வேறு வேலை பார்க்கும் நினைப்பை தற்காலிகமாக தள்ளி வைத்தனர் நவீனும் மிருதுளாவும். அவர்கள் தலைதீபாவளிக்காக ஊருக்குக் கிளம்பும் நாள் நெருங்கியது. மிருதுளா அனைத்தையும் பேக் செய்தாள் ஏனெனில் அவள் இனி மீண்டும் குஜராத்துக்கு குழந்தையுடன் தான் வருவது என்று இருவருமாக முடிவு செய்துள்ளனர். ஆகையால் அடுப்படி சாமான்கள் எல்லாவற்றையுமே காலி செய்து டப்பாக்கள் எல்லாவற்றையும் நன்றாக தேய்த்துக் கழுவி வெயிலில் வைத்து கார்டன் பாக்ஸில் போட்டு பேக் செய்து ஹாலின் ஒரு மூலையில் வைத்தாள். நவீனுக்கு காபி / டி போடுவதற்கு வேண்டியப் பாத்திரங்கள் மட்டுமே வெளியே இருந்தன. நவீன் அன்றைய கடைசி வகுப்பு முடிந்து வந்தான்
“ஹே மிருது வா போய் டின்னர் சாப்ட்டுட்டு வருவோம்”
“ஓகே நான் ரெடி”
இருவரும் பேசிக்கொண்டே நடந்து சென்றனர்.
“நவீ நான் இல்லாம எட்டு மாசம் எப்படி இருப்பேங்கள்?”
“கஷ்டம் தான் ஆனா என்ன பண்ணறது இருந்துத்தானே ஆகணும் நம்ம ஜுனியரின் வரவுக்காக…ஆமாம் நீ இருந்துடுவயா?”
“எனக்கும் கஷ்டம் தான். ஆனா என்னை சுத்தி உங்க வீட்டு ஆட்கள் அன்ட் எங்க வீட்டு ஆட்கள்ன்னு இருந்துண்டே இருப்பாளே அதனால அவ்வளவா தெரியாதுன்னு நினைக்கறேன்..நீங்க தான் இங்க தனியா இருக்கணும் அதனால தான் கேட்டேன்”
“ஆமாம். அன்ட் ஒன் மோர் திங் சொல்ல மறந்துட்டேன். எனக்கு இன்னும் இரண்டு மாசத்தில நம்ம சர்வீஸ் குவார்ட்டஸ் கிடைச்சிடும்ன்னு இன்னைக்கு தான் எனக்கு அதோட ஆர்டர் வந்தது. ஸோ.. நீ நம்ம குட்டியோட புது வீட்டுக்கு தான் வருவேங்கள்.”
“ஓ!! வாவ்!! சூப்பர் நவீ”
“எங்க இந்த கேம்பஸ்க்கு உள்ளயே வா?”
“அநேகமா அமாம். பார்ப்போம் வந்தா தான் தெரியும். அப்படி வந்ததுனா நான் ஷிப்டிங் வேலைல கொஞ்ச நாள் பிசியாகிடுவேன்”
“ஆமாம் நம்ம கிட்ட அப்படி என்ன பொருள் இருக்கு …பெரிய பொருட்கள்ன்னு சொல்லறதுக்கு
ஒரு ஃப்ரிட்ஜ், டிவி, கிரைண்டர், அடுப்பு, மிக்ஸி அவ்வளவு தான் அதுக்கு ரொம்ப நாள் எல்லாம் ஆகாது”
“பொருள் கம்மி தான் மிருது ஆனா அதை புது வீட்டில் செட் பண்ணணுமில்ல”
“ஓகே ஓகே”
டாபா வந்ததும் இருவரும் அவரவருக்கு வேண்டிய உணவை ஆர்டர் கொடுத்து சாப்பிட்டுக்கொண்டே பேசினர்..
