அத்தியாயம் 39: புதிரும்! புது வரவும்! 

பதிலுக்காக காத்திருந்த சக்தியிடம், ஜேம்ஸ்,

“முதல்ல நாம உங்க பேஸ்மென்ட்ட பார்த்துட்டு வந்துடலாமா?”

என்று கேட்க, அதற்கு சக்தி,

“வி…

ப்ளீஸ் அவரை கூட்டிண்டு போயேன். 

நான் ஜேம்ஸுக்கு காஃபி போடறேன். 

உனக்கும் போடட்டுமா வி?”

“சரி தி. 

ஜேம்ஸ் வா நான் உன்னை கூட்டிட்டு போறேன்.”

என்று ஜேம்ஸும், விஷாலுமாக அடுப்படி அருகே இருந்த கதவை திறந்து கொண்டு பேஸ்மென்ட்டுக்கு சென்றனர். அங்கே ப்ளூவின் சார்ஜிங் ஸ்டேஷன், கதவில் வந்தவர்கள் விட்டுச்சென்ற ஆட்டோகிராஃப் மற்றும் 

கேரேஜுக்குள் செல்லும் வழியை விஷால் காண்பிக்க… ஜேம்ஸ் அனைத்தையும் பார்த்துக்கொண்டே சென்றான். கேரேஜ் ஷட்டர் அருகே வந்ததும், அதை கைகளால் இழுத்து மேலே தள்ளினான் விஷால். அதைப்பார்த்த ஜேம்ஸ் விஷாலிடம்…

“என்ன! சக்தி மேனுவல் ஷட்டரா யூஸ் பண்ணுறாங்க?”

“இல்ல ஜேம்ஸ்.”

“அப்புறம் ஏன் இப்படி திறக்குற விஷால்.”

என்று கேட்ட ஜேம்ஸிடம் அங்கு பழுதாகக்கப்பட்டிருந்த பேஸ்மென்ட் ஷட்டர் சென்சர்ஸை காண்பித்து…

“இதனால் தான் மேனுவலா திறந்தேன்.

இதை எப்படி செய்திருக்காங்கன்னு எனக்கு தெரியும். 

இதோ இந்த இடத்துல ஒரு டாப் செஞ்சு…மெலிய கத்தி ஆர் கத்திரிக்கோல் வச்சு வயரை கட் பண்ணிட்டு திறந்து உள்ள வந்திருக்காங்க. 

ஆனா எமர்ஜென்சி ரிலீஸ் கிட் இல்லாம…

அதுல இருக்குற அந்த சாவியை இந்த இடத்துல போட்டு திறக்காம எப்படி ஃபுல்லா இப்படி திறந்து ப்ளூவ எடுத்துட்டு போயிருக்க முடியும்ன்னு தான் எனக்கு புரியலை.”

“இதுல புரியறதுக்கு என்ன இருக்கு விஷால்.

அதுக்கான ப்ரொபஷனல்ல வச்சு திறந்திருப்பாங்க. 

அதெல்லாம் ஈஸியா செய்ய பல பேரு இருக்காங்க.”

“அதுவுமில்லாம இந்த கேரேஜ்லேந்து பேஸ்மென்ட்டுக்குள்ள போற அந்த கதவோட லாக்கை அப்படியே கட் செஞ்சு உள்ள போயிருக்காங்க பாரேன்.

அது எப்படி சக்திக்கு எந்தவித சப்தமும் கேட்கலைன்னு தான் எனக்கு ஆச்சர்யமா இருக்கு.”

“இல்லடா.

அவங்களுக்கு டூ மச் இன்ஃபர்மேஷன் ஃபீட் பண்ணதுல அவங்க கன்ஃப்யூஸ்டா இருந்தாங்க. 

எனக்கு ஏதோ சத்தம் கேட்டது.

நான் போய் பார்க்கறேன்னும் சொன்னேன்.

ஆனா சக்தி என்னை அனுமதிக்கலை.

அப்போன்னு பார்த்து எனக்கு ஒரு இம்பார்ட்டென்ட் கால் வந்தது.

சோ அதை அட்டென்ட் பண்ண போயிட்டேன்.”

“நான் அனுமதிச்சிருந்தா என் ப்ளூ இன்னைக்கு என்கூட இருந்திருப்பான்.

