அத்தியாயம் 24: இருளில் ஒளி

“நளினி ரூம்ல அவ மட்டும் தான் இருந்தா.
அவ தனியா தான் இருந்தா.
அங்க வசுந்தரா இருக்கலை.”

“சரி நளினி ரூமுக்கு நீங்க போனீங்க. அவங்க தனியா தான் இருந்தாங்க. ஓகே.
அங்க வேற என்ன நடந்ததுன்னு சொல்லுங்க சக்தி.”

“வசுந்தரா அவளோட ஆஃப்டர்னூன் ஷிப்ட் முடிச்சிட்டு வீட்டுக்கு கிளம்பும் போது நளினியும் அவ ரூமுக்கு கிளம்பியிருக்கா.
அப்போ வசுந்தரா நளினியை அவ கார்ல ஏற சொல்லிருக்கா.
நளினியும் ஏறியிருக்கா.
இரண்டு பேரும் பாட்டுக் கேட்டுக்கிட்டும், பேசிக்கிட்டும் போனதுல…போனதுல…”

“போனதுல என்ன ஆச்சு.
ஏன் தயங்கறீங்க சக்தி சொல்லுங்க.
என்ன ஆச்சு?”

“நான் சொல்லுவேன்.
ஆனா நீங்க அதுக்கப்புறம் அந்த பொண்ணு நளினியை தொந்தரவு செய்யக் கூடாது.
ஏன்னா நான் அவளுக்கு வாக்கு குடுத்திருக்கேன்.”

“ஐயோ! சரி தொந்தரவு பண்ண மாட்டேன்.
தயவுசெய்து சொல்லுங்க சக்தி.”

“அவங்க கார் ஏதோ ஒரு ஜீப்பில மோதியிருக்கு”

“அப்புறம்?”

“உடனே வசுந்தரா அதிர்ச்சியில மயக்கமாகியிருக்கா.
ஆனா சுயநினைவுல இருந்த நளினி வசுந்தரா உயிரோடு இருக்காளான்னு செக் பண்ணி அதை ஊர்ஜிதப் படுத்திண்டதுக்கப்புறமா ஹாஸ்பிடலுக்கு கால் பண்ண தன்னோடு மொபைலை தேடியிருக்கா. அது எங்கயோ தெரிச்சுப் போய் இருக்கு. அவளால கண்டுபிடிக்க முடியலை. உடனே காரிலிருந்து இறங்கியிருக்கா.
நேரா அந்த ஜீப்பு கிட்ட போயி டிரைவர் சீட்டை பார்த்திருக்கா.
அப்போ காரோட பின்னாடி சீட்டுலேந்து யாரோ ஒருத்தர் நளினியை கட்டையால் அடிக்க முயற்சி செய்திருக்கான்.
ஆனா அவன் கிட்டேந்து தப்பிச்ச நளினி வேகமா ஓடி நேரா அவ ரூமுக்கு போய் கதவை அடைச்சிட்டு உட்கார்ந்தவ நான் போய் தட்டியதும் தான் கதவைத் தொறந்திருக்கா.”

“நளினிக்கு டிரைவர் சீட்டுல யாரிருந்தான்னு தெரிஞ்சுதா?
அவங்களை கட்டையால் அடிக்க வந்தவனை அடையாளம் பார்த்தாங்களா?
எந்த இடத்தில் இது நடந்ததாம்?
எத்தனை மணிக்கு நடந்துதாம்?”

“அச்சச்சோ எவ்வளவு கேள்விகள்?”

“ஆமாம் சக்தி.
உங்க கேஸ் எனக்கு பெரிய சவாலா இருக்குமோன்னு தோணுது.
அதுனால உங்க விஷயத்துல ஏதாவது ஒரு க்ளூ கிடைத்திடாதான்னு தேடுற எனக்கு
இந்த நர்ஸ் நளினி இருட்டுல தெரியும் ஒரு சிறு வெளிச்சம் போல இருக்க மாட்டாங்களான்னு ஒரு எதிர்பார்ப்பு தான்.
அதுதான் கேட்கிறேன்.
கொஞ்சம் யோசிச்சு கரெக்ட்டா சொல்லுங்க சக்தி”

“எனக்கும் புரியுது ஜேம்ஸ்.
ஆனா நீங்க கேட்ட கேள்விகள்ல நான் அவகிட்ட கேட்டது எந்த இடத்தில் அன்ட் எத்தனை மணிக்கு? இந்த ரெண்டு கேள்விகள் தான்.”

