தியாசமா பிஹேவ் பண்ணினா? என் அப்பா அம்மாவை ரம்யா சித்தி அவா ஆத்துக்கு இன்வைட் பண்ணினாளா

சீ எங்காத்துல நடந்தது நாம கல்யாணமாகி ஜஸ்ட் இரண்டு வாரம் தான் அங்கிருந்தோம். நீயும் என்கிட்ட எதுவும் தப்புன்னு சொல்லாததுனால எனக்கு எதுவும் தப்பாவே தெரியலை. ரம்யா சித்தி என்னிடம் இன்வைட் பண்ணலை. அவா என் பேரன்ட்ஸ்ட்ட சொல்லிருக்கா அவா தான் எனக்கு ஆபீஸுக்கு கால் பண்ணி சொன்னா.

நான் ஆத்துல நடந்தது எதையுமே உங்ககிட்ட கம்பளேயின்ட் பண்ணாததால உங்களுக்கு தப்பாவே படலைங்கறது என்னால நம்ப முடியலை பட் லெட்ஸ் லீவ் தட் தேர். இனி அங்க போகும் போது அப்படி நடந்தா! நடக்கும்… அப்போ உங்ககிட்ட நிச்சயம் சொல்லறேன் என்ன பண்ணறேங்கள்ன்னு அப்போ பார்ப்போம்….உங்க சித்திக்கு உங்க நம்பர் தெரியும் தானே அப்போ ஏன் உங்ககிட்ட சொல்லாம உங்க பேரன்ட்ஸ்ட்ட சொல்லிருக்கா? அதுவுமில்லாமல் அவாளுக்குள்ள என்ன டிஸ்கஷன் நடந்துதோ !!!!  சித்தியோட அந்த பிஹேவியர் மே பீ அதுனால கூட இருக்கலாம்ன்னு என்னோட யூகம். எது எப்படியோ இனி இப்படி பண்ணாதீங்கோ. நீங்க இப்படி செய்ததினால் என் பேரன்ட்ஸ் காட் வரீடு!!! தெரியுமா.

ஓ !!!!நான் அவ்வளவு எல்லாம் யோசிக்கலை இப்போ ஏதோ புரியறா மாதிரி இருக்கு. நான் உன் பேரன்ட்ஸ்கிட்ட நல்லா தானே பழகறேன்

என்கிட்ட மூஞ்சிய காட்டிட்டு அவாகிட்ட நல்லா பழகினா எப்படி அவா நிம்மதியா இருப்பா நவீன்…என்னை நினைச்சுத் தானே கவலைப்படுவா

ஓகே ஐ வில் பீ நார்மல் ஃப்ரம் நவ்” 

அப்பாடா நான் என்னுள் சபதம் எடுத்தேன்….இந்த பிரச்சினையை இன்றோடு முடிப்பேன்னு. தாங் காட் ஃபார் ஹெல்பிங் மீ

அன்று டாபா உணவால் வயிறு நிறைந்ததோ இல்லையோ ஆனால் மிருதுளாவுக்கும் அவள் பெற்றோருக்கும் அவர்கள் மனம் நிறைந்தது. மிருதுளா நிதானமாக யோசித்து கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கிடைத்தாக வேண்டுமென அவள் வலியுறுத்தவில்லை ஆனால் நவீனின் மனது பதில்களைத் தேட அவளது கேள்விகள் வித்தானது. 

சண்டையிட்டு மண்டையுடைத்துக்கொள்ளாமல்

டைவர்ஸ் கேட்டு கோர்ட் படி ஏறாமல்

தனக்குத் தானே கேள்விகளை கேட்டு அதற்கான பதில்களை தன் கணவனையே தேட வைக்க முயற்சிக்கும் மிருதுளாவை மனமாற வாழ்த்துவோமாக. பொறுமையும் நிதானமுமிருந்தால் நமது பேச்சு எங்கும் எடுப்படும் அல்லது எடுபட வைக்க முடியும் என்பதற்கு இவர்கள் வாழ்வின் இந்த நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இருபத்தி நான்கு மணி நேர கோபம்  உட்கார்ந்து பேசியதில் ஒரு மணி நேரத்தில் காணாமல் போனது. 

பெண்ணே நீ பூமாதேவி தான்

எல்லாவற்றுக்கும் பொறுத்துப் போவதற்காக அல்ல

எல்லாவற்றையும் பொறுமையோடு  கையாள்வற்காக

பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது பழைய மொழி அல்ல அது உண்மையானது. காலதாமதம் ஆகலாம் ஆனால் என்றுமே தவறாகாது.

பொறுமை, நிதானம் இரண்டும் நம் மூளையை சிறப்பாக இயக்க முக்கிய கருவிகளாகும்

பொறுமையுடன் நிதானமாக சிந்தித்து செயல் படுவோம். வெற்றி காண்போம். 

தொடரும்…..

மறுநாள் காலை கதிரவன் சோம்பல் முறித்து மெல்ல எழ ஆரம்பிக்கும் போதே அப்புஜமும், ராமானுஜமும் எழுந்து பல் துலக்கி, முகம் கை கால் அலம்பி பின் மற்றவர்கள் எழுந்திருக்கும் வரையில் அவர்களை தொந்தரவு செய்யாமல் மீண்டும் படுத்துக் கொண்டனர். அவர்கள் எழுந்து ஒரு மணி நேரம் கழித்து எழுந்தாள் மிருதுளா. எழுந்ததும் தனது அம்மாவையும் அப்பாவையும் பார்த்து….

நீங்க எழுந்துண்டாச்சா? எப்போ எழுந்தேங்கள்? ப்ரஷ் பண்ணிட்டேளா? ஆமாம் நீங்க தான் காலை ல அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்திரிக்கறவாளாச்சே…சரி இருங்கோ நான் போய் ப்ரஷ் பண்ணிட்டு காபி போட்டுத் தரேன்” 

சரி சரி அவாள டிஸ்டர்ப் பண்ணாம போயிட்டு வா

மிருதுளா டிகாக்ஷன் போட்டு சுட சுட ஃபில்டர் காபியை தனது பெற்றோருக்கு கொடுத்து தானும் குடிக்க அமர்ந்தாள். நவீன் எழுந்து ..

ஆஹா காபி வாசம் தூக்கறதே..என்னை தூக்கத்திலிருந்து எழுப்பிடுத்து. டைம் என்ன ஆச்சு மிருது?”

மணி ஆறரை ஆச்சு நவீன்

ஓ !!ஒரு ஃபைவ் மினிட்ஸ் எழுந்துடறேன்

ஏன்டீ மாப்பிள்ளையை தொந்தரவு செய்யற? அவர் தூங்கட்டுமே

அம்மா என்ன நீ என்னவோ நான் தான் அவரை எழுப்பினா மாதிரி சொல்லற!! என் காபி தான் எழுப்பித்து

நிஜமாவே காபி சூப்பரா இருக்கு மிருது

நன்றி தந்தையே

நவீன் எழுந்து ஆஃபிஸ் செல்ல தயாராகிக் கொண்டிருந்தான். ப்ரவின், பவின் மற்றும் வேனு நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். மிருதுளா அடுப்படியில் மும்முரமாக நவீனுக்கான காலை டிபன் மற்றும் மத்திய உணவை தயார் செய்துக் கொண்டிருந்தாள். அம்புஜமும், ராமானுஜமும் நவீன் குளித்தப் பின் ஒவ்வொருவராக சென்று குளித்துவிட்டு வந்தனர். அம்புஜம் குளித்துவிட்டு நேராக அடுப்படிக்கு சென்று..

ஏய் மிருதுளா நான் செய்யறேன் டீ. நீ அவர் ஆஃபிஸ் போறதுக்கு என்ன செய்யனுமோ அதை செய் போ

அம்மா அவருக்கு தான் செய்திண்டிருக்கேன். நீ இப்போ இடையில கடலடின்னு வராதே. ப்ளீஸ் மா

சரி சரி சித்த நகந்துக்கோ நான் வீட்டிக்கு பின்னாடி போய் பார்க்கட்டும். நேத்து சரியா பார்கலை

ம்…இதோ போ… என்னப் பா உனக்கும் கொள்ளப் பக்கம் போகனுமா?”

தாங்க் யூ

அம்புஜத்திடம் ராமானுஜம் அந்த ஏரியாவைப் பற்றி விரிவாக சொல்ல அதற்கு அம்புஜம்

என்னமோ ஃபுல்லா பார்த்தா மாதிரி சொல்லறேங்கள்

ஆமாம். நேத்து மத்தியானம் நீங்க எல்லாரும் தூங்கும் போது நான் ஒரு மணி நேரம் வெளியே போய் இந்த கேம்பஸை ஃபுல்லா சுத்திப் பாத்தேன்

என இருவருமாக அலவலாவிக் கொண்டிருக்கும் போது நவீன் கையில் ஹெல்மட்டுடன் வந்து…

ஓகே நான் ஆஃபிஸ் போயிட்டு வரேன். நீங்க எல்லாரும் இன்னைக்கு நல்லா ரெஸ்ட் எடுங்கோ நான் நாளைக்கு லீவ் கிடைக்கறதான்னு கேட்டுப் பார்க்கறேன்

சரி மாப்ள நீங்க போயிட்டு வாங்கோ. உங்களுக்கு லீவ் கிடைக்காட்டினாலும் பரவாயில்லை எங்களுக்கு எங்க பொண்ணோட இருந்தாலே போதும்.

அதுக்காக எங்கேயும் வரமாட்டேளா? ஃபர்ஸ்ட் டைம் குஜராத் வந்திருக்கேங்கள் சுத்திப் பார்க்க வேண்டாமா?”

அது தான் சனி ஞாயிறு இருக்கே அன்னைக்கு பார்த்துண்டா போறது

நான் லீவுக்கு டிரைப் பண்ணறேன் கிடைச்சா ஓகே இல்லாட்டி சனி அன்ட் ஞாயிறு தான் போகணும். கல்யாணத்துக்கே நிறைய லீவ் எடுத்துட்டேனா அதுதான்….

புரியறது மாப்ள. ஒரு பிரச்சனையும் இல்லை. நீங்க ஆஃபிஸ் போயிட்டு வாங்கோ

ஓகே பை….பை மிருது. பார்த்துக்கோ நான் ஈவ்னிங் அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடுவேன் எல்லாரும் ரெடியா இருங்கோ நாம எங்க சித்தி ஆத்துக்கு போயிட்டு வருவோம்

ஓகே எல்லாருமா எப்படி போவோம் நவீன்?”

இங்கேருந்து பஸ்ஸில போயிட்டு அங்கேருந்து ரெண்டு ஆட்டோ வச்சுண்டா போச்சு… அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ ரெடியாகி எல்லாரையும் ரெடியாக இருக்கச் சொல்லு ஓகே வா. சரி நேரமாகறது பை பை

என்று வண்டியை ஸ்டார்ட் செய்து ஆஃபிஸ் சென்றான் நவீன். அவனது லீவுகள் கல்யாணத்தினால் மட்டுமில்லை அதற்கு பிறகு மிருதுளா பைக்கிலிருந்து விழுந்த போதும் எடுத்ததனால் தான் இப்பொழுது லீவ் கிடைப்பது சிரமம் என்று சொல்ல முடியாமல் மழுப்பினர் நவீனும் மிருதுளாவும். 

நவீன் கிளம்பிச் சென்றதும் மிருதுளா குளித்து விட்டு பெற்றோருக்கும் தனக்கும் டிபன் கொண்டு வந்து ஹாலில் வைத்து மூவருமாக சாப்பிட ஆரம்பிக்கும் போது அம்புஜம் ….

மிருது மா நீ நல்லா இருக்கயா?”

என்னமா நேத்தே கேட்டுட்டியே மறுபடியும் ஏன் கேட்கற?”

இல்லமா நீ சந்தோஷமா இருக்கயா? உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே!

அம்மா நான் சந்தோஷமா இருக்கேன் எனக்கு எந்த வித பிரச்சனையும் இங்கு இல்லை. ஓகே வா நீ நிம்மதியா டிபனை சாப்பிடு

அதுக்கில்லடீ மாப்ள உன்ன நல்லா கவனிச்சுக்கறாரா?”

அவர் என்னை நல்லா தான் பார்த்துக்கறார் மா அதனால தானே சந்தோஷமா இருக்கேன்னு சொல்லறேன்

இல்லமா….

ஹாய் மன்னி குட் மார்னிங்! அண்ணா ஆஃபிஸ் போயாச்சா?”

ஹாய் ப்ரவின் குட் மார்னிங். ஆமாம் அவர் கிளம்பி ஒரு ஒன் ஹவர் ஆகறது. நீ ப்ரஷ் பண்ணிட்டு வா காபி போட்டுத் தரேன்

ஓகே மன்னி….மாமி ஏதோ கேட்டுண்டிருந்தாளே ….நீங்க கன்டின்யூ பன்னுங்கோ நான் ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்

அம்மா க்கு என்ன ஏதாவது கேட்டுண்டே தான் இருப்பா. நீ போயிட்டு வா.

என்று ப்ரவினை அனுப்பி விட்டு தனது தாயிடம் செய்கையில் பிறகு பேசலாம் என காட்டி விட்டு சாப்பிட்ட தட்டை தேய்த்து வைத்தாள். அடுத்தடுத்து பவின் மற்றும் வேனு எழுந்தனர். அவர்கள் அனைவருக்கும் காபி குடுத்த பின் அனைவரும் குளித்து விட்டு வந்து டிபன் அருந்தினர். மிருதுளா மத்திய சமையலும் செய்து முடித்துவிட்டதால் அனைவருமாக அமர்ந்து சீட்டு விளையாடினர். அம்புஜம் தன் மகளிடம் மனம் விட்டு பேச முடியாமல் அல்லாடினாள். அப்பொழுதுதான் அவள் ப்ரவின் மற்றும் பவினை ஏன் தங்களுடன் கூட்டி வந்தோம் என வருந்தினாள். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொண்டால் தன் மகளுக்கு கஷ்டமாகி விடுமே என அமைதியாக இருந்தாள். 

சீட்டு விளையாட்டு முடிந்தப் பின் வேனு பவினையும் ப்ரவினையும் கொஞ்ச நேரம் அப்படியே வெளியே போய் அந்த கேம்பஸை சுற்றி பார்க்க அழைத்தான். ஆனால் பவின் மட்டும் வேனுவுடன் போக தயார் ஆனான். அப்போது மிருதுளா…

ஏய் ப்ரவின் நீயும் வேனு, பவின் கூட வெளிய சும்மா போயிட்டுத் தான் வாயேன். இங்க நாங்க சாதம் வச்சுட்டு வீட்டை கூட்டி சுத்தம் செய்வோம். நீ உட்கார்ந்துண்டு என்னப் பண்ணப் போற. உனக்கு போர் அடிக்கும்.

இல்லை மன்னி ….பவின் மாத்திரம் போயிட்டு வரட்டும் நான் இங்கேயே இருக்கேன்

என்ன ப்ரவின் !!! நாங்க இங்க தங்க மலை ரகசியம் எதுவும் பேசப் போவதில்லை அதனால நீ எதையும் மிஸ் பண்ணமாட்ட அதுக்கு நான் கியாரண்டி. போயிட்டு வா

அச்சோ மன்னி அதெல்லாம் ஒன்றுமில்லை…ஐ மீன் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ன்னு சொல்லவந்தேன்

சரி அப்படியே இருக்கட்டும். டேய் வேனு நீயும் பவினும் போயிட்டு வாங்கோஎன ஒரு நக்கல் சிரிப்புடன் கூறினாள் மிருதுளா. வேனுவும் பவினும் சென்ற பிறகு அவள் சொன்னது போலவே பெட்டிகளை எல்லாம் ஒரு புறமாக அடுக்கி வீட்டை கூட்டிச் சுத்தம் செய்து பின் குக்கரில் சாதம் வைத்து விட்டு ஹாலில் வந்தமர்ந்தாள். அப்போது ராமானுஜம்…

நம்ம குவார்டர்ஸுக்கும் இந்த இடத்துக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. மளிகை ஜாமன் எல்லாம் எங்க வாங்குவேங்கள் மிருது ? கேம்புக்குள்ள ஒரு கடை பார்த்தேன் அங்கயா?”

இல்லைப் பா பாதி அங்க மீதி இவருக்கு கேன்டீன்னு இவாளுக்கு மாத்திரமான கடையிருக்கு அங்க வெளில விக்கறதவிட ரொம்ப கம்மியா இருக்கும் ஸோ அங்க வாங்குவோம்…அங்க தான் இந்த மிக்ஸி கிரைண்டர் எல்லாம் வாங்கினோம்” 

ஓ இதெல்லாம் கூட மலிவா கிடைக்குமா? அப்போ டிவி, ஃபிர்ஜ் எல்லாம் வாங்க வேண்டியது தானே.

வாங்குவோம் …மெது மெதுவா ஒவ்வொரு மாசம் ஒவ்வொன்னா வாங்கலாம்ன்னு இருக்கோம்.

சரி அப்போ டிவியும் ஃபிர்ஜும் நாங்க வாங்கித் தறோம். என்ன சொல்லறேங்கள் நாம வாங்கிக் கொடுக்கலாம் தானேஎன்று அம்புஜம் ராமானுஜத்தைப் பார்த்தாள்…

வாங்கிட்டா போறது அங்க எவ்வளவு கம்மியா கிடைக்கும் மிருது

அப்பா கவலை படாதே நீங்க ஒன்னும் வாங்கித் தர வேண்டாம்

நீ சும்மா இரு மிருது நாங்க தான் வாங்கித் தருவோம். மாப்ள கிட்ட எங்கள அந்த கடைக்கு வர சனிக்கிழமை கூட்டிண்டு போகச் சொல்லு போதும். என்ன யோசிச்சிண்டிருக்கேங்கள் சரின்னு சொல்லுங்கோ

சரி சரி வாங்கிடலாம்

இவர்கள் பேசுவதை உன்னித்து கவனித்துக் கொண்டிருந்தான் ப்ரவின்.

அதை உணர்ந்த அம்புஜம் தனது கணவரிடம்…

சரி நீங்க நம்ம ப்ரவின் கிட்ட பேசிண்டு இருங்கோ. நான் ஆத்துக்கு பின்னாடி என்னென்ன செடிகள் மரங்கள் எல்லாம் வச்சிருக்கான்னு பார்த்துட்டு வரேன்

அது தான் காலையிலேயே நாம ரெண்டு பேருமா பார்த்தோமே

நான் சரியா பாக்கலை அதனால மறுபடியும் போறேன் தப்பா?”

தப்பே இல்லம்மா நீ போ” 

அம்புஜம் வீட்டின் பின்புறம் சென்றதும் சிறிது நேரத்தில் ….

மிருது …மிருது இங்கே சித்த வாயேன்‌.

என்ன மா என்ன வேணும்?”

எழுந்து இங்க வாயேன்டீ இது என்ன செடி வச்சிருக்க?”

இதோ வந்துட்டேன்….சொல்லு எந்த செடியை கேக்கறாய். நான் எதுவும் வைக்கலை இந்த வீட்டு ஓனர் வச்சிருக்கறது

இங்க வாடி

என்ன மா இப்படி இழுக்கற.

அம்புஜம் கதவை சாத்திவிட்டு பேசலானாள்…

என்னடி உன் மச்சினர்கள் இங்கிதம் இல்லாம இப்படி இருக்கா. அவாளும் வரேன் சொன்னப்போ சரி நம்ம வேனு வோட சுத்த ஆசைப்பட்டு தான் சொல்லறான்னு கூட்டிண்டு வந்தா இங்க நாம பேசக் கூட முடியாத அளவுக்கு மாத்தி மாத்தி ஒருத்தன் காவலுக்கு இருக்கானே…இதை நான் கொஞ்சம் கூட எதிர்ப் பார்க்கலை

மிருதுளா புன்னகைத்தாள்…

என்னடி சிரிக்கற!!! நான் என் பொண்ணுட்ட அவா புக்காம் பத்தியும் என் பொண்ணு எப்படி இருக்கானுட்டும் கேட்டு தெரிஞ்சுக்க இப்படி ரகசிய மாநாடு போட வேண்டியிருக்கே!!

சரி நாளைக்கு சாயந்தரம் நாம ரெண்டு பேரும் வாக்கிங் போகலாம் அப்போ உனக்கு என்னனென்ன கேட்கனுமோ கேட்டுக்கோ சரியா. இப்போ உள்ள போகலாம் இல்லாட்டி….என்று மிருதுளா முடிப்பதற்குள்

மன்னி என்ன இவ்வளவு நேரமாவா அந்த செடியப் பத்தி சொல்லறேங்கள்!!! எனக்கு ஒரு கப் சாய் தறேளா ப்ளீஸ்” 

அது ஒன்னுமில்லை ப்ரவின் எங்க அம்மாவுக்கு எக்ஸ்ப்ளேயின் பண்ணிட்டிருந்தேன். இப்போ போய் சாய் கேட்கற சாப்பிட டைம் ஆகறதே!

ஓ அப்படியா ஓகே தென் வேனுவும் பவினும் வந்ததுக்கப்புறம் சாப்பாடே சாப்பிடலாம்” 

என்று கூறிக் கொண்டே உள்ளே சென்றான் அவன் பின்னாலே மிருதுளாவும் தனது தாயிடம் அமைதியாக இருக்கும் படி சொல்லிவிட்டுச் சென்றாள். வேனுவும் பவினும் வீட்டிற்கு திரும்பி வந்து அவர்கள் பார்த்ததை எல்லாம் ப்ரவினிடம் கூறினர். அப்போது மிருதுளா…

பார்த்தயா ப்ரவின் நீயும் அவாளோட போயிருந்தா இதெல்லாம் கேட்டுண்டில்லாம பார்த்துட்டே வந்திருக்கலாம். நீ எதையோ யோசிச்சுண்டு யூ மிஸ்டு இட். ஓகே எல்லாரும் கை அலம்பிட்டு சாப்பிட வாங்கோ

அனைவருமாக சாப்பிட்டப் பின் மீண்டும் சிறிது நேரம் சீட்டுக் கச்சேரியில் மூழ்கினர். மணி நாலானதும் அனைவருக்கும் காபி கொடுத்து விட்டு சித்தி வீட்டிற்கு போவதற்காக கிளம்பச் சொன்னாள். எல்லோரும் கிளம்பினர். மணி அஞ்சடித்ததும் நவீன் வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது. நவீன் வீட்டினுள் நுழைந்தான் அனைவரும் தயாராக இருப்பதைப் பார்த்து ….

ஓ எல்லாரும் ரெடியா இருக்கேங்களே…இதோ ஒரு ஃபைவ் மினிட்ஸ் ல நானும் டிரஸ் சேஞ்ச் பண்ணி ரெடி ஆகிடறேன்.

நவீன் டிரஸ் சேஞ்ச் செய்து வருவதற்குள் மிருதுளா ஒரு தட்டில் ஊரிலிருந்து வந்த பட்சணங்கள் கொஞ்சமும் சூடான ஒரு கப் காபியும் கொண்டு வந்து மேஜை மீது வைத்தாள். பின்பு பின் கதவு ஜன்னல் எல்லாவற்றையும் மூடினாள்‌. நவீன் அந்த பட்சணங்களில் கொஞ்சம் மட்டும் சாப்பிட்டு, காபியை குடித்து விட்டு ….

ஓகே கிளம்பலாமா?”

அனைவருமாக நவீன் காலையில் கூறியது போலவே பஸ்ஸில் சென்று பின் பஸ்டாப்பிலிருந்து இரண்டு ஆட்டோ வைத்து அவர்கள் சித்தி வீட்டைச் சென்றடைந்தனர். ரம்யா சித்தியும் சித்தப்பாவும் அவர்களை வரவேற்று சற்று நேரம் பேசிக் கொண்டிருக்கையில் ரம்யா சித்தி அம்புஜத்திடம்….

எங்க நவீன் உங்க மிருதுளாவ கட்டிண்டதுலேருந்து அவன் மிருதுதாசனாவே ஆயிட்டான். அவன் பேரே இனி மிருது தாசன்னு ஆக போறது ன்னா பாருங்கோளேன்

என்று குதர்க்கமாக பேசியதில் அம்புஜத்திற்கு எப்படி ரியாக்ட் பண்ணுவதென்றே தெரியாமல் அசடு வழிந்துக் கொண்டிருந்தாள் ….மற்றவர்கள் ஏதோ பெரிய ஜோக் கேட்டது போல சரித்துக் கொண்டிருந்தனர்…நவீன் உட்பட. அதைப் பார்த்த மிருதுளாவிற்கு சுர் என்று கோபம் தலைக்கேறியது ஆனாலும் நிதானமாக ரம்யா சித்தியைப் போலவே சிரித்துக் கொண்டே …

ஆமாம் ஆமாம் சித்தி எல்லாம் உங்க ஃபேமிலி டிரென்டு போல….என சிரித்தாள்

நீ என்ன சொல்ல வர மிருதுளா?”

அது ஒன்னுமில்லை சித்தி….சித்தப்பா எவ்வழியோ மகன் நவீனும் அவ்வழியே.  ரைட்டா. உங்க ஆத்துல ஒரு ரம்யா தாசன் போல எங்காத்துல மிருது தாசன் தட்ஸ் இட்” 

என மிருதுளா சொன்னதும் ரம்யா சித்தி சட்டென்று எழுந்து உள்ளே போனாள். அதை கவனித்த நவீன் மிருதுளாவை முறைத்தான். அதுவே மிருதுளாவை முதன்முதலாக நவீன் கோபமாக முறைத்துப் பார்த்தது. அதைப் பார்த்ததும் மிருதுளா தனக்குள்….

நான் என்ன தப்பா சொல்லிட்டேன் அவா மட்டும் அப்படி ஒரு ஜோக் என்ற பெயரில் என்னையும் என் பெற்றோரையும் அவமானப்படுத்தலாமாம் ஆனா நான்  அதையே சொன்னா ஏன் முறைக்கறாரோ தெரியலை” 

நவீனும் அங்கிருந்து எழுந்து உள்ளே தன் சித்தியிடம் பேச்சுக் கொடுக்கச் சென்றான். அவன் சித்தப்பா சற்று நேரத்தில் வருவதாக சொல்லி விட்டு வெளியே எங்கோ புறப்பட்டுச் சென்றார். ப்ரவினும், பவினும் அவர்கள் சித்தி மகள்களுடன் வெளியே மொட்டை மாடிக்குச் சென்றனர். ஹாலில் மிருதுளா குடும்பம் மட்டும் யாருமின்றி அமர்ந்திருந்தனர். வேனு தன் அக்காவிடம்….

என்ன மிருதுக்கா இப்படி நம்மள உட்கார வச்சிட்டு ஆளாளுக்கு போயிட்டா!!! பின்ன எதுக்கு நம்மள வரச்சொன்னாலாம்

இதைக் கேட்ட அம்புஜம்…

டேய் வேனு வாயை வச்சுண்டு கொஞ்ச நேரம் சும்மா இருடா. ஏண்டி மிருது நீ ஏன் அவாள்ட்ட அப்படி கேட்ட? பேசாம சிரிச்சிண்டு உட்கார்ந்திருக்க வேண்டியது தானே மா

அம்மா மிருதுக்கா ஒன்னுமே தப்பா சொல்லலையே. அத்திம்பேரோட சித்தி  செட் அ வெரி பேட் ஜோக்

சரி சரி இத விடுங்கோ. இங்க இப்போ இதப்பத்தி நாம பேச வேண்டாம். ஆத்துல போய் பேசிக்கலாம். நானே உள்ள போய் என்ன நடக்கறதுன்னு பார்த்துட்டு வரேன். நீங்க மூணு பேரும் இங்கயே இருங்கோ

என்ன சித்தி நான் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா?” 

நவீன் மீண்டும் அவளை முறைத்து விட்டு ஹாலுக்குச் சென்றான்.

இல்ல இல்ல எல்லாம் ரெடி. வாங்கோ எல்லாருமா சாப்பிடலாம்

அனைவருமாக இரவு உணவை உண்ட பின் அங்கிருந்து கிளம்பினார்கள். அப்போது ப்ரவின்…

ஓகே எல்லாருக்கும் பை. நான் இங்க சித்தி ஆத்துல இரண்டு நாள் தங்கிட்டு வரேன். நீங்க எல்லாரும் போயிட்டு வாங்கோ

என்ன சொல்லற ப்ரவின். உன் டிரெஸ் எல்லாம் வேண்டாமா!என கேட்டான் நவீன்

இதோ வேண்டிய டிரஸ் எல்லாம் எடுத்துண்டு வந்திருக்கேன் அண்ணா. வரும்போதே டிசைட் பண்ணி தான் வந்தேன்” 

மிருது உன்கிட்ட ப்ரவின் சொன்னானா?”

இல்லை எனக்கும் இப்போ அவன் சொல்லித் தான் தெரியறது

அப்போ ரெண்டு நாள் கழிச்சு நீயே பஸ்ஸு பிடிச்சு ஆத்துக்கு வந்திடு சரியா

ஓகே அண்ணா நான் பார்த்துக்கறேன்

இதுவே நவீனுக்கும் மிருதுளாவிற்கும் ப்ரவின் கொடுத்த மரியாதை!!!!!

ரம்யா குடும்பத்தினருக்கு பை சொல்லி விட்டு பஸ்ஸில் ஏறினர். பஸ் பயணத்தின் போது நவீன் மிருதுளாவிடம்…

நீ ஏன் என் சித்தியிடம் அப்படி சொன்ன?”

என்று கேட்டதும் மிருதுளா நவீனைப் பார்த்து…

இதே கேள்வியை உங்க சித்தியிடம் கேட்டிருக்க வேண்டியது தானே. கேட்டேங்களா?” 

என்றதும் சட்டென எழுந்து வேனுவை மிருதுளா பக்கத்தில் உட்காரச் சொல்லி விட்டு நவீன் பவின் அருகில் சென்று அமர்ந்தான். நடந்தவையை பார்த்த அம்புஜம் மனதிற்குள்….

அச்சோ இந்த பொண்ணு ஏன் அப்படி சொல்லனும் இப்போ மாப்ளயோட பிரச்சினை ஆகனும். அதுவும் நாங்க வந்த நேரமா இப்படியெல்லாம் நடக்கனும். அம்மா தாயே மாப்ளையோட கோபத்தை சீக்கிரம் தணித்துடுமா

அம்புஜம் தொன்னூறுகள் தாய் மார்களின் ஓர் எடுத்துக்காட்டு. இதே இந்த கால தாய்மார்கள் தங்கள் பெண் செய்தது தான் சரி என்று மாப்பிள்ளையிடமே சண்டையிடவும் தயங்க மாட்டார்கள். ஆனால் அன்றோ மாப்பிள்ளை முன் வருவதற்கே சங்கோஜப் படுவார்கள். தனது பெண் தனக்காக தன் தன்மானத்தைக் காக்க தன்மையாக திருப்பி பேசியதை ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால் அவளிடம் இப்படி ஏதாவது பேசி அவளின் தன்னம்பிக்கையை தளர்த்தாமல் இருந்தாலே நல்லது. 

நவீனின் இந்த திடீர் மாற்றம் மிருதுளாவை மட்டும் அல்ல நம்மையும் குழப்பம் என்ற குழியில் தள்ளியுள்ளது. மிருதுளா நவீனிடம் பஸ்ஸில் கேட்டது சரியா? நவீனின் கோபம் சரியானதா? அம்புஜத்தின் பரிதவிப்பு தேவையானதா

இதை எப்படி கையாளப் போகிறாள் மிருதுளா!!!!!

தொடரும்…..

தனது குடும்பத்தினரின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த மிருதுளா என்னனென்ன பொருட்கள் வாங்க வேண்டி வரும் என்று ஒரு லிஸ்ட் தயார் செய்தாள். அன்று மாலை நவீன் கிளாஸ் முடிந்து வந்து இருவரும் உணவருந்தியதும் அமர்ந்து அந்த லிஸ்ட்டில் உள்ள பொருட்களை எங்கே வாங்கலாம் எவ்வளவு ஆகும் என்று பட்ஜெட் போட்டனர். அப்போது மிருதுளா

சரி இந்த பொருட்களுக்கு ஒரு ஆயிரம் ரூபாய் தேவை. அப்புறம் இந்த மாத மளிகை ஜாமான்கள் வாங்கனும் அதுக்கு ஒரு இரண்டாயிரம் போயிடும், காய்கறிகளுக்கு ஒரு ஆயிரம், ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து அவாள கூட்டிண்டு வர்றதுக்கு கார் வைக்கனும் அதுக்கு ஒரு ஐநூறு, பால் + பெட்ரோல் + ஸ்நாக்ஸ் எல்லாமுமா ஒரு ஆயிரம்….ஸோ டோட்டல் இப்பவே ஐயாயிரத்தி ஐந்நூறு மீதமிருக்கறது ஐந்நூறு இதுல எப்படி நாம அவாள எல்லா இடத்துக்கும் சுத்திக்காட்ட கூடிண்டு போக முடியும்?”

மிருது நீ சொல்லற கணக்கில் எல்லாமே கொஞ்சம் ஜாஸ்தியா தான் சொல்லற அதனால பணம் இருக்கும். அப்படியே பத்தாட்டினா என் ஆஃபீஸில் அட்வான்ஸ் வாங்கறேன். என்ன அடுத்த மாதம் சம்பளம் குறைவா வரும். என்ன சொல்லற?”

ஆஃபிஸிலேருந்து அட்வான்ஸ் ன்னா ஓகே ஆனா யார்கிட்டேயும் கடன் வாங்க கூடாது சரியா

சரி மகாராணி. நீ இதெல்லாம் மனசுல போட்டுண்டு அவாளோட என்ஜாய் பண்ணாம இருக்காத. நான் பார்த்துக்கறேன். கவலைப் படாதே.

சரி உங்க பேரன்ட்ஸுக்கு அனுப்பவேண்டிய  மூவாயிரத்தை அனுப்பியாச்சா இல்லையா?”

அதெல்லாம் நீ சொன்ன மறுநாளே அனுப்பியாச்சு.

அவா எல்லாருமா என்னைக்கு எத்தர மணிக்கு வராநவீன்

அவா வர்ற ஞாயிற்றுக்கிழமை காலை ல எட்டு மணிக்கு ரெயில்வே ஸ்டேஷன் வந்து சேர்வார்கள் என பத்தாவது முறையாக அறிவிக்கிறேன்

ஓகே உங்களின் பத்தாவது தடவை அறிவிப்புக்கு நன்றி நன்றி நன்றி

இந்த வெள்ளிக்கிழமையும் கிளாஸுக்கு லீவ் போடட்டுமா?”

ஏன் ஏன்னத்துக்கு வேண்டாம். நீங்க கிளாஸுக்கு போயிட்டு வாங்கோ. எல்லாத்தையும் சனிக்கிழமை காலை ல ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுட்டு போய் வாங்கிண்டு வரலாம்.

அப்போ லஞ்ச் வெளிய சாப்பிடலாமா?”

ஏன் எதுக்கு நான் காலையில சீக்கிரம் எழுந்து மத்தியான சமையலையும் முடிச்சிடறேன். எல்லா பர்சேஸிங்கும் முடிச்சிட்டு ஆத்துக்கு வந்து சாப்பிடலாம் ஓகே வா?”

எனக்கு ஓகே மிருது

சனிக்கிழமை காலை மிருதுளா சீக்கிரமே எழுந்து காலை டிபன் மற்றும் மத்திய சாப்பாடு எல்லாம் செய்துவிட்டு குளித்து வெளியே செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள்.  அப்போது எழுந்த நவீனைப் பார்த்து…

என்ன நவீன் இன்னைக்கு வெளியே பொருளெல்லாம் வாங்க போகனும்னு தெரியாதா இப்படி தூங்கறேங்கள்!

ஏன் எழுப்பலை

நல்லா தூங்கிண்டிருந்தேங்கள் எழுப்ப மனசு வரலை

டைம் என்ன ஆச்சு?”

மணி ஒன்பதாகறது

என்ன ஒன்பது தானே ஆகறது கடைகள் பத்து மணிக்கு தான் ஓப்பன் பண்ணுவா ஸோ எனக்கு ஒரு மணிநேரமிருக்கே சட்டுன்னு ரெடி ஆயிடுவேன்

சரி சரி பேசிண்டே இருக்காம சீக்கிரம் கிளம்புங்கோ. டிபன் வேற சாப்பிடனும்

என் மிருது குட்டி ..சூடா ஒரு கப் காஃபி ரெடி பண்ணுவாளாம் நான் நிமிஷத்துல ப்ரஷ் பண்ணிட்டு வந்திடுவேனாம். மிருது காபி குடிச்சிட்டு, பேப்பரை ஒரு பொரட்டு பொரட்டிட்டு பின்ன குளிச்சி ரெடி ஆயிடுவேனாம்

இருவருமாக ஒருவழியாக வெளியே கிளம்பினர். மிருதுளா போட்ட லிஸ்ட் படி எல்லா பொருட்களையும் வாங்கினார்கள் ஆனால் எல்லாவற்றையும் பைக்கில் வைத்து கொண்டுவரமுடியாத காரணத்தினால் மிருதுளாவை எல்லா பொருட்களுடன் ஆட்டோவில் ஏற்றிவிட்டு பின்னாடியே பைக்கில் சென்றான் நவீன்.

வீட்டிற்கு வந்து மத்திய உணவருந்தியப்பின் சற்று ஓய்வெடுத்து விட்டு பின் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் அது அது இடத்தில் அடுக்கி வைத்து விட்டு மறுநாள் சமைக்கவேண்டிய காய்கறிகளை நறுக்கி வைத்தனர். அன்று மாலை பக்கத்திலிருக்கும் ஒரு பார்க்குக்கு சென்று சற்று நேரம் நடந்து பின் அங்குள்ள பென்ச்சில் அமர்ந்தனர். அப்பொழுதும் மிருதுளா ஏதோ யோசனையிலேயே இருந்ததைப் பார்த்த நவீன்…

என்ன யோசிக்கற மிருதுளா? நாளைக்கு உன் அப்பா, அம்மா, தம்பி எல்லாரும் வந்திடுவா அப்புறம் உனக்கு என்னோட பேசக் கூட நேரமிருக்காது…அத தானே யோசிச்சிண்டுருக்க

அட போ பா…நான் ஏன் அதையெல்லாம் யோசிக்கப்போறேன். தெரிஞ்ச விஷயத்தை எல்லாம் நான் யோசிக்க மாட்டேன். அப்படின்னா நீங்க ஏன் அதை யோசிக்கலையாம் உங்க தம்பிகளும் தானே வர்றா….எப்புடி

அடி பாவி!!! அப்போ வேற என்னத்த பத்தி அப்படி யோசனையாம்!

நாளைக்கு காலை ல எட்டு மணிக்கு வர்றான்னா நாம ஸ்டேஷனுக்கு ஏழரை க்கு போயாகனும் இல்லையா

ஆமாம் நாம ஆத்துல இருந்து  ஒரு ஏழேகாலுக்கு பஸ் ல கிளம்பினோம்ன்னா கரெக்ட்டா ஏழரைக்கு ஸ்டேஷன் ரீச் ஆகிடுவோம்.

ஓ ஏழேகாலுக்கெல்லாம் ரெடி ஆகனுமா? அப்போ நான் நாலரை மணிக்கு எழுந்திருக்கனுமே!!

ஏன் அவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்கனும்?”

அப்போ தானே காலை அன்ட் மத்திய  சமையல் வேலைகளை எல்லாம் முடிக்க முடியும்.

ஓ நீ அடுப்படிக்குள்ள இருக்கயா?…என் கூட பார்க்ல இருக்கேன்னு நினைச்சிண்டிருக்கேன்

என்னது!!! நாம பார்க் ல தானே இருக்கோம்

தெரியறது தானே அப்புறம் என்ன அடுப்படி சமையல்ன்னு அதையே நினைச்சிண்டிருக்க.

ஓகே மறுபடியும் பார்க்குக்கே வந்துட்டேன். சொல்லுங்கோ அவாள எங்கெல்லாம் கூட்டிண்டு போகபோறோம்.

அதெல்லாம் நான் ஏற்பாடு பண்ணிட்டேன். நீ கவலைப் படாதே

உங்க ஈவ்னிங் கிளாஸ் எப்படி போகபோறேங்கள்?” 

அவா இருக்கற வரைக்கும் டொக்கடிக்க வேண்டியது தான்.

நோ நோ நோ…அது மட்டும் கூடவே கூடாது. என்னைக்கெல்லாம் ஈவ்னிங் எங்கேயும் போற ப்ளான் இல்லையோ அன்னைக்கெல்லாம் கிளாஸ் அடென்ட் பண்ணுங்கோ..சரியா

உத்தரவு டிச்சர்.

சரி நேரமாயாச்சு ஆத்துக்கு போகலாமா?”

ஓ ஆமாம் இட்ஸ் செவன் தர்ட்டி. அப்படியே ஆத்துக்கு போற வழில நம்ம டாபா ல டின்னர் சாப்ட்டுட்டே போலாமா இல்லை ஏதாவது செய்து வச்சிருக்கயா?”

ஒன்னும் செய்து வைக்கலை. சாப்பிட்டுட்டே போகலாம்.

நவீனுக்கும் மிருதுளாவும் காலை முதல் மாலை வரை பர்ச்சேஸிங், வருபவர்கள் சௌகர்யமாக தங்குவதற்கான ஏற்பாடுகள், பார்க்கில் வாக்கிங் என சனிக்கிழமை விறுவிறுவென ஓடியதில் களைத்துப் போனார்கள். அன்றிரவு இருவருமே அசந்து உறங்கிப் போனார்கள். 

மிருதுளா சட்டென்று விழித்துப்பார்த்தாள் சூரியன் உதயமாகி பல மணி நேரமானது போல தோன்ற கிடுகிடுவென குளித்து ஃப்ரெஷ் ஆகி கடிகாரத்தைப் பார்த்தாள்….மணி ஆறு என்று அவள் பார்த்ததில் கடிகாரத்தின் இரு முட்களும் வெளியே வந்து அவளை சுறுக்கென குத்தியது போல 

ஓ! ஹோ!!என்றபடியே

நவீன் ஏய் நவீன் மணி ஆறாச்சுப்பா!!! எழுந்திறீங்கோ…இவ்வளவு லேட்டா எழுந்துண்டுட்டேனே

என பொலம்பிக்கொண்டே காபி டிக்காக்ஷன் போட்டுக்கொண்டே மளமளவென வேலையில் இறங்கினாள். மிருதுளா எழுப்பிய வேகத்தில் நவீன் எழுந்து 

என்னத்துக்கு இப்போ இவ்வளவு டென்ஷன் ஆகற மிருது இன்னும் ஒன்னேகால் மணி நேரமிருக்கு நாம கிளம்ப. அதுவரை என்ன முடியறதோ அதை செய் மீதியை வந்துட்டு செஞ்சுக்கலாம். காபி உண்டா?”

நவீன் கையில் சுடசுட காபி டம்ளரைக் குடுத்துக்கொண்டே…

ஆமாம் உங்களுக்கென்ன வந்தவாளோட அரட்டை அடிச்சிண்டு இருப்பேங்கள்‌

உனக்கென்ன ஆச்சு நீயும் ஜாயின் பண்ணிக்கோ

அதுக்குதான் என் வேலைகளை எல்லாம் இப்பவே முடிச்சிட்டா நானும் உங்களோட உட்கார்ந்து அவாளோட பேசலாமேன்னுட்டு இப்படி அவசர அவரமா செய்துண்டிருக்கேன். காபி குடிச்சாச்சில்லையா நீங்க போய் ரெடி ஆகுங்கோ…

என்று பேச்சைக்குறைக்க நவீனை அங்கிருந்து அனுப்பிவிட்டு கிடுகிடுவென காலை டிஃபனுக்கு இரவே ஊர வைத்த பருப்பு அரிசியை போட்டு அடைக்கு மாவறைத்து வைத்து, மத்தியத்துக்கு சாம்பார், ரசம், பொறியல் செய்து விட்டு ஸ்டேஷன் செல்வதற்கு புறப்பட்டாள். 

பரவாயில்லை மிருது வித்தின் ஒன் அவர் நீ இவ்வளவு செய்துட்டேயே. யூ ஆர் கிரேட்

என்ன புகழ்ந்தது போதும் நாம கிளம்பலாமா?” 

ஓகே நீ போ நான் கதவை பூட்டிட்டு வரேன்

இருவருமாக ஸ்டேஷனில் விருந்தினர்கள் வரும் கம்பார்ட்மென்ட் நிற்கும் இடத்தை  சென்றடையவும்  அவர்கள் வரும் ரெயில் அதற்குரிய பிளாட்பாரம் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. மூன்று மாதங்களுக்கு பிறகு தனது குடும்பத்தினரை பார்க்க போகும் மிருதுளாவின் மனது முழுவதும் மகிழ்ச்சி ஆக்கிரமித்திருந்தது. அதுவரை அவள் அவளின் குடும்பத்தை விட்டு இவ்வளவு நாட்கள் இருந்ததில்லை. 

நவீன் மிருதுளாவை அங்கேயே நிற்க சொல்லி விட்டு அந்த கம்பார்ட்மென்ட்டிற்குள் சென்றான். மிருதுளாவின் கண்கள் அந்த ரெயில் பெட்டியினுள் ஸ்கேன் செய்துக்கொண்டிருக்கையிலே….அவள் பின்னாலிருந்து…

ஹாய் மிருதுக்காஎன்றான் வேனு

ஹேய் மிருது எப்படி மா இருக்கஎன அவள் தாய் 

அவர்களை பாத்ததும் ஓவென்று அழத்துவங்கினாள் மிருதுளா. உடனே நவீன் அவளருகில் வந்து 

இட்ஸ் ஓகே ஏன் அழற இப்போ…எல்லாரும் உன்னையே பாக்கறா பாரு …கண்ண தொடச்சுக்கோ..

என்ன மிருதுக்கா இவன் வந்துட்டானேன்னு அழறயா என்ன?”

என்று வேனு கூறியதும் அனைவரும் சிரித்தனர் பின் தன்னை நிதானித்துக் கொண்டாள் மிருதுளா ..

சாரி உங்களை எல்லாரையும் பார்த்ததும் என்னமோ தெரியலை அழுகை வந்துடுத்து. வெல்கம் டூ குஜராத் அம்மா, அப்பா, வேனு, ப்ரவீன் அன்ட் பவின்

உன் சமையலை சாப்பிடப் போற  நாங்க இல்லையா அழனும் எங்களுக்காக நீ ஏன் அழுவற?”

டேய் வேனு வேனாம்டா

ச்சே ச்சே அப்படி எல்லாம் சொல்லாதே வேனு உங்க அக்கா சூப்பரா சமைக்கறா. நீயும் சாப்பிட்டதுக்கப்புறம் சொல்லு

சாப்பிட்டதுக்கப்புறம் சொல்றதுக்கு இருக்கனுமே!!

டேய் வேனு போதும் போதும் நிறுத்திக்கோஎன்று அம்புஜம் சொன்னதும் கப்சிப் ஆனான் வேனு.

நவீனின் நண்பனின் மாருதி ஓம்னி வேனில் அனைத்து லக்கேஜ்களுடன் எப்படியோ அட்ஜெஸ்ட் செய்து அனைவரும் அமர்ந்து  இப்படியே பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர். அதனால் புதுமண தம்பதியினருக்கு ஒரு முன்னூறு ரூபாய் மிச்சமானது. 

வீட்டைத் திறந்துக் கொண்டே அனைவரையும்வாங்கோ..வாங்கோ எல்லாரும் எங்காத்துக்குள்ள வாங்கோஎன்று கூறினாள். மிருதுளாவும்அம்புஜமும், ராமானுஜமும் முதலில் உள்ளே சென்றனர். மற்றவர்கள் பெட்டிப் படுக்கைகளை வண்டியிலிருந்து இறக்கி வீட்டினுள் எடுத்து வந்துக் கொண்டிருந்தனர். மிருதுளா அவள் பெற்றோரிடம்…

அம்மா அப்பா வீட்டை சுத்திப் பாருங்கோ அதுக்குள்ள உங்க எல்லாருக்கும் காபி போடறேன்

நீ தள்ளு மிருது நான் போடறேன்

அம்மா இப்போ நீ எங்காத்துக்கு வந்திருக்க ஸோ நான் தான் போடுவேன்…நீ போய் வீட்டைப் பாரு இல்லாட்டி ஹால் ல உட்காரு

வீடு நம்ம குவார்டர்ஸ் மாதிரிதான் இருக்குஎன்றார் ராமானுஜம்

இதுவும் எங்களோட குவார்டர்ஸ் தான். ஆனா இது எனக்கு அளாட் ஆன வீடு இல்லை. இதுக்குள்ள சேஃப்ட்டியா இருக்குமேன்னு தான் உள்ளயே  இருக்கோம். இன்னும் ஒரு ஆறு  இல்லை எட்டு மாசத்தில எனக்கு வீடு அளாட் ஆகிடும்என்று பதிலளித்தான் நவீன். 

லக்கேஜ் எல்லாம் ஹாலில் வைத்துவிட்டு அனைவருமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். மிருதுளா ஏழு காபி டம்பளர்களுடன் வந்து அனைவருக்கும் காபிக் கொடுத்துவிட்டு…

அம்மா என் காபி எப்படின்னு குடிச்சுப்பார்த்து சொல்லேன்” 

தாயல்லவா!!! மகள் சொன்னதும் குடித்துவிட்டு

சூப்பர் காபி மிருது. ரொம்ப நல்லா இருக்கு

மிருதுக்கா அம்மா உனக்கு ஜைன் சக் அடிப்பா இரு இரு இதோ நான் குடிச்சிட்டு உண்மையான ஒப்பீனியன் சொல்லறேன்..

சரிடா நீ குடிச்சிட்டு சொல்லு

.”ம்…ம்..ஆஹா நிஜமாவே சூப்பர் தான் மிருதுக்கா

வஷிஷ்ட்டர் வாயால் ப்ரம்மரிஷி. போதுமாடா!!

ஏய் மிருது அது என்ன வஷிஷ்ட்டர் வாயால்…..

அதுவா அதை அப்புறமா சொல்லறேன். ஹேய் ப்ரவீன் அன்ட் பவின் என்ன அமைதியா இருக்கேங்கள். உங்க மன்னி காபி எப்படி

சூப்பரா இருக்கு மன்னிஎன்றான் ப்ரவின்

ஓகே எல்லாரும் ஒவ்வொருத்தரா குளிச்சிட்டு வாங்கோ நான் அடை வார்த்துத் தறேன். நவீன் அவா எல்லாம் குளிச்சிட்டு வரட்டும் உங்களுக்கு ஃபர்ஸ்ட் டிஃபன் தரேன் வாங்கோ

அம்புஜம் முதலில் குளித்து விட்டு அடுப்படிக்குள் சென்று..

மிருது மா தாடி நான் அடை வார்க்கறேன்

அம்மா எத்தனத் தடவ சொல்லுவேன் …இந்தா புடி நீயும் போய் உட்கார்ந்து சாப்பிடு.

அனைவரும் குளித்து டிஃபன் அருந்தியப்பின் ஹாலில் வட்டமாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் அம்புஜம் மிருதுளாவையே பார்த்துக்கொண்டிருந்தாள். அதை கவனித்த மிருதுளா தன் அம்மாவிடம்…

என்ன மா வந்ததுலேருந்து என்னை அப்படிப் பார்க்கற

கல்யாணத்துக்கு முன்னாடி நீ இருந்ததையும் இப்ப நீ இப்படி பொருப்பான குடும்பஸ்த்தியா இருக்கறதையும் நினைச்சுப் பார்த்திண்டிருக்கேன்

அதெல்லாம் ஓகே நான் நல்லா இருக்கேன்னு சொல்லவரயா இல்லை…

நீ எவ்வளவு சமத்தா இருக்க…அதப் பார்த்து ரசிச்சிண்டிருக்கேன்

அப்போ சரி நீ நல்லா ரசிச்சிண்டே இரு. நான் போய் பாயசமும் வடையும் மட்டும் பாக்கி வச்சிருக்கேன் அதை செய்துட்டு வரேன்.

ராமானுஜம் …நவீனுக்கும் மிருதுளாவிற்குமாக கொண்டு வந்த டிரெஸ், பலகாரங்கள், பழங்கள், ஊறுகாய் பாட்டில்கள் என எல்லாவற்றையும் அட்டைப்பெட்டியிலிருந்து எடுத்து வெளியே வைத்தார். அதைப் பார்த்த நவீன்…

என்னது இது இவ்வளவு கொண்டு வந்திருக்கேங்கள்!!! ஏய் மிருது இதெல்லாம் எங்க வைக்க போறஎன்றான்.

அம்மா ஏதாவது வேலை செய்யனும்னா அதை எல்லாம் இங்க அடுப்படி ல கொண்டு வந்து அடுக்கேன்

ஓ பண்ணறேனே. எங்க அடுக்கனும்ன்னு சொல்லு அங்கேயே வச்சுடறேன்

இதோ இந்த ஷெல்ஃப் காலியாதான் இருக்கு இதுல அடுக்கிடூ

அம்புஜமும் மிருதுளாவும் அடுப்படியில் மும்முரமாக வேலையில் இறங்கினர். ராமானுஜம் தரையில் துண்டை விரித்து படுக்க அப்படியே அசந்துப்போனார். நவீன் பசங்களை கூட்டிக்கொண்டு வெளியே போவதாக மிருதுளாவிடம் சொல்லி விட்டு வேனு, ப்ரவின் அன்ட் பவினை அழைத்தான். அதற்கு பவின்…

இல்லண்ணா நான் வரலை. இங்கேயே இருக்கேன் நீங்க எல்லாரும் போயிட்டு வாங்கோஎன்று சொல்ல அதற்கு ப்ரவின் 

ஓகே பவின் இப்போ நீ இங்க இருந்துக்கோ அடுத்த தடவை இப்படி வெளியே போனா நீ அவா கூட போ சரியா

டேய் என்னடா பேசறேங்கள்? ஏன் ரெண்டு பேரும் வர்றத்துக்கு என்னவாம்!!!நான் என்ன உங்க ரெண்டு பேர் ல ஒருத்தரை தான் கூட்டிண்டு போவேன்னா சொல்லறேன்? அதென்ன இந்த தடவ நான் அடுத்த தடவ நீ அப்படீன்னு பேசிக்கறேங்கள். என்ன நடக்குது உங்ளுக்குள்ள?”

அது ஒன்னுமில்லண்ணா…நீ வா நாம போயிட்டு வரலாம் பவினுக்கு வரனும்ன்னு தோனலையாம்

என்ன டிஸ்கஷன் வெளியே போறோம்ன்னு சொல்லி பத்து நிமஷத்துக்கு மேல ஆச்சு ஆனா இன்னும் இங்கயே பேசிண்டிருக்கேங்கள். உங்க பேச்சு சத்தத்திலும் எங்க அப்பா எப்படி தான் இப்படி தூங்கறாரோ!!! என்ன ஆச்சு?”

அது ஒன்னுமில்லை மன்னி. பவினுக்கு வர தோனலையாம் அதைத்தான் ஏன்னு நவீன் அண்ணா கேட்டுண்டிருக்கா

ஏன் பா அவனுக்கு வரனும்ன்னு இல்லைன்னா விட வேண்டியது தானே..ஏன் இப்படி கம்ப்பல் பண்ணறேங்கள்? நீங்க எல்லாரும் போயிட்டு வாங்கோளேன்

நவீனுக்கு எடுத்துச்சொல்லி அவர்கள் வெளியே சென்றதும் கதவை சாத்தி விட்டு பவினிடம் சற்று படுத்து ஓய்வெடுக்க சொல்லி விட்டு அடுப்படிக்குள் சென்று சமையலைத் தொடர்ந்தாள். 

அன்று மத்தியம் வெளியே சென்றவர்கள் வந்ததும் அனைவருமாக அமர்ந்து மிருதுளா சமைத்த விருந்து சாப்பாட்டை ஒரு பிடி பிடித்தனர். மூன்று நாட்கள் கட்டு சாதம் சாப்பிட்ட வாய்க்கு விருந்து தேவாமிருதமாக இருந்தது. விருந்துண்ட மயக்கத்தில் அனைவரும் கண்ணசந்தனர். ராமானுஜம் காலை டிஃபன் சாப்பிட்டப் பின் ஒரு குட்டித்தூக்கம் போட்டதினால் அவருக்கு உறக்கம் வரவில்லை ஆகையால் கதவைத் திறந்து வெளியே பூட்டிவிட்டு அந்த கேம்ப்பை சுத்தி பார்க்க புறப்பட்டுச் சென்றார். முழுவதும் சுற்றிப் பார்த்தப் பின் தன் மகள் வீட்டுக்கு வந்து கதவைத் திறந்து பார்த்தார் அனைவரும் நல்ல உறக்கத்திலிருந்தனர். அவர்களை தொந்தரவு செய்யாமல் கிடைத்த இடத்தில் துண்டை விரித்து அவரும் படுத்துக் கொண்டார். 

அன்று மாலை காபி அருந்தியப் பின் அனைவரும் கிளம்பி நடந்து  பக்கத்திலிருந்த கோவிலுக்கு போய்விட்டு அப்படியே நவீன் மிருதுளா தினமும் வாக்கிங் போகும் பார்க்கில் சென்று சற்று நேரம் அமர்ந்து அரட்டை அடித்து விட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் அவர்களின் ஃபேமஸ் ரோஹித் டாபாவில் அம்புஜத்தைத் தவிற மற்ற அனைவரும் டின்னர் சாப்பிட்டு வீடு வந்து சேர்ந்தனர். வீட்டிற்கு வந்ததும் மிருதுளா தன் அம்மா கேட்டுக்கொண்டது படி சாதமும் தயிரும் கொடுத்து சாப்பிடச் சொன்னாள். அம்புஜமும் கொஞ்சமாக சாப்பிட்டாள். 

அனைவரும் வரிசையாக ஹாலில் படுத்தனர் அப்போது நவீன் 

டேய் பவின் ஈவ்னிங் எங்களோட வந்த இல்ல அதே மாதிரி காலை ல கூப்பிட்டப்போவும் வர்றதுக்கு என்னவாம்?”

அண்ணா ஈவ்னிங் எல்லாருமா போனோம் ல அப்போ நான் மட்டும் இங்கே இருந்து என்ன பண்ணுவேன் அதுனால வந்தேன்

ஓ சார் அப்படி வர்றீங்களா..ஓகே ஓகே

என்று நவீனுக்கு ஏதோ புரிந்ததுப் போல சொல்லி அத்துடன் பேச்சை நிறுத்திக்கொண்டான்.

மிருதுளா குடும்பத்தினரின் வருகையால்  மிருதுளாவும் நவீனும் சற்று பரபரப்புடன் இருந்தாலும், கொஞ்ச நாள் பிரிந்திருக்க வேண்டியிருந்தாலும் அவர்களுக்கு புத்துணர்வு அளித்தது. அம்புஜமும் ராமானுஜமும் அவர்களின் மகள் பொறுப்புடன் குடும்பம் நடத்தும் அழகைப் பார்த்ததில்  மனமகிழ்ந்தனர். மகள் மருமகன் வீட்டில் அவர்களின் முதல் நாள் இனிதே நிறைவுற்றது. 

ப்ரவின் அன்ட் பவின் மிருதுளா குடும்பத்தினருடன் வந்ததின் நோக்கத்தை முதல் நாளே நாம் தெரிந்துக்கொண்டோம் அல்லவா! பாவம் அவர்கள் வெறும் அம்புகள் தான். அவர்களை ஏய்தவர்கள் யாரென்று நமக்கு சொல்லியா புரியவேண்டும். 

அம்பு ஏய்து மிருங்களை கொன்று புசிப்பவன் வேடன்.

தங்களுக்கு வேண்டியவர்களை அம்புகளாக ஏய்து வம்புக்கு காத்திருப்பவர்கள் நமது இதிகாசத்தில் வரும் சகுனி / கூனி ஆவர்.

வேடனுக்கு வயிற்றுப் பசி.

சகுனி / கூனி களுக்கோ பழி/வம்பு பசி.

வேடன் பசி உண்டதும் அடங்கிவிடும்.

சகுனி/கூனி பசி அவர்கள் குறி வைத்தவர்கள் அழிந்தால் தான் அடங்கும்.

ஏய்தவர் எங்கோ இருக்க அம்பை நோவானேன்!!!! என்ற எண்ணத்தில் இருக்கிறாளா நம்ம மிருதுளா?

தொடரும்….

மகிழ்ச்சியாக மீதமிருந்த விடுமுறை நாட்களை நவீன், மிருதுளா இருவருமாக கழித்தனர். திங்கட்கிழமை வந்தது. நவீன் வேலையில் ஜாயின் பண்ணுவதற்காக கிளம்பிக்கொண்டிருந்தான். மிருதுளா அடுப்படியில் தன் கணவனுக்காக காலை உணவையும் மத்திய உணவையும் தயார் செய்வதில் மும்முரமாக இருந்தாள். இருவருமாக காலை உணவை ஒன்றாக அமர்ந்து அருந்தினர். பின் மத்தியத்திற்கு சாம்பார் சாதமும் பீன்ஸ் பொறியலும் வைத்திருப்பதாக சொல்லி அது எப்படி இருந்தது என்பதை மாலையில் சொல்ல வேண்டுமென கட்டளையிட்டு நவீன் கையில் கொடுத்தாள் மிருதுளா. அதற்கு நவீன்..

அப்படியே ஆகட்டும் தாயேஎன்று சொல்லி ஆஃபீஸுக்குச் சென்றான். நவீனை ஒரு வாரம் முன் பார்த்த நண்பர்கள் அன்று அவனைப்பார்த்து ….

அடே அப்பா ஒரே வாரத்தில் என்ன தேஜஸாயிட்ட நவீன்!!!!என்று அவனின் உள்ளத்திலிருந்த மகிழ்ச்சி முகத்தில் பளிச்சிட்டதைப் பார்த்துக் கேட்டனர். பல்பீர்…

ஹவ் ஈஸ் யுவர் வைஃப் நவீன்?…நானும் என் மனைவியும் உங்க வீட்டுக்கு வரலாமென நினைத்தோம்…அப்புறம் ஏன் நியூலி வெட்டெட் கப்புளை டிஸ்டர்ப் பண்ணனும்னு விட்டுட்டோம்….வில் கம் அன்ட் சீ ஹெர் திஸ் வீக் என்ட்

ஹவ் அபௌட் ஆல் ஆஃப் அஸ் கோ அன்ட் விஸிட் தெம் திஸ் வீக் என்ட்என்றார் மற்றொரு நண்பர். அதற்கு நவீன்..

ஓகே யாரெல்லாம் இந்த வீக் என்ட் வரீங்களோ தயவுசெய்து முன்னாடியே சொல்லிடுங்கப்பா..அட் லீஸ்ட் நாளைக்கு.

நவீனின் நெருங்கிய நண்பர்களில் பல்பீர் மட்டுமே திருமணமானவர்  ஆகையால் மீதி நால்வரும் ப்லபீருடன் கலந்து பேசி உடனே டிசிஷன் எடுத்து சனிகிழமை நவீன் வீட்டிற்கு வருவதாக கூறினர். நவீனும் எப்போ என்று மிருதுளாவைக்கேட்டு சொல்வதாக சொல்ல …அனைவரும்…

ஓ!!! ஹோ!!என ஒன்றாக கோஷமிட்டனர். 

நவீனை நண்பர்கள் மத்திய உணவருந்த மெஸ்ஸுக்கு கூப்பிட்டனர். மிருதுளா தனக்காக சமைத்துக் குடுத்தனுப்பியிருக்கிறாள் என்பதால் அவர்கள் அழைப்பை மறுத்துவிட்டான். பின்பு அவனது டிஃபன் பாக்ஸை திறந்து சாப்பிட்டான். மிருதுளா அன்புடன் கட்டிக்கொடுத்த அன்னம் அமிர்தமாக இருந்தது. அதை அவளிடம் சொல்ல மாலை நேரத்திற்காக காத்திருந்தான். 

கடிகாரம் நாலு நாப்பது காட்டியதும் தனது வேலை மேஜையை சுத்தமாக்கி விட்டு நண்பர்களுக்கு பை சொல்லிவிட்டு வேக வேக மாக வீட்டிற்குச் சென்று வீட்டின் கதவைத்தட்டினான். கதவை மிருதுளா திறந்ததும் ….

ஹாய் நவீன். குட் ஈவ்னிங். ஹவ் வாஸ் தி டேஎன்றாள் 

நவீனுக்கு ஏதோ தேவ லோகத்தில் நுழைந்தது போல வீடே ஊதுவத்தி மணம் கமழ சுத்த பத்தமாக இருந்தது. மிருதுளாவும் லக்ஷ்ணமாக நெற்றியில் குங்குமம் விபூதியுடன் பளிச்சிட்டாள். நவீனால் அவளைப் பார்த்து பேசி பாராட்டக்கூட நேரமில்லாமல் கிடு கிடுவென ஈவினிங் கிளாஸுக்கு தயாராகிக்கொண்டே மத்திய உணவைப் பற்றியும் வீட்டை நேர்த்தியாக வைத்திருக்கும் அழகையும் வர்ணித்தான். மிருதுளா அவனுக்கு ஒரு தட்டில் நிலக்கடலை சுண்டலும் ஒரு கப் சூடான காபியும் கொடுத்தாள். சுண்டலை சாப்பிட்டு, காபியை குடித்து விட்டு ….

சூப்பர் மிருது…சரி நான் கிளம்பறேன் அன்ட் வில் பீ பேக் பை நைன் தர்ட்டி. பத்திரமா இரு. இங்க சேஃப் தான் ஸோ கவலை வேண்டாம். பை பை

என தனது பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பிச் சென்றான். மிருதுளாவும் பை சொல்லி விட்டு வீட்டினுள் சென்று காபி பாத்திரங்களை தேய்த்து வைத்துவிட்டு. இரவுக்கு மசால் செய்து, பூரிக்கு மாவு பிசைந்து வைத்துவிட்டு அவளின் புத்தகங்களை எடுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தாள். 

அன்று இரவு நவீன் சொன்னதைப் போலவே ஒன்பதரை மணிக்கு கதைவைத் தட்ட மிருதுளா திறந்தாள். உடைகளை மாற்றி சற்று ரிலாக்ஸாக அமர்ந்தான். 

ஏய் மிருது என்ன பண்ணற?”

தட்டில் சூடான பூரி மசாலை போட்டு நவீனிடம் கொடுத்தாள். 

ஓ வாவ்!!! மிருது இப்படியே நீ வித விதமா செய்து தந்து நானும் அளவு தெரியாம சாப்பிட்டு வேயிட் போடப் போறேன்

போட்டா என்னவாம்!! நல்லா தான் இருப்பேங்கள்

நான் நல்லா இருக்கறது இருக்கட்டும்….என்ன அப்பறம் வேயிட் குறைக்கனும்ன்னு மெடிக்கல் டெஸ்ட் ல சொல்லிடுவா…அது ஒரு பெரிய ப்ராஸஸ்…

ஓ அப்படி வேற இருக்கா?”

எஸ் எஸ்!! ஐ ஹாவ் டூ மேய்டேயின் மை வேயிட். சரி நீ சாப்ட்டயா?”

இதோ இத மட்டும் போட்டு எடுத்துட்டேனா ஆச்சு. நானும் சாப்பிடலாம்

வா வா !! உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்.

இதோ வந்துட்டேன். சொல்லுங்கோ

என் நண்பர்கள் ஒரு ஆறு பேரு வர சனிக்கிழமை நம்ம ஆத்துக்கு வரேன்ங்கறா எப்போ வரச்சொல்லலாம் நீயே சொல்லு அன்ட் உன்னால அத்தனைப் பேருக்கும் ஏதாவது சாப்பிட செய்ய முடியுமா இல்லை டாபாலேருந்து வாங்கிண்டு வரட்டுமா

என்னத்துக்கு வாங்கிண்டு வரனும்!!! நானே சமைக்கறேன் மத்திய சாப்பாட்டுக்கு வரச்சொல்லுங்கோ.

ஓகே சொல்லிடறேன். நான் இதை எல்லாம் எடுத்து ஒதுக்கி வைக்கறேன். நீ சாப்ட்டு அந்த தட்டை மட்டும் தேச்சுக்கோ. அதுக்குள்ள இதை எல்லாம் நானே தேச்சுட்டு வரேன்…அப்போ தான் நேரத்துக்கு தூங்க முடியும்என்று கண்ணடித்துக் கொண்டே சொன்னான் நவீன். 

நீ படிச்சியா? உனக்கு நேரமிருந்துதா? ஏன்னா நீ இதெல்லாம் பண்ணறதுக்கே டைம் ஆகிருக்குமே பின்ன எப்போ படிச்ச?? நாளையிலேருந்து இப்படி எல்லாம் டிஃபன் பண்ண வேண்டாம். மத்தியானம் செய்ததையே சாப்பிடலாம் சாதம் மட்டும் வச்சுண்டா போதும் என்ன சொல்லற? அப்போ தான் உனக்கும் படிக்க டைம் கிடைக்கும்

அதெல்லாம் இருக்கு நவீன்.  டிஃபன் நல்லா இருக்கா இல்லையா?”

நல்லா இல்லாம என்ன!!! சூப்பரா தான் இருக்கு. ஆனா உனக்கு தான் வேலை அதிகமாகும்ன்னு சொன்னேன்

நோ ப்ராப்ளம் …என்னால டிஃபன் செய்தும் தரமுடியும் என் படிப்பையும் படிச்சுக்க முடியும்

உனக்கு ஓகேன்னா தென் ஃபைன் கோ அஹெட். எனக்கும் வித விதமா டின்னர் கிடைச்சா வேண்டாம்ன்னா சொல்லப்போறேன். எனக்கு விவரம் தெரிஞ்ச வயசுலேருந்து இந்த வேலைக்கு சேர்ந்த வரைக்கும் தயிர் சாதம் தான் சாப்பாடு… பல நாட்கள் ல அதுவும் இருக்காது… அதுக்கப்புறம் இதோ எங்க மெஸ் சாப்பாடு தான். இப்போ நீ வந்ததுக்கப்பறம் தான் வித வித மா சாப்பிடறேன்

எங்காத்துல காலையிலும் மாலையிலும் டிஃபன் தான் மத்தியானம் மட்டும் தான் சாப்பாடு…நான் அதையே ஃபாலோ பண்ணட்டுமா இல்லை உங்களுக்கு ராத்திரி சாதம் வேணுமா?”

இல்லை உனக்கு கஷ்டமில்லை என்றால் டிஃபனே ஓகே தான்

டன். வர வெள்ளிக்கிழமை ஈவ்னிங் மார்கெட் போய் காய்கறிகள் எல்லாம் வாங்கிண்டு வருவோமா

ஓகே நான் அன்னைக்கு என் கிளாஸுக்கு சுட்டிப் போடறேன். நாம போய் வேண்டியதை எல்லாம் வாங்கிண்டு வருவோம். சரி இப்போ படுக்கலாமா. காலை ல சீக்கிரம் எழுந்திரிக்கனுமே!!

வெள்ளிக்கிழமை வந்தது. மார்கெட்டிலிருந்து வாங்கி வந்த காய்கறிகளை நறுக்கி வைத்துவிட்டு உறங்கினர் நவீனும் மிருதுளாவும். 

சனிக்கிழமை காலையில் சீக்கிரம் எழுந்து சமையலில் மும்மரமானாள் மிருதுளா. சாம்பார், ரசம், கூட்டு, பொறியல், பாயசம், வடை, அப்பளம் என ஃபுல் மீல்ஸ் தயார் செய்து அழகாக பரிமாறுவதற்கு தகுந்தாற்போல் வரிசையாக அடுப்படி மேடையில் அடுக்கி வைத்தாள். மத்தியம் பன்னிரெண்டு மணிக்கு நண்பர்கள் அனைவரும் வந்தனர். அவர்களை வரவேற்று அவர்களுக்கு ஜுஸ் கொடுத்து, குக்கரில் சாதம் வைத்து விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு வந்து ஹாலில் அமர்ந்தாள்‌. 

நவீனின் நண்பனான ஹரீஷ் என்பவர்…

நவீன் சரியான கஞ்சன்ங்க….எங்க மெஸ் சாப்பாட்ட முகம் சுளிக்காம சாப்பிடர ஒரே ஆள் இவன் தான். நாங்க எல்லாரும் பல நேரம் மெஸ் சாப்பட்டை குற்றம் சொல்லிட்டு வெளியே போய் சாப்பிடுவோம் ஆனா நவீன் மட்டும் தான் எங்களோட வராமா மெஸ் சாப்பாட்டை சாப்பிடுவான்

அதற்குகஞ்சன்ன்னு ஏன் சொல்லனும் சாப்பாட்டுக்கு மரியாதைக் குடுக்கறவர்ன்னு கூட சொல்லலாமே!என்று மிருதுளா சொன்னதும் நவீனின் முகம் மலர்ந்தது. அதை கேட்ட நண்பன் …

சூப்பர்ங்க அத அப்படியும் சொல்லலாம்” 

மற்ற நண்பர்கள் எல்லோருமாக

ஓய் அசடு வழியாதே டா…என்றதும் மிருதுளா..

தப்பா எடுத்துக்காதீங்க. உங்கள சங்கடப்படுத்தனும்ன்னு சொல்லலை

அச்சசோ சிஸ்டர் ஃப்ரீயா விடுங்க…நீங்க உங்க கணவருக்கு இதே போல சப்போர்டிவ்வா இருந்து எங்க நவீனை நல்லா பார்த்துக்கோங்க” 

அந்த கவலை இனி நண்பர்களான உங்களுக்கு வேண்டாம். நான் உங்க நவீனை நல்லா பார்த்துக்கறேன் இப்போ எல்லாரும் சாப்பிட வரீங்களா?”

அனைவரும் வரிசையாக அமர்ந்தனர். மிருதுளா வாழை இலையை போட்டாள். பின்பு பரிமாற துவங்கினாள். முதலில் சாப்பிட சற்று தயங்கிய நண்பர்கள்…ருசியாக இருக்கிறது என்றுணர்ந்ததும் வெளுத்துக்கட்டினார்கள். அனைவரும் சாப்பிட்டப் பின் சற்று நேரம் அமர்ந்து பின் கிளம்பளானார்கள். அப்போது அனைவரும் மிருதுளாவின் சாப்பாட்டை போற்றினர். பல்பீரின் மனைவி தான் உண்ட தென்னாட்டு சாம்பாரை கற்றுக்கொள்வற்காக ஒரு நாள் வருவதாக கூறினாள். வீட்டைவிட்டு வெளியே செல்வதற்கு முன் நண்பர்கள் ஒன்றாக…

யூ ஆர் அ லக்கி மேன் நவீன். எஞ்சாய்

என்று கூறி விடைப்பெற்றனர். அவர்கள் சென்ற பின் மிருதுளா நவீனைப் பார்த்து…

நிஜமா என் சமையல் நல்லா இருந்துதா நவீன். இல்லை இவா எல்லாரும் சும்மா சொல்லிட்டுப்போறாளா?”

நிஜமாவே ரொம்ப சூப்பரா சமச்சிருந்த மிருது. தாங்கஸ் ஃபார் தி லவ்லி லஞ்ச் மை வைஃப்….தாங்கஸ் சொல்லக்கூடாதுன்னு தான் சொல்லிருக்கேன் ஆனா நீ இன்னைக்கு சமையல் மட்டுமில்லை எனக்காக பேசினதிலும் நான் மகிழ்ச்சி அடைந்தேன்  அதனால் தான் சொன்னேன்

அதெல்லாம் சரி இப்போ வீட்டை சுத்தம் செய்ய எனக்கு ஹெல்ப் வேணுமே

அதனால் என்ன நான் செய்யறேன்

மூன்று மாதங்கள் காலையில் வேலை, மாலையில் படிப்பு, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியே சுற்றுவது என மகிழ்ச்சியாக உருண்டோடின. 

ஒரு சனிக்கிழமை மாலை நவீனின் நண்பன் ராமகிருஷ்ணனும் அவர் மனைவியும் வீட்டுக்கு வந்து ஒரு சுவீட் பாக்ஸை கொடுத்து தாங்கள் அப்பா அம்மா ஆக போவதாக சொல்ல அதைக் கேட்டு நவீனும் மிருதுளாவும் மகிழ்ச்சியில் அவர்களை வாழ்த்தி ஹோட்டலில் டின்னர் கொடுத்தனர். மறுநாள் மிருதுளா வருத்தமாக இருந்ததைப் பார்த்த நவீன்…

மிருது நீ ஏன் டல்லா இருக்க? என்ன ஆச்சு?”

நேத்து உங்க நண்பரும் மனைவியும் பட்ட சந்தோஷம் நமக்கு ஏன் இன்னும் வரலைன்னு ஒரே யோசனையா இருக்கு. நம்மளுக்கும் கல்யாணமாகி மூணு மாசமாயாச்சு ஆனா…என்று சொல்ல அவளின் கண்கள் இரண்டிலும் கண்ணீர் ததும்பி வழிய ஆரம்பித்தது

ஹேய் மிருதுளா !! என்ன அசடு மாதிரி இருக்க?? அதெல்லாம் நடக்கும் போது நடக்கும்…இதுக்கு நீ ஏன் இப்போ அழற?”

இல்லை எனக்கு ஏதாவது ப்ராப்ளம் இருக்குமோன்னு பயமாருக்கு

அட அசடே!!! நமக்கு கல்யாணமாகி மூணே மாசம் தான் ஆகறது மூணு வருஷம் ஆகலை.

என்று மிருதுளாவின் கண்களைத் துடைத்து விட்டு அவளை இறுக்கமாக தன்னோடு அணைத்துக்கொண்டான். 

ஒரு நாள் நவீன் ஆஃபீஸிலிருந்து வந்ததும் மிருதுளாவிடம் அவளது அப்பா, அம்மா, தம்பி… இருவரையும் காண அடுத்த வாரம் குஜராத் வருவதாக சொன்னான். அதைக் கேட்டதும் சந்தோஷத்தில் செய்வதறியாது துள்ளினாள் மிருதுளா. பின் நவீனிடம்…

நவீன் நாம இன்னும் ஒரு நாலு தலைகாணி, போர்வை, பாய் எல்லாம் வாங்கனும்.

ஓகே வாங்கிடலாம்

மறுநாள் காலை நவீன் ஆஃபீஸுக்கு ஈஸ்வரனிடமிருந்து  ஃபோன் கால் வந்தது. அதில் நவீனின் கடைசி இரண்டு தம்பிகளும் அவன் மாமனார் குடும்பத்தினருடன் வருவதாக கூறினார். அதைக் கேட்டதும் நவீன்…

அவா ஏன் இப்போ மிருதுளா ஃபேமிலியோட வரனும்? அவா ரெண்டு பேரும் டிசம்பர் லீவில் வரலாம் இல்லையா?” 

ஏன் இதில் உனக்கு என்ன கஷ்டம். உன் மாமனார் மாமியாரே ஒன்னும் சொல்லலை அப்புறம் என்ன?.. ப்ரவினுக்கும், பவினுக்கும் டிக்கெட் புக் பண்ணியாச்சு அவாளும் வராங்கறத இன்ஃபார்ம் பண்ண தான் ஃபோன் பண்ணினேன். பை

என நவீனையோ மிருதுளாவையோ பற்றி நலனேதும் விசாரிக்காமல் தான் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லிவிட்டு ஃபோன் கால் ஐ துண்டித்தார் நவீனின் தந்தை. இதை மிருதுளா எப்படி எடுத்துக்கொள்வாள் என்ற எண்ணத்திலேயே வீட்டிற்கு சென்று நடந்ததைக் கூறி மிருதுளாவையே பார்த்தான்…

ஓ!! ப்ரவின் அன்ட் பவினும் வராலா…சூப்பர் சூப்பர். அப்போ செம ஜாலியா இருக்கப்போறது.  இன்னும் சில பொருட்கள் எல்லாம் வாங்கனும் நவீன். நாம இந்த வீக் என்ட் போய் வேண்டியதை எல்லாம் வாங்கிண்டு வந்திடுவோம் ஓகே வா?”

என்று வெள்ளேந்தியாக பேசிய மிருதுளாவைப் பார்த்துக்கொண்டிருந்த நவீன் அப்பாடா என பெருமூச்சு விட்டான். அதை கவனித்த மிருதுளா…

ஏன் ஏதோ டென்ஷனா இருக்கேங்கள்?”

இதை சொன்னா நீ எப்படி எடுத்துப்பன்னு தான் டென்ஷன்

இத வேற எப்படி எடுத்துக்கனும்

ஒன்னுமில்லை மா ஒன்னுமில்லை என் டென்ஷன் எல்லாத்தையும் நீ போக்கிட்ட

நவீனுக்கே ஏதோ தவறாக தெரிந்த இந்த விஷயத்தில், மிருதுளாவிற்கு எந்த வித தவறும் தெரியவில்லை என்பதிலிருந்தே மிருதுளா வெள்ளேந்தியான நல்ல மனம் படைத்தவள் என்பதை நவீனும் நாமும் புரிந்துக்கொள்ளத் தான் இப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளார் அந்த கடவுள் என்று தான் எண்ணத் தோன்றுகிறது. 

மிருதுளா குடும்பத்தின் வரவுக்காக காத்திருப்போம்.

தொடரும்……

பணமில்லாதது ஒரு பிரச்சினை என்பதை விட நவீன் அப்படி ஒரு வார்த்தைக் கேட்டதில் மனமுடைந்த மிருதுளா அழுதுகொண்டே படுத்ததில் சற்று கண் அசந்துப்போனாள். டக்..டக்..டக் என கதவு தட்டும் சத்தம் அவளுக்கு எங்கோ தூரத்தில் கேட்பது போல இருந்தது. மீண்டும் பலமாக கதவைத் தட்டும் சத்தம் மிருதுளாவை சட்டென எழச்செய்தது. ஒரு நிமிடம் தான் எங்கிருக்கோம் என்பதை மறந்தவள் போல் சுற்றும் முற்றும் பார்த்தாள்….டக்டக்டக்டக்டக் …என இடைவிடாமல் கதவு தட்டும் சப்தம் அவளை சுயநினைவுக்கு கொண்டுவந்தது. ஓடிப்போய் கதவைத் திறந்தாள். தவிப்புடன் நின்றிருந்த நவீனைப்பார்த்தும் ஏதும் பேசாமல் உள்ளே சென்றாள். நவீன் கதவடைத்துக்கொண்டே ….

கதவ தொறக்க ஏன் இவ்வளவு நேரமாச்சு…நான் பயந்தேப் போயிட்டேன்

என்னத்துக்கு பயப்படனும்….கவலைப் படாதீங்கோ…என்னால இன்னும் எத்தனை பொய்களை எல்லாம் ஏத்துக்க முடியும் ங்கறத நானும் தெறிஞ்சிக்கற வரைக்கும் எதுவும் பண்ணிக்கவும் மாட்டேன்…எங்கேயும் போயிடவும் மாட்டேன்

கம் ஆன் மிருது…நானா உன்கிட்ட என் சம்பளத்தை அதிகமாக சொன்னேன்?”

அத விடுங்கோ உங்க பேரன்ட்ஸ் சொன்ன பொய்கள் ல அதுவும் ஒன்னுன்னு கணக்கில் வச்சுக்கலாம்.‌…ஆனா நீங்க எப்படி அப்படி ஒரு வார்த்தையை கேட்கலாம்? நான் தெரிஞ்சின்டத உங்கள்ட்ட கேட்டேன்..கொஞ்சம் என்னோட இடத்தில் இருந்து இந்த சிட்டுவேஷனை நினைச்சுப்பாருங்கோ ….உங்களுக்கு ஷாக்கிங்கா இருக்குமா! இருக்காதா? என்ட்ட நான் கேட்ட மாதிரி கேட்பேளா மாட்டேளா!!!??”

அப்படி உன் பேரன்ட்ஸ் ஏதையாவது என்ட்ட சொல்லி …அது உண்மை இல்லாட்டா …நான் உன்ட்ட அப்படி கேட்க மாட்டேன் ஏன்னா எனக்கு நீ சொல்லறது தான் முக்கியமே தவிர உன் அப்பா அம்மா சொல்லறது இல்லை.

ஆமாம் ஆமாம் அப்படி ஒன்னும் நடக்காத வரை இப்படி எல்லாம் ரொம்ப பெருந்தன்மையுடன் பேசலாம்….ஒரு தடவ தப்பாவோ இல்லை பொய்யோ சொன்னா தெரியாம பண்ணிட்டான்னு விடலாம் ஆனா இது வரிசையா ரயில் வண்டி மாதிரின்னா ஒவ்வொன்னா வர்ரது” 

ஓகே இப்போ என்ன தான் பண்ணறது. நான் என் சம்பளம் டிட்டேய்ல்ஸை சொல்லிட்டேன். நான் சொல்லறது தான் உண்மை. எனக்கு சம்பளம் இவ்வளவு தான் என்ன செய்லாம்ன்னு சொல்லு

இப்போ என்னத்த பண்ண!! அதுக்குள்ளயே அட்ஜஸ்ட் பண்ணிண்டு வாழ வேண்டியது தான். ஆனால் இதுவே கடைசி முறையா இருக்கட்டும்….நாம கையில ஒரு ரூபாய் இல்லாட்டியும் பரவாயில்லை, அதற்காக எவரிடமும் நீங்கள் இனி பணம் கேட்டு வாங்கக்கூடாது சரியா

சரி நிச்சயமா யாருகிட்டேயும் நான் பணம் கேட்டு வாங்க மாட்டேன்

தாங்கஸ் ….சரி சூட்டோட சூடா இன்னொரு விஷயமும் கேட்டுடவா?”

அம்மாடி இன்னொன்னா!!! அது என்ன அதையும் கேட்டுவிடு

நாம ஊருக்கு கிளம்பறதுக்கு முன்னாடி நாள் ஏன் உங்க அப்பா கிட்ட பணம் கேட்டுட்டிருந்தேங்கள் ங்கறதுக்கு எனக்கு பதில் கிடைச்சிடுத்து ஆனா நீங்க கேட்டும் அவர் தர்ரத்துக்கு ரொம்ப யோசிச்சா மாதிரி தெரிஞ்சுது அன்ட் அதுவும் இல்லாம அடுத்த மாசமே திருப்பி அனுப்பச் சொன்னாரே அதுக்கு நீங்களும் தலையை ஆட்டிண்டு இருந்தேங்களே அது ஏன் அன்ட் எப்படி அவர் அப்படி சொல்லும் போது பேசாம நின்னுண்டிருந்தேங்கள்

அது ….அவரிடம் பணம் இல்லையாம் அதனால வந்த மொய்ப் பணத்திலேருந்துதான் தந்தாராம் அதனால திருப்பி உடனே சம்பளம் வாங்கினதும் அனுப்பச் சொன்னா

அத அனுப்பிட்டேங்களா?”

