ரம்யா சித்தி வீட்டிலிருந்து வந்த பின் உறங்க போகும் வரை நவீனின் கோபத்தால் வீட்டினுள் ஒரு இறுக்கமான  சூழல் நிலவியது. நவீன்…பவின் மற்றும் வேனுவுடன் சற்று நேரம் பேசிவிட்டு பின் தூங்கலானான். மிருதுளாவிற்கு தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். அவள் மனதில் பல கேள்விகள் மீண்டும் மீண்டும் உதித்து அவளின் தூக்கத்தை துரத்தியடித்தது.

“ஒரே மாதிரியான விஷயம் அதை ரம்யா சித்தி சொன்னால் ஜோக், நான் சொன்னால் பெரிய குற்றமா ? அது ஏன்? இதில் எந்த வித நியாயமும் இல்லையே? பெரியவர்கள் என்றால் எப்படி வேண்டுமானாலும் பேசலாமா? ஆனால் ரம்யா சித்தி போன முறை நான் சென்றபோது பழகியதுக்கும் இந்த முறை பழகியதிலும் நிறைய வேறுபாடு தெரிகிறதே? அது ஏன்? ஒரு வேளை ஊரிலிருக்கும் நம்ம மூத்த தம்பதிகளின் பங்கு இருக்குமோ? நிச்சயம் இருக்கும். ஏனெனில் போன சனிக்கிழமை அவர்களுடன் ஃபோனில் பேசிய போது ரம்யாட்ட பேசினோம்ன்னு சொல்லிவிட்டு உடனே பேச்சை மாற்றினார்களே!!!!… ரம்யா சித்தியின் இந்த மாற்றம் அப்படிதான் நினைக்க தோன்றுகிறது….அது எப்படி நான் நிம்மதியா சந்தோஷமா என் பெற்றோருடன் இருப்பது!! அது அவர்களைப் பொறுத்தவரை பெரிய தவறாயிற்றே. இதை நான் எப்படி நவீனுக்கு சொல்லிப் புரிய வைக்கப் போகிறேனோ !!!!அந்த அம்மன் தான் எனக்கு இதில் உதவி செய்யணும்….“

என்று கடவுள் மீது பாரத்தை வைத்ததும் மெல்ல அவளது விழிகள் மூட, உறக்கம் தொற்றிக்கொண்டது. 

காலை கதிரவன் எழுந்து பல மணி நேரம் ஆகியும் மிருதுளா எழவில்லை. அம்புஜம் தன் மகளை தொந்தரவு செய்யாமல் அவளே டிக்காக்ஷன் போட்டு காபி வைத்து ராமானுஜத்துக்கும், நவீனுக்கும் கொடுத்து தானும் ஒரு தம்ளர் காபியுடன் ஹாலில் அமர்ந்தாள். மிருதுளா மெல்ல கண் விழித்துப் பார்த்தாள். அம்மா, அப்பா மற்றும் கணவர் மூவருமாக அமர்ந்து காபி அருந்துவதைப் பார்த்துவிட்டு சட்டென்று எழுந்து…

“மணி என்ன ஆச்சு அம்மா“

“மணி ஏழாக போறது மிருது“

“ஓஹோ இவ்வளவு நேரம் தூங்கிட்டேனே!!! எழுப்பிருக்கலாம் இல்லையா” 

“நீ நல்லா தூங்கிண்டிருந்த மா அது தான் எழுப்ப தோணலை..நீ போய் ப்ரஷ் பண்ணியுட்டு வா உனக்கும் காபி போட்டுத் தரேன்“

“ஓகே நீ போட்டு வை நான் இதோ அஞ்சே நிமிஷத்துல வந்துடுவேன்“

என்று கூறிக்கொண்டே நவீனை ஒரு பார்வைப் பார்த்தாள் ஆனால் நவீன் அவளை கண்டுக் கொள்ளவில்லை. அதில் மிகவும் மனவேதனை அடைந்தாள் மிருதுளா. காபி குடித்துவிட்டு மடமடவென வேலையில் இறங்கினாள். காலை டிபன் செய்து மத்திய உணவு செய்து முடிப்பதற்குள் நவீன் ஆபீஸுக்கு ரெடி ஆகி விட்டான். அவன் அம்புஜத்திடம்..

“எனக்கு டிபன் மட்டும் போதும். லஞ்ச் ஆபீஸ்ல சாப்பிட்டுக்கறேன் அவள அவசரப்படாம செய்யச் சொல்லுங்கோ“

“ஏன் அத என்கிட்ட சொல்ல மாட்டேங்களோ! இந்தாங்கோ டிபன். நீங்க உங்க மாமியார்கிட்ட சொன்ன மாதிரி மத்திய சாப்பாட்டை ஆபீஸ்ல ஒன்னும் சாப்பிட வேண்டாம் அதுவும் ரெடி இதோ டேபிள் மேல வச்சுருக்கேன் எடுத்துக்கோங்கோ..“

நவீன் ஏதும் சொல்லாமல் டிஃபனை சாப்பிட்டுவிட்டு லஞ்ச் பாக்ஸை எடுத்துக்கொண்டு தன் மாமனார் மாமியாரிடம் மட்டும் சொல்லிவிட்டு தனது பைக்கில் ஆபீஸ் சென்றான். அதைப் பார்த்த மிருதுளாவுக்கு ஆத்திரம் வந்தது. அவள் கோபத்தில் இருப்பதை அறியாத அம்புஜம் அவளிடம்…

“மிருது நீ நேத்து சும்மா இருந்திருந்தா மாப்பள உன்கிட்ட ஏன் இப்படி கோபப்படப் போறார்?”

“என்ன அம்மா ஏதோ நான் தப்பு பண்ணின மாதிரி சொல்லற!!! உனக்கு அவா பேசினது சரின்னு பட்டுதா?”

“நீ தப்பு பண்ணினேன்னு சொல்லலை மா.  அதே சமயம் அவா அப்போ அப்படி பேசினதும் தப்பு தான். அதுக்காக உடனே நீ திருப்பி பேசிருக்க வேண்டாம்….கொஞ்ச நேரம் கழிச்சு சொல்லிருக்கலாம் இல்லாட்டி அவாளுக்கு தெரிஞ்சது அவ்வளவு தான்னுட்டு நீ சும்மா இருந்திருக்கலாம்….அதனால நீங்க ரெண்டு பேரும் இப்படி முகத்தை திருப்பிண்டு இருக்கறது நல்லாவா இருக்கு சொல்லு“

“அம்மா நான் எந்த தப்பும் பண்ணலை….தப்பாவும் பேசலை. நவீனுக்கு அவா சித்தி என்னை சொல்லும் போது இனிச்சுதுல்ல அப்போ அவாள நான் சொல்லும்போது ஏன் கசந்துதாம்? சொல்லப்போனா அவர் தான் எனக்காக அவா சித்தி கிட்ட பேசிருக்கனும்.“

“சரி மா….அப்படியே இருக்கட்டுமே நீ தான் கொஞ்சம் விட்டுக் கொடுத்து போயேன்“

“விட்டுக் கொடுத்துன்னா !!!!என்ன சொல்ல வர இப்போ“

“நீ கொஞ்சம் இறங்கி போய் ஒரு சாரி கேட்டுடேன் அதுனால நீ ஒன்னும் கொறஞ்சுப் போயிடமாட்டாய்“

“அம்மா உனக்கு நிறைய விஷயம் தெரியாது …நான் நிறைய தடவை விட்டும் கொடுத்தாச்சு …இறங்கியும் போயாச்சு …இது எங்களுக்குள் நடப்பது அதை நானே பார்த்துக்கறேன். நீ தலையிடாதே சரியா.“

“இல்லடி … எங்களுக்கு இப்படி நீங்க பேசாம மூஞ்சிய திருப்பிண்டு போறதெல்லாம் பார்க்க பார்க்க மனசு கஷ்ட்டப்படறது மா“

“அம்மா இதுல மனசு கஷ்ட்டப்படற அளவுக்கு ஒன்னுமே இல்லை நான் பார்த்துக்கறேன். சரி …நீயும் அப்பாவும் எவ்வளவு சண்ட போட்டிருக்கேங்கள்? பேசாம எல்லாம் இருந்திருக்கேங்கள்!!! அப்போ நான் ஏதாவது சொன்னேனா?”

“அடிப் போடி எங்க சண்டையும் உங்க பிரச்சினையும் ஒன்னா!!!” 

“அதென்ன ஒங்களோட சண்ட எங்களோட சண்டைன்னு பிரிச்சுப் பேசற!!! சண்டைன்னா எல்லாமும் சண்டை தான்…சரி வேனுவும், பவினும் எழுந்துண்டு டுவா ஸோ இப்போதைக்கு இந்த சாப்ட்டரை கொஞ்சம் க்ளோஸ் பண்ணு. “

“ஓ ஆமாம் ஆமாம் பவின் இருக்கறத மறந்துட்டேன். அது என்னடி அந்த ப்ரவின் உங்க ரெண்டு பேர் கிட்டேயும் சொல்லாம அங்க வச்சு சொல்லறான்“

“அம்மா விடுமா அவா எல்லாம் அப்படி தான். அவரையும் என்னையும் எவ்வளவு மதிக்கறான்னு எனக்கு நல்லாவே தெரியும் நவீனும் இப்போ தெரிஞ்சுண்டிருப்பார்ன்னு நினைக்கறேன்“

“ஹாய் மிருதுக்கா குட் மார்னிங்“

“குட் மார்னிங் வேனு“

அனைவருமாக முன் தினம் போலவே உணவருந்திய பின் சீட்டு கச்சேரியில் மூழ்கினர். மாலை ஐந்து மணிக்கு நவீன் வரவை நோக்கி காத்திருந்தாள் மிருதுளா. அன்று நவீன் ஐந்து பத்துக்கு தான் வந்தான். கதவு திறந்தே இருந்தது பவினும் வேனுவும் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். நவீன் வண்டியை நிப்பாட்டி விட்டு வீட்டினுள் நுழைந்தான்….

“ஹாய் நவீன் குட் ஈவினிங். ஹவ் வாஸ் தி டே” என்று மலர்ந்த முகத்துடன் கேட்டாள் மிருதுளா அதற்கு பதில் சொல்லாமல் வந்ததும் க்ளாஸுக்கு போவதாக சொல்லிவிட்டு டிரஸ் சேஞ்ச் பண்ணச் சென்றான். அதுக்குள் காபி போட்டு கொடுத்தாள். அதை குடித்து விட்டு மீண்டும் தனது மாமனார் மாமியாரிடம் மட்டும் சொல்லிக் கொண்டு கிளம்பிச் சென்றான். அப்போது மிருதுளாவுக்கு கவலையாக இருந்தாலும் ….மனதிற்குள் …..

“போ போ எப்படியும் இங்க தானே வரணும். இன்னைக்கு இதுக்கு ஒரு ஃபுல் ஸ்டாப் வைக்கறேனா இல்லையான்னு பாரு”  என சபதம் எடுத்தாள். பிறகு வேனுவையும் பவினையும் வீட்டிலிருக்கச் சொல்லிவிட்டு தன் பெற்றோரை வாக்கிங் கூட்டிச் செல்ல தயார் ஆனாள்…

“மன்னி இங்க டிவி இல்லை எங்களுக்கு போரடிக்கும். நாங்களும் உங்க கூடவே வரோமே“

“ஆமாம் மிருதுக்கா இங்க உட்கார்ந்துண்டு என்னப் பண்ணுவோம் சொல்லு“

“சரி சரி நீங்க பாட்டுக்கு நடங்கோ எங்கள தொந்தரவு செய்யக் கூடாது சரியா“

“ஓகே இதோ நாங்களும் ரெடி“

“மிருது நைட்டுக்கு என்ன டிஃபன் பண்ணப்போற ? ஒன்னும் நீ செய்தா மாதிரி தெரியலையே“

“உனக்கு சாதமிருக்கு. நாங்க டாபா ல சாப்பிட்டுட்டு நவீனுக்கும் வாங்கிண்டு வந்துட்டா போச்சு. என்ன பசங்களா டாபா ல சாப்பிடலாமா“

“ஓ எஸ்“

என்று ஒருமித்து சொன்னார்கள் பவினும் வேனுவும். அதைக் கேட்ட மிருதுளா…

“ஏன் டா பசங்களா என்னோட சமையல் உங்களுக்கு பிடிக்கலையா“

“அப்படி இல்ல மன்னி“

“அக்கா டாபா ல தர ரொட்டி சப்ஜீ எல்லாம் நம்ம ஊர்ல கிடைக்காது இல்லையா. அதுவும் இல்லாம இது எங்களுக்கு புது வகையான உணவு அதுனால தான் சொன்னோம். நீ சூப்பரா தான் சமைக்கற.  அடுத்த தடவை நாங்க வர்றத்துக்குள்ள இந்த நார்த் இந்தியன் குக்கிங் எல்லாம் கத்துக்கோ.“

“அப்படியே ஆகட்டும் தம்பிகளா. இப்போ எல்லாரும் வெளியே போங்கோ நான் கதவ பூட்டிட்டு வரேன்.“

அனைவருமாக நடக்கலானார்கள். பவினையும் வேனுவையும் தன்னுடன் கூட்டிக்கொண்டு அம்மாவையும் பொண்ணையும் பின்னால் வரச்சொல்லிவிட்டு நடந்தார் ராமானுஜம். 

அதை கவனித்த அம்புஜம்…

“அட உங்க அப்பா கூட என்னோட அவஸ்த்தைய புரிஞ்சிண்டு பசங்கள அவரோட கூட்டிண்டு முன்னாடி போயிட்டாரே!!! பரவாயில்லை  இன்னைக்கு குஜராத்துல மழை தான் போ“

“அவஸ்த்தையா அது என்னன்னு சொல்லேன் கேட்கறேன்“

“நேத்து கொள்ளப்பக்கத்துல கேட்டேனே அதேதான் நான் வேற என்னத்த புதுசா கேட்கப்போறேன்.“

“அம்மா மனுஷான்னா நிறை குறைகளோட தான் இருப்பா. என்ன என் மாமியாருக்கு ஏனோ என்ன கண்டாலே ஆக மாட்டேங்கறது. அதுனால நொடுக்கு நொடுக்குன்னு  ஏதாவது குறை சொல்லிண்டே தான் இருக்கா.“

“அதை நம்ம வேனு அப்பவே சரியா சொன்னான் தெரியுமோ !!!அது  என் மனச அரிச்சுண்டே இருந்தது. என் பொண்ணு என்ன கஷ்ட்டப் படறாளோ ன்னு பக் பக்ன்னு இருந்தது“

“அப்படி என்ன வேனு சொன்னான்!!! அத கேட்டு நீ சங்கடப் பட?”

“அன்னைக்கு உங்க ஆத்துக்கு வந்தபோது அவன் கவனிச்சிருக்கான். அவன் சொன்னான் ….மிருதுக்கா மாமியாருக்கு நம்ம மிருதுவைப் பிடிக்கலைப் போல அதுதான் மிருதுக்கா என்ன சொன்னாலும் அதுக்கு ஜஸ்ட் ஆப்போஸிட்டா தான் பேசறான்னு“

“பரவாயில்லை மா அவனுக்கும் தெரிஞ்சிருக்கு பாரேன்!!!“

“அப்படின்னா!!!“

“அப்படின்னா அப்படி தான்…சரி அதெல்லாம் நீ மனசுல போட்டு குழப்பிக்காதே…அதுதான் நான் இங்க வந்துட்டேன் இல்லையா….ஆனா ஒரு விஷயம் மா ….என் சித்திகள் பேச்சையும் என் தோழி பேச்சையும் கேட்டு நான் அவர் கூட இங்க வந்தேனோ பொழச்சேன்… நீ சொன்னத கேட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கிண்டு அங்க இருந்திருந்தேன் என் வாழ்க்கையையே தொலைச்சிருப்பேன் தெரியுமா “

“எல்லாம் அந்த அம்பாள் செயல் மிருது நம்ம கையில என்ன இருக்குச் சொல்லு… உனக்கு அவர் தான்னு அம்பாளே பூ கொடுத்து உத்தரவு தந்தா…பின்ன எப்படி தப்பாகும்“

“அப்புறம் ஏன் உன் மனசு சங்கடப்பட்டுதாம்?”

“நான் சாதாரண மனுஷி தானே மா.  பொண்ணுக்கு கஷ்டம்ன்னா அம்மாவோட மனசு பதறத்தான் செய்யும். அதை நீ அம்மா ஆகும் போது தெரிஞ்சுப்ப. சரி உன் முகத்தைப் பார்த்தா எனக்கென்னவோ….உனக்கு நாள் தள்ளிப் போயிருக்கா மிருது?”

“ஆமாம் இந்த மாசம் இன்னும் ஆகலை“

“அப்போ உடனே டாக்டரைப் போய் பாரும்மா. அவர் கிட்ட சொல்லிக் கூட்டிண்டு போகச் சொல்லு“

“மொதல்ல இந்த ரம்யா சித்திப் பிரச்சினக்கு ஒரு முடிவு கட்டணும். அப்புறம் தான் என்னால மத்ததைப் பத்தி எல்லாம் யோசிக்க முடியும்.“

“அதெல்லாம் சரியாகும். நீ தேவையில்லாத கவலைகளை எல்லாம் மனசுல ஏத்திக்காத. நாளையிலேந்து நான் சமைக்கறேன். நீ நல்லா ரெஸ்ட் எடு.“

“அம்மா ரெஸ்ட் எடுக்கற அளவுக்கு நான் என்ன வேலை செய்தேனாம்“

“நாள் தள்ளி போயிருக்குன்னு சொல்லற அப்போ நீ நல்லா ரெஸ்ட் எடுக்கத் தான் வேணும்.  எனக்கு வந்து உன் முகத்தை பார்த்ததும் என் மனசுலப் பட்டது..அதுதான் கேட்டுட்டேன்.“

“பார்ப்போம் பார்ப்போம்” என புன்னகைத்தாள் மிருதுளா.

“இன்னும் எவ்வளவு நேரம் நடக்கப் போறோம் மன்னி? அண்ணா வர நேரமாச்சு“

“இதோ அத்திம்ஸே வர்றார். அவர் நம்மள பார்க்கலை. பவின் அவரை கூப்பிடேன்“

“அண்ணா ….நவீன் அண்ணா“

நவீன் திரும்பிப் பார்த்து வண்டியை நிப்பாட்டி…

“ஏய் எல்லாரும் எங்க போயிண்டிருக்கேங்கள்?”

“அத்திம்பேர் நாங்க வாக்கிங் பண்ண ஆரம்பிச்சு இரண்டு மணிநேரமாகறது“

“அப்போ யாரும் இன்னும் சாப்பிடலயா?”

“இதோ அப்படியே டாபாக்கு போகலாம்ன்னு மன்னி சொன்னா“

“ஓ அப்போ சரி வாங்கோ நானும் உங்களோடவே வரேன்“

அனைவரும் டாபாவிற்குள் சென்று அமர்ந்தனர். அப்போது மிருதுளா நவீனிடம்…

“அவா எல்லாரும் அந்த டேபிளில் ஒன்னா உட்காரட்டும் நாம ரெண்டு பேரும் நம்மளோட யூஷுவல் டூ சீட்டர் ல உட்காரலாம் ப்ளீஸ்“

நவீன் மறுப்பேதும் சொல்லாமல் அமர்ந்தான். மற்றவர்களை அவர்களுக்கு வேண்டியதை ஆர்டர் செய்ய சொல்லிவிட்டு இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தனர். அப்போது பவின்…

“அண்ணா நீங்க ரெண்டு பேரும் இன்னும் ஆர்டர் பண்ணலையே“

“பவின் அதை நாங்க பார்த்துக்கறோம் பா நீ சாப்பிடுப் பா. எங்களை கொஞ்ச நேரம் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் ப்ளீஸ்” என்று சொல்லிவிட்டு நவீனைப் பார்த்து

“என்ன உங்களுக்கு என் மேல இருக்கும் கோபம் இன்னும் குறையவில்லை யா? இல்லை குறையவே குறையாதா? எனக்கு இப்படி நீங்க முகத்தை திருப்பிண்டு போறதும் சொல்லிக்காம போறதும் எல்லாம் பிடிக்கலை“

“நீ நேத்து சித்தியை பேசினது தப்பு. பெரியவாள்ட்ட எப்படி நீ அப்படி பேசலாம்? எனக்கு அது பிடிக்கலை“

“சரி நான் பேசினது தப்பாவே இருந்துட்டுப் போட்டும். அவா பேசினது சரியா அத மட்டும் உங்க மனசாட்சிய கேட்டு சொல்லுங்கோ“

“அது அது …“

“என்ன அது அதுன்னு இழுக்கறேங்கள். பதில் சொல்லுங்கோ“

“இங்க பாரு மிருது …அவா பெரியவா அப்படித் தான் பேசுவா ஏன்னா அவா வளர்ந்த சூழல் அப்படி அதுக்காக நீயும் அப்படி பேசணுமா சொல்லு“

“உண்மைச் சொல்லனும்னா நான் தான் உங்க கிட்ட கோவிச்சிண்டுருக்கனும் தெரியுமா!!“

“நான் என்ன பண்ணினேன்“

“அவா பெரியவா அப்படி பேசறா ஆர் அப்படித்தான் பேசுவான்னு உங்களுக்கு தெரியும் போது நீங்க ஏன் எனக்காக பேசலை. நான் உங்க குடும்பத்துக்குள்ள வந்து பல வருஷம் ஆகலை நாலு மாசம் தான் ஆச்சு….அவா அப்படி சொன்னதும் நான் உங்களைத் தான் பார்த்தேன் நீங்க சிரிச்சிண்டிருந்தேங்கள் அதனால எனக்கு கோபம் வந்தது …அப்பவும் அதை அடக்கிண்டு நிதானமா தானே சொன்னேன். சரிப்பா தப்பா சொன்னேன்னே இருக்கட்டும் அதுக்கு உங்க சித்தி எல்லார் முன்னாடியும் அப்படி தான் வெடுக்குனு எழுந்து போவாளா? அவா சொல்லும் போது நான் எழுந்து போயிருந்தா !!! அப்பவும் என் மேல தான் பழி போடுவேங்கள் இல்லையா?”

“இங்க பாரு மிருது அவா பேசினது சரின்னு நான் சொல்லலை “

“இது எப்போ உங்களுக்கு தெரிஞ்சுது? இப்போ நான் இவ்வளவு எடுத்துச் சொன்னதுக்கப்புறமா இல்லை நேத்து அங்கேயே வா“

“நேத்தே“

“சும்மா சொல்லாதீங்கோ நவீன்….அப்போ ஏன் என்ன மொறச்சுண்டே இருந்தேங்கள்? பஸ்ஸில சீட்டை ஏன் மாத்தினேங்கள்? காலையிலேந்து ஏன் முகம் கொடுத்துக்கூட பேசலை?”

“அது ஐ டிடின்ட் எக்ஸ்பெக்ட் தட் ஃப்ரம் யூ!!! அதுனால தான் என்னால ஏத்துக்க முடியலை“

“ஐ டூ டிடின்ட் எக்ஸ்பெக்ட் தட் ஃப்ரம் யூ!!! அதுக்காக நான் அப்படியா நடந்துண்டேன்?”

“சரி இப்போ என்ன சொல்ல வர நீ பேசினது தப்பில்லைங்கறயா?”

“அப்படி தானே நீங்களே கொஞ்ச முன்னாடி சொன்னேங்கள்….ஓகே லெட் மீ ஃபினிஷ் திஸ் ப்ளேம் கேம். இங்க பாருங்கோ நவீன் பெரியவாளா இருந்தாலும் சரி சின்னவாளா இருந்தாளும் சரி தப்பா பேசினா தப்புதான்னு ஒன்னு நீங்க கேட்கணும் இல்லை என்னையாவது கேட்க விடனும். உங்க அம்மா என்னை என்னென்ன சொன்னா அதுவும் உங்க முன்னாடியே !!! நீங்க எனக்காக பேசுவேங்கள்ன்னு அங்க இருந்தவரைக்கும் காத்திருந்தேன்… அப்போ என்ன எனக்காக நீங்க பேசினேங்களா? இல்லையே !!!அதுக்கு நான் முகத்தை திருப்பிண்டேனா? இல்லையே !!! அப்படீன்னா நீங்க எனக்கு செய்யறது சரியில்லை. எனக்கு ஒரு டவுட்….உங்க ரம்யா சித்தி போன தடவை நம்ம கிட்ட அப்படி எதுமே பேசலையே!!! நல்லா தானே ஜென்டிலா பழகினா!!! இப்போ எங்க பேரன்ட்ஸோட போனப்போது ஏன் வித்தியாசமா பிஹேவ் பண்ணினா? என் அப்பா அம்மாவை ரம்யா சித்தி அவா ஆத்துக்கு இன்வைட் பண்ணினாளா“

“சீ எங்காத்துல நடந்தது நாம கல்யாணமாகி ஜஸ்ட் இரண்டு வாரம் தான் அங்கிருந்தோம். நீயும் என்கிட்ட எதுவும் தப்புன்னு சொல்லாததுனால எனக்கு எதுவும் தப்பாவே தெரியலை. ரம்யா சித்தி என்னிடம் இன்வைட் பண்ணலை. அவா என் பேரன்ட்ஸ்ட்ட சொல்லிருக்கா அவா தான் எனக்கு ஆபீஸுக்கு கால் பண்ணி சொன்னா.“

“நான் ஆத்துல நடந்தது எதையுமே உங்ககிட்ட கம்பளேயின்ட் பண்ணாததால உங்களுக்கு தப்பாவே படலைங்கறது என்னால நம்ப முடியலை பட் லெட்ஸ் லீவ் தட் தேர். இனி அங்க போகும் போது அப்படி நடந்தா! நடக்கும்… அப்போ உங்ககிட்ட நிச்சயம் சொல்லறேன் என்ன பண்ணறேங்கள்ன்னு அப்போ பார்ப்போம்….உங்க சித்திக்கு உங்க நம்பர் தெரியும் தானே அப்போ ஏன் உங்ககிட்ட சொல்லாம உங்க பேரன்ட்ஸ்ட்ட சொல்லிருக்கா? அதுவுமில்லாமல் அவாளுக்குள்ள என்ன டிஸ்கஷன் நடந்துதோ !!!!  சித்தியோட அந்த பிஹேவியர் மே பீ அதுனால கூட இருக்கலாம்ன்னு என்னோட யூகம். எது எப்படியோ இனி இப்படி பண்ணாதீங்கோ. நீங்க இப்படி செய்ததினால் என் பேரன்ட்ஸ் காட் வரீடு!!! தெரியுமா. “

“ஓ !!!!நான் அவ்வளவு எல்லாம் யோசிக்கலை இப்போ ஏதோ புரியறா மாதிரி இருக்கு. நான் உன் பேரன்ட்ஸ்கிட்ட நல்லா தானே பழகறேன்“

“என்கிட்ட மூஞ்சிய காட்டிட்டு அவாகிட்ட நல்லா பழகினா எப்படி அவா நிம்மதியா இருப்பா நவீன்…என்னை நினைச்சுத் தானே கவலைப்படுவா“

“ஓகே ஐ வில் பீ நார்மல் ஃப்ரம் நவ்” 

“அப்பாடா நான் என்னுள் சபதம் எடுத்தேன்….இந்த பிரச்சினையை இன்றோடு முடிப்பேன்னு. தாங் காட் ஃபார் ஹெல்பிங் மீ“

அன்று டாபா உணவால் வயிறு நிறைந்ததோ இல்லையோ ஆனால் மிருதுளாவுக்கும் அவள் பெற்றோருக்கும் அவர்கள் மனம் நிறைந்தது. மிருதுளா நிதானமாக யோசித்து கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கிடைத்தாக வேண்டுமென அவள் வலியுறுத்தவில்லை ஆனால் நவீனின் மனது பதில்களைத் தேட அவளது கேள்விகள் வித்தானது. 

சண்டையிட்டு மண்டையுடைத்துக்கொள்ளாமல்

டைவர்ஸ் கேட்டு கோர்ட் படி ஏறாமல்

தனக்குத் தானே கேள்விகளை கேட்டு அதற்கான பதில்களை தன் கணவனையே தேட வைக்க முயற்சிக்கும் மிருதுளாவை மனமாற வாழ்த்துவோமாக. பொறுமையும் நிதானமுமிருந்தால் நமது பேச்சு எங்கும் எடுப்படும் அல்லது எடுபட வைக்க முடியும் என்பதற்கு இவர்கள் வாழ்வின் இந்த நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இருபத்தி நான்கு மணி நேர கோபம்  உட்கார்ந்து பேசியதில் ஒரு மணி நேரத்தில் காணாமல் போனது. 

பெண்ணே நீ பூமாதேவி தான்

எல்லாவற்றுக்கும் பொறுத்துப் போவதற்காக அல்ல

எல்லாவற்றையும் பொறுமையோடு  கையாள்வற்காக

பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது பழைய மொழி அல்ல அது உண்மையானது. காலதாமதம் ஆகலாம் ஆனால் என்றுமே தவறாகாது.

பொறுமை, நிதானம் இரண்டும் நம் மூளையை சிறப்பாக இயக்க முக்கிய கருவிகளாகும்

பொறுமையுடன் நிதானமாக சிந்தித்து செயல் படுவோம். வெற்றி காண்போம். 

தொடரும்…..

மறுநாள் காலை கதிரவன் சோம்பல் முறித்து மெல்ல எழ ஆரம்பிக்கும் போதே அப்புஜமும், ராமானுஜமும் எழுந்து பல் துலக்கி, முகம் கை கால் அலம்பி பின் மற்றவர்கள் எழுந்திருக்கும் வரையில் அவர்களை தொந்தரவு செய்யாமல் மீண்டும் படுத்துக் கொண்டனர். அவர்கள் எழுந்து ஒரு மணி நேரம் கழித்து எழுந்தாள் மிருதுளா. எழுந்ததும் தனது அம்மாவையும் அப்பாவையும் பார்த்து….

“நீங்க எழுந்துண்டாச்சா? எப்போ எழுந்தேங்கள்? ப்ரஷ் பண்ணிட்டேளா? ஆமாம் நீங்க தான் காலை ல அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்திரிக்கறவாளாச்சே…சரி இருங்கோ நான் போய் ப்ரஷ் பண்ணிட்டு காபி போட்டுத் தரேன்” 

“சரி சரி அவாள டிஸ்டர்ப் பண்ணாம போயிட்டு வா“

மிருதுளா டிகாக்ஷன் போட்டு சுட சுட ஃபில்டர் காபியை தனது பெற்றோருக்கு கொடுத்து தானும் குடிக்க அமர்ந்தாள். நவீன் எழுந்து ..

“ஆஹா காபி வாசம் தூக்கறதே..என்னை தூக்கத்திலிருந்து எழுப்பிடுத்து. டைம் என்ன ஆச்சு மிருது?”

“மணி ஆறரை ஆச்சு நவீன்“

“ஓ !!ஒரு ஃபைவ் மினிட்ஸ் எழுந்துடறேன்“

“ஏன்டீ மாப்பிள்ளையை தொந்தரவு செய்யற? அவர் தூங்கட்டுமே“

“அம்மா என்ன நீ என்னவோ நான் தான் அவரை எழுப்பினா மாதிரி சொல்லற!! என் காபி தான் எழுப்பித்து“

“நிஜமாவே காபி சூப்பரா இருக்கு மிருது“

“நன்றி தந்தையே“

நவீன் எழுந்து ஆஃபிஸ் செல்ல தயாராகிக் கொண்டிருந்தான். ப்ரவின், பவின் மற்றும் வேனு நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். மிருதுளா அடுப்படியில் மும்முரமாக நவீனுக்கான காலை டிபன் மற்றும் மத்திய உணவை தயார் செய்துக் கொண்டிருந்தாள். அம்புஜமும், ராமானுஜமும் நவீன் குளித்தப் பின் ஒவ்வொருவராக சென்று குளித்துவிட்டு வந்தனர். அம்புஜம் குளித்துவிட்டு நேராக அடுப்படிக்கு சென்று..

“ஏய் மிருதுளா நான் செய்யறேன் டீ. நீ அவர் ஆஃபிஸ் போறதுக்கு என்ன செய்யனுமோ அதை செய் போ“

“அம்மா அவருக்கு தான் செய்திண்டிருக்கேன். நீ இப்போ இடையில கடலடின்னு வராதே. ப்ளீஸ் மா“

“சரி சரி சித்த நகந்துக்கோ நான் வீட்டிக்கு பின்னாடி போய் பார்க்கட்டும். நேத்து சரியா பார்கலை“

“ம்…இதோ போ… என்னப் பா உனக்கும் கொள்ளப் பக்கம் போகனுமா?”

“தாங்க் யூ“

அம்புஜத்திடம் ராமானுஜம் அந்த ஏரியாவைப் பற்றி விரிவாக சொல்ல அதற்கு அம்புஜம்

“என்னமோ ஃபுல்லா பார்த்தா மாதிரி சொல்லறேங்கள்“

“ஆமாம். நேத்து மத்தியானம் நீங்க எல்லாரும் தூங்கும் போது நான் ஒரு மணி நேரம் வெளியே போய் இந்த கேம்பஸை ஃபுல்லா சுத்திப் பாத்தேன்“

என இருவருமாக அலவலாவிக் கொண்டிருக்கும் போது நவீன் கையில் ஹெல்மட்டுடன் வந்து…

“ஓகே நான் ஆஃபிஸ் போயிட்டு வரேன். நீங்க எல்லாரும் இன்னைக்கு நல்லா ரெஸ்ட் எடுங்கோ நான் நாளைக்கு லீவ் கிடைக்கறதான்னு கேட்டுப் பார்க்கறேன்“

“சரி மாப்ள நீங்க போயிட்டு வாங்கோ. உங்களுக்கு லீவ் கிடைக்காட்டினாலும் பரவாயில்லை எங்களுக்கு எங்க பொண்ணோட இருந்தாலே போதும்.“

“அதுக்காக எங்கேயும் வரமாட்டேளா? ஃபர்ஸ்ட் டைம் குஜராத் வந்திருக்கேங்கள் சுத்திப் பார்க்க வேண்டாமா?”

“அது தான் சனி ஞாயிறு இருக்கே அன்னைக்கு பார்த்துண்டா போறது“

“நான் லீவுக்கு டிரைப் பண்ணறேன் கிடைச்சா ஓகே இல்லாட்டி சனி அன்ட் ஞாயிறு தான் போகணும். கல்யாணத்துக்கே நிறைய லீவ் எடுத்துட்டேனா அதுதான்….“

“புரியறது மாப்ள. ஒரு பிரச்சனையும் இல்லை. நீங்க ஆஃபிஸ் போயிட்டு வாங்கோ“

“ஓகே பை….பை மிருது. பார்த்துக்கோ நான் ஈவ்னிங் அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடுவேன் எல்லாரும் ரெடியா இருங்கோ நாம எங்க சித்தி ஆத்துக்கு போயிட்டு வருவோம்“

“ஓகே எல்லாருமா எப்படி போவோம் நவீன்?”

“இங்கேருந்து பஸ்ஸில போயிட்டு அங்கேருந்து ரெண்டு ஆட்டோ வச்சுண்டா போச்சு… அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ ரெடியாகி எல்லாரையும் ரெடியாக இருக்கச் சொல்லு ஓகே வா. சரி நேரமாகறது பை பை“

என்று வண்டியை ஸ்டார்ட் செய்து ஆஃபிஸ் சென்றான் நவீன். அவனது லீவுகள் கல்யாணத்தினால் மட்டுமில்லை அதற்கு பிறகு மிருதுளா பைக்கிலிருந்து விழுந்த போதும் எடுத்ததனால் தான் இப்பொழுது லீவ் கிடைப்பது சிரமம் என்று சொல்ல முடியாமல் மழுப்பினர் நவீனும் மிருதுளாவும். 

நவீன் கிளம்பிச் சென்றதும் மிருதுளா குளித்து விட்டு பெற்றோருக்கும் தனக்கும் டிபன் கொண்டு வந்து ஹாலில் வைத்து மூவருமாக சாப்பிட ஆரம்பிக்கும் போது அம்புஜம் ….

“மிருது மா நீ நல்லா இருக்கயா?”

“என்னமா நேத்தே கேட்டுட்டியே மறுபடியும் ஏன் கேட்கற?”

“இல்லமா நீ சந்தோஷமா இருக்கயா? உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே!“

“அம்மா நான் சந்தோஷமா இருக்கேன் எனக்கு எந்த வித பிரச்சனையும் இங்கு இல்லை. ஓகே வா நீ நிம்மதியா டிபனை சாப்பிடு“

“அதுக்கில்லடீ மாப்ள உன்ன நல்லா கவனிச்சுக்கறாரா?”

“அவர் என்னை நல்லா தான் பார்த்துக்கறார் மா அதனால தானே சந்தோஷமா இருக்கேன்னு சொல்லறேன்“

“இல்லமா….“

“ஹாய் மன்னி குட் மார்னிங்! அண்ணா ஆஃபிஸ் போயாச்சா?”

“ஹாய் ப்ரவின் குட் மார்னிங். ஆமாம் அவர் கிளம்பி ஒரு ஒன் ஹவர் ஆகறது. நீ ப்ரஷ் பண்ணிட்டு வா காபி போட்டுத் தரேன்“

“ஓகே மன்னி….மாமி ஏதோ கேட்டுண்டிருந்தாளே ….நீங்க கன்டின்யூ பன்னுங்கோ நான் ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்“

“அம்மா க்கு என்ன ஏதாவது கேட்டுண்டே தான் இருப்பா. நீ போயிட்டு வா.“

என்று ப்ரவினை அனுப்பி விட்டு தனது தாயிடம் செய்கையில் பிறகு பேசலாம் என காட்டி விட்டு சாப்பிட்ட தட்டை தேய்த்து வைத்தாள். அடுத்தடுத்து பவின் மற்றும் வேனு எழுந்தனர். அவர்கள் அனைவருக்கும் காபி குடுத்த பின் அனைவரும் குளித்து விட்டு வந்து டிபன் அருந்தினர். மிருதுளா மத்திய சமையலும் செய்து முடித்துவிட்டதால் அனைவருமாக அமர்ந்து சீட்டு விளையாடினர். அம்புஜம் தன் மகளிடம் மனம் விட்டு பேச முடியாமல் அல்லாடினாள். அப்பொழுதுதான் அவள் ப்ரவின் மற்றும் பவினை ஏன் தங்களுடன் கூட்டி வந்தோம் என வருந்தினாள். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொண்டால் தன் மகளுக்கு கஷ்டமாகி விடுமே என அமைதியாக இருந்தாள். 

சீட்டு விளையாட்டு முடிந்தப் பின் வேனு பவினையும் ப்ரவினையும் கொஞ்ச நேரம் அப்படியே வெளியே போய் அந்த கேம்பஸை சுற்றி பார்க்க அழைத்தான். ஆனால் பவின் மட்டும் வேனுவுடன் போக தயார் ஆனான். அப்போது மிருதுளா…

“ஏய் ப்ரவின் நீயும் வேனு, பவின் கூட வெளிய சும்மா போயிட்டுத் தான் வாயேன். இங்க நாங்க சாதம் வச்சுட்டு வீட்டை கூட்டி சுத்தம் செய்வோம். நீ உட்கார்ந்துண்டு என்னப் பண்ணப் போற. உனக்கு போர் அடிக்கும்.“

“இல்லை மன்னி ….பவின் மாத்திரம் போயிட்டு வரட்டும் நான் இங்கேயே இருக்கேன்“

“என்ன ப்ரவின் !!! நாங்க இங்க தங்க மலை ரகசியம் எதுவும் பேசப் போவதில்லை அதனால நீ எதையும் மிஸ் பண்ணமாட்ட அதுக்கு நான் கியாரண்டி. போயிட்டு வா“

“அச்சோ மன்னி அதெல்லாம் ஒன்றுமில்லை…ஐ மீன் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ன்னு சொல்லவந்தேன்“

“சரி அப்படியே இருக்கட்டும். டேய் வேனு நீயும் பவினும் போயிட்டு வாங்கோ” என ஒரு நக்கல் சிரிப்புடன் கூறினாள் மிருதுளா. வேனுவும் பவினும் சென்ற பிறகு அவள் சொன்னது போலவே பெட்டிகளை எல்லாம் ஒரு புறமாக அடுக்கி வீட்டை கூட்டிச் சுத்தம் செய்து பின் குக்கரில் சாதம் வைத்து விட்டு ஹாலில் வந்தமர்ந்தாள். அப்போது ராமானுஜம்…

“நம்ம குவார்டர்ஸுக்கும் இந்த இடத்துக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. மளிகை ஜாமன் எல்லாம் எங்க வாங்குவேங்கள் மிருது ? கேம்புக்குள்ள ஒரு கடை பார்த்தேன் அங்கயா?”

“இல்லைப் பா பாதி அங்க மீதி இவருக்கு கேன்டீன்னு இவாளுக்கு மாத்திரமான கடையிருக்கு அங்க வெளில விக்கறதவிட ரொம்ப கம்மியா இருக்கும் ஸோ அங்க வாங்குவோம்…அங்க தான் இந்த மிக்ஸி கிரைண்டர் எல்லாம் வாங்கினோம்” 

“ஓ இதெல்லாம் கூட மலிவா கிடைக்குமா? அப்போ டிவி, ஃபிர்ஜ் எல்லாம் வாங்க வேண்டியது தானே.“

“வாங்குவோம் …மெது மெதுவா ஒவ்வொரு மாசம் ஒவ்வொன்னா வாங்கலாம்ன்னு இருக்கோம்.“

“சரி அப்போ டிவியும் ஃபிர்ஜும் நாங்க வாங்கித் தறோம். என்ன சொல்லறேங்கள் நாம வாங்கிக் கொடுக்கலாம் தானே” என்று அம்புஜம் ராமானுஜத்தைப் பார்த்தாள்…

“வாங்கிட்டா போறது அங்க எவ்வளவு கம்மியா கிடைக்கும் மிருது“

“அப்பா கவலை படாதே நீங்க ஒன்னும் வாங்கித் தர வேண்டாம்“

“நீ சும்மா இரு மிருது நாங்க தான் வாங்கித் தருவோம். மாப்ள கிட்ட எங்கள அந்த கடைக்கு வர சனிக்கிழமை கூட்டிண்டு போகச் சொல்லு போதும். என்ன யோசிச்சிண்டிருக்கேங்கள் சரின்னு சொல்லுங்கோ“

“சரி சரி வாங்கிடலாம்“

இவர்கள் பேசுவதை உன்னித்து கவனித்துக் கொண்டிருந்தான் ப்ரவின்.

அதை உணர்ந்த அம்புஜம் தனது கணவரிடம்…

“சரி நீங்க நம்ம ப்ரவின் கிட்ட பேசிண்டு இருங்கோ. நான் ஆத்துக்கு பின்னாடி என்னென்ன செடிகள் மரங்கள் எல்லாம் வச்சிருக்கான்னு பார்த்துட்டு வரேன்“

“அது தான் காலையிலேயே நாம ரெண்டு பேருமா பார்த்தோமே“

“நான் சரியா பாக்கலை அதனால மறுபடியும் போறேன் தப்பா?”

“தப்பே இல்லம்மா நீ போ” 

அம்புஜம் வீட்டின் பின்புறம் சென்றதும் சிறிது நேரத்தில் ….

“மிருது …மிருது இங்கே சித்த வாயேன்‌.“

“என்ன மா என்ன வேணும்?”

“எழுந்து இங்க வாயேன்டீ இது என்ன செடி வச்சிருக்க?”

“இதோ வந்துட்டேன்….சொல்லு எந்த செடியை கேக்கறாய். நான் எதுவும் வைக்கலை இந்த வீட்டு ஓனர் வச்சிருக்கறது“

“இங்க வாடி“

“என்ன மா இப்படி இழுக்கற.“

அம்புஜம் கதவை சாத்திவிட்டு பேசலானாள்…

“என்னடி உன் மச்சினர்கள் இங்கிதம் இல்லாம இப்படி இருக்கா. அவாளும் வரேன் சொன்னப்போ சரி நம்ம வேனு வோட சுத்த ஆசைப்பட்டு தான் சொல்லறான்னு கூட்டிண்டு வந்தா இங்க நாம பேசக் கூட முடியாத அளவுக்கு மாத்தி மாத்தி ஒருத்தன் காவலுக்கு இருக்கானே…இதை நான் கொஞ்சம் கூட எதிர்ப் பார்க்கலை“

மிருதுளா புன்னகைத்தாள்…

“என்னடி சிரிக்கற!!! நான் என் பொண்ணுட்ட அவா புக்காம் பத்தியும் என் பொண்ணு எப்படி இருக்கானுட்டும் கேட்டு தெரிஞ்சுக்க இப்படி ரகசிய மாநாடு போட வேண்டியிருக்கே!!“

“சரி நாளைக்கு சாயந்தரம் நாம ரெண்டு பேரும் வாக்கிங் போகலாம் அப்போ உனக்கு என்னனென்ன கேட்கனுமோ கேட்டுக்கோ சரியா. இப்போ உள்ள போகலாம் இல்லாட்டி….” என்று மிருதுளா முடிப்பதற்குள்

“மன்னி என்ன இவ்வளவு நேரமாவா அந்த செடியப் பத்தி சொல்லறேங்கள்!!! எனக்கு ஒரு கப் சாய் தறேளா ப்ளீஸ்” 

“அது ஒன்னுமில்லை ப்ரவின் எங்க அம்மாவுக்கு எக்ஸ்ப்ளேயின் பண்ணிட்டிருந்தேன். இப்போ போய் சாய் கேட்கற சாப்பிட டைம் ஆகறதே!“

“ஓ அப்படியா ஓகே தென் வேனுவும் பவினும் வந்ததுக்கப்புறம் சாப்பாடே சாப்பிடலாம்” 

என்று கூறிக் கொண்டே உள்ளே சென்றான் அவன் பின்னாலே மிருதுளாவும் தனது தாயிடம் அமைதியாக இருக்கும் படி சொல்லிவிட்டுச் சென்றாள். வேனுவும் பவினும் வீட்டிற்கு திரும்பி வந்து அவர்கள் பார்த்ததை எல்லாம் ப்ரவினிடம் கூறினர். அப்போது மிருதுளா…

“பார்த்தயா ப்ரவின் நீயும் அவாளோட போயிருந்தா இதெல்லாம் கேட்டுண்டில்லாம பார்த்துட்டே வந்திருக்கலாம். நீ எதையோ யோசிச்சுண்டு யூ மிஸ்டு இட். ஓகே எல்லாரும் கை அலம்பிட்டு சாப்பிட வாங்கோ“

அனைவருமாக சாப்பிட்டப் பின் மீண்டும் சிறிது நேரம் சீட்டுக் கச்சேரியில் மூழ்கினர். மணி நாலானதும் அனைவருக்கும் காபி கொடுத்து விட்டு சித்தி வீட்டிற்கு போவதற்காக கிளம்பச் சொன்னாள். எல்லோரும் கிளம்பினர். மணி அஞ்சடித்ததும் நவீன் வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது. நவீன் வீட்டினுள் நுழைந்தான் அனைவரும் தயாராக இருப்பதைப் பார்த்து ….

“ஓ எல்லாரும் ரெடியா இருக்கேங்களே…இதோ ஒரு ஃபைவ் மினிட்ஸ் ல நானும் டிரஸ் சேஞ்ச் பண்ணி ரெடி ஆகிடறேன்.“

நவீன் டிரஸ் சேஞ்ச் செய்து வருவதற்குள் மிருதுளா ஒரு தட்டில் ஊரிலிருந்து வந்த பட்சணங்கள் கொஞ்சமும் சூடான ஒரு கப் காபியும் கொண்டு வந்து மேஜை மீது வைத்தாள். பின்பு பின் கதவு ஜன்னல் எல்லாவற்றையும் மூடினாள்‌. நவீன் அந்த பட்சணங்களில் கொஞ்சம் மட்டும் சாப்பிட்டு, காபியை குடித்து விட்டு ….

“ஓகே கிளம்பலாமா?”

அனைவருமாக நவீன் காலையில் கூறியது போலவே பஸ்ஸில் சென்று பின் பஸ்டாப்பிலிருந்து இரண்டு ஆட்டோ வைத்து அவர்கள் சித்தி வீட்டைச் சென்றடைந்தனர். ரம்யா சித்தியும் சித்தப்பாவும் அவர்களை வரவேற்று சற்று நேரம் பேசிக் கொண்டிருக்கையில் ரம்யா சித்தி அம்புஜத்திடம்….

“எங்க நவீன் உங்க மிருதுளாவ கட்டிண்டதுலேருந்து அவன் மிருதுதாசனாவே ஆயிட்டான். அவன் பேரே இனி மிருது தாசன்னு ஆக போறது ன்னா பாருங்கோளேன்“

என்று குதர்க்கமாக பேசியதில் அம்புஜத்திற்கு எப்படி ரியாக்ட் பண்ணுவதென்றே தெரியாமல் அசடு வழிந்துக் கொண்டிருந்தாள் ….மற்றவர்கள் ஏதோ பெரிய ஜோக் கேட்டது போல சரித்துக் கொண்டிருந்தனர்…நவீன் உட்பட. அதைப் பார்த்த மிருதுளாவிற்கு சுர் என்று கோபம் தலைக்கேறியது ஆனாலும் நிதானமாக ரம்யா சித்தியைப் போலவே சிரித்துக் கொண்டே …

“ஆமாம் ஆமாம் சித்தி எல்லாம் உங்க ஃபேமிலி டிரென்டு போல….என சிரித்தாள்“

“நீ என்ன சொல்ல வர மிருதுளா?”

“அது ஒன்னுமில்லை சித்தி….சித்தப்பா எவ்வழியோ மகன் நவீனும் அவ்வழியே.  ரைட்டா. உங்க ஆத்துல ஒரு ரம்யா தாசன் போல எங்காத்துல மிருது தாசன் தட்ஸ் இட்” 

என மிருதுளா சொன்னதும் ரம்யா சித்தி சட்டென்று எழுந்து உள்ளே போனாள். அதை கவனித்த நவீன் மிருதுளாவை முறைத்தான். அதுவே மிருதுளாவை முதன்முதலாக நவீன் கோபமாக முறைத்துப் பார்த்தது. அதைப் பார்த்ததும் மிருதுளா தனக்குள்….

“நான் என்ன தப்பா சொல்லிட்டேன் அவா மட்டும் அப்படி ஒரு ஜோக் என்ற பெயரில் என்னையும் என் பெற்றோரையும் அவமானப்படுத்தலாமாம் ஆனா நான்  அதையே சொன்னா ஏன் முறைக்கறாரோ தெரியலை” 

நவீனும் அங்கிருந்து எழுந்து உள்ளே தன் சித்தியிடம் பேச்சுக் கொடுக்கச் சென்றான். அவன் சித்தப்பா சற்று நேரத்தில் வருவதாக சொல்லி விட்டு வெளியே எங்கோ புறப்பட்டுச் சென்றார். ப்ரவினும், பவினும் அவர்கள் சித்தி மகள்களுடன் வெளியே மொட்டை மாடிக்குச் சென்றனர். ஹாலில் மிருதுளா குடும்பம் மட்டும் யாருமின்றி அமர்ந்திருந்தனர். வேனு தன் அக்காவிடம்….

“என்ன மிருதுக்கா இப்படி நம்மள உட்கார வச்சிட்டு ஆளாளுக்கு போயிட்டா!!! பின்ன எதுக்கு நம்மள வரச்சொன்னாலாம்“

இதைக் கேட்ட அம்புஜம்…

“டேய் வேனு வாயை வச்சுண்டு கொஞ்ச நேரம் சும்மா இருடா. ஏண்டி மிருது நீ ஏன் அவாள்ட்ட அப்படி கேட்ட? பேசாம சிரிச்சிண்டு உட்கார்ந்திருக்க வேண்டியது தானே மா“

“அம்மா மிருதுக்கா ஒன்னுமே தப்பா சொல்லலையே. அத்திம்பேரோட சித்தி  செட் அ வெரி பேட் ஜோக்“

“சரி சரி இத விடுங்கோ. இங்க இப்போ இதப்பத்தி நாம பேச வேண்டாம். ஆத்துல போய் பேசிக்கலாம். நானே உள்ள போய் என்ன நடக்கறதுன்னு பார்த்துட்டு வரேன். நீங்க மூணு பேரும் இங்கயே இருங்கோ“

“என்ன சித்தி நான் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா?” 

நவீன் மீண்டும் அவளை முறைத்து விட்டு ஹாலுக்குச் சென்றான்.

“இல்ல இல்ல எல்லாம் ரெடி. வாங்கோ எல்லாருமா சாப்பிடலாம்“

அனைவருமாக இரவு உணவை உண்ட பின் அங்கிருந்து கிளம்பினார்கள். அப்போது ப்ரவின்…

“ஓகே எல்லாருக்கும் பை. நான் இங்க சித்தி ஆத்துல இரண்டு நாள் தங்கிட்டு வரேன். நீங்க எல்லாரும் போயிட்டு வாங்கோ“

“என்ன சொல்லற ப்ரவின். உன் டிரெஸ் எல்லாம் வேண்டாமா!” என கேட்டான் நவீன்

“இதோ வேண்டிய டிரஸ் எல்லாம் எடுத்துண்டு வந்திருக்கேன் அண்ணா. வரும்போதே டிசைட் பண்ணி தான் வந்தேன்” 

“மிருது உன்கிட்ட ப்ரவின் சொன்னானா?”

“இல்லை எனக்கும் இப்போ அவன் சொல்லித் தான் தெரியறது“

“அப்போ ரெண்டு நாள் கழிச்சு நீயே பஸ்ஸு பிடிச்சு ஆத்துக்கு வந்திடு சரியா“

“ஓகே அண்ணா நான் பார்த்துக்கறேன்“

இதுவே நவீனுக்கும் மிருதுளாவிற்கும் ப்ரவின் கொடுத்த மரியாதை!!!!!

ரம்யா குடும்பத்தினருக்கு பை சொல்லி விட்டு பஸ்ஸில் ஏறினர். பஸ் பயணத்தின் போது நவீன் மிருதுளாவிடம்…

“நீ ஏன் என் சித்தியிடம் அப்படி சொன்ன?”

என்று கேட்டதும் மிருதுளா நவீனைப் பார்த்து…

“இதே கேள்வியை உங்க சித்தியிடம் கேட்டிருக்க வேண்டியது தானே. கேட்டேங்களா?” 

என்றதும் சட்டென எழுந்து வேனுவை மிருதுளா பக்கத்தில் உட்காரச் சொல்லி விட்டு நவீன் பவின் அருகில் சென்று அமர்ந்தான். நடந்தவையை பார்த்த அம்புஜம் மனதிற்குள்….

“அச்சோ இந்த பொண்ணு ஏன் அப்படி சொல்லனும் இப்போ மாப்ளயோட பிரச்சினை ஆகனும். அதுவும் நாங்க வந்த நேரமா இப்படியெல்லாம் நடக்கனும். அம்மா தாயே மாப்ளையோட கோபத்தை சீக்கிரம் தணித்துடுமா“

அம்புஜம் தொன்னூறுகள் தாய் மார்களின் ஓர் எடுத்துக்காட்டு. இதே இந்த கால தாய்மார்கள் தங்கள் பெண் செய்தது தான் சரி என்று மாப்பிள்ளையிடமே சண்டையிடவும் தயங்க மாட்டார்கள். ஆனால் அன்றோ மாப்பிள்ளை முன் வருவதற்கே சங்கோஜப் படுவார்கள். தனது பெண் தனக்காக தன் தன்மானத்தைக் காக்க தன்மையாக திருப்பி பேசியதை ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால் அவளிடம் இப்படி ஏதாவது பேசி அவளின் தன்னம்பிக்கையை தளர்த்தாமல் இருந்தாலே நல்லது. 

நவீனின் இந்த திடீர் மாற்றம் மிருதுளாவை மட்டும் அல்ல நம்மையும் குழப்பம் என்ற குழியில் தள்ளியுள்ளது. மிருதுளா நவீனிடம் பஸ்ஸில் கேட்டது சரியா? நவீனின் கோபம் சரியானதா? அம்புஜத்தின் பரிதவிப்பு தேவையானதா? 

இதை எப்படி கையாளப் போகிறாள் மிருதுளா!!!!!

தொடரும்…..

தனது குடும்பத்தினரின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த மிருதுளா என்னனென்ன பொருட்கள் வாங்க வேண்டி வரும் என்று ஒரு லிஸ்ட் தயார் செய்தாள். அன்று மாலை நவீன் கிளாஸ் முடிந்து வந்து இருவரும் உணவருந்தியதும் அமர்ந்து அந்த லிஸ்ட்டில் உள்ள பொருட்களை எங்கே வாங்கலாம் எவ்வளவு ஆகும் என்று பட்ஜெட் போட்டனர். அப்போது மிருதுளா

“சரி இந்த பொருட்களுக்கு ஒரு ஆயிரம் ரூபாய் தேவை. அப்புறம் இந்த மாத மளிகை ஜாமான்கள் வாங்கனும் அதுக்கு ஒரு இரண்டாயிரம் போயிடும், காய்கறிகளுக்கு ஒரு ஆயிரம், ரெயில்வே ஸ்டேஷனிலிருந்து அவாள கூட்டிண்டு வர்றதுக்கு கார் வைக்கனும் அதுக்கு ஒரு ஐநூறு, பால் + பெட்ரோல் + ஸ்நாக்ஸ் எல்லாமுமா ஒரு ஆயிரம்….ஸோ டோட்டல் இப்பவே ஐயாயிரத்தி ஐந்நூறு மீதமிருக்கறது ஐந்நூறு இதுல எப்படி நாம அவாள எல்லா இடத்துக்கும் சுத்திக்காட்ட கூடிண்டு போக முடியும்?”

“மிருது நீ சொல்லற கணக்கில் எல்லாமே கொஞ்சம் ஜாஸ்தியா தான் சொல்லற அதனால பணம் இருக்கும். அப்படியே பத்தாட்டினா என் ஆஃபீஸில் அட்வான்ஸ் வாங்கறேன். என்ன அடுத்த மாதம் சம்பளம் குறைவா வரும். என்ன சொல்லற?”

“ஆஃபிஸிலேருந்து அட்வான்ஸ் ன்னா ஓகே ஆனா யார்கிட்டேயும் கடன் வாங்க கூடாது சரியா“

“சரி மகாராணி. நீ இதெல்லாம் மனசுல போட்டுண்டு அவாளோட என்ஜாய் பண்ணாம இருக்காத. நான் பார்த்துக்கறேன். கவலைப் படாதே.“

“சரி உங்க பேரன்ட்ஸுக்கு அனுப்பவேண்டிய  மூவாயிரத்தை அனுப்பியாச்சா இல்லையா?”

“அதெல்லாம் நீ சொன்ன மறுநாளே அனுப்பியாச்சு.“

“அவா எல்லாருமா என்னைக்கு எத்தர மணிக்கு வரா?  நவீன்“

“அவா வர்ற ஞாயிற்றுக்கிழமை காலை ல எட்டு மணிக்கு ரெயில்வே ஸ்டேஷன் வந்து சேர்வார்கள் என பத்தாவது முறையாக அறிவிக்கிறேன்“

“ஓகே உங்களின் பத்தாவது தடவை அறிவிப்புக்கு நன்றி நன்றி நன்றி“

“இந்த வெள்ளிக்கிழமையும் கிளாஸுக்கு லீவ் போடட்டுமா?”

“ஏன் ஏன்னத்துக்கு வேண்டாம். நீங்க கிளாஸுக்கு போயிட்டு வாங்கோ. எல்லாத்தையும் சனிக்கிழமை காலை ல ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுட்டு போய் வாங்கிண்டு வரலாம்.“

“அப்போ லஞ்ச் வெளிய சாப்பிடலாமா?”

“ஏன் எதுக்கு நான் காலையில சீக்கிரம் எழுந்து மத்தியான சமையலையும் முடிச்சிடறேன். எல்லா பர்சேஸிங்கும் முடிச்சிட்டு ஆத்துக்கு வந்து சாப்பிடலாம் ஓகே வா?”

“எனக்கு ஓகே மிருது“

சனிக்கிழமை காலை மிருதுளா சீக்கிரமே எழுந்து காலை டிபன் மற்றும் மத்திய சாப்பாடு எல்லாம் செய்துவிட்டு குளித்து வெளியே செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள்.  அப்போது எழுந்த நவீனைப் பார்த்து…

“என்ன நவீன் இன்னைக்கு வெளியே பொருளெல்லாம் வாங்க போகனும்னு தெரியாதா இப்படி தூங்கறேங்கள்!“

” ஏன் எழுப்பலை“

“நல்லா தூங்கிண்டிருந்தேங்கள் எழுப்ப மனசு வரலை“

“டைம் என்ன ஆச்சு?”

“மணி ஒன்பதாகறது“

“என்ன ஒன்பது தானே ஆகறது கடைகள் பத்து மணிக்கு தான் ஓப்பன் பண்ணுவா ஸோ எனக்கு ஒரு மணிநேரமிருக்கே சட்டுன்னு ரெடி ஆயிடுவேன்“

“சரி சரி பேசிண்டே இருக்காம சீக்கிரம் கிளம்புங்கோ. டிபன் வேற சாப்பிடனும்“

“என் மிருது குட்டி ..சூடா ஒரு கப் காஃபி ரெடி பண்ணுவாளாம் நான் நிமிஷத்துல ப்ரஷ் பண்ணிட்டு வந்திடுவேனாம். மிருது காபி குடிச்சிட்டு, பேப்பரை ஒரு பொரட்டு பொரட்டிட்டு பின்ன குளிச்சி ரெடி ஆயிடுவேனாம்“

இருவருமாக ஒருவழியாக வெளியே கிளம்பினர். மிருதுளா போட்ட லிஸ்ட் படி எல்லா பொருட்களையும் வாங்கினார்கள் ஆனால் எல்லாவற்றையும் பைக்கில் வைத்து கொண்டுவரமுடியாத காரணத்தினால் மிருதுளாவை எல்லா பொருட்களுடன் ஆட்டோவில் ஏற்றிவிட்டு பின்னாடியே பைக்கில் சென்றான் நவீன்.

வீட்டிற்கு வந்து மத்திய உணவருந்தியப்பின் சற்று ஓய்வெடுத்து விட்டு பின் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் அது அது இடத்தில் அடுக்கி வைத்து விட்டு மறுநாள் சமைக்கவேண்டிய காய்கறிகளை நறுக்கி வைத்தனர். அன்று மாலை பக்கத்திலிருக்கும் ஒரு பார்க்குக்கு சென்று சற்று நேரம் நடந்து பின் அங்குள்ள பென்ச்சில் அமர்ந்தனர். அப்பொழுதும் மிருதுளா ஏதோ யோசனையிலேயே இருந்ததைப் பார்த்த நவீன்…

“என்ன யோசிக்கற மிருதுளா? நாளைக்கு உன் அப்பா, அம்மா, தம்பி எல்லாரும் வந்திடுவா அப்புறம் உனக்கு என்னோட பேசக் கூட நேரமிருக்காது…அத தானே யோசிச்சிண்டுருக்க“

“அட போ பா…நான் ஏன் அதையெல்லாம் யோசிக்கப்போறேன். தெரிஞ்ச விஷயத்தை எல்லாம் நான் யோசிக்க மாட்டேன். அப்படின்னா நீங்க ஏன் அதை யோசிக்கலையாம் உங்க தம்பிகளும் தானே வர்றா….எப்புடி“

“அடி பாவி!!! அப்போ வேற என்னத்த பத்தி அப்படி யோசனையாம்!“

“நாளைக்கு காலை ல எட்டு மணிக்கு வர்றான்னா நாம ஸ்டேஷனுக்கு ஏழரை க்கு போயாகனும் இல்லையா“

“ஆமாம் நாம ஆத்துல இருந்து  ஒரு ஏழேகாலுக்கு பஸ் ல கிளம்பினோம்ன்னா கரெக்ட்டா ஏழரைக்கு ஸ்டேஷன் ரீச் ஆகிடுவோம்.“

“ஓ ஏழேகாலுக்கெல்லாம் ரெடி ஆகனுமா? அப்போ நான் நாலரை மணிக்கு எழுந்திருக்கனுமே!!“

“ஏன் அவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்கனும்?”

“அப்போ தானே காலை அன்ட் மத்திய  சமையல் வேலைகளை எல்லாம் முடிக்க முடியும்.“

“ஓ நீ அடுப்படிக்குள்ள இருக்கயா?…என் கூட பார்க்ல இருக்கேன்னு நினைச்சிண்டிருக்கேன்“

“என்னது!!! நாம பார்க் ல தானே இருக்கோம்“

“தெரியறது தானே அப்புறம் என்ன அடுப்படி சமையல்ன்னு அதையே நினைச்சிண்டிருக்க.“

“ஓகே மறுபடியும் பார்க்குக்கே வந்துட்டேன். சொல்லுங்கோ அவாள எங்கெல்லாம் கூட்டிண்டு போகபோறோம்.“

“அதெல்லாம் நான் ஏற்பாடு பண்ணிட்டேன். நீ கவலைப் படாதே“

“உங்க ஈவ்னிங் கிளாஸ் எப்படி போகபோறேங்கள்?” 

“அவா இருக்கற வரைக்கும் டொக்கடிக்க வேண்டியது தான்.“

“நோ நோ நோ…அது மட்டும் கூடவே கூடாது. என்னைக்கெல்லாம் ஈவ்னிங் எங்கேயும் போற ப்ளான் இல்லையோ அன்னைக்கெல்லாம் கிளாஸ் அடென்ட் பண்ணுங்கோ..சரியா“

“உத்தரவு டிச்சர்.“

“சரி நேரமாயாச்சு ஆத்துக்கு போகலாமா?”

“ஓ ஆமாம் இட்ஸ் செவன் தர்ட்டி. அப்படியே ஆத்துக்கு போற வழில நம்ம டாபா ல டின்னர் சாப்ட்டுட்டே போலாமா இல்லை ஏதாவது செய்து வச்சிருக்கயா?”

“ஒன்னும் செய்து வைக்கலை. சாப்பிட்டுட்டே போகலாம்.“

நவீனுக்கும் மிருதுளாவும் காலை முதல் மாலை வரை பர்ச்சேஸிங், வருபவர்கள் சௌகர்யமாக தங்குவதற்கான ஏற்பாடுகள், பார்க்கில் வாக்கிங் என சனிக்கிழமை விறுவிறுவென ஓடியதில் களைத்துப் போனார்கள். அன்றிரவு இருவருமே அசந்து உறங்கிப் போனார்கள். 

மிருதுளா சட்டென்று விழித்துப்பார்த்தாள் சூரியன் உதயமாகி பல மணி நேரமானது போல தோன்ற கிடுகிடுவென குளித்து ஃப்ரெஷ் ஆகி கடிகாரத்தைப் பார்த்தாள்….மணி ஆறு என்று அவள் பார்த்ததில் கடிகாரத்தின் இரு முட்களும் வெளியே வந்து அவளை சுறுக்கென குத்தியது போல 

“ஓ! ஹோ!!” என்றபடியே

“நவீன் ஏய் நவீன் மணி ஆறாச்சுப்பா!!! எழுந்திறீங்கோ…இவ்வளவு லேட்டா எழுந்துண்டுட்டேனே“

என பொலம்பிக்கொண்டே காபி டிக்காக்ஷன் போட்டுக்கொண்டே மளமளவென வேலையில் இறங்கினாள். மிருதுளா எழுப்பிய வேகத்தில் நவீன் எழுந்து 

“என்னத்துக்கு இப்போ இவ்வளவு டென்ஷன் ஆகற மிருது இன்னும் ஒன்னேகால் மணி நேரமிருக்கு நாம கிளம்ப. அதுவரை என்ன முடியறதோ அதை செய் மீதியை வந்துட்டு செஞ்சுக்கலாம். காபி உண்டா?”

நவீன் கையில் சுடசுட காபி டம்ளரைக் குடுத்துக்கொண்டே…

“ஆமாம் உங்களுக்கென்ன வந்தவாளோட அரட்டை அடிச்சிண்டு இருப்பேங்கள்‌“

“உனக்கென்ன ஆச்சு நீயும் ஜாயின் பண்ணிக்கோ“

“அதுக்குதான் என் வேலைகளை எல்லாம் இப்பவே முடிச்சிட்டா நானும் உங்களோட உட்கார்ந்து அவாளோட பேசலாமேன்னுட்டு இப்படி அவசர அவரமா செய்துண்டிருக்கேன். காபி குடிச்சாச்சில்லையா நீங்க போய் ரெடி ஆகுங்கோ…“

என்று பேச்சைக்குறைக்க நவீனை அங்கிருந்து அனுப்பிவிட்டு கிடுகிடுவென காலை டிஃபனுக்கு இரவே ஊர வைத்த பருப்பு அரிசியை போட்டு அடைக்கு மாவறைத்து வைத்து, மத்தியத்துக்கு சாம்பார், ரசம், பொறியல் செய்து விட்டு ஸ்டேஷன் செல்வதற்கு புறப்பட்டாள். 

“பரவாயில்லை மிருது வித்தின் ஒன் அவர் நீ இவ்வளவு செய்துட்டேயே. யூ ஆர் கிரேட்“

“என்ன புகழ்ந்தது போதும் நாம கிளம்பலாமா?” 

“ஓகே நீ போ நான் கதவை பூட்டிட்டு வரேன்“

இருவருமாக ஸ்டேஷனில் விருந்தினர்கள் வரும் கம்பார்ட்மென்ட் நிற்கும் இடத்தை  சென்றடையவும்  அவர்கள் வரும் ரெயில் அதற்குரிய பிளாட்பாரம் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. மூன்று மாதங்களுக்கு பிறகு தனது குடும்பத்தினரை பார்க்க போகும் மிருதுளாவின் மனது முழுவதும் மகிழ்ச்சி ஆக்கிரமித்திருந்தது. அதுவரை அவள் அவளின் குடும்பத்தை விட்டு இவ்வளவு நாட்கள் இருந்ததில்லை. 

நவீன் மிருதுளாவை அங்கேயே நிற்க சொல்லி விட்டு அந்த கம்பார்ட்மென்ட்டிற்குள் சென்றான். மிருதுளாவின் கண்கள் அந்த ரெயில் பெட்டியினுள் ஸ்கேன் செய்துக்கொண்டிருக்கையிலே….அவள் பின்னாலிருந்து…

“ஹாய் மிருதுக்கா” என்றான் வேனு

“ஹேய் மிருது எப்படி மா இருக்க” என அவள் தாய் 

அவர்களை பாத்ததும் ஓவென்று அழத்துவங்கினாள் மிருதுளா. உடனே நவீன் அவளருகில் வந்து 

“இட்ஸ் ஓகே ஏன் அழற இப்போ…எல்லாரும் உன்னையே பாக்கறா பாரு …கண்ண தொடச்சுக்கோ..“

“என்ன மிருதுக்கா இவன் வந்துட்டானேன்னு அழறயா என்ன?”

என்று வேனு கூறியதும் அனைவரும் சிரித்தனர் பின் தன்னை நிதானித்துக் கொண்டாள் மிருதுளா ..

“சாரி உங்களை எல்லாரையும் பார்த்ததும் என்னமோ தெரியலை அழுகை வந்துடுத்து. வெல்கம் டூ குஜராத் அம்மா, அப்பா, வேனு, ப்ரவீன் அன்ட் பவின்“

“உன் சமையலை சாப்பிடப் போற  நாங்க இல்லையா அழனும் எங்களுக்காக நீ ஏன் அழுவற?”

“டேய் வேனு வேனாம்டா“

“ச்சே ச்சே அப்படி எல்லாம் சொல்லாதே வேனு உங்க அக்கா சூப்பரா சமைக்கறா. நீயும் சாப்பிட்டதுக்கப்புறம் சொல்லு“

“சாப்பிட்டதுக்கப்புறம் சொல்றதுக்கு இருக்கனுமே!!“

“டேய் வேனு போதும் போதும் நிறுத்திக்கோ” என்று அம்புஜம் சொன்னதும் கப்சிப் ஆனான் வேனு.

நவீனின் நண்பனின் மாருதி ஓம்னி வேனில் அனைத்து லக்கேஜ்களுடன் எப்படியோ அட்ஜெஸ்ட் செய்து அனைவரும் அமர்ந்து  இப்படியே பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர். அதனால் புதுமண தம்பதியினருக்கு ஒரு முன்னூறு ரூபாய் மிச்சமானது. 

வீட்டைத் திறந்துக் கொண்டே அனைவரையும் “வாங்கோ..வாங்கோ எல்லாரும் எங்காத்துக்குள்ள வாங்கோ” என்று கூறினாள். மிருதுளாவும்,  அம்புஜமும், ராமானுஜமும் முதலில் உள்ளே சென்றனர். மற்றவர்கள் பெட்டிப் படுக்கைகளை வண்டியிலிருந்து இறக்கி வீட்டினுள் எடுத்து வந்துக் கொண்டிருந்தனர். மிருதுளா அவள் பெற்றோரிடம்…

“அம்மா அப்பா வீட்டை சுத்திப் பாருங்கோ அதுக்குள்ள உங்க எல்லாருக்கும் காபி போடறேன்“

“நீ தள்ளு மிருது நான் போடறேன்“

“அம்மா இப்போ நீ எங்காத்துக்கு வந்திருக்க ஸோ நான் தான் போடுவேன்…நீ போய் வீட்டைப் பாரு இல்லாட்டி ஹால் ல உட்காரு“

“வீடு நம்ம குவார்டர்ஸ் மாதிரிதான் இருக்கு” என்றார் ராமானுஜம்

“இதுவும் எங்களோட குவார்டர்ஸ் தான். ஆனா இது எனக்கு அளாட் ஆன வீடு இல்லை. இதுக்குள்ள சேஃப்ட்டியா இருக்குமேன்னு தான் உள்ளயே  இருக்கோம். இன்னும் ஒரு ஆறு  இல்லை எட்டு மாசத்தில எனக்கு வீடு அளாட் ஆகிடும்” என்று பதிலளித்தான் நவீன். 

லக்கேஜ் எல்லாம் ஹாலில் வைத்துவிட்டு அனைவருமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். மிருதுளா ஏழு காபி டம்பளர்களுடன் வந்து அனைவருக்கும் காபிக் கொடுத்துவிட்டு…

“அம்மா என் காபி எப்படின்னு குடிச்சுப்பார்த்து சொல்லேன்” 

தாயல்லவா!!! மகள் சொன்னதும் குடித்துவிட்டு

“சூப்பர் காபி மிருது. ரொம்ப நல்லா இருக்கு“

“மிருதுக்கா அம்மா உனக்கு ஜைன் சக் அடிப்பா இரு இரு இதோ நான் குடிச்சிட்டு உண்மையான ஒப்பீனியன் சொல்லறேன்..“

“சரிடா நீ குடிச்சிட்டு சொல்லு“

.”ம்…ம்..ஆஹா நிஜமாவே சூப்பர் தான் மிருதுக்கா“

“வஷிஷ்ட்டர் வாயால் ப்ரம்மரிஷி. போதுமாடா!!“

“ஏய் மிருது அது என்ன வஷிஷ்ட்டர் வாயால்…..“

“அதுவா அதை அப்புறமா சொல்லறேன். ஹேய் ப்ரவீன் அன்ட் பவின் என்ன அமைதியா இருக்கேங்கள். உங்க மன்னி காபி எப்படி“

“சூப்பரா இருக்கு மன்னி” என்றான் ப்ரவின்

“ஓகே எல்லாரும் ஒவ்வொருத்தரா குளிச்சிட்டு வாங்கோ நான் அடை வார்த்துத் தறேன். நவீன் அவா எல்லாம் குளிச்சிட்டு வரட்டும் உங்களுக்கு ஃபர்ஸ்ட் டிஃபன் தரேன் வாங்கோ“

அம்புஜம் முதலில் குளித்து விட்டு அடுப்படிக்குள் சென்று..

“மிருது மா தாடி நான் அடை வார்க்கறேன்“

“அம்மா எத்தனத் தடவ சொல்லுவேன் …இந்தா புடி நீயும் போய் உட்கார்ந்து சாப்பிடு.“

அனைவரும் குளித்து டிஃபன் அருந்தியப்பின் ஹாலில் வட்டமாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் அம்புஜம் மிருதுளாவையே பார்த்துக்கொண்டிருந்தாள். அதை கவனித்த மிருதுளா தன் அம்மாவிடம்…

“என்ன மா வந்ததுலேருந்து என்னை அப்படிப் பார்க்கற“

“கல்யாணத்துக்கு முன்னாடி நீ இருந்ததையும் இப்ப நீ இப்படி பொருப்பான குடும்பஸ்த்தியா இருக்கறதையும் நினைச்சுப் பார்த்திண்டிருக்கேன்“

“அதெல்லாம் ஓகே நான் நல்லா இருக்கேன்னு சொல்லவரயா இல்லை…“

“நீ எவ்வளவு சமத்தா இருக்க…அதப் பார்த்து ரசிச்சிண்டிருக்கேன்“

“அப்போ சரி நீ நல்லா ரசிச்சிண்டே இரு. நான் போய் பாயசமும் வடையும் மட்டும் பாக்கி வச்சிருக்கேன் அதை செய்துட்டு வரேன்.“

ராமானுஜம் …நவீனுக்கும் மிருதுளாவிற்குமாக கொண்டு வந்த டிரெஸ், பலகாரங்கள், பழங்கள், ஊறுகாய் பாட்டில்கள் என எல்லாவற்றையும் அட்டைப்பெட்டியிலிருந்து எடுத்து வெளியே வைத்தார். அதைப் பார்த்த நவீன்…

“என்னது இது இவ்வளவு கொண்டு வந்திருக்கேங்கள்!!! ஏய் மிருது இதெல்லாம் எங்க வைக்க போற” என்றான்.

“அம்மா ஏதாவது வேலை செய்யனும்னா அதை எல்லாம் இங்க அடுப்படி ல கொண்டு வந்து அடுக்கேன்“

“ஓ பண்ணறேனே. எங்க அடுக்கனும்ன்னு சொல்லு அங்கேயே வச்சுடறேன்“

“இதோ இந்த ஷெல்ஃப் காலியாதான் இருக்கு இதுல அடுக்கிடூ“

அம்புஜமும் மிருதுளாவும் அடுப்படியில் மும்முரமாக வேலையில் இறங்கினர். ராமானுஜம் தரையில் துண்டை விரித்து படுக்க அப்படியே அசந்துப்போனார். நவீன் பசங்களை கூட்டிக்கொண்டு வெளியே போவதாக மிருதுளாவிடம் சொல்லி விட்டு வேனு, ப்ரவின் அன்ட் பவினை அழைத்தான். அதற்கு பவின்…

“இல்லண்ணா நான் வரலை. இங்கேயே இருக்கேன் நீங்க எல்லாரும் போயிட்டு வாங்கோ” என்று சொல்ல அதற்கு ப்ரவின் 

“ஓகே பவின் இப்போ நீ இங்க இருந்துக்கோ அடுத்த தடவை இப்படி வெளியே போனா நீ அவா கூட போ சரியா“

“டேய் என்னடா பேசறேங்கள்? ஏன் ரெண்டு பேரும் வர்றத்துக்கு என்னவாம்!!!நான் என்ன உங்க ரெண்டு பேர் ல ஒருத்தரை தான் கூட்டிண்டு போவேன்னா சொல்லறேன்? அதென்ன இந்த தடவ நான் அடுத்த தடவ நீ அப்படீன்னு பேசிக்கறேங்கள். என்ன நடக்குது உங்ளுக்குள்ள?”

“அது ஒன்னுமில்லண்ணா…நீ வா நாம போயிட்டு வரலாம் பவினுக்கு வரனும்ன்னு தோனலையாம்“

“என்ன டிஸ்கஷன் வெளியே போறோம்ன்னு சொல்லி பத்து நிமஷத்துக்கு மேல ஆச்சு ஆனா இன்னும் இங்கயே பேசிண்டிருக்கேங்கள். உங்க பேச்சு சத்தத்திலும் எங்க அப்பா எப்படி தான் இப்படி தூங்கறாரோ!!! என்ன ஆச்சு?”

“அது ஒன்னுமில்லை மன்னி. பவினுக்கு வர தோனலையாம் அதைத்தான் ஏன்னு நவீன் அண்ணா கேட்டுண்டிருக்கா“

“ஏன் பா அவனுக்கு வரனும்ன்னு இல்லைன்னா விட வேண்டியது தானே..ஏன் இப்படி கம்ப்பல் பண்ணறேங்கள்? நீங்க எல்லாரும் போயிட்டு வாங்கோளேன்“

நவீனுக்கு எடுத்துச்சொல்லி அவர்கள் வெளியே சென்றதும் கதவை சாத்தி விட்டு பவினிடம் சற்று படுத்து ஓய்வெடுக்க சொல்லி விட்டு அடுப்படிக்குள் சென்று சமையலைத் தொடர்ந்தாள். 

அன்று மத்தியம் வெளியே சென்றவர்கள் வந்ததும் அனைவருமாக அமர்ந்து மிருதுளா சமைத்த விருந்து சாப்பாட்டை ஒரு பிடி பிடித்தனர். மூன்று நாட்கள் கட்டு சாதம் சாப்பிட்ட வாய்க்கு விருந்து தேவாமிருதமாக இருந்தது. விருந்துண்ட மயக்கத்தில் அனைவரும் கண்ணசந்தனர். ராமானுஜம் காலை டிஃபன் சாப்பிட்டப் பின் ஒரு குட்டித்தூக்கம் போட்டதினால் அவருக்கு உறக்கம் வரவில்லை ஆகையால் கதவைத் திறந்து வெளியே பூட்டிவிட்டு அந்த கேம்ப்பை சுத்தி பார்க்க புறப்பட்டுச் சென்றார். முழுவதும் சுற்றிப் பார்த்தப் பின் தன் மகள் வீட்டுக்கு வந்து கதவைத் திறந்து பார்த்தார் அனைவரும் நல்ல உறக்கத்திலிருந்தனர். அவர்களை தொந்தரவு செய்யாமல் கிடைத்த இடத்தில் துண்டை விரித்து அவரும் படுத்துக் கொண்டார். 

அன்று மாலை காபி அருந்தியப் பின் அனைவரும் கிளம்பி நடந்து  பக்கத்திலிருந்த கோவிலுக்கு போய்விட்டு அப்படியே நவீன் மிருதுளா தினமும் வாக்கிங் போகும் பார்க்கில் சென்று சற்று நேரம் அமர்ந்து அரட்டை அடித்து விட்டு வீட்டிற்கு திரும்பும் வழியில் அவர்களின் ஃபேமஸ் ரோஹித் டாபாவில் அம்புஜத்தைத் தவிற மற்ற அனைவரும் டின்னர் சாப்பிட்டு வீடு வந்து சேர்ந்தனர். வீட்டிற்கு வந்ததும் மிருதுளா தன் அம்மா கேட்டுக்கொண்டது படி சாதமும் தயிரும் கொடுத்து சாப்பிடச் சொன்னாள். அம்புஜமும் கொஞ்சமாக சாப்பிட்டாள். 

அனைவரும் வரிசையாக ஹாலில் படுத்தனர் அப்போது நவீன் 

“டேய் பவின் ஈவ்னிங் எங்களோட வந்த இல்ல அதே மாதிரி காலை ல கூப்பிட்டப்போவும் வர்றதுக்கு என்னவாம்?”

“அண்ணா ஈவ்னிங் எல்லாருமா போனோம் ல அப்போ நான் மட்டும் இங்கே இருந்து என்ன பண்ணுவேன் அதுனால வந்தேன்“

“ஓ சார் அப்படி வர்றீங்களா..ஓகே ஓகே“

என்று நவீனுக்கு ஏதோ புரிந்ததுப் போல சொல்லி அத்துடன் பேச்சை நிறுத்திக்கொண்டான்.

மிருதுளா குடும்பத்தினரின் வருகையால்  மிருதுளாவும் நவீனும் சற்று பரபரப்புடன் இருந்தாலும், கொஞ்ச நாள் பிரிந்திருக்க வேண்டியிருந்தாலும் அவர்களுக்கு புத்துணர்வு அளித்தது. அம்புஜமும் ராமானுஜமும் அவர்களின் மகள் பொறுப்புடன் குடும்பம் நடத்தும் அழகைப் பார்த்ததில்  மனமகிழ்ந்தனர். மகள் மருமகன் வீட்டில் அவர்களின் முதல் நாள் இனிதே நிறைவுற்றது. 

ப்ரவின் அன்ட் பவின் மிருதுளா குடும்பத்தினருடன் வந்ததின் நோக்கத்தை முதல் நாளே நாம் தெரிந்துக்கொண்டோம் அல்லவா! பாவம் அவர்கள் வெறும் அம்புகள் தான். அவர்களை ஏய்தவர்கள் யாரென்று நமக்கு சொல்லியா புரியவேண்டும். 

அம்பு ஏய்து மிருங்களை கொன்று புசிப்பவன் வேடன்.

தங்களுக்கு வேண்டியவர்களை அம்புகளாக ஏய்து வம்புக்கு காத்திருப்பவர்கள் நமது இதிகாசத்தில் வரும் சகுனி / கூனி ஆவர்.

வேடனுக்கு வயிற்றுப் பசி.

சகுனி / கூனி களுக்கோ பழி/வம்பு பசி.

வேடன் பசி உண்டதும் அடங்கிவிடும்.

சகுனி/கூனி பசி அவர்கள் குறி வைத்தவர்கள் அழிந்தால் தான் அடங்கும்.

ஏய்தவர் எங்கோ இருக்க அம்பை நோவானேன்!!!! என்ற எண்ணத்தில் இருக்கிறாளா நம்ம மிருதுளா?

தொடரும்….

மகிழ்ச்சியாக மீதமிருந்த விடுமுறை நாட்களை நவீன், மிருதுளா இருவருமாக கழித்தனர். திங்கட்கிழமை வந்தது. நவீன் வேலையில் ஜாயின் பண்ணுவதற்காக கிளம்பிக்கொண்டிருந்தான். மிருதுளா அடுப்படியில் தன் கணவனுக்காக காலை உணவையும் மத்திய உணவையும் தயார் செய்வதில் மும்முரமாக இருந்தாள். இருவருமாக காலை உணவை ஒன்றாக அமர்ந்து அருந்தினர். பின் மத்தியத்திற்கு சாம்பார் சாதமும் பீன்ஸ் பொறியலும் வைத்திருப்பதாக சொல்லி அது எப்படி இருந்தது என்பதை மாலையில் சொல்ல வேண்டுமென கட்டளையிட்டு நவீன் கையில் கொடுத்தாள் மிருதுளா. அதற்கு நவீன்..

“அப்படியே ஆகட்டும் தாயே” என்று சொல்லி ஆஃபீஸுக்குச் சென்றான். நவீனை ஒரு வாரம் முன் பார்த்த நண்பர்கள் அன்று அவனைப்பார்த்து ….

“அடே அப்பா ஒரே வாரத்தில் என்ன தேஜஸாயிட்ட நவீன்!!!!” என்று அவனின் உள்ளத்திலிருந்த மகிழ்ச்சி முகத்தில் பளிச்சிட்டதைப் பார்த்துக் கேட்டனர். பல்பீர்…

“ஹவ் ஈஸ் யுவர் வைஃப் நவீன்?…நானும் என் மனைவியும் உங்க வீட்டுக்கு வரலாமென நினைத்தோம்…அப்புறம் ஏன் நியூலி வெட்டெட் கப்புளை டிஸ்டர்ப் பண்ணனும்னு விட்டுட்டோம்….வில் கம் அன்ட் சீ ஹெர் திஸ் வீக் என்ட்“

“ஹவ் அபௌட் ஆல் ஆஃப் அஸ் கோ அன்ட் விஸிட் தெம் திஸ் வீக் என்ட்” என்றார் மற்றொரு நண்பர். அதற்கு நவீன்..

“ஓகே யாரெல்லாம் இந்த வீக் என்ட் வரீங்களோ தயவுசெய்து முன்னாடியே சொல்லிடுங்கப்பா..அட் லீஸ்ட் நாளைக்கு.“

நவீனின் நெருங்கிய நண்பர்களில் பல்பீர் மட்டுமே திருமணமானவர்  ஆகையால் மீதி நால்வரும் ப்லபீருடன் கலந்து பேசி உடனே டிசிஷன் எடுத்து சனிகிழமை நவீன் வீட்டிற்கு வருவதாக கூறினர். நவீனும் எப்போ என்று மிருதுளாவைக்கேட்டு சொல்வதாக சொல்ல …அனைவரும்…

“ஓ!!! ஹோ!!” என ஒன்றாக கோஷமிட்டனர். 

நவீனை நண்பர்கள் மத்திய உணவருந்த மெஸ்ஸுக்கு கூப்பிட்டனர். மிருதுளா தனக்காக சமைத்துக் குடுத்தனுப்பியிருக்கிறாள் என்பதால் அவர்கள் அழைப்பை மறுத்துவிட்டான். பின்பு அவனது டிஃபன் பாக்ஸை திறந்து சாப்பிட்டான். மிருதுளா அன்புடன் கட்டிக்கொடுத்த அன்னம் அமிர்தமாக இருந்தது. அதை அவளிடம் சொல்ல மாலை நேரத்திற்காக காத்திருந்தான். 

கடிகாரம் நாலு நாப்பது காட்டியதும் தனது வேலை மேஜையை சுத்தமாக்கி விட்டு நண்பர்களுக்கு பை சொல்லிவிட்டு வேக வேக மாக வீட்டிற்குச் சென்று வீட்டின் கதவைத்தட்டினான். கதவை மிருதுளா திறந்ததும் ….

“ஹாய் நவீன். குட் ஈவ்னிங். ஹவ் வாஸ் தி டே” என்றாள் 

நவீனுக்கு ஏதோ தேவ லோகத்தில் நுழைந்தது போல வீடே ஊதுவத்தி மணம் கமழ சுத்த பத்தமாக இருந்தது. மிருதுளாவும் லக்ஷ்ணமாக நெற்றியில் குங்குமம் விபூதியுடன் பளிச்சிட்டாள். நவீனால் அவளைப் பார்த்து பேசி பாராட்டக்கூட நேரமில்லாமல் கிடு கிடுவென ஈவினிங் கிளாஸுக்கு தயாராகிக்கொண்டே மத்திய உணவைப் பற்றியும் வீட்டை நேர்த்தியாக வைத்திருக்கும் அழகையும் வர்ணித்தான். மிருதுளா அவனுக்கு ஒரு தட்டில் நிலக்கடலை சுண்டலும் ஒரு கப் சூடான காபியும் கொடுத்தாள். சுண்டலை சாப்பிட்டு, காபியை குடித்து விட்டு ….

“சூப்பர் மிருது…சரி நான் கிளம்பறேன் அன்ட் வில் பீ பேக் பை நைன் தர்ட்டி. பத்திரமா இரு. இங்க சேஃப் தான் ஸோ கவலை வேண்டாம். பை பை“

என தனது பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பிச் சென்றான். மிருதுளாவும் பை சொல்லி விட்டு வீட்டினுள் சென்று காபி பாத்திரங்களை தேய்த்து வைத்துவிட்டு. இரவுக்கு மசால் செய்து, பூரிக்கு மாவு பிசைந்து வைத்துவிட்டு அவளின் புத்தகங்களை எடுத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தாள். 

அன்று இரவு நவீன் சொன்னதைப் போலவே ஒன்பதரை மணிக்கு கதைவைத் தட்ட மிருதுளா திறந்தாள். உடைகளை மாற்றி சற்று ரிலாக்ஸாக அமர்ந்தான். 

“ஏய் மிருது என்ன பண்ணற?”

தட்டில் சூடான பூரி மசாலை போட்டு நவீனிடம் கொடுத்தாள். 

“ஓ வாவ்!!! மிருது இப்படியே நீ வித விதமா செய்து தந்து நானும் அளவு தெரியாம சாப்பிட்டு வேயிட் போடப் போறேன்“

“போட்டா என்னவாம்!! நல்லா தான் இருப்பேங்கள்“

“நான் நல்லா இருக்கறது இருக்கட்டும்….என்ன அப்பறம் வேயிட் குறைக்கனும்ன்னு மெடிக்கல் டெஸ்ட் ல சொல்லிடுவா…அது ஒரு பெரிய ப்ராஸஸ்…“

“ஓ அப்படி வேற இருக்கா?”

“எஸ் எஸ்!! ஐ ஹாவ் டூ மேய்டேயின் மை வேயிட். சரி நீ சாப்ட்டயா?”

“இதோ இத மட்டும் போட்டு எடுத்துட்டேனா ஆச்சு. நானும் சாப்பிடலாம்“

“வா வா !! உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்.“

“இதோ வந்துட்டேன். சொல்லுங்கோ“

“என் நண்பர்கள் ஒரு ஆறு பேரு வர சனிக்கிழமை நம்ம ஆத்துக்கு வரேன்ங்கறா எப்போ வரச்சொல்லலாம் நீயே சொல்லு அன்ட் உன்னால அத்தனைப் பேருக்கும் ஏதாவது சாப்பிட செய்ய முடியுமா இல்லை டாபாலேருந்து வாங்கிண்டு வரட்டுமா“

“என்னத்துக்கு வாங்கிண்டு வரனும்!!! நானே சமைக்கறேன் மத்திய சாப்பாட்டுக்கு வரச்சொல்லுங்கோ.“

“ஓகே சொல்லிடறேன். நான் இதை எல்லாம் எடுத்து ஒதுக்கி வைக்கறேன். நீ சாப்ட்டு அந்த தட்டை மட்டும் தேச்சுக்கோ. அதுக்குள்ள இதை எல்லாம் நானே தேச்சுட்டு வரேன்…அப்போ தான் நேரத்துக்கு தூங்க முடியும்” என்று கண்ணடித்துக் கொண்டே சொன்னான் நவீன். 

“நீ படிச்சியா? உனக்கு நேரமிருந்துதா? ஏன்னா நீ இதெல்லாம் பண்ணறதுக்கே டைம் ஆகிருக்குமே பின்ன எப்போ படிச்ச?? நாளையிலேருந்து இப்படி எல்லாம் டிஃபன் பண்ண வேண்டாம். மத்தியானம் செய்ததையே சாப்பிடலாம் சாதம் மட்டும் வச்சுண்டா போதும் என்ன சொல்லற? அப்போ தான் உனக்கும் படிக்க டைம் கிடைக்கும்“

“அதெல்லாம் இருக்கு நவீன்.  டிஃபன் நல்லா இருக்கா இல்லையா?”

“நல்லா இல்லாம என்ன!!! சூப்பரா தான் இருக்கு. ஆனா உனக்கு தான் வேலை அதிகமாகும்ன்னு சொன்னேன்“

“நோ ப்ராப்ளம் …என்னால டிஃபன் செய்தும் தரமுடியும் என் படிப்பையும் படிச்சுக்க முடியும்“

“உனக்கு ஓகேன்னா தென் ஃபைன் கோ அஹெட். எனக்கும் வித விதமா டின்னர் கிடைச்சா வேண்டாம்ன்னா சொல்லப்போறேன். எனக்கு விவரம் தெரிஞ்ச வயசுலேருந்து இந்த வேலைக்கு சேர்ந்த வரைக்கும் தயிர் சாதம் தான் சாப்பாடு… பல நாட்கள் ல அதுவும் இருக்காது… அதுக்கப்புறம் இதோ எங்க மெஸ் சாப்பாடு தான். இப்போ நீ வந்ததுக்கப்பறம் தான் வித வித மா சாப்பிடறேன்“

“எங்காத்துல காலையிலும் மாலையிலும் டிஃபன் தான் மத்தியானம் மட்டும் தான் சாப்பாடு…நான் அதையே ஃபாலோ பண்ணட்டுமா இல்லை உங்களுக்கு ராத்திரி சாதம் வேணுமா?”

“இல்லை உனக்கு கஷ்டமில்லை என்றால் டிஃபனே ஓகே தான்“

“டன். வர வெள்ளிக்கிழமை ஈவ்னிங் மார்கெட் போய் காய்கறிகள் எல்லாம் வாங்கிண்டு வருவோமா“

“ஓகே நான் அன்னைக்கு என் கிளாஸுக்கு சுட்டிப் போடறேன். நாம போய் வேண்டியதை எல்லாம் வாங்கிண்டு வருவோம். சரி இப்போ படுக்கலாமா. காலை ல சீக்கிரம் எழுந்திரிக்கனுமே!!“

வெள்ளிக்கிழமை வந்தது. மார்கெட்டிலிருந்து வாங்கி வந்த காய்கறிகளை நறுக்கி வைத்துவிட்டு உறங்கினர் நவீனும் மிருதுளாவும். 

சனிக்கிழமை காலையில் சீக்கிரம் எழுந்து சமையலில் மும்மரமானாள் மிருதுளா. சாம்பார், ரசம், கூட்டு, பொறியல், பாயசம், வடை, அப்பளம் என ஃபுல் மீல்ஸ் தயார் செய்து அழகாக பரிமாறுவதற்கு தகுந்தாற்போல் வரிசையாக அடுப்படி மேடையில் அடுக்கி வைத்தாள். மத்தியம் பன்னிரெண்டு மணிக்கு நண்பர்கள் அனைவரும் வந்தனர். அவர்களை வரவேற்று அவர்களுக்கு ஜுஸ் கொடுத்து, குக்கரில் சாதம் வைத்து விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு வந்து ஹாலில் அமர்ந்தாள்‌. 

நவீனின் நண்பனான ஹரீஷ் என்பவர்…

“நவீன் சரியான கஞ்சன்ங்க….எங்க மெஸ் சாப்பாட்ட முகம் சுளிக்காம சாப்பிடர ஒரே ஆள் இவன் தான். நாங்க எல்லாரும் பல நேரம் மெஸ் சாப்பட்டை குற்றம் சொல்லிட்டு வெளியே போய் சாப்பிடுவோம் ஆனா நவீன் மட்டும் தான் எங்களோட வராமா மெஸ் சாப்பாட்டை சாப்பிடுவான்“

“அதற்கு “கஞ்சன்“ன்னு ஏன் சொல்லனும் சாப்பாட்டுக்கு மரியாதைக் குடுக்கறவர்ன்னு கூட சொல்லலாமே!” என்று மிருதுளா சொன்னதும் நவீனின் முகம் மலர்ந்தது. அதை கேட்ட நண்பன் …

“சூப்பர்ங்க அத அப்படியும் சொல்லலாம்” 

மற்ற நண்பர்கள் எல்லோருமாக

“ஓய் அசடு வழியாதே டா…” என்றதும் மிருதுளா..

“தப்பா எடுத்துக்காதீங்க. உங்கள சங்கடப்படுத்தனும்ன்னு சொல்லலை“

“அச்சசோ சிஸ்டர் ஃப்ரீயா விடுங்க…நீங்க உங்க கணவருக்கு இதே போல சப்போர்டிவ்வா இருந்து எங்க நவீனை நல்லா பார்த்துக்கோங்க” 

“அந்த கவலை இனி நண்பர்களான உங்களுக்கு வேண்டாம். நான் உங்க நவீனை நல்லா பார்த்துக்கறேன் இப்போ எல்லாரும் சாப்பிட வரீங்களா?”

அனைவரும் வரிசையாக அமர்ந்தனர். மிருதுளா வாழை இலையை போட்டாள். பின்பு பரிமாற துவங்கினாள். முதலில் சாப்பிட சற்று தயங்கிய நண்பர்கள்…ருசியாக இருக்கிறது என்றுணர்ந்ததும் வெளுத்துக்கட்டினார்கள். அனைவரும் சாப்பிட்டப் பின் சற்று நேரம் அமர்ந்து பின் கிளம்பளானார்கள். அப்போது அனைவரும் மிருதுளாவின் சாப்பாட்டை போற்றினர். பல்பீரின் மனைவி தான் உண்ட தென்னாட்டு சாம்பாரை கற்றுக்கொள்வற்காக ஒரு நாள் வருவதாக கூறினாள். வீட்டைவிட்டு வெளியே செல்வதற்கு முன் நண்பர்கள் ஒன்றாக…

“யூ ஆர் அ லக்கி மேன் நவீன். எஞ்சாய்“

என்று கூறி விடைப்பெற்றனர். அவர்கள் சென்ற பின் மிருதுளா நவீனைப் பார்த்து…

“நிஜமா என் சமையல் நல்லா இருந்துதா நவீன். இல்லை இவா எல்லாரும் சும்மா சொல்லிட்டுப்போறாளா?”

“நிஜமாவே ரொம்ப சூப்பரா சமச்சிருந்த மிருது. தாங்கஸ் ஃபார் தி லவ்லி லஞ்ச் மை வைஃப்….தாங்கஸ் சொல்லக்கூடாதுன்னு தான் சொல்லிருக்கேன் ஆனா நீ இன்னைக்கு சமையல் மட்டுமில்லை எனக்காக பேசினதிலும் நான் மகிழ்ச்சி அடைந்தேன்  அதனால் தான் சொன்னேன்“

“அதெல்லாம் சரி இப்போ வீட்டை சுத்தம் செய்ய எனக்கு ஹெல்ப் வேணுமே“

“அதனால் என்ன நான் செய்யறேன்“

மூன்று மாதங்கள் காலையில் வேலை, மாலையில் படிப்பு, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியே சுற்றுவது என மகிழ்ச்சியாக உருண்டோடின. 

ஒரு சனிக்கிழமை மாலை நவீனின் நண்பன் ராமகிருஷ்ணனும் அவர் மனைவியும் வீட்டுக்கு வந்து ஒரு சுவீட் பாக்ஸை கொடுத்து தாங்கள் அப்பா அம்மா ஆக போவதாக சொல்ல அதைக் கேட்டு நவீனும் மிருதுளாவும் மகிழ்ச்சியில் அவர்களை வாழ்த்தி ஹோட்டலில் டின்னர் கொடுத்தனர். மறுநாள் மிருதுளா வருத்தமாக இருந்ததைப் பார்த்த நவீன்…

“மிருது நீ ஏன் டல்லா இருக்க? என்ன ஆச்சு?”

“நேத்து உங்க நண்பரும் மனைவியும் பட்ட சந்தோஷம் நமக்கு ஏன் இன்னும் வரலைன்னு ஒரே யோசனையா இருக்கு. நம்மளுக்கும் கல்யாணமாகி மூணு மாசமாயாச்சு ஆனா…” என்று சொல்ல அவளின் கண்கள் இரண்டிலும் கண்ணீர் ததும்பி வழிய ஆரம்பித்தது

“ஹேய் மிருதுளா !! என்ன அசடு மாதிரி இருக்க?? அதெல்லாம் நடக்கும் போது நடக்கும்…இதுக்கு நீ ஏன் இப்போ அழற?”

“இல்லை எனக்கு ஏதாவது ப்ராப்ளம் இருக்குமோன்னு பயமாருக்கு“

“அட அசடே!!! நமக்கு கல்யாணமாகி மூணே மாசம் தான் ஆகறது மூணு வருஷம் ஆகலை.“

என்று மிருதுளாவின் கண்களைத் துடைத்து விட்டு அவளை இறுக்கமாக தன்னோடு அணைத்துக்கொண்டான். 

ஒரு நாள் நவீன் ஆஃபீஸிலிருந்து வந்ததும் மிருதுளாவிடம் அவளது அப்பா, அம்மா, தம்பி… இருவரையும் காண அடுத்த வாரம் குஜராத் வருவதாக சொன்னான். அதைக் கேட்டதும் சந்தோஷத்தில் செய்வதறியாது துள்ளினாள் மிருதுளா. பின் நவீனிடம்…

“நவீன் நாம இன்னும் ஒரு நாலு தலைகாணி, போர்வை, பாய் எல்லாம் வாங்கனும்.“

“ஓகே வாங்கிடலாம்“

மறுநாள் காலை நவீன் ஆஃபீஸுக்கு ஈஸ்வரனிடமிருந்து  ஃபோன் கால் வந்தது. அதில் நவீனின் கடைசி இரண்டு தம்பிகளும் அவன் மாமனார் குடும்பத்தினருடன் வருவதாக கூறினார். அதைக் கேட்டதும் நவீன்…

“அவா ஏன் இப்போ மிருதுளா ஃபேமிலியோட வரனும்? அவா ரெண்டு பேரும் டிசம்பர் லீவில் வரலாம் இல்லையா?” 

“ஏன் இதில் உனக்கு என்ன கஷ்டம். உன் மாமனார் மாமியாரே ஒன்னும் சொல்லலை அப்புறம் என்ன?.. ப்ரவினுக்கும், பவினுக்கும் டிக்கெட் புக் பண்ணியாச்சு அவாளும் வராங்கறத இன்ஃபார்ம் பண்ண தான் ஃபோன் பண்ணினேன். பை“

என நவீனையோ மிருதுளாவையோ பற்றி நலனேதும் விசாரிக்காமல் தான் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லிவிட்டு ஃபோன் கால் ஐ துண்டித்தார் நவீனின் தந்தை. இதை மிருதுளா எப்படி எடுத்துக்கொள்வாள் என்ற எண்ணத்திலேயே வீட்டிற்கு சென்று நடந்ததைக் கூறி மிருதுளாவையே பார்த்தான்…

“ஓ!! ப்ரவின் அன்ட் பவினும் வராலா…சூப்பர் சூப்பர். அப்போ செம ஜாலியா இருக்கப்போறது.  இன்னும் சில பொருட்கள் எல்லாம் வாங்கனும் நவீன். நாம இந்த வீக் என்ட் போய் வேண்டியதை எல்லாம் வாங்கிண்டு வந்திடுவோம் ஓகே வா?”

என்று வெள்ளேந்தியாக பேசிய மிருதுளாவைப் பார்த்துக்கொண்டிருந்த நவீன் அப்பாடா என பெருமூச்சு விட்டான். அதை கவனித்த மிருதுளா…

“ஏன் ஏதோ டென்ஷனா இருக்கேங்கள்?”

“இதை சொன்னா நீ எப்படி எடுத்துப்பன்னு தான் டென்ஷன்“

“இத வேற எப்படி எடுத்துக்கனும்“

“ஒன்னுமில்லை மா ஒன்னுமில்லை என் டென்ஷன் எல்லாத்தையும் நீ போக்கிட்ட“

நவீனுக்கே ஏதோ தவறாக தெரிந்த இந்த விஷயத்தில், மிருதுளாவிற்கு எந்த வித தவறும் தெரியவில்லை என்பதிலிருந்தே மிருதுளா வெள்ளேந்தியான நல்ல மனம் படைத்தவள் என்பதை நவீனும் நாமும் புரிந்துக்கொள்ளத் தான் இப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளார் அந்த கடவுள் என்று தான் எண்ணத் தோன்றுகிறது. 

மிருதுளா குடும்பத்தின் வரவுக்காக காத்திருப்போம்.

தொடரும்……

பணமில்லாதது ஒரு பிரச்சினை என்பதை விட நவீன் அப்படி ஒரு வார்த்தைக் கேட்டதில் மனமுடைந்த மிருதுளா அழுதுகொண்டே படுத்ததில் சற்று கண் அசந்துப்போனாள். டக்..டக்..டக் என கதவு தட்டும் சத்தம் அவளுக்கு எங்கோ தூரத்தில் கேட்பது போல இருந்தது. மீண்டும் பலமாக கதவைத் தட்டும் சத்தம் மிருதுளாவை சட்டென எழச்செய்தது. ஒரு நிமிடம் தான் எங்கிருக்கோம் என்பதை மறந்தவள் போல் சுற்றும் முற்றும் பார்த்தாள்….டக்டக்டக்டக்டக் …என இடைவிடாமல் கதவு தட்டும் சப்தம் அவளை சுயநினைவுக்கு கொண்டுவந்தது. ஓடிப்போய் கதவைத் திறந்தாள். தவிப்புடன் நின்றிருந்த நவீனைப்பார்த்தும் ஏதும் பேசாமல் உள்ளே சென்றாள். நவீன் கதவடைத்துக்கொண்டே ….

“கதவ தொறக்க ஏன் இவ்வளவு நேரமாச்சு…நான் பயந்தேப் போயிட்டேன்“

“என்னத்துக்கு பயப்படனும்….கவலைப் படாதீங்கோ…என்னால இன்னும் எத்தனை பொய்களை எல்லாம் ஏத்துக்க முடியும் ங்கறத நானும் தெறிஞ்சிக்கற வரைக்கும் எதுவும் பண்ணிக்கவும் மாட்டேன்…எங்கேயும் போயிடவும் மாட்டேன்“

“கம் ஆன் மிருது…நானா உன்கிட்ட என் சம்பளத்தை அதிகமாக சொன்னேன்?”

“அத விடுங்கோ உங்க பேரன்ட்ஸ் சொன்ன பொய்கள் ல அதுவும் ஒன்னுன்னு கணக்கில் வச்சுக்கலாம்.‌…ஆனா நீங்க எப்படி அப்படி ஒரு வார்த்தையை கேட்கலாம்? நான் தெரிஞ்சின்டத உங்கள்ட்ட கேட்டேன்..கொஞ்சம் என்னோட இடத்தில் இருந்து இந்த சிட்டுவேஷனை நினைச்சுப்பாருங்கோ ….உங்களுக்கு ஷாக்கிங்கா இருக்குமா! இருக்காதா? என்ட்ட நான் கேட்ட மாதிரி கேட்பேளா மாட்டேளா!!!??”

“அப்படி உன் பேரன்ட்ஸ் ஏதையாவது என்ட்ட சொல்லி …அது உண்மை இல்லாட்டா …நான் உன்ட்ட அப்படி கேட்க மாட்டேன் ஏன்னா எனக்கு நீ சொல்லறது தான் முக்கியமே தவிர உன் அப்பா அம்மா சொல்லறது இல்லை.“

“ஆமாம் ஆமாம் அப்படி ஒன்னும் நடக்காத வரை இப்படி எல்லாம் ரொம்ப பெருந்தன்மையுடன் பேசலாம்….ஒரு தடவ தப்பாவோ இல்லை பொய்யோ சொன்னா தெரியாம பண்ணிட்டான்னு விடலாம் ஆனா இது வரிசையா ரயில் வண்டி மாதிரின்னா ஒவ்வொன்னா வர்ரது” 

“ஓகே இப்போ என்ன தான் பண்ணறது. நான் என் சம்பளம் டிட்டேய்ல்ஸை சொல்லிட்டேன். நான் சொல்லறது தான் உண்மை. எனக்கு சம்பளம் இவ்வளவு தான் என்ன செய்லாம்ன்னு சொல்லு“

“இப்போ என்னத்த பண்ண!! அதுக்குள்ளயே அட்ஜஸ்ட் பண்ணிண்டு வாழ வேண்டியது தான். ஆனால் இதுவே கடைசி முறையா இருக்கட்டும்….நாம கையில ஒரு ரூபாய் இல்லாட்டியும் பரவாயில்லை, அதற்காக எவரிடமும் நீங்கள் இனி பணம் கேட்டு வாங்கக்கூடாது சரியா“

“சரி நிச்சயமா யாருகிட்டேயும் நான் பணம் கேட்டு வாங்க மாட்டேன்“

“தாங்கஸ் ….சரி சூட்டோட சூடா இன்னொரு விஷயமும் கேட்டுடவா?”

“அம்மாடி இன்னொன்னா!!! அது என்ன அதையும் கேட்டுவிடு“

“நாம ஊருக்கு கிளம்பறதுக்கு முன்னாடி நாள் ஏன் உங்க அப்பா கிட்ட பணம் கேட்டுட்டிருந்தேங்கள் ங்கறதுக்கு எனக்கு பதில் கிடைச்சிடுத்து ஆனா நீங்க கேட்டும் அவர் தர்ரத்துக்கு ரொம்ப யோசிச்சா மாதிரி தெரிஞ்சுது அன்ட் அதுவும் இல்லாம அடுத்த மாசமே திருப்பி அனுப்பச் சொன்னாரே அதுக்கு நீங்களும் தலையை ஆட்டிண்டு இருந்தேங்களே அது ஏன் அன்ட் எப்படி அவர் அப்படி சொல்லும் போது பேசாம நின்னுண்டிருந்தேங்கள்“

“அது ….அவரிடம் பணம் இல்லையாம் அதனால வந்த மொய்ப் பணத்திலேருந்துதான் தந்தாராம் அதனால திருப்பி உடனே சம்பளம் வாங்கினதும் அனுப்பச் சொன்னா“

“அத அனுப்பிட்டேங்களா?”

“இன்னும் இல்லை ….அத கேட்டு அவா நான் ஆஃபீஸ் ஜாயின் பண்ணின அன்னைக்கே எனக்கு ஃபோன் போட்டு சித்தப்பாட்ட இருந்து வாங்கின பணத்திலிருந்து உடனே அனுப்பச்சொல்லி கேட்டாச்சு…அனுப்பித்தரேன்னு சொல்லி கால் ஐ கட் செய்தேன்… நானே நீ விழுந்த டென்ஷன் ல இருந்தேன் இதுல இவா வேற எப்பவும் போல பணம் தா பணம் தா ன்னுட்டு….என் ஆபீஸுக்கு இன்னைக்கு காலை ல கூட கால் பண்ணிருக்கா என் நண்பன் கிட்ட அந்த மூவாயிரத்தை என்னை அனுப்பித்தர சொல்ல சொல்லிருக்கா…அவன் காலை ல நான் கடைக்கு சிப்ஸ் வாங்க போனப்போ என்ட்ட சொன்னான்…நான் அந்த கடுப்புல இருக்கும் போது தான் இந்த  சம்பளம் மேட்டர் பேச்சு வர டென்ஷன்ல அப்படி உன்கிட்ட கேட்டுட்டேன்“

“வேயிட் ! வேயிட் ! வேயிட்! ….சித்தப்பாட்ட நீங்க பணம் வாங்கினது எப்படி அவாளுக்கு தெரிஞ்சுது“

“என் சித்தி தான் சொல்லிருப்பா“

“அப்போ பணம் வாங்கிண்டு போனத சொன்ன சித்தி நான் கீழே விழுந்ததைச் சொல்லாமலா இருந்திருப்பா?!!!”

“நான் சொல்ல வேண்டாம் ன்னு சொன்னேன் !!!! ஆனாலும்…. என் பணம்,.. நான் வாங்கினத ஃபோன் போட்டு சொல்லிருக்கான்னா…. நீ விழுந்ததையும்  சொல்லியிருக்கலாம்“

“ஆனா அன்னைக்கு ஆஃபீஸுக்கு ஃபோன் போட்டப்போ உங்க அப்பா அம்மா அதைப்பத்தி ஒன்னுமே கேட்கலை இல்லையா!!!“

“ஆமாம் ஒன்னுமே தெரியாதது போல தான் பேசினா“

“சரி… நீங்க ஏன் அந்த பணத்தை அனுப்பாம இருக்கேங்கள்“

“எனக்கு இருக்கும் டென்ஷன் ல  அனுப்ப மறந்துட்டேன்“

“இந்த தடவை இந்த பாலிசி பணம் வந்திருக்கு அனுப்பிடுங்கோ ஆனா அடுத்த தடவை கேட்டா என்ன பண்ணப் போறேங்கள் ?? 

நீங்க வாங்கறதே ஆறாயிரம் தான் இதுல நமக்கு வீடு அலாட் ஆகும் வரைக்கும் இந்த வீட்டுக்கு ஆயிரத்தி ஐநூறு ரூபாய் வாடகை குடுக்கனும். வீட்டு செலவுக்கு எப்படியும் மூவாயிரம் தேவை அது போக உங்க பைக் டியூ எழுநூத்தி ஐம்பது ரூபாய், பெட்ரோல் ஒரு முன்னூறு ரூபாய்…எங்கயாவது கூட்டிண்டு போனேள்ன்னா…உங்க படிப்புக்கு எப்படியும் ஆயிரம் தேவை ….எல்லாத்தையும் கூட்டினா ஆராயிரத்தி ஐநூறு வர்ரதே!!! சரி நான் நம்ம ஆத்து செலவ குறைச்சிண்டாலும் ஒரு ஆயிரம் ரூபாய் தான் கொறச்சுக்க முடியும் அப்படியானாலும் மீதம் ஐநூறு தானே வரும் ….இதுல உங்க அப்பா கேட்டா …எப்படி? எங்கேருந்து குடுக்கப்போறேங்கள்?”

“இல்லன்னு சொல்லுவேன்…அது தான் பதினோரு வருஷமா குடுத்துண்டிருக்கேனே…அதுக்கு முன்னாடியும் ஸ்கூல் படிக்கும் போது கூட என்னால முடிஞ்ச வேலைகளை லீவ் நாட்கள் ல பார்த்து காசு குடுத்துண்டே தான் இருந்திருக்கேன் !!“

“ஆனா இப்போ தரமாட்டேன்னு சொன்னேங்கள்னா அந்த பழி என் மேல தான் விழும்….உண்டா இல்லையா?”

“அது எப்படி உன்ன சொல்லுவா? நான் என் நிலைமையை எடுத்துச்சொல்லுவேன், எங்க அப்பாக்கு பென்ஷன் வேற வர்ரது,  அதுவும் இல்லாம இப்போ தான் கவின் குவைத் ல சம்பாதிக்கறானே அவன் பார்த்துக்கட்டுமே“

“நீங்க என்ன தான் சொன்னாலும் என்னை தான் குற்றம் சொல்லுவா…எங்கடான்னு காத்திருக்கறவா வாயிக்கு கரும்பு குடுக்கப் போறேங்கள் அத நன்னா மென்னு கடிச்சு துப்பப்போறா….எனக்கு இந்த டீட்டேயில்ஸ் அப்பவே தெரிஞ்சிருந்தா எங்க அப்பா குடுத்த பத்தாயிரத்தை தாங்கோன்னு கேட்டிருப்பேன்“

“ஹா !!ஹா !!ஹா!!!“

“என்ன சிரிக்கறேங்கள்? சிரிக்கறா மாதிரி நான் இப்போ என்ன சொல்லிட்டேன்“

“எனக்கே தெரியாம என் பெயரை யூஸ் பண்ணி உங்க அப்பாட்ட இருந்து பணம் வாங்கிருக்கா எந்த வித கூச்ச நாச்சமும் இல்லாம அப்படி இருக்கறவாள்ட்ட போய் நீ கேட்டு …அதுக்கு அவா அப்படியா நாங்க எதுவும் அப்படி வாங்கவே இல்லைன்னு சொன்னா….சொன்னா !!!என்ன !!!! இவ்வளவு செய்தவா சொல்லுவா அப்போ நீ என்ன பண்ண முடியும் மிருது வீணா உனக்கு தான் மனசு கஷ்டம்“

“ஓ அப்படி வேற சொல்லுவாலோ!!!! அந்த கடவுள் இருக்கார் …அவருக்குத் தெரியும்…..அப்படி எல்லாம் சொல்லி என்னை ஏமாத்தலாம் ஆனா அந்த ஆயிரம் கண்ணுடையாளை ஏமாத்த முடியாது“

“பிரேஸ்லெட் விஷயத்துலயும் என்ன தைரியமா நான் வாங்கினத கவின் வாங்கினதா உங்க கிட்ட சொல்லிருக்கா ….அப்படிப் பட்ட வா எப்படி வேணும்னாலும் பேசறவான்னு இன்னுமா உனக்கு புரியலை…நான் இது மாதிரி சில விஷயங்கள் பார்த்திருக்கேன்…கேட்டும் இருக்கேன்… அப்போ எல்லாம் அவா செஞ்சது என்னை பாதிச்சுது….ஆனா அதை எல்லாம் நான் பெரிசா எடுத்துக்கலை..அது தான் நான் செய்த தவறு…. 

ஃபார் எக்சாம்பிள்… நான் தஞ்சாவூர் போஸ்டிங்க ல இருந்தப்போ எனக்கு சம்பளம் ஆயிரத்தி இருநூறு தான்… அங்க ஒரு பட்டுப்புடவை வீவ் பண்ணும் ஃபேமிலி என் நண்பன் மூலம் எனக்கு தெரிய வந்தது, அதை நான் வீட்டில் சொன்னேன்…மறுநாள் என்னிடம் கூட சொல்லாமல் என் அம்மா அவ அக்கா ரமணி பெரியம்மாவுடன் அவர்கள் வீட்டுக்குப் போய் இரண்டு புடவை இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு எடுத்துக்கொண்டு காசை என்னிடம் வாங்கிக்கச் சொல்லிட்டு போயிக்கா…

சரி வாங்க வர்ரத தான் சொல்லலை அட்லீஸ்ட் வாங்கிருக்கேன்னாவது சொல்லிருக்கனுமா இல்லையா!!! அதுவும் சொல்லலை. எனக்கு என் நண்பன் மூலமா தான் தெரிஞ்சுது…கையில் காசு இல்லாத நேரத்துல இப்படிப் புடவை எடுக்கனுமா சொல்லு!!! அப்புறம் நான் கொஞ்சம் கொஞ்சமா அவாள்ட்ட கொடுத்து அந்த புடவைக்கடனை அடைத்தேன்! வீட்டுக்கு வந்து ஏன் அப்படி செஞ்சான்னு கேட்டதுக்கு அந்த புடவைகளை கொடுத்து போய் திருப்பிக்கொடுத்துக்கோன்னு திமிரா சொல்லிட்டு அவா பாட்டுக்கு அவா வேலையை பார்க்க போயிட்டா “

“சரி இதை இத்தோட விட்டு விடுவோம் அந்த ஆண்டவன் அவாளுக்கு அதுக்கு தகுந்த கூலி குடுப்பார். ஆனா இனி என்கிட்ட இருந்து எதையும் மறைக்காதீங்கோ…நானும் இனி எதையும் மறைக்க மாட்டேன் “

“ஷுவர் மிருது. வரியா நடந்துப் போய் நம்ம ரோஹித் டாபா ல ஒரு ஆலுடிக்கியும் சாய் யும் குடிச்சிட்டு வருவோம். உன்னால அவ்வளவு தூரம் நடக்க முடியுமா?”

