அத்தியாயம் 18: மூன்றாவது கருத்து

சக்தியும் விஷாலும் வெகுநேரம் கைபேசியில் பேசிவிட்டு உறங்குவதற்கு பன்னிரெண்டு மணி ஆனதால் மறுநாள் காலை விடிந்தும் சக்தி எழாமல் உறங்கிக்கொண்டே இருந்தாள். ப்ளூ வழக்கம் போல சக்தியின் அருகே வந்து அவளை எழுப்பியது. சக்தியும் வழக்கம் போல டூ மினிட்ஸ் டைம் கேட்டாள். சரியாக இரண்டு நிமிடங்களானதும் ப்ளூ அவளை எழுப்பியது அதற்கு சக்தி

“என்ன ப்ளூ!
இப்படி என்ன டிஸ்டர்ப் பண்ணிட்டே இருக்க!
நிம்மதியா தூங்க விட மாட்டேங்கறயே!”

“தீ டைம் என்ன ஆச்சு தெரியுமா?”

“என்ன ஆச்சு?”

“மணி இப்போ ஏழாச்சு”

“என்னது ஏழாச்சா!
அய்யயோ ப்ளூ!
ஏன் முன்னாடியே என்ன எழுப்பல?”

“ம்…ஹும்…சொல்ல மாட்ட!
உன்ன ஆறு மணிலேந்து எழுப்பிவிட்டுட்டே இருக்கேன்.
ஆமாம் அது எப்படி உனக்கு தெரியும்!
நீ தான் டூ மினிட்ஸ் டூ மினிட்ஸ்ன்னு ஒரு மணி நேரமா தூங்கறயே!”

“ம்…சரி சரி நகரு நகரு.
நான் போய் சீக்கிரம் ரெடி ஆகணும்.”

“ம்…ம்…போ போ.
இதோ நான் நகர்ந்துக்கிட்டேன்.
இல்லாட்டி அன்னைக்கு மாதிரியே என்னை தள்ளிவிட்டுட்டு போயிடவ.
நான் போய் என் வேலையைப் பார்க்கட்டும்”

என்று சக்தி குளித்து தயாராகிக்கொண்டிருந்த வேலையில் ப்ளூ வீட்டை சுத்தம் செய்து.
அடுப்படியில் சக்தி காபி போடுவதற்கும், ப்ரெட் டோஸ்ட் பண்ணுவதற்கும் எல்லாத்தையும் மேடையில் எடுத்து வைத்தது. சக்தி வந்தாள் காபி போட்டுக்கொண்டு இரண்டு பிரட் துண்டுகளை அப்படியோ எடுத்து உண்ணலானாள். அதைப் பார்த்த ப்ளூ அவளிடம்

“ஏய் தீ.
ஏன் பிரட்ட டோஸ்ட் பண்ணாம அப்படியே சாப்பிடற?”

“அதுக்கெல்லாம் டைம் இல்ல ப்ளூ”

“சொல்லிருந்தா நானாவது டோஸ்ட் பண்ணி வச்சிருப்பேன் இல்ல”

“இட்ஸ் ஓகே ப்ளூ.
ஆங் ப்ளூ இன்னைக்கு ஈவினிங் நம்ம வீட்டுக்கு ஒரு கெஸ்ட் அழைச்சிட்டு வரப்போறேன்.”

“யாரு தீ அது?”

“நம்ம வி தான் ப்ளூ”

“விஷாலா?
அவர் எதுக்கு இப்போ இங்க வரார்?”

“அது ஒரு பெரிய கதை ப்ளூ.
அது சொல்லறதுக்கெல்லாம் எனக்கு இப்போ டைம் இல்ல.
ஸோ நைட் சொல்லறேன்‌.
இப்போ நான் ஆஃபீஸுக்கு கிளம்பறேன்”

“ஏய் தீ ஏன் எதுக்கு வரார்னு சொல்லிட்டு போ தீ.
நான் ஹால்ல இருக்கலாமா இல்ல சார்ஜிங் ஸ்டேஷன்ல இருக்கணுமா?”