“சரி அதுக்கு என்ன பதில் சொன்னாங்க?”

“ஒரு பத்து மணியளவுல அவங்க ஹாஸ்பிடல் ஸ்டாஃப் அப்பார்ட்மெண்ட்டுலேந்து ஒரு ஐநூறு அடி முன்னாடி நடந்ததுன்னு நளினி சொன்னா.”

“ம்…மொதல்ல அந்த நேரத்துல அங்கிருந்த சிசிடிவிகளை எல்லாம் செக் பண்ண சொல்லறேன்.
ஏதாவது ஆக்ஸிடென்ட் கேஸ் ரிஜிஸ்டர் ஆகிருக்கான்னும் விசாரிக்கணும்.”

“என்னடா ஜேம்ஸ் கிணறு தோண்ட பூதம் கிளம்பின கதையா என்னென்னவோ நடக்குது!”

“ம்…இதுல அவங்க டார்கெட் சக்தி தான்னு அவங்கள ஃபாலோ பண்ணற விதத்தில் இருந்து புரியுது.
ஆனா ஏன்? எதுக்கு? யாரு?
சரி சரி நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு ஏதாவது பண்ணுங்க.
நான் டிராஃபிக் டிப்பார்ட்மெண்ட் வரை போயிட்டு அப்படியே சக்தி ஆஃபிஸ் வந்திடறேன்.
சக்தி நீங்களும் அங்க வந்திடுங்க.”

“ம்…ஓகே ஜேம்ஸ்.
நான் கரெக்ட்டா ஒரு ஒன்றரை மணிக்கெல்லாம் ஆஃபீஸ் ல இருப்பேன்.
நீங்க வரலாம்.”

“ம்…நானும் வறதுக்கு அந்த டைம் ஆயிடும்.
சீ யூ இன் யுவர் ஆஃபிஸ்.
பை
பை டா ரோல்ஸ் ராய்ஸ்”

“பை ஜேம்ஸ்”

“ம்….ம்….பை டா போலீஸ்”

“சரி. சிவ பூஜையில் கரடி மாதிரி இவ்வளவு நேரம் இருந்த இம்சை போயாச்சு.
இப்ப சொல்லு தி.”

“எக்ஸ்க்யூஸ் மீ.”

“என்னடா நீ இன்னும் கிளம்பலையா?”

“ம்…என் கூலர்ஸ் விட்டுட்டு போயிட்டேன்.
அதை எடுக்க வந்தேன்.”

“சரி எடுத்துக்கோ”

“இம்சை!!! ம்….
கரடி ம்….
இன்னைக்கு நைட்டு என் வீட்டுப் பக்கம் வந்திடாதே!
சொல்லிட்டேன்.”

“டேய் டேய் டேய்!! ஜேம்ஸ் சும்மா சொல்லிட்டிருந்தேன் டா.”

“நண்பனை பத்தி அவன் இல்லாட்டி என்னென்ன சொல்லுவீங்கன்னு இப்போ புரிஞ்சுக்கிட்டேன் டா.
யப்பா!! நண்பா விஷால்.”

“சரி டா சாரி டா.”

“ம்…அது நண்பனுக்கு அழகு!
ஓகே ஓகே எஞ்சாய் எஞ்சாய்.
பை”

“ஆங் ஆங் பை பை”

“வா வா வி.
உட்காரு.
இது உனக்கு தேவையா?
ஒழுங்கா பேச வேண்டியது தானே”

“போலிஸ்காரன்ங்கறது சரியா தான் இருக்கு இல்ல.
எப்ப, எப்படி, எங்க வருவாங்கன்னே தெரியாது ஆனா வர வண்டிய நேரத்துல கரெக்ட்டா வந்து நிப்பாங்க.”

