அத்தியாயம் 15: நினைவூட்டி

“நான் முகத்துல தண்ணீ தெளிச்சதும் நீங்க ரெண்டு பேரும் எழுந்து கேட்டீங்களே ஒரு கேள்வி!!!”

“அப்படி என்ன கேட்டோம்?”

“ம்….இந்த சினிமால எல்லாம் கேட்பாங்களே..அது மாதிரி எழுந்ததும் …நான் எங்க இருக்கேன்? இது என்ன!! கை காலெல்லாம் காயம்? அப்படீன்னு கேட்டீங்க. நான் நினைச்சேன் அவ்வளவு தான்…அடுத்தது என்னையும் யாருன்னு கேட்கப்போறீங்கனு…ஆனா என்னைப் பார்த்து…டேய் ராமு நாம எங்க இருக்கோம்ன்னு கேட்டீங்க பாரு அப்பதான் என் உசுரு திரும்ப வந்துச்சு…”

“பார்த்தியா ராமு அப்பவும் நாங்க ரெண்டு பேரும் உன்னை மறக்கலை…இது தான்டா நட்பு…நீ எங்க உயிர் நண்பேன்டா!!”

“ஆமா… ஆமா….ராஜேஷ்… உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா அப்புறம் நான் தானே உங்க அப்பா அம்மாட்ட பதில் சொல்லணும்”

“அதுவும் சரிதான்!!! அப்புறம் என்ன பண்ணின?”

“அந்த பொண்ணு எழுந்திரிக்காததால அவ செத்துட்டானு நான் நினைச்சுகிட்டேன். அதனால அவளைப் பற்றியோ இல்லை அங்கே நடந்ததைப் பற்றியோ உங்ககிட்ட எதுவுமே சொல்லவேண்டாம்னு முடிவு பண்ணினேன். அதுவுமில்லாம யாராவது நம்மளைப் பார்க்கறதுக்குள்ள அங்கேந்து மொதல்ல கிளம்பிடணும்னு டிசைட் பண்ணி…ஒரு தடவை நல்லா சுத்திமுத்திப் பார்த்துக்கிட்டேன்…நம்மளை யாராவது பார்க்கிறாங்களான்னு….நாம இருந்த இடத்தைச் சுற்றி ஒரு ஈ காக்காக்கூட இல்லைங்கறதை நல்லா தெரிஞ்சுகிட்டதுக்கப்புறமா ராபர்ட்டோட பைக்கை எடுத்து கொஞ்சம் சரி செஞ்சு…உங்களை அதுல உட்காரச் சொன்னேன். அப்போ ராஜேஷு நீ ஒண்ணு சொன்னீயே யப்பா!!!!”

“என்ன சொன்னேன்?”

“டேய் ..ராமு நான் ஓட்டறேன்டான்னு சொன்ன…அதைக் கேட்டதும் எனக்கு வந்துதே கோபம்….நீ ஓட்டித் தான் இவ்வளவும் நடந்திருக்குனு சொல்ல வாய் வரைக்கும் வந்த வார்த்தைகளை அப்படியே முழுங்கிட்டு….அடிப்பட்டிருக்கும் உனக்கு மேலும் காயப்படுத்த வேண்டாம்னு நினைச்சு….பேசாம வந்து வண்டியில ஏறி உட்காரச் சொன்னேன். அப்போ ராஜா நீ என்ன பண்ணின தெரியுமா”

“என்ன பண்ணினேன் ராமு?”

“அங்கே ஆக்ஸிடென்ட் ஆகியிருந்த காரைப் பார்த்து ….டேய் ராமு யாருக்கோ ஆக்ஸிடென்ட் ஆகியிருக்கு டா….பாவம் ….நாம ஏதாவது உதவி பண்ணலாமானு கேட்ட… அதுக்கு நம்ம ஹீரோ சார் ராஜேஷ் …ஆமா டா ராமு நீ எங்களை காப்பாத்தின மாதிரியே அந்த கார்ல வந்தவங்களையும் காப்பாத்துடானு சொல்லி என் உயிரை ரெண்டு பேருமா மாத்தி மாத்தி எடுத்தீங்க..”

“அப்படியா சாரி டா ராமு.”

“ஆமா ஒரு வருஷத்துக்கு முன்னாடி பண்ணினதுக்கு இப்போ சாரியா?”

“இப்ப தானேடா எனக்கு விவரம் தெரிய வந்தது!!”

“ராஜேஷ் நீ கொஞ்ச நேரம் சும்மு இருடா. அப்புறம் என்ன பண்ணின ராமு?”

“அப்புறம் என்ன? ராபர்ட் பைக்குல அவன் வீட்டுக்கு மூணு பேருமா போனோம். அங்கே அவன்கிட்ட நடந்ததெல்லாம் சொன்னேன்.”

