அத்தியாயம் 23: மர்ம முடிச்சுகள்

இரண்டு டாக்டர்கள், நர்ஸ்கள், சக்தி மற்றும் விஷால் ஆகியோர் கூரை தளம் சென்று அவர்கள் லிஃப்ட்டிலிருந்து வெளியே வந்ததும் வாசலில் நின்றிருந்த ஜேம்ஸை பார்த்தனர். அப்போது சக்தி

“ஜேம்ஸ் என்ன ஆச்சு? இதோ டாக்டர்ஸ்!”

“ஓ மை காட்!! ஏய் நம்ம கீர்த்தனா!”

“வா வா வா! கீர்த்தனா! கீர்த்தனா!”

“நகருங்க சிஸ்டர்.
என்ன ஆச்சுன்னு பார்ப்போம்.”

“ஏன் சார் எங்க ஹாஸ்பிடல் நர்ஸ்க்கு எப்படி இப்படி நடந்தது?
நீங்க யாரு?”

“டாக்டர்…”

என்று கூறிக்கொண்டே டாக்டரின் கோர்ட்டில் அவரது பெயரை தேடியது ஜேம்ஸின் கண்கள். அது அகப்பட்டதும்

“டாக்டர் ராமசந்திரன் என் பெயர் ஜேம்ஸ் இமானுவேல்.
நான் பிரான்ஸ் போலீஸ்.
இது தான் என் ஐடி”

“சரி சார்.
எதுக்காக போலீஸ் நீங்க எங்க ஹாஸ்பிடல் வந்திருக்கீங்க?
எங்க நர்ஸ்க்கு என்ன நடந்தது?”

“ஹேய் ராம் கீர்த்தனா உயிரோட தான் இருக்கா.
மொதல்ல அவளை ஐசியூ வுக்கு ஷிப்ட் பண்ணணும்.
சீக்கிரம் வா.
மத்ததெல்லாம் அப்புறமா பேசிப்போம்.”

“நர்ஸ் கொஞ்சம் நகந்துக்கோங்க.
ம்… இப்போ க்ரௌண்ட் அழுத்து.”

“சார் நீங்க எல்லாரும் கீழே வாங்க.
அங்க பேசிக்கலாம்.
மொதல்ல இவங்கள காப்பாத்தணும்.
ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க.”

“ஷுவர்.
நீங்க போங்க நாங்க கீழே வரோம்.
எப்படியாவது அவங்கள காப்பாத்துங்க.”

என்று ஜேம்ஸ் கூறிக் கொண்டிருந்த போதே லிஃப்ட்டின் கதவுகள் மூடின. உடனே ஜேம்ஸ்

“சக்தி, விஷால் வாங்க நாம அந்த லிஃப்ட்டுல கீழ போகலாம்.
ம்… சீக்கிரம் உள்ள வாங்க.”

என்று பக்கத்து லிஃப்ட்டிற்குள் மூவரும் சென்றதும்

“ஜேம்ஸ் என்ன நடக்குது இங்க?
யார் அந்த நர்ஸ்?
அவங்க ஏன் இப்படி?…
யார் அவங்கள அப்படி பண்ணிருக்காங்க?
நீ எப்படி கூரை தளத்துக்கு வந்த!
ஏன் வந்த?”

“அந்த நர்ஸ்…சரி சரி கிரௌண்ட் ஃப்ளோர் வந்துட்டோம்.
மொதல்ல அந்த நர்ஸ்க்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுப்போம் வாங்க”

“வி என்னப்பா நடக்குது.
நான் ஆஃபிஸ் வேற போகணுமே!”

“பேசாம இன்னைக்கு லீவ் போடு தி.
இங்க நடக்கறதெல்லாம் பார்த்தா ஏதோ விபரீதமா இருக்குமோன்னு தோணுது.”

“ம்…லீவு கிடைக்குமான்னு கேட்டுப் பார்க்கிறேன்.”

“சக்தி நீங்க இங்க இருக்க வேண்டாம்.
நீங்க உங்க ஆஃபிஸுக்கு போய் நான் கேட்ட பர்மிஷன் வாங்கி வையுங்க.
நான் வரேன்.”

