அத்தியாயம் 38: இன்ஸ்டால்மெண்டில் இன்ஃபர்மேஷன்!

ஜேம்ஸும், சக்தியும் ஒரு சேர ஒரே டைலாக்கை பேசி பின் மௌனம் காப்பதை கவனித்த விஷால் சக்தியிடம் ஃபோனை ஸ்பீக்கரில் போட சொன்னான். சக்தியும் ஸ்பீக்கரை ஆன் செய்தாள். உடனே விஷால் ஜேம்ஸிடம்…

“என்ன மை டியர் ஃப்ரெண்ட்! 

எப்படி இருக்க?”

“ஹேய் விஷால் நீ எங்க அங்க?”

“ஏன் வரக்கூடாதா என்ன?”

“அப்படி இல்லடா…

நீ இன்னைக்கு வர்றதா சக்தி ஒண்ணுமே சொல்லலையே! 

அது தான் கேட்டேன்.”

“நான் இன்னைக்கு வர்றது அவளுக்கும் தெரியாது.

ஏதோ தோணிச்சு லீவு போட்டுட்டு வந்துட்டேன்.

பாதி வழி வந்ததுக்கப்புறம் தான் தி கிட்டயே சொன்னேன்.”

“ம்‌…சரி சக்தி ஏதோ முக்கியமான விஷயம் சொல்லணும்ன்னு சொன்னாங்களே!

அது என்ன?”

“இதோ பக்கத்துல தான் இருக்கா. 

பேசு.

ஆனா ஒரே நேரத்துல ரெண்டு பேருமா பேசாதீங்க.”

என்று சக்தியிடம் அவள் ஃபோனை கொடுத்தான் விஷால். சக்தியும் பேசலானாள்.

“நீங்களும் ஏதோ முக்கியமான விஷயம் சொல்லணும்ன்னு சொன்னீங்களே!”

என்று கேட்க. உடனே ஜேம்ஸ்,

“லேடீஸ் ஃப்ர்ஸ்ட்” 

என்று சொல்ல. உடனே சக்தி…

“சரி. நானே சொல்லறேன்.”

என்று ஜேம்ஸ் அன்று வந்து சென்ற பிறகு அவள் வீட்டின் பேஸ்மென்ட்டில் நடந்தவற்றை முழுவதுமாக கூறி முடித்தாள். அதை கேட்ட ஜேம்ஸ் அவளிடம்…

“அப்போ அந்த கிட்சன் பக்கத்துல இருந்த அந்த பேஸ்மென்ட் கதவுக்ககுள்ளேந்து வந்த அந்த சப்தம்!”

“அது அப்போ எனக்கு கேட்கலையே ஜேம்ஸ்!”

“அச்சோ! சக்தி! ஜஸ்ட் மிஸ்! ச்சே…நான் அப்பவே அந்த கதவை திறந்து பார்த்து இருக்கணும்.

இப்படி கண்ணாமூச்சி ஆட்டம் காட்டறானே! 

உங்க பக்கத்து வீட்டு விவகாரம் தெளிவானதும், அங்க காவலுக்கு போட்டிருந்த ரெண்டு செக்யூரிடியை உடனே ரிமூவ் செஞ்சுருக்கக் கூடாது.

இன்னும் ஒரு நாள் வச்சிருந்தா…ச்சே…”

“இல்லை ஜேம்ஸ். ஒரு வேளை நீங்க அந்த செக்யூரிட்டியை எடுக்கலைன்னா அவங்க தைரியமா என் வீட்டுக்குள்ள வந்திருக்க மாட்டாங்கங்கறதுக்கு எந்த வித கியாரண்டியும் சொல்ல முடியாது. ஏன்னா, பட்டபகல்ல காரோட என்னை என்ன பண்ணினாங்கங்கறதுக்கே ஆதாரம் இல்ல அன்ட் அதையே துணிஞ்சு செஞ்சுருக்காங்கன்னா…

இட்ஸ் ஆல் மை மிஸ்டேக்.

