ஜேம்ஸின் வந்த வேலை முடிந்ததும் சக்தியின் ஆஃபிஸிலிருந்து புறப்படுவதற்காக தன் இருக்கையிலிருந்து எழுந்து,
“ஓகே சக்தி.
அப்போ நான் கிளம்பறேன்.”
“ஓகே ஜேம்ஸ்.
சீ யூ டுமாரோ”
“எதுக்கு சக்தி?”
“சும்மா தான்.
நாளைக்கு எப்படியும் உங்க நண்பன் விஷால் வந்திடுவான்.
எப்படியும் நீங்க மீட் பண்ணுவீங்க.
நானும் அவனோடு வருவேன்.
அதுதான் சொன்னேன்.”
“அப்பப்பா!! ரொம்பவே முன்னோக்கி யோசிச்சுப் பேசறீங்க சக்தி.
பார்ப்போம் எனக்கு எதுவும் முக்கியமான வேலை இல்லாட்டி நாம் சந்திப்போம்.
இப்போ நான் கொஞ்சம் உங்க செகரெட்டரி அம்மாவை விசாரிச்சிட்டு அப்படியே கிளம்பறேன். பை சக்தி.”
“ஆங்! ஓகே! பை ஜேம்ஸ்.”
என்று சக்தியிடமிருந்து விடைப் பெற்றுக் கொண்டு நேராக ருத்ரா அமர்ந்திருந்த அறையை பார்த்தான். உள்ளிருந்து ருத்ராவும் ஜேம்ஸை ஓரக்கண்ணால் பார்த்தாள். அவள் அமர்ந்திருந்த அறைக்குள் நுழைய அதன் கண்ணாடி கதவைத் தட்டினான் ஜேம்ஸ். அதை அப்போது தான் கவனித்தது போல பாவனை செய்த ருத்ரா தன் முன்னிருந்த கணினியின் மேல் வழியாக எட்டிப்பார்த்து, உடனே எழுந்து சென்று அவளின் அறை கதவை திறந்து
“ஹாய்! மிஸ்டர் ஜேம்ஸ்.
ப்ளீஸ் கம் இன்.”
“ஓ! தாங் யூ.
மிஸ்டர் எல்லாம் வேண்டாமே!
ஜேம்ஸ் என்றே கூப்பிடலாமே
மிஸ் ருத்ரா”
“ஓ! ஓகே.
அதே மாதிரி நீங்களும் என்னை ருத்ரா என்றே கூப்பிடலாம் ஜேம்ஸ்.”
“சரி ருத்ரா.
இப்போ நான் நேரா விஷயத்துக்கே வரேன்.”
“சொல்லுங்க ஜேம்ஸ்.
நான் என்ன பண்ணணும்?”
“நீங்க நான் கேட்குற கேள்விக்கு மட்டும் பதில் சொன்னா போதும்”
“சரி கேளுங்க”
“சக்தி விஷாலை பார்க்க போனது உங்களுக்கு தெரியும் தானே”
“ம்…தெரியும்.
அவ என்கிட்ட சொல்லிட்டு தான் போனா”
“உங்களுக்கு சக்தியை எவ்வளவு நாளா தெரியும்?”
“அவளும் நானும் ரூம் மேட்ஸா இருந்த நாள் முதல் எனக்கு அவளையும், அவளுக்கு என்னையும் தெரியும். ஏன் கேட்கறீங்க?”
“ஓ! ஓகே.
அப்புறம் ஏன் இப்போ நீங்க ரெண்டு பேரும் தனித்தனியா இருக்கீங்க?”
“அது வந்து…வந்து”
“ஏன் தயங்குறீங்க ருத்ரா? பதில் சொல்லுங்க.
என்கிட்ட சொல்லுற விஷயம் எதுவும் இந்த ரூமைத் தாண்டாது.”