“நம்ம ஷாப்பிங் போனப்போ வெளில சாப்ட்டது அதுக்கப்புறம் இப்போ தான் சாப்பிடறோம் இல்ல …”
“நவீ ஜஸ்ட் ரெண்டு வாரம் முன்னாடி தான் ஷாப்பிங்கும் போனோம் வெளிலயும் சாப்டோம். என்னமோ ரெண்டு மாசமானா மாதிரி சொல்லறேங்கள்”
“சரி பாப்பாக்கு நேம் டிசைட் பண்ணிட்டயா?”
“லிஸ்ட் ரெடி நீங்க தான் அந்த டிஸ்கஷனுக்கே வர்ற மாட்டேங்கறேங்களே”
“சரி சாப்பிட்டுட்டு போய் அத டிசைட்டு பண்ணறோம் ஓகே”
இருவரும் சாப்பிட்டப் பின் வீட்டிற்கு திரும்பி வந்து நவீன் சொன்னது போலவே அவர்களுக்கு பிறக்கப் போகும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று மாறி மாறி யோசித்து கடைசியா ஆண் பிள்ளைன்னா அஷ்வின், பெண் குழந்தைன்னா அஷ்வினி என்று முடிவெடுத்தப் பின் உறங்கப் படுத்துக்கொண்டனர்.
“நவீ நாம இப்போ ஊருக்கு போக வேணுமா? இங்கேயே இருந்துடறேனே”
“ஹேய் மிருது என்ன ஆச்சு?”
“எனக்கென்னவோ ஊருக்கு போறதுக்கு ஒரு மாதிரி பயமா இருக்கு நவீ”
“பயமா!!! என்னத்துக்கு பயப்படற? எல்லாம் நல்லபடியா நடக்கும். நீயும் நம்ம பாப்பாவும் சீக்கிரம் இங்க வந்திடுவேங்கள். நாம மூணு பேருமா ஜாலியா இருக்கப் போறோம். அதை எல்லாம் நினைச்சுண்டே இந்த எட்டு மாசத்தையும் ஒட்டிடுவேன். நீயும் அப்படியே நினைச்சுண்டு இரு. வேற எந்த வித பயமும் வேண்டாம் புரியறதா மிருது.”
“ம்….”
“என்ன வெறும் “ம்” மட்டும் சொல்லற?”
“வேற என்ன சொல்லணுமாம்?”
“அங் தட்ஸ் மை மிருது. அப்படி நீ பேசினா தான் எனக்கு பிடிச்சிருக்கு. தேவையில்லாத பயம் கவலை எல்லாத்தையும் தூக்கிப் போடு. பீ போல்டு மிருது.”
மிருதுளாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை நவீன் இரண்டு மூன்று முறை அழைத்தும் பதில் வராததால் அவளை உன்னித்து பார்த்தான். அவள் நன்றாக உறங்கியிருந்தாள். அவள் கன்னத்தை தட்டிக் கொடுத்து, தலையை வருடிக் கொடுத்து, அவள் நெற்றியில் முத்தமிட்டு மனதில்…
“கடவுளே என் மிருதுவையும் எங்க குழந்தையையும் பத்திரமா என்கிட்ட திரும்பி வரவச்சுடுப்பா. அவளுக்கு எந்த வித கஷ்டமும் இல்லாம் பார்த்துக்கோப்பா”
என்று மனதார வேண்டிக்கொண்டு அவளை அணைத்துக்கொண்டு தூங்கலானான்.
மறுநாள் விடிந்தது. மிருதுளா எழுந்து காபி போட்டாள் இருவரும் அதை குடித்துவிட்டு வாசலில் சற்று நேரம் அமர்ந்திருந்தனர். அப்போது பக்கத்து வீட்டு லதா துணி காயப் போட்டுக்கொண்டிருந்தாள்.
