அடுத்தப் பக்கத்தைத் திருப்பினான் ராஜேஷ். அதில் ஒரு அழகான பெண்ணின் கண்கள் வரையப்பட்டிருந்தது. மீன் வடிவில் அழகான கண்கள் அதற்கு குடைப் போல அடர்த்தியான புருவங்கள். அதைப் பார்த்ததும் ராஜேஷ்…
“பார்த்தீங்களாடா இந்த ராஜேஷின் ராசியை. உங்களுக்கு பட்டாம்பூச்சி, குழந்தை, பாம்புன்னு தானே வந்துச்சு!! நான் திறந்ததும் ஒரு அழகான பொண்ணு கண்ணு வந்திருக்கு!! முழு முகமும் வந்திருந்தா நல்லா இருந்திருக்கும் இல்ல”
“என்ன உனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு ஃபோட்டோ காம்மிக்குதாக்கும்?”
“டேய் ராமு அங்கப் பாரு”
“ஹேய் ராஜா!! ஆமா …ஏன் அந்த கண்ணுலேந்து கண்ணீரா வழியுது?”
“அட ஆமாம் டா ராஜா!! இது வெறும் கண்ணீர் இல்ல!! மழைப் போல கொட்டுதுடா. என் ஷார்ட்ஸ் எல்லாம் ஈரம் ஆயிடுச்சுடா பசங்களா…வழியற தண்ணீ சூடா இருக்குதுடா !”
“கண்ணீர் பின்ன என்ன ஐஸ்வார்ட்டர் மாதிரி ஜில்லுன்னா இருக்கும். உனக்குத் தானே பொண்ணு கண்ணு வந்திருக்குன்னு சொன்ன அனுபவி ராஜேஷ் அனுபவி”
“டேய் விளையாடாதடா ராமு. இப்போ நான் இந்த புக்கை மூடிட்டு ஷார்ட்ஸ் மாத்தியாகணுமே!! ராஜா உன்னோட ஒரு ஷார்ட்ஸ் தாடா”
“இரு !!!இரு!!! இரு!!”
“இரு! இரு! இரு!!!”
“ஏன்டா ரெண்டு பேரும் ஒண்ணா இப்படி அலர்றீங்க?”
“ஏன்னா நாங்க அனுபவிச்சவங்க அதுனால தான் அலர்றோம்”
“சரி நான் என்ன தான் பண்ண? ஏதாவது ஒரு வழி சொல்லுங்கப்பா…என்னால இப்படி ஈரத்தோட உட்கார முடியாது!!!”
“ஓகே! ராஜேஷ் நீ அந்த புக்கை அப்படியே பெட்டு மேல கமுத்தி வச்சிட்டு வந்து ஷார்ட்ஸை மாத்திக்கோ”
“ம்…ஓகே!! அப்படிப் பண்ணினா இந்த புக்கு மறுபடியும் மூடிக்காதே?”
“எங்களுக்குத் தெரிஞ்சு மூடிக்காது.”
“அப்படீன்னா சரி இரு கமுத்தி வச்சிட்டு வர்றேன்”
“பார்றா ராமு!! யாரோ ஒருத்தன் புக்கைத்திறக்கவே யோசிச்சான்….இப்போ என்னடான்னா அதை கமுத்தி வச்சிட்டா மூடிடுமோன்னு கவலைப் படறான்!!! கவனிச்சியா ராமு”
“ம்…ம்…கவனிச்சேன் கவனிச்சேன் ராஜா. நீ சொல்லறது சரி தான்”
“என்ன வேணும்னாலும் கிண்டல் பண்ணிக்கோங்கடா ரெண்டு பேரும். ஆனா நான் தான் உங்களுக்கு அந்த புக்கைத் திறந்துக் காட்டணும்…. அதை மறந்துடாதீங்க!!”
“சரிப்பா …ஷார்ட்ஸ் மாத்திட்ட இல்ல வா…வா…உட்காரு…ம் …புக்க மறுபடியும் பார்ப்போம் வா”
“ஹேய் ராமு மறுபடியும் அந்த கண்ணுலேந்து கண்ணீர் வந்து என் ஷார்ட்ஸை நனைச்சுடுச்சின்னா?”
