அத்தியாயம் 14:விளையாட்டு வினையானது!!

மூன்று பேரும் அந்த படத்திலிருந்த மூன்று பையன்களையும் உற்றுப் பார்த்தனர்.

“டேய் இது நாமளாடா?”

“ஆமாம் ராஜேஷ்!! ஆனா எப்படி இந்த புத்தகத்துக்குள்ள இருக்குற ஓவியத்துல நாம இருக்கோம்? உனக்கு ஏதாவது தோணுதா ராஜா”

“கொஞ்சம் குழப்பமா தான் இருக்கு ராமு…ஆனா அது நாம தான்னு வச்சுக்கிட்டாலும்…நாம எப்போ இப்படி பைக்ல மூணு பேரா போயிருக்கோம்? அதைத் தான் யோசிச்சிக்கிட்டிருக்கேன்!!”

“ஆங்!!! எனக்கு ஞாபகம் வந்திடுச்சு!!! ஆனா அந்த காரு, பொண்ணு இதெல்லாம் இடிக்குதே!!”

“எப்போ போனோம் ராஜா? எங்கே சொல்லு!!”

“அதுதானே தெரியலை….ஆனா இந்த இடமொல்லாம் நான் பார்த்த மாதிரியே ஒரு உணர்விருக்கு.”

“ம்……நாம மூணு பேருமா நம்மளோட மொதோ கதைக்கு லொகேஷன் தேடி போன வருஷம் ஒரு டீ எஸ்டேட்டுக்குப் போயிருந்தோம்…?அதோட பேரு கூட தைஷோலா டீ எஸ்டேட் ஊட்டிப் பக்கத்துல இருக்கு!!”

“ஆமாம்!!! ராமு நீ சொல்லறது உண்மைன்னா…. ஆனா…. நாமளா இப்படி வண்டியை ஓட்டினோம்!!”

“வண்டி ஓட்டுறது இருக்கட்டும் அப்போ நாம முதல் பக்கங்கள்ல பார்த்தது காட்டுவாசிங்க இல்ல ராஜா கிராமவாசிங்க!!!”

“அதெல்லாம் இருக்கட்டும் ராமு…. அப்படீன்னா அந்த பொண்ணு சென்னையிலேந்து ஊட்டி வரைக்கும் டிரைவ் பண்ணிட்டா போயிருக்கும்? அதுவும் மாசமா இருக்குற நேரத்துல!!! எப்படியும் மினிமம் டென் ஹவர்ஸ் ஆகிருக்குமே”

“இப்போ அதைப் பத்தி என்னடா ராஜேஷ்? அவங்க எங்கயாவது ஃப்ரெண்டு வீட்டுல தங்கிட்டு போயிருக்கலாம் …இல்ல இங்கேந்து ஃப்ளைட்ல கோயம்புத்தூர் போயிட்டு அங்கேந்து ஃப்ரெண்டோட கார்ல போயிருக்கலாம்!!”

“ராமு….அப்படி ஃப்ரெண்டோட கார்ல போயிருந்தா இன்னேரம் அந்த ஃப்ரெண்டு அவங்க கணவர்ட்ட சொல்லிருக்க மாட்டாங்களா?”

“அது தானே!!! ராஜேஷ் சொல்லுறதும் சரி தானே ராமு!!”

“அப்போ அன்னைக்கு என்ன நடந்ததுன்னு நான் சொன்னாதான் இதுக்கு ஒரு சல்யூஷன் கிடைக்கும்!!”

“சீக்கிரம் சொல்லு ராமு”

“ஓ!!! ஷிட் …..அப்போ நாம மூணு பேரு தானா?”

“என்னடா சொல்ல வர ராமு. கொஞ்சம் தெளிவா சொல்லுடா”

