அத்தியாயம் 25: பதகளிப்பு!

ஜேம்ஸ் வேறெந்த விவரமும் கூறாமல் நேரில் பார்க்கும் போது சொல்வதாக கூறி கைபேசி அழைப்பை துண்டித்ததும் ஏதோ யோசனையில் மூழ்கியிருந்த சக்தியிடம் விஷால்

“ஏய் தி…தி…தி…
என்ன ஆச்சு?
என்ன யோசிக்கிற?
என்னைப் பாரு தி”

என்று கூறிக்கொண்டே அவள் தோளை பிடித்து உலுக்கி அவனைப் பார்க்கச் செய்தான்.

“வி எனக்கு ஏதோ தப்பு நடக்கப் போறா மாதிரி தோணுது.”

“என்ன தப்பு?
எங்க?
யாருக்கு?”

“அதெல்லாம் தெரியலை.
ஆனா ஏதோ பெரிய தப்பு நடக்கப் போறதா என் மனசு சொல்லுது.”

“தி நீ அனாவசியமா போலிஸோட டென்ஷனை எல்லாம் மண்டைக்குள்ள எடுத்துண்டு உன்னை நீயே குழப்பிக்கற.”

“இல்ல வி நல்லா யோசிச்சுப் பாறேன்.
நான் அன்னைக்கு உன் வீட்டுக்கு வர கிளம்பினேன்…
ஆனா நான் அந்த ஹைவேல டிராவலே பண்ணலன்னு போலீஸ் சொல்லறா!
எனக்கு ஏதோ நடந்திருக்கு ஆனா என்னன்னு தெரியாது.
பக்கத்து வீட்டு மிஸ்டர் அன்ட் மிஸ்ஸர்ஸ் டேவிட் இத்தனை வருஷமா எங்கேயுமே போகாதவங்க திடீர்னு சொல்லிக்காம எங்கயோ போயிட்டாங்க.
பிளட் டெஸ்ட் ரிப்போர்ட் ல செடெடிவ் ரத்தத்துல கலந்திருக்குனு டெஸ்ட் எடுத்து வசுந்தரா குடுத்த ரிப்போர்ட்டும் காணாம போயிடுச்சு அதை கொடுத்த வசுவையும் காணலை.
அதை கேட்க போனா அந்த ஹாஸ்பிடல்ல ஒரு நர்ஸை கொலை செய்ய முயற்சி நடந்தது.
அவங்களும் இப்போ ஐசியூ ல இருக்காங்க.
அடுத்து வசுவோட நர்ஸ் நளினி.
அவங்களை பார்த்து பேசிட்டு வந்திருக்கேன்.
இப்போ என்னடான்னா ஜேம்ஸ் அதெல்லாம் சரியான இன்ஃபர்மேஷன் தானான்னு கேட்டு கால் பண்ணறார்!
ஒரு வேளை அந்த நளினிக்கும் ஏதாவது ஆகிடுமா?”

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது தி.
நீ போலீஸ் மாதிரி எல்லாம் யோசிக்க வேண்டிய அவசியமில்லை தி.
ஜஸ்ட் ரிலாக்ஸ்.”

“அப்படி என்னை சுத்தும் அந்த மர்ம நபர் யார்?
ஏன் என்னையே சுத்தி வரணும்?”

“இப்ப தானே சொன்னேன் தேவையில்லாததை எல்லாம் யோசிக்காதேன்னு.
மறுபடியும் ஆரம்பிச்சுட்டயே!”

“நாம ரெண்டு பேரும் போய் அந்த நர்ஸ் நளினி பத்திரமா இருக்காளான்னு பார்த்துட்டு வரலாமா வி!”