“ம்…ம்…”

“ஏய் தி.
ஏன் ஏதோ மாதிரி இருக்க?”

“இந்த ஜேம்ஸ் வந்ததால நிறைய முடிச்சுகள் வெளிய தெரிய ஆரம்பிச்சிருக்கு வி.
என்னை சுத்தி எனக்கே தெரியாம நிறைய முடிச்சுகள் போடப்பட்டிருக்கு.
போடறவங்க யாரு?
ஏன் போடுறாங்க?
என்ட்ட என்ன இருக்கு?
என்கிட்டேந்து என்ன எதிர்பார்க்கறாங்க?”

“அதைப் பத்தி எல்லாம் நீ ஏன் யோசிக்கிற? கவலைப்படற?
அதெல்லாம் ஜேம்ஸ் பார்த்துப்பான்.”

“எல்லாம் உன்னைப் பார்க்க பாரிஸ் வந்ததுலேந்து தான் இப்படி எல்லாம் நடக்குது.
இதுக்கு நான் அங்க வராமலே இருந்திருக்கலாம்.
இல்ல இப்போ மாதிரி நீயே அப்போவும் வந்திருக்கலாம்.”

“என்ன நீ இப்படி பேசுற தி?”

“பின்ன என்ன வி?
யோசிச்சுப் பாரு என்னைக்கு உன்னைப் பார்க்க பாரிஸுக்கு கிளம்பினேனோ அன்னேலேந்து தானே என் வாழ்க்கையில் என்னென்னவோ நடக்க ஆரம்பிச்சிருக்கு!
உன்னால இல்லைன்னு சொல்ல முடியுமா சொல்லு!”

“அது என்னவோ உண்மை தான்.
ஆனா நீ இப்படியே யோசிச்சேன்னா அப்புறம் இப்போ என்னைப் பார்க்க வந்ததாலன்னு சொல்லற நீ நாளைக்கே உன்னால தான் என்னை சொல்லாம இருந்தா சரி.”

“அது எப்படி வி சொல்லுவேன்!”

“அப்பாடா.
அது போதும்.
நன்றிமா உனக்கு நன்றி”

“அதுக்கில்ல இப்படி எல்லாம் பண்ணறதுக்கு மூளை வேணுமே!
அதுனால தான் அப்படி சொன்னேன்.”

“என்னது?
சொல்லுமா சொல்லு.
என்ன வேணும்னாலும் சொல்லு.
சரி இந்த கேஸு கீஸூ எல்லாம் சரி கிஸ்ஸுன்னு ஒண்ணு இருக்குங்கறது உனக்கு தெரியுமா?”

“அட அட அட!!
கேஸூ கீஸூ கிஸ்ஸு!!
என்ன வார்த்தை ஜாலம்.
நீ எப்படி?
எப்போலேந்து இப்படியெல்லாம்?”

“கிண்டலா?”

“இல்ல சுண்டல்.”

“சரி சரி… என்ன?
நீ ஆஃபிஸ் போற வரைக்கும் இங்கேயே உட்கார போறோமா?”

“இல்ல இல்ல!
அதுக்கு இன்னும் இரண்டு மணி நேரமிருக்கே!”

“அதுவரைக்கும் என்ன பண்ணலாம்?”

“வா என் வீட்டுக்கு போகலாம்.”

“ஐயோ! உன் வீட்டுக்கா?
அப்புறம் உன் பாலிஸி, பிரின்ஸிப்பிளுக்கு எல்லாம் பங்கம் வந்திடுமே!”

“ஹலோ!
அது நைட் ஸ்டேக்கு தான் சொன்னேன்.
நான் போகப் போறேன்.
நீ வறயா இல்லையா?”

“ம்…ம்…காலையில் ஒரு பாலிஸி…
மாலையில் ஒரு பாலிஸி…
விளங்க முடியா மங்கை நீ தி”

“ஆமாம் ஆமாம்.
இப்படி எல்லாம் பேசினா கமல்ஹாசனா ஆயிட முடியுமா?”