“நீ சார்ஜிங் ஸ்டேஷன்லயே இரு ப்ளூ.
நான் கூப்பிட்டா வந்தா போதும் சரியா”

“அப்போ நான் எப்போ அந்த விஷாலை பார்க்கறது?”

“நான் சொல்லும் போது‌ பார்த்தா போதும்.
சரி சரி எனக்கு டைம் ஆச்சு.
பை பை ப்ளூ”

“ஏய் தீ…தீ…தீ…போயிட்டாளா?
இப்போ எதுக்கு அவன் இங்க வரணும்?
என்னவா இருக்கும்?
பார்ப்போம் வரட்டும்.”

ஆஃபீஸுக்கு சென்றுக்கொண்டிருக்கும் போது காரிலிருந்தே சக்தி தன் பெற்றோரிடம் மாலை விஷாலுடன் பேச முடியுமா இல்லை அவர்களுக்கு வேறு ஏதாவது வேலை இருக்கிறதா என்பதை வீடியோ கால் போட்டு கேட்டு அதற்கு அவர்களின் சம்மதத்தையும் பெற்றுக் கொண்டாள். பின் தன் காரை ஆஃபீஸ் பார்க்கிங்கில் நிப்பாட்டிவிட்டு நேராக மீட்டிங் ரூமிற்குள் சென்றாள்.

பாரிஸிலிருந்து புறப்படுவதற்கு முன் விஷால் தன் பெற்றோர்களிடம் விவரத்தைக் கூறி மாலை சக்தியுடன் பேச விருப்பமா என்று கேட்டு அதற்கான சம்மதத்தையும் பெற்று அங்கிருந்தே சக்தி இருக்கும் ஊரான மெட்ஸ் சென்றிட காரில் புறப்பட்டான்.

சக்திக்கு அன்று என்னவோ மீட்டிங் ரொம்ப நேரம் நடப்பதைப் போலவும், நேரம் போகாததுப் போலவும் இருந்ததில் அடிக்கடி தன் கைகடிகாரத்தைப் பார்த்தபடியே மீட்டிங் அட்டென்ட் செய்துக் கொண்டிருந்தவளை கவனித்த அந்த எம்.என்.எம் கம்பெனி காரர் ஒருவர் சக்தியிடம்,

“என்ன தீ?
உங்களுக்கு வேற ஏதாவது முக்கியமான மீட்டிங் அட்டென்ட் பண்ண வேண்டியிருக்கா?”

“நோ நோ நாட் அட் ஆல்.
இன்னைக்கு ஸ்லாட் உங்களுக்கு மட்டும் தான் கொடுத்திருக்கேன்.
ஏன் அப்படி கேட்கறீங்க?”

“இல்ல நீங்க அடிக்கடி டைம் பார்க்கறதால உங்களுக்கு வேற ஏதாவது மீட்டிங்குக்கு நேரமாச்சோன்னு நான் நினைச்சுக்கிட்டேன்.
ஐ ஆம் சாரி.
அப்படியே இருந்தாலும் நோ பிராப்ளம் நீங்க அதை முடிச்சுட்டே வாங்க.
நாங்க வெயிட் பண்ணறோம்.”

“இல்ல இல்ல சாரி.
அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை.
ப்ளீஸ் கண்டின்யூ.”

என்று கூறி அன்று நடந்த அந்த இரண்டரை மணி நேர மீட்டிங் முடிந்ததும் மீண்டும் கைகடிகாரத்தைப் பார்த்தாள். மணி பத்தரை என்று காட்டியது இதயவடிவிலான கைகடிகாரம். நேரகா பேன்ட்ரீ சென்று ஒரு டீ எடுத்துக் கொண்டு அவள் அறைக்குச் சென்று இரண்டு பிஸ்கட்டுடன் அந்த டீயைக் குடித்து முடித்ததும்‌ அவளின் அசிஸ்டன்ட்டாக பணி புரியும் ருத்ரா அவளிடம் வந்து

“ஹாய் தீ.
அடுத்தது நம்ம ரெகுலர் டீம் மீட் பதினோரு மணிக்கு இருக்கு.
உனக்கு ஞாபகப் படுத்த தான் வந்தேன்.”

