அத்தியாயம் 37: ஆல்காரித சோதனை! 

ப்ரொபசர் சேவியர்,  “நியூரல் ஓவர்ரைடு” அல்காரிதம் பற்றி எவரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் ரகசியமாக வைத்து வந்ததையும், அதை அந்த பீட்டர் கண்டுப்பிடித்து விட்டதாகவும், அதை கேட்டு ப்ரொபசரை அவன் துன்புறுத்தியதாகவும் அவர் கூறியதாக சக்தி விஷாலிடம் கூறினாள். அதை பொறுமையாக கேட்ட விஷால் சக்தியிடம்,

“அது என்ன “நியூரல் ஓவர்ரைடு” ஆல்காரிதம்? 

அது எப்படி ப்ரொபசர் சேவியர் ரகசியமா வச்சிருந்தது அந்த பீட்டருக்கு தெரிய வந்தது?

உன்கிட்டேந்து மறைச்சு வச்ச அவருக்கு பீட்டர் கிட்டேந்து மறைச்சு வைக்க ஏன் முடியலை?”

“வி…

அவர் மேல் எனக்கு அளவுகடந்த மரியாதையும் மதிப்பும் இருந்ததால நான் அவர் சொல்படி நடந்துக்கிட்டேன். 

அதுனால அவரோட அந்த ப்ராஜெக்ட் ல நான் இன்ட்ரெஸ்ட் காட்டலை.

ஏன்னா… எப்போ அதில் என் பங்கு முடிஞ்சிடுச்சுன்னு அவர் சொன்னாரோ அப்போலேந்து அது எனக்கானதில்லன்னு நான் முடிவெடுத்து அந்த பக்கமே போகலை. 

ஆனா பீட்டருக்கு அதுல என்ன ஆதாயம் இருக்குன்னோ, அவனுக்கு எப்படி அந்த ஆல்காரிதம் பற்றி தெரிஞ்சுதுன்னோ இல்ல அவன் தான் அவரை கொல்ல முயற்சி செஞ்சான்ங்கறதுக்கோ என்கிட்ட எந்த ஆதாரமும் இல்லை. எக்சப்ட் ப்ரொபசர் சேவியர்ஸ் லாஸ்ட் ஸ்போக்கன் வேர்ட்ஸ்.

இது தான் உன்னோட செகன்ட் ஹாஃப் கேள்விகளுக்கான என்கிட்ட இருக்கும் பதில்கள்.”

“அப்போ முதல் கேள்விக்கான பதில்!”

“இரு இரு சொல்லறேன் வி.

ஐ ஆம் கம்மிங் டு தட்.

நியூரல் ஓவர்ரைடு அல்காரிதம் அப்படீங்கறது… நம் மனித மனங்களுடன் நேரடியாக இணையும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு ஏ.ஐ அல்காரிதம். இதன் மூலம் அறிவு பரிமாற்றம், நினைவாற்றல் மேம்பாடு, மேலும் இதனால் ஒருவர் மனதை கட்டுப்படுத்தி தன் கன்ட்ரோலுக்குள் கொண்டு வரக் கூட அதனால் சாத்தியமாகும்.

இதன் ஆபத்தான விளைவுகளை உணர்ந்த ப்ரொபசர், அந்த அல்காரிதத்தை ப்ளூவின் உள்ளே குறியாக்கம்…அதாவது ஸ்பெஷல் ஆக்டிவேஷன் கோட் ஒன்றை செய்து பூட்டினார். அதை செயல்படுத்தறதுக்கு ஒரு சிறப்பு குறியீடு இல்லாமல் அதை அணுக முடியாதபடியும் செய்திருந்தார்.”

“அப்படீன்னா…

அந்த ஆக்டிவேஷன் கோட் அன்ட் அந்த குறியீடு இதெல்லாம் தெரியாம எப்படி நீ அந்த ப்ளூவ இவ்வளவு நாளா யூஸ் பண்ணின?

அதுவுமில்லாம நீ வேற எதையோ பொருத்தி இருக்கன்னு வேற சொன்னையே! 

அது எப்படி சாத்தியம்?”

விஷாலின் கேள்விக்கு மௌனத்தை பதிலாக வீசிவிட்டு காஃபி கப்ஸை டிரேவில் வைத்து அதை கிட்சன் மேடையில் வைத்துக் கொண்டே விஷாலை பார்த்தாள். அந்த மௌனம் விஷாலை மீண்டும் கேள்வி கேட்க தூண்டியது, உடனே அவன்

“சக்தி உன்கிட்ட தானே கேட்கிறேன். 

என்ன பதிலேதும் சொல்லாம நீ பாட்டுக்கு எழுந்து போயிட்ட?”