“அச்சச்சோ! சும்மா ஏதோ தோனினத சொன்னேன் அவ்வளவு தான்.
ஏய் தி…தி…தி…இரு வந்துட்டேன்.
தாங்க்ஸ் மிஸ்டர் வில்யம்ஸ் பை.
ஹாவ் எ நைஸ் டே”

“யூ டூ சார்.
பை”

“ஏய் தி நில்லு நில்லுன்னு சொல்லிண்டே வரேன்…
கண்டுக்காம போற!
சரி இப்போ நான் என் கார்ல வரணுமா இல்ல உன் கார்லயே போகலாமா?”

“என் காரிலேயே போகலாம் வி.
என் ஆஃபிஸுக்கு போகும் போது அப்படியே இங்க வந்து உங்க காரை எடுத்துண்டு நீங்க பாரிஸ் போகலாம்.
இந்த லீ கார்னர் என் வீட்டிலேந்து என் ஆஃபிஸ் போற வழியில் தான் இருக்கு.”

“ஓ! ஓகே ஓகே. அப்போ சரி.
பூட்டிட்டேன். ம்…போகலாம்.”

“எனக்கு யாரு எதிரி?
ஜேம்ஸ் சொன்னா மாதிரி என்னை யாரு டார்கெட் பண்ணறது?
ஒரே கொழப்பமா இருக்கு வி.”

“ஏய் தி.
நீ ஏன் அனாவசியமா உன்னை நீயே கொழப்பிக்கற?”

“எப்படி கொழம்பாம இருக்க முடியும் வி?”

“அதை எல்லாம் பார்த்துக்க தான் ஜேம்ஸ் இருக்கான்.
அவன் பாத்துப்பான்.
இதை எல்லாம் நினைச்சு நீ இப்படி கவலைப் பட வேண்டிய அவசியமே இல்லை தி.
ஜஸ்ட் ச்சில் அன்ட் ரிலாக்ஸ்.
பட் கொஞ்சம் ஜாக்கிரதையா இரு.
தட்ஸ் ஆல்.”

“ம்…ம்…ஓகே ஓகே!
அப்பா அம்மாக்கு வேற கால் பண்ணணும்.
அவா காலேலேந்து இரண்டு தடவை கால் பண்ணட்டா.”

“எதுக்கு கால பண்ணிருக்கா?”

“வேற எதுக்கு?
என்னாச்சு ஏதாச்சு?
நேத்து வேற உன் கசினுக்கு ஆக்ஸிடென்ட் ன்னு சொல்லிருக்கோமா!
அதைப் பத்தி கேட்க…
அவாளுக்கு என் கிட்ட கேட்க ஏதாவது கேள்வி இருந்துண்டே தான் இருக்கும்.
ஆத்துக்கு போனதும் கால் பண்ணணும்.
சரி வி. எப்ப மறுபடியும் உன் பேரன்ட்ஸ் கிட்ட நான் பேசறது?”

“நானும் அவாகிட்ட பேசி குரு எப்படி இருக்கான்னு கேட்கணும்.
அப்படியே இன்னைக்கு பேசலாமான்னும் கேட்கிறேன்.”

“ம்…ஓகே.
வீடு வந்தாச்சு.
இறங்கலாமா?”

“இப்ப ஏன் யாருமே இல்லாத தெருவுல, உன் வீட்டு வாசல் ல ஹாரன் அடிச்ச?”

“தெரியாம கை பட்டு டுத்து.”

“ஓ சரி சரி!!”

“ம் வா வி வா வா.
வீட்டை திறக்கிறேன் வா.”

“சரி தொற…அதுக்கு ஏன் அனௌன்ஸ் பண்ணற?
உனக்கு என்ன ஆச்சு தி?
ஏன் திடீர்னு ஒரு மாதிரி நடந்துக்கற?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லையே வி.
நீ உள்ள வாயேன்.
நான் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்.”

