அத்தியாயம் 23: தெளிவு பிறந்தது!

உடனே ராஜா ரஞ்சிதாவிடம்…

“இல்ல மேடம்…. ஒரு ஹெல்ப் பண்ணலாமேனு தான் சொன்னேன்”

அப்போது அவனின் கால்களுக்கு மருந்து போட்டு… கட்டுப்போட்டுக் கொண்டிருந்த டாக்டர் ராஜேந்திரன் ராஜாவிடம்

“ம்…அதெல்லாம் வேண்டாம்ப்பா நாங்க பார்த்துக்கறோம். நீ மொதல்ல உங்க வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுப்பா. அநேகமா இன்னைக்கு நைட்டு உனக்கு ஜுரம் வரலாம்.”

அப்போது ராஜா ராஜேஷைப் பார்த்து ஏதோ ஜாடைக் காட்ட உடனே அவன் டாக்டரிடம்

“மேடம் என்கிட்ட தாங்க …சார் ராஜாவுக்கு மருந்துப் போட்டு முடிக்கறதுக்குள்ள நான் போயிட்டு வந்துடறேன்”

“ஏன்ப்பா நீங்க இவ்வளவு ஆர்வமா இருக்கீங்க? எங்க வீட்டு வேலைக்காரங்க கிட்ட குடுத்தா பண்ணிட்டு வந்திடுவாங்க…இருங்க….ஏய் ரோஹித்.. ரோஹித் “

“அதுக்கில்ல மேடம் சாருக்கு நன்றி சொல்ல வந்த இடத்துல உதவி பண்ண முடிஞ்சதுன்னா எங்களுக்கும் சந்தோஷமா இருக்கும் இல்லையா அது தான்….”

“பரவாயில்லைப்பா…ம்…இதோ வந்துட்டானே ….ரோஹித் இதை கொண்டு போய் ஃப்ரேம் போட்டு கொண்டு வந்து இங்கே வை சரியா”

“சாயந்தரம் போகட்டுமா மேடம்?”

“டேய் இப்பவே சரி செஞ்சு அது இருந்த இடத்துல வைக்கற… புரியுதா….உனக்கு பத்தே நிமிஷம் தான் டைம்…”

“இதோ வந்துடறேன் சார்”

என்று கூறிக்கொண்டே வெளியே சென்றான் ரோஹித். அடுத்த ஐந்து நிமிடங்களில் ராஜாவுக்கு ஃபர்ஸ்ட் ஏய்டு செய்து முடித்தார் டாக்டர் ராஜேந்திரன். ராஜாவுக்கோ அந்த ஃபோட்டோவைப் பார்க்க வேண்டுமென்றிருந்தது. அப்போது ராஜேந்திரன் அவர்களிடம்

“சரிப்பா இப்போ நீங்க வீட்டுக்குப் போகலாம். சாரி எங்க வீட்டுக்கு வந்து இப்படி அடிப்பட்டுட்டுப் போகறீங்க.”

“இட்ஸ் ஓகே சார். சரி நாங்க கிளம்பறோம் சார்”

“ம்…..ஆங்…தம்பிகளா நீங்க என் வைஃப் பெயர் கேட்டீங்க இல்ல…சாரி இங்கே நடந்த பரபரப்புல அதை நான் சொல்ல மறந்துட்டேன் பாருங்க”

என்றதும் ராஜாவும் ராஜேஷும் ஆவலாக அவரிடம்

“ம்…சொல்லுங்க சார்”

“ஏன்ப்பா உங்களுக்கு அவ பெயரைத் தெரிஞ்சுக்க இவ்வளவு ஆர்வம்?”

“அதுக்கில்ல சார் நாங்க கேட்டப்ப நீங்க சொல்ல மறந்துட்டீங்க….இப்போ நீங்களே சொல்லறேன்னு சொல்லும்போது….அவங்க பெயரை தெரிஞ்சுக்கறதுல ஒரு சந்தோஷம் வருது அவ்வளவு தான்…”

என்று ஏதேதோ சொல்லி சமாளித்தான் ராஜா.

“ம்….என்னமோ சொல்லுறீங்க….ம்…..அவப் பெயர் சாமுண்டீஸ்வரி. சரிப்பா நீங்களும் வீட்டுக்கு கிளம்புங்க நானும் போய் ரெஸ்ட் எடுக்கறேன். பை. ஹாவ் எ நைஸ் டே”

“தாங்க யூ. விஷ் யூ தி சேம் சார். பை”

என்று டாக்டரின் மனைவிப் பெயரைக் கேட்டதும்….அது அவர்கள் நினைத்தப் பெயர் இல்லை என்றதும்…சோர்வான குரலில் பதிலளித்து விட்டு அங்கிருந்து கிளம்பினர் ராஜாவும் ராஜேஷும். ஆனால் ராமு டாக்டர் சென்ற வழியையே பார்த்துக் கொண்டு அமர்ந்த இடத்திலேயே அமர்ந்திருந்தான். அதை கவனித்த ராஜா ராஜேஷிடம்

“டேய் அவனை எழுப்பலாம் வா..”