ம்…என்ன பண்ண…

சரி ரெண்டு பேரும் உள்ள வாங்க காஃபி அன்ட் ஸ்னாக்ஸ் ரெடி.”

என்று சக்தி கூறியதும் மூவருமாக கேரேஜ் ஷட்டரை உள்பக்கமாக மூடிவிட்டு பேஸ்மென்ட் வழியே வீட்டினுள் சென்றனர். அங்கே சோஃபாவில் அமர்ந்து காஃபி அருந்திக்கொண்டே… ஜேம்ஸ் சக்தியை பார்த்து,

“நைஸ் காஃபி. 

தாங்க்ஸ் சக்தி.

அன்ட் திஸ் ஸ்னாக்ஸ் ஈஸ் டூ குட்.”

“சரி. நீங்க சொல்ல வந்ததை இன்னும் சொல்லவே இல்லையே!”

என்று சக்தி ஜேம்ஸிடம் கேட்க…உடனே ஜேம்ஸ் காஃபியை ஒரு சிப் எடுத்த பின் அந்த கப்பை டேபிளில் வைத்து விட்டு சக்தியையும் விஷாலையும் பார்த்து,

“சக்தி பேஸ்மென்ட்ல சத்தம் கேட்டு நான் போறேன் சொன்னப்போ…

நீங்க வேண்டாம்னு தடுத்தீங்களே…

அப்போ எனக்கு ஒரு கால் வந்தது…

நானும் வேகமா போனேனே…”

“அப்படியா!”

“அட ! ஆமாங்க…

அந்த கால் ஹாஸ்பிடலேந்து வந்தது. 

நர்ஸ் கீர்த்தனாவுக்கு நினைவு வந்துடுச்சுன்னு சொன்னாங்க.”

“ஓ! வாவ். 

அவங்க ஏதாவது சொன்னாங்களா?

என் ஃப்ரெண்ட் வசு பத்தி ஏதாவது தெரிஞ்சுதா?”

“ம்…சொன்னாங்க.”

“என்ன சொன்னாங்க?”

“உங்க ஃப்ரெண்ட் வசுந்தராவுக்கு உங்க பிளட் டெஸ்ட்டுல ஏதோ சந்தேகம் வந்திருக்கு…

ஏதோ ஃபாரின் சப்ஸ்டன்ஸ் உங்க ரத்துல இருக்குமோன்னு அவங்களுக்கு அந்த ரிப்போர்ட்லேந்து தெரிய வந்திருக்கு. சோ அவங்க நர்ஸ் மிஸ் நளினிகிட்ட இன்னும் ஏதோ டெஸ்ட் செய்ய சொல்லிருக்காங்க… 

அன்ட் என்னவா இருக்கலாம்ன்னும் சொல்லிருக்காங்க. 

அதை அந்த நளினி இந்த கீர்த்தனாகிட்ட ஷேர் செஞ்சிருக்கா. அதை தெரிந்த கீர்த்தனா என்னை பார்த்ததும் சொல்லலாமா வேண்டாமான்னு யோசிச்சிருக்கா. ஆனா அவ பயமே அவளை தாக்க உங்க எதிரிகளுக்கு சாதகமாயிருக்கு‌. 

தாக்கிட்டாங்க…”

“அப்படி பார்த்தா அவங்க டார்கெட் கீர்த்தனா தானே!

அப்புறம் ஏன் நர்ஸ் நளினியை கொன்னாங்க?”

“அங்க தான் நீங்களே அவங்களுக்கு உதவி செய்துருக்கீங்க.”

“என்ன நானா! எப்படி?”

“உங்க எதிரிகளுக்கு கீர்த்தனா மெயின் டார்கெட் இல்ல. 

அதுக்கு முன்னாடி அவங்க கிட்டேந்து தப்பிச்சு போன நளினி தான்.

ஆனா நாம ஹாஸ்பிடல் போனபோது நம்மை பார்த்து ஏதோ சொல்ல வந்து அப்புறம் எதையோ இல்லை யாரையோ பார்த்து பயந்து நம்மகிட்டேந்து விலகி வேகமா போனதாலும்…

அதை கவனித்த நான் அவங்க பின்னாடி போனதாலும்…

அவங்களுக்கும் ஏதோ தெரிந்திருக்கக்கூடும்ன்னு நெனச்சு அவங்களை உடனே கொலை செய்ய முயற்சி செய்துருக்காங்க.

