அத்தியாயம் 20: அறிமுகமும் அதிர்ச்சி தகவலும்

“எப்படி இருக்கேங்கள்?”

“நான் நல்லா இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் எப்படி இருக்கேங்கள்?”

“நாங்களும் நல்லா இருக்கோம் பா.”

“தி எப்பவுமே உங்க ரெண்டு பேரைப் பத்தி தான் சொல்லிண்டே இருப்பா. யூ போத் ஆர் ரியலி க்ரேட்”

விஷால் சக்தியை தி என்று குறிப்பிட்டதும் மிருதுளாவும் நவீனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் அழைப்பது போலவே விஷாலும் அழைக்கிறானே என்று சந்தோஷப்பட்டனர்.

“பாரிஸில் என்ன பண்ணறேங்கள்?”

“என்னை முதல்ல “ங்கள்” போட்டு கூப்பிடறதை விட்டுடுங்கோ. என்னை விஷால் ஆர் வி ன்னே கூப்பிடலாம்.”

“ஓ! தட்ஸ் ஸோ நைஸ் ஆஃப் யூ வி. ஓகே வா?”

“ம்…இது ஓகே அப்பா.”

“என்னது இவ்வளவு நேரமா பெயர் டிஸ்கஷனும் எப்படி கூப்பிட்டுக்கறதுங்கறது தான் போயிண்டிருக்கா?”

“இவளுக்கு எப்பவும் எல்லாத்துலேயுமே விளையாட்டு தான் பா.”

“ஆமாம் மா.
ஆமா!”

“சரி சரி. விஷால் உங்க சொந்த ஊரப் பத்தியும் வேலையைப் பத்தி எல்லாம் தி எங்ககிட்ட ஏற்கனவே சொல்லிட்டா. எங்க பொண்ணு செலக்சன் எதுலயும் என்னிக்குமே தப்பான தில்லை.
அவ எதுக்குமே அவ்வளோ சீக்கிரம் ஒரு டிசிஷன் எடுக்க மாட்டா.
பல முறை யோசிச்சு ஆராய்ஞ்சு அப்புறம் தான் ஒரு முடிவுக்கே வருவா. சின்ன வயசுலேந்தே அவ அப்படி தான். பத்து வயசு குழந்தைக்கு சைக்கிள் வாங்கித் தரேன்னு அப்பா சொன்னா அது உடனே வாங்கி தர தானே சொல்லும் ஆனா ஒரு சைக்கிள் வாங்கறதுக்கு நாங்க அவ கூட எத்தனைக் கடைக்கு ஏறி இறங்கி இருப்போம் தெரியுமா?
எங்க பொண்ணுக்கு உங்களைப் பிடிச்சிருக்குன்னா அவ அந்த முடிவை எடுக்க எவ்வளவு காலம் எடுத்திருப்பா எவ்வளவு யோசிச்சிருப்பான்னு அவ அப்பாவான என்னால் யூகிக்க முடியும். அதனால தான் நாங்க அவளோட விருப்பத்துக்கு எந்த விதமான தடையும் போடலை.”

“ஆமாம் ஆமாம் பா.
அது எனக்கும் நல்லாவே தெரியும்.
எனக்கு ஓகே சொல்லவே அவ மூணு வருஷம் எடுத்தா.
அதுனால நானும் அனுபவிச்சிருக்கேன்.”

“பரவாயில்லையே தியை நல்லாவே புரிஞ்சிண்டிருக்கேங்கள்.
ரொம்ப சந்தோஷம் பா விஷால்.
நாங்க உங்கள்ட்ட எதிர்பார்க்கிறது ஒண்ணே ஒண்ணு தான்.
எக்காரணம் கொண்டும் உங்களால் எங்க பொண்ணு கண்கலங்கி வருத்தப் படக்கூடாது.
அது மாதிரியான சூழல் வந்தாலும் அதை நீங்க தவித்து அவளுக்கு எல்லா நேரத்துலயும் பக்கபலமா இருக்கணும்.
எந்த இடத்துலேயுமே அவளை விட்டுக் கொடுத்துடக் கூடாது.
ஏன்னா….”