இன்னும் இல்லை ….அத கேட்டு அவா நான் ஆஃபீஸ் ஜாயின் பண்ணின அன்னைக்கே எனக்கு ஃபோன் போட்டு சித்தப்பாட்ட இருந்து வாங்கின பணத்திலிருந்து உடனே அனுப்பச்சொல்லி கேட்டாச்சு…அனுப்பித்தரேன்னு சொல்லி கால் ஐ கட் செய்தேன்… நானே நீ விழுந்த டென்ஷன் ல இருந்தேன் இதுல இவா வேற எப்பவும் போல பணம் தா பணம் தா ன்னுட்டு….என் ஆபீஸுக்கு இன்னைக்கு காலை ல கூட கால் பண்ணிருக்கா என் நண்பன் கிட்ட அந்த மூவாயிரத்தை என்னை அனுப்பித்தர சொல்ல சொல்லிருக்கா…அவன் காலை ல நான் கடைக்கு சிப்ஸ் வாங்க போனப்போ என்ட்ட சொன்னான்…நான் அந்த கடுப்புல இருக்கும் போது தான் இந்த  சம்பளம் மேட்டர் பேச்சு வர டென்ஷன்ல அப்படி உன்கிட்ட கேட்டுட்டேன்

வேயிட் ! வேயிட் ! வேயிட்! ….சித்தப்பாட்ட நீங்க பணம் வாங்கினது எப்படி அவாளுக்கு தெரிஞ்சுது

என் சித்தி தான் சொல்லிருப்பா

அப்போ பணம் வாங்கிண்டு போனத சொன்ன சித்தி நான் கீழே விழுந்ததைச் சொல்லாமலா இருந்திருப்பா?!!!”

நான் சொல்ல வேண்டாம் ன்னு சொன்னேன் !!!! ஆனாலும்…. என் பணம்,.. நான் வாங்கினத ஃபோன் போட்டு சொல்லிருக்கான்னா…. நீ விழுந்ததையும்  சொல்லியிருக்கலாம்

ஆனா அன்னைக்கு ஆஃபீஸுக்கு ஃபோன் போட்டப்போ உங்க அப்பா அம்மா அதைப்பத்தி ஒன்னுமே கேட்கலை இல்லையா!!!

ஆமாம் ஒன்னுமே தெரியாதது போல தான் பேசினா

சரி… நீங்க ஏன் அந்த பணத்தை அனுப்பாம இருக்கேங்கள்

எனக்கு இருக்கும் டென்ஷன் ல  அனுப்ப மறந்துட்டேன்

இந்த தடவை இந்த பாலிசி பணம் வந்திருக்கு அனுப்பிடுங்கோ ஆனா அடுத்த தடவை கேட்டா என்ன பண்ணப் போறேங்கள் ?? 

நீங்க வாங்கறதே ஆறாயிரம் தான் இதுல நமக்கு வீடு அலாட் ஆகும் வரைக்கும் இந்த வீட்டுக்கு ஆயிரத்தி ஐநூறு ரூபாய் வாடகை குடுக்கனும். வீட்டு செலவுக்கு எப்படியும் மூவாயிரம் தேவை அது போக உங்க பைக் டியூ எழுநூத்தி ஐம்பது ரூபாய், பெட்ரோல் ஒரு முன்னூறு ரூபாய்…எங்கயாவது கூட்டிண்டு போனேள்ன்னா…உங்க படிப்புக்கு எப்படியும் ஆயிரம் தேவை ….எல்லாத்தையும் கூட்டினா ஆராயிரத்தி ஐநூறு வர்ரதே!!! சரி நான் நம்ம ஆத்து செலவ குறைச்சிண்டாலும் ஒரு ஆயிரம் ரூபாய் தான் கொறச்சுக்க முடியும் அப்படியானாலும் மீதம் ஐநூறு தானே வரும் ….இதுல உங்க அப்பா கேட்டா …எப்படி? எங்கேருந்து குடுக்கப்போறேங்கள்?”

இல்லன்னு சொல்லுவேன்…அது தான் பதினோரு வருஷமா குடுத்துண்டிருக்கேனே…அதுக்கு முன்னாடியும் ஸ்கூல் படிக்கும் போது கூட என்னால முடிஞ்ச வேலைகளை லீவ் நாட்கள் ல பார்த்து காசு குடுத்துண்டே தான் இருந்திருக்கேன் !!

ஆனா இப்போ தரமாட்டேன்னு சொன்னேங்கள்னா அந்த பழி என் மேல தான் விழும்….உண்டா இல்லையா?”

அது எப்படி உன்ன சொல்லுவா? நான் என் நிலைமையை எடுத்துச்சொல்லுவேன், எங்க அப்பாக்கு பென்ஷன் வேற வர்ரதுஅதுவும் இல்லாம இப்போ தான் கவின் குவைத் ல சம்பாதிக்கறானே அவன் பார்த்துக்கட்டுமே

நீங்க என்ன தான் சொன்னாலும் என்னை தான் குற்றம் சொல்லுவா…எங்கடான்னு காத்திருக்கறவா வாயிக்கு கரும்பு குடுக்கப் போறேங்கள் அத நன்னா மென்னு கடிச்சு துப்பப்போறா….எனக்கு இந்த டீட்டேயில்ஸ் அப்பவே தெரிஞ்சிருந்தா எங்க அப்பா குடுத்த பத்தாயிரத்தை தாங்கோன்னு கேட்டிருப்பேன்

ஹா !!ஹா !!ஹா!!!

என்ன சிரிக்கறேங்கள்? சிரிக்கறா மாதிரி நான் இப்போ என்ன சொல்லிட்டேன்

எனக்கே தெரியாம என் பெயரை யூஸ் பண்ணி உங்க அப்பாட்ட இருந்து பணம் வாங்கிருக்கா எந்த வித கூச்ச நாச்சமும் இல்லாம அப்படி இருக்கறவாள்ட்ட போய் நீ கேட்டு …அதுக்கு அவா அப்படியா நாங்க எதுவும் அப்படி வாங்கவே இல்லைன்னு சொன்னா….சொன்னா !!!என்ன !!!! இவ்வளவு செய்தவா சொல்லுவா அப்போ நீ என்ன பண்ண முடியும் மிருது வீணா உனக்கு தான் மனசு கஷ்டம்

ஓ அப்படி வேற சொல்லுவாலோ!!!! அந்த கடவுள் இருக்கார் …அவருக்குத் தெரியும்…..அப்படி எல்லாம் சொல்லி என்னை ஏமாத்தலாம் ஆனா அந்த ஆயிரம் கண்ணுடையாளை ஏமாத்த முடியாது

பிரேஸ்லெட் விஷயத்துலயும் என்ன தைரியமா நான் வாங்கினத கவின் வாங்கினதா உங்க கிட்ட சொல்லிருக்கா ….அப்படிப் பட்ட வா எப்படி வேணும்னாலும் பேசறவான்னு இன்னுமா உனக்கு புரியலை…நான் இது மாதிரி சில விஷயங்கள் பார்த்திருக்கேன்…கேட்டும் இருக்கேன்… அப்போ எல்லாம் அவா செஞ்சது என்னை பாதிச்சுது….ஆனா அதை எல்லாம் நான் பெரிசா எடுத்துக்கலை..அது தான் நான் செய்த தவறு…. 

ஃபார் எக்சாம்பிள்… நான் தஞ்சாவூர் போஸ்டிங்க ல இருந்தப்போ எனக்கு சம்பளம் ஆயிரத்தி இருநூறு தான்… அங்க ஒரு பட்டுப்புடவை வீவ் பண்ணும் ஃபேமிலி என் நண்பன் மூலம் எனக்கு தெரிய வந்தது, அதை நான் வீட்டில் சொன்னேன்…மறுநாள் என்னிடம் கூட சொல்லாமல் என் அம்மா அவ அக்கா ரமணி பெரியம்மாவுடன் அவர்கள் வீட்டுக்குப் போய் இரண்டு புடவை இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு எடுத்துக்கொண்டு காசை என்னிடம் வாங்கிக்கச் சொல்லிட்டு போயிக்கா…

சரி வாங்க வர்ரத தான் சொல்லலை அட்லீஸ்ட் வாங்கிருக்கேன்னாவது சொல்லிருக்கனுமா இல்லையா!!! அதுவும் சொல்லலை. எனக்கு என் நண்பன் மூலமா தான் தெரிஞ்சுது…கையில் காசு இல்லாத நேரத்துல இப்படிப் புடவை எடுக்கனுமா சொல்லு!!! அப்புறம் நான் கொஞ்சம் கொஞ்சமா அவாள்ட்ட கொடுத்து அந்த புடவைக்கடனை அடைத்தேன்! வீட்டுக்கு வந்து ஏன் அப்படி செஞ்சான்னு கேட்டதுக்கு அந்த புடவைகளை கொடுத்து போய் திருப்பிக்கொடுத்துக்கோன்னு திமிரா சொல்லிட்டு அவா பாட்டுக்கு அவா வேலையை பார்க்க போயிட்டா

சரி இதை இத்தோட விட்டு விடுவோம் அந்த ஆண்டவன் அவாளுக்கு அதுக்கு தகுந்த கூலி குடுப்பார். ஆனா இனி என்கிட்ட இருந்து எதையும் மறைக்காதீங்கோ…நானும் இனி எதையும் மறைக்க மாட்டேன்

ஷுவர் மிருது. வரியா நடந்துப் போய் நம்ம ரோஹித் டாபா ல ஒரு ஆலுடிக்கியும் சாய் யும் குடிச்சிட்டு வருவோம். உன்னால அவ்வளவு தூரம் நடக்க முடியுமா?”

ஓ எஸ் முடியும் ஆனா அழுது அழுது என் முகமெல்லாம் வீங்கிருக்கே!!!

பேஸ் வாஷ் பண்ணு சரியாயிடும்

ஓகே ஒரு பத்து நிமிஷத்துல ரெடி ஆயிடறேன்” 

இருவருமாக அமர்ந்து பேசி சமாதானம் ஆகி பின் மெல்ல நடந்து சென்று மாலை நேரத்தை இனிதே கழித்தனர். அன்று காலை மகிழ்ச்சியாக தொடங்கி…இடையில் நவீன் அவன் பெற்றோர்களின் ஃபோன் கால் லால் டென்ஷனாகி, விளக்கு தேய்க்க பூதம் கிளம்பியதைப்போல சம்பள விஷயம் கிளம்பி இருவருக்குள்ளும் வந்த சிறிது நேரப் பிரிவு அவர்களை அவர்களே நிதானித்துக் கொள்ள ஏதுவாக இருந்தது.  பின் இருவருமாக அமர்ந்து பேசியதில் தெளிவடைந்து ரோஹித் டாபா டீ அன்ட் ஆலுடிக்கியுடன் மீண்டும் சந்தோஷம் துளிர்விட ஆரம்பித்தது.

எந்தப் பிரச்சினையும் பத்து நிமிடம் உட்கார்ந்து பேசினால் சரியாகி விடும் என்பார்கள் ஆனால் அப்படி பேசுவதற்கு இரு தரப்பினரும் சம்மதிக்க வேண்டும், பேசும் மனநிலையில் இருக்க வேண்டும். நீ பெரியவானா !!! நான் பெரியவளா !!!என்று பட்டிமன்றத்திற்கு தயாராகக் கூடாது. அப்படியே ஒருவர் நினைத்தாலும் மற்றொருவர் விட்டுக்கொடுத்து இறங்கிப் பேச வேண்டும். அப்படி பட்ட பேச்சு வார்த்தையே வெற்றியைத் தரும்.

மிருதுளா நினைத்திருந்தால் நவீனை அவன் பெற்றோருடன் பல காரணங்களுக்காக சண்டையிட வைத்திருக்க முடியும் ஆனால் அவள் அதை விரும்பவில்லை. சண்டையிடுவது தான் அவள் நோக்கம் என்றால் அதை அவள் திருமணமான அடுத்த நாளிலிருந்தே செய்திருக்கலாமே. அவளைப் பொருத்த வரை நவீனை நடந்தவற்றை எல்லாம் சரிவர புரிந்துக்கொள்ள வைக்க வேண்டும் அவ்வளவு தான். ஏனெனில் அவன் சரியாக புரிந்துக்கொண்டாலே வாழ்க்கை இனிதாகும் என்று நம்பினாள். சின்ன சின்ன விஷயத்துக் கெல்லாம் புருஷனைத் தூண்டி விட்டு சண்டையிட வைக்கும் பெண்களுக்கிடையே மிருதுளா தனித்துவம் வாய்ந்தவளே.

நவீனைப் பெற்றவர்கள் அவனை பணத்திற்காக எல்லார் வீட்டு வாசலிலும் நிற்க வைத்தார்கள் ஆனால் அவன் கட்டிக்கொண்ட மனைவியோ சாப்பிடுவதற்கு வழி இல்லாவிட்டாலும் எவரிடமும் கையேந்தக் கூடாதென்கிறாள். இதைத் தான் என்னவென்று சொல்ல. இது தான் கடவுளின் விளையாட்டு. 

நவீனை அவன் திருமணத்திற்கு முன் எவ்வளவு அவமானங்கள், வேதனைகள், பணத்திற்காக பிச்சைக்காரரை போல் சொந்தக் காரர்கள் வீட்டின் வாசலில் அவனைப் பெற்றவர்கள் எனும் உறவு மூலம் நிற்க வைத்த கடவுள் இன்று அதை அப்படியே அழித்துவிட்டு புதுக் கணக்கை மனைவி எனும் உறவுக் கொண்டு எழுத ஆரம்பித்துள்ளார். இந்த கணக்குக்கு மறு கணக்கு  உண்டா !!! என்பதை போக போக படித்து தெரிந்துக்கொள்வோம்.

தொடரும்….

இரவு நன்றாக உறங்கி எழுந்தாள் மிருதுளா. நவீன் அடுப்படியில் ஏதோ செய்துக் கொண்டிருந்தான். மிருதுளா மெல்ல கட்டிலை விட்டு இறங்கிச் சென்று குளித்து ஃப்ரெஷாகி …

குட் மார்னிங் நவீ

ஹேய் குட் மார்னிங். இரு உனக்கு காபி தரேன் கொஞ்சம் வேயிட் பண்ணு….இதோ போட்டுண்டே இருக்கேன் …இதோ போட்டுட்டேன் …ஹியர் யூ கோ

வாவ்!!! சூப்பர் நவீ தாங்க்ஸ். ஓ ! ஓகே ஓகே என்னோட தாங்க்ஸ் வாப்பஸ் ப்ளீஸ்…ஹா ஹா ஹா

என சந்தோஷமாக ஆரம்பித்தது அன்றைய தினம். 

காயங்கள் எல்லாம் ஆறப்போறது அநேகமா எல்லாம் இன்னும் ஒரு நாள்ல காஞ்சிடும்ன்னு நினைக்கிறேன்…டாக்டர் சொன்ன மாதிரி ஒரு வாரமெல்லாம் ஆகாது

ஸோ வாட்? இன்னும் ஒரு மூணு நாள் ரெஸ்ட் எடு அவ்வளவு தானே. சரி இந்தா பிரெட் பட்டர் அன்ட் ஜாம். இதுதான் நம்ம பிரேக்ஃபாஸ்ட்.

நீங்க குளிச்சாச்சா?”

இல்லை இனி தான் போய் குளிக்கனும் நீ எழுந்திரிக்கறதுக்கு ஒரு பத்து நிமிஷம் முன்னாடி தான் நான் எழுந்துண்டேன்

சரி அப்போ நீங்க போய் குளிச்சிட்டு வாங்கோ நான் எல்லாத்துலயும் பட்டர் அன்ட் ஜாம் தடவி வைக்கறேன்

ஓகே ஒரு அஞ்சு நிமிஷத்தில் வந்திடறேன்

பிரெட் சாப்பிட்டுவிட்டு இருவருமாக

சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்கும் போதே மிருதுளா எடுத்துக்கொண்ட மாத்திரைகளினால் மீண்டும்  உறங்கிப்போனாள். நவீன் மெதுவாக எழுந்து அடுப்படிக்குச் சென்று கதவை தாழிட்டுக்கொண்டு  மத்தியத்துக்கு தால் மற்றும் சாதம் வைத்து, கடையிலிருந்து இரண்டு பாக்கெட் உருளைக்கிழங்கு சிப்ஸ் வாங்கிக்கொண்டு வந்து வைத்துவிட்டு தனது பாட புத்தகத்தில் முழ்கினான். 

ஒரு இரண்டு மணிநேரம் கழித்து எழுந்துப் பார்த்தாள் மிருதுளா…நவீன் மும்முரமாக படித்துக்கொண்டிருந்தான். அவனை தொந்தரவு செய்ய வேண்டாமென எண்ணி அமைதியாக அவனைப் பார்த்துக்கொண்டே படுக்கையை விட்டு எழாமலிருந்தாள். சற்று நேரம் கழித்து சட்டென்று திரும்பிப் பார்த்தான் நவீன்…

மிருது எழுந்துட்டயா !!! இரு இந்த சாப்ட்டரை மட்டும் முடிச்சுட்டு வந்துடறேன்.

நீங்க படிங்கோ. நான் பேசாம படுத்துக்கறேன்

அடுத்த வாரத்திலிருந்து நான் எவ்வெரி டே ஈவினிங் சி.ஏ கிளாஸுக்கு போகனும். எக்ஸாம் தேதி வேற நெருங்கறது. ஆமாம் நீ உன் எக்ஸாமை எப்ப எழுதப் போற?” 

நான் நவம்பர் ல போய் எழுதலாம்னு இருக்கேன். எப்படியும் தீபாவளிக்கு ஊருக்கு போக தான் வேணும் அப்படியே பரீட்சையையும் முடிச்சிட்டு வரலாம்னு இருக்கேன் என்ன சொல்லறேங்கள்?”

நல்ல ஐடியாவா தான் இருக்கு ஆனா அதுக்கு இன்னும் ஏழு மாசம் இருக்கு அப்போ பார்த்துப்போம். நான் ஈவினிங் கிளாஸ் போகணும்னு சொன்னேனே அதுக்கு உன்னிடமிருந்து ஒரு ரியாக்ஷனும் காணமே!!

என்னன்னு ரியாக்ட் பண்ணனும். கிளாஸ் இருக்குன்னா போய் தான் ஆகனும். ஆமாம் எவ்வளவு நேரமாகும் கிளாஸ் முடியறத்துக்கு?”

ஆஃபீஸ் முடிச்சிட்டு ஒரு ஐந்து மணிக்கு ஆத்துக்கு வந்துட்டு ஃப்ரெஷ் ஆகிட்டு ஆறு மணிக்கு கிளம்பினேனா ஒன்பது மணிக்கு முடியும் ஸோ ஒரு ஒன்பதரை மணிக்கு வந்திடுவேன்

அப்போ நான் அதுவரை என் படிப்பை படிக்கறேன்

ஸோ எவ்விரிடே ஈவ்னிங் எக்செப்ட் சனி அன்ட் ஞாயிறு சிக்ஸ் டூ நைன் படிப்புக்காக என்று வைத்திடுவோம்.

அப்படியே ஆகட்டும் மை லார்ட். பேசிண்டே இருக்கேங்களே!!! சீக்கிரம் படிச்சு முடிங்கோ

இதோ முடிச்சிட்டேன். ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்….ஆச்சு

ஓ டைம் ஒன்னாக போறது!! நீங்க படிங்கோ என்னால முடிஞ்சத நான் சமைக்கப் பார்க்கறேன். இப்போ அவ்வளவா வலியில்லை அன்ட் புண்களும் நல்லா ஆறியிருக்கு.

என்ன சமைக்கப் போற…அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்‌. நீ ரெஸ்ட் ரூம் போயிட்டு ஃப்ரெஷாகிட்டு வா நாம சாப்பிடலாம்.

என்ன இன்னைக்கும் டாபாலேருந்து வாங்கிண்டு வந்திருக்கேளா என்ன?”

நீ ரெஸ்ட் ரூம் போயிட்டு வா. உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு

மிருதுளா வேகமாக ஃப்ரெஷாகி ஹாலுக்கு வந்தாள். தரையில் குக்கர், இரண்டு சிப்ஸ் பாக்கெட், தயிர் டப்பா, பிரியா ஊறுகாய் பாட்டில், மூடியிட்டு ஒரு பாத்திரத்தில் தால், இரண்டு தட்டு எல்லாமிருந்தது.  அதைப்பார்த்த மிருது….

ஹேய் நவீ என்னது இதெல்லாம்!!! எப்படி !!! எனக்கு குக்கர் விசில் சத்தம் கூட கேட்கலையா இல்லை கேட்காத அளவுக்கு கும்பகர்ணி மாதிரி தூங்கிருக்கேனா?” 

எல்லாம் நீ சாப்பிட்ட மாத்திரையின் எஃபெக்ட் தான் நீ தூங்கினது. நான் அடுப்படி கதவை சாத்திண்டு இதெல்லாம் செய்தேன். எப்படி இருக்குன்னுட்டு நீ தான் சாப்பிட்டு சொல்லனும்

ஸோ நைஸ் ஆஃப் யூ கணவா. சரி வாங்கோ சாப்பிடலாம்.

இருவரும் சாப்பிட அமர்ந்தனர். சாப்பாட்டை ஒரு வாய் சாப்பிட்டு மிருதுளா…

ஆஹா !!!ஆஹா!!! சூப்பரா இருக்கு இந்த தால் அன்ட் ரைஸ் வித் ஊறுகாய் அன்ட் சிப்ஸ். கலக்கிட்டேங்கள் போங்கோ. சமைக்க தெரியாதுன்னுட்டு சூப்பரா சமச்சிருக்கேங்கள்!!!! இந்த… நல்லா படிக்கற பசங்கள் பரீட்சைக்கு முன்னாடி படிக்கவே இல்லைன்னு சொல்லுவாஆனா ஃபுல் மார்க் வாங்குவாளே அதே மாதிரி இருக்கு நீங்க அன்னைக்கு சொன்னதும் இன்னைக்கு ரிசல்ட்டும்

அட ஆமாம் நல்லா தான் செஞ்சிருக்கேன்!!! நீ சும்மா சொல்லறயோன்னு நினைச்சேன். பரவாயில்லை சாப்பிடற மாதிரி இருக்கு. மிருது நான் பாஸ் ஆயிட்டேன்

என்று இருவருமாக உணவருந்தியப்  பாத்திரங்களை எல்லாம் உள்ளே எடுத்து வைத்து விட்டு அந்த இடத்தை சுத்தம் செய்தார்கள். பின் மிருதுளாவின் மாத்திரைகளை கொடுத்து சாபப்பிடச் சொன்னான் நவீன்…

அச்சோ இந்த மாத்திரைகளைப் போட்டாலே தூக்கம் வந்திடுமே…கொஞ்சம் நேரம் கழிச்சு போட்டுக்கறேனே

இல்லை இல்லை சாப்பிட்டதும் போடனும்னு டாக்டர் சொல்லிருக்கா. ஒழுங்கா நீ மாத்திரைகளை சாப்பிட்டதால்தான் புண்ணெல்லாம் இவ்வளவு சீக்கிரம் ஆறியிருக்கு. இந்தா புடி சாப்டு

இன்னும் எவ்வளவு நாள் சாப்பிடனும் இந்த மாத்திரைகளை?”

நாளையோட முடிஞ்சிடும் அவ்வளவு தான்

அப்பாடா இன்னும் நாலு தடவ சாப்பிட்டா போதும்

பின்பு அவர்கள் வாழ்க்கை, படிப்புப் பற்றி 

பேசிக்கொண்டிருக்கையில் மிருதுளா மனதில் நவீன் அவன் சித்தப்பாவிடம் பணம் கேட்டு வாங்கியது ரியாலிட்டி ஷோ போல ஓட அதை அவனிடம் கேட்கலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருந்தவளைப் பார்த்து நவீன்…..

என்ன மிருது என்ன பலத்த யோசனைல இருக்க!! என்ன ஆச்சு” 

ஆங்…..ஆமாம் என் மனசுல நிறைய விஷயங்கள் உங்ககிட்ட கேட்கறதுக்கு இருக்கு அதில் முந்தாநாள் நடந்ததைப் பற்றி கேட்கலாமா!!

கேளு அதுக்கு ஏன் இவ்வளவு தயக்கம்?”

நீங்க தான் மாசம் பன்னிரெண்டாயிரம் சம்பாதிக்கறேங்களே அப்புறம் ஏன் உங்க சித்தப்பாக்கிட்ட பணம் கேட்டு வாங்கினேங்கள்? உங்கள்ட்ட பணமில்லையா?”

என்னது பன்னிரெண்டாயிரமா!!!! சரியா போச்சுப்போ

ஏன் அப்படி சொல்லறேங்கள்?”

உனக்கு யாரு நான் பன்னிரெண்டாயிரம் சம்பளம் வாங்கறேன்னு சொன்னது?”

உங்க அப்பா அம்மா தான் என் பேரன்ட்ஸ் கேட்டதுக்கு …பிடிப்பெல்லாம் போக கையில் பன்னிரெண்டாயிரம் வாங்கறான்னு சொன்னா …நானும் அதைக் கேட்டேன்…ஏன் அதுக்கென்ன இப்போ?”

இங்க பாரு மிருது என் அப்பா ஏன் அப்படி சொன்னானு எனக்குத் தெரியலை. உனக்கு தெரிஞ்சிண்டிருக்கனும்ன்னா நீ டைரெக்டா என்னிடம் கேட்டிருக்கனும்

சரி இப்போதாவது சொல்லுங்கோ…டைரெக்டா கேட்கறேன்…உங்கள் சம்பளம் எவ்வளவு?”

எனக்கு வீடு + கேன்டீன் சலுகை அது இல்லாம கிராஜுட்டி, பிஎஃப், எல்லா பிடிப்பும் போக பாங்கில் விழும் மாத சம்பளம் ஆறாயிரம் ரூபாய்.” 

என்னது!!!! இதை உங்க பேரன்ட்ஸ் எங்ககிட்ட டபுளாக சொல்லிருக்கா!!!!! அவாகிட்ட நீங்க வாங்கற சம்பளத்தை சரியா சொல்லலையா!

என் சம்பள விவரமெல்லாம் புள்ளிவிவரமாக அவாளுக்கு நல்லாவே தெரியும் ஆனாலும் ஏன் அப்படி சொல்லிருக்காங்கறது தான் தெரியலை

என்னவாயிருக்கும் ??? ஒருவேளை அவா நினைத்திருக்கலாம் ….எங்கடா ஆறாயிரம்ன்னு சொன்னா பொண்ணு தரமாட்டாளோன்னு அதனால பொய் சொல்லிருப்பான்னு நினைக்கறேன்!!!! சரி இப்போ உண்மை தெரிஞ்சுடுத்தே இப்போ நான் விட்டுப்போனா என்ன பண்ணுவா!!!

இங்க பாரு மிருது நான் உன்ட்ட சொல்லலை. அவா சொன்னதுக்காக என்னை விட்டுட்டு போவியா?”

கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாத்துக்கும் உங்க கிட்ட கேட்க முடியாது நவீ அதை நீங்க புரிஞ்சுக்கனும். உங்க பேரன்ட்ஸ் சொல்லறத தானே நாங்க நம்ப முடியும்…பிரேஸ்லெட் விஷயத்திலயும் இதே தான் நடந்தது. அவா ஒன்னு சொல்லிருக்கா ஆனா நீங்க ஒன்னு சொல்லறேங்கள்….பத்தாயிரம் நீங்க கேட்டதா சொல்லி தான் வாங்கினா ஆனா நீங்க கேட்கவேயில்லைன்னு சொல்லறேங்கள்… முன்னுக்கு பின் முரணாக இருக்கு அவா சொன்னதும் நீங்க சொல்றதும். எனக்கு ஒரே கன்ஃபூஷனா இருக்கு

அதுதான் நான் இப்போ சொல்லிட்டேனே இன்னமும் ஏன் குழப்பம்?”

சரி அத விடுங்கோ நீங்க ஏன் சித்தப்பாட்ட பணம் வாங்கினேங்கள் உங்கள் பணமெல்லாம் என்ன ஆச்சு??”

நான் சித்தப்பாட்ட ஒரு பாலிசி போட்டிருந்தேன் அது மெச்சூர்ட் ஆகி ஒரு மாசம் ஆச்சு ஆனா பணம் வரலை அதைத்தான் சித்தப்பா தன் கையிலிருந்து என்னிடம் கொடுத்துட்டு வரதை தான் எடுத்துக்கறதுக்காக ஃபார்ம்ல கையெழுத்து வாங்கிண்டார்

ஓ!! சாரி நான் தான் நீங்க அவர்கிட்டயும் பணம் கடனாகவோ இல்லை செலவுக்கு கேட்டு வாங்கவோ செய்யறேங்கள்ன்னு தப்பா நினைச்சுட்டேன்

நீ நினைச்சதுல பாதி கரெக்ட் தான்…அதாவது என் செலவுக்காக தான் நான் அவசரமாக அவர்கிட்ட இருந்து வாங்கினேன். ஆனா அது என் பணம் நான் கடனெல்லாம் வாங்கலை..புரியறதா?”

ஏன்? அந்த பணம் வந்தா தான் உங்களிடம் செலவுக்கு பணமிருக்கா என்ன!!! வேற பணம் ஏதும் இல்லையா!!! நீங்க தான் பதினாறு வயசுலேயே வேலை ல சேர்ந்தாச்சுன்னு சொன்னாலே…. பதினோரு வருஷம் சம்பாதிச்சதுல ஒரு ஐந்தாயிரம் கூடவா இல்லை

உண்மைய சொல்லனும்னா ….இல்லை மிருதுளா…என் அக்கௌன்ட் ல வெரும் நூறு ரூபாய் தான் இருக்கு.

என்ன சொல்லறேங்கள்

எஸ்….நான் பதினோரு வருடம் சம்பாதிச்சதில் படிச்சேன், என் குடும்பத்துக்கு கொடுத்தேன், மூன்று தம்பிகளை படிக்க வைத்தேன், வீடு வாங்கினேன், பைக் நம்ம நிச்சயத்துக்கு அப்புறம் தான் வாங்கினேன் அதோட ஈ.எம்.ஐ இன்னும் போயிட்டிருக்கு, நம்ம கல்யாணத்துக்கு ஐம்பதாயிரம் எங்க பேரன்ட்ஸ்ட்ட கொடுத்தேன் அது தவிர எப்படியும் இன்னும் ஒரு இருபதாயிரம் செலவாகியிருக்கு …. இது எல்லா செலவுகளும் போக நூறு தான் பாக்கி

அப்போ என்னை கல்யாணம் பண்ணிண்டு வரும் போது உங்க கையிருப்பு நூறு ரூபாய் தானா!!!

என்ன லட்சாதிபதியா இருப்பேன்னு நினைச்சயோ!!

லட்சாதிபதியா இருப்பேங்கள்ன்னும் நினைக்கலை இப்படி பிட்சாதிபதியா இருப்பேங்கள்ன்னும் நினைக்கலை

என்ன இப்படி எல்லாம் பேசற” 

பின்ன நீங்க அப்படி கேட்டா நானும் இப்படி தான் பதில் சொல்ல முடியும். உங்களை கல்யாணம் பண்ணி ஒரு மாதம் ஆயாச்சு என்னைக்காவது பணம் பற்றி பேசிருக்கேனாஇப்படி ஷாக் மேலே ஷாக்கா அடிச்சா வேற எப்படி பேசறது நவீ? இன்னும் என்னென்ன பொய்களோ!!! எத்தனைப் பொய்களோ!!! அந்த பகவதி தான் எனக்கு மனதைரியத்தைக் குடுக்கனும்

நவீன் சட்டென்று எழுந்து சட்டையை மாட்டிக்கொண்டு வெளியேச் சென்றான். மிருதுளாவும் சென்றுப் பார்த்தாள் அவன் தெரு முனையை கடப்பதைப் பார்த்துவிட்டு கதவடைத்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் முத்துக்கள் உருண்டோடின….உடல் வலிகள் ஒரு பக்கமிருக்க …ஏமாந்தது ஒரு வலி, கையில் பணமேயில்லாமல் வாழ்க்கை துவங்கியிருப்பது எதிர்காலத்தை இருட்டாக காட்டியதில் பெரும் வலியாக உருவெடுத்தது அவளது உள்ளத்தில். அவள் மனம் குழப்பத்தில் இருந்ததால் மாத்திரை உண்டும் உறக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.  

ஈஸ்வரன் பர்வதம் போட்ட முடிச்சுகள் பல 

அதில் இரண்டு அவிழ்ந்தாலும் பிரச்சினை பெரிதாகவில்லை

பிரேஸ்லெட் எனும் முதல் முடிச்சு அவிழ்ந்ததும்

நவீன் மனவருத்தமடைந்ததை உணர்ந்த மிருதுளா அவன் மீது வைத்த நம்பிக்கை அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

ரூபாய் பத்தாயிரம் எனும் இரண்டாம் முடிச்சு அவிழ்ந்ததும்

நவீன் தனது பெற்றோர்கள் இப்படி தனக்கே தெரியாமல் செய்திருக்கிறார்களே என்று வருந்த அதைப்பார்த்த மிருதுளா ரூபாய் பத்தாயிரத்தோட போச்சே என்று விட்ட பெருமூச்சில் அதுவும் காற்றோடு கறைந்து போனது.

ஆனால் இந்த மூன்றாவது முடிச்சான சம்பளம் எனும் பொய் முடிச்சவிழ்ந்ததில் இருவருமே குழம்பிப்போனார்கள். குழப்பத்திலிருந்தால் பேச்சைத் தவிர்த்தல் அல்லது சற்று நிதானமாகிக்கொண்டு பேசுவது சிறந்தது என்பதை நவீனும் மிருதுளாவும் மறந்திட பேச்சு முற்றி இறுதியில் மூத்த தம்பதியின் திட்டமே நடந்தேறியது. 

மிருதுளா சொன்ன மாதிரி பொண்ணு கொடுக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் சம்பளத்தை தவறாக ஈஸ்வரனும், பர்வதமும் சொல்லவில்லை வேண்டுமென்றே தான் பொய் சொல்லியிருக்கவேண்டும்…‌ஏனெனில் சம்பளம் பற்றிய பேச்சு வார்த்தை நிச்சயதார்த்தம் முடிந்து திருமண நாளுக்கு முஹூர்த்த பட்டுப்புடவை எடுக்க போனபோதுதான் ஹோட்டலில் வைத்து மிருதுளாவின் பெற்றோர்கள் கேட்டுள்ளனர்…. மேலும் மிருதுளா நவீன் திருமணத்தில் பர்வதத்துக்கும் ஈஸ்வரனுக்கும் துளிக்கூட இஷ்ட்டமில்லை என்பது நவீனிடம் மிருதுளாவை தவிர்க்க சொன்னதிலிருந்தே புரிகிறதே அப்படிப்பட்ட எண்ணமுடையவர் நிச்சயமாக சம்பளத்தைக் குறைத்துச் சொல்லி தடுக்க நினைத்திருப்பார்களே தவிர அதிகமாக சொல்லியிருக்க மாட்டார்கள். 

எப்படியோ திருமணம் வரை வந்துவிட்டதால் மிருதுளாவை தங்களுடனே வைத்துக்கொண்டு சில பல சகுனி, கூனி வேலைகளை செய்து அவர்களை சந்தோஷமாக வாழ விடாமல் பிரிக்க திட்டமிட்டிருந்ததாலும்…..அதையும் மீறி ஏதாவது நல்லது நடந்துவிட்டால் இது போல சில பொய்களாவது நிம்மதியைக் குலைக்கட்டும் என்றெண்ணி அவர்கள் பத்த வைத்த பல ஓல வெடிகளில் ஒன்று அவர்கள் நினைத்தது போலவே இன்று வெடித்துள்ளது. 

இந்த வெடி புஸ்ஸாக போகிறதா இல்லை வெடித்து சிதறப்போகிறா

தொடரும்.‌…….

பைக் வாங்கிய நாள்முதல் அவ்வளவு மெதுவாக நவீன் என்றுமே ஓட்டியதில்லை. முன்தினம் நடந்த விபத்து அவனை எச்சரிக்கையுடன் வண்டியை ஓட்ட வைத்தது. பத்திரமாக வீடு வந்து சேர்ந்தனர். மிருதுளா வண்டியிலிருந்து இறங்க மிகவும் கஷ்டப்படுவதைப்பார்த்த நவீன் அவளை அப்படியே உட்காரச் சொல்லிவிட்டு தான் முதலில் இறங்கி பின் ஒரு கையில் பைக்கைப் பிடித்துக்கொண்டு மறுகையை மிருதுளாவிடம் நீட்டினான். எப்படியோ சமாளித்து கொண்டு இறங்கினாள் ஆனால் வலியில் சற்று துடித்தாள். நவீன் பைக்கை நிறுத்திவிட்டு வீட்டின் கதவை திறந்து இருவருமாக உள்ளேச் சென்றனர். அப்போது தான் மிருதுளாவுக்கு ஞாபகம் வந்தது….

நவீ இன்னைக்கு நீங்க ஆஃபீஸ் ஜாயின் பண்ணனும்ன்னு சொல்லியிருந்தேங்கள். போக வேண்டாமா? இப்பவே பதினொரு மணி ஆச்சே!!! நீங்க போய் கிளம்பிக்கோங்கோ. நான் பார்த்துக்கொள்கிறேன்

என்ன விளையாடறயா!!! உன்ன இப்படி விட்டுட்டு நான் எப்படி போவேன்? ஒன்னுப் பண்ணறேன் பக்கத்து வீட்டு லதா அக்கா கிட்ட உன்னை பார்த்துக்க சொல்லிவிட்டு நான் ஆஃபிஸ் போய் ஒரு வாரம் லீவ் அப்பளைப் பண்ணிட்டு அப்படியே நமக்கு லஞ்ச் வாங்கிண்டு வரேன்

லதா அக்கவ எல்லாம் ஏன் தொந்தரவு செய்யணும்..பேசாம நீங்க போயிட்டு வாங்கோ நான் அது வரை தூங்கறேன். காலை ல போட்ட மாத்திரையால தூக்கம் தூக்கமா வருது. கதவைப்பூட்டி சாவியை எடுத்துண்டு போங்கோ

ஆர் யூ ஷுவர்? நான் போயிட்டு வர எப்படியும் ஒரு மூணு மணி நேரமாகும் பரவாயில்லையா!!! இருந்துப்பியா?”

நான் இருந்துப்பேன் நீங்க போயிட்டு வாங்கோ.

நவீன் குளித்துவிட்டு தனது யூனிஃபார்மை போட்டுக்கொண்டு கிளம்புவதற்குள் மிருதுளா உறங்கிப் போனாள். அவளைத் தொந்தரவு செய்யாமல் அங்கிருந்து நகர்ந்து மெதுவாக கதவைப்பூட்டி ஆபீஸுக்கு சென்றான். அவன் உடல் தான் அலுவலகத்தில் இருந்தது அவனது உள்ளம் வீட்டில் மிருதுளா என்னச் செய்வாள் தனியாக அதுவும் இந்த நேரத்தில் விட்டுவிட்டு வரவேண்டியது ஆயிற்றே என்று தவித்துக்கொண்டே இருந்தது. வேக வேகமாக லீவ் லெட்டர் எழுதி அதை தனது மேல் அதிகாரியிடம் கொடுத்துவிட்டு அவரது பதிலுக்காக டென்ஷனுடன் அவனது இருக்கையில் அமர்ந்திருந்தான். நேரம் வேற கிடுகிடுவென ஓடிக்கொண்டிருந்ததில் அவனது இதயத்துடிப்பும் அதற்கு போட்டிப்போட்டு துடித்துக்கொண்டிருக்க…அவனது அலுவலக நண்பர்கள் அவனைப்பார்த்து..‌

என்ன நவீன் மறுபடியும் லீவ் அப்ளை பண்ணிருக்க !!! என்ன புது மனைவியை விட்டு வர மனசு வரலையா?” என்று ஒருவர் கேட்க அதற்கு கல்யாணமாகாத மற்றொரு நண்பர்

ஓ!!! அப்போ நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா ஆஃபிஸுக்கே வரமாட்டேனே!என்று கூற அதற்கு பல்பீர் சிங்

ஆமாம் ஆமாம் எல்லாம் ஆரம்பத்துல அப்படி தான் இருக்கும்….ஒரு இரண்டு வருஷம் போட்டும் வீட்டை விட ஆஃபிஸ் சொர்கமா தெரியும்என்று பதிலளிக்க அதைக்கேட்ட மற்றொருவர்

என்ன பல்பீர் சார் உங்க வைஃப் கிட்ட இதை சொல்லட்டுமாஎன நக்கலடிக்க

ஏன் உனக்கு அந்த தேவையில்லாத வேலை. அவன் அவன் குடும்பத்தப் பாருங்கப்பாஎன பல்பீர் கூறிக்கொண்டிருக்கையில் அவர்களின் மேலதிகாரி வர அனைவரும் எழுந்து சல்யூட் செய்ய அவர் நேராக நவீனிடம் வந்து..

இதை நீ ஃபோனில் சொல்லியிருந்தாலே லீவ் கொடுத்திருப்பேனே எதற்காக உன் மனைவியை விட்டுவிட்டு வந்தாய். சாரி நான் மற்ற வேலைகளில் மும்முரமாக இருந்ததால் இப்போது தான் உன் லீவ் லெட்டரைப்பார்த்தேன். சரி நீ இப்போதே கிளம்பலாம். உன் லீவை அப்ரூவ் பண்ணிட்டேன். சென்று உன் மனைவியை நல்லா பார்த்துக்கோ. ஏதாவது உதவி வேணும்னா ஒரு ஃபோன் போடு ஓகே.” 

அவர் இதைக்கூறிவிட்டு அவர் அறைக்குள் சென்றதும் நவீனின் நண்பர்கள் அவனை சூழ்ந்துக்கொண்டனர். என்ன ஆச்சு ஏதாச்சு என விசாரித்தனர். நவீனும் நடந்தவற்றைக்கூறினான். அனைவரும் அவனை உடனே வீட்டுக்கு செல்லும்படி கூறினர். என்ன உதவி வேண்டுமானாலும் நண்பர்கள் இருக்கிறோம் என்று நம்பிக்கை கொடுத்து நவீனை அனுப்பி வைத்தனர். நவீன் நேராக அவர்கள் குவார்ட்ஸுக்குள் இருக்கும் ரோஹித் டாபா சென்று இரண்டு சாப்பாடு பார்சல் செய்ய ஆர்டர் கொடுத்துவிட்டு நின்றுக்கொண்டிருக்கையில் அவனுக்கு மிருதுளாவுடன் முன்தினம் காலைப் பேசியது கண்முன் திரைப்படம் போல் ஓடியது…. அவளுக்கு உடம்பு சரியில்லாமல் போனால்  என்று அவள் கூறியதும், தனக்கு சமைக்க தெரியாது என்பதும்,   ரோஹித் டாபாவிலிருந்து வாங்கி வருவதாக சொன்னதும்… அவளுக்கு ஏன் உடம்பு சரியில்லாமல் போகும் என்று கேட்டு பேச்சை திசைத்திருப்பியதும்… அதேபோல ஆகிவிட்டதே என்றெண்ணிக்கொண்டிருக்கையில்….சட்டென்று   

டாபாவில் வேலை செய்யும் பப்பு… அவனுக்கு மட்டுமே  ஓடிக்கொண்டிருந்த படத்திரை முன் வந்து நின்று…

சாப் !!!சாப்!!! நவீன் சாப் ஆப்கா பார்சல்

என கூற திரையிலிருந்து கண்களை அகற்றி பப்புவிடம் பணத்தைக்கொடுத்து விட்டு அங்கிருந்து வேகமாக வீட்டுக்கு வந்து கதவைத்திறந்துப்பார்த்தான்மிருதுளா நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். நவீன் தனது உடைகளை மாற்றிவிட்டு முகம் கை கால் அலம்பி விட்டு மிருதுளாவை எழுப்பலாமா வேண்டாமா என அவளைப்பார்த்துக்கொண்டே யோசித்தான்…. காலை ஒன்பது மணிக்கு சாப்பிட்டது அதுவும் ஒரே ஒரு சப்பாத்தி இப்போ மணி மூணு ஆகப்போகிறது என தனக்குத்தானே பேசிக்கொண்டிருக்கையில்…. முனகிக்கொண்டே எழுந்தாள் மிருதுளா. 

ரொம்ப வலிக்கறது. ஓ !!! வந்துட்டேளா!!! டைம் என்ன ஆகறது? எனக்கு ரொம்ப பசிக்கறதுஎன்றாள் 

இதோ டாபாவிலிருந்து ரொட்டி சப்ஜீ, தால் அன்ட் ரைஸ் வாங்கிண்டு வந்திருக்கேன் வா சாப்பிடலாம்என நவீன் கூப்பிட

இருங்கோ ரெஸ்ட்ரூம் போயிட்டு வரேன்

நான் வரட்டுமா ஹெல்ப் பண்ண?”

இல்லை நான் பார்த்துக்கறேன்

பின் இருவரும் உணவருந்த அமர்ந்தனர். அப்போது மிருதுளா சாப்பிட சிரமப் படுவதைப் பார்த்த நவீன் …

ஓ!!! இதனால தான் காலை ல ஒரே ஒரு சப்பாத்தியோட எழுந்துட்டயா!!!! விடு விடு நீ கையை எடு  நான் ஊட்டி விடறேன் நீ சாப்பிடு….என்று ஊட்ட

எனக்கு ரொட்டி போதும் ஹார்டாஆ இருக்கு

அப்போ இந்த தால் ரைஸ் சாப்பிடுஎன்று சாதத்தை ஊட்டிவிட்டான். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது…

ஏய் மிருது ஏன் கண் ல இருந்து கண்ணீர் வருது …ரொம்ப காரமா என்ன!!! இல்ல அழுவறையா? என்ன ஆச்சு

எனக்கு உடம்பு முடியாமல் போனபோதெல்லாம் என் அம்மா தான் சாப்பாடு ஊட்டிவிட்டிருக்கா அதுக்கப்புறம் நீங்க தான் ஊட்டி விடுறேங்கள்… அதனால ஏதோ உள்ள பண்ணித்து கண்ணுல இருந்து கண்ணீர் தானா வருது.

சாப்பாடு தான் காரமோன்னு நினைச்சுட்டேன்…இதுக்கெல்லாமா கண்ணுலேருந்து தண்ணீ வரும்

சரி எனக்கு ஊட்டின்டே இருக்கேங்களே உங்களுக்கு பசிக்கலையா!!! நீங்களும் சாப்பிடுங்கோ. இந்த காயமெல்லாம் எப்போதான் ஆறுமோன்னு இருக்கு. சரி உங்களுக்கு லீவு கிடைச்சுதா? எனக்கு போதும் பா நீங்க சாப்பிட ஆரமிங்கோ

போதுமா !!! ஓகே இதோ நானும் சாப்பிடறேன். எஸ்… எஸ் ….ஒரு வாரம் லீவு கிடைச்சிடுத்து.

வாவ் சூப்பர்..‌ஆனா நான் இப்படி காயங்களோட இருக்கேனே!!!

ஹலோ மேடம்!!! அதனால தான் லீவே குடுத்திருக்கா…சரி நீ மத்தியானம் சாப்பிட வேண்டிய மாத்திரை மருந்தெல்லாம் அங்க இருக்கு எடுத்து சாப்பிடு நான் இதை எல்லாம் குப்பை ல போட்டுட்டு இந்த இடத்தையும் தொடச்சுட்டு வரேன்

என்று கூறி வேலையில் மும்மரமானான் நவீன். மிருதுளா அவன் வேலை செய்வதைப்பார்த்து ….

சாரி என்னால உங்களுக்கு ஹெல்ப் எதுவும் பண்ண முடியலை

மேடம் அன்னைக்கே சொன்னேன் நமக்குள் நோ சாரி அன்ட் நோ தாங்க்ஸ் ன்னுட்டு….என்ன மறந்துப்போச்சா?”

ஓகே சார் ஓகே டன்

நவீனைப் பார்த்துக்கொண்டே மிருதுளா மனதில் …

பேச்சில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் பர்வதத்தின் மகனா இவன்!!!!என்று எண்ணியதில்… ஆச்சர்யம் அவளைத் தொற்றிக்கொண்டது.

மாலை காபி வைத்துக்கொடுத்து பரீட்சை எழுதி மதிபெண்களுக்காக காத்திருக்கும்  மாணவனைப் போல மிருதுளாவையேப் பார்த்துக்கொண்டிருந்தான் நவீன். அதை உணர்ந்த மிருதுளா….

என்ன ரிசல்ட்டுக்கு வேயிட்டிங்கா?” 

எஸ்…ஏன் அப்படி கேட்கிற?”

ஏன்னா எனக்கு அதோட அருமைப் புரியுமே, தெரியுமே அதனால தான் அப்படிக்கேட்டேன்

சரி எல்லாம் புரிஞ்சும் தெரிஞ்சும் என்ன பிரயோஜனம் ரிசல்ட் இன்னும் ரிலீஸ் ஆகலையே!!!

இந்தாங்கோ என் கப்

என்ன ஒன்னுமே சொல்லாம கப்பை கொடுத்துட்ட!!!

அச்சோ!!! அச்சோ!!! கப்பை பாருங்கோ அதுல காபி துளிக்கூட மீதி இல்லை. இதிலிருந்தே உங்களுக்கு தெரியலையா!!” 

என்ன தெரியணும் !!!! எதுவாக இருந்தாலும் நேரா சொல்லு எனக்கு ஒன்னும் புரியலை

கப்பில் ஒரு துளிக்கூட காபி மீதமில்லைன்னா அது சூப்பர்ன்னு அர்த்தம். நீங்க சூப்பரா காபி வைக்கிறேங்கள் ன்னு அர்த்தம். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு அர்த்தம்.

இப்படி சொல்லனுமே அப்போ தானே எனக்கு புரியும். காலி கப்பை கையில் கொடுத்துட்டு புரியலையான்னு கேட்டா எப்படி?? நான் எப்படி சன்டே நீ செய்த பொங்கலை சாப்பிட்டுட்டு சூப்பர்ன்னு சொன்னேன் !!! நானும் ஒன்னும் சொல்லாம காலி தட்டை நீட்டிட்டு பேசாம போயிருக்கனும் அப்போ தெரிஞ்சிண்டிருப்பயாக்கும்

ஓகே சார் இனி ரெண்டு பேருமே ஓப்பனா இருவருக்குமே புரியுறமாதிரி பாராட்டிக்குவோம் சரியா. என் நவீ போட்ட காபி சூப்பரோ சூப்பர்

ஆங் அது!!என்று நவீன் சொன்னதும் இருவருமாக சிரித்துக்கொண்டனர்.

நைட்டுக்கும் டாபாலேர்ந்தா வாங்கப் போறேங்கள்?”

ஆமாம். வேற என்னப் பண்ணுவேன். இன்னைக்கு மட்டும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ நாளை முதல் என் சமையல்

உங்களுக்கு சமைக்கத் தெரியாதுன்னு சொன்னேங்கள்!” 

தெரியாது தான். நீ சொல்லித்தா செய்யறேன்.” 

ஓகே டன் நாளைமுதல் இருவருமாக சமையல் பாடம் கத்துக்குவோம்

ஏன் !!!!நீ தான் நல்லா சமைக்கிறயே

உண்மைச் சொல்லனும்ன்னா நான் கல்யாணத்துக்கு முன்னாடி சமைச்சதே கிடையாது. தோசை, இட்டிலி சுடுவேன் அன்ட் தேங்கா சட்னி பண்ணிருக்கேன் அவ்வளவு தான்

அப்போ எப்படி கிச்சடி, பொங்கல், கேசரி எல்லாம் செஞ்ச? அதுவும் அவ்வளவு ருசியா

என் அம்மா செய்யறத பார்த்திருக்கேன் என்னவெல்லாம் போடணும்ன்னு தெரியும் அதனால செய்தேன். செய்ய தொடங்கறத்துக்கு முன்னாடி கடவுளிடம் வேண்டிப்பேன் …நான் செய்யறது நல்லப்படியா வரணுமே!!! என் சாப்பாட்டை சாப்பிடறவாளுக்கு அது பிடிக்கணுமே!!  ன்னு ஒரு ரிக்குவெஸ்ட் போட்டுட்டு செய்தேன் நல்லாவும் வந்தது.

ஓகே !!!!ஓகே!!! நாளைக்கு நானும் கடவுளிடம் ….நான் செய்யறது சாப்பிடறமாதிரி இருக்கனுமே…என் மிருதுவுக்குப் பிடிக்கணுமே ன்னு ஒரு ரிக்வெஸ்ட் அன்ட் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிச்சுட்டா போச்சு

அன்றிரவு உணவையும் டாபாவிலிருந்து வாங்கி வந்து இருவரும் அருந்தியப்பின் மிருதுளாவின் காயங்களுக்கு மருந்து தடவி விட்டு அவள் சாப்பிட வேண்டிய மாத்திரைகளை எடுத்துக்கொடுத்துவிட்டு படுக்கையின் நடுவில் ஒரு தலையணையை வைத்து மிருதுளாவைப் படுக்கச் சொன்னான் நவீன் …அதைப்பார்த்த மிருதுளா…

ஏன் நடுவில் புதிதாக தலையணைஎன அரை மயக்கத்தில் கேட்டாள்.

தூங்கும் போது தெரியாமல் உன் மீது  கால் ஆர் கையைப் போட்டுட்டேன்னா…உன் காயங்களில் பட்டு உனக்கு வலிக்குமே அதனால் தான் நடுவில் தலையணையை வைத்தேன்

ஸோ நைஸ் ஆஃப் யூர் மை புருஷா. குட் நைட்

குட் நைட் மிருது. ஐ லவ் யூ. நல்லா தூங்கி ரெஸ்ட் எடுஎன்று கூறிக்கொண்டே பார்த்தான் அவள் உறங்கியிருந்தாள்.

ஒருவரையொருவர் பரஸ்பரம் புரிந்துக்கொள்வதற்கு சந்தர்பங்களும் சூழ்நிலைகளும் மிக முக்கியமான இடம் வகிக்கிறது. அவை சரியாக அமைவதிலும், அவற்றை சரியாக உபயோகித்து புரிய வைப்பதிலும், புரிந்துக்கொள்வதிலும் தான் தம்பதிகளின் வாழ்க்கை அழகானதாகவும், ஆழமானதாகவும் உருவெடுத்து அவர்களின் உறவை பல ஆண்டுகளுக்கு அர்த்தமுள்ளதாக உயிர்ப்பித்திருக்க செய்கிறது. 

இந்த பைக் விபத்தும் நவீன் மிருதுளா ஆகிய இருவரின் புரிதலுக்கான வித்தாக தான் கடவுள் அமைத்திருக்க வேண்டும். இந்த சூழ்நிலை அவர்களுக்கு  நல்ல சந்தர்ப்பமாக அமைந்து அவர்களுக்குள் இருக்கும் அக்கறை, அன்பு, பாசம், அனுசரணை போன்ற குணாதிசயங்களை இருவருக்கும் புரியவைக்கப் போகிறதா? அவர்கள் அதை புரிந்துக் கொள்வார்களா

திருமண வாழ்க்கை என்ற செடியை,

அக்கறை, அன்பு, பாசம் எனும் வளமான மண்ணும், சூரிய ஒளியும், நீரும்,

கொண்டு பேணிக்காத்தால்,

காதல் எனும் அழகிய மலர் மலர்ந்திடாதா என்ன?

அதில் புரிதல் எனும் மதுரசம் தான் வழிந்திடாதா!

அந்த மதுரசத்தைப் பருகி இன்பம் எனும் வண்டுகள் தான் ஆடி களித்திடாதா!!!

தொடரும்…..

மிருதுளா முதல் முறையாக புடவைக்கட்டிக்கொண்டு பைக்கில் சென்றாள். அவள் புடவை தலைப்பை சரியாக பிடித்துக்கொள்ள முடியாமல் பிடித்துக்கொண்டதில் புடவைத் தலைப்பு  அதுவும் புது பட்டுப்புடவை வழ வழவென இருந்ததில் அவள் கையிலிருந்து நழுவியதை உணர்ந்ததும் சட்டென அதை பிடித்து வைக்க முற்பட்டு பைக்கிலிருந்து வழுக்கி கீழே விழுந்தாள். அவள் விழுந்ததும் புடவை தலைப்பின் குஞ்சம் ஃபுட் ஸ்டான்டில் மாட்டிக்கொண்டது. தன் மனைவி பின்னாடி வண்டியில் இருக்காளா இல்லையா என்று கூட கவனிக்காமல் நவீன் வண்டியை ஓட்ட பின்னால் ரோட்டில் ஃபுட் ஸ்டான்டில் மாட்டிக் கொண்டுள்ள புடவைத் தலைப்பை பிடித்துக்கொண்டுஐய்யோ அம்மா!!! மா!!! மா!!! நவீ!!! நவீ!!!! என்று கத்திக்கொண்டு சறுக்கிக்கொண்டே சென்றவளை ரோட்டோரம் இருந்தவர் பக்கத்து வண்டியில் பயணித்தவர்கள் என எல்லாரும் நவீனுக்கு கூச்சலிட்டு வண்டியை நிறுத்தச் சொல்ல 

ஏன் ரோட்டில் எல்லாரும் கையை காட்டி, நிறுத்தச்சொல்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டுவண்டியை நிறுத்தி திரும்பி பார்த்தான் மிருதுளா ரோட்டில் கிடந்தாள். ஓடிச்சென்றான் ….அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் அனைவரும் உதவ ஓடினார்கள். மிருதுளா கட்டியிருந்த ஆஃப் வைட் பட்டுப் புடவை முன்பக்கமாக ரோட்டில் உராய்ந்து கொண்டு வந்ததில் முழுவதும் ரத்தத்தால் சிவப்பு நிறமாக மாறியிருந்தது. மிருதுளாவை ஆட்டோவில் ஒரு பெண்மணியுடன் ஏற்றிவிட்டு அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி பின்னாலேயே பைக்கில் சென்றான் நவீன். அப்பொழுதும் பைக்கை விடவில்லை அவன். 

ஆஸ்பத்திரி சென்றடைந்ததும் உதவ வந்த பெண்மணி மிருதுளாவை தாங்கிப்பிடித்துக்கொண்டு உள்ளே அழைத்துச்சென்றாள். நவீன் பைக்கை ஸ்டான்டில் நிப்பாட்டி விட்டுதான் உள்ளே சென்றான். மிருதுளாவை ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்து டாக்டர் ரூமிற்குள் அழைத்து செல்வதைப்பார்த்து ஓடினான் வழியில் அவளுடன் வந்த பெண்மணியை நன்றி சொல்வதற்காக தேடினான் அவளை காணவில்லை. பின் டாக்டரிடம் போய் தான் யார் என்பதும் அட்மிட் ஆனவரின் பெயர் என்று சொல்ல முயன்றப்போது 

மிருதுளா உங்க மனைவியா?” என டாக்டர் கேட்க 

ஆமாம் டாக்டர்….மிருதுளா எப்படி இருக்கா டாக்டர்என்று கேட்டான் 

கொஞ்சம் வேயிட் பண்ணுங்க இப்போ தானே பேஷன்ட்டைப் பார்க்க போறேன்…நீங்க வெளியே இருங்க…நான் கூப்பிடும் போது வந்தா போதும்என டாக்டர் கூறியதும் 

ரூமுக்கு வெளியே நின்று உள்ளே என்ன செய்கிறார்கள் என தவித்துக்கொண்டிருந்தான் நவீன். சிறுது நேரத்தில் மிஸ்டர் நவீன் என்று டாக்டர் அழைக்க உள்ளே சென்று

என்ன ஆச்சு டாக்டர் அவ எப்படி இருக்கா?” 

இருங்க மிஸ்டர் நவீன். வண்டியிலிருந்து விழுந்து சுமார் ஒரு அரை கிலோமீட்டர் ரோட்டில் சறுக்கி வந்ததில் மார்பு, வயிறு, தொடை, கைகள், கால் முட்டி என எல்லா இடங்களிலும் அதிகமாக சிராய்ப்புகள் ஆகியிருக்கு மத்தபடி ஸ்கேன் அன்ட் எக்ஸ்ரே ரிப்போர்ட் வந்ததுக்கப்புறம் தான் உள்ள ஏதாவது பாதிப்பு இருக்காங்கறது தெரியும். ஒரு ஹாஃப் அன் ஆர் வேயிட் பண்ணுங்க தெரிஞ்சுடும். அவங்க காயங்களுக்கு மருந்து போட்டாச்சு, இன்ஜெக்ஷன் கொடுத்திருக்கோம், பேயின் கில்லரும் கொடுத்திருக்கோம் அதனால் டிரௌஸியா தான் இருப்பாங்க…. பின்னாடி வைஃப் இருக்காளா இல்லையான்னு கூட தெரியாமயா வண்டி ஓட்டு வீங்க? அது அவ்வளவு பிசியான ரோடு ….ஏதாவது வண்டி அவங்க மேல ஏறியிருந்தா என்னவாகியிருக்கும்? நல்ல வேளை இன்னிக்கு சன்டே. காட் ஈஸ் ரியலி கிரேட்.   நீங்க போய் அவங்களோட இருங்க ரிப்போர்ட் வந்ததும் கூப்பிடறேன்.

ஓகே டாக்டர். அவள் புடவைக்கட்டிக்கொண்டு பைக்கில் இன்றுதான் முதல் முறையாக பயணிக்கின்றாள். பட்டுப்புடவை வழுக்கி விட்டது என்று நினைக்கிறேன். ஷுவர் டாக்டர் இனி ஜாக்கிரதையாக இருக்கிறோம்.தாங்க் யூ டாக்டர்என்று கூறி அங்கிருந்து மிருதுளா இருந்த ரூமிற்குள் சென்றான். அழகாக பட்டுப்புடவையுடுத்தி கிளம்பிய தன் மனைவி உடம்பில் காயங்களுடன் படுத்துக்கிடப்பதைப்பார்த்து அதிர்ந்துப் போனான். 

மிருதுளா அரை மயக்கத்தில் மெல்ல கண்களைத் திறந்துப் பார்த்தாள். அவள் நகைகள் ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்து நவீனிடம் செய்கையில் கேட்க அவன் எல்லாம் பத்திரமாக தன்னிடம் இருப்பதாகவும் நிம்மதியாக உறங்கும்படி கூறினான். 

அன்று மிருதுளாவை ஆட்டோவில் கூட்டிவந்து ஆஸ்பத்திரியில் சேர்த்து சென்றவர் மிருதுளா வணங்கிய அந்த சமயபுரத்து அம்மனே என்றெண்ணி மனமுருகி நன்றிச்சொன்னாள் மிருதுளா. 

டாக்டர் நவீனை உள்ளே அழைத்தார். 

சொல்லுங்க டாக்டர்” 

எஸ் நவீன் எல்லா ரிப்போர்ட்ஸும் வந்தாச்சு அதை பார்க்கவும் செய்துட்டேன். நோ அதர் இஷூஸ். எவ்ரித்திங் இஸ் ஃபைன். அவங்க வயிற்றில் அதிகமாக சிராய்ப்புகள் இருந்ததனால் எனக்கு கொஞ்சம் கவலையாக இருந்தது‌ அது தான் ஸ்கேன் அன்ட் எக்ஸ்ரே எடுக்கச்சொன்னோம் வேற ஒன்னுமில்லை. இப்போ நீங்க அவங்களை வீட்டுக்கு கூட்டிட்டுப் போகலாம்‌. இந்த மெடிசின்ஸ் எல்லாம் மறக்காமல் கொடுங்க அப்போத்தான் காயங்கள் சீக்கிரம் ஆறும். எப்படியும் ஒரு பதினைந்து நாட்கள் எடுக்கும்.

ஓகே டாக்டர். நான் பார்த்துக்கறேன்

தனது பைக்கை ஸ்டான்டிலேயே விட்டுவிட்டு வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடித்து இருவரும் அதில் ஏறி நவீன் சித்தி வீடு பக்கத்திலிருந்ததால் அங்கே சென்றார்கள். சித்தி ரம்யா வீட்டு கதவைத் தட்டினான் நவீன். கதவு திறந்ததும் ரம்யா 

ஹாய் புது மண தம்பதியினரே வெல்கம்…ஹேய் மிருதுளா. என்ன!!!! உன் புடவை எல்லாம் ஒரே ரத்தக்கறையா இருக்கு? என்ன ஆச்சு? என்னடா ஆச்சு நவீன். வாங்கோ உள்ள வாங்கோ ஃபர்ஸ்ட்

நடந்தவற்றை நவீன் கூறினான். அதைக்கேட்டதும் அவன் சித்தியும் சித்தப்பாவும் அவனை திட்டினார்கள். 

ஆத்துக்காரி பின்னாடி இருக்காளா இல்லையான்னுட்டு கூட  தெரியாமலா வண்டி ஒட்டுவ!!!”  

சாரி சித்தி…சரி என் பைக் அந்த ஆஸ்பத்திரியிலேயே விட்டிருக்கேன். அதைப் நான் போய் எடுத்துண்டு வரேன். நீங்க மிருதுவை பார்த்துக்கோங்கோ இபோ வந்துடுவேன்” 

சரி சரி நீ வாம்மா நான் உனக்கு என்னோட நைட்டியை தரேன் மொதல்ல இந்த ரத்தக்கறை புடவையை மாத்திக்கோ வா

ஒரு பத்து நிமிடத்தில் பைக்குடன் வீடு திரும்பினான் நவீன். மிருதுளா புடவையை கழட்ட மிகவும் சிரமம் படுவதைப்பார்த்த ரம்யா அவளுக்கு புடவையை கழற்றி நைட்டியை மாற்ற உதவும்  போது மிருதுளாவின் காயங்களைப்பார்த்துவிட்டு வெளியே வந்து …

ஏன்டா நவீன் இப்படி காயங்களாகிருக்கு!!!! வயத்துல இப்படி சிராய்ஞ்சிருக்கு!!! உள்ள ஏதும் அடி படலையே?” 

இல்ல சித்தி…டாக்டருக்கும் அந்த சந்தேகம் வந்ததால எக்ஸ்ரே, ஸ்கேன் எல்லாம் எடுத்துப் பார்த்துட்டு ஒன்னுமில்லைன்னு தெரிஞ்சதுக்கப்புறம் தான் டிஸ்சார்ஜே பண்ணினா

அப்பாடா எல்லாம் அந்த தெய்வத்தின் அருள் தான்ம்பா!!! சரி நீயும் போய் உங்க சித்தப்பா வேஷ்டியை போட்டுண்டு வா. நான் ரெண்டு பேருக்கும் மொதல்ல சூடா காபி தரேன்

நவீனும், மிருதுளாவும் டிரஸ் மாத்தி கண்கொண்டு ஹாலில் வந்தமர்ந்தனர். அப்போ நவீன்

எங்க சித்தப்பா உங்க பொண்ணுகள் ராதா அன்ட் ரேவதியை காணமே!!

ரெண்டு பேரும் ஸ்பெஷல் க்ளாஸ் போயிருக்கா இப்போ வந்திடுவா

சொல்லிக்கொண்டிருக்கையிலே உள்ளே நுழைந்தனர் இரு பெண்களும்….

ஹாய் பையா!! ஹாய் மன்னி வெல்கம்” 

என்று கூறிக்கொண்டே ரேவதி நவீனின் மடியில் அமர்ந்தாள். மிருதுளாவிற்கு அது வித்யாசமாக பட்டது ஆனாலும் அவள் காட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் ரேவதி சின்ன குழந்தை அல்ல அவள் பத்தாம் வகுப்பு படிக்கும் இளம்பெண். ராதா காலேஜ் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள். மிருதுளா வளர்ந்த விதம் வேறு. வயதுக்கு வந்த பெண் அவள் வீட்டில் அவளது அப்பா, அண்ணன், தம்பிகளுடன் கூட இப்படி மடியில் அமர்ந்து தடவுவது கொஞ்சுவது என்பதெல்லாம் செய்யக் கூடாது என்றுதான் சொல்லி வளர்க்கப்பட்டிருக்கிறாள். அதனாலோ என்னமோ அவளுக்கு அப்படி தோன்றியது. பின்பு அனைவருமாக அமர்ந்து இரவு உணவு அருந்தினார்கள். மிருதுளாவால் தனது கைகளைத் தூக்கி உணவருந்த முடியாமல் சிரமப்பட்டாள். அதை யாரிடமும் சொல்லி அவர்களை தொந்தரவு செய்யவேண்டாமென எண்ணி தனக்கு உணவு வேண்டாம் என்றும் ஒரு கிலாஸ் பால் மட்டும் போதும் என்றாள். நவீனும் அவளின் கஷ்ட்டத்தை புரிந்துக்கொள்ளவில்லை. நவீன், மிருதுளா இருவருக்கும் ஒரு அறையை காட்டி அதில் படுத்துறங்கச்சொன்னாள் ரம்யா சித்தி. அப்போது நவீன் சித்தியிடம்

சித்தி இதை ஊர்ல யார்கிட்டேயும் சொல்லி அவாள பயப்பட வைக்க வேண்டாமென நான் நினைக்கிறேன் …ஸோ நீங்களும் ப்ளீஸ் நடந்ததை யாரிடமும் சொல்லிடாதீங்கோ

புரியுது நவீன் கவலைப்படாதே நான் சொல்லமாட்டேன். நீ போய் மிருதுளாவுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகள் எல்லாம் கொடுத்து அவளை தூங்கச் சொல்லு. குட் நைட்

நவீனும் குட் நைட் சொல்லிவிட்டு அவர்கள் அறையின் கதவை தாழிட்டான். மிருதுளா அவள் காயங்களுக்கு மருந்து தடவிக்கொண்டிருந்ததைப் பார்த்து மருந்தை அவளிடமிருந்து வாங்கி அவனே எல்லா இடங்களிலும் தடவி விட்டு அவள் இரவு எடுத்துக்கொள்ள வேண்டிய மாத்திரைகளையும் தண்ணீரும் கொடுத்து அவற்றை விழுங்கச் செய்து படுக்க வைத்து…

மிருது இந்த விஷயத்தை ஊர்ல உன் பேரன்ட்ஸ் அன்ட் மை பேரன்ட்ஸ் கிட்ட சொல்லி அவாள பயப்பட வைக்க வேண்டாம்னு நினைக்கிறேன்…நீ என்ன சொல்லுற??”

நீங்க உங்க சித்திகிட்டேயும் இதை தானே பேசினேங்கள்…அதை நானும் கேட்டேன். நீங்க சொல்லறதும் சரிதான் நானும் யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன். அப்படியே சொல்லனும்னாலும் நீங்கதான் எஸ்.டி.டி பூத்துக்கு கூட்டிட்டுப் போகணும் ஆர் லெட்டர் எழுதறதாயிருந்தாலும் நீங்க தான் எழுதித் தரணும் ….இந்த கையை வைத்துக்கொண்டு நான் எப்படி எழுத முடியும்…ஸோ கவலையை விடுங்கோ. எனக்கு தூக்கமா வருது நான் தூங்கறேன். குட் நைட்

என்று உண்ட மருந்துகளினால் கூறிய சில மணித்துளிகளில் உறங்கிப்போனாள். அவளை சிறிது நேரம் பார்த்துக்கொண்டே அமர்ந்தான் நவீன் பின் எழுந்து லைட்டை ஆஃப் செய்துவிட்டு படுத்தான் அன்று மாலை முழுவதும் ஆன பரபரப்பில் அவனும் அசந்து போய் உறங்கலானான். சட்டென்று ஏதோ முனகல் சத்தம் கேட்டெழுந்து பார்த்தான். அருகில் படுத்திருந்த மிருதுளா தான் தூக்கத்தில் வலியில் முனகிக்கொண்டே உறங்கிக்கொண்டிருந்தாள்.  

நவீனுக்கு என்ன செய்ய வேண்டும் என அறியாது எழுந்து அமர்ந்துக்கொண்டு அவளயே பார்த்துக்கொண்டிருந்தான். அவள் வலியில் ரொம்ப முனக ஆரம்பித்ததும் உடனே டாக்டர் சொன்ன அந்த பேயின் கில்லர் மாத்திரையை வலி வரும்போதெல்லாம் கொடுக்கச்சொன்னது நியாபகம் வர அதை எடுத்து மெல்ல மிருதுளாவை எழுப்பி கொடுத்தான். அந்த மாத்திரை சாப்பிட்ட சில மணி நேரத்தில் முனகல் நின்றது. அவளின் முனகல் நின்று அவள் நன்றாக மீண்டும் உறங்க ஆரம்பித்த பின்னரே நவீனும் உறங்கினான்.

காலை விடிந்தது. இரவு முழுவதும் சரியாக தூங்காததால் இருவரும் அசந்து தூங்கிப்போனார்கள். வெளிச்சம் கண்ணில் பட சட்டென கைகளில் இருந்த காயங்களை மறந்து கைகளை தரையில் ஊன்றி எழ முயன்று”  “அம்மாஎன்று சொல்லிக்கொண்டே கைகளை தரையிலிருந்து எடுத்தாள் மிருதுளா. இதைக்கேட்டெழுந்தான் நவீன்…

என்ன ஆச்சு மிருது!! ஏன் கத்தின?”

ஒன்னுமில்லை அடிப்பட்டதை மறந்து கையை தரையில் ஊனிட்டேன் வலிச்சுது அதுதான் கத்தினேன். சரி டைம் ரொம்ப ஆயிடுத்துன்னு நினைக்கிறேன் எழுந்துண்டு, என்னையும் எழுப்பி விடுங்கோ

நவீன் மிருதுளாவை எழுப்பிவிட்டு இருவருமாக வெளியே வந்தனர். மிருதுளா ரம்யா சித்தியிடம்…

சாரி சித்தி ரொம்ப நேரம் தூங்கிட்டோம். டைம் என்ன ஆச்சு?”

பரவாயில்லை மா. மணி எட்டு தான் ஆச்சு. நீயே இப்படி அடிப்பட்டுண்டு படுத்திருக்க வலில எப்படி தூக்கம் வந்திருக்கும். எனக்கு அது கூட புரிஞ்சுக்க முடியாதம்மா. சரி புது டூத் பிரஷ் வச்சிருக்கேன் போய் பல் தேச்சுட்டு வாங்கோ காபி தரேன்

ஓகே சித்தி. எங்க வச்சுருக்கேங்கள்?”

அந்த வாஷ் பேஸன் ஷெல்ஃப்ல இருக்கு எடுத்துக்கோங்கோ

இருவரும் பல் துலக்கி முகம் கழுவி ஃப்ரெஷ் ஆகி ஹாலுக்கு வந்தமர்ந்தனர். ரம்யா நான்கு கப் காபியுடன் வந்து நவீனுக்கும், மிருதுளாவுக்கும், தன் கணவருக்கும் கொடுத்துவிட்டு தானும் ஒரு கப் காபியுடன் அமர்ந்து…

நல்லா தூங்கினேங்களா?”

ஓ எஸ் ஆனா நடுவுல செம்மையா வலிச்சுது அப்போ நவீன் டாப்லெட் கொடுத்தார் அதை சாப்பிட்டதும் மறுபடியும் நல்லா தூங்கிட்டேன்

நிச்சயம் தூக்கத்துக்கு மாத்திரை கொடுத்திருப்பா. ஏன்னா இந்த மாதிரி அடிப்பட்டா தூக்கம் வராதுன்னுட்டு டாக்டருக்கு தெரியாதா

நவீன் அவன் சித்தப்பாவிடம் 

சித்தப்பா அந்த பணம் என்ன ஆச்சு? எனக்கு அது இப்போ கிடைச்சா ரொம்ப உதவியா இருக்கும். அதை நம்பி தான் அடுத்த சம்பள நாள் வரை இருக்கணும்.

அது வரத்துக்கு இன்னும் இரண்டு வாரமெடுக்குமே. சரி இரு நான் பணம் தரேன் அது வந்ததும் அதை நானே வைத்துக்கொள்கிறேன் அதுக்காக இந்த ஃபார்ம் ல நீ கையெழுத்து போட்டுத் தந்திடு

நீங்க இந்த வாரத்துல வந்திடும்ன்னு சொன்னேங்களே…அதுனால தான் கேட்டேன் ப்ளீஸ் டோன்ட் மிஸ்டேக் மீ.

ஆமாம் நானும் அப்படித்தான் நினைத்தேன் ஆனால் நடக்கலையே என்னச் செய்ய? சரி இந்தா பணம் அன்ட் ஃபார்ம்

என்று கொடுக்க அதை வாங்கிக்கொண்டு ஃப்ர்மில் கையெழுத்திட்டு கொடுத்தான் நவீன்.  

இவற்றைப் பார்த்த மிருதுளாவிற்கு நடப்பது எதுவுமே புரியவில்லை.ஏன் நவீன் எல்லோரிடமும் பணம் வாங்குகிறார் ??” அதைப் பற்றி வீட்டிற்கு சென்று நவீனிடம் கேட்டு தெரிந்துக்கொண்டாக வேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டாள்.

இருடா டிஃபன் பண்ணிடறேன் சாப்பிட்டுட்டு கிளம்புங்கோ” 

ஓகே சித்தி

சித்தி நாங்க உடுத்திண்ட உங்க நைட்டீ அன்ட் சித்தப்பா வேஷ்டீ எல்லாத்தையும் நான் எடுத்துண்டு போய் தோச்சு வைக்கறேன் நீங்க எங்காத்துக்கு வரும்போதோ இல்லை நாங்க இங்க வரும்போதோ கொடுக்கறோம் சரியா

ஆமாம் சரிதான் போவியா…அதெல்லாம் அப்படியே அந்த வாஷிங் மெஷின் பக்கத்துல போடு போறும் போ…சரி நீ இந்த ரத்தக்கறை படிந்த புடவையை கட்டிண்டு போகாதே. என்னோட சல்வார் தரேன் அத போட்டுண்டு போ சரியா

சரி சித்தி

நவீனும் மிருதுளாவும் சித்தி சித்தப்பாவுடன் காலை டிஃபன் அருந்திவிட்டு கிளம்பினார்கள் அப்போது ரம்யா…

டேய் நவீன் பார்த்து பத்திரமா கூட்டிண்டு போடா. அடிக்கடி பின்னாடி மிருதுளா இருக்காளான்னு செக் பண்ணிக்கோ

ஓகே சித்தி நாங்க போயிட்டு வரோம்

மிருதுளாவிற்கு பைக்கைப் பார்த்ததும் ஒரு வித பயம் தொற்றியது. ஆனாலும் வீட்டிற்கு போக வேண்டுமே என்றெண்ணி ஏறி ஒரு புறமாக அமர்ந்தாள். அதைப்பார்த்த நவீன்…

மிருது ப்ளீஸ் இரண்டு பக்கமாக கால்களைப் போட்டு உட்கார்ந்துண்டு என்னை பிடிச்சுக்கோ அப்போ கீழே விழ மாட்ட

அவளும் தலையசைத்து அவ்வாறே செய்ய முற்பட்டபோது அவளின் காயங்கள் அதற்கு தடையாக இருக்க இரண்டு புறமாக கால்களைப்போட்டு உட்கார்ந்து இரண்டு புறமுமிருந்த கைப்பிடிகளை பிடித்துக் கொள்ள முயன்று வலியால் முடியாமல்கடவுளே பத்திரமாக எங்களை வீட்டில் சேர்த்து விடுஎன்று வேண்டிக் கொண்டே பயணிக்கலானாள்.

அன்றுமுதல் பைக் பயணம் மிருதுளாவிற்கு பயப் பயணமானது. அந்த பயம் அவளைவிட்டு நீங்க சில நாட்கள் / மாதங்கள் / ஆண்டுகள் ஆகலாம்.

தொடரும் …..

ஞாயிறு காலை சூரியன் பார்வை படுவதற்கு முன்னதாகவே மிருதுளா எழுந்து குளித்து புத்தாடை அணிந்து நெய்வேத்தியத்திற்கு வெண்பொங்கலும், கேசரியும் செய்துக்கொண்டிருக்கையில் நவீன் எழுந்து ….

என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்துண்டு என்ன பண்ணற?”

நீங்க ஏன் இப்பவே எழுந்துண்டு வந்தேங்கள்?”

கிட்சனிலிருந்து வாசம் வந்து என்னை எழுப்பிடுத்து. சரி மறுபடியும் தூக்கம் வராது நான் போய் குளிச்சிட்டு வரேன்

ஓகே. நானும் அதுக்குள்ள இங்கத்த வேலைகளை முடிச்சிடுவேன்

நவீனுக்கு புது வேஷ்டி மற்றும் சட்டை எடுத்து கொடுத்து அணியச் சொல்ல அவனும் அதை அணிந்து வர இருவருமாக சேர்ந்து விளக்கை ஏற்றி பூஜை செய்தனர். அப்பொழுது மிருதுளா மனதில்…

அம்மா எங்களது இந்த புதிய வாழ்க்கை துவக்கம் நல்லதாகவும் இனி வரும் காலங்களிலும் நல்லபடியாக நாங்கள் வாழ்வதற்கும் நீயே துணை. உன் கால்லடியில் எங்கள் வாழ்க்கையை வைத்துவிட்டேன் தாயே. நல்லவற்றையே தந்தருள்வாயாக. ஏதாவது கஷ்டமென்றால் அதை தாங்கும் சக்தியையும் அதிலிருந்து மீண்டு வருவதற்கும் உன் அருள் வேண்டும் அம்மா சமயபுரத்தாயே நீயே துணைஎன்று கண்களை மூடி வேண்டிக்கொண்டிருந்ததைப் பார்த்த நவீன் 

என்ன மிருது சாமிகிட்ட பயங்கர வேண்டுதல் வச்சயே அது என்னதுன்னுட்டு நான் தெரிஞ்சுக்கலாமா?” 

ஓ எஸ் தாராளமா தெரிஞ்சுக்கலாமே. நம்ம வாழ்க்கை நல்லா இருக்கனும்னு வேண்டின்டேன்

அதுக்கு இவ்வளவு நேரமா!!

நீங்க என்ன வேண்டின்டேங்கள்

சாமி எல்லாம் நீயே! நல்லபடியா வச்சுக்கோன்னு ஷாட் அன்ட் சுவீட்டா ஒரு அப்பிளிக்கேஷன் போட்டுட்டேன் இனி எல்லாம் அவன் செயல்

சரி வாங்கோ டிபன் சாப்பிடலாம்” 

காலை உணவான வெண்பொங்கலையும் கேசரியையும் சாப்பிட அமர்ந்தனர். மிருதுளா நவீனுக்கு பரிமாறி அவனைப் பார்த்துக்கொண்டே பரீட்சை எழுதி மதிப்பெண்களுக்காக காத்திருக்கும் மாணவர் போல காத்திருந்தாள். 

சூப்பரா இருக்கு மிருது. ஆத்துல அன்னைக்கு நீ பண்ணின கிச்சடியும் சரி இன்னைக்கு இந்த பொங்கலும் கேசரியும் சரி எல்லாமே ருசியோ ருசி போ. ஆம் எ லக்கி ஃபெலோ. இன்னும் கொஞ்சம் போட்டுக்கறேன். ஆமாம் நீயும் சாப்பிட வேண்டியது தானே. ஏன் என்னையே பார்த்துண்டிருக்காய்?”

உங்களுக்கு பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சதும் எனக்கு வயிறு ரொம்பிடுத்து. தாங்க்ஸ் ஃபார் யுவர் அப்ரிசியேஷன்

ஹலோ இந்த தாங்க்ஸ் எல்லாம் வெளி ஆட்கள்கிட்ட வச்சுக்கோ நம்மளுக்குள்ள எல்லாம் நோ சாரி நோ தாங்க்ஸ் ஓகே. மொதல்ல நீயும் உட்கார்ந்து சாப்பிடு.

நவீனின் பேச்சு, பழக்கங்கள் எல்லாம் மிருதுளாவிற்கு மெல்ல மெல்ல அவன் மீது காதலை வரவைத்தது. அதே போல நவீனும் மிருதுளா மீது கொள்ளை ஆசையும் பிரியமும் வைத்திருந்தான்… ஆனாலும் இருவரின் மனதிலும் ஏதோ சில நெருடல்கள் இருந்து கொண்டு அதை முழுவதுமாக அனுபவிக்க தடுத்தது. 

மிருதுளாவிற்கு நவீனிடம் கேட்டு க்ளியர் பண்ணிக்கொள்ள  வேண்டிய விஷயங்கள் பல உள்ளது அவற்றை நவீனிடம் எப்படி கேட்பது? என்ன நினைப்பார்? வருத்தப்படுவாரா? சரியான பதில் கிடைக்குமா? என்பதனால் தயக்கம். நவீனுக்கு பிரேஸ்லெட் விஷயத்தில் ஒரு பொய்யை தனது பெற்றோர் சொல்லி தன்னை தாழ்த்தியதில் வருத்தம். இருவருமே அதை வெளிக்காட்டாமல் மனதினுள் பூட்டி வைத்தனர். 

இதுதான் நிச்சயிக்கப்பட்ட திருமணமத்தின் ஆரம்ப கால தயக்கங்களும் தவிப்புகளும். இவை அனைத்தும் சரியாக சில நாட்கள் / மாதங்கள் ஆகலாம். பல தம்பதிகளுக்கு சில வருடங்களும் ஆகலாம். சில தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்துக்கொள்ளாமலே போவதும் உண்டு.  அதனால் தான் திருமணமானதும் கணவன் மனைவி பிரிந்திருக்கக்கூடாது என்று பெரியவர்கள் கூறியுள்ளனர். இதில் நம்ம நவீன் மிருதுளா புரிதலுக்கு சில நாட்களாகபோகிறதா, மாதங்களாகபோகிறதா இல்லை வருடங்களாகப்போகிறதா!!!  பர்வதம் ஈஸ்வரன் சொன்னது போல மிருதுளா அவர்களுடனே இருந்திருந்தால் அவர்களுக்குள் புரிதலே வராதபடி செய்திருப்பார்கள் அந்த மூத்த தம்பதியர்.

நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில்

இரு மனங்கள் இணைவதில்

காலதாமதம் ஆவதில்

தவறேதுமில்லை! ஆனால்

இணையாமல் போனால்

அவர்கள் வாழ்க்கை மட்டுமல்லாமல்

இரு குடும்பத்தினரின் வாழ்க்கையும்

ஆட்டம் கண்டுவிடும்

அதிலிருந்து மீள்வதற்கு காலதாமதம் ஆகும்

பலரால் மீண்டு வந்து விடமுடியும்

சிலரால் முடியாமல் அவர்கள் வாழ்க்கை அழிந்துவிடும்.