“அப்போ பாரிஸ்?”

“அந்த கேஸை வேற ஒருத்தருக்கு மாத்திக் கொடுத்துட்டேன்.
அதுனால இன்னைக்கு இதை கண்டு பிடிச்சே ஆகணும்”

“ஆக்சுவலி நான் ஈமெயில் போட்டு உங்களுக்கு பர்மிஷன் வாங்கியாச்சு ஜேம்ஸ்.”

“அப்புறம் என்னடா அவளும் நம்ம கூடவே இருக்கட்டுமே ஜேம்ஸ்”

“ம்…ஓகே சக்தி.
அப்படீன்னா இங்க நிலவரம் தெரிஞ்சுகிட்டு நாம உங்க ஆஃபிஸ் போகலாம்.”

“நான் இன்னைக்கு ஹாஃப் டே பர்மிஷன் கேட்டிருக்கேன்.
பார்ப்போம்… கிடைச்சா நீங்க சொன்னபடியே செய்யலாம்.
இல்லாட்டி…நான் போக வேண்டி இருக்கும்.”

“ஓகே.”

“எப்போ தெரியும் தி?
ஈமெயிலுக்காக காத்திருக்காம…
நீயே கால் பண்ணிக் கேட்டுடேன்.”

“ம்…அதுவும் சரி தான் வி.
இதோ கால் பண்ணிட்டு வந்துடறேன்”

என்று சக்தி அங்கிருந்து நகர்ந்து சென்றதும் விஷால் ஜேம்ஸிடம்

“என்ன தான் நடக்குது ஜேம்ஸ்?
ஒண்ணும் புரியல.
அந்த நர்ஸை அப்படி ரத்தவெள்ளத்துல பார்த்ததும் அப்படியே தல சுத்தித்து தெரியுமா!
அவங்களை யார் என்ன பண்ணிட்டாங்க?”

“நாம இங்க வசுந்தராவைத் தேடி வந்தப்ப அந்த வரவேற்பாளர் பொண்ணு அவங்க ஷிப்ட் முடிச்சுட்டு நைட்டே ஒன்பது மணிக்கெல்லாம் வீட்டுக்கு கிளம்பி போயிட்டாங்கன்னு சொன்னப்போ… இப்போ அடிப்பட்டுக் ஐசியூல இருக்காங்களே இந்த நர்ஸ் அவசர அவசரமா ஒரு பதட்டத்தோடு புறப்பட்டுட்டிருந்தாங்க.
அவங்க கண்ணு என்கிட்ட ஏதோ சொல்ல தவிச்சது எனக்கு புரிஞ்சுது.
சரி தனியா போனா ஏதாவது சொல்லுவாங்கன்னு நினைச்சு அவங்க பின்னாடியே போனேன்.
அப்போ தான் லிஃப்ட்டுக்குள்ள போனாங்க நான் படிகள்ல ஏறி போனேன்.
அவங்க போன லிஃப்ட் கூரை தளத்தில் நின்னுது.
நானும் அங்க போய் பார்த்தேன் ஆனா அவங்கள அதுக்குள்ள யாரோ அப்படி பண்ணிட்டுப் போயிருக்காங்க.
அதுக்கப்புறம் நான் சக்திக்கு கால் பண்ணி டாக்டர்ஸோட வரச்சொன்னேன்.
அதுக்கப்புறம் நடந்தது தான் உனக்கே தெரியுமே”

“அப்போ அந்த நர்ஸ்க்கு ஏதோ விஷயம் தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்குன்னு சொல்லறயா ஜேம்ஸ்.”

“வாய்ப்பிருக்கலாம்….
இல்லாமலும் இருக்கலாம்.”

“என்னடா குழப்பற?”

“ஆமாம் அவங்க வாயைத் திறந்து ஏதாவது சொன்னா தானே தெரியும்.
சரி நீ இங்கேயே இரு இதோ நான் வந்துடறேன்.”

“எங்கடா போற?”

“நீ அந்த நர்ஸ்க்கு என்ன ஆச்சுன்னு டாக்டர்ஸ் வந்து சொல்லுற வரைக்கும் அங்கேந்து நகராத சரியா.
அஞ்சே நிமிஷத்துல வந்துடுவேன்”

“ஹேய் வி.
ஜேம்ஸ் எங்கே?
நீ மட்டும் நிக்கற!”