“ஓ எஸ் முடியும் ஆனா அழுது அழுது என் முகமெல்லாம் வீங்கிருக்கே!!!“

“பேஸ் வாஷ் பண்ணு சரியாயிடும்“

“ஓகே ஒரு பத்து நிமிஷத்துல ரெடி ஆயிடறேன்” 

இருவருமாக அமர்ந்து பேசி சமாதானம் ஆகி பின் மெல்ல நடந்து சென்று மாலை நேரத்தை இனிதே கழித்தனர். அன்று காலை மகிழ்ச்சியாக தொடங்கி…இடையில் நவீன் அவன் பெற்றோர்களின் ஃபோன் கால் லால் டென்ஷனாகி, விளக்கு தேய்க்க பூதம் கிளம்பியதைப்போல சம்பள விஷயம் கிளம்பி இருவருக்குள்ளும் வந்த சிறிது நேரப் பிரிவு அவர்களை அவர்களே நிதானித்துக் கொள்ள ஏதுவாக இருந்தது.  பின் இருவருமாக அமர்ந்து பேசியதில் தெளிவடைந்து ரோஹித் டாபா டீ அன்ட் ஆலுடிக்கியுடன் மீண்டும் சந்தோஷம் துளிர்விட ஆரம்பித்தது.

எந்தப் பிரச்சினையும் பத்து நிமிடம் உட்கார்ந்து பேசினால் சரியாகி விடும் என்பார்கள் ஆனால் அப்படி பேசுவதற்கு இரு தரப்பினரும் சம்மதிக்க வேண்டும், பேசும் மனநிலையில் இருக்க வேண்டும். நீ பெரியவானா !!! நான் பெரியவளா !!!என்று பட்டிமன்றத்திற்கு தயாராகக் கூடாது. அப்படியே ஒருவர் நினைத்தாலும் மற்றொருவர் விட்டுக்கொடுத்து இறங்கிப் பேச வேண்டும். அப்படி பட்ட பேச்சு வார்த்தையே வெற்றியைத் தரும்.

மிருதுளா நினைத்திருந்தால் நவீனை அவன் பெற்றோருடன் பல காரணங்களுக்காக சண்டையிட வைத்திருக்க முடியும் ஆனால் அவள் அதை விரும்பவில்லை. சண்டையிடுவது தான் அவள் நோக்கம் என்றால் அதை அவள் திருமணமான அடுத்த நாளிலிருந்தே செய்திருக்கலாமே. அவளைப் பொருத்த வரை நவீனை நடந்தவற்றை எல்லாம் சரிவர புரிந்துக்கொள்ள வைக்க வேண்டும் அவ்வளவு தான். ஏனெனில் அவன் சரியாக புரிந்துக்கொண்டாலே வாழ்க்கை இனிதாகும் என்று நம்பினாள். சின்ன சின்ன விஷயத்துக் கெல்லாம் புருஷனைத் தூண்டி விட்டு சண்டையிட வைக்கும் பெண்களுக்கிடையே மிருதுளா தனித்துவம் வாய்ந்தவளே.

நவீனைப் பெற்றவர்கள் அவனை பணத்திற்காக எல்லார் வீட்டு வாசலிலும் நிற்க வைத்தார்கள் ஆனால் அவன் கட்டிக்கொண்ட மனைவியோ சாப்பிடுவதற்கு வழி இல்லாவிட்டாலும் எவரிடமும் கையேந்தக் கூடாதென்கிறாள். இதைத் தான் என்னவென்று சொல்ல. இது தான் கடவுளின் விளையாட்டு. 

நவீனை அவன் திருமணத்திற்கு முன் எவ்வளவு அவமானங்கள், வேதனைகள், பணத்திற்காக பிச்சைக்காரரை போல் சொந்தக் காரர்கள் வீட்டின் வாசலில் அவனைப் பெற்றவர்கள் எனும் உறவு மூலம் நிற்க வைத்த கடவுள் இன்று அதை அப்படியே அழித்துவிட்டு புதுக் கணக்கை மனைவி எனும் உறவுக் கொண்டு எழுத ஆரம்பித்துள்ளார். இந்த கணக்குக்கு மறு கணக்கு  உண்டா !!! என்பதை போக போக படித்து தெரிந்துக்கொள்வோம்.

தொடரும்….

இரவு நன்றாக உறங்கி எழுந்தாள் மிருதுளா. நவீன் அடுப்படியில் ஏதோ செய்துக் கொண்டிருந்தான். மிருதுளா மெல்ல கட்டிலை விட்டு இறங்கிச் சென்று குளித்து ஃப்ரெஷாகி …

“குட் மார்னிங் நவீ“

“ஹேய் குட் மார்னிங். இரு உனக்கு காபி தரேன் கொஞ்சம் வேயிட் பண்ணு….இதோ போட்டுண்டே இருக்கேன் …இதோ போட்டுட்டேன் …ஹியர் யூ கோ“

“வாவ்!!! சூப்பர் நவீ தாங்க்ஸ். ஓ ! ஓகே ஓகே என்னோட தாங்க்ஸ் வாப்பஸ் ப்ளீஸ்…ஹா ஹா ஹா“

என சந்தோஷமாக ஆரம்பித்தது அன்றைய தினம். 

“காயங்கள் எல்லாம் ஆறப்போறது அநேகமா எல்லாம் இன்னும் ஒரு நாள்ல காஞ்சிடும்ன்னு நினைக்கிறேன்…டாக்டர் சொன்ன மாதிரி ஒரு வாரமெல்லாம் ஆகாது“

“ஸோ வாட்? இன்னும் ஒரு மூணு நாள் ரெஸ்ட் எடு அவ்வளவு தானே. சரி இந்தா பிரெட் பட்டர் அன்ட் ஜாம். இதுதான் நம்ம பிரேக்ஃபாஸ்ட்.“

“நீங்க குளிச்சாச்சா?”

“இல்லை இனி தான் போய் குளிக்கனும் நீ எழுந்திரிக்கறதுக்கு ஒரு பத்து நிமிஷம் முன்னாடி தான் நான் எழுந்துண்டேன்“

“சரி அப்போ நீங்க போய் குளிச்சிட்டு வாங்கோ நான் எல்லாத்துலயும் பட்டர் அன்ட் ஜாம் தடவி வைக்கறேன்“

“ஓகே ஒரு அஞ்சு நிமிஷத்தில் வந்திடறேன்“

பிரெட் சாப்பிட்டுவிட்டு இருவருமாக

சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்கும் போதே மிருதுளா எடுத்துக்கொண்ட மாத்திரைகளினால் மீண்டும்  உறங்கிப்போனாள். நவீன் மெதுவாக எழுந்து அடுப்படிக்குச் சென்று கதவை தாழிட்டுக்கொண்டு  மத்தியத்துக்கு தால் மற்றும் சாதம் வைத்து, கடையிலிருந்து இரண்டு பாக்கெட் உருளைக்கிழங்கு சிப்ஸ் வாங்கிக்கொண்டு வந்து வைத்துவிட்டு தனது பாட புத்தகத்தில் முழ்கினான். 

ஒரு இரண்டு மணிநேரம் கழித்து எழுந்துப் பார்த்தாள் மிருதுளா…நவீன் மும்முரமாக படித்துக்கொண்டிருந்தான். அவனை தொந்தரவு செய்ய வேண்டாமென எண்ணி அமைதியாக அவனைப் பார்த்துக்கொண்டே படுக்கையை விட்டு எழாமலிருந்தாள். சற்று நேரம் கழித்து சட்டென்று திரும்பிப் பார்த்தான் நவீன்…

“மிருது எழுந்துட்டயா !!! இரு இந்த சாப்ட்டரை மட்டும் முடிச்சுட்டு வந்துடறேன்.“

“நீங்க படிங்கோ. நான் பேசாம படுத்துக்கறேன்“

“அடுத்த வாரத்திலிருந்து நான் எவ்வெரி டே ஈவினிங் சி.ஏ கிளாஸுக்கு போகனும். எக்ஸாம் தேதி வேற நெருங்கறது. ஆமாம் நீ உன் எக்ஸாமை எப்ப எழுதப் போற?” 

“நான் நவம்பர் ல போய் எழுதலாம்னு இருக்கேன். எப்படியும் தீபாவளிக்கு ஊருக்கு போக தான் வேணும் அப்படியே பரீட்சையையும் முடிச்சிட்டு வரலாம்னு இருக்கேன் என்ன சொல்லறேங்கள்?”

“நல்ல ஐடியாவா தான் இருக்கு ஆனா அதுக்கு இன்னும் ஏழு மாசம் இருக்கு அப்போ பார்த்துப்போம். நான் ஈவினிங் கிளாஸ் போகணும்னு சொன்னேனே அதுக்கு உன்னிடமிருந்து ஒரு ரியாக்ஷனும் காணமே!!“

“என்னன்னு ரியாக்ட் பண்ணனும். கிளாஸ் இருக்குன்னா போய் தான் ஆகனும். ஆமாம் எவ்வளவு நேரமாகும் கிளாஸ் முடியறத்துக்கு?”

“ஆஃபீஸ் முடிச்சிட்டு ஒரு ஐந்து மணிக்கு ஆத்துக்கு வந்துட்டு ஃப்ரெஷ் ஆகிட்டு ஆறு மணிக்கு கிளம்பினேனா ஒன்பது மணிக்கு முடியும் ஸோ ஒரு ஒன்பதரை மணிக்கு வந்திடுவேன்“

“அப்போ நான் அதுவரை என் படிப்பை படிக்கறேன்“

“ஸோ எவ்விரிடே ஈவ்னிங் எக்செப்ட் சனி அன்ட் ஞாயிறு சிக்ஸ் டூ நைன் படிப்புக்காக என்று வைத்திடுவோம்.“

“அப்படியே ஆகட்டும் மை லார்ட். பேசிண்டே இருக்கேங்களே!!! சீக்கிரம் படிச்சு முடிங்கோ“

“இதோ முடிச்சிட்டேன். ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்….ஆச்சு“

“ஓ டைம் ஒன்னாக போறது!! நீங்க படிங்கோ என்னால முடிஞ்சத நான் சமைக்கப் பார்க்கறேன். இப்போ அவ்வளவா வலியில்லை அன்ட் புண்களும் நல்லா ஆறியிருக்கு.“

“என்ன சமைக்கப் போற…அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்‌. நீ ரெஸ்ட் ரூம் போயிட்டு ஃப்ரெஷாகிட்டு வா நாம சாப்பிடலாம்.“

“என்ன இன்னைக்கும் டாபாலேருந்து வாங்கிண்டு வந்திருக்கேளா என்ன?”

“நீ ரெஸ்ட் ரூம் போயிட்டு வா. உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு“

மிருதுளா வேகமாக ஃப்ரெஷாகி ஹாலுக்கு வந்தாள். தரையில் குக்கர், இரண்டு சிப்ஸ் பாக்கெட், தயிர் டப்பா, பிரியா ஊறுகாய் பாட்டில், மூடியிட்டு ஒரு பாத்திரத்தில் தால், இரண்டு தட்டு எல்லாமிருந்தது.  அதைப்பார்த்த மிருது….

“ஹேய் நவீ என்னது இதெல்லாம்!!! எப்படி !!! எனக்கு குக்கர் விசில் சத்தம் கூட கேட்கலையா இல்லை கேட்காத அளவுக்கு கும்பகர்ணி மாதிரி தூங்கிருக்கேனா?” 

“எல்லாம் நீ சாப்பிட்ட மாத்திரையின் எஃபெக்ட் தான் நீ தூங்கினது. நான் அடுப்படி கதவை சாத்திண்டு இதெல்லாம் செய்தேன். எப்படி இருக்குன்னுட்டு நீ தான் சாப்பிட்டு சொல்லனும்“

“ஸோ நைஸ் ஆஃப் யூ கணவா. சரி வாங்கோ சாப்பிடலாம்.“

இருவரும் சாப்பிட அமர்ந்தனர். சாப்பாட்டை ஒரு வாய் சாப்பிட்டு மிருதுளா…

“ஆஹா !!!ஆஹா!!! சூப்பரா இருக்கு இந்த தால் அன்ட் ரைஸ் வித் ஊறுகாய் அன்ட் சிப்ஸ். கலக்கிட்டேங்கள் போங்கோ. சமைக்க தெரியாதுன்னுட்டு சூப்பரா சமச்சிருக்கேங்கள்!!!! இந்த… நல்லா படிக்கற பசங்கள் பரீட்சைக்கு முன்னாடி படிக்கவே இல்லைன்னு சொல்லுவாஆனா ஃபுல் மார்க் வாங்குவாளே அதே மாதிரி இருக்கு நீங்க அன்னைக்கு சொன்னதும் இன்னைக்கு ரிசல்ட்டும்“

“அட ஆமாம் நல்லா தான் செஞ்சிருக்கேன்!!! நீ சும்மா சொல்லறயோன்னு நினைச்சேன். பரவாயில்லை சாப்பிடற மாதிரி இருக்கு. மிருது நான் பாஸ் ஆயிட்டேன்“

என்று இருவருமாக உணவருந்தியப்  பாத்திரங்களை எல்லாம் உள்ளே எடுத்து வைத்து விட்டு அந்த இடத்தை சுத்தம் செய்தார்கள். பின் மிருதுளாவின் மாத்திரைகளை கொடுத்து சாபப்பிடச் சொன்னான் நவீன்…

“அச்சோ இந்த மாத்திரைகளைப் போட்டாலே தூக்கம் வந்திடுமே…கொஞ்சம் நேரம் கழிச்சு போட்டுக்கறேனே“

“இல்லை இல்லை சாப்பிட்டதும் போடனும்னு டாக்டர் சொல்லிருக்கா. ஒழுங்கா நீ மாத்திரைகளை சாப்பிட்டதால்தான் புண்ணெல்லாம் இவ்வளவு சீக்கிரம் ஆறியிருக்கு. இந்தா புடி சாப்டு“

“இன்னும் எவ்வளவு நாள் சாப்பிடனும் இந்த மாத்திரைகளை?”

“நாளையோட முடிஞ்சிடும் அவ்வளவு தான்“

“அப்பாடா இன்னும் நாலு தடவ சாப்பிட்டா போதும்“

பின்பு அவர்கள் வாழ்க்கை, படிப்புப் பற்றி 

பேசிக்கொண்டிருக்கையில் மிருதுளா மனதில் நவீன் அவன் சித்தப்பாவிடம் பணம் கேட்டு வாங்கியது ரியாலிட்டி ஷோ போல ஓட அதை அவனிடம் கேட்கலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருந்தவளைப் பார்த்து நவீன்…..

“என்ன மிருது என்ன பலத்த யோசனைல இருக்க!! என்ன ஆச்சு” 

“ஆங்…..ஆமாம் என் மனசுல நிறைய விஷயங்கள் உங்ககிட்ட கேட்கறதுக்கு இருக்கு அதில் முந்தாநாள் நடந்ததைப் பற்றி கேட்கலாமா!!“

“கேளு அதுக்கு ஏன் இவ்வளவு தயக்கம்?”

“நீங்க தான் மாசம் பன்னிரெண்டாயிரம் சம்பாதிக்கறேங்களே அப்புறம் ஏன் உங்க சித்தப்பாக்கிட்ட பணம் கேட்டு வாங்கினேங்கள்? உங்கள்ட்ட பணமில்லையா?”

“என்னது பன்னிரெண்டாயிரமா!!!! சரியா போச்சுப்போ“

“ஏன் அப்படி சொல்லறேங்கள்?”

“உனக்கு யாரு நான் பன்னிரெண்டாயிரம் சம்பளம் வாங்கறேன்னு சொன்னது?”

“உங்க அப்பா அம்மா தான் என் பேரன்ட்ஸ் கேட்டதுக்கு …பிடிப்பெல்லாம் போக கையில் பன்னிரெண்டாயிரம் வாங்கறான்னு சொன்னா …நானும் அதைக் கேட்டேன்…ஏன் அதுக்கென்ன இப்போ?”

“இங்க பாரு மிருது என் அப்பா ஏன் அப்படி சொன்னானு எனக்குத் தெரியலை. உனக்கு தெரிஞ்சிண்டிருக்கனும்ன்னா நீ டைரெக்டா என்னிடம் கேட்டிருக்கனும்“

“சரி இப்போதாவது சொல்லுங்கோ…டைரெக்டா கேட்கறேன்…உங்கள் சம்பளம் எவ்வளவு?”

“எனக்கு வீடு + கேன்டீன் சலுகை அது இல்லாம கிராஜுட்டி, பிஎஃப், எல்லா பிடிப்பும் போக பாங்கில் விழும் மாத சம்பளம் ஆறாயிரம் ரூபாய்.” 

“என்னது!!!! இதை உங்க பேரன்ட்ஸ் எங்ககிட்ட டபுளாக சொல்லிருக்கா!!!!! அவாகிட்ட நீங்க வாங்கற சம்பளத்தை சரியா சொல்லலையா!“

“என் சம்பள விவரமெல்லாம் புள்ளிவிவரமாக அவாளுக்கு நல்லாவே தெரியும் ஆனாலும் ஏன் அப்படி சொல்லிருக்காங்கறது தான் தெரியலை“

“என்னவாயிருக்கும் ??? ஒருவேளை அவா நினைத்திருக்கலாம் ….எங்கடா ஆறாயிரம்ன்னு சொன்னா பொண்ணு தரமாட்டாளோன்னு அதனால பொய் சொல்லிருப்பான்னு நினைக்கறேன்!!!! சரி இப்போ உண்மை தெரிஞ்சுடுத்தே இப்போ நான் விட்டுப்போனா என்ன பண்ணுவா!!!“

“இங்க பாரு மிருது நான் உன்ட்ட சொல்லலை. அவா சொன்னதுக்காக என்னை விட்டுட்டு போவியா?”

“கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாத்துக்கும் உங்க கிட்ட கேட்க முடியாது நவீ அதை நீங்க புரிஞ்சுக்கனும். உங்க பேரன்ட்ஸ் சொல்லறத தானே நாங்க நம்ப முடியும்…பிரேஸ்லெட் விஷயத்திலயும் இதே தான் நடந்தது. அவா ஒன்னு சொல்லிருக்கா ஆனா நீங்க ஒன்னு சொல்லறேங்கள்….பத்தாயிரம் நீங்க கேட்டதா சொல்லி தான் வாங்கினா ஆனா நீங்க கேட்கவேயில்லைன்னு சொல்லறேங்கள்… முன்னுக்கு பின் முரணாக இருக்கு அவா சொன்னதும் நீங்க சொல்றதும். எனக்கு ஒரே கன்ஃபூஷனா இருக்கு“

“அதுதான் நான் இப்போ சொல்லிட்டேனே இன்னமும் ஏன் குழப்பம்?”

“சரி அத விடுங்கோ நீங்க ஏன் சித்தப்பாட்ட பணம் வாங்கினேங்கள் உங்கள் பணமெல்லாம் என்ன ஆச்சு??”

“நான் சித்தப்பாட்ட ஒரு பாலிசி போட்டிருந்தேன் அது மெச்சூர்ட் ஆகி ஒரு மாசம் ஆச்சு ஆனா பணம் வரலை அதைத்தான் சித்தப்பா தன் கையிலிருந்து என்னிடம் கொடுத்துட்டு வரதை தான் எடுத்துக்கறதுக்காக ஃபார்ம்ல கையெழுத்து வாங்கிண்டார்“

“ஓ!! சாரி நான் தான் நீங்க அவர்கிட்டயும் பணம் கடனாகவோ இல்லை செலவுக்கு கேட்டு வாங்கவோ செய்யறேங்கள்ன்னு தப்பா நினைச்சுட்டேன்“

“நீ நினைச்சதுல பாதி கரெக்ட் தான்…அதாவது என் செலவுக்காக தான் நான் அவசரமாக அவர்கிட்ட இருந்து வாங்கினேன். ஆனா அது என் பணம் நான் கடனெல்லாம் வாங்கலை..புரியறதா?”

“ஏன்? அந்த பணம் வந்தா தான் உங்களிடம் செலவுக்கு பணமிருக்கா என்ன!!! வேற பணம் ஏதும் இல்லையா!!! நீங்க தான் பதினாறு வயசுலேயே வேலை ல சேர்ந்தாச்சுன்னு சொன்னாலே…. பதினோரு வருஷம் சம்பாதிச்சதுல ஒரு ஐந்தாயிரம் கூடவா இல்லை“

” உண்மைய சொல்லனும்னா ….இல்லை மிருதுளா…என் அக்கௌன்ட் ல வெரும் நூறு ரூபாய் தான் இருக்கு.“

“என்ன சொல்லறேங்கள்“

“எஸ்….நான் பதினோரு வருடம் சம்பாதிச்சதில் படிச்சேன், என் குடும்பத்துக்கு கொடுத்தேன், மூன்று தம்பிகளை படிக்க வைத்தேன், வீடு வாங்கினேன், பைக் நம்ம நிச்சயத்துக்கு அப்புறம் தான் வாங்கினேன் அதோட ஈ.எம்.ஐ இன்னும் போயிட்டிருக்கு, நம்ம கல்யாணத்துக்கு ஐம்பதாயிரம் எங்க பேரன்ட்ஸ்ட்ட கொடுத்தேன் அது தவிர எப்படியும் இன்னும் ஒரு இருபதாயிரம் செலவாகியிருக்கு …. இது எல்லா செலவுகளும் போக நூறு தான் பாக்கி“

“அப்போ என்னை கல்யாணம் பண்ணிண்டு வரும் போது உங்க கையிருப்பு நூறு ரூபாய் தானா!!!“

“என்ன லட்சாதிபதியா இருப்பேன்னு நினைச்சயோ!!“

“லட்சாதிபதியா இருப்பேங்கள்ன்னும் நினைக்கலை இப்படி பிட்சாதிபதியா இருப்பேங்கள்ன்னும் நினைக்கலை“

“என்ன இப்படி எல்லாம் பேசற” 

“பின்ன நீங்க அப்படி கேட்டா நானும் இப்படி தான் பதில் சொல்ல முடியும். உங்களை கல்யாணம் பண்ணி ஒரு மாதம் ஆயாச்சு என்னைக்காவது பணம் பற்றி பேசிருக்கேனா?  இப்படி ஷாக் மேலே ஷாக்கா அடிச்சா வேற எப்படி பேசறது நவீ? இன்னும் என்னென்ன பொய்களோ!!! எத்தனைப் பொய்களோ!!! அந்த பகவதி தான் எனக்கு மனதைரியத்தைக் குடுக்கனும்“

நவீன் சட்டென்று எழுந்து சட்டையை மாட்டிக்கொண்டு வெளியேச் சென்றான். மிருதுளாவும் சென்றுப் பார்த்தாள் அவன் தெரு முனையை கடப்பதைப் பார்த்துவிட்டு கதவடைத்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர் முத்துக்கள் உருண்டோடின….உடல் வலிகள் ஒரு பக்கமிருக்க …ஏமாந்தது ஒரு வலி, கையில் பணமேயில்லாமல் வாழ்க்கை துவங்கியிருப்பது எதிர்காலத்தை இருட்டாக காட்டியதில் பெரும் வலியாக உருவெடுத்தது அவளது உள்ளத்தில். அவள் மனம் குழப்பத்தில் இருந்ததால் மாத்திரை உண்டும் உறக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.  

ஈஸ்வரன் பர்வதம் போட்ட முடிச்சுகள் பல 

அதில் இரண்டு அவிழ்ந்தாலும் பிரச்சினை பெரிதாகவில்லை

பிரேஸ்லெட் எனும் முதல் முடிச்சு அவிழ்ந்ததும்

நவீன் மனவருத்தமடைந்ததை உணர்ந்த மிருதுளா அவன் மீது வைத்த நம்பிக்கை அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

ரூபாய் பத்தாயிரம் எனும் இரண்டாம் முடிச்சு அவிழ்ந்ததும்

நவீன் தனது பெற்றோர்கள் இப்படி தனக்கே தெரியாமல் செய்திருக்கிறார்களே என்று வருந்த அதைப்பார்த்த மிருதுளா ரூபாய் பத்தாயிரத்தோட போச்சே என்று விட்ட பெருமூச்சில் அதுவும் காற்றோடு கறைந்து போனது.

ஆனால் இந்த மூன்றாவது முடிச்சான சம்பளம் எனும் பொய் முடிச்சவிழ்ந்ததில் இருவருமே குழம்பிப்போனார்கள். குழப்பத்திலிருந்தால் பேச்சைத் தவிர்த்தல் அல்லது சற்று நிதானமாகிக்கொண்டு பேசுவது சிறந்தது என்பதை நவீனும் மிருதுளாவும் மறந்திட பேச்சு முற்றி இறுதியில் மூத்த தம்பதியின் திட்டமே நடந்தேறியது. 

மிருதுளா சொன்ன மாதிரி பொண்ணு கொடுக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் சம்பளத்தை தவறாக ஈஸ்வரனும், பர்வதமும் சொல்லவில்லை வேண்டுமென்றே தான் பொய் சொல்லியிருக்கவேண்டும்…‌ஏனெனில் சம்பளம் பற்றிய பேச்சு வார்த்தை நிச்சயதார்த்தம் முடிந்து திருமண நாளுக்கு முஹூர்த்த பட்டுப்புடவை எடுக்க போனபோதுதான் ஹோட்டலில் வைத்து மிருதுளாவின் பெற்றோர்கள் கேட்டுள்ளனர்…. மேலும் மிருதுளா நவீன் திருமணத்தில் பர்வதத்துக்கும் ஈஸ்வரனுக்கும் துளிக்கூட இஷ்ட்டமில்லை என்பது நவீனிடம் மிருதுளாவை தவிர்க்க சொன்னதிலிருந்தே புரிகிறதே அப்படிப்பட்ட எண்ணமுடையவர் நிச்சயமாக சம்பளத்தைக் குறைத்துச் சொல்லி தடுக்க நினைத்திருப்பார்களே தவிர அதிகமாக சொல்லியிருக்க மாட்டார்கள். 

எப்படியோ திருமணம் வரை வந்துவிட்டதால் மிருதுளாவை தங்களுடனே வைத்துக்கொண்டு சில பல சகுனி, கூனி வேலைகளை செய்து அவர்களை சந்தோஷமாக வாழ விடாமல் பிரிக்க திட்டமிட்டிருந்ததாலும்…..அதையும் மீறி ஏதாவது நல்லது நடந்துவிட்டால் இது போல சில பொய்களாவது நிம்மதியைக் குலைக்கட்டும் என்றெண்ணி அவர்கள் பத்த வைத்த பல ஓல வெடிகளில் ஒன்று அவர்கள் நினைத்தது போலவே இன்று வெடித்துள்ளது. 

இந்த வெடி புஸ்ஸாக போகிறதா இல்லை வெடித்து சிதறப்போகிறா? 

தொடரும்.‌…….

பைக் வாங்கிய நாள்முதல் அவ்வளவு மெதுவாக நவீன் என்றுமே ஓட்டியதில்லை. முன்தினம் நடந்த விபத்து அவனை எச்சரிக்கையுடன் வண்டியை ஓட்ட வைத்தது. பத்திரமாக வீடு வந்து சேர்ந்தனர். மிருதுளா வண்டியிலிருந்து இறங்க மிகவும் கஷ்டப்படுவதைப்பார்த்த நவீன் அவளை அப்படியே உட்காரச் சொல்லிவிட்டு தான் முதலில் இறங்கி பின் ஒரு கையில் பைக்கைப் பிடித்துக்கொண்டு மறுகையை மிருதுளாவிடம் நீட்டினான். எப்படியோ சமாளித்து கொண்டு இறங்கினாள் ஆனால் வலியில் சற்று துடித்தாள். நவீன் பைக்கை நிறுத்திவிட்டு வீட்டின் கதவை திறந்து இருவருமாக உள்ளேச் சென்றனர். அப்போது தான் மிருதுளாவுக்கு ஞாபகம் வந்தது….

“நவீ இன்னைக்கு நீங்க ஆஃபீஸ் ஜாயின் பண்ணனும்ன்னு சொல்லியிருந்தேங்கள். போக வேண்டாமா? இப்பவே பதினொரு மணி ஆச்சே!!! நீங்க போய் கிளம்பிக்கோங்கோ. நான் பார்த்துக்கொள்கிறேன்“

“என்ன விளையாடறயா!!! உன்ன இப்படி விட்டுட்டு நான் எப்படி போவேன்? ஒன்னுப் பண்ணறேன் பக்கத்து வீட்டு லதா அக்கா கிட்ட உன்னை பார்த்துக்க சொல்லிவிட்டு நான் ஆஃபிஸ் போய் ஒரு வாரம் லீவ் அப்பளைப் பண்ணிட்டு அப்படியே நமக்கு லஞ்ச் வாங்கிண்டு வரேன்“

“லதா அக்கவ எல்லாம் ஏன் தொந்தரவு செய்யணும்..பேசாம நீங்க போயிட்டு வாங்கோ நான் அது வரை தூங்கறேன். காலை ல போட்ட மாத்திரையால தூக்கம் தூக்கமா வருது. கதவைப்பூட்டி சாவியை எடுத்துண்டு போங்கோ“

“ஆர் யூ ஷுவர்? நான் போயிட்டு வர எப்படியும் ஒரு மூணு மணி நேரமாகும் பரவாயில்லையா!!! இருந்துப்பியா?”

“நான் இருந்துப்பேன் நீங்க போயிட்டு வாங்கோ.“

நவீன் குளித்துவிட்டு தனது யூனிஃபார்மை போட்டுக்கொண்டு கிளம்புவதற்குள் மிருதுளா உறங்கிப் போனாள். அவளைத் தொந்தரவு செய்யாமல் அங்கிருந்து நகர்ந்து மெதுவாக கதவைப்பூட்டி ஆபீஸுக்கு சென்றான். அவன் உடல் தான் அலுவலகத்தில் இருந்தது அவனது உள்ளம் வீட்டில் மிருதுளா என்னச் செய்வாள் தனியாக அதுவும் இந்த நேரத்தில் விட்டுவிட்டு வரவேண்டியது ஆயிற்றே என்று தவித்துக்கொண்டே இருந்தது. வேக வேகமாக லீவ் லெட்டர் எழுதி அதை தனது மேல் அதிகாரியிடம் கொடுத்துவிட்டு அவரது பதிலுக்காக டென்ஷனுடன் அவனது இருக்கையில் அமர்ந்திருந்தான். நேரம் வேற கிடுகிடுவென ஓடிக்கொண்டிருந்ததில் அவனது இதயத்துடிப்பும் அதற்கு போட்டிப்போட்டு துடித்துக்கொண்டிருக்க…அவனது அலுவலக நண்பர்கள் அவனைப்பார்த்து..‌

“என்ன நவீன் மறுபடியும் லீவ் அப்ளை பண்ணிருக்க !!! என்ன புது மனைவியை விட்டு வர மனசு வரலையா?” என்று ஒருவர் கேட்க அதற்கு கல்யாணமாகாத மற்றொரு நண்பர்

” ஓ!!! அப்போ நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா ஆஃபிஸுக்கே வரமாட்டேனே!“என்று கூற அதற்கு பல்பீர் சிங்

“ஆமாம் ஆமாம் எல்லாம் ஆரம்பத்துல அப்படி தான் இருக்கும்….ஒரு இரண்டு வருஷம் போட்டும் வீட்டை விட ஆஃபிஸ் சொர்கமா தெரியும்” என்று பதிலளிக்க அதைக்கேட்ட மற்றொருவர்

“என்ன பல்பீர் சார் உங்க வைஃப் கிட்ட இதை சொல்லட்டுமா” என நக்கலடிக்க

“ஏன் உனக்கு அந்த தேவையில்லாத வேலை. அவன் அவன் குடும்பத்தப் பாருங்கப்பா” என பல்பீர் கூறிக்கொண்டிருக்கையில் அவர்களின் மேலதிகாரி வர அனைவரும் எழுந்து சல்யூட் செய்ய அவர் நேராக நவீனிடம் வந்து..

“இதை நீ ஃபோனில் சொல்லியிருந்தாலே லீவ் கொடுத்திருப்பேனே எதற்காக உன் மனைவியை விட்டுவிட்டு வந்தாய். சாரி நான் மற்ற வேலைகளில் மும்முரமாக இருந்ததால் இப்போது தான் உன் லீவ் லெட்டரைப்பார்த்தேன். சரி நீ இப்போதே கிளம்பலாம். உன் லீவை அப்ரூவ் பண்ணிட்டேன். சென்று உன் மனைவியை நல்லா பார்த்துக்கோ. ஏதாவது உதவி வேணும்னா ஒரு ஃபோன் போடு ஓகே.” 

அவர் இதைக்கூறிவிட்டு அவர் அறைக்குள் சென்றதும் நவீனின் நண்பர்கள் அவனை சூழ்ந்துக்கொண்டனர். என்ன ஆச்சு ஏதாச்சு என விசாரித்தனர். நவீனும் நடந்தவற்றைக்கூறினான். அனைவரும் அவனை உடனே வீட்டுக்கு செல்லும்படி கூறினர். என்ன உதவி வேண்டுமானாலும் நண்பர்கள் இருக்கிறோம் என்று நம்பிக்கை கொடுத்து நவீனை அனுப்பி வைத்தனர். நவீன் நேராக அவர்கள் குவார்ட்ஸுக்குள் இருக்கும் ரோஹித் டாபா சென்று இரண்டு சாப்பாடு பார்சல் செய்ய ஆர்டர் கொடுத்துவிட்டு நின்றுக்கொண்டிருக்கையில் அவனுக்கு மிருதுளாவுடன் முன்தினம் காலைப் பேசியது கண்முன் திரைப்படம் போல் ஓடியது…. அவளுக்கு உடம்பு சரியில்லாமல் போனால்  என்று அவள் கூறியதும், தனக்கு சமைக்க தெரியாது என்பதும்,   ரோஹித் டாபாவிலிருந்து வாங்கி வருவதாக சொன்னதும்… அவளுக்கு ஏன் உடம்பு சரியில்லாமல் போகும் என்று கேட்டு பேச்சை திசைத்திருப்பியதும்… அதேபோல ஆகிவிட்டதே என்றெண்ணிக்கொண்டிருக்கையில்….சட்டென்று   

டாபாவில் வேலை செய்யும் பப்பு… அவனுக்கு மட்டுமே  ஓடிக்கொண்டிருந்த படத்திரை முன் வந்து நின்று…

“சாப் !!!சாப்!!! நவீன் சாப் ஆப்கா பார்சல்“

என கூற திரையிலிருந்து கண்களை அகற்றி பப்புவிடம் பணத்தைக்கொடுத்து விட்டு அங்கிருந்து வேகமாக வீட்டுக்கு வந்து கதவைத்திறந்துப்பார்த்தான்,  மிருதுளா நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள். நவீன் தனது உடைகளை மாற்றிவிட்டு முகம் கை கால் அலம்பி விட்டு மிருதுளாவை எழுப்பலாமா வேண்டாமா என அவளைப்பார்த்துக்கொண்டே யோசித்தான்…. காலை ஒன்பது மணிக்கு சாப்பிட்டது அதுவும் ஒரே ஒரு சப்பாத்தி இப்போ மணி மூணு ஆகப்போகிறது என தனக்குத்தானே பேசிக்கொண்டிருக்கையில்…. முனகிக்கொண்டே எழுந்தாள் மிருதுளா. 

“ரொம்ப வலிக்கறது. ஓ !!! வந்துட்டேளா!!! டைம் என்ன ஆகறது? எனக்கு ரொம்ப பசிக்கறது” என்றாள் 

“இதோ டாபாவிலிருந்து ரொட்டி சப்ஜீ, தால் அன்ட் ரைஸ் வாங்கிண்டு வந்திருக்கேன் வா சாப்பிடலாம்” என நவீன் கூப்பிட

“இருங்கோ ரெஸ்ட்ரூம் போயிட்டு வரேன்“

“நான் வரட்டுமா ஹெல்ப் பண்ண?”

“இல்லை நான் பார்த்துக்கறேன்“

பின் இருவரும் உணவருந்த அமர்ந்தனர். அப்போது மிருதுளா சாப்பிட சிரமப் படுவதைப் பார்த்த நவீன் …

“ஓ!!! இதனால தான் காலை ல ஒரே ஒரு சப்பாத்தியோட எழுந்துட்டயா!!!! விடு விடு நீ கையை எடு  நான் ஊட்டி விடறேன் நீ சாப்பிடு….” என்று ஊட்ட

“எனக்கு ரொட்டி போதும் ஹார்டாஆ இருக்கு“

“அப்போ இந்த தால் ரைஸ் சாப்பிடு” என்று சாதத்தை ஊட்டிவிட்டான். அவள் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது…

“ஏய் மிருது ஏன் கண் ல இருந்து கண்ணீர் வருது …ரொம்ப காரமா என்ன!!! இல்ல அழுவறையா? என்ன ஆச்சு“

“எனக்கு உடம்பு முடியாமல் போனபோதெல்லாம் என் அம்மா தான் சாப்பாடு ஊட்டிவிட்டிருக்கா அதுக்கப்புறம் நீங்க தான் ஊட்டி விடுறேங்கள்… அதனால ஏதோ உள்ள பண்ணித்து கண்ணுல இருந்து கண்ணீர் தானா வருது.“

“சாப்பாடு தான் காரமோன்னு நினைச்சுட்டேன்…இதுக்கெல்லாமா கண்ணுலேருந்து தண்ணீ வரும்“

“சரி எனக்கு ஊட்டின்டே இருக்கேங்களே உங்களுக்கு பசிக்கலையா!!! நீங்களும் சாப்பிடுங்கோ. இந்த காயமெல்லாம் எப்போதான் ஆறுமோன்னு இருக்கு. சரி உங்களுக்கு லீவு கிடைச்சுதா? எனக்கு போதும் பா நீங்க சாப்பிட ஆரமிங்கோ“

“போதுமா !!! ஓகே இதோ நானும் சாப்பிடறேன். எஸ்… எஸ் ….ஒரு வாரம் லீவு கிடைச்சிடுத்து.“

“வாவ் சூப்பர்..‌ஆனா நான் இப்படி காயங்களோட இருக்கேனே!!!“

“ஹலோ மேடம்!!! அதனால தான் லீவே குடுத்திருக்கா…சரி நீ மத்தியானம் சாப்பிட வேண்டிய மாத்திரை மருந்தெல்லாம் அங்க இருக்கு எடுத்து சாப்பிடு நான் இதை எல்லாம் குப்பை ல போட்டுட்டு இந்த இடத்தையும் தொடச்சுட்டு வரேன்“

என்று கூறி வேலையில் மும்மரமானான் நவீன். மிருதுளா அவன் வேலை செய்வதைப்பார்த்து ….

“சாரி என்னால உங்களுக்கு ஹெல்ப் எதுவும் பண்ண முடியலை“

“மேடம் அன்னைக்கே சொன்னேன் நமக்குள் நோ சாரி அன்ட் நோ தாங்க்ஸ் ன்னுட்டு….என்ன மறந்துப்போச்சா?”

“ஓகே சார் ஓகே டன்“

நவீனைப் பார்த்துக்கொண்டே மிருதுளா மனதில் …

“பேச்சில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் பர்வதத்தின் மகனா இவன்!!!!” என்று எண்ணியதில்… ஆச்சர்யம் அவளைத் தொற்றிக்கொண்டது.

மாலை காபி வைத்துக்கொடுத்து பரீட்சை எழுதி மதிபெண்களுக்காக காத்திருக்கும்  மாணவனைப் போல மிருதுளாவையேப் பார்த்துக்கொண்டிருந்தான் நவீன். அதை உணர்ந்த மிருதுளா….

“என்ன ரிசல்ட்டுக்கு வேயிட்டிங்கா?” 

“எஸ்…ஏன் அப்படி கேட்கிற?”

“ஏன்னா எனக்கு அதோட அருமைப் புரியுமே, தெரியுமே அதனால தான் அப்படிக்கேட்டேன்“

“சரி எல்லாம் புரிஞ்சும் தெரிஞ்சும் என்ன பிரயோஜனம் ரிசல்ட் இன்னும் ரிலீஸ் ஆகலையே!!!“

“இந்தாங்கோ என் கப்“

“என்ன ஒன்னுமே சொல்லாம கப்பை கொடுத்துட்ட!!!“

“அச்சோ!!! அச்சோ!!! கப்பை பாருங்கோ அதுல காபி துளிக்கூட மீதி இல்லை. இதிலிருந்தே உங்களுக்கு தெரியலையா!!” 

“என்ன தெரியணும் !!!! எதுவாக இருந்தாலும் நேரா சொல்லு எனக்கு ஒன்னும் புரியலை“

“கப்பில் ஒரு துளிக்கூட காபி மீதமில்லைன்னா அது சூப்பர்ன்னு அர்த்தம். நீங்க சூப்பரா காபி வைக்கிறேங்கள் ன்னு அர்த்தம். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு அர்த்தம்.“

“இப்படி சொல்லனுமே அப்போ தானே எனக்கு புரியும். காலி கப்பை கையில் கொடுத்துட்டு புரியலையான்னு கேட்டா எப்படி?? நான் எப்படி சன்டே நீ செய்த பொங்கலை சாப்பிட்டுட்டு சூப்பர்ன்னு சொன்னேன் !!! நானும் ஒன்னும் சொல்லாம காலி தட்டை நீட்டிட்டு பேசாம போயிருக்கனும் அப்போ தெரிஞ்சிண்டிருப்பயாக்கும்“

“ஓகே சார் இனி ரெண்டு பேருமே ஓப்பனா இருவருக்குமே புரியுறமாதிரி பாராட்டிக்குவோம் சரியா. என் நவீ போட்ட காபி சூப்பரோ சூப்பர்“

“ஆங் அது!!” என்று நவீன் சொன்னதும் இருவருமாக சிரித்துக்கொண்டனர்.

“நைட்டுக்கும் டாபாலேர்ந்தா வாங்கப் போறேங்கள்?”

“ஆமாம். வேற என்னப் பண்ணுவேன். இன்னைக்கு மட்டும் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ நாளை முதல் என் சமையல்“

“உங்களுக்கு சமைக்கத் தெரியாதுன்னு சொன்னேங்கள்!” 

“தெரியாது தான். நீ சொல்லித்தா செய்யறேன்.” 

“ஓகே டன் நாளைமுதல் இருவருமாக சமையல் பாடம் கத்துக்குவோம்“

“ஏன் !!!!நீ தான் நல்லா சமைக்கிறயே“

“உண்மைச் சொல்லனும்ன்னா நான் கல்யாணத்துக்கு முன்னாடி சமைச்சதே கிடையாது. தோசை, இட்டிலி சுடுவேன் அன்ட் தேங்கா சட்னி பண்ணிருக்கேன் அவ்வளவு தான்“

“அப்போ எப்படி கிச்சடி, பொங்கல், கேசரி எல்லாம் செஞ்ச? அதுவும் அவ்வளவு ருசியா“

“என் அம்மா செய்யறத பார்த்திருக்கேன் என்னவெல்லாம் போடணும்ன்னு தெரியும் அதனால செய்தேன். செய்ய தொடங்கறத்துக்கு முன்னாடி கடவுளிடம் வேண்டிப்பேன் …நான் செய்யறது நல்லப்படியா வரணுமே!!! என் சாப்பாட்டை சாப்பிடறவாளுக்கு அது பிடிக்கணுமே!!  ன்னு ஒரு ரிக்குவெஸ்ட் போட்டுட்டு செய்தேன் நல்லாவும் வந்தது.“

“ஓகே !!!!ஓகே!!! நாளைக்கு நானும் கடவுளிடம் ….நான் செய்யறது சாப்பிடறமாதிரி இருக்கனுமே…என் மிருதுவுக்குப் பிடிக்கணுமே ன்னு ஒரு ரிக்வெஸ்ட் அன்ட் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிச்சுட்டா போச்சு“

அன்றிரவு உணவையும் டாபாவிலிருந்து வாங்கி வந்து இருவரும் அருந்தியப்பின் மிருதுளாவின் காயங்களுக்கு மருந்து தடவி விட்டு அவள் சாப்பிட வேண்டிய மாத்திரைகளை எடுத்துக்கொடுத்துவிட்டு படுக்கையின் நடுவில் ஒரு தலையணையை வைத்து மிருதுளாவைப் படுக்கச் சொன்னான் நவீன் …அதைப்பார்த்த மிருதுளா…

“ஏன் நடுவில் புதிதாக தலையணை” என அரை மயக்கத்தில் கேட்டாள்.

“தூங்கும் போது தெரியாமல் உன் மீது  கால் ஆர் கையைப் போட்டுட்டேன்னா…உன் காயங்களில் பட்டு உனக்கு வலிக்குமே அதனால் தான் நடுவில் தலையணையை வைத்தேன்“

“ஸோ நைஸ் ஆஃப் யூர் மை புருஷா. குட் நைட்“

“குட் நைட் மிருது. ஐ லவ் யூ. நல்லா தூங்கி ரெஸ்ட் எடு” என்று கூறிக்கொண்டே பார்த்தான் அவள் உறங்கியிருந்தாள்.

ஒருவரையொருவர் பரஸ்பரம் புரிந்துக்கொள்வதற்கு சந்தர்பங்களும் சூழ்நிலைகளும் மிக முக்கியமான இடம் வகிக்கிறது. அவை சரியாக அமைவதிலும், அவற்றை சரியாக உபயோகித்து புரிய வைப்பதிலும், புரிந்துக்கொள்வதிலும் தான் தம்பதிகளின் வாழ்க்கை அழகானதாகவும், ஆழமானதாகவும் உருவெடுத்து அவர்களின் உறவை பல ஆண்டுகளுக்கு அர்த்தமுள்ளதாக உயிர்ப்பித்திருக்க செய்கிறது. 

இந்த பைக் விபத்தும் நவீன் மிருதுளா ஆகிய இருவரின் புரிதலுக்கான வித்தாக தான் கடவுள் அமைத்திருக்க வேண்டும். இந்த சூழ்நிலை அவர்களுக்கு  நல்ல சந்தர்ப்பமாக அமைந்து அவர்களுக்குள் இருக்கும் அக்கறை, அன்பு, பாசம், அனுசரணை போன்ற குணாதிசயங்களை இருவருக்கும் புரியவைக்கப் போகிறதா? அவர்கள் அதை புரிந்துக் கொள்வார்களா? 

திருமண வாழ்க்கை என்ற செடியை,

அக்கறை, அன்பு, பாசம் எனும் வளமான மண்ணும், சூரிய ஒளியும், நீரும்,

கொண்டு பேணிக்காத்தால்,

காதல் எனும் அழகிய மலர் மலர்ந்திடாதா என்ன?

அதில் புரிதல் எனும் மதுரசம் தான் வழிந்திடாதா!

அந்த மதுரசத்தைப் பருகி இன்பம் எனும் வண்டுகள் தான் ஆடி களித்திடாதா!!!

தொடரும்…..

மிருதுளா முதல் முறையாக புடவைக்கட்டிக்கொண்டு பைக்கில் சென்றாள். அவள் புடவை தலைப்பை சரியாக பிடித்துக்கொள்ள முடியாமல் பிடித்துக்கொண்டதில் புடவைத் தலைப்பு  அதுவும் புது பட்டுப்புடவை வழ வழவென இருந்ததில் அவள் கையிலிருந்து நழுவியதை உணர்ந்ததும் சட்டென அதை பிடித்து வைக்க முற்பட்டு பைக்கிலிருந்து வழுக்கி கீழே விழுந்தாள். அவள் விழுந்ததும் புடவை தலைப்பின் குஞ்சம் ஃபுட் ஸ்டான்டில் மாட்டிக்கொண்டது. தன் மனைவி பின்னாடி வண்டியில் இருக்காளா இல்லையா என்று கூட கவனிக்காமல் நவீன் வண்டியை ஓட்ட பின்னால் ரோட்டில் ஃபுட் ஸ்டான்டில் மாட்டிக் கொண்டுள்ள புடவைத் தலைப்பை பிடித்துக்கொண்டு “ஐய்யோ அம்மா!!! மா!!! மா!!! நவீ!!! நவீ!!!! என்று கத்திக்கொண்டு சறுக்கிக்கொண்டே சென்றவளை ரோட்டோரம் இருந்தவர் பக்கத்து வண்டியில் பயணித்தவர்கள் என எல்லாரும் நவீனுக்கு கூச்சலிட்டு வண்டியை நிறுத்தச் சொல்ல 

“ஏன் ரோட்டில் எல்லாரும் கையை காட்டி, நிறுத்தச்சொல்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டு” வண்டியை நிறுத்தி திரும்பி பார்த்தான் மிருதுளா ரோட்டில் கிடந்தாள். ஓடிச்சென்றான் ….அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் அனைவரும் உதவ ஓடினார்கள். மிருதுளா கட்டியிருந்த ஆஃப் வைட் பட்டுப் புடவை முன்பக்கமாக ரோட்டில் உராய்ந்து கொண்டு வந்ததில் முழுவதும் ரத்தத்தால் சிவப்பு நிறமாக மாறியிருந்தது. மிருதுளாவை ஆட்டோவில் ஒரு பெண்மணியுடன் ஏற்றிவிட்டு அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி பின்னாலேயே பைக்கில் சென்றான் நவீன். அப்பொழுதும் பைக்கை விடவில்லை அவன். 

ஆஸ்பத்திரி சென்றடைந்ததும் உதவ வந்த பெண்மணி மிருதுளாவை தாங்கிப்பிடித்துக்கொண்டு உள்ளே அழைத்துச்சென்றாள். நவீன் பைக்கை ஸ்டான்டில் நிப்பாட்டி விட்டுதான் உள்ளே சென்றான். மிருதுளாவை ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்து டாக்டர் ரூமிற்குள் அழைத்து செல்வதைப்பார்த்து ஓடினான் வழியில் அவளுடன் வந்த பெண்மணியை நன்றி சொல்வதற்காக தேடினான் அவளை காணவில்லை. பின் டாக்டரிடம் போய் தான் யார் என்பதும் அட்மிட் ஆனவரின் பெயர் என்று சொல்ல முயன்றப்போது 

“மிருதுளா உங்க மனைவியா?” என டாக்டர் கேட்க 

“ஆமாம் டாக்டர்….மிருதுளா எப்படி இருக்கா டாக்டர் ” என்று கேட்டான் 

“கொஞ்சம் வேயிட் பண்ணுங்க இப்போ தானே பேஷன்ட்டைப் பார்க்க போறேன்…நீங்க வெளியே இருங்க…நான் கூப்பிடும் போது வந்தா போதும்” என டாக்டர் கூறியதும் 

ரூமுக்கு வெளியே நின்று உள்ளே என்ன செய்கிறார்கள் என தவித்துக்கொண்டிருந்தான் நவீன். சிறுது நேரத்தில் மிஸ்டர் நவீன் என்று டாக்டர் அழைக்க உள்ளே சென்று

“என்ன ஆச்சு டாக்டர் அவ எப்படி இருக்கா?” 

“இருங்க மிஸ்டர் நவீன். வண்டியிலிருந்து விழுந்து சுமார் ஒரு அரை கிலோமீட்டர் ரோட்டில் சறுக்கி வந்ததில் மார்பு, வயிறு, தொடை, கைகள், கால் முட்டி என எல்லா இடங்களிலும் அதிகமாக சிராய்ப்புகள் ஆகியிருக்கு மத்தபடி ஸ்கேன் அன்ட் எக்ஸ்ரே ரிப்போர்ட் வந்ததுக்கப்புறம் தான் உள்ள ஏதாவது பாதிப்பு இருக்காங்கறது தெரியும். ஒரு ஹாஃப் அன் ஆர் வேயிட் பண்ணுங்க தெரிஞ்சுடும். அவங்க காயங்களுக்கு மருந்து போட்டாச்சு, இன்ஜெக்ஷன் கொடுத்திருக்கோம், பேயின் கில்லரும் கொடுத்திருக்கோம் அதனால் டிரௌஸியா தான் இருப்பாங்க…. பின்னாடி வைஃப் இருக்காளா இல்லையான்னு கூட தெரியாமயா வண்டி ஓட்டு வீங்க? அது அவ்வளவு பிசியான ரோடு ….ஏதாவது வண்டி அவங்க மேல ஏறியிருந்தா என்னவாகியிருக்கும்? நல்ல வேளை இன்னிக்கு சன்டே. காட் ஈஸ் ரியலி கிரேட்.   நீங்க போய் அவங்களோட இருங்க ரிப்போர்ட் வந்ததும் கூப்பிடறேன்.“

” ஓகே டாக்டர். அவள் புடவைக்கட்டிக்கொண்டு பைக்கில் இன்றுதான் முதல் முறையாக பயணிக்கின்றாள். பட்டுப்புடவை வழுக்கி விட்டது என்று நினைக்கிறேன். ஷுவர் டாக்டர் இனி ஜாக்கிரதையாக இருக்கிறோம்.தாங்க் யூ டாக்டர்” என்று கூறி அங்கிருந்து மிருதுளா இருந்த ரூமிற்குள் சென்றான். அழகாக பட்டுப்புடவையுடுத்தி கிளம்பிய தன் மனைவி உடம்பில் காயங்களுடன் படுத்துக்கிடப்பதைப்பார்த்து அதிர்ந்துப் போனான். 

மிருதுளா அரை மயக்கத்தில் மெல்ல கண்களைத் திறந்துப் பார்த்தாள். அவள் நகைகள் ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்து நவீனிடம் செய்கையில் கேட்க அவன் எல்லாம் பத்திரமாக தன்னிடம் இருப்பதாகவும் நிம்மதியாக உறங்கும்படி கூறினான். 

அன்று மிருதுளாவை ஆட்டோவில் கூட்டிவந்து ஆஸ்பத்திரியில் சேர்த்து சென்றவர் மிருதுளா வணங்கிய அந்த சமயபுரத்து அம்மனே என்றெண்ணி மனமுருகி நன்றிச்சொன்னாள் மிருதுளா. 

டாக்டர் நவீனை உள்ளே அழைத்தார். 

“சொல்லுங்க டாக்டர்” 

“எஸ் நவீன் எல்லா ரிப்போர்ட்ஸும் வந்தாச்சு அதை பார்க்கவும் செய்துட்டேன். நோ அதர் இஷூஸ். எவ்ரித்திங் இஸ் ஃபைன். அவங்க வயிற்றில் அதிகமாக சிராய்ப்புகள் இருந்ததனால் எனக்கு கொஞ்சம் கவலையாக இருந்தது‌ அது தான் ஸ்கேன் அன்ட் எக்ஸ்ரே எடுக்கச்சொன்னோம் வேற ஒன்னுமில்லை. இப்போ நீங்க அவங்களை வீட்டுக்கு கூட்டிட்டுப் போகலாம்‌. இந்த மெடிசின்ஸ் எல்லாம் மறக்காமல் கொடுங்க அப்போத்தான் காயங்கள் சீக்கிரம் ஆறும். எப்படியும் ஒரு பதினைந்து நாட்கள் எடுக்கும்.“

“ஓகே டாக்டர். நான் பார்த்துக்கறேன்“

தனது பைக்கை ஸ்டான்டிலேயே விட்டுவிட்டு வெளியே வந்து ஒரு ஆட்டோ பிடித்து இருவரும் அதில் ஏறி நவீன் சித்தி வீடு பக்கத்திலிருந்ததால் அங்கே சென்றார்கள். சித்தி ரம்யா வீட்டு கதவைத் தட்டினான் நவீன். கதவு திறந்ததும் ரம்யா 

“ஹாய் புது மண தம்பதியினரே வெல்கம்…ஹேய் மிருதுளா. என்ன!!!! உன் புடவை எல்லாம் ஒரே ரத்தக்கறையா இருக்கு? என்ன ஆச்சு? என்னடா ஆச்சு நவீன். வாங்கோ உள்ள வாங்கோ ஃபர்ஸ்ட்“

நடந்தவற்றை நவீன் கூறினான். அதைக்கேட்டதும் அவன் சித்தியும் சித்தப்பாவும் அவனை திட்டினார்கள். 

“ஆத்துக்காரி பின்னாடி இருக்காளா இல்லையான்னுட்டு கூட  தெரியாமலா வண்டி ஒட்டுவ!!!”  

“சாரி சித்தி…சரி என் பைக் அந்த ஆஸ்பத்திரியிலேயே விட்டிருக்கேன். அதைப் நான் போய் எடுத்துண்டு வரேன். நீங்க மிருதுவை பார்த்துக்கோங்கோ இபோ வந்துடுவேன்” 

“சரி சரி நீ வாம்மா நான் உனக்கு என்னோட நைட்டியை தரேன் மொதல்ல இந்த ரத்தக்கறை புடவையை மாத்திக்கோ வா“

ஒரு பத்து நிமிடத்தில் பைக்குடன் வீடு திரும்பினான் நவீன். மிருதுளா புடவையை கழட்ட மிகவும் சிரமம் படுவதைப்பார்த்த ரம்யா அவளுக்கு புடவையை கழற்றி நைட்டியை மாற்ற உதவும்  போது மிருதுளாவின் காயங்களைப்பார்த்துவிட்டு வெளியே வந்து …

“ஏன்டா நவீன் இப்படி காயங்களாகிருக்கு!!!! வயத்துல இப்படி சிராய்ஞ்சிருக்கு!!! உள்ள ஏதும் அடி படலையே?” 

“இல்ல சித்தி…டாக்டருக்கும் அந்த சந்தேகம் வந்ததால எக்ஸ்ரே, ஸ்கேன் எல்லாம் எடுத்துப் பார்த்துட்டு ஒன்னுமில்லைன்னு தெரிஞ்சதுக்கப்புறம் தான் டிஸ்சார்ஜே பண்ணினா“

“அப்பாடா எல்லாம் அந்த தெய்வத்தின் அருள் தான்ம்பா!!! சரி நீயும் போய் உங்க சித்தப்பா வேஷ்டியை போட்டுண்டு வா. நான் ரெண்டு பேருக்கும் மொதல்ல சூடா காபி தரேன்“

நவீனும், மிருதுளாவும் டிரஸ் மாத்தி கண்கொண்டு ஹாலில் வந்தமர்ந்தனர். அப்போ நவீன்

“எங்க சித்தப்பா உங்க பொண்ணுகள் ராதா அன்ட் ரேவதியை காணமே!!“

“ரெண்டு பேரும் ஸ்பெஷல் க்ளாஸ் போயிருக்கா இப்போ வந்திடுவா“

சொல்லிக்கொண்டிருக்கையிலே உள்ளே நுழைந்தனர் இரு பெண்களும்….

“ஹாய் பையா!! ஹாய் மன்னி வெல்கம்” 

என்று கூறிக்கொண்டே ரேவதி நவீனின் மடியில் அமர்ந்தாள். மிருதுளாவிற்கு அது வித்யாசமாக பட்டது ஆனாலும் அவள் காட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் ரேவதி சின்ன குழந்தை அல்ல அவள் பத்தாம் வகுப்பு படிக்கும் இளம்பெண். ராதா காலேஜ் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள். மிருதுளா வளர்ந்த விதம் வேறு. வயதுக்கு வந்த பெண் அவள் வீட்டில் அவளது அப்பா, அண்ணன், தம்பிகளுடன் கூட இப்படி மடியில் அமர்ந்து தடவுவது கொஞ்சுவது என்பதெல்லாம் செய்யக் கூடாது என்றுதான் சொல்லி வளர்க்கப்பட்டிருக்கிறாள். அதனாலோ என்னமோ அவளுக்கு அப்படி தோன்றியது. பின்பு அனைவருமாக அமர்ந்து இரவு உணவு அருந்தினார்கள். மிருதுளாவால் தனது கைகளைத் தூக்கி உணவருந்த முடியாமல் சிரமப்பட்டாள். அதை யாரிடமும் சொல்லி அவர்களை தொந்தரவு செய்யவேண்டாமென எண்ணி தனக்கு உணவு வேண்டாம் என்றும் ஒரு கிலாஸ் பால் மட்டும் போதும் என்றாள். நவீனும் அவளின் கஷ்ட்டத்தை புரிந்துக்கொள்ளவில்லை. நவீன், மிருதுளா இருவருக்கும் ஒரு அறையை காட்டி அதில் படுத்துறங்கச்சொன்னாள் ரம்யா சித்தி. அப்போது நவீன் சித்தியிடம்

“சித்தி இதை ஊர்ல யார்கிட்டேயும் சொல்லி அவாள பயப்பட வைக்க வேண்டாமென நான் நினைக்கிறேன் …ஸோ நீங்களும் ப்ளீஸ் நடந்ததை யாரிடமும் சொல்லிடாதீங்கோ“

“புரியுது நவீன் கவலைப்படாதே நான் சொல்லமாட்டேன். நீ போய் மிருதுளாவுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகள் எல்லாம் கொடுத்து அவளை தூங்கச் சொல்லு. குட் நைட்“

நவீனும் குட் நைட் சொல்லிவிட்டு அவர்கள் அறையின் கதவை தாழிட்டான். மிருதுளா அவள் காயங்களுக்கு மருந்து தடவிக்கொண்டிருந்ததைப் பார்த்து மருந்தை அவளிடமிருந்து வாங்கி அவனே எல்லா இடங்களிலும் தடவி விட்டு அவள் இரவு எடுத்துக்கொள்ள வேண்டிய மாத்திரைகளையும் தண்ணீரும் கொடுத்து அவற்றை விழுங்கச் செய்து படுக்க வைத்து…

“மிருது இந்த விஷயத்தை ஊர்ல உன் பேரன்ட்ஸ் அன்ட் மை பேரன்ட்ஸ் கிட்ட சொல்லி அவாள பயப்பட வைக்க வேண்டாம்னு நினைக்கிறேன்…நீ என்ன சொல்லுற??”

“நீங்க உங்க சித்திகிட்டேயும் இதை தானே பேசினேங்கள்…அதை நானும் கேட்டேன். நீங்க சொல்லறதும் சரிதான் நானும் யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன். அப்படியே சொல்லனும்னாலும் நீங்கதான் எஸ்.டி.டி பூத்துக்கு கூட்டிட்டுப் போகணும் ஆர் லெட்டர் எழுதறதாயிருந்தாலும் நீங்க தான் எழுதித் தரணும் ….இந்த கையை வைத்துக்கொண்டு நான் எப்படி எழுத முடியும்…ஸோ கவலையை விடுங்கோ. எனக்கு தூக்கமா வருது நான் தூங்கறேன். குட் நைட்“

என்று உண்ட மருந்துகளினால் கூறிய சில மணித்துளிகளில் உறங்கிப்போனாள். அவளை சிறிது நேரம் பார்த்துக்கொண்டே அமர்ந்தான் நவீன் பின் எழுந்து லைட்டை ஆஃப் செய்துவிட்டு படுத்தான் அன்று மாலை முழுவதும் ஆன பரபரப்பில் அவனும் அசந்து போய் உறங்கலானான். சட்டென்று ஏதோ முனகல் சத்தம் கேட்டெழுந்து பார்த்தான். அருகில் படுத்திருந்த மிருதுளா தான் தூக்கத்தில் வலியில் முனகிக்கொண்டே உறங்கிக்கொண்டிருந்தாள்.  

நவீனுக்கு என்ன செய்ய வேண்டும் என அறியாது எழுந்து அமர்ந்துக்கொண்டு அவளயே பார்த்துக்கொண்டிருந்தான். அவள் வலியில் ரொம்ப முனக ஆரம்பித்ததும் உடனே டாக்டர் சொன்ன அந்த பேயின் கில்லர் மாத்திரையை வலி வரும்போதெல்லாம் கொடுக்கச்சொன்னது நியாபகம் வர அதை எடுத்து மெல்ல மிருதுளாவை எழுப்பி கொடுத்தான். அந்த மாத்திரை சாப்பிட்ட சில மணி நேரத்தில் முனகல் நின்றது. அவளின் முனகல் நின்று அவள் நன்றாக மீண்டும் உறங்க ஆரம்பித்த பின்னரே நவீனும் உறங்கினான்.

காலை விடிந்தது. இரவு முழுவதும் சரியாக தூங்காததால் இருவரும் அசந்து தூங்கிப்போனார்கள். வெளிச்சம் கண்ணில் பட சட்டென கைகளில் இருந்த காயங்களை மறந்து கைகளை தரையில் ஊன்றி எழ முயன்று “ஆ”  “அம்மா” என்று சொல்லிக்கொண்டே கைகளை தரையிலிருந்து எடுத்தாள் மிருதுளா. இதைக்கேட்டெழுந்தான் நவீன்…

“என்ன ஆச்சு மிருது!! ஏன் கத்தின?”

“ஒன்னுமில்லை அடிப்பட்டதை மறந்து கையை தரையில் ஊனிட்டேன் வலிச்சுது அதுதான் கத்தினேன். சரி டைம் ரொம்ப ஆயிடுத்துன்னு நினைக்கிறேன் எழுந்துண்டு, என்னையும் எழுப்பி விடுங்கோ“

நவீன் மிருதுளாவை எழுப்பிவிட்டு இருவருமாக வெளியே வந்தனர். மிருதுளா ரம்யா சித்தியிடம்…

“சாரி சித்தி ரொம்ப நேரம் தூங்கிட்டோம். டைம் என்ன ஆச்சு?”

“பரவாயில்லை மா. மணி எட்டு தான் ஆச்சு. நீயே இப்படி அடிப்பட்டுண்டு படுத்திருக்க வலில எப்படி தூக்கம் வந்திருக்கும். எனக்கு அது கூட புரிஞ்சுக்க முடியாதம்மா. சரி புது டூத் பிரஷ் வச்சிருக்கேன் போய் பல் தேச்சுட்டு வாங்கோ காபி தரேன்“

“ஓகே சித்தி. எங்க வச்சுருக்கேங்கள்?”

“அந்த வாஷ் பேஸன் ஷெல்ஃப்ல இருக்கு எடுத்துக்கோங்கோ“

இருவரும் பல் துலக்கி முகம் கழுவி ஃப்ரெஷ் ஆகி ஹாலுக்கு வந்தமர்ந்தனர். ரம்யா நான்கு கப் காபியுடன் வந்து நவீனுக்கும், மிருதுளாவுக்கும், தன் கணவருக்கும் கொடுத்துவிட்டு தானும் ஒரு கப் காபியுடன் அமர்ந்து…

“நல்லா தூங்கினேங்களா?”

“ஓ எஸ் ஆனா நடுவுல செம்மையா வலிச்சுது அப்போ நவீன் டாப்லெட் கொடுத்தார் அதை சாப்பிட்டதும் மறுபடியும் நல்லா தூங்கிட்டேன்“

“நிச்சயம் தூக்கத்துக்கு மாத்திரை கொடுத்திருப்பா. ஏன்னா இந்த மாதிரி அடிப்பட்டா தூக்கம் வராதுன்னுட்டு டாக்டருக்கு தெரியாதா“

நவீன் அவன் சித்தப்பாவிடம் 

“சித்தப்பா அந்த பணம் என்ன ஆச்சு? எனக்கு அது இப்போ கிடைச்சா ரொம்ப உதவியா இருக்கும். அதை நம்பி தான் அடுத்த சம்பள நாள் வரை இருக்கணும்.“

“அது வரத்துக்கு இன்னும் இரண்டு வாரமெடுக்குமே. சரி இரு நான் பணம் தரேன் அது வந்ததும் அதை நானே வைத்துக்கொள்கிறேன் அதுக்காக இந்த ஃபார்ம் ல நீ கையெழுத்து போட்டுத் தந்திடு“

“நீங்க இந்த வாரத்துல வந்திடும்ன்னு சொன்னேங்களே…அதுனால தான் கேட்டேன் ப்ளீஸ் டோன்ட் மிஸ்டேக் மீ.“

“ஆமாம் நானும் அப்படித்தான் நினைத்தேன் ஆனால் நடக்கலையே என்னச் செய்ய? சரி இந்தா பணம் அன்ட் ஃபார்ம்“

என்று கொடுக்க அதை வாங்கிக்கொண்டு ஃப்ர்மில் கையெழுத்திட்டு கொடுத்தான் நவீன்.  

இவற்றைப் பார்த்த மிருதுளாவிற்கு நடப்பது எதுவுமே புரியவில்லை. “ஏன் நவீன் எல்லோரிடமும் பணம் வாங்குகிறார் ??” அதைப் பற்றி வீட்டிற்கு சென்று நவீனிடம் கேட்டு தெரிந்துக்கொண்டாக வேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டாள்.

“இருடா டிஃபன் பண்ணிடறேன் சாப்பிட்டுட்டு கிளம்புங்கோ” 

“ஓகே சித்தி“

“சித்தி நாங்க உடுத்திண்ட உங்க நைட்டீ அன்ட் சித்தப்பா வேஷ்டீ எல்லாத்தையும் நான் எடுத்துண்டு போய் தோச்சு வைக்கறேன் நீங்க எங்காத்துக்கு வரும்போதோ இல்லை நாங்க இங்க வரும்போதோ கொடுக்கறோம் சரியா“

“ஆமாம் சரிதான் போவியா…அதெல்லாம் அப்படியே அந்த வாஷிங் மெஷின் பக்கத்துல போடு போறும் போ…சரி நீ இந்த ரத்தக்கறை படிந்த புடவையை கட்டிண்டு போகாதே. என்னோட சல்வார் தரேன் அத போட்டுண்டு போ சரியா“

“சரி சித்தி“

நவீனும் மிருதுளாவும் சித்தி சித்தப்பாவுடன் காலை டிஃபன் அருந்திவிட்டு கிளம்பினார்கள் அப்போது ரம்யா…

“டேய் நவீன் பார்த்து பத்திரமா கூட்டிண்டு போடா. அடிக்கடி பின்னாடி மிருதுளா இருக்காளான்னு செக் பண்ணிக்கோ“

“ஓகே சித்தி நாங்க போயிட்டு வரோம்“

மிருதுளாவிற்கு பைக்கைப் பார்த்ததும் ஒரு வித பயம் தொற்றியது. ஆனாலும் வீட்டிற்கு போக வேண்டுமே என்றெண்ணி ஏறி ஒரு புறமாக அமர்ந்தாள். அதைப்பார்த்த நவீன்…

“மிருது ப்ளீஸ் இரண்டு பக்கமாக கால்களைப் போட்டு உட்கார்ந்துண்டு என்னை பிடிச்சுக்கோ அப்போ கீழே விழ மாட்ட“

அவளும் தலையசைத்து அவ்வாறே செய்ய முற்பட்டபோது அவளின் காயங்கள் அதற்கு தடையாக இருக்க இரண்டு புறமாக கால்களைப்போட்டு உட்கார்ந்து இரண்டு புறமுமிருந்த கைப்பிடிகளை பிடித்துக் கொள்ள முயன்று வலியால் முடியாமல் “கடவுளே பத்திரமாக எங்களை வீட்டில் சேர்த்து விடு” என்று வேண்டிக் கொண்டே பயணிக்கலானாள்.

அன்றுமுதல் பைக் பயணம் மிருதுளாவிற்கு பயப் பயணமானது. அந்த பயம் அவளைவிட்டு நீங்க சில நாட்கள் / மாதங்கள் / ஆண்டுகள் ஆகலாம்.

தொடரும் …..

ஞாயிறு காலை சூரியன் பார்வை படுவதற்கு முன்னதாகவே மிருதுளா எழுந்து குளித்து புத்தாடை அணிந்து நெய்வேத்தியத்திற்கு வெண்பொங்கலும், கேசரியும் செய்துக்கொண்டிருக்கையில் நவீன் எழுந்து ….

“என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்துண்டு என்ன பண்ணற?”

“நீங்க ஏன் இப்பவே எழுந்துண்டு வந்தேங்கள்?”

“கிட்சனிலிருந்து வாசம் வந்து என்னை எழுப்பிடுத்து. சரி மறுபடியும் தூக்கம் வராது நான் போய் குளிச்சிட்டு வரேன்“

“ஓகே. நானும் அதுக்குள்ள இங்கத்த வேலைகளை முடிச்சிடுவேன்“

நவீனுக்கு புது வேஷ்டி மற்றும் சட்டை எடுத்து கொடுத்து அணியச் சொல்ல அவனும் அதை அணிந்து வர இருவருமாக சேர்ந்து விளக்கை ஏற்றி பூஜை செய்தனர். அப்பொழுது மிருதுளா மனதில்…

“அம்மா எங்களது இந்த புதிய வாழ்க்கை துவக்கம் நல்லதாகவும் இனி வரும் காலங்களிலும் நல்லபடியாக நாங்கள் வாழ்வதற்கும் நீயே துணை. உன் கால்லடியில் எங்கள் வாழ்க்கையை வைத்துவிட்டேன் தாயே. நல்லவற்றையே தந்தருள்வாயாக. ஏதாவது கஷ்டமென்றால் அதை தாங்கும் சக்தியையும் அதிலிருந்து மீண்டு வருவதற்கும் உன் அருள் வேண்டும் அம்மா சமயபுரத்தாயே நீயே துணை” என்று கண்களை மூடி வேண்டிக்கொண்டிருந்ததைப் பார்த்த நவீன் 

“என்ன மிருது சாமிகிட்ட பயங்கர வேண்டுதல் வச்சயே அது என்னதுன்னுட்டு நான் தெரிஞ்சுக்கலாமா?” 

“ஓ எஸ் தாராளமா தெரிஞ்சுக்கலாமே. நம்ம வாழ்க்கை நல்லா இருக்கனும்னு வேண்டின்டேன்“

“அதுக்கு இவ்வளவு நேரமா!!“

“நீங்க என்ன வேண்டின்டேங்கள்“

“சாமி எல்லாம் நீயே! நல்லபடியா வச்சுக்கோன்னு ஷாட் அன்ட் சுவீட்டா ஒரு அப்பிளிக்கேஷன் போட்டுட்டேன் இனி எல்லாம் அவன் செயல்“

“சரி வாங்கோ டிபன் சாப்பிடலாம்” 

காலை உணவான வெண்பொங்கலையும் கேசரியையும் சாப்பிட அமர்ந்தனர். மிருதுளா நவீனுக்கு பரிமாறி அவனைப் பார்த்துக்கொண்டே பரீட்சை எழுதி மதிப்பெண்களுக்காக காத்திருக்கும் மாணவர் போல காத்திருந்தாள். 

“சூப்பரா இருக்கு மிருது. ஆத்துல அன்னைக்கு நீ பண்ணின கிச்சடியும் சரி இன்னைக்கு இந்த பொங்கலும் கேசரியும் சரி எல்லாமே ருசியோ ருசி போ. ஆம் எ லக்கி ஃபெலோ. இன்னும் கொஞ்சம் போட்டுக்கறேன். ஆமாம் நீயும் சாப்பிட வேண்டியது தானே. ஏன் என்னையே பார்த்துண்டிருக்காய்?”

“உங்களுக்கு பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சதும் எனக்கு வயிறு ரொம்பிடுத்து. தாங்க்ஸ் ஃபார் யுவர் அப்ரிசியேஷன்“

“ஹலோ இந்த தாங்க்ஸ் எல்லாம் வெளி ஆட்கள்கிட்ட வச்சுக்கோ நம்மளுக்குள்ள எல்லாம் நோ சாரி நோ தாங்க்ஸ் ஓகே. மொதல்ல நீயும் உட்கார்ந்து சாப்பிடு.“

நவீனின் பேச்சு, பழக்கங்கள் எல்லாம் மிருதுளாவிற்கு மெல்ல மெல்ல அவன் மீது காதலை வரவைத்தது. அதே போல நவீனும் மிருதுளா மீது கொள்ளை ஆசையும் பிரியமும் வைத்திருந்தான்… ஆனாலும் இருவரின் மனதிலும் ஏதோ சில நெருடல்கள் இருந்து கொண்டு அதை முழுவதுமாக அனுபவிக்க தடுத்தது. 

மிருதுளாவிற்கு நவீனிடம் கேட்டு க்ளியர் பண்ணிக்கொள்ள  வேண்டிய விஷயங்கள் பல உள்ளது அவற்றை நவீனிடம் எப்படி கேட்பது? என்ன நினைப்பார்? வருத்தப்படுவாரா? சரியான பதில் கிடைக்குமா? என்பதனால் தயக்கம். நவீனுக்கு பிரேஸ்லெட் விஷயத்தில் ஒரு பொய்யை தனது பெற்றோர் சொல்லி தன்னை தாழ்த்தியதில் வருத்தம். இருவருமே அதை வெளிக்காட்டாமல் மனதினுள் பூட்டி வைத்தனர். 

இதுதான் நிச்சயிக்கப்பட்ட திருமணமத்தின் ஆரம்ப கால தயக்கங்களும் தவிப்புகளும். இவை அனைத்தும் சரியாக சில நாட்கள் / மாதங்கள் ஆகலாம். பல தம்பதிகளுக்கு சில வருடங்களும் ஆகலாம். சில தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்துக்கொள்ளாமலே போவதும் உண்டு.  அதனால் தான் திருமணமானதும் கணவன் மனைவி பிரிந்திருக்கக்கூடாது என்று பெரியவர்கள் கூறியுள்ளனர். இதில் நம்ம நவீன் மிருதுளா புரிதலுக்கு சில நாட்களாகபோகிறதா, மாதங்களாகபோகிறதா இல்லை வருடங்களாகப்போகிறதா!!!  பர்வதம் ஈஸ்வரன் சொன்னது போல மிருதுளா அவர்களுடனே இருந்திருந்தால் அவர்களுக்குள் புரிதலே வராதபடி செய்திருப்பார்கள் அந்த மூத்த தம்பதியர்.

நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில்

இரு மனங்கள் இணைவதில்

காலதாமதம் ஆவதில்

தவறேதுமில்லை! ஆனால்

இணையாமல் போனால்

அவர்கள் வாழ்க்கை மட்டுமல்லாமல்

இரு குடும்பத்தினரின் வாழ்க்கையும்

ஆட்டம் கண்டுவிடும்

அதிலிருந்து மீள்வதற்கு காலதாமதம் ஆகும்

பலரால் மீண்டு வந்து விடமுடியும்

சிலரால் முடியாமல் அவர்கள் வாழ்க்கை அழிந்துவிடும்.

திருமண வாழ்க்கையில் தம்பதிகளுக்குள் புரிதல் என்பது மனசு விட்டு பேசுவதனால் மட்டுமே வந்துவிடாது அது பல சந்தர்ப்ப சூழ்நிலைகளை சார்ந்தும் தான் ஏற்படும். அப்படிப்பட்ட சூழ்நிலைகள் நிறைய காத்திருக்கிறது நம்ம மிருதுளா நவீன் வாழ்க்கையில். அவர்கள் அவற்றை புரிந்துக்கொள்கிறார்களா என்பது தான் கேள்வி அதற்குண்டான பதிலைத்தேடி தான் நாம் அவர்கள் கதையை படிக்கின்றோம்.

மிருதுளா மந்திய சாப்பாட்டுக்கு ரசமும் உருளைக்கிழங்கு ஃப்ரையும் செய்ய முற்பட்டபோது…

“மிருது மத்தியத்திற்கு வேணும்னா நம்ம கேம்ப்புக்குள்ளயே இருக்கிற வெஜ் டாபாலேருந்து லஞ்ச் வாங்கிண்டு வரேன்.“

“வேண்டாம் நவீ. வெளியே சாப்பிட்டு அலுத்துடுத்து. எனக்கு ரசம் சாதம் சாப்பிடனும் போல இருக்கு. அதுதான் செய்துண்டிருக்கேன். இதோ ரசமும் உருளை பொறியலும் ஆயாச்சு. சாதம் மட்டும் வச்சுட்டேன்னா வேலை ஆச்சு. நான் ஒன்னு கேட்கவா?” 

“கேளு. என்ன?”

“உங்களுக்கு சமைக்கத்தெரியுமா?”

“நாட் அட் ஆல் மிருது. சின்ன வயசுலயே வேலைல சேர்ந்துட்டேன் அன்னேலேருந்து இன்னிக்கு நீ சமைச்சு தந்தது வரைக்கும் எனக்கு எங்க ஆர்மி மெஸ் சாப்பாடு தான் கைகுடுத்திருக்கு. மெஸ் இருந்ததால நான் சமைக்கனும்ங்கற அவசியம் வரலை அதனாலயோ என்னமோ அதை கத்துக்கணும்ன்னு தோணலை.“

“ஓ!!! அப்படியா? சரி சப்போஸ் எனக்கு உடம்புக்கு சரியில்லாமல் போச்சுன்னா?”

“அப்போ இருக்கவே இருக்கு நம்ம ரோஹித் டாபா. அங்கிருந்து வாங்கி சாப்பிடுவோம் என்ன சொல்லற“

“அப்பவும் கத்துக்க மாட்டேங்கள்ங்கறது நல்லா புரியறது“

“அதெல்லாம் பார்த்துக்கலாம் இப்போ ஏன் உடம்பு முடியாமல் போறத பத்தி எல்லாம் பேசற. விடு வேற ஏதாவது பேசுவோம்“

“சாதம் ஆயாச்சு. சரி வாங்கோ நாம ஹாலுக்கு போவோம்“

“இந்த கோட் சூட்டை கவர்ல போட்டு வைக்கனும் இல்லைன்னா டஸ்ட் படியும்.  இப்போ சொல்லு நேத்திக்கு என்கிட்டே ஏதோ கேட்க வந்து கேட்காம விட்டுட்ட என்னதது?”

“நம்ம ரிசப்ஷன் டிரஸ் தானே எஸ் எஸ் அப்படியே வையுங்கோ. சரி நேத்திக்கு கேட்க வந்தது இருக்கட்டும் இப்போ இந்த கோட் சூட்டை பார்த்ததும் இன்னொரு விஷயம் ஞாபகம் வருது கேட்கட்டுமா? கோபப்படாமல் பதில் சொல்லனும்“

“எனக்கு கோபமே வராது அதெல்லாம் ஒரு காலத்துல பயங்கரமா இருந்தது…இப்போ அப்படி இல்லை‌. அதனால கேளு“

“ஆமாம் நீங்கள் தான் சம்பாதிக்கறேங்கள் அதுவுமில்லாம வரதட்சணை ஏதும் வேண்டாம் என்றும் அதைப்பத்தி என் அப்பா மீண்டும் பேச ஆரம்பிச்சபோது எழுந்து வெளியே போனேங்களே“

“ஆமாம் நான் வேண்டாம்னு சொன்னதுக்கப்புறமும் உன் அப்பா அதைப்பத்தி மறுபடியும் பேசினார் அதுதான் போனேன்“

“ஓகே ஓகே நீங்க அன்னைக்கு சொன்னது செய்தது எல்லாம் சரிதான் ஆனா அதுக்கப்புறம் உங்க அப்பா அம்மாட்ட ஏன் ரிசப்ஷன் டிரஸ், ஷூ எல்லாம் வாங்க பணம் கேட்டிருக்கேங்கள்?”

“என்ன சொல்லற நீ? நான் எப்போ அவாகிட்ட பணம் கேட்டேன்? எதுக்கு கேட்கனும்? நானே தான் எல்லாம் டில்லியில் எடுத்துண்டேன்“

இதை கேட்டதும் மிருதுளாவிற்கு ஊருக்கு கிளம்புவதற்கு முன்தினம் நவீன் அவர் அப்பாவிடம் பணம் கேட்டு வாங்கியது நினைவுக்கு வந்தது. ஆனால் அதை இப்போது கேட்டால் தானும் குழம்பி நவீனையும் குழப்பிவிடுவோம் என்றெண்ணி அதை இன்னொரு நாள் கேட்கலாம் என்று முடிவு செய்து…அதுதான் சரி என தலையை அசைத்து….

“என்ன சொல்லறேங்கள்? அப்போ நீங்க அவாகிட்ட டிரஸ் எடுக்க பணம் ஏதும் கேட்கலையா? ஆனா அவா ரெண்டு பேரும் நீங்க கேட்டதா சொல்லித்தான் எங்க அப்பாகிட்ட இருந்து ரூபாய் பத்தாயிரத்த பஸ் ஸ்டாப் ன்னு கூட பார்க்காம அங்கேயே குடுக்கச்சொல்லி வாங்கிண்டு தான் உங்க ஊர் பஸ்ஸிலயே ஏறினா. எங்க அப்பா கூட சாயந்தரம் ஆத்துக்கு வந்து தரேன்னு சொன்னதுக்கு, “இல்ல இப்பவே அவனுக்கு நாங்கள் மணி ஆர்டர் பண்ணனும்” ன்னு சொன்னாலே!!!“

“என்னது பத்தாயிரமா!!! அப்படியா சொல்லி வாங்கினா? ஏன் உங்க அப்பா கொடுத்தா? என்ட்ட ஒரு வார்த்தை கேட்டுருக்கலாமோனோ!!! அந்த வெள்ளி சொம்பு, முகம் விஷயத்தில எப்படி நேரா வந்து பளிச்சுன்னு கேட்டா?”

“என்ன சொல்லறேங்கள்? அது மூனாம் மனுஷர் வந்து கேட்டதால் என் அப்பா அம்மா நேரா கேட்டா, அதுவும் இல்லாம நீங்க அப்போ அங்க இருந்தேங்கள் அதனால க்ளியர் ஆச்சு ஆனா இது அப்படியில்லையே கேட்டது உங்க அப்பா அம்மா அவாள்ட்ட அப்படி எப்படி கேட்க முடியும்? அதுவும் நீங்க டில்லில இருந்தேங்கள்“

“ஒரு ஃபோன் பண்ணி கேட்டிருக்கலாமே“

“அந்த கொடுக்கல் வாங்கல் நடந்தப்போ நானும் அங்கிருந்தேன். எனக்கு உங்க மேல தான் கோபம் வந்தது. அன்னைக்கு நைட் நீங்க ஃபோன் பண்ணினேங்கள் அப்போ அதை சொல்லனும்ன்னு ஆரம்பிச்சேன் என் சித்தி தான் “அதெல்லாம் ஃபோன் ல சொல்லக்கூடாது…இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் நேர்ல பேசரா மாதிரி வராது நீ ஏதாவது அவர்ட்ட இப்போ சொல்ல அத அவர் டில்லியிலிருந்து அவா பெத்தவாள்ட்ட கேட்க அவா உன்னை தப்பா நினைச்சுடுவா” ன்னு சொன்னது ஞாபகம் வர அப்படியே சொல்ல வந்ததை விட்டுட்டேன். அதுக்கப்புறம் நான் அதை மறந்துட்டேன் இப்போ தான் ஞாபகம் வந்தது கேட்டேன்” 

“ஓ மை காட்!!! என்கிட்ட எங்க அப்பா அம்மா உன் பேரன்ட்ஸ் கிட்டருந்து பணம் வாங்கியதா சொல்லவுமில்லை, தரவுமில்லை” 

“அப்போ அந்த பத்தாயிரம் என்ன தான் ஆச்சு! எங்க போச்சு!!“

“தெரியலையே!!! ச்சே ஏன் இப்படி எல்லாம் பண்ணிருக்கா? சரி கல்யாணமானதுக்கப்புறமாவது ஆத்துல இருந்தப்போவே சொல்லிருந்தே னா நேரா கேட்டிருக்கலாமில்லையா?”

“நானும் கல்யாண டென்ஷன் அன்ட் ஒருவித பயம் கலக்கம் எல்லாத்தோடையும் இருந்ததுனால மறந்துட்டேன்” 

“என்னன்னு சொல்லுவேன் போ. பசிக்கறது சாப்பிடலாமா“

“மொத்தத்துல எங்க அப்பாவுக்கு பத்தாயிரம் நஷ்டம். சரி வாங்கோ சாப்பிடலாம்.“

வரதட்சணை வேண்டாம் என நவீன் சொல்லியிருந்தாலும்

அவன் பெற்றோர் வேறு வழியில் அதைப் பெற்றுச் சென்றிருந்தாலும்

அதை மகனிடமிருந்து மறைத்திருந்தாலும் 

உண்மை மிருதுளா மூலம் வெளி வந்ததால்

பர்வதம் ஈஸ்வரன் போட்ட முடிச்சுகளில் இரண்டாவதும் அவிழ்ந்தது.

முடிச்சுகள் பல போட்டதால்

இருவரும் இணைந்தால்

ஒவ்வொன்றாக அவிழும் என்பதால்

மிருதுளாவை போகாமல் 

தடுத்துள்ளனர் மூத்த தம்பதியினரான பர்வதம் ஈஸ்வரன்

என்னதான் அவர்கள் முடிச்சுகள் போட்டிருந்தாலும் ஆண்டவன் முடிச்சு என்று ஒன்றிருப்பதை மறந்துவிட்டார்கள் போலும். அவர்கள் போட்ட முடிச்சு காலப்போக்கில் தளர தளர  மிருதுளாவிற்கும் நவீனுக்கும் ஆண்டவன் போட்ட முடிச்சு தளராமலிருக்க அவரே அருள் புரிய வேண்டும். 

இருவரும் உணவருந்தியதும் சற்று நேரம் ஓய்வெடுத்து விட்டு நவீனின் ஒன்னு விட்ட சித்தி வீட்டிற்கு கிளம்பலானார்கள். மிருதுளா பட்டுப்புடவையுடுத்தி தயார் ஆனாள். அவளைப்பார்த்த நவீன் 

“ஏதோ குறையுதே“

“என்ன !! என்ன குறையறது? ஓ !! ஐ காட் இட். தலையில் பூ ரைட்டா?”

“எஸ் ரைட். போற வழியில் பூக்கடை இருக்கு அங்க வாங்கிக்கலாம்“

பூக்கடையில் வண்டியை நிறுத்தி பூ வாங்கிக்கொடுத்தான் நவீன். அதை தன் தலையில் சூடிக்கொண்டாள் மிருதுளா. இருவருமாக பைக்கில் மீண்டும் பயணத்தை தொடர்ந்த சில மணி நேரத்தில் “ஐய்யோ அம்மா” என்று ஒரு அலறல் சத்தம் …..

தொடரும்…….

காலை கதிரவன் கண்விழித்துப்பார்க்களானார்.  ஜன்னல்களுக்கு திரைச்சீலை இல்லாததால் அவரின் பார்வை மிருதுளாவை தூங்க விடாமல் எழச்செய்தது. எழுந்து நவீனைப்பார்த்தாள் அவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான். அவனை தொந்தரவு செய்யாமல் ஃப்ரெஷ்ஷாகி வந்து மெதுவாக கொண்டு வந்த அட்டைப்பெட்டிகள் மற்றும் சூட்கேஸ்களை திறந்து உள்ளிருந்த பொருட்கள் எல்லாவற்றையும் ஹாலில் பாத்திரங்கள், மளிகை, ஸ்நாக்ஸ், டிரஸ்ஸை, சாமி படங்கள் என பிரித்து அடுக்கி வைத்தாள். சாமி படங்களை எங்கே மாட்டுவது என்று சுற்றும் முற்றும் பார்த்து ஓர் இடத்தில் பேனாவால் குறியீடு  போட்டு வைத்தாள். 

ஒரு பேப்பரில் கடையில் வாங்க வேண்டிய டப்பாக்கள் (மளிகை சாமான்களைப் போட்டு வைக்க), பால் போன்றவைகளை லிஸ்ட் போட்டாள். டக்..டக்…டக்..டக் என கதவு தட்டும் சத்தம் கேட்டது. அச்சச்சோ இந்த சத்தம் நவீனின் தூக்கத்தை தொந்தரவு செய்யுமே என்ற எண்ணம் தோன்ற உடனே தாவி குதித்துக்கொண்டு இன்னும் ஒருமுறை தட்டுவதற்குள் கதவை திறந்தாள். நடுத்தர வயது பெண்மணி கையில் ஒரு டிரேவில் இரண்டு கப் டியுடன் நின்றுக்கொண்டிருந்தார். அந்த பெண்ணைப் பார்த்ததும் …

“நீங்க தமிழா?”

“ஆமாம். எங்க ஊரு திருநெல்வேலி. உங்க பக்கத்து வீடுதான். நீங்க வீட்டை இன்னும் செட் செய்திருக்க மாட்டிங்கன்னு தெரியும் அதுதான் காபி கொண்டு வந்தேன்“

“ஓ!! ரொம்ப நன்றிங்க. என் பெயர் மிருதுளா. உங்க பெயர் என்ன?”

“என் பெயர் லதா. எதுக்குங்க தாங்க்ஸ் எல்லாம். நான் கல்யாணமாகி வந்த புதுசுல இப்படித்தான் எங்க அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க ஹெல்ப் பண்ணினாங்க. சரி சரி காபி ஆறிட போவுது குடிங்க. என் பசங்கள ஸ்கூலுக்கு கிளப்பனும். நீங்க மொதல்ல செட்டில் ஆகுங்க அப்புறம் பேசுவோம். சரியா மிருதுளா.“

“ஓகே பை” என கதவை சாத்தி டிரேவுடன் திரும்பினாள் நவீன் “தாங்க்ஸ்” என்று கூறிக்கொண்டே ஒரு கப்பை எடுத்துக்கொண்டு…

“ஹேய் எப்போ எழுந்தே நீ? எல்லாத்தையும் அடுக்கி வச்சுருக்கறத பார்த்தா நீ எழுந்துண்டு ஒரு ஒன் ஆர் ஆகிருக்குமே!! ஏன் என்னை எழுப்பலை“

“நீங்க எப்போ எழுந்தேங்கள்?”

“நீ நம்ம பக்கத்தாத்து லதாவோடு இன்ட்ரோ ஸெஷன் நடத்தினியே அப்போவே எழுந்துட்டேன்“

“சரி சரி குளிச்சிட்டு வாங்கோ கடைக்கு போகணும் சில சாமான்கள் எல்லாம் வாங்கணும். இதோ லிஸ்ட் ரெடி. இன்னைக்கு போய் எல்லாத்தையும் வாங்கிண்டு வந்து எல்லாத்தையும் செட் பண்ணிட்டோம்ன்னா நாளைக்கு விளக்கு ஏற்றி சமையலை தொடங்கிடுவேன்“

“என்ன இவ்வளோ வேகமா இருக்க? நான் எல்லாம் கொஞ்சம் ஸ்லோ தான் மா.” 

“எனக்கு பழைய நியூஸ் பேப்பர் வேணுமே. எங்கே கிடைக்கும்“

“என்னத்துக்கு?”

“எல்லா செல்ஃப்லையும் விரிக்கத்தான்.“

“ஓகே நான் குளிச்சிட்டு போய் எடுத்துண்டு வரேன்.“

“எங்கேருந்து?”

“என் நண்பர்கள் ரூமிலிருந்து தான்.“

“அந்த இடம் ரொம்ப தூரமா“

“இல்லை நடந்தே போயிட்டு வந்துடுவேன். ஒரு நாலு தெரு தள்ளி தான் இருக்கு“

“அப்படின்னா இப்பவே போயிட்டு வாங்கோளேன்‌. வந்துட்டு குளிச்சுக்கோங்கோ. ப்ளீஸ்…“

“சரி போயிட்டு வரேன்.“

நவீன் வருவதற்குள் பக்கத்து வீட்டு டிரே, காபி கப் எல்லாவற்றையும் தேய்த்து அலம்பி வைத்தாள். நவீன் பேப்பர்களை மிருதுளாவிடம் கொடுத்துவிட்டு குளிக்கச்சென்றான். அவன் ரெடி ஆவதற்குள் துணிமணிகளை பீரோவில் அடுக்கி வைத்தாள். அடுப்படியில் எல்லா இடத்தையும் ஒரு துண்டு கொண்டு துடைத்து, படிகளில் எல்லாம் பேப்பரை விரித்து, பாத்திரங்களை எல்லாம் அடுக்கி வைத்தாள். நவீன் அனைத்தையும் பார்த்துவிட்டு..

“அம்மாடி நீ என்ன சூப்பர் உமன்னா!!! அதுக்குள்ள எல்லாத்தையும் ஒதுக்கி வச்சிட்டயே!!!” 

“இதை எல்லாம் செய்ய சூப்பர் உமன்னா இருக்கனும்ங்கற அவசியமில்லை எந்த எந்த வேலைகளை எப்போ செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும்ன்னு மனசுல கணக்கு போட்டு வேலைப் பார்த்தா சுலபமாக முடியும் அவ்வளவுதான்.“

“ஓ அப்படியா!!! இப்போ புரியுது நான் ஏன் ஃபாஸ்ட்டா செய்ய மாட்டேன்ங்கறது.“

“ஏன்“

“ஏன்னா நான் மாத்தமாட்டிக்கஸ்ல வீக் அதுதான்“

“அச்சோ கடி ஜோக். சரி சீக்கிரம் ரெடி ஆகுங்கோ. இன்னைக்கு பிரேக்ஃபாஸ்ட் எங்க? எனக்கு பசிக்கறது“

“இன்னைக்கு நாம கேண்டீனுக்கு தானே போறோம் அதுக்குப்பக்கத்திலயே ஒரு சின்ன வெஜ் ஹோட்டல் இருக்கு அங்கயே சாப்பிடலாம் சரியா.“

“நாங்கெல்லாம் கேண்டீனுக்கு போனா அங்கதான் சாப்பிடுவோம் அதுக்கு வெளியே இருக்கிற ஹோட்டல்களில் சாப்பிட மாட்டோம்“

“அம்மாடி உன் அறிவ பார்த்து அப்படியே புல்லரிச்சுடுத்து போ…அசடே இங்க கேண்டீன்னா சாப்பாடு தரும் இடமில்லை… நம்ம ஆளுகளுக்கு மலிவான விலையில் பொருட்கள் விற்கும் எ ஸ்மால் கடை மாதிரின்னு வச்சுக்கோயேன். வா பார்க்கத்தானே போற“

“ஓ… அப்படியா…சாரி எனக்கு அது தெரியாது….இந்த டிரே அன்ட் கப்பை லதா ஆத்துல குடுத்துட்டு வரேன் நீங்க கதவைப்பூட்டிட்டு ரெடியா இருங்கோ“

“ஓகே ஓகே போயிட்டு வா“

பக்கத்துவீட்டு கதவை தட்டினாள் மிருதுளா. லதா அடுப்படியிலிருந்தே எட்டிப்பார்த்து…

“வா வா மிருதுளா உள்ள வா“

“இல்ல நாங்க வெளில கிளம்பறோம். இன்னொரு நாள் வரேன். இதோ இதை குடுத்துட்டுப்போகலாமேன்னு வந்தேன்.“

“இது என்ன முறுக்கு, அதிரசமெல்லாம் வச்சிருக்க!“

“ஆமாம் எங்க கல்யாண பட்சணம். சாப்பிடுங்க நல்லாருக்கும்.“

பைக் ஹான் சத்தம் கேட்டதும் மிருதுளா…

“சரி நான் வரேன் அவர் தான் ஹான் அடிச்சுக்கூப்பிடறார். அப்புறம் பேசலாம். பை“

“ஓ கே மா பை.“

இருவரும் கேண்டீன் பார்க்கிங்கில் வண்டியை நிப்பாட்டிவிட்டு காலை உணவருந்த ஹோட்டலுக்குள் சென்றனர். நவீன் ஒரு பிரெட் பக்கோடா அன்ட் ஒரு ஆலு பரோட்டா ஆர்டர் செய்தான். அதற்கு மிருதுளா….

“இங்க இட்டிலி தோசை எல்லாம் இருக்காதா?…எப்படி எப்ப பார்த்தாலும் ரொட்டியவே சாப்பிடறாளோ தெரியலைப்பா.“

“நாம எப்படி எப்பப்பார்த்தாலும் இட்டிலி தோசை சாப்பிடறோமோ அப்படி தான் அவாளுக்கும்.“

“மொதல்ல எல்லாத்தையும் செட் செய்துட்டு இட்டிலி தோசைக்கு மாவு அறைத்து வைக்கணும்“

“உனக்கு தான் அறைக்க தெரியாதே பின்ன எப்படி!!!“

“உங்க அம்மா அன்னைக்கு செய்ததை எல்லாம் பார்த்து தெரிஞ்சுண்டேன். ஆமாம் அது என்ன பிரெட் பகோடா?”

“இதோ வந்துடுத்தே இது தான் சாப்பிட்டுப்பார்த்து சொல்லு.“

“அப்பா சுட சுட இருக்கு. ம்…ம்…ம்…சூப்பரா இருக்கு. இது தான் ஃபர்ஸ்ட் டைம் இப்படி பிரெட் சாப்பிடறேன். இதுக்குள்ள ஆலு ஸ்டஃப் பண்ணிருக்காளோ.“

“எஸ் ஆலு தான். இதுலயே பன்னீர் பிரெட் பகோடாவும் இருக்கு. அடுத்த தடவை வாங்கித்தறேன்.“

“பரவாயில்லை எனக்கு இந்த ஊரு டிஷ் எல்லாம் கத்துக்கணும்னு ஆசையா இருக்கு.  இன்னும் ஒரு வருஷத்துல எல்லாம் கத்துண்டு ஆத்துலயே செய்து தறேனா இல்லையான்னு பாருங்கோ. சரி உங்க ஆத்துக்கு ஃபோன் பண்ணிச் சொல்லிட்டேளா நாம பத்திரமா வந்து சேர்ந்தாச்சுன்னு?”

“ம் ம்..ம் அதெல்லாம் சொல்லியாச்சு. நீ உங்க அப்பா அம்மாட்ட பேசணுமா? இதோ இங்க ஒரு எஸ்.டி.டி பூத் இருக்கு. பேசறயா?”

“ம். …பேசறேன்.“

மிருதுளா வீட்டுக்கு ஃபோன் போட்டுக்குடுத்து 

 “எவ்வளவு ஆச்சுன்னுட்டு மேலே காட்டும் பார்த்து பேசு” என்றான் நவீன். 

மிருதுளா அவள் அம்மா அப்பா மற்றும் தம்பியுடன் பேசிக்கொண்டே மேலே பார்த்தாள் அறுபது என்று காட்டியதும் அவசர அவசரமாக பை சொல்லி கால்லை கட் செய்தாள். இதைப்பார்த்த நவீன்…

“ஏன் என்ன ஆச்சு? நூறு ருபாய் வரைக்கும் பேசிருக்க வேண்டியது தானே“

“அத நீங்க முன்னாடியே சொல்லிருக்கனும். இப்போ சொல்லறேங்கள்“

“ஹா! ஹா! ஹா! வா வா பொருட்களை வாங்குவோம் அப்புறமா வேணுனா நைட் பேசலாம். நம்ம கேம்ப்புக்குள்ளயே ஒரு எஸ்.டி.டி பூத் இருக்கு. ஓகே வா“

 வேண்டிய பொருட்களை எல்லாம் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.  வீட்டில் முதலில் சாமி படங்களை சுவரில் ஆணி அடித்து மாட்டினார்கள். அதற்காக வாங்கி வந்த ஸ்டாண்டையும் ஃபிக்ஸ் செய்தான் நவீன். மிருதுளா எடுத்து வந்த எல்லா சாமி பொருட்களையும் அந்த ஸ்டாண்டில் அடுக்கி வைத்தாள். மளிகை ஜாமான்களை எல்லாம் டப்பாக்களில் இருவருமாக போட்டு அடுப்படியில் அடுக்கினர். அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர் வாங்குவதற்கு மிருதுளாவிடம் பணம் கொடுத்திருந்தார் ராமானுஜம். ஆனால் அதை அவர்கள் வாங்க மறந்ததால் மீண்டும் போக ஆயத்தம் ஆனார்கள். அப்பொழுது நவீன்…

“ஏய் மிருது எப்படியும் மத்திய சாப்பாட்டுக்கு வெளியே தான் போகணும் அப்போவே போய் மிச்சத்த வாங்கிண்டு உன்னை ஆட்டோல ஏத்திவிட்டுட்டு பின்னாடியே நானும் பைக்ல வரேன் என்ன சொல்லுற….இல்லாட்டி இப்ப ஒரு தடவை அப்புறம் ஒருதடவைன்னுட்டு ரெண்டு மூணு டிரிப் அடிக்கனும்“

“ஓகே அதுவும் சரி தான் அப்படியே செய்வோம். ஆனா அதுக்கு இன்னும் ரெண்டு ஆர் மூணு மணிநேரமிருக்கே! அதுவரை என்ன செய்வோம்…என்ன மறுபடியும் படுத்துட்டேள்“

“ஆமாம் ..வா நீயும் வந்து படுத்துக்கோ.“

மிருதுளாவிற்கு நவீனிடம் காசு இல்லாமல் போனது ஏன் என்ற நினைப்பு மனதிலிருந்ததை நவீனிடமே கேட்டாக வேண்டும் என்று எண்ணி ஆரம்பித்தாள்…

“என் மனசுல ஒரு விஷயம் உருத்திண்டே இருக்கு அதை உங்கள்ட்ட கேட்கலாமா!!“

“கேளு..அதுக்கு ஏன் இழுக்கறாய்…?” 

“இல்லை நீங்க ஏதாவது நினைச்சிட்டா…“

“ஏய் சொல்லுமா” என்று கையை பிடித்திழுத்தான் நவீன், உடனே ஆ…என சத்தமிட்டாள் மிருதுளா. 

“என்ன ஆச்சு ? ஏன் கத்தின?”

“இந்த பிரேசிலட் கீரிடுத்து அதுதான் கத்தினேன். கழட்டி வைக்க மறந்துட்டேன்“

“ஏய் நானும் மறந்தே போயிட்டேன் பாரேன்!!!! உனக்கு இந்த பிரேசிலட் பிடிச்சிருக்கா? இதை கல்யாண நாள் அன்றைக்கே கேட்கனும்ன்னு நினைத்தேன் அந்த டென்ஷன்ல மறந்துட்டேன்.“

“நல்லா தான் இருக்கு ஏன் இதுக்கு என்ன ஸ்பெஷலாம்!!! ஓ!!! மச்சினர் வாங்கி தந்ததாச்சே அதனாலயா? நீங்கதான் எனக்கு ஒன்னுமே வாங்கித்தரலையே!!! அதுல எனக்கு கொஞ்சம் மன வருத்தம் தான்“

“ஹலோ என்ன சொல்லுற? எந்த மச்சினன் வாங்கினதுனு நினைச்சிண்டிருக்க? இது நான் உனக்காக கடை கடையா ஏறி பார்த்து வாங்கியது மா“

“என்ன சொல்லறேங்கள் எங்க ஃபேமிலி ஆட்கள்கிட்ட உங்க அம்மா தான் சொல்லிருக்கா!!! அவா என்கிட்ட சொன்னா“

“என்னத்த சொன்னா உன் மாமியார்“

“ஏன் உங்க அம்மான்னு சொல்லமாட்டேளோ!!!“

“இப்ப அதுதான் ரொம்ப முக்கியம் பாரு. மொதல்ல என்ன நடந்ததுனு சொல்லறயா“

“உங்க தம்பி கவின் குவைத்திலிருந்து அவன் மன்னிக்காக வாங்கிண்டு வந்ததுனு உங்க அம்மா சொன்னதால் நாங்கள் அனைவரும் அதை உண்மைன்னு நம்பி கல்யாணத்தன்னைக்கு மண்டபத்தில எல்லார்கிட்டயும் அதையே தான் சொன்னோம், அதுக்கு என் சித்திக்கூட சொன்னா தட் ஐ ஆம் லக்கின்னு. அப்போ என் தோழி காயத்திரி கூட கேட்டா “உன் மச்சினனே உனக்கு பிரேஸ்லட் எல்லாம் வாங்கித்தரார் உன்னவர் ஒன்னும் தரலையா” னுட்டு“

“ஆமாம் …ஆமாம் …அவன் ஒன்னும் வாங்கலை இது நான் வாங்கினது“

“இதை நீங்க ஏன் அப்பவே என் கிட்ட சொல்லலை?”

“சரி விடு கல்யாண டென்ஷன்ல மறந்துட்டேன்… இப்போ தெரிஞ்சுண்டுட்ட ல அது போறும். நீ ஏதோ கேட்கணும்னு சொன்னயே என்னதது“

“இந்த பிரேஸ்லட் இஷ்ஷுல இனி அது வேறயா !!! வேண்டாம் பா வேண்டாம். நான் இன்னொரு நாள் கேட்கறேன்.“

“ஏன் அப்படி என்ன விஷயம் அது?”

“இல்ல இல்ல விடுங்கோ…ஏன் உங்க அம்மா அப்போ அப்படி சொன்னா? நீங்க வாங்கினத கவின் வாங்கினதா ஏன் சொல்லனும்? அதுனால என்ன கிடைச்சது அவாளுக்கு?”

“அதை நீ அவாகிட்ட தான் கேட்கனும். என்னிடம் கேட்டா!!“

“அப்பவே நீங்க என்னிடம் சொல்லிருந்தா நிச்சயமா கேட்டு இருப்பேன். இனியாவது எதுவும் மறக்காமல் சொல்லுங்கோ. சரி நேரமாயிடுத்து நாம போய் அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர், பெட், பில்லோ ரெண்டு எல்லாம் வாங்கிண்டு வரலாமா“

“ஓகே டன். சரி சரி போகலாம் வா“

இருவரும் போய் வேண்டிய அனைத்தையும் வாங்கிக்கொண்டு வந்து எல்லாவற்றையும் அது அது இடத்தில் ஃபிக்ஸ் செய்தனர். இரண்டு கட்டில்கள் மட்டும் தான் குவார்டர்ஸில் தந்திருந்தார்கள் அதில் மெத்தைப்போட்டு புது பெட் ஷீட் விரித்து புது கவரிட்ட தலையணையை வைத்து விட்டு நவீனைப்பார்த்து…..

“அப்பாடா எல்லாம் செட் பண்ணியாச்சு. நாளைக்கு காலைல சீக்கிரம் எழுந்து சுவாமிக்கு நெய்வேத்தியத்திற்கு கேசரி செய்து பூஜைப் பண்ணனும். அதுக்கப்புறம் என்னோட ரெகுலர் சமையலைத் தொடங்கனும்.“

“அதெல்லாம் ஓகே நாளைக்கு ஈவ்னிங் நாம ரெண்டு பேரும் என்னோட ஒன்னுவிட்ட சித்தி இங்க இருக்கா அவா ஆத்துக்கு டின்னருக்கு போகணும் சரியா“

“ஓ இங்கேயும் நம்ம சொந்த காரா இருக்காளா. சூப்பர். ஓ எஸ் போயிட்டு வரலாம்“

நவீன்  போட்டதோ மூன்று முடிச்சு

அவன் பெற்றோர் போட்டதோ பல முடிச்சு

இன்று அதில் அவிழ்ந்தது ஒரு முடிச்சு

பிரேஸ்லட் என்னும் பொய் முடிச்சு…

நம்ம மிருதுளாவும் நவீனும் தனிக்குடித்தனம் தொடங்கிய இரண்டே நாளில் பர்வதம் ஈஸ்வரன் போட்ட முடிச்சுகளில் …பிரேஸ்லட் எனும் முதல் முடிச்சு அவிழ்ந்து இருவருக்கும் உண்மையை விளங்கச்செய்தது. இன்னும் எத்தனை முடிச்சுகள் வரிசையாக நம்ம மிருதுளா நவீன் மனம்விட்டுப் பேச ஆரம்பித்தால் அவிழப்போகிறதென்பதை வரும் நாட்களில் படித்து தெரிந்துக்கொள்வோம்.

தொடரும்……

சாபர்மதி ஆற்றின் மேற்குக் கரையில், குஜராத்தின் தலைநகரான காந்திநகரில் கால்லடி எடுத்து வைத்தாள் மிருதுளா. இரண்டு நாள் பயணித்தும் அசதியேதுமின்றி புத்துணர்ச்சியுடன் புதிய வாழ்க்கையை வாழ தனது முதல் அடியை நவீனுடன் எடுத்து வைத்ததும். ஆயியே ஆயியே மிஸர்ஸ் அன்ட் மிஸ்டர் நவீன், வாங்க வாங்க திருமதி மற்றும் திரு நவீன் அவர்களே, ரண்டி ரண்டி மிஸர்ஸ் அன்ட் மிஸ்டர் நவீன் சார். வரூ வரூ மிஸ்டர் அன்ட் மிஸர்ஸ் நவீன். காந்திநகரலெக்கு சுவாகதம். என அனைத்து மொழிக்காரர்களும் வரவேற்றனர். மிருதுளா அனைவருக்கும் வணக்கம் என்று கூறினாள். நவீன் தனது நண்பர்கள் அனைவரையும் மிருதுளாவிற்கு அறிமுகப் படுத்தினான். பின் அனைவருமாக அவர்களின் ஆர்மி வண்டியில் ஏறி காந்திநகர் யூனிட்டுக்குள் சென்று ஒரு சிறிய வீட்டின் முன் நிறுத்தினர். 

அதுதான் நவீன் மிருதுளாவிற்காக பார்த்துவைத்திருந்த வீடு. அனைவரும் இறங்கி பெட்டிகள் அனைத்தையும் வீட்டினுள் வைத்துவிட்டு அவர்களை ஃப்ரெஷ் ஆக சொல்லிவிட்டு விடைப்பெற்றனர். மிருதுளா வீட்டைச்சுற்றிப்பார்த்தாள். ஒரு பெரிய ஹால் நடுவில் ஒரு சுவர் தடுப்பு, டாய்லெட் பாத்ரூம், மிக சிறிய அடுப்படி, அடுப்படி வழியே வீட்டின் பின்புறம் செல்வதற்கு கதவு. அவ்வளவேதான் அவள் வாழப்போகும் வீடு. அவள் எல்லாத்தையும் பார்த்துவிட்டு வருவதற்குள் நவீன் குளித்துவிட்டு வந்தான்…

“என்ன மிருது வீடு ஓகே வா! இது எனக்கு அலாட் ஆன குவார்ட்ஸ் இல்லை. நான் வாடகைக்கு தான் எடுத்துருக்கேன். இன்னும் ஒரு ஆறு மாசத்தில நம்மளுக்குன்னு நம்ம வீடு அலாட் ஆகிடும். அது நல்ல ஸ்பேஷியஸா இருக்கும்.“

“எனக்கு வீடு ரொம்ப பிடிச்சிருக்கு. நாம ரெண்டு பேருக்கு இதே போறுமே!.“

“சரி நீ போய் சீக்கிரம் குளிச்சு ரெடி ஆகு“

“ஏன்“

“நம்மள ரிசீவ் பண்ண ஸ்டேஷன் வந்தார்ல பல்பீர் சிங் அவங்க வீட்ல பிரேக் ஃபாஸ்டுக்கு வரச்சொல்லிருக்கா. நாம அவா ஆத்துக்கு போனும் …ம்..ம்.. சீக்கிரம் ஆகட்டும்“

டக் டக் டக் டக் என வீட்டின் கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்தான் நவீன். பல்பீர் சிங்கின் பத்து வயது மகள் கையில் ஒரு டிரே அதில் இரண்டு கப் டீ மற்றும் பிஸ்கெட்டோடு மலர்ந்த முகத்துடன்…

“அங்கிள் பப்பா நே ஆப்கோ சாய் தேனே கேலியே போலா” என்று தனது அப்பா நவீனுக்கும் மிருதுளாவும் டீ கொடுக்க சொன்னதாக கூறி டிரேவை நீட்டினாள். நவீன் அதை வாங்கிக்கொண்டு தாங்கள் இன்னும் சிறுது நேரத்தில் அவர்கள் வீட்டுக்கு வருவதாக பலபீரிடம் சொல்லச்சொல்லி அந்த சிறுமியிடம் டீ கொண்டு வந்ததற்கு தாங்க்ஸ் என்று ஹிந்தியில் சொல்லி அனுப்பிய பின் கதவை சாத்திவிட்டு உள்ளே வருவதற்குள் மிருதுளா ஃப்ரெஷ்ஷாகி வந்தாள்…

“யாரு வந்தது. சரி நீங்க பேசிண்டு இருந்தேங்களா அதுதான் நான் போய் குளிச்சு ஃப்ரெஷ்ஷாயிட்டு வந்தேன். ஆமாம் இந்த காபியும் பிஸ்கெட்டெல்லாம் எங்கேர்ந்து வந்தது?”

“இது காபி இல்லை டீ. இனி இங்க எங்க போனாலும் டீ தான் தருவா. காபி நாம நம்ம வீட்டுல போட்டு குடிச்சா உண்டு. இதை நமக்காக பல்பீர் வீட்டுலருந்து அவா பொண்ணுட்ட அனுப்பிருக்கா.“

“ஓ அப்படியா!!! சரி அவா நான்வெஜ் சாப்பிடுவாளா?”

“ஆமாம், அவா பஞ்சாபி ஆச்சே நிச்சயம் சாப்பிடுவா. அதுனால என்ன? ஏன் இப்போ இதைக்கேட்ட?”

“அச்சச்சோ அப்படீனா எனக்கு வேணாம். நான் அவா ஆத்துக்கும் டிஃபன் சாப்பிட வரலை“

“அவாளுக்குத் தெரியும் நாம நான்வெஜ் சாப்பிட மாட்டோம்ன்னு ஸோ அவா அதெல்லாம் செய்திருக்க மாட்டா. ஏதாவது வெஜ் டிஷ் தான் பண்ணிருப்பா அதனால நீ தைரியமா சாப்பிட வரலாம்“

“இல்லை அதுக்கில்லை….“

“என்ன இழுக்கற…என்ன உன் ப்ராப்ளம் தயங்காம சொல்லு மிருது“

“இதுவரைக்கும் நான் நான்வெஜ் சாப்பிடறவா ஆத்துல எல்லாம் சாப்பிட்டது இல்லை. அதுவும் இல்லமா என்னதான் அவா சைவ சாப்பாடு செய்திருந்தாலும் அதை அசைவம் சமைத்த பாத்திரங்களாக தானே இருக்கும் …ஸோ நான் சாப்பிடும் போது அந்த நினைப்பு வந்து எனக்கு வாந்தி வந்துடுத்துன்னா? “

“ஹேய் நீ பேசறது அசட்டுத்தனமா இருக்கு. அவா என்ன பாத்திரங்களை தேய்த்து கழுவாமலா இருப்பா!!! என்ன இது …இனி இது மாதிரி எவ்வளவு கெட்டுகெதர் எல்லாம் நடக்கும் அப்போ எல்லாம் நீ எப்படி சாப்பிடுவ? சைவம், அசைவம் ரெண்டுமிருக்குமே! நானும் தான் நான் வெஜ் சாப்பிட மாட்டேன் ஆனா. வெஜ் டிஷ் யாரு சமைத்தாலும் எங்க வேணும்னாலும் சாப்பிடுவேன். நீ இப்போ வரலைன்னா அவா தப்பா எடுத்துப்பா. நீ வா கொஞ்சமா சாப்பிடு அதுக்கப்புறம் வேணும்னா ஏதாவது ஹோட்டலுக்கு போகலாம் சரியா“

“சரி நான் உங்களுக்காக ட்ரைப் பண்ணுறேன்“

“சரி எனக்கு ஒரு டவுட் கேட்கட்டுமா?”

“கேளுங்கோ“

“ஹோட்டல்ல சாப்பிடுவியா?”

“ஓ எஸ்!! இஃப் இட்ஸ் வெஜிடேரியன் ஹோட்டல். இது என்ன டவுட்?”

“அதுக்கில்லை வெஜிடேரியன் ஹோட்டல்ல சமைக்கரவா யாராவது நான்வெஜ் சாப்பிட்டுட்டு வந்து அதே கையாலா உனக்கு பொங்கல் செய்து தந்தா சாப்பிடுவியா?”

“அய்யோ என்ன பேசறேங்கள் நவீன். இனி ஹோட்டல்ல எப்போ சாப்பிட்டாலும் இந்த நினைப்பு வந்து என்னை சாப்பிட விடாதே!!!!“

“அம்மா தாயே!!! இப்படி இருந்தே எனக்கு ரொம்ப கஷ்ட்டம்மா!!!“

“நீங்க மட்டும் அவா ஆத்துக்கு போயிட்டு உங்க வைஃப் ரொம்ப டையர்டா இருக்கானுட்டு சொல்லிடுங்கோளேன். எப்படி என் ஐடியா?”