திருமண வாழ்க்கையில் தம்பதிகளுக்குள் புரிதல் என்பது மனசு விட்டு பேசுவதனால் மட்டுமே வந்துவிடாது அது பல சந்தர்ப்ப சூழ்நிலைகளை சார்ந்தும் தான் ஏற்படும். அப்படிப்பட்ட சூழ்நிலைகள் நிறைய காத்திருக்கிறது நம்ம மிருதுளா நவீன் வாழ்க்கையில். அவர்கள் அவற்றை புரிந்துக்கொள்கிறார்களா என்பது தான் கேள்வி அதற்குண்டான பதிலைத்தேடி தான் நாம் அவர்கள் கதையை படிக்கின்றோம்.

மிருதுளா மந்திய சாப்பாட்டுக்கு ரசமும் உருளைக்கிழங்கு ஃப்ரையும் செய்ய முற்பட்டபோது…

மிருது மத்தியத்திற்கு வேணும்னா நம்ம கேம்ப்புக்குள்ளயே இருக்கிற வெஜ் டாபாலேருந்து லஞ்ச் வாங்கிண்டு வரேன்.

வேண்டாம் நவீ. வெளியே சாப்பிட்டு அலுத்துடுத்து. எனக்கு ரசம் சாதம் சாப்பிடனும் போல இருக்கு. அதுதான் செய்துண்டிருக்கேன். இதோ ரசமும் உருளை பொறியலும் ஆயாச்சு. சாதம் மட்டும் வச்சுட்டேன்னா வேலை ஆச்சு. நான் ஒன்னு கேட்கவா?” 

கேளு. என்ன?”

உங்களுக்கு சமைக்கத்தெரியுமா?”

நாட் அட் ஆல் மிருது. சின்ன வயசுலயே வேலைல சேர்ந்துட்டேன் அன்னேலேருந்து இன்னிக்கு நீ சமைச்சு தந்தது வரைக்கும் எனக்கு எங்க ஆர்மி மெஸ் சாப்பாடு தான் கைகுடுத்திருக்கு. மெஸ் இருந்ததால நான் சமைக்கனும்ங்கற அவசியம் வரலை அதனாலயோ என்னமோ அதை கத்துக்கணும்ன்னு தோணலை.

ஓ!!! அப்படியா? சரி சப்போஸ் எனக்கு உடம்புக்கு சரியில்லாமல் போச்சுன்னா?”

அப்போ இருக்கவே இருக்கு நம்ம ரோஹித் டாபா. அங்கிருந்து வாங்கி சாப்பிடுவோம் என்ன சொல்லற

அப்பவும் கத்துக்க மாட்டேங்கள்ங்கறது நல்லா புரியறது

அதெல்லாம் பார்த்துக்கலாம் இப்போ ஏன் உடம்பு முடியாமல் போறத பத்தி எல்லாம் பேசற. விடு வேற ஏதாவது பேசுவோம்

சாதம் ஆயாச்சு. சரி வாங்கோ நாம ஹாலுக்கு போவோம்

இந்த கோட் சூட்டை கவர்ல போட்டு வைக்கனும் இல்லைன்னா டஸ்ட் படியும்.  இப்போ சொல்லு நேத்திக்கு என்கிட்டே ஏதோ கேட்க வந்து கேட்காம விட்டுட்ட என்னதது?”

நம்ம ரிசப்ஷன் டிரஸ் தானே எஸ் எஸ் அப்படியே வையுங்கோ. சரி நேத்திக்கு கேட்க வந்தது இருக்கட்டும் இப்போ இந்த கோட் சூட்டை பார்த்ததும் இன்னொரு விஷயம் ஞாபகம் வருது கேட்கட்டுமா? கோபப்படாமல் பதில் சொல்லனும்

எனக்கு கோபமே வராது அதெல்லாம் ஒரு காலத்துல பயங்கரமா இருந்தது…இப்போ அப்படி இல்லை‌. அதனால கேளு

ஆமாம் நீங்கள் தான் சம்பாதிக்கறேங்கள் அதுவுமில்லாம வரதட்சணை ஏதும் வேண்டாம் என்றும் அதைப்பத்தி என் அப்பா மீண்டும் பேச ஆரம்பிச்சபோது எழுந்து வெளியே போனேங்களே

ஆமாம் நான் வேண்டாம்னு சொன்னதுக்கப்புறமும் உன் அப்பா அதைப்பத்தி மறுபடியும் பேசினார் அதுதான் போனேன்

ஓகே ஓகே நீங்க அன்னைக்கு சொன்னது செய்தது எல்லாம் சரிதான் ஆனா அதுக்கப்புறம் உங்க அப்பா அம்மாட்ட ஏன் ரிசப்ஷன் டிரஸ், ஷூ எல்லாம் வாங்க பணம் கேட்டிருக்கேங்கள்?”

என்ன சொல்லற நீ? நான் எப்போ அவாகிட்ட பணம் கேட்டேன்? எதுக்கு கேட்கனும்? நானே தான் எல்லாம் டில்லியில் எடுத்துண்டேன்

இதை கேட்டதும் மிருதுளாவிற்கு ஊருக்கு கிளம்புவதற்கு முன்தினம் நவீன் அவர் அப்பாவிடம் பணம் கேட்டு வாங்கியது நினைவுக்கு வந்தது. ஆனால் அதை இப்போது கேட்டால் தானும் குழம்பி நவீனையும் குழப்பிவிடுவோம் என்றெண்ணி அதை இன்னொரு நாள் கேட்கலாம் என்று முடிவு செய்து…அதுதான் சரி என தலையை அசைத்து….

என்ன சொல்லறேங்கள்? அப்போ நீங்க அவாகிட்ட டிரஸ் எடுக்க பணம் ஏதும் கேட்கலையா? ஆனா அவா ரெண்டு பேரும் நீங்க கேட்டதா சொல்லித்தான் எங்க அப்பாகிட்ட இருந்து ரூபாய் பத்தாயிரத்த பஸ் ஸ்டாப் ன்னு கூட பார்க்காம அங்கேயே குடுக்கச்சொல்லி வாங்கிண்டு தான் உங்க ஊர் பஸ்ஸிலயே ஏறினா. எங்க அப்பா கூட சாயந்தரம் ஆத்துக்கு வந்து தரேன்னு சொன்னதுக்கு, “இல்ல இப்பவே அவனுக்கு நாங்கள் மணி ஆர்டர் பண்ணனும்ன்னு சொன்னாலே!!!

என்னது பத்தாயிரமா!!! அப்படியா சொல்லி வாங்கினா? ஏன் உங்க அப்பா கொடுத்தா? என்ட்ட ஒரு வார்த்தை கேட்டுருக்கலாமோனோ!!! அந்த வெள்ளி சொம்பு, முகம் விஷயத்தில எப்படி நேரா வந்து பளிச்சுன்னு கேட்டா?”

என்ன சொல்லறேங்கள்? அது மூனாம் மனுஷர் வந்து கேட்டதால் என் அப்பா அம்மா நேரா கேட்டா, அதுவும் இல்லாம நீங்க அப்போ அங்க இருந்தேங்கள் அதனால க்ளியர் ஆச்சு ஆனா இது அப்படியில்லையே கேட்டது உங்க அப்பா அம்மா அவாள்ட்ட அப்படி எப்படி கேட்க முடியும்? அதுவும் நீங்க டில்லில இருந்தேங்கள்

ஒரு ஃபோன் பண்ணி கேட்டிருக்கலாமே

அந்த கொடுக்கல் வாங்கல் நடந்தப்போ நானும் அங்கிருந்தேன். எனக்கு உங்க மேல தான் கோபம் வந்தது. அன்னைக்கு நைட் நீங்க ஃபோன் பண்ணினேங்கள் அப்போ அதை சொல்லனும்ன்னு ஆரம்பிச்சேன் என் சித்தி தான்அதெல்லாம் ஃபோன் ல சொல்லக்கூடாது…இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் நேர்ல பேசரா மாதிரி வராது நீ ஏதாவது அவர்ட்ட இப்போ சொல்ல அத அவர் டில்லியிலிருந்து அவா பெத்தவாள்ட்ட கேட்க அவா உன்னை தப்பா நினைச்சுடுவான்னு சொன்னது ஞாபகம் வர அப்படியே சொல்ல வந்ததை விட்டுட்டேன். அதுக்கப்புறம் நான் அதை மறந்துட்டேன் இப்போ தான் ஞாபகம் வந்தது கேட்டேன்” 

ஓ மை காட்!!! என்கிட்ட எங்க அப்பா அம்மா உன் பேரன்ட்ஸ் கிட்டருந்து பணம் வாங்கியதா சொல்லவுமில்லை, தரவுமில்லை” 

அப்போ அந்த பத்தாயிரம் என்ன தான் ஆச்சு! எங்க போச்சு!!

தெரியலையே!!! ச்சே ஏன் இப்படி எல்லாம் பண்ணிருக்கா? சரி கல்யாணமானதுக்கப்புறமாவது ஆத்துல இருந்தப்போவே சொல்லிருந்தே னா நேரா கேட்டிருக்கலாமில்லையா?”

நானும் கல்யாண டென்ஷன் அன்ட் ஒருவித பயம் கலக்கம் எல்லாத்தோடையும் இருந்ததுனால மறந்துட்டேன்” 

என்னன்னு சொல்லுவேன் போ. பசிக்கறது சாப்பிடலாமா

மொத்தத்துல எங்க அப்பாவுக்கு பத்தாயிரம் நஷ்டம். சரி வாங்கோ சாப்பிடலாம்.

வரதட்சணை வேண்டாம் என நவீன் சொல்லியிருந்தாலும்

அவன் பெற்றோர் வேறு வழியில் அதைப் பெற்றுச் சென்றிருந்தாலும்

அதை மகனிடமிருந்து மறைத்திருந்தாலும் 

உண்மை மிருதுளா மூலம் வெளி வந்ததால்

பர்வதம் ஈஸ்வரன் போட்ட முடிச்சுகளில் இரண்டாவதும் அவிழ்ந்தது.

முடிச்சுகள் பல போட்டதால்

இருவரும் இணைந்தால்

ஒவ்வொன்றாக அவிழும் என்பதால்

மிருதுளாவை போகாமல் 

தடுத்துள்ளனர் மூத்த தம்பதியினரான பர்வதம் ஈஸ்வரன்

என்னதான் அவர்கள் முடிச்சுகள் போட்டிருந்தாலும் ஆண்டவன் முடிச்சு என்று ஒன்றிருப்பதை மறந்துவிட்டார்கள் போலும். அவர்கள் போட்ட முடிச்சு காலப்போக்கில் தளர தளர  மிருதுளாவிற்கும் நவீனுக்கும் ஆண்டவன் போட்ட முடிச்சு தளராமலிருக்க அவரே அருள் புரிய வேண்டும். 

இருவரும் உணவருந்தியதும் சற்று நேரம் ஓய்வெடுத்து விட்டு நவீனின் ஒன்னு விட்ட சித்தி வீட்டிற்கு கிளம்பலானார்கள். மிருதுளா பட்டுப்புடவையுடுத்தி தயார் ஆனாள். அவளைப்பார்த்த நவீன் 

ஏதோ குறையுதே

என்ன !! என்ன குறையறது? ஓ !! ஐ காட் இட். தலையில் பூ ரைட்டா?”

எஸ் ரைட். போற வழியில் பூக்கடை இருக்கு அங்க வாங்கிக்கலாம்

பூக்கடையில் வண்டியை நிறுத்தி பூ வாங்கிக்கொடுத்தான் நவீன். அதை தன் தலையில் சூடிக்கொண்டாள் மிருதுளா. இருவருமாக பைக்கில் மீண்டும் பயணத்தை தொடர்ந்த சில மணி நேரத்தில்ஐய்யோ அம்மாஎன்று ஒரு அலறல் சத்தம் …..

தொடரும்…….

காலை கதிரவன் கண்விழித்துப்பார்க்களானார்.  ஜன்னல்களுக்கு திரைச்சீலை இல்லாததால் அவரின் பார்வை மிருதுளாவை தூங்க விடாமல் எழச்செய்தது. எழுந்து நவீனைப்பார்த்தாள் அவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான். அவனை தொந்தரவு செய்யாமல் ஃப்ரெஷ்ஷாகி வந்து மெதுவாக கொண்டு வந்த அட்டைப்பெட்டிகள் மற்றும் சூட்கேஸ்களை திறந்து உள்ளிருந்த பொருட்கள் எல்லாவற்றையும் ஹாலில் பாத்திரங்கள், மளிகை, ஸ்நாக்ஸ், டிரஸ்ஸை, சாமி படங்கள் என பிரித்து அடுக்கி வைத்தாள். சாமி படங்களை எங்கே மாட்டுவது என்று சுற்றும் முற்றும் பார்த்து ஓர் இடத்தில் பேனாவால் குறியீடு  போட்டு வைத்தாள். 

ஒரு பேப்பரில் கடையில் வாங்க வேண்டிய டப்பாக்கள் (மளிகை சாமான்களைப் போட்டு வைக்க), பால் போன்றவைகளை லிஸ்ட் போட்டாள். டக்..டக்…டக்..டக் என கதவு தட்டும் சத்தம் கேட்டது. அச்சச்சோ இந்த சத்தம் நவீனின் தூக்கத்தை தொந்தரவு செய்யுமே என்ற எண்ணம் தோன்ற உடனே தாவி குதித்துக்கொண்டு இன்னும் ஒருமுறை தட்டுவதற்குள் கதவை திறந்தாள். நடுத்தர வயது பெண்மணி கையில் ஒரு டிரேவில் இரண்டு கப் டியுடன் நின்றுக்கொண்டிருந்தார். அந்த பெண்ணைப் பார்த்ததும் …

நீங்க தமிழா?”

ஆமாம். எங்க ஊரு திருநெல்வேலி. உங்க பக்கத்து வீடுதான். நீங்க வீட்டை இன்னும் செட் செய்திருக்க மாட்டிங்கன்னு தெரியும் அதுதான் காபி கொண்டு வந்தேன்

ஓ!! ரொம்ப நன்றிங்க. என் பெயர் மிருதுளா. உங்க பெயர் என்ன?”

என் பெயர் லதா. எதுக்குங்க தாங்க்ஸ் எல்லாம். நான் கல்யாணமாகி வந்த புதுசுல இப்படித்தான் எங்க அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க ஹெல்ப் பண்ணினாங்க. சரி சரி காபி ஆறிட போவுது குடிங்க. என் பசங்கள ஸ்கூலுக்கு கிளப்பனும். நீங்க மொதல்ல செட்டில் ஆகுங்க அப்புறம் பேசுவோம். சரியா மிருதுளா.

ஓகே பைஎன கதவை சாத்தி டிரேவுடன் திரும்பினாள் நவீன்தாங்க்ஸ்என்று கூறிக்கொண்டே ஒரு கப்பை எடுத்துக்கொண்டு…

ஹேய் எப்போ எழுந்தே நீ? எல்லாத்தையும் அடுக்கி வச்சுருக்கறத பார்த்தா நீ எழுந்துண்டு ஒரு ஒன் ஆர் ஆகிருக்குமே!! ஏன் என்னை எழுப்பலை

நீங்க எப்போ எழுந்தேங்கள்?”

நீ நம்ம பக்கத்தாத்து லதாவோடு இன்ட்ரோ ஸெஷன் நடத்தினியே அப்போவே எழுந்துட்டேன்

சரி சரி குளிச்சிட்டு வாங்கோ கடைக்கு போகணும் சில சாமான்கள் எல்லாம் வாங்கணும். இதோ லிஸ்ட் ரெடி. இன்னைக்கு போய் எல்லாத்தையும் வாங்கிண்டு வந்து எல்லாத்தையும் செட் பண்ணிட்டோம்ன்னா நாளைக்கு விளக்கு ஏற்றி சமையலை தொடங்கிடுவேன்

என்ன இவ்வளோ வேகமா இருக்க? நான் எல்லாம் கொஞ்சம் ஸ்லோ தான் மா.” 

எனக்கு பழைய நியூஸ் பேப்பர் வேணுமே. எங்கே கிடைக்கும்

என்னத்துக்கு?”

எல்லா செல்ஃப்லையும் விரிக்கத்தான்.

ஓகே நான் குளிச்சிட்டு போய் எடுத்துண்டு வரேன்.

எங்கேருந்து?”

என் நண்பர்கள் ரூமிலிருந்து தான்.

அந்த இடம் ரொம்ப தூரமா

இல்லை நடந்தே போயிட்டு வந்துடுவேன். ஒரு நாலு தெரு தள்ளி தான் இருக்கு

அப்படின்னா இப்பவே போயிட்டு வாங்கோளேன்‌. வந்துட்டு குளிச்சுக்கோங்கோ. ப்ளீஸ்…

சரி போயிட்டு வரேன்.

நவீன் வருவதற்குள் பக்கத்து வீட்டு டிரே, காபி கப் எல்லாவற்றையும் தேய்த்து அலம்பி வைத்தாள். நவீன் பேப்பர்களை மிருதுளாவிடம் கொடுத்துவிட்டு குளிக்கச்சென்றான். அவன் ரெடி ஆவதற்குள் துணிமணிகளை பீரோவில் அடுக்கி வைத்தாள். அடுப்படியில் எல்லா இடத்தையும் ஒரு துண்டு கொண்டு துடைத்து, படிகளில் எல்லாம் பேப்பரை விரித்து, பாத்திரங்களை எல்லாம் அடுக்கி வைத்தாள். நவீன் அனைத்தையும் பார்த்துவிட்டு..

அம்மாடி நீ என்ன சூப்பர் உமன்னா!!! அதுக்குள்ள எல்லாத்தையும் ஒதுக்கி வச்சிட்டயே!!!” 

இதை எல்லாம் செய்ய சூப்பர் உமன்னா இருக்கனும்ங்கற அவசியமில்லை எந்த எந்த வேலைகளை எப்போ செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும்ன்னு மனசுல கணக்கு போட்டு வேலைப் பார்த்தா சுலபமாக முடியும் அவ்வளவுதான்.

ஓ அப்படியா!!! இப்போ புரியுது நான் ஏன் ஃபாஸ்ட்டா செய்ய மாட்டேன்ங்கறது.

ஏன்

ஏன்னா நான் மாத்தமாட்டிக்கஸ்ல வீக் அதுதான்

அச்சோ கடி ஜோக். சரி சீக்கிரம் ரெடி ஆகுங்கோ. இன்னைக்கு பிரேக்ஃபாஸ்ட் எங்க? எனக்கு பசிக்கறது

இன்னைக்கு நாம கேண்டீனுக்கு தானே போறோம் அதுக்குப்பக்கத்திலயே ஒரு சின்ன வெஜ் ஹோட்டல் இருக்கு அங்கயே சாப்பிடலாம் சரியா.

நாங்கெல்லாம் கேண்டீனுக்கு போனா அங்கதான் சாப்பிடுவோம் அதுக்கு வெளியே இருக்கிற ஹோட்டல்களில் சாப்பிட மாட்டோம்

அம்மாடி உன் அறிவ பார்த்து அப்படியே புல்லரிச்சுடுத்து போ…அசடே இங்க கேண்டீன்னா சாப்பாடு தரும் இடமில்லை… நம்ம ஆளுகளுக்கு மலிவான விலையில் பொருட்கள் விற்கும் எ ஸ்மால் கடை மாதிரின்னு வச்சுக்கோயேன். வா பார்க்கத்தானே போற

ஓ… அப்படியா…சாரி எனக்கு அது தெரியாது….இந்த டிரே அன்ட் கப்பை லதா ஆத்துல குடுத்துட்டு வரேன் நீங்க கதவைப்பூட்டிட்டு ரெடியா இருங்கோ

ஓகே ஓகே போயிட்டு வா

பக்கத்துவீட்டு கதவை தட்டினாள் மிருதுளா. லதா அடுப்படியிலிருந்தே எட்டிப்பார்த்து…

வா வா மிருதுளா உள்ள வா

இல்ல நாங்க வெளில கிளம்பறோம். இன்னொரு நாள் வரேன். இதோ இதை குடுத்துட்டுப்போகலாமேன்னு வந்தேன்.

இது என்ன முறுக்கு, அதிரசமெல்லாம் வச்சிருக்க!

ஆமாம் எங்க கல்யாண பட்சணம். சாப்பிடுங்க நல்லாருக்கும்.

பைக் ஹான் சத்தம் கேட்டதும் மிருதுளா…

சரி நான் வரேன் அவர் தான் ஹான் அடிச்சுக்கூப்பிடறார். அப்புறம் பேசலாம். பை

ஓ கே மா பை.

இருவரும் கேண்டீன் பார்க்கிங்கில் வண்டியை நிப்பாட்டிவிட்டு காலை உணவருந்த ஹோட்டலுக்குள் சென்றனர். நவீன் ஒரு பிரெட் பக்கோடா அன்ட் ஒரு ஆலு பரோட்டா ஆர்டர் செய்தான். அதற்கு மிருதுளா….

இங்க இட்டிலி தோசை எல்லாம் இருக்காதா?…எப்படி எப்ப பார்த்தாலும் ரொட்டியவே சாப்பிடறாளோ தெரியலைப்பா.

நாம எப்படி எப்பப்பார்த்தாலும் இட்டிலி தோசை சாப்பிடறோமோ அப்படி தான் அவாளுக்கும்.

மொதல்ல எல்லாத்தையும் செட் செய்துட்டு இட்டிலி தோசைக்கு மாவு அறைத்து வைக்கணும்

உனக்கு தான் அறைக்க தெரியாதே பின்ன எப்படி!!!

உங்க அம்மா அன்னைக்கு செய்ததை எல்லாம் பார்த்து தெரிஞ்சுண்டேன். ஆமாம் அது என்ன பிரெட் பகோடா?”

இதோ வந்துடுத்தே இது தான் சாப்பிட்டுப்பார்த்து சொல்லு.

அப்பா சுட சுட இருக்கு. ம்…ம்…ம்…சூப்பரா இருக்கு. இது தான் ஃபர்ஸ்ட் டைம் இப்படி பிரெட் சாப்பிடறேன். இதுக்குள்ள ஆலு ஸ்டஃப் பண்ணிருக்காளோ.

எஸ் ஆலு தான். இதுலயே பன்னீர் பிரெட் பகோடாவும் இருக்கு. அடுத்த தடவை வாங்கித்தறேன்.

பரவாயில்லை எனக்கு இந்த ஊரு டிஷ் எல்லாம் கத்துக்கணும்னு ஆசையா இருக்கு.  இன்னும் ஒரு வருஷத்துல எல்லாம் கத்துண்டு ஆத்துலயே செய்து தறேனா இல்லையான்னு பாருங்கோ. சரி உங்க ஆத்துக்கு ஃபோன் பண்ணிச் சொல்லிட்டேளா நாம பத்திரமா வந்து சேர்ந்தாச்சுன்னு?”

ம் ம்..ம் அதெல்லாம் சொல்லியாச்சு. நீ உங்க அப்பா அம்மாட்ட பேசணுமா? இதோ இங்க ஒரு எஸ்.டி.டி பூத் இருக்கு. பேசறயா?”

ம். …பேசறேன்.

மிருதுளா வீட்டுக்கு ஃபோன் போட்டுக்குடுத்து 

 “எவ்வளவு ஆச்சுன்னுட்டு மேலே காட்டும் பார்த்து பேசுஎன்றான் நவீன். 

மிருதுளா அவள் அம்மா அப்பா மற்றும் தம்பியுடன் பேசிக்கொண்டே மேலே பார்த்தாள் அறுபது என்று காட்டியதும் அவசர அவசரமாக பை சொல்லி கால்லை கட் செய்தாள். இதைப்பார்த்த நவீன்…

ஏன் என்ன ஆச்சு? நூறு ருபாய் வரைக்கும் பேசிருக்க வேண்டியது தானே

அத நீங்க முன்னாடியே சொல்லிருக்கனும். இப்போ சொல்லறேங்கள்

ஹா! ஹா! ஹா! வா வா பொருட்களை வாங்குவோம் அப்புறமா வேணுனா நைட் பேசலாம். நம்ம கேம்ப்புக்குள்ளயே ஒரு எஸ்.டி.டி பூத் இருக்கு. ஓகே வா

 வேண்டிய பொருட்களை எல்லாம் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.  வீட்டில் முதலில் சாமி படங்களை சுவரில் ஆணி அடித்து மாட்டினார்கள். அதற்காக வாங்கி வந்த ஸ்டாண்டையும் ஃபிக்ஸ் செய்தான் நவீன். மிருதுளா எடுத்து வந்த எல்லா சாமி பொருட்களையும் அந்த ஸ்டாண்டில் அடுக்கி வைத்தாள். மளிகை ஜாமான்களை எல்லாம் டப்பாக்களில் இருவருமாக போட்டு அடுப்படியில் அடுக்கினர். அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர் வாங்குவதற்கு மிருதுளாவிடம் பணம் கொடுத்திருந்தார் ராமானுஜம். ஆனால் அதை அவர்கள் வாங்க மறந்ததால் மீண்டும் போக ஆயத்தம் ஆனார்கள். அப்பொழுது நவீன்…

ஏய் மிருது எப்படியும் மத்திய சாப்பாட்டுக்கு வெளியே தான் போகணும் அப்போவே போய் மிச்சத்த வாங்கிண்டு உன்னை ஆட்டோல ஏத்திவிட்டுட்டு பின்னாடியே நானும் பைக்ல வரேன் என்ன சொல்லுற….இல்லாட்டி இப்ப ஒரு தடவை அப்புறம் ஒருதடவைன்னுட்டு ரெண்டு மூணு டிரிப் அடிக்கனும்

ஓகே அதுவும் சரி தான் அப்படியே செய்வோம். ஆனா அதுக்கு இன்னும் ரெண்டு ஆர் மூணு மணிநேரமிருக்கே! அதுவரை என்ன செய்வோம்…என்ன மறுபடியும் படுத்துட்டேள்

ஆமாம் ..வா நீயும் வந்து படுத்துக்கோ.

மிருதுளாவிற்கு நவீனிடம் காசு இல்லாமல் போனது ஏன் என்ற நினைப்பு மனதிலிருந்ததை நவீனிடமே கேட்டாக வேண்டும் என்று எண்ணி ஆரம்பித்தாள்…

என் மனசுல ஒரு விஷயம் உருத்திண்டே இருக்கு அதை உங்கள்ட்ட கேட்கலாமா!!

கேளு..அதுக்கு ஏன் இழுக்கறாய்…?” 

இல்லை நீங்க ஏதாவது நினைச்சிட்டா…

ஏய் சொல்லுமாஎன்று கையை பிடித்திழுத்தான் நவீன், உடனே ஆ…என சத்தமிட்டாள் மிருதுளா. 

என்ன ஆச்சு ? ஏன் கத்தின?”

இந்த பிரேசிலட் கீரிடுத்து அதுதான் கத்தினேன். கழட்டி வைக்க மறந்துட்டேன்

ஏய் நானும் மறந்தே போயிட்டேன் பாரேன்!!!! உனக்கு இந்த பிரேசிலட் பிடிச்சிருக்கா? இதை கல்யாண நாள் அன்றைக்கே கேட்கனும்ன்னு நினைத்தேன் அந்த டென்ஷன்ல மறந்துட்டேன்.

நல்லா தான் இருக்கு ஏன் இதுக்கு என்ன ஸ்பெஷலாம்!!! ஓ!!! மச்சினர் வாங்கி தந்ததாச்சே அதனாலயா? நீங்கதான் எனக்கு ஒன்னுமே வாங்கித்தரலையே!!! அதுல எனக்கு கொஞ்சம் மன வருத்தம் தான்

ஹலோ என்ன சொல்லுற? எந்த மச்சினன் வாங்கினதுனு நினைச்சிண்டிருக்க? இது நான் உனக்காக கடை கடையா ஏறி பார்த்து வாங்கியது மா

என்ன சொல்லறேங்கள் எங்க ஃபேமிலி ஆட்கள்கிட்ட உங்க அம்மா தான் சொல்லிருக்கா!!! அவா என்கிட்ட சொன்னா

என்னத்த சொன்னா உன் மாமியார்

ஏன் உங்க அம்மான்னு சொல்லமாட்டேளோ!!!

இப்ப அதுதான் ரொம்ப முக்கியம் பாரு. மொதல்ல என்ன நடந்ததுனு சொல்லறயா

உங்க தம்பி கவின் குவைத்திலிருந்து அவன் மன்னிக்காக வாங்கிண்டு வந்ததுனு உங்க அம்மா சொன்னதால் நாங்கள் அனைவரும் அதை உண்மைன்னு நம்பி கல்யாணத்தன்னைக்கு மண்டபத்தில எல்லார்கிட்டயும் அதையே தான் சொன்னோம், அதுக்கு என் சித்திக்கூட சொன்னா தட் ஐ ஆம் லக்கின்னு. அப்போ என் தோழி காயத்திரி கூட கேட்டாஉன் மச்சினனே உனக்கு பிரேஸ்லட் எல்லாம் வாங்கித்தரார் உன்னவர் ஒன்னும் தரலையானுட்டு

ஆமாம் …ஆமாம் …அவன் ஒன்னும் வாங்கலை இது நான் வாங்கினது

இதை நீங்க ஏன் அப்பவே என் கிட்ட சொல்லலை?”

சரி விடு கல்யாண டென்ஷன்ல மறந்துட்டேன்… இப்போ தெரிஞ்சுண்டுட்ட ல அது போறும். நீ ஏதோ கேட்கணும்னு சொன்னயே என்னதது

இந்த பிரேஸ்லட் இஷ்ஷுல இனி அது வேறயா !!! வேண்டாம் பா வேண்டாம். நான் இன்னொரு நாள் கேட்கறேன்.

ஏன் அப்படி என்ன விஷயம் அது?”

இல்ல இல்ல விடுங்கோ…ஏன் உங்க அம்மா அப்போ அப்படி சொன்னா? நீங்க வாங்கினத கவின் வாங்கினதா ஏன் சொல்லனும்? அதுனால என்ன கிடைச்சது அவாளுக்கு?”

அதை நீ அவாகிட்ட தான் கேட்கனும். என்னிடம் கேட்டா!!

அப்பவே நீங்க என்னிடம் சொல்லிருந்தா நிச்சயமா கேட்டு இருப்பேன். இனியாவது எதுவும் மறக்காமல் சொல்லுங்கோ. சரி நேரமாயிடுத்து நாம போய் அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர், பெட், பில்லோ ரெண்டு எல்லாம் வாங்கிண்டு வரலாமா

ஓகே டன். சரி சரி போகலாம் வா

இருவரும் போய் வேண்டிய அனைத்தையும் வாங்கிக்கொண்டு வந்து எல்லாவற்றையும் அது அது இடத்தில் ஃபிக்ஸ் செய்தனர். இரண்டு கட்டில்கள் மட்டும் தான் குவார்டர்ஸில் தந்திருந்தார்கள் அதில் மெத்தைப்போட்டு புது பெட் ஷீட் விரித்து புது கவரிட்ட தலையணையை வைத்து விட்டு நவீனைப்பார்த்து…..

அப்பாடா எல்லாம் செட் பண்ணியாச்சு. நாளைக்கு காலைல சீக்கிரம் எழுந்து சுவாமிக்கு நெய்வேத்தியத்திற்கு கேசரி செய்து பூஜைப் பண்ணனும். அதுக்கப்புறம் என்னோட ரெகுலர் சமையலைத் தொடங்கனும்.

அதெல்லாம் ஓகே நாளைக்கு ஈவ்னிங் நாம ரெண்டு பேரும் என்னோட ஒன்னுவிட்ட சித்தி இங்க இருக்கா அவா ஆத்துக்கு டின்னருக்கு போகணும் சரியா

ஓ இங்கேயும் நம்ம சொந்த காரா இருக்காளா. சூப்பர். ஓ எஸ் போயிட்டு வரலாம்

நவீன்  போட்டதோ மூன்று முடிச்சு

அவன் பெற்றோர் போட்டதோ பல முடிச்சு

இன்று அதில் அவிழ்ந்தது ஒரு முடிச்சு

பிரேஸ்லட் என்னும் பொய் முடிச்சு…

நம்ம மிருதுளாவும் நவீனும் தனிக்குடித்தனம் தொடங்கிய இரண்டே நாளில் பர்வதம் ஈஸ்வரன் போட்ட முடிச்சுகளில் …பிரேஸ்லட் எனும் முதல் முடிச்சு அவிழ்ந்து இருவருக்கும் உண்மையை விளங்கச்செய்தது. இன்னும் எத்தனை முடிச்சுகள் வரிசையாக நம்ம மிருதுளா நவீன் மனம்விட்டுப் பேச ஆரம்பித்தால் அவிழப்போகிறதென்பதை வரும் நாட்களில் படித்து தெரிந்துக்கொள்வோம்.

தொடரும்……

சாபர்மதி ஆற்றின் மேற்குக் கரையில், குஜராத்தின் தலைநகரான காந்திநகரில் கால்லடி எடுத்து வைத்தாள் மிருதுளா. இரண்டு நாள் பயணித்தும் அசதியேதுமின்றி புத்துணர்ச்சியுடன் புதிய வாழ்க்கையை வாழ தனது முதல் அடியை நவீனுடன் எடுத்து வைத்ததும். ஆயியே ஆயியே மிஸர்ஸ் அன்ட் மிஸ்டர் நவீன், வாங்க வாங்க திருமதி மற்றும் திரு நவீன் அவர்களே, ரண்டி ரண்டி மிஸர்ஸ் அன்ட் மிஸ்டர் நவீன் சார். வரூ வரூ மிஸ்டர் அன்ட் மிஸர்ஸ் நவீன். காந்திநகரலெக்கு சுவாகதம். என அனைத்து மொழிக்காரர்களும் வரவேற்றனர். மிருதுளா அனைவருக்கும் வணக்கம் என்று கூறினாள். நவீன் தனது நண்பர்கள் அனைவரையும் மிருதுளாவிற்கு அறிமுகப் படுத்தினான். பின் அனைவருமாக அவர்களின் ஆர்மி வண்டியில் ஏறி காந்திநகர் யூனிட்டுக்குள் சென்று ஒரு சிறிய வீட்டின் முன் நிறுத்தினர். 

அதுதான் நவீன் மிருதுளாவிற்காக பார்த்துவைத்திருந்த வீடு. அனைவரும் இறங்கி பெட்டிகள் அனைத்தையும் வீட்டினுள் வைத்துவிட்டு அவர்களை ஃப்ரெஷ் ஆக சொல்லிவிட்டு விடைப்பெற்றனர். மிருதுளா வீட்டைச்சுற்றிப்பார்த்தாள். ஒரு பெரிய ஹால் நடுவில் ஒரு சுவர் தடுப்பு, டாய்லெட் பாத்ரூம், மிக சிறிய அடுப்படி, அடுப்படி வழியே வீட்டின் பின்புறம் செல்வதற்கு கதவு. அவ்வளவேதான் அவள் வாழப்போகும் வீடு. அவள் எல்லாத்தையும் பார்த்துவிட்டு வருவதற்குள் நவீன் குளித்துவிட்டு வந்தான்…

என்ன மிருது வீடு ஓகே வா! இது எனக்கு அலாட் ஆன குவார்ட்ஸ் இல்லை. நான் வாடகைக்கு தான் எடுத்துருக்கேன். இன்னும் ஒரு ஆறு மாசத்தில நம்மளுக்குன்னு நம்ம வீடு அலாட் ஆகிடும். அது நல்ல ஸ்பேஷியஸா இருக்கும்.

எனக்கு வீடு ரொம்ப பிடிச்சிருக்கு. நாம ரெண்டு பேருக்கு இதே போறுமே!.

சரி நீ போய் சீக்கிரம் குளிச்சு ரெடி ஆகு

ஏன்

நம்மள ரிசீவ் பண்ண ஸ்டேஷன் வந்தார்ல பல்பீர் சிங் அவங்க வீட்ல பிரேக் ஃபாஸ்டுக்கு வரச்சொல்லிருக்கா. நாம அவா ஆத்துக்கு போனும் …ம்..ம்.. சீக்கிரம் ஆகட்டும்

டக் டக் டக் டக் என வீட்டின் கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்தான் நவீன். பல்பீர் சிங்கின் பத்து வயது மகள் கையில் ஒரு டிரே அதில் இரண்டு கப் டீ மற்றும் பிஸ்கெட்டோடு மலர்ந்த முகத்துடன்…

அங்கிள் பப்பா நே ஆப்கோ சாய் தேனே கேலியே போலாஎன்று தனது அப்பா நவீனுக்கும் மிருதுளாவும் டீ கொடுக்க சொன்னதாக கூறி டிரேவை நீட்டினாள். நவீன் அதை வாங்கிக்கொண்டு தாங்கள் இன்னும் சிறுது நேரத்தில் அவர்கள் வீட்டுக்கு வருவதாக பலபீரிடம் சொல்லச்சொல்லி அந்த சிறுமியிடம் டீ கொண்டு வந்ததற்கு தாங்க்ஸ் என்று ஹிந்தியில் சொல்லி அனுப்பிய பின் கதவை சாத்திவிட்டு உள்ளே வருவதற்குள் மிருதுளா ஃப்ரெஷ்ஷாகி வந்தாள்…

யாரு வந்தது. சரி நீங்க பேசிண்டு இருந்தேங்களா அதுதான் நான் போய் குளிச்சு ஃப்ரெஷ்ஷாயிட்டு வந்தேன். ஆமாம் இந்த காபியும் பிஸ்கெட்டெல்லாம் எங்கேர்ந்து வந்தது?”

இது காபி இல்லை டீ. இனி இங்க எங்க போனாலும் டீ தான் தருவா. காபி நாம நம்ம வீட்டுல போட்டு குடிச்சா உண்டு. இதை நமக்காக பல்பீர் வீட்டுலருந்து அவா பொண்ணுட்ட அனுப்பிருக்கா.

ஓ அப்படியா!!! சரி அவா நான்வெஜ் சாப்பிடுவாளா?”

ஆமாம், அவா பஞ்சாபி ஆச்சே நிச்சயம் சாப்பிடுவா. அதுனால என்ன? ஏன் இப்போ இதைக்கேட்ட?”

அச்சச்சோ அப்படீனா எனக்கு வேணாம். நான் அவா ஆத்துக்கும் டிஃபன் சாப்பிட வரலை

அவாளுக்குத் தெரியும் நாம நான்வெஜ் சாப்பிட மாட்டோம்ன்னு ஸோ அவா அதெல்லாம் செய்திருக்க மாட்டா. ஏதாவது வெஜ் டிஷ் தான் பண்ணிருப்பா அதனால நீ தைரியமா சாப்பிட வரலாம்

இல்லை அதுக்கில்லை….

என்ன இழுக்கற…என்ன உன் ப்ராப்ளம் தயங்காம சொல்லு மிருது

இதுவரைக்கும் நான் நான்வெஜ் சாப்பிடறவா ஆத்துல எல்லாம் சாப்பிட்டது இல்லை. அதுவும் இல்லமா என்னதான் அவா சைவ சாப்பாடு செய்திருந்தாலும் அதை அசைவம் சமைத்த பாத்திரங்களாக தானே இருக்கும் …ஸோ நான் சாப்பிடும் போது அந்த நினைப்பு வந்து எனக்கு வாந்தி வந்துடுத்துன்னா? “

ஹேய் நீ பேசறது அசட்டுத்தனமா இருக்கு. அவா என்ன பாத்திரங்களை தேய்த்து கழுவாமலா இருப்பா!!! என்ன இது …இனி இது மாதிரி எவ்வளவு கெட்டுகெதர் எல்லாம் நடக்கும் அப்போ எல்லாம் நீ எப்படி சாப்பிடுவ? சைவம், அசைவம் ரெண்டுமிருக்குமே! நானும் தான் நான் வெஜ் சாப்பிட மாட்டேன் ஆனா. வெஜ் டிஷ் யாரு சமைத்தாலும் எங்க வேணும்னாலும் சாப்பிடுவேன். நீ இப்போ வரலைன்னா அவா தப்பா எடுத்துப்பா. நீ வா கொஞ்சமா சாப்பிடு அதுக்கப்புறம் வேணும்னா ஏதாவது ஹோட்டலுக்கு போகலாம் சரியா

சரி நான் உங்களுக்காக ட்ரைப் பண்ணுறேன்

சரி எனக்கு ஒரு டவுட் கேட்கட்டுமா?”

கேளுங்கோ

ஹோட்டல்ல சாப்பிடுவியா?”

ஓ எஸ்!! இஃப் இட்ஸ் வெஜிடேரியன் ஹோட்டல். இது என்ன டவுட்?”

அதுக்கில்லை வெஜிடேரியன் ஹோட்டல்ல சமைக்கரவா யாராவது நான்வெஜ் சாப்பிட்டுட்டு வந்து அதே கையாலா உனக்கு பொங்கல் செய்து தந்தா சாப்பிடுவியா?”

அய்யோ என்ன பேசறேங்கள் நவீன். இனி ஹோட்டல்ல எப்போ சாப்பிட்டாலும் இந்த நினைப்பு வந்து என்னை சாப்பிட விடாதே!!!!

அம்மா தாயே!!! இப்படி இருந்தே எனக்கு ரொம்ப கஷ்ட்டம்மா!!!

நீங்க மட்டும் அவா ஆத்துக்கு போயிட்டு உங்க வைஃப் ரொம்ப டையர்டா இருக்கானுட்டு சொல்லிடுங்கோளேன். எப்படி என் ஐடியா?”

அப்படி சொன்னாலும் அவா சாப்பாட்டை பேக் பண்ணி என்னிடம் குடுத்தனுப்பிடுவா…இதெல்லாம் தப்பு. மொதல்ல என் கூட அவா ஆத்துக்கு வா. உன்னை நிறைய மாத்த வேண்டியிருக்கும் போல தெரியறது…வா வா

அறை மனதுடன் நவீனுடன் சென்றாள் மிருதுளா. நண்பர் வீடு அடுத்தத் தெருவில் இருந்ததால் இருவரும் நடந்தே  அவர்கள் வீட்டுக்கு சென்றனர்.

ஆயியே ஆயியே!!! நியூலி வெட்டெட். வாங்க வாங்க வண்கம்!! ஹவ் ஈஸ் மை டமில்

அச்சா ஹை”  நல்லா இருக்கு என்று மிருதுளா பதிலளித்ததும் பல்பீர் 

உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?” 

ஓரளவு தெரியும். நல்லா புரிஞ்சுக்குவேன் ஆனால் பேச கொஞ்சம் பயம். ஸ்கூல்ல படிச்சிருக்கேன்.என்று சரளமாக ஹிந்தியில் பதிலளித்தாள்.

பல்பீரின் மனைவி லெஷ்யா

இங்க வந்துட்டிங்க என் கூட பேசி பேசி கூடிய சீக்கிரம் பஞ்சாபியும் பேசப்போறீங்க பாருங்க” 

என்று பேசிக்கொண்டே டிஃபன் பரிமாறினார்கள். மிருதுளா நவீனைப் பார்க்க நவீன் சாப்பிடு என்று கண்ணசைக்க அதைப்பார்த்த லெஷ்யா..

கவலை வேண்டாம் அனைத்தும் வெஜ்டேரியன் தான். சாப்பிடுங்கள்என்றாள்

மிருதுளா மெல்ல எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள். ஒரே ஒரு பரோட்டாவோடு போதும் என்று சொல்லி எழுந்தாள். அனைவரும் டிஃபன் சாப்பிட்டப்பின் உட்கார்ந்து சிறிது நேரம் பேசிவிட்டு வீட்டிற்கு சென்றனர். 

என்ன மிருதுளா வாமிட்  வந்ததா?”

வரமாதிரி இருந்தது ஆனா அப்படியே அடக்கிண்டுட்டேன்.

எல்லாத்துக்கும் உன் மனசு தான் காரணம் தெரியுமா!! நீ மனசுல இருக்கும்வாந்தி வந்திடும்என்கிற எண்ணத்தை அழிச்சுடு எல்லாம் சரியாகிடும்

கொஞ்சம் நாளாகும் ஆனா நிச்சயமா என்ன மாத்திக்க முயற்சிப் பண்ணறேன் உங்களுக்காக

சரி நீ சரியாவே சாப்பிடலயே ஹோட்டலுக்கு போலாமா?”

இல்லை இல்லை வேண்டாம் அவா குடுத்த அந்த ஒரு பரோட்டாலயே பசி அடங்கிடுத்து

ஆமாம் உனக்கு ஹிந்தி தெரியும்ன்னு நீ சொல்லவே இல்லையே. இன்னைக்கு நீ அவாள்ட்ட பேசும்போது எனக்கு ஆச்சர்யமா இருந்தது தெரியுமா

நீங்க என்கிட்ட கேட்கலை நானும் சொல்லலை. ஏன் ஆச்சர்யம்!!!சரியா தானே பேசினேன்!!

கரெக்ட்டா பேசின ஒரு தப்பும் இல்லை. இது மாதிரி பேச பேச இன்னும் சரளமா வந்திடும். மத்தியானம் நாம நம்ம ராமகிருஷ்ணன் வீட்டுக்கு லஞ்சுக்கு போகணும். அவா வீடு இந்த காம்ப்புக்கு வெளியே இருக்கு நாம நம்ம பைக்ல போயிட்டு வந்திடலாம் அதுவரைக்கும் ரெஸ்ட் எடுத்துக்கோ. ஈவ்னிங் எங்க போகலாம் டெம்பிள் ஆர் பார்க்?”

கோவில் போயிட்டு பார்க் போகலாம் டைம் இருந்தா

கோவில் 7:30 மணி வரைக்கும் திறந்திருக்கும் ஆனா பார்க் ஏழு மணி வரைதான் ஓப்பனா இருக்கும்.

அப்போ இன்னைக்கு கோவிலுக்கு மட்டும் போயிட்டு வருவோமா? கல்யாணமாகி மொதோ மொதோ இந்த ஊருக்கு வந்திருக்கேன் கோவிலேர்ந்தே ஆரம்பிக்கலாமேன்னுட்டு தான் சொன்னேன்… உங்களுக்கு பார்க் போகணுமா

இல்லை இல்லை உன் விருப்பம் எதுவோ அதுபடியே செய்வோம். இங்கேருந்து ஒரு பத்து நிமிஷத்துல ஒரு அம்மன் கோவில் இருக்கு. இன்னைக்கு அங்க போயிட்டு அப்படியே டின்னர் வெளியே சாப்பிட்டுட்டு வருவோம்.  நாளைக்கு காலைல சுவாமிநாராயண் கோவில் அக்ஷர்தாம்ன்னுட்டு இருக்கு. ரொம்ப அழகா இருக்கும், அதுக்கு கூட்டிண்டு போறேன்.

நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஓகே ஈவ்னிங் அப்போ நீங்க சொன்னப்படியே செய்யலாம்.

இருவரும் சற்று நேரம் படுத்துறங்கிறனர். பின் நண்பர் வீட்டில் மத்திய உணவருந்த கிளம்பினார்கள். நவீன் தனது பைக்கை துடைத்து சுத்தமாக வைத்திருந்தான் அதன் ஹான்ட்பாரில்  “மிருதுஎன்று ஸ்டிக்கர் ஒட்டியிருந்ததைப்பார்த்து …

இது யாரு மிருது?” என்றாள் மிருதுளா

ஓ அது என் லவ்வர் பெயர்.

ஓ உங்களுக்கு லவ்வர் எல்லாம் இருக்காளோ?”

ஏன் இருக்கக்கூடாதோ!

இருக்கலாமே எனக்கு ஒருநவீஇருப்பதுப்போல் உங்களுக்கு ஒரு மிருது இருந்துட்டுப்போட்டுமே” 

என்று சிறு புன்னையுடன் மிருதுளா கூற, நவீனும் புன்னகைக்க…

சரி வந்து பைக்ல ஏறு

மிருதுளா ஏறி உட்கார சிரமப்படுவதைப்பார்த்த நவீன் …

ஏன் இவ்வளவு கஷ்டப்படறாய் சும்மா ஏறி உட்கார்ந்துண்டு என்னை பிடிச்சுக்கோஎன்றான்

திருமணமான நாளிலிருந்து அன்றுதான் முதன் முதலாக இருவரும் சற்று ஃப்ரீயாக பேசத்தொடங்கினார்கள். மிருதுளா பைக்கில் ஏறி நவீனை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள், ஏனெனில் அன்றுதான் முதல் முறையாக பைக்கில் ஏறுகிறாள் என்பதால் சற்று பயத்துடனே பயணித்தாள். நண்பன் வீட்டில் விருந்துண்டு இருவருமாக வீட்டுக்கு வந்து சற்று ஓய்வெடுத்து விட்டு மீண்டும் குளித்து ஆடைகளை மாற்றிக்கொண்டு கோவிலுக்கு பைக்கில் சென்றனர். அம்மனை தரிசனம் செய்துவிட்டு சற்று நேரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர் பின் அங்கிருந்து நவீன் அவன் நண்பர்களுடன் எப்பொழுதும் வீக்என்டில்  சாப்பிடும் ஒரு சிறிய டாபாவிற்கு அழைத்துச்சென்று…

இதுதான் நான் என் ஃப்ரெண்ட்ஸ் கூட ரெகுளரா சாப்பிடற டாபா. சாப்பாடு ரொம்ப சூப்பரா இருக்கும் அன்ட் இது ஷுத்த ஷாக்காஹாரி டாபா. ஊப்ஸ்…சுத்தமான சைவ ஹோட்டல்

எனக்கு புரிஞ்சுதே! என்னத்துக்கு டிரான்ஸிளேட் பண்ணினேங்கள்!

ஓ !!! உனக்கு ஹிந்தி தெரியும் என்பதை மறந்துட்டேன். சரி வா சாப்பிடலாம்

நம்ம மிருதுளாவின் குஜராத்தில் முதல் நாள் இனிதே முடிந்தது. அவர்களும் சற்று நிம்மதியாக அவர்கள் நேரத்தை அவர்களுக்கானதாக்கிக்கொள்ளட்டும்.

தொடரும்….

ஊருக்கு செல்ல விடியற்காலையில் எழுந்து தயார் ஆகி, கொண்டு செல்ல வேண்டிய பெட்டிகள் அனைத்தையும் மாடியிலிருந்து கீழே எடுத்து வந்து வைத்துவிட்டு, ஈஸ்வரன் பர்வதம் காலில் விழுந்து நமஸ்காரம் செய்தனர் நவீனும் மிருதுளாவும். ராமானுஜம்அம்புஜம் மற்றும் வேனு(காலேஜ் காக்கி யூனிஃபார்மில்) காரில் வந்திறங்கினர்.

அவர்களைப்பார்த்த மிருதுளா…

என்னடா வேனு உன் லாப் டிரஸ்லயே வந்திருக்க?”

ஆமாம் மிருதுக்கா உன்னை டிரெயின் ஏத்திட்டு அப்படியே காலேஜ் போகனும். சரி சரி நான் போய் அந்த பெட்டி எல்லாத்தையும் கார்ல ஏத்தட்டும்

வேனுவும் பவினுமாக பெட்டிகளை காரின் மேலே வைத்து கட்டினார்கள். 

அம்புஜம் காரிலிருந்து ஒரு பெரிய பை முழுவதும் மாங்காயும் ஒரு பை முழுவதும் தேங்காயும் கொண்டு வந்து பர்வதத்திடம் கொடுத்து…

இந்தாங்கோ மாமி இந்த தேங்காய், மாங்காய் எல்லாமும் எங்காத்துல காச்சது. நேத்து பறிச்சோம் சரி உங்களுக்கும் உங்க மச்சினர் பொண்ணுக்கும்னு நாலு பை ல போட்டு எடுத்துண்டு வந்தோம். இது உங்களோடது.

இவ்வளவும் மா!!! இதே மாதிரியா மீணு ஆத்துக்கும் கொண்டுவந்திருக்கேங்கள்?”

ஆமாம் மாமி இதே மாதிரி ரெண்டு பை தான் அவா ஆத்துக்கும் எடுத்துண்டு வந்திருக்கோம்

அவா ஆத்துல மீணு அவ ஆத்துக்காரர் சேகரன், பொண்ணு லீலா மட்டும் தான் இருக்கா அவாளுக்கு இவ்வளவெல்லாம் தேவையில்லை

அப்படியா சரி இருங்கோ …டேய் வேனு அந்த இரண்டு பையையும் எடுத்துண்டு வா

இந்தாங்கோ மாமி இதுதான் அவாளுக்குன்னு எடுத்துண்டு வந்தது. இதுல எவ்வளவு அவாளுக்கு குடுக்கணுமோ அதை மட்டும் எடுத்துக்கோங்கோ மீதியை நீங்களே வச்சுக்கோங்கோ

என்று இரண்டு பைகளையும் பர்வதத்திடம் கொடுத்தாள் அம்புஜம். அதிலிருந்து நாலே நாலு மாங்காய் நாலு தேங்காயை மட்டும் ஒரு பையில் போட்டு அம்புஜத்திடம் கொடுத்து..

இத அவாளுக்கு குடுங்கோ போதும்

இது போதுமா !!! சரி அப்படியே ஆகட்டும் மாமிஎன்று அம்புஜம் அதை வாங்கி காரில் வைக்கச்சொல்லி வேனுவிடம் கொடுத்தனுப்பினாள்.

அவ்வளவு குடுத்தும் அந்த பர்வதத்திற்கு மற்றவர்களுக்கு குடுக்க கை வராததில் எந்த ஆச்சர்யமும் இல்லை. ஏனெனில் அது தான் அவள் சுபாவம். எல்லாரும் எல்லாமும் தனக்கு செய்ய வேண்டும் தர வேண்டும் ஆனால் அவள் யாருக்கும் எதுவும் செய்யவும்மாட்டாள் குடுக்கவும்மாட்டாள். அப்படி ஒரு பாலிசியை கடைப்பிடித்து வரும் உத்தமி ஆச்சே.

 எல்லாரும் ரெடி ஆனதும் ஈஸ்வரன்…

சரி எல்லாம் எடுத்துண்டாச்சா நவீன்?”

எஸ் எல்லாம் எடுத்தாச்சு

அப்போ எல்லாரும் கிளம்பலாமா?”

சரி நீங்க எல்லாரும் கார்ல வாங்கோ நாங்க டிரெயின் ல வரோம். நீங்க நேரா நம்ம பெரியப்பா பொண்ணு மீணு ஆத்துக்கு போயிடுங்கோ நாங்களும் அங்கு வந்திடறோம். சரியா

ஓகே டன்

என்னதான் சாப்பாடு கட்டிக்கொள்ள வேண்டாமென்று பர்வதம் சொன்னாலும் அம்புஜம் அனைவருக்கும் எலுமிச்சை சாதம், தயிர்சாதம், துவயல், அப்பளம் வடாம் எல்லாம் கட்டிக்கொண்டு வந்திருந்தாள்‌. மிருதுளாவிடம்  மூன்று சாப்பாடு பார்சலை டிரெயினில் சாப்பிடுவதற்காக கொடுத்தாள். ஏனெனில் அவர்கள் சென்னை சேரும் போது மதியம் இரண்டரை மணி ஆகிவிடும். மிருதுளா தன் அம்மாவிடம்..

தாங்க்ஸ் மா

என்னத்துக்கு இப்போ தாங்க்ஸ் எல்லாம். சரி சரி நீங்க ரெண்டு பேரும் அந்த கார்ல ரெயில்வே ஸ்டேஷனுக்கு கிளம்புங்கோ. நாங்க இந்த கார்ல பின்னாடியே நம்ம வேனுவ பஸ் ஸ்டாப் ல விட்டுட்டு ஸ்டேஷன் வரோம்.

அந்த வீட்டிற்கு வெளியே வந்ததும் அப்பாடா என மிருதுளா மனதிற்குள் ஒரு வினாடி தோன்றியது ஆனால் போக இருக்கும் இடம் எப்படியோ என்னவோ!! நவீனை இன்னும் சரியாக புரிந்துக்கொள்ளவும் இல்லை. அவன் எப்படி தன்னை பார்த்துப்பானோ!!! என்ற எண்ணங்களுடன் காரில் ஏறினாள், அவள் பின்னாலேயே நவீனும் ஏறினான். கார் ஸ்டேஷனை நோக்கி பயணிக்க தொடங்கியது. எல்லா கல்யாணமான பெண்களுக்குள்ளும் இருக்கும் பரிதவிப்பு மிருதுளாவையும் தொற்றிக்கொண்டது. 

ஸ்டேஷன் வந்ததும் காரிலிருந்து இறங்கி ஒரே ஒரு கைபையுடன் அவர்கள் ரெயில் நிற்கும் பிளாட்பாரத்தில் ரெயிலுக்காக காத்திருந்தனர். மற்ற அனைவரும் பின்னாலேயே வந்து சேர்ந்தனர். வேனுவும் அவர்களுடன் வந்திருப்பதைப்பார்த்த மிருதுளா…

டேய் வேனு நீ காலேஜுக்கு போகலையா இங்க வந்திருக்க?”

இல்ல அக்கா எனக்கும் சென்னை வந்து உன்னை வழியனுப்பனும்முன்னு ஆசையா இருக்கு அதுதான் வந்துட்டேன்

கார்ல இடமிருக்கா நீங்க எல்லாருமா வரத்துக்கு?”

அதெல்லாம் நாங்க பார்த்துக்கறோம் இதோ டிரெயின் வந்துடுத்து நீங்க ஏறுங்கோ. சென்னையில் பார்ப்போம்

நவீனும் மிருதுளாவும் டிரெயினில் ஏறியதும் மற்ற அனைவரும் காரில் ஏறி சென்னைக்கு புறப்பட்டனர். டிரெயினும் கிளம்பியது. சென்னைப் போய் சேர ஐந்து மணிநேரமாகும் என்று நவீன் சொல்ல …

ஐந்து மணி நேரமா. அதுவரைக்கும் என்ன செய்ய போர் அடிக்குமே

இதோ இந்த புத்தகத்தைப்படிச்சு முடிக்கவும் சென்னை வரவும் சரியா இருக்கும் தெரியுமா? நான் ஒவ்வொரு முறை வரும்போதும் இதைத்தான் செய்வேன்

ஆனா எனக்கு புக்கு படிக்கும் பழக்கம் இல்லையே” 

என்று கூறிக்கொண்டே ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டே வந்தவள் உறங்கிப்போனாள். சில மணி நேரமானதும் அவளை எழுப்பினான் நவீன். அவளும் எழுந்தாள் மணியைப் பார்த்தாள் மணி ஒன்று என காட்டியது…

ஓ!! நல்லா தூங்கிட்டேன்

ஆமாம் அதனால தான் உன்னை தொந்தரவு செய்யலை. ஆனா எனக்கு பசிக்க ஆரம்பிச்சிடுத்து. அதே மாதிரி உனக்கும் பசிக்குமேனுட்டு தான் எழுப்பினேன். உனக்கு சாப்பிட என்ன வாங்கிண்டு வரட்டும்?”

ஆமாம் எனக்கும் பசிக்கறது. என்னத்துக்கு வாங்கணும்? என் அம்மா நம்மளுக்கு சாப்பாடு கட்டிக்குடுத்திருக்காளே. அந்த பையை மேலிருந்து எடுங்கோ.

ஓ அப்படியா!!! இந்தா பையைப் பிடி. என்ன குடுத்தனுப்பிருக்கா?”

இந்தாங்கோ உங்களுக்கு இரண்டு பொட்டலம். ஒன்னு எலுமிச்சை சாதம் இன்னொன்னு தயிர் சாதம். இதோ வடாமும் தந்திருக்கா. இது எனக்கு.

உனக்கு ஏன் ஒரு பொட்டலம் தான்?”

நான் தயிர் சாதம் சாப்பிட மாட்டேன். எனக்கு தயிர், மோர் பிடிக்காது

ஓ !!! அப்போ நீ தயிர் சாதமோ மோர் சாதமோ சாப்பிட்டதே இல்லையா? அது எப்படி முடியும்” 

இல்லை நான் சாப்பிட்டதே இல்லை. அது அப்படி தான். சும்மா பேசாம சாப்பிடுங்கோ. எப்படி இருக்கு

சூப்பரா இருக்கு. லெமென் ரைஸும் தயிர் சாதமும் ரெண்டுமே சூப்பரோ சூப்பர் மிருது.

என் அம்மா நல்லா சமைப்பா. என் அப்பாவும் நல்லா சமைப்பா.

எனக்கெல்லாம் சாப்பிட மட்டும் தான் தெரியும் பா. ஹா! ஹா! ஹா!

சரி நான் கையை அலம்பிட்டு வரேன்

இருவரும் சாப்பிட்டப்பின் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தனர் அப்பொழுது மிருதுளாவிற்கு முன்தினம் இரவு நவீன் தன் அப்பாவிடம் காசு கேட்டுக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. அதைப்பற்றி கேட்கலாமா வேண்டாமா என்று தனக்குள்ளேயே மாறி மாறி கேட்டுக் கொண்டிருக்கையில்…

மிருது மிருது ஹேய் மிருதுளாஎன்று நவீன் கூப்பிட்டது காதில் விழ

என்ன …என்ன சொன்னேங்கள் நவீன்

சரியா போச்சுப் போ அப்போ இவ்வளவு நேரமா நான் பேசினது எதுவுமே நீ கேட்காம அப்படி என்னத்த யோசிச்சுண்டிருக்க?”

அது ஒன்னுமில்லை எப்போ சென்னை வரும்ன்னுட்டு தான் நினைச்சுண்டிருந்தேன்

இன்னும் ஒரு அஞ்சு நிமிஷத்துல ரீச் ஆகிடுவோம். அங்கேருந்து மீணு ஆத்துக்கு எலக்ட்ரிக் டிரெயின் பிடிச்சு போகணும். சரி என் பின்னாடியே வா சரியா

சரி சரி நீங்க போங்கோ நான் வரேன்

இருவரும் இறங்கி எலக்ட்ரிக் டிரெயினில் ஏறினார்கள். மிருதுளாவிற்கு எலக்ட்ரிக் டிரெயினில்  ஏறியதும் அலைப்பாயுதே படத்தில் வரும் மாதவன் நடித்த சீன் ஞாபகம் வர உடனே சிரித்தாள். அதைப்பார்த்த நவீன் 

ஏன் சிரிச்ச என்ன ஆச்சு

ஒன்றுமில்லை ஒன்ன நினைச்சேன் சிரிப்பு வந்ததுஎன்று புன்னகைத்தாள்.

சரி நாம இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்தாச்சு வா வா சீக்கிரம் வா

அதுக்குள்ளேயே வந்தாச்சா? இதோ வந்துண்டே இருக்கேன்

வெளியே வந்ததும் இருவரும் ஆட்டோவில் ஏறி மீணு வீட்டைச் சென்றடைந்தனர். அங்கு அவர்களுக்கு முன்னால் அவர்கள் பெற்றோர்கள் மற்றும் தம்பிகள் அங்கிருந்தனர். மீணுவும், சேகரனும் …

வா வா நவீன். வாம்மா மிருதுளா. வாங்கோ வாங்கோஎன்றழைத்தனர்

பின் அனைவருமாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் மீணு உள்ளே ஏதோ வேலை செய்துக்கொண்டிருந்தாள். மிருதுளா உள்ளே போய்…

அக்கா என்ன பண்ணறேங்கள்?”

உங்களுக்கு தான் சப்பாத்தியும் தக்காளித்தொக்கும் பண்ணிட்டிருக்கேன்

எங்களுக்கா எதுக்குக்கா?”

நல்லா கேட்டயே!! நீங்க ஊருக்கு போய் சேர இரண்டு நாள் ஆகுமாம் அதுவரைக்கும் சாப்பிட எதுவும் வேண்டாமா அதுக்குத்தான் செய்யறேன்

ஓ அப்படியா!! ரொம்ப தாங்க்ஸ் அக்கா

என்னத்த பேசறேங்கள் தம்பி பொண்டாட்டியும் நாத்தனாருமா?” என்று கேட்டுக்கொண்டே அடுப்படிக்குள் நுழைந்தாள் பர்வதம்.

ஒன்னுமில்லை சித்தி நம்ம மிருதுளா நான் என்ன செஞ்சிண்டிருக்கேன்னு கேட்டா அதுக்கு பதில் சொல்லிண்டே இருந்தேன் நீங்க வந்துட்டேங்கள்

ஓ சரி சரி சரி நான் பாத்ரூம் போயிட்டு வரேன்

சரி சித்தி. ஓகே மிருதுளா இதுக்கு மேலே நாம ரெண்டு பேரும் பேசிண்டிருந்தா அவ்வளவு தான் சித்தி ஏதாவது தப்பா எடுத்துப்பா அதனால நீ போய் அவா கூட உட்கார்ந்துக்கோ போ

ஏன்க்கா நான் உங்களோட பேசறதுல  என்னத்த தப்பா எடுக்க இருக்கு?” நாமளும் எதுவும் தப்பா பேசலையே!

அதெல்லாம் உனக்கு இப்போ புரியாது மிருதுளா. சித்தி நிச்சயம் தப்பாதான் எடுத்துப்பா. எனக்கு தெரியும். எதுக்கு வீணா அதுக்கு இடம் கொடுக்கணும். வேண்டாம்மா நீ போய் அங்க உட்கார்ந்துக்கோ. இதோ என் வேலைகளும் ஆயாச்சு பின்னாடியே நானும் வரேன். போம்மா போ.

சரி அக்காஎன்று ஹாலில் வந்தமர்ந்தாள் மிருதுளா.

இரவு டிஃபன் அனைவருமாக அமர்ந்து அருந்தினார்கள். பின்பு நவீனும் மிருதுளாவும் குளித்து ஆடைகளை மாற்றிக்கொண்டு கிளம்பினார்கள். ஒரு கார் வரவழைத்தனர் பின் அனைவருமாக இரண்டு காரில் ஏறி ரெயில்வே ஸ்டேஷனை சென்றடைந்தனர். நவீன் மிருதுளா செல்ல வேண்டி டிரெயின் பிளாட்பாரத்தில் நின்றுக்கொண்டிருந்தது. வேனுவும் பவினும் அனைத்துப்பெட்டிகளையும் டிரெயினில் ஏற்றினார்கள் பின் நவீன்

 “அனைவருக்கும் பை சொல்லிட்டு வண்டில ஏறு மிருதுஎன்றான்

அதை கேட்டதும் மிருதுளாவிற்கு அழுகை வந்தது. அதுவரை ஏதோ தனது பெற்றோர் தம்பி அனைவரும் கிட்டத்தில் தானே இருக்கிறார்கள் என்றிருந்தவள்  இப்பொழுது அவர்களைப் பிரிந்து ரொம்ப தூரம் போக போகிறாள் என்பதை உணர்ந்தாள். அவளால் அழுகையை கட்டுப்படுத்திக்கொள்ள முயன்றும் முடியாமல் அழுதாள். அதைப்பார்த்த அம்புஜமும் அழ ஆரம்பித்தாள். உடனே பர்வதம்…

என்னதிது கல்யாணமாகி அவ புருஷன் கூட தானே போறா! நாங்க எங்களோட இருக்க சொல்லியும் போகத்தான் வேணும்ன்னு அடம் பிடிச்சு கிளம்பினா!!! அப்புறம் என்னத்துக்கு இப்படி மாறி மாறி அழறேங்கள். எங்க நவீனும் தான் போறான் அதுக்கு என்ன நாங்க எல்லாரும் அழறோமா என்ன?”

அம்புஜம் சுதாரித்துக்கொண்டு மிருதுளாவை சமாதானம் செய்து நவீனிடம்…

எங்க பொண்ண பத்திரமா பார்த்துக்கோங்கோ. உங்களை நம்பித்தான் அத்தர தூரம் அனுப்பறோம். அவளை நல்லப்படியா பாத்துக்கோங்கோ.

நீங்க கவலைப்படாதீங்கோ. அதெல்லாம் அவா பார்த்துப்பா. மொதல்ல நீங்க அழறத நிப்பாட்டுங்கோஎன்றார் ஈஸ்வரன்

வேனு தனது அம்மாவின் தோளில் கையைப்போட்டு தட்டிக்கொடுத்தான். 

மிருதுளா டிரெயின் கிளம்பப்போறது ஏறு சீக்கிரம்என்றான் நவீன்.

அம்மா அப்பா வேனு நான் போயிட்டு வரேன்.

போயிட்டு லெட்டர் போடுமா மிருது. பொறுமையா இருமா. எதுவானாலும் அனுசரிச்சு போமா. மாப்ள மிருது வ பத்திரமா பார்த்துக்கோங்கோ”  என்று டிரெயின் மெல்ல நகர ஆரம்பித்தும் அது கூடவே நடந்தும் மெல்ல ஓடியும் கூறிக்கொண்டே சென்றனர் மிருதுளாவின் அம்மாவும் அப்பாவும், வேனுவும்.  சிறிது நேரத்தில் டிரெயின் அவர்கள் கண்களில் இருந்து மறைந்து போனது. 

மிருதுளா ஜன்னல் வழியாக அழுதுகொண்டே பார்த்துக்கொண்டிருந்தாள். நவீன் அவள் கண்களைத் துடைக்கச் சொன்னான். பின் அவளிடம் பேச்சுக்கொடுத்து சற்று சமாதானப்படுத்தினான்.

வேனு அவன் அம்மாவை அணைத்துப்பிடித்துக்கொண்டு சமாதானம் படுத்திக்கொண்டே அனைவருமாக காரில் ஏறி ஊருக்குப்புறப்பட்டனர். 

மிருதுளா தனது வாழ்வின் அடுத்த முக்கிய அத்தியாயத்தை நோக்கி ஒரு புதிய பயணத்திற்கு புறப்பட்டு விட்டாள். அவளுக்கு அடுத்தடுத்து என்னென்ன காத்திருக்கிறது! என்னவெல்லாம் நடக்கவிருக்கிறது என்பதைப்பற்றி வரும் வாரங்களில் படித்து தெரிந்துக்கொள்வோம். 

நம்ம மிருதளாவையும் நவீனையும் குஜராத்துக்கு வழியனுப்ப ரெயில்வே ஸ்டேஷன் வரை வந்திருந்தமிருதுளா என்ன ஆனாள்?” வாசகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வரும் செவ்வாய் முதல் அனைவரும் குஜராத்தில் நமது பயணத்தை மேற்கொள்வோம் வாருங்கள் என அனைவரையும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தொடரும்….. 

மறுநாள் காலை விடிந்தது. மிருதுளா யாராவது வந்து கதவை தட்டி விட போகிறார்களோ என்ற பயத்தில் அலாரம் வைத்து ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து கீழே போனாள்.  வாசல் கதவு சாத்தி இருந்தது. அனைவரும் உறங்குகிறார்கள்  அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என எண்ணி (இதுதான் மனிதாபிமானம்) பாத்ரூம் டாய்லெட் எல்லாமே வீட்டுக்கு வெளியே இருந்ததால் குளித்து ரெடியாகி துணிகளை காயவைக்க மாடிக்கு போய் துணிகளை கொடியில் காயவைத்துக்கொண்டிருக்கையில் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என பெல் ஒலித்தது. நவீன் சட்டென்று எழுந்தான்.

என்ன அது மறுபடியும் பெல் சத்தம்என கண்களை கசக்கிக்கொண்டே ரூமை விட்டு வெளியே வந்தவன் மிருதுளா துணிகளை கொடியில் போட்டுக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டே கீழே சென்று…

என்ன ஒரு பெல் சவுன்டு அது ? நேத்தே கேட்கனும்னு நினைச்சேன் மிருது பேரன்ட்ஸ் இருந்ததால அப்படியே விட்டுட்டேன். இது என்ன புதுசா பெல்லு? யார் பண்ணின வேலை இது?”

ஆமாம் உன் பொண்டாட்டிய ஒவ்வொரு தடவையும் கீழேருந்து கத்தி கத்தி கூப்பிட முடியாது அதுவும் இல்லாம அவள எழுப்பிவிட நாங்க மேல ஏறி வந்து கதவெல்லாம் தட்ட முடியாது அதனால தான் இந்த பெல்லை ஃபிக்ஸ் பண்ணினோம் நேத்து. அப்படி பெல் அடிச்சும் உன் ஆத்துக்காரி எழுந்து வந்தாளா?”

ஏதாவது பேசனமேனுட்டு பேசாதே. அவ எழுந்து குளிச்சு துணியை எல்லாம் தோச்சு மாடில காய வச்சிண்டிருக்கா. அவ எப்பவோ எழுந்துண்டாச்சு. மொதல்ல அந்த பெல்லை கழட்டி எறிங்கோ. அதோட சத்தம் ஸோ இரிடேட்டிங். இந்த தெருவுல எல்லாரையும் எழுப்பிருக்கும் அதோட சத்தம்

என்று சொல்லிவிட்டு பல் துலக்க சென்றான் நவீன்‌. மிருதுளா கீழே வந்து துணி கொண்டுபோன பக்கெட்டை பாத்ரூமுல வச்சுட்டு அடுப்படிக்குள் காபி போட சென்றவளைப் பார்த்து பர்வதம்…

இன்னைக்கு என்ன அதிசயமா காலங்காத்தால எழுந்திரிச்சிருக்க? நாங்க யாரும் எழுப்பாமையே!!!!

மொதோ ரெண்டு மூணு நாள் கல்யாண அசதில தூங்கிட்டேன். கல்யாண டென்ஷன்ல ஒரு வாரமா சரியாவே தூங்கலை அப்பறம் இது புது இடம் அதனால தூக்கம் வர கொஞ்சம் லேட் அனதாலதான் காலையில எழுந்திருக்க கொஞ்சம் லேட்டாச்சு. இப்போ அசதி இல்லை, இடம் பழகிடுத்து அதனால நல்லா தூங்கி காலையே எழுந்துட்டேன்

உன் அம்மா காலைல வரேன்னு சொல்லிருக்கா அதுனால எழுந்துன்ட்டு அதை எவ்வளவு அழகா மாத்தி சொல்லற

நான் சொன்னதுதான் உண்மையான காரணம் மா. ஏன் எல்லாத்துக்கும் தப்பாவே திரிச்சு விடறேங்கள்!என பொறுமை இழந்து கேட்டாள் மிருதுளா.

ஆமான்டிமா நான் தான் எல்லாத்தையும் திரிச்சுண்டு இருக்கேன் நீயும் உன் அம்மாவும் அப்படியே ரொம்ப உத்தமிகள் தான் பாரு

என்ன என்ன வேணுபம்னாலும் சொல்லிக்கோங்கோ ஏன் என் அம்மாவை எல்லாம் இழுக்கறேங்கள்?”

ஓ…. என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ நான் அப்பிடி தான் இருப்பேன்ங்கறயோ….என்ன காலங்காத்தால என்னோட சண்டை போட தான் ஃப்ரெஷ் ஆ இருக்கயோ

மிருதுளா தன்னை தானே சற்று நிதானித்துக் கொண்டு பின்…

சாரி மா. எழுந்துண்டாலும் குத்தம் சொல்லறேள்…எழுந்திரிக்களேனாலும் குத்தம் சொல்லறேள் அப்போ நான் என்ன தான் செய்யட்டும் நீங்களே சொல்லுங்கோ

நீ என்னத்தையோ செய் போ!

மிருதுளா இரண்டு டம்ளரில் காபி போட்டுக்கொண்டு ஹாலில் இருந்த நவீனிடம் ஒன்றை கொடுத்து விட்டு தானும் அமர்ந்து காபியை அருந்தலானாள். இவ்வளவு பர்வதம் பேசியும் அந்த வீட்டு ஆண்கள் யாருமே அவளை அடக்கவில்லையே!!! நவீனும் ஏதோ ஒன்றுமே நடக்காதது போல காபியை குடித்துக்கொண்டிருக்கிறானே!!  என்ற ஆச்சர்யம் நம் அனைவருக்கும் எழுகிறது அல்லவா? ஆனால் சில வீடுகளில் உள்ள மருமகள்களின் நிலைமை இதுதான். குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்க  வீட்டுக்கு தன்னை நம்பி வந்த பெண்ணை காத்து அவளுக்கு சுவாத்தியமான சூழலை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது எல்லா கணவன்மார்களின் தலையாய கடமையாகும்.  பல கணவன்மார்கள் இதை செய்ய தவறுவதால் அந்த பெண் பல இன்னல்களுக்கு ஆள் ஆகிறாள்.  இங்கு நவீனும் அப்படிப்பட்ட ஆண்களில் விதிவிலக்கல்ல. 

காபியை குடித்த பின் மிருதுளா அடுப்படிக்குள் சென்று என்ன டிஃபன் செய்ய வேண்டும் என பர்வதத்திடம் கேட்டாள். அதற்கு பர்வதம் அவளே செய்துக்கொள்வதாக சொன்னதால் மிருதுளா நவீனை பேக்கிங் செய்ய மாடிக்கு அழைத்துச் சென்றாள்.

இருவருமாக அவர்களின் துணிமணிகளை பேக் செய்தனர். பின் சீர் சாமான்களிலிருந்து மிருதுளாவிற்கு தேவையான பாத்திரங்களை மட்டும் ஒரு அட்டைப்பெட்டியில் பேக் செய்து மற்ற எவர்சில்வர் பாத்திரங்கள், பித்தளை, வெண்கலப் பாத்திரங்கள் எல்லாவற்றையும் தனிதனியாக அட்டைப்பெட்டியில் அடுக்கி பரண் மீது அடுக்கி வைத்துவிட்டு கீழே செல்லலாம் என்று கதவை சாத்தும்போது மறுபடியும் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என ஒலித்தது பெல். 

இத மொதல்ல கழட்டி எறியனும். அடிக்காதே என சொல்லிட்டும் ஏன் இப்படி அந்த பெல்லை அடிக்கறாளோ

என அலுத்துக்கொண்டே கீழே சென்றனர் நவீனும், மிருதுளாவும். கீழே ஹாலில் மிருதுளாவின் அம்மா அம்புஜமும், தம்பி வேனுவும் வந்திருந்தனர். பர்வதம் அவர்களிடம்…

உங்க பொண்ணு எப்ப பார்த்தாலும் மாடில போய் உட்கார்ந்துக்கறா எங்களால கத்தி கத்தி கூப்பிட முடியாததால இந்த பெல் ஃப்க்ஸ் பண்ணிருக்கோம். இது உங்க பொண்ணுக்கு பிடிக்கலை போல அதுதான் நவீன்ட்ட சொல்லி நேத்து நீங்க வந்திருக்கும் போது கூட கத்திண்டே வந்தானே…நீங்களும் கேட்டேளே!

என குற்றப்பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்தாள். நவீனும், மிருதுளாவும் அவர்களை வரவேற்றனர். அம்புஜம் இரண்டு அட்டைப்பெட்டிகளை பக்காவாக பேக் செய்து எடுத்து வந்திருந்தாள். மிருதுளாவிடம்…

மிருது இதுல மளிகை ஜாமான்கள் எல்லாம் ஒரு மாசத்துக்கு வேண்டியது இருக்கு. அதுல உனக்கு பிடித்த வத்தல் வடாம் எல்லாம் இருக்கு

அச்சசோ ஆல்ரெடி நாங்க ரெண்டு சூட்கேஸ் அன்ட் ஒரு பெரிய அட்டைப்பெடில பாத்திரங்கள் என மூணு லக்கேஜ் ஆயாச்சு இதுல இன்னும் ரெண்டு ஃபாக்ஸ் ஆ!!!என கேட்ட நவீனிடம்

என்ன நாமளா தூக்கிண்டு போகபோறோம் இங்கேருந்து பாதியை அப்பா அம்மா கார்ல எடுத்துண்டு வருவா நாம நம்ம சூட்கேஸை மட்டும் எடுத்துண்டு டிரெயின்ல போவோம்என்றாள் மிருதுளா. 

அம்மா நீ மாடியை பார்க்கவே இல்லையே வா காட்டறேன்

இல்ல மிருது பரவாயில்லை.

போங்கோ உங்க பொண்ணு கூப்பிடறாளோனோ போய் பார்த்துட்டுதான் வாங்கோளேன். உங்க பொண்ணுக்காக நாங்க கட்டின ரூமைஎன்றாள் பர்வதம்

மிருதுளாவும், அம்புஜமும், வேனுவும் மாடிக்குச்சென்றனர். ரூமைப்பார்த்ததும் வேனு..

என்ன மிருதுக்கா இந்த தமாதுண்டு ரூமுக்குள்ள வா நீயும் அதிம்ஸும் இருக்கேங்கள்!!! இட்ஸ் வெரி ஸ்மால் ஈவன் ஃபார் டூ ஆச்சே!!

டேய் வேனு மெதுவாடா அவா காதுல விழுந்திட போறது!

ஏம்மா இப்படி பயந்து சாகறாய். அவா என்ன உன்ன கடிச்சு திண்ண போறாளா என்ன?”

போடா உனக்கு இதெல்லாம் புரியாது. ஏண்டி மிருது நீ ஏன் அடிக்கடி மாடிக்கு வந்து உட்கார்ந்துக்கறாய்? கீழே அவளோட எல்லாம் பழகினா தானே உங்காத்து மனுஷால புரிஞ்சிப்ப அது படி நடந்துப்ப!

அம்மா நான் மாடிக்கு டிரெஸ் மாத்தவும், ராத்திரி தூங்கவும் மட்டும் தான் மேலே வருவேன். ஆனாலும் அவா ஏன் அப்படி சொன்னானு நீ அவாள்ட்ட தான் கேட்கனும்!

சரி சரி விடு. வாங்கோ கீழே போகலாம் இல்லாட்டி ஏதாவது சொல்லப்போறா. நாளைக்கு காலைல வரோம் மா. சரியா

கீழே வந்ததும்

ஓகே மாமி நாங்க கிளம்பறோம் நாழி ஆயிடுத்து. நாளைக்கு எல்லாருக்கும் மத்தியத்துக்கு சாப்பாடு நான் கட்டிண்டு வரட்டுமா?” என அம்புஜம் பர்வதத்திடம் கேட்க 

அதெல்லாம் என்னத்துக்கு போற வழியில் ஏதாவது கடைல சாப்பிட்டுக்கலாமேஎன்றாள் பர்வதம்

அப்போ சரி மாமி நாங்க நாளைக்கு கார்த்தால வந்திடறோம். மாமாட்டயும் சொல்லிடுங்கோ

என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச்சென்றனர் அம்புஜமும், வேனுவும். 

அவர்களை வழி அனுப்பிவிட்டு டிஃபன் சாப்பிட அடுப்படிக்குள் சென்றாள் மிருதுளா. அங்கு இரண்டே ரெண்டு இட்டிலி தான் மீதம் இருந்தது. நவீனிடம்..

நீங்க டிஃபன் சாப்பிடறேளா? கொண்டு வரட்டுமா?” 

நான் சாப்ட்டாச்சு நீ சாப்பிடு இப்பவே ரொம்ப லேட் ஆச்சு

அனைவரும் சாப்பிட்டு விட்டு மிதமிருந்ததுதான் அந்த இரண்டு இட்டிலி அதை தட்டில் போட்டுக்கொண்டு சட்னி பாத்திரத்தை தேடினாள் அது காலியாகி அலம்ப போடப்பட்டிருந்தது. சரி இட்டிலி பொடியாவது இருக்குமே என டப்பாக்களை திறந்து பார்த்தாள். இதை அனைத்தையும் கவணித்துக்கொண்டிருந்த பர்வதம் மெல்ல அடுப்படிக்குள் வந்து

நீ ரெண்டு தானே அன்னைக்கு சாப்பிட்ட அதனால்தான் அடுப்பை நிப்பாட்டிட்டேன். என்னத்த தேடிண்டிருக்க?”

இட்டிலி பொடியை தேடறேன்

அது திந்து போய் நாலு நாள் ஆச்சு. இப்போ தேடினா!!

அப்போ இட்டிலிக்கு எதை தொட்டுண்டு சாப்பிடுவேன்?”

இன்னைக்கு ஒரு நாள் தயிர் தொட்டுக்கோ

எனக்கு தயிர் மோர் பிடிக்காதே

அப்போ சக்கரையை தொட்டுக்கோ

என்னடா இது சோதனை என்றெண்ணி சக்கரையை தொட்டுக்கொண்டு ஒரு இட்டிலியை மட்டும் சாப்பிட்டுவிட்டு ஹாலில் சென்று அமர்ந்தாள். பீன்ஸை கொண்டு வந்து மிருதுளாவிடம் கொடுத்து பொறியலுக்கு நறுக்கி வைக்க ச் சொன்னாள் பர்வதம். மிருதுளாவும் அவள் அம்மா நறுக்குவது போலவே பொடி பொடியாக நறுக்கி கொடுத்தாள். அதை பார்த்த பர்வதம்…

என்னதிது இப்படி வெட்டினேனா இரண்டு கிலோ பீன்ஸ் வேணும் நம்மாத்துக்கு…போ இந்த காரெட்டையும் நறுக்கு…கொஞ்சம் பெரிசாவே நறுக்கு. இவ்வளோ பொடியா நறுக்கிடாதே

காரெட்டை நறுக்கி கொடுத்துவிட்டு காய்ந்த துணிகளை எடுக்க மாடிக்கு சென்று எடுத்து அவள் துணிகளை மடித்து மாடி ரூமிலே வைத்துவிட்டு, மற்ற அனைவரின் துணிகளையும் மடித்து கீழே எடுத்து வந்து கட்டிலின் மேல் வைத்தாள்.

அன்று மாலை அனைவரும் ஒன்றாக ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது. நவீன்..

மிருது நம்ம கல்யாண பட்சணங்கள் எடுத்துண்டு போகனும். என் ஃப்ரெண்ட்ஸ் கேப்பா. ஒரு பத்து பாக்கெட் எடுத்துக்கோ போஎன சொன்னதும் மிருதுளா உள் ரூமுக்குள் சென்று பார்த்தாள் அங்கு அந்த அட்டப்பெட்டியை காணவில்லை. வெளியே வந்து பர்வதத்திடம் கேட்டாள் அதற்கு பரவதம்…

அதுவா அதெல்லாம் கெட்டுப்போச்சு குப்பைல தூக்கிப்போட்டுட்டேன்

அது எப்படி கெட்டு போகும் ஒரு மாசத்துக்கு நல்லா இருக்கும்னு கேட்டரிங் காரா சொன்னாளே

ஒரே சிக்கு வாடை அது தான் தூக்கிப்போட்டுடேன்

அவ்வளவையுமா!!! அக்கம் பக்கத்தில் குடுத்தயா இல்லையாஎன நவீன் கேட்க

கெட்டத எப்படி கொடுப்பேன் அதனால யாருக்கும் குடுக்கலை

என்ன சொல்லறேங்கள் மா அவ்வளவு பட்சணமுமா கெட்டு போயிடுத்து

என்ன இது ஏதோ நான் பொய் சொல்லறா மாதிரி கேட்கிற?”