“ம்…அது வந்து…நான் ஒரு நாள் என்னோட பாய் பிரெண்டை எங்க ரூமுக்கு கூட்டிட்டு வந்தேன்.
அதுனால சக்தி வேற வீடு பார்த்துட்டு போயிட்டா.”
“உங்க பாய் பிரெண்டை கூட்டிட்டு வந்ததுக்கு எதுக்கு சக்தி ரூமை காலி பண்ணணும்!
புரியலையே!
கொஞ்சம் விவரமா சொல்ல முடியுமா?”
“அவளுக்கு எந்த ஆம்பளையையும் ரூமுக்கு கூட்டிட்டு வர பிடிக்காது.
அதை எங்க ரெண்டு பேரோட ரூம் ரூல்ஸ்லயே எழுதி வச்சிருந்தோம்.
மொதோ தடவை நான் அவனை எங்க ரூமுக்கு கூட்டிட்டு வந்தப்போவே அவ என்னை எச்சரிச்சா…
நானும் சாரி கேட்டு இனி இது போல நடக்காதுன்னு சொன்னேன்.
ஆனா ரெண்டாவது தடவை நானும் என் பாய் பிரெண்டும் அவனோட ஒரு பிரெண்டோட பார்ட்டிக்கு போயிருந்தோம்.
அங்க என்னத்த குடுத்தாங்களோ தெரியலை எனக்கு போதை தலைக்கு ஏறிடுச்சு.
அதுனால அவன் என்னை என் ரூமில் டிராப் பண்ணிட்டு போக வந்தான்.
நானும் ஹால்ல இருந்த சோஃபாவிலேயே தூங்கியிருக்கேன்.
மறுநாள் காலை நான் எழுந்து பார்த்தா….
எதிர்த்த சோஃபாவுல சக்தி தலைவிரி கோலத்துல கோவமா உட்கார்ந்திட்டிருந்தா.
என்ன ஆச்சு? ஏன் அப்படி உட்கார்ந்திருக்கான்னு அவகிட்ட கேட்டேன்.
அதுக்கு அவ என்னை டிராப் பண்ண வந்த என் பாய் பிரெண்ட் சக்தியிடம் மிஸ் பிஹேப் பண்ணப் பார்த்தான்னும்,
அவனை அடிச்சு ரூமை விட்டு துறத்தி விட அவ ரொம்ப போராடியிருக்கான்னும் அவ சொல்லி எனக்கு தெரிய வந்தது.
அவகிட்ட அதுக்கு மன்னிப்பும் கேட்டேன்.
ஆனா அவ நடந்ததை என்கிட்ட சொல்லிட்டு வீட்டை விட்டு வெளியே தனியா போயிட்டா.
என்னாலையும் ஒண்ணும் சொல்ல முடியலை.
அன்னைக்கு பிரிஞ்சோம்.
இன்னைக்கு வரை நாங்க தனித்தனியா தான் இருக்கோம்.”
“அந்த…உங்க பாய் பிரெண்ட் என்ன ஆனான்?”
“எனக்கு தெரியாது ஏன்னா…அவனை நான் கடைசியா பார்த்தது அன்னைக்கு நைட்டு தான்.”
“அவனை அப்புறமா அவன் வீட்டுக்கோ இல்ல நீங்க அவனை அடிக்கடி சந்திக்கும் இடங்களுக்கோ போய் நீங்க பார்க்க முயற்சிக்கலையா?”
“போனேன்.
ஏன்டா என் சந்தி கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தன்னு கேட்க அவனை எல்லா இடத்துலேயும் தேடினேன்.
ஆனா அதுக்கப்புறம் அவனை நான் எங்கேயுமே பார்க்கலை.”
“அவன் வீடு உங்களுக்கு தெரியாதா?
அங்க போய் பார்த்திருக்கலாமே!”
“இல்ல அவன் வீடு எனக்கு தெரியாது.