“அவன் ஏதோ ஒரு விஷயத்துக்காக அந்த பக்கம் போயிருக்கான்.
வந்தா தான் என்ன விஷயம்ன்னே தெரியும்.
சரி உனக்கு பர்மிஷன் என்ன ஆச்சு?”

“ஆங்! ஆங்! அதெல்லாம் கிடைச்சாச்சு.
நான் இனி மத்தியானம் ஒரு ஒன்றரை மணிக்கு ஆஃபிஸ் போனா போதும்.”

“குட் குட்….”

“ஏய் வி அந்த நர்ஸ்க்கு என்ன ஆச்சு?”

“தெரியலையே!
இப்போ தான் என்ன நடந்ததுனு ஜேம்ஸ் சொல்லி முடிச்சிட்டு போனான் நீ வந்துட்ட”

“அப்படியா என்ன நடந்தது?”

என்று சக்தி கேட்டதும் ஜேம்ஸ் சொன்ன அனைத்து விவரங்களையும் விஷால் சக்தியிடம் விளக்கிக் கூறினான். அதைக் கேட்ட சக்தி

“என்னது இது சினிமா கதை மாதிரி இல்ல இருக்கு!”

“அது இருக்கட்டும் தி.
எங்க உன் பிரெண்டு வசுந்தரா?”

“அது தான் எனக்கும் தெரியலை வி.”

“அவளுக்கு ஒரு ஃபோன் போட்டு கேட்க வேண்டியது தானே”

“பண்ணாம இருப்பேனா வி!
எத்தனைத் தடவை கால் பண்ணறது.
நாட் ரீச்சபள் ன்னு தான் வருது.
குடும்பத்தோட எங்கயாவது வெளியூருக்கு போயிருப்பாளோ?”

“என்கிட்ட கேட்டா!
எனக்கென்ன தெரியும் தி?
நீதான் சொல்லணும்.”

“ம்…என்ன பண்ணலாம்…
எப்படி அவளை கண்டு பிடிக்கறது?
ம்….ஆங்!
ஒரு வழியிருக்கு…”

“என்ன அந்த வழி தி?”

“இரு வி இதோ நான் வந்துடறேன்.”

“ஏய் தி அது என்ன வழின்னு சொல்லிட்டுப் போயேன்.”

“இரு இரு வி.
அது சரியானதான்னு மொதல்ல செக் பண்ணிட்டு…
அப்புறமா வந்து சொல்லறேன்.
நீ அங்கேயே இரு வி.
இதோ வந்துடறேன்.”

“அட போங்கப்பா.
நான் என்ன காவலாளியா என்ன?
என்னை இங்க நிக்க வச்சுட்டு ரெண்டு பேரும் ஆளுக்கொரு திசையில போறீங்க.
ஆங் டாக்டர்!
டாக்டர் அந்த நர்ஸ்க்கு என்ன ஆச்சு?
இப்போ எப்படி இருக்காங்க?”

“மிஸ்டர் ஜேம்ஸ் இமானுவேல் எங்க?”

“அவர் ஏதோ அவசரமா வெளியே போயிருக்கார்.
எதுவா இருந்தாலும் நீங்க என்கிட்ட சொல்லலாம்.”

“நீங்களும் போலீஸா?”

“இல்ல இல்ல.
நான் ஜேம்ஸோட பெஸ்ட் பிரெண்ட்.
அதுவுமில்லாம அவன் தான் என்கிட்ட நீங்க வெளிய வந்ததும் என்ன ஆச்சு ஏதாச்சுன்னு கேட்டு வைக்க சொன்னான்.”

“கீர்த்தனாவுக்கு காயங்கள் ரொம்ப சிவியரா இருக்கு.
பயங்கரமா தாக்கப்பட்டிருக்கா.”

“அப்படியா? உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையே டாக்டர்!
ஆங்! இதோ ஜேம்ஸே வந்துட்டான்.”