“இதுக்கு எதுக்கு அங்க போகணும்?
உனக்கு அவங்க நம்பர் தெரிஞ்சா ஒரு கால் பண்ணி கேளு”

“ஆங்…நம்பர் குடுத்தா.
ஆனாலும் ஒரு எட்டு போய் பார்த்துட்டு வரலாமே”

“நீ மொதல்ல கால் பண்ணிப் பாரு.
அப்படி அவங்க நல்லா இருக்காங்கன்னா அதுக்கப்புறம்
வேணும்னா நாம கிளம்பி போய் பார்ப்போம்.
என்ன சொல்ற தி?”

“ம்..சரி இதோ உடனே பண்ணறேன்”

“ஏய் தி…இரு இரு…
அந்த நளினி தான் அவங்களோட மொபைல்ல வசுந்தரா வோட கார்லேயே விட்டுட்டாங்கன்னு அவங்க சொன்னதா நீ சொன்னையே அப்புறம் எப்படி எந்த நம்பருக்கு கால் பண்ணற?”

“அவங்களோட ரூம்ல இருக்குற ஃபிக்ஸ்டு லைன் நம்பரை தான் நளினி குடுத்தா.
அதுக்கு தான் கால் பண்ணப் போறேன்.”

“அது தானே மொபைல்ல கார்ல விட்டுட்டேன் சொன்னவ எப்படி நம்பர் குடுத்திருக்க முடியும்னு ஒரு செகண்ட் யோசனை வந்தது.”

“ஆமாம் ஆமாம் மொபைல விட்டா பேசறதுக்கு ஃபிக்ஸ்டு லைன் இருக்குங்கறதையே நிறைய பேரு மறந்திட்டா என்ன பண்ண?
மொபைல் நம்மள அப்படி அதுக்குள்ளயே கட்டிப் போட்டிருக்கு.”

“சரி சரி நீ இப்போ ஃபோன் பண்ணி கேளு.”

“ஆங் ரிங் போறது.
ஹலோ நளினி.
நான் தான் சக்தி பேசறேன்.
உங்களை இன்னைக்கு காலையில வந்து பார்த்தேனே!
வசுவோட பிரெண்ட்.”

“சக்தி… சக்தி… சக்தி…”

“நளினி! நளினி!
என்ன ஆச்சு?
ஏன் உங்க குரல் ஒரு மாதிரி இருக்கு?”

“சக்தி…காப்பா…த்…து…ங்க…ஆ!”

என்ற அலறல் சத்தம் கேட்டதும் தன் காதோடு வைத்திருந்த ஃபோனை சற்று தூரமாக பிடித்துக் கொண்ட சக்தி உறைந்து நின்றிருந்தாள்

“தி…தி…தி…
என்ன ஆச்சு?
ஏதாவது பேசு தி…
அந்த ஃபோனை குடு…
ஹலோ மிஸ் நளினி…
என்ன இது ஃபோன் கட்டாகியிருக்கு?
தி…தி…
கம் ஆன் தி…
பேசு.
என்ன ஆச்சு?
இரு இரு…இதோ வரேன்.
ஆங் இந்தா மொதல்ல இந்த தண்ணிய குடி.”

என்று சக்திக்கு தண்ணீர் குடுத்து அவளை ஆசுவாசப்படுத்தினான் விஷால். ஆனாலும் அவள் பதற்றமாகவே இருந்தாள்.

“தி…ஜஸ்ட் ரிலாக்ஸ்…
டேக் எ டீப் பிரெத்…
இப்போ சொல்லு என்ன ஆச்சு?”

“வி…வி…நாம நளினி ரூமுக்கு போகலாம்னு சொன்னேனில்லையா!
நாம போயிருந்தா அந்த பொண்ண காப்பாத்திருக்கலாம்.”

“சரி இப்போ அந்த பொண்ணுக்கு என்ன ஆச்சாம்?”

“ஐ திங்க்…ஐ திங்க்…
அவளை யாரோ கொன்னுட்டா!”

“வாட்?
என்ன உளர்ர தி!”