நான் ப்ளூவை பற்றி உங்ககிட்ட முன்னாடியே சொல்லிருக்கணும்.

அவனை உங்ககிட்டேந்து மறைச்சு வைக்க நெனச்சு…

கடைசில யாருகிட்டயோ அவனை பறிக்கொடுத்துட்டு இப்போ வருத்தப்பட்டுண்டு இருக்கேன்.”

“அப்படீன்னா அன்னைக்கு உங்க பக்கத்து வீட்டை சோதனை போட வந்திருந்தப்போ…

நீங்க உங்க வீட்டைப் பார்த்து கையசைத்து ஏதோ சைகை காட்டினது எல்லாம் உண்மை தானே!

உங்க ப்ளூங்கற ரோபோகிட்ட தான் ஏதோ ஜாடையில சொன்னீங்க?”

“ஆமாம்! ஜேம்ஸ். அவன் என்ன நடக்குதுன்னு கேட்டான்.

அதுக்கு நான் வீட்டுக்கு வந்து சொல்றேன்னு சொன்னேன்.”

“ஓ! அந்த ரோபோ அவ்வளவு விவரமெல்லாம் கேட்குமா?”

“அவன் நம்மை போலவே யோசிக்கவும் செய்வான்.

பேசவும் செய்வான்.

ஹீ ஈஸ் ப்ரோக்ராம்டு லைக் தட்.”

“இப்படியெல்லாம் எதையாவது கண்டுபிடிங்க…

அதுல பல ரகசியங்களை வச்சுக்கோங்க…

அப்புறம் ஏதாவது ஆச்சுன்னா நாங்க உங்க உதவிக்கு வரணும் இல்ல…

நல்லா இருக்குங்க…

நீங்களும் உங்க கண்டுபிடிப்பும்…”

“நான் இல்ல எங்க ப்ரொபசர் மிஸ்டர் சேவியர் தான் கண்டுபிடிச்சார்.

நான் அவருக்கு ஒத்தாசையா இருந்தேன்.

ஆனா ப்ளூ என்கிட்ட வந்ததுக்கப்புறமா…

அவனை வைத்து நான் செய்த ஆராய்ச்சில…

அதுக்குள்ள நான் ஒன்றை பொருத்திருக்கேன்‌…

இந்த டூ ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் மாதிரி ஒண்ணும்…

அப்புறம் செல்ஃப் டிஸ்ட்ரக்டிவ் ஆல்காரிதமும் ப்ரோகிராம் செய்து வச்சுருக்கேன்.

ஃபார் அடிஷனல் சேஃப்டி.”

“சூப்பர். 

குருவுக்கு ஏத்த சிஷ்யை…

சரி…இன்னும் இது மாதிரி வேற ஏதாவது சொல்லாம இருக்கீங்களா?

தயவுசெய்து விவரங்களை இன்ஸ்டால்மென்ட் பேசிஸில் சொல்லாம…முழுசா சொன்னீங்கன்னா எங்களுக்கும் உங்க ப்ளூவுக்கும் ரொம்பவே ஹெல்ப்ஃபுல்லா இருக்கும். ”

“இல்ல! இல்ல! ஜேம்ஸ். 

அவ்வளவு தான் இனி சொல்ல என்கிட்ட வேறெதுவும் இல்லை.”

“நீங்க சொல்றதை வச்சுப்பார்த்தா…

அந்த கும்பல் உங்களை மறுபடியும்  கடத்திட்டு போக வாய்ப்பிருக்கு.”

“அதுதான் ஒரு தடவை கடத்திட்டாங்களே”

“அது எதுக்குன்னு! இன்னமும் தெரியலையே‌! ஆனா இப்போ நீங்க சொன்னதுபடி பார்த்தா அவங்களுக்கு ப்ளூ மட்டும் இருந்துட்டு பிரயோஜனம் இல்ல…அந்த ப்ளூவ வச்சு அவங்க ஒண்ணும் பண்ண முடியாது. அந்த ஆல்காரிதத்துக்கான கோட் அன்ட் குறியீடு தெரிஞ்ச ஒரே ஆள் நீங்க! சோ நிச்சயம் உங்களை கடத்தவும் வருவாங்க.” 

