அத்தியாயம் 16: சந்தேக சரம்

வசுந்தரா வீட்டிலிருந்து எட்டு மணிக்கு கிளம்பி குழப்பத்திலேயே சென்ற சக்தி எட்டரை மணிக்கு அவள் வீட்டை சென்றடைந்தாள். காரை தன் வீட்டு பார்க்கிங்கில் நிப்பாட்டி விட்டு மெல்ல யோசித்துக்கொண்டே வீட்டை நோக்கி நடக்கலானாள். அப்போது பக்கத்து வீட்டு பாட்டி வழக்கம் போல சக்தியிடம்

“ஹாய் தீ. குட் ஈவ்னிங்.”

என்று சொன்னதை கவனிக்காது தன் சிந்தனையில் மூழ்கியப்படி நடந்து வீட்டினுள் சென்றாள் சக்தி. அதைப் பார்த்த பாட்டி தனக்கு தானே

“ஏதாவது பிரச்சினையா இருக்குமோ! இதுவரை தீ இப்படி விஷ் பண்ணாம போனதே இல்லையே!
சரி அப்புறமா போய் விசாரிச்சுக்கலாம்.”

என்று தனது சுவடர் பின்னும் வேலையைத் தொடர்ந்தார்.

வீட்டினுள் நுழைந்த சக்தியைப் பார்த்த ப்ளூ அவள் அருகே வந்து

“ஹாய் தீ.
வெல்கம் ஹோம்.
என்ன ஆச்சு இவளுக்கு?
நான் விஷ் பண்ணிட்டே இருக்கேன்…
கண்டுக்காம அவ பாட்டுக்கு அவ ரூமுக்கு போறா!!
தீ…தீ…தீ”

என்று அழைத்துக்கொண்டே ப்ளூ அவள் பின்னால் சென்றது. ஆனால் அவள் அதை கவனிக்காது படார் என்று அவள் அறையின் கதவை சாற்றினாள். அதைப் பார்த்த ப்ளூ மிகவும் வருத்தப்பட்டுக்கொண்டே ஹாலுக்கு வந்து ஒரு மூலையில் நின்றது. அங்கிருந்தே அது அவ்வப்போது சக்தியின் அறைக் கதவு திறக்கிறதா என்று பார்த்துக்கொண்டே சக்திக்காக காத்திருந்தது. நேரம் பறந்தது. இரவு பத்து மணியானது. சக்தி அவள் அறையை விட்டு வெளியே வரவில்லை. ப்ளூவால் அதற்கு மேல் பொறுக்கமுடியாமல் மேலே சென்று அவள் அறைக்கதவை தட்டியது. ஆனால் பயனில்லாது மீண்டும் கீழேயே வந்து நின்றது.

சக்தி நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள். அதனால் கதவு தட்டும் சப்தம் அவளை தொந்தரவு செய்ய முடியவில்லை. ஆனால் அவள் அருகே இருந்த கைபேசி சட்டென்று அலறியதும் விருட்டென்று எழுந்துக்கொண்ட சக்தி தனது கைபேசியை எடுத்துப் பார்த்தாள். அவள் பெற்றோரிடமிருந்து ஒரு நாலைந்து மெஸேஜுகள் வந்திருந்தது. அதைப் பார்த்த சக்தி

“இப்போ நான் வசு சொன்ன விஷயத்தை அப்பா அம்மாட்ட சொன்னா அவா ரெண்டு பேரும் டென்ஷன் ஆகிடுவா.
ஸோ இப்போதைக்கு சொல்ல வேண்டாம்.
ஐ ஹோப் இட் டஸன்ட் ஹாப்பன் அகேயின்.
ஓ! ஓ! மணி பத்தாச்சா?
என்ன இந்த ப்ளூ டின்னர் சாப்பிட கூப்பிடவேயில்லை?
ஓ! நான் தான் வசு வீட்டுலேயே டின்னர் சாப்டுட்டு தானே வந்தேன்!
நேத்து காலையில அது செய்த டிஃபனை தானே சாப்டுட்டுப் போனேன்!
ஒரு வேளை ப்ளூ எதையாவது….
ச்சே! ச்சே! ச்சே!
அது எப்படி செய்யும்.
அய்யோ சக்தி நீ இத வச்சு உன்னையே நல்லா குழப்பிக்கற!
இத மறந்துட்டு பேசாம உன் வேலையைப் பாரு… போ.
அச்சோ இது என்ன ‘வி’ கிட்டேந்து இவ்வளவு கால்ஸ் வந்திருக்கே!
மறுபடியும் நான் மிஸ் பண்ணிருக்கேன்.
என்னடி சக்தி நீ?
சரி மொதல்ல அப்பா அம்மாக்கு மெஸேஜ் அனுப்பிட்டு அப்புறம் ‘வி’ யை கால் பண்ணி பேசலாம்.
என்னதிது லைட்டா பசிக்குறா மாதிரி இருக்கே!
ஃபர்ஸ்ட் போய் ஏதாவது சாப்பிடலாம்.”