“வி…

தட் ஈஸ் இம்ப்ளைட்.”

“அது தான் எப்படி? 

அவரோ பொக்கிஷம்ன்னு சொல்லி ப்ளூவ உன்கிட்ட கொடுத்துட்டார்.

நீயும் அதை எடுத்துண்டு இத்தனை வருஷமா பாதுகாத்துண்டு வர.

அவரோ இறந்துட்டார்.

நீயும் அங்க இருக்கலை. 

தென் ஹவ் இட் ஈஸ் இம்ப்ளைடு?”

“வி…வி…

அன்னைக்கு அந்த மயானத்துல ப்ளூவை பற்றி சொன்னபோதே அவர் அந்த ஆல்காரிதம் பற்றியும் அதற்கான ஆக்டிவேஷன் கோட் அன்ட் குறியீடு எல்லாத்தையுமே பகிர்ந்துகிட்டார். 

அதுனால தானே என்னால நீ சொன்னா மாதிரி ப்ளூவ யூஸ் பண்ண முடியறது.

அதுனால தான் இம்ப்ளைடுன்னு சொன்னேன்.”

“அவர் உன்கிட்ட சொன்னதெல்லாத்தையும் நீ என்கிட்ட சொல்லிருந்தேன்னா அப்படி எடுத்துக்கலாம்.

ஆனா நீ இதை எல்லாம் சொல்லாம அவர் உன்கிட்ட ஒரு பொக்கிஷத்தை கொடுத்து பார்த்துக்க சொன்னாருன்னு மட்டும் தானே சொன்ன.

அப்போ எப்படி எனக்கு தெரியும். 

அதுவுமில்லாம அது தெரிஞ்சதால தான்…

ப்ளூவ யூஸ் பண்ணறன்னு சொல்ல தெரிஞ்ச எனக்கு… 

அந்த ஆக்டிவேஷன் கோடும் குறியீடும் உனக்கு தெரிஞ்சிருக்கும்ன்னும் தெரிஞ்ச எனக்கு…

எப்போ எப்படி உனக்கு தெரிய வந்ததுன்னு தெரிஞ்சுக்க தான் அப்படி கேட்டேன் போதுமா.”

“வி…நல்லாவே சமாளிக்கற…ம்…

ஆனா ப்ளூவ யூஸ் பண்ண அந்த ரெண்டுமே வேண்டாம்.

அவனுக்குள்ள இருக்குற அந்த நியூரல் ஓவர்ரைடு ஆல்காரித்தை ஆக்டிவேட் பண்ண தான் அந்த கோட் அன்ட் குறியீடு வேணும்.”

“அப்படீன்னா…

நீ இன்னும் அதை ஆக்டிவேட் செய்து பார்க்கலையா?”

“ம்…ஒரு தடவை செய்து பார்த்தேன்.

அப்போ சரியா வரலை.

நெக்ஸ்ட் டைம்மும் ஏதோ மிஸ் பண்ணறேன்னு தெரிஞ்சுது.

அதை சரி செய்து மூணாவது தடவை டெஸ்ட் செய்தப்போ…

அந்த ஆல்காரிதம் வேலை செஞ்சுது.”

“ஹவ் டிட் யூ டெஸ்ட் இட்?”

“என் தோழி ருத்ராவோட பாய் ஃப்ரெண்ட் வச்சு தான் முதலும் கடைசியுமா டெஸ்ட் செஞ்சேன்…

இட் வாஸ் மைண்ட் ப்ளோயிங்.”

“என்னன்னு கொஞ்சம் தெளிவா சொல்லேன்.”

“என் தோழி ருத்ரா எப்பவும் அவ பாய்ஃப்ரெண்டோடவே சுத்திண்டு இருந்தா. 

அவன் பார்க்க நல்ல பையனா எனக்கு தெரியலை.

அப்போ ஒரு நாள் ருத்ரா அவ பாய்ஃப்ரெண்ட எங்க ஷேர்டு ரூமுக்கு கூட்டிண்டு வந்தா.

அவா ரெண்டு பேருமே ஃபுல் போதையில இருந்தா. 

என்னோட கண்டீஷனே அப்படி யாரையும் ரூமுக்கு கூட்டிண்டு வரக்கூடாதுங்கறது தான்.”

“உன் ஃப்ரெண்டுகிட்டயுமா”

“ம்…மேலே சொல்லணுமா வேண்டாமா?”

“சொல்லுமா சொல்லு. 

யூ டிண்ட் ஸ்பேர் யுவர் ஃப்ரெண்டு டூ…

ம்…மேல சொல்லு!”

