அத்தியாயம் 17: தன்னிலை விளக்கம்

சக்தி கைபேசியில் விஷாலை அழைத்துப் பேசியபோது அவன் பட்டும் படாதது போல பதிலளிக்க அதற்கான காரணத்தை அவளே யூகித்துக்கொண்டு அவனிடம்,

“ஹேய் ‘வி’ ஐ ஆம் சாரி பா.
நடந்தது என்னன்னு உனக்கு தெரிஞ்சா நீ இப்படி டல்லா பேச மாட்ட தெரியுமா!
உன் பேரன்ட்ஸ் என்ன சொன்னா?
நான் வராததை பத்தி நீ அவா கிட்ட என்ன சொன்ன?
உன்ன அப்படி ஒரு ஸிட்டுவேஷன்ல நிறுத்தினதுக்கு ஐ ஆம் எக்ஸ்ட்ரீமிலி சாரி.
எனக்கு புரியுது உன்னோட சங்கடம்
ஆனா…”

என்று அவள் சொல்ல முயன்றபோது அவளைத் தொடர விடாது சட்டென்று விஷால் அவளிடம்

“போதும் தீ போதும்.
இது ஒண்ணும் எனக்கு புதுசில்லையே!
ஒரு தடவ இல்ல இது ரெண்டாவது தடவ சொல்லாம கொள்ளாம இருக்கறது.
அப்புறம் வந்து சாரி கேட்கறது.
இந்த தடவ என்ன ஸ்டோரி சொல்ல போற?”

“பார்த்தயா!!
அப்போ நான் வேணுனே அப்படி செய்தேன்னு நீ நெனச்சிருக்க இல்ல?
அப்படி நீ நெனச்சாலும் உன்னை நான் தப்பா எடுத்துக்க மாட்டேன் வி.
ஏன் தெரியுமா?
ஏன்னா அந்த ரெண்டு தருணத்திலேயும் தப்பு என் பக்கம் தான்.
அது எனக்கு நல்லாவே தெரியும்.
ஆனா அந்த ரெண்டு சந்தர்ப்பங்கள்லேயும் என்னால எதுவும் பண்ணமுடியாம போச்சு வி.
மொதோ தடவ நீ என்ன ப்ரபோஸ் பண்ணின போது என்னோட மறைவுக்கு பின்னால் என்ன நடந்ததுன்னு உன்கிட்ட சொல்லிட்டேன்.
அதே மாதிரி இந்த தடவ…”

“ம்…சொல்லு அவ கால் பண்ணினா இல்ல இவ கால் பண்ணினா.
அதக் காப்பாத்த போனேன்…
இதக் காப்பாத்த போனேன்னு எதையாது சொல்லப் போற அதுதானே!”

“இல்ல வி நான் சொல்லறதைக் கேட்கற மனநிலையில நீ இல்ல.
ஸோ குட் நைட்.
நீ இப்போ தூங்கப் போ.
நாளைக்கு ஈவ்னிங் பேசலாம்.
பை.”

“ஏய் தீ என்ன விளையாடறயா?
நான் கோபப்படறது தப்பு ஆனா நீ செஞ்சது தப்பில்லையா?”

“அச்சோ! உன் கோபம் நியாயமானது தான்னு தானே நானும் சொல்லறேன்.
அதே நேரம் அந்த ரெண்டு தடவையும் என் மேல எந்த தப்பும் இல்லன்னும் சொல்லறேன் அவ்வளவு தான்.
நீ கேட்க ரெடின்னா நான் எக்ஸ்பிளேயின் பண்ணறேன்”

“ம்…சொல்லு கேட்கறேன்.”

“நான் ஆஃபீஸ் மீட்டிங் முடிஞ்சிட்டு அங்கேந்து கிளம்பினேன்.
உன் வீட்டுக்கு என் காரை டிரைவ் பண்ணிட்டு வந்துட்டிருந்தேன்.
அப்போ பாதி தூரம் கிராஸ் பண்ணினதும் எனக்கு மயக்கம் வரா மாதிரி இருந்தது…”

“அய்யயோ! அப்புறம் என்ன ஆச்சு தீ?”

