அத்தியாயம் 12: விவரம்! விபத்து!

“இல்ல தம்பி அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை.”

“அப்படீன்னா அந்த பொண்ணுக்கும் அவங்க வீட்டுக்காரருக்கும் ஏதாவது சண்டைச் சச்சரவுனு இருந்திருக்கலாம்!! அதுனால அந்த பொண்ணு கோவிச்சுக்கிட்டு எங்கேயாவது போயிருக்கலாம் இல்ல”

“அப்படி இருக்க வாய்ப்பே இல்ல தம்பி. அந்த அம்மா மேலே ஐய்யாவும், ஐய்யா மேல அம்மாவும் கொள்ள ஆசை, ப்ரியம், பாசம், அன்பு வச்சிருந்தாங்க அது அவங்க நடந்துக்கிட்ட விதத்துலேந்தே அவங்க வீட்டுல வேலைப் பார்த்த எங்களுக்கெல்லாருக்குமே நல்லா தெரியும். அவங்க காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க தம்பி.”

“அப்போ பணப்பிரச்சினை ஏதாவதா இருக்குமா? ஏதாவது கடன் கிடன்”

“ச்சே ச்சே!!! அவங்க ரொம்ப பணக்காரங்க தம்பி. அந்த ஐய்யாவுக்கு பத்து தலைமுறைக்கு வேண்டிய சொத்திருக்குதாம். அவரு சம்பாதிக்கணும்னு இல்லையாம். ஆனாலும் அவரு படிச்சப் படிப்பு வீணாகக்கூடாதுன்னுட்டு இலவசமா நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்தாரு. நான் கூட எங்க வீட்டுல யாருக்காவது உடம்பு முடியாம போச்சுதுன்னா…ஏன் எனக்கே ஏதாவது முடியலைன்னா அவருகிட்ட தான் போவேன். எங்க தெருவுல எல்லாருமே அவருகிட்ட தான் போவோம். நல்ல கைராசியான டாக்டர் தெரியுமா. அந்த ஐய்யாவோட அப்பா பெரிய அரசியல்வாதி. அந்த டீச்சர் அம்மா தான் கொஞ்சம் நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்தவங்க.”

“அவங்க கல்யாணத்தை அந்த அரசியல்வாதி அப்பா ஏத்துக்கிட்டாரா?”

“ம்…அவர் ஒண்ணுமே சொல்லலையாம். பையனோட விருப்பம் தான் தன் விருப்பமும்னு சொல்லி சிறப்பா கல்யாணம் பண்ணி வச்சாரு. நாங்கெல்லாம் போயிருந்தோம். என்ன வரவேற்பு!! என்ன சாப்பாடு!! நானெல்லாம் அப்படி ஒரு கல்யாணத்தைப் பார்த்ததே இல்ல தம்பி. அன்னைக்கு தான் மொதோ மொதோ பார்த்தேன்.”

“அந்த டீச்சருக்கு அப்பா அம்மா கூடபிறந்தவங்கன்னு யார் யார் இருந்தாங்க? நீங்க கல்யாணத்துக்கு போணீங்களே அதுனால கேட்கிறேன்”

“அப்படி எல்லாம் யாருமே அந்த பொண்ணுக்கு இல்ல தம்பி. அதுவே ஒரு அனாதை ஆசிரமத்துல வளர்ந்து படிச்சிருக்கு. அதுனால தானே டாக்டரோட அப்பாவே எல்லா செலவும் செய்து அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சாரு.”

“அதுக்கப்புறம் அதாவது அவங்க கல்யாணத்துக்கப்புறமா…அந்த ஐய்யாவோட அப்பா அவரு டாக்டர் பையன் வீட்டுக்கு வந்துட்டு போயிட்டு இருந்தாராக்கா”

“ஆங் மூணு நாலு தடவை வந்திருக்கார் தம்பி. நானே பார்த்திருக்கேன்.”

“அந்த டாக்டர் அவருக்கு ஒரே புள்ளையாக்கா?”

“இல்லை தம்பி அதுதான் அப்பவே சொன்னேனே …அவருக்கு ஒரு தம்பி இருக்காரு. அவருக்கும் கல்யாணமாகிடுச்சு. அவரு அவர் அப்பா மாதிரி அரசியல்ல ரொம்ப ஈடுபாட்டோட இருக்காரு….இப்ப ஏதோ எம்.எல்.ஏ ஆகிட்டாருன்னு பேப்பர்ல பாத்துத் தெரிஞ்சுக்கிட்டேன். அந்த பையன் கூட தான் ஐய்யாவோட அப்பா இருந்தாரு. அப்பப்ப வந்து ஐய்யாவைப் பார்த்துட்டுப் போவாரு”

“ஆனா இப்போ உங்க டாக்ட்டரோட தம்பியும், அவர் வைஃப்பும் அவருகூட தானே இருக்காங்க…அப்படீன்னா அந்த அரசியல்வாதி அப்பாவும் உங்க ஐய்யா வீட்டுல தான் இருக்காறா?”