“டேய் நாம அன்னைக்கு லொகேஷன் பார்த்துட்டு காட்டு வழியா பைக்குல வந்துகிட்டிருந்தோம்….ராஜா தான் பைக்கை ஓட்டிட்டு வந்துட்டிருந்தான். அடர்த்தியான காட்டுக்குள்ள கிச்சப்பட்டிங்கற கிராமத்தோட போர்டு ஒண்ணு இருந்தது. அதைப் பார்த்து நாம கூட இந்த காட்டுக்குள்ள ஒரு கிராமம் அதுக்கு ஒரு போர்டுன்னு கிண்டலடிச்சுக்கிட்டே அந்த கிராமத்தை நெருங்கும் போது தான் இந்த கார் நமக்கு முன்னாடி அந்த கிராமத்து மண் ரோடு வழியா வந்து சேர்ந்துச்சு……அப்போ இந்த ராஜேஷ் தான் அந்த பொண்ணை காருக்குள்ள எட்டிப் பார்த்தான்…ஆனா அவனால பார்க்க முடியல…உடனே …ராஜா… உன்கிட்ட இருந்து பைக்கை அவன் வாங்கி ஓட்டி ஓவர்டேக் பண்ணினான்…. அவளைப் பார்க்கலாம்னு நினைச்சு வண்டியைக் கண்ணா பின்னானு ஓட்டிகிட்டு வந்தான். அப்போ தான் நமக்கு பின்னாடி ஒரு லாரி வந்தது. அந்த லாரிக்காரன் வழிவிடச் சொல்லி ஹார்ன் அடிச்சுக்கிட்டே இருந்தான். நாம ரெண்டு பேரு சொல்லியும் இந்த ராஜேஷ் கேட்கவேயில்லை. மறுபடியும் மறுபடியும் இதோ இப்போ இந்த புத்தகத்துல பார்த்தோமே அதே மாதிரி தான் ஓட்டினான். அப்போ தான் அந்த சம்பவம் நடந்தது”

“டேய் என்னடா சொல்லுற ராமு எனக்கு எதுவுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குதேடா!!!! ராஜா உனக்கு ஏதாவது ஞாபகமிருக்கா?”

“இல்லை ராஜேஷ்…சுத்தமா இல்லை. டேய் ராமு நீ கதை விடலையே”

“ராஜா நான் ஏன் கதை விடணும்? அதுதான் அந்த புத்தகமே காட்டிச்சு இல்ல!!”

“அதுக்கில்ல டா ராமு….நாம மூணு பேரும் போனோம்னு சொல்லுற ஆனா அது எப்படி உனக்கு மட்டும் ஞாபகமிருக்கு ஆனா எங்க ரெண்டு பேருக்கும் ஞாபகமில்லை?”

“ராஜேஷ் நான் அந்த சம்பவத்தை மறந்து ஒரு வருஷமாகுதுடா!!! அது ஞாபகத்துல இருக்கக் கூடாதுன்னு தான் இருந்தேன்!!! ஆனா இந்த புத்தகம் எனக்கு ஞாபகப் படுத்திடுச்சு”

“ஹலோ என்ன சம்பவம் சம்பவம்னு ரெண்டு மூணு தடவ சொல்லிட்ட….அப்படி என்ன தான் நடந்தது”

“ம்…எல்லாம் உன்னால தான் ராஜேஷ்…நீ மட்டும் கொஞ்சம் ஒழுங்கா இருந்திருந்தேனா நாம அப்பவே அந்த கதையை படமா எடுத்திருப்போம்…எல்லாமே உன்னால வீணாப் போச்சுடா”

“டேய் ராமு …..அது தான் இவன் ஆரம்பத்துல இருந்தே அந்த பொண்ண சீரழிச்சாங்களா? இல்ல சீரழிக்க தூக்கிக்கிட்டுப் போறாங்களானு சொல்லிக்கிட்டிருந்தானோ….ஆனா ராமு நீ சொல்லுறப் படிப் பார்த்தா…அதெல்லாம் ஏன் எங்களுக்கு ஞாபகம் இல்லை”

“டேய் ராமு, ராஜா என்னடா ரெண்டு பேருமா சேர்ந்து என்னை அமைதிப்படை சத்தியராஜ் ரேஞ்சுக்கு பில்ட்அப் கொடுக்கறீங்க….நான் நல்ல பையன் டா”

“நீ நல்லப் பையன் தான் ராஜேஷ் ஆனா அன்னைக்கு அந்த ஒரு பதினைந்து நிமிடங்கள் மட்டும் நீ இப்போ போலவே இருந்திருந்தீனா எல்லாருக்கும் நல்லா இருந்திருக்கும்”

“சரி சரி எனக்கு சர்ட்டிபிகேட் கொடுத்ததெல்லாம் போதும் மேல சொல்லு….மொதல்ல இதல்லாம் ஏன் எனக்கும் ராஜாவுக்கும் மட்டும் ஞாபகமில்லைன்னு சொல்லு”

“அதுக்கு என்னை முழுசா சொல்லவிட்டா தானே!!!”

