காலை விடிந்து மணி ஏழானது நவீனும் மிருதுளாவும் இரவு முழுவதும் அவர்களின் மகள் சக்தியை எண்ணிக்கொண்டே வெகுநேரம் தூங்காமல் இருந்ததில் மணி ஏழானது கூட தெரியாமல் உறங்கிக்கொண்டிருந்தனர். சட்டென்று மிருதுளா எழுந்தாள். மணியைப் பார்த்தாள். கடிகாரம் ஏழரை என்றுக் காட்டியது. சக்திக்கு ஃபோன் செய்து பார்ப்போமா என்று நினைத்து மொபைலை எடுத்தவள் அருகில் உறங்கிக்கொண்டிருந்த நவீனைப் பார்த்தாள். பின் மெல்ல அந்த அறையிலிருந்து வெளியே வந்து ஹாலில் அமர்ந்து மொபைலையே பார்த்துக்கொண்டிருந்த அவளது மனம் ஒன்று நினைத்தது ஆனால் கைகள் சக்தியின் நம்பரை அழுத்திட துடித்தது. அவள் சற்று நிதானித்துக் கொண்டு மனம் சொல்வதைக் கேட்கலானாள்.
“இப்போ சக்திக்கு விடியற்காலை ரெண்டரைலேந்து மூணு மணிக்குள்ள இருக்கும்.
ஒரு வேளை அவ நைட்டு லேட்டா வந்துட்டு இப்ப தான் தூங்க போயிருந்தான்னா!!! அப்பறம்…
நான் தேவையில்லாம குழந்தைய எழுப்பி விட்டுருவேன்.
வேண்டாம் வேண்டாம்! அவ எழுந்துரிக்கட்டும்.
சரி வீட்டு நம்பருக்கு கால் பண்ணினா என்ன?
இல்ல இல்ல அந்த ப்ளூவும் சார்ஜிங் ஸ்டேஷன்ல இருக்கும் அப்புறம் சக்தி தான் எழுந்து வரவேண்டியிருக்கும்.
அப்படி அவ வீட்டுக்கு வந்திருந்தான்னா நிச்சயம் எங்க கால்ஸை பாத்திருப்பா…
அப்படி பார்த்திருந்தான்னா உடனே எங்களுக்கு மெஸேஜாவது பண்ணிருப்பாளே!
ஏன் பண்ணல?
அப்படீன்னா அவ இன்னும் வீட்டுக்கு வரலைன்னு தானே அர்த்தம்!
கால் பண்ணிடலாமா? ம்…சரி பண்ணித்தான் பார்ப்போம்.
இதுக்கு மேல என்னால இந்த டென்ஷன தாங்க முடியாது.
ஆனா நான் கால் பண்ணி அவ மொபைல் மறுபடியும் சுவிட்ச்டு ஆஃப்ன்னு வந்துதுன்னா?”
என்று தனக்குள் ஒரு வினாவிடை அமர்வு நடத்திக்கொண்டிருக்கும் போது அவளின் தோளைப் பிடித்து உலுக்கி
“ஏய் மிருது!
காலையில மொபைலை கையில வச்சுண்டு என்ன யோசனை?
மிருது கால் பண்ணினாளா?”
“ம்…ஆமாம் நவீன்.
அவள்ட்ட பேசிட்டு இப்ப தான் வச்சேன்”
“அப்படியா!
என்னை ஏன் எழுப்பலை?
அப்போ நான் உடனே அவளைக் கூப்பிட்டு பேசட்டும்.”
“ம்..இல்ல இல்ல.
இப்ப வேண்டாமே நவீன்.”
“ஏன் வேண்டாம்ங்கற?
அப்படீன்னா நான் டென்ஷனாகக் கூடாதுன்னுட்டு நீ சும்மா சொல்லறயா?”
“அய்யோ! இல்ல நவீன்.
அவ இப்ப தான் என்கூட பேசிட்டு தூங்க போயிருக்கா.
இப்போ நீங்க அவளுக்கு கால் பண்ணி அவள எழுப்பிவிட போறேங்களா?”
“ஓ!! சரி சரி சரி அதைச் சொல்ல வேண்டியது தானே!
ஏன் அவ ஃபோன் சுவிட்ச் ஆஃப் பண்ணிருந்தாளாம்?”
“அது…அது…அது வந்து…
ஆங் நாம சொல்லிண்டா மாதிரியே தான்.
அவ ஃபிரென்ட்ஸோட அவுட்டிங் போயிருக்கா அதுக்கு முன்னாடியே ஏதோ மீடிங்குன்னு…
ப்ளூ சொல்லித்தே அப்பவே ஃபோன சுவிட்ச் ஆஃப் பண்ணினாலாம்.
அப்புறம் மறுபடியும் சுட்விச் ஆன் பண்ண மறந்துட்டாளாம்.
ரொம்ப சாரின்னு சொன்னா”
“அப்பாடா!
இப்போ தான் உயிரே திரும்பி வந்தா மாதிரி இருக்கு மிருது.”
“ம்..ஆமாம் ஆமாம் நவீ.
உங்களுக்கு திரும்பி வந்துடுத்து…”
“ம்…என்ன சொன்ன?”
“ஆங் அது ஒண்ணுமில்ல நவீ.
நீங்க ப்ரெஷ் பண்ணிட்டு வாங்கே நான் காபி போட்டு தர்றேன்.
போங்கோ”
“ஓகே டன். இதோ வந்துடறேன்”
என்று நவீன் பாத்ரூமுக்குள் சென்றதும் மிருதுளாவின் கண்கள் கலங்கின அவள் அடுப்படியிலிருந்தே அவர்கள் வீட்டு பூஜை அறையைப் பார்த்து
“அம்மா தாயே!
எங்க பொண்ணு பத்திரமா இருக்கணுமா.
மத்தியானத்துக்காள்ள அவ எங்களுக்கு கால் பண்ணும்மா.
ஏன்னா அதுக்கு மேல என்னால நவீனை சமாளிக்க முடியாதுமா.”
“என்ன மிருது காபி ரெடியா?”
“ம்…இதோ.
நீங்க உங்க பேப்பரை படிச்சிண்டிருங்கோ இதோ கொண்டு வர்றேன்.”
என்று நவீன் கண்டுப்பிடித்து விட கூடாதே என்று கண்களைத் துடைத்துக் கொண்டு முகத்தை அலம்பிக் கொண்டு காபியை எடுத்துச் சென்று நவீனிடம் கொடுத்தாள். அதை வாங்கிக் கொண்ட நவீன் அவளிடம்
“என்ன மிருது?
எனக்கு மட்டும் கொண்டு வந்திருக்க!
எங்க உன் காபி?”
“ம்…நான் நீங்க எழுந்துக்கறதுக்கு முன்னாடியே குடிச்சுட்டேன்.
நீங்க குடிங்கோ.
ஆறிடப் போறது.”
என்று மனதிற்குள் படக் படகென்று அவளின் இதயம் துடித்தது அவளுக்கு கேட்டது.
“ஏன் நீ ஒரு மாதிரி இருக்க மிருது?”
“ஒண்ணுமில்ல நவீ.
நீங்க போய் குளிச்சிட்டு வாங்கோ.
நான் ப்ரேக்ஃபாஸ்ட் செஞ்சு வைக்கறேன்.”
“ஆங்…அப்போ வாக்கிங்?”
“இன்னைக்கு நாம லேட்டா எழுந்துண்டோம் ஸோ நோ வாக்கிங்.”
“சரி இன்னைக்கு நம்ம ஆடிட்டர் பதினோரு மணிக்கு வர்றதா சொல்லியிருந்தார இல்ல…”
“ஆங் ஆமாம்.
அதுக்கென்ன இப்போ?”
“இல்ல நாம சக்திக்கு அப்போ காலையில ஆறரை மணி ஆகிருக்குமே!
அவ எழுந்துக்கற டைம் தானே.
அவகிட்டே ஃபோன்ல பேசிட்டா கொஞ்சம் மனசு லேசாகிடும்.
அதுதான் ஆடிட்டர் மீட்டிங்க ஒரு ஹாஃப் அன் அவர் தள்ளிப்போடட்டுமா?”
“ஏன் நவீ இப்படி இருக்கேங்கள்.
நம்ம ஆடிட்டர் எவ்வளவு பிஸியானவர்ன்னு உங்களுக்கே நன்னா தெரியும்.
அவரோட இந்த மீட்டிங்கை போன மாசம் டிசைட் பண்ணி கன்பர்மேஷனும் வாங்கிண்டோம்.
இப்போ போயி மாத்திக்க சொன்னா!
அப்பறம் மறுபடியும் அவருக்காக நாம வெயிட் பண்ண வேண்டி வரும்.
பேசாம மீட்டிங்கை அட்டென்ட் பண்ணுங்கோப்பா”
“என்னது பண்ணுங்கோ வா?
நீயும் தானே வரனும்.
உனக்கு தான் அக்கௌன்ட்ஸ் டீட்டேயில்ஸ் எல்லாம் தெரியும்.”
“ஆங்…ஆங்.
நான் எல்லாத்தையும் நம்ம அஃபீஸ் ல என்னோட செக்கரெட்ரி ரேணுகிட்ட ஃபோன்ல சொல்லிடறேன்.
அவ மீட்டிங்க்கு வேண்டிய ரெக்கார்ட்ஸ் எல்லாத்தையும் ரெடி பண்ணி வெப்பா.”
“மிருது நீ ஏன் வர மாட்டேங்கற?
நம்ம சக்தி நல்லா இருக்கா இல்லையா?”
“நவீ நம்ம பொண்ணுக்கு ஒண்ணுமே ஆகல.
அதுக்காக நான் அப்படி சொல்லலை.
நைட்டு ஃபுல்லா தூங்காததால தல வலிக்கறது அதுதான்.
வேற ஒண்ணுமில்ல.
அதுவுமில்லாம சக்தி லேட்டா தான் எழுந்துப்பேன்னு என்கிட்ட ஃபோன்ல சொன்னா.
நீங்க அவள நம்ம டைம் பதினோரு மணிக்கெல்லாம் கூப்பிட்டு டிஸ்டர்ப் பண்ணாதீங்கோ.”
“ம்…ம்…சரி.
நான் போய் குளிச்சுட்டு நம்ம ஆஃபீஸுக்கு புறப்படறேன்.”
நவீன் குளித்து வந்ததும் மிருதுளா அவனுக்கு டிபன் கொடுத்தாள். அதை சாப்பிட்டுவிட்டு நவீன் ஆஃபீஸுக்கு சென்று வர காருக்குள் ஏறி காரை ஸ்டார்ட் செய்து அவர்கள் தெரு முனையைத் தாண்டியதும் அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகையை வாசல் கதைவைத் தாழிட்டு வீட்டினுள் வந்ததும் ஹாலில் உட்கார்ந்த மிருதுளா ஓவென்று அழுதுக்கொண்டே சக்தி மொபைலுக்கு கால் செய்தாள் மீண்டும் சுவிட்ச்டு ஆஃப் என்றே வந்தது. உடனே வாய்விட்டு
“அடியே சக்தி எங்கடி போயிருக்க?
கால் ல ஏன்டி எடுக்க மாட்டேங்கற?”
என்று கூறிக்கொண்டே வீட்டு நம்பருக்கு கால் செய்தாள். ரொம்ப நேரம் கால் சென்றுக் கொண்டே இருந்தது. ஆனால் ப்ளூவும் கால் ஐ எடுக்கவில்லை. பரிதவித்துக் கொண்டிருந்த மிருதுளாவுக்கு கடவுளை வேண்டிக்கொள்வதைத் தவிர வேறெதுவும் தோன்றவில்லை. நேராக பூஜை அறையில் அமர்ந்துக்கொண்டு வேண்டலானாள்.
ஒரு இரண்டு மணி நேரமானதும் மிருதுளாவின் மொபைலுக்கு ஒரு கால் வந்தது. தொடர்ந்து அடித்துக் கொண்டேயிருந்த ஃபோனின் சப்தம் நின்றது. அவள் சக்தியையே எண்ணிக்கொண்டு அப்படியே உறைந்து அமர்ந்திருந்ததால் ஃபோனின் வந்த சப்தமும் அது நின்று போனதும் தெரியாதிருந்தாள்.
இன்னுமொரு பதினைந்து நிமிடங்கள் கழிந்ததும் மீண்டும் மிருதுளாவின் மொபைல் ஒலித்தது. அந்த சப்தம் எங்கோ தூரத்தில் ஒலிப்பது போல உணர்ந்த மிருதுளா சுயநினைவுக்கு வந்ததும் ஓடிப்போய் தனது மொபைலை எடுத்து யார் என்ன என்று கூட பார்க்காமல்
“ஹலோ! ஹலோ!”
“ஹலோ மிருது!
ஏன் இவ்வளவு பதட்டமா பேசற?
என்ன ஆச்சு?”
“ஓ! நீங்களா.
சொல்லுங்கோ நவீ.
ஒண்ணுமில்ல தலவலிக்கு மாத்திரை போட்டுண்டு தூங்கப் படுத்தேன்…
ரொம்ப நேரமா கால் பண்ணறேங்களோ?”
“இல்லையே இப்ப தான் பண்ணினேன்.
சரி ஒரு முக்கியமான விஷயம் பத்தி சொல்லத்தான் கால் பண்ணினேன்.
நம்ம சக்தி எனக்கு கால் பண்ணினா.”
“என்னது நம்ம சக்தி உங்களுக்கு கால் பண்ணினாளா?
என்ன சொல்லறேங்கள் நவீ?”
“ஆமாம் மிருது.
நான் மீட்டிங்குக்கு போயிண்டிருந்தப்போ அவகிட்டேந்து எனக்கு கால் வந்துது.
அவ உனக்கு தான் ஃபர்ஸ்ட் கால் பண்ணினாளாம்.
ஆனா நீ எடுக்காததால எனக்கு பண்ணினா.
அவ ரொம்ப டையர்டா இருக்காளாம்.
ரெஸ்ட் எடுத்துட்டு அவளோட ஈவினிங் டைம்ல நமக்கு மறுபடியும் கால் பண்ணறதா சொன்னா.
நானும் சரின்னுட்டேன்.”
“அச்சோ நவீ.
அவ எங்க போயிருந்தாளாம்?
எப்ப ஆத்துக்கு வந்தாளாம்?
மொபைல் ஏன் சுவிட்ச் ஆஃபா இருந்துதாம்?”
“ம்…நீ தான் காலையிலேயே அவகிட்ட பேசினேன்னு சொன்னயே!
அப்பவே இதெல்லாம் நீ அவகிட்ட கேட்கலையா மிருது?”
“ஷ்…நவீ!!
அது வந்து…”
“ஏன் மிருது? ஏன்?
இப்படி பொய்க்கு மேல பொய்யா சொல்ல முயற்சிக்கற?
அப்படீன்னா நீ அவளோட காலையில பேசல தானே!
எங்கடா நான் மறுபடியும் ஹார்ட்ட பிடிச்சுண்டு ஹாஸ்பிடல்ல போய் படுத்துப்பேனோன்னு தானே நீ என்கிட்டேந்து மறச்ச?”
“அய்யோ நவீ.
ஐ ஆம் எக்ட்ரீமிலி சாரி.
மொதல்ல நம்ம சக்தி உங்களுக்கு கால் பண்ணினது உண்மையா?
இல்ல நீங்களும் எனக்காக பொய் சொல்லறேங்களா?
ப்ளீஸ் சொல்லுங்கோ நவீ.
காலையிலேந்து தவிச்சுண்டிருக்கேன்.”
“ம்…ம்…எனக்கு அப்பவே நீ பொய் சொல்லறன்னு தோனித்து மிருது.
இல்லாட்டி ஆடிட் மீட்டிங்குக்கெல்லாம் நீ வராம இருந்ததே இல்லையே!”
“அச்சோ அச்சோ நவீ… ப்ளீஸ் நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்கோளேன்.”
“ஆமாம் சக்தி தான் ஃபோன் பண்ணினா.
நான் பொய் சொல்லலை.
அவ ஏதோ தூக்க கலக்கத்துல பேசினா.
அவளோட ஆஃபீஸ் மீட்டிங் போது மொபைல சுவிட்ச் ஆஃப் பண்ணினாளாம்.
அதுக்கப்புறம் அதை மறந்துட்டாளாம்.
இப்போ தான் ஞாபகம் வந்துதாம்.
ஃபோனை எடுத்துப் பார்த்தாளாம் நம்மகிட்டேந்து நிறைய தடவ கால்ஸ் வந்ததால என்னமோ ஏதோன்னு கால் செய்தாளாம்.
இதை எல்லாம் உன்கிட்டயும் சொல்ல சொல்லி சொன்னா.
இல்லாட்டி நீ டென்ஷனாகிடுவேன்னும் சொன்னா.
அவ்வளவு தான் அதுக்கப்புறம் தூக்கம் வர்றதுன்னும், தூங்க போறதாவும், சாயந்தரமா பேசறேன்னும் சொல்லி ஃபோன வச்சுட்டா.
இது தான் நானும் சக்தியுமா பேசிண்டது.
ஸோ ஷு ஈஸ் ஆல்ரைட்.
அவகூட பேசினதுக்கப்பறமா தான் நிம்மதியானேன்.
இனி மீட்டிங்கை நல்லபடியா முடிச்சுட்டு ஆத்துக்கு வரேன்.
நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு மிருது.
நான் நம்ம ரெண்டு பேருக்கும் லஞ்ச் வாங்கிண்டு வரேன்.
சரியா?”
“ம்…சரி சரி.
தாங்க்ஸ் பா எனக்கு உடனே தகவல் சொன்னதுக்கு.
இல்ல நான் சமச்சுடறேன்”
“ம்..ஹூம்..
நீ ரொம்ப டென்ஷனா இருக்க.
அதுனால இன்னைக்கு நாம ஹோட்டலேந்து வாங்கியே சாப்பிடுவோம்.
பை பை ஆடிட்டர் இஸ் வெயிட்டிங்.”
“ம்…பை நவீ”
என்று மிருதுளா ஃபோனை வைத்ததும் சக்திக்குக் கால் செய்தாள். ரிங் போனது ஆனால் சக்தி ஃபோனை அட்டென்ட் செய்யவில்லை. உடனே மிருதுளா தன் மனதிற்குள்
“மனுஷால இப்படி பரிதவிக்க விட்டுட்டு இவ அப்படி எங்கதான் போனான்னு கேட்கணும்னு ஃபோன் பண்ணினா எடுக்க மாட்டேங்கறாளே!!
ம்…சாயந்தரம் ஃபோன் பண்ணட்டும் அப்போ வச்சுக்கறேன் அவளுக்கு.
ஆமாம் அந்த ப்ளூ ஏன் கால் ஐ எடுக்கல?
அது எங்க போச்சு?
இந்த பசங்கள வெளிநாட்டுல படிக்கவும் வேலைக்கும் அனுப்பிட்டு பெத்தவா படற பாடு இருக்கே ஆண்டவா!!!
அப்பா காலையிலேந்து பட்ட பதட்டத்துக்கு ஒரு ரிலீஃப் கிடைச்சிருக்கு.
ஆனாலும் அவ கிட்ட பேசறவரைக்கும் என்னால ஃப்ரீ ஆக முடியாது.
எனிவேஸ் கடவுளே எங்க மகள் பத்திரமாகத்தான் இருக்கான்னு எங்களுக்கு அவ மூலமாவே தகவல் தெரிவித்தமைக்கு கோடானுகோடி நன்றிகள்.
நான் வேண்டிண்ட படியே எல்லா நிறைவேத்திடறேன்.
அப்பாடா”
என்று அமைதியாக கொஞ்ச நேரம் படுத்துக்கொண்ட மிருதுளா. ஆழ்ந்து தூங்கலானாள்.
கடத்தப்பட்ட சக்தியிடமிருந்து ஃபோன் வந்ததாக நவீன் சொல்வது உண்மையா? அப்படியே அது உண்மையாக இருந்தாலும் அவள் எங்கிருந்து கால் செய்திருப்பாள்?
அவள் எப்படி கடத்தப்பட்டவர்களிடமிருந்து தப்பித்திருப்பாள்?
அதைப் பற்றி எல்லாம் நவீனிடம் ஏன் அவள் ஒன்றுமே கூறவில்லை?
இல்லை அவள் கூறி நவீன் மிருதுளாவிடம் சொல்லாமல் மறைத்தானா?
என பல கேள்விகளுக்கான தெளிவான பதில்களை நாமும் வரும் நாட்களில் தேடுவோம்.
தொடர்வாள்…
நா.பார்வதி
அத்தியாயம் 11: பெற்றோரின் பரிதவிப்பு
ஃபோன் கால் பேசி முடித்ததும் நவீனின் வாடிய முகம் கண்டு
“ஏன் ரொம்ப சோகமா இருக்கேங்கள்?
என்ன ஆச்சு?”
“ம்… ஒண்ணுமில்லை!”
“உங்க வாய் தான் ஒண்ணுமில்லைனு சொல்லறது.
ஆனா உங்க முகம் ஏதோ இருக்குன்னு பளிச்சுன்னு சொல்லறதே!”
“ம்…அப்படியா?
அப்போ என் முகத்துக்கிட்டயே கேட்டு தெரிஞ்சுக்கோ.”
“சரி சரி எதுவாயிருந்தாலும் கவலைப் படாதீங்கோ.
நாம ரெண்டு பேருமா எவ்வளவு பார்த்தாச்சு லைஃப்ல.
ஜஸ்ட் டேக் இட் ஈஸி மை டியர் ஹஸுபண்டு.
நான் டின்னர் பண்ணபோறேன்”
“ம்…ம்ம்…என்ன நீ ஏன் என்னனு கேட்காமயே சமாதனம் பண்ணற…
டின்னர் பண்ண போறேன்னு சொல்லிட்டு நீ பாட்டுக்கு அடுப்படிக்குள்ள போயிண்டேயிருக்க?”
“ஹலோ மிஸ்டர் நவீன் என்ன விளையாடறேளா?
நீங்க ஃபோன வச்சதுமே என்ன ஆச்சுன்னு தானே கேட்டேன்?
நீங்க சரியா பதில் சொல்லலை நான் பாட்டுக்கு என் வேலையை பார்க்க தொடங்கிட்டேன்.
இப்போ நான் டின்னர் பண்ணனுமா வேண்டாமா?”
“அது ரொம்ப முக்கியம்.
மனுஷன் இங்க டென்ஷன்ல இருக்கான்.
டின்னராம் டின்னர்.”
“ஓகே சார் ஜி.
உங்களோட இந்த டென்ஷனோட காரணம் என்னனு நானே சொல்லட்டுமா!”
“தெரியுமா?
எப்படி?
எப்போலேந்து மைன்ட் ரீடிங் எல்லாம் பண்ண ஆரம்பிச்ச?”
“ஆமாம்! இதுக்கு அதெல்லாம் வேற கத்துக்கணமாக்கும்.
என்னத்த?
எப்பவும் போல உங்க பொண்ணு கால் அட்டென்ட் பண்ணிருக்க மாட்டா.
உடனே டென்ஷன் ஆகிருப்பேங்கள்.
இதுதானே!
விடுங்கோப்பா.
அவ என்ன சின்ன குழந்தையா?
அவளுக்கு ஏதாவது வேலை இருந்திருக்கும்.
அவளே எப்பவும் போல அப்பறமா கால் பண்ணுவா.
ஸோ வெயிட் பண்ணுங்கோ.”
“அதுக்கில்ல மிருது.
நான் மொபைலுக்கு கால் பண்ணினதும் சுவிட்ச்டு ஆஃப்ன்னு வந்தது.
அவ ஏன் சுவிட்ச் ஆஃப் பண்ணி வைக்கணும்?
இது வரை அவ அப்படி பண்ணினதே இல்லையே!
அதுவுமில்லாம நான் அவ வீட்டு நம்பருக்கும் கால் பண்ணினேன் தெரியுமா!!
அங்கேயும் அவ இல்லன்னு ப்ளூ சொல்லித்து.”
“அச்சச்சோ நீங்க என்ன அபியும் நானும் பிகாஷ்ராஜ் மாதிரி ஆகிண்டிருக்கேங்கள்?
அவ எங்கயாவது ஃபிரண்ட்ஸோட போயிருப்பா!!”
“ம்…ஆமாம் ஆமாம்…
ப்ளூ சொல்லித்து அவ ஆஃபிஸுலேந்து நேரா பாரிஸ் போயிருக்காளாம்!”
“சரி போகட்டும்.
அங்க ஏதாவது வேல இருந்திருக்கும்.”
“ஆஃபிஸ் வேலை இல்ல மிருது.
அவ விஷாலோட பேரன்ட்ஸ் கிட்ட வீடியோ கால்ல பேசறதுக்காக போயிருக்காளாம்.”
“சரி பேசட்டுமே.
நமக்கு எப்படி விஷாலோட பேசணும்னு தோனறதோ அதே போல தானே அவாளுக்கும் நம்ம சக்தியோட பேச தோனிருக்கும்.
அதுதான் போயிருப்பா.”
“நாமளும் தான் அந்த பையன்ட்ட பேசணும்னு சொன்னோம்.
ஏன் நம்மளோட அவன இவ ஆத்துக்கு வரவச்சு பேசவச்சுட்டு…
அப்புறமா இவ அவாளோட பேச போயிருக்கலாமில்லையா?
அந்த பையன் எப்படி என்னனு நாம தெரிஞ்சுண்டதுக்கு அப்பறமா அவள் அங்க போயகருக்கலாம்ன்னு எனக்கு படறது.”
“ம்…ஹும்…
நீங்க பிரகாஷ் ராஜ்ஜே தான் போங்கோ.
அவ நம்ம பொண்ணு எப்போதும் தப்பான முடிவு எடுக்க மாட்டா.
கவலைப் படாதீங்கோ நவீ”
“அது சரிதான்.
போகட்டும் நான் வேண்டாங்கல.
நம்மகிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாமில்லையா.
அதுதான் எனக்கு வருத்தத்த தர்றது”
“நீங்க ஒரு வருத்தமும் படவேண்டிய அவசியமே இல்ல.
இருங்கோ நான் சூடா நாலு இட்லி எடுத்துண்டு வரேன்.
உங்களுக்கு ரொம்ப பிடிச்ச தக்காளி தொக்கு பண்ணிருக்கேன்.
சாப்டுட்டு மாத்திரைய போட்டுக்கோங்கோ.
சக்தி பத்தின கவலை உங்களுக்கு நேவையே இல்ல.
சரியா”
என்று நவீன் பதற்றமடையாமல் இருக்கவேண்டும் என்பதற்காக மிருதுளா அவனை தேத்திவிட்டு அடுப்படிக்குள் டின்னர் செய்துக்கொண்டே மனதிற்குள்
“என்ன ஆச்சு?
ஏன் இந்த பொண்ணு மொபைல சுவிட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்கா?
ஒரு வேள முன்ன நடந்தா மாதிரியே மொபைல தொலச்சிருப்பாளோ?
அப்படின்னா எங்களுக்கு ஃபோன் பண்ணி சொல்லியிருப்பாளே!!
நவீன் சாப்டுட்டு தூங்கட்டும்.
அப்புறமா மறுபடியும் நான் அவளுக்கு கால் பண்ணிப் பாக்கறேன்.”
யோசித்துக் கொண்டே வேலையை செய்துக் கொண்டிருக்கையில் நவீன் ஹாலில் இருந்து
“என்னமோ டின்னர் பண்ணித்தரேன்னும்.
தக்காளி தொக்குன்னும் எல்லாம் சொன்ன?
ஆனா இன்னும் ஒண்ணும் வரலையே!
மிருது! மிருது!”
நவீனின் குரல் கேட்டதும் சட்டென்று தனது மகளைப் பற்றிய யோசனைகளிலிருந்து சுயநினைவுக்கு வந்த மிருதுளா கடகடவென தட்டில் இட்லியும் தயிரும் வைத்து எடுத்துச் சென்று நவீன் முன் வைத்தாள். அதைப் பார்த்த நவீன்
“உனக்கு என்ன ஆச்சு மிருது?”
“ம்..ஏன் கேட்கறேங்கள்?”
“இல்ல தக்காளி தொக்குன்னு சொல்லிட்டு இப்போ வெறும் தயிர் வச்சு கொண்டு வந்திருக்கயேன்னு கேட்டேன்.”
“ஓ! சாரி நவீ.
இருங்கோ தொக்கு கொண்டுண்டு வரேன்.”
என்று கூறி கொண்டு வந்து கொடுத்து, அவன் சாப்பிட்டதும் மாத்திரையையும் கொடுத்தாள். எப்போதும் மாத்திரையை போட்டுக்கொண்ட அரைமணிநேரத்தில் தூங்கும் நவீன் அன்று அவனது மனக்குழப்பதால் தூங்காமல் இருந்தான். அவன் தூங்கினப் பிறகு தான் சக்தியோட பேசி விஷயத்தை தெரிஞ்சுக்க முடியுமேன்னு காத்திருந்த மிருதுளா நவீனிடம்
“என்ன இன்னிக்கு தூங்காம உட்கார்ந்துண்டிருக்கேங்கள்?”
“தூக்கம் வர்றது.
ஆனா தூங்க என் மனசு விட மாட்டேங்கறது மிருது.
என்னமோ தெரியல மத்தியானத்துலேந்து எனக்கு சக்தி ஞாபகமாவே இருக்கு.”
“கவலைப் படாதீங்கோ நவீ.
அவ நேத்து நம்ம கூட நல்லா தானே பேசினா!
அப்புறமென்ன?
இன்னைக்கு அவ அவளோட வருங்கால மாமனார் மாமியாரோட பேச பேயிருக்கா.
அவ அந்த டென்ஷன்ல கூட ஃபோன எடுக்காம இருந்திருக்கலாம் இல்லையா”
“எடுக்காம இருந்தா ஓகே தான்.
ஆனா ஏன் சுவிட்ச் ஆஃப் பண்ணி வைக்கணும்னு தான் யோசனையா இருக்கு!”
“ம்….சுவிட்ச் ஆஃப் பண்ணலைன்னா நீங்களே அவள ரெண்டு மூணு தடவ தொந்தரவு செய்திருப்பேங்கள்.
உண்மையா இல்லையா.
சொல்லுங்கோ!”
“ம்…அப்படியும் இருக்கலாமோ!”
“இருக்கலாமோ என்ன அப்படித்தான் இருக்கும்.
அவ அவாளோட பேசிண்டிருக்கும் போது நீங்க கால் பண்ணினா அது அவ்வளவு சரியா இருக்காது நவீ.
புரிஞ்சுக்கோங்கோ.
அவ தான் அந்த பைனை நம்ம கூட வீடகயோ கால்ல பேச வைக்கறேன்னு சொல்லிருக்காளோனோ அப்புறம் ஏன் உங்களுக்கு அவசரம்.
எழுந்திரிங்கோ வாங்கோ போய் படுக்கலாம்.
இல்லாட்டி நாளைக்கு உங்களுக்கு முடியாம போயிடும்.
ம்…கிளம்புங்கோ நவீ”
“ஒரே ஒரு தடவ சக்திக்கு கால் பண்ணிப் பார்த்துடவா?”
“நவீ திஸ் ஈஸ் டூ மச்.
அவ சின்ன குழந்தைக் கிடையாது.
தயவுசெய்து வாங்கோ வந்து படுத்து தூங்குங்கோ.
காலையில அவளே கால் பண்ணி உங்க கூட பேசுவா.”
“ம்..சரி சரி… வரேன்.”
“ம்…படுங்கோ இதோ நான் வந்துடறேன்”
“நீ எங்க போற?”
“எனக்கு கிட்சன்ல கொஞ்சம் வேலையிருக்குப்பா.
அதை முடிச்சுட்டு வந்துடறேன்.
நீங்க தூங்குங்கோ.
லைட்ட ஆஃப் பண்ணறேன்.
சரியா.
குட் நைட் நவீ.
ஹாவ் எ நைஸ் ஸ்லீப்”
“குட் நைட் மிருது.”
என்று நவீனை தூங்குவதற்காக படுக்க வைத்துவிட்டு அவன அடுப்படியிலிருந்த வேலைகளை வேகவேகமாக முடித்து மெல்ல நவீன் உறங்கிக்கொண்டிருந்த அறையினுள் எட்டிப்பார்த்தாள். அவன் நன்றாக உறங்கிவிட்டான் என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டதும் வேகமாக தனது மொபைலை எடுத்து சக்திக்கு கால் செய்தாள். அப்போதும் சுவிட்ச்டு ஆஃப் என்றே வந்தது. உடனே வீட்டு நம்பருக்கு கால் செய்துப் பார்த்தாள். மீண்டும் ப்ளூவிடமிருந்து அதே பதில் தான் வந்தது.
மிருதுளாவும் நவீனைப் போலவே பதற்றமானாள். என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்த மிருதுளா உடனே சக்தியுடன் வேலை பார்க்கும் அவளின் சினேகிதி ருத்ராவுக்கு கால் செய்தாள்.
“ஹலோ ருத்ரா.
நான் சக்தியோட அம்மா பேசறேன் மா.
எப்படி இருக்கமா?”
“ஹாய் ஆன்டி.
நான் நல்லா இருக்கேன்.
நீங்க எப்படி இருக்கீங்க?
அங்கிள் எப்படி இருக்கார்?”
“நாங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கோம் மா.
தாங்க்ஸ்.
நான் வந்து உனக்கு எதுக்கு கால் பண்ணினேன்னா!!”
“எதுக்கு ஆன்டி.
ஏன் தயங்குறீங்க.
எதுவானாலும் செல்லுங்க ஆன்டி.
அங்கிளுக்கு மறுபடியும்…”
“ச்சே ச்சே…
அதெல்லாம் ஒண்ணுமில்லமா.
சாயந்தரத்துலேந்து சக்தி மொபைலுக்கு கால் பண்ணி பார்த்துண்டே இருக்கோம் அவ ஃபோன் சுவிட்ச் ஆஃப்ன்னே வர்றது மா.
அதுதான் உனக்கு அவ ஏதாவது ஃபோன் பண்ணினாளான்னு கேட்க தான் உன்னை நான் கால் பண்ணினேன் மா.”
“இல்ல ஆன்டி.
அவ எனக்கு எந்த காலும் பண்ணல.
மோரோவர் அவ அவளோட புது ஃபிரண்ட் யாரோ விஷாலாம் அவன் வீட்டுக்கு பாரிஸுக்கு போறதா சொல்லி காலையில பதினோரு மணிக்கெல்லாம் கிளம்பி ஆஃபீஸுக்கு ஹாஃப் டே லீவு சொல்லிட்டு கிளம்பி போயிட்டாளே!”
“ஆங் அத எங்ககிட்ட சொன்னாமா.
ஆனா அதுக்கப்பறமா தான் அவள கான்டாக்ட் பண்ண முடியலை.
அதுதான் கொஞ்சம் கவலையா இருக்கு”
“ஒரு கவலையும் வேண்டாம்.
சில நேரங்கள் ல டவர் கிடைக்காது ஆன்டி.
அதுனாலையும் இருக்கலாம்.”
“ஆனா அவ இன்னேரத்துக்கு பாரிஸ் போய் சேர்ந்திருக்கணுமே மா!
ஆனா அவ ஏன் இன்னும் ஃபோனை சுவிட்ச் ஆஃப் பண்ணியே வச்சிருக்கா?”
“ஆன்டி அதுவும் நல்ல பாயின்ட் தான்…
ம்…”
“சரி மா.
உன்கிட்ட அவளோட அந்த பாரிஸ் ஃபிரண்ட் நம்பர் இருக்காமா?”
“சாரி ஆன்டி என்கிட்ட இல்லையே.
தீ என்கிட்ட அந்த பையனைப் பத்தி இன்னைக்கு காலையில தான் சொன்னா.
நானும் அவனை பார்த்ததில்ல.
நம்பர் எதுவும் இல்ல ஆன்டி.”
“ம்….அப்படியா!”
“ஆன்டி இப்போ உங்களுக்கு டைம் பதினொன்னு ஆகிருக்குமே!
டு நாட் வரி ஆன்டி.
அவளே கால் பண்ணுவா.
நானும் அவள கான்டாக்ட் பண்ண முயற்சிக்கறேன்.
கான்டாக்ட் பண்ணினா உடனே உங்களுக்கு ஃபோன் பண்ண சொல்லறேன்.
நீங்க போய் தூங்குங்க ஆன்டி.
ஒண்ணுமிருக்காது.”
“சரி மா.
நல்லது.
உன்னை தொந்தரவு செஞ்சதுக்கு ரொம்ப சாரிமா.”
“அய்யோ ஆன்டி.
எதுக்கு சாரி எல்லாம் சொல்லறேங்கள்.
என்னோட அப்பா அம்மாவும் என்னோட பேசமுடியலைன்னா சக்தியை தான் கால் பண்ணி கேட்பாங்க.
டோன்ட் வரி டூ மச் ஆன்டி.
அவளே உங்களுக்கு கால் பண்ணுவா பாருங்க.
ஏதாவது வேலையில ஃபோன சுவிட்ச் ஆஃப் பண்ணிருப்பா…
அத மறுபடியும் சுவிட்ச் ஆன் பண்ண மறந்திருப்பா.
அவ்வளவு தான்.
இது மாதிரி நானே நிறைய தடவ பண்ணிருக்கேன் ஆன்டி.
ஸோ கவலைப் படாம போய் நிம்மதியா தூங்குங்க ஆன்டி.”
“சரி மா.
ஹாவ் எ நைஸ் ஈவ்னிங் ருத்ரா.
நான் வச்சுடறேன்.
பை”
“ம்…பல ஆன்டி.
குட் நைட் அன்ட் ஹாவ் எ நைஸ் ஸ்லீப் ஆன்டி.
பை பை.”
என்று மொபைலை ஆஃப் செய்தும் மொபைலயே வெறித்துப் பார்த்துக்கொண்டே கண்களில் கண்ணீருடன் அமர்ந்திருந்தாள் மிருதுளா.
சட்டென மேலே முகத்தை தூக்கியவள் அதிர்ந்துப் போனாள். ஏனெனில் அவள் அமர்ந்து ருத்ராவுடன் ஃபோன் பேசிக்கொண்டிருந்த அறையின் கதவில் சாயந்தபடி கண்களில் கண்ணீருடன் நின்றிருந்தான் நவீன். அவனைப் பார்த்ததும் மிருதுளா அவளின் கண்களைத் துடைத்துக் கொண்டு
“நீங்க எப்போ வந்தேங்கள்?
தூங்கலையா?”
“நம்ம சக்திக்கு என்ன ஆச்சு மிருது? உண்மைய சொல்லு மிருது!”
“அய்யோ!
அவளுக்கு என்ன ஆகிடப் போறது நவீ.
அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா.
வாங்கோ நாம போய் படுத்துண்டு தூங்கலாம்.”
“இல்ல இல்ல…
சம்திங் ராங்.
நீ இப்போ அவளோட ஃபிரண்ட் ருத்ரா கிட்ட தானே பேசிண்டிருந்த?
அப்படின்னா அவளோட மொபைல் இன்னமும் சாவிட்ச் ஆஃப்ல தானே இருக்கு!
எங்க நம்ம பொண்ணு சக்தி மிருது?”
“நவீ…நவீ…நவீ!!
நம்ம பொண்ணுக்கு ஒண்ணும் ஆகாலை ஆகவும் ஆகாது.
வாங்கோ தூங்குங்கோ ப்ளீஸ்”
“அப்புறம் ஏன் உன் கண்ணுலேந்து கண்ணீர் வந்துது?”
“பின்ன எனக்கும் கவலையிருக்காதா என்ன?
ஆனா உங்கள மாதிரி எல்லாம் நான் கற்பனை பண்ண மாட்டேன்.
அவ காலையில கட்டாயமா ஃபோன் பண்ணுவா.
இப்போ வாங்கோ”
என்று குழந்தையை சமாதானம் செய்வதுப் போல செய்து நவீனை மீண்டு அவர்கள் அறைக்கு அழைத்துப் போய் படுக்கவைத்தாள் மிருதுளா.
“ஹேய் மிருது!
இப்போ மறுபடியும் எங்க எழுந்துப் போற?”
“தண்ணி காலி ஆயிடுத்து இல்லையா.
அது தான் வேற பாட்டில் தண்ணி எடுத்துண்டு வரலாமேன்னு எழுந்துண்டேன்.
கவலைப் படாம தூங்குங்கோ.
இதோ நானும் தண்ணி எடுத்துண்டு வந்திடுவேன்.”
என்று கூறிக்கொண்டே அடுப்படிக்கு சென்று ஃப்ரிட்ஜில் இருந்து ஒரு பாட்டில் தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்து படுக்கைபக்க மேஜையில் வைத்துவிட்டு படுத்துக்கொண்டே
“அம்மா சமயபுரத்தம்மா தாயே!
எங்க பொண்ணுக்கு ஒண்ணும் ஆகக்கூடாது.
அவ நன்னா இருக்கணும்.
நாளைக்கு விடிஞ்சதும் அவ எங்களோட கால் பண்ணி பேசணும் மா.
எங்க கொழந்தைய பார்த்துக்கோமா”
என்று மனதில் வேண்டிக்கொண்டு ரொம்ப நேரம் தூக்கமின்றி புரண்டு படுத்தவள் அவளுக்கே அறியாது தூங்கிப்போனாள்.
விடிந்தால் நவீனும் மிருதுளாவும் காத்திருக்கும் கால் சக்தியிடமிருந்து வருமா?
தொடர்வாள்…
அத்தியாயம் 10: கைபேசி
நால்வரால் கடத்தப்பட்ட சக்தி மயக்கத்திலேயே இருந்தாள். அவளை கொண்டுச் சென்ற அந்த கண்டேய்னர் வண்டி வெகு தூரம் பயணித்துக் கொண்டிருந்தது. இதற்கிடையில்
அவளைக் கடத்த சொன்ன மர்ம நபர் சக்தியின் மொபைலுக்கு கால் பண்ண முயற்சித்தான்.
“ம்…கம் ஆன் தீ…ஷிட்.”
என்று விஷால் அவள் மொபைலுக்கு கால் பண்ண முயற்சித்து அவள் எடுக்கவில்லை என்றதும் கேபப்பட்டான்.
ப்ளூ சக்தியின் மொபைல் நம்பரை அழைத்தது.
“ம்…என்ன இது யூஸர் பிஸின்னு வருது!
அப்படின்னா?”
என்று எதையோ யோசித்தது.
மர்ம நபர் கால் சக்தி மொபைலுக்கு சென்றதும் அவன் உடனே காலை கட் செய்து விட்டு உடனே ராபர்ட்டுக்கு கால் செய்தான்
“ம்…ராபர்ட் அவளோட மொபைல்லை சுவிட்ச் ஆஃப் பண்ணீட்டிங்களா?”
“ஷிட்…சாரி பாஸ் மறந்துட்டோம். இதோ இப்பவே பண்ண சொல்லிடறேன். நீங்க ஃபோனை வையுங்க. அன்ட் தாங்க்ஸ் ஃபார் ரிமைன்டிங்”
“ம்..ம்…நான் கொஞ்ச நேரம் முன்னாடி தான் அவள் நம்பருக்கு கால் பண்ணினேன். ரிங் போச்சு அதுனால தான் உனக்கு கால் பண்ணிக் கேட்டேன். ம்…சீக்கிரமா பண்ணு”
என்று சொல்லி கால் ஐ கட் செய்தான். உடனே ராபரட் ஜானை அழைத்து
“ஜான்”
“எஸ் ராபர்ட் ஷீ இஸ் பர்ஃபெக்ட்லி ஃபைன். எத்தன தடவ சொல்லறது?”
“ஏய் அது இல்ல ஜான்.
நாம அவளோட மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்யலை.
மறந்துட்டோம்.
நம்ம பாஸ் அவளுக்கு கால் பண்ணிருக்கார் ரிங் போயிருக்கு”
“ராபர்ட் அப்படி அவ மொபைல் ரிங் ஆகிருந்தா எங்களுக்கு கேட்டிருக்குமே!”
“டேய் டேய் டேய்!!! உன்ன எல்லாம் வச்சுட்டு இந்த மாதிரி வேலையில இறங்கியிருக்கேன் பாரு.
என்ன சொல்லணும்.”
“ஓ ஒரு வேளை அவ ஃபோன் சைலென்ட் மோடுல இருக்குமோ…
அதுனால தான் நமக்கு கேட்கலையோ!”
“அப்பாடா இப்பவாவது கண்டுபிடிச்சியே!
சரி சரி டைம் வேஸ்ட் பண்ணாம முதல்ல அவளோட மொபைல்ல சுவிட்ச் ஆஃப் பண்ணு. போ”
“ஓகே டன்.”
என்று ஜான் கூறி ஃபோனை தனது பாக்கெட்டில் வைத்துவிட்டு சக்தியின் ஃபோனை அவள் காரிலிருந்த பைகளில் தேட ஆரம்பித்தான். அவள் வைத்திருந்த இரண்டு பைகளிலுமே மொபைல் இருக்கவில்லை. அவன் கார் டேஷ்போர்டு, சீட் கவர் என காரை முழுவதுமாக சோதனை செய்து பார்த்தான். அப்போதும் அவனுக்கு கிடைக்கவில்லை. உடனே அவன் ராபர்ட்டை தொடர்பு கொண்டான்.
“ராபர்ட் அவ ஃபோன் காருக்குள்ள இல்லையே!”
“என்னடா சொல்லற?
அவளோட ஹேன்ட்பேக்ல பாருடா.”
“அவ வச்சிருந்த ரெணடு பேக்கையும் பார்த்துட்டேன். காரையும் நல்லா சோதனைப் போட்டுட்டேன் அவ மொபைல காணல”
“என்னடா சொல்லற ஜான்.
காருக்குள்ள நல்லா தேடிப்பார்த்தயா?”
“ம்…ஃபுல்லா தரோவா பார்த்தாச்சு ஆனா அவ மொபைல் இல்ல”
“அவ நம்பர் இருந்திருந்தா உடனே கால் பண்ணி பார்த்திருக்கலாம்….
ம்…..”
“ராபர்ட் நீ யாரு நம்மள கடத்த சொன்னாங்களோ அவங்க கிட்ட இவ நம்பரை வாங்கி கால் பண்ணு.
அப்போ அவ மொபைல் வைப்ரேட் ஆகுமில்ல அதை வச்சு காருக்குள் எங்க இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்.”
“ம்…சரி சரி!
நீ ஃபோனை வை.
நான் அவங்க கிட்ட கேட்டுப் பார்க்கறேன்.
அதுக்கு என்ன சொல்லப் போறாங்களோ!!”
என்று கூறிக்கொண்டே ஜானின் கால் ஐ துண்டித்ததும் மர்மநபருக்கு கால் செய்தான் ராபர்ட்.
“ம்…என்ன மொபைல இன்னும் சுவிட்ச் ஆஃப் பண்ணல போல!”
“ஆமாம்.
அவ மொபைல் அவளோட ஹேன்ட்பேக்ல இல்ல.
காருக்குள்ளேயும் என் ஆள் தேடிப்பார்த்திருக்கான் அங்கேயும் இல்ல.
அதுனால…”
“அதுனால என்ன?”
“உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா…
அந்த பொண்ணோட நம்பரை எனக்கு ஷேர் பண்ணுங்க.”
“அப்படி அனுப்பினா?”
“நாங்க அந்த நம்பரை கால் பண்ணிப் பார்ப்போம்.
அது சப்போஸ் கார் இடிச்சதுல காருக்குள்ளயே எங்கயாவது போய் மாட்டிட்டு இருக்கலாம்.
நீங்க நம்பர் கொடுத்தீங்கன்னா…”
“ம்…ம்…புரியுது புரியுது!
அவ நம்பரை வாட்ஸ்அப் பண்ணறேன்.
சீக்கிரமா !!?
அவளை சொன்ன இடத்துக்கு கொண்டு வந்து சேர்க்கறதுக்கு முன்னாடியே செஞ்சு முடி…
இல்லாட்டி சிசிடிவிலேந்து தப்பிச்சுக்கிட்டாலும்…
மொபைல் டிரேஸில் மாட்டிக்க வேண்டி வந்துட போவுது.
புரிஞ்சுதா?”
“ம்…நல்லா புரிஞ்சுது.
நீங்க நம்பரை அனுப்பினதும் உடனே அதை நானே தேடி சுவிட்ச் ஆஃப் பண்ணிடறேன்.
கவலைப் படாதீங்க”
“நான் அனுப்பிட்டேன்.
உன் ஃபோனை செக் பண்ணு.
எனக்கொரு ப்ராப்ளமும் இல்ல.
மாட்டினா நீங்க நாலுபேரு தான் மாட்டிக்குவீங்க.”
“ம்…மெஸேஜ் வந்திருக்கு.
இதோ இப்பவே பண்ணிடறேன். நீங்க ஃபோனை வையுங்க”
மர்மநபர் ஃபோனை வைத்ததும் ராபர்ட் வண்டி ஓட்டுனர் மைக்கேலிடம்
“மைக்கேல் புல் ஓவர்”
“ஏன்.
என்ன ஆச்சு?
எதுக்காக வண்டிய நிறுத்த சொல்லற ராபர்ட்?”
“முதல்ல நிறுத்து.
இந்த ஜான் கிட்ட சொல்லி அவன் அதை செஞ்சானன்னு க்ராஸ் வெரிஃபை பண்ணறதுக்கு…
நானே செஞ்சிட்டு வந்திடுவேன்.
நீ வண்டியை ஒரமா நிப்பாட்டு.”
“ம்…சரி சரி.
அதோ அங்க நிப்பாட்டறேன்.
ஆனா சீக்கிரமா இங்கேந்து கிளம்பிடணும்.
ஏன்னா நாம போக வேண்டிய இடம் ரொம்ப தூரம்.
இந்த ரேட்ல போனாலும் அங்க போய் சேர நைட் ஆகிடும்.
இதுல இப்படி நின்னு நின்னு போனா…
சுத்தம் அப்புறம் நாளைக்கு காலைல தான் போய் சேர முடியும்.
இந்த பொண்ண ஒப்படைக்க வேண்டிய அந்த இடத்துல எவ்வளவு சீக்கரம் ஒப்படைக்கறோமோ அவ்வளோ நமக்கு நல்லது.
ம்…இந்த நிப்பாட்டிட்டேன்.”
என்று மைக்கேல் கூறிக்கொண்டே கண்டேய்னர் வண்டியை நிப்பாட்டியதும் ராபர்ட் தனது சீட் பெல்ட்டை அவிழ்த்துக் கொண்டு இறங்கும் போது
“எல்லாம் புரியுது மைக்கேல்.
இதோ ஜஸ்ட் ஃப்யூ செகன்ட்ஸ்.
ஒண்ணு பண்ணு நான் பின்னாடி ஏறியதும் நீ வண்டியை ஸ்டார்ட் பண்ணி ஓட்ட ஆரம்பிச்சிடு.
அடுத்த முறை நிப்பாட்டுற இடத்துல நான் மறுபடியும் முன்னாடி வந்துக்கறேன்.”
“ம்…ஓகே.
அதுவும் சரிதான்.”
என்று ராபர்ட் கண்டேய்னருக்குள் சென்றதும் மைக்கேல் வண்டியை தொடர்ந்து ஓட்டலானான்.
கண்டேய்னருக்குள் நுழைந்த ராபர்ட்டைப் பார்த்த ஜான்
“என்ன ராபர்ட் நீ ஏன் இங்க வந்த?”
“ஏன் ஜான் நான் இங்க வரக்கூடாதா?”
என்று சக்தியின் காருக்கு அருகே சென்று அவளின் மொபைல் நம்பருக்கு கால் செய்து கொண்டே பேசினான். அப்போது ஜான்
“அதுக்கில்ல ராபர்ட்…”
“ஜான்….உஷ்….
அவ மொபைல் வைப்ரேட்டிங் சப்தம் காருக்குள்ள கேட்குது.
ம்….இதோ இந்த டிரைவர் சீட்டுக்கும் இந்த நடுவுல இருக்குற பாக்ஸுக்கும் இடையிலேந்து தான் கேட்குது.
எப்படியாவது அந்த கியாப்லேந்து மொபைல சீக்கிரமா எடுக்க பாரு ஜான்”
“ம்..நீ நகரு ராபர்ட்.
நான் ட்ரை பண்ணறேன்.
ஆஹா நல்லாவே உள்ள போய் கிடக்கு.
என்னோட கை ரொம்ப பெரிசு உள்ள போகலை.”
“சரி ஏதாவது அந்த கியாப்புக்குள்ள போகறா மாதிரி எடுத்துட்டு வந்து ட்ரை பண்ணு ஜான்.
நீ ஏதாவது கொண்டு வரவரைக்கும் நான் ட்ரை பண்ணிட்டிருக்கேன்”
“ம்…இந்தா இந்த கம்பிய கொக்கி மாதிரி வளைச்சு உள்ள விட்டு மொபைல எடுக்க பார்ப்போம்.”
“ம்….ஜான் இது வேலைக்காகலை. வேற எதாவது இருக்கா?”
“வேற எதுவும் இல்லையே ராபர்ட்”
“அப்படின்னா சீட்டை எடுத்துட வேண்டியது தான்.
ம்…வா ஜான் இந்த சீட்டைக் கழட்டுவோம்.”
“ம்…இதோ வந்துட்டேன்.
கொஞ்சம் நகந்துக்கோ”
என்று ஜானும் ராபர்ட்டுமாக சக்தி காரின் ட்ரைவர் சீட்டை கழற்றி எடுத்தனர். அதைக் கழற்றியதும் அவளின் ஃபோன் சறுக்கி கீழே காரின் ட்ரைவர் சீட் இருந்த இடத்தில் வந்து விழுந்தது. அதைப் பார்த்த ராபர்ட் அதை உடனே எடுத்து சுவிட்ச் ஆஃப் செய்தான்.
அதன் பின் அவன் அந்த மர்ப நபருக்கு “டன்” ன்னு ஒரு மெஸேஜ் டைப் செய்து அனுப்பினான். அப்போ ஜான் அவனிடம்
“யாரு இவ?
இவள நாம ஏன் கடத்தறோம்?
யூஷ்வலா நீ யாரு? என்ன? எதுக்குன்னு விவரம் தெரிஞ்சுக்காம கடத்த ஒத்துக்க மாட்டியே ராபர்ட் !”
“நீ சொல்லறது சரி தான் ஜான்.
ஆனா இவள கடத்த சொன்னது ரொம்ப பெரிய இடம்.
இதுல பல பேர் சம்மந்தப்பட்டிருக்காங்க.
அவங்களோட கண்டீஷனே நான் எதப் பத்தியும் தெரிஞ்சுக்காம சொல்லறதை மட்டும் செய்யணும்ங்கறது தான்.”
“அது தான் கேட்கறேன் ராபர்ட்.
நீ எப்படி இதுக்கு ஒத்துகிட்ட?”
“பணம் டா பணம்.
அள்ளிக் கொடுத்தாங்க.
இன்னும் தரோம்ன்னு சொன்னாங்க.
இவளை கொண்டு போய் அவங்க கிட்ட ஒப்படைச்சுட்டா…
நாம கோடீஸ்வரங்களாயிடுவோம் ஜான்.
அதுக்கப்புறமா இந்த தொழில விட்டுட்டு உருப்படற வழியைப் பார்க்கணும்.
என் லவ்வரும் ரொம்ப நாளா என்ன மாறச் சொல்லி நச்சரிச்சுக்கிட்டே இருக்கா.
அதுதான் இந்த ஜாக்பாட் அடிக்க ஒத்துக்கிட்டேன்.”
“அதுவும் சரிதான்.
ஆனா அவங்க சொன்னா மாதிரி பணத்தை செட்டில் பண்ணிடுவாங்க இல்ல!!
ஏன்னா பெரிய இடம்ன்னு வேற சொல்லற!
அவங்க பாட்டுக்கு பொண்ணு கிடைச்சதும் நம்மள டீல்ல விட்டுட போறாங்க ராபர்ட்.”
“அது எப்படி.
கையில் பணம் செட்டிலாகம இவளை அவங்ககிட்ட ஒப்படைக்கக் கூடாது.
அதுமாதிரி ஏமாத்த மாட்டாங்கன்னு நினைக்கறேன்.
ஆனா இவ யாரு?
இவளுக்கு ஏன் இவ்வளவு பணம் தர்றாங்க?
அதே நினைப்பு தான் இவள கடத்தினதுலேந்து எனக்குள்ள ஓடிட்டே இருக்கு!”
“ஒரு வேளை இப்படி இருக்குமோ?”
“எப்படி?”
“இவ தான் பெரிய சைன்டிஸ்ட் ஆச்சே!
ஒரு வேளை இவளோட மூளைக்காக இருக்குமோ!”
“இவ மூளைய வச்சு என்ன பண்ணுவாங்களாம்?
ம்…ம்…ம்…ஹும்….
இதுல வேற ஏதோ இருக்குன்னு என் உள் மனசு சொல்லிக்கிட்டே இருக்கு!
பார்ப்போம்….
பார்க்கதானே போறோம்.”
இதற்கிடையில் சக்தியின் பெற்றோரான நவீனும் மிருதுளாவும் அவளின் மொபைலுக்கு கால் செய்துப் பார்த்ததில் சுவிட்ச்டு ஆஃப் என்று தொடர்ந்து வந்துக் கொண்டே இருந்ததில் பதற்றமாகி அவளின் வீட்டு எண்ணிற்கு அழைத்தனர்.
ப்ளூ அந்த கால் நவீனின் எண்ணிலிருந்து வருகிறது என்பதை அறிந்துக் கொண்டு கால் ஐ அட்டென்ட் செய்தது.
“ஹலோ! மிஸ்டர் நவீன்.”
“ஹலோ ப்ளூ. எப்படி இருக்க?”
“எனக்கென்ன எனக்குன்னு தான் என் தீ இருக்காளே!
அப்புறம் எனக்கென்ன கொறச்சல்?
நீங்க சொல்லுங்கோ”
“ம்… ம்… அது என்னவோ சரிதான்.
அவ எங்களோட இருக்கறத விட உன் கூட தானே அதிகமா இருக்கா!!
அதுனால நீ சொல்லறதும் கரெக்ட் தான்.
சரி சரி உன் தீ யை கூப்பிடு”
“தீ இஸ் நாட் அட் ஹோம் மிஸ்டர் நவீன்”
“என்னது!
நான் அவளோட மொபைலுக்கு கால் பண்ணிப் பார்த்தேன் சுவிட்ச்டு ஆஃப்ன்னே வர்றது.
அதுதான் வீட்டுல இருப்பாளோன்னு கால் பண்ணினேன்.”
“அவ விஷால பார்க்க பாரீஸ் போயிண்டிருப்பா இப்போ.”
“என்னது!
விஷால பார்க்கவா?
அவ எங்ககிட்ட அதப் பத்தி ஒண்ணும் சொல்லலையே!”
“அவ விஷாலோட பேரன்ட்ஸ்கிட்ட வீடியோ கால்ல பேசறதுக்காக அவனோட வீட்டுக்கு போயிருக்கா.”
“வீடியோ கால்ல அவ வீட்டுலேந்து பண்ணிருக்கலாமே!
வீடியோ கால் ல பேசறதுக்கு எதுக்கு பாரீஸ் வரைக்கும் போயிருக்கா!
அப்படீன்னா ஒரு வேளை அவ மொபைல்ல சார்ஜ் கீர்ஜ் ஏதாவது போயிருக்குமோ?
அதுனால தான் சுவிட்ச்டு ஆஃப்ன்னு வர்றதோ!”
“மிஸ்டர் நவீன்!
நீங்க எந்த காலத்துல இருக்கீங்க?
அவ கிட்ட பவர் பேங்க் இருக்கு.
அதுவுமில்லாம அவ கார்லயே சார்ஜிங் ஃபெசிலிடி இருக்கு.”
“அப்போ ஏன் ஃபோனை சுவிட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்கா?
அதுவும் நாலு மணி நேரம் டிராவல் வேற பண்ணிண்டிருப்பா…
இப்போ போய் ஏன் அப்படி செய்யறா அந்த பொண்ணு!!!”
“தெரியலையே மிஸ்டர் நவீன்.
நானும் அவ நம்பருக்கு ட்ரை பண்ணிட்டு தான் இருக்கேன்.
எனக்கும் அதே தான் வர்றது.”
“சரி ப்ளூ அவ உன்னை கான்டாக்ட் பண்ணினானா உடனே எனக்கு கால் பண்ண சொல்லு.
சரியா!”
“ஓகே வில் டூ.
பை.
ஹாவ் எ நைஸ் ஈவ்னிங் மிஸ்டர் நவீன்”
“ம்…எங்கேந்து இனி எனக்கு நைஸ் ஈவ்னிங்?
சக்தி கிட்டேந்து கால் வந்தா தான் நைஸ் ஈவ்னிங்.
சரி சரி பை ப்ளூ.
நான் வச்சுடறேன்”
என்று நவீன் கால் செய்து விவரமேதும் சரிவர அறியாததால் குழப்பத்தில் ஆழ்ந்தான்.
ப்ளூ காலையில் சக்திக்கு கால் பண்ணிய போது அவள் சுவிட்ச் ஆஃப் செய்ததைப் பற்றியோ இல்லை அது இடையில் கால் செய்து போது பிஸி என்று வந்ததைப் பற்றியோ எதுவுமே அது நவீனிடம் சொல்லவில்லை.
தொடர்வாள்…
அத்தியாயம் 9: மர்ம சம்பவம்
மறுநாள் காலை ப்ளூ சக்தியை எழுப்புவதற்காக அவள் ரூமுக்கு சென்றது. அங்கே சக்தி அவள் படுக்கையில் இல்லாததைப் பார்த்த ப்ளூ அப்படியே திரும்பி அடுப்படிக்குச் சென்று சக்திக்கு காலை உணவான பேன்கேக்ஸ் செய்யத் துவங்கியது. தயார் செய்த பேன்கேக்ஸையும் மேப்பிள் சிரப்பையும் கொண்டு வந்து டைனிங் டேபிளில் வைத்து விட்டு மீண்டும் சக்தியின் அறைக்கு சென்றது. அங்கே சக்தி கண்ணாடி முன் அமர்ந்து அலங்காரம் செய்துக் கொண்டிருந்ததைப் பார்த்த ப்ளூ
“ம்….
என்ன இன்னைக்கு எல்லாமே புதுசா இருக்கே!”
“ப்ளூ உனக்கு இந்த டிரஸ் தெரியல இது என் அப்பா அம்மா எனக்காக போன பர்த்டேக்கு வாங்கி அனுப்பினது.
நீ மறந்துட்டயா?”
“ம்…என்ன ஜோக்கா?
நான் மறந்துட்டேன் ம்….!!!
இன்னிக்கு உன்னை நான் எழுப்பாம நீயே எழுந்துண்ட்ட?
அதுவுமில்லாம நீ இவ்வளவு நேரமெல்லாம் கண்ணாடி முன்னாடி செலவிட மாட்டியே!!
நான் உன்கிட்ட கொஞ்சம் கண்ணாடியப் பார்த்து தலைமுடியை சரி செஞ்சுட்டு போயேன்னு சொன்னாகூட கேட்காம அதெல்லாம் டைம் வேஸ்ட்ன்னு சொல்லுவ!!
இப்போ என்ன?
போதும் கண்ணாடியோட ரசம் போயிடப்போகுது!
என்ன விஷயம்?
இன்னைக்கு உனக்கு என்ன ஆச்சு?
எப்பவும் போல ஆஃபிஸ்க்கு தானே போகபோற?”
“ஆமாம் ப்ளூ இப்போ ஆஃபிஸுக்கு தானே போறேன்.
ஆனா பதினொன்றரை மணிக்கு நான் பாரீஸ் போறேனே.
அதுவும் “வி”ய பார்க்க!
அதுக்கு தான் லைட்டா மேக்கப் போடறேன்”
“எவ்வளவு அறிவாளியான சைன்டிஸ்ட் நீ!! இப்படி முட்டாளாகிட்டியே தீ!”
“ஏய் ப்ளூ என்ன சொல்லற?”
“ஆமாம் பின்ன என்னவாம்!
நீ பாரிஸுக்கு வி கிட்ட போறதுக்கு இன்னும் பத்து மணிநேரமிருக்கு!
இப்போவே மேக்கப் போட்டு என்ன பிரயோஜனம்?
அதுனால தான் அப்படி சொன்னேன்”
“அது எனக்கும் தெரியும் ப்ளூ.
ஆனா என்ன பண்ண ஆஃபிஸூக்கு இதெல்லாம் எடுத்துண்டு எப்படி போறதாம்?”
“இன்னைக்கு ஒரு நாள் தானே தீ.
கொஞ்சம் பெரிய பேக் எடுத்துக்கோ.
அதுல இன்னொரு செட் டிரஸ் அன்ட் காஸ்மெட்டிக்ஸ் எல்லாம் வச்சுக்கோ.
ப்ராப்ளம் சால்வுடு.
உன்ன மாதிரி சைன்டிஸ்ட்க்கெல்லாம் நான் யோசனை சொல்ல வேண்டிருக்கு பாரு!”
“சைன்டிஸ்ட்க்கு ஐடியா கொடுக்கும் புத்திசாலியே…
நான் அந்த பெரிய பேக் தூக்கிண்டு வி ஆத்துக்கு போகணுமா என்ன?”
“அச்சச்சோ காதல் கல்யாணம்னு வந்ததுமே என் அறிவாளி சைன்டிஸ்ட் மூளை சரியா வேலை செய்ய மாட்டிங்குதே!”
“ஏய் ப்ளூ உன்னோட கேலி கிண்டல் எல்லாத்தையும விட்டுட்டு இப்போ விஷயத்தை சொல்லறையா”
“தீ வி வீட்டுக்கு போகும் போது ஒரு சின்ன ஹேன்ட்பேக் மட்டும் எடுத்துண்டு போ.
அதாவது ரெண்டு பேக் எடுத்துக்கோன்னு சொல்லறேன் புரியுதா?”
“ம்…அது நல்ல யோசனை தான்.
தாங்க்ஸ் ப்ளூ.”
“சரி சரி சீக்கிரமா வா.
ப்ரேக்ஃபாஸ்ட் ரெடி.
ஆறிட போறது.
சாப்பிட வா.”
“என்னது நீ ப்ரேக்ஃபாஸ்ட் பண்ணிருக்கையா?
இது என்ன புது பழக்கம்?
நம்ம அக்ரிமெண்டே நான் ப்ரேக்ஃபாஸ்ட் நீ டின்னர்னு தானே!!
இன்னைக்கு உனக்கு என்ன ஆச்சு ப்ளூ?
ஆர் யூ ஓகே?”
“ம…எனக்கு ஒண்ணும் ஆகலை தீ.
இன்னைக்கு டின்னருக்கு நீ வரமாட்டே இல்லையா!
அதுனால தான் ப்ரேக்ஃபாஸ்ட் செஞ்சு வைச்சுட்டேன்.”
“ஓ!!! ஓ!! அப்படி…
ஓகே ஓகே!
இதோ ஒரு டூ மினிட்ஸ் ல டைனிங் டேபிள் ல இருப்பேன்.
நீ போ ப்ளூ”
“பார்த்தயா உனக்கு வி கிடைச்சதும் என்ன போன்னு சொல்லற!”
“அச்சச்சோ!!
என்னது இது ப்ளூ பாப்பாவுக்கு ஜெலசி ஜெலசியா?”
“ம்…அதெல்லாம் ஒண்ணுமில்லை.
நீ வா சாப்பிட.”
ப்ளூ சொன்னது போலவே சக்தி இரண்டு பைகள் எடுத்துக்கொண்டு ப்ளூ செய்து வைத்திருந்த காலை உணவை உண்டபின் ஆஃபிஸுக்கு புறப்பட்டு, காரில் ஏறுவதற்கு முன் வழக்கம் போல பக்கத்து வீட்டு பாட்டிக்கு காலை வணக்கும் தெரிவித்துவிட்டு கிளம்பிச் சென்றாள்.
ஆஃபிஸுக்கு போன சக்தி அவள் அட்டென்ட் பண்ண வேண்டிய மீட்டிங்கை அட்டென்ட் செய்துக் கொண்டிருந்தாள். அப்போது அவளின் கைபேசி சப்தமேதுமின்றி அதிர்வுற்றது. சக்தி மெல்ல எடுத்துப் பார்த்தாள். அழைப்பு ப்ளூவிடமிருந்து வந்ததை கண்டாள். உடனே அதை துண்டித்து விட்டு அங்கு வைத்திருந்த காஃபியை ஒரு சிப் எடுத்துக் கொண்டே மீட்டிங்கில் கவனம் செலுத்தினாள். மீண்டும் அவள் கைபேசி அதிர்வுற்றது. மீண்டும் ப்ளூவின் அழைப்பு வர சக்தி தனது கைப்பேசியை சுவிட்ச் ஆஃப் செய்து வைத்தாள்.
மீட்டிங் பத்தே முக்காலுக்கு முடிந்தது. உடனே சக்தி தன் கேபினுக்கு சென்று பையை எடுத்துக் கொண்டு ரெஸ்ட்ரூமிற்குள் சென்று மீண்டும் மேக்கப் போட்டுக் கொண்டு வேகமாக கார் பார்க்கிங்குக்கு வந்தாள். காரை ஸ்டார்ட் செய்தாள். நேராக பாரிஸை நோக்கி பயணிக்க ஆரம்பித்தாள். தனது காதல் கைக்கூடயிருப்பதை எண்ணி மனதிற்குள் மகிழ்ச்சிப்பொங்க காரில் காதல் பாட்டுகளைப் போட்டு அதைக் கேட்டுக் கொண்டே சென்றாள். அவள் தனது கைபேசியை சுவிட்ச் ஆஃப் செய்திருந்ததை மறந்து சென்றுக் கொண்டிருந்தாள்.
” ஓ! ஓ! ப்ளூ கால் பண்ணிருந்தானே!! உஷ்…நான் மறந்தே போயிட்டேன் சரி இப்போ பேசலாம்.”
என்று எண்ணிக்கொண்டே தனது காரிலிருந்தே வீட்டு நம்பருக்கு கால் செய்தாள். அப்போது தான் அவளுக்கு ஃபோனை ஆன் செய்யாதது தெரிய வந்தது. உடனே தனது இடது கையால் ஸ்டியரிங்கை பிடித்துக் கொண்டு வலது கையை பையிக்குள் விட்டு துழாவினாள். அவள் கையில் ஃபோன் அகப்படவில்லை. வண்டியை எங்காவது ஓரமாக நிப்பாட்டி எடுக்கலாம் என்று எண்ணி மீண்டும் இருகைகளாலும் காரை ஓட்ட ஆரம்பித்தாள்.
பாதி தூரம் கடந்தததும் அவளுக்கு ஏதோ செய்வது போல இருந்தது. கண்கள் இரண்டும் மங்கலாக தெரிய ஆரம்பித்தது. இடையிடையே காருக்கு முன் இருளானது போல தோன்றியது. அவள் கண்களை நன்றாக இறுக்க மூடித் திறந்தாள். அப்போதும் சரியாகவில்லை. ஒரு கையால் கண்களை நன்றாக கசக்கிப் பாரத்தாள் அப்போதும் தெளிவாக தெரியவில்லை.
மயக்கமாகிறாள் என்பதை உணர்ந்த சக்தி தனது காரை அவள் சென்றுக்கொண்டிருந்த ஹைவேயின் ஓரத்தில் நிறுத்த முயற்சித்தாள். அப்போது அவள் முன் திடிரென ஒரு பெரிய கண்டேய்னர் வண்டி நின்றிருப்பது போல தெரிந்ததும் சட்டென ஸ்டியரிங்கை வலதுபுறம் ஒடித்தாள். ஆனால் வண்டி எதிலோ மோதி நின்றதை உணர்ந்தாள். தனது கைபேசியை எடுத்து எமர்ஜென்சியை அழைக்க நினைத்தாள். பேக்கினுளிருந்து கைபேசியை எடுத்தாள். அப்போதுதான் அது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது அவளுக்கு தெரிய வந்தது. உடனே அதை ஆன் செய்ய அரை மயக்கத்தில் முயற்சித்தாள். அது ஆன் ஆனதும் அவள் முழுவதுமாக மூர்ச்சையானாள்.
அவளின் கைபேசி தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. அவள் காரின் இரண்டு புறமும் வானுயர்ந்த மரங்கள் கொண்ட காடு போல இருந்தது. அவள் மூச்சையாகி சில மணி நேரம் கடந்ததும். அவளின் கார் ஒரு க்ரேனால் அப்படியே தூக்கப் பட்டது. பின் ஒரு பெரிய கண்டேய்னர் வண்டியில் அப்படியே இறக்கி வைக்கப்பட்டது. சக்தியின் காரை கண்டேயினருக்குள் வைத்ததும் அதன் மேல் கூரை தானாக மூடியது. சக்தியின் கார் அதனுள் வைத்து முழுவதுமாக மூடியதும் அந்த வண்டி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.
அங்கு சக்தியின் கார் நின்றிருந்த சுவடின்றி மறைந்து போனது.
அந்த வண்டியினுள் நாலுபேர் இருந்தனர். அவர்கள் கரும்பச்சை நிறத்தில் உடையணிந்திருந்தனர். அதில் ஒருவர் ஓட்டுனர். அவர் அருகே ஒருவர் அமர்ந்திருந்தார். கண்டேய்னருக்குள் இருவர் சக்தியின் காருடன் இருந்தனர்.
முன்னால் ஓட்டுனர் மைக்கேல் அருகே அமர்ந்திருந்த ராபர்ட் தனது கைபேசி மூலமாக கண்டேய்னருக்குள் இருந்த இருவரில் ஒருவரான ஜான் என்பவரை தொடர்பு கொண்டு பிரஞ்சில்
“அவள் எப்படி இருக்கிறாள்?”
“இன்னமும் மயக்கத்தில் தான் இருக்கிறாள்.”
“அவளை காருக்குள்ளேந்து வெளிய இருக்கும் பெட்டில் படுக்க வைத்து நம்ம டாக்டர் சைமனை செக் பண்ண சொல்லு.”
“ஓகே சார்.
பண்ண சொல்லறேன்.”
என்று ராபர்ட் கூறியதை ஜான் அவனுடனிருந்த டாக்டர் சைமனிடம் தெரிவித்தார். அதற்கு சைமன்
“அவளை முதலில் வெளியே எடுக்க வேண்டும்.
ம்…காரை முதலில் திற ஜான்”
“இதோ திறக்கறேன்.
எதுக்கும் மயக்க ஊசியை தயாரா வச்சுக்க சைமன்.
ஏன்னா இவ பெரிய சைன்டிஸ்ட் உண்மையிலேயே மயக்கத்திலிருக்காளா இல்லை நடிக்கறாளான்னு நமக்கு தெரியாது.”
“நான் கொடுத்த அளவு தானே அவளுக்கு கொடுக்கப்பட்டிருக்கு?”
“அப்படி தான்னு மெஸேஜ் வந்தது”
“அப்பறம் என்ன!
பயப்படவே வேண்டாம்.
அவ நிச்சயமா மயக்கத்துல தான் இருக்கா.
நீ தைரியமா கார் கதவை திற ஜான்”
என்று சைமன் சொன்னதும் ஜான் ஏதோ ஒரு சாவியைப் போட்டு காரைத் திறந்தான். இருவருமாக சக்தியை காருக்குள்ளிருந்து வெளியே தூக்கி வந்து அந்த காருக்குப் பின்னால் போடப்பட்டிருந்த மெத்தையில் படுக்க வைத்தனர். அதன் பின் அவளுக்கு ஏதோ ஒரு ஊசிப் போட்டான் சைமன். ஜான் உடனே ராபர்ட்டுக்கு கால் செய்து
“எல்லாம் நாம் நினைத்தப்படியே நடக்கிறது. ஆல் டன்.
எவ்ரிதிங் அன்டர் அவர் கன்ட்ரோல்ன்னு நீ அங்கே சொல்லிக்கலாம்”
என்று கூறி வைத்தான். ராபர்ட்டும் அதுபடியே ஒரு ப்ரைவேட் நம்பருக்கு கால் செய்தான். ரிங் போனது. அங்கிருந்து ஒரு குரல்
“ம்…”
“ஹாய்!
எவ்ரிதிங் அன்டர் அவர் கன்ட்ரோல்.
நத்திங் டூ வரி”
“ம்…குட்”
“அப்பறம் அந்த சிசிடிவி இஷ்ஷூஸ் வராம இருக்கணும்.”
“ம்…அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்.
நீ அதைப் பத்தி எல்லாம் கவலைப் பட வேண்டிய அவசியமில்லை”
“ஓகே தென்.
சீ யூ சூன்.
பை ஃபார் நவ்”
“ம்…பை”
என்று அந்த மர்ம நபர் கூறி முடித்ததும் ராபர்ட் ஓட்டுனர் மைகேலிடம்
“இந்த பொண்ணு அப்படி என்ன பண்ணிட்டான்னு!!”
“அதெல்லாம் நமக்கெதுக்கு ராபர்ட்.
நாம வேலைய முடிச்சோமா, காச வாங்கினோமான்னு இருக்கணும். புரியுதா?”
“ம்…ம்…”
என்று மனதில் பல குழப்பத்துடன் பதிலளித்தான் ராபர்ட்.
விஷாலை சந்தித்து அவனின் பெற்றோருடன் பேசவேண்டுமென்று ஆசையாக புறப்பட்ட சக்தி பாதி வழியிலேயே நால்வரால் கடத்தப்பட்டாள்.
தொடர்வாள்…
Watch “Unnadha Aamaiyum Moondru Vyabaarigalum” on YouTube
Watch “Ponnana Arivurai” on YouTube
அத்தியாயம் 8: இரு கை ஓசை
சக்தி தன் பெற்றோரிடம் பேசி சம்மதம் வாங்கியதும் விஷாலை அலைப்பேசியில் அழைத்தாள்.
“கம் ஆன் வி. பிக் அப்.
எவ்வளோ நல்ல நியூஸ் சொல்ல கூப்பிடறேன்.
எங்க போயிருக்க.
கம் ஆன்…ஹாய் வி…”
“ப்ளீஸ் லீவ் எ வாய்ஸ் மெஸேஜ்…”
“ம்…வி ஐ ஹாவ் எ குட் நியூஸ் ஃபார் யூ கால் மி”
“வாய்ஸ் மெஸேஜ் குடுத்திருக்கேன் எப்போ கால் பண்ணறான்னு பார்ப்போம்.”
என்று சக்தி காத்திருந்தாள். அடுபடியிலிருந்து ஹாலுக்கு சக்தியிடம் வந்த ப்ளூ
“டின்னர் ஈஸ் ரெடி.
என்ன தீ உன்னவர் என்ன சொல்லறார்?
ஒரே ஹாப்பியா?”
“எங்க ப்ளூ?”
“என்ன தீ சலிச்சுக்கற?”
“ஆமாம்!
பின்ன என்ன ப்ளூ?
நான் எவ்வளவு ஆசையா அப்பா அம்மா எங்க கல்யாணத்துக்கு சம்மதிச்ச விஷயத்தை சொல்ல விஷாலுக்கு கால் பண்ணினேன்…
ஆனா அவன் கால் அட்டென்ட் பண்ணலை.”
“ஏன் பண்ணலை?
சரி நீ ஒரு வாய்ஸ் மெஸேஜ் அனுப்ப வேண்டியது தானே!”
“எல்லாம் அனுப்பி பத்து நிமிஷமாச்சு”
“என்ன சொல்லற தீ?
பத்து நிமிஷமாச்சா?”
“அதுக்கு நீ ஏன் இவ்வளவு ஷாக் ஆகற?”
“அதுக்கில்ல எனக்கு ஒண்ணு தோனுது…
அதை சொன்னா நீ எப்படி ரியாக்ட் பண்ணுவியோன்னு தான் யோசிக்கறேன்…”
“நமக்குள்ள எதுக்கு யோசிச்சிண்டு?
சும்மா சொல்லு ப்ளூ”
“அன்னைக்கு நீ மூணு வருஷம் கழிச்சு கால் பண்ணினப்போ உடனே எடுத்த விஷால்…
இன்னைக்கு நீ கால் பண்ணி,
வாய்ஸ் மெஸேஜ் குடுத்துட்டும் இன்னும் உன்னைக் கூப்பிடலையே ஏன்?”
“ஏதாவது வேலையா இருப்பான் ப்ளூ. இதுல என்ன இருக்கு?”
“இல்ல கல்யாணம்ன்னு சொன்னதும் உன்னவர் பயந்துட்டாரோ?”
“ம்…
ஏன் நான் பயமுறுத்தறா மாதிரியா இருக்கேன்?”
“அதுக்கில்ல தீ…
ம்…
உன் மொபைல் அடிக்குது பாரு.”
“சைலென்ட் மோட்ல போட்டிருக்கேன் அது தான் நான் கவனிக்கலை.
ஓ வி தான் ப்ளூ.
இரு நான் அவன்கிட்ட பேசிட்டு வரேன்.”
“ஓகே தீ.”
“ஹாய் வி”
“ஹாய் தீ. ரொம்ப ரொம்ப சாரி.
நீ கால் பண்ணும்போது நான் என் பேரன்ட்ஸோட வீடியோ கால்ல இருந்தேன்.
நம்ம விஷயமா தான் பேசிட்டிருந்தேன். இப்போ தான் பேசி முடிச்சிட்டு உன் வாய்ஸ் மெஸேஜ் பார்த்தேன்.
உடனே கால் பண்ணிட்டேன்.
உன் பேரன்ட்ஸ்கிட்ட பேசினியா?
அவா என்ன சொல்லறா?”
“ம்..இட்ஸ் ஓகே வி.
என் பேரன்ட்ஸ் சைடுலேந்து க்ரீன் சிக்னல் கிடைச்சிடுத்து.
உங்க அப்பா அம்மா அன்ட் தம்பி என்ன சொல்லறா?”
“அவா சொன்னதை சொன்னா நீ இன்னைக்கு ஃபுல்லா சிரிச்சுண்டே இருப்ப!”
“அப்படி என்ன சொன்னா?”
“நான் நம்ம விஷயத்தைப் பத்தி சொன்னதும்,
மூணு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துண்டு சிரிச்சா.
அப்புறம் என் அப்பா என்கிட்ட…
இதை அப்பவே சொல்லிருக்கலாமே! நாங்க என்ன வேண்டான்னா சொல்ல போறோம்! என்ன சீதா நான் சொல்லறதுன்னு என் அம்மாட்ட கேட்க…
என் அம்மா உடனே
அதுதானே!! டேய் இவளை விட்டுடாதேடா விஷால்! சீக்கிரமா கல்யாணம் பண்ணிண்டு டூன்னு சொல்ல….
அடுத்ததா என் தம்பி
டேய் அண்ணா என் ரூட் க்ளியர் பண்ணிக்குடுடா உனக்கு புண்ணியமா போகும் ன்னு சொன்னான்.”
“ஹா! ஹா! ஹா! ஸோ க்யூட் ஃபேமிலி”
“பார்த்தயா நீ சிரிப்பன்னு சொன்னேன் ல.
இதுல உன்கிட்டேந்து கால் அன்ட் வாய்ஸ் மெஸேஜ் வந்திருக்குன்னு சொன்னேன்…
அவ்வளவு தான் என் அம்மா என்னை உன்கிட்ட உடனே பேச சொல்லிட்டு அவா கால் ஐ கட் பண்ணிட்டா.”
“ஓ ஸோ நைஸ்”
“ஆக நம்ம ரெண்டு பேர் வீட்டுலேந்தும் க்ரீன் சிக்னல் கிடைச்சாச்சு.
அடுத்து என்ன?”
“அடுத்து என்ன?
தனிதனியா அவா அவா ஆத்துக்கு கால் பேசின நாம ரெண்டு பேரும்…
ஒண்ணா இரண்டு பேர் வீட்டுக்கும் கால் பண்ணி பேசணும்.
அப்புறம் என் பேரன்ட்ஸையும் உன் பேரன்ட்ஸையும் ஒருத்தரை ஒருத்தர் அறிமுகப்படுத்தி வைச்சிட்டோம்னா…
மீதிய அவா பேசி டிசைட் பண்ணிப்பா.
தட்ஸ் ஆல்.”
“சூப்பர் அப்படின்னா இப்பவே ஈதர் உன் ஃபேமிலி ஆர் என் ஃபேமிலிட்ட பேசிடுவோமா?”
“அச்சச்சோ வி எதுக்கு இவ்வளவு அவசரம். வெயிட் நாளைக்கு ஈவ்னிங் நம்ம டைம் ஒரு நாலு மணிக்கு நாம உன் ஆத்துக்கு கால் பண்ணி பேசுவோம்.
டைம் அ நீ அவாட்ட சொல்லிடு.
தி நெக்ஸ்ட் டே எங்க பேரன்ட்ஸ்கிட்ட பேசலாம். சேம் டைம் அன்ட் ஐ வில் கன்வே தெம் தட்.
அதுக்கு அடுத்த நாள் அவா எல்லாரையும் சூம் கால்ல வரவச்சு இன்ட்ரோ பண்ணி வச்சிடுவோம்…
அதுக்கப்புறம் அவா பேசி டிசைட் பண்ணட்டும்.
என்ன சொல்லற வி?”
“சூப்பர்.
நானும் என் ஆத்துல சொல்லிடறேன்.
ஆனா தீ கல்யாண டேட்டை அவா டிசைட் பண்ணறதுக்கு முன்னாடி,
நாம நமக்கு கம்ஃபர்டபுளான டேட்டை டிசைட் பண்ணி வச்சுக்கணும்.
ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்தில லீவ் கிடைக்கணுமில்லையா?”
“ஹலோ வி யூ ஆர் டூ ஃபாஸ்ட்.
கொஞ்சம் நிதானமா போவோமே.
அவா ஏதாவது டேட் டிசைட் பண்ணிட்டு நிச்சயம் நம்ம கிட்ட கேட்பா.
அப்போ அது நமக்கு ஓகேன்னா சரி இல்லாட்டி அப்போ நமக்கு வேண்டிய தேதியை சொல்லிப்போமே! அதைப் பத்தி ஏன் இப்பவே பேசணும்?”
“ம்…அதுவும் சரி தான். சரி நாளைக்கு நீ இங்க வரயா இல்ல நான் உன் இடத்துக்கு வரட்டுமா?”
“நாளைக்கு உன் பேரன்ட்ஸ் கிட்ட தானே பேசப் போறோம்.
ஸோ நானே உன் இடத்துக்கு வர்றேன்.”
“சூப்பர் டூப்பர்.
நான் ஆவலோடு வெயிட் பண்ணின்டிருப்பேன் தீ.
நீ பேசாம லஞ்சுக்கே வந்துடேன்.
இரண்டு பேருமா லஞ்ச் சாப்டுட்டு அப்படியே கொஞ்சநேரம் பேசிண்டிருந்துட்டு…
அப்பறம் அப்பா அம்மாவோட கால் பேசலாம்.
என்ன சொல்லற?”
“சாரி வி.
எனக்கு நாளைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு.
அது முடியவே மணி பதினோரு மணி ஆகிடும்.
அது முடிஞ்சிட்டு தான் நான் இங்கேந்து கிளம்ப முடியும்.
ஸோ ஏதாவது சாப்டுட்டு தான் கிளம்புவேன்.
நாலு மணி நேர டிராவல் இல்லையா.
அப்படிப்பாத்தா நான் உன் இடத்துக்கு மூனே முக்கால் போல தான் ரீச்சே ஆவேன்.
அதுனால நான் அங்கு வந்துட்டு கால் அட்டென்ட் பண்ணிட்டு நாம வேணும்னா ஏர்ளி டின்னர் சாப்பிடலாம்.
என்ன சொல்லற வி”
“அப்படியே ஆகட்டும் மகாராணி தீ அவர்களே!”
“மிக்க நன்றி மகாராஜா வி அவர்களே.
சரி ப்ளூ ஈஸ் வெயிட்டிங் வித் மை டின்னர்.
நான் போய் சாப்பிட்டு சீக்கிரமா தூங்கணும்.
ஏன்னா நாளைக்கு ஆஃபீஸுக்கு செவனோக்ளாக் போகணும்.
நாளைக்கு சந்திப்போம்.
அதுவரை பை வி.”
“ம்…வெறும் பை தானா தீ.
அதுதான் நாம இவ்வளவு தூரம் வந்துட்டமே!”
“ஹலோ இன்னும் நீ அங்க நான் இங்கே தான் இருக்கோம்.
பாதி கிணறு கூட. தாண்டலை.
நாம எங்கேயும் போகலை.
ஸோ இப்போ போய் நிம்மதியா தூங்கு.”
“ம்…உத்தரவு ராணி. பை தீ. ஹாவ் எ நைஸ் ஸ்லீப்.”
“ம். ஓகே வி.
பை. குட் நைட் அன்ட் ஸ்வீட் டிரீம்ஸ்”
“ம்ஹும்…இது வேறயா. இனி தூக்கம் வந்தா மாதிரிதான். நீ போய் நல்லா தூங்கு. பை”
என்று ஃபோனை விஷால் வைத்தபின் சக்தி வெட்கத்தில் புன்னகைத்துக் கொண்டே தனது அலைபேசியை முத்தமிட்டாள். அதைப் பார்த்த ப்ளூ…
“ஹலோ மிஸ் தீ.
இதை அவர் கேட்கும் போது குடுக்காம.
இப்போ இந்த மொபைலுக்கு இது ரொம்ப அவசியம் தான்.”
“ச்சீ போ ப்ளூ”
“சரி சரி வா டின்னர் சாப்பிடு.
நீ சாப்பிட்டதுக்கப்பறமா நான் என் வேலைகளை முடிச்சிட்டு.
என்னை நான் சார்ஜ் பணணிக்கணும்.
ஏன்னா அது தானே என் சாப்பாடு.”
“என்னது மறுபடியும் சார்ஜ் பண்ணனுமா?
ஈவினிங் நான் வரும்போது தானே சார்ஜிங் ஸ்டேஷன்லேந்து வந்தேன்னு சொன்ன!!
அதுக்குள்ள என்ன மறுபடியும் சார்ஜ் பண்ணனும்னு சொல்லற?
உனக்கு என்ன ஆச்சு?
திரும்பு நான் பார்க்கட்டும்.”
“அது அது வந்து…
நீ ஈவினிங் வருமபோது தான் நான் சார்ஜிங் ஸ்டேஷன்ல போய் செட்டில் ஆனேன்.
நீ வந்துட்டயா உடனே நானும் அங்கேந்து வந்துட்டேன்.
ஸோ சார்ஜே ஆகலை.
அது தான் இன்னைக்கு நைட் ஃபுல்லா சார்ஜ் பண்ணிகிட்டேனா…
ஐ வில் பி ஃபைன் ஃப்ரம் டுமாரோ.
சரி சரி நீ சாப்டுட்டு போய் படு.
நாளைக்கு சீக்கிரம் கிளம்பணுமில்ல.”
“ப்ளூ…என்னமோ சொல்லற.
ம்…ஓகே ஓகே.
டின்னர் சூப்பர்.
தாங்கஸ் ப்ளூ.
சரி நான் போய் படுத்துக்கறேன்.
குட் நைட் ப்ளூ”
“குட் நைட் தீ. சுவீட் டிரீம்ஸ். ஹாவ் எ நைஸ் ஸ்லீப்.”
தொடர்வாள்…
அத்தியாயம் 7: ஒரு கை ஓசை ஒலித்தது
காணல் போல் விஷால் கார் தெரிந்த வரை நின்று பார்த்துக்கொண்டிருந்து விட்டு பின் தன் காரில் ஏறி வீட்டிற்கு சென்றாள் சக்தி. வீட்டு வாசலில் காரை பார்க் செய்து காரிலிருந்து வெளியே வந்து காரை பார்க் செய்தாள்.
பக்கத்து வீட்டு பாட்டி அவர் வீட்டுத் திண்ணையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து சுவெட்டர் பிண்ணிக் கொண்டே சக்தி வந்ததைப் பார்த்து அவளிடம்
“ஹாய் தீ குட் ஈவ்னிங். ஹவ் வாஸ் தி டே?.”
“ஹாய் மிஸ்ஸரஸ் டேவிட். குட் ஈவ்னிங்.
எஸ்.
இட் வாஸ் ஃபன்டாஸ்டிக்.
ஹவ் வாஸ் யுவர்ஸ்?”
“எனக்கென்ன…சமைத்தேன்.
பக்கத்தில் இருக்கும் பார்க்கு போயிட்டு வந்தேன். சாப்பிட்டேன்.
இதோ உட்கார்ந்து சுவெட்டர் பிண்ணறேன். என்ன உன் முகத்துல ஏதோ ஒரு ஒளி தெரியுதே!
என்ன விஷயம்?”
“ஒண்ணுமில்லையே!!
நான் எப்பவும் போல தானே இருக்கேன்.”
“நோ நோ நோ!!
தேர் இஸ் சம்திங்…
சரி சரி உனக்கா எப்போ சொல்லணும்னு தோனுதோ அப்ப சொல்லு.
அதுவரை நான் காத்திருக்கேன்.
வா வந்து ஒரு கப் காஃபி குடியேன்.
நான் ஸ்ட்ராபெரி குக்கீஸ் பண்ணிருக்கேன்.”
“ஓ! ஸோ நைஸ் ஆஃப் யூ.
தாங்க் யூ ஸோ மச்.
இட்ஸ் ஃபைன் மிஸ்ஸர்ஸ் டேவிட்.
நான் இன்னொரு நாளைக்கு வர்றேன்.”
“இரு இரு அட்லீஸ்ட் குக்கீஸையாவது சாப்பிடு.
ஏதோ உனக்கு நல்லது நடந்திருக்குனு உன் முகத்தப் பார்த்துலே தெரியுது.
அதுக்கு இந்த ஓல்ட் லேடியால முடிஞ்ச சுவீட்ன்னு வச்சுக்கோயேன்.
எடுத்துட்டு வரேன்.
ஜஸ்ட் டூ மினிட்ஸ்”
“ஓகே.
நான் இங்கேயே இருக்கேன்.
நீங்க மெதுவா எடுத்துட்டு வாங்க.”
மிஸ்ஸர்ஸ் டேவிட் உள்ளே போய் ஒரு டப்பாவில் குக்கீஸைப் போட்டு எடுத்து வந்து சக்தியிடம் கொடுத்தார். சக்தியும் அதை வாங்கிக் கொண்டு நன்றி சொல்லிவிட்டு வீட்டினுள் சென்றாள்.
“டட்ட..டைங்….
ப்ளூ நான் வந்துட்டேன்.
ப்ளூ…ப்ளூ எங்க நீ இருக்க?
நான் ஒரு குட் நியூஸோட வந்திருக்கேன்.
ப்ளூ…”
“ஹாய் தீ…
குட் ஈவினிங்.
நான் என் சார்ஜிங் ஸ்டேஷன்ல இருந்தேன்.
என்ன எல்லாம் சுபம் தானே”
“அப்பாடா…
உன்னை காணமேன்னு ஒரு செகண்ட் டென்ஷனாகிட்டேன் தெரியுமா?”
“உன்னை விட்டா எனக்கு யாரிருக்கா தீ?
நான் எங்க போயிடுவேன் சொல்லு?”
“ஆமாம்!!
உன்னை நேத்து தானே சார்ஜ் பண்ணினேன்.
அதுக்குள்ள சார்ஜ் போயிடுச்சா என்ன?
இருக்காதே!!
என்ன ப்ளூ ஏதாவது பிரச்சினையா?”
“ம்…தீ…
எனக்கும் வயசாகுதில்ல.
சரி சரி அதெல்லாம் விட்டுத்தள்ளு…
உன் விஷயத்துக்கு வா.
அவனை சந்திச்சயா?
என்ன சொன்னான்?
எல்லாம ஓகே வா?”
“ம்…அவனை சந்திச்சேன்.
ரொம்ப நேரம் பேசினோம்.
அவன் என்னை ப்ராங்க் பண்ணினான் தெரியுமா.”
என்று சக்தி அங்கு நடந்த அனைத்தையும் ப்ளூவிடம் கூறி மகிழ்ந்தாள். அனைத்தையும் கேட்ட ப்ளூ அவளிடம்…
“எல்லாம் சரி தீ…
கல்யாணம் எப்போ?”
“அதை எங்களோட பேரன்ட்ஸ் தான் முடிவு பண்ணனும்.”
*அப்புறமும் ஏன் டைம் வேஸ்ட் பண்ணிட்டு.
உடனே மிஸ்டர் அன்ட் மிஸ்ஸர்ஸ் நவீனுக்கு கால் பண்ண வேண்டியது.
விஷயத்தை சொல்ல வேண்டியது.
கல்யாணத்துக்கு நாள் குறிக்க வேண்டியது.
டூம் டூம் டூம்ன்னு கல்யாணம் நடக்க வேண்டியது தானே!”
“கேட்க எல்லாம் நல்லா தான் இருக்கு.
ஆனா இதை அப்பா அம்மாட்ட எப்படி ஆரம்பிக்கறதுன்னு தான் தெரியலை.”
“ஏன் இன்னைக்கு இவ்வளவு தயக்கம் உனக்கு?
இதுவரை நீ அவங்ககிட்ட எதைப் பத்தி பேசறதுக்கும் இப்படி தயங்கினதே இல்லையே!!
இந்த பொண்ணுங்களுக்கு கல்யாணம்ன்னு வந்தா மட்டும் எங்கேந்து தான் இப்படி ஒரு தயக்கம் வருதோ யாம் அறியேன் பராபரமே!”
“மத்த விஷயமெல்லாம் ஓகே.
அவாகிட்ட டிஸ்கஸ் பண்ணறதுல எனக்கு எந்த தயக்கமுமில்லை.
இதை சொல்லறதுக்கும் எனக்கு தயக்கமில்லை…
ஒரு மாதிரி இருக்கு அவ்வளவு தான்.
முன்னமே சொன்னா மாதிரி கொஞ்சம் ஸ்டார்டிங் டிரபுள்.”
“அதை என் கிட்ட விடு.
நான் பேச்சை ஆரம்பிக்கறேன்.
நீ கண்டினியூ பணணிக்கோ.
இட்ஸ் ஸோ சிம்பிள் ரைட்”
“ம்…அதுவும் சரி தான்.
ஓகே டன்.
ஆனா நீ சொதப்ப மாட்டியே ப்ளூ?
கால் பண்ணவா?”
“ஓ!! டபுள் எஸ்.
கால் பண்ணு தீ.
நான் பார்த்துக்கறேன்.”
சக்தி தன் அப்பா அம்மாவான நவீன் மிருதுளாவை அலைபேசியில் அழைத்தாள். முதல் முறை அவர்கள் எடுக்கவில்லை. இரண்டாவது முறை முயற்சி செய்தாள் சக்தி. அப்போதும் எடுக்கவில்லை. சக்தி பதற்றமானாள்.
“ப்ளூ என்ன இது?
மொதோ ரிங்குலேயே எடுப்பாளே!!
ஏன் இன்னைக்கு மூணு தடவை பண்ணிட்டும் எடுக்கலை?
ஏதாவது தப்பா நடந்திருக்குமோ?”
“ஏன் நெகடிவ்வா நினைக்கற தீ.
அவங்க எங்கயாவது போயிருக்கலாம் இல்லையா?”
“அப்படி போயிருந்தாலும் மொபைல்ல எடுத்துண்டு தானே போயிருப்பா?”
“மே பி மறந்திருக்கலாம்.
இல்லாட்டி மொபைல்ல எங்கயாவது வச்சுட்டு மறந்திருக்கலாம்.
டோன்ட் வரி தீ.
இன்னொரு தடவ கால் பண்ணிப்பாரு.”
“ம்…பண்ணறேன்.
இரு.
ம்….கால் போறது.
கம் ஆன் பிக் அப் அப்பா.
அம்மா நீயாவது எடுமா…
ம்…ஹலோ”
“ஹலோ தீ.
எப்படி இருக்கமா?”
“அப்பாடா அம்மா நீயாவது ஃபோனை எடுத்தையே.”
“ஏன் என்ன ஆச்சுமா?”
“ம்…நான் எத்தனை தடவ கால் பண்ணிருக்கேன்னு பாரு.
நீங்க ரெணடு பேரும் எடுக்காததால ஒரு செகண்ட் பயந்துட்டேன் தெரியுமா!”
“அதுவா…மொபைல சார்ஜ்ல போட்டிருந்தோம்.
நம்ம பக்கத்துத் தெருவுல இருக்காளே சேகர் அன்கிள் அன்ட் ராணி ஆன்டி அவா நம்ம ஆத்துக்கு டின்னருக்கு வந்திருந்தா.
அவளோட பேசிண்டிருந்தோம்.
அவா இப்போ தான் அவா ஆத்துக்கு கிளம்பினா.
உள்ள வந்து மொபைல பார்க்கலாமேன்னு வந்தேன்.
நீ கால் பண்ணின.
எடுத்தேன்.”
“ம்…அங்கேயும் சார்ஜ் இஷூவா.
சரி சரி.
நீங்க ரெண்டு பேரும் ஒகே தானே!”
“அதெல்லாம் நாங்க ஃபிட் அன்ட் ஃபைனா இருக்கோம்.
அதையெல்லாம் கவலையே படாதே.”
“ம். ஓகே.
உன்கிட்ட ப்ளூ ஏதோ பேசணும்னு சொன்னான் குடுக்கறேன்.”
“தீ…தீ…தீ…இரு இரு…”
“என்னம்மா?”
“இன்னைக்கு அவா நம்மாத்துக்கு வந்ததே ஒரு நல்ல விஷயம் பேச தான்.
நானே அதைப் பத்தி உன்கிட்ட டிஸ்கஸ் பண்ண ஃபோன் பண்ணனும்னு நெனச்சுண்டிருந்தேன்.
நல்ல வேளையா நீயே கால பண்ணிட்ட.”
“என்ன விஷயம் மா?”
“அந்த ராணி ஆன்டியோட ஒண்ணுவிட்ட அக்கா புள்ள ஒருத்தன் இருக்கானாம்.
நல்லா படிச்சிருக்கான்.
பெரிய உத்யோகத்துல இருக்கான்.
நல்ல ஃபேமிலியாம்.
அந்த புள்ள கூட பிரான்ஸ் ல தான் இருக்கானாம்.”
“அம்மா… அம்மா… ஸ்டாப்.
என்ன கல்யாணப் பேச்சு பேச தானே வந்திருந்தா?”
“ஆமாம் தீ. உனக்கும் வயசு ஏறிண்டே போறதில்லையா?”
“ஹாய் ஆன்டி எப்படி இருக்கேங்கள்?”
“ஹாய் ப்ளூ நான் நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க?
ஃபுல் சார்ஜ் ல இருக்கயா?”
மிருதுளா ப்ளூவிடம் பேசிக்கொண்டிருக்கையில் சக்தி ப்ளூவிடம் தனது காதல் விஷயத்தை ஆரம்பிக்குமாறு சைகைக் காட்டினாள். ஆனால் ப்ளூ ஏதேதோ பேசிவிட்டு சட்டென
“ம்…ஆன்டி…
தீ உங்ககிட்ட அவளோட லவ் பத்தி சொல்லணும்னு நினைக்கறா.
ஆனா அவளுக்கு ஸ்டார்டிங் டிரபுளா இருக்காம்.
ஸோ நான் ஸ்டார்ட் பண்ணி குடுத்துட்டேன்.
இனி அவளே பேசுவான்னு நினைக்கறேன். தீ என்ன ஓகே வா!”
என்று ப்ளூ கூறியதும் சக்தி தன் தலையில் கையை வைத்து ஃபோனை மியூட்டில் போட்டுவிட்டு
“என்ன ப்ளூ இதுதான் நீ ஆரம்பிச்சு வைக்கற லட்சணமா?”
“என்ன தீ?
நான் என்ன தப்பா சொல்லிட்டேன்?
ஐ வாஸ் ரைட்.
இனி நீ ஆச்சு உன் பேரன்ட்ஸ் ஆச்சுமா.
நான் போய் டின்னர் ரெடி செய்யறேன்.
இந்தா உன் மொபைல்”
“ஏய் ப்ளூ…
தீ…
என்ன பண்ணறீங்க ரெண்டு பேரும்?
யாராவது பேசுங்கோ.
எனக்கு ஒண்ணும் கேட்கலை.
நவீ நவீ கொஞ்சம் இங்க வாங்கோளேன்.
இந்த ப்ளூ என்னமோ சக்தி லவ் அதுஇதுன்னு சொல்லிட்டுப் போயிடுத்து.
அதுக்கப்புறமா அவா வீடியோ இருக்கு ஆடியோ வரலை.
வந்து என்னன்னு பாருங்கோ.”
“அச்சச்சோ அம்மா இப்போ அப்பாவையும் கூப்டுட்டா.
ப்ளூ….”
“ஹலோ தீ.
சக்தி கண்ணா.
என்னடா விஷயம்.
அப்பா அம்மாட்ட சொல்லுமா.”
“ஆங். ஹாய் பா.”
“ஹாய் தீ.
என்னமா ஆச்சு ஆடியோவுக்கு?”
“அது வந்து பா…
ப்ளூ மியூட் பண்ணிட்டுப் போயிட்டான்.
அதை கவனிக்காம நானும் பேசிண்டிருக்கேன். ஸோ சாரி பா.”
“இட்ஸ் ஓகே. அம்மா சேகர் அங்கிள் வந்த விவரத்தை சொன்னாளா?”
“ம்…சொன்னாப்பா.”
“நீ என்ன சொல்லற?”
“அப்பா…”
“ஏன் தயங்கற?
உனக்கு எங்க கிட்ட எதையோ சொல்லணும் ஆனா சொல்ல முடியாம தவிக்கற.
ரைட்டா.”
“ம்…ஆமாம் பா..”
“இது என்ன புதுசா இருக்கே.
அப்படீன்னா ப்ளூ சொன்னா மாதிரி ஏதோ லவ் தான் போல!
சொல்லு தீ.
யார் அந்தப் பையன்?
என்ன பண்ணறார்?
உனக்குப் பிடிச்சிருந்தா!
அப்புறம் நாங்க என்ன சொல்ல போறோம்மா?
கம் ஆன் தீ அப்பா அம்மாட்ட சொல்லு”
“ஓகே பா.
நான் ஒருத்தரை விருமபறேன்.
அவர் பேரு விஷால்.
என் கூட இங்க பிரான்ஸ் ல தான் அவனும் எம் எஸ் பண்ணினான்.
நான் எம்எஸ்சி இன் ரோபோடிஸ் அன்ட் அட்டானமஸ் சிஸ்டம்ஸ் பண்ணினேன்.
அவன் எம்ஈ இன் இன்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன் பண்ணினான்.
எனக்கு அவனை ரொம்ப பிடிச்சிருக்குப்பா அவனுக்கும் என்னை ரொம்ப பிடிச்சிருக்கு.
நாங்க ரெண்டு பேருமே லாஸ்ட் மூணு வருஷமா பார்த்துக்கவோ பேசிக்கவோ இல்ல.
ஆனா ஒருவர் இன்னொருவருக்காகவே காத்திருந்தோம்.
இன்னைக்கு சந்திக்க வாய்ப்பு கிடைச்சுது.
ரெண்டு பேரும் அவா அவா மனசுல இருந்ததை எல்லாம் டிஸ்கஸ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கலாம் அப்படீங்கற முடிவுக்கு வந்திருக்கோம்.
ஆனா எங்க கல்யாணம் எங்க ரெண்டு பேரோட பேரன்ட்ஸ் சம்மதத்தோட தான் நடக்கணும்னு நாங்க டிசைட் பண்ணிருக்கோம்.
அவன் அவனோட பேரன்ட்ஸ்ட்ட இன்னைக்கு பேசுவான்.
அது தான் நானும் உங்க ரெண்டு பேருகிட்டேயும் பேசி உங்க சம்மதத்தை கேட்கலாமேனுட்டு கால் பண்ணினேன்.
நீங்க ரெண்டு பேரும் என்ன சொல்லறேங்கள்.”
“ம்…ஒரே மூச்சுல உன் லவ் பத்தியும் உன் வருங்கால கணவர் பத்தியும் சொல்லி முடிச்சுட்ட.
எங்களோட வேலையை குறைச்சுட்ட.
எங்க பொண்ணு சாய்ஸ் என்னைக்குமே தப்பானதில்லை.
தப்பாகாதுங்கற நம்பிக்கை எங்களுக்கு சென்ட்பர்சன்ட் இருக்கு.
உனக்கு ஒரு கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்ங்கற ஆசை எங்களுக்குள்ள நிறைய இருக்கு.”
“இருங்கோப்பா...தீ…
அந்த புள்ளாண்டானோட ஃபோட்டோ அனுப்பேன்.
எங்க வருங்கால மாப்பிள்ளையைப் பார்க்கணும் போல இருக்கு.”
“ம்…உன் அம்மாவே வருங்கால மாப்பிள்ளைன்னு சொல்லி எங்க முடிவ டிக்ளேர் பண்யுட்டா.
ஹாப்பியா தீ?”
“ம்…டபுள் ஹாப்பிப்பா.
தாங்க்யூ ஸோ மச்…
உம்மா உம்மா உம்மா டூ போத் ஆஃப் யூ.”
“அடியே உன் உம்மா எல்லாம் இருக்கட்டும்.
நான் கேட்ட ஃபோட்டோ இன்னும் வரலையே!
பையனைப் பார்க்காம எப்படி ஏத்துக்கறதாம்?
உங்க அப்பாவோட சம்தத்த நான் சொன்னா மாதிரி சொல்லிக்கறார் கவனிச்சயா?”
“அம்மா…நீ இருக்கயே!!
இதோ இந்தா.
நீ கேட்ட பையனோட ஃபோட்டோ.
நல்லா பார்த்துட்டு உன் டிசிஷனை சொல்லு.”
“ம்…என் பொண்ணு அழகுக்கு முன்னாடி
பையன் சுமார் தான். ஆமாம் என்ன பேரு சொன்ன?”
“ம்….விஷால்.
அம்மா “காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு” ன்னு ஒரு பழமொழியிருக்கே அது இப்போ நீ சொன்னதுக்கு கரெக்ட்டா பொருந்தும்.
இதையே விஷாலோட அம்மாவும் சொன்னா எப்படி இருக்கும்!!
அதை யோசிச்சுப் பாருமா”
“அவா அவா அம்மாக்களுக்கு அவா அவா குழந்தைகள் தான் அழகு.
ம்…குட் சாய்ஸ் தீ.
எனக்கும் ஓகே தான்.”
“எல்லாம் ஓகே தீ மா.
நாங்க எப்போ அந்த பையனோட பேசறது? அதே மாதிரி நீ எப்போ அவா பேரன்ட்ஸோட பேசுவ?”
“அதெல்லாம் அவா பேசுவா. அது இருக்கட்டும் சக்தி.
அவா எந்த ஊரு?
பையனோட கூடப் பொறந்தவா எத்தனைப் பேர்?
அவா எல்லாரும் எங்க இருக்கா?”
“ஓ!! ஓ!! ஓ!! மா அன்ட் பா
உங்க எல்லா கேள்விகளுக்குமான பதில் எல்லாத்தையும் வாட்ஸ்அப் பண்ணறேன்.
விஷால் எப்போ ஃப்ரீன்னு கேட்டுட்டு அவனை உங்ககூட பேச சொல்லறேன்.
நீங்க ஓகே சொன்னதுக்கப்புறம் தான் அவனை இங்கே என் ரூமுக்கே வரவிடணும்னு அவனை அப்படியே காஃபி ஷாப்லேந்து திருப்பி அனுப்பிட்டேன்.”
“ம்…அப்படியா தீ.”
“என்ன அப்படியா தீ ன்னு வாயை பிளக்கறேங்கள்.
அவ தான் ஏதோ கதை விட்டுண்டிருக்கான்னா நீங்களும் அவ கூட சேர்ந்துண்டு…
போங்கோப்பா”
“அம்மா உண்மையாவே மா.
நீ வேணும்னா ப்ளூட்ட கேட்டுப் பாரு.
ப்ளூ இங்க வாயேன்”
“ஏய் தீ…
உன் அம்மா சும்மா உன்னை ஓட்டறா…விடு.”
“ம்…அப்படியா மா.
சரி சரி உங்களுக்கு நைட் தூங்கற டைம் ஆயிடுத்து போய் ரெண்டு பேரும் நிம்மதியா தூங்குங்கோ.
இப்போ எங்க கல்யாணத்துக்கு ஓகே சொன்னதுக்கு தாங்க் யூ ஸோ மச்.
குட் நைட் ப்பா.
குட் நைட் மா.”
“ஓகே டா கண்ணா ஹாவ் எ நைஸ் ஈவ்னிங். கன்வே அவர் ரிகாட்ஸ் டூ விஷால் டூ. பை”
மனதிலிருந்த தயக்கம் நீங்கி
திருமணத்திற்கு சம்மதம் வாங்கி
ப்ளூவோடு நடனமாடி மகிழ்ந்தாள் சக்தி.
திருமணம் என்னும் பந்தத்திற்கு
இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்க வேண்டும்.
அதில் ஒரு கை ஓசை ஒலித்தது.
தொடர்வாள்….
அத்தியாயம் 6: தீர்மானம்
விஷால் அவளை உலுக்கியதும் சுயநினைவுக்கு வந்த சக்தி அவனை கட்டியணைத்துக் கொண்டு ஓவென்று அழுதாள். அவளைத் தட்டிக் கொடுத்து அவளின் இரு தோள்களை பிடித்து நேருக்கு நேராக அவளைப் பார்த்து
“ஹே தீ!! ஏன் என் மனைவியைப் பார்த்ததும் இப்படி தேம்பி அழற? அவ என்ன நீ அழறா மாதிரியா இருக்கா? மொதல்ல கண்ண தொடச்சுக்கோ. நல்ல வேளை இந்த காஃபி ஷாப்ல இப்போ நம்மளைத் தவிர வேற யாருமில்ல. இருந்திருந்தா நீ அழறதப் பார்த்து ஏதோ நான் தான் உன்னை ஏதோ சொல்லிட்டேன்னு ஒரு பெரிய ரகளை ஆகியிருக்கும். என்ன சொல்லற தீ?”
“போடா!!”
“என்னது போடா வா? என்னப்பா என் மனைவியைப் பார்த்ததும் மரியாதைக் குறையுது!!”
“ஏன் வி இப்படி பண்ணின?”
“நான் என்ன பண்ணினேன் தீ?”
“உனக்கு கல்யாணம் ஆயிடுத்துன்னு நீ சொன்னதும் மனசளவுல நான் ரொம்ப நொறுங்கிப் போயிட்டேன் தெரியுமா? உன் முன்னாடி உட்கார்ந்து பேசினேனே தவிர என் மனசெல்லாம் அச்சோ இவனுக்கு கல்யாணம் ஆயிடுத்தேன்னு அழுதுது. கொஞ்ச நேரத்துல நான் செத்துப் பொழச்சா மாதிரி இருக்கு!! ஏன் இப்படி செஞ்ச வி?”
“பின்ன நான் மட்டும் மூணு வருஷமா செத்து செத்துப் பொழச்சிண்டிருந்தேனே அதைக் கம்பேர் பண்ணும் போது நீ அனுபவிச்ச இந்த சில மணி நேர டென்ஷன் ஒண்ணுமே இல்ல தெரியுமா!! சரி அதெல்லாம் விடு தீ. என் மனைவி எப்படி இருக்கா?”
“ம்….அது தான் உன் முன்னாடியே உட்கார்ந்திருக்காளே நீயே பார்த்து சொல்லு!”
“எனக்கு பிடிச்சுப் போனதுனால தானே நான் அவளை மனசார மனைவி ஆக்கிண்டேன். அவ எப்படின்னு நீ சொன்னா…..நீ சொல்லி அதை நான் கேட்டா எனக்கு இன்னும் கொஞ்சம் சந்தோஷமா இருக்கும் இல்ல. சொல்லு தீ”
“அவளுக்கென்ன வி!! அவ தான் இப்ப ரொம்ப குடுத்து வச்சவ. அவளுக்காகவே மூணு வருஷமா காத்திருக்குற கணவன்!! பாசகாரன், அவ மேல உயிரா இருக்கறவன்னு இன்னும் சொல்லிண்டே போகலாம்… அப்படி ஒருத்தனை இந்த மூணு வருஷத்துல… அவளோ இல்ல அவ அப்பா அம்மாவோ தேடிருந்தாலும் கிடைச்சிருக்க மாட்டான். போதுமா!”
“தட்ஸ் ஸோ நைஸ் ஆஃப் யூ தீ. உன்கிட்ட எப்போ நான் ப்ரபோஸ் பண்ணினேனோ அன்னேலேந்து நான் உன்னை என் மனைவியா தான் மனசுல நெனச்சுண்டு வாழ்ந்துண்டிருக்கேன். சரி இப்போ கேட்கிறேன் தீ…ம்… வெயிட் வெயிட்…உன் மொபைலை முதல்ல என்கிட்ட குடு…ம்…இப்ப சொல்லு…என்னை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா?”
“அதுல உனக்கு இன்னமும் சந்தேகமா?”
“ஐய்யோ டைரெக்ட் ஆன்சர் ப்ளீஸ்!”
“சம்மதம், சம்மதம் பரிபூரண சம்மதம்.”
“ஹேய்!!! மிஸ்டர் வில்யம் ப்ளீஸ் கம் ஹியர்”
“ஏய் வி…இப்போ எதுக்கு அவர கூப்பிடற?” வி..வி…வி!!
“இரு… இரு…இருமா…ஒரு நிமிஷம்… மிஸ்டர் வில்யம் இந்தாங்கோ ஒன் தௌஸன்ட் யூரோஸ். இதுல இன்னைக்கு எத்தனைப் பேருக்கு உங்களால உணவளிக்க முடியுமோ அவளோ பேருக்கும் எங்க சார்பா ஃபுட் வழங்குங்கோ.”
“சார்…மே ஐ நோ தி ரீசன் ப்ளீஸ்?”
“தீ அக்ரீட் டூ மேரி மீ. தீ என்னை கல்யாணம் செஞ்சுக்க ஒத்துண்டுட்டா. அதுதான் ரீசன் ஃபார் மை ஹாப்பினஸ். ஓகே. இட்ஸ் டைம் நாம கிளம்பலாமா தீ?”
“ஓ எஸ். ஓகே மிஸ்டர் வில்யம். ஹாவ் எ நைஸ் டே. பை”
“மேடம் அன்ட் சார் ஹாவ் அ லவ்லீ வெட்டெட் லைஃப்.”
“தாங்க்யூ மிஸ்டர் வில்யம். வீ வில். பை”
என்று மிகுந்த சந்தோஷத்தில் அந்த ரெஸ்டாரன்ட்டிலிருந்து இருவரும் வெளியே வந்தனர். அப்போது விஷால் சக்தியை அவன் காருக்கு அழைத்துச் சென்று காரின் முன் கதவை அவளுக்காக திறந்து
“உனக்கு ரொம்ப பிடித்த ப்ளாக் ரோல்ஸ் ராய்ஸ். நிறைய சம்பாதிச்சு இந்த காரைத் தான் முதல்ல வாங்கணும்னு வெயிட் பண்ணி வாங்கினது. உன்னை எப்போ சந்திச்சாலும் இதுல வந்து தான் சந்திக்கணும்னு வெயிட் பண்ணிண்டிருந்தேன் தீ. ஏறி உட்காரு ப்ளீஸ்”
“வி அப்போ என் காரை என்ன செய்ய?”
“அது இங்கேயே இருக்கட்டும் தீ. நாம என் கார்ல பக்கத்துல இருக்குற பார்க்குக்குப் போயிட்டு வருவோமா?”
“ஓ ஷுவர் வி. வாவ்!! யுவர் கார் ஈஸ் ஸோ நைஸ் வி.”
“இட்ஸ் அவர் கார் தீ.”
என்று இருவரும் விஷாலின் காரில் பக்கத்தில் இருந்த ஒரு பார்க்குக்குள் சென்றனர். அங்கே பார்க்கிங்கில் காரை வைத்துவிட்டு உள்ளே சென்று அங்கு போடப்பட்டிருந்த பென்ச்சில் அமர்ந்து பேசலானார்கள்.
“ஹலோ சார். என் மொபைலை இப்போவாவது தர்றேங்களா?”
“ஓ ஷுவர். இந்தாமா உன் மொபைல்”
“ஆமாம் ஏன் என்னோட மொபைலை எடுத்து வச்சுண்டுட்டு என்கிட்ட அந்த கேள்வியைக் கேட்ட?”
“ம்…முன்ன மாதிரி மறுபடியும் யாராவது உனக்கு கால் பண்ணி, நீ எழுந்து போய், அப்புறம் அப்படியே என்னை அம்போன்னு விட்டுட்டு போயிட்டன்னா? அதுக்கு தான். எல்லாம் ஒரு செல்ஃப்டிக்கு தான்.”
“ம்…ஏதோ ஒரு தடவ அப்படி நடந்துதுன்னா எப்பவுமே அப்படியேவா நடக்கும்!! என்ன வி.”
“சொல்ல முடியாது தீ. ஒரு தடவ நடந்துடுத்துன்னா நாம சேஃப்பா இருக்கறது தான் புத்திசாலிதனம். புரிஞ்சுதோ?”
“ம்..நன்னா புரிஞ்சுது. சரி உன் பேரன்ட்ஸ் எப்படி இருக்கா? என் அப்பாவ மாதிரி அவா உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லலையா?”
“சொல்லாம இருப்பாளா? முதல்ல என்கிட்ட சொல்லி சொல்லிப் பார்த்தா…நான் பிடிக் குடுக்காததால என் தம்பிக்கு கல்யாணம் பண்ணணும்ன்னு என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி தொணதொணத்தா. நான் என் தம்பிட்ட எனக்காக எல்லாம் நீ வெயிட் பண்ண வேண்டாம் நீ கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லிட்டேன். ஆனா அவன் கேட்கலை. இந்த வருஷத்துக்குள்ள எனக்கு கல்யாணம் பண்ணி வச்சாகணும்னு பிடிவாதமா இருக்கா…நானும் சரி இத்தனை வருஷமா கிடைக்காத தீ… இனி எங்க கிடைக்கப் போறா!! அவளுக்காக ஏன் என்ன பெத்தவாளையும் கூடப் பிறந்தவனையும் கஷ்டப்படுத்தணும்னு…அவா பார்க்கற ஏதாவது ஒரு பொண்ண பிடிச்சிருக்குன்னு சொல்லி லைஃப்ல செட்டில் ஆகிடணும்னு நினைச்சிண்டிருந்தேன் அப்போ தான் உன் மெஸேஜ் வந்தது.”
“அப்பாடா கரெக்ட்டான நேரத்துல தான் மெஸேஜ் பண்ணிருக்கேன். எனக்கு தெரியும் நீ இப்படி ஏதாவது செய்வன்னு அதுனால தான் மெஸேஜ் பண்ணினேன்.”
“ஆமாம் ஆமாம்…அது தான் எனக்கு கல்யாணம் ஆயிடுத்துன்னு சொன்னதுமே உன் முகம் பிரகாசிச்சுதா?”
“ம்…பிரகாசிக்கும் பிரகாசிக்கும்…”
“சரி உன் அப்பா அம்மாகிட்ட நம்மளைப் பத்தி சொல்லிட்டியா? அவா நம்ம கல்யாணத்தை அக்செப்ட் பண்ணிப்பாளா?”