“அப்படி சொன்னாலும் அவா சாப்பாட்டை பேக் பண்ணி என்னிடம் குடுத்தனுப்பிடுவா…இதெல்லாம் தப்பு. மொதல்ல என் கூட அவா ஆத்துக்கு வா. உன்னை நிறைய மாத்த வேண்டியிருக்கும் போல தெரியறது…வா வா“

அறை மனதுடன் நவீனுடன் சென்றாள் மிருதுளா. நண்பர் வீடு அடுத்தத் தெருவில் இருந்ததால் இருவரும் நடந்தே  அவர்கள் வீட்டுக்கு சென்றனர்.

“ஆயியே ஆயியே!!! நியூலி வெட்டெட். வாங்க வாங்க வண்கம்!! ஹவ் ஈஸ் மை டமில்“

“அச்சா ஹை”  நல்லா இருக்கு என்று மிருதுளா பதிலளித்ததும் பல்பீர் 

“உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?” 

“ஓரளவு தெரியும். நல்லா புரிஞ்சுக்குவேன் ஆனால் பேச கொஞ்சம் பயம். ஸ்கூல்ல படிச்சிருக்கேன்.” என்று சரளமாக ஹிந்தியில் பதிலளித்தாள்.

பல்பீரின் மனைவி லெஷ்யா

“இங்க வந்துட்டிங்க என் கூட பேசி பேசி கூடிய சீக்கிரம் பஞ்சாபியும் பேசப்போறீங்க பாருங்க” 

என்று பேசிக்கொண்டே டிஃபன் பரிமாறினார்கள். மிருதுளா நவீனைப் பார்க்க நவீன் சாப்பிடு என்று கண்ணசைக்க அதைப்பார்த்த லெஷ்யா..

“கவலை வேண்டாம் அனைத்தும் வெஜ்டேரியன் தான். சாப்பிடுங்கள்” என்றாள்

மிருதுளா மெல்ல எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள். ஒரே ஒரு பரோட்டாவோடு போதும் என்று சொல்லி எழுந்தாள். அனைவரும் டிஃபன் சாப்பிட்டப்பின் உட்கார்ந்து சிறிது நேரம் பேசிவிட்டு வீட்டிற்கு சென்றனர். 

“என்ன மிருதுளா வாமிட்  வந்ததா?”

“வரமாதிரி இருந்தது ஆனா அப்படியே அடக்கிண்டுட்டேன்.“

“எல்லாத்துக்கும் உன் மனசு தான் காரணம் தெரியுமா!! நீ மனசுல இருக்கும் “வாந்தி வந்திடும்” என்கிற எண்ணத்தை அழிச்சுடு எல்லாம் சரியாகிடும்“

“கொஞ்சம் நாளாகும் ஆனா நிச்சயமா என்ன மாத்திக்க முயற்சிப் பண்ணறேன் உங்களுக்காக“

“சரி நீ சரியாவே சாப்பிடலயே ஹோட்டலுக்கு போலாமா?”

“இல்லை இல்லை வேண்டாம் அவா குடுத்த அந்த ஒரு பரோட்டாலயே பசி அடங்கிடுத்து“

“ஆமாம் உனக்கு ஹிந்தி தெரியும்ன்னு நீ சொல்லவே இல்லையே. இன்னைக்கு நீ அவாள்ட்ட பேசும்போது எனக்கு ஆச்சர்யமா இருந்தது தெரியுமா“

“நீங்க என்கிட்ட கேட்கலை நானும் சொல்லலை. ஏன் ஆச்சர்யம்!!!சரியா தானே பேசினேன்!!“

“கரெக்ட்டா பேசின ஒரு தப்பும் இல்லை. இது மாதிரி பேச பேச இன்னும் சரளமா வந்திடும். மத்தியானம் நாம நம்ம ராமகிருஷ்ணன் வீட்டுக்கு லஞ்சுக்கு போகணும். அவா வீடு இந்த காம்ப்புக்கு வெளியே இருக்கு நாம நம்ம பைக்ல போயிட்டு வந்திடலாம் அதுவரைக்கும் ரெஸ்ட் எடுத்துக்கோ. ஈவ்னிங் எங்க போகலாம் டெம்பிள் ஆர் பார்க்?”

“கோவில் போயிட்டு பார்க் போகலாம் டைம் இருந்தா“

“கோவில் 7:30 மணி வரைக்கும் திறந்திருக்கும் ஆனா பார்க் ஏழு மணி வரைதான் ஓப்பனா இருக்கும். “

“அப்போ இன்னைக்கு கோவிலுக்கு மட்டும் போயிட்டு வருவோமா? கல்யாணமாகி மொதோ மொதோ இந்த ஊருக்கு வந்திருக்கேன் கோவிலேர்ந்தே ஆரம்பிக்கலாமேன்னுட்டு தான் சொன்னேன்… உங்களுக்கு பார்க் போகணுமா“

“இல்லை இல்லை உன் விருப்பம் எதுவோ அதுபடியே செய்வோம். இங்கேருந்து ஒரு பத்து நிமிஷத்துல ஒரு அம்மன் கோவில் இருக்கு. இன்னைக்கு அங்க போயிட்டு அப்படியே டின்னர் வெளியே சாப்பிட்டுட்டு வருவோம்.  நாளைக்கு காலைல சுவாமிநாராயண் கோவில் அக்ஷர்தாம்ன்னுட்டு இருக்கு. ரொம்ப அழகா இருக்கும், அதுக்கு கூட்டிண்டு போறேன்.“

“நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஓகே ஈவ்னிங் அப்போ நீங்க சொன்னப்படியே செய்யலாம்.“

இருவரும் சற்று நேரம் படுத்துறங்கிறனர். பின் நண்பர் வீட்டில் மத்திய உணவருந்த கிளம்பினார்கள். நவீன் தனது பைக்கை துடைத்து சுத்தமாக வைத்திருந்தான் அதன் ஹான்ட்பாரில்  “மிருது” என்று ஸ்டிக்கர் ஒட்டியிருந்ததைப்பார்த்து …

“இது யாரு மிருது?” என்றாள் மிருதுளா

“ஓ அது என் லவ்வர் பெயர்.“

“ஓ உங்களுக்கு லவ்வர் எல்லாம் இருக்காளோ?”

“ஏன் இருக்கக்கூடாதோ!“

“இருக்கலாமே எனக்கு ஒரு “நவீ” இருப்பதுப்போல் உங்களுக்கு ஒரு மிருது இருந்துட்டுப்போட்டுமே” 

என்று சிறு புன்னையுடன் மிருதுளா கூற, நவீனும் புன்னகைக்க…

“சரி வந்து பைக்ல ஏறு“

மிருதுளா ஏறி உட்கார சிரமப்படுவதைப்பார்த்த நவீன் …

“ஏன் இவ்வளவு கஷ்டப்படறாய் சும்மா ஏறி உட்கார்ந்துண்டு என்னை பிடிச்சுக்கோ” என்றான்

திருமணமான நாளிலிருந்து அன்றுதான் முதன் முதலாக இருவரும் சற்று ஃப்ரீயாக பேசத்தொடங்கினார்கள். மிருதுளா பைக்கில் ஏறி நவீனை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள், ஏனெனில் அன்றுதான் முதல் முறையாக பைக்கில் ஏறுகிறாள் என்பதால் சற்று பயத்துடனே பயணித்தாள். நண்பன் வீட்டில் விருந்துண்டு இருவருமாக வீட்டுக்கு வந்து சற்று ஓய்வெடுத்து விட்டு மீண்டும் குளித்து ஆடைகளை மாற்றிக்கொண்டு கோவிலுக்கு பைக்கில் சென்றனர். அம்மனை தரிசனம் செய்துவிட்டு சற்று நேரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர் பின் அங்கிருந்து நவீன் அவன் நண்பர்களுடன் எப்பொழுதும் வீக்என்டில்  சாப்பிடும் ஒரு சிறிய டாபாவிற்கு அழைத்துச்சென்று…

“இதுதான் நான் என் ஃப்ரெண்ட்ஸ் கூட ரெகுளரா சாப்பிடற டாபா. சாப்பாடு ரொம்ப சூப்பரா இருக்கும் அன்ட் இது ஷுத்த ஷாக்காஹாரி டாபா. ஊப்ஸ்…சுத்தமான சைவ ஹோட்டல்“

“எனக்கு புரிஞ்சுதே! என்னத்துக்கு டிரான்ஸிளேட் பண்ணினேங்கள்!“

“ஓ !!! உனக்கு ஹிந்தி தெரியும் என்பதை மறந்துட்டேன். சரி வா சாப்பிடலாம்“

நம்ம மிருதுளாவின் குஜராத்தில் முதல் நாள் இனிதே முடிந்தது. அவர்களும் சற்று நிம்மதியாக அவர்கள் நேரத்தை அவர்களுக்கானதாக்கிக்கொள்ளட்டும்.

தொடரும்….

ஊருக்கு செல்ல விடியற்காலையில் எழுந்து தயார் ஆகி, கொண்டு செல்ல வேண்டிய பெட்டிகள் அனைத்தையும் மாடியிலிருந்து கீழே எடுத்து வந்து வைத்துவிட்டு, ஈஸ்வரன் பர்வதம் காலில் விழுந்து நமஸ்காரம் செய்தனர் நவீனும் மிருதுளாவும். ராமானுஜம்,  அம்புஜம் மற்றும் வேனு(காலேஜ் காக்கி யூனிஃபார்மில்) காரில் வந்திறங்கினர்.

அவர்களைப்பார்த்த மிருதுளா…

“என்னடா வேனு உன் லாப் டிரஸ்லயே வந்திருக்க?”

“ஆமாம் மிருதுக்கா உன்னை டிரெயின் ஏத்திட்டு அப்படியே காலேஜ் போகனும். சரி சரி நான் போய் அந்த பெட்டி எல்லாத்தையும் கார்ல ஏத்தட்டும்“

வேனுவும் பவினுமாக பெட்டிகளை காரின் மேலே வைத்து கட்டினார்கள். 

அம்புஜம் காரிலிருந்து ஒரு பெரிய பை முழுவதும் மாங்காயும் ஒரு பை முழுவதும் தேங்காயும் கொண்டு வந்து பர்வதத்திடம் கொடுத்து…

“இந்தாங்கோ மாமி இந்த தேங்காய், மாங்காய் எல்லாமும் எங்காத்துல காச்சது. நேத்து பறிச்சோம் சரி உங்களுக்கும் உங்க மச்சினர் பொண்ணுக்கும்னு நாலு பை ல போட்டு எடுத்துண்டு வந்தோம். இது உங்களோடது.“

“இவ்வளவும் மா!!! இதே மாதிரியா மீணு ஆத்துக்கும் கொண்டுவந்திருக்கேங்கள்?”

“ஆமாம் மாமி இதே மாதிரி ரெண்டு பை தான் அவா ஆத்துக்கும் எடுத்துண்டு வந்திருக்கோம்“

“அவா ஆத்துல மீணு அவ ஆத்துக்காரர் சேகரன், பொண்ணு லீலா மட்டும் தான் இருக்கா அவாளுக்கு இவ்வளவெல்லாம் தேவையில்லை“

“அப்படியா சரி இருங்கோ …டேய் வேனு அந்த இரண்டு பையையும் எடுத்துண்டு வா“

“இந்தாங்கோ மாமி இதுதான் அவாளுக்குன்னு எடுத்துண்டு வந்தது. இதுல எவ்வளவு அவாளுக்கு குடுக்கணுமோ அதை மட்டும் எடுத்துக்கோங்கோ மீதியை நீங்களே வச்சுக்கோங்கோ“

என்று இரண்டு பைகளையும் பர்வதத்திடம் கொடுத்தாள் அம்புஜம். அதிலிருந்து நாலே நாலு மாங்காய் நாலு தேங்காயை மட்டும் ஒரு பையில் போட்டு அம்புஜத்திடம் கொடுத்து..

“இத அவாளுக்கு குடுங்கோ போதும்“

“இது போதுமா !!! சரி அப்படியே ஆகட்டும் மாமி” என்று அம்புஜம் அதை வாங்கி காரில் வைக்கச்சொல்லி வேனுவிடம் கொடுத்தனுப்பினாள்.

அவ்வளவு குடுத்தும் அந்த பர்வதத்திற்கு மற்றவர்களுக்கு குடுக்க கை வராததில் எந்த ஆச்சர்யமும் இல்லை. ஏனெனில் அது தான் அவள் சுபாவம். எல்லாரும் எல்லாமும் தனக்கு செய்ய வேண்டும் தர வேண்டும் ஆனால் அவள் யாருக்கும் எதுவும் செய்யவும்மாட்டாள் குடுக்கவும்மாட்டாள். அப்படி ஒரு பாலிசியை கடைப்பிடித்து வரும் உத்தமி ஆச்சே.

 எல்லாரும் ரெடி ஆனதும் ஈஸ்வரன்…

“சரி எல்லாம் எடுத்துண்டாச்சா நவீன்?”

“எஸ் எல்லாம் எடுத்தாச்சு“

“அப்போ எல்லாரும் கிளம்பலாமா?”

“சரி நீங்க எல்லாரும் கார்ல வாங்கோ நாங்க டிரெயின் ல வரோம். நீங்க நேரா நம்ம பெரியப்பா பொண்ணு மீணு ஆத்துக்கு போயிடுங்கோ நாங்களும் அங்கு வந்திடறோம். சரியா“

“ஓகே டன்“

என்னதான் சாப்பாடு கட்டிக்கொள்ள வேண்டாமென்று பர்வதம் சொன்னாலும் அம்புஜம் அனைவருக்கும் எலுமிச்சை சாதம், தயிர்சாதம், துவயல், அப்பளம் வடாம் எல்லாம் கட்டிக்கொண்டு வந்திருந்தாள்‌. மிருதுளாவிடம்  மூன்று சாப்பாடு பார்சலை டிரெயினில் சாப்பிடுவதற்காக கொடுத்தாள். ஏனெனில் அவர்கள் சென்னை சேரும் போது மதியம் இரண்டரை மணி ஆகிவிடும். மிருதுளா தன் அம்மாவிடம்..

“தாங்க்ஸ் மா“

“என்னத்துக்கு இப்போ தாங்க்ஸ் எல்லாம். சரி சரி நீங்க ரெண்டு பேரும் அந்த கார்ல ரெயில்வே ஸ்டேஷனுக்கு கிளம்புங்கோ. நாங்க இந்த கார்ல பின்னாடியே நம்ம வேனுவ பஸ் ஸ்டாப் ல விட்டுட்டு ஸ்டேஷன் வரோம்.“

அந்த வீட்டிற்கு வெளியே வந்ததும் அப்பாடா என மிருதுளா மனதிற்குள் ஒரு வினாடி தோன்றியது ஆனால் போக இருக்கும் இடம் எப்படியோ என்னவோ!! நவீனை இன்னும் சரியாக புரிந்துக்கொள்ளவும் இல்லை. அவன் எப்படி தன்னை பார்த்துப்பானோ!!! என்ற எண்ணங்களுடன் காரில் ஏறினாள், அவள் பின்னாலேயே நவீனும் ஏறினான். கார் ஸ்டேஷனை நோக்கி பயணிக்க தொடங்கியது. எல்லா கல்யாணமான பெண்களுக்குள்ளும் இருக்கும் பரிதவிப்பு மிருதுளாவையும் தொற்றிக்கொண்டது. 

ஸ்டேஷன் வந்ததும் காரிலிருந்து இறங்கி ஒரே ஒரு கைபையுடன் அவர்கள் ரெயில் நிற்கும் பிளாட்பாரத்தில் ரெயிலுக்காக காத்திருந்தனர். மற்ற அனைவரும் பின்னாலேயே வந்து சேர்ந்தனர். வேனுவும் அவர்களுடன் வந்திருப்பதைப்பார்த்த மிருதுளா…

“டேய் வேனு நீ காலேஜுக்கு போகலையா இங்க வந்திருக்க?”

“இல்ல அக்கா எனக்கும் சென்னை வந்து உன்னை வழியனுப்பனும்முன்னு ஆசையா இருக்கு அதுதான் வந்துட்டேன்“

“கார்ல இடமிருக்கா நீங்க எல்லாருமா வரத்துக்கு?”

“அதெல்லாம் நாங்க பார்த்துக்கறோம் இதோ டிரெயின் வந்துடுத்து நீங்க ஏறுங்கோ. சென்னையில் பார்ப்போம்“

நவீனும் மிருதுளாவும் டிரெயினில் ஏறியதும் மற்ற அனைவரும் காரில் ஏறி சென்னைக்கு புறப்பட்டனர். டிரெயினும் கிளம்பியது. சென்னைப் போய் சேர ஐந்து மணிநேரமாகும் என்று நவீன் சொல்ல …

“ஐந்து மணி நேரமா. அதுவரைக்கும் என்ன செய்ய போர் அடிக்குமே“

“இதோ இந்த புத்தகத்தைப்படிச்சு முடிக்கவும் சென்னை வரவும் சரியா இருக்கும் தெரியுமா? நான் ஒவ்வொரு முறை வரும்போதும் இதைத்தான் செய்வேன்“

“ஆனா எனக்கு புக்கு படிக்கும் பழக்கம் இல்லையே” 

என்று கூறிக்கொண்டே ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டே வந்தவள் உறங்கிப்போனாள். சில மணி நேரமானதும் அவளை எழுப்பினான் நவீன். அவளும் எழுந்தாள் மணியைப் பார்த்தாள் மணி ஒன்று என காட்டியது…

“ஓ!! நல்லா தூங்கிட்டேன்“

“ஆமாம் அதனால தான் உன்னை தொந்தரவு செய்யலை. ஆனா எனக்கு பசிக்க ஆரம்பிச்சிடுத்து. அதே மாதிரி உனக்கும் பசிக்குமேனுட்டு தான் எழுப்பினேன். உனக்கு சாப்பிட என்ன வாங்கிண்டு வரட்டும்?”

“ஆமாம் எனக்கும் பசிக்கறது. என்னத்துக்கு வாங்கணும்? என் அம்மா நம்மளுக்கு சாப்பாடு கட்டிக்குடுத்திருக்காளே. அந்த பையை மேலிருந்து எடுங்கோ.“

“ஓ அப்படியா!!! இந்தா பையைப் பிடி. என்ன குடுத்தனுப்பிருக்கா?”

“இந்தாங்கோ உங்களுக்கு இரண்டு பொட்டலம். ஒன்னு எலுமிச்சை சாதம் இன்னொன்னு தயிர் சாதம். இதோ வடாமும் தந்திருக்கா. இது எனக்கு.“

“உனக்கு ஏன் ஒரு பொட்டலம் தான்?”

“நான் தயிர் சாதம் சாப்பிட மாட்டேன். எனக்கு தயிர், மோர் பிடிக்காது“

“ஓ !!! அப்போ நீ தயிர் சாதமோ மோர் சாதமோ சாப்பிட்டதே இல்லையா? அது எப்படி முடியும்” 

“இல்லை நான் சாப்பிட்டதே இல்லை. அது அப்படி தான். சும்மா பேசாம சாப்பிடுங்கோ. எப்படி இருக்கு“

“சூப்பரா இருக்கு. லெமென் ரைஸும் தயிர் சாதமும் ரெண்டுமே சூப்பரோ சூப்பர் மிருது.“

“என் அம்மா நல்லா சமைப்பா. என் அப்பாவும் நல்லா சமைப்பா.“

“எனக்கெல்லாம் சாப்பிட மட்டும் தான் தெரியும் பா. ஹா! ஹா! ஹா! “

“சரி நான் கையை அலம்பிட்டு வரேன்“

இருவரும் சாப்பிட்டப்பின் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தனர் அப்பொழுது மிருதுளாவிற்கு முன்தினம் இரவு நவீன் தன் அப்பாவிடம் காசு கேட்டுக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. அதைப்பற்றி கேட்கலாமா வேண்டாமா என்று தனக்குள்ளேயே மாறி மாறி கேட்டுக் கொண்டிருக்கையில்…

“மிருது மிருது ஹேய் மிருதுளா” என்று நவீன் கூப்பிட்டது காதில் விழ

“என்ன …என்ன சொன்னேங்கள் நவீன்“

“சரியா போச்சுப் போ அப்போ இவ்வளவு நேரமா நான் பேசினது எதுவுமே நீ கேட்காம அப்படி என்னத்த யோசிச்சுண்டிருக்க?”

“அது ஒன்னுமில்லை எப்போ சென்னை வரும்ன்னுட்டு தான் நினைச்சுண்டிருந்தேன்“

“இன்னும் ஒரு அஞ்சு நிமிஷத்துல ரீச் ஆகிடுவோம். அங்கேருந்து மீணு ஆத்துக்கு எலக்ட்ரிக் டிரெயின் பிடிச்சு போகணும். சரி என் பின்னாடியே வா சரியா“

“சரி சரி நீங்க போங்கோ நான் வரேன்“

இருவரும் இறங்கி எலக்ட்ரிக் டிரெயினில் ஏறினார்கள். மிருதுளாவிற்கு எலக்ட்ரிக் டிரெயினில்  ஏறியதும் அலைப்பாயுதே படத்தில் வரும் மாதவன் நடித்த சீன் ஞாபகம் வர உடனே சிரித்தாள். அதைப்பார்த்த நவீன் 

“ஏன் சிரிச்ச என்ன ஆச்சு“

“ஒன்றுமில்லை ஒன்ன நினைச்சேன் சிரிப்பு வந்தது” என்று புன்னகைத்தாள்.

“சரி நாம இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்தாச்சு வா வா சீக்கிரம் வா“

“அதுக்குள்ளேயே வந்தாச்சா? இதோ வந்துண்டே இருக்கேன்“

வெளியே வந்ததும் இருவரும் ஆட்டோவில் ஏறி மீணு வீட்டைச் சென்றடைந்தனர். அங்கு அவர்களுக்கு முன்னால் அவர்கள் பெற்றோர்கள் மற்றும் தம்பிகள் அங்கிருந்தனர். மீணுவும், சேகரனும் …

“வா வா நவீன். வாம்மா மிருதுளா. வாங்கோ வாங்கோ” என்றழைத்தனர்

பின் அனைவருமாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் மீணு உள்ளே ஏதோ வேலை செய்துக்கொண்டிருந்தாள். மிருதுளா உள்ளே போய்…

“அக்கா என்ன பண்ணறேங்கள்?”

“உங்களுக்கு தான் சப்பாத்தியும் தக்காளித்தொக்கும் பண்ணிட்டிருக்கேன்“

“எங்களுக்கா எதுக்குக்கா?”

“நல்லா கேட்டயே!! நீங்க ஊருக்கு போய் சேர இரண்டு நாள் ஆகுமாம் அதுவரைக்கும் சாப்பிட எதுவும் வேண்டாமா அதுக்குத்தான் செய்யறேன்“

“ஓ அப்படியா!! ரொம்ப தாங்க்ஸ் அக்கா“

“என்னத்த பேசறேங்கள் தம்பி பொண்டாட்டியும் நாத்தனாருமா?” என்று கேட்டுக்கொண்டே அடுப்படிக்குள் நுழைந்தாள் பர்வதம்.

“ஒன்னுமில்லை சித்தி நம்ம மிருதுளா நான் என்ன செஞ்சிண்டிருக்கேன்னு கேட்டா அதுக்கு பதில் சொல்லிண்டே இருந்தேன் நீங்க வந்துட்டேங்கள்“

“ஓ சரி சரி சரி நான் பாத்ரூம் போயிட்டு வரேன்“

“சரி சித்தி. ஓகே மிருதுளா இதுக்கு மேலே நாம ரெண்டு பேரும் பேசிண்டிருந்தா அவ்வளவு தான் சித்தி ஏதாவது தப்பா எடுத்துப்பா அதனால நீ போய் அவா கூட உட்கார்ந்துக்கோ போ“

“ஏன்க்கா நான் உங்களோட பேசறதுல  என்னத்த தப்பா எடுக்க இருக்கு?” நாமளும் எதுவும் தப்பா பேசலையே!“

“அதெல்லாம் உனக்கு இப்போ புரியாது மிருதுளா. சித்தி நிச்சயம் தப்பாதான் எடுத்துப்பா. எனக்கு தெரியும். எதுக்கு வீணா அதுக்கு இடம் கொடுக்கணும். வேண்டாம்மா நீ போய் அங்க உட்கார்ந்துக்கோ. இதோ என் வேலைகளும் ஆயாச்சு பின்னாடியே நானும் வரேன். போம்மா போ.“

“சரி அக்கா” என்று ஹாலில் வந்தமர்ந்தாள் மிருதுளா.

இரவு டிஃபன் அனைவருமாக அமர்ந்து அருந்தினார்கள். பின்பு நவீனும் மிருதுளாவும் குளித்து ஆடைகளை மாற்றிக்கொண்டு கிளம்பினார்கள். ஒரு கார் வரவழைத்தனர் பின் அனைவருமாக இரண்டு காரில் ஏறி ரெயில்வே ஸ்டேஷனை சென்றடைந்தனர். நவீன் மிருதுளா செல்ல வேண்டி டிரெயின் பிளாட்பாரத்தில் நின்றுக்கொண்டிருந்தது. வேனுவும் பவினும் அனைத்துப்பெட்டிகளையும் டிரெயினில் ஏற்றினார்கள் பின் நவீன்

 “அனைவருக்கும் பை சொல்லிட்டு வண்டில ஏறு மிருது” என்றான்

அதை கேட்டதும் மிருதுளாவிற்கு அழுகை வந்தது. அதுவரை ஏதோ தனது பெற்றோர் தம்பி அனைவரும் கிட்டத்தில் தானே இருக்கிறார்கள் என்றிருந்தவள்  இப்பொழுது அவர்களைப் பிரிந்து ரொம்ப தூரம் போக போகிறாள் என்பதை உணர்ந்தாள். அவளால் அழுகையை கட்டுப்படுத்திக்கொள்ள முயன்றும் முடியாமல் அழுதாள். அதைப்பார்த்த அம்புஜமும் அழ ஆரம்பித்தாள். உடனே பர்வதம்…

“என்னதிது கல்யாணமாகி அவ புருஷன் கூட தானே போறா! நாங்க எங்களோட இருக்க சொல்லியும் போகத்தான் வேணும்ன்னு அடம் பிடிச்சு கிளம்பினா!!! அப்புறம் என்னத்துக்கு இப்படி மாறி மாறி அழறேங்கள். எங்க நவீனும் தான் போறான் அதுக்கு என்ன நாங்க எல்லாரும் அழறோமா என்ன?”

அம்புஜம் சுதாரித்துக்கொண்டு மிருதுளாவை சமாதானம் செய்து நவீனிடம்…

“எங்க பொண்ண பத்திரமா பார்த்துக்கோங்கோ. உங்களை நம்பித்தான் அத்தர தூரம் அனுப்பறோம். அவளை நல்லப்படியா பாத்துக்கோங்கோ.“

“நீங்க கவலைப்படாதீங்கோ. அதெல்லாம் அவா பார்த்துப்பா. மொதல்ல நீங்க அழறத நிப்பாட்டுங்கோ” என்றார் ஈஸ்வரன்

வேனு தனது அம்மாவின் தோளில் கையைப்போட்டு தட்டிக்கொடுத்தான். 

“மிருதுளா டிரெயின் கிளம்பப்போறது ஏறு சீக்கிரம்” என்றான் நவீன்.

“அம்மா அப்பா வேனு நான் போயிட்டு வரேன்.“

“போயிட்டு லெட்டர் போடுமா மிருது. பொறுமையா இருமா. எதுவானாலும் அனுசரிச்சு போமா. மாப்ள மிருது வ பத்திரமா பார்த்துக்கோங்கோ”  என்று டிரெயின் மெல்ல நகர ஆரம்பித்தும் அது கூடவே நடந்தும் மெல்ல ஓடியும் கூறிக்கொண்டே சென்றனர் மிருதுளாவின் அம்மாவும் அப்பாவும், வேனுவும்.  சிறிது நேரத்தில் டிரெயின் அவர்கள் கண்களில் இருந்து மறைந்து போனது. 

மிருதுளா ஜன்னல் வழியாக அழுதுகொண்டே பார்த்துக்கொண்டிருந்தாள். நவீன் அவள் கண்களைத் துடைக்கச் சொன்னான். பின் அவளிடம் பேச்சுக்கொடுத்து சற்று சமாதானப்படுத்தினான்.

வேனு அவன் அம்மாவை அணைத்துப்பிடித்துக்கொண்டு சமாதானம் படுத்திக்கொண்டே அனைவருமாக காரில் ஏறி ஊருக்குப்புறப்பட்டனர். 

மிருதுளா தனது வாழ்வின் அடுத்த முக்கிய அத்தியாயத்தை நோக்கி ஒரு புதிய பயணத்திற்கு புறப்பட்டு விட்டாள். அவளுக்கு அடுத்தடுத்து என்னென்ன காத்திருக்கிறது! என்னவெல்லாம் நடக்கவிருக்கிறது என்பதைப்பற்றி வரும் வாரங்களில் படித்து தெரிந்துக்கொள்வோம். 

நம்ம மிருதளாவையும் நவீனையும் குஜராத்துக்கு வழியனுப்ப ரெயில்வே ஸ்டேஷன் வரை வந்திருந்த “மிருதுளா என்ன ஆனாள்?” வாசகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வரும் செவ்வாய் முதல் அனைவரும் குஜராத்தில் நமது பயணத்தை மேற்கொள்வோம் வாருங்கள் என அனைவரையும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தொடரும்….. 

மறுநாள் காலை விடிந்தது. மிருதுளா யாராவது வந்து கதவை தட்டி விட போகிறார்களோ என்ற பயத்தில் அலாரம் வைத்து ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து கீழே போனாள்.  வாசல் கதவு சாத்தி இருந்தது. அனைவரும் உறங்குகிறார்கள்  அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என எண்ணி (இதுதான் மனிதாபிமானம்) பாத்ரூம் டாய்லெட் எல்லாமே வீட்டுக்கு வெளியே இருந்ததால் குளித்து ரெடியாகி துணிகளை காயவைக்க மாடிக்கு போய் துணிகளை கொடியில் காயவைத்துக்கொண்டிருக்கையில் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என பெல் ஒலித்தது. நவீன் சட்டென்று எழுந்தான்.

“என்ன அது மறுபடியும் பெல் சத்தம்” என கண்களை கசக்கிக்கொண்டே ரூமை விட்டு வெளியே வந்தவன் மிருதுளா துணிகளை கொடியில் போட்டுக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டே கீழே சென்று…

“என்ன ஒரு பெல் சவுன்டு அது ? நேத்தே கேட்கனும்னு நினைச்சேன் மிருது பேரன்ட்ஸ் இருந்ததால அப்படியே விட்டுட்டேன். இது என்ன புதுசா பெல்லு? யார் பண்ணின வேலை இது?”

“ஆமாம் உன் பொண்டாட்டிய ஒவ்வொரு தடவையும் கீழேருந்து கத்தி கத்தி கூப்பிட முடியாது அதுவும் இல்லாம அவள எழுப்பிவிட நாங்க மேல ஏறி வந்து கதவெல்லாம் தட்ட முடியாது அதனால தான் இந்த பெல்லை ஃபிக்ஸ் பண்ணினோம் நேத்து. அப்படி பெல் அடிச்சும் உன் ஆத்துக்காரி எழுந்து வந்தாளா?”

“ஏதாவது பேசனமேனுட்டு பேசாதே. அவ எழுந்து குளிச்சு துணியை எல்லாம் தோச்சு மாடில காய வச்சிண்டிருக்கா. அவ எப்பவோ எழுந்துண்டாச்சு. மொதல்ல அந்த பெல்லை கழட்டி எறிங்கோ. அதோட சத்தம் ஸோ இரிடேட்டிங். இந்த தெருவுல எல்லாரையும் எழுப்பிருக்கும் அதோட சத்தம்“

என்று சொல்லிவிட்டு பல் துலக்க சென்றான் நவீன்‌. மிருதுளா கீழே வந்து துணி கொண்டுபோன பக்கெட்டை பாத்ரூமுல வச்சுட்டு அடுப்படிக்குள் காபி போட சென்றவளைப் பார்த்து பர்வதம்…

“இன்னைக்கு என்ன அதிசயமா காலங்காத்தால எழுந்திரிச்சிருக்க? நாங்க யாரும் எழுப்பாமையே!!!!“

“மொதோ ரெண்டு மூணு நாள் கல்யாண அசதில தூங்கிட்டேன். கல்யாண டென்ஷன்ல ஒரு வாரமா சரியாவே தூங்கலை அப்பறம் இது புது இடம் அதனால தூக்கம் வர கொஞ்சம் லேட் அனதாலதான் காலையில எழுந்திருக்க கொஞ்சம் லேட்டாச்சு. இப்போ அசதி இல்லை, இடம் பழகிடுத்து அதனால நல்லா தூங்கி காலையே எழுந்துட்டேன்“

“உன் அம்மா காலைல வரேன்னு சொல்லிருக்கா அதுனால எழுந்துன்ட்டு அதை எவ்வளவு அழகா மாத்தி சொல்லற“

“நான் சொன்னதுதான் உண்மையான காரணம் மா. ஏன் எல்லாத்துக்கும் தப்பாவே திரிச்சு விடறேங்கள்!” என பொறுமை இழந்து கேட்டாள் மிருதுளா.

“ஆமான்டிமா நான் தான் எல்லாத்தையும் திரிச்சுண்டு இருக்கேன் நீயும் உன் அம்மாவும் அப்படியே ரொம்ப உத்தமிகள் தான் பாரு“

“என்ன என்ன வேணுபம்னாலும் சொல்லிக்கோங்கோ ஏன் என் அம்மாவை எல்லாம் இழுக்கறேங்கள்?”

“ஓ…. என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ நான் அப்பிடி தான் இருப்பேன்ங்கறயோ….என்ன காலங்காத்தால என்னோட சண்டை போட தான் ஃப்ரெஷ் ஆ இருக்கயோ“

மிருதுளா தன்னை தானே சற்று நிதானித்துக் கொண்டு பின்…

“சாரி மா. எழுந்துண்டாலும் குத்தம் சொல்லறேள்…எழுந்திரிக்களேனாலும் குத்தம் சொல்லறேள் அப்போ நான் என்ன தான் செய்யட்டும் நீங்களே சொல்லுங்கோ“

“நீ என்னத்தையோ செய் போ!“

மிருதுளா இரண்டு டம்ளரில் காபி போட்டுக்கொண்டு ஹாலில் இருந்த நவீனிடம் ஒன்றை கொடுத்து விட்டு தானும் அமர்ந்து காபியை அருந்தலானாள். இவ்வளவு பர்வதம் பேசியும் அந்த வீட்டு ஆண்கள் யாருமே அவளை அடக்கவில்லையே!!! நவீனும் ஏதோ ஒன்றுமே நடக்காதது போல காபியை குடித்துக்கொண்டிருக்கிறானே!!  என்ற ஆச்சர்யம் நம் அனைவருக்கும் எழுகிறது அல்லவா? ஆனால் சில வீடுகளில் உள்ள மருமகள்களின் நிலைமை இதுதான். குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்திருக்க  வீட்டுக்கு தன்னை நம்பி வந்த பெண்ணை காத்து அவளுக்கு சுவாத்தியமான சூழலை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது எல்லா கணவன்மார்களின் தலையாய கடமையாகும்.  பல கணவன்மார்கள் இதை செய்ய தவறுவதால் அந்த பெண் பல இன்னல்களுக்கு ஆள் ஆகிறாள்.  இங்கு நவீனும் அப்படிப்பட்ட ஆண்களில் விதிவிலக்கல்ல. 

காபியை குடித்த பின் மிருதுளா அடுப்படிக்குள் சென்று என்ன டிஃபன் செய்ய வேண்டும் என பர்வதத்திடம் கேட்டாள். அதற்கு பர்வதம் அவளே செய்துக்கொள்வதாக சொன்னதால் மிருதுளா நவீனை பேக்கிங் செய்ய மாடிக்கு அழைத்துச் சென்றாள்.

இருவருமாக அவர்களின் துணிமணிகளை பேக் செய்தனர். பின் சீர் சாமான்களிலிருந்து மிருதுளாவிற்கு தேவையான பாத்திரங்களை மட்டும் ஒரு அட்டைப்பெட்டியில் பேக் செய்து மற்ற எவர்சில்வர் பாத்திரங்கள், பித்தளை, வெண்கலப் பாத்திரங்கள் எல்லாவற்றையும் தனிதனியாக அட்டைப்பெட்டியில் அடுக்கி பரண் மீது அடுக்கி வைத்துவிட்டு கீழே செல்லலாம் என்று கதவை சாத்தும்போது மறுபடியும் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என ஒலித்தது பெல். 

“இத மொதல்ல கழட்டி எறியனும். அடிக்காதே என சொல்லிட்டும் ஏன் இப்படி அந்த பெல்லை அடிக்கறாளோ“

என அலுத்துக்கொண்டே கீழே சென்றனர் நவீனும், மிருதுளாவும். கீழே ஹாலில் மிருதுளாவின் அம்மா அம்புஜமும், தம்பி வேனுவும் வந்திருந்தனர். பர்வதம் அவர்களிடம்…

“உங்க பொண்ணு எப்ப பார்த்தாலும் மாடில போய் உட்கார்ந்துக்கறா எங்களால கத்தி கத்தி கூப்பிட முடியாததால இந்த பெல் ஃப்க்ஸ் பண்ணிருக்கோம். இது உங்க பொண்ணுக்கு பிடிக்கலை போல அதுதான் நவீன்ட்ட சொல்லி நேத்து நீங்க வந்திருக்கும் போது கூட கத்திண்டே வந்தானே…நீங்களும் கேட்டேளே!“

என குற்றப்பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்தாள். நவீனும், மிருதுளாவும் அவர்களை வரவேற்றனர். அம்புஜம் இரண்டு அட்டைப்பெட்டிகளை பக்காவாக பேக் செய்து எடுத்து வந்திருந்தாள். மிருதுளாவிடம்…

“மிருது இதுல மளிகை ஜாமான்கள் எல்லாம் ஒரு மாசத்துக்கு வேண்டியது இருக்கு. அதுல உனக்கு பிடித்த வத்தல் வடாம் எல்லாம் இருக்கு“

“அச்சசோ ஆல்ரெடி நாங்க ரெண்டு சூட்கேஸ் அன்ட் ஒரு பெரிய அட்டைப்பெடில பாத்திரங்கள் என மூணு லக்கேஜ் ஆயாச்சு இதுல இன்னும் ரெண்டு ஃபாக்ஸ் ஆ!!!” என கேட்ட நவீனிடம்

“என்ன நாமளா தூக்கிண்டு போகபோறோம் இங்கேருந்து பாதியை அப்பா அம்மா கார்ல எடுத்துண்டு வருவா நாம நம்ம சூட்கேஸை மட்டும் எடுத்துண்டு டிரெயின்ல போவோம்” என்றாள் மிருதுளா. 

“அம்மா நீ மாடியை பார்க்கவே இல்லையே வா காட்டறேன்“

“இல்ல மிருது பரவாயில்லை.“

“போங்கோ உங்க பொண்ணு கூப்பிடறாளோனோ போய் பார்த்துட்டுதான் வாங்கோளேன். உங்க பொண்ணுக்காக நாங்க கட்டின ரூமை” என்றாள் பர்வதம்

மிருதுளாவும், அம்புஜமும், வேனுவும் மாடிக்குச்சென்றனர். ரூமைப்பார்த்ததும் வேனு..

“என்ன மிருதுக்கா இந்த தமாதுண்டு ரூமுக்குள்ள வா நீயும் அதிம்ஸும் இருக்கேங்கள்!!! இட்ஸ் வெரி ஸ்மால் ஈவன் ஃபார் டூ ஆச்சே!!“

“டேய் வேனு மெதுவாடா அவா காதுல விழுந்திட போறது!“

“ஏம்மா இப்படி பயந்து சாகறாய். அவா என்ன உன்ன கடிச்சு திண்ண போறாளா என்ன?”

“போடா உனக்கு இதெல்லாம் புரியாது. ஏண்டி மிருது நீ ஏன் அடிக்கடி மாடிக்கு வந்து உட்கார்ந்துக்கறாய்? கீழே அவளோட எல்லாம் பழகினா தானே உங்காத்து மனுஷால புரிஞ்சிப்ப அது படி நடந்துப்ப!“

“அம்மா நான் மாடிக்கு டிரெஸ் மாத்தவும், ராத்திரி தூங்கவும் மட்டும் தான் மேலே வருவேன். ஆனாலும் அவா ஏன் அப்படி சொன்னானு நீ அவாள்ட்ட தான் கேட்கனும்!“

“சரி சரி விடு. வாங்கோ கீழே போகலாம் இல்லாட்டி ஏதாவது சொல்லப்போறா. நாளைக்கு காலைல வரோம் மா. சரியா“

கீழே வந்ததும்

“ஓகே மாமி நாங்க கிளம்பறோம் நாழி ஆயிடுத்து. நாளைக்கு எல்லாருக்கும் மத்தியத்துக்கு சாப்பாடு நான் கட்டிண்டு வரட்டுமா?” என அம்புஜம் பர்வதத்திடம் கேட்க 

“அதெல்லாம் என்னத்துக்கு போற வழியில் ஏதாவது கடைல சாப்பிட்டுக்கலாமே” என்றாள் பர்வதம்

“அப்போ சரி மாமி நாங்க நாளைக்கு கார்த்தால வந்திடறோம். மாமாட்டயும் சொல்லிடுங்கோ“

என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச்சென்றனர் அம்புஜமும், வேனுவும். 

அவர்களை வழி அனுப்பிவிட்டு டிஃபன் சாப்பிட அடுப்படிக்குள் சென்றாள் மிருதுளா. அங்கு இரண்டே ரெண்டு இட்டிலி தான் மீதம் இருந்தது. நவீனிடம்..

“நீங்க டிஃபன் சாப்பிடறேளா? கொண்டு வரட்டுமா?” 

“நான் சாப்ட்டாச்சு நீ சாப்பிடு இப்பவே ரொம்ப லேட் ஆச்சு“

அனைவரும் சாப்பிட்டு விட்டு மிதமிருந்ததுதான் அந்த இரண்டு இட்டிலி அதை தட்டில் போட்டுக்கொண்டு சட்னி பாத்திரத்தை தேடினாள் அது காலியாகி அலம்ப போடப்பட்டிருந்தது. சரி இட்டிலி பொடியாவது இருக்குமே என டப்பாக்களை திறந்து பார்த்தாள். இதை அனைத்தையும் கவணித்துக்கொண்டிருந்த பர்வதம் மெல்ல அடுப்படிக்குள் வந்து

“நீ ரெண்டு தானே அன்னைக்கு சாப்பிட்ட அதனால்தான் அடுப்பை நிப்பாட்டிட்டேன். என்னத்த தேடிண்டிருக்க?”

“இட்டிலி பொடியை தேடறேன்“

“அது திந்து போய் நாலு நாள் ஆச்சு. இப்போ தேடினா!!“

“அப்போ இட்டிலிக்கு எதை தொட்டுண்டு சாப்பிடுவேன்?”

“இன்னைக்கு ஒரு நாள் தயிர் தொட்டுக்கோ“

“எனக்கு தயிர் மோர் பிடிக்காதே“

“அப்போ சக்கரையை தொட்டுக்கோ“

என்னடா இது சோதனை என்றெண்ணி சக்கரையை தொட்டுக்கொண்டு ஒரு இட்டிலியை மட்டும் சாப்பிட்டுவிட்டு ஹாலில் சென்று அமர்ந்தாள். பீன்ஸை கொண்டு வந்து மிருதுளாவிடம் கொடுத்து பொறியலுக்கு நறுக்கி வைக்க ச் சொன்னாள் பர்வதம். மிருதுளாவும் அவள் அம்மா நறுக்குவது போலவே பொடி பொடியாக நறுக்கி கொடுத்தாள். அதை பார்த்த பர்வதம்…

“என்னதிது இப்படி வெட்டினேனா இரண்டு கிலோ பீன்ஸ் வேணும் நம்மாத்துக்கு…போ இந்த காரெட்டையும் நறுக்கு…கொஞ்சம் பெரிசாவே நறுக்கு. இவ்வளோ பொடியா நறுக்கிடாதே“

காரெட்டை நறுக்கி கொடுத்துவிட்டு காய்ந்த துணிகளை எடுக்க மாடிக்கு சென்று எடுத்து அவள் துணிகளை மடித்து மாடி ரூமிலே வைத்துவிட்டு, மற்ற அனைவரின் துணிகளையும் மடித்து கீழே எடுத்து வந்து கட்டிலின் மேல் வைத்தாள்.

அன்று மாலை அனைவரும் ஒன்றாக ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது. நவீன்..

“மிருது நம்ம கல்யாண பட்சணங்கள் எடுத்துண்டு போகனும். என் ஃப்ரெண்ட்ஸ் கேப்பா. ஒரு பத்து பாக்கெட் எடுத்துக்கோ போ” என சொன்னதும் மிருதுளா உள் ரூமுக்குள் சென்று பார்த்தாள் அங்கு அந்த அட்டப்பெட்டியை காணவில்லை. வெளியே வந்து பர்வதத்திடம் கேட்டாள் அதற்கு பரவதம்…

“அதுவா அதெல்லாம் கெட்டுப்போச்சு குப்பைல தூக்கிப்போட்டுட்டேன்“

“அது எப்படி கெட்டு போகும் ஒரு மாசத்துக்கு நல்லா இருக்கும்னு கேட்டரிங் காரா சொன்னாளே“

“ஒரே சிக்கு வாடை அது தான் தூக்கிப்போட்டுடேன்“

“அவ்வளவையுமா!!! அக்கம் பக்கத்தில் குடுத்தயா இல்லையா” என நவீன் கேட்க

“கெட்டத எப்படி கொடுப்பேன் அதனால யாருக்கும் குடுக்கலை“

“என்ன சொல்லறேங்கள் மா அவ்வளவு பட்சணமுமா கெட்டு போயிடுத்து“

“என்ன இது ஏதோ நான் பொய் சொல்லறா மாதிரி கேட்கிற?”

என கூறிக்கொண்டே வெளியே பக்கத்துவீட்டு சிநேகிதிகளுடன் அரட்டை அடிக்கச்சென்றாள் பர்வதம்

“சரி நோ ப்ராப்ளம் நவீன். உங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் ஒரு நாள் லஞ்ச்சுக்கு நம்ம ஆத்துக்கு கூப்பிடுவோம். நான் சமைக்கறேன். என்ன சொல்லறேங்கள்“

“ஓகே மிருது உன்னால அத்தனை பேருக்கும் சமைக்க முடியுமா?”

“நான் இதுவரை சமைத்ததில்லை பட் நிச்சயமா டிரை பண்ணறேன் நவீன்“.

“இப்படி ஊருக்கெல்லாம் சமைச்சு அவன் காச கறைக்க வா அவனோட போற?” என்றார் ஈஸ்வரன்

சற்று அமைதி நிலவியது. வெளியே இருந்து பர்வதம் மிருதுளாவை வரச்சொல்லி கூப்பிட்டாள். மிருதுளாவும் சென்றாள். அங்கிருந்த அக்கம் பக்கத்து வீட்டுப்பெண்கள் மிருதுளாவைப் பார்த்து..

“ஏன் மா மிருதுளா கல்யாணமாகி வந்து பத்து நாள் ஆக போறது ..நவீன் கூட வெளியே போற வர மத்தப்படி உன்ன ஆளயே வெளில காணமே..என்னதான் பண்ணர வீட்டுக்குள்ளே?” 

“எனக்கு வெளில வந்து இப்படி நின்னுண்டு பேசி எல்லாம் பழக்கம் இல்லை. சாரி அதுனாலதான் வரலை“

“இதுக்கு ஏன்மா சாரி எல்லாம் சொல்லுற!! நீ உங்க மாமியார் பர்வதத்துக்கு நேர் எதிரா இருக்கமா. உன் மாமியார் எப்பப்பாரு வெளில யார் வீட்டுக்குள்ளயாவது உட்கார்ந்து பேசிகிட்டே இருப்பாங்க. என்ன பர்வதம் உங்களுக்கும் உங்க மாட்டுப்பொண்ணுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது போல தெரியுதே!” 

என பர்வதம் நினைத்தபடி இல்லாமல் அவளுக்கு எதிராக அவள் செயல் திரும்ப உடனே ..

“ஏய் மிருதுளா போய் குக்கர்ல சாதம் வை போ. இதோ நானும் வரேன்.“

என்று கூறி மிருதுளாவை வீட்டுக்குள்ளே அனுப்பினாள் பர்வதம். உள்ளே நுழைந்த மிருதுளா கண்ட காட்சி அவளுக்கு அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் அளித்தது. நவீன் தன் தந்தையிடம்…

“நாளைக்கு ஊருக்கு கிளம்பனும் அதற்கு பணம் வேணும்” என்று கேட்டுக்கொண்டிருந்தான். அதற்கு ஈஸ்வரன் ஒரு கட்டு பணத்திலிருந்து மூவாயிரம் எடுத்து நவீனிடம் கொடுத்து …

“அடுத்த மாசமே திருப்பி அனுப்பிடனும் என்ன சரியா!!” என்று கூறி கொடுத்தைக்கண்டாள். 

“சம்பாதிக்கும் என் கணவன் ஏன் சம்பாதிக்காத தந்தையிடமிருந்து பணம் கேட்டு வாங்க வேண்டும். சிறு வயது முதல் குடும்பத்தை காப்பாத்தி வந்திருக்கும் நவீன் ஏன் காசுக்காக அவர் தந்தையிடம் நிற்கிறார்!!!” என பல எண்ணங்கள் அவள் மனதில் அந்த காட்சியை கண்ட சில மணி துளிகளில் உதித்தது. அவள் வருவதைக்கண்ட ஈஸ்வரன் ..

“சரி சரி இப்போ போய் உன் வேலைகளை பாரு” என நவீனிடம் கூற நவீனும் அந்த ரூமிலிருந்து வெளியே சென்றான். 

பொறுப்பில்லாத குடிகார தந்தையாக இருந்த ஈஸ்வரனிடம் கட்டாக பணம்… பதினாறு வயதிலிருந்து உழைத்து குடும்ப பொறுப்புகளை ஏற்றக்கொண்டிருக்கும் மகன் கையில் பணமில்லை. புது மனைவியுடன் ஊருக்குச் செல்ல கூட பணமில்லாதது ஏன்? சம்பாதித்த பணமெல்லாம் என்ன ஆனது? இதற்கான விடை நவீனிடம் தான் உள்ளது. இதை அவனிடம் கேட்டு தெரிந்துக்கொள்கிறாளா மிருதுளா? 

பர்வதத்துடன் இருந்து வந்த போராட்டத்தின் கடைசி நாள் இதுவாக இருந்தால் நல்லது ஆனால் அடுத்த போராட்டம் நவீனுடன் துவங்கப்போகிறதா? என்பது பற்றி வரும் வெள்ளிக்கிழமை தெரிந்துக்கொள்வோம். 

தொடரும்…..

 

 

நவீன், மிருதுளா, பவின் மூவரும் வருவதைப்பார்த்த பெரியப்பா ராசாமணி…

“வாங்கோ, வாங்கோ புது மாப்பிள்ளை அன்ட் புது பொண்ணு“

“நமஸ்காரம் பெரியப்பா. எப்படி இருக்கேங்கள்?”

“நாங்க எல்லாரும் நன்னா இருக்கோம் மா. நீ எப்படி இருக்க உன் புக்காம் எல்லாம் எப்படி இருக்கா?”

“நான் நல்லா இருக்கேன் புக்காமும் நன்னா இருக்கு “

“உங்க நிச்சயதார்த்தம் இங்க தானே நடந்தது. ஞாபகம் இருக்கோனோ“

“ஓ நல்லா ஞாபகம் இருக்கு. அதுக்குள்ள மறந்திடுவேனா பெரியம்மா“

சற்று நேரம் பொது விஷயங்கள் எல்லாம் பேசி முடித்தப் பின் அனைவரும் ஒன்றாக  அமர்ந்து உணவருந்தினார்கள். மிருதுளா  அனைவரும் சாப்பிட்டு எழுந்ததும் இலைகளை எடுத்து ஒரு குப்பைக் கவரில் போட்டுவிட்டு, பாத்திரங்களை எல்லாம் அடுப்படிக்குள்ளே கொண்டு வைத்து சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்தாள். இதைப் பார்த்துக்கொண்டிருந்த ஈஸ்வரனின் மூத்த அக்கா சொர்ணம் தன் மகள் துளசியை பார்த்துக்கொண்டே மிருதுளாவிடம்…

“ஏன் மா மிருது உன் மாமியார் என்ன மாமியார்தனத்தை ஆரம்பிச்சுட்டாளா? ஆரம்பிச்சுருப்பா ஆரம்பிச்சுருப்பா !!! அவளாவது சும்மா இருப்பதாவது?”

“அப்படி எல்லாம் ஒன்னுமில்லை சொர்ணம் அத்தை. என்னை நல்லா தான் பார்த்துக்கறா“

“நம்பிட்டேன் மா அப்படியே நம்பிட்டேன். பர்வதத்துக்கு போய் இப்படி ஒரு நல்ல மாட்டுப்பொண்ணு வந்திருக்கா பாரேன் துளசி.“

“அம்மா சித்த சும்மாதான் இரேன்…மா..நீ ஒன்னும் நினைச்சுக்காத மிருது அம்மா எப்பவும் இப்படி தான்“

சொர்ணம் தன் மகள் துளசியை தனது தம்பி ராசாமணிக்கே திருமணம் செய்து கொடுத்து அவர்களுடனே இருக்கிறார்.

“ஏய் மிருது உன் மாமியார் எங்க ஈஸ்வரனை கல்யாணம் பண்ணின்டு வந்த அடுத்த நாளே கால் மேல கால போட்டுண்டு அவளுக்கு பியர்ஸ் சோப்பு இருந்தா தான் குளிப்பேனுட்டா.!! அப்பறம் ராசாமணி கடைக்கு போய் வாங்கிண்டு வந்து கொடுக்கற வரைக்கும் குளிக்காம உட்கார்ந்துண்டு நுயூஸ் பேப்பர் வாசிச்சா…வெளக்கமாத்துக்கு பட்டு குஞ்சலம் வேணுமாம். கல்யாணத்துக்கு முன்னாடி அவா குடும்பம் எவ்வளோ கஷ்டம் பட்டுண்டிருந்ததுனு எல்லாம் எங்களுக்கு நன்னா தெரியும்ங்கறது அவளுக்கும் தெரியும் ஆனாலும் இங்க வந்து வெட்டி பந்தா. எங்க அம்மாவ அவ எப்படி எல்லாம் கொடுமை படுத்திருக்கா தெரியுமா?? அவ நல்லாவே இருக்க மாட்டா…புள்ளகளை பெத்து பெத்து கொண்டு வந்து எங்க அம்மாட்ட விட்டு புருனை கூட்டிண்டு போயிடுவள். நவீன் ஆஞ்சு வயசு வரைக்கும் எங்க அம்மாட்ட தான் வளர்ந்தான். அதுவரை புள்ள எப்படி இருக்கான் என்ன பண்ணறான் என எந்த அக்கறையும் இல்லாதவள் நவீன் அவன் வேலைகளை அவனே செய்து கொள்ள ஆரம்பிச்சதும் வந்து கூட்டிண்டு போயிட்டா…அவள் ஆடிய ஆட்டமெல்லாம் ஒன்னா ரெண்டா ….அடே அப்பா…அவளும் அவ நடையும்… வந்துடுவள் ஆட்டி ஆட்டிண்டு.“

“அம்மா ஏன் மா !!! கொஞ்சம் சும்மா இரு மா. மிருது நீ வா நாம ஹாலுக்கு போயிடலாம். இங்க இருந்தா எங்க அம்மா உன் மாமியாரை பத்தி பொலம்பிண்டே தான் இருப்பா“

“ஏண்டி அவள கூட்டிண்டு போற!!! நான் என்ன இல்லாததயா சொல்லிட்டேன். நடந்ததை தானே சொன்னேன். இப்படியே எல்லாரும் அவ அப்படி தான் அப்படி தான் சொல்லி சொல்லி அவளை இன்னும் நல்லா ஆட விடுங்கோடி ஆட விடுங்கோ….எனக்கென்ன வந்தது. மிருது ஜாக்கிரதையா இருந்துக்கோமா!!!“

மிருதுளாவிற்கு மனதில் ஒரு கலக்கம் வந்தது “என்னடா இது!!! மாமா வீட்டிலும் மாமியாரை குற்றம் கூறினார்கள் ஜாக்கிரதையா இருந்துக்கோனு சொன்னா. இப்போ சொர்ணம் அத்தை என்னனமோ சொல்லறா!!! இவாளும் ஜாக்கிறதையா இருந்துக்கோங்கறா !!! நம்ம மாமியார் என்ன புலியா!! சிங்கமா? நான் ஜாக்கிரதையா இருந்துக்க!!! அப்படி என்ன என் மாமியார் அவ்வளவு கெட்டவளா என்ன? ஏதோ பொஸஸிவ்னஸ்னு நான் நினைச்சா இவா இப்படி சொல்லறாளே !!! நவீனை பெத்து அவா மாமியார்ட்ட விட்டுட்டு அஞ்சு வயசு வரைக்கும் எட்டிப் பார்க்காத ஒரு அம்மாவுக்கு எங்கேருந்து இருக்க போறது பொஸஸிவ்னஸ்? இதுல என்னமோ இருக்கு. எங்கயோ இடிக்கறதே…. பொறுத்திருந்து தான் தெரிஞ்சுக்கனும்“

“என்ன மிருதுளா ஏதோ யோசனையில் இருக்க? எங்காத்து சாப்பாடு பிடிச்சிருந்துதா?”

“ஓ! நல்லா இருந்தது பெரியப்பா. சூப்பரா சமைச்சிருந்தா பெரியம்மா.“

“சரி பெரியப்பா நாங்க கிளம்பறோம்.“

“என்னடா நவீன் அதுக்குள்ள!! இரு காபி குடிச்சிட்டு வெயில் தாழ போனா போரும்“

“சாரி பெரியப்பா. நாளன்னைக்கு ஊருக்கு கிளம்பனும் அதனால வேலை நிறைய இருக்கு. அடுத்த தடவை வரும்போது நிச்சயம் இருந்துட்டு போறோம்“

“அப்படியா சரி. நீயும் உன் வேலையை பார்க்கணுமே. ஓகே நீங்க வந்ததுக்கு ரொம்ப சந்தோஷம்.“

“வராம இருப்போமா பெரியப்பா!!“

என்று கூறி பெரியப்பா பெரியம்மா இருவரையும் நமஸ்காரம் செய்து ஆசிர்வாதத்துடன் புடவை, வேஷ்டி, பூ, பழம், வெற்றிலை பாக்கு வைத்த தாம்பாளத்தை வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள் மூவரும். பஸ்ஸில் ஏறி வீடு வந்து சேரும் போது மணி ஆறானது. வழக்கம் போல் நவீன் டிரெஸ் மாற்ற நேராக மாடிக்குச் சென்றான் மிருதுளா ஹலுக்கு போய் நடந்தவற்றை கூற முயலும்போது பர்வதம் பவினிடம் 

“நீ சொல்லுடா அங்க எல்லாரும் எப்படி இருக்கா? என்ன சொன்னா? உங்க பெரியம்மா என்ன சமச்சிருந்தா?”

என்று கேட்க மிருதுளா சட்டென்று எழுந்து மாடிக்கு சென்றுவிட்டாள்.  போன தடதை மாமா வீட்டில் நடந்ததை சரியாக நவீனும் மிருதுளாவும்  சொல்லவில்லை என்ற எண்ணத்தில் இம்முறை விவரமாக தெரிந்து கொள்ளவே பவீனை கூட அனுப்பி “உங்களிடமிருந்து எங்களுக்கு எதுவும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை” என்பது போல நடந்துக்கொண்டார்கள் பர்வதமும், ஈஸ்வரனும். அதனால் மனம் வருத்தப்பட்டு சென்றாள் மிருதுளா.

நவீன் டிரெஸ் மாற்றிவிட்டு சற்று அங்கேயே கட்டிலில் படுத்திருந்தான். மிருதுளா ரூமுக்குள் நுழைந்ததும்….

“ஹேய் மிருது எனக்கென்னவோ ரொம்ப டையர்டாயிருக்கு…உனக்கும் தான் அப்படி இருக்கும் ஒரு காபி போட்டு குடிப்போமா!!!“

“போட்டு தாங்கோளேன் நான் குடிக்க ரெடி“

“பார்தயா….ப்ளீஸ் ஈவ்னிங் காபி குடிகலையோனோ அதுதான் லைட்டா தலைவலிக்கறா மாதிரி இருக்கு“

“அச்சசோ.!! இருங்கோ அமிர்தான்ஜன் தடவி தரேன் அப்பறம் போய் காபி போட்டுண்டு வரேன்“

என்று சொல்லிக்கொண்டே நவீன் நெற்றியில் அமினர்தான்ஜனை தடவி நன்றாக அழுத்தி கொடுத்தாள்.

“ஆஹா என்ன சுகமா இருக்கு தெரியுமா மிருது!!“

“ஏன் இதுவரைக்கும் யாரும் உங்களுக்கு இப்படி தலைவலிக்கும் போது செய்து தந்ததில்லையா?”

“இல்லவே இல்லை இது தான் முதல் தடவை. எனக்கு நெற்றியில் தைலம் தடவி நீவி விட்ட முதல் ஆள் நீ தான்.“

“ஏன் உங்க அம்மா அப்பா யாருமே செய்ததில்லையா?”

“ஆமாம்… நல்லா கேட்ட போ… ஒரு தடவ நான் கிரிக்கெட் ஆடி கால்ல நல்லா அடிபட்டு நானே ஆஸ்பத்திரி போய் கட்டெல்லாம் போட்டுண்டு வீட்டுக்கு வந்தேன் அத பார்த்துக்கூட என்ன ஆச்சு ஏதாச்சுனுட்டு வீட்ல யாருமே கேக்கலை அவாளா தைலம் தடவி விடப்போறா.“

“அப்பிடியா!!!! ரொம்ப ஷாக்கிங்கா இருக்கு நீங்க சொல்லறதை கேட்க. எனக்கு தலைவலினாலும் சரி என் தம்பி வேனுவுக்கு தலைவலினாலும் சரி எங்க அம்மா தைலம் தடவி ஐஸ்வாட்டர் ஒத்தடம் கொடுப்பா“

“யூ கைஸ் ஆர் லக்கி” 

இப்படி பேசிக்கொண்டிருக்கலயில் திடீரென அவர்கள் ரூமில்….

டர்ர்ர்ரர்ர்ர்ர்ரர்ர்ரர்ர்ர்ர்ர்ர்ர…என ஒரு பெல் பயங்கர சப்தத்தில் ஒலித்தது. அதை கேட்டது நவீனும் மிருதுளாவும் கட கட வென கதவை திறந்து கீழே போனார்கள்…நவீன் படிகளில் இறங்கி சத்தமாக…

“என்ன பெல் சத்தம் அது எங்க ரூம்ல? யார் பிக்ஸ் பண்ணினது அன்ட் யார் அடிச்சது?”

என கோபத்தோடு கேட்டுக்கொண்டே ஹாலுக்குள் நுழைய அங்கு மிருதுளாவின் பெற்றோரும் அவள் தம்பி வேனுவும் அமர்ந்திருந்தைப்பார்த்ததும் ..

“வாங்கோ வாங்கோ எப்படி இருக்கேங்கள்? ஹேய் வேனு எப்படிடா இருக்க?” என்றான் நவீன்

“நாங்க நல்லா இருக்கோம் மாப்பிள்ளை நீங்க நல்லா இருக்கேங்களா?” என கேட்டார் ராமானுஜம்

“ஓ எஸ் நாங்க எல்லாரும் நன்னா இருக்கோம்“

“அம்மா !!அப்பா !!! டேய் வேனு எல்லாரும் எப்படி இருக்கேங்கள்? ” 

“ஹேய் மிருது நீ எப்படி மா இருக்க? எங்களை எல்லாம் மறந்துட்ட போல தெரியறதே!!!” என அம்புஜம் கேட்க

“அச்சோ அம்மா அப்படி எல்லாம் மறந்திடுவேனாமா…இப்போ கூட உங்களை பத்தி தான் நாங்க ரெண்டு பேரும் பேசிண்டிருந்தோம். நீங்களே வந்துட்டேங்கள்“

“ஆமாம் ஆமாம் கல்யாணமாகியும் இன்னமும் உங்க மிருதுளா உங்க நினைப்பில் தான் இருக்கா எங்களை எல்லாம் எங்க நினைக்கறா இந்தாங்கோ காபி எடுத்துக்கோங்கோ” என சலித்துக் கொண்டே காபியை நீட்டினாள் பர்வதம் சற்று நேரம் அமைதி நிலவியது …பின் வேனு தரையில் அமர்ந்திருந்த மிருதுளா மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டே…

“மிருதுக்கா நீ இல்லாம வீடே டல்லா இருக்கு. எனக்கும் சண்ட போட ஆளில்லாமல் ரொம்ப கஷ்டமா இருக்கு” 

“இருக்கும் டா இருக்கும். நல்லா வேணும் உனக்கு. ” என கூறிக்கொண்டே தம்பியின் தலைமுடியை கோதிவிட்டாள். 

“உங்க அக்கா நல்லா சண்ட போடுவாளா!” என நக்கலாக பர்வதம் கேட்க

“ஆமாம் மாமி நாங்க ரெண்டு பேரும் அடிச்சுக்குவோம்.ஹா ஹாஹா!! என்ன அக்கா” என வெகுளித்தனமாக வேனு பதிலளிக்க

“ஓ அப்படியா!!! சரி என்ன கல்யாணமான உங்க அக்காள் மடில இப்படி தலை வச்சுண்டு படுத்திருக்க எழுந்திரி” என்று பர்வதம் அதட்ட

“மாமி மிருதுக்காவுக்கு கல்யாணமானாலும் எனக்கு அக்கா தானே அவ மடில படுத்தா என்ன தப்பு?”

இதை இப்படியே விட்டா இதுவே பிரச்சினை ஆகிவிடும் என உணர்ந்து மிருது சட்டென 

“சரி டா எனக்கும் கால் கடுக்கறது கொஞ்சம் எழுந்து சேர்ல உட்காரு வேனு ப்ளீஸ்” என்று கூறி வேனுவை எழுப்பி விட்டாள் மிருதுளா. வேனுவும் சேரில் அமர்ந்தான். பின் அம்புஜம் ..

“நாளன்னைக்கு ஊருக்கு கிளம்பறேளோனோ அதுக்கு யாரெல்லாம் சென்னை வரைக்கும் போறோம்? என்ன ஏதுனுட்டு விசாரிச்சுட்டு போகலாமேனு வந்துருக்கோம்“

“என்னத்துக்கு எல்லாருமா வரனும்? எனக்கும் மிருதுவுக்கும் இங்கெருந்து சென்னை அப்பறம் அங்கேருந்து குஜராத்துக்கு டிரெயின் புக்  பண்ணிருக்கேனே. நாங்களே போயிக்கறோம்“

“அதுக்கில்லை எங்க பொண்ணு மொதோ மொதோ வெளியூருக்கு கல்யாணமாகி போறா நாங்க வந்து வழியனுப்பனும்னு ஒரு ஆசை அது தான் கார் ஏற்பாடு பண்ணிருக்கோம் வேனுக்கு காலேஜ் இருக்கு ஸோ அவன் வரமாட்டான் நீங்க ரெண்டு பேரும் பேசாம டிரெயின் டிக்கெட் கேன்ஸல் பண்ணிட்டு எங்களோட கார்லயே வரளாமே என்ன சொல்லறேங்கள்?” என்றார் ராமானுஜம்

“அதுவும் சரிதான் ஆனா இப்போ கேன்ஸல் பண்ணினா காசு நிறைய போகுமேனு யோசிக்கிறேன்” என்று நவீன் சொன்னதும்

பர்வதமும் ஈஸ்வரனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். பர்வதம் ஏதோ கண்ணால் சொல்ல உடனே ஈஸ்வரன்…

“அதனால என்ன இப்போ நீயும் மிருதுளாவும் டிரெயின்ல வாங்கோ நாங்க எல்லாரும் மாமா மாமி கூட கார்ல வரோம். அப்படியே உன் பெரியப்பா பொண்ணு ஆத்துக்கு போயிட்டு ஃப்ரெஷ் ஆகிண்டு பின்ன டிரெயின் ஏறுங்கோ. என்ன மாமா நான் சொல்லறது. நாங்க நாலு பேரு நீங்க மாமி நம்ம ஆறு பேரும் ஒரே கார்ல போகலாமோனோ?”

” போகலாம்…” என தயங்கினார் ராமானுஜம். 

“என்ன போகலாம்னு இழுக்கறேங்கள். போகலாம்னு சொல்லுங்கோ” என்றார் ஈஸ்வரன்

“சரி மாமா அப்படியே ஆகட்டும்“

“மிருதுளா நாளைக்கு சில சாமான்கள் எல்லாம் எடுத்துண்டு வரேன் அதையும் சேர்த்து பேக் பண்ணிடு. மாமி அங்குமணி சீர் இருக்கோனோ அதை அப்படியே இவாள்ட்ட கொடுத்தனுப்பிடலாம். ரெண்டு பேரும் போனதும் மளிகை எல்லாமா வாங்கண்டாமோனோ. மிருது அதையும் ஒரு ஃபாக்ஸ் ல போட்டு பேக் பண்ணிடு.” என்று அம்புஜம் படபட என அடுக்க குறிக்கிட்டாள் பர்வதம்…

“மாமி அங்கு மணி சீர் மாப்பிள்ளை ஆத்துக்கு அதெல்லாம் எப்போவோ தீர்ந்தாச்சு. உங்க பொண்ணுக்கு நீங்க வேணும்னா மறுபடியும் வாங்கி குடுத்து அனுப்புங்கோ” 

“என்னது கல்யாணம் ஆகி பத்து நாள் தானே ஆக போறது !!!! அங்கு மணி சீர் ஒரு மாச ஜாமான்களாச்சே!!!! அதுக்குள்ளேயே தீர்ந்துடுத்தா என்ன?” 

என ராமானுஜம் கேட்க 

இதுவே பெரிய பிரச்சினை ஆகிடுமோ என எண்ணி மிருதுளா 

“இப்போ அதுனால என்ன நாங்க அங்க போய் வாங்கிக்கறோமே அது தான் மாசத்துக்கு என்னென்ன வேணும்ன்னு லிஸ்ட் போட்டு குடுத்திருக்கேங்களே அத வெச்சு வாங்கிக்கறோம்.” 

“சரி அப்போ நாங்க இப்போ கிளம்பறோம் நாளன்னைக்கு கார்த்தால காரோட வரோம் ரெடியா இருங்கோ.போயிட்டு வரோம் மாமா மாமி. மாப்பிள்ளை நாங்க வரோம் மிருது வரட்டுமா!!” என அனைவரிடமும் கூறினாள் அம்புஜம்..

“அம்மா நீ நாளைக்கு பேக்கிங்க்கு ஹெல்ப் பண்ண வரயா? “

“ஓ வரேனே நான் தான் சில பொருளெல்லாம் தரனும்னு சொன்னேனே அதனால நிச்சயம் வருவேன் அப்போ ஹெல்ப் பண்ணறேன். சரியா வரேன். குட் நைட்.“

“அத்திம்பேர் அன்ட் மிருதுக்கா பை. மாமா, மாமி, கவின் அண்ணா, ப்ரவீன், பவின் எல்லாருக்கும் பை‌. குட் நைட்“

என விடைப்பெற்றனர் மிருதுளாவின் குடும்பத்தினர். 

நவீன் வீட்டார் அனைவரும் இரவு உணவருந்திய பின் அவரவர் உறங்கச்சென்றனர். மிருதுளாவும் எல்லா வேலைகளும் முடித்து விட்டு மாடிக்குச் சென்று உறங்கினாள். 

மிருதுளா வீட்டார் வந்து போனதில் அந்த பெல்லின் பிரச்சனை அப்படியே அமுங்கி போனது. அந்த பிரச்சினை மீண்டும் வெடிக்குமா என்பதை பொறுத்திருந்து விடிந்ததும் தெரிந்துக்கொள்ளலாம். அதுவரை பொறுத்திருக்கவும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  நன்றி🙏

தொடரும்…….

அடுப்படிக்குள் சென்ற மிருதுளாவை பார்த்து பர்வதம் 

“நான் இட்டிலிக்கு மாவு அரைக்க போரேன் அதனால நீ தான் டிஃபன் பண்ணனும் சரியா“

“ஓகே அம்மா என்ன பண்ணட்டும்?”

“எதையாவது பண்ணு. உனக்கு மாவு ஆட்ட தெரிஞ்சிருந்தா உன்ன செய்ய சொல்லிட்டு நான் டிஃபன் பண்ணிருப்பேன்… உனக்கு தான் தெரியாதுன்னுட்டயே…நேத்தே… பின்ன நீ தான் பண்ணனும்“

“கிரைண்டர்ல அரிசியை போடனும் தானே அத நான் போடறேனே…எப்போ எடுக்கனும்னு சொல்லுங்கோ எடுக்கறேன்“

“ஏன் வேற டிஃபன் ஏதும் உனக்கு பண்ண தெரியாதோ??”

“இல்லை மா நான் ரெண்டும் பண்ணறேனே. நீங்க மாவு அரைக்க மட்டும் சொல்லித்தாங்கோ“

“உனக்கு கிளாஸ் எடுக்க எல்லாம் இப்போ எனக்கு டைம் இல்லை. நீ போய் டிஃபனையாவது பண்ணறியா?”

“ஓ அதுக்கு தான் இந்த காய் எல்லாம் கட் பண்ணிண்டே உங்கள்ட்ட கேட்டுண்டும் இருக்கேன்“

“என்னத்துக்கு இப்போ காரட், பீன்ஸ், தக்காளி, பட்டாணி எல்லாம் எடுத்திருக்காய்? என்னவாக்கும் பண்ண போறாய்? தேங்கா வேற துருவி வச்சிருக்க!!! இதெல்லாம் செய்துண்டே தானா என்னாண்ட பேசின!!!“

“ஆமாம் மா ரவா, சேமியா போட்டு கிச்சடியும் தேங்காய் சட்னியும் பண்ணிண்டிருக்கேன்“

“அச்சசோ உப்புமா பண்ணறியா!!! அப்பாக்கு பிடிக்கவே பிடிக்காதே!!!“

“இல்லை இது உப்புமா இல்லை நல்லா இருக்கும். நான் செய்து தரேன் சாப்பிட்டுட்டு சொல்லுங்கோ“

“இன்னிக்கு எல்லாரும் பட்டினியா? உப்புமாக்கு என்னத்துக்கு பாசிபருப்பு வேக வச்சிருக்காய்?”

“அம்மா நான் தான் சொன்னேனோல்யோ இது உப்புமாவுக்கு ஒரு படி மேலே உள்ள டிஷ் நல்லா இருக்கும். எனக்கு கொஞ்சம் டைம் குடுங்கோ. இந்த காய்கள் அன்ட் வேக வைத்த பாசிப்பருப்பு எல்லாத்தையும் போட்டுதான் இத பண்ணுவா. இன்னும் பத்தே நிமிஷத்துல ரெடி ஆகிடும்.“

என்று பர்வதம் என்ன பேச்சுக்குடுத்தாலும் மிருதுளா தனது காரியத்தில் கண்ணாக இருந்து வேலைகளை எல்லாம் செய்து முடித்து அடுப்பு மற்றும் அடுப்பு மேடையை சுத்தம் செய்து, கிச்சடியையும் தேங்காய் சட்னியையும் ஹாலில் கொண்டு வைத்து அனைவரையும் சாப்பிட அழைத்தாள். ஈஸ்வரன் உள்ரூமிலிருந்து …

“பர்வதம் என்ன பண்ணிருக்காய் வாசம் தூக்கறதே“

“அப்பா இன்னைக்கு டிஃபன் நான் பண்ணிருக்கேன்” 

வேகமாக சொன்னாள் மிருதுளா ஏனெனில் காலை காபி போற்றுதல்களை மாமியாருக்கு விட்டுக்கொத்தாகிவிட்டது😉 ஆகையால் டிஃபனை தான் ஏற்றுக்கொள்ள முடிவெடுத்து அவ்வாறு முந்திக்கொண்டாள்😁. பொறுக்குமா பர்வதத்துக்கு…

“ஏதோ கிச்சடியாம் அதுதான் இன்னைக்கு உங்களுக்கு எல்லாம் டிஃபன்…சாப்பிடுங்கோ சாப்பிடுங்கோ” 

என்று நக்கலாக சொன்னாள்.

அனைவரும் டிஃபன் சாப்பிட அமர்ந்ததும் சட்டி மூடியிருந்த தட்டை எடுத்தாள் மிருதுளா. சட்டியில் இருந்த கிச்சடியைப்பார்த்து …

“என்னத்துக்கு இவ்வளவு பண்ணிருக்க? இந்த தெருவுக்கே டிஃபன் நம்ம ஆத்துலதானா? அதுவும் உப்புமா!!!“

எடுத்துக்கொடுத்ததும் ஈஸ்வரன் கப்பென்று பிடித்துக்கொண்டு…

“என்னது உப்புமாவா!!!! எனக்கு பிடிக்காதே!!!“

“அப்பா இது உப்புமா இல்ல கிச்சடினு சொல்லுவா. இதை சட்னியோட சாப்பிட்டா நல்லாருக்கும். ப்ளீஸ் சாப்பிட்டு பார்த்து சொல்லுங்கோ.“

விடுவாளா நம்ம மா…மாமியார்…

“ரவை சேமியா போட்டுட்டு பெயரை மட்டும் மாத்திட்டா உப்புமா இல்லைனு ஆயிடுமா“

இட்டிலி தோசைக்கு மாவும் இல்லை இருப்பதை வைத்து ஏதோ தன்னால் முடிஞ்சதை செய்த மிருதுளாவை தொணதொணப்பு செய்ததுமில்லாமல் நக்கல் நையாண்டி செய்து சாப்பிட வந்தவர்களையும் தூண்டி விட்டுக்கொண்டிருந்தாள் பர்வதம். இதை புரிந்துக்கொண்ட மிருதுளா தட்டில் சுட சுட ஆவி பறக்கும் கிச்சடியைப்போட்டு சட்னியை ஊற்றி தனது மாமனார் ஈஸ்வரனிடம் கொடுத்து 

“இந்தாங்கோ பா சாப்பிட்டுட்டு சொல்லுங்கோ“

என்று தட்டை நீட்ட அவரும் அதிலிருந்து வந்த வாசத்தினால் தட்டை கையில் வாங்கிக்கொண்டு…

“இதுல நெய் ஊத்திருக்கயா மிருதுளா? வாசம் சூப்பர்.. இரு சூடா இருக்கு சாப்பிட்டு சொல்லறேன்..நீங்க எல்லாம் ஏன்டா என் வாயை பார்த்துண்டு நிக்கறேங்கள் தட்டெடுத்து போட்டு சாப்பிடுங்கோடா“

இன்னொரு தட்டில் போட்டு நவீனிடம் கொடுத்தாள் பின் பர்வதத்தைப்பார்த்து

“அம்மா உங்களுக்கும் இப்போவே தரட்டுமா?”

“எனக்கும் உப்புமா பிடிக்காது. என்ன செய்ய அது தானே செய்திருக்க….இப்போ வேண்டாம் நான் அப்பறமா சாப்பிட்டுக்கறேன்.“

கவினும்,  ப்ரவீனும் சாப்பிட்டுட்டு 

“வாவ் மன்னி இது சூப்பரா இருக்கு. சட்னி இன்னும் கொஞ்சம் ஊத்துங்கோளேன்.“

என்றதும் சந்தோஷத்தில் குடு குடு வென ஓடி போய் பரிமாறினாள் மிருதுளா. ஈஸ்வரன் ரசித்து உண்டு கொண்டிருந்தார். 

“மிருதுளா எனக்கு இன்னும் கொஞ்சம் கிச்சடி போடுமா நல்லாருக்கு” என்றார் 

“உங்களுக்கு உப்புமா பிடிக்காதே அப்பறம் என்ன இன்னொரு தடவை கேக்கறேங்கள்?” என பர்வதம் சொன்னதும் 

“சரி மா மிருதுளா எனக்கு போதும்.” என்றவருக்கு இன்னும் கொஞ்சம் கிச்சடியை தட்டில் போட்டு

“அப்பா இன்னைக்கு ஒரு நாள் இந்த  கிச்சடி என்கிற உப்புமாவை சாப்பிடுங்கோ பரவாயில்லை, ஒன்னும் ஆகிடாது“

என்னதான் அனைவரும் சூப்பர் என்று பாராட்டினாலும் தன்னவன் பாராட்டுக்காக ஏங்கியது மிருதுளாவின் உள்ளம். அதை எண்ணிக்கொண்டே அவனை பார்க்க முனையும் போது சட்டென்று பவின் 

“மன்னி எனக்கும் இன்னும் கொஞ்சம் கிச்சடி அன்ட் சட்னி போடுங்கோ” என்றதும் அவனுக்கு பரிமாற சென்றாள் அப்பொழுது நவீன்

“மிருது திஸ் கிச்சடி ஈஸ் சிம்ப்ளி சூப்பர்ப். ரொம்ப நல்லா பண்ணிருக்க. நல்ல டேஸ்ட்டா இருக்கு. இது மாதிரி உப்புமா செய்தா தினமுமே சாப்பிடலாம் என்னப்பா சொல்லுற!!!” 

இதை கேட்டதும் மிருதுளாவுக்கு மனதில் சந்தோஷம் இருந்தாலும் அச்சசோ மாமியார் முன்னாடி இப்படி சொல்லிட்டாரே தன்னவன் என்ற மைன்ட் வாய்ஸில்

“அச்சச்சோ இவர் டேஸ்ட்டா இருக்ககுங்கறதோட நிப்பாட்டிருக்கக்கூடாதா. அடுத்த வரி அம்மாவை சங்கடப்பட வைத்திருக்குமே” 

என எண்ணி 

“ஆமாம் ஆமாம் என்னைக்காவது செய்தால் தான் ஆஹா ஹோ ஹோனுட்டு எல்லாரும் சாப்பிடுவா நீங்க சொல்லறா மாதிரி தினந்தோறும் செஞ்சா அலுத்துப்போகும்“

அனைவரும் சாப்பிட்டு எழுந்த பின் 

“அம்மா வரேளா நாம சாப்பிடலாம்?”

“சரி எனக்கும் தட்டுல போட்டு குடு. என்னமோ உன் புருஷனும், மாமனாரும், மச்சினன்களும் பாராட்டரா மாதிரி அப்படி என்ன இருக்குனு பார்க்கட்டும்” 

மிருதுளாவுக்கு மனதில் சரிப்பு வந்தது. அதை அடக்கிக்கொண்டு தன் மாமியாருக்கு பரிமாறி பின் தானும் தட்டில் போட்டுக்கொண்டு இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர். 

“அம்மா நிறைய பண்ணிருக்கேன்னு சொன்னேளே இப்போ பாருங்கோ எல்லாம் காலி ஆயிடுத்து. நான் பண்ணும்போது பத்தாதோனு நினைச்சுட்டேன். ஆனா கரெக்ட்டா இருக்கு.” 

“சரி…சரி…சட்டுபுட்டுன்னு சாப்பிட்டுட்டு ரெண்டு பேருமா கிளம்புங்கோ. ராசாமணி பெரியப்பா ஆத்துல இன்னைக்கு உங்களை விருந்துக்கு கூப்பிட்டிருக்கா. போயிட்டு வாங்கோ.“

“சரி..மா“

சாப்பிட்ட பின் பாத்திரங்களை எல்லாம் கழுவிட்டு விருந்துக்கு கிளம்ப மாடிக்கு சென்றாள் மிருதுளா.  அப்பொழுது அவளை கீழேயிருந்து கூப்பிட்டாள் பர்வதம். உடனே கீழே வந்தாள் மிருதுளா. வந்தவளிடம் தனக்கு தலைவலிப்பதாகவும் ஒரு காபி போட்டு தந்துவிட்டு கிளம்பும்படி சொன்னாள். மிருதுவும் அவ்வாறே செய்துவிட்டு மீண்டும் மாடிக்கு சென்று டிரெஸ் பண்ணிக்கொண்டு வந்தாள். 

நவீனும் ரெடி ஆகி கீழே வந்து 

“என்ன மிருது கிளம்பலாமா?”

“ஓ நான் ரெடி கிளம்பலாம். அம்மா அப்பா நாங்க பெரியப்பா ஆத்துக்கு போயிட்டு வரோம்“

“உங்க கூட பவினும் வரானாம். கூட்டிண்டு போங்கோ” என்றாள் பர்வதம்

“நாங்க எங்க கல்யாண விருந்துக்கு போறோம் என்னத்துக்கு பவின் எங்ககூட” என்றான் நவீன் 

பர்வதம் எதிர் பார்த்தது போலவே கேள்வி வர…

“ஏன் அவனையும் உங்களோட கூட்டிண்டு போனால்தான் என்ன? ஏன் ஆத்துக்காரி வந்தததும் தம்பி எல்லாம் வெளியே கூட்டிண்டு போக கூடாதூனுட்டாளோ! இல்ல எங்களை தொந்தரவா நினைக்கறாளா?” என்றாள்

“என்ன பேசற நான் என்ன சொல்லறேன் நீ என்னத்த பேசற !!! கொஞ்சமாவது பேசறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசு” என்று நவீன் சொன்னதும் மிருதுளா குறுக்கிட்டு

“ஏன் இதுக்கெல்லாம் இப்படி பேசறேங்கள் நவீன். பவினும் நம்ம கூட வரட்டுமே. அதனால என்ன இப்போ? பவின் நீ ரெடியா” 

“ஓ எஸ் அம்மா என்ட்ட எழுந்ததும் சொல்லிட்டா பெரியப்பா ஆத்துக்கு உங்க ரெண்டு பேரு கூட போயிட்டு வரச்சொல்லி. அதனால நான் அப்பவே ரெடி” 

மிருதுளாவுக்கும் பவின் அவர்களுடன் வருவதில் இஷ்டம் இல்லை. அவள் மனதிற்குள்

“புதுசா கல்யாணமானவர்கள் தனியாக வெளியே போயிட்டு வரட்டும்னு இல்லாம கூட ஒரு ஸ்பை வேற. ஏன் இவனை அவா தம்பி ஆத்துக்கு போனப்போ எங்க கூட அனுப்பலை!!! ஏன் பெரியப்பா ஆத்துக்கு மட்டும் கூட எஸ்கார்ட் அனுப்பறா?” 

என போராட்டம் இருந்தாலும் அவள் மனம் படக் படக் என அடித்துக்கொள்ள ஆரம்பித்தது ஏனென்றால் மறுபடியும் வெளியே செல்லும்போது ஒரு சண்டை வந்தால் அந்த டென்ஷனோட தான் போயிட்டு வர வேண்டி இருக்கும் அதுவுமில்லாமல் இன்னும் மூணு நாள்ல குஜராத் போய் விடுவார்கள் அங்க போனா இருவர் மட்டும் தனியாக தானே இருக்க போகிறார்கள் என்பதால் நவீனைப்பார்த்து …

“ஓகே இப்போ நாம மூணு பேரும் சேர்ந்து கிளம்பலாமா!“

நவீன், மிருதுளா, பவின் மூவரும் வீட்டிலிருந்து புறப்பட்டு பஸ்ஸில் ஏறி ராசாமணி வீட்டுக்கு போய் சேரட்டும். அதுவரை நமது வேலைகளை எல்லாம் நாமும் முடித்துவிட்டு விவரங்களை தெரிந்துக்கொள்ள மீண்டும் வருவோம்.

தொடரும்…..

பஸ்ஸில் இருந்து இறங்கி நவீனும் மிருதுளாவும் வீட்டிற்கு மெல்ல பேசிக்கொண்டே நடந்தனர். மிருதுளாக்கு  அந்த வீட்டிற்குள் செல்வது என்றாலே ஏதோ ஒரு யுத்த களத்தில் வெறியோடு தன்னைத்தாக்க எதிரி காத்துக்கொண்டிருப்பது போலவே ஒரு நினைப்பு அவளை மெல்ல மெல்ல அடி எடுத்து நடக்கச் செய்தது. இதை அவள் நவீனிடம் பகிர்ந்து கொண்டால் அவன் தவறாக எண்ணி விடுவானோ என்ற பயம். மாமியாரிடமே “ஏன் இப்படி என்னை எதிரியாக பார்க்கிறீர்கள்” என்று கேட்டால் அதை வைத்தே மற்றுமொரு சண்டையை உருவாக்கிவிடுவாளே என்ற அச்சம். நவீனாவது தனது மனைவியின் சங்கடமான நிலைமையை புரிந்துக்கொண்டு அவளுக்கு ஒரு கம்ஃபர்டான சூழலை தனது வீட்டில் உருவாக்கியிருக்க வேண்டும். அவன் வீட்டார் சுபாவம் அதுவாகவே இருந்தாலும், தான் இருபத்தி இரண்டு வருடம் வாழ்ந்த வாழ்க்கை அப்படியே விட்டு விட்டு நவீனையும் அவனது குடும்பத்தினரையும் நம்பி வந்தவளுக்கு அவர்கள் கொடுக்கும் இந்த பதற்றமான வாழ்க்கை துளியும் சரியானது அல்ல ஆனால் இதை மனம் விட்டு நவீனிடம் மிருதுளா பேசாததும் ஒரு காரணம். இது அரேஞ்ச்டு கல்யாணத்தின்  ஒரு குறைபாடாக தான் இருந்துள்ளது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்.

 மனதில் குழப்பத்துடனே நவீன் பேசுவதைக் கூட காதில் வாங்காமல் நடந்து கொண்டிருந்தவளை பார்த்து நவீன் …

“ஹேய் மிருது என்ன நீ ஏதோ யோசிச்சிண்டே இப்படி ரொம்ப ஸ்லோவா நடக்கறாய்!!! இன்னைக்கு மாமா ஆத்துக்கு போறவரைக்கும் நல்லா இருந்த அங்கேந்து கிளம்பி வந்ததிலருந்து ஏதோ தீவிரமான யோசனையிலேயே இருக்கியே!! என்ன? எங்க பாட்டி கதையை எல்லாம் கேட்டு பயந்துட்டயோ…அவா எல்லாம் அந்த காலத்து மனுஷா அப்படி இருந்திருக்கா என்ன பண்ண…அதை எல்லாம் மனசுலே போட்டு குழப்பிக்காதே..என்ன சரியா!!

“ம்….சரி” என்ற பதில் ஒரு சிறு புன்னகையுடன்…

வீடு வந்து சேர்ந்தனர். உள்ளே நுழைந்ததும் யாருமே யாரையுமே பார்க்காதது போலவே பாவனை செய்ய மிருதுளாவிற்கு ஒரு இறுக்கமான சூழலை உருவாக்கியது. நவீன் வந்ததும் சர்ரென்று நேராக மாடிக்கு ஆடையை மாற்ற சென்றான். மிருதுளாவிற்கு வீட்டின் பெரியவர்களிடம் ஏதும் விவரம் கூறாமல் அப்படி நேராக மாடிக்கு செல்ல சற்று சங்கடமாக இருந்தது. எனவே ஹாலில் போய் அமர்ந்தாள். அவள் அமர்ந்ததும் அனைவரும் அங்கிருந்து எழுந்து நாலாபக்கமும் சென்றுவிட்டனர். மிருதுளாவிற்கு தான் என்ன தவறு செய்தோம் ஏன் இப்படி அவள் வந்தததும் அனைவரும் ஒன்றும் கூறாமல் எழுந்து சென்றுவிட்டனர் என்று மனதில் குழப்பம் ஆனாலும் அவர்கள் அப்படி நடந்துக்கொண்டாலும் அதை பெரிதாக எடுத்துக்கக்கூடாது என்று முடிவு செய்து அடுப்படியில் இருந்த தனது மாமியாரிடம்   பேச்சை ஆரம்பிக்க முயர்ச்சித்தாள். 

“அம்மா நாங்க பாங்க் போய் நகையை லாக்கரில் வைத்துவிட்டு அப்படியே மாமா ஆத்துக்கும் போயிட்டு….“

என்று அவள் முடிப்பதற்குள் பர்வதம் குறிக்கிட்டு தனது கடைக்குட்டி மகனிடம்…

“டேய் பவின் போய் அப்பா கவின், ப்ரவீன் எல்லாரையும் சாப்பிட அழைச்சுண்டு வா“

என மிருதுளா சொல்வதை காதில் வாங்கதவள் போல பேச மிருதுளாவிற்கு என்ன செய்வதென்று தெரியாமல் 

“அம்மா நான் உங்ககிட்ட தான் சொல்லிண்டிருக்கேன்” என்றாள்

அதற்கும் பர்வதத்திடமிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை. அப்படி ஒருத்தி அங்கு நின்று கொண்டு பேசுகிறாள் என்பதையே எவரும் கண்டுகொள்ளாதது போலவே இருந்தார்கள். மிருதுளா தனக்கு வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு விருட்டென்று மாடிப் படிகளில் ஏற துவங்கினாள். எதிரே நவீன் படிகளில் இறங்கிக்கொண்டிருந்தான். மிருதுளா வேகமாக படியில் ஏறுவதைப்பார்த்த நவீன்..

“மிருது மெதுவா மெதுவா விழுந்திட போற…நீ ஏன் இன்னும் டிரஸ் மாத்தாம இருக்க? போ போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா. நான் கீழே போய் முகம் கை கால் எல்லாம் அலம்பி கொஞ்சம்  ரிப்ஃப்ரெஷ் ஆகிக்கறேன். ஓகே.“

அதற்கு பதில் ஏதும் கூறாமல் மேலே ஏறிச்சென்றாள் மிருதுளா. அதைப்பார்த்த நவீன் தனது தோள்பட்டையை உயர்த்தி புரியாதது போல கீழே சென்றான். ஒன்றாக அமர்ந்திருந்த குடும்ப உறுப்பினர்கள் மிருதுளா சென்றதும் எப்படி நடந்துக்கொண்டனரோ அதே போலவே நவீன் ஹாலில் நுழைந்ததும் நடந்துக்கொண்டனர். ஆனால் நவீன் அதை துளியும் கண்டுக்கொள்ளாமல் டிவியை ஆன் செய்து செய்திகள் பார்க்கலானான். அதைப்பார்த்த பர்வதம் ஈஸ்வரனிடம் ஏதோ கண்ணைக்காட்ட உடனே..

“ஏண்டா ….புருஷனும் பொண்டாட்டியுமா வெளியே போயிட்டு வந்திருக்கேங்களே அத பத்தி ஏதாவது வீட்டுப்பெரியவானுட்டு இருக்கோமே எங்களாண்ட உங்களுக்கு சொல்லனும்னு தோனித்தோ!!! ஏதோ வநத சர்ரெனு மாடிக்கு போயிட்ட அப்போ இங்க நாங்களெல்லாம் என்னத்துக்கு இருக்கோமாம்? “

“அப்பா டிரஸை மாத்திட்டு கொஞ்சம் ரிப்ஃப்ரெஷ் ஆயிட்டு சொல்லலாம்னு இருந்தேன் அது தப்பா ஆனா மிருது சொல்லிருப்பாளே“

“ஆமாம் சொன்னா சொன்னா சொரக்காய்க்கு உப்பில்லைனு” என்று முனுமுனுத்தாள் பர்வதம்

“என்ன என்ன சொன்ன இப்போ. எதுவானாலும் சத்தமா சொல்லு அப்போதான் பதில் கிடைக்கும்” என நவீன் பர்வதத்தைப்பார்த்து சொல்லிக்கொண்டிருக்கும் போது மிருதுளா உள்ளே நுழைய அனைவரும் மீண்டும் கப்சிப் ஆனார்கள். அதைப்பார்த்த மிருதுளா …

“ஏன் எல்லாரும் ஸடன்னா பேசறதை நிப்பாட்டிட்டேங்கள். என்னாலயா? நான் வேனும்னா மாடிக்கே போயிடட்டுமா?”

“ஹே மிருது உன்னால எல்லாம் இல்லை. நீ உள்ளே வந்து உட்காரு” என்று நவீன் கூற மிருதுளாவும் ஹாலில் ஒரு புறம் சுவற்றில் சாய்ந்தபடி அமர்ந்தாள். பர்வதம் சட்டென்று எழுந்து அனைவரையும் இரவு உணவருந்த வருமாறு அழைத்தாள். அனைவரும் அவரவர் தட்டுகளை அலம்பி எடுத்துக்கொண்டு சென்று வரிசையாக அமர்ந்தார்கள். மிருதுளா அனைவருக்கும் பரிமாறினாள். அனைவரும் எழுந்த பின் சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்து பின் தனது மாமியாருடன் சாப்பிடக்காத்திருந்தாள். பர்வதம் அவள் பாட்டுக்கு தட்டில் சாப்பாடு போட்டு சாப்பிட ஆரம்பித்தாள். மிருதுளாவிற்கு தட்டு இருக்கவில்லை உடனே வெளியே தேய்க்க போட்டிருந்த தட்டில் ஒன்றை எடுத்து தேய்த்து எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்தாள். சாதம் மிக குறைவாக இருந்தது. குழம்பு பொறியல் பாத்திரங்கள் எல்லாம் காலியாக இருந்தது. மிருதுளா மோர் தயிர் சாப்பிடமாட்டாள் என்பது பர்வதத்திற்கு நன்றாக தெரிந்திருந்தும் மோர் பாத்திரத்தை எடுத்து மிருதுளா முன் வைத்தாள். மிருதுளாவிற்கு நல்லவேளை அவ்வளவாக பசியில்லை என்பதால் மோரைத்தவிர ஏதாவது மீதமுள்ளதா என்று பார்த்தாள். ரசம் கொஞ்சம் மிஞ்சியிருந்தது அதை ஊற்றி கடகடவென சாப்பிட்டு பாத்திரங்களை எல்லாம் கழுவி கமுத்தி வைத்துவிட்டு மீண்டும் ஹாலுக்குள் நுழைந்தாள். யாரும் ஒன்றும் பேசவில்லை ஈஸ்வரன், கவின், ப்ரவீன் மற்றும் பவின் உள் ரூமில் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். பர்வதம் மறுநாள் அரைப்பதற்கு அரிசி உளுந்து ஊறவைத்துக் கொண்டிருந்தாள்.  அதைப்பார்த்த மிருதுளா மாமியார் என்ன செய்கிறார் என போய் பார்த்து அப்படியே பேச்சுக் கொடுக்கலாம் என நினைத்து பர்வதம் அருகே சென்று…

“என்ன மா பண்ணறேங்கள். எல்லா வேலைகளும் ஆயாச்சுனு நினைச்சு தான் போய் உட்கார்ந்தேன்“

“உனக்கு இட்டிலி தோசைக்கு மாவுக்கு அரிசி உளுந்து ஊறவெக்க அது ஊறினதும் அரைக்க தெரியுமா?” 

“இல்லை அம்மா. எனக்கு தெரியாது. என் அம்மா செய்றத பார்த்திருக்கேன் ஆனா நான் செய்ததில்லை.” என்று தனக்கு தெரியாததை தெரிந்தது போல பொய் ஏதும் கூறாமல் அப்பாவியாக உண்மையைச்சொல்ல…. அதை புரிந்துக்கொண்டு ..அதற்கென்ன போக போக தெரிந்துக்கொள்வாய் என பெரிய மனுஷிப்போல நடந்துக்கொள்ளாமல் இதுதான் சான்ஸ் என்று பர்வதம் என்ற பகடை உருள ஆரம்பித்தது…

“என்னத்த வளர்த்திருக்கா உங்க அம்மா!!! ஒரு பொண்ணுக்கு இதெல்லாம் சொல்லிக்கொடுத்திருக்க வேண்டாமோ!!! நீ தனியா நவீனோட குஜராத் போய் என்னத்த வடிச்சுக்கொட்டப்போறயோ!!! இங்கேயே இருந்திருந்தா நானாவது சொல்லிக்குடுத்திருப்பேன் அதுக்கும் மாட்டேன்னு அடம்பிடிச்சு அவனோட இன்னும் அஞ்சு நாள்ல கிளம்ப வேற போற. பெரியவா சொன்னா அதுபடி கேட்டு நடக்க உங்க அம்மா சொல்லித்தறலையா? இதெல்லாம் விட்டுட்டு வேற என்னத்தான் சொல்லிக்குடுத்திருக்காளோ?”

இனி இதற்கு மேலிருந்தால் அது விபரீதம் என்று எண்ணி அங்கிருந்து எப்படியாவது நழுவிட நினைத்து… என்ன சொல்லி நழுவுவது என்று நெளிந்த வண்ணம் மிருதுளா நின்றிருக்க… நவீன் ஹாலில் இருந்து தண்ணீர் கேட்க ….இதுதான் சமயம் என..

“அம்மா நவீன் தண்ணீர் கேட்கிறார் நான் போய் குடுத்துட்டு வரேன்” 

“அது என்ன ஆத்துக்காரரை பெயர் சொல்லி கூப்பிடற பழக்கம் !அது  அப்பாக்கு சுத்தமா பிடிக்கலை இனி எங்க முன்னாடி அப்படி கூப்பிடாதே…போ தண்ணீ குடு“

“இந்தாங்கோ தண்ணீ” 

“தாங்க்ஸ் மிருது“

“என்னத்துக்கு எனக்கு தாங்க்ஸ் எல்லாம் சொல்லிண்டிருக்கேங்கள்“

“நான் மாடிக்கு போறேன். உனக்கு வேலை எல்லாம் ஆயாச்சா?”

“ஆ ஆயாச்சு“

“அப்போ நீயும் வா போகலாம். இப்போ இவாளும் எல்லாரும் படுத்துக்க பாயைப்போடுவா. கம் லெட்ஸ் கோ“

என்று நவீன் சொன்னதும் அவளுக்கு அதற்கு முன்னாடி நாள் அவளிடம் யாரும் பேசாமல் அவரவர் படுக்கையை தயார் செய்து படுத்துக்கொண்டது, ஒருத்தி நின்றுக்கொண்டிருக்கிறாளே என்பதைக்கூட பொருட்படுத்தாமல் நடந்துக்கொண்டது எல்லாம் ஞாபகம் வர இன்றும் அதேபோல் நடந்தால் என்ற எண்ணம் அவளை நவீனுடன் மாடிக்கு ஏற வைத்தது. 

ஆனாலும் அவளது இந்த சங்கடங்களை நவீனிடம் பகிர்ந்துக்கொள்ளவில்லை. 

மூன்றாவது நாள் விடிந்தது. நன்றாக உறங்கிக்கொண்டிருந்தனர் நவீனும் மிருதுளாவும். மீண்டும் டக்…டக்…டக்… என கதவு தட்டும் சத்தம். மிருதுளா எழுந்து கடிகாரத்தைப்பார்த்தாள் மணி ஐந்து தான் ஆகியிருந்தது. நவீனை எழுப்ப அவன் பக்கம் திரும்பினாள் ஆனால் அவன் ஆழந்து உறங்கிக்கொண்டிருப்பதைப்பார்த்து எழுப்ப மனசு வரவில்லை. தானே எழுந்து கதவைத்திறந்து பார்த்தாள், இம்முறை இருட்டில் நின்று கதவைத்தட்டியது பக்கத்துவீட்டுக் குட்டிப்பையன் கார்த்திக் இல்லை, காலேஜ் செல்லும் நவீன் வீட்டுக் கடைக்குட்டி பவின். 

“ஹாய் பவின் குட் மார்னிங். என்ன காலங்காத்தால கதவ தட்டற?”

“மன்னி டைம் அஞ்சு ஆச்சு. உங்களை கீழே வரச்சொன்னா அம்மா” 

ஏய்தவள் கீழே இருக்க அம்பை நோவானேன் என நினைத்து

“சரி சரி வரேன்னு போய் சொல்லு“

சிறிது நேரம் கழித்து மாற்றுத்துணிகளுடன்  கீழே சென்று குளித்துவிட்டு துணிகளை காயப்போட்டுவிட்டு அடுப்படிக்குள் நுழைந்து தனது அம்மாவிடம் கேட்பது போலவே …

“அம்மா காபி” 

“வேனும்னா போட்டுக்குடி. உனக்கு காபி போடவாவது தெரியுமா? அதையாவது சொல்லிக்கொடுத்திருக்காளா ஒங்க அம்ம்மா” என்று காலையிலேயே  பர்வதப்பாதம் ஆரம்பமானது…

பர்வதப்பாதத்தை காதில் வாங்காதது போலவே மிருதுளா தானே காபிப்போட்டுக்கொண்டு  ஹாலுக்கு சென்று அமர்ந்துக்கொண்டாள். அப்பொழுது நவீன் உள்ளே வர உடனே தனது காபியை அவனுக்கு குடுத்துவிட்டு தனக்கு காபி போட மீண்டும் அடுப்படிக்குள் சென்று காபி போட்டுக்கொண்டிருக்கும் போது நவீன் ஹாலில் இருந்து 

“இன்னைக்கு காபி சூப்பரா இருக்கே என்ன விஷேசம்? காபி பொடி மாத்திட்டயா என்ன…இனி இதே ப்ராண்ட் காபி  பொடி வாங்கு.” என்று பர்வதத்திடம் சொல்ல…எறிந்துக்கொண்டிருந்த நெருப்பில் எண்ணையை ஊற்றியது போலானது. அப்பொழுதும் மிருதுளா தான் போட்ட காபி என்று நவீனிடம் சொல்லவில்லை. சொன்னால் வரக்கூடிய விளைவுகளை நன்கு மூன்றே நாளில் கற்றுக்கொண்டு விட்டாள். ஆகையால் அமைதியாக தனக்கு தானே போட்ட காபியோடு வந்து நவீன் அருகே அமர்ந்து அருந்தலானாள். இங்கு நடந்தது ஏதும் தெரியாத ஈஸ்வரன் …நவீன் சொல்வதைக்கேட்டுவிட்டு

“ஏய் பர்வதம் காபி பொடி மாத்திட்டயா சொல்லவே இல்ல…ஆனா எனக்கு எப்பவுமே தர காபி தானே இன்னைக்கு காலையிலும் தந்த!!! ஒரு வித்யாசமும் தெரியலையே. சரி போய் எனக்கு புது காபிப் பொடி போட்டு நவீனுக்கு கொடுத்த மாதிரியே ஒரு காபி போட்டுண்டு வா” 

பர்வதத்திற்கு சுர்ரென்று கோபம் தலைக்கேறியது…

“காலை ல ஒரு காபி தான். ரெண்டாவது காபி ..புது பழக்கமா இருக்கு?? இது என்ன காபி கடையா? காபி போட்டுண்டே இருக்க. இன்னும் கொஞ்சம் நேரத்துல டிஃபன் சாப்பிடனும் இப்போ என்னத்துக்கு காபி கீபி எல்லாம் அது பசியை முறிச்சுடும். போங்கோ உங்க நியூஸ்ஸை ரேடியோவில் கேளுங்கோ“

இதை பார்த்தும் கேட்டும் கொண்டிருந்த மிருதுளாவிற்கு சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சட்டென ஒரு சிரிப்பு சிரித்தாள். அதைப் பார்த்த நவீன் 

“என்ன மிருதுளா காபி குடிக்கும் போது இப்படி ஒரு சிரிப்பு“

“அது …அது… எதையோ நினைத்தேன் சிரிப்பு வந்துடுத்து… மனசுக்குள்ள சிரிக்கறதா அல்லவா நினைச்சேன். சாரி“

“என்னத்துக்கு சிரிச்சதுக்கெல்லாம் சாரி கேட்கிற?”

இவர்களின் உறையாடலைக் கேட்ட பர்வதம் மிருதுளாவை முறைத்துக்கொண்டே அடுப்படிக்குள் போய் ..

“ஏய் மிருதுளா எத்தர நேரமா ஒரு கிலாஸ் காபி குடிப்ப? இங்க வா“

என்றழைக்க….பர்வதத்தின் அடுத்த களம் என்னவாக இருக்கும் அதை எப்படி சமாளிப்பது என்ற எண்ணங்கள் மிருதுளா மனதில் தாறுமாறாக ஓட…

“என்ன மா சொல்லுங்கோ” என தன்னை தயார் படுத்திக்கொண்டு எதுவானாலும் எதிர்க்கொள்ள அடுப்படிக்குள் சென்றாள்.

வெகுளிப் பெண்ணாக வந்தும் வீட்டின் பெரியவர்களின் செயல்களால் வந்தவளும் தனது குணத்தை அங்கிருப்பவர்களுக்கு தகுந்தார் போல் மெல்ல மாற்றிக்கொள்ள ஆரம்பித்தாள்.  இதுவே மிருதுளா எடுத்து வைத்த முதல் அடி. மிருதுளா மாறுவது தவறா இல்லை பர்வதம் மாறாதது தவறா.!!!! 

தொடரும்…..

நவீனும் மிருதுளாவும் ஒருவழியாக வெளியே சென்றனர். முதலில் இருவரும் ஜோடியாக வெளிய செல்வதால் பிள்ளையாரை தரிசித்து பின்பு செல்லலாமா என மிருதுளா நவீனை கேட்டாள். இருவரும் உச்சிப்பிள்ளையாரை தரிசித்த பின்  பிச்சுமணி மாமா வேலை பார்க்கும் பாங்கிற்கு சென்றனர். பாங்க் வாசலில் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த பிச்சுமணி இவர்கள் வருவதை பார்த்ததும் ..

“வாங்கோ வாங்கோ நவீன் அன்ட் மிருதுளா. வெல்கம். என்ன லாக்கர் விஷயம் தானே. வாங்கோ உள்ளே போகலாம் “

“ஆமாம் மாமா அதற்கே தான் வந்திருக்கோம். அப்படியே உங்க ஆத்துக்கும் ஒரு எட்டு போயி மாமிக்கும் ஒரு ஹாய் சொல்லலாம்னு …மாமி ஆத்துல இருக்காளோனோ!!!!“

“ஓ தாராளமா போயிட்டு வாங்கோ. அம்பிகா ஆத்துல தான் இருக்கா. ஐ வில் ஜாயின் யூ ஃபார் லஞ்ச். இங்கே ஒரு ஸிக்னேச்சர் போடு. ஜாயின்ட் அக்கௌன்ட் தானே !!!“

“ஆமாம் மாமா ஜாயின்ட் தான் …இனி எல்லாமே ஜாயின்ட் தான்“

“தட்ஸ் குட் ரா. ஐ லைக் தி வே யூ செட். சரி அப்போ மிருதுளா நீயும் இங்க ஒரு சைன் பண்ணுமா“

“சரி மாமா“

“ஓகே தென் ஆல் ஃபார்மாலிடீஸ்  ஓவர். லெட் மி ஷோ யுவர் லாக்கர். இந்தாமா இது உங்களோட லாக்கர் கீ. பத்திரமா வச்சுக்கோ. எஸ் ஹியர் வி ஆர். இதுதான் உங்க லாக்கர். மிருதுளா அந்த சாவியை தா. இப்படி என்னிடமுள்ள சாவியையும் உங்கள்ட்ட இருக்குற சாவியையும் ஒன்னா போட்டாதான் திறக்க முடியும். ஸோ நீங்க ஒவ்வொரு தடவ வரும்போதும் சாவியை மறக்காம எடுத்துண்டு வரனும். ஓகே. சரி இனி என்னென்ன வைக்கனுமோ வச்சுட்டு மறக்காம லாக் பண்ணிட்டு வாங்கோ“

“அப்போ உங்க கீ மாமா. அத எடுத்துண்டு போரேளே“

“ஹா !ஹா! ஹா! லாக் பண்ண உன்னிடம் இருக்கும் கீ மட்டும் போதும் மிருதுளா.“

“ஓ !!! ஓகே மாமா“

“சரி முடிச்சுட்டு ஆத்துக்கு போங்கோ நான் ஒரு க்ளைன்ட்ட மீட் பண்ண வெளியே போயிட்டு அப்படியே ஆத்துக்கு வந்துடரேன். ஐ வில் கோ இன் மை ஆஃபிஸ் கார். நீங்க என்னோட ஸ்கூட்டர் எடுத்துண்டு போங்கோ” 

என்று கூறி அவரது காரில் ஏறி புறப்பட்டு சென்றார். நவீனும் மிருதுளாவும் நகைகள், வெள்ளி பாத்திரங்கள் என அனைத்தையும் லாக்கரில் வைத்துவிட்டு நவீன் மாமாவின் பஜாஜ் ஸ்கூட்டரில் அவர் வீட்டுக்குச் சென்றார்கள். அவர்களைப்பார்த்த அம்பிகா உள்ளேயிருந்து ஓடி வாசலுக்கு வந்து அவர்களை வரவேற்றாள். 

“வாடா நவீன். வாம்மா மிருதுளா. உள்ள வாங்கோ. எப்படி உன் மாமா ஸ்கூட்டர் உங்ககிட்ட !!!“

“வந்துன்டே இருக்கோம் மாமி. ரொம்ப யோசிக்காதீங்கோ. நாங்க அவர பாங்க்ல லாக்கர் விஷயமா  பார்த்துட்டுதான் வரோம். அவர்தான் ஸ்கூட்டரை எடுத்துண்டு போகச்சொன்னார் மாமி.“

“ஓ !!! அப்படியா!!! அதுதானே காலைல அவர் ஸ்கூட்டர்ல தானே பாங்க் போனார் என்னடா இவா அதுல வராலேன்னுட்டு கொஞ்சம் கன்ஃப்யூஸ் ஆகிட்டேன் அவ்வளவு தான். அச்சோ விட்டா  நான் பேசிண்டே இருப்பேன். கொழந்தகள் மொதோ மொதோ தம்பதிகளா ஆத்துக்கு வந்துருக்கேங்கள் ஏதாவது குடிக்க தரண்டாமோ அத விட்டுட்டு ஸ்கூட்டர் புராணம் பாடறேன் பாரேன்…இந்தா எடுத்துக்கோமா லெமென் ஜூஸ். இந்தாடா உனக்கும் ” 

“தாங்க்ஸ் மாமி“

“என்னதுக்கு தாங்க்ஸ் எல்லாம் சொல்லர மா? கையிலேயே வச்சிண்டு இருக்கேங்கள் குடிங்கோ ரெண்டு பேரும்“

“என்ன மிருதுளா கல்யாண வாழ்க்கை எப்படி ஆரம்பிச்சிருக்கு?”

மிருதுளா மனதிற்குள் காலை வீட்டில் நடந்த வாக்குவாதம் சட்டென்று வந்து போனாலும் மலர்ந்த முகத்துடன் பதிலளித்தாள்.

“ஓ! நன்னா ஆரம்பிச்சிருக்கு மாமி.“

“அப்படியா!!! அப்படி போடு“

“ஏன் மாமி நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா“

“நீ ஏதும் தப்பா சொல்லலமா. நல்ல மாட்டுப்பொண்ணா சொல்லற. பார்ப்போம் போக போக தெரியும். டேய் நவீன் உனக்கும் உங்க குடும்பத்துக்கும் நல்ல பொண்ணா கிடச்சிருக்கா நம்ம மிருது. நீ தான் அவள நல்லா பார்த்துக்கணும் டா.“

“டன் மாமி. மாமி பேச்சுக்கு நோ அப்பீல் அட் ஆல்.“

“போடா உனக்கு எப்பவும் விளையாட்டு தான். மிருதுளா …நவீன் அவனோட செவென்த் ஸ்டான்டர்டை இங்கே இருந்து தான் படிச்சான். எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணிருக்கான். என் மாமியார் பயங்கரி அவா என் மேல சுட சுட பாலை உத்தினதிலிருந்து எல்லாமே அவனுக்கு தெரியும் எல்லாத்தையும் அவன் நேரிலே பார்த்திருக்கான். அவா பொண்ணு தான் இப்போ உன் மாமியார் அதனாலதான் அவன்ட்ட உன்ன பத்திரமா பார்த்துக்க சொன்னேன். நான் பட்டதே போரும்மா. எனக்கு ஒரு மாமியார் இல்லை நாலு பேர்…என்ன யோசிக்கறாய் என் நாத்தனார்களையும் சேர்த்து தான் சொல்லரேன்…அதிலும் உன் மாமியார் என்னையும் என் புருஷனையும் மனதளவில் பிரிச்சுட்டானுதான் சொல்லுவேன் …ஏதோ கல்யாணம் பண்ணின்டதால கூட இருக்கார் அவ்வளவுதான்..சரி சரி என் கஷ்டம் என்னோடயே போகட்டும். சாப்பிடலாமா எல்லாத்தையும் எடுத்து வைக்கட்டுமா?”

“இல்ல மாமி மாமா வந்துடட்டும் எல்லாருமா சேர்ந்து சாப்பிடலாம்“

“சாப்பிட வரேன்னு சொன்னாரா?”

“ஆமாம் மாமி சொனார். அதோ அவரே வந்துட்டார்“

“சரி அப்போ இலையை போட்டு வைக்கறேன் நீங்க ரெண்டு பேரும் கை கால் அலம்பிட்டு வாங்கோ“

“சரி மாமி“

என்று உள்ளே சென்று கை கால்களை அலம்பி விட்டு விருந்து சாப்பிட வந்து அமர்ந்தான் நவீன். பிச்சுமணியும் அமர்ந்திருந்தார். மிருதுளாவிற்கும் நவீன் பக்கத்தில் இலைப் போட்டிருந்தாள் அம்பிகா ஆனால் மிருதுளா தான் மாமிக்கு பரிமாறுவதில் உதவி செய்துவிட்டு பின் மாமியுடன் சேர்ந்து சாப்பிடுவதாக கூறினாள் அதற்கு அம்பிகா…

“ஏய் மிருது அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீ போய் நவீன் கிட்ட உட்காரு எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன். அடுத்த தடவை வரும்போது நீயே பரிமாறு நான் உன்ன தடுக்க மாட்டேன் இப்போ அங்க போய் உட்கார்ந்துண்டு சமத்தா சாப்பிடு போ.“

மிருதுளா சென்று நவீன் பக்கத்தில் அமர்ந்து மூவருமாக உணவருந்திய பின் மிருதுளா அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு மாமிக்கு பரிமாறினாள். நவீனும் பிச்சுமணியும் ஹாலில் அமர்ந்து கிரிக்கெட் மாட்ச் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சாப்பிட்டுக்கொண்டே அம்பிகா மிருதுளாவோடு பேசினாள். 

“உன் மாமியார் என்னையும் உங்க மாமாவையும் கல்யாணமான புதுசுல இப்படி தனியா எங்கயுமே விடமாட்டா எப்பப்பார்த்தாலும் தம்பி தம்பி னுட்டு கூடவே தான் வருவாள். அப்போ அவா எல்லாருமே இங்க தானே இருந்தா. உனக்கு உங்க மாமனார் எப்படி இருந்தார் ன்னுட்டு எல்லாம் தெரியுமோல்யோ…அந்த சமயத்துல இங்க தான் இருந்தா நாங்க தான் பார்த்துண்டோம். அவளுக்கு கல்யாணமாகி நாலு புள்ளகள பெத்துட்டா ஆனாலும் என்ன என் புருஷன் கூட பேச விட மாட்டா அப்படியே எங்க ரூமுக்குள்ள பேச ஆரம்பிச்சாலும் கழுகுக்கு மூக்கு வெசர்க்கறா மாதிரி எங்கிருந்தாலும் கொஞ்சம் கூட இங்கிதமில்லாமல் உள்ள வந்து தம்பியை கூட்டிண்டு போயிடுவள்…இதனாலயே எனக்கும் உங்க மாமாக்கும் இடையில ஒரு அன்டர்ஸ்டாண்டிங் இன்னே வரைக்கும் இல்லாம போச்சு” 

என்று பேசிக்கொண்டிருக்கும் போதே கரன்ட் கட் ஆனது அப்போ அம்பிகா பேசியதை கேட்ட பிச்சுமணி 

“என்ன மிருதுளா கிட்டையும் உன் கதா காலட்சேபத்த ஆரம்பிச்சுட்டயா? உனக்கு என் அக்கா, அம்மா பத்தி குத்தம் சொல்லாட்டி நாள் முழுமையாகாதோ? மிருதுளா அவ கெடக்காமா நீ வா வந்து ஹால்ல உட்காரு  நான் விசிறி எடுத்துண்டு வரேன்“

“பார்த்தயாமா அவாள விட்டுக்கொடுக்காமா பேசறதை!!!! ஆனா பொண்டாட்டி னா மனுஷனுக்கு எவ்வளவு எலக்காரம் …பார்த்தயா ….இது தான் மாமியாரின் எஃபெக்ட். சரி இதுக்கு மேலே ஏதாவது சொன்னா அடி கூட கிடைக்கும். நீ போய் ஹால்ல உட்காரு நான் வரேன்“

மிருதுளாவிற்கு என்ன சொல்வது எப்படி ரியாக்ட் செய்வது என்று ஒன்றும் புரியாமல் சென்று சேரில் அமர்ந்தாள். அம்பிகா சாப்பிட்டப்பின் வந்து ஹாலில் அமர்ந்தாள்..

