அத்தியாயம் 15: இரத்தப் பரிசோதனை

ஹாஸ்பிடல் சென்ற சக்தி தனக்கு மிகவும் நெருக்கமான தோழியான டாக்டர் வசுந்தராவின் நர்ஸிடம் ஒரு அட்டென்டன்ஸ் கொடுத்துவிட்டு அவளின் கேபின் கதவைத் தட்டினாள். உடனே உள்ளிருந்து

“எஸ் கம் இன்”

“ஹாய் வசு. எப்படி இருக்க?”

“ஹாய்! ஹாய்! ஹாய்! தீ.
நான் ரொம்ப நல்லா இருக்கேன்.
தாங்க்யூ.
நீ எப்படி இருக்க?”

“நான் நல்லா இருக்கேன் வசு.”

“அம்மா அப்பா எல்லோரும் நலமா இருக்குறாங்க தானே?
நாம மீட் பண்ணி ரொம்ப நாளாச்சு இல்ல”

“அப்பா அன்ட் அம்மா ஆல் டூயிங் க்ரேட். உன்ன விசாரிச்சதா சொல்ல சொன்னா.
ஆமாம் ஆமாம் நாம மீட் பண்ணி எப்படியும் ஒரு நாலு மாசம் இருக்கும்னு நினைக்கறேன்.”

“ம்…இருக்கும்.
நீ லாவன்யா பொறந்த நாளுக்கு வீட்டுக்கு வந்தது இல்ல…
கரெக்ட் நாலு மாசமாச்சு நாம பார்த்து.
சொல்லு தீ”

“உங்க ஃபேமிலில எல்லாரும் எப்படி இருக்காங்க? குட்டி புயல் லாவன்யா எப்படி இருக்கா? என்ன பண்ணறா?”

“எல்லாவரும் நலமாக இருக்கிறார்கள். அவளுக்கென்ன தாத்தா பாட்டி கூட ரொம்பவே சந்தோஷமா நேரத்தை கழிச்சுக்கிட்டிருக்கா.
நீ அவளோட பொறந்த நாளுக்கு செய்து கொடுத்த அந்த ரோபோ டாலோட எப்பப்பாரு எதையாவது பேசிகிட்டு அதை எல்லா இடத்துக்கும் கூட்டிட்டுன்னு அந்த பொம்மைய விட்டு நகர்றதில்லை.
அவளுக்கு அது ரொம்ப பிடிச்சுப்போச்சு.
அதுக்கு அவ லக்கின்னு பேரு கூட வச்சிருக்கா.”

“ஸோ ஸ்வீட்.
அவ உன்னோட அழகான ஏன்ஜல் வசு.”

“ம்…ஆமாம் சக்தி.
என்னோட வலிகளை மறக்கச் செய்ய அந்த ஆண்டவன் எனக்குக் குடுத்த குட்டி தேவதை தான் என் லாவ்.”

“ஆம் சாரி வசு.
லாவ்வ அப்படி சொல்லி உங்களோட பழசை ஞாபகப்படுத்திட்டேனா?”

“ம்…ம்…ம்…இட்ஸ் ஓகே.
அப்புறம் என்ன? நீ க்ளினிக் வந்திருக்க?
வீட்டுக்கே வந்திருக்கலாமே!”

“இல்ல இல்ல இப்போ நான் என் ப்ரெண்ட் வசுவ பார்க்க வரலை.
ஒரு பேஷ்ண்ட்டா டாக்டர் வசுந்தராவ பார்க்க வந்திருக்கேன்.”

“ம்…சரி சரி.
என்ன ஆச்சு தீ?”

என்று வசுந்தரா கேட்டதும் சக்தி அவளுக்கு நடத்ததை வசுந்தராவிடம் விவரித்தாள். அதை கேட்ட வசுந்தரா

“தீ அது எப்படி நீ மோர் தன் டுவல்வ் அவர்ஸா ஹைவே சைட் லேன்ல யாருக்கும் தெரியாம இருந்திருக்க முடியும்?
போஸீஸ் கூடவா பார்க்கல?
இல்லையே எனக்கு இது சரியா படலையே தீ!”

