அத்தியாயம் 21: மாயமான மெடிக்கல் ரிப்போர்ட்

சக்தி மற்றும் விஷாலை சந்திக்க வந்த ஜேம்ஸ் அவர்களிடம் சம்பவம் நடந்ததாக கூறப்படும் அன்று சக்தி அந்த ஹைவேயில் போனதுக்கான எந்த ஒரு தடயமும் சிசிடிவியில் இல்லை என்று கூறியதைக் கேட்டதும் இருவரும் பிம்மித்துப் போயினர்‌. உடனே விஷால் ஜேம்ஸிடம்…

“ஏய் ஜேம்ஸ்! என்ன சொல்லுறடா?”

“அட ஆமாம் வி”

“நல்லா பார்த்தாயா?”

“நான் நல்லா எல்லா கேமராக்களையும் செக் பண்ணிட்டேன் டா.”

“அது எப்படி தி அந்த ரோட்டுல போனது மட்டும் இல்லாம போகும்?”

“அதுனால தான் அவங்க கிட்ட போனீங்களான்னு கேட்டேன்.”

“அஃப்கோர்ஸ் நான் அந்த ஹைவேல தான் டிராவல் பண்ணினேன்.
அது எப்படி கேமராவில் பதிவாகம இருக்கும்?”

“பதிவாகலையே சக்தி.
நீங்க போனது பதிவாகியிருந்தா ஏதாவது ஒரு க்ளூவாவது கிடைச்சிருக்கும்.
ஆனா உங்க கார் அந்த ரோட்டுல போனதாவே எங்கேயும் பதிவாகலையே!
அந்த விஷுவல்ஸை எல்லாம் பார்த்தது வேந்து…
நான் எதை வச்சு இந்த இன்வெஸ்டிகேஷனை கன்டினியூ பண்ணறதுன்னு யோசிச்சிக்கிட்டே தான் இருக்கேன்.”

“இதுக்கு வேற வழியே இல்லையா ஜேம்ஸ்?”

“வழியெல்லாம் இல்லாம இருக்காது விஷால்.
உண்மையாவே சக்தி அன்னைக்கு அந்த ரோட்டுல டிராவல் பண்ணியிருந்து… அது சிசிடிவி எதுலேயுமே பதிவாகலைன்னா இதுக்குப் பின்னாடி ஏதோ பெரிசா இருக்குன்னு எனக்கு தோனுது.”

“என்ன ஜேம்ஸ்? பண்ணியிருந்துன்னு இழுக்கறீங்க?
நான் டிராவல் பண்ணினேன்.”

“எக்ஸ்க்யூஸ்மி சார் அன்ட் மேடம்.
யுவர் டின்னர்.
மே ஐ சர்வ்?”

“இட்ஸ் ஓகே! நாங்களே சர்வ் பண்ணிக்கறோம்.
தாங்க் யூ.”

“ஓகே மேடம்.
எஞ்சாய் யுவர் டின்னர்.”

“ம்…போதும் போதும் சக்தி.”

“வி…இந்தா உனக்கு.”

“தி போதும்.
அப்பா எவ்வளவு போட்டுட்ட?”

“ம்…நீங்க கன்டினியூ பண்ணுங்க ஜேம்ஸ்”

“எங்க விட்டேன்?
ஆங் அந்த சம்பவத்துக்குப் பின்னாடி ஏதோ பெரிய கைகள் இருக்குன்னும் எடுத்துக்கலாம்.
இதை ஊர்ஜிதம் படுத்திக்க சக்தி நீங்க தான் ஹெல்ப் பண்ணனும்.”

“ஓ ஷுவர் ஜேம்ஸ்!
என்னால் ஆன எல்லா ஹெல்ப்பும் பண்ணறேன்.
எனக்கும் அன்னைக்கு எனக்கு என்ன நடந்துதுன்னு தெரிஞ்சே ஆகணும்.”