“ம்…உன்கிட்ட கேட்காம நான் எப்படி அவாகிட்ட பேசுவேன் வி. நீ விளையாட்டுக்கு சொன்னது போலவே நிஜத்துல உனக்கு கல்யாணம் ஆகியிருந்தா!!! அப்புறம் என்னோட சேர்ந்து அவாளும் சங்கடப்படுவா. அதுனால முதல்ல உன்கிட்ட பேசிட்டு அப்புறம் அவாகிட்ட பேசலாம்னு இருந்தேன்.”
“வில் தே அக்செப்ட்?”
“அவா ரெண்டு பேரும் என்னைக்குமே என்னோட விருப்பங்களுக்குத் தடை சொன்னதில்லை. அதுனாலையோ என்னவோ நானும் என் விரும்பியதைத் தேர்ந்தெடுக்கறதுல ரொம்ப ஜாக்கிரதையா இருப்பேன். அதுனால இந்த விஷயத்தை சொன்னா என் பேரன்ட்ஸ் நிச்சயம் சந்தோஷப்படுவா அன்ட் அக்செப்ட்டும் பண்ணுவா. ஸோ டோன்ட் வரி வி.”
“என் ஆத்துலேயும் நிச்சயம் சந்தோஷப்படுவான்னு தான் நினைக்கறேன். அப்போ நம்ம ரெண்டு பேர் ஆத்துலேயும் நம்ம கல்யாணத்துக்கு பச்சக்கொடி காட்டுவான்னு சொல்லு.”
“ஐ திங்க் ஸோ. நான் கிளம்பும் போது கூட அப்பா அம்மாட்ட சொல்லலையான்னு ப்ளூ கேட்டான்… நான் திரும்பி வந்துட்டு பேசறேன்னு சொன்னேன். ஸோ இன்னைக்கே என் பேரன்ட்ஸ் கிட்ட பேசறேன் வி.”
“வெயிட்…நீ இப்போ என்ன சொன்ன?”
“நான் இன்னைக்கே என் பேரன்ட்ஸ்கிட்ட…”
“அது இல்ல அதுக்கு முன்னாடி ஏதோ சொன்னயே!! ஏதோ ப்ளூன்னு…அது என்ன?”
“ஓ!! அவனைப் பத்தி நீ என் ஆத்துக்கு வரும்போது தெரிஞ்சுக்கோ.”
“என்னது அவனா?”
“ஆமாம் அவனை அவன்னு தானே சொல்ல முடியும்.”
“ஓ!!! புரிஞ்சுடுத்து”
“என்ன புரிஞ்சுது?”
“ப்ளூ உன்னோட செல்லப் பிராணி தானே!! அதுதான் இப்போ ஃபேஷனா போச்சே…”
“ம்…அப்புடியும் வச்சுக்கலாம்”
“அப்படின்னா புரியலையே”
“நான் தான் சொன்னேன் ல வி… நீ என் ஆத்துக்கு வந்து தெரிஞ்சுக்கோ. அவனை உனக்கு இன்டர்டியூஸ் பண்ணி வைக்கறேன்.”
“ஓகே. அப்படின்னா இப்பவே உன் ஆத்துக்குப் போகலாமா?”
“இப்பவா… நோ நோ. மொதல்ல நான் என் பேரன்ட்ஸ்கிட்ட பேசறேன். அவா ஓகே தான் சொல்லுவா…இருந்தாலும் அதை அவா சொல்லிக் கேட்டதுக்கப்புறமா உன்கிட்ட சொல்லறேன் நீ அப்போ வா. சரியா?”
“ம்…நம்ம கல்யாணத்துக்கு உங்க அப்பா அம்மா ஓகே சொன்னா தான் நான் உன் வீட்டுக்கே வரணுமோ!!! ஓகே. ஓகே. உன்னை உன் ஆத்துல ட்ராப்பாவது பண்ணலாமா?”
“எதுக்கு? என் கார் இருக்கே!! நீ என்னை என் கார் நிக்கற பார்க்கிங்ல இறக்கி விடு போதும். நீயும் இன்னைக்கே உன் பேரன்ட்ஸ் கிட்ட பேசி அவாளோட சம்மதத்தையும் வாங்கு வி.”
“நிச்சயமா. ஆத்துக்கு போனதுமே இந்தியாவுக்கு கால் போட்டு பேசிடுவேன். மூணு வருஷமா இதுக்கு தானே காத்திருந்தேன். ம்…இதோ உன் கார் நிற்கும் இடம் வந்தாச்சு. நீ அவசியம் உன் கார்ல தான் போகணுமா தீ. என் கார்ல என் கூடவே வாயேன்.”
“வி… என்னது இது சின்ன பசங்க மாதிரி பேசற? வீ போத் ஆர் மெச்சூர்டு அடல்ட்ஸ். இட்ஸ் ஓகே. எல்லாம் நல்லபடியா நடக்கட்டும் அப்புறம் நீயும் நானும் எப்பவுமே ஒண்ணா தானே இருக்கப்போறோம். இப்போ பத்திரமா உன் ஆத்துக்கு கிளம்பு.”
“ம்…சரி சரி…கல்யாணத்துக்கு ஒத்துண்டதுமே மேடம் ஆர்டர் போட தொடங்கிட்டாங்க…அதைக் கேட்காம இருப்பேனா? ஓகே டேக் கேர் பை. நான் ரீச் ஆயிட்டு கால் பண்ணறேன். நீயும் பத்திரமா உன் ஆத்துக்குப் போ. பை தீ”
“ஹா! ஹா! ஹா! சரி சரி பை. ட்ரைவ் சேஃப் வி”
“யூ டூ தீ”
என்று கூறி விஷால் அவன் வீட்டிற்கும் சக்தி அவள் வீட்டிற்கும் அவரவர் கார்களில் சென்றனர்.
பல வருடங்களாக மனதில் காதல் கொண்டு
இதுவரை ஒன்று சேரா தண்டவாளம் போல் இருந்த மனங்கள் இரண்டு
இப்போது ஒன்று சேர்ந்திட மனம் விட்டுப் பேசிக் கொண்டு
மீண்டும் காணும் தவிப்போடு கண்கள் இரண்டு
பிரிந்து அவரவர் வழி சென்றன மனதில் கல்யாண கனவுகளை சுமந்துக் கொண்டு
தொடர்வாள்…
அத்தியாயம் 5: விளத்தம்
“என்னைத் தேடி நீ வந்திருந்தாலும் உனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியிருக்கும்”
“ஓ ஆமாம் ல…நீயும் விடியற்காலை ஃப்ளைட் பிடிச்சுப் போயிருப்ப இல்ல!!”
“சரி அதை விடு…உன் அவசரம், பதற்றம் உன்னை யோசிக்க விட்டிருக்காது. ஹாஸ்டலுக்கு வந்த ஃபோன் கால் யாருடையது? அதைக் கேட்டு ஏன் ஷாக் ஆன?”
“அது என் அம்மாகிட்டேந்து வந்த கால் வி.”
“அம்மாகிட்டேந்து தானே வந்தது அதுக்கு ஏன் ஷாக் ஆகனும்?”
“அவங்க சொன்ன விஷயம் அப்படி”
“உன் அம்மா அப்படி என்ன சொன்னாங்க தீ?”
“எனக்கு எல்லாமே என் அப்பா அம்மா தான் வி. அது உனக்கும் நல்லாவே தெரியும் ல”
“ஆங் தெரியுமே தீ”
“எனக்கு கிடைச்சிருக்குற பேரண்ட்ஸ் மாதிரி மத்தவங்களுக்கு இருக்காளானு எனக்கு தெரியாது ஆனா எனக்கு அந்த கடவுள் சூப்பரான அப்பா அன்ட் அம்மாவை கொடுத்திருக்கார். அந்த கால் ல அம்மா என்கிட்ட அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்னு சொன்னா. ஹாஸ்பிடல் ல அட்மிட் பண்ணிருக்கறதா சொன்னா. எனக்கு என் அப்பாவின் முகமும் அம்மாவின் முகமும் என் முன்னாடி வந்தது. உடனே கிடைச்ச ஃப்ளைட் அது டைரெக்ட் ஃப்ளைட்டா இல்ல சிங்கள் ஹாப் ஃப்ளைட்டான்னு எல்லாம் பார்க்காம புக் பண்ணி கிளம்பினேன். எதுல சீட் இருந்ததோ அதில் புக் செஞ்சேன். நான் புக் பண்ணின ஃபளைட் லண்டன் வழியா இந்தியா போற ஃப்ளைட். ஸோ ஃபிரான்ஸ் டூ லண்டன் டிக்கெட்டை மட்டும் கையில் வச்சிண்டிருந்தேன். ரூம் சாவியை ஒப்படைக்கும் போது பதற்றத்தில் என் ஃப்ளைட் டிக்கெட்டை செக்யூரிட்டி டேபிள்லேயே வச்சுட்டு டாக்ஸிக்காக காத்திருந்தேன்.”
“அச்சச்சோ… அப்புறம்? அப்படியே டிக்கெட் இல்லாமயே ஏர்போர்ட் போயிட்டியா?”
“இல்ல வி. அந்த செக்யூரிட்டி அதைப் பார்த்துட்டு என்னோடதா தான் இருக்கும்னு என்கிட்ட வந்து டிக்கெட்டைக் காட்டிக் கேட்டார். நானும் ஆமாம்னு சொல்லி வாங்கிண்டு அவருக்கு தாங்க்ஸ் சொல்லிட்டு டாக்ஸி வந்ததும் அங்கேந்து கிளம்பிட்டேன்.”
“ஓ !!! ஓகே ! இப்போதான் எனக்கு புரியுது.”
“என்னது புரியறது வி?”
“அதுவா என் ஃப்ளைட் டேக் ஆஃப் ஆகறதுக்கு முன்னாடி உன் மொபைலுக்கு கால் பண்ணினேன் அது ஸ்சுவிச்சிடு ஆஃப்ன்னு வந்தது. அதுக்கப்புறம் உன் ஹாஸ்டல் நம்பருக்கு கால் பண்ணினேன். அப்போ அந்த கால் அட்டென்ட் பண்ணினவர் நீ லண்டனுக்கு கிளம்பி போயிட்டனு சொன்னார். அவர் உன் டிக்கெட்டைப் பார்த்துட்டு நீ லண்டன் வரைக்கும் தான் போறேன்னு நினைச்சுண்டு என்கிட்ட சொல்லிருக்கார். நானும் நீ ஏன் லண்டன் போகனும் உனக்கு தான் பிரான்ஸிலேயே வேலை கிடைச்சிருக்கேனு நினைச்சுண்டேன். அப்புறம் நானா அஸ்யூம் பண்ணிடேன் உனக்கு அதைவிட பெட்டர் ஆஃபர் லண்டன்ல கிடைச்சிருக்கும் அது தான் அவசரமா போயிருப்பனு…ஐ ஆம் ஸோ சாரி ஃபார் தட் தீ! ம் சொல்லு உன் அப்பா எப்படி இருக்கார்? நீ கரெக்ட்டா ஊருக்குப் போய் சேர்ந்துட்டயா?”
“இட்ஸ் ஓகே வி. உனக்கு தெரியாததால நீ அப்படி நினைச்சி கிட்ட. அதுக்கு எதுக்கு சாரி எல்லாம். ம் நான் கரெக்ட்டா இந்தியா ரீச் ஆனேன். அங்க அம்மா ஒரே அழுகை. அப்பாவுக்கு சர்ஜரி செய்யற அளவுக்கு போயிடுத்து. மொதல்ல அம்மாவை சமாதானப்படுத்திட்டு மெதுவா என்ன ஆச்சுன்னு கேட்டேன். அப்புறம் அம்மாவும் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திண்டு நடந்ததைச் சொன்னா. டாக்டர் கிட்ட பேசினேன். அவர் சர்ஜரிக்கு அப்புறம் அப்பாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லைன்னு சொன்னார். அதுக்குள்ள என் மாமா, பாட்டி தாத்தா எல்லாரும் வந்துட்டா. அவா எல்லார்கிட்டயும் விவரத்தைச் சொல்லி சமாதானப் படுத்தி அவாளோடவே அம்மாவையும் வீட்டுக்கு அனுப்பி வச்சுட்டு நிமிர்ரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுத்து. ரண்டு மூணு நாளா தூங்காதது டையர்டா இருந்தது. அதுவுமில்லாம என் அப்பாவை கிட்டப் போய் பார்க்க முடியாம அவர் கையைப் பிடித்து உனக்கு நான் இருக்கேன்ப்பானு சொல்ல முடியாம ஐசியு வாசல்ல தவிச்சிண்டிருந்தேன். அப்போ வந்தா என் அப்பாவோட அப்பாவும் அம்மாவும்.”
“அவாளும் உனக்கு பாட்டி தாத்தா தானே? அப்புறம் ஏன் உன் அப்பாவோட அம்மா அப்பான்னு சொல்லற?”
“ஆமாம் ஆமாம் என் அப்பாவை பதினாறு வயசுலேயே வேலைக்கு அனுப்பி அவரோட உழைப்பை உறிஞ்சினவா. ஒரு ஃபார்மாலிடிக்காக வந்து எட்டிப் பார்த்துட்டு…என் அம்மாவையும் என்னையுமே குற்றம் சொன்னா…எனக்கு அவா பேசின விதம் அன்ட் விஷயம் பிடிக்கலை ஸோ தலையில கைய வச்சுண்டு எதுவும் பேசாம உட்கார்ந்துட்டேன்.”
“உன்ன என்ன சொன்னா? பேத்தியப் பத்தி குற்றம் சொல்ல என்ன இருக்கு அவாளுக்கு?”
“ம்…நான் யாரையோ கல்யாணம் பண்ணிண்டுட்டேனாம் அதுனால தான் என் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்காம்…அப்படி இப்படின்னு என்னனவோ சொன்னா. நான் எதையுமே காதுல வாங்காம என் அப்பா நல்லபடியா குணமாகி வரணுமேன்னு மட்டும் வேண்டிண்டே இருந்தேன்.”
“உனக்கு இருந்த டென்ஷன்ல நீ எப்படி என்னைப் பத்தி… இல்ல வேற எதைப்பத்தியும் யோசிச்சிருப்ப…ம்…யோசிக்கனும்னு தோனிருக்காது. ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்.”
“அப்பாக்கு சர்ஜரி எல்லாம் நல்லபடியா முடிஞ்சு …ஆஃபட்டர் சர்ஜரி ரிவியூ எல்லாம் முடிஞ்சு நல்லாகி வீட்டுக்கு வரதுக்கு ஒரு மாசமாச்சு. என் மாமா, பாட்டி, தாத்தா அன்ட் அப்பாவோட பேரண்ட்ஸ் எல்லாரும் ஒரு வாரம் இருந்துட்டு ஊருக்கு கிளம்பி போயிட்டா. நான் இன்னுமொரு மாசம் அப்பா அம்மாவோடவே இருந்தேன். அப்போ அப்பா மெல்ல என் கல்யாணப் பேச்சை எடுத்தார். உண்மையை சொல்லணும்னா அப்போ தான் எனக்கு உன் ஞாபகமே வந்தது. நான் தயங்கினேன். என் தயக்கத்தைப் புரிஞ்சுண்ட அம்மா அப்பாவிடம் “விடுங்கோ பார்க்கலாம் இப்போ என்ன அவசரம்னு” சொல்லி அப்பாவை சமாதானம் செய்து எனக்கு சப்போர்ட் பண்ணினா. அப்புறமா அம்மா மெதுவா என்கிட்ட வந்து “தீ உனக்கு எப்போ கல்யாணம் பண்ணிக்கணும்னு தோனறதோ அப்போ பண்ணிக்கோ சரியா.” னு சொன்னது எனக்கு க்ரேட் ரிலீஃபா இருந்தது. ஸோ இரண்டு மாசம் ஓடிப்போச்சு. அப்பா உடம்பும் தேறியாச்சு. அடுத்து நான் என் வேலையைப் பார்க்க வேணுமேனுட்டு அங்கேந்து புறப்பட்டு மறுபடியும் பிரான்ஸ் வந்தேன். அவா என்னை ஒரு ப்ராஜெக்ட்டுக்காக யூ.கே.வுக்கு அனுப்பினா. அங்க ஒரு ஆறு மாசம் இருந்தேன் …தென் பேக் டூ பிரான்ஸ். இதுதான் நடந்தது. இப்படியே ஒரு வருஷம் ஓடிப்போனதுல நான்… என் அப்பா அம்மா வேலையைத் தவிர வேறெதையுமே நினைச்சுப் பார்க்கக் கூட நேரமில்லாம போயிடுத்து. அதுனால தான் எந்த சோஷியல் ப்ளாட்ஃபார்ம் லயும் நான் வரவேயில்லை. அதுக்கெல்லாம் நேரமும் இருக்கலை. உண்மையை சொல்லணும்னா வரத்தோனலை. தட்ஸ் இட் இதுதான் நடந்தது. போன வாரம் தான் உன்னை எப்படியாவது கான்ட்டாக்ட் பண்ணமுடியுமானு யோசிச்சேன். அப்போ கைக் குடுத்தது தான் ஃபேஸ்புக்.”
“அப்பப்பா எவ்வளவு நடந்திருக்கு? உங்க அம்மாவும் நானும் உன் மொபைலுக்கு அன்னைக்கு நைட்லேந்து காலையில வரைக்கும் எவ்வளவு கால் பண்ணிருப்போம்…உங்க அம்மாவுக்காவது அடுத்த நாளே உன் மொபைல் தொலைந்த விஷயம் நீ சொல்லி தெரிஞ்சிருக்கும்….ஆனா நான் கிட்டத்தட்ட ஒரு வருஷமா ட்ரைப் பண்ணினேன் தெரியுமா? மூணு வருஷம் கழிச்சு வந்து நீ சொல்லறதை எல்லாம் கேட்டா ஏதோ ஒரு த்ரில்லர் கம் ஃபேமிலி ஃபில்ம் பார்த்தா மாதிரி இருக்கு தீ!!”
“ம்…இருக்கும் இருக்கும்…சொல்ல மாட்ட!!! உனக்கென்ன ஜாலியா கல்யாணமெல்லாம் ஆயிடுச்சு. குழந்தைகள் இருக்காளா? ம்…அதுதான் நடந்ததை எல்லாம் சொல்லிட்டேனே இப்போ உன் மனைவியை எனக்கு காட்டுவியா? இன்ட்ரோ பண்ணி வெப்பயா?”
“உனக்கு கல்யாணம் ஆச்சா தீ?”
“ம்…என்ன கிண்டலா? நடந்ததெல்லாத்தையும் ஒண்ணு விடாம சொல்லிருக்கேனே!! அதுல கல்யாணம் வந்ததா?”
“ம்….ஓகே ஓகே தீ!! சாரி சாரி! அதுக்கப்புறம் அந்த பீட்டரை சந்திச்சயா? உனக்கு அந்த ப்ரொபசராலயும் அந்த ரோபோவாலையும் அதுக்கப்புறம் பிராப்ளம் ஏதும் வரலையே!!”
“ம்…ஹூம்…அதுக்கப்புறம் அவங்களால எனக்கு எந்த பிரச்சனையும் இதுவரை இல்லை. அன்னைக்கு நடந்தது அத்தனையும் இப்போ நினைச்சாக் கூட பயமா தான் இருக்கு. அது போல எல்லாம் நான் சினிமால தான் பார்த்திருக்கேன் பா…”
“ம்..சரி அந்த ப்ரொபசர் சொன்ன அந்த ரோபோவை கண்டு பிடிச்சியா? அதை என்ன பண்ணின?”
“நானும் பார்த்துண்டே இருக்கேன்… வந்ததுலேந்து என்னைப் பத்தி மட்டுமே கேட்டுண்டிருக்க!!”
“ப்ளீஸ் சொல்லேன் தீ. ப்ரொபசர் கதையை பாதியிலேயே விட்டா எப்படி? அவரோட ரோபோவை கண்டு பிடிச்சியா?”
“நோ வே!! அதை தெரிஞ்சுக்கணும்னா முதல்ல ஐ ஹாவ் டூ மீட் யுவர் வைஃப். போலாமா?”
“அவ இப்போ வீட்ல இல்ல தீ.”
“சரி அவங்க ஃபோட்டோவாவது காட்டுப்பா. எனக்கு தெரிஞ்சவங்கன்னு வேற சொல்லற. அது யாருன்னு நானும் தெரிஞ்சுக்கறேனே! என்னை மீட் பண்ண வர்றதை அவங்ககிட்ட சொன்னயா?”
“ம்..ம்…எல்லாம் அவகிட்ட சொல்லிட்டு தான் வந்திருக்கேன். அவளோட ஃபோட்டோ…ம்… அச்சச்சோ என் வாலட்டை மாத்தி எடுத்துண்டு வந்துட்டேனே!! சரி இரு என் மொபைல்ல அவ ஃபோட்டோஸ் இருக்கு காட்டறேன்.”
“மொபைல்ல இருக்குற ஃபோட்டோவை எடுக்க இவ்வளவு நேரம் என்ன பண்ணுற வி”
“இரு தீ. அவளோட நல்ல பிக்ச்சரை காட்டணும் ல…அது தான்…ம்…இதோ பார்.”
என்று தன் மனைவியின் படத்தை மொபைலில் காட்டிய விஷால் சக்தியிடம்
“என்ன தீ!! என் மனைவி எப்படி இருக்கா? உனக்கு அவ யாருன்னு அடையாளம் தெரியுதா?”
சக்தி விஷாலின் மொபைலை அவனிடமிர்ந்து வாங்கிப் பார்த்ததும் ஷாக் ஆனாள். விஷால் அவளை மூன்று முறை அழைத்தும் அசையாதிருந்த சக்தியின் தோள் மீது கை வைத்து உலுக்கினான். அப்போதும் எந்த வித அசைவுமின்றி அமர்ந்திருந்த சக்தியின் கண்கள் மட்டும் கலங்கின.
தொடர்வாள்…
அத்தியாயம் 4: விளக்கம்
அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருந்த சக்தியை அழைத்தான் விஷால் ஆனால் அவள் அசையவில்லை. அவளின் வலது தோள் மீது கை வைத்து
“தீ…தீ…தீ…. என்ன ஆச்சு?”
என்று உலுக்கினான். சட்டென சுயநினைவுக்கு வந்த சக்தி விஷாலை நோக்கி
“ஓ தட்ஸ் க்ரேட் வி. கங்க்ராட்ஸ்.”
என்று கூறிக்கொண்டே அவள் கண்களிலிருந்து அருவி போல் வழிய இருந்த கண்ணீரை மெல்ல கண்களுக்குள்ளேயே அனுப்ப வேண்டி டேபிளில் இருந்த டிஷு ஒன்றை எடுத்து விஷாலுக்கு தெரிந்துவிடக் கூடாது என்றெண்ணி முகத்தில் புன்னகையுடன் கண்களை மெல்ல மேல் நோக்கி டிஷுவால் தூசித்தட்டுவது போல கண்களைத் தட்டினாள். அதைப் பார்த்த விஷால்
“ஹேய் தீ…நீ அழறயா?”
“ச்ச …ச்ச நோ நோ வி. ஐ ஃபீல் ஹாப்பி ஃபார் யூ”
“ம்…நம்பிட்டேன் நம்பிட்டேன். அசடு வழியற தீ. என் மேல இவ்வளவு அசையை வச்சிருக்க தானே அப்புறம் ஏன் அன்னைக்கு நான் ப்ரப்போஸ் பண்ணும் போது சொல்லாம கொள்ளாம ஓடிப் போயிட்ட? சரி போனியே..அதுக்கப்புறம் என்னை கான்ட்டாக்ட் பண்ணனும்னு ஏன் உனக்கு தோனலை?”
“விடு வி. இனி அதைப் பத்தி எல்லாம் பேசி என்ன ஆக போறது. ஜஸ்ட் ஃபர்கெட் இட்.”
“ஏன் சம்பந்தப் பட்ட நான் தெரிஞ்சுக்க வேண்டாமா?”
“அதெல்லாம் விடு வி. உன் மனைவி யாரு? எப்படி இருக்கா? ஃபோட்டோ எதாவது வச்சிருந்தா காமியேன் ப்ளீஸ்.”
“எனக்கு… நான் கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்காம என் மனைவியை உனக்கு இன்ட்ரோ பண்ணி வைக்க மாட்டேன். அதனால ஒழுங்கா பதில் சொல்லு. அவளை உனக்குக் காட்டறேன். உனக்கும் அவ ரொம்ப பரிட்சயமானவ தான்.”
“அப்படியா யாருப்பா அது? நம்ம கூட காலேஜ்ல படிச்சவளா? இல்லை….”
“ஹலோ மேடம் மொதல்ல என்னோட கேள்விகளுக்கான பதில்…”
“ஓகே ஓகே…அன்னைக்கு நீ உன் காதலை என்கிட்ட சொன்னதும் என் மொபைலுக்கு ஒரு கால் வந்தது.”
“ஆமாம் ஆமாம் அதை அட்டெண்ட் பண்ணிட்டு வரதா சொல்லிட்டு போனவ தானே நீ!”
“ஆமாம் வி அட்டெண்ட் பண்ணிட்டு வந்திடலாம்னு தான் வெளியே போனேன் ஆனா அந்த கால் நம்மளை இப்படி பிரிச்சு வைக்கும்னு நான் எதிர்பார்க்கலை.”
“அப்படி நம்மளை பிரிக்கும் அளவுக்கு அந்த கால் யார்கிட்டேந்து வந்தது?”
“ப்ரொபசர் சேவியர் கிட்டேந்து தான் அந்த கால் வந்தது”
“ப்ரொபசர் சேவியரா!! அவர் நாம காலேஜ் முடிச்ச ஒரு வாரத்துல சூசைட் பண்ணி இறந்துட்டதா கேள்விப்பட்டேனே. நமக்கு பாடம் சொல்லிக்கொடுத்துட்டு அவர் இறந்துட்டாரேன்னு நான் நினைச்சேன். அவர் எதுக்கு உன்னை கால் பண்ணினார்? ஆமாம் ஆமாம் நீ அவரோட பெட் அன்ட் பெஸ்ட் ஸ்டூடண்ட் ஆச்சே!!! அவருக்காகவா அப்படி ஓடின?”
“அவர் அன்னைக்கு எனக்கு கால் பண்ணும் போது ரொம்ப பதட்டமா பேசினார். உடனே என்னைப் பார்த்து முக்கியமானது ஒன்னு என்கிட்ட தரணும்னு சொல்லி நான் எங்கிருந்தாலும் உடனே கிளம்பி அவர் இருக்குற இடத்துக்கு வரச்சொன்னார்.”
“சரி அதை நீ எங்ககிட்ட சொல்லியிருக்கலாமே! நாங்களும் வந்திருப்போமே!”
“இல்ல வி அவர் என்னை மட்டும் தனியா வரச்சொன்னார். அதுவும் உடனே…அவர் ஏதோ ஆபத்தில் சிக்கியிருக்கார்னு எனக்கு தோனித்து. அதுவுமில்லாம நானும் கொஞ்சம் பதற்றமானேன். உன்கிட்ட சொல்ல முடியலையேன்னு கண்ணு கலங்கித்து….சரி போயிட்டு வந்து சொல்லிக்கலாம்னு அங்க வந்த டாக்ஸியை பிடித்து ப்ரொபசரைப் பார்க்க புறப்பட்டுப் போயிட்டேன். “
“சரி அவர் உன்னை எங்க வரச்சொன்னார்? ஏன் வரச்சொன்னார்?”
“அவர் கால் பண்ணின கொஞ்ச நேரத்துல எல்லாம் வேறொரு நம்பர்லேந்து நான் எங்க வரணும்னு லொக்கேஷன் ஷேர் செய்தார்.”
“ஏன் அவர் நம்பருக்கு என்ன ஆச்சு? ஏன் அவர் வேறொரு நம்பர்லேந்து லொக்கேஷனை ஷேர் பண்ணனும்?”
“அந்த மெஸேஜைப் பார்த்ததும் தான் அவர் ஏதோ பெரிய ஆபத்தில் சிக்கியிருக்கார்னு எனக்கு தெரிய வந்தது.”
“அப்படி என்ன மெஸேஜ் அது?”
“அதுல அவர் மிகவும் ஆபத்தில் சிக்கியிருக்கிறார்னும் அதிலிருந்து தப்பி ஓடும் போது அவருடைய மொபைலை எங்கயோ தவறவிட்டுட்டார்னும் எழுதியிருந்தது.”
“அய்யயோ!! சரி அவர் ஷேர் பண்ணின லொக்கேஷனுக்கு போனயா?”
“ம் போனேன். அங்க எந்த பில்டிங் எதுவுமே இருக்கலை. ஒரே இருட்டா இருந்தது. சுத்திப் பார்த்தேன். அப்போ அந்த டாக்ஸி டிரைவர் பணம் கேட்டு தொந்தரவு செய்யவே நானும் வேகமா பணத்தை எடுத்து அவன் கையில கொடுத்தேன்… அவன் அதை வாங்கிண்டு என்னைப் பார்த்து …”இங்க எதுக்கு வந்திருக்கீங்கனு நான் தெரிஞ்சுக்கலாமானு” கேட்டான். அதுக்கு நான் அவனைப் பார்த்து… உன் வேலையைப் பார்னு சொன்னேன். அவன் என்னை முறைத்து விட்டு ஏதேதோ திட்டிட்டு அங்கிருந்து வண்டியை ஸ்டார்ட் பண்ணி எனக்கு முன்னாடிலேந்து நகந்தான் அவ்வளவு தான் நான் அதிர்ச்சியில் அப்படியே ஷாக் ஆகி நின்னுட்டேன்.”
“ஏன் தீ? என்ன ஆச்சு?”
“எனக்கு முன்னாடி இருந்தது ஒரு மயானம்.”
“என்னது? அப்பவாவது எனக்கு ஒரு கால் பண்ணிருக்கலாம் இல்ல.”
“உனக்கு கால் பண்ணி விவரத்தை சொல்லி உன்னை அங்கே வரச்சொல்லலாம்னு மொபைலைத் தேடினேன். அப்போ நான் இருந்த பதற்றத்துல என் மொபைலை அந்த கார்லயே விட்டது எனக்கு தெரிய வந்தது.. அவனும் அதைக் கொண்டு போயிட்டான்”
“அச்சச்சோ!!! சரி அப்புறம் நீ என்ன பண்ணின?”
“மெதுவா அங்கேயே சுத்தி சுத்தி ஏதாவது பப்ளிக் டெலிபோன் இருக்கானு பார்த்தேன். அப்போ ஒரு பெரிய மரத்துக்குப் பின்னாடிலேந்து தீ …தீ…தீ…னு என்னை யாரோ கூப்பிடறா மாதிரி இருந்தது. நானும் மெதுவா அந்த குரல் வந்த டைரெக்ஷனில் போனேன். அந்த குரல் வந்த மரத்துக்குப் பின்னாடி சாய்ந்தபடி ப்ரொபசர் சேவியர் குத்துயிரும் கொலையுயிருமா கிடந்தார். அவரை அப்படி பார்த்ததும் என்னோட பதற்றம் இன்னும் ஜாஸ்தியாச்சு…ஹெல்ப் ஹெல்ப்னு கத்த ஆரம்பித்தேன். அவர் என்னை அமைதியா இருக்கும் படி சொன்னார். நானும் சற்று நிதானமாகி ஹாஸ்பிடல் போகலாம்னு அவரை தூக்க முயற்சித்தேன்…ஆனா என்னால முடியலை. அவருக்கு என்ன நடந்ததுனு கேட்டேன்?”
“ம்…என்ன ஆச்சாம்? ம்…ம்…அவர் எப்பவும் போல சும்மா இருக்காம எங்கயாவது போராட்டம் பண்ணிருப்பார் இல்லாட்டி யாரையாவது எதிர்த்துக் கேட்டிருப்பார்…அதுதானே!!”
“இல்ல வி. அவர் ஒரு ரோபோ தயாரிச்சுட்டு இருந்தார் அது உனக்கு தெரியுமா?”
“ம்…ரோபோ வா? இல்லை எனக்குத் தெரியாதே? உனக்குத் தெரியுமா?”
“ம்…எனக்கு தெரியும் ஆனா அதை அவர் என்கிட்டேயும் பிஎச்டி ஸ்டூடண்ட் பீட்டர் கிட்டேயும் தான் சொல்லியிருந்தார். எனக்கு இந்த ரோபோவைப் பத்தி தெரியும்ங்கற விஷயம் பீட்டருக்குத் தெரியாது. ஆனா பீட்டருக்கு தெரியும்ங்கறது எனக்குத் தெரியும். ஏன்னா ப்ரொபசர் என்கிட்ட சொல்லிருக்கார். நாங்க ரெண்டே பேரு தான் அதைப் பார்த்தவர்கள். அதை அப்படியே மனிதன் போலவே மாற்றுவது தான் அவரோட கோல் ஆ இருந்தது. அதுக்காக ரொம்ப பாடுப்பட்டார். அதற்கான பேடெண்ட் வாங்க இருக்கும் நேரத்தில் அந்த பீட்டர் ஏதேதோ செய்து யார்யாரையோ வைத்து அது அவனுடையது என்றும் அதை ப்ரொபசர் திருடிவிட்டார் என்றும் எப்படியோ கதையை மாற்றிவிட்டது ப்ரொபசருக்கு அன்னைக்கு ஈவினிங் தெரிய வர உடனே அவர் தனது ரோபோவை ஒரு பத்திரமான இடத்தில் வைத்துவிட்டு தலைமறைவாக திட்டமிட்டிருக்கார்.”
“ஏன் ப்ரொபசர் சேவியர் ஒரு ஸ்டூடண்டுக்கு பயந்து தலைமறைவாக வேண்டும்?”
“ஏன்னா அந்த ஸ்டூடண்ட் இந்த நாட்டின் பெரிய அரசியல்வாதியோட புள்ளையாம்.”
“போச்சுடா எந்த நாட்டுக்கு போனாலும் இவங்க தொல்லை விடாது போல. சரி அதுதான் அவர் அந்த ரோபோவை ஒளிச்சு வச்சுட்டாரே அப்புறம் எதுக்கு உன்னை இந்த வம்புக்குள்ள மாட்டி விடப் பார்த்திருக்கார்?”
“மாட்டி விடப் பார்க்கலை அவரோட பொக்கிஷத்தை என்னிடம் ஒப்படைக்க தான் வரச்சொல்லியிருக்கார். ஏன்னா அந்த அரசியல்வாதிகள் அவரை கொலை பண்ணற அளவுக்கு போவாங்கனு அவர் நினைக்கலையாம். அதுனால அவர்கள் கைக்கு அது கிடைத்துவிடக் கூடாதுன்னு நினைச்சு அதை வைத்திருந்த இடத்தை என்னிடம் சொல்லி என்னை எடுத்துக்கச் சொன்னார். அதுல ஏதோ இருக்குன்னும் சொல்ல வந்தார் ஆனா அதுக்குள்ள இறந்துட்டார்.”
“உனக்கு லொக்கேஷனை ஷேர் பண்ணறதுக்கு…அந்த மயானத்துல அவருக்கு ஃபோன் குடுத்தது யாராம்?”
“அந்த வழியில் போன யாராவதா இருக்கலாம். அதை நான் கேட்கவும் இல்லை அதை பத்தி அவர் எனக்கு எதுவும் சொல்லவுமில்லை.”
“சரி அதுக்கப்புறம் நீ அங்கிருந்து எப்படி சிட்டிக்கு திரும்பி வந்த?”
“ஏதாவது வண்டிக் கிடைக்குதானு கொஞ்ச நேரம் அங்கேயே இருந்துப் பார்த்தேன் ஒன்னுமே அந்த வழியா வரலை. சுத்திலும் இருட்டா இருந்ததா அதுனால பயத்துல வேகவேகமா நடக்க ஆரம்பித்தேன். ஒரு ஆறு கிலோமீட்டர் நடந்திருப்பேன் அதுக்குள்ள தூரத்துல ஒரு டாக்ஸி தெரிஞ்சுது. அதை நிப்பாட்டி அதில் ஏறி ரூமுக்கு வந்தேன்.”
“சரி அப்பவாவது எனக்கு கால் பண்ணிருக்கலாமில்ல?”
“எப்படி எனக்கு எந்த நம்பரும் ஞாபகத்தில் இல்லையே!! சரி பக்கத்துல தானே ரோஸ் இருக்கா…அவகிட்ட போய் கேட்கலாம்னு நினைச்சு அவ ரூம் வாசல்வரைக்கும் போனேன். அப்புறம் அவளை ஏன் தொந்தரவு செய்யணும்! காலையில கேட்டுக்கலாம்னு நினைச்சு என் ரூமுக்குப் போய் நல்லா தூங்கிட்டேன்.
மறுநாள் காலை ஒரு பத்து மணிக்கு தான் எழுந்தேன். எழுந்ததும் நேரா ரோஸ் ரூமுக்கு தான் போனேன். ஆனா அவங்க எல்லாருமே விடியற் காலையில் கிளம்பி ஏர்போர்ட் போயிட்டாங்கனு தெரிய வந்தது. இனி அவங்களை தொடர்பு கொள்ளனும்னா இருபது மணி நேரம் காத்திருக்கணும்னு நினைச்சு உன்னைத் தேடி உன் ரூமுக்கு வரதுக்கு புறப்பட்டுட்டு இருந்தேன். அப்போ தான் என் ரூமுக்கு ஒரு கால் வந்தது. அதை அட்டெண்ட் செய்ததும் மறுபடியும் அதிர்ச்சியில் அப்படியே உறைந்துப் போய் உட்காந்துட்டேன்.”
தொடர்வாள்…
அத்தியாயம் 3: சந்திப்பு
சக்தி நடந்து காஃபி ஷாப்புக்கு அருகில் செல்ல செல்ல அவளின் இதயம் படக் படக் படக் என துடித்தது அவளுக்கு கேட்கத் துவங்கியது. அது வெளியே இருப்பவர்களுக்கும் கேட்குமோ என்ற எண்ணமோ என்னவோ அவள் காஃபி ஷாப் கதவைத் திறந்து உள்ளே செல்வதற்கு முன் தனது இடது மற்றும் வலது புறம் நடந்துச் சென்றவர்களை பார்த்தாள். சட்டென ஒரு பெண் தங்களைப் பார்த்ததும் அவ்வழியாக அவளைக் கடந்து சென்றவர்களும் ஓர் நொடி அவளைப் பார்த்து “ஹாய் குட் மார்னிங்” என்றும், சிலர் தலையசைத்து “ஹாய்” என்று செய்கையில் சொன்னதும் அவள் தனக்குள்
“என்ன!! அப்போ நான் நினைத்தது சரி தானா!!! எல்லாருக்கும் கேட்குதோ!!! ம்…ம்..”
என்று மனதிற்குள் சிரித்துக் கொண்டே வலது கையால் தன் வலது புற நெற்றியில் மெலிதாக தட்டிக் கொண்டு கதவைத் திறந்தாள். சுற்றிலும் பார்த்தாள். அவள் கண்களுக்கு விஷால் தென்படவில்லை. அவள் யாரையோ தேடுவதை அறிந்துக் கொண்ட அந்த கடையின் மேனேஜர் நேராக அவளருகில் வந்து
“ஹாய் மேடம் குட் மார்னிங். உங்களுடைய ரெகுலர் காஃபி அன்ட் குக்கீஸ் எடுத்து வரச் சொல்லட்டுமா? நீங்கள் யாரையோ தேடுவது போல தோன்றுகிறதே! ஸோ டூ யூ வான்ட் டூ வெயிட் ஃபார் சம் ஒன்?”
“ம்…ஆங்…ஹாய் மிஸ்டர் வில்லியம். ஹோப் யூ ஆர் டூயிங் கிரேட் டுடே. ஆமாம் நான் என் நண்பருக்காக காத்திருக்க வேண்டும். நோ பிராப்ளம் நீங்க என்னோட ரெகுலர் ஆர்டரை செய்ய சொல்லுங்க. நான் அங்கே உட்கார்ந்துக்கறேன். மை ஃபேவரைட் ஸ்பாட்.”
“ஓகே. மேடம். கொண்டு வரச்சொல்கிறேன்”
“நோ ஹரி அட் ஆல் மிஸ்டர் வில்லியம். டேக் யுவர் டைம்.”
“ஓ ஷுவர்.”
என்று வில்லியம் சக்தியின் ஆர்டரை தயார் செய்ய சொல்லிவிட்டு உள்ளே சென்றார். அப்போது சக்தி தனக்குத்தானே
“நான் ஒரு கருப்பு ரோல்ஸ் ராய்ஸ் கார் பார்க்கிங் ல பார்த்தேனே!!! அப்போ அது வி யோடது இல்லையோ!! நான் பெரிய இவ மாதிரி அவன் நம்பர் சொல்ல வந்தப்போ வேண்டாம் நேர்ல பார்த்துக்கறேன்னு வேற சொல்லிட்டேனே!! இட்ஸ் ஓகே வெயிட் பண்ணிப் பார்ப்போம்.”
என்று முனுகிக் கொண்டிருக்கையில் வில்லியம் அவளருகே வந்து அவள் முன் ஒரு மூடிப்போட்ட ப்ளேட்டை வைத்தார். அதைப் பார்த்ததும் சக்தி அவரிடம்
“மிஸ்டர் வில்லியம்ஸ் என்ன இது? என்னோட ஆர்டரை மறந்துட்டீங்களா?”
“நோ மேடம் இது உங்களுக்கு தான். என்ஜாய் பண்ணிட்டிருங்க உங்க ஆர்டரும் ரெடி ஆகிடுச்சு கொண்டு வரேன்.”
என்று கூறி மறைந்தார். மனதில் குழப்பத்துடன் மெல்ல தட்டை மூடியிருந்த அந்த பீங்கான் மூடியை தூக்கினாள் சக்தி. அதில் அழகிய சிறிய ரெட் வெல்வெட் கேக் இருந்தது. அதில் உன்னை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று எழுதியிருந்தது. அதைப் பார்த்ததும் சக்தி உடனே சுற்றும் முற்றும் பார்த்தாள். கடையின் சமயலறைக்குள் இருந்து வெளியே வந்த வில்லியம் அங்கே பாருங்கள் என்று கைக் காட்ட அவர் பின்னாலேயே வந்த விஷாலைப் பார்த்ததும் சக்திக்கு மீண்டும் ஆனந்தத்தில் கண்களில் வெள்ளப்பெருக்கெடுத்தது. செய்வதறியாது அப்படியே திகைத்து நின்றாள். அவளருகே நடந்து வந்த விஷாலை ஓடிச் சென்று கட்டியணைத்துக் கொள் சக்தி என்ற மந்திரத்தை அவள் மனம் உச்சரித்துக்கொண்டே இருந்தாலும் அவள் அதை சட்டை செய்யாமல்
“ஹாய் வி. இத்தனை வருஷத்துக்கு அப்புறம் உன்னை பார்த்ததில் எனக்கு என்ன பண்ணணும் பேசணும்னு தெரியலை. அதுதான் அப்படியே நின்னுட்டேன். ஆம் சாரி. “
“இட்ஸ் ஓகே தீ. நீ இருக்கியே அதுவே போதும். எங்கடா அன்னைக்கு போலவே மறைஞ்சுடுவியோன்னு நினைச்சேன்”
“ஹேய்!!! அன்னைக்கு சிட்டுவேஷன் அப்படி போக வேண்டி வந்தது போயிட்டேன். ஆனா இன்னைக்கு அப்படி இல்லையே”
“ம்….அப்புறம் சொல்லு எப்படி இருக்க? நீ சொன்னா மாதிரியே உன்கிட்ட ஜாஸ்தி மாற்றங்கள் எதுவுமில்ல தீ. மூணு வருஷம் முன்னாடி எப்படி இருந்தயோ அப்படியே தான் இருக்க.”
“யூ டூ லுக் தி சேம் பட் கொஞ்சம் மெச்சுவர்டா தெரியற வி. ஆமாம் நீ எனக்கு முன்னாடியே வந்துட்டியா? ஏன் இங்க உட்காராம உள்ள ஒளிஞ்சிகிட்டிருந்த?”
“மேடம் அன்ட் சார் உங்கள் ஆர்டர்.”
“ஓ தாங்க் யூ வில்லியம். ஸோ நைஸ் ஆஃப் யூ… நீங்களும் இவர் இங்க வந்ததைப் பத்தி ஒண்ணுமே சொல்லலையே மிஸ்டர் வில்லியம். ஏன்?”
“அது அவருக்கும் எனக்குமான தனிப்பட்ட டீல் தீ…அதை ஏன் பாவம் அவர்கிட்ட கேட்குற? இட்ஸ் ஓகே வில்லியம். தாங்க் யூ ஸோ மச் ஃபார் யுவர் ஹெல்ப்”
“யூ ஆர் வெல்கம் சார் அன்ட் யூ டூ மேடம். என்ஜாய் தி மீல்”
“ம்…இப்ப சொல்லு ஏன் ஒளிஞ்சிட்டிருந்த?”
“அதுவா!!! உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க தான்.”
“ஆனா நான் தான் பார்க்கிங்ல ப்ளாக் ரோல்ஸ் ராய்ஸ் பார்த்தேனே அப்புறம் எப்படி சர்ப்ரைஸ் ஆவேன்?”
“ஆனா அது என் காரு தானான்னு உனக்குள்ள ஒரு டவுட் வந்ததே!!! உன் முகமே காட்டிக் கொடுத்துதே”
“ம்…ம்….சரி சரி விளையாட்டெல்லாம் போதும் வி. நீ எப்படி இருக்க? உனக்கு கல்யாணம் ஆகியிருக்கும்னு நான் நினைச்சேன்.”
“எஸ் யூ ஆர் ரைட். எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு தீ.
என்று விஷால் சொன்னதைக் கேட்டதும் அதிர்ந்துப் போனாள் சக்தி.
தொடர்வாள்…
அத்தியாயம் 2: உயிர் தோழன்
சக்தி வீட்டிலிருந்து வெளியே வந்ததும் தான் அணிந்திருந்த நீல நிறத்தில் பிங் பூக்கள் வரையப்பட்டிருந்த கவுனை… தன் கார் ஜன்னல் கண்ணாடியில் ஒரு முறை சரி பார்த்துக் கொண்டாள். அப்போது அவள் வீட்டு வாசல் வழியாக வாக்கிங் சென்றுக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு பாட்டி அவளிடம் பிரஞ்சில்
“ஹேய் தீ! நீ ரொம்ப அழகா இருக்க. காட் ப்ளஸ் யூ மை சைல்ட்”
அதற்கு சக்தியும் பிரஞ்சில்
“நன்றி மிஸ்ஸர்ஸ் டேவிட்”
“என்ன தீ இன்னைக்கு இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்ட?”
“வேலை இருக்கு அதுதான் சீக்கிரம் கிளம்பிட்டேன். பை…ஹாவ் எ நைஸ் டே மிஸ்ஸர்ஸ் டேவிட். மாலையில் சந்திப்போம்”
என்று கூறிக் கொண்டே கார் கதவைத் திறந்து காருக்குள் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாள்.
கார் நேராக ஒரு காபி ஷாப் முன் சென்று நின்றது.
இஞ்சினை ஆஃப் செய்ததும் கார் பார்க் முழுவதையும் தன் மான் விழிகளால் ஒரு ஸ்கேன் செய்தாள்.
அவள் காரிலிருந்து இரண்டு கார் தள்ளி ஒரு ப்ளாக் ரோல்ஸ் ராய்ஸ் கார் நின்றிருந்ததைப் பார்த்ததும் அவள் கார் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டாள்.
பின் தன் கைப்பையிலிருந்து உதட்டுச்சாயத்தை எடுத்து உதட்டில் தேய்த்துக்கொண்டே மூன்று வருடங்களுக்கு முன் தனது நினைவலைகளில் மெல்ல மூழ்களானாள்
அன்று அவள் எம் எஸ் படிப்பு முடித்து பட்டமளிப்பு விழா நடந்த நாள் ஜூன் 12. அன்றிரவு அனைத்து நண்பர்களுமாக ஓர் பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தனர்.
அந்த கல்லூரியில் சேர்ந்த இரண்டாவது ஆண்டில் விஷால் சக்தியின் நெருங்கிய நண்பனானான்.
நட்பு காதலாக மலர்ந்தது.
ஆனால் அதை இருவரும் அவரவர் மனம் என்னும் மண்ணிலிட்டு புதைத்து வைத்துக் கொண்டனர்.
அது விஷாலின் மனதில் விருட்சமாக வளர்ந்ததும் அதை சக்தியிடம் அந்த பார்டியில் வைத்து தெரிவிக்க வேண்டி அவளின் வருகைக்காக காத்திருந்தான்.
சக்தியும் வந்தாள். அனைவரும் மிகவும் சந்தோஷமாக அவர்கள் அந்த கல்லூரியில் இரண்டு ஆண்டுகளில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள், அனுபவங்கள் மற்றும் கிண்டல் கேலி என அனைத்தையும் பேசிக் கொண்டதில் பார்ட்டி மகிழ்ச்சியாக நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. இடையிடையே ஸ்னாக்ஸ், ட்ரிங்க்ஸ் மற்றும் மெயின் கோர்ஸ் என உண்டு கொண்டும் இருந்தனர். அன்று வரை கலகலப்பாக பேசிக் கொண்டிருந்த விஷால் அன்ட் சக்தி இருவரும் கையில் ஆளுக்கொரு கிளாஸில் கோக் வைத்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்ததைப் பார்த்த நண்பர்கள் அவர்களிடம்
“ஹேய் சக்தி அன்ட் விஷால் என்ன ஆச்சு? ஏன் இரண்டு பேரும் பேசாம உட்கார்ந்திட்டு இருக்கீங்க?”
“நாளைக்கு காலையிலே அவரவர் அவரவர்கள் நாட்டுக்கும் வீட்டுக்கும் பறந்து போயிடுவோம்ங்கற கவலையா?”
“அதுனால என்ன நாம வருஷத்துக்கு ஒரு தடவை இப்படி எங்கயாவது ஒண்ணா ஒரு ரீயூனியன் வச்சுட்டா போச்சு. இதுக்காகவா இவளோ ஃபீலிங்ஸ்?”
“ஹேய் என்னடா பேசற ஜான். நம்ம சக்திக்கு தான் கேம்பஸ் இன்டர்வியூவில் இங்கேயே பெரிய கம்பெனியில் ஜாப் கிடைச்சிடுச்சே! அவளைத் தவிர நம்ம எல்லாருக்கும் வேற நாடுகளில் கிடைச்சிருக்கு.”
“எனக்கு இன்னும் எங்கயுமே கிடைக்கலையே ரோஸ். என்னை ஏன் உன் லிஸ்ட்டில் சேர்த்துக்கற?”
“டேய் ரிஷி அதுக்கு நல்லா படிச்சிருக்கணும் இல்ல!!! உனக்கென்னப்பா இந்தியாவுல உங்க அப்பா பிஸினஸ் இருக்கே அதைப் போய் பார்த்துக்கோ”
“ஆங்!! ஆங்!! எங்கப்பா அப்படியே தூக்கி குடுத்துட்டு தான் அடுத்த வேலையே பாப்பாரு….எனக்கென்னவோ நம்ம விஷால் அன்ட் சக்தியோட சைலென்ஸை பார்த்தா…ரெண்டு பேரும் காதல் எனும் வலையில் சிக்கி…விக்கிக்கிட்டு இருக்காங்களோன்னு தோணுது”
“எனக்கும் அப்படி தான் தோணுது ரிஷி. ஈஸ் இட் ட்ரூ விஷால்?”
என்று ரோஸ் விஷாலைப் பார்த்துக் கேட்டதும் உடனே விஷால் தான் அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்து தனக்கு எதிரே அமர்ந்திருந்த சக்தி அருகே சென்று அவளின் கரம் பற்றி தரையில் முழங்காலிட்டு
“சக்தி நீ எனக்கு கிடைத்த சிறந்த தோழி. உன்னுடய வெளிப்படையான பேச்சு, தைரியம், எளிமை, அறிவு, அழகு, இதுல எது என்னை கவர்ந்ததுன்னு எனக்கு சொல்ல தெரியலை. ஆனா நீ தான் என்னவள்ன்னு ஏதோ ஒண்ணு எனக்குள்ள சொல்லிக்கிட்டே இருக்கு. இந்த நாளையும் நான் தவரவிட்டுட்டேன்னா அப்புறம் எப்போ இதை நான் உன்கிட்ட சொல்ல முடியும்னு தெரியலை அதுனால இப்பவே சொல்லிடறேன்…தீ… ஐ லவ் யூ”
என்று விஷால் கூறி முடித்ததும் அனைவரும் ஹே!! என்று கத்திக் கொண்டே கரகோஷம் எழுப்பினர். அப்போது ரோஸ் அனைவரையும் அமைதியாக இருக்கச் செய்தாள். பின் அனைவரின் பார்வையும் சக்தி மீது பாய்ந்தது. அவள் கூறப் போகும் பதிலுக்காக விஷால் உற்பட அனைவரும் காத்திருந்தனர்.
தான் விஷாலை நேசிப்பது போலவே விஷாலும் தன்னை நேசிக்கிறான் என்று அறிந்துக் கொண்டதில் சக்தியின் கண்கள் ஆனந்தத்தில் வெள்ளப்பெருக்கெடுத்தது. அதைப் பார்த்த நண்பர்கள் அனைவரும் சக்தியிடம்
“கம் ஆன் சக்தி அக்சப்ட்…தீ….தீ…தீ…”
என்று சபதம் எழுப்பத் துவங்கினர். அப்போது சக்தியின் கைபேசி ஒலித்தது. அனைவரும் அமைதியாயினர். சக்தி தன் கைபேசியில் யார் அழைப்பது என்று பார்த்தாள். உடனே தன் கண்களைத் துடைத்துக் கொண்டு கால் ஐ அட்டென்ட் செய்ய எழுந்து வெளியே சென்றாள்.
சென்றவள் வருவாள் தனக்கு நல்ல பதில் தருவாள் என்று காத்திருந்தான் விஷால். ஆனால் சக்தி அந்த கால் ஐ அட்டென்ட் செய்ததும் டாக்ஸி பிடித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டாள்.
காரணமறியாது விஷாலும் அங்கிருந்து தன் வீட்டிற்கு சென்றுவிட மகிழ்ச்சியாக நடந்துக் கொண்டிருந்த பார்ட்டியும் முடிவுற்றது.
அதன் பின் சக்தி தனது ரிசர்ச் வேலையில் மூழ்கியதில் முகநூல் போன்ற எந்த சோசியல் நெட்வொர்க் தளத்திலும் இரண்டு ஆண்டுகள் எட்டிக்கூடப் பார்க்காதிருந்தாள். ஆறு மாதங்களுக்கு முன் அவள் தனது முகநூல் பக்கத்தைத் திருந்துப் பார்த்தாள் அதில் அவள் நண்பர்களிடமிருந்து ஆயிரக்கணக்கில் அழைப்புகள் மற்றும் மெஸேஜ்ஜுகள் கொட்டிக்கிடந்தன. அதிலிருந்த ஒரு பெயர் அவள் கவனத்தைத் திருப்பியது. அது தான் விஷாலின் மெஸேஜஸ். அவன் சக்திக்காக தினமும் ஒரு மெஸேஜ் அனுப்பியிருந்தான். அதைப் பார்த்த சக்தி தன்னைத் தானே நொந்துக் கொண்டாள். பின் விஷாலின் முகநூல் பக்கத்துக்குச் சென்று அவனின் புகைப்படத்தைப் பார்த்த அவள் தனக்குள்
“டேய் இந்த மூணு வருஷத்துல எப்படி மாறிட்ட…ம்…ம்..எப்போதும் போல யூ லுக் ஸ்மார்ட்”
என்று கூறிக்கொண்டே அவனுக்கு மெஸேஜ் செய்தாள். உடனே அவனிடமிருந்து பதில் வந்தது
“ஹேய் தீ…அப்பாடா…இப்பவாவது ரிப்ளை பண்ணணும்னு தோணிச்சே….உன்கிட்ட இருந்து மெஸேஜ் வந்ததில் நான் ரொம்ப சந்தோஷமாகிட்டேன். எப்படி இருக்க? ஏன் இவ்வளவு வருஷமா பதில் போடலை? ஜூன் 12த் நைட் எங்க போன? எப்ப மறுபடியும் மெட்ஸுக்கு வந்த? ஏன் இத்தனை வருஷமா கான்ட்டாக்ட்டே இல்ல? நான் என்ன அப்படி கேட்கக்கூடாததைக் கேட்டுட்டேன். உனக்கு இஷ்ட்டமில்லைன்னா அதை நீ அப்பவே சொல்லியிருக்கலாம் இல்ல. இதுக்கெல்லாம் ஆன்சர்ஸ் தேடி தேடி சோர்ந்துப் போயிட்டேன். உன்னைப் பத்தி விசாரிக்காத பிரண்ட்ஸ் இல்ல தெரியுமா! ஆனா யாருக்குமே எதுவுமே தெரியலை. அப்படி ஏன் எங்க எல்லாரையும் ஒதிக்கிட்ட?”
“அப்பப்பா எவ்வளவு கேள்விகள் வி? எல்லாத்துக்கும் இப்படி மெஸேஜ் லேயே பதில் சொல்லணுமா இல்லை நேரில் மீட் பண்ணி சொல்லணுமா?”
“ஹேய் தீ…ஆம் ரெடி டூ மீட் யூ ரைட் அவே!! எங்க எப்போ சொல்லு.”
“ஹலோ வி நீ இருக்கற இடத்துக்கும் நான் இருக்குற இடத்துக்கும் முன்னூற்றி முப்பது கிலோமீட்டர் டிஸ்டன்ஸ் இருக்கு தெரியுமா?”
“இவ்வளவு வருஷமா இந்த முன்னூற்றி முப்பது கிலோமீட்டர்கள் தான் நம்மள பிரித்து வைச்சிருந்ததுன்னு நினைக்கும் போது அதை உடனே கடந்தாக வேண்டும்னு தோணுது தீ. ஆனா கடைசியா நான் கேள்வி பட்டதை வைத்துப் பார்த்தா நீ யூகேவுக்கு இல்ல ஜாப் கிடைச்சுப் போனதா கேள்விப்பட்டேன்! அப்புறம் எப்படி அன்ட் எப்போ மறுபடியும் பிரான்ஸ் வந்த? சரி சரி முதல்ல எப்போ அன்ட் எங்க மீட் பண்ணலாம்னு சொல்லு”
“நான் பிரான்ஸ்லேயே தான் இருக்கேன். யூகே ல ஜாப் கிடைச்சது என்னமோ உண்மை தான். அங்க போணேன் ஆனா ஆறு மாசத்துல இங்கேயே வந்துட்டேன். உனக்கு இந்த விஷயம் யார் சொன்னா? எப்படி தெரிஞ்சுகிட்ட?”
“நம்ம மனசுக்கு பிடிச்சவங்கள பத்தி நமக்கு நிச்சயம் விவரங்கள் தானா தேடி வரும் தெரியுமா…உன் மனசுக்கு தான் என்னை பிடிக்கலைன்னு நினைக்கிறேன்.”
“நோ நோ நோ….இட்ஸ் நாட் லைக் தட் வி. நான் உன்கிட்ட நிறைய சொல்ல வேண்டியிருக்கு ஸோ நேர்ல பார்ப்போம்.
கம்மிங் சாட்டர்டே மார்னிங் ஒன்பது மணிக்கு லீ கார்னர் காஃபி ஷாப் மெட்ஸுக்கு வர முடியுமா? இட்ஸ் மை ஃபேவரைட் அன்ட் லக்கி ஸ்பாட். என்ன ஓகே வா.”
“அய்யோ அதுக்கு இன்னும் மூன்று நாள் இருக்கே தீ”
“மூணு வருஷமே பறந்து போயிடுச்சு மூணு நாள் போயிடாதா வி. எனக்கு வேலையிருக்கு இல்லாட்டி இன்னைக்கே கூட நான் பாரிஸ் வந்துடுவேன்.”
“ம்…என் லக் அவ்வளவு தான். ஓகே தென் நாம நீ சொன்ன டே, டைம் அன்ட் ப்ளேஸில் மீட் பண்ணலாம்.”
“சரி நீ எதுல வருவ வி”
“நான் உனக்கு ரொம்ப பிடிச்ச ரோல்ஸ் ராய்ஸ் ப்ளாக் கார் தான் வாங்கியிருக்கேன் அதுல தான் வருவேன். என் கார் நம்பர்”
“ஹே வி…இரு இரு கார் நம்பர் எல்லாம் எனக்கெதுக்கு? உன்னை எனக்கு நல்லாவே தெரியும். கடைக்குள்ள வந்தே பார்க்கறேன்.”
“தீ நீ உன் ஃபேஸ்புக் பேஜ்ஜை அப்டேட் பண்ணவேயில்லையே…உன்னோட ரீசன்ட் பிக்சர் எதாவது அனுப்பேன்…ப்ளீஸ்”
“என்ட்ட பெரிய சேஞ்ச் ஏதும் இல்ல வி…ஸோ நேர்ல பார்த்து சொல்லு ஓகே…டில் தென் பை…யுவர் தீ”
நிழலாடிய நினைவலைகளை எண்ணிக் கொண்டே இட்ட உதட்டு சாயம் சற்று உதட்டைவிட்டு வெளியே வர அதை உடனே சரி செய்துக் கொண்டு காரிலிருந்து இறங்கி காரை லாக் செய்து நேராக காஃபி ஷாப்பை நோக்கி நடக்கலானாள் சக்தி.
தொடர்வாள்….
அத்தியாயம் 1: இயந்திர தோழன்
சிறிய முள் ஐந்தில் வெகுநேரமாக கால் கடுக்க நின்றிருந்ததில் எப்படாப்பா ஆறு நீ வருவ என்பது போலவே சோர்ந்திருக்க சோம்பல் முறித்துக் கொண்டு யாருப்பா அங்கே என்று கேட்டு சிறிய முள் ஆறில் ஒரு அடி வைக்க முன் வந்தது. அப்போது பெரிய முள் சட்டென்று பன்னிரெண்டில் போய் செட்டில் ஆனதும் ஹாய் சக்தி குட் மார்னிங் வேக் அப் இட்ஸ் சிக்ஸ் ஓ க்ளாக் என்ற குரல் முழங்கியது. அதைக் கேட்டு விருட்டென்று எழுந்து வேகமாக தனது படுக்கையின் வலது புறம் ஒரு சிறிய பொம்மைப் போல் ஸ்மார்டாக உடையணிந்து இதய வடிவிலான முகத்தில், நீல நிற கண்களுடனும், அகன்று விரிந்த மெல்லிய சிரிப்புக் கோட்டுடனும் இருந்த ரோபோவின் உலோகத் தலையில் அணிந்திருந்த விக் எனப்படும் ஒட்டவைக்கப்பட்ட பொய் தலைமுடியின் உச்சியில் தனது உள்ளங்கையை வைத்து
“தாங்க்யூ ப்ளூ. குட் மார்னிங். ஜஸ்ட் டூ மோர் மினிட்ஸ் டா.”
“நோ தீ நோ நோ. எழுந்துக்கோ. தீ…தீ… ஓ ஹோ!! மறுபடியும் தூங்கிட்டியா?”
என்று நேரத்தை கணக்கிடத் துவங்கியது சக்தியின் இயந்திர தோழனான ப்ளூ. சரியாக இரண்டு நிமிடமானதும் மீண்டும்
“தீ ….தீ…நீ சொன்ன டூ மினிட்ஸ் முடிஞ்சிடுச்சு…கம் ஆன் எழுந்துக்கோ. இன்னைக்கு உன்னோட மிக மிக முக்கியமான நாள். மறந்துட்டியா?”
“என்ன நாள்? என் பிறந்த நாளா ப்ளூ?”
“அப்படின்னா நான் உன்னை எழுப்பறதுக்கு முன்னாடியே மிஸ்ஸர்ஸ் அன்ட் மிஸ்டர் நவீன் உன்னை எழுப்பியிருப்பாங்களே…எனக்கும் வேலை மிச்சமாகியிருக்கும்…ஸோ இன்று உன் பிறந்த நாள் இல்லை.”
“அப்போ என்ன நாள்ன்னு சொல்லேன் ப்ளூ”
“இப்படியா மறப்ப? படிப்பு வேலை ஆராய்ச்சின்னுட்டு இப்படி எல்லாத்தையும் மறந்தா எப்படி தீ!!! உன் வாழ்க்கையில் அடுத்த புதிய பிறப்பெடுக்க அடி எடுத்து வைக்கணும்னு நீ முடிவெடுத்த நாள். ஞாபகம் வந்ததா?”
“ஓ மை காட்…ஆமாம் இல்ல…நகரு நகரு…லெட் மீ கெட் ரெடி”
“அய்யோ! அம்மா! தீ…ஏன் இப்படி என்னை தள்ளிவிட்டுட்டு போற? நான் எழுந்திரிக்க எவ்வளவு நேரமாகும் தெரியுமா…எழுப்பி விட்டுட்டுப் போ தீ…தீ…தீ… போச்சுடா இனி அவ திரும்பி வரவரைக்கும் நான் இப்படியே பப்பரப்பேன்னு கிடக்க வேண்டியது தான்…ஷ் …ஷபா..”
என்று ப்ளூவை கையால் தள்ளிவிட்டு வேகமாக ஓடிச்சென்ற சக்தி நேராக பாத்ரூமிற்குள் சென்று முகத்தில் தண்ணீரை தெளித்து வேக வேகமாக பல் துலக்கி வெளியே வந்து காபி மேக்கரில் காபி பொடியைப் போட்டு அதில் தண்ணீரையும் ஊற்றி வைத்து விட்டு…இரண்டு பிரெட் துண்டுகளை டோஸ்ட்டரில் போட்டு விட்டு, மர அலமாரியிலிருந்து டவல் ஒன்றை எடுத்துக் கொண்டு மீண்டும் வேகமாக பாத்ரூம் சென்று மடமடவென குளித்து ஃப்ரெஷ் ஆகி குளியல் அங்கி என்றழைக்கப்படும் பாத்ரோப்புடன் வெளியே வந்து காபிப் போட்டுக்கொண்டு அந்த இரண்டு பிரெட் துண்டுகளை காபியுடன் உண்டு முடித்ததும் மீண்டும் அலமாரி முன் நின்று உடைகளை தடவிக்கொண்டே
“ப்ளூ வாட் டூ வேர் டுடே?”
“முதல்ல என்னை எழுப்பி விடு தீ…இப்படியே எவ்வளவு நேரம் தரையில் மல்லாந்து படுத்திருப்பேன்”
வாயிலிருந்த பிரட் துண்டை மடக்கென்று விழுங்கிக் கொண்டே ப்ளூவை தூக்கி நிறுத்திய சக்தி தன் தோழனிடம்
“உஷ்….சாரி சாரி ப்ளூ….நான் உன்னை கவனிக்கவே இல்லை…ஆம் ஸோ சாரி….ம்…வா…இப்ப ஓகே வா?”
“ம்…ம்…எவ்வளவு நாளா இந்த நாளுக்காக நீ காத்திருந்த? நான் ஞாபகப் படுத்தலைன்னா அதையும் மறந்திருப்ப...ஞாபகப்படுத்தினதுக்கு எனக்கு இந்த பதினைந்து நிமிட தண்டனையா?”
“அது தான் சாரி கேட்டுட்டேன் இல்ல…சும்மா விடு ப்ளூ. சரி சரி இப்ப நான் எதை போட்டுக்கட்டும்ன்னு சொல்லேன்”
“ஹேய் தீ! ரெண்டு நாள் முன்னாடி இன்னைக்கு போட்டுட்டு போறதுக்காக ஒரு டிரெஸ் வாங்கினியே!!! அதோ அங்க அந்த கவர்ல வச்சிருக்க பாரு…அதைப் போட்டுக்கோ. அந்த டிரெஸில் நீ பிரின்ஸஸ் மாதிரி இருப்ப தீ”
“அந்த டிரெஸ் போட்டா தான் நான் பிரின்ஸஸ் ஆ!!! ம்…ம்…”
“அம்மாடி மன்னிச்சுக்கோமா…நீ என்னைக்கும் உங்க அப்பா நவீனோட பிரின்ஸஸ் தான். நான் ஒத்துக்கறேன். இப்போ போய் ரெடி ஆகிட்டு வா. இல்லாட்டி யூ வில் மிஸ் திஸ் டே”
“ஓகே ப்ளூ. ஐ வில் பீ பேக் இன் த்ரீ மினிட்ஸ்”
“எப்பவுமே டூ மினிட்ஸ் தானே சொல்லுவ…இன்னைக்கு என்ன த்ரீ மினிட்ஸ்? சரி சரி சீக்கிரம் தயாராகி வா”
“டட்ட டைங்…ஹே ப்ளூ...கிட்சனை நான் வெளியே போனதுக்கப்புறமா சுத்தம் செய்துக்கோ…இப்போ இந்த பக்கம் திரும்பி என்னைப் பார்த்து நான் எப்படி இருக்கேன்னு சொல்லேன்”
சக்தி பிரட் உண்டு வைத்த தட்டு மற்றும் காபி அருந்திய கப் ஆகியவற்றை அடுப்படி சிங்க்கில் போட சென்றுக் கொண்டிருந்த ப்ளூ தன் தோழியின் அழைப்பைக் கேட்டு கையிலிருந்த பாத்திரங்களுடன் திரும்பி அவளைப் பார்த்ததும் தட்டையும் கப்பையும் கீழே போட்டது…பின் அவளருகே சென்று
“வாவ்!! நீ ரொம்ப ரொம்ப அழகா இருக்க தீ. எனக்கே உன்னைப் பார்த்ததும் பிரபோஸ் பண்ணணும் போல தோணுது தீ…யூ லுக் கார்சியஸ்”
“ம்….ப்ளூ டோன்ட் மேக் மீ ஃபீல் ஷை.”
“அச்சச்சோ நீ இப்படியே வெட்கப்பட்டுட்டு போனேனா காரியம் கெட்டு விடும் தீ. சரி சரி அதெல்லாம் இருக்கட்டும் நீ உங்க அப்பா அம்மாகிட்ட சொன்னியா?”
“இல்ல ப்ளூ…அவங்க எப்பவுமே எதுக்குமே என்னை தப்பா நினைச்சதுமில்லை நினைக்கவுமாட்டாங்க…என்னோட விருப்பம் தான் அவங்க விருப்பமும்ன்னு எனக்கு நல்லாவே தெரியும்…”
“பின்ன ஏன் சொல்லலை தீ? ஆங்கிலத்துல ஒண்ணு சொல்லுவாங்க இல்ல…பேரன்ட்ஸ் ஆர் பை சான்ஸ் அன்ட் பிரெண்ட்ஸ் ஆர் பை சாய்ஸ் ன்னு…அது படி பார்த்தா உனக்கு அந்த காட் அற்புதமான சான்ஸ் அன்ட் சாய்ஸ் ரெண்டுமே குடுத்திருக்காரே!!”
“நீ சொல்லறது எல்லாமே சென்ட் பர்சன்ட் கரெக்ட் தான் ப்ளூ. ஆனா நான் முதல்ல கன்பார்ம் பண்ணிட்டு அப்புறமா அவங்ககிட்ட சொல்லலாம்ன்னு இருக்கேன்.”
“அதுதான் ஏன்னு கேட்கிறேன்? நீ எல்லாத்தையுமே எந்த தயக்கமுமில்லாம உன் பேரன்ட்ஸ்கிட்ட சொல்லுவ ஆனா இதுல ஏன் தயக்கம் அன்ட் அவநம்பிக்கை?”
“இட்ஸ் ஓகே ப்ளூ. ஜஸ்ட் லீவ் இட் தேர். நான் இன்னைக்கு அவாகிட்ட சொல்லுவேனா இல்லையான்னு இப்போ நான் வெளியே போயிட்டு வந்தா தான் எனக்கே தெரியும்.”
“ம்…என்னமோ குழப்பத்துல இருக்கன்னு மட்டும் தெரியுது. ஆனா உன் பேரன்ட்ஸைப் பார்த்ததிலேந்து அன்ட் அவங்களோட பழகியதை வைத்து சொல்லறேன் உனக்கு இந்த தயக்கமே தேவையில்லை. இட்ஸ் ஓகே ஐ வில் லீவ் இட் டூ யூ. சரி கிளம்பி போயிட்டு நல்ல செய்தியோட வா.”
“ஓகே ப்ளூ. நான் போயிட்டு வர்றேன். அம்மா அப்பா காப்பாத்துங்க”
என்று ப்ளூவை இறுக்கி அணைத்து முத்தமிட்டு வெளியே சென்றாள் சக்தி.
தொடர்வாள்…
சக்தி – முன்னுரை
நவீன் மிருதுளாவின் ஒரே செல்லப் பெண்ணான சக்தி நன்குப் படித்து யூரோப்பில் பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிப்புரிந்து வருகிறாள். அவளின் அப்பா அம்மாவின் அனைத்து சங்கடங்களிலும், கஷ்டங்களிலும், சந்தோஷங்களிலும் அவர்கள் கூடவே பயணித்தவள். அவளுக்காகவே வாழ்ந்து, ஒரே பெண் என்ற காரணத்தைக் காட்டி அவளின் வளர்ச்சியை தடுத்து நிறுத்திடாமல் தங்கள் பெண்ணிற்கு அவள் விருப்பப்படியே அனைத்தையும் நடத்திக் கொடுத்த நவீன் மிருதுளாவின் மனசுப் போலவே நல்ல சிறந்தப் பெண்ணாக வலம் வந்துக் கொண்டிருப்பவள். பொறுமையே பொறுமை இழந்துப் போனாலும் துளிக்கூட பொறுமையை இழந்திடாது அதையே தனது ஆயுதமாகவும் கேடையமாகவும் உபயோகித்த தன் அம்மா மிருதுளாவைப் போல் பொறுத்தாளப் போகிறாளா? இல்லை அவள் வழி தனி வழி என்றிருக்கப் போகிறாளா? இருபத்தி ஆறு வயதான சக்தியின் வாழ்க்கையை
புரட்டிப் பார்க்க நேரம் வந்தது!
அலசி ஆராய காலம் வந்தது!
உயிருள்ள அனைத்திலும் செயல்படும் ஆற்றலைக் குறிப்பதும் சக்தி தான்!
உணர்வுகள் அனைத்திலும் பிரதிபலிப்பதும் சக்தி தான்!
வியந்து வாசிக்க வாரீர்!
விமர்சனங்களை அள்ளித் தாரீர்!
சக்தியுடன் ஓர் புதிய அரிய பயணத்தை திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மேற்கொள்ள உங்களை
பணிவன்புடன் அழைக்கும் உங்கள் சகோதரி
நா. பார்வதி
பொங்கல் வாழ்த்து
கார்த்திகை தீபம்
தீபாவளி வாழ்த்து
ஆசிரியர் தினம்
பிரதி பிம்பம்
இந்த ரதியாம்பிகாவுக்காகவே பிறந்து வளர்ந்து வந்து என்னை பிடித்திருக்கிறது என்று சொல்வதற்கு முன் தன்னைப் பிடித்திருக்கிறதா என்று எனக்கு முன்னுரிமை கொடுத்த கேசவனை திருமணம் புரிந்து என் புகுந்த வீட்டிற்கு சென்றேன். அங்கே அனைவருடனும் நன்றாக பழகினேன். அவர்கள் அனைவருடனும் உடனே ஒரு இணைப்பு ஏற்பட்டது. மகிழச்சியாக என் திருமண வாழ்க்கை சென்றுக் கொண்டிருந்தது. எங்களுக்கு இரண்டு இரட்டையர்கள் என நான்கு குழந்தைகள் இரண்டு வருட வித்தியாசத்தில் பிறந்தனர். அவர்களுக்கு ராகேஷ், ராஜேஷ், ரம்யா, ராதா என்று பெயரிட்டோம். வருடங்கள் உருண்டோடின. வசதிகள் பெருகியது. குழந்தைகள் பெரியவர்களானார்கள். ஆளுக்கொரு கார், பெரிய பங்களா, வருடத்தில் ஒரு மாதம் வெளிநாட்டுச் சுற்றுலா என்று மிகவும் அற்புதமாக சென்றுக் கொண்டிருந்தது எங்களின் வாழ்க்கை. மூத்த இரட்டையர்கள் அமெரிக்காவில் பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியான கூகுளில் பணியாற்றுகிறார்கள். இரண்டாவது பெண் இரட்டையர்கள் லண்டனில் அவரவர் விருப்பத்திற்கேற்ப ரம்யா ஆடிட்டராகவும், ராதா இன்டிப்பென்டென்ட் ம்யூசிஷியனாகவும் பணி புரிந்துக் கொண்டிருக்கிறார்கள். அவரவர் வாழ்க்கையில் அவரவர் நின்று பேசக்கூட நேரமின்றி வேகமாக ஓடிக் கொண்டிருந்தனர்.
நானும் ஆரம்பத்தில் நிற்க நேரமின்றி எனது பிள்ளைகள், அவர்களின் வகுப்பு பாடங்கள், பாட்டுக் க்ளாஸ், கராத்தே க்ளாஸ் என்று பிள்ளைகளை கொண்டு விடுதல் கூட்டிக் கொண்டு வருதல் என தினம் தினம் ஓட்டத்திலேயே எனது பாதி வாழ்க்கையும் ஓடியது. இப்போது அனைவரும் நன்றாக அவரவர் வாழ்க்கையில் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் செட்டிலாகி விட்டனர். நால்வருக்கும் திருமணமாகி நான்கு பேரப்பிள்ளைகளும் உள்ளனர். ஆறு மாதங்கள் அமெரிக்காவில் இரண்டு மகன்களுடனும் இரண்டு பேரப்பிள்ளைகளுடனும் மூன்று மாதங்கள் லண்டனில் இரண்டு மகள்களுடனும் இரண்டு பேரப்பிள்ளைகளுடனும் மூன்று மாதங்கள் இந்தியாவில் தனிக்குடித்தனம் என்று எங்கள் இருவரின் வாழ்க்கை நகர்ந்தது.
இப்படியே சென்றுக் கொண்டிருந்த எங்களது வாழ்க்கையில் எங்களுக்கு சதாபிஷேகம் செய்து அழகுப் பார்க்க வேண்டி எங்களது பிள்ளைகள் அனைவரும் இந்தியா வந்திருந்தனர். மிகவும் கோலாகலமாக நடந்தேறியது எங்களின் சதாபிஷேகம். அன்று முழுவதும் நானும் கேசவனும் எல்லையில்லா மகிழ்ச்சியில் இருந்தோம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகிவிடும் என்பதற்கு ஏற்றார் போல அன்றிரவு உறக்கத்திலேயே என்னைத் தனியாக விட்டு விட்டு இறைவனடி சேர்ந்தார் கேசவன். ஒரு நாள் முன் மகிழ்ச்சி வெள்ளத்திலிருந்த வீடு அடுத்த நாளே துக்கத்தில் ஆழ்ந்திருந்தது. வாழ்க்கை என்றால் நம்மோடு எப்போதும் இருப்பவர்கள் நம்முடனே கடைசி வரை வருவார்கள் என்ற நினைப்பில் இருந்த எனக்கு கேசவனின் மரணம் உண்மையை புரியவைத்தது. எனது வாழ்க்கையே வெருச்சோடிப் போனது போல உணர்ந்தேன். பிள்ளைகள் அவர்களின் கடமைகளை செய்து முடித்ததும் அவரவர் நாட்டிற்கு செல்ல தயாராகினர். அதற்கு முன்பு என்னையும் அவர்களுடன் வரும்படி வற்புறுத்தினர். ஆனால் நான் மறுத்துவிட்டேன். அப்போது எனது இளைய மகன் ராஜேஷ் என்னைப் பார்த்து
“அம்மா நீ தனியா இங்கே இருந்து என்ன பண்ணப் போற? பேசாம கிளம்புமா. உனக்கு யார் கூட இருக்கணுமோ அவங்க கூடவே போய் இருந்துக்கோமா. நீ எங்க இருந்தாலும் நாங்க எல்லாரும் உன்னை அடிக்கடி வந்து பார்த்துக்கறோம் மா. ப்ளீஸ் எங்க கூட கிளம்புமா”
“இல்ல கண்ணா நீங்க எல்லாரும் கிளம்பிக்கோங்கப்பா உங்களுக்கெல்லாம் வேலையிருக்கு, பிள்ளைகளுக்கு ஸ்கூல் இருக்கு. என்னை மட்டும் இங்கேயே விட்டுடங்கப்பா. நானும் கேசவனுமா சென்று வந்த இடங்களின் இந்த ஃபோட்டோஸ், அவரும் நானுமா சேகரித்து வைத்திருக்கும் இந்த க்ராக்கரிஸ், இதோ இதைப் பாரேன் இது கேசவன் ரொம்ப ஆசைப்பட்டு சுவிட்சர்லாந்தில் வாங்கின பெல், அந்த சேர் இந்தோனேசியா ல ஆர்டர் பண்ணி வாங்கினார். இப்படி இந்த வீட்டுல என் கேசவனோட நினைவுகளோட நான் இருந்துக்கறேன்ப்பா. நீங்க எல்லாரும் கிளம்பி பத்திரமா ஊருக்குப் போயிட்டு வாங்க சரியா. சாரி கண்ணா. அம்மாவால இந்த தடவை உங்களுக்கெல்லாம் உங்களுக்கு ரொம்ப பிடிச்ச சுவீட்ஸ் அன்ட் ஸ்னாக்ஸ் எல்லாம் பண்ணித்தர முடியாம போயிடிச்சி.”
என்று நான் சொன்னதும் ராகேஷ் என்னைப் இறுக்கி அணைத்துக் கொண்டு
“அம்மா என்ன பேசற நீ? இப்பவும் நீ எங்களைப் பத்தி தான் நினைக்குற… பேசுற…நாங்க உன்னை நினைச்சுத் தான் கவலைப்படறோம் மா. நீ எப்படி தனியா இங்கே…அதெல்லாம் சரி வராதுமா. எங்களால நிம்மதியா அங்க எங்க வேலையைப் பார்க்க முடியாது. புரிஞ்சுக்கோயேன் ப்ளீஸ்.”
“அதெல்லாம் எந்த கவலையும் உங்க யாருக்குமே வேண்டாம்ப்பா. நானும் கேசவனுமா இங்கே பக்கத்துல இருக்குற ஒரு ஓல்ட் ஏஜ் ஹோம் ல எங்க பெயர்களைப் பதிவு செய்து வச்சிருந்தோம். அது அவருக்கு தேவைப்படலை ஆனா எனக்குத் தேவைப்படும் போது உங்ககிட்ட எல்லாம் சொல்லிட்டு அங்க போறேன். நீங்க எனக்கு அடிக்கடி ஃபோன் போட்டுப் பேசுங்கப்பா அது போதும். அதுவுமில்லாம அதே கேம்பஸ்லயே ஒரு ஆர்ஃபனேஜ் இருக்கு அங்கே நானும் உங்க அப்பாவும் அடிக்கடிப் போய் அந்த பிஞ்சுக் குழந்தைகளுக்கு நிறைய கிஃப்ட்ஸ் மற்றும் சாப்பாடு எல்லாம் குடுத்து அவங்களோட ஒரு வாரம் டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு வந்துக்கிட்டிருந்தோம். அதை நான் தொடர்ந்து செய்யணும்னு நினைக்கிறேன். வயசாயிடுச்சு இல்லப்பா…நீங்க சொல்லறா மாதிரி எல்லாம் இனி தனியா பயணம் பண்ணறதுங்கறது கொஞ்சம் கஷ்டம் தான். புரிஞ்சுக்கோங்க.”
அப்போது குறுக்கிட்டு பேசிய என் இளைய மருமகள் விசித்ரா
“அத்தை நான் ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே”
“என்ன விசித்ரா? நான் என்னைக்கு நீ சொன்னதை தப்பா எடுத்துக்கிட்டிருக்கேன்! நீயும் என் மகள் தானே அதனால் நீ எதையுமே தப்பா கேட்டதுமில்லை இனி கேட்க போவதுமில்லைன்னு எனக்கு நல்லா தெரியும் மா. அதனால தயங்காம கேளுமா.”
“இவ்வளவு பெரிய வீடு முழுக்க பல வகையான கைவினைப் பொருட்கள், கலைப் பொருட்கள், அப்படி இப்படினு இவ்வளவு சாமான்களை சேர்த்து வச்சிருக்கீங்களே இதை எல்லாம் எப்படி துடைச்சு பார்த்துக்கப் போறீங்க?”
“அதுக்கு தான் வேலையாட்கள் இருக்காங்களேமா. அவங்க பார்த்துப்பாங்க. ம்…இருங்க உங்களுக்கு சேரவேண்டியதை தந்திடறேன்”
என்று எனது அறைக்குச் சென்று எங்கள் லாக்ரைத் திறந்தேன். அதிலிருந்த எனது நகைகளை எல்லாம் எடுத்து வந்து என் மகன்கள் மற்றும் மகள்களுக்கும் மருமகள்களுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் என பகிர்ந்துக் கொடுத்தேன். அப்போது என் மகள் ரம்யா என்னைப் பார்த்து
“அம்மா இவ்வளவு நாள் நீ லாக்ர்ல பூட்டி வைத்திருந்ததை எல்லாம் எங்க தலையில கட்டிட்ட இல்ல…இப்போ நாங்க எங்க பாங்க் லாக்ர்ல இதை எல்லாம் வைச்சுட்டு ஊருக்குப் போகப் போறோம். இதுக்காகவா விழுந்து விழுந்து இவ்வளவு நகைகளை சேர்த்த?”
“என்ன பண்ண ரம்யா நானும் பெண் தானே!”
“அம்மா இதெல்லாம் நீ ஆசை ஆசையா பார்த்துப் பார்த்து வாங்கினது. எங்களுக்கு இதெல்லாம் வேண்டாம். இந்தா நீயே வச்சுக்கோ. உனக்கு இதை வச்சு என்ன பண்ணணும்னு தோணுதோ பண்ணிக்கோ. எங்களுக்கு தரவேண்டியதனைத்தையும் நீயும் அப்பாவும் நிறையவே தந்திருக்கீங்க எங்களுக்கு அது போதும் மா. இந்தா புடி…இல்ல…குடு… நானே உன் லாக்ர்ல வச்சுட்டு வரேன். நீ மறுபடியும் மாடிப்படி ஏறி போக வேண்டாம். என்னப்பா சொல்லுறீங்க நீங்க எல்லாரும்?”
“எஸ் ரம்யா நீ சொல்லறது தான் சரி. அம்மா நீயும் அப்பாவும் எங்களுக்கு கல்வி, அன்பு, பாசம், குடும்பம்ங்கற நிரந்தரமான சொத்துக்களைக் கொடுத்திருக்கீங்க அதுவே எங்களுக்குப் போதும்.”
என்று ராகேஷும்
“ஆமாம் மா அண்ணணும் ரம்யாவும் சொல்லறது தான் சரி. எங்களுக்கு எதுவும் வேண்டாம் மா.”
என்று ராஜேஷும்
“எஸ் மா தே போத் ஆர் வெரி கரெக்ட். எனக்கும் வேண்டாம் மா. எங்களுக்கு நீ ஆரோக்கியமா, சந்தோஷமா, நிம்மதியா இருந்தாலே போதும் மா.”
என்று ராதாவும் கூறியதைக் கேட்டதும் என் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. அதைத் துடைக்க எட்டுக் கரங்கள் ஓடி வந்தன. அன்று என் மனம் நிறைந்திருந்தது. ஏனெனில் எங்கள் பிள்ளைகளை நாங்கள் சரியாக வளர்த்துள்ளோம் என்று பல தருணங்களில் உணர்ந்திருந்தாலும் அன்று சற்று பெருமிதமாகவும் இருந்ததால் மனம் பூரித்தது. ஆனால் அதைப் பகிர்ந்துக் கொள்ள கேசவனில்லையே என்ற வருத்தம் என் மனதைப் பிசைந்தது. பிள்ளைகள் அவரவர் ஊர்களுக்குச் சென்றனர். நான் ஒரு ஆறு மாதங்கள் அங்கேயே என் கேசவனின் நினைவுகளுடனும், பேரன் பேத்திகளுடன் வீடியோ கால்களும் என்று சுற்றி சுற்றி வந்தேன். ஊருக்கு செல்வதற்கு முன் ரம்யா என்னிடம் சொன்னது என் மனதின் ஓரத்தில் இருந்திருக்கிறது போலும். ஓர் நாள் அந்த குழந்தைகள் காப்பகத்திற்கு சென்றேன். அங்கே ஒரு குழந்தை என்னிடம் வந்து
“பாட்டி நீங்க உங்க வீட்டுல நிறைய தோடு வச்சிருக்கீங்களா?”
“ஏம்மா கேக்கற?”
“இல்ல பாட்டி நீங்க ஒவ்வொரு தடவை வரும் போதும் ஒவ்வொரு கலர்ல தோடு போட்டுட்டு வர்றீங்களே அது தான் கேட்டேன்”
அப்போது என் மனதின் ஓரத்திலிருந்த
என் ரம்யாவின் பேச்சு அன்று என் மனதில் மீண்டும் உதிக்கச் செய்தது. எதற்காக நான் இவ்வளவு பொருட்களை சேர்த்து வைத்தேன்? யாருக்காக இவைகளை வாங்கி இப்படி அழகாக அடுக்கி வைத்தேன்? இவைகளுக்காக எவ்வளவு செலவு செய்துள்ளேன்? இதற்கு பதிலாக இன்னும் அந்த ஆசிரமத்திலிருக்கும் ஒரு இருபது குழந்தைகளைப் படிக்க வைத்திருக்கலாமே! என்ற எண்ணங்கள் என்னை அன்று முழுவதும் தூங்க விடாது படுத்தி எடுத்ததில் நான் ஒரு முடிவுக்கு வந்தேன்.
மறுநாள் எழுந்ததும் என் பிள்ளைகளை கான்பரன்ஸ் காலில் வரச்சொல்லி அதைச் சொன்னேன். அதைக் கேட்டதும் நால்வரும்
“அம்மா ஏன்மா? இங்க வாயேன் மா.”
“அம்மா நீ ஏன் அந்த ஓல்டேஜ் ஹோம்ல போய் இருக்கணும்? நாங்க எல்லாரும் உனக்கு இருக்கோமே மா”
“அம்மா திஸ் இஸ் டூ மச். எதுக்காக இப்போ நீ இப்படி ஒரு டிஸிஷன் எடுத்திருக்க?”
“அம்மா உன்னைத் தாங்கறதுக்கு நாங்க நாலு பேர் காத்திருக்கும் போது ஏன் மா நீ முதியோர் இல்லம் போறேன்னு சொல்லற?”
என்று நாலவரும் என்னிடம் மாறி மாறி கேள்விக் கேட்டனர். அவர்கள் அனைவரும் பேசி முடிக்கும் வரை காத்திருந்த பின்
“எல்லாரும் பேசி முடிச்சாச்சா? இப்போ நான் பேசலாமா? உங்க எல்லாரோட தவிப்பும் அக்கறையும் எனக்கு நல்லா புரியுது. ஆனால் ப்ராக்டிக்கலா யோசிச்சுப் பாருங்க. நீங்க எல்லாருமே வேலைக்குப் போறீங்க. உங்க பசங்க ஸ்கூல், கிளாஸ்ன்னு போறாங்க. நீங்க உங்களுக்குள்ளேயே உட்கார்ந்து பேச நேரமில்லாமல் ஓடிக்கிட்டிருக்கீங்க… இதுல நான் வந்து அங்க உட்கார்ந்துக்கிட்டு என்ன பண்ணப்போறேன்? அதுவுமில்லாம நீங்களும் சற்று நின்னு நிதானமா யோசிங்க…எதுக்காக? எதை சாதிக்க இப்படி குடும்பம் பிள்ளைகள் எல்லாரையும் விட்டுட்டு இப்படி ஓடிக்கிட்டிருக்கீங்கன்னு…பசங்க வளர்ந்துட்டா அப்புறம் அவங்க …அவங்க வாழ்க்கை, அவங்க ஃப்ரெண்ட்ஸ் ன்னு அவங்க உலகமே வேற ஒண்ணா மாறிடும். நீங்க அவங்களோட இருக்க வேண்டிய தருணங்களில் இப்படி ஓடிக்கிட்டே இருந்தீங்கன்னா அப்புறம் உங்களுக்குன்னு நேரம் கிடைக்கும் போது அவங்க உங்ககிட்ட இருக்க மாட்டாங்க. அதுனால முடிஞ்ச வரை உங்களோட இந்த ஓட்டத்துக்கு இடையில உங்க பசங்களோடவும் டைம் ஸ்பென்ட் பண்ணுங்க. அது தான் உங்க வயசான காலத்துல உங்க கூடவே வரப்போற பசுமையான நினைவுகளாயிருக்கும். அது தான் உங்களுக்கு அந்த வயதில் நீங்கள் நகர்ந்துச் செல்ல டானிக்காக இருக்கும். வாழ்க்கையை ஓடிப்பார்க்க நினைக்காதீங்க கொஞ்சம் நிதானித்துக் கொண்டு நடந்து தான் பாருங்களேன் அப்போ அதிலிருக்கும் அமைதி, அழகு, நிம்மதி, சந்தோஷம் எல்லாம் புரிஞ்சுக்கலாம். நானும் உங்க அப்பாவும் அப்படித் தான் வாழ்ந்திருக்கிறோம் அதுனால தான் இப்போ அந்த பழைய நினைவுகள் என்னை நகர்த்திக்கிட்டிருக்கு. அதுவே எனக்குப் போதும் கண்ணுகளா. அதுவுமில்லாம அங்க இருக்குற பெத்தவங்க இல்லாத அந்த குழந்தைகளுக்கு படிப்பு, கைவேலை, எல்லாம் கத்துக் கொடுத்து அவங்களையும் உங்களைப் போல சிறந்த பிள்ளைகளா உருவாக்கணும்னு எனக்கு ஆசையா இருக்கு. நீங்க ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட்டோ இல்ல பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டோ எது புக் பண்ணினாலும் இனி என்னால அவ்வளவு தூரம் பிரயாணம், இந்த நேரம் மாற்றம் எல்லாத்துக்கும் அட்ஜஸ்ட் செய்துக்கொள்ள முடியாதுப்பா...என் உடலும் அதுக்கு ஒத்துழைக்காது. இப்போ உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு நம்புறேன். உங்களுக்கு என்னைப் பார்க்க வேண்டுமா என்னுடன் இருக்க வேண்டுமா வாங்க சந்தோஷமா இருக்கலாம். என்ன சொல்லுறீங்க?”
கொஞ்ச நேரம் அமைதி நிலவியது. ராகேஷ் பேசி அந்த நிசப்தத்தை உடைத்தெறிந்தான்
“அம்மா நீ சொல்லறது எல்லாமே கரெக்ட் தான் மா. சரி நீ அங்கேயே போய் இருந்துக்கோ. நாங்க மாறி மாறி வந்து உன்னைப் பார்த்துக்கறோம். அப்படி நீ அங்கப் போனேன்னா இப்ப இருக்குற வீடு அதிலுள்ள பொருட்கள் எல்லாத்தையும் என்ன பண்ணப்போற?”
“ம்…இது நல்ல கேள்வி. அதை அப்படியே வைக்கறேன். நீங்க வந்து ஏதாவது பண்ணிக்கோங்க.”
“இல்லமா…எனக்கு அதுக்கெல்லாம் டைமில்ல…”
“எங்களுக்கும் நேரமில்லை மா.”
“அப்படின்னா நான் இதை எல்லாம் வித்துடவா?”
“அம்மா அதெல்லாம் நீயும் அப்பாவுமா வாங்கின சொத்துக்கள் அதனால் அதை என்னவேண்டுமானாலும் பண்ண உன்னைத் தவிர வேறு யாருக்குமா ரைட்ஸ் இருக்கு! சொல்லு.”
“அப்போ சரி சொல்லிட்டீங்க இல்ல இனி நான் பார்த்துக்கறேன்.”
“பத்திரமா இருமா. நான் ஒரு மூணு மாசம் கழிச்சு வந்து உன்னைப் பார்க்கறேன்.”
“அம்மா நாங்க தீபாவளிக்கு வர்றோம்”
“சரி கண்ணுகளா. உங்களால எப்ப முடியுதோ அப்போ வாங்க நோ ப்ராப்ளம். சரி நான் அப்போ இந்த மாசமே அங்கே ஷிப்ட் பண்ணிடறேன் சரியா.”
“ம்….சரி மா. உன் விருப்பத்துக்கு நாங்க குறுக்கே நிற்க மாட்டோம். கோ அஹெட் ரதியா மா”
“நன்றி குழந்தைகளா. சரி சரி இப்போ என் பேரப்பிள்ளைகளைப் பேச சொல்லுங்க”
என்றதும் அவர்கள் வந்தனர். அவர்களுடன் பேசிவிட்டு ஃபோனை வைத்ததும் அந்த ஹோமுக்குக் கால் செய்து விவரங்களைச் சொன்னேன். அவர்களும் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றார்கள். அடுத்த நாளே ரியல் எஸ்டேட் காரர் ஒரு வரை வரவழைத்து பேசினேன். அவரும் எங்கள் வீட்டை விற்றுத் தர ஏற்பாடு செய்வதாக கூறினார். எங்களுக்கு இன்னுமொரு சிறிய வீடு இருந்தது. அதில் நானும் கேசவனுமாக சேகரித்து வைத்திருந்த பொருட்களில் முக்கியமான சில வற்றை கொண்டுச் சென்று ஆட்களை வைத்து அடுக்கி ஒரு ம்யூசியம் போல வைத்தேன். வீடு விற்கப்பட்டது. எனக்குப் பிடித்த ஓரிரண்டு நகைகளைத் தவிர மீதமிருந்த அனைத்து நகைகளையும் விற்றேன்.
பணம் என் வங்கியில் போடப்பட்டது. அவ்வளவு பொருட்களின் சொந்தக்காரி, மூன்று பீரோ முழுக்க அடுக்கப்பட்டிருந்த உடைகளுக்கு உரிமைக்காரி, நகைகள் நிரம்பிய லாக்கருக்கு எஜமானி… அன்று… கையில் வெரும் இரண்டு சிறியப் பெட்டிகளுடன் அந்த ஆசிரமத்திற்குச் சென்றேன்.
அங்கேயிருந்த அந்த பிஞ்சுக் குழந்தைகள் என்னைப் பாரத்ததும் ஓடி வந்தன நானும் அவர்களை என் இரு கரங்களில் வாரிக் கட்டி அணைத்துக் கொண்டேன். அந்த ஆசிரமத்தில் நானும் ஒருத்தியானேன். என்னிடம் இருந்த பணம் நகை பொருட்கள் எதுவுமே என் பிள்ளைகளுக்கு தேவையில்லை ஏனெனில் அவர்களுக்கு அவை அனைத்தையும் தாங்களே வாங்கிக்கொள்ளும் அளவிற்கு ஆளாக்கியுள்ளோம். ஆகையால் என்னிடமிருந்த பணத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்து ஒன்றை மட்டும் வங்கியில் போட்டேன். இரண்டாவது பங்கை என் பேரப்பிள்ளைகள் பெயரில் எஃப் டியில் போட்டேன். மூன்றாவது பங்கை எங்களுக்காக அத்துனை வருடங்கள் வேலைப்பார்த்தவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தேன். நான்காவது பங்கை வைத்து ஆசிரமத்தை விரிவுப்படுத்தினேன். வசதிகளைப் பெருக்கிக் கொடுத்தேன். அங்கிருந்த பிள்ளைகள் படிப்பதற்காக பண்ணிரெண்டாம் வகுப்பு வரையிலான பள்ளிக்கூடத்தைக் கட்டினேன். அங்கேயிருந்த சிறிய முதலுதவி கூடத்தை அனைவருக்கும் பயன்படும்படியான க்ளினிக்காக மாற்றியமைத்தேன். வங்கியில் போட்டிருந்த எனது பங்கிலிருந்து வந்த வட்டியே எனது மாத செலவுக்கு போதுமானதாக இருந்தது. அதை வைத்து அங்கிருந்த முதியவர்கள், பிள்ளைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள் ஆகிய தினங்களை விமர்சையாக இல்லாவிட்டாலும் நல்ல உணவு, புதிய உடை அளித்து மகிழ்ச்சியாக கொண்டாடினோம். என் பிள்ளைகளும் அவ்வப்போது வந்து என்னுடன் இருந்து அவர்களால் ஆன உதவிகளை அந்த இடத்திற்கும் அங்கிருந்தவர்களுக்கும் செய்து வந்தனர். அவர்கள் எங்கள் பெயரிலே ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து அதில் பணத்தைப் போட்டு அதன் மூலம் அந்த இடத்தையும், மருத்துவமனையையும், பள்ளிக்கூடத்தையும் பராமரித்து வந்தனர். பேரப்பிள்ளைகளும் வந்து அங்கிருந்த பிள்ளைகளுடன் ஓடியாடி விளையாடிச் சென்றனர்.
சம்பாத்தியம் என்பது நாம் வாழ்வதற்கு முக்கியமானது தான். ஆனால் அதற்கும் எல்லையை வகுத்துக் கொண்டோமேயானால் நமது வாழ்க்கை அழகானதாக அமைதியானதாக நிம்மதியானதாக இருக்கும். ஓட வேண்டிய வயதில் தான் ஓட முடியுமென்றெண்ணி ஓட்டத்தைத் தவிர வேறெதுவுமே காணதவாறு நமது வாழ்க்கைக்கு நாமே திரையிட்டுக்கொள்ளாது நின்று நிதானமாக ஓடியும், நடந்தும், ஓய்வெடுத்தும் நமது வாழ்க்கையைக் கடந்துச் சென்றால்…வாழ்க்கை நமக்கு பல அற்புதமான அனுபவங்களை, பாடங்களை, பரிசுகளை, நட்புக்களை நமக்களிப்பதில் தவறுவதில்லை. அவற்றை நாமும் வேகமாக கடந்திடாது ரசித்து வாழ முடியும்.
அந்த ஆசிரமத்தின் பள்ளியில் படித்த பிள்ளைகள் பெரிய பெரிய கம்பெனிகளில் பணிப்புரிந்தனர். அவர்கள் அங்கிருந்து வெளியேச் சென்றாலும் அந்த ட்ரஸ்ட்டுக்கு பணம் அனுப்புவதையும், மாதம் ஒரு முறையாவது வந்து அங்கிருந்த அனைவருடனும் நேரம் செலவிடுவதையும் தவறாது செய்து வந்தனர். அந்த கடவுள் என் மூலம் விதைத்த ஒரு சிறிய விதையானது இன்று பெரிய வானுயர விருட்சமாக ஓங்கி வளர்ந்து கம்பீரமாக நிற்கின்றது.
ஒவ்வொரு நாள் இரவும் அன்று நடந்த அனைத்து விஷயங்களையும் எனது டைரியில் குறிப்பெழுதி வைத்து கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு உறங்கச் செல்வேன். அன்றிரவும் குறிப்பெழுதி வைத்துவிட்டு கடவுளுக்கு நன்றிச் சொல்லிவிட்டு மனநிறைவோடு படுத்துறங்கினேன்.
பல வருடங்களாக என்னைப் பிரிந்திருந்த கேசவன் வந்தார் தன் கரங்களை நீட்டி என் கரம் பிடிக்க காத்திருப்பதாக சொன்னார். நானும் என் கரம் நீட்டி அவர் கரங்களைப் பற்றிக் கொண்டேன். இருவரும் வானில் புதிய பறவைகளைப் போல வட்டமடித்துப் பறந்துக் கொண்டே வெகு தூரம் பயணிக்க ஆரம்பித்தோம். அந்தப் பயணத்தின் போது கேசவன் என்னிடம்
“ரதியா நீ நல்ல காரியம் செய்துள்ளாய். நீ இதுவரை செய்துள்ள நல்ல விஷயங்கள் தான்… எந்த பாவப் பொதிளையும் சுமக்காது, எந்த வித வலி வேதனையுமின்றி உனக்கு இவ்வாறான ஒரு இனிய பயணத்தை அளித்துள்ளது.”
என்றார். அதைக்கேட்டதும் நான் இன்னும் மகிழ்ச்சியானேன். என் மறைவினால் நான் பெற்றெடுத்த பிள்ளைகள் மட்டுமின்றி நான் வளர்த்தப் பிள்ளைகளும் என் ஆசிரமத்து நண்பர்களும் என அனைத்து நல்லுள்ளங்களும் எங்களுக்காக வடித்த ஒவ்வொரு சொட்டுக் கண்ணீருக்கும் நாங்கள் இருவரும் நன்றி சொல்லிக்கொண்டே இருப்போம்.
எங்கள் பெற்றவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறோம்… எதைக் கொண்டு வந்தோம் நாம் எடுத்துச் செல்வதற்கு. வெறும் ஆறடி இடமிருந்தாலே போதுமென்று. அது அந்தக் காலம். இப்போது அந்த ஆறடியும் சொந்தமில்லை நமக்கு. மின்சார தகனம் செய்து சில மணிநேரத்தில் எல்லாம் ஒரு பிடி சாம்லுடன் திரும்பிச் சென்று விடுகிறார்கள் நம் சொந்தங்கள்.
நாம் இந்த உலகை விட்டுப் பிரிந்து வேறுலகம் செல்லும் போது நாம் எதையுமே எடுத்துச் செல்ல முடியாது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து உள்ளது. நாம் வாழும் காலத்தில் ஓடோடி சேர்த்துவைக்கும் பொருட்களையும், பொன்னையும், சொந்தங்களையும், நட்புக்களையும் தான் எடுத்துச் செல்ல முடியாது. ஆனால் நாமும் நம்முடன் எடுத்துச் செல்ல சிலவற்றை அதாவது கண்ணுக்கு தெரியாத, உருவமில்லாத சிலவற்றை சேர்த்து வைத்தோமே என்றால் அவை நாம் இவ்வுலகிலிருந்து பிரிந்து செல்லும் போது நம் கரம் பிடித்து கேசவன் என்னிடம் சொன்னது போல எந்த வித வலி வேதனையுமின்றி ஒரு இனிமையான பயணத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும். அது தான் நாம் வாழும் காலத்தில் சம்பாதித்து வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான சொத்தாகும். அது வேறெதுவுமில்லை புண்ணியம் தான் அது.
நாங்கள் சேர்த்து வைத்த பொன், பொருள், வீடு, வாசல் எங்களுடைய இந்த இனிய பயணத்திற்கு சிறிய வகையில் உதவியிருந்தாலும் பெரியதாக உதவியவை எவை தெரியுமா?… நாங்கள் எங்கள் கடமைகளை சரிவரச் செய்தது, எங்கள் பிள்ளைகளுக்குத் தேவையானதனைத்தையும் செய்து முடித்தது, இந்த சமுகத்திற்கு நல்ல மனிதர்களை உருவாக்கிக் கொடுத்தது, அனைவருக்கும் நல்லதையே நினைத்தது, எங்களால் முடிந்த வரை அனைத்து நல்ல காரியங்களையும் செய்தது ஆகியவையாகும். அவைகளை செய்யும் போது அவைகள் அனைத்தும் விண்ணுலகில் எங்களைக் காக்கப் போகும் துவார பாலகர்கள் என்றறிந்திடாது செய்தோம். கேசவன் எனக்கு முன்னே அறிந்துக் கொண்டுவிட்டார் ஆனால் நான் அன்று தான் அதை அறிந்துக் கொண்டேன்.
பணம், பொன், பொருள், பதவி அகியவை மண்ணுலகத்தில் நாம் மேற்கொள்ளும் பயணங்களுக்குத் தான் உதவியாக இருக்கும்.
நாம் அவைகளை வைத்து செய்யும் புண்ணியக் காரியங்கள் தான் நமது விண்ணுலகப் பயணத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
எங்களால் அந்த புண்ணிய பணியை விட மனமில்லாததால் நானும் கேசவனும் இணைந்து அந்த இடத்திலேயே அவர்களுக்கு பாதுக்காப்பாகவும், அவ்வப்போது எங்களாலான… ஆனால் அவர்களின் கண்களுக்குத் தெரியாதவாறு சில சிறிய உதவிகளையும் செய்து வந்ததில் மரணமில்லா மகிழ்ச்சியைப் பெற்று வந்தோம்.
உயிருடன் இருந்தாலும்,
உயிரற்றுப் போனாலும்,
நம்முடனே வருவதும்,
நம்மால் செய்ய முடிந்ததும்
புண்ணியக் காரியங்களே!
பணம், பொன், பொருள்களுக்கு எல்லை நம் மரணம்
புண்ணியக் காரியங்களுக்கு எல்லை என்பது இன்னும் வகுக்கப்படவில்லை!
முடிந்த வரை புண்ணியக் காரியங்களில்
ஈடுபடுங்கள்
வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்.
மண்ணுலகின் பிரதி பிம்பமே விண்ணுலகம். மண்ணுலகில் எதை விதைக்கிறீர்களோ அது தான் விண்ணுலகில் உங்களுக்கு நன்மைத் தரக்கூடிய விருட்சமாகும். ஆகையால் நல்லதே எண்ணுங்கள், நல்லவைகளையே செய்திடுங்கள், இரு உலகிலும் நன்மையையே பெற்றிடுங்கள்.
எங்களுக்குக் கிடைத்த இந்த இரு உலகப் பயணத்திலும் நாங்கள் நன்றாகவே பயணித்தோம், பயணித்துக் கொண்டும் இருக்கிறோம் என்ற மன நிறைவுடன்.
உங்கள்
ரதியாம்பிகா கேசவன்.
🙏நன்றி🙏
🇮🇳சுதந்திரம்🇮🇳
சுதந்திரம் வேண்டும்
தூய்மையான காற்றை சுவாசிப்பதற்கு
சுதந்திரம் வேண்டும்
சுத்தமான குடிநீர் அருந்துவதற்கு
சுதந்திரம் வேண்டும்
நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு
சுதந்திரம் வேண்டும்
பிள்ளைகள் ஓடியாடி விளையாடுவதற்கு
சுதந்திரம் வேண்டும்
கலப்படமில்லாத உணவை உண்பதற்கு
சுதந்திரம் வேண்டும்
கட்டணமில்லாது கடவுளை தரிசனம் செய்வதற்கு
சுதந்திரம் வேண்டும்
அனைத்து இடங்களுக்கும் ஈபாஸ் இன்றி சென்று வருவதற்கு
சுதந்திரம் வேண்டும்
முக கவசமின்றி பவனிவருவதற்கு
சுதந்திரம் வேண்டும்
சுதந்திரம் வேண்டும்
என்று வெள்ளையரிடமிருந்து பெற்று தந்த சுதந்திரத்தை
நம்மவர்களுக்கே தாரை வார்த்துக் கொடுத்து
பெற்ற சுதந்திரத்தை நாமே தொலைத்துவிட்டு
இன்றும் சுதந்திரம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றோம்!
நாம் தோன்றிய நாள் முதலே
அனைத்தையும் நாம் கேட்காமலே அள்ளி தந்தாள் இயற்கை அன்னை
கேட்காது கிடைத்தால் மதிப்பிருக்காது என்பதை உணர்த்தவே
கிடைத்ததை தொலைத்துவிட்டு இப்படி கேட்டுக் கொண்டிருக்கின்றோமோ?
சுதந்திரம் வேண்டும்
சுதந்திரம் வேண்டும்
என்று கேட்டுக்கொண்டிருக்கும் நமக்கு
அவை அனைத்தும் நம் கையிலே என்பது புரியாது போனது ஏனோ!
கேட்பதை நிறுத்துவோம்
பெற்றதை போற்றுவோம்
சுத்தம், சுகாதாரம், தனி மனித ஒழுக்கத்தை ஓங்கச் செய்வோம்
நல்வாழ்வு வாழ்வோம்
நாடு நலம்பெற செய்வோம்
ஜெய்ஹிந்த்
அனைவருக்கும் எனது மனமார்ந்த சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
-பார்வதி நாராயணன்
பரிசும் பாராட்டும்
படிப்பு, போட்டி, விளையாட்டு இவை அனைத்திற்கும் இதையே பின்பற்றுவோம்.
பனித்துளி அட்டிகை
தேங்காய் பூ
Treat & Tweet : Masala Dosai
ஒரு நாள் போதுமா!
நாம் இன்று நாமாக இருப்பதற்கும்
இரண்டு கால்களால் நடப்பதற்கும்
இரண்டு கைகளால் உழைப்பதற்கும்
இரண்டு கண்களால் இவ்வுலகைக் கண்டு ரசிப்பதற்கும்
இரண்டு செவிகளால் நல்லவைகளை கேட்டு அறிந்துக் கொள்வதற்கும்
வாய்கொண்டு நல்லவைகளை பேசுவதற்கும்
இந்த பூமியில் சுதந்திரமாக சுவாசிப்பதற்கும்
நம்மை ஈன்ற தாயும் தந்தையுமே காரணம்
நம்மை பத்து மாதங்கள் தன் கருவில் சுமப்பவர் தாய்
நம்மை வாழ்நாள் முழுவதும் உள்ளத்தில் சுமப்பவர் தந்தை
தாய் தன் உதிரத்தைப் பாலாக தந்து பசியாற்றுவார்
தந்தை தன் உதிரத்தை உழைப்பாக தந்து பசியாற்றுவார்
தாயையும் சேயையும் இணைப்பது தொப்புள் கொடி
தந்தையையும் சேயையும் இணைப்பது பாச கொடி
வார்த்தை ஜாலங்கள் இல்லாவிட்டாலும்
கண்டிப்பு நிறைந்திருந்தாலும்
அனைத்திலும் பிரதிப்பலிப்பது அவரின் அன்பே
தம்பி உடையான் படைக்கு அஞ்சான்
தந்தை உடையார் எதற்கும் அஞ்சார்
கணக்கில்லா அன்பை
அளிக்கொடுப்பவர் நம் தந்தை
அதில் இல்லை ஏதும் விந்தை
வாழ்க்கை என்னும் பந்தை
விளையாடக் கற்றுக் கொடுப்பவர் நம் தந்தை
தந்தையைக் கண்டு வளர்த்துக் கொள்வோம் நல்ல சிந்தை
விந்தை உலகில் கைக்கொடுப்பது நல்ல சிந்தை
நமக்களிப்பது நமக்கு கிடைப்பதற்கரிய
பொக்கிஷமான நம் தந்தை !
இறைவன் ஒரு முறை தாயாக வந்து உதவியதால் தாயுமானவரானார்
தினம் தினம் தாயாகவும் நம் தந்தை வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்
தாயுள்ளத்தோடு தாயுமானவராக நம் வாழ்வில் வலம் வரும் அனைத்து தந்தைகளையும்
தந்தை பாசத்தோடு தந்தையுமானவராக நம் வாழ்வில் வலம் வரும் அனைத்து தாய்மார்களையும்
கொண்டாடிட வருடத்தில் ஒரு நாளை தேர்ந்தெடுப்பதை விட
ஒவ்வொரு நாளும் கொண்டாடினோமேயானால்
நமது வாழ்வு ஆரோகணத்திலும் கவலைகள் துன்பங்கள் அனைத்தும் அவரோகணத்திலும் இசைந்து
வாழ்க்கையை இன்னிசையாக ஒலிக்கச் செய்திடும்.
மௌனம்
Treat & Tweet -1
ஆயிரம் கருவிழிகள் கொண்ட என்னை
வெட்ட நினைக்கும் உன்னை
பார்த்து சிரிக்கும் என்னை
கூறுபோட்ட உன்னை
கோபப்பட்ட என்னை
தட்டிலிட்டு மற்றவர்களுக்க பகிர்ந்தளித்த உன்னை
கண்டதும் குருடான என்னை
வாயிலிட்டதும் கரைந்துப் போனேன்
உன் புகழ் அறியச் செய்தேன்
வெண்ணிலா சாக்கோ சிப் கேக் என்றானேன்!
From Paru’s Kitchen
உபத்திரவம்