“ருத்ரா மட்டையாகி சோபாவுல படுத்துட்டா.

ஆனா அவ கூட்டிண்டு வந்த அவளோடு பாய்ஃப்ரெண்டு அனத்திண்டே இருந்தான். 

இட் வாஸ் சோ டிஸ்டர்பிங்.

அந்த நேரத்தை நான் யூஸ் பண்ணி…

அந்த ஆலாகாரிதத்தை ஆக்டிவேட் செஞ்சு,

ப்ளூவ வச்சு ருத்ராவோட பாய்ஃப்ரெண்டு மைண்ட் ரீட் பண்ணினதுல…

அவன் சரியான சைக்கோன்னு தெரியவர…

உடனே அவனோட மைண்டை ப்ளூ தன்னோட கன்ட்ரோல்ல எடுக்க வச்சு…

ருத்ரா பத்தின அவனோட மெமரீஸ் எல்லாத்தையும் எரேஸ் செஞ்சதோட இல்லாம…

அவனை பற்றிய விவரங்களையும் அவன்கிட்டேந்து எரேஸ் செஞ்சு,

தான் யாரு என்னங்கறது கூட தெரியாம ஆக்கி…

அவனை பில்டிங் கீழே போகும் படி ஆர்டர் கொடுத்ததும்…

கீக்கொடுத்த பொம்மை மாதிரி அவனும் கீழே போனான். 

அதுக்கப்புறம் அந்த ஆல்காரிதத்தை ஷட் பண்ணிட்டு. 

அவன் கீழ போயிட்டானான்னு நானும் போய் கன்பார்ம் பண்ணிண்டுட்டு போய் படுத்து தூங்கிட்டேன்.”

“அச்சச்சோ! உன் ஃப்ரெண்டு ருத்ரா பத்தின மெமரீஸ் டிலீட் செஞ்ச வரைக்கும் ஓகே.

ஆனா பாவம் ஏன் அவனையே அவனுக்கு தெரியாத மாதிரி ஆக்கின.”

“அவன் ருத்ரா மாதிரி பல பெண்களை ஏமாத்திருக்கான்.

அன்ட் ஏமாத்த ப்ளான் போட்டும் வச்சிருந்தான். 

அவனை எல்லாம் அப்படித்தான் பைத்தியமாக்கி அலைய விடணும்.”

“அதுக்கப்புறம்…

அவனுக்கு என்ன தான் ஆச்சு?”

“நான் கலையில ஆஃபீஸ்க்கு போக கீழே வந்தப்போ…

அவன் அங்கேயே பித்துப் பிடிச்சு என்ன செய்யணும்ன்னு தெரியாம உட்கார்ந்துண்டு,

அங்க இருந்த மரத்தையே வெறிச்சுப் பார்த்துண்டு இருந்தான்.

பார்க்கவே பாவமா இருந்ததாலையும்…

அவனோட அந்த நிலைமைக்கு நானும் ஒரு காரணம்ங்கறதாலையும்…

அவனை கொண்டு போய் ஒரு மெண்டல் அசைலம்ல சேர்த்து விட்டுட்டு ஆஃபீஸ் போயிட்டேன்.”

“அவங்களே பைத்தியமாக்குவாங்களாம்…

அவங்களே ஆஸ்பிடல்ல சேர்ப்பாங்களாம்…”

“ஹேய்…வி…

அவன் இருக்க வேண்டிய இடத்துல தான் இருக்கான்.

ஓகே.”

“சரி …உன் ஃப்ரெண்ட் ருத்ரா அவனை தேடலையா?

உன் கிட்ட ஏதும் கேட்கலையா?”

“அவ எழுந்துக்கறதுக்கு முன்னாடியே நான் ஆஃபீஸ் போயிட்டேன்.

சோ, காலையில அதைப் பத்தி எதுவும் பேச நேரமில்லாம போச்சு. 

அவ அன்னைக்கு ஆபீஸுக்கு வரவு மில்லை.

லீவு போட்டுட்டா.

ஆனா ஈவ்னிங் நான் ரூமுக்கு வந்ததும் என்கிட்ட அவ பாய்ஃப்ரெண்ட காணலைன்னும்…

காலையிலேந்து தேடி பார்த்தும், அவனை காண்டாக்ட் பண்ணவே முடியலைன்னும் சொல்லி அழுதா.

ஒரு அயோக்கியனுக்காக அவ கண்ணீரை வேஸ்ட் பண்ணாறாளேன்னு எனக்கு கோபமா வந்தது…

ஆனா பாவம் அவளுக்கு எப்படி அது தெரியும்ன்னு தோணினதும் பாவமா இருந்தது. 

உடனே யோசிச்சேன்.