“இதே டவுட் எனக்கும் என் பேரண்ட்ஸுக்கும் இருக்கு வசு.
அவங்க ரெண்டு பேரும் ஒரு படி மேலயே போய் எனக்கு யாரோ எதையோ கலந்துக் கொடுத்து ஆக்ஸிடன்ட் ஆக வைக்க பார்த்திருப்பாங்கன்னு சொன்னாங்க தெரியுமா!
அதைக் கேட்டதும் முதல்ல எனக்கு ஒரே காமெடியா இருந்தது.
ஆனா அப்புறமா யோசிச்சுப் பார்த்தேன்…
அதுதான் உன்கிட்ட வந்து ஒரு ப்ளட் டெஸ்ட் எடுத்து பார்த்துடலாமேன்னு வந்திருக்கேன்.”

“ம்…உன் பேரன்ட்ஸ் சொன்னதுலயும் ஒரு பாயின்ட் இருக்கு தீ.
ஓகே ஒரு நிமிஷம்.
நர்ஸ் ப்ளீஸ் கம்மின்”

“எஸ் டாக்டர்.”

“நர்ஸ் தீ க்கு இதுல நான் எழுதியிருக்குற ப்ளட் டெஸ்ட் எடுங்க.”

“ஓகே டாக்டர்.
மேம் ப்ளீஸ் வாங்க.”

“ஓகே வசு நான் போய் ப்ளட் டெஸ்ட் குடுத்துட்டு வரேன்‌.”

“ஷுவர் தீ.
நீ போய் டெஸ்ட்டுக்கு குடுத்துட்டு வா.”

சக்தி நர்ஸுடன் சென்று தனது ரத்தத்தை பரிசோதனைக்கு கொடுத்துவிட்டு வந்தாள்.

“மே ஐ கம் இன்”

“ஆங் உள்ள வா தீ”

“என்ன வசு எப்பவும் பிஸியா இருக்கற நீ இன்னைக்கு ரொம்ப ஃப்ரீயா இருக்க?”

“நல்லது தானே தீ.
மக்கள் எல்லாரும் ஆரோகியமா இருக்காங்கன்னு தானே அர்த்தம்.
அது நல்லது தானே.”

“அது என்னவோ உண்மை தான்.
ஆனா இப்ப இருக்குற இந்த பான்டமிக் காலத்துல அது எப்படி சாத்தியம்?”

“தீ என்ன பேசற நீ.
ஆக்ட்சுவலி இந்த பான்டமிக் நம்ம மக்களுக்கு ஒரு நல்லத செஞ்சிருக்கு தெரியுமா?”

“அப்படியா?”

“ஆமாம்.
முன்பெல்லாம் ஏதாவது ஒரு சின்ன வலின்னா கூட உடனே ஹாஸ்பிடல் வந்திடுவாங்க.
ஆனா இப்போ எதுவந்தாலும் ஹாஸ்பிடல் பக்கம் போயிடக்கூடாதுன்னு இல்ல நெனைக்கறாங்க!
பழையபடி வீட்டு வைத்தியத்துலேயே சரி செஞ்சுக்க பார்க்கறாங்க.
இதுவும் நல்லது தானே.”

“ம்…ஆமாம் ஆமாம்.
அது சரி தான்.
சரி வசு ரிசல்ட் எப்ப வரும்?”

“அது ஒரு த்ரீ ஆர் ஃபோர் அவர்ஸ்க்குள்ள வந்திடும்.
நான் உனக்கு வாட்ஸ்அப் பண்ணறேன்‌.
ஆர் எல்ஸ் சாயந்தரம் டின்னருக்கு வீட்டுக்கு வாயேன்.”

“ஓ! டின்னர் தந்து ப்ளட் ரிசல்ட் தர்ற நீங்க ரெடின்னா!
நானும் வந்து டின்னர் சாப்டுட்டு ரிசல்ட்டை வாங்கிக்க ரெடி தான்.”

“ஓகே தென்.
வீ வில் மீட் அட் செவன் தர்ட்டி அட் மை ரெஸிடன்ஸ்.
மறந்திடாத சக்தி”

“டோன்ட் வரி வசு.
நிச்சயமா வரேன்.
போன தடவ மாதிரி மறக்க மாட்டேன்.
லாவ் கிட்ட சொல்லு அவளோட அந்த லக்கி டாலுக்கு எக்ஸ்ட்ராவா ஒண்ணு கொண்டு வரேன்னு.”