மாற்றம்
அன்பினால் நேரும் மாற்றம்
என்றும் நிரந்தரமானது
பயத்தினால் நேரும் மாற்றம்
என்றும் நிலையற்றது
கல்லானாலும் கடவுள்
கடவுளை வெறும் கல்லென நினைத்து
மனக்குறைகளை தீர்த்து வைக்காது
சொன்னாலும் காது கேளாது என்றெண்ணி
கண்டவர்களிடம் சொல்லி
அவர்களை கடவுளென்று போற்றி
அனைத்தையும் இழந்தப் பின்
கடவுள் அல்ல காட்டுமிராண்டி என்றுணர்ந்ததும்
கூண்டில் இட தவிக்கும் ஒவ்வொருவரும்
இனியாவது கல்லானாலும் கடவுள்
இருக்கிறார் என்றுணர்ந்து
நல்வாழ்வு வாழ்ந்திட
மனிதம் மேம்பட
எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வோம்.
வசனத்தை மாத்துங்கப்பா

பெண்ணின் அப்பா: வாங்கோ வாங்கோ உட்காருங்கோ. லச்சு மாப்பிள்ளை ஆத்துக்காரா எல்லாரும் வந்துட்டா பாரு.
மாப்பிள்ளையின் அப்பா: நமஸ்காரம் சுப்பிரமணியன். நான் பையனோட அப்பா கேசவன் இவ தான் என் ஆத்துக்காரி ராஜம் பையனோட அம்மா.
பெண்ணின் அப்பா: உங்க ஆத்துக்காரின்னா பையனோட அம்மா தானே…ஹா!ஹா!ஹா!
மாப்பிள்ளையின் அப்பா: அவசியம் அப்படி இருக்கணுமா என்ன? ஹா! ஹா! ஹா! பயந்துட்டேளோ!!
பெண்ணின் அப்பா: லச்சு நம்ம பொண்ணு சரசுவை அழைச்சுண்டு வந்துடு மா.
மாப்பிள்ளையின் அத்தை: முன்னெல்லாம் பொண்ணைப் பார்த்தா மூக்கும் முழியுமா நல்லா லட்சணமா இருக்கான்னு சொல்லுவா…ஆனா இப்போ என்னன்னு சொல்லறது? முகத்தில் பாதியும் மாஸ்க் மறைச்சுண்டிருக்கே!!!!
மாப்பிள்ளையின் அப்பா: பொண்ணு மாஸ்க்கும் முழியுமா லட்சணமா இருக்கான்னு சொல்லிண்டா போறது. காலத்துக்கு ஏத்தா மாதிரி டைலாக்கை மாத்திக்கோங்கோளேன்.. ஹா! ஹா! ஹா!
– பார்வதி நாராயணன்
காலத்தின் கோலம்