“புக்கை நிம்மிதனதும் டக்குனு அடுத்தப் பக்கத்துக்கு போயிடு.”
“ஓகே டன்!”
என்று கமுத்தி வைத்திருந்த புத்தகத்தை மீண்டும் நிம்மித்தியதும் கண்ணீர் வந்தது ஆனால் உடனே அடுத்தப் பக்கத்தைத் திருப்பியதால் ராஜேஷ் மீண்டும் கண்ணீர் மழையில் நனைந்திடாது தப்பித்தான். அடுத்தப் பக்கத்தைத் திருப்பிய ராஜேஷ்….
“என்னடா இது ஏதோ ஒரு பொண்ண நாலஞ்சுப் பேரு காட்டுக்குள்ள தூக்கிக்கிட்டு போறா மாதிரி வரைஞ்சிருக்கு”
என்றதும் அந்த ஓவியம் உயிர்ப்பித்து அவர்கள் கண்முன் ஒரு பெண்ணை ஐந்து பேர் சேர்ந்து காட்டிற்குள் தூக்கிச் சென்றுக்கொண்டிருந்ததையும், அந்த பெண் வலியால் கத்துவதையும் படமாகக் காட்டியது. அதைப் பார்த்ததும் ராஜேஷ்…
“டேய் எனக்கென்னவோ பயமா இருக்குடா!!! புக்குக்குள்ளேந்து என்னென்ன வந்ததுனு சொன்னீங்க ஆனா இந்த புக்கு எப்படி உங்க கிட்ட வந்ததுனு சொல்லவேயில்லையே!!”
என்று புக்கை மெத்தையில் கமுத்தி வைத்து விட்டு ராமுவிடமும் ராஜாவிடமும் கேட்டான் ராஜேஷ். அதற்கு ராமு அந்த புத்தகத்தை வாங்கி வந்த கதையை சொல்லி முடித்தான். அதைக் கேட்டதும் ராஜேஷ்
“டேய் நீ சொல்லறதைக் கேட்டாலே ஒரு மாதிரி இருக்குடா…எரிஞ்சுப்போன கைக் கொண்ட புக்கு கடைக்காரர், புக்கிலிருந்து வெளிவந்த பட்டாம்பூச்சிகள், காடு, பாம்பு, பெண்ணின் கண்ணீர், ஒரு பொண்ண அஞ்சாறுப் பேர் தூக்கிக் கிட்டுப் போறாங்க…இதை எல்லாம் பார்க்கப் பார்க்க ஏதோ பேய் தான் நம்ம கிட்ட கம்யூனிகேட் பண்ணப் பாக்குதோ?”
“சரி ராஜேஷ் அப்படியே வச்சுக்கிட்டாலும்….யார் அந்த பேய்? எதுக்காக நம்ம கிட்ட கம்யூனிகேட் பண்ண நினைக்குது? நமக்கும் அந்த பேயிக்கும் என்ன சம்மந்தம்? இதுக்கெல்லாம் உன் கிட்ட பதிலிருக்கா?”
“இதுக்கெல்லாம் என் கிட்ட பதில் இல்லை… ஆனா எனக்கென்னத் தோனுதுன்னா….ஏதோ ஒரு பொண்ணு நாலஞ்சுப் பேருகிட்ட மாட்டிக்கிட்டு சீரழஞ்சிருக்கு….அது தான் பேயா வந்து நமக்கு அந்த ஆட்களை அடையாளம் காட்டுதுனு தோணுது!! பேசாம உடனே நாம போலிஸ் கிட்ட போய் சொல்லிடுவோம் டா”
“என்னனு சொல்லுவ ராஜேஷ்? புக்குலேந்து எல்லாம் வந்ததுன்னா? நம்மளை கீழ்ப்பாக்கம் ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணிடுவாங்க. சரி …அப்போ ஏன் ஒரு குழந்தை அழுவுறமாதிரி ஒரு பக்கத்திலிருந்தது?”