அவன் ஏதோ ஒரு பிரெண்டோட ரூமுல தங்கிட்டிருக்கறதா தான் சொன்னான்.”
“என்ன பாய் பிரெண்டு?
என்ன ஒரு பிரெண்ட்ஷிப் இதெல்லாம்.
ஒருத்தர் ஒருத்தர் எங்க தங்கறாங்கன்னே தெரியாம என்ன ஒரு லவ்வோ!
ஐ ஆம் சாரி ருத்ரா.
ஏதோ சொல்லணும்னு தோனிச்சு சொன்னேன்.”
“இட்ஸ் ஓகே ஜேம்ஸ்.
நீங்க சொல்லறதும் சரிதான்.
அதை எல்லாம் எனக்கு புரிய வச்சது சக்தியின் பிரிவு தான்.
அன்னேலேந்து இன்னைக்கு வரை நானும் எந்த ஒரு ஆணையும் என் ரூமுக்குள்ள விடறதே இல்லை.
சொல்லப் போனால் எனக்கு எந்த பாய் பிரெண்ட்ஸுமே இல்லை.
நானும் தி போல தன்னந்தனியா தான் இருக்கேன்.”
“ம்…ம்…குட் குட்.
அதெல்லாம் இருக்கட்டும் ருத்ரா.
சக்தி விஷாலை பார்க்க போன அன்னைக்கு காலையில் உங்க ஆஃபிஸ் கேண்டினில் ப்ரேக் பாஸ்ட் சாப்பிட போயிருந்தப்போ…
நீங்க அவங்களுக்கு ஒரு ஜூஸ் குடுத்தேங்களே…
அது என்ன ஜூஸ்? எங்கேந்து வாங்கிக் குடுத்தீங்க?”
“அது நான் ஆஃபிஸ் வரும் போது வழியில் என் காருக்கு பெட்ரோல் போட ஒரு கியாஸ் ஸ்டேஷன்ல நின்னேன்.
அப்போ அங்க இருந்த கடையில் நான் குடிக்க வாங்கினேன்.”
“அப்புறம் ஏன் நீங்க குடிக்காம அதை சக்திக்கு குடுத்தீங்க?”
“அதை வாங்கிட்டு வெளியில் வந்ததும் என் காருக்கு பெட்ரோல் போட்டாச்சுன்னு அங்க இருந்த பையன் சொன்னான்.
அதைக் கேட்டதும் நேரா வந்து என் காருக்குள்ள உட்கார்ந்து காரை ஸ்டார்ட் பண்ணி ஆஃபிஸுக்கு வந்துட்டேன்.
இங்கே ஆஃபிஸுக்கு கார் பார்க்கிங் வந்ததுக்கு அப்புறமா தான் நான் வாங்கின அந்த ஜூஸ் கேனை பாரத்தேன்.
சரி லிஃப்ட்டுல போகும் போது குடிக்கலாமேன்னு அதையும் எடுத்துகிட்டு லிஃப்ட்டுல ஏறினேன்.
அதுல எங்க டீமோட டி.எல் ஆன ராகேஷ் இருந்தார்.
அவர் கூட பேசிட்டே வந்ததுல மறுபடியும் அந்த ஜூஸை குடிக்கலை.
அப்புறம் அவர் அவரோட கேபினுக்கு போயிட்டார்.
எனக்கு சரியான பசி வேற…
ஆனா தி அதுக்குள்ள மீட்டிங்குக்கு எல்லாத்தையும் ரெடி பண்ண சொல்லிட்டா…
சோ அப்பவும் குடிக்க முடியலை.
ஒண்ணும் சாப்பிடவும் முடியலை.
அப்புறமா அவ மீட்டிங் எல்லாம் முடிச்சிட்டு வேகமா கேண்டினுக்கு போனா.
நானும் சரியான பசியில் இருந்ததால் அவ பின்னாடியே போனேன்.