“ம்.‌..ஹும்…நான் மாட்டேன்.
அப்புறம் நீ வீட்டுக்கு வரவரைக்கும் அதைப் பத்தியே கேட்டு கேட்டு என்ன நச்சரிப்பா.
நீ கொண்டு வந்து குடுக்கும்போதே தெரிஞ்சுக்கட்டும்.”

“ஓகே தென்.
பை ஃபார் நவ்.”

“பை தீ.”

ஹாஸ்பிடலில் இருந்து சக்தி வெளியே செல்லும் போதே மணி நான்காகி இருந்தது. நேராக அவள் வீட்டுக்குச் சென்றாள். அப்போது அவர்கள் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த மிஸர்ஸ் டேவிட் சக்தியின் கார் வந்து அவள் வீட்டு வாசலில் நின்றதும்

“ஹாய் தீ.
நேத்து ஆஃபீஸ் போகும்போது பார்த்தது.
எப்படி இருக்க மா?”

“நான் நல்லா இருக்கேன் மிஸ்ஸர்ஸ் டேவிட் நீங்க எப்படி இருக்கீங்க?”

“எனக்கென்னமா அதே ரொட்டீன்.
போரடிக்குது.
ஆமாம் நீ ரொம்ப டல்லா இருக்கயே!!
ஏன்?”

“அப்படியா!
எனக்கு ரொம்ப தூக்கம் வருது அதுதான்.”

“அப்படீன்னா ஏன் என்கூட பேசி நேரத்த வேஸட் பண்ணற?
போய் தூங்கு தீ‌.
இப்போ தூங்கினா தான் உண்டு”

“ஏன் அப்படி அலுத்துக்கிட்டே சொல்லறீங்க மிஸ்ஸர்ஸ் டேவிட்?”

“ஆமாம் மா.
இதோ எங்க வயசுல மாத்திரைப் போட்டுக்கிட்டாலும் தூக்கம் வரமாட்டேன்னு வம்பு பண்ணுதே!
அதுனால தான் அப்படி சொன்னேன்.
போ போ போய் தூங்கு”

“ஓகே.
பை.
ஹாவ் எ நைஸ் ஈவ்னிங்.”

“யூ டூ பேபி.
ஃபர்ஸ்ட் கோ அன்ட் ஹாவ் எ நைஸ் ஸ்லீப் மை ச்சைல்டு”

மிஸ்ஸர்ஸ் டேவிட்டுடன் பேசி விட்டு சக்தி உள்ளே நுழைந்ததும் ஹாலில் போடப்பட்டிருந்த சோபாவில் பொத்தென்று படுத்துக் கொண்டதும் உறங்கிப்போனாள்.
யாரோ கதவைத் திறந்து உள்ளே வந்த சப்தம் கேட்டு ப்ளூ மெல்ல சோபாவிற்கு பின்னாலிருந்த அடுப்படியிலிருந்து எட்டிப்பார்த்தது. யாருமில்லை என்றெண்ணிக் கொண்டே திரும்பும் போது சோபாவின் மேல் ஒரு கை இருந்ததைப் பார்த்தது. உடனே சோபா அருகே வந்து சக்தி நன்றாக தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் உள்ளே சென்று க்வில்ட் எனப்படும் மெல்லிய மெத்தையைக் கொண்டு வந்து அவளுக்கு போர்த்திவிட்டது. பின்பு ப்ளூ மீண்டும் அடுப்படியில் அதன் வேலையை செய்யத் துவங்கியது. வீடே அமைதியாக இருள் சூழ்ந்து ஹாலில் ஒரே ஒரு சின்ன விளக்கை மட்டும் போட்டிருந்தது ப்ளூ. சட்டென்று எழுந்துக் கொண்ட சக்தி தனது கைகடிகாரத்தைப் பார்த்தாள்.

“அச்சச்சோ டைம் ஏழேகால் ஆ!!”

“ம்…என்ன ஆச்சு தீ?
ஏன் கத்தின?”