“நீங்க சொன்னா மாதிரி ப்ரொபசர் சேவியர் அவரோட மரணத்தை ஒரு கவர்அப் போல் யூஸ் செஞ்சு…

இப்போ நான் இருக்கும் இடத்தை தெரிஞ்சுண்டு ப்ளூவை கடத்தி இருந்தா…

அவங்களுக்கு நான் அவசியமில்லையே!”

“அது யூகம் தானே சக்தி.

எதுக்கும் நீங்க ஜாக்கிரதையா இருங்க.

நான் ஈவினிங் ஒரு அஞ்சு மணிக்கு உங்க வீட்டுக்கு வரேன்.

உங்க வீட்டு பேஸ்மென்ட்டை நான் பார்க்கணும்.”

“ஓ! தாராளமா வாங்க. 

சரி…நீங்க சொல்ல வந்த விஷயம் என்ன?

அது பத்தி நீங்க எதுவுமே சொல்லையே!”

“ம்…சொல்லறேன்.

ஈவினிங் மீட் பண்ணும்போது விவரமா சொல்லறேன்.

மறுபடியும் சொல்லறேன் சக்தி.

பத்திரமா இருங்க.

டேய் விஷால் நீ சக்தி கூடவே இரு.”

“நான் ரெடி…

ஆனா அம்மணி நைட் ஆச்சுன்னா என்னை தொறத்தி விட்டுருவாங்களே!”

“டேய்! டேய்! நான் வர வரைக்கும்ன்னு சொன்னேன்.”

“சரிப்பா சரி.

நீ வர வரைக்கும் எங்கேயும் போகாம இங்கேயே இவளை பார்த்துக்கிட்டே உட்கார்ந்துருக்கேன். 

போதுமா.”

“அது போதும். 

பை ஃபார் நவ். 

சீ யூ இன் தி ஈவினிங்.”

என்று கூறி ஜேம்ஸ் ஃபோன் காலை துண்டித்ததும். விஷால் சக்தியையே வச்சக்கண் வாங்காது வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அதை கவனித்த சக்தி விஷாலிடம்…

“இது கொஞ்சம் டூ மச்.”

“நான் ஜேம்ஸோட பேசிண்டு இருந்தப்போ…

நீ… என்ன… ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருந்த!”

“என் ப்ளூவ யாரு கடத்திருப்பா?

அவனை என்ன செய்ய வைக்கப் போறாளோன்னு நெனச்சுண்டு இருந்தேன்.”

“சரி வா…உன் வீட்டு பேஸ்மென்ட்டை போய் பார்ப்போம்.”

என்று கூறிய விஷால் சக்தியை அழைத்துக் கொண்டு அவள் வீட்டின் பேஸ்மென்ட் சென்று அங்கிருந்த அந்த கதவையும், அதில் எழுதப்பட்டிருந்ததையும் பார்த்துக் கொண்டே கேரேஜ் ஷட்டரின் சென்சர்களை பார்த்தான். உடனே சக்தியிடம்…

“தி…

இந்த வழியா தான் உள்ள வந்திருக்காளா!…”

“ஆமாம் வி.

அந்த சென்சரை டாப் செய்திருக்கா.”

“ம்…சரி…நீ லஞ்ச் சாப்பிட வேண்டாமா?

மணி மூணாவ போறது.”

“எனக்கு பசியே இல்லை வி.”

“நோ…நோ…

நீ ஏதாவது சாப்ட்டே ஆகணும்.

வா நாம ரெண்டு பேருமா லீ கார்னர் போய் சாப்டுட்டு வருவோம்.