என கூறிக்கொண்டே வெளியே பக்கத்துவீட்டு சிநேகிதிகளுடன் அரட்டை அடிக்கச்சென்றாள் பர்வதம்

சரி நோ ப்ராப்ளம் நவீன். உங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் ஒரு நாள் லஞ்ச்சுக்கு நம்ம ஆத்துக்கு கூப்பிடுவோம். நான் சமைக்கறேன். என்ன சொல்லறேங்கள்

ஓகே மிருது உன்னால அத்தனை பேருக்கும் சமைக்க முடியுமா?”

நான் இதுவரை சமைத்ததில்லை பட் நிச்சயமா டிரை பண்ணறேன் நவீன்“.

இப்படி ஊருக்கெல்லாம் சமைச்சு அவன் காச கறைக்க வா அவனோட போற?” என்றார் ஈஸ்வரன்

சற்று அமைதி நிலவியது. வெளியே இருந்து பர்வதம் மிருதுளாவை வரச்சொல்லி கூப்பிட்டாள். மிருதுளாவும் சென்றாள். அங்கிருந்த அக்கம் பக்கத்து வீட்டுப்பெண்கள் மிருதுளாவைப் பார்த்து..

ஏன் மா மிருதுளா கல்யாணமாகி வந்து பத்து நாள் ஆக போறது ..நவீன் கூட வெளியே போற வர மத்தப்படி உன்ன ஆளயே வெளில காணமே..என்னதான் பண்ணர வீட்டுக்குள்ளே?” 

எனக்கு வெளில வந்து இப்படி நின்னுண்டு பேசி எல்லாம் பழக்கம் இல்லை. சாரி அதுனாலதான் வரலை

இதுக்கு ஏன்மா சாரி எல்லாம் சொல்லுற!! நீ உங்க மாமியார் பர்வதத்துக்கு நேர் எதிரா இருக்கமா. உன் மாமியார் எப்பப்பாரு வெளில யார் வீட்டுக்குள்ளயாவது உட்கார்ந்து பேசிகிட்டே இருப்பாங்க. என்ன பர்வதம் உங்களுக்கும் உங்க மாட்டுப்பொண்ணுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது போல தெரியுதே!” 

என பர்வதம் நினைத்தபடி இல்லாமல் அவளுக்கு எதிராக அவள் செயல் திரும்ப உடனே ..

ஏய் மிருதுளா போய் குக்கர்ல சாதம் வை போ. இதோ நானும் வரேன்.

என்று கூறி மிருதுளாவை வீட்டுக்குள்ளே அனுப்பினாள் பர்வதம். உள்ளே நுழைந்த மிருதுளா கண்ட காட்சி அவளுக்கு அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் அளித்தது. நவீன் தன் தந்தையிடம்…

நாளைக்கு ஊருக்கு கிளம்பனும் அதற்கு பணம் வேணும்என்று கேட்டுக்கொண்டிருந்தான். அதற்கு ஈஸ்வரன் ஒரு கட்டு பணத்திலிருந்து மூவாயிரம் எடுத்து நவீனிடம் கொடுத்து …

அடுத்த மாசமே திருப்பி அனுப்பிடனும் என்ன சரியா!!என்று கூறி கொடுத்தைக்கண்டாள். 

சம்பாதிக்கும் என் கணவன் ஏன் சம்பாதிக்காத தந்தையிடமிருந்து பணம் கேட்டு வாங்க வேண்டும். சிறு வயது முதல் குடும்பத்தை காப்பாத்தி வந்திருக்கும் நவீன் ஏன் காசுக்காக அவர் தந்தையிடம் நிற்கிறார்!!!என பல எண்ணங்கள் அவள் மனதில் அந்த காட்சியை கண்ட சில மணி துளிகளில் உதித்தது. அவள் வருவதைக்கண்ட ஈஸ்வரன் ..

சரி சரி இப்போ போய் உன் வேலைகளை பாருஎன நவீனிடம் கூற நவீனும் அந்த ரூமிலிருந்து வெளியே சென்றான். 

பொறுப்பில்லாத குடிகார தந்தையாக இருந்த ஈஸ்வரனிடம் கட்டாக பணம்… பதினாறு வயதிலிருந்து உழைத்து குடும்ப பொறுப்புகளை ஏற்றக்கொண்டிருக்கும் மகன் கையில் பணமில்லை. புது மனைவியுடன் ஊருக்குச் செல்ல கூட பணமில்லாதது ஏன்? சம்பாதித்த பணமெல்லாம் என்ன ஆனது? இதற்கான விடை நவீனிடம் தான் உள்ளது. இதை அவனிடம் கேட்டு தெரிந்துக்கொள்கிறாளா மிருதுளா

பர்வதத்துடன் இருந்து வந்த போராட்டத்தின் கடைசி நாள் இதுவாக இருந்தால் நல்லது ஆனால் அடுத்த போராட்டம் நவீனுடன் துவங்கப்போகிறதா? என்பது பற்றி வரும் வெள்ளிக்கிழமை தெரிந்துக்கொள்வோம். 

தொடரும்…..

 

 

நவீன், மிருதுளா, பவின் மூவரும் வருவதைப்பார்த்த பெரியப்பா ராசாமணி…

வாங்கோ, வாங்கோ புது மாப்பிள்ளை அன்ட் புது பொண்ணு

நமஸ்காரம் பெரியப்பா. எப்படி இருக்கேங்கள்?”

நாங்க எல்லாரும் நன்னா இருக்கோம் மா. நீ எப்படி இருக்க உன் புக்காம் எல்லாம் எப்படி இருக்கா?”

நான் நல்லா இருக்கேன் புக்காமும் நன்னா இருக்கு

உங்க நிச்சயதார்த்தம் இங்க தானே நடந்தது. ஞாபகம் இருக்கோனோ

ஓ நல்லா ஞாபகம் இருக்கு. அதுக்குள்ள மறந்திடுவேனா பெரியம்மா

சற்று நேரம் பொது விஷயங்கள் எல்லாம் பேசி முடித்தப் பின் அனைவரும் ஒன்றாக  அமர்ந்து உணவருந்தினார்கள். மிருதுளா  அனைவரும் சாப்பிட்டு எழுந்ததும் இலைகளை எடுத்து ஒரு குப்பைக் கவரில் போட்டுவிட்டு, பாத்திரங்களை எல்லாம் அடுப்படிக்குள்ளே கொண்டு வைத்து சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்தாள். இதைப் பார்த்துக்கொண்டிருந்த ஈஸ்வரனின் மூத்த அக்கா சொர்ணம் தன் மகள் துளசியை பார்த்துக்கொண்டே மிருதுளாவிடம்…

ஏன் மா மிருது உன் மாமியார் என்ன மாமியார்தனத்தை ஆரம்பிச்சுட்டாளா? ஆரம்பிச்சுருப்பா ஆரம்பிச்சுருப்பா !!! அவளாவது சும்மா இருப்பதாவது?”

அப்படி எல்லாம் ஒன்னுமில்லை சொர்ணம் அத்தை. என்னை நல்லா தான் பார்த்துக்கறா

நம்பிட்டேன் மா அப்படியே நம்பிட்டேன். பர்வதத்துக்கு போய் இப்படி ஒரு நல்ல மாட்டுப்பொண்ணு வந்திருக்கா பாரேன் துளசி.

அம்மா சித்த சும்மாதான் இரேன்…மா..நீ ஒன்னும் நினைச்சுக்காத மிருது அம்மா எப்பவும் இப்படி தான்

சொர்ணம் தன் மகள் துளசியை தனது தம்பி ராசாமணிக்கே திருமணம் செய்து கொடுத்து அவர்களுடனே இருக்கிறார்.

ஏய் மிருது உன் மாமியார் எங்க ஈஸ்வரனை கல்யாணம் பண்ணின்டு வந்த அடுத்த நாளே கால் மேல கால போட்டுண்டு அவளுக்கு பியர்ஸ் சோப்பு இருந்தா தான் குளிப்பேனுட்டா.!! அப்பறம் ராசாமணி கடைக்கு போய் வாங்கிண்டு வந்து கொடுக்கற வரைக்கும் குளிக்காம உட்கார்ந்துண்டு நுயூஸ் பேப்பர் வாசிச்சா…வெளக்கமாத்துக்கு பட்டு குஞ்சலம் வேணுமாம். கல்யாணத்துக்கு முன்னாடி அவா குடும்பம் எவ்வளோ கஷ்டம் பட்டுண்டிருந்ததுனு எல்லாம் எங்களுக்கு நன்னா தெரியும்ங்கறது அவளுக்கும் தெரியும் ஆனாலும் இங்க வந்து வெட்டி பந்தா. எங்க அம்மாவ அவ எப்படி எல்லாம் கொடுமை படுத்திருக்கா தெரியுமா?? அவ நல்லாவே இருக்க மாட்டா…புள்ளகளை பெத்து பெத்து கொண்டு வந்து எங்க அம்மாட்ட விட்டு புருனை கூட்டிண்டு போயிடுவள். நவீன் ஆஞ்சு வயசு வரைக்கும் எங்க அம்மாட்ட தான் வளர்ந்தான். அதுவரை புள்ள எப்படி இருக்கான் என்ன பண்ணறான் என எந்த அக்கறையும் இல்லாதவள் நவீன் அவன் வேலைகளை அவனே செய்து கொள்ள ஆரம்பிச்சதும் வந்து கூட்டிண்டு போயிட்டா…அவள் ஆடிய ஆட்டமெல்லாம் ஒன்னா ரெண்டா ….அடே அப்பா…அவளும் அவ நடையும்… வந்துடுவள் ஆட்டி ஆட்டிண்டு.

அம்மா ஏன் மா !!! கொஞ்சம் சும்மா இரு மா. மிருது நீ வா நாம ஹாலுக்கு போயிடலாம். இங்க இருந்தா எங்க அம்மா உன் மாமியாரை பத்தி பொலம்பிண்டே தான் இருப்பா

ஏண்டி அவள கூட்டிண்டு போற!!! நான் என்ன இல்லாததயா சொல்லிட்டேன். நடந்ததை தானே சொன்னேன். இப்படியே எல்லாரும் அவ அப்படி தான் அப்படி தான் சொல்லி சொல்லி அவளை இன்னும் நல்லா ஆட விடுங்கோடி ஆட விடுங்கோ….எனக்கென்ன வந்தது. மிருது ஜாக்கிரதையா இருந்துக்கோமா!!!

மிருதுளாவிற்கு மனதில் ஒரு கலக்கம் வந்ததுஎன்னடா இது!!! மாமா வீட்டிலும் மாமியாரை குற்றம் கூறினார்கள் ஜாக்கிரதையா இருந்துக்கோனு சொன்னா. இப்போ சொர்ணம் அத்தை என்னனமோ சொல்லறா!!! இவாளும் ஜாக்கிறதையா இருந்துக்கோங்கறா !!! நம்ம மாமியார் என்ன புலியா!! சிங்கமா? நான் ஜாக்கிரதையா இருந்துக்க!!! அப்படி என்ன என் மாமியார் அவ்வளவு கெட்டவளா என்ன? ஏதோ பொஸஸிவ்னஸ்னு நான் நினைச்சா இவா இப்படி சொல்லறாளே !!! நவீனை பெத்து அவா மாமியார்ட்ட விட்டுட்டு அஞ்சு வயசு வரைக்கும் எட்டிப் பார்க்காத ஒரு அம்மாவுக்கு எங்கேருந்து இருக்க போறது பொஸஸிவ்னஸ்? இதுல என்னமோ இருக்கு. எங்கயோ இடிக்கறதே…. பொறுத்திருந்து தான் தெரிஞ்சுக்கனும்

என்ன மிருதுளா ஏதோ யோசனையில் இருக்க? எங்காத்து சாப்பாடு பிடிச்சிருந்துதா?”

ஓ! நல்லா இருந்தது பெரியப்பா. சூப்பரா சமைச்சிருந்தா பெரியம்மா.

சரி பெரியப்பா நாங்க கிளம்பறோம்.

என்னடா நவீன் அதுக்குள்ள!! இரு காபி குடிச்சிட்டு வெயில் தாழ போனா போரும்

சாரி பெரியப்பா. நாளன்னைக்கு ஊருக்கு கிளம்பனும் அதனால வேலை நிறைய இருக்கு. அடுத்த தடவை வரும்போது நிச்சயம் இருந்துட்டு போறோம்

அப்படியா சரி. நீயும் உன் வேலையை பார்க்கணுமே. ஓகே நீங்க வந்ததுக்கு ரொம்ப சந்தோஷம்.

வராம இருப்போமா பெரியப்பா!!

என்று கூறி பெரியப்பா பெரியம்மா இருவரையும் நமஸ்காரம் செய்து ஆசிர்வாதத்துடன் புடவை, வேஷ்டி, பூ, பழம், வெற்றிலை பாக்கு வைத்த தாம்பாளத்தை வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள் மூவரும். பஸ்ஸில் ஏறி வீடு வந்து சேரும் போது மணி ஆறானது. வழக்கம் போல் நவீன் டிரெஸ் மாற்ற நேராக மாடிக்குச் சென்றான் மிருதுளா ஹலுக்கு போய் நடந்தவற்றை கூற முயலும்போது பர்வதம் பவினிடம் 

நீ சொல்லுடா அங்க எல்லாரும் எப்படி இருக்கா? என்ன சொன்னா? உங்க பெரியம்மா என்ன சமச்சிருந்தா?”

என்று கேட்க மிருதுளா சட்டென்று எழுந்து மாடிக்கு சென்றுவிட்டாள்.  போன தடதை மாமா வீட்டில் நடந்ததை சரியாக நவீனும் மிருதுளாவும்  சொல்லவில்லை என்ற எண்ணத்தில் இம்முறை விவரமாக தெரிந்து கொள்ளவே பவீனை கூட அனுப்பிஉங்களிடமிருந்து எங்களுக்கு எதுவும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லைஎன்பது போல நடந்துக்கொண்டார்கள் பர்வதமும், ஈஸ்வரனும். அதனால் மனம் வருத்தப்பட்டு சென்றாள் மிருதுளா.

நவீன் டிரெஸ் மாற்றிவிட்டு சற்று அங்கேயே கட்டிலில் படுத்திருந்தான். மிருதுளா ரூமுக்குள் நுழைந்ததும்….

ஹேய் மிருது எனக்கென்னவோ ரொம்ப டையர்டாயிருக்கு…உனக்கும் தான் அப்படி இருக்கும் ஒரு காபி போட்டு குடிப்போமா!!!

போட்டு தாங்கோளேன் நான் குடிக்க ரெடி

பார்தயா….ப்ளீஸ் ஈவ்னிங் காபி குடிகலையோனோ அதுதான் லைட்டா தலைவலிக்கறா மாதிரி இருக்கு

அச்சசோ.!! இருங்கோ அமிர்தான்ஜன் தடவி தரேன் அப்பறம் போய் காபி போட்டுண்டு வரேன்

என்று சொல்லிக்கொண்டே நவீன் நெற்றியில் அமினர்தான்ஜனை தடவி நன்றாக அழுத்தி கொடுத்தாள்.

ஆஹா என்ன சுகமா இருக்கு தெரியுமா மிருது!!

ஏன் இதுவரைக்கும் யாரும் உங்களுக்கு இப்படி தலைவலிக்கும் போது செய்து தந்ததில்லையா?”

இல்லவே இல்லை இது தான் முதல் தடவை. எனக்கு நெற்றியில் தைலம் தடவி நீவி விட்ட முதல் ஆள் நீ தான்.

ஏன் உங்க அம்மா அப்பா யாருமே செய்ததில்லையா?”

ஆமாம்… நல்லா கேட்ட போ… ஒரு தடவ நான் கிரிக்கெட் ஆடி கால்ல நல்லா அடிபட்டு நானே ஆஸ்பத்திரி போய் கட்டெல்லாம் போட்டுண்டு வீட்டுக்கு வந்தேன் அத பார்த்துக்கூட என்ன ஆச்சு ஏதாச்சுனுட்டு வீட்ல யாருமே கேக்கலை அவாளா தைலம் தடவி விடப்போறா.

அப்பிடியா!!!! ரொம்ப ஷாக்கிங்கா இருக்கு நீங்க சொல்லறதை கேட்க. எனக்கு தலைவலினாலும் சரி என் தம்பி வேனுவுக்கு தலைவலினாலும் சரி எங்க அம்மா தைலம் தடவி ஐஸ்வாட்டர் ஒத்தடம் கொடுப்பா

யூ கைஸ் ஆர் லக்கி” 

இப்படி பேசிக்கொண்டிருக்கலயில் திடீரென அவர்கள் ரூமில்….

டர்ர்ர்ரர்ர்ர்ர்ரர்ர்ரர்ர்ர்ர்ர்ர்ர…என ஒரு பெல் பயங்கர சப்தத்தில் ஒலித்தது. அதை கேட்டது நவீனும் மிருதுளாவும் கட கட வென கதவை திறந்து கீழே போனார்கள்…நவீன் படிகளில் இறங்கி சத்தமாக…

என்ன பெல் சத்தம் அது எங்க ரூம்ல? யார் பிக்ஸ் பண்ணினது அன்ட் யார் அடிச்சது?”

என கோபத்தோடு கேட்டுக்கொண்டே ஹாலுக்குள் நுழைய அங்கு மிருதுளாவின் பெற்றோரும் அவள் தம்பி வேனுவும் அமர்ந்திருந்தைப்பார்த்ததும் ..

வாங்கோ வாங்கோ எப்படி இருக்கேங்கள்? ஹேய் வேனு எப்படிடா இருக்க?” என்றான் நவீன்

நாங்க நல்லா இருக்கோம் மாப்பிள்ளை நீங்க நல்லா இருக்கேங்களா?” என கேட்டார் ராமானுஜம்

ஓ எஸ் நாங்க எல்லாரும் நன்னா இருக்கோம்

அம்மா !!அப்பா !!! டேய் வேனு எல்லாரும் எப்படி இருக்கேங்கள்? ” 

ஹேய் மிருது நீ எப்படி மா இருக்க? எங்களை எல்லாம் மறந்துட்ட போல தெரியறதே!!!என அம்புஜம் கேட்க

அச்சோ அம்மா அப்படி எல்லாம் மறந்திடுவேனாமா…இப்போ கூட உங்களை பத்தி தான் நாங்க ரெண்டு பேரும் பேசிண்டிருந்தோம். நீங்களே வந்துட்டேங்கள்

ஆமாம் ஆமாம் கல்யாணமாகியும் இன்னமும் உங்க மிருதுளா உங்க நினைப்பில் தான் இருக்கா எங்களை எல்லாம் எங்க நினைக்கறா இந்தாங்கோ காபி எடுத்துக்கோங்கோஎன சலித்துக் கொண்டே காபியை நீட்டினாள் பர்வதம் சற்று நேரம் அமைதி நிலவியது …பின் வேனு தரையில் அமர்ந்திருந்த மிருதுளா மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டே…

மிருதுக்கா நீ இல்லாம வீடே டல்லா இருக்கு. எனக்கும் சண்ட போட ஆளில்லாமல் ரொம்ப கஷ்டமா இருக்கு” 

இருக்கும் டா இருக்கும். நல்லா வேணும் உனக்கு.என கூறிக்கொண்டே தம்பியின் தலைமுடியை கோதிவிட்டாள். 

உங்க அக்கா நல்லா சண்ட போடுவாளா!என நக்கலாக பர்வதம் கேட்க

ஆமாம் மாமி நாங்க ரெண்டு பேரும் அடிச்சுக்குவோம்.ஹா ஹாஹா!! என்ன அக்காஎன வெகுளித்தனமாக வேனு பதிலளிக்க

ஓ அப்படியா!!! சரி என்ன கல்யாணமான உங்க அக்காள் மடில இப்படி தலை வச்சுண்டு படுத்திருக்க எழுந்திரிஎன்று பர்வதம் அதட்ட

மாமி மிருதுக்காவுக்கு கல்யாணமானாலும் எனக்கு அக்கா தானே அவ மடில படுத்தா என்ன தப்பு?”

இதை இப்படியே விட்டா இதுவே பிரச்சினை ஆகிவிடும் என உணர்ந்து மிருது சட்டென 

சரி டா எனக்கும் கால் கடுக்கறது கொஞ்சம் எழுந்து சேர்ல உட்காரு வேனு ப்ளீஸ்என்று கூறி வேனுவை எழுப்பி விட்டாள் மிருதுளா. வேனுவும் சேரில் அமர்ந்தான். பின் அம்புஜம் ..

நாளன்னைக்கு ஊருக்கு கிளம்பறேளோனோ அதுக்கு யாரெல்லாம் சென்னை வரைக்கும் போறோம்? என்ன ஏதுனுட்டு விசாரிச்சுட்டு போகலாமேனு வந்துருக்கோம்

என்னத்துக்கு எல்லாருமா வரனும்? எனக்கும் மிருதுவுக்கும் இங்கெருந்து சென்னை அப்பறம் அங்கேருந்து குஜராத்துக்கு டிரெயின் புக்  பண்ணிருக்கேனே. நாங்களே போயிக்கறோம்

அதுக்கில்லை எங்க பொண்ணு மொதோ மொதோ வெளியூருக்கு கல்யாணமாகி போறா நாங்க வந்து வழியனுப்பனும்னு ஒரு ஆசை அது தான் கார் ஏற்பாடு பண்ணிருக்கோம் வேனுக்கு காலேஜ் இருக்கு ஸோ அவன் வரமாட்டான் நீங்க ரெண்டு பேரும் பேசாம டிரெயின் டிக்கெட் கேன்ஸல் பண்ணிட்டு எங்களோட கார்லயே வரளாமே என்ன சொல்லறேங்கள்?” என்றார் ராமானுஜம்

அதுவும் சரிதான் ஆனா இப்போ கேன்ஸல் பண்ணினா காசு நிறைய போகுமேனு யோசிக்கிறேன்என்று நவீன் சொன்னதும்

பர்வதமும் ஈஸ்வரனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். பர்வதம் ஏதோ கண்ணால் சொல்ல உடனே ஈஸ்வரன்…

அதனால என்ன இப்போ நீயும் மிருதுளாவும் டிரெயின்ல வாங்கோ நாங்க எல்லாரும் மாமா மாமி கூட கார்ல வரோம். அப்படியே உன் பெரியப்பா பொண்ணு ஆத்துக்கு போயிட்டு ஃப்ரெஷ் ஆகிண்டு பின்ன டிரெயின் ஏறுங்கோ. என்ன மாமா நான் சொல்லறது. நாங்க நாலு பேரு நீங்க மாமி நம்ம ஆறு பேரும் ஒரே கார்ல போகலாமோனோ?”

போகலாம்…என தயங்கினார் ராமானுஜம். 

என்ன போகலாம்னு இழுக்கறேங்கள். போகலாம்னு சொல்லுங்கோஎன்றார் ஈஸ்வரன்

சரி மாமா அப்படியே ஆகட்டும்

மிருதுளா நாளைக்கு சில சாமான்கள் எல்லாம் எடுத்துண்டு வரேன் அதையும் சேர்த்து பேக் பண்ணிடு. மாமி அங்குமணி சீர் இருக்கோனோ அதை அப்படியே இவாள்ட்ட கொடுத்தனுப்பிடலாம். ரெண்டு பேரும் போனதும் மளிகை எல்லாமா வாங்கண்டாமோனோ. மிருது அதையும் ஒரு ஃபாக்ஸ் ல போட்டு பேக் பண்ணிடு.என்று அம்புஜம் படபட என அடுக்க குறிக்கிட்டாள் பர்வதம்…

மாமி அங்கு மணி சீர் மாப்பிள்ளை ஆத்துக்கு அதெல்லாம் எப்போவோ தீர்ந்தாச்சு. உங்க பொண்ணுக்கு நீங்க வேணும்னா மறுபடியும் வாங்கி குடுத்து அனுப்புங்கோ” 

என்னது கல்யாணம் ஆகி பத்து நாள் தானே ஆக போறது !!!! அங்கு மணி சீர் ஒரு மாச ஜாமான்களாச்சே!!!! அதுக்குள்ளேயே தீர்ந்துடுத்தா என்ன?” 

என ராமானுஜம் கேட்க 

இதுவே பெரிய பிரச்சினை ஆகிடுமோ என எண்ணி மிருதுளா 

இப்போ அதுனால என்ன நாங்க அங்க போய் வாங்கிக்கறோமே அது தான் மாசத்துக்கு என்னென்ன வேணும்ன்னு லிஸ்ட் போட்டு குடுத்திருக்கேங்களே அத வெச்சு வாங்கிக்கறோம்.” 

சரி அப்போ நாங்க இப்போ கிளம்பறோம் நாளன்னைக்கு கார்த்தால காரோட வரோம் ரெடியா இருங்கோ.போயிட்டு வரோம் மாமா மாமி. மாப்பிள்ளை நாங்க வரோம் மிருது வரட்டுமா!!என அனைவரிடமும் கூறினாள் அம்புஜம்..

அம்மா நீ நாளைக்கு பேக்கிங்க்கு ஹெல்ப் பண்ண வரயா? “

ஓ வரேனே நான் தான் சில பொருளெல்லாம் தரனும்னு சொன்னேனே அதனால நிச்சயம் வருவேன் அப்போ ஹெல்ப் பண்ணறேன். சரியா வரேன். குட் நைட்.

அத்திம்பேர் அன்ட் மிருதுக்கா பை. மாமா, மாமி, கவின் அண்ணா, ப்ரவீன், பவின் எல்லாருக்கும் பை‌. குட் நைட்

என விடைப்பெற்றனர் மிருதுளாவின் குடும்பத்தினர். 

நவீன் வீட்டார் அனைவரும் இரவு உணவருந்திய பின் அவரவர் உறங்கச்சென்றனர். மிருதுளாவும் எல்லா வேலைகளும் முடித்து விட்டு மாடிக்குச் சென்று உறங்கினாள். 

மிருதுளா வீட்டார் வந்து போனதில் அந்த பெல்லின் பிரச்சனை அப்படியே அமுங்கி போனது. அந்த பிரச்சினை மீண்டும் வெடிக்குமா என்பதை பொறுத்திருந்து விடிந்ததும் தெரிந்துக்கொள்ளலாம். அதுவரை பொறுத்திருக்கவும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  நன்றி🙏

தொடரும்…….

அடுப்படிக்குள் சென்ற மிருதுளாவை பார்த்து பர்வதம் 

நான் இட்டிலிக்கு மாவு அரைக்க போரேன் அதனால நீ தான் டிஃபன் பண்ணனும் சரியா

ஓகே அம்மா என்ன பண்ணட்டும்?”

எதையாவது பண்ணு. உனக்கு மாவு ஆட்ட தெரிஞ்சிருந்தா உன்ன செய்ய சொல்லிட்டு நான் டிஃபன் பண்ணிருப்பேன்… உனக்கு தான் தெரியாதுன்னுட்டயே…நேத்தே… பின்ன நீ தான் பண்ணனும்

கிரைண்டர்ல அரிசியை போடனும் தானே அத நான் போடறேனே…எப்போ எடுக்கனும்னு சொல்லுங்கோ எடுக்கறேன்

ஏன் வேற டிஃபன் ஏதும் உனக்கு பண்ண தெரியாதோ??”

இல்லை மா நான் ரெண்டும் பண்ணறேனே. நீங்க மாவு அரைக்க மட்டும் சொல்லித்தாங்கோ

உனக்கு கிளாஸ் எடுக்க எல்லாம் இப்போ எனக்கு டைம் இல்லை. நீ போய் டிஃபனையாவது பண்ணறியா?”

ஓ அதுக்கு தான் இந்த காய் எல்லாம் கட் பண்ணிண்டே உங்கள்ட்ட கேட்டுண்டும் இருக்கேன்

என்னத்துக்கு இப்போ காரட், பீன்ஸ், தக்காளி, பட்டாணி எல்லாம் எடுத்திருக்காய்? என்னவாக்கும் பண்ண போறாய்? தேங்கா வேற துருவி வச்சிருக்க!!! இதெல்லாம் செய்துண்டே தானா என்னாண்ட பேசின!!!

ஆமாம் மா ரவா, சேமியா போட்டு கிச்சடியும் தேங்காய் சட்னியும் பண்ணிண்டிருக்கேன்

அச்சசோ உப்புமா பண்ணறியா!!! அப்பாக்கு பிடிக்கவே பிடிக்காதே!!!

இல்லை இது உப்புமா இல்லை நல்லா இருக்கும். நான் செய்து தரேன் சாப்பிட்டுட்டு சொல்லுங்கோ

இன்னிக்கு எல்லாரும் பட்டினியா? உப்புமாக்கு என்னத்துக்கு பாசிபருப்பு வேக வச்சிருக்காய்?”

அம்மா நான் தான் சொன்னேனோல்யோ இது உப்புமாவுக்கு ஒரு படி மேலே உள்ள டிஷ் நல்லா இருக்கும். எனக்கு கொஞ்சம் டைம் குடுங்கோ. இந்த காய்கள் அன்ட் வேக வைத்த பாசிப்பருப்பு எல்லாத்தையும் போட்டுதான் இத பண்ணுவா. இன்னும் பத்தே நிமிஷத்துல ரெடி ஆகிடும்.

என்று பர்வதம் என்ன பேச்சுக்குடுத்தாலும் மிருதுளா தனது காரியத்தில் கண்ணாக இருந்து வேலைகளை எல்லாம் செய்து முடித்து அடுப்பு மற்றும் அடுப்பு மேடையை சுத்தம் செய்து, கிச்சடியையும் தேங்காய் சட்னியையும் ஹாலில் கொண்டு வைத்து அனைவரையும் சாப்பிட அழைத்தாள். ஈஸ்வரன் உள்ரூமிலிருந்து …

பர்வதம் என்ன பண்ணிருக்காய் வாசம் தூக்கறதே

அப்பா இன்னைக்கு டிஃபன் நான் பண்ணிருக்கேன்” 

வேகமாக சொன்னாள் மிருதுளா ஏனெனில் காலை காபி போற்றுதல்களை மாமியாருக்கு விட்டுக்கொத்தாகிவிட்டது😉 ஆகையால் டிஃபனை தான் ஏற்றுக்கொள்ள முடிவெடுத்து அவ்வாறு முந்திக்கொண்டாள்😁. பொறுக்குமா பர்வதத்துக்கு

ஏதோ கிச்சடியாம் அதுதான் இன்னைக்கு உங்களுக்கு எல்லாம் டிஃபன்…சாப்பிடுங்கோ சாப்பிடுங்கோ” 

என்று நக்கலாக சொன்னாள்.

அனைவரும் டிஃபன் சாப்பிட அமர்ந்ததும் சட்டி மூடியிருந்த தட்டை எடுத்தாள் மிருதுளா. சட்டியில் இருந்த கிச்சடியைப்பார்த்து …

என்னத்துக்கு இவ்வளவு பண்ணிருக்க? இந்த தெருவுக்கே டிஃபன் நம்ம ஆத்துலதானா? அதுவும் உப்புமா!!!

எடுத்துக்கொடுத்ததும் ஈஸ்வரன் கப்பென்று பிடித்துக்கொண்டு…

என்னது உப்புமாவா!!!! எனக்கு பிடிக்காதே!!!

அப்பா இது உப்புமா இல்ல கிச்சடினு சொல்லுவா. இதை சட்னியோட சாப்பிட்டா நல்லாருக்கும். ப்ளீஸ் சாப்பிட்டு பார்த்து சொல்லுங்கோ.

விடுவாளா நம்ம மா…மாமியார்…

ரவை சேமியா போட்டுட்டு பெயரை மட்டும் மாத்திட்டா உப்புமா இல்லைனு ஆயிடுமா

இட்டிலி தோசைக்கு மாவும் இல்லை இருப்பதை வைத்து ஏதோ தன்னால் முடிஞ்சதை செய்த மிருதுளாவை தொணதொணப்பு செய்ததுமில்லாமல் நக்கல் நையாண்டி செய்து சாப்பிட வந்தவர்களையும் தூண்டி விட்டுக்கொண்டிருந்தாள் பர்வதம். இதை புரிந்துக்கொண்ட மிருதுளா தட்டில் சுட சுட ஆவி பறக்கும் கிச்சடியைப்போட்டு சட்னியை ஊற்றி தனது மாமனார் ஈஸ்வரனிடம் கொடுத்து 

இந்தாங்கோ பா சாப்பிட்டுட்டு சொல்லுங்கோ

என்று தட்டை நீட்ட அவரும் அதிலிருந்து வந்த வாசத்தினால் தட்டை கையில் வாங்கிக்கொண்டு…

இதுல நெய் ஊத்திருக்கயா மிருதுளா? வாசம் சூப்பர்.. இரு சூடா இருக்கு சாப்பிட்டு சொல்லறேன்..நீங்க எல்லாம் ஏன்டா என் வாயை பார்த்துண்டு நிக்கறேங்கள் தட்டெடுத்து போட்டு சாப்பிடுங்கோடா

இன்னொரு தட்டில் போட்டு நவீனிடம் கொடுத்தாள் பின் பர்வதத்தைப்பார்த்து

அம்மா உங்களுக்கும் இப்போவே தரட்டுமா?”

எனக்கும் உப்புமா பிடிக்காது. என்ன செய்ய அது தானே செய்திருக்க….இப்போ வேண்டாம் நான் அப்பறமா சாப்பிட்டுக்கறேன்.

கவினும்ப்ரவீனும் சாப்பிட்டுட்டு 

வாவ் மன்னி இது சூப்பரா இருக்கு. சட்னி இன்னும் கொஞ்சம் ஊத்துங்கோளேன்.

என்றதும் சந்தோஷத்தில் குடு குடு வென ஓடி போய் பரிமாறினாள் மிருதுளா. ஈஸ்வரன் ரசித்து உண்டு கொண்டிருந்தார். 

மிருதுளா எனக்கு இன்னும் கொஞ்சம் கிச்சடி போடுமா நல்லாருக்குஎன்றார் 

உங்களுக்கு உப்புமா பிடிக்காதே அப்பறம் என்ன இன்னொரு தடவை கேக்கறேங்கள்?” என பர்வதம் சொன்னதும் 

சரி மா மிருதுளா எனக்கு போதும்.என்றவருக்கு இன்னும் கொஞ்சம் கிச்சடியை தட்டில் போட்டு

அப்பா இன்னைக்கு ஒரு நாள் இந்த  கிச்சடி என்கிற உப்புமாவை சாப்பிடுங்கோ பரவாயில்லை, ஒன்னும் ஆகிடாது

என்னதான் அனைவரும் சூப்பர் என்று பாராட்டினாலும் தன்னவன் பாராட்டுக்காக ஏங்கியது மிருதுளாவின் உள்ளம். அதை எண்ணிக்கொண்டே அவனை பார்க்க முனையும் போது சட்டென்று பவின் 

மன்னி எனக்கும் இன்னும் கொஞ்சம் கிச்சடி அன்ட் சட்னி போடுங்கோஎன்றதும் அவனுக்கு பரிமாற சென்றாள் அப்பொழுது நவீன்

மிருது திஸ் கிச்சடி ஈஸ் சிம்ப்ளி சூப்பர்ப். ரொம்ப நல்லா பண்ணிருக்க. நல்ல டேஸ்ட்டா இருக்கு. இது மாதிரி உப்புமா செய்தா தினமுமே சாப்பிடலாம் என்னப்பா சொல்லுற!!!” 

இதை கேட்டதும் மிருதுளாவுக்கு மனதில் சந்தோஷம் இருந்தாலும் அச்சசோ மாமியார் முன்னாடி இப்படி சொல்லிட்டாரே தன்னவன் என்ற மைன்ட் வாய்ஸில்

அச்சச்சோ இவர் டேஸ்ட்டா இருக்ககுங்கறதோட நிப்பாட்டிருக்கக்கூடாதா. அடுத்த வரி அம்மாவை சங்கடப்பட வைத்திருக்குமே” 

என எண்ணி 

ஆமாம் ஆமாம் என்னைக்காவது செய்தால் தான் ஆஹா ஹோ ஹோனுட்டு எல்லாரும் சாப்பிடுவா நீங்க சொல்லறா மாதிரி தினந்தோறும் செஞ்சா அலுத்துப்போகும்

அனைவரும் சாப்பிட்டு எழுந்த பின் 

அம்மா வரேளா நாம சாப்பிடலாம்?”

சரி எனக்கும் தட்டுல போட்டு குடு. என்னமோ உன் புருஷனும், மாமனாரும், மச்சினன்களும் பாராட்டரா மாதிரி அப்படி என்ன இருக்குனு பார்க்கட்டும்” 

மிருதுளாவுக்கு மனதில் சரிப்பு வந்தது. அதை அடக்கிக்கொண்டு தன் மாமியாருக்கு பரிமாறி பின் தானும் தட்டில் போட்டுக்கொண்டு இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர். 

அம்மா நிறைய பண்ணிருக்கேன்னு சொன்னேளே இப்போ பாருங்கோ எல்லாம் காலி ஆயிடுத்து. நான் பண்ணும்போது பத்தாதோனு நினைச்சுட்டேன். ஆனா கரெக்ட்டா இருக்கு.” 

சரி…சரி…சட்டுபுட்டுன்னு சாப்பிட்டுட்டு ரெண்டு பேருமா கிளம்புங்கோ. ராசாமணி பெரியப்பா ஆத்துல இன்னைக்கு உங்களை விருந்துக்கு கூப்பிட்டிருக்கா. போயிட்டு வாங்கோ.

சரி..மா

சாப்பிட்ட பின் பாத்திரங்களை எல்லாம் கழுவிட்டு விருந்துக்கு கிளம்ப மாடிக்கு சென்றாள் மிருதுளா.  அப்பொழுது அவளை கீழேயிருந்து கூப்பிட்டாள் பர்வதம். உடனே கீழே வந்தாள் மிருதுளா. வந்தவளிடம் தனக்கு தலைவலிப்பதாகவும் ஒரு காபி போட்டு தந்துவிட்டு கிளம்பும்படி சொன்னாள். மிருதுவும் அவ்வாறே செய்துவிட்டு மீண்டும் மாடிக்கு சென்று டிரெஸ் பண்ணிக்கொண்டு வந்தாள். 

நவீனும் ரெடி ஆகி கீழே வந்து 

என்ன மிருது கிளம்பலாமா?”

ஓ நான் ரெடி கிளம்பலாம். அம்மா அப்பா நாங்க பெரியப்பா ஆத்துக்கு போயிட்டு வரோம்

உங்க கூட பவினும் வரானாம். கூட்டிண்டு போங்கோஎன்றாள் பர்வதம்

நாங்க எங்க கல்யாண விருந்துக்கு போறோம் என்னத்துக்கு பவின் எங்ககூடஎன்றான் நவீன் 

பர்வதம் எதிர் பார்த்தது போலவே கேள்வி வர…

ஏன் அவனையும் உங்களோட கூட்டிண்டு போனால்தான் என்ன? ஏன் ஆத்துக்காரி வந்தததும் தம்பி எல்லாம் வெளியே கூட்டிண்டு போக கூடாதூனுட்டாளோ! இல்ல எங்களை தொந்தரவா நினைக்கறாளா?” என்றாள்

என்ன பேசற நான் என்ன சொல்லறேன் நீ என்னத்த பேசற !!! கொஞ்சமாவது பேசறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசுஎன்று நவீன் சொன்னதும் மிருதுளா குறுக்கிட்டு

ஏன் இதுக்கெல்லாம் இப்படி பேசறேங்கள் நவீன். பவினும் நம்ம கூட வரட்டுமே. அதனால என்ன இப்போ? பவின் நீ ரெடியா” 

ஓ எஸ் அம்மா என்ட்ட எழுந்ததும் சொல்லிட்டா பெரியப்பா ஆத்துக்கு உங்க ரெண்டு பேரு கூட போயிட்டு வரச்சொல்லி. அதனால நான் அப்பவே ரெடி” 

மிருதுளாவுக்கும் பவின் அவர்களுடன் வருவதில் இஷ்டம் இல்லை. அவள் மனதிற்குள்

புதுசா கல்யாணமானவர்கள் தனியாக வெளியே போயிட்டு வரட்டும்னு இல்லாம கூட ஒரு ஸ்பை வேற. ஏன் இவனை அவா தம்பி ஆத்துக்கு போனப்போ எங்க கூட அனுப்பலை!!! ஏன் பெரியப்பா ஆத்துக்கு மட்டும் கூட எஸ்கார்ட் அனுப்பறா?” 

என போராட்டம் இருந்தாலும் அவள் மனம் படக் படக் என அடித்துக்கொள்ள ஆரம்பித்தது ஏனென்றால் மறுபடியும் வெளியே செல்லும்போது ஒரு சண்டை வந்தால் அந்த டென்ஷனோட தான் போயிட்டு வர வேண்டி இருக்கும் அதுவுமில்லாமல் இன்னும் மூணு நாள்ல குஜராத் போய் விடுவார்கள் அங்க போனா இருவர் மட்டும் தனியாக தானே இருக்க போகிறார்கள் என்பதால் நவீனைப்பார்த்து …

ஓகே இப்போ நாம மூணு பேரும் சேர்ந்து கிளம்பலாமா!

நவீன், மிருதுளா, பவின் மூவரும் வீட்டிலிருந்து புறப்பட்டு பஸ்ஸில் ஏறி ராசாமணி வீட்டுக்கு போய் சேரட்டும். அதுவரை நமது வேலைகளை எல்லாம் நாமும் முடித்துவிட்டு விவரங்களை தெரிந்துக்கொள்ள மீண்டும் வருவோம்.

தொடரும்…..

பஸ்ஸில் இருந்து இறங்கி நவீனும் மிருதுளாவும் வீட்டிற்கு மெல்ல பேசிக்கொண்டே நடந்தனர். மிருதுளாக்கு  அந்த வீட்டிற்குள் செல்வது என்றாலே ஏதோ ஒரு யுத்த களத்தில் வெறியோடு தன்னைத்தாக்க எதிரி காத்துக்கொண்டிருப்பது போலவே ஒரு நினைப்பு அவளை மெல்ல மெல்ல அடி எடுத்து நடக்கச் செய்தது. இதை அவள் நவீனிடம் பகிர்ந்து கொண்டால் அவன் தவறாக எண்ணி விடுவானோ என்ற பயம். மாமியாரிடமேஏன் இப்படி என்னை எதிரியாக பார்க்கிறீர்கள்என்று கேட்டால் அதை வைத்தே மற்றுமொரு சண்டையை உருவாக்கிவிடுவாளே என்ற அச்சம். நவீனாவது தனது மனைவியின் சங்கடமான நிலைமையை புரிந்துக்கொண்டு அவளுக்கு ஒரு கம்ஃபர்டான சூழலை தனது வீட்டில் உருவாக்கியிருக்க வேண்டும். அவன் வீட்டார் சுபாவம் அதுவாகவே இருந்தாலும், தான் இருபத்தி இரண்டு வருடம் வாழ்ந்த வாழ்க்கை அப்படியே விட்டு விட்டு நவீனையும் அவனது குடும்பத்தினரையும் நம்பி வந்தவளுக்கு அவர்கள் கொடுக்கும் இந்த பதற்றமான வாழ்க்கை துளியும் சரியானது அல்ல ஆனால் இதை மனம் விட்டு நவீனிடம் மிருதுளா பேசாததும் ஒரு காரணம். இது அரேஞ்ச்டு கல்யாணத்தின்  ஒரு குறைபாடாக தான் இருந்துள்ளது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்.

 மனதில் குழப்பத்துடனே நவீன் பேசுவதைக் கூட காதில் வாங்காமல் நடந்து கொண்டிருந்தவளை பார்த்து நவீன் …

ஹேய் மிருது என்ன நீ ஏதோ யோசிச்சிண்டே இப்படி ரொம்ப ஸ்லோவா நடக்கறாய்!!! இன்னைக்கு மாமா ஆத்துக்கு போறவரைக்கும் நல்லா இருந்த அங்கேந்து கிளம்பி வந்ததிலருந்து ஏதோ தீவிரமான யோசனையிலேயே இருக்கியே!! என்ன? எங்க பாட்டி கதையை எல்லாம் கேட்டு பயந்துட்டயோ…அவா எல்லாம் அந்த காலத்து மனுஷா அப்படி இருந்திருக்கா என்ன பண்ண…அதை எல்லாம் மனசுலே போட்டு குழப்பிக்காதே..என்ன சரியா!!

ம்….சரிஎன்ற பதில் ஒரு சிறு புன்னகையுடன்…

வீடு வந்து சேர்ந்தனர். உள்ளே நுழைந்ததும் யாருமே யாரையுமே பார்க்காதது போலவே பாவனை செய்ய மிருதுளாவிற்கு ஒரு இறுக்கமான சூழலை உருவாக்கியது. நவீன் வந்ததும் சர்ரென்று நேராக மாடிக்கு ஆடையை மாற்ற சென்றான். மிருதுளாவிற்கு வீட்டின் பெரியவர்களிடம் ஏதும் விவரம் கூறாமல் அப்படி நேராக மாடிக்கு செல்ல சற்று சங்கடமாக இருந்தது. எனவே ஹாலில் போய் அமர்ந்தாள். அவள் அமர்ந்ததும் அனைவரும் அங்கிருந்து எழுந்து நாலாபக்கமும் சென்றுவிட்டனர். மிருதுளாவிற்கு தான் என்ன தவறு செய்தோம் ஏன் இப்படி அவள் வந்தததும் அனைவரும் ஒன்றும் கூறாமல் எழுந்து சென்றுவிட்டனர் என்று மனதில் குழப்பம் ஆனாலும் அவர்கள் அப்படி நடந்துக்கொண்டாலும் அதை பெரிதாக எடுத்துக்கக்கூடாது என்று முடிவு செய்து அடுப்படியில் இருந்த தனது மாமியாரிடம்   பேச்சை ஆரம்பிக்க முயர்ச்சித்தாள். 

அம்மா நாங்க பாங்க் போய் நகையை லாக்கரில் வைத்துவிட்டு அப்படியே மாமா ஆத்துக்கும் போயிட்டு….

என்று அவள் முடிப்பதற்குள் பர்வதம் குறிக்கிட்டு தனது கடைக்குட்டி மகனிடம்…

டேய் பவின் போய் அப்பா கவின், ப்ரவீன் எல்லாரையும் சாப்பிட அழைச்சுண்டு வா

என மிருதுளா சொல்வதை காதில் வாங்கதவள் போல பேச மிருதுளாவிற்கு என்ன செய்வதென்று தெரியாமல் 

அம்மா நான் உங்ககிட்ட தான் சொல்லிண்டிருக்கேன்என்றாள்

அதற்கும் பர்வதத்திடமிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை. அப்படி ஒருத்தி அங்கு நின்று கொண்டு பேசுகிறாள் என்பதையே எவரும் கண்டுகொள்ளாதது போலவே இருந்தார்கள். மிருதுளா தனக்கு வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு விருட்டென்று மாடிப் படிகளில் ஏற துவங்கினாள். எதிரே நவீன் படிகளில் இறங்கிக்கொண்டிருந்தான். மிருதுளா வேகமாக படியில் ஏறுவதைப்பார்த்த நவீன்..

மிருது மெதுவா மெதுவா விழுந்திட போற…நீ ஏன் இன்னும் டிரஸ் மாத்தாம இருக்க? போ போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா. நான் கீழே போய் முகம் கை கால் எல்லாம் அலம்பி கொஞ்சம்  ரிப்ஃப்ரெஷ் ஆகிக்கறேன். ஓகே.

அதற்கு பதில் ஏதும் கூறாமல் மேலே ஏறிச்சென்றாள் மிருதுளா. அதைப்பார்த்த நவீன் தனது தோள்பட்டையை உயர்த்தி புரியாதது போல கீழே சென்றான். ஒன்றாக அமர்ந்திருந்த குடும்ப உறுப்பினர்கள் மிருதுளா சென்றதும் எப்படி நடந்துக்கொண்டனரோ அதே போலவே நவீன் ஹாலில் நுழைந்ததும் நடந்துக்கொண்டனர். ஆனால் நவீன் அதை துளியும் கண்டுக்கொள்ளாமல் டிவியை ஆன் செய்து செய்திகள் பார்க்கலானான். அதைப்பார்த்த பர்வதம் ஈஸ்வரனிடம் ஏதோ கண்ணைக்காட்ட உடனே..

ஏண்டா ….புருஷனும் பொண்டாட்டியுமா வெளியே போயிட்டு வந்திருக்கேங்களே அத பத்தி ஏதாவது வீட்டுப்பெரியவானுட்டு இருக்கோமே எங்களாண்ட உங்களுக்கு சொல்லனும்னு தோனித்தோ!!! ஏதோ வநத சர்ரெனு மாடிக்கு போயிட்ட அப்போ இங்க நாங்களெல்லாம் என்னத்துக்கு இருக்கோமாம்? “

அப்பா டிரஸை மாத்திட்டு கொஞ்சம் ரிப்ஃப்ரெஷ் ஆயிட்டு சொல்லலாம்னு இருந்தேன் அது தப்பா ஆனா மிருது சொல்லிருப்பாளே

ஆமாம் சொன்னா சொன்னா சொரக்காய்க்கு உப்பில்லைனுஎன்று முனுமுனுத்தாள் பர்வதம்

என்ன என்ன சொன்ன இப்போ. எதுவானாலும் சத்தமா சொல்லு அப்போதான் பதில் கிடைக்கும்என நவீன் பர்வதத்தைப்பார்த்து சொல்லிக்கொண்டிருக்கும் போது மிருதுளா உள்ளே நுழைய அனைவரும் மீண்டும் கப்சிப் ஆனார்கள். அதைப்பார்த்த மிருதுளா …

ஏன் எல்லாரும் ஸடன்னா பேசறதை நிப்பாட்டிட்டேங்கள். என்னாலயா? நான் வேனும்னா மாடிக்கே போயிடட்டுமா?”

ஹே மிருது உன்னால எல்லாம் இல்லை. நீ உள்ளே வந்து உட்காருஎன்று நவீன் கூற மிருதுளாவும் ஹாலில் ஒரு புறம் சுவற்றில் சாய்ந்தபடி அமர்ந்தாள். பர்வதம் சட்டென்று எழுந்து அனைவரையும் இரவு உணவருந்த வருமாறு அழைத்தாள். அனைவரும் அவரவர் தட்டுகளை அலம்பி எடுத்துக்கொண்டு சென்று வரிசையாக அமர்ந்தார்கள். மிருதுளா அனைவருக்கும் பரிமாறினாள். அனைவரும் எழுந்த பின் சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்து பின் தனது மாமியாருடன் சாப்பிடக்காத்திருந்தாள். பர்வதம் அவள் பாட்டுக்கு தட்டில் சாப்பாடு போட்டு சாப்பிட ஆரம்பித்தாள். மிருதுளாவிற்கு தட்டு இருக்கவில்லை உடனே வெளியே தேய்க்க போட்டிருந்த தட்டில் ஒன்றை எடுத்து தேய்த்து எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்தாள். சாதம் மிக குறைவாக இருந்தது. குழம்பு பொறியல் பாத்திரங்கள் எல்லாம் காலியாக இருந்தது. மிருதுளா மோர் தயிர் சாப்பிடமாட்டாள் என்பது பர்வதத்திற்கு நன்றாக தெரிந்திருந்தும் மோர் பாத்திரத்தை எடுத்து மிருதுளா முன் வைத்தாள். மிருதுளாவிற்கு நல்லவேளை அவ்வளவாக பசியில்லை என்பதால் மோரைத்தவிர ஏதாவது மீதமுள்ளதா என்று பார்த்தாள். ரசம் கொஞ்சம் மிஞ்சியிருந்தது அதை ஊற்றி கடகடவென சாப்பிட்டு பாத்திரங்களை எல்லாம் கழுவி கமுத்தி வைத்துவிட்டு மீண்டும் ஹாலுக்குள் நுழைந்தாள். யாரும் ஒன்றும் பேசவில்லை ஈஸ்வரன், கவின், ப்ரவீன் மற்றும் பவின் உள் ரூமில் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். பர்வதம் மறுநாள் அரைப்பதற்கு அரிசி உளுந்து ஊறவைத்துக் கொண்டிருந்தாள்.  அதைப்பார்த்த மிருதுளா மாமியார் என்ன செய்கிறார் என போய் பார்த்து அப்படியே பேச்சுக் கொடுக்கலாம் என நினைத்து பர்வதம் அருகே சென்று…

என்ன மா பண்ணறேங்கள். எல்லா வேலைகளும் ஆயாச்சுனு நினைச்சு தான் போய் உட்கார்ந்தேன்

உனக்கு இட்டிலி தோசைக்கு மாவுக்கு அரிசி உளுந்து ஊறவெக்க அது ஊறினதும் அரைக்க தெரியுமா?” 

இல்லை அம்மா. எனக்கு தெரியாது. என் அம்மா செய்றத பார்த்திருக்கேன் ஆனா நான் செய்ததில்லை.என்று தனக்கு தெரியாததை தெரிந்தது போல பொய் ஏதும் கூறாமல் அப்பாவியாக உண்மையைச்சொல்ல…. அதை புரிந்துக்கொண்டு ..அதற்கென்ன போக போக தெரிந்துக்கொள்வாய் என பெரிய மனுஷிப்போல நடந்துக்கொள்ளாமல் இதுதான் சான்ஸ் என்று பர்வதம் என்ற பகடை உருள ஆரம்பித்தது…

என்னத்த வளர்த்திருக்கா உங்க அம்மா!!! ஒரு பொண்ணுக்கு இதெல்லாம் சொல்லிக்கொடுத்திருக்க வேண்டாமோ!!! நீ தனியா நவீனோட குஜராத் போய் என்னத்த வடிச்சுக்கொட்டப்போறயோ!!! இங்கேயே இருந்திருந்தா நானாவது சொல்லிக்குடுத்திருப்பேன் அதுக்கும் மாட்டேன்னு அடம்பிடிச்சு அவனோட இன்னும் அஞ்சு நாள்ல கிளம்ப வேற போற. பெரியவா சொன்னா அதுபடி கேட்டு நடக்க உங்க அம்மா சொல்லித்தறலையா? இதெல்லாம் விட்டுட்டு வேற என்னத்தான் சொல்லிக்குடுத்திருக்காளோ?”

இனி இதற்கு மேலிருந்தால் அது விபரீதம் என்று எண்ணி அங்கிருந்து எப்படியாவது நழுவிட நினைத்து… என்ன சொல்லி நழுவுவது என்று நெளிந்த வண்ணம் மிருதுளா நின்றிருக்க… நவீன் ஹாலில் இருந்து தண்ணீர் கேட்க ….இதுதான் சமயம் என..

அம்மா நவீன் தண்ணீர் கேட்கிறார் நான் போய் குடுத்துட்டு வரேன்” 

அது என்ன ஆத்துக்காரரை பெயர் சொல்லி கூப்பிடற பழக்கம் !அது  அப்பாக்கு சுத்தமா பிடிக்கலை இனி எங்க முன்னாடி அப்படி கூப்பிடாதே…போ தண்ணீ குடு

இந்தாங்கோ தண்ணீ” 

தாங்க்ஸ் மிருது

என்னத்துக்கு எனக்கு தாங்க்ஸ் எல்லாம் சொல்லிண்டிருக்கேங்கள்

நான் மாடிக்கு போறேன். உனக்கு வேலை எல்லாம் ஆயாச்சா?”

ஆ ஆயாச்சு

அப்போ நீயும் வா போகலாம். இப்போ இவாளும் எல்லாரும் படுத்துக்க பாயைப்போடுவா. கம் லெட்ஸ் கோ

என்று நவீன் சொன்னதும் அவளுக்கு அதற்கு முன்னாடி நாள் அவளிடம் யாரும் பேசாமல் அவரவர் படுக்கையை தயார் செய்து படுத்துக்கொண்டது, ஒருத்தி நின்றுக்கொண்டிருக்கிறாளே என்பதைக்கூட பொருட்படுத்தாமல் நடந்துக்கொண்டது எல்லாம் ஞாபகம் வர இன்றும் அதேபோல் நடந்தால் என்ற எண்ணம் அவளை நவீனுடன் மாடிக்கு ஏற வைத்தது. 

ஆனாலும் அவளது இந்த சங்கடங்களை நவீனிடம் பகிர்ந்துக்கொள்ளவில்லை. 

மூன்றாவது நாள் விடிந்தது. நன்றாக உறங்கிக்கொண்டிருந்தனர் நவீனும் மிருதுளாவும். மீண்டும் டக்…டக்…டக்… என கதவு தட்டும் சத்தம். மிருதுளா எழுந்து கடிகாரத்தைப்பார்த்தாள் மணி ஐந்து தான் ஆகியிருந்தது. நவீனை எழுப்ப அவன் பக்கம் திரும்பினாள் ஆனால் அவன் ஆழந்து உறங்கிக்கொண்டிருப்பதைப்பார்த்து எழுப்ப மனசு வரவில்லை. தானே எழுந்து கதவைத்திறந்து பார்த்தாள், இம்முறை இருட்டில் நின்று கதவைத்தட்டியது பக்கத்துவீட்டுக் குட்டிப்பையன் கார்த்திக் இல்லை, காலேஜ் செல்லும் நவீன் வீட்டுக் கடைக்குட்டி பவின். 

ஹாய் பவின் குட் மார்னிங். என்ன காலங்காத்தால கதவ தட்டற?”

மன்னி டைம் அஞ்சு ஆச்சு. உங்களை கீழே வரச்சொன்னா அம்மா” 

ஏய்தவள் கீழே இருக்க அம்பை நோவானேன் என நினைத்து

சரி சரி வரேன்னு போய் சொல்லு

சிறிது நேரம் கழித்து மாற்றுத்துணிகளுடன்  கீழே சென்று குளித்துவிட்டு துணிகளை காயப்போட்டுவிட்டு அடுப்படிக்குள் நுழைந்து தனது அம்மாவிடம் கேட்பது போலவே …

அம்மா காபி” 

வேனும்னா போட்டுக்குடி. உனக்கு காபி போடவாவது தெரியுமா? அதையாவது சொல்லிக்கொடுத்திருக்காளா ஒங்க அம்ம்மாஎன்று காலையிலேயே  பர்வதப்பாதம் ஆரம்பமானது…

பர்வதப்பாதத்தை காதில் வாங்காதது போலவே மிருதுளா தானே காபிப்போட்டுக்கொண்டு  ஹாலுக்கு சென்று அமர்ந்துக்கொண்டாள். அப்பொழுது நவீன் உள்ளே வர உடனே தனது காபியை அவனுக்கு குடுத்துவிட்டு தனக்கு காபி போட மீண்டும் அடுப்படிக்குள் சென்று காபி போட்டுக்கொண்டிருக்கும் போது நவீன் ஹாலில் இருந்து 

இன்னைக்கு காபி சூப்பரா இருக்கே என்ன விஷேசம்? காபி பொடி மாத்திட்டயா என்ன…இனி இதே ப்ராண்ட் காபி  பொடி வாங்கு.என்று பர்வதத்திடம் சொல்ல…எறிந்துக்கொண்டிருந்த நெருப்பில் எண்ணையை ஊற்றியது போலானது. அப்பொழுதும் மிருதுளா தான் போட்ட காபி என்று நவீனிடம் சொல்லவில்லை. சொன்னால் வரக்கூடிய விளைவுகளை நன்கு மூன்றே நாளில் கற்றுக்கொண்டு விட்டாள். ஆகையால் அமைதியாக தனக்கு தானே போட்ட காபியோடு வந்து நவீன் அருகே அமர்ந்து அருந்தலானாள். இங்கு நடந்தது ஏதும் தெரியாத ஈஸ்வரன் …நவீன் சொல்வதைக்கேட்டுவிட்டு

ஏய் பர்வதம் காபி பொடி மாத்திட்டயா சொல்லவே இல்ல…ஆனா எனக்கு எப்பவுமே தர காபி தானே இன்னைக்கு காலையிலும் தந்த!!! ஒரு வித்யாசமும் தெரியலையே. சரி போய் எனக்கு புது காபிப் பொடி போட்டு நவீனுக்கு கொடுத்த மாதிரியே ஒரு காபி போட்டுண்டு வா” 

பர்வதத்திற்கு சுர்ரென்று கோபம் தலைக்கேறியது…

காலை ல ஒரு காபி தான். ரெண்டாவது காபி ..புது பழக்கமா இருக்கு?? இது என்ன காபி கடையா? காபி போட்டுண்டே இருக்க. இன்னும் கொஞ்சம் நேரத்துல டிஃபன் சாப்பிடனும் இப்போ என்னத்துக்கு காபி கீபி எல்லாம் அது பசியை முறிச்சுடும். போங்கோ உங்க நியூஸ்ஸை ரேடியோவில் கேளுங்கோ

இதை பார்த்தும் கேட்டும் கொண்டிருந்த மிருதுளாவிற்கு சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சட்டென ஒரு சிரிப்பு சிரித்தாள். அதைப் பார்த்த நவீன் 

என்ன மிருதுளா காபி குடிக்கும் போது இப்படி ஒரு சிரிப்பு

அது …அது… எதையோ நினைத்தேன் சிரிப்பு வந்துடுத்து… மனசுக்குள்ள சிரிக்கறதா அல்லவா நினைச்சேன். சாரி

என்னத்துக்கு சிரிச்சதுக்கெல்லாம் சாரி கேட்கிற?”

இவர்களின் உறையாடலைக் கேட்ட பர்வதம் மிருதுளாவை முறைத்துக்கொண்டே அடுப்படிக்குள் போய் ..

ஏய் மிருதுளா எத்தர நேரமா ஒரு கிலாஸ் காபி குடிப்ப? இங்க வா

என்றழைக்க….பர்வதத்தின் அடுத்த களம் என்னவாக இருக்கும் அதை எப்படி சமாளிப்பது என்ற எண்ணங்கள் மிருதுளா மனதில் தாறுமாறாக ஓட…

என்ன மா சொல்லுங்கோஎன தன்னை தயார் படுத்திக்கொண்டு எதுவானாலும் எதிர்க்கொள்ள அடுப்படிக்குள் சென்றாள்.

வெகுளிப் பெண்ணாக வந்தும் வீட்டின் பெரியவர்களின் செயல்களால் வந்தவளும் தனது குணத்தை அங்கிருப்பவர்களுக்கு தகுந்தார் போல் மெல்ல மாற்றிக்கொள்ள ஆரம்பித்தாள்.  இதுவே மிருதுளா எடுத்து வைத்த முதல் அடி. மிருதுளா மாறுவது தவறா இல்லை பர்வதம் மாறாதது தவறா.!!!! 

தொடரும்…..

நவீனும் மிருதுளாவும் ஒருவழியாக வெளியே சென்றனர். முதலில் இருவரும் ஜோடியாக வெளிய செல்வதால் பிள்ளையாரை தரிசித்து பின்பு செல்லலாமா என மிருதுளா நவீனை கேட்டாள். இருவரும் உச்சிப்பிள்ளையாரை தரிசித்த பின்  பிச்சுமணி மாமா வேலை பார்க்கும் பாங்கிற்கு சென்றனர். பாங்க் வாசலில் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த பிச்சுமணி இவர்கள் வருவதை பார்த்ததும் ..

வாங்கோ வாங்கோ நவீன் அன்ட் மிருதுளா. வெல்கம். என்ன லாக்கர் விஷயம் தானே. வாங்கோ உள்ளே போகலாம்

ஆமாம் மாமா அதற்கே தான் வந்திருக்கோம். அப்படியே உங்க ஆத்துக்கும் ஒரு எட்டு போயி மாமிக்கும் ஒரு ஹாய் சொல்லலாம்னு …மாமி ஆத்துல இருக்காளோனோ!!!!

ஓ தாராளமா போயிட்டு வாங்கோ. அம்பிகா ஆத்துல தான் இருக்கா. ஐ வில் ஜாயின் யூ ஃபார் லஞ்ச். இங்கே ஒரு ஸிக்னேச்சர் போடு. ஜாயின்ட் அக்கௌன்ட் தானே !!!

ஆமாம் மாமா ஜாயின்ட் தான் …இனி எல்லாமே ஜாயின்ட் தான்

தட்ஸ் குட் ரா. ஐ லைக் தி வே யூ செட். சரி அப்போ மிருதுளா நீயும் இங்க ஒரு சைன் பண்ணுமா

சரி மாமா

ஓகே தென் ஆல் ஃபார்மாலிடீஸ்  ஓவர். லெட் மி ஷோ யுவர் லாக்கர். இந்தாமா இது உங்களோட லாக்கர் கீ. பத்திரமா வச்சுக்கோ. எஸ் ஹியர் வி ஆர். இதுதான் உங்க லாக்கர். மிருதுளா அந்த சாவியை தா. இப்படி என்னிடமுள்ள சாவியையும் உங்கள்ட்ட இருக்குற சாவியையும் ஒன்னா போட்டாதான் திறக்க முடியும். ஸோ நீங்க ஒவ்வொரு தடவ வரும்போதும் சாவியை மறக்காம எடுத்துண்டு வரனும். ஓகே. சரி இனி என்னென்ன வைக்கனுமோ வச்சுட்டு மறக்காம லாக் பண்ணிட்டு வாங்கோ

அப்போ உங்க கீ மாமா. அத எடுத்துண்டு போரேளே

ஹா !ஹா! ஹா! லாக் பண்ண உன்னிடம் இருக்கும் கீ மட்டும் போதும் மிருதுளா.

ஓ !!! ஓகே மாமா

சரி முடிச்சுட்டு ஆத்துக்கு போங்கோ நான் ஒரு க்ளைன்ட்ட மீட் பண்ண வெளியே போயிட்டு அப்படியே ஆத்துக்கு வந்துடரேன். ஐ வில் கோ இன் மை ஆஃபிஸ் கார். நீங்க என்னோட ஸ்கூட்டர் எடுத்துண்டு போங்கோ” 

என்று கூறி அவரது காரில் ஏறி புறப்பட்டு சென்றார். நவீனும் மிருதுளாவும் நகைகள், வெள்ளி பாத்திரங்கள் என அனைத்தையும் லாக்கரில் வைத்துவிட்டு நவீன் மாமாவின் பஜாஜ் ஸ்கூட்டரில் அவர் வீட்டுக்குச் சென்றார்கள். அவர்களைப்பார்த்த அம்பிகா உள்ளேயிருந்து ஓடி வாசலுக்கு வந்து அவர்களை வரவேற்றாள். 

வாடா நவீன். வாம்மா மிருதுளா. உள்ள வாங்கோ. எப்படி உன் மாமா ஸ்கூட்டர் உங்ககிட்ட !!!

வந்துன்டே இருக்கோம் மாமி. ரொம்ப யோசிக்காதீங்கோ. நாங்க அவர பாங்க்ல லாக்கர் விஷயமா  பார்த்துட்டுதான் வரோம். அவர்தான் ஸ்கூட்டரை எடுத்துண்டு போகச்சொன்னார் மாமி.

ஓ !!! அப்படியா!!! அதுதானே காலைல அவர் ஸ்கூட்டர்ல தானே பாங்க் போனார் என்னடா இவா அதுல வராலேன்னுட்டு கொஞ்சம் கன்ஃப்யூஸ் ஆகிட்டேன் அவ்வளவு தான். அச்சோ விட்டா  நான் பேசிண்டே இருப்பேன். கொழந்தகள் மொதோ மொதோ தம்பதிகளா ஆத்துக்கு வந்துருக்கேங்கள் ஏதாவது குடிக்க தரண்டாமோ அத விட்டுட்டு ஸ்கூட்டர் புராணம் பாடறேன் பாரேன்…இந்தா எடுத்துக்கோமா லெமென் ஜூஸ். இந்தாடா உனக்கும் ” 

தாங்க்ஸ் மாமி

என்னதுக்கு தாங்க்ஸ் எல்லாம் சொல்லர மா? கையிலேயே வச்சிண்டு இருக்கேங்கள் குடிங்கோ ரெண்டு பேரும்

என்ன மிருதுளா கல்யாண வாழ்க்கை எப்படி ஆரம்பிச்சிருக்கு?”

மிருதுளா மனதிற்குள் காலை வீட்டில் நடந்த வாக்குவாதம் சட்டென்று வந்து போனாலும் மலர்ந்த முகத்துடன் பதிலளித்தாள்.

ஓ! நன்னா ஆரம்பிச்சிருக்கு மாமி.

அப்படியா!!! அப்படி போடு

ஏன் மாமி நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா

நீ ஏதும் தப்பா சொல்லலமா. நல்ல மாட்டுப்பொண்ணா சொல்லற. பார்ப்போம் போக போக தெரியும். டேய் நவீன் உனக்கும் உங்க குடும்பத்துக்கும் நல்ல பொண்ணா கிடச்சிருக்கா நம்ம மிருது. நீ தான் அவள நல்லா பார்த்துக்கணும் டா.

டன் மாமி. மாமி பேச்சுக்கு நோ அப்பீல் அட் ஆல்.

போடா உனக்கு எப்பவும் விளையாட்டு தான். மிருதுளா …நவீன் அவனோட செவென்த் ஸ்டான்டர்டை இங்கே இருந்து தான் படிச்சான். எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணிருக்கான். என் மாமியார் பயங்கரி அவா என் மேல சுட சுட பாலை உத்தினதிலிருந்து எல்லாமே அவனுக்கு தெரியும் எல்லாத்தையும் அவன் நேரிலே பார்த்திருக்கான். அவா பொண்ணு தான் இப்போ உன் மாமியார் அதனாலதான் அவன்ட்ட உன்ன பத்திரமா பார்த்துக்க சொன்னேன். நான் பட்டதே போரும்மா. எனக்கு ஒரு மாமியார் இல்லை நாலு பேர்…என்ன யோசிக்கறாய் என் நாத்தனார்களையும் சேர்த்து தான் சொல்லரேன்…அதிலும் உன் மாமியார் என்னையும் என் புருஷனையும் மனதளவில் பிரிச்சுட்டானுதான் சொல்லுவேன் …ஏதோ கல்யாணம் பண்ணின்டதால கூட இருக்கார் அவ்வளவுதான்..சரி சரி என் கஷ்டம் என்னோடயே போகட்டும். சாப்பிடலாமா எல்லாத்தையும் எடுத்து வைக்கட்டுமா?”

இல்ல மாமி மாமா வந்துடட்டும் எல்லாருமா சேர்ந்து சாப்பிடலாம்

சாப்பிட வரேன்னு சொன்னாரா?”

ஆமாம் மாமி சொனார். அதோ அவரே வந்துட்டார்

சரி அப்போ இலையை போட்டு வைக்கறேன் நீங்க ரெண்டு பேரும் கை கால் அலம்பிட்டு வாங்கோ

சரி மாமி

என்று உள்ளே சென்று கை கால்களை அலம்பி விட்டு விருந்து சாப்பிட வந்து அமர்ந்தான் நவீன். பிச்சுமணியும் அமர்ந்திருந்தார். மிருதுளாவிற்கும் நவீன் பக்கத்தில் இலைப் போட்டிருந்தாள் அம்பிகா ஆனால் மிருதுளா தான் மாமிக்கு பரிமாறுவதில் உதவி செய்துவிட்டு பின் மாமியுடன் சேர்ந்து சாப்பிடுவதாக கூறினாள் அதற்கு அம்பிகா…

ஏய் மிருது அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீ போய் நவீன் கிட்ட உட்காரு எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன். அடுத்த தடவை வரும்போது நீயே பரிமாறு நான் உன்ன தடுக்க மாட்டேன் இப்போ அங்க போய் உட்கார்ந்துண்டு சமத்தா சாப்பிடு போ.

மிருதுளா சென்று நவீன் பக்கத்தில் அமர்ந்து மூவருமாக உணவருந்திய பின் மிருதுளா அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு மாமிக்கு பரிமாறினாள். நவீனும் பிச்சுமணியும் ஹாலில் அமர்ந்து கிரிக்கெட் மாட்ச் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சாப்பிட்டுக்கொண்டே அம்பிகா மிருதுளாவோடு பேசினாள். 

உன் மாமியார் என்னையும் உங்க மாமாவையும் கல்யாணமான புதுசுல இப்படி தனியா எங்கயுமே விடமாட்டா எப்பப்பார்த்தாலும் தம்பி தம்பி னுட்டு கூடவே தான் வருவாள். அப்போ அவா எல்லாருமே இங்க தானே இருந்தா. உனக்கு உங்க மாமனார் எப்படி இருந்தார் ன்னுட்டு எல்லாம் தெரியுமோல்யோ…அந்த சமயத்துல இங்க தான் இருந்தா நாங்க தான் பார்த்துண்டோம். அவளுக்கு கல்யாணமாகி நாலு புள்ளகள பெத்துட்டா ஆனாலும் என்ன என் புருஷன் கூட பேச விட மாட்டா அப்படியே எங்க ரூமுக்குள்ள பேச ஆரம்பிச்சாலும் கழுகுக்கு மூக்கு வெசர்க்கறா மாதிரி எங்கிருந்தாலும் கொஞ்சம் கூட இங்கிதமில்லாமல் உள்ள வந்து தம்பியை கூட்டிண்டு போயிடுவள்…இதனாலயே எனக்கும் உங்க மாமாக்கும் இடையில ஒரு அன்டர்ஸ்டாண்டிங் இன்னே வரைக்கும் இல்லாம போச்சு” 

என்று பேசிக்கொண்டிருக்கும் போதே கரன்ட் கட் ஆனது அப்போ அம்பிகா பேசியதை கேட்ட பிச்சுமணி 

என்ன மிருதுளா கிட்டையும் உன் கதா காலட்சேபத்த ஆரம்பிச்சுட்டயா? உனக்கு என் அக்கா, அம்மா பத்தி குத்தம் சொல்லாட்டி நாள் முழுமையாகாதோ? மிருதுளா அவ கெடக்காமா நீ வா வந்து ஹால்ல உட்காரு  நான் விசிறி எடுத்துண்டு வரேன்

பார்த்தயாமா அவாள விட்டுக்கொடுக்காமா பேசறதை!!!! ஆனா பொண்டாட்டி னா மனுஷனுக்கு எவ்வளவு எலக்காரம் …பார்த்தயா ….இது தான் மாமியாரின் எஃபெக்ட். சரி இதுக்கு மேலே ஏதாவது சொன்னா அடி கூட கிடைக்கும். நீ போய் ஹால்ல உட்காரு நான் வரேன்

மிருதுளாவிற்கு என்ன சொல்வது எப்படி ரியாக்ட் செய்வது என்று ஒன்றும் புரியாமல் சென்று சேரில் அமர்ந்தாள். அம்பிகா சாப்பிட்டப்பின் வந்து ஹாலில் அமர்ந்தாள்..

நீங்க ரெண்டு பேரும் வேணும்னா அந்த ரூம்ல போய் செத்த நேரம் படுத்துக்கோங்கோடா

நோ மாமி நோ வே நாங்க கிளம்பறோம். நீங்க சாப்பிட்டுட்டு வரத்துக்காக வேயிட் பண்ணினோம். டைம் மூனு ஆச்சு.

ஏன்டா இருந்து சாயந்தரம் காபி குடிச்சுட்டு வெயில் தாழ கிளம்புங்கோ

இல்ல மாமா வி ஹாவ் டு கோ நவ். இப்ப கிளம்பினா தான் பஸ் பிடிச்சு ஆத்துக்கு ஒரு ஆறு மணிக்காவது போய் சேர முடியும். நாங்க கிளம்பறோம். தாங்க்ஸ் ஃபார் தி லவ்லி விருந்து மாமி

என்னத்துக்கு தாங்ஸ் எல்லாம் போடா. இருங்கோ இதோ வரேன்

ஏன்னா இப்படி வந்து என்னோட சேர்ந்து இந்த புடவை வேஷ்டி யை கொழந்தைகளுக்கு குடுங்கோ

நீயே குடு டி. என்னத்துக்கு!!! சேர்ந்து தான் குடுக்கனுமாக்கும். அடி போடி..

மாமா போய் மாமி கூட சேர்ந்து நில்லுங்கோ நாங்க நமஸ்காரம் பண்ணனும்

ஏன்டா நீ வேற. சரி சரி உங்களுக்காக

நவீனும், மிருதுளாவும் மாமா மாமி கால்களில் விழுந்து நமஸ்காரம் செய்து புடவை வேஷ்டியையும் வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பி நடந்து பஸ் ஸ்டாண்ட் வந்தனர். நடந்து வருகையில் மிருதுளா நவீனைப்பார்த்து

ஏன் நவீன் உங்க மாமி சொன்னதெல்லாம் நிஜமா? உங்க பாட்டி அப்படியெல்லாம் செய்தாளா?”

ஆமாம் மிருது உண்மை தான் என் அம்மாவோட அம்மா கொஞ்சம் ரூட் அன்ட் பேராசைப் பிடிச்சவா. பிச்சுமணி மாமாவுக்கு மொதல்ல ஒரு இடத்துல பொண்ணு பார்த்து ஓகே பண்ணினா.  மாமாவும் அந்த பொண்ணை மனதார விரும்பி பழகிண்டிருந்தார் ஆனா அம்பிகா மாமி சம்மந்தம் வந்ததும் முன்னாடி பேசின சம்மந்தத்தை வேண்டாம்னுட்டா

ஏன் அப்படி செய்தா மாமாவுக்கு தான் அந்த பொண்ண பிடிச்சிருந்துதே!!

எல்லாம் பணத்தாசை னு தான் சொல்லனும். அம்பிகா மாமி அந்த மொதோ பார்த்த குடும்பத்தை விட வசதி ஆனவா அதனால அப்படியே பல்டி அடிச்சுட்டா. அதுக்கப்பறம் என்னென்னவோ நடந்தது. கடைசில அம்பிகா மாமியையும் நிம்மதியா வாழ விடலை என் பாட்டி. அப்போ நான் நினைச்சுக்குவேன் மொதோ எங்க மாமாவுக்கு பார்த்த பொண்ணு இந்த பாட்டிக்கிட்டயிருந்து  தப்பிச்சாடானு…என்ன பண்ண எல்லாம் அவா அவா  ஃபேட்

ஏன் நவீன் உங்க அம்மா செய்தது பத்தி ஒன்னுமே சொல்ல மாட்டேங்கறேங்களே.

இதோ பஸ் வந்துடுத்து சீக்கிரம் வா. ஏறு இந்த பஸ் தான்

இருவரும் பஸ்ஸில் எறி அமர்ந்தார்கள். மிருதுளா மனதில் பல கேள்விகள் உதித்தது. 

அம்பிகா மாமி பேசியது சரியா? முதல் மதலில் அவா ஆத்துக்கு போயிருக்கோம் இப்படி அவா மாமியார் பத்தியும் என் மாமியார் பத்தியும் குத்தம் சொன்னது சரியா? பாவம் எவ்வளோ நாள் தான் மனதிலே பூட்டி வைத்திருக்க முடியும் அதுதான் கொட்டித் தீர்த்துட்டாளோ!!! நவீன் அவா பாட்டியை பத்தி கேட்டபோது அவ்வளவு டீட்டேய்லா சொன்னவர் ஏன் அவா அம்மாவ பத்தி கேட்ட போது சரியா பதில் சொல்லலை? ஏன் மழுப்பினார்? கல்யாணத்துக்கு முன்னாடியே என்னையும் நவீனையும் ஆறு மாசம் பிரிச்சு வைக்க திட்டம் போட்டவாளாச்சே!!! காலைல கூட ஒன்னுமில்லாத விஷயத்துக்கு அவ்வளவு பெரிய சண்டையை போட்டாளே!!! இதெல்லாம் வச்சுப்பார்த்தா அம்பிகா மாமி சொன்னதெல்லாம் சரின்னு தான் எனக்கு படரது. பார்ப்போம். அம்மா தாயே நீ தாம்மா துணை” 

என்று பஸ்ஸின் ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டிருந்தாலும் மனதில் ஒரு போராட்டமே நடத்திக்கொண்டிருக்கையிலே  சட்டென்று தன் முகத்தை உரசிக்கொண்டு ஒரு கை ஜன்னல் பக்கம் நீண்டது. சட்டென்று நெட்டினாள் மிருதுளா.  உடனே நவீன்

ஹேய் மிருது அது தான் நான் படிச்ச ஸ்கூல். ஏய் என்ன ஆச்சு எங்க இருக்க? ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்த போல?”

அதெல்லாம் ஒன்றுமில்லை நவீன். ஓ!! உங்க ஸ்கூலுக்கு நாங்க நிறய காம்படீஷன்ஸ்க்கு வந்துருக்கோம். நான் பேச்சுப்போட்டிக்கு வந்திருக்கேன்.

ஓ!! ஈஸ் இட்!!! அப்போ நாம அப்பவே மீட் பண்ணிருப்போமோ!!! பாரேன்!!! காட் டிசைட்ஸ் வென் வீ ஹாவ் டூ மீட் னு…இல்ல

எஸ் நவீன் எவரிதிங் ஹாப்பென்ஸ் ஆஸ் பெர் காட்ஸ் விஷ் அன்ட் ஐ பிலீவ் இட் ஈஸ் ஆல்வேஸ் ஃபார் அவர் குட் ஓன்லி. லெட்ஸ் ப்ரே டு காட் அன்ட் ஹோப் ஆல் ஈஸ் வெல்

ஹய் என்ன மிருது ஏன் சீரியஸா ஆகிட்ட? ஆல் இஸ் வெல் அன்ட் இட் வில் பி வெல் ஆல்வேஸ். நான் இருக்கேன். ஓகே

ஓகே” 

என்று புன்னகையித்தாள் மிருதுளா. 

பிச்சுமணி வீட்டு விருந்து மிருதுளாவின் மனதில் போராட்டத்தை உண்டாக்கியது. அவளுள் பல கேள்விகளை உதிக்கச்செய்தது.  வினாக்களுக்கு விடை கிடைக்குமா மிருதுளாவிற்கு? அதன் பதில்கள் அனுபவமாக கிடைக்குமா இல்லை பதிலாக மட்டும் இருக்குமா என்பதை பற்றி நாம் வரும் வெள்ளிக்கிழமை மேலும் படித்து தெரிந்துக்கொள்வோம்.

தொடரும்……

 காலை ஆறு மணி ஆனது. நவீன் மிருதுளா ரூமின் கதவு டக் டக் டக் டக் என பலமாக தட்டும் சத்தம் கேட்டு மிருதுளா கடிகாரத்தை பார்த்தாள் மணி ஆறு காட்டவும் பதறியடித்து எழுந்து கதைவைத்திறந்தாள் யாரையும் காணவில்லையே என எண்ணிக்கொண்டே திரும்பலானாள் அப்பொழுது பார்த்தாள் பக்கத்துவீட்டு சிறுவன் கார்த்திக் நின்று கொண்டிருந்ததை. 

ஏய் குட்டி பையா நீ தான் கதவ தட்டினியா?”

ஆமாம் அக்கா. பர்வதம் மாமிதான் மணி ஆறாச்சு நீங்க இன்னும் எழுந்திரிக்கல னு என்னை கதவ தட்டி எழுப்பிவிடச் சொன்னாங்க. அக்கா நானே எழுந்துருச்சிட்டேன் நீங்க இன்னுமா தூங்கரீங்க..நவீன் அண்ணா எங்கஎன்று உள்ளே செல்ல முயன்ற சிறுவனை தடுத்து தாங்கள் கீழே வருவதாக பர்வதம் மாமியிடம் சொல்லும்படி சொல்லி அனுப்பினாள். 

மிருதுளாவை விடிந்ததும் சிறுவனின் மூலம் அவமானப்படுத்த துவங்கினாள் பர்வதம். கீழே வந்து பல் துலக்கியவுடன் குளிக்கச் சென்றாள் மிருதுளா. அது அவளது வழக்கம். குளித்து முடிந்ததும் ஹாலுக்கு வந்தாள். அவளருகே காபிவை வைத்துவிட்டு…

இந்தா காபி. உனக்கு இதுதான் காலை அஞ்சு மணியோ?” என முனுமுனுத்துக்கொண்டே அடுப்படிக்குள் சென்றாள். 

மிருதுளாவிற்கு என்ன சொல்வது… என்ன செய்வதென்று தெரியாமல் காபியை குடித்துவிட்டு அந்த டம்பளரையும் மற்ற அங்கு கிடந்த பாத்திரங்களையும் தேய்த்து வைத்து அடுப்படிக்குள் சென்று ஏதாவது செய்ய வேண்டுமா என்று கேட்க அதற்கு பர்வதம்

இவ்வளவு லேட்டா வந்து கேட்டா. எல்லாம் ஆயாச்சுஎன்று கூறி வெடுக்கென்று முகத்தை திருப்பிக்கொண்டாள். அங்கு இருந்த தனது மச்சினர்களை பார்த்துஹாய் குட் மார்னிங்என்றாள் அவர்களும்குட்மார்னிங்என்று சொல்லிவிட்டு அவரவர் வேலையை பார்க்கலானார்கள்.

மாமனார் உள் ரூமிலிருந்து வரவும் மிருதுளா எழுந்துகுட்மார்னிங்என்று சொல்ல அவரும் வெறுமனே தலையை மட்டும் அசைத்துவிட்டு ரேடியோவை ஆன் செய்து செய்திகளைக் கேட்கலானார். அவரகள் யாருமே ஒருத்தி அங்கு செய்வதறியாது நிற்கிறாளே தானாக பேச்சுக்குடுக்க முன்வருகிறாளே என்று துளியும் புரியாதது போலவே பாவனை செய்து கொண்டிருந்தார்களா இல்லை அவர்கள் குடும்பமே அப்படி தானா என்ற சந்தேகம் மிருதுளாவின் மனதில் எழுந்தது. 

மிருதுளாவிற்கு ஏதோ ஒரு அன்னிய வீட்டினுள் யாருமே இல்லாமல் தனித்து நிற்பது போல் இருந்தது. நவீன் எப்போது எழுந்து வருவார் என மனதில் நினைத்துக்கொண்டே மாடிப்படியை பார்த்தாள் நவீன் கீழே இறங்கி வந்துக்கொண்டிருந்ததைப் பார்த்துஅப்பாடஎன பெருமூச்சு விட்டாள். அவன் ஃப்ரெஷ் அப் ஆகி வந்ததும் மிருதுளாவைப் பார்த்து 

ஹே மிருது அதுக்குள்ள குளிச்சிட்டயா. குட் குட்என கூறிக்கொண்டே பர்வதம் கையிலிருந்து காபியை வாங்கிக்கொண்டான். நவீனுடனும் அவர்கள் அவ்வளவாக யாருமே பேசவில்லை. அதனால் அவர்களின் சுபாவமே அதுதான் என மனதில் நினைத்துக்கொண்டாள் மிருதுளா. 

