ஓட்டுனர் உரிமம் – பாகம் 3

ஒரு வழியாக இரண்டாவது முயற்சியில் இன்டர்ணல் ரோட் டெஸ்ட் பாஸ் ஆனதும் நம்பிக்கை பிறந்தது. அடுத்ததாக நான்கு மணிநேரம் பார்க்கிங் வகுப்புக்கு செல்லும் படி கூறினர். சரி என்று சென்றேன்.
பார்க்கிங்கில் ஐந்து வகை என்று ஆரம்பித்தார் பார்க்கிங் பயிற்றுவிப்பாளர். பாரலல், கராஜ், ஆங்கிள், ஹில் மற்றும் எமர்ஜென்சி பார்க்கிங் என்று நான்கு மணிநேர வகுப்பில் கற்றுத் தந்தார். ஆங்கிள் பார்க்கிங் தவிர மற்ற அனைத்தும் நன்றாக சரியாக செய்தேன். இந்த வகுப்பின் போது தான் பார்க்கிங் டெஸ்ட் ஸ்மார்ட் காரில் எடுக்க வேண்டும் என்ற விஷயம் எனக்கு தெரிய வந்தது. அது என்ன ஸ்மார்ட் கார்? என்று கேட்டேன். அதற்கு அவர், இன்டர்ணல் டெஸ்ட்டின் போது அந்த கார் எப்படி இருக்கும் அதில் நான் எப்படி டெஸ்ட் எடுக்க வேண்டுமென்பதை முதலில் சொல்லிக் கொடுத்துவிட்டு தான் அதில் டெஸ்ட் எடுக்க சொல்வார்கள் என்றார். எல்லாம் ஒரு அனுபவம் தானே! இல்லையா. சரி அதையும் பார்ப்போம் என்று அதற்கான இன்ஸ்டிடியூட்டின் பார்க்கிங் இன்டர்ணல் பரீட்சைக்கு பதிவு செய்தேன். ஏனெனில் இன்டர்ணல் ரோட் டெஸ்ட் போலவே இந்த இன்டர்ணல் பார்க்கிங் டெஸ்ட்டை க்ளியர் செய்தால் தான் RTA பார்க்கிங் டெஸ்ட்டுக்கே அனுப்புவார்களாம்.

சிங்கத்தின் குகைக்குள் போயாச்சு ஒண்ணு அதோட போராடி எப்படியாவது வெளியே வெற்றியோடு வரணும் இல்லையா சத்தமில்லாம அங்கிருந்து ஓடிடணும். இந்த ரெண்டு ஆப்ஷன் தான். தோற்று ஓட மனமில்லை. எனவே போராட முடிவெடுத்து பார்க்கிங் இன்டர்ணல் டெஸ்ட்டுக்கு சென்றேன். அங்கே எனது ஆய்வாளர் என்னை அந்த ஸ்மார்ட் காரில் ஏறி அமரச் சொன்னார். நானும் அம்ர்ந்தேன். முதலில் அவர் அந்த காரை ஓட்டி அது எப்போது என்ன சொல்லும், அப்போ நான் என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தார். நான் ஒரு முறை அந்த காரை சுற்றிப் பார்த்தேன். அதன் ஸ்டியரிங் வீலில் பொட்டு பொட்டாக சென்சர்ஸ் இருந்தது. காருக்குள் முன் கண்ணாடி மீது இரண்டு காமிராக்கள், காரின் நடுவில் இரண்டு காமிராக்கள், பின் சீட்டிற்கு மேல் இரண்டு காமிராக்கள், அதை தவிர இன்னும் பல காமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. காரினுள் ஏறி டெஸ்ட் எடுக்கத் துவங்கியதும் காரை விட்டு இறங்கவோ இல்லை அனாவசியமாக நிறுத்தவோ கூடாது என்ற எச்சரிக்கை வேறு. டிரைவர் சீட்டுக்கு அருகில் ஒரு பெரிய டேப்லட் பொருத்தப் பட்டிருந்தது.