“ஓகே ருத்ரா.
மெயினா எதைப்பத்தி இந்த மீட்?”

“அது தான் உனக்கு நான் ஈமெயில் அனுப்பிருக்கேனே தீ.
இட்ஸ் பேஸிக்கலி நம்ம புது ரோபோ ஒண்ணை உருவாக்கிக்கிட்டிருக்கோமே அதைப் பத்தின மீட்டிங் தான் தீ.
டீட்டேயில்ஸ் எல்லாம் உன் ஈமெயில்ல இருக்கு.”

“ம்…ஆங்..
எஸ் எஸ்…இருக்கு இருக்கு.
சாரி நான் தான் கவனிக்கலை.
ஓகே இன்னும் பதினைந்து நிமிஷம் தான் இருக்கு.
நான் வந்துடறேன்.
நீ எல்லாரையும் கொஞ்சம் சீக்கிரம் அங்க அஸம்பிள் பண்ண சொல்லு ருத்ரா.”

“ஷுவர் தீ.
நான் எல்லாரையும் இப்பவே போய் இருக்கச் சொல்லிடறேன்.
தீ கேன் ஐ ஆஸ்க் யூ சம்திங்”

“என்ன ருத்ரா?”

“முந்தாநாள் நீ உன் பிரெண்ட் யாரோ விஷாலைப் பார்க்க போறேன்னு சொல்லிட்டுப் போன!
ஆனா உன் அம்மா எனக்கு ஃபோன் பண்ணி நீ எங்கன்னு கேட்டாங்க.
அப்படி எங்க போயிருந்த தீ?”

“அதெல்லாம் என் பேரன்ட்ஸ் கூட பேசி சார்ட் அவுட் பண்ணியாச்சு ருத்ரா.
மறுபடியும் ஆரம்பத்துலேந்து சொல்ல எனக்கு இப்போ டைம் இல்ல.
ஸோ அப்புறமா ஒரு நாள் உனக்கு நான் விவரமா சொல்லறேன்.
சரியா.
இப்போ நீ போய் எல்லாரையும் நம்ம டீம்மீட்டுக்கு வரச்சொல்லு.
நான் ஒரு பன்னிரண்டரை மணிக்கு வெளில போகணும்.
இன்னைக்கு நான் ஹாஃப் டே லீவ்.
ஸோ எதுவா இருந்தாலும் நாளைக்கு மார்னிங் தான் இனி.
ஓகே.”

“ம்…ஓகே தீ.
நீ சரியா பதினோரு மணிக்கு மீட்டிங் ரூமுக்கு வந்துடு.
நான் எல்லாம் ரெடி பண்ணி வைக்கறேன்”

“ம்…ம்…சீக்கிரம் ருத்ரா.
இட்ஸ் ஆல் ரெடி டென் பிஃப்டி ஆச்சு.
கோ கோ.
நானும் உன் பின்னாடியே வரேன் நீ போயிட்டே இரு.”

என்று கூறிக்கொண்டே எழுந்து மீட்டிங் ரூமை நோக்கிச் சென்றாள் சக்தி. ருத்ரா அவளிடம் கூறியது போலவே அனைவரையும் அங்கு வரவைத்திருந்தாள். அனைவருமாக அவரகளின் புதிய ப்ராஜெக்ட் ஒரு ரோபோவைப் பற்றிய தீவிரமான கலந்துரையாடலில் இறங்கினர். சக்தியின் மனம் முழுவதும் விஷாலை இந்த முறை ஏமாற்றமடையச் செய்திடக் கூடாது என்ற ஒரே எண்ணம் தான் ஓடியது. நேரம் கிடுகிடுவென பறந்ததை கவனித்துக் கொண்டேயிருந்த சக்தி மணி பன்னிரெண்டரை ஆனதும் சட்டென்று தன் இருக்கையிலிருந்து எழுந்தாள்.