“இல்ல வி…
அவங்க என் கூட பேசு போது அங்க வேற யாரோ இருந்திருக்கா.
ஏன்னா நளினி குரல்ல நடுக்கமும் பயமும் இருந்தது.
அவ திக்கி திக்கி தான் பேசினா.
கடைசியில் ஆ ன்னு ஒரு அலறல் சத்தம் கேட்டது அவ்வளவு தான் ஃபோன் கால் கட்டாகிடுத்து.”

“இரு இதை உடனே நான் ஜேம்ஸுக்கு இன்ஃபார்ம் பண்ணிடறேன்.
அதுக்கப்புறம் நாமும் நளினி ரூமுக்கு போவோம்.
ஆங்…இட்ஸ் ரிங்கிங்…
ஹாய் ஜேம்ஸ்…”

என்று நடந்தவற்றை ஜேம்ஸிடம் விளக்கிக் கூறினான் விஷால். அதை கேட்ட ஜேம்ஸ்…

“அப்படியா!
ஓ மை காட்!
சரி சரி நான் அந்த நளினி ரூம் இருக்குற அந்த ஹாஸ்பிடல் ஸ்டாஃப் அப்பார்ட்மெண்ட்டுக்கு இப்பவே போறேன்.”

என்று விஷாலிடம் கூறிவிட்டு தனது மேலதிகாரியான எட்வார்ட் கிள்பர்ட்டிடம் விரைந்து சென்று விளக்க முயன்ற போது அவர்

“என்ன ஜேம்ஸ்!
நீங்க இவ்வளவு நேரம் இங்க நம்ம பக்கத்துல இருக்குற டிராஃபிக் போலிஸ் டிப்பார்ட்மென்ட்டுல இருந்தீங்க.
அது எப்படி அந்த ஹாஸ்பிடல் ஸாடாஃப் தங்குற அப்பார்ட்மெண்ட்ல கொலை நடந்திருக்குன்னு சொல்லறீங்க?
இன்னும் எந்த போலிஸ் ஸ்டேஷனுக்கும் எந்த தகவலும் வந்தா மாதிரி தெரியலையே!!”

என்று அவர் கூறிக்கொண்டிருக்கும் போதே அவரின் தொலைபேசி மணி ஒலித்தது. அதை எடுத்து மறுபக்கத்திலிருந்து வந்த செய்தியை கேட்டதும் அமைதியாக

“ம்…ப்ரொசீட்.
நம்ம ஜேம்ஸும் ஸ்பாட்டுக்கு வருவார்.
ம்…”

என்று கூறி ஃபோனை வைத்தவர் ஜேம்ஸை பார்த்து

“என்ன ஆச்சு ஜேம்ஸ்?
அது எப்படி உங்களுக்கு முதலில் தெரிய வந்தது?”

“சார் அதை சொல்ல தான் நான் வந்தேன்.
இது ஒரு வித்தியாசமான கேஸாக இருக்கிறது.
நான் கொலை நடந்துள்ள ஸ்பாட்டுக்கு போயிட்டு வந்து உங்களுக்கு விளக்கி சொல்லவா!”

“ம்…ஓகே ஓகே.
நீங்க மொதல்ல அங்க போங்க.
அங்க என்ன ஏதுன்னு பார்த்ததுட்டு வந்து…எல்லாத்தையும் விவரமா சொல்லுங்க.”

“ஓகே சார்.
ஐ வில் டூ”

என்று கூறிவிட்டு நேராக நளினியின் ரூமிருக்கும் இடத்திற்கு சென்றான் ஜேம்ஸ். அதே நேரம் சக்தியும் விஷாலும் சக்தி வீட்டிலிருந்து அதே இடம் செல்ல புறப்பட்டனர்.