“இல்லை தம்பி அவரு வரலை. சொல்லப் போனா அவரு அந்த பொண்ணு காணம போயிடுச்சுன்னு ஐய்யா சந்தேகப்பட்டு போலீஸுல சொன்ன அன்னைக்கு வந்தாரு. டாக்டர் ஐய்யாவை சமாதாப்படுத்தினாரு….அதுக்கப்புறம் அவர் ரெண்டு தடவை வந்ததா தோட்டக்காரர் என்கிட்ட சொன்னாரு…அப்புறம் அவரையும் வேலையிலேந்து அந்த அம்மா துரத்தி விட்டதும் எனக்கு செய்தி சொல்ல ஆளில்லாம போயிட்டாங்க…அதுனால அதுக்கப்புறம் அவரு வந்தாரா இல்லையான்னு எனக்கு தெரியாது தம்பி.”

“நீங்க உங்க டாக்டர் ஐய்யாவ அவரு வைஃப் காணாம போனதுக்கு அப்புறம் பார்த்தீங்களா? அவர் க்ளீனிக் வந்தாரா?”

“இல்ல தம்பி அந்த அம்மா காணாம போனதுலேந்து அவரு போலீஸ் ஸ்டேஷனுக்கு இரண்டு மூணு தடவை போயிட்டு வந்தாரு அவ்வளவு தான் எனக்குத் தெரியும்….அதுக்கப்புறம் அவரு வெளியில எங்கயுமே வரலைன்னு தான் நினைக்கிறேன்…. அவரோட ஹாஸ்பிடல் கூட மூடித்தான் இருக்கு…ஆமா ஏன் நீங்க அவங்களைப் பத்தி துருவி துருவி கேட்குறீங்க தம்பி?”

“ம்…. இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு அக்கா …..அதுதான் கேட்டேன்…சரி நாங்க என் ரூமுக்குப் போறோம்”

“சரி தம்பி.”

மூவரும் ராஜாவின் அறைக்குள் வந்ததும் ராஜா கதவை தாழிட்டான். ராஜேஷ் ராஜாவிடம்

“ஏன் நீ அந்த அக்காகிட்ட ஏதோ ஒரு பொண்ணோட கதையை அவ்வளவு சுவாரஸ்யமா கேட்ட? நம்ம கதையா மாத்திக்கவா?”

“அதுக்கில்ல ராஜேஷ்!!! எனக்கென்னவோ அந்த பொண்ணு தான் இந்த புத்தகத்துல இருக்குற பொண்ணாயிருக்குமோ ஒரு சந்தேகம் வந்தது…அதுனால தான் அவங்க கதையைக் கேட்டேன்”

“ஆனா மங்களம் அக்கா அந்த பொண்ணு கன்சீவ்டா இல்லைங்கறாங்களே!!! அப்புறம் எப்படி இந்த புக்குல இருக்குற பொண்ணா இருக்க முடியும்”

“அங்கே தான் கொஞ்சம் இடிக்குது!”

“இதுல இடிக்க என்ன இருக்கு ராஜா? ஒரு வேளை உன் யூகம் சரியா இருந்ததுன்னா….மே பீ மங்களம் அக்காவுக்கு அந்த பொண்ணு பிரெக்னென்ட்டா இருந்தது தெரியாதோ என்னவோ!!!”

“அட ஆமாம் அப்படியும் இருக்க வாய்ப்பிருக்கு. மங்களம் அக்கா என் வீட்டுல வேலை செய்யறதால இந்த புக்கு இங்கே வந்திருக்கு”

“ஆங்…அது ஏத்துக்க முடியாது ராஜா”

“ஏன் ராமு?”

“அந்த புக்கு முதல்ல என்கிட்ட தான் வந்தது. அப்படி அந்த பொண்ணப் பத்தி தெரிஞ்ச மங்களம் அக்கா உன் வீட்டுல இருக்காங்கன்னு அந்த புக்கு நினைச்சிருந்தா அது ஃபர்ஸ்ட் உன்கிட்ட இல்ல வந்திருக்கணும்? ஏன் வரலை?”