மாப்பிள்ளை வீட்டார் : எங்களுக்கு உங்க பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. எங்க புள்ளைக்கும் பிடிச்சிருக்கு. நாம மத்ததைப் பேசலாமா?
பெண்ணின் அப்பா: எங்களுக்கு இருப்பது ஒரு புள்ள ஒரு பொண்ணு அதுனால எங்க பொண்ணுக்கு எல்லாம் நிறைவா செய்வோம். நகையா ஒரு….
மாப்பிள்ளை வீட்டார்: இருங்கோ இருங்கோ அதெல்லாம் உங்க இஷ்டம் அதைப் பத்தி எல்லாம் எங்களுக்கு எந்த வித எதிர்பார்ப்பும் இல்லை. ஆனா எங்க சைடுலேந்து ஒரே ஒரு எதிர்பார்ப்பு தான் அதை நீங்க செய்தா போதும்.
பெண் வீட்டார்: என்னது அது தயங்காம சொல்லுங்கோ.
மாப்பிள்ளை வீட்டார்: உங்க பொண்ணுக்கு லைஃப் லாங் தேவையான மாஸ்க், க்ளௌஸ், சானிடைசர், வருஷா வருஷம் கொரோனா தடுப்பூசி, அவா டிராவல் பண்ணும்போதெல்லாம் எடுக்கற பி.சி.ஆர் டெஸ்ட், ஆக்ஸிஜன் சிலிண்டர்ஸ், அப்படியே தொற்று ஏற்பட்டால் அதற்கான ஆஸ்பத்திரி, பெட், மற்றும் இதற செலவுகள்…..அதை எல்லாம் நீங்களே பார்த்துண்டா போதும். ஏன்னா எங்களால ஆஸ்பத்திரிக்கும் பெட்டுக்கும் அலைய முடியாது பாருங்கோ!!! என்ன சொல்லறேங்கள்?
பெண் வீட்டார்: ஆங்!!!
– பார்வதி நாராயணன்
அம்மா
அவனிதனிலே நாம் பவனி வர காரணமானவள்
அன்பு, அக்கறை, அரவணைப்பின் பெட்டகமானவள்
தன்னலமற்ற தகழியாக குடும்பத்தை ஒளிரவைப்பவள்
பொன்னும், பொருளும் அள்ளிக் கொடுத்தாலும் கிள்ளிக்கூட எடுக்க எண்ணாதவள்
ஈன்ற பிள்ளைகளின் வளர்ச்சி, ஆரோக்கியம், மகிழ்ச்சிக்காக மட்டுமே நித்தம் நித்தம் ஆண்டவனை வேண்டும் தெய்வமானவள்
பிள்ளைகள் என்றும் பற்றிக்கொள்ளும் நம்பிக்கை கரமானவள்
மூன்று எழுத்தில் மூவுலகத்தையும் சுவாசிக்க செய்பவள்
அம்மா
அனைவருக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்
❤️நன்றி❤️
பொங்கல் திருநாள் வாழ்த்து
நேர் நிமிர்ந்த மரம்