ஆனா நான் சட்டுன்னு அங்க போயிட்டதால அவங்க அங்கேந்து மறைஞ்சுட்டாங்க. கீர்த்தனாவும் நளினியும் ரூம் மேட்ஸ்”

“அதுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்? 

அதுவுமில்லாம நளினியை கொலை செய்யறதுக்கு நான் எப்படி உதவி செஞ்சேன்னு சொல்லுறீங்க?”

“எல்லாமே உங்களை வச்சு தானே நடக்குது சக்தி. 

அப்புறம் எப்படி இப்படி ஒரு கேள்வி கேட்கறீங்க!

வசுந்தராக்கும் நளினிக்கும் நடந்த அந்த விபத்துக்கு அப்புறம் நளினி அவங்க ரூம் விட்டு வரவே இல்லை.

சோ அவங்களை தேடிட்டு இருந்திருக்காங்க.

அந்த நேரம் பார்த்து நீங்க அவங்க ரூமுக்கு போய் அவங்க இருந்த இடத்தை காட்டிக் கொடுத்திருக்கீங்க‌.”

“ஆனா நான் போன போ…

என்னை யாருமே ஃபாலோ பண்ணினா மாதிரி இல்லையே.

நான் மட்டும் தான் போனேன். 

வந்தேன்.

நான் நல்லா சுத்தி பார்த்தேனே!”

“அது தான் எப்படின்னு தெரியலை.

நீங்க அன்னைக்கு விஷாலை பார்க்க போனப்போ கொண்டு போன பர்ஸ்/பேக், உங்க மொபைல், நீங்க போட்டுட்டு போன ஷூ ஆர் சான்டில்ன்னு எல்லாத்தையும் ப்ளீஸ் எடுத்துட்டு வாங்க.”

“ஓ! இதோ எடுத்துட்டு வரேன்.”

என்று சக்தி எழுந்து அவள் அறைக்குள் சென்றதும் விஷால் மெல்ல ஜேம்ஸிடம்…

“என்ன ஜேம்ஸ்! பக் பண்ணிருப்பாங்கன்னு சந்தேகப்படறயா?”

“ம்…எஸ் விஷால்.

ஏன்னா, சக்தியை யாராவது ஃபாலோ செய்திருந்தா…

எப்படியும் ஒரு ஹின்ட் அவங்களுக்கு கிடைச்சிருக்கும்…

ஆனா அப்படி யாரைமே  எங்கையுமே அவங்க பார்க்கலை…

ஆனா அவங்க எங்க போறாங்க, வர்றாங்க அப்படீங்கறதெல்லாம் எவனோ எங்கையோ உட்கார்ந்துட்டு பார்க்கிறான். 

அது தான் செக் பண்ணிடலாம்ன்னு…”

“அப்படி பார்த்தா ‘தி’ வீட்டையே சானிடைஸ் பண்ண வேண்டாமா ஜேம்ஸ்.”

“ம்…அதுவும் நல்ல யோசனை.

இரு என்னோட டீமை வரச் சொல்லறேன்.”

என்று ஃபோன் செய்ய வெளியே சென்றான் ஜேம்ஸ். அப்போது கையில் பேக், பர்ஸ், டிரெஸ், சேன்டல்ஸ், சாவிகள் என அனைத்தையும் எடுத்து வந்த சக்தி, 

“ஹேய் வி!

ஜேம்ஸ் எங்க?

நான் இந்த டிரெஸ்ஸை லாண்டரி பேக்ல போட்டுட்டு கப்போர்டு ஃபுல்லா தேடிண்டு இருந்தேன். 

அது தான் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு.”

“அவன் கால் பண்ண போயிருக்கான்‌.

ஆங் இதோ வந்துட்டானே.”

“ஆங். 

இந்தாங்க ஜேம்ஸ்.”

“சக்தி. 

அதை எல்லாத்தையும் இங்க வையுங்க.”

என்று டேபிளை காண்பித்து அதில் வைக்க சொல்லி… ஏதோ ஒன்றை வைத்து சோதனை செய்து பார்த்தான். பின் சக்தியை பார்த்து…

“இல்லையே எனக்கு அப்படி எதுவும் யாரும் செய்திருக்கறதா தெரியலையே.

