“தெரியலையே ராமு!! என்ன அது?”
“அது தான் டீச்சிங் ப்ரொஃபஷன் லோகோ… ராஜேஷ்”
“ஓ!! அப்படீன்னா இந்த வண்டி ஏதோ டீச்சரோடதா?”
“டீச்சரோடதாவும் இருக்கலாம் இல்லாட்டி ஏதாவது புரொபஸரோடதாகவும் இருக்கலாம்”
“டேய் ராமு ரெண்டும் ஒண்ணு தானே….என்ன!!! பெயர் தான்… வேற வேற …ஆனா ரெண்டு பேருமே டீச் தானே பண்ணறாங்க?”
“ஆமா….ஆனா!!!”
“என்ன ஆனா ஆவன்னான்னுட்டு…அப்படிப் பார்த்தா மங்களம் அக்கா சொன்ன பொண்ணு தானா இந்த புக்குல இருக்குற பொண்ணு? டேய் ராஜா நீ சந்தேகப்பட்டது சரி தான் டா”
“ஆங்…இதுக்கு தான் நான் ரெண்டும் வேற வேறன்னு சொல்ல வந்தேன்….ஏன்னா டீச்சர்ன்னு நினைச்சீங்கன்னா அந்த அக்கா சொன்ன கதையோட ஒத்துப் பார்ப்பீங்க அதே புரொபஸர்ன்னு எடுத்துக்கிட்டா…தெளிந்த மனசோட மேல படிப்பீங்க….சரி தானே!!!”
“ராஜேஷ் அவசரப் படவேண்டாம். ராமு சொல்லறா மாதிரியே எடுத்துக்கிட்டு மேலே படிப்போம். நீ சொன்னா மாதிரி மனசுல பட்டுட்டா அப்புறம் அதே ஆங்கிள் ல தான் நம்மளோட தாட்ஸ் எல்லாமே போகும். அடுத்தடுத்தப் பக்கத்தைப் பார்த்துட்டு ஒரு முடிவுக்கு வரலாமே!!”
“அதுவும் சரிதான் ராஜா அன்ட் ராமு ….சரி சரி வாங்க நெக்ஸ்ட் பேஜ்ஜுக்கு போவோம்”
“ம்…இதோ….இந்த பக்கத்துல என்ன எல்லாருமா ரவுண்டா ஒரு பொண்ண சுத்தி உட்கார்ந்திருக்காங்க. அந்த பொண்ணுக்கு எல்லாருமா என்னென்னெமோ தட்டுல வச்சுக் குடுக்குறா மாதிரி வரைஞ்சிருக்கே…ஏதாவது விசேஷமா இருக்குமோ!!”
“ம்..ம்….லைவ் ஆரம்பிச்சிடுச்சு…உஷ்…பார்ப்போம் பேசாம இருங்க”
“இந்தா மா சாப்பிடு. இது எல்லாமே எங்க காட்டுல விளைஞ்ச சுத்தமான காய்கறிகளும் பழங்களும் தான். எப்பவும் வந்துட்டு சும்மா ஏதோ கொஞ்சமா சாப்டுட்டு போயிடுவ…ஆனா இன்னைக்கு அது கூடாது….ஏன்னா நீ மாசமா இருக்க….சரி தானே தாயி”
“அட உங்களுக்கு எப்படித் தெரிஞ்சுது?? இதை இன்னும் நான் என் கணவர் கிட்ட கூட சொல்லலை. ஆனா நீங்க எந்த டெஸ்ட்டும் பண்ணாமயே கரெக்ட்டா சொல்லிட்டீங்களே…நீங்க க்ரேட்”
“அப்படீன்னா?”