நான் மன்டே டூ ஃப்ரைடே உன்ன மாதிரிதான் எழுந்ததும் குளித்துவிட்டு தான் வருவேன் ஆனால் சாட்டர்டே சன்டே மத்தியான சாப்பாட்டுக்கு முன்னாடிதான் குளிப்பேன். சரி நீ சீக்கிரம் ரெடி ஆகு நாம வெளில போகனும்என்றதும் மிருதுளாவின் மனம் அப்பாட இந்த இறுக்கமான இடத்திலிருந்து சற்று நேரம் ரிலீஃப் கிடைக்கப்போகிறதே என சந்தோஷத்தில் துள்ளியது. அதில் மண்ணைப்போட்டு அணைத்தது போல பர்வதம் குறுக்கிட்டு

இனைக்கு எதுக்கு வெளில போகனும் அதுவும் வெயில்ல ஒன்னும் வேண்டாம்” 

ஏதோ புதிதாக திருமணம் ஆனவர்கள் வெளியே போயிட்டு வரட்டும் சந்தோஷமா இருக்கட்டும் என்றில்லாமல் தனது ஆதிக்கத்தை செலுத்த நினைத்தாள் பர்வதம். ஆனால் நவீன் உடனே

இங்க இருந்துண்டு என்ன பண்ணப்போறோம். இட் வில் பி போரிங் ஃபார் அஸ். கொஞ்சம் டவுன் வரைக்கும் போயிட்டு வரோம். உனக்கு ஏதாவது வாங்கிண்டு வரனுமா?”

எனக்கென்ன வேனும்!!என்று அலுத்துக்கொண்டாள் பர்வதம். ஆமாம் அவளுக்கு வேண்டியது கடையில் கிடைக்காது ஏனெனில் அவளுக்கு வேண்டியது மிருதுளாவின் நிம்மதி, சந்தோஷம் என்பது இதுவரை படித்ததை வைத்து நமக்குத்தானே தெரியும். என்ன மக்களே நான் சொல்வது உண்மை தானே??

சரி எங்க கல்யாணத்துக்கு பக்ஷணம் தந்தாலே அதெல்லாம் நம்ம தெரு ஆட்களுக்கெல்லாம் கொடுத்தயா? நேத்து என் நண்பன் ஆத்துக்கு போனேனே அவா அம்மா சொன்னா கல்யாண பக்ஷணமே வரலயேனுட்டு

இவாளுக்கெல்லாம் கொடுக்க எங்கப்போறது!! உன் மாமனார் ஆத்துல அவளவா கொடுத்தா?” இதை கேட்டதும் ஈஸ்வரன் பர்வதத்தைப்பார்த்து …

ஏண்டி இப்படி சொல்லற…உள்ள அவா கொடுத்தனுப்பிய பக்ஷணம் எல்லாம் அட்டப்பெட்டியோட அப்படியே இருக்கே. உன் ஆத்துக்காராளுக்கெல்லாம் கொடுத்தது போக எவ்வளோ மீதி இருக்கு !!!என்றதும் பர்வதம் அவரை ஒரு முறை முறைத்தாள். மனிதர் கப்சிப் ஆனார். 

ஆமாம் மிருது ஆத்துலேருந்து நிறைய பக்ஷணம் எல்லாம் அவ தம்பி வேனு நம்ம வேனுல ஏத்தும்போது நான் கேட்டேன் என்னது இவ்வளவு டப்பா ஏத்தறேங்கள் னு அப்போ அவன் சொன்னான் எல்லாம் சீர் பக்ஷணங்கள் னுட்டு

ஆமாம் ஆமாம் அவன் அக்கா சூட்கேஸை எல்லாம் பக்ஷணம் டப்பா னுட்டு சொல்லிருக்க போறான்என்று நக்கலாக சொன்னாள் பர்வதம் 

மிருதுளாவிற்கு பிடிக்கவில்லை என்றாலும் காலை முதல் தன்னை வம்புக்கு இழுப்பது போலவே பேசும் தனது மாமியாரிடம் ஒன்றுமே பதில் அளிக்காமல் விலகிச்சென்றாள். ஆம் மிருதுளா நினைப்பதும் சரிதான் பதிலுக்கு பதில் பேசி வந்ததும் சண்டை போடுறா என்கிற பேரை அவளுக்கு பட்டமளிக்க வோஇல்லை சண்டைக்கு இழுத்து அவர்கள் மன நிம்மதியை குலைக்க வா!!!… என்னவோ ஏதோ ஆனால் மிருதுளாவை முனுமுனுத்துக்கொண்டே சீண்டிக்கொண்டு இருந்தாள் பர்வதம். இப்படியும் சில மனிதர்கள். 

அனைவரும் காலை உணவு அருந்த அமர்ந்தனர். மிருதுளா தயங்கி நின்றிருந்தாள் அப்போது நவீன் மிருதுளாவையும் அமரும்படி சொல்ல பர்வதத்திற்கு கோபம் வந்து..

ஏன் இவ்வளவு நாள் மிருதுளா கூடதான் சாப்பிட்டயோ!!! அவள் பக்கத்தில் இல்லாமல் சாப்பாடு இறங்காதோஎன்று கேட்க

அதுக்கில்ல அவள யாருமே கூப்பிடலை அதுதான் நான் கூப்பிட்டேன் ஏன் இதுல என்ன இருக்கு? இதுக்கு ஏன் இப்படி சொல்லற?” என நவீன் திருப்பி கேட்டதும் சுதாரித்துக்கொண்டாள் பர்வதம் 

அவளும் நானும் அப்பறமா சாப்பிட்டுக்கறோம் முதல்ல நீங்கெல்லாம் சாப்பிட்டு எழுந்திரிங்கோஎன்றாள்

ஓகே மிருது நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்கோ ஆனா சீக்கிரம் சாப்பிட்டு ரெடி ஆகிடு

சரிஎன்று புன்னகையித்தால் மிருதுளா. 

நவீன் சாப்பிட்டுவிட்டு மாடிக்குச்சென்றான். அனைவரும் சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்தாள் மிருதுளா. பின் மாமியாருடன் சாப்பிட தட்டு எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்தாள். இட்டிலி என்று ஒன்றை சுட்டு வைத்திருந்தாள் பர்வதம் அதை மிருதுளா சாப்பிட்டதும் அவளின் அம்மா நினைப்பு வந்தது அவளுக்கு. அவள் அம்மா சுடும் இட்டிலி பஞ்சுப்போல இருக்கும். ஏதோ ஒரு நாள் கொஞ்சம் ஹார்டான இட்டிலி சுட்டதற்கு வேனுவும் மிருதுளாவும் அவர்கள் அம்மாவை கல்லிட்டிலி அம்பு என கிண்டலடித்தது அவளுக்கு ஞாபகம் வந்தது. அதைவிட பல மடங்கு கனமான இட்டிலியை அன்று நவீன் வீட்டில் தான் முதல் முறையாக பார்க்கிறாள். அதையும் ஒன்றும் சொல்லாமல் ஐந்தைந்து உண்டு எழுந்த தனது மாமனார், கணவர், மச்சினன்களை பாவம் என்று மனதில் எண்ணிக்கொண்டே ஒரே ஒரு இட்டிலி மட்டும் சாப்பிட்டு எழலானாள் அப்போது பார்த்து பர்வத்திற்கு எங்கிருந்தோ பாசம் மடைத்திறந்து தாவும் நதியலைப்போல 

என்ன இது ஒரு இட்டில எழுந்திரிக்கறாய் உட்காருஎன இன்னும் இரண்டு தட்டில் கேட்காமல் போட திரு திருவென முழித்துக்கொண்டு சாப்பிட முடியாமல் மிகவும் சிரமப்பட்டு சாப்பிட்டு முடித்து தட்டைக்கழுவி வைத்து விட்டு தான் டிரஸ் மாற்ற போவதாக சொல்லிவிட்டு மாடிக்குப் போனாள். அங்கே நவீன் ரெடியாகி அமர்ந்திருந்தான். மிருதுளாவை பார்த்ததும் அவளிடம்..

ஹே மிருது நீ உன் நகைகளை எல்லாம் ஒரு பேக்கில் போட்டு எடுத்துக்கோ நம்ம பிச்சுமணி மாமா பாங்கில் லாக்கருக்கு சொல்லிருக்கேன் அங்க போய் வச்சுடலாம். இந்த ஏரியா அவ்வளவு ஸேஃப் இல்ல மோரோவர் அப்பாவும் வயசானவர் அதுனால தான் சொல்லறேன். நீ என்ன சொல்லற” 

ஓகே வச்சுடலாம் எனக்கு வேண்டியதை மட்டும் வச்சுக்கறேன் மத்ததை எல்லாம் பாங்க் லாக்கர்ல வச்சுடலாம்” 

என பேசிக்கொண்டு கையில் பேக்குடன் கீழே இறங்கி வந்தவர்களை பார்த்து பர்வதம்

என்ன அது பேக்?”

இது எனக்கு இப்போதைக்கு தேவையில்லாத நகைகள் அம்மா. இத ஊருக்கும் எடுத்துண்டு போகவேண்டாமாம் நவீன் சொல்றார். அவர் பிச்சுமணி மாமா பாங்க் லாக்கர்ல வைக்கலாம் னு சொன்னார் அதுதான் எடுத்துண்டு போறோம்” 

காலை முதல் சண்டைக்காக காத்திருந்த பர்வதம் இதையே பிரச்சினை ஆக்க முடிவெடுத்து ஆரம்பித்தாள்

இதோ பாருமா இது மாதிரி உன் எண்ணங்களை எல்லாம் நவீன் சொன்னான் என்று அவன் மேல போட்டுட்டு ஒன்னுமே தெரியாததுபோல நின்னுட்டா நாங்க நம்பிடுவோமா. எல்லாத்தையும் மேலே அவனுக்கு சொல்லிக்குடுத்துட்டு இப்போ என்னவோ அவனே சொன்னா மாதிரியும் உனக்கு ஒன்னும் தெரியாதது போலவும் சொல்லற!!

அவளுக்கு ஒன்னும் தெரியாதுதான் நான் அவளுக்கே இப்போ தான் சொன்னேன்

அப்படிப்போடு ஒரு நாள்லயே இவளோ மாறிட்ட பேஷ். சரி அப்படியே வச்சுப்போம்…

வச்சுக்க எல்லாம் வேண்டாம் அதுதான் உண்மை

சரிடா அப்படியே இருக்கட்டும். நீ சொன்ன சரி நாங்க ரெண்டு பேரு ஆத்துல இருக்கோமே எங்களாண்ட இது மாதிரி வைக்கலாம் னு இருக்கேன் என்ன சொல்லறேங்கள் னுட்டு ஒரு வார்த்த கேட்டயாடா?”

அது மிருதுளாவோட நகை அத லாக்கர்ல வைக்கறதுக்கு உங்கள்ட்ட ஏன் கேட்கனும்? மிருதுளாட்ட தான் கேட்கனும் அதுதான் கேட்டேன். அவளும் சரினுட்டா. இதுல இப்போ உனக்கென்ன ப்ராப்ளம்?”

என்ன ப்ராப்ளமாமே நன்னாருக்குடா நன்னாருக்கு நீ பேசறது ரொம்ப நன்னாருக்கு. எல்லாத்துக்கும் இவதான் இவளேதான் காரணம். பெரியவானுட்டு ஒரு மரியாத இல்லை அவாள்ட்ட சொல்லிட்டு எதாருந்தாலும் செய்வோம்னு இல்ல எல்லாம் அவ இஷ்டம் இல்லையா!!!

அத தான் மிருது இப்போ சொன்னாளே பின்ன என்ன. நாங்க சொல்லாம போயிட்டு வந்தா நீ சொல்லறா மாதிரி கூட வச்சுக்கலாம் ஆனா அவ தான் இப்போ கீழே வந்ததும் சொன்னாலே

எப்போ சொன்னா? எப்போடா சொன்னா? நானா கேட்டதுக்கப்பறம் தானே சொன்னா? என்னமோ தானா ஓடி வந்து சொன்னா மாதிரி சொல்லற

அய்யோ எப்ப சொன்னா என்ன? சொன்னாளா இல்லையா?

என பர்வதத்திற்கும் நவீனுக்கும் பேச்சு முற்றி விடுவதற்குள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டி மிருதுளா 

சாரி மா அவர் உங்கள்ட்ட சொல்லிருக்கனும் அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எங்கள மன்னிச்சுடுங்கோ” 

ஏய் மிருதுளா நாம மன்னிப்பு கேட்குற அளவுக்கு ஒரு தப்புமே பண்ணல தென் வை ஆர் யூ ஆஸ்க்கிங் சாரி?” என்றான் நவீன்

மிருதுளா தடாலென்று சாரி கேட்டதும் அதை எதிர்பார்க்காத பர்வதம் 

சரி சரி ஏதோ இந்த தடவ மன்னிச்சுடரேன் இத தொடராமா பார்த்துக்கோங்கோ.என கூறி உள் ரூமிற்குள் சென்றாள். 

இப்படியாக வெளியே கிளம்பியவர்களிடம் சண்டையிட்டு மன நிம்மதியை குலைத்து விட்டு மன திருப்தியுடன் உள்ளே சென்றாள் பர்வதம். அவள் காலை முதல் மிருதுளா ஏதாவது தன்னை எதிர்த்து பேசுவாள் என்று பலவற்றை முயற்சித்து  நடக்காததால் சற்று வருத்தமாகவும் இருந்தாள். பர்வதத்திற்கு என்னதான் ஒரு பிரச்சினையை கிளப்பின திருப்தி இருந்தாலும் அவள் எதிர்பார்த்தது மிருதுளாவை சீண்டினால் அவள் திருப்பி பேசுவாள் அதை வைத்து ஒரு பெரிய பூகம்பத்தையே உருவாக்கலாம் என்று ஆனால் மிருதுளாவின் மௌனம் அவளை ஏமாற்றமடையச் செய்து புஸ்ஸுவானமாக்கியது.  

இப்படி வம்புக்கென்றே திட்டம் தீட்டும் பர்வதத்துடன் மீதமிருக்கும் ஒரு வாரம் காந்தி நகர் செல்லும் வரை என்னவெல்லாம் நம்ம மிருதுளா எதிர்கொள்ள வேண்டிருக்கப்போகிறதோ? பொறுமையை இழக்க நேரிடுமா? அதைப்பற்றி வரும் செவ்வாய் தெரிந்துகொள்ளலாம். இப்போ நம்ம நவீனும் மிருதுளாவும்  நிம்மதியாக வெளியே சென்று வரட்டும். 

தொடரும்…..

 

 

 

திருமணம் முடிந்த மறுநாள் அனைவரும் மண்டபத்தைக் காலி செய்ய வேண்டியிருந்ததால் கிளம்பிக்கொண்டிருந்தனர். அன்று காலை ஒன்பது மணிக்கு டைரெக்ட்டாக சாப்பாடு பரிமாறப்பட்டது. கட்டு சாத கூடைகள், அங்குமணி சீர்கள், சீர் பக்ஷ்ணங்கள் என திருமண காண்ட்ராக்ட் காரர்கள் அனைத்தையும் பக்காவாக பேக் செய்து மண்டப மேடை அருகே வைத்து அம்புஜத்திடம்…

மாமி எல்லாம் ரெடி நீங்க ஆர்டர் கொடுத்த அனைத்தும் தயார். ஒரு தடவ சரி பார்த்துக்கோங்கோ. 7 சுத்து முறுக்கு , முத்துச்சரம், அதிரசம், மைசூர்பாக், லட்டு எல்லாத்துலயும் 101 மாப்பிள்ளை ஆத்துக்கும் 51 உங்க ஆத்துக்கும் னு தனித்தனியா பேக் பண்ணிருக்கோம். மஞ்சள் நிற டப்பாக்கள் எல்லாம் மாப்பிள்ளை ஆத்துக்கு பச்சை நிற டப்பா எல்லாம் பொன்னாத்துக்கு. அங்குமணி சீர் பேக் அந்த ரெண்டு பெரிய பிளாஸ்டிக் ஃபாக்ஸ் ல இருக்கு. கட்டு சாதக்கூடை  இதோ இந்த அஞ்சு ஆரஞ்சு பக்கெட்டில் இருக்கே இது மாப்பிள்ளை ஆத்துக்கு அதே மாதிரி அஞ்சு பச்சை பக்கெட்டில் இருக்கறது உங்களுக்கு. அதுல பொடி தடவிய இட்டிலி, புளியோதரை, தயிர் சாதம், ஊறுகாய் னு அஞ்சு ஐட்டம் பேக் செய்திருக்கோம். எல்லாம் ஓகே வா மாமி?” 

ரொம்ப சந்தோஷம் எல்லாம் சூப்பரா நடத்திக்கொடுத்தேள். தாங்க்ஸ்

பின் அம்புஜம் பர்வதத்தை அழைத்து அவர்களுக்கு கொடுக்க வேண்டிய அனைத்து சாமான்களையும் காண்பித்து எடுத்து வேனில் வைக்க சொல்லலாமா என்று கேட்க பர்வதம் சரி என்று தலை அசைக்க அனைத்தும் நவீன் வீட்டார் வேனில் ஏற்றப்பட்டது. பாக்கி டப்பாக்கள் பெண்வீட்டார் வேனில் ஏற்றினார்கள்.

 இது ஒருபுறம் நடந்துக்கொண்டிருந்தது. 

கட்டு சாத கூடை என்பது மாப்பிள்ளை வீட்டார் மண்டபத்திலிருந்து அவர்கள் வீட்டுக்குச் சென்றதும் அன்று மத்திய உணவை சமைத்து உண்ண வேண்டிய கஷ்ட்டத்தை குறைப்பதற்காக ஏற்படுத்துப்பட்டது. அங்குமணி சீர் என்பது புது மண தம்பதியினர் புது வாழ்க்கை ஆரம்பிக்க ஒரு மாதத்திற்கு வேண்டிய அனைத்து மளிகை சாமான்களும் பெண்ணின் பெற்றோர் வழங்குவது. 

ராமானுஜம் பணம் செட்டில்மென்ட் செய்துக்கொண்டிருந்தார். வேனு அனைத்து சீர் பாத்திரங்கள் அழகாக அடுக்கி வைத்ததை எல்லாம் எடுத்து  அட்டைப்பெட்டிகளில் மறுபடியும் அடுக்கி அதை நவீன் வீட்டார் வேனில் வைத்தான். அதோடு தனது அக்காவின் 4 சூட்கேஸ்களையும் ஏற்றி வைத்தான். பின் அவர்களின் சூட்கேஸ்களை அவர்கள் வண்டியில் வைத்தான். இப்படி ஒவ்வொரும் அவரவர் வேலைகளில் மும்முரமாக இருந்தனர். நவீனும் மிருதுளாவும் மண்டபத்தின் நடுவில் சொந்த பந்தங்களுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். அனைத்தும் பேக் செய்து அவரவர் வண்டியில் ஏற்றப்பட்ட பின் எல்லாரையும் ஒன்றாக அமரச் செய்து அனைவருக்கும் திருஷ்டி பூசணிக்காய் சுற்றினார்கள் மண்டபத்துக்காரர்கள். 

எல்லாம் சுபமாக நிறைவேறியது என்ற திருப்தியில் அவரவர் வண்டியில் ஏறி மண்டபத்திலிருந்து மாப்பிள்ளை வீட்டுக்கு சென்றனர். அங்கு அம்பிகா உள்ளிருந்து ஆரத்தி தட்டு எடுத்து வந்து புது தம்பதியருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றாள். நவீனும் மிருதுளாவும் உள்ளே சென்றனர். பின் அனைவருமாக சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு மிருதுளாவின் பெற்றோர் மற்றும் சொந்தக்காரர்கள் அனைவரும் நவீனிடமும் நவீன் வீட்டாரிடமும் விடைப்பெற்றுக்கொண்டு அவரவர் வீடுகளுக்குச் சென்றனர். மிருதுளாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு சமத்தா பொறுமையா இருக்கனும் என அம்புஜம் கூற மிருதுளா கண்களில் கண்ணீர் பெருக அதை டக்கென்று துடைத்துக்கொண்டாள். 

அனைவரும் சென்றபின் மிருதுளாவிற்கு என்ன செய்ய வேண்டுமென்று ஒன்றுமே புரியாமல் நின்றுக்கொண்டிருந்ததைப்பார்த்து பர்வதம் 

என்ன சும்மா நின்னுண்டிருக்க போய் டிரஸை மாத்திட்டு வா” 

என்று சொல்ல உடனே மேலே மாடிக்குச்சென்று பட்டுப்புடவையை கழற்றிவிட்டு ஒரு சல்வாரை போட்டுக்கொண்டு கீழே வந்தவளைப் பார்த்து பர்வதம் ..

இது என்ன இப்படி வந்திருக்க இந்த மாதிரி எல்லாம் டிரஸ் போட்டுண்டா அப்பாவுக்கு பிடிக்காது சத்தம் போடுவார். போ ..போய் ..ஒரு புடவையை கட்டிண்டு வா.என கூற

மிருதுளாவும் மறுபடியும் போய் புடைவையை கட்டிக்கொண்டு கழற்றி போட்ட பட்டுப்புடவையையும் சல்வாரையும் மடித்துக்கொண்டிருக்கையிலே கீழிருந்து பர்வதம் சத்தமாக அக்கம் பக்கத்தினருக்கு கேட்கும்படி

ஏய் மிருதுளா என்ன இவ்வளவு நேரமா மாடில பண்ணர? ஒரு புடவை மாற்ற தானே போன அதுக்கு இவ்வளவு நேரமா. சீக்கிரம் கீழே வாஎன்றாள்

மிருதுளாவும் கீழே இறங்கி வந்தாள். இதை அனைத்தையும் பார்த்த வண்ணம் இருந்தனர் ஈஸ்வரன் நவீன் மற்றும் அவன் தம்பிகள். ஒருவர் கூட ஏன் அவ்வாறு பர்வதம் கத்தி கூப்பிட்டாள் என அவளை கேட்கவில்லை. அனைவரும் மத்திய உணவு உண்ண அமர்ந்தார்கள். அப்பொழுது பர்வத்தின் அக்கா ரமணி மிருதுளாவிடம்…

மிருது நீயும் நவீனோடயே உட்கார்ந்துக்கோ நாங்க பார்த்துக்கறோம்என்று சொல்ல அதை கேட்டுக்கொண்டே உடைமாற்ற சென்ற பர்வதம் வந்து.

பரவாயில்லை மிருதுளா பரிமாறுவாள் நீங்க எல்லாரும் உட்காருங்கோஎன்றதும் அம்பிகா குறிக்கிட்டு

அக்கா அவ இப்பதான் நம்ம ஆத்துக்கு வந்திருக்கா பரவாயில்லை அவள் நவீனுடன் சாப்பிட உட்காரட்டும் நான் பரிமாறரேன். நீங்களும் வேனும்னா உட்காருங்கோஎன்று கூறுவதோடு நிற்காமல் மிருதுளாவை பிடித்து அமர வைத்தாள். அனைவரும் கட்டு சாத கூடையில் வந்ததை பலே பேஷ் என்று சாப்பிட்டனர். அனைவரும் மிருதுளாவிடம் அவள் பெற்றோர் சூப்பராக திருமணம் செய்து வைத்தார்கள் என்றும் கட்டு சாத கூடை ஐட்டம்ஸ் வரை எல்லாமுமே நன்றாக ருசிகரமாக இருந்தது எனவும் பாராட்டினர். இதை பிடிக்காத பர்வதம் அம்பிகாவிடம் …

கட்டு சாத கூடை சாப்பாடு பத்தாதோ!! இன்னும் கொஞ்சம் அதிகமா கொடுத்திருக்கலாம் உங்க அப்பா அம்மா மிருதுளாஎன்றாள் 

அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். உடனே ஈஸ்வரன்

என்ன பேசர நீ. இவ்வளோ சாப்பாடு கொடுத்தனுப்பிருக்கா. பத்தாதூங்கறாய். உனக்கு கண்ணுல ஏதாவது கோளாறாஎன்றதும் அனைவரும் அதுதானே என்று கூறி சிரித்தார்கள். பர்வதத்திற்கு கோவம்  தலைக்கேறியது. ஆனால் காட்டிக்கொள்ளாமல் சமாளித்தாள்.

உணவு உண்ட பின் அனைவரும் உறக்கத்தில் ஆழ்ந்தனர். நவீன் மிருதுளாவை மாடிக்கு வரும்படி அழைக்க அதைப்பார்த்த பர்வதம் மிருதுளாவிடம் …

சாயந்தரம் நம்ம பிள்ளையார் கோவிலுக்கு போய் மாலை சாத்தனும் அதனால நீ இங்கயே இப்படி படுத்து கொஞ்சம் ரெஸ்ட் எடுஎன்றதும் அவளருகே மிருதுளா படுத்ததும் நன்றாக அசந்து தூங்கிப்போனாள். 

மிருதுளாவிற்கு அப்பொழுதுதான் கண் மூடியதுபோல இருந்தது ஆனால் மணி நாலரை ஆனது அனைவரும் கோவிலுக்கு கிளம்பிக்கொண்டிருந்தனர். எழுந்ததும் பர்வதம் ..

சீக்கிரம் ஆகட்டும் இப்படியா தூங்குவ!!

சாரி மா இரண்டு நாளா சரியா தூங்கலையா அதுதான் கொஞ்சம் அசந்துட்டேன்என்றாள் மிருதுளா

சரி சரி போய் பட்டுப்புடவை கட்டிண்டு வா. ” 

அனைவரும் கோவிலுக்கு சென்றனர். நவீன் மிருதுளா பெயர்களுக்கு அர்ச்சனை செய்தனர் பின் பர்வதம் மிருதுளாவிற்கு கோவிலைச் சுற்றி காண்பிப்பதாக கூறி தனியாக அழைத்துச்சென்றாள். ஓரிடத்தில் இருவரும் அமர்ந்தார்கள். அப்போது பர்வதம் ஏதோ நவகிரகத்தை வலம் வந்துக்கொண்டிருந்த ஒரு மாமியை காட்டி…

மிருதுளா அந்த மாமிக்கு மூணு பொண்ணுகள்

. அவாளுக்கு நவீனை அவா ரெண்டாவது பொன்னுக்கு கட்டி வைக்கனும்னு ஆசைப்பட்டா தெரியுமா அதுவும் இல்லாம அவா ஆத்த பொன்னுகள் எல்லாரும் சிலிம்மா வெள்ள வெளேர்னு இருப்பா. ஹும் …என்ன பண்ண நவீன் என்னடான்னா உன்ன தான் கட்டிப்பேனுட்டான். சரி வாஎன்று அலுத்துக்கொண்டாள். 

இதைக்கேட்டதும் மிருதுளாவிற்கு கோபம் வந்தது ஆனால் தன் தாயின் அறிவுரை அவள் காதில் ஒலித்தது. ஆகையால் அமைதியாக ஒன்றும் கூறாமல் பர்வததின் பின் சென்றாள்.  நவீனின் சொந்தக்காரர்கள் அனைவரும் அங்கிருந்தே விடைபெற நவீன் குடும்பத்தினர் மட்டும் கோவிலில் இருந்து வீடு திரும்பினார்கள். வீட்டுக்கு வந்ததும் அனைவரும் மீண்டும் உடைகளை மாற்றினர். மிருதுளாவும் பட்டுப்புடவையை மாற்றி ஒரு சாதாரணப் புடவையை கட்டிக்கொண்டு வேகமாக கீழே வந்தாள். 

அவள் வந்ததும் பர்வதம் நவீனை அவன் நண்பன் அழைத்ததாக கூறி அவனை சென்று பார்த்துவரச்சொன்னாள்.  நவீன் மிருதுளாவையும் கூட்டிச்சென்று வருவதாக கூற…

அவ என்னத்துக்கு இங்க கொஞ்சம் அவளுக்கு வேலை இருக்கு நீ மட்டும் போயிட்டு வாஎன நவீனை வெளிய அனுப்பியதும் மிருதுளாவைப்பார்த்து

இன்னைக்கு நைட்டுக்கு சாதம் வச்சுட்டேன் நீ ஒரு ரசம் பண்ணி அப்படியே உருளைக்கிழங்கு பொரியல் பண்ணி வை இதோ நான் வரேன்என்று கூறி வாசலுக்குச் சென்று அக்கம்பக்கத்து வீட்டுப்பெண்களுடன் அரட்டையில் மூழ்கினாள். 

முதல் நாளே சமையல் கட்டில் எங்கே எது இருக்கிறது என்று கூட தெரியாது உள்ளே நுழைந்தாள் மிருதுளா. மெதுவாக ஒவ்வொரு டப்பாவாக திறந்து திறந்து பார்த்து எதுஎது எங்கெங்கு இருக்கிறது என்பதை முதலில் தெரிந்துக்கொண்டபின் சமையலில் இறங்கினாள். மாமியார் வைத்துவிட்டுப்போன குக்கரை அடுப்பிலிருந்து எடுத்து மேடையின் ஓரமாக வைத்துவிட்டு ரசம் செய்ய ஆரம்பித்தாள். ரசத்துக்கு வேண்டியதை எல்லாம் போட்டு சட்டியை அடுப்பில் வைத்துவிட்டு உருளைக்கிழங்கை நறுக்க தொடங்கினாள் அப்பொழுது கவின் வந்து 

மன்னி எனக்கு உருளை ரொம்ப ரோஸ்ட் ஆனா பிடிக்காது ஸோ பார்த்துப்பண்ணுங்கோஎன்றான்

அவன் பின்னாடியே ஈஸ்வரன் வந்துநீ நல்லா உருளை ரோஸ்ட் பண்ணுமா எனக்கு அது தான் பிடிக்கும்என்றார். 

இப்படி ஆளாளுக்கு ஒவ்வொரு மாதிரி கேட்கவும் மிருதுளாவிற்கு மனதில் பயம் தொற்றிக்கொண்டது ஆனாலும் அவள் இரண்டும் செய்தாள். ரசம், உருளை பொரியல், உருளை ரோஸ்ட், அப்பளம் என அனைத்தையும் ஒரே சட்டி உபயோகித்து அறைமணி நேரத்தில் செய்து மேடையின் மூலையில் மூடி வைத்துவிட்டு அடுப்படியை சமைத்தது போலவே தெரியாதவாறு சுத்தம் செய்துவிட்டு ஹாலில் வந்து அமர்ந்து ஈஸ்வரன் டீவியில் பார்த்துக்கொண்டிருந்த நியூஸை பார்க்கலானாள். ஒரு மணிநேரம் கழித்து நவீன் வீட்டினுள்என்ன இன்னைக்கு நம்ம ஆத்துல ரசம் வாசம் வாசல் வரைக்கும் வீசறது. என்ன அப்படி செபெஷல் ரசம் பண்ணிருக்கா அம்மாஎன்று கூறிக்கொண்டே நுழைந்தான்.  பின்னாடியே கேட்டுக்கொண்டே வந்த பர்வதம்.எனக்கு ஒன்னும் அப்படி வாசம் வரலையேஎன சொல்லிக்கொண்டே நுழைந்தாள். 

மாலை உணவை மிருதுளாதான் செய்தாள் என ஈஸ்வரன் நவீனிடம் சொல்ல பர்வதம் ஈஸ்வரனை முறைத்தாள்.  அனைவரும் இரவு உணவருந்த அமர்ந்தனர். உணவு மிக அருமையாக இருந்ததை அனைவரும் பாராட்டினர் ஆனால் கவின் 

இந்த உருளையை இன்னும் கொஞ்சம் கூட சாஃப்ட்டா செய்திருக்கலாம்என்றான்

ரசத்துல உப்பு ஜாஸ்தியா இருக்கு எல்லாரும் எப்படி சாப்படரேங்கள்என்றாள் பர்வதம்

உடனே பதற்றம் ஆனா மிருதுளா ..

அச்சச்சோ சாரி மா.என்றதும் நவீன் குறுக்கிட்டு

நோ நோ இட் ஈஸ் சூப்பர். அம்மா உனக்கு மட்டும் எப்படிமா உப்பு ஜாஸ்தியா இருக்கும்?” என்றதும் மிருதுளாவிற்கு அப்பாடா என்றிருந்தது.

அனைவரும் சாப்பிட்ட பின்னர் அனைத்துப்பாத்திரங்களையும் தேய்த்து வைத்தாள் மிருதுளா‌. அனைவரும் பாயை விரித்து படுக்கலானார்கள் வேலைகளை முடித்ததும் மாடிக்கு செல்லலாமா இல்லை பர்வதம் ஏதாவது சொல்லி கூப்பிடுவாளா என்ற எண்ணத்தில் தயங்கி ஹாலில் நின்றிருந்தாள். நவீனாவது அவளை கூப்பிட்டிருக்க வேண்டும் ஆனால் அவன் பாட்டுக்கு மாடிக்கு சென்றுவிட்டான். கீழே இவர்களும் அவரவர்கள் உறங்க ஆயத்தம் ஆகிக்கொண்டிருந்தனர். மிருதுளா எனும் ஒரு பெண் அங்கு இருந்ததையே கண்டுக்கொள்ளாதது போல அனைவரும் நடந்துக்கொண்டார்கள். சிறிது நேரம் நின்றுப்பார்த்த மிருதுளா மெல்ல அங்கிருந்து நகர்ந்து மாடிக்கு போக முதல் படியில் காலை வைத்ததும் பர்வதம் அழைத்தாள்…மிருதுளா மனதிற்குள்

இவ்வளவு நேரம் அங்க தான் இருந்தேன் அப்பெல்லாம் ஏதோ நான் இருப்பதே கண்ணுக்கு தெரியாதது போல இருந்துட்டு கரெட்டா கூபிடறா ஹும்…என்று நினைத்துக்கொண்டேவந்துட்டேன் மாஎன பர்வதம் முன் நின்றாள் 

நாளைக்கு நவீன் பெரியப்பா ராசாமணி ஆத்துக்கு விருந்துக்கு போகனும் அதனால நல்ல பட்டுப்புடவையா கட்டிண்டு போ சரியா.

சரி மாஎன்றாள் மிருதுளா

சரி சரி போய் தூங்கு காலை ல அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்திரிக்கனும் இல்லாட்டி அப்பாவுக்கு பிடிக்காது அப்பறம் சத்தம் போடுவார் சொல்லிட்டேன்என கூறி போர்வையை இழுத்துப்போர்த்திக்கொண்டாள்.

அப்பாட என பெருமூச்சு விட்டுக்கொண்டே மாடிக்கு வேகமாக சென்றாள் மிருதுளா. 

ஒரு நாளில் இவ்வளவு பதற்றம் அடைந்த நம்ம மிருதுளா இனி ஒவ்வொரு நாளும் எப்படி கடக்க போகிறாள் என்பதை வரும் வாரங்களில் தெரிந்துக்கொள்வோம்.

தொடரும்…..

இருபத்தி எட்டாம் தேதி அதிகாலை மூன்றரை மணிக்கெல்லாம் ராமானுஜம் எழுந்து அனைவரையும் எழுப்பினார். அம்புஜம், வேனு, மிருதுளா, ஈஸ்வரன், பர்வதம், நவீன் எழுந்தார்கள். மடமடவென குளித்து அனைவரும் தயார் ஆனார்கள். அன்று அதிகாலை பெண்வீட்டாருக்கு எந்த வேலையும் இல்லை. அவர்கள் திருமணத்திற்கு தயார் ஆகிக்கொண்டிருந்தனர். நவீன் வீட்டார் வாத்தியார்கள் வந்ததும் விரதத்தில் மும்முரமானார்கள். ஃபோட்டோ கிராஃபர்கள் கேமராவுடன் அங்கும் இங்குமாக க்ளிக் செய்ய தொடங்கினர். 

 விரதம் முடிவதற்குள் அனைத்து சொந்த பந்தங்களும் எழுந்து குளித்து பெண்கள் பட்டுப்புடவை உடுத்தி நகைகள் எல்லாம் அணிந்து தலைநிறைய பூ வைத்து கொண்டார்கள். ஆண்கள் அனைவரும் பட்டு வேஷ்டி சட்டை அணிந்து வந்து சபையில் முன் வரிசையில் அமர்ந்தார்கள். இளவட்டங்கள் புத்தாடை உடுத்தி அந்த கூட்டத்தில் அங்கும் இங்குமாக நண்பர்களுடன் நடந்து பேசிக்கொண்டே இருந்தார்கள். பொடிசுகள் அனைவரையும் அழகாக டிரஸ் பண்ணி மண்டபத்தை விட்டு வெளியே செல்லாமல் அங்கேயே விளையாட அவர்கள் அன்னையர் சொல்ல அங்கும் இங்குமாக ஓடி ஆடி டேய் சதீஷ் என்ன புடி பார்ப்போம்..ஏய் ஆஷா நீ என்ன கண்டுபிடி என குட்டீஸ் லூட்டி அடித்துக்கொண்டிருந்தார்கள். 

நாதஸ்வரமும், தவிலும், மிருதங்கமும் இன்னிசையை தந்தன.

வயதானவர்கள் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து அந்த காலத்துல ஆத்துலேயே தான் கல்யாணம் பண்ணினா என்று கடந்தகாலத்தை நிகழ்காலத்துடன் ஒப்பிட்டு அனைத்து சம்பிரதாயங்களையும் அலசி ஆராய்ந்துக் கொண்டிருந்தனர்.

நவீன் வீட்டார் விரதம் முடிந்ததும் காசி யாத்திரைக்கு தயாராகினர். காசி யாத்திரைக்கு வேண்டிய குடை, கைவிசிறிகொஞ்சம் பருப்பு, அரிசி முடிந்த சிறு மூட்டை என அனைத்துப்பொருட்களும் மாப்பிள்ளை ரூமில் வைக்கப்பட்டிருந்தது. நவீனின் மாமா நவீனுக்கு பஞ்சகஜம் கட்டி, மாலையிட்டு அத்தை வசுந்தரா நவீனின் கண்களுக்கு மையிட்டாள். நவீனுடன் அனைவரும் மண்டப வாசலுக்கு வந்தனர். 

காசி யாத்திரை என்றால் என்ன? ஏன் இதை இவர்கள் திருமணங்களில் வைக்கிறார்கள் ? அப்பொழுது சொல்லும் மந்திரங்களின் பொருள் என்னமாப்பிள்ளை தனக்கு திருமண வாழ்வில் இஷ்டமில்லை என்றும் காசிக்கு சென்று வேத பாடங்களை கற்று சன்யாசம் ஏற்க போவதாகவும் முடிவெடுத்து அவர் செல்லும்போது மணமகளின் தந்தை அவரைத் தடுத்து திருமண வாழ்க்கையில் உள்ள சந்தோஷங்களை அவருக்கு எடுத்துறைப்பதோடு மட்டுமல்லாமல் தனது பெண்ணை அவருக்கே மணமுடித்து தருவதாகவும் வாக்களித்து தனது மகனை மாப்பிள்ளைக்கு குடைப்பிடிக்கச் சொல்லி இருவருமாக மணமகனை திருப்பி மண்டபத்திற்குள் அழைத்து வருவதே இந்த காசி யாத்திரை சடங்கின் விளக்கமாகும். 

இவ்வாறு அவர்கள் திரும்பியதும் மணமகளை கீழே வரச்சொல்லி  இருவர் கழுத்திலும் மூன்று மாலைகள் போட்டு மூன்று முறை மாற்றிக்கொள்ள சொல்வார்கள். இதை சற்று விளையாட்டாக மணமகன் மணமகள் இருவரின் தாய்மாமன்களும் அவர்களை தூக்கிக்கொள்ள மாலைகளை மாற்றிக்கொள்ள சொல்வார்கள் ஆனால் இருவரையும் உயர்த்தித் தூக்கிப்பிடித்துக்கொள்வார்கள். சிறிது நேரம் விளையாடிய பின்னர் பெண்ணின் தந்தை கூறியது போலவே இருவர் கைகளிலும் கல்யாண மாலையை கொடுத்து மாற்றிக்கொள்ள சொல்ல அவர்களும் மாலையை மாற்றிக்கொண்டு தனது மகளின் கரங்களை பிடித்து மணமகனின் கரங்களில் கொடுத்து இனி என் மகளுக்கு எல்லாமும் நீங்கள்தான் அவளை நல்லபடியாக பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு என கூறுவார். இதுவே கண்ணிகாதானம் ஆகும்.

மணமகன் மணமகள் கரங்களைப் பிடித்தவாறே இருவரையும் அலங்காரம் செய்த ஊஞ்சலில் அமரச்செய்து ஊஞ்சல் பாடல்களை பெண்கள் அனைவரும் பாட, சுமங்கலிகள் அவர்களுக்கு பச்சப்பொடி சுற்ற பாலும் பழமும் மணமக்கள் கைகளில் கொடுத்து பின் மாங்கல்ய தாரணத்திற்கு மண்டபத்திற்குள் அழைத்துச்சென்றனர். 

இந்த ஊஞ்சல் வழக்கத்தில் உள்ள சூட்சுமம் என்னவென்றால்…திருமண வாழ்க்கையில் ஊஞ்சல் ஆடுவது போல பல ஏற்ற தாழ்வுகள் இருக்கும் அதை இருவருமாக ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக இன்று கரங்கள் இணைந்து இருப்பது போலவே இருந்து சரிசெய்து வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும் என்பது தான். 

அனைவரும் ஊஞ்சல் முடிந்து மண்டபத்திற்குள் வந்தனர். இருவீட்டாரும் அழைப்பு விடுத்திருந்த அனைத்து சொந்தங்களும் நண்பர்களும் வந்திருந்து மண்டபம் முழுவதும் மக்கள் நிறைந்து வழிந்தனர். இரண்டு வீடுகளிலும் இது முதல் கல்யாணம் ஆகையால் அன்று விடுமுறை இல்லாத போதும் அழைத்த அனைவரும்  வந்திருந்தனர். கல்யாண மேடையில் பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் இருந்தனர். இருவீட்டாரின் சில முக்கிய பெரியவர்களும் இருந்தனர்.

வேதங்கள் முழங்க நாதஸ்வரம் இசைக்க நவீன் மிருதுளாவிடம் கல்யாண கூரை புடவையைக்கொடுத்து கட்டிவரச்சொல்ல மிருதுளாவும் உள்ளே புடவை மாற்ற சென்றாள். அப்பொழுது மேடையில் மாப்பிள்ளைக்கு ராமானுஜமும் அம்புஜமும் பாத பூஜை செய்தனர். 

மிருதுளாவுடன் அனைத்து நவீன் வீட்டார் மாமிகளும் உள்ளே சென்று ஒன்பது கஜப்புடவையை கட்டிவிட்டு (அது சரியாகவும் கட்டவில்லை) மேடைக்கு அழைத்துவந்தனர். பின் ராமானுஜம் மடியில் அமர்ந்தாள் மிருதுளா. பர்வதத்தின் தம்பி சும்மா இல்லாமல்அப்பா பாவம் கொஞ்சம் பார்த்து உட்காருமா மிருதுளாஎன்று கூறி கெக்க புக்கே என சிரிக்க பெண் வீட்டார்களுக்கும் மிருதுளாவிற்கும் துளியும் பிடிக்கவில்லை. அவருக்கு யாரும் அந்த நேரத்தில் பதில் குடுக்கவும் போகவில்லை. 

எல்லோரும் மாங்கல்ய தாரணத்திற்காக காத்திருந்தனர். மந்திரங்கள் ஒலிக்க மேளதாளங்கள் முழங்க நவீன் மிருதுளா கழுத்தில் தாலியின் இரண்டு முடிச்சுப் போட மூன்றாவது முடிச்சை அவனின் பெரியப்பா மகள் நாத்தனார் முடிச்சுப்போட மண்டபத்திலுள்ள அனைவரும் எழுந்து மணமக்கள் மேல் பூக்களையும் அட்சதையும்‌ போட்டு வாழ்த்த நமது நவீன் மிருதுளா திருமணம் இனிதே நடந்தது. அம்புஜத்திற்கும் ராமானுஜத்திற்கும் கண்கள் களங்கியது. இருவீட்டாரும் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள். ஆத்துக்கு மாட்டுப்பொன் வந்தாச்சா? உங்க ஆத்துக்கு மாப்பிள்ளை வந்தாச்சா என மகிழ்ச்சியாக விசாரித்துக்கொண்டனர். அனைவருக்கும் ஜூஸ் பரிமாறப்பட்டது. நவீனுக்கும் மிருதுளாவிற்கும் ஜூஸ் கொடுககப்பட்டது. 

மாங்கல்ய தாரணம் ஆனதும் மந்திரங்கள் சொல்லிக்கொண்டே மற்ற சடங்குகள் நடைப்பெற்றுக்கொண்டிருந்தது அப்பொழுது மேடையில் நவீன், மிருதுளா மட்டுமே இருந்தனர். அனைத்து சொந்தங்களும் மேடைவிட்டு கீழே இறங்கினர். நவீன் மற்றும்  மிருதுளாவின் பெற்றோர்கள் வந்த அனைவரையும் வரவேற்ப்பதில் மும்முரமானார்கள்.  திருமணத்திற்கு வந்திருந்த பெண்வீட்டார் வலதுபுறமும் மாப்பிள்ளை வீட்டார் இடதுபுறமும் என இரு வரிசையில் பலர் பரிசுப்பொருட்களுடனும், பணத்துடனும் மொய் செய்வதற்காக பொறுமையாக நின்று அவர்களுக்கு கொடுத்து வாழ்த்தி கல்யாண சாப்பாடு சாப்பிடுவதற்க்காக கீழே டைனிங் ஹாலுக்குச் சென்றனர். 

காலைமுதல் ஒன்றுமே சாப்பிடாமல் வெரும் பாலும் பழமும் ஜூஸும் மட்டுமே அருந்திய நவீனுக்கும் மிருதுளாவிக்கும்

தனியாக ஒரு டேபிளில் இரண்டு கோலமிட்டு அதன் மேல் இரண்டு வாழை இலை போட்டு அதில் சாப்பாடு பரிமாறப்பட்டது. சொந்தங்கள் நண்பர்கள் அவர்களை சுற்றிக்கொண்டு இருவரையும் கலாயித்துக் கொண்டிருந்தனர். இருவரையும் ஒருவரொக்கொருவர் ஊட்டிவிடும் படி அனைவரும் சொல்ல நவீன் முதலில் மிருதுளாவிற்கு லட்டு ஊட்டிவிட்டான் பின் மிருதுளா நவீனுக்கு ஜாங்கிரி ஊட்டிவிட அனைவரும் கைத்தட்டினார்கள். மத்திய கல்யாண சாப்பாடு ஆன பின் மண்டபம் சற்று காலியானது ஆம் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இருந்தனர் மற்ற அனைவரும் அவரவர் வீடுகளுக்கு சென்றனர். 

நவீனும், மிருதுளாவும் அவரவர் ரூமுக்குள் சென்று ஆடைகளை மாற்றிக்கொண்டனர். கிருஹப்ரவேசம் என பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டார் அறைக்கும் மாப்பிள்ளைவீட்டார் பெண்வீட்டார் அறைக்கும் சென்று மீண்டும் மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுத்து பின் வெற்றிலைப்பாக்கு, பூ, பழம், ரவிக்கைத்துணி என சுமங்கலிகளுக்கு இருவீட்டிலும் கொடுக்கப்பட்டது. இவை அனைத்தும் முடிந்ததும் அனைவரும் சற்று ஓய்வெடுத்தார்கள். அப்பொழுது அம்புஜம் ரூம் கதவு தட்டப்பட்டது.யாரதுஎன கேட்டுக்கொண்டே கதவை திறந்தாள். வெளியே பர்வதம் நின்றுக்கொண்டிருந்ததைப்பார்த்து 

வாங்கோ மாமி. உள்ள வாங்கோஎன்றழைக்க அதற்கு பர்வதம் சத்தமாக 

பருப்பு தேங்காய் ரெண்டிருக்கனும் ஆனா ஒன்னு தான் எங்க ரூமுக்கு வந்திருக்குஎன்று கேட்க

இல்லையே மேடையிலிருந்த எல்லாத்தையும் உங்க ரூம்ல வைக்கச்சொன்னேன். அவாளும் வச்சானுட்டு சொன்னாலே. இருங்கோ பார்க்கறேன்” 

என அம்புஜம் மேடைக்குச்சென்று பார்த்தாள் அங்கு மேடையின் ஓரமாக ஒரு செட் பருப்பு தேங்காய் வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்துக்கொண்டு வந்து பர்வதம் கையில் கொடுத்து…

சாரி மாமி அவா மேடை ஓரமா வச்சிருக்கா. கவணிக்கலை போல. இதாங்கோஎன்று கூறி கொடுத்தாள் 

அதை பர்வதம் வாங்கிக்கொண்டாள். இதை காரணமாக வைத்து வம்பிழுக்கப்பார்த்து வடிவேலு மாதிரி வடபோச்சே என்ற ரியாக்ஷனுடன் அங்கிருந்து சென்றாள்.

மாலை நாலு  மணி ஆனதும் அனைவருக்கும் காபி ஈவ்னிங் ஸ்நாக்ஸ் பரிமாறப்பட்டது. மிருதுளா நலங்குக்கு ரெடியானாள். ஒரு தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கு பழம் எல்லாம் வைத்து  மிருதுளா நவீன் ரூமிற்கு சென்று நலங்கிற்கு அழைத்தாள் அப்பொழுது நவீனின் சித்திகள்

 “ஒரு பாட்டு பாடினா தான் எங்க நவீன் வருவான்என்று சொல்ல எந்த வித தயக்கமுமின்றி மிருதுளாவும் பாட்டு பாடினாள்.சூப்பரா பாடர மிருதுஎன்றனர்.

நெருங்கிய சொந்தகளும் நண்பர்களும் ஒன்றாக மண்டபத்தின் நடுவில் விரிக்கப்பட்டிருந்த ஜமுக்காளத்தில் இருவீட்டாரின் பெண்கள் வட்டமாக அமர்ந்தனர். ஆண்கள் அனைவரும் அவர்களைச்சுற்றி நாற்காலியில் அமர்ந்தார்கள். நடுவிலே எதிர் எதிராக நவீனும் மிருதுளாவும் இரண்டு அணிகளோடு அமர்ந்திருந்தனர். அழகிய பாட்டுடன் நலங்கு ஆரம்பமானது. அப்பளம் உடைத்தல், தேங்காய் உருட்டுதல், அரிசி தறேன் பருப்பு தருவியா என்று கேலிச் செய்தல், அந்தாக்ஷரி எனப்படும் பாட்டுக்கு பாட்டு என்று ஒரே சிரிப்பும் சந்தோஷமுமாக நடந்தேறியது நம்ம மிருதுளா நவீன் நலங்கு. இருவரையும் ஒன்றாக அமரச்செய்து ஆரத்தி எடுத்தனர். 

அந்த காலத்தில் பெரும்பாலும் அரேஞ்ஜ் மேரேஜாக தான் இருந்தது. அத்தகைய கல்யாணத்தில் மணமகனும் மணமகளும் அவ்வளவாக ஒருவருக்கொருவர் பரிட்சயமாகாதவர்கள் என்பதால் இப்படி நலங்கு என சில விளையாட்டுகளை வைத்து அவர்களுக்குள் (ஆங்கிலத்தில் இதை – the ceremony where the bride and groom break the ice and get along என்பார்கள்)  நெருக்கத்தையும், ஒற்றுமையையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் ஏற்படுத்தினார்கள் நமது முன்னோர்கள். ஆனால் இன்றைக்கு இது ஒரு கேலிக்கூத்தாகிவிட்டது என்றால் தவறில்லை என நினைக்கிறேன். 

அனைவரும் இரவு சாப்பாடு முடிந்ததும் நவீனையும், மிருதுளாவையும் சாந்தி முஹூர்த்த ரூமிற்குள் அனுப்பி விட்டு வெளியே கும்மிப்பாட்டு பாடி கும்மியடித்து எல்லோரும் அவரவர் ரூமில் உறங்கச் சென்றனர். சீட்டுக்கச்சேரி கும்பல் மீண்டும் சீட்டாட துவங்கியது. அம்புஜம் காலை முதல் அங்கும் இங்குமாக ஓடியாடியதில் களைத்திருந்தாலும் மிருதுளாவின் பெட்டியை அடுக்கி அவளது புடவைகள் நகைகள் எல்லாவற்றையும் சரிபார்த்து தனியாக மற்றொரு பெட்டியில் அடுக்கி மறுநாள் மண்டபத்தை காலி செய்ய வேண்டுமே என அவர்கள் ரூமில் ராமானுஜம், வேனு எல்லாரும் அவிழ்த்துப்போட்ட துணிகளை மடித்து அவரவர் சூட்கேசில் போட்டு மறுநாள் போட்டுக்கொள்ள வேண்டி டிரெஸ்ஸை மட்டும் நால்வருக்கும் எடுத்து வைத்து விட்டு எல்லாவற்றையும் பேக் செய்து அவள் உறங்கும் போது மணி இரண்டரை ஆனது. அங்கே பர்வதமும் இதே போல அவர்கள் ரூமிலிருந்த துணிகளை எல்லாம் அவரவர் சூட்கேசில் போட்டு பேக் செய்தாள்.

இவ்வாறு பலர் தடுக்க எண்ணியும் அவைகளை எல்லாம் சாம்பலாக்கி நவீனுடன் மிருதுளாவை கைகோர்க்க வைத்த அம்புஜம் நம்பும் அந்த அம்பாளின் அடுத்த விளையாட்டு தான் என்னஎதார்த்தமான, சூது வாது தெரியாத வெகுளிபெண்ணான நம்ம மிருதுளா துளியும் உண்மை இல்லாத, சூது வாது நிறைந்த குடும்பத்தில் அதுவும் ஆகாத மருமகளாக நுழைந்திருக்கிறாள். என்னவெல்லாம் அவளுக்கு காத்திருக்கிறதோ? நவீன் அவளுக்கு பக்கத்துணையாக இருப்பானாஇப்படி இருக்கும் மிருதுளா மாறுவாளா? என்பதைப் பற்றி வரும் நாட்களில் படித்து தெரிந்துகொள்ளலாம்.

எனது அழைப்பை ஏற்று மிருதுளா நவீன் திருமணத்திற்கு வருகைதந்த வாசகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தொடரும்….

இருபத்தி ஏழாம் தேதி காலை சீதா கல்யாண வைபோகமே ராம கல்யாண வைபோகமே என்ற பாடலை வ்ரதம் மேற்கொண்ட கல்யாண பெண்ணான நமது மிருதுளாவிற்கு ஆரத்தி எடுத்துக்கொண்டே பாடினர் பரிமளமும், மேகலாவும். பின் மிருதுளாவின் உறவுக்காரர்கள் அனைவரும் சேர்ந்து ஒன்றாக காலை டிபன் அருந்தினார்கள். 

வ்ரதம் என்பது திருமணத்தின் முன்தினம்  மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் ஏற்றுக்கொண்டு  கைகளில் மஞ்சள் தடவிய கயிறு கட்டி பிரம்மச்சரியத்தை அன்றுடன் முடித்து கிரஹஸ்த்தர்களாக மாறுவதே இந்த சடங்கின் அர்த்தம். இந்த சடங்கு முடிந்தால் மணப்பெண் மணமகன் இருவரும் வீட்டை விட்டு திருமணம் முடியும் வரை வெளியே செல்லக்கூடாது ஆகையால்தான் பெரும்பாலும் வ்ரதம் மண்டபத்தில் திருமணத்திற்கு முன்தினம் செய்வது வழக்கத்தில் உள்ளது. சில நேரம் மாப்பிள்ளை திருமணத்தினத்தன்று விடியற்காலையிலும் மேற்க்கொள்வர்.

இருபத்தி ஏழாம் தேதி காலை உணவு ஆன பின் சிலர் ஊரைச் சுற்றி பார்க்க சென்றனர். ஒரு கூட்டம் சீட்டு கச்சேரியில் மூழ்கினர். ஒரு சிலர் அனைவரையும் நலம் விசாரித்துக் கொண்டும் பழங்கதைகளை அசைப்போட்டுக்கொண்டும் வட்டமாக அமர்ந்திருந்தனர். மிருதுளாவும் அம்புஜமும் அவர்கள் அறையில் கொண்டுவந்த பெட்டிகள் நகைகள் எல்லாவற்றையும் பத்திரமாக அடுக்கி வைத்துவிட்டு வெளியே வந்து அனைவருடனும் பேசிக்கொண்டிருந்தார்கள். வேனுவும் ராமானுஜமும் சீர் ஜாமான்களை ராமனுஜம் அட்டைப்பெட்டியிலிருந்து எடுத்துக்கொடுக்க அவற்றை அழகாக வரிசையாக அடுக்கி வைத்தான் வேனு. 

அம்புஜத்திடம் அவள் தங்கையின் கணவனின் ஒன்னு விட்ட மாமா ..

ஏம்மா அம்புஜம் இப்பத்தான் கேள்விப்பட்டேன் கல்யாண புள்ளான்டான் அவா ஆத்த மூத்தப்புள்ளையாமே!!

ஆமாம் மாமா ஏன் அதுக்கென்ன இப்போ?”

நம்ம மிருதுளாவும் நம்ம ஆத்த மூத்தப்பொன்னு

ஆமாம். சரி

இல்லை மூத்த புள்ளைக்கு மூத்த பொன்னை கல்யாணம் பண்ணப்டாதுனு சொல்லுவா அதுதான் நீ எப்படி ஒத்துண்ட ?”

ஓ அப்படியா எனக்கு அதெல்லாம் தெரியாது மாமா அதுவும் இல்லாம இதை இது வரைக்கும் யாருமே சொல்லலையே!!! இனி ஒன்னும் செய்ய முடியாதே. எல்லாம் அந்த பகவதி பார்த்துப்பள். அவ மேல பாரத்த போட்டுதான் இவ்வளவு ஏற்பாடுகளும் பண்ணிருக்கோம் அதனால எல்லாம் அவள் செயல். சரி மாப்பிள்ளை ஆத்துக்காரா எல்லாம் வர நேரமாச்சு நான் போய் சாப்பாடு எல்லாம் ரெடி ஆயாச்சானு ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடறேன்.

என்று கூறி அங்கிருந்து நேராக மண்டப டைனிங் ஹாலுக்குச்சென்று எல்லாம் தயாராக உள்ளதா என்று விசாரிப்புடன் ஒரு க்ளான்ஸ் பார்த்துக்கொண்டிருக்கையில் திருமண கான்ட்ராக்ட் தலைவர்  மாப்பிள்ளைவீட்டார் வந்ததும் சம்பந்தி கையில் கொடுக்க வேண்டிய தெரட்டிப்பாலை ஒரு அழகான டப்பாவிலிட்டு அம்புஜத்திடம் கொடுத்து …

மாமி ஏற்பாடெல்லாம் நன்னாருக்கா. உங்களுக்கு திருப்தியாருக்கா.

இதுவரைக்கும் எல்லாம் நன்னா இருக்கு. மாப்பிள்ளை ஆத்துக்காரா வந்ததும் அவாள எல்லாரையும் நன்னா கவனிச்சுக்கோங்கோ. எந்த குற்றமும் குறையும் அவா சொல்லிடப்டாது அது உங்க கையில் தான் இருக்கு“.

கவலைய விடுங்கோ மாமி. ஒரு குறையுமில்லாம பேஷா நடத்திக்கொடுத்திடுவோம் சரி நான் பந்திக்கு எல்லாத்தையும் ரெடி பண்யுடறேன்

டைனிங் ஹால் கீழே உள்ளது. திருமண மண்டபம் டைனிங் ஹாலுக்கு மேலே உள்ளது. அம்புஜம் கீழே எல்லாம் ரெடி என்று திருப்தி ஆனபின் மேலே சென்று மிருதுளாவை புடவை மாற்றி தயாராக சொல்லி தானும் தயார் ஆனாள். 

வேனு வேகமாக மேலே வந்து 

அம்மா அம்மா அவா எல்லாரும் வந்தாச்சு. சீக்கிரம் கதவ தொறந்து வா மா. அப்பா உன்னை கூட்டிண்டு வரச்சொன்னா

என்றதும் கதவை திறந்துக்கொண்டு வெளியே வந்தாள் அம்புஜம். மிருதுளாவை ரூமிலேயே இருக்கச்சொல்லிவிட்டு பெண்வீட்டார் அனைவரும் மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்க்க கீழே சென்றனர். மாப்பிள்ளை வீட்டு வேன்களும், கார்களும் சர் சர்ரென வந்து நின்றது. அனைவரும் இறங்கி மண்டப வாசலுக்கு சென்றதும் அம்புஜத்தின் மன்னியும், ராமானுஜத்தின் சித்தியுமாக மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுத்தனர். அம்புஜம் தன் கையில் வைத்திருந்த தெரட்டிப்பால் டப்பாவை பர்வதத்திடம் கொடுத்து வரவேற்றாள். வேனு மாப்பிள்ளைக்கு மாலையிட்டு, சந்தனம், குங்குமமிட்டு பன்னீர் தெளித்து உள்ளே அழைத்தான். ராமானுஜம் ஈஸ்வரனுடன் கைக்குலுக்கி வாங்கோ என்று அனைவரையும் வரவேற்றார்கள். அனைவரும் வந்ததும் மேலே சென்று அவரவர் ரூமுகளில் பெட்டிகளை வைத்துவிட்டு மிருதுளாவைப்பார்க்காத நவீன் வீட்டார் அவளை காண சென்றனர். மிருதுளா ரூம் கதைவை தள்ளிக்கொண்டே உள்ளே சென்றனர் பர்வதத்தின் டில்லி தங்கைகள் லட்சுமியும், லலிதாவும். மிருதுளாவைப்பார்த்ததும் லட்சுமி..

ஹேய் இவ நம்ம பர்வதம் சொன்னா மாதிரி குண்டெல்லாம் இல்லையே அவ ஹைட்டுக்கு ஏத்த மாதிரிதான் இருக்கா

கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாத மனிதர்கள். இத்தகைக்கு நன்றாக படித்து வேலைக்கு செல்லும் பெண்மணிகளாம். ஒரு பெண்ணை முதன்முதலில் பார்க்கும் போது எப்படி பேச வேண்டும் என்று தெரியாத அளவுக்கு மக்குகள் இல்லை..பர்வதம் ஏத்திவிட்டதை அப்படியே கக்கிவிட்டு சங்கடப்படுத்த வந்தவர்கள் போலவே பேசினர். அவர்களுக்கும் பெண் குழந்தைகள் இருப்பதை மறந்து போனார்கள் அடுத்தவர் பெற்று வளர்த்த பெண்ணை பழிக்கும் ஜோரில். பர்வத்துடன் கூட பிறந்தவர்களாயிற்றே.

சீர் சாமான்கள் அடுக்கிவைத்திருந்த ரூமில் அழகான அலங்கார விளக்குள் ஆன் செய்யப்பட்டிருந்தது. அதில் வேனுவின் கைவனம் ஜொலித்தது. மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் வாய் பிளந்த வண்ணம் அனைத்தையும் அவரவர் கண்களாலேயே ஸ்கேன் செய்தனர். ஈஸ்வரனின் அக்காக்கள் சொர்னமும் வரலட்சுமியும் பேசிக்கொண்டனர்….

பர்வதத்திற்கு வந்த சம்பத்திகள் எல்லாத்தையும் பார்த்து பார்த்து அழகா பண்ணிருக்கா..இந்த பர்வதம் வம்பேதும் செய்யாமல் இருந்தால் நல்லாருக்கும்

அதச் சொல்லு சொர்னம் அக்கா. அவளால சும்மா இருக்க முடியாதே ஏதாவது செய்வள். எனக்கு அந்த மிருதுளா பொன்ன நெனைச்சா பாவம்னு தோனறது. நாம அந்த பொன்னுக்காக வேண்டிப்போம். வேறென்ன செய்யறது.

நவீன் வீட்டார் அனைவரும் அவரவர் ரூமில் செட்டில் ஆனதும் ராமானுஜமும் அம்புஜமும் வேனுவும் சென்று அவர்கள் அனைவரையும் மதிய உணவு சாப்பிட அழைப்பு விடுத்தப் போது பர்வதம் அவர்கள் அறைக்குள் வரும்படி சொல்ல இவர்கள் உள்ளே “நாழி ஆகறது சாப்பிட கூட்டிண்டு போக வந்தோம்”  என்று கூறிக்கொண்டே சென்றனர். அப்போது ஒரு நவரத்தின ப்ரேஸ்லெட் ஒன்றை எடுத்து பர்வதம் அவர்களிடம் காண்பித்து…

இது உங்க பொன்னு மிருதுளாவிற்காக என் புள்ள கவின் குவைத்திலிருந்து வாங்கிண்டு வந்திருக்கான் பாருங்கோ

அம்புஜம் பார்த்துவிட்டு 

ரொம்ப அழகா இருக்கு மாமி. ஆமாம் எங்க யாரையுமே காணம் நீங்க மட்டும் இருக்கேங்கள்என்று கேட்க அதற்கு பர்வதம்

எல்லாரும் பக்கத்து ரூம்ல இருக்கா. சரி வாங்கோ இத காட்டத்தான் கூப்பிட்டேன். அவாளையும் அழைச்சுண்டு வரேன். நீங்க முன்னாடி போங்கோ

எல்லாருமாக அமர்ந்து முதல் பந்தி பரிமாறப்பட்டது. அனைவரும் சாப்பாடு சூப்பர் என்று ரசித்து ருசித்து சாப்பிட்டனர். அடுத்த பந்தியில் மீதமிருந்த நவீன் வீட்டாரும் மிருதுளா வீட்டாரும் உணவருந்த அமர்ந்தனர். அம்புஜம் பங்கஜத்தை அழைத்து மிருதுளாவையும் சாப்பிட அழைத்து வரச்சொன்னாள். இது சாப்பிட்டு கை கழுவுவதற்கு எழுந்த நவீன் காதில் விழ அவன் மெதுவாக கை கழுவச்சென்றான். பின் அங்கிருந்தவர்களிடம் சற்று பேசிக்கொண்டிருப்பது போல மிருதுளா வரவுக்காக காத்திருந்தான். மிருதுளாவும் பங்கஜமும் வந்தார்கள். உடனே நவீன் ஹாய் மிருதுளா என்றான் அவளும் ஹாய் என்றாள். பங்கஜம் கிண்டலாக…

சரி சரி நாளையிலிருந்து பேசத்தான் போரேள் அதுக்கும் கொஞ்சம் பாக்கி வச்சுக்கோங்கோ ரெண்டு பேரும்

உடனே நவீன்..

ஒரு ஹாய் தானே சொல்லிண்டோம். நீங்க சொல்வதும் சரிதான். நாங்க நாளையிலிருந்தே பேசிக்கறோம். ஓகே வா.என்றதும் பங்கஜம் மீண்டும்

நாளையிலேர்ந்து நீங்களாச்சு உங்க ஆத்துக்காரியாச்சு. அதெல்லாம் சரி நான் ஒன்னு கேள்ளிப்பட்டேன் அதப்பத்தி உங்கள்ளட்ட கேக்களாமா?”

ஓ எஸ் தாராளமா. அப்படி என்ன கேள்விப்பட்டேங்கள் சொல்லுங்கோ நானும் தெரிஞ்சுக்கறேன்

என்ன எங்க மிருதுவ கூட்டிண்டு போகமாட்டேன்னு சொன்னேங்களாமே!! உங்களோட வாழரத்துக்கு தானே கல்யாணம் பண்ணி வைக்கறோம் இங்கேயே விட்டுட்டுப் போறத்துக்கா எங்க அக்காவும் அத்திம்பேரும் இத்தர கஷ்ட்டப்பட்டு உங்களுக்கு மிருதுளாவ கல்யாணம் பண்ணி வைக்கறா?!”

அவளுக்கு தான் ஏதோ பரீட்சை இருக்குனுட்டு ஒரு கன்ஃப்யூஷன் ஆச்சு. நான் அப்படி ஒன்னுமே சொல்லலையே

ஸோ அவள உங்ககூட கூட்டிண்டு போறதுல உங்களுக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லையா

அஃப்கோர்ஸ் எஸ் எனக்கு நோ இஷூஸ் அட் ஆல். நான் வீடு கூட பார்த்தாச்சு. டிகெட் மட்டும் தான் எடுக்கனும்

ஏன் இன்னும் டிக்கெட் எடுக்கலை?”

இதோ எடுக்க என் பெரியம்மா பையனிட்ட சொல்லிருக்கேன் நாளைக்கு எடுத்துண்டு வருவான்

அப்போ இப்ப வரைக்கும் கூட்டிண்டு போற ஐடியாவே இல்லை ம்ம்ம்ம்… நாளைக்கு டிக்கெட் வந்தாதான் நான் நம்புவேன்

ஓகே ஓகே அப்படியே ஆகட்டும்.

என்று கூறி இருவரும் சிரித்துக்கொண்டிருக்கையில் நவீனை அவன் அத்தை மகன் வந்து பர்வதம் அழைத்துவரச்சொன்னதாக  அழைத்தான். பங்கஜமும்…

சாரி உங்கள ரொம்ப நேரம் பிடிச்சுண்டுட்டேன். சரி நீங்க போய் உங்க வேலைகளைப்பாருங்கோ நானும் போய் சாப்பிடட்டும் ஆல்ரெடி மணி இரண்டரை ஆயிடுத்து.

ஓகே பை ஃபார் நௌ

அனைவரும் மத்திய உணவு அருந்திய பின் ஓய்வெடுத்தனர். மிருதுளாவும் அம்புஜமும் சற்று நேரம் படுத்துக்கொண்டனர். சற்று கண் அசந்ததும் …டக் டக் டக் என்று கதவை தட்டும் சத்தம் கேட்டு எழுந்தாள் அம்புஜம். அவர்கள் ரூம் வாசலில் மிருதுளாவிற்கு மேக்அப் போட இருவர் வந்திருந்தனர். 

 அப்பொழுதுதான் டைமைப்பார்த்தாள் அம்புஜம் மணி மூன்றரை ஆகியிருந்தது. மிருதுளாவை எழுப்பி குளித்துவிட்டு வரச்சொல்லி மேக்அப் போட வந்தவர்களை ரூமிற்குள் அமரவைத்துவிட்டு அவர்களுக்கு காபி கொடுக்க சொல்லி மிருதுளா மாலை கட்ட வேண்டிய புடவை நகை எல்லாவற்றையும் எடுத்துக்கொடுத்து மிருதுளாவை தயார் படுத்தச் சொல்லிவிட்டு தான் தயாராகிக்கொண்டிருக்கையில் நவீனின் அம்பிகா மாமி ஒரு பட்டுப்புடவையை எடுத்து வந்து அம்புஜத்திடம்…

மாமி இந்தாங்கோ நிச்சயதார்த்தப்புடவை பர்வதம் அக்கா உங்களாண்ட கொடுக்கச் சொன்னா

இத ஏன் இப்ப தறேங்கள். சபேல நிச்சயதார்த்தம் சமையத்துல தானே தரனும்

அதெல்லாம் எனக்கு தெரியாது மாமி கொடுக்கச்சொன்னா குடுத்துட்டேன் நான் வரேன் மாமி“.

சரி நான் சம்பந்தி மாமிகிட்டேயே கேட்டுக்கறேன். அதை அப்படியே மிருதுளாட்ட கொடுத்திடுங்கோ. மிருது அத மாமிகிட்டேருந்து வாங்கிக்கோமா.

என்றாள். மிருதுளாவிற்கு மேக்அப் போட்டுக்கொண்டிருந்ததினால் அம்புஜத்தின் தங்கை கோமளம் அந்தப்புடவையை அம்பிகாவிடமிருந்து வாங்கி ஷெல்ஃபில் வைத்தாள். அம்புஜம், ராமானுஜம், வேனு மூவரும் ஜானவாசம் எனும் மாப்பிள்ளை அழைப்பிற்கு  தயாராகி அனைவருக்கும் மாலை டிபன் காபி எல்லாம் சரியாக பரிமாரப்பட்டதா என்றெல்லாம் விசாரித்துக்கொண்டிருந்தனர். 

ஜானவாஸத்திற்கு அனைவரும் அருகே உள்ள கோவிலுக்கு செல்ல விறுவிறுப்பாக கிளம்பிக்கொண்டிருக்கையில் பர்வதம் மெல்ல பூனைப்போல மிருதுளா அறைக்குச்சென்று…

என்ற மிருதுளா மேக்அப் நடக்கறதா..டைமுக்கு ரெடி ஆயிடுவியோனோ!

ஆயிடுவேன் மா. ஜஸ்ட் புடவைதான் கட்டனும். நீங்கள் எல்லாரும் கோவில் போயிட்டு வரத்துக்குள்ள ரெடி ஆகிடுவேன்!

சரி அம்பிகா ஒரு புடவை குடுத்தாளா.

ஆமாம் மாமி நிச்சயதார்த்தப் புடவைனுட்டுத் தந்துட்டுப்போனாஎன்றாள் கோமளம்.

ஓ நீங்களும் இங்க தான் இருக்கேளா நான் கவணிக்கலை. எப்படி இருக்கேங்கள்? சரி எனக்கு நாழி ஆகறது அந்தப் புடவையை கொஞ்சம் தாங்கோ நான் நிச்சயத்தப்போ சபேல வைக்கனும்

அதத்தான் அம்புஜமும் அம்பிகா மாமிகிட்ட சொன்னா ஆனா நீங்கதான் குடுத்துட்டு வரச்சொன்னதா இல்லையா சொன்னா

ஆமாம் ஏதோ ஒரு எண்ணத்துல சொல்லிட்டேன் சரி தாங்கோ நான் போய் மத்த ஏற்பாடெல்லாம் பண்ணனும்

இந்தாங்கோ மாமி அந்த புடவைஎன்று கோமளம் குடுத்ததும் ரூமைவிட்டு வெளியேறினாள் பர்வதம். அவளைப்பார்த்த அவளது அக்கா …

என்ன பர்வதம் உன் மாட்டுப்பொன் ரூமிலேருந்து கையில ஏதோ புடவ டப்பா மாதிரி எடுத்துண்டு போறாய்

அது ஒன்னுமில்லை ரமணி. சரி நம்ம ஆளுகள் எல்லாரும் கோவிலுக்கு போக ரெடி ஆகிட்டாளான்னு ஒன்னுப் பார்த்துட்டு வாயேன்” 

என ரமணியை அனுப்பிவைத்துவிட்டு அந்த புடவையை அவள் ரூமிலுள்ள பீரோவில் வைத்துப்பூட்டினாள் பர்வதம்.

அவள் புடவையை அவசரமாக வாங்கிக்கொண்டுப்போனது கோமளத்திற்கு சந்தேகமாக இருந்தது. ஆனால் அவள் அதைப்பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை ஏனெனில் எப்படியும் நிச்சயதார்த்தம் சமயத்தில் சபையில் வைத்து தரத்தானே போகிறார்கள் என்று விட்டுவிட்டாள் அதை யாரிடமும் அவள் சொல்லவில்லை. 

 மண்டபத்தில் மிருதுளாவும் அவளுக்கு துணையாக கோமளமும்  மட்டும் இருந்தனர். மற்ற அனைவரும் மண்டபத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவிலில் இருந்தனர். அங்கிருந்துதான் மாப்பிள்ளை அழைப்பு எனப்படும் ஜானவாசம் தொடங்கவுள்ளது. 

கோவிலில் அர்ச்சனை செய்துவிட்டு அன்று நிச்சயதார்த்த்திற்கு நவீன் எடுத்து வந்த கோட் சூட்டை, மாலை அனைத்தயும் தாம்பாளத்தில் வைத்து ராமானுஜமும் அம்புஜமும் கொடுத்தனர் அதை வாங்கிக்கொண்டு கோவிலில் ஒரு மறைவான இடத்தில் சென்று மாற்றிக்கொண்டு வருவதர்க்குள் அனைத்து சொந்த பந்தங்களும் வட்டமாக ஒரு பாதி பெண்வீட்டாரும் மறு பாதி மாப்பிள்ளை வீட்டார் என அமர்ந்திருந்தனர். அங்கே நவீனையும் அமரவைத்தனர். 

வேனுவும் ஜம்முனு ஒரு கோட் சூட் போட்டுக்கொண்டு தனது அக்காவிற்கு கணவராக போகும் நவீனுக்கு மாலை போட்டு பூச்செண்டை கையில் கொடுத்து தங்க சேயின் ஒன்றை போட்டுவிட்டான். வேனு சேயின் போட்டதும் பர்வதம் தனது இரண்டாவது மகனாகிய கவினைப்பார்த்து கண் அசைத்தாள்.

 என்னென்ன விளங்க வில்லை அல்லவா. வாருங்கள் அன்று காலை நவீன் வீட்டிற்கு சென்று என்ன நடந்தது என்பதை உங்கள் முன் தோன்றவிருக்கும் சுழல்களின் நடுவில் பார்த்துவிட்டு மறுபடியும் கோவிலுக்கு வருவோம். அன்று காலை நவீன் வீட்டில் அனைவரும் மண்டபத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்தனர் அப்பொழுது குவைத் கவின் அனைவர் முன்னும் நவீனுக்கு சேயின் போட்டு விட்ட சிறுது நேரத்தில் பர்வதம் நவீனிடம் சென்று..

நவீன் அந்த செயினை கழற்றிக்கொடுத்துவிடுஎன்றாள் அதற்கு நவீன் ஏன் என்று கேட்க 

உனக்கு மண்டபத்தில் அவர்கள் செயின் போடுவார்கள் அதனால் இதை என்னிடம் கழற்றித் தந்துவிடு”  என்றதும் நவீனுக்கு பிடிக்கவில்லை ஆனாலும் அந்த பேச்சை அதற்கு மேல் வளரவிட விருப்பமில்லாமல் கழற்றிக்கொடுத்துவிட்டான். இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த கவினும் எந்த வித மறுப்பும் தெரிவிக்கவில்லை.

இதுதான் பர்வதத்தின் கண்ணசைவுக்கு பின் இருந்த ஃபிளாஷ் பேக். சரி சரி சுழல் நின்னுப்போய் நாம அனைவரும் மீண்டும் கோவில் வந்துவிட்டோம். அனைவரும் வேனு செயின் போட்டதுக்கு கைத்தட்டினார்கள். பின் மாப்பிள்ளையான நவீனை பூவெல்லாம் வைத்து அலங்கரித்த ஜானவாச காரில் ஏறி அமரச்சொன்னார்கள் கூடவே சித்தப்பா, மாமா, அத்தை ஆகியவர்களின் குழந்தைகளையும் காரில் ஏற்றி நவீனுடன் அமர்த்தினர். காரின் வலதுபுறம் பெண்வீட்டாரும், இடதுபுறம் மாப்பிள்ளை வீட்டாரும் என ஜானவாச கார் மெல்ல மெல்ல வானவேடிக்கைகளுடன் நாதஸ்வரம் இசைக்க மேள தாளங்களுடன் நகர்ந்து மண்டப வாசல் வந்தடைந்தது. உடனே ராமானுஜம் நண்பரான சீனிவாசன் உள்ளேச் சென்று மிருதுளாவை வெளியே அழைத்து வந்தார். அவர் பெண்ணின் திருமணத்தின் போது அவ்வாறு செய்ததால் இங்கேயும் அதையே செய்தார். 

ஜானவாச காரில் மிருதுளாவையும் ஏறி அமரச்சொன்னார் யாருமே அதை வித்தியாசமாக பார்க்கவில்லை ஆனால் பர்வதமும் அவள் தங்கைகளும் மூஞ்சியை சுளித்துக்கொண்டு இது என்ன கூத்து என்று அவர்களுக்குள் ஆனால் அம்புஜம் கேட்கும்படி சொன்னார்கள். ஆனால் அம்புஜம் அதைக்கண்டுக்கொள்ளாதது போல அவள் மகளும் மாப்பிள்ளையும் ஒன்றாக அமர்ந்திருக்கும் அழகைப்பார்த்து மெய் மறந்து நின்றிருந்தவளை ..

மாமி போதும் ரசிச்சது வாங்கோ இரண்டுபேருக்கும் ஆரத்தி எடுக்கனும்என்று வாத்தியார் கூற சுயநினைவுக்கு வந்தாள் அம்புஜம். பின் நவீனையும் மிருதுளாவையும் காரிலிருந்து கீழே இறங்கச்சொனார். அப்பொழுது நவீன் முதலில் இறங்கி பின் மிருதுளா இறங்க கஷ்ட்டப்படும்போது மிருதுளாவின் தோழிகள் 

நவீன் ப்ளீஸ் ஹெல்ப் மிருதுஎன்று சொன்னதும் நவீன் திரும்பி கையை நீட்ட அதற்கு அவன் சித்தி லலிதா சட்டென்று நவீன் கையை தட்டிவிட்டு

தாலி கட்டறதுக்கு  முன்னாடி எல்லாம் தொடப்டாது” (இதே சித்திக்காரியின் மகள்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே மாப்பிள்ளைகளோட அடிக்கப்போற லூட்டிகள் எல்லாம் சில வருடங்களுக்கு பின் நாம பார்க்கத்தானே போறோம். அதுவரை பொறுத்திருங்கள்) என்றதும் அனைவருக்கும் ஒரு மாதிரி ஆக உடனே மிருதுளா தானாக பிடித்து இறங்கினாள். 

இருவருக்கும் ஆரத்தி எடுக்கப்பட்டது. அனைவருமாக அலங்கரிக்கப்பட்ட கல்யாண மண்டப மேடையில் அமர்ந்தனர். நிச்சயதார்த்தம் துவங்கியது. 

நவீனுக்கு டிரஸ் கோவிலில் பெண்வீட்டாரால் கொடுக்கப்பட்டது.(என்னதான் நவீன் டில்லியிலிருந்து தானே எடுத்து வந்திருந்தாலும் அதற்கான பணத்தை பர்வதமும் ஈஸ்வரனும் வாங்கிக்கொண்டமையால் அது ராமானுஜமும் அம்புஜமும் நிச்சயதார்த்ததிற்கு எடுத்தததாக தான் நாமும் கருதுவோம். அதுதான் நியாயமும்.) அதே போல் மாப்பிள்ளை வீட்டாரும் பட்டுப்புடவை மணப்பெண்ணிற்கு நிச்சயதார்த்தத்தன்று ஆசிர்வாதம் செய்து கொடுக்கவேண்டும். அதுதான் சம்பிரதாயம். இங்கு என்ன நடக்கிறது என்பதைப்பார்ப்போம் வாருங்கள். 

நிச்சயதார்த்தப்பத்திரிகை வாசிக்கப்பட்டு அனைவராலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டு நிச்சயதார்த்தப்புடவையை மாற்றிக்கொண்டு வருமாறு மிருதுளாவிடம் வாத்தியார் கூற அவள் புடவை எங்கே கட்டிக்கொண்டு வருவதற்கு என்று முழிக்க உடனே பர்வதம் …

சாயந்தரம் கொடுத்தேனே அதுதான் போய் கட்டிண்டு வாஎன்று சபையில் தில்லாக சொல்ல அதிர்ந்துப் போனாள் மிருதுளா. 

அம்புஜமும், பங்கஜமும், கோமளமும், மேகலாவும் மிருதுளாவை அழைத்துக்கொண்டு ரூமிர்க்குள் புடவை மாற்ற செல்ல முயன்ற போது…. சில சம்பிரதாயங்களை செய்வதற்காக வாத்தியார் அம்புஜத்தை மேடையிலேயே இருக்கும்படியும் சொல்ல மற்றவர்கள் மிருதுளாவுடன் சென்றனர். 

ரூமுக்குள் சென்றதும் பங்கஜம் மிருதுளாவைப் பார்த்து…

சரி மிருது உங்க மாமியார் குடுத்தப்புடவையை எடு சீக்கிரம் மாத்திக்கட்டனும். இன்னும் பத்து நிமிஷத்துல வாத்தியார் கூப்பிட ஆரம்பிச்சுடுவார்அதற்கு கோமளம்

எங்கேருந்து வரும் புடவை. திருட்டுத்தனமா வந்து குடுத்தப்புடவையை திருப்பி வாங்கிண்டு போனப்பவே எனக்கு  அந்த மாமி மேலே சந்தேகம் வந்தது.

என்ன சொல்றே கோமளம். எங்களுக்கு ஒன்னுமே புரியலைஎன்றாள் பங்கஜம். மிருதுளா அன்று மாலை ஜானவாசத்திற்கு முன் நடந்தவற்றை எல்லாம் கூறிமுடிக்க….பங்கஜம்…

அடகடவுளே. ஏன் அந்த மாமி அப்படி பண்ணினா?” உடனே மேகலா

இத நாம சொன்ன அந்த மாமி உடனே தான் அம்பிகாட்ட குடுத்தனுப்பிச்சத மட்டும்  சொல்லுவா திருப்பி வாங்கிண்டு போனது கோமளத்திற்கும் மிருதுளாவிற்கும் மட்டும் தான் தெரியும் ஸோ அத ஒத்துக்கமாட்டா”  கோமளம் குறுக்கிட்டு

அதனால அந்த மாமிக்கு என்ன லாபம்?”

வேறென்ன சண்ட வரனும்முனு தான் பண்ணிருக்கானு நேக்கு படரதுஎன்றாள் மேகலா.

கோமளம் ….இப்போ என்ன பண்ணறது பாவம் நம்ம மிருது முழிச்சிண்டு நின்னுண்டிருக்கா

ரூமுக்கு வெளியிலிருந்து வேனு கதவைத்தட்டிக்கொண்டே வாத்தியார் மேடைக்கு அழைப்பதாக கூப்பிட்டான். 

இதோ வந்துட்டோம்என்றாள் கோமளம்.

சரி மிருது உன்ட்ட வேற புடவை இருக்குமில்லையா அதில் ஒன்றை எடு மாத்திண்டு போவோம்என்றாள் கோமளம் அதற்கு கோபத்துடன் பங்கஜம்…

எடுத்துக்குடுக்காதது அவா தப்பு மிருது இப்ப அவளோட புடவையையே மாத்திக்கட்டிண்டு போனா அவா எடுத்துக்குடுத்ததா ஆகிடுமே” 

ஐயோ சித்தி வேனு வேற கூப்பிட்டுண்டே இருக்கான் இப்போ என்ன தான் பண்ண.. சீக்கிரம் சொல்லு பங்கு சித்தி

பங்கஜம் மிருதுளாவின் ஒட்டியானத்தை மட்டும் கழட்டிவிட்டுட்டு 

இப்போ இப்படியே இதே புடவையிலேயே மேடைக்கு போவோம் வா. அவா எடுத்துதரலைங்கறது எல்லாருக்கும் தெரியட்டும்என்று ரூமின் கதவைத்திறந்து மிருதுளாவை மேடைக்கு கூட்டிச்சென்றாள். கோமளமும், மேகலாவும் ரூமைப்பூட்டிவிட்டு பின்னாலே சென்றனர். மேடை ஏறும்போது பர்வதம் சும்மா இல்லாமல் ..