“சர்ப்ரைஸா!
என்னடா இது? உலகமகா அதிசயமா இருக்கு!
உன்னை அந்த லீ கார்னர் ப்ரேக் ஃபாஸ்ட் என்னமோ செய்துடுத்து!!”

“உட்காரு வி.
லெட் மீ கெட் யூ சம் ஆரஞ்சு ஜூஸ்”

“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் தி.
அது தான் ஹோட்டல்ல நல்லா சாப்பிட்டுட்டு தானே வந்திருக்கோம் அப்புறம் என்ன?
வா வந்து நீயும் உட்காரு.”

“அப்ப சரி.
ம்…சொல்லு.
இன்னும் ஒன்றரை மணி நேரமிருக்கு
என்ன பண்ணலாம்?”

“என்ன பண்ணலாமா?
அட போ தி!”

“ஏய்!!”

“சரி சரி என்னமோ சர்ப்ரைஸ் வச்சிருக்கன்னு சொன்னியே!
என்ன அது?”

“அதுவா! அது வந்து! அது வந்து!”

“என்ன அது வந்து அது வந்துன்னு சொல்லிண்டே நீ எங்கயோ எழுந்து போற?”

“ம்…அதுக்கு முன்னாடி நான் உன்கிட்ட ஒண்ணு கேட்கணுமே!”

“ம்..என்ன கேளு!”

“ஆங்…ஓகே…அது வந்து….
ஊப்ஸ் என் மொபைல் வைப்ரேட் ஆகறது…
ஓ ஜேம்ஸ் தான் கூப்பிடறார்.
இரு வி அட்டென்ட் பண்ணிட்டு சொல்லறேன்.”

“கரடி கரடி”

“ஆங் என்ன சொன்ன வி?”

“ஒண்ணுமில்லையே! நீ பேசு”

“ஆங்! சொல்லுங்க ஜேம்ஸ்.”

“சக்தி நான் டிராஃபிக் போலிஸ் டிப்பார்ட்மென்ட்டுலேந்து தான் பேசறேன்”

“ஆங் ஆமாம் அங்க போறதா தானே செல்லிட்டுப் போனீங்க.
சொல்லுங்க என்ன ஆச்சு?
ஏதாவது க்ளூ கிடைச்சுதா?”

“என்ன தி?
என்ன ஆச்சாம்?”

ஃபோனை கைகளால் மறைத்துக் கொண்ட சக்தி விஷாலிடம்

“தெரியலையே!
அவர் அங்கே யார் கூடவோ பேசிட்டே என்கிட்ட பேசறார்.
இரு அவர் இன்னும் சொல்லலை.
ஆங் ஜேம்ஸ் இருக்கேன் சொல்லுங்க”

“நீங்க நர்ஸ் நளினி சொன்னதா சொன்ன நேரம் இடம் கரெகட்டான இன்ஃபர்மேஷன் தானே?”

“ஏன் கேட்கறீங்க?
எல்லாமே அவ சொன்னதை தான் அப்படியே நானும் உங்க கிட்ட சொன்னேன்.”

“ம்…ஓகே ஆஃபிஸ் ல சந்திப்போம்”

“ஏன் என்ன ஆச்சு ஜேம்ஸ்?”

“நாம மீட் பண்ணும் போது சொல்லறேன் சக்தி.
இப்போ நான் இன்னொரு முக்கியமான இடத்துக்கு போக வேண்டியிருக்கு.
பை.”

“ஓகே பை ஜேம்ஸ்.”

“என்னவாம் அவனுக்கு?
என்ன சொல்றான்?”

“அவரு நளினி என்கிட்ட சொன்னதெல்லாம் சரியான தகவல் தானான்னு கேட்டார்.”

“சரி”

“நானும் சரியான இன்ஃபர்மேஷன் தான்னு சொன்னேன்.
சரி ஆஃபிஸ் ல சந்திக்கும் போது விவரங்களை சொல்லறேன்னு சொல்லி ஃபோனை வச்சுட்டார்.”

தொடர்வாள்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s