அத்தியாயம் 16: அம்மணி டூ அம்னீஷியா!

“ஹாஸ்பிடல் போய் டாக்டரைப் பார்த்தோம் அவரு டெஸ்ட் ரிப்போர்ட் எல்லாத்தையும் பார்த்ததும்…உங்களை கொஞ்ச நேரம் வெளியே போய் உட்காரச் சொல்லிட்டு எங்ககிட்ட உங்க ரெண்டு பேருக்கும் தலையில அடிப்பட்டதனால உங்களுக்கு ரெட்ரோக்ரேடு அம்னீஷியா ஆகிருக்குன்னு சொன்னாரு”

“அப்படீன்னா?”

“ஆங்!! நானும் ராபர்ட்டும் டாக்டர்ட்ட இதையே தான் கேட்டோம். அதுக்கு அவரு சொன்னாரு……….ஏதாவது விபத்து நேர்ந்து அதனால தலையில அடிப்பட்டு இந்த ரெட்ரோக்ரேடு அம்னீஷியா வந்துச்சுன்னா….யாருக்கு வந்ததோ அவங்க அந்த ட்ரோமா அதாவது எந்த விபத்தால அப்படி ஆச்சோ அதை மட்டும் மறந்திடுவாங்களாம். அது தான் உங்க ரெண்டு பேரு விஷயத்துல நடந்திருக்கு”

“புரியலை ராமு”

“ராஜேஷ்…‌உங்களுக்கு அந்த ட்ரோமா அதாவது அந்த விபத்து நடந்ததற்கு முன்னாடி நடந்த …அதாவது அந்த பதினைந்து நிமிடங்கள் மட்டும் உங்க மூளையிலிருந்து வைப் ஆஃப் ஆயிடுச்சுன்னு சொன்னாரு.”

“ஓ!!! அப்போதைக்கு மட்டும் மறந்திடுமா இல்ல எப்பவுமே ஞாபகம் இருக்காதா?”

“உனக்கு இப்போ ஞாபகமிருக்கா ராஜேஷ்?”

“இல்லையே!!”

“அப்புறம் என்ன கேள்வி கேட்கணுமேன்னு கேட்கிறயா? அது எப்பவுமே ஞாபகமிருக்காது….அதுவுமில்லாம உங்க ரெண்டு பேர் கிட்டேயும் அந்த சம்பவத்தைப் பற்றி கேட்டு ஞாபகத்துக்கு கொண்டு வர முயற்சிக்கவும் கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டார். அப்படி செய்தா அது உங்க மூளைக்கு ஸ்ட்ரெஸ் குடுக்குகறா மாதிரி ஆகி அது உங்களை ரொம்பவே பாதிக்கும்னும் சொன்னாரு. அதுனால தான் நானும் ராபர்ட்டும் அதை அப்படியே மறந்துட்டோம்.”

“சரி வெளியில உட்கார்ந்திருந்த நாங்க உங்க கிட்ட என்ன ஆச்சுன்னு கேட்டிருப்போமே ராமு!!”

“ராமு இவன் நீ சொன்னா மாதிரி கேள்வி கேட்கணுமேனு தான் கேட்கிறான். டேய் ராஜேஷ்… அது உனக்கு ஞாபகமில்ல!!!! ராபர்ட் வந்து நம்ம கிட்ட என்ன சொன்னான்? நம்மளோட ப்ளட் குரூப் அந்த கேம்ப்புல இருக்கறவங்களோட ஒத்துப் போகலைன்னும் அதுனால நாம ரத்தம் குடுக்க முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டாருனு சொன்னது உனக்கு மறந்திடுச்சாக்கும். அதவுமில்லாம நாம உடல் தானம் செய்றதுக்கு சம்மதம்னு ஃபார்ம் ல கையெழுத்து போட்டுட்டோம்னும் சொன்னானே டா அது கூடவா உனக்கு ஞாபகமில்ல?”

“ஆங்!!! ஆங்!!! நல்லாவே ஞாபகமிருக்கு ராஜா”

“அப்புறம் ஏன்டா கேள்வி கேட்ட?”