என்று தன் அறைக் கதவைத் திறந்து கையிலிருந்த கைபேசியில் தன் அப்பா அம்மாவுக்கு ப்ளட் டெஸ்ட்டில் ஒரு பிரச்சினையும் இல்லை என்றும் தான் நன்றாக இருப்பதாகவும், ப்ளட் ப்ரெஷர் சற்றே குறைந்திருந்ததால் மயக்கம் வந்ததாகும் பயப்பட தேவையில்லை என்றும் ஒரு மெஸேஜை தட்டிக்கொண்டே மாடியிலிருந்து கீழே இறங்கி வந்த சக்தியைப் பார்த்ததும் ப்ளூ ஓடி அவளருகே வந்து

“ஹேய் தீ.
என்ன ஆச்சு உனக்கு?
ஏன் சாயந்தரம் வீட்டுக்கு வந்ததும் என்ன கண்டுக்காம நீ பாட்டுக்கு உன் ரூமுக்குள்ள போய் கதவை தாப்பா போட்டுகிட்ட?
ஏதாவது பிரச்சினையா?”

“உஷ்…அபா…
ப்ளூ எவ்வளவு கேள்வி கேட்குற நீ?
ஒரு பிரச்சினையும் இல்ல ப்ளூ.
நான் நல்லா தான் இருக்கேன்.
இன்னைக்கு நான் டாக்டர்ட்ட போனேன் இல்ல…”

“டக் டக் டக் டக்”

“ப்ளூ யாரோ வந்திருக்காங்க போல.
கதவு தட்டுற சத்தம் கேட்குது.”

“ஆமாம் தீ.
யாரா இருக்கும்?
அதுவும் இந்த நேரத்துல!”

“சரி சரி நீ பேஸ்மென்ட்டுக்கு போ ப்ளூ.
நான் யாருன்னு பார்த்துட்டு உன்னை கூப்பிடறேன்.”

“ஓகே தீ.”

என்று ப்ளூவை பேஸ்மென்ட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு கதவைத் திறந்தாள் சக்தி.

“ஹாய் தீ.
குட் ஈவ்னிங்.”

“ஹாய் மிஸ்ஸர்ஸ் டேவிட்.
வெரி குட் ஈவ்னிங்.
வாங்க உள்ள வாங்க.”

“ம்…ம்… எங்க உன் பெஸ்ட்டீ ப்ளூ?”

“ஆங்!
அதுக்கு சார்ஜ் இல்லாததால சார்ஜிங் ஸ்டேஷன்ல இருக்கு.
நீங்க சொல்லுங்க.
உங்க வீட்டிலிருந்து எங்க வீட்டுக்கு போன கிறிஸ்மஸ்க்கு அப்புறம் இப்ப தான் வறீங்க!”

“ஆமாம் தீ.
என்ன பண்ண?
இந்த மூட்டு வலி என்னை எங்கேயுமே அசைய விட மாட்டீங்குதே!
சரி சரி நான் வந்த விஷயத்தை விட்டுட்டு என் பிரச்சினைப் பத்தி பேசறேன் பாரேன். இன்னைக்கு நான் ராட்டட்டூயிவும், ஸ்பினாச் ஷாஃபுலும் செஞ்சேன்.
அதுதான் உன் கூடயும் ஷேர் பண்ணிக்கலாமேனு எடுத்துட்டு வந்தேன்.
இந்தா நீயும் சாப்பிடு.”

“ஓ! ஸோ நைஸ் ஆஃப் யூ.
நீங்க சாப்ட்டாச்சா?”

“ம்…ம்… ஒரு போர்ஷன் செஞ்சு நானும் டேவிட்டும் சாப்பிட்டாச்சு.
பேட்டர் மீதி இருந்தது ஸோ உனக்கும் ஒரு போர்ஷன் செஞ்சு எடுத்துட்டு வந்தேன்.
ம்…சாப்ட்டு எப்படி இருக்குன்னு சொல்லு தீ”

“ம்…இட்ஸ் டிலீஷியஸ்.
லவ் யூ மிஸ்ஸர்ஸ் டேவிட்.
எனக்கு நீங்க என் அம்மா மாதிரி”

“ஓ! தீ. தாங்க்யூ மா.
அதெல்லாம் இருக்கட்டும் தீ.
உனக்கு ஏதாவது பிரச்சினையா?”