“அம்மா ப்ளீஸ் நீ உடனே உன்னோட ஃப்ளாஷ் பேக்குக்கு போயிடாதே மா.”

“போடி! நான் எங்கேயும் போகலை.
என்னை சொல்ல விட மாட்டேங்கற பாரு”

“சரி சொல்லு சொல்லு”

“போ மறந்துட்டேன்.
மொத்தத்துல எங்க தியை நல்லா பார்த்துக்கணும் பா.
அவ்வளவு தான்”

“இதை அப்பவே சொல்லிருக்க வேண்டியது தானே மா”

“ஹேய் தி.
இட்ஸ் ஓகே.
அம்மா அவாளோட எதிர்பார்ப்ப தானே சொன்னா.
அம்மா நீங்க கவலைப் படவேண்டிய அவசியமே இல்லை.
நீங்க எப்படி அவளைப் பார்த்துண்டேங்களோ அதே மாதிரி இல்ல அதைவிட ஒரு மடங்கு நல்லாவே பார்த்துப்பேன்.”

“ரொம்ப தாங்ஸ் பா”

“சரி சரி அப்பா அன்ட் அம்மா.
நாங்க இப்போ வியோட பேரன்ட்ஸ்கிட்ட பேசணும்.
அவா கிட்டயும் பேசிட்டு மறுபடியும் வீடியோ கால் பண்ணி உங்களை அவாளுக்கும் அவாளை உங்களுக்கும் இன்ட்ரோ பண்ணி வைக்கறோம் சரியா.
அவா வெயிட் பண்ணிண்டிருப்பா.
நாங்க இந்த கால் கட் பண்ணறோம்.
பை.”

“ஓ சரி மா.
பை தி அன்ட் வி”

“பை அம்மா அன்ட் அப்பா”

“வி எப்படி என் பேரன்ட்ஸ்?
ஜெல்லாயிட்ட போல!”

“லவ்லி பேரன்ட்ஸ் தி.
அவா ரெண்டு பேரும் பேசினதுலேந்து எனக்கு ஒண்ணு நன்னா தெரிஞ்சுண்டேன்.
ரெண்டு பேரும் உன் மேல உயிரையே வச்சிருக்கா.”

“எஸ் வி.
ஐ ஆம் ப்ளெஸ்டு டூ ஹாவ் தெம் ஆஸ் மை பேரன்ட்ஸ்.
சரி சரி உன் பேரன்ட்ஸுக்கு கால் பண்ணு.”

“ம்…இதோ பண்ணிட்டேன்.”

“ஏன் எடுக்க மாட்டேங்கறா?”

“அதுதான் தெரியலை.
இரு இரு இன்னொரு தடவை ட்ரை பண்ணறேன்”

“அவா பிஸியா இருக்காளோ என்னவோ?
கொஞ்சம் நேரம் கழிச்சு பண்ணிப் பாரு வி.”

“இல்ல இல்ல நான் டைம் சொல்லிருக்கேன்.
ஸோ அவா ரெடியா தான் இருப்பா.
ஆனா ஏதாவது இன்டர்நெட் பிராப்ளமா? என்னன்னு தெரியலையே!”

“சரி மொபைல்ல டேட்டா இருக்கும் இல்லையா!
மொபைல்ல கால் பண்ணிப் பாரு”

“ம்…இதோ பண்ணறேன்.
ஆங் ரிங் போறது.”

“ஹலோ விஷால் எப்படி இருக்க?”

“அம்மா என்ன மா வீடியோ கால்ல வரச்சொன்னேனே.
ஏன் வரலை?”