“டாக்டர் அந்த நர்ஸ் கீர்த்தனாவுக்கு என்ன ஆச்சு?
அவங்க கண் முழிச்சிட்டாங்களா?”

“இல்ல மிஸ்டர் ஜேம்ஸ்”

“நீங்க என்ன ஜேம்ஸ்ன்னே கூப்பிடலாம் டாக்டர்.
மிஸ்டர் எல்லாம் தேவையில்லை”

“ஓகே ஜேம்ஸ்.
அந்த பொண்ண கத்தியால் பயங்கரமா தாக்கியிருக்காங்க.
உடம்புல எல்லா இடங்களிலும் கத்திக் காயமிருக்கு.
மோரோவர் அவளை கொல்ல விடாம அவ ரொம்ப போரடிருக்கா.
ஏன்னா அவ கை எல்லாம் கத்தி கீறல்களா இருக்கு.
கடைசியில் தான் அவ வயிற்றுல குத்திருக்காங்க.
நல்ல வேளை அந்த கத்தி அவ்வளவா உடலுக்குள் போகலை.
அதுனால அவ பொழச்சுக்கிட்டா!”

“அந்த பொண்ணு எப்படி டாக்டர்?”

“எப்படின்னா?”

“இல்ல காரெக்டர் எப்படி?”

“ரொம்ப நல்ல பொண்ணு அவ.
அவ உண்டு அவ வேலை உண்டுன்னு இருப்பா.
வேலையில் ரொம்ப சின்சியிர்.
அந்த பொண்ணுக்கு ஏன் இப்படி ஆச்சுன்னு தெரியலை?”

“இதுக்கு முன்னாடி உங்க ஹாஸ்பிடல் ல இது மாதிரி நடந்திருக்கா டாக்டர்?”

“இல்லவே இல்லை ஜேம்ஸ்.
இது தான் ஃப்ர்ஸ்ட் டைம்.”

“நீங்க எத்தனை வருஷமா இந்த க்ளினிக் ல டாக்டரா இருக்கீங்க ராம்?
ஐ திங்க் யூ டோண்ட் மைன்ட் மி காலிங் யூ ராம்!”

“நோ நோ நாட் அட் ஆல். இங்க எல்லாரும் என்னை அப்படி தான் கூப்பிடுவாங்க.
நான் கடந்த பதினோரு வருஷமா இதே ஹாஸ்பிடல் ல தான் டாக்டரா இருக்கேன்.”

“சரி இங்க வசுந்தரான்னு ஒரு டாக்டர் இருக்காங்களா?”

“வசுந்தரா வா!! ஆமா ஆமாம்.
அவங்களுக்கு இந்த வாரம் ஆஃப்டர்னூன் ஷிப்ட்.
மத்தியானம் இரண்டு மணிக்கு தான் வருவாங்க.”

“ஓ! அப்படியா?”

“ஏன் அவங்கள தேடறீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

“அது வேறொரு விஷயம் ராம்.
சரி இந்த நர்ஸ் எப்போ கான்சியஸ்க்கு வருவாங்க?”

“அவ இன்னும் ஒரு ஆறு லேந்து ஏழு மணி நேரம் கழிச்சு தான் கான்சியஸ்க்கு வருவா.”

“சரி டாக்டர் ராம்.
ரொம்ப தாங்க்ஸ். அனாவசியமான கேள்விகள் கேட்காம உடனே மாடிக்கு வந்து உதவினதுக்கு ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்.
இந்த நர்ஸ் கீர்த்தனா எழுந்து சொல்லப் போறதுல தான் என்னோட ஒரு கேஸுக்கான முதல் க்ளூ இருக்கப் போகுது.
நான் அவங்க காவலுக்கு ரெண்டு சென்ட்ரி போடறேன்.
தயவுசெய்து அவங்கள உங்க ஹாஸ்பிடல் ஸ்டாஃப்பும் பத்திரமா பார்த்துக்கோங்க.
கீர்த்தனா வீட்டுல சொல்லியாச்சா?”

“இல்ல. இன்னும் சொல்ல ல.
அவ இங்க இருக்கற எங்க ஹாஸ்பிடல் ஸ்டாஃப் அப்பார்ட்மெண்ட்டுல தான் மற்ற நர்ஸ்களுடன் தங்கியிருக்கா.
அவ சொந்தங்கள் எல்லாம் இந்தியாவுல இருப்பாங்க.”