“இரு இரு வி.
நான் உடனே என் காரை ஹைவே சைட் லேன்ல நிப்பாட்டினேன்.”

“நிப்பாட்டி! டிட் யூ கால் ஃபார் ஹெல்ப்?”

“எங்கேந்து கூப்பிடுவேன்?
நான் அப்போ ஆல்ரெடி பாதி மயக்கத்துல இருந்தேன்.”

“சரி கார விட்டு வெளியில வந்திருக்கலாம் இல்ல!”

“வர தோணலை!
ஆக்சுவலா வர முடியல.”

“அட்லீஸ்ட் எனக்காவது கால் பண்ணிருக்கலாம் இல்ல!
ஒரு ரிங் குடுத்துட்டு விட்டிருந்தா கூட நான் உன்னை ட்ராக் பண்ணி நீ இருந்த இடத்துக்கு வந்திருப்பேனே தீ!”

“எங்க நான் ஆஃபீஸ் மீட்டிங் போது என்னோட மொபைல சுவிட்ச் ஆஃப் பண்ணி
வச்சிருந்தேன்.
அதை சுவிட்ச் ஆன் பண்ண மறந்துட்டேன்‌.
அதுவும் எமர்ஜன்சிக்கு கால் பண்ணலாம்னு என் பேக்லேந்து மொபைல எடுக்கும் போது தான் சுவிட்ச் ஆஃப் பண்ணினதே தெரிய வந்துது.
அந்த அரை மயக்கத்துலேயும் என் மொபைல சுவிட்ச் ஆன் பண்ணினது நல்லா ஞாபகமிருக்கு…
ஆனா எமர்ஜன்சிக்கு கால் பண்ணினேனா இல்லையான்னு எனக்கு சுத்தமா ஞாபகமில்ல.
ஏதோ ஒரு பெரிய கண்டேயினர் ல மோதி நின்னா மாதிரி ஒரு ஃபீலிங் இன்னமும் இருக்கு.
பட் என் வண்டிக்கு ஒரு சேதமுமில்லை.
அதுனால நான் மோதிருக்க மாட்டேன்னு நானா நெனச்சுண்டேன்.
அப்போ அது ஒரு இல்யூஷனோ என்னவோ தெரியலை வி.”

“ஓ இவ்வளவு நடந்திருக்கா?
ஏன் உனக்கு பிசிக்கலி ஏதாவது பிராப்ளம் இருக்கா?
ஏன்னா திடீர்னு மயக்கம் வந்திருக்கேன்னு கேட்கறேன்.
இல்ல இது மாதிரி இதுக்கு முன்னாடி எப்பவாவது மயக்கம் வந்திருக்கா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல வி.
இதுக்கு முன்னாடி எனக்கு மயக்கமெல்லாம் வந்ததில்லை.
இதுதான் ஃபர்ஸ்ட் டைம் இது மாதிரி ஆயிருக்கு.”

“அப்போ பிசிக்கல் பிராப்ளம்ஸ் ஒண்ணுமில்லன்னா…
எதுக்கும் மொதல்ல காலையில எழுந்ததும் ஃபர்ஸ்ட் டாக்டர்ட்ட போ.
ஃபுல் டெஸ்ட் எடு.”

“நான் சாயந்தரமே டாக்டர்ட்ட போயிட்டு வந்துட்டேன் வி.”

“ஓ அப்படியா!
தட்ஸ் குட்.
டாக்டர் என்ன சொன்னா?”

“அதைக் கேட்டதிலிருந்து தான் எனக்குள்ள பல கேள்விகளும் சந்தேங்கங்களும் அப்படியே கிடு கிடுன்னு வளர ஆரம்பிச்சிருக்கு வி.”

“அப்படி என்ன அந்த டாக்டர் சொன்னா?”

“எனக்கு ப்ளட் டெஸ்ட் எடுத்தா.
அதுல என்னோட ப்ளட்ல மயக்கமருந்து இருந்தது தெரிய வந்துது.”