இந்த கேரேஜ் கதவு இப்படி பாதியா தொறந்திருக்கே! 

ஈஸ் இட் ஓகே?”

“அதுக்குள்ள இனி எடுத்துண்டு போக என் கார் மட்டும் தான் இருக்கு. நான் கிட்சன்ல இருக்குற டோரை லாக் பண்ணிக்கறேன்.”

“ஆமாம் நீ பேஸ்மென்ட்லேந்து இந்த கேரேஜுக்கு வர இந்த கதவை பூட்டி வைக்க மாட்டியா?”

“பூட்டி தான் வைப்பேன். 

அதையும் இங்க பாரு அழகா லாக் இருக்கற இடத்தை மட்டும் கட் செய்து எடுத்திருக்கா.”

“இதெல்லாம் நடக்கும் போது ப்ளூ பேஸ்மென்ட்ல இருந்துதா? 

இல்லை வீட்டுக்குள்ள இருந்துதா?”

“வீட்டுக்குள்ள என்கூட பேசிண்டு இருந்த ப்ளூவை…

நான் தான் ஜேம்ஸ் வரப்போறார்னுட்டு…

பேஸ்மென்ட் போக சொன்னேன். 

அதுவும் பாவம் சமத்தா போச்சு.

அப்போ மட்டும் நான் அவனை என் கூடவே வச்சுண்டு இருந்திருந்தேன்னா…

இப்போ இப்படி வருத்தப்பட வேண்டியிருக்க தேவையில்லை.”

“விடு சக்தி…

எல்லாம் நடந்து முடிஞ்சுடுத்து…

இனி நடக்க இருக்கிறதை பார்ப்போம்.

சரி…நீ ஏதோ செல்ஃப் டிஸ்ட்ரக்டிவ் ஆல்காரிதம் ப்ளூக்குள்ள வச்சிருக்கறதா ஜேம்ஸ்ட்ட சொன்னியே…

அதை ஆக்டிவேட் செஞ்சு ப்ளூவ செல்ஃப் டிஸ்ட்ரக்ட் பண்ண வைக்க முடியாதா?”

“வி! என்ன சொல்லற?

மறுபடியும் அவனை உருவாக்க எவ்வளவு செலவாகும் தெரியுமா?

இப்போ எங்க கம்பெனில கூட அவனை மாதிரியே பட் இன்டஸ்டிரியல் யூஸேஜுக்காக ஒரு ரோபோ தயாரிச்சுண்டு இருக்கோம். 

யூ நோ ஹவ் மச் டைம் அன்ட் மேன்பவர் எனர்ஜி இட் டேக்ஸ்.

ரொம்ப ஈசியா சொல்லிட்ட…”

“இல்ல…

அது தப்பானவா கையில போயிட்டா என்ன ஆகும்ன்னு…

நீ வருத்தப்பட்டதால நான் அப்படி சொன்னேன்.”

“பரவாயில்லை வி. 

இட்ஸ் ஓகே.

ஆனா அவனை கடத்தினவாளுக்கு அவனை வச்சு ஏதாவது செய்யணும்னா… 

அந்த கோட் அன்ட் குறியீடு வேணுமே!”

“இவ்வளவு செஞ்வாகிட்ட ஹாக்கர்ஸ் இருக்க மாட்டாளா!

அவாள வச்சு ஹாக் செய்ய முடியாதா என்ன.”

“அது அவ்வளவு ஈஸி இல்லை வி.”

“அப்போ அவாளுக்கு நீயும் ரொம்ப முக்கியம் இல்லையா?”

“இதுக்கு என்கிட்ட பதில் இல்லை வி.”

“சரி…இஃப் யூ டோன்ட் மைண்ட்…

அது என்ன அந்த ஆக்டிவேஷன் கோட் அன்ட் குறியீடுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

“ம்…”

“இல்ல தெரிஞ்சுக்கலாமேன்னு கேட்டேன்.