“அதுவா…உன் ரவி சித்தப்பா பையனுக்கு ஆக்ஸிடென்ட் ஆயிடுத்து அது தான் நாங்க எல்லாரும் ஆஸ்பத்திரி வந்திருக்கோம்.
அதனால தான் வீடியோ கால்ல வர மறந்துட்டோம்.”

“ஓ!! ஓ! அப்படியா? எப்படி குருவுக்கு ஆக்ஸிடென்ட் ஆச்சு?”

“அவன் பைக்கை ஒரு கார் காரன் பின்னாடிலேந்து வந்து இடிச்சிருக்கான். குருவுக்கு பேலன்ஸ் போயிருக்கு பைக்கோட சறுக்கிண்டே போயிருக்கான்.”

“வி யாருக்கு என்ன ஆச்சு?”

“ஒரு நிமிஷம் தி”

“அம்மா குரு இப்போ எப்படி இருக்கான்? காயம் ஒண்ணும் ஜாஸ்தி இல்லையே”

“மயக்கமா தான் இருக்கான் டா. உடம்புல ஆறேழு தையல் போட்டுருக்கான்னு ரவி சொன்னான்.
நாங்க இன்னும் குரு வ பாக்கலை. அவனை வார்டுக்கு கொண்டு வந்ததுக்கப்புறமா தான் பார்க்கணும். ஆனா அடி பலமா பட்டுருக்கு போல. பாவம் ரவிக்கும் மங்களத்துக்கும் ரொம்ப நாள் கழிச்சு பொறந்த புள்ளி இப்படி ஆஸ்பத்திரில படுத்துண்டிருக்கு. அந்த பகவான் தான் இந்த புள்ளைய சீக்கிரம் குணப்படுத்தணும்னு வேண்டிண்டே இருக்கேன்.
நாம வேற என்ன பண்ண முடியும் சொல்லு…
சரி இடையில பேசினது நம்ம சக்தியா?”

“ம்..ஆமாம் மா. சரி சரி நீங்க அங்க சித்தப்பாவையும் சித்தியையும் பார்த்துக்கோங்கோ.
குரு வ டாக்டர்ஸ் பார்த்துப்பா ஆனா இப்போ அவா ரெண்டு பேருக்கு தான் சப்போர்ட் வேணும்.
புரியறதா?”

“ம்…அதுனால தானே டா முக்கியமான கால் இருந்தும் இப்படி இங்க ஓடி வந்திருக்கோம்.”

“சரி சரி நீ சக்தி கிட்ட பேசறயா?
ஃபோனை அவகிட்ட குடுக்கவா?”

“இல்ல இல்ல வேண்டாம் விஷால்.
இப்போ நிலைமை சரியில்லை.
மொதோ மொதோ பேசப்போறோம் அப்ப போயி ஆக்ஸிடென்ட் விஷயத்தோடவா பேசணும்.
அவ இனி எப்ப ஃபிரியா இருப்பான்னு கேட்டு வை.
இன்னொரு நாளைக்கு பேசிக்கறோம்.”

“சரி மா பத்திரமா இருங்கோ.
அங்க எல்லாரையும் விசாரிச்சதா சொல்லு.”

“ஓகே டா கண்ணா.
வச்சுடவா.”

“ம்…ஓகே மா. பை.”

“ம்…பை பை. அப்புறமா அப்பாவ பேச சொல்லறேன்.”

“ஓகே ஓகே ஃபோனை வை மா”

“என்ன வி யாருக்கு ஆக்ஸிடென்ட் ஆகிருக்கு?”

“என்னோட சித்தப்பா பையன் குருவுக்கு.”

“ஹவ் இஸ் ஹீ நவ்?”

“அவன் இன்னும் மயக்கத்துல தான் இருக்கானாம்.
பயப்படும் படி ஒண்ணுமில்லன்னு டாக்டர்ஸ் சொல்லியிருக்காளாம்.”