என்று இருவருமாக அவனை எழுப்பிக் கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வெளியே சென்றனர். டாக்டர் வீட்டின் கேட்டைத் தாண்டியதும் ராமு

“டேய் என்னடா இன்னமும் கேட்டுக்கு வெளியவே நிக்கிறோம்…..வாங்க அந்த வாட்ச்மேன் அண்ணன்ட்ட பேசி எப்படியாவது உள்ளே போய் ஏதாவது விவரம் கிடைக்குதான்னு பார்ப்போம்…”

என்றதும் ராஜாவும் ராஜேஷும் ராமுவையே ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தனர். தன் நண்பர்கள் தன்னை வினோதமாக பார்ப்பதை பார்த்த ராமு

“டேய் ஏன்டா என்னை ரெண்டு பேரும் அப்படி பார்க்குறீங்க?”

“அப்போ உனக்கு நாம உள்ள போனது….அங்கே நடந்தது எதுவுமே தெரியாது …இல்ல”

“டேய் ராஜேஷ் நாம உள்ள போனோமா?”

“சூப்பர் ராமு….எனக்கு கால்ல கண்ணாடி குத்தி….அதுக்கு டாக்டர் எனக்கு கட்டுப் போட்டதுனு எதுவுமே உனக்கு தெரியாதா?”

“ஏய் ரெண்டு பேரும் என்னடா சொல்லறீங்க!!!! இதெல்லாம் எப்போ நடந்தது? ஏன் எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை?”

“ம்….ஏன்னா நீ டாக்டரையே பார்த்துக் கொண்டு மெய் மறந்து உட்கார்ந்திருந்த அதுதான்…”

“ம்….என்ன?”

“சரி சரி ராமு அன்ட் ராஜேஷ் இதை பத்தி வீட்டுக்குப் போய் பேசிக்கலாம். இப்போ நாம செய்ய வேண்டியது ஒரு விஷயம் தான்….”

“என்னது அது ராஜா?”

“இந்த வழியா தான் டாகடர் வீட்டு வேலைக்காரன் ரோஹித் ஃப்ரேம் போட்ட ஃபோட்டோவோட அவரு வீட்டுக்குப் போவான்….அப்போ அவனை நாம மடக்கி எப்படியாவது அந்த ஃபோட்டோவிலிருக்கும் அந்த பெண்ணைப் பார்க்கறோம்…என்ன ஓகே வா?”

“என்னது டாக்டர் வீட்டு வேலைக்காரனா? ஃபோட்டோ வா?? என்னடா நடக்குது இங்க?”

“டேய் ராமு நீ கொஞ்ச நேரம் டாக்டர் வீட்டுல எப்படி ஜடம் மாதிரி உட்கார்ந்திருந்தையோ அப்படியே இரு. ப்ளீஸ் கொஞ்ச நேரம் தான்… வீட்டுக்கு போனதும் உனக்கு எல்லாத்தையும் எக்ஸ்ப்ளேயின் பண்ணறோம். சரி…. ராஜா
அந்த டாக்டரோட வைஃப் பெயர் சாண்டி இல்லங்கறது ஊர்ஜித மாயிடுச்சு…அப்புறமும் எதுக்காக நாம அந்த ஃபோட்டோவைப் பார்க்க இங்க இப்படி நிக்கணும்”

“என்னது டாக்டர் வைஃப் பெயர் அது இல்லையா? அப்படீன்னா அந்த பொண்ணு நாம நினைக்குற பொண்ணு இல்லையா?”

“ராமு …..உஷ்…..ப்ளீஸ் டா”

“ஓகே ஓகே!!! சாரி”

“அதுக்கில்ல ராஜேஷ்…இவ்வளவு தூரம் வந்துட்டோம் அந்த ஃபோட்டோவையும் பார்த்துட்டா ….அப்புறம் நாம வேற ஆங்கிள்ல யோசிக்கலாம் இல்ல அதுதான்”

“ம்….அதுவும் சரி தான் ராஜா…ம்….ம்….ராஜா அங்கே பாரு அந்த வேலைக் காரன் ரோஹித் வர்றான் பாரு. மடக்கு அவனை மடக்கு”

“ம்…நான் பார்த்துக்கறேன்….ஹெய் ரோஹித்…”

“யார் நீங்க? என் பெயர் எப்படி உங்களுக்குத் தெரியும்? உங்களுக்கு என்ன வேணும்?”