ஜேம்ஸ் முதலில் சென்றான். அவன் பின்னாலேயே சக்தியும் விஷாலும் அங்கு சென்றார்கள். சக்தி வேகமாக நளினியின் ரூமிற்கு சென்றாள். அங்கே போலிஸ் அவளை உள்ளே அனுமதிக்கவில்லை. ஜேம்ஸ் அவளிடம்

“சக்தி அன்ட் விஷால் நீங்க ரெண்டு பேரும் கீழே வெயிட் பண்ணுங்க நான் பார்த்துட்டு என்ன ஏதுங்கற விவரத்தை சொல்லறேன்.”

“ஜேம்ஸ் அந்த பொண்ணோட முகத்த ஒரே ஒரு தடவ பார்த்துட்டுப் போனேனே ப்ளீஸ்.”

“இல்ல சக்தி அது முடியாது.
சில ப்ரோட்டோகால்ஸ் இருக்கு.
உங்களை இப்போ உள்ளே விட மாட்டாங்க.
விடவும் கூடாது. தயவுசெய்து புரிஞ்சுக்கோங்க.
எல்லாம் முடிஞ்சு பாடியை போஸ்ட்மார்ட்டம் பண்ணி ஒப்படைக்கும் போது தான் நீங்க பார்க்க முடியும். டேய் விஷால் இவங்கள கூட்டிட்டு கீழே போ.
நான் கொஞ்ச நேரத்துல கீழ வரேன்.”

“ப்ளீஸ் தி..‌.
வா நாம் ஜேம்ஸ் சொல்லற படி கீழ போய் நிற்போம்.
வா தி…ம்…வா”

என்று கண்களில் கண்ணீருடன் நளினி ரூமின் வாசலிலேயே நின்றிருந்த சக்தியை அழைத்துக் கொண்டு அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் கீழே சென்று ஒரு மரத்தடியில் இருவருமாக நின்றுக் கொண்டனர். அப்போது விஷால் சக்தியிடம்

“ஏய் சக்தி! இன்னும் அரைமணி நேரத்துல நீ ஆஃபிஸ் போகணும்.”

“ஓ! ஆமாம். நான் லீவுனு மெஸேஜ் அனுப்பிடறேன்.”

“சரி அதை செய்.”

“ம்…அனுப்பிட்டேன் வி.
என்னை நினைச்சா எனக்கே கோபம் வருது வி.”

“நீ என்ன செஞ்ச?”

“பின்ன என்னால் தானே இத்தனை பேருக்கு பிரச்சினை.
நான் அந்த ஹாஸ்பிடலுக்கு போனதால் தானே அந்த நர்ஸ் இப்போ ஐசியூ ல இருக்கா.
நான் இந்த நளினியை பார்க்க வந்ததால் தானே அவளும் இதோ இப்படி இறந்து போயிட்டா!
நான் வசுந்தராகிட்ட பிளட் டெஸ்ட் எடுத்ததால தானே அவளும் காணாமல் போயிருக்கா!
ஸோ எல்லாமே என்னால் தானே!
இதை எல்லாம் நினைக்க நினைக்க எனக்கு என் மேல் கோபமும் ஆத்திரமும் தான் வருது வி.”

“இதுக்கும் உனக்கும் நீ நினைக்கிற மாதிரியான சம்மந்தம் இல்ல…
ஆமாம் உன்ன சுத்தி ஏதோ ஒரு வலை பின்னப்படுதுங்கறது என்னவோ உண்மைதான்.
ஆனா அதுக்கு நீயே நீதான் காரணம்னு சொல்லிக்கறதை முதல்ல நிப்பாட்டு சரியா.”

“என்ன தான் சொன்னாலும் என்னால் ஒரு உயிர் போயிருக்குன்னு நினைக்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு வி.”

“இட்ஸ் ஓகே! என்ன நீயா கொலை பண்ணின?”

“நான் நேரடியா பண்ணலைனாலும் இதுக்கு நானும் ஒரு காரணமாகிட்டேனேன்னு நினைக்கும் போது தான் எனக்கு…”

“இதோ ஜேம்ஸ் வந்துட்டான்.
வா ஜேம்ஸ் என்ன ஆச்சு?”