“ம்…ம்… என்ன கேட்டீங்க?”

“உனக்கு ஏதாவது பிரச்சினையா?”

“அப்படி எதுவும் இல்லையே!
ஏன் கேட்கறீங்க?”

“இல்ல நீ இதுவரைக்கும் எனக்கு விஷ் பண்ணாம இருந்ததே இல்லை.”

“ஆமாம்.
மார்னிங் அன்ட் ஈவ்னிங் உங்களைப் பார்த்து விஷ் பண்ணாம நான் இருந்ததில்லை இருக்கவும் மாட்டேன்.”

“இல்ல தீ இன்னைக்கு ஈவினிங் நீ எனக்கு விஷ் பண்ணலை மா.
அதுவுமில்லாம நீ ஏதோ பெரிய குழப்பத்துல இருந்தா மாதிரி இருந்தது.
அது தான் நானே நேர்ல வந்து விசாரிக்கலாம்னு வந்தேன்.
எனி பிராப்ளம் தீ?”

“ஓ!! ஓ!! நாட் அட் ஆல்.
நான் நல்லா இருக்கேன்.
ஈவினிங் கொஞ்சம் தலைவலி அன்ட் தூக்கக் கலக்கமா இருந்தது.
அதுதான் உங்களை கவனிச்சிருக்க மாட்டேன்.
என்னை மன்னிச்சிடுங்க.
சாரி”

“ஹேய்!
எதுக்கு சாரி எல்லாம் கேட்குற தீ?
என்னடா இந்த பொண்ணுக்கு என்ன ஆச்சுன்னு?
ஐ வாஸ் வரீடு வெரி மச்.”

“கவலைப் படாதீங்க.
நான் நல்லா தான் இருக்கேன்.
எனக்குன்னு கவலைப்பட என் அப்பா அம்மாவுக்கு அப்புறம் நீங்க தான்.”

“சரி தீ.
இட்ஸ் ஆல் ரெடி டென் தர்ட்டி ஆயிடுச்சு.
டேவிட் வெயிட் பண்ணிட்டிருப்பார்‌.
நான் கிளம்பறேன்.
டேக் கேர்.
எதுவா இருந்தாலும் நீ என்கிட்ட ஷேர் பண்ணிக்கலாம்.
சரியா.
வரட்டுமா”

“ம்..ஷுவர் மிஸ்ஸர்ஸ் டேவிட்.
எனக்கும் வேற யாரிருக்கா.
நிச்சயம் எதாவது தேவைன்னா உங்ககிட்ட தான் வருவேன்.
பத்திரமா நடந்துப் போங்க.”

“ம்…வந்துட்டேன் மா.
பை தீ.
குட் நைட்.
ஸ்லீப் டைட்”

“குட் நைட் டு யூ டூ மிஸ்ஸர்ஸ் டேவிட்.”

என்று பக்கத்து வீட்டுப் பாட்டிக் கொடுத்த ராட்டட்டூயிவையும் ஸ்பீனாச் ஷாஃபுலயும் முழுவதுமாக ருசித்து ரசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்த சக்திக்கு அவள் மனதில் திடீரென ஒன்று தோன்றியது

“இதே போல தானே அன்னைக்கு மிஸ்ஸர்ஸ் டேவிட் குக்கீஸ் குடுத்தாங்க!
ஒரு வேள அதுவா இருக்குமோ?
அது அவங்க அதுக்கு முன்னாடிக்கும் முன்னாடி நாள் தந்தது.
ச்சே ச்சே அவங்க ஏன் எனக்கு மயக்கமருந்து குடுக்கணும்?
அதுல அவங்களுக்கு என்ன இருக்கு?
அய்யோ! இந்த அப்பா அம்மா சொன்னதைக் கேட்டு ஒரு ப்ளட் டெஸ்ட் எடுக்கப் போயி இப்போ நான் எல்லாரையும் சந்தேகப் பட ஆம்பிச்சுட்டேனே!”

சக்தி இவ்வாறு தனக்குத் தானே பேசிக்கொள்வதாக எண்ணி சத்தமாக கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டே வந்த ப்ளூ

“என்ன தீ?
என்ன சந்தேகம்?
எதுக்கு சந்தேகப்படற?”