“அச்சச்சோ!
நீ என்ன சொல்லற தீ?”

“பாரு இதைக் கேட்டதும் உனக்கே இவ்வளவு ஷாக் ஆ இருக்கே வி…
அப்போ எனக்கு எப்படி இருக்கும் சொல்லு.”

“இட்ஸ் ஷாக்கிங் டு ஹியர் தீ.
அப்படீன்னா…
உனக்கு விரோதிங்கன்னு யாராவது?
நீ வேலை செய்யற இடத்துல…
இல்லாட்டி உன் கம்பெனி காம்படீட்டர்ஸ் யாராவது?”

“எனக்கு தெரிஞ்சு அப்படி எல்லாம் யாருமே இல்ல வி.
இல்ல அப்படி யாராவது எனக்கே தெரியாமா இருக்காளான்னும் தெரியலை!”

ம்…சரி மயக்கமான!
அப்போ எப்ப எப்படி அங்கேந்து வீட்டுக்குப் போன?
போலீஸ் வந்திருப்பாளே?

“அது தான் இப்போ எனக்கு இன்னொரு பெரிய குழப்பமா இருக்கு வி”

“எதைச் சொல்லற தீ?
எது உனக்கு குழப்பமா இருக்கு?”

“ஆமாம் நான் அந்த ரோட்டோரமா மயக்கமாகி நின்னது மத்தியானம்…
ஆனா எனக்கு நெனவு வந்து நான் கண் முழிச்சுப் பார்த்தது இன்னைக்கு விடியற்காலையில தான்…
அதுவும் அதே இடத்துல எப்படி என் காரை நிப்பாட்டியிருந்தேனோ அதே மாதிரி என் காரும், அதே மாதிரி நானும் என்னோட ஸீட்ல உட்கார்ந்துண்டிருந்தேன்.
ஸோ நியர்லீ மோர் தன் டுவல் அவர்ஸ்!
அது எப்படி போலீஸுக்கு தெரியாம போச்சுன்னு தான் குழம்பிண்டிருக்கேன்.”

“ம்…தட்ஸ் எ வாலிட் பாயிண்ட் தீ.
சரி போலீஸ் கம்பிளைன்ட் குடுத்தியா?”

“என்னன்னு குடுப்பேன் வி?”

“இப்போ என் கிட்ட என்ன சொன்னயோ அதை அப்படியே போலீஸ்கிட்ட சொல்ல வேண்டியது தானே!
அவா அந்த ஏரியா சிசிடிவில பார்த்து ஏதாவது சொல்லுவா இல்ல?
அத வச்சு நாம ஒரு டிசிஷன் எடுக்கலாம் இல்லையா?
இல்ல அட்லீஸ்ட் என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்கவாவது செய்யலாமே!”

“ம்…அதுவும் சரி தான்.
ஆனா நான் போய் சொன்னா நம்புவாளா?
ஏன்னா அதுக்கப்புறம் ப்ராஸஸ் ரொம்ப இருக்குமேன்னு யோசனையா இருக்கு”

“அதப்பத்தி எல்லாம் கவலைப் படாதே தீ.
அதுக்கப்புறம் என்ன ப்ராஸஸாக இருந்தாலும் நான் உன் கூடவே இருப்பேன்.
ஸோ கவலைப் படாம நாளைக்கே போலிஸுல கம்பிளைன்ட் குடு புரிஞ்சுதா?

“சரி உன்கிட்ட அந்த ப்ளட் டெஸ்ட் ரிப்போர்ட் இருக்குமே!”

“ஆமாம் இருக்கு வி”

“அதை வச்சுகூட நீ போலீஸ் கிட்ட கம்பிளைன்ட் பண்ணலாமே தீ!”

“அப்படீங்கற!”

“அட ஆமாம் தீ.
நான் வோணும்னா நாளைக்கு உன் வீட்டுக்கு வரட்டுமா?
நாம சேர்ந்து போய் போலீஸ் கம்பிளைன்ட் குடுக்கலாம்.”

“ம்…நல்ல ஐடியா தான்.
ஆனா…”

“என்ன ஆனா ஆவன்னானுட்டு?”