“என்ன தி?
இன்னைக்கு காலேல நாம் டாக்டர்ட்ட போகும் போதும் சரி…
போலீஸ் ஸ்டேஷன் போகும் போதும் சரி…
இதெல்லாம் தேவையான்னு கேட்ட?
இப்ப என்னடான்னா தெரிஞ்சே ஆகணும்ன்னு சொல்லற?”

“பின்ன நான் போகவேயில்லைன்னு சொன்னா?
அது எப்படி காரை டிரைவ் பண்ணிட்டு போன நான் கேமராவுல பதிவாகலை?
ஒரே மர்மமா வேற இருக்கு?
வசுவோட ரிப்போர்ட்டுலயும்…
ஓ! வி…
நல்ல வேளை ஞாபகம் வந்தது…
எக்ஸ்க்யூஸ்மி கைஸ்.
நான் ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன்.
நீங்க ரெண்டு பேரும் சாப்பிட்டிட்டிருங்க.”

“எங்க போறீங்க சக்தி?”

“ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ் ஜேம்ஸ்…
வந்து சொல்லறேன்”

“என்னடா இது வந்ததும் நீ பத்து நிமிஷம் போன!
இப்போ இவங்க என்னமோ அவசர அவசரமா எங்கயோ போறாங்க?
என்னடா நடக்குது விஷால்?
இந்த ரெஸ்டாரன்ட் நல்லா தானே இருக்கும்!”

“ஹேய் ஜேம்ஸ்!
அதெல்லாம் நல்லா தான் இருக்கு.
தி க்கு எதோ ஞாபகம் வந்திருக்கு போல்!”

“அப்படின்னா அதை சொல்லாம ஏன் எழுந்து வெளில போகணும்?”

“ஓ!! ஓகே ஓகே!!”

“என்னடா ஓகே?”

“அவ அவளோட பிளட் ரிப்போர்ட்டை எடுக்கப் போயிராக்கான்னு நினைக்கறேன்.”

“பிளட் ரிப்போர்ட்டா?
அது எதுக்கு?”

“ஆக்ச்சுலா…
இந்த விஷயத்தை தி சொன்னதும் நாங்க அவளுக்கு யாராவது ஏதாவது குடுத்திருப்பாங்களோன்னு சந்தேகப்பட்டு…
அவளோட டாக்டர் பிரெண்ட் கிட்ட போயி ஒரு டெஸ்ட் எடுத்தா.
அதைத் தான் எடுத்துண்டு வரப் போயிருக்கான்னு நினைக்கறேன்”

“அதை ஏன் நீங்க மத்தியானம் என்னைப் பார்க்க வந்த போது காமிக்கலை?”

“அப்போ நாங்க மறந்துட்டோம் டா.
வீட்டுக்குப் போனதுக்கப்பறமா தான் ஞாபகம் வந்தது.
இப்பவும் மறந்துட்டோம்.
ஆனா அவளுக்கு ஞாபகம் வந்ததும் எடுக்கப் போயிருக்கா!”

“ம்….டாக்டர் என்னன்னு எழுதிருந்தாங்க?”

“அது வந்து…
ஆங்…இதோ தி யே வந்துட்டா.”

“வாங்க தி.
ரிப்போர்ட் எங்க?
காமிங்க!”

“அது வந்து…
வந்து…”

“என்ன ஆச்சு தி?
ஏன் தயங்கற?
ரிப்போர்ட் எங்க தி?”

“வாங்க சக்தி.
முதல்ல வந்து உட்காருங்க.
இப்போ சொல்லுங்க.
ரிப்போர்ட் எடுக்கவா வெளிய போனீங்க?”

“ம்…ஆமாம் ஜேம்ஸ்”

“சரி ரிப்போர்ட் எங்க?”

“அதை என் கார்ல தான் வச்சிருந்தேன்…”

“ஆமாம். வி சொன்னான்.”