“மே பி அந்த பொண்ணோட குழந்தையா இருக்கலாம்!! கல்யாணமாகி குழந்தையுள்ள பொண்ணா இருக்கலாமே!! இப்ப தான் அஞ்சு வயசு குழந்தையானாலும் அறுபது வயசுப் பாட்டியானாலும் பாதுகாப்பில்லாம இருக்கே!!! அதையும் கொன்னுட்டாங்களோ அந்த பாவிங்க? அதைத்தான் நம்ம கிட்ட சொல்ல வருதா அந்த அம்மா பேய்?”
“ஏய் ராஜா நானும் ராஜேஷும் இங்கே இவ்வளவு தீவிரமா டிஸ்கஸ் பண்ணிக்கிட்டிருக்கோம் ….நீ என்னடான்னா ஏதோ யோசனையில இருக்க?? என்ன ஆச்சு உனக்கு?”
“நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டதைப் பத்தி தான் யோசிச்சிக்கிட்டிருக்கேன்”
“நாங்க பேசினதிலிருந்தா? என்னன்னு யோசிச்சிட்டிருக்க?”
“ராஜேஷ் சொல்லறா மாதிரி…. இந்த புக்கு மூலமா நம்ம கிட்ட யாரோ ஏதோ சொல்ல வர்றது உறுதி தான்… ஆனா ராமு நீ கேட்டா மாதிரி ஏன்? எதுக்கு நம்ம கிட்ட வரணும்? நமக்கும் அதுக்கும் என்ன சம்மந்தம்? அதை தான் மறுபடியும் மறுபடியும் யோசிக்கறேன்…ஒண்ணுமே புரிய மாட்டேங்குது டா….”
“அப்போ நீயும் நம்ம ராஜேஷ் மாதிரியே அந்தப் பொண்ணு பேய் தான்னு முடிவுப் பண்ணிட்ட….ஏன் எதுக்குனு தான் உனக்குப் புரியல இல்ல”
“ஆமாம் ராமு!! ஏன் உனக்கு அப்படித் தோணலையா?”
“எனக்கென்னவோ நீங்க ரெண்டு பேரும் யூகிச்சதுல பாதி சரின்னும் மீதி ஏத்துக்கறா மாதிரி இல்லடா!!”
“எந்தப் பாதி சரின்னும் எது ஏத்துக்க முடியாததுனும் உனக்குத் தோணுது?”
“அதாவது உங்க ரெண்டுப் பேரோட யூகமான …இந்த புத்தகம் நம்ம கிட்ட ஏதோ சொல்ல வர்றதுங்கறது ஏத்துக்கறேன் ….ஆனா….அதுக்கப்புறம் நீங்க சொன்ன பேய் யூகமெல்லாம் என்னால ஏத்துக்க முடியலை”
“அப்படின்னா யார் நம்மகிட்ட இந்த புத்தகம் மூலமா கான்டாக்ட் பண்ண நினைக்கறாங்கன்னு சொல்லு”
“டேய் ராஜேஷ் இந்த காலத்துல போய் பேய் பிசாசுன்னுட்டு. கொஞ்சம் யோசிச்சா நாமளே கண்டுப் பிடிச்சிடலாம் டா”
“அப்போ உனக்கு பேய் பிசாசு மேல எல்லாம் நம்பிக்கை இல்லன்னு சொல்ல வர ரைட்டா!!”
“ஆமாம் எனக்கு அதுல எல்லாம் சுத்தமா நம்பிக்கை இல்ல ராஜா”
“சரி….நாங்க ரெண்டு பேரும் சொல்லறது ஏத்துக்கறா மாதிரி இல்லைன்னா….நீயே கொஞ்சம் யோசிச்சு சொல்லறது..”
“சொல்லலாம் ஆனா அடுத்தடுத்தப் பக்கங்களைப் பார்த்தால் நிச்சயம் நம்ம மூணு பேருக்கும் ஏதாவது ஒண்ணு புரிய ஆர் தெரிய வரலாம்.”
“அதுவும் சரிதான் ராமு. இன்னும் கொஞ்சம் பக்கங்கள் தானே இருக்கு…முழுசா பார்த்துட்டு ஒரு முடிவுக்கு வரலாம். சரி ராஜேஷ் மறுபடியும் புக்கைத் திற வா வா”
தொடரும்…….