“சும்மா…. ராமு நல்ல ஃப்ளோல போயிட்டிருந்தானா ….அதுதான் கேள்வி கேட்டா இன்னும் ஏதாவது விவரங்கள் கிடைக்குமான்னு பார்த்தேன்”

“ஆமாம்….ஆமாம்….இவரு பெரிய சி.ஐ.டி சங்கர்லால் பாரு!!! அப்படியே ஏதாவது விவரம் தெரிஞ்சாலும் அதை கலெக்ட் பண்ணி என்ன பண்ணப்போற!!!! அந்த விபத்துக்கு காரணமானவனே நீ தான்….. ஆனா பாரு அந்த கடவுள் அழகா அதை உன் நினைவுகளிலிருந்தே அழிச்சுட்டார்”

“விபத்துக்கு காரணமா ராஜேஷ் இருந்தாலும் அந்த கடவுள் ஏன் எனக்கும் அந்த தண்டனைய குடுத்தார்?”

“ம்….வண்டியை அவன் கிட்ட குடுக்காதேனு நான் சொல்லியும் கேட்காம ராஜேஷ்ட்ட குடுத்த இல்ல அதுக்காக தான் போதுமா!!”

“கடவுள் இருக்காரு ராஜா கடவுள் இருக்காரு….ராமு சொன்னா மாதிரி நீ பைக்கை என்கிட்ட குடுக்கலைன்னா இதெல்லாம் நடந்திருக்காது இல்ல!!! அதை விட்டுட்டு !!! ஏன்டா ராமு!!! ஒரேயடியா எல்லாமே என்னாலதான்னு சொல்லி முடிச்சிட்ட? அந்த லாரிகாரனை விட்டுட்டியே!!”

“ம்….அவனை ஏன் சொல்லணும்? அவன் பாட்டுக்கு பேசாம போயிருந்திருப்பான்…..நீ தான் அவனையும் போக விடாம இரிடேட் பண்ணின”

“சரி!!சரி!!! அப்போ இந்த சம்பவத்தால தான் அந்த புஸ்தகத்தை நம்ம மூணு பேரால மட்டும் திறக்க முடியுதா?”

“அப்படி தான் இருக்கணும். ஆனா எனக்கென்னன்னா இப்போ அது நம்மகிட்ட ஏன் வந்தது? எதுக்காக நமக்கு இதையெல்லாம் ஞாபகம் படுத்திச்சு?”

“என்னடா கேள்வி இது ராமு? ஒருவேளை அந்த பொண்ணு இறந்துப் போய் பேயா வந்திருக்காளோ!!!”

“வந்து என்ன பண்ணப் போறாளாம்?”

“டேய் ராமு ….வந்து என்னப் பண்ணுவாளா!!!
அவளோட சாவுக்கு காரணமான நம்மளை பழிவாங்கப் போறாடா!!”

“ஹா!ஹா!ஹா! ஓ! மை காட் ராஜா….உன் கற்பனை அபாரம் போ!!”

“ஏன்டா அப்படி சொல்லுற?”

“பின்ன என்ன ராஜா!!! அப்படி நம்மளை பழிவாங்க வந்திருந்தா நம்மை கொன்னுட்டு போயிருக்கலாமே!!! எதுக்காக இப்படி ஒரு புக்கை நம்ம கிட்ட வரும்படி செய்து …இப்படி எல்லா விஷயங்களையும் ஞாபகப்படுத்தணும்? அவளைப் பத்தியும் நமக்கு விவரிக்கணும்”

“டேய் ராஜா ஒரு வேளை நாம எதுக்கு சாகப் போறோம்னு எக்ஸ்ப்ளேயின் பண்ணிட்டு கொலைப் பண்ணப்போகுதோ என்னவோ!!!”

“அடேய் பயந்தாங்கோலிகலா….

“அது நடக்கும் போது பார்த்துப்போம்…சரி ராமு….இந்த விஷயமெல்லாம் எங்க அப்பா அம்மாவுக்கு தெரியுமா?”