“அப்படீன்னா நீங்க பெரிய ஆளுன்னு அர்த்தம் பாட்டிமா”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல தாயி…மொகத்தப் பார்த்தே நாங்க சொல்லிப்புடுவோம் இல்ல….சரி சரி பேசிக்கிட்டிருந்தது போதும் சாப்பிடு தாயி. எங்க புள்ளைங்களுக்கு பாடம் சொல்லிக் குடுக்குற தெய்வம்மா நீயீ!!! எங்க புள்ளைங்களும் படிச்சு உன்னைய மாதிரியே பெரிய ஆளா ….அதுக்கு என்னமோ சொன்னியே தாயி…..என்னது…”
“அட கிழவி வரலைன்னா விட்டுத்தள்ளு…உன் பேரப்புள்ளைங்க இன்னும் கொஞ்ச நாள்ல சொல்லுவாங்க! அவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்க”
“அட இரு புள்ள….தாயி சொன்னது என்னன்னு கொஞ்சம் யோசிக்க அவகாசம் தரமாட்டீங்கிறியே!!! ஆங் புடிச்சுப்புட்டேன்….”கிரைட்”…சரிதானே தாயி”
“பரவாயில்லையே பாட்டிமா ஓரளவு சரியா சொல்லிட்டீங்களே…நீங்க க்ரேட் தான்…சரி எனக்கு நேரமாச்சு நான் பசங்களுக்கு பாடம் சொல்லிக் குடுத்துட்டு கிளம்பணும்…பசங்களா எல்லாரும் தயாரா?”
“தாயி நீ சாப்பிடலையே!!”
“எனக்குப் போதும் பாட்டியம்மா…இதுக்கு மேல சாப்பிட்டேன்னா அப்புறம் தூங்கிடுவேன்…அப்புறம் பசங்களுக்கு பாடம் யார் சொல்லிக் குடுக்கறதாம்?”
“சரி தாயி நீ போய் புள்ளைங்களுக்கு பாடம் எடும்மா….என்ன நீயும் இத்தினி நாளா வந்துட்டு போற….எங்களுக்கு என்னென்னவோ வசதி எல்லாம் செஞ்சுக் குடுத்திருக்க …குடுத்துக்கிட்டும் இருக்க….ஆனா நீ யாரு என்னங்கற விவரத்தை மட்டும் சொல்லவே மாட்டேங்கிறியே தாயி.”
“அது எதுக்கு உங்களுக்குப் பாட்டி. நான் வாராவாரம் வருவேன் உங்களுக்கு வேண்டியதை செய்வேன்…பசங்களுக்குப் பாடம் சொல்லிக் குடுப்பேன். நானும் உங்களை மாதிரி ஒரு பொண்ணு ….இது தெரிஞ்சா போதும் பாட்டி….”
“டீச்சர் கண்ணு நீ நூறு வருஷம் நல்லா இருப்ப தாயி. உன் பெயரு கூட எங்களுக்கு தெரியாது…அத விடு தாயீ…என்னத்துக்கு பெயரு எல்லாம்….நீ எங்களுக்கு என்னைக்குமே டீச்சரம்மா தாம்மா”
“சரி பாட்டி நான் பாடம் எடுக்கப் போறேன். அதை முடிச்சிட்டு அப்படியே வீட்டுக்கு கிளம்பிடுவேன் ….ஏன்னா இந்த தடவை உங்க கூட எல்லாம் நிறைய நேரம் செலவழிச்சாச்சு அதுனால வகுப்பு முடிஞ்சதும் கிளம்பிடுவேன் சரியா”
“சரி தாயி”
“என்னடா லைவ் முடிஞ்சு மறுபடியும் வெறும் ஓவியமாயிடுச்சு”
“அப்படீன்னா இந்த பக்கத்துல அவ்வளவு தான்னு அர்த்தம் ராஜேஷ். ஸோ இந்த பொண்ணு காட்டு வாசிக் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் குடுக்க காட்டுக்குள்ள தன்னோட கார்ல போயிருக்கா அப்படீங்கறது புரியுது”
“எஸ் ராமு!!! மங்களம் அக்கா சொன்னாங்களே…அந்த பொண்ணு பெரிய சமூக சேவகின்னு…ஞாபகமிருக்கா?!”
“ம்…ஞாபகமிருக்கு ராஜா…சரி ராஜேஷ் அடுத்தப் பக்கத்துக்கு போ!!”