அதே புடவைல வந்திருக்க என்று மிருதுளாவிடம் எல்லார் முன்னாடியும் கேட்க” 

பிரச்சனை பண்ணுவதற்காகவே கேட்கிறாள் பர்வதம் என்பதை அறிந்துக்கொண்ட பங்கஜம் டைமில்ல மாமி அதுதான் என்று சம்மாளிக்க…

எடுத்துக்குடுத்ததை கட்டிக்காம வந்திருக்கா பாருஎன்று பர்வதம் வேண்டுமென்றே எல்லோர் காதிலும் படும்படி முனுமுனுத்தாள். அதை கேட்ட அம்புஜம் சும்மா இல்லாமல் பங்கஜத்திடம்….

ஏன்டி பங்கு ஏன் மாமி தந்த புடவையை மிருதுளாவுக்கு மாத்தாமா அழைச்சுண்டு வந்திருக்கேள்என கேட்க உடனே பங்கஜம் 

அம்பு செத்த சும்மா இருக்கயா. இதுக்குப்பின்னாடி பர்வதத்தோட பெரிய சூழ்ச்சியே இருக்கு. இப்போ எதுவும் விளக்க முடியாது ஸோ பேசாம இரு.என்ற சிரித்துக்கொண்டே சொன்னாள்.

நிலைமையை சுதாரித்துக்கொண்டு சட்டென்று பேச்சை மாற்றி நிச்சயதார்தத்தை எந்த வித பிரச்சினைகளுமில்லாமல் நடத்தி முடித்தனர். பின் ரிசப்ஷென் தொடங்கியது. எல்லோருமாக ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருக்கையில் கோமளம் அம்புஜத்திடம் அன்று மாலை நடந்த பர்வதலீலையை கூறிமுடித்ததும் அம்புஜம் கண்ணில் பொல பொலவென கண்ணீர் வர அவளை ரூமுக்குள் அழைத்துச்சென்றாள். அங்கு அம்புஜத்தைப்பார்த்து

என்னத்துக்கு அழுத. அதுதான் பங்கஜம் சம்மாளிச்சிட்டாளோனோ. உனக்கு தெரியனமேனுட்டு தான் சொன்னேன்

அதுக்கில்லடி கோமளம் இப்பவே இந்த மாமி இப்படி எல்லாம் பண்ணறாளே. இவ மிருதுவ படுத்துவாளோடி. அத நெனச்சுத்தான் அழுதேன்

மாமி அம்புஜம் மாமிஎன்று கூப்பிட்டுக்கொண்டே வந்தார் வாத்தியார். 

உடனே கண்களை வேகமாக துடைத்துக்கொண்டாள் அம்புஜம்.

காலை செய்யவேண்டிய ஏற்பாடுகள் பற்றி விவரித்துவிட்டு சென்றார். அனைவரும் இரவு மாப்பிள்ளை அழைப்பு விருந்து சாப்பிட்டு அவரவர் அறைகளுக்குள் சென்று படுத்தார்கள். வழக்கம் போல ஒரு பெரிய கூட்டம் வட்டமாக அமர்ந்து சீட்டு கச்சேரியில் ஆழ்ந்தது. 

அனைவரும் உறங்கினாலும் அம்புஜத்திற்கு கவலை விட்டப்பாடாக இல்லை…கண்களை இறுக்க மூடினாலும் உறக்கம் வராமல் புரண்டு புரண்டுப் படுத்து அவளுக்கே தெரியாமல் கண் அசந்தாள்.

இருபத்தி ஏழாம் தேதி நடந்த அனைத்து நிகழ்வுகளையும் வந்திருந்து பார்த்த வாசகர் நல்லுள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். 

தொடரும்…..

பரிமளமும் பங்கஜமும் சொன்னது போலவே மறுநாள் காலை ஒரு பதினோரு மணி வாக்கில் டெலிபோன் மணி அடித்தது. மிருதுளா அம்புஜத்தைப் பார்தாள் …

அம்மா சித்திகள் சொன்னா மாதிரி அவா தானோ ?” என்றாள் மிருதுளா.

ஃபோனை எடுத்தா தானே தெரியும் மிருது. அட்டென்ட் பண்ணேன் அம்மா இந்த உளுந்த கிரைண்டரலேருந்து வழிச்சுட்டு வந்துடறேன். போ மா

மிருதுளா நினைத்தது சரிதான். அங்கிருந்து ஈஸ்வரன்ஹலோஎன்றதும் மிருதுளா…

ஹலோ அப்பா நான் மிருதுளா பேசறேன். எப்படி இருக்கேங்கள்?”

நாங்க நல்லா இருக்கோம். சரி நான் சொன்ன விஷயத்தை யோசிச்சியா? என்ன முடிவு எடுத்திருக்க? அத கேட்க தான் ஃபோன் பண்ணினேன்

என்று நவீன் ஏதும் சொல்லாதது போலவே விசாரித்தார் அதற்கு நம்ம மிருது…

ஆமாம் ..பா …யோசிச்சேன் ….நான் அவர் கூடவே கிளம்பிடலாம்னு இருக்கேன்

ஓ அப்படியா!! நான் ஏன் இன்ஸிஸ்ட் பண்ணினேனா …நவீனும் ஆடிட்டிங்க்கு படிச்சிண்டிருக்கான் அவனுக்கும் மே மாசம்  பரீட்சை வருதாம். ரெண்டு பேருக்கும் எக்ஸாம் இருக்கு. அதுவும் இல்லாம நீ அவன் கூட கிளம்பினாய் னா பின்ன ரெண்டு பேருமே பரீட்சையை சரியா எழுத மாட்டேங்களே. கஷ்ட்டப்பட்டு படிக்கறேங்களோனோ அதனாலதான் யோசிக்கிறேன். இப்போ நான் சொன்னதையும் மனசுல வச்சுண்டு ஒரு நல்ல முடிவா சொல்லு நான் அடுத்த வாரம் அகேய்ன் ஃபோன் பண்ணிக் கேட்டுக்கறேன். இப்போ ஃபோனை வச்சிடறேன்.

என்று கால்ஐ துண்டித்தார். திருமணத்திற்கு பின் மருமகள் தன் மகனுடன் செல்வது ஈஸ்வரனுக்கும் பர்வதத்திற்கும் நல்ல முடிவு இல்லை என்பது அவர் பேசிய விதத்திலே நமக்கு புரிகின்றது. ஆனால் மிருதுளாவும் அம்புஜமும் புரிந்துக்கொண்டார்களா? வாருங்கள் மேலும் படித்துத் தெரிந்துக்கொள்வோம்.

மிருதுளாவிற்கு அவள் சித்தி சொன்னதுப்போல ஏதோ சரி இல்லை என்பது புரிய ஆரம்பித்தது. அவள் நவீன் முந்தின நாள் பேசியதையும் சற்றுமுன் ஈஸ்வரன் பேசியதையும் மனதிற்குள் அசைப்போட்டுப் பார்த்தாள். 

நவீன் அவரது பரீட்சை பற்றி ஒன்றுமே கூறவில்லையே. ஏன்? எனது விருப்பத்தை தானே கேட்க ஃபோனில் அழைத்ததாக சொன்னார். அவர் அப்பா முதலில் எனது பரீட்சையை காரணமாக சொன்னார் ஆனால் இப்போது

நவீனின் பரீட்சையை காரணமாக சொல்றார்!!!! எதுக்கும் அவரிடமே கேட்டுத்தெரிந்துக் கொண்டால் இதற்கு தீர்வு கிடைக்கலாம்…அதுதான் சரி

என்று அவளுக்குள் ஒரு பட்டிமன்றமே நடத்தி பின் நவீனுக்கு ஃபோன் செய்தாள்.

ஹலோ நான் மிருதுளா பேசறேன்

ஹாய் மிருதுளா எப்படி இருக்க? வாட் அ சர்ப்ரைஸ்!! ” 

உங்களுக்கும் மே மன்த் எக்ஸாம் இருக்கா?”

ஆமாம் ஏன் கேக்கறே?”

அதனாலதான் என்னை இங்கேயே விட்டுட்டு போகனும்னு யோசிக்கறேங்களா?”

என்ன சொல்லுற!!! எனக்கு எக்ஸாம்னா உன்னை ஏன் அங்க விட்டுட்டு வருவேன். உனக்கு எக்ஸாம் எழுதனுமேனு தான் சொன்னேன்

ஓ சரி சரி அப்போ என்ன கூட்டிண்டு போறது கன்ஃபார்ம் தானே?”

ஆமாம் இட்ஸ் கன்ஃபார்ம். சரி எனக்கு லஞ் டைம் ஆச்சு. ஐ ஹாவ் டு கெட் பேக் டு வர்க். பை மிருது. வில் கால் யூ டுமாரோ.

ஓகே பை. ஹாவ் அ நைஸ் டே

என்று பேசி முடித்தாள். 

இன்னார் சொன்னதினால் கேட்கிறேன், ஏன் அப்படி சொன்னீர்கள் என்றெல்லாம் நேரடியாக கேட்டு பேசினால் பிரச்சனை தீரும்.  இவர்களுக்குள் முன் பின் அவ்வளவாக அறிமுகமும் இல்லை பழக்கமும் இல்லை. இருவருமே மனம் விட்டு பேசவுமில்லை. மனதிற்குள் அச்சம், வெட்கம், ஃபோனில் தான் பேச முடியும் திருமணத்திற்கு முன் நேரில் பேச வாய்ப்பேயில்லை, அதனால் ஏதாவது சொன்னால் அதை தவறாக புரிந்துகொண்டு விடுவாரோ என்ற எண்ணம் இருவர் மனதிலும் இருந்ததனால் இருவரையும் சரிவர பேச அனுமதிக்கவில்லை. 

இந்த இரண்டு மாதத்திற்குள் அவர்களுக்குள்  இவ்வளவு குழப்பத்தை உருவாக்கும் ஈஸ்வரனும் பர்வதமும் அவர்களை நாலு மாதம் பிரித்துவைக்க பார்ப்பது நல்லது செய்யத்தான் என்று நம்பமுடிகிறதா வாசகர்களே?

அன்று மாலை ராமானுஜத்துடன் அவரது அலுவலகத்தில் வேறு டிப்பார்ட்மென்டில் பணிப்புரியும் ஜெயேந்திரன் என்பவர் ராமானுஜம் வீட்டிற்கு

வந்தார். ராமானுஜம் அவசரமாக இரவு நேர ஷிஃப்ட்டுக்கு செல்ல தயார் ஆகிக்கொண்டிருந்தார். ஜெயேந்திரன் வருவதைப்பார்த்து ….

வாங்கோ வாங்கோ ஜெயேந்திரன்

எங்கயோ கிளம்பறேள் போல தெரியறது. தப்பான நேரத்துல வந்துட்டேனோ?”

கடமை அழைக்கறது வேறு ஒன்னுமில்லை. இன்னைக்கு நைட் ஷிஃப்ட் அதுவும் இல்லாம கொஞ்சம் சீக்கிரமே கிளம்பனும் அதுதான். சொல்லுங்கோ

யாருன்னா என்று கேட்டுக்கொண்டே அம்புஜம் வந்தாள்…

நமஸ்காரம் மாமி. நான் ஜெயேந்திரன்

ஓ தெரியுமே. எப்படி இருக்கேங்கள்? ஆத்துல மாமி அப்பறம் உங்க பொன்னுகள் எல்லாரும் எப்படி இருக்கா?”

எல்லாரும் நல்லா இருக்கா. நான் இப்போ வந்தது ஒரு முக்கியமான விஷயம் பேச

என்னது சொல்லுங்கோஎன்றாள் 

அம்புஜம்.

ராமானுஜம் வந்தவரிடம் என்ன ஏதுனு கேட்காமல் தனது பணியைப் பற்றி மட்டும் சிந்தித்துக்கொண்டே கடிகாரத்தைப் பார்த்தார். அலுவலக வேலை என்று வந்தால் எதைப்பற்றியும் யாரைப் பற்றியும் யோசிக்காத இப்படியும் ஒரு மனிதர் மிருதுளாவைப்பெற்றவர். 

மாமாக்கு நாழி ஆகறதோ?”

உடனே அம்புஜம் 

இந்தாங்கோ காபி எடுத்துக்கோங்கோ. அவர் அப்படித்தான் பத்து மணிக்கு ஒரு எடத்துக்கு போகனும்னா எட்டு மணிலேருந்தே பரக்கம் பாய்வார். அது அவருடை சுபாவம். நீங்க ஏதோ முக்கியமான விஷயம்னு சொன்னேளே அது என்னனு சொல்லுங்கோ

இல்ல உங்க பொன்னுக்கு பார்த்திருக்கேளே ஒரு குடும்பம்.

ஆமாம் ஈஸ்வரன் மாமா பர்வதம் மாமி ஃபேமிலி. அவாளுக்கு என்ன

ஆமாம் அவாளே தான்.  அவாள பத்தி விசாரிச்சேளோ?”

ஏன் இப்போ வந்து இப்படி கேக்கறேங்கள்?”

அவா இப்ப இருக்கிற வீட்டுக்கு முன்னாடி எங்க ஆத்துப்பக்கத்தில தான் வாடகைக்கு குடி இருந்தா. அந்த மாமா மொடாக்குடிகாரர்

அப்படியா!!! பார்த்தா அப்படி தெரியலையே

இப்போ கொஞ்ச வருஷமா எல்லாத்தையும் விட்டுருக்கார். அந்த பர்வதம் மாமி இருக்காளே அவ எமகாதகியாக்கும். அவ இருக்கற ஆத்துக்கு உங்க பொன்னை கொடுக்க போறேங்கள்னு இன்னைக்கு காலைல தான் கேள்விப்பட்டேன் அதுதான் என் ஷிஃப்ட் முடிஞ்சதும் நேரா இங்க வந்தேன். எனக்கும் மூனு பொன்கள் இருகாளோனோ அதுதான் மனசு கேட்கலை ஓடி வந்துட்டேன் உங்களாண்ட சொல்ல. இந்த சம்மந்தம் வேண்டாமே அந்த மாமி உங்க பொன்ன நிம்மதியா வாழ விடமாட்டா.

அம்புஜத்திற்கு தலையில் இடி விழுந்தது போல இருந்தது. 

அந்த மாமாவும் மாமியும் துளி கூட பொறுப்பில்லாதவா. சுயநலவாதிகள்

அவா புள்ள நவீன் எப்படி? மாமாஎன்று கேட்டாள் அம்புஜம்

தங்கமான புள்ள மாமி. புள்ள நல்ல புள்ள தான் அவனை ஒரு குற்றமும்  சொல்ல முடியாது.

அப்பாடா பின்ன என்ன மாமா. புள்ள கூடதான் வாழ்க்கை பூரா இருக்கப்போறா அவர் நல்லவரா இருந்தா போராதா. இதை நீங்க முன்னாடியே சொல்லிருந்தேங்கள்னா ஏதாவது யோசிச்சிருக்கலாம். ஆனா இத இப்போ வந்து சொல்லறேளே. நிச்சயமாயாச்சு. புடவை, தாலி, மண்டபம் எல்லாம் ஆயாச்சே” 

ஆனா உங்க பொன்னு அந்த குடும்பத்துக்குள்ள போனுமோல்யோ. அவா கூடவும் தானே வாழ்ந்தாகனும்.  எனக்கு இன்னைக்கு தானே தெரிய வந்துது மாமி.  அதுதான் உடனே ஓடி வந்தேன். அதனால என்ன இன்னும்  கல்யாணமாகலையே. அவா எப்படிப்பட்டவா னா…..

உடனே ராமானுஜம் குறிக்கிட்டு ஏதோ சொல்ல வருபவரை தடுத்து தனக்கு வேலைக்கு நேரமாச்சு என்றும் …கூட வருகிறாயா என்று கேட்டதும் ஜெயேந்திரன் வேறு வழியில்லாமல் அவருடன் புறப்பட்டுச் சென்றார். எத்தனை பொறுப்பான தந்தை என்பது புரிகிறதா. அவரைப் பொறுத்தவரை சம்பாத்தியம் தான் முக்கியம். ஜெயேந்திரனை சொல்லவிடாமல் தடுத்து அவருடன் கூட்டிச்சென்றதனால் அம்புஜத்திற்கு கோபம் வந்தது. தங்களது பெண்ணின் வாழ்க்கையைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் யாரோ ஒருவர் அக்கரையுடன் சொல்ல வந்தவரையும் முழுவதுமாக சொல்லவும் விடாமல் இப்படிப் பொறுப்பில்லாமல் நடந்துக்கொண்ட ராமனுஜம் மேல் நமக்கே கோபம் வரும்போது பெற்றவள் அம்புஜத்துக்கு வராதா என்ன மக்களே. அவளுக்கு அடிவயிறு கலங்கியது. ஏதோ பூமி சுற்றுவது நின்றது போல் இருந்தது. உடனே ஓடினாள் பூஜை அறைக்கு. திக்கற்றவர்க்கு தெய்வமே துணை. அம்பாளுக்கு சூடியிருந்த பூக்களில் இருந்து மல்லிகையையும் கனகாம்பரத்தையும் எடுத்து இரு பேப்பரில் பொதிந்து மனதில் 

ஆண்டவா இந்த நேரத்தில் எங்களுக்கு இப்படி ஒரு மனக்குழப்பமா. பொறுப்பில்லாத புருஷனை வைத்துக்கொண்டு நான் படும் அவஸ்தையை நீயும் தானே பார்த்துக்கொண்டிருக்கிறாய்!! எங்களுக்கு விவரங்களை விசாரித்துச்சொல்ல யாரும் இல்லை நீயா சொல்ல அனுப்பியவரையும் எங்காத்துக்காரர் சொல்ல விடாமல் செய்துட்டார். அதுவும் உன் திருவிளையாடலாகவே நான் எடுத்துக்கொள்கிறேன் தாயே. ஆனாலும் தாயல்லவா என் மனதிலிருக்கும் அச்சம் நீங்க … இதோ இந்த பூக்களில் கனகாம்பரம் வந்தால் இந்த திருமண ஏற்பாடுகள் தொடரட்டும் நல்லபடியாக உன் மகள் என் பெண் மிருது வாழ்வாள் என்றும் மல்லிகைப்பூ வந்தால் எல்லாவற்றையும் நிறுத்த வேண்டும் என்றும் உன் உத்திரவாக ஏற்றுக்கொண்டு அதன் வழி நடப்பேன் தாயே எனக்கும் என் குடும்பத்திற்கும் நீயே துணை அம்மா

என்று மனதார வேண்டிக்கொண்டு குலுக்கிப் போட்டு வேனுவை அழைத்து அதில் ஒன்றை எடுக்கச்சொன்னாள். வேனுவும் எடுத்துக்கொடுத்துவிட்டு….

இது என்ன மா? என்ன பண்ணறாய்என்று வினவ

எடுத்துக்கொடுத்ததுக்கு தாங்கஸ் டா கண்ணா. நீ போய் உன் வேலையைப்பார்” 

என்று சொல்லி அவன் சென்றபின் கண்களில் கண்ணீர் பெருக மனதில் அம்மனை நினைத்துக்கொண்டு திறந்துப்பார்த்தாள். அவளது கண்ணீரை ஆனந்த கண்ணீராக கனகாம்பரத்தைக்கொடுத்து மாற்றினாள் அந்த சமயபுரத்தாள். அதன் பின் மனதில் எந்த அச்சமுமின்றி கல்யாண வேலைகளில் இறங்கினாள் அம்புஜம். 

மறுநாள் விடிந்ததும் மிருதுளாவை அழைத்துக்கொண்டு நேராக பக்கத்திலிருந்த அம்மன் கோவிலுக்குச் சென்று இருவரும் அந்த அகிலாண்டேஸ்வரியை, ஆயிரம்கண்ணுடையாளை தரிசனம் செய்து மனதார வேண்டிக்கொண்டு அம்பாள் பெயரில் ஒரு அர்ச்சனையும் செய்து விட்டு வந்தனர். வீட்டிற்கு வந்த பின் பர்வதத்திற்கு ஃபோன் செய்தாள் அம்புஜம் 

ஹலோ மாமி நான் அம்புஜம் பேசரேன்

ம்..ம்… சொல்லுங்கோ என்ன விஷயம்?”

என்று விருப்பமில்லாதவள் போலவே கேட்டாள் பர்வதம்.

இன்னைக்கு சாயந்திரம் ரிசப்ஷன் புடவை மற்றும் எங்க சொந்தகாராளுக்கெல்லாம் டிரஸ் எடுக்க போரோம் அப்படியே பின் தாலி முடியற நாத்தனாருக்கும் பட்டுப்புடவை எடுக்கலாம்னு இருக்கோம். ஒரு இரண்டாயிரத்துல எடுக்கலாமா என்ன ஏதுனு கேட்க தான் கூப்பிட்டேன் மாமி

இதை கேட்டதும் பர்வதம் 

என்னத்துக்கு அவ்வளவு காஸ்ட்லியான புடவை அவ என்ன உங்க பொன்னோட சொந்த நாத்தனாரா? இல்லையே …அதனால ஒரு ஐநூறு ரூபாய்க்கு எடுத்தா போரும். அந்த பணத்தை சம்மந்தி சீர்க்கு சேத்துப்போட்டு எடுங்கோ என்ன கரெக்டா?”

இதை கேட்ட அம்புஜத்திற்கு ச்சே என்ன இப்படி இருக்கானு தோன்றியது.

சரி மாமி அப்படியே செய்துடறோம். பை

என்று ஃபோனை வைத்துவிட்டு டவுனுக்கு கிளம்பினார்கள். பர்வதம் அப்படி சொன்னாலும் அம்புஜம் நல்ல புடவையாக ஆயிரத்தி ஐநூறு ரூபாய்க்கு எடுத்தாள். மிருதுளாவிற்கு இன்னும் கொஞ்சம் நகையும் வாங்கிக்கொண்டு அனைத்து பர்சேஸிங்கும் முடித்து விட்டு வீட்டுக்கு வந்தபின் ராமானுஜம் கணக்குப் போட்டுப்பார்த்தார் பின் அவர் அனைவரையும் அழைத்து…..

நகை கொஞ்சம் ஜாஸ்த்தியாயிடுத்து…இப்பவே இவ்வளவையும் போட்டா எப்படி இனி நிறைய சீர் செய்யனுமே என்று கூற

உடனே மிருதுளா 

எவ்வளவு அதிகமாகறது

ஆறு பவுன்

சரி அப்பா அப்போ இந்த வளையலை திருப்பிக்கொடுத்திடலாம். அது கரெக்டா ஆறு பவுன் இருக்கு

ஏய் மிருது நீ அது ஆசைப்பட்டு எடுத்ததுடி அதை ஏன் திருப்பிக்கொடுக்கனும்

வேனு….

இதெல்லாமே வேஸ்ட் ஆஃப் டைம் அன்ட் பணம். பேசாம இந்த கல்யாணத்துக்கு எவ்வளவு செலவாகுமோ அதை அப்படியே அக்கா பேருல ஒரு ஃப்டி ல போட்டா அவளுக்காவது பின்னாடி யூஸ் ஆகும்.

டேய் போடா நடக்கறகார்யத்த பேசுவோமாஎன்றாள் அம்புஜம்

விடு மா எனக்கு அந்த வளையல் வேண்டாம் இதுவே போரும்

கல்யாணத்துக்கு இன்னும் இருபது நாட்களே உள்ளது நவீன் வருவதற்கு ஏழே நாட்கள் உள்ள நிலையில் ஈஸ்வரனுக்கும் பர்வதத்திற்கும் இன்னும் உருத்திக்கொண்டிருந்த விஷயம் தெளிவாகாததால் பிப்ரவரி பத்தாம் தேதி ஃபோன் செய்தனர்…மிருதுளா அட்டென்ட் செய்தாள்…

ஹலோ நான் மிருது பேசறேன்.

ஹலோ நான் ஈஸ்வரன் பேசறேன். என்ன முடிவெடுத்திருக்காய் நவீனுடன் ஊருக்கு போவதைப்பற்றி?”

என்று பழைய பல்லவியை பாடினார். அதற்கு மிருதுளா தான் நவீனுடன் செல்லப்போவதாக கூறியதும் ஆத்திரத்தில் ஈஸ்வரன்….

என்ன இது கிளி மாதிரி சொன்னதையே சொல்லிண்டிருக்க. பெரியவா சொல்லறதை கேட்டு நடக்க உன் அம்மா சொல்லி‌க்குடுக்கலையா. எத்தனை வாட்டி நான் சொன்னேன் போக வேண்டாம் னு மறுபடியும் மறுபடியும் நீ போவேனு அல்ச்சாட்டியம் பண்ணராய். அதுவும் நவீன்ட்டயே சொல்லிருக்காய்  என்ன திமிரு உனக்கு. நாங்க யாரு அப்போ. ஏன் எங்க பேச்செல்லாம் கேட்கமாட்டியோ. ஆனாலும் ஒரு பொன்னுக்கு  இவ்வளவு அழுத்தம் கூடாது.

என்று குரலை ஒசத்தி மிரட்டுவது போல பேச மிருதுளா பயந்து போய் அவள் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டோடின. அதைப்பார்த்த அம்புஜம்…

ஏய் மிருது ஏண்டி அழறாய் என்ன ஆச்சுமா? யாருமா ஃபோன்ல…ஏய் ஃபோனை என்கிட்ட தா

என்று வாங்கி ஹலோ என்றதும் ஈஸ்வரன் வழக்கம் போல் காலைத்துண்டித்தார். பின் மிருதுவிடம் விவரங்கள் கேட்டதும் அம்புஜமும் கலங்கினாள் ஆனால் அதைக்காட்டிக்கொள்ளாமல் இதுக்கெல்லாம் அழறதா என்ன மா நீ. அவா போகக்கூடாதுனு சொன்னா நீ உன் புருஷனோடு தானே போவேனு சொன்ன இதுல எந்த தப்பும் இல்லை. என்னத்துக்கு பின்ன இவ்வளவு செலவு செஞ்சு கல்யாணம் பண்ணறோம். நீ நல்லா இருப்பமா… கண்ண தொடச்சுண்டு போய் நாளைக்கு சுமங்கலி பிராத்தனைக்கு வாங்கிண்டு வந்ததை எல்லாம் அடுக்குவோம் வா என்று மிருதுளாவை தேத்தினாள் அம்புஜம். அவள் மனதில் அந்த அம்மனை இறுக்கமாக பிடித்துக்கொண்டு தான் இதை கூறினாள்.

இவர்கள் வழக்கப்படி திருமணத்தின் போது பெண் வீட்டார் திருமணத்திற்கு முன் சுமங்கலிப் பிரார்த்தனை செய்து தங்கள் வீட்டுப்பெண்ணை சாமியான சுமங்கலிகள் வாழ்த்தி ஆசிர்வதித்து மறுவீடு அனுப்புவதும் அதேபோல மாப்பிள்ளைவீட்டில் திருமணத்திற்கு பின் சுமங்கலி பிரார்த்தனை செய்து தங்கள் வீட்டுக்கு வந்த பெண்ணை சாமியான அவர்கள் வீட்டு சுமங்கலிகள் வாழ்த்தி ஆசிர்வதித்து வரவேற்பதும்  தான் வழக்கம். அதே போல மிருதுளா வீட்டில் சிறப்பாக சுமங்கலிப் பிரார்த்தனை நடந்தது. அன்று மாலை பர்வதம் ஃபோன் செய்தாள். 

ஹலோ நான் பர்வதம் பேசரேன்

மிருதுளா தான் ஃபோனை எடுத்தாள் குரலைக்கேட்டதும் உடனே ஃபோனை தன் அம்மாவிடம் கொடுத்தாள்..

மாமி சொல்லுங்கோ நான் அம்புஜம் தான் பேசரேன்

சுமங்கலிப் பிரார்த்தனை எல்லாம் ஆச்சா

எல்லாம் நல்லப்படியா நடந்தது மாமி. எங்காத்து சுமங்கலிகளின் ஆசிர்வாதங்களோட எங்க மிருது உங்க ஆத்துக்கு வர தயார் ஆகிட்டா. மாப்ள ஊர்ல இருந்து வந்தாச்சா?”

நேத்து நைட் வந்தான். நாளைக்கு எங்காத்த சுமங்கலிப் பிரார்த்தனை அதுக்கும் மறுநாள் சமாராதனை அதனால நீங்க மிருதுளாவ அழைச்சுண்டு சமாராதனைக்கு வந்திடுங்கோ அத சொல்லத்தான் கூப்பிட்டேன்

ஆனா மாமி“… என்று அம்புஜம் ஏதோ கூற வருவதற்குள் 

சரி எனக்கு நிறைய வேலை இருக்கு நான் வச்சுடரேன் நாள மறுநாள் வந்திடுங்கோ. பை

என்று ஃபோனை வைத்தாள்.

சமாராதனை நாளன்று அம்புஜமும் மிருதுளாவும் டூ வீலரில் நவீன் வீட்டுக்கு சென்றனர். நவீனும் பர்வதமும் வாங்கோ என்று வரவேர்த்தனர் அவர்கள் வீட்டில் பர்வதம், ஈஸ்வரன்நவீன்ப்ரவீன், பவின் மற்றும் பர்வதத்தின் அக்கா ரமணி அவர் மகன் ராஜூ ஆகியோர் இருந்தனர். 

உள்ளே சென்றதும் பர்வதம் ரொம்ப அக்கரை உள்ளவள் போல நவீன் ஏதோ மிருதுட்ட பேசனும்னு சொன்னயே போ மாடில போய் பேசிட்டு வா என்று சொல்லி வைத்தது போல இருந்தது அவர்களின் பரிமாற்றம். உடனே நவீன் மிருதுளாவை அழைத்துக்கொண்டு புதிதாக அவர்களுக்கென்று கட்டியிருந்த

அறைக்கு மாடியில் சென்றான். அம்புஜம் மிருதுளா வையே பார்த்துக்கொண்டிருந்தாள் அப்போது பர்வதம்…

மாமி நீங்களும் மாமாவும் சேர்ந்து போய் இவர் அண்ணா ராசாமணிக்கும், என் அக்கா ரமணிக்கும், தம்பி பிச்சுமணிக்கும் நேர்ல போய் பத்திரிகை வச்சு அழைச்சுடுங்கோ. அப்பறம் அவாளுக்குள்ள பேச ஏதாவது இருக்குமோள்யோ அதுதான் அனுப்பி வைத்தேன் பாவம் ரெண்டும் தயங்கறதுகள். பேசிட்டு தான் வரட்டுமே. நீங்க சொல்லுங்கோ மாமி நாங்க உங்க பொன்ன நவீன் கூட எக்ஸாம் எழுதிட்டு போனாபோரும்னு தானே சொன்னோம் ஏனா நாமளும் அந்த வயச கடந்து வந்தவா தானே நமக்கு தெரியாதா எப்படி ரெண்டு பேரும் படிப்பானுட்டு

என்று கூறி ஒரு சிரிப்பு வேற இதைக்கேட்டதும் அம்புஜத்திற்குஐயோ மறுபடியும் மொதல இருந்தாஎன்னும் வடிவேலு டயலாக் மனதிற்குள் ஒலித்தது.

அதே நேரம் மாடி ரூமில் நவீன் மிருதுளாவிடம். 

நீ எக்ஸாம் எழுதிட்டு தான் வரமுடியுமாமே.

அப்படி எல்லாம் ஒன்றுமில்லை நான் தான் முன்னாடியே சொல்லிட்டேனே உங்க கூட தான் வருவேனு அப்பறம் ஏன் மறுபடியும் மறுபடியும கேக்கறேங்கள். ஏன் வீடு பார்க்கலையா?”

வீடெல்லாம் பார்த்தாச்சு டிக்கெட் இன்னும் போடலை அதுக்கு முன்னாடி உன்னிடம் கேட்டுடலாம்னு தான்

ஓ அப்போ என்ன கூட்டிண்டு போற ஐடியாவே இல்லையா அதுதான் டிக்கெட் கூட புக் பண்ணலையா?”

அது பண்ண எவ்வளவு நேரமாக போறது. ஸோ யூ ஆர் கம்மிங் வித் மீ ரைட்டா

ஓ மை காட் நான் எத்தனை தடவ சொல்லறது. எஸ் எஸ் எஸ் போதுமா

ஏய் ஓகே ஓகே இதோ இது தான் நான் ரிசப்ஷனுக்கு எடுத்திருக்கும் கோட் சூட். நல்லாருக்கா

சூப்பரா இருக்கு அன்ட் என்னோட சாரியும் ஏகதேசம் இதே கலர் தான் வாட் எ கோயின்ஸிடன்ஸ்

கொடுத்த டைம் முடிந்துவிட்டது போல கரெக்டா பவினை அனுப்பி அவர்களை கீழே வரச்சொன்னாள் பர்வதம். அவர்களும் வந்தனர். பின் வெற்றிலை பாக்கு வாங்கிக்கொண்டு கிளம்பினார்கள் மிருதுளாவும் அம்புஜமும். 

இரு வீட்டாரும் மும்மரமாக பத்திரிகைகளை அனைவருக்கும் டிஸ்ட்ரிப்யூட் செய்யத்தார்கள். வெளியூர்காரர்களுக்கு முன்னதாகவே போஸ்ட்டில் அனுப்பிவைத்துவிட்டனர். பர்வதம் சொன்னது போலவே ராமனுஜமும் அம்புஜமும் ரமணி, பிச்சுமணி வீட்டில் பத்திரிகை வைத்துவிட்டு ராசாமணி வீட்டிற்கு சென்றனர். அங்கே ஈஸ்வரனின் அக்கா சொர்னம் அம்புஜத்திடம் 

என்ன உங்க பொன்னுக்கு நிறைய நகையும், வெள்ளியும், பாத்திங்களும் எல்லாம் செய்யறேளாமே ஈஸ்வரன் சொன்னான்

ஏதோ அந்த கடவுள் ஆசிர்வாதத்தால எங்களால செய்ய முடிஞ்சதை செய்யறோம் மாமி

அதெல்லாம் சரிதாம்மா ஆனா எல்லாத்தையும் ஒன்னா கல்யாணத்துக்கே செய்து காட்டினேங்கள்னா அவ்வளவுதான் அந்த பர்வதம் பெரிய பேராசைப்பிடிச்சவள் எப்போவும் அதையே எதிர்ப்பார்ப்பள் சொல்லிட்டேன் பார்த்து நடந்துக்கோங்கோ

அப்போதும் தனது சம்மந்தியை விட்டுக்கொடுக்காமல் பேசினாள் அம்புஜம்

மாமி எங்களுக்கு இருக்கறது ஒரு பொன்னு அவளுக்கு செய்யாம வேற யாருக்கு. அதெல்லாம் நல்ல படியா செய்ய அந்த அம்பாள் துணையிருப்பா

அப்பறம் உங்க விருப்பம். உங்களப் பார்த்தா நல்ல மனுஷாளா தெரியறது …அந்த பர்வததத்திடம் கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்கோ. ஏதோ  சொல்லனும்னு தோனித்து சொல்லிட்டேன். ஆனா அவ தான் அப்படி நவீன் தங்கமானவன். உங்க பொன்ன பத்திரமா இருக்கச் சொல்லுங்கோ

சரி மாமி நாங்க போயிட்டு வரோம்

என்று கூறி அங்கிருந்து விடைப்பெற்றனர் ராமானுஜமும் அம்புஜமும். பஸ்ஸில் வீட்டிற்கு வரும்பொழுது மனதிற்குள் யோசித்துக்கொண்டே வந்தாள் அம்புஜம்..

ஏன் எல்லாரும் அந்த பர்வதத்தை கண்டு பயப்படரா? சொல்லி வச்சா மாதிரி எல்லாரும் அவள்ட்ட ஜாக்கிரதையா இருக்க சொல்றாலே ஏன்? இதை மிருதுட்ட சொன்னா பாவம் அது பயந்துடும். சொல்ல வேண்டாம். அம்மா நீ உன் மகளுக்கு கொடுத்த வாழ்க்கை அவளை எல்லா இக்கட்டுகளிலும் நீதான் காப்பாத்தனும் தாயேஎன்று வேண்டிக்கொண்டாள்.

கல்யாணத்திற்கு இரண்டு நாள் முன் அதாவது இருபத்தி ஆறாம் தேதி மாலை மிருதுளா குடும்பத்தினர் அனைவரும் மண்டபத்திற்கு சென்றனர். 

இருபத்தி ஏழாம் தேதி காலை முதல் கல்யாண சம்பிரதாயங்கள் நடக்கவிருப்பதால் அவற்றையும் மேலும் நடக்கவிருக்கும் நிகழ்வுகளையும் வாசகர்களாகிய நீங்கள் அனைவரும் நேராக மண்டபத்திற்கு வந்து தெரிந்துக்கொள்ளும்படி பணிவுன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

வரும் செவ்வாய் அன்று கல்யாண மண்டபத்தில் சந்திப்போம்.

தொடரும்….

நிச்சயதார்த்தம் முடிந்து நண்பர்களையும் சொந்தங்களையும் அவரவர் வீடுகளில் விட்டுவிட்டு ராமானுஜம் குடும்பத்தினர் வீடு வந்து சேரும்போது இரவு பதினோரு மணியானது. அனைவரும் அசதியாக இருந்தார்கள். அம்புஜம் கவலையாகவும் இருந்தாள். இதை கவனித்த வேனு 

என்ன மா சந்தோஷப்படாமல் கவலையா இருக்க?”

அது ஒன்னுமில்லடா கொஞ்சம் அசதி இனி இருக்கற வேலைகள் எல்லாம் நினைச்சா மலப்பா இருக்குடா. அதத்தான் யோசிண்டு வரேன்

அனைவரும் உறங்கினார்கள். அம்புஜம் நன்றாக தூங்கும் மிருதுளாவையே சற்று நேரம் பார்த்து …

கள்ளம் கபடமில்லாத வெகுளியான என் பொன்னை நீ தாம்மா  காப்பாத்தனும் தாயே” 

என்று வேண்டிக்கொண்டு பின் உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

மறுநாள் விடிந்தது. கல்யாண தேதி குறிப்பதற்கு நல்ல நாள் பார்க்கப்பட்டது. ஐப்பசி மாதத்தின் இரண்டாம்  வெள்ளிக்கிழமை வரச்சொல்லிருந்தார் ஜோதிடர். 

இந்த கல்யாண ஏற்பாடுகள் நடப்பது மொபைல் ஃபோன்கள் இல்லாத காலக்கட்டமாகும். சுமார் ஒரு இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னாள். அப்பொழுது வீட்டில் லாண்ட் லைன் ஃபோன் வைத்திருப்பதே ஆடம்பரமாக கருதப்பட்ட காலம்.

நவீன் ஊருக்கு கிளம்பும் நாள் வந்தது. ரெயில்வே ஸ்டேஷனில் பவின் மற்றும்  ஈஸ்வரன் நவீனை வழியனுப்ப வந்திருந்தனர். ரெயில் கிளம்ப அரைமணி நேரம் இருந்தது. நவீனின் மனது அவள் வருவாளா என்று ஏங்கியது. சுற்றும் முற்றும் பார்த்தான் தூரத்தில் அழகான சுடிதார் அணிந்து மிருதுளா தனது பெற்றோர்களுடன்  நடந்து வருவது தெரிந்தது. அவர்கள் அருகே வந்ததும்

 “வாங்கோ வாங்கோஎன்று நவீனும் ஈஸ்வரனும் சொன்னார்கள்.

பின் அனைவருமாக உரையாடினார்கள். நவீனும் மிருதுளாவும் தனியாக பேச தயங்கினர். ரெயில் கிளம்ப ஐந்தே நிமிடங்கள் இருந்தது. ரெயிலில் நவீன் ஏறியப்பின் தனது இருக்கையில் அமர்ந்தான். ரெயில் கிளம்ப தயாரானதை சப்தம் எழுப்பி அறிவித்தது. நவீன் தனது கைகளை அசைத்து பை பை மிருது என்று முதல்முறை அவளிடம் சொன்னான். மிருதுளாவும் பை என்றாள். இதுதான் அவர்கள் நிச்சயதார்த்திற்கு பின் பேசியவை. ரெயில் புறப்பட்டு சென்றதும் ஈஸ்வரன், பவின், ராமானுஜம், அம்புஜம் மற்றும் மிருதுளா அவரவர் பஸ்ஸில் ஏறி வீட்டிற்கு சென்றனர்.

ஐப்பசி மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை வந்தது ராமானுஜமும் அம்புஜமும் ஜோதிடர் வீட்டுக்கு சென்றனர். மாப்பிள்ளைப் பெண்ணின் ஜாதகப்படி மாசி மாதம் திருமணத்திற்கு உகந்தது என்று அந்த மாதத்தில் மூன்று தேதிகளைக் குறித்துக்கொடுத்ததை எடுத்துக்கொண்டு பர்வதம் வீட்டிற்கு சென்று அவர்களிடம் கொடுத்து மாப்பிள்ளைக்கு எந்த தேதி சரிவரும் என்று கேட்டு சொல்ல சொன்னார்கள். 

பர்வதமும் ஈஸ்வரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்….பின் பர்வதம் …

கல்யாணமானதும் நவீன் பத்து நாளில் குஜராத் போயிடுவான். கல்யாணம் முடிந்ததுக்கப்பறம் தான் ஃபேமிலி குவார்ட்ஸ் தருவா. அவன் போய் தான் வீடு பார்க்கனும் அதனால மிருதுளா இங்க தான் இருக்கனும் ஒரு ரெண்டு மாசத்தில வீடு அலாட் ஆகிடும் அப்பறம் லீவு போட்டு வந்து அழைச்சிண்டு போவான். ஸோ நாளு மாசம் இங்கயே இருக்கட்டும் என்ன சொல்லறேங்கள்?”

இப்பொழுது ராமானுஜமும் அம்புஜமும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பின் அம்புஜம்…

என்ன மாமி கல்யாணம் ஆன உடனே நாளு மாசம் மிருதுளா மாப்பிள்ளையை பிரிஞ்சு இருக்கனுமான்னு யோசனையா இருக்கு!

ஏன் நாங்களெல்லாம் இல்லை என்ன?”

அதுவும் சரிதான் ஆனாலும்……. மிருதுவோட எக்ஸாம் வேற மே மாசம் வரது. அதுதான் அவ எப்படியும் போயிட்டு ரெண்டு மாசத்தில திரும்பி வரத்தான் வேணும்….

உடனே ஈஸ்வரன் குறுக்கிட்டு…

என்னத்துக்கு அலஞ்சுண்டு கல்யாணம் முடிந்ததும் உங்க பொன்னு இங்கயே இருந்து எக்ஸாம் எல்லாம் முடிசிட்டு அப்பறம் ஜூன் ஆர் ஜூலைல போனா போரும். அதுக்குள்ள நவீனுக்கும் வீடு அலாட் ஆயிடும். இது தான் சரி அப்படியே இருக்கட்டும். நீங்களும் மிருது கிட்ட எடுத்து சொல்லிடுங்கோ

அம்புஜத்திற்கு தற்மசங்கடமான நிலையானது. மனதிற்குள் ஒரு நெருடல்…அவள் மறுப்பு தெரிவிக்க முயல்வதற்குள் ராமானுஜம் குறுக்கிட்டு..

சரி மாமா அப்படியே ஆகட்டும். நாங்க கிளம்பறோம். நாழி ஆயிடுத்து.

என்று கூறி விடைப்பெற்றனர்.

வீடு வந்ததும் அம்புஜம் ராமானுஜத்தைப்பார்த்து ….

ஏன் அவா சொன்னதுக்கு சரினு சொன்னேங்கள்? எனக்கென்னவோ இது சரியா படலை

ஆமாம் அவா ரெண்டு பேரும் டிசைட் பண்ணிட்டா மிருதுளாவ அனுப்பக்கூடாதுனு …அது அவா பேசர விதத்திலருந்தே நன்னா புரிஞ்சுது அதனால ஆர்க்யூ செய்து ஒரு யூஸும் இல்லை

நீங்க சொல்லறதும் சரிதான். நம்ம பொன்னுக்கு நல்ல வரன் தானே பார்த்திருக்கோம்? நாம ஏதும் விசாரிக்கலை…எல்லாம் பகவதி துணை

மிருதுளாவுடன் ஜோதிடர் குறித்துக் குடுத்த தேதிகளை டிஸ்கஸ் செய்து பிப்பிரவரி இருப்பத்தி எட்டாம் தேதியை தேர்ந்தெடுத்தனர். அதை நவீன் வீட்டாரிடமும் தெரிவித்தனர். அவர்களும் சம்மதித்தனர்.

அடுத்து கல்யாண மண்டபம் புக் செய்யும் வேலையில் இறங்கினர் மிருதுளாவின் பெற்றோர்.  அவர்கள் ஒரு மண்டபம் செலக்ட் செய்து அதை நவீன் வீட்டாரிடம் தெரிவித்தப்போது அவர்கள் அதில் திருப்தி இல்லாததுபோல….பர்வதம் …

நல்லாதான் இருக்கு ….எங்காத்து மனுஷா நிறைய பேர் வருவா அதனால இன்னும் கொஞ்சம் பெரிய மண்டபமா இருந்தா சௌகர்யமா இருக்கும்என்றிழுக்க ….

ஓகே மாமி இன்னொரு மண்டபம் பார்த்துட்டு உங்களுக்கு கால் பண்ணறோம்என்றார் ராமானுஜம்.

ராமானுஜம் அம்புஜம் தம்பதியினர் நவீன் பெற்றொரை அந்த ஊரிலேயே உள்ள இரண்டாவது பெரிய மண்டபத்திற்கு அழைத்துச்சென்று இதை ஓகே பண்ணலாமா என்று கேட்டனர். ஈஸ்வரன் சூப்பரா இருக்கு என்றார் ஆனால் பர்வதம்ரெண்டே ரெண்டு ஏசி ரூம் தானா”  என்று கூறவும்….ராமானுஜம் சட்டென்று…

மாமி இதுவே என் சக்திக்கு மீறினது இதுக்கு மேலே எங்களால முடியாது முடிவா என்ன சொல்லறேங்கள்?”

சரி சரி நாங்க அட்ஜெஸ்ட் பண்ணிக்கறோம். பரவாயில்லை இதையே புக் பண்ணுங்கோ” 

 என்று பர்வதம் சொன்னதும் ராமானுஜத்திற்கும் அம்புஜத்திற்கும் பிடிக்கவில்லை. மண்டபத்தின் மேலாலரைப்பார்த்து முன்பணம் கட்டி பதிவு செய்தார்கள். சமையல், சீர் பட்சணங்கள், பூ, மாலை, நலங்கு என அனைத்தையும் மண்டபகாரர்களிடமே கான்ட்ராக்ட் போட்டார் ராமானுஜம். இல்லாவிட்டால்  ஒவ்வொன்றுக்கும் குற்றப்பத்திரிகையை பர்வதம் வாசித்து விடுவாரோ என்ற அச்சம் போல பாவம். மணடபத்தை விட்டு வெளியே வந்ததும் பர்வதம்…

எப்போ முகூர்த்த புடவை எடுக்க போறேங்கள். எங்களாண்ட ஒரு வார்த்தை சொன்னா நாங்களும் வருவோம். தாலி

 எங்க செய்ய சொல்லப்போறேள்?” அம்புஜம் பதிலளித்தாள்‌..

மாமி மண்டபம் பார்க்கவே உங்களைக்கூட்டிண்டு வந்திருக்கோம் பின்ன புடவை தாலி எடுக்கும் போது சொல்லாமல் இருப்போமா? தாலி எங்களுக்கு தெரிந்த ஆசாரியிடம் செய்ய சொல்லாம்னு இருக்கோம். ஒரு தாலி நீங்க தானே செய்யனும் அதையும் அவரே செய்து தருவார் ஒரு தாலிக்கு உண்டான பைசா மட்டும் நீங்க தந்தா போரும்.

இல்லை இல்லை அது சரிவராது எங்களுக்கு தெரிந்த நகைக்கடை ஒன்று இருக்கு அங்கத்தான் ஆர்டர் கொடுக்கனும்என்றாள் பர்வதம் அதற்கு அம்புஜம்..

சரி அதுவும் உங்கள் விருப்ப்படியே ஆகட்டும். நாளை மறுநாள் சுபமுகூர்த்த நாளா இருக்கு நீங்களும் இதே பஸ்டாப்பிற்கு வந்திடுங்கோ நாங்களும் வந்துடறோம் நாம எல்லாரும் சேர்ந்தே போய் புடவை தாலி எல்லாம் எடுத்துண்டு வரலாம்

சரி எங்களுக்கு பஸ் வந்துடுத்து நாங்க கிளம்பறோம். போயிட்டு வரோம்.” 

என்று கூறி ஈஸ்வரனும் பர்வதமும் இடத்தைக் காலி செய்ததும் அம்புஜம் ராமானுஜத்திடம் …

ஏன்னா இவா நாம என்ன சொன்னாலும் அதுல ஏதாவது குறைச்சொல்லிண்டே இருக்காளே இவாள திருப்திப் பட வைக்கறத்துக்கு நாம ரொம்ப சிறமப்படப்போறோம்னு நினைக்கறேன்.. எல்லாத்துக்கும் பகவதி துணை

முகூர்த்த புடவை எடுக்கவும் தாலி ஆர்டர் குடுக்கவும் நவீன் மற்றும் மிருதுளாவின் பெற்றோருடன் மிருதுளாவும் சென்றாள்.. தாலி டிசைனிலும் பிரிச்சனை எழுப்பினாள் பர்வதம் அதையும் விட்டுக்கொடுத்தனர் மிருதுளாவின் பெற்றோர். அவர்கள் முறைப்படி பெண்வீட்டார் ஒரு தாலியும் மாப்பிள்ளைவீட்டார் ஒரு தாலியும் செய்வது வழக்கம் ஆனால் இங்கே தாலி ஆர்டர் கொடுத்ததும் பில் கட்டவேண்டிய நேரத்தில் ஈஸ்வரனும், பர்வதமும் பக்கத்துக்கடையில் ஏதோ வேலை இருப்பதாக கூறி சென்றனர். மொத்த பணத்தையும் ராமானுஜமே கட்டவேண்டியிருந்தது. உள்ளே கோபம் இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் புடவை எடுக்க சென்றனர். புடவைக்கடையும் பர்வதம் சாய்ஸ் தான் கையோங்கியது பட்டில் ஒன்பது கஜம் கல்யாண  முகூர்த்தப் புடவை காட்டச்சொல்ல பல ரகங்களில் பல வண்ணங்களில் விரித்துக்காட்டப்பட்டது. அதில் மிருதுளாவிற்கு ஆரஞ்சு நிறத்தில் பச்சைப்பார்டர் போட்டப்புடவை மிகவும் பிடித்திருப்பதாகச் சொன்னாள். அதே கலரில் தான் நடிகை மீனா அவ்வைசண்முகி படத்தில் ருக்கு ருக்கு பாடலில் கட்டிக்கொண்டு வருவார்.  ராமானுஜமும் எடுத்துக்கொள்ளச்சொன்னார். விடுவாளா பர்வதம் !!!!….இடையில புகுந்து 

இந்த கலர்ல எல்லாம் கட்டிக்கக்கூடாது வெரும் மெரூன் இல்லாட்டி அரக்கு கலர்ல தான் எடுக்கனும்

 என்றதும் மிருதுளா….

அம்மா எனக்கு இந்தக்கலர் தான் பிடிச்சிருக்கு என் அப்பா தானே காசு கொடுத்து எடுத்துத்தரா அப்போ நம்ம இஷ்ட்டத்துக்கு தானே எடுக்கனும்…ப்லீஸ் மா இதையே எடுக்கலாமா” 

என்று அம்புஜம் காதில் கூறினாள். இதை கவனித்த பர்வதம்…

என்ன அங்க உங்க பொன்னு என்னமோ முனுமுனுன்னு சொல்லறா?” 

அது ஒன்னும் இல்லை மாமி. நீ கட்டிண்டா அரக்கு கலரும் அழகாதான் இருக்கும்னு சொல்லிண்டிருக்கேன்என்று அம்புஜம் கூறி சமாளிக்க…மிருதுளா அம்மா…என்று அம்புஜம் கையை இருக்கப்பிடித்தாள் உடனே அம்புஜம் …மகள் கைகளை தட்டிக்கொடுத்து பரவாயில்லை விடு என்று மெல்லச்சொன்னாள். 

ஆக அன்று எல்லாமே பர்வதத்தின் சாய்ஸ் படி தான் நடந்தது. ராமானுஜம் குடும்பத்தினர் பணம் கட்ட மட்டும் வந்தது போல் ஆக்கினாள் பர்வதம். 

அனைவரும் மத்திய உணவருந்த ஒரு ஹோட்டலுக்குச் சென்றனர். அனைவரும் மீல்ஸ் ஆர்டர் செய்தார்கள் அம்புஜம் வெளியே உணவு உட்கொள்ளாமாட்டாள் அதனால் ஒரு ஜூஸ் மட்டும் குடித்தாள். மிருதுளா பொரோட்டா ஆர்டர் செய்ய உடனே பர்வதம் அதெல்லாம் என்னத்துக்கு பேசாம மீல்ஸே ஆர்டர் பண்ணு என்று சொல்ல மிருதுளா அம்புஜத்தைப்பார்க்க அவளும் அவர்கள் சொல்படியே  கேள் என்று கூற வேற வழியின்றி மீல்ஸே ஆர்டர் செய்தாள். அதன் பில்லும் ராமானுஜமே கட்டினார். பின் அனைவரும் பஸ்டாப்பில் பஸ்ஸுக்காக காத்திருந்த சமயத்தில் ஈஸ்வரன் மிருதுளாவிடம் ….

மிருதுளா உனக்கு மே மாசம் எக்ஸாமாமே?” 

ஆமாம் அப்பா

அதனால நீ நவீன் கூட போக வேண்டாம் அவனே உன்ன கூப்பிட்டாலும் போகாதே. ஏன் வீனா அலைஞ்சுண்டு ஒன்னா பரீட்சை எல்லாம் நல்லப்படியா முடிச்சுட்டே கிளம்பு என்ன சரியா?” 

அதப்பத்தி இன்னும் நாங்க அவகிட்ட எதுவும் டிஸ்கஸ் பண்ணலை பண்ணிட்டு சொல்லறோமேஎன்றாள் அம்புஜம்

சரி நான் அடுத்தவாரம் ஃபோன் போட்டுகேட்டுக்கறேன் அதுக்குள்ள டிசைட் பண்ணுங்கோ. இன்னொரு விஷயம் நவீனுக்கு கோட் சூட், சர்ட், டை, ஷூ எல்லாம் அவன் அங்கேந்தே எடுத்துக்கறானாம் அதனால அவனுக்கு பணம் அனுப்பனும் ஸோ ஒரு பத்தாயிரம் ரூபா கொடுத்திடுங்கோ” 

அப்படியா சரி நான் நாளைக்கு இல்லாட்டி அடுத்த திங்கள் கிழமை வந்து தந்துடறேன்என்றார் ராமானுஜம் அதற்கு ஈஸ்வரன்…

இல்லை இல்லை நவீனுக்கு நாளைக்கே நான் அனுப்பனும் அதனால இப்பவே கொடுத்திடுங்கோ

இப்பவா!!! இங்கேயே வா!!! இது பஸ்டாப்!! மாமா நீங்க வயசானவா வேற. நாங்க இன்னைக்கு சாயந்தரம் ஆத்துக்கு வந்து தந்திடறோமே” 

என்று ராமானுஜம் சொன்னதுக்கு பர்வதம் உடனே…

இல்லை …பரவாயில்லை இங்கேயே தாங்கோ நாங்க பத்திரமா எடுத்துண்டு போயிடுவோம். நீங்க ஏன் இதுக்காக ரெண்டு தடவை அலையனும் பாவம்.

என்று அடாவடியாக கூற வேற வழியில்லாமல் ரூபாய் பத்தாயிரத்தை எடுத்து ஈஸ்வரன் கையில் கொடுத்தார் ராமானுஜம். உடனே ஈஸ்வரன் அதை எண்ணிப்பார்த்து பின்…

இந்தாங்கோ எங்க வகை தாளிக்கு உண்டான பணம் என்று ரூபாய் இரண்டாயிரத்தை ராமானுஜம் கொடுத்த பணத்திலிருந்தே எடுத்துக்கொடுத்தார்

அவர்கள் பஸ் வந்தது அதில் ஏறி புறப்பட்டுச் சென்றனர் நவீனின் பெற்றோர். 

 ராமானுஜம் அம்புஜத்திடம்….

என்ன இவா என்கிட்ட இருந்தே காச வாங்கி எனக்கே அவா தாளி காசுனுட்டு தந்துட்டுப்போறா!!!! அதுவும் இல்லாம நவீன் தான் சம்பாதிக்கிறானே அவனுக்கு டிரஸ் எடுக்க ஏன்  இவா பணம் அனுப்பனும்!!!! ஒரே குழப்பமா இருக்கே

ஆமாம் அவாள்ட்ட எல்லாத்துக்கும் பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டிட்டு இப்போ என்னாண்ட கேட்டா நான் என்ன சொல்லறது. இதை எல்லாம் அவாக்கிட்ட கேட்டிருக்கனும்

ஆமாம் நீ உன் வாயில என்ன கொழுக்கட்டையவா வச்சுண்டிருந்த நீ கேட்டிருக்க வேண்டியது தானே

என்று அவர்களுக்குள் சண்டை ஆரம்பிக்க…பஸ்ஸும் வந்தது அதில் ஏறி அமர்ந்தனர்.  மிருதுளாவுக்கு சங்கடமாக இருந்தது. தனது அப்பா கூறுவதும் சரிதானே என்று அவளுக்கும் தோன்றியது. ஈஸ்வரன் பர்வதம் அன்று காலையிலிருந்து அவர்களை எல்லாக்கடையிலும் பாடாய் படுத்தியது எல்லாம் அசைப்போட்டுப்பார்த்தாள் பின் வீடு சென்றதும் ….

அம்மா எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம். ரொம்ப பயமா இருக்குஎன்றாள். உடனே அம்புஜம்…

இதெல்லாம் ஒன்னுமில்லை மா. இதுக்கெல்லாமா பயப்படறது அசடு. நீ எப்போதும் பொறுப்பா நடந்துக்கனும், பொறுமையை எப்போதும் விட்டுடாதே. இதை ஞாபகத்துல வச்சுண்டா போரும் மிருது. அவா சொல்லரா மாதிரி கல்யாணத்துக்கப்பறம் உன் எக்ஸாம் எல்லாம் முடிச்சுட்டே மாப்பிள்ளையோட குஜராத்துக்கு கிளம்பு என்ன சரியா

சரிமா. அப்படியே செய்யரேன்

அம்புஜத்தின் முதல் தங்கையான பரிமளம் கல்யாணம் விசாரிக்க அவர்கள் வீட்டிற்கு வந்தாள். அப்போது நடந்தவற்றை எல்லாம் அம்புஜம் அவளுடன் ஷேர் செய்துக்கொண்டாள். பரிமளம் மிருதுளாவைக்கூப்பிட்டாள்.

மிருதுளா வந்தாள்…

என்ன சித்தி?”

ஏன்டி நீ படிச்சவ தானே உங்க அப்பா காசு போடறார் உனக்கு பிடிச்ச புடவையையே எடுத்திருக்க வேண்டியது தானே ஏன் எடுக்கலை?”

இதையேத்தான் நான் அம்மா கிட்ட சொன்னேன். அம்மா தான் பரவாயில்லைனா. நீ அம்மாட்ட கேளு.

உங்க அம்மா ஒரு இ.வா ஆனா நீ ஸ்டபேர்ன்னா இருந்திருக்கனும். அதுவும் இல்லாம ஏதோ எம்.காம் எக்ஸாமுக்காக நாளு மாசம் கழிச்சு போன்னு உன் மாமியாரும் அம்மாவும் சொன்னா உடனே தலையை ஆட்டுவியா? இதோ பருமா படிப்பும் இம்ப்பார்ட்டன்ட் தான் நான் இல்லனு சொல்லலை ஆனா  எக்ஸாம் எப்ப வேனும்னாலும் எழுதிக்கலாம் வாழ்க்கை அப்படி இல்லை ஆரம்பத்திலேயே கோட்ட விட்டுட்டனா பின்ன அவ்வளவுதான் என்ன புரியரதா?”

இப்போ நான் என்னப்பண்ணும் சித்தி?”

அடுத்தத்தடவை இந்த பேச்சு வந்துதுனா நீ நவீன் கூட போவேன் எக்ஸாம் அப்பறம் எழுதிக்குவேன்னு சொல்லு அதுதான் உன் வாழ்க்கைக்கு சேஃப். உங்க மாமியார் என்னத்துக்கு உன்ன நாளு மாசம் பிடிச்சுவச்சுக்க பார்க்கரானு நினைக்கற…. கல்யாணமான முதல் வருடம் ஒருவரை ஒருவர் நன்னா புரிஞ்சுக்க வேண்டிய ரொம்ப முக்கியமான காலம் இந்த நேரத்துல உன்னை நவீனுடன் அனுப்பாமல் வீட்டில் வைத்துக்கொள்ள நினைக்கும் உன் புக்காத்து மனுஷாலோட எண்ணம் எனக்கு சரியாப்படலை“. உடனே அம்புஜம் …

ஏன்டி பரி அவா ஆத்த பொன்னுகளே இல்லை அதனால கூட சொல்லிருக்கலாமோள்யோ!

அட போ அம்பு நீ சொன்னதெல்லாம் வச்சுப்பார்த்தா எனக்கென்னவோ இதுல ஏதோ அந்த பர்வதத்திற்கு உள்நோக்கம் இருக்குனு தோனறது

இவர்கள் உரையாடிக்கொண்டிருக்கும்போது பங்கஜமும் அம்புஜம் வீட்டிற்கு விஜயித்தாள். அவளும் விஷயங்களை சொல்லக்கேட்டதும் பரிமளம் சொல்வதுதான் சரி என்றாள். அப்பொழுது ஃபோன் அடித்தது. அம்புஜம் எடுத்தாள் …

ஹலோ நான் அம்புஜம் பேசறேன்

ஹலோ. நல்லாருக்கேளா நான் நவீன் பேசறேன். அங்க எல்லாரும் எப்படி இருக்கேங்கள்?”

ஓ மாப்ள நாங்க எல்லாரும் நன்னா இருக்கோம் நீங்க நல்லாருக்கேளா? நாங்க நேத்துதான் தாளிக்கு ஆர்டர் கொடுதுட்டு வந்திருக்கோம்.

நான் நன்னா இருக்கேன். ஹோ! ஈஸ் இட்!. குட். மிருதுட்ட பேசலாமா

ஓ தாராளமா. சாரி… இதோ குடுக்கறேன்” 

என்று மிருதுளாவிடம் ரிசீவரை கொடுத்துவிட்டு அனைவரும் உள் ரூமிர்க்குள் சென்று பேசத்தொடங்கினார்கள். அனைவரும் சென்றபின் மிருதுளா…

ஹலோ

ஹாய். எப்படி இருக்க?”

நல்லாருக்கேன் நீங்க எப்படி இருக்கேங்கள்?”

நன்னாருக்கேன் நான் பிப்பிரவரி பதினைந்தாம் தேதி ஊருக்கு வந்திடுவேன். இருபது நாள் தான் லீவு ஸோ மார்ச் ஏழு அங்கிருந்து கிளம்பனும். புடவை தாளி எல்லாம் எடுத்தாச்சாமே!

 “ஆமாம் நேத்து தான் எடுத்துண்டு வந்தோம்

எங்க அம்மா சொன்னா ஏதோ உனக்கு மே மாசம்  எம்.காம் எக்ஸாம் இருக்காமே அதனால நீ அத முடிச்சிட்டு தான் என் கூட வருவயாமே அப்படியா?”

இல்லை நான் அப்படி எதுவுமே சொல்லலை. நான் கல்யாணம் முடிஞ்சதும் உங்க கூடவே வந்துடறேன்

ஈஸ் இட்!! அப்போ எக்ஸாம்?”

பரவாயில்லை நான் அதை டிசம்பரில் எழுதிக்கறேன்” 

ஓகே நான் அப்போ வீடுப்பார்க்கட்டுமா?”

எஸ் தாராளமா பாருங்கோ

ஓகே தென் டேக் கேர் பை மிருது.

ஓகே பை பை

நவீனுடன் ஓப்பனாக பேசியது ஏதோ பெரிய விஷயம் சாதித்ததுப்போல இருந்தது மிருதுளாவிற்கு. அவள் தன் சித்திகளிடம் தான் திருமணம் முடிந்ததும் நவீனுடன் போவதாக கூறி மகிழ்ந்தாள். அதற்கு பரிமளம்…

நீ இன்னைக்கு நவீனிடம் சொன்னதுக்கு உன் மாமியார் ஆர் மாமனாரிடமிருந்து நாளை ரியாக்ஷன் வந்தால் தென் அவா ஏதோ காரணமா தான் உன்னை அனுப்பாமலிருக்க பார்க்கரானு கன்ஃபார்ம் ஆகிடும்

அப்போ அவா நாளைக்கு எங்கள்ட்ட மறுப்படியும் இதப்பத்திப்பேசுவாளா?” என்றாள் அப்பாவி மிருதுளா.

நிச்சயமா பேசுவா பாறேன்என்றால் பங்கஜம்.  

பரிமளத்திற்கும் , பங்கஜத்திற்கும் கூறப்புடவையை காண்பித்தாள் அம்புஜம். பரிமளம்… அம்புஜத்திடம் ஏமாறாமல் இருங்கோ என்று எச்சரித்து பின் பங்கஜத்துடன் சேர்ந்து அவள் வீட்டுக்கு இருவரும் சென்றனர். 

அடுத்தநாள் பரிமளமும் பங்கஜமும் சொன்னது போல  ஈஸ்வரன் பர்வதம் ஃபோன் செய்தார்களா? இல்லையா? மேலும் என்னவெல்லாம் நடக்கவிருக்கிறது என்பதைப்பற்றி வெள்ளிக்கிழமை வரை பொறுத்திருந்து தெரிந்துக்கொள்வோம்.

தொடரும்……

ராமானுஜமும் அம்புஜமும் வீடு திரும்பியதும் ஒரு சொம்பு தண்ணீர் குடித்துவிட்டு மருதுளாவையும் வேனுவையும் அழைத்து அனைவருமாக நடந்தவற்றை அவர்களுக்குள் உரையாடி பின் நிச்சயதார்த்த தேதியையும் கூறி அன்றே நிச்சயம் பண்ணிடலாம் என்ற முடிவுக்கும் வந்தனர். அதை மாப்பிள்ளை வீட்டாரிடமும் ஃபோனில் தெரிவித்தனர். ராமானுஜமும் அம்புஜமும் தங்களுக்கு மிகவும் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்களை மட்டும்  நிச்சயதார்த்திற்கு  அழைத்தனர். மற்றவர்களை திருமணத்திற்கு அழைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து நிச்சயதார்த்தத்திற்கு நான்கு நாட்களே இருப்பதால் விறுவிறுப்பாக வேலைகளில் இருங்கினர். அம்புஜம் பங்கஜத்துக்கு ஃபோன் போட்டு  நடந்த அனைத்து விவரங்களையும் கூறி நன்றியையும் தெரிவித்தாள். அதற்கு பங்கஜம்

என்னத்துக்கு இப்போ தாங்ஸ் எல்லாம் சொல்லர அம்பு…ஏதோ என்னால முடிஞ்சது. நீ என் தோழி மேனகாக்கு தான் தாங்ஸ் சொல்லனும் ஏன்னா அவ மூல்யமா தானே இந்த வரன் வந்தது. சரி உனக்கும் நிறைய வேலைகள் இருக்கும் இன்னும் நாலு நாள் தானே இருக்கு. போய் ஆகவேண்டியதை பாரு. ஏதாவது ஹெல்ப் வேணும்னா ஒரு ஃபோன் போடு போறும். பை த பை மாமியார் ஆக போர என் அக்கா அம்பு… பை… “

சரி பங்கு பை”

ராமானுஜத்தின் நண்பர்கள் விஷயத்தைக் கேள்வி பட்டதும் அவர்கள் அனைவரும் (ஒரு நாலு பேர். ராமானுஜத்திற்கு அதிக நண்பர்கள் இல்லாவிட்டாலும் இருக்கும் நாலு பேரும் உண்மையான நட்புடன் இருந்தனர்)  ஆளுக்கு ஒரு பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள். ராஜேஷ் பூ மற்றும் மாலைகள், சதாசிவம் பழங்கள், ஸ்வீட்கள், வெங்கட் நிச்சயதார்த்தத்திற்கு அனைவரும் சென்று வர வேன், வெற்றிமாறன் அன்று வேண்டிய காலை, மத்திய உணவு மற்றும் காபிடி  என ஒவ்வொரு வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யலானார்கள்.

அம்புஜம் தனது மகளுக்கு மேக்அப் போட அவர்கள் வீட்டுப்பக்கத்தில் இருந்த ஒரு அழகு நிலைத்தில் சொல்லி வைத்தாள். 

இப்படி நிச்சயதார்த்த ஏற்பாடுகள் எல்லாம் மடமடவென நடந்தது மருதுளா வீட்டில். நமது மாப்பிள்ளை நவீன் வீட்டில் என்ன செய்கிறார்கள் என்பதை…. மிருதுளா என்ன ஆனாள்? தொடரைப் படிக்கும் வாசகர்களாகிய நாம்

தெரிந்துகொள்ள நமக்கு எல்லா உரிமையும் இருக்கிறது ஆகையால் வாருங்கள் போய் ஒரு எட்டு ஏற்பாடுகளைப் பார்த்துவிட்டு வருவோம். 

ஈஸ்வரன் அவர் உறவினர்கள் அனைவருக்கும் ஃபோனில் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார். அனைவருக்கும் தெரிவித்தப்பின் பர்வதம் கூறளானாள்

காலைல புடவ எடுக்க வெய்யிலில் போயிட்டுவந்ததால ஒரே தலைவலி. சரி ஏன்னா உங்க தங்கை அக்காக்கள் எல்லாரும் எப்ப வராளாம்? பேசாம நிச்சயதார்த்தத்தனைக்கு உங்க அக்காவையே சமைக்க சொல்லிடுங்கோ அப்பறம் நம்ம ஆம் ரொம்ப சின்னது அதனால உங்க அண்ணா ராசாமணி ஆத்துல வச்சுண்டுடலாம் அவராண்ட சொல்லிடுங்கோ. நம்ம பிச்சுமணியையும் என் அக்கா ரமணியையும் அவா ஆத்துக்கே போய் நிச்சயத்துக்கு அழைச்சுட்டு வரலாம். பூ மாலை பழங்கள் எல்லாம் பிச்சுமணி பார்த்துப்பான்.”

பர்வதம் பேசுவதிலிருந்து ஒன்றை நாம் நன்றாக புரிந்துக் கொள்ள முடிகிறது அது என்னவென்றால் அவள் வீட்டுச் சொந்தங்களை மட்டும் மதிப்பவள் கணவர் வீட்டு சொந்தங்களை நன்றாக தனது கணவர் மூலமே வேலை வாங்கும் சிறந்த ரிங் மாஸ்டர். அடுத்தவர்களிடம் தங்களுக்காக இதை செய்ய மடியுமா என்றெல்லாம் கேட்க தயக்கேமே இல்லாதஅடுத்தவர்களை ஏதோ அவளுக்கு செய்ய கடமை பட்டவர்கள் போல ஒரு நினைப்பு வேற… என்ன மக்களே இதில் உங்களுக்கு ஏதாவது கருத்துவேறுபாடு இருக்கிறதா?

ஈஸ்வரன் குடும்பத்தில் அவருடன் கூடப்பிறந்தவர்கள் ஐந்து பேர். ஒரு அண்ணன் ராசாமணி, இரண்டு அக்காக்கள் சொர்ணம், வரலட்சுமி, இரண்டு தங்கைகள் வசுந்தரா, சுபத்திரை. சொர்ணம் அனைவருக்கும் அக்கா ஆவார். இவருக்கு பர்வதத்தை அறவே பிடிக்காது. வரலட்சுமியையும் வசுந்தராவையும்  சமையலுக்கு வரச்சொல்லிருக்காள் பர்வதம். அவர்களும் தங்களது சகோதரனுக்காக மட்டுமே சம்மதித்தனர். அவர்கள் அனைவரும் பணத்தை விட மனிதர்களை பெரிதும் மதிப்பவர்கள். தங்களது சகோதரன் ஈஸ்வரன் எதுக்கோ வாக்கப்பட்டு முருங்கை மரம் ஏறி ஆக வேண்டியிருப்பதை புரிந்து அவருக்காக அவர் மேல்லுள்ள பாசத்தினால் செய்ய முன்வந்தனர். 

பர்வதம் வேண்டுமென்றே ஒரு சாதாரணமான ஒரு அழுது வடியும் நிறத்தில் நிச்சயதார்த்தப் புடவையை மிருதுளாவுக்காக  எடுத்தாள். அது பட்டுப்புடவை கூட இல்லை. ஆனாலும் அவளை கேள்விகேட்க யாரும் இல்லை அப்படியே கேட்டாலும் பிரயோஜனம் இல்லை என்பதும் அனைவரும் தெரிந்ததே. அவளை யாருமே திருத்த முயற்சிக்காமல் அவள் அப்படி தான் என்று விலகிச்சென்ற உறவினர்களே அதிகம்.

நிச்சயதார்த்தம் நாள் வந்தது பர்வதம் வீட்டார் அனைவரும் பர்வதம், ஈஸ்வரன், நவீன், ப்ரவீன் மற்றும் பவின் ராசாமணி வீட்டிற்கு அன்று காலையிலேயே வந்துவிட்டனர். வரலட்சுமியும் வசுந்தராவும் அன்று காலை முதல் சமயற்க்கட்டிலேயே இருக்கவேண்டியதாயிற்று.

அனைவரும் சேர்ந்து நிச்சயதார்தத்திற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்து சாஸ்த்திரிகளின் வரவுக்காகவும், பெண் வீட்டார் வரவுக்காகவும் காத்திருந்தனர்.

அன்று மாலை ராகுகாலத்திற்கு முன் ஒரு நாலு மணிக்கு சாஸ்த்திரிகள், தாய் மாமா பிச்சுமணி, பெரியம்மா ரமணி அவரவர் குடும்பத்துடன் ராசாமணி வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். 

வாருங்கள் நம்ம மிருதுளா வீட்டிலிருந்து அனைவரும் கிளம்பி விட்டார்களா என்று தெரிந்துக்கொள்ளலாம்.

நிச்சயத்தன்று காலை அம்புஜம் வேனுவை கூப்பிட்டு மிருதுளாவோடு கோவிலுக்கு சென்று வரும்படி கூறி மிருதுளாவையும் நன்றாக கடவுளிடம் வேண்டிக்கொள்ள சொல்லி அனுப்பினாள். 

மிருதுளாவும் நன்றாக எண்ணை தேய்த்து குளித்து ஆத்திப்பின்னலிட்டு அழகான புடவை உடுத்தி கோவிலுக்கு புறப்பட்டு அறையிலிருந்து வெளியே வந்ததும் அவள் சொந்தங்கள் அனைவரும் அவளைப்பார்த்து

 “மிருது உனக்கு கல்யாணகல வந்துடுத்து.”

லட்சணமா இருக்கா நம்ம மிருது. நவீன் குடுத்துவச்சவர்” 

என்றனர்

அம்புஜத்துடன் கூடப்பிறந்தவர்கள் மூன்று தங்கைகள் பாரிமளம், கோமளம், பங்கஜம். ஒரு அண்ணன் மணியன். 

ராமானுஜத்திற்கு ஒரே தம்பி ராமநாதன் அவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். இவர் மனைவி மேகலா. 

அக்காவும் தம்பியும் கோவில் சென்று வந்ததும் சற்றுநேரம் அனைவருடனும் பேசிக்கொண்டிருந்து மத்திய உணவு உண்ட பின் ஒரு இரண்டு மணிக்கு அழகு நிலைத்தில் மிருதுளாவை கொண்டு விட்டான் வேனு. மிருதுளா அன்று தான் முதன்மதலில் மேக்அப் போட போகிறாள். 

அவளுக்கு மேக்அப் போட்டு பட்டுப்புடவை கட்டி அவள் வெளியே வந்ததும் வேனு அவளைப்பார்த்து கோபப்பட்டான். காலைல சிம்ப்ளா அழகா இருந்த மிருதுக்கா இந்த மேக்அப் உனக்கு சூட் ஆகலை…. எனக்குப்பிடிக்கலை

என்றதும் மிருதுவின் முகம் வாடியது. மேலும் வேனு  வீட்டிற்கு சென்று அனைத்தயும் கலைச்சுட்டு காலைல இருந்த மாதிரி இரு அக்கா என்றதும் அவளுக்கு அழுகை வந்தது. இருவரும் வீடு வந்து சேர்ந்ததும் வேன் அனைவரையும் ஏற்றிக்கொண்டு இவர்களுக்காக காத்துக்கொண்டிருந்தது. வேனு தனது தாயை அழைத்து வீட்டைத்திறக்க சொன்னான். அம்புஜம் வேனிலிருந்து இறங்கினாள்…

என்னடா வேனு இப்ப என்னத்துக்கு ஆம தொறக்கனும்? எல்லாரும் காத்துண்டிருக்கா நாழி ஆகறது”

என்று கூறிக்கொண்டே வீட்டை திறந்தாள். உடனே மிருதுளா அழுதுகொண்டே குளியலறைக்குள் சென்றால்…அதைப்பார்த்த அம்புஜம்…

ஏய் மிருது இப்போ ஏன் பாத்ரூமுக்குள்ள போனாய்? என்னாட வேனு என்ன ஆச்சு”

அக்கா நீ உன் மேக்அப் எல்லாத்தையும் கலச்சுட்டு வா அக்கா”

அடேய் என்னடா அக்காளும் தம்பியுமா விளையாடரேங்களா. அடியே மிருது இப்ப வெளில வரல அப்பறம் …” என்று அம்புஜம் கூறிக்கொண்டிருக்கும் போதே கதவு திறந்தது…

டேய் வேனு இந்த மேக்அப் அழிய மாட்டேங்கறது டா. நான் என்ன செய்ய ?”

என்னது ?? ஏன்டி இப்படி பண்ணறாய்? சீக்கிரம் மொகத்த தொடச்சுண்டு வா. இதுக்கு மேல ஒன்னும் பண்ணிடாதே…நீ நல்லா தாம்மா இருக்க. வாம்மா நாழி ஆகறதோனோ எல்லாரும் காத்துண்டிருக்கா வாசல்ல”

பங்கஜமும், ராமநாதனின் மனைவி மேகலாவும் உள்ளே சென்றார்கள் …

என்ன வண்டி கிளம்பப்போறது. அத்திம்பேர் அங்க சத்தம் போடரார் இங்க அம்மாவும் புள்ளையும் பொன்னும் கூடிண்டு என்ன பண்ணறேங்கள்?”

ஏய் மிருது ஏன் ஒரு மாதிரி இருக்க?”

அவ தம்பிக்கு அவளோட மேக்அப் பிடிக்கலையாம் அதனால கலச்சுக்கப்போறேன்னு ஒரே அல்ச்சாட்டியம் பண்ணரதுகள் ரெண்டுமா. நான் என்னத்த பண்ண!”

டேய் வேனு உங்க அக்கா இதுவரைக்கும் மேக்அப் போட்டு நீ பார்க்காததால உனக்கு அப்படி தோனரது அவ்வளவுதான். அவள் அழகா தான் இருக்கா. தம்பி சொன்னானாம்..அக்கா மேக்அப்ப அழிக்கறாளாம்…நல்ல தம்பி ..நல்ல அக்கா…”

வாசலில் இருந்து ராமானுஜம்….

 “மணி மூன்றை ஆச்சு. இப்போ கிளம்பினாதான் ராகு காலத்துக்கு முன்னாடி அங்க எத்த முடியும். என்ன பண்ணரேங்கள் எல்லாருமா?!!”

நாலரை டூ ஆறு ராகு காலம் என்பதால் நாலு மணிக்கெல்லாம் ராசாமணி வீட்டிற்கு சென்று நிச்சயதார்த்ததிற்கு வேண்டியவற்றை அடுக்கி தயாராகி ஆறு மணிக்கு நிச்சயதார்த்ததை முடித்துக்கொண்டு இரவு உணவு உண்டு வீடு திரும்ப திட்டமிட்டிருந்தனர். 

ராமானுஜம் உறக்க சொன்னதும் அனைவரும் வீட்டைச் பூட்டிக்கொண்டு வேனில் ஏறினார்கள். சரியாக நாலு பத்துக்கு ராசாமணி வீட்டை சென்றடைந்தார்கள். ராசாமணி வீட்டிற்கு எதிர் விடு இவர்களுக்காக சுத்தம் செய்யது வைத்திருந்தனர். மிருதுளா வீட்டார் அனைவரும் அந்த வீட்டினுள் சென்று பழங்கள், பூக்கள், மாலைகள் அனைத்தையும் தாம்பாளத்தில் அழகாக அடுக்கி வைத்தனர். சக்கரையை ஒரு தாம்பாளத்தில் பரப்பி அதன் மேல் ஜெம்ஸ் மிட்டாயால் தனது அக்கா பெயரையும் வரப்போர அத்திம்பேர் பெயரையும் அழகாக பதித்தான் வேனு. 

இதற்கிடையில் அனைவருக்கும் காபி பறிமாறப்பட்டது. எல்லாம் தயார் ஆகவும் மணி ஆறு ஆகவும் சரியாக இருந்தது. மிருதுளா வீட்டார் மிருதுளாவை அழைத்துக்கொண்டு நிச்சயதார்த்த சீர்களுடன் ராசாமணி வீட்டிற்குள் சென்றனர். 

நிச்சயதார்த்தம் துவங்கியது. நவீனுக்கு கூட பிறந்த தங்கைகள் யாரும் இல்லாததால் அவன் அத்தைப்பெண் மிருதுளாவின் நாத்தநாராக இருந்து சம்பிரதாயங்களை செய்தார். 

நிச்சயம் ஆனதும் ராமானுஜம் வேனுவிடம் ஒரு அழகிய மோதிரத்தைக்கொடுத்து மாப்பிள்ளைக்கு போட்டுவிட சொன்னார். வேனுவும் நவீனுக்கு மோதிரம் போட அனைவரும் வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டனர். பெரியவர்கள் அனைவரையும் நமஸ்காரம் செய்து ஆசிர்வாதத்தை பெற்றனர் நவீனும் மிருதுளாவும்.  வாழை இலை போட்டு இரவு உணவை ஈஸ்வரன் வீட்டார் பறிமாற பெண் வீட்டார் அனைவரும் உண்டு பின் வீட்டிற்கு திரும்பிச்செல்ல ஆயத்தம் ஆனார்கள். அப்பொழுது மிருதுளாவும் அனைவருடனும் வேனில் ஏற முயன்ற போது பங்கஜம் அவளை நவீனிடம் ஒரு வார்த்தை சொல்லிட்டு வரச்சொல்லி அனுப்பினாள். 

மிருதுளாவும் நவீனிடம் பங்கஜம் கூறியதை மட்டும் கூறிவிட்டு வேனில் ஏறி அமர்ந்தாள். பங்கஜமும் மேகலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு…

என்ன இந்த பொன்னு இப்படி இருக்கா?”

ஆனாலும் இவ்வளவு வெகுளியா இருக்கப்படாது மிருது. நீ நிறைய கத்துக்கணும்…”

அம்புஜம் பர்வத்திடம் சென்று…

பர்வதம் மாமி நிச்சயத்தை அமர்க்களப்படுத்திட்டேள். ரொம்ப நல்லா நடந்தது. இனி எங்க மிருது உங்க பொன்னு.” என்றதும் பர்வதம் சட்டென்று…

அது கல்யாணத்துக்கு அப்பறம் தானே. இப்போ நிச்சயம் தானே முடிஞ்சிருக்கு. எல்லாரும் கிளம்பரா போல …உங்கள தேடப்போரா பாருங்கோ” 

என்றாள். இதைக்கேட்டதும் அம்புஜத்துக்குள் ஒரு கவலை பற்றியது. அந்த யோசனையிலேயே அவள் வேனில் ஏறி அமர்ந்தாள். அப்போது மேகலா 

என்ன மன்னி ஒரு மாதிரி இருக்கேள்? என்ன ஆச்சு?”

அதெல்லாம் ஒன்னுமில்லை காலையிலேருந்து ஒரே டென்ஷன் எல்லாம் நல்லப்படியா நடக்கணும்னு அதுதான் கொஞ்சம் அசத்தறது. வேறொன்னுமில்லை.”

அனைவரிடமும் மிருதுளாவின் குடும்பத்தினரும் ராமானுஜத்தின் நண்பர்களும் விடைப்பெற்றுக்கொண்டனர். வேனும் புறப்பட்டு சென்றது.

நம்ம மிருதுளா நவீன் நிச்சயதார்த்த்திற்கு வந்திருந்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். 

அடுத்து நிச்சயதார்த்ததிற்கு பின் கல்யாணத்திற்கு முன் வரை நடக்கவிருப்பதை வரும் செவ்வாய் அன்று வந்து தெறிந்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தொடரும்……

நவீன் வீட்டார் அனைவரும் பெண் பார்க்கும் படலம் முடிந்தபின் வேனில் பர்வதம் வீட்டிற்கு திரும்பும்போது பெண் வீட்டாரையும் அவர்களின் விருந்தோம்பலையும் பற்றி பேசிக்கொண்டு வந்தனர்.

 நவீன் பெரியம்மா 

நவீன் உனக்கு நல்ல பொன்னா அமைஞ்சிருக்காப்பா. ரெண்டு பேருக்கும் ஜோடிப்பொருத்தம் ரொம்ப நல்லா இருக்கு”

நவீனின் பெரியப்பா சுரேஷ் கிருஷ்ணா..