“என்ன மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ் நவீன். இன்னைக்கு ஊருக்கு கிளம்பறீங்க இல்ல”
“ஆமாம் லதா அக்கா. அதுவுமில்லாம நான் திரும்பி வரும்போது நவீனுக்கு வீடு கிடைச்சிடுமாம் ஸோ அங்க தான் வருவேன். வந்ததும் உங்களை வந்து நிச்சயம் பார்ப்பேன் எங்க பாப்பாவோட”
“எங்க வீடு கிடைக்கும் நவீன்? ஓல்டு கேம்ப்பா இல்ல நியூ கேம்ப்பா?”
“தெரியலை அக்கா. அதுக்கு இன்னும் இரண்டு மாசமிருக்கு. பிப்ரவரி ல தான் கிடைக்கும்”
“ஓ ஓகே. மிருதுளா பத்திரமா ஊருக்கு போயிட்டு பிள்ளையும் கையுமா வா. சந்தோஷமா இரு. என்ன ஓகே வா”
“அம்மா இங்க வாயேன் இவ என்ன அடிக்கறா வந்து என்னனு கேளுமா”
“இதோ என் பிள்ளைகளின் அழைப்பு வந்தாச்சு. சரி மா நான் போய் என்னனு பார்க்கறேன் நீங்க என்ஜாய் அடுத்த ஜூன்ல உங்க வீட்டுலயும் ஒரு பிள்ள கத்துமில்ல”
“அம்மா.மா.மா..”
“இதோ வரேன் டா….சரி மிருதுளா அன்ட் நவீன் ஹாவ் அ சேஃப் ஜெர்னி…நான் உள்ள போறேன் இல்லாட்டி என்ன ஏலம் விட்டுடிடுவாங்க என் பசங்க”
“சரி அக்கா பை எட்டு மாசம் கழித்து பார்ப்போம்”
“பை மா”
இருவரும் குளித்து விட்டு ப்ரெட், பட்டர், ஜாம் சாப்பிட்டனர். மத்தியத்துக்கு நவீன் டாபாவிற்கு சென்று இருவருக்கும் குஜராத்தி ஃபுல் மீல்ஸ் வாங்கி வந்தான். இருவரும் நன்றாக சாப்பிட்டு டிவியில் திரைப்படம் பார்த்தார்கள். மாலை ஆனதும் ஊருக்கு கொண்டு போக வேண்டிய ஒரு பேக் மற்றும் இரண்டு பெட்டிகளையும் வாசல் கதவுக்கு முன் வைத்தான் நவீன். மிருதுளா சாமிக்கு விளக்கேற்றி நல்லபடியா ஊருக்கு போயிட்டு வரணும்னு வேண்டிக்கொண்டாள். அன்றிரவுக்கு ரெயில்வே ஸ்டேஷனின் அருகிலிருந்த ஒரு டாபாவில் இரவுணவு அருந்தி விட்டு ரெயில் ஏறினார்கள் நவீனும் மிருதுளாவும்.
ஒன்றரை நாள் ரெயிலில் நவீன், மிருதுளா இருவருமாக பேசிக்கொண்டும் அக்கம்பக்கத்தில் அமர்ந்திருந்தவர்களுடன் நன்றாக பேசி அரட்டை அடித்துக்கொண்டும் ஊருக்கு வந்து சேர்ந்தனர்.
ரெயில் நிலையத்தில் நவீனின் தந்தை மற்றும் மிருதுளாவின் பெற்றோர்கள் இவர்களின் வருகைக்காக காத்திருந்தனர். இருவரும் ரெயிலிலிருந்து இறங்கியதும் அம்புஜம் மிருதுளாவை கட்டிக் கொண்டு தன் மகளுக்கு பிடித்த ஜாங்கிரி டப்பாவைக் கொடுத்தாள். பின் ராமானுஜமும் அம்புஜமும் மிருதுளா நவீனிடம் நலம் விசாரித்தனர். ஈஸ்வரன் நவீனிடம் “வாடா” என்று மட்டும் சொன்னார். அனைவருமாக ரெயிவே ஸ்டேஷன் வெளியே வந்ததும் அம்புஜமும் ராமானுஜமும் பஸ்ஸில் அவர்கள் வீட்டுக்குச் சென்றார்கள். ஈஸ்வரன், நவீன், மிருதுளா மூவரும் ஒரு டாக்ஸியில் பர்வதக்குடிலுக்கு சென்றனர்.