“மணி ஏழேகால் ஆயிடுச்சு ப்ளூ.
என்ன ஒரு ஆறு மணிக்கெல்லாம் எழுப்பி விட்டிருக்கலாம் இல்ல ப்ளூ”

“நல்லா இருக்கே நீ சொல்லறது!
உன்ன ஆறு மணிக்கு எழுப்பி விடணும்னு என்கிட்ட சொல்லிட்டா படுத்த?
சரி சரி அதுக்கென்ன இப்போ.
நல்லா தூங்கின தானே.
விடு தீ.
வா வா டின்னர் சாப்பிடு.
எல்லாம் ரெடியா இருக்கு.”

“ஓ நோ ப்ளூ.
சாரி நான் இன்னைக்கு டின்னருக்கு வசு வீட்டுக்கு வரேன்னு சொல்லிருக்கேன்.
நான் அங்க போகணும்.
ஸோ சாரி ப்ளூ.
நீ செஞ்சதை ஃப்ரிட்ஜில வச்சுடு.
நாளைக்கு ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு சாப்ட்டுக்கறேன்.”

“ம்…ம்…சரி சரி.
ஆமாம் வசுங்கறது உன் பெஸ்ட் பிரெண்டு அந்த டாக்டர் தானே?”

“ஆமாம் ஆமாம்.
அவங்களே தான்.
இன்னைக்கு ப்ளட் டெஸ்ட்டுக்கு போயிருந்தேன் இல்ல
அப்ப அவங்க டின்னருக்கு என்ன இன்வைட் பண்ணினாங்க.
அதுக்கு தான் கிளம்பிட்டிருக்கேன்”

“அவங்க பொண்ணுக்கு தானே எனக்கு ரொம்ப பிடிச்ச எலிஸைக் கொண்டு போய் குடுத்துட்ட.”

“அந்த பொண்ணுக்கு உன் எலிஸை ரொம்ப பிடிச்சுப் போயிடுத்தாம்.
தெரியுமா!”

“என் எலிஸ யாருக்கு தான் பிடிக்காது! ம்…”

“அட அட அட!! ப்ளூ டூ மச்.
உன் எலிஸுக்கு பேசக்கூடிய தன்மையை கொடுக்குற வாய்ஸ் டூல் ஐ இன்னைக்கு பிக்ஸ் பண்ணிக் குடுக்கப் போறேன்.”

“அப்போ என் எலிஸ் இனி பேசுவாளா?
ஆனா நான் கேட்க முடியாதே!”

“என்னமோ காதல் ஜோடிய நான் பிரிச்சா மாதிரி இருக்கு உன் பேச்சு.”

“பின்ன இல்லையா?”

“ஓ!!! ஓகே ஓகே.
இப்போ இந்த எலிஸ் போனா என்ன நான் உனக்கு புதுசா ஒரு ஏன்ஜல் செஞ்சு தரேன்.
என்ன சொல்லற?”

“ம்‌…அப்படீன்னா உனக்கு உன் விஷாலுக்கு பதில் ஒரு திஷால தரேன்னா நீ ஒத்துப்பியா?”

“ப்ளூ நீ வர வர ரொம்ப பேசற.”

“பதில் சொல்லு தீ”

“போ ப்ளூ விளையாடாதே.
நான் இப்போ வசு வீட்டுக்கு போறேன்.
வர்றதுக்கு எப்படியும் நைட் பத்து மணி ஆகிடும்.
அப்பா அம்மா கால் பண்ண மாட்டாங்க சப்போஸ் பண்ணினாங்கன்னா நான் வசு வீட்டுக்கு போயிருக்கறதா சொல்லிடு.
ஓகே பை ப்ளூ.”

“ம்…ம்…பை தீ.”