“ஓ! கடவுளே அந்த பையன காப்பாத்துப்பா.
சரி என்கிட்ட ஃபோன குடுத்திருக்கலாம் இல்லையா!
நானும் அம்மாட்ட ஒரு வார்த்தை விசாரிச்சிருப்பேனே.”

“நான் உன் கிட்ட குடுக்கட்டுமான்னு அம்மாட்ட கேட்டேன்.
ஆனா அம்மா தான் மொதோ மொதோ பேசப் போற விஷயம் ஆக்ஸிடென்ட் பத்தி இருக்க வேண்டாம்னு சொல்லி இன்னொரு நாள் பேசறோம்னு சொல்லிட்டா.”

“ஓ! ஓகே ஓகே.”

“ஹேய் தி உன் பேரன்ட்ஸ் நம்மலோட கான்ஃபரென்ஸ் காலுக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பா.
நீ அவாளுக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்லி இன்னொரு நாள் வச்சுக்கலாம்னு சொல்லிடு.”

“ம்…சரி சரி நான் அப்பவே மெஸேஜ் அனுப்பிட்டேன்.
அவாளும் ஓகேன்னு சொல்லிட்டா.”

“சரி இந்த வீட்டுல நீ மட்டும் தனியாக வா இருக்க?”

“ஆமாம். ஏன் கேட்கற?”

“இல்ல உனக்கெல்லாம் இந்த பயம் எல்லாம் இல்லையா?”

“ஹா ஹா ஹா! நான் லாஸ்ட் அஞ்சு வருஷமா தனியா தான் இருக்கேன்.
ஆரம்பத்துல பயமெல்லாம் இருந்தது.
ஆனா வருஷங்கள் போக போக எல்லாம் பழகிடுத்து.
தைரியம் தானா பொறந்துடுத்து.”

“ஹே டைம் எட்டாச்சு தி”

“ஸோ வாட்?”

“நாம ஜேம்ஸை ஒன்பது மணிக்கு லீ கார்னர்ல மீட் பண்ணறோம்னு சொல்லிருக்கோமே!”

“அட ஆமாம். சரி அப்படீன்னா நாம கிளம்புவோமா?”

“ஓ ஷவர்.
ரெஸ்ட் ரூம் எங்க இருக்கு தி?”

“அதோ அந்த லெஃப்ட் சைட்ல தான் இருக்கு வி.
நானும் ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன்.”

“ம்…ஓகே.”

“என்ன தி இவ்வளவு சீக்கிரமா ரெடி ஆகி வந்துட்ட?”

“நானென்லாம் அப்படி தான்.
எனக்கு வெறும் அஞ்சு நிமிஷம் போதும்.”

“அப்பாடா அப்படீன்னா நான் குடுத்து வச்ச கணவனாக போறேன்.”

“என்னை போல ஒருத்தி உனக்கு மனைவியா கிடைக்க நீ குடுத்து வச்சிருக்கணும் வி.”

“அதைத் தானே மா நானும் சொன்னேன்.
நான் இல்லைன்னா சொன்னேன்”

“சரி சரி வா போகலாம்.”

என்று வீட்டினுளிருந்து வெளியே சென்றதும் கதவை தாழிட்டுக் கொண்டே பக்கத்து வீட்டைப் பார்த்தாள் சக்தி. எப்போதுமே அலங்கார விளக்குகள் பளிச்சிட்டவாறு ஜொலிக்கும் பக்கத்து வீடு அன்று இருள் சூழ்ந்திருந்ததைப் பார்த்ததும் நேராக அவர்கள் வீட்டுக்கு சென்றாள். அதைப் பார்த்த விஷால்

“ஹேய் தி.
அங்க எங்க போற?”

“ஒரு நிமிஷம் வி.
நீ கார்ல உட்காரு.
இதோ வந்துடறேன்.”