ஈஸ்வரா ஆத்துக்கு மாட்டுப்பொன் வரப்போரா… இனி உனக்கு ருசியா சாப்பாடு கிடைக்கப்போறது …என்ன சரியா…ஓகே பர்வதம் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்” 

பர்வதம் தனக்குள் முனுமுனுத்தாள்

ஆமாம் விளையாடராராம் …வேற வேலை இல்லை. அவர் தான் அப்படி சொல்லரார்னா இவரும் கேட்டுண்டு கெக்க புக்க னு சிறிச்சுண்டு இருக்கறத பாரு..என்னத்த சொல்ல” 

நவீன் பெரியப்பா …

என்ன பர்வதம் ஏதோ முனுமுனுன்னு சொல்லற!!! சத்தமாதான் சொல்லேன் எல்லாரும் கேட்ப்போமோனோ”

உடனே அக்காளை காக்க வந்தார் தம்பி பிச்சுமணி.

அத்திம்பேர் எல்லாருக்கும் கேட்கனும்னா அக்கா சத்தமாவே சொல்லிருப்பாளே….நீங்க புரிஞ்சுக்காத மாதிரி இப்படி கேட்க்கலாமா !!!”

என்னடா நவீன் இங்க தானே இருக்க?”

என்று பிச்சுமணி கேட்டதும் அனைவரும் நவீனை நகையாடி சிரிப்பு மழையில் நனைந்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர். பிச்சுமணியின் மனைவியை என்றுமே பர்வதம் மதித்ததில்லை. அதைப்பற்றி பிச்சுமணியும் அக்காவை எதிர்த்து கேட்டதும் இல்லை. அதனால் அவர் மனைவி அம்பிகா மிகவும் அவமானப்படுத்தப்பட்டார். அன்று பெண் பார்ப்பதற்கு கூட பர்வதம் கூட்டிக்கொண்டு போகவில்லை. அவர்கள் அனைவரும் வந்ததும் அம்பிகா ஓடி வந்து விவரங்களை கேட்டாள் அதற்கு பர்வதம் 

ம்ம்ம்… எல்லாம் சொல்லறோம் இப்ப தானே வந்துருக்கோம்”

அம்பிகா உடனே தான் பார்த்து வளர்ந்த நவீனிடம் கேட்டாள்

என்ன நவீன் பொன்னு ஓகே வா? டும் டும் டும் கல்யாணமா?”

ஆமாம் மாமி எனக்கு பொன்ன பிடிச்சிருக்கு ஓகே சொல்லிட்டேன் இனி நீங்க எல்லாருமா நிச்சயதார்த்ததுக்கு ஒரு டேட் பிக்ஸ் பண்ணுங்கோ. நான் இந்த மாசம் இருபத்தைந்தாம் தேதி டில்லிக்கு ரிட்டேர்ன் ஆகனும்.. 

அதுக்குள்ள நடந்ததுனா நல்லாருக்கும்.‌..இல்லைனா தென் பிப்பிரவரி மாதம் தான் லீவ் கிடைக்கும்”

நவீன் பெரியப்பா ….

என்ன இவன் இப்படி சொல்றான். இன்னைக்கு பண்ணடு தேதி ஆகறது, இவன் இருப்பத்தைந்து கிளம்பறான் இடைல 13 நாட்கள் தானே இருக்கு!”

நான் என்ன பண்ண பெரியப்பா…என்னை குஜராத் காந்தி நகருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிருக்கா அன்ட் ஒன்னாம் தேதி அங்க ரிப்போர்ட்  பண்ணனும் ஸோ டில்லி போய் திங்க்ஸ் எல்லாம் பாக் செஞ்சு பேப்பர்ஸ் கலெக்ட் பண்ணிண்டு ஃர்ஸ்ட் காந்தி நகர் யூனிட்டில் இருக்கனும்.”

என்று கூறி உடை மாற்ற சென்றான் நவீன்.

உடனே நவீனின் மாமாவும் பெரியம்மாவும் காலண்டரில் நல்லநாள் பார்க்க ஆரம்பித்தனர். பின் பிச்சுமணி தன் அக்காவைப்பார்த்து …

என்ன அக்கா நாங்க எல்லாரும் இன்னும் 13 நாள் தான் இருக்குனுட்டு நல்ல நாளெல்லாம் பார்க்கறோம் நீ என்ன ஏதோ யோசிச்சிண்டு இருக்க?”

உடனே பெரியப்பா சுரேஷ் மீண்டும் …

அது வேறோன்னும்மில்லடா பிச்சு மாமியாராக போராளோனோ அந்த கெத்து வந்துடுத்து போல. என்ன பர்வதம் கரெக்ட்டா சொன்னேனா….ஹா..ஹா..ஹா”

அத்திம்பேர் ப்ளீஸ் பீ சீரியஸ்…இப்போ அக்காவை கிண்டல் பண்ணறதுதான் முக்கியமா?”

ஓகே டா ….பர்வதம் காவலா. இனி உன் அக்காளை ஒன்னும் சொல்ல மாட்டேன்..போருமா?”

பர்வதம் அக்கா, ஈஸ்வரன் அத்திம்பேர் வர வாரம் பத்தொன்பதாம் தேதி சுப முகூர்த்த நாள்ன்னு காலண்டரில் போட்டிருக்கு நவீன் கிளம்பற தேதிக்குள்ள இந்த நாள் மாத்தரம் தான் சுப முகூர்த்த நாள். அன்னைக்கே நிச்சயம் பண்ணிண்டுடலாமா? என்ன சொல்லறேங்கள்?”

பர்வதம் உடனே…” நவீனிடம் கேட்டுக்கோங்கோ” என்று கூறி அடுப்படிக்கு சென்று விட்டாள்.

இதை கேட்டுக்கொண்டே வந்த நவீன் 

அது ஒன்னுமில்லை மாமா…. அம்மா வேண்டாம் என்று சொன்ன பொன்னை நான் ஓகே சொன்னதால் தான் இந்த ரியாக்ஷன்…அவள் நிறம் கம்மியாம் ஆள் தடியாம் …நீங்க எல்லாரும் பார்த்தேங்களே ….பெரியம்மா சொல்லுங்கோ.”

பொன்னு அத்தர நிறம் கம்மி எல்லாம் இல்லையே!! ஆளும் அவ ஹைட்டுக்கு ஏத்த மாதிரி தான் இருக்கா…ஏன்டி பர்வதம் உன் கண்ணுல ஏதாவது பிரச்சினையா?”

என்று பர்வதத்தின் அக்கா ரமணி கூற அனைவரும் சிரித்தனர்.

நவீனுக்குதான் பிடிக்கனும் அவன் தான் அவளோட வாழப்போறவன். அவனுக்கு பிடிச்சிருக்கு ஸோ இதுல இனி நாம பெரியவாளா லட்சணமா கொழந்தகள ஆசிர்வாதம் பண்ணுவோம்”

 இரவு உணவு உண்டு அனைவரும் அவரவர்கள் வீடுகளுக்கு சென்றனர். பர்வத்திற்கு அன்று உறக்கம் வரவில்லை. எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்தியே ஆக வேண்டுமென யோசித்தாள்… மனதில் திட்டம் ஒன்று உதிக்க நிம்மதியாக உறங்கினாள்.

மறுநாள் காலையில் பர்வதம் தனது வீட்டு தெருவில் மிருதுளாவின் அப்பா வேலை பார்க்கும் அதே அலுவலகத்தில் பண்ணிப்புரியும் ரமணன் என்பவர் வீட்டிற்கு சென்று வந்தாள். 

அன்று மிருதுளாவின் தந்தை ராமானுஜத்தை அலுவலகத்தில் போய் சந்தித்தார் ரமணன். 

என்ன ராமானுஜம் மாமா பொன்னுக்கு கல்யாணமாமே! சொல்லவேயில்லை”

உனக்கு எப்படி தெரியும் நேத்துதான் பொன்ன பார்த்துட்டுப்போயிருக்கா அதுக்குள்ள உனக்கு ….”

ரொம்ப யோசிக்காதீங்கோ …நான் உங்களுக்கு சம்மந்தி ஆக போர ஈஸ்வரன் மாமா பர்வதம் மாமி ஆத்து பக்கத்துல தான் இருக்கேன். மாமி என்னாண்ட ஒரு விஷயம் சொல்லி உங்கள்ட்ட சொல்ல சொன்னா”

என்னவாம்?” என்றார் ராமானுஜம்.

(அப்பொழுதும் தன் பெண் வாழ போகும் வீட்டிற்கு பக்கத்தில் வசிப்பவராயிற்றே அவர்களைப்பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றில்லை ராமானுஜத்திற்கு. அவ்வளவு பொறுப்பானவர்.)

அது ஒன்னும்மில்லை மாமா நிச்சயத்திற்கு மாப்பிள்ளைக்கு ஒரு ப்ரேஸ்ளெட்டும், மோதிரமும் போடனுமாம் அத சொல்ல மறந்துட்டாளாம் அது தான் என்னாண்ட சொல்லி அனுப்பினா…நானும் சொல்லிட்டேன் வரேன் மாமா”

இதை கேட்டதும் சுர்ரென்று கோபம் தலைக்கேறியது ராமானுஜத்திற்கு. உடனே ஒரு மணிநேரம் பெர்மிஷன் போட்டு வீட்டிற்குச் சென்று…

ஏய் அம்புஜம் அடியே அம்புஜம்.”

என்ன …னா  என்ன ஆச்சு ஏன் இவ்வளோ கோவமா இருக்கேங்கள்?”

என்ன நினைச்சுண்டிருக்கா அவா? நேத்தே தெளிவா பேசிடலாம்முனு சொன்னதுக்கு எங்களுக்கு ஒன்னும் வேண்டாம் அது இதுனு சபைல சொல்லிட்டு இப்போ அதுவும் அந்த ரமணனை தூது ஆனுப்பி மாப்பிள்ளைக்கு நிச்சயத்துக்கு மோதிரம், ப்ரேஸ்ளெட் போடனும்முனு சொல்லி அனுப்பிருக்கா!!!! அவனெல்லாம் யாரு அவன் வந்து என்கிட்ட என்ன நக்கலா சொல்லறான் தெறியுமா? அப்படியே வேணும்னாலும் ஏன் அவாளுக்கு ஃபோன் போட்டு சொல்ல முடியாதோ? எனக்கு இந்த இடம் சரிவரும்முனு தோனலை” 

அச்சசோ அவசரப்படாதீங்கோ இத அவா தான் சொல்லி அனுப்பிருக்காளானு நமக்குத்தெரியாது இல்லையா? அதனால பேசாம இருப்போம்… அப்போ… அவாளே ஃபோன் போட்டு கேப்பாளோனோ… அவா கேட்கச்சொல்லிருந்தா! ” 

என்னமோ போ… சரி சாப்பாட்ட போடு வந்தது தான் வந்தேன் அத முடிச்சுட்டுப்போறேன்”

மறுநாள் காலையிலும் ரமணன் சென்று ராமானுஜத்தை சந்தித்து …

ஹலோ மாமா எப்படி இருக்கேங்கள்?”

இது வரைக்கும் நல்லாதான் இருந்தேன். இன்னைக்கு என்ன விஷயமா வந்திருக்க?”

அது ஒன்னுமில்லை மாமா”

அப்படினா என்ன சும்மா பார்க்கறதுக்காக இத்தர தூரம் வந்தியாகும்?”

உங்களுக்கு எப்பவுமே விளையாட்டுதான் போங்கோ”

அய்யோ ராமா!!! விஷயத்தை சொல்லரயா நேக்கு நிறய வேல இருக்கு”

பர்வதம் மாமி உங்களாண்ட சொல்ல சொன்னதை சொல்ல தான் வந்தேன்”

என்னவாம் அந்த மாமிக்கு?”

அவாளுக்கு வரலட்சுமி விரதம் உண்டாம்  அதனால வெள்ளில ஒரு சொம்பும் அம்மன் முகமும் தந்திடுங்கோனு சொல்ல சொன்னா சொல்லிட்டேன்”

நீ யாரு அந்த மாமியோட புறாவா தூது அனுப்பிண்டே இருக்கா”

அவா சொல்ல சொன்னா சொல்லிட்டேன் இதெல்லாம் நீங்களே அவாள்ட்ட பேசிருந்தா அவா ஏன் என்ட்ட இப்படி சொல்லி அனுப்பப்போறா மாமா…சரி நான் வரேன்” 

என்று ரமணன் கூறியதும் ராமானுஜம் ஆத்திரம் அடைந்து அன்று லீவ் போட்டு வீட்டிற்கு சென்று …

அம்புஜம் நான்தான் அப்பவே சொன்னேனோ இல்யா இந்த இடம் நமக்கு ஒத்து வராது…சும்மா ஒவ்வொரு நாளும் அந்த ரமணனை அனுப்பி அது வேணும் இது வேணுமுனு கேட்கறது நல்லாவா இருக்கு? அவா பண்ணறது சரியில்லை இப்பவே ஃபோன போட்டு இந்த சம்மந்தத்தில் நம்மளுக்கு இஷ்டமில்லைனு சொல்லிடபோரேன்”

ஏன் இன்னிக்கு என்ன கேட்டு அனுப்பிருந்தா?”

அவா வரலட்சுமி விரதத்திற்கு வெள்ளில முகமும் சொம்பும் வேணுமாம்…அந்த ரமணன் சொல்லறான் இதலெல்லாம் க்ளியரா பேசிருக்கனும்முனு ….ஏன் நான் பேசலையா அவாள்ட்ட நேரடியா கேட்கலையா சொல்லு”

என்னது வரலட்சுமி விரதமா!! கேரளா காராளுக்கு கிடையாதே பின்ன ஏன் கேட்டா? சரி இனி இத இப்படியே தொடர விட கூடாது நான் கெளம்பறேன். நம்ம ரெண்டு பேரும் இப்பவே அவா ஆத்துக்குப்போய் நேரடியா விஷயத்த சொல்லி என்ன ஏதுனு கேட்டுண்டு வரலாம் வாங்கோ”

இருவரும் புறப்பட்டு நவீன் வீட்டிற்கு சென்றனர். அங்கு நவீனும் பர்வதமும் மட்டும் இருந்தனர். மாடியிலிருந்து அம்புஜமும், ராமானுஜமும் வருவதை கண்ட பர்வதம் ….நவீனை அவன் நண்பன் சதீஷ் வீட்டுக்கு போகுமாறு வற்ப்புறுத்தினாள். ஆனால் நவீன் போகவில்லை. அவர்களும் வீட்டு வாசலுக்கு வந்து விட்டனர் உடனே பர்வதம்…

வாங்கோ வாங்கோ என்ன திடிர்னு வந்திருக்கேங்கள் ” என்றதும் 

ராமானுஜம் சட்டென்று கோபத்தில்

நீங்களும் திடிர் திடிர்னு தானே ஒவ்வொன்னா கேட்டு அனுப்பறேங்கள்”

நவீன் எட்டிப்பார்த்தான் பின் எழுந்து சென்று..

வாங்கோ வாங்கோ உள்ள வாங்கோ”

நீங்களும் ஆத்துல தான் இருக்கேளா ரொம்ப நல்லதா போச்சு. “

என்ன சொல்லறேங்கள் எனக்கு ஒன்னும் புரியலை” 

உடனே அம்புஜம் 

இல்லை விஷயம் என்னனா…”

என்னத்துக்கு அவாள மாதிரியே இழுக்கறாய்? நான் நேரடியாவே கேட்கறேன் …..நீங்க என் பொன்னைப்பார்க்க வந்தப்போவே உங்கள் எதிர்பார்ப்புகளை சொல்லச்சொன்னேனா இல்லையா அப்போ ஏதோ எனக்கு எதுவும் வேண்டாம்னு சொன்னேங்கள் எங்களுக்கும் ரொம்ப சந்தோஷமா இருந்தது எல்லாம் ஒகே ஆனால்  என் கூட வேல பார்க்குர ரமணன் கிட்ட மோதிரம்ப்ரேஸ்ளெட், வெள்ளில முகம், சொம்பு அது இதுனு ஒவ்வொரு நாள் ஒவ்வொன்னா கேட்டு அனுபறேங்களே இது நல்லா இருக்கா சொல்லுங்கோ சபேல வேண்டாம்னு சொல்லிட்டு தனியா இப்படி அதுவும் மூனாம் மனுஷாள விட்டு கேட்க சொல்லலாமா? எனக்கு மனசு கேட்கலை அதுதான் நாங்க ரெண்டு பேரும் நேரா பேசி க்ளியர் பண்ணிக்கலாம்னு வந்திருக்கோம்!”

ராமானுஜம் ஆவேசத்தில் பேசி முடித்ததும் அம்புஜம்

தப்பா எடுத்துக்காதீங்கோ அவர் ஏதோ டென்ஷன்ல பேசிட்டார் ஆனாலும் உண்மை தானே மத்தவாள விட்டு கேட்க சொன்னதுக்கு பதில் நீங்களே ஒரு ஃபோன் போட்டு கேட்டுருக்கலாம்”

நடந்தது அனைத்தும் அப்பொழுது தான் நவீனுக்கு தெறிய வந்தது…அவன் யோசித்துக்கொண்டே …

ஆமாம்… ரமணன் மாமாட்ட இதெல்லாம் எங்காத்தேந்து யாரு கேட்க சொன்னாலாம்?”

பர்வதம் மாமி தான் கேட்க சொன்னதா சொன்னான்” என்றார் ராமானுஜம்

அதை கேட்டதும் தூக்கிவாரிப்போட்டது பர்வதத்திற்கு ஆனாலும் சுதாரித்துக்கொண்டு

நானா ? நான் எந்த ரமணன் குமணன் கிட்ட எல்லாம் எதுவும் கேட்க சொல்லலையே” என்று முழு பூசணிக்காயை மறைக்கப்பார்தாள்.

ராமானுஜம் விடுவதாக இல்லை …” ஓ அப்படியா விஷயம் ஒகே மாமி ரமணனுக்கு என் பொன்னுக்கு நிச்சயம் ஆக போறத பத்தி நாங்க யாரும் சொல்லலை அது பாய்ண்ட் நம்பர் ஒன் இன்னும் பத்து நிமிஷத்துல ரமணனே வீட்டுக்கு வந்திடுவான் அவன் உங்க தெருவில் தான் இருக்கானாமே கூப்பிட்டு உங்க முன்னாடியே ஏன் அப்படி பொய் சொன்னான்ங்கறதையும் கேட்டு தெரிஞ்சுண்டே போறோம்”

பர்வதம் ரமணன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததையும் தனது தாய் குணத்தை தெரிந்ததனாலும்…இந்த பிரச்சினை பெரிசாகாமலிருக்க….நவீன் 

ஓகே நீங்க ஸ்டேரைட் ஃபார் வேர்ட் ஆ இருக்கறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.  நடந்ததெல்லாம் விடுங்கோ தப்பு எங்க யாரு பண்ணிருக்கா எல்லாம் நான் பார்த்துக்கறேன். ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோங்கோ இதெல்லாமே எனக்கு தெரியாமல் நடந்திருக்கு ஆனாலும் மண்ணிப்பு கேட்டுக்கறேன். இனி இது மாதிரி நடக்காது. எதுவா இருந்தாலும் நீங்கள் என்னிடம் டைரக்ட்டா பேசிடுங்கோ அதுதான் எல்லாருக்கும் நல்லதுனு நான் நினைக்கறேன். அன்ட் நிச்சயதார்த்தம் 19த் வச்சுக்கலாமானு டிஸ்கஸ் பண்ணி சொல்லுங்கோ. ஏன்னா நான் இருபத்தைந்தாம் தேதி டில்லிக்கு திரும்பனும் என்னை குஜராத் காந்தி நகருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிருக்கா அன்ட் ஒன்னாம் தேதி அங்க ரிப்போர்ட்  பண்ணனும் ஸோ டில்லி போய் திங்க்ஸ் எல்லாம் பாக் செஞ்சு பேப்பர்ஸ் கலெக்ட் பண்ணிண்டு ஃர்ஸ்ட் அன்னைக்கு காந்தி நகர் யூனிட்டில் இருக்கனும்.  இத விட்டா அப்பறம் பிப்ரவரியில் தான் லீவு கிடைக்கும். இன்னைக்கு சாயங்காலம் ஃபோன் போட்டு சொல்லலாம் என்று இருந்தோம் நீங்களே நேரா வந்ததனால சொல்லிட்டேன்”

ஐயோ மாப்பள மண்ணிப்பு எல்லாம் நாங்க எதிர் பார்க்கலை இனி இப்படி நடக்காம இருந்தா போரும். எதுவா இருந்தாலும் டைரெக்ட்டா எங்கள்ட்டயே கேளுங்கோ ப்ளீஸ். அப்போ கல்யாணத்துக்கு அப்பறம் எங்க மிருது குஜராத்துக்கு வரனுமா ” என்றாள் அம்புஜம்

அப்படியே ஃபாலோ பண்ணுவோம் அன்ட் எஸ் நாங்க குஜராத் தான் போகனும்”

மழ வரா மாதிரி இருக்கு நாங்க கிளம்பரோம். வரோம் மாமி. ஈஸ்வரன் மாமா வ விசாரிச்சதா சொல்லுங்கோ. வரோம் மாப்பள” என்றார் ராமானுஜம்.

அவர்கள் சென்றதும் நவீன் பர்வதத்தைப் பார்த்து 

ஏன் இப்படியெல்லாம் செய்யராய்? இனி இப்படி ஏதாவது பண்ணினயோ வேண்டாம் இதுவே கடைசியா இருக்கட்டும்”  என்றதும் ஒன்றுமே நடக்காததுபோல….

நிச்சயதார்த்தத்திற்கு பொன்னுக்கு புடவை எடுக்கனும் மற்ற செலவெல்லாம் இருக்கு “

என்று கூறி பணம் வாங்கிக்கொண்டாள். 

ஈஸ்வரன் ஒரு பொறுப்பான  தந்தையாக என்றுமே இருந்ததில்லை. அவர் பொறுப்புடன் இருந்திருந்தால் நவீன் விருப்பப்பட்ட மருத்துவப்படிப்பு முடித்து ஒரு மருத்துவராக இருந்திருப்பான். அவரின் பொறுப்பின்மை மற்றும் கெட்ட பழக்கங்களால்  வேலையை இழந்தார். ஒரு காலத்தில் பெரிய குடிமகன், புகை அணையாத புகைவண்டி, வெற்றிலை பாக்கே தன்னை பார்த்து சற்று ஓய்வு கொடுக்க கெஞ்சும் அளவுக்கு வெளுத்துக்கட்டும் வெற்றிலை பிரியர். பிள்ளைகளை விளையாட அனுப்பிவிட்டு அவர்களை தேடும் பெற்றோர்கள் பற்றி அறிந்துள்ளோம். ஆனால் ஏழாவது படிக்கும் நவீனுக்கு தன்னை விட நான்கு மடங்கு எடையுள்ள தன் தந்தையை தேடி அலைந்து கண்டு பிடித்து அவரை சுமந்து  வீட்டில் கொண்டு சேர்ப்பதற்குள் பாதி உயிர் போய்விடும். பிள்ளைகள் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி அவர்களை மீட்டெடுக்க போராடும் பெற்றவர்களைப்பற்றி நாம் அறிந்ததே ஆனால் இங்கோ அது தலைகீழாக இருந்தது. தனது தந்தையை தீய பழக்கங்களிலிருந்து மீட்டெடுக்க பல வழிகளில் பலர் உதவியோடு போராடி வெற்றிக்கண்டான் நவீன்.

பர்வதம் பொறுப்பில்லாத, பேராசைக்கும் பொறாமைக்கும் சொந்தக்காரி ஆவாள். இப்படிப்பட்ட பெற்றவர்களையும், கூட பிறந்த தம்பிகளையும் காப்பாத்த வேண்டி பல சொந்தங்கள், நண்பர்கள் என எல்லார் வீட்டு வாசலிலும் பணத்திற்க்காக தனது தாயால் நிற்க வைக்கப்பட்டான் நவீன் தனது பண்ணி ரெண்டு வயதிலிருந்து. நல்ல தாய் என்றால் தனக்கு தெரிந்த ஏதாவது ஒரு வேலையை செய்து ஏன் பத்து வீட்டுக்கு பத்துப்பாத்திரம் தேய்த்தாவது கௌரவமாக பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்திருப்பாள். ஆனால் பர்வதம் நவீனை ஒரு ஏடிஎம் போலவே வளர்த்து வந்தாள். 

பெற்றோர்கள் பாலூட்டி சீராட்டி தோள்மீது தூங்க வைத்து வளரவேண்டிய குழந்தை தன் பெற்றோர்களை தோள்மீது சுமக்க ஆரம்பித்தது. ஊனமுற்ற பெற்றோர்கள் என்றால் அதில் ஒரு நியாயம் உண்டு ஆனால் பொறுப்பற்ற சுயநலமான பெற்றோர்கள் என்றால் வாழ்க்கை நரகமே. ஆனாலும் அசரவில்லை நம் நாயகன் நவீன். 

பணத்திற்காக அடுத்தவர்களிடம் போய் நின்றால் என்னென்ன அவமானங்கள் நேரும் என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்ததனால் தான் ப்ளஸ்டூ முடித்ததும் ஆர்மியில் சேர்ந்துவிட்டான். அவனது முதல் தம்பி கவினுக்கு வேலை கிடைத்து அவன் குவைத்தில் பணிமாற்றம் ஆன பிறகு தான் நவீன் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் கூறியுள்ளான். இப்பொழுது புரிகிறதா நம்ம பர்வதத்திற்கு ஏன் இந்த சம்மந்தம் பிடிக்கவில்லை என்று. இந்த சம்மந்தம் என்றில்லை அவளுக்கு நவீன் திருமணம் செய்துக்கொள்வதிலேயே இஷ்டம் இல்லை. 

தொடரும்…..

மேனகா சென்றதும் பர்வதம் அந்த ஃபோட்டோவைப்பார்த்தாள். பின் தனது சகோதரனான பிச்சுமணிக்கு ஃபோன் போட்டு விஷயத்தை கூறி வரச்சொன்னாள். அவரும் அக்கா சொல்மிக்க மந்திரம் இல்லை என்றிருக்கும் தம்பியாச்சே உடனே பர்வதம் வீட்டில் விஜயம் செய்தார். அவர் நாஷ்னலைஸ்டு வங்கியில் மேனேஜராக இருக்கிறார். 

என்ன பர்வதம் அக்கா கல்யாணம் கதவ தட்டியாச்சோ? பொன்னு யாரு? அப்பா என்ன பண்ணரார்? விவரத்தை சொல்லு”

எல்லா விவரமும் இதோ இதுல இருக்கு. இந்தா இதப்படிச்சுண்டு இரு நான் உனக்கு காபி போட்டுண்டு வரேன்.”

சரி நம்ம நவீனான்ட சொன்னயோ? என்ன சொல்லறான் அவன்?”

சொன்னேன் அடுத்த வாரம் இங்க வரானாம் தீபாவளி வரதோனோ அதுக்காக …அப்படியே பொன்ன பார்த்துட்டு சொல்லரேன்னு சொல்லறான்”

அவன் சொல்லறதும் சரி தான். அவனே நேர்ல பார்த்து சொல்லிட்டானா பின்ன நமக்கும் வேல மிச்சம் பாரு”

அவன் பார்க்கறத்துக்கு முன்னாடி நாம ஒரு எட்டு போய் பார்த்து என்ன ஏதுங்கற விவரங்கள் எல்லாம் தெரிஞ்சுண்டு வருவோமா? பொன்னு ஃபோட்டல நிறம் கொஞ்சம் கம்மியா இருக்கறா மாதிரி தெரியரது…கொஞ்சம் ஆளும் தடியா இருப்பாளோனு தோனரது …அதுதான் போய் நாம பார்கலாமானு கேட்டேன். வர ஞாயிற்றுக்கிழமை போகலாமா?”

சரி அதுவும் சரிதான் நான் அம்பிகாவையும் கூட்டிண்டு வந்துடரேன். நாம சேர்ந்தே போகலாம்”

ஓக்..கே …ஆனா நீயும் நானும் மட்டும் அவா ஆத்துக்கு போனா போரும் உன் ஆத்துக்காரி அம்பிகா இங்கயே எங்க ஆத்துலேயே இருக்கட்டும்”

சரி க்கா உன் இஷ்ட்டம். அப்போ நான் கிளம்பறேன். ஞாயிற்றுக்கிழமை பார்ப்போம் வரேன்”

பர்வதம் கணவர் ஈஸ்வரன்  பெண்வீட்டாருக்கு ஃபோன் போட்டு விவரத்தை சொன்னார். 

ஞாயிற்றுக்கிழமை வந்தது பெண்ணின் தாய் பரபரப்பானாள் எத்தனை பேர் வருவார்களோ? மிருதுளாவிடம் விவரத்தை சொல்லி  தயார் ஆக

சென்னாள். மிருதுளாவும் தாய் சொல்லை தட்டாமல் அவர் கூறியபடியே செய்தாள். அம்புஜம் மாலை சிற்றுண்டி செய்தாள். காபி போட இரண்டு பால் பாக்கெட் வைத்திருந்தாள். பங்கஜத்துக்கு ஃபோன் போட்டு விவரத்தை சொல்லி

வரச்சொல்லிருந்தாள் ஆனால் அன்று பங்கஜத்தால் வரமுடியாத சூழ்நிலையானது. அம்புஜமும், ராமானுஜமும் அக்கம் பக்கத்தினரிடம் சொந்த பந்தகளிடம் என யாரிடமும் கூறவில்லை. அவர்கள் பார்த்து சம்மதித்தால் பின் அனைவரிடமும் கூறிக்கொள்ளலாம் என்றிருந்தனர். 

மாப்பிள்ளை வீட்டிலிருந்து அவர் அம்மா பர்வதம், தாய்மாமா பிச்சுமணி மற்றும் அவரின் இரண்டாவது தம்பி ப்ரவீன் ஆகிய மூவர் மிருதுளாவைப்பார்க்க வந்தனர். பர்வதம் மிருதுளாவை ஏற எறங்க பார்த்துக்கொண்டிருந்தாள்….பிச்சுமணி பேச்சுக்கொடுத்தார்… மிருதுளாவும் அவர்களுடன் சகஜமாக பேசினாள். 

அம்புஜம் காபிப்போட பாலை காய்ச்சும்போது இரண்டு பாக்கெட் பாலும்  திரிந்து போனது. பதற்றமானாள் உடனே ராமானுஜத்தை உள்ளே அழைத்து விஷயத்தை கூறினாள். அதற்கு அவர் ஒன்று போய் வேர பால் பாக்கெட் உடனடியாக வாங்கிக்கொண்டு வந்திருக்கவேண்டும் இல்லையேல் வேறெதாவது யோசனை சொல்லிருக்க வேண்டும் ஆனால் அவரோ… தனக்கு காபி வேண்டாம் என்று சொல்லிவிட்டு போய் ஹாலில் அமர்ந்துக்கொண்டார். பொறுப்பில்லாத மனுஷனிடம் சொல்லி என்ன பிரயோஜனம் என்று தன் தலையில் அடிந்துக்கொண்டு வேனுவை அழைத்து பால் பாக்கெட் வாங்கி வரச்சொல்லி பின் அவர்களுக்கு காபி போட்டுக்கொடுத்தாள். அவர்கள் வந்த விவரத்தை எல்லாம் கலெக்ட் செய்ததும் வருகிறோம் என்று கூறி விடைப்பெற்றனர். ஹாலில் அவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்த ராமானுஜம் அவர்களைப்பற்றி ஒரு விவரமும் கேட்டு தெறிந்துக்கொள்ளாதது அம்புஜத்துக்கு ஆத்திரத்தை வரவழைத்தது.

மாப்பிள்ளை வீட்டார் பெண்ப்பார்த்து சென்ற விவரங்கள் எதுவும் மாப்பிள்ளை நவீனுக்கு சொல்லவில்லை. நவீன் தான் செய்யும் வீக்லீ காளில் தான் விவரங்கள் தெறிந்துக்கொண்டான்.

நவீன் இந்திய ராணுவத்தில் தனது பதினேழு வயதிலிருந்து பணியாற்றி வருகிறார். தற்போது புது தில்லியில் போஸ்ட்டிங் போடப்பட்டு அங்கு வசித்து வருகிறார். 

பர்வத்திற்கு கூட பிறந்தவர்கள் ஒரு அக்கா ரமணி, தம்பி பிச்சுமணி இருவரும் பர்வதம் இருக்கும் ஊரான திருச்சியிலேயே வசித்து வருகின்றனர்.  தங்கைகள் லட்சுமி, லலிதா இருவரும் திருமணம் முடித்து தில்லியில் வாழ்ந்து வருகின்றனர். 

பர்வதம், ஈஸ்வரன் தம்பதியினருக்கு நான்கு பிள்ளைகள். ஈஸ்வரன் அவர் செய்து வந்த பணியிலிருந்து வீ.ஆர்.ஸ் வாங்கிக்கொண்டு குடும்பத்துடன் திருச்சிராப்பள்ளியில் செட்டில் ஆகிவிட்டார், பர்வதம் இல்லத்தரசி என்று தான் மேனகா மூலமாக மிருதுளா குடும்பம் தெரிந்துக்கொண்டது. மூத்தவன் பெயர் நவீன் நமது கதையின் நாயகன், இரண்டாவது கவின், மூன்றாவது மகன் ப்ரவீன், கடைக்குட்டியின் பெயர் பவின். நவீனின் ஜாதகமே நமக்கு தான் தெரியுமே மற்றவர்களைப்பற்றி தெரிந்துக்கொள்வோம். கவின் குவைத்தில் பணிபுரிந்து வருகிறான். ப்ரவீன் மற்றும் பவின் இருவரும் கல்லூரியில் படித்துக்கொண்டு வருகின்றனர். 

நவீன் தில்லியிலிருந்து திருச்சி வந்து சேர்ந்தான். அவர்கள் அனைவரும் கலந்துரையாடினார்கள் அப்போது பர்வதம் நவீனிடம்

பொன்னு தடியா இருக்கா. நிறம் வேற கம்மி எனக்கென்னவோ இந்த சம்பந்தம் வேண்டாம்னு தோனறது. நான் அவாளுக்கு ஃபோனை போட்டு சொல்லிடவா?

இல்ல அவசரப்படாதே…மாமா தானே உன்னோட வந்தார் நான் அவர்ட்ட ஒரு வார்த்தை பேசிட்டு சொல்லறேன். 

என்றான் நவீன். அடுத்த நாளே தனது பிச்சுமணி மாமாவை காண அவர் வீட்டுக்குச்சென்றான். இருவரும் அவரவர் பணியைப்பற்றி சிறிது நேரம் உரையாடினர் பின் நேராக விஷயத்திற்கு. வந்தான் நவீன். 

மாமா நீங்களும் அம்மாவோட பொன்னுப் பார்க்க போனேளே பொன்னு எப்படி என்ன ப்ரோஸீட் பண்ணலாமா …ஏன் கேட்கறேன்னா நான் மொதோ மொதோ பார்க்கப்போர பொன்னு இவள் அதனால ரிஜக்ட் பண்ண வேண்டாம்னு தோனறது அதுவும் அவளுக்கும் என்னை பிடித்திருந்தால். வாட் டூ யூ ஸே

என்ன பொருத்தவரைக்கும் நல்ல குடும்பமா படரா. பொன்னும் நல்லா இருக்கா அன்ட் நல்லா பழகரா பேசரா. ஸோ ஐ திங்க் யூ கேன் ப்ரோஸீட் அன்ட் ஐ ஃபீல் யூ ஷுடுன்ட் மிஸ் ஹெர். 

ரொம்ப தாங்ஸ் மாமா. அம்மா ஏதேதோ சொல்லி இந்த சம்பந்தம் வேண்டாம் னு சொன்னா.. ஆனா இப்போ ஐ ஆம் கிளியர். எனக்கும் இரண்டு வாரம் தான் லீவ் அதனால இந்த சன்டேவே பொன்ன பார்க்கலாம்முன்னு இருக்கேன். இத அப்பா அம்மாட்டயும் சொல்லி அவாள்ட்டயும் சொல்ல சொல்லிடறேன். நான் கிளம்பறேன்.

ஆல் தி பெஸ்ட் ரா. எல்லாம் நல்லதாகவே நடக்கும். லெட் அஸ் மீட் ஆன் சன்டே. பத்திரமா ஆத்துக்கு போ.

ஓகே மாமா அன்ட் மாமி பைய்.

வீட்டிற்கு வந்ததும் தனது பெற்றோரிடம் அந்த பெண்ணைப்போய் ஒரு முறைப்பார்த்துவிட்டு வந்திடலாம் அப்புறம் டிசைட் பண்ணலாம் என்று கூறி வர ஞாயிற்றுக்கிழமை பெண் பார்க்க வருவதாக பெண் வீட்டாரிடம் தெரிவிக்க  சொனான் நவீன். பர்வதத்திற்கு துளியும் இஷ்ட்டமில்லை காரணம் ஏனென்று அவளுக்கு மட்டுமே தெரியும். அறை மனதோடு அம்புஜத்துக்கு ஃபோன் போட்டு தங்களின் மகன் வரவைத்தெரிவித்து அப்படியே பெண் பார்க்க ஒரு பத்துப்பேர் வருவதாகவும் தெரிவித்தாள். 

அம்புஜம் ஃபோனை வைத்ததும் நேராக கடவுளிடம் சென்று தன் பெண்ணிற்காக வேண்டிக்கொண்டாள். பின் விவரத்தை வீட்டிலிள்ள ராமானுஜத்திடமும் வேனுவிடமும் மற்றும்  இருவரும் தனது தங்கை பங்கஜத்திடமும், ராமானுஜத்தின் தம்பி ராமநாதனிடமும் கூறி அனைவரையும் ஞாயிற்றுக்கிழமை தங்களின் வீட்டுக்கு வரும்படி அழைத்தனர். ராமானுஜத்தின் நண்பர் ஒருவர் விஷேஷங்களுக்கு சமையல் செய்பவர். அவரை அன்று மாலை டிபன் செய்ய வரவழைத்தனர். 

ஞாயிற்றுக்கிழமை வந்தது மாப்பிள்ளை வீட்டார் மாலை 3:30 மணிக்கு மிருதுளாவைப் பார்க்க அவள் இல்லம் வந்தனர். அனைவரையும் ராமானுஜமும் அம்புஜமும் வரவேற்று வீட்டு ஹாலில் அவர்களை அமர வைத்தனர். பின் நவீன் வீட்டார் மிருதுளா வீட்டாருடன் ஒருவருக்கொருவர் விசாரித்து யார் என்ன உறவு என்பதை எல்லாம் விசாரித்துக்கொண்டிருந்தனர். நவீன் தன் நண்பனிடம் என்னட இப்படி பேசிக்கிட்டே இருக்காங்க ஆனா பொன்ன காட்ட மாட்டேங்கறாங்க என்று முனுமுனுக்க அதை கேட்ட மாமா பிச்சுமணி…

சரி நாழி ஆரது…இப்பவே மணி நாலாச்சு…நாலரைக்கு ராகுகாலம் தொடங்கரத்துக்கு முன்னாடி பொன்னப்பார்த்து பேச வேண்டியது எல்லாம் பேசிடலாமே அப்பறம் சாவகாசமா ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுக்கலாம். அம்புஜம் மாமி பொன்ன வரச் சொல்லுங்கோ.

பங்கு நீ போய் மிருதுவ அழைச்சிண்டு வா. 

மிருதுளா வந்தாள். அனைவரையும் நமஸ்க்கரித்து சகஜமாக எல்லோருடனும் பேச ஆரம்பித்தாள். நவீனுக்கு அவளைப்பார்த்ததுமே மிகவும் பிடித்துப்போனது ஆனால் அவனுக்கு ஏதோ அவளிடம் சொல்ல

வேண்டியிருந்ததால் தனியாக பேச அனுமதிக்கேட்டான். 

அம்புஜமும், ராமானுஜமும் சரி என்று சொல்ல மிருதுளா எழுந்து நவீனை அவர்கள் வீட்டில் இருக்கும் ஒரே அறைக்கு அழைத்துச்சென்றாள். அந்த அறையின் வாசலில் பங்கஜத்தின் கணவரும், ராமநாதனும்

நின்றுக்கொண்டு கவனித்துக்கொண்டே இருந்தனர். முதலில் நவீன் பேசலானான்..

ஹாய்! என் பேரு நான் என்ன வேலை பார்க்கறேன் என்ற விவரமெல்லாம் உனக்கு தெரிந்திருக்கும். என்ன உனக்கு பிடிச்சிருக்காங்கறது எனக்கு தெரிஞ்சிக்கனும். அதுக்கு முன்னாடி என்னைப்பற்றிய உனக்கு தெரியாத சில விஷயங்களை சொல்லறேன் அப்புறம் நீ என்னை பிடிச்சிருக்கானு சொல்லு போரும். ஓகே.

ஓகே சொல்லுங்கோ 

எனது இந்த தலைமுடி டிரான்ஸ்ப்ளான்ட் செய்யப்பட்டது. இத சொல்லி உன் விருப்பத்த தெரிஞ்சுக்க தான் நான் தனியா பேசனும்முனு வந்தேன். நான் சொல்ல நினைத்தது இதுதான். இனி உனக்கு என்னிடம் சொல்லவோ இல்ல கேட்க்கவோ ஏதாவது இருந்தா கேட்கலாம். யோசித்து பதில் சொன்னாப்போரும். 

என்ன உங்களுக்கு பிடிச்சிருக்கா?

எனக்கு பிடிச்சதனாலதான் என்னைப்பற்றிய விஷயத்தை ஷேர் பண்ணரேன். எனக்கு உன் விருப்பம் தெறிஞ்சுக்கனும். 

எனக்கும் இப்படி வெளிப்படையா இருக்கிற உங்களைப் பிடிச்சிருக்கு.

சரி எல்லாரும் வெளியே வேயிட் பண்ணரா வா போகலாம்.

மிருதுளாவின் சித்திகளும் சித்தப்பாக்களும் அவளை சுற்றிக்கொண்டு என்ன ஆச்சு என்ன சொன்னார்என்று கேட்டுக்கொண்டிருக்கும் போது ராமானுஜம் மிருதுளாவை அழைத்தார். அவளும் உடனே ஹாலுக்குச் சென்றாள்.

மணி நாலரை ஆக இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு சட்டுபுட்டுனு அடுத்தது என்னு சொல்லுங்கோ என்றார் நவீனின் பெரியப்பா.

பர்வதம் மெதுவாக தாங்கள் கலந்தாலோசித்து முடிவை சொல்லி அனுப்பறோம் என்று சொல்லிக்கொண்டே இருக்கும்போது சட்டென்று நவீன் 

எதுக்கு இழுத்தடிச்சுண்டு எனக்கு மிருதுளாவ பிடிச்சிருக்கு அவளக்கு என்ன பிடிச்சிருக்கானு கேளுங்கோ 

அனைவரின் பார்வையும் மிருதுளா மீது பாய்ந்தது. மிருதுளாவும்

எனக்கும் அவரை பிடிச்சிருக்கு.

என்று சொல்ல அனைவரும் மகிழ்ச்சியுற்றனர் பர்வதத்தைத்தவிர.

ராமானுஜம்  அவர் தரப்பை கிளியர் செய்துக்கொள்ள …

எல்லாம் சரி… எனக்கு ஒரு பொன்னுதான். எங்களாள முடிஞ்சதை நிச்சயமாக நாங்க செய்வோம். ஒரு நாற்ப்பத்தஞ்சு பவுன் நகைவெள்ளி ஜாமான்கள், வீட்டுக்கு வேண்டிய பாத்திரங்கள் அன்ட் கல்யாணத்தை ஜோரா பண்ணறோம். என்ன சொல்லறேங்கள். உங்களோட எதிர்ப்பார்பையும் சொல்லிட்டேங்கள்னா இப்பவே டிசைட் பண்ணிடலாம் அப்பறம் நாள பின்ன அது சரியில்ல இது இல்லனு எல்லாம் வரப்படாதோனோ அதுதான் …தப்பா எடுத்துக்காதீங்கோ என்னால முடிஞ்சத நான் சொல்லனோமோ அதுதான் எல்லார் முன்னாடியும் சொல்லிட்டேன்.  இனி நீங்கதான் சொல்லணும்.

இதை கேட்டதும் நவீன் சட்டென்று எழுந்து எனக்கு உங்க பொன்ன பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்கறேன் ஆனால் இந்த நகை பாத்திரம் ஒன்னும் வேண்டாம். எனக்கு எதுவும் வேண்டாம். இதற்கு மேலும் இதைப்பற்றி யாரும் பேச வேண்டாம் ப்ளீஸ். 

என்றதும் பர்வதத்திற்கு சுர்ரென்று ஆத்திரம் தலைக்கேறியது. அவளுக்கு மிருதுளாவை நவீனுக்கு கட்டிவைக்கவே விருப்பமில்லை இதில் நவீன் வேறு வரதட்சணை ஏதும் வேண்டாமென்று சொன்னதில் அவள் அதிர்ந்து போனாள். 

ராமானுஜம் விடாமல்….

என்னால் முடிந்ததை நான் சபையில் சொல்லிவிட்டேன் அதை என் பொன்னுக்கு நிச்சயம் செய்வேன். நீங்கள் வேண்டாமென்பது உங்கள் விருப்பம். அதை சொன்னதுக்கு நன்றி. ரொம்ப சந்தோஷமாவும் இருக்கு. சரி எல்லாரும் சாப்பட வாங்கோ 

என்று கூறி இலைப்போட்டு மாலை சிற்றுண்டி பறிமாறப்பட்டது. அனைவரும் உணவருந்தியப்பின் நவீன் வீட்டார் நிச்சயதார்த்தத்திற்கு நாள் குறித்துவிட்டு தெறிவிப்பதாக கூறி விடைப்பெற்றனர். 

அம்புஜம் மிருதுளாவை முத்தமிட்டாள் பின் நேராக பூஜை அறைக்குச்சென்று கடவுளுக்கு நன்றி சொன்னாள். வீடே சந்தோஷ வெள்ளத்திலிருந்தது.

தொடரும்…..

ராமானுஜம் அம்புஜம் தம்பதியருக்கு மிருதுளா, வேனு என்று இரு பிள்ளைகள். மிருதுளா பி.காம் முடிச்சுட்டு எம்.காம் முதலாம் ஆண்டு கரஸ்ல படித்துக்கொண்டே வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் அமைதியான பெற்றோர் சொல்படி வாழ்ந்து வரும் ஒரு வெகுளிப்பெண்.  வேனு ப்ளஸ் டூ முடித்துவிட்டு இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவரும் பொறுப்பான பிள்ளை.

ராமானுஜம் பப்ளிக் செக்ட்டர் இன்டஸ்ட்ரீயில் பணிப்புரிகிறார். அவர்  குடும்பம் அளவானதாகவும் வளமானதாகவும், அமைதியானதாகவும் எதற்காகவும் யாரிடமும் செல்லாமல் தன்னிறைவான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.

“நம்ம மிருதுளாவுக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு பார்ப்போமா” என்று கூறிக்கொண்டே அம்புஜம் வீட்டினுள்ளே நுழைந்தாள் அவளின் தங்கை பங்கஜம்.

அப்படியா புள்ள எந்த ஊரு என்ன பண்ணரான்? வா வா பங்கு இந்தா தண்ணியை குடி வெயில் என்னமா சுட்டெறிக்கறது!!!! சரி …அப்பா, அம்மா, அக்கா, தங்கை, தம்பி அண்ணா இப்படி யாரெல்லாம் இருக்கா? எல்லா விவரமும் சொல்லு. பார்ப்போம் அமைஞ்துன்னா…. இது புரட்டாசி இல்லையா? வர தை இல்லாட்டி மாசியில கல்யாணத்த பண்ணிடவேண்டியது தான்.

அம்பு அக்கா கொஞ்சம் நிதானமா இரு. வரன் வந்துருக்குன்னு சொன்னேன் அவ்வளவு தான் நீ டேட் பிக்ஸ் பண்ணர வரைக்கும் போயிட்டயே…

என்னடி பங்கு நீ வளவளன்னு பேசர விஷயத்தை முதல்ல சொல்லு.

அம்பு இந்தா இது மாப்பிள்ளை புள்ளான்டானோட ஜாதகம் உன் கேள்வி அத்தனைக்கும் இதுல பதில் இருக்கு. என்னோட சினேகிதி மேனகா மூல்யமா வந்தது.

அம்புஜம் ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து சாமி கும்பிட்ட பின் பிரித்து படித்தாள். 

ஏன்டி பங்கு மாப்பிள்ளை பட்டாளத்துள இருக்கறதா போட்டுருக்கா அதுவும் டில்லில அவ்வளவு தூரம் நம்ம மிருதுவ கொடுக்கனுமாடி? கொழந்தைக்கு ஏதாவதுன்னா நாம போறத்துக்கே மூனு நாள் ஆயிடுமே!!! அதுவும் ….கூட பொறந்தவா மூனு பேரு இருக்கா…மாப்ள புள்ளான்டான் மூத்த புள்ள வேற …பெரிய குடும்பமா இருக்குமோடி? குடும்பம் எப்படியாம்? ஏதாவது தெரியுமா நோக்கு?

குடுபம் நல்ல குடும்பம்னு தான் சொன்னா. ஆமா அவா அவா பொன்னுகள அமேரிக்காவுக்கே அனுப்பரா நீ இதோ இருக்கர டில்லிக்கு அனுப்ப யோசிக்கர!!!! கூட பொறந்தவா மூனும் தம்பிகள் தான். ஸோ மிருதுவுக்கு.. உனக்கு இருந்தா மாதிரி நாத்தனார் தொல்லைகள் இல்லை சந்தோஷமா? புள்ளான்டான் பதினேழு

வயசுளயே பட்டாளத்துல சேர்ந்துட்டன் அப்பறம் குடும்பத்தையும் பார்த்துண்டு தன்னோட சொந்த முயற்சில தான் பி.ஏ, எம்.ஏ, பி.ஜி டிப்பளமா இப்போ ஆடிட்டிங்  படிச்சிண்டிருக்கான். வேலையும் பார்த்துண்டு, குடும்பத்தையும் பார்த்துண்டு, படிச்சுண்டும் இருக்கான்னா நல்ல பொறுப்பான புள்ளனு எனக்கு படரது. என்ன நான் சொல்றது. அம்பு என்ன யோசனை??

 இல்ல பங்கு புள்ள மூத்தவனா இருக்கானேனு யோசிக்கறேன்….மூத்தது கோழன்னு சொல்லிகேட்டுருக்கோமே …கேட்கறது என்ன நானும் நீயும் மூத்ததுகளை கட்டிண்டு படறோமே ….எதுக்காவது வாய தொறப்பாரா !!! எல்லா வீரமும் ஜம்பமும் என்னாண்ட தான் காட்ட தெரியும் வெளில கப்சிப்…. அதுதான் கொஞ்சம் யோசனையா இருக்கு. அதுவும் இல்லாம பட்டாளத்துல இருக்கான் ஏதாவது அப்படி இப்பிடினு கெட்ட பழக்கங்கள் இருந்துதுனா !!! ஜாதகத்தில டிடோட்டலர்னு தான் எழுதிருக்கு……

 என்ன அம்பு நம்ம காலம் வேற  இப்போ இருக்கற கொழந்தைகள் எல்லாம் கண்ணும் கருத்துமா சமத்துகளா இருக்கா நம்மள மாதிரி பொன்னுகளும் இல்ல நம்ம ஆத்துகாரர்கள் மாதிரி புள்ளகளும் இல்ல.

ராமானுஜம் தனது டி.வி.ஸ் 50 ஐ நிருத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்தார்.

 வா வா பங்கு. என்ன அக்காளும் தங்கையுமா யாரு தலையை உருட்டிண்டு இருக்கேங்கள்?

எல்லாம் உங்களோடதும் உங்க ஷட்டகரோடதும் தான். அதுக்கு என்ன இப்போ? இந்தாங்கோ தண்ணீ குடிங்கோ.

அத்திம்பேர் உங்க பணபெட்டியை தொறக்க நேரம் வந்தாச்சு.

ஏன் அக்காளும் தங்கையுமா கொள்ளையடிக்க திட்டம் போட்டாச்சோ!!

நாங்க ஏன் கொள்ளையடிக்கனும் அத்திம்பேர். அதுக்கு தான் நம்ம மிருது  இருக்காளே.

என்னடி அம்புஜம் உன் தங்கை ஏன் இப்படி உளரிக்கொட்டரா.

பங்கஜம் கூறிய விவரங்களை எல்லாம் ராமானுஜமிடம் அம்புஜம் கூறினாள். ராமானுஜம் சட்டென்று கல்யாணம் என்றால் பணத்திற்கு என்ன செய்வது

என்றும்… கையிருப்பு போதுமா என்ற சிந்தனையில் ஆழ்ந்தார். அடுத்து மகன் கல்லூரி செலவு வரும் என்றெல்லாம் கணக்கில் மூழ்கியவரை

என்ன அத்திம்பேர் இப்பவே கணக்கு போட ஆரம்பிச்சுட்டேள் போல தெரியரது. என்ன சரியா?

அட கரெக்ட்டா கண்டுபிடிச்சுட்டயே  உங்க அக்காவை விட புத்திசாலிதான்.

போங்கோ அத்திம்பேர்…இது என்ன பெரிய சிதம்பர ரகசியமா? பின்ன விஷயத்தை கேட்டதும் உங்க முகமே காட்டிக்கொடுக்கறதே. சரி சரி என் வேலை முடிஞ்சுது நீங்க ரெண்டு பேரும் மிருதுவோட பேசி நல்ல முடிவா சொல்லுங்கோ. என் புள்ளகளை ஸ்கூல்ல இருந்து கூட்டிண்டு நான் எங்காத்துக்கு போரேன். வரட்டுமா அம்பு. போயிட்டு வரேன் அத்திம்பேர்.

பங்கஜம் கிளம்பி சென்ற பின்

ஏன்னா இந்த வரன் நல்லபடியா முடிஞ்சுதுனா நம்ம மிருது இன்னொருத்தா ஆத்து பொன்னாயிடுவா இல்லன்னா!! நம்மள விட்டுட்டு அவா ஆத்துக்கே போயிடுவா இல்லன்னா!!!

இல்ல நம்ம ஆத்துளயே இருந்துட சொல்லலாமா? அடி போடி அசடு நானே இந்த வரன் அமஞ்சுதுனா பணம் போருமான்னு யோசிச்சிண்டிருக்கேன்.

சரின்னா மொதல்ல பொன்ன பார்க்கட்டும் பின்ன மத்தது எல்லாம் யோசிக்கலாம் பேசிக்கலாம் என்ன நான் சொல்லறது சரிதானே!!!

சரிதான் நம்ம பங்குகிட்ட அவாள பொன் பார்க்க வரச்சொல்லுவோம் பின்ன பிடிச்சிருந்தா அப்பறம் என்ன பண்ணரதுனு பார்ப்போம்.

அம்புஜமும் ராமானுஜமும் இப்படி பேசிக்கொண்டிருக்கும் போது வீட்டினுள் நுழைந்தாள் மிருதுளா.  உடனே அம்புஜம்

நம்ம மிருது வரா இப்போ அவள்ட்ட எதுவும் சொல்லிக்க வேண்டாம் அவா பொன் பார்க்க வரேன்னு சொல்லட்டும் அப்பறம் சொல்லிக்களாம்.

வாமா மிருது உன் சிநேகிதிகளோட ஏதோ இன்டர்வியூ அட்டன்ட் பண்ண போனயே என்ன ஆச்சு..

மொதல்ல முகம், கை, கால் அலம்பிட்டு வரேன்மா இன்னுட்டு எல்லாத்தையும் விவரமா சொல்லரேன் எனக்கு ரொம்ப பசிக்கறது சாப்பாடு எடுத்து வைமா ஒரு நிமிஷத்துல வந்துடரேன்.

மிருது ஆச்சா வாயேன்டி சாதம் ஆரிடப்போறது. மொகம் கழுவ இத்தர நேரமா மிருதுளா….

வந்துட்டேன்மா ஏன் இப்படி கத்திண்டிருக்க? நீங்களாம் சாப்டாச்சா? என்ன சாம்பாரும் உருளை ஃபரையுமா? உன் புள்ளைக்கு பிடிச்சதா?

சாப்பட உட்கார்ந்துண்டு என்ன கேள்வி? என்னமோ சாம்பார காயோட ஊத்திண்டு சாப்படராமாதிரி தான் பேச்சு ….ஆனா சாம்பார தண்ணி மாதிரி காய எல்லாம் வடிகட்டி குடிச்சா எப்டிறீ உடம்புல சத்து இருக்கும்?

சரி இன்னைக்கு அட்டென்ட் பண்ணின இன்டெர்வியூ என்ன ஆச்சு ?

அவா இன்னும் ரெண்டு வாரத்தில சொல்லுவாலாம் அதுவரைக்கும் வேய்ட் பண்ணனும்..

சட்புட்னு சொல்ல மாட்டாலோ என்னத்துக்கு இழுத்தடிக்கறா??

அம்மா சாப்பிடும்போது பேசப்படாதுன்னு சொல்லுவ ஆனா இப்போ நீயே பேசர!!

ஏன்னா நீங்க இப்போ சாபடரேளா இல்லை வேனு வந்துட்டு அவனோட சேர்ந்து சாபடரேளா?

வேனு வரட்டும் நாங்க சேர்ந்து சாப்பிட்டுக்கறோம் நீங்க ரெண்டு பேரும் பேச்ச கொறச்சு… சாப்ட்டு ஏந்திரிங்கோ.

இதோ நம்ம வேனுவும் வந்தாச்சு சரி அப்போ எங்களுக்கும் தட்டு வை.

ஃப்ரஷ்அப் ஆகிட்டு சாப்பிட வரேன்பா நீ சாப்பிட ஆரம்பிச்சுக்கோ நான் ஒரு நிமிஷத்துல வந்துடுவேன்..

வந்தாச்சு….அம்மா எனக்கு சரி பசி என்ன பண்ணிருக்க? ஓ வாவ் சாம்பார் அன்ட் உருளை ஃப்ரையா சூப்பர்…

அனைவரும் ஒன்றாக உணவருந்திய பின் அம்புஜம் மிருதுளாவிடம்….

சரி சாப்டாச்சோனோ எனக்கு கொஞ்சம் உன் பங்கு சித்திக்கு ஃபோன போட்டுக்குடுடி மிருது இதோ இத உள்ள வச்சுட்டு வந்துடரேன்.

ஹலோ சித்தி நான் மிருது பேசறேன் அம்மா உன்கிட்ட ஏதோ பேசனம்னு ஃபோன போட்டுத்தர சொன்னா ஆனா ஆள கானோம் …கொஞ்சம் ஹோல்ட் பண்ணு சித்தி …இதோ வரா. என்னமா ஃபோன போட சொல்லிட்டு நீ எங்க போனாய்….சித்தி வேய்ட்டிங்..

சரி…டி …அங்க கிடந்த ரெண்டு கரண்டிய தேச்சுட்டு வந்தேன் அதுதான்… கொஞ்சம் நகர்ந்துக்கோ….ஹலோ பங்கு புள்ளகள கூட்டிண்டு ஆத்துக்கு வந்தாச்சா ?

அம்பு உன்ன அத்திம்பேர் சொல்லரதில் தப்பே இல்லடி. ஆத்துக்கு வந்ததனால தானே லான்ட்லைன்ல ஆன்ஸர் பண்ணறேன். சரி என்ன விஷயம் சொல்லு.

 நீ உன் சினேகிதி மேனகாட்ட நம்ம மிருதுவோட ஜாதகத்தையும் ஃபோட்டவையும் அவாள்ட்ட கொடுக்க சொல்லு. பிடிச்சிருந்தா பொன் பார்க்க எப்போ வராங்கறதையும் கேட்டு சொல்லச்சொல்லு என்ன சரிதானே.

அம்பு …மிருதுட்ட கேட்டயோ?

அவ என்னத்த சொல்லப்போறா எல்லாம் நாம பார்த்து வச்சா அவ நல்லபடியா இருப்பா.

சரி அம்பு நான் நாளைக்கே மேனகாட்ட சொல்லிடரேன். வைக்கட்டுமா? இங்க ரெண்டும் அடிச்சுக்கறதுகள். என்னனு போய் பார்க்கரேன். பை அம்பு.

மறுநாள் பங்கஜம் தனது சிநேகிதி மேனகாவிடம் மிருதுளாவின் ஜாதகத்தையும், ஃபோட்டோவையும் குடுத்து அதை மாப்பிள்ளை வீட்டாரிடம் சேர்த்து விருப்பமிருந்தால் பெண்ப்பார்க்க அவர்களுக்கு எப்போ தோதாக இருக்கும் என்பதையும் கேட்டுச்சொல்ல சொன்னாள்.

மேனகாவும் அன்று மாலை வேலை முடித்து வீடு சென்றதுமே அவர்கள் பக்கத்து வீட்டு பர்வதம் மாமியிடம்

“பர்வதம் மாமி உங்க பெரிய புள்ள நவீனோட ஜாதகத்தை இதிலிருக்கும் பொன்னுவீட்டுக்காராள்ட்ட கொடுத்தேன். அவா பொன்னோட ஜாதகம் அன்ட் ஃபோட்டோவை உங்கள்ட்ட கொடுக்கச்சொன்னா இந்தாங்கோ இதில அவா ஃபோன் நம்பர் இருக்கு உங்களுக்கு ஓகேன்னா  நீங்களே அவாளுக்கு டைரெக்ட்டா ஃபோன் போட்டு சொல்லிடுங்க்கோ. அமைஞ்சுதுனா சீக்கிரமே கல்யாணச் சாப்பாடு போடுங்கோ. அவாளோட எல்லா டிடேல்ஸும் இதுல இருக்கு வரட்டா மாமி “

அதைக்கேட்ட பர்வதம்… வீட்டில் அனைவருடன் கலந்து பேசி சொல்லுவதாக சொல்ல அதை மேனகா மறுநாள் பங்கஜமிடம் தெறிவித்தாள். அன்று மாலை வேலை முடிந்து வீடு திரும்பியதும் பங்கஜம் அதை அம்புஜத்திடம் ஃபோனில் விவரித்தாள். அதற்கு அம்புஜம்

“பகவான் யாருக்கு யாருன்னு எழுதி வச்சுருப்பார்….நம்ம மிருதுக்கு அந்த புள்ளான்டான் தான் ஆத்துக்காரர்

ஆகனும்னு அவ ஜாதகத்தில எழுதிருந்தா இது நடக்கும். எல்லாம் அவன் விட்ட வழி..சரி பங்கு ரொம்ப தாங்ஸ். நீ போய் உன் ரெண்டு வாலுகளப்பாரு நான் வைக்கறேன்”

என்று கூறி ஃபோன் கால் ஐ துண்டித்து “பகவானே” என்று கண்களை மூடி வேண்டிக்கொண்டாள்.

இவ்வாறு சீராக சென்றுக்கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் வந்த  இந்த வரன் அமையுமா! அமைந்தால் நல்லதா!!

மனதில் வருத்தம், கண்களில் கண்ணீர் நடையில் வேகம் என சென்றுக் கொண்டிருந்த மிருதுளாவின் பின்னால் வேகமாக நடந்தும் ஓடியும் அவளை பிடிக்க சென்றான் நவீன்.  அவள் நேராக வீட்டின் வாசலில் சென்று அமர்ந்தாள். ஒரு இரண்டு நிமிடங்களில் நவீனும் வீட்டிற்கு வந்து சேரந்தான். வாசலில் அமர்ந்திருந்த மிருதுளாவிடம்..

“ஏய் என்ன மிருது இவ்வளவு வேகமா நடந்துண்டேயிருக்க. நான் வர்றேனா இல்லையான்னு கூட பார்க்காம நீ பாட்டுக்கு வந்துண்டிருக்க!! என்ன ஆச்சு ஏன் இப்போ உன் கண்லேருந்து கண்ணீர் வர்றது? சரி ஆத்துக்குள்ள ஃபர்ஸ்ட் வா.”

என்று கதவைத் திறந்தான் நவீன். மிருதுளா வேகமாக வீட்டினுள் நுழைந்து நேராக கட்டிலில் சென்று படுத்துக் கொண்டாள். என்ன நேர்ந்தது என்று புரியாமல் “என்ன ஆச்சு?” என்ற கேள்வியை அவளிடம் இரண்டு மூன்று முறை கேட்டும் பதில் இல்லாததால் நவீனும் பேசாமல் அவளருகே அமர்ந்தான்.  சிறுது நேரம் மௌனத்திற்கு பிறகு எழுந்து நவீனைப் பார்த்து …

“ஏன் நவீ நான் கன்சீவ் ஆனதில் உங்களுக்கு சந்தோஷம் தானே?”

“இது என்ன கேள்வி மிருது?”

“ப்ளீஸ் சொல்லுங்கோ”

“ஆஃப்கோர்ஸ் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் தான். நானும் அப்பா ஆக போறேன்னு எனக்கு சந்தோஷம் இருக்காதா என்ன! இப்போ ஏன் உனக்கு சடன்னா இப்படி ஒரு டவுட்டு”

“இல்ல இன்னிக்கு நான், நீங்க, என் பேரன்ட்ஸ் எல்லாருமே அந்த செய்திக்காக எதிர்ப்பார்த்து தெரிஞ்சதும் எவ்வளவு ஹாப்பியானோம் … இவ்வளவு ஏன் அதை சொல்லும் போது டாக்டரும் கூட எவ்வளவு சந்தோஷமா சொன்னா… எல்லாருக்கும் மகிழ்ச்சி கொடுத்த விஷயம் ஏன் உங்க ஆத்துல யாருக்குமே பிடிக்கலை?”

“ஆமாம் நானும் கவனிச்சேன் ஏதோ சொல்லனுமேன்னு “சந்தோஷம்ன்னு” சொன்னா…அதுக்கு நீ ஏன் கவலை படணும்? ஏன் கண்கலங்கின?”

“அதோட நிப்பாட்டிருந்தா எனக்கும் பெரிசா சங்கடம் இருந்திருக்காது ஆனா உங்க அம்மா வெடுக்குன்னு …”

“என்ன சொன்னா ? அதை தானே அப்போலேந்து கேட்டுண்டிருக்கேன்!”

“”என்னத்துக்கு  இவ்வளவு அவசர பட்டே” ன்னு கேக்கறா!!! எனக்கு எப்படி இருந்திருக்கும் சொல்லுங்கோ. எந்த ஒரு அப்பா அம்மாவும் அவா தாத்தா பாட்டி ஆக போறான்னா சந்தோஷமா தான் ஃபீல் பண்ணுவா ஆனா இவா என்னடான்னா என்னத்துக்குன்னு கேட்கறா. உங்க ரம்யா சித்திக் கூட நாம ஃபர்ஸ்ட் டைம் போனபோது ப்ளானிங் ன்னு எல்லாம் குழந்தைய தள்ளிப் போடாதீங்கோ மாக்ஸிமம் ஒரு ஆறு மாசம் நம்மளுக்குன்னு எடுத்தா போறும்ன்னு சொன்னா தெரியுமா!! உங்க அம்மாக்கு நான் பிடிக்காத மாட்டுப்பொண்ணாவே இருந்துட்டுப் போறேன் ஆனா எப்படி அவா பேரக் குழந்தை வரப்போறத கூட என்னை அசிங்க படுத்தவே யூஸ் பண்ணறா…ச்சீ …என்னை வந்த நாள்லேருந்து என்னென்னவோ சொல்லிருக்கா … நான் எதையாவது உங்ககிட்ட வந்து சொல்லிருக்கேனா? இல்லை அவா கிட்டதான் சண்டைக்கு போனேனா? இத என்னால தாங்க முடியலை…இப்படியுமா பழிவாங்கறதுக்காக பேசுவா? நான் அப்படி என்ன தான் அவாளுக்கு செய்துட்டேன்?  எனக்கு ஆற மாட்டேங்கறது!!!” 

“அது ஒண்ணுமில்லை நான் உன்னை கல்யாணம் பண்ணிண்டது அவாளுக்கு பிடிக்கலை. அவா உன்னை வேண்டாமன்னு சொல்லியும் நான் உன்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லி அத செய்தது அவாளுக்கு கோபம். சொன்னா சொல்லிட்டுப் போறா விட்டுத்தள்ளு மிருது. நாம சந்தோஷமா இருக்கோமா அது தான் முக்கியம் புரிஞ்சுதா!!”

“அதெல்லாம் உங்களுக்குள்ள அதுல என் தப்பு என்ன சொல்லுங்கோ? நாம என்ன லவ் பண்ணியா கல்யாணம் பண்ணிண்டோம்? என் மேல ஏன் அந்த வெறுப்ப கொட்டணும்? எப்படி அப்படி ஈசியா விட்டுட சொல்லறேங்கள் நவீ ? ஏதாவது மூணா மனுஷா சொல்லிருந்தா விட்டுடலாம் ஆனா சொன்னது உங்க அம்மா …இந்த வலி என் வாழ்நாள் முழுவதும் இருக்கும் நவீ”

“புரியறது மிருது சொல்லிட்டா இப்போ அள்ளவா முடியும்?”

“அவாளால அள்ளவும் முடியாது என்னால மறக்கவும் முடியாது. அவா சொல்படி நான் அவசரப்பட்டு  வந்த என் குழந்தையைப்  பத்தி இனி நான் அவா கிட்ட எதையுமே ஷேர் பண்ணமாட்டேன். நீங்களும் என்னை சொல்ல சொல்லி வற்புறுத்தக் கூடாது. ஓகே வா?”

“அவா அப்படி பேசி அவா உரிமைய இழந்துட்டா ஸோ நான் உன்னை வற்புறுத்த மாட்டேன். நீ மொதல்ல கண்ணை தொட மிருது. அழறத நிப்பாட்டு ப்ளீஸ்”

“ஓகே ஓகே”

வெளியே குல்ஃபி வண்டி மணி ஓசை கேட்டதும் …

“உன் ஃபேவரைட் வண்டி வந்துடுத்து மிருது. என் வீட்டு பெரிய குழந்தை அழறதேன்னு குல்ஃபிகாரன் நம்ம ஆத்து வாசலேருந்து நகராம இங்கேயே நிக்கறான் பாரேன் !!! நாம வாங்காம நகர மாட்டான் போல….இரு நான் போய் ரெண்டு குல்ஃபி வாங்கிண்டு வந்துடறேன்”

“இரண்டு கேசர் குல்ஃபி குடுப்பா. நாளைலேருந்து இப்படி இங்கேயே நின்னா நாங்க வாங்குவோம்ன்னு நினைக்காதே சரியா. வேணும்னா நாங்களே வாசலில் நிப்போம்.”

“இந்தா மிருது உனக்கு பிடிச்ச கேசர் குல்ஃபி”

“என்ன குல்ஃபி குடுத்து ஐஸ்ஸா!!!” 

“அச்சசோ அதெல்லாம் ஒண்ணுமில்லைமா… ஏதோ அவன் இந்த நேரம் பார்த்து வந்தான் …சரி உனக்கும் பிடிக்குமேனுட்டு வாங்கினேன். குல்ஃபி குடுத்து குழந்தை அழறத நிப்பாட்டலாமேன்னு ஒரு நல்ல எண்ணத்தில் தான் வாங்கினேன்”

“எந்த குழந்தை அழறதாம் இங்க?”

“ம்….என் மாமியார் அம்புஜத்தின் குழந்தை மிருது பாப்பா தான் வேற யாரு?”

“ம்…ம்… அப்படியா அப்போ இந்த பாப்பா சாப்பிட்ட குல்ஃபி ஐஸ் குச்சியை பாப்பாக்கிட்டேருந்து வாங்கிண்டு போய் டஸ்ட்பின்ல போடுங்கோ பார்ப்போம்” 

“போட்டுட்டா போச்சு!! அதுக்கு பாப்பா எனக்கு ஒரு உம்மா தருமாமே”

“ஐய்யே அதை எல்லாம் உன் பொண்டாட்டி மிருதுளான்னு இருக்கா ல அவகிட்ட கேளு போ போ”

ஹா! ஹா! ஹா! ஹா! ஹா! ஹா! 

என இருவருமாக சிரித்து நடந்ததை சற்று மறந்து உறங்கினார்கள். 

செவ்வாய்க்கிழமை விடிந்ததும் வழக்கம் போல் நவீன் ஆபீஸுக்கு கிளம்பினான். அப்போது மிருதுளா..

“என்னப்பா நீங்களும் ஆபீஸுக்கு போயிட்டா வீடே வெறுச்சோடி இருக்குமே”

“நல்லாருக்கே அதுக்காக நான் லீவெடுக்க முடியுமா பெண்ணே!!! சரி நீ ஒழுங்கா சாப்பிடு. மாத்திரையை கரெக்டா போட்டுக்கோ. நான் வரட்டுமா. நீ டிவி பாரு இல்லாட்டி உன் படிப்பை கன்டின்யூ பண்ணு. கீப் யுவர் செல்ஃப் பிசி. ஓகே வா. சிரிச்ச முகத்தோட வழியனுப்பு மிருது. இந்த உம்மு மூஞ்சி உனக்கு செட் ஆகலை”

“ஈ.ஈ.ஈ.ஈ.ஈ.ஈ போறுமா”

“அம்மாடியோ இது கொஞ்சம் ஓவரா இருக்கே”

“சரி சரி பத்திரமா ஆபீஸ் போயிட்டு வாங்கோ. பை நவீ”

“பை மிருது டேக் கேர்”

நவீன் ஆபீஸ் சென்றதும் கதவை தாழிட்டு உள்ளே வந்தவளுக்கு தனது அம்மா அப்பா தம்பிகள் எல்லாரும் அமர்ந்திருப்பது போல தோன்ற சற்று கண்ணில் கண்ணீர் வடிந்தது. வேகமாக அதை துடைத்துக்கொண்டு அடுப்படிக்குள் சென்று வேலைகளை முடித்து பின் குளித்து சற்று நேரம் படித்துக்கொண்டே உறங்கிப்போனாள். சட்டென பசியால் கண்விழித்து பார்த்தாள் மணி இரண்டாகியிருந்தது. மெல்ல கட்டிலில் இருந்து இறங்கி சென்று சாப்பாடு சாப்பிட்டு பின் டிவியை போட்டாள் அதில்  திரைப்படம் ஒடிக்கொண்டிருந்தது. அப்படியே தலையணையை தரையில் போட்டு படுத்தவாறே திரைப்படத்தைப் பார்த்து முடிக்கவும் மணி நாலாகவும் சரியாக இருக்க எழுந்து முகம் கை கால் கழுவி விளக்கேற்றி வாசல் கதவைத் திறந்து வைத்து வெளிய வாசல் படியிலிருந்து  கேட் வரை நடந்துக்கொண்டே நவீனுக்காக காத்திருந்தாள். அப்போது பக்கத்து வீட்டு லதா மிருதுளாவிடம்..

“என்ன மிருதுளா ஹஸ்பன்ட்டுக்காக வெயிடிங் ஆ!!”

“ஆமாம் லதா அக்கா.”

“என்ன முகமெல்லாம் பிரகாசமா இருக்கே. எனி குட் நியூஸ் மிருதுளா?”

“ஆமாம் லதா அக்கா  நான் கன்சீவ் ஆகிருக்கேன்”

“வாவ்!! வாழ்த்துக்கள்” 

“அம்மா அம்மா என்னோட ரெக்கார்ட் புக்க பார்த்தயா நான் டியூஷன் போறதுக்கு நேரமாச்சு”

“சரி மிருதுளா நாம அப்பறம் பேசலாம் அவன டியூனுக்கு அனுப்பனும் நான் வரேன். டேக் கேர்”

“ஓகே லதா அக்கா”

“ஹேய் மிருது வாசல்ல என்ன பண்ணிட்டு இருக்க?”

“உங்கள் வரவுக்காக தான் வெயிட்டிங்”

“இரு பைக்கை நிப்பாட்டிட்டு வந்துடறேன்”

“வாங்கோ. இந்தாங்கோ காபி. இன்னைக்கு ஏன் லேட்? க்ளாஸ் வேற போகணுமில்லையா!”

“ஆமாம் மிருது இன்னைக்கு கொஞ்சம் வர்க்லோடு அதிகம் அதுதான் லேட் ஆயிடுத்து. க்ளாஸுக்கும் நேரமாகிடுத்து. எப்பவும் போல காபி சூப்பர். நான் க்ளாஸுக்கு போயிட்டு வரேன் பத்திரமா இரு. பை”

“ஓகே பை”

க்ளாஸ் முடிந்து வந்ததும் இருவருமாக இரவுணவு உண்டபின் கணக்கு பார்க்க அமர்ந்தனர்‌. ஊரிலிருந்து வந்தவர்களை வெளியே கூட்டிக்கொண்டு சென்றது, சுற்றுலா ஏற்பாடு செய்தது,  அவர்களுக்கு டிரஸ் எடுத்துக்கொடுத்தது மற்றும் அவர்களுடன் வெளியே சாப்பிட்டது என எல்லாவற்றையும் கூட்டி அவற்றை கையிருந்த பணத்திலிருந்து கழித்தால் கையில் மீண்டும் ஐநூறே மிஞ்சியது. அதுவும் அது ஜூலை மாத ஆரம்பம் தான் ஆகியிருந்தது. 

ஒரு மாதம் அவர்கள் அந்த ஐநூறில் தான் குடும்பத்தை ஓட்ட வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கையிலே மிருதுளா அடுப்படிக்குள் சென்று ஒரு ஐநூறு ரூபாய் எடுத்து வந்தாள். எங்கிருந்து வந்தது அந்த ஐநூறு என நவீன் கேட்க அது தனது அப்பாவும் அம்மாவும் ஊருக்கு செல்லும்முன் வற்புறுத்தி அவள் கையில் திணித்த பணம் என்றும் அதை அஞ்சறைப் பெட்டியினுள் போட்டு வைத்தது ஞாபகம் வந்ததென்றும் கூறி நவீனிடம் கொடுத்து …

“மளிகை ஜாமான்கள் மீதமிருக்கு மாதாமாதம் வாங்குவது போல வாங்க வேண்டியிருக்காது. காய்கறிகள் அப்பா வாங்கி ஃப்ரிட்ஜில் வைத்தது ஒரு இரண்டு வாரததுக்கு வரும்… ஆக வெளியே செல்வது சாப்பிடுவதை மட்டும் அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்தால் போறும்… என்ன சொல்லறேங்கள் நவீ”

“ஓகே நீ சொன்னா அதுக்கு அப்பீலே கிடையாது மேடம். அப்படியே ஆகட்டும். ஆனா அதுக்காக உனக்கு ஏதாவது சாப்பிடனும்னு தோணித்துன்னா காசில்லையேன்னு எல்லாம் யோசிக்காம கேட்கனும் சரியா”

“ஷுவரா கேட்கறேன்”

ஜூலை மாதத்தை மிகவும் ஜாக்கிரதையாக செலவழித்து கழிக்க முடிவெடுத்து அதுபடியே நடந்துக்கொண்டனர் இருவரும். ஆகஸ்டு மாதம் வந்தது கையில் மீதமிருந்தது முன்னூறு ரூபாய். அந்த மாதம் சம்பளம்  எல்லா பிடிப்பும் போக ஐயாயிரம் வந்தது. ஆனால் அந்த மாதம் எல்லா மளிகையும் அரிசி உற்பட வாங்க வேண்டியிருந்தது. பால், காய்கறி, பழங்கள், என எல்லா செலவுகளும் போக கையிருப்பு அதே ஆயிரம் தான். அந்த மாதம் திருமணத்திற்கு பின் முதல் முறை இருபதாம் தேதி மிருதுளாவின் பிறந்தநாள் வந்தது. அதற்கு அவளுக்கு விலைவுயர்ந்த பரிசுப் பொருள் வாங்கிக்கொடுக்க மனமிருந்தும் பணமில்லாமல் போனது நவீனுக்கு.  அன்றைய தினம் அவளை கோவிலுக்கு கூட்டிச் சென்று தலைநிறைய பூ வாங்கிக் கொடுத்து வைத்துக்கொள்ளச் செய்து வீட்டுக்கு வந்ததும் அவளுக்கென அவளுக்கு பிடித்த ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் ஒரே ஒரு பீஸ் மட்டும் வாங்கிக்கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெறிவித்தான் நவீன்….மிருதுளாவும் மகிழ்ச்சியாக அதை கட் செய்து நவீனுக்கு ஒரு பீஸ் ஊட்டிவிட்டு தானும் சாப்பிட்டாள். அதைப் பார்த்த நவீன்…

“ஏன் ஒரே ஒரு பீஸ் கேக் தான் வாங்கிருக்கேங்கள்ன்னு கேட்க மாட்டியா மிருது. ஆர் யூ அப்செட் வித் மீ”

“நாட் அட் ஆல் நவீ. நம்ம நிதி நிலவரம் தெரிந்தும் நான் எப்படி அப்படி கேட்பேன்னு நீங்க நினைக்கலாம்?  உங்க கிட்ட நிறைய பணமிருந்து எனக்கு செய்யலைன்னா கேட்டிருப்பேன். நாம ரெண்டு பேருமா தானே வரவு செலவெல்லாம் பார்த்துக்கறோம் அப்புறம் என்ன கேள்வி இது”

“சரி சாரி”

“என்னது”

“ஓகே மை சாரி வாப்பஸ் வாங்கிக்கறேன். இப்போ நாம ரெண்டு பேருமா நம்ம கேன்டீன் பக்கத்துல இருக்கற டாபாக்கு போய் டின்னர் சாப்பிடலாம் வா”

“ஆர் யூ ஷுவர் அபௌட் ஹாவிங் டின்னர் அவுட் சைட்?  நவீ!!”

“அதுக்கு வேணும்ன்னு தான் நான் கேக்கை கட் ஷாட் பண்ணிட்டேன். வா போயிட்டு வந்துடலாம்”

இருவருமாக சென்று உணவருந்தியதும் நவீன் …

“ஹேய் மிருது உங்க அப்பா அம்மாட்ட பேசணுமா”

“பேசலாம் ஆனா”

“என்ன ஆனா. வா பேசிட்டே போகலாம். மீட்டர்ல ஒரு கண்ணு வச்சுக்கோ எழுபத்தி அஞ்சு ரூபாய் வரைக்கும் நோ ப்ராப்ளம்”

“எனக்கே வா…ஓகே ஓகே நான் பார்த்துக்கறேன்.”

என கூறி அந்த கண்ணாடி ரூமிற்குள் சென்று பேசலானாள். சரியா ஐம்பது ரூபாயை எட்டியதும் பை சொல்லி ஃபோனை கட் செய்து வெளியே வந்து…

“உங்களை விசாரிச்சதா சொல்ல சொன்னா”

“இன்னும் இருபத்தி அஞ்சு ரூபாய்க்கு பேசிருக்கலாமே ஏன் அவசரம் அவசரமா கட் பண்ணிட்ட?”

“என்னத்த அதே தான் …பத்திரமா இரு, ஒழுங்கா சாப்பிடு, உடம்பை பார்த்துக்கோ இப்போ நீ தனி ஆள்ளில்லை இரண்டு பேருக்கு சாப்பிடனும்ன்னு சொன்னா எல்லாரும் நல்லாயிருக்காலாம் நாமும் நல்லா இருக்கோம்ன்னு சொன்னேன் அவ்வளவு தான் மீதி நேர்ல பார்க்கும் போது பேசிக்க வேண்டியது தான்”

“ஓ ஓகே தென் வீட்டுக்கு போகலாமா?”

“எஸ் போகலாம்”

அன்றிரவு தூக்கத்தில் மிருதுளா எழுந்து நவீனிடம் சாதமும் அவியலும் வேணுமென்று சொல்ல நவீன் செய்வதறியாது மறுநாள் விடிந்ததும் செய்து தருவதாக சொல்லி தண்ணீர் குடிக்க வைத்து அவளை தூங்க வைத்தான். 

மறுநாள் காலை எழுந்து காபி குடித்ததும் வாந்தி எடுத்தாள் மிருதுளா. அதைப் பார்த்ததும் என்ன ஆச்சோ ஏதாச்சோ என்று பயந்துப் போனான் நவீன் அப்போது டாக்டர் சொன்னது அவனுக்கு ஞாபகம் வந்தது உடனே அவள் நெற்றியை பிடித்துக் கொண்டான். இதே போல் காலை காபி குடித்ததும், குக்கர் திறந்ததும் என ஒவ்வொரு முறையும் வாந்தி எடுத்து எடுத்து எதுவும் சரியாக சாப்பிடாமலானாள் மிருதுளா. மகப்பேறு காலத்தின் ஆரம்ப கால பிரச்சனைகளைப் பார்த்த நவீன் அதை தனது ரம்யா சித்தியிடம் கூற அவரும் மிருதுளாவிற்கு பிடித்த இனிப்பு பலகாரம் எது என்று நவீனிடம் கேட்டு அதேபோல தெறட்டிப்பால் செய்து எடுத்துக் கொண்டு மிருதுளாவை பார்க்க வந்தார். 

“ஹை ரம்யா சித்தி வாங்கோ வாங்கோ. எவ்வளவு நாளாச்சு உங்கள பார்த்து”

“ஹேய் மிருதுளா வாழ்த்துக்கள். அம்மா ஆக போற. நவீன் நேத்து ஃபோன் பண்ணிருந்தான். ஆமாம் நீ சரியாவே சாப்பிடறதில்லையாம். என்ன யாம்…பார்த்தாலே தெரியறதே..ஆளு பாதியாகிருக்க. இங்க பாரு மிருது வாந்தி எல்லாம் அப்படி தான் வரும் அதுக்காக சாப்பிடாம இருக்கக் கூடாது புரியறதா. நீ இப்படி இருந்தா பாவம் நவீனுக்கு எவ்வளவு கஷ்டம்…புரிஞச்சுக்கோமா”

“ஓகே சித்தி டிரை பண்ணறேன். காபி யா டீ யா எது போடட்டும்”

“ஒண்ணும் வேண்டாம் இதோ இந்த ஐஸ் வாட்டர் போறும். நான் கிளம்பறேன் என் பொண்ணுகளும், சித்தப்பாவும் வீட்டுக்கு வர்ற நேரமாச்சு மா. நான் வரட்டுமா. நவீன்ட்ட சொல்லு. இன்னொரு நாள் நாங்க எல்லோருமா வர்றோம். பை”

நவீன் தனது மாமியாரிடமும் மிருதுளா படும் பாட்டை ஃபோன் போட்டு சொல்ல அம்புஜத்திற்கு இருப்பு கொள்ளாமல் தனது கணவன் மற்றும் மகனிடம் ….தான் குஜராத் சென்று மிருதுளாவை ஒரு மாசம் பார்த்துக்கொண்டு அவளுக்கு வேண்டியதை செய்து கொடுத்துவிட்டு வருவதாகவும் அந்த ஒரு மாதம் கணவரும் மகனும் அட்ஜஸ்ட் செய்யுது கொள்ளமுடியுமா என்றும் கேட்டாள்.  அதற்கு வேனு..