“ம்…நான் ஊர்லேந்து இங்க வந்ததுமே உங்க ரெண்டு பேரு பேரன்ட்ஸ் கிட்டேயும் சொல்லி…அது சம்மந்தமா உங்க கிட்ட எதுவும் கேட்க வேண்டாம்னும் அப்படியே கேட்டா அது உங்க பையன்களுக்கு தான் ஆபத்தாகிடும்னும் சொன்னதால அவங்க யாருமே அதைப் பத்தி ஒண்ணுமே உங்க கிட்ட கேட்கலை…..ஆனா என்னை நல்லா வறுத்தெடுத்துட்டாங்கப்பா….எந்த தப்பும் பண்ணாத நான் தேவையே இல்லாம வாங்கிக் கட்டிக்கிட்டேன். இதுல என்ன ஒரு டிவிஸ்ட்டுனா….இந்த விஷயத்தை எல்லாம் நான் என் வீட்டுல இன்னும் சொல்லலை. நான் மட்டும் சொல்லியிருந்தேன் அவ்வளவு தான் அப்புறம் என்னை உங்க கூட விட்டிருக்கவே மாட்டாங்க”

“சரி நாம முடிவு பண்ணின கதைக்கு லொக்கேஷன் பார்க்க தானே அங்கே போனோம். அந்த கதையை தான் நீயும் ராபர்ட்டும் ஏதோ சர்வே எடுத்துப் பார்த்ததுல நல்ல ரிவ்யூஸ் வரலைன்னு சொல்லி ப்ரொசீட் பண்ண விடலை அப்புறம் எப்படி அது என்னால தான் நின்னுப் போச்சுன்னு சொல்லுவ ராமு? இனிஷ்யலி ஹவ் டிட் யூ ப்ளேம் மீ ஃபார் இட்?”

“ராஜேஷ் வேற என்ன சொல்லி நான் அந்த ஏற்பாடெல்லாம் நிப்பாட்டறது?”

“ஏன் நிப்பாட்டினன்னு? தான் இப்போ கேட்கிறேன்”

“ம்….அதை உங்க அப்பா அம்மாட்ட தான் நீ போய் கேட்கணும். நாமளும் கடந்த இரண்டரை வருஷமா ஒரு படமெடுக்க ட்ரைப் பண்ணிட்டு தான் இருக்கோம். உன் பேரன்ட்ஸ் உன்னை எப்போலேந்து இதெல்லாம் வேண்டாம்னு திட்ட ஆரம்பிச்சாங்கனு கொஞ்சம் சொல்றியா ராஜேஷ்”

“ம்….அது…..”

“என்ன அது? பதில் சொல்லு…”

“போன வருஷத்துலேந்து தான் ராமு”

“ம்….அதுக்கு முன்னாடி ஒன்றரை வருஷமும் இப்படி தானே இருந்த… அப்போ திட்டாத உன் பேரன்ட்ஸ் ஏன் இந்த ஒரு வருஷமா திட்டுறாங்க!!!! எல்லாம் அந்த விபத்துக்கு அப்புறம் தான்.”

“ஓ!!! அதுனால தான் என் அப்பா அம்மா வெளில எல்லாம் படம் லொகேஷன் பார்க்க போகக்கூடாதுன்னும்…கிட்டக்கையே இல்லாட்டி செட் போட்டாவது எடுத்துக்கோன்னும், அதுக்கு என்ன செலவானாலும் பரவாயில்லைன்னும் சொன்னாங்களா!!!!”

“ஆமாம் ராஜா. அவங்க பயமும் சரி தானே!! அவங்களுக்கு நாம மட்டும் தான் முக்கியம் இல்லையா?”

“ஓ!!! அதுனால தான் நான் வெளியில போறதுக்கே தடைகளங்களை தாண்டி வர்றா மாதிரி பண்ணிட்டாரா என் அப்பா!!!.”