எவ்ரிதிங் இஸ் க்ளீன்.”

என்றதும் விஷால் ஜேம்ஸிடம்…

“அப்பாடா. 

நல்லதா போச்சு.

இல்லாட்டி நாங்க பேசினதெல்லாம் எங்கெங்கையோ போயிருக்கும்.”

என்று விஷால் கூறிக் கொண்டிருக்கும் போது, சக்தி வீட்டின் அழைப்பொலி கேட்க உடனே சக்தி சென்று கதவை திறந்தாள். வெளியே ஒரு ஆறரை அடி உயரத்தில் டிப்டாப்பாக ஒரு ஆசாமி நின்றிருக்க…அவரிடம் 

“எஸ். 

நீங்க யாரு.

உங்களுக்கு என்ன வேணும்.

ஹவ் மே ஐ ஹெல்ப் யூ”

என்று சக்தி கேட்டுக் கொண்டிருக்கும் போதே ஜேம்ஸ் எழுந்து வந்து சக்தியிடம்…

“சக்தி…

இது என்னோட நண்பன் ப்ரூஸ்.

ஹே ப்ரூஸ் என்ன இங்க?

சக்தி இஃப் யூ டோன்ட் மைண்ட்…

நான் அவனை உள்ளே அழைத்து வரலாமா?”

என்று கேட்க அதற்கு சக்தியும் சம்மதிக்க…ப்ரூஸை சக்தி வீட்டினுள் அழைத்து வந்தான் ஜேம்ஸ். அப்போது சக்தி ப்ரூஸை சோஃபாவில் அமரச்சொல்லிவிட்டு. அடுப்படிக்குள் சென்று ஜூஸ் எடுத்து வரச் சென்றாள். அப்போது ஜேம்ஸ், ப்ரூஸை விஷாலுக்கு

“இவன் என்னோட பெஸ்ட் ப்ரெண்டு.”

என்று அறிமுகம் செய்து வைத்தான். அப்போது விஷாலும் தன்னை ப்ருஸிடம் அறிமுகம் செய்து கொண்டு கைக்குலுக்கினான். 

“ஹே ப்ரூஸ் நான் இங்க இருக்கறது எப்படி உனக்கு தெரியும்.

அன்ட் நீ ஏன் இங்க வந்த?”

என்று ஜேம்ஸ் கேட்க அதற்கு…

“நான் உன்கிட்ட ஒரு முக்கியமான கேஸ் விஷயமா பேசணும் அதுதான் உன் ஆபீஸுக்கு போனேன்.

நீ அங்க இல்ல…

எங்கன்னு கேட்டேன்.

இங்கன்னு சொன்னாங்க.

வந்துட்டேன்.

போதுமா..

இட் ஈஸ் வெரி இம்பார்ட்டென்ட் அது தான்.”

ப்ரூஸ் பதிலளித்துக்கொண்டிருக்கையிலே, டிரேவில் ஜூஸ் எடுத்து வந்த சக்தி, அதை ப்ரூஸிடம் எடுத்துக்க சொல்லி கொடுத்துவிட்டு, விஷாலின் அருகே அமர்ந்து கொண்டே…

“நீங்களும் போலீசா” 

என்று கேட்க அதற்கு ஜேம்ஸ் சட்டென

“ஏன் சக்தி!

போலீஸ் ஃப்ரெண்டு போலீசா தான் இருக்கணுமா என்ன?”

என்று சொல்ல உடனே ப்ருஸ் சக்தியை பார்த்து,

“இல்லங்க நான் ஐ.டி.

ஜேம்ஸும் நானும் ஒரே டிப்பார்ட்மெண்ட். 

ஐ மீன்… இன் காலேஜ் 

சோ ஃப்ரெண்ட்ஸ்.”

“ஓகே! அப்படீன்னா…

விஷால் உனக்கும் ப்ரூஸை தெரிஞ்சிருக்கணுமே!”

“எனக்கு தெரியாதுப்பா!”

என்று விஷால் சொல்ல உடனே ஜேம்ஸ் அவனிடம்…

“டேய் நம்ம கேம் பார்க்க வந்திருக்கான்.

நீயும் மீட் பண்ணிருக்க…

என்னடா மறந்துட்டியா!”

“அட ஆமாம் ப்ரோ!