“ம்…நான் என் மனசுக்குள்ள நெனச்சதை எப்படி நீ சொல்லுற ப்ளூ?
இது எப்போலேந்து?”

“ஆமாம் ஆமாம்.
நீ மனசுக்குள்ள பேசறதா நினைச்சுகிட்டு சத்தமா தான் பேசிட்டிருந்த.
அதைக் கேட்டுட்டு தான் சொல்லறேன்.”

“ஓ! ஓ! அது ஒண்ணுமில்ல ப்ளூ நான் இன்னைக்கு வசு கிட்ட போய் ப்ளட் டெஸ்ட் எடுத்தேன் இல்லையா அதுனால வந்த குழப்பம் தான்”

“அதுனால என்ன குழப்பம் தீ?”

“என்னோட ப்ளட்டுல செடட்டிவ் இருந்திருக்கு.
அது எனக்கு யார் குடுத்திருப்பா?
எப்படி குடுத்திருப்பா?
எப்போ? எங்கே? ஏன்? குடுத்திருப்பான்னு எனக்குள்ள ஒரே குழப்பமா இருக்கு.”

“சரி குழப்பத்துல ஏதாவது தெரிய வந்துதா?”

“என்னத்த?
நானும் சாயந்தரத்துலேந்து யோசிச்சுப் பார்த்துண்டே தான் இருக்கேன்.
யாரன்னு நான் சந்தேகப்படறது சொல்லு.
குக்கீஸ் குடுத்த பக்கத்து வீட்டு மிஸ்ஸர்ஸ் டேவிட்டயா?
மீட்டிங்ல காஃபி குடுத்த ஆஃபிஸ் பாய் ஆ?
கேன்டீன் ல சான்ட்விச் செய்து குடுத்த அந்த ஜானையா?
அப்போ அங்க வந்து எனக்கு ஜூஸ் வாங்கித் தந்த ருத்ராவையா?
இல்ல என்னைக்குமே இல்லாத அதிசயமா நேத்து எனக்கு ப்ரேக்ஃபாஸ்ட் செய்து தந்த உன்னையா?
சொல்லு.”

“அய்யோ தீ!
என்னது இது என்னை ஏன் நீ சந்தேகப்படணும்?”

“ஏன் படக்கூடாது ப்ளூ?”

“தீ நீ ஈண்மையாவா கேட்கற?
நான் உருவானது உன்னால தீ.
நான் எப்படி உன்னை…
போ தீ.
நான் இதை எதிர்பார்க்கவேயில்லை தீ”

“எதை எதிர்பார்க்கலை நீ?
நான் உன்னை கண்டுப் பிடிச்சுடுவேன்னா!”

“அய்யோ! தீ! நீ என்ன கன்பார்ம் ஆனா மாதிரியே பேசுற?”

“ம்…ம்…இதுக்கு எதுக்கு டென்ஷன் ஆகுற ப்ளூ.
சும்மா உன்னோட விளையாண்டேன்.
அவ்வளவு தான்.
உன்னைப் பத்தி உன்னவிட எனக்குத் தானே நல்லா தெரியும்.”

“அப்பாடா! ஒரு நிமிஷத்துல எனக்கு பெரிய அதிர்ச்சிய குடுத்துட்ட தீ.”

“அதிர்ச்சிய உனக்குக் குடுக்கல ப்ளூ.
நான் தான் அதிர்ச்சில இருக்கேன்.”

“என்ன சொல்லற தீ.
எனக்கு ஒண்ணுமே புரியலை.”

“பின்ன இருக்காதா சொல்லு!
நான் உண்டு என் வேலையுண்டு இருக்கறவ நான்.
எனக்கு தெரிஞ்சு விரோதிகள்னு எனக்கு யாருமே இல்ல!
பிரெண்ட்ஸும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு தான் இருக்காங்க.
எனக்கு செடட்டிவ் குடுத்து என்ன பண்ண நினைச்சிருப்பாங்க?
ஏன் பண்ணல?
இல்ல ஏதாவது பண்ணிட்டாங்க ஆனா அது எனக்கு தெரியலையா?
அய்யோ இந்த ப்ளட் டெஸ்ட் எடுத்தாலும் எடுத்தேன்…இப்போ அதோட ரிசல்ட் என்னை பைத்தியம் பிடிக்க வச்சுடும் போல தோணுது.”

