அத்தியாயம் 17: அழைப்பு!

புத்தகத்தைத் திறக்கப் போவதாக சொல்லிக் கொண்டே மெத்தை மீது கமுத்தி வைத்திருந்த புத்தகத்தை எடுத்து மெல்ல திறக்கும் போது மீண்டும் ஃபோன் கால் வந்தது ஆனால் இம்முறை ராஜேஷ் வீட்டிலிருந்து வந்தது. உடனே அவன் புத்தகத்தை மீண்டும் மெத்தையில் கமுத்தி வைத்துவிட்டு தனது மொபைலில் வந்த கால் ஐ அட்டென்ட் செய்தான்.

“ஹலோ அம்மா சொல்லுமா!!”

“ராஜேஷ் எங்க இருக்க நீ? காலையில ராஜா வீட்டுக்கு போறேன் கிளம்பி போன மணி இப்போ எட்டாகப் போவுது!!! மத்தியானம் எங்க என்ன சாப்பிட்ட? மறுபடியும் சினிமா கினிமானுட்டு எங்கேயாவது போயிருக்கீங்களா மூணு பேரும்? எப்ப வீட்டுக்கு வர்றதா உத்தேசம்?”

“அம்மா இரு இரு இருமா…இப்படி கேள்விகளை அடுக்கிக்கிட்டே போனா நான் எப்படி பதில் சொல்லு வேனாம். கொஞ்சம் பதில் சொல்ல எனக்கும் கியாப் குடும்மா!! நீ பாட்டுக்கு கேட்டுகிட்டே இருப்ப போலவே”

“சரி உன் பதில்களைச் சொல்லு கேட்கிறேன்”

“நான் இன்னமும் ராஜா வீட்டுல தான் இருக்கேன். வெளியே எங்கேயும் போகல…மத்தியானம் ராஜா வீட்டுலேயே தான் சாப்பிட்டேன். மங்களம் அக்கா சுப்பரா சமைச்சுத் தந்தாங்க. ராமுவும் இங்கே எங்க கூட தான் இருக்கான்”

“போச்சு மூணு பேரும் மறுபடியும் சினிமா ஆரம்பிச்சிட்டீங்களா?”

“அம்மா ப்ளீஸ் நீங்க தான் ஆறு மாசம் டைம் குடுத்திருக்கீங்களே…அப்புறம் ஏன்ம்மா மறுபடியும் ஆரம்பிக்கிறீங்க?”

“சரி சரி ….எப்போ வீட்டுக்கு வருவே?”

என்று ராஜேஷின் அம்மா அவனுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே அவனின் அப்பா தண்டபாணி

“ஏய் சத்யா இங்கே குடு…அவன்ட்ட நான் பேசறேன்…டேய் ராஜேஷ் அம்மா சொன்னா நீ காலையில நான் ஆஃபீஸ் போனதும் நீ வெளியில கிளம்பி போயிட்டேன்னு ….இப்போ மணி என்ன ஆச்சு? ம்….போதும் உடனே வீட்டுக்கு வா”

“சரிப்பா இதோ வந்துடறேன்…நீங்க ஃபோனை வையுங்க.”

“டேய் ராஜா, ராமு நான் உடனே வீட்டுக்குப் போகணும் டா. சாரி …நாளைக்கு வந்து மீதியைப் பார்ப்போமா?”

“என்னடா ராஜேஷ்!!”

“என்னப் பண்ண என் அப்பா அம்மா ஒரு வேளை பழசை நினைச்சு பயப்படறாங்கனு நினைக்கிறேன். நான் இப்போ போயிட்டு காலையில சீக்கிரமா வந்துடறேனே ப்ளீஸ்”

“ஓ!!! ஆமாம் டா…மணி எட்டாச்சு. எங்க அம்மாவும் அப்பா வர்றதுக்குள்ள வரச்சொன்னாங்க….இந்நேரம் அப்பா வந்திருப்பார்…நானும் கிளம்பணும் ராஜா. நாளைக்கு காலையில பார்ப்போம்”

“டேய் என்னங்கடா இப்படி பண்ணறீங்க..”

“அநேகமா உன் பேரன்ட்ஸும் வந்திருப்பாங்க”

“ஆமாம் ஆனா….”