“இல்ல எதுக்கு உன்ன கஷ்டப்படுத்தணும்னு யோசிக்கறேன்.
வேற ஒண்ணுமில்லை”

“இதுல என்ன கஷ்டமிருக்கு?”

“உனக்கு ஓகேன்னா தாராளமா வா வி.”

“ஷுவர். நிச்சயமா வரேன்.
நாளைக்கு காலையில ஒரு பதினோரு மணிக்கு உன் வீட்டு வாசல்ல இருப்பேன்.”

“ஓ…ஓ…இல்ல வி.
எனக்கு நாளைக்கு ஆஃபீஸ்ல ஒரு இம்பார்ட்டன்ட் மீட்டிங் இருக்கு.
அது இன்னைக்கு இருந்திருக்கணும்…
இன்னைக்கு நான் ஆஃபீஸ் போகாததால அதை நாளைக்கு ஷிஃப்ட் பண்ணிருக்கா.
ஸோ அதை முடிச்சுட்டு நான் வீட்டுக்கு வரதுக்கே பதினொன்னு ஆர் பன்னிரண்டு மணி ஆகிடும்.”

“சரி அப்போ லெட் அஸ் மீட் இன் தி ஆஃப்டர்னூன்.”

“ம்…ஓகே.
அப்படீன்னா நாம ஃபர்ஸ்ட் மீட் பண்ணினோமே அதே ரெஸ்டாரன்ட்டுக்கு வரயா வி?
லெட் அஸ் மீட் தேர் ஃபார் லஞ்ச் அட் 1:30!”

“அப்போ உன் வீட்டுக்கு வரக்கூடாதுங்கற!”

“ச்சே ச்சே! அப்படி இல்ல வி.
எப்படியும் லஞ்சுக்கு வெளில தான் போகணும் அதுனால சொன்னேன்.
இப்போ என்ன லஞ்ச் சாப்டுட்டு நாம போலீஸ் ஸ்டேஷன் போய் கம்பிளைன்ட் குடுத்துட்டு வீட்டுக்கு போகலாமே.
நான் என் ஆஃபீஸ் ல ஹாஃப் டே லீவ் போட்டுடறேன்.”

“ம்…மேடம் நான் ஒரு நாள் லீவ் போட்டுட்டு வரேன்!”

“அதுக்கு தான் நீ வரணுமான்னு கேட்டேன்.”

“சும்மா சொன்னேன் தீ.”

“சரி என் உன் பேரன்ட்ஸ் என்ன சொன்னான்னு நீ சொல்லவே இல்லையே வி!
ப்ளீஸ்… நான் சாரி சொன்னேன்னு அவாகிட்ட சொல்லிடு.”

“என்னத்த சொல்லுவேன்!
நீ வர்க்ல பிசியா இருக்க.
அதுனால உன்னால வரமுடியலைன்னு நீ சொன்னதாக அவாகிட்ட சொல்லி…
நீ சாரி கேட்டதாகவும் சொன்னேன்”

“ஸோ சுவீட் ஆஃப் யூ வி.
அதுக்கு அவா என்ன சொன்னா?”

“அவாளா…!
அதுக்கு அவா….”

“ஏன் இழுக்கற வி?
என்ன என்னைத் திட்டினாளா!
திட்டியிருந்தாலும் தப்பில்ல தான்.”

“உன்ன ஒண்ணும் சொல்லல தீ.”

“அப்புறம்?”

“அவா…
கல்யாணத்துக்காவது வந்திடுவாளா இல்ல அன்னைக்கும் உன்ன மேடையில உட்கார வச்சுட்டு வராம இருந்திடுவாளான்னு சொன்னா.
நீ கேட்டயேன்னு சொன்னேன்.
எதுவும் தப்பா எடுத்துக்காத தீ.”

“அவாள நான் தப்பா எடுத்துக்க மாட்டேன் வி.
அதே நேரம் என் மேலயும் எந்தவித தப்பும் இல்லங்கறத நீ தான் அவா கிட்ட எடுத்து சொல்லணும்.
செய்வியா வி?”