உனக்கு விருப்பமில்லைன்னா…

வேண்டாம்.”

“சாரி வி.

இந்த விஷயமெல்லாம் சரியாகாம…

எனக்கு என் ப்ளூ கிடைக்கற வரை நான் யார்கிட்டேயும் அதை பகிர்ந்துக்கறதா இல்லை.

ஐ ஆம் வெரி சாரி.”

“ஹேய்…இதுக்கெல்லாம் எதுக்கு சாரி…இட்ஸ் ஃபைன் லீவ் இட்.

சரி வா ஏதாவது சாப்டுட்டு வரலாம்.

ஜேம்ஸ் வந்துட்டான்னா…அப்புறம் அவன் சொல்ற விஷயமெல்லாம் கேட்க தெம்பு வேணும் இல்லையா.”

“ஏன் அவரு அப்படி என்ன சொல்லிடப்போறார்?

நீ ஏன் அப்படி சொல்லற?”

“உன்னை சுத்தி நடக்கறதெல்லாத்தையும் வச்சு தான் அப்படி சொன்னேன் தாயே!

உனக்கு பசிக்கறதோ இல்லையோ எனக்கு நல்ல பசி.

நான் போறேன். 

என் கூட வருவியா மாட்டியா.”

“சரி சரி வா போயிட்டு ஜேம்ஸ் வர்றதுக்குள்ள வந்துடுவோம். 

அன்ட் தாங்க்ஸ் வி.”

“தாங்க்ஸா! எதுக்கு?”

“இல்ல இந்த மாதிரி இக்கட்டான நேரத்துல என் கூட இருக்கியே அதுக்கு தான்.

நீயும் இல்லைன்னா…

ஜேம்ஸ் இருந்திருக்க மாட்டார்…

ஜேம்ஸ் இல்லைன்னா மிஸஸ் டேவிட் பத்தின விவரங்கள் அன்ட் பீட்டர் பத்தின விஷயங்கள்ன்னு எதுவுமே தெரியாம போயிருக்கும்.

இப்போ ப்ளூ காணாம போணதுக்கு அப்புறமா தான் நான் போலீஸ் கிட்டயே போயிருப்பேன்…

சோ தாங்க்ஸ் ஃபார் எவ்ரிதிங்.”

“ஓ! ப்ளீஸ்…

நோ சச் ஃபார்மல் டாக்ஸ் தி. 

என் வாழ்நாள் முழுவதும் என்னை ஆளப்போறவளுக்கு ஒரு சங்கடம்ன்னா நான் இருக்காம வேறு யாரு இருப்பா?

பேசிண்டே லீ கார்னர் வந்தாச்சு.

போய் ஏதாவது சாப்டுண்டே பேச்சை கன்டினியூ பண்ணலாம் வா.”

என்று கூறிக்கொண்டே ஹோட்டலுக்குள் சென்றவர்கள் அவர்கள் சொல்லிக்கொண்டது போலவே உணவருந்தி விட்டு சக்தியின் வீட்டுக்கு திரும்பி வந்தனர். விஷாலுடன் இருந்தாலும் சக்தியின் மனம் ப்ளூவைத் தேடியது. 

ஜேம்ஸ், தான் சொன்னது போலவே, ஐந்து மணிக்கு சக்தி வீட்டிற்கு சென்றான். அங்கே சக்தியும் விஷாலுமாக அவனை வீட்டினுள் வரவேற்றனர். அவன் சோஃபாவில் அமர்ந்ததும்… சக்தி அவனிடம்,

“நீங்க சொல்றதா சொன்ன அந்த முக்கியமான விஷயம் என்ன?’

என்று ஆவலோடு கேட்டு பதிலுக்காக ஜேம்ஸையே பார்த்துக் கொண்டு அம்ர்ந்திருந்தாள். 

ஜேம்ஸ் சொல்ல இருக்கும் அந்த முக்கியமான விஷயம் தான் என்ன?

தொடர்வாள்…

Leave a comment