“ஓகே! எல்லாருக்கும் நன்றி.
இந்த மீட்டிங் நாளையும் தொடரும்.
இப்போது எல்லாரும் அவங்க அவங்க ஸீட்டுக்கு போகலாம்.”

“மிஸ் தீ.
பிராப்ளம் ஸ் நாட் சிம்பிள்.
நீங்க இதுக்கு ஒரு சல்யூஷன் குடுக்காம மீட்டிங்கை தள்ளி வைக்கறீங்களே!”

“மிஸ்டர் டானி இட்ஸ் ஓகே.
நான் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டேன் இல்லையா.
அப்படின்னா நான் பார்த்துப்பேன்.
நீங்க கவலைப் பட வேண்டாம்.
நாளை இதுக்கு ஒரு சல்யூஷனை நான் யோசிச்சு சொல்லறேன்.
நீங்க எல்லாரும் சேர்ந்து ஏதாவது வழியை யோசிச்சு வையுங்க.
இட்ஸ் டைம் ஃபார் மீ டூ லீவ்.”

என்று பிரச்சினை என்னவென்று சரியாக அறிந்துக் கொள்ளாததைப் போல தனது டீமை அப்படியே அம்போ என்று விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பி ரெஸ்டாரன்ட்டுக்கு தன் காரில் சென்றாள் சக்தி. ஆனால் கார் ஓட்டிச் சென்றுக் கொண்டிருக்கும் போது அவள் மனதிற்குள் அன்று நடந்த கலந்துரையாடலும் அதில் அவர்கள் கூறிய பிரச்சினைகளுமாக இரு அணிகளாக பிரிந்து ஒன்றோடொன்று வாக்குவாதம் செய்துக்கொண்டிருந்தது. அதன் முடிவு தெரிய வேண்டிய நேரம் வந்ததும் சக்தியின் கார் ரெஸ்டாரன்ட் கார் பார்க்கிங்கில் நின்றது. அதிலிருந்து இறங்கி காரை லாக் செய்தபின் ரெஸ்டாரன்ட்டை நோக்கி நடந்துக் கொண்டே தனது ப்ராஜெக்ட் பிரச்சினைக்கான தீர்வை யோசித்துக் கொண்டே ரெஸ்டாரன்ட் கதவைத் திறந்தவளிடம்

“வெல்கம் மிஸ் சக்தி”

என்று புன்னைத்துக் கொண்டே சக்தியை வரவேற்றார் மிஸ்டர் வில்லியம். அவரின் குரல் கேட்டதும் அவளுள் நடந்துக்கொண்டிருந்த வாக்குவாதம் அதற்கான தீர்வைத் தேடும் மனம் என்று எல்லாம் அப்படியே உறைந்துப் போனது. அவளும் முகமலர்ச்சியுடன்

“ஹாய் மிஸ்டர் வில்லியம்.”

என்று கூறினாள். அவளின் கண்கள் விஷாலைத் தேடியது. அதை கவனித்த மிஸ்டர் வில்லியம்

“என்ன மிஸ் சக்தி நீங்க யாரையோ தேடுவது போல தெரியுதே!”

“எஸ் எஸ் மிஸ்டர் வில்லியம்.
அன்னைக்கு வந்தார் இல்லையா விஷால்.
அவரைத் தான் தேடுறேன்.”

“அவர் வந்து பத்து நிமிஷமாச்சு மேடம்.
அதோ அந்த கடைசி டேபிள்ல உட்கார்ந்திருக்கார் பாருங்க.
எக்ஸ்க்யூஸ்மி மேடம்.
அங்க என்னை கூப்பிடறாங்க நான் போயிட்டு வரேன்.”

“ஓ ! ஷுவர் யூ கேரி ஆன்.”