“உஷ்…ராஜா….சரி ராமு.. இனி நாங்க ரெண்டு பேரும் இடையில பேச மாட்டோம். நீ முழுசா சொல்லி முடி”

“அப்படி நீ கண்டபடி வண்டி ஓட்ட ….சில நேரம் அந்த காருக்கு முன்னாடியும் பல நேரம் காருக்கு பின்னாடியும் மாறி மாறி ஓட்டிட்டிருந்தப்போ…நமக்கு பின்னால வந்துட்டிருந்த லாரி காரன் கடுப்பாகி நம்மளை ஓரங்கட்ட செய்யறேன்னு லைட்டா இடிக்குற மாதிரி பயமுறுத்த நினைச்சிருப்பான் போல …ஆனா அவன் நிஜமாவே நம்ம வண்டியை தட்டினான். நம்ம வண்டியை தட்டினதும் உனக்கு பாலன்ஸ் போயிடுச்சு…தடுமாறிகிட்டே நீ அந்த கார்ல தட்டாம நகரப் பார்த்த ஆனா அந்த பொண்ணு தன் காருக்குப் பின்னாடி என்ன நடக்குதுன்னு தெரியாம உன்னை முன்னாடி போக விடக்கூடாதுன்னுட்டு நினைச்சுதோ என்னவோ ….அது அந்த கடவுளுக்கும் அந்த பொண்ணுக்கும் மட்டுமே தெரிஞ்ச விஷயம்…..நம்ம வண்டியை நீ டைட்டுக்கு திருப்பின …அந்த பொண்ணும் தன்னோட காரை ரைட்டுக்குத் திருப்பினா….நீ நேரா போய் அவ வண்டி பின்னாடி இடிச்சுட்ட…..அதுனால நாம விழுந்தோம். நீ இடிச்ச வேகத்துல அந்த பொண்ணும் நிலைத் தடுமாறி அங்க இருந்த மரத்துல போய் மோதிடுச்சு. அந்த லாரிக்காரன் சர்ன்னு போயிட்டான். கொஞ்ச நேரத்துல எல்லாமே நடந்து முடிஞ்சிடுச்சு….நான் பின்னாடி உட்கார்ந்திருந்ததால வண்டி இடிச்சதும் குதிச்சிட்டேன் அதுனால லேசான சிராய்ப்பு தான் இருந்தது. ஆனா நீங்க ரெண்டு பேரும் விழுந்ததுல உங்க உடம்புல காயங்கள் ஏதும் படலைன்னு நினைச்சுக்கிட்டே உங்களைப் பார்த்து எழுந்திரிக்க சொன்னேன் ஆனா நீங்க எழுந்திரிக்கவேயில்லை உடனே ஓடிப்போய் அந்த பொண்ணப் பார்த்தேன்!!!! ஆங் இப்போ ஞாபகம் வருதுடா!!!! அந்த பொண்ணு கையில ஒரு கருப்புப் பட்டாம்பூச்சி டாட்டூ இருந்தது. அவ நம்ம மூணு பேரையும் உற்றுப் பார்த்து….”காப்பாத்துங்க” னு சொல்லிட்டு மயக்கமாயிட்டான்னு தான் முதல்ல நான் நினைச்சேன் ….அவளைக் காப்பாற்றுவதா இல்லை உங்களைக் காப்பாற்றுவதாங்கற குழப்பம் வந்தது. எனக்கு கார் ஓட்டத் தெரியாட்டாலும் ஏதோ ஒரு குருட்டு தைரியத்துல அந்த காரை எடுத்து மூணு பேரையும் காப்பத்தலாம்னு முயற்சிப் பண்ணினேன்…ஆனா அந்த கார் நல்லா மரத்துல இடிச்சிருந்ததால என்னால எடுக்க முடியலை. முடியலைன்னு சொல்லுறதைவிட தெரியலைன்னு தான் சொல்லணும். உடனே அந்த காருக்குள்ள இருந்த தண்ணீ பாட்டிலை எடுத்து முதலில் அந்த பொண்ணு முகத்துல தெளிச்சேன் அந்த பொண்ணு எழுந்திரிக்கலை….அவளை தட்டிப்பார்த்தேன் அசையவேயில்லை….பயமாகிடுச்சு…..
அப்புறம் உங்க முகத்துல தண்ணி தெளிச்சேன்….எழுந்துக்கிட்டீங்க….ஆனா எழுந்ததும் தான் எனக்கு ஒரு ஷாக் குடுத்தீங்கடா!!”

“அப்படியா!! என்ன ஷாக் அது?”

தொடரும்……





Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s