“நீங்க ரெண்டு பேரும் வேணும்னா அந்த ரூம்ல போய் செத்த நேரம் படுத்துக்கோங்கோடா“

“நோ மாமி நோ வே நாங்க கிளம்பறோம். நீங்க சாப்பிட்டுட்டு வரத்துக்காக வேயிட் பண்ணினோம். டைம் மூனு ஆச்சு.“

“ஏன்டா இருந்து சாயந்தரம் காபி குடிச்சுட்டு வெயில் தாழ கிளம்புங்கோ“

“இல்ல மாமா வி ஹாவ் டு கோ நவ். இப்ப கிளம்பினா தான் பஸ் பிடிச்சு ஆத்துக்கு ஒரு ஆறு மணிக்காவது போய் சேர முடியும். நாங்க கிளம்பறோம். தாங்க்ஸ் ஃபார் தி லவ்லி விருந்து மாமி“

“என்னத்துக்கு தாங்ஸ் எல்லாம் போடா. இருங்கோ இதோ வரேன்“

“ஏன்னா இப்படி வந்து என்னோட சேர்ந்து இந்த புடவை வேஷ்டி யை கொழந்தைகளுக்கு குடுங்கோ“

“நீயே குடு டி. என்னத்துக்கு!!! சேர்ந்து தான் குடுக்கனுமாக்கும். அடி போடி..“

“மாமா போய் மாமி கூட சேர்ந்து நில்லுங்கோ நாங்க நமஸ்காரம் பண்ணனும்“

“ஏன்டா நீ வேற. சரி சரி உங்களுக்காக“

நவீனும், மிருதுளாவும் மாமா மாமி கால்களில் விழுந்து நமஸ்காரம் செய்து புடவை வேஷ்டியையும் வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பி நடந்து பஸ் ஸ்டாண்ட் வந்தனர். நடந்து வருகையில் மிருதுளா நவீனைப்பார்த்து

“ஏன் நவீன் உங்க மாமி சொன்னதெல்லாம் நிஜமா? உங்க பாட்டி அப்படியெல்லாம் செய்தாளா?”

“ஆமாம் மிருது உண்மை தான் என் அம்மாவோட அம்மா கொஞ்சம் ரூட் அன்ட் பேராசைப் பிடிச்சவா. பிச்சுமணி மாமாவுக்கு மொதல்ல ஒரு இடத்துல பொண்ணு பார்த்து ஓகே பண்ணினா.  மாமாவும் அந்த பொண்ணை மனதார விரும்பி பழகிண்டிருந்தார் ஆனா அம்பிகா மாமி சம்மந்தம் வந்ததும் முன்னாடி பேசின சம்மந்தத்தை வேண்டாம்னுட்டா“

“ஏன் அப்படி செய்தா மாமாவுக்கு தான் அந்த பொண்ண பிடிச்சிருந்துதே!!“

“எல்லாம் பணத்தாசை னு தான் சொல்லனும். அம்பிகா மாமி அந்த மொதோ பார்த்த குடும்பத்தை விட வசதி ஆனவா அதனால அப்படியே பல்டி அடிச்சுட்டா. அதுக்கப்பறம் என்னென்னவோ நடந்தது. கடைசில அம்பிகா மாமியையும் நிம்மதியா வாழ விடலை என் பாட்டி. அப்போ நான் நினைச்சுக்குவேன் மொதோ எங்க மாமாவுக்கு பார்த்த பொண்ணு இந்த பாட்டிக்கிட்டயிருந்து  தப்பிச்சாடானு…என்ன பண்ண எல்லாம் அவா அவா  ஃபேட்“

“ஏன் நவீன் உங்க அம்மா செய்தது பத்தி ஒன்னுமே சொல்ல மாட்டேங்கறேங்களே.“

“இதோ பஸ் வந்துடுத்து சீக்கிரம் வா. ஏறு இந்த பஸ் தான்“

இருவரும் பஸ்ஸில் எறி அமர்ந்தார்கள். மிருதுளா மனதில் பல கேள்விகள் உதித்தது. 

“அம்பிகா மாமி பேசியது சரியா? முதல் மதலில் அவா ஆத்துக்கு போயிருக்கோம் இப்படி அவா மாமியார் பத்தியும் என் மாமியார் பத்தியும் குத்தம் சொன்னது சரியா? பாவம் எவ்வளோ நாள் தான் மனதிலே பூட்டி வைத்திருக்க முடியும் அதுதான் கொட்டித் தீர்த்துட்டாளோ!!! நவீன் அவா பாட்டியை பத்தி கேட்டபோது அவ்வளவு டீட்டேய்லா சொன்னவர் ஏன் அவா அம்மாவ பத்தி கேட்ட போது சரியா பதில் சொல்லலை? ஏன் மழுப்பினார்? கல்யாணத்துக்கு முன்னாடியே என்னையும் நவீனையும் ஆறு மாசம் பிரிச்சு வைக்க திட்டம் போட்டவாளாச்சே!!! காலைல கூட ஒன்னுமில்லாத விஷயத்துக்கு அவ்வளவு பெரிய சண்டையை போட்டாளே!!! இதெல்லாம் வச்சுப்பார்த்தா அம்பிகா மாமி சொன்னதெல்லாம் சரின்னு தான் எனக்கு படரது. பார்ப்போம். அம்மா தாயே நீ தாம்மா துணை” 

என்று பஸ்ஸின் ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டிருந்தாலும் மனதில் ஒரு போராட்டமே நடத்திக்கொண்டிருக்கையிலே  சட்டென்று தன் முகத்தை உரசிக்கொண்டு ஒரு கை ஜன்னல் பக்கம் நீண்டது. சட்டென்று நெட்டினாள் மிருதுளா.  உடனே நவீன்

“ஹேய் மிருது அது தான் நான் படிச்ச ஸ்கூல். ஏய் என்ன ஆச்சு எங்க இருக்க? ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்த போல?”

“அதெல்லாம் ஒன்றுமில்லை நவீன். ஓ!! உங்க ஸ்கூலுக்கு நாங்க நிறய காம்படீஷன்ஸ்க்கு வந்துருக்கோம். நான் பேச்சுப்போட்டிக்கு வந்திருக்கேன்.“

“ஓ!! ஈஸ் இட்!!! அப்போ நாம அப்பவே மீட் பண்ணிருப்போமோ!!! பாரேன்!!! காட் டிசைட்ஸ் வென் வீ ஹாவ் டூ மீட் னு…இல்ல“

“எஸ் நவீன் எவரிதிங் ஹாப்பென்ஸ் ஆஸ் பெர் காட்ஸ் விஷ் அன்ட் ஐ பிலீவ் இட் ஈஸ் ஆல்வேஸ் ஃபார் அவர் குட் ஓன்லி. லெட்ஸ் ப்ரே டு காட் அன்ட் ஹோப் ஆல் ஈஸ் வெல்“

“ஹய் என்ன மிருது ஏன் சீரியஸா ஆகிட்ட? ஆல் இஸ் வெல் அன்ட் இட் வில் பி வெல் ஆல்வேஸ். நான் இருக்கேன். ஓகே“

” ஓகே” 

என்று புன்னகையித்தாள் மிருதுளா. 

பிச்சுமணி வீட்டு விருந்து மிருதுளாவின் மனதில் போராட்டத்தை உண்டாக்கியது. அவளுள் பல கேள்விகளை உதிக்கச்செய்தது.  வினாக்களுக்கு விடை கிடைக்குமா மிருதுளாவிற்கு? அதன் பதில்கள் அனுபவமாக கிடைக்குமா இல்லை பதிலாக மட்டும் இருக்குமா என்பதை பற்றி நாம் வரும் வெள்ளிக்கிழமை மேலும் படித்து தெரிந்துக்கொள்வோம்.

தொடரும்……

 காலை ஆறு மணி ஆனது. நவீன் மிருதுளா ரூமின் கதவு டக் டக் டக் டக் என பலமாக தட்டும் சத்தம் கேட்டு மிருதுளா கடிகாரத்தை பார்த்தாள் மணி ஆறு காட்டவும் பதறியடித்து எழுந்து கதைவைத்திறந்தாள் யாரையும் காணவில்லையே என எண்ணிக்கொண்டே திரும்பலானாள் அப்பொழுது பார்த்தாள் பக்கத்துவீட்டு சிறுவன் கார்த்திக் நின்று கொண்டிருந்ததை. 

“ஏய் குட்டி பையா நீ தான் கதவ தட்டினியா?”

“ஆமாம் அக்கா. பர்வதம் மாமிதான் மணி ஆறாச்சு நீங்க இன்னும் எழுந்திரிக்கல னு என்னை கதவ தட்டி எழுப்பிவிடச் சொன்னாங்க. அக்கா நானே எழுந்துருச்சிட்டேன் நீங்க இன்னுமா தூங்கரீங்க..நவீன் அண்ணா எங்க” என்று உள்ளே செல்ல முயன்ற சிறுவனை தடுத்து தாங்கள் கீழே வருவதாக பர்வதம் மாமியிடம் சொல்லும்படி சொல்லி அனுப்பினாள். 

மிருதுளாவை விடிந்ததும் சிறுவனின் மூலம் அவமானப்படுத்த துவங்கினாள் பர்வதம். கீழே வந்து பல் துலக்கியவுடன் குளிக்கச் சென்றாள் மிருதுளா. அது அவளது வழக்கம். குளித்து முடிந்ததும் ஹாலுக்கு வந்தாள். அவளருகே காபிவை வைத்துவிட்டு…

“இந்தா காபி. உனக்கு இதுதான் காலை அஞ்சு மணியோ?” என முனுமுனுத்துக்கொண்டே அடுப்படிக்குள் சென்றாள். 

மிருதுளாவிற்கு என்ன சொல்வது… என்ன செய்வதென்று தெரியாமல் காபியை குடித்துவிட்டு அந்த டம்பளரையும் மற்ற அங்கு கிடந்த பாத்திரங்களையும் தேய்த்து வைத்து அடுப்படிக்குள் சென்று ஏதாவது செய்ய வேண்டுமா என்று கேட்க அதற்கு பர்வதம்

“இவ்வளவு லேட்டா வந்து கேட்டா. எல்லாம் ஆயாச்சு” என்று கூறி வெடுக்கென்று முகத்தை திருப்பிக்கொண்டாள். அங்கு இருந்த தனது மச்சினர்களை பார்த்து “ஹாய் குட் மார்னிங்” என்றாள் அவர்களும் “குட்மார்னிங்” என்று சொல்லிவிட்டு அவரவர் வேலையை பார்க்கலானார்கள்.

மாமனார் உள் ரூமிலிருந்து வரவும் மிருதுளா எழுந்து “குட்மார்னிங்” என்று சொல்ல அவரும் வெறுமனே தலையை மட்டும் அசைத்துவிட்டு ரேடியோவை ஆன் செய்து செய்திகளைக் கேட்கலானார். அவரகள் யாருமே ஒருத்தி அங்கு செய்வதறியாது நிற்கிறாளே தானாக பேச்சுக்குடுக்க முன்வருகிறாளே என்று துளியும் புரியாதது போலவே பாவனை செய்து கொண்டிருந்தார்களா இல்லை அவர்கள் குடும்பமே அப்படி தானா என்ற சந்தேகம் மிருதுளாவின் மனதில் எழுந்தது. 

மிருதுளாவிற்கு ஏதோ ஒரு அன்னிய வீட்டினுள் யாருமே இல்லாமல் தனித்து நிற்பது போல் இருந்தது. நவீன் எப்போது எழுந்து வருவார் என மனதில் நினைத்துக்கொண்டே மாடிப்படியை பார்த்தாள் நவீன் கீழே இறங்கி வந்துக்கொண்டிருந்ததைப் பார்த்து “அப்பாட” என பெருமூச்சு விட்டாள். அவன் ஃப்ரெஷ் அப் ஆகி வந்ததும் மிருதுளாவைப் பார்த்து 

“ஹே மிருது அதுக்குள்ள குளிச்சிட்டயா. குட் குட் ” என கூறிக்கொண்டே பர்வதம் கையிலிருந்து காபியை வாங்கிக்கொண்டான். நவீனுடனும் அவர்கள் அவ்வளவாக யாருமே பேசவில்லை. அதனால் அவர்களின் சுபாவமே அதுதான் என மனதில் நினைத்துக்கொண்டாள் மிருதுளா. 

“நான் மன்டே டூ ஃப்ரைடே உன்ன மாதிரிதான் எழுந்ததும் குளித்துவிட்டு தான் வருவேன் ஆனால் சாட்டர்டே சன்டே மத்தியான சாப்பாட்டுக்கு முன்னாடிதான் குளிப்பேன். சரி நீ சீக்கிரம் ரெடி ஆகு நாம வெளில போகனும்” என்றதும் மிருதுளாவின் மனம் அப்பாட இந்த இறுக்கமான இடத்திலிருந்து சற்று நேரம் ரிலீஃப் கிடைக்கப்போகிறதே என சந்தோஷத்தில் துள்ளியது. அதில் மண்ணைப்போட்டு அணைத்தது போல பர்வதம் குறுக்கிட்டு

“இனைக்கு எதுக்கு வெளில போகனும் அதுவும் வெயில்ல ஒன்னும் வேண்டாம்” 

ஏதோ புதிதாக திருமணம் ஆனவர்கள் வெளியே போயிட்டு வரட்டும் சந்தோஷமா இருக்கட்டும் என்றில்லாமல் தனது ஆதிக்கத்தை செலுத்த நினைத்தாள் பர்வதம். ஆனால் நவீன் உடனே

“இங்க இருந்துண்டு என்ன பண்ணப்போறோம். இட் வில் பி போரிங் ஃபார் அஸ். கொஞ்சம் டவுன் வரைக்கும் போயிட்டு வரோம். உனக்கு ஏதாவது வாங்கிண்டு வரனுமா?”

“எனக்கென்ன வேனும்!!“என்று அலுத்துக்கொண்டாள் பர்வதம். ஆமாம் அவளுக்கு வேண்டியது கடையில் கிடைக்காது ஏனெனில் அவளுக்கு வேண்டியது மிருதுளாவின் நிம்மதி, சந்தோஷம் என்பது இதுவரை படித்ததை வைத்து நமக்குத்தானே தெரியும். என்ன மக்களே நான் சொல்வது உண்மை தானே??

“சரி எங்க கல்யாணத்துக்கு பக்ஷணம் தந்தாலே அதெல்லாம் நம்ம தெரு ஆட்களுக்கெல்லாம் கொடுத்தயா? நேத்து என் நண்பன் ஆத்துக்கு போனேனே அவா அம்மா சொன்னா கல்யாண பக்ஷணமே வரலயேனுட்டு“

“இவாளுக்கெல்லாம் கொடுக்க எங்கப்போறது!! உன் மாமனார் ஆத்துல அவளவா கொடுத்தா?” இதை கேட்டதும் ஈஸ்வரன் பர்வதத்தைப்பார்த்து …

“ஏண்டி இப்படி சொல்லற…உள்ள அவா கொடுத்தனுப்பிய பக்ஷணம் எல்லாம் அட்டப்பெட்டியோட அப்படியே இருக்கே. உன் ஆத்துக்காராளுக்கெல்லாம் கொடுத்தது போக எவ்வளோ மீதி இருக்கு !!!” என்றதும் பர்வதம் அவரை ஒரு முறை முறைத்தாள். மனிதர் கப்சிப் ஆனார். 

“ஆமாம் மிருது ஆத்துலேருந்து நிறைய பக்ஷணம் எல்லாம் அவ தம்பி வேனு நம்ம வேனுல ஏத்தும்போது நான் கேட்டேன் என்னது இவ்வளவு டப்பா ஏத்தறேங்கள் னு அப்போ அவன் சொன்னான் எல்லாம் சீர் பக்ஷணங்கள் னுட்டு“

“ஆமாம் ஆமாம் அவன் அக்கா சூட்கேஸை எல்லாம் பக்ஷணம் டப்பா னுட்டு சொல்லிருக்க போறான்” என்று நக்கலாக சொன்னாள் பர்வதம் 

மிருதுளாவிற்கு பிடிக்கவில்லை என்றாலும் காலை முதல் தன்னை வம்புக்கு இழுப்பது போலவே பேசும் தனது மாமியாரிடம் ஒன்றுமே பதில் அளிக்காமல் விலகிச்சென்றாள். ஆம் மிருதுளா நினைப்பதும் சரிதான் பதிலுக்கு பதில் பேசி வந்ததும் சண்டை போடுறா என்கிற பேரை அவளுக்கு பட்டமளிக்க வோ?  இல்லை சண்டைக்கு இழுத்து அவர்கள் மன நிம்மதியை குலைக்க வா!!!… என்னவோ ஏதோ ஆனால் மிருதுளாவை முனுமுனுத்துக்கொண்டே சீண்டிக்கொண்டு இருந்தாள் பர்வதம். இப்படியும் சில மனிதர்கள். 

அனைவரும் காலை உணவு அருந்த அமர்ந்தனர். மிருதுளா தயங்கி நின்றிருந்தாள் அப்போது நவீன் மிருதுளாவையும் அமரும்படி சொல்ல பர்வதத்திற்கு கோபம் வந்து..

“ஏன் இவ்வளவு நாள் மிருதுளா கூடதான் சாப்பிட்டயோ!!! அவள் பக்கத்தில் இல்லாமல் சாப்பாடு இறங்காதோ” என்று கேட்க

“அதுக்கில்ல அவள யாருமே கூப்பிடலை அதுதான் நான் கூப்பிட்டேன் ஏன் இதுல என்ன இருக்கு? இதுக்கு ஏன் இப்படி சொல்லற?” என நவீன் திருப்பி கேட்டதும் சுதாரித்துக்கொண்டாள் பர்வதம் 

“அவளும் நானும் அப்பறமா சாப்பிட்டுக்கறோம் முதல்ல நீங்கெல்லாம் சாப்பிட்டு எழுந்திரிங்கோ” என்றாள்

“ஓகே மிருது நீங்க ரெண்டு பேரும் சாப்பிடுங்கோ ஆனா சீக்கிரம் சாப்பிட்டு ரெடி ஆகிடு“

“சரி” என்று புன்னகையித்தால் மிருதுளா. 

நவீன் சாப்பிட்டுவிட்டு மாடிக்குச்சென்றான். அனைவரும் சாப்பிட்ட இடத்தை சுத்தம் செய்தாள் மிருதுளா. பின் மாமியாருடன் சாப்பிட தட்டு எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்தாள். இட்டிலி என்று ஒன்றை சுட்டு வைத்திருந்தாள் பர்வதம் அதை மிருதுளா சாப்பிட்டதும் அவளின் அம்மா நினைப்பு வந்தது அவளுக்கு. அவள் அம்மா சுடும் இட்டிலி பஞ்சுப்போல இருக்கும். ஏதோ ஒரு நாள் கொஞ்சம் ஹார்டான இட்டிலி சுட்டதற்கு வேனுவும் மிருதுளாவும் அவர்கள் அம்மாவை கல்லிட்டிலி அம்பு என கிண்டலடித்தது அவளுக்கு ஞாபகம் வந்தது. அதைவிட பல மடங்கு கனமான இட்டிலியை அன்று நவீன் வீட்டில் தான் முதல் முறையாக பார்க்கிறாள். அதையும் ஒன்றும் சொல்லாமல் ஐந்தைந்து உண்டு எழுந்த தனது மாமனார், கணவர், மச்சினன்களை பாவம் என்று மனதில் எண்ணிக்கொண்டே ஒரே ஒரு இட்டிலி மட்டும் சாப்பிட்டு எழலானாள் அப்போது பார்த்து பர்வத்திற்கு எங்கிருந்தோ பாசம் மடைத்திறந்து தாவும் நதியலைப்போல 

“என்ன இது ஒரு இட்டில எழுந்திரிக்கறாய் உட்காரு “என இன்னும் இரண்டு தட்டில் கேட்காமல் போட திரு திருவென முழித்துக்கொண்டு சாப்பிட முடியாமல் மிகவும் சிரமப்பட்டு சாப்பிட்டு முடித்து தட்டைக்கழுவி வைத்து விட்டு தான் டிரஸ் மாற்ற போவதாக சொல்லிவிட்டு மாடிக்குப் போனாள். அங்கே நவீன் ரெடியாகி அமர்ந்திருந்தான். மிருதுளாவை பார்த்ததும் அவளிடம்..

“ஹே மிருது நீ உன் நகைகளை எல்லாம் ஒரு பேக்கில் போட்டு எடுத்துக்கோ நம்ம பிச்சுமணி மாமா பாங்கில் லாக்கருக்கு சொல்லிருக்கேன் அங்க போய் வச்சுடலாம். இந்த ஏரியா அவ்வளவு ஸேஃப் இல்ல மோரோவர் அப்பாவும் வயசானவர் அதுனால தான் சொல்லறேன். நீ என்ன சொல்லற” 

“ஓகே வச்சுடலாம் எனக்கு வேண்டியதை மட்டும் வச்சுக்கறேன் மத்ததை எல்லாம் பாங்க் லாக்கர்ல வச்சுடலாம்” 

என பேசிக்கொண்டு கையில் பேக்குடன் கீழே இறங்கி வந்தவர்களை பார்த்து பர்வதம்

“என்ன அது பேக்?”

“இது எனக்கு இப்போதைக்கு தேவையில்லாத நகைகள் அம்மா. இத ஊருக்கும் எடுத்துண்டு போகவேண்டாமாம் நவீன் சொல்றார். அவர் பிச்சுமணி மாமா பாங்க் லாக்கர்ல வைக்கலாம் னு சொன்னார் அதுதான் எடுத்துண்டு போறோம்” 

காலை முதல் சண்டைக்காக காத்திருந்த பர்வதம் இதையே பிரச்சினை ஆக்க முடிவெடுத்து ஆரம்பித்தாள்

“இதோ பாருமா இது மாதிரி உன் எண்ணங்களை எல்லாம் நவீன் சொன்னான் என்று அவன் மேல போட்டுட்டு ஒன்னுமே தெரியாததுபோல நின்னுட்டா நாங்க நம்பிடுவோமா. எல்லாத்தையும் மேலே அவனுக்கு சொல்லிக்குடுத்துட்டு இப்போ என்னவோ அவனே சொன்னா மாதிரியும் உனக்கு ஒன்னும் தெரியாதது போலவும் சொல்லற!!“

“அவளுக்கு ஒன்னும் தெரியாதுதான் நான் அவளுக்கே இப்போ தான் சொன்னேன்“

“அப்படிப்போடு ஒரு நாள்லயே இவளோ மாறிட்ட பேஷ். சரி அப்படியே வச்சுப்போம்…“

“வச்சுக்க எல்லாம் வேண்டாம் அதுதான் உண்மை“

“சரிடா அப்படியே இருக்கட்டும். நீ சொன்ன சரி நாங்க ரெண்டு பேரு ஆத்துல இருக்கோமே எங்களாண்ட இது மாதிரி வைக்கலாம் னு இருக்கேன் என்ன சொல்லறேங்கள் னுட்டு ஒரு வார்த்த கேட்டயாடா?”

“அது மிருதுளாவோட நகை அத லாக்கர்ல வைக்கறதுக்கு உங்கள்ட்ட ஏன் கேட்கனும்? மிருதுளாட்ட தான் கேட்கனும் அதுதான் கேட்டேன். அவளும் சரினுட்டா. இதுல இப்போ உனக்கென்ன ப்ராப்ளம்?”

“என்ன ப்ராப்ளமாமே நன்னாருக்குடா நன்னாருக்கு நீ பேசறது ரொம்ப நன்னாருக்கு. எல்லாத்துக்கும் இவதான் இவளேதான் காரணம். பெரியவானுட்டு ஒரு மரியாத இல்லை அவாள்ட்ட சொல்லிட்டு எதாருந்தாலும் செய்வோம்னு இல்ல எல்லாம் அவ இஷ்டம் இல்லையா!!!“

“அத தான் மிருது இப்போ சொன்னாளே பின்ன என்ன. நாங்க சொல்லாம போயிட்டு வந்தா நீ சொல்லறா மாதிரி கூட வச்சுக்கலாம் ஆனா அவ தான் இப்போ கீழே வந்ததும் சொன்னாலே“

“எப்போ சொன்னா? எப்போடா சொன்னா? நானா கேட்டதுக்கப்பறம் தானே சொன்னா? என்னமோ தானா ஓடி வந்து சொன்னா மாதிரி சொல்லற“

“அய்யோ எப்ப சொன்னா என்ன? சொன்னாளா இல்லையா?

என பர்வதத்திற்கும் நவீனுக்கும் பேச்சு முற்றி விடுவதற்குள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டி மிருதுளா 

“சாரி மா அவர் உங்கள்ட்ட சொல்லிருக்கனும் அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எங்கள மன்னிச்சுடுங்கோ” 

“ஏய் மிருதுளா நாம மன்னிப்பு கேட்குற அளவுக்கு ஒரு தப்புமே பண்ணல தென் வை ஆர் யூ ஆஸ்க்கிங் சாரி?” என்றான் நவீன்

மிருதுளா தடாலென்று சாரி கேட்டதும் அதை எதிர்பார்க்காத பர்வதம் 

“சரி சரி ஏதோ இந்த தடவ மன்னிச்சுடரேன் இத தொடராமா பார்த்துக்கோங்கோ.” என கூறி உள் ரூமிற்குள் சென்றாள். 

இப்படியாக வெளியே கிளம்பியவர்களிடம் சண்டையிட்டு மன நிம்மதியை குலைத்து விட்டு மன திருப்தியுடன் உள்ளே சென்றாள் பர்வதம். அவள் காலை முதல் மிருதுளா ஏதாவது தன்னை எதிர்த்து பேசுவாள் என்று பலவற்றை முயற்சித்து  நடக்காததால் சற்று வருத்தமாகவும் இருந்தாள். பர்வதத்திற்கு என்னதான் ஒரு பிரச்சினையை கிளப்பின திருப்தி இருந்தாலும் அவள் எதிர்பார்த்தது மிருதுளாவை சீண்டினால் அவள் திருப்பி பேசுவாள் அதை வைத்து ஒரு பெரிய பூகம்பத்தையே உருவாக்கலாம் என்று ஆனால் மிருதுளாவின் மௌனம் அவளை ஏமாற்றமடையச் செய்து புஸ்ஸுவானமாக்கியது.  

இப்படி வம்புக்கென்றே திட்டம் தீட்டும் பர்வதத்துடன் மீதமிருக்கும் ஒரு வாரம் காந்தி நகர் செல்லும் வரை என்னவெல்லாம் நம்ம மிருதுளா எதிர்கொள்ள வேண்டிருக்கப்போகிறதோ? பொறுமையை இழக்க நேரிடுமா? அதைப்பற்றி வரும் செவ்வாய் தெரிந்துகொள்ளலாம். இப்போ நம்ம நவீனும் மிருதுளாவும்  நிம்மதியாக வெளியே சென்று வரட்டும். 

தொடரும்…..

 

 

 

திருமணம் முடிந்த மறுநாள் அனைவரும் மண்டபத்தைக் காலி செய்ய வேண்டியிருந்ததால் கிளம்பிக்கொண்டிருந்தனர். அன்று காலை ஒன்பது மணிக்கு டைரெக்ட்டாக சாப்பாடு பரிமாறப்பட்டது. கட்டு சாத கூடைகள், அங்குமணி சீர்கள், சீர் பக்ஷ்ணங்கள் என திருமண காண்ட்ராக்ட் காரர்கள் அனைத்தையும் பக்காவாக பேக் செய்து மண்டப மேடை அருகே வைத்து அம்புஜத்திடம்…

“மாமி எல்லாம் ரெடி நீங்க ஆர்டர் கொடுத்த அனைத்தும் தயார். ஒரு தடவ சரி பார்த்துக்கோங்கோ. 7 சுத்து முறுக்கு , முத்துச்சரம், அதிரசம், மைசூர்பாக், லட்டு எல்லாத்துலயும் 101 மாப்பிள்ளை ஆத்துக்கும் 51 உங்க ஆத்துக்கும் னு தனித்தனியா பேக் பண்ணிருக்கோம். மஞ்சள் நிற டப்பாக்கள் எல்லாம் மாப்பிள்ளை ஆத்துக்கு பச்சை நிற டப்பா எல்லாம் பொன்னாத்துக்கு. அங்குமணி சீர் பேக் அந்த ரெண்டு பெரிய பிளாஸ்டிக் ஃபாக்ஸ் ல இருக்கு. கட்டு சாதக்கூடை  இதோ இந்த அஞ்சு ஆரஞ்சு பக்கெட்டில் இருக்கே இது மாப்பிள்ளை ஆத்துக்கு அதே மாதிரி அஞ்சு பச்சை பக்கெட்டில் இருக்கறது உங்களுக்கு. அதுல பொடி தடவிய இட்டிலி, புளியோதரை, தயிர் சாதம், ஊறுகாய் னு அஞ்சு ஐட்டம் பேக் செய்திருக்கோம். எல்லாம் ஓகே வா மாமி?” 

“ரொம்ப சந்தோஷம் எல்லாம் சூப்பரா நடத்திக்கொடுத்தேள். தாங்க்ஸ்“

பின் அம்புஜம் பர்வதத்தை அழைத்து அவர்களுக்கு கொடுக்க வேண்டிய அனைத்து சாமான்களையும் காண்பித்து எடுத்து வேனில் வைக்க சொல்லலாமா என்று கேட்க பர்வதம் சரி என்று தலை அசைக்க அனைத்தும் நவீன் வீட்டார் வேனில் ஏற்றப்பட்டது. பாக்கி டப்பாக்கள் பெண்வீட்டார் வேனில் ஏற்றினார்கள்.

 இது ஒருபுறம் நடந்துக்கொண்டிருந்தது. 

கட்டு சாத கூடை என்பது மாப்பிள்ளை வீட்டார் மண்டபத்திலிருந்து அவர்கள் வீட்டுக்குச் சென்றதும் அன்று மத்திய உணவை சமைத்து உண்ண வேண்டிய கஷ்ட்டத்தை குறைப்பதற்காக ஏற்படுத்துப்பட்டது. அங்குமணி சீர் என்பது புது மண தம்பதியினர் புது வாழ்க்கை ஆரம்பிக்க ஒரு மாதத்திற்கு வேண்டிய அனைத்து மளிகை சாமான்களும் பெண்ணின் பெற்றோர் வழங்குவது. 

ராமானுஜம் பணம் செட்டில்மென்ட் செய்துக்கொண்டிருந்தார். வேனு அனைத்து சீர் பாத்திரங்கள் அழகாக அடுக்கி வைத்ததை எல்லாம் எடுத்து  அட்டைப்பெட்டிகளில் மறுபடியும் அடுக்கி அதை நவீன் வீட்டார் வேனில் வைத்தான். அதோடு தனது அக்காவின் 4 சூட்கேஸ்களையும் ஏற்றி வைத்தான். பின் அவர்களின் சூட்கேஸ்களை அவர்கள் வண்டியில் வைத்தான். இப்படி ஒவ்வொரும் அவரவர் வேலைகளில் மும்முரமாக இருந்தனர். நவீனும் மிருதுளாவும் மண்டபத்தின் நடுவில் சொந்த பந்தங்களுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். அனைத்தும் பேக் செய்து அவரவர் வண்டியில் ஏற்றப்பட்ட பின் எல்லாரையும் ஒன்றாக அமரச் செய்து அனைவருக்கும் திருஷ்டி பூசணிக்காய் சுற்றினார்கள் மண்டபத்துக்காரர்கள். 

எல்லாம் சுபமாக நிறைவேறியது என்ற திருப்தியில் அவரவர் வண்டியில் ஏறி மண்டபத்திலிருந்து மாப்பிள்ளை வீட்டுக்கு சென்றனர். அங்கு அம்பிகா உள்ளிருந்து ஆரத்தி தட்டு எடுத்து வந்து புது தம்பதியருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றாள். நவீனும் மிருதுளாவும் உள்ளே சென்றனர். பின் அனைவருமாக சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு மிருதுளாவின் பெற்றோர் மற்றும் சொந்தக்காரர்கள் அனைவரும் நவீனிடமும் நவீன் வீட்டாரிடமும் விடைப்பெற்றுக்கொண்டு அவரவர் வீடுகளுக்குச் சென்றனர். மிருதுளாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு சமத்தா பொறுமையா இருக்கனும் என அம்புஜம் கூற மிருதுளா கண்களில் கண்ணீர் பெருக அதை டக்கென்று துடைத்துக்கொண்டாள். 

அனைவரும் சென்றபின் மிருதுளாவிற்கு என்ன செய்ய வேண்டுமென்று ஒன்றுமே புரியாமல் நின்றுக்கொண்டிருந்ததைப்பார்த்து பர்வதம் 

“என்ன சும்மா நின்னுண்டிருக்க போய் டிரஸை மாத்திட்டு வா” 

என்று சொல்ல உடனே மேலே மாடிக்குச்சென்று பட்டுப்புடவையை கழற்றிவிட்டு ஒரு சல்வாரை போட்டுக்கொண்டு கீழே வந்தவளைப் பார்த்து பர்வதம் ..

“இது என்ன இப்படி வந்திருக்க இந்த மாதிரி எல்லாம் டிரஸ் போட்டுண்டா அப்பாவுக்கு பிடிக்காது சத்தம் போடுவார். போ ..போய் ..ஒரு புடவையை கட்டிண்டு வா.” என கூற

மிருதுளாவும் மறுபடியும் போய் புடைவையை கட்டிக்கொண்டு கழற்றி போட்ட பட்டுப்புடவையையும் சல்வாரையும் மடித்துக்கொண்டிருக்கையிலே கீழிருந்து பர்வதம் சத்தமாக அக்கம் பக்கத்தினருக்கு கேட்கும்படி

“ஏய் மிருதுளா என்ன இவ்வளவு நேரமா மாடில பண்ணர? ஒரு புடவை மாற்ற தானே போன அதுக்கு இவ்வளவு நேரமா. சீக்கிரம் கீழே வா” என்றாள்

மிருதுளாவும் கீழே இறங்கி வந்தாள். இதை அனைத்தையும் பார்த்த வண்ணம் இருந்தனர் ஈஸ்வரன் நவீன் மற்றும் அவன் தம்பிகள். ஒருவர் கூட ஏன் அவ்வாறு பர்வதம் கத்தி கூப்பிட்டாள் என அவளை கேட்கவில்லை. அனைவரும் மத்திய உணவு உண்ண அமர்ந்தார்கள். அப்பொழுது பர்வத்தின் அக்கா ரமணி மிருதுளாவிடம்…

“மிருது நீயும் நவீனோடயே உட்கார்ந்துக்கோ நாங்க பார்த்துக்கறோம்” என்று சொல்ல அதை கேட்டுக்கொண்டே உடைமாற்ற சென்ற பர்வதம் வந்து.

“பரவாயில்லை மிருதுளா பரிமாறுவாள் நீங்க எல்லாரும் உட்காருங்கோ ” என்றதும் அம்பிகா குறிக்கிட்டு

“அக்கா அவ இப்பதான் நம்ம ஆத்துக்கு வந்திருக்கா பரவாயில்லை அவள் நவீனுடன் சாப்பிட உட்காரட்டும் நான் பரிமாறரேன். நீங்களும் வேனும்னா உட்காருங்கோ” என்று கூறுவதோடு நிற்காமல் மிருதுளாவை பிடித்து அமர வைத்தாள். அனைவரும் கட்டு சாத கூடையில் வந்ததை பலே பேஷ் என்று சாப்பிட்டனர். அனைவரும் மிருதுளாவிடம் அவள் பெற்றோர் சூப்பராக திருமணம் செய்து வைத்தார்கள் என்றும் கட்டு சாத கூடை ஐட்டம்ஸ் வரை எல்லாமுமே நன்றாக ருசிகரமாக இருந்தது எனவும் பாராட்டினர். இதை பிடிக்காத பர்வதம் அம்பிகாவிடம் …

“கட்டு சாத கூடை சாப்பாடு பத்தாதோ!! இன்னும் கொஞ்சம் அதிகமா கொடுத்திருக்கலாம் உங்க அப்பா அம்மா மிருதுளா” என்றாள் 

அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். உடனே ஈஸ்வரன்

“என்ன பேசர நீ. இவ்வளோ சாப்பாடு கொடுத்தனுப்பிருக்கா. பத்தாதூங்கறாய். உனக்கு கண்ணுல ஏதாவது கோளாறா” என்றதும் அனைவரும் அதுதானே என்று கூறி சிரித்தார்கள். பர்வதத்திற்கு கோவம்  தலைக்கேறியது. ஆனால் காட்டிக்கொள்ளாமல் சமாளித்தாள்.

உணவு உண்ட பின் அனைவரும் உறக்கத்தில் ஆழ்ந்தனர். நவீன் மிருதுளாவை மாடிக்கு வரும்படி அழைக்க அதைப்பார்த்த பர்வதம் மிருதுளாவிடம் …

“சாயந்தரம் நம்ம பிள்ளையார் கோவிலுக்கு போய் மாலை சாத்தனும் அதனால நீ இங்கயே இப்படி படுத்து கொஞ்சம் ரெஸ்ட் எடு” என்றதும் அவளருகே மிருதுளா படுத்ததும் நன்றாக அசந்து தூங்கிப்போனாள். 

மிருதுளாவிற்கு அப்பொழுதுதான் கண் மூடியதுபோல இருந்தது ஆனால் மணி நாலரை ஆனது அனைவரும் கோவிலுக்கு கிளம்பிக்கொண்டிருந்தனர். எழுந்ததும் பர்வதம் ..

“சீக்கிரம் ஆகட்டும் இப்படியா தூங்குவ!!“

“சாரி மா இரண்டு நாளா சரியா தூங்கலையா அதுதான் கொஞ்சம் அசந்துட்டேன்” என்றாள் மிருதுளா

“சரி சரி போய் பட்டுப்புடவை கட்டிண்டு வா. ” 

அனைவரும் கோவிலுக்கு சென்றனர். நவீன் மிருதுளா பெயர்களுக்கு அர்ச்சனை செய்தனர் பின் பர்வதம் மிருதுளாவிற்கு கோவிலைச் சுற்றி காண்பிப்பதாக கூறி தனியாக அழைத்துச்சென்றாள். ஓரிடத்தில் இருவரும் அமர்ந்தார்கள். அப்போது பர்வதம் ஏதோ நவகிரகத்தை வலம் வந்துக்கொண்டிருந்த ஒரு மாமியை காட்டி…

“மிருதுளா அந்த மாமிக்கு மூணு பொண்ணுகள்

. அவாளுக்கு நவீனை அவா ரெண்டாவது பொன்னுக்கு கட்டி வைக்கனும்னு ஆசைப்பட்டா தெரியுமா அதுவும் இல்லாம அவா ஆத்த பொன்னுகள் எல்லாரும் சிலிம்மா வெள்ள வெளேர்னு இருப்பா. ஹும் …என்ன பண்ண நவீன் என்னடான்னா உன்ன தான் கட்டிப்பேனுட்டான். சரி வா” என்று அலுத்துக்கொண்டாள். 

இதைக்கேட்டதும் மிருதுளாவிற்கு கோபம் வந்தது ஆனால் தன் தாயின் அறிவுரை அவள் காதில் ஒலித்தது. ஆகையால் அமைதியாக ஒன்றும் கூறாமல் பர்வததின் பின் சென்றாள்.  நவீனின் சொந்தக்காரர்கள் அனைவரும் அங்கிருந்தே விடைபெற நவீன் குடும்பத்தினர் மட்டும் கோவிலில் இருந்து வீடு திரும்பினார்கள். வீட்டுக்கு வந்ததும் அனைவரும் மீண்டும் உடைகளை மாற்றினர். மிருதுளாவும் பட்டுப்புடவையை மாற்றி ஒரு சாதாரணப் புடவையை கட்டிக்கொண்டு வேகமாக கீழே வந்தாள். 

அவள் வந்ததும் பர்வதம் நவீனை அவன் நண்பன் அழைத்ததாக கூறி அவனை சென்று பார்த்துவரச்சொன்னாள்.  நவீன் மிருதுளாவையும் கூட்டிச்சென்று வருவதாக கூற…

“அவ என்னத்துக்கு இங்க கொஞ்சம் அவளுக்கு வேலை இருக்கு நீ மட்டும் போயிட்டு வா” என நவீனை வெளிய அனுப்பியதும் மிருதுளாவைப்பார்த்து

“இன்னைக்கு நைட்டுக்கு சாதம் வச்சுட்டேன் நீ ஒரு ரசம் பண்ணி அப்படியே உருளைக்கிழங்கு பொரியல் பண்ணி வை இதோ நான் வரேன்” என்று கூறி வாசலுக்குச் சென்று அக்கம்பக்கத்து வீட்டுப்பெண்களுடன் அரட்டையில் மூழ்கினாள். 

முதல் நாளே சமையல் கட்டில் எங்கே எது இருக்கிறது என்று கூட தெரியாது உள்ளே நுழைந்தாள் மிருதுளா. மெதுவாக ஒவ்வொரு டப்பாவாக திறந்து திறந்து பார்த்து எதுஎது எங்கெங்கு இருக்கிறது என்பதை முதலில் தெரிந்துக்கொண்டபின் சமையலில் இறங்கினாள். மாமியார் வைத்துவிட்டுப்போன குக்கரை அடுப்பிலிருந்து எடுத்து மேடையின் ஓரமாக வைத்துவிட்டு ரசம் செய்ய ஆரம்பித்தாள். ரசத்துக்கு வேண்டியதை எல்லாம் போட்டு சட்டியை அடுப்பில் வைத்துவிட்டு உருளைக்கிழங்கை நறுக்க தொடங்கினாள் அப்பொழுது கவின் வந்து 

“மன்னி எனக்கு உருளை ரொம்ப ரோஸ்ட் ஆனா பிடிக்காது ஸோ பார்த்துப்பண்ணுங்கோ” என்றான்

அவன் பின்னாடியே ஈஸ்வரன் வந்து “நீ நல்லா உருளை ரோஸ்ட் பண்ணுமா எனக்கு அது தான் பிடிக்கும்” என்றார். 

இப்படி ஆளாளுக்கு ஒவ்வொரு மாதிரி கேட்கவும் மிருதுளாவிற்கு மனதில் பயம் தொற்றிக்கொண்டது ஆனாலும் அவள் இரண்டும் செய்தாள். ரசம், உருளை பொரியல், உருளை ரோஸ்ட், அப்பளம் என அனைத்தையும் ஒரே சட்டி உபயோகித்து அறைமணி நேரத்தில் செய்து மேடையின் மூலையில் மூடி வைத்துவிட்டு அடுப்படியை சமைத்தது போலவே தெரியாதவாறு சுத்தம் செய்துவிட்டு ஹாலில் வந்து அமர்ந்து ஈஸ்வரன் டீவியில் பார்த்துக்கொண்டிருந்த நியூஸை பார்க்கலானாள். ஒரு மணிநேரம் கழித்து நவீன் வீட்டினுள் “என்ன இன்னைக்கு நம்ம ஆத்துல ரசம் வாசம் வாசல் வரைக்கும் வீசறது. என்ன அப்படி செபெஷல் ரசம் பண்ணிருக்கா அம்மா” என்று கூறிக்கொண்டே நுழைந்தான்.  பின்னாடியே கேட்டுக்கொண்டே வந்த பர்வதம். “எனக்கு ஒன்னும் அப்படி வாசம் வரலையே” என சொல்லிக்கொண்டே நுழைந்தாள். 

மாலை உணவை மிருதுளாதான் செய்தாள் என ஈஸ்வரன் நவீனிடம் சொல்ல பர்வதம் ஈஸ்வரனை முறைத்தாள்.  அனைவரும் இரவு உணவருந்த அமர்ந்தனர். உணவு மிக அருமையாக இருந்ததை அனைவரும் பாராட்டினர் ஆனால் கவின் 

“இந்த உருளையை இன்னும் கொஞ்சம் கூட சாஃப்ட்டா செய்திருக்கலாம் ” என்றான்

“ரசத்துல உப்பு ஜாஸ்தியா இருக்கு எல்லாரும் எப்படி சாப்படரேங்கள்” என்றாள் பர்வதம்

உடனே பதற்றம் ஆனா மிருதுளா ..

“அச்சச்சோ சாரி மா.” என்றதும் நவீன் குறுக்கிட்டு

“நோ நோ இட் ஈஸ் சூப்பர். அம்மா உனக்கு மட்டும் எப்படிமா உப்பு ஜாஸ்தியா இருக்கும்?” என்றதும் மிருதுளாவிற்கு அப்பாடா என்றிருந்தது.

அனைவரும் சாப்பிட்ட பின்னர் அனைத்துப்பாத்திரங்களையும் தேய்த்து வைத்தாள் மிருதுளா‌. அனைவரும் பாயை விரித்து படுக்கலானார்கள் வேலைகளை முடித்ததும் மாடிக்கு செல்லலாமா இல்லை பர்வதம் ஏதாவது சொல்லி கூப்பிடுவாளா என்ற எண்ணத்தில் தயங்கி ஹாலில் நின்றிருந்தாள். நவீனாவது அவளை கூப்பிட்டிருக்க வேண்டும் ஆனால் அவன் பாட்டுக்கு மாடிக்கு சென்றுவிட்டான். கீழே இவர்களும் அவரவர்கள் உறங்க ஆயத்தம் ஆகிக்கொண்டிருந்தனர். மிருதுளா எனும் ஒரு பெண் அங்கு இருந்ததையே கண்டுக்கொள்ளாதது போல அனைவரும் நடந்துக்கொண்டார்கள். சிறிது நேரம் நின்றுப்பார்த்த மிருதுளா மெல்ல அங்கிருந்து நகர்ந்து மாடிக்கு போக முதல் படியில் காலை வைத்ததும் பர்வதம் அழைத்தாள்…மிருதுளா மனதிற்குள்

“இவ்வளவு நேரம் அங்க தான் இருந்தேன் அப்பெல்லாம் ஏதோ நான் இருப்பதே கண்ணுக்கு தெரியாதது போல இருந்துட்டு கரெட்டா கூபிடறா ஹும்…” என்று நினைத்துக்கொண்டே “வந்துட்டேன் மா” என பர்வதம் முன் நின்றாள் 

“நாளைக்கு நவீன் பெரியப்பா ராசாமணி ஆத்துக்கு விருந்துக்கு போகனும் அதனால நல்ல பட்டுப்புடவையா கட்டிண்டு போ சரியா.“

“சரி மா” என்றாள் மிருதுளா

“சரி சரி போய் தூங்கு காலை ல அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்திரிக்கனும் இல்லாட்டி அப்பாவுக்கு பிடிக்காது அப்பறம் சத்தம் போடுவார் சொல்லிட்டேன்” என கூறி போர்வையை இழுத்துப்போர்த்திக்கொண்டாள்.

அப்பாட என பெருமூச்சு விட்டுக்கொண்டே மாடிக்கு வேகமாக சென்றாள் மிருதுளா. 

ஒரு நாளில் இவ்வளவு பதற்றம் அடைந்த நம்ம மிருதுளா இனி ஒவ்வொரு நாளும் எப்படி கடக்க போகிறாள் என்பதை வரும் வாரங்களில் தெரிந்துக்கொள்வோம்.

தொடரும்…..

இருபத்தி எட்டாம் தேதி அதிகாலை மூன்றரை மணிக்கெல்லாம் ராமானுஜம் எழுந்து அனைவரையும் எழுப்பினார். அம்புஜம், வேனு, மிருதுளா, ஈஸ்வரன், பர்வதம், நவீன் எழுந்தார்கள். மடமடவென குளித்து அனைவரும் தயார் ஆனார்கள். அன்று அதிகாலை பெண்வீட்டாருக்கு எந்த வேலையும் இல்லை. அவர்கள் திருமணத்திற்கு தயார் ஆகிக்கொண்டிருந்தனர். நவீன் வீட்டார் வாத்தியார்கள் வந்ததும் விரதத்தில் மும்முரமானார்கள். ஃபோட்டோ கிராஃபர்கள் கேமராவுடன் அங்கும் இங்குமாக க்ளிக் செய்ய தொடங்கினர். 

 விரதம் முடிவதற்குள் அனைத்து சொந்த பந்தங்களும் எழுந்து குளித்து பெண்கள் பட்டுப்புடவை உடுத்தி நகைகள் எல்லாம் அணிந்து தலைநிறைய பூ வைத்து கொண்டார்கள். ஆண்கள் அனைவரும் பட்டு வேஷ்டி சட்டை அணிந்து வந்து சபையில் முன் வரிசையில் அமர்ந்தார்கள். இளவட்டங்கள் புத்தாடை உடுத்தி அந்த கூட்டத்தில் அங்கும் இங்குமாக நண்பர்களுடன் நடந்து பேசிக்கொண்டே இருந்தார்கள். பொடிசுகள் அனைவரையும் அழகாக டிரஸ் பண்ணி மண்டபத்தை விட்டு வெளியே செல்லாமல் அங்கேயே விளையாட அவர்கள் அன்னையர் சொல்ல அங்கும் இங்குமாக ஓடி ஆடி டேய் சதீஷ் என்ன புடி பார்ப்போம்..ஏய் ஆஷா நீ என்ன கண்டுபிடி என குட்டீஸ் லூட்டி அடித்துக்கொண்டிருந்தார்கள். 

நாதஸ்வரமும், தவிலும், மிருதங்கமும் இன்னிசையை தந்தன.

வயதானவர்கள் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து அந்த காலத்துல ஆத்துலேயே தான் கல்யாணம் பண்ணினா என்று கடந்தகாலத்தை நிகழ்காலத்துடன் ஒப்பிட்டு அனைத்து சம்பிரதாயங்களையும் அலசி ஆராய்ந்துக் கொண்டிருந்தனர்.

நவீன் வீட்டார் விரதம் முடிந்ததும் காசி யாத்திரைக்கு தயாராகினர். காசி யாத்திரைக்கு வேண்டிய குடை, கைவிசிறி,  கொஞ்சம் பருப்பு, அரிசி முடிந்த சிறு மூட்டை என அனைத்துப்பொருட்களும் மாப்பிள்ளை ரூமில் வைக்கப்பட்டிருந்தது. நவீனின் மாமா நவீனுக்கு பஞ்சகஜம் கட்டி, மாலையிட்டு அத்தை வசுந்தரா நவீனின் கண்களுக்கு மையிட்டாள். நவீனுடன் அனைவரும் மண்டப வாசலுக்கு வந்தனர். 

காசி யாத்திரை என்றால் என்ன? ஏன் இதை இவர்கள் திருமணங்களில் வைக்கிறார்கள் ? அப்பொழுது சொல்லும் மந்திரங்களின் பொருள் என்ன?  மாப்பிள்ளை தனக்கு திருமண வாழ்வில் இஷ்டமில்லை என்றும் காசிக்கு சென்று வேத பாடங்களை கற்று சன்யாசம் ஏற்க போவதாகவும் முடிவெடுத்து அவர் செல்லும்போது மணமகளின் தந்தை அவரைத் தடுத்து திருமண வாழ்க்கையில் உள்ள சந்தோஷங்களை அவருக்கு எடுத்துறைப்பதோடு மட்டுமல்லாமல் தனது பெண்ணை அவருக்கே மணமுடித்து தருவதாகவும் வாக்களித்து தனது மகனை மாப்பிள்ளைக்கு குடைப்பிடிக்கச் சொல்லி இருவருமாக மணமகனை திருப்பி மண்டபத்திற்குள் அழைத்து வருவதே இந்த காசி யாத்திரை சடங்கின் விளக்கமாகும். 

இவ்வாறு அவர்கள் திரும்பியதும் மணமகளை கீழே வரச்சொல்லி  இருவர் கழுத்திலும் மூன்று மாலைகள் போட்டு மூன்று முறை மாற்றிக்கொள்ள சொல்வார்கள். இதை சற்று விளையாட்டாக மணமகன் மணமகள் இருவரின் தாய்மாமன்களும் அவர்களை தூக்கிக்கொள்ள மாலைகளை மாற்றிக்கொள்ள சொல்வார்கள் ஆனால் இருவரையும் உயர்த்தித் தூக்கிப்பிடித்துக்கொள்வார்கள். சிறிது நேரம் விளையாடிய பின்னர் பெண்ணின் தந்தை கூறியது போலவே இருவர் கைகளிலும் கல்யாண மாலையை கொடுத்து மாற்றிக்கொள்ள சொல்ல அவர்களும் மாலையை மாற்றிக்கொண்டு தனது மகளின் கரங்களை பிடித்து மணமகனின் கரங்களில் கொடுத்து இனி என் மகளுக்கு எல்லாமும் நீங்கள்தான் அவளை நல்லபடியாக பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு என கூறுவார். இதுவே கண்ணிகாதானம் ஆகும்.

மணமகன் மணமகள் கரங்களைப் பிடித்தவாறே இருவரையும் அலங்காரம் செய்த ஊஞ்சலில் அமரச்செய்து ஊஞ்சல் பாடல்களை பெண்கள் அனைவரும் பாட, சுமங்கலிகள் அவர்களுக்கு பச்சப்பொடி சுற்ற பாலும் பழமும் மணமக்கள் கைகளில் கொடுத்து பின் மாங்கல்ய தாரணத்திற்கு மண்டபத்திற்குள் அழைத்துச்சென்றனர். 

இந்த ஊஞ்சல் வழக்கத்தில் உள்ள சூட்சுமம் என்னவென்றால்…திருமண வாழ்க்கையில் ஊஞ்சல் ஆடுவது போல பல ஏற்ற தாழ்வுகள் இருக்கும் அதை இருவருமாக ஒன்றாக இணைந்து ஒற்றுமையாக இன்று கரங்கள் இணைந்து இருப்பது போலவே இருந்து சரிசெய்து வாழ்வில் சிறந்து விளங்க வேண்டும் என்பது தான். 

அனைவரும் ஊஞ்சல் முடிந்து மண்டபத்திற்குள் வந்தனர். இருவீட்டாரும் அழைப்பு விடுத்திருந்த அனைத்து சொந்தங்களும் நண்பர்களும் வந்திருந்து மண்டபம் முழுவதும் மக்கள் நிறைந்து வழிந்தனர். இரண்டு வீடுகளிலும் இது முதல் கல்யாணம் ஆகையால் அன்று விடுமுறை இல்லாத போதும் அழைத்த அனைவரும்  வந்திருந்தனர். கல்யாண மேடையில் பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் இருந்தனர். இருவீட்டாரின் சில முக்கிய பெரியவர்களும் இருந்தனர்.

வேதங்கள் முழங்க நாதஸ்வரம் இசைக்க நவீன் மிருதுளாவிடம் கல்யாண கூரை புடவையைக்கொடுத்து கட்டிவரச்சொல்ல மிருதுளாவும் உள்ளே புடவை மாற்ற சென்றாள். அப்பொழுது மேடையில் மாப்பிள்ளைக்கு ராமானுஜமும் அம்புஜமும் பாத பூஜை செய்தனர். 

மிருதுளாவுடன் அனைத்து நவீன் வீட்டார் மாமிகளும் உள்ளே சென்று ஒன்பது கஜப்புடவையை கட்டிவிட்டு (அது சரியாகவும் கட்டவில்லை) மேடைக்கு அழைத்துவந்தனர். பின் ராமானுஜம் மடியில் அமர்ந்தாள் மிருதுளா. பர்வதத்தின் தம்பி சும்மா இல்லாமல் “அப்பா பாவம் கொஞ்சம் பார்த்து உட்காருமா மிருதுளா” என்று கூறி கெக்க புக்கே என சிரிக்க பெண் வீட்டார்களுக்கும் மிருதுளாவிற்கும் துளியும் பிடிக்கவில்லை. அவருக்கு யாரும் அந்த நேரத்தில் பதில் குடுக்கவும் போகவில்லை. 

எல்லோரும் மாங்கல்ய தாரணத்திற்காக காத்திருந்தனர். மந்திரங்கள் ஒலிக்க மேளதாளங்கள் முழங்க நவீன் மிருதுளா கழுத்தில் தாலியின் இரண்டு முடிச்சுப் போட மூன்றாவது முடிச்சை அவனின் பெரியப்பா மகள் நாத்தனார் முடிச்சுப்போட மண்டபத்திலுள்ள அனைவரும் எழுந்து மணமக்கள் மேல் பூக்களையும் அட்சதையும்‌ போட்டு வாழ்த்த நமது நவீன் மிருதுளா திருமணம் இனிதே நடந்தது. அம்புஜத்திற்கும் ராமானுஜத்திற்கும் கண்கள் களங்கியது. இருவீட்டாரும் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள். ஆத்துக்கு மாட்டுப்பொன் வந்தாச்சா? உங்க ஆத்துக்கு மாப்பிள்ளை வந்தாச்சா என மகிழ்ச்சியாக விசாரித்துக்கொண்டனர். அனைவருக்கும் ஜூஸ் பரிமாறப்பட்டது. நவீனுக்கும் மிருதுளாவிற்கும் ஜூஸ் கொடுககப்பட்டது. 

மாங்கல்ய தாரணம் ஆனதும் மந்திரங்கள் சொல்லிக்கொண்டே மற்ற சடங்குகள் நடைப்பெற்றுக்கொண்டிருந்தது அப்பொழுது மேடையில் நவீன், மிருதுளா மட்டுமே இருந்தனர். அனைத்து சொந்தங்களும் மேடைவிட்டு கீழே இறங்கினர். நவீன் மற்றும்  மிருதுளாவின் பெற்றோர்கள் வந்த அனைவரையும் வரவேற்ப்பதில் மும்முரமானார்கள்.  திருமணத்திற்கு வந்திருந்த பெண்வீட்டார் வலதுபுறமும் மாப்பிள்ளை வீட்டார் இடதுபுறமும் என இரு வரிசையில் பலர் பரிசுப்பொருட்களுடனும், பணத்துடனும் மொய் செய்வதற்காக பொறுமையாக நின்று அவர்களுக்கு கொடுத்து வாழ்த்தி கல்யாண சாப்பாடு சாப்பிடுவதற்க்காக கீழே டைனிங் ஹாலுக்குச் சென்றனர். 

காலைமுதல் ஒன்றுமே சாப்பிடாமல் வெரும் பாலும் பழமும் ஜூஸும் மட்டுமே அருந்திய நவீனுக்கும் மிருதுளாவிக்கும்

தனியாக ஒரு டேபிளில் இரண்டு கோலமிட்டு அதன் மேல் இரண்டு வாழை இலை போட்டு அதில் சாப்பாடு பரிமாறப்பட்டது. சொந்தங்கள் நண்பர்கள் அவர்களை சுற்றிக்கொண்டு இருவரையும் கலாயித்துக் கொண்டிருந்தனர். இருவரையும் ஒருவரொக்கொருவர் ஊட்டிவிடும் படி அனைவரும் சொல்ல நவீன் முதலில் மிருதுளாவிற்கு லட்டு ஊட்டிவிட்டான் பின் மிருதுளா நவீனுக்கு ஜாங்கிரி ஊட்டிவிட அனைவரும் கைத்தட்டினார்கள். மத்திய கல்யாண சாப்பாடு ஆன பின் மண்டபம் சற்று காலியானது ஆம் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இருந்தனர் மற்ற அனைவரும் அவரவர் வீடுகளுக்கு சென்றனர். 

நவீனும், மிருதுளாவும் அவரவர் ரூமுக்குள் சென்று ஆடைகளை மாற்றிக்கொண்டனர். கிருஹப்ரவேசம் என பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டார் அறைக்கும் மாப்பிள்ளைவீட்டார் பெண்வீட்டார் அறைக்கும் சென்று மீண்டும் மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுத்து பின் வெற்றிலைப்பாக்கு, பூ, பழம், ரவிக்கைத்துணி என சுமங்கலிகளுக்கு இருவீட்டிலும் கொடுக்கப்பட்டது. இவை அனைத்தும் முடிந்ததும் அனைவரும் சற்று ஓய்வெடுத்தார்கள். அப்பொழுது அம்புஜம் ரூம் கதவு தட்டப்பட்டது. “யாரது” என கேட்டுக்கொண்டே கதவை திறந்தாள். வெளியே பர்வதம் நின்றுக்கொண்டிருந்ததைப்பார்த்து 

“வாங்கோ மாமி. உள்ள வாங்கோ” என்றழைக்க அதற்கு பர்வதம் சத்தமாக 

“பருப்பு தேங்காய் ரெண்டிருக்கனும் ஆனா ஒன்னு தான் எங்க ரூமுக்கு வந்திருக்கு” என்று கேட்க

“இல்லையே மேடையிலிருந்த எல்லாத்தையும் உங்க ரூம்ல வைக்கச்சொன்னேன். அவாளும் வச்சானுட்டு சொன்னாலே. இருங்கோ பார்க்கறேன்” 

என அம்புஜம் மேடைக்குச்சென்று பார்த்தாள் அங்கு மேடையின் ஓரமாக ஒரு செட் பருப்பு தேங்காய் வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்துக்கொண்டு வந்து பர்வதம் கையில் கொடுத்து…

“சாரி மாமி அவா மேடை ஓரமா வச்சிருக்கா. கவணிக்கலை போல. இதாங்கோ” என்று கூறி கொடுத்தாள் 

அதை பர்வதம் வாங்கிக்கொண்டாள். இதை காரணமாக வைத்து வம்பிழுக்கப்பார்த்து வடிவேலு மாதிரி வடபோச்சே என்ற ரியாக்ஷனுடன் அங்கிருந்து சென்றாள்.

மாலை நாலு  மணி ஆனதும் அனைவருக்கும் காபி ஈவ்னிங் ஸ்நாக்ஸ் பரிமாறப்பட்டது. மிருதுளா நலங்குக்கு ரெடியானாள். ஒரு தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கு பழம் எல்லாம் வைத்து  மிருதுளா நவீன் ரூமிற்கு சென்று நலங்கிற்கு அழைத்தாள் அப்பொழுது நவீனின் சித்திகள்

 “ஒரு பாட்டு பாடினா தான் எங்க நவீன் வருவான்” என்று சொல்ல எந்த வித தயக்கமுமின்றி மிருதுளாவும் பாட்டு பாடினாள். “சூப்பரா பாடர மிருது” என்றனர்.

நெருங்கிய சொந்தகளும் நண்பர்களும் ஒன்றாக மண்டபத்தின் நடுவில் விரிக்கப்பட்டிருந்த ஜமுக்காளத்தில் இருவீட்டாரின் பெண்கள் வட்டமாக அமர்ந்தனர். ஆண்கள் அனைவரும் அவர்களைச்சுற்றி நாற்காலியில் அமர்ந்தார்கள். நடுவிலே எதிர் எதிராக நவீனும் மிருதுளாவும் இரண்டு அணிகளோடு அமர்ந்திருந்தனர். அழகிய பாட்டுடன் நலங்கு ஆரம்பமானது. அப்பளம் உடைத்தல், தேங்காய் உருட்டுதல், அரிசி தறேன் பருப்பு தருவியா என்று கேலிச் செய்தல், அந்தாக்ஷரி எனப்படும் பாட்டுக்கு பாட்டு என்று ஒரே சிரிப்பும் சந்தோஷமுமாக நடந்தேறியது நம்ம மிருதுளா நவீன் நலங்கு. இருவரையும் ஒன்றாக அமரச்செய்து ஆரத்தி எடுத்தனர். 

அந்த காலத்தில் பெரும்பாலும் அரேஞ்ஜ் மேரேஜாக தான் இருந்தது. அத்தகைய கல்யாணத்தில் மணமகனும் மணமகளும் அவ்வளவாக ஒருவருக்கொருவர் பரிட்சயமாகாதவர்கள் என்பதால் இப்படி நலங்கு என சில விளையாட்டுகளை வைத்து அவர்களுக்குள் (ஆங்கிலத்தில் இதை – the ceremony where the bride and groom break the ice and get along என்பார்கள்)  நெருக்கத்தையும், ஒற்றுமையையும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையையும் ஏற்படுத்தினார்கள் நமது முன்னோர்கள். ஆனால் இன்றைக்கு இது ஒரு கேலிக்கூத்தாகிவிட்டது என்றால் தவறில்லை என நினைக்கிறேன். 

அனைவரும் இரவு சாப்பாடு முடிந்ததும் நவீனையும், மிருதுளாவையும் சாந்தி முஹூர்த்த ரூமிற்குள் அனுப்பி விட்டு வெளியே கும்மிப்பாட்டு பாடி கும்மியடித்து எல்லோரும் அவரவர் ரூமில் உறங்கச் சென்றனர். சீட்டுக்கச்சேரி கும்பல் மீண்டும் சீட்டாட துவங்கியது. அம்புஜம் காலை முதல் அங்கும் இங்குமாக ஓடியாடியதில் களைத்திருந்தாலும் மிருதுளாவின் பெட்டியை அடுக்கி அவளது புடவைகள் நகைகள் எல்லாவற்றையும் சரிபார்த்து தனியாக மற்றொரு பெட்டியில் அடுக்கி மறுநாள் மண்டபத்தை காலி செய்ய வேண்டுமே என அவர்கள் ரூமில் ராமானுஜம், வேனு எல்லாரும் அவிழ்த்துப்போட்ட துணிகளை மடித்து அவரவர் சூட்கேசில் போட்டு மறுநாள் போட்டுக்கொள்ள வேண்டி டிரெஸ்ஸை மட்டும் நால்வருக்கும் எடுத்து வைத்து விட்டு எல்லாவற்றையும் பேக் செய்து அவள் உறங்கும் போது மணி இரண்டரை ஆனது. அங்கே பர்வதமும் இதே போல அவர்கள் ரூமிலிருந்த துணிகளை எல்லாம் அவரவர் சூட்கேசில் போட்டு பேக் செய்தாள்.

இவ்வாறு பலர் தடுக்க எண்ணியும் அவைகளை எல்லாம் சாம்பலாக்கி நவீனுடன் மிருதுளாவை கைகோர்க்க வைத்த அம்புஜம் நம்பும் அந்த அம்பாளின் அடுத்த விளையாட்டு தான் என்ன?  எதார்த்தமான, சூது வாது தெரியாத வெகுளிபெண்ணான நம்ம மிருதுளா துளியும் உண்மை இல்லாத, சூது வாது நிறைந்த குடும்பத்தில் அதுவும் ஆகாத மருமகளாக நுழைந்திருக்கிறாள். என்னவெல்லாம் அவளுக்கு காத்திருக்கிறதோ? நவீன் அவளுக்கு பக்கத்துணையாக இருப்பானா?  இப்படி இருக்கும் மிருதுளா மாறுவாளா? என்பதைப் பற்றி வரும் நாட்களில் படித்து தெரிந்துகொள்ளலாம்.

எனது அழைப்பை ஏற்று மிருதுளா நவீன் திருமணத்திற்கு வருகைதந்த வாசகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

தொடரும்….

இருபத்தி ஏழாம் தேதி காலை சீதா கல்யாண வைபோகமே ராம கல்யாண வைபோகமே என்ற பாடலை வ்ரதம் மேற்கொண்ட கல்யாண பெண்ணான நமது மிருதுளாவிற்கு ஆரத்தி எடுத்துக்கொண்டே பாடினர் பரிமளமும், மேகலாவும். பின் மிருதுளாவின் உறவுக்காரர்கள் அனைவரும் சேர்ந்து ஒன்றாக காலை டிபன் அருந்தினார்கள். 

வ்ரதம் என்பது திருமணத்தின் முன்தினம்  மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் ஏற்றுக்கொண்டு  கைகளில் மஞ்சள் தடவிய கயிறு கட்டி பிரம்மச்சரியத்தை அன்றுடன் முடித்து கிரஹஸ்த்தர்களாக மாறுவதே இந்த சடங்கின் அர்த்தம். இந்த சடங்கு முடிந்தால் மணப்பெண் மணமகன் இருவரும் வீட்டை விட்டு திருமணம் முடியும் வரை வெளியே செல்லக்கூடாது ஆகையால்தான் பெரும்பாலும் வ்ரதம் மண்டபத்தில் திருமணத்திற்கு முன்தினம் செய்வது வழக்கத்தில் உள்ளது. சில நேரம் மாப்பிள்ளை திருமணத்தினத்தன்று விடியற்காலையிலும் மேற்க்கொள்வர்.

இருபத்தி ஏழாம் தேதி காலை உணவு ஆன பின் சிலர் ஊரைச் சுற்றி பார்க்க சென்றனர். ஒரு கூட்டம் சீட்டு கச்சேரியில் மூழ்கினர். ஒரு சிலர் அனைவரையும் நலம் விசாரித்துக் கொண்டும் பழங்கதைகளை அசைப்போட்டுக்கொண்டும் வட்டமாக அமர்ந்திருந்தனர். மிருதுளாவும் அம்புஜமும் அவர்கள் அறையில் கொண்டுவந்த பெட்டிகள் நகைகள் எல்லாவற்றையும் பத்திரமாக அடுக்கி வைத்துவிட்டு வெளியே வந்து அனைவருடனும் பேசிக்கொண்டிருந்தார்கள். வேனுவும் ராமானுஜமும் சீர் ஜாமான்களை ராமனுஜம் அட்டைப்பெட்டியிலிருந்து எடுத்துக்கொடுக்க அவற்றை அழகாக வரிசையாக அடுக்கி வைத்தான் வேனு. 

அம்புஜத்திடம் அவள் தங்கையின் கணவனின் ஒன்னு விட்ட மாமா ..

“ஏம்மா அம்புஜம் இப்பத்தான் கேள்விப்பட்டேன் கல்யாண புள்ளான்டான் அவா ஆத்த மூத்தப்புள்ளையாமே!!“

“ஆமாம் மாமா ஏன் அதுக்கென்ன இப்போ?”

“நம்ம மிருதுளாவும் நம்ம ஆத்த மூத்தப்பொன்னு“

“ஆமாம். சரி“

“இல்லை மூத்த புள்ளைக்கு மூத்த பொன்னை கல்யாணம் பண்ணப்டாதுனு சொல்லுவா அதுதான் நீ எப்படி ஒத்துண்ட ?”

“ஓ அப்படியா எனக்கு அதெல்லாம் தெரியாது மாமா அதுவும் இல்லாம இதை இது வரைக்கும் யாருமே சொல்லலையே!!! இனி ஒன்னும் செய்ய முடியாதே. எல்லாம் அந்த பகவதி பார்த்துப்பள். அவ மேல பாரத்த போட்டுதான் இவ்வளவு ஏற்பாடுகளும் பண்ணிருக்கோம் அதனால எல்லாம் அவள் செயல். சரி மாப்பிள்ளை ஆத்துக்காரா எல்லாம் வர நேரமாச்சு நான் போய் சாப்பாடு எல்லாம் ரெடி ஆயாச்சானு ஒரு எட்டு பார்த்துட்டு வந்துடறேன்.“

என்று கூறி அங்கிருந்து நேராக மண்டப டைனிங் ஹாலுக்குச்சென்று எல்லாம் தயாராக உள்ளதா என்று விசாரிப்புடன் ஒரு க்ளான்ஸ் பார்த்துக்கொண்டிருக்கையில் திருமண கான்ட்ராக்ட் தலைவர்  மாப்பிள்ளைவீட்டார் வந்ததும் சம்பந்தி கையில் கொடுக்க வேண்டிய தெரட்டிப்பாலை ஒரு அழகான டப்பாவிலிட்டு அம்புஜத்திடம் கொடுத்து …

“மாமி ஏற்பாடெல்லாம் நன்னாருக்கா. உங்களுக்கு திருப்தியாருக்கா.“

“இதுவரைக்கும் எல்லாம் நன்னா இருக்கு. மாப்பிள்ளை ஆத்துக்காரா வந்ததும் அவாள எல்லாரையும் நன்னா கவனிச்சுக்கோங்கோ. எந்த குற்றமும் குறையும் அவா சொல்லிடப்டாது அது உங்க கையில் தான் இருக்கு“.

“கவலைய விடுங்கோ மாமி. ஒரு குறையுமில்லாம பேஷா நடத்திக்கொடுத்திடுவோம் சரி நான் பந்திக்கு எல்லாத்தையும் ரெடி பண்யுடறேன்“

டைனிங் ஹால் கீழே உள்ளது. திருமண மண்டபம் டைனிங் ஹாலுக்கு மேலே உள்ளது. அம்புஜம் கீழே எல்லாம் ரெடி என்று திருப்தி ஆனபின் மேலே சென்று மிருதுளாவை புடவை மாற்றி தயாராக சொல்லி தானும் தயார் ஆனாள். 

வேனு வேகமாக மேலே வந்து 

“அம்மா அம்மா அவா எல்லாரும் வந்தாச்சு. சீக்கிரம் கதவ தொறந்து வா மா. அப்பா உன்னை கூட்டிண்டு வரச்சொன்னா“

என்றதும் கதவை திறந்துக்கொண்டு வெளியே வந்தாள் அம்புஜம். மிருதுளாவை ரூமிலேயே இருக்கச்சொல்லிவிட்டு பெண்வீட்டார் அனைவரும் மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்க்க கீழே சென்றனர். மாப்பிள்ளை வீட்டு வேன்களும், கார்களும் சர் சர்ரென வந்து நின்றது. அனைவரும் இறங்கி மண்டப வாசலுக்கு சென்றதும் அம்புஜத்தின் மன்னியும், ராமானுஜத்தின் சித்தியுமாக மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுத்தனர். அம்புஜம் தன் கையில் வைத்திருந்த தெரட்டிப்பால் டப்பாவை பர்வதத்திடம் கொடுத்து வரவேற்றாள். வேனு மாப்பிள்ளைக்கு மாலையிட்டு, சந்தனம், குங்குமமிட்டு பன்னீர் தெளித்து உள்ளே அழைத்தான். ராமானுஜம் ஈஸ்வரனுடன் கைக்குலுக்கி வாங்கோ என்று அனைவரையும் வரவேற்றார்கள். அனைவரும் வந்ததும் மேலே சென்று அவரவர் ரூமுகளில் பெட்டிகளை வைத்துவிட்டு மிருதுளாவைப்பார்க்காத நவீன் வீட்டார் அவளை காண சென்றனர். மிருதுளா ரூம் கதைவை தள்ளிக்கொண்டே உள்ளே சென்றனர் பர்வதத்தின் டில்லி தங்கைகள் லட்சுமியும், லலிதாவும். மிருதுளாவைப்பார்த்ததும் லட்சுமி..

“ஹேய் இவ நம்ம பர்வதம் சொன்னா மாதிரி குண்டெல்லாம் இல்லையே அவ ஹைட்டுக்கு ஏத்த மாதிரிதான் இருக்கா“

கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாத மனிதர்கள். இத்தகைக்கு நன்றாக படித்து வேலைக்கு செல்லும் பெண்மணிகளாம். ஒரு பெண்ணை முதன்முதலில் பார்க்கும் போது எப்படி பேச வேண்டும் என்று தெரியாத அளவுக்கு மக்குகள் இல்லை..பர்வதம் ஏத்திவிட்டதை அப்படியே கக்கிவிட்டு சங்கடப்படுத்த வந்தவர்கள் போலவே பேசினர். அவர்களுக்கும் பெண் குழந்தைகள் இருப்பதை மறந்து போனார்கள் அடுத்தவர் பெற்று வளர்த்த பெண்ணை பழிக்கும் ஜோரில். பர்வத்துடன் கூட பிறந்தவர்களாயிற்றே.

சீர் சாமான்கள் அடுக்கிவைத்திருந்த ரூமில் அழகான அலங்கார விளக்குள் ஆன் செய்யப்பட்டிருந்தது. அதில் வேனுவின் கைவனம் ஜொலித்தது. மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் வாய் பிளந்த வண்ணம் அனைத்தையும் அவரவர் கண்களாலேயே ஸ்கேன் செய்தனர். ஈஸ்வரனின் அக்காக்கள் சொர்னமும் வரலட்சுமியும் பேசிக்கொண்டனர்….

“பர்வதத்திற்கு வந்த சம்பத்திகள் எல்லாத்தையும் பார்த்து பார்த்து அழகா பண்ணிருக்கா..இந்த பர்வதம் வம்பேதும் செய்யாமல் இருந்தால் நல்லாருக்கும்“

“அதச் சொல்லு சொர்னம் அக்கா. அவளால சும்மா இருக்க முடியாதே ஏதாவது செய்வள். எனக்கு அந்த மிருதுளா பொன்ன நெனைச்சா பாவம்னு தோனறது. நாம அந்த பொன்னுக்காக வேண்டிப்போம். வேறென்ன செய்யறது.“

நவீன் வீட்டார் அனைவரும் அவரவர் ரூமில் செட்டில் ஆனதும் ராமானுஜமும் அம்புஜமும் வேனுவும் சென்று அவர்கள் அனைவரையும் மதிய உணவு சாப்பிட அழைப்பு விடுத்தப் போது பர்வதம் அவர்கள் அறைக்குள் வரும்படி சொல்ல இவர்கள் உள்ளே “நாழி ஆகறது சாப்பிட கூட்டிண்டு போக வந்தோம்”  என்று கூறிக்கொண்டே சென்றனர். அப்போது ஒரு நவரத்தின ப்ரேஸ்லெட் ஒன்றை எடுத்து பர்வதம் அவர்களிடம் காண்பித்து…

“இது உங்க பொன்னு மிருதுளாவிற்காக என் புள்ள கவின் குவைத்திலிருந்து வாங்கிண்டு வந்திருக்கான் பாருங்கோ“

அம்புஜம் பார்த்துவிட்டு 

“ரொம்ப அழகா இருக்கு மாமி. ஆமாம் எங்க யாரையுமே காணம் நீங்க மட்டும் இருக்கேங்கள்” என்று கேட்க அதற்கு பர்வதம்

“எல்லாரும் பக்கத்து ரூம்ல இருக்கா. சரி வாங்கோ இத காட்டத்தான் கூப்பிட்டேன். அவாளையும் அழைச்சுண்டு வரேன். நீங்க முன்னாடி போங்கோ“

எல்லாருமாக அமர்ந்து முதல் பந்தி பரிமாறப்பட்டது. அனைவரும் சாப்பாடு சூப்பர் என்று ரசித்து ருசித்து சாப்பிட்டனர். அடுத்த பந்தியில் மீதமிருந்த நவீன் வீட்டாரும் மிருதுளா வீட்டாரும் உணவருந்த அமர்ந்தனர். அம்புஜம் பங்கஜத்தை அழைத்து மிருதுளாவையும் சாப்பிட அழைத்து வரச்சொன்னாள். இது சாப்பிட்டு கை கழுவுவதற்கு எழுந்த நவீன் காதில் விழ அவன் மெதுவாக கை கழுவச்சென்றான். பின் அங்கிருந்தவர்களிடம் சற்று பேசிக்கொண்டிருப்பது போல மிருதுளா வரவுக்காக காத்திருந்தான். மிருதுளாவும் பங்கஜமும் வந்தார்கள். உடனே நவீன் ஹாய் மிருதுளா என்றான் அவளும் ஹாய் என்றாள். பங்கஜம் கிண்டலாக…

“சரி சரி நாளையிலிருந்து பேசத்தான் போரேள் அதுக்கும் கொஞ்சம் பாக்கி வச்சுக்கோங்கோ ரெண்டு பேரும்“

உடனே நவீன்..

“ஒரு ஹாய் தானே சொல்லிண்டோம். நீங்க சொல்வதும் சரிதான். நாங்க நாளையிலிருந்தே பேசிக்கறோம். ஓகே வா.” என்றதும் பங்கஜம் மீண்டும்

“நாளையிலேர்ந்து நீங்களாச்சு உங்க ஆத்துக்காரியாச்சு. அதெல்லாம் சரி நான் ஒன்னு கேள்ளிப்பட்டேன் அதப்பத்தி உங்கள்ளட்ட கேக்களாமா?”

“ஓ எஸ் தாராளமா. அப்படி என்ன கேள்விப்பட்டேங்கள் சொல்லுங்கோ நானும் தெரிஞ்சுக்கறேன்“

“என்ன எங்க மிருதுவ கூட்டிண்டு போகமாட்டேன்னு சொன்னேங்களாமே!! உங்களோட வாழரத்துக்கு தானே கல்யாணம் பண்ணி வைக்கறோம் இங்கேயே விட்டுட்டுப் போறத்துக்கா எங்க அக்காவும் அத்திம்பேரும் இத்தர கஷ்ட்டப்பட்டு உங்களுக்கு மிருதுளாவ கல்யாணம் பண்ணி வைக்கறா?!”

“அவளுக்கு தான் ஏதோ பரீட்சை இருக்குனுட்டு ஒரு கன்ஃப்யூஷன் ஆச்சு. நான் அப்படி ஒன்னுமே சொல்லலையே“

“ஸோ அவள உங்ககூட கூட்டிண்டு போறதுல உங்களுக்கு ஒரு ப்ராப்ளமும் இல்லையா“

“அஃப்கோர்ஸ் எஸ் எனக்கு நோ இஷூஸ் அட் ஆல். நான் வீடு கூட பார்த்தாச்சு. டிகெட் மட்டும் தான் எடுக்கனும்“

“ஏன் இன்னும் டிக்கெட் எடுக்கலை?”

“இதோ எடுக்க என் பெரியம்மா பையனிட்ட சொல்லிருக்கேன் நாளைக்கு எடுத்துண்டு வருவான்

“அப்போ இப்ப வரைக்கும் கூட்டிண்டு போற ஐடியாவே இல்லை ம்ம்ம்ம்… நாளைக்கு டிக்கெட் வந்தாதான் நான் நம்புவேன்“

“ஓகே ஓகே அப்படியே ஆகட்டும். “

என்று கூறி இருவரும் சிரித்துக்கொண்டிருக்கையில் நவீனை அவன் அத்தை மகன் வந்து பர்வதம் அழைத்துவரச்சொன்னதாக  அழைத்தான். பங்கஜமும்…

“சாரி உங்கள ரொம்ப நேரம் பிடிச்சுண்டுட்டேன். சரி நீங்க போய் உங்க வேலைகளைப்பாருங்கோ நானும் போய் சாப்பிடட்டும் ஆல்ரெடி மணி இரண்டரை ஆயிடுத்து.“

“ஓகே பை ஃபார் நௌ“

அனைவரும் மத்திய உணவு அருந்திய பின் ஓய்வெடுத்தனர். மிருதுளாவும் அம்புஜமும் சற்று நேரம் படுத்துக்கொண்டனர். சற்று கண் அசந்ததும் …டக் டக் டக் என்று கதவை தட்டும் சத்தம் கேட்டு எழுந்தாள் அம்புஜம். அவர்கள் ரூம் வாசலில் மிருதுளாவிற்கு மேக்அப் போட இருவர் வந்திருந்தனர். 

 அப்பொழுதுதான் டைமைப்பார்த்தாள் அம்புஜம் மணி மூன்றரை ஆகியிருந்தது. மிருதுளாவை எழுப்பி குளித்துவிட்டு வரச்சொல்லி மேக்அப் போட வந்தவர்களை ரூமிற்குள் அமரவைத்துவிட்டு அவர்களுக்கு காபி கொடுக்க சொல்லி மிருதுளா மாலை கட்ட வேண்டிய புடவை நகை எல்லாவற்றையும் எடுத்துக்கொடுத்து மிருதுளாவை தயார் படுத்தச் சொல்லிவிட்டு தான் தயாராகிக்கொண்டிருக்கையில் நவீனின் அம்பிகா மாமி ஒரு பட்டுப்புடவையை எடுத்து வந்து அம்புஜத்திடம்…

“மாமி இந்தாங்கோ நிச்சயதார்த்தப்புடவை பர்வதம் அக்கா உங்களாண்ட கொடுக்கச் சொன்னா“

“இத ஏன் இப்ப தறேங்கள். சபேல நிச்சயதார்த்தம் சமையத்துல தானே தரனும்“

“அதெல்லாம் எனக்கு தெரியாது மாமி கொடுக்கச்சொன்னா குடுத்துட்டேன் நான் வரேன் மாமி“.

“சரி நான் சம்பந்தி மாமிகிட்டேயே கேட்டுக்கறேன். அதை அப்படியே மிருதுளாட்ட கொடுத்திடுங்கோ. மிருது அத மாமிகிட்டேருந்து வாங்கிக்கோமா.“

என்றாள். மிருதுளாவிற்கு மேக்அப் போட்டுக்கொண்டிருந்ததினால் அம்புஜத்தின் தங்கை கோமளம் அந்தப்புடவையை அம்பிகாவிடமிருந்து வாங்கி ஷெல்ஃபில் வைத்தாள். அம்புஜம், ராமானுஜம், வேனு மூவரும் ஜானவாசம் எனும் மாப்பிள்ளை அழைப்பிற்கு  தயாராகி அனைவருக்கும் மாலை டிபன் காபி எல்லாம் சரியாக பரிமாரப்பட்டதா என்றெல்லாம் விசாரித்துக்கொண்டிருந்தனர். 

ஜானவாஸத்திற்கு அனைவரும் அருகே உள்ள கோவிலுக்கு செல்ல விறுவிறுப்பாக கிளம்பிக்கொண்டிருக்கையில் பர்வதம் மெல்ல பூனைப்போல மிருதுளா அறைக்குச்சென்று…

“என்ற மிருதுளா மேக்அப் நடக்கறதா..டைமுக்கு ரெடி ஆயிடுவியோனோ!“

“ஆயிடுவேன் மா. ஜஸ்ட் புடவைதான் கட்டனும். நீங்கள் எல்லாரும் கோவில் போயிட்டு வரத்துக்குள்ள ரெடி ஆகிடுவேன்!“

“சரி அம்பிகா ஒரு புடவை குடுத்தாளா.“

“ஆமாம் மாமி நிச்சயதார்த்தப் புடவைனுட்டுத் தந்துட்டுப்போனா” என்றாள் கோமளம்.

“ஓ நீங்களும் இங்க தான் இருக்கேளா நான் கவணிக்கலை. எப்படி இருக்கேங்கள்? சரி எனக்கு நாழி ஆகறது அந்தப் புடவையை கொஞ்சம் தாங்கோ நான் நிச்சயத்தப்போ சபேல வைக்கனும்“

“அதத்தான் அம்புஜமும் அம்பிகா மாமிகிட்ட சொன்னா ஆனா நீங்கதான் குடுத்துட்டு வரச்சொன்னதா இல்லையா சொன்னா“

“ஆமாம் ஏதோ ஒரு எண்ணத்துல சொல்லிட்டேன் சரி தாங்கோ நான் போய் மத்த ஏற்பாடெல்லாம் பண்ணனும்“

“இந்தாங்கோ மாமி அந்த புடவை” என்று கோமளம் குடுத்ததும் ரூமைவிட்டு வெளியேறினாள் பர்வதம். அவளைப்பார்த்த அவளது அக்கா …

“என்ன பர்வதம் உன் மாட்டுப்பொன் ரூமிலேருந்து கையில ஏதோ புடவ டப்பா மாதிரி எடுத்துண்டு போறாய்“

“அது ஒன்னுமில்லை ரமணி. சரி நம்ம ஆளுகள் எல்லாரும் கோவிலுக்கு போக ரெடி ஆகிட்டாளான்னு ஒன்னுப் பார்த்துட்டு வாயேன்” 

என ரமணியை அனுப்பிவைத்துவிட்டு அந்த புடவையை அவள் ரூமிலுள்ள பீரோவில் வைத்துப்பூட்டினாள் பர்வதம்.

அவள் புடவையை அவசரமாக வாங்கிக்கொண்டுப்போனது கோமளத்திற்கு சந்தேகமாக இருந்தது. ஆனால் அவள் அதைப்பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை ஏனெனில் எப்படியும் நிச்சயதார்த்தம் சமயத்தில் சபையில் வைத்து தரத்தானே போகிறார்கள் என்று விட்டுவிட்டாள் அதை யாரிடமும் அவள் சொல்லவில்லை. 

 மண்டபத்தில் மிருதுளாவும் அவளுக்கு துணையாக கோமளமும்  மட்டும் இருந்தனர். மற்ற அனைவரும் மண்டபத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவிலில் இருந்தனர். அங்கிருந்துதான் மாப்பிள்ளை அழைப்பு எனப்படும் ஜானவாசம் தொடங்கவுள்ளது. 

கோவிலில் அர்ச்சனை செய்துவிட்டு அன்று நிச்சயதார்த்த்திற்கு நவீன் எடுத்து வந்த கோட் சூட்டை, மாலை அனைத்தயும் தாம்பாளத்தில் வைத்து ராமானுஜமும் அம்புஜமும் கொடுத்தனர் அதை வாங்கிக்கொண்டு கோவிலில் ஒரு மறைவான இடத்தில் சென்று மாற்றிக்கொண்டு வருவதர்க்குள் அனைத்து சொந்த பந்தங்களும் வட்டமாக ஒரு பாதி பெண்வீட்டாரும் மறு பாதி மாப்பிள்ளை வீட்டார் என அமர்ந்திருந்தனர். அங்கே நவீனையும் அமரவைத்தனர். 

வேனுவும் ஜம்முனு ஒரு கோட் சூட் போட்டுக்கொண்டு தனது அக்காவிற்கு கணவராக போகும் நவீனுக்கு மாலை போட்டு பூச்செண்டை கையில் கொடுத்து தங்க சேயின் ஒன்றை போட்டுவிட்டான். வேனு சேயின் போட்டதும் பர்வதம் தனது இரண்டாவது மகனாகிய கவினைப்பார்த்து கண் அசைத்தாள்.

 என்னென்ன விளங்க வில்லை அல்லவா. வாருங்கள் அன்று காலை நவீன் வீட்டிற்கு சென்று என்ன நடந்தது என்பதை உங்கள் முன் தோன்றவிருக்கும் சுழல்களின் நடுவில் பார்த்துவிட்டு மறுபடியும் கோவிலுக்கு வருவோம். அன்று காலை நவீன் வீட்டில் அனைவரும் மண்டபத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்தனர் அப்பொழுது குவைத் கவின் அனைவர் முன்னும் நவீனுக்கு சேயின் போட்டு விட்ட சிறுது நேரத்தில் பர்வதம் நவீனிடம் சென்று..

“நவீன் அந்த செயினை கழற்றிக்கொடுத்துவிடு” என்றாள் அதற்கு நவீன் ஏன் என்று கேட்க 

“உனக்கு மண்டபத்தில் அவர்கள் செயின் போடுவார்கள் அதனால் இதை என்னிடம் கழற்றித் தந்துவிடு”  என்றதும் நவீனுக்கு பிடிக்கவில்லை ஆனாலும் அந்த பேச்சை அதற்கு மேல் வளரவிட விருப்பமில்லாமல் கழற்றிக்கொடுத்துவிட்டான். இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த கவினும் எந்த வித மறுப்பும் தெரிவிக்கவில்லை.

இதுதான் பர்வதத்தின் கண்ணசைவுக்கு பின் இருந்த ஃபிளாஷ் பேக். சரி சரி சுழல் நின்னுப்போய் நாம அனைவரும் மீண்டும் கோவில் வந்துவிட்டோம். அனைவரும் வேனு செயின் போட்டதுக்கு கைத்தட்டினார்கள். பின் மாப்பிள்ளையான நவீனை பூவெல்லாம் வைத்து அலங்கரித்த ஜானவாச காரில் ஏறி அமரச்சொன்னார்கள் கூடவே சித்தப்பா, மாமா, அத்தை ஆகியவர்களின் குழந்தைகளையும் காரில் ஏற்றி நவீனுடன் அமர்த்தினர். காரின் வலதுபுறம் பெண்வீட்டாரும், இடதுபுறம் மாப்பிள்ளை வீட்டாரும் என ஜானவாச கார் மெல்ல மெல்ல வானவேடிக்கைகளுடன் நாதஸ்வரம் இசைக்க மேள தாளங்களுடன் நகர்ந்து மண்டப வாசல் வந்தடைந்தது. உடனே ராமானுஜம் நண்பரான சீனிவாசன் உள்ளேச் சென்று மிருதுளாவை வெளியே அழைத்து வந்தார். அவர் பெண்ணின் திருமணத்தின் போது அவ்வாறு செய்ததால் இங்கேயும் அதையே செய்தார். 

ஜானவாச காரில் மிருதுளாவையும் ஏறி அமரச்சொன்னார் யாருமே அதை வித்தியாசமாக பார்க்கவில்லை ஆனால் பர்வதமும் அவள் தங்கைகளும் மூஞ்சியை சுளித்துக்கொண்டு இது என்ன கூத்து என்று அவர்களுக்குள் ஆனால் அம்புஜம் கேட்கும்படி சொன்னார்கள். ஆனால் அம்புஜம் அதைக்கண்டுக்கொள்ளாதது போல அவள் மகளும் மாப்பிள்ளையும் ஒன்றாக அமர்ந்திருக்கும் அழகைப்பார்த்து மெய் மறந்து நின்றிருந்தவளை ..

“மாமி போதும் ரசிச்சது வாங்கோ இரண்டுபேருக்கும் ஆரத்தி எடுக்கனும்” என்று வாத்தியார் கூற சுயநினைவுக்கு வந்தாள் அம்புஜம். பின் நவீனையும் மிருதுளாவையும் காரிலிருந்து கீழே இறங்கச்சொனார். அப்பொழுது நவீன் முதலில் இறங்கி பின் மிருதுளா இறங்க கஷ்ட்டப்படும்போது மிருதுளாவின் தோழிகள் 

“நவீன் ப்ளீஸ் ஹெல்ப் மிருது” என்று சொன்னதும் நவீன் திரும்பி கையை நீட்ட அதற்கு அவன் சித்தி லலிதா சட்டென்று நவீன் கையை தட்டிவிட்டு

“தாலி கட்டறதுக்கு  முன்னாடி எல்லாம் தொடப்டாது” (இதே சித்திக்காரியின் மகள்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே மாப்பிள்ளைகளோட அடிக்கப்போற லூட்டிகள் எல்லாம் சில வருடங்களுக்கு பின் நாம பார்க்கத்தானே போறோம். அதுவரை பொறுத்திருங்கள்) என்றதும் அனைவருக்கும் ஒரு மாதிரி ஆக உடனே மிருதுளா தானாக பிடித்து இறங்கினாள். 

இருவருக்கும் ஆரத்தி எடுக்கப்பட்டது. அனைவருமாக அலங்கரிக்கப்பட்ட கல்யாண மண்டப மேடையில் அமர்ந்தனர். நிச்சயதார்த்தம் துவங்கியது. 

நவீனுக்கு டிரஸ் கோவிலில் பெண்வீட்டாரால் கொடுக்கப்பட்டது.(என்னதான் நவீன் டில்லியிலிருந்து தானே எடுத்து வந்திருந்தாலும் அதற்கான பணத்தை பர்வதமும் ஈஸ்வரனும் வாங்கிக்கொண்டமையால் அது ராமானுஜமும் அம்புஜமும் நிச்சயதார்த்ததிற்கு எடுத்தததாக தான் நாமும் கருதுவோம். அதுதான் நியாயமும்.) அதே போல் மாப்பிள்ளை வீட்டாரும் பட்டுப்புடவை மணப்பெண்ணிற்கு நிச்சயதார்த்தத்தன்று ஆசிர்வாதம் செய்து கொடுக்கவேண்டும். அதுதான் சம்பிரதாயம். இங்கு என்ன நடக்கிறது என்பதைப்பார்ப்போம் வாருங்கள். 

நிச்சயதார்த்தப்பத்திரிகை வாசிக்கப்பட்டு அனைவராலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டு நிச்சயதார்த்தப்புடவையை மாற்றிக்கொண்டு வருமாறு மிருதுளாவிடம் வாத்தியார் கூற அவள் புடவை எங்கே கட்டிக்கொண்டு வருவதற்கு என்று முழிக்க உடனே பர்வதம் …

“சாயந்தரம் கொடுத்தேனே அதுதான் போய் கட்டிண்டு வா” என்று சபையில் தில்லாக சொல்ல அதிர்ந்துப் போனாள் மிருதுளா. 

அம்புஜமும், பங்கஜமும், கோமளமும், மேகலாவும் மிருதுளாவை அழைத்துக்கொண்டு ரூமிர்க்குள் புடவை மாற்ற செல்ல முயன்ற போது…. சில சம்பிரதாயங்களை செய்வதற்காக வாத்தியார் அம்புஜத்தை மேடையிலேயே இருக்கும்படியும் சொல்ல மற்றவர்கள் மிருதுளாவுடன் சென்றனர். 

ரூமுக்குள் சென்றதும் பங்கஜம் மிருதுளாவைப் பார்த்து…

“சரி மிருது உங்க மாமியார் குடுத்தப்புடவையை எடு சீக்கிரம் மாத்திக்கட்டனும். இன்னும் பத்து நிமிஷத்துல வாத்தியார் கூப்பிட ஆரம்பிச்சுடுவார்” அதற்கு கோமளம்

“எங்கேருந்து வரும் புடவை. திருட்டுத்தனமா வந்து குடுத்தப்புடவையை திருப்பி வாங்கிண்டு போனப்பவே எனக்கு  அந்த மாமி மேலே சந்தேகம் வந்தது. “

“என்ன சொல்றே கோமளம். எங்களுக்கு ஒன்னுமே புரியலை” என்றாள் பங்கஜம். மிருதுளா அன்று மாலை ஜானவாசத்திற்கு முன் நடந்தவற்றை எல்லாம் கூறிமுடிக்க….பங்கஜம்…

“அடகடவுளே. ஏன் அந்த மாமி அப்படி பண்ணினா?” உடனே மேகலா

“இத நாம சொன்ன அந்த மாமி உடனே தான் அம்பிகாட்ட குடுத்தனுப்பிச்சத மட்டும்  சொல்லுவா திருப்பி வாங்கிண்டு போனது கோமளத்திற்கும் மிருதுளாவிற்கும் மட்டும் தான் தெரியும் ஸோ அத ஒத்துக்கமாட்டா”  கோமளம் குறுக்கிட்டு

“அதனால அந்த மாமிக்கு என்ன லாபம்?”

“வேறென்ன சண்ட வரனும்முனு தான் பண்ணிருக்கானு நேக்கு படரது” என்றாள் மேகலா.

கோமளம் ….“இப்போ என்ன பண்ணறது பாவம் நம்ம மிருது முழிச்சிண்டு நின்னுண்டிருக்கா“

ரூமுக்கு வெளியிலிருந்து வேனு கதவைத்தட்டிக்கொண்டே வாத்தியார் மேடைக்கு அழைப்பதாக கூப்பிட்டான். 

“இதோ வந்துட்டோம்” என்றாள் கோமளம்.

“சரி மிருது உன்ட்ட வேற புடவை இருக்குமில்லையா அதில் ஒன்றை எடு மாத்திண்டு போவோம்” என்றாள் கோமளம் அதற்கு கோபத்துடன் பங்கஜம்…

“எடுத்துக்குடுக்காதது அவா தப்பு மிருது இப்ப அவளோட புடவையையே மாத்திக்கட்டிண்டு போனா அவா எடுத்துக்குடுத்ததா ஆகிடுமே” 

“ஐயோ சித்தி வேனு வேற கூப்பிட்டுண்டே இருக்கான் இப்போ என்ன தான் பண்ண.. சீக்கிரம் சொல்லு பங்கு சித்தி“

பங்கஜம் மிருதுளாவின் ஒட்டியானத்தை மட்டும் கழட்டிவிட்டுட்டு 

“இப்போ இப்படியே இதே புடவையிலேயே மேடைக்கு போவோம் வா. அவா எடுத்துதரலைங்கறது எல்லாருக்கும் தெரியட்டும்” என்று ரூமின் கதவைத்திறந்து மிருதுளாவை மேடைக்கு கூட்டிச்சென்றாள். கோமளமும், மேகலாவும் ரூமைப்பூட்டிவிட்டு பின்னாலே சென்றனர். மேடை ஏறும்போது பர்வதம் சும்மா இல்லாமல் ..

“அதே புடவைல வந்திருக்க என்று மிருதுளாவிடம் எல்லார் முன்னாடியும் கேட்க” 

பிரச்சனை பண்ணுவதற்காகவே கேட்கிறாள் பர்வதம் என்பதை அறிந்துக்கொண்ட பங்கஜம் டைமில்ல மாமி அதுதான் என்று சம்மாளிக்க…

“எடுத்துக்குடுத்ததை கட்டிக்காம வந்திருக்கா பாரு” என்று பர்வதம் வேண்டுமென்றே எல்லோர் காதிலும் படும்படி முனுமுனுத்தாள். அதை கேட்ட அம்புஜம் சும்மா இல்லாமல் பங்கஜத்திடம்….

“ஏன்டி பங்கு ஏன் மாமி தந்த புடவையை மிருதுளாவுக்கு மாத்தாமா அழைச்சுண்டு வந்திருக்கேள்” என கேட்க உடனே பங்கஜம் 

“அம்பு செத்த சும்மா இருக்கயா. இதுக்குப்பின்னாடி பர்வதத்தோட பெரிய சூழ்ச்சியே இருக்கு. இப்போ எதுவும் விளக்க முடியாது ஸோ பேசாம இரு.” என்ற சிரித்துக்கொண்டே சொன்னாள்.

நிலைமையை சுதாரித்துக்கொண்டு சட்டென்று பேச்சை மாற்றி நிச்சயதார்தத்தை எந்த வித பிரச்சினைகளுமில்லாமல் நடத்தி முடித்தனர். பின் ரிசப்ஷென் தொடங்கியது. எல்லோருமாக ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருக்கையில் கோமளம் அம்புஜத்திடம் அன்று மாலை நடந்த பர்வதலீலையை கூறிமுடித்ததும் அம்புஜம் கண்ணில் பொல பொலவென கண்ணீர் வர அவளை ரூமுக்குள் அழைத்துச்சென்றாள். அங்கு அம்புஜத்தைப்பார்த்து

“என்னத்துக்கு அழுத. அதுதான் பங்கஜம் சம்மாளிச்சிட்டாளோனோ. உனக்கு தெரியனமேனுட்டு தான் சொன்னேன்“

“அதுக்கில்லடி கோமளம் இப்பவே இந்த மாமி இப்படி எல்லாம் பண்ணறாளே. இவ மிருதுவ படுத்துவாளோடி. அத நெனச்சுத்தான் அழுதேன்“

“மாமி அம்புஜம் மாமி” என்று கூப்பிட்டுக்கொண்டே வந்தார் வாத்தியார். 

உடனே கண்களை வேகமாக துடைத்துக்கொண்டாள் அம்புஜம்.

காலை செய்யவேண்டிய ஏற்பாடுகள் பற்றி விவரித்துவிட்டு சென்றார். அனைவரும் இரவு மாப்பிள்ளை அழைப்பு விருந்து சாப்பிட்டு அவரவர் அறைகளுக்குள் சென்று படுத்தார்கள். வழக்கம் போல ஒரு பெரிய கூட்டம் வட்டமாக அமர்ந்து சீட்டு கச்சேரியில் ஆழ்ந்தது. 

அனைவரும் உறங்கினாலும் அம்புஜத்திற்கு கவலை விட்டப்பாடாக இல்லை…கண்களை இறுக்க மூடினாலும் உறக்கம் வராமல் புரண்டு புரண்டுப் படுத்து அவளுக்கே தெரியாமல் கண் அசந்தாள்.

இருபத்தி ஏழாம் தேதி நடந்த அனைத்து நிகழ்வுகளையும் வந்திருந்து பார்த்த வாசகர் நல்லுள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். 

தொடரும்…..

பரிமளமும் பங்கஜமும் சொன்னது போலவே மறுநாள் காலை ஒரு பதினோரு மணி வாக்கில் டெலிபோன் மணி அடித்தது. மிருதுளா அம்புஜத்தைப் பார்தாள் …

“அம்மா சித்திகள் சொன்னா மாதிரி அவா தானோ ?” என்றாள் மிருதுளா.

“ஃபோனை எடுத்தா தானே தெரியும் மிருது. அட்டென்ட் பண்ணேன் அம்மா இந்த உளுந்த கிரைண்டரலேருந்து வழிச்சுட்டு வந்துடறேன். போ மா“

மிருதுளா நினைத்தது சரிதான். அங்கிருந்து ஈஸ்வரன் “ஹலோ ” என்றதும் மிருதுளா…

“ஹலோ அப்பா நான் மிருதுளா பேசறேன். எப்படி இருக்கேங்கள்?”

“நாங்க நல்லா இருக்கோம். சரி நான் சொன்ன விஷயத்தை யோசிச்சியா? என்ன முடிவு எடுத்திருக்க? அத கேட்க தான் ஃபோன் பண்ணினேன்“

என்று நவீன் ஏதும் சொல்லாதது போலவே விசாரித்தார் அதற்கு நம்ம மிருது…

“ஆமாம் ..பா …யோசிச்சேன் ….நான் அவர் கூடவே கிளம்பிடலாம்னு இருக்கேன்“

“ஓ அப்படியா!! நான் ஏன் இன்ஸிஸ்ட் பண்ணினேனா …நவீனும் ஆடிட்டிங்க்கு படிச்சிண்டிருக்கான் அவனுக்கும் மே மாசம்  பரீட்சை வருதாம். ரெண்டு பேருக்கும் எக்ஸாம் இருக்கு. அதுவும் இல்லாம நீ அவன் கூட கிளம்பினாய் னா பின்ன ரெண்டு பேருமே பரீட்சையை சரியா எழுத மாட்டேங்களே. கஷ்ட்டப்பட்டு படிக்கறேங்களோனோ அதனாலதான் யோசிக்கிறேன். இப்போ நான் சொன்னதையும் மனசுல வச்சுண்டு ஒரு நல்ல முடிவா சொல்லு நான் அடுத்த வாரம் அகேய்ன் ஃபோன் பண்ணிக் கேட்டுக்கறேன். இப்போ ஃபோனை வச்சிடறேன்.‘

என்று கால்ஐ துண்டித்தார். திருமணத்திற்கு பின் மருமகள் தன் மகனுடன் செல்வது ஈஸ்வரனுக்கும் பர்வதத்திற்கும் நல்ல முடிவு இல்லை என்பது அவர் பேசிய விதத்திலே நமக்கு புரிகின்றது. ஆனால் மிருதுளாவும் அம்புஜமும் புரிந்துக்கொண்டார்களா? வாருங்கள் மேலும் படித்துத் தெரிந்துக்கொள்வோம்.

மிருதுளாவிற்கு அவள் சித்தி சொன்னதுப்போல ஏதோ சரி இல்லை என்பது புரிய ஆரம்பித்தது. அவள் நவீன் முந்தின நாள் பேசியதையும் சற்றுமுன் ஈஸ்வரன் பேசியதையும் மனதிற்குள் அசைப்போட்டுப் பார்த்தாள். 

“நவீன் அவரது பரீட்சை பற்றி ஒன்றுமே கூறவில்லையே. ஏன்? எனது விருப்பத்தை தானே கேட்க ஃபோனில் அழைத்ததாக சொன்னார். அவர் அப்பா முதலில் எனது பரீட்சையை காரணமாக சொன்னார் ஆனால் இப்போது

நவீனின் பரீட்சையை காரணமாக சொல்றார்!!!! எதுக்கும் அவரிடமே கேட்டுத்தெரிந்துக் கொண்டால் இதற்கு தீர்வு கிடைக்கலாம்…அதுதான் சரி“

என்று அவளுக்குள் ஒரு பட்டிமன்றமே நடத்தி பின் நவீனுக்கு ஃபோன் செய்தாள்.

“ஹலோ நான் மிருதுளா பேசறேன்“

“ஹாய் மிருதுளா எப்படி இருக்க? வாட் அ சர்ப்ரைஸ்!! ” 

“உங்களுக்கும் மே மன்த் எக்ஸாம் இருக்கா?”

“ஆமாம் ஏன் கேக்கறே?”

“அதனாலதான் என்னை இங்கேயே விட்டுட்டு போகனும்னு யோசிக்கறேங்களா?”

“என்ன சொல்லுற!!! எனக்கு எக்ஸாம்னா உன்னை ஏன் அங்க விட்டுட்டு வருவேன். உனக்கு எக்ஸாம் எழுதனுமேனு தான் சொன்னேன்“

“ஓ சரி சரி அப்போ என்ன கூட்டிண்டு போறது கன்ஃபார்ம் தானே?”

“ஆமாம் இட்ஸ் கன்ஃபார்ம். சரி எனக்கு லஞ் டைம் ஆச்சு. ஐ ஹாவ் டு கெட் பேக் டு வர்க். பை மிருது. வில் கால் யூ டுமாரோ.“

“ஓகே பை. ஹாவ் அ நைஸ் டே“

என்று பேசி முடித்தாள். 

இன்னார் சொன்னதினால் கேட்கிறேன், ஏன் அப்படி சொன்னீர்கள் என்றெல்லாம் நேரடியாக கேட்டு பேசினால் பிரச்சனை தீரும்.  இவர்களுக்குள் முன் பின் அவ்வளவாக அறிமுகமும் இல்லை பழக்கமும் இல்லை. இருவருமே மனம் விட்டு பேசவுமில்லை. மனதிற்குள் அச்சம், வெட்கம், ஃபோனில் தான் பேச முடியும் திருமணத்திற்கு முன் நேரில் பேச வாய்ப்பேயில்லை, அதனால் ஏதாவது சொன்னால் அதை தவறாக புரிந்துகொண்டு விடுவாரோ என்ற எண்ணம் இருவர் மனதிலும் இருந்ததனால் இருவரையும் சரிவர பேச அனுமதிக்கவில்லை. 

இந்த இரண்டு மாதத்திற்குள் அவர்களுக்குள்  இவ்வளவு குழப்பத்தை உருவாக்கும் ஈஸ்வரனும் பர்வதமும் அவர்களை நாலு மாதம் பிரித்துவைக்க பார்ப்பது நல்லது செய்யத்தான் என்று நம்பமுடிகிறதா வாசகர்களே?

அன்று மாலை ராமானுஜத்துடன் அவரது அலுவலகத்தில் வேறு டிப்பார்ட்மென்டில் பணிப்புரியும் ஜெயேந்திரன் என்பவர் ராமானுஜம் வீட்டிற்கு

வந்தார். ராமானுஜம் அவசரமாக இரவு நேர ஷிஃப்ட்டுக்கு செல்ல தயார் ஆகிக்கொண்டிருந்தார். ஜெயேந்திரன் வருவதைப்பார்த்து ….

“வாங்கோ வாங்கோ ஜெயேந்திரன்“

“எங்கயோ கிளம்பறேள் போல தெரியறது. தப்பான நேரத்துல வந்துட்டேனோ?”

“கடமை அழைக்கறது வேறு ஒன்னுமில்லை. இன்னைக்கு நைட் ஷிஃப்ட் அதுவும் இல்லாம கொஞ்சம் சீக்கிரமே கிளம்பனும் அதுதான். சொல்லுங்கோ“

யாருன்னா என்று கேட்டுக்கொண்டே அம்புஜம் வந்தாள்…

“நமஸ்காரம் மாமி. நான் ஜெயேந்திரன்“

“ஓ தெரியுமே. எப்படி இருக்கேங்கள்? ஆத்துல மாமி அப்பறம் உங்க பொன்னுகள் எல்லாரும் எப்படி இருக்கா?”

“எல்லாரும் நல்லா இருக்கா. நான் இப்போ வந்தது ஒரு முக்கியமான விஷயம் பேச“

“என்னது சொல்லுங்கோ” என்றாள் 

அம்புஜம்.

ராமானுஜம் வந்தவரிடம் என்ன ஏதுனு கேட்காமல் தனது பணியைப் பற்றி மட்டும் சிந்தித்துக்கொண்டே கடிகாரத்தைப் பார்த்தார். அலுவலக வேலை என்று வந்தால் எதைப்பற்றியும் யாரைப் பற்றியும் யோசிக்காத இப்படியும் ஒரு மனிதர் மிருதுளாவைப்பெற்றவர். 

“மாமாக்கு நாழி ஆகறதோ?”

உடனே அம்புஜம் 

“இந்தாங்கோ காபி எடுத்துக்கோங்கோ. அவர் அப்படித்தான் பத்து மணிக்கு ஒரு எடத்துக்கு போகனும்னா எட்டு மணிலேருந்தே பரக்கம் பாய்வார். அது அவருடை சுபாவம். நீங்க ஏதோ முக்கியமான விஷயம்னு சொன்னேளே அது என்னனு சொல்லுங்கோ“

“இல்ல உங்க பொன்னுக்கு பார்த்திருக்கேளே ஒரு குடும்பம்.“

“ஆமாம் ஈஸ்வரன் மாமா பர்வதம் மாமி ஃபேமிலி. அவாளுக்கு என்ன“

“ஆமாம் அவாளே தான்.  அவாள பத்தி விசாரிச்சேளோ?”

“ஏன் இப்போ வந்து இப்படி கேக்கறேங்கள்?”

“அவா இப்ப இருக்கிற வீட்டுக்கு முன்னாடி எங்க ஆத்துப்பக்கத்தில தான் வாடகைக்கு குடி இருந்தா. அந்த மாமா மொடாக்குடிகாரர்“

“அப்படியா!!! பார்த்தா அப்படி தெரியலையே“

“இப்போ கொஞ்ச வருஷமா எல்லாத்தையும் விட்டுருக்கார். அந்த பர்வதம் மாமி இருக்காளே அவ எமகாதகியாக்கும். அவ இருக்கற ஆத்துக்கு உங்க பொன்னை கொடுக்க போறேங்கள்னு இன்னைக்கு காலைல தான் கேள்விப்பட்டேன் அதுதான் என் ஷிஃப்ட் முடிஞ்சதும் நேரா இங்க வந்தேன். எனக்கும் மூனு பொன்கள் இருகாளோனோ அதுதான் மனசு கேட்கலை ஓடி வந்துட்டேன் உங்களாண்ட சொல்ல. இந்த சம்மந்தம் வேண்டாமே அந்த மாமி உங்க பொன்ன நிம்மதியா வாழ விடமாட்டா.“

அம்புஜத்திற்கு தலையில் இடி விழுந்தது போல இருந்தது. 

“அந்த மாமாவும் மாமியும் துளி கூட பொறுப்பில்லாதவா. சுயநலவாதிகள்“

“அவா புள்ள நவீன் எப்படி? மாமா” என்று கேட்டாள் அம்புஜம்

“தங்கமான புள்ள மாமி. புள்ள நல்ல புள்ள தான் அவனை ஒரு குற்றமும்  சொல்ல முடியாது.“

“அப்பாடா பின்ன என்ன மாமா. புள்ள கூடதான் வாழ்க்கை பூரா இருக்கப்போறா அவர் நல்லவரா இருந்தா போராதா. இதை நீங்க முன்னாடியே சொல்லிருந்தேங்கள்னா ஏதாவது யோசிச்சிருக்கலாம். ஆனா இத இப்போ வந்து சொல்லறேளே. நிச்சயமாயாச்சு. புடவை, தாலி, மண்டபம் எல்லாம் ஆயாச்சே” 

“ஆனா உங்க பொன்னு அந்த குடும்பத்துக்குள்ள போனுமோல்யோ. அவா கூடவும் தானே வாழ்ந்தாகனும்.  எனக்கு இன்னைக்கு தானே தெரிய வந்துது மாமி.  அதுதான் உடனே ஓடி வந்தேன். அதனால என்ன இன்னும்  கல்யாணமாகலையே. அவா எப்படிப்பட்டவா னா…..“

உடனே ராமானுஜம் குறிக்கிட்டு ஏதோ சொல்ல வருபவரை தடுத்து தனக்கு வேலைக்கு நேரமாச்சு என்றும் …கூட வருகிறாயா என்று கேட்டதும் ஜெயேந்திரன் வேறு வழியில்லாமல் அவருடன் புறப்பட்டுச் சென்றார். எத்தனை பொறுப்பான தந்தை என்பது புரிகிறதா. அவரைப் பொறுத்தவரை சம்பாத்தியம் தான் முக்கியம். ஜெயேந்திரனை சொல்லவிடாமல் தடுத்து அவருடன் கூட்டிச்சென்றதனால் அம்புஜத்திற்கு கோபம் வந்தது. தங்களது பெண்ணின் வாழ்க்கையைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் யாரோ ஒருவர் அக்கரையுடன் சொல்ல வந்தவரையும் முழுவதுமாக சொல்லவும் விடாமல் இப்படிப் பொறுப்பில்லாமல் நடந்துக்கொண்ட ராமனுஜம் மேல் நமக்கே கோபம் வரும்போது பெற்றவள் அம்புஜத்துக்கு வராதா என்ன மக்களே. அவளுக்கு அடிவயிறு கலங்கியது. ஏதோ பூமி சுற்றுவது நின்றது போல் இருந்தது. உடனே ஓடினாள் பூஜை அறைக்கு. திக்கற்றவர்க்கு தெய்வமே துணை. அம்பாளுக்கு சூடியிருந்த பூக்களில் இருந்து மல்லிகையையும் கனகாம்பரத்தையும் எடுத்து இரு பேப்பரில் பொதிந்து மனதில் 

“ஆண்டவா இந்த நேரத்தில் எங்களுக்கு இப்படி ஒரு மனக்குழப்பமா. பொறுப்பில்லாத புருஷனை வைத்துக்கொண்டு நான் படும் அவஸ்தையை நீயும் தானே பார்த்துக்கொண்டிருக்கிறாய்!! எங்களுக்கு விவரங்களை விசாரித்துச்சொல்ல யாரும் இல்லை நீயா சொல்ல அனுப்பியவரையும் எங்காத்துக்காரர் சொல்ல விடாமல் செய்துட்டார். அதுவும் உன் திருவிளையாடலாகவே நான் எடுத்துக்கொள்கிறேன் தாயே. ஆனாலும் தாயல்லவா என் மனதிலிருக்கும் அச்சம் நீங்க … இதோ இந்த பூக்களில் கனகாம்பரம் வந்தால் இந்த திருமண ஏற்பாடுகள் தொடரட்டும் நல்லபடியாக உன் மகள் என் பெண் மிருது வாழ்வாள் என்றும் மல்லிகைப்பூ வந்தால் எல்லாவற்றையும் நிறுத்த வேண்டும் என்றும் உன் உத்திரவாக ஏற்றுக்கொண்டு அதன் வழி நடப்பேன் தாயே எனக்கும் என் குடும்பத்திற்கும் நீயே துணை அம்மா“

என்று மனதார வேண்டிக்கொண்டு குலுக்கிப் போட்டு வேனுவை அழைத்து அதில் ஒன்றை எடுக்கச்சொன்னாள். வேனுவும் எடுத்துக்கொடுத்துவிட்டு….

“இது என்ன மா? என்ன பண்ணறாய்” என்று வினவ

“எடுத்துக்கொடுத்ததுக்கு தாங்கஸ் டா கண்ணா. நீ போய் உன் வேலையைப்பார்” 

என்று சொல்லி அவன் சென்றபின் கண்களில் கண்ணீர் பெருக மனதில் அம்மனை நினைத்துக்கொண்டு திறந்துப்பார்த்தாள். அவளது கண்ணீரை ஆனந்த கண்ணீராக கனகாம்பரத்தைக்கொடுத்து மாற்றினாள் அந்த சமயபுரத்தாள். அதன் பின் மனதில் எந்த அச்சமுமின்றி கல்யாண வேலைகளில் இறங்கினாள் அம்புஜம். 

மறுநாள் விடிந்ததும் மிருதுளாவை அழைத்துக்கொண்டு நேராக பக்கத்திலிருந்த அம்மன் கோவிலுக்குச் சென்று இருவரும் அந்த அகிலாண்டேஸ்வரியை, ஆயிரம்கண்ணுடையாளை தரிசனம் செய்து மனதார வேண்டிக்கொண்டு அம்பாள் பெயரில் ஒரு அர்ச்சனையும் செய்து விட்டு வந்தனர். வீட்டிற்கு வந்த பின் பர்வதத்திற்கு ஃபோன் செய்தாள் அம்புஜம் 

“ஹலோ மாமி நான் அம்புஜம் பேசரேன்“

“ம்..ம்… சொல்லுங்கோ என்ன விஷயம்?”

என்று விருப்பமில்லாதவள் போலவே கேட்டாள் பர்வதம்.

“இன்னைக்கு சாயந்திரம் ரிசப்ஷன் புடவை மற்றும் எங்க சொந்தகாராளுக்கெல்லாம் டிரஸ் எடுக்க போரோம் அப்படியே பின் தாலி முடியற நாத்தனாருக்கும் பட்டுப்புடவை எடுக்கலாம்னு இருக்கோம். ஒரு இரண்டாயிரத்துல எடுக்கலாமா என்ன ஏதுனு கேட்க தான் கூப்பிட்டேன் மாமி“

இதை கேட்டதும் பர்வதம் 

“என்னத்துக்கு அவ்வளவு காஸ்ட்லியான புடவை அவ என்ன உங்க பொன்னோட சொந்த நாத்தனாரா? இல்லையே …அதனால ஒரு ஐநூறு ரூபாய்க்கு எடுத்தா போரும். அந்த பணத்தை சம்மந்தி சீர்க்கு சேத்துப்போட்டு எடுங்கோ என்ன கரெக்டா?”