நேர் நிமிர்ந்த மரமே முதலில் வெட்டிச் சாய்க்கப் படுகிறது
அது நேராக வளர்ந்து நின்றிருப்பதனால் மட்டுமே வெட்டப்படுகிறது
அது சாய்ந்து வீழ்ந்தாலும் பலர் அமரும் நாற்காலியாகும்
வெட்டுபவருக்கு என்றும் உபயோகமாக மட்டுமே இருக்கும்
தன்னை வெட்டிவிடுவார்கள் என்று ஒருநாளும் அது தன்னை வளைத்துக் கொள்வதில்லை
அப்படிப் பட்ட மரங்கள் எண்ணிக்கையில் குறைவானதாகவே இருக்கும்
நேர் நிமிர்ந்த மரங்களைப் போல தான் மனிதர்களில் சிலர்
நேர்மை, நியாயம், நாணயம், உண்மை, சட்டம், சுய ஒழுக்கம் என்று வாழ்கிறார்கள்
அவர்கள் தங்களின் சுய விருப்பங்களுக்காகவோ / அடுத்தவரிடமிருந்து காரியத்தை நடத்திக் கொள்வதற்காகவோ எங்கும் எதற்கும் தங்களின் நல்ல குணங்களையோ / பழக்கங்களையோ / பாரம்பரியத்தையோ சிறிதும் மாற்றிக் கொள்ளாமல் வாழ்கிறார்கள்
அவர்களுக்கு ஒத்து வரவில்லை என்றால் ஒதுங்கிவிடுகிறார்கள்
வளைந்து நெளிந்து வளர்ந்த மரங்கள் நேர் நிமிர்ந்திருக்கும் மரத்தில் முட்டி, மோதி, அதன் மீதே சாய்ந்தும் கூட வளர்ந்திருக்கும்
சூழ்நிலைக்கேற்ப, இடத்துக்கேற்ப, ஆட்களுக்கு ஏற்றார் போல வளைந்து, நெளிந்து வாழ்பவர்கள் நன்னெறியோடு நேராக வாழ்க்கை நடத்துபவர்களை வளைந்த மரத்தைப் போல முட்டுவார்கள், மோதுவார்கள், எல்லா வழிகளிலும் தாக்குவார்கள்
வளைந்து நெளிந்து வளரும் மரங்கள் பல நேரங்களில் பலரை தடுக்கி விழச்செய்யும், கண்களைக் குத்தும், வழியை மறைக்கும், மற்ற மரங்களை வளரவிடாது தடுக்கும்
அதேப் போல் எல்லாவற்றிக்கும் வளைந்து, நெளிந்து, குனிந்து, கும்பிடுப் போட்டு வாழ்க்கை நடத்துபவர்கள், விரல் விட்டு எண்ணக் கூடிய நேர்மையான மனிதர்களை பல நேரங்களில் பல சோதனைகளுக்கு உள்ளாக்குகிறார்கள்
அவற்றை எல்லாம் பொறுமையாக, நிதானம் தவறாமல் கையாளுபவர்கள், வெட்டுப் பட்டும் நேர்மையாகவே இருப்பவர்கள் என்றாவது ஒரு நாள் மீண்டும் துளிர்ப்பர், மீண்டும் நேர்மையானவராகத் தான் வளர்வர்
நேர்மையின்றி, வேண்டிய இடங்களில் வேண்டியோருக்கு துதிப் பாடி வளைந்து கொடுத்தால் தான் வெட்டுப்படுவதிலிருந்து சற்று தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் பலரால் திணிக்கப் படுகிறது
எத்துனை முறை வெட்டுப் பட்டாலும் நாம் நமது நேர்மையிலிருந்தும், நேர்மறை எண்ணங்களிலிருந்தும் நல்லொழுக்கங்களிலிருந்தும் ஒருபோதும் வளைந்து, நெளிந்து மாற வேண்டிய அவசியமில்லை
வளைந்தும், நெளிந்தும், அடுத்த மரத்தில் சாய்ந்தும் மட்டுமே வளரக்கூடிய மரங்களின் மத்தியில் நெடுநெடுவென நேர் நிமிர்ந்த மரமாகவே நாம் உயர்ந்து நிற்போம்
வெட்டுப் பட்டால் நாற்காலிகள் ஆவோம் இல்லையேல் நமது விதைகள் நாளைய சிறந்த தலைமுறையினர்களாகி, நேர் நிமிர்ந்த மரங்களாக வளர்ந்து நமது குடும்பத்திலும் சமுதாயத்திலும் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். அதைப் பார்த்து வளைந்து நெளிந்து கிடக்கும் மரங்களும் நேர் நிமிர்ந்த மரங்களாகட்டும்.
❤️நன்றி❤️
2020 – 2021

இரண்டாயிரத்து இருபது ஆரம்பம் ஜோரு
பிப்ரவரியில் ஆரம்பித்தது அக்கப் போரு
மார்ச்சில் செய்திகள் எல்லாம் தாறு மாறு
ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தோம் பாரு
சொந்தங்கள் பல நம்மை விட்டுப் பிரிந்தன
பந்தங்கள் அனைத்தும் தூரத்திலேயே இருந்தன
அன்பு, பாசம், அக்கறை, வேலை, படிப்பு என்று எல்லாமும் நிகழ்நிலையில் நடந்தன
பலர் வேலையை இழந்தனர்
சிலர் வேலையை உருவாக்கிக் கொண்டனர்
குடும்பம், பிள்ளைகள் என நேரத்தை உபயோகமாக செலவழித்தனர்
முகக் கவசம் முக்கிய அணிகலனாக அணியத் துவங்கினர்
தொலைந்த சுத்தம் சுகாதாரம் உயிர்தெழச் செய்தனர்
நிலையில்லாதது வாழ்க்கை என்பதை உணர்ந்தனர்
எதுவும் நிரந்தரமில்லை என்பதைப் புரிந்துக் கொண்டனர்
பணம், பதவி, கௌரவத்தை விட உயிர் தான் முக்கியம் என்று எண்ணத் துவங்கினர்
மறைந்துக் கொண்டிருந்த மனிதம் மீண்டும் துளிர்க்க காரணமாயினர்
உயிர், குடும்பம், பிள்ளைகள், அன்பு, பாசம், அக்கறை, மனிதநேயம் ஆகியவைகளை விதைத்து இரண்டாயிரத்து இருபத்தி ஒன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம்
நடக்கபோவதெல்லாம் நல்லவையாகவே நடக்கும் என்ற நம்பிக்கையோடு பயணிப்போம்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
உயரப்பற

இரட்டைவால் குருவி / கரிக்குருவி எனப்படும் குருவி மட்டுமே கழுகின் மீது அமர்ந்து பயணிக்கும் தைரியம் உள்ள ஒரே பறவை இனம். இவை பயமறியா பறவை இனம். இது தன்னை விடப்பெரிய பறவைகளைக் கூட தாக்கும் குணம் கொண்டது.
ஆம் இந்த வகைக் பறவை கழுகின் மீது பயணிப்பதோட நின்றிடாது. அது கழுகின் கழுத்தில் அமர்ந்து சவாரி செய்வதோடு கழுகின் கழுத்தை தனது சிறிய கூர்மையான அலகால் கொத்தி கொத்தி புண்ணாக்குமாம். அது தான் அதன் பொழுதுப் போக்கு போல(சில மனிதர்களைப் போல்). சிரமப்படாமல் தன் சிறகுகளுக்கு அதிக வேலைக் கொடுக்காமல் இலவச வான்வழிப் பயணத்துடன் கொத்திக் கொத்தி விளையாடும் விளையாட்டும் கிடைத்தால் கசக்குமா கரிக்குருவிக்கு?
தன் மீது சொகுசு பயணம் மேற்கொள்வதோடு தன்னை ரணமாக்கும் அந்த கரிக்குருவியை கழுகார் ஒன்றுமே செய்ய மாட்டார். அந்த சின்னக் குருவியுடன் சண்டைப் போட்டு தன் நேரத்தையோ தனது சக்தியையோ வீணாக்க அவருக்கு விருப்பமில்லை. அதனால் என்ன செய்வார் தெரியுமா? தனது நீளமான சிறகுகளை வான் முழுவதுமாக விரித்து மெல்ல மெல்ல உயரத்தை அதிகரித்து வானில் உயர்ந்துப் பறப்பாராம். அது தானே அவர் வலிமையே!!
ஆம் மற்றப் பறவைகளைக் காட்டிலும் அதிக உயரம் பறக்கக் கூடியது கழுகு மட்டுமே. கழுகு தனது தனித்திரனால் உயர உயர பறந்து, அதிகமான உயரத்தை எட்டுவதிலேயே அதன் கவனம் இருக்குமாம். சாதாரணமாக மழைக்கு காற்று வீசினாலே மரக்கிளைகளில் ஒதுங்கும் பறவை இனத்தில் நமது கழுகார் புயலிலும் ஜம்பமாக மேகத்தைக் கிழித்துக் கொண்டு பறக்கவே ஆசைப்படும் தனித்துவம் வாய்ந்த பறவை இனமாகும். மற்றப் பறவைகள் அனைத்தும் கூட்டமாகவே பறக்கும். ஆனால் கழுகள் மட்டுமே தனித்தனியாக பறக்கக்கூடியவை.
இவ்வளவு தனித்துவம் வாய்ந்த கழுகின் கழுத்தைக் கொத்திக் கொண்டிருக்கும் குருவியிடம் சண்டையிடாமல் அது தனது உயரத்தை உயர்த்திக் கொண்டே சென்று குருவியையும் கூடவே கூட்டிச் செல்ல ஒரு கட்டத்தில் கரிக்குருவியால் கழுகின் உயரத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் பிராணவாயு குறைவினால் கழுகின் மீதிருந்து வீழ்ந்திடுமாம்.
இந்த சிறிய கரிக்குருவி மற்றும் கழுகிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய இருக்கிறது. கழுகைப் போல் தன்னம்பிக்கை உடையவர்கள் வாழ்வின் சவால்களை அவர்களாகவே சந்திப்பார்கள் கூட்டம் சேர்க்க மாட்டார்கள். பலவீனமானவர்களே கூட்டத்துடன் அதிகம் காணப்படுவார்கள். மன ஒருமைப்பாடு மற்றும் துல்லியமான இலக்கு இவையே கழுகுகள் தங்கள் இரையை எவ்வளவு தூரத்திலிருந்தாலும் அதை அடையும் சக்தியைக் அதற்கு கொடுக்கிறது.
அது போல நாமும் நமது இலக்கை நோக்கி, மன ஒருமைப்பாட்டுடன் உயர்ந்துக் கொண்டே சென்றோமேயானால் கரிக்குருவியைப் போல நமக்கு இடையூறுகள் செய்ய பலர் வந்தாலும் அவர்கள் எல்லாம் நமது உயரத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் காணாமல் போயிவிடுவர். எல்லா வாதங்களுக்கும் நாம் பிரதிவாதம் வைக்க வேண்டிய அவசியமில்லை. எல்லா விமர்சகர்களுக்கும் நாம் பதிலளிக்க வேண்டிய அவசியமுமில்லை. நாம் நமது குணத்தை, தன்னபிக்கையை, தரத்தை எல்லாவகையிலும் உயர்த்திக் கொள்வோம்.
எதிரிகள், நமக்கு தீங்கிழைக்கக் காத்திருப்பவர்கள், கரிக்குருவி கழுகைக் கொத்துவதுப் போல நமக்குப் பின்னாலிருந்து என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும், செய்துக் கொள்ளட்டும் அதைப் பற்றி சிந்தித்து கவலைக் கொள்ளல் வேண்டாம், அப்படிப் பட்டவர்கள் இருக்க வேண்டிய இடம் அதுதான் என்று விட்டுத்தள்வோம்.
நாம் நமது பயணத்தை மட்டும் கவனத்துடன் மேற்கொண்டு உயரப்பறப்போம்.
❤️நன்றி❤️
புதிய தசாப்தம்

மார்கழி

மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது மார்கழி
ஆலகால விஷத்தை உண்டு அனைவரையும் நீலகண்டன் காப்பாற்றியது மார்கழியில்
பாவை விரதமிருந்து ஆண்டாள் பெருமாளையே மணாளனாகக் கொண்டது மார்கழியில்
மகாபாரத யுத்தம் நடைப்பெற்றது மார்கழியில்
கிருஷ்ணன் கோவர்தனகிரி மலையை குடையாக பிடித்து கோகுலத்தை பெரு மழையிலிருந்து காப்பாற்றியது மார்கழியில்
சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது மார்கழியில்
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பது மார்கழியில்
வீட்டில் மகள் அல்லது மகன் திருமணத்திற்கு தயாராக இருக்கிறார்கள் என்று வாசல் கோலத்தின் நடுவே பூசணிப் பூ வைத்து தெரிவிக்கப் பட்டது மார்கழியில்
தைப் பிறந்தால் நல்ல வழிப் பிறப்பதற்கு, தெய்வீக மாதமான மார்கழியில் அனைத்திற்கும் ஆதாரமான ஆண்டவனை வழிப்பட்டுத் துதிப் பாடி, அதன் நலன்களை தை மாதம் முதல் காண்போம்.
🙏நன்றி🙏
ஆற்றல் (energy)

நமது நண்பர்கள் அல்லது சொந்தக் காரர்கள் சிலர் வீடுகளுக்குச் சென்றால் பல மணி நேரம் அமர்ந்து பேசிக்கொண்டே இருக்கத் தோன்றும். வெகு நேரம் கழித்து கடிகாரத்தைப் பார்த்து “ஓ நேரம் இவ்வளவு ஆகிவிட்டதா” என்று கடிகாரம் பார்த்தால் தான் உணர்வோம். கிளம்புகிறோம் என்று சொல்ல ஆரம்பித்ததிலிருந்து சுமார் ஒரு மணி நேரம் கழித்தும் கிளம்பாமல் பேசிக்கொண்டே இருப்போம். அப்படிப் பட்ட வீடுகளுக்கு எப்போது போக நினைத்தாலும் உடனே கிளம்பி விடுவோம். எந்த வித சாக்கு போக்கும் சொல்லத் தோணாது. எப்போது மறுபடியும் அவர்கள் வீட்டுக்கு போகலாம் என்று உள்ளம் எதிர்ப்பார்த்திருக்கும்.
அதே நாம் சில நண்பர் அல்லது சொந்தக்காரர் வீடுகளுக்கு செல்வதற்கே மிகவும் யோசிப்போம். அவர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டுமென்று இருந்தாலும் அடுத்தவாரம் பார்ப்போம் இல்லையெனில் அடுத்த மாதம் போய்க் கொள்வோம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்போம். அப்படியே சென்றாலும் அவர்கள் வீட்டிற்குள் சென்றதுமே நம் மனதில் அமைதி குறைந்ததுப் போலவும் ஒரு வகையான சங்கடமும் நம்மை ஆட்கொள்ளும். ஏதோ இனம் புரியாத ஒரு பதற்றம் அங்கிருந்து கிளம்பும் வரை இருந்துக் கொண்டே இருக்கும். சற்று நேரம் அமர்ந்து பேசியதுமே கிளம்பிவிடுவோம். அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் நமக்குள் ஒரு வகையான மனநிம்மதியும், ஏதோ ஒரு பிடியிலிருந்து விடுப்பட்டது போல தோன்றும்.
இது நம்முள் பெரும்பாலானோர் அனுபவித்த உணர்வு என்றாலும் அதை எத்தனைப் பேர் நினைத்து அதன் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்துள்ளீர்கள்? ஏன் அப்படி நம்முள் ஒரு மாற்றம் ஏற்படுகிறது என்பதைப் பற்றியது தான் இந்த கட்டுரை. ஏனெனில் இது மாதிரியான நேர்மறை / எதிர்மறை உணர்வுகளை உணர்ந்ததாக பலர் சொல்லிக் கேட்டுள்ளேன். நானும் பல முறை உணர்ந்திருக்கிறேன்.
இந்தப் பதிவு ஒருவர் வீட்டில் நமக்கு அளிக்கப்படும் உபசரிப்பினாலோ அல்லது அவர்கள் நமக்கு அளிக்கும் மரியாதை / மதிப்பினாலோ எழும் மாற்றங்களைப் பற்றியது அல்ல. அந்த வீட்டினில் உள்ள ஆற்றல் /சக்தி எனப்படும் எனர்ஜி தான் எல்லாவற்றிற்கும் காரணமாகும்.
நாம் ஒருவர் வீட்டுக்கு செல்கிறோம் அவர்கள் நம்மை ராஜ உபசாரம் செய்கிறார்கள், நம் மீது அதீத மரியாதை மற்றும் மதிப்புடன் நம்மை நடத்துகிறார்கள் என்றாலும் நமக்கு ஒரு வகையான பதற்றம், சங்கடம், மனதில் அமைதியின்மை போன்ற உணர்வுகள் இருந்துக் கொண்டே இருக்கும். அதே சிலர் வீடுகளில் வெறும் தண்ணீர் குடித்தாலும் மனம் நிம்மதியடையும், மனதில் ஒரு வகையான மகிழ்ச்சிப் பொங்கும். இன்னும் சற்று நேரம் பேசிவிட்டுப் போவோம் என்று நம்மை தூண்டிலிட்டு அமர வைக்கும். இவை நேர்மாறாகவும் நடக்கலாம். அவை அனைத்தும் நாம் சந்திக்கும் நபரின் வீட்டினுள் உள்ள ஆற்றல்/சக்தி செய்யும் வேலையே!
அது என்ன ஆற்றல்? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நம் வீட்டுப் பெரியவர்கள் அவர்கள் வீட்டை அவ்வளவு சீக்கிரம் விற்கவோ அல்லது இடித்து புதுபிக்கவோ விடமாட்டார்கள். அதற்கு காரணம் பெரும்பாலும் அது “அவர் கணவர்/மனைவி/அப்பா/ அம்மா வாழ்ந்த வீடு, அதிர்ஷ்டமான வீடு. ராசியான வீடு” என்று பலர் பலவகையாக கூறுவர். ஆனால் அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகம் உள்ளது என்பது தான் உண்மையான காரணமாகும். ஆம் நமக்கு எப்படி நேர்மறை /எதிர்மறை எண்ணங்கள் /சிந்தனைகள் உள்ளதோ அதே போல நாம் வசிக்கும் வீட்டிற்கும் நேர்மறை/எதிர்மறை ஆற்றல் எனப்படும் பாஸிடிவ்/நெகடிவ் எனர்ஜி உள்ளது.
அதைப் பற்றி பலர் பல விதமாக எழுதியும், காணொளியாகவும் பதிவிட்டுள்ளனர். அவைகளை இணையதளத்தில் பறக்கவிட்டு, தங்கள் வீட்டில் இது சரியில்லையோ, நம்ம வீட்டில் இது இருப்பதால் / இல்லாததால் தான் அது நடந்ததோ என்று எண்ணும் அளவிற்கு மக்களை கொண்டுச் சென்றுவிட்டனர். அதற்கு வாஸ்து சரி செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என்றும், வீட்டில் இதை வாங்கி இந்த இடத்தில் வைத்தால், அதை வாங்கி அந்த இடத்தில் வைத்தால் சரியாகிவிடும் என்றும் பலர் கூறி மக்களைக் குழப்பம் என்னும் குட்டையில் தள்ளிவிட்டு கலங்கச் செய்து அதில் மீன் பிடிக்கப் பார்க்கிறார்கள் பல வழிகளில்.
கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் எல்லா திசைகளிலும் இருப்பார் நமது பிக் பாஸ் வீட்டினுள் உள்ள காமெராக்களைப் போல எங்கும் நிறைந்திருப்பார். அவரிடமிருந்து எவருமே ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்றிருக்கும் அவரையே நம்மக்கள் ஒரு குறிப்பிட்ட திசையை பார்த்து தான் இருக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். ஏன்? எதற்கு?. ஒரு சிலர் கிழக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு என்கிறார்கள், வட இந்தியாவில் மேற்குப் பார்த்து வைக்க வேண்டும் என்கிறார்கள். இதில் நான் படித்த ஒரு கட்டுரையை பற்றி உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன் நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்.
அந்த கட்டுரையில் ஒரு வீட்டின் பூஜை அறையை வடகிழக்கு / தென்கிழக்கு/ கிழக்கு/வடக்கு மூலைகளில் வைத்தால் தான் நமக்கு நல்லது நடக்கும் என்று கட்டுரையின் துவக்கத்தில் எழுதியிருந்தது. அதே கட்டுரையின் முடிவில் நான்கு திசைகளான கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று எல்லா திசைகளிலும் பூஜை அறையை அமைக்கலாம் என்றும் பதிவிடப்பட்டிருந்தது. கட்டுரையை முழுவதும் படிக்காமல் முதல் மூன்று பத்திகளை மட்டும் படித்தால் நாம் நமது வீட்டின் பூஜை அறையை மாற்றி வைக்க வேண்டும் என்னும் அளவிற்கு நம் மனம் எண்ணத் துவங்கிவிடும், அப்படி இருந்தது அந்த கட்டுரையின் ஆரம்பத்திலிருக்கும் மூன்று, நான்கு பத்திகளும். இது நம் வீட்டின் எல்லா அறைகளுக்கும் நமது வீடு முழுவதுக்குமாக நாம் யோசிக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயமாகும். இங்கே ஒரு உதாரணத்திற்காக பூஜை அறையை குறிப்பிட்டுள்ளேன். இவை எல்லாம் சொந்த வீடு வாங்கிய அல்லது இருக்கும் நபர்களுக்கு சரி, ஆனால் வாடகை வீட்டிலிருப்பவர்கள் எப்படி மாற்றி அமைக்க முடியும்? அப்போ அவர்கள் வீடுகளில் எப்பொழுதும் பிரச்சினை என்றோ அல்லது எதிர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும் என்றோ எடுத்துக்கொள்ள முடியுமா என்ன?
அவரவர் பின்பற்றும் முறைகள் அவரவர் தனிப்பட்ட விருப்பமே. அதில் எந்த வித கருத்தையோ/எண்ணத்தையோ/ அபிப்பிராயத்தையோ/பின்பற்றும் முறையையோ தவறென்றோ இல்லை குற்றமென்றோ கூற நமக்கு உரிமையில்லை. ஆனால் எளிதாக சில மாற்றங்களை நம்முள் நாம் கொண்டுவந்தாலே போதுமானது என்று சொன்னால்!! அனைவரும் சற்று சிந்திக்கத் துவங்குவார்கள் இல்லையா? அது போல, சில மிகவும் எளிமையான விஷயங்கள், மாற்றங்கள் நமது வீட்டினில் உள்ள எதிர்மறை ஆற்றல் எனப்படும் நெகடிவ் எனர்ஜியை துறத்தியடிக்க வேண்டியவையாகும். அது சொந்த வீடானாலும் பொருந்தும் வாடகை வீடானாலும் பொருந்தும்.
நல்ல வெளிச்சம் மற்றும் காற்று ஆகிய இரண்டும் நம் வீட்டினுள் நிறைந்திருக்கும் படிப் பார்த்துக் கொள்ள வேண்டும். இதுவே மிக முக்கியமான தேவைகளில் ஒன்று.
மற்ற எல்லாவற்றையும் விட நம் வீட்டிலிருக்கும் எதிர்மறை ஆற்றலை துறத்த மிக மிக முக்கியமான அவசியமான ஒன்று என்னவென்றால் அது நாம் தான். நமது வீடு நம்முடைய பிரதிபலிப்பே ஆகும். வீட்டில் வசதி இருக்கிறதோ இல்லையோ வாஸ்து படி அமைந்திருக்கிறதோ இல்லையோ அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு சில மாதங்கள் நமது வீட்டில் ( சொந்த வீடோ/ வாடகை வீடோ)
நாம் நல்ல எண்ணங்களை மட்டுமே எண்ணுவோம்.
வீட்டிலுள்ள அனைவரிடமும் அன்பாகவும் அமைதியாக பேசுவோம்.
நம் வீட்டிலுள்ள ஒரு நபர் சோர்வடைந்தாலும் மற்ற அனைவருமாக அந்த நபருக்கு தோள் கொடுத்து உற்சாகத்தை பரிசளிப்போம்.
கோபம், வெறுப்பு, போட்டி, பொறாமை, பொய், ஏமாற்றுதல், எரிச்சல், வன்மம் போன்றவைகளை நம்மிலிருந்து தூக்கி எறிந்துவிட்டு
அமைதியை நமதாக்குவோம்.
வெறுப்பு மற்றும் வன்மத்தை வெல்ல அதை மறப்பதே ஆகும்.
மற்றவர்களை நமக்கு போட்டியாக எண்ணாமல் நம்மோடு நாமே போட்டியிட்டு நம்மை நாமே மேம்படுத்திக் கொள்ளவேண்டும்.
பொறாமைக்கு ஆதார காரணம் அதீத ஆசை மற்றும் போட்டி. போட்டியைப் பற்றி புரிதல் ஆகிவிட்டது. இல்லையா? ஆசை பட வேண்டும். ஆனால் அது எதற்கு? ஏன்? என்று ஆராய்தலும் வேண்டும். ஆசை நியாயமானதாகவும் இருத்தல் வேண்டும். ஆரோக்கியமான ஆசைகளை, பொறாமையை தூண்டாத ஆசைகளை வளர்த்துக் கொள்ளல் வேண்டும்.
நம்மால் முடிந்தால், நம்மால் முடிந்ததை, நாலு பேருக்கோ, நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ உதவுவோம். எந்த வகை நல்லுதவி ஆனாலும் செய்வோம். அப்படி முடியாத பட்சத்தில் எவருக்கும் உபதிரவம் செய்யாமல் இருப்போம். எவரும் நமக்கு தாழ்ந்தவர்களும் இல்லை, நம்மைவிட உயர்ந்தவர்களும் இல்லை அனைவரையும் ஒரே மாதிரியாக எண்ணுவோம், அதுபடியே நடத்துவோம்.
நமது வீட்டிற்குள் இருக்கும் நேர்மறை / எதிர்மறை ஆற்றல் நம்முள் இருந்து வந்ததே என்பதை உணர்ந்தால் போதும். அதற்கு என்ன செய்ய வேண்டும் / கூடாது என்று நமக்கே புரிந்து விடும். “ஆடத் தெரியாதவர் மேடைக் கோணல்” என்றார் என்பது போல நம்மை நாம் மாற்றிக் கொள்ளாமல் வீட்டைக் குறை சொல்வானேன்!!!
நல்ல சிந்தனைகள், எண்ணங்கள், உண்மை, நம்பிக்கை, பொறுமை, மனநிறைவு ஆகியவைகளை நம் இல்லம் முழுவதும் விதைத்து வாழ்ந்துப் பாருங்களேன் எந்த திசை வீடாக இருந்தாலும் எல்லாப் பக்கங்களிலிருந்தும் நேர்மறை ஆற்றலே நமக்கும் நம் வீட்டுக்கு வருவோருக்கும் மனமுழுவதும் நிறைந்து நம் இல்லம் இனிமையான அனுபவத்தையே தரும் சொர்க்கமாகும்.
❤️நன்றி❤️
இ4
இரண்டாயிரத்து இருபது – இனிமையான இடைவேளை

