ஜேம்ஸை சந்தித்து புகார் கொடுத்து விட்டு வெளியே வந்து சக்தியின் காரில் இருவரும் ஏறி சக்தி வீட்டை நோக்கி பயணித்தனர். அப்போது சக்தி விஷாலிடம்
“நல்ல வேளை உங்க பிரெண்டு ஜேம்ஸ் இருந்ததால நமக்கு வேலை சுலபம் ஆயிடுச்சு,
இல்லாட்டி எவ்வளவு அலைக்கழித்து இருப்பாங்களோ!!
என்ன வி ஒண்ணுமே பேசாம வரீங்க”
“ஆமாம் தி அவன் மட்டும் அங்க இல்லன்னா நம்ம வெளிலே வரதுக்கு இன்னும் எவ்வளவு நேரம் ஆகியிருக்குமோ!!
அதுவுமில்லாம அவன் நமக்காக கொஞ்சம் தீவிரமாக இந்த கேஸை விசாரிச்சு சீக்கிரமே உனக்கு என்ன ஆச்சுங்கறத கண்டுபிடிச்சு தருவான்னு நினைக்கிறேன்.
லெட் அஸ் வெயிட் அன்ட் சீ”
“அவர் பார்த்தா ரொம்ப நல்லவரா தெரியறார் நிச்சயமா கண்டுபிடிச்சு சொல்லுவாரு பாரு வி”
“ம்…ம்…”
“இல்லையே நீ ரொம்ப டல்லா இருக்கறா மாதிரி எனக்குத் தெரியுதே!!
ஏன் வி? என்ன ஆச்சு?”
“நான் இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம பேரன்ட்ஸோட பேசப் போற வீடியோ கால் பத்தி யோசிச்சிட்டு வரேன்.”
“ஓ! மாமனார் மாமியார்ட்ட பேச போறத நினைச்சு பயப்படறயா வி?
கவலைய விடு.
என் பேரன்ட்ஸ் ரொம்ப டீசன்ட் அன்ட் உன் கிட்ட நல்லாவே பேசுவா.
பேசறதுன்னா அவாளுக்கு ரொம்ப பிடிக்கும்.
அவா கூட பேசினா நீயே தெரிஞ்சுப்ப பாரு.
ஐ ஹோப் உங்க பேரன்ட்ஸும் அப்படி தான்னு நினைக்கிறேன்”
“ம்…ம்…ஆமாம் ஆமாம்”
“வி கம் ஆன்.
எதற்கு டென்ஷன்?
கொஞ்சம் ச்சில் பண்ணு மாப்பி!”
“பாட்டு…. ம்….?
டென்ஷன் எல்லாம் இல்ல தி.
ஆனா ஏதோ ஒரு மாதிரி இருக்கு.
உனக்குள்ள அப்படி ஒரு ஃபீல் இல்ல?”
“இருக்கு…
ஓ! ஓ!”
“என்ன ஆச்சு தி?”
“பார்த்தியா நாம என்னோட பிளட் டெஸ்ட் ரிப்போர்ட்டை உன் பிரெண்டு ஜேம்ஸ் கிட்ட குடுக்க மறந்துட்டோம்.”
“அட ஆமாம்.”
“என்ன அதை ஏதோ சந்தோஷமா சொல்லறா மாதிரி இருக்கே!”
“இதுல என்ன சந்தோஷம் இருக்கு தி?
ஆமாம் மறந்துட்டோமேன்னு தான் சொன்னேன்.”
“ம்…சரி அதுனால என்ன நாம தான் இன்னைக்கு நைட் அவரோட டின்னர் சாப்பிட போறோமே அப்போ குடுத்துக்கலாம்.
என்ன வி?
சரிதானே?”
“ம்…ம்…வெரி கரெக்ட்.
அப்பவே குடுத்துடலாம்.”
“ம்…வீடு வந்துடுச்சு.
காரிலிருந்து இறங்கலாமா.”
“ஓ எஸ் தி”
என்று காரை நிப்பாட்டி விட்டு இருவரும் காரிலிருந்து இறங்கியதும் சக்தி மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டின் திண்ணையைப் பார்த்தாள். ஆனால் அன்று அவளை பாரத்துப் புன்னகைக்க திருமதி டேவிட் அங்கிருக்கவில்லை. சக்தி பக்கத்து வீட்டையே பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்த விஷால் அவளிடம்
“ஹேய் தி.
அங்க என்ன பார்க்கிற?
இது தானே உன் வீடு?”
“ஆங். ஆமாம் வி.
நான் எப்ப வீட்டை விட்டு கிளம்பினாலும் சரி, வெளியே இருந்து வீட்டுக்கு வந்தாலும் சரி அங்க தெரியுது பாரு அந்த திண்ணையில் உட்கார்ந்துட்டே அழகான புன்னகையோடு எனக்கு விஷ் பண்ணுவாங்க மிஸ்ஸர்ஸ் டேவிட்.