“அப்போ எங்களுக்கு ராபர்ட்டை அடையாளம் தெரிஞ்சுதா!!!”

“என்ன கேள்வி இது ராஜேஷ்!!! அப்போ தெரிஞ்சதால தானே இப்ப நான் சொல்லும் போது நீங்க ரெண்டு பேரும் யார் அந்த ராபர்ட்ன்னு கேட்காம இருக்கீங்க?”

“ஆங்!!! ஆமாம் !! ஆமாம்….எனக்கு இன்னமும் ராபர்ட்டை நல்லாவே தெரியுமே. உனக்கு ராஜா?”

“ஆங்!! தெரியுமே…போன வாரம் கூட நான் அவன்ட்ட ஃபோன்ல பேசினேனே….அப்போ கூட அவன் இதைப் பத்தி எல்லாம் எதுவுமே சொல்லலை….ஆனா….இப்போ எல்லாம் எதுவும் மறக்கறது இல்லை ல ராஜானு கேட்டான்…அதுக்கு நானும் அவன்ட்ட ஏன்டா அப்படி கேட்குறன்னு கேட்டேன் அதுக்கு சும்மா தான்னு சொல்லி மழுப்பிட்டான். நானும் அதை சீரியஸா எடுத்துக்கலை.”

“ஆமா நாங்க ரெண்டு பேரும் இதை எல்லாம் உங்ககிட்ட சொல்ல வேண்டாம்னு தான் இருந்தோம் ராஜா. அதுனால தான் அவன் அப்படி கேட்டுட்டு விட்டுட்டான் ஆனா நான் அதை கூட உங்ககிட்ட கேட்க விரும்பலை. நாங்களே அதைப் பத்தி பேசக்கூடாதுனு இருந்துட்டோம்.”

“சரி சரி ராமு நீ மேல சொல்லு. ராபர்ட் என்ன சொன்னான்?”

“நடந்ததை சொன்னதும் உடனே அவன் உங்களுக்கு தலையில ஏதாவது அடிப்பட்டிருக்கலாம்ன்னும்…..அதனால நீங்க நடந்ததெல்லாம் மறந்திருக்கலாம்ன்னும் சொன்னான். அதைக் கேட்டதும் எனக்கு பக்குனு ஆயிடுச்சு….அதுக்கு என்ன பண்ணலாம்னு கேட்டேன் அப்போ…அவன் முதல்ல உங்களோட வெளி காயங்களுக்கு மருந்து போடலாம்ன்னு சொன்னான். நானும் அவனுமா சேர்ந்து உங்க காயங்களுக்கு மருந்து போட்டோம். அப்புறம் உங்க ரெண்டு பேரையும் அவன் வீட்டுப் பக்கத்திலிருந்த ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போனோம்.”

“அம்மாடி எவ்வளவு நடந்திருக்கு!!!தாங்ஸ் டா ராமு”

“எல்லாம் உன்னால தான் ராஜேஷ்”

“சரி டா …அதுதான் இப்போ மன்னிப்பு கேட்டுட்டேன் ல.”

“நல்ல வேளை அந்த கடவுள் புண்ணியத்துல நமக்கு கை கால் எல்லாம் நல்லாயிருக்கு. ஹாஸ்பிடல்ல என்ன நடந்தது ராமு? டாக்டர் என்ன சொன்னார்?”

“நானும் ராபர்ட்டும் நீங்க ரெண்டு பேரும் ஒரு ஆக்ஸிடென்ட்ல பைக்குலேந்து கீழே விழுந்துட்டீங்கன்னும் ஆனா அதைப் பத்தின எதுவும் உங்களுக்கு தெரியலைன்னும் சொன்னோம்.”

“அதுக்கு அவரு என்ன சொன்னாரு? மெட்யூளா ஆப்ளகான்ட்டால அடிப்பட்டிருக்குனு சொன்னாரா?”

“ம்….சினிமால வர்றா மாதிரியே நிஜத்திலும் வந்தா நல்லா தான் இருக்கும் ராஜேஷ்….அதுக்கா எல்லாம் வந்திடாது….அப்படிப் பட்டிருந்தா கூட அந்த நேரம் மட்டும் தான் மறந்திருக்கும் அதுவுமில்லாம மறுநாளே ஞாபகம் வந்திருக்கணுமே உன் சினிமா கதைப் படி…வரலையே!!!.”

“அப்போ என்ன தான் ஆச்சு எங்களுக்கு?”