“ஆனா அதை இப்ப எடுத்துண்டு வரலாம்னு போய் பார்த்தேன்…”

“சரி அது எங்க?
ரிப்போர்ட் எடுக்க போயிட்டு வெறும் கையோடு வந்திருக்கீங்க?”

“அந்த ரிப்போர்ட் என் கார்ல இல்ல.
நான் என் கார்ல வச்சிருந்த ரிப்போர்ட்டை காணல!”

“என்ன சொல்லுற தி?
அது எப்படி காணாம போகும்?”

“இரு இரு வி.
சக்தி அதை நீங்க உங்க கார்ல தானே வச்சீங்க?”

“ஆமாம் என் காரோட டாஷ்போர்டுல தான் வச்சிருந்தேன்.
ஆனா அதை இப்போ காணுமே!”

“அதை உங்க காரோட டாஷ்போர்டுல எப்போ வச்சீங்க?”

“ஆக்ச்சுவலி நான் என்னோட ஒரு பையில் தான் வச்சிருந்தேன்.
அதை உங்க கிட்ட கொடுக்க மறந்துட்டு நாங்க வீட்டுக்கு போனதுக்கப்புறமா அதை என் காரோட டாஷ்போர்டுல வச்சேன்.
அட்லீஸ்ட் இந்த மீட்டிலாவது உங்ககிட்ட காட்டணும்னு நினைச்சு வச்சேன்.
ஆனா மறுபடியும் மறந்துப் போயிட்டேன்.”

“உங்க கார்ல வச்சிருந்த ரிப்போர்ட் எப்படி காணாம போகும் சக்தி?”

“அது தானே தி!
அது எப்படி காணாம போயிருக்கும்?
அதுவுமில்லாம நானும் உன் கூடவே தானே மத்தியானத்துலேந்து இருக்கேன்!
நீ எப்ப அந்த ரிப்போர்ட்டை உன் டாஷ்போர்டுல வச்ச?
நான் பார்க்கலையே!”

“நீ கார்லேந்து இறங்கினதும்…
நான் என் பையை பின் சீட்டிலிருந்து எடுத்தேனே!”

“ஆமாம் எடுத்த.
அதைத் தான் எடுத்துண்டு கதவைத் திறக்க வந்துட்டியே!”

“இல்ல பின்னாலிருந்து பேக்கை எடுக்கும் போதே ரிப்போர்ட்டை எடுத்து என்னோடு சைடுல இருக்குற டாஷ்போர்டுல வச்சுட்டு தான் கதவை திறக்க வந்தேன்.”

“ஏன் அதை மாத்தி வச்ச தி?”

“இல்ல வி…
நான் ஈவ்னிங் பேக் மாத்திப்பேன்.
அதுனால எடுக்க மறந்துட்டா என்ன பண்ணறதுன்னு தான் கார்லேயே வச்சேன்.”

“ஓகே ஓகே.
இப்போ உங்க ரிப்போர்ட்டும் காணாம போயிடுச்சு சரி.
அதுல என்ன இருந்துதுன்னு உங்களுக்கு தெரியுமா சக்தி?”

“ஆங்…வசு சொல்லிட்டு தான் என்கிட்ட குடுத்தா.”

“அது யாரு வசு?”

“நான் தான் சொன்னேனே டா…
தி யோட டாக்டர் பிரெண்ட்.
அவங்கள தான் சொல்லுறா”

“ஆமாம் ஜேம்ஸ்.
அவங்க பேரு டாக்டர் வசுந்தரா.
எனக்கு அவங்களை ஒரு இரண்டு வருஷமா தான் தெரியும்.
ஒரு பார்ட்டி ல சந்திச்சோம் அப்படியே பிரெண்ட் ஆகிட்டோம்.”

“ஓ ஓகே. சக்தி நீங்க என்னோட இன்னொரு கேள்விக்கு பதிலே சொல்லலையே!”