நாம் காரில் ஏறியதும் செய்ய வேண்டிய சடங்குகளை செய்து முடித்த பின் அந்த டேப்லெட் மேல் இருக்கும் காமிராவிடம் நான் டெஸ்ட்டுக்கு தயார் என்று கை கட்டைவிரலை (thumbs up) காட்ட வேண்டும். உடனே நமது அனைத்து விவரங்களும் நமது புகைப்படத்துடன் அந்த டேப்லெட்டில் பளிச்சிடும். அதன் பின் வண்டிக்குள் “உங்கள் பார்க்கிங் டெஸ்ட் ஆரம்பம் ஆகிறது” என்று ஓர் குரல் ஒலிக்கும். உடனே நாம் கார் பார்க்கிங் நோக்கி ஓட்டிச் செல்ல வேண்டும். ஏனெனில் இதற்கு கால அவகாசம் உள்ளது. அந்த ஐந்து பார்க்கிங் டெஸ்ட்டையுமே இருபது நிமிடங்களில் முடிக்க வேண்டும். வண்டியை எடுக்க மற்றும் மீண்டும் எடுத்த இடத்தில் ஓட்டி வந்து நிறுத்த ஏழு நிமிடங்கள், பாரலல் பார்க்கிங்கிற்கு ஐந்து நிமிடங்கள், கராஜ் பார்க்கிங்கிற்கு மூன்று நிமிடங்கள், ஆங்கிள் பார்க்கிங்கிற்கு இரண்டு நிமிடங்கள், ஹில் மற்றும் எமர்ஜென்சி பார்க்கிங்கிற்கு தலா தொண்ணூறு நொடிகள்.

பரீட்சை களத்தில் மூன்று ஆங்கிள் பார்க்கிங், மூன்று கராஜ் பார்க்கிங், இரண்டு பாரலல் பார்க்கிங் ஸ்லாட்டுகள் இருக்கும். மேலும் ஹில் மற்றும் எமர்ஜென்சி பார்க்கிங் தளங்கள் ஒன்று தான் கொடுக்கப்பட்டிருக்கும். பரீட்சை களத்தில் நாம் மட்டுமின்றி இன்னும் பலர் பரீட்சை எடுத்து கொண்டிருப்பார்கள் எனவே நாம் கவனமாக காரை ஓட்டிச் சென்று எப்பெப்போ எந்தெந்த ஸ்லாட் காலியாகிறதோ அப்போது அங்கு சென்று பார்க்கிங் செய்ய வேண்டும். பின் அடுத்த பார்க்கிங் ஸ்லாட்டிற்கு பொறுமையாக செல்ல வேண்டும். இப்படியே அடுத்தடுத்து ஒவ்வொரு பார்ங்க்கிங் டெஸ்ட்டையும் மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு பார்க்கிங்கிற்கும் நாம் காரை ஓட்டி செல்லும் அந்த ரோட்டில் சென்சர்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். எனவே நாம் அதன் மீது நமது காரை ஓட்டிச் செல்லும் போது நாம் ஓட்டிச் செல்லும் காருக்குள்(உதாரணத்திற்கு ) “இப்போது நீங்கள் கராஜ் பார்க்கிங் செய்ய போகிறீர்கள்” என்ற குரல் ஒலிக்கும். இதே போல அனைத்து பார்க்கிங் பகுதிக்குள் நாம் செல்லும் போதும் கார் நம்மிடம் எந்த பார்க்கிங் செய்ய இருக்கிறோம் என்பதை கூறும். அதே போல் ஹில் பார்க்கிங் செய்ய மலை போலிருக்கும் அந்த ரோட்டின் மேலே ஏறும் போது பீப்… பீப்… பீப் என்று நமது காருக்குள் சப்தம் வரும் அந்த சப்தம் வந்ததும் காரை பார்க் செய்து ஹேண்ட் ப்ரேக் போட வேண்டும். ஹேண்ட் ப்ரேக் போட்டதும் நமது கார் நம்மிடம் அடுத்த பார்க்கிங் செய்ய அங்கிருந்து கிளம்ப சொல்லும். உடனே அடுத்த பார்க்கிங்கிற்கு செல்ல வேண்டும்.