“ராதா அன்ட் ராஜு ரெண்டு பேரும் வாங்கோ இங்க….டைம் பண்ணண்டு ஆக போறது. நான் விளக்கேத்தப் போறேன்”
“வந்துட்டேன் மா”
“உன் அப்பா எங்கடி? அவரையும் வரச்சொல்லு”
“அம்மா நீ கத்தினது நிச்சயம் அப்பாக்கும் கேட்டிருக்கும் வருவா சித்த வெயிட் பண்ணு”
“நாழி ஆகறது சீக்கிரம் வாங்கோளேன்”
“வந்துட்டேன் ராஜம் வந்துட்டேன்”
“நன்னா ரெண்டு பேரும் வேண்டிக்கோங்கோ. இந்த வருஷம் நல்லபடியா எல்லாத்தையும் நடத்திக்குடுத்ததுக்கு நன்றி ஆண்டவா இனி வரப்போற இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டையும் நல்லபடியா அமைச்சுக் குடும்மா தாயேன்னுட்டு வேண்டிக்கோங்கோ”
“அம்மா அதுதான் நீயே சொல்லிட்டயே அதுவே அம்பாளுக்கு நன்னா கேட்டிருக்கும்.”
“எதுக்கெடுத்தாலும் ஏட்டிக்கு போட்டியா பேசுடி பேசு”
“அம்மா புது வருஷம் மா ஞாபகம் வச்சுக்கோ”
“ஓ!!! கடவுளே கடவுளே எல்லாரையும் ஷேமமா வச்சுக்கோப்பா”
“அம்மா உன் பூஜை ஆயாச்சு இப்போ கேக் கட் பண்ணலாமா?”
“ஓகே!! நீ ரெடி பண்ணு இதோ வந்துட்டேன்.”
“அப்பா வா நம்ம போவோம் அம்மா வரட்டும்”
“விஷ் யூ போத் அ ஹாப்பி 2020 மை டியர் அப்பா அன்ட் அம்மா”
“தாங்க்ஸ் மா. ஹாப்பி நியூ இயர் டா ராதா கண்ணா. ஹாப்பி நியூ இயர் மை டியர் வைஃப்”
“நன்றி ராதா அன்ட் மை நாதா. என் கணவருக்கும் மகளுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்”
“வாரே வா!!! கலக்கல் அம்மா”
என்று கேக்கை ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டும், வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டதன் பின்னர் ராதா அவள் நண்பர்களுடனும், ராஜு அவர் நண்பர்களுடனும் ஃபோனில் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டிருந்தனர். ராஜம் மீதமிருந்த அந்த கேக்கை ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு அவளது தோழிகளுக்கு வாழ்த்துக்களை அனுப்பிவிட்டு, விளக்கை சாந்தப் படுத்திய பின் உறங்கச் சென்றாள்.
மறுநாள் முதல் அவரவர் வேலைகள் மற்றும் நண்பர்கள் என முழ்கினர். ராஜம் வழக்கம் போல சமையல் அடுப்படி என்றிருந்தாள்.
ஜனவரி ஐந்தாம் தேதி ராதா அவளது இரண்டாம் வருட இஞ்சினியரிங் படிப்பின் இரண்டாவது செமஸ்டரை முடிக்க கனடா நாட்டுக்குச் செல்ல ஆயத்தம் ஆனாள். ராஜம் மகளுக்கு வேண்டிய புளிக்காய்ச்சல், பருப்புப் பொடி, ஊறுகாய்கள் என தயார் செய்வதில் மும்முரமானாள். அனைத்தும் பேக் செய்து இரண்டு பெட்டிகளை காரில் ஏற்றி ஏர்போர்ட் சென்றார்கள். அங்கே ராதா தன் பெற்றோரை கட்டி அணைத்து “பை” சொல்லிவிட்டு இமிக்ரேஷனுக்கு உள்ளே செல்லவதற்கு முன் சற்று நின்று திரும்பி தன் அம்மாவையும் அப்பாவையும் பார்த்து கை அசைத்தாள். ராஜம் தன்னைச் சுற்றி ஆட்கள் நிற்கிறார்கள் என்ற உணர்வே இல்லாமல் அவள் கண்ணிலிருந்து ராதா மறையும் வரை அதே இடத்தைப் பார்த்தபடி நின்று அழுதாள். உடனே ராஜு தன் மனைவி தோளில் கையைப் போட்டு தட்டிக் கொடுக்க சுயநினைவுக்கு வந்தாள் ராஜம். பின் இருவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். இது கடந்த இரண்டு வருடங்களாக ராதா ஒவ்வொரு முறை விடுமுறைக்கு வந்து செல்லும்போதும் நடைப் பெரும் நிகழ்வே. ஆனால் இந்த முறை ராஜத்தின் அழுகை ஒரு நாள் ஆகியும் நிற்கவில்லை. அதை பார்த்த ராஜு..
“என்ன ராஜம் நம்ம ராதா படிக்க தானே போயிருக்கா!! ஏன் இப்படி ஒவ்வொரு தடவையும் அழுற? அதுவும் இந்த தடவை ஜாஸாத்தி வருத்தப் படுற!!!”
“ஆமாம் ராஜு ஏதோ சொல்ல முடியாத கவலை என் மனச போட்டு அழுத்தறது. ஏதோ தப்பு நடக்கப் போறா மாதிரியே இருக்கு. இருங்கோ நான் அந்த அம்பாளுக்கு வேண்டிண்டு காசு முடிஞ்சு வச்சுட்டு வந்துடறேன்”
என்று கூறிவிட்டு அம்பாள் படத்திற்கு முன் நின்று மனதார வேண்டிக்கொண்டு காசை முடிந்து வைத்து விட்டு சற்று நேரம் அமைதியாக அமர்ந்தாள்.
மறுநாள் ராதா நல்லபடியாக அவளது கல்லூரி ஹாஸ்டலுக்கு சென்று விட்டாள் என அவளிடமிருந்து ஃபோன் வந்த பிறகு சற்று ஆசுவாசமானாள் ராஜம்.
ராஜுவிற்கு ஆபிஸ் வேலைக்காக மார்ச் மாதம் கனடா போகவேண்டி வந்தது அப்போது அவருடன் ராஜமும் சேர்ந்து போய் அவர்கள் மகளுடன் வசந்த கால விடுமுறை ஒரு வாரத்தை செலவழிக்க முடிவு செய்து எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள்.
பிப்பரவரி மாதம் இறுதியில் கொரோனா என்ற கொடிய நச்சுயிரி உலகெங்கும் பரவி வருவதாகவும் அதனால் பல லட்சம் மக்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் வெளிவந்துக் கொண்டே இருந்தன.
அந்த நச்சுயிரி பரவாமல் இருப்பதற்காக பல நாடுகள் கதவடைத்து வருவதாக செய்திகள் வெளியாகத் துவங்கியதும் ராஜு அவர்களின் கனடா பயணத்தை தவிர்த்து ஆக வேண்டும் என்று முடிவு செய்து அனைத்து ஏற்பாடுகளையும் ரத்து செய்தார்.
ராதாவிற்கு திரும்பி ராஜு, ராஜம் வசிக்கும் நாட்டிற்கு வருவதற்கு ஏப்ரல் முப்பதாம் தேதிக்கு டிக்கெட் புக் செய்திருந்தார்கள். இந்த செய்திகளைப் பார்த்ததும்… மார்ச் பண்ணிரெண்டாம் தேதி ராதாவுடன் பேசியபோது டிக்கெட்டை அவள் பரீட்சை முடியும் நாளான ஏப்ரல் இருபத்தி ஐந்தாம் தேதிக்கு மாற்றி சீக்கிரம் வீட்டிற்கு வரும்படி சொன்னார்கள்.
ஆனால் ராதாவுக்கு ஏதோ ரிசர்ச் சம்மந்தமான வேலை இருபத்தி எட்டாம் தேதி இருப்பதால் அதுவரை அங்கு இருந்தாக வேண்டும் என்று சொல்லி முப்பதாம் தேதி டிக்கெட்டை இருப்பத்தி எட்டாம் தேதிக்கு மாற்ற முயற்சித்தாள். அது செய்ய முடியாது ஏனென்றால் நிறைய டிக்கெட் ரத்துக்களும் மாற்றங்களும் உலகெங்கும் செய்யப்படுவதால் கையிலிருக்கும் டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு புதிதாக தான் டிக்கெட் பதிவு செய்ய இயலும் என்று ராதா டிக்கெட் பதிவு செய்த வலைத்தளம் குறிப்பிட வேறு வழியின்றி முப்பதாம் தேதி பயணச்சீட்டை ரத்து செய்து புதிதாக இருப்பத்தி எட்டாம் தேதிக்கு அவள் அங்கே கேம்பஸில் வேலைப் பார்த்து சம்பாதித்த பணத்தை வைத்து மீண்டும் பதிவு செய்தாள். ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டின் காசு இரண்டு வாரங்களில் அக்கௌன்டில் வந்து சேரும் என்று அச்சிடப்பட்டிருந்தது அந்த வலைத்தளத்தில்.
பதிமூன்றாம் தேதி செய்தித்தாள் படித்ததும் அதிர்ச்சி அடைந்தார்கள் ராஜுவும் ராஜமும். அவர்கள் வசிக்கும் நாட்டில் மார்ச் பதினேழாம் தேதி முதல் அனைத்து வகை விசாக்களையும் காலவரையின்றி நிறுத்தி வைக்கப் போவதாக அச்சிடப்பட்டிருந்தது. பலர் விசாக்கள் நிறுத்திவைக்க துவங்கி விட்டார்கள் எனக் கூறிவும் அதிர்ந்து போனார்கள் இருவரும்.
அப்படி விசாக்கள் வழுங்குவதை காலவரையின்றி நிறுத்திவிட்டால் ராதாவால் இருபத்தி எட்டாம் தேதி அவள் பெற்றோர் வசிக்கும் நாட்டிற்குள் நுழைய முடியாது ஏனெனில் அவளது விசா முடிவடைந்ததை அவர்கள் யாருமே கவனிக்கவில்லை ஆகையால் ஏப்ரல் மாதம் விசா ஆன் அரைவலில் வந்துவிட்டு பின் மீண்டும் விசாவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றிருந்தனர். ஆனால் விசாவை நிறுத்தி விட்டால் அவள் பெற்றோருடன் இருக்க முடியாது அவளை இந்தியாவிற்கு அவள் தாத்தா பாட்டியிடம் அனுப்பலாம் என்றும் யோசித்தார்கள் ஆனால் இந்தியாவிலும் கதவடைப்பு செய்யப்பட்டிருந்தது.
செய்வதறியாது ராஜுவும் ராஜமும் தவித்துக் கொண்டிருந்த வேளையில் ராதா அவர்களை வீடியோ காலில் அழைத்தாள். அவள் அழைக்கும் போது ராஜு தம்பதியினருக்கு மணி காலை எட்டரை ராதாவிற்கு நள்ளிரவு பண்ணி ரெண்டு.
“ஹலோ அப்பா. எப்படி இருக்கேங்கள் ரெண்டு பேரும். அங்க லாக்டவுன் ஏதும் இல்லையே?”
“என்னம்மா உனக்கு டைம் பண்ணண்டு ஆயிருக்குமே இன்னுமா தூங்காம இருக்க?”
“இன்னைக்கு கல்லூரிக்கு கடைசி நாள் அப்பா அதனால நண்பர்கள் அனைவருமாக டின்னருக்கு சென்று வந்தோம். அதுதான் இவ்வளவு லேட் ஆயிடுத்து”
“அங்க ஒண்ணும் உனக்கு பிரச்சினை இல்லையே ஏன்னா கனடா ல நிறைய யூனிவெர்ஸிட்டீஸ் ஆன் லைன் ல க்ளாஸஸ் ஆரம்பிக்க போறான்னுட்டு நியூஸ் பார்த்தேன். உங்க காலேஜ் என்ன பண்ண போறா?”
“அதப்பத்தி சொல்லத்தான் இப்போ கால் பண்ணினேன். எங்க காலேஜும் இந்த ஸ்ப்ரிங் ப்ரேக்குக்கு ஊருக்கு போற ஸ்டூடன்ட்ஸை திரும்பி வரவேண்டாம்ன்னும் க்ளாஸஸ் ஆன் லைன்ல நடத்தப் போறான்னும் இன்னைக்கு மத்தியானம் எங்க எல்லாருக்கும் காலேஜ் ப்ரெஸிடென்ட் கிட்ட இருந்து ஈமெயில் வந்தது. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் அவாஅவா ஊருக்கு நாளை மறுநாள் அதாவது பதினைந்தாம் தேதி கிளம்பிப் போகப்போறாளாம் டின்னரில் டிஸ்கஸ் பண்ணினா. அது தான் நானும் வந்திடலாமா இல்லை இங்கேயே இருக்கலாமான்னு யோசிக்கறேன்”
“இதுல என்ன யோசிக்க இருக்கு ராதா பேசாம நீயும் உன் இருபத்தி எட்டாம் தேதி டிக்கெட்டை பதினைந்தாம் தேதிக்கு மாத்திண்டு இங்க எங்கள்ட்டயே வந்துடுமா”
“ஆனா அப்படி எங்க ஸ்டூடன்ட் வெப்சைட்டில் ப்ரீபோன்ட் பண்ண முடியாது பா. கான்ஸல் பண்ணிட்டு புதுசா தான் பூக் பண்ணணும்.”
“சரி அதை பண்ணு”
“அம்மா நான் ஃபர்ஸ்ட் செஞ்ச கேன்ஸலேஷனுக்கே இன்னும் காசு திரும்பி என் அக்கௌன்ட்க்கு வரலை.”
“அது வரும்போது வரட்டும் நீ இப்போ இந்த டிக்கெட்டையும் கான்ஸல் பண்ணிட்டு புதுசா புக் பண்ணிடு”
“அம்மா என் கிட்ட புது டிக்கெட் புக் செய்யற அளவுக்கு அக்கௌன்டில் பணமில்லை…நீங்க எனக்கு பணம் ட்ரான்ஸ்பர் செய்தாலும் அது என் அக்கௌன்ட்டுக்கு வரத்துக்கு செவ்வாய்க்கிழமை ஆகிடும்”
“சரி அப்போ ஒண்ணு பண்ணறேன் நான் டிக்கெட் பார்க்கறேன் கிடைச்சா உன் ஈமெயில் ஐடி கொடுத்து புக் பண்ணறேன் சரியா”
“அம்மா என் ஃப்ரெண்ட்ஸ் பாரிஸ் வழியா வர்ற ஃப்ளைட் புக் பண்ணிருக்கா எனக்கும் அதுல இருக்கான்னுட்டு பாரு”
“சாரி ராதா அந்த ஃப்ளைட் ஃபுல் ஆகிடுத்து. ஃப்ராங்ஃபர்ட் வழியா வர்ற ஃப்ளைடில் சீட் இருக்கு பண்ணவா?”
“சரி சரி சீக்கிரம் பண்ணு அதுவும் ஃபுல்லாக போறது”
“ஓகே பண்ணிட்டேன் உனக்கு ஈமெயில் வந்திருக்குமே”
“ஆங் வந்தாச்சு”
“சரி உன் ரூம்ல இருக்கற திங்க்ஸ் எல்லாத்தையும் என்ன பண்ணப் போற?”
“எங்க ஃப்ரெண்ட் ஆன்ட்ரியா வீட்டு பேஸ்மென்ட் ல வைக்க போறோம். அவா எல்லாம் பேக்கிங் ஆரம்பிச்சுட்டா. நான் டிஸிஷன் தெரியாம வெயிட் பண்ணிண்டிருந்தேன். இதோ நானும் பேக் பண்ணப் போறேன்”
“முக்கியமா வேண்டியதை மட்டும் எடுத்துண்டு வா போறும்”
“சரி நான் எல்லாத்தையும் பேக் பண்ணட்டும் பை.”
“ஓகே பை ராதா”
“ஓகே ராஜம் டிக்கெட் புக் பண்ணிட்டே ஆனா ராதாவோட விசா ரின்யூ பண்ணிட்டில்லையே….இங்க வேற பதினேழாம் தேதி முதல் எல்லா விசாவையும் ஸ்டாப் பண்ணப்போறா…இன்னைக்கு இங்க லீவு… ஸோ ஒண்ணும் பண்ண முடியாது நாளைக்கு காலை ல தான் என் ஆபிஸ் டிராவல்ஸ் ல பேசி ஏற்பாடு பண்ணணும்”
“ஓ அது வேற இருக்கே!!! ரின்யூ பண்ணலைன்னு நான் ஞாபகப் படுத்தும்போதெல்லாம் எங்களுக்கு தெரியும்ன்னுட்டு இப்போ எப்படிப் பட்ட இக்கட்டான நிலைமை ல நிக்கறோம்ன்னு பாருங்கோ.”
“இப்போதான் குத்திக் காமிக்கற நேரமா? நாளைக்கு காலை ல ஏழு மணிக்கெல்லாம் ப்ராஸஸை ஸ்டார்ட் பண்ணிடணும்”
“ராதா நாளன்னைக்கு கிளம்பறா பதினாறாம் தேதி ராத்திரி பதினோரு மணிக்கு இங்க வந்திடுவா அப்போ அவள் கிட்ட விசா இருக்கணுமே…ஒரே நாள்ல விசா கிடைச்சுடுமா?”
“லெட் அஸ் ட்ரை.”
“பகவானே என்னப்பா இந்த சோதனை”
“ஒரு சோதனையும் இல்லை ராஜம். பீ கூல். எல்லாம் நல்லபடியாக தான் நடக்கும். வர்றியா லஞ்ச்சுக்கு வெளியே போகலாம்”
“எப்படிப்பா உங்களால இவ்வளவு ஈசியா எடுத்துக்க முடியறது? சப்போஸ் விசா கிடைக்கலைன்னா நம்ம பொண்ணு ஏர்போர்ட்லையே மாட்டிப்பா”
“அப்படி எல்லாம் ஒண்ணுமே நடக்காது. நீ வேணும்ன்னா பாரு எல்லாமே ஸ்விஃப்ட்டா நடக்கும்”
அன்று முழுவதும் மனக்கவலையில் ராஜம் ஒன்றும் சாப்பிடாமலும் சரியாக தூங்காமலும் தவித்துக்கொண்டிருந்தாள். ஆனால் ராஜு எல்லாம் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில் நன்றாக டிவி பார்த்துவிட்டு உறங்கலானார். அவர் உறங்குவதைப் பார்த்து ராஜம் மனதிற்குள்….
“இந்த மனுஷனா ல எப்படி இப்படி நிம்மதியா தூங்க முடியறதுன்னே எனக்கு புரியலை….சரி அவராது தூங்கட்டும் பாவம்”
மறுநாள் பதினான்காம் தேதி விடிந்ததும் சீக்கிரம் எழுந்து தயாராகி ஆபிஸ் சென்று ட்ராவல்ஸிடம் விவரத்தைக் கூறி ஏற்பாடுகளை செய்தார் ராஜு. அவற்றை எல்லாம் அவ்வப்போது ஃபோன் போட்டு கேட்டுக்கொண்டே இருந்தாள் ராஜம். அங்கே ராதா அனைத்துப் பொருட்களையும் பேக் செய்து வைத்து விட்டு தன் அம்மாவுடன் பேசினாள்.
“அம்மா இதோ பார் பத்து கார்டன் பாக்ஸ் ல போட்டு எல்லாத்தையும் ரெடி பண்ணியாச்சு நாளைக்கு காலை ல ஒரு கார் வாடகைக்கு எடுத்து அதுல எங்க மூணு பேரோட திங்க்ஸையும் லொடு பண்ணி ஆன்ட்ரியா வீட்டுல வைக்கணும்”
“என்னடி பத்து டப்பாவா!!!”
ராஜம் அவளது தவிப்பு, மற்றும் விசா பிரச்சினை எதையுமே ராதாவிடம் காட்டிக்கொள்ளாமல் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது போலவே பேசினாள்.
“ஆமாம்”
“சரி உனக்கு இப்போ டைம் மூணு ஆகிருக்குமே போய் தூங்கு ராதா”
“இப்போ தான் எல்லாத்தையும் ஃபுல் பேக்கிங் முடிச்சேன் சரி உன்கிட்ட கொஞ்ச நேரம் பேசிட்டு தூங்கப்போலாமேன்னு கூப்பிட்டேன்”
“அது தான் நாளன்னைக்கு வந்திடுவயே அப்போ பேசிக்கலாம் இப்போ போய் தூங்கு”
“சரி மா பை”
ராஜம் ராதாவுடன் பேசி முடித்ததும் ராஜுவின் கால் வந்தது. அதில் அவர் ஆபிஸ் ட்ராவல்ஸ் ஒரே நாளில் விசா கிடைக்க முயற்சிப்பதாக சொன்னார்கள் என்று சொல்ல….
“என்னப்பா முயற்சிக்கிறோம் என்று சொல்கிறார்களே கிடைக்குமா!!!கிடைக்காதா!!! கிடைத்தால் சந்தோஷம், கிடைக்காவிட்டால் நம்மகிட்டயும் வரமுடியாது, இந்தியாவிற்கும் செல்ல முடியாமல் ஏர்போர்ட்டில் மாட்டிக்கொள்வாளே நம்ம பொண்ணு”
என்ற மனவேதனை ராஜத்தின் மனநிம்மதி, தூக்கம், பசி என அனைத்தையும் பாதித்தது. அங்கே இவர்கள் மகள் அனைத்து பொருட்களையும் அவள் தோழி வீட்டில் வைத்துவிட்டு பயணத்திற்கு தயாராகினாள்.
இந்த இக்கட்டான நிலையில் மொத்தம் இரண்டாயிரத்தி மூன்னூறு டாலர் பணம் அந்த டிக்கெட்டிங் வலைதளத்தில் மாட்டியிருந்தது.
பதினைந்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை மத்தியம் பண்ணி ரெண்டு மணி வரை ராதாவின் விசா பற்றிய எந்தவித தகவலும் வராததால் மூன்றாவது முறையாக ஃபோன் செய்து கேட்டார் ராஜு அப்போதும் ஆகிவிடும் என்று சொன்னார்களே தவிர எப்போ என்று சொல்லவில்லை. அன்றிரவு எட்டரை மணிக்கு (அதாவது ராஜு வசிக்கும் நாட்டின் டைம் பதினாறாம் தேதி விடியற் காலை நாலரை மணி) ராதாவிற்கு ஃப்ளைட். ராஜம் தோழி ஒருத்தி ராதா வரும் ஏர்லைன்ஸில் பணிப்புரிவது ஞாபகம் வர அவளுக்கு ஃபோன் செய்தாள். அவளிடம் விசா கொடுப்பதை நிறுத்திவிட்டார்கள் என அனைவரும் கூறுகிறார்களே அது உண்மையா என்றும் தன் மகள் பதினாறாம் தேதி இரவு பதினோரு மணிக்கு வருவாள் உள்ளே அழைத்து வர என்ன வழி என்றும் கேட்டாள் ராஜம். அவள் தோழி சொன்ன பதில் ராஜத்துக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. விசா வழங்குவதை பதினேழாம் தேதி முதல் தான் நிறுத்த போகிறார்கள் எதற்கும் ஏர்போர்ட் சென்று அந்த ஏர்லைன்ஸ் கௌன்டரில் நேராக விசாரித்துக் கொள்ளும்படி கூறினாள். உடனே ராஜம் ராஜுவை அலைபேசியில் அழைத்து விவரத்தைக் கூற அவரும் ஆபிஸில் வேலை ஓடவில்லை என்று கிளம்பி வந்து ராஜத்தையும் அழைத்துக் கொண்டு ஏர்போர்ட் சென்று ஏர்லைன்ஸ் கௌன்டரில் விசாரித்தனர்.
விசா ஆன் அரைவல் பதினாறாம் தேதி கிடைக்கும் ஆனால் அது செல்லுபடியாகும் பதினான்கு நாட்கள் முடிந்ததும் அந்த விசாவை புதுப்பிக்க முடியாது என்றும் முடிந்தால் லாங் டெர்ம் விசா எடுக்கும்படியும் கூறினார் அந்த ஏர்லைன்ஸ் ஊழியர். ராஜுவிற்கும் ராஜத்திற்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை. அந்த டென்ஷன், இரண்டு நாட்களாக சரியாக சாப்பிடாதது, தூங்காதது என்று அனைத்தும் ஒருசேர ராஜத்திற்கு சற்று தலைச்சுற்றலை தந்தது.
ராஜு அவளை தாங்கிப் பிடித்துக்கொண்டு அங்கே இருந்த இருக்கையில் அமர வைத்து தண்ணீர் வாங்கி வந்து கொடுத்தார். மீண்டும் ஒரு முறை அந்த டிராவல்ஸ்க்கு ஃபோன் போட்டுக் கேட்டதில் அதே பதில் தான் கிடைத்தது. இனி ஏர்போர்ட்டில் அமர்ந்திருந்து ஒண்ணும் ஆக போவதில்லை என்று வீட்டிற்கு வந்து சேரும் போது மணி மூன்றரை அதற்கு மேல் என்னத்த சாப்பிட என்று இருவரும் காபி போட்டு குடித்து விட்டு அமர்ந்திருந்தார்கள். ராஜம் மீண்டும் சாமி படங்கள் முன் அமர்ந்து அவர்களின் அந்த இக்கட்டான நேரத்தில் ஏதாவது ஒரு வழி காட்டி காப்பாற்ற வேண்டி மனமுருகி நின்றாள்.
ராஜு வசிக்கும் நாட்டின் நேரம் மாலை ஆறு மணிக்கு (ராதாவுக்கு காலை பத்து மணி) மகள் ஃபோன் செய்து விசா வந்ததா என்று கேட்க ராஜுவும்
“வந்து விடும், வந்ததும் மின்னஞ்சலில் அனுப்பிவைக்கிறேன்” என்று கூறினார்.
விசா இல்லாமல் பயணித்தால் அங்கே இமிக்ரேஷனில் கேள்வி எழும் ஆகையால் ராதா அங்கிருந்து கிளம்பும் முன் அவளுக்கு ராஜு விசாவை அனுப்பிவைக்க வேண்டும். இல்லாததை எங்கிருந்து அனுப்புவது என்று பரிதவித்தார்கள் ராஜுவும் ராஜமும். இரவு அவர்கள் நேரம் பத்து மணிக்கு ராஜுவின் மின்னஞ்சலுக்கு விசா வந்தது உடனே அதை அவர்கள் மகளுக்கு ஃபார்வேர்டு செய்தபின் தான் அவர்களால் நிம்மதி பெருமூச்சு விட முடிந்தது.
பதினாறாம் தேதி மாலை ஒரு எட்டு மணியளவில் மெது வடை, சட்னி, சாம்பார், வெண்பொங்கல் எல்லாம் செய்து ஹாட்பேக்கில் போட்டு வைத்து விட்டு ஏர்போர்ட்டுக்கு கிளம்பிச் சென்றனர் ராஜுவும் ராஜமும். அங்கே அவர்கள் மகள் வெளியே வந்து அவர்களை கட்டி அணைத்துக் கொண்டதன் பின் தான் அவர்களுக்கு உயிர் திரும்பியது போல் இருந்தது. வீட்டிற்கு வந்து ராதா குளித்து விட்டு வருவதற்குள் ராஜம் சூடாக இட்டிலி செய்து டேபிளில் அனைத்து சாப்பாடு வெரைட்டி களையும் வைத்துவிட்டாள். ராதா வந்ததும் மூவரும் அமர்ந்து மூன்று நாட்கள் கழித்து அப்போதுதான் நிம்மதியாக சாப்பிட்டனர்.
பிப்ரவரியிலிருந்தே இருந்து வந்த மனக்கவலை மற்றும் மார்ச் பதிமூன்றாம் தேதி தொடங்கிய பதற்றமான சூழல் மார்ச் பதினாறாம் தேதி இரவு பதினொன்றரை மணிக்கு தான் நிதானத்திற்கு வந்தது. அவர்கள் வசிக்கும் நாட்டிலும் லாக்டவுன் செய்யப்பட்டதால் ராஜு வீட்டிலிருந்தே வேலை பார்க்கத் துவங்கினார். காலை டிபன், மத்திய சாப்பாடு தயார் செய்து வைத்துவிட்டு, மகளுக்கு ஒரு வாரம் விடுமுறை என்பதால் ராஜமும் ராதாவும் வீடியோ கேம்ஸ் விளையாடினார்கள். இரவில் டின்னர் முடிந்ததும் மூவரும் ஊனோ எனும் கார்ட் விளையாட்டை விளையாடிய பின் தான் உறங்கச் சென்றார்கள். ஒரு வாரம் விடுமுறை முடிந்ததும் காலையில் ராஜு வேலைப் பார்த்தார் மாலையில் ராதா கல்லூரி ஆன்லைன் வகுப்புகளை அட்டென்ட் செய்தாள். ராஜம் அவளது அடுப்படி வேலைகள் என அவரவர்களின் நேரத்தில் அவரவர் பணியை செவ்வனே செய்யத் துவங்கினர்.
மாலை ராஜு ஆபிஸ் வேலை முடிந்தது, ராதா வகுப்பு துவங்குவதற்கு முன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஸ்னாக்ஸ் செய்து கொடுத்து அதை இருவரும் ரசித்து உண்பதைப் பார்த்து மகிழ்ந்தாள் ராஜம். இப்படியே ஜூன் மாதம் வரை விதவிதமான சாப்பாடு வகைகள், ஸ்னாக்ஸ் வகைகள் என்று செய்வதும் சாப்பிடுவதும், வீடியோ கேம்ஸ், திரைப்படங்கள் என காலை நேரமும், கார்ட்ஸ், ஊனோ என்று இரவு நேரமும் மிகவும் மகிழ்ச்சியாக கழித்தனர் ராஜு குடும்பத்தினர்.
ஜூலை முதல் ராஜு ஆபிஸுக்கு செல்ல ஆரம்பித்தார். ராதாவிற்கு ஆகஸ்ட்டில் கல்லூரி துவங்க உள்ளதால் அவரை அனுப்ப வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வி எழுந்தது. அப்போது அவர்கள் கல்லூரியிலிருந்து வந்த மின்னஞ்சல் அவர்களுக்குள் இருந்து வந்த குழப்பத்தை நீக்கியது. மீண்டும் ஆன்லைன் வகுப்புகளே தொடர்ந்தது, அவர்களின் வழக்கமான சமையல், சாப்பாடு, விளையாட்டும் தொடர்ந்தது.
இரண்டு வருடங்களுக்கு பின் அவர்கள் மூவரும் இந்த வருடம் தான் எல்லா பண்டிகை தினங்களிலும் ஒன்றாக சேர்ந்திருக்கிளார்கள் என்பதனால் எல்லா பண்டிகையையும் சிறப்பாக கொண்டாடினார்கள். இந்த வருடம் பலருக்கு பலவகையான அனுபவங்களை கொடுத்துள்ளது. ராஜு குடும்பத்தினருக்கு ஆரம்பத்தில் சற்று பதற்றம், குழப்பம், கவலை என இருந்தாலும் இறுதியில் மகிழ்ச்சியையே தந்துள்ளது.
வெளியே எங்கும் போகாமல் எவர் முகத்தையும் பாராமல் வீட்டிற்குள்ளேயே அடைப்பட்டுக்கிடந்தாலும் சந்தோஷத்திற்கு எந்த வித குறையுமில்லாமல் அற்புதமாக கிடைத்த அந்த நேரத்தை மிக மிக அழகான தருணங்களாக மாற்றி செவ்வனே அவரவர் வேலைகளை செய்துக்கொண்டும், வீடியோ கேம்ஸ் மற்றும் போர்ட் கேம்ஸ், சீட்டு விளையாட்டு போன்ற விளையாட்டுகளை விளையாடிக் கொண்டும், பலவகையான தலைப்புகளை எடுத்து அதை பற்றி கலந்துரையாடிக் கொண்டும் செலவிட்டு வந்ததில் அவர்களுக்குள் இருந்த குடும்ப பிணைப்பு எனப்படும் family bonding இன்னும் வலிமை பெற்று பல நல்ல தருணங்களை பரிசளித்துள்ளது என்று தான் சொல்லவேண்டும்.
அவர்களின் வழக்கமான வாழ்க்கையிலிருந்து இந்த இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டு அவர்களுக்கு கொடுத்த இந்த இனிமையான இடைவேளைக்கு நன்றி தெரிவித்தாள் ராஜம்.
நமக்கு கிடைப்பதை/நடப்பது (நல்லதோ கெட்டதோ) ஏற்றுக்கொண்டு அதிலிருக்கும் துன்பங்களை, கஷ்ட்டங்களை அல்லது தீயவைகளை நீக்கி நல்லவைகளை மட்டும் எடுத்துக் கொண்டு அதை வளர்த்துக் கொண்டால் நாமும் நம்மைச் சுற்றி உள்ளவர்களும் நன்றாக வாழ ஏதுவாக இருக்கும்.
“இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல்”
என்ற திருக்குறளுக்கு ஏற்ப சோதனைகளை/துன்பங்களை/கஷ்டங்களைக் கண்டுக் கலங்காமல் அதை வெல்லக்கூடிய மகிழ்ச்சியை, நம்பிக்கையை மனதில் வளர்த்துக்கொண்டோமேயானால் அவை அனைத்தும் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
மனதில் நல்லெண்ணத்தை பயிரிடுவோம் நன்மையை அறுவடை செய்வோம்.
❤️முற்றும்❤️
அத்தியாயம் 34: மகப்பேறு காலம் ஆரம்பம்

மனதில் வருத்தம், கண்களில் கண்ணீர் நடையில் வேகம் என சென்றுக் கொண்டிருந்த மிருதுளாவின் பின்னால் வேகமாக நடந்தும் ஓடியும் அவளை பிடிக்க சென்றான் நவீன். அவள் நேராக வீட்டின் வாசலில் சென்று அமர்ந்தாள். ஒரு இரண்டு நிமிடங்களில் நவீனும் வீட்டிற்கு வந்து சேரந்தான். வாசலில் அமர்ந்திருந்த மிருதுளாவிடம்..
“ஏய் என்ன மிருது இவ்வளவு வேகமா நடந்துண்டேயிருக்க. நான் வர்றேனா இல்லையான்னு கூட பார்க்காம நீ பாட்டுக்கு வந்துண்டிருக்க!! என்ன ஆச்சு ஏன் இப்போ உன் கண்லேருந்து கண்ணீர் வர்றது? சரி ஆத்துக்குள்ள ஃபர்ஸ்ட் வா.”
என்று கதவைத் திறந்தான் நவீன். மிருதுளா வேகமாக வீட்டினுள் நுழைந்து நேராக கட்டிலில் சென்று படுத்துக் கொண்டாள். என்ன நேர்ந்தது என்று புரியாமல் “என்ன ஆச்சு?” என்ற கேள்வியை அவளிடம் இரண்டு மூன்று முறை கேட்டும் பதில் இல்லாததால் நவீனும் பேசாமல் அவளருகே அமர்ந்தான். சிறுது நேரம் மௌனத்திற்கு பிறகு எழுந்து நவீனைப் பார்த்து …
“ஏன் நவீ நான் கன்சீவ் ஆனதில் உங்களுக்கு சந்தோஷம் தானே?”
“இது என்ன கேள்வி மிருது?”
“ப்ளீஸ் சொல்லுங்கோ”
“ஆஃப்கோர்ஸ் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் தான். நானும் அப்பா ஆக போறேன்னு எனக்கு சந்தோஷம் இருக்காதா என்ன! இப்போ ஏன் உனக்கு சடன்னா இப்படி ஒரு டவுட்டு”
“இல்ல இன்னிக்கு நான், நீங்க, என் பேரன்ட்ஸ் எல்லாருமே அந்த செய்திக்காக எதிர்ப்பார்த்து தெரிஞ்சதும் எவ்வளவு ஹாப்பியானோம் … இவ்வளவு ஏன் அதை சொல்லும் போது டாக்டரும் கூட எவ்வளவு சந்தோஷமா சொன்னா… எல்லாருக்கும் மகிழ்ச்சி கொடுத்த விஷயம் ஏன் உங்க ஆத்துல யாருக்குமே பிடிக்கலை?”
“ஆமாம் நானும் கவனிச்சேன் ஏதோ சொல்லனுமேன்னு “சந்தோஷம்ன்னு” சொன்னா…அதுக்கு நீ ஏன் கவலை படணும்? ஏன் கண்கலங்கின?”
“அதோட நிப்பாட்டிருந்தா எனக்கும் பெரிசா சங்கடம் இருந்திருக்காது ஆனா உங்க அம்மா வெடுக்குன்னு …”
“என்ன சொன்னா ? அதை தானே அப்போலேந்து கேட்டுண்டிருக்கேன்!”
“”என்னத்துக்கு இவ்வளவு அவசர பட்டே” ன்னு கேக்கறா!!! எனக்கு எப்படி இருந்திருக்கும் சொல்லுங்கோ. எந்த ஒரு அப்பா அம்மாவும் அவா தாத்தா பாட்டி ஆக போறான்னா சந்தோஷமா தான் ஃபீல் பண்ணுவா ஆனா இவா என்னடான்னா என்னத்துக்குன்னு கேட்கறா. உங்க ரம்யா சித்திக் கூட நாம ஃபர்ஸ்ட் டைம் போனபோது ப்ளானிங் ன்னு எல்லாம் குழந்தைய தள்ளிப் போடாதீங்கோ மாக்ஸிமம் ஒரு ஆறு மாசம் நம்மளுக்குன்னு எடுத்தா போறும்ன்னு சொன்னா தெரியுமா!! உங்க அம்மாக்கு நான் பிடிக்காத மாட்டுப்பொண்ணாவே இருந்துட்டுப் போறேன் ஆனா எப்படி அவா பேரக் குழந்தை வரப்போறத கூட என்னை அசிங்க படுத்தவே யூஸ் பண்ணறா…ச்சீ …என்னை வந்த நாள்லேருந்து என்னென்னவோ சொல்லிருக்கா … நான் எதையாவது உங்ககிட்ட வந்து சொல்லிருக்கேனா? இல்லை அவா கிட்டதான் சண்டைக்கு போனேனா? இத என்னால தாங்க முடியலை…இப்படியுமா பழிவாங்கறதுக்காக பேசுவா? நான் அப்படி என்ன தான் அவாளுக்கு செய்துட்டேன்? எனக்கு ஆற மாட்டேங்கறது!!!”
“அது ஒண்ணுமில்லை நான் உன்னை கல்யாணம் பண்ணிண்டது அவாளுக்கு பிடிக்கலை. அவா உன்னை வேண்டாமன்னு சொல்லியும் நான் உன்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லி அத செய்தது அவாளுக்கு கோபம். சொன்னா சொல்லிட்டுப் போறா விட்டுத்தள்ளு மிருது. நாம சந்தோஷமா இருக்கோமா அது தான் முக்கியம் புரிஞ்சுதா!!”
“அதெல்லாம் உங்களுக்குள்ள அதுல என் தப்பு என்ன சொல்லுங்கோ? நாம என்ன லவ் பண்ணியா கல்யாணம் பண்ணிண்டோம்? என் மேல ஏன் அந்த வெறுப்ப கொட்டணும்? எப்படி அப்படி ஈசியா விட்டுட சொல்லறேங்கள் நவீ ? ஏதாவது மூணா மனுஷா சொல்லிருந்தா விட்டுடலாம் ஆனா சொன்னது உங்க அம்மா …இந்த வலி என் வாழ்நாள் முழுவதும் இருக்கும் நவீ”
“புரியறது மிருது சொல்லிட்டா இப்போ அள்ளவா முடியும்?”
“அவாளால அள்ளவும் முடியாது என்னால மறக்கவும் முடியாது. அவா சொல்படி நான் அவசரப்பட்டு வந்த என் குழந்தையைப் பத்தி இனி நான் அவா கிட்ட எதையுமே ஷேர் பண்ணமாட்டேன். நீங்களும் என்னை சொல்ல சொல்லி வற்புறுத்தக் கூடாது. ஓகே வா?”
“அவா அப்படி பேசி அவா உரிமைய இழந்துட்டா ஸோ நான் உன்னை வற்புறுத்த மாட்டேன். நீ மொதல்ல கண்ணை தொட மிருது. அழறத நிப்பாட்டு ப்ளீஸ்”
“ஓகே ஓகே”
வெளியே குல்ஃபி வண்டி மணி ஓசை கேட்டதும் …
“உன் ஃபேவரைட் வண்டி வந்துடுத்து மிருது. என் வீட்டு பெரிய குழந்தை அழறதேன்னு குல்ஃபிகாரன் நம்ம ஆத்து வாசலேருந்து நகராம இங்கேயே நிக்கறான் பாரேன் !!! நாம வாங்காம நகர மாட்டான் போல….இரு நான் போய் ரெண்டு குல்ஃபி வாங்கிண்டு வந்துடறேன்”
“இரண்டு கேசர் குல்ஃபி குடுப்பா. நாளைலேருந்து இப்படி இங்கேயே நின்னா நாங்க வாங்குவோம்ன்னு நினைக்காதே சரியா. வேணும்னா நாங்களே வாசலில் நிப்போம்.”
“இந்தா மிருது உனக்கு பிடிச்ச கேசர் குல்ஃபி”
“என்ன குல்ஃபி குடுத்து ஐஸ்ஸா!!!”
“அச்சசோ அதெல்லாம் ஒண்ணுமில்லைமா… ஏதோ அவன் இந்த நேரம் பார்த்து வந்தான் …சரி உனக்கும் பிடிக்குமேனுட்டு வாங்கினேன். குல்ஃபி குடுத்து குழந்தை அழறத நிப்பாட்டலாமேன்னு ஒரு நல்ல எண்ணத்தில் தான் வாங்கினேன்”
“எந்த குழந்தை அழறதாம் இங்க?”
“ம்….என் மாமியார் அம்புஜத்தின் குழந்தை மிருது பாப்பா தான் வேற யாரு?”
“ம்…ம்… அப்படியா அப்போ இந்த பாப்பா சாப்பிட்ட குல்ஃபி ஐஸ் குச்சியை பாப்பாக்கிட்டேருந்து வாங்கிண்டு போய் டஸ்ட்பின்ல போடுங்கோ பார்ப்போம்”
“போட்டுட்டா போச்சு!! அதுக்கு பாப்பா எனக்கு ஒரு உம்மா தருமாமே”
“ஐய்யே அதை எல்லாம் உன் பொண்டாட்டி மிருதுளான்னு இருக்கா ல அவகிட்ட கேளு போ போ”
ஹா! ஹா! ஹா! ஹா! ஹா! ஹா!
என இருவருமாக சிரித்து நடந்ததை சற்று மறந்து உறங்கினார்கள்.
செவ்வாய்க்கிழமை விடிந்ததும் வழக்கம் போல் நவீன் ஆபீஸுக்கு கிளம்பினான். அப்போது மிருதுளா..
“என்னப்பா நீங்களும் ஆபீஸுக்கு போயிட்டா வீடே வெறுச்சோடி இருக்குமே”
“நல்லாருக்கே அதுக்காக நான் லீவெடுக்க முடியுமா பெண்ணே!!! சரி நீ ஒழுங்கா சாப்பிடு. மாத்திரையை கரெக்டா போட்டுக்கோ. நான் வரட்டுமா. நீ டிவி பாரு இல்லாட்டி உன் படிப்பை கன்டின்யூ பண்ணு. கீப் யுவர் செல்ஃப் பிசி. ஓகே வா. சிரிச்ச முகத்தோட வழியனுப்பு மிருது. இந்த உம்மு மூஞ்சி உனக்கு செட் ஆகலை”
“ஈ.ஈ.ஈ.ஈ.ஈ.ஈ போறுமா”
“அம்மாடியோ இது கொஞ்சம் ஓவரா இருக்கே”
“சரி சரி பத்திரமா ஆபீஸ் போயிட்டு வாங்கோ. பை நவீ”
“பை மிருது டேக் கேர்”
நவீன் ஆபீஸ் சென்றதும் கதவை தாழிட்டு உள்ளே வந்தவளுக்கு தனது அம்மா அப்பா தம்பிகள் எல்லாரும் அமர்ந்திருப்பது போல தோன்ற சற்று கண்ணில் கண்ணீர் வடிந்தது. வேகமாக அதை துடைத்துக்கொண்டு அடுப்படிக்குள் சென்று வேலைகளை முடித்து பின் குளித்து சற்று நேரம் படித்துக்கொண்டே உறங்கிப்போனாள். சட்டென பசியால் கண்விழித்து பார்த்தாள் மணி இரண்டாகியிருந்தது. மெல்ல கட்டிலில் இருந்து இறங்கி சென்று சாப்பாடு சாப்பிட்டு பின் டிவியை போட்டாள் அதில் திரைப்படம் ஒடிக்கொண்டிருந்தது. அப்படியே தலையணையை தரையில் போட்டு படுத்தவாறே திரைப்படத்தைப் பார்த்து முடிக்கவும் மணி நாலாகவும் சரியாக இருக்க எழுந்து முகம் கை கால் கழுவி விளக்கேற்றி வாசல் கதவைத் திறந்து வைத்து வெளிய வாசல் படியிலிருந்து கேட் வரை நடந்துக்கொண்டே நவீனுக்காக காத்திருந்தாள். அப்போது பக்கத்து வீட்டு லதா மிருதுளாவிடம்..
“என்ன மிருதுளா ஹஸ்பன்ட்டுக்காக வெயிடிங் ஆ!!”
“ஆமாம் லதா அக்கா.”
“என்ன முகமெல்லாம் பிரகாசமா இருக்கே. எனி குட் நியூஸ் மிருதுளா?”
“ஆமாம் லதா அக்கா நான் கன்சீவ் ஆகிருக்கேன்”
“வாவ்!! வாழ்த்துக்கள்”
“அம்மா அம்மா என்னோட ரெக்கார்ட் புக்க பார்த்தயா நான் டியூஷன் போறதுக்கு நேரமாச்சு”
“சரி மிருதுளா நாம அப்பறம் பேசலாம் அவன டியூனுக்கு அனுப்பனும் நான் வரேன். டேக் கேர்”
“ஓகே லதா அக்கா”
“ஹேய் மிருது வாசல்ல என்ன பண்ணிட்டு இருக்க?”
“உங்கள் வரவுக்காக தான் வெயிட்டிங்”
“இரு பைக்கை நிப்பாட்டிட்டு வந்துடறேன்”
“வாங்கோ. இந்தாங்கோ காபி. இன்னைக்கு ஏன் லேட்? க்ளாஸ் வேற போகணுமில்லையா!”
“ஆமாம் மிருது இன்னைக்கு கொஞ்சம் வர்க்லோடு அதிகம் அதுதான் லேட் ஆயிடுத்து. க்ளாஸுக்கும் நேரமாகிடுத்து. எப்பவும் போல காபி சூப்பர். நான் க்ளாஸுக்கு போயிட்டு வரேன் பத்திரமா இரு. பை”
“ஓகே பை”
க்ளாஸ் முடிந்து வந்ததும் இருவருமாக இரவுணவு உண்டபின் கணக்கு பார்க்க அமர்ந்தனர். ஊரிலிருந்து வந்தவர்களை வெளியே கூட்டிக்கொண்டு சென்றது, சுற்றுலா ஏற்பாடு செய்தது, அவர்களுக்கு டிரஸ் எடுத்துக்கொடுத்தது மற்றும் அவர்களுடன் வெளியே சாப்பிட்டது என எல்லாவற்றையும் கூட்டி அவற்றை கையிருந்த பணத்திலிருந்து கழித்தால் கையில் மீண்டும் ஐநூறே மிஞ்சியது. அதுவும் அது ஜூலை மாத ஆரம்பம் தான் ஆகியிருந்தது.
ஒரு மாதம் அவர்கள் அந்த ஐநூறில் தான் குடும்பத்தை ஓட்ட வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கையிலே மிருதுளா அடுப்படிக்குள் சென்று ஒரு ஐநூறு ரூபாய் எடுத்து வந்தாள். எங்கிருந்து வந்தது அந்த ஐநூறு என நவீன் கேட்க அது தனது அப்பாவும் அம்மாவும் ஊருக்கு செல்லும்முன் வற்புறுத்தி அவள் கையில் திணித்த பணம் என்றும் அதை அஞ்சறைப் பெட்டியினுள் போட்டு வைத்தது ஞாபகம் வந்ததென்றும் கூறி நவீனிடம் கொடுத்து …
“மளிகை ஜாமான்கள் மீதமிருக்கு மாதாமாதம் வாங்குவது போல வாங்க வேண்டியிருக்காது. காய்கறிகள் அப்பா வாங்கி ஃப்ரிட்ஜில் வைத்தது ஒரு இரண்டு வாரததுக்கு வரும்… ஆக வெளியே செல்வது சாப்பிடுவதை மட்டும் அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்தால் போறும்… என்ன சொல்லறேங்கள் நவீ”
“ஓகே நீ சொன்னா அதுக்கு அப்பீலே கிடையாது மேடம். அப்படியே ஆகட்டும். ஆனா அதுக்காக உனக்கு ஏதாவது சாப்பிடனும்னு தோணித்துன்னா காசில்லையேன்னு எல்லாம் யோசிக்காம கேட்கனும் சரியா”
“ஷுவரா கேட்கறேன்”
ஜூலை மாதத்தை மிகவும் ஜாக்கிரதையாக செலவழித்து கழிக்க முடிவெடுத்து அதுபடியே நடந்துக்கொண்டனர் இருவரும். ஆகஸ்டு மாதம் வந்தது கையில் மீதமிருந்தது முன்னூறு ரூபாய். அந்த மாதம் சம்பளம் எல்லா பிடிப்பும் போக ஐயாயிரம் வந்தது. ஆனால் அந்த மாதம் எல்லா மளிகையும் அரிசி உற்பட வாங்க வேண்டியிருந்தது. பால், காய்கறி, பழங்கள், என எல்லா செலவுகளும் போக கையிருப்பு அதே ஆயிரம் தான். அந்த மாதம் திருமணத்திற்கு பின் முதல் முறை இருபதாம் தேதி மிருதுளாவின் பிறந்தநாள் வந்தது. அதற்கு அவளுக்கு விலைவுயர்ந்த பரிசுப் பொருள் வாங்கிக்கொடுக்க மனமிருந்தும் பணமில்லாமல் போனது நவீனுக்கு. அன்றைய தினம் அவளை கோவிலுக்கு கூட்டிச் சென்று தலைநிறைய பூ வாங்கிக் கொடுத்து வைத்துக்கொள்ளச் செய்து வீட்டுக்கு வந்ததும் அவளுக்கென அவளுக்கு பிடித்த ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் ஒரே ஒரு பீஸ் மட்டும் வாங்கிக்கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெறிவித்தான் நவீன்….மிருதுளாவும் மகிழ்ச்சியாக அதை கட் செய்து நவீனுக்கு ஒரு பீஸ் ஊட்டிவிட்டு தானும் சாப்பிட்டாள். அதைப் பார்த்த நவீன்…
“ஏன் ஒரே ஒரு பீஸ் கேக் தான் வாங்கிருக்கேங்கள்ன்னு கேட்க மாட்டியா மிருது. ஆர் யூ அப்செட் வித் மீ”
“நாட் அட் ஆல் நவீ. நம்ம நிதி நிலவரம் தெரிந்தும் நான் எப்படி அப்படி கேட்பேன்னு நீங்க நினைக்கலாம்? உங்க கிட்ட நிறைய பணமிருந்து எனக்கு செய்யலைன்னா கேட்டிருப்பேன். நாம ரெண்டு பேருமா தானே வரவு செலவெல்லாம் பார்த்துக்கறோம் அப்புறம் என்ன கேள்வி இது”
“சரி சாரி”
“என்னது”
“ஓகே மை சாரி வாப்பஸ் வாங்கிக்கறேன். இப்போ நாம ரெண்டு பேருமா நம்ம கேன்டீன் பக்கத்துல இருக்கற டாபாக்கு போய் டின்னர் சாப்பிடலாம் வா”
“ஆர் யூ ஷுவர் அபௌட் ஹாவிங் டின்னர் அவுட் சைட்? நவீ!!”
“அதுக்கு வேணும்ன்னு தான் நான் கேக்கை கட் ஷாட் பண்ணிட்டேன். வா போயிட்டு வந்துடலாம்”
இருவருமாக சென்று உணவருந்தியதும் நவீன் …
“ஹேய் மிருது உங்க அப்பா அம்மாட்ட பேசணுமா”
“பேசலாம் ஆனா”
“என்ன ஆனா. வா பேசிட்டே போகலாம். மீட்டர்ல ஒரு கண்ணு வச்சுக்கோ எழுபத்தி அஞ்சு ரூபாய் வரைக்கும் நோ ப்ராப்ளம்”
“எனக்கே வா…ஓகே ஓகே நான் பார்த்துக்கறேன்.”
என கூறி அந்த கண்ணாடி ரூமிற்குள் சென்று பேசலானாள். சரியா ஐம்பது ரூபாயை எட்டியதும் பை சொல்லி ஃபோனை கட் செய்து வெளியே வந்து…
“உங்களை விசாரிச்சதா சொல்ல சொன்னா”
“இன்னும் இருபத்தி அஞ்சு ரூபாய்க்கு பேசிருக்கலாமே ஏன் அவசரம் அவசரமா கட் பண்ணிட்ட?”
“என்னத்த அதே தான் …பத்திரமா இரு, ஒழுங்கா சாப்பிடு, உடம்பை பார்த்துக்கோ இப்போ நீ தனி ஆள்ளில்லை இரண்டு பேருக்கு சாப்பிடனும்ன்னு சொன்னா எல்லாரும் நல்லாயிருக்காலாம் நாமும் நல்லா இருக்கோம்ன்னு சொன்னேன் அவ்வளவு தான் மீதி நேர்ல பார்க்கும் போது பேசிக்க வேண்டியது தான்”
“ஓ ஓகே தென் வீட்டுக்கு போகலாமா?”
“எஸ் போகலாம்”
அன்றிரவு தூக்கத்தில் மிருதுளா எழுந்து நவீனிடம் சாதமும் அவியலும் வேணுமென்று சொல்ல நவீன் செய்வதறியாது மறுநாள் விடிந்ததும் செய்து தருவதாக சொல்லி தண்ணீர் குடிக்க வைத்து அவளை தூங்க வைத்தான்.
மறுநாள் காலை எழுந்து காபி குடித்ததும் வாந்தி எடுத்தாள் மிருதுளா. அதைப் பார்த்ததும் என்ன ஆச்சோ ஏதாச்சோ என்று பயந்துப் போனான் நவீன் அப்போது டாக்டர் சொன்னது அவனுக்கு ஞாபகம் வந்தது உடனே அவள் நெற்றியை பிடித்துக் கொண்டான். இதே போல் காலை காபி குடித்ததும், குக்கர் திறந்ததும் என ஒவ்வொரு முறையும் வாந்தி எடுத்து எடுத்து எதுவும் சரியாக சாப்பிடாமலானாள் மிருதுளா. மகப்பேறு காலத்தின் ஆரம்ப கால பிரச்சனைகளைப் பார்த்த நவீன் அதை தனது ரம்யா சித்தியிடம் கூற அவரும் மிருதுளாவிற்கு பிடித்த இனிப்பு பலகாரம் எது என்று நவீனிடம் கேட்டு அதேபோல தெறட்டிப்பால் செய்து எடுத்துக் கொண்டு மிருதுளாவை பார்க்க வந்தார்.
“ஹை ரம்யா சித்தி வாங்கோ வாங்கோ. எவ்வளவு நாளாச்சு உங்கள பார்த்து”
“ஹேய் மிருதுளா வாழ்த்துக்கள். அம்மா ஆக போற. நவீன் நேத்து ஃபோன் பண்ணிருந்தான். ஆமாம் நீ சரியாவே சாப்பிடறதில்லையாம். என்ன யாம்…பார்த்தாலே தெரியறதே..ஆளு பாதியாகிருக்க. இங்க பாரு மிருது வாந்தி எல்லாம் அப்படி தான் வரும் அதுக்காக சாப்பிடாம இருக்கக் கூடாது புரியறதா. நீ இப்படி இருந்தா பாவம் நவீனுக்கு எவ்வளவு கஷ்டம்…புரிஞச்சுக்கோமா”
“ஓகே சித்தி டிரை பண்ணறேன். காபி யா டீ யா எது போடட்டும்”
“ஒண்ணும் வேண்டாம் இதோ இந்த ஐஸ் வாட்டர் போறும். நான் கிளம்பறேன் என் பொண்ணுகளும், சித்தப்பாவும் வீட்டுக்கு வர்ற நேரமாச்சு மா. நான் வரட்டுமா. நவீன்ட்ட சொல்லு. இன்னொரு நாள் நாங்க எல்லோருமா வர்றோம். பை”
நவீன் தனது மாமியாரிடமும் மிருதுளா படும் பாட்டை ஃபோன் போட்டு சொல்ல அம்புஜத்திற்கு இருப்பு கொள்ளாமல் தனது கணவன் மற்றும் மகனிடம் ….தான் குஜராத் சென்று மிருதுளாவை ஒரு மாசம் பார்த்துக்கொண்டு அவளுக்கு வேண்டியதை செய்து கொடுத்துவிட்டு வருவதாகவும் அந்த ஒரு மாதம் கணவரும் மகனும் அட்ஜஸ்ட் செய்யுது கொள்ளமுடியுமா என்றும் கேட்டாள். அதற்கு வேனு..
“அம்மா நாங்க ரெண்டு பேரும் இருந்துப்போம் நீ போய் மிருதுக்காவுக்கு என்ன வேணுமோ செய்து கொடும்மா நாங்க எங்களைப் பார்த்துக்கறோம் என்னப்பா உனக்கும் ஓகே தானே?”
“எனக்கும் ஓகே தான். ஆனா அடுத்த மாசம் என்ன பண்ணுவா”
“இந்த மாசம் தான் வாந்தி எல்லாம் ரொம்ப இருக்கும் அடுத்த மாசத்துக்கு அடுத்த மாசம் தீபாவளிக்கு இங்க வந்துடுவாளே.”
“ஓ சரி சரி அப்போ எப்போ டிக்கெட் புக் பண்ணணும்?”
“வர்ற சனிக்கிழமை கிளம்பட்டுமா”
“சரி அப்போ சனிக்கிழமைக்கே புக் பண்ணிடுறேன். நாளைக்கு மாப்ளைக்கும் ஃபோன் போட்டு சொல்லிடறேன். நீ சம்மந்திட்ட சொல்லிடு”
“சரி அப்படியே செய்துடறேன். டேய் வேனு பத்திரமா இருடா. அவனுக்கு வேளா வேளைக்கு ஒழுங்கா சாப்பாடு கொடுங்கோ”
“அம்மா அதெல்லாம் நானும் அப்பாவும் பார்த்துக்கறோம். நீ நிம்மதி யா போய் அக்காவ பார்த்துக்கோ”
மறுநாள் காலை ராமானுஜம் நவீனின் ஆபீஸுக்கு ஃபோன் போட்டு உதவிக்கு அம்புஜம் புறப்பட்டு வருவதாக கூற அதற்கு நவீன் தனது நன்றியை தெரிவித்தான். அம்புஜம் பர்வததிற்கு ஃபோன் போட்டு தான் மீண்டும் குஜராத் செல்லவிருப்பதை கூற அதற்கு பர்வதம் ..
“இன்னும் ரெண்டே மாசம் கழிச்சா அவாளே வர்றப் போறா அப்புறம் என்னத்துக்கு இப்போ போறேங்கள்?”
“இல்ல மாமி மிருதுக்கு வாந்தி, தல சுத்தல் எல்லாம் ஜாஸ்த்தியா இருக்காம். சரியா சாப்ட மாட்டேங்கறாளாம். மாப்ளைக்கும் லீவு போட முடியலையாம். இந்த ஒரு மாசம் மட்டும் போய் பார்த்துண்டுட்டு வந்திடலாம்ன்னு இருக்கேன். பாவம் கொழந்தை எவ்வளவு கஷ்டப்படறாளோ.”
“அப்படி எதுவும் எங்ககிட்ட அவன் சொல்லலையே….சரி சரி நீங்க குஜராத் போயிட்டா அப்போ உங்காத்து மாமாவையும் வேனுவையும் யார் பார்த்துப்பா?”
“அவா ரெண்டு பேரையும்..அவாளே பார்த்துப்பா. ஒரு மாசம் தானே. நான் மிருது படற கஷ்டத்தை சொன்னதும் ரெண்டு பேருமே மொதல்ல போய் அவளப் பார்த்துக்கோன்னு தான் சொன்னா”
“ஓ அப்படியா. சரி எப்போ கிளம்பறேங்கள்”
“வர்ற சனிக்கிழமை நைட். அதுதான் உங்ககிட்டயும் ஒரு வார்த்த சொல்லிடலாம்ன்னு ஃபோன் பண்ணினேன் மாமி. மாமா கிட்டயும் சொல்லிடுங்கோ.”
“சரி சரி போயிட்டு வாங்கோ உங்க பொண்ணாத்துக்கு. நான் ஃபோனை வச்சுடவா”
“சரி மாமி. உங்க புள்ளட்ட இல்ல மிருதுட்ட ஏதாவது சொல்லணுமா….”
என்று அம்புஜம் கேட்டதுக்கு பதில் ஏதும் கூறாமல் ஃபோனை கட் செய்தாள் பர்வதம். அதிலிருந்தே அம்புஜத்திற்கு புரிந்தது அவர்களுக்கு பிடிக்கவில்லை என்பது. ஆனால் அதை எல்லாம் பார்த்தால் தன் மகள் தான் கஷ்டப்படுவாள் என்று மனதில் எண்ணிக்கொண்டு ஃபோனை வைத்து விட்டு ஊருக்கு கிளம்ப தயார் ஆனாள்.
அன்று மாலை நவீன் ஆபீஸிலிருந்து வந்ததும்
“மிருது….நீ சந்தோஷப் படறா மாதிரி ஒரு நியூஸ் கொண்டு வந்திருக்கேன்”
“என்னது நவீ?”
“வர்ற திங்கட்கிழமை காலை ல உன்ன பார்த்துக்க… உனக்கு பிடிச்சதெல்லாம் செய்து தர …ம்…ம்…நீ கேட்ட அவியல் செய்து தர உன் அம்மா இங்கே வரப் போறா”
“ஹேய் என்னப்பா சொல்லறேங்கள் நிஜமாவா!!”
“ஆமாம் இன்னைக்கு காலை ல உன் அப்பா ஃபோன் பண்ணிச் சொன்னார்”
“அப்போ அப்பாவையும் வேனுவையும் யார் பார்த்துப்பா? அம்மா இங்க வந்துட்டான்னா?”
“அவா ரெண்டு பேருமே அவாள பார்த்துக்கறோம்ன்னு சொல்லி உங்க அம்மாவை உனக்காக அனுப்பி வைக்கறா. தே ஆர் கிரேட்”
“ஒரு பக்கம் அம்மா வராளேன்னு சந்தோஷமா இருந்தாலும் …. அப்பாவையும் வேனுவையும் நினைச்சா பாவமாயிருக்கு”
“லெட்ஸ் வெயிட் ஃபார் மன்டே”
சனிக்கிழமை வந்தது அம்புஜத்தை ரெயிலில் ஏற்றி விட்டனர் ராமானுஜமும் வேனுவும். அதுவரை தனியாக எந்த வெளி மாநிலத்துக்கும் (வெளியூருக்கு கூட) பிரயாணம் செய்திராத அம்புஜம் ஏதோ பெண்ணை பார்க்க வேண்டும் அவளுக்கு பிடித்ததை எல்லாம் செய்துக் கொடுத்து அவளை தேற்ற வேண்டுமென்ற ஆசையில் ரெயில் ஏறிவிட்டாள். ரெயிலும் புறப்பட்டது.
தொடரும்….
அத்தியாயம் 33: சந்தோஷமும் சங்கடமும்