“ஆங்!! ஆங்!!
அந்த ரிப்போர்ட் ல என்னோட பிளட்ல செடடிவ் இருந்ததா வசு சொன்னா.
அதுவுமில்லாம அது ஏதோ ஸ்லோ செடடிவ்வாம்.
அதை ஒரு தடவைக்கு மேல் குடுத்திருக்காங்கலாம்.
ஆனா அது எதுவுமே எனக்கு ஞாபகத்துல இல்ல ஜேம்ஸ்.
அதுனால எல்லார்கிட்டேயும் என்னை ஜாக்கிரதையா இருக்க சொன்னா வசு.”

“ரிப்போர்ட் காணாம போனதுக்கு நீங்க டென்ஷன் ஆக வேண்டாம் சக்தி.
நாளைக்கு அந்த டாக்டர் வசு வை சந்திச்சு அவங்க குடுத்த ரிப்போர்ட்டோட காபி ஒண்ணை வாங்கிக்கலாம்.
அது ஒரு பிரச்சினையே இல்லை.
ஆனா…”

“என்ன ஆனான்னு… இழுக்கறீங்க?”

“இல்ல சிசிடிவி ல நீங்க டிராவல் பண்ணிணதுக்கான எவிடன்ஸ் எதுவுமே இல்ல!
இப்போ என்னடான்னா உங்க காருக்குள்ள நீங்க வச்சிருந்த ரிப்போர்ட் காணாம போயிருக்கு!
ரிப்போர்ட் ல உங்களுக்கு செடடிவ் குடுத்திருக்கறதா டாக்டர் சொல்லியிருக்காங்க!
இதெல்லாம் சேர்த்து யோசிச்சுப் பார்த்தா ஏதோ பெரிய தப்பா இருக்கும் போல தெரியுதே!”

“என்ன தப்பா இருக்கும் ஜேம்ஸ்?”

“என்னன்னு என்னால் இப்போ யூகிக்க முடியாது விஷால்.
ம்…சக்தி உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?
உங்க வேலை சம்பந்தமா,
இல்ல நட்பு ரீதியா…
இப்படி ஏதாவது இல்ல யாராவது மேல சந்தேகம் இருக்கா?”

“ம்…ஹும்.
எனக்கு அப்படி யாரையுமே சந்தேகப் படத் தோணலை ஜேம்ஸ்.
நானும் அதை யோசிச்சு யோசிச்சுப் பார்க்கறேன் ஆனா யாருமே என்க்கு எந்தவித கெடுதலும் நெனைக்கறவங்க இல்ல…
எனக்கு ஒரே குழப்பமா இருக்கு”

“இட்ஸ் ஓகே கூல் கூல் சக்தி”

“உங்களுக்கே தெரியாம உங்களுக்கு செடடிவ் குடுத்து உங்கள யாரோ கடத்திருக்காங்க ஆர் கடத்த முயற்சிப் பண்ணிருக்காங்க.”

“அது யாராக இருக்கும் ஜேம்ஸ்?”

“தெரியலையே விஷால்.
சக்திக்கிட்ட பேசினா ஏதாவது தெரிஞ்சுக்கலாம்னு நெனச்சேன்…
ஆனா அவங்களுக்கு தெரியலை!
ம்…இன்டரெஸ்டிங்!”

“இப்போ என்ன பண்ணறது ஜேம்ஸ்?”

“ம்…நாளைக்கு அந்த டாக்டர் வசுந்தராவ பார்த்து சக்தியோட ரிப்போர்ட்டோட காபியை வாங்கணும்.
ஆங்…சக்தி உங்க ஆஃபிஸுக்கு நாளை நான் வரலாமா?”

“ஓ! தாராளமா வரலாமே!
டைம் மட்டும் சொல்லிடுங்கோ.
நான் எந்த மீட்டிங்கும் இல்லாம ஃப்ரீயா வச்சுக்கறேன்.”