என்று தன் வீட்டிலிருந்து வசுந்தரா வீட்டிற்கு காரை ஓட்டிச் சென்றுக் கொண்டிருக்கும் போது சக்தி தனக்குத்தானே

“வர வர இந்த ப்ளூவோட பேச்சு நடவடிக்கை எல்லாம் ரொம்பவே வித்தியாசமா இருக்கறா மாதிரி எனக்குத் தெரியுது.
அது ஏன்?
எப்படி?
எதுக்குன்னு நான் சீக்கிரம் கண்டுபிடிக்கணும்.
இந்த விஷாலுக்கு எத்தனைத் தடவ கால் பண்ணறது.
அவன் ஏன் ஃபோன் அட்டென்ட் பண்ணகூட மாட்டேங்கறான்?
ஆமாம் அவனுக்கும் கோபமிருக்காதா?
ரெண்டாவது தடவையா சொல்லாம கொள்ளாம இருந்திருக்கேன்.
சரி வசு வீடு வந்திடுச்சு.
இங்க டின்னர முடிச்சுட்டு வீட்டுக்கு போனதும் மறுபடியும் விஷாலுக்கு கால் பண்ணுவோம்‌.”

“ஹாய் தீ ஆன்டி”

“ஹாய் லாவ் குட்டி.
வாசல்ல என்ன பண்ணிட்டிருக்க?”

“உங்களுக்காக தான் வெயிட்டிங் ஆன்டி.”

“ம்….அப்படியா.
இந்தா சாக்லேட்ஸ்.”

“வாங்க உள்ள போகலாம் ஆன்டி. அம்மா பாட்டி தாத்தா எல்லாரும் உங்களுக்காக தான் வெயிட்டிங்”

“ம்…வா போகலாம்.”

“ஹாய் சக்தி வாமா வா. எப்படி இருக்க?”

“நல்லா இருக்கேன் அம்மா.
நல்லா இருக்கேன் அப்பா.
நீங்க ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்க?”

“எங்களுக்கென்னமா அதே ஒரே ரொடீனான லைஃப்‌.
அதுல கொஞ்சம் சுவாரஸ்யம் குடுக்கறது நம்ம லாவ் தான்.”

“ஆங் இவ போதுமே டைம் போறதே தெரியாதே”

“ஹாய் தீ வா வா.
இந்தா ஜூஸ் எடுத்துக்கோ”

“தாங்கஸ் வசு.”

“அம்மா தாத்தாக்கு பாட்டிக்கு அன்ட் எனக்கு?”

“இதோ எல்லாருக்கும் கொண்டு வந்திருக்கேன் மா.
எல்லாரும் எடுத்துக்கோங்க”

“ஆங் லாவ் உன்னோட லக்கிக்கு நான் வாய்ஸ் எனேபிள் பண்ணப்போறேனே.”

“அப்படீன்னா?”

“அப்படீன்னா இன்னேலேந்து உன்னோட லக்கி கிட்ட நீ பேசலாமே”

“நான் தான் எப்பவும் அது கூட பேசிகிட்டிருக்கேனே ஆன்டி”

“இனி அதுவும் உன்கூட பேசும். ஹாப்பியா?”

“அய்யா ஜாலி ஜாலி.”

“ம்…இதோ ஆல் செட்.
இப்போ நீ அதுகூட பேசலாம் அதுவும் உனக்கு ரிப்ளை பண்ணும்.”

“தாங்க்ஸ் ஆன்டி. நான் போய் இதுகூட பேசிப் பார்க்கறேன்”

“ம்…ஓகே லாவ்.
வசு என்னோட ரிப்போர்ட்ஸ் வந்துடுத்தா?”

“அவளோ தான்.
இனி அடுத்த ஒரு வாரத்துக்கு அவளுக்கு சாப்பாடு தூக்கம் எதுவுமிருக்காது.
ஆங் வந்திடுச்சு தீ.
மொதல்ல டின்னர் சாப்டுட்டு பிறகு அதைப் பத்தி பேசலாம்.
எல்லாரும் வாங்க டின்னர் சாப்பிடலாம்.
லாவ் வாடா கண்ணா.
சாப்டுட்டு போய் விளையாடு”

“அம்மா நான் அப்பறமா சாப்டுறேன்.
இப்போ எனக்கு வேண்டாம்.”

“விடு மா வசு.
நாம சாப்டுட்டு அவளுக்கு நான் போய் ஊட்டி விடுறேன்.
சாயந்தரம் தான் வடை எல்லாம் சாப்பிட்டிருக்கா”

“சரி வா தீ நாம சாப்பிடலாம்.”