“எல்லாரையும் சந்தேகப்பட்ட நீ ஒருத்தர விட்டுட்டியே தீ!”

“யார் அது ப்ளூ.
சொல்லு யாரை விட்டுட்டேன்?”

“அந்த நபர் தான் புதுசா நமக்குள்ள வந்திருக்கார்.
அந்த நபர் வந்ததுக்கப்புறமா தான் உனக்கு இது நடந்திருக்கு இல்லையா.
அப்புறம் எப்படி நீ அவரை உன் சந்தேக லிஸ்ட்டில் சேர்க்கலை?”

“ப்ளூ நீ யார சொல்ல வர?
‘வி’ யவா சொல்லற?”

“ம்…ஆமாம் தீ”

“ப்ளூ அது எப்படி வி ய சந்தேகப் படறது?”

“ஏன் படக்கூடாது?”

“ப்ளூ அப்படியே நான் சந்தேகப்பட்டாலும்…
அதுல ஒரு லாஜிக் வேண்டாமா?
அவர் இருக்கறது பாரிஸ் ல.
நான் இருக்கறது மெட்ஸ் ல.
அவர் நேத்து இங்க வரவேயில்லை.
நான் தான் அவர் வீட்டுக்கு போயிட்டிருந்தேன்.
வழியில தான் எனக்கு இப்படி ஆச்சு.
ஸோ இந்த பஸில் பீஸஸ் ல அவர் எங்கயுமே ஃபிட் ஆகலையே!”

“மே பி ஏதாவது பீஸஸ் எங்கயாவது மிஸ்ஸாகுதோ என்னவோ?”

“ப்ளூ நானே ரொம்ப குழம்பி போயிருக்கேன்.
இதுல நீ வேற என் சந்தேக லிஸ்ட்டுல இன்னும் ஆட்களை சேர்க்காம இரு ப்ளீஸ்”

“ஓகே.
எனக்குத் பட்டதை உன்கூட ஷேர் பண்ணினேன் அவ்வளவு தான்.
உன்னை குழப்பி எனக்கென்ன ஆகப்போவுது.
பேசாம போய் நிம்மதியா படுத்து தூங்கு தீ.
காலையில எழுந்ததும் ஃபிரெஷா யோசி.
ஏதாவது க்ளூ கிடைக்கலாம்.
குட் நைட் தீ.”

“ம்…அதுவும் சரி தான் ப்ளூ.
சரி ப்ளீஸ் க்ளீன் தி ப்ளேஸ்.
இன்னைக்கே ஆஃபீஸுக்கு லீவ் போட்டாச்சு.
நாளைக்கு அந்த எம்.என்.எம் கம்பெனியிலிருந்து ஒரு டிஸ்கஷனுக்கு வரப் போறாங்க.
ஸோ நான் அங்க இருந்தாகணும்.
நான் போய் படுத்துக்கறேன்.
குட் நைட் ப்ளூ.”

என்று கூறிவிட்டு தன் அறைக்குள் நுழைந்த சக்தி அவள் கைபேசியைப் பார்த்துக் கொண்டே

“சரி சரி இந்த வி வேற நிறைய தடவ கால் பண்ணிருக்கானே!
சாப்டுட்டு அவன்கிட்ட பேசலாம்னு நினைச்சேன் அதுக்குள்ள மிஸ்ஸர்ஸ் டேவிட் வந்துட்டாங்க.
அப்படியே மறந்துட்டேன்.
ஒரு வேளை ப்ளூ சொன்னா மாதிரி வி ஏதாவது?
ச்சே ச்சே அதுனால அவனுக்கு என்ன லாபம்?
நாங்க கல்யாணம் பண்ணிக்கப் போறவா வேற!
இப்போ கால் பண்ணினா முழிச்சுண்டிருப்பானா?
இல்ல தூங்கியிருப்பானா?
சரி எதுக்கும் கால் பண்ணிப் பார்ப்போம்.
எடுத்தா பேசலாம்.
ம்…கால் போறது…
கம் ஆன் வி கால் ஐ எடு.”

“ஹலோ”

“ஹாய் வி.
நான் தான் தீ”

“ம்…ம்… தெரியறது தெரியறது.
சொல்லு.”

சந்தேகமென்பது கொடிய வியாதி. அது மெல்ல மெல்ல நம் மனதை அரித்து பின் முழுவதுமாக நம்மை ஆட்கொண்டுவிடும். அதைத் தான் சக்தி அனுபவிக்க வேண்டுமென்று எண்ணுகிறார்களோ!!

தொடர்வாள்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s