“அம்மா நாங்க ரெண்டு பேரும் இருந்துப்போம் நீ போய் மிருதுக்காவுக்கு என்ன வேணுமோ செய்து கொடும்மா நாங்க எங்களைப் பார்த்துக்கறோம் என்னப்பா உனக்கும் ஓகே தானே?”

“எனக்கும் ஓகே தான். ஆனா அடுத்த மாசம் என்ன பண்ணுவா”

“இந்த மாசம் தான் வாந்தி எல்லாம் ரொம்ப இருக்கும் அடுத்த மாசத்துக்கு அடுத்த மாசம் தீபாவளிக்கு இங்க வந்துடுவாளே.”

“ஓ சரி சரி அப்போ எப்போ டிக்கெட் புக் பண்ணணும்?”

“வர்ற சனிக்கிழமை கிளம்பட்டுமா”

“சரி அப்போ சனிக்கிழமைக்கே புக் பண்ணிடுறேன். நாளைக்கு மாப்ளைக்கும் ஃபோன் போட்டு சொல்லிடறேன். நீ சம்மந்திட்ட சொல்லிடு”

“சரி அப்படியே செய்துடறேன். டேய் வேனு பத்திரமா இருடா. அவனுக்கு வேளா வேளைக்கு ஒழுங்கா சாப்பாடு கொடுங்கோ”

“அம்மா அதெல்லாம் நானும் அப்பாவும் பார்த்துக்கறோம். நீ நிம்மதி யா போய் அக்காவ பார்த்துக்கோ”

மறுநாள் காலை ராமானுஜம் நவீனின் ஆபீஸுக்கு ஃபோன் போட்டு உதவிக்கு அம்புஜம் புறப்பட்டு வருவதாக கூற அதற்கு நவீன் தனது நன்றியை தெரிவித்தான். அம்புஜம் பர்வததிற்கு ஃபோன் போட்டு தான் மீண்டும் குஜராத் செல்லவிருப்பதை கூற அதற்கு பர்வதம் ..

“இன்னும் ரெண்டே மாசம் கழிச்சா அவாளே வர்றப் போறா அப்புறம் என்னத்துக்கு இப்போ போறேங்கள்?”

“இல்ல மாமி மிருதுக்கு வாந்தி, தல சுத்தல் எல்லாம் ஜாஸ்த்தியா இருக்காம். சரியா சாப்ட மாட்டேங்கறாளாம். மாப்ளைக்கும் லீவு போட முடியலையாம். இந்த ஒரு மாசம் மட்டும் போய் பார்த்துண்டுட்டு வந்திடலாம்ன்னு இருக்கேன். பாவம் கொழந்தை எவ்வளவு கஷ்டப்படறாளோ.”

“அப்படி எதுவும் எங்ககிட்ட அவன் சொல்லலையே….சரி சரி நீங்க குஜராத் போயிட்டா அப்போ உங்காத்து மாமாவையும் வேனுவையும் யார் பார்த்துப்பா?”

“அவா ரெண்டு பேரையும்..அவாளே பார்த்துப்பா. ஒரு மாசம் தானே. நான் மிருது படற கஷ்டத்தை சொன்னதும் ரெண்டு பேருமே மொதல்ல போய் அவளப் பார்த்துக்கோன்னு தான் சொன்னா”

“ஓ அப்படியா. சரி எப்போ கி‌ளம்பறேங்கள்”

“வர்ற சனிக்கிழமை நைட். அதுதான் உங்ககிட்டயும் ஒரு வார்த்த சொல்லிடலாம்ன்னு ஃபோன் பண்ணினேன் மாமி. மாமா கிட்டயும் சொல்லிடுங்கோ.”

“சரி சரி போயிட்டு வாங்கோ உங்க பொண்ணாத்துக்கு. நான் ஃபோனை வச்சுடவா”

“சரி மாமி. உங்க புள்ளட்ட இல்ல மிருதுட்ட ஏதாவது சொல்லணுமா….”

என்று அம்புஜம் கேட்டதுக்கு பதில் ஏதும் கூறாமல் ஃபோனை கட் செய்தாள் பர்வதம். அதிலிருந்தே அம்புஜத்திற்கு புரிந்தது அவர்களுக்கு பிடிக்கவில்லை என்பது. ஆனால் அதை எல்லாம் பார்த்தால் தன் மகள் தான் கஷ்டப்படுவாள் என்று மனதில் எண்ணிக்கொண்டு ஃபோனை வைத்து விட்டு ஊருக்கு கிளம்ப தயார் ஆனாள். 

அன்று மாலை நவீன் ஆபீஸிலிருந்து வந்ததும் 

“மிருது….நீ சந்தோஷப் படறா மாதிரி ஒரு நியூஸ் கொண்டு வந்திருக்கேன்”

“என்னது நவீ?”

“வர்ற திங்கட்கிழமை காலை ல உன்ன பார்த்துக்க… உனக்கு பிடிச்சதெல்லாம் செய்து தர …ம்…ம்…நீ கேட்ட அவியல் செய்து தர உன் அம்மா இங்கே வரப் போறா”

“ஹேய் என்னப்பா சொல்லறேங்கள் நிஜமாவா!!”

“ஆமாம் இன்னைக்கு காலை ல உன் அப்பா ஃபோன் பண்ணிச் சொன்னார்”

“அப்போ அப்பாவையும் வேனுவையும் யார் பார்த்துப்பா? அம்மா இங்க வந்துட்டான்னா?”

“அவா ரெண்டு பேருமே அவாள பார்த்துக்கறோம்ன்னு சொல்லி உங்க அம்மாவை உனக்காக அனுப்பி வைக்கறா. தே ஆர் கிரேட்”

“ஒரு பக்கம் அம்மா வராளேன்னு சந்தோஷமா இருந்தாலும் …. அப்பாவையும் வேனுவையும் நினைச்சா பாவமாயிருக்கு”

“லெட்ஸ் வெயிட் ஃபார் மன்டே”

சனிக்கிழமை வந்தது அம்புஜத்தை ரெயிலில் ஏற்றி விட்டனர் ராமானுஜமும் வேனுவும். அதுவரை தனியாக எந்த வெளி மாநிலத்துக்கும் (வெளியூருக்கு கூட) பிரயாணம் செய்திராத அம்புஜம் ஏதோ பெண்ணை பார்க்க வேண்டும் அவளுக்கு பிடித்ததை எல்லாம் செய்துக் கொடுத்து அவளை தேற்ற வேண்டுமென்ற ஆசையில் ரெயில் ஏறிவிட்டாள். ரெயிலும் புறப்பட்டது. 

தொடரும்….

 காலை சூரியனின் கதிர்களில் ஒன்று மிருதுளாவின் இமைகளை தட்டி திறந்து கண்களால் தன்னைப் பார்க்கும் படி மிகவும் தொந்தரவு செய்ய அவளும் அதிலிருந்து நகர்ந்து படுத்தும்,  போர்வையை கொண்டு முகத்தை மூடியும் உறக்கத்தை தொடர நினைத்து கடைசியில் சூரியக்கதிரிடம் தோற்றுப்போய் விழித்து கடிகாரத்தைப் பார்த்தாள். மணி எட்டு காட்டியது. விரைந்து எழுந்தாள். கட்டிலின் எதிரில் தரையில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த நவீனிடம்….

“குட் மார்னிங் நவீ. என்னப்பா என்னை எழுப்பிருக்கலாம் இல்லையா!! மணி எட்டாச்சே”

“ஸோ வாட்? நீ நல்லா தூங்கிண்டிருந்த அதனால எழுப்பலை…இப்போ அப்படி சீக்கிரம் எழுந்து என்ன பண்ணணும் உனக்கு?”

“இல்ல இவ்வளவு நேரம் தூங்கிட்டேனேன்னு இருக்கு”

“இட்ஸ் ஓகே மிருது. நீ போய் ப்ரஷ் பண்ணிட்டு வா காபி போட்டுத் தர்றேன்.”

“நீங்க குடிச்சாச்சா?”

“ஓ! குடிச்சிட்டேன்”

ப்ரஷ் செய்து முகம் கழுவி விட்டு டவலில் முகத்தைத் துடைத்துக் கொண்டே …

“நவீ நீங்க எப்போ எழுந்துண்டேங்கள்?”

“நான் ஒரு ஏழு மணிக்கு எழுந்து கொஞ்ச நேரம் சும்மா படுத்துண்டே இருந்துட்டு அப்பறம் ஏழரைக்கு கட்டிலை விட்டு இறங்கி ஃப்ரெஷ் ஆகி காபி போட்டு குடிச்சிட்டு நியூஸ் பேப்பர் படிக்க உட்கார்ந்தேன் நீ எழுந்துண்ட்ட. சரி சரி இந்தா என் காபி குடிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லு”

“என்னமோ ஃபர்ஸ்ட் டைம் போடறா மாதிரி கேட்கறேங்கள்!”

“ஒவ்வொரு தடவையும் கேட்டா என்ன தப்பு. ஏன் நீ சொல்ல மாட்டியா?”

“ஓகே ஓகே!!! இருங்கோ குடிச்சுட்டு சொல்லறேன்”

“அப்படி வா வழிக்கு”

“சூப்பரா இருக்கு நவீ. தாங்க்ஸ்….ஊப்ஸ் தாங்க்ஸ் வாப்பஸ் வாங்கிக்கறேன்”

“சரி இன்னைக்கு நாம வெளில போகலாமா?”

“எங்க போகணும். எனக்கு என்னவோ ரொம்ப சோம்பலா இருக்கு. இன்னைக்கு வேண்டாமே. சாயந்தரமா ஒரு வாக் போகலாம் என்ன சொல்லறேங்கள்?”

“டன். காலை ல டிஃபன் என்ன?”

“என் அம்மா இருந்திருந்தா இந்த நேரம் ப்ரேக் ஃபாஸ்ட் ரெடி ஆகிருக்கும்…ம்..‌என்ன பண்ண!! மாவு இருக்கு தோசை சுடவா? கொத்தமல்லி சட்னி ஃப்ரிட்ஜில் இருக்கு. அத தொட்டுண்டு சாப்பிடலாம்.”

“நான் சுட்டுத் தரட்டுமா தோசையை?”

“நீங்க இதுக்கு முன்னாடி தோசை சுட்டுருக்கேங்களா?”

“இல்லை”

“அப்போ ஏன் விஷப் பரீட்சை. எனக்கு பசி வேற அதனால நானே ரெண்டு பேருக்கும் தோசையை வார்த்து எடுத்துண்டு வரேன் அதுவரை நீங்க உங்க நியூஸ் பேப்பரை படிங்கோ..”

மிருதுளா தோசையை வார்த்து தட்டிலிட்டு நவீனிடம் கொடுத்தாள். அவனும் செய்தித்தாள் படித்தவாறே தோசையை உண்டான். நான்கு சாப்பிட்டதும் போதும் என எழுந்து தட்டை அடுப்படியில் பாத்திரங்கள் கழுவும் தொட்டியில் போட போனபோது மிருதுளா அவனிடமிருந்து தட்டைவாங்கி அதில் அவளுக்கான மூன்று தோசையை சுட்டு போட்டுக் கொண்டு வந்து ஹாலில் அமர்ந்து சாப்பிடும் போது நவீன் அவளிடம்…

“ஏய் மிருது தட்டை அலம்பி தந்திருப்பேன் ல.”

“ஏன் நீங்க சாப்ட்ட தட்டை அலம்பாம சாப்ட்டா என்ன ஆயிடுமாம்? அட போங்கோப்பா எனக்கு பாத்திரம் கழுவுவதில் ஒரு தட்டு குறையுமோ இல்லையோ அதுக்குத்தான்.”

“ஓகே”

“ஆமாம் தலையில ஏன் துண்டால முண்டாசு கட்டிருக்கேங்கள்? எழுந்ததும் பார்த்தேன் அப்பவே கேட்கனும்ன்னு நினைச்சேன் மறந்துட்டேன்”

“அது வந்து மிருது”

“ஏன் இழுக்கறேங்கள். என்ட்ட சொல்ல என்ன தயக்கம் உங்களுக்கு? சொல்லுங்கோ”

“நான் ஹேர் டிரான்ஸ்ப்ளான்ட் பண்ணிருக்கேன்னு உன்னை பொண் பார்க்க வந்த போதே சொன்னேன் இல்லையா?”

“ஆமாம் ஆமாம் யூ நோ ஒன் திங் நவீ. நான் சொல்ல மறந்தே போயிட்டேன். ஒரு ஜோக். “

“என்ன சொல்லற மிருது”

“என் அம்மா என்ட்ட உங்க ஹேர் பத்தி கேட்டா. அவாளுக்கு என்னன்னு புரியாததால் அது என்னமோ பிரச்சினைன்னு நினைச்சுண்டு அதால எந்த பாதிப்பும் இல்லையேன்னு என்ட்ட கேட்டா பாருங்கோ!!! என்னால சிரிப்ப அடக்கிக்கவே முடியலை. அப்பறம் சொல்லிப் புரிய வைத்தேன்…சரி அதுக்கும் இந்த முண்டாசுக்கும் என்ன சம்மந்தம்”

“நான் அதை ரிமூவ் பண்ணி க்ளீன் பண்ணி வச்சிருக்கேன் அதனால தான் துண்டை முண்டாசு மாதிரி கட்டிண்டிருக்கேன்”

“ஓகே அதை என்ட்ட ஏன் மறைக்கணும்? தலையிலிருந்து அந்த துண்டை கழட்டுங்கோ நான் பார்க்கட்டும்.”

மெல்ல மனதில் ஒரு வகையான தாழ்வு மனப்பான்மையோடு துண்டை எடுத்தான் நவீன். உச்சந்தலையில் முடியில்லாத நவீனை அன்று தான் பார்த்தாள் மிருதுளா. அவளுக்கு நவீனின் தயக்கம் எதனால் என்பது புரிந்தது. முதலில் அவனிடமிருந்து அந்த எண்ணத்தை துடைத்தெறிய முடிவெடுத்து எதுமே வித்தியாசமாக தெரியாதது போல …

“இதுக்கு ஏன் பா துண்டெல்லாம் கட்டிண்டு. என்ன கேட்டா இனி அந்த ஆர்ட்டிபிஷியல் ஹேர் எல்லாம் வேண்டாம். இப்படியே இருங்கோ. நீங்க இப்படி இருக்கறதால எனக்கு எந்த விதத்திலும் சங்கடமோ, பிரச்சினையோ துளி கூட கிடையாது. நீங்க எதையும் மறைக்காம என்கிட்ட இந்த விஷயத்தை சொல்லி என் விருப்பத்தை கேட்ட உங்களோட நேர்மைக்கு  தான் உங்களை கல்யாணம் பண்ணிண்டேன். ஸோ இனி இது தேவையில்லை சரியா! எதுவாக இருந்தாலும் நான் இருக்கேன் உங்களோட.”

“எனக்கு தெரியும் ஆனாலும்…..”

“என்னதுக்கு ஆனாலும் எல்லாம்..இந்த டிரான்ஸ்ப்ளான்ட்டை எப்போ பண்ணிண்டேங்கள்?”

“உன்ன பொண் பார்க்க வர்றத்துக்கு ஒரு ஆறு மாசம் முன்னாடி தான் பண்ணிண்டேன்”

“அப்புறமென்ன எனக்கே ப்ராப்ளம் இல்லங்கும் போது வேற யாருக்காக யோசிக்கறேங்கள்?”

“இல்ல மிருது உனக்காக தான் யோசிச்சேன் இப்ப நீயே வேண்டாம்னு சொன்னதுக்கு அப்புறம் இனி இது எனக்கும் தேவையில்லை. லவ் யூ மிருது”

“ஐ லவ் யூ டூ நவீ”

அன்று நவீனின் தாழ்வு மனப்பான்மை உடைந்து சில்லு சில்லாக சிதறிப் போனது. அதுவரை தன் மனைவி என்ன நினைப்பாள், எப்படி எடுத்துக்கொள்வாள் என்றெல்லாம் நான்கு மாதங்களாக அவன் மனதை அறுத்துக் கொண்டிருந்த விஷயத்தை மிருதுளா சட்டென சர்வசாதாரணமாக துடைத்தெறிந்தது நவீனுக்கு சற்று வியப்பாக இருந்தாலும் அவன் மனதில் மிருதுளா கோபுரமாக உயர்ந்து நின்றாள். 

தனது வாழ்க்கைத் துணையாக இருப்பவர் /ள் என்ன நினைப்பார்களோ? இதை சொன்னால் என்ன செய்வார்களோ? எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்றெல்லாம் தனக்குத்தானே எண்ணிக் கொண்டு பலர் பல விஷயங்களை மனம் விட்டு பேசாமலே இருப்பதற்கு ஒன்று அவரவர் அடுத்தவர் மீதுள்ள அச்சம் காரணமாக இருக்கும் மற்றொன்று அந்த கூடயிருப்பவர்களும் ஒரு காரணம் ஆவர். கூடயிருப்பவர் தங்களின் துணைக்கு நம்பிக்கைக் கொடுக்க வேண்டும். எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொள்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும். அந்த சூழலும் நம்பிக்கையும் இவர்களுக்குள் உருவாக நான்கு மாதங்கள் எடுத்துள்ளது. 

கணவன் மனைவி அவர்களுக்குள் ஒரு விஷயம் ஒத்துப் போய் ஒரு முடிவெடுத்து ஒன்றை செய்தாலும் சுற்றிலுமிருப்பவர்கள் சும்மா இருப்பார்களா!!! 

அன்று மாலை இருவருமாக பேசிக்கொண்டே வாக்கிங் சென்றனர். மிருதுளா நவீனிடம்…

“நேத்து நாம ரெயில்வே ஸ்டேஷன்ல இருந்து திரும்பியதும் அப்பா அம்மாட்ட ஃபோன்ல பேசினேங்களே அவாள்ட்ட சொன்னேங்களா பசங்களையும் என் அப்பா அம்மாவையும் ரெயில் ஏத்தி விட்டாச்சுன்னு? நான் அதப்பத்தி கேட்கவே மறந்துட்டேன் இப்போ இந்த ஃபோன் பூத் பார்த்ததும் தான் ஞாபகம் வந்தது. என்ன சொன்னா அவா?”

“ஒண்ணும் சொல்லலை. சரின்னு சொன்னா அவ்வளவு தான்”

“என்ன பத்தி ஒண்ணும் கேட்கலையா?”

“அப்பா மட்டும் கேட்டா. அதுக்கு நல்லா இருக்கன்னு சொன்னேன். வேற ஒண்ணும் நானும் சொல்லலை அவாளும் கேட்கலை”

என்று பேசிக்கொண்டே நடக்கையில் வழியில் எதிரே நவீனின் நண்பன் சதீஷ் நவீனைப் பார்த்து…

“ஹேய் நவீன் என்ன மறுபடியும் பழைய ஹேர் ஸ்டைலுக்கு போயிட்ட?”

“எனக்கு இந்த நவீனை தான் பிடிச்சிருக்குன்னு நான் சொன்னதும் என் நவீன் அவரை மாத்திக்கிட்டார். ஒல்ட் ஈஸ் கோல்டு இல்லையா  சதீஷ்”

“வாவ் சூப்பர் மிருதுளா. சாரி மா நான் வழக்கம் போல அவனை கலாய்ச்சிட்டேன்.”

“அதனால என்ன சதீஷ். நீங்க அவரோட நண்பர் உங்களுக்கில்லாத உரிமையா. ஆனா அது உங்களுக்குள்ள மட்டும் இருந்தா நல்லாயிருக்கும் அவ்வளவு தான்.”

“டேய் நவீன் யூ ஆர் லக்கி டா.  சரி அம்மா அப்பா தம்பிங்க எல்லாரும் ஊருக்கு போயாச்சா?”

“நேத்து தான் ரெயில் ஏத்தி விட்டோம் சதீஷ். நாளைக்கு காலை ல ஊர் ல ரீச் ஆவாங்க. உன் சொந்தக்காரங்க எல்லாரும் எப்போ ஊருக்கு கிளம்பறாங்க?”

“எல்லாரும் அடுத்த வெள்ளிகிழமை கிளம்பறாங்க நவீன். சரி என் வைஃப் சில மளிகை சாமான்கள் வாங்கிட்டு வர சொன்னா நான் பாட்டுக்கு உங்க கூட அரட்டை அடிச்சுக்கிட்டு இருக்கேன். ஓகே நீங்க என்ஜாய் பண்ணுங்க நான் கிளம்பறேன் பா. பை நவீன் அன்ட் மிருதுளா”

“பை டா சதீஷ்”

“பை சதீஷ்”

மீண்டும் நடையை தொடர்ந்த போது நவீன் மிருதுளாவின் வலதுகையை தனது இடது கையால் கோர்துப் பிடித்துக் கொண்டான். மிருதுளாவும் நவீனின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு நடந்தாள். அன்றிரவு மன அமைதி, நிறைவு இருவருக்குள்ளும் நிறைந்திருந்தது. 

திங்கட்கிழமை காலை விடிந்ததும் எழுந்து குளித்து, டிஃபன் சாப்பிட்டு ஹாஸ்பிடல் சென்று வர  தயார் ஆனார்கள் நவீனும் மிருதுளாவும் ஆனால் மணியோ எட்டு தான் ஆகியிருந்தது. ஆனாலும் இருவரும் கிளம்பி ஹால்பிடலுக்கு எட்டரை மணிக்கெல்லாம் சென்றனர். டாக்டர் ஒன்பதரை மணிக்கு தான் வருவார்கள் என தெரிய வர சற்று மனம் தளர்ந்து போனாள் மிருதுளா. அவளின் முகம் வாடியதைக் கண்ட நவீன்…

“மிருது இன்னும் ஒரு ஃபார்டிஃபைவ் மினிட்ஸ் தானே டோன்ட் வரி.”

என கூறிக்கொண்டிருக்கையில் டாக்டர் ரூமிலிருந்து மிருதுளா நவீன் என்று நர்ஸ் கூப்பிட உடனே எழுந்து உள்ளே சென்றனர். 

“நீங்க தான் மிருதுளா வா?”

“ஆமாம் சிஸ்டர். டாக்டர் வந்தாச்சா?”

“இல்லை மா இன்னும் ஒரு ஹாஃபனார் ல வந்திடு வாங்க. அவங்க வர்றத்துக்குள்ள நீங்க போய் இந்த டெஸ்டெல்லாம் குடுத்துட்டு வாங்க. டாக்டர் நேத்தே உங்களுக்கு இதெல்லாம் எழுதி வச்சிட்டாங்க. “

“ஓ அப்படியா. சரி சிஸ்டர் இதெல்லாம் குடுக்க எங்க போகணும்?”

“இப்படியே நேரா போயிட்டு ரைட் எடுங்க அங்க லேப் எல்லாம் இருக்கு அங்க சொல்லுவாங்க”

“ஓகே சிஸ்டர் தாங்க்யூ”

மிருதுளா நர்ஸ் சொன்ன மாதிரியே டாக்டர் எழதிக் கொடுத்த எல்லா டெஸ்டும் கொடுத்துவிட்டு வந்தமர்ந்தாள். அப்போது நவீன்…

“எல்லாம் ஆச்சா மிருது?”

“எஸ் நவீ ஆல் டன்”

“ஓகே குட். டீ குடிக்கறயா?”

“வேண்டாம் பா.”

டாக்டர் வந்தார். மிருதுளா டாக்டரைப் பார்த்து புன்னகைத்தாள். டாக்டரும் தலையசைத்து விட்டு அவர் ரூமுக்குள் சென்றார். மிருதுளாவிற்கு பின் வந்தவர்களை நர்ஸ் ஒவ்வொருவராக அழைக்க நவீனுக்கு சற்று நிதானம் இழந்து  நர்ஸிடம் கேட்டான்…

“என்ன சிஸ்டர் இப்ப வந்தவங்களை எல்லாம் உள்ளே அனுப்பறீங்க. நாங்க இங்க கிட்ட தட்ட மூணு மணி நேரமா உட்கார்ந்துட்டிருக்கோம் என் மனைவியை கூப்பிடவே மாட்டேங்கறீங்க”

“சார் உங்க மனைவி ரிப்போர்ட்ஸ் காக வெயிட் பண்ணறோம்”

என்று நர்ஸ் சொல்லிக்கொண்டிருக்கையிலே கம்பௌண்டர் வந்து ஒரு கவரை நர்ஸிடம் நீட்டினார். அதைப் பார்த்ததும் நர்ஸ் நவீனிடம்..

“இதோ ரிப்போர்ட்ஸ் வந்தாச்சு ஒரு ஃபைவ் மினிட்ஸ் இருங்க. உள்ள இருக்குற பேஷன்ட் போனதும் உங்க மனைவியை கூப்பிடுவாங்க”

அதே போல மிருதுளா பெயரை கூப்பிட இருவரும் டாக்டர் ரூமிற்குள் சென்று அமர்ந்து டாக்டரைப் பார்த்துக் கேட்க நவீன் முயற்சிக்கும் போது டாக்டர் உடனே..

“வாழ்த்துக்கள் நவீன் அன்ட் மிருதுளா இட்ஸ் கன்பார்ம்டு. உங்க இருவருக்கும் பெற்றோர் பிரமோஷன் கிடைத்திருக்கிறது.”

“தாங்க்ஸ் டாக்டர்”  என நவீனும் மிருதுளாவும் ஒருமித்து சொன்னார்கள்.

“எல்லா ரிப்போர்ட்ஸையும் பார்த்தேன். எவ்ரிதிங் ஈஸ் ஃபைன். சில வைட்டமின் டாப்லெட்ஸ் எழுதறேன் அதை மட்டும் எடுத்துக்கோங்க மிருதுளா. நல்லா சத்தான ஆகாரம் சாப்பிடனும் சரியா. டேக் கேர் ஆஃப் ஹெர் நவீன். இனி நீங்க எப்பப்போ செக்கப் வரணும்ங்கறத நர்ஸ் ஒரு அட்டவணை ல எழுதிக் கொடுப்பாங்க அந்த டேட்ஸ் ல தவறாம செக்கப்புக்கு வந்திடணும் சரியா. பி ஹாப்பி ஆல்வேஸ்”

மீண்டும் நன்றியை தெரிவித்து நர்ஸிடம் டாக்டர் சொன்ன அட்டவணையை வாங்கிக் கொண்டு ஹாஸ்பிடல் விட்டு வெளியே வந்ததும் நவீன் மிருதுளாவை சற்று நேரம் வண்டிப் பக்கத்தில் நிற்க சொல்லிவிட்டு கடைக்குச் சென்று வந்தான். பின் இருவருமாக வீட்டிற்கு வந்தனர். வீட்டினுள் நுழைந்ததும் நவீன் மிருதுளாவைப் பார்த்து…

“மிருது வீ ஆர் கோயிங் டு பி பேரன்ட்ஸ் சூன். இந்தா உனக்கு ரொம்ப பிடிச்ச காட்பெரிஸ் டையரிமில்க் சாக்லெட்.”

“ஓ ஸோ சுவீட் ஆஃப் யூ நவீ. ஆமாம் எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் அம்மாகிட்ட சொல்லனும் போல இருக்கு.”

“ஆனா அவா ஆத்துக்கு போய் சேர இன்னும் அரைமணி நேரமாகுமே. யூ டோன்ட் வரி இன்னைக்கு நான் ஆபீஸ் போகலை. ஒரு மணி நேரம் கழிச்சு ஃபோன் பூத் போய் எல்லாருக்கும் சொல்லலாம் ஓகே”

“ஓகே. சரி எனக்கு காலை ல இருந்து ஒரு மாதிரி டென்ஷன் ஆனது ரொம்ப அசதியாயிருக்கு நான் கொஞ்ச நேரம் தூங்கட்டுமா?”

“இது என்ன கேள்வி மிருது? தூக்கம் வர்றதுன்னா தூங்கு. நான் சமையலை பார்த்துக்கறேன்”

“இல்லை ஒரு மணி நேரத்துல எழுப்பிடுங்கோ போய் ஃபோன் பண்ணி சொல்லிட்டு வரலாம்”

“ஓகே ஓகே இப்போ நிம்மதியா சந்தோஷமா தூங்கு”

மிருதுளா நன்றாக உறங்கினாள். ஒரு மணி நேரமானதும் நவீன் அவளை எழுப்ப முயன்ற போது அவனுக்கு மனம் வரவில்லை சாதாரண நாட்களிலேயே அவளை தொந்தரவின்றி தூங்க விடும் நவீன் அன்று அவளா எழுந்திரிக்கும் போது எல்லாருக்கும் சொன்னால் போதும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் ஏனெனில் அவள் மட்டுமா உறங்குகிறாள் அவளுள் அவன் பிள்ளையும் அல்லவா உறங்குகிறது. அவளை எழுப்பினால் இருவரும் எழுந்திடுவார்களே என எண்ணி அவனும் அவளருகே படுத்துறங்கிப் போனான். நவீன் உறங்கின சில மணி நேரத்தில் மிருதுளா எழுந்தாள். 

பக்கத்தில் நவீன் உறங்குவதைப் பார்த்தாள். கடிகாரத்தையும் பார்த்தாள். மணி இரண்டாகியிருந்தது. டைமை பார்த்ததும் அவளுக்கு பசி எடுக்க நவீன் ஏதாவது சமைத்து வைத்திருக்கிறானா என்று பார்க்க மெல்ல கட்டிலிலிருந்து இறங்கும் போது நவீன் விழித்துக் கொண்டான். 

“மிருது எங்க போற?”

“மணி என்ன ஆச்சு தெரியுமா? ரெண்டு ஆச்சு. எனக்கு பசிக்கறது.”

“ஊப்ஸ்…. நானும் உன் கிட்ட படுத்துண்டு இவ்வளவு நேரம் தூங்கிட்டேன். நான் போய் டாபாலேந்து சாப்பாடு வாங்கிண்டு ஒரு பத்தே நிமிஷத்துல வந்துடறேன் இரு.”

என்று கூறிக்கொண்டே கிளம்பி சென்றான் நவீன். அவன் சொன்னது போலவே பத்தே நிமிடத்தில் வராவிட்டாலும் சிறிது நேரத்தில் வந்தான். அவன் வருவதற்குள் மிருதுளா இரண்டு தட்டு, குடிக்க தண்ணீர், கரண்டிகள் என எல்லாவற்றையும் ஹாலில் எடுத்து வைத்திருந்தாள். சாப்பாட்டை வாங்கி வந்ததும் இருவரும் சாப்பிட்டார்கள். மிருதுளா பசி அடங்கியப் பின் நவீனிடம்…

“நான் ஒரு மணி நேரத்துல எழுப்பச் சொன்னா நீங்களும் என் கூட நல்லா தூங்கிருக்கேங்கள். சரி வாங்கோ இப்ப போய் சொல்லிட்டு வருவோம்”

“இப்பவா வேண்டாம் மிருது. வெளில வெயில் கொளுத்தறது. சாயந்தரமா வாக் போவோமில்லையா அப்போ போய் சொல்லலாம் சரியா”

“ஓகே ஓகே!! உங்களுக்கு பொண்ணு வேணுமா இல்லை பையன் வேணுமா?”

“உனக்கு என்ன குழந்தை வேணும் மிருது? எனக்கு பொண்ணு தான் வேணும்.”

“எனக்கும் பொண்ணு தான் வேணும் நவீ. உங்களுக்கு ஏன் பொண்ணு வேணும்னு சொல்லறேங்கள்”

“ஆமாம் எங்காத்துல எல்லாம் பசங்க தான் அதுனால நமக்கு பொண்ணு பொறக்கட்டுமேன்னு  ஒரு ஆசை. சரி உனக்கு ஏன் பொண்ணு வேணும்”

“ஏன்னா பொண்ணுகளுக்கு தான் அழகழகான டிரஸ் போட்டுப் பார்க்க முடியும் பசங்களுக்கு என்ன இருக்கு சொல்லுங்கோ”

“அடிப் பாவி டிரஸ் போட்டுப் பார்க்க பொண்ணு வேணுமா உனக்கு”

“ஆமாம். இதில எனக்கொன்னும் தப்பாவே தெரியலையே. “

“தப்புன்னு யார் சொன்னா? உன்னோட காரணம் கேட்க வேடிக்கையா இருக்கு”

இப்படியே குழந்தைப் பற்றி பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியாமல் போனது இருவருக்கும். மாலை நேரமானதும் வழக்கம் போல காபி குடித்து, முகம் கை கால் கழுவி விட்டு சாமிக்கு விளக்கேற்றி கும்பிட்டு சற்று நேரம் வாசல் கதவை திறந்து வைத்து உட்கார்ந்தனர். மணி ஆறரை ஆனதும் மிருதுளா…

“நவீன் ஃபோன் பண்ண போகலாமா ?”

“ஓ போகலாமே.”

ஃபோன் பூத்தை நெருங்கியதும் யார் இதை சொல்வது என்ற பேச்சு வார்த்தை வந்தது. அப்போது மிருதுளா…

“நான் என் பேரன்ட்ஸ்ட்ட சொல்லிட்டு உங்க கிட்ட ஃபோனைத் தரேன். அதே போல நீங்க உங்க பேரன்ட்ஸ்ட்ட சொல்லுங்கோ இன்னுட்டு என்கிட்ட தாங்கோ நான் பேசறேன் டீல் ஓகே வா?”

“ஓகே மா. வா வா”

முதலில் மிருதுளா ஃபோன் பேச அவள் பெற்றோர் வீட்டு நம்பரை டையல் செய்தாள். முதல் ரிங்கிலேயே அம்புஜம் ஃபோனை எடுத்து…

“ஹலோ நான் அம்புஜம் பேசறேன்”

“ஹலோ அம்மா …நான் மிருது பேசறேன்”

“சொல்லு மிருது உன் ஃபோனுக்காக தான் காலையில இருந்து இந்த ஃபோனையே பார்த்துண்டு இருக்கேன். டாக்டர்ட்ட போனேங்களா? டாக்டர் என்ன சொன்னா?”

“அம்மா என்னை கொஞ்சம் பேச விடுமா. டாக்டர்ட்ட போனேன் அவா சில டெஸ்டெல்லாம் எடுத்துட்டு கன்பார்ம் பண்ணிட்டா. ஸோ நீ பாட்டியாக போற.”

“அம்மா தாயே நன்றி மா(என அம்மன் படத்தைப் பார்த்து சொன்னாள்) ரொம்ப சந்தோஷமா இருக்கு மிருது. நீ நல்லா சாப்டு உடம்பை பார்த்துக்கோ. சரி… மாப்ள பக்கத்துல  இருக்காரா?”

“இதோ கொடுக்கறேன். நவீன் இந்தாங்கோ”

“ஹலோ நான் நவீன் பேசறேன்.”

“வாழ்த்துக்கள் அப்பா ஆக போறேங்கள். எங்களுக்கெல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம். மிருதுவ நல்லபடியா பார்த்துக்கோங்கோ. இருங்கோ எங்காத்துக்காரர்ட்ட கொடுக்கறேன்”

“வாழ்த்துக்கள் மாப்ள அன்ட் மிருது. ரொம்ப சந்தோஷம் அவள நல்லா பார்த்துக்கோங்கோ”

“ஷுவர் ஷுவர் நிச்சயமா. தாங்க்ஸ். உங்க எல்லாருக்கும் பிரயாணம் எல்லாம் சௌகர்யமா இருந்துதா?”

“நாங்க நல்லா சௌகர்யமா வந்து சேர்ந்தோம். உங்க தம்பிகளை ஆத்துல விட்டுட்டு தான் நாங்க ஆத்துக்கு வந்தோம்”

“ஓகே நான் வச்சுடட்டுமா. இல்ல மிருது வ பேச சொல்லட்டுமா?”

“பரவாயில்லை மாப்ள வச்சுடுங்கோ. பை குட் நைட். மிருதுட்டையும் சொல்லிடுங்கோ”

நவீன் ஃபோனை வைத்து விட்டு மிருதுளாவிடம்…

“உங்க அம்மா அன்ட் அப்பாக்கு என்ன ஒரு சந்தோஷம்”

“பின்ன இருக்காதா தாத்தா பாட்டின்னா சும்மாவா!!! உங்க பேரன்ட்ஸும் அப்படி தான் பேசுவா பாருங்கோ. அவாளுக்கும் ஃபோன் போடுங்கோ”

நவீன் அவன்  பெற்றோர் வீட்டுக்கு ஃபோன் செய்தான். ஒரு அஞ்சு நிமிடம் கழித்து ஃபோனை எடுத்தார் ஈஸ்வரன்…

“ஹலோ”

“ஹலோ நான் நவீன் பேசறேன்”

“ஹாங் நவீன் சொல்லு பவினும்,  ப்ரவினும் வந்தாச்சு”

“ஒகே. ஒரு குட் நியூஸ்.”

“என்னது?”

“நீங்க தாத்தா பாட்டி ஆக போறேங்கள்”

“அப்படியா சந்தோஷம் இதோ பர்வதம் பேசணுமாம் குடுக்கறேன்.”

“ஹலோ”

“மிருதுளா பிரக்னென்ட் ஆகிருக்கா. நாங்க அப்பா அம்மா ஆக போறோம்.”

“ஓ சரி. மிருதுளாட்ட ஃபோனைக் குடு “

நவீன் மிருதுளா பெற்றோரின் சந்தோஷம் தன் பெற்றோரிடமும் எதிர்ப்பார்த்து விஷயத்தை சொல்ல அதற்கு அவர்களின் சுரத்தில்லாத பேச்சு அவனுக்கு ஏன்டா சொன்னோம் என்பது போல அவன் மனம் நினைத்தது முகம் வாடி காட்டிக்கொடுத்ததை கவனித்த மிருதுளா “என்ன ஆயிற்று ” என்று சைகையில் கேட்க ஃபோனை அவளிடம் கொடுத்தான் நவீன். அவளும் வாங்கிக் கொண்டு..

“ஹலோ நான் மிருதுளா பேசறேன்”

“நவீன் சொன்னான்….ஆமாம் அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்?”

என்று ஒரு மிரட்டல் துவனியில் கேட்க…

பால் பொங்கி வரும் வேளை கொஞ்சம் தண்ணீர் தெளித்து அதை பொங்க விடாமல் தடுப்பதுபோல பர்வததின் பேச்சு மிருதுளா மனதில் பொங்கி வழிந்த சந்தோஷத்தில் தண்ணீர் தெளித்தது போல் ஆக அவளின் முகம் சட்டென மாறியது. 

“என்னமா கேட்டேங்கள்?”

“இல்ல ஒரு ரெண்டு மூணு வருஷம் கழிச்சு ஆகிருக்கலாமேன்னு சொன்னேன்” 

எந்த ஒரு அப்பா அம்மாவும் தாத்தா பாட்டி ஆகிவிட்டனர் என தெரிந்தால் பேரானந்தம் கொள்வார்கள்.  அவர்கள் அப்பா அம்மா ஆனபோதிருந்த மகிழ்ச்சியை விட பாட்டி தாத்தா ஆனதில் தான் பெருமகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் இப்படி ஒரு ரியாக்ஷனை துளியும் எதிர் பார்க்காத மிருதுளாவின் மனம் வருந்தியது அதற்கு மேல் பேச்சைத் தொடர விரும்பாமல்…

“சரி நான் நவீன்ட்ட குடுக்கறேன்”

என்று சட்டென ஃபோனை மிருதுளா குடுத்ததிலிருந்தே நவீனுக்கு புரிந்துவிட்டது ஏதோ சரியில்லை என்பது அதனால் ஃபோனை அவளிடமிருந்து பெற்றதும்….

“நான் நவீன் …சரி சரி நாங்க அப்புறமா பேசறோம் பை ” 

என ஃபோனை கட் செய்து நவீன் காசுக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது மிருதுளா வெளியே வந்து வீட்டிற்கு மெல்ல நடக்கலானாள். நவீன் வெளியே வந்து பார்த்ததும் மிருதுளாவை காணவில்லை என தேட பின் வீட்டிற்கு நடந்துச் சென்றுக் கொண்டிருப்பவளை நோக்கி வேகமாக அவள் பின்னால் சென்றான். 

தொடரும்….

ஊருக்கு கிளம்ப மீதமிருந்த ஐந்து நாட்களும் பசங்க மூவரும் சுற்றுலா கதையையே மிருதுளாவிற்கும் நவீனிற்கும் விவரித்துக் கொண்டிருந்தனர்.  அம்புஜம் மகளுக்கு வேண்டிய புளி காய்ச்சல், ஊறுகாய்கள் என மகள் கேட்டுக்கொண்டதை எல்லாம் செய்து டப்பாக்களில் போட்டு வைப்பதில் மும்முரமாக இருந்தாள். நவீன் ஆபிஸ் க்ளாஸ் என்று ஓடிக்கொண்டே இருந்தான். ராமானுஜம் பக்கத்திலிருக்கும் கடைக்கு தினமும் சென்று அவருக்கு தெரிந்த ஹிந்தியில் பேசி காய்கறிகள், பழங்கள் என வாங்கி வந்து அதை அலம்பி வெட்டி காய்களை ஃப்ரிஜில் கவர்களில் போட்டும் பழங்களை அன்றன்றே நறுக்கி அனைவருக்கும் கொடுத்தார். இதனால் மிருதுளா தினமும் நிறைய பழங்கள் சாப்பிட்டு வந்தாள். 

வெள்ளிக்கிழமை நவீன் ஆபீஸுக்கு லீவுப் போட்டு காலை உணவருந்திய பின் அனைவரையும் அழைத்துக்கொண்டு பக்கத்திலிருக்கும் மார்க்கெட்டுக்கு சென்றனர் மிருதுளாவும் நவீனும். அங்கே ஒரு கடையினுள் சென்று மூன்று பசங்களிடமும் அவர்களுக்கு வேண்டிய டிரஸ் எடுத்துக்க சொன்னார்கள். அதில் வேனு ஒரு செட், பவின் ஒரு செட் என எடுத்துக்கொண்டனர் ஆனால் ப்ரவின் மட்டும் அனைத்து துணிகளையும் ஆராய்ந்து புரட்டிப்போட்டு இரண்டு செட் எடுத்து வந்தான். அதைப் பார்த்த மிருதுளா வேனுவிடமும் பவினிடமும் இன்னும் ஒரு செட் டிரஸ் எடுத்துக்கச் சொன்னாள் அதற்கு இருவரும் அவர்களுக்கு ஒரு செட் போதும் என்று கூற நவீன் பில் செட்டில் பண்ணி விட்டு 

அவரவர் துணிப் பையை அவரவரிடம் கொடுத்தான். கொஞ்ச நேரம் மற்ற கடைகளை எல்லாம் பார்த்துக் கொண்டே நடந்தவர்களை மற்றுமொரு கடைக்குள் நுழையச் சொன்னாள் மிருதுளா. அது புடவைக் கடை அதில் தனது அம்மாவை செலக்ட் செய்ய சொல்ல அதற்கு அம்புஜம் மறுக்க பின் மிருதுளாவே நல்ல  காட்டன் புடவை இரண்டு ஒரே மாதிரி டிசைன் ஆனால் கலர் வேறு வேறாக எடுத்து அதையும் பில் போட்டுப் பெற்றுக்கொண்டு பக்கத்துக் கடைக்குள் சென்றனர். அங்கிருந்து ஒரே மாதிரியான இரண்டு சட்டைகள் வெவ்வேறு நிறத்தில் எடுத்துக்கொண்டு பின் அங்கேயிருந்த டாபாவில் மத்திய உணவருந்தினர். அம்புஜத்திற்கு வெறும் சாதமும் தயிரும் மட்டும் வாங்கிக் கொடுத்தாள் மிருதுளா. அம்புஜம் அதற்கு தொட்டுக்கொள்ள அவள் செய்த ஊறுகாயிலிருந்து கொஞ்சத்தை ஒரு சின்ன டப்பாவில் போட்டு எடுத்து வந்திருந்தாள் அதைத் தொட்டுக்கொண்டு சாப்பிட அனைவரும் சிரித்துக்கொண்டே அவரவர் ஆர்டர் செய்ததை ரசித்து ருசித்து உண்டனர்.  சாப்பிட்டதுக்கு பில் செட்டில் செய்யும் போது வேனு..

“அத்திம்ஸ் எங்க அம்மா சாப்பாட்டுக்கு தான் ஜாஸ்த்தி சார்ஜ் பண்ணிருப்பா பாருங்கோ”

என கூறியதும் அனைவரும் சிரித்தனர். அப்போது ப்ரவின்…

“மாமி ஸ்பெஷல் ஐட்டம் இல்லையா சாப்ட்டுருக்கா.”

என்று கேலியும், கிண்டலும், சிரிப்புமாக அனைவரும் ஒரு ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தனர். சற்று நேரம் அவர்கள் வாங்கின டிரெஸ் எல்லாம் பார்த்தனர் பின் அவரவர் பெட்டியில் வைத்து அடுக்கத்துவங்கினர். அப்போது மிருதுளா ப்ரவினிடம் ஒரு பையை கொடுத்து அதையும் சேர்த்து பேக் பண்ண சொன்னாள் அதற்கு ப்ரவின்…

“என்னது இது மன்னி?”

“இது இந்த ஊரு ஸ்பெஷல் சுவீட்ஸ் மோஹன்தால் அன்ட் சூரத்தி காரி. இரண்டு சுவீட்டுமே சூப்பரா இருக்கும். அப்பறம் அம்மா அப்பாக்கு புடவை அன்ட் ஷர்ட் இருக்கு இதை எல்லாம் அம்மாட்ட குடுத்துடு”

“மிருதுக்கா சுவீட் ஒன்லீ ஃபார் மாமியாரா. எங்களுக்கு இல்லையா?”

“இதோ இது உனக்கும் அப்பா அம்மாவுக்கும் வச்சுக்கோ இதையும் சேர்த்து பேக் பண்ணிடுமா. இருங்கோ அந்த சுவீட்ஸ் எப்படி இருக்கும்ன்னு தெரிஞ்சுக்க இதோ இந்த டப்பாவை திறங்கோ எல்லாருமா சாப்பிடலாம்” 

என்று கூறி சுவீட் டப்பாவை நவீனிடம் கொடுத்தாள் மிருதுளா. அதை வாங்கி திறந்து அனைவருக்கும் கொடுத்தான் நவீன். 

“வாவ் சூப்பரா இருக்கு இந்த சுவீட் மிருதுக்கா”

“ஆமாம் மன்னி செம டேஸ்ட்டியா இருக்கு.” 

“அம்மா நீயும் சாப்பிடலாம். இதில் எஸன்ஸ் எதுவுமில்லை.”

“சரி ஒரு சின்ன பீஸ் குடு சாப்ட்டு பார்க்கறேன்”

“நல்லாருக்கே இந்த சுவீட். நாம எப்பவும் சாப்டுற நம்ம ஊரு சுவீட்லேந்து ஒரு வித்தியாசமான சுவீட்டா இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.” என்றார் ராமானுஜம்

“அட ஆமாம் நல்லா தான் இருக்கு” என அம்புஜம் இன்னொரு பீஸ் கேட்டு வாங்கி சாப்பிட்டாள். 

ஊருக்கு போட்டுக்கொண்டு போக வேண்டிய டிரஸை மட்டும் வெளியே வைத்துவிட்டு மற்றவைகளை பெட்டிகளில் அடுக்கி எல்லா பேக்கிங்கையும் தயார் செய்து ஒரு ஓரத்தில் வரிசையாக பேக் மற்றும் பெட்டிகளை அடுக்கி வைத்து விட்டு இரவு உணவருந்தி விட்டு அனைவரும் எழுந்ததும் மிருதுளாவும் அம்புஜமும் சாப்பிட அமர்ந்தனர். அப்போது அம்புஜம்..

“மிருது டைம்க்கு சாப்பிடு. நல்லா சாப்பிடு. உடம்ப பார்த்துக்கோ. திங்கட்கிழமை உன்ட்ட இருந்து வர போற நல்ல செய்திக்காக  நான் ஆவலா காத்துண்டிருப்பேன் மறக்காம ஃபோன் பண்ணிச் சொல்லு”

“அது என்ன திங்கட்கிழமை செய்தி மாமி?” என்று ப்ரவின் கேட்க உடனே நவீன்

“அவா ஏதோ பேசிக்கறா உனக்கென்ன டா. நீ ஏன் அவா பேசறதுல உன் மூக்கை நுழைக்கற. பேசாம டிவியைப் பாரு” 

வெளியே ஏதோ மணி அடிக்கும் சத்தம் கேட்டதும் பவினும் வேனுவும் கதவைத்திறந்து பார்த்தனர். உள்ளே வந்து வேனு….

“மணி சத்தம் வேற எதுவும் இல்லை குல்ஃபி வண்டி வந்திருக்கு. எல்லாரும் குல்ஃபி சாப்பிடலாமா? யார்யாருக்கு வேணும்ன்னு சொல்லுங்கோ”

“இந்தா டா வேனு. ஒரு பத்து வாங்கிண்டு வா. வேணுங்கறவா எடுத்துக்கட்டும் மீதியிருந்தா ஃப்ரிஜ்ல வச்சுக்கலாம்” என்று ராமானுஜம் வேனுவிடம் காசு கொடுத்து அனுப்ப வேனுவும் தன் அப்பா சொன்னது போலவே பத்து வாங்கிவந்து அனைவருக்கும் கொடுத்தான். மீதமிருந்த அஞ்சு குல்ஃபியை ஃப்ரிஜில் வைத்துக்கொண்டே….

“அம்மா அன்ட் மிருதுக்கா உங்க ரெண்டு பேரோடதும் சேர்த்து உள்ள வைக்கறேன். நீங்க சாப்ட்டுட்டு எடுத்துக்கோங்கோ”

“தாங்கஸ் டா வேனு. நாங்க அப்பறமா எடுத்துக்கறோம். அம்மா நீ எதுவும் நினைச்சு கவலைப் படாதே. நிச்சயம் ஃபோன் பண்ணறேன். என்ன நீங்க எல்லாரும் போயிட்டா வீடே வெறுச்சோடி இருக்கும்.”

“அதுக்கென்ன பண்ண முடியும் மா. அப்பாக்கு ஆபிஸ் போகணும். வேனுக்கு காலேஜ் போகணும். என்ன பண்ண!”

இருவருமாக பேசிக்கொண்டே உணவருந்தி பின் குல்ஃபியை சாப்பிட்டுக்கொண்டிருக்கையில்….

“மிருதுக்கா ஒரு கேம் கார்ட்ஸ் விளையாடலாமா”

“டேய் வேனு மணி ஒன்பதாச்சுடா”

“அம்மா நாளைக்கு இந்த நேரம் ரெயில்வே ஸ்டேஷன்ல இருப்போம். இன்னைக்கு மட்டும் ஒரு பத்து மணி வரைக்கும் விளையாடலாமே”

“சரி டா வேனு நான் வறேன்”  நவீன் சொல்ல

“நாங்களும் வறோம்” என்றனர் பவினும் ப்ரவினும்.

மெஜாரிட்டி ஆண்கள் பக்கம்  என்பதால் மிருதுளாவும் அம்புஜமும் வேறு வழியின்றி விளையாட சம்மதித்து அவர்களின் சீட்டாட்ட குழுவில் சேர்ந்துக்கொண்டனர். அனைவருமாக இரவு பத்து மணி வரை விளையாடிவிட்டு பின் உறங்க படுத்துக்கொண்டாலும் சில மணி நேரம் அரட்டை அடித்த பின்னரே உறங்கலானார்கள். 

மறுநாள் சனிக்கிழமை அன்று அம்புஜம் விருந்து சமையல் சமைத்தாள். சாம்பார், ரசம், அவியல், இரண்டு பொறியல், பாயசம் என அனைத்தும் சமைத்து ராமானுஜத்திடம் வாழை இலை வீட்டின் பின்னாலிருந்து வெட்டி வரச்சொல்லி அனைவருக்கும் வாழை இலைப் போட்டு சாப்பாடு பரிமாறினாள். அப்போது மிருதுளா…

“என்ன மா இன்னைக்கு ஊருக்கு போற குஷி ல சும்மா சூப்பரா சமச்சிருக்க…இவ்வளவு ஐட்டம்ஸ் பண்ணிருக்க.”

“இல்லமா இன்னைக்கு போனா இனி எப்போ மறுபடியும் வர வாய்ப்பு கிடைக்கும்ன்னு தெரியலை அதுனால என் பொண்ணுக்கும் மாப்ளைக்கும் இப்படி சமைச்சேன் நல்லாருக்கில்லையா!!”

“சூப்பரா இருக்கு மாமி. நீங்க அண்ணா மன்னிக்கு மட்டும் சமச்சேங்கள்ன்னா ஏன் எங்களுக்கும் பரிமாறினேங்கள்” என பவின் கேட்க

“எல்லாருக்குமாக செய்தேன் போறுமா. நன்னாயிருக்கோனோ எல்லாரும் நல்லா சாப்டுங்கோ.”

அனைவரும் சாப்பிட்டப்பின் சற்று நேரம் ஓய்வெடுத்தனர். மாலை நான்கு மணிக்கெல்லாம் காபி குடித்து விட்டு பிரயாணத்துக்கு வேண்டிய சாப்பாட்டை செய்து ஹாலில் கொண்டு வந்து வைத்தாள் அம்புஜம். அவற்றை ஐந்து ஐந்து பொட்டலங்களாக கட்டி, பாட்டில்களில் தண்ணீர் நிறப்பி, வடாமை ஒரு கவரில் போட்டு கட்டி, எல்லாவற்றையும் ஒரு கட்டப்பையில் அடுக்கி வைத்தார் ராமானுஜம். 

ஒருவர் பின் ஒருவராக குளித்து கிளம்ப சரியாக இருந்தது. நவீன் தனது நண்பன் ஓம்னி வேனை எடுத்து வந்து அதில் பெட்டிப் படுக்கைகள் என அனைத்து சாமான்களையும் ஏற்றினார்கள் பவின், ப்ரவின் மற்றும் வேனு. எல்லாரும் தயார் ஆனதும் வேனில் ஏறி ரெயில்வே ஸ்டேஷனை எழரை மணிக்கு சென்றடைந்தனர். அங்கே ஸ்டான்டில் வண்டியை பார்க் செய்து விட்டு அவரவர்  சாமான்களை அவரவர் தூக்கிக்கொண்டு அவர்கள் செல்லவிருக்கு ரெயில் நிற்கும் ப்ளாட்பாரத்திற்கு எட்டு மணிக்கு சென்றனர். அங்கே அவர்கள் ரெயில் நின்றுக்கொண்டிருந்தது. அதில் பொருட்களை ஏற்றி செட் செய்தப்பின் வண்டியிலிருந்து அனைவருமாக கீழே இறங்கி வண்டி கிளம்ப பதினைந்து நிமிடங்கள் இருப்பதால் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது மிருதுளா தனது அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு மௌனமாக இருந்தாள். அவள் கண்களில் கண்ணீர் மடை திறக்க காத்திருக்கும் நதி போல உருண்டோட காத்திருந்தது. அதை கவனித்த அம்புஜம் தன் மகளின் கையை தட்டிக் கொடுத்துக் கொண்டே ….

“சரி மா… சரி ரெண்டு பேரும் நல்லா சந்தோஷமா இருங்கோ. மாப்ள எங்க பொண்ண நல்லா தான் பார்த்துக்கறேங்கள். இதே போல எப்பவும் அவள பார்த்துக்கோங்கோ. அவள சந்தோஷமா வச்சுக்கோங்கோ.” 

ரெயில் கிளம்ப போகிறது என்பதற்கான  சங்கு ஊத அனைவரும் வேகமாக ரெயிலில் ஏறி அவரவர் இருக்கையில் அமர்ந்ததும் ரெயில் மெல்ல நகர ஆரம்பித்தது….

“பை அண்ணா மன்னி “

“அப்பா அம்மாவ கேட்டதா சொல்லுங்கோ பவின் அன்ட் ப்ரவின்” என்றாள் மிருதுளா

“பை மிருதுக்கா.. பை அத்திம்ஸ்” 

“பை டா வேனு. டேக் கேர்.”

“அம்மா அம்மா அம்மா பை !! அப்பா பை!”

“பை மா மிருது. பை மாப்ள” என்றாள் அம்புஜம் கண்ணில் கண்ணீரோடு

“நாங்க போயிட்டு வறோம் மாப்ள. வறோம் மா மிருது” என்று கறகறத்த குரலில் சொன்னார் ராமானுஜம். 

“ஓகே எந்த கவலையும் இல்லாம போயிட்டு வாங்கோ” என்றான் நவீன் தனது மாமனார் மற்றும் மாமியாரிடம்.

ரெயில் கொஞ்சம் வேகம் எடுக்க மெல்ல மிருதுளா கைகளிலிருந்து அவள் அம்மாவின் கை நழுவியது. அம்புஜம் முடிந்த வரை தனது கையை ஜன்னல் வெளியே விட்டு ஆட்டிக்கொண்டே சென்றாள். சிறிது நேரத்தில் கும்பலாக இரந்த அந்த ப்ளாட்பாரம் ஆள் நடமாட்டமில்லாமல் ஆனது. அதுவரை மிருதுளா அங்கேயே அமர்ந்து அழ அவளை சமாதானம் படுத்த மிகவும் சிரம பட்ட நவீன்….

“மிருது எல்லாரும் போயாச்சு ப்ளாட்பாரமே காலியா இருக்கு. ரெயில் போய் இருபது நிமிஷமாச்சு. அது தான் இன்னும் மூணு மாசததுல நாமளே ஊருக்கு போக போறோமே அப்பறம் என்ன!! வா கண்ண தொடச்சுக்கோ. மணி வேற ஆகறது. நாம வந்த வண்டியை  திருப்பிக்குடுக்கனுமில்லையா. எழுந்திரி மிருது போகலாம்.”

மிருதுளா சமாதானம் ஆகாவிட்டாலும் வீட்டுக்கு போயாக வேண்டுமே என்றோ!!! இல்லை தங்களுக்குதவிய நண்பனின் வண்டியை திருப்பி நேரத்துக்கு குடுக்க வேண்டுமென்றோ!! இரவுநேரம் வேற  ஆகிறதென்றோ!!!  ஏதோ ஒரு காரணத்தினாலோ அல்லது இவ்வனைத்து காரணத்தினாலோ சட்டென கண்களைத் துடைத்துக்கொண்டு நவீனுடன் வீட்டுக்கு புறப்பட்டாள் ஆனால் அவள் கண்கள் வற்றவில்லை அதில் கண்ணீர் பெருக்கெடுத்துக்கொண்டே தான் இருந்தது.

அவர்கள் கேம்ப்புக்குள் வந்ததும் நேராக வண்டியை நவீன் நண்பனிடம் ஒப்படைத்து விட்டு இருவருமாக நடந்து வீட்டுக்குச் செல்லும் போது …மிருதுளா …

“இவா எல்லாரும் ஏன் வரணும், நாம எல்லாருமாக ஏன் அவ்வளவு ஜாலியா இருந்திருக்கனும் அப்பறம் ஏன் இப்படி நம்மள அம்போன்னு விட்டுட்டு அவா எல்லாரும் கிளம்பி போகணும்?”

“அது தான் மா லைஃப் மிருது. இனி இப்படி தான் எப்பவாவது எல்லாருமா நம்மள பார்க்க, நம்மளோட இருக்க வருவா அப்புறம் கிளம்பி போவா. நீ அவா வந்துட்டு போற ஒவ்வொரு தடவையும் இப்படி தான் அழப்போறயா என்ன?” 

“மனசு ரொம்ப சங்கடப்படறது நவீ. எனக்கு வீட்டுக்குள்ள போகவே என்னவோ மாதிரி இருக்கு. யாருமே இல்லாத வீடு போல தோணும்”

” மூணு வாரத்துக்கு முன்னாடி வரை நம்ம ரெண்டு பேரு மட்டும் தானே இருந்தோம் அப்போ பிடிச்சிருந்தது இல்ல அது மாதிரிதான் இப்போவும். இங்க பாரு மிருது யாரு வேணும்னாலும் நம்ம லைஃப் ல வரலாம் போகலாம் ஆனா கடைசி வரைக்கும் இனி நாம மட்டும் தான் புரியறதா?”

“அதெல்லாம் புரியறது ஆனா மனசு அதை ஏத்துக்க மாட்டேங்கறது நவீ”

“இப்போ அப்படி தான் இருக்கும் இன்னும் சில வருஷம் போனா மனசு புரிஞ்சுக்கும் அதை ஏத்துக்கவும் செய்யும் அதுவரை கொஞ்சம் காத்திருக்க தான் வேணும். உன் மனசும் நானும்”

“ஆமாம் ஆமாம் பார்ப்போம் பார்ப்போம்”

என்று கூறினாலும் அவள்  கண்களிலிருந்து கண்ணீர் பல நாட்களாக ஸ்டாக் வைத்திருந்தது போல பொல பொலவென உரண்டோடிக்கொண்டே தான் இருந்தது. அதை பார்த்த நவீன் மீண்டும்…

“என்ன மிருது உனக்குள்ளேயே நிறைய உறுப்புகள் சரியான குவார்டினேஷனே இல்லாம இருக்கு !!!! வாய் பார்க்கலாம்ன்னு சொல்லறது ஆனா கண்ணு அதை ஏத்துக்காம நிக்காம மழை பொழிஞ்சிண்டே  இருக்கே. சரி மன்டே காலை ல டாக்டர்ட்ட போகணும் ஞாபகம் இருக்கா?” 

என்று பேச்சை திசைத் திருப்ப வீடும் வந்தது. வீட்டைத் திறந்தான் நவீன். இருவருமாக உள்ளே நுழைய மிருதுளாவிற்கு அவள் அப்பா அம்மா மற்றும் தம்பிகள் ஹாலில் உட்கார்ந்துக் கொண்டு இருப்பது போல தெரிய மீண்டும் அவள் கண் கலங்கினாள். ஆனாலும் அதை துடைத்துக் கொண்டே…

“ஓ!!! நல்லா ஞாபகம் இருக்கே. ஐ ஆம் வேயிட்டிங் ஃபார் மன்டே நவீ” 

இருவரும் முகம் கை கால் அலம்பி விட்டு சற்று நேரம் டிவி பார்த்தப் பின் அம்புஜம் அவர்களுக்கும் சுட்டு வைத்திருந்த சப்பாத்தியையும் மசாலாவையும் சாப்பிட்டனர். அதே குல்ஃபி காரன் மணி அடிக்க அதைக் கேட்ட மிருதுளா…

“ஹேய் நவீ நேத்து வேனு வாங்கின குல்ஃபி ப்ரிஜ்ல இருக்கு சாப்பிடலாமா!”

“ஓ எஸ்” என கூறிக்கொண்டே ஃப்ரிஜை திறந்துப் பார்த்தான் நவீன் ஆனால் அதில் குல்ஃபி இருக்கவில்லை. 

“அட இங்கே ஒரு குல்ஃபி கூட இல்லை மிருது எப்போ யாரு சாப்ட்டானே தெரியலையே நாமளும் இங்கே இருந்திருக்கோம் பாரேன்!”

“ஓ !!! ஆமாம் ஆமாம் இன்னைக்கு மத்தியானம் பசங்க சாப்ட்டா. சாரி நான் தான் மறந்துட்டேன்”

“சரி இரு நான் போய் ரெண்டு வாங்கிண்டு வரேன்”

நவீன் குல்ஃபி வாங்கி வர… மிருதுளாவும் நவீனுமாக திரைப்படம் பார்த்துக்கொண்டே அதை உண்டு முடித்து பின் உறங்க படுத்துக்கொண்டனர். மிருதுளா திரும்பி படுத்துக் கொண்டு மெல்ல அழுவதை கவனித்த நவீன் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு ….

“டோன்ட் வரி மிருது ஜஸ்ட் மூணு மாசம் தான் வீ வில் கோ தேர் அன்ட் பி வித் தெம். நீ சமாதானம் ஆயிட்டன்னு நினைச்சேன் மறுபடியும் ஆரம்பிக்கற. ப்ளீஸ் ஜஸ்ட் ரிலாக்ஸ் அன்ட் ஸ்லீப்.”

என கூற மிருதுளாவும் கண்களைத் துடைத்துக்கொண்டு நவீனை கட்டிக்கொண்டு உறங்கினாள். 

ஆக மீதமிருந்த ஐந்து நாட்களும் விருந்தினருடன் சந்தோஷமாக கழித்ததாலும் ஸ்பெஷல் விருந்தினரான பவின் அன்ட் ப்ரவினும் ஏதும் அனாவசியமாக பேசாததினாலும் வாசகர்களாகிய நமக்கு சுவாரஸ்யம் கொஞ்சம் குறைந்தது போல இருந்தாலும்… உணர்ச்சிகள் பொங்கி வழிந்ததை நம்மால் உணர முடிந்தது இந்த வாரம்.  உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத சுமையாகிவிடும், ரசனை இல்லாமல் போய் விடும் பின் நல்லவை நமது கண்களுக்கு புலப்படாமல் இருந்துவிடும். நவீன் கூறியது போல திருமணம் என்ற பந்தம் ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் கடைசி வரை வரக்கூடிய ஒரே பந்தமாகும். 

இவர்களும் அது போலவே இருந்தால் நல்லது தான் இல்லையா? 

தொடரும்…….

பசங்க மூணு பேரும் டிரிப் போகும் போது வழியில் உண்பதற்கு சிப்ஸ் மற்றும் சில நொறுக்கு தீணிகளை கடையிலிருந்து வாங்கி வந்தனர். வீட்டில் இருந்துக்கொண்டு இது போன்ற தீணிகளை உண்பதற்கும் வெளியே சுற்றுலா போகும் போது உண்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என்பது பசங்களின் அபிப்பிராயம் மட்டுமில்லை நமக்கே அப்படிதான் இல்லையா நண்பர்களே.  ஆனால் அதை பார்த்த ராமானுஜம்…

“ஏன்டா பசங்களா இங்க நம்ம ஊர்லேந்து கொண்டு வந்த நொறுக்கு தீணிகளே  இருக்கு இதில இன்னும் வேற வாங்கிண்டு வந்திருக்கேங்கள்! அதே போறாதோ?”

“அப்பா அதையே தான் மூணு வாரமா சாப்பிட்டோம். ஒரு நாளைக்கு சேஞ் இருக்கட்டுமே”

“ஆமாம் மாமா வேனு சொல்லறா மாதிரி முறுக்கு, ரிப்பன் பக்கோடா, மிச்சர் சாப்ட்டு சாப்ட்டு போர் அடிச்சுப்போச்சு. எங்களுக்காக ஒரு நூறு ரூபாய் செலவழிக்க மாட்டேளா என்ன!”

“செலவழிக்கறத பத்தி நினைச்சிருந்தேனா வேனுட்ட காசு குடுத்தனுப்பியிருக்கவே மாட்டேனே!!! ஆத்துல பட்சணங்கள் இருக்கும் போது ஏன் வெளியே வாங்கினேங்கள் ன்னு தான் கேட்கறேன்….சாப்ட்டு அலுத்துப்போச்சுன்னு சொல்லறேங்கள் ஓகே ஒத்துக்கறேன். எங்களுக்கெல்லாம் கிடைச்சா மாதிரி வருஷத்துல ஒரு தடவை  மட்டுமே பட்சணம் செய்து கொடுத்தா அது அலுத்துப்போகாது அதவிட்டுட்டு எப்ப வேணுமோ அப்போ எல்லாம் கிடைச்சா இப்படிதான் இருக்கும். உங்கள சொல்லி தப்பே இல்லை.”

“அப்பா உங்க காலம் வேற. அப்போ எல்லாம் ஒரு குடும்பத்தில கொறஞ்சது ஏழு அல்லது எட்டு பேர் இருந்தேங்கள் அத்தனை பேருக்கும் அடிக்கடியா பட்சணங்கள் பண்ணித்தர முடியும்? அதனால வருஷத்துல ஒரு தடவை செஞ்சா …ஆனா இப்போ ஒரு குடும்பதுல நாலு பேரு தான் ஸோ எப்போ தோணறதோ அப்போ எல்லாம் செய்து சாப்படறா”

“அது வாஸ்தவம் தான்”

“சரி சரி எல்லாரும் சீக்கிரம் சாப்ட்டு தூங்கினாதானே நாளைக்கு காலங்காத்தால எழுந்துக்க முடியும். இப்படி பேசிண்டே இருந்தா அப்பறம் எல்லாருமா தூங்கிப் போயிடுவேங்கள் இல்லாட்டி ரெண்டு இடம் பார்த்ததும் டையர்டா ஆகிடுவேங்கள். அம்மா நீ இன்னும் கிட்சன்ல என்ன பண்ணிண்டிருக்காய்? உனக்கும் தான் சொல்லறேன்”

“இதோ ஆயிடுத்து வந்துடறேன். வந்தாச்சு போறுமா”

“என்ன மெனு கட்டிண்டு போற மா நீ”

“காலைக்கு இட்டிலியும் கொத்தமல்லி சட்னியும், மத்தியானத்துக்கு  புளியோதரையும் தயிர் சாதமும்,  வடாமும் கட்டிண்டிருக்கேன். எதுக்கும் எக்ஸ்ட்ராவா நாலு பொட்டலமும் எடுத்துண்டிருக்கேன்….இவாளுக்கு யாருக்காவது வேணும்னாலும் கொடுக்கலாமேன்னு…உங்களுக்கும் சட்னி சாதமெல்லாம் இருக்கு.  இட்டிலி மட்டும் காலைல வச்சுக்கோ. வடாம் அந்த நீல கலர் மூடி போட்ட டப்பால போட்டு வச்சிருக்கேன்.  ஒண்ணும் செஞ்சிண்டிருக்க வேண்டாம். காபி அன்ட் டீ மட்டும் போட்டுக்கோ போறும்.”

“அம்மா நீ என்னத்த கட்டிண்டிருக்கன்னு தானே மிருதுக்கா கேட்டா!!!! நீ என்னடான்னா எல்லாருக்கும் செய்து எடுத்துண்டு வர மாதிரி தெரியறது”

“டேய் அது தான் டா நம்ம அம்மா!!”

“மாமி நாங்க அவா தர்ற ரொட்டி சப்ஜீ எல்லாம் சாப்பிடுவோமே என்னத்துக்கு எங்களுக்கும் எடுத்துக்கறேங்கள்?”

“சரி பா நீங்க எல்லாரும் அதையே சாப்டுங்கோ நான் இதை தான் சாப்பிடனும்னு யாரையும் வற்புறுத்தலையே. ஒரு வேள அது நல்லா இல்லாட்டி உங்கள எல்லாரையும் விட்டுட்டு நான் மட்டும் சாப்ட முடியுமா?”

“ஆமாம் சாப்பிடனும். அவா தான் அவளோ பேசறா இல்லையா. அப்போ நீங்க உங்களுக்கு மட்டும் எடுத்துக்கணும் . கேட்டாலும் கொடுக்காதீங்கோ”

“டேய் பசங்களா நாளைக்கு சப்போஸ் அவா சாப்பாடு பிடிக்கலைன்னா அப்பறம் பட்டினியாதான் சுத்த வேண்டி வரும் அதனால பேசாம எங்க அம்மா எடுத்துக்கறதை எடுத்துக்கட்டும் வேணும்ன்னா சாப்பிடுங்கோ இல்லாட்டி அது கெட்டு ஒண்ணும் போகாது வந்துட்டு சாப்பிட்டுக்கோங்கோ”

“மிருதுக்கா நீ சொல்லறதும் கரெக்ட் தான் அம்மா நீ எடுத்துக்கறத எடுத்துக்கோ மா. நாங்க ஒண்ணுமே சொல்ல மாட்டோம் என்ன சொல்லறேங்கள் பவின் அன்ட் ப்ரவின்?”

“ஆமாம் ஆமாம் மாமி நீங்க எடுத்துக்கறத எடுத்துக்கோங்கோ.”

“அது!!! எதையுமே பேசறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசுங்கப்பா..சரி சரி ஆல் ஆஃப் யூ குட் நைட்”

“குட் நைட்” என எல்லாரும் கூறினர். 

“யாராவது அலாரம் வச்சிருக்கேங்களா?” என்றான் ப்ரவின் 

“என்னோட அலாரம் என் மண்டைக்குள்ள இருக்கு டான்னு எல்லாரையும் எழுப்பிடறேன் கவலை படாம தூங்குங்கோ” என்றார் ராமானுஜம்.

அவர் கூறியது போலவே மூன்று மணிக்கெல்லாம் எழுந்து அம்புஜத்தையும் எழுப்பி இருவரும் ஒருவர் பின் ஒருவராக குளித்து முடித்ததும் பசங்களை எழுப்பினார்கள். அவர்களும் ஒவ்வொருவராக குளித்து வந்ததும் நவீனும் மிருதுளாவும் எழுந்து பல் துலக்கி ஃப்ரெஷ் ஆகியதும் அனைவருக்கும் காபி போட்டுக் கொடுத்தாள் அம்புஜம். எல்லோருமாக குளித்து, காபி அருந்தி முடித்து கிளம்ப சரியாக மணி நாலரை ஆனது. பஸ்ஸில் ஏறுவதற்காக மெயின்கேட்டுக்கு நடக்கலானார்கள். அவர்களை வழியனுப்ப  நவீனும் மிருதுளாவும் வீட்டின் கதவை தாழிட்டு அவர்களுடன் கிளம்பினார்கள்.  கேட் ஐ சென்றடையும் போது மணி நாலே முக்கால். பஸ் காத்துக்கொண்டிருந்தது. இவர்கள் பஸ் ஸ்டாப் சென்றடைவும் நவீனின் நண்பன் சதீஷும் அவர் குடும்பத்தினருடன் அங்கு வரவும் சரியாக இருந்தது. நவீன் அவர்களை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தப் பின் தனது குடும்பத்தினரையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளும் படி சதீஷிடம் சொல்ல அவனும் நவீனிடம் அதை பற்றி எல்லாம் கவலையின்றி இருக்குமாறு சொல்லிக்கொண்டிருக்கையில் பஸ் டிரைவர் அனைவரையும் பஸ்ஸினுள் ஏறச் சொன்னார். எல்லோருமாக ஏறி அவரவருக்கு பிடித்த இடத்தில் அமர்ந்தனர். நவீனுக்கும் மிருதுளாவும் அனைவரும் டாட்டா காட்ட பஸ் புறப்பட்டுச் சென்றது. 

நவீனும் மிருதுளாவும் வீட்டை நோக்கி பேசிக்கொண்டே மெல்ல நடந்தார்கள். அப்போது நவீன்…

“உனக்கு போக முடியலையேன்னு கவலையா மிருது?”

“நோ நாட் அட் ஆல் நவீ. அதவிட முக்கியமான சந்தோஷத்துக்காக நான் காத்துண்டு இருக்கும் போது இதுக்கெல்லாம் கவலை ஏன் படணும்.  ஏன் உங்களுக்கு போயிருக்கலாம்ன்னு தோணறதோ?” 

“நோ!! நோ !!! எனக்கு மூணு வாரத்துக்கப்பறம் இப்போ தான் என் வைஃப் கூட மட்டும் இருக்க டைம் கிடைச்சிருக்கு… இதை விட்டுட்டு நான் ஏன் போகணும்னு நினைக்கப்போறேன்”

“ஹேய் ஆமா இல்ல!!!! ஸோ இன்னைக்கு நாம மட்டும் தான் இருக்கப் போறோம். வாவ்!! இந்த மூணு வாரமா நாம விலகி இருந்தது ஏதோ பல வருஷம் பிரிஞ்சு இருந்த மாதிரி ஒரு ஃபீல்.”

“ஆமாம். ஸோ ட்ரூ. லெட் அஸ் செலிப்ரேட் திஸ் டே டுகெதர்.”

“டாக்டர் சொன்னது ஞாபகம் இருந்தா நல்லது”

“ஹேய் அதெல்லாம் நல்லாவே ஞாபகம் இருக்கு மேடம்.”

“எவ்வளவு ஆச்சர்யமா இருக்கு நமக்குள்ளேயிருந்து நமக்குன்னு ஒரு புது உயிர் உருவாகி அது இந்த பூமிக்கு வந்து நம்மை பார்த்து சிரித்து, அழுது, விளையாடி, வளர்ந்து !!! வாவ்!!! காட் ஈஸ் ரியலீ கிரேட் பா. என்ன அழகான ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதில் மனிதர்களை ஒரு இயந்திரம் போல படைத்து அவர்களுக்கு எல்லா வகையான உணர்வுகளும் கொடுத்து மெல்ல மெல்ல நம்மை பரமபதம் காய்கள் போல நகர்த்தி ஒரு அழகான ஆட்டம் ஆடுகிறார்? இல்ல!!!”

“ஏய் சூப்பர் எக்ப்ளநேஷன் ஃபார் காட்ஸ் க்ரியேஷன் மிருது!! ஆசம்!!!”

“என்னை புகழ்ந்தது போதும் ஆம் வந்தாச்சு கதவ தொறங்கோ!”

“உண்மையா மா. நீ கொடுத்த இந்த விரிவாக்கம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.”

இருவருமாக பல நாள் கழித்து அவர்களுக்கென்று கிடைத்த  தனிமையை அனுபவித்து பின் குளித்து காலை உணவு சாப்பிட அமர்ந்தனர். மிருதுளா சுட சுட ஆவி பறக்க இரு தட்டுகளில் நாலு நாலு இட்டிலியும் அவள் அம்மா செய்து வைத்திருந்த கொத்தமல்லி சட்டினியும் போட்டுக்கொண்டு ஹாலுக்கு வந்து ஒன்றை நவீனிடம் கொடுத்துவிட்டு மீண்டும் அடுப்படிக்குள் சென்று இட்டிலி வைத்திருந்த பாத்திரத்தை எடுத்து வந்து கீழே வைத்து விட்டு சாப்பிடலானாள். அப்போது நவீன்….

“இட்டிலி செம சாஃப்ட்டா இருக்கு”

“ஹலோ இட்டிலினா சாஃப்ட்டா தான் இருக்கும்”

“எங்க ஆத்துல சாப்ட்டயே அது சாஃப்ட்டாவா இருந்தது. இவ்வளோ வருஷமா அது மாதிரி தான் நான் சாப்டிருக்கேன் ஆனா இது உண்மையாவே பஞ்சு மாதிரி இருக்கு மிருது.”

“உளுந்து அளவு கம்மியான இட்டிலி கல்லு மாதிரி தான் ஆகும். நம்ம ஆத்துல!!! அச்சோ!!! அந்த ஒரு இட்டிலய தேங்காய் சட்னில ஊர வச்சும் அது அப்படியே தான் இருந்தது. இப்படி பஞ்சு மாதிரி இட்டிலிய  நான் இருப்பத்திரண்டு வருஷமா சாப்பிட்டு கல்யாணத்துக்கப்பறம் உங்க அம்மா பண்ணின இட்லியோட ப்ரூசிலீ மாதிரி ஃபைட் பண்ணி ரொம்ப சிரமப்பட்டுப் போயிட்டேன் அத சாப்பிட. ஆனா அத சொன்னா உங்க அம்மா மனசு கஷ்ட்டப்படுமேன்னுட்டு சொல்லாம விட்டுட்டேன்”

“இது என்ன சட்டினி சொன்னா உங்க அம்மா?”

“கொத்தமல்லி சட்டினி. ஏன் கேட்கறேங்கள்?”

“இதுவும் ரொம்ப சூப்பரா இருக்கு. இது மாதிரி சட்னி நான் சாப்ட்டதே இல்லை. யூ அன்ட் வேனு ஆர் லக்கி”

“இதை என் அம்மா கேட்டா சந்தோஷப்படுவா. நான் உங்களுக்கு வித வித மா செய்துத்தறேன் யூ டோன்ட் வரி மை ஹப்பி. யூ டூ ஆர் லக்கி டூ ஹாவ் மீ…எப்புடி”

“நன்றி வைஃபி. ஷுவர் ஆம் நவ் லக்கி டூ. நீயும் சாப்பிடு”

“இதோ சாப்டுண்டே தானே பேசறேன்”

உணவருந்திய பின் இருவருமாக டிவியில் ஒளிபரப்பான திரைப்படத்தைப் பார்த்தனர். வீட்டுக்கு டிவி வந்த நாளிலிருந்து அன்று தான் அவர்கள் கையில் ரிமோர்ட் கிடைத்துள்ளது. அதுவரை பவின் தான் எப்போழுதும் அதை வைத்திருந்தான். அவன் தூங்கும் போது தான் அது டிவி அருகே இருக்கும். அன்றிரவு ஒரு எட்டு மணி போல மீண்டும் ஒரு நடை நடந்து அந்த வளாகத்தின் கேட் அருகே சென்று அங்கேயே நடந்துக்கொண்டே டூர் போனவர்கள் திரும்பி வர காத்திருந்தனர். பஸ் சரியாக எட்டரை மணிக்கு வந்து சேர்ந்தது. அனைவரும் குஷியாக இறங்கினார்கள். பஸ்ஸினுள் ஒரே பேச்சு சத்தமும் சிரிப்பு சத்தமும் தான் கேட்டது. அனைவரும் இறங்கியதும் ஒன்றாக கோரஸாக டிரைவருக்கும் அவர் அஸிஸ்ட்டென்டுக்கும் நன்றி தெரிவித்தனர். சதீஷ் நவீனைப் பார்த்து…

“நவீன் இதோ உன் குடும்பத்தினரை உன்ட்ட பத்திரமா ஒப்படைச்சிட்டேன் பா.”

“ஹேய் ரொம்ப ரொம்ப தாங்கஸ் டா”

“இதுக்கெல்லாம் எதுக்கு டா தாங்க்ஸ் சொல்லிகிட்டு. நான் சும்மா ஜோக் அடிச்சேன். ஆனா ஒரு விஷயம் உன்ட்ட சொல்லணும் நவீன். உன் இன் லாஸ் மூணு பேரும் ரொம்ப நல்லவங்க பா. யூ ஆர் ரியலி கிஃப்ட்டெட் டூ ஹாவ் தெம் இன் யூவர் லைஃப். உன் தம்பிகளும் நல்ல பசங்க தான் …..உண்மைய சொல்லனும்னா அவங்க கொஞ்சம் செல்ஃபிஷோன்னு மனசுக்கு படுதுப்பா. நாங்க எல்லாரும் சூப்பரா என்ஜாய் பண்ணினோம். அன்ட் மாமி செய்து கொண்டு வந்த சாஃப்ட் இட்டிலி அன்ட் அந்த சட்னி வாஸ் ஆசம். வீ ஆல் லவ்டு இட். சரி சரி நாம அடுத்த வாரம் ஆபீஸ்ல மிச்சத்த பேசிக்கலாம் இப்போ அவங்க கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிட்டு   நாங்க எங்க வீட்டுக்கு கிளம்பறோம் வா”

என அனைவரும் ஒருவருக்கொருவர் பை சொல்லி விடைப்பெற்று அங்கிருந்து அவரவர் வீட்டிற்கு நடக்கலானார்கள். அப்போது நவீன் அம்புஜத்திடம்…

“என்ன உங்க கொத்தமல்லி சட்னி செம ஃபேமஸ் ஆயிடுத்துப் போல”

“அப்படியா சொல்லறேங்கள்”

“ஆமாம் அத்திம்ஸ் காலை ல அவா பூரியும் சப்ஜியும் கொடுத்தா ஆனா நாலு நாலு தான் தந்தா ஸோ அம்மா கொண்டு வந்த இட்டிலியையும் சட்னியையும் எல்லாருமா ஷேர் பண்ணிண்டோம்.” 

“நேத்து என்னவோ சில பேரு கிண்டல் அடிச்சா!!! அவா எல்லாம் எங்க போணா இப்போ?” என்று மிருதுளா கேட்க அதற்கு பவின்

“அவாளும் லைன்ல நிண்ணு இட்டிலியும் சட்னியும் வாங்கி சாப்ட்டா”

என்று சொல்ல அனைவரும் சிரிப்பு மழையில் நனைந்தனர்.

“சரி அம்மா நீ கொண்டு போன சாப்பாட்டில் மிச்சமிருக்கா ஏன்னா அதை தானே நைட்க்கு எல்லாரும் சாப்பிடறதா சொன்னா!! அதுனால கேட்டேன்”

“ஒண்ணும் மிச்சமாகலை எல்லாம் தீர்ந்துடுத்து. அப்போ நைட்டுக்கு என்னவாக்கும் டின்னர்?”

“மிருதுக்கா ஷால் வீ கோ டூ அவர் ரோஹித் டாபா?”

என்று வேனு கேட்டதும் மிருதுளா நவீனைப் பார்த்தாள் அவனும் சம்மதிக்க அனைவருமாக டாபா சென்றனர். அங்கே மிருது அம்புஜத்தைப் பார்த்தே…

“அம்மா நீ என்னத சாப்பிடுவ?”

“எனக்கு ஒண்ணும் வேண்டாம் மா. மத்தியானம் சாப்ட் புளிசாதமே எறுக்களிச்சிண்டிருக்கு.”

“மிருதுக்கா …இல்லாட்டி நம்ம அம்மா அப்படியே ரொட்டி சப்ஜீ எல்லாம் சாப்ட்ருவா பாரு…அட போ க்கா”

“அதுவும் சரிதான் டா வேனு”

“எனக்கு ஒரு லைம் சோடா கிடைக்குமா? அது மட்டும் போதும்” 

“நிச்சயம் கிடைக்கும் இருங்கோ நான் ஆர்டர் பண்ணறேன்” என நவீன் ஆர்டர் பண்ணிக் கொடுத்தான்.

அனைவரும் சென்று பார்த்த இடங்களைப் பற்றியும், பிரயாணம் பற்றியும் டாபாவில் பேச ஆரம்பித்து வீட்டிற்குச் சென்று உறங்கும் வரை அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்.  அப்போது மிருதுளா ப்ரவினிடம்….

“என்ன ப்ரவின் இப்போ உன் நண்பர்கள்ட்ட சொல்லிக்க விஷயம் கிடைத்திருக்குமே. ஹாப்பியா”

“ஓ எஸ் !!! நிறையா பார்த்தேன் அன்ட் நிறையா விஷயங்கள்  இருக்கு சொல்ல”

“அப்பாடா ப்ரவின் இனி திருப்தியா ஊருக்கு கிளம்புவான்” என்றான் நவீன்.

“என்ன இன்றய டே என்ட் முடிவில் நான் தான் டாப்பிக் ஆஃப் டிஸ்கஷனா. பேசாம எல்லாரும் தூங்குங்கப்பா. குட் நைட்”

தொடரும்…..