காலை சூரியனின் கதிர்களில் ஒன்று மிருதுளாவின் இமைகளை தட்டி திறந்து கண்களால் தன்னைப் பார்க்கும் படி மிகவும் தொந்தரவு செய்ய அவளும் அதிலிருந்து நகர்ந்து படுத்தும், போர்வையை கொண்டு முகத்தை மூடியும் உறக்கத்தை தொடர நினைத்து கடைசியில் சூரியக்கதிரிடம் தோற்றுப்போய் விழித்து கடிகாரத்தைப் பார்த்தாள். மணி எட்டு காட்டியது. விரைந்து எழுந்தாள். கட்டிலின் எதிரில் தரையில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த நவீனிடம்….
“குட் மார்னிங் நவீ. என்னப்பா என்னை எழுப்பிருக்கலாம் இல்லையா!! மணி எட்டாச்சே”
“ஸோ வாட்? நீ நல்லா தூங்கிண்டிருந்த அதனால எழுப்பலை…இப்போ அப்படி சீக்கிரம் எழுந்து என்ன பண்ணணும் உனக்கு?”
“இல்ல இவ்வளவு நேரம் தூங்கிட்டேனேன்னு இருக்கு”
“இட்ஸ் ஓகே மிருது. நீ போய் ப்ரஷ் பண்ணிட்டு வா காபி போட்டுத் தர்றேன்.”
“நீங்க குடிச்சாச்சா?”
“ஓ! குடிச்சிட்டேன்”
ப்ரஷ் செய்து முகம் கழுவி விட்டு டவலில் முகத்தைத் துடைத்துக் கொண்டே …
“நவீ நீங்க எப்போ எழுந்துண்டேங்கள்?”
“நான் ஒரு ஏழு மணிக்கு எழுந்து கொஞ்ச நேரம் சும்மா படுத்துண்டே இருந்துட்டு அப்பறம் ஏழரைக்கு கட்டிலை விட்டு இறங்கி ஃப்ரெஷ் ஆகி காபி போட்டு குடிச்சிட்டு நியூஸ் பேப்பர் படிக்க உட்கார்ந்தேன் நீ எழுந்துண்ட்ட. சரி சரி இந்தா என் காபி குடிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லு”
“என்னமோ ஃபர்ஸ்ட் டைம் போடறா மாதிரி கேட்கறேங்கள்!”
“ஒவ்வொரு தடவையும் கேட்டா என்ன தப்பு. ஏன் நீ சொல்ல மாட்டியா?”
“ஓகே ஓகே!!! இருங்கோ குடிச்சுட்டு சொல்லறேன்”
“அப்படி வா வழிக்கு”
“சூப்பரா இருக்கு நவீ. தாங்க்ஸ்….ஊப்ஸ் தாங்க்ஸ் வாப்பஸ் வாங்கிக்கறேன்”
“சரி இன்னைக்கு நாம வெளில போகலாமா?”
“எங்க போகணும். எனக்கு என்னவோ ரொம்ப சோம்பலா இருக்கு. இன்னைக்கு வேண்டாமே. சாயந்தரமா ஒரு வாக் போகலாம் என்ன சொல்லறேங்கள்?”
“டன். காலை ல டிஃபன் என்ன?”
“என் அம்மா இருந்திருந்தா இந்த நேரம் ப்ரேக் ஃபாஸ்ட் ரெடி ஆகிருக்கும்…ம்..என்ன பண்ண!! மாவு இருக்கு தோசை சுடவா? கொத்தமல்லி சட்னி ஃப்ரிட்ஜில் இருக்கு. அத தொட்டுண்டு சாப்பிடலாம்.”
“நான் சுட்டுத் தரட்டுமா தோசையை?”
“நீங்க இதுக்கு முன்னாடி தோசை சுட்டுருக்கேங்களா?”
“இல்லை”
“அப்போ ஏன் விஷப் பரீட்சை. எனக்கு பசி வேற அதனால நானே ரெண்டு பேருக்கும் தோசையை வார்த்து எடுத்துண்டு வரேன் அதுவரை நீங்க உங்க நியூஸ் பேப்பரை படிங்கோ..”
மிருதுளா தோசையை வார்த்து தட்டிலிட்டு நவீனிடம் கொடுத்தாள். அவனும் செய்தித்தாள் படித்தவாறே தோசையை உண்டான். நான்கு சாப்பிட்டதும் போதும் என எழுந்து தட்டை அடுப்படியில் பாத்திரங்கள் கழுவும் தொட்டியில் போட போனபோது மிருதுளா அவனிடமிருந்து தட்டைவாங்கி அதில் அவளுக்கான மூன்று தோசையை சுட்டு போட்டுக் கொண்டு வந்து ஹாலில் அமர்ந்து சாப்பிடும் போது நவீன் அவளிடம்…
“ஏய் மிருது தட்டை அலம்பி தந்திருப்பேன் ல.”
“ஏன் நீங்க சாப்ட்ட தட்டை அலம்பாம சாப்ட்டா என்ன ஆயிடுமாம்? அட போங்கோப்பா எனக்கு பாத்திரம் கழுவுவதில் ஒரு தட்டு குறையுமோ இல்லையோ அதுக்குத்தான்.”
“ஓகே”
“ஆமாம் தலையில ஏன் துண்டால முண்டாசு கட்டிருக்கேங்கள்? எழுந்ததும் பார்த்தேன் அப்பவே கேட்கனும்ன்னு நினைச்சேன் மறந்துட்டேன்”
“அது வந்து மிருது”
“ஏன் இழுக்கறேங்கள். என்ட்ட சொல்ல என்ன தயக்கம் உங்களுக்கு? சொல்லுங்கோ”
“நான் ஹேர் டிரான்ஸ்ப்ளான்ட் பண்ணிருக்கேன்னு உன்னை பொண் பார்க்க வந்த போதே சொன்னேன் இல்லையா?”
“ஆமாம் ஆமாம் யூ நோ ஒன் திங் நவீ. நான் சொல்ல மறந்தே போயிட்டேன். ஒரு ஜோக். “
“என்ன சொல்லற மிருது”
“என் அம்மா என்ட்ட உங்க ஹேர் பத்தி கேட்டா. அவாளுக்கு என்னன்னு புரியாததால் அது என்னமோ பிரச்சினைன்னு நினைச்சுண்டு அதால எந்த பாதிப்பும் இல்லையேன்னு என்ட்ட கேட்டா பாருங்கோ!!! என்னால சிரிப்ப அடக்கிக்கவே முடியலை. அப்பறம் சொல்லிப் புரிய வைத்தேன்…சரி அதுக்கும் இந்த முண்டாசுக்கும் என்ன சம்மந்தம்”
“நான் அதை ரிமூவ் பண்ணி க்ளீன் பண்ணி வச்சிருக்கேன் அதனால தான் துண்டை முண்டாசு மாதிரி கட்டிண்டிருக்கேன்”
“ஓகே அதை என்ட்ட ஏன் மறைக்கணும்? தலையிலிருந்து அந்த துண்டை கழட்டுங்கோ நான் பார்க்கட்டும்.”
மெல்ல மனதில் ஒரு வகையான தாழ்வு மனப்பான்மையோடு துண்டை எடுத்தான் நவீன். உச்சந்தலையில் முடியில்லாத நவீனை அன்று தான் பார்த்தாள் மிருதுளா. அவளுக்கு நவீனின் தயக்கம் எதனால் என்பது புரிந்தது. முதலில் அவனிடமிருந்து அந்த எண்ணத்தை துடைத்தெறிய முடிவெடுத்து எதுமே வித்தியாசமாக தெரியாதது போல …
“இதுக்கு ஏன் பா துண்டெல்லாம் கட்டிண்டு. என்ன கேட்டா இனி அந்த ஆர்ட்டிபிஷியல் ஹேர் எல்லாம் வேண்டாம். இப்படியே இருங்கோ. நீங்க இப்படி இருக்கறதால எனக்கு எந்த விதத்திலும் சங்கடமோ, பிரச்சினையோ துளி கூட கிடையாது. நீங்க எதையும் மறைக்காம என்கிட்ட இந்த விஷயத்தை சொல்லி என் விருப்பத்தை கேட்ட உங்களோட நேர்மைக்கு தான் உங்களை கல்யாணம் பண்ணிண்டேன். ஸோ இனி இது தேவையில்லை சரியா! எதுவாக இருந்தாலும் நான் இருக்கேன் உங்களோட.”
“எனக்கு தெரியும் ஆனாலும்…..”
“என்னதுக்கு ஆனாலும் எல்லாம்..இந்த டிரான்ஸ்ப்ளான்ட்டை எப்போ பண்ணிண்டேங்கள்?”
“உன்ன பொண் பார்க்க வர்றத்துக்கு ஒரு ஆறு மாசம் முன்னாடி தான் பண்ணிண்டேன்”
“அப்புறமென்ன எனக்கே ப்ராப்ளம் இல்லங்கும் போது வேற யாருக்காக யோசிக்கறேங்கள்?”
“இல்ல மிருது உனக்காக தான் யோசிச்சேன் இப்ப நீயே வேண்டாம்னு சொன்னதுக்கு அப்புறம் இனி இது எனக்கும் தேவையில்லை. லவ் யூ மிருது”
“ஐ லவ் யூ டூ நவீ”
அன்று நவீனின் தாழ்வு மனப்பான்மை உடைந்து சில்லு சில்லாக சிதறிப் போனது. அதுவரை தன் மனைவி என்ன நினைப்பாள், எப்படி எடுத்துக்கொள்வாள் என்றெல்லாம் நான்கு மாதங்களாக அவன் மனதை அறுத்துக் கொண்டிருந்த விஷயத்தை மிருதுளா சட்டென சர்வசாதாரணமாக துடைத்தெறிந்தது நவீனுக்கு சற்று வியப்பாக இருந்தாலும் அவன் மனதில் மிருதுளா கோபுரமாக உயர்ந்து நின்றாள்.
தனது வாழ்க்கைத் துணையாக இருப்பவர் /ள் என்ன நினைப்பார்களோ? இதை சொன்னால் என்ன செய்வார்களோ? எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்றெல்லாம் தனக்குத்தானே எண்ணிக் கொண்டு பலர் பல விஷயங்களை மனம் விட்டு பேசாமலே இருப்பதற்கு ஒன்று அவரவர் அடுத்தவர் மீதுள்ள அச்சம் காரணமாக இருக்கும் மற்றொன்று அந்த கூடயிருப்பவர்களும் ஒரு காரணம் ஆவர். கூடயிருப்பவர் தங்களின் துணைக்கு நம்பிக்கைக் கொடுக்க வேண்டும். எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொள்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும். அந்த சூழலும் நம்பிக்கையும் இவர்களுக்குள் உருவாக நான்கு மாதங்கள் எடுத்துள்ளது.
கணவன் மனைவி அவர்களுக்குள் ஒரு விஷயம் ஒத்துப் போய் ஒரு முடிவெடுத்து ஒன்றை செய்தாலும் சுற்றிலுமிருப்பவர்கள் சும்மா இருப்பார்களா!!!
அன்று மாலை இருவருமாக பேசிக்கொண்டே வாக்கிங் சென்றனர். மிருதுளா நவீனிடம்…
“நேத்து நாம ரெயில்வே ஸ்டேஷன்ல இருந்து திரும்பியதும் அப்பா அம்மாட்ட ஃபோன்ல பேசினேங்களே அவாள்ட்ட சொன்னேங்களா பசங்களையும் என் அப்பா அம்மாவையும் ரெயில் ஏத்தி விட்டாச்சுன்னு? நான் அதப்பத்தி கேட்கவே மறந்துட்டேன் இப்போ இந்த ஃபோன் பூத் பார்த்ததும் தான் ஞாபகம் வந்தது. என்ன சொன்னா அவா?”
“ஒண்ணும் சொல்லலை. சரின்னு சொன்னா அவ்வளவு தான்”
“என்ன பத்தி ஒண்ணும் கேட்கலையா?”
“அப்பா மட்டும் கேட்டா. அதுக்கு நல்லா இருக்கன்னு சொன்னேன். வேற ஒண்ணும் நானும் சொல்லலை அவாளும் கேட்கலை”
என்று பேசிக்கொண்டே நடக்கையில் வழியில் எதிரே நவீனின் நண்பன் சதீஷ் நவீனைப் பார்த்து…
“ஹேய் நவீன் என்ன மறுபடியும் பழைய ஹேர் ஸ்டைலுக்கு போயிட்ட?”
“எனக்கு இந்த நவீனை தான் பிடிச்சிருக்குன்னு நான் சொன்னதும் என் நவீன் அவரை மாத்திக்கிட்டார். ஒல்ட் ஈஸ் கோல்டு இல்லையா சதீஷ்”
“வாவ் சூப்பர் மிருதுளா. சாரி மா நான் வழக்கம் போல அவனை கலாய்ச்சிட்டேன்.”
“அதனால என்ன சதீஷ். நீங்க அவரோட நண்பர் உங்களுக்கில்லாத உரிமையா. ஆனா அது உங்களுக்குள்ள மட்டும் இருந்தா நல்லாயிருக்கும் அவ்வளவு தான்.”
“டேய் நவீன் யூ ஆர் லக்கி டா. சரி அம்மா அப்பா தம்பிங்க எல்லாரும் ஊருக்கு போயாச்சா?”
“நேத்து தான் ரெயில் ஏத்தி விட்டோம் சதீஷ். நாளைக்கு காலை ல ஊர் ல ரீச் ஆவாங்க. உன் சொந்தக்காரங்க எல்லாரும் எப்போ ஊருக்கு கிளம்பறாங்க?”
“எல்லாரும் அடுத்த வெள்ளிகிழமை கிளம்பறாங்க நவீன். சரி என் வைஃப் சில மளிகை சாமான்கள் வாங்கிட்டு வர சொன்னா நான் பாட்டுக்கு உங்க கூட அரட்டை அடிச்சுக்கிட்டு இருக்கேன். ஓகே நீங்க என்ஜாய் பண்ணுங்க நான் கிளம்பறேன் பா. பை நவீன் அன்ட் மிருதுளா”
“பை டா சதீஷ்”
“பை சதீஷ்”
மீண்டும் நடையை தொடர்ந்த போது நவீன் மிருதுளாவின் வலதுகையை தனது இடது கையால் கோர்துப் பிடித்துக் கொண்டான். மிருதுளாவும் நவீனின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு நடந்தாள். அன்றிரவு மன அமைதி, நிறைவு இருவருக்குள்ளும் நிறைந்திருந்தது.
திங்கட்கிழமை காலை விடிந்ததும் எழுந்து குளித்து, டிஃபன் சாப்பிட்டு ஹாஸ்பிடல் சென்று வர தயார் ஆனார்கள் நவீனும் மிருதுளாவும் ஆனால் மணியோ எட்டு தான் ஆகியிருந்தது. ஆனாலும் இருவரும் கிளம்பி ஹால்பிடலுக்கு எட்டரை மணிக்கெல்லாம் சென்றனர். டாக்டர் ஒன்பதரை மணிக்கு தான் வருவார்கள் என தெரிய வர சற்று மனம் தளர்ந்து போனாள் மிருதுளா. அவளின் முகம் வாடியதைக் கண்ட நவீன்…
“மிருது இன்னும் ஒரு ஃபார்டிஃபைவ் மினிட்ஸ் தானே டோன்ட் வரி.”
என கூறிக்கொண்டிருக்கையில் டாக்டர் ரூமிலிருந்து மிருதுளா நவீன் என்று நர்ஸ் கூப்பிட உடனே எழுந்து உள்ளே சென்றனர்.
“நீங்க தான் மிருதுளா வா?”
“ஆமாம் சிஸ்டர். டாக்டர் வந்தாச்சா?”
“இல்லை மா இன்னும் ஒரு ஹாஃபனார் ல வந்திடு வாங்க. அவங்க வர்றத்துக்குள்ள நீங்க போய் இந்த டெஸ்டெல்லாம் குடுத்துட்டு வாங்க. டாக்டர் நேத்தே உங்களுக்கு இதெல்லாம் எழுதி வச்சிட்டாங்க. “
“ஓ அப்படியா. சரி சிஸ்டர் இதெல்லாம் குடுக்க எங்க போகணும்?”
“இப்படியே நேரா போயிட்டு ரைட் எடுங்க அங்க லேப் எல்லாம் இருக்கு அங்க சொல்லுவாங்க”
“ஓகே சிஸ்டர் தாங்க்யூ”
மிருதுளா நர்ஸ் சொன்ன மாதிரியே டாக்டர் எழதிக் கொடுத்த எல்லா டெஸ்டும் கொடுத்துவிட்டு வந்தமர்ந்தாள். அப்போது நவீன்…
“எல்லாம் ஆச்சா மிருது?”
“எஸ் நவீ ஆல் டன்”
“ஓகே குட். டீ குடிக்கறயா?”
“வேண்டாம் பா.”
டாக்டர் வந்தார். மிருதுளா டாக்டரைப் பார்த்து புன்னகைத்தாள். டாக்டரும் தலையசைத்து விட்டு அவர் ரூமுக்குள் சென்றார். மிருதுளாவிற்கு பின் வந்தவர்களை நர்ஸ் ஒவ்வொருவராக அழைக்க நவீனுக்கு சற்று நிதானம் இழந்து நர்ஸிடம் கேட்டான்…
“என்ன சிஸ்டர் இப்ப வந்தவங்களை எல்லாம் உள்ளே அனுப்பறீங்க. நாங்க இங்க கிட்ட தட்ட மூணு மணி நேரமா உட்கார்ந்துட்டிருக்கோம் என் மனைவியை கூப்பிடவே மாட்டேங்கறீங்க”
“சார் உங்க மனைவி ரிப்போர்ட்ஸ் காக வெயிட் பண்ணறோம்”
என்று நர்ஸ் சொல்லிக்கொண்டிருக்கையிலே கம்பௌண்டர் வந்து ஒரு கவரை நர்ஸிடம் நீட்டினார். அதைப் பார்த்ததும் நர்ஸ் நவீனிடம்..
“இதோ ரிப்போர்ட்ஸ் வந்தாச்சு ஒரு ஃபைவ் மினிட்ஸ் இருங்க. உள்ள இருக்குற பேஷன்ட் போனதும் உங்க மனைவியை கூப்பிடுவாங்க”
அதே போல மிருதுளா பெயரை கூப்பிட இருவரும் டாக்டர் ரூமிற்குள் சென்று அமர்ந்து டாக்டரைப் பார்த்துக் கேட்க நவீன் முயற்சிக்கும் போது டாக்டர் உடனே..
“வாழ்த்துக்கள் நவீன் அன்ட் மிருதுளா இட்ஸ் கன்பார்ம்டு. உங்க இருவருக்கும் பெற்றோர் பிரமோஷன் கிடைத்திருக்கிறது.”
“தாங்க்ஸ் டாக்டர்” என நவீனும் மிருதுளாவும் ஒருமித்து சொன்னார்கள்.
“எல்லா ரிப்போர்ட்ஸையும் பார்த்தேன். எவ்ரிதிங் ஈஸ் ஃபைன். சில வைட்டமின் டாப்லெட்ஸ் எழுதறேன் அதை மட்டும் எடுத்துக்கோங்க மிருதுளா. நல்லா சத்தான ஆகாரம் சாப்பிடனும் சரியா. டேக் கேர் ஆஃப் ஹெர் நவீன். இனி நீங்க எப்பப்போ செக்கப் வரணும்ங்கறத நர்ஸ் ஒரு அட்டவணை ல எழுதிக் கொடுப்பாங்க அந்த டேட்ஸ் ல தவறாம செக்கப்புக்கு வந்திடணும் சரியா. பி ஹாப்பி ஆல்வேஸ்”
மீண்டும் நன்றியை தெரிவித்து நர்ஸிடம் டாக்டர் சொன்ன அட்டவணையை வாங்கிக் கொண்டு ஹாஸ்பிடல் விட்டு வெளியே வந்ததும் நவீன் மிருதுளாவை சற்று நேரம் வண்டிப் பக்கத்தில் நிற்க சொல்லிவிட்டு கடைக்குச் சென்று வந்தான். பின் இருவருமாக வீட்டிற்கு வந்தனர். வீட்டினுள் நுழைந்ததும் நவீன் மிருதுளாவைப் பார்த்து…
“மிருது வீ ஆர் கோயிங் டு பி பேரன்ட்ஸ் சூன். இந்தா உனக்கு ரொம்ப பிடிச்ச காட்பெரிஸ் டையரிமில்க் சாக்லெட்.”
“ஓ ஸோ சுவீட் ஆஃப் யூ நவீ. ஆமாம் எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் அம்மாகிட்ட சொல்லனும் போல இருக்கு.”
“ஆனா அவா ஆத்துக்கு போய் சேர இன்னும் அரைமணி நேரமாகுமே. யூ டோன்ட் வரி இன்னைக்கு நான் ஆபீஸ் போகலை. ஒரு மணி நேரம் கழிச்சு ஃபோன் பூத் போய் எல்லாருக்கும் சொல்லலாம் ஓகே”
“ஓகே. சரி எனக்கு காலை ல இருந்து ஒரு மாதிரி டென்ஷன் ஆனது ரொம்ப அசதியாயிருக்கு நான் கொஞ்ச நேரம் தூங்கட்டுமா?”
“இது என்ன கேள்வி மிருது? தூக்கம் வர்றதுன்னா தூங்கு. நான் சமையலை பார்த்துக்கறேன்”
“இல்லை ஒரு மணி நேரத்துல எழுப்பிடுங்கோ போய் ஃபோன் பண்ணி சொல்லிட்டு வரலாம்”
“ஓகே ஓகே இப்போ நிம்மதியா சந்தோஷமா தூங்கு”
மிருதுளா நன்றாக உறங்கினாள். ஒரு மணி நேரமானதும் நவீன் அவளை எழுப்ப முயன்ற போது அவனுக்கு மனம் வரவில்லை சாதாரண நாட்களிலேயே அவளை தொந்தரவின்றி தூங்க விடும் நவீன் அன்று அவளா எழுந்திரிக்கும் போது எல்லாருக்கும் சொன்னால் போதும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் ஏனெனில் அவள் மட்டுமா உறங்குகிறாள் அவளுள் அவன் பிள்ளையும் அல்லவா உறங்குகிறது. அவளை எழுப்பினால் இருவரும் எழுந்திடுவார்களே என எண்ணி அவனும் அவளருகே படுத்துறங்கிப் போனான். நவீன் உறங்கின சில மணி நேரத்தில் மிருதுளா எழுந்தாள்.
பக்கத்தில் நவீன் உறங்குவதைப் பார்த்தாள். கடிகாரத்தையும் பார்த்தாள். மணி இரண்டாகியிருந்தது. டைமை பார்த்ததும் அவளுக்கு பசி எடுக்க நவீன் ஏதாவது சமைத்து வைத்திருக்கிறானா என்று பார்க்க மெல்ல கட்டிலிலிருந்து இறங்கும் போது நவீன் விழித்துக் கொண்டான்.
“மிருது எங்க போற?”
“மணி என்ன ஆச்சு தெரியுமா? ரெண்டு ஆச்சு. எனக்கு பசிக்கறது.”
“ஊப்ஸ்…. நானும் உன் கிட்ட படுத்துண்டு இவ்வளவு நேரம் தூங்கிட்டேன். நான் போய் டாபாலேந்து சாப்பாடு வாங்கிண்டு ஒரு பத்தே நிமிஷத்துல வந்துடறேன் இரு.”
என்று கூறிக்கொண்டே கிளம்பி சென்றான் நவீன். அவன் சொன்னது போலவே பத்தே நிமிடத்தில் வராவிட்டாலும் சிறிது நேரத்தில் வந்தான். அவன் வருவதற்குள் மிருதுளா இரண்டு தட்டு, குடிக்க தண்ணீர், கரண்டிகள் என எல்லாவற்றையும் ஹாலில் எடுத்து வைத்திருந்தாள். சாப்பாட்டை வாங்கி வந்ததும் இருவரும் சாப்பிட்டார்கள். மிருதுளா பசி அடங்கியப் பின் நவீனிடம்…
“நான் ஒரு மணி நேரத்துல எழுப்பச் சொன்னா நீங்களும் என் கூட நல்லா தூங்கிருக்கேங்கள். சரி வாங்கோ இப்ப போய் சொல்லிட்டு வருவோம்”
“இப்பவா வேண்டாம் மிருது. வெளில வெயில் கொளுத்தறது. சாயந்தரமா வாக் போவோமில்லையா அப்போ போய் சொல்லலாம் சரியா”
“ஓகே ஓகே!! உங்களுக்கு பொண்ணு வேணுமா இல்லை பையன் வேணுமா?”
“உனக்கு என்ன குழந்தை வேணும் மிருது? எனக்கு பொண்ணு தான் வேணும்.”
“எனக்கும் பொண்ணு தான் வேணும் நவீ. உங்களுக்கு ஏன் பொண்ணு வேணும்னு சொல்லறேங்கள்”
“ஆமாம் எங்காத்துல எல்லாம் பசங்க தான் அதுனால நமக்கு பொண்ணு பொறக்கட்டுமேன்னு ஒரு ஆசை. சரி உனக்கு ஏன் பொண்ணு வேணும்”
“ஏன்னா பொண்ணுகளுக்கு தான் அழகழகான டிரஸ் போட்டுப் பார்க்க முடியும் பசங்களுக்கு என்ன இருக்கு சொல்லுங்கோ”
“அடிப் பாவி டிரஸ் போட்டுப் பார்க்க பொண்ணு வேணுமா உனக்கு”
“ஆமாம். இதில எனக்கொன்னும் தப்பாவே தெரியலையே. “
“தப்புன்னு யார் சொன்னா? உன்னோட காரணம் கேட்க வேடிக்கையா இருக்கு”
இப்படியே குழந்தைப் பற்றி பேசிக்கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியாமல் போனது இருவருக்கும். மாலை நேரமானதும் வழக்கம் போல காபி குடித்து, முகம் கை கால் கழுவி விட்டு சாமிக்கு விளக்கேற்றி கும்பிட்டு சற்று நேரம் வாசல் கதவை திறந்து வைத்து உட்கார்ந்தனர். மணி ஆறரை ஆனதும் மிருதுளா…
“நவீன் ஃபோன் பண்ண போகலாமா ?”
“ஓ போகலாமே.”
ஃபோன் பூத்தை நெருங்கியதும் யார் இதை சொல்வது என்ற பேச்சு வார்த்தை வந்தது. அப்போது மிருதுளா…
“நான் என் பேரன்ட்ஸ்ட்ட சொல்லிட்டு உங்க கிட்ட ஃபோனைத் தரேன். அதே போல நீங்க உங்க பேரன்ட்ஸ்ட்ட சொல்லுங்கோ இன்னுட்டு என்கிட்ட தாங்கோ நான் பேசறேன் டீல் ஓகே வா?”
“ஓகே மா. வா வா”
முதலில் மிருதுளா ஃபோன் பேச அவள் பெற்றோர் வீட்டு நம்பரை டையல் செய்தாள். முதல் ரிங்கிலேயே அம்புஜம் ஃபோனை எடுத்து…
“ஹலோ நான் அம்புஜம் பேசறேன்”
“ஹலோ அம்மா …நான் மிருது பேசறேன்”
“சொல்லு மிருது உன் ஃபோனுக்காக தான் காலையில இருந்து இந்த ஃபோனையே பார்த்துண்டு இருக்கேன். டாக்டர்ட்ட போனேங்களா? டாக்டர் என்ன சொன்னா?”
“அம்மா என்னை கொஞ்சம் பேச விடுமா. டாக்டர்ட்ட போனேன் அவா சில டெஸ்டெல்லாம் எடுத்துட்டு கன்பார்ம் பண்ணிட்டா. ஸோ நீ பாட்டியாக போற.”
“அம்மா தாயே நன்றி மா(என அம்மன் படத்தைப் பார்த்து சொன்னாள்) ரொம்ப சந்தோஷமா இருக்கு மிருது. நீ நல்லா சாப்டு உடம்பை பார்த்துக்கோ. சரி… மாப்ள பக்கத்துல இருக்காரா?”
“இதோ கொடுக்கறேன். நவீன் இந்தாங்கோ”
“ஹலோ நான் நவீன் பேசறேன்.”
“வாழ்த்துக்கள் அப்பா ஆக போறேங்கள். எங்களுக்கெல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம். மிருதுவ நல்லபடியா பார்த்துக்கோங்கோ. இருங்கோ எங்காத்துக்காரர்ட்ட கொடுக்கறேன்”
“வாழ்த்துக்கள் மாப்ள அன்ட் மிருது. ரொம்ப சந்தோஷம் அவள நல்லா பார்த்துக்கோங்கோ”
“ஷுவர் ஷுவர் நிச்சயமா. தாங்க்ஸ். உங்க எல்லாருக்கும் பிரயாணம் எல்லாம் சௌகர்யமா இருந்துதா?”
“நாங்க நல்லா சௌகர்யமா வந்து சேர்ந்தோம். உங்க தம்பிகளை ஆத்துல விட்டுட்டு தான் நாங்க ஆத்துக்கு வந்தோம்”
“ஓகே நான் வச்சுடட்டுமா. இல்ல மிருது வ பேச சொல்லட்டுமா?”
“பரவாயில்லை மாப்ள வச்சுடுங்கோ. பை குட் நைட். மிருதுட்டையும் சொல்லிடுங்கோ”
நவீன் ஃபோனை வைத்து விட்டு மிருதுளாவிடம்…
“உங்க அம்மா அன்ட் அப்பாக்கு என்ன ஒரு சந்தோஷம்”
“பின்ன இருக்காதா தாத்தா பாட்டின்னா சும்மாவா!!! உங்க பேரன்ட்ஸும் அப்படி தான் பேசுவா பாருங்கோ. அவாளுக்கும் ஃபோன் போடுங்கோ”
நவீன் அவன் பெற்றோர் வீட்டுக்கு ஃபோன் செய்தான். ஒரு அஞ்சு நிமிடம் கழித்து ஃபோனை எடுத்தார் ஈஸ்வரன்…
“ஹலோ”
“ஹலோ நான் நவீன் பேசறேன்”
“ஹாங் நவீன் சொல்லு பவினும், ப்ரவினும் வந்தாச்சு”
“ஒகே. ஒரு குட் நியூஸ்.”
“என்னது?”
“நீங்க தாத்தா பாட்டி ஆக போறேங்கள்”
“அப்படியா சந்தோஷம் இதோ பர்வதம் பேசணுமாம் குடுக்கறேன்.”
“ஹலோ”
“மிருதுளா பிரக்னென்ட் ஆகிருக்கா. நாங்க அப்பா அம்மா ஆக போறோம்.”
“ஓ சரி. மிருதுளாட்ட ஃபோனைக் குடு “
நவீன் மிருதுளா பெற்றோரின் சந்தோஷம் தன் பெற்றோரிடமும் எதிர்ப்பார்த்து விஷயத்தை சொல்ல அதற்கு அவர்களின் சுரத்தில்லாத பேச்சு அவனுக்கு ஏன்டா சொன்னோம் என்பது போல அவன் மனம் நினைத்தது முகம் வாடி காட்டிக்கொடுத்ததை கவனித்த மிருதுளா “என்ன ஆயிற்று ” என்று சைகையில் கேட்க ஃபோனை அவளிடம் கொடுத்தான் நவீன். அவளும் வாங்கிக் கொண்டு..
“ஹலோ நான் மிருதுளா பேசறேன்”
“நவீன் சொன்னான்….ஆமாம் அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்?”
என்று ஒரு மிரட்டல் துவனியில் கேட்க…
பால் பொங்கி வரும் வேளை கொஞ்சம் தண்ணீர் தெளித்து அதை பொங்க விடாமல் தடுப்பதுபோல பர்வததின் பேச்சு மிருதுளா மனதில் பொங்கி வழிந்த சந்தோஷத்தில் தண்ணீர் தெளித்தது போல் ஆக அவளின் முகம் சட்டென மாறியது.
“என்னமா கேட்டேங்கள்?”
“இல்ல ஒரு ரெண்டு மூணு வருஷம் கழிச்சு ஆகிருக்கலாமேன்னு சொன்னேன்”
எந்த ஒரு அப்பா அம்மாவும் தாத்தா பாட்டி ஆகிவிட்டனர் என தெரிந்தால் பேரானந்தம் கொள்வார்கள். அவர்கள் அப்பா அம்மா ஆனபோதிருந்த மகிழ்ச்சியை விட பாட்டி தாத்தா ஆனதில் தான் பெருமகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் இப்படி ஒரு ரியாக்ஷனை துளியும் எதிர் பார்க்காத மிருதுளாவின் மனம் வருந்தியது அதற்கு மேல் பேச்சைத் தொடர விரும்பாமல்…
“சரி நான் நவீன்ட்ட குடுக்கறேன்”
என்று சட்டென ஃபோனை மிருதுளா குடுத்ததிலிருந்தே நவீனுக்கு புரிந்துவிட்டது ஏதோ சரியில்லை என்பது அதனால் ஃபோனை அவளிடமிருந்து பெற்றதும்….
“நான் நவீன் …சரி சரி நாங்க அப்புறமா பேசறோம் பை ”
என ஃபோனை கட் செய்து நவீன் காசுக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது மிருதுளா வெளியே வந்து வீட்டிற்கு மெல்ல நடக்கலானாள். நவீன் வெளியே வந்து பார்த்ததும் மிருதுளாவை காணவில்லை என தேட பின் வீட்டிற்கு நடந்துச் சென்றுக் கொண்டிருப்பவளை நோக்கி வேகமாக அவள் பின்னால் சென்றான்.
தொடரும்….
அத்தியாயம் 32: மீண்டும் இருவர் மட்டும்

ஊருக்கு கிளம்ப மீதமிருந்த ஐந்து நாட்களும் பசங்க மூவரும் சுற்றுலா கதையையே மிருதுளாவிற்கும் நவீனிற்கும் விவரித்துக் கொண்டிருந்தனர். அம்புஜம் மகளுக்கு வேண்டிய புளி காய்ச்சல், ஊறுகாய்கள் என மகள் கேட்டுக்கொண்டதை எல்லாம் செய்து டப்பாக்களில் போட்டு வைப்பதில் மும்முரமாக இருந்தாள். நவீன் ஆபிஸ் க்ளாஸ் என்று ஓடிக்கொண்டே இருந்தான். ராமானுஜம் பக்கத்திலிருக்கும் கடைக்கு தினமும் சென்று அவருக்கு தெரிந்த ஹிந்தியில் பேசி காய்கறிகள், பழங்கள் என வாங்கி வந்து அதை அலம்பி வெட்டி காய்களை ஃப்ரிஜில் கவர்களில் போட்டும் பழங்களை அன்றன்றே நறுக்கி அனைவருக்கும் கொடுத்தார். இதனால் மிருதுளா தினமும் நிறைய பழங்கள் சாப்பிட்டு வந்தாள்.
வெள்ளிக்கிழமை நவீன் ஆபீஸுக்கு லீவுப் போட்டு காலை உணவருந்திய பின் அனைவரையும் அழைத்துக்கொண்டு பக்கத்திலிருக்கும் மார்க்கெட்டுக்கு சென்றனர் மிருதுளாவும் நவீனும். அங்கே ஒரு கடையினுள் சென்று மூன்று பசங்களிடமும் அவர்களுக்கு வேண்டிய டிரஸ் எடுத்துக்க சொன்னார்கள். அதில் வேனு ஒரு செட், பவின் ஒரு செட் என எடுத்துக்கொண்டனர் ஆனால் ப்ரவின் மட்டும் அனைத்து துணிகளையும் ஆராய்ந்து புரட்டிப்போட்டு இரண்டு செட் எடுத்து வந்தான். அதைப் பார்த்த மிருதுளா வேனுவிடமும் பவினிடமும் இன்னும் ஒரு செட் டிரஸ் எடுத்துக்கச் சொன்னாள் அதற்கு இருவரும் அவர்களுக்கு ஒரு செட் போதும் என்று கூற நவீன் பில் செட்டில் பண்ணி விட்டு
அவரவர் துணிப் பையை அவரவரிடம் கொடுத்தான். கொஞ்ச நேரம் மற்ற கடைகளை எல்லாம் பார்த்துக் கொண்டே நடந்தவர்களை மற்றுமொரு கடைக்குள் நுழையச் சொன்னாள் மிருதுளா. அது புடவைக் கடை அதில் தனது அம்மாவை செலக்ட் செய்ய சொல்ல அதற்கு அம்புஜம் மறுக்க பின் மிருதுளாவே நல்ல காட்டன் புடவை இரண்டு ஒரே மாதிரி டிசைன் ஆனால் கலர் வேறு வேறாக எடுத்து அதையும் பில் போட்டுப் பெற்றுக்கொண்டு பக்கத்துக் கடைக்குள் சென்றனர். அங்கிருந்து ஒரே மாதிரியான இரண்டு சட்டைகள் வெவ்வேறு நிறத்தில் எடுத்துக்கொண்டு பின் அங்கேயிருந்த டாபாவில் மத்திய உணவருந்தினர். அம்புஜத்திற்கு வெறும் சாதமும் தயிரும் மட்டும் வாங்கிக் கொடுத்தாள் மிருதுளா. அம்புஜம் அதற்கு தொட்டுக்கொள்ள அவள் செய்த ஊறுகாயிலிருந்து கொஞ்சத்தை ஒரு சின்ன டப்பாவில் போட்டு எடுத்து வந்திருந்தாள் அதைத் தொட்டுக்கொண்டு சாப்பிட அனைவரும் சிரித்துக்கொண்டே அவரவர் ஆர்டர் செய்ததை ரசித்து ருசித்து உண்டனர். சாப்பிட்டதுக்கு பில் செட்டில் செய்யும் போது வேனு..
“அத்திம்ஸ் எங்க அம்மா சாப்பாட்டுக்கு தான் ஜாஸ்த்தி சார்ஜ் பண்ணிருப்பா பாருங்கோ”
என கூறியதும் அனைவரும் சிரித்தனர். அப்போது ப்ரவின்…
“மாமி ஸ்பெஷல் ஐட்டம் இல்லையா சாப்ட்டுருக்கா.”
என்று கேலியும், கிண்டலும், சிரிப்புமாக அனைவரும் ஒரு ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தனர். சற்று நேரம் அவர்கள் வாங்கின டிரெஸ் எல்லாம் பார்த்தனர் பின் அவரவர் பெட்டியில் வைத்து அடுக்கத்துவங்கினர். அப்போது மிருதுளா ப்ரவினிடம் ஒரு பையை கொடுத்து அதையும் சேர்த்து பேக் பண்ண சொன்னாள் அதற்கு ப்ரவின்…
“என்னது இது மன்னி?”
“இது இந்த ஊரு ஸ்பெஷல் சுவீட்ஸ் மோஹன்தால் அன்ட் சூரத்தி காரி. இரண்டு சுவீட்டுமே சூப்பரா இருக்கும். அப்பறம் அம்மா அப்பாக்கு புடவை அன்ட் ஷர்ட் இருக்கு இதை எல்லாம் அம்மாட்ட குடுத்துடு”
“மிருதுக்கா சுவீட் ஒன்லீ ஃபார் மாமியாரா. எங்களுக்கு இல்லையா?”
“இதோ இது உனக்கும் அப்பா அம்மாவுக்கும் வச்சுக்கோ இதையும் சேர்த்து பேக் பண்ணிடுமா. இருங்கோ அந்த சுவீட்ஸ் எப்படி இருக்கும்ன்னு தெரிஞ்சுக்க இதோ இந்த டப்பாவை திறங்கோ எல்லாருமா சாப்பிடலாம்”
என்று கூறி சுவீட் டப்பாவை நவீனிடம் கொடுத்தாள் மிருதுளா. அதை வாங்கி திறந்து அனைவருக்கும் கொடுத்தான் நவீன்.
“வாவ் சூப்பரா இருக்கு இந்த சுவீட் மிருதுக்கா”
“ஆமாம் மன்னி செம டேஸ்ட்டியா இருக்கு.”
“அம்மா நீயும் சாப்பிடலாம். இதில் எஸன்ஸ் எதுவுமில்லை.”
“சரி ஒரு சின்ன பீஸ் குடு சாப்ட்டு பார்க்கறேன்”
“நல்லாருக்கே இந்த சுவீட். நாம எப்பவும் சாப்டுற நம்ம ஊரு சுவீட்லேந்து ஒரு வித்தியாசமான சுவீட்டா இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.” என்றார் ராமானுஜம்
“அட ஆமாம் நல்லா தான் இருக்கு” என அம்புஜம் இன்னொரு பீஸ் கேட்டு வாங்கி சாப்பிட்டாள்.
ஊருக்கு போட்டுக்கொண்டு போக வேண்டிய டிரஸை மட்டும் வெளியே வைத்துவிட்டு மற்றவைகளை பெட்டிகளில் அடுக்கி எல்லா பேக்கிங்கையும் தயார் செய்து ஒரு ஓரத்தில் வரிசையாக பேக் மற்றும் பெட்டிகளை அடுக்கி வைத்து விட்டு இரவு உணவருந்தி விட்டு அனைவரும் எழுந்ததும் மிருதுளாவும் அம்புஜமும் சாப்பிட அமர்ந்தனர். அப்போது அம்புஜம்..
“மிருது டைம்க்கு சாப்பிடு. நல்லா சாப்பிடு. உடம்ப பார்த்துக்கோ. திங்கட்கிழமை உன்ட்ட இருந்து வர போற நல்ல செய்திக்காக நான் ஆவலா காத்துண்டிருப்பேன் மறக்காம ஃபோன் பண்ணிச் சொல்லு”
“அது என்ன திங்கட்கிழமை செய்தி மாமி?” என்று ப்ரவின் கேட்க உடனே நவீன்
“அவா ஏதோ பேசிக்கறா உனக்கென்ன டா. நீ ஏன் அவா பேசறதுல உன் மூக்கை நுழைக்கற. பேசாம டிவியைப் பாரு”
வெளியே ஏதோ மணி அடிக்கும் சத்தம் கேட்டதும் பவினும் வேனுவும் கதவைத்திறந்து பார்த்தனர். உள்ளே வந்து வேனு….
“மணி சத்தம் வேற எதுவும் இல்லை குல்ஃபி வண்டி வந்திருக்கு. எல்லாரும் குல்ஃபி சாப்பிடலாமா? யார்யாருக்கு வேணும்ன்னு சொல்லுங்கோ”
“இந்தா டா வேனு. ஒரு பத்து வாங்கிண்டு வா. வேணுங்கறவா எடுத்துக்கட்டும் மீதியிருந்தா ஃப்ரிஜ்ல வச்சுக்கலாம்” என்று ராமானுஜம் வேனுவிடம் காசு கொடுத்து அனுப்ப வேனுவும் தன் அப்பா சொன்னது போலவே பத்து வாங்கிவந்து அனைவருக்கும் கொடுத்தான். மீதமிருந்த அஞ்சு குல்ஃபியை ஃப்ரிஜில் வைத்துக்கொண்டே….
“அம்மா அன்ட் மிருதுக்கா உங்க ரெண்டு பேரோடதும் சேர்த்து உள்ள வைக்கறேன். நீங்க சாப்ட்டுட்டு எடுத்துக்கோங்கோ”
“தாங்கஸ் டா வேனு. நாங்க அப்பறமா எடுத்துக்கறோம். அம்மா நீ எதுவும் நினைச்சு கவலைப் படாதே. நிச்சயம் ஃபோன் பண்ணறேன். என்ன நீங்க எல்லாரும் போயிட்டா வீடே வெறுச்சோடி இருக்கும்.”
“அதுக்கென்ன பண்ண முடியும் மா. அப்பாக்கு ஆபிஸ் போகணும். வேனுக்கு காலேஜ் போகணும். என்ன பண்ண!”
இருவருமாக பேசிக்கொண்டே உணவருந்தி பின் குல்ஃபியை சாப்பிட்டுக்கொண்டிருக்கையில்….
“மிருதுக்கா ஒரு கேம் கார்ட்ஸ் விளையாடலாமா”
“டேய் வேனு மணி ஒன்பதாச்சுடா”
“அம்மா நாளைக்கு இந்த நேரம் ரெயில்வே ஸ்டேஷன்ல இருப்போம். இன்னைக்கு மட்டும் ஒரு பத்து மணி வரைக்கும் விளையாடலாமே”
“சரி டா வேனு நான் வறேன்” நவீன் சொல்ல
“நாங்களும் வறோம்” என்றனர் பவினும் ப்ரவினும்.
மெஜாரிட்டி ஆண்கள் பக்கம் என்பதால் மிருதுளாவும் அம்புஜமும் வேறு வழியின்றி விளையாட சம்மதித்து அவர்களின் சீட்டாட்ட குழுவில் சேர்ந்துக்கொண்டனர். அனைவருமாக இரவு பத்து மணி வரை விளையாடிவிட்டு பின் உறங்க படுத்துக்கொண்டாலும் சில மணி நேரம் அரட்டை அடித்த பின்னரே உறங்கலானார்கள்.
மறுநாள் சனிக்கிழமை அன்று அம்புஜம் விருந்து சமையல் சமைத்தாள். சாம்பார், ரசம், அவியல், இரண்டு பொறியல், பாயசம் என அனைத்தும் சமைத்து ராமானுஜத்திடம் வாழை இலை வீட்டின் பின்னாலிருந்து வெட்டி வரச்சொல்லி அனைவருக்கும் வாழை இலைப் போட்டு சாப்பாடு பரிமாறினாள். அப்போது மிருதுளா…
“என்ன மா இன்னைக்கு ஊருக்கு போற குஷி ல சும்மா சூப்பரா சமச்சிருக்க…இவ்வளவு ஐட்டம்ஸ் பண்ணிருக்க.”
“இல்லமா இன்னைக்கு போனா இனி எப்போ மறுபடியும் வர வாய்ப்பு கிடைக்கும்ன்னு தெரியலை அதுனால என் பொண்ணுக்கும் மாப்ளைக்கும் இப்படி சமைச்சேன் நல்லாருக்கில்லையா!!”
“சூப்பரா இருக்கு மாமி. நீங்க அண்ணா மன்னிக்கு மட்டும் சமச்சேங்கள்ன்னா ஏன் எங்களுக்கும் பரிமாறினேங்கள்” என பவின் கேட்க
“எல்லாருக்குமாக செய்தேன் போறுமா. நன்னாயிருக்கோனோ எல்லாரும் நல்லா சாப்டுங்கோ.”
அனைவரும் சாப்பிட்டப்பின் சற்று நேரம் ஓய்வெடுத்தனர். மாலை நான்கு மணிக்கெல்லாம் காபி குடித்து விட்டு பிரயாணத்துக்கு வேண்டிய சாப்பாட்டை செய்து ஹாலில் கொண்டு வந்து வைத்தாள் அம்புஜம். அவற்றை ஐந்து ஐந்து பொட்டலங்களாக கட்டி, பாட்டில்களில் தண்ணீர் நிறப்பி, வடாமை ஒரு கவரில் போட்டு கட்டி, எல்லாவற்றையும் ஒரு கட்டப்பையில் அடுக்கி வைத்தார் ராமானுஜம்.
ஒருவர் பின் ஒருவராக குளித்து கிளம்ப சரியாக இருந்தது. நவீன் தனது நண்பன் ஓம்னி வேனை எடுத்து வந்து அதில் பெட்டிப் படுக்கைகள் என அனைத்து சாமான்களையும் ஏற்றினார்கள் பவின், ப்ரவின் மற்றும் வேனு. எல்லாரும் தயார் ஆனதும் வேனில் ஏறி ரெயில்வே ஸ்டேஷனை எழரை மணிக்கு சென்றடைந்தனர். அங்கே ஸ்டான்டில் வண்டியை பார்க் செய்து விட்டு அவரவர் சாமான்களை அவரவர் தூக்கிக்கொண்டு அவர்கள் செல்லவிருக்கு ரெயில் நிற்கும் ப்ளாட்பாரத்திற்கு எட்டு மணிக்கு சென்றனர். அங்கே அவர்கள் ரெயில் நின்றுக்கொண்டிருந்தது. அதில் பொருட்களை ஏற்றி செட் செய்தப்பின் வண்டியிலிருந்து அனைவருமாக கீழே இறங்கி வண்டி கிளம்ப பதினைந்து நிமிடங்கள் இருப்பதால் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது மிருதுளா தனது அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு மௌனமாக இருந்தாள். அவள் கண்களில் கண்ணீர் மடை திறக்க காத்திருக்கும் நதி போல உருண்டோட காத்திருந்தது. அதை கவனித்த அம்புஜம் தன் மகளின் கையை தட்டிக் கொடுத்துக் கொண்டே ….
“சரி மா… சரி ரெண்டு பேரும் நல்லா சந்தோஷமா இருங்கோ. மாப்ள எங்க பொண்ண நல்லா தான் பார்த்துக்கறேங்கள். இதே போல எப்பவும் அவள பார்த்துக்கோங்கோ. அவள சந்தோஷமா வச்சுக்கோங்கோ.”
ரெயில் கிளம்ப போகிறது என்பதற்கான சங்கு ஊத அனைவரும் வேகமாக ரெயிலில் ஏறி அவரவர் இருக்கையில் அமர்ந்ததும் ரெயில் மெல்ல நகர ஆரம்பித்தது….
“பை அண்ணா மன்னி “
“அப்பா அம்மாவ கேட்டதா சொல்லுங்கோ பவின் அன்ட் ப்ரவின்” என்றாள் மிருதுளா
“பை மிருதுக்கா.. பை அத்திம்ஸ்”
“பை டா வேனு. டேக் கேர்.”
“அம்மா அம்மா அம்மா பை !! அப்பா பை!”
“பை மா மிருது. பை மாப்ள” என்றாள் அம்புஜம் கண்ணில் கண்ணீரோடு
“நாங்க போயிட்டு வறோம் மாப்ள. வறோம் மா மிருது” என்று கறகறத்த குரலில் சொன்னார் ராமானுஜம்.
“ஓகே எந்த கவலையும் இல்லாம போயிட்டு வாங்கோ” என்றான் நவீன் தனது மாமனார் மற்றும் மாமியாரிடம்.
ரெயில் கொஞ்சம் வேகம் எடுக்க மெல்ல மிருதுளா கைகளிலிருந்து அவள் அம்மாவின் கை நழுவியது. அம்புஜம் முடிந்த வரை தனது கையை ஜன்னல் வெளியே விட்டு ஆட்டிக்கொண்டே சென்றாள். சிறிது நேரத்தில் கும்பலாக இரந்த அந்த ப்ளாட்பாரம் ஆள் நடமாட்டமில்லாமல் ஆனது. அதுவரை மிருதுளா அங்கேயே அமர்ந்து அழ அவளை சமாதானம் படுத்த மிகவும் சிரம பட்ட நவீன்….
“மிருது எல்லாரும் போயாச்சு ப்ளாட்பாரமே காலியா இருக்கு. ரெயில் போய் இருபது நிமிஷமாச்சு. அது தான் இன்னும் மூணு மாசததுல நாமளே ஊருக்கு போக போறோமே அப்பறம் என்ன!! வா கண்ண தொடச்சுக்கோ. மணி வேற ஆகறது. நாம வந்த வண்டியை திருப்பிக்குடுக்கனுமில்லையா. எழுந்திரி மிருது போகலாம்.”
மிருதுளா சமாதானம் ஆகாவிட்டாலும் வீட்டுக்கு போயாக வேண்டுமே என்றோ!!! இல்லை தங்களுக்குதவிய நண்பனின் வண்டியை திருப்பி நேரத்துக்கு குடுக்க வேண்டுமென்றோ!! இரவுநேரம் வேற ஆகிறதென்றோ!!! ஏதோ ஒரு காரணத்தினாலோ அல்லது இவ்வனைத்து காரணத்தினாலோ சட்டென கண்களைத் துடைத்துக்கொண்டு நவீனுடன் வீட்டுக்கு புறப்பட்டாள் ஆனால் அவள் கண்கள் வற்றவில்லை அதில் கண்ணீர் பெருக்கெடுத்துக்கொண்டே தான் இருந்தது.
அவர்கள் கேம்ப்புக்குள் வந்ததும் நேராக வண்டியை நவீன் நண்பனிடம் ஒப்படைத்து விட்டு இருவருமாக நடந்து வீட்டுக்குச் செல்லும் போது …மிருதுளா …
“இவா எல்லாரும் ஏன் வரணும், நாம எல்லாருமாக ஏன் அவ்வளவு ஜாலியா இருந்திருக்கனும் அப்பறம் ஏன் இப்படி நம்மள அம்போன்னு விட்டுட்டு அவா எல்லாரும் கிளம்பி போகணும்?”
“அது தான் மா லைஃப் மிருது. இனி இப்படி தான் எப்பவாவது எல்லாருமா நம்மள பார்க்க, நம்மளோட இருக்க வருவா அப்புறம் கிளம்பி போவா. நீ அவா வந்துட்டு போற ஒவ்வொரு தடவையும் இப்படி தான் அழப்போறயா என்ன?”
“மனசு ரொம்ப சங்கடப்படறது நவீ. எனக்கு வீட்டுக்குள்ள போகவே என்னவோ மாதிரி இருக்கு. யாருமே இல்லாத வீடு போல தோணும்”
” மூணு வாரத்துக்கு முன்னாடி வரை நம்ம ரெண்டு பேரு மட்டும் தானே இருந்தோம் அப்போ பிடிச்சிருந்தது இல்ல அது மாதிரிதான் இப்போவும். இங்க பாரு மிருது யாரு வேணும்னாலும் நம்ம லைஃப் ல வரலாம் போகலாம் ஆனா கடைசி வரைக்கும் இனி நாம மட்டும் தான் புரியறதா?”
“அதெல்லாம் புரியறது ஆனா மனசு அதை ஏத்துக்க மாட்டேங்கறது நவீ”
“இப்போ அப்படி தான் இருக்கும் இன்னும் சில வருஷம் போனா மனசு புரிஞ்சுக்கும் அதை ஏத்துக்கவும் செய்யும் அதுவரை கொஞ்சம் காத்திருக்க தான் வேணும். உன் மனசும் நானும்”
“ஆமாம் ஆமாம் பார்ப்போம் பார்ப்போம்”
என்று கூறினாலும் அவள் கண்களிலிருந்து கண்ணீர் பல நாட்களாக ஸ்டாக் வைத்திருந்தது போல பொல பொலவென உரண்டோடிக்கொண்டே தான் இருந்தது. அதை பார்த்த நவீன் மீண்டும்…
“என்ன மிருது உனக்குள்ளேயே நிறைய உறுப்புகள் சரியான குவார்டினேஷனே இல்லாம இருக்கு !!!! வாய் பார்க்கலாம்ன்னு சொல்லறது ஆனா கண்ணு அதை ஏத்துக்காம நிக்காம மழை பொழிஞ்சிண்டே இருக்கே. சரி மன்டே காலை ல டாக்டர்ட்ட போகணும் ஞாபகம் இருக்கா?”
என்று பேச்சை திசைத் திருப்ப வீடும் வந்தது. வீட்டைத் திறந்தான் நவீன். இருவருமாக உள்ளே நுழைய மிருதுளாவிற்கு அவள் அப்பா அம்மா மற்றும் தம்பிகள் ஹாலில் உட்கார்ந்துக் கொண்டு இருப்பது போல தெரிய மீண்டும் அவள் கண் கலங்கினாள். ஆனாலும் அதை துடைத்துக் கொண்டே…
“ஓ!!! நல்லா ஞாபகம் இருக்கே. ஐ ஆம் வேயிட்டிங் ஃபார் மன்டே நவீ”
இருவரும் முகம் கை கால் அலம்பி விட்டு சற்று நேரம் டிவி பார்த்தப் பின் அம்புஜம் அவர்களுக்கும் சுட்டு வைத்திருந்த சப்பாத்தியையும் மசாலாவையும் சாப்பிட்டனர். அதே குல்ஃபி காரன் மணி அடிக்க அதைக் கேட்ட மிருதுளா…
“ஹேய் நவீ நேத்து வேனு வாங்கின குல்ஃபி ப்ரிஜ்ல இருக்கு சாப்பிடலாமா!”
“ஓ எஸ்” என கூறிக்கொண்டே ஃப்ரிஜை திறந்துப் பார்த்தான் நவீன் ஆனால் அதில் குல்ஃபி இருக்கவில்லை.
“அட இங்கே ஒரு குல்ஃபி கூட இல்லை மிருது எப்போ யாரு சாப்ட்டானே தெரியலையே நாமளும் இங்கே இருந்திருக்கோம் பாரேன்!”
“ஓ !!! ஆமாம் ஆமாம் இன்னைக்கு மத்தியானம் பசங்க சாப்ட்டா. சாரி நான் தான் மறந்துட்டேன்”
“சரி இரு நான் போய் ரெண்டு வாங்கிண்டு வரேன்”
நவீன் குல்ஃபி வாங்கி வர… மிருதுளாவும் நவீனுமாக திரைப்படம் பார்த்துக்கொண்டே அதை உண்டு முடித்து பின் உறங்க படுத்துக்கொண்டனர். மிருதுளா திரும்பி படுத்துக் கொண்டு மெல்ல அழுவதை கவனித்த நவீன் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு ….
“டோன்ட் வரி மிருது ஜஸ்ட் மூணு மாசம் தான் வீ வில் கோ தேர் அன்ட் பி வித் தெம். நீ சமாதானம் ஆயிட்டன்னு நினைச்சேன் மறுபடியும் ஆரம்பிக்கற. ப்ளீஸ் ஜஸ்ட் ரிலாக்ஸ் அன்ட் ஸ்லீப்.”
என கூற மிருதுளாவும் கண்களைத் துடைத்துக்கொண்டு நவீனை கட்டிக்கொண்டு உறங்கினாள்.
ஆக மீதமிருந்த ஐந்து நாட்களும் விருந்தினருடன் சந்தோஷமாக கழித்ததாலும் ஸ்பெஷல் விருந்தினரான பவின் அன்ட் ப்ரவினும் ஏதும் அனாவசியமாக பேசாததினாலும் வாசகர்களாகிய நமக்கு சுவாரஸ்யம் கொஞ்சம் குறைந்தது போல இருந்தாலும்… உணர்ச்சிகள் பொங்கி வழிந்ததை நம்மால் உணர முடிந்தது இந்த வாரம். உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத சுமையாகிவிடும், ரசனை இல்லாமல் போய் விடும் பின் நல்லவை நமது கண்களுக்கு புலப்படாமல் இருந்துவிடும். நவீன் கூறியது போல திருமணம் என்ற பந்தம் ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் கடைசி வரை வரக்கூடிய ஒரே பந்தமாகும்.
இவர்களும் அது போலவே இருந்தால் நல்லது தான் இல்லையா?
தொடரும்…….
அத்தியாயம் 31: பயணமும் தனிமையும்