“ஆனா டைம் சொல்ல முடியாதே சக்தி!
ஏன்னா எனக்கு இன்னொரு கேஸ் விஷயமா பாரிஸ் போக வேண்டியிருக்கு…
ஸோ எப்ப வருவேன்னு எல்லாம் சொல்ல முடியாதே!
சரி ஒண்ணு பண்ணுங்க…
நான் வந்தா என்னை உங்க ஆஃபிஸ் உள்ளே விடவும் உங்க சிசிடிவி டிப்பார்ட்மென்டுக்குள்ள விடவும் பர்மிஷன் வாங்கி வச்சுக்கோங்க.
அது போதும்.
நான் எப்ப வந்தாலும் என் வேலையைப் பார்த்துக்க அது உபயோகமா இருக்கும்.
மத்தப்படி நீங்க உங்க வேலையைப் பார்த்துக்கலாம்.
நான் உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.”

“அதெல்லாம் இன்னைக்கு நைட்டே ஈமெயில் போட்டு வாங்கிடுவேன்.
நீங்க தாராளமா எங்க ஆஃபிஸுக்குள்ள வரலாம்.
ஆனா நான் நாளைக்கு ஃபுல்லா இருக்குற மீட்டிங்ஸ் எல்லாத்தையும் நாளன்னைக்கு போஸ்ட்போன் பண்ணிக்கறேன்.
போ பிராப்ளம்”

“ஓகே தென் நேரமாயிடுச்சு.
நான் கிளம்பறேன்.
தாங்க்ஸ் ஃபார் தி டின்னர்.
டேக் கேர்.
ரெண்டு பேரும் பத்திரமா இருங்க.”

“ஹேய் இரு டா.
நாங்களும் கிளம்ப வேண்டியது தான்.
இதோ பில் பே பண்ணிட்டா ஆச்சு.”

“ம்…என்ன டா ஹெவி டிப்ஸ் வைக்கிற?”

“பாவம் தானே டா!
அதுவுமில்லாம நான் மாஸ்டர்ஸ் படிக்கும் போது படிப்புக்கு இடையில பாக்கெட்மணிக்காக இந்த மாதிரி எல்லாம் வேலைப் பார்த்திருக்கேன்.
அது தான்.”

“சரி சரி. வா போகலாம்”

என்று மூவருமாக கார் பார்க்கிங் வரை ஒன்றாக நடந்து பேசிக்கொண்டே வந்தனர். அப்போது விஷால் சக்தி காரில் ஏறப்போனதைப் பார்த்த ஜேம்ஸ்

“ஏன்டா விஷால் நீ இன்னுமா கார் வாங்கலை?”

“அடேய்! இதோ நிக்குது பாரு என் கார்.”

“அடேங்கப்பா ரோல்ஸ் ராய்ஸ் காரா!
ஏய் நிஜமாவே இது உன்னோடது தானா?”

“இங்க பாரு என் கார் கீ.
இரு ஓபன் பண்ணிக் காட்டுறேன் அப்புறமா நீ நம்பு.”

என்று தனது காரைத் திறக்க முயன்ற போது அவனால் காரை திறக்க முடியாது போனது. அதைப் பார்த்த ஜேம்ஸ்

“ஹலோ! ஓகே ஓகே!
யாரோடாவது காரை உன்கிட்ட இருக்குற சாவியை வைத்துத் திறக்க முயற்சித்தால் தண்டனை என்ன தெரியுமா?
அதுவும் என்னைப் பக்கத்துல வச்சுக்கிட்டு இந்த வேலைப் பார்க்குற…ம்….”

“இல்ல இல்ல ஜேம்ஸ் அது வி யோட கார் தான்.
எனக்கு நல்லா தெரியுமே!”

“அப்பாடி! தாயே என்னை காப்பாற்றிவிட்டாய்.”

“அதெல்லாம் இருக்கட்டும் வி.
உங்க கார்‌ ஏன் ஓபன் ஆகமாட்டேங்கறது?”

தொடர்வாள்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s