“சரி இரு நீ ஒண்ணு பண்ணு அந்த பொண்ணோட படத்தை உன் மொபைல்ல க்ளிக் பண்ணி அதை மங்களம் அக்காகிட்ட காட்டி அது அவங்க சொன்ன பொண்ணு தானான்னு கன்ஃபார்ம் பண்ணிக்கோ. அப்படி ஒரு வேளை அந்தப் பொண்ணு தான் இந்த பொண்ணுன்னா அப்புறம் நமக்கு நாளைக்கு நிறைய வேலையிருக்கு. ம் உன் மொபைல் எடு க்ளிக் பண்ணு ராஜா”

“ம்…சரி சரி …இரு ராமு இதோ பண்ணறேன்”

“பண்ணிட்டியா…சரி இப்போ நம்ம ராஜேஷ் அந்த புத்தகத்தை உன் டேபிள்ல கமுத்தி வச்சிட்டுப் அவன் வீட்டுக்கு போவான்…நீ எக்காரணம் கொண்டும் அந்த புத்தகத்தை எடுக்கவோ திறக்கவோ கூடாது சரியா!!!”

“ஏன் ராமு !!! அப்படியே எடுத்து …அது மூடிக்கிட்டாலும் திறக்கத் தான் நம்ம ராஜேஷ் இருக்கானே…அப்புறமென்ன?”

“அது சரிதான் ராஜா ஆனாலும் எதுக்கு அதைப் பரீட்சித்துப் பார்க்கணும்? சப்போஸ் திறக்க முடியாம போச்சுன்னா!!!”

“ம்….சரி சரி…..ஓகே நான் அப்படியே வச்சிருக்கேன். மங்களம் அக்காக்கிட்டக் கூட என் ரூமை க்ளீன் பண்ண வேண்டாம்னு சொல்லிடறேன்”

“சூப்பர் ராஜா. அப்படியே செய்திடு. சரி நான் இந்த புக்கை இங்கே வைக்கட்டா?”

“அடுத்தப் பக்கம் மட்டும் என்னன்னு பாத்துட்டு கமுத்தி வச்சிடலாமா!!!”

“டேய் ராமு வேண்டாம்….அப்புறம் அதுக்கடுத்தப் பக்கத்தையும் பார்க்கலாம்னு தோணும்….பேசாம கிளம்பிடுவோம் வா…வா டா”

“ஓகே ராஜா பை நாங்க போயிட்டு நாளைக்கு காலையில வர்றோம்”

“ஓகே கைய்ஸ் பத்திரமா போயிட்டு வாங்க.”

என்று நண்பர்கள் அங்கிருந்து கிளம்பிச் செல்ல மனமில்லாது அவரவர் வீடுகளுக்கு செல்ல ராஜாவின் அறையிலிருந்து மாடிப்படிகளில் இறங்கி வந்தனர். அப்போது கீழே ராஜாவின் அப்பாவும் அம்மாவும் சோஃபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். கீழே வந்ததும் ராஜாவின் அப்பா

“என்னப்பா ராமு, ராஜேஷ், ராஜா ட்ரியோ என்ன காலையிலேந்தே ரூமுக்குள்ளேயே இருக்கீங்களாம்…சாப்பிட மட்டும் வந்துட்டு மறுபடியும் ரூமுக்குள்ள போனீங்களாம்….மங்களம் எல்லாத்தையும் சொல்லிட்டு அவ வேலைகளையும் முடிச்சிட்டு கிளம்பி போயிட்டா….நாங்களும் வந்து இரண்டு மணி நேரம் வேற ஆயிடுச்சு…என்ன பண்ணுறீங்க மூணு பேருமா? கதை ஏதாவது கிடைச்சிடுச்சா?”

“அதெல்லாம் இல்ல அங்கிள்…ஒரு புக் டிஸ்கஷன்ல இருந்தோம் அது தான் எங்களுக்கு நேரம் போனதே தெரியலை. இப்போ தான் என் பேரன்ட்ஸ் ஃபோன் பண்ணி வரச்சொன்னாங்க…அப்போ தான் நாங்க டைமையே பார்த்தோம். வெரி சாரி அங்கிள்.”

“எதுக்குப்பா சாரி எல்லாம் சொல்லிக்கிட்டு…அதை விடுங்க. சரி வாங்க எல்லாருமா சேர்ந்து சாப்பிடலாம். மங்களம் உங்களுக்கும் சேர்த்து தான் சமைச்சு வச்சிட்டு போயிருக்கா”

“என்னது அக்கா வீட்டுக்குப் போயிட்டாங்களா?”

“ஆமாம் !! அதுக்கு ஏன் ராஜா இவ்வளவு ஷாக் ஆகுற?”

“ம்….ஒண்ணுமில்லைப்பா.”

“சரி அங்கிள். தாங்ஸ் எங்களுக்கும் டின்னர் ஆஃபர் பண்ணினதுக்கு. ஆனா சாரி அங்கிள் எங்க வீட்டுல எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க. நாங்க வீட்டுக்கு போய் சாப்பிடறோம். ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் அஸ்”

“ஓ!! இட்ஸ் ஃபைன். பத்திரமா வீட்டுக்கு போயிட்டு வாங்கப்பா”

“அப்பா நான் நம்ம கேட்டு வரைக்கும் போய் அவங்களை விட்டுட்டு வந்திடறேன் ப்பா”

“ஏன்டா காலையிலேந்து ஒண்ணா தானே இருந்தீங்க அப்புறமென்ன…சரி சரி போயிட்டு வா.”