என்று கூறிக்கொண்டே சென்று மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டின் திண்ணை விளக்கை போட்டு விட்டு காரருகே வந்து மிஸ்ஸர்ஸ் டேவிட் எப்போதும் அமர்ந்திருக்கும் திண்ணையையே பார்த்துக்கொண்டு காரின் கதவைத் திறந்தாள்

“தி வாம்மா.
நேரமாகுது.
ஜேம்ஸ் நமக்காக காத்துண்டிருப்பான்”

“ஓகே இதோ இதோ வந்துட்டேன்.”

“என்ன உன் பக்கத்து வீட்டுக்கு நீ தான் ஒளி கொடுக்கும் தேவதையா?”

“ம்….அப்படி இல்ல வி.
அவங்க வீடு எப்பவுமே விளக்குகளால் ஜொலிச்சிண்டே இருக்கும்.
இப்போ இருட்டடைஞ்சு பார்க்கிறதுக்கு என்னமோ மாதிரி இருக்கு.
அதுதான் போய் வாசல் லைட்டை போட்டுட்டு வந்தேன்.”

“நாம டின்னருக்கு ஜேம்ஸை வரச்சொல்லிட்டு நாமளே லேட்டா போகப் போறோம்.”

“நோ நோ. நாம இன்னும் பத்தே நிமிஷத்துல லீ கார்னர் ரீச் ஆயிடுவோம்.
கவலைப் படாதே வி”

“அட ஆமா! நீ சொன்ன மாதிரியே கரெக்ட் டைமுக்கு வந்துட்டயே!
அதோ என் கார் பக்கத்துலேயே பார்க்கிங் காலியா இருக்கு பாரு அங்கேயே பார்க் பண்ணிடு”

“ஓகே டன்.
கார்லேந்து இறங்கு வி.”

“ஓகே காரை லாக் பண்ணிட்டயா?”

“ம்.‌.ம்…பண்ணியாச்சு.
எதுக்கு என் காரையே பார்க்கற வி?”

“ஒண்ணுமில்லை…நான் உன் காரை பாக்கலை.
நான் என் காரை பார்த்துண்டிருக்கேன்.”

“காலையிலேந்து உன் காரை மிஸ் பண்ணறயோ?”

“அஃப்கோர்ஸ் எஸ் தி!”

“வெல்கம் மேடம் அன்ட் சார்”

“ஹாய் மிஸ்டர் வில்யம்ஸ்”

“தி நாம அங்க உட்காரலாமா?”

“ஓ எஸ்.”

“மிஸ்டர் வில்யம்ஸ் நாங்க எங்க நண்பருக்காக காத்திருக்கணும்.
அவர் வந்ததும் ஆர்டர் கொடுக்கறோம்”

“ஹவ் அபௌட் சம் திங் டு ட்ரிங்க்?”

“ம்…நோ ப்ளீஸ். தாங்க் யூ.”

“ஹேய் வி அதோ பாரு ஜேம்ஸ் சொன்ன டைம்க்கு கரெக்ட்டா வந்துட்டார்.”

“ஹாய் ஜேம்ஸ் வா வா வா.”

“ஹாய் டா.
ஹாய் சக்தி.”

“ஹாய்!”

“ம்…ரெண்டு பேரும் உட்காருங்க.”

என்று ஜேம்ஸ் கூறியதும் மூவருமாக அமர்ந்தனர். பின் அவரவருக்கான உணவை ஆர்டர் செய்தனர். அப்போது விஷால்

“ஒன் மினிட் கைஸ்…
எக்ஸ்க்யூஸ்மி…
நான் ரெஸ்ட் ரூம் வரை போயிட்டு வந்துடறேன்.
நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க.”

“ஓகே டா சாப்பாடு வரதுக்கு முன்னாடி வந்துடு.
இல்லாட்டி நம்ம மெஸ் மாதிரி உன்னோட சாப்பாட்டையும் நானே சாப்பிட்டுடுவேன்.”