ஸ்மார்ட் கார் என்ன சொல்லும் நாம் என்ன செய்ய வேண்டும் எப்படி வண்டியை ஓட்டி ஒவ்வொரு பார்க்கிங்காக போட வேண்டும் போன்ற அனைத்தையும் சொல்லிக்கொடுத்த பின் ஆய்வாளர் காரை விட்டு இறங்கி என்னையும் இறங்க சொன்னார். நானும் இறங்கினேன். அனைத்தும் புரிந்ததா என்று கேட்டார். நானும் எல்லாம் புரிந்தது என்று கூறினேன். அதுக்கப்புறம் அவர் சொன்னார் பாருங்க ஒரு விஷயம்…அது என்னன்னா அதுவரை அவர் ஓட்டி காண்பித்த அந்த ஸ்மார்ட் காரில் நான் இன்டர்ணல் அஸஸ்மஎண்ட் டெஸ்ட் எடுக்கப் போவதில்லையாம். அந்த கார் RTA டெஸ்ட்டின் போது தான் தருவார்களாம். மேலும் அப்போதைக்கு நான் பயிற்சி மேற்கொண்ட சாதாரண காரில் தான் பரீட்சையை எடுக்கணும்முன்னு சொன்னார்.

ஒரு விதத்தில் அந்த பல கண்கள் (காமிராக்களை தான் அப்படி சொல்லறேன்) கொண்ட காரை ஓட்ட தேவையில்லை…மேலும் மனிதர்கள் ஆய்வாளர்களாக இருந்தால் கூட கொஞ்சம் கவணிக்க தவற வாய்ப்பிருக்கிறது ஆனால் இந்த மெஷின் அப்படி இல்லையே நாம் இழைக்கும் தவறுகள் அனைத்தையும் படம் பிடித்து விடுமே என்ற பதற்றத்தில் இருந்து தற்காலிகமாக விடுப்பட்டதை எண்ணி அப்பாடா என்றிருந்தது. ஆனால் RTA டெஸ்ட்ட அதில் தானே எடுக்க வேண்டும் என்று மனதின் ஓரத்தில் அசிரீரி ஒலிக்க உடனே என் மனதின் மற்றொரு பக்கம், முதலில் இந்த பரீட்சையில் தேர்ச்சி பெற்றால் தான் அந்த கார் அதனால் இப்போ அதை ஒத்தி வச்சுட்டு இப்ப என்ன செய்யணுமோ அதை செய்ய போ என்று கட்டளையிட உடனே ஓரத்தில் ஒலித்த அசிரீரியும் நானும் அமைதியாக அப்ப நடக்க இருப்பதை நடத்திக் காட்டுவோம் என்று முடிவெடுத்து இரண்டு கண்கள் முன்னிலையில் பரீட்சையை மேற்கொள்ள எனக்கான காரில் ஏறினேன்.

காரை மெல்ல பார்க்கிங்கில் இருந்து எனது பயிற்றுவிப்பாளர் சொல்லிக்கொடுத்தது போலவே வெளியே எடுத்து பின் சர்ரென்று பரீட்சையை எதிர்கொள்ள புறப்பட்டேன்.

எந்தெந்த பார்க்கிங் எப்படி எப்படி செய்தேன். இந்த பார்க்கிங் இன்டர்ணல் பரீட்சையில் பாஸ் ஆனேனா? இல்லையா? போன்ற கேள்விகளின் விடைகளையும் பார்க்கிங் சுவாரஸ்யங்களையும் நாளை பதிவில் காண்போம்.

🚗பயணம் தொடரும்… 🚗

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s