“ம்…முதல்ல நானும் உன் மேல சரி கோபத்துல இருந்தேன்.
இப்போ விவரம் தெரிஞ்சதும் காம் ஆகிட்டேன்.
அவாளும் இதெல்லாம் தெரிஞ்சா உன்னைப் புரிஞ்சுப்பா”

“அப்படீன்னா நான் உன்கிட்ட சொன்னது அத்தனையும் அவாகிட்ட சொல்லப் போறயா வி”

“ஆமாம் ஏன் அதுக்கு இப்படி ரியாக்ட் பண்ணற தீ?”

“இல்ல நான் என் பேரன்ட்ஸ் கிட்ட இதைப் பத்தி எதுவுமே சொல்லலை.
அதுதான் யோசிக்கறேன்”

“அப்படீன்னா உன் அப்பா அம்மாவுக்கு இங்க உனக்கு நடந்தது எதுவுமே தெரியாதா தீ?”

“இல்ல இல்ல வி…
நான் மயக்கமானது வீட்டுக்கு லேட்டா வந்தது எல்லாம் தெரியும்.
ஆனா எனக்கு யாரோ மயக்கமருந்து குடுத்திருக்கானோ…
அதுனால குழப்பத்துல இருக்கேன்னோ சொல்லலை.
அதுனால நீ இந்த டாப்பிக்கையே அவாயிட் பண்ணிட்டு பேசாம என் கார் ப்ரேக் டவுன் ஆயிடுத்துன்னு சொல்லிடேன்.
ஏன்னா அவாளும் இதை எல்லாம் கேட்டுட்டு அப்புறம் பயந்துக்கப் போறா…
அதுதான் சொன்னேன்”

“ம்…அதுவும் சரிதான்.
ஓகே நான் ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கறேன்.
யூ டோன்ட் வரி தீ”

“என்னத்த சொல்லி சமாளிக்கப் போறேன்னு எனக்கும் சொல்லு வி.
அப்பதானே அவா இதப்பத்தி எனக்கிட்ட எப்பவாவது கேட்டுக்கும் போது நானும் அதையே சொல்லமுடியும்.”

“ம்..ம்..நிச்சயமா சொல்லறேன் தீ.”

“ஒண்ணு பண்ணினா என்ன?”

“என்ன தீ?”

“பேசாம நாளைக்கு ஈவ்னிங் என் வீட்டுலேந்து அவாளைக் கால் பண்ணி பேசிட்டா என்ன?
அப்படியே என் பேரன்ட்ஸோடயையும் பேசிடலாம்.
என்ன சொல்லற வி?”

“ம்…நல்ல ஐடியாவா தான் இருக்கு.
ஆனா அவா ரெண்டு பேரும் ஃப்ரீயா இருக்கணுமே?”

“நாளைக்கு காலையில ஐ வில் கன்பார்ம் வித் மை பேரன்ட்ஸ்.
நீ பாரிஸிலிருந்து கிளம்பறதுக்கு முன்னாடியே அவாளைக் கால் செஞ்சு கன்பார்ம் பண்ணிக்கோ.
சப்போஸ் ரெண்டு பேரு வீட்டுலயும் ஓகே சொல்லிட்டா நாளைக்கே பேசி முடிச்சிடலாம்.
என்ன சொல்லுற வி”

“ம்…ஓகே டன்.
நான் அவாகிட்ட கேட்டுட்டு அங்க வந்து என்ன ஏதுங்கறதை நாம மீட் பண்ணும் போது சொல்லறேன்.
நீயும் அப்போ சொல்லு.
சரி சரி மணி பன்னிரண்டு ஆயிடுத்து.
இப்போ நீ போய் நிம்மதியா படுத்துத் தூங்கு.
நாளைக்கு மத்தியானம் ரெஸ்டாரன்ட்ல சந்திப்போம்.”

“ஓகே வி.
பை பை.
குட் நைட்
ஹாவ் எ நைஸ் ஸ்லீப் வி”

“ஓகே பை தீ.
குட் நைட்.”

தொடர்வாள்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s