நானும் உங்களை மறந்துட்டேன் பாருங்க…

ஆனா உங்க ஃபேஸ் ஃபெமிலியரா இருந்தது.

இப்போ ஜேம்ஸ் சொன்னதுக்கப்புறமா தான் உங்களை பார்த்த ஞாபகம் வருது.”

என்று ப்ரூஸும் கூற அசடு வழிந்த விஷால்‌…

“ஆங்…

ஆமாம் ஆமாம்…

இப்போ நல்லாவே ஞாபகம் வருது.”

என்று சொல்லி சமாளிக்க. உடனே ப்ரூஸ் எழுந்து விஷாலின் தோளை தட்டிக்கொடுத்து…

“என்ன ப்ரோ…

அதுக்குள்ள என்னை மறந்துட்டீங்க…

பை தி பை சக்தி உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு.”

என்று சுற்றும் முற்றும் பார்த்தவனை சக்தி அவள் வீட்டை சுற்றிக்காட்டிக் கொண்டே…

“திஸ் ஈஸ் ரென்டட்…

என்னோடது இல்லை.” ன்னு சொன்னதை கேட்டுக் கொண்டே வீடு முழுவதுமாக ஒரு ரவுண்டு வந்த ப்ரூஸ் மறுபடியும் ஹாலுக்கு வந்தமர்ந்து,

“ரென்டட் வீடா இருந்தாலும் ரொம்ப அழகா வச்சிருக்கீங்க.”

என்று சொன்னதும் ஜேம்ஸ் ப்ரூஸை பார்த்து…

“என்ன விஷயமா நீ வந்திருக்க.

சொல்லு கேட்போம்.”

“இல்ல ஜேம்ஸ்…

இட்ஸ் ப்ரைவேட்.”

“ஓ! ஓகே.

சரி சக்தி அன்ட் விஷால் நான் அப்போ கிளம்பறேன். 

கடமை ப்ரூஸ் ரூபத்தில் வந்து அழைக்கிறது.

பை ஃபார் நவ்.

டேக் கேர்.”

என்று விஷால் மற்றும் சக்தியிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து ஜேம்ஸும், ப்ரூஸும் வெளியேறினர்.  

அவர்கள் காரில் ஏறி சென்றபின் வீட்டுக்குள் வந்த சக்தி விஷாலிடம்,

“அச்சச்சோ வி! 

அந்த கீர்த்தனா வேற என்னென்ன சொன்னான்னு நாம கேட்கலையே!

ஜேம்ஸும் அதுக்கு மேல சொல்லலையே!”

“ஆமாம் நீ ஏதோ கேள்வி கேட்க போய்…

டாபிக் மாறி…

அப்புறம் ப்ரூஸ் வந்து…

எல்லாமே மாறி…

கடைசில ஜேம்ஸும் கிளம்பி போயிட்டான்…”

என்று இருவருமாக பேசிக் கொண்டிருக்கும் போது விஷாலுக்கு ஒரு மெஸேஜ் வந்தது. 

அதை பார்த்ததும் அவன் சக்தியிடம்…

“ஹேய் தி!

எனக்கு ஒரு இம்பார்ட்டென்ட் கால் இருக்கு…

மறந்தே போயிட்டேன்.

நான் போய் அந்த கால் முடிச்சிட்டு வரவா?”

என்று கேட்க,

“ஏன்! இங்கேயே உட்கார்ந்து பேசேன். 

நான் வேணும்னா உள்ள போறேன்.”

என்று சக்தி சொல்ல…உடனே விஷால்,

“இல்ல இல்ல இரு…

இதோ வந்துடறேன்.

ஜஸ்ட் கிவ் மீ ஃபைவ் மினிட்ஸ்”

என்று கூறிவிட்டு வேகமாக சக்தி வீட்டிற்கு வெளியே சென்று, அவள் வீட்டின் முன் இருந்த லானில் நின்றுக்கொண்டு பேசினான்.

விஷாலுக்கு வந்த அந்த  முக்கியமான மெஸேஜ் என்ன? யாருடையது? ஏன் மெசேஜை பாரத்ததும் விஷால் பதற்றமானான்?  எதற்காக வெளியே சென்று பேச வேண்டும்? போன்ற கேள்விகளை தாங்கியவளாய்.

தொடர்வாள்…

Leave a comment