ஆனா அவங்களை இப்போ காணுமே!”
“அவங்க ஏதாவது வேலையா வீட்டுக்குள்ள இருப்பாங்க தி”
“இல்ல இல்ல வி.”
“என்ன தி இது?
அவங்கவங்களுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும் இல்லையா?”
“இல்ல வி.
எனக்கு மார்னிங் அன்ட் ஈவினிங் விஷ் பண்ண அவங்க தவறினதே இல்லை.
இது தான் முதல் தடவையா அவங்க அங்க இல்லை.”
“ஒரு வேளை வெளிய எங்கயாவது போயிருக்கலாம் இல்லையா?”
“இல்ல வி.
அவங்க அப்படியெல்லாம் எங்கேயுமே போக மாட்டாங்க.
எல்லாமே அவங்க வேலைக்காரன் தான் வாங்கிட்டு வருவான்.”
“சரி தி.
இப்போ என்ன பண்ணலாம்ன்னு சொல்லற?”
“ஒரு வேளை அவங்களுக்கு உடம்பு சரியில்லாம போயிருக்குமோ?”
“அப்படி அவங்களுக்கு என்ன வயசாகுது தி?”
“அவங்களுக்கு எழுபத்தைந்து வயதாகுது வி.
ஆனா துரு துரு இருப்பாங்க.
இரு நான் போய் என்னன்னு பார்த்துட்டு ஒரு நொடியில் வந்துடறேன்”
“சரி அதுவரைக்கும் நான் இங்கேயே வாசல்லயே நிக்கட்டுமா?”
“ஊப்ஸ்! சாரி வி.
நீயும் வாயேன்.
அவங்க கிட்ட உன்னை இன்ட்ரோ பண்ணி வைக்கறேன்.”
“என்னன்னு?”
“என்னோட வருங்கால கணவர்ன்னு”
“ம்…என்னமோ பண்ணு.
இரு இரு மெல்லமா போ.”
என்று விஷாலின் கையைப் பிடித்துக் கொண்டு பக்கத்து வீடான மிஸ்டர் அன்ட் மிஸ்ஸர்ஸ் டேவிட் வீட்டின் வாசலில் நின்று அவர்கள் வீட்டின் அழைப்பு மணியின் பொத்தானை அழுத்தினாள் சக்தி. அப்போது அந்த வீட்டின் வேலைக்காரனாக அந்த வீட்டோடு இருக்கும் ஜான் கதவைத் திறந்தான். அவனிடம் சக்தி
“ஹாய் ஜான்.
ஹோப் ஆல் இஸ் வெல்!”
“ம்…ஆமாம் ஆல் இஸ் வெல் மிஸ் சக்தி.”
“சரி மிஸ்ஸர்ஸ் டேவிட் எங்க?
அவங்களைப் பார்க்கத்தான் வந்திருக்கோம்.”
“ஓ! ஓ! அவங்க வீட்டுல இல்லையே!”
“என்னது வீட்டுல இல்லையா?”
“ஆமாம் சக்தி மேடம்.”
“எங்க போயிருக்காங்க?”
“அதைப் பத்தி என்கிட்ட எதுவும் சொல்லலை மேடம்.”
“எப்போ திரும்பி வருவாங்க?”
“அதுவும் எனக்குத் தெரியாது மேடம்”
“சரி மிஸ்டர் டேவிட் எங்கே?”
“அவரும் மேடமும் தான் வெளிய போயிருக்காங்க.
பெட்டி எல்லாம் எடுத்துகிட்டு போயிருக்காங்க.”
“ஆனா உங்க கிட்ட ஒண்ணுமே சொல்லலையா?”
“இல்ல இல்ல என்னை இன்னைக்கு வீட்டை ஃபுல்லா சுத்தம் பண்ணிட்டு என்னோட வீட்டுக்கு போக சொல்லிட்டாங்க.
அவங்க திரும்பி வந்ததும் கால் பண்ணறதாகவும் அப்போ வந்தா போதும்ன்னும் சொல்லிட்டு தான் போனாங்க. அதுவுமில்லாம எனக்கு இரண்டு மாச சம்பளத்தையும் குடுத்துட்டுப் போயிருக்காங்க.”
“அப்படியா? ம்…சரி
நான் வரேன்.”
என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியே வந்தார்கள் சக்தியும் விஷாலும்.
“ஏன் சக்தி? உன்கிட்ட அந்த லேடியோட மொபைல் நம்பர் இல்லையா?”
“இல்ல வி.
எனக்கு அவங்க வீட்டு ஃபோன் நம்பர் தான் தெரியும்.