“ஓகே அங்கிள் அன்ட் ஆன்ட்டி பை..பை குட் நைட்.”

“குட் நைட் ராமு அன்ட் ராஜேஷ்”

என்று அங்கிருந்து ராஜா வீட்டு வாசலில் நின்றவர்கள்

“டேய் ராமு மங்களம் அக்கா வீட்டுக்கு போயிட்டாங்களே!!! நான் எப்படி இப்போ அந்தப் பொண்ணோட ஃபோடவை காமிச்சுக் கேட்பேன்?”

“என்ன பண்ணறது…..விடு நாளைக்கு காலையில வந்திடுவாங்களே அப்போ நாங்களும் வந்திடுவோம் ஸோ…நாம மூணு பேருமா அவங்க கிட்ட கேட்டாப் போச்சு”

“ம்….வேற என்ன பண்ணறது? ஆனா இன்னைக்கும் எனக்கு தூக்கமில்லை அவ்வளவுதான்”

“எனக்கும் தான் ராஜா”

“எனக்கு இன்னைக்கு தான் முதல் இரவு….”

“என்னது?”

“என்னது?”

என்று ராஜாவும், ராமுவும் ஒருசேர கேட்க…உடனே ராஜேஷ்

“நான் சொல்ல வந்ததை முழுசா கேளுங்கடா…பாதி கேட்டுட்டு இப்படி எல்லாம் ரியாக்ட் பண்ணாதீங்கடா”

“சரி‌…. என்ன சொல்ல வந்தங்கறதை நீயும் இனிமேல் முழுசா ஒரே சென்டன்ஸா சொல்லா கத்துக்கோ….ப்ரேக் விட்டு பேசாத…புரியுதா”

“ம்…ம்…இப்போ எனக்கு பேசக் கத்துத் தர்றது தான் ரொம்ப முக்கியம் பாரு…”

“தெரியாம சொல்லிட்டேன் ராஜேஷ்…மன்னிச்சுக்கோ….இப்பவாவது என்ன சொல்ல வந்தேங்கறதை சொல்லி முடிச்சீனா நாம நம்ம வீட்டுப் போகலாம்.”

“எனக்கு இன்னிக்குதான் ஃப்ர்ஸ்ட் நைட் தூக்கமில்லாம இருக்கப் போறேன்னு சொல்ல வந்தேன்…..ஏன்னா நீங்க ரெண்டு பேரும் அந்த புக்கால நேத்திக்கும் தூங்கலை இன்னிக்கும் தூங்க போவதில்லை ஆனா நான் இன்னைக்கு தான் உங்கள மாதிரி தூங்காம இருக்கப் போறேன்ங்கறதை அப்படி சொன்னேன் போதுமா!!.”

“அதை அப்படி தான் சொல்லணுமா? இப்போ சொன்னா மாதிரி க்ளியரா சொல்லிருக்கலாம் இல்ல”

“ஓகே!! பை டா ராஜா குட் நைட்!”

“பை பை ராமு அன்ட் ராஜேஷ். குட் நைட் டூ யூ டூ”

“எங்கே குட்….ஓன்லி நைட்டு”

என்று மூன்று நண்பர்களும் பிரிந்து அவரவர் வீடுகளுக்குச் சென்றனர். ராமுவையும் ராஜேஷையும் அனுப்பிவைத்துவிட்டு வீட்டினுள் வந்து தன் அப்பா அம்மாவுடன் இரவு உணவருந்தி சற்று நேரம் அவர்களுடன் பேசிவிட்டு தன் ரூமிற்குச் சென்று தன் மெத்தையில் படுத்துக் கொண்டு அவன் எடுத்த அந்த பெண்ணின் படத்தைப் பார்க்க நினைத்து தன் கைபேசியை எடுத்து ஃபோட்டோ கேலரிக்குச் சென்றுப் பார்த்ததில்… அதிர்ந்து போய்… உடனே ராமுவை அவனது கைபேசியில் அழைத்தான்.

“ஹலோ ராமு!!!”

“சொல்லு ராஜா. என்ன விஷயம்?”

“நான் என்னோட மொபைல்ல அந்த பொண்ணோட படத்தை ஃபோட்டோ எடுத்தேன் இல்ல….”

“ஆமாம்.”

“அதைப் பார்க்கலாமேன்னு இப்போ எடுத்துப் பார்த்தேன் ஆனா அதுல இப்போ….”

“அதுல… இப்போ….என்ன ஆச்சு ராஜா? சொல்லுடா …ராஜா…ராஜா….பேசுடா….”

தொடரும்…..Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s