“டின்னர் ரொம்ப சூப்பரா இருந்தது வசு. ரொம்ப தாங்க்ஸ் ஃபார் திஸ் லவ்லி டிலீஷியஸ் புஃட்”

“எல்லாம் அம்மா பண்ணினது தான் தீ.
நான் இன்னைக்கு வீட்டுக்கு வந்ததே ஏழு மணிக்கு தான்.
நான் வந்து ஜூஸ் மட்டும் தான் போட்டேன்”

“ஓ அப்படியா.
அம்மா சூப்பர் சாப்பாடு.
ரொம்ப தாங்க்ஸ் மா.”

“அதெல்லாம் எதுக்குமா.
நீயும் எங்க பொண்ணு மாதிரி தானே மா.”

“ஸோ நைஸ் ஆஃப் யூ அம்மா.”

“சரி அம்மா நீங்க நம்ம லாவ்க்கு சாப்பாடு ஊட்டறேங்களா?”

“ஆங் சரி மா வசு.
இதோ எல்லாம் எடுத்துக்கிட்டேன்.
அவ கிட்ட போய் உட்கார்ந்து ஊட்டிவிட வேண்டியது தான்.
நீ போய் சக்திக் கூட பேசிட்டு இருமா.
லாவ்வ நாங்க பார்த்துக்கறோம்.”

“ஓகே மா.
தீ வாங்க நாம மேல போகலாம்.”

“என்ன ஆச்சு வசு?
என் ரிப்போர்ட் என்ன ஆச்சு?
ஏன் ஒரு மாதிரி இருக்க வசு?”

“அது வந்து தீ.
உன் பேரன்ட்ஸ் யூகிச்சது சரி தான்.”

“அப்படீன்னா?”

“ஆமாம் தீ உனக்கு யாரோ எந்த விதத்திலயோ செடெடிவ் குடுத்திருக்காங்க.
உன் ப்ளட் டெஸ்ட் ரிப்போர்ட்ல இருந்துது.
அது ஒரு வகையான கான்ஷியஸ் செடடிவ்.
அது ஐவி வழியா குடுத்தா தான் சட்டுன்னு வேலை செய்யும் இல்லாட்டி அது மெதுவா தான் வேலை செய்யும்.
நீ சொன்னத வச்சுப் பார்த்தா. உனக்கு அது மெதுவா தான் வேலை செய்ய ஆரம்பிச்சிருக்கு.
ஆக்ச்சுவலி இது ஷார்ட் டெர்ம் செடடிவ் தான்.
ஆனா உனக்கு அது மறுபடியும் கொடுக்கப்பட்டிருக்கலாம் அது ஐவி த்ரூவா குடுத்திருக்கலாம் அப்படீங்கறது என்னோட யூகம் தான். ஏன்னா நீ விடியற்காலை வரைக்கும் மயக்கத்துல இருந்திருக்க.”

“ஆனா மறுபடியும் குடுக்கணும்னா!! அப்போ என் காருக்குள்ள வச்சே எனக்கு குடுத்திருக்காங்களா?
இல்லையே என் கார் பூட்டினது பூட்டினபடியே தானே இருந்தது”

“என்ன தீ !!
இந்த காலத்துல காரை சாவியே இல்லாம தொறக்கறதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்ல பா.
அதை விடுங்க உனக்கு யார் முதல்ல குடுத்திருப்பா?
ஏன்?”

“ஆமாம் இல்ல.
யாரா இருப்பாங்க?
எனக்கு எதிரிங்கன்னு யாருமே இல்லையே வசு.
அப்புறம் நான் யாரன்னு யோசிக்கறது.
எல்லாரும் என்னோட நல்லா தான் பழகுறாங்க.
நான் யாரன்னு சந்தேகப்படுவேன்?”

“நல்லா யோசி தீ.
உனக்கே தெரியாமா உனக்குத் தரப்பட்டிருக்கு.
அது ரொம்ப தப்பு.
யாரோ உனக்கு ரொம்ப பக்கத்துல இருக்கறவங்க, ரொம்ப பழக்கமானவங்க, நெருக்கமானவங்க, உன்னோட ஆக்டிவிடிஸ் நல்லா தெரிஞ்சவங்க தான் இதை முதல்ல உனக்கு தந்திருக்கணும்.
ஸோ பொறுமையா யோசிச்சு கண்டு பிடி.
இல்லாட்டி அது மறுபடியும் நடக்க வாய்ப்பிருக்கலாமில்லையா.
யூ ஹாவ் டு பீ எக்ஸ்ட்ரீமிலி கேர்ஃபுல்”

“அய்யோ எனக்கு தலையே சுத்துது வசு.
என்னால யாரையுமே சந்தேகப் பட முடியலையே.
யாரன்னு நான் சொல்லுவேன்?”