“அப்படீன்னா இப்போதைக்கு அவங்க வீட்டுல எதுவும் சொல்லிக்க வேண்டாம்.
அவங்க நல்ல படியா குணமானதும் சொல்லிக்கலாம்.
இல்லாட்டி அவங்க எல்லாம் டென்ஷன் ஆகிடுவாங்க.”

“ஆனா அவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா?”

“ஆச்சுன்னா எல்லாருக்கும் கஷ்டம் தான் டாக்டர் ராம்.
அதுனால அவங்கள பத்திரமா பார்த்துக்கோங்க.
சரி அது என்ன இந்த ஹாஸ்பிடல் ல இருக்கற ஸ்டாஃப் முக்கா வாசி பேரும் இந்தியர்களா இருக்கீங்க!”

“இந்தியர்களும், இலங்கையர்களும் இருக்கோம்.
இது நம்ம கம்யூனிட்டிக்காக எங்க சேர்மென் மிஸ்டர் கோபாலன் உருவாக்கின ஹாஸ்பிடல்”

“ஓ!! இர்ட்ரெஸ்டிங்.
அவர் இப்போ எங்க இருக்கார்?”

“அவர் இப்போ இந்தியாவுல இருக்கார்.
அடுத்த வாரம் இங்க வருவார்.”

“சரி அவருக்கு அவர் ஹாஸ்பிடல் ல இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது தெரியுமா?
இல்ல நீங்க யாராவது அவருக்கு தெரியப்படுத்தி இருக்கேங்களா?”

“எஸ் எஸ்!
அதெல்லாம் அப்பவே அவர்கிட்ட இன்ஃபாம் பண்ணியாச்சு.”

“ம்…சரி சரி டாக்டர் ராம்.
இதோ நான் சொன்ன ரெண்டு சென்ட்ரி வந்துட்டாங்க.
இவங்க பகல் முழுவதும் இங்கேயே இருப்பாங்க.
நைட் ஷிப்ட்டுக்கு ஆள் மாறுவாங்க.
சரியா.
சென்ட்ரீஸ் நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா எங்கேயும் இந்த இடத்தை விட்டு போகக்கூடுது.
யாராவது ஒருத்தர் இங்கே இருந்துக்கொண்டே இருக்க வேண்டும்.
நைட் ஷிப்ட் வர்றவங்க கிட்டேயும் இந்த அப்டேட் குடுத்துட்டு வீட்டுக்கு போங்க.”

“எஸ் சார்.”

“நான் மீண்டும் ஈவ்னிங் வரேன்.
ஓகே டாக்டர் ராம் சீ யூ பை.
நான் வேறொரு இடத்துக்கும் போக வேண்டியிருக்கு.”

“ஓகே ஜேம்ஸ்.
பை. டேக் கேர்.”

“இந்தாங்க இது என் கார்ட்.
அந்த நர்ஸ் கண் முழிச்சதும் எனக்கு கால் பண்ணி சொல்லுங்க.”

“ஓ! ஷுவர் ஜேம்ஸ்.”

“டேய் ஜேம்ஸ் என்னாட இவ்வளவு நேரம் அந்த டாக்டர்ட்ட பேசிட்டிருந்த?
அவர் என்ன தான் சொல்றார்?
அந்த நர்ஸ் பொழப்பாளா மாட்டாளா?”

“ஏன்டா!!! பொழைக்கணும்னு வேண்டிக்கோயேன் டா.
அப்ப தான் நம்ம சக்தியோட விஷயத்துல ஏதாவது ஒரு ஹின்ட்டாவது கிடைக்கும்.”

“ஆங்!! ஆங்!! வேண்டிக்கறேன்…வேண்டிக்கறேன்.”

“சரி சக்தி எங்க?”

“உன்னை மாதிரியே இதோ வர்றேன்னு சொல்லிட்டு போனா…
இன்னும் வரலை.
ஆங்… அதோ வர்றாளே!
நீயே கேட்டுக்கோப்பா!”