என்று சக்தி கூறியதும் வில்லியம் அங்கிருந்து அவரை அழைத்த டேபிளுக்கு சென்று பேசிக் கொண்டிருந்தார். அன்று மத்திய சாப்பாட்டு நேரமென்பதால் அவர் ரெஸ்டாரன்ட்டில் கூட்டமிருந்தது. சக்தி நேராக விஷால் அமர்ந்திருந்த டேபிளை நோக்கிச் சென்றாள். விஷால் மற்ற பக்கமாக திரும்பி உட்கார்ந்திருந்ததில் சக்தி வருவதை பார்க்கவில்லை. அவன் அவனின் கைபேசியில் ஏதோ டைப் செய்துக் கொண்டிருந்தான். சக்தி அவனருகே சென்றதும்.

“பூம்….ஹாய் வி.
சாரி ஆம் ஐ லேட்”

“நோ நோ.
நீ கரெக்ட்டா ஒன்றரை மணிக்கு தான் வந்திருக்க.
நான் தான் கொஞ்சம் சீக்கிரமா வந்துட்டேன்.
இன்னைக்கு அவ்வளவா டிராஃப்பிக் இருக்கலையா அதுதான் வந்துட்டேன்.
வா வா உட்காரு தீ.
என்ன சாப்பிடற?”

“ம்…இன்னைக்கு உன்னோட விருப்பம் வி.”

“ஓகே தென் நானே ஆர்டர் பண்ணறேன்”

என்று இருவரும் மத்திய உணவை உண்டுக்
கொண்டே

“தீ அந்த ப்ளட் ரிப்போர்ட் எடுத்துட்டு வந்திருக்க இல்ல…”

“ஆங் கொண்டு வந்திருக்கேன் வி
என் பையில இருக்கு…
ஓ ஓ !”

“என்ன ஆச்சு தீ?”

“ஏதோ ஒரு ஞாபகத்துல என் பையை கார்லயே விட்டுட்டு வந்துட்டேன் வி.”

“வண்டியைப் பூட்டிட்ட தானே!”

“ஆங் ஆங்!! பூட்டிட்டேன்”

“அப்புறமென்ன தீ.
கவலைப் படாதே.”

“சரி சாப்பிடு தீ.
நாம இப்போ சாப்டுட்டு இங்கேந்து நேரா போலீஸ் ஸ்டேஷனக்கு போறோம்.
ஓகே வா?”

“எல்லாம் சரி தான்.
ஆனா போலீஸ் எல்லாம் தேனவையா வி?”

“என்ன பேசுற தீ?
உனக்கு ஒண்ணும் ஆகலை சரி.
சப்போஸ் உன் பேரன்ட்ஸ் சொன்னா மாதிரி ஏதாவது ஆகிருந்தா?
ஸோ போலீஸ் கிட்ட ஒரு கம்பிளையின்ட் கொடுத்து வைக்கறது நல்லதுன்னு எனக்கு தோனுது.
மத்தது உன் விருப்பம்.”

“சரி…போகலாம்.”

“ம்.. சரி உனக்கு வேற ஏதாவது இன்னும் வேணுமா?”

“இல்ல வி”

“ஏதாவது டிஸர்ட் வேண்டாமா?”

“இல்லப்பா.
எனக்கு டம்மி ஃபுல்.
நீ வேணும்னா வாங்கி சாப்பிடு வி”

“இல்ல இல்ல.
எனக்கு வேண்டாம் தீ.
உனக்கும் வேண்டாம்னா…
அப்ப வா.
கிளம்பு தீ.
நாம போலீஸ் ஸ்டேஷன் போவோம்”

என்று சாப்பிட்டதற்கான பில்லை செட்டில் செய்து விட்டு இருவரும் கார் பார்க்கிங் வந்ததும் விஷாலும் சக்திக் காரிலேயே வருவதாக கூறினான். அதற்கு சக்தி

“வி நாம போலீஸ் ஸ்டேஷனிலிருந்து அப்படியே என் வீட்டுக்கு போகப்போறோம்.
உன் கார் இங்கேயே அது வரைக்கும் நிக்கலாமா?”