அவர்கள் வீட்டின் வாசலில் வந்தும் எவருமே வா என்று அழைக்க வாசல் கூட வரவில்லை. உள்ளே சென்றதும் தம்பிகள்
“ஹாய் அண்ணா” என்றும் பர்வதம்
“ம்….ம்….வந்துட்டேளா!!! வா வா” என்றும்
ஏதோ வேண்டா வெறுப்பாக விரும்பாத விருந்தாளிகளை வரவேற்பது போல சொல்லிவிட்டு அவரவர் வேலைகளை பார்ப்பது போல பாவலா செய்தனர். அதை உணர்ந்த நவீன் மிருதுளாவிடம்…
“மிருது வா நம்ம மேலே ரூமுக்கு போகலாம்”
“இருங்கோ நவீ இப்பதானே வந்திருக்கோம். முதல்ல அந்த பேக்கை தொறங்கோளேன் ப்ளீஸ்”
“இந்தா தொறந்தாச்சு”
மிருதுளா பேக்கிலிருந்து சுவீட் மற்றும் காரம் என ஒரு பெரிய பாக்ஸ் ஒன்றை பர்வதத்திடம் கொடுத்து…
“அம்மா இந்தாங்கோ குஜராத்தி சுவீட்ஸ் மற்றும் ஸ்னாக்ஸ்”
பர்வதம் அதை வாங்கி அவர்கள் ஹாலில் இருந்த கட்டில் மேல் வைத்து விட்டு இரவு சாப்பாட்டை எடுத்து வைக்கலானாள்.
நவீன் அந்த பேக்கிலிருந்த தனது உடையை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்கு சென்று குளித்துவிட்டு வந்தான்.
“மிருது நீ குளிக்கறதுக்கு முன்னாடி வெண்ணீறு வைச்சுக்கோ. தண்ணீ ரொம்ப ஜில்லின்னு இருக்கு”
“ஓகே நவீ”
என்றதும் பாம்பு தன் தலையை விருட்டென திருப்பிப் பார்ப்பது போல மிருதுளாவை அடுப்படியிலிருந்து பார்த்தாள் பர்வதம். மிருதுளாவும் எழுந்து போய் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சூடு பண்ண அடுப்பில் வைத்தாள். அவளுக்கு பயங்கர அசதி ஆனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வெண்ணீறு கொதித்ததும் நவீனை கூப்பிட்டு அதை பக்கெட்டில் ஊற்றித் தரும்படி சொல்லி குளித்துவிட்டு வந்தாள்.
மகனும் மருமகளும் வருவார்கள், தனது மருமகள் தங்கள் குடும்பத்தின் அடுத்த தலைமுறையின் முதல் வாரிசை சுமந்து வருகிறாளே என்ற எந்த விதப் பாசமோ அன்போ துளி கூட இல்லாமல்….. வெண்ணீறும் போட்டு வைக்கவில்லை, சாப்பாடும் வெறும் ரசமும் ஒரு பொறியலும் மட்டும் செய்து வைத்திருந்தாள் பர்வதம்.
நான்கு மாதங்கள் பிரித்துவைத்து
வாழ்நாள் முழுவதும் பிரிந்திருக்க
பர்வதம் திட்டம் போட்டு வைத்து
அது நிறைவேறாமல் ஏமாந்திருக்க
அடுத்த சந்தர்ப்பமாக இந்த நேரத்தை
எண்ணி செயல்பட ஆரம்பித்துவிட்டாளோ!!
நவீன் மிருதுளா திருமணம் ஆனதும் அவர்களின் முதல் நான்கு மாதங்களை அவர்களிடமிருந்து களவாட நினைத்து தோற்றுப்போன பர்வதம் ஆட்டம் மீண்டும் ஆரம்பம்.
தொடரும்……