“சாப்பிட்டுகோ…சாப்பிட்டுக்கோ”

என்று கூறி வெளியே சென்றான் விஷால். அதைப் பார்த்த சக்தி

“என்ன இவன் வெளிய போறான்?”

“ஏன் போகக் கூடாதா சக்தி?”

“இல்ல இல்ல அதுக்கில்ல ஜேம்ஸ்.
ரெஸ்ட் ரூம் அதோ அந்த பக்கம் லெஃப்ட்ல இருக்கு.
ஆனா இவன் அது தெரியாம எங்கயோ போறான்.”

“போயிட்டு அங்க இல்லன்னா திரும்பி வரப்போறான் அவ்வளவு தானே!
இதுக்கு எதுக்கு நீங்க டென்ஷன் ஆகறீங்க?”

“ம்…ம்…அதுவும் சரிதான்.
சரி உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?”

“இன்னும் இல்லங்க.
வீட்டுல பொண்ணு தேடும் படலம் நடந்துட்டிருக்கு.
போலீஸ்ன்னாலே எல்லாரும் பொண்ணு குடுக்க மாட்டேங்கறாங்க.”

“ஓ அப்படியா? ஏன்?”

“பயம் தான் வேறென்ன?”

“உங்களுக்குன்னு ஒருத்தி பொறக்காமயா இருப்பா?
உங்களைத் தேடி வருவா பாருங்க.”

“உங்க வாய் முகூர்த்தம் அப்படியே நடக்கட்டும்.
அது நடக்கும் போது நடக்கட்டும்…சரி உங்க விஷயத்துக்கு வருவோம்”

“என் விஷயமா? அது என்ன?”

“என்னங்க காலையில தானே என்னோட ஆஃபிஸ் வந்து கம்பிளேயிண்ட் கொடுத்தீங்க! இப்போ என்ன விஷயம்னு கேட்கறீங்க?”

“ஓ! அதுவா…
இல்ல அது நாளைக்கு காலையில பதினோரு மணிக்கு தானே சொல்லறேன்னு சொன்னீங்க?
அதுனால தான் அது தோணலை.”

“ம்…அதுவும் சரி தான்.”

“சரி என்ன ஆச்சு?
ஏதாவது தெரிஞ்சுதா?
சிசிடிவியை பார்த்தீங்களா?
இதோ வியும் வந்துட்டான்.”

“என்ன ரெண்டு பேரும் மும்மரமா பேசிட்டிருக்கேங்கள்?”

“வி நம்ம ஜேம்ஸ் நாம குடுத்த கம்பிளேயிணட் பத்தி தான் சொல்ல வந்தார்…நீயும் வந்துட்ட.
உட்காரு வி.
ஜேம்ஸ் நீங்க சொல்லுங்க.”

“விஷால் அன்ட் சக்தி நான் சொல்லப் போறத ரெண்டு பேரும் முழுசா கேட்டுட்டு அப்புறமா உங்க கேள்விகளையோ இல்ல சந்தேகங்களையோ கேளுங்க சரியா.”

“என்னடா ரொம்ப பீடிகை எல்லாம் போடற?
சொல்லு டா”

“சக்தி நீங்க அன்னைக்கு உண்மையாவே பாரிஸுக்கு போனீங்களா?”

“ஏன்? ஏன் ஜேம்ஸ் அப்படி ஒரு கேள்வியை கேட்கறீங்க?”

“காரணம் இருக்கு சக்தி. சொல்லுங்க”

“ஆமாம் போனேன்.
உங்க கிட்ட சொன்னா மாதிரி ஆஃபிஸ்லேந்து மீட்டிங் முடிஞ்சதும் கிளம்பிப் போனேன்.”

“ஆனா உங்க கார் நீங்க சொன்ன அந்த டைம்ல மெட்ஸ் டூ பாரிஸ் ஹைவேல இருக்குற எந்த சிசிடிவி கேமராவுலேயும் பதிவாகலையே!”

தொடர்வாள்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s