“பரவாயில்ல தீ.
இங்கேயே இருக்கட்டும்.
நாம உங்க வீட்டுக்கு போயிட்டு அதுக்கப்புறமா நான் பாரிஸுக்கு புறப்படும்போது நீ வந்து என்னை இங்கேயே டிராப் பண்ணு.
அதுவுமில்லாம உன் காரை பார்க்கணும்னு போலீஸ் சொல்லுவா.
ஸோ நாம உன் காருலேயே போகலாம்.”

“ஓகே வி”

என்று இருவரும் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் காரை நிப்பாட்டிவிட்டு ஸ்டேஷனுள் சென்றனர். உள்ளே சென்றதும் அங்கிருக்கும் மேலதிகாரியைப் பார்க்க வேண்டுமென்று விஷால் சொன்னதும் அங்கிருந்த இருவர் அவர்கள் செல்ல வேண்டிய வழியைக் காட்டினர். விஷால் முன்னே சென்று அந்த மேலதிகாரியின் அறைக் கதவைத் தட்டினான். அவன் பின்னாலேயே சென்றாள் சக்தி. உள்ளேயிருந்து ஒரு கனத்தக் குரல்

“ம்..கம் இன்.”

என்றது. உடனே இருவரும் உள்ளே நுழைந்தனர். அவர்களைப் பார்த்த அந்த மேலதிகாரி தன் இருக்கையிலிருந்து எழுந்து நேராக அவர்களிடம் வந்து…

“ஹாய் விஷால்.
எங்க இவ்வளவு தூரம்?
நீ பாரிஸ் ல இல்ல இருக்க!”

“ஹல்லோ ஜேம்ஸ்!
நீ எங்க இங்க?”

“நான் தான்ப்பா இங்க எல்லாமே.”

“ஓ ! நீ காலேஜ் ல சொன்னா மாதிரியே போலீஸ் அதிகாரியாகிட்ட.
க்ரேட் டா.
ஓ சாரி க்ரேட் சார்”

“ஏய் பார்த்தயா.
நீ என்னை டான்னு சொன்னாலும் நான் கோவிச்சுக்க மாட்டேன்.
ஓகே…அதெல்லாம் இருக்கட்டும்…
யாரு இந்த பொண்ணு?”

“ஓ! பார்த்தயா உன்ன பார்த்ததுல இன்ட்ரொடியூஸ் பண்ண மறந்துட்டேன்.
ஐ ஆம் சாரி”

“எனக்கெதுக்கு சாரி எல்லாம்.”

“அடேய் இது உனக்கு சொல்லலை என் சக்திக்கு சொன்னது டா”

“ஓ அவங்க பேரு சக்தி யா?”

“ஆமாம் ஜேம்ஸ்.
சக்தி இவன் தான் ஜேம்ஸ்.
என்னோட அன்டர்கிராட் காலேஜ்ல கிரிமினாலஜி படிச்சான்.
அப்பவே போலீஸா தான் ஆவேன்னு சொல்லிட்டிருப்பான்.
அதே மாதிரி போலீஸாகிட்டான்.”

“ஹாய் மிஸ்டர் ஜேம்ஸ்”

” மிஸ்டர் எல்லாம் வேண்டாமே ப்ளீஸ்.
நீங்க என்ன ஜேம்ஸ்ன்னே கூப்பிடலாம் சக்தி.”

“ஓ! ஷுவர் ஜேம்ஸ்.
ஆமாம் வி நீ படிச்சது…ஆனா இவர் கிரிமினாலஜி…
எப்படி உங்களுக்குள்ள…”

“பிரெண்ட்ஷிப் ஆச்சுன்னு தானே கேட்க வர.
அது நாங்க ரெண்டு பேருமே காலேஜ்ல டென்னிஸ் ப்ளேயர்ஸ்.
அப்படி தான் எங்களுக்குள்ள பிரெண்ட்ஷிப் டெவலப் ஆச்சு.
இப்போ புரிஞ்சுதா தீ?”