அவ சாண்ட்விச் வாங்கிட்டு போய் உட்கார்ந்தா.
நானும் சாப்பிட்டுட்டு அவ எங்க உட்கார்ந்திருக்கான்னு பார்த்தேன்.”
“ஏன் அவங்க பின்னாடியே போன உங்களுக்கு அவங்க எங்க உட்கார்ந்தாங்கன்னு தெரியலையா?”
“நீங்க எங்க காண்டீனை பாருங்க அப்போ தான் நான் சொன்னது உங்களுக்கு புரியும்.
அது ஒரு கடல் மாதிரி.
அதுக்குள்ள சக்தி போனதும் நானும் போனேன்.
ஆனா என்னோட பசி முதல்ல என் வயிற்றை நிரப்ப தான் சொல்லிச்சு.
சோ அதை தான் முதல்ல செய்தேன்.
அப்புறமா அவளை தேடி கண்டு பிடிச்சு அவ பக்கத்துல போய் உட்கார்ந்தேன்.
அவ தண்ணியோ ஜூஸோ வாங்காம வெறும் சாண்ட்விச் மட்டும் வாங்கிட்டு வந்திருந்ததைப் பார்த்தேன்.
அப்போ என்கிட்ட இருந்த ஜூஸ் கேனை எடுத்து அவளுக்கு கொடுத்தேன்.
அவ்வளவு தான்.
அவளும் சாப்டுட்டு நேரா ரெஸ்ட் ரூம் போய் டிரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு பாரிஸுக்கு கிளம்பி போயிட்டா.”
“ஓ. ஓகே.”
“ஏன் நீங்க நான் குடுத்த ஜுஸைப் பற்றியே கேட்கறீங்க?”
“அது ஒண்ணுமில்ல ருத்ரா.
என்குவைரின்னு வந்துட்டா எல்லாரையும் அன்ட் எல்லாத்தையும் தானே விசாரிக்கணும்!”
“என்குவைரியா? எதுக்கு?
அதுவும் என்னை எதுக்கு என்குவைரி பண்ணணும்.”
“இட்ஸ் ஓகே ருத்ரா.
ஜஸ்ட் லீட்.
உங்களோட ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி.
ம்… உங்க கண்கள் ரொம்ப அழகா இருக்கு.
எனக்கு சொல்லணும்னு தோனிச்சு சொல்லிட்டேன்.
சொன்னது தப்புன்னா மன்னிச்சுக்கோங்க.
நான் கிளம்பறேன்.
பை.”
“ம்….இட்ஸ் ஓகே.
தாங்ஸ் ஃபார் யுவர் காம்ப்ளிமென்ட் ஜேம்ஸ்.
பை. ஹாவ் எ நைஸ் ஈவ்னிங்”
“யூ டூ ருத்ரா.”
ருத்ராவுடன் விசாரணை என்ற பெயரில் பேசி விட்டு வெளியே வந்த ஜேம்ஸ் தனக்கு தானே
“இவ சொல்றதை பார்த்தா நம்புறா மாதிரி தான் இருக்கு…
அதே நேரம் ரொம்ப பர்ஃபெக்ட்டா வரிசையா நடந்ததை எல்லாம் சொல்றதை பார்த்தா எங்கயோ இடிக்குற மாதிரியும் இருக்கே!
பார்ப்போம்…
கொஞ்சம் விட்டுப் பிடிப்போம்.
இவ சொன்னது மட்டும் உண்மையா இருந்ததுன்னா…
டேய் ஜேம்ஸ் கூடிய சீக்கிரமே உனக்கொரு கேர்ள் பிரெண்ட் கிடைச்சிடுவா டா…”
என்று கூறிக்கொண்டே சிறு புன்னகையுடன் சக்தியின் ஆஃபிஸிலிருந்து புறப்பட்டு தனது ஸ்டேஷன் சென்றடைந்தான்.
தொடர்வாள்…