“ம்….தட்ஸ் ஆல்ஸோ அ வாலிட் பாயின்ட் ராமு!!”

“ராஜா…எனக்கென்னவோ நீ தேவையில்லாம மங்களம் அக்கா சொன்ன கதையை இந்த புத்தகத்தோடு இணைத்து உன்னை நீயே குழப்பிக்கறனு தான் தோணுது”

“சரி சரி ரெண்டு பேரும் அந்த அக்கா கதையிலேந்து நம்ம புக்குக் கதைக்கு கொஞ்சம் வர்றீங்களா தோழர்களே!!”

“ம்….வா ராஜா நாம போய் அந்த கார் பக்கத்தை இன்னும் நல்லா பார்ப்போம். ஏதாவது தெரிய வருதானு பார்ப்போம். அக்கா சொன்ன கதையை உன் மூளையிலிருந்து வைப் ஆஃப் பண்ணிட்டு க்ளியர் மைன்டோட வா”

“வாங்கடா வாங்கடா…புக்கை எடுக்கறேன்….இன்னும் இந்த வண்டி காட்டுக்குள்ள ஓடிட்டே தான் இருக்கு டா”

“சரி அடுத்தப் பக்கத்துக்குப் போ ராஜேஷ்”

“இதோ போறேன் ராமு”

என்று திருப்ப முயன்றபோது ஒரு பயங்கரமான சப்தம் கார் ஓடிக்கொண்டிருந்த பக்கத்திலிருந்து வந்தது. உடனே மீண்டும் அதே பக்கத்தைப் பார்த்தனர். அந்த கார் விபத்துக்குள்ளாகியிருந்தது. அதிலிருந்த பெண்ணைக் காணவில்லை. காரின் முன் பக்கம் ஒரு மரத்தில் மோதியிருந்தது. காரின் பின்புறம் ஏதோ வண்டி பின்னாலிருந்து இடித்துத்தள்ளியது போலவே நொறுங்கிப் போய் இருந்தது. அதை மூன்று நண்பர்களும் உற்றுப் பார்த்தனர்

“அடேய் இந்த காருல இருந்த பொண்ணு எங்கடா”

“ஆமா ராஜேஷ் நீ சொல்வது போல இந்த காரை ஓட்டிட்டி வந்த பொண்ண காணமேடா!! சரி அடுத்தப் பக்கத்துக்குப் போ அப்போ தெரியும்னு நினைக்கிறேன்”

ராஜேஷும் அடுத்தப் பக்கத்துக்கு போக முயன்ற போது ராமு அவனைத் தடுத்து

“ஏய் நீங்க ரெண்டு பேரும் இதை கவனிக்கலையா!”

“எதை?”

“எங்கே!!! அந்த பொண்ணு உனக்கு தெரியறாளா ராமு?”

“அது இல்ல ராஜேஷ்….அந்த காரோட பின்னாடி ஒட்டியிருக்குற ஸ்டிக்கரைப் பாருங்கங்கடா.”

“அட ஆமா ஏதோ ஸ்டிக்கர் ஒட்டிருக்கு. அதுக்கென்ன ராமு”

“ராஜேஷ் ராமு காட்டின ஸ்டிக்கர் என்ன தெரியுதா?”

“இல்லையே எனக்கு ஒண்ணுமே புரியலை. உனக்கு புரிஞ்சுதா? ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தன் சொல்லுங்கப்பா”

“எப்படி டாக்டர்ஸ்க்கு, லாயர்ஸ்க்கு எல்லாம் ஒரு லோகோ இருக்கோ….”

“ஆமா டாக்டர்கள் வண்டில ஒரு குச்சியை இரண்டு பாம்பு பின்னிக்கிட்டும், லாயர்ஸ் வண்டில அட்வோகேட்டோட அந்த காலர் ரிப்பனும் இருக்கும். ஆனா இந்த லோகோ எந்த ப்ரொஃபஷனை குறிக்குது?”

“உனக்குப் புரியலை ராஜேஷ்”

“இரு இன்னும் சரியா பார்க்கறேன். இந்த லோகோவை எங்கேயோ பார்த்திருக்கேனே!!”

“டேய் ரெண்டு கைக்கு நடுவுல புக்கு…அதுல பேனா எழுதுவது போலவும்…அதுக்கு மேலே “எ நேஷன் பில்டர்” னு எழுதிருந்தா அது என்ன லோகோன்னு உனக்கு தெரியலை”

தொடரும்…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s