“நீங்க தானே டாக்டர் ராஜேந்திரன் சார் வீட்டுல வேலைப் பார்க்கறீங்க? இப்போ கொஞ்ச முன்னாடி தானே அவரு வீட்டுல பார்த்துக் கிட்டோம்….அதுக்குள்ள மறந்துட்டீங்களா?”

“ஓ!!!! ம்….ஆமாம் ஆமாம்…சார் கூட உங்களுக்கு கால்ல கட்டுப் போட்டாரு இல்ல. ஞாபகம் வந்துடுச்சு”

“ஆங் அவங்களே தான்…சரி ஃபோட்டோவுக்கு ஃப்ரேம் போட்டாச்சா ப்ரோ”

“ஆங்…போட்டாச்சு ப்ரோ!”

“எங்கே காட்டுங்க பார்ப்போம்”

“ஆங்….எதுக்கு?”

“அதுக்கில்ல ப்ரோ நானும் ஒரு ஃபோட்டோவைப் ப்ரேம் பண்ணணும் அதுதான் நீங்க பண்ணிருக்கறது நல்லா இருந்ததுன்னா நானும் அதே கடையில கொடுப்பேன் அதுக்காக தான்”

“ஓ!!! அப்படியா? நான் அதோ அந்த தெருவுல இருக்குற ரவி ஸ்டூடியோவில தான் ஃப்ரேம் பண்ணினேன்…வேகமா செய்துக் குடுத்துட்டாங்க”

“ஓ!!! சரி சரி சரி….எது ? அந்த தெருவுல இருக்குற ஸ்டூடியோவா?”

“ஆமாம்”

என்று ரோஹித் சொன்னதும் ராமு தன் மனதிற்குள்

“டேய் ராஜா உனக்கு நம்ம ரவி ஸ்டூடியோஸ் தெரியாது!!! தெரியாத மாதிரியே கேட்கறானே ….என்னவோ…. நாம பேசாம நடக்கறதை வேடிக்கைப் பார்ப்போம்”

என எண்ணிக்கொண்டு அமைதியாக நின்றிருந்தான்.

“சரி ப்ளீஸ் காமிங்க ப்ரோ….எனக்காக டாக்டரே கட்டெல்லாம்…. ஒரு வருஷத்துக்கு அப்பறமா வெளியில வந்து எங்களோட பேசி எல்லாம் செய்திருக்காரு….நீங்க என்னடான்னா ஒரு ஃபோட்டோவை காட்ட மாட்றீங்களே…என்னடா ராஜேஷ்!!”

“அதுதானே!!! நாங்க அந்த ஃபோட்டோவை அவரு வீட்டிலேயே பார்த்துட்டோம் ரோஹித்….அந்த ஃப்ரேம் நல்லாவே இருக்கலை அதுதான் நீங்க போட்டுட்டு வந்திருக்கறதாவது நல்லா இருக்கான்னு பார்க்கத் தான் கேட்டோம்…சரி உங்களுக்கு விருப்பமில்லைன்னா பரவாயில்லை நீங்க போங்க ப்ரோ”

“அதுக்கில்ல…..”

“பரவாயில்லை நீங்க போங்க ப்ரோ”

“சரி இந்தாங்க பார்த்து எப்படி இருக்குதுன்னு சொல்லுங்க”

என்றதும் வேகமாக அதை வாங்கினான் ராஜா. பின் கவரிலிருந்து வெளியே எடுத்து மூன்று நண்பர்களும் பார்த்தனர். ஃபோட்டோவைப் பார்த்ததும் அவர்கள் மூவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர். ஃபோட்டோவைப் பார்த்தனர் மீண்டும் மூவரும் பார்த்துக் கொண்டனர். இப்படியே செய்துக் கொண்டிருந்ததைப் பார்த்த ரோஹித்…

“சரி சரி ஃப்ரேம் எப்படி இருக்கு? அதை சொல்லுறதை விட்டுட்டு நீங்க மூணு பேரும் ஏன் ஒருத்தரை ஒருத்தர் மாறி மாறி பார்த்துக்கிட்டே இருக்கீங்க? தாங்க ப்ரோ நான் வீட்டுக்குப் போகணும்”

“ம்….ம்…சூப்பரா இருக்கு ரோஹித்….இந்தாங்க. ரொம்ப நன்றி. நீங்க வீட்டுக்கு கிளம்புங்க.”

என்று ரோஹித் சென்றதும் ராஜா ராஜேஷிடம்….

“டேய் ராஜேஷ் எப்படிடா?”

“அது தான் எனக்கும் ஒரே குழப்பமா இருக்கு ராஜா…”

“இதுல என்னடா உங்க ரெண்டு பேருக்கும் குழப்பம்?

தொடரும்…..Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s