“டாக்டர் உங்க ரெண்டு பேருகிட்டேயும் தனிதனியா பேசினாரு. அப்புறம் ஒண்ணா உட்கார வச்சும் பேசினாரு. சில டெஸ்ட்டுக்களுக்கு எழுதிக் குடுத்தாரு. நானும் ராபர்ட்டும் உங்களைக் கூட்டிக்கிட்டுப் போய் எல்லா டெஸ்ட்டும் எடுத்தோம்.”

“ஆங் !!! அப்போ கூட நான் உங்க கிட்ட கேட்டேனே எதுக்குடா இதெல்லாம் பண்ணறீங்கனு? அதுக்குக் கூட நீங்க ரெண்டு பேருமா ஏதோ மெடிக்கல் கேம்ப்புக்காக…..அதுல வர்றவங்களுக்கு நம்மளால முடிஞ்ச ஹெல்ப் ….லைக் ….ப்ளட்டு, இல்ல ஏதாவது உடல் பாகங்களை தானம் செய்யறேன் உறுதி எடுத்துக் கொள்ளலாம்னு தான் இதெல்லாம் பண்ணறோம்னும்….நீங்களும் அதுக்குதான் பண்ணறீங்கனும் சொன்னீங்க….இதெல்லாம் நல்ல விஷயம் தானேனு நான் அதுக்கு சம்மதிச்சேனே….அதெல்லாம் நல்லாவே ஞாபகமிருக்கு ராமு”

“அட ஆமாம் ராஜா. உங்க ரெண்டு பேருக்கும் டெஸ்ட் எடுக்கறதுக்கு நானும் ராபர்ட்டும் டெஸ்ட் எடுத்துக்குறா மாதிரி ஆக்ட் பண்ண வேண்டியிருந்தது. அப்படி பண்ணலைன்னா எங்களை கேள்வி கேட்டே கொன்னுடுவீங்களேன்னு தான் நாங்க நடிக்க வேண்டியிருந்தது!”

“ஓ!! மை காட்!!! அப்புறம் என்ன ஆச்சு ராமு?”

“அப்புறம் என்ன ராஜேஷ்….எல்லா டெஸ்ட் ரிசல்ட்டும் வர்றதுக்கு இருபத்தி நான்கு மணி நேரமாகும்னும்….அந்த ரிப்போர்ட்டை எல்லாம் அடுத்த நாள் கலெக்ட் பண்ணிக்கிட்டு டாக்டரை வந்து பார்க்கும் படியும் சொல்லி அனுப்பிட்டாங்க. நாம அன்னைக்கு நைட்டு அவங்க அவங்க வீட்டுக்கு போயிடறதா தான் ப்ளான் போட்டிருந்தோம்….ஆனா இப்படி ஆனதுல வேற வழியில்லாம நானும் ராபர்ட்டும் உங்க வீட்டுக்கெல்லாம் ஃபோன் பண்ணி நமக்கு இன்னும் கொஞ்சம் வேலையிருக்கு அதுனால ஊருக்கு வர்றதுக்கு இன்னும் ரெண்டு நாள் ஆகும்னும் சொன்னோம். அவங்க உங்ககிட்ட பேசணும்னு சொன்னதும் நீங்க பிஸினும் அப்புறமா பேச சொல்லறோம்னும் சொல்லி வச்சிட்டு…. உங்க ரெண்டு பேரையும் நாங்க சொன்னா மாதிரியே உங்க பேரன்ட்ஸ் கிட்ட உங்களையும் சொல்ல வச்சோம்…..அதுக்கு நாங்க பட்ட பாடு இருக்கே…..அந்த கடவுளுக்கு தான் தெரியும்!!!! எத்தனை கேள்விகள் கேட்டீங்கடா? அப்புறமா ராபர்ட் உங்ககிட்ட… மறுநாள் அந்த மெடிக்கல் கேம்ப்புக்கு போகணும்னு சொல்லி உங்களை நம்ப வச்சு பேச வச்சான். நீங்களும் நாங்க சொன்னா மாதிரியே பேசிட்டு வச்சிட்டிங்க”

“அப்படீன்னா எங்களுக்கு எங்க அப்பா அம்மா…எங்க ஃபோன் நம்பர்ஸ் எல்லாமே ஞாபகமிருந்திருக்கு இல்ல”

“ஆமாம் ராஜா. அதுதான் எனக்கும் ராபர்ட்டுக்கும் ஆச்சர்யமா இருந்தது.”

“அப்படி தெரியலைன்னா எப்படி இப்போ அவங்க கூடவே இருக்கீங்கன்னு கேட்பியோன்னு நினைச்சுத் தான் நான் அதை கேட்காம விட்டுட்டேன்!.”

“சரி ராமு அடுத்த நாள் ஹாஸ்பிடல் போனோமா? டாக்டர் என்ன சொன்னாரு?”

தொடரும்…….










Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s