“ஹேய் சக்தி நீங்க எங்க போயிருந்தீங்க?
உங்களுக்கு ஹாஃப் டே பர்மிஷன் கிடைச்சுதா?”

“ஆங் அதெல்லாம் கிடைச்சாச்சு.”

“இப்போ எங்கேந்து வர்றீங்க?”

“அப்பா துப்பறிவாளரே!
உனக்கு பசிக்குதோ இல்லையோ!
எனக்கு பசிக்குது டா.
மணி என்ன பாரு.
பத்தாக போவுது.
என்ன தி நீ நல்லா ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டுட்டு தான் வந்திருக்க போல!”

“இல்ல வி.
வசுந்தரா வீட்டுல சாப்பிடலாம்ன்னு தான் வந்தேன்.
ஆனா இப்போ அவளையே காணல!
வேணும்னா மறுபடியும் அவங்க வீட்டுக்கு போய் பார்ப்போமா?”

“ம்…இதுவும் நல்ல யோசனை தான்.
சரி வாங்க வசுந்தரா வீட்டுக்கு போய் பார்த்துட்டு அப்படியே ஏதாவது சாப்பிட்டுட்டு அங்கேந்து சக்தி நாம உங்க ஆஃபிஸுக்கு போகலாம்.
என்ன சொல்லுறீங்க?”

“ம்…ஓகே.”

“என்னவோ எதுவோ!
வாங்கப்பா சீக்கிரம் போய் ஏதாவது சாப்பிடுவோம்.”

மூவருமாக வசுந்தரா வீட்டுக்கு மீண்டும் சென்று பார்த்தனர். ஆனால் அவள் வீடு பூட்டியபடியே இருந்தது. உடனே ஜேம்ஸ் வசுந்தரா வீட்டுப் பக்கத்து வீட்டிலிருப்பவரிடம் விசாரித்தான். பின் அங்கிருந்து கிளம்பி ஒரு ரெஸ்டாரன்ட்டுக்கு சென்றனர். அங்கே சக்தி ஜேம்ஸிடம்

“வசுந்தரா பக்கத்து வீட்டுக் காரங்க கிட்ட விசாரிச்சேங்களே…
அவங்க என்ன சொன்னாங்க?”

“உங்க பிரெண்ட் நேத்து ராத்திரியே மூட்டை முடிச்செல்லாம் கட்டிகிட்டு ஊரை விட்டே போயிட்டாங்களாம்.”

“ஏன் போனாளாம்?”

“அதைப் பத்தி அவங்களுக்கு ஒண்ணும் தெரியல.
இதை எல்லாம் வச்சுப் பார்த்தா…
உங்க பிரெண்ட் வசுந்தரா வை யாரோ நல்லா மிரட்டி இருக்காங்க.
அதுனால பயந்து அவங்க ஊரை விட்டே போயிருப்பாங்க அப்படீங்கறது என்னோட யூகம்.
நீங்க என்ன நினைக்கிறீங்க சக்தி?”

“அப்படி முழுசா நம்பிவிட முடியாது ஜேம்ஸ்.
மிரட்டலுக்கு பயந்து போயிருப்பாங்கன்னு தோணல… அவங்க ஹஸ்பன்ட் தொந்தரவால கூட போயிருக்க வாய்ப்பிருக்கு.
நான் எங்கேந்து வந்தேன்னு அப்போ ஹாஸ்பிடல் ல கேட்டீங்களே அது எங்கன்னா…
என் வசுந்தராவோடவே எப்பவும் இருக்குற நர்ஸ் நளினிக்கு கால் பண்ண போனேன்.”

“அவங்க கிட்ட பேசினீங்களா?
என்ன சொன்னாங்க?”

“பேசினேன்.
அவங்க என்னை அவங்க ரூமுக்கு வரச் சொன்னாங்க.
நானும் வசுந்தராவைப் பத்தி ஏதாவது தெரிஞ்சுக்கலாமேன்னு உடனே போனேன்.”

“அவங்களை மீட் பண்ணிணீங்களா?
இல்ல ஒரு வேளை வசுந்தரா அவங்களோடு இருந்தாங்களா?”

தொடர்வாள்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s