இதை கேட்ட அம்புஜத்திற்கு ச்சே என்ன இப்படி இருக்கானு தோன்றியது.

“சரி மாமி அப்படியே செய்துடறோம். பை “

என்று ஃபோனை வைத்துவிட்டு டவுனுக்கு கிளம்பினார்கள். பர்வதம் அப்படி சொன்னாலும் அம்புஜம் நல்ல புடவையாக ஆயிரத்தி ஐநூறு ரூபாய்க்கு எடுத்தாள். மிருதுளாவிற்கு இன்னும் கொஞ்சம் நகையும் வாங்கிக்கொண்டு அனைத்து பர்சேஸிங்கும் முடித்து விட்டு வீட்டுக்கு வந்தபின் ராமானுஜம் கணக்குப் போட்டுப்பார்த்தார் பின் அவர் அனைவரையும் அழைத்து…..

“நகை கொஞ்சம் ஜாஸ்த்தியாயிடுத்து…இப்பவே இவ்வளவையும் போட்டா எப்படி இனி நிறைய சீர் செய்யனுமே என்று கூற“

உடனே மிருதுளா 

“எவ்வளவு அதிகமாகறது“

“ஆறு பவுன்“

“சரி அப்பா அப்போ இந்த வளையலை திருப்பிக்கொடுத்திடலாம். அது கரெக்டா ஆறு பவுன் இருக்கு“

“ஏய் மிருது நீ அது ஆசைப்பட்டு எடுத்ததுடி அதை ஏன் திருப்பிக்கொடுக்கனும்? 

வேனு….

“இதெல்லாமே வேஸ்ட் ஆஃப் டைம் அன்ட் பணம். பேசாம இந்த கல்யாணத்துக்கு எவ்வளவு செலவாகுமோ அதை அப்படியே அக்கா பேருல ஒரு ஃப்டி ல போட்டா அவளுக்காவது பின்னாடி யூஸ் ஆகும்.“

“டேய் போடா நடக்கறகார்யத்த பேசுவோமா” என்றாள் அம்புஜம்

“விடு மா எனக்கு அந்த வளையல் வேண்டாம் இதுவே போரும்“

கல்யாணத்துக்கு இன்னும் இருபது நாட்களே உள்ளது நவீன் வருவதற்கு ஏழே நாட்கள் உள்ள நிலையில் ஈஸ்வரனுக்கும் பர்வதத்திற்கும் இன்னும் உருத்திக்கொண்டிருந்த விஷயம் தெளிவாகாததால் பிப்ரவரி பத்தாம் தேதி ஃபோன் செய்தனர்…மிருதுளா அட்டென்ட் செய்தாள்…

“ஹலோ நான் மிருது பேசறேன்.“

“ஹலோ நான் ஈஸ்வரன் பேசறேன். என்ன முடிவெடுத்திருக்காய் நவீனுடன் ஊருக்கு போவதைப்பற்றி?”

என்று பழைய பல்லவியை பாடினார். அதற்கு மிருதுளா தான் நவீனுடன் செல்லப்போவதாக கூறியதும் ஆத்திரத்தில் ஈஸ்வரன்….

“என்ன இது கிளி மாதிரி சொன்னதையே சொல்லிண்டிருக்க. பெரியவா சொல்லறதை கேட்டு நடக்க உன் அம்மா சொல்லி‌க்குடுக்கலையா. எத்தனை வாட்டி நான் சொன்னேன் போக வேண்டாம் னு மறுபடியும் மறுபடியும் நீ போவேனு அல்ச்சாட்டியம் பண்ணராய். அதுவும் நவீன்ட்டயே சொல்லிருக்காய்  என்ன திமிரு உனக்கு. நாங்க யாரு அப்போ. ஏன் எங்க பேச்செல்லாம் கேட்கமாட்டியோ. ஆனாலும் ஒரு பொன்னுக்கு  இவ்வளவு அழுத்தம் கூடாது. “

என்று குரலை ஒசத்தி மிரட்டுவது போல பேச மிருதுளா பயந்து போய் அவள் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டோடின. அதைப்பார்த்த அம்புஜம்…

“ஏய் மிருது ஏண்டி அழறாய் என்ன ஆச்சுமா? யாருமா ஃபோன்ல…ஏய் ஃபோனை என்கிட்ட தா“

என்று வாங்கி ஹலோ என்றதும் ஈஸ்வரன் வழக்கம் போல் காலைத்துண்டித்தார். பின் மிருதுவிடம் விவரங்கள் கேட்டதும் அம்புஜமும் கலங்கினாள் ஆனால் அதைக்காட்டிக்கொள்ளாமல் இதுக்கெல்லாம் அழறதா என்ன மா நீ. அவா போகக்கூடாதுனு சொன்னா நீ உன் புருஷனோடு தானே போவேனு சொன்ன இதுல எந்த தப்பும் இல்லை. என்னத்துக்கு பின்ன இவ்வளவு செலவு செஞ்சு கல்யாணம் பண்ணறோம். நீ நல்லா இருப்பமா… கண்ண தொடச்சுண்டு போய் நாளைக்கு சுமங்கலி பிராத்தனைக்கு வாங்கிண்டு வந்ததை எல்லாம் அடுக்குவோம் வா என்று மிருதுளாவை தேத்தினாள் அம்புஜம். அவள் மனதில் அந்த அம்மனை இறுக்கமாக பிடித்துக்கொண்டு தான் இதை கூறினாள்.

இவர்கள் வழக்கப்படி திருமணத்தின் போது பெண் வீட்டார் திருமணத்திற்கு முன் சுமங்கலிப் பிரார்த்தனை செய்து தங்கள் வீட்டுப்பெண்ணை சாமியான சுமங்கலிகள் வாழ்த்தி ஆசிர்வதித்து மறுவீடு அனுப்புவதும் அதேபோல மாப்பிள்ளைவீட்டில் திருமணத்திற்கு பின் சுமங்கலி பிரார்த்தனை செய்து தங்கள் வீட்டுக்கு வந்த பெண்ணை சாமியான அவர்கள் வீட்டு சுமங்கலிகள் வாழ்த்தி ஆசிர்வதித்து வரவேற்பதும்  தான் வழக்கம். அதே போல மிருதுளா வீட்டில் சிறப்பாக சுமங்கலிப் பிரார்த்தனை நடந்தது. அன்று மாலை பர்வதம் ஃபோன் செய்தாள். 

“ஹலோ நான் பர்வதம் பேசரேன்“

மிருதுளா தான் ஃபோனை எடுத்தாள் குரலைக்கேட்டதும் உடனே ஃபோனை தன் அம்மாவிடம் கொடுத்தாள்..

“மாமி சொல்லுங்கோ நான் அம்புஜம் தான் பேசரேன்“

“சுமங்கலிப் பிரார்த்தனை எல்லாம் ஆச்சா“

“எல்லாம் நல்லப்படியா நடந்தது மாமி. எங்காத்து சுமங்கலிகளின் ஆசிர்வாதங்களோட எங்க மிருது உங்க ஆத்துக்கு வர தயார் ஆகிட்டா. மாப்ள ஊர்ல இருந்து வந்தாச்சா?”

“நேத்து நைட் வந்தான். நாளைக்கு எங்காத்த சுமங்கலிப் பிரார்த்தனை அதுக்கும் மறுநாள் சமாராதனை அதனால நீங்க மிருதுளாவ அழைச்சுண்டு சமாராதனைக்கு வந்திடுங்கோ அத சொல்லத்தான் கூப்பிட்டேன்“

“ஆனா மாமி“… என்று அம்புஜம் ஏதோ கூற வருவதற்குள் 

“சரி எனக்கு நிறைய வேலை இருக்கு நான் வச்சுடரேன் நாள மறுநாள் வந்திடுங்கோ. பை“

என்று ஃபோனை வைத்தாள்.

சமாராதனை நாளன்று அம்புஜமும் மிருதுளாவும் டூ வீலரில் நவீன் வீட்டுக்கு சென்றனர். நவீனும் பர்வதமும் வாங்கோ என்று வரவேர்த்தனர் அவர்கள் வீட்டில் பர்வதம், ஈஸ்வரன்,  நவீன்,  ப்ரவீன், பவின் மற்றும் பர்வதத்தின் அக்கா ரமணி அவர் மகன் ராஜூ ஆகியோர் இருந்தனர். 

உள்ளே சென்றதும் பர்வதம் ரொம்ப அக்கரை உள்ளவள் போல நவீன் ஏதோ மிருதுட்ட பேசனும்னு சொன்னயே போ மாடில போய் பேசிட்டு வா என்று சொல்லி வைத்தது போல இருந்தது அவர்களின் பரிமாற்றம். உடனே நவீன் மிருதுளாவை அழைத்துக்கொண்டு புதிதாக அவர்களுக்கென்று கட்டியிருந்த

அறைக்கு மாடியில் சென்றான். அம்புஜம் மிருதுளா வையே பார்த்துக்கொண்டிருந்தாள் அப்போது பர்வதம்…

“மாமி நீங்களும் மாமாவும் சேர்ந்து போய் இவர் அண்ணா ராசாமணிக்கும், என் அக்கா ரமணிக்கும், தம்பி பிச்சுமணிக்கும் நேர்ல போய் பத்திரிகை வச்சு அழைச்சுடுங்கோ. அப்பறம் அவாளுக்குள்ள பேச ஏதாவது இருக்குமோள்யோ அதுதான் அனுப்பி வைத்தேன் பாவம் ரெண்டும் தயங்கறதுகள். பேசிட்டு தான் வரட்டுமே. நீங்க சொல்லுங்கோ மாமி நாங்க உங்க பொன்ன நவீன் கூட எக்ஸாம் எழுதிட்டு போனாபோரும்னு தானே சொன்னோம் ஏனா நாமளும் அந்த வயச கடந்து வந்தவா தானே நமக்கு தெரியாதா எப்படி ரெண்டு பேரும் படிப்பானுட்டு“

என்று கூறி ஒரு சிரிப்பு வேற இதைக்கேட்டதும் அம்புஜத்திற்கு “ஐயோ மறுபடியும் மொதல இருந்தா” என்னும் வடிவேலு டயலாக் மனதிற்குள் ஒலித்தது.

அதே நேரம் மாடி ரூமில் நவீன் மிருதுளாவிடம். 

“நீ எக்ஸாம் எழுதிட்டு தான் வரமுடியுமாமே.“

“அப்படி எல்லாம் ஒன்றுமில்லை நான் தான் முன்னாடியே சொல்லிட்டேனே உங்க கூட தான் வருவேனு அப்பறம் ஏன் மறுபடியும் மறுபடியும கேக்கறேங்கள். ஏன் வீடு பார்க்கலையா?”

“வீடெல்லாம் பார்த்தாச்சு டிக்கெட் இன்னும் போடலை அதுக்கு முன்னாடி உன்னிடம் கேட்டுடலாம்னு தான்“

“ஓ அப்போ என்ன கூட்டிண்டு போற ஐடியாவே இல்லையா அதுதான் டிக்கெட் கூட புக் பண்ணலையா?”

“அது பண்ண எவ்வளவு நேரமாக போறது. ஸோ யூ ஆர் கம்மிங் வித் மீ ரைட்டா“

“ஓ மை காட் நான் எத்தனை தடவ சொல்லறது. எஸ் எஸ் எஸ் போதுமா“

“ஏய் ஓகே ஓகே இதோ இது தான் நான் ரிசப்ஷனுக்கு எடுத்திருக்கும் கோட் சூட். நல்லாருக்கா“

“சூப்பரா இருக்கு அன்ட் என்னோட சாரியும் ஏகதேசம் இதே கலர் தான் வாட் எ கோயின்ஸிடன்ஸ்“

கொடுத்த டைம் முடிந்துவிட்டது போல கரெக்டா பவினை அனுப்பி அவர்களை கீழே வரச்சொன்னாள் பர்வதம். அவர்களும் வந்தனர். பின் வெற்றிலை பாக்கு வாங்கிக்கொண்டு கிளம்பினார்கள் மிருதுளாவும் அம்புஜமும். 

இரு வீட்டாரும் மும்மரமாக பத்திரிகைகளை அனைவருக்கும் டிஸ்ட்ரிப்யூட் செய்யத்தார்கள். வெளியூர்காரர்களுக்கு முன்னதாகவே போஸ்ட்டில் அனுப்பிவைத்துவிட்டனர். பர்வதம் சொன்னது போலவே ராமனுஜமும் அம்புஜமும் ரமணி, பிச்சுமணி வீட்டில் பத்திரிகை வைத்துவிட்டு ராசாமணி வீட்டிற்கு சென்றனர். அங்கே ஈஸ்வரனின் அக்கா சொர்னம் அம்புஜத்திடம் 

“என்ன உங்க பொன்னுக்கு நிறைய நகையும், வெள்ளியும், பாத்திங்களும் எல்லாம் செய்யறேளாமே ஈஸ்வரன் சொன்னான்“

“ஏதோ அந்த கடவுள் ஆசிர்வாதத்தால எங்களால செய்ய முடிஞ்சதை செய்யறோம் மாமி“

“அதெல்லாம் சரிதாம்மா ஆனா எல்லாத்தையும் ஒன்னா கல்யாணத்துக்கே செய்து காட்டினேங்கள்னா அவ்வளவுதான் அந்த பர்வதம் பெரிய பேராசைப்பிடிச்சவள் எப்போவும் அதையே எதிர்ப்பார்ப்பள் சொல்லிட்டேன் பார்த்து நடந்துக்கோங்கோ“

அப்போதும் தனது சம்மந்தியை விட்டுக்கொடுக்காமல் பேசினாள் அம்புஜம்

“மாமி எங்களுக்கு இருக்கறது ஒரு பொன்னு அவளுக்கு செய்யாம வேற யாருக்கு. அதெல்லாம் நல்ல படியா செய்ய அந்த அம்பாள் துணையிருப்பா“

“அப்பறம் உங்க விருப்பம். உங்களப் பார்த்தா நல்ல மனுஷாளா தெரியறது …அந்த பர்வததத்திடம் கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்கோ. ஏதோ  சொல்லனும்னு தோனித்து சொல்லிட்டேன். ஆனா அவ தான் அப்படி நவீன் தங்கமானவன். உங்க பொன்ன பத்திரமா இருக்கச் சொல்லுங்கோ“

“சரி மாமி நாங்க போயிட்டு வரோம்“

என்று கூறி அங்கிருந்து விடைப்பெற்றனர் ராமானுஜமும் அம்புஜமும். பஸ்ஸில் வீட்டிற்கு வரும்பொழுது மனதிற்குள் யோசித்துக்கொண்டே வந்தாள் அம்புஜம்..

“ஏன் எல்லாரும் அந்த பர்வதத்தை கண்டு பயப்படரா? சொல்லி வச்சா மாதிரி எல்லாரும் அவள்ட்ட ஜாக்கிரதையா இருக்க சொல்றாலே ஏன்? இதை மிருதுட்ட சொன்னா பாவம் அது பயந்துடும். சொல்ல வேண்டாம். அம்மா நீ உன் மகளுக்கு கொடுத்த வாழ்க்கை அவளை எல்லா இக்கட்டுகளிலும் நீதான் காப்பாத்தனும் தாயே” என்று வேண்டிக்கொண்டாள்.

கல்யாணத்திற்கு இரண்டு நாள் முன் அதாவது இருபத்தி ஆறாம் தேதி மாலை மிருதுளா குடும்பத்தினர் அனைவரும் மண்டபத்திற்கு சென்றனர். 

இருபத்தி ஏழாம் தேதி காலை முதல் கல்யாண சம்பிரதாயங்கள் நடக்கவிருப்பதால் அவற்றையும் மேலும் நடக்கவிருக்கும் நிகழ்வுகளையும் வாசகர்களாகிய நீங்கள் அனைவரும் நேராக மண்டபத்திற்கு வந்து தெரிந்துக்கொள்ளும்படி பணிவுன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

வரும் செவ்வாய் அன்று கல்யாண மண்டபத்தில் சந்திப்போம்.

தொடரும்….

நிச்சயதார்த்தம் முடிந்து நண்பர்களையும் சொந்தங்களையும் அவரவர் வீடுகளில் விட்டுவிட்டு ராமானுஜம் குடும்பத்தினர் வீடு வந்து சேரும்போது இரவு பதினோரு மணியானது. அனைவரும் அசதியாக இருந்தார்கள். அம்புஜம் கவலையாகவும் இருந்தாள். இதை கவனித்த வேனு 

“என்ன மா சந்தோஷப்படாமல் கவலையா இருக்க?”

“அது ஒன்னுமில்லடா கொஞ்சம் அசதி இனி இருக்கற வேலைகள் எல்லாம் நினைச்சா மலப்பா இருக்குடா. அதத்தான் யோசிண்டு வரேன்“

அனைவரும் உறங்கினார்கள். அம்புஜம் நன்றாக தூங்கும் மிருதுளாவையே சற்று நேரம் பார்த்து …

“கள்ளம் கபடமில்லாத வெகுளியான என் பொன்னை நீ தாம்மா  காப்பாத்தனும் தாயே” 

என்று வேண்டிக்கொண்டு பின் உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

மறுநாள் விடிந்தது. கல்யாண தேதி குறிப்பதற்கு நல்ல நாள் பார்க்கப்பட்டது. ஐப்பசி மாதத்தின் இரண்டாம்  வெள்ளிக்கிழமை வரச்சொல்லிருந்தார் ஜோதிடர். 

இந்த கல்யாண ஏற்பாடுகள் நடப்பது மொபைல் ஃபோன்கள் இல்லாத காலக்கட்டமாகும். சுமார் ஒரு இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னாள். அப்பொழுது வீட்டில் லாண்ட் லைன் ஃபோன் வைத்திருப்பதே ஆடம்பரமாக கருதப்பட்ட காலம்.

நவீன் ஊருக்கு கிளம்பும் நாள் வந்தது. ரெயில்வே ஸ்டேஷனில் பவின் மற்றும்  ஈஸ்வரன் நவீனை வழியனுப்ப வந்திருந்தனர். ரெயில் கிளம்ப அரைமணி நேரம் இருந்தது. நவீனின் மனது அவள் வருவாளா என்று ஏங்கியது. சுற்றும் முற்றும் பார்த்தான் தூரத்தில் அழகான சுடிதார் அணிந்து மிருதுளா தனது பெற்றோர்களுடன்  நடந்து வருவது தெரிந்தது. அவர்கள் அருகே வந்ததும்

 “வாங்கோ வாங்கோ” என்று நவீனும் ஈஸ்வரனும் சொன்னார்கள்.

பின் அனைவருமாக உரையாடினார்கள். நவீனும் மிருதுளாவும் தனியாக பேச தயங்கினர். ரெயில் கிளம்ப ஐந்தே நிமிடங்கள் இருந்தது. ரெயிலில் நவீன் ஏறியப்பின் தனது இருக்கையில் அமர்ந்தான். ரெயில் கிளம்ப தயாரானதை சப்தம் எழுப்பி அறிவித்தது. நவீன் தனது கைகளை அசைத்து பை பை மிருது என்று முதல்முறை அவளிடம் சொன்னான். மிருதுளாவும் பை என்றாள். இதுதான் அவர்கள் நிச்சயதார்த்திற்கு பின் பேசியவை. ரெயில் புறப்பட்டு சென்றதும் ஈஸ்வரன், பவின், ராமானுஜம், அம்புஜம் மற்றும் மிருதுளா அவரவர் பஸ்ஸில் ஏறி வீட்டிற்கு சென்றனர்.

ஐப்பசி மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை வந்தது ராமானுஜமும் அம்புஜமும் ஜோதிடர் வீட்டுக்கு சென்றனர். மாப்பிள்ளைப் பெண்ணின் ஜாதகப்படி மாசி மாதம் திருமணத்திற்கு உகந்தது என்று அந்த மாதத்தில் மூன்று தேதிகளைக் குறித்துக்கொடுத்ததை எடுத்துக்கொண்டு பர்வதம் வீட்டிற்கு சென்று அவர்களிடம் கொடுத்து மாப்பிள்ளைக்கு எந்த தேதி சரிவரும் என்று கேட்டு சொல்ல சொன்னார்கள். 

பர்வதமும் ஈஸ்வரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்….பின் பர்வதம் …

“கல்யாணமானதும் நவீன் பத்து நாளில் குஜராத் போயிடுவான். கல்யாணம் முடிந்ததுக்கப்பறம் தான் ஃபேமிலி குவார்ட்ஸ் தருவா. அவன் போய் தான் வீடு பார்க்கனும் அதனால மிருதுளா இங்க தான் இருக்கனும் ஒரு ரெண்டு மாசத்தில வீடு அலாட் ஆகிடும் அப்பறம் லீவு போட்டு வந்து அழைச்சிண்டு போவான். ஸோ நாளு மாசம் இங்கயே இருக்கட்டும் என்ன சொல்லறேங்கள்?”

இப்பொழுது ராமானுஜமும் அம்புஜமும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பின் அம்புஜம்…

“என்ன மாமி கல்யாணம் ஆன உடனே நாளு மாசம் மிருதுளா மாப்பிள்ளையை பிரிஞ்சு இருக்கனுமான்னு யோசனையா இருக்கு!“

“ஏன் நாங்களெல்லாம் இல்லை என்ன?”

“அதுவும் சரிதான் ஆனாலும்……. மிருதுவோட எக்ஸாம் வேற மே மாசம் வரது. அதுதான் அவ எப்படியும் போயிட்டு ரெண்டு மாசத்தில திரும்பி வரத்தான் வேணும்….“

உடனே ஈஸ்வரன் குறுக்கிட்டு…

“என்னத்துக்கு அலஞ்சுண்டு கல்யாணம் முடிந்ததும் உங்க பொன்னு இங்கயே இருந்து எக்ஸாம் எல்லாம் முடிசிட்டு அப்பறம் ஜூன் ஆர் ஜூலைல போனா போரும். அதுக்குள்ள நவீனுக்கும் வீடு அலாட் ஆயிடும். இது தான் சரி அப்படியே இருக்கட்டும். நீங்களும் மிருது கிட்ட எடுத்து சொல்லிடுங்கோ“

அம்புஜத்திற்கு தற்மசங்கடமான நிலையானது. மனதிற்குள் ஒரு நெருடல்…அவள் மறுப்பு தெரிவிக்க முயல்வதற்குள் ராமானுஜம் குறுக்கிட்டு..

“சரி மாமா அப்படியே ஆகட்டும். நாங்க கிளம்பறோம். நாழி ஆயிடுத்து.“

என்று கூறி விடைப்பெற்றனர்.

வீடு வந்ததும் அம்புஜம் ராமானுஜத்தைப்பார்த்து ….

“ஏன் அவா சொன்னதுக்கு சரினு சொன்னேங்கள்? எனக்கென்னவோ இது சரியா படலை“

“ஆமாம் அவா ரெண்டு பேரும் டிசைட் பண்ணிட்டா மிருதுளாவ அனுப்பக்கூடாதுனு …அது அவா பேசர விதத்திலருந்தே நன்னா புரிஞ்சுது அதனால ஆர்க்யூ செய்து ஒரு யூஸும் இல்லை“

“நீங்க சொல்லறதும் சரிதான். நம்ம பொன்னுக்கு நல்ல வரன் தானே பார்த்திருக்கோம்? நாம ஏதும் விசாரிக்கலை…எல்லாம் பகவதி துணை“

மிருதுளாவுடன் ஜோதிடர் குறித்துக் குடுத்த தேதிகளை டிஸ்கஸ் செய்து பிப்பிரவரி இருப்பத்தி எட்டாம் தேதியை தேர்ந்தெடுத்தனர். அதை நவீன் வீட்டாரிடமும் தெரிவித்தனர். அவர்களும் சம்மதித்தனர்.

அடுத்து கல்யாண மண்டபம் புக் செய்யும் வேலையில் இறங்கினர் மிருதுளாவின் பெற்றோர்.  அவர்கள் ஒரு மண்டபம் செலக்ட் செய்து அதை நவீன் வீட்டாரிடம் தெரிவித்தப்போது அவர்கள் அதில் திருப்தி இல்லாததுபோல….பர்வதம் …

“நல்லாதான் இருக்கு ….எங்காத்து மனுஷா நிறைய பேர் வருவா அதனால இன்னும் கொஞ்சம் பெரிய மண்டபமா இருந்தா சௌகர்யமா இருக்கும்” என்றிழுக்க ….

“ஓகே மாமி இன்னொரு மண்டபம் பார்த்துட்டு உங்களுக்கு கால் பண்ணறோம்” என்றார் ராமானுஜம்.

ராமானுஜம் அம்புஜம் தம்பதியினர் நவீன் பெற்றொரை அந்த ஊரிலேயே உள்ள இரண்டாவது பெரிய மண்டபத்திற்கு அழைத்துச்சென்று இதை ஓகே பண்ணலாமா என்று கேட்டனர். ஈஸ்வரன் சூப்பரா இருக்கு என்றார் ஆனால் பர்வதம் “ரெண்டே ரெண்டு ஏசி ரூம் தானா”  என்று கூறவும்….ராமானுஜம் சட்டென்று…

“மாமி இதுவே என் சக்திக்கு மீறினது இதுக்கு மேலே எங்களால முடியாது முடிவா என்ன சொல்லறேங்கள்?”

“சரி சரி நாங்க அட்ஜெஸ்ட் பண்ணிக்கறோம். பரவாயில்லை இதையே புக் பண்ணுங்கோ” 

 என்று பர்வதம் சொன்னதும் ராமானுஜத்திற்கும் அம்புஜத்திற்கும் பிடிக்கவில்லை. மண்டபத்தின் மேலாலரைப்பார்த்து முன்பணம் கட்டி பதிவு செய்தார்கள். சமையல், சீர் பட்சணங்கள், பூ, மாலை, நலங்கு என அனைத்தையும் மண்டபகாரர்களிடமே கான்ட்ராக்ட் போட்டார் ராமானுஜம். இல்லாவிட்டால்  ஒவ்வொன்றுக்கும் குற்றப்பத்திரிகையை பர்வதம் வாசித்து விடுவாரோ என்ற அச்சம் போல பாவம். மணடபத்தை விட்டு வெளியே வந்ததும் பர்வதம்…

“எப்போ முகூர்த்த புடவை எடுக்க போறேங்கள். எங்களாண்ட ஒரு வார்த்தை சொன்னா நாங்களும் வருவோம். தாலி

 எங்க செய்ய சொல்லப்போறேள்?” அம்புஜம் பதிலளித்தாள்‌..

“மாமி மண்டபம் பார்க்கவே உங்களைக்கூட்டிண்டு வந்திருக்கோம் பின்ன புடவை தாலி எடுக்கும் போது சொல்லாமல் இருப்போமா? தாலி எங்களுக்கு தெரிந்த ஆசாரியிடம் செய்ய சொல்லாம்னு இருக்கோம். ஒரு தாலி நீங்க தானே செய்யனும் அதையும் அவரே செய்து தருவார் ஒரு தாலிக்கு உண்டான பைசா மட்டும் நீங்க தந்தா போரும்.“

“இல்லை இல்லை அது சரிவராது எங்களுக்கு தெரிந்த நகைக்கடை ஒன்று இருக்கு அங்கத்தான் ஆர்டர் கொடுக்கனும்” என்றாள் பர்வதம் அதற்கு அம்புஜம்..

“சரி அதுவும் உங்கள் விருப்ப்படியே ஆகட்டும். நாளை மறுநாள் சுபமுகூர்த்த நாளா இருக்கு நீங்களும் இதே பஸ்டாப்பிற்கு வந்திடுங்கோ நாங்களும் வந்துடறோம் நாம எல்லாரும் சேர்ந்தே போய் புடவை தாலி எல்லாம் எடுத்துண்டு வரலாம்“

“சரி எங்களுக்கு பஸ் வந்துடுத்து நாங்க கிளம்பறோம். போயிட்டு வரோம்.” 

என்று கூறி ஈஸ்வரனும் பர்வதமும் இடத்தைக் காலி செய்ததும் அம்புஜம் ராமானுஜத்திடம் …

“ஏன்னா இவா நாம என்ன சொன்னாலும் அதுல ஏதாவது குறைச்சொல்லிண்டே இருக்காளே இவாள திருப்திப் பட வைக்கறத்துக்கு நாம ரொம்ப சிறமப்படப்போறோம்னு நினைக்கறேன்.. எல்லாத்துக்கும் பகவதி துணை“

முகூர்த்த புடவை எடுக்கவும் தாலி ஆர்டர் குடுக்கவும் நவீன் மற்றும் மிருதுளாவின் பெற்றோருடன் மிருதுளாவும் சென்றாள்.. தாலி டிசைனிலும் பிரிச்சனை எழுப்பினாள் பர்வதம் அதையும் விட்டுக்கொடுத்தனர் மிருதுளாவின் பெற்றோர். அவர்கள் முறைப்படி பெண்வீட்டார் ஒரு தாலியும் மாப்பிள்ளைவீட்டார் ஒரு தாலியும் செய்வது வழக்கம் ஆனால் இங்கே தாலி ஆர்டர் கொடுத்ததும் பில் கட்டவேண்டிய நேரத்தில் ஈஸ்வரனும், பர்வதமும் பக்கத்துக்கடையில் ஏதோ வேலை இருப்பதாக கூறி சென்றனர். மொத்த பணத்தையும் ராமானுஜமே கட்டவேண்டியிருந்தது. உள்ளே கோபம் இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் புடவை எடுக்க சென்றனர். புடவைக்கடையும் பர்வதம் சாய்ஸ் தான் கையோங்கியது பட்டில் ஒன்பது கஜம் கல்யாண  முகூர்த்தப் புடவை காட்டச்சொல்ல பல ரகங்களில் பல வண்ணங்களில் விரித்துக்காட்டப்பட்டது. அதில் மிருதுளாவிற்கு ஆரஞ்சு நிறத்தில் பச்சைப்பார்டர் போட்டப்புடவை மிகவும் பிடித்திருப்பதாகச் சொன்னாள். அதே கலரில் தான் நடிகை மீனா அவ்வைசண்முகி படத்தில் ருக்கு ருக்கு பாடலில் கட்டிக்கொண்டு வருவார்.  ராமானுஜமும் எடுத்துக்கொள்ளச்சொன்னார். விடுவாளா பர்வதம் !!!!….இடையில புகுந்து 

“இந்த கலர்ல எல்லாம் கட்டிக்கக்கூடாது வெரும் மெரூன் இல்லாட்டி அரக்கு கலர்ல தான் எடுக்கனும்“

 என்றதும் மிருதுளா….

“அம்மா எனக்கு இந்தக்கலர் தான் பிடிச்சிருக்கு என் அப்பா தானே காசு கொடுத்து எடுத்துத்தரா அப்போ நம்ம இஷ்ட்டத்துக்கு தானே எடுக்கனும்…ப்லீஸ் மா இதையே எடுக்கலாமா” 

என்று அம்புஜம் காதில் கூறினாள். இதை கவனித்த பர்வதம்…

“என்ன அங்க உங்க பொன்னு என்னமோ முனுமுனுன்னு சொல்லறா?” 

“அது ஒன்னும் இல்லை மாமி. நீ கட்டிண்டா அரக்கு கலரும் அழகாதான் இருக்கும்னு சொல்லிண்டிருக்கேன்” என்று அம்புஜம் கூறி சமாளிக்க…மிருதுளா அம்மா…என்று அம்புஜம் கையை இருக்கப்பிடித்தாள் உடனே அம்புஜம் …மகள் கைகளை தட்டிக்கொடுத்து பரவாயில்லை விடு என்று மெல்லச்சொன்னாள். 

ஆக அன்று எல்லாமே பர்வதத்தின் சாய்ஸ் படி தான் நடந்தது. ராமானுஜம் குடும்பத்தினர் பணம் கட்ட மட்டும் வந்தது போல் ஆக்கினாள் பர்வதம். 

அனைவரும் மத்திய உணவருந்த ஒரு ஹோட்டலுக்குச் சென்றனர். அனைவரும் மீல்ஸ் ஆர்டர் செய்தார்கள் அம்புஜம் வெளியே உணவு உட்கொள்ளாமாட்டாள் அதனால் ஒரு ஜூஸ் மட்டும் குடித்தாள். மிருதுளா பொரோட்டா ஆர்டர் செய்ய உடனே பர்வதம் அதெல்லாம் என்னத்துக்கு பேசாம மீல்ஸே ஆர்டர் பண்ணு என்று சொல்ல மிருதுளா அம்புஜத்தைப்பார்க்க அவளும் அவர்கள் சொல்படியே  கேள் என்று கூற வேற வழியின்றி மீல்ஸே ஆர்டர் செய்தாள். அதன் பில்லும் ராமானுஜமே கட்டினார். பின் அனைவரும் பஸ்டாப்பில் பஸ்ஸுக்காக காத்திருந்த சமயத்தில் ஈஸ்வரன் மிருதுளாவிடம் ….

“மிருதுளா உனக்கு மே மாசம் எக்ஸாமாமே?” 

“ஆமாம் அப்பா“

“அதனால நீ நவீன் கூட போக வேண்டாம் அவனே உன்ன கூப்பிட்டாலும் போகாதே. ஏன் வீனா அலைஞ்சுண்டு ஒன்னா பரீட்சை எல்லாம் நல்லப்படியா முடிச்சுட்டே கிளம்பு என்ன சரியா?” 

“அதப்பத்தி இன்னும் நாங்க அவகிட்ட எதுவும் டிஸ்கஸ் பண்ணலை பண்ணிட்டு சொல்லறோமே” என்றாள் அம்புஜம்

“சரி நான் அடுத்தவாரம் ஃபோன் போட்டுகேட்டுக்கறேன் அதுக்குள்ள டிசைட் பண்ணுங்கோ. இன்னொரு விஷயம் நவீனுக்கு கோட் சூட், சர்ட், டை, ஷூ எல்லாம் அவன் அங்கேந்தே எடுத்துக்கறானாம் அதனால அவனுக்கு பணம் அனுப்பனும் ஸோ ஒரு பத்தாயிரம் ரூபா கொடுத்திடுங்கோ” 

“அப்படியா சரி நான் நாளைக்கு இல்லாட்டி அடுத்த திங்கள் கிழமை வந்து தந்துடறேன்” என்றார் ராமானுஜம் அதற்கு ஈஸ்வரன்…

“இல்லை இல்லை நவீனுக்கு நாளைக்கே நான் அனுப்பனும் அதனால இப்பவே கொடுத்திடுங்கோ“

“இப்பவா!!! இங்கேயே வா!!! இது பஸ்டாப்!! மாமா நீங்க வயசானவா வேற. நாங்க இன்னைக்கு சாயந்தரம் ஆத்துக்கு வந்து தந்திடறோமே” 

என்று ராமானுஜம் சொன்னதுக்கு பர்வதம் உடனே…

“இல்லை …பரவாயில்லை இங்கேயே தாங்கோ நாங்க பத்திரமா எடுத்துண்டு போயிடுவோம். நீங்க ஏன் இதுக்காக ரெண்டு தடவை அலையனும் பாவம்.“

என்று அடாவடியாக கூற வேற வழியில்லாமல் ரூபாய் பத்தாயிரத்தை எடுத்து ஈஸ்வரன் கையில் கொடுத்தார் ராமானுஜம். உடனே ஈஸ்வரன் அதை எண்ணிப்பார்த்து பின்…

“இந்தாங்கோ எங்க வகை தாளிக்கு உண்டான பணம் என்று ரூபாய் இரண்டாயிரத்தை ராமானுஜம் கொடுத்த பணத்திலிருந்தே எடுத்துக்கொடுத்தார்“

அவர்கள் பஸ் வந்தது அதில் ஏறி புறப்பட்டுச் சென்றனர் நவீனின் பெற்றோர். 

 ராமானுஜம் அம்புஜத்திடம்….

“என்ன இவா என்கிட்ட இருந்தே காச வாங்கி எனக்கே அவா தாளி காசுனுட்டு தந்துட்டுப்போறா!!!! அதுவும் இல்லாம நவீன் தான் சம்பாதிக்கிறானே அவனுக்கு டிரஸ் எடுக்க ஏன்  இவா பணம் அனுப்பனும்!!!! ஒரே குழப்பமா இருக்கே“

“ஆமாம் அவாள்ட்ட எல்லாத்துக்கும் பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டிட்டு இப்போ என்னாண்ட கேட்டா நான் என்ன சொல்லறது. இதை எல்லாம் அவாக்கிட்ட கேட்டிருக்கனும்“

“ஆமாம் நீ உன் வாயில என்ன கொழுக்கட்டையவா வச்சுண்டிருந்த நீ கேட்டிருக்க வேண்டியது தானே“

என்று அவர்களுக்குள் சண்டை ஆரம்பிக்க…பஸ்ஸும் வந்தது அதில் ஏறி அமர்ந்தனர்.  மிருதுளாவுக்கு சங்கடமாக இருந்தது. தனது அப்பா கூறுவதும் சரிதானே என்று அவளுக்கும் தோன்றியது. ஈஸ்வரன் பர்வதம் அன்று காலையிலிருந்து அவர்களை எல்லாக்கடையிலும் பாடாய் படுத்தியது எல்லாம் அசைப்போட்டுப்பார்த்தாள் பின் வீடு சென்றதும் ….

“அம்மா எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம். ரொம்ப பயமா இருக்கு” என்றாள். உடனே அம்புஜம்…

“இதெல்லாம் ஒன்னுமில்லை மா. இதுக்கெல்லாமா பயப்படறது அசடு. நீ எப்போதும் பொறுப்பா நடந்துக்கனும், பொறுமையை எப்போதும் விட்டுடாதே. இதை ஞாபகத்துல வச்சுண்டா போரும் மிருது. அவா சொல்லரா மாதிரி கல்யாணத்துக்கப்பறம் உன் எக்ஸாம் எல்லாம் முடிச்சுட்டே மாப்பிள்ளையோட குஜராத்துக்கு கிளம்பு என்ன சரியா“

“சரிமா. அப்படியே செய்யரேன்“

அம்புஜத்தின் முதல் தங்கையான பரிமளம் கல்யாணம் விசாரிக்க அவர்கள் வீட்டிற்கு வந்தாள். அப்போது நடந்தவற்றை எல்லாம் அம்புஜம் அவளுடன் ஷேர் செய்துக்கொண்டாள். பரிமளம் மிருதுளாவைக்கூப்பிட்டாள்.

மிருதுளா வந்தாள்…

“என்ன சித்தி?”

“ஏன்டி நீ படிச்சவ தானே உங்க அப்பா காசு போடறார் உனக்கு பிடிச்ச புடவையையே எடுத்திருக்க வேண்டியது தானே ஏன் எடுக்கலை?”

“இதையேத்தான் நான் அம்மா கிட்ட சொன்னேன். அம்மா தான் பரவாயில்லைனா. நீ அம்மாட்ட கேளு.“

“உங்க அம்மா ஒரு இ.வா ஆனா நீ ஸ்டபேர்ன்னா இருந்திருக்கனும். அதுவும் இல்லாம ஏதோ எம்.காம் எக்ஸாமுக்காக நாளு மாசம் கழிச்சு போன்னு உன் மாமியாரும் அம்மாவும் சொன்னா உடனே தலையை ஆட்டுவியா? இதோ பருமா படிப்பும் இம்ப்பார்ட்டன்ட் தான் நான் இல்லனு சொல்லலை ஆனா  எக்ஸாம் எப்ப வேனும்னாலும் எழுதிக்கலாம் வாழ்க்கை அப்படி இல்லை ஆரம்பத்திலேயே கோட்ட விட்டுட்டனா பின்ன அவ்வளவுதான் என்ன புரியரதா?”

“இப்போ நான் என்னப்பண்ணும் சித்தி?”

“அடுத்தத்தடவை இந்த பேச்சு வந்துதுனா நீ நவீன் கூட போவேன் எக்ஸாம் அப்பறம் எழுதிக்குவேன்னு சொல்லு அதுதான் உன் வாழ்க்கைக்கு சேஃப். உங்க மாமியார் என்னத்துக்கு உன்ன நாளு மாசம் பிடிச்சுவச்சுக்க பார்க்கரானு நினைக்கற…. கல்யாணமான முதல் வருடம் ஒருவரை ஒருவர் நன்னா புரிஞ்சுக்க வேண்டிய ரொம்ப முக்கியமான காலம் இந்த நேரத்துல உன்னை நவீனுடன் அனுப்பாமல் வீட்டில் வைத்துக்கொள்ள நினைக்கும் உன் புக்காத்து மனுஷாலோட எண்ணம் எனக்கு சரியாப்படலை“. உடனே அம்புஜம் …

“ஏன்டி பரி அவா ஆத்த பொன்னுகளே இல்லை அதனால கூட சொல்லிருக்கலாமோள்யோ!“

“அட போ அம்பு நீ சொன்னதெல்லாம் வச்சுப்பார்த்தா எனக்கென்னவோ இதுல ஏதோ அந்த பர்வதத்திற்கு உள்நோக்கம் இருக்குனு தோனறது“

இவர்கள் உரையாடிக்கொண்டிருக்கும்போது பங்கஜமும் அம்புஜம் வீட்டிற்கு விஜயித்தாள். அவளும் விஷயங்களை சொல்லக்கேட்டதும் பரிமளம் சொல்வதுதான் சரி என்றாள். அப்பொழுது ஃபோன் அடித்தது. அம்புஜம் எடுத்தாள் …

“ஹலோ நான் அம்புஜம் பேசறேன்“

“ஹலோ. நல்லாருக்கேளா நான் நவீன் பேசறேன். அங்க எல்லாரும் எப்படி இருக்கேங்கள்?”

“ஓ மாப்ள நாங்க எல்லாரும் நன்னா இருக்கோம் நீங்க நல்லாருக்கேளா? நாங்க நேத்துதான் தாளிக்கு ஆர்டர் கொடுதுட்டு வந்திருக்கோம்.“

“நான் நன்னா இருக்கேன். ஹோ! ஈஸ் இட்!. குட். மிருதுட்ட பேசலாமா“

“ஓ தாராளமா. சாரி… இதோ குடுக்கறேன்” 

என்று மிருதுளாவிடம் ரிசீவரை கொடுத்துவிட்டு அனைவரும் உள் ரூமிர்க்குள் சென்று பேசத்தொடங்கினார்கள். அனைவரும் சென்றபின் மிருதுளா…

“ஹலோ“

“ஹாய். எப்படி இருக்க?”

“நல்லாருக்கேன் நீங்க எப்படி இருக்கேங்கள்?”

“நன்னாருக்கேன் நான் பிப்பிரவரி பதினைந்தாம் தேதி ஊருக்கு வந்திடுவேன். இருபது நாள் தான் லீவு ஸோ மார்ச் ஏழு அங்கிருந்து கிளம்பனும். புடவை தாளி எல்லாம் எடுத்தாச்சாமே!“

 “ஆமாம் நேத்து தான் எடுத்துண்டு வந்தோம்“

“எங்க அம்மா சொன்னா ஏதோ உனக்கு மே மாசம்  எம்.காம் எக்ஸாம் இருக்காமே அதனால நீ அத முடிச்சிட்டு தான் என் கூட வருவயாமே அப்படியா?”

“இல்லை நான் அப்படி எதுவுமே சொல்லலை. நான் கல்யாணம் முடிஞ்சதும் உங்க கூடவே வந்துடறேன்“

“ஈஸ் இட்!! அப்போ எக்ஸாம்?”

“பரவாயில்லை நான் அதை டிசம்பரில் எழுதிக்கறேன்” 

“ஓகே நான் அப்போ வீடுப்பார்க்கட்டுமா?”

“எஸ் தாராளமா பாருங்கோ“

“ஓகே தென் டேக் கேர் பை மிருது.“

“ஓகே பை பை“

நவீனுடன் ஓப்பனாக பேசியது ஏதோ பெரிய விஷயம் சாதித்ததுப்போல இருந்தது மிருதுளாவிற்கு. அவள் தன் சித்திகளிடம் தான் திருமணம் முடிந்ததும் நவீனுடன் போவதாக கூறி மகிழ்ந்தாள். அதற்கு பரிமளம்…

“நீ இன்னைக்கு நவீனிடம் சொன்னதுக்கு உன் மாமியார் ஆர் மாமனாரிடமிருந்து நாளை ரியாக்ஷன் வந்தால் தென் அவா ஏதோ காரணமா தான் உன்னை அனுப்பாமலிருக்க பார்க்கரானு கன்ஃபார்ம் ஆகிடும்“

“அப்போ அவா நாளைக்கு எங்கள்ட்ட மறுப்படியும் இதப்பத்திப்பேசுவாளா?” என்றாள் அப்பாவி மிருதுளா.

“நிச்சயமா பேசுவா பாறேன்” என்றால் பங்கஜம்.  

பரிமளத்திற்கும் , பங்கஜத்திற்கும் கூறப்புடவையை காண்பித்தாள் அம்புஜம். பரிமளம்… அம்புஜத்திடம் ஏமாறாமல் இருங்கோ என்று எச்சரித்து பின் பங்கஜத்துடன் சேர்ந்து அவள் வீட்டுக்கு இருவரும் சென்றனர். 

அடுத்தநாள் பரிமளமும் பங்கஜமும் சொன்னது போல  ஈஸ்வரன் பர்வதம் ஃபோன் செய்தார்களா? இல்லையா? மேலும் என்னவெல்லாம் நடக்கவிருக்கிறது என்பதைப்பற்றி வெள்ளிக்கிழமை வரை பொறுத்திருந்து தெரிந்துக்கொள்வோம்.

தொடரும்……

ராமானுஜமும் அம்புஜமும் வீடு திரும்பியதும் ஒரு சொம்பு தண்ணீர் குடித்துவிட்டு மருதுளாவையும் வேனுவையும் அழைத்து அனைவருமாக நடந்தவற்றை அவர்களுக்குள் உரையாடி பின் நிச்சயதார்த்த தேதியையும் கூறி அன்றே நிச்சயம் பண்ணிடலாம் என்ற முடிவுக்கும் வந்தனர். அதை மாப்பிள்ளை வீட்டாரிடமும் ஃபோனில் தெரிவித்தனர். ராமானுஜமும் அம்புஜமும் தங்களுக்கு மிகவும் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்களை மட்டும்  நிச்சயதார்த்திற்கு  அழைத்தனர். மற்றவர்களை திருமணத்திற்கு அழைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து நிச்சயதார்த்தத்திற்கு நான்கு நாட்களே இருப்பதால் விறுவிறுப்பாக வேலைகளில் இருங்கினர். அம்புஜம் பங்கஜத்துக்கு ஃபோன் போட்டு  நடந்த அனைத்து விவரங்களையும் கூறி நன்றியையும் தெரிவித்தாள். அதற்கு பங்கஜம்

“என்னத்துக்கு இப்போ தாங்ஸ் எல்லாம் சொல்லர அம்பு…ஏதோ என்னால முடிஞ்சது. நீ என் தோழி மேனகாக்கு தான் தாங்ஸ் சொல்லனும் ஏன்னா அவ மூல்யமா தானே இந்த வரன் வந்தது. சரி உனக்கும் நிறைய வேலைகள் இருக்கும் இன்னும் நாலு நாள் தானே இருக்கு. போய் ஆகவேண்டியதை பாரு. ஏதாவது ஹெல்ப் வேணும்னா ஒரு ஃபோன் போடு போறும். பை த பை மாமியார் ஆக போர என் அக்கா அம்பு… பை… “

“சரி பங்கு பை”

ராமானுஜத்தின் நண்பர்கள் விஷயத்தைக் கேள்வி பட்டதும் அவர்கள் அனைவரும் (ஒரு நாலு பேர். ராமானுஜத்திற்கு அதிக நண்பர்கள் இல்லாவிட்டாலும் இருக்கும் நாலு பேரும் உண்மையான நட்புடன் இருந்தனர்)  ஆளுக்கு ஒரு பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள். ராஜேஷ் பூ மற்றும் மாலைகள், சதாசிவம் பழங்கள், ஸ்வீட்கள், வெங்கட் நிச்சயதார்த்தத்திற்கு அனைவரும் சென்று வர வேன், வெற்றிமாறன் அன்று வேண்டிய காலை, மத்திய உணவு மற்றும் காபி,  டி  என ஒவ்வொரு வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யலானார்கள்.

அம்புஜம் தனது மகளுக்கு மேக்அப் போட அவர்கள் வீட்டுப்பக்கத்தில் இருந்த ஒரு அழகு நிலைத்தில் சொல்லி வைத்தாள். 

இப்படி நிச்சயதார்த்த ஏற்பாடுகள் எல்லாம் மடமடவென நடந்தது மருதுளா வீட்டில். நமது மாப்பிள்ளை நவீன் வீட்டில் என்ன செய்கிறார்கள் என்பதை…. மிருதுளா என்ன ஆனாள்? தொடரைப் படிக்கும் வாசகர்களாகிய நாம்

தெரிந்துகொள்ள நமக்கு எல்லா உரிமையும் இருக்கிறது ஆகையால் வாருங்கள் போய் ஒரு எட்டு ஏற்பாடுகளைப் பார்த்துவிட்டு வருவோம். 

ஈஸ்வரன் அவர் உறவினர்கள் அனைவருக்கும் ஃபோனில் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார். அனைவருக்கும் தெரிவித்தப்பின் பர்வதம் கூறளானாள்

“காலைல புடவ எடுக்க வெய்யிலில் போயிட்டுவந்ததால ஒரே தலைவலி. சரி ஏன்னா உங்க தங்கை அக்காக்கள் எல்லாரும் எப்ப வராளாம்? பேசாம நிச்சயதார்த்தத்தனைக்கு உங்க அக்காவையே சமைக்க சொல்லிடுங்கோ அப்பறம் நம்ம ஆம் ரொம்ப சின்னது அதனால உங்க அண்ணா ராசாமணி ஆத்துல வச்சுண்டுடலாம் அவராண்ட சொல்லிடுங்கோ. நம்ம பிச்சுமணியையும் என் அக்கா ரமணியையும் அவா ஆத்துக்கே போய் நிச்சயத்துக்கு அழைச்சுட்டு வரலாம். பூ மாலை பழங்கள் எல்லாம் பிச்சுமணி பார்த்துப்பான்.”

பர்வதம் பேசுவதிலிருந்து ஒன்றை நாம் நன்றாக புரிந்துக் கொள்ள முடிகிறது அது என்னவென்றால் அவள் வீட்டுச் சொந்தங்களை மட்டும் மதிப்பவள் கணவர் வீட்டு சொந்தங்களை நன்றாக தனது கணவர் மூலமே வேலை வாங்கும் சிறந்த ரிங் மாஸ்டர். அடுத்தவர்களிடம் தங்களுக்காக இதை செய்ய மடியுமா என்றெல்லாம் கேட்க தயக்கேமே இல்லாத,  அடுத்தவர்களை ஏதோ அவளுக்கு செய்ய கடமை பட்டவர்கள் போல ஒரு நினைப்பு வேற… என்ன மக்களே இதில் உங்களுக்கு ஏதாவது கருத்துவேறுபாடு இருக்கிறதா?

ஈஸ்வரன் குடும்பத்தில் அவருடன் கூடப்பிறந்தவர்கள் ஐந்து பேர். ஒரு அண்ணன் ராசாமணி, இரண்டு அக்காக்கள் சொர்ணம், வரலட்சுமி, இரண்டு தங்கைகள் வசுந்தரா, சுபத்திரை. சொர்ணம் அனைவருக்கும் அக்கா ஆவார். இவருக்கு பர்வதத்தை அறவே பிடிக்காது. வரலட்சுமியையும் வசுந்தராவையும்  சமையலுக்கு வரச்சொல்லிருக்காள் பர்வதம். அவர்களும் தங்களது சகோதரனுக்காக மட்டுமே சம்மதித்தனர். அவர்கள் அனைவரும் பணத்தை விட மனிதர்களை பெரிதும் மதிப்பவர்கள். தங்களது சகோதரன் ஈஸ்வரன் எதுக்கோ வாக்கப்பட்டு முருங்கை மரம் ஏறி ஆக வேண்டியிருப்பதை புரிந்து அவருக்காக அவர் மேல்லுள்ள பாசத்தினால் செய்ய முன்வந்தனர். 

பர்வதம் வேண்டுமென்றே ஒரு சாதாரணமான ஒரு அழுது வடியும் நிறத்தில் நிச்சயதார்த்தப் புடவையை மிருதுளாவுக்காக  எடுத்தாள். அது பட்டுப்புடவை கூட இல்லை. ஆனாலும் அவளை கேள்விகேட்க யாரும் இல்லை அப்படியே கேட்டாலும் பிரயோஜனம் இல்லை என்பதும் அனைவரும் தெரிந்ததே. அவளை யாருமே திருத்த முயற்சிக்காமல் அவள் அப்படி தான் என்று விலகிச்சென்ற உறவினர்களே அதிகம்.

நிச்சயதார்த்தம் நாள் வந்தது பர்வதம் வீட்டார் அனைவரும் பர்வதம், ஈஸ்வரன், நவீன், ப்ரவீன் மற்றும் பவின் ராசாமணி வீட்டிற்கு அன்று காலையிலேயே வந்துவிட்டனர். வரலட்சுமியும் வசுந்தராவும் அன்று காலை முதல் சமயற்க்கட்டிலேயே இருக்கவேண்டியதாயிற்று.

அனைவரும் சேர்ந்து நிச்சயதார்தத்திற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்து சாஸ்த்திரிகளின் வரவுக்காகவும், பெண் வீட்டார் வரவுக்காகவும் காத்திருந்தனர்.

அன்று மாலை ராகுகாலத்திற்கு முன் ஒரு நாலு மணிக்கு சாஸ்த்திரிகள், தாய் மாமா பிச்சுமணி, பெரியம்மா ரமணி அவரவர் குடும்பத்துடன் ராசாமணி வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். 

வாருங்கள் நம்ம மிருதுளா வீட்டிலிருந்து அனைவரும் கிளம்பி விட்டார்களா என்று தெரிந்துக்கொள்ளலாம்.

நிச்சயத்தன்று காலை அம்புஜம் வேனுவை கூப்பிட்டு மிருதுளாவோடு கோவிலுக்கு சென்று வரும்படி கூறி மிருதுளாவையும் நன்றாக கடவுளிடம் வேண்டிக்கொள்ள சொல்லி அனுப்பினாள். 

மிருதுளாவும் நன்றாக எண்ணை தேய்த்து குளித்து ஆத்திப்பின்னலிட்டு அழகான புடவை உடுத்தி கோவிலுக்கு புறப்பட்டு அறையிலிருந்து வெளியே வந்ததும் அவள் சொந்தங்கள் அனைவரும் அவளைப்பார்த்து

 “மிருது உனக்கு கல்யாணகல வந்துடுத்து.”

“லட்சணமா இருக்கா நம்ம மிருது. நவீன் குடுத்துவச்சவர்” 

என்றனர்

அம்புஜத்துடன் கூடப்பிறந்தவர்கள் மூன்று தங்கைகள் பாரிமளம், கோமளம், பங்கஜம். ஒரு அண்ணன் மணியன். 

ராமானுஜத்திற்கு ஒரே தம்பி ராமநாதன் அவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். இவர் மனைவி மேகலா. 

அக்காவும் தம்பியும் கோவில் சென்று வந்ததும் சற்றுநேரம் அனைவருடனும் பேசிக்கொண்டிருந்து மத்திய உணவு உண்ட பின் ஒரு இரண்டு மணிக்கு அழகு நிலைத்தில் மிருதுளாவை கொண்டு விட்டான் வேனு. மிருதுளா அன்று தான் முதன்மதலில் மேக்அப் போட போகிறாள். 

அவளுக்கு மேக்அப் போட்டு பட்டுப்புடவை கட்டி அவள் வெளியே வந்ததும் வேனு அவளைப்பார்த்து கோபப்பட்டான். காலைல சிம்ப்ளா அழகா இருந்த மிருதுக்கா இந்த மேக்அப் உனக்கு சூட் ஆகலை…. எனக்குப்பிடிக்கலை

என்றதும் மிருதுவின் முகம் வாடியது. மேலும் வேனு  வீட்டிற்கு சென்று அனைத்தயும் கலைச்சுட்டு காலைல இருந்த மாதிரி இரு அக்கா என்றதும் அவளுக்கு அழுகை வந்தது. இருவரும் வீடு வந்து சேர்ந்ததும் வேன் அனைவரையும் ஏற்றிக்கொண்டு இவர்களுக்காக காத்துக்கொண்டிருந்தது. வேனு தனது தாயை அழைத்து வீட்டைத்திறக்க சொன்னான். அம்புஜம் வேனிலிருந்து இறங்கினாள்…

“என்னடா வேனு இப்ப என்னத்துக்கு ஆம தொறக்கனும்? எல்லாரும் காத்துண்டிருக்கா நாழி ஆகறது”

என்று கூறிக்கொண்டே வீட்டை திறந்தாள். உடனே மிருதுளா அழுதுகொண்டே குளியலறைக்குள் சென்றால்…அதைப்பார்த்த அம்புஜம்…

” ஏய் மிருது இப்போ ஏன் பாத்ரூமுக்குள்ள போனாய்? என்னாட வேனு என்ன ஆச்சு”

“அக்கா நீ உன் மேக்அப் எல்லாத்தையும் கலச்சுட்டு வா அக்கா”

“அடேய் என்னடா அக்காளும் தம்பியுமா விளையாடரேங்களா. அடியே மிருது இப்ப வெளில வரல அப்பறம் …” என்று அம்புஜம் கூறிக்கொண்டிருக்கும் போதே கதவு திறந்தது…

“டேய் வேனு இந்த மேக்அப் அழிய மாட்டேங்கறது டா. நான் என்ன செய்ய ?”

“என்னது ?? ஏன்டி இப்படி பண்ணறாய்? சீக்கிரம் மொகத்த தொடச்சுண்டு வா. இதுக்கு மேல ஒன்னும் பண்ணிடாதே…நீ நல்லா தாம்மா இருக்க. வாம்மா நாழி ஆகறதோனோ எல்லாரும் காத்துண்டிருக்கா வாசல்ல”

பங்கஜமும், ராமநாதனின் மனைவி மேகலாவும் உள்ளே சென்றார்கள் …

“என்ன வண்டி கிளம்பப்போறது. அத்திம்பேர் அங்க சத்தம் போடரார் இங்க அம்மாவும் புள்ளையும் பொன்னும் கூடிண்டு என்ன பண்ணறேங்கள்?”

“ஏய் மிருது ஏன் ஒரு மாதிரி இருக்க?”

“அவ தம்பிக்கு அவளோட மேக்அப் பிடிக்கலையாம் அதனால கலச்சுக்கப்போறேன்னு ஒரே அல்ச்சாட்டியம் பண்ணரதுகள் ரெண்டுமா. நான் என்னத்த பண்ண!”

“டேய் வேனு உங்க அக்கா இதுவரைக்கும் மேக்அப் போட்டு நீ பார்க்காததால உனக்கு அப்படி தோனரது அவ்வளவுதான். அவள் அழகா தான் இருக்கா. தம்பி சொன்னானாம்..அக்கா மேக்அப்ப அழிக்கறாளாம்…நல்ல தம்பி ..நல்ல அக்கா…”

வாசலில் இருந்து ராமானுஜம்….

 “மணி மூன்றை ஆச்சு. இப்போ கிளம்பினாதான் ராகு காலத்துக்கு முன்னாடி அங்க எத்த முடியும். என்ன பண்ணரேங்கள் எல்லாருமா?!!”

நாலரை டூ ஆறு ராகு காலம் என்பதால் நாலு மணிக்கெல்லாம் ராசாமணி வீட்டிற்கு சென்று நிச்சயதார்த்ததிற்கு வேண்டியவற்றை அடுக்கி தயாராகி ஆறு மணிக்கு நிச்சயதார்த்ததை முடித்துக்கொண்டு இரவு உணவு உண்டு வீடு திரும்ப திட்டமிட்டிருந்தனர். 

ராமானுஜம் உறக்க சொன்னதும் அனைவரும் வீட்டைச் பூட்டிக்கொண்டு வேனில் ஏறினார்கள். சரியாக நாலு பத்துக்கு ராசாமணி வீட்டை சென்றடைந்தார்கள். ராசாமணி வீட்டிற்கு எதிர் விடு இவர்களுக்காக சுத்தம் செய்யது வைத்திருந்தனர். மிருதுளா வீட்டார் அனைவரும் அந்த வீட்டினுள் சென்று பழங்கள், பூக்கள், மாலைகள் அனைத்தையும் தாம்பாளத்தில் அழகாக அடுக்கி வைத்தனர். சக்கரையை ஒரு தாம்பாளத்தில் பரப்பி அதன் மேல் ஜெம்ஸ் மிட்டாயால் தனது அக்கா பெயரையும் வரப்போர அத்திம்பேர் பெயரையும் அழகாக பதித்தான் வேனு. 

இதற்கிடையில் அனைவருக்கும் காபி பறிமாறப்பட்டது. எல்லாம் தயார் ஆகவும் மணி ஆறு ஆகவும் சரியாக இருந்தது. மிருதுளா வீட்டார் மிருதுளாவை அழைத்துக்கொண்டு நிச்சயதார்த்த சீர்களுடன் ராசாமணி வீட்டிற்குள் சென்றனர். 

நிச்சயதார்த்தம் துவங்கியது. நவீனுக்கு கூட பிறந்த தங்கைகள் யாரும் இல்லாததால் அவன் அத்தைப்பெண் மிருதுளாவின் நாத்தநாராக இருந்து சம்பிரதாயங்களை செய்தார். 

நிச்சயம் ஆனதும் ராமானுஜம் வேனுவிடம் ஒரு அழகிய மோதிரத்தைக்கொடுத்து மாப்பிள்ளைக்கு போட்டுவிட சொன்னார். வேனுவும் நவீனுக்கு மோதிரம் போட அனைவரும் வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டனர். பெரியவர்கள் அனைவரையும் நமஸ்காரம் செய்து ஆசிர்வாதத்தை பெற்றனர் நவீனும் மிருதுளாவும்.  வாழை இலை போட்டு இரவு உணவை ஈஸ்வரன் வீட்டார் பறிமாற பெண் வீட்டார் அனைவரும் உண்டு பின் வீட்டிற்கு திரும்பிச்செல்ல ஆயத்தம் ஆனார்கள். அப்பொழுது மிருதுளாவும் அனைவருடனும் வேனில் ஏற முயன்ற போது பங்கஜம் அவளை நவீனிடம் ஒரு வார்த்தை சொல்லிட்டு வரச்சொல்லி அனுப்பினாள். 

மிருதுளாவும் நவீனிடம் பங்கஜம் கூறியதை மட்டும் கூறிவிட்டு வேனில் ஏறி அமர்ந்தாள். பங்கஜமும் மேகலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு…

“என்ன இந்த பொன்னு இப்படி இருக்கா?”

“ஆனாலும் இவ்வளவு வெகுளியா இருக்கப்படாது மிருது. நீ நிறைய கத்துக்கணும்…”

அம்புஜம் பர்வத்திடம் சென்று…

“பர்வதம் மாமி நிச்சயத்தை அமர்க்களப்படுத்திட்டேள். ரொம்ப நல்லா நடந்தது. இனி எங்க மிருது உங்க பொன்னு.” என்றதும் பர்வதம் சட்டென்று…

“அது கல்யாணத்துக்கு அப்பறம் தானே. இப்போ நிச்சயம் தானே முடிஞ்சிருக்கு. எல்லாரும் கிளம்பரா போல …உங்கள தேடப்போரா பாருங்கோ” 

என்றாள். இதைக்கேட்டதும் அம்புஜத்துக்குள் ஒரு கவலை பற்றியது. அந்த யோசனையிலேயே அவள் வேனில் ஏறி அமர்ந்தாள். அப்போது மேகலா 

“என்ன மன்னி ஒரு மாதிரி இருக்கேள்? என்ன ஆச்சு?”

“அதெல்லாம் ஒன்னுமில்லை காலையிலேருந்து ஒரே டென்ஷன் எல்லாம் நல்லப்படியா நடக்கணும்னு அதுதான் கொஞ்சம் அசத்தறது. வேறொன்னுமில்லை.”

அனைவரிடமும் மிருதுளாவின் குடும்பத்தினரும் ராமானுஜத்தின் நண்பர்களும் விடைப்பெற்றுக்கொண்டனர். வேனும் புறப்பட்டு சென்றது.

நம்ம மிருதுளா நவீன் நிச்சயதார்த்த்திற்கு வந்திருந்த உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். 

அடுத்து நிச்சயதார்த்ததிற்கு பின் கல்யாணத்திற்கு முன் வரை நடக்கவிருப்பதை வரும் செவ்வாய் அன்று வந்து தெறிந்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தொடரும்……

நவீன் வீட்டார் அனைவரும் பெண் பார்க்கும் படலம் முடிந்தபின் வேனில் பர்வதம் வீட்டிற்கு திரும்பும்போது பெண் வீட்டாரையும் அவர்களின் விருந்தோம்பலையும் பற்றி பேசிக்கொண்டு வந்தனர்.

 நவீன் பெரியம்மா 

“நவீன் உனக்கு நல்ல பொன்னா அமைஞ்சிருக்காப்பா. ரெண்டு பேருக்கும் ஜோடிப்பொருத்தம் ரொம்ப நல்லா இருக்கு”

நவீனின் பெரியப்பா சுரேஷ் கிருஷ்ணா..

“ஈஸ்வரா ஆத்துக்கு மாட்டுப்பொன் வரப்போரா… இனி உனக்கு ருசியா சாப்பாடு கிடைக்கப்போறது …என்ன சரியா…ஓகே பர்வதம் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்” 

பர்வதம் தனக்குள் முனுமுனுத்தாள்

“ஆமாம் விளையாடராராம் …வேற வேலை இல்லை. அவர் தான் அப்படி சொல்லரார்னா இவரும் கேட்டுண்டு கெக்க புக்க னு சிறிச்சுண்டு இருக்கறத பாரு..என்னத்த சொல்ல” 

நவீன் பெரியப்பா …

“என்ன பர்வதம் ஏதோ முனுமுனுன்னு சொல்லற!!! சத்தமாதான் சொல்லேன் எல்லாரும் கேட்ப்போமோனோ”

உடனே அக்காளை காக்க வந்தார் தம்பி பிச்சுமணி.

“அத்திம்பேர் எல்லாருக்கும் கேட்கனும்னா அக்கா சத்தமாவே சொல்லிருப்பாளே….நீங்க புரிஞ்சுக்காத மாதிரி இப்படி கேட்க்கலாமா !!!”

“என்னடா நவீன் இங்க தானே இருக்க?”

என்று பிச்சுமணி கேட்டதும் அனைவரும் நவீனை நகையாடி சிரிப்பு மழையில் நனைந்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர். பிச்சுமணியின் மனைவியை என்றுமே பர்வதம் மதித்ததில்லை. அதைப்பற்றி பிச்சுமணியும் அக்காவை எதிர்த்து கேட்டதும் இல்லை. அதனால் அவர் மனைவி அம்பிகா மிகவும் அவமானப்படுத்தப்பட்டார். அன்று பெண் பார்ப்பதற்கு கூட பர்வதம் கூட்டிக்கொண்டு போகவில்லை. அவர்கள் அனைவரும் வந்ததும் அம்பிகா ஓடி வந்து விவரங்களை கேட்டாள் அதற்கு பர்வதம் 

“ம்ம்ம்… எல்லாம் சொல்லறோம் இப்ப தானே வந்துருக்கோம்”

அம்பிகா உடனே தான் பார்த்து வளர்ந்த நவீனிடம் கேட்டாள்

“என்ன நவீன் பொன்னு ஓகே வா? டும் டும் டும் கல்யாணமா?”

“ஆமாம் மாமி எனக்கு பொன்ன பிடிச்சிருக்கு ஓகே சொல்லிட்டேன் இனி நீங்க எல்லாருமா நிச்சயதார்த்ததுக்கு ஒரு டேட் பிக்ஸ் பண்ணுங்கோ. நான் இந்த மாசம் இருபத்தைந்தாம் தேதி டில்லிக்கு ரிட்டேர்ன் ஆகனும்.. 

அதுக்குள்ள நடந்ததுனா நல்லாருக்கும்.‌..இல்லைனா தென் பிப்பிரவரி மாதம் தான் லீவ் கிடைக்கும்”

நவீன் பெரியப்பா ….

“என்ன இவன் இப்படி சொல்றான். இன்னைக்கு பண்ணடு தேதி ஆகறது, இவன் இருப்பத்தைந்து கிளம்பறான் இடைல 13 நாட்கள் தானே இருக்கு!”

“நான் என்ன பண்ண பெரியப்பா…என்னை குஜராத் காந்தி நகருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிருக்கா அன்ட் ஒன்னாம் தேதி அங்க ரிப்போர்ட்  பண்ணனும் ஸோ டில்லி போய் திங்க்ஸ் எல்லாம் பாக் செஞ்சு பேப்பர்ஸ் கலெக்ட் பண்ணிண்டு ஃர்ஸ்ட் காந்தி நகர் யூனிட்டில் இருக்கனும்.”

என்று கூறி உடை மாற்ற சென்றான் நவீன்.

உடனே நவீனின் மாமாவும் பெரியம்மாவும் காலண்டரில் நல்லநாள் பார்க்க ஆரம்பித்தனர். பின் பிச்சுமணி தன் அக்காவைப்பார்த்து …

“என்ன அக்கா நாங்க எல்லாரும் இன்னும் 13 நாள் தான் இருக்குனுட்டு நல்ல நாளெல்லாம் பார்க்கறோம் நீ என்ன ஏதோ யோசிச்சிண்டு இருக்க?”

உடனே பெரியப்பா சுரேஷ் மீண்டும் …

“அது வேறோன்னும்மில்லடா பிச்சு மாமியாராக போராளோனோ அந்த கெத்து வந்துடுத்து போல. என்ன பர்வதம் கரெக்ட்டா சொன்னேனா….ஹா..ஹா..ஹா”

“அத்திம்பேர் ப்ளீஸ் பீ சீரியஸ்…இப்போ அக்காவை கிண்டல் பண்ணறதுதான் முக்கியமா?”

“ஓகே டா ….பர்வதம் காவலா. இனி உன் அக்காளை ஒன்னும் சொல்ல மாட்டேன்..போருமா?”

“பர்வதம் அக்கா, ஈஸ்வரன் அத்திம்பேர் வர வாரம் பத்தொன்பதாம் தேதி சுப முகூர்த்த நாள்ன்னு காலண்டரில் போட்டிருக்கு நவீன் கிளம்பற தேதிக்குள்ள இந்த நாள் மாத்தரம் தான் சுப முகூர்த்த நாள். அன்னைக்கே நிச்சயம் பண்ணிண்டுடலாமா? என்ன சொல்லறேங்கள்?”

பர்வதம் உடனே…” நவீனிடம் கேட்டுக்கோங்கோ” என்று கூறி அடுப்படிக்கு சென்று விட்டாள்.

இதை கேட்டுக்கொண்டே வந்த நவீன் 

“அது ஒன்னுமில்லை மாமா…. அம்மா வேண்டாம் என்று சொன்ன பொன்னை நான் ஓகே சொன்னதால் தான் இந்த ரியாக்ஷன்…அவள் நிறம் கம்மியாம் ஆள் தடியாம் …நீங்க எல்லாரும் பார்த்தேங்களே ….பெரியம்மா சொல்லுங்கோ.”

“பொன்னு அத்தர நிறம் கம்மி எல்லாம் இல்லையே!! ஆளும் அவ ஹைட்டுக்கு ஏத்த மாதிரி தான் இருக்கா…ஏன்டி பர்வதம் உன் கண்ணுல ஏதாவது பிரச்சினையா?”

என்று பர்வதத்தின் அக்கா ரமணி கூற அனைவரும் சிரித்தனர்.

“நவீனுக்குதான் பிடிக்கனும் அவன் தான் அவளோட வாழப்போறவன். அவனுக்கு பிடிச்சிருக்கு ஸோ இதுல இனி நாம பெரியவாளா லட்சணமா கொழந்தகள ஆசிர்வாதம் பண்ணுவோம்”

 இரவு உணவு உண்டு அனைவரும் அவரவர்கள் வீடுகளுக்கு சென்றனர். பர்வத்திற்கு அன்று உறக்கம் வரவில்லை. எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்தியே ஆக வேண்டுமென யோசித்தாள்… மனதில் திட்டம் ஒன்று உதிக்க நிம்மதியாக உறங்கினாள்.

மறுநாள் காலையில் பர்வதம் தனது வீட்டு தெருவில் மிருதுளாவின் அப்பா வேலை பார்க்கும் அதே அலுவலகத்தில் பண்ணிப்புரியும் ரமணன் என்பவர் வீட்டிற்கு சென்று வந்தாள். 

அன்று மிருதுளாவின் தந்தை ராமானுஜத்தை அலுவலகத்தில் போய் சந்தித்தார் ரமணன். 

“என்ன ராமானுஜம் மாமா பொன்னுக்கு கல்யாணமாமே! சொல்லவேயில்லை”

“உனக்கு எப்படி தெரியும் நேத்துதான் பொன்ன பார்த்துட்டுப்போயிருக்கா அதுக்குள்ள உனக்கு ….”

“ரொம்ப யோசிக்காதீங்கோ …நான் உங்களுக்கு சம்மந்தி ஆக போர ஈஸ்வரன் மாமா பர்வதம் மாமி ஆத்து பக்கத்துல தான் இருக்கேன். மாமி என்னாண்ட ஒரு விஷயம் சொல்லி உங்கள்ட்ட சொல்ல சொன்னா”

“என்னவாம்?” என்றார் ராமானுஜம்.

(அப்பொழுதும் தன் பெண் வாழ போகும் வீட்டிற்கு பக்கத்தில் வசிப்பவராயிற்றே அவர்களைப்பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றில்லை ராமானுஜத்திற்கு. அவ்வளவு பொறுப்பானவர்.)

“அது ஒன்னும்மில்லை மாமா நிச்சயத்திற்கு மாப்பிள்ளைக்கு ஒரு ப்ரேஸ்ளெட்டும், மோதிரமும் போடனுமாம் அத சொல்ல மறந்துட்டாளாம் அது தான் என்னாண்ட சொல்லி அனுப்பினா…நானும் சொல்லிட்டேன் வரேன் மாமா”

இதை கேட்டதும் சுர்ரென்று கோபம் தலைக்கேறியது ராமானுஜத்திற்கு. உடனே ஒரு மணிநேரம் பெர்மிஷன் போட்டு வீட்டிற்குச் சென்று…

“ஏய் அம்புஜம் அடியே அம்புஜம்.”

“என்ன …னா  என்ன ஆச்சு ஏன் இவ்வளோ கோவமா இருக்கேங்கள்?”

“என்ன நினைச்சுண்டிருக்கா அவா? நேத்தே தெளிவா பேசிடலாம்முனு சொன்னதுக்கு எங்களுக்கு ஒன்னும் வேண்டாம் அது இதுனு சபைல சொல்லிட்டு இப்போ அதுவும் அந்த ரமணனை தூது ஆனுப்பி மாப்பிள்ளைக்கு நிச்சயத்துக்கு மோதிரம், ப்ரேஸ்ளெட் போடனும்முனு சொல்லி அனுப்பிருக்கா!!!! அவனெல்லாம் யாரு அவன் வந்து என்கிட்ட என்ன நக்கலா சொல்லறான் தெறியுமா? அப்படியே வேணும்னாலும் ஏன் அவாளுக்கு ஃபோன் போட்டு சொல்ல முடியாதோ? எனக்கு இந்த இடம் சரிவரும்முனு தோனலை” 

“அச்சசோ அவசரப்படாதீங்கோ இத அவா தான் சொல்லி அனுப்பிருக்காளானு நமக்குத்தெரியாது இல்லையா? அதனால பேசாம இருப்போம்… அப்போ… அவாளே ஃபோன் போட்டு கேப்பாளோனோ… அவா கேட்கச்சொல்லிருந்தா! ” 

“என்னமோ போ… சரி சாப்பாட்ட போடு வந்தது தான் வந்தேன் அத முடிச்சுட்டுப்போறேன்”

மறுநாள் காலையிலும் ரமணன் சென்று ராமானுஜத்தை சந்தித்து …

“ஹலோ மாமா எப்படி இருக்கேங்கள்?”

“இது வரைக்கும் நல்லாதான் இருந்தேன். இன்னைக்கு என்ன விஷயமா வந்திருக்க?”

“அது ஒன்னுமில்லை மாமா”

“அப்படினா என்ன சும்மா பார்க்கறதுக்காக இத்தர தூரம் வந்தியாகும்?”

“உங்களுக்கு எப்பவுமே விளையாட்டுதான் போங்கோ”

“அய்யோ ராமா!!! விஷயத்தை சொல்லரயா நேக்கு நிறய வேல இருக்கு”

“பர்வதம் மாமி உங்களாண்ட சொல்ல சொன்னதை சொல்ல தான் வந்தேன்”

“என்னவாம் அந்த மாமிக்கு?”

“அவாளுக்கு வரலட்சுமி விரதம் உண்டாம்  அதனால வெள்ளில ஒரு சொம்பும் அம்மன் முகமும் தந்திடுங்கோனு சொல்ல சொன்னா சொல்லிட்டேன்”

“நீ யாரு அந்த மாமியோட புறாவா தூது அனுப்பிண்டே இருக்கா”

“அவா சொல்ல சொன்னா சொல்லிட்டேன் இதெல்லாம் நீங்களே அவாள்ட்ட பேசிருந்தா அவா ஏன் என்ட்ட இப்படி சொல்லி அனுப்பப்போறா மாமா…சரி நான் வரேன்” 

என்று ரமணன் கூறியதும் ராமானுஜம் ஆத்திரம் அடைந்து அன்று லீவ் போட்டு வீட்டிற்கு சென்று …

“அம்புஜம் நான்தான் அப்பவே சொன்னேனோ இல்யா இந்த இடம் நமக்கு ஒத்து வராது…சும்மா ஒவ்வொரு நாளும் அந்த ரமணனை அனுப்பி அது வேணும் இது வேணுமுனு கேட்கறது நல்லாவா இருக்கு? அவா பண்ணறது சரியில்லை இப்பவே ஃபோன போட்டு இந்த சம்மந்தத்தில் நம்மளுக்கு இஷ்டமில்லைனு சொல்லிடபோரேன்”

“ஏன் இன்னிக்கு என்ன கேட்டு அனுப்பிருந்தா?”

“அவா வரலட்சுமி விரதத்திற்கு வெள்ளில முகமும் சொம்பும் வேணுமாம்…அந்த ரமணன் சொல்லறான் இதலெல்லாம் க்ளியரா பேசிருக்கனும்முனு ….ஏன் நான் பேசலையா அவாள்ட்ட நேரடியா கேட்கலையா சொல்லு”

“என்னது வரலட்சுமி விரதமா!! கேரளா காராளுக்கு கிடையாதே பின்ன ஏன் கேட்டா? சரி இனி இத இப்படியே தொடர விட கூடாது நான் கெளம்பறேன். நம்ம ரெண்டு பேரும் இப்பவே அவா ஆத்துக்குப்போய் நேரடியா விஷயத்த சொல்லி என்ன ஏதுனு கேட்டுண்டு வரலாம் வாங்கோ”

இருவரும் புறப்பட்டு நவீன் வீட்டிற்கு சென்றனர். அங்கு நவீனும் பர்வதமும் மட்டும் இருந்தனர். மாடியிலிருந்து அம்புஜமும், ராமானுஜமும் வருவதை கண்ட பர்வதம் ….நவீனை அவன் நண்பன் சதீஷ் வீட்டுக்கு போகுமாறு வற்ப்புறுத்தினாள். ஆனால் நவீன் போகவில்லை. அவர்களும் வீட்டு வாசலுக்கு வந்து விட்டனர் உடனே பர்வதம்…

“வாங்கோ வாங்கோ என்ன திடிர்னு வந்திருக்கேங்கள் ” என்றதும் 

ராமானுஜம் சட்டென்று கோபத்தில்

“நீங்களும் திடிர் திடிர்னு தானே ஒவ்வொன்னா கேட்டு அனுப்பறேங்கள்”

நவீன் எட்டிப்பார்த்தான் பின் எழுந்து சென்று..

“வாங்கோ வாங்கோ உள்ள வாங்கோ”

“நீங்களும் ஆத்துல தான் இருக்கேளா ரொம்ப நல்லதா போச்சு. “

“என்ன சொல்லறேங்கள் எனக்கு ஒன்னும் புரியலை” 

உடனே அம்புஜம் 

“இல்லை விஷயம் என்னனா…”

“என்னத்துக்கு அவாள மாதிரியே இழுக்கறாய்? நான் நேரடியாவே கேட்கறேன் …..நீங்க என் பொன்னைப்பார்க்க வந்தப்போவே உங்கள் எதிர்பார்ப்புகளை சொல்லச்சொன்னேனா இல்லையா அப்போ ஏதோ எனக்கு எதுவும் வேண்டாம்னு சொன்னேங்கள் எங்களுக்கும் ரொம்ப சந்தோஷமா இருந்தது எல்லாம் ஒகே ஆனால்  என் கூட வேல பார்க்குர ரமணன் கிட்ட மோதிரம்,  ப்ரேஸ்ளெட், வெள்ளில முகம், சொம்பு அது இதுனு ஒவ்வொரு நாள் ஒவ்வொன்னா கேட்டு அனுபறேங்களே இது நல்லா இருக்கா சொல்லுங்கோ சபேல வேண்டாம்னு சொல்லிட்டு தனியா இப்படி அதுவும் மூனாம் மனுஷாள விட்டு கேட்க சொல்லலாமா? எனக்கு மனசு கேட்கலை அதுதான் நாங்க ரெண்டு பேரும் நேரா பேசி க்ளியர் பண்ணிக்கலாம்னு வந்திருக்கோம்!”

ராமானுஜம் ஆவேசத்தில் பேசி முடித்ததும் அம்புஜம்

“தப்பா எடுத்துக்காதீங்கோ அவர் ஏதோ டென்ஷன்ல பேசிட்டார் ஆனாலும் உண்மை தானே மத்தவாள விட்டு கேட்க சொன்னதுக்கு பதில் நீங்களே ஒரு ஃபோன் போட்டு கேட்டுருக்கலாம்”

நடந்தது அனைத்தும் அப்பொழுது தான் நவீனுக்கு தெறிய வந்தது…அவன் யோசித்துக்கொண்டே …

“ஆமாம்… ரமணன் மாமாட்ட இதெல்லாம் எங்காத்தேந்து யாரு கேட்க சொன்னாலாம்?”

“பர்வதம் மாமி தான் கேட்க சொன்னதா சொன்னான்” என்றார் ராமானுஜம்

அதை கேட்டதும் தூக்கிவாரிப்போட்டது பர்வதத்திற்கு ஆனாலும் சுதாரித்துக்கொண்டு

“நானா ? நான் எந்த ரமணன் குமணன் கிட்ட எல்லாம் எதுவும் கேட்க சொல்லலையே” என்று முழு பூசணிக்காயை மறைக்கப்பார்தாள்.

ராமானுஜம் விடுவதாக இல்லை …” ஓ அப்படியா விஷயம் ஒகே மாமி ரமணனுக்கு என் பொன்னுக்கு நிச்சயம் ஆக போறத பத்தி நாங்க யாரும் சொல்லலை அது பாய்ண்ட் நம்பர் ஒன் இன்னும் பத்து நிமிஷத்துல ரமணனே வீட்டுக்கு வந்திடுவான் அவன் உங்க தெருவில் தான் இருக்கானாமே கூப்பிட்டு உங்க முன்னாடியே ஏன் அப்படி பொய் சொன்னான்ங்கறதையும் கேட்டு தெரிஞ்சுண்டே போறோம்”

பர்வதம் ரமணன் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததையும் தனது தாய் குணத்தை தெரிந்ததனாலும்…இந்த பிரச்சினை பெரிசாகாமலிருக்க….நவீன் 

“ஓகே நீங்க ஸ்டேரைட் ஃபார் வேர்ட் ஆ இருக்கறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.  நடந்ததெல்லாம் விடுங்கோ தப்பு எங்க யாரு பண்ணிருக்கா எல்லாம் நான் பார்த்துக்கறேன். ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோங்கோ இதெல்லாமே எனக்கு தெரியாமல் நடந்திருக்கு ஆனாலும் மண்ணிப்பு கேட்டுக்கறேன். இனி இது மாதிரி நடக்காது. எதுவா இருந்தாலும் நீங்கள் என்னிடம் டைரக்ட்டா பேசிடுங்கோ அதுதான் எல்லாருக்கும் நல்லதுனு நான் நினைக்கறேன். அன்ட் நிச்சயதார்த்தம் 19த் வச்சுக்கலாமானு டிஸ்கஸ் பண்ணி சொல்லுங்கோ. ஏன்னா நான் இருபத்தைந்தாம் தேதி டில்லிக்கு திரும்பனும் என்னை குஜராத் காந்தி நகருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிருக்கா அன்ட் ஒன்னாம் தேதி அங்க ரிப்போர்ட்  பண்ணனும் ஸோ டில்லி போய் திங்க்ஸ் எல்லாம் பாக் செஞ்சு பேப்பர்ஸ் கலெக்ட் பண்ணிண்டு ஃர்ஸ்ட் அன்னைக்கு காந்தி நகர் யூனிட்டில் இருக்கனும்.  இத விட்டா அப்பறம் பிப்ரவரியில் தான் லீவு கிடைக்கும். இன்னைக்கு சாயங்காலம் ஃபோன் போட்டு சொல்லலாம் என்று இருந்தோம் நீங்களே நேரா வந்ததனால சொல்லிட்டேன்”

“ஐயோ மாப்பள மண்ணிப்பு எல்லாம் நாங்க எதிர் பார்க்கலை இனி இப்படி நடக்காம இருந்தா போரும். எதுவா இருந்தாலும் டைரெக்ட்டா எங்கள்ட்டயே கேளுங்கோ ப்ளீஸ். அப்போ கல்யாணத்துக்கு அப்பறம் எங்க மிருது குஜராத்துக்கு வரனுமா ” என்றாள் அம்புஜம்

“அப்படியே ஃபாலோ பண்ணுவோம் அன்ட் எஸ் நாங்க குஜராத் தான் போகனும்”

“மழ வரா மாதிரி இருக்கு நாங்க கிளம்பரோம். வரோம் மாமி. ஈஸ்வரன் மாமா வ விசாரிச்சதா சொல்லுங்கோ. வரோம் மாப்பள” என்றார் ராமானுஜம்.

அவர்கள் சென்றதும் நவீன் பர்வதத்தைப் பார்த்து 

“ஏன் இப்படியெல்லாம் செய்யராய்? இனி இப்படி ஏதாவது பண்ணினயோ வேண்டாம் இதுவே கடைசியா இருக்கட்டும்”  என்றதும் ஒன்றுமே நடக்காததுபோல….

“நிச்சயதார்த்தத்திற்கு பொன்னுக்கு புடவை எடுக்கனும் மற்ற செலவெல்லாம் இருக்கு “

என்று கூறி பணம் வாங்கிக்கொண்டாள். 

ஈஸ்வரன் ஒரு பொறுப்பான  தந்தையாக என்றுமே இருந்ததில்லை. அவர் பொறுப்புடன் இருந்திருந்தால் நவீன் விருப்பப்பட்ட மருத்துவப்படிப்பு முடித்து ஒரு மருத்துவராக இருந்திருப்பான். அவரின் பொறுப்பின்மை மற்றும் கெட்ட பழக்கங்களால்  வேலையை இழந்தார். ஒரு காலத்தில் பெரிய குடிமகன், புகை அணையாத புகைவண்டி, வெற்றிலை பாக்கே தன்னை பார்த்து சற்று ஓய்வு கொடுக்க கெஞ்சும் அளவுக்கு வெளுத்துக்கட்டும் வெற்றிலை பிரியர். பிள்ளைகளை விளையாட அனுப்பிவிட்டு அவர்களை தேடும் பெற்றோர்கள் பற்றி அறிந்துள்ளோம். ஆனால் ஏழாவது படிக்கும் நவீனுக்கு தன்னை விட நான்கு மடங்கு எடையுள்ள தன் தந்தையை தேடி அலைந்து கண்டு பிடித்து அவரை சுமந்து  வீட்டில் கொண்டு சேர்ப்பதற்குள் பாதி உயிர் போய்விடும். பிள்ளைகள் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி அவர்களை மீட்டெடுக்க போராடும் பெற்றவர்களைப்பற்றி நாம் அறிந்ததே ஆனால் இங்கோ அது தலைகீழாக இருந்தது. தனது தந்தையை தீய பழக்கங்களிலிருந்து மீட்டெடுக்க பல வழிகளில் பலர் உதவியோடு போராடி வெற்றிக்கண்டான் நவீன்.

பர்வதம் பொறுப்பில்லாத, பேராசைக்கும் பொறாமைக்கும் சொந்தக்காரி ஆவாள். இப்படிப்பட்ட பெற்றவர்களையும், கூட பிறந்த தம்பிகளையும் காப்பாத்த வேண்டி பல சொந்தங்கள், நண்பர்கள் என எல்லார் வீட்டு வாசலிலும் பணத்திற்க்காக தனது தாயால் நிற்க வைக்கப்பட்டான் நவீன் தனது பண்ணி ரெண்டு வயதிலிருந்து. நல்ல தாய் என்றால் தனக்கு தெரிந்த ஏதாவது ஒரு வேலையை செய்து ஏன் பத்து வீட்டுக்கு பத்துப்பாத்திரம் தேய்த்தாவது கௌரவமாக பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்திருப்பாள். ஆனால் பர்வதம் நவீனை ஒரு ஏடிஎம் போலவே வளர்த்து வந்தாள். 

பெற்றோர்கள் பாலூட்டி சீராட்டி தோள்மீது தூங்க வைத்து வளரவேண்டிய குழந்தை தன் பெற்றோர்களை தோள்மீது சுமக்க ஆரம்பித்தது. ஊனமுற்ற பெற்றோர்கள் என்றால் அதில் ஒரு நியாயம் உண்டு ஆனால் பொறுப்பற்ற சுயநலமான பெற்றோர்கள் என்றால் வாழ்க்கை நரகமே. ஆனாலும் அசரவில்லை நம் நாயகன் நவீன். 

பணத்திற்காக அடுத்தவர்களிடம் போய் நின்றால் என்னென்ன அவமானங்கள் நேரும் என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்ததனால் தான் ப்ளஸ்டூ முடித்ததும் ஆர்மியில் சேர்ந்துவிட்டான். அவனது முதல் தம்பி கவினுக்கு வேலை கிடைத்து அவன் குவைத்தில் பணிமாற்றம் ஆன பிறகு தான் நவீன் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் கூறியுள்ளான். இப்பொழுது புரிகிறதா நம்ம பர்வதத்திற்கு ஏன் இந்த சம்மந்தம் பிடிக்கவில்லை என்று. இந்த சம்மந்தம் என்றில்லை அவளுக்கு நவீன் திருமணம் செய்துக்கொள்வதிலேயே இஷ்டம் இல்லை. 

தொடரும்…..

மேனகா சென்றதும் பர்வதம் அந்த ஃபோட்டோவைப்பார்த்தாள். பின் தனது சகோதரனான பிச்சுமணிக்கு ஃபோன் போட்டு விஷயத்தை கூறி வரச்சொன்னாள். அவரும் அக்கா சொல்மிக்க மந்திரம் இல்லை என்றிருக்கும் தம்பியாச்சே உடனே பர்வதம் வீட்டில் விஜயம் செய்தார். அவர் நாஷ்னலைஸ்டு வங்கியில் மேனேஜராக இருக்கிறார். 

“என்ன பர்வதம் அக்கா கல்யாணம் கதவ தட்டியாச்சோ? பொன்னு யாரு? அப்பா என்ன பண்ணரார்? விவரத்தை சொல்லு”

“எல்லா விவரமும் இதோ இதுல இருக்கு. இந்தா இதப்படிச்சுண்டு இரு நான் உனக்கு காபி போட்டுண்டு வரேன்.”

“சரி நம்ம நவீனான்ட சொன்னயோ? என்ன சொல்லறான் அவன்?”

“சொன்னேன் அடுத்த வாரம் இங்க வரானாம் தீபாவளி வரதோனோ அதுக்காக …அப்படியே பொன்ன பார்த்துட்டு சொல்லரேன்னு சொல்லறான்”

“அவன் சொல்லறதும் சரி தான். அவனே நேர்ல பார்த்து சொல்லிட்டானா பின்ன நமக்கும் வேல மிச்சம் பாரு”

“அவன் பார்க்கறத்துக்கு முன்னாடி நாம ஒரு எட்டு போய் பார்த்து என்ன ஏதுங்கற விவரங்கள் எல்லாம் தெரிஞ்சுண்டு வருவோமா? பொன்னு ஃபோட்டல நிறம் கொஞ்சம் கம்மியா இருக்கறா மாதிரி தெரியரது…கொஞ்சம் ஆளும் தடியா இருப்பாளோனு தோனரது …அதுதான் போய் நாம பார்கலாமானு கேட்டேன். வர ஞாயிற்றுக்கிழமை போகலாமா?”

“சரி அதுவும் சரிதான் நான் அம்பிகாவையும் கூட்டிண்டு வந்துடரேன். நாம சேர்ந்தே போகலாம்”

“ஓக்..கே …ஆனா நீயும் நானும் மட்டும் அவா ஆத்துக்கு போனா போரும் உன் ஆத்துக்காரி அம்பிகா இங்கயே எங்க ஆத்துலேயே இருக்கட்டும்”

“சரி க்கா உன் இஷ்ட்டம். அப்போ நான் கிளம்பறேன். ஞாயிற்றுக்கிழமை பார்ப்போம் வரேன்”

பர்வதம் கணவர் ஈஸ்வரன்  பெண்வீட்டாருக்கு ஃபோன் போட்டு விவரத்தை சொன்னார். 

ஞாயிற்றுக்கிழமை வந்தது பெண்ணின் தாய் பரபரப்பானாள் எத்தனை பேர் வருவார்களோ? மிருதுளாவிடம் விவரத்தை சொல்லி  தயார் ஆக

சென்னாள். மிருதுளாவும் தாய் சொல்லை தட்டாமல் அவர் கூறியபடியே செய்தாள். அம்புஜம் மாலை சிற்றுண்டி செய்தாள். காபி போட இரண்டு பால் பாக்கெட் வைத்திருந்தாள். பங்கஜத்துக்கு ஃபோன் போட்டு விவரத்தை சொல்லி

வரச்சொல்லிருந்தாள் ஆனால் அன்று பங்கஜத்தால் வரமுடியாத சூழ்நிலையானது. அம்புஜமும், ராமானுஜமும் அக்கம் பக்கத்தினரிடம் சொந்த பந்தகளிடம் என யாரிடமும் கூறவில்லை. அவர்கள் பார்த்து சம்மதித்தால் பின் அனைவரிடமும் கூறிக்கொள்ளலாம் என்றிருந்தனர். 

மாப்பிள்ளை வீட்டிலிருந்து அவர் அம்மா பர்வதம், தாய்மாமா பிச்சுமணி மற்றும் அவரின் இரண்டாவது தம்பி ப்ரவீன் ஆகிய மூவர் மிருதுளாவைப்பார்க்க வந்தனர். பர்வதம் மிருதுளாவை ஏற எறங்க பார்த்துக்கொண்டிருந்தாள்….பிச்சுமணி பேச்சுக்கொடுத்தார்… மிருதுளாவும் அவர்களுடன் சகஜமாக பேசினாள். 

அம்புஜம் காபிப்போட பாலை காய்ச்சும்போது இரண்டு பாக்கெட் பாலும்  திரிந்து போனது. பதற்றமானாள் உடனே ராமானுஜத்தை உள்ளே அழைத்து விஷயத்தை கூறினாள். அதற்கு அவர் ஒன்று போய் வேர பால் பாக்கெட் உடனடியாக வாங்கிக்கொண்டு வந்திருக்கவேண்டும் இல்லையேல் வேறெதாவது யோசனை சொல்லிருக்க வேண்டும் ஆனால் அவரோ… தனக்கு காபி வேண்டாம் என்று சொல்லிவிட்டு போய் ஹாலில் அமர்ந்துக்கொண்டார். பொறுப்பில்லாத மனுஷனிடம் சொல்லி என்ன பிரயோஜனம் என்று தன் தலையில் அடிந்துக்கொண்டு வேனுவை அழைத்து பால் பாக்கெட் வாங்கி வரச்சொல்லி பின் அவர்களுக்கு காபி போட்டுக்கொடுத்தாள். அவர்கள் வந்த விவரத்தை எல்லாம் கலெக்ட் செய்ததும் வருகிறோம் என்று கூறி விடைப்பெற்றனர். ஹாலில் அவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்த ராமானுஜம் அவர்களைப்பற்றி ஒரு விவரமும் கேட்டு தெறிந்துக்கொள்ளாதது அம்புஜத்துக்கு ஆத்திரத்தை வரவழைத்தது.

மாப்பிள்ளை வீட்டார் பெண்ப்பார்த்து சென்ற விவரங்கள் எதுவும் மாப்பிள்ளை நவீனுக்கு சொல்லவில்லை. நவீன் தான் செய்யும் வீக்லீ காளில் தான் விவரங்கள் தெறிந்துக்கொண்டான்.

நவீன் இந்திய ராணுவத்தில் தனது பதினேழு வயதிலிருந்து பணியாற்றி வருகிறார். தற்போது புது தில்லியில் போஸ்ட்டிங் போடப்பட்டு அங்கு வசித்து வருகிறார். 

பர்வத்திற்கு கூட பிறந்தவர்கள் ஒரு அக்கா ரமணி, தம்பி பிச்சுமணி இருவரும் பர்வதம் இருக்கும் ஊரான திருச்சியிலேயே வசித்து வருகின்றனர்.  தங்கைகள் லட்சுமி, லலிதா இருவரும் திருமணம் முடித்து தில்லியில் வாழ்ந்து வருகின்றனர். 

பர்வதம், ஈஸ்வரன் தம்பதியினருக்கு நான்கு பிள்ளைகள். ஈஸ்வரன் அவர் செய்து வந்த பணியிலிருந்து வீ.ஆர்.ஸ் வாங்கிக்கொண்டு குடும்பத்துடன் திருச்சிராப்பள்ளியில் செட்டில் ஆகிவிட்டார், பர்வதம் இல்லத்தரசி என்று தான் மேனகா மூலமாக மிருதுளா குடும்பம் தெரிந்துக்கொண்டது. மூத்தவன் பெயர் நவீன் நமது கதையின் நாயகன், இரண்டாவது கவின், மூன்றாவது மகன் ப்ரவீன், கடைக்குட்டியின் பெயர் பவின். நவீனின் ஜாதகமே நமக்கு தான் தெரியுமே மற்றவர்களைப்பற்றி தெரிந்துக்கொள்வோம். கவின் குவைத்தில் பணிபுரிந்து வருகிறான். ப்ரவீன் மற்றும் பவின் இருவரும் கல்லூரியில் படித்துக்கொண்டு வருகின்றனர். 

நவீன் தில்லியிலிருந்து திருச்சி வந்து சேர்ந்தான். அவர்கள் அனைவரும் கலந்துரையாடினார்கள் அப்போது பர்வதம் நவீனிடம்

பொன்னு தடியா இருக்கா. நிறம் வேற கம்மி எனக்கென்னவோ இந்த சம்பந்தம் வேண்டாம்னு தோனறது. நான் அவாளுக்கு ஃபோனை போட்டு சொல்லிடவா?

இல்ல அவசரப்படாதே…மாமா தானே உன்னோட வந்தார் நான் அவர்ட்ட ஒரு வார்த்தை பேசிட்டு சொல்லறேன். 

என்றான் நவீன். அடுத்த நாளே தனது பிச்சுமணி மாமாவை காண அவர் வீட்டுக்குச்சென்றான். இருவரும் அவரவர் பணியைப்பற்றி சிறிது நேரம் உரையாடினர் பின் நேராக விஷயத்திற்கு. வந்தான் நவீன். 

மாமா நீங்களும் அம்மாவோட பொன்னுப் பார்க்க போனேளே பொன்னு எப்படி என்ன ப்ரோஸீட் பண்ணலாமா …ஏன் கேட்கறேன்னா நான் மொதோ மொதோ பார்க்கப்போர பொன்னு இவள் அதனால ரிஜக்ட் பண்ண வேண்டாம்னு தோனறது அதுவும் அவளுக்கும் என்னை பிடித்திருந்தால். வாட் டூ யூ ஸே? 

என்ன பொருத்தவரைக்கும் நல்ல குடும்பமா படரா. பொன்னும் நல்லா இருக்கா அன்ட் நல்லா பழகரா பேசரா. ஸோ ஐ திங்க் யூ கேன் ப்ரோஸீட் அன்ட் ஐ ஃபீல் யூ ஷுடுன்ட் மிஸ் ஹெர். 

ரொம்ப தாங்ஸ் மாமா. அம்மா ஏதேதோ சொல்லி இந்த சம்பந்தம் வேண்டாம் னு சொன்னா.. ஆனா இப்போ ஐ ஆம் கிளியர். எனக்கும் இரண்டு வாரம் தான் லீவ் அதனால இந்த சன்டேவே பொன்ன பார்க்கலாம்முன்னு இருக்கேன். இத அப்பா அம்மாட்டயும் சொல்லி அவாள்ட்டயும் சொல்ல சொல்லிடறேன். நான் கிளம்பறேன்.

ஆல் தி பெஸ்ட் ரா. எல்லாம் நல்லதாகவே நடக்கும். லெட் அஸ் மீட் ஆன் சன்டே. பத்திரமா ஆத்துக்கு போ.

ஓகே மாமா அன்ட் மாமி பைய்.

வீட்டிற்கு வந்ததும் தனது பெற்றோரிடம் அந்த பெண்ணைப்போய் ஒரு முறைப்பார்த்துவிட்டு வந்திடலாம் அப்புறம் டிசைட் பண்ணலாம் என்று கூறி வர ஞாயிற்றுக்கிழமை பெண் பார்க்க வருவதாக பெண் வீட்டாரிடம் தெரிவிக்க  சொனான் நவீன். பர்வதத்திற்கு துளியும் இஷ்ட்டமில்லை காரணம் ஏனென்று அவளுக்கு மட்டுமே தெரியும். அறை மனதோடு அம்புஜத்துக்கு ஃபோன் போட்டு தங்களின் மகன் வரவைத்தெரிவித்து அப்படியே பெண் பார்க்க ஒரு பத்துப்பேர் வருவதாகவும் தெரிவித்தாள். 

அம்புஜம் ஃபோனை வைத்ததும் நேராக கடவுளிடம் சென்று தன் பெண்ணிற்காக வேண்டிக்கொண்டாள். பின் விவரத்தை வீட்டிலிள்ள ராமானுஜத்திடமும் வேனுவிடமும் மற்றும்  இருவரும் தனது தங்கை பங்கஜத்திடமும், ராமானுஜத்தின் தம்பி ராமநாதனிடமும் கூறி அனைவரையும் ஞாயிற்றுக்கிழமை தங்களின் வீட்டுக்கு வரும்படி அழைத்தனர். ராமானுஜத்தின் நண்பர் ஒருவர் விஷேஷங்களுக்கு சமையல் செய்பவர். அவரை அன்று மாலை டிபன் செய்ய வரவழைத்தனர். 

ஞாயிற்றுக்கிழமை வந்தது மாப்பிள்ளை வீட்டார் மாலை 3:30 மணிக்கு மிருதுளாவைப் பார்க்க அவள் இல்லம் வந்தனர். அனைவரையும் ராமானுஜமும் அம்புஜமும் வரவேற்று வீட்டு ஹாலில் அவர்களை அமர வைத்தனர். பின் நவீன் வீட்டார் மிருதுளா வீட்டாருடன் ஒருவருக்கொருவர் விசாரித்து யார் என்ன உறவு என்பதை எல்லாம் விசாரித்துக்கொண்டிருந்தனர். நவீன் தன் நண்பனிடம் என்னட இப்படி பேசிக்கிட்டே இருக்காங்க ஆனா பொன்ன காட்ட மாட்டேங்கறாங்க என்று முனுமுனுக்க அதை கேட்ட மாமா பிச்சுமணி…

சரி நாழி ஆரது…இப்பவே மணி நாலாச்சு…நாலரைக்கு ராகுகாலம் தொடங்கரத்துக்கு முன்னாடி பொன்னப்பார்த்து பேச வேண்டியது எல்லாம் பேசிடலாமே அப்பறம் சாவகாசமா ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுக்கலாம். அம்புஜம் மாமி பொன்ன வரச் சொல்லுங்கோ.

பங்கு நீ போய் மிருதுவ அழைச்சிண்டு வா. 

மிருதுளா வந்தாள். அனைவரையும் நமஸ்க்கரித்து சகஜமாக எல்லோருடனும் பேச ஆரம்பித்தாள். நவீனுக்கு அவளைப்பார்த்ததுமே மிகவும் பிடித்துப்போனது ஆனால் அவனுக்கு ஏதோ அவளிடம் சொல்ல

வேண்டியிருந்ததால் தனியாக பேச அனுமதிக்கேட்டான். 

அம்புஜமும், ராமானுஜமும் சரி என்று சொல்ல மிருதுளா எழுந்து நவீனை அவர்கள் வீட்டில் இருக்கும் ஒரே அறைக்கு அழைத்துச்சென்றாள். அந்த அறையின் வாசலில் பங்கஜத்தின் கணவரும், ராமநாதனும்

நின்றுக்கொண்டு கவனித்துக்கொண்டே இருந்தனர். முதலில் நவீன் பேசலானான்..

ஹாய்! என் பேரு நான் என்ன வேலை பார்க்கறேன் என்ற விவரமெல்லாம் உனக்கு தெரிந்திருக்கும். என்ன உனக்கு பிடிச்சிருக்காங்கறது எனக்கு தெரிஞ்சிக்கனும். அதுக்கு முன்னாடி என்னைப்பற்றிய உனக்கு தெரியாத சில விஷயங்களை சொல்லறேன் அப்புறம் நீ என்னை பிடிச்சிருக்கானு சொல்லு போரும். ஓகே.

ஓகே சொல்லுங்கோ 

எனது இந்த தலைமுடி டிரான்ஸ்ப்ளான்ட் செய்யப்பட்டது. இத சொல்லி உன் விருப்பத்த தெரிஞ்சுக்க தான் நான் தனியா பேசனும்முனு வந்தேன். நான் சொல்ல நினைத்தது இதுதான். இனி உனக்கு என்னிடம் சொல்லவோ இல்ல கேட்க்கவோ ஏதாவது இருந்தா கேட்கலாம். யோசித்து பதில் சொன்னாப்போரும். 

என்ன உங்களுக்கு பிடிச்சிருக்கா?

எனக்கு பிடிச்சதனாலதான் என்னைப்பற்றிய விஷயத்தை ஷேர் பண்ணரேன். எனக்கு உன் விருப்பம் தெறிஞ்சுக்கனும். 

எனக்கும் இப்படி வெளிப்படையா இருக்கிற உங்களைப் பிடிச்சிருக்கு.

சரி எல்லாரும் வெளியே வேயிட் பண்ணரா வா போகலாம்.

மிருதுளாவின் சித்திகளும் சித்தப்பாக்களும் அவளை சுற்றிக்கொண்டு என்ன ஆச்சு என்ன சொன்னார்?  என்று கேட்டுக்கொண்டிருக்கும் போது ராமானுஜம் மிருதுளாவை அழைத்தார். அவளும் உடனே ஹாலுக்குச் சென்றாள்.

மணி நாலரை ஆக இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு சட்டுபுட்டுனு அடுத்தது என்னு சொல்லுங்கோ என்றார் நவீனின் பெரியப்பா.

பர்வதம் மெதுவாக தாங்கள் கலந்தாலோசித்து முடிவை சொல்லி அனுப்பறோம் என்று சொல்லிக்கொண்டே இருக்கும்போது சட்டென்று நவீன் 

எதுக்கு இழுத்தடிச்சுண்டு எனக்கு மிருதுளாவ பிடிச்சிருக்கு அவளக்கு என்ன பிடிச்சிருக்கானு கேளுங்கோ 

அனைவரின் பார்வையும் மிருதுளா மீது பாய்ந்தது. மிருதுளாவும்

எனக்கும் அவரை பிடிச்சிருக்கு.

என்று சொல்ல அனைவரும் மகிழ்ச்சியுற்றனர் பர்வதத்தைத்தவிர.

ராமானுஜம்  அவர் தரப்பை கிளியர் செய்துக்கொள்ள …

எல்லாம் சரி… எனக்கு ஒரு பொன்னுதான். எங்களாள முடிஞ்சதை நிச்சயமாக நாங்க செய்வோம். ஒரு நாற்ப்பத்தஞ்சு பவுன் நகை,  வெள்ளி ஜாமான்கள், வீட்டுக்கு வேண்டிய பாத்திரங்கள் அன்ட் கல்யாணத்தை ஜோரா பண்ணறோம். என்ன சொல்லறேங்கள். உங்களோட எதிர்ப்பார்பையும் சொல்லிட்டேங்கள்னா இப்பவே டிசைட் பண்ணிடலாம் அப்பறம் நாள பின்ன அது சரியில்ல இது இல்லனு எல்லாம் வரப்படாதோனோ அதுதான் …தப்பா எடுத்துக்காதீங்கோ என்னால முடிஞ்சத நான் சொல்லனோமோ அதுதான் எல்லார் முன்னாடியும் சொல்லிட்டேன்.  இனி நீங்கதான் சொல்லணும்.

இதை கேட்டதும் நவீன் சட்டென்று எழுந்து எனக்கு உங்க பொன்ன பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிக்கறேன் ஆனால் இந்த நகை பாத்திரம் ஒன்னும் வேண்டாம். எனக்கு எதுவும் வேண்டாம். இதற்கு மேலும் இதைப்பற்றி யாரும் பேச வேண்டாம் ப்ளீஸ். 

என்றதும் பர்வதத்திற்கு சுர்ரென்று ஆத்திரம் தலைக்கேறியது. அவளுக்கு மிருதுளாவை நவீனுக்கு கட்டிவைக்கவே விருப்பமில்லை இதில் நவீன் வேறு வரதட்சணை ஏதும் வேண்டாமென்று சொன்னதில் அவள் அதிர்ந்து போனாள். 

ராமானுஜம் விடாமல்….

என்னால் முடிந்ததை நான் சபையில் சொல்லிவிட்டேன் அதை என் பொன்னுக்கு நிச்சயம் செய்வேன். நீங்கள் வேண்டாமென்பது உங்கள் விருப்பம். அதை சொன்னதுக்கு நன்றி. ரொம்ப சந்தோஷமாவும் இருக்கு. சரி எல்லாரும் சாப்பட வாங்கோ 

என்று கூறி இலைப்போட்டு மாலை சிற்றுண்டி பறிமாறப்பட்டது. அனைவரும் உணவருந்தியப்பின் நவீன் வீட்டார் நிச்சயதார்த்தத்திற்கு நாள் குறித்துவிட்டு தெறிவிப்பதாக கூறி விடைப்பெற்றனர். 

அம்புஜம் மிருதுளாவை முத்தமிட்டாள் பின் நேராக பூஜை அறைக்குச்சென்று கடவுளுக்கு நன்றி சொன்னாள். வீடே சந்தோஷ வெள்ளத்திலிருந்தது.

தொடரும்…..

RTA வில் இருந்து வந்த குறுஞ்செய்தியை திறந்து பார்த்தேன். அதில் நான் எட்டாம் தேதி பதிவு செய்திருந்த ரோட் டெஸ்ட் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாகவும். அந்த டெஸ்ட்டை மார்ச் 13 ஆம் தேதி எடுக்கும் படியும் இருந்தது. அதைப் பார்த்ததும் “அச்சச்சோ அதுக்கு இன்னும் அஞ்சு நாளு இருக்கே! அதுக்குள்ள எல்லாத்தையும் மறந்துட்டேன்னா!!!என்று எண்ணி அதற்கு முன்னதாக ஏதாவது டேட் கிடைக்கிறதா என்று பார்ப்போம் என்று கூறிக்கொண்டே வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்தேன். விவரத்தை கூறி ஏன் எனது பரீட்சை தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று முதலில் கேட்டேன். அதற்கு அந்த பக்கமிருந்த பெண்மணி ஏதோ RTA வில் சிஸ்டம் இஷுஸ் என்று கூற…சரி என்னவோ இருக்கட்டும், எனக்கு 13 ஆம் தேதிக்கு முன்னாடி ஏதாவது ஸ்லாட் கிடைக்குமா என்று கேட்க அனைத்து ஸ்லாட்டுகளும் ஃபுல் என்றும் வேண்டுமெனில் அதற்கு அடுத்த ஸ்லாட்டான பதினாறாம் தேதி பதிவு செய்துக் கொள்லாம் என்று கூறினாள். அதை கேட்டதும் வேக வேகமாக “இல்லை இல்லை பதிமூன்றாம் தேதியை இருக்கட்டும். பரவாயில்லை. தாங்க்ஸ்” என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டு கணவரை பார்த்தேன். அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவர். “பரவாயில்லை அதெல்லாம் ஒண்ணும் மறக்க மாட்ட. சைக்கிள், சுவிம்மிங், கார் இதெல்லாம் ஒரு தடவ காத்துண்டா எப்போதும் மறக்காது. ஸோ ஜஸ்ட் சில்” என்று கூறி சென்றார். வேற என்ன பண்ணுவது? பதிமூன்றாம் தேதிக்கு காத்திருந்தேன்.

மார்ச் பதிமூன்றாம் தேதி வந்தது. இம்முறை பரீட்சை காலை எட்டு மணிக்கு பதிவாகி இருந்தது. இந்த தடவை வேறு ஒரு முக்கியமான கால் இருப்பதால் என் கணவர் வரவில்லை. என் மகன் தான் அவரின் காரில் அழைத்துச் சென்றார். நான் ஏழரை மணிக்கெல்லாம் பெண்களுக்கான காத்திருப்பு அறையில் சென்று அமர்ந்தேன். மணி எட்டு ஆனது. மகனிடமிருந்து ஒரு மெஸேஜ் வந்தது. டெஸ்ட் ஸ்டார்ட்டட்டா? என்று. அதற்கு நான் இன்னும் இல்லை காத்துக் கொண்டிருக்கிறேன் என்று பதிலளித்தேன். உடனே “நோ டென்ஷன். கம் அவுட் வித் லைசென்ஸ். ஆல் தி பெஸ்ட்” என்று மீண்டும் ஒரு மெஸேஜ் அனுப்பினார். நானும் “தாங்க்ஸ். வில் டூ மை பெஸ்ட்” என்று டைப் செய்து அனுப்பியதும் என் பெயரை அழைத்தார் அரபு நாட்டு பெண் ஆய்வாளர். உடனே எழுந்து “எஸ்” என்று கூறினேன். அன்று போலவே இன்னும் இருவர் பெயர்களை அழைத்தார். ஆனால் மூவரில் இருவர் மட்டுமே இருந்தோம். அந்த ஆய்வாளர் மூன்றாவது நபருக்காக காத்திருக்காது எங்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு கார் பார்க்கிங்கிற்குள் சென்றார்.

அங்கே போனதும் என்னுடன் வந்திருந்த பெண்மணியை முதலில் காரை ஓட்ட சொன்னார். என்னை இரண்டாவதாக ஓட்டச் சொன்னார். அதை கேட்டதும் அப்பாடா! என்று எனக்கு இருந்தது. அந்த பெண் முதலில் காரில் ஏறியதும் சில மணி துளிகள் ஆய்வாளர் அவரிடம் மிகவும் சகஜமாக பேச்சுக் கொடுத்தார். பிறகு காரை வெளியே எடுக்க சொன்னார். அந்த பெண்ணும் நிதானமாக காரை வெளியே எடுத்து ஓட்டத் துவங்கினாள். அவரை உள் சாலைகளில் எல்லாம் ஒரு பத்து நிமிடங்கள் ஓட்ட வைத்துவிட்டு காரை ஓரமாக நிப்பாட்ட சொன்னார். பின் நெக்ஸ்ட் என்று கூறியதும். அந்த பெண் பின்னால் வந்து அமர நான் முன்னால் டிரைவர் சீட்டில் அமர்ந்து செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை செய்து கொண்டிருக்கையில் ஆய்வாளர் என்னிடம் நான் அணிந்திருந்த டிரஸ் நன்றாக இருப்பதாகவும் அதை எங்கு வாங்கினேன் என்றும் கேட்டார். நானும் இந்தியாவில் வாங்கினேன் என்று பதில் கூற, அவரோ வாவ். இட்ஸ் வெரி நைஸ் டாப்ஸ் என்று கூறி வண்டியை எடுக்க சொன்னார். அவருடனான அந்த சில மணித் துளி உரையாடல் என் பதற்றத்தை குறைத்தது. அதற்காக தான் அவர் பேச்சுக் கொடுத்தாரோ என்னவோ!!

அதன் பின் வண்டியை எடுத்தேன். உள் சாலைகளில் சற்று நேரம் இடது வலது என்று திருப்பி திருப்பி ஓட்ட வைத்தவர் நேராக பிரதான சாலையில் சென்று இணையும் படி கூறினார். நானும் வகுப்பில் கற்றுக் கொண்டது போலவே ஓட்டினேன். அறுபது ஸ்பீடில் ஓட்டிக் கொண்டிருந்த என்னிடம் சட்டென ரைட் லேனுக்கு மாறும் படி கூறினார் ஆய்வாளர். நானும் மாறினேன். பின் ரைட் கட் எடுத்து பிரதான சாலையில் இருந்து உள் வழி சாலைக்கு போக சொன்னார். போனேன். பத்து நிமிடங்கள் ஓட்டி முடித்ததும் கடைசியில் “டேக் ரைட் ப்ளீஸ்” என்றார், பார்த்தால் எங்கிருந்து புறப்பட்டோமோ அதே இன்ஸ்டிடியூட் வாசலில் வந்து விட்டோம். காரை எடுத்த இடத்தில் கொண்டு போய் நிப்பாட்டும்படி சொன்னார். நானும் நிப்பாட்டினேன்‌.

வண்டியை நிப்பாட்டியதும் அவர் எங்கள் இருவரையும் பார்த்து
“நீங்கள் இருவரும் நன்றாக ஓட்டினீர்கள். தவறுகள் எதுவும் இழைக்காததால் இருவருமே பாஸ். முதல் தளத்திற்கு சென்று உங்கள் லைசென்ஸை பெற்றுக் கொள்ளுங்கள்”

என்று கூறினார். அதைக் கேட்டதும்
நாங்கள் இருவருமே மகிழ்ச்சியில் அந்த ஆய்வாளருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டதோடு நாங்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டோம். பின் அங்கிருந்து நேராக என் மகன் அமர்ந்திருந்த வரவேற்பு அறைக்கு சென்று

“ஆதி! அம்மா பாஸ் ஆயிட்டேன்”

என்று கூறி கட்டிக்கொண்டேன் அவரும்

“வாழ்த்துக்கள் மா”

என்று என்னை தட்டிக் கொடுத்தார். பின் இருவரும் முதல் தளத்திற்கு சென்று கட்ட வேண்டிய பணத்தை செலுத்தியதும் “நியூ டிரைவர்” என்ற ஸ்டிக்கரை என் கையில் தந்து, ஒரு டோக்கனையும் தந்து அமர்ந்திருக்கும் படி கூறினர். நாங்களும் அமர்ந்திருந்தோம். அப்போது என் கணவருக்கு ஒரு மெஸேஜ் அனுப்பி நான் பாஸ் ஆனதை தெரிவித்தேன். சற்று நேரமானதும் எனது டோக்கன் நம்பர் பளிச்சிட்டது. உடனே சென்று எனது அடையாள அட்டையை கொடுத்தேன். சில நொடிகளில் என் கையில் பிரிண்ட்டரில் இருந்து சுட சுட லைசென்ஸை தந்தனர். அதை பெற்றுக் கொண்டு அதில் எனது பெயர் மற்றும் லைசென்ஸ் எக்ஸ்பிரேஷன் தேதி போன்றவற்றை சரி பார்த்து நன்றி தெரிவித்துக் கொண்டு அங்கிருந்து வெளியே வந்தேன். என் மகனிடம் லைசென்ஸை கொடுத்தேன். அவரோ அதை ஃபோட்டோ எடுத்து அவர் அப்பாவுக்கு அனுப்பி வைத்தார்.

இருவருமாக இன்ஸ்டிடியூட்டில் இருந்து வெளியே வந்தோம். என் மகன் அவரின் காரில் “நியூ டிரைவர்” ஸ்டிக்கரை ஒட்டினார். பிறகு என்னை அவரின் காரை ஓட்ட சொன்னார்.