“ம்…..உங்க பேரன்ட்ஸ் என்னைக் கூப்பிட்டு இதை எல்லாம் விட்டுவிடும் படி உங்க கிட்ட சொல்ல சொன்னாங்க…நான் தான் நமக்காக ரெண்டு வீட்டுலேயும் பேசி இனி அப்படி ஆகாம பார்த்துக்கறேன்னு உறுதியா சொல்லி சம்மதம் வாங்கினேன் தெரியுமா!!! அதுக்கு நீங்க ரெண்டு பேரும் தான் எனக்கு நன்றி சொல்லணும்”

“அதுதான் ஆரம்பத்துலேந்தே சொல்லிட்டு இருக்கோமே ராமு”

“ஓகே ஓகே!!! சரி உங்களுக்கு நடந்து முடிந்த விவரங்கள் எல்லாமே சொல்லி முடிச்சிட்டேன்….நீங்க ரெண்டு பேரும் எனக்கு ஒரு சத்தியம் பண்ணி தரணும்”

“சத்தியமா!!! என்னன்னு பண்ணி தரணும் ராமு?”

“நீங்க ரெண்டு பேரும் இனி இதைப் பத்தி எதுக்காகவும் யோசிக்கவோ இல்ல ஞாபகத்துக்கு வரவழைக்கவோ முயற்சிக்க மாட்டோம்னு சத்தியம் பண்ணித்தாங்க”

“ஓ!! ஷுவர் ராமு. நீ எங்களுக்காக எவ்வளவு பண்ணிருக்க….அதுவுமில்லாம எங்க நல்லதுக்காக தானே சொல்லுற…நான் சத்தியமா இனி இதை எல்லாம் என் ஞாபகத்துக்கு கொண்டு வர நிச்சயமா முயற்சிக்க மாட்டேன் ராமு.”

“தாங்ஸ் ராஜா. ராஜேஷ் என்ன நீ பண்ணமாட்டியா?”

“நிச்சயமா ராமு”

“அப்போ பண்ணு ….அதை விட்டுட்டு என்னமோ யோசனையில இருக்க!!”

“பெரிய யோசனையெல்லாம் ஒண்ணுமில்லப்பா….நானும் ராஜாவும் போன ஜென்மத்துல ஏதோ புண்ணியம் பண்ணிருக்கோம்னு நினைக்கிறேன்…..அதுனால தான் எங்களுக்கு இப்படி எங்களுக்கா எதுவும் செய்யும் நண்பனும், எங்களைப் புரிஞ்சு கிட்டு எங்களோட நலனுக்கா எல்லாம் செய்யும் ஃபேமிலியும் கிடைச்சிருக்கு!! இன்னைக்கு சொல்லறேன்…. சத்தியமா நானும் அந்த பழைய ஞாபகங்களை எல்லாம் என்னைக்குமே கொண்டு வர முயற்சிக்க மாட்டேன் ராமு.”

“சூப்பரா சொன்ன ராஜேஷ். உண்மை தான்.”

“தாங்ஸ் ராஜேஷ்”

“அதை நாங்க தான் உனக்கு சொல்லணும் ராமு”

“சரி…நம்ம ராஜேஷ் ஒருத்தியை பார்க்கத்துடித்து, மரத்தில் இடித்து அனைத்தும் மறந்தது வரை….அதாவது அம்மணி டூ அம்னீஷியா வரை எல்லாத்தையும் விலாவாரியா சொல்லிமுடிச்சாச்சு… அதுக்கு இப்படியே மாறி மாறி நன்றி சொல்லிக் கிட்டே இருந்தா அப்புறம் அந்த புக்கை யாரு படிக்கறது… சாரி…சாரி பார்க்கறது!!!”

“அட ஆமா ராமு நாம நம்ம கதையில மூழ்கி புக்கை மறந்திட்டோமே….வா ராஜேஷ் வா வா….மறுபடியும் அந்த புக்கை எடு. இன்னும் என்னென்ன சொல்லுதுனு பார்ப்போம்”

“சொல்லுது …இல்ல ராஜா…காட்டுதுனு பார்ப்போம்”

“சரி நான் மறுபடியும் புக்கைத் திறக்கறேன் வாங்க.”

தொடரும்…….











Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s