“ஆங். புரிஞ்சுது வி”

“தீ…வி…ஆஹா ஆஹா என்னப்பா ஒரு எழுத்துல பெயரை சுருக்கி கூப்பிட்டுக்கிறீங்க?
என்ன லவ் பண்ணறேங்களா?”

“அச்சோ ஜேம்ஸ் அந்த கதையை உனக்கு அப்புறமா சொல்லறேன்.
அது ஒரு பெரிய கதை.”

“ம்…சரி சரி.
காபி எடுத்துக்கோங்க.
இப்போ என்ன இங்க வந்திருக்கீங்க?
எனி பிராப்ளம்?”

“ஆமாம் ஜேம்ஸ்.
நாங்க ஒரு‌ கம்பிளேண்ட் குடுக்க தான் வந்திருக்கோம்.”

“அப்படியா என்ன ஆச்சு?
யார் மேல கம்பிளேண்ட்?”

“என்ன ஆச்சுன்னு தீ சொல்லுவா.
ஆனா யாருன்னு எங்களுக்கே தெரியலை”

“என்ன சொல்லுற விஷால்?”

“ஆமாம் ஜேம்ஸ்.
தீ க்கு நடந்தது எதுக்கு? ஏன்? யாரால? எப்படி? அப்படின்னு எந்த கேள்விகளுக்கும் எங்ககிட்ட பதிலில்லடா.”

“ஓகே சக்தி நீங்க சொல்லுங்க.
என்ன நடந்தது?”

சக்தி ஜேம்ஸிடம் நடந்ததை அப்படியே கூறி முடித்ததும் அதை கேட்ட ஜேம்ஸ்

“ம்…இன்ட்ரஸ்டிங்.
அது எப்படி நீங்க பன்னிரண்டு மணி நேரத்துக்கு மேல அதே எடுத்துல இருந்தும் போலீஸ் கண்ணுல படல?
அதுக்கு சான்ஸே இல்லையே.
அப்படின்னா நீங்க…
ஐ மீன் உங்க காரும் நீங்களும் அங்க இருக்கலன்னு தான் அர்த்தம்.”

“இல்லையே நான் கண் முழிச்சுப் பார்த்தப்போ அதே இடத்துல…நான் எப்படி டிரைவர் சீட்டுல உட்கார்ந்திருந்தேனோ அப்படியே தானே இருந்தேன்.”

“ம்…ஹும்…ஏன் உங்களையும் உங்க காரையும் எங்கயாவது எடுத்துட்டுப் போயி இல்ல எங்கயாவது தள்ளிட்டுப் போயிருக்கக் கூடாது!”

“இல்ல அப்படின்னா…”

“இருங்க சக்தி. நான் இன்னும் என்னோட யூகத்தை முழுசா சொல்லலையே!”

“ஓ சாரி. யூ கன்டின்யூ.”

“அப்படி போயிட்டு காலையில உங்களுக்கு மயக்கம் தெளியப் போற நேரத்துக்கு கொஞ்சம் முன்னாடி மறுபடியும் அங்கேயே கொண்டு வந்து வச்சிருக்கக் கூடாது?”

“எப்படிடா ஜேம்ஸ் இப்படி எல்லாம் உன்னால யோசிக்க முடியுது?
அப்படியே செஞ்சிருந்தாலும் எதுக்காக செஞ்சாங்க?
யாரு செஞ்சாங்க?”

“அப்படி தான் நடந்திருக்கணும்னு நான் சொல்ல வரல.
ஆனா அப்படி நடந்திருப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
ஏன்னா எங்க போலீஸ் பெட்ரோலிங் அன்ட் டிராஃபிக் போலீஸ் பெட்ரோலிங் இதுலேந்தெல்லாம் ரோட்டோரமா காருக்குள்ள நீங்க மயங்கிக் கிடந்தது தப்பிருக்க வாய்ப்பே இல்லை.
ஏன்னா அவ்வளவு நேரமெல்லாம் ஒரு கார் அப்படி நிக்குதுன்னா உடனே அது எங்க பார்வைக்கு வந்திருக்கும்.
இதுல வேற ஏதோ இருக்கு.”