நான் அவங்க மொபைல் நம்பரைக் கேட்டதுமில்லை அவங்க தந்ததுமில்லை.”
“ஓ! ஓ! சரி ஏதாவது எமர்ஜென்சியா இருந்திருக்கலாம்.
அதனால அவசரமா கிளம்பியிருக்கலாம் இல்லையா!”
“இருக்கலாம்…”
“என்ன இழுக்கற தி?”
“இல்ல எனக்கென்னவோ அந்த வேலைக்காரன் ஜான் மேல தான் டவுட்டா இருக்கு வி”
“சரி சரி நான்சி ட்ரூ.
என்னை உன் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தன்னு நினைச்சேன்!”
“உஸ் சாரி சாரி வி.
அவங்க ரொம்ப நல்லவங்க.
எனக்கு பல தருணங்கள்ல ரொம்பவே ஹெல்ப் புல்லா இருந்திருக்காங்க.
அன்னைக்கு நான் வரதுக்கு லேட் ஆனப்போக் கூட என்ன ஏதுன்னு வந்து விசாரிச்சுட்டுப் போனாங்க தெரியுமா”
“சரி மா இதை எல்லாம் உன் வீட்டுக்குள்ள போய் பேசலாமே! இப்படியே இவங்க வீட்டு வாசல்லயே நிக்கணுமா?”
“ஆமாம் ஆமாம். ஒன்ஸ் அகெயின் சாரி வி.”
“இன்னைக்கு தி சாரி சொல்லும் நாளா என்ன?”
“வா வா. உள்ள வா வி. வெல்கம் டூ மை ஹோம்.”
“அப்பாடா வீட்டுக்குள்ள அழைச்சுட்டு வந்தியே.
ரொம்ப சந்தோஷம் மா.”
என்று சக்தியின் வீட்டை சுற்றிப் பார்த்த வி அவளிடம்
“ஹேய் வீடு சூப்பரா இருக்கு.
ரொம்ப சுத்தமா வச்சிருக்கயே!
எப்படி வேலைக்கும் போயிட்டு வீட்டையும் இவ்வளவு சுத்தமா வச்சிருக்க நீ?
வீட்டு வேலைக்கு ஆள் வச்சிருக்கயா என்ன?”
“இல்ல இல்லப்பா…
இங்க வேலைக்கு ஆள் வச்சா எவ்வளவு குடுக்கணும்ன்னு உனக்கு தெரியாதா?
அதுக்கெல்லாம் பக்கத்து வீட்டு மிஸ்ஸர்ஸ் டேவிட் போல ரொம்பவே பணக்காரர்களாக இருக்கணும்”
“சுத்தி சுத்தி அவங்க கிட்டயே வரியே தி”
“ஓ! ஓ! நான் பக்கத்து வீட்டைப் பத்தி பேசினதுல…
நாம என் பேரன்ட்ஸ் கூட பேச வேண்டியதை மறந்துட்டேனே!
இதோ என் அப்பா அம்மா மெஸேஜ் அனுப்பிருக்கா.
பேசிடலாமா வி?”
“ஓ எஸ் பேசலாம்.”
“இரு இரு நான் நமக்கு காபி போட்டுட்டு வர்றேன்.
அதுக்கப்பறமா கால் பண்ணலாம்.
ஏன்னா அதுக்கப்புறம் உன் பேரன்ட்ஸ் கிட்ட பேசணும் இல்லையா”
“உனக்கு காபி போட தெரியுமா?”
“ம்…இந்தா காபி.
குடிச்சிட்டு சொல்லு நல்லா இருக்கான்னு!
இரு கொஞ்சம் ஸ்னாக்ஸ் எடுத்துண்டு வந்து கால் கனெக்ட் பண்ணறேன்.”
“ஏய் பாவம் உன் பேரன்ட்ஸ் எவ்வளவு நேரமா வெயிட் பண்ணிட்டிருக்காங்க”
“இதோ இதோ வந்துட்டேன்.
ம்…கால் போறது.
என் காபி எப்படி?”
“ம்…சூப்பர்.”
“இந்தா வி…இந்த முறுக்கை அப்பப்போ கடிச்சுக்கோ”
“ஓகே. ஹேய் கால் கனெக்ட் ஆகிடுச்சு பாரு”
“ஹலோ மா. ஹலோ பா.
எப்படி இருக்கேங்கள்?
இதோ வி. சாரி சாரி விஷால்.
விஷால் இவங்க தான் என் அம்மா மிருதுளா அன்ட் அப்பா நவீன்.
இனி நீங்க பேசிக்கோங்கோ நான் போய் இந்த காபி கப்ஸ்ஸை சிங்க்ல போட்டுட்டு வர்றேன்.”
“ஹாய் விஷால்.”
“ஹாய்!”
தொடர்வாள்…