“ஆ!!! அப்பாவோட வரும் போது ஓட்டரேனே”

என்றேன்.

“அதுதான் லைசென்ஸ் குடுத்துட்டா இல்ல. அப்புறம் என்ன? சும்மா ஓட்டுமா”

என்று கூறி அவர் டிரைவர் சீட் பக்கத்தில் இருக்கும் இருக்கையில் அமர்ந்துக் கொண்டார். எனக்கோ தயக்கம்! ஏனெனில் எங்கள் வீடு இருபது கிலோமீட்டர் தள்ளி இருக்கிறது மேலும் துபாய் ஷேக் சாயத் ரோடு வழியாக தான் எங்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும். அந்த ரோட்டில் ஸ்பீடு லிமிட் நூற்றி இருபது. இவை எல்லாத்தையும் மனதில் அசைப்போட்டுக் கொண்டே காருக்கு வெளியே நின்றிருந்த என்னிடம் காரின் கதவை திறந்த என் மகன்,

“அம்மா உன்னால ஓட்ட முடியும்ன்னு தானே லைசென்ஸ் குடுத்திருக்கா. அப்புறம் என்னமா. வா மா ஓட்டு பயப்படாதே!”

என்றார். அவரின் வார்த்தைகள் ஒரு தெம்பு கொடுத்தது உடனே சரி என்று டிரைவர் சீட்டில் அமர்ந்தேன். வண்டியை ஸ்டார்ட் செய்தேன்.

அன்று வரை அதே ஷேக் சாயத் ரோட்டில் கணவர் அல்லது மகன் காரை ஓட்ட நான் அமர்ந்து சென்றது தான் அதிகம். அந்த ரோட்டில் நான் கார் ஓட்டுவேன் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் நடந்துக் கொண்டிருந்தது. காலையில் நாங்கள் நேராக பரீட்சைக்கு சென்றதால் பிரேக்பாஸ்ட் அருந்தவில்லை. எனவே நேராக என் மகனுக்கு மிகவும் பிடித்த பிக்கானேர் வாலா ரெஸ்டாரன்ட்டுக்கு ஓட்டிச் சென்றேன். அதை பார்த்த மகன்

“அம்மா எங்க போற?”

என்று கேட்க.

“ம்…உனக்கு ட்ரீட் தர தான். வா… வா”

என்று அவரை அழைத்துக் கொண்டு சென்று அவருக்கும் எனக்கும் பிடித்த உணவை ஆர்டர் செய்தோம். அப்போது அலுவலக காலில் இருந்த என் கணவர் அது முடிந்ததும் எங்களது மெஸேஜை பார்த்து என்னை கைப்பேசியில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருக்கு பிடித்த உணவையும் பார்சல் செய்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு நேராக வீட்டுக்கு ஓட்டிச் சென்று எங்கள் அப்பார்ட்மெண்ட் பார்க்கிங்கில் காரை பார்க் செய்தேன். பின் என் மகனிடம்

“எப்படி ஓட்டினேன்”

என்று கேட்டேன். அவரோ

“சூப்பரா ஓட்டின”

என்று கூறியதும் மனதில் மகிழ்ச்சி இரட்டிப்பானது.

இதற்கு முன் பல பரீட்சைகள் எழுதியுள்ளேன். பல போட்டிகளில் கலந்துக் கொண்டுள்ளேன். ஆனால் அப்போதெல்லாம் வராத பதற்றம் ஏன் இந்த கார் டிரைவிங் பரீட்சைகளில் வந்தது? என்று யோசித்தேன். அதன் விளைவாக ஒன்றை கற்றுக் கொண்டேன். அது என்னவென்றால்
ஒரு விஷயத்தை நாம் செய்ய முற்படும்போது பலர் பலவிதமான அபிப்பிராயங்களை கூறுவர் ஆனால் அதை கேட்டுக் கொண்டு அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது இல்லை அதில் எவ்வளவு நமக்கு வேண்டியது உள்ளது என்பதை மட்டும் பிரித்தறிந்துக் கொண்டோமே என்றால் வாழ்க்கை சிறக்கும். அதை விடுத்து கேட்டது அனைத்தையும் மனதில் ஏத்திக் கொண்டோமே என்றால் குழப்பம் தான் நீடிக்கும்.

கார் டிரைவிங் லைசென்ஸ் எடுக்கப் போகிறேன் என்று சொன்னதுமே பலர் என்னிடம் அது மிகவும் கஷ்டம், அவ்வளவு எளிதில் லைசென்ஸ் கிடைத்து விடாது. பணமும் நேரமும் தான் விரயம் ஆகும், போன்ற அபிப்பிராயங்களை பகிர்ந்துக் கொண்டனர். அது அவர்கள் கடந்து வந்த பாதையாக இருக்கலாம் அல்லது அவர்கள் நண்பர்கள், தெரிந்தவர்கள் சொல்லி கேட்டிருக்கலாம் இல்லையா! அவற்றை பிரித்து பார்க்காது அவை அனைத்தையும் மனதிற்குள் பதிய வைத்ததால் பயம் என்னும் வேதாளம் என் மேல் தொற்றிக் கொண்டது. அதனால் பதற்றம் ஏற்பட்டது. பதற்றம் ஆனதால் பல முறை தோல்வியுற்றேன்‌. ஆனால் விடா முயற்சியால் வெற்றியும் கண்டேன்.

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார், முயன்றால் முடியாதது என்று ஒன்றுமில்லை, முயற்சி திருவினையாக்கும் ஆகிய அனைத்து வாக்கியங்களும் என் விஷயத்தில் நிரூபணமானது.

எனக்கு இருந்த பயத்திற்கு இன்னுமொரு முக்கிய காரணம் நான் அந்த வகுப்புகளுக்கும் பரீட்சைகளுக்குமாக செலவழித்த பணம். கஷ்டப்பட்டு சம்பாதித்தது வீணாகிவிடக் கூடாதே என்ற எண்ணம் பயத்தை கொடுத்தது. பயம் பதற்றத்தை கொடுத்தது. பதற்றம் பல முறை தோல்வியுறச் செய்தது. இறுதியில் உழைத்த காசு என்றும் வீணாவதில்லை என்ற உண்மையை மீண்டும் புரிய வைத்தது.

காரணமின்றி காரியமில்லை. கடந்த நவம்பர் மாதம் முதல் இந்த மார்ச் மாதம் வரை நான் மேற்கொண்ட டிரைவிங் வகுப்புகள் மற்றும் பரீட்சைகள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் ஏராளம்! வாழ்க்கை நமக்கு பலவிதத்தில் பலவகையான பாடங்களை பல ரூபங்களில் கற்றுக் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறது. அவற்றை கற்றுக் கொண்டு அதற்கேற்றார் போல் வாழ்வதும் சரி இல்லை அதற்கு மாறாக அவற்றை கற்க மறுத்து வாழ்க்கையில் வீழ்வதும் சரி அவரவர் விருப்பம்.

எனது இந்த ஓட்டுனர் உரிமம் கட்டுரையை படித்து என்னுடன் எனது வகுப்புகளிலும் பரீட்சைகளிலும் பயணித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். என் பயணம் தொடரும். உங்கள் அனைவரின் பயணங்களும் இனிதாக அமைந்திட எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.

❤️முற்றும்❤️

பிப்ரவரி இருபத்தி மூன்றாம் தேதி வந்தது. அன்று மகனுக்கு கல்லூரியில் வகுப்பு இருந்ததால் அவரால் வர முடியவில்லை. கணவர் அவர் காரில் அழைத்துச் சென்றார். மதியம் 1 மணிக்கெல்லாம் சென்றுவிட்டோம். பரீட்சை 2 மணிக்கு தான். அதுவரை என்ன செய்வது என்று யோசித்தோம். கணவர் அவரின் லேப்டாப்பை திறந்து வேலையில் மூழ்கினார். நானும் சற்று என் வேலையை பார்க்கலாமென்று நினைத்து எனது லேப்டாப்பை திறந்தேன். ஆனால் மனம் முழுவதும் ரோட் டெஸ்ட்டில் மூழ்கி இருந்தது. என்னை கவனித்த என் கணவர். நீ இப்போ வேலையெல்லாம் செய்ய வேண்டாம். பேசாம அமைதியா உட்காரு போதும் என்றார். வேலையில் நாட்டம் இல்லாதிருந்த நானும் லேப்டாப்பை மூடி வைத்து விட்டு சற்று நேரம் அமைதியாக அமரலாம் என்று நினைத்து கண்களை மூடினேன். அப்ப பார்த்து நான் டிரைவிங் வகுப்புகளில் செய்த தவறுகள் ஒவ்வொன்றாக வரிசைக் கட்டிக்கொண்டு நான்… நீ என்று போட்டிப் போட்டுக்கொண்டு கண்முன் வர சட்டென கண்களை விழித்துக் கொண்டேன். கை கடிகாரத்தைப் பார்த்தேன் நேரம் ஒன்றரை என்று காட்டியது உடனே கணவரிடம் சொல்லிக்கொண்டு (போருக்கு போகும் கணவன் மனைவியிடம் சொல்லிக் கொண்டு செல்வது போல்😉) பெண்களுக்கான காத்திருப்பு அறைக்குள் சென்று அமர்ந்தேன்.

பக்கத்தில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பெண்மணி ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் என்னிடம் பேச்சுக் கொடுக்க நானும் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவருடனான அந்த பேச்சு என்னை சற்று நேரம் பரீட்சை பற்றிய எண்ணத்தில் இருந்து விடுவிக்க ஏதுவாக இருந்தது. அப்போது கருப்பு நிற ஹிஜாப் அணிந்திருந்த அரபு நாட்டை சேர்ந்த அழகான பெண்மணி ஒருவர் கண்களில் கூலர்ஸுடன் உள்ளே நுழைந்தார். நுழைந்தவர் முதலில் “பார்வதி” என்று என் பெயரை அழைக்க நான் “எஸ்” என்று எழுந்து அவர் அருகே சென்றதும், அவர் இன்னும் இரண்டு பெண்களின் பெயர்களை அழைக்க அவர்களும் எழுந்து வந்ததும். எங்கள் மூவரையும் அவர் பின்னால் வரச் சொன்னார். நாங்களும் அவர் பின்னால் சென்றோம்.

RTA ரோட் டெஸ்ட்டுக்கான கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தது. அங்கே சென்றதும் அவர் எங்கள் பக்கம் திரும்பி “பார்வதி நீங்கள் தான் முதலில் காரை ஓட்ட வேண்டும் அடுத்தது நீங்கள் அதுக்கு அடுத்தது நீங்கள்” என்று எங்களிடம் கூறி ஒரு வண்டியை காட்டி ஏறச் சொன்னார்.

முதலில் நானா!! என்ற எண்ணம் மனதில் தோன்றியதுமே வேதாளம் வந்து என்னை தொற்றிக் கொண்டது. காருக்குள் ஏறி அமர்ந்தேன். அப்போது அந்த அரபு நாட்டு பெண் ஆய்வாளர் எனது அடையாள அட்டையை கேட்க. நான் எனது கைப்பையில் இருந்து அதை எடுத்துக் அவரிடம் கொடுக்கும் போது எனது கை நடுங்கியது. அதை பார்த்த அந்த பெண்மணி

“டோண்ட் பி டென்ஸ்டு. டிரைவ் சேஃப். நீங்கள் தயார் என்றால் வண்டியை எடுக்கலாம்”

என்றார். நானும் வண்டியை எடுப்பதற்கு முன் செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை செய்து முடித்ததும். அவர் என்னிடம்

“வெரி குட். நவ் டேக் இட் அவுட்” என்றார்.

நானும் மெல்ல வண்டியை ரிவர்ஸில் எடுத்தேன். அவசரம் ப்ளஸ் டென்ஷனில் சற்று முன்னதாகவே இடது பக்கமாக வண்டியை திருப்ப முயன்றதால் பக்கத்தில் இருக்கும் காரின் மீது இடிக்க போய்விட்டேன். உடனே அவர் என்னை சற்று நேரம் நிறுத்த சொன்னார் (அப்போதே எனக்கு எனது ரிசல்ட் தெரிந்து விட்டது). பின் என்னைப் பார்த்து “என்ன செய்கிறீர்கள்” என்று கேட்டார். நான் “சாரி” என்று கூறி மீண்டும் பார்க்கிங் உள்ளேயே சென்று பின் வெளியே எடுத்தேன். இம்முறை சரியாக எடுத்தேன். ஓட்டிச் சென்றேன். ஆனால் ஏழு நிமிடத்தில் காரை நிறுத்த சொன்னார். நானும் ரோட்டின் சாலிட் லைனை தாண்டி ஓரமாக வண்டியை நிப்பாட்டினேன். அவர் உடனே நெக்ஸ்ட் என்று கூறினார். நானும் எனது சீட் பெல்ட்டை கழற்றிவிட்டு காரில் இருந்து இறங்கி பின்னால் சென்று அமர்ந்துக் கொண்டேன். எனக்கு அடுத்ததாக வரிசையில் இருந்த பெண்மணி காரை அங்கிருந்து ஓட்ட ஆரம்பித்தார்.

பின்னால் அமர்ந்ததும் எனது கணவருக்கு கைப்பேசியில் மெஸேஜ் டைப் செய்ய ஆரம்பித்தேன். கை விரல்கள் அனைத்தும் நடு நடுங்கியது. நடுக்கத்துடனேயே “நான் நிச்சயம் இந்த ரோட் டெஸ்ட்டில் ஃபெயில் ஆகிவிடுவேன்” என்று ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினேன். அவரோ “பரவாயில்லை. பி கூல். அடுத்த தடவை பார்த்துக் கொள்ளலாம்” என்றொரு பதிலை அனுப்பினார். ஆனாலும் எனக்குள் இருந்த பதற்றம் அடங்கவில்லை. எப்படி?!! எடுத்ததும் அப்படி ஒரு தவற்றை செய்தேன் என்று என் மனம் என்னை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தது.

வண்டியில் இருந்த மூவரின் பரீட்சையும் முடிந்தது. மூன்றாவதாக காரை ஓட்டிய பெண்மணி மீண்டும் காரை இன்ஸ்டிடியூட்டிற்குள் ஓட்டி வந்து பார்க் செய்தார். அப்போது அவர் கோணலாக வண்டியை நிப்பாட்ட அதற்கு ஆய்வாளர் சரியாக நிப்பாட்டும் படி உத்தரவிட அந்த பெண் சற்று பதற்றமானாள். பின் இரண்டு முறை முயற்சித்த பின் சரியாக பார்க் செய்தாள். மூவரும் ஆய்வாளரை பார்த்தோம். அவர் நாங்கள் ஒவ்வொருவரும் செய்த தவறுகளை பட்டியலிட்டு மூவருமே ஃபெயில் என்றும், பயிற்சி வகுப்புக்கு பதிவு செய்து, நன்றாக பயிற்சி எடுத்துக் கொண்டு, பின் மீண்டும் முயற்சிக்கும் படி கூறிவிட்டு சென்றார். நான் வழக்கம் போல வெளியே காத்திருந்த கணவரிடம் கூற அவரோ வழக்கம் போல் அடுத்த முறை பார்த்துக் கொள் என்று கூற.
மீண்டும் வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்து அடுத்த RTA ரோட் டெஸ்ட்டுக்கு டேட் எப்போது கிடைக்கும் என்று கேட்டேன். அவரோ மார்ச் 8 ஆம் தேதி இருப்பதாக கூற உடனே RTA ரோட் டெஸ்ட்டுக்கு மார்ச் 8 ஆம் தேதி பதிவு செய்தேன். அதற்கு முன் 6 மற்றும் 7 ஆம் தேதி என இரண்டு நாட்களுக்கு பயிற்சி வகுப்புக்கு பதிவு செய்தேன்.

ஒரு மணி நேரம் பயிற்சி வகுப்பு இரண்டு நாட்களும் சிறப்பாக நடந்தேறியது.
நம்பிக்கை கூடியது.
RTA ரோட் டெஸ்ட்டில் என்னென்ன செய்ய சொல்வார்களோ அத்தனையையும் செய்து காட்ட சொல்லி பயிற்சி அளித்தார் எனது பயிற்றுவிப்பாளர்.

அதாவது காரை எடுப்பதற்கு முன் செய்ய வேண்டிய சம்பிரதாயங்கள், உள் சாலைகளில் வேகம் நாற்பதுக்கு மேல் இருக்கக் கூடாது. பிரதான சாலைகளில் 60 அல்லது 80 என
ரோட் சைனில் குறிப்பிடப்பட்டுள்ள வேகத்தை கடைபிடிக்க வேண்டும். அதற்கு மேலும் போகக்கூடாது அதைவிட கம்மியான வேகத்திலும் போகக் கூடாது. லேன் சேஞ்ச் ‌எப்படி எப்போது செய்ய வேண்டும், அது செய்வதற்கு முன் செய்ய வேண்டியவை. வலது, இடது புறம் காரை திருப்புவது. சிக்னலில் எப்படி எப்போது நிறுத்த வேண்டும். சிக்னல் பச்சை ஆனதும் எப்போது புறப்பட வேண்டும். உள் வழி சாலையில் இருந்து பிரதான சாலைகளில் இணையும் போது செய்ய வேண்டியவை. U டர்ன் எப்படி செய்வது. ரவுண்ட் அபௌட்டில் எப்போது நுழைய வேண்டும், எந்த கோட்டிற்குள் எப்போது செல்வது. அதற்கான சிக்னல் எதை எப்போது கொடுப்பது போன்ற அனைத்தையும் பயிற்சி செய்து முடித்ததும். எனது பயிற்றுவிப்பாளர் என்னிடம்

“RTA ரோட் டெஸ்ட்டுக்கு என்று பதிவு செய்திருக்கிறீர்கள்”

என்று கேட்க நானோ

“நாளை. எட்டாம் தேதிக்கு தான் பதிவு செய்திருக்கிறேன்”

என்று கூற. அதை கேட்ட அவர்

“அப்படியா!! இருக்காதே!! உங்களுக்கு RTA வில் இருந்து ஏதாவது மெஸேஜ் வந்ததா?”

“ஆமாம். நேற்று மாலை வந்தது. எட்டாம் தேதி பரீட்சை இருக்கிறது என்று ஒரு ரிமைன்டர் மெஸேஜ் வந்தது.”

என்றேன். அவர் என்னை எதற்கும் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு சரி பார்த்துக் கொள்ளும் படி கூற

“ஏன் என்ன ஆயிற்று? பரீட்சை நடக்காதா?”

என்று பதற்றத்தில் நான் கேட்டேன். அதற்கு அவர், RTA புது ரூல் ஒன்றை அமல் படுத்தி இருப்பதாகவும். முதல் அட்டெம்ட்டில் தேர்ச்சி பெறாவிட்டால் இரண்டாவது முறை பயிற்சி வகுப்பு எடுத்த நாற்பத்தி எட்டு மணிநேரத்திற்கு பிறகு தான் ரோட் டெஸ்ட் எடுக்க முடியும் என்றும் கூறினார். அதன்படி பார்த்தால் நான் மறுநாள் அதாவது எட்டாம் தேதி பரீட்சையை எடுக்க முடியாது. ஏனெனில் எனது பயிற்சி வகுப்பு முடிந்து நாற்பத்தி எட்டு மணிநேரம் முழுமை அடைந்திருக்காது. என்ன செய்வது என்ற யோசனையில் இருந்த என்னிடம் தான் விடைப்பெற்றுக் கொள்வதாகவும் கஸ்டமர் கேருக்கு கால் செய்து பார்க்கும் படியும் கூறியவரிடம் எனது நன்றியை தெரிவித்துக் கொண்டேன். அவரும் எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு என்னை எனது வீட்டில் இறக்கி விட்டுவிட்டு சென்றார். அப்போது எனது கைபேசியை எடுத்துப் பார்த்தேன். அதில் அந்த இன்ஸ்டிடியூட்டில் இருந்து அழைப்பு வந்திருந்தது. கார் டிரைவிங் வகுப்பின் போது கைபேசியை சைலண்ட்டில் போடுவது வழக்கம். அதனால் ரிங் கேட்கவில்லை. உடனே அந்த எண்ணை அழைத்தேன். எவரும் எடுக்கவில்லை. சரி வீட்டுக்கு போன பிறகு மீண்டும் முயற்சிப்போம் என்றும், அதுவே நான் அந்த இன்ஸ்டிடியூட்டில் எடுக்கும் கடைசி பயிற்சி வகுப்பாக இருக்க வேண்டும் ஆண்டவா என்றும் எண்ணிக் கொண்டே லிஃப்ட் பொத்தானை அழுத்திவிட்டு நின்றிருந்த என் முன் லிஃப்ட்டின் கதவு திறந்தது.

வீட்டிற்கு சென்றேன். கணவரிடம் விவரத்தை விவரித்தேன். மீண்டும் ஒரு முறை வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அழைப்பு விடுத்து பார்க்கலாமென்று கைப்பேசியை எடுத்தேன். அப்போது RTA வில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. அதை திறந்து பார்த்தேன்.


🚗பயணம் தொடரும்….🚗

ராமானுஜம் அம்புஜம் தம்பதியருக்கு மிருதுளா, வேனு என்று இரு பிள்ளைகள். மிருதுளா பி.காம் முடிச்சுட்டு எம்.காம் முதலாம் ஆண்டு கரஸ்ல படித்துக்கொண்டே வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் அமைதியான பெற்றோர் சொல்படி வாழ்ந்து வரும் ஒரு வெகுளிப்பெண்.  வேனு ப்ளஸ் டூ முடித்துவிட்டு இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவரும் பொறுப்பான பிள்ளை.

ராமானுஜம் பப்ளிக் செக்ட்டர் இன்டஸ்ட்ரீயில் பணிப்புரிகிறார். அவர்  குடும்பம் அளவானதாகவும் வளமானதாகவும், அமைதியானதாகவும் எதற்காகவும் யாரிடமும் செல்லாமல் தன்னிறைவான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.

“நம்ம மிருதுளாவுக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு பார்ப்போமா” என்று கூறிக்கொண்டே அம்புஜம் வீட்டினுள்ளே நுழைந்தாள் அவளின் தங்கை பங்கஜம்.

அப்படியா புள்ள எந்த ஊரு என்ன பண்ணரான்? வா வா பங்கு இந்தா தண்ணியை குடி வெயில் என்னமா சுட்டெறிக்கறது!!!! சரி …அப்பா, அம்மா, அக்கா, தங்கை, தம்பி அண்ணா இப்படி யாரெல்லாம் இருக்கா? எல்லா விவரமும் சொல்லு. பார்ப்போம் அமைஞ்துன்னா…. இது புரட்டாசி இல்லையா? வர தை இல்லாட்டி மாசியில கல்யாணத்த பண்ணிடவேண்டியது தான்.

அம்பு அக்கா கொஞ்சம் நிதானமா இரு. வரன் வந்துருக்குன்னு சொன்னேன் அவ்வளவு தான் நீ டேட் பிக்ஸ் பண்ணர வரைக்கும் போயிட்டயே…

என்னடி பங்கு நீ வளவளன்னு பேசர விஷயத்தை முதல்ல சொல்லு.

அம்பு இந்தா இது மாப்பிள்ளை புள்ளான்டானோட ஜாதகம் உன் கேள்வி அத்தனைக்கும் இதுல பதில் இருக்கு. என்னோட சினேகிதி மேனகா மூல்யமா வந்தது.

அம்புஜம் ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து சாமி கும்பிட்ட பின் பிரித்து படித்தாள். 

ஏன்டி பங்கு மாப்பிள்ளை பட்டாளத்துள இருக்கறதா போட்டுருக்கா அதுவும் டில்லில அவ்வளவு தூரம் நம்ம மிருதுவ கொடுக்கனுமாடி? கொழந்தைக்கு ஏதாவதுன்னா நாம போறத்துக்கே மூனு நாள் ஆயிடுமே!!! அதுவும் ….கூட பொறந்தவா மூனு பேரு இருக்கா…மாப்ள புள்ளான்டான் மூத்த புள்ள வேற …பெரிய குடும்பமா இருக்குமோடி? குடும்பம் எப்படியாம்? ஏதாவது தெரியுமா நோக்கு?

குடுபம் நல்ல குடும்பம்னு தான் சொன்னா. ஆமா அவா அவா பொன்னுகள அமேரிக்காவுக்கே அனுப்பரா நீ இதோ இருக்கர டில்லிக்கு அனுப்ப யோசிக்கர!!!! கூட பொறந்தவா மூனும் தம்பிகள் தான். ஸோ மிருதுவுக்கு.. உனக்கு இருந்தா மாதிரி நாத்தனார் தொல்லைகள் இல்லை சந்தோஷமா? புள்ளான்டான் பதினேழு

வயசுளயே பட்டாளத்துல சேர்ந்துட்டன் அப்பறம் குடும்பத்தையும் பார்த்துண்டு தன்னோட சொந்த முயற்சில தான் பி.ஏ, எம்.ஏ, பி.ஜி டிப்பளமா இப்போ ஆடிட்டிங்  படிச்சிண்டிருக்கான். வேலையும் பார்த்துண்டு, குடும்பத்தையும் பார்த்துண்டு, படிச்சுண்டும் இருக்கான்னா நல்ல பொறுப்பான புள்ளனு எனக்கு படரது. என்ன நான் சொல்றது. அம்பு என்ன யோசனை??

 இல்ல பங்கு புள்ள மூத்தவனா இருக்கானேனு யோசிக்கறேன்….மூத்தது கோழன்னு சொல்லிகேட்டுருக்கோமே …கேட்கறது என்ன நானும் நீயும் மூத்ததுகளை கட்டிண்டு படறோமே ….எதுக்காவது வாய தொறப்பாரா !!! எல்லா வீரமும் ஜம்பமும் என்னாண்ட தான் காட்ட தெரியும் வெளில கப்சிப்…. அதுதான் கொஞ்சம் யோசனையா இருக்கு. அதுவும் இல்லாம பட்டாளத்துல இருக்கான் ஏதாவது அப்படி இப்பிடினு கெட்ட பழக்கங்கள் இருந்துதுனா !!! ஜாதகத்தில டிடோட்டலர்னு தான் எழுதிருக்கு……

 என்ன அம்பு நம்ம காலம் வேற  இப்போ இருக்கற கொழந்தைகள் எல்லாம் கண்ணும் கருத்துமா சமத்துகளா இருக்கா நம்மள மாதிரி பொன்னுகளும் இல்ல நம்ம ஆத்துகாரர்கள் மாதிரி புள்ளகளும் இல்ல.

ராமானுஜம் தனது டி.வி.ஸ் 50 ஐ நிருத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்தார்.

 வா வா பங்கு. என்ன அக்காளும் தங்கையுமா யாரு தலையை உருட்டிண்டு இருக்கேங்கள்?

எல்லாம் உங்களோடதும் உங்க ஷட்டகரோடதும் தான். அதுக்கு என்ன இப்போ? இந்தாங்கோ தண்ணீ குடிங்கோ.

அத்திம்பேர் உங்க பணபெட்டியை தொறக்க நேரம் வந்தாச்சு.

ஏன் அக்காளும் தங்கையுமா கொள்ளையடிக்க திட்டம் போட்டாச்சோ!!

நாங்க ஏன் கொள்ளையடிக்கனும் அத்திம்பேர். அதுக்கு தான் நம்ம மிருது  இருக்காளே.

என்னடி அம்புஜம் உன் தங்கை ஏன் இப்படி உளரிக்கொட்டரா.

பங்கஜம் கூறிய விவரங்களை எல்லாம் ராமானுஜமிடம் அம்புஜம் கூறினாள். ராமானுஜம் சட்டென்று கல்யாணம் என்றால் பணத்திற்கு என்ன செய்வது

என்றும்… கையிருப்பு போதுமா என்ற சிந்தனையில் ஆழ்ந்தார். அடுத்து மகன் கல்லூரி செலவு வரும் என்றெல்லாம் கணக்கில் மூழ்கியவரை

என்ன அத்திம்பேர் இப்பவே கணக்கு போட ஆரம்பிச்சுட்டேள் போல தெரியரது. என்ன சரியா?

அட கரெக்ட்டா கண்டுபிடிச்சுட்டயே  உங்க அக்காவை விட புத்திசாலிதான்.

போங்கோ அத்திம்பேர்…இது என்ன பெரிய சிதம்பர ரகசியமா? பின்ன விஷயத்தை கேட்டதும் உங்க முகமே காட்டிக்கொடுக்கறதே. சரி சரி என் வேலை முடிஞ்சுது நீங்க ரெண்டு பேரும் மிருதுவோட பேசி நல்ல முடிவா சொல்லுங்கோ. என் புள்ளகளை ஸ்கூல்ல இருந்து கூட்டிண்டு நான் எங்காத்துக்கு போரேன். வரட்டுமா அம்பு. போயிட்டு வரேன் அத்திம்பேர்.

பங்கஜம் கிளம்பி சென்ற பின்

ஏன்னா இந்த வரன் நல்லபடியா முடிஞ்சுதுனா நம்ம மிருது இன்னொருத்தா ஆத்து பொன்னாயிடுவா இல்லன்னா!! நம்மள விட்டுட்டு அவா ஆத்துக்கே போயிடுவா இல்லன்னா!!!

இல்ல நம்ம ஆத்துளயே இருந்துட சொல்லலாமா? அடி போடி அசடு நானே இந்த வரன் அமஞ்சுதுனா பணம் போருமான்னு யோசிச்சிண்டிருக்கேன்.

சரின்னா மொதல்ல பொன்ன பார்க்கட்டும் பின்ன மத்தது எல்லாம் யோசிக்கலாம் பேசிக்கலாம் என்ன நான் சொல்லறது சரிதானே!!!

சரிதான் நம்ம பங்குகிட்ட அவாள பொன் பார்க்க வரச்சொல்லுவோம் பின்ன பிடிச்சிருந்தா அப்பறம் என்ன பண்ணரதுனு பார்ப்போம்.

அம்புஜமும் ராமானுஜமும் இப்படி பேசிக்கொண்டிருக்கும் போது வீட்டினுள் நுழைந்தாள் மிருதுளா.  உடனே அம்புஜம்

நம்ம மிருது வரா இப்போ அவள்ட்ட எதுவும் சொல்லிக்க வேண்டாம் அவா பொன் பார்க்க வரேன்னு சொல்லட்டும் அப்பறம் சொல்லிக்களாம்.

வாமா மிருது உன் சிநேகிதிகளோட ஏதோ இன்டர்வியூ அட்டன்ட் பண்ண போனயே என்ன ஆச்சு..

மொதல்ல முகம், கை, கால் அலம்பிட்டு வரேன்மா இன்னுட்டு எல்லாத்தையும் விவரமா சொல்லரேன் எனக்கு ரொம்ப பசிக்கறது சாப்பாடு எடுத்து வைமா ஒரு நிமிஷத்துல வந்துடரேன்.

மிருது ஆச்சா வாயேன்டி சாதம் ஆரிடப்போறது. மொகம் கழுவ இத்தர நேரமா மிருதுளா….

வந்துட்டேன்மா ஏன் இப்படி கத்திண்டிருக்க? நீங்களாம் சாப்டாச்சா? என்ன சாம்பாரும் உருளை ஃபரையுமா? உன் புள்ளைக்கு பிடிச்சதா?

சாப்பட உட்கார்ந்துண்டு என்ன கேள்வி? என்னமோ சாம்பார காயோட ஊத்திண்டு சாப்படராமாதிரி தான் பேச்சு ….ஆனா சாம்பார தண்ணி மாதிரி காய எல்லாம் வடிகட்டி குடிச்சா எப்டிறீ உடம்புல சத்து இருக்கும்?

சரி இன்னைக்கு அட்டென்ட் பண்ணின இன்டெர்வியூ என்ன ஆச்சு ?

அவா இன்னும் ரெண்டு வாரத்தில சொல்லுவாலாம் அதுவரைக்கும் வேய்ட் பண்ணனும்..

சட்புட்னு சொல்ல மாட்டாலோ என்னத்துக்கு இழுத்தடிக்கறா??

அம்மா சாப்பிடும்போது பேசப்படாதுன்னு சொல்லுவ ஆனா இப்போ நீயே பேசர!!

ஏன்னா நீங்க இப்போ சாபடரேளா இல்லை வேனு வந்துட்டு அவனோட சேர்ந்து சாபடரேளா?

வேனு வரட்டும் நாங்க சேர்ந்து சாப்பிட்டுக்கறோம் நீங்க ரெண்டு பேரும் பேச்ச கொறச்சு… சாப்ட்டு ஏந்திரிங்கோ.

இதோ நம்ம வேனுவும் வந்தாச்சு சரி அப்போ எங்களுக்கும் தட்டு வை.

ஃப்ரஷ்அப் ஆகிட்டு சாப்பிட வரேன்பா நீ சாப்பிட ஆரம்பிச்சுக்கோ நான் ஒரு நிமிஷத்துல வந்துடுவேன்..

வந்தாச்சு….அம்மா எனக்கு சரி பசி என்ன பண்ணிருக்க? ஓ வாவ் சாம்பார் அன்ட் உருளை ஃப்ரையா சூப்பர்…

அனைவரும் ஒன்றாக உணவருந்திய பின் அம்புஜம் மிருதுளாவிடம்….

சரி சாப்டாச்சோனோ எனக்கு கொஞ்சம் உன் பங்கு சித்திக்கு ஃபோன போட்டுக்குடுடி மிருது இதோ இத உள்ள வச்சுட்டு வந்துடரேன்.

ஹலோ சித்தி நான் மிருது பேசறேன் அம்மா உன்கிட்ட ஏதோ பேசனம்னு ஃபோன போட்டுத்தர சொன்னா ஆனா ஆள கானோம் …கொஞ்சம் ஹோல்ட் பண்ணு சித்தி …இதோ வரா. என்னமா ஃபோன போட சொல்லிட்டு நீ எங்க போனாய்….சித்தி வேய்ட்டிங்..

சரி…டி …அங்க கிடந்த ரெண்டு கரண்டிய தேச்சுட்டு வந்தேன் அதுதான்… கொஞ்சம் நகர்ந்துக்கோ….ஹலோ பங்கு புள்ளகள கூட்டிண்டு ஆத்துக்கு வந்தாச்சா ?

அம்பு உன்ன அத்திம்பேர் சொல்லரதில் தப்பே இல்லடி. ஆத்துக்கு வந்ததனால தானே லான்ட்லைன்ல ஆன்ஸர் பண்ணறேன். சரி என்ன விஷயம் சொல்லு.

 நீ உன் சினேகிதி மேனகாட்ட நம்ம மிருதுவோட ஜாதகத்தையும் ஃபோட்டவையும் அவாள்ட்ட கொடுக்க சொல்லு. பிடிச்சிருந்தா பொன் பார்க்க எப்போ வராங்கறதையும் கேட்டு சொல்லச்சொல்லு என்ன சரிதானே.

அம்பு …மிருதுட்ட கேட்டயோ?

அவ என்னத்த சொல்லப்போறா எல்லாம் நாம பார்த்து வச்சா அவ நல்லபடியா இருப்பா.

சரி அம்பு நான் நாளைக்கே மேனகாட்ட சொல்லிடரேன். வைக்கட்டுமா? இங்க ரெண்டும் அடிச்சுக்கறதுகள். என்னனு போய் பார்க்கரேன். பை அம்பு.

மறுநாள் பங்கஜம் தனது சிநேகிதி மேனகாவிடம் மிருதுளாவின் ஜாதகத்தையும், ஃபோட்டோவையும் குடுத்து அதை மாப்பிள்ளை வீட்டாரிடம் சேர்த்து விருப்பமிருந்தால் பெண்ப்பார்க்க அவர்களுக்கு எப்போ தோதாக இருக்கும் என்பதையும் கேட்டுச்சொல்ல சொன்னாள்.

மேனகாவும் அன்று மாலை வேலை முடித்து வீடு சென்றதுமே அவர்கள் பக்கத்து வீட்டு பர்வதம் மாமியிடம்

“பர்வதம் மாமி உங்க பெரிய புள்ள நவீனோட ஜாதகத்தை இதிலிருக்கும் பொன்னுவீட்டுக்காராள்ட்ட கொடுத்தேன். அவா பொன்னோட ஜாதகம் அன்ட் ஃபோட்டோவை உங்கள்ட்ட கொடுக்கச்சொன்னா இந்தாங்கோ இதில அவா ஃபோன் நம்பர் இருக்கு உங்களுக்கு ஓகேன்னா  நீங்களே அவாளுக்கு டைரெக்ட்டா ஃபோன் போட்டு சொல்லிடுங்க்கோ. அமைஞ்சுதுனா சீக்கிரமே கல்யாணச் சாப்பாடு போடுங்கோ. அவாளோட எல்லா டிடேல்ஸும் இதுல இருக்கு வரட்டா மாமி “

அதைக்கேட்ட பர்வதம்… வீட்டில் அனைவருடன் கலந்து பேசி சொல்லுவதாக சொல்ல அதை மேனகா மறுநாள் பங்கஜமிடம் தெறிவித்தாள். அன்று மாலை வேலை முடிந்து வீடு திரும்பியதும் பங்கஜம் அதை அம்புஜத்திடம் ஃபோனில் விவரித்தாள். அதற்கு அம்புஜம்

“பகவான் யாருக்கு யாருன்னு எழுதி வச்சுருப்பார்….நம்ம மிருதுக்கு அந்த புள்ளான்டான் தான் ஆத்துக்காரர்

ஆகனும்னு அவ ஜாதகத்தில எழுதிருந்தா இது நடக்கும். எல்லாம் அவன் விட்ட வழி..சரி பங்கு ரொம்ப தாங்ஸ். நீ போய் உன் ரெண்டு வாலுகளப்பாரு நான் வைக்கறேன்”

என்று கூறி ஃபோன் கால் ஐ துண்டித்து “பகவானே” என்று கண்களை மூடி வேண்டிக்கொண்டாள்.

இவ்வாறு சீராக சென்றுக்கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் வந்த  இந்த வரன் அமையுமா! அமைந்தால் நல்லதா!!

RTA பார்க்கிங் பரீட்சையின் முதல் அட்டெம்ட்டில் தேர்ச்சி பெற முடியாது போனதும் மனம் தளர்ந்து போனது. அப்போது சட்டென நம்ம பாரதியாரோட

“துன்பம் நெருங்கி வந்த போதும்
நாம் சோர்ந்துவிட லாகாது பாப்பா!”

என்ற பாட்டு மனதில் உதித்தது. உடனே தெம்பு பிறந்தது.

“மீண்டும் ஓர் முயற்சி செய்வோம் அதில் வெற்றியை மட்டுமே காண்போம்”

என்ற நம்பிக்கையுடன் அடுத்த முயற்சிக்கு பதிவு செய்தேன். வழக்கம் போல் குறித்த நாளில் (புதன்கிழமை) குறித்த நேரத்தில் (3 pm) RTA பார்க்கிங் பரீட்சை நடக்கும் வளாகத்திற்கு சென்றேன்.

இந்த தடவை உள்ளே நுழைந்ததும் அங்கே வரவேற்பு அறையில் அமர்ந்திருந்த அரபு நாட்டவர் மற்றொரு மாணவரிடம் “நீங்கள் பாஸ்” என்று கூறுவதை கேட்டுக் கொண்டே நுழைந்ததில் “நல்ல சகுனம் பார்வதி” என்று
என் மனம் கூறியது எனக்கு கேட்க
மனதிலும் முகத்திலும் மகிழ்ச்சி பொங்க அடையாள அட்டையை கொடுத்தேன். எனது முறைக்கு காத்திருந்தேன்.

ஏதாவது ஒன்றை நாம் மீண்டும் மீண்டும் செய்தாலோ அல்லது ஏதாவது ஒன்று மீண்டும் மீண்டும் நமக்கு நடந்தாலோ அதை நம் மனம் முதல் தடவை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அடுத்தடுத்த முறை அதுவே பழகி போய்விடுவது போல எனக்கு இந்த தோல்வி என்பது பழக்கமாகி விட்டதாலோ என்னவோ இம்முறை எந்தவித கலக்கமும் இன்றி அமர்ந்திருந்தேன்.

அன்று நிறைய நபர்கள் பரீட்சை கொடுத்துக் கொண்டிருந்தனர். நான் அமர்ந்திருந்த அந்த பதினைந்து நிமிடங்களில் மூன்று நபர்கள் பார்க்கிங் பரீட்சையில் தேர்ச்சி பெற்று சந்தோஷத்தில் துள்ளித் குதித்து சென்றனர். அதைப் பார்த்ததும் என் மனதில் “பாவம் எத்தனை முறை முயற்சித்தார்களோ!” என்று தான் எண்ண தோன்றியது. மேலும் நான் தேர்ச்சி பெற்றால் எப்படி ரியாக்ட் செய்வேன் இல்லை செய்வது என்ற யோசனையை புள்ளி கோலம் போல் வரைந்து பார்க்க முயற்சித்து நாளு புள்ளி வைப்பதற்குள் எனது பெயர் அழைக்கப்பட்டது.
உடனே புள்ளிகள் அழிக்கப்பட்டது.
கார் எண் 4 என்று கூறப்பட்டது. பார்க்கிங் யார்டுக்குள் செல்லும் கதவு திறக்கப்பட்டது.

அந்த கதவு வழியே பார்க்கிங் யார்டுக்குள் சென்று எனக்கான காரின் கதவை திறந்ததும் விக்ரமாதித்தன் தோளில் தொற்றிக் கொள்ளும் வேதாளம் போல் தொற்றிக் கொண்டது ஒரு வகை பயம் என்னும் வேதாளம். ஏனென்று தெரியவில்லை. வேதாளம் ஏன் தொற்றிக் கொண்டது என்று ஆராய்வதற்கெல்லாம் நேரம் இல்லாததால் அதை சுமந்து கொண்டு காரில் ஏறினேன்.

ஹில் மற்றும் கராஜ் இரண்டில் தேர்ச்சி பெறாததால் அவ்விரண்டையும் தான் செய்ய வேண்டும். அதனால் இம்முறை நிச்சயம் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையையும் சுமந்துகொண்டு நேராக ஹில் பார்க்கிங் செய்து காட்ட சென்றேன். போன முறை பீப் சப்தம் வரும் முன் நிப்பாட்டி விட்டதால் இம்முறை அந்த சப்தத்திற்காக காத்திருந்தேன் அது ஒலித்ததும் சரியாக நிப்பாட்டினேன். பின் கார் என்னிடம், அடுத்த பார்க்கிங் செய்து காட்ட செல்லும் படி கூறியதும் அங்கிருந்து அடுத்ததாக கராஜ் பார்க்கிங் செய்ய காரை ஓட்டிச் சென்றேன்.

போன முறை செய்த தவற்றை இம்முறை செய்யக்கூடாது என்ற கவனம் கூடுதலாக இருக்க, கார் எந்த கோட்டிலும் பட்டுவிடாது மெல்ல பார்க் செய்தேன். எனக்கு தெரிந்து எந்த தவறும் இம்முறை செய்யவில்லை என்ற மனத்திருப்தியில் பார்க் செய்ததும் சில நோடிகள் ஆசுவாசப்படுத்திக் கொண்டு பின் பார்க்கிங் பிரேக் போட்டேன். கார் என்னை அடுத்த பார்க்கிங்கிற்கு செல்ல உத்தரவிட்டது. அப்பாடா எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுச்சுப்பா என்று காரை எங்கிருந்து எடுத்து ஓட்டி சென்றேனோ அங்கேயே ஓட்டி சென்று பார்க் செய்து, காரில் இருந்து இறங்கி நேராக வரவேற்பு அறைக்கு சென்றேன். அங்கிருந்த வரவேற்பாளர் என்னை காத்திருக்கும் படி சொன்னார்.

மனதில் அனைத்து கடவுள்களையும் வேண்டிக்கொண்டு அமர்ந்திருந்த என்னை அழைத்தார். எழுந்து சென்று அவர் மேஜையின் முன் நின்றேன். அவர் என்னைப் பார்த்து

“நீங்கள் நன்றாக தான் பார்க் செய்தீர்கள் ஆனால்… அந்த வீடியோவை பாருங்கள்”

என்று கூறி மீண்டும் அங்கிருந்த டிவியை பார்க்க சொன்னதும்

“போச்சுடா மறுபடியும் அவுட்டா?!!!”

என்று என் மனம் என்னிடம் கேட்க, பதற்றம் தொற்றிக் கொள்ள, வாடிய முகத்துடன் டிவியை பார்த்தேன். முதலில் ஏதாவது கோட்டில் கார் பட்டுவிட்டதா என்று தான் என் கண்கள் தேடின. ஆனால் சரியாக தான் பார்க் செய்திருந்தேன். பின்பு ஏன் அவர் ஆனால் என்று இழுத்தார்!!!! என்ற குழப்பம் முகத்தில் பளிச்சிட அவரை பார்த்தேன். அதைப் பார்த்த அவர் விளக்கமளிக்க துவங்கினார்

“நீங்கள் பார்க்கிங் சரியா செய்தீர்கள் ஆனால் ஏன் ஹேண்ட் பிரேக் போட லேட்டாச்சு? காரை பார்க் செய்ததும் ஹேண்ட் பிரேக் போட வேண்டுமல்லவா?”

அதை கேட்டதும் அதிர்ந்து போனேன். உடனே சுதாரித்துக் கொண்டு

“இல்லை… நான் எந்த கோட்டிலும் படாது பார்க் செய்த மனத்திருப்தியில் சற்று அமர்ந்து விட்டேன். அதுவும் சில நொடிகள் தான் எடுத்துக் கொண்டேன். பின் உடனே பார்க்கிங் பிரேக்கை போட்டு விட்டேனே!”

என்று விளக்கமளித்தேன். அதை கேட்டவர் சிரித்துக் கொண்டே

“ரிலாக்ஸ் மேடம். ரிலாக்ஸ். யூ ஆர் பாஸ்”

என்றார். அதை கேட்டதும் சந்தோஷத்தில் செய்வதறியாது நான் காண்பது கனவா இல்லை நிஜமா என்பது போல் சற்று நேரம் நின்றதும்

“பார்வதி நிஜம் தான் நிஜம் தான் நிஜமே தான்”

என்று திருவிளையாடல் தருமியை போல என் மனம் எனக்கு உணர்த்தியதும் முதலில் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு வேக வேகமாக வெளியே வந்து எனக்காக காத்திருந்த என் மகனிடமும் கணவரிடமும் சொல்லி மகிழ்ந்தேன். அவர்களும் அடுத்ததாக RTA ரோட் டெஸ்ட்டுக்கு உடனே பதிவு செய்ய சொன்னார்கள். ஏனெனில் அதற்கான பரீட்சை தேதி கிடைக்க காலதாமதமாகலாம்.

அவர்கள் இருவரிடமும் என்னை கடைசி நேரத்தில் தொற்றிக் கொண்ட வேதாளத்தை பற்றி கூறியதும். இருவரும் ஒன்றாக

“எதற்கு பயம் ? இட்ஸ் ஜஸ்ட் எ பார்க்கிங் டெஸ்ட் அவ்வளவு தானே.! யூ ஆர் டேக்கிங் இட் டூ சீரியஸ். தேவையே இல்லை. அதுவும் நீ இந்தியால கார் ஓட்டி இருக்க வேற!! அப்புறமென்ன?”

என்று கேட்டதும்.

“ஆமாம்! நீங்க ரெண்டு பேரும் சொல்றது கரெக்ட் தான்…இருந்தாலும் அந்த பார்க்கிங் யார்டுக்குள்ள போனாலே எனக்கு ஏதோ ஒரு மாதிரி ஆயிடுது என்ன பண்ண?!”

“அம்மா அந்த மாதிரி எல்லாம் ரோட் டெஸ்ட் ல ஆகக்கூடாது மா. பார்த்துக்கோ!”

என்று மகன் சொன்னதை தலையசைத்து ஆமோதித்தார் கணவர். நான் சிரித்துக் கொண்டேன். கைபேசியை எடுத்தேன் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அழைப்பு விடுத்தேன். RTA ரோட் டெஸ்ட்டுக்கு பதிவு செய்தேன்‌. பரீட்சைக்கான நாள் வியாழக்கிழமை, பிப்ரவரி இருபத்தி மூன்றாம் தேதி மதியம் இரண்டு மணி. தேர்ச்சி பெற்றால் உடனே கையில் லைசன்ஸ். சொல்லவும் கேட்கவும் நன்றாக தான் இருக்கும் ஆனால் நடந்தது என்ன? அடுத்த பதிவில்.

🚗பயணம் தொடரும்…🚗

RTA பார்க்கிங்

ஒரு வழியாக பல படிகளை தாண்டி கடைசி இரு படிகளுக்கு வந்து சேர மூன்று மாதங்கள் எடுத்தது. இன்னும் ஒரு மாதம் தான் RTA அளித்த லர்னிங் பர்மிட் செல்லுபடியாகும். அதற்குள் லைசென்ஸ் கிடைக்காவிட்டால் மீண்டும் பணம் செலுத்தி அதை புதுப்பிக்க வேண்டுமென்று டிரைவிங் இன்ஸ்டிடியூட்டில் கூறினர். ஒரு மாசம் இருக்கே பார்க்கலாம் என்ற தைரியத்தில் RTA பார்க்கிங் பரீட்சைக்கு பதிவு செய்தேன். பார்க்கிங் பரீட்சைக்கு முன் தினம் இரண்டு மணி நேர வகுப்புக்கு பதிவு செய்து பயிற்சி எடுக்க சொல்லி அறிவுறுத்தினர் நண்பர்கள். சரி அவர்கள் அறிவுரையை அலட்சியம் பண்ண மனமின்றி அதற்கும் பதிவு செய்தேன்.

இரண்டு மணி நேர வகுப்பு சென்றேன்.

“நன்றாக பார்க் செய்கிறீர்கள். இப்படியே நாளையும் எந்தவித பதற்றமும் இன்றி செய்து ஒரே அட்டெம்ட்டில் பாஸ் ஆகி விடுங்கள். ஆல் தி பெஸ்ட்”

என்று எனது பயிற்றுவிப்பாளரின் ஆசிர்வாதத்துடன் முடிந்தது பார்க்கிங் வகுப்பு. அன்றைய தினம் முழுவதும் ஏதோ சொல்ல முடியாத ஒரு த‌விப்பு. பாஸ் ஆகி விடுவோமா மாட்டோமா! என்ற குழப்பம் நீடித்ததில் பார்க்கிங் ஜுரம் நூறை தாண்ட அன்று சரியாக சாப்பிடவில்லை, அன்றிரவு சரியாக தூங்கவில்லை.

மறுநாள் காலை விடிந்தது. விருட்டென எழுந்து காலை கடமைகளை முடித்துக் கொண்டு ஒரு கையில் ஒரு கப் காபி மறுகையில் கைபேசியுடன் அமர்ந்தேன்‌. RTA பார்க்கிங் வீடியோக்களை யூடியூப்பில் போட்டுப் போட்டுப் பார்த்துக் கொண்டு இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. கணவர் வந்து காலை உணவு என்ன என்று கேட்ட போது நேரத்தைப் பார்த்தேன். கடிகாரம் ஒன்பதரை என்று காட்ட உடனே அடுப்படிக்கு சென்று அவருக்கு தோசையை சுட்டுக் கொடுத்து விட்டு அடுப்பை அணைத்து விட்டேன். அதைப் பார்த்த என் கணவர்.

“ஏன் இன்னைக்கு இவ்வளவு பதற்றம்? உனக்கு ப்ரேக்ஃபாஸ்ட் வேண்டாமா? அடுப்பை ஆஃப் பண்ணிட்ட? இன்னைக்கு இன்னொரு பார்க்கிங் கிளாஸ் தான் போக போறன்னு நினைச்சு போ. டோன்ட் டேக் இட் டூ சீரியஸ். புரியுதா? நீ போ நான் உனக்கு தோசை சுட்டு தரேன்.”

என்ற ஆறுதல் வார்த்தைகளை கூறினாலும் என் மனதில் ஒரு கலக்கம் இருக்கத்தான் செய்தது. பரீட்சை மதியம் மூன்று மணிக்கு இருந்தது. ஆனால் இரண்டரை மணிக்கெல்லாம் சென்று அடையாள அட்டையை அங்கிருக்கும் வரவேற்பாளரிடம் கொடுக்க வேண்டும் என்பதால் குறித்த நேரத்தில் RTA பார்க்கிங் பரீட்சைக்கு சென்றேன். அங்கே சென்றால் எப்போதும் அங்கிருக்கும் வரவேற்பாளர் இருக்கவில்லை ஏனெனில் அவர் அந்த டிரைவிங் இன்ஸ்டிடியூட்டின் வரவேற்பாளர் என்பதால் அவர் மாலை அஸஸ்மெண்ட் பரீட்சையின் போது தான் அங்கு அமர்ந்திருப்பார். RTA பரீட்சைக்கு அரபு நாட்டை சேர்ந்தவர் ஒருவர் அமர்ந்திருந்தார். நேராக அவரிடம் சென்று பார்க்கிங் பரீட்சைக்கு வந்திருப்பதாக கூறினேன். அவர் அவரின் கனத்த குரலில் எமிரேட்ஸ் ஐடி என்று கேட்க உடனே கைபையில் இருந்த ஐடியை எடுத்து அவரிடம் கொடுத்தேன். அதை வாங்கிக்கொண்டு, என்னை சற்று நேரம் அமர்ந்திருக்கும் படி கூறினார்.

மனதில் பதற்றம் வெளியே புன்னகை என்று அமர்ந்திருந்தேன். அவர் சொன்னது போலவே சற்று நேரத்தில் எனது பெயரை சொல்லி அழைத்து கார் எண் 7 ஐ பார்க்கிங் செய்து காட்ட சொல்லி, வாழ்த்துக்களையும் கூறினார். அன்று பரீட்சைக்கு ஏனோ வேறு யாருமே இருக்கவில்லை போலும். நான் மட்டும் தான் இருந்தேன்.

வரவேற்பு அறையின் கதவை திறந்து பார்க்கிங் யார்டுக்குள் (இதற்கு முன் மூன்று முறை சென்று வந்த இடம். முதல் முறை பகலில்…) சென்றேன். அங்கே ஒரு செக்யூரிட்டி நின்றுக் கொண்டிருந்தார். அவரிடம் கார் எண் 7 என்று கூறினேன். என்னை அழைத்துக் கொண்டு கார் எண் 7 அருகே சென்று

“ஆல் தி பெஸ்ட் மேடம்”

என்று கூறினார். நானும் நன்றியை தெரிவித்துக் கொண்டு அந்த ஸ்மார்ட் காருக்குள் ஏறி அமர்ந்ததும் செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை செய்து முடித்து எனது வலது புறம் இருந்த பெரிய டேப்லட்டுக்கு மேல் பொருத்தப்பட்டிருந்த காமெராவிடம் நான் ரெடி என்று கட்டை விரலை உயர்த்தி தம்ஸ்அப் காட்டினேன். வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. சரி நான் தான் ஏதாவது சம்பிரதாயத்தை செய்ய தவறிவிட்டேனோ என்று எண்ணி ஒரு முறை அனைத்தையும் சரி செய்துக் கொண்டு மீண்டும் அந்த காமிரா முன் நான் தயார் என்று சொன்னேன். அப்போதும் கார் ஸ்டார்ட் ஆகவில்லை.

உடனே இறங்கி போய் சொல்லலாம் என்று சீட் பெல்ட்டை கழற்ற முற்பட்ட போது…பார்க்கிங் பரீட்சைக்கு என்று காரில் ஏறி விட்டால் அதை முடிக்கும் வரை காரை விட்டு வெளியே வரக்கூடாது என்று எனது ஆய்வாளர் கூறியது நினைவுக்கு வர, சட்டென சீட் பெல்ட்டில் இருந்து கைகளை எடுத்து காருக்கு முன் வெளியே நின்றிருந்த செக்யூரிட்டியிடம் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை என்று ஆக்ஷனில் கூற அவர் யாரிடமோ ஃபோனில் ஏதோ கேட்க பின் என்னிடம் ஃபைவ் மினிட்ஸ் என்று கை விரல்களை காட்டி சொல்ல. என்னடா இந்த பார்வதிக்கு வந்த சோதனை என்று நினைத்துக் கொண்டிருக்கையில் கார் ஸ்டார்ட் ஆனது. உங்கள் பார்க்கிங் பரீட்சை தொடங்குகிறது என்ற குரல் காருக்குள் ஒலித்தது.

காரை ரிவர்ஸ் கியரில் போட்டேன். வண்டியை அதன் பார்க்கிங்கில் இருந்து வெளியே எடுத்தேன். பார்க்கிங் பரீட்சைக்கு ஓட்டிச் சென்றேன். முதலில் ஹில், பின் பாரலல், எமர்ஜென்சி, ஆங்கிள் கடைசியில் கராஜ் பார்க்கிங் என்று அனைத்தையும் செய்து முடித்ததும் காரை எங்கிருந்து எடுத்தேனோ அதே பார்க்கிங்கில் கொண்டு வந்து பார்க் செய்து விட்டு வரவேற்பு அறைக்குள் நுழைந்தேன். அங்கிருந்த மண்ணின் மைந்தன் வரவேற்பாளர் சற்று நேரம் அமரும் படி கூறினார். எல்லாம் சரியாக செய்த திருப்தியில் அமர்ந்திருந்தேன்.

சற்று நேரம் ஆனதும் இன்னும் மூன்று நபர்கள் பார்க்கிங் பரீட்சை எடுக்க வந்து காத்திருந்தனர். அவர்களுக்கு ஒரு ஹாய் சொல்லி பேச்சை ஆரம்பித்த போது வரவேற்பாளர் எனது பெயரை சொல்லி அழைத்தார். எழுந்து அவர் அமர்ந்திருந்த மேஜை அருகே சென்றேன். அவர் ஒரு காகிதத்தை என்னிடம் நீட்டி

“நீங்கள் ஹில் மற்றும் கராஜ் ஃபெயில் மற்ற மூன்றிலும் பாஸ். டூ ட் வெல் நெக்ஸ்ட் டைம். ஆயுஷ்”

என்று அடுத்த மாணவரை அழைத்தார். நானோ கையில் அந்த பேப்பருடன் சற்று நேரம் அங்கேயே நின்றுக் கொண்டிருந்தேன். அடுத்தடுத்து ஆட்கள் பரீட்சையை எடுக்க யார்டுக்குள் சென்றார்கள். அங்கேயே நின்றிருந்த என்னை வரவேற்பாளர் அழைத்தார். சென்றேன். அவர் பக்கத்தில் இருந்த டிவியை பார்க்க சொன்னார். நானும் பார்த்தேன். அதில் நான் வண்டி ஓட்டிய வீடியோ போடப்பட்டிருந்தது. பாஸ் ஆனதை எல்லாம் ஓட்டிவிட்டு ஃபெயில் ஆன பார்க்கிங்கை மட்டும் போட்டுக் காட்டினார். முதலில் ஹில் டெஸ்ட்டில் பீப் சத்தம் வருவதற்கு முன்னதாகவே வண்டியை நிறுத்தி விட்டேன். அடுத்ததாக கராஜ் பார்க்கிங், இதில் வண்டியை பார்க் செய்யும் போது லைட்டாக கோட்டில் டையர் பட்டுவிட்டது. மேலும் வண்டியை நான் செய்த கராஜ் பார்க்கிங்கில் இருந்து வெளியே எடுக்கும் போது சிக்ஸ் பாயிண்ட் செக் எனப்படும் ஓர் சம்பிரதாயத்தை செய்யாது எடுத்துவிட்டேன். இரண்டு தவறுகளையும் பார்த்து விட்டு அவரிடம் தாங்க்ஸ் என்று கூறி இன்ஸ்டிடியூட்டிற்கு வெளியே காத்திருந்த எனது கணவரிடம் வந்து நடந்ததை கூறினேன். அவரும் வழக்கம் போல என்னை தேற்றினார்.

பரீட்சையை நன்றாக செய்தேன், முதல் முயற்சியிலேயே RTA பார்க்கிங் பரீட்சையில் பாஸ் ஆகி விடுவேன் என்று பரீட்சையை முடித்ததும் நம்பிக்கையில் இருந்த எனக்கு, உன் நினைப்பு தவறு… என்ன தான் சரியாக செய்திருந்தாலும் உனக்கே அறியாமல் சில சின்ன சின்ன தவறுகள் செய்துள்ளாய் என்று அந்த ஸ்மார்ட் கார் படம் பிடித்ததை போட்டு காட்டியபோது தான் உணர்ந்தேன்.

காரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த நேரத்தில், அன்று அந்த பார்க்கிங் பரீட்சையில் நடந்ததை மனதில் அசைப்போட்டு பார்த்துக் கொண்டே வந்ததில் ஒன்று நன்றாக புரிந்தது என்னவென்றால் எப்படி எனக்கே தெரியாது செய்த சிறிய தவற்றை அந்த ஸ்மார்ட் கார் படம் பிடித்து என்னை ஃபெயில் ஆக்கியதோ அதே போல் தான் நாம் நம் வாழ்க்கையிலும் நமக்கே தெரியாது செய்யும் தவறுகளை நமக்கு உணர்த்திடவே அவ்வப்போது சில தோல்விகள், இழப்புகள், வருத்தங்கள் ஆகியவை வந்து போகிறது. உணர்ந்தால் அவற்றை திருத்திக் கொண்டு வாழ்க்கையையும்/வண்டியையும் சரியான முறையில் நல்வழியில் ஓட்டிச் செல்லலாம். அப்படி இல்லையென்றால் தொடர் தோல்விகளை சந்திக்க வேண்டியது தான். எவ்வளவு முயன்றாலும் நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுன்னு புலம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை.

தவறு செய்வது மனித இயல்பு
தவற்றை தவறு என்று உணர்ந்தும் அதையே செய்வது இறுமாப்பு
தவற்றை உணர்ந்ததும் திருந்தி/ திருத்தி கொள்வது இயல்பிருப்பு

இல்லையா!

ஒரு கார் பார்க்கிங் டெஸ்ட் தானே! ஒரு சாதாரண இன்டர்வியூ தானே! அதில் என்ன பிரமாதம் அது ஒரு சின்ன போட்டி தானே! இதிலென்ன பிரமாதம் என்றெல்லாம் பலர் நினைக்கலாம்/கூறலாம். ஆனால் அவை ஒவ்வொன்றும் நமக்கு கற்று தரும் பாடங்கள் ஏராளம்! தோல்விகள் வெற்றிக்கான முதல் படின்னு ஏன் சொல்றாங்க தெரியுமா? ஏன்னா தோல்வி அப்படிங்கறது நம் சிந்தனை, நமது பார்வை, நமது எண்ணம், ஒரு விஷயத்தை எதிர்கொள்ளும் விதம், பொறுமை, தன்னடக்கம், தன்னம்பிக்கை, தைரியம் போன்ற பல குணாதிசயங்களை நமக்குள் வரவழைக்கும். நம்மை நாம் மாற்றிக்கொள்ள வாய்ப்பளிக்கும்.

இந்த தோல்வி என்னை வெற்றிக்கு நகர்த்தி சென்றதா? இரண்டாவது முயற்சியில் RTA பார்க்கிங் பரீட்சையில் பாஸ் ஆனேனா இல்லையா என்பதை அடுத்த பதிவில் காண்போம்.

🚗பயணம் தொடரும்…🚗

பார்க்கிங் பரீட்சையில் எந்த வகை பார்க்கிங்கில் ஃபெயில் ஆகிறோமோ அதை மட்டும் மீண்டும் எடுத்தால் போதுமென்று இரண்டாவது பரீட்சையில் தோல்வியுற்ற பின் அங்கிருந்த எனது சீனியர் மாணவர்கள் (மூன்றாவது முறை பரீட்சை எடுக்க காத்திருந்தவர்கள்) கூற கேட்டதும் இரண்டாவது முயற்சிக்கு முன் என் மனதில் எழுந்த சந்தேகத்திற்கு பதில் கிடைத்தது. அப்பாடா மூன்றாவது முயற்சியில் கராஜ் பார்க்கிங் மட்டும் செய்தால் போதும் என்று எண்ணி என்னை நானே ஆசுவாசப்படுத்திக் கொண்டு அடுத்த நாள் இன்டர்ணல் பார்க்கிங் அஸஸ்மெண்ட் டெஸ்ட்டை மூன்றாவது முறை கொடுக்க சென்றேன்.

இம்முறை ஏழு மணி ஸ்லாட் தான் இருக்கிறது என்று வாடிக்கையாளர் சேவை மையத்தில் கூறினர். நாம ஆறு மணிக்கு புக் செய்தாலும் எட்டு மணிக்கு தான் பரீட்சையை எடுக்க முடியுதுங்கும் போது எதுவா இருந்தா என்னன்னு அந்த ஸ்லாட்டை புக் செய்திருந்தேன். வழக்கம் போல் அவர்களின் விதிமுறைப்படி ஆறரை மணிக்கு சென்று அங்கிருந்த வரவேற்பாளரை பார்த்து ஒரு “ஹாய்” சொல்லிவிட்டு எனது கைபைக்குள் இருந்து அடையாள அட்டையை எடுக்க முற்பட்ட போது

“வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தே….ன்
உங்கள் பார்க்கிங் பரீட்சையில்
இம்முறை
பாஸ் ஆக வந்தே…ன்”

என்று எனது எண்ணம் மனதிற்குள் பாட்டாக ஒலித்தது போல் இருக்க உடனே நிமிர்ந்து வரவேற்பாளரிடம் அடையாள அட்டையை நீட்டினேன். அவருக்குள்ளும் என் மனதில் ஒலித்தது போலவே

ரா ரா… இன்டர்ணல் பார்க்கிங் டெஸ்ட்டுக்கு மீண்டும் ரா..ரா..

என்று அவர்கள் பாஷையில் அது போல ஏதாவது தோன்றியிருக்கும் போல் இருந்தது அவரின் சிரித்த முகத்துடனான வரவேற்பு. அவர் எனது விவரங்களை கணினியில் சரி பார்த்த பின் “ஆல் தி பெஸ்ட்” என்று கூறி பரீட்சை நடக்கும் யார்டுக்கு போக சொன்னார். நானும் வழக்கம் போல நன்றி தெரிவித்துக் கொண்டு அங்கிருந்து யார்டை நோக்கி நடக்கலானேன். நமக்கு நன்றாக பழகி போன பாதை. அதில் பயணிப்பது இதுவே கடைசி முறை. இனி அந்த யார்டுக்குள் RTA பரீட்சை எடுக்கத் தான் செல்ல வேண்டும் என்றெல்லாம் மனதில் பல கணக்கு போட்டுக்கொண்டு சென்று அமர்ந்தேன்.

என் பெயர் அழைக்கப்பட்டது. இருக்கையில் இருந்து எழுந்து நிமிர்ந்து பார்த்தால் எனது முதல் இன்டர்ணல் பார்க்கிங் அஸஸ்மெண்ட் டெஸ்ட்டுக்கு வந்த அதே ஆய்வாளர். அவருக்கு ஒரு “ஹாய்” சொல்ல அவரும்

“ஹாய் பார்வதி. ஆல் தி பெஸ்ட்”

என்று கூறினாலும் “மறுபடியும் நீயா?” என்பது போல அவரின் முக பாவம் இருந்ததாக எனக்கு தோன்றியது. அவர் சாதாரணமாக இருந்திருந்தாலும் எனது இரண்டு முறை தோல்வி என் மனதில் அவ்வாறு ஒரு எண்ணத்தை வரவழைத்தது. அவர் சொன்ன காரில் ஏறினேன். நேராக கராஜ் பார்க்கிங்கிற்கு காரை ஓட்டிச் சென்றேன். ஆய்வாளர் வண்டியிலிருந்து இறங்கிக் கொண்டார். பின் என்னை கராஜ் பார்க்கிங் செய்து காட்ட சொன்னார்.

இம்முறை பாஸ் ஆகி அடுத்து RTA பரீட்சைக்கு செல்ல வேண்டும் தாயே உதவி புரிவாயே என்று மனதிற்குள் அம்பாளை வேண்டிக்கொண்டேன். ரிவர்ஸ் கியர் போட்டேன். பார்க் செய்தேன். ஆய்வாளரை கார் ஜன்னல் வழியாக பார்த்தேன். அவர் முகத்தில் சந்தோஷம் தெரிந்ததும் என் முகம் மலர்ந்தது. காருக்குள் ஏறி அமர்ந்தவர் என்னிடம்

“எப்படி இப்போது ஒரே டிரையில் எந்தவித அட்ஜெஸ்ட்மென்ட்டுமின்றி பர்ஃபெக்ட்டா பார்க் செஞ்சீங்க? இதே போல RTA டெஸ்டிலும் ஒரே அட்டெம்ட்ல பாஸ் ஆகுங்க. ஆல் தி பெஸ்ட். யூ ஹாவ் கிளியர்டு தி பார்க்கிங் அஸஸ்மெண்ட் டெஸ்ட்”

என்று சொன்னதும் அப்பாடா என்று ஒரு பெருமூச்சு விட்டு காரை அதன் பார்க்கிங்கில் கொண்டு சேர்த்துவிட்டு, ஆய்வாளரிடம் நன்றியை தெரிவித்துக் கொண்டு நேராக RTA கவுண்டர் சென்று RTA பார்க்கிங் டெஸ்ட்டுக்கு பதிவு செய்ய வேண்டுமென்று கூறினேன்.

பார்க்கிங் இன்டர்ணல் அஸஸ்மெண்ட் டெஸ்ட் முடிவுகள் கணினியில் பதிவேற்றிய பின்னரே RTA பரீட்சைக்கு பதிவு செய்ய முடியும் என்றும், ஆய்வாளர்கள் அனைவரது பரீட்சையையும் முடித்த பின்பு தான் அதை பதிவேற்றம் செய்வார்கள் என்றும், அதற்கு இரண்டு மணிநேரம் ஆகும் என்றும் அந்த கவுண்டரில் இருந்த நபர் கூறினார். சரி மீண்டும் வாடிக்கையாளர் சேவை மையம் மூலமாகவே அதற்கும் பதிவு செய்வோம், அதற்காக இரண்டு மணிநேரம் எல்லாம் காத்திருக்க முடியாது என்று முடிவெடுத்து அங்கிருந்து நகர்ந்து அந்த இன்ஸ்டிடியூட்டின் வரவேற்பரையில் அமர்ந்திருந்த என் மகனிடம் சென்று முதலில் நான் பாஸ் ஆன விஷயத்தை சொல்லி மற்ற விவரங்களையும் விவரித்தேன். பின் மகனுடன் அவரின் காரில் ஏறி வீட்டிற்கு சென்று என் கணவரிடம் விவரத்தை சொன்னதும்

“பரவாயில்லையே சொன்னபடி செய்து காட்டிட்ட! குட். அடுத்தது RTA தானா? இன்னும் இரண்டே இரண்டு படி தான் அதையும் தாண்டிட்டா உன் கையிலும் ஐக்கிய அரபு அமீரக ஓட்டுனர் உரிமம் இருக்கும்.”

“அது எவ்வளவு தடவை எடுக்க வேண்டி இருக்குமோ!! பார்ப்போம்”

“அதெல்லாம் உன்னால முடியும். RTA டெஸ்ட்டுக்கு புக் பண்ணிட்டியா? டேட்ஸ் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்”

“இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு தானே புக் பண்ண முடியும். சரி இன்னைக்கு டின்னர் வெளியே சாப்பிடுவோமா? அப்படியே அந்த டிரைவிங் இன்ஸ்டிடியூட் ப்ராஞ்ச்ல போய் RTA டெஸ்ட்டுக்கும் புக் பண்ணிட்டு வந்திடலாம்.”

என்று நான் சொன்னதும் அதற்கு என்னவரும் எங்களவரும் சம்மதிக்க, ஒரு டென்ஷன் விலகிய மகிழ்ச்சியை கொண்டாட மூவருமாக வெளியே சென்றோம். அவரவருக்கு பிடித்தமான உணவை ஆர்டர் செய்து நன்றாக உண்டோம். RTA பரீட்சைக்கு பதிவு செய்தோம். வீட்டிற்கு திரும்பி வந்தோம்.

இன்டர்ணல் பரீட்சை ஜுரம் குறைந்தது
RTA பரீட்சை ஜுரம் ஆரம்பம் ஆனது!

🚗பயணம் தொடரும்…🚗

பாகம் 4 முடிந்து ஐந்தாவது பாகம் பதிப்பிக்க காலதாமதமானதற்கு முதல் முயற்சியின் தோல்வியில் இருந்து வெளிவர இவ்வளவு நாட்கள் எடுத்தது என்று நினைத்துக் கொண்டு மன்னிக்கவும்.😅

முதல் இன்டர்ணல் பார்க்கிங் அஸஸ்மெண்ட்டில் தேர்ச்சி பெறாததால் மீண்டும் இரண்டு மணிநேர வகுப்புக்கு சென்றேன். அன்று எனக்கு வந்த பயிற்றுவிப்பாளர் நான் காரை பார்க் செய்வதைப் பார்த்து ,

“நீங்கள் நன்றாக தானே பார்க் செய்கிறீர்கள் பின்பு ஏன் பாஸ் ஆகவில்லை?”

என்று கேட்க. நான் அவரிடம்

“அது என்ன மாயமோ தெரியல! என்ன மந்திரமோ புரியல! அந்த டெஸ்ட் யார்டுக்குள்ள போனாலே தப்பு தப்பா தான் வருது”

என்று சொல்ல அவரும் எனது முந்தைய பயிற்சியாளர் சொன்னது போலவே பயத்தை தவிர்க்க சொன்னார். நானும் சரி என்று தலையை ஆட்டினேன். வீட்டில் கணவர் அல்லது மகன் /மகள் கார் இருந்தால் அதில் பார்க்கிங் பயிற்சி எடுத்துப் பார்க்க சொன்னார். ஓகே என்று கூறி வகுப்பை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றேன்.

முதலில் எனது கணவரிடம் அவரின் காரை சிறிது நேரம் பயிற்சி செய்ய கேட்டேன். அவரது கார் பெரியது என்றும் எங்கள் மகனின் கார் செடான் என்பதால் அதில் பயிற்சி எடுக்குமாறு கூறி விட்டார். நானும் அது சரி தானே என்று எண்ணி மகன் பக்கம் திரும்பினேன். உடனே அவர்

“அம்மா என்னை பார்க்காதே எனக்கு நாளைக்கு காலேஜ் இருக்கு.”

என்று வேகவேகமாக கூற,

“அட போங்கப்பா நான் வகுப்பு போனதை வச்சே பாஸ் ஆனா ஆகிறேன் இல்லைன்னா வேண்டாம்.”

என்று சொல்லி இரண்டாவது இன்டர்ணல் பார்க்கிங் அஸஸ்மெண்ட் டெஸ்ட் பகல் நேரத்தில் எடுக்க முடியுமா என்று கேட்டதற்கு பகல் முழுவதும் RTA பரீட்சை நடக்கும் என்றும் மாலை ஆறு மணிக்கு மேல் தான் பார்க்கிங் யார்டு இன்டர்ணல் டெஸ்ட்டுக்கு கிடைக்கும் என்றும் கூற வேறு வழியின்றி முதல் ஸ்லாட் ஆன ஆறு மணி ஸ்லாட்டை பதிவு செய்தேன். ஏன்னா பக்கபலமாக கொஞ்சம் சூரியன் இருப்பார் என்று நினைத்தேன். மூன்று நாள் கழித்து மீண்டும் நம்பிக்கையுடன் சென்றேன்.

வெளிச்சத்தோட டெஸ்ட் எடுத்தா பாஸ் ஆகிடலாம்ன்னு நெனச்சு போன எனக்கு வருணபகவான் ரூபத்துல ஆப்பு ஆப்போஸிட்டுல ஆட்டம் போட்டுச்சு பாருங்க. ஆட்டம்ன்னா ஆட்டம் அப்படி ஒரு குத்தாட்டம் போட்டுச்சு. அதோட அந்த ஆட்டத்துல ஆறு மணிக்கு இருந்த பரீட்சையை எல்லாம் எட்டு மணிக்கு தள்ளி வச்சுட்டாங்க. அப்படி காத்திருக்க விருப்பமில்லைனா வேற ஒரு நாளுக்கு டெஸ்ட்டை மாத்தி வச்சுக்கலாம்னு சொன்னாங்க. அவ்வளவு தூரம் போயாச்சேன்னும், அன்று அந்த பரீட்சையை முடிச்சிடணும்னும் காத்துகிட்டு இருந்தேன். மணி எட்டாச்சு மழையும் விட்டாச்சு. ஆறு மணி பரீட்சைக்கு புக் செய்தவர்களை அழைத்தார்கள். என்னுடன் சேர்த்து இன்னும் மூன்று பேர் இருந்தனர்.

ஏற்கனவே இரண்டு மணிநேரம் காத்துக் கொண்டிருந்ததில் பதற்றத்தின் அளவு சற்று அதிகமாக இருந்தது. இதில் எனது ஆய்வாளர் என்னிடம் டென்ஷன் இல்லாம ஓட்டுங்கன்னு சொன்னதைக் கேட்டதும் முழிச்சேன் பாருங்க ஒரு முழி. அதை பார்த்து அவரு என்ன நெனச்சாரோ தெரியல உடனே

“ம்…வண்டியை எடுங்க. நேரா ஹில், அடுத்தது ஆங்கிள் நெக்ஸ்ட் கராஜ் ஓகே. ஆல் தி பெஸ்ட்”

என்றவரிடம் சும்மா இல்லாம

“அப்போ பாரலல் அன்ட் எமர்ஜென்சி”

என்று கேட்க போய்

“ஓ!!! உங்களுக்கு மறுபடியும் அந்த ரெண்டு டெஸ்ட்டும் எடுக்கணும்னா எடுங்க எனக்கு நோ ப்ராப்ளம். டூ யூ வான்ட் டு டூ அகெய்ன்?”

என்று கேட்டவரிடம் வேகவேகமாக

“நோ நோ. ஐ வாஸ் ஜஸ்ட் ஆஸ்க்கிங்‌.”

என்று வெளியே சொல்லிக் கொண்டாலும் உள்ளுக்குள்ளே ஒரு புறம் அப்பாடா என்றும் மறுபுறம் ஏன் அந்த ரெண்டு டெஸ்ட் எடுக்க வேண்டாம்? என்ற குழப்பத்தோடு கிளம்பினேன்.

அவர் கூறிய மூன்றில் இரண்டு முடிந்தது. மூன்றாவதாக கராஜ் பார்க்கிங் செய்ய முற்பட்ட போது சற்று முன்னதாக காரை வலது புறம் திருப்பியதால் ஒரு சிறு தடு மாற்றம் ஏற்பட்டது. ஆனாலும் அதை அவர்கள் அளித்துள்ள ஒரு முறை அட்ஜெஸ்ட்மென்ட் செய்யலாம் என்ற சலுகையை உபயோகிக்க முயற்சித்தேன். பார்க் செய்தேன். வெளியே நின்றிருந்த ஆய்வாளர் காரை அதன் பார்க்கிங்கில் கொண்டு நிப்பாட்ட சொன்னார். நானும் ஓட்டி சென்று நிப்பாட்டி ஹேண்ட் ப்ரேக் போட்டு, கியரை பார்க்கிங்கில் போட்டு, சீட் பெல்ட்டை கழற்றிவிட்டு, எனது கைபையை எடுத்துக் கொண்டு ஒரு வழியா முடிச்சிட்டேன்டாப்பா என்று எண்ணிக்கொண்டு ஆய்வாளரிடம் சென்றால் அவர் என்னிடம்

“நீங்கள் ஹில் அன்ட் ஆங்கிள் டெஸ்ட்டில் பாஸ் ஆனால் கராஜ் ஃபெயில். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்”

என்று கூறிவிட்டு அடுத்த ஆட்டின் பெயரை அழைத்துக் கொண்டே உள்ளே சென்றவர் அடுத்த ஆட்டுடன் யார்டுக்குள் நுழைந்தார். அந்த ஆடும் ஆய்வாளர் கூறிக்கொண்டே வந்த விதிமுறைகளுக்கு என்னை போலவே நன்றாக தலையை ஆட்டியது. அதை எல்லாம் பார்த்துக் கொண்டு நின்ற இடத்திலேயே நின்றிருந்த என்னை பார்த்து…

“உங்க பரீட்சை முடிஞ்சிடிச்சு. நீங்க போகலாம்‌. யூ கெட் இன்சைட் தி கார்”

என்று அடுத்த ஆடிடம் சொன்னதும் அதுவரை பிரமயில் இருந்த நான் அதிலிருந்து விடுபட்டு முன்பு ஆட்டியது போலவே மீண்டும் தலையை சரி என்று ஆட்டிவிட்டு நன்றி தெரிவித்துக் கொண்டு வெளியே வந்து எனக்காக காத்திருந்த கணவரிடம்

“மீண்டும் நான் ஃபெயில்”

என்று கூறி எனது வருத்தத்தை தெரிவித்தேன். அப்போது வாடி போயிருந்த என்னிடம்

“உன்னால முடியலனா விடு நோ ப்ராப்ளம்”

என்றார். அதை கேட்டதும் மனதில் ஒரு இனம் புரியாத உத்வேகம் தோன்ற உடனே அவரிடம்

“ஏன் முடியாது? என்னால் முடியும். முடியும் வரை முயற்சிக்க போகிறேன்.”

என்று கூறி மூன்றாவது முறை இன்டர்ணல் அஸஸ்மெண்ட் பரீட்சைக்கு அடுத்த நாளே ஸ்லாட் கிடைத்ததும் சற்றும் யோசிக்காமல் பதிவு செய்தேன்.

முயற்சி திருவினையாக்கும் என்ற கூற்று பலிக்குமா!!!
அடுத்த பதிவில்…

🚗பயணம் தொடரும்…🚗

“இப்போது இந்த இன்டர்ணல் டெஸ்ட்டுக்கு நீங்கள் இந்த வண்டியை ஓட்ட போவதில்லை இந்த கார் RTA டெஸ்ட்டின் போது தான் உங்களுக்கு தருவார்கள். நீங்கள் RTA டெஸ்ட்டின் போது ஓட்ட வேண்டிய ஸ்மார்ட் காரை பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்வதற்கான ஒரு இருபது நிமிட வகுப்பு தான் இது.”

என்று கூறி வேறொரு காரின் அருகே சென்று

“இந்த கார் இப்போது உங்களுடையது. இதை நீங்கள் வகுப்புகளில் எப்படி ஓட்டினீர்களோ அப்படியே ஓட்டி பார்க் செய்து காட்டுங்கள். இப்போ இந்த இன்டர்ணல் பரீட்சையை இந்த காரில் எடுத்து பாஸ் ஆகுங்கள். ஆல் தி பெஸ்ட்”

என்று அவர் கூறியதை கேட்டதும் “என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கிறேன் அதற்கு எந்தவித சேதமுமின்றி கொண்டு வந்து இங்கேயே என்கிட்ட விட்டுடுமான்னு” சிவாஜி ஸ்டைலில் சொன்னது போல் ஒரு நிமிட கற்பனை பளிச்சிட என்னையும் அறியாமல் சிரித்து விட்டேன். உடனே அவர் என்னை “என்னடா பரீட்சை எடுக்கறதுக்கு முன்னாடி ஏன் இவங்க இப்படி சிரிக்கிறாங்க? ஒரு வேளை முடிவு தெரிஞ்சிடிச்சோ!!! அப்படிங்கற மாதிரி பார்க்க, சாரி என்று நான் கூறி ரைட் இன்டிகேட்டரை போட்டு காரை ஆங்கிள் பார்க்கிங்கில் இருந்து பின்னால் மெல்ல எடுத்து பின் வளைத்து நேரே சென்றேன்.

முதலில் சுலபமான ஹில் மற்றும் எமர்ஜென்சி பார்க்கிங் முடித்து விடலாம் என்று மனதில் ஒரு கணக்குப் போட்டு அதன்படி முதலில் ஹில் டெஸ்ட் எடுக்க சென்றேன். அந்த மலை மீது இரு கோடுகள் குறுக்கே வரையப்பட்டிருக்கும். நாம் நமது காரை அந்த இரு கோட்டிற்கு நடுவில் நிறுத்தி ஹேண்ட் ப்ரேக் போட வேண்டும். இது தான் சரியான முறை. அதை தான் நான் கற்றும் கொண்டேன். அன்று வரை வகுப்பு பயிற்சிகளில் இந்த வகை பார்க்கிங்கில் எந்த தவறும் இன்றி செய்து வந்ததால் கொஞ்சம் கூடுதல் தன்னம்பிக்கையோடு மலை மீது ஏறினேன். அந்த சிறிய மலை மீது ஏறியதும், முன் சொன்னது போல் கார் அந்த இரண்டு கோடுகளுக்கு நடுவில் வந்ததும் நிறுத்த வேண்டும்.

நான் பரீட்சை எடுத்தது இரவு ஏழரை மணிக்கு. அன்று வரை எந்த வகுப்பும் இரவு நேரத்தில் இருக்கவில்லை. மலை மீது காரை ஏத்தினேன். கண்ணாடிகளில் பார்த்தேன் வெள்ளைக் கோடு தெரிந்தது உடனே காரை நிறுத்தி ஹேண்ட் ப்ரேக் போட்டேன். எனது கார் அருகே வேகமாக வந்த ஆய்வாளர் என்னை சற்று எனது கார் எங்கே இருக்கிறது என்று இறங்கி பார்க்க சொன்னார். நானும் இறங்கினேன். பார்த்தேன்😲 கார் முதல் கோட்டின் மேல் நின்று கொண்டிருந்தது. ஐய்யோ! என்று தூக்கிவாரிப் போட்டது. எப்பிடி டி!!!! அப்படின்னு என் மனம் என்னை கேட்டது. செய்வதறியாது முழித்துக் கொண்டிருந்த என்னிடம் காரை அடுத்த பார்க்கிங்கிற்கு ஓட்டி செல்லும் படி கூறினார் ஆய்வாளர்.

நானும் காருக்குள் அமர்ந்து சீட் பெல்ட் அணிந்து கொண்டு மலையிலிருந்து கீழே இறங்கி அடுத்ததாக எமர்ஜென்சி பார்க்கிங்கிற்கு செல்ல ஆயத்தம் ஆனேன். இன்டர்ணல் ரோட் டெஸ்ட் அஸஸ்மெண்ட்டில் செய்ததைப் போலவே இன்டர்ணல் பார்க்கிங் அஸஸ்மெண்ட்டிலும் எடுத்ததும் தவறிழைத்து விட்டதை எண்ணி என் நெத்தியில் நானே எனது வலது கையால் தட்டிக் கொண்டே எமர்ஜென்சி பார்க்கிங் முன் வந்து சேர்ந்தேன். பின் பயிற்றுவிப்பாளர் கற்று தந்ததை போலவே காரை இருபதுக்கு மேல் இருபத்தி ஐந்துக்குள் ஸ்பீடு இருக்கும் படி ஓட்டிச் சென்றேன். ஆய்வாளர் ஸ்டாப் என்று சொன்னதும் உடனே ப்ரேக்கை முதலில் செய்த தவற்றை மனதில் கொண்டு எனது முழு பலத்தையும் திரட்டி ஒரு மிதி மிதித்து காரை நிறுத்தினேன். ஏனெனில் கார் ப்ரேக் அழுத்தியதும் உடனே அதே இடத்தில் நிற்க வேண்டும் அவ்வளவு பலமாக அழுத்த வேண்டும் இல்லையேல் வண்டி சற்று முன்னால் செல்ல வாய்ப்பிருக்கிறது. அப்படி சென்றால் நாம் அதில் ஃபெயில்!

ஆய்வாளர் நெக்ஸ்ட் என்று சொல்ல உடனே காரை அங்கிருந்து ஆங்கிள் பார்க்கிங்கை நோக்கி ஓட்டி சென்றேன்‌.
எனது பயிற்றுவிப்பாளர் சொல்லி கொடுத்ததை போலவே திருப்பினேன். ஆங்கிள் பார்க்கிங் பாக்ஸ்க்குள் காரை சரியாக ஓட்டி சென்று நிறுத்தி ஹேண்ட் ப்ரேக் போட்டு ஆய்வாளர் முகத்தைப் பார்த்தேன். அவர் தலையை இடது வலது புறமாக ஆட்டிக்கொண்டே என்னை காரிலிருந்து வெளியே வர சொன்னார். போச்சுடா!!! இதுவும் அவுட்டா என்று என் மனம் என்னிடம் கேட்டது அவருக்கு தமிழ் தெரிந்திருந்தால் நிச்சயம் புரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஏன்னா அவ்வளவு சத்தமாக மைண்ட் வாயிஸ் என்றெண்ணி நானே சொல்லிவிட்டேன். ஒரு முறை காரை சுற்றி பார்த்தேன். கார் சரியாக தான் பார்க்கிங் பாக்ஸுக்குள் நின்றிருந்ததை பார்த்ததும் அப்பாடா என்று இருந்தது. கார் பார்க்கிங் பாக்ஸுக்குள் தானே நிற்கிறது பின்பு ஏன் என்னை இறங்கி பார்க்க சொன்னார் ஆய்வாளர் என்று என் முகத்தில் ஒரு பெரிய ஆச்சர்ய குறியுடன் அவரை நோக்கினேன்.

என்னருகே வந்து நின்றவர் என்னிடம், நான் சரியாக தான் ஆங்கிள் பார்க்கிங்கிற்குள் வண்டியை ஓட்டி வந்ததாகவும், கார் ஆங்கிள் பார்க்கிங் பாக்ஸுக்குள் நிருத்தியதாகவும் கூறி அதன் பின் ஆனால்…என்று ஒரு இழு இழுத்து….காரை நன்றாக உள்ளே ஓட்டி வந்து பார்க் செய்வதற்கு பதில் சற்று முன்னதாகவே நிறுத்தி பார்க்கிங்கில் வண்டியை போட்டதாக கூறினார். அப்போது மீண்டும் காரை நன்றாக பார்த்தேன் அது சில சென்டிமீட்டர் வித்தியாசத்தில் தான் முன் கோட்டில் இருந்து சற்றே பின்னால் இருந்தது. அதைப் பார்த்ததும் நான் பாஸ் தானே என்ற குழப்பமான முகத்துடன் அவரைப் பார்த்தேன். அதற்கு அவர்

“இப்படி நீங்க RTA பார்க்கிங் டெஸ்ட் ல பார்க் பண்ணுனீங்கன்னா நிச்சம் ஸ்மார்ட் கார் உங்களை ஃபெயில் ஆக்கி விடும்”

என்று கூற

“அச்சச்சோ! மறுபடியும் மொதல்லேந்தா!!” என்ற வடிவேலு டையலாக் தான் அந்த இடத்தில் ஞாபகம் வந்தது. ஆய்வாளர் என்னை மீண்டும் காருக்குள் ஏறி அடுத்த பார்க்கிங் செய்து காண்பிக்க சொன்னார். தெம்பு குறைந்த மனதுடன் காருக்குள் ஏறி அடுத்த கராஜ் பார்க்கிங்கை நோக்கி காரை மெல்ல ஓட்டி சென்றேன்.

காரை ரோட்டின் நடுவே இருக்கும் வெள்ளை நிற கோட்டிற்கு மிக அருகே இருக்கும் படி ஓட்டி சென்று பின் ரிவர்ஸில் சரியான இன்டிகேட்டர் கொடுத்து பின்னால் எடுத்து வந்து சரியாக அந்த கராஜ் பார்க்கிங் பாக்ஸுக்குள் நிறுத்த வேண்டும். நானும் அது படியே செய்து வண்டியை அதன் பாக்ஸிற்குள் நிப்பாட்டி ஹேண்ட் ப்ரேக் போட்டு காருக்கு வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்த ஆய்வாளர் முகத்தை ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தேன். அவர் முகத்தில் எந்தவித ரியாக்ஷனுமின்றி அடுத்த பார்க்கிங்கிற்கு செல்லும் படி கூறினார். அப்பாடா பாஸ் என்று எண்ணிக் கொண்டு அடுத்ததாக என்னை சோதிக்க காத்திருந்த பாரலல் பார்க்கிங்கை நோக்கி காரை ஓட்டி சென்றேன்.

பாரலல் பார்க்கிங்கிற்கு காரை பார்க்கிங் அருகே இருக்கும் வெள்ளைக் கோட்டில் இருந்து ஒரு அடி தள்ளி ஓட்டி சென்று பின் ரிவர்ஸ் கியரில் சரியான இன்டிகேட்டர் கொடுத்து வண்டியை மெல்ல பாரலல் பார்க்கிங் பாக்ஸிற்குள் நுழைத்து வகுப்பில் கற்றுக் கொண்டதை போலவே பார்க் செய்தேன். ஹேண்ட் ப்ரேக் போட்டேன். ஆய்வாளரை பார்த்தேன். அவர் கார் கதவை திறந்து உள்ளே வந்து டிரைவர் சீட்டுக்கு அருகே இருக்கும் சீட்டில் அமர்ந்து சீட் பெல்ட்டை அணிந்துக் கொண்டதும் என்னை நேராக முதன் முதலில் எங்கிருந்து பார்க்கிங் டெஸ்ட்டுக்கு காரை வெளியே எடுத்து வந்தேனோ அதே பார்க்கிங்கிற்கு ஓட்டி சென்று பார்க்க செய்ய சொன்னார். நானும் அவர் கூறிய படியே பாரலல் பார்க்கிங்கில் இருந்து வண்டியை வெளியே எடுக்கும் முன் செய்ய வேண்டிய சிக்ஸ் பாயிண்ட் செக் ஆகிய சம்பிரதாயங்களை செய்து வெளியே எடுத்து அவர் கூறிய பார்க்கிங்கில் காரை பார்க் செய்தேன்.

ஆய்வாளர் என்னைப் பார்த்து ” நீங்கள் ஹில் பார்க்கிங்கில் கோட்டின் மீது காரை நிறுத்தி விட்டீர்கள், ஆங்கிள் பார்க்கிங்கில் சில சென்டிமீட்டர் முன்னதாகவே வண்டியை நிறுத்தி விட்டீர்கள், கராஜ் பார்க்கிங்கில் காரை பாக்ஸிற்குள் சரியாக தாங்கள் கொண்டு வரவில்லை சற்று முன்னதாக வண்டியை திருப்பியதால் கோட்டின் மீது வண்டியின் டயர் ஏறியது. எமர்ஜென்சி பார்க்கிங் அன்ட் பாரலல் பார்க்கிங் மட்டும் தான் பாஸ் ஆகி இருக்கிறீர்கள். எனவே மீண்டும் ஒரு இரண்டு மணி நேர வகுப்பிற்கு புக் செய்து நன்றாக கற்றுக்கொண்ட பின் மீண்டும் இன்டர்ணல் டெஸ்ட் கொடுங்க. ஆல் தி பெஸ்ட்.”

என்றார். அதை கேட்டதும். எங்கோ கேட்ட குரல் போல் இருக்க…

“அட பார்வதி! உனக்கு இந்த கார் ஓட்டுனர் பயிற்சி பள்ளியின் இன்டர்ணல் டெஸ்ட்டில் இரண்டாவது முயற்சியில் தான் பாஸ் ஆக வேண்டுமென்பது எழுதப்படாத விதியோ!!!”

என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு வெளியே எனக்காக காத்திருந்த என் கணவரிடம் சென்று

“நான் ஃபெயில் ஆகி விட்டேன்”

என்று சொன்னதும்

“அதெல்லாம் டிரைவிங்கில் சகஜமப்பா” என்றார்.

அவர் ஏற்கனவே லைசென்ஸ் எடுத்துள்ளதால் அவருக்கு என் கஷ்டம் புரிந்தது. ஆனாலும் எனக்கு அந்த பரீட்சையின் பதற்றம் குறைய சில மணி நேரம் ஆனது.

வீட்டிற்கு வந்து சேர்வதற்குள் சற்று நிதானித்து கொண்டு

“அடுத்த முறை பார்த்துக்கலாம்”

என அடுத்த இரண்டு மணி நேர வகுப்புக்கு கால் சென்டர் எண்ணை அலைபேசியில் அழைத்து பதிவு செய்தேன். நாம எது செய்தாலும் அதில் சில வெற்றிகளும் பல தோல்விகளும் இருப்பது தான் வாழ்க்கை. இல்லையா! இரண்டாவது முயற்சியில் பாஸ் ஆனேனா? இல்லையா!!!! அடுத்த பதிவில் காண்போம்.

🚗…பயணம் தொடரும்…🚗

ஒரு வழியாக இரண்டாவது முயற்சியில் இன்டர்ணல் ரோட் டெஸ்ட் பாஸ் ஆனதும் நம்பிக்கை பிறந்தது. அடுத்ததாக நான்கு மணிநேரம் பார்க்கிங் வகுப்புக்கு செல்லும் படி கூறினர். சரி என்று சென்றேன்.
பார்க்கிங்கில் ஐந்து வகை என்று ஆரம்பித்தார் பார்க்கிங் பயிற்றுவிப்பாளர். பாரலல், கராஜ், ஆங்கிள், ஹில் மற்றும் எமர்ஜென்சி பார்க்கிங் என்று நான்கு மணிநேர வகுப்பில் கற்றுத் தந்தார். ஆங்கிள் பார்க்கிங் தவிர மற்ற அனைத்தும் நன்றாக சரியாக செய்தேன். இந்த வகுப்பின் போது தான் பார்க்கிங் டெஸ்ட் ஸ்மார்ட் காரில் எடுக்க வேண்டும் என்ற விஷயம் எனக்கு தெரிய வந்தது. அது என்ன ஸ்மார்ட் கார்? என்று கேட்டேன். அதற்கு அவர், இன்டர்ணல் டெஸ்ட்டின் போது அந்த கார் எப்படி இருக்கும் அதில் நான் எப்படி டெஸ்ட் எடுக்க வேண்டுமென்பதை முதலில் சொல்லிக் கொடுத்துவிட்டு தான் அதில் டெஸ்ட் எடுக்க சொல்வார்கள் என்றார். எல்லாம் ஒரு அனுபவம் தானே! இல்லையா. சரி அதையும் பார்ப்போம் என்று அதற்கான இன்ஸ்டிடியூட்டின் பார்க்கிங் இன்டர்ணல் பரீட்சைக்கு பதிவு செய்தேன். ஏனெனில் இன்டர்ணல் ரோட் டெஸ்ட் போலவே இந்த இன்டர்ணல் பார்க்கிங் டெஸ்ட்டை க்ளியர் செய்தால் தான் RTA பார்க்கிங் டெஸ்ட்டுக்கே அனுப்புவார்களாம்.

சிங்கத்தின் குகைக்குள் போயாச்சு ஒண்ணு அதோட போராடி எப்படியாவது வெளியே வெற்றியோடு வரணும் இல்லையா சத்தமில்லாம அங்கிருந்து ஓடிடணும். இந்த ரெண்டு ஆப்ஷன் தான். தோற்று ஓட மனமில்லை. எனவே போராட முடிவெடுத்து பார்க்கிங் இன்டர்ணல் டெஸ்ட்டுக்கு சென்றேன். அங்கே எனது ஆய்வாளர் என்னை அந்த ஸ்மார்ட் காரில் ஏறி அமரச் சொன்னார். நானும் அம்ர்ந்தேன். முதலில் அவர் அந்த காரை ஓட்டி அது எப்போது என்ன சொல்லும், அப்போ நான் என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தார். நான் ஒரு முறை அந்த காரை சுற்றிப் பார்த்தேன். அதன் ஸ்டியரிங் வீலில் பொட்டு பொட்டாக சென்சர்ஸ் இருந்தது. காருக்குள் முன் கண்ணாடி மீது இரண்டு காமிராக்கள், காரின் நடுவில் இரண்டு காமிராக்கள், பின் சீட்டிற்கு மேல் இரண்டு காமிராக்கள், அதை தவிர இன்னும் பல காமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. காரினுள் ஏறி டெஸ்ட் எடுக்கத் துவங்கியதும் காரை விட்டு இறங்கவோ இல்லை அனாவசியமாக நிறுத்தவோ கூடாது என்ற எச்சரிக்கை வேறு. டிரைவர் சீட்டுக்கு அருகில் ஒரு பெரிய டேப்லட் பொருத்தப் பட்டிருந்தது.

நாம் காரில் ஏறியதும் செய்ய வேண்டிய சடங்குகளை செய்து முடித்த பின் அந்த டேப்லெட் மேல் இருக்கும் காமிராவிடம் நான் டெஸ்ட்டுக்கு தயார் என்று கை கட்டைவிரலை (thumbs up) காட்ட வேண்டும். உடனே நமது அனைத்து விவரங்களும் நமது புகைப்படத்துடன் அந்த டேப்லெட்டில் பளிச்சிடும். அதன் பின் வண்டிக்குள் “உங்கள் பார்க்கிங் டெஸ்ட் ஆரம்பம் ஆகிறது” என்று ஓர் குரல் ஒலிக்கும். உடனே நாம் கார் பார்க்கிங் நோக்கி ஓட்டிச் செல்ல வேண்டும். ஏனெனில் இதற்கு கால அவகாசம் உள்ளது. அந்த ஐந்து பார்க்கிங் டெஸ்ட்டையுமே இருபது நிமிடங்களில் முடிக்க வேண்டும். வண்டியை எடுக்க மற்றும் மீண்டும் எடுத்த இடத்தில் ஓட்டி வந்து நிறுத்த ஏழு நிமிடங்கள், பாரலல் பார்க்கிங்கிற்கு ஐந்து நிமிடங்கள், கராஜ் பார்க்கிங்கிற்கு மூன்று நிமிடங்கள், ஆங்கிள் பார்க்கிங்கிற்கு இரண்டு நிமிடங்கள், ஹில் மற்றும் எமர்ஜென்சி பார்க்கிங்கிற்கு தலா தொண்ணூறு நொடிகள்.

பரீட்சை களத்தில் மூன்று ஆங்கிள் பார்க்கிங், மூன்று கராஜ் பார்க்கிங், இரண்டு பாரலல் பார்க்கிங் ஸ்லாட்டுகள் இருக்கும். மேலும் ஹில் மற்றும் எமர்ஜென்சி பார்க்கிங் தளங்கள் ஒன்று தான் கொடுக்கப்பட்டிருக்கும். பரீட்சை களத்தில் நாம் மட்டுமின்றி இன்னும் பலர் பரீட்சை எடுத்து கொண்டிருப்பார்கள் எனவே நாம் கவனமாக காரை ஓட்டிச் சென்று எப்பெப்போ எந்தெந்த ஸ்லாட் காலியாகிறதோ அப்போது அங்கு சென்று பார்க்கிங் செய்ய வேண்டும். பின் அடுத்த பார்க்கிங் ஸ்லாட்டிற்கு பொறுமையாக செல்ல வேண்டும். இப்படியே அடுத்தடுத்து ஒவ்வொரு பார்ங்க்கிங் டெஸ்ட்டையும் மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு பார்க்கிங்கிற்கும் நாம் காரை ஓட்டி செல்லும் அந்த ரோட்டில் சென்சர்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். எனவே நாம் அதன் மீது நமது காரை ஓட்டிச் செல்லும் போது நாம் ஓட்டிச் செல்லும் காருக்குள்(உதாரணத்திற்கு ) “இப்போது நீங்கள் கராஜ் பார்க்கிங் செய்ய போகிறீர்கள்” என்ற குரல் ஒலிக்கும். இதே போல அனைத்து பார்க்கிங் பகுதிக்குள் நாம் செல்லும் போதும் கார் நம்மிடம் எந்த பார்க்கிங் செய்ய இருக்கிறோம் என்பதை கூறும். அதே போல் ஹில் பார்க்கிங் செய்ய மலை போலிருக்கும் அந்த ரோட்டின் மேலே ஏறும் போது பீப்… பீப்… பீப் என்று நமது காருக்குள் சப்தம் வரும் அந்த சப்தம் வந்ததும் காரை பார்க் செய்து ஹேண்ட் ப்ரேக் போட வேண்டும். ஹேண்ட் ப்ரேக் போட்டதும் நமது கார் நம்மிடம் அடுத்த பார்க்கிங் செய்ய அங்கிருந்து கிளம்ப சொல்லும். உடனே அடுத்த பார்க்கிங்கிற்கு செல்ல வேண்டும்.

ஸ்மார்ட் கார் என்ன சொல்லும் நாம் என்ன செய்ய வேண்டும் எப்படி வண்டியை ஓட்டி ஒவ்வொரு பார்க்கிங்காக போட வேண்டும் போன்ற அனைத்தையும் சொல்லிக்கொடுத்த பின் ஆய்வாளர் காரை விட்டு இறங்கி என்னையும் இறங்க சொன்னார். நானும் இறங்கினேன். அனைத்தும் புரிந்ததா என்று கேட்டார். நானும் எல்லாம் புரிந்தது என்று கூறினேன். அதுக்கப்புறம் அவர் சொன்னார் பாருங்க ஒரு விஷயம்…அது என்னன்னா அதுவரை அவர் ஓட்டி காண்பித்த அந்த ஸ்மார்ட் காரில் நான் இன்டர்ணல் அஸஸ்மஎண்ட் டெஸ்ட் எடுக்கப் போவதில்லையாம். அந்த கார் RTA டெஸ்ட்டின் போது தான் தருவார்களாம். மேலும் அப்போதைக்கு நான் பயிற்சி மேற்கொண்ட சாதாரண காரில் தான் பரீட்சையை எடுக்கணும்முன்னு சொன்னார்.

ஒரு விதத்தில் அந்த பல கண்கள் (காமிராக்களை தான் அப்படி சொல்லறேன்) கொண்ட காரை ஓட்ட தேவையில்லை…மேலும் மனிதர்கள் ஆய்வாளர்களாக இருந்தால் கூட கொஞ்சம் கவணிக்க தவற வாய்ப்பிருக்கிறது ஆனால் இந்த மெஷின் அப்படி இல்லையே நாம் இழைக்கும் தவறுகள் அனைத்தையும் படம் பிடித்து விடுமே என்ற பதற்றத்தில் இருந்து தற்காலிகமாக விடுப்பட்டதை எண்ணி அப்பாடா என்றிருந்தது. ஆனால் RTA டெஸ்ட்ட அதில் தானே எடுக்க வேண்டும் என்று மனதின் ஓரத்தில் அசிரீரி ஒலிக்க உடனே என் மனதின் மற்றொரு பக்கம், முதலில் இந்த பரீட்சையில் தேர்ச்சி பெற்றால் தான் அந்த கார் அதனால் இப்போ அதை ஒத்தி வச்சுட்டு இப்ப என்ன செய்யணுமோ அதை செய்ய போ என்று கட்டளையிட உடனே ஓரத்தில் ஒலித்த அசிரீரியும் நானும் அமைதியாக அப்ப நடக்க இருப்பதை நடத்திக் காட்டுவோம் என்று முடிவெடுத்து இரண்டு கண்கள் முன்னிலையில் பரீட்சையை மேற்கொள்ள எனக்கான காரில் ஏறினேன்.

காரை மெல்ல பார்க்கிங்கில் இருந்து எனது பயிற்றுவிப்பாளர் சொல்லிக்கொடுத்தது போலவே வெளியே எடுத்து பின் சர்ரென்று பரீட்சையை எதிர்கொள்ள புறப்பட்டேன்.

எந்தெந்த பார்க்கிங் எப்படி எப்படி செய்தேன். இந்த பார்க்கிங் இன்டர்ணல் பரீட்சையில் பாஸ் ஆனேனா? இல்லையா? போன்ற கேள்விகளின் விடைகளையும் பார்க்கிங் சுவாரஸ்யங்களையும் நாளை பதிவில் காண்போம்.

🚗பயணம் தொடரும்… 🚗

அப்பேற்பட்ட சுப வார்த்தைகளால் ஆரம்பிக்கப்பட்ட எனது ஓட்டுனர் வகுப்பில் அன்று முதல் கப்சிப்😷 சரி அவர் சொல்வது போலவே நடந்துக் கொள்வோம் என்று காரை ஓட்ட ஆரம்பித்தேன். அங்கே பார், இங்கே பார், ஷோல்டர் செக் பண்ணு, ஓட்டும் போது மூன்று கண்ணாடிகளையும் பார், சாலையில் நடப்பவர்களுக்கு நின்று வழிவிட வேண்டும். ரோட்டில் டாட்டட் லைனில் நிதானித்து வண்டி ஏதுமில்லை என்றால் வேகமாக செல் வண்டியை நிறுத்தாதே. ரோட்டில் சாலிட் லைன் இருந்தால் கட்டாயம் வண்டியை நிறுத்திவிட்டு தான் செல்ல வேண்டும். வண்டி அந்த கோட்டையும் தொடக்கூடாது இந்த கோட்டையும் தொடக்கூடாது நடுவில் செல்ல வேண்டும். மஞ்சள் கோட்டை தொடவே கூடாது. நாற்பது ஸ்பீடு லிமிட் என்றால் நாற்பது முதல் நாற்பத்தைந்து வரை தான் செல்ல வேண்டும் அதை விட அதிக வேகம் கூடாது. அதே நேரம் அதை விட கம்மி வேகத்திலும் செல்லக் கூடாது. ரோட்டில் குறிப்பிட்டுள்ள வேகத்தை தான் கடைப்பிடிக்க வேண்டும். வண்டி ஜெர்க் ஆக கூடாது. ஸ்மூத்தாக ஓட்ட வேண்டும். ரோட்டில் இருக்கும் பெரிய வேகத்தடை மீது ஏறி இறங்கும் போது ஸ்பீடு இருபதை தாண்ட கூடாது. சிறிய வேகத்தடை மீது ஏறி இறங்கும் போது ஸ்பீடு ஜீரோவில் இருக்க வேண்டும். இண்டிகேட்டர் போடாது வண்டியை திருப்பக்கூடாது. ரவுண்ட் அபௌட்டில் எப்போது இண்டிகேட்டர் குடுக்க வேண்டும் எந்த இண்டிகேட்டர் குடுக்க வேண்டும் என தியரியாக படிக்கும் போது இருந்ததை விட ரோட்டில் காரை ஓட்டும் போது சற்றே நம்பிக்கை தளர்வதை உணர்ந்தேன். ஒரு நாளைக்கு இரண்டு மணிநேர வகுப்பு. வாரத்திற்கு இரண்டே வகுப்புகள் என பத்து மணிநேர வகுப்பு முடிந்ததும் அவர்கள் இன்ஸ்டிடியூட்டின் இன்டர்ணல் டிரைவிங் அசஸ்மெண்ட் டெஸ்ட் இருப்பதாகவும் அதை நான் எடுக்க வேண்டும் என்றும் கூறினர். சரி என்று அதற்கு பதிவு செய்தேன். அதற்கான நாள் வந்தது. இன்ஸ்டிடியூட் சென்றேன். பெண்களுக்கான வரவேற்பரையில் அமர்ந்தேன். சற்று நேரமானதும் ஒரு பெண்மணி வந்து எனது பெயரை அழைத்தார். நான் எழுந்து அவர் பின்னால் சென்றேன். என் கையில் கார் சாவியை கொடுத்து ஓர் காரை காட்டி அதில் ஏறும்படி கூறினார். நானும் ஏறி எனது பயிற்றுவிப்பாளர் சொன்னதை போலவே சீட் பெல்ட் போடுவதற்கு முன் செய்ய வேண்டி சடங்குகள் (அது படி தான் செய்ய வேண்டும்) ஆன இஞ்சின் ஸ்டார்ட் செய்வது, ஏ.சியை ஆன் செய்வது, கண்ணாடிகளை சரி செய்வது போன்றவற்றை முடித்தேன். சீட் பெல்ட்டை அணிந்தேன். பக்கத்தில் அமர்ந்திருந்த ஆய்வாளரும் சீட் பெல்ட் போட்டிருக்கிறாரா என்றும் நாம் பார்க்க வேண்டும். அதையும் பார்த்தேன். பின் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஆய்வாளர் வண்டியை நிதானமாக வெளியே எடுத்து ஓட்டச் சொன்னார். சிக்ஸ் பாயிண்ட் செக் என்று சொல்லப்படும் வலது புற கண்ணாடி, ஷோல்டர் செக், இடது புற கண்ணாடி ஷோல்டர் செக், வண்டிக்கு பின்னால், காரின் சென்டர் மிரர் ஆகியவைகளை சரி பார்த்த பின் காரை இன்ஸ்டிடியூட்டிலிருந்து வெளியே ஓட்டி வந்தேன். அதுவரை எல்லாம் நல்லபடியாக தான் சென்றது.

அன்று வரை இன்ஸ்டிடியூட்டில் இருந்து வண்டியை அத்தனை முறை வெளியே எடுத்து வந்துள்ளேன். ஆனால் அன்று பதட்டத்தில் அதன் வாசலில் இருந்த ஸ்டாப் சைனை கவணிக்க தவறிவிட்டேன். நான் அந்த பரீட்சையில் தோல்வியுற்றதாக ஆய்வாளர் கூறி வலது புறம் வண்டியை திருப்பி ஓட்டச் சொன்னார். அதை கேட்டதுமே அவ்வளவுதான் என்று என் மனம் என்னிடம் கூறியது. அடுத்து பதினைந்து நிமிடங்கள் ஆய்வாளர் சொன்னபடி காரை ஓட்டி இருக்கிறேன். ஆனால் எப்படி என்று எனக்கு தெரியவில்லை ஏனெனில் என் மனம் முழுவதும் எடுத்ததும் நான் செய்த தவற்றை எண்ணிக் கொண்டே இருந்தது. ஒரு வழியாக இன்ஸ்டிடியூட்டிற்குள் வந்து காரை நிறுத்தினேன். சீட் பெல்ட்டை கழற்றினேன். பக்கத்தில் இருந்த ஆய்வாளர், வண்டி ஓட்டிய அந்த பதினைந்து நிமிடங்களில் நான் செய்த தவறுகளை பட்டியலிட்டார். அய்யோ! பார்வதி நீ என்னடான்னா ஒரே ஒரு தப்ப நினைச்சுட்டு இருக்க இங்க இந்தம்மா என்னடான்னா இருபது தவறுகளை அடுக்கறாங்களே! என்று என் மனம் என்னை ஏளனம் செய்தது எனக்கு கேட்டது. உடனே நான் ஆய்வாளரிடம்,

“முதலிலேயே நான் ஒரு பெரிய தவற்றை செய்து விட்டதால் பதற்றத்தில் அடுத்தடுத்து தவறுகளை இழைத்து விட்டேன். மன்னியுங்கள்”

என்றேன். அதற்கு அவர்

“எதற்கு மன்னிப்பு? ஒரு போதும் வண்டி ஓட்டும் போது பதற்றம் இருக்க கூடாது. தன்னம்பிக்கை வேண்டும். நீங்கள் கொஞ்சம் பயப்படுகிறீர்கள். அதனால் தான் தவறு நேர்கிறது. இம்முறை நீங்கள் இந்த பரீட்சையில் தோல்வி அடைந்துள்ளீர்கள். மீண்டும் வகுப்புகள் எடுத்து நன்றாக பயிற்சி பெற்றதும் வாருங்கள் வண்டியை ஓட்டி காட்டுங்கள். இங்கே நாங்கள் வைக்கும் பரீட்சையில் நீங்கள் பாஸ் ஆனால் தான் உங்களை நாங்கள் RTA ரோட் டெஸ்ட்க்கு அனுப்புவோம். ஆல் தி பெஸ்ட்”

என்று கூறினார். நன்றியை தெரிவித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டேன். மனம் சற்று சோர்வடைந்து தான் இருந்தது. ஆனால் மீண்டும் முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணமும் உதித்தது. நான்கு மணிநேர வகுப்புக்கு சென்றேன். மீண்டும் அதே இன்டர்ணல் டெஸ்ட் எடுத்தேன். இம்முறை சற்று தன்னம்பிக்கை கூடியிருந்தது. சரியாக ஓட்டி, அப்படியும் ஆறு சிறிய தவறுகள் செய்தேன். பத்து வரை சிறிய தவறிழைக்கலாம் என்பதால் பாஸ் ஆனேன்.

அடுத்ததாக பார்க்கிங் கிளாஸில் சேர வேண்டும் என்று கூறினார்கள். அதற்கான வகுப்புகளை பதிவு செய்ய சென்றேன். இரண்டு நாட்கள் நான்கு மணி நேர வகுப்பை பதிவு செய்துவிட்டு வீட்டிற்கு வந்தேன்.

பார்க்கிங் பரிதாபங்கள் நாளைய பதிவில்😊

🚗பயணம் தொடரும்…

ஒரு பக்கம் சுசிலா அவர்கள் சொசைட்டி  குழந்தைகளுக்கு பாரதியார் பாட்டு சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தாள். குழந்தைகளும் சத்தமாக நம் மகாகவியின் பாடல்களை பாடிக் கொண்டிருந்தார்கள். 

மறுபக்கம் அவளின் பக்கத்து வீட்டுக்காரர்களான வசந்தியும் ராதாவும் பேசிக் கொண்டிருந்தனர். 

வசந்தி: ஏய் ராதா இன்னிக்கு நம்ம கண்ணம்மா வேலைக்கு உன் வீட்டுக்கு வந்தாளா?

ராதா: இல்லையே வசந்தி. நானும் அவளுக்கு தான் வெய்ட் பண்ணிட்டிருக்கேன். நீ என்னடான்னா என்கிட்ட வந்து கேட்கிற!!!

வசந்தி: என்ன ஆச்சு அவளுக்கு? இந்த சுசிலா வேற ஞாயிறு ஆச்சுன்னா பாரதியார்… பாட்டுன்னு ஆரம்பிச்சிடறா!!!  

ராதா: விடுப்பா. இந்த மாதிரி யாராவது சொல்லிக்கொடுத்தா தான் இந்த காலத்து குழந்தைங்க பாரதி யாருன்னே தெரிஞ்ப்பாங்க. 

வசந்தி:  நான் அந்த கண்ணம்மாக்கு ஃபோன் செஞ்சும் பாத்தேன். ஆனா அவ எடுக்கல!! 

ராதா: அவ நம்ம கிட்ட வேலை கேட்டு வந்தப்ப எப்படி இருந்தா!! ஆனா இப்ப!!! ஞாயிறு லீவு வேணுமாம், சம்பளத்த Gpay or phonepay பண்ணுங்கறா!! அதை கேட்ட நான் பப்பேன்னு முழிச்சுக்கிட்டு நின்னேன்!!! 

வசந்தி: நீ சொல்லறதும் கரெக்ட் தான் ஒண்ணும் தெரியாதவளா இருந்தவ நம்மக்கே அட்வைஸ் சொல்லற அளவுக்கு என்ன வாய்? 

ராதா: அத சொல்லு வசந்தி. சரி சரி விடு! என்ன பண்ண! ஒரு வேளை அவளுக்கு உடம்பு கிடம்பு சரியில்லையோ என்னமோ!! ஏய் அதோ நம்ம சுசிலா வரா!! 

வசந்தி: ஆமாம் ஆமாம்!! அவ குடுக்குற தைரியத்துல தான் இந்த கண்ணம்மா ரொம்ப ஆட்டம் போடறா!

ராதா: சும்மா இரு வசந்தி. சுசி! ஏய் சுசி!

சுசிலா: ஹே ராதா. எப்படி இருக்க? ஹாய் வசந்தி நீ எப்படி இருக்க? ஆஃபீஸ் வேலையெல்லாம் எப்படி போவுது? 

ராதா: நான் நல்லா இருக்கேன் சுசி.

வசந்தி: ம்…ம்…நல்லா தான் இருக்கேன். சரி இன்னைக்கு அந்த கண்ணம்மா உன் வீட்டுக்கு வேலைக்கு வந்தாளா? 

சுசிலா: இல்ல வரல! 

வசந்தி: அப்படீன்னா அவ இன்னைக்கு நம்ம காலனிக்குள்ளயே வரலையா! ஞாயித்துக்கிழமையும் அதுவுமா அவ பாட்டுக்கு லீவு போட்டா நாம என்ன பண்ணறது? 

சுசிலா: இப்படி நின்னு பேசறதுக்கு பதிலா வேலையை பார்க்கலாமே!! அவளும் மனுஷி தானே. அவளுக்கும் வாரத்துல ஒரு நாளாவது ஓய்வு வேண்டாமா? 

வசந்தி: உனக்கென்னமா உன் வீட்டுல நீயும் உன் பொண்ணும் மட்டும் தான் ஆனா என் வீட்டுல அஞ்சு டிக்கெட் அப்படீன்னா எவ்வளவு பாத்திரம் சேரும்? எவ்வளவு வேலை இருக்கும்ன்னு யோசிச்சுப் பாரு!

சுசிலா: சரி சரி! எனக்கு நேரமாச்சு நான் வரேன்.

வசந்தி: நியாயமான கேள்வி கேட்டா எப்படி தப்பிக்கறா பாரு!!