“நிச்சயம் உனக்கே தெரியாம உனக்கு ஒரு துரோகி இருக்காங்க.
அதுவும் உங்க கூடவே பயணிக்கறாங்க.
அது யாரு என்னன்னு சீக்கிரம் கண்டு பிடி தீ.
இல்லாட்டி வர்றீங்களா நாம போய் போலீஸ்ல கம்ப்ளெயின்ட் பண்ணிட்டு வரலாம்.”

“என்னன்னு கம்ப்ளெயின்ட் பண்ணுவேன் வசு?
யாரன்னு கை காட்டுவேன்?
எப்போ எப்படி இப்படி நடந்துதுன்னு சொல்லுவேன்?
ஏன்னா எனக்கே எதுவும் தெளிவா இல்லன்னா…
நான் போலீஸ்க்கு எப்படி என்னத்த சொல்லுவேன்?
அதுவுமில்லாம அங்க எல்லாம் போனோம்னா அது எவ்வளவு பெரிய ப்ரொஸீஜர்ஸ் எல்லாம் ஃபாளோ பண்ண வேண்டியிருக்கும்.”

“அதுக்காக அப்படியே விட்டுவிடறதா தீ?”

“இல்ல இல்ல!
அதுதான் என்ன பண்ணலாம்னு யோசிக்கறேன்.”

“ஆங்…பேசாம என்னோட பிரெண்டோட பிரதர் இந்த நாட்டுக்காரர் தான்.
அவரு இந்த டிராஃபிக் போலீஸா தான் இருக்காருன்னு நெனைக்கறேன்.
நான் அவங்ககிட்ட கேட்டு நீங்க அந்த ஹைவேல இருந்த அந்த பதிமூணு மணிநேரம் என்ன நடந்ததுன்னு அவங்களோட சிசிடிவி ல பார்த்து சொல்ல சொல்லறேன்.”

“அது முடியுமா வசு?”

“லெட் அஸ் ட்ரை.
ஆனா நீயும் இனி ஜாக்கிரதையா இரு தீ.”

“ம்…தாங்க்ஸ் வசு.
சரி நான் வீட்டுக்கு கிளம்பறேன்.”

“யூ ஆர் கன்ஃப்யூஸ்டு நவ்.
பேசாம இங்கேயே இருந்துட்டு காலையில போயேன் தீ”

“ஓ…நோ நோ வசு.
நான் போயே ஆகணும்.
ஆஃபீஸுக்கு நேத்து ஹாஃப் எ டே லீவ் போட்டேன்
இன்னைக்கு போகவேயில்ல.
நாளைக்கு காலையில சீக்கிரம் போகணும். இல்லாட்டி இருந்திருப்பேன்.
ஆம் சாரி வசு.”

“இட்ஸ் ஓகே தீ”

“வசு நீ கொஞ்சம் உன் பிரெண்டுட்ட சொல்லி அந்த சிசிடிவி ல என்ன இருந்ததுன்னு சொல்ல சொல்லு பா.”

“நிச்சயமா நான் அவங்க கிட்ட இப்பவே கூப்பிட்டு சொல்லறேன்.
கவலைப் படாம பத்திரமா வீட்டுக்கு போயிட்டு வா தீ.
பை பை.
ஹாவ் எ நைஸ் ஈவ்னிங் தீ.”

“யூ டூ வசு.
அப்பா அம்மா நான் போயிட்டு வரேன்.
லாவ் பை.”

“பை மா.”

“பை அன்டி.”

வசுந்தரா வீட்டிலிருந்து தன் வீட்டிற்கு செல்லும் வரையிலும் சக்தி தனக்கு மயக்கமருந்து கொடுத்தவர் யாராக இருக்கக்கூடும் என்ற குழப்பத்திலேயே
சென்றாள்.

தொடர்வாள்…
































Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s