“ம்…இதோ…….இது என்ன மரத்தடியில ஒரு டீச்சர் பசங்களுக்கு பாடம் சொல்லிக் குடுத்துக்கிட்டிருக்கறா மாதிரி ஒரு படமிருக்கு!!”
“ராஜேஷ்……இந்த ஆறுவது வாய்ப்பாடு சத்தம் ரொம்ப வருதே!!! சீக்கிரம் அடுத்தப் பக்கத்துக்கு போ….”
“ஏய் அந்த மங்களம் அக்கா சொன்ன மாதிரி இந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்கா டா”
“ராஜேஷ்….ப்ளீஸ் அடுத்தப் பக்கத்துக்கு போயேன்…..இந்த சத்தத்தைக் கேட்டு மங்களம் அக்கா வந்திடப் போறாங்க”
“ஓகே ஓகே!!!ஆங்!!! ஆங்!!! திருப்பிட்டேன் மறுபடியும் அதே காரு ஓடுது?!!”
“ஏய் இங்க பாருங்கடா!!!! இந்த தடவை அந்த காருக்குப் பின்னாடி மூணு பசங்க பைக்குல அந்த பொண்ணை ஃபாலோ பண்ணுறா மாதிரி இல்ல…..”
“அட ஆமாம்!! அந்த பொண்ணை கார் ஓட்ட விடாம ஓவர் டேக் பண்ணுவதும்…இடிக்கறா மாதிரி போறதும் ….அவனுகளுக்குப் பின்னாடி ஒரு லாரி வேற வருது!!!….”
“ஒரு வேளை இந்த லாரி இடிச்சு தான் அந்த பொண்ணு கார் ஆக்ஸிடென்ட் ஆகி இறந்து போயிருக்குமோ!!!”
“இருக்கலாம்….இல்லாமையும் இருக்கலாம்”
“இல்லே ராஜா!!! அந்த காருக்குப் பின்னாடி நசுங்கியிருந்ததைப் பார்த்தா எனக்கு அப்படித்தான் நினைக்கத் தோணுது.”
“ஆமாம் ஆமாம்!!! நீ சொல்லறதும் சரியா தான் இருக்கு….ஒரு வேளை நீ சொன்னா மாதிரி அந்த லாரிக்காரன் ஒரு தட்டு தட்டிட்டு போயிருப்பானோ?”
“இல்ல இந்த மூணு பசங்க ஏதாவது சில்மிஷம் பண்ணறதுக்காக அந்த பொண்ணோட காரை ஆக்சிடென்ட் பண்ண வச்சிருப்பாங்களோ?”
“ராஜேஷ் ….நீ சொல்லறதும் யோசிக்க வேண்டிய விஷயம் தான்….ஆனா அப்போ ஏன் ஒரு லாரியையும் அந்த படத்துல காட்டிச்சு?”
“மே பீ நம்மள டைவேர்ட் பண்ணவோ என்னவோ!!!”
“ஆமா ராஜேஷ்….நாம இங்க படமா பார்த்திட்டிருக்கோம் நம்மளை டைவேர்ட் பண்ண”
“ஆமாம் ராமு…. இவன் ஏன் அப்பேலேந்து ஒரு பொண்ணை சீரழிக்குற லைன்லேயே யோசிக்கறான்?”
“அதுதான் எனக்கும் புரியலை ராஜா. நிறைய சினிமா பார்த்த இம்பாக்ட்னு நினைக்கிறேன்…ஹா!ஹா!ஹா!!”
“ஹா! ஹா! ஹா!!”
“டேய்!! டேய் !! ரெண்டு பேரும் சிரிச்சது போதும்டா….அந்த பசங்களை கொஞ்சம் ரெண்டு பேரும் நல்லா பாருங்க”
“ஆங் !!!ராஜேஷ்….என்ன இது!!!!! உனக்கு தோனறது தான் எனக்கும் தோனுது….டேய் ராமு உனக்கு!”
“ஆமாம் …உங்களுக்கு தெரியறது தான் எனக்கும் தெரியுது ….நீங்க நினைக்கறது தான் நானும் நினைக்கறேன்….ஆனா …இது எப்போ எங்கே?”
தொடரும்……