என் ஃப்ரெண்ட அதுலேந்து வெளியே கொண்டு வர முடிவெடுத்து…

அவ மட்டயாகி கிடந்தப்போ…

அவ பாய்ஃப்ரெண்ட் என்கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி செஞ்சான்னும்…

நான் என்னை காப்பாத்திக்க போராடினேன்னும் சொல்ல…

உடனே அவள் என்னை கட்டிண்டு “ஓ”ன்னு அழுது, மன்னிப்பு கேட்டு, இனி அவனுக்கு தன் வாழ்க்கையில் இடமே இல்லைன்னு டைலாக்கெல்லாம் பேசினா.

ஆனா நான் சொன்ன அந்த பொய் என்னை அவ கூட இருக்க எனக்கு தடையா இருக்கும்ன்னு நெனச்சு… அதையே காரணமா சொல்லி ரூமை வெக்கேட் செஞ்சு இங்க இந்த வீட்டுல வந்து செட்டில் ஆகிட்டேன்.”

“அம்மாடியோ! 

என்ன ஸ்க்ரீன் ப்ளே! 

என்ன ஒரு பர்ஃபாமென்ஸ்!

வாரே வா!

தி…”

“யோசிச்சு பாரு வி…

ஒரு தடவை அந்த ஆல்காரிதத்தை யூஸ் பண்ணினதுல…

ஒருத்தன் பைத்தியமாகிட்டான்…

நான் என் ஃப்ரெண்ட விட்டு விலக வேண்டியதா போச்சு…

இப்போ சொல்லு வி…

அந்த ஆல்காரிதம் கெட்ட நோக்கத்தோட இருக்கறவா கையில் கிடைச்சா என்னாகும்!”

“நீ சொல்றதும் உண்மை தான்.

அப்படி யோசிக்கவே கொஞ்சம் பயமா தான் இருக்கு.

ஏன்னா யாரை எப்படி ஆட்டிவைப்பான்னு தெரியாதே!

செக்யூரிட்டி ப்ரீச்…

பர்சனல் இன்ஃபர்மேஷன் ப்ரீச்…

அப்படின்னு பல ப்ரீச்ஸ் அடுக்கிண்டே போகலாமே…

கொஞ்சம் ஷாக்கிங்கா தான் இருக்கு!”

“நான் அந்த ஆல்காரிதத்தை முதலும் கடைசியுமா யூஸ் பண்ணினதுல…

நடந்த ஒரே நல்லது என் ஃப்ரெண்ட் ருத்ரா அந்த அயோக்கியன்ட்ட மாட்டாம தப்பிச்சது தான்.”

“அது என்னவோ சரிதான்.

சரி… இதைப் பற்றி ஜேம்ஸ்ட்ட சொல்ல வேண்டாமா?”

“எனக்கு…இப்போ நான் இருக்கற மனகுழப்பத்துல…

யாரை நம்பறதுன்னே எனக்கு தெரியலை.”

“தி…

உன் வீட்டு பேஸ்மெண்ட் வரை வந்து ப்ளூவ கடத்தினது மட்டுமில்லாம…

உன்னை கவனிச்சுண்டு இருக்கேன்னும்…ப்ளூவை தேட வேண்டாம்ன்னும்…

எழுதி வச்சு எச்சரிச்சுட்டு போயிருக்கான்னா…

இதை நிச்சயம் ஜேம்ஸ்ட்ட சொல்லியே ஆகணும்.”

“சரி…சரி…

இப்பவே கால் பண்ணறேன்.

என்ன இது பிஸின்னே வருது…

ஆங் கால் போறது…”

“ஹலோ சக்தி…”

“ஹாய் ஜேம்ஸ்….”

“நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்….”

என்று சக்தியும் ஜேம்ஸும் ஒரு சேர சொன்னார்கள். 

பின்பு சில மணித்துளிகள் மௌனத்திற்கு பிறகு 

“சரி…நீங்களே முதல்ல சொல்லுங்க!”

என்று இருவருமே மீண்டும் ஒன்றாக ஒரே நேரத்தில் சொல்ல…மீண்டும் சில மணித்துளி மௌனம் நிலவியது… 

சக்தி சொல்ல இருந்த விவரம் இந்த அத்தியாயம் மூலம் நாம் அறிந்ததே! ஆனால் ஜேம்ஸ் சொல்ல இருந்த அந்த முக்கியமான விஷயம்?! 

அதை கேட்டதும் சக்திக்கு தெளிவு பிறக்கிறதா?

இல்லை 

அவளை இன்னும் குழப்பமெனும் குட்டையில் ஆழ்த்துகிறதா?!

தொடர்வாள்…

Leave a comment