“அந்த பொண்ணு டெலிபோன் கேபிளால கழுத்தை நெரிச்சு கொலை செய்யப்பட்டிருக்கா.”

“அய்யோ! அப்ப அவ என் கிட்ட பேசும் போது தான் அது நடந்திருக்கு.
கடவுளே.”

“ஆமாம் அதுனால தான் உங்களுக்கு அவங்களோட அலறல் சத்தம் பாதியா கேட்டிருக்கு”

“ஐயோ! பாவமே!
கடைசியா என்கிட்ட சக்தி காப்பாத்துங்கன்னு அந்த பொண்ணு சொன்னாளே!!!”

“சக்தி உங்களோட அவங்க பேசிய போது உங்களுக்கு வேற ஏதாவது குரல் அல்லது சத்தம் கேட்டுதா?
கொஞ்சம் நல்லா யோசிச்சு சொல்லுங்க சக்தி ப்ளீஸ்”

“ம்…இல்ல ஜேம்ஸ்.
இன்னமும் அந்த பொண்ணோட ஆ ன்னு அலறல் சத்தம் தான் கேட்குது.
அதை தவிர வேறெதுவும் எனக்கு கேட்கலை.”

“ம்…”

“இதை செஞ்சது யாரா இருக்கும் ஜேம்ஸ்?”

“நம்ம சக்தியை ஃபாலோ பண்ணுறவங்களா இருக்கலாம்.
இல்ல வேற யாராவதா இருக்கலாம்.
பார்ப்போம் இன்வெஸ்ட்டிகேஷன் முடிஞ்சா தான் ஒரு க்ளியர் பிக்சர் தெரிய வரும்.
லெட் அஸ் வெயிட் அன்ட் வாட்ச்”

“ம்…அதுவும் சரிதான் ஜேம்ஸ்.
சரி நீ ஏதோ டிராஃபிக் போலிஸ் டிப்பார்ட்மெண்ட்டுலேந்து சக்திக்கு கால் பண்ணி நளினி சொன்னதெல்லாம் சரியான தகவல் தானான்னு கேட்டியே அது ஏன்?”

“அது வந்து விஷால்…”

“மிஸ்டர் ஜேம்ஸ் உங்க மொபைலுக்கு மிஸ்டர் கிள்பர்ட் கால் பண்ணினாறாம்‌.
நீங்க எடுக்கலைமாம்.
உடனே உங்கள அவருக்கு கால் பண்ண சொன்னார்.”

“ம்…ஓ! ஆமாம்.
என் ஃபோன் சைலென்ட் ல இருந்ததால் கவனிக்கல.
இதோ உடனே பண்ணறேன்.
சரி விஷால் அன்ட் சக்தி நீங்க இங்க நிற்க வேண்டாம் வீட்டுக்கு போங்க.
நான் இங்க ஃபார்மாலிட்டிஸ் எல்லாத்தையும் முடிச்சிட்டு… சக்தி… உங்க ஆஃபிஸுக்கு வரேன்.
பை டேக் கேர்.”

“ஓகே டா பை.
சக்தி நாம இங்கேந்து கிளம்புவோமா?”

என்று விஷால் கூறிக்கொண்டே சிலை போல் நின்றிருந்த சக்தியை காரில் அமரவைத்து. அவள் கையிலிருந்த கார் சாவியை எடுத்து காரை ஸ்டார்ட் செய்தான்.

தன்னை பின்தொடர்பவர்கள் நளினியை கொலை செய்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று ஜேம்ஸ் கூறியதைக் கேட்ட சக்தி அப்படியே சிலை போல் நின்றவள் விஷால் காரை ஸ்டார்ட் செய்த சப்தம் கேட்டதும் சுயநினைவுக்கு வந்தாள்.

தொடர்வாள்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s