சுசிலா: என்ன சொன்ன வசந்தி!! நான் தப்பிக்கல. எனக்கு வேலை இருக்குப்பா. “புறஞ்சொல்லலாகாது பாப்பான்னு” நம்ம பாரதி சொன்னது பாப்பாக்கு மட்டுமில்ல நம்மளுக்கும் தான்.  அதுவுமில்லாம கண்ணம்மா அவ கனவ நெனவாக்க போயிருக்கா. அவ இன்னைக்கு வர்றது டவுட் தான். சும்மா பேசிட்டு இருக்காம ரெண்டு பேரும் வேலையை போய் பாருங்க.

ராதா: பார்த்தியா வசந்தி!! அப்படீன்னா அந்த கண்ணம்மா இன்னிக்கு வரமாட்டேன்னு இவகிட்ட சொல்லிட்டு தான் போயிருக்கா!

வசந்தி: ஏன் நம்மகிட்டயும் சொல்லிருக்கலாம் இல்ல

ராதா: நாம விட மாட்டோம்ன்னு தான் சொல்லலையோ என்னவோ! 

வசந்தி: சரி சரி!! நம்ம சுசிலா மாதிரி நானும் ஒரு பாரதியார் லைன் எ இந்த சிட்டுவேஷனுக்கு ஏத்தா மாதிரி சொல்லவா…

ராதா: என்னது? சொல்லேன் கேட்போம்!

வசந்தி: “துன்பம் நெருங்கிவந்த போதும் – நாம்

சோர்ந்துவிட லாகாது பாப்பா” சாரி ராதா! ராதா! போ நீயும் போய் உன் வேலையை பாரு. 

என்று பாத்திரத்தை தேய்ப்பது போல் பாவனை காட்டிக் கொண்டே சொன்னாள் வசந்தி.

ராதா: எனக்கு தோனுற பாட்டு என்ன தெரியுமா “கண்ணம்மா கண்ணம்மா சீக்கிரம் வேலைக்கு வந்துடுமா” 

மறுநாள் ஆனது

கண்ணம்மா: வசந்தி மா வசந்தி மா!! 

வசந்தி: வாடி மா வா! நேத்து ஏன் மகாராணி வரலை?

கண்ணம்மா: நேத்திலேந்து நான் என் வேலைய விட்டு விலகிட்டேன் மா.

வசந்தி: என்னடி சொல்லுற?

கண்ணம்மா: அம்மா! அதுதான் இங்கிலிஷ் ல சொல்லுவாங்களே!! ரெஸிக்னேஷன் அத செய்யறேன் மா‌. 

வசந்தி: என்னடி கண்ணம்மா! குண்ட தூக்கி போடற? ராதா க்கு தெரியுமா?

கண்ணம்மா: அவங்க கிட்டயும் சொல்லிட்டேன்ம்மா. இப்போ நம்ம காலனில ஒரு மீட்டிங் வச்சிருக்கேன் மறக்காம வந்திடுங்க. நான் வரேன். 

வசந்தி: ஆஃபீஸ் இருக்கே!

கண்ணம்மா: அம்மா அதுதான் ஒர்க் ஃப்ரம் ஹோம் தானேமா! ஒரு பத்து நிமிஷம் தான்ம்மா… வாங்கமா! 

வசந்தி: சரி சரி வரேன். 

என்று கண்ணம்மாவிடம் கூறிய வசந்தி நேராக ராதாவிடம் சென்றாள் 

வசந்தி: ராதா…

ராதா: வசந்தி….என்ன நடக்குது? 

வசந்தி: எனக்கும் ஒண்ணும் புரியல. சரி வா நாம போய் அப்படி என்னத்த இந்த கண்ணம்மா சொல்ல போறான்னு கேட்போம். 

என்று இருவரும் அவர்களின் மற்றொரு தோழியான மாவையும் அழைத்துக் கொண்டு சென்றனர். அங்கே ஏற்கனவே வந்து அமர்ந்திருந்த காயத்ரி இவர்களை பார்த்ததும்…

காயத்ரி: ஹே உமா, ராதா, வசந்தி என்ன நம்ம கண்ணம்மா எல்லாம் மீட்டிங் போட்டிருக்கா?

உமா: அவ ரொம்ப நாளா அவளுக்கு ஒரு கனவு இருக்கு இருக்குன்னு சொல்லிக்கிட்டே இருந்தா…அது…இந்த மீட்டிங் தானோ!!!

ஹீ ஹீ ஹீ ஹீ… என்று அவர்களுக்குள்ளேயே சிரித்து கேலி செய்துக் கொண்டனர். அப்போது அங்கு ஏதோ பேப்பர்களை அடுக்கிக் கொண்டிருந்த கண்ணம்மா அவர்கள் பேசுவதை கவனிக்கவில்லை. பேப்பர்களை அடுக்கி கையில் ஏந்திக் கொண்டு வந்து அங்கிருந்த அந்த காலனி பெண்களைப் பார்த்து பேசலானாள். 

கண்ணம்மா: ம்….எல்லாரும் வந்துட்டீங்கன்னு நினைக்கறேன். இன்னேலேந்து நம்ம காலனில நான் வேலைப் பார்க்க போறதில்ல. 

வசந்தி: அதத்தான் ஏற்கனவே சொல்லிட்டியே!

கண்ணம்மா: ஆனா ஏன்னு காரணத்த சொல்லணுல்லமா. 

உமா: என்னடி மா…அந்த காரணம்!!

கண்ணம்மா: அது என்னன்னா!!! எனக்குள்ளேயும் நிறைய கனவு இருக்கு. அதுல ஒண்ணு நல்லா படிக்கணும்ங்ற கனவு, பன்னெண்டாம் வகுப்பு மட்டுமே படிச்ச நான் நம்ம சுசிலா அம்மா தயவால டிகிரி முடிச்சிட்டேன். என்னோட ஒரு கனவு பலிச்சிடுச்சு. 

Gayathri: அதுக்கும் நீ வேலைக்கு வரமாட்டேன்னு சொல்லறதுக்கும் என்ன கண்ணம்மா சம்மந்தம்?

கண்ணம்மா: இருங்க இருங்கம்மா.  என்னோட இன்னொரு கனவு சுயம்மா ஒரு தொழில் பண்ணனும்ன்னுங்கறது. அதுக்கும் சுசிலா மா சொல்லி தந்த பாரதியார் பாட்டு தான் எனக்கு ஊந்துகோலா இருந்துச்சு. 

வசந்தி: அப்படி என்ன பண்ணின?

கண்ணம்மா: நேத்து ஒரு ஏஜென்சி எடுக்குற இன்டர்வியூ விஷயமா போயிருந்தேன். அந்த ஆர்டர் எனக்கு கிடைச்சிருக்கு. இனி இந்த காலனி மட்டுமில்லாம இன்னும் நிறைய காலனிகளுக்கும் “கண்ணம்மா ஹோம் க்ளீனிங் சர்வீஸஸ்” லேந்து என்னோட ஸ்டாஃப் தான் உங்க வீடெல்லாத்தையும் பளபளக்க  செய்வாங்க. 

வசந்தி: அப்பாடா. வயத்துல பால வார்த்த கண்ணம்மா! 

கண்ணம்மா: இருங்க அதுக்கும் சில விதிமுறைகள் எல்லாம் இருக்கு அதெல்லாம் இந்த ஃபார்ம்ல இருக்கு இதுக்கெல்லாம் உட்படறவங்க மட்டும்  கையெழுத்து போட்டு தந்தா உங்க வீட்டுவேலைக்கு ஆள் வருவாங்க. இல்லாட்டி இல்ல. அவங்கள மரியாதையா நடத்தணும். 

என்று அவள் கையில் வைத்திருந்த ஃபார்ம்களை அனைவருக்கும் குடுத்தாள். அதை வாங்கி பார்த்தனர் அக்காலனி பெண்கள். அப்போது ராதா கண்ணம்மாவிடம்…

ராதா: சரி கண்ணம்மா! உனக்கு இவ்வளவு விஷயங்களும் தைரியமும் எங்கேந்து வந்தது?

கண்ணம்மா: சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, – அதைத்

தொழுது படித்திடடி பாப்பான்னு பாரதியார் பாட்டு நீங்க கேட்டதில்ல? அதுக்கு ஏத்தா மாதிரி படிப்பை தொழுது படிச்சேன்.

ராதாவை பார்த்து சொன்னாள் 

ராதா: ஓ!!!!

வசந்தி: சரி படிச்ச. ஆனா தைரியம் எப்படி வந்துச்சு?

கண்ணம்மா: பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்! உங்களுக்கு மட்டுமில்ல மா என்னை மாதிரி இருக்கறவங்களுக்கும் தான் 

வசந்தியை பார்த்து சொன்னாள் கண்ணம்மா. 

வசந்தி & ராதா: ஆங் (என்று வாய் பிளந்து நின்றனர்)

கண்ணம்மா: வாயை மூடுங்கம்மா ஈ இல்ல கொசு போயிட போகுது. நளைக்குள்ள ஃபார்ம் ஃபில் செஞ்சு குடுங்க. சரியா.

“ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்

றெண்ணி யிருந்தவர் மாய்ந்துவிட்டார்

வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற

விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்”ன்னு

இருக்குற இந்த காலத்துலன்னு இல்லங்க எந்த காலமா இருந்தாலும் நம்ம பாரதியார் சொல்லி இருக்குறா  மாதிரி ஒரு பெண்ணுக்கும் சரி ஆணுக்கும் சரி அவங்க படிப்பும் அறிவும் உழைப்பும் என்னென்னைக்கும் வீண் போனதில்லை, வீண் போகாது.

ஒரு பொண்ண நல்லா படிக்க வச்சீங்கன்னா அடுத்த சந்ததியையும் சேர்த்து படிக்க வைக்கிறது சமம்ங்க. 

சுசிலா: சபாஷ் கண்ணம்மா. சரியா சொன்ன. 

கனவு மெய்ப்பட வேண்டும்ங்கற நம்ம பாரதியார் வரிகளுக்கு ஏத்தா மாதிரி  கண்ணம்மா கண்ட கனவு நெனவாகிடுச்சு. நீங்க எல்லாரும் எதுக்கு காத்திட்டு இருக்கீங்க? ம்…உங்க கனவுகளை நிஜமாக்க புறப்படுங்க. உங்கள் அனைவரின் கனவுகளும் மெய்ப்பட எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

🙏நன்றி🙏

நா. பார்வதி 

ஓர் புதிய பயணம்

துபாயில் ஓட்டுனர் உரிமம் பெறுவது என்பது ஒரு மாபெரும் சாதனை புரிவதற்கு இணையானதாகும் என்று அனைவரும் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அது எவ்வளவு உண்மை என்று இங்கிருக்கும் மக்கள் அனைவரும் நன்கறிந்த விஷயமாகும். இந்தியாவில் கார் ஓட்டி பழக்கம் இருப்பதால் முதன்முதலில் துபாய் வந்த போது இங்கேயும் ஓட்டுனர் உரிமம் எடுத்துவிடலாம் என்ற எண்ணம் தோன்றியது. எனது இந்த விருப்பத்தை நண்பர்களிடம் சொன்ன போது, இங்கு கார் ஓட்டுவது சுலபம், ஏனெனில் லேன் சிஸ்டம். ஆனால் அதற்கான உரிமம் பெறுவது என்பது மிக மிக கடினமான செயல்முறை என்றும், மேலும் பலர் ஒரு வருட காலம் எல்லாம் பயிற்சி பெற்றும் ஓட்டுனர் உரிமம் பெற முடியாமல் உள்ளனர் என்றும் அவர்கள் கூற கேட்டதும் மனதிற்குள் ஓர் அச்சம் எழுந்தது உடனே அந்த எண்ணத்தை ஒத்தி வைத்தேன். முதலில் என் கணவர் கார் ஓட்டுனர் உரிமத்தை பெற்றார். இருபது வருடங்கள் கார் ஓட்டி பழக்கம் இருந்தாலும், அவரை இருபது மணிநேரம் வகுப்பு எடுத்தாக வேண்டும் என்று கூறிவிட்டனர் துபாயின் சாலை போக்குவரத்து ஆணையம். அவரின் அலுவலக பணிக்கு இடையே அவற்றை பூர்த்தி செய்து அவர் அந்த ஓட்டுனர் உரிமத்தை பெற ஐந்து மாதங்கள் எடுத்தது. அதற்கே நண்பர்கள் பலர் “பலே” என்று கூறினர். அப்போதும் என்னடா ஒரு ஓட்டுனர் உரிமம் பெறுவதில் என்ன இருக்கிறது! அதுவும் இந்தியாவில் பல வருடங்களாக கார் ஓட்டி பழக்க இருப்பவர்களுக்கு! என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். துபாயில் ஓட்டுனர் உரிமம் பெறுவது கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது என்று கணவரும் கூற கேட்டதும், முதலில் ஒத்தி வைத்த நான் பின்பு வேண்டவே வேண்டாம் என்று ஒதுக்கி வைத்து விட்டேன்.

எங்காவது சென்று வர வேண்டுமெனில் டாக்ஸி/ மெட்ரோ வில் சென்று வந்தேன். சில நேரங்களில் கணவர் அழைத்து செல்வார் அல்லது நண்பர்கள் அழைத்து செல்வார்கள். பின்பு மகன் அழைத்துச் சென்றான். இப்படியே ஏழு ஆண்டுகள் உருண்டோடின. கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக வேலை நிமித்தம் அடிக்கடி வெளியே சென்று வர வேண்டியிருப்பதால் கணவர் மற்றும் நண்பர்களை தொந்தரவு செய்ய கஷ்டமாக இருந்தது. நானும் ஓட்டுனர் உரிமம் பெற வேண்டும் என்று முடிவெடுத்தேன். கடந்த டிசம்பர் மாதம் கார் ஓட்டுனர் வகுப்பில் சேர்ந்தேன். சேர்ந்ததும் முதலில் RTA அங்கீகாரம் பெற்ற கண் பரிசோதனை மையம் சென்று கண்களை பரிசோதனை செய்துக் கொள்ள சொன்னார்கள். நானும் சென்றேன் பரிசோதனை முடிந்ததும் அவர்கள் சிஸ்டத்தில் அப்டேட் செய்தனர். தானாக அது RTA ஆப் இல் அப்டேட் ஆனது. மீண்டும் அதே சென்டருக்கு சென்று, கார் ஓட்டி அனுபவம் இருப்பதாக கூறி எனது இந்திய ஓட்டுனர் உரிமத்தை காட்டினேன். இருந்தாலும் வகுப்புகள் எடுத்தாக வேண்டும் என்று கூறினர். நாம் தான் இந்தியாவில் ஓட்டி இருக்கிறோமே! பார்த்துக்கலாம்! என்ற நினைப்பில் தைரியமாக இருந்தேன்.

முதலில் ஆன்லைனில் தியரி கிளாஸ் எட்டு மணிநேரம் எடுத்தாக வேண்டும் என்றனர். சரி என்று அந்த வகுப்பில் கலந்துக் கொண்டேன். அது முடிந்ததும் அதற்கான பரீட்சை தேதி மற்றும் நேரத்தை முடிவு செய்து அதற்கு பதிவும் செய்தேன். குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் துபாய் RTA அலுவலகம் சென்றேன். பெண்கள் அமர்ந்துக் கொள்வதற்தான இடத்தில் அமர்ந்தேன். எனது பெயரை அழைத்தனர். உள்ளே சென்றேன். அங்கே குட்டி குட்டியாய் நிறைய அறைகள் இருந்தன (நம்ம ஊரில் முன்பெல்லாம் இருந்த எஸ்.டி.டி பூத் மாதிரி) அதில் ஒரு அறைக்குள் என்னை அமர்ந்து பரீட்சையை கணினியில் எடுக்கச் சொன்னார்கள். நான் சென்று அமர்ந்து காதில் ஹெட் ஃபோனை வைத்து ஸ்டார்ட் பட்டனை அழுத்தியதும் துவங்கியது பரீட்சை‌. அரை மணி நேர பரீட்சை, நாற்பது கேள்விகள். பன்னிரண்டு கேள்விகளுக்கு மேல் தவறான பதில் அளித்தால் அந்த நபர் தோல்வி அடைந்து விட்டார் என்று மீண்டும் வகுப்புக்கு அனுப்பப்படுவார்கள். நான் பரீட்சையை முடித்து அந்த கூண்டிற்குள் இருந்து வெளியே வந்ததுமே அங்கு அமர்ந்திருந்த RTA ஊழியர் (பெண்மணி) ஒருவர் வாழ்த்துகள் நீங்கள் ஹை ஸ்கோர் செய்துள்ளீர்கள் என்று சொல்லி ஒரு காகிதத்தை என்னிடம் நீட்டினார். நானும் மகிழ்ச்சியில் நன்றி தெரிவித்து அதை கையில் வாங்கிப் பார்த்தேன். நாற்பதுக்கு முப்பத்தி எட்டு என்றும் தியரி டெஸ்ட் பாஸ் என்றும் அச்சிடப்பட்டிருந்தது. உடனே அதை கைபேசியில் படம் பிடித்து கணவருக்கும் மகனுக்கும் வாட்ஸ்அப் இல் அனுப்பி வைத்தேன்.

அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று அங்கிருந்த வரவேற்பாளரை கேட்டேன். அவர் ஓர் அறையை காட்டி அங்கு சென்று அடுத்ததாக ஓட்டுனர் பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்ய சொன்னார். நானும் சென்றேன். ஆனால் வகுப்புகள் இரண்டு வாரம் தள்ளி தான் உள்ளதாக கூறினர். சரி பரவாயில்லை என்றேன். அடுத்து, உங்களுக்கு பெண் பயிற்றுவிப்பாளர் வேண்டுமா இல்லை ஆண் பயிற்றுவிப்பாளர் வேண்டுமா என்று கேட்டனர். ஆங்!! யாராக இருந்தாலும் சரி நான் சீக்கிரம் லைசென்ஸ் பெற வேண்டும் அவ்வளவு தான் என்றேன். அவர் சிரித்துக் கொண்டே பதிவு செய்து விட்டதாகவும், வகுப்பு அட்டவணை மெஸேஜில் வரும் என்றும் கூறி வேறு எதாவது தெரிந்துக் கொள்ள வேண்டுமா என்றார். மனதிற்குள் அவரின் சிரிப்புக்கான அர்த்தம் என்னவாக இருக்கும் என்றெண்ணிக் கொண்டே… இல்லை அவ்வளவு தான் நன்றி என்று கூறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றேன்.

அவர்கள் கூறியது போலவே வகுப்பு அட்டவணை மெஸேஜ் வந்தது. இரண்டு வாரம் கழித்து வகுப்புக்கு சென்றேன். பயிற்றுவிப்பாளருக்கு காலை வணக்கம் சொன்னேன். காரில் அமரும்படி சொன்னார். எனக்கு கார் ஓட்டி பழக்கம் இருப்பதால் முதல் வகுப்பில் எனது பயிற்றுவிப்பாளர் என்னை சற்று நேரம் காரை ஓட்டி காண்பிக்க சொன்னார். நானும் ஓட்டினேன். நிறுத்த சொன்னார். நிறுத்தினேன். “காரில் உள்ள கண்ணாடிகளை பார்க்கும் பழக்கமே இல்லையா? எப்படி நீங்கள் உங்கள் ஊரில் கார் ஓட்டினீர்கள்?” என்று கேட்க, சற்றும் தயங்காமல் “அடுத்தவர் அதை தட்டி உடைத்து விடுவார்கள் என்று எங்கள் ஊரில் நாங்கள் காரின் கண்ணாடிகளை மடக்கி கொண்டு காருக்குள் இருக்கும் சென்டர் மிரரை மட்டும் பார்த்து வண்டி ஓட்டுவோம்.” என்று பதிலளித்தேன். அதைக் கேட்டவர் என்னை பார்த்து, “இங்கே நீங்கள் காரின் வலது, இடது புற கண்ணாடிகள், சென்டர் மிரர், ஷோல்டர் செக் இதெல்லாம் பார்த்து ஒட்டவில்லை என்றால் உங்களுக்கு லைசென்ஸ் கிடைக்காது” என்றார். ஆக இப்படிப்பட்ட சுப வார்த்தைகளால் ஆரம்பித்தது எனது கார் ஓட்டுனர் வகுப்பு.

பயணம் தொடரும்…..

மையின் சாரல்கள் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவரின் ஆதரவும் அன்பும் வேண்டி இக்கதையை எழுத இருக்கிறேன். இக்கதை முழுக்க முழுக்க எனது கற்பனைக் கதையாகும். இதில் வரும் கதாபாத்திரங்கள், இடம், காலம் மற்றும் பொருள் அனைத்தும் என்னுள் தோன்றியதை வைத்து படைத்துள்ளேன். நமது தமிழ்நாட்டின் வீர மங்கைகளாக திகழ்ந்த/ திகழ போகிற மூன்று பெண்கள் பற்றிய கதையாகும்.

வீரத்திலும், விவேகத்திலும்
ஆளுமையிலும், ஆன்மீகத்திலும்
ஆனந்தத்திலும், ஆக்ரோஷத்திலும்
பாசத்திலும், பண்பிலும்
அன்பிலும், அக்கறையிலும்
ஆவலிலும், ஆர்பாட்டத்திலும்

என்று அனைத்திலும் சிறந்து விளங்கிய நமது பெண் சிங்கங்களின் அருமைப் பெருமையையும் அதே போல் இன்றும் நம்முள் வாழ்ந்துக்கொண்டிருக்கும் பெண் சிங்கங்களின் ஆற்றலையும் உணரச் செய்திடும் கதையாக இது அமையும் என்ற முழு நம்பிக்கையுடன் எழுதத் துவங்கியுள்ளேன்.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் அனைவரும் பெண் விடுதலை, பெண்கள் முன்னேற்றம், பெண் சுதந்திரம், பெண்கள் அதிகார பதவி வகித்தல் என்று பலர் பலவிதமாக போர்க்கொடி உயர்த்தியும், பல இடங்களில் இதைப் பற்றி முழக்கமிட்டும், வானொலி, தொலைக்காட்சி, கீச்சகம், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் ஆக்கப்பூர்வமாக பேசியும், எழுதியும், படங்களாகவும் பதிவிட்டு வருகின்றனர். இவற்றால் மாற்றங்கள் நேர்ந்ததா? என்றால் அதற்கு முழுமனதோடு ஆம் நிகழ்ந்துள்ளது, என்று கூற முயன்றாலும் முடியாது மீண்டும் அதே பல்லவியை பாட ஆரம்பிக்கின்றோம். ஏனெனில் அனைத்திற்கும் ஓர் முற்றுப் புள்ளி வைக்க தவறுகிறோம் என்பதே உண்மை. ஆங்காங்கே இன்றளவும் பெண்களுக்கு எதிராக பெண்களே/ஆண்களே செய்து வரும் வக்ரங்களை பற்றிய செய்திகளை காணும் போதும், படிக்கும் போதும் பிறரிடமிருந்து கேள்விப்படும்போதும் மனம் பத பதைக்கத் தான் செய்கிறது. இல்லையா! ஏன் அப்படி? என்றால் நம்முள் இன்னமும் கொஞ்சம் ஈரம் மிச்சம் உள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

அந்த ஈரத்தை வைத்து ஏதாவது செய்யலாமென்று ஒரு அடி முன் வைத்தால் அதற்குள் அடுத்த சம்பவம் ஒன்று நடந்தேறி, அது அடுத்த நாள் நாளிதழ், செய்திகள், மீம்ஸ் என்று அனைத்திலும் பளிச்சிட நாம் முதலாவது சம்பவத்திற்காக கொடி பிடிப்பதா? இல்லை இரண்டாவதாக நடந்த சம்பவத்திற்கு போராட்டம் செய்வதா? என்று ஒரு முடிவெடுத்து இரண்டிற்குமாக ஏதாவது செய்ய முயலும் போது மூன்றாவதாக ஏதேனும் ஒன்று நிகழ்ந்து விடுகிறது.

அந்த காலத்தில் பெண்கள் படிப்பறிவு அவ்வளவாக இல்லாதவர்களாக இருந்தாலும் நுண்ணறிவு நிறைந்தவர்களாக திகழ்ந்துள்ளனர்.
பாசம், அன்பு, பண்பு, பொறுப்பு, அக்கறை என்று நிறைந்திருந்தாலும் தன் குடும்பத்தினருக்கு ஏதேனும் ஒன்று நேர்ந்து விட்டால் தன் உயிரைக் கொடுத்தாவது போராடி அவர்களை காப்பாற்றுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே!

முப்பெரும் தேவியர்களாக திகழ்ந்த மூன்று பெண் சிங்கங்கள் கர்ஜித்தால் என்னவாகும் என்பதை பற்றியது இந்த கதை. முப்பெரும் தேவியர் என்றதும் சரஸ்வதி, லட்சுமி மற்றும் சக்தி என்று சட்டென எண்ணிக் கொள்ளாதீர்கள். இக்கதையை தொடர்ந்து படிக்க ஆரம்பித்தீர்கள் என்றால் நான் கூற வரும் முப்பெரும் தேவியர் யார் என்பது உங்களுக்குத் தெரிய வரும்‌. குடும்பத்திற்காக, நாட்டு மக்களுக்காக, பொது மக்கள் நலனுக்காக, நாட்டையும் வீட்டையும் மீட்டெடுப்பதற்காக என போராடிய / போராடிக் கொண்டிருக்கும் முப்பெரும் தேவியரை பற்றிய கதை தான் இது.

மரணத்தை துணிந்து ஏற்றுக்கொண்ட அக்கால பெண்களும், அவர்களுக்காக மரணம் வரை சென்று மீண்டு வரும் இக்கால பெண்களும் என மாறி மாறி நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்த உள்ளனர்.

சில கதைகளை படித்ததும் பிடித்துவிடும். சில நாட்களில் மறந்தும் போய்விடும். ஆனால் சில கதைகள் படித்ததும் பிடித்து விடாது, மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்தால் அதன் உள் அர்த்தங்களும், அதில் புதைந்து கிடக்கும் உண்மைகளும், கதாபாத்திரத்தின் உருவாக்கமும் புரிய ஆரம்பித்ததும் மனதில் பச்சைக் குத்தியது போல ஒட்டிக்கொள்ளும். அப்படிப் பட்ட கதை நம் மனதில் நீங்கா இடம் பிடித்து விடும். அது போன்ற கதையாக இக்கதை அமைய வேண்டுமென்ற ஆசையுடன் எழுதியுள்ளேன்.

பரபரப்பு நிறைந்த இக்கதையை படித்துப் பாருங்கள்.
உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற எழுத்தாளர்களுக்கு உற்சாகம் மட்டுமின்றி உத்வேகத்தையும் கொடுக்க வல்லமைப் பெற்றதாகும்.

எனவே தொடர்ந்து படியுங்கள்
விமர்சனங்களை அள்ளித் தாருங்கள்
என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மீண்டு வாருங்கள். மீண்டும் வாருங்கள்.

நன்றி
நா. பார்வதி.

டக் டக் டக்…டக்…டக்டக்டக்…

என்று கதவு தட்டும் சப்தம் கேட்டதும் சோபாவில் படுத்துறங்கிக் கொண்டிருந்த சதீஷ் சட்டென எழுந்து கண்களை கசக்கி கொண்டு

“ஆங் ஆங்!! இதோ வரேன். வரேன்”

என சொல்லிக் கொண்டே கதவை திறந்தான். அப்போது அவனுக்கு வந்த கொட்டாவியை அடக்க முடியாது, யசோதை முன் வாய் திறந்து உலகை காட்டிய கிருஷ்ணனை போல வாசலில் நின்றிருந்தவர் முன் வாயை “ஆவ்” என்ற சப்தத்துடன் திறக்க, அவரைப் பார்த்ததும் “ஆங்” “அம்” என வந்த கொட்டாவியை அடக்க முயற்சிக்க, அதைக் கண்டு வாசலில் நின்றிருந்த ராஜரத்தினத்தைப் பார்த்து

“அப்பா!! நீங்க! எங்க!! இங்க?”

“ஏன் உன்னைப் பார்க்க சொல்லாம கொள்ளாம வர கூடாதோ!! தள்ளுடா.”

“அப்பா!! உங்க சட்டையெல்லாம் என்னது இது?”

“ஓ! இதுவா!! இது…ஆங்! அது தான் இந்த ஊர்ல அவன் அவன் வாயில பீடாவ போட்டு மென்னுகிட்டே அங்கங்க துப்புறாங்களே அதுல எவனோ ஒருத்தன் என் சட்டையில ஆட்டோகிராப் போட்டுட்டான் போல!”

“என்னப்பா சொல்லுறீங்க?”

“அத விடுடா. இப்படி நைட்டெல்லாம் வேலைப் பார்த்துட்டு பகலெல்லாம் தூங்கறதுங்கறது என்னடா வாழ்க்கை? பேசாம எனக்கு ஒத்தாசையா ஊருலயே எங்க கூடவே இருந்திருக்கலாம் இல்ல. இப்படி ஊரு விட்டு ஊரு வந்து…இதோ இத்தனூண்டு ஒரு ரூம்ல…தேவையாடா? என்னமோ கம்ப்யூட்டிங்…அது தான் படிப்பேன்…அந்த வேலையை தான் பார்ப்பேன்னு சொல்லிட்டு இந்த மொழி தெரியாத ஊருக்கு வந்து இப்படி எல்லாம் கஷ்டப்படணுமா!!! என்னமோ போ! சரி சரி பாத்ரூம் எங்க!!! ஆங் அது தானே! என்னமோ தெரியலை இனிக்கு என்னையே எனக்கு ரொம்ப நாத்தம் அடிக்குது டா! என்னோட இந்த நாத்தத்தை என்னாலயே சகிச்சுக்க முடியல…சரி சரி நான் போய் மொதல்ல குளிச்சிட்டு வரேன்.”

என்று வீட்டுக்குள் நுழைந்தது முதல் மூச்சுவிடாது பேசிவிட்டு குளியலறைக்குள் சென்றார் ராஜரத்தினம். எப்போதும் தனது ரியல் எஸ்டேட் ப்ரோக்கர் பிஸினஸ், மேட்ரிமோனி பிஸினஸ், காய்கறி வியாபாரம், மளிகை கடை வியாபாரம் என்று அங்குமிங்கும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருக்கும் ராஜரத்தினம் தனது மகன் சதீஷ் வேலைப்பார்க்கும் மும்பை மாநகரத்துக்கு முதன்முதலாக சென்றுள்ளார்.

“அப்பா… அம்மா, ரேணு எல்லாரும் எப்படி இருக்காங்க? அவங்க ஏன் வரல?”

“ஆங்!! நல்ல வேளை அவங்க வரல.”

“என்ன?”

“டேய் மொதல்ல நீ போய் குளிச்சிட்டு வா. நான் டிபன் செஞ்சு வைக்கறேன். ரெண்டு பேருமா சாப்பிடுவோம்‌. எனக்கு உன்கிட்ட சில விஷயங்களை சொல்லணும். சொல்லிட்டு உடனே கிளம்பணும்.”

“என்னது உடனே கிளம்பணுமா?”

“டேய் சொன்னத இப்பவாவது கொஞ்சம் எனக்காக கேளுடா”

“என்னமோ பா! நீங்க சொல்லறது செய்யறது எல்லாமே ரொம்ப புதுசா இருக்கு…சரி சரி டிவி ஆன் பண்ணறேன் பார்த்துட்டு இருங்க… நான் குளிச்சிட்டு வரேன்.”

என்று சதீஷ் டிவியை ஆன் செய்ததும் வேகமாக அவனிடமிருந்து ரிமோட்டை பிடிங்கி டிவியை ஆஃப் செய்த ராஜரத்தினம்

“டேய் டிவி எல்லாம் எனக்கு பார்க்க வேண்டாம் டா. நீ போய் குளிச்சிட்டு வா டா”

“என்னப்பா நம்ம ஊருல என்னேரமும் டிவில நியூஸை போட்டு போட்டு பாப்பீங்க!!! என்னமோ… நீங்க சரியில்லைப்பா‌. மொதல்ல நான் அம்மாக்கு கால் பண்ணி கேட்கறேன்”

என்று சதீஷ் தன் மொபைலை எடுத்ததும் ராஜரத்தினம் வெடுக்கென அதை சதீஷ் கையிலிருந்து பிடுங்கி டிவி அருகே வைத்து விட்டு

“நீயும் உன் அம்மாவும் பேச தொடங்குனீங்கன்னா, அப்புறம் நீ குளிக்க போனா மாதிரிதான்.இது இங்கேயே இருக்கட்டும் நீ போய் குளிச்சிட்டு வா.”

என்று கூறி சதீஷை குளியலறைக்குள் அனுப்பி வைத்து, கைபேசியை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்துவிட்டு உப்புமா கிளறி சட்னி அரைத்து டேபிளில் வைத்து சதீஷுக்காக காத்திருந்தார். சதீஷ் குளித்து முடித்து வந்ததும் இருவருமாக உப்புமாவை உண்டு முடித்தனர்.

“ஏன் பா! இந்த உப்புமாவ கிளறிக் கொடுக்கத்தான் நீங்க ஊருலேந்து கிளம்பி வந்திருக்கீங்களா என்ன?”

“தெரியல பா. தெரியல!”

“அதுக்கில்ல…நானும் வந்ததுலேந்து பாக்குறேன் நீங்க ஆளே சரியில்லையே! அதுவுமில்லாம நீங்க உங்க வேலை எல்லாம் விட்டுட்டு வர ஆள் கிடையாதே! அது தான் கொஞ்சம் இடிக்குதுப்பா”

“டேய் நம்ம ரேணுக்கு நல்ல வரன் வந்திருக்கு. மாப்பிள்ளை அமெரிக்காவுல இருக்காரு. நல்ல குடும்பம். நானும் அம்மாவுமா அவங்க வீட்டுக்கெல்லாம் போய் பார்த்துட்டோம். நல்லவங்களா தான் இருக்காங்க.”

“ஓ! அதுதான் விஷயமா! அதெல்லாம் சரிப்பா! அந்த பையன நம்ம ரேணுக்கு பிடிச்சிருக்கா? ஏன்னா அவ அந்த பையன கட்டிக்கிட்டா அப்புறம் அவ பாக்குற வேலையை விட்டுட்டு அமெரிக்கா போக வேண்டியிருக்குமே! அம்மணி அவங்க வேலையை விடுவாங்களா? போன வாரம் கூட நான் அவகிட்ட பேசினேன் அப்போ கூட அவ எதுவுமே சொல்லலையே!”

“அதெல்லாம் அவ அந்த பையன் கூட ஃபோன்ல பேசிட்டா. அவளுக்கும் பிடிச்சிருக்குது. அதுதான் அது விஷயமா உன்கிட்டயும் பேசிட்டு அப்படியே சில முக்கியமான முடிவுகளையும், விஷயங்களையும் உனக்கு புரிய வச்சுட்டு போக தான் வந்திருக்கேன். நீ இப்போ ஃப்ரீயா பேசலாமா?”

“என்னப்பா! பெரிய பீடிகை எல்லாம் போடறீங்க?”

“இல்லப்பா எனக்கும் வயசாகிட்டே போவுது இல்ல. அத! அத! அப்பப்ப! செஞ்சுட்டா திருப்தியாகிடும் இல்லையா. அதுதான்.”

“சரிப்பா. சொல்லுங்க. கேட்டுக்குறேன்.”

“ம்… இரு இரு நான் போய் என்னோட முக்கியமான ஒரு பையை எடுத்துட்டு வரேன்.”

“ம்…சரிப்பா!!”

ராஜரத்தினம் பையை எடுத்துவர உள்ளே சென்றதும் சதீஷ் தனது கைபேசியை எடுத்துப் பார்த்தான். அது சுவிட்ச் ஆஃப் ஆக இருந்ததும் அதில் சார்ஜ் இல்லையோ என்றெண்ணி அதை சார்ஜில் போட்டு அதை ஆன் செய்து அதைப் பார்க்க முற்பட்ட போது ராஜரத்தினம் சதீஷின் தோளை தட்டி…

“என்ன அதுக்குள்ள மொபைல்ல என்ன வந்திடப் போகுது. அப்புறமா பார்த்துக்கோ. மொதல்ல இங்க வந்து உட்காரு.”

“இல்லப்பா…மொபைல் ஆஃப் ஆகியிருந்தது. சார்ஜ் இல்ல போல அது தான் சார்ஜ்ல போட்டேன். இன்னுமா நீங்க இந்த மஞ்சபையை விடல!!! ம்…சரி சொல்லுங்க”

“இந்த மஞ்சப்பை தான் உன் அப்பனோட பேங்க் லாக்கர். தெரியுமா!!”

“சரி அப்படி என்ன வச்சுருக்கீங்க உங்க லாக்கர்ல?”

“அதை சொல்லத் தானே வந்திருக்கேன். இதோ இது தான் அந்த மாப்பிள்ளை பையனோட வீட்டு விலாசம், இது தான் போட்டோ. அப்புறம்… நம்ம ஊருலயே பெரிய மண்டபம் நம்ம சுப்பிரமணி அண்ணாச்சியோட கல்யாண மண்டபம் தான். அங்க தான் நம்ம ரேணு கல்யாணத்தை நடத்தணும். இது என்னோட பேங்க் பாஸ்புக், இது செக்புக், இதுல நான் கையெழுத்து போட்டு ஒரு மூணு செக் வச்சிருக்கேன். ஒரு புத்தகத்துல எனக்கு யார்யார் எவ்வளவு பணம் தரவேண்டியிருக்கு அதேபோல நான் யார்யாருக்கு எவ்வளவு தரவேண்டியிருக்குங்கற விவரமெல்லாம் இருக்கு. அந்த புத்தகம், நம்ம காய்கறி கடை, மளிகைக்கடை கணக்கு புத்தகம், எனக்கும் உங்க அம்மாவுக்கும்ன்னு இரண்டு லைஃப் இன்சூரன்ஸ் எடுத்து வச்சிருக்கேன். அதோட பாலிசி டாக்குமெண்ட், நம்ம வீட்டு பத்திரம், அப்புறம் ராணிபேட்டையில உன் பேர்ல வாங்கின ரெண்டு கிரௌண்ட் நிலப் பத்திரம், நம்ம கடைகளோட பத்திரம் ரெண்டு, உன் பேருலையும் ரேணு பேருலையும் மாசாமாசம் டெப்பாசிட் பண்ணிட்டு வந்திட்டுருக்கேனே அதோட டாக்குமெண்ட்ன்னு எல்லாமே நம்ம வீட்டுல இருக்குற என்னோட பீரோல இருக்கு. இது தான் அதோட சாவி. இது எப்பவுமே என்னோட இந்த பை உள்ள தான் இருக்கும். உன் அம்மாவோட நகை அப்புறம் ரேணுவுக்குன்னு வாங்கின நகை எல்லாம் அம்மா பீரோல இருக்கு. நம்ம பேங்க் மேனேஜர் சுந்தரமூர்த்தி ரொம்ப நல்ல மனுஷர். அவர் உனக்கு எல்லா உதவியும் செய்துத் தருவாரு.”

“அப்பா! இப்போ சென்னையிலேந்து டிரெயின் ஏறி மும்பை வந்து இதெல்லாம் எதுக்கு என்கிட்ட சொல்லறீங்க? உங்களுக்கு என்ன ஆச்சுப்பா? உடம்புக்கு ஏதாவது ?”

“நான் நல்லா இருக்குற மாதிரி இருக்கும். ஆனா எப்போ எது நடக்கும்னு யாருக்குத் தெரியும்!! அப்போ என் பையன் நீ தவிக்கக் கூடாது இல்லையா. அதுக்கு தான் முன் எச்சரிக்கையா எல்லாத்தையும் உன் கிட்ட சொல்லிட்டா எனக்கு ஒரு நிம்மதி.”

“””””தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே”””””

என்று சதீஷின் கைபேசியில் இருந்து அழைப்பு பாடல் ஒலித்தது, அதை கேட்டதும் ராஜரத்தினத்தின் கண்கள் குளமாகின. உடனே கைபேசியை எடுத்த சதீஷ்

“ஹலோ அம்மா! சொல்லுமா! என்னமா!! அப்பா என்கிட்ட சொல்லாம கொள்ளாம…..”

என்று கூறி முடிப்பதற்குள் மறுபக்கத்திலிருந்து ரேணு…

“அண்ணே!!! அண்ணே!!! நம்ம அப்பா…நம்ம அப்பா…நம்மளை விட்டுட்டுப் போயிட்டார் அண்ணே! போயிட்டாரு”

“ஏய் ரேணு? என்ன சொல்லுற? அவர் இப்ப தான் …”

என்று கூறிக்கொண்டே திரும்பி பார்த்த சதீஷ் அதிர்ந்து போனான். ஏனெனில் அதுவரை அவனுடன் பேசிக் கொண்டிருந்த ராஜரத்தினம் அங்கு இருக்கவில்லை. உடனே தன் தங்கையிடம்

“ஏய் ரேணு! என்ன தான் நடக்குது? அப்பா எங்க? அப்பாக்கு என்ன ஆச்சு? கொஞ்சம் தெளிவா சொல்லுமா. அம்மா எங்க?”

“அண்ணே!! எனக்கு மாப்பிள்ளை பார்த்த விஷயத்தை உனக்கு சர்ப்ரைஸா நேர்ல வந்து சொல்லணும்னு நம்ம அப்பா உன்னை பார்க்க நேத்து காலையில கிளம்பினாரு…”

“ஐய்யோ! அழாம விஷயத்தை சொல்லுமா”

“அந்த டிரெயின் தடம் புரண்டுடுச்சாம் அண்ணே!! அதுல பயணம் செஞ்ச நிறைய பேரு இறந்துட்டாங்களாம் ணே. அதுவும் மும்பைக்கு அருகாமையில் தான் நடந்திருக்கு! அப்பா நம்பருக்கு கால் பண்ணினா நாட் ரீச்சபள்னு வருது! காலையிலேந்து உனக்கு இந்த விஷயத்தை சொல்ல கால் பண்ணிட்டே இருக்கோம். ஆனா உன் ஃபோனும் சுவிட்ச் ஆஃப்னுனே வருது.”

“நீ என்ன சொல்லுற ரேணு…சரி அம்மாவை பத்திரமா பாத்துக்கோ. நான் சம்பவம் நடந்த இடத்துக்கு போய் என்ன ஏதுன்னு விசாரிச்சு உனக்கு கால் பண்றேன். பத்திரமா இரு. அம்மாவையும் பத்திரமா பார்த்துக்கோ. சரியா”

என்று கைபேசியில் சிவப்பு பொத்தானை அழுத்திவிட்டு வேகமாக தனது வீட்டிலிருந்த ஒரே ஒரு அறைக்குள் சென்று பார்த்த சதீஷ் அதிர்ந்து போனான். அங்கே அவன் அப்பா ராஜரத்தினம் படுத்திருந்தார். அதைப் பார்த்ததும் சதீஷின் மனதிற்குள் ரேணு சொன்ன விஷயம், அப்பா பகிர்ந்துக் கொண்ட விஷயங்கள், அவர் செய்து தந்த உப்புமா, அம்மாவின் முகம் என அனைத்தும் மாறி மாறி வந்து அவனை குழப்பியதில் தான் பார்ப்பது ரத்தமும் சதையுமாக இருக்கும் தந்தையையா இல்லை அவரின் நிழலான ஆவியையா என்று ஒரு நொடி திகைப்பில் ஆழ்ந்தான். அந்த அறையை விட்டு ஒரு நொடி வெளியே வந்து மீண்டும் உள்ளே சென்று பார்த்தான் அப்போதும் அவன் அப்பா அங்கு படுத்து இருந்ததை அவனால் பார்க்க முடிந்தது. அவன் உடனே அவனின் நண்பன் ரகுவுக்கு கால் செய்து நடந்தவற்றை விளக்கி

“டேய் ரகு இப்ப நான் என்னடா செய்வேன். இப்போ என் வீட்டுல இக்குறது என் அப்பாவா இல்ல அவரோட ஆவியான்னு எனக்கு ஒரே குழப்பமா இருக்குடா. என் அப்பாவுக்கு ஏதுவும் ஆகியிருக்க கூடாது டா.”

“அதை அவர்கிட்டயே கேளேன்டா!”

“என்னது!! என் அப்பாட்ட போய் நீங்க உயிரோட இருக்கீங்களா இல்லையான்னு எப்படிடா கேட்கறது? எனக்கென்னவோ அவர் உயிரோட இருக்கறா மாதிரி தான் தெரியுது டா. அவர் உயிரோட தான் இருக்கணும். இருப்பாரு”

“அப்படீன்னா அவர் ஏன் உன்கிட்ட அந்த ஆக்ஸிடென்ட் சம்பவத்தை பத்தி ஒண்ணும் சொல்லல!”

“அது தான் எனக்கும் குழப்பமா இருக்கு டா ரகு.”

“இரு நான் உன் ரூமுக்கு இன்னும் அஞ்சே நிமிஷத்துல வரேன். ரெண்டு பேருமா அவர்கிட்ட கேட்போம். கவலைப்படாதே. அவர் உயிரோட தான் இருக்கார்ன்னு நாம நம்புவோம். தைரியமா இருடா சதீஷ்”

ரகு சொன்னது போலவே அடுத்த ஐந்தாவது நிமிடம் சதீஷ் ரூமில் இருந்தான். அவர்கள் இருவருமாக உள்ளே படுத்திருந்த ராஜரத்தினத்தை மெல்ல தட்டி எழுப்பினர். அவரும் எழுந்து அவர்களைப் பார்த்து

“டேய் சதீஷ் நம்ம ரேணு கல்யாணத்த சுப்பிரமணி அண்ணாச்சியோட மண்டபத்துல தான் நடத்தணும்டா…இதோ என்னோட பேங்க் பாஸ்புக்….”

“அப்பா!! அப்பா!! அப்பா!! சரிப்பா சரி… நம்ம ரேணு கல்யாணத்த சூப்பரா நடத்திடலாம். நீங்க வந்த டிரெயின் ஆக்ஸிடென்ட் ஆச்சே, அதுலேந்து நீங்க எப்படி தப்பிச்சு இங்க வந்தீங்க? என்ன தான் நடந்ததுப்பா?”

“டேய் சதீஷ் நம்ம ரேணு கல்யாணத்த நம்ம சுப்பிரமணி அண்ணாச்சி மண்டபத்துல தான்டா நடத்தணும். இது என்னோட பேங்க் பாஸ்புக்….”

என்று மறுபடியும் ஆரம்பித்ததும் சதீஷ் தன் அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்களில் கண்ணீருடன்

“நீங்க கொஞ்ச நேரம் தூங்குங்கப்பா”

என்று அவரை மீண்டும் படுக்க வைத்து விட்டு ரகுவும் சதீஷும் அந்த அறையை விட்டு வெளியே வந்ததும்

“சரி… உங்க அப்பா வந்ததுலேந்து சொன்னதையே தான் சொல்லுறாரா?”

“இல்ல டா ரகு. வந்ததுலேந்து மனுஷன் ஏதோ ஒரு மாதிரி பரபரப்பாவே இருந்தாரு. அவரோட பேச்சு நடவடிக்கை எல்லாமே கொஞ்சம் வித்தியாசமா தான் இருந்துச்சு…ஏதோ எல்லா பொறுப்பையும் என் கிட்ட ஒப்படைச்சிட்டு உடனே எங்கயோ கிளம்பிப் போகணும் அப்படிங்கற மாதிரியே அவசரப் பட்டாரு. எல்லாத்தையும் சொல்லி முடிக்கற வரைக்கும் நல்லா தான் இருந்தாரு ஆனா சொல்லி முடிச்சதுக்கு அப்புறமா தான் இப்படி சொன்னதையே மறுபடியும் மறுபடியும் சொல்லுறாரு”

“சரி சரி அப்பா அப்படி ஒரு கண்டத்துலேந்து தப்பிச்சு நல்லபடியா உன்கிட்ட வந்து சேர்ந்துட்டாரு. அதை நினைச்சு நிம்மதியா இரு. நான் போய் டாக்டரை கூட்டிட்டு வரேன்.”

என்று கூறிச் சென்றது போலவே ரகு மருத்தவருடன் வந்தான். மருத்துவர் ராஜரத்தினத்துடன் பேச்சுக் கொடுத்துக்கொண்டே ஒரு ஊசியை போட்டார். பின் அந்த அறையின் கதவில் சாய்ந்து தனது அப்பாவையே பார்த்துக் கொண்டிருந்த சதீஷை தட்டிக் கொடுத்து வெளியே அழைத்து வந்த டாக்டர்,

“தம்பி… எதிர்பாராது நடந்த இந்த ஆக்ஸிடென்ட் ல உங்க அப்பா மனசு ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கு. எங்கடா அவரு உங்களை எல்லாம் விட்டுட்டு எதுவும் சொல்லாம போயிடுவாறோன்னு பயந்திருக்காரு. அந்த பயத்துல எப்படியாவது உங்களைப் பார்த்து எல்லாத்தையும் விளக்கமா சொல்லி புரிய வச்சு, உங்களை தவிக்க விட்டுட கூடாதுங்கறதுல அவரு மனசு உறுதியா இருந்திருக்கு. அந்த மன உறுதி தான் அவரை எப்படியோ இங்க உங்க கிட்ட கொண்டு வந்து சேர்த்திருக்கு. வந்தவரு அவர் மனசுல இருந்ததை எல்லாம் விளக்கியதும் வந்த ஜோலி முடிஞ்சிருச்சுன்னு மனசளவுல சோர்ந்துட்டார். வேற ஒண்ணுமில்ல. எந்த ஒரு பாதிப்பையும் நம்ம மனசு ஏத்துக்கறதுக்கு பல காலமெடுக்கலாம். ஆனா தனக்கு நேர்ந்த பாதிப்பினால் தன் பிள்ளைகளின் எதிர்காலம் பாதித்திடக்கூடாது என்பதை தான் உங்க அப்பா மனசு அந்த நேரத்திலும் யோசிச்சிருக்கு. இப்போ அவர் நிம்மதியா தூங்கறதுக்கு இன்ஜெக்ஷன் போட்டிருக்கேன். அவரை நல்லா பாத்துக்கோங்க. அது தான் அவருக்கு இப்போ வேண்டியது. டோன்ட் வரி. எவ்ரிதிங் வில் பி ஆல் ரைட்”

“ரொம்ப தாங்ஸ் டாக்டர்.”

என்று டாக்டர் சென்றதும்‌ பெருமூச்சு விட்ட சதீஷ் தனது அப்பாவின் அருகே சென்று அவரின் தலையை தடவிக் கொடுத்தான். அப்போது ரகு சதீஷிடம்

“நாம என்ன தான் வெளியூரு, வெளிநாடுன்னு போனாலும் நம்ம அப்பா அம்மா எல்லாம் எப்பவுமே நம்மள பத்தியும் நம்மளோட எதிர்காலத்தைப் பத்தியும் தான் என் நேரமும் யோசிப்பாங்க போல… இல்லடா. இவ்வளவு பெரிய ஆபத்திலும், அதிர்ச்சியிலும்! பாரேன்! உன் அப்பாவுக்கு உன்னையும் உன் தங்கச்சியையும் பத்தின விஷயம் மட்டும் தான் மனசுல அழியாம ஆழமா இருந்திருக்கு. நீ தவிக்கக் கூடாதுன்னு எப்படியோ தப்பிச்சு வந்து உன்கிட்ட எல்லா விவரங்களையும் சொல்லிருக்காரு பாரேன்!!!!! அம்மா எல்லாம் இப்படி இருப்பாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன், கதைகள்ல எல்லாம் படிச்சிருக்கேன் ஆனா அப்பாவும் அப்படி தான்னு இன்னைக்கு என் கண்ணு முன்னாடி பார்த்துட்டேன் டா சதீஷ்….பெத்தவங்கள கடவுள்ன்னு சும்மா வா சொல்லறாங்க. சரிடா இப்ப என்ன பண்ணப் போற?”

“அப்பாவ கூட்டிட்டு ஊருக்கு போக போறேன்”

“சூப்பர் டா சதீஷ். ஒரு ரெண்டு மாசம் அவங்க கூடவே நீ இருந்துட்டு வா?”

“இனி நான் இங்கன்னு இல்ல எங்கயுமே போக போறதில்ல ரகு. சாகப் போற நேரத்துல கூட எனக்காக யோசிச்சு, அவரோட மறைவுக்கு பின்னாடி நான் தவிக்கக் கூடாதுன்னு நினைச்ச அவரு இந்த பூமில இருக்குற வரைக்கும் அவர்கூடவே தான் இருக்க போறேன். அவர் சொன்னது போலவே அவரோட பிசினஸ் எல்லாத்தையும் இனி நான் பார்த்துப்பேன். அவர் விருப்பப்படியே ரேணுவோட கல்யாணத்தையும் செய்து முடிப்பேன். நான் வரேன் டா ரகு”

“அப்போ இங்க இருக்குற இந்த பொருளெல்லாம்!!”

“என் அப்பா முன்னாடி இதெல்லாம் ஒண்ணுமே இல்லடா! நான் வரேன்.”

“அப்போ சாயந்தரம் டாக்டர்ட்ட போகணுமே”

“இனி என் அப்பாக்கு மருந்தே நான் தான். பை ரகு.”

என்று கூறிய சதீஷ் தனது அப்பாவை அழைத்துக் கொண்டு ஊருக்கு சென்றான். அன்றிரவு சதீஷின் அறையிலேயே தங்கியிருந்த ரகு, சதீஷுடன் சேர்ந்து பதற்றமானதில் சற்று அசந்து போய் சதீஷ் வீட்டிலிருந்த சோபாவில் படுத்துறந்கினான்.

திடீரென வீட்டின் கதவை யாரோ பலமாக தட்டும் சத்தம் தொடர்ந்து ஒலித்தது

டக்…டக்…டக்…டக்…டக்….டக்….டக்….

உறக்கம் கலைந்த கோபத்தில் எழுந்த ரகு கண்களை கசக்கிக்கொண்டே

“யாரது? இந்த நேரத்துல?”

டக்…டக்….டக்…டக்…டக்….

“ஆங் ஆங்! வரேன் வரேன்!”

டக்டக்டக்டக்டக்……..டக்….டக்…டக்

நன்றி
நா. பார்வதி

நளபாகத்தின் ஒரு பாகமான மத்திய விருந்தில் நடந்த சம்பாஷணை;

நடக்கிறதோ இல்லையோ யாமறியேன் பராபரமே!
ஆனால் நடந்தால் எப்படி இருக்கும்?
கற்பனை பிறந்தது
சம்பாஷணை நடந்தது.

வாழை இலை 1 : அப்பாடா மூச்சு முட்ட முட்ட எங்களை ஒருவர் மீது ஒருவர் என அடுக்கி வைச்சதிலிருந்து விடுதலை விடுதலை விடுதலை…

வாழை இலை 2: என்னத்த விடுதலை! இதோ இப்போ நம்ம மேல தண்ணீயை தெளித்து ஒவ்வொன்னா வைக்க ஆரம்பிப்பாளே..

வாழை இலை 3: அதோ வர ஆரம்பிச்சுட்டா! முதலில் என்னது?

சுவீட் : ஹாய் வாழை இலை..நான் வந்துட்டேன்.

பாயசம் : நானும் வந்துட்டேன்…ஆனா! இப்போ எல்லாம் என்னை இந்த கப்புல வச்சுடறா. என்ன பண்ண!

சுவீட் : உன்னை வாழை இலையில் ஊத்தினா நீ தான் எல்லாத்தோடயும் கலந்து எல்லாத்தையுமே இனிக்க வச்சுடறயே. அதுனால இருக்குமோ!

வாழை இலை 4 : அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்! ஆனா… என்னக்கென்னவோ அந்த காலத்துல இருந்த பாயசம் மாதிரி இல்லாம… இப்பெல்லாம் உன்னை தண்ணியாட்டம் செஞ்சுடறாளா அதுனால குடிக்க வசதியா இருக்குமேன்னு கப்புல வச்சிருக்கா போல!

வாழை இலை 5: சுவீட்டும் அதைத் தானே சொன்னா!!

வாழை இலை 6: எதுவா இருந்தா என்ன நம்ம தலையில விழறதுல ஒரு ஐட்டம் கம்மி ஆகிடுத்துன்னு நெனைச்சு நாம சந்தோஷப் பட்டுப்போம். இதோ அடுத்தது வந்துண்டிருக்கு பாருங்கோ.

சுவீட் பச்சடி : என்ன! என்ன! இங்கே ஒரே கூச்சலும் குழப்பமுமா இருக்கு?

சுவீட் : வாடி என் பச்சடி. நீயும் இனிப்பு நானும் இனிப்பு. பின்ன எதுக்கு நம்ம ரெண்டு பேரையும் பரிமாரறாளோ தெரியலை?

சுவீட் பச்சடி : ஏன் பாயசம் மட்டும் என்ன கசப்பா!!! அது மாதிரி தான். நான் வந்ததுல உனக்கென்ன கஷ்டமா போச்சு?

சுவீட் : எனக்கென்ன கஷ்டம்? நான் தான் ஃபர்ஸ்ட் டு பி சர்வ்டு ஆக்கும்.

சுவீட் பச்சடி : க்கும்!!

வாழை இலை 7: ரெண்டு பேரும் நிப்பாட்டுங்கோ!! ஏய் சுவீட் பச்சடி எங்கடி உன் சிநேகிதி தயிர் பச்சடி? அவளும் நீயுமா தானே ஜோடி போட்டுண்டு வருவேள்! இன்னைக்கு ஏன் நீ மட்டும் வந்திருக்க?

சுவீட் பச்சடி : ஹா ! ஹா! ஹா! எப்போ நான் மட்டும் வந்திருக்கேன்? இதோ என் பக்கத்திலேயே சத்தமில்லாம உட்கார்ந்திருக்காளே! வெள்ளரி தயிர் பச்சடி. ஏன் உன் தலையில அவ உட்கார்ந்தது தெரியலையோ!!

சுவீட் : அது ஒண்ணுமில்லை ரெண்டு பேரையும் ரெட்டைப் பிரவிகளாட்டம் டக்கு டக்குன்னு போட்டுட்டுப் போயிட்டாளோனோ! அது தான் வாழை இலைக்கு ஒண்ணு போல தோனிருக்கு!

வாழை இலை 8: சரி சரி அதோ அங்க வரது நம்ம பாசிபருப்பு கோஸ்மல்லி தானே!

வாழை இலை 9: சாக்ஷாத் அவனே தான்.

பாசிபருப்பு கோஸ்மல்லி : டன்டடான் ஹாய் படீஸ்

தயிர் பச்சடி : வாடா வா. வந்து ஐக்கிய மாகிக்கோ!

பாசிபருப்பு கோஸ்மல்லி : என்ன தச்சு பச்சு அக்கா!

சுவீட் பச்சடி : டேய்! நீ அப்படி அவளை கூப்பிடறது நல்லா தான் இருக்கு டா. ஹீ ஹீ ஹீ!

தயிர் பச்சடி : ம்…இருக்கும் இருக்கும்!! ஏன் போன முஹூர்த்துக்கு அந்த ஜட்ஜ் ஆத்து சஷ்டியப்தபூர்த்தி பந்தில உன்ன அவன் எப்படி கூப்பிட்டான்னு ஞாபகம் இருக்கா?

சுவீட் பச்சடி : அச்சச்சோ! அது ஏன் இப்போ?

தயிர் பச்சடி : ஆங்! அது! அப்போ நான் என்ன அவனோட சேர்ந்துண்டு உன்னை கேலி செஞ்சேனா! இல்ல ஹீ ஹீ ஹீன்னு எகத்தாளமா சிரிச்சேனா!

சுவீட் பச்சடி : மன்னிச்சுக்கோமா தாயே! சரி சரி நம்ம உருளை காரகறி உருண்டுண்டே வந்து விழறத எல்லாரும் பாருங்கோளேன்!

பாசிப்பருப்பு கோஸ்மல்லி : டேய் ! உருளை செத்த நகந்துக்கோயேன்டா! எப்பப் பார்த்தாலும் உருண்டுண்டே என் மேல வந்து விழறதே உன் பொழப்பா போச்சு!

உருளை காரகறி : சாரி அண்ணா! நானாவா வந்து உங்க மேல விழறேன்!! அதோ பறிமாறறாரே அந்த சுப்புணி பண்ணற வேலையாக்கும்! அவருக்கு என்ன அப்படி தலபோற அவசரம்ன்னு தெரியலை. இப்படி என்னை படக் படக்னு இலையில உருட்டி போட்டுட்டு அவர் பாட்டுக்கு போயிண்டுருக்கார். ம்…இதோ நம்ம இலைக்கு முன்னாடி உட்கார்ந்துண்டு இருக்குற புன்னியவதி என்னை உங்க மேலேந்து நகர்த்தி வச்சுட்டா. நிம்மதியாச்சா?

பாசி பருப்பு கோஸ்மல்லி: பின்ன! ஆங் ஆங்! சரி சரி

உருளை காரகறி : அண்ணா இதோ நம்மகூட அளவலாவ பீன்ஸ் உசிலி துள்ளிண்டு வந்துட்டான் பாருங்கோ!

பீன்ஸ் உசிலி : எல்லாருக்கும் ஒரு பெரிய ஹாய் சொல்லிக்கறேன்! என்ன நான் வர்றதுக்குள்ள நிறைய பேசிறிப்பேளே! நான் என்னத்த மிஸ் பண்ணினேன்னு வரிசையா சொல்லுங்கோ பார்ப்போம்!

தயிர் பச்சடி : ஐய்யயோ!!

பீன்ஸ் உசிலி : என்ன ஆச்சு பச்சடி அக்கா?

தயிர் பச்சடி : நம்மளை எல்லாரையும் சேர்த்து செஞ்ச மாதிரி இருப்பானே! அவன் வந்துட்டான் டா வந்துட்டான்!

பீன்ஸ் உசிலி : நம்மளை சேர்த்து செஞ்சா மாதிரியா? ஓ! ஓ! ஓ! ஆங்! ஆங்! ஆங்! ஆமாம்! அதுவும் என் பக்கத்துலயே வந்து உட்காருவானே…ம்…உட்கார்ந்துட்டன்… ஹலோ மிஸ்டர் அவியல்

அவியல் : ஹாய் மை டியர் தோழர்களே! தோழிகளே!

உருளை காரகறி : இவரே ஒரு கலப்படம்! இதுல மொழி கலப்படம் வேறயா! ஹாய்

அவியல் : உருளை நீ ஏதோ சொன்னா மாதிரி இருந்துதே!

உருளை காரகறி : ஒண்ணுமில்ல மாமா!

அவியல் : இப்படியே மெயின்டேயின் பண்ணிக்கோ! சரியா! உன்னோட இந்த வாயால தான் உன்னை என்னோட சேர்த்துக்க மாட்டேங்கறேன்!

உருளை காரகறி : ஓகே ஓகே! அதுதான் ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டேனே மாமா!

அவியல் : அச்சச்சோ! இவளா! இவளைப் பார்த்தாலே புளிப்பு மண்டைக்கு ஏறுமே!

பீன்ஸ் உசிலி : வாம்மா மின்னல்!

இஞ்சிப்புளி : எல்லாரும் எப்படி இருக்கேங்கள்? நலமா?

அவியல் : ம்க்கும்! எங்க!! அதுதான் நீ வந்துட்டியே!

இஞ்சிப்புளி: நான் மட்டும் தனியா வரலை இதோ இவளும் வந்திருக்கா. ஏன்டி ஒரு ஹாய் சொன்னா தான் என்னவாம். உனக்கு ஊறும் காய்ன்னு பேரு வச்சாலும் வச்சா நீ அப்படியே ஊறி போயிட்டயாக்கும்.

ஊறுகாய்: ஹாய்

இஞ்சிப்புளி: ம்க்கும்! இப்படி சுரத்தே இல்லாம சொல்லறதுக்கு நீ சும்மாவே இருந்திருக்கலாம் போ.

வாழை இலை 10: வந்துட்டாங்கப்பா கொற கொறன்னு சத்தம் குடுக்கற டிவின்ஸ்! வாங்க அப்பளம் சார் அன்ட் மொறு மொறு வடை சார்.

அப்பளம் : என்ன இந்த பந்தில வரவேற்பு கொஞ்சம் கம்மியா இருக்கறா மாதிரி இருக்கே! நீ என்ன சொல்லற வட்டு என்கிற வடையாரே?

வடை : அட ஆமாம்! அப்பு என்கிற அப்பளமாரே நீர் சொல்லறது சரி தான். நமக்கு முன்னாடியே வந்து ப்ரைம் ஸ்லாட்டை பிடிச்சுண்டு உட்கார்ந்துக்கறதால ரொம்ப தான் பண்ணறா!! இருக்கட்டும்! இருக்கட்டும்! அடுத்த பந்தில நாம இல்லாம போனோம்ன்னா தெரியும் இவாளோட கதி!

இஞ்சிப்புளி : அதை விடுங்கோ அப்பு அன்ட் வட்டு. இதோ வந்திருக்கானே இவனை போட்டு தான் நம்ம எல்லாரையும் தயார் பண்ணறா! ஆனாலும் இவனை எதுக்கு இப்படி நம்மளோட சேர்த்து பந்தில வாழை இலை மூலையில வைக்கறாளோ தெரியலை!

அப்பளம் : என்ன தான் இவனைப் போட்டு உங்களை செய்திருந்தாலும் சிலருக்கு இவன் கொஞ்சம் எக்ஸ்ட்ராவா தேவைப்படுறான் அதுதான் காரணம். என்னடா உப்பு நான் சொன்னது சரி தானே!

உப்பு : சரி தான் அய்யா! உங்களிலும் நான் இருக்கிறேன்! ஆனால் ஏனோ நீங்கள் அதை மறந்து விடுகிறீர்கள். பரவாயில்லை.

அப்பளம்: இதோ வந்துடுத்து வழவழ கொழ கொழ வாழைப்பழம்.

வாழை இலை 11: அச்சச்சோ! அதோ சாதம் வந்துண்டிருக்கே! சுட சுட வந்து என் தலையில அவளை போடுவாளே! தயாரா இருங்கோ அவளோட ஆவி உங்க மேலயும் படும்.

சாதம்: சூடான சாதம் நான், சுட சுட சுட இருப்பேனாம். ஈடில்லா சூடு சாதம் இதை நீங்க பாருங்க. ஓ….

வாழை இலை 12: அச்சச்சோ இவளையே தாங்க முடியல இதுல இவ பாட்டு வேற!!! இவளவிட சூடா ஒருதன் வருவானே அவனெங்க?

பருப்பு: ….ஆங் அவனுக்கு முன்னாடி நான் தான் வருவேன்.

நெய்: நானும் தான்!

வாழை இலை 12: வந்துட்டான்யா வந்துட்டான் எல்லாரையும் நகர்ந்துக்க சொல்லுவான்…நானும் அவன் பேச்சை கேட்டு நகர்ந்துண்டேன்னா என்னாகும்?

சாம்பார் : ஏய்!! எல்லாரும் தள்ளுங்கோ தள்ளுங்கோ வரிசைப்படி நான் தான் ஃபர்ஸ்ட் …நீங்க எல்லாரும் நெக்ஸ்ட்.

பொறியல்கள் : ஹலோ மிஸ்டர் சாம்பார் உங்களை மட்டும் ஊத்தி சாப்பிட்டா ருசியிருக்காது எங்களையும் தொட்டுண்டா தான் ருசிக்கும்

அவியல் : எல்லா காய்கறிகளையும் என்னோடு சேர்த்துண்டு, ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டான அவியல் ஆகிய நான் இல்லாத விருந்தே கிடையாது தெரியுமா!

இவைகள் பேசிக்கொண்டிருக்கும் போதே சாம்பர் சாதத்தோடு கைக்கோர்த்து பொறியலை அதனுள் அனுமதித்து, எஜமானரின் வயிற்றுக்குள் சென்று வயிற்றை நிரப்பியது.

சாதம்: அச்சச்சோ! இவாளுக்கு சரி பசி போல, அதுதான் இவ்வளவு சீக்கிரமா நான் மறுபடியும் பிரவேசிக்க வேண்டியதா போச்சு.

ரசம்: “வெண்ணிற சாதமாய் வெந்தவனே! தக்காளி ரசம் என்னை பாராய்”

என்று பாட்டாவே படிச்ச ரசம்… சாதத்துடன் கைக்கோர்த்து, அப்பளத்தை அதில் நொறுக்கிப் போட்டு, மீதமுள்ள காய்கறிகளுடன் இணைந்து எஜமானருக்கு ஜீரன சக்தியை அதிகரித்தது.

சாதம்: மறுபடியும் நானா!!

தயிர்: நீயும் வெள்ளை நானும் வெள்ளை ஒன்றாய் சேர்ந்தால்!!! குடலில் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து நல்ல பாக்டீரியாக்களை உருவாக்குவோமே. அதுனால தான் நம்மை விருந்தில் கடைசியா சாப்படறா!! லேட்டாக வந்தாலும் லேட்டெஸ்ட்டாக எப்போதும் திகழும் தயிர் சாதம் ஆகிய நான் என்னை உட்கொண்டவருக்கு அருமருந்தாகி இந்த விருந்தை நிறைவு செய்கிறேன்.

என்று தயிர் சாதம் சொன்னதும்

வாழை இலை 13: அச்சச்சோ! இப்போ நம்ம மேல பரிமாறப்பட்டதுல மீதமிருக்கறதெல்லாத்தையும் ஒண்ணாக்கி நடுவுல வச்சுட்டு நம்மள மூடிடுவாளே!!

வாழை இலை 14: ஆமாம்! அவ்வளவு தான் நம் வாழ்க்கை அவ்வளவு தான்.

வாழை இலை 1: இதுக்கு நாம பேசாம ஒருவர் மீது ஒருவர் சாய்ந்துன்னு இருந்திருக்கலாம் இல்ல!

வாழை இலை 15: அப்படி இருந்திருந்தா நாம யாருக்குமே பிரயோஜனம் இல்லாம காஞ்சு போயிருப்போம். அதுக்கு இது எவ்வளவோ மேல்.

வாழை இலை 16: ஆமாம்! ஆமாம்! வெரி வெரி கரெக்ட். நம்மகிட்ட இருந்த சத்துக்கள் எல்லாத்தையும் நம்மள உபயோகப்படுத்தினவாளுக்கு கொடுத்துட்டோம்.

வாழை இலை 17: அடுத்தது என்ன?

வாழை இலை 18: அடுத்தது என்ன!!
குப்பையில் போடப்படுவோம்
ஆடும் மாடும் நம்மள நன்னா மென்னு தின்னும்.
இப்படி ஒரு விருந்து சாப்பாட்டோட சுவடே இல்லாம போயிடும்.

வாழை இலை 19: அது மட்டுமில்லக்கா நம்மளால ஆரோக்கியம் பன்மடங்காகும்.

வாழை இலை 20: ஆட்களுக்கும் ஆடு மாடுகளுக்கும்ன்னு குறிப்பிட்டு சொல்லுமா…
ஓகே அடுத்த விருந்தில் மீண்டும் பிறப்போம்
இதே போல சுவையான உணவோடு இணைவோம்
நம்ம அரட்டையை தொடர்வோம்.

வாழ வைக்கும் வாழை இலையில் உணவு உட்கொள்ளுங்கள்
வாழ்க்கை முழுதும் ஆரோகிய குறைபாடுகள் ஏதுமின்றி நல்வாழ்வு வாழ்ந்திடுங்கள்.

பொறுமையாக படித்தமைக்கு நன்றி. பிடித்திருந்தால் பகிரலாமே.

நன்றி
நா. பார்வதி.

ஜேம்ஸின் வந்த வேலை முடிந்ததும் சக்தியின் ஆஃபிஸிலிருந்து புறப்படுவதற்காக தன் இருக்கையிலிருந்து எழுந்து,

“ஓகே சக்தி.
அப்போ நான் கிளம்பறேன்.”

“ஓகே ஜேம்ஸ்.
சீ யூ டுமாரோ”

“எதுக்கு சக்தி?”

“சும்மா தான்.
நாளைக்கு எப்படியும் உங்க நண்பன் விஷால் வந்திடுவான்.
எப்படியும் நீங்க மீட் பண்ணுவீங்க.
நானும் அவனோடு வருவேன்.
அதுதான் சொன்னேன்.”

“அப்பப்பா!! ரொம்பவே முன்னோக்கி யோசிச்சுப் பேசறீங்க சக்தி.
பார்ப்போம் எனக்கு எதுவும் முக்கியமான வேலை இல்லாட்டி நாம் சந்திப்போம்.
இப்போ நான் கொஞ்சம் உங்க செகரெட்டரி அம்மாவை விசாரிச்சிட்டு அப்படியே கிளம்பறேன். பை சக்தி.”

“ஆங்! ஓகே! பை ஜேம்ஸ்.”

என்று சக்தியிடமிருந்து விடைப் பெற்றுக் கொண்டு நேராக ருத்ரா அமர்ந்திருந்த அறையை பார்த்தான். உள்ளிருந்து ருத்ராவும் ஜேம்ஸை ஓரக்கண்ணால் பார்த்தாள். அவள் அமர்ந்திருந்த அறைக்குள் நுழைய அதன் கண்ணாடி கதவைத் தட்டினான் ஜேம்ஸ். அதை அப்போது தான் கவனித்தது போல பாவனை செய்த ருத்ரா தன் முன்னிருந்த கணினியின் மேல் வழியாக எட்டிப்பார்த்து, உடனே எழுந்து சென்று அவளின் அறை கதவை திறந்து

“ஹாய்! மிஸ்டர் ஜேம்ஸ்.
ப்ளீஸ் கம் இன்.”

“ஓ! தாங் யூ.
மிஸ்டர் எல்லாம் வேண்டாமே!
ஜேம்ஸ் என்றே கூப்பிடலாமே
மிஸ் ருத்ரா”

“ஓ! ஓகே.
அதே மாதிரி நீங்களும் என்னை ருத்ரா என்றே கூப்பிடலாம் ஜேம்ஸ்.”

“சரி ருத்ரா.
இப்போ நான் நேரா விஷயத்துக்கே வரேன்.”

“சொல்லுங்க ஜேம்ஸ்.
நான் என்ன பண்ணணும்?”

“நீங்க நான் கேட்குற கேள்விக்கு மட்டும் பதில் சொன்னா போதும்”

“சரி கேளுங்க”

“சக்தி விஷாலை பார்க்க போனது உங்களுக்கு தெரியும் தானே”

“ம்…தெரியும்.
அவ என்கிட்ட சொல்லிட்டு தான் போனா”

“உங்களுக்கு சக்தியை எவ்வளவு நாளா தெரியும்?”

“அவளும் நானும் ரூம் மேட்ஸா இருந்த நாள் முதல் எனக்கு அவளையும், அவளுக்கு என்னையும் தெரியும். ஏன் கேட்கறீங்க?”

“ஓ! ஓகே.
அப்புறம் ஏன் இப்போ நீங்க ரெண்டு பேரும் தனித்தனியா இருக்கீங்க?”

“அது வந்து…வந்து”

“ஏன் தயங்குறீங்க ருத்ரா? பதில் சொல்லுங்க.
என்கிட்ட சொல்லுற விஷயம் எதுவும் இந்த ரூமைத் தாண்டாது.”

“ம்…அது வந்து…நான் ஒரு நாள் என்னோட பாய் பிரெண்டை எங்க ரூமுக்கு கூட்டிட்டு வந்தேன்.
அதுனால சக்தி வேற வீடு பார்த்துட்டு போயிட்டா.”

“உங்க பாய் பிரெண்டை கூட்டிட்டு வந்ததுக்கு எதுக்கு சக்தி ரூமை காலி பண்ணணும்!
புரியலையே!
கொஞ்சம் விவரமா சொல்ல முடியுமா?”

“அவளுக்கு எந்த ஆம்பளையையும் ரூமுக்கு கூட்டிட்டு வர பிடிக்காது.
அதை எங்க ரெண்டு பேரோட ரூம் ரூல்ஸ்லயே எழுதி வச்சிருந்தோம்.
மொதோ தடவை நான் அவனை எங்க ரூமுக்கு கூட்டிட்டு வந்தப்போவே அவ என்னை எச்சரிச்சா…
நானும் சாரி கேட்டு இனி இது போல நடக்காதுன்னு சொன்னேன்.
ஆனா ரெண்டாவது தடவை நானும் என் பாய் பிரெண்டும் அவனோட ஒரு பிரெண்டோட பார்ட்டிக்கு போயிருந்தோம்.
அங்க என்னத்த குடுத்தாங்களோ தெரியலை எனக்கு போதை தலைக்கு ஏறிடுச்சு.
அதுனால அவன் என்னை என் ரூமில் டிராப் பண்ணிட்டு போக வந்தான்.
நானும் ஹால்ல இருந்த சோஃபாவிலேயே தூங்கியிருக்கேன்.
மறுநாள் காலை நான் எழுந்து பார்த்தா….
எதிர்த்த சோஃபாவுல சக்தி தலைவிரி கோலத்துல கோவமா உட்கார்ந்திட்டிருந்தா.
என்ன ஆச்சு? ஏன் அப்படி உட்கார்ந்திருக்கான்னு அவகிட்ட கேட்டேன்.
அதுக்கு அவ என்னை டிராப் பண்ண வந்த என் பாய் பிரெண்ட் சக்தியிடம் மிஸ் பிஹேப் பண்ணப் பார்த்தான்னும்,
அவனை அடிச்சு ரூமை விட்டு துறத்தி விட அவ ரொம்ப போராடியிருக்கான்னும் அவ சொல்லி எனக்கு தெரிய வந்தது.
அவகிட்ட அதுக்கு மன்னிப்பும் கேட்டேன்.
ஆனா அவ நடந்ததை என்கிட்ட சொல்லிட்டு வீட்டை விட்டு வெளியே தனியா போயிட்டா.
என்னாலையும் ஒண்ணும் சொல்ல முடியலை.
அன்னைக்கு பிரிஞ்சோம்.
இன்னைக்கு வரை நாங்க தனித்தனியா தான் இருக்கோம்.”

“அந்த…உங்க பாய் பிரெண்ட் என்ன ஆனான்?”

“எனக்கு தெரியாது ஏன்னா…அவனை நான் கடைசியா பார்த்தது அன்னைக்கு நைட்டு தான்.”

“அவனை அப்புறமா அவன் வீட்டுக்கோ இல்ல நீங்க அவனை அடிக்கடி சந்திக்கும் இடங்களுக்கோ போய் நீங்க பார்க்க முயற்சிக்கலையா?”

“போனேன்.
ஏன்டா என் சந்தி கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தன்னு கேட்க அவனை எல்லா இடத்துலேயும் தேடினேன்.
ஆனா அதுக்கப்புறம் அவனை நான் எங்கேயுமே பார்க்கலை.”

“அவன் வீடு உங்களுக்கு தெரியாதா?
அங்க போய் பார்த்திருக்கலாமே!”

“இல்ல அவன் வீடு எனக்கு தெரியாது.
அவன் ஏதோ ஒரு பிரெண்டோட ரூமுல தங்கிட்டிருக்கறதா தான் சொன்னான்.”

“என்ன பாய் பிரெண்டு?
என்ன ஒரு பிரெண்ட்ஷிப் இதெல்லாம்.
ஒருத்தர் ஒருத்தர் எங்க தங்கறாங்கன்னே தெரியாம என்ன ஒரு லவ்வோ!
ஐ ஆம் சாரி ருத்ரா.
ஏதோ சொல்லணும்னு தோனிச்சு சொன்னேன்.”

“இட்ஸ் ஓகே ஜேம்ஸ்.
நீங்க சொல்லறதும் சரிதான்.
அதை எல்லாம் எனக்கு புரிய வச்சது சக்தியின் பிரிவு தான்.
அன்னேலேந்து இன்னைக்கு வரை நானும் எந்த ஒரு ஆணையும் என் ரூமுக்குள்ள விடறதே இல்லை.
சொல்லப் போனால் எனக்கு எந்த பாய் பிரெண்ட்ஸுமே இல்லை.
நானும் தி போல தன்னந்தனியா தான் இருக்கேன்.”

“ம்…ம்…குட் குட்.
அதெல்லாம் இருக்கட்டும் ருத்ரா.
சக்தி விஷாலை பார்க்க போன அன்னைக்கு காலையில் உங்க ஆஃபிஸ் கேண்டினில் ப்ரேக் பாஸ்ட் சாப்பிட போயிருந்தப்போ…
நீங்க அவங்களுக்கு ஒரு ஜூஸ் குடுத்தேங்களே…
அது என்ன ஜூஸ்? எங்கேந்து வாங்கிக் குடுத்தீங்க?”

“அது நான் ஆஃபிஸ் வரும் போது வழியில் என் காருக்கு பெட்ரோல் போட ஒரு கியாஸ் ஸ்டேஷன்ல நின்னேன்.
அப்போ அங்க இருந்த கடையில் நான் குடிக்க வாங்கினேன்.”

“அப்புறம் ஏன் நீங்க குடிக்காம அதை சக்திக்கு குடுத்தீங்க?”

“அதை வாங்கிட்டு வெளியில் வந்ததும் என் காருக்கு பெட்ரோல் போட்டாச்சுன்னு அங்க இருந்த பையன் சொன்னான்.
அதைக் கேட்டதும் நேரா வந்து என் காருக்குள்ள உட்கார்ந்து காரை ஸ்டார்ட் பண்ணி ஆஃபிஸுக்கு வந்துட்டேன்.
இங்கே ஆஃபிஸுக்கு கார் பார்க்கிங் வந்ததுக்கு அப்புறமா தான் நான் வாங்கின அந்த ஜூஸ் கேனை பாரத்தேன்.
சரி லிஃப்ட்டுல போகும் போது குடிக்கலாமேன்னு அதையும் எடுத்துகிட்டு லிஃப்ட்டுல ஏறினேன்.
அதுல எங்க டீமோட டி.எல் ஆன ராகேஷ் இருந்தார்.
அவர் கூட பேசிட்டே வந்ததுல மறுபடியும் அந்த ஜூஸை குடிக்கலை.
அப்புறம் அவர் அவரோட கேபினுக்கு போயிட்டார்.
எனக்கு சரியான பசி வேற…
ஆனா தி அதுக்குள்ள மீட்டிங்குக்கு எல்லாத்தையும் ரெடி பண்ண சொல்லிட்டா…
சோ அப்பவும் குடிக்க முடியலை.
ஒண்ணும் சாப்பிடவும் முடியலை.
அப்புறமா அவ மீட்டிங் எல்லாம் முடிச்சிட்டு வேகமா கேண்டினுக்கு போனா.
நானும் சரியான பசியில் இருந்ததால் அவ பின்னாடியே போனேன்‌.
அவ சாண்ட்விச் வாங்கிட்டு போய் உட்கார்ந்தா.
நானும் சாப்பிட்டுட்டு அவ எங்க உட்கார்ந்திருக்கான்னு பார்த்தேன்.”

“ஏன் அவங்க பின்னாடியே போன உங்களுக்கு அவங்க எங்க உட்கார்ந்தாங்கன்னு தெரியலையா?”

“நீங்க எங்க காண்டீனை பாருங்க அப்போ தான் நான் சொன்னது உங்களுக்கு புரியும்.
அது ஒரு கடல் மாதிரி.
அதுக்குள்ள சக்தி போனதும் நானும் போனேன்.
ஆனா என்னோட பசி முதல்ல என் வயிற்றை நிரப்ப தான் சொல்லிச்சு.
சோ அதை தான் முதல்ல செய்தேன்.
அப்புறமா அவளை தேடி கண்டு பிடிச்சு அவ பக்கத்துல போய் உட்கார்ந்தேன்.
அவ தண்ணியோ ஜூஸோ வாங்காம வெறும் சாண்ட்விச் மட்டும் வாங்கிட்டு வந்திருந்ததைப் பார்த்தேன்.
அப்போ என்கிட்ட இருந்த ஜூஸ் கேனை எடுத்து அவளுக்கு கொடுத்தேன்.
அவ்வளவு தான்.
அவளும் சாப்டுட்டு நேரா ரெஸ்ட் ரூம் போய் டிரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு பாரிஸுக்கு கிளம்பி போயிட்டா.”

“ஓ. ஓகே.”

“ஏன் நீங்க நான் குடுத்த ஜுஸைப் பற்றியே கேட்கறீங்க?”

“அது ஒண்ணுமில்ல ருத்ரா.
என்குவைரின்னு வந்துட்டா எல்லாரையும் அன்ட் எல்லாத்தையும் தானே விசாரிக்கணும்!”

“என்குவைரியா? எதுக்கு?
அதுவும் என்னை எதுக்கு என்குவைரி பண்ணணும்.”

“இட்ஸ் ஓகே ருத்ரா.
ஜஸ்ட் லீட்.
உங்களோட ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி.
ம்… உங்க கண்கள் ரொம்ப அழகா இருக்கு.
எனக்கு சொல்லணும்னு தோனிச்சு சொல்லிட்டேன்.
சொன்னது தப்புன்னா மன்னிச்சுக்கோங்க.
நான் கிளம்பறேன்.
பை.”

“ம்….இட்ஸ் ஓகே.
தாங்ஸ் ஃபார் யுவர் காம்ப்ளிமென்ட் ஜேம்ஸ்.
பை. ஹாவ் எ நைஸ் ஈவ்னிங்”

“யூ டூ ருத்ரா.”

ருத்ராவுடன் விசாரணை என்ற பெயரில் பேசி விட்டு வெளியே வந்த ஜேம்ஸ் தனக்கு தானே

“இவ சொல்றதை பார்த்தா நம்புறா மாதிரி தான் இருக்கு…
அதே நேரம் ரொம்ப பர்ஃபெக்ட்டா வரிசையா நடந்ததை எல்லாம் சொல்றதை பார்த்தா எங்கயோ இடிக்குற மாதிரியும் இருக்கே!
பார்ப்போம்…
கொஞ்சம் விட்டுப் பிடிப்போம்.
இவ சொன்னது மட்டும் உண்மையா இருந்ததுன்னா…
டேய் ஜேம்ஸ் கூடிய சீக்கிரமே உனக்கொரு கேர்ள் பிரெண்ட் கிடைச்சிடுவா டா…”

என்று கூறிக்கொண்டே சிறு புன்னகையுடன் சக்தியின் ஆஃபிஸிலிருந்து புறப்பட்டு தனது ஸ்டேஷன் சென்றடைந்தான்.

தொடர்வாள்…

கார் ஸ்டார்ட் ஆன சப்தத்தில் சுயநினைவுக்கு வந்த சக்தி விஷாலை பார்த்து

“ஏய் வி!
என்ன நீ ஓட்ட போறியா?”

“ம்…ஆமாம்.
ஏன்?
நான் ஒட்ட கூடாதா?”

“இல்ல சாவி…எப்படி?”

“என்கிட்ட சாவி எப்படி வந்ததுன்னு கேட்க வர அது தானே!”

“ஆமாம்.”

“ஜேம்ஸ் பேசிட்டு போனதுலேந்து நீ பிரமை பிடித்தவ போல இருந்த.
ஜேம்ஸ் வேற நம்மளை அங்கே இருக்க வேண்டாம்ன்னு உடனே கிளம்பி வீட்டுக்கு போக சொன்னான்.
நான் திரும்பி உன்னைப் பார்த்தா நீ இந்த உலகத்துலயே இல்ல.
என்ன பண்ணுவேன்?
உன் கையிலிருந்த சாவியை எடுத்தேன்.
உன்னை அப்படியே கை தாங்கலா கூட்டிண்டு வந்து காருக்குள்ள உட்கார வச்சேன்.
இதோ வண்டிய ஸாடார்ட் பண்ணினேன்‌.
எங்கயோ இருந்த நீ இதோ இப்ப இங்க இந்த உலகத்துக்கே வந்துட்ட.
சரி இப்போ நாம உன் வீட்டுக்கு போகலாமா?”

“ஓ எஸ் போகலாம்.
ஆனா மணி இப்போ ஒன்றரை ஆகுது.
பேசாம லீ கார்னர் ல போய் லஞ்ச் சாப்டுட்டு அப்படியே ஆஃபிஸ் ல தலையை காட்டிட்டு வரட்டுமா வி!”

“ஹலோ! இன்னைக்கு லீவ் சொல்லிருக்க ஞாபகமிருக்கா?”

“ஆமாம். நல்லாவே ஞாபகமிருக்கு.
ஆனா ஜேம்ஸ் மத்தியானம் ஆஃபிஸ் வரேன்னு சொன்னதா கேட்டுது.
ஆனா ஏதோ கிணத்துக் குள்ளேந்து கேட்டுது.”

“அவன் அப்படி தான் சொன்னான்.
தெளிவா தான் சொன்னான்.
ஆனா நீ ஏதோ சிந்தனையில் ஆழமா மூழ்கி இருந்ததால உனக்கு அப்படி கேட்டிருக்கு.”

“சரி சரி நான் சொன்னா மாதிரி பண்ணலாமா?”

“எல்லாம் சரி.
எனக்கும் ஆஃபிஸ்னு ஒண்ணு இருக்கு அது தெரியுமா உனக்கு.”

“இருக்கு உனக்கு! ஆஹா ஹ ஆஹா!
என்ன ஒரு வார்த்தை ஜாலம்.”

“தி விளையாடாதே.”

“சரி சரி நீ பாரிஸுக்கு கிளம்பு‌.
உன்னை யாரு இங்க இருக்க சொன்னா?”

“சொல்ல மாட்ட நீ.
பாவமே இவளை சுத்தி ஏதேதோ நடக்குதேன்னு… கூடவே இருந்ததுக்கு இப்படியா சொல்லுவா?”

“இதுல என்ன தப்பு வி.
உனக்கு ஆஃபிஸ் இருக்கு உண்மை தான்.
நீ போய் தான் ஆகனும் அதுவும் உண்மைதான்.
அப்போ போன்னு தானே சொல்ல முடியும்.
போகாத என்கூடவே இருன்னா சொல்ல முடியும்!”

“ஆங்…ஏன் அது மாதிரி சொன்னா என்ன கொறஞ்சிடுமாம் மகாராணிக்கு?”

“சரி அப்படி நான் சொன்னா உனக்கு ஆஃபிஸ் போக வேண்டியதில்லையா.
அதுனால உனக்கு பிரச்சினை வராதா?”

“ம்….அது…”

“என்ன ம்…இழுவை! எனக்கு தெரியும் வி.
டயலாக்குக்காக வேணும்னா அப்படியெல்லாம் சொல்லிக்கலாம்.
ஆனால் பிராக்டிகல்லா யோசிச்சுப் பார்த்தா வேலை முக்கியம் தானே!
எனக்காக நீ இந்த இரண்டு நாள் என் கூடவே இருந்ததே எனக்கு பெரிய பலமா இருந்தது.
அதை வைத்தே வரும் நாளெல்லாம் ஓட்டிடுவேன்.
யூ டோண்ட் வரி வி.
நீ இப்பவே கூட லஞ்ச் முடிச்சிட்டு பாரிஸ் கிளம்பு.”

“ஆனா உன்னை எப்படி தனியா விட்டுட்டு…”

“ஹலோ சார்! நான் இத்தனை வருஷமா தனியா தானே இருந்தேன்.”

“ஆனா இத்தனை வருஷத்துல உனக்கு இப்படி ஏதாவது நடந்திருக்கா? இல்லையே!
அது தான் யோசனையாவே இருக்கு.”

“இட்ஸ் ஓகே வி.
இன்னைக்கு பாரிஸ் போ.
இன்னும் இரண்டு நாள்ல வீக் என்ட் வந்திடும் அப்புறமென்ன இந்க வந்துடு.
அப்போ உன் பேரன்ட்ஸ் கிட்டயும் டைம் வாங்கிண்டு வா.
நாம எல்லாரும் பேசலாம்.
என்ன சொல்லுற?”

“ம்…ஓகே தான்.
ஆனா நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் தி.”

“அதெல்லாம் இருப்பேன் வி.
நீ அதைப் பத்தி எல்லாம் கவலைப் படாம சாப்டுட்டு கிளம்பு.”

“ம்…ஓகே.”

“இதோ லீ கார்னர் வந்துட்டோம்.”

சக்தியும் விஷாலும் சேர்ந்து மத்திய உணவை உண்டு முடித்ததும் விஷால் அவன் காரை எடுத்துக் கொண்டு பாரிஸ் புறப்பட்டுச் சென்றான். சக்தி அவளது அலுவலகம் சென்று அவளின் மேலதிகாரியிடம் தனது நிலைமையை எடுத்துக் கூறினாள். அவரும் அவளை புரிந்துக் கொண்டு அவள் கேட்டது போலவே அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை அளித்தார். அவருக்கு நன்றி சொல்லி விட்டு வெளியே வந்தவள் நேராக ருத்ராவை வரவழைத்து அன்றைக்கு பாதியில் விட்ட மீட்டிங்கை தொடர்வதாக கூறி அனைவரையும் மீட்டிங் அறையில் கூடச் சொன்னாள். அப்போது ருத்ரா அன்று சிலர் லீவில் இருப்பதாகவும் அதனால் அடுத்த நாள் வைத்துக் கொள்ளலாமா என்று கேட்க அதற்கு சக்தி

“இல்ல ருத்ரா! நான் நாளைக்கும் நாளான்னைக்கும் லீவு கேட்டிருக்கேன். சோ ஆஃபிஸ் வரமாட்டேன்.
அதுதான் இன்னைக்கு முடிச்சிடலாம்ன்னு நினைச்சேன்…
சரி சரி நம்மளோட அந்த புது ரோபோ எந்த ஸ்டேஜ்ல இருக்கு?
அன்ட் அன்னைக்கு அந்த எம்.என்.எம் கம்பெனியோட நடந்த மீட்டிங்க்கு அப்புறம் அவங்க கிட்டேந்து எந்த ரெஸ்பான்ஸும் எனக்கு வரலையே!! அது என்ன ஆச்சுன்னு அவங்ககிட்ட கேட்டுட்டு அப்படியே அவங்கள ஈமெயில் பண்ண சொல்லு ருத்ரா.”

“புது ரோபோ பாராஜெக்ட் வேகமா நடந்துட்டு இருக்கு தி.
ஆனா அன்னைக்கு மீட்டிங்கில் நம்ம டீம் மேட்ஸ் ஏதோ டவுட் கேட்க வந்தாங்க இல்ல…
அப்ப கூட நீ அந்த விஷாலை பார்க்க போகணும்னும் நீ பார்த்துக்கறேன்னும் சொல்லிட்டு போனியே!
ஐ திங்க் அவங்களுக்கு நீ அதுக்கான விளக்கத்தை ஒரு ஈமெயிலா போட்டுட்டேன்னா அந்த ப்ராஸஸ் நிக்காம இருக்கும்.”

“ஆக்ச்சுவலி அன்னைக்கு அவங்க என்ன சொல்ல வறாங்கங்கறது எனக்கு புரிஞ்சிடிச்சு அதுனால தான் நான் அப்பறமா சொல்லறேன்னு சொல்லிட்டு வெளியே போனேன். அதுக்கான சல்யூஷனை அன்னைக்கே ஈமெயில் பண்ணிட்டேனே!”

“இல்ல தி.
நீ பண்ணலை.
அதுனால தான் அவங்க உன்கிட்டே ஈமெயில் வர வரைக்கும் அதுக்கு முன்னாடி ஸ்டெப் வரை ப்ராஸஸ் பண்ணிட்டிருக்காங்க.
நீ அதற்கான சல்யூஷனை அனுப்பிருந்தேன்னா அவங்க அதை இன்னேரம் இம்ப்ளிமென்ட் பண்ணிருப்பாங்க தி.”

“இல்லையே! இரு நான் செக் பண்ணறேன்.
ஊப்ஸ்!! நான் ஈமெயில் டைப் பண்ணிருக்கேன் ஆனா சென்டு பண்ணலை.
இதோ இப்பவே அனுப்பிடறேன்.
ஆங் டன்.
இந்த ஆராடர் டெலிவரி டேட் என்ன?”

“அடுத்த மாசம் இருப்பத்தி எட்டாம் தேதிக்குள்ள கவர்மென்ட்டுக்கு குடுக்கணும்.”

“அதுக்குள்ள முடிஞ்சிடுமில்ல ருத்ரா?”

“தி நீயா!!”

“வாட் டூ யூ மீன் பை நீயா?”

“இல்ல இத்தனை வருஷத்துல இது மாதிரி டவுட் ஃபுல்லா நீ எப்பவுமே இருந்ததில்லையே!
அதுதான் கேட்டேன்.
உனக்கு உடம்பு சரியில்லையா தி.
எனி ப்ராப்ளம்?”

“உடம்புக்கு ஒண்ணுமில்ல ருத்ரா.
ம்…சரி நான் ஈமெயில் அனுப்பிட்டேன்.
நம்ம டீமை முழு மூச்சோடு வேலையில் இறங்க சொல்லு.
வீ ஹாவ் டூ டெலிவர் இன் டைம்.
சோ இது சால்வுடு.
அந்த எம்.என்.எம் என்ன ஆச்சு?
அதைப் பத்தி ஒண்ணுமே நீ சொல்லலையே!”

“ஆங் அவங்கிட்ட இருந்து ஒரு ரெஸ்பான்ஸும் இல்ல தி.
நானும் நீ எதுவம் சொல்லாததால் ஃபாலோ அப் பண்ணலை.”

“என்ன ருத்ரா.
நான் தான் சொல்லலை.
அட்லீஸ்ட் நீயாவது என்னை கால் பண்ணி கேட்டிருக்கலாமில்ல!”

“சாரி தி.”

“சரி சரி இன்னைக்கே அவங்களுக்கு கால் பண்ணி பேசிட்டு அப்படியே ஈமெயிலும் போட்டு என்ன ஏதுன்னு விசாரிச்சு எனக்கு கால் பண்ணி சொல்லு”

“ஓகே தி.
டன்.”

“எக்ஸ்க்யூஸ்மி தி.”

“எஸ் பீட்டர்.
ஓகே ருத்ரா நீ போய் நான் சொன்னதை எல்லாம் இன்னைக்கே முடிச்சிடு.
கம் இன் பீட்டர்”

“உங்களை பார்க்க ஜேம்ஸ்ன்னு ஒருத்தர் வந்திருக்கார்.”

“ஓ வந்துட்டாரா.
ஓகே அவரை என் கேபினுக்கு அழைச்சிட்டு வாங்க.”

“ஓகே. இதோ அழைச்சிட்டு வரேன்”

சிறிது நேரம் கழித்து பீட்டர் ஜேம்ஸை அழைத்துக் கொண்டு சக்தியின் கேபினுக்குள் வந்தான்.

“வாங்க ஜேம்ஸ் வாங்க வாங்க.
ஓகே பீட்டர் தாங்ஸ்.
யூ கேன் கேரி ஆன் வித் யுவர் வொர்க்.
ஏதாவது தேவைன்னா கூப்பிடுறேன்.”

“ஓகே தி.”

“ம்…சொல்லுங்க ஜேம்ஸ்.”

“நான் உங்க ஆஃபிஸ் சிசிடிவி ரிக்கார்டிங் எல்லாத்தையும் பார்க்கணும்னு சொல்லியிருந்தேனே.
பார்க்கலாமா?”

“ஓ ஷுவர்! வாங்க போகலாம்.”

என்று சக்தி சொன்னதும் இருவருமாக செக்யூரிட்டி அதிகாரியிடம் சென்றனர். அவரிடம் சக்தி ஒரு பேப்பரை காட்டியதும் அதை படித்த அந்த அதிகாரி அவர்களை சிசிடிவி ரிக்கார்டிங் அறைக்குள் அழைத்து சென்றார்.
அங்கே ஜேம்ஸ் அவரிடம் சக்தி பாரிஸ் கிளம்பி சென்ற நாளின் காலை முதல் மத்தியப் வரையிலான ரிக்கார்டிங் கை பார்க்க வேண்டுமென கூறினான். அதிகாரியும் அவரின் கீழ் வேலை பார்க்கும் மைக்கேலிடம் ஜேம்ஸ் கேட்டது போலவே அந்த ரிக்கார்டிங்கை காண்பிக்க சொன்னார். அதைப் பார்த்துவிட்டு அதன் ஒரு காபியை தனது மொபைலுக்கு அனுப்பி வைக்குமாறு கூறிவிட்டு அங்கிருந்து மீண்டும் சக்தியின் கேபினுக்கு வந்தனர் சக்தியும் ஜேம்ஸும். சக்திக்கு அதில் எதுவும் வித்தியாசமாக தெரியவில்லை.

“வாங்க ஜேம்ஸ்.
உட்காருங்க.
காஃபி ஆர் டீ?”

“காஃபி”

“ருத்ரா டூ காஃபி ப்ளீஸ்”

ருத்ரா ஆஃபிஸ் பாய் இடம் சொல்ல அவனும் இரண்டு காஃபி எடுத்துக் கொண்டு சக்தியின் அறைக்கு சென்று கதவை தட்டினான் அப்போது உள்ளிருந்து

“எஸ் கம் இன்.”

“காஃபி எடுத்துக்கோங்க ஜேம்ஸ்.
தாங்க்ஸ் டக்லஸ்.
ம்…சொல்லுங்க ஜேம்ஸ்…
இந்த சிசிடிவி ரிக்கார்டிங் பார்த்ததுல உங்களுக்கு ஏதாவது க்ளூ கிடைச்சுதா?”

“ஒண்ணு கன்பர்மா தெரியறது என்னனா நீங்க அன்னைக்கு… நீங்க சொன்னா மாதிரியே ஆஃபிஸ்லேந்து நீங்க சொன்ன டைமுக்கு கிளிம்பியிருக்கீங்க.”

“அப்பாடா இப்பவாவது நம்பீனீங்களே.”

“இதுவரை உங்க கேஸ்ல இந்த ஒண்ணு மட்டும் தான் உண்மையா இருக்கு…”

“ஆங்…”

“இருங்க சக்தி. அதே நேரம் நீங்க அன்னைக்கு ஆஃபிஸ் கேண்டீன்ல சாப்பிட்ட போது உங்க பிரெண்ட் ஜூல்ஸ் குடுத்தான்னு சொன்னீங்களே அது அவங்க கேண்டீன்ல வாங்கினது இல்ல.”

“அப்படியா? இல்லையே ருத்ரா அதை எனக்காக வாங்கிண்டு வந்ததா தானே சொன்னா!”

“உங்களுக்காக தான் வாங்கிட்டு வந்திருக்காங்க.
அதுல எந்த வித மாற்றமும் இல்லை.
ஆனா அதை எங்கேந்து வாங்கிட்டு வந்தாங்கன்னு அவங்க கிட்ட தான் கேட்கணும்.”

“இல்ல ஜேம்ஸ் அந்த சாஃப்ட் ட்ரிங்க்ஸ் எங்க கேண்டீன்ல கிடைக்கறது தான்”

“இருக்கலாம் ஆனா அன்னைக்கு அவங்க அங்கேந்து வாங்கல.
வேறெங்கேந்தோ வாங்கிட்டு வந்து அங்க வாங்கினதா சொல்லிருக்காங்க.”

“அப்படியா? அது எப்படி உங்களுக்கு தெரியும்?”

“இதோ இப்போ பார்த்தோமே அந்த கேண்டீன் சிசிடிவி ல தான் தெரிஞ்சுது.
நீங்க வேற பக்கமா திரும்பி உட்கார்ந்திருந்தால் உங்களால அவங்க அங்கேந்து தான் வாங்கிட்டு வந்தாங்களான்னு தெரியாம போச்சு.”

“அப்படீன்னா அவ தான் எனக்கு அதுல ஏதாவது கலந்து குடுத்திருப்பாளா?ஆனா அவ ஏன் அப்படி செய்யணும்?”

“தீர்க்கமா சொல்ல முடியாது.
ஆனால் அவங்கள என் சஸ்பிஷன் லிஸ்ட்டில் சேர்த்துள்ளேன்.
நான் அவங்க கிட்ட தனியா பேசி விசாரிச்சுக்கறேன்.
நீங்க எதுவும் தெரிஞ்சா மாதிரி காட்டிக்க வேண்டாம்.”

“ம்…சரி.
அவளை இப்போ இங்க வர சொல்லவா?”

“இல்ல இல்ல நான் வெளியே போகும் போது பார்த்து பேசிக்கறேன்.”

“சரி நளினி விஷயம் என்ன ஆச்சு ஜேம்ஸ்?”

“அடாப்ஸி ரிப்போர்ட் வந்தா தான் தெரியும்.”

“அப்படியா! அது வறதுக்கு எவ்வளவு நேரமாகும்?”

“இருபத்தி நான்கு மணி நேரமாகும்.”

“ஓ! ஓகே ஓகே. சரி நீங்க டிராஃபிக் போலிஸ் டிப்பார்ட்மென்ட்டுலேந்து எனக்கு கால் பண்ணி அந்த நளினி சொன்னதெல்லாம் சரியான தகவல் தானான்னு கேட்டீங்களே ஏன்?”

“ஆங்!! ஆங்!! அது ஏன்னா! அந்த பொண்ணு சொன்ன நேரத்துல, அவ சொன்ன அந்த இடத்துல எதுவுமே நடக்கலை.
அப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கான எந்த வித அறிகுறியும் அந்த ஏரியாவில் இருக்கும் எந்த சிசிடிவிலேயும் பதிவாகலை.
அதுவுமில்லாம நான் தனிப்பட்ட முறையில் அந்த ஏரியா காரங்களையும் விசாரிச்சுப் பார்த்தேன்.
அதுல…”

“எக்ஸ்க்யூஸ்மி தி.
மே ஐ கம் இன்”

“ஆங்…ஒன் செகண்ட் ஜேம்ஸ்.
எஸ் கம் இன் ருத்ரா”

“தி….”

“யூ டோண்ட் வரி ருத்ரா.
இவர் பேரு ஜேம்ஸ்.
என்னோட நண்பர்.
ஜேம்ஸ் இவங்க தான் ருத்ரா.
மை செகரெட்டரி.”

“ஹலோ மிஸ் ருத்ரா”

“ஹாய்”

“சரி என்ன விஷயம் ருத்ரா?”

“அந்த எம்.என்.எம் கம்பெனி உனக்கு அன்னைக்கே அவங்க ப்ரபோசல உன் ஈமெயிலுக்கு அனுப்பிட்டாங்களாம்.
உன் கிட்டேந்து தான் ரிப்ளை எதிர்பார்த்திட்டிருக்கறதா சொன்னாங்க.
அதை சொல்லி உனக்கு ஞாபக படுத்திட்டு போக தான் வந்தேன்.
நீயே அவங்களுக்கு ரிப்ளை பண்ணிடு சரியா.
ஓகே நான் என் சீட்டுக்கு போறேன்.
நைஸ் மீட்டிங் யூ மிஸ்டர் ஜேம்ஸ்.
ஹாவ் எ நைஸ் ஈவ்னிங்.”

“தாங்யூ மிஸ் ருத்ரா. விஷ் யூ தி சேம்.”

என்று சந்தேக கண்ணுடன் ருத்ராவைப் பார்த்த படி அமர்ந்திருந்த ஜேம்ஸை பார்த்து சக்தி தன் தொண்டையை சரி செய்துக் கொள்வது போல சப்தம் எழுப்பியதும் ஜேம்ஸ் அவளைப் பார்த்து

“ம்…என்ன சொன்னீங்க சக்தி?”

“நான் ஒண்ணுமே சொல்லலை ஜேம்ஸ்.
தொண்டை வரண்டு போன மாதிரி இருந்தது.
அதுதான் தண்ணி குடிச்சேன்.
நீங்க தான் ருத்ராவை வச்சக் கண்ணு வாங்காம பார்த்துட்டே இருந்தீங்க”

“இல்ல அவங்க கிட்ட ஏதோ ஒரு ரகசியமிருக்குன்னு என் மனசுக்கு படுது.
எதுக்கும் அவங்க மேல ஒரு கண்ணு வச்சுக்கறேன்.
நீங்களும் அவங்க கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.”

“எனக்கு தெரிஞ்சு அவ ரொம்ப நல்லவ தான்.
நான் ஜாக்கிரதையா இருக்கிறதெல்லாம் இருக்கட்டும்…
நீங்க அவளை பார்த்ததைப் பார்த்தா அவளை உங்க சந்தேக லிஸ்ட்டுல சேர்க்க பார்த்தா மாதிரி தெரியலையே!”

“அட போங்க சக்தி.
நீங்க வேற…
எப்ப விளையாடுறதுன்னு இல்ல.
சரி நம்ம பையன் விஷால் எங்க?
ஆளையே காணுமே!”

“ஹலோ ஜேம்ஸ் இது என்னோட ஆஃபிஸ்.
இங்க எப்படி அவனிருப்பான்.
அவன் கிளம்பி பாரிஸ் போயாச்சு.
நாளைக்கு மத்தியானமா வருவான்.”

“ம்…ஓகே ஓகே!”

ஜேம்ஸ் நளினி சொன்ன சம்பவத்தைப் பற்றி சக்தியிடம் விளக்கிக் கொண்டிருக்கையில் ருத்ரா உள்ளே நுழைந்து அவர்கள் பேச்சை திசை திருப்பி விட அந்த விஷயம் மீண்டும் தட்டிப் போனது.

தொடர்வாள்….

ஜேம்ஸ் வேறெந்த விவரமும் கூறாமல் நேரில் பார்க்கும் போது சொல்வதாக கூறி கைபேசி அழைப்பை துண்டித்ததும் ஏதோ யோசனையில் மூழ்கியிருந்த சக்தியிடம் விஷால்

“ஏய் தி…தி…தி…
என்ன ஆச்சு?
என்ன யோசிக்கிற?
என்னைப் பாரு தி”

என்று கூறிக்கொண்டே அவள் தோளை பிடித்து உலுக்கி அவனைப் பார்க்கச் செய்தான்.

“வி எனக்கு ஏதோ தப்பு நடக்கப் போறா மாதிரி தோணுது.”

“என்ன தப்பு?
எங்க?
யாருக்கு?”

“அதெல்லாம் தெரியலை.
ஆனா ஏதோ பெரிய தப்பு நடக்கப் போறதா என் மனசு சொல்லுது.”

“தி நீ அனாவசியமா போலிஸோட டென்ஷனை எல்லாம் மண்டைக்குள்ள எடுத்துண்டு உன்னை நீயே குழப்பிக்கற.”

“இல்ல வி நல்லா யோசிச்சுப் பாறேன்.
நான் அன்னைக்கு உன் வீட்டுக்கு வர கிளம்பினேன்…
ஆனா நான் அந்த ஹைவேல டிராவலே பண்ணலன்னு போலீஸ் சொல்லறா!
எனக்கு ஏதோ நடந்திருக்கு ஆனா என்னன்னு தெரியாது.
பக்கத்து வீட்டு மிஸ்டர் அன்ட் மிஸ்ஸர்ஸ் டேவிட் இத்தனை வருஷமா எங்கேயுமே போகாதவங்க திடீர்னு சொல்லிக்காம எங்கயோ போயிட்டாங்க.
பிளட் டெஸ்ட் ரிப்போர்ட் ல செடெடிவ் ரத்தத்துல கலந்திருக்குனு டெஸ்ட் எடுத்து வசுந்தரா குடுத்த ரிப்போர்ட்டும் காணாம போயிடுச்சு அதை கொடுத்த வசுவையும் காணலை.
அதை கேட்க போனா அந்த ஹாஸ்பிடல்ல ஒரு நர்ஸை கொலை செய்ய முயற்சி நடந்தது.
அவங்களும் இப்போ ஐசியூ ல இருக்காங்க.
அடுத்து வசுவோட நர்ஸ் நளினி.
அவங்களை பார்த்து பேசிட்டு வந்திருக்கேன்.
இப்போ என்னடான்னா ஜேம்ஸ் அதெல்லாம் சரியான இன்ஃபர்மேஷன் தானான்னு கேட்டு கால் பண்ணறார்!
ஒரு வேளை அந்த நளினிக்கும் ஏதாவது ஆகிடுமா?”

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது தி.
நீ போலீஸ் மாதிரி எல்லாம் யோசிக்க வேண்டிய அவசியமில்லை தி.
ஜஸ்ட் ரிலாக்ஸ்.”

“அப்படி என்னை சுத்தும் அந்த மர்ம நபர் யார்?
ஏன் என்னையே சுத்தி வரணும்?”

“இப்ப தானே சொன்னேன் தேவையில்லாததை எல்லாம் யோசிக்காதேன்னு.
மறுபடியும் ஆரம்பிச்சுட்டயே!”

“நாம ரெண்டு பேரும் போய் அந்த நர்ஸ் நளினி பத்திரமா இருக்காளான்னு பார்த்துட்டு வரலாமா வி!”

“இதுக்கு எதுக்கு அங்க போகணும்?
உனக்கு அவங்க நம்பர் தெரிஞ்சா ஒரு கால் பண்ணி கேளு”

“ஆங்…நம்பர் குடுத்தா.
ஆனாலும் ஒரு எட்டு போய் பார்த்துட்டு வரலாமே”

“நீ மொதல்ல கால் பண்ணிப் பாரு.
அப்படி அவங்க நல்லா இருக்காங்கன்னா அதுக்கப்புறம்
வேணும்னா நாம கிளம்பி போய் பார்ப்போம்.
என்ன சொல்ற தி?”

“ம்..சரி இதோ உடனே பண்ணறேன்”

“ஏய் தி…இரு இரு…
அந்த நளினி தான் அவங்களோட மொபைல்ல வசுந்தரா வோட கார்லேயே விட்டுட்டாங்கன்னு அவங்க சொன்னதா நீ சொன்னையே அப்புறம் எப்படி எந்த நம்பருக்கு கால் பண்ணற?”

“அவங்களோட ரூம்ல இருக்குற ஃபிக்ஸ்டு லைன் நம்பரை தான் நளினி குடுத்தா.
அதுக்கு தான் கால் பண்ணப் போறேன்.”

“அது தானே மொபைல்ல கார்ல விட்டுட்டேன் சொன்னவ எப்படி நம்பர் குடுத்திருக்க முடியும்னு ஒரு செகண்ட் யோசனை வந்தது.”

“ஆமாம் ஆமாம் மொபைல விட்டா பேசறதுக்கு ஃபிக்ஸ்டு லைன் இருக்குங்கறதையே நிறைய பேரு மறந்திட்டா என்ன பண்ண?
மொபைல் நம்மள அப்படி அதுக்குள்ளயே கட்டிப் போட்டிருக்கு.”

“சரி சரி நீ இப்போ ஃபோன் பண்ணி கேளு.”

“ஆங் ரிங் போறது.
ஹலோ நளினி.
நான் தான் சக்தி பேசறேன்.
உங்களை இன்னைக்கு காலையில வந்து பார்த்தேனே!
வசுவோட பிரெண்ட்.”

“சக்தி… சக்தி… சக்தி…”

“நளினி! நளினி!
என்ன ஆச்சு?
ஏன் உங்க குரல் ஒரு மாதிரி இருக்கு?”

“சக்தி…காப்பா…த்…து…ங்க…ஆ!”

என்ற அலறல் சத்தம் கேட்டதும் தன் காதோடு வைத்திருந்த ஃபோனை சற்று தூரமாக பிடித்துக் கொண்ட சக்தி உறைந்து நின்றிருந்தாள்

“தி…தி…தி…
என்ன ஆச்சு?
ஏதாவது பேசு தி…
அந்த ஃபோனை குடு…
ஹலோ மிஸ் நளினி…
என்ன இது ஃபோன் கட்டாகியிருக்கு?
தி…தி…
கம் ஆன் தி…
பேசு.
என்ன ஆச்சு?
இரு இரு…இதோ வரேன்.
ஆங் இந்தா மொதல்ல இந்த தண்ணிய குடி.”

என்று சக்திக்கு தண்ணீர் குடுத்து அவளை ஆசுவாசப்படுத்தினான் விஷால். ஆனாலும் அவள் பதற்றமாகவே இருந்தாள்.

“தி…ஜஸ்ட் ரிலாக்ஸ்…
டேக் எ டீப் பிரெத்…
இப்போ சொல்லு என்ன ஆச்சு?”

“வி…வி…நாம நளினி ரூமுக்கு போகலாம்னு சொன்னேனில்லையா!
நாம போயிருந்தா அந்த பொண்ண காப்பாத்திருக்கலாம்.”

“சரி இப்போ அந்த பொண்ணுக்கு என்ன ஆச்சாம்?”

“ஐ திங்க்…ஐ திங்க்…
அவளை யாரோ கொன்னுட்டா!”

“வாட்?
என்ன உளர்ர தி!”

“இல்ல வி…
அவங்க என் கூட பேசு போது அங்க வேற யாரோ இருந்திருக்கா.
ஏன்னா நளினி குரல்ல நடுக்கமும் பயமும் இருந்தது.
அவ திக்கி திக்கி தான் பேசினா.
கடைசியில் ஆ ன்னு ஒரு அலறல் சத்தம் கேட்டது அவ்வளவு தான் ஃபோன் கால் கட்டாகிடுத்து.”

“இரு இதை உடனே நான் ஜேம்ஸுக்கு இன்ஃபார்ம் பண்ணிடறேன்.
அதுக்கப்புறம் நாமும் நளினி ரூமுக்கு போவோம்.
ஆங்…இட்ஸ் ரிங்கிங்…
ஹாய் ஜேம்ஸ்…”

என்று நடந்தவற்றை ஜேம்ஸிடம் விளக்கிக் கூறினான் விஷால். அதை கேட்ட ஜேம்ஸ்…

“அப்படியா!
ஓ மை காட்!
சரி சரி நான் அந்த நளினி ரூம் இருக்குற அந்த ஹாஸ்பிடல் ஸ்டாஃப் அப்பார்ட்மெண்ட்டுக்கு இப்பவே போறேன்.”

என்று விஷாலிடம் கூறிவிட்டு தனது மேலதிகாரியான எட்வார்ட் கிள்பர்ட்டிடம் விரைந்து சென்று விளக்க முயன்ற போது அவர்

“என்ன ஜேம்ஸ்!
நீங்க இவ்வளவு நேரம் இங்க நம்ம பக்கத்துல இருக்குற டிராஃபிக் போலிஸ் டிப்பார்ட்மென்ட்டுல இருந்தீங்க.
அது எப்படி அந்த ஹாஸ்பிடல் ஸாடாஃப் தங்குற அப்பார்ட்மெண்ட்ல கொலை நடந்திருக்குன்னு சொல்லறீங்க?
இன்னும் எந்த போலிஸ் ஸ்டேஷனுக்கும் எந்த தகவலும் வந்தா மாதிரி தெரியலையே!!”

என்று அவர் கூறிக்கொண்டிருக்கும் போதே அவரின் தொலைபேசி மணி ஒலித்தது. அதை எடுத்து மறுபக்கத்திலிருந்து வந்த செய்தியை கேட்டதும் அமைதியாக

“ம்…ப்ரொசீட்.
நம்ம ஜேம்ஸும் ஸ்பாட்டுக்கு வருவார்.
ம்…”

என்று கூறி ஃபோனை வைத்தவர் ஜேம்ஸை பார்த்து

“என்ன ஆச்சு ஜேம்ஸ்?
அது எப்படி உங்களுக்கு முதலில் தெரிய வந்தது?”

“சார் அதை சொல்ல தான் நான் வந்தேன்.
இது ஒரு வித்தியாசமான கேஸாக இருக்கிறது.
நான் கொலை நடந்துள்ள ஸ்பாட்டுக்கு போயிட்டு வந்து உங்களுக்கு விளக்கி சொல்லவா!”

“ம்…ஓகே ஓகே.
நீங்க மொதல்ல அங்க போங்க.
அங்க என்ன ஏதுன்னு பார்த்ததுட்டு வந்து…எல்லாத்தையும் விவரமா சொல்லுங்க.”

“ஓகே சார்.
ஐ வில் டூ”

என்று கூறிவிட்டு நேராக நளினியின் ரூமிருக்கும் இடத்திற்கு சென்றான் ஜேம்ஸ். அதே நேரம் சக்தியும் விஷாலும் சக்தி வீட்டிலிருந்து அதே இடம் செல்ல புறப்பட்டனர்.

ஜேம்ஸ் முதலில் சென்றான். அவன் பின்னாலேயே சக்தியும் விஷாலும் அங்கு சென்றார்கள். சக்தி வேகமாக நளினியின் ரூமிற்கு சென்றாள். அங்கே போலிஸ் அவளை உள்ளே அனுமதிக்கவில்லை. ஜேம்ஸ் அவளிடம்

“சக்தி அன்ட் விஷால் நீங்க ரெண்டு பேரும் கீழே வெயிட் பண்ணுங்க நான் பார்த்துட்டு என்ன ஏதுங்கற விவரத்தை சொல்லறேன்.”

“ஜேம்ஸ் அந்த பொண்ணோட முகத்த ஒரே ஒரு தடவ பார்த்துட்டுப் போனேனே ப்ளீஸ்.”