“ஜேம்ஸ் நானும் தீ யும் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்.”

“ஓ சுப்பர்.
நீங்க ரெண்டு பேரும் நல்ல ஜோடி தான்.
எப்போ கல்யாணம்?”

“அதெல்லாம் இன்னும் டிசைட் பண்ணல.
அதுனால நீ கொஞ்சம் இந்த மேட்டரை அன்அஃபிஷியலா டீல் பண்ணி என்ன ஏதுன்னு கண்டுபிடிச்சு சொல்லறயா?”

“இங்க வந்ததுக்கப்புறமா தானே நான் உன் பிரெண்டுன்னு உனக்கு தெரிய வந்துது.
சப்போஸ் இந்த இடத்துல என்ன தவிர வேற யாராவது இருந்திருந்தா என்ன பண்ணிருப்ப விஷால்?”

“அவர்கிட்டேயும் இதே போல ரிக்குவஸ்ட் பண்ணிருப்பேன் ஜேம்ஸ்.”

“சரி சரி நான் சும்மா தான கேட்டேன்.
டோன்ட் வரி.
நான் பார்த்துக்கறேன்.
மொதல்ல அந்த ஏரியா சிசிடிவி எல்லாத்தையும் எடுத்துட்டு வரச் சொல்லி பார்க்கறேன்.
அதுக்கு எப்படியும் நாளைக்கு காலையில ஆயிடும்.
அதைப் பார்த்தா விஷயம் தெரிஞ்சுடும்ன்னு நினைக்கறேன்.
பார்ப்போம்.
எதுக்கு நீங்க ரெண்டு பேரும் நாளைக்கு ஒரு பதினொரு மணி போல வாங்க.
என்ன நடந்திருக்கும்னு சொல்லறேன்.
பை தி பை சக்தி உங்க காரோட டீட்டெயில்ஸ் அன்ட் நீங்க எப்போ ஆஃபீஸ்லேந்து கிளம்பினீங்க எங்க வண்டியை நிறுத்தினீங்க அப்படீங்கற எல்லா டீட்டெயில்ஸையும் இந்த பேப்பர்ல எழுதித் தாங்க.”

“ஓகே. ஷுவர் ஜேம்ஸ்.”

என்று ஜேம்ஸ் கேட்ட அனைத்து விவரங்களையும் அவன் கொடுத்த பேப்பரில் எழுதிக்கொடுத்தாள் சக்தி. அதை வாங்கிப் படித்துப் பார்த்த ஜேம்ஸ்

“சூப்பர் சக்தி.
என்னோட இன்வெஸ்டிகேஷன் ஆரம்பமாகிடுச்சு.
நீங்க ரெண்டு பேரும் நிம்மதியா போயிட்டு நாளைக்கு வாங்க.
அதுக்குள்ள யாரு என்னங்கற விவரங்களை கலெக்ட் பண்ணி வச்சிருப்பேன்.”

“ஓகே ஜேம்ஸ்.
அப்போ நாங்க கிளம்பறோம் டா.
நாளைக்கு சந்திப்போம்.
ஏற்கனவே உன்னோட அஃபிஷியல் நேரத்துல வந்து ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டோம்.
ஈவ்னிங் மீட் பண்ணலாமா?”

“ஓ ஷுவர் விஷால்.
ஈவ்னிங் ஒரு ஏழு மணிக்கு?”

“இல்ல இல்ல எங்களுக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு.
ஹவ் அபௌட் ஒன்பது மணி?
அட் லீ கார்னர் காஃபி ஷாப்?”

“ஓகே டன்.
அப்போ ஒன்பது மணிக்கு லீ கார்னர் ல மீட் பண்ணுவோம்.”

“பை ஜேம்ஸ்.”

“பை ஜேம்ஸ். நைஸ் மீட்டிங் யூ”

“பை விஷால். பை சக்தி. நைஸ் மீட்டிங் யூடூ.”

தொடர்வாள்….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s