பசங்க மூணு பேரும் டிரிப் போகும் போது வழியில் உண்பதற்கு சிப்ஸ் மற்றும் சில நொறுக்கு தீணிகளை கடையிலிருந்து வாங்கி வந்தனர். வீட்டில் இருந்துக்கொண்டு இது போன்ற தீணிகளை உண்பதற்கும் வெளியே சுற்றுலா போகும் போது உண்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது என்பது பசங்களின் அபிப்பிராயம் மட்டுமில்லை நமக்கே அப்படிதான் இல்லையா நண்பர்களே. ஆனால் அதை பார்த்த ராமானுஜம்…
“ஏன்டா பசங்களா இங்க நம்ம ஊர்லேந்து கொண்டு வந்த நொறுக்கு தீணிகளே இருக்கு இதில இன்னும் வேற வாங்கிண்டு வந்திருக்கேங்கள்! அதே போறாதோ?”
“அப்பா அதையே தான் மூணு வாரமா சாப்பிட்டோம். ஒரு நாளைக்கு சேஞ் இருக்கட்டுமே”
“ஆமாம் மாமா வேனு சொல்லறா மாதிரி முறுக்கு, ரிப்பன் பக்கோடா, மிச்சர் சாப்ட்டு சாப்ட்டு போர் அடிச்சுப்போச்சு. எங்களுக்காக ஒரு நூறு ரூபாய் செலவழிக்க மாட்டேளா என்ன!”
“செலவழிக்கறத பத்தி நினைச்சிருந்தேனா வேனுட்ட காசு குடுத்தனுப்பியிருக்கவே மாட்டேனே!!! ஆத்துல பட்சணங்கள் இருக்கும் போது ஏன் வெளியே வாங்கினேங்கள் ன்னு தான் கேட்கறேன்….சாப்ட்டு அலுத்துப்போச்சுன்னு சொல்லறேங்கள் ஓகே ஒத்துக்கறேன். எங்களுக்கெல்லாம் கிடைச்சா மாதிரி வருஷத்துல ஒரு தடவை மட்டுமே பட்சணம் செய்து கொடுத்தா அது அலுத்துப்போகாது அதவிட்டுட்டு எப்ப வேணுமோ அப்போ எல்லாம் கிடைச்சா இப்படிதான் இருக்கும். உங்கள சொல்லி தப்பே இல்லை.”
“அப்பா உங்க காலம் வேற. அப்போ எல்லாம் ஒரு குடும்பத்தில கொறஞ்சது ஏழு அல்லது எட்டு பேர் இருந்தேங்கள் அத்தனை பேருக்கும் அடிக்கடியா பட்சணங்கள் பண்ணித்தர முடியும்? அதனால வருஷத்துல ஒரு தடவை செஞ்சா …ஆனா இப்போ ஒரு குடும்பதுல நாலு பேரு தான் ஸோ எப்போ தோணறதோ அப்போ எல்லாம் செய்து சாப்படறா”
“அது வாஸ்தவம் தான்”
“சரி சரி எல்லாரும் சீக்கிரம் சாப்ட்டு தூங்கினாதானே நாளைக்கு காலங்காத்தால எழுந்துக்க முடியும். இப்படி பேசிண்டே இருந்தா அப்பறம் எல்லாருமா தூங்கிப் போயிடுவேங்கள் இல்லாட்டி ரெண்டு இடம் பார்த்ததும் டையர்டா ஆகிடுவேங்கள். அம்மா நீ இன்னும் கிட்சன்ல என்ன பண்ணிண்டிருக்காய்? உனக்கும் தான் சொல்லறேன்”
“இதோ ஆயிடுத்து வந்துடறேன். வந்தாச்சு போறுமா”
“என்ன மெனு கட்டிண்டு போற மா நீ”
“காலைக்கு இட்டிலியும் கொத்தமல்லி சட்னியும், மத்தியானத்துக்கு புளியோதரையும் தயிர் சாதமும், வடாமும் கட்டிண்டிருக்கேன். எதுக்கும் எக்ஸ்ட்ராவா நாலு பொட்டலமும் எடுத்துண்டிருக்கேன்….இவாளுக்கு யாருக்காவது வேணும்னாலும் கொடுக்கலாமேன்னு…உங்களுக்கும் சட்னி சாதமெல்லாம் இருக்கு. இட்டிலி மட்டும் காலைல வச்சுக்கோ. வடாம் அந்த நீல கலர் மூடி போட்ட டப்பால போட்டு வச்சிருக்கேன். ஒண்ணும் செஞ்சிண்டிருக்க வேண்டாம். காபி அன்ட் டீ மட்டும் போட்டுக்கோ போறும்.”
“அம்மா நீ என்னத்த கட்டிண்டிருக்கன்னு தானே மிருதுக்கா கேட்டா!!!! நீ என்னடான்னா எல்லாருக்கும் செய்து எடுத்துண்டு வர மாதிரி தெரியறது”
“டேய் அது தான் டா நம்ம அம்மா!!”
“மாமி நாங்க அவா தர்ற ரொட்டி சப்ஜீ எல்லாம் சாப்பிடுவோமே என்னத்துக்கு எங்களுக்கும் எடுத்துக்கறேங்கள்?”
“சரி பா நீங்க எல்லாரும் அதையே சாப்டுங்கோ நான் இதை தான் சாப்பிடனும்னு யாரையும் வற்புறுத்தலையே. ஒரு வேள அது நல்லா இல்லாட்டி உங்கள எல்லாரையும் விட்டுட்டு நான் மட்டும் சாப்ட முடியுமா?”
“ஆமாம் சாப்பிடனும். அவா தான் அவளோ பேசறா இல்லையா. அப்போ நீங்க உங்களுக்கு மட்டும் எடுத்துக்கணும் . கேட்டாலும் கொடுக்காதீங்கோ”
“டேய் பசங்களா நாளைக்கு சப்போஸ் அவா சாப்பாடு பிடிக்கலைன்னா அப்பறம் பட்டினியாதான் சுத்த வேண்டி வரும் அதனால பேசாம எங்க அம்மா எடுத்துக்கறதை எடுத்துக்கட்டும் வேணும்ன்னா சாப்பிடுங்கோ இல்லாட்டி அது கெட்டு ஒண்ணும் போகாது வந்துட்டு சாப்பிட்டுக்கோங்கோ”
“மிருதுக்கா நீ சொல்லறதும் கரெக்ட் தான் அம்மா நீ எடுத்துக்கறத எடுத்துக்கோ மா. நாங்க ஒண்ணுமே சொல்ல மாட்டோம் என்ன சொல்லறேங்கள் பவின் அன்ட் ப்ரவின்?”
“ஆமாம் ஆமாம் மாமி நீங்க எடுத்துக்கறத எடுத்துக்கோங்கோ.”
“அது!!! எதையுமே பேசறதுக்கு முன்னாடி யோசிச்சு பேசுங்கப்பா..சரி சரி ஆல் ஆஃப் யூ குட் நைட்”
“குட் நைட்” என எல்லாரும் கூறினர்.
“யாராவது அலாரம் வச்சிருக்கேங்களா?” என்றான் ப்ரவின்
“என்னோட அலாரம் என் மண்டைக்குள்ள இருக்கு டான்னு எல்லாரையும் எழுப்பிடறேன் கவலை படாம தூங்குங்கோ” என்றார் ராமானுஜம்.
அவர் கூறியது போலவே மூன்று மணிக்கெல்லாம் எழுந்து அம்புஜத்தையும் எழுப்பி இருவரும் ஒருவர் பின் ஒருவராக குளித்து முடித்ததும் பசங்களை எழுப்பினார்கள். அவர்களும் ஒவ்வொருவராக குளித்து வந்ததும் நவீனும் மிருதுளாவும் எழுந்து பல் துலக்கி ஃப்ரெஷ் ஆகியதும் அனைவருக்கும் காபி போட்டுக் கொடுத்தாள் அம்புஜம். எல்லோருமாக குளித்து, காபி அருந்தி முடித்து கிளம்ப சரியாக மணி நாலரை ஆனது. பஸ்ஸில் ஏறுவதற்காக மெயின்கேட்டுக்கு நடக்கலானார்கள். அவர்களை வழியனுப்ப நவீனும் மிருதுளாவும் வீட்டின் கதவை தாழிட்டு அவர்களுடன் கிளம்பினார்கள். கேட் ஐ சென்றடையும் போது மணி நாலே முக்கால். பஸ் காத்துக்கொண்டிருந்தது. இவர்கள் பஸ் ஸ்டாப் சென்றடைவும் நவீனின் நண்பன் சதீஷும் அவர் குடும்பத்தினருடன் அங்கு வரவும் சரியாக இருந்தது. நவீன் அவர்களை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தப் பின் தனது குடும்பத்தினரையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளும் படி சதீஷிடம் சொல்ல அவனும் நவீனிடம் அதை பற்றி எல்லாம் கவலையின்றி இருக்குமாறு சொல்லிக்கொண்டிருக்கையில் பஸ் டிரைவர் அனைவரையும் பஸ்ஸினுள் ஏறச் சொன்னார். எல்லோருமாக ஏறி அவரவருக்கு பிடித்த இடத்தில் அமர்ந்தனர். நவீனுக்கும் மிருதுளாவும் அனைவரும் டாட்டா காட்ட பஸ் புறப்பட்டுச் சென்றது.
நவீனும் மிருதுளாவும் வீட்டை நோக்கி பேசிக்கொண்டே மெல்ல நடந்தார்கள். அப்போது நவீன்…
“உனக்கு போக முடியலையேன்னு கவலையா மிருது?”
“நோ நாட் அட் ஆல் நவீ. அதவிட முக்கியமான சந்தோஷத்துக்காக நான் காத்துண்டு இருக்கும் போது இதுக்கெல்லாம் கவலை ஏன் படணும். ஏன் உங்களுக்கு போயிருக்கலாம்ன்னு தோணறதோ?”
“நோ!! நோ !!! எனக்கு மூணு வாரத்துக்கப்பறம் இப்போ தான் என் வைஃப் கூட மட்டும் இருக்க டைம் கிடைச்சிருக்கு… இதை விட்டுட்டு நான் ஏன் போகணும்னு நினைக்கப்போறேன்”
“ஹேய் ஆமா இல்ல!!!! ஸோ இன்னைக்கு நாம மட்டும் தான் இருக்கப் போறோம். வாவ்!! இந்த மூணு வாரமா நாம விலகி இருந்தது ஏதோ பல வருஷம் பிரிஞ்சு இருந்த மாதிரி ஒரு ஃபீல்.”
“ஆமாம். ஸோ ட்ரூ. லெட் அஸ் செலிப்ரேட் திஸ் டே டுகெதர்.”
“டாக்டர் சொன்னது ஞாபகம் இருந்தா நல்லது”
“ஹேய் அதெல்லாம் நல்லாவே ஞாபகம் இருக்கு மேடம்.”
“எவ்வளவு ஆச்சர்யமா இருக்கு நமக்குள்ளேயிருந்து நமக்குன்னு ஒரு புது உயிர் உருவாகி அது இந்த பூமிக்கு வந்து நம்மை பார்த்து சிரித்து, அழுது, விளையாடி, வளர்ந்து !!! வாவ்!!! காட் ஈஸ் ரியலீ கிரேட் பா. என்ன அழகான ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதில் மனிதர்களை ஒரு இயந்திரம் போல படைத்து அவர்களுக்கு எல்லா வகையான உணர்வுகளும் கொடுத்து மெல்ல மெல்ல நம்மை பரமபதம் காய்கள் போல நகர்த்தி ஒரு அழகான ஆட்டம் ஆடுகிறார்? இல்ல!!!”
“ஏய் சூப்பர் எக்ப்ளநேஷன் ஃபார் காட்ஸ் க்ரியேஷன் மிருது!! ஆசம்!!!”
“என்னை புகழ்ந்தது போதும் ஆம் வந்தாச்சு கதவ தொறங்கோ!”
“உண்மையா மா. நீ கொடுத்த இந்த விரிவாக்கம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.”
இருவருமாக பல நாள் கழித்து அவர்களுக்கென்று கிடைத்த தனிமையை அனுபவித்து பின் குளித்து காலை உணவு சாப்பிட அமர்ந்தனர். மிருதுளா சுட சுட ஆவி பறக்க இரு தட்டுகளில் நாலு நாலு இட்டிலியும் அவள் அம்மா செய்து வைத்திருந்த கொத்தமல்லி சட்டினியும் போட்டுக்கொண்டு ஹாலுக்கு வந்து ஒன்றை நவீனிடம் கொடுத்துவிட்டு மீண்டும் அடுப்படிக்குள் சென்று இட்டிலி வைத்திருந்த பாத்திரத்தை எடுத்து வந்து கீழே வைத்து விட்டு சாப்பிடலானாள். அப்போது நவீன்….
“இட்டிலி செம சாஃப்ட்டா இருக்கு”
“ஹலோ இட்டிலினா சாஃப்ட்டா தான் இருக்கும்”
“எங்க ஆத்துல சாப்ட்டயே அது சாஃப்ட்டாவா இருந்தது. இவ்வளோ வருஷமா அது மாதிரி தான் நான் சாப்டிருக்கேன் ஆனா இது உண்மையாவே பஞ்சு மாதிரி இருக்கு மிருது.”
“உளுந்து அளவு கம்மியான இட்டிலி கல்லு மாதிரி தான் ஆகும். நம்ம ஆத்துல!!! அச்சோ!!! அந்த ஒரு இட்டிலய தேங்காய் சட்னில ஊர வச்சும் அது அப்படியே தான் இருந்தது. இப்படி பஞ்சு மாதிரி இட்டிலிய நான் இருப்பத்திரண்டு வருஷமா சாப்பிட்டு கல்யாணத்துக்கப்பறம் உங்க அம்மா பண்ணின இட்லியோட ப்ரூசிலீ மாதிரி ஃபைட் பண்ணி ரொம்ப சிரமப்பட்டுப் போயிட்டேன் அத சாப்பிட. ஆனா அத சொன்னா உங்க அம்மா மனசு கஷ்ட்டப்படுமேன்னுட்டு சொல்லாம விட்டுட்டேன்”
“இது என்ன சட்டினி சொன்னா உங்க அம்மா?”
“கொத்தமல்லி சட்டினி. ஏன் கேட்கறேங்கள்?”
“இதுவும் ரொம்ப சூப்பரா இருக்கு. இது மாதிரி சட்னி நான் சாப்ட்டதே இல்லை. யூ அன்ட் வேனு ஆர் லக்கி”
“இதை என் அம்மா கேட்டா சந்தோஷப்படுவா. நான் உங்களுக்கு வித வித மா செய்துத்தறேன் யூ டோன்ட் வரி மை ஹப்பி. யூ டூ ஆர் லக்கி டூ ஹாவ் மீ…எப்புடி”
“நன்றி வைஃபி. ஷுவர் ஆம் நவ் லக்கி டூ. நீயும் சாப்பிடு”
“இதோ சாப்டுண்டே தானே பேசறேன்”
உணவருந்திய பின் இருவருமாக டிவியில் ஒளிபரப்பான திரைப்படத்தைப் பார்த்தனர். வீட்டுக்கு டிவி வந்த நாளிலிருந்து அன்று தான் அவர்கள் கையில் ரிமோர்ட் கிடைத்துள்ளது. அதுவரை பவின் தான் எப்போழுதும் அதை வைத்திருந்தான். அவன் தூங்கும் போது தான் அது டிவி அருகே இருக்கும். அன்றிரவு ஒரு எட்டு மணி போல மீண்டும் ஒரு நடை நடந்து அந்த வளாகத்தின் கேட் அருகே சென்று அங்கேயே நடந்துக்கொண்டே டூர் போனவர்கள் திரும்பி வர காத்திருந்தனர். பஸ் சரியாக எட்டரை மணிக்கு வந்து சேர்ந்தது. அனைவரும் குஷியாக இறங்கினார்கள். பஸ்ஸினுள் ஒரே பேச்சு சத்தமும் சிரிப்பு சத்தமும் தான் கேட்டது. அனைவரும் இறங்கியதும் ஒன்றாக கோரஸாக டிரைவருக்கும் அவர் அஸிஸ்ட்டென்டுக்கும் நன்றி தெரிவித்தனர். சதீஷ் நவீனைப் பார்த்து…
“நவீன் இதோ உன் குடும்பத்தினரை உன்ட்ட பத்திரமா ஒப்படைச்சிட்டேன் பா.”
“ஹேய் ரொம்ப ரொம்ப தாங்கஸ் டா”
“இதுக்கெல்லாம் எதுக்கு டா தாங்க்ஸ் சொல்லிகிட்டு. நான் சும்மா ஜோக் அடிச்சேன். ஆனா ஒரு விஷயம் உன்ட்ட சொல்லணும் நவீன். உன் இன் லாஸ் மூணு பேரும் ரொம்ப நல்லவங்க பா. யூ ஆர் ரியலி கிஃப்ட்டெட் டூ ஹாவ் தெம் இன் யூவர் லைஃப். உன் தம்பிகளும் நல்ல பசங்க தான் …..உண்மைய சொல்லனும்னா அவங்க கொஞ்சம் செல்ஃபிஷோன்னு மனசுக்கு படுதுப்பா. நாங்க எல்லாரும் சூப்பரா என்ஜாய் பண்ணினோம். அன்ட் மாமி செய்து கொண்டு வந்த சாஃப்ட் இட்டிலி அன்ட் அந்த சட்னி வாஸ் ஆசம். வீ ஆல் லவ்டு இட். சரி சரி நாம அடுத்த வாரம் ஆபீஸ்ல மிச்சத்த பேசிக்கலாம் இப்போ அவங்க கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிட்டு நாங்க எங்க வீட்டுக்கு கிளம்பறோம் வா”
என அனைவரும் ஒருவருக்கொருவர் பை சொல்லி விடைப்பெற்று அங்கிருந்து அவரவர் வீட்டிற்கு நடக்கலானார்கள். அப்போது நவீன் அம்புஜத்திடம்…
“என்ன உங்க கொத்தமல்லி சட்னி செம ஃபேமஸ் ஆயிடுத்துப் போல”
“அப்படியா சொல்லறேங்கள்”
“ஆமாம் அத்திம்ஸ் காலை ல அவா பூரியும் சப்ஜியும் கொடுத்தா ஆனா நாலு நாலு தான் தந்தா ஸோ அம்மா கொண்டு வந்த இட்டிலியையும் சட்னியையும் எல்லாருமா ஷேர் பண்ணிண்டோம்.”
“நேத்து என்னவோ சில பேரு கிண்டல் அடிச்சா!!! அவா எல்லாம் எங்க போணா இப்போ?” என்று மிருதுளா கேட்க அதற்கு பவின்
“அவாளும் லைன்ல நிண்ணு இட்டிலியும் சட்னியும் வாங்கி சாப்ட்டா”
என்று சொல்ல அனைவரும் சிரிப்பு மழையில் நனைந்தனர்.
“சரி அம்மா நீ கொண்டு போன சாப்பாட்டில் மிச்சமிருக்கா ஏன்னா அதை தானே நைட்க்கு எல்லாரும் சாப்பிடறதா சொன்னா!! அதுனால கேட்டேன்”
“ஒண்ணும் மிச்சமாகலை எல்லாம் தீர்ந்துடுத்து. அப்போ நைட்டுக்கு என்னவாக்கும் டின்னர்?”
“மிருதுக்கா ஷால் வீ கோ டூ அவர் ரோஹித் டாபா?”
என்று வேனு கேட்டதும் மிருதுளா நவீனைப் பார்த்தாள் அவனும் சம்மதிக்க அனைவருமாக டாபா சென்றனர். அங்கே மிருது அம்புஜத்தைப் பார்த்தே…
“அம்மா நீ என்னத சாப்பிடுவ?”
“எனக்கு ஒண்ணும் வேண்டாம் மா. மத்தியானம் சாப்ட் புளிசாதமே எறுக்களிச்சிண்டிருக்கு.”
“மிருதுக்கா …இல்லாட்டி நம்ம அம்மா அப்படியே ரொட்டி சப்ஜீ எல்லாம் சாப்ட்ருவா பாரு…அட போ க்கா”
“அதுவும் சரிதான் டா வேனு”
“எனக்கு ஒரு லைம் சோடா கிடைக்குமா? அது மட்டும் போதும்”
“நிச்சயம் கிடைக்கும் இருங்கோ நான் ஆர்டர் பண்ணறேன்” என நவீன் ஆர்டர் பண்ணிக் கொடுத்தான்.
அனைவரும் சென்று பார்த்த இடங்களைப் பற்றியும், பிரயாணம் பற்றியும் டாபாவில் பேச ஆரம்பித்து வீட்டிற்குச் சென்று உறங்கும் வரை அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மிருதுளா ப்ரவினிடம்….
“என்ன ப்ரவின் இப்போ உன் நண்பர்கள்ட்ட சொல்லிக்க விஷயம் கிடைத்திருக்குமே. ஹாப்பியா”
“ஓ எஸ் !!! நிறையா பார்த்தேன் அன்ட் நிறையா விஷயங்கள் இருக்கு சொல்ல”
“அப்பாடா ப்ரவின் இனி திருப்தியா ஊருக்கு கிளம்புவான்” என்றான் நவீன்.
“என்ன இன்றய டே என்ட் முடிவில் நான் தான் டாப்பிக் ஆஃப் டிஸ்கஷனா. பேசாம எல்லாரும் தூங்குங்கப்பா. குட் நைட்”
தொடரும்…..
ஊரடங்கும் வாட்ஸ்அப் குழுவும்

நண்பர்களின் வாட்ஸ்அப் குழு மூன்று மாதங்கள் முன்புவரை மிகவும் பரபரப்பாக இருந்தது. ஒரு நாளைக்கு நூறு மெஸேஜ் வந்த வண்ணம் இருந்தது.
ஒரு மெஸேஜுக்கு பதில் அளிப்பதற்குள் பத்து மெஸேஜஸ் குவிந்து விடும்
அரசியல், அலுவலகம், சினிமா, சீரியல் என்று ஒன்று விடாமல் எல்லாமும் குழுவில் புரட்டி எடுக்கப்படும்.
அவ்வளவு விறுவிறுப்பாக இருந்த குழு
இந்த மூன்று மாதங்களாக கிணற்றில் கல்லை போட்டது போல கம்முனு இருந்தது.
மெதுவாக குழுவில் ராமு…
எல்லாரும் இருக்கீங்களா? ஏன் ஒரு மெஸேஜ்ம் இப்பெல்லாம் யாரும் போடரதே இல்ல…ஒரு கொரோனா ஃபார்வேட் மெஸேஜ் கூட காணோமே ஹலோ டியர் நண்பர்களே!!!
ரொம்ப நேரம் கழித்து கோமுவிடமிருந்து பதில் வந்தது
கோமு: டேய் ராமு உனக்கு வாட்ஸ்அப் ல மெஸேஜ் பண்ணுற அளவுக்கு டைம் இருக்காடா??
ரவி : அப்போல்லாம் ஆஃபிஸ் போயிட்டிருந்தோம் வாட்ஸ்அப் ல ஜாலியா அரட்டை அடிச்சிட்டு இருந்தோம்….இப்போ அப்பிடியா!!!வீட்டு வேலை பென்டெடுக்குதுடா…சரி சரி …நான் துணியை துவைத்துக்கொண்டிருந்தேன்.. பாதிலயே விட்டுவிட்டு உங்களோட பேச ஆரம்பிச்சிட்டேன்….குட்…பை …நண்பர்களே.
ரகு: சீக்கிரமே ஆபிஸுக்கு வரசொல்லனுமுனு வேண்டிக்கோங்கடா…
கொரோனாவால் பதிக்கப்படுவது உடல்நலம் மட்டும் அல்ல…..😉

பிள்ளையாரும் பிடிக்கொழுக்கட்டையும்!

அன்று வினாயகர் சதுர்த்தி. பாட்டி வள்ளியம்மை சுறுசுறுப்பாக பூஜைக்கு வேண்டிய கொழுக்கட்டை, வடை எல்லாம் செய்து கொண்டிருந்தார்.
மருமகள் ராணி வினாயகரை அலங்காரம் செய்து பின் சுவற்றில் ஹாப்பி பெர்த்டே அஞ்சு என்று ஒரு சுவரொட்டியை ஒட்டினாள். அன்று பாட்டியின் மூன்று வயது செல்லக்குட்டி பேத்தி அஞ்சனாவின் பிறந்தநாளுமாகும்.
ராணி: அம்மா அடுக்களையில் உங்கள் வேலை முடிந்ததா? நான் அஞ்சுக்கு கேக் பேக் பண்ணணும்…
ஆச்சு என்று சொல்லிக்கொண்டே செய்ததை எல்லாம் வினாயகருக்கு முன் வைத்து தனது கணவர், மகன், மருமகள், பேத்தி அஞ்சனா அனைவரையும் பூஜைக்கு அழைத்தார். பூஜை சிறப்பாக முடிந்தது.
அஞ்சனா: இதெல்லாம் என்ன பாட்டி?
பாட்டி: இன்னைக்கு பிள்ளையாருக்கும் பெர்த்டே ஆச்சே. மூத்த கடவுள் இல்லையா…அதனால இது பிள்ளையாருக்கு பூர்ணக்கொழுக்கட்டை, பிடிகொழுக்கட்டை அப்பறம் வடை.
ராணி : கேக் தயார். அஞ்சுமா கேக்கை வெட்ட வா மா.
எழுந்து வராமல் வருத்தமாக அமர்ந்திருந்தாள் அஞ்சனா. அனைவரும் ஏன் என்ன ஆச்சு என்று வினவினர்.
அஞ்சனா: பாட்டி நான் உன் கூட டூ!
பாட்டி: நான் என்ன செய்தேன் கண்ணா? ஏன் என் கூட அஞ்சுமா டூ விடரா?
அஞ்சனா: பி ஃபார் பிள்ளையார் ரைட்டா?
பாட்டி : சரிதான்.
அஞ்சனா: அ ஃபார் அஞ்சனா ரைட்டா?
பாட்டி : ரைட்டுதான்.
அஞ்சனா : பிள்ளையாருக்கு பூர்ணக்கொழுக்கட்டையும், பிடிகொழுக்கட்டையும், வடையும் செய்திருக்க பாட்டி அப்போ எனக்கு மட்டும் ஏன் கேக்?
பாட்டி: என் அஞ்சனா குட்டிக்கு வேற என்ன வேணும் சொல்லு உடனே செய்து தரேன்.
அஞ்சனா: எனக்கு ஆறின கொழுக்கட்டை யும், அடி கொழுக்கட்டையும் அன்ட்..அன்ட் அடையும் வேணும்.
அனைவரும் சிரித்தார்கள். பாட்டிக்கும் சிரிப்பு அடக்கமுடியலை ..ஆனாலும் அடுக்களைக்குள் சென்று தட்டு ஒன்றில் ஆறிப்போன பூரணக்கொழுக்கட்டையும், பிடிக்கொழுக்கட்டையை இரண்டாக வெட்டி அதில் ஒரு பாதியையும், வடையை நன்றாக கைகளினால் நசுக்கி அடைப்போல செய்து எடுத்து வந்து ….
பாட்டி: அ ஃபார் அஞ்சனா குட்டிக்கு பாட்டி செய்த ஆறின கொழுக்கட்டை, அடி கொழுக்கட்டை அன்ட் அடை தயார் ஆ காமி…
அஞ்சனா : சூப்பர் பாட்டி.
என்று உண்டு பின் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்கள்.
பிள்ளைகள் எப்பொழுது எதை கேட்ப்பார்கள் என்பது எவராலும் கணிக்க முடியாத ஒன்றாகும். ஆனால் அதை அழகாக குழந்தை மனம் கோணாமல் லாவகமாக கையாண்டு சாபாஷ் வாங்குவதில் பாட்டிகளை மிஞ்ச யாரும் இல்லை.

வாட்ஸ்அப் தூண்டில்

குடும்பங்களும், நண்பர்களும், இப்பொழுது வாட்ஸ்அப் குழுக்களாக அமைந்து செவ்வனே செயல்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. அம்மா வழி சொந்தங்கள், அப்பா வழி சொந்தங்கள் என்று பிள்ளைகளும், அவர் வழி உறவினர்கள், அவள் வழி உறவினர்கள் என்று தம்பதிகளும் மற்றும் அம்மா, அப்பா, மகன், மகள் தனித்தன்மையான ஒரு குடும்ப பெயருடன் ஒன்றும், பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், அலுவலக நண்பர்கள் என்றும் பலவகை குழுக்கள் உள்ளன எல்லாருடைய அலைபேசியிலும்.
அனைவரது வாட்ஸ்அபிலும் தனி நபரின் எண்(எந்த குழுவிலும் இல்லாதவர்) கடைசியில் தான் வரும் அதுவும் ஏறிப்போனா ஒரு பத்து இருக்கும் அவ்வளவுதான் மிதமுள்ள அனைத்து எண்களும் பல தரப்பட்ட குடும்ப பெயர்கள் கொண்ட குழுக்களில் அல்லது நண்பர்களின் குழுக்களில் ஏதேனும் ஒன்றில் அடங்கும். சில சமயம் ஒரே நபர் பல குழுக்களிலும் இருப்பர். எல்லாருடைய விஷயங்களும் தெறிஞ்சுக்க வேண்டாமா அதுக்கு தான். அப்படிப்பட்ட ஆசாமிகள் ஒரு குழுவில் நடப்பதை அடுத்த குழுவினர்களுக்கு கொண்டு சேர்க்கும் இறக்கை இல்லா பறவை போல அங்கும் இங்குமாக மெஸேஜ்களை தட்டிவிடும் நவீன நாரதராவார்கள்.
இந்த குழுக்களில் பல சுவாரசியமான உரையாடல்கள் நடைப்பெறுவதும் உண்டு. வம்புகள் உருவாவதும் உண்டு.ஒரு குடும்ப வாட்ஸ்அப் குழுவிலிருந்து வெளியேறினால் ஏதோ குடும்பத்தை விட்டே வெளியேறியது போல ஒரு தாக்கத்தை கொடுத்து விடுவார் அந்த குழுவின் நிர்வாகி.
எவரேனும் ஒருவருக்கு மற்றொரு குழு உறுப்பினர் மீது மனஸ்தாபமோ, கோவமோ, வருத்தமோ, ஏன் வயித்தெரிச்சலாக கூட இருக்கலாம்..அப்படி இருக்கும் பட்சத்தில் பல தத்துவங்கள் ..யாரோ ஒரு புண்ணியவான் எழுதியதோ / படமாக்கப்பட்டதோ இணையதளத்தில் சுதந்திரமாக பறந்துக்கொண்டிருபதில் ஒன்றை அவர்கள் மனநிலைக்கேற்ப பகிர்ந்து எவருக்காக போடப்பட்டதோ அவரின் ரியாக்ஷனுக்காக… தூண்டில் போட்டு மீன் எப்போ வந்து மாட்டும் என்று மீன்பிடிப்பவர் தூண்டிலை அடிக்கடி தூக்கிப்பார்ப்பது போல் அலைபேசியை எடுத்து எடுத்து பார்த்துக்கொண்டே காத்திருப்பதில் அவர்களுக்கு தனி சுகம் போலும். முன்பெல்லாம் ஏதாவது விஷேஷங்களில் ஒன்று கூடும்போது நடைபெறும் அரட்டை அதனால் விளையும் வம்புகள் இப்பொழுது அலைபேசியில் நடைபெற்றுவருகிறது.
எந்த நபருக்காக போடப்பட்டதோ அவர் அந்த தூண்டிலில் மாட்டினால் அன்று முழுவதும் குழுவில் தீபாவளி தான். அப்படியே அவர் கழுவுற மீனில் நழுவுற மீனாட்டம் இருந்தாலும்….சில நமத்து போச்சுன்னு எண்ணிக்கொண்டிருக்கும் ஊசி பட்டாசுகள் கூட மெதுவா பட் பட் என்று வெடிக்க ஆரம்பிக்கும் அதனுடன் ஓல வெடி மெல்ல சேர பின் லக்ஷ்மி வெடிகள் சரங்களாக மெஸேஜுகளைக் கோர்க்க… கடைசியில் இந்த சப்தத்தை எல்லாம் அடங்க செய்ய …நம்ம மீன்… ஆட்டம் பாம் போல ஒரு பெரிய மெஸேஜை தட்டிவிட…அதில் ஊசி வெடிகளும், ஓல வெடிகளும் தெறித்து ஓட, சமந்தமே இல்லாத சங்கு சக்கரங்களும், புஸ்வானங்களும் சரசரக்க, சில ராக்கெட்டுகள் குழுவிலிருந்து வெளியேற. தொட்டால் சுட்டு பொசுக்கிவிடும் அளவிற்கு சுட சுட குழு இருக்கும் போது மெதுவாக ஒரு ரோல் கேப் உள்ளேன் ஐயா என்று ரோலாகி வந்து முதலாவது மெஸேஜிலிருந்து பதிலளிக்க.. மீண்டும் அடுத்த ரவுண்டு தொடங்கும். அதில் சம்மந்தமே இல்லாத சில வெளிநாட்டு வெடிகள் உள்நுழைய அனைத்து சூடான உள்நாட்டு வெடிகளும் அவைகள் பக்கம் திரும்ப திரியைக்காணோம் காகிதத்தைக்காணோமென்று வெளிநாட்டு வெடிகளும் குழுவை விட்டு வெளியேற, குழுவின் சமாதானப் புறாக்களான பென்ஸில், மத்தாப்பு தனி தனியாக மெஸேஜ் செய்து தூது போக வெளியேரியவர்கள் அத்துனைபேரும் மீண்டும் குழுவில் சேர்க்கப்படுவர். காரணங்கள் வேறுப்பட்டாலும் இது பெரும்பாலும் எல்லா குழுக்களிலும் நடக்கும் ஒரு அத்தியாயம் ஆகும்.
இதில் உன்னித்து பார்த்தோமேயானால் மீனவன் ஒரே ஒரு தத்துவத்தை கவிதையாகவோ/ மெஸேஜாகவோ/ வீடியோவாகவோ தட்டிவிட்டுட்டு கம்முன்னு தீபாவளி வாணவேடிக்கையை ரசித்துக்கொண்டு இருப்பார். மீனும் தவிர்க்க முயன்று பின் சலசலப்பை அடக்க ஒரே ஒரு மெஸேஜை தட்டிவிட்டுட்டு மீதி எல்லாருடை மெஸேஜையும் படித்தவண்ணமே இருக்கும். இதை குழு உறுப்பினர்களில் சிலர் உணர்ந்து எல்லா நேரங்களிலும் புஸ்ஸான புஸ்வானம் போல பார்வையாளர்களாக மட்டுமே இருப்பார்கள். இன்னும் சிலர் சரவெடியில் முதலிலும் இறுதியிலும் மட்டும் வெடிக்ககூடிய ஊசிவெடிப்போல் காலை வணக்கம் மற்றும் இரவு வணக்கம் மட்டும் சொல்லிக் கொண்டே யார் யார் எப்படி வெடிப்பார்கள், ஏன் வெடிப்பார்கள், எதற்கு வெடிப்பார்கள் என்பதை எல்லாம் உலகநாயகனின் மகளிர்மட்டும் திரைப்படத்தில் வரும் தாத்தாப்போல அனைத்தையும் கிரகித்துக்கொண்டு ஊதுவத்தியாக சரியான நேரத்தில் சரியான பட்டாசை பத்தவைத்துவிடுவார்கள்.
ஆக இந்த தீபாவளி இவ்வளவு சிறப்பாக வாணவேடிக்கைகளுடன் நடந்து முடிந்ததற்கு காரணகர்த்தா யார்?
தூண்டிலிட்டுக்காத்திருந்த மீனவனா? தூண்டிலில் இருந்து நழுவப்பார்த்து பின் தானே போய் சிக்கிக்கொண்ட மீனா? இல்லை தேவையில்லாமல் வெடித்த இதர பட்டாசுகளா?
இதுபோன்ற மீனவர்கள் வாட்ஸ்அபிலும், வாழ்க்கையிலும், இணையதளத்திலும் அவரவர் மனநிலைக்கேற்ப பலவித மெஸேஜை தூண்டிலாக இட்டு மீன்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள். நாம் மீனாக தூண்டிலில் மாட்டாமலும் அனாவசியமாக இதர பட்டாசுகளை போல தேவையில்லாத இடங்களிலும் நேரங்களிலும் வெடிக்காமலும் இருந்தால் பல பிரச்சனைகளை மிக சுலபமாக கடந்து மன அமைதியுடன் வாழலாம்.

அம்மா பகிரும் மகனதிகாரம்!!

முதன் முதலில் பள்ளிக்கு எனது ஒரே மகனை அனுப்பியது இன்றும் என் கண்முன்னே இருக்கிறது. அது ஆகிவிட்டது பதினெட்டு வருடங்கள் ஆனாலும் இன்றும் பசுமையான நினைவுகளாக என் மனம் அசைப்போட்டுக்கொண்டே தான் இருகிறது.
பள்ளிக்கு சென்று அவனை வகுப்பறையில் அமரவைத்து நான் வெளியே வந்ததும் என் மகன் பின்னாலேயே ஓடிவந்து அம்மா…அம்மா….என்ன விட்டுட்டு போகாதே அம்மா….என்று கதறி அழுதது, அவனது ஆசிரியை என்னை அங்கு நிற்காமல் செல்லும் படி கூறியது, என்னைச் சுற்றி ஆட்கள் இருக்கிறார்கள் என்ற உணர்வே இல்லாமல் நானும் என் மகனைப் பார்த்து அழுத வண்ணம் நின்றது எல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கையில் மனதிற்குள் சிரிப்பு வருகிறது ஆனால் அன்று அந்த கணம் நான் நொறுங்கி போனேன்.
என் குழந்தை சாப்பிட்டதா? டாய்லட் போக அனுமதி கேட்க சொல்லிக்கொடுத்தேனே ஒழுங்கா கேட்க தெரியுமா இல்லை பயத்தில் கேட்காமல் உட்கார்ந்திருப்பானா, மற்ற குழந்தைகளுடன் விளையாடுவானா? என்றெல்லாம் பல கேள்விகள் உதித்து என் நிம்மதியை குலைத்தது.
என் கணவரிடம் அடிக்கடி அவன் இன்னமும் அழுதுக்கொண்டிருப்பானா? சாப்பிட்டிருப்பானா? சண்டையிடாமல் மற்ற பிள்ளைகளுடன் விளையாடுவானா? என்று தொனதொனக்க அவர் என் புலம்பல்கள் கேட்டு …..
“இதெல்லாம் நீ அந்த பள்ளில வேலை செய்தால் உன் புள்ள பக்கத்திலிருந்தே தெரிஞ்சுக்கலாம். என்ன கேட்டா நானும் உன்ன மாதிரி இங்க தானே இருக்கேன்.”
சாயங்காலம் அவன் வந்ததுக்கப்பரம் கேட்டு தெரிஞ்சுக்கலாம். இப்போ போய் வேற வேலைய பாரு என்று கடுப்படித்தார். பாவம் அவரும் பிள்ளை நினைப்பில் தான் இருந்திருப்பார் ஆனால் என்னைப்போல காட்டிக்கொள்ள வில்லை அவ்வளவுதான்.
ஆனால் அவர் சொன்னதில் ஒரு விஷயம் என் மனதில் பதிந்தது “நீ அந்த பள்ளியில் வேலை செய்தால்” பிள்ளையை பிரிய மனமில்லாமல் அதே பள்ளியில் ஆரம்ப பள்ளி ஆசிரியை வேலைக்கு விண்ணப்பித்தேன்.
இன்டர்வியூ நாள் வந்தது அங்கே என்னை நோக்கி பாய்ந்த முதல் கேள்வி….
“இது உங்கள் படிப்பிற்கு ஏற்ற வேலை அல்லவே… நீங்கள் போஸ்ட் கிராஜுவேட் முடித்துள்ளீர்கள் பின்பு ஏன் விண்ணப்பித்தீர்கள் என்பதை தெரிந்துக் கொள்ளலாமா?” என்று கேட்டார்கள்.
என் மகனுக்காக! மகனுடன் இருப்பதற்காக சேர்ந்தேன் என்று கூறமுடியுமா!! ஏதோ ஆசிரியை ஆக ஆசை அது இது என்று சொல்லி ஒரு வழியாக என் மகன் பள்ளி செல்ல ஆரம்பித்த ஒரு மாதத்திற்குள் நானும் ஆரம்ப பள்ளி ஆசிரியை ஆனேன். முன்னனுபவம் ஏதுமின்றி. அதுவும் எல்.கே.ஜி வகுப்பு எனக்கு தரப்பட்டது. என் மகனுக்காக ஆசிரியை ஆனாலும் அந்த பிஞ்சு முகங்களை தினமும் பார்ப்பதில் பேரானந்தமாக இருந்ததை உணர்ந்தேன்.
ஆசிரியை ஆயாச்சு என் மகனுடன் ஒன்றாக பள்ளிக்கு சென்று வரலாம் என்று எண்ணினேன். ஆனால் வேலையில் சேர்ந்த பிறகு தான் தெரிந்தது ஆசிரியர்கள் பள்ளி முடிந்த நேரத்திலிருந்து ஒரு மணிநேரம் ஆன பின்னரே வீட்டுக்கு செல்ல முடியும் என்பது. அந்த ஒரு மணிநேரம் என் மகனை எங்கே விடுவது என்ற கேள்வி எழுந்தது.
பள்ளியில் அவனை சேர்க்க….. அவனை பிரிய மனமில்லாமல் நான் ஆசிரியையாக சேர….. பின் எனக்காக அவன் ஒரு மணிநேரம் பள்ளியில் காத்திருக்க வேண்டியிருந்தது. அவனுக்காக காலை மத்திய உணவு போக தனியாக மாலை உண்பதற்கு ஏதாவது தினமும் எடுத்து செல்வேன். இதோடு எல்லாம் முடிந்தது இனி சுபமே என்று பெருமூச்சு விடுவதற்குள் அடுத்த சிக்கல் வந்தது.
என் மகன் தனது வகுப்பிலிருந்து ஓடிவந்து எனது வகுப்பில் அமர ஆரம்பித்தான். அம்மாவின் வகுப்பில் தான் அமருவேன் என்று ஒரே அழுகை வேறு. அந்த பள்ளி தலைமை ஆசிரியை முன் நானும் என் மகனும் நின்றோம். எங்கள் பிரச்சினையை முன் வைத்தோம். அவர் என் மகன் என் வகுப்பில் அமர அனுமதித்தார். அவன் என் வகுப்பில் அமர சில நிபந்தனைகளை நான் அவன் முன் வைத்தேன். நல்ல பிள்ளையாக அவை அனைத்தையும் கடைபிடித்து எனக்கு ஒத்துழைத்தான் என் மகன்.
வகுப்பில் மேடம் என்று தான் அழைப்பான் அம்மா என்று ஒருபோதும் அழைத்ததில்லை. தனது அம்மா தானே என்று எந்த வித சலுகைகளையும் அவனும் எதிர்ப்பார்க்கவில்லை நானும் கொடுக்கவில்லை. இப்படியே எல்.கே.ஜியும், யூ.கே.ஜியும் இருவரும் ஓன்றாக ஒரே வகுப்பறையில் படித்தோம். ஆம் அவன் படித்ததோ பாடப்புத்தகம் ஆனால் எனது வகுப்பில் இருந்த முப்பது குழந்தைகளும் என் மகன் உள்பட எனக்கு முப்பது வாழ்க்கை பாட புத்தகங்கள் ஆனார்கள்.
குழந்ததைகளுடன் நாம் இணைந்து பயணிக்கும் பயணத்தில் பல பாடங்களை நமக்கு மிக சுலபமாக கற்று தந்து விடுவார்கள்.
கவலை என்பது அடுத்த நிமிட நிகழ்வில் மறக்க வேண்டும்,
அழுதாலும் நம்மால் மற்றொருவரின் பேச்சைக்கேட்டு சிரிக்கவும் முடியும்,
ஒன்றாக இருந்தால் சந்தோஷம் பெருகும்,
ஏதேனும் மறந்தாலும் அதை அழகாக கதை போல சொல்லி கவர்வது,
வெளிப்படையாக போலித்தனமில்லாமல் பேசுவது என்று பலவற்றை நாம் அவர்களோடு இருந்தால் கற்றுக்கொள்ளலாம். நானும் கற்றுக் கொண்டேன்.
பெற்றோர்கள் என்னிடம் வந்து எங்கள் பிள்ளைகளுக்கு நீங்க ன்ன ரொம்ப பிடிக்கும் மேடம்…..எங்க மேம் அது சொன்னாங்க இது சொன்னாங்க என்று எப்ப பார்த்தாலும் சொல்லிக்கிட்டே இருக்காங்க என்று கூறும்போது சற்று சங்கோஜமாகவும் அதே சமயம் சந்தோஷமாகவும் இருந்தது. இதுவே என் முப்பது செல்வங்களும் எனக்களித்த முப்பது அவார்டாக கருதிக்கொண்டு இருக்கையிலே…. பிஞ்சுகளால் நான் அந்த ஆண்டின் பள்ளி ஆண்டுவிழாவில் சிறந்த ஆசிரியை பரிசுப்பெற்றேன். என் வகுப்பு பிள்ளைகளும் நிறைய போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றனர்.
எனது மகன் ஒன்றாம் வகுப்புக்கு தேர்ச்சி ஆனான். அவனின் பாதை நண்பர்கள், படிப்பு, விளையாட்டு என்று மெல்ல மாற துவங்கியது. நானும் என் பாதையை மாற்றி அமைத்துக்கொண்டேன். +1 மற்றும் +2 வகுப்பு பிள்ளைகளுக்கு அக்கௌன்டன்ஸி மற்றும் காமர்ஸ் ஆசிரியையாக ஆர்மி ப்பளிக் பள்ளியில் நியமிக்கப்பட்டேன். என் படிப்பிற்கும் வேலைக்கும் அன்று சம்பந்தத்தை ஏற்ப்படுத்திக்கொண்டேன். அன்று யோசித்துப்பார்த்தேன்…. மகன் தான் சிறுப்பிள்ளை என்றால் நானும் சிறுப்பிள்ளை தனமாக இருந்ததை உணர்ந்தேன். என் சிறுப்பிள்ளை தனம் என்னை எனக்கே புரியவைக்க கடவுள் கொடுத்த ஒரு நல்ல, சிறந்த வாய்ப்பாக நான் கருதினேன்.
எனது இந்த உணர்வு எல்லா தாய் மார்களும் அவர்கள் பிள்ளைகள் பள்ளி செல்லும் முதல் நாள் அனுபவித்திருப்பார்கள்.
இன்று என் மகன் வெளிநாட்டில் இஞ்சினியரிங் படித்து வருகிறார். அவரை கல்லூரியில் சேர்க்க நானும் என் கணவரும் அவருடன் சென்றிருந்தோம். ஒரு வாரம் ஹோட்டலில் தங்கியிருந்தோம். மூன்று நாட்கள் ஓரியன்ட்டேஷன் என்று ஓடியது. ஒரு நாள் காலேஜ் ஹாஸ்டல் ரூமை அவருக்கு செட் செய்து கொடுப்பதில் கழிந்தது. ஒரு நாள் ஊரை சுற்றிப்பார்ப்பதில் சென்றது. ஆறாவது நாள் கல்லூரி வகுப்புகள் ஆரம்பம் ஆனது.
ஏழாவது நாள் நாங்கள் ஊருக்கு திரும்பும் நாள் ….காலை உணவு அருந்திவிட்டு நேராக கல்லூரிக்கு சென்று எங்கள் மகன் வகுப்பு முடிந்து வரும் வரையில் காத்திருந்தோம். அவர் வந்தார் நாங்கள் மூவரும் மத்திய உணவு ஒன்றாக அமர்ந்து அருந்தினோம். ஏதோ என் மனதில் ஒரு கலக்கம். முதல் முறையாக மகனை தூரதேசத்தில் விட்டுவிட்டு பிரியபோகிறோமே என்றா… சொல்ல முடியாத ஒரு தவிப்பு….அப்பாவும் மகனும் மும்முரமாக வகுப்புகள், லெக்சரர்கள், கல்லூரி, பாடம் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். நான் என் மகனை பார்த்துக்கொண்டே இருந்தேன் ஏதும் பேசாமல். அவரும் என்னை அடிக்கடி பார்த்தார் ஆனால் பேசவில்லை. பின் கேட்டார் “என்ன அம்மா பார்த்துண்டே இருக்க?”
நான் என் மகனைப்பார்த்து….
“இப்போ உன்னுடன் உன் கல்லூரியில் தான் இருப்பேன், உன் வகுப்பறையில் தான் அமர்வேன் என்னை கூட்டிக்கொண்டு போகதான் வேண்டும்”
என்று நான் இப்போ அடம்பிடித்தால் என்ன ஆகும் என்றேன்.
மகன் பதில் அளிப்பதற்கு முன் என் கணவர் முந்திக்கொண்டு
“அம்மா தாயே விட்டா நீ உன் பையன் பின்னாடியே இஞ்சினியரிங் காலேஜ் லெக்சரரா போயிடுவ…..நான் ஒருத்தன் இங்கே இருக்கேன் மா…. மனமிறங்கி வா தாயீ”
என்றதும் மூவருக்கும் சிரிப்பு மழையில் அன்று முழுவதும் ஊருக்கு கிளம்பும் வரையில் பழைய நினைவுகளால் நனைந்தோம்.
அன்றும் அழுதேன் என் மகனைப் பிரியும் பொழுது. அதே மாதிரி சிந்தனை பழக்கமில்லாத நாட்டில் மகனை தனியே விட்டுவிட்டு போகபோகிறோமே! என்ன செய்வாரோ!!!! என்றல்ல எங்கள் மகன் இன்று இவ்வளவு படித்து, பல திறமைகளை வளர்த்துக்கொண்டு, இப்படி ஒரு கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்து அதை தைரியமாக ஏற்று தனித்திருந்து சாதிக்க போகிறார் என்ற பெருமிதத்தில் வந்த ஆனந்த கண்ணீர் ஆகும்.
முதன் முதலில் மகனை
பள்ளியில் சேர்த்தபோதும் கண்கள் கலங்கின
கல்லூரியில் சேர்த்தபோதும் கண்கள் கலங்கின
இரண்டு தருணங்களிலும் கண்களில் வடிந்தது கண்ணீர்
முதலாவது முறை பரிதவிப்பினால்
இரண்டாவது முறை ஆனந்தத்தினால்
கண்ணீர் ஒன்று தான்
ஆனால் காரணங்கள் வேறுபட்டது
பரிதவிப்பு என்னை ஆசிரியையாக மாற்றியது
ஆனந்தம் என்னை எழுத்தாளராக மாற்றியது.