“இல்ல சக்தி அது முடியாது.
சில ப்ரோட்டோகால்ஸ் இருக்கு.
உங்களை இப்போ உள்ளே விட மாட்டாங்க.
விடவும் கூடாது. தயவுசெய்து புரிஞ்சுக்கோங்க.
எல்லாம் முடிஞ்சு பாடியை போஸ்ட்மார்ட்டம் பண்ணி ஒப்படைக்கும் போது தான் நீங்க பார்க்க முடியும். டேய் விஷால் இவங்கள கூட்டிட்டு கீழே போ.
நான் கொஞ்ச நேரத்துல கீழ வரேன்.”

“ப்ளீஸ் தி..‌.
வா நாம் ஜேம்ஸ் சொல்லற படி கீழ போய் நிற்போம்.
வா தி…ம்…வா”

என்று கண்களில் கண்ணீருடன் நளினி ரூமின் வாசலிலேயே நின்றிருந்த சக்தியை அழைத்துக் கொண்டு அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் கீழே சென்று ஒரு மரத்தடியில் இருவருமாக நின்றுக் கொண்டனர். அப்போது விஷால் சக்தியிடம்

“ஏய் சக்தி! இன்னும் அரைமணி நேரத்துல நீ ஆஃபிஸ் போகணும்.”

“ஓ! ஆமாம். நான் லீவுனு மெஸேஜ் அனுப்பிடறேன்.”

“சரி அதை செய்.”

“ம்…அனுப்பிட்டேன் வி.
என்னை நினைச்சா எனக்கே கோபம் வருது வி.”

“நீ என்ன செஞ்ச?”

“பின்ன என்னால் தானே இத்தனை பேருக்கு பிரச்சினை.
நான் அந்த ஹாஸ்பிடலுக்கு போனதால் தானே அந்த நர்ஸ் இப்போ ஐசியூ ல இருக்கா.
நான் இந்த நளினியை பார்க்க வந்ததால் தானே அவளும் இதோ இப்படி இறந்து போயிட்டா!
நான் வசுந்தராகிட்ட பிளட் டெஸ்ட் எடுத்ததால தானே அவளும் காணாமல் போயிருக்கா!
ஸோ எல்லாமே என்னால் தானே!
இதை எல்லாம் நினைக்க நினைக்க எனக்கு என் மேல் கோபமும் ஆத்திரமும் தான் வருது வி.”

“இதுக்கும் உனக்கும் நீ நினைக்கிற மாதிரியான சம்மந்தம் இல்ல…
ஆமாம் உன்ன சுத்தி ஏதோ ஒரு வலை பின்னப்படுதுங்கறது என்னவோ உண்மைதான்.
ஆனா அதுக்கு நீயே நீதான் காரணம்னு சொல்லிக்கறதை முதல்ல நிப்பாட்டு சரியா.”

“என்ன தான் சொன்னாலும் என்னால் ஒரு உயிர் போயிருக்குன்னு நினைக்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு வி.”

“இட்ஸ் ஓகே! என்ன நீயா கொலை பண்ணின?”

“நான் நேரடியா பண்ணலைனாலும் இதுக்கு நானும் ஒரு காரணமாகிட்டேனேன்னு நினைக்கும் போது தான் எனக்கு…”

“இதோ ஜேம்ஸ் வந்துட்டான்.
வா ஜேம்ஸ் என்ன ஆச்சு?”

“அந்த பொண்ணு டெலிபோன் கேபிளால கழுத்தை நெரிச்சு கொலை செய்யப்பட்டிருக்கா.”

“அய்யோ! அப்ப அவ என் கிட்ட பேசும் போது தான் அது நடந்திருக்கு.
கடவுளே.”

“ஆமாம் அதுனால தான் உங்களுக்கு அவங்களோட அலறல் சத்தம் பாதியா கேட்டிருக்கு”

“ஐயோ! பாவமே!
கடைசியா என்கிட்ட சக்தி காப்பாத்துங்கன்னு அந்த பொண்ணு சொன்னாளே!!!”

“சக்தி உங்களோட அவங்க பேசிய போது உங்களுக்கு வேற ஏதாவது குரல் அல்லது சத்தம் கேட்டுதா?
கொஞ்சம் நல்லா யோசிச்சு சொல்லுங்க சக்தி ப்ளீஸ்”

“ம்…இல்ல ஜேம்ஸ்.
இன்னமும் அந்த பொண்ணோட ஆ ன்னு அலறல் சத்தம் தான் கேட்குது.
அதை தவிர வேறெதுவும் எனக்கு கேட்கலை.”

“ம்…”

“இதை செஞ்சது யாரா இருக்கும் ஜேம்ஸ்?”

“நம்ம சக்தியை ஃபாலோ பண்ணுறவங்களா இருக்கலாம்.
இல்ல வேற யாராவதா இருக்கலாம்.
பார்ப்போம் இன்வெஸ்ட்டிகேஷன் முடிஞ்சா தான் ஒரு க்ளியர் பிக்சர் தெரிய வரும்.
லெட் அஸ் வெயிட் அன்ட் வாட்ச்”

“ம்…அதுவும் சரிதான் ஜேம்ஸ்.
சரி நீ ஏதோ டிராஃபிக் போலிஸ் டிப்பார்ட்மெண்ட்டுலேந்து சக்திக்கு கால் பண்ணி நளினி சொன்னதெல்லாம் சரியான தகவல் தானான்னு கேட்டியே அது ஏன்?”

“அது வந்து விஷால்…”

“மிஸ்டர் ஜேம்ஸ் உங்க மொபைலுக்கு மிஸ்டர் கிள்பர்ட் கால் பண்ணினாறாம்‌.
நீங்க எடுக்கலைமாம்.
உடனே உங்கள அவருக்கு கால் பண்ண சொன்னார்.”

“ம்…ஓ! ஆமாம்.
என் ஃபோன் சைலென்ட் ல இருந்ததால் கவனிக்கல.
இதோ உடனே பண்ணறேன்.
சரி விஷால் அன்ட் சக்தி நீங்க இங்க நிற்க வேண்டாம் வீட்டுக்கு போங்க.
நான் இங்க ஃபார்மாலிட்டிஸ் எல்லாத்தையும் முடிச்சிட்டு… சக்தி… உங்க ஆஃபிஸுக்கு வரேன்.
பை டேக் கேர்.”

“ஓகே டா பை.
சக்தி நாம இங்கேந்து கிளம்புவோமா?”

என்று விஷால் கூறிக்கொண்டே சிலை போல் நின்றிருந்த சக்தியை காரில் அமரவைத்து. அவள் கையிலிருந்த கார் சாவியை எடுத்து காரை ஸ்டார்ட் செய்தான்.

தன்னை பின்தொடர்பவர்கள் நளினியை கொலை செய்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று ஜேம்ஸ் கூறியதைக் கேட்ட சக்தி அப்படியே சிலை போல் நின்றவள் விஷால் காரை ஸ்டார்ட் செய்த சப்தம் கேட்டதும் சுயநினைவுக்கு வந்தாள்.

தொடர்வாள்…

“நளினி ரூம்ல அவ மட்டும் தான் இருந்தா.
அவ தனியா தான் இருந்தா.
அங்க வசுந்தரா இருக்கலை.”

“சரி நளினி ரூமுக்கு நீங்க போனீங்க. அவங்க தனியா தான் இருந்தாங்க. ஓகே.
அங்க வேற என்ன நடந்ததுன்னு சொல்லுங்க சக்தி.”

“வசுந்தரா அவளோட ஆஃப்டர்னூன் ஷிப்ட் முடிச்சிட்டு வீட்டுக்கு கிளம்பும் போது நளினியும் அவ ரூமுக்கு கிளம்பியிருக்கா.
அப்போ வசுந்தரா நளினியை அவ கார்ல ஏற சொல்லிருக்கா.
நளினியும் ஏறியிருக்கா.
இரண்டு பேரும் பாட்டுக் கேட்டுக்கிட்டும், பேசிக்கிட்டும் போனதுல…போனதுல…”

“போனதுல என்ன ஆச்சு.
ஏன் தயங்கறீங்க சக்தி சொல்லுங்க.
என்ன ஆச்சு?”

“நான் சொல்லுவேன்.
ஆனா நீங்க அதுக்கப்புறம் அந்த பொண்ணு நளினியை தொந்தரவு செய்யக் கூடாது.
ஏன்னா நான் அவளுக்கு வாக்கு குடுத்திருக்கேன்.”

“ஐயோ! சரி தொந்தரவு பண்ண மாட்டேன்.
தயவுசெய்து சொல்லுங்க சக்தி.”

“அவங்க கார் ஏதோ ஒரு ஜீப்பில மோதியிருக்கு”

“அப்புறம்?”

“உடனே வசுந்தரா அதிர்ச்சியில மயக்கமாகியிருக்கா.
ஆனா சுயநினைவுல இருந்த நளினி வசுந்தரா உயிரோடு இருக்காளான்னு செக் பண்ணி அதை ஊர்ஜிதப் படுத்திண்டதுக்கப்புறமா ஹாஸ்பிடலுக்கு கால் பண்ண தன்னோடு மொபைலை தேடியிருக்கா. அது எங்கயோ தெரிச்சுப் போய் இருக்கு. அவளால கண்டுபிடிக்க முடியலை. உடனே காரிலிருந்து இறங்கியிருக்கா.
நேரா அந்த ஜீப்பு கிட்ட போயி டிரைவர் சீட்டை பார்த்திருக்கா.
அப்போ காரோட பின்னாடி சீட்டுலேந்து யாரோ ஒருத்தர் நளினியை கட்டையால் அடிக்க முயற்சி செய்திருக்கான்.
ஆனா அவன் கிட்டேந்து தப்பிச்ச நளினி வேகமா ஓடி நேரா அவ ரூமுக்கு போய் கதவை அடைச்சிட்டு உட்கார்ந்தவ நான் போய் தட்டியதும் தான் கதவைத் தொறந்திருக்கா.”

“நளினிக்கு டிரைவர் சீட்டுல யாரிருந்தான்னு தெரிஞ்சுதா?
அவங்களை கட்டையால் அடிக்க வந்தவனை அடையாளம் பார்த்தாங்களா?
எந்த இடத்தில் இது நடந்ததாம்?
எத்தனை மணிக்கு நடந்துதாம்?”

“அச்சச்சோ எவ்வளவு கேள்விகள்?”

“ஆமாம் சக்தி.
உங்க கேஸ் எனக்கு பெரிய சவாலா இருக்குமோன்னு தோணுது.
அதுனால உங்க விஷயத்துல ஏதாவது ஒரு க்ளூ கிடைத்திடாதான்னு தேடுற எனக்கு
இந்த நர்ஸ் நளினி இருட்டுல தெரியும் ஒரு சிறு வெளிச்சம் போல இருக்க மாட்டாங்களான்னு ஒரு எதிர்பார்ப்பு தான்.
அதுதான் கேட்கிறேன்.
கொஞ்சம் யோசிச்சு கரெக்ட்டா சொல்லுங்க சக்தி”

“எனக்கும் புரியுது ஜேம்ஸ்.
ஆனா நீங்க கேட்ட கேள்விகள்ல நான் அவகிட்ட கேட்டது எந்த இடத்தில் அன்ட் எத்தனை மணிக்கு? இந்த ரெண்டு கேள்விகள் தான்.”

“சரி அதுக்கு என்ன பதில் சொன்னாங்க?”

“ஒரு பத்து மணியளவுல அவங்க ஹாஸ்பிடல் ஸ்டாஃப் அப்பார்ட்மெண்ட்டுலேந்து ஒரு ஐநூறு அடி முன்னாடி நடந்ததுன்னு நளினி சொன்னா.”

“ம்…மொதல்ல அந்த நேரத்துல அங்கிருந்த சிசிடிவிகளை எல்லாம் செக் பண்ண சொல்லறேன்.
ஏதாவது ஆக்ஸிடென்ட் கேஸ் ரிஜிஸ்டர் ஆகிருக்கான்னும் விசாரிக்கணும்.”

“என்னடா ஜேம்ஸ் கிணறு தோண்ட பூதம் கிளம்பின கதையா என்னென்னவோ நடக்குது!”

“ம்…இதுல அவங்க டார்கெட் சக்தி தான்னு அவங்கள ஃபாலோ பண்ணற விதத்தில் இருந்து புரியுது.
ஆனா ஏன்? எதுக்கு? யாரு?
சரி சரி நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு ஏதாவது பண்ணுங்க.
நான் டிராஃபிக் டிப்பார்ட்மெண்ட் வரை போயிட்டு அப்படியே சக்தி ஆஃபிஸ் வந்திடறேன்.
சக்தி நீங்களும் அங்க வந்திடுங்க.”

“ம்…ஓகே ஜேம்ஸ்.
நான் கரெக்ட்டா ஒரு ஒன்றரை மணிக்கெல்லாம் ஆஃபீஸ் ல இருப்பேன்.
நீங்க வரலாம்.”

“ம்…நானும் வறதுக்கு அந்த டைம் ஆயிடும்.
சீ யூ இன் யுவர் ஆஃபிஸ்.
பை
பை டா ரோல்ஸ் ராய்ஸ்”

“பை ஜேம்ஸ்”

“ம்….ம்….பை டா போலீஸ்”

“சரி. சிவ பூஜையில் கரடி மாதிரி இவ்வளவு நேரம் இருந்த இம்சை போயாச்சு.
இப்ப சொல்லு தி.”

“எக்ஸ்க்யூஸ் மீ.”

“என்னடா நீ இன்னும் கிளம்பலையா?”

“ம்…என் கூலர்ஸ் விட்டுட்டு போயிட்டேன்.
அதை எடுக்க வந்தேன்.”

“சரி எடுத்துக்கோ”

“இம்சை!!! ம்….
கரடி ம்….
இன்னைக்கு நைட்டு என் வீட்டுப் பக்கம் வந்திடாதே!
சொல்லிட்டேன்.”

“டேய் டேய் டேய்!! ஜேம்ஸ் சும்மா சொல்லிட்டிருந்தேன் டா.”

“நண்பனை பத்தி அவன் இல்லாட்டி என்னென்ன சொல்லுவீங்கன்னு இப்போ புரிஞ்சுக்கிட்டேன் டா.
யப்பா!! நண்பா விஷால்.”

“சரி டா சாரி டா.”

“ம்…அது நண்பனுக்கு அழகு!
ஓகே ஓகே எஞ்சாய் எஞ்சாய்.
பை”

“ஆங் ஆங் பை பை”

“வா வா வி.
உட்காரு.
இது உனக்கு தேவையா?
ஒழுங்கா பேச வேண்டியது தானே”

“போலிஸ்காரன்ங்கறது சரியா தான் இருக்கு இல்ல.
எப்ப, எப்படி, எங்க வருவாங்கன்னே தெரியாது ஆனா வர வண்டிய நேரத்துல கரெக்ட்டா வந்து நிப்பாங்க.”

“ம்…ம்…”

“ஏய் தி.
ஏன் ஏதோ மாதிரி இருக்க?”

“இந்த ஜேம்ஸ் வந்ததால நிறைய முடிச்சுகள் வெளிய தெரிய ஆரம்பிச்சிருக்கு வி.
என்னை சுத்தி எனக்கே தெரியாம நிறைய முடிச்சுகள் போடப்பட்டிருக்கு.
போடறவங்க யாரு?
ஏன் போடுறாங்க?
என்ட்ட என்ன இருக்கு?
என்கிட்டேந்து என்ன எதிர்பார்க்கறாங்க?”

“அதைப் பத்தி எல்லாம் நீ ஏன் யோசிக்கிற? கவலைப்படற?
அதெல்லாம் ஜேம்ஸ் பார்த்துப்பான்.”

“எல்லாம் உன்னைப் பார்க்க பாரிஸ் வந்ததுலேந்து தான் இப்படி எல்லாம் நடக்குது.
இதுக்கு நான் அங்க வராமலே இருந்திருக்கலாம்.
இல்ல இப்போ மாதிரி நீயே அப்போவும் வந்திருக்கலாம்.”

“என்ன நீ இப்படி பேசுற தி?”

“பின்ன என்ன வி?
யோசிச்சுப் பாரு என்னைக்கு உன்னைப் பார்க்க பாரிஸுக்கு கிளம்பினேனோ அன்னேலேந்து தானே என் வாழ்க்கையில் என்னென்னவோ நடக்க ஆரம்பிச்சிருக்கு!
உன்னால இல்லைன்னு சொல்ல முடியுமா சொல்லு!”

“அது என்னவோ உண்மை தான்.
ஆனா நீ இப்படியே யோசிச்சேன்னா அப்புறம் இப்போ என்னைப் பார்க்க வந்ததாலன்னு சொல்லற நீ நாளைக்கே உன்னால தான் என்னை சொல்லாம இருந்தா சரி.”

“அது எப்படி வி சொல்லுவேன்!”

“அப்பாடா.
அது போதும்.
நன்றிமா உனக்கு நன்றி”

“அதுக்கில்ல இப்படி எல்லாம் பண்ணறதுக்கு மூளை வேணுமே!
அதுனால தான் அப்படி சொன்னேன்.”

“என்னது?
சொல்லுமா சொல்லு.
என்ன வேணும்னாலும் சொல்லு.
சரி இந்த கேஸு கீஸூ எல்லாம் சரி கிஸ்ஸுன்னு ஒண்ணு இருக்குங்கறது உனக்கு தெரியுமா?”

“அட அட அட!!
கேஸூ கீஸூ கிஸ்ஸு!!
என்ன வார்த்தை ஜாலம்.
நீ எப்படி?
எப்போலேந்து இப்படியெல்லாம்?”

“கிண்டலா?”

“இல்ல சுண்டல்.”

“சரி சரி… என்ன?
நீ ஆஃபிஸ் போற வரைக்கும் இங்கேயே உட்கார போறோமா?”

“இல்ல இல்ல!
அதுக்கு இன்னும் இரண்டு மணி நேரமிருக்கே!”

“அதுவரைக்கும் என்ன பண்ணலாம்?”

“வா என் வீட்டுக்கு போகலாம்.”

“ஐயோ! உன் வீட்டுக்கா?
அப்புறம் உன் பாலிஸி, பிரின்ஸிப்பிளுக்கு எல்லாம் பங்கம் வந்திடுமே!”

“ஹலோ!
அது நைட் ஸ்டேக்கு தான் சொன்னேன்.
நான் போகப் போறேன்.
நீ வறயா இல்லையா?”

“ம்…ம்…காலையில் ஒரு பாலிஸி…
மாலையில் ஒரு பாலிஸி…
விளங்க முடியா மங்கை நீ தி”

“ஆமாம் ஆமாம்.
இப்படி எல்லாம் பேசினா கமல்ஹாசனா ஆயிட முடியுமா?”

“அச்சச்சோ! சும்மா ஏதோ தோனினத சொன்னேன் அவ்வளவு தான்.
ஏய் தி…தி…தி…இரு வந்துட்டேன்.
தாங்க்ஸ் மிஸ்டர் வில்யம்ஸ் பை.
ஹாவ் எ நைஸ் டே”

“யூ டூ சார்.
பை”

“ஏய் தி நில்லு நில்லுன்னு சொல்லிண்டே வரேன்…
கண்டுக்காம போற!
சரி இப்போ நான் என் கார்ல வரணுமா இல்ல உன் கார்லயே போகலாமா?”

“என் காரிலேயே போகலாம் வி.
என் ஆஃபிஸுக்கு போகும் போது அப்படியே இங்க வந்து உங்க காரை எடுத்துண்டு நீங்க பாரிஸ் போகலாம்.
இந்த லீ கார்னர் என் வீட்டிலேந்து என் ஆஃபிஸ் போற வழியில் தான் இருக்கு.”

“ஓ! ஓகே ஓகே. அப்போ சரி.
பூட்டிட்டேன். ம்…போகலாம்.”

“எனக்கு யாரு எதிரி?
ஜேம்ஸ் சொன்னா மாதிரி என்னை யாரு டார்கெட் பண்ணறது?
ஒரே கொழப்பமா இருக்கு வி.”

“ஏய் தி.
நீ ஏன் அனாவசியமா உன்னை நீயே கொழப்பிக்கற?”

“எப்படி கொழம்பாம இருக்க முடியும் வி?”

“அதை எல்லாம் பார்த்துக்க தான் ஜேம்ஸ் இருக்கான்.
அவன் பாத்துப்பான்.
இதை எல்லாம் நினைச்சு நீ இப்படி கவலைப் பட வேண்டிய அவசியமே இல்லை தி.
ஜஸ்ட் ச்சில் அன்ட் ரிலாக்ஸ்.
பட் கொஞ்சம் ஜாக்கிரதையா இரு.
தட்ஸ் ஆல்.”

“ம்…ம்…ஓகே ஓகே!
அப்பா அம்மாக்கு வேற கால் பண்ணணும்.
அவா காலேலேந்து இரண்டு தடவை கால் பண்ணட்டா.”

“எதுக்கு கால பண்ணிருக்கா?”

“வேற எதுக்கு?
என்னாச்சு ஏதாச்சு?
நேத்து வேற உன் கசினுக்கு ஆக்ஸிடென்ட் ன்னு சொல்லிருக்கோமா!
அதைப் பத்தி கேட்க…
அவாளுக்கு என் கிட்ட கேட்க ஏதாவது கேள்வி இருந்துண்டே தான் இருக்கும்.
ஆத்துக்கு போனதும் கால் பண்ணணும்.
சரி வி. எப்ப மறுபடியும் உன் பேரன்ட்ஸ் கிட்ட நான் பேசறது?”

“நானும் அவாகிட்ட பேசி குரு எப்படி இருக்கான்னு கேட்கணும்.
அப்படியே இன்னைக்கு பேசலாமான்னும் கேட்கிறேன்.”

“ம்…ஓகே.
வீடு வந்தாச்சு.
இறங்கலாமா?”

“இப்ப ஏன் யாருமே இல்லாத தெருவுல, உன் வீட்டு வாசல் ல ஹாரன் அடிச்ச?”

“தெரியாம கை பட்டு டுத்து.”

“ஓ சரி சரி!!”

“ம் வா வி வா வா.
வீட்டை திறக்கிறேன் வா.”

“சரி தொற…அதுக்கு ஏன் அனௌன்ஸ் பண்ணற?
உனக்கு என்ன ஆச்சு தி?
ஏன் திடீர்னு ஒரு மாதிரி நடந்துக்கற?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லையே வி.
நீ உள்ள வாயேன்.
நான் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்.”

“சர்ப்ரைஸா!
என்னடா இது? உலகமகா அதிசயமா இருக்கு!
உன்னை அந்த லீ கார்னர் ப்ரேக் ஃபாஸ்ட் என்னமோ செய்துடுத்து!!”

“உட்காரு வி.
லெட் மீ கெட் யூ சம் ஆரஞ்சு ஜூஸ்”

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் தி.
அது தான் ஹோட்டல்ல நல்லா சாப்பிட்டுட்டு தானே வந்திருக்கோம் அப்புறம் என்ன?
வா வந்து நீயும் உட்காரு.”

“அப்ப சரி.
ம்…சொல்லு.
இன்னும் ஒன்றரை மணி நேரமிருக்கு
என்ன பண்ணலாம்?”

“என்ன பண்ணலாமா?
அட போ தி!”

“ஏய்!!”

“சரி சரி என்னமோ சர்ப்ரைஸ் வச்சிருக்கன்னு சொன்னியே!
என்ன அது?”

“அதுவா! அது வந்து! அது வந்து!”

“என்ன அது வந்து அது வந்துன்னு சொல்லிண்டே நீ எங்கயோ எழுந்து போற?”

“ம்…அதுக்கு முன்னாடி நான் உன்கிட்ட ஒண்ணு கேட்கணுமே!”

“ம்..என்ன கேளு!”

“ஆங்…ஓகே…அது வந்து….
ஊப்ஸ் என் மொபைல் வைப்ரேட் ஆகறது…
ஓ ஜேம்ஸ் தான் கூப்பிடறார்.
இரு வி அட்டென்ட் பண்ணிட்டு சொல்லறேன்.”

“கரடி கரடி”

“ஆங் என்ன சொன்ன வி?”

“ஒண்ணுமில்லையே! நீ பேசு”

“ஆங்! சொல்லுங்க ஜேம்ஸ்.”

“சக்தி நான் டிராஃபிக் போலிஸ் டிப்பார்ட்மென்ட்டுலேந்து தான் பேசறேன்”

“ஆங் ஆமாம் அங்க போறதா தானே செல்லிட்டுப் போனீங்க.
சொல்லுங்க என்ன ஆச்சு?
ஏதாவது க்ளூ கிடைச்சுதா?”

“என்ன தி?
என்ன ஆச்சாம்?”

ஃபோனை கைகளால் மறைத்துக் கொண்ட சக்தி விஷாலிடம்

“தெரியலையே!
அவர் அங்கே யார் கூடவோ பேசிட்டே என்கிட்ட பேசறார்.
இரு அவர் இன்னும் சொல்லலை.
ஆங் ஜேம்ஸ் இருக்கேன் சொல்லுங்க”

“நீங்க நர்ஸ் நளினி சொன்னதா சொன்ன நேரம் இடம் கரெகட்டான இன்ஃபர்மேஷன் தானே?”

“ஏன் கேட்கறீங்க?
எல்லாமே அவ சொன்னதை தான் அப்படியே நானும் உங்க கிட்ட சொன்னேன்.”

“ம்…ஓகே ஆஃபிஸ் ல சந்திப்போம்”

“ஏன் என்ன ஆச்சு ஜேம்ஸ்?”

“நாம மீட் பண்ணும் போது சொல்லறேன் சக்தி.
இப்போ நான் இன்னொரு முக்கியமான இடத்துக்கு போக வேண்டியிருக்கு.
பை.”

“ஓகே பை ஜேம்ஸ்.”

“என்னவாம் அவனுக்கு?
என்ன சொல்றான்?”

“அவரு நளினி என்கிட்ட சொன்னதெல்லாம் சரியான தகவல் தானான்னு கேட்டார்.”

“சரி”

“நானும் சரியான இன்ஃபர்மேஷன் தான்னு சொன்னேன்.
சரி ஆஃபிஸ் ல சந்திக்கும் போது விவரங்களை சொல்லறேன்னு சொல்லி ஃபோனை வச்சுட்டார்.”

தொடர்வாள்…

“மகேஷ் நேரமாயிடுச்சு பா. கிளம்பலாமா”

“ஏய் கீதா எல்லாத்தையும் எடுத்துக்கிட்டயா?”

“ஆங் ஆங்!”

“பாஸ்போர்ட்?”

“ஆங்.”

“கோவிட் டாக்யூமென்ட்ஸ்”

“ஆங்”

“சரி சரி பத்திரமா போயிட்டு வா.
நான் நம்ம சுட்டியை நல்லா பார்த்துக்கறேன்”

“அம்மா நானும் அப்பாவும் சமத்தா இருப்போம் மா. நீ காலேஜுக்குப் போயிட்டு வா மா”

“சரிடா கண்ணா.
உம்ம்மா…
ஓகே மகேஷ் நான் போயிட்டு வரட்டா.”

“ஓகே கீதா. ஒன்ஸ் அகேயின் கங்ராட்ஸ் அன்ட் ஹாவ் எ சேஃப் டிராவல்”

“தாங்க்யூ மகேஷ்”

“என்ன கண்ணனுக்கு மட்டும் தானா எனக்கில்லையா?”

“அச்சச்சோ பாரு கண்ணா உன் அப்பாவ!
சரி அப்பாக்கும் குடுத்திடட்டுமா?”

“ம்…சரிமா. அப்பாவும் பாவம் தானே. குடுத்துட்டுப் போ”

“சரி நம்ம பையன் பர்மிஷன் தந்துட்டான்.
வரேங்களா”

“எல்லாம் என் நேரம்.
இந்த சுண்டெலி பர்மிஷன் எல்லாம் தேவைப்படுதுப்பா.”

“ஹலோ வறேங்களா!
இல்லை நான் பாட்டுக்கு போயிட்டே இருப்பேன்.”

“அப்பா போப்பா”

என்று சுட்டிக் கண்ணன் தன் அப்பாவைத் தள்ளிவிட மகேஷ் கீதா மீது சாய இருவரும் அன்பைப் பரிமாறிக் கொண்டனர். சட்டென கீதா விலகி

“மகேஷ் ஃப்ளைட்டுக்கு நேரமாச்சு. இப்படியே நின்னுட்டிருந்தா அப்புறம் ஃப்ளைட்டை மிஸ் பண்ணிடுவேன்”

“ஊப்ஸ்!
சரி சரி பத்திரமா போய்ட்டு சீக்கிரமா வா”

“இதையே எத்தனைத் தடவை சொல்லுவீங்க?
வாங்க ரெண்டு பேருமா என்னை ஏர்போர்ட்டில் ட்ராப் பண்ணிட்டு ஊர் சுத்த கிளம்பிக்கோங்க”

“ம்….ஓகே கண்ணா.
நாம போய் அம்மாவ ஃப்ளைட் ஏத்தி விட்டுட்டு வருவோமா?”

“எஸ் அப்பா.
போகலாம்.”

என்று மூவரும் காரில் ஏறினர். மகேஷ் காரை ஓட்டிச்சென்று லாஸ் ஏஞ்சல்ஸ் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் சென்றான். கீதாவை இறக்கி விட்டுவிட்டு அவளுக்கு கையசைத்து பறக்கும் முத்தங்களை வாரி வழங்கிவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர் மகேஷும் அவன் மகன் கண்ணனும்.

கீதா ஏர்போர்ட் சம்பிரதாயங்கள் அனைத்தையும் முடித்து விட்டு அங்கிருந்த ஒரு காஃபி ஷாப்பில் ஒரு காஃபி வாங்கி அதை கையில் வைத்துக் கொண்டு விமானத்தில் ஏறுவதற்காக அதற்குண்டான வாயிலின் அருகேயிருந்த ஒரு சோஃபாவில் அமர்ந்து மெல்ல ரசித்துக் குடித்தாள். காஃபி தீரவும் விமானத்தில் ஏறுவதற்கான அழைப்பு வரவும் சரியாக இருந்தது. விமானத்திற்குள் தனது ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துக்கொண்டாள். தரையிலிருந்து வானில் விமானம் பறந்து அமெரிக்க மண்ணை மெல்ல கடந்து அட்லாண்டிக் பெருங்கடல் மீது சென்றுக் கொண்டிருந்தது.

அப்போது கீதா அங்கிருந்த விமானப் பணிப்பெண்ணிடம் தன்னை எதற்கும் தொந்தரவு செய்ய வேண்டாமென்றும் தனக்கு ஏதாவது தேவை என்றால் தானே வந்து கேட்டு வாங்கிக்கொள்வதாகவும் கூறிவிட்டு விமானத்தில் கொடுத்த கம்பளியை நன்கு சுற்றிக்கொண்டு மெல்ல ஜன்னலில் சாய்ந்தாள். விடியற் காலையில் எழுந்ததால் அவளின் கண்கள் அவள் பேச்சைக் கேட்க மறுத்தன.
மெல்ல அவளது கண்கள் அவளின் அனுமதியின்றி மூடிக்கொண்டன. அவளை அவளின் நினைவலைகள் இழுத்துச் சென்றன.

சிறு வயது முதல் ஒரு பெரிய பதவியில் பணிப்புரிய வேண்டுமென்ற எண்ணம்/ஆசை கீதா மனதிற்குள் இருந்து வந்தது. அதற்காக நன்றாக படித்தாள். பல திறமைகளை வளர்த்துக் கொண்டாள். ஆனால் எதையுமே வெளிக்காட்டிக் கொள்ளாதிருந்திருந்தாள். வெட்கத்தினாலா? இல்லை அடுத்தவர்கள் ஏதாவது கூறிவிடுவார்களோ என்ற அச்சத்தினாலா? என்று அவளுக்கே தெரியாதிருந்த பள்ளி மற்றும் கல்லூரி காலம் அது. வணிகவியல் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருந்த சமயம்…ஒரு நாள் கல்லூரி வணிகவியல் துறைத் தலைவர் கீதாவை அழைத்ததாக அவள் தோழி லதா சொன்னதைக் கேட்டதும் கீதாவின் மனதிற்குள் பயம் அப்பிக்கொண்டது.

“நான் எந்த தவறும் செய்யவில்லையே பின்பு ஏன் என்னை வர சொல்லியிருப்பார்?”

என்று தனக்குத் தானே கேட்டுக்கொண்டாள். கல்லூரி மாணவ மாணவிகளை துறைத் தலைவர் அவர் அறைக்கு அழைக்கிறார் என்றால் ஏதோ நன்றாக திட்டு வாங்கப் போகிறோம் என்று தான் முதலில் அவர்கள் மனதில் தோன்றும். (அந்த காலத்தில்) அதே போல கீதாவுக்கும் தோன்றியது. ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாது உடனே ஆசிரியர்கள் அமர்ந்திருக்கும் அறைக்குச் சென்று கதவை தட்டி உள்ளே வரலாமா என்று கேட்டு நின்றாள். உள்ளே வாருங்கள் என்ற கம்பீரக் குரல் ஒன்று ஒலித்தது. அது தான் அவளின் வணிகவியல் துறைத் தலைமை ஆசிரியையின் குரல். உள்ளே சென்றாள். அவளைக் கண்டதும் ஆசிரியைகள்

“வாழ்த்துக்கள் கீதா.”

என்றனர். திட்டுவதற்காக தன்னை அழைக்கவில்லை என்று மகிழ்வதா இல்லை வாழ்த்தியதற்காக மகிழ்வதா என்ற குழப்பத்திலேயே

“நன்றி மிஸ்.
எதுக்குன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

“நிச்சயமா. அதுக்கு தானே உன்னை வர சொல்லியிருக்கோம். நமது வணிகவியல் கலாச்சார நிகழ்வுகள் செயலாளராக உன்னை நியமித்துள்ளோம்”

என்று அவர் கூறியதைக் கேட்டதும் கீதாவின் மனதிற்குள் மகிழ்ச்சிப் பெருக்கெடுத்து ஓடினாலும் கூடவே பயமும் தொற்றிக் கொண்டதில் கண்கள் குளமாகின. அதைக் கண்ட ஆசிரியை

“ஏய் என்ன ஆச்சு? ஏன் அழற?”

“மிஸ் எனக்கு இந்த பதவி வேண்டாம். என்னால் இதை செய்ய முடியாது. என்னை மன்னியுங்கள்”

“உன்னால் முடியுமா முடியாதா என்று எங்களுக்கு தெரியும்.
நாங்கள் சும்மா உன்னிடம் இந்த பதவியைக் கொடுக்க வில்லை. இரண்டு வருடங்களாக உன்னை நாங்கள் கவனித்துக் கொண்டிருக்கிறோம்.
எல்லா ஆக்டிவிட்டிஸ்லேயும் நல்லா பர்ஃபார்ம் பண்ணிருக்க.
உன்னால் முடியும்ன்னு நாங்க நம்பறோம்.
மேலும் உன்கிட்ட இருக்கிறயான்னு ஆலோசனைக் கேட்கலை…
இருன்னு சொல்லறோம்.
புரிந்ததா.
அடுத்த வாரம் நடக்கவிருக்கும் பதவி ஏற்பு விழாவில் நமது வணிகவியல் துறை சார்பாக நீ பேச வேண்டும். ம்…இப்போது நீ உன் வகுப்பறைக்கு செல்லலாம்.”

“மிஸ்…”

“உன்னை நீ நம்பு.
ம்…அடுத்த வார நிகழ்வுக்கு தயாராக இரு.
இப்போது நீ போகலாம்.”

“நன்றி மிஸ்”

என்று கூறி கண்களில் நீர் வழிய ஆசிரியைகள் அறையிலிருந்து வெளியே வந்த கீதாவைப் பார்த்த அவள் தோழி லதா

” ஏய் கீதா. ஏன் அழுதுகிட்டே வர? என்ன ஆச்சு?”

“என்னை நம்ம டிப்பார்ட்மென்ட் கல்ச்சுரல்ஸ் செக்கரெட்டரியா நியமிச்சிருக்காங்களாம். அடுத்த வாரம் பதவி ஏற்பு விழாவுல நான் நம்ம டிப்பார்ட்மென்ட்டுக்கா பேசணுமாம்”

“சரி அதை சொல்லவா உன்னை அழைச்சாங்க?”

“ஆமாம்”

“நீ தான் சூப்பரா பேசுவியே! அதுக்கு ஏன் அழுதுகிட்டே வெளியே வர?”

“பேசறதைப் பத்தி இல்ல லதா.
என்னால எல்லாம் இந்த பதவி ல எல்லாம் இருந்துகிட்டு… முடியாதுப்பா! அதுதான் பயத்துல கண்ணு கலங்கிடுச்சு.
இது வரைக்கும் நான் அப்படி எல்லாம் எந்த பதவிலேயும் இருந்ததில்லைப்பா.”

“எல்லாரும் எல்லா பதவியிலேயும் இருந்துட்டு தான் பதவி ஏத்துக்கணும்னா அப்புறம் எந்த பதவியும் இருந்திருக்காது.
யாரும் எந்த பதவியும் ஏத்துக்கிட்டிருக்கவும் மாட்டாங்க. எல்லாத்துக்கும் எல்லாருக்கும் முதல் படின்னு ஒண்ணு இருக்கும்.
அதுபோல உன்னோட ஃப்ர்ஸ்ட் ஸ்டெப் இதுன்னு எடுத்துக்கிட்டு மேலே போவியா…
அத விட்டுட்டு பயப்படறாளாமே!
இந்த பதவிக்கு நம்ம டிப்பார்ட்மென்ட்ல எத்தனை பேர் ஆசைப்பட்டுக்கிட்டிருக்காங்கன்னு உனக்கு தெரியுமா.
உன்ன கூப்பிட்டுக் குடுத்திருக்காங்கன்னா உன்கிட்ட ஏதோ ஒரு தனித்திறமை இருக்கறத அவங்க தெரிஞ்சிட்டிருந்திருப்பாங்க. கண்ணைத் துடைச்சிகிட்டு வேலையைப் பாருப்பா”

என்று அன்று கீதாவின் தோழி லதா அவளிடம் கூறியது அவள் மனதில் பச்சைக் குத்தியது போல் பதிந்து விட்டது. மனம் அதை ஏற்றுக் கொள்ள சற்று நேரம் எடுத்துக் கொண்டாலும் இறுதியில் தன்னால் முடியும் என்ற எண்ணம் அவளுக்குள் உதித்தது. சரி என்று ஒப்புக்கொண்டு அந்த ஆண்டில் நடந்த அனைத்து கலாச்சார நிகழ்வுகளையும் தனது கல்லூரி தோழிகளின் உதவியுடன் சிறப்பாக நடத்தி வந்தாள் கீதா.

அந்த ஆண்டில் இந்திய சுதந்திர தின விழாவிற்காக உப்பு சத்தியாகிரகம் பற்றிய ஒரு டாப்ளோ எனப்படும் குறிப்பிடத்தக்க காட்சி படம் ஒன்றை தயார் செய்தாள் கீதா. அதில் நடிப்பதற்கான தோழிகளை அனைவருமாக அமர்ந்து அனைவரோடும் கலந்து பேசி தேர்ந்தெடுத்தாள். அதற்கான நகரும் ஆளுயுர பேனர்களை கீதாவே வடிவமைத்துக் கொடுத்தாள். அதை அனைவருமாக இணைந்து செய்து முடித்தனர். மற்றும் அதற்கான எழுத்து வடிவத்தையும் தயார் செய்தாள். அதை கீதாவும் அவளது உயிர் தோழியுமான லதாவும் திரைக்கு பின்னாலிருந்து காட்சிக்கு தகுந்தாற் போல பேசினர். அது போல ஒரு நிகழ்வை எவருமே அக்கல்லூரியில் செய்து காட்டியதில்லை என்ற விவரம் அன்று தான் கீதாவுக்கும் அவளின் தோழிகளுக்கும் தெரிய வந்தது. அவர்களின் வணிகவியல் துறைக்கு பல ஆண்டுகளுக்கு பின் பரிசு கிடைத்தது.

அந்த நிகழ்ச்சி முடிந்ததும் தலைமை ஆசிரியை அவரது அறைக்கு வரும்மாறு அழைத்தார். கீதாவும் சென்றாள். ஆனால் இம்முறை மனதில் எந்த பயமுமின்றி குழப்பமுமின்றி தெள்ளத் தெளிவான மனதுடன் சென்று அறை கதவை தட்டினாள். மீண்டும் கம்பீர குரலில் உள்ளே வர சொன்னார் துறை தலைமை ஆசிரியை. உள்ளே சென்றவளிடம்

“என்ன உன்னால முடியாதுன்னு சொன்ன! இப்போ எப்படி முடிஞ்சுது? உன்கிட்ட இருக்கும் திறமை எங்களுக்கு தெரிந்ததால் தான் உன்னை தேர்ந்தெடுத்தோம்.
நீ உன் வாழ்வில் இன்னும் நிறைய சந்திக்க வேண்டியிருக்கும்.
உன்னால் முடியும் என்று நீ நம்பினால் போதும் எல்லாம் இனிதே நடந்தேறும்.
நீ கதவை தட்டிய விதத்தில் இருந்தே தெரிகிறது உனக்குள் தெளிவு பிறந்திருக்கிறது என்று.
அதை கெட்டியாக பிடித்துக் கொள் வாழ்வில் பல சாதனைகளை நிகழ்த்து. வாழ்த்துக்கள்.
இப்போது நீ உன் வகுப்பறைக்கு செல்லலாம்.”

“நன்றி மிஸ்.”

என்று மட்டும் கூறினாள் கீதா. வேறெதுவும் கூற வாய் வரவில்லை ஏனெனில் அவள் மனம் முழுவதும் அவரின் வார்த்தைகள் நிறைந்திருந்தது.

மேலும் அந்த ஆண்டின் கல்லூரி இதழில் கீதா மற்றும் அவள் தோழிகள் அறங்கேற்றிய டாப்ளோவான உப்பு சத்தியாக்கிரகம் இதழின் அட்டைப் படமானதைக் கண்டு அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

“ஹேய் கீதா உன்னால முடியாது முடியாதுன்னு வருஷ ஆரம்பத்துல அழுத!
இப்ப என்னடான்னா அந்த இங்லீஷ் டிப்பார்ட்மென்ட்டை வீழ்த்தி நம்ம டிப்பார்ட்மென்ட் ப்ரோகிராம நம்ம கல்லூரி இதழோட அட்டைப் படமா மாத்திட்டயே!
யூ ஆர் ரியலீ க்ரேட் டி.”

“நம்ம கீதாவுக்கு எல்லாரும் ஒரு ஓ போடுங்கப்பா”

“ஓ !!!! ஓ!!!”

அந்த சப்தம் கேட்டதும் விருட்டென எழுந்து சுற்றி முற்றிப் பார்த்த கீதா மெல்ல தன் நெற்றியில் வலது கையால் செல்லமாக தட்டிக்கொண்டே புன்னகைத்தாள். பின் மனதிற்குள்…

“ம்…எல்லாம் இப்போ நடந்தா மாதிரி இருக்கு.”

என்று கூறிக் கொண்டே எழுந்து சென்று வாஷ்ரூம் போய்விட்டு பேன்ட்ரியிலிருந்து சூடா ஒரு கப் காபி மட்டும் வாங்கி அங்கேயே நின்று குடித்துவிட்டு மீண்டும் தன் இருக்கையில் வந்து அமர்ந்து கம்பளியை இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கலானாள்.

கீதாவுக்கே தெரியாதிருந்த அவளது திறமையைத் தெரிந்துக் கொண்டதோடு நின்றிராமல் அதை வெளிக்கொணர்ந்து அவளுக்கே வெளிச்சம் போட்டுக் காட்டி அவளுக்குள் அதுவரை இருந்து வந்த பயம், அச்சம், தயக்கம் ஆகியவைகளை உடைத்தெறிய செய்த அவளது கல்லூரி வணிகவியல் தலைமை ஆசிரியைக்கு கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டாள்.

நமக்குள் இருக்கும் திறமைகளை நாம் தான் வெளி கொண்டு வரவேண்டும். மற்றவர்கள் அதை செய்ய மாட்டார்கள் என்று எண்ணிக்கொண்டு

அதற்கான வழியில் செல்ல தயக்கம் கொண்டு

இடையில் அச்சம் ஆட்கொண்டு

ஊருக்குள் இருக்கும் அந்த நாலு பேர் பற்றி எண்ணி கவலை கொண்டு

மனதில் பயத்தை வளர்த்துக் கொண்டு

திறமைகளை அப்படியே மனமெனும் பாதாள சுரங்கத்திற்குள் வீசி தாழிட்டுக் கொண்டு

ஆட்டு மந்தைக் கூட்டத்தோடு கூட்டமாக கலந்துக் கொண்டு

தலையை ஆட்டிக்கொண்டு
இருந்த நேரத்தில்

கீதாவுக்கு கலங்கரை விளக்கு போல் வழிகாட்டி, அவள் வாழ்வில் ஒளி வீச செய்த அந்த தலைமை ஆசிரியையை சந்திக்க பத்து வருடங்களுக்கு பிறகு
ஒன்றரை நாள் பயணம் மேற்கொண்டு சென்னை விமானநிலையம் சென்றிறங்கினாள்.

நேராக தன் தாய் வீட்டுக்குச் சென்று குளித்து அம்மா கையால் சாப்பிட்டு, நன்றாக உறங்கி மத்தியம் ஒரு இரண்டு மணியளவில் எழுந்து மீண்டும் அம்மா கையால் மத்திய உணவு உண்ட பின் கிளம்பி உறவினர்கள் வீடுகளுக் கெல்லாம் சென்று அங்கு அனைவரோடும் பேசிவிட்டு அவர்களுக்காக வாங்கி வந்ததை எல்லாம் அவரவர்களுக்குக் கொடுத்து மகளாகவும் மருமகளாகவும் தனது கடமைகளை இரண்டே நாட்களில் முடித்து எதற்காக சென்னை சென்றிருந்தாளோ அதற்கான வேலையில் இறங்கினாள் கீதா. மூன்றாவது நாள் விடியற்காலையில் எழுந்து குளித்து தயாராகி காரில் சென்னையிலிருந்து புறப்பட்டு திருச்சி சென்றாள்.

திருச்சியிலிருந்த பெண்கள் கல்லூரி ஒன்றின் வாசலில் கார் சென்று நின்றது. கீதா மெல்ல காரிலிருந்து இறங்கினாள். உடனே எங்கிருந்தோ ஒரு பெண் ஓடி அவளருகே வந்து

“ஹாய் மேம்.
ஐ ஆம் லதா.
தேர்டு இயர் காமர்ஸ் டிப்பார்ட்மென்ட் மேம்.
வெல்கம் டூ அவர் காலேஜ்”

என்று அன்று பூத்த மலர் போல மலர்ந்த முகத்துடன் லதா கீதாவின் கையில் பூச்செண்டை கொடுத்து வரவேற்றாள். லதா என்ற பெயரைக்கேட்டதுமே கீதாவுக்கு ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! பாடல் மனதில் ஒலிக்க ஆரம்பித்தது. பூச்செண்டை வாங்கிக்கொண்டு

“தாங்ஸ் லதா.
என்னுடைய உயிர் தோழி பெயரும் லதா தான்.”

“வாவ் ஈஸ் இட்!”

“எஸ்.
நான் இங்க இப்படி ஒரு நிகழ்ச்சிக்கு முக்கிய விருந்தினரா வந்ததற்கு அவளும் ஒரு காரணம்.”

“அப்படீன்னா நானும் உங்க பிரெண்டா இருக்கலாமா மேம்.”

“ஷுவர் மிஸ். லதா”

என்று இருவரும் பேசிக்கொண்டே அவர்கள் வணிகவியல் துறையை சென்றடைந்தனர். அங்கே கீதா சென்றதும் அவளுக்கு அவளின் கல்லூரி நாட்கள் மீண்டும் ஞாபகம் வந்தது. அப்போது ஆசிரியை அறைக்குள் இருந்து வெளியே வந்த துறை தலைமை ஆசிரியை கீதாவைப் பார்த்ததும்

“ஓ மை சைல்டு!
வெல்கம்.
எப்படி இருக்க மா?
ஐ ஆம் ஸோ ப்ரௌட் ஆஃப் யூ மை கேர்ள்”

என்று கீதாவை அணைத்துக் கொண்டார்.

“மேம் நைஸ் மீட்டிங் யூ.
இட்ஸ் மை ப்ளஷர் மேம்.
என்ன மேம் உங்க கம்பீர குரல் கொஞ்சம் குறைஞ்சிருக்கு!”

“வயசாயிடுச்சு இல்ல மா.
சரி சரி உள்ளே வா.
இந்த இடம் ஞாபகமிருக்கா?”

“ம்…நல்லாவே இருக்கு மேம்.
நான் நின்னு அழுத இடம்.
என் வாழ்க்கையையே மாற்றிய இடம். இந்த ரூம் அப்படியே இருக்கு மேம். “

“ம்…எஸ் மை சைல்டு. ஹாவ் தி காஃபி கீதா”

“தாங்ஸ் மேம்.”

“தென் ஹவ் இஸ் லைஃப்”

“உங்களால ரொம்ப நல்லாவே இருக்கு மேம்.”

“ஏய் எல்லாம் உன்னோடு உழைப்பு உன்னோட திறமை மா.
இதுல நான் என்ன செஞ்சேன்?”

“மேம் என்ன இப்படி சொல்லிட்டீங்க? நீங்க மட்டும் எனக்கு அந்த பதவியை தந்திருக்கலேனா நான் இன்னமும் அச்சத் தோடவே இருந்திருப்பேன்.”

“அப்படி எல்லாம் இல்லமா நான் இல்லாட்டி வேற யாராவது அதை செஞ்சிருப்பாங்க.
அவ்வளவு தான்.
இல்லாட்டி நீயே அதை எல்லாம் உடைத்தெறிந்து வெளிவந்திருப்ப…
சரி சரி நாம நிகழ்ச்சி நடக்குற அரங்குக்கு போகலாமா?
எல்லாரும் காத்துக்கிட்டிருப்பாங்க”

“எஸ் மேம்.”

என்று கல்லூரி காலங்களில் தலைமை ஆசிரியையிடமிருந்து பத்தடி தள்ளி நின்று பேசிய கீதா இன்று அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு அவருடன் அரங்கிற்கு நடந்து சென்றாள்.

அரங்கில் கல்லூரி மாணவிகளும் ஆசிரியைகளும் அமர்ந்திருந்தனர். மேடையில் ஐந்து நாற்காலிகள் போடப்பட்டிருந்தது அதில் கீதாவுக்கென்று தனி இருக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதில் அவளின் பெயரும் எழுதப்பட்டிருந்தது. அதை பார்த்து அவள் மனம் பூரித்து போனது. அவளை அங்கே அமர செய்து விட்டு தலைமை ஆசிரியை மெல்ல நடந்து சென்று அங்கிருந்த ஒலிபெருக்கியில் அனைவரையும் வரவேற்கும் வண்ணம் வரவேற்புரை ஆற்றினார். இறுதியில் அவர்

“நமது இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி சிறப்புற செய்வதற்காக நமது கல்லூரியின் முன்னாள் மாணவியும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் மிகப் பெரிய நிறுவனமான ஏஞ்சல்ஸ் இன்ஃபோடெக்கின் ஃபௌண்டர் அன்ட் சி.ஈ.ஓவுமான திருமதி கீதா கிருஷ்ணகுமார் அவர்களை சிறப்புரையாற்ற அன்போடு அழைக்கிறேன்”

என்று கூறி மெல்ல நடந்து சென்று அவருக்கான இருக்கையில் அமர்ந்தார். கீதா எழுந்து சென்று ஒலிபெருக்கியை சற்று மேலே தன் உயரத்துக்கு ஏற்றார் போல் தூக்கி சரி செய்து தனது உரையை துவங்கினாள்

“அனைவருக்கும் வணக்கம்.
இன்று நான் இங்கு உங்கள் முன் நின்று இப்படி பேசுவதற்கு முழு காரணமும் என் தலைமை ஆசிரியையான திருமதி ஏஞ்சல் டிசோசா அவர்களையே சேரும். ஆம் எனது நிறுவனத்திற்கு அவர் பெயர் தான் வைத்துள்ளேன்.
நம்ம திறமைகளை நாம் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அதே நேரம் மற்றவர்கள் நம்மிடமிருக்கும் திறமைகளை கண்டு அதை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பை அளித்தால் அதை நாம் தவற விடக்கூடாது.
ஆம் நான் என் வாழ்க்கையில் பல திறமைகளை வளர்த்துக் கொண்டேன் ஆனால் அனைத்தையும் என்னுள்ளேயே அடக்கி வைத்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் என் தலைமை ஆசிரியை அதை கண்டுப்பிடித்து எனக்கான ஒரு வாய்ப்பை தந்தார். அப்போதும் எனது பயம், கூச்சம் என்னை மறுக்க செய்தது.
ஆனால் அவர் கண்டிப்பாக இருந்து என்னுள் இருந்த திறமை என்னும் விதையை விருட்சமாக்கினார்.

அவர் இல்லையெனில் அது விதையாகவே இருந்திருக்குமா, இல்லை மெல்ல ஒரு சாதாரணமான குட்டி செடியாகியிருக்குமா என்று எனக்கே தெரியாது.
என்னைப் போல பலர் இருந்திருப்பார்கள் உங்களுள் இருந்துக்கொண்டும் இருப்பீர்கள். அவர்களுக்கெல்லாம் நான் ஒன்றை தெளிவிக்க விரும்பவது என்னவென்றால் நமக்கு கனவுகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் என நிறைய இருக்கலாம் ஆனால் அதை எந்த வித தங்கு தடைகள் இன்றி வாய்ப்பு கிடைக்கும் போது வெளி கொண்டு வர வேண்டும்.
அப்படி ஒரு முறை…
ஒரே ஒரு முறை நமது திறமை வெளி வந்து…
அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு மேலே எழ ஆரம்பித்தால் நீங்கள் ஒவ்வொரு வரும் இந்த கீதா கிருஷ்ணகுமார் என்ன!
அவளை விட பெரிய இடத்திற்கு போகலாம்.
பல சாதனைகளை படைக்கலாம்.

இன்று நான் சிறந்த பிஸ்னஸ் உமன் என்று பல பட்டங்களும் பதவிகளும் பெரும்போது என் தலைமை ஆசிரியையை தான் மனதில் நினைத்துக் கொள்வேன்.

ஒரு பருக்கு அரிசியை தனது இருப்பிடத்திற்கு ஒரு எறும்பு எடுத்து செல்லும் போது வழியில் ஏதேனும் தடையிருந்தால் அதாவது ஒரு கல் அல்லது ஒரு காகிதம் என ஏதாவது கிடந்தால் அது சும்மா இருக்காது அதை தாண்டி செல்லவே முயற்சிக்கும். அதுவும் அந்த அரிசி பருக்கையோடு. அப்படி பல திறமைகளை சுமந்துக் கொண்டு வழியிலிருந்த தடைகளான அச்சம், கூச்சம், சமுதாயம் ஆகியவைகளில் இருந்து தவித்துக் கொண்டிருந்த அந்த எறும்பை ஒரே ஒரு குச்சி அதாவது கல்ச்சுரல்ஸ் செக்கரெட்டரி என்ற குச்சியை பாலமாக வைத்து தாண்ட உதவி புரிந்ததில் உங்கள் முன் நான் ஒரு நிறுவனத்தின் ஃபௌண்டர் அன்ட் சி.இ.ஓ வாக நிற்கிறேன்.

நம்ம அப்துல் கலாம் சார் சொன்ன மாதிரி நிறைய கனவு காணுங்கள். திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள், அச்சம் தவிருங்கள், நல்ல வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள முயற்சியுங்கள் அல்லது கிடைத்த வாய்ப்பை சரிவர பயன்படுத்திக் கொள்ளுங்கள் வாழ்க்கையில் முன்னேருங்கள்.
நீங்கள் கண்ட கனவை நிஜமாக்கும் வரை ஓயாதீர்கள்.
முயற்சி என்றுமே நம்மை கைவிடாது என்றாவது அதற்கான மெய்வருத்த கூலி தரும் என்று கூறி என்னை மீண்டும் எனது கல்லூரிக்குள் வலம் வர வாய்ப்பளித்த நமது கல்லூரி தலைவர் அவர்களுக்கும், எனது வணிகவியல் துறைத் தலைமை ஆசிரியைக்கும் மற்றும் இங்குள்ள அனைத்து நல்லூள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டு விடை பெறுகிறேன்.
நன்றி வணக்கம்.”

என்று கீதா தன் நீண்ட உரையை முடித்ததும். சற்று நேரம் அமைதி நிலவியது. அதன் பின் பலத்த கரகோஷம் எழுந்ததில் அரங்கமே அதிர்ந்தது. ஒரு கல்லூரியில் நன்றாக படித்து நல்ல பெயருடன் வெளியே வருவதென்பதே மிக பெரிய விஷயமாக இருக்கும் இந்த காலத்தில்…தான் படித்த போதும், படித்து முடித்து இவ்வளவு வருடங்களாகியும் கீதாவை மறக்காது மீண்டும் கல்லூரிக்கு அழைத்து கௌரவப்படுத்தி அடுத்த சந்ததி மாணவிகளுக்கு நல்வழி காட்டி ஊக்கமளித்துள்ளனர் கீதாவின் கல்லூரி ஆசிரியைகள். கல்லூரியில் கீதாவுக்கு அன்று இரவு டின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவளும் தனது ஆசிரியைகளுடன் இரவு உணவு உண்டு பழைய கதைகளை எல்லாம் பேசிக் கொண்டு மகிழ்ச்சியாக இருந்தாள். அனைவரும் உண்டு முடித்ததும் கீதாவிடம் ஒரு பரிசை கொடுத்தார் அவளுக்கு மிகவும் பிடித்த அவளது துறை தலைமை ஆசிரியை. அதை கீதாவின் கைகளில் கொடுத்து

“மை டியர் சைல்டு.
இதை நீ உன் வீட்டுக்கு சென்ற பின் உன் குடும்பத்தினருடன் சேர்ந்து திறந்துப் பார்.
சரியா”

“ஷுவர் மிஸ்.
நீங்க சொன்னா தட்டாம செய்வேன் மிஸ்.
நான் அமெரிக்கா சென்று என் கனவர் மற்றும் மகன் முன் வைத்து தான் இதை திறந்து பார்ப்பேன் மிஸ்.”

“இந்த மரியாதையான குணமும், நன்னடத்தையும் தான் மா உன்னை இவ்வளவு உயரத்துக்கு கொண்டு வந்திருக்கு.
இனியும் நீ வளரணும்.
உன்னோட ஸ்பீச் மிக அருமையா இருந்தது மா.”

“தாங்க்ஸ் மேம். சரி மேம் எனக்கு நேரமாயிடுச்சி நான் இப்போ கிளம்பினா தான் நைட் ஒரு பன்னிரெண்டு மணிக்காவது என் வீட்டுக்கு போய் சேர முடியும்.
நான் கிளம்பட்டுமா? நாளைக்கு நள்ளிரவு நான் அமெரிக்காவுக்கு கிளம்பணும்.”

“ஓ! ஷுவர் மை சைல்டு.
எங்களை மதித்து எங்களுக்காக இவ்வளவு தூரம் வந்து இந்த நாளை இவ்வளவு பிரகாசமாக்கியதற்கு நன்றிமா.”

“ஓ! ஓ! மிஸ் நீங்களெல்லாம் நன்றி சொல்ல கூடாது.
எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை அளித்த உங்களுக்கெல்லாம் தான் நான் நன்றி சொல்லணும்.”

என்று பேசிக் கொண்டே கீதாவின் கார் நின்று கொண்டிருந்த இடம் வரைக்கும் வந்தனர். கார் அருகே வந்ததும் கீதா காரின் கதவை திறந்து உள்ளே சென்று அமர்ந்து

“சரி மேம் நான் போயிட்டு வரேன்.
டேக் கேர் ஆஃப் யுவர் ஹெல்த்”

“நிச்சயமா மா.
தாங்ஸ் டியர்.
பத்திரமா போயிட்டு வா.
இன்னும் பல சாதனைகளை புரிய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மா.
பை பை.
ஹாவ் எ சேஃப் ட்ரிப்”

“பை மேம்.”

என்று கீதா அங்கிருந்து விடைப் பெற்று திருச்சியிலிருந்து சென்னையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தாள். அவள் மனம் முழுவதும் மகிழ்ச்சிப் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. அதே மகிழ்ச்சியோடு அமெரிக்காவிலிருக்கும் தனது கனவருக்கு கால் செய்தாள்.

“ஹலோ கீதா மேடம்.
எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன் மகேஷ்.
நீங்க எப்படி இருக்கீங்க?
நம்ம சுட்டிப் பையன் எப்படி இருக்கான்? ரெண்டு பேரும் நான் இல்லாம என்ன பண்ணறீங்க?”

“அம்மா!”

“கண்ணா. உம்ம்மா.”

“அம்மா நீ உன் காலேஜுக்கு போனயே. உன் மேம் என்ன சொன்னாங்க மா?”

“ம்….நான் ரொம்ப குட் கேர்ள்னு சொல்லி இதோ இந்த கிஃப்ட் கொடுத்தாங்க. இதை உன் முன்னாடி தான் ஓபன் பண்ணணும்னு சொல்லிட்டாங்க.
சோ நான் நம்ம வீட்டுக்கு வந்ததும் நாம மூணு பேரும் சேர்ந்து ஓபன் பண்ணி பார்க்கலாம். சரியா”

“அது எனக்கு குடுத்திருக்காங்களா மா?”

“நமக்கு குடுத்திருக்காங்க கண்ணா.
சரி உனக்கு நான் என்ன இங்கேந்து வாங்கிட்டு வரணும்?”

என்று கனவர் மகனுடன் பேசிக்கொண்டே பயணித்ததில் நேரம் போனது தெரியாது போக தனது தாய் வீட்டுக்கு சட்டென வந்து சேந்தது போல இருந்தது கீதாவுக்கு.

மறுநாள் ஷாப்பிங் சென்று வேண்டியவைகளை வாங்கிக் கொண்டு அன்று முழுவதும் தனது அப்பா அம்மாவுடன் இருந்துவிட்டு அன்றிரவு உணவு உண்ட பின் தன் பெற்றோரிடம் ஆசிர்வாதம் பெற்று கொண்டு ஏர்போர்ட்டுக்கு புறப்பட்டுச் சென்றாள் கீதா.

அதே ஒன்றரை நாள் பிரயாணம். மீண்டும் அமெரிக்க மண்ணில் கால் வைத்தாள். மகேஷும் கண்ணனும் அவளுக்காக காத்திருந்தனர். அவர்களைக் கண்டதும் தூரத்திலிருந்தே “ஹாய்” என்று கூறினாள். கண்ணன் அவளை கட்டியணைக்க ஓடி வந்ததும் அவனை தடுத்தாள் கீதா. இப்போதிருக்கும் இந்த காலம் நம் குழந்தைகள் ஆசையாக ஓடி நம்மிடம் வரும்போது அவர்களை உடனே தூக்கி கொஞ்ச அனுமதிப்பதில்லையே!! கலி காலம் என்று நொந்துக் கொள்ள வேண்டியது தான். அதை போலவே கீதாவும் தன் குழந்தையை தடுத்து நிறுத்தி

“கண்ணா அம்மா டிராவல் பண்ணிட்டு வந்திருக்கேன் இல்ல…
இப்போ உன்ன தூக்கிக்க முடியாதுப்பா..
உனக்கு தெரியும் தானே?
வீட்டுக்கு போய் குளிச்சிட்டு அம்மா உன்னை தூக்கிக் கொஞ்சறேன் சரியா கண்ணா”

“ஓகே அம்மா. அப்பா சொன்னா.”

“குட் பாய்.”

என்று வீட்டுக்கு சென்றதும் குளித்துவிட்டு தான் வாங்கி வந்த பொருட்களை எல்லாம் வெளியே எடுத்து வைத்தாள். அப்போது கண்ணன்

“அம்மா உன் மேம் குடுத்த கிஃப்ட் எது மா?
நாம அதை ஓபன் செஞ்சுப் பார்ப்போமா?”

“ஷுவர் கண்ணா.
இதோ இது தான் அது.
நாம ஓபன் பண்ணுவோமா”

“ம்…அப்பா நீயும் வாப்பா”

“நானும் வந்துட்டேன்.”

என்று தலைமை ஆசிரியை சொன்னது போலவே மூவருமாக அதிலிருந்த ரிப்பனை அவிழ்த்தனர். பின் மகேஷ் அதன் மேலிருந்த கிஃப்ட் ராப்பரை அவிழ்த்தான். அதனுள் ஒரு மரப் பேழை இருந்தது. அதை கீதாவிடம் கொடுத்தான். கீதா அதை கண்ணனிடம் கொடுத்து திறக்கச் சொன்னாள். கண்ணனும் மெல்ல திறந்தான். அதனுள்ளே இருந்து ஒரு பெண் சிலை வெளிவந்தது. அது தன்னைத் தானே செதுக்கிக் கொள்ள ஆரம்பித்தது. அப்போது பின்னணியில் ஒரு மெல்லிய இசையோடு தலைமை ஆசிரியையின் குரலும் ஒலித்தது.

“ஒரு பெண் என்பவள் தன்னைத் தானே செதுக்கிக் கொள்ளும் வல்லமைப் பெற்றவள் ஆவாள்.
ஆனால் அவளை அவளே செதுக்க கல் வேண்டுமல்லவா.
அது தான் அவளை பெற்றவர்கள். உளியின்றி அவள் எப்படி அவளை செதுக்க முடியும்?
அந்த உளியாக அவளின் கனவனும் அவளின் குடும்பமும் இருந்தால் போதும் அவள் அழகிய சிற்பமாக மட்டுமல்லாது சிறந்த சிற்பியாகவும் திகழ்வாள். உங்களையும் செதுக்கி அழகுறச் செய்வாள்.
வாழ்க வளமுடன்”

என்று கூறி நின்றது ஆனால் அந்த மரப்பேழையை மூடும் வரை அந்த பெண் சிலை தன்னை செதுக்குவதை நிறுத்தவில்லை. அதைப் பார்த்ததும் மகேஷ் கீதாவை கட்டியணைத்து அவளின் நெற்றியில் முத்தமிட்டு

“ஐ ஆம் ப்ரௌட் ஆஃப் யூ மை டியர் கீதா”

என்றான். அவள் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் உருண்டோடியது. அதைத் துடைத்த கண்ணனின் பிஞ்சுக் கைகளை பற்றிக்கொண்டு முத்தமிட்டாள் கீதா. வானத்தை நோக்கி கண்களை மூடிக்கொண்டு மனதிற்குள்

“ஐ ஆம் ப்ளெஸ்டு.
தாங்யூ காட்.
இதற்கு மேல் எனக் கெதுவுமே தேவையில்லை.
என்னை போலவே எல்லா பெண்களுக்கும் இது போன்ற வாழ்வையும் உணர்வையும் கொடு ஆண்டவா.”

முற்றும்

நா. பார்வதி

இரண்டு டாக்டர்கள், நர்ஸ்கள், சக்தி மற்றும் விஷால் ஆகியோர் கூரை தளம் சென்று அவர்கள் லிஃப்ட்டிலிருந்து வெளியே வந்ததும் வாசலில் நின்றிருந்த ஜேம்ஸை பார்த்தனர். அப்போது சக்தி

“ஜேம்ஸ் என்ன ஆச்சு? இதோ டாக்டர்ஸ்!”

“ஓ மை காட்!! ஏய் நம்ம கீர்த்தனா!”

“வா வா வா! கீர்த்தனா! கீர்த்தனா!”

“நகருங்க சிஸ்டர்.
என்ன ஆச்சுன்னு பார்ப்போம்.”

“ஏன் சார் எங்க ஹாஸ்பிடல் நர்ஸ்க்கு எப்படி இப்படி நடந்தது?
நீங்க யாரு?”

“டாக்டர்…”

என்று கூறிக்கொண்டே டாக்டரின் கோர்ட்டில் அவரது பெயரை தேடியது ஜேம்ஸின் கண்கள். அது அகப்பட்டதும்

“டாக்டர் ராமசந்திரன் என் பெயர் ஜேம்ஸ் இமானுவேல்.
நான் பிரான்ஸ் போலீஸ்.
இது தான் என் ஐடி”

“சரி சார்.
எதுக்காக போலீஸ் நீங்க எங்க ஹாஸ்பிடல் வந்திருக்கீங்க?
எங்க நர்ஸ்க்கு என்ன நடந்தது?”

“ஹேய் ராம் கீர்த்தனா உயிரோட தான் இருக்கா.
மொதல்ல அவளை ஐசியூ வுக்கு ஷிப்ட் பண்ணணும்.
சீக்கிரம் வா.
மத்ததெல்லாம் அப்புறமா பேசிப்போம்.”

“நர்ஸ் கொஞ்சம் நகந்துக்கோங்க.
ம்… இப்போ க்ரௌண்ட் அழுத்து.”

“சார் நீங்க எல்லாரும் கீழே வாங்க.
அங்க பேசிக்கலாம்.
மொதல்ல இவங்கள காப்பாத்தணும்.
ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க.”

“ஷுவர்.
நீங்க போங்க நாங்க கீழே வரோம்.
எப்படியாவது அவங்கள காப்பாத்துங்க.”

என்று ஜேம்ஸ் கூறிக் கொண்டிருந்த போதே லிஃப்ட்டின் கதவுகள் மூடின. உடனே ஜேம்ஸ்

“சக்தி, விஷால் வாங்க நாம அந்த லிஃப்ட்டுல கீழ போகலாம்.
ம்… சீக்கிரம் உள்ள வாங்க.”

என்று பக்கத்து லிஃப்ட்டிற்குள் மூவரும் சென்றதும்

“ஜேம்ஸ் என்ன நடக்குது இங்க?
யார் அந்த நர்ஸ்?
அவங்க ஏன் இப்படி?…
யார் அவங்கள அப்படி பண்ணிருக்காங்க?
நீ எப்படி கூரை தளத்துக்கு வந்த!
ஏன் வந்த?”

“அந்த நர்ஸ்…சரி சரி கிரௌண்ட் ஃப்ளோர் வந்துட்டோம்.
மொதல்ல அந்த நர்ஸ்க்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுப்போம் வாங்க”

“வி என்னப்பா நடக்குது.
நான் ஆஃபிஸ் வேற போகணுமே!”

“பேசாம இன்னைக்கு லீவ் போடு தி.
இங்க நடக்கறதெல்லாம் பார்த்தா ஏதோ விபரீதமா இருக்குமோன்னு தோணுது.”

“ம்…லீவு கிடைக்குமான்னு கேட்டுப் பார்க்கிறேன்.”

“சக்தி நீங்க இங்க இருக்க வேண்டாம்.
நீங்க உங்க ஆஃபிஸுக்கு போய் நான் கேட்ட பர்மிஷன் வாங்கி வையுங்க.
நான் வரேன்.”

“அப்போ பாரிஸ்?”

“அந்த கேஸை வேற ஒருத்தருக்கு மாத்திக் கொடுத்துட்டேன்.
அதுனால இன்னைக்கு இதை கண்டு பிடிச்சே ஆகணும்”

“ஆக்சுவலி நான் ஈமெயில் போட்டு உங்களுக்கு பர்மிஷன் வாங்கியாச்சு ஜேம்ஸ்.”

“அப்புறம் என்னடா அவளும் நம்ம கூடவே இருக்கட்டுமே ஜேம்ஸ்”

“ம்…ஓகே சக்தி.
அப்படீன்னா இங்க நிலவரம் தெரிஞ்சுகிட்டு நாம உங்க ஆஃபிஸ் போகலாம்.”

“நான் இன்னைக்கு ஹாஃப் டே பர்மிஷன் கேட்டிருக்கேன்.
பார்ப்போம்… கிடைச்சா நீங்க சொன்னபடியே செய்யலாம்.
இல்லாட்டி…நான் போக வேண்டி இருக்கும்.”

“ஓகே.”

“எப்போ தெரியும் தி?
ஈமெயிலுக்காக காத்திருக்காம…
நீயே கால் பண்ணிக் கேட்டுடேன்.”

“ம்…அதுவும் சரி தான் வி.
இதோ கால் பண்ணிட்டு வந்துடறேன்”

என்று சக்தி அங்கிருந்து நகர்ந்து சென்றதும் விஷால் ஜேம்ஸிடம்

“என்ன தான் நடக்குது ஜேம்ஸ்?
ஒண்ணும் புரியல.
அந்த நர்ஸை அப்படி ரத்தவெள்ளத்துல பார்த்ததும் அப்படியே தல சுத்தித்து தெரியுமா!
அவங்களை யார் என்ன பண்ணிட்டாங்க?”

“நாம இங்க வசுந்தராவைத் தேடி வந்தப்ப அந்த வரவேற்பாளர் பொண்ணு அவங்க ஷிப்ட் முடிச்சுட்டு நைட்டே ஒன்பது மணிக்கெல்லாம் வீட்டுக்கு கிளம்பி போயிட்டாங்கன்னு சொன்னப்போ… இப்போ அடிப்பட்டுக் ஐசியூல இருக்காங்களே இந்த நர்ஸ் அவசர அவசரமா ஒரு பதட்டத்தோடு புறப்பட்டுட்டிருந்தாங்க.
அவங்க கண்ணு என்கிட்ட ஏதோ சொல்ல தவிச்சது எனக்கு புரிஞ்சுது.
சரி தனியா போனா ஏதாவது சொல்லுவாங்கன்னு நினைச்சு அவங்க பின்னாடியே போனேன்.
அப்போ தான் லிஃப்ட்டுக்குள்ள போனாங்க நான் படிகள்ல ஏறி போனேன்.
அவங்க போன லிஃப்ட் கூரை தளத்தில் நின்னுது.
நானும் அங்க போய் பார்த்தேன் ஆனா அவங்கள அதுக்குள்ள யாரோ அப்படி பண்ணிட்டுப் போயிருக்காங்க.
அதுக்கப்புறம் நான் சக்திக்கு கால் பண்ணி டாக்டர்ஸோட வரச்சொன்னேன்.
அதுக்கப்புறம் நடந்தது தான் உனக்கே தெரியுமே”

“அப்போ அந்த நர்ஸ்க்கு ஏதோ விஷயம் தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்குன்னு சொல்லறயா ஜேம்ஸ்.”

“வாய்ப்பிருக்கலாம்….
இல்லாமலும் இருக்கலாம்.”

“என்னடா குழப்பற?”

“ஆமாம் அவங்க வாயைத் திறந்து ஏதாவது சொன்னா தானே தெரியும்.
சரி நீ இங்கேயே இரு இதோ நான் வந்துடறேன்.”

“எங்கடா போற?”

“நீ அந்த நர்ஸ்க்கு என்ன ஆச்சுன்னு டாக்டர்ஸ் வந்து சொல்லுற வரைக்கும் அங்கேந்து நகராத சரியா.
அஞ்சே நிமிஷத்துல வந்துடுவேன்”

“ஹேய் வி.
ஜேம்ஸ் எங்கே?
நீ மட்டும் நிக்கற!”

“அவன் ஏதோ ஒரு விஷயத்துக்காக அந்த பக்கம் போயிருக்கான்.
வந்தா தான் என்ன விஷயம்ன்னே தெரியும்.
சரி உனக்கு பர்மிஷன் என்ன ஆச்சு?”

“ஆங்! ஆங்! அதெல்லாம் கிடைச்சாச்சு.
நான் இனி மத்தியானம் ஒரு ஒன்றரை மணிக்கு ஆஃபிஸ் போனா போதும்.”

“குட் குட்….”

“ஏய் வி அந்த நர்ஸ்க்கு என்ன ஆச்சு?”

“தெரியலையே!
இப்போ தான் என்ன நடந்ததுனு ஜேம்ஸ் சொல்லி முடிச்சிட்டு போனான் நீ வந்துட்ட”

“அப்படியா என்ன நடந்தது?”

என்று சக்தி கேட்டதும் ஜேம்ஸ் சொன்ன அனைத்து விவரங்களையும் விஷால் சக்தியிடம் விளக்கிக் கூறினான். அதைக் கேட்ட சக்தி

“என்னது இது சினிமா கதை மாதிரி இல்ல இருக்கு!”

“அது இருக்கட்டும் தி.
எங்க உன் பிரெண்டு வசுந்தரா?”

“அது தான் எனக்கும் தெரியலை வி.”

“அவளுக்கு ஒரு ஃபோன் போட்டு கேட்க வேண்டியது தானே”

“பண்ணாம இருப்பேனா வி!
எத்தனைத் தடவை கால் பண்ணறது.
நாட் ரீச்சபள் ன்னு தான் வருது.
குடும்பத்தோட எங்கயாவது வெளியூருக்கு போயிருப்பாளோ?”

“என்கிட்ட கேட்டா!
எனக்கென்ன தெரியும் தி?
நீதான் சொல்லணும்.”

“ம்…என்ன பண்ணலாம்…
எப்படி அவளை கண்டு பிடிக்கறது?
ம்….ஆங்!
ஒரு வழியிருக்கு…”

“என்ன அந்த வழி தி?”

“இரு வி இதோ நான் வந்துடறேன்.”

“ஏய் தி அது என்ன வழின்னு சொல்லிட்டுப் போயேன்.”

“இரு இரு வி.
அது சரியானதான்னு மொதல்ல செக் பண்ணிட்டு…
அப்புறமா வந்து சொல்லறேன்.
நீ அங்கேயே இரு வி.
இதோ வந்துடறேன்.”

“அட போங்கப்பா.
நான் என்ன காவலாளியா என்ன?
என்னை இங்க நிக்க வச்சுட்டு ரெண்டு பேரும் ஆளுக்கொரு திசையில போறீங்க.
ஆங் டாக்டர்!
டாக்டர் அந்த நர்ஸ்க்கு என்ன ஆச்சு?
இப்போ எப்படி இருக்காங்க?”

“மிஸ்டர் ஜேம்ஸ் இமானுவேல் எங்க?”

“அவர் ஏதோ அவசரமா வெளியே போயிருக்கார்.
எதுவா இருந்தாலும் நீங்க என்கிட்ட சொல்லலாம்.”

“நீங்களும் போலீஸா?”

“இல்ல இல்ல.
நான் ஜேம்ஸோட பெஸ்ட் பிரெண்ட்.
அதுவுமில்லாம அவன் தான் என்கிட்ட நீங்க வெளிய வந்ததும் என்ன ஆச்சு ஏதாச்சுன்னு கேட்டு வைக்க சொன்னான்.”

“கீர்த்தனாவுக்கு காயங்கள் ரொம்ப சிவியரா இருக்கு.
பயங்கரமா தாக்கப்பட்டிருக்கா.”

“அப்படியா? உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையே டாக்டர்!
ஆங்! இதோ ஜேம்ஸே வந்துட்டான்.”

“டாக்டர் அந்த நர்ஸ் கீர்த்தனாவுக்கு என்ன ஆச்சு?
அவங்க கண் முழிச்சிட்டாங்களா?”

“இல்ல மிஸ்டர் ஜேம்ஸ்”

“நீங்க என்ன ஜேம்ஸ்ன்னே கூப்பிடலாம் டாக்டர்.
மிஸ்டர் எல்லாம் தேவையில்லை”

“ஓகே ஜேம்ஸ்.
அந்த பொண்ண கத்தியால் பயங்கரமா தாக்கியிருக்காங்க.
உடம்புல எல்லா இடங்களிலும் கத்திக் காயமிருக்கு.
மோரோவர் அவளை கொல்ல விடாம அவ ரொம்ப போரடிருக்கா.
ஏன்னா அவ கை எல்லாம் கத்தி கீறல்களா இருக்கு.
கடைசியில் தான் அவ வயிற்றுல குத்திருக்காங்க.
நல்ல வேளை அந்த கத்தி அவ்வளவா உடலுக்குள் போகலை.
அதுனால அவ பொழச்சுக்கிட்டா!”

“அந்த பொண்ணு எப்படி டாக்டர்?”

“எப்படின்னா?”

“இல்ல காரெக்டர் எப்படி?”

“ரொம்ப நல்ல பொண்ணு அவ.
அவ உண்டு அவ வேலை உண்டுன்னு இருப்பா.
வேலையில் ரொம்ப சின்சியிர்.
அந்த பொண்ணுக்கு ஏன் இப்படி ஆச்சுன்னு தெரியலை?”

“இதுக்கு முன்னாடி உங்க ஹாஸ்பிடல் ல இது மாதிரி நடந்திருக்கா டாக்டர்?”

“இல்லவே இல்லை ஜேம்ஸ்.
இது தான் ஃப்ர்ஸ்ட் டைம்.”

“நீங்க எத்தனை வருஷமா இந்த க்ளினிக் ல டாக்டரா இருக்கீங்க ராம்?
ஐ திங்க் யூ டோண்ட் மைன்ட் மி காலிங் யூ ராம்!”

“நோ நோ நாட் அட் ஆல். இங்க எல்லாரும் என்னை அப்படி தான் கூப்பிடுவாங்க.
நான் கடந்த பதினோரு வருஷமா இதே ஹாஸ்பிடல் ல தான் டாக்டரா இருக்கேன்.”

“சரி இங்க வசுந்தரான்னு ஒரு டாக்டர் இருக்காங்களா?”

“வசுந்தரா வா!! ஆமா ஆமாம்.
அவங்களுக்கு இந்த வாரம் ஆஃப்டர்னூன் ஷிப்ட்.
மத்தியானம் இரண்டு மணிக்கு தான் வருவாங்க.”

“ஓ! அப்படியா?”

“ஏன் அவங்கள தேடறீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

“அது வேறொரு விஷயம் ராம்.
சரி இந்த நர்ஸ் எப்போ கான்சியஸ்க்கு வருவாங்க?”

“அவ இன்னும் ஒரு ஆறு லேந்து ஏழு மணி நேரம் கழிச்சு தான் கான்சியஸ்க்கு வருவா.”

“சரி டாக்டர் ராம்.
ரொம்ப தாங்க்ஸ். அனாவசியமான கேள்விகள் கேட்காம உடனே மாடிக்கு வந்து உதவினதுக்கு ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்.
இந்த நர்ஸ் கீர்த்தனா எழுந்து சொல்லப் போறதுல தான் என்னோட ஒரு கேஸுக்கான முதல் க்ளூ இருக்கப் போகுது.
நான் அவங்க காவலுக்கு ரெண்டு சென்ட்ரி போடறேன்.
தயவுசெய்து அவங்கள உங்க ஹாஸ்பிடல் ஸ்டாஃப்பும் பத்திரமா பார்த்துக்கோங்க.
கீர்த்தனா வீட்டுல சொல்லியாச்சா?”

“இல்ல. இன்னும் சொல்ல ல.
அவ இங்க இருக்கற எங்க ஹாஸ்பிடல் ஸ்டாஃப் அப்பார்ட்மெண்ட்டுல தான் மற்ற நர்ஸ்களுடன் தங்கியிருக்கா.
அவ சொந்தங்கள் எல்லாம் இந்தியாவுல இருப்பாங்க.”

“அப்படீன்னா இப்போதைக்கு அவங்க வீட்டுல எதுவும் சொல்லிக்க வேண்டாம்.
அவங்க நல்ல படியா குணமானதும் சொல்லிக்கலாம்.
இல்லாட்டி அவங்க எல்லாம் டென்ஷன் ஆகிடுவாங்க.”

“ஆனா அவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா?”

“ஆச்சுன்னா எல்லாருக்கும் கஷ்டம் தான் டாக்டர் ராம்.
அதுனால அவங்கள பத்திரமா பார்த்துக்கோங்க.
சரி அது என்ன இந்த ஹாஸ்பிடல் ல இருக்கற ஸ்டாஃப் முக்கா வாசி பேரும் இந்தியர்களா இருக்கீங்க!”

“இந்தியர்களும், இலங்கையர்களும் இருக்கோம்.
இது நம்ம கம்யூனிட்டிக்காக எங்க சேர்மென் மிஸ்டர் கோபாலன் உருவாக்கின ஹாஸ்பிடல்”

“ஓ!! இர்ட்ரெஸ்டிங்.
அவர் இப்போ எங்க இருக்கார்?”

“அவர் இப்போ இந்தியாவுல இருக்கார்.
அடுத்த வாரம் இங்க வருவார்.”

“சரி அவருக்கு அவர் ஹாஸ்பிடல் ல இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது தெரியுமா?
இல்ல நீங்க யாராவது அவருக்கு தெரியப்படுத்தி இருக்கேங்களா?”

“எஸ் எஸ்!
அதெல்லாம் அப்பவே அவர்கிட்ட இன்ஃபாம் பண்ணியாச்சு.”

“ம்…சரி சரி டாக்டர் ராம்.
இதோ நான் சொன்ன ரெண்டு சென்ட்ரி வந்துட்டாங்க.
இவங்க பகல் முழுவதும் இங்கேயே இருப்பாங்க.
நைட் ஷிப்ட்டுக்கு ஆள் மாறுவாங்க.
சரியா.
சென்ட்ரீஸ் நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா எங்கேயும் இந்த இடத்தை விட்டு போகக்கூடுது.
யாராவது ஒருத்தர் இங்கே இருந்துக்கொண்டே இருக்க வேண்டும்.
நைட் ஷிப்ட் வர்றவங்க கிட்டேயும் இந்த அப்டேட் குடுத்துட்டு வீட்டுக்கு போங்க.”

“எஸ் சார்.”

“நான் மீண்டும் ஈவ்னிங் வரேன்.
ஓகே டாக்டர் ராம் சீ யூ பை.
நான் வேறொரு இடத்துக்கும் போக வேண்டியிருக்கு.”

“ஓகே ஜேம்ஸ்.
பை. டேக் கேர்.”

“இந்தாங்க இது என் கார்ட்.
அந்த நர்ஸ் கண் முழிச்சதும் எனக்கு கால் பண்ணி சொல்லுங்க.”

“ஓ! ஷுவர் ஜேம்ஸ்.”

“டேய் ஜேம்ஸ் என்னாட இவ்வளவு நேரம் அந்த டாக்டர்ட்ட பேசிட்டிருந்த?
அவர் என்ன தான் சொல்றார்?
அந்த நர்ஸ் பொழப்பாளா மாட்டாளா?”

“ஏன்டா!!! பொழைக்கணும்னு வேண்டிக்கோயேன் டா.
அப்ப தான் நம்ம சக்தியோட விஷயத்துல ஏதாவது ஒரு ஹின்ட்டாவது கிடைக்கும்.”

“ஆங்!! ஆங்!! வேண்டிக்கறேன்…வேண்டிக்கறேன்.”

“சரி சக்தி எங்க?”

“உன்னை மாதிரியே இதோ வர்றேன்னு சொல்லிட்டு போனா…
இன்னும் வரலை.
ஆங்… அதோ வர்றாளே!
நீயே கேட்டுக்கோப்பா!”

“ஹேய் சக்தி நீங்க எங்க போயிருந்தீங்க?
உங்களுக்கு ஹாஃப் டே பர்மிஷன் கிடைச்சுதா?”

“ஆங் அதெல்லாம் கிடைச்சாச்சு.”

“இப்போ எங்கேந்து வர்றீங்க?”

“அப்பா துப்பறிவாளரே!
உனக்கு பசிக்குதோ இல்லையோ!
எனக்கு பசிக்குது டா.
மணி என்ன பாரு.
பத்தாக போவுது.
என்ன தி நீ நல்லா ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டுட்டு தான் வந்திருக்க போல!”

“இல்ல வி.
வசுந்தரா வீட்டுல சாப்பிடலாம்ன்னு தான் வந்தேன்.
ஆனா இப்போ அவளையே காணல!
வேணும்னா மறுபடியும் அவங்க வீட்டுக்கு போய் பார்ப்போமா?”

“ம்…இதுவும் நல்ல யோசனை தான்.
சரி வாங்க வசுந்தரா வீட்டுக்கு போய் பார்த்துட்டு அப்படியே ஏதாவது சாப்பிட்டுட்டு அங்கேந்து சக்தி நாம உங்க ஆஃபிஸுக்கு போகலாம்.
என்ன சொல்லுறீங்க?”

“ம்…ஓகே.”

“என்னவோ எதுவோ!
வாங்கப்பா சீக்கிரம் போய் ஏதாவது சாப்பிடுவோம்.”

மூவருமாக வசுந்தரா வீட்டுக்கு மீண்டும் சென்று பார்த்தனர். ஆனால் அவள் வீடு பூட்டியபடியே இருந்தது. உடனே ஜேம்ஸ் வசுந்தரா வீட்டுப் பக்கத்து வீட்டிலிருப்பவரிடம் விசாரித்தான். பின் அங்கிருந்து கிளம்பி ஒரு ரெஸ்டாரன்ட்டுக்கு சென்றனர். அங்கே சக்தி ஜேம்ஸிடம்

“வசுந்தரா பக்கத்து வீட்டுக் காரங்க கிட்ட விசாரிச்சேங்களே…
அவங்க என்ன சொன்னாங்க?”

“உங்க பிரெண்ட் நேத்து ராத்திரியே மூட்டை முடிச்செல்லாம் கட்டிகிட்டு ஊரை விட்டே போயிட்டாங்களாம்.”

“ஏன் போனாளாம்?”

“அதைப் பத்தி அவங்களுக்கு ஒண்ணும் தெரியல.
இதை எல்லாம் வச்சுப் பார்த்தா…
உங்க பிரெண்ட் வசுந்தரா வை யாரோ நல்லா மிரட்டி இருக்காங்க.
அதுனால பயந்து அவங்க ஊரை விட்டே போயிருப்பாங்க அப்படீங்கறது என்னோட யூகம்.
நீங்க என்ன நினைக்கிறீங்க சக்தி?”

“அப்படி முழுசா நம்பிவிட முடியாது ஜேம்ஸ்.
மிரட்டலுக்கு பயந்து போயிருப்பாங்கன்னு தோணல… அவங்க ஹஸ்பன்ட் தொந்தரவால கூட போயிருக்க வாய்ப்பிருக்கு.
நான் எங்கேந்து வந்தேன்னு அப்போ ஹாஸ்பிடல் ல கேட்டீங்களே அது எங்கன்னா…
என் வசுந்தராவோடவே எப்பவும் இருக்குற நர்ஸ் நளினிக்கு கால் பண்ண போனேன்.”

“அவங்க கிட்ட பேசினீங்களா?
என்ன சொன்னாங்க?”

“பேசினேன்.
அவங்க என்னை அவங்க ரூமுக்கு வரச் சொன்னாங்க.
நானும் வசுந்தராவைப் பத்தி ஏதாவது தெரிஞ்சுக்கலாமேன்னு உடனே போனேன்.”

“அவங்களை மீட் பண்ணிணீங்களா?
இல்ல ஒரு வேளை வசுந்தரா அவங்களோடு இருந்தாங்களா?”

தொடர்வாள்…

விஷாலின் கார் திறக்காததால் சக்தி அவனிடமிருந்த சாவியை வாங்கி திறக்க முயற்சித்தாள். பின் தன் கையிலிருந்த சாவியை நன்றாக பார்த்த சக்தி…

“ஹலோ வி! உன் கார் எப்படி திறக்கும்?”

“ஏன் தி?”

“இது என் காரோட சாவி!”

“ம்…அப்படியா?”

“இதோ இங்கே பாரு!
என் கார் திறந்திருக்கு!”

“அட ஆமா!”

“என்ன ஆமா?
சரி எப்படி என் கார் சாவி உன்கிட்ட வந்தது?”

“அது தானே எப்படி வந்தது?”

“டேய் விஷால் என்ன சக்தி கேட்கிற கேள்வியை அப்படியே திருப்பிக் கேட்குற?
எப்படி உன்கிட்ட அவங்க கார் சாவி வந்ததுன்னு மொதல்ல சொல்லுடா”

“அதுவா!
நாம எல்லாரும் சாப்பிட உட்கார்ந்தோம் இல்லையா அப்போ அவ டேபிள் மேல வச்சிருந்தா,
சாப்பாடு கொண்டு வந்த வில்லியம்ஸ் தட்டுகளை வைக்க நான் தான் சாவியை எடுத்து என் பாக்கெட்டில் போட்டுண்டேன்”

“ஓ! ஓகே ஓகே!
இது என்கிட்ட இருக்குற கெட்ட பழக்கம்.
எப்பவுமே சாவியை பேக் உள்ள போடணும்னு நினைப்பேன்…
ஆனா மறந்து கையிலேயே வச்சுப்பேன் அப்புறம் எங்கயாவது மறந்து வச்சுடுவேன்.”

“சரி சரி இரு என் கார் சாவியை எடுக்கிறேன்.
ம்…இதோ என் கார் கீ.
இப்போ பாருடா ஜேம்ஸ்”

“வாவ்! சூப்பர்ப் கார் விஷால்.
சரி நீ தான் கார் வச்சிருக்கியே அப்புறமும் ஏன் சக்தி கார்ல போற?”

“ஒண்ணா போயிட்டு ஒண்ணா வரலாமேன்னு…”

“ஓ! ஓ! ஓகே ஓகே! நடத்து நடத்து.
சரி ரெண்டு பேரும் பத்திரமா வீடு போய் சேருங்க.
எனக்கென்னவோ உங்களை எப்பவும் யாரோ ஃபாலோ பண்ணிகிட்டே இருக்காங்களோன்னு தோணுது.”

“அப்படியா சொல்லுற?”

“ஆமாம்…ஸோ எப்பவுமே ஜாக்கிரதையா இருங்க.
நாளைக்கு டாக்டர் வசுந்தரா வீட்டுல சந்திப்போம்.”

“அப்போ நாளைக்கு என் ஆஃபிஸுக்கு நீங்க வரலையா? என் ஆஃபிஸ் வரேன்னு சொன்னீங்களே! அதுவுமில்லாம நீங்க பாரிஸ் போகணும்னும் சொன்னீங்களே!
அப்புறம் எப்படி வசுந்தரா வீட்டுல மீட் பண்ணலாம்ன்னு சொல்லறீங்க?

“அச்சச்சோ எத்தனை கேள்விகள்?
சக்தி நாளைக்கு காலையில ஏழரை மணிக்கு வசுந்தரா வீட்டுக்கு போவோம்.
அதுக்கப்புறமா நான் பாரிஸ் போறேன்.
நீங்க ஆஃபிஸ் போங்க.
பாரிஸுலேந்து நான் திரும்பி இங்க வரும்போது உங்க ஆஃபிஸுக்கு வந்து சிசிடிவியை செக் பண்ணிக்கறேன்.
இப்போ எல்லாம் கரெக்ட்டா இருக்கா?”

“எஸ் எஸ் இப்போ எல்லாம் ஓகே.
அப்படீன்னா நானும் நாளைக்கு வசு வீட்டுக்கு ஏழரைக்கு வரணும் இல்ல!”

“அஃப்கோர்ஸ் சக்தி.
இதுல என்ன கேள்வி?”

“இல்ல வி…
இப்பவே மணி என்னாச்சுப் பாரு…
இதுல காலையில ஏழரை மணிக்கெல்லாம் வசுந்தரா வீட்டுல இருக்கணும்னா!
நான் ஆறு மணிக்கெல்லாம் எழுத்துக்கணுமேன்னு யோசிச்சேன்.”

“அடிப் பாவி நாங்களும் தானே அவ்வளவு சீக்கிரம் எழுந்து வரணும்!”

“சரி சரி இங்கேயே நின்னுட்டு இப்படியே மாறி மாறி பேசிட்டிருந்தா காலை ஆறு மணி ஆயிடும்.
பேசாம கிளம்பி போய் ஒரு நாலஞ்சு மணி நேரமாவது தூங்கிட்டு வாங்க.
போங்க போங்க..
நானும் கிளம்பறேன். பை.”

“ஓகே டா ஜேம்ஸ்.
பை.
குட் நைட்”

“ஓகே ஓகே.
குட் நைட்”

“சக்தி என்னோட நம்பருக்கு அந்த டாக்டர் அட்ரெஸை ஷேர் பண்ணிடுங்க.”

“ஷுவர்.
இதோ இப்பவே பண்ணிடறேன்.”

என்று உடனே ஜேம்ஸுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள் சக்தி. அது கிடைத்ததை சக்தியிடம் சொன்ன ஜேம்ஸ் அவன் காரில் புறப்பட்டுச் சென்றதும் சக்தி விஷாலை பார்த்து

“சார் என்ன என் வண்டில ஏறப் பாக்குறீங்க?”

“அப்புறம் என்ன பண்ணுவேன் தி?”

“அதோ உங்க கார் இருக்கே!
அதை எடுத்துட்டு பாரிஸ் கிளம்ப வேண்டியது தானே!”

“என்ன தி!
என்னை துரத்தி விடற?”

“பின்ன என்னவாம்?”

“இப்பவே டைம் பதினொன்னு ஆயிடுத்து!
இதுக்கு மேல நான் டிரைவ் பண்ணி பாரிஸ் ரீச்சாகறதுக்கு இரண்டு ஆர் மூணு மணி ஆயிடும்.
அப்புறம் மறுபடியும் காலையில உன் வீட்டுக்கு வரணும்!
நான் பாவம் தானே!”

“அதுக்கு நான் என்ன பண்ணறது?”

“என்ன இப்படி சொல்லற?
ஏன் உன் வீட்டுக்குள்ள என்னை அலௌ பண்ண மாட்டியா என்ன?”

“நோ வே வி.
நமக்கு கல்யாணம் ஆகுற வரை ராத்திரியில் ஒண்ணா தங்குறதெல்லாம் சரி கிடையாது.”

“எந்த காலத்துல இருக்க நீ?”

“ஒண்ணா தங்கினா என்னவாம்?
அவா அவா ஒண்ணா அஞ்சாறு வருஷம் லிவ்ங் டுகெதர்ன்னு சொல்லி இருந்துட்டு தான் கல்யாணமே பண்ணிக்கறா…
நீ என்னடான்னா?”

“நான் இப்படி தான் வி.
எனக்குன்னு சில பாலிஸிஸ் இருக்கு.
நான் அது படிதான் நடந்துப்பேன்.
யாருக்காகவும் அதை மாத்திக்க மாட்டேன்.
நம்மளோட கல்யாணம் வரை நோ நைட் ஸ்டே”

“ஏன் உனக்கு உன் மேல நம்பிக்கை இல்லையா?”

“வாட்?
மொதல்ல நீ கிளம்பு வி.
நான் கிளம்பறேன்.
பை. பை. குட் நைட்”

“தி…தி…தி…
அடி போடி.
இவளும் இவளோட பாலிஸியும்.
பொல்லாத பொடலங்கா பாலிஸி!
முன்னாடியே சொல்லியிருந்தான்னா நான் ஜேம்ஸோட அவன் வீட்டுக்காவாவது போயிருப்பேன்.
இப்படி நடு ராத்திரி தனியா பொலம்ப விட்டுட்டுப் அவ பாட்டுக்கு போயிட்டாளே!
என்ன பண்ணலாம்.
சரி பேசாம ஜேம்ஸ் வீட்டுக்கே போக வேண்டியது தான்.
வேற வழி?”

என்று தனக்குத் தானே பேசிக்கொண்டே காரை ஜேம்ஸ் வீட்டிற்கு விட்டான். அங்கே அவன் வீட்டு அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருந்தான். அப்போது கதவைத் திறந்த ஜேம்ஸ்

“டேய் விஷால் என்ன? என்னாச்சு?
சக்தி எங்க?
ஏன் நீ மட்டும் வந்திருக்க?”

“ஹலோ வீட்டுக்கு யாராவது வந்தா முதல்ல உள்ள வாங்கன்னு கூப்பிடணும் தெரியுமா?
அதை விட்டுட்டு ஏதேதோ கேள்வி மேல கேள்வியா அடுக்கிக்கிட்டே போற?”

“சரி சரி வா வா உள்ள வா”

“ம்…வீட்டை நல்லா தான் வச்சிருக்க!
ஆங் இப்போ கேளு”

“அது தான் அப்பவே கேட்டுட்டேனே!
பதில் சொல்லு”

“அவ அவளோட வீட்டுக்கு போயிட்டா!
நான் நடு ரோட்டுல நின்னுட்டிருந்தேன்.
அது தான் நம்ம நண்பன் நீ இருக்கயேன்னு நேரா இங்க வந்துட்டேன்”

“ஏன் நீ அவங்களோட அவங்க வீட்டுக்கு போகலை?
சம் பியர்”

“நோ தாங்க்ஸ்!
எங்க கல்யாணம் முடியற வரைக்கும் நாங்க ஒரே வீட்டுல ஒண்ணா நைட்டு தங்கக் கூடாதாம்.
அது அந்த அம்மணியோட பாலிஸியாம்”

“அதுவும் சரி தான்.
ஆனா நீ அவங்கள தனியா விட்டுட்டு வந்திருக்கக் கூடாது டா!”

“வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொன்னதுக்கப்புறம் நான் எப்படி அவ கூட போவேன் ஜேம்ஸ்”

“நீ அவங்க கூட போயிருக்க வேண்டாம்.
ஆனா அவங்க வீடு வரைக்கும் பின்னாடியே போயி விட்டுட்டு வந்திருக்கலாம்.
ஏன்னா அவங்களை சுத்தி ஏதோ ஒரு பெரிய ஆபத்து இருக்குது இல்ல!”

“அட ஆமா இல்ல.
எனக்கு இது தோணலப் பாரேன்!”

“எப்படி தோணும்?
உன் மனசுல கோபம் நிறைஞ்சிருந்தா இப்படியெல்லாம் எப்படி தோணும்?”

“ச்சே! ஆமாம் ஜேம்ஸ்.
நான் தப்பு பண்ணிட்டேன்”

“சரி சரி அவங்களுக்கு ஃபோன் போட்டு வீட்டுக்கு போய் சேர்ந்துட்டாங்களான்னாவது கேளுடா”

“ம்…இரு இரு…
இப்பவே கேட்கிறேன்..
ஆங்…ரிங் போறது!”

“ஹலோ வி”

“ஹாய் தி.
வீட்டுக்கு போய் சேர்ந்தாச்சா?”

“இல்ல இதோ இன்னும் ஒரு அஞ்சு நிமிஷத்துல ரீச் ஆயிடுவேன்.”

“ஓகே நீ ரீச் ஆனதும் எனக்கு கால் பண்ணு”

“வேண்டாம் வேண்டாம் வி.
நீ டிரைவ் பண்ணிண்டிருப்ப…நான் டிஸ்டர்ப் பண்ணலை.”

“ஹலோ மெட்ஸ் ல உன் வீட்டைவிட்டா எனக்கு தங்குறதுக்கு இடமா இல்லை.”

“எங்க தங்கியிருக்க?”

“என் நண்பன் ஜேம்ஸ் வீட்டுல தான்”

“ஓகே ஓகே.
காலையில் மீட் பண்ணுவோம்.
பை”

என்று பேசி முடித்ததும் வீட்டு வாசலில் சென்று காரை நிறுத்திவிட்டு, காரை பூட்டி, வீட்டை திறந்து உள்ளே சென்று

“ஹேய் ப்ளூ.
நீ வெளிய வரலாம்.
ப்ளூ கேட்குதா?”

“ம்…ம்…
கேட்குது நல்லாவே கேட்குது.
இதோ வரேன்”

“வா வா வா மை டியர் ப்ளூ கண்ணா.
உம்மா…”

“ஆமா ஆமா! காலையிலேந்து அந்த பேஸ்மென்ட்டுலேயே கிடக்கேனாம்…
இப்ப வந்து கண்ணாவாம்…
உம்மாவாம்….
அட போ மா”

“அடடே என் ப்ளூ செல்லத்துக்கு கோவமாக்கும்?”

“பின்ன இருக்காதா?
அந்த வி வந்ததிலேந்து நீ ஆளே சரியில்ல பார்த்துக்கோ… அவ்வளவு தான் சொல்லிட்டேன்”

“ஹலோ! சும்மா அலுத்துக்காதப்பா!
நாங்க தான் இவ்வளவு நேரம் வீட்டுலேயே இருக்கலையே!
அப்புறம் என்ன?
ப்ளூ ஐய்யா சுதந்திரமா சுத்தியிருப்பாரே!”

“ஆங்…ஆங்!!
சுத்தினேன்! சுத்தினேன்!
எப்படா உன் கார் சத்தம் வரும் ஓடி ஒளிஞ்சுக்கணும்னு தவிச்சுக்கிட்டே சுத்திட்டிருந்தேன் தெரியுமா!
நிம்மதியாவா சுத்தினேன்?”

“ஓ !! அது தான் மேட்டரா?”

“சரி சரி அதெல்லாம் இருக்கட்டும் தி.
நீ போன காரியம் என்ன ஆச்சு?”

“அது ஒரு பெரிய கதை ப்ளூ.
நிறைய டிவிஸ்ட் அன்ட் டர்ன்ஸ் இருக்கு.
என்னன்னு சொல்லறது?”

“பரவாயில்லை இந்தா உன்னோட ஃபேவரைட் காபியை குடிச்சுக்கிட்டே சொல்லு.
கேட்கிறேன்”

“ஹலோ! டைம் என்ன ஆச்சுன்னு பார்த்தியா?
உனக்கு தூக்கம் எல்லாம் தேவையே இல்லப்பா…
ஆனா எனக்கு அட்லீஸ்ட் ஒரு அஞ்சு மணி நேரமாவது தூங்கி ஆகணும்.
அப்போ தான் நாளைக்கு என்னால ஆஃபிஸ் போக முடியும்.
அதுனால கதையை நாளைக்கோ இல்ல எனக்கு எப்போ ஃப்ரீ டைம் கிடைக்குதோ அப்ப சொல்லறேன்.
சரியா.
இப்போ நான் போய் தூங்கறேன்.
குட் நைட் ப்ளூ.”

“இதுக்கு எதுக்கு என்ன கூப்பிட்ட?”

“உன்னை காலையிலேந்து நான் பார்க்கலையா அதுதான் கூப்பிட்டு பார்த்தேன்.”

“சரி சரி பார்த்து படியேறி போ தி.”

“ஆங்! ஏய் ப்ளூ! இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேனே!”

“என்னது?
பார்த்து! பார்த்து! படியில மெதுவா இறங்கி வா தி…
விழுந்துட போற”

“நம்ம பக்கத்து வீட்டு மிஸ்ஸர்ஸ் டேவிட் இருக்காங்க இல்ல…
அவங்க இன்னைக்கு அங்க வீட்டுல இல்ல.
அவசரமா கிளம்பி எங்கயோ போயிருக்காங்களாம்.
அவங்க வீட்டுல வேலை செய்வானே ஒரு பையன் அவன் தான் சொன்னான்.”

“நீ அவங்கள கடைசியாக எப்ப பார்த்த தி?”

“இன்னைக்கு!
ஓ மணி ஒண்ணா ஆயிடுச்சோ!
அப்படீன்னா நேத்து காலையில் ஆஃபிஸ் போகும் போது பார்த்தது தான் ப்ளூ.
அதுக்கப்புறம் மத்தியானம் நானும் வி யுமா வீட்டுக்கு திரும்பி வந்தோம் இல்லையா அப்போ அவங்க அங்க இருக்கலை.
காலையில அவங்க எதுவுமே சொல்லவுமில்லை!”

“ஆனா அந்த பாட்டி எதுவானாலும் உன்கிட்ட சொல்லுவாங்களே!
இப்படி திடுதிப்புன்னு ஊருக்கு கிளம்பி போயிருக்காங்கன்னா உன்னை ஃபோன் ல பிடிக்க முடியலைன்னாலும் மெஸேஜாவது அனுப்பி இருப்பாங்களே தி!”

“ஆமாம் ப்ளூ…
அதுதான் எனக்கும் காலையிலேந்து ஒரே வருத்தமா இருக்கு.”

“சரி இப்போ… உனக்கு அஞ்சு மணி நேரம் தூக்கம் வேண்டாமா தி?”

“ஊப்ஸ்…
சரி சரி மீதியை அப்பறமா யோசிச்சுப்போம்.
குட் நைட் ப்ளூ”

“குட் நைட் குட் நைட் போ போ போய் தூங்கு தி”

என்று ப்ளூ சொல்லி முடிப்பதற்குள் சக்தி அவள் அறையினுள் சென்று கதவை சாத்திக் கொண்டாள். பின் உடையை மாற்றிவிட்டு படுத்துறங்கலானாள்.

மறுநாள் காலை சரியாக ஆறு மணியளவில் வழக்கம் போல ப்ளூ சக்தியை எழுப்பி விட அவள் அறைக்குள் வந்தது. ஆனால் சக்தி படுக்கையில் இருக்கவில்லை. அவளின் படுக்கையும் அழகாக விரித்து வைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்த ப்ளூ தனக்குத் தானே

“என்ன இது உலகமகா அதிசயமா இருக்கே!
இந்த தி நான் எழுப்புறதுக்கு முன்னாடியே இப்ப எல்லாம் எழுந்துக்கறாளே!
தி…தி…தி…
குளிச்சிட்டிருக்கியா?”

“ஆமாம் ப்ளூ.
நீ போ நான் ரெடியானதும் கீழே வரேன்.”

“ஓகே. வா வா.”

ஆஃபீஸுக்கு கிளம்பி கீழே வந்த சக்தியை மேலிருந்து கால் வரைப் பார்த்த ப்ளூ

“தி என்ன இன்னைக்கு இவ்வளவு சீக்கிரமே கிளம்பிட்ட?”

“நான் தான் நேத்து நைட்டே சொன்னேனே ப்ளூ.
இன்னைக்கு நிறைய வேலையிருக்குன்னு…
அதுதான் கிளம்பிட்டேன்.”

“சரி…உன் காபி இந்தா.”

“இல்ல ப்ளூ.
எனக்கு நேரமாயிடுச்சு.
நான் இப்ப வசுந்தரா வீட்டுக்கு தான் போறேன்.
அங்கேயே காபி டிபன் எல்லாம் சாப்பிட்டுக்கறேன்.
நீ உன் வேலைகளை முடிச்சுட்டு பேஸ்மென்ட்டுக்கு போயிடு.
ஏன்னா நான் வியோட இங்க வந்தாலும் வருவேன்.”

“அப்படீன்னா இன்னைக்கும் எனக்கு பேஸ்மென்ட் தானா!!
இப்பவே எல்லாம் போக மாட்டேன்.
உன் கார் சத்தம் கேட்டதுக்கப்புறமா வேணும்னா போறேன்.”

“என்னமோ பண்ணு.
நான் போயிட்டு வரேன் ப்ளூ.
பை”

“பை தி.”

என்று ப்ளூவிடமிருந்து விடைப் பெற்று வெளியே வந்து வீட்டின் கதவை பூட்டிய சக்தியின் கண்கள் பக்கத்து வீட்டுப் பாட்டியை தேடியது. அப்போது அவளது கைப்பேசி அதிர்வுற்றதில் கிடுகிடுவென கதவைப் பூட்டிவிட்டு கைப் பேசியை அழுத்தி

“குட் மார்னிங் வி.”

“ம்…குட் மார்னிங். குட் மார்னிங்”

“நாங்க உன் தோழி வசுந்தரா வீட்டுக்கு கிளம்பிட்டோம்.
நீ உன் வீட்டிலிருந்து புறப்பட்டாச்சா?”

“ஆங்! ஆங்! புறப்பட்டாச்சு புறப்பட்டாச்சு!
சரி அது என்ன நாங்க?”

“ம்…நானும் என் நண்பனும் தான்.
எனக்கு நேத்து நைட்டு ரூம் தந்த புண்ணியவான்”

“ம்…ஓகே ஓகே.
நான் கால் ஐ கட் பண்ணிட்டு காரை ஸ்டார்ட் பண்ணட்டுமா?
இல்ல இப்படியே உன் கூட பேசிட்டே இருக்கட்டுமா?”

“சரி சரி சீக்கிரமா வந்து சேருமா.
நான் வச்சுடறேன்”

என்று கூறி விஷால் ஃபோனை வச்சதும் வீட்டிலிருந்து புறப்பட்ட சக்தி நேராக வசுந்தரா வீட்டு வாசலில் வண்டியை நிப்பாட்டினாள். அவள் காரிலிருந்து இறங்கிய போது அவளருகில் சர்ரென இரு கார்கள் வந்து நின்றது. சக்தி திரும்பிப் பார்த்தாள். அதிலிருந்து இறங்கினர் விஷாலும் ஜேம்ஸும்.
அவர்களைப் பார்த்ததும் சக்தி

“குட் மார்னிங் ஜேம்ஸ்.”

“குட் மார்னிங் சக்தி.”

“ஓ நீங்க தான் வி க்கு ரூம் குடுத்த வள்ளலோ”

“ஆமாம் என்ன பண்ண? ராத்திரி வந்து பாவமா வீட்டு வாசல்ல நின்னவனை வேற என்ன பண்ணுவேன் சொல்லுங்க”

“ரோல்ஸ் ராய்ஸ் வச்சிருக்கறவனுக்கு ஒரு ஹோட்டல்ல ரூம் போட முடியலையாக்கும்!”

“அதுதானே! அதை சொல்லுங்க சக்தி”

“அடேய் ராத்திரி பதினோரு மணிக்கு ஹோட்டல் ஹோட்டலா ரூம் கேட்டு ஏறி இறங்க முடியுமா?
அதைவிட பெஸ்ட் என் ப்ரெண்ட் வீட்டுக்கு போறது தானே!
இதை எல்லாம் வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொன்னவங்க எல்லாம் பேச வேண்டாம்ன்னு சொல்லு ஜேம்ஸ்”

“அச்சச்சோ! உங்க சண்டைக்கு கொஞ்சம் ப்ரேக் விட்டுட்டு இப்போ நாம வசுந்தரா வீட்டுக்குள்ள போகலாமா?
இதை முடிச்சுட்டு நான் பாரிஸ் வேற போகணும்”

“சாரி ஜேம்ஸ்.
வாங்க போகலாம்.”

“ம்…நீங்க ஃபர்ஸ்ட் போங்க சக்தி.
நாங்க ரெண்டு பேரும் உங்களை ஃபாலோ பண்ணி வறோம்”

“ம்…ஷுவர். வாங்க வாங்க.
வசு…வசு…”

“ஹலோ மேடம்! கொஞ்சம் நல்லா பாருங்க”

“அட ஆமாம்! என்ன வீடு பூட்டியிருக்கு?”

“உங்க கிட்ட ஏதாவது உங்க பிரெண்ட் சொன்னாங்களா சக்தி?”

“இல்லையே! ஒரு வேளை அவ அப்பா அம்மா பொண்ணு மூணு பேரும் எங்கயாவது வெளிய பேயிருப்பாங்கன்னு நினைக்கறேன்.”

“நாம பார்க்க வந்தது உன் தோழி வசுந்தராவ தானே!”

“ஆமா வி. ஆனா வசு க்ளினிக்கை விட்டுட்டு எங்கேயும் போக மாட்டாளே!! ஜேம்ஸ் நாம அவ க்ளினிக் போய் பார்ப்போமா?”

“ம்..சரி அவங்க க்ளினிக் எங்க இருக்கு?”

“நான் லொக்கேஷன் ஷேர் பண்ணியிருக்கேன் பாருங்க.
நீங்க ரெண்டு பேரும் அங்க வந்துடுங்க.
நானும் அங்க வந்துடறேன்”

“சரி கொஞ்சம் சீக்கிரமா போகலாமா?”

“ம்…இதோ நான் கிளம்பிட்டேன்”

என்று மூவருமாக அவரவர் காரில் வசுந்தராவின் க்ளினிக் சென்றனர். அங்கே சென்றவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. வசுந்தரா முன்தினம் மாலை டியூட்டி முடிந்து ஒன்பது மணிக்கெல்லாம் வீட்டுக்கு சென்றுவிட்டார் என்ற செய்தி தான் கிடைத்தது. ஆனால் அங்கிருந்த ஒரு நர்ஸ் நைட் ட்யூட்டி முடித்து விட்டு பரபரப்பாக வீட்டுக்கு செல்ல புறப்பட்டுக் கொண்டே ஜேம்ஸைப் பார்த்தாள். அவள் கண்கள் ஜேம்ஸிடம் ஏதோ சொல்ல துடித்ததை உணர்ந்த ஜேம்ஸ் மெல்ல சக்தி விஷாலை அங்கேயே இருக்க சொல்லி விட்டு அந்த நர்ஸை பின் தொடர்ந்து சென்றான். அவள் லிஃப்ட்டிற்குள் நுழைந்தாள். ஜேம்ஸும் அதே லிஃப்ட்டிற்குள் நுழைய ஓடிச் சென்றான் ஆனால் லிஃப்ட்டின் கதவுகள் மூடியதால் அவன் அந்த நர்ஸ் ஏறிய லிஃப்ட் எங்கே செல்கிறதென்று நின்று பார்த்தான். அது அந்த கட்டிடத்தின் கூரை தளத்திற்கு சென்றது.

பக்கத்து லிஃப்ட்டை எடுத்தால் ஜேம்ஸ் அந்த நர்ஸை தவரவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் …ஏனெனில் ஒரு வேளை அவள் அவனை ஏமாற்ற அங்கு சென்று விட்டு மீண்டும் கீழே ஏதாவது தளத்தில் இறங்கினால்! என்று யோசிக்க சில வினாடிகளே எடுத்த ஜேம்ஸ் படிகளில் ஏறிச் சென்றான். அப்படி ஏறுவதால் அவள் இடையில் எந்த தளத்தில் இறங்கினாலும் அவனிடம் அகப்படுவாள்.

ஜேம்ஸ் வேக வேகமாக படிகளில் ஏறிச் சென்றான். ஆனால் மேலே கூரை தளத்திற்கு சென்ற லிஃப்ட் கீழே வரவேயில்லை. அவனும் கூரை தளத்தை சென்றடைந்தான். அங்கே பீப் பீப் பீப் என்ற ஒலியுடன் லிஃப்ட் மூடாமல் திறந்திருந்தது. யாரோ ஒருவரின் கால்கள் லிஃப்ட்டின் கதவுகளை மூடவிடாது குறுக்கே தடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த ஜேம்ஸ் வேகமாக லிஃப்ட் அருகே சென்று பார்த்தான். அவன் யாரைத் தேடி வந்தானோ அந்த நர்ஸ் தான் குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்திருந்தாள். அதைப் பார்த்த ஜேம்ஸ் உடனே சக்தியை கைபேசியில் அழைத்து டாக்டர்களுடன் வேகமாக கூரை தளத்திற்கு வருமாறு கூறினான்.

ஜேம்ஸின் பேச்சில் இருந்த படபடப்பு ஏதோ ஆபத்தான விஷயம் நடந்துள்ளது என்பதை சக்திக்கு உணர்த்தியது. உடனே அவள் அங்கிருந்த வரப்வேற்பாளரிடம் சென்று அவசரம் என்று கூறி இரண்டு டாக்டர்கள் மற்றும் இரண்டு நர்ஸுகளுடன் லிஃப்ட்டை நோக்கிச் சென்றாள். அப்போது விஷால் அவளிடம்

“ஏய் தி…தி…தி…எங்க போற?
ஜேம்ஸ் எங்க”

என்று கேட்டுக் கொண்டே அவள் பின்னால் செல்ல அவனும் அவர்களுடன் லிஃப்ட்டிற்குள் சென்றான். லிஃப்ட்டின் கதவுகள் மூடியது. சக்தி கூரை தளம் செல்வதற்கான பொத்தானை அழுத்தினாள்.

தொடர்வாள்….

ஆயிரம் பொய்கள் சொல்ல
ஆயிரம் ஜென்மங்கள் வேண்டாம்
நமது வாழ்நாளே போதுமானது!

பொய்களில் உண்டு இருவகை
அதற்கான விதைகளோ பல வகை

தீமை இழைக்கும் பொய்
நன்மை பயக்கும் பொய்

தீமை இழைக்கும் பொய்களின் விதைகள் சுயநலம், பொறாமை, பேராசை, ஆணவம், அதிகாரம், தற்பெருமை, சோம்பல், புறம்பேசுதல், பாரபட்சம், வாக்குவாதம்…

நன்மை பயக்கும் பொய்களின் விதைகள் அன்பு, பாசம், ஒற்றுமை, பிறரை வாழ வைப்பது, சக மனிதர்களின் மகிழ்ச்சி, குடும்ப நலன்…

தீமை இழைக்கும் பொய் முடிவில்லாதது
நன்மை பயக்கும் பொய் சுபத்தில் முடிவது

தீமை இழைக்க சொன்ன பொய் நன்மையிலும்
நன்மை பயக்க சொன்ன பொய் தீமையிலும்
சிலநேரங்களில் நிலையெதிர் மாறாக மாறுவதும் உண்டு
மனம் துவண்டு போக வேண்டாம் அதை கண்டு

பொதுவான பொய் சொல்வதும் தவறு
பொதுவாக பொய் சொல்வதும் தவறு

ஆயிரம் ஆயிரம் பொய்களப்பா
அதை சற்று ஆராய்ந்து நல்லவைகளுக்காக சொன்னால் நல்லதப்பா

நன்றி🙏
நா. பார்வதி