அத்தியாயம் 9:சாவி கிடைத்தது!

“அதெல்லாம் இன்னும் கிடைக்கலை. ராஜேஷ் கொஞ்சம் என் வீட்டுக்கு வர்றியா?”

“சாயந்தரம் வரட்டுமா?”

“இல்ல இல்ல உடனே வா”

“இப்பவே வா!!!எதுக்கு டா?”

“நீ வாயேன்….வந்து தெரிஞ்சுக்க”

“சரி சரி இரு… நான் என் டாடி தாடி தண்டபாணி கிட்ட அகப்படாம வரணுமே! அதுக்கு கொஞ்சம் நேரமாகலாம்!!”

“டேய் ராஜேஷ் ரொம்ப லேட் பண்ணிடாதடா!!”

“ம்…ஒரு பத்து பதினைந்தே நிமிஷத்துல வந்துடறேன் போதுமா. நீ ஃபோனை வை. நேரில் பார்ப்போம்”

ட்ர்ர்ரிங்…… ட்ர்ர்ரிங்….. ட்ரிங்…ராஜா வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. உடனே ராஜா ராமுவிடம்

“ராமு நம்ம ராஜேஷ் தான் வந்துட்டான்னு நினைக்கிறேன்”

“அவன் தான் டென் பிஃப்டீன் மினிட்ஸ் ஆகும்னு சொல்லிருக்கானே!! அப்புறம் எப்படி உடனே வந்திடுவான். அவன் அப்பாவை சமாளிச்சு வர்றதுக்கு எப்படியும் அரைமணி நேரமாவது ஆகும். இது அவனா இருக்காது ராஜா”

“ஆமாம் அதுவும் சரிதான்”

மீண்டும் அழைப்பு மணி ஒலிக்க வேகமாகச் சென்று கதவை திறந்தாள் மங்களம்.

“தம்பி…. ராஜா தம்பி…. உங்க நண்பன் ராஜேஷ் வந்திருக்காரு”

“டேய் ராமு அவனே தான் வந்திருக்கான்”

“பரவாயில்லையே…இன்னிக்கு மழை தான் வரப்போகுது”

“தம்பி….ராஜா தம்பி”

“ம்…அக்கா …அவனை மேலே வரச் சொல்லுங்க அக்கா”

என்று ராஜா சொன்னதும் ராஜேஷ் மாடிப்படி ஏறிச் சென்றான் அங்க ராஜாவும் ராமுவும் நின்றுக்கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து…

“டேய் ராமு நீயும் இங்க தான் இருக்கியா? ரெண்டு பேருமா என்ன பண்ணறீங்க? என்னை எதுக்கு அவசரமா வரச் சொன்னீங்க?”

“இரு …இரு …மொதல்ல கதவை சாத்திடறேன்”

“டேய் என்ன நடக்குது இங்கே? இப்போ எதுக்கு கதவை சாத்தற?”

“உட்காரு மச்சான்”

“என்ன ராமு?”

“ராஜா நம்ம ராஜேஷ் கிட்ட இப்போ குடு அதை”

“எதை டா சொல்லுற? என்னத்த தரப்போறீங்க? ம்….புக்கா?”

“ஆமாம் இந்த புக்கை இப்போ நீ எங்களுக்குத் திறந்துத் தரணும். பூட்டிய இந்த புக்கின் சாவி எங்களைப் பொறுத்தவரை நீ தான்னு நினைச்சுக்கிட்டிருக்கோம்”

“ஏய் இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை? இந்த தம்மா துண்டு புக்க தொறக்க வா என்னை அவசரமா வரச்சொன்னீங்க!! நான் என்ன அவ்வளவு வேலையில்லாதவனாயிட்டேனா உங்களுக்கு? எங்க டாடிக்கு தெரியாம வீட்டுலேந்து எஸ்கேப் ஆகி வேகவேகமா இங்க வந்தா….ஒரு புக்கத் திறந்துத் தரச் சொல்லுறீங்க!!!!”

“ராமு நடந்ததை எல்லாம் சொன்னா தான் இவன் இந்த புக்கைத் திறப்பான் போல!! ஸோ நீ சொல்லி கிட்டே இரு நான் போய் நாம சாப்பிட ஏதாவது மங்களம் அக்காட்ட செய்துத் தரச்சொல்லி எடுத்துட்டு வர்றேன்”

“சரி நீ போய் எடுத்துட்டு வர்றதுக்குள்ள நான் நம்ம ராஜேஷ் கிட்ட எல்லாத்தையும் சொல்லிடறேன்”

“இந்தாங்கடா வாழக்காய் பஜ்ஜீ அன்ட் டீ. எடுத்துக்கோங்க. என்ன ராஜேஷ் இப்போ இந்த புக்கை திறக்க முயற்சிப்ப இல்ல”

“ஓ! ஷுவர். ராமு சொன்னதெல்லாம் உண்மை தானே!! நீங்க ரெண்டு பேருமா சேர்ந்து என்ன வச்சு காமிடி கீமிடி பண்ணலையே!”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை ராஜேஷ். நாங்க சொன்னதெல்லாமே உண்மை உண்மையைத் தவிர வேறு எதுவும் இல்லை..போதுமா. இப்போ அந்த புக்கைத் திற போ”

“அதுக்கில்ல ராஜா அந்த புக்குலேந்து பட்டாம்பூச்சி வந்தா ஓகே ஆனா மறுபடியும் பாம்பு வந்துச்சின்னா?”

“இனி வராது அது ஒரு தடவை தான் வரும். நான் அந்த பக்கத்தைத் திருப்பியதும் வந்துடுச்சு… ஸோ! நீ அந்த பக்கத்துக்கு போனா வராது. கவலைப் படாம எடுத்து திறந்து அடுத்தப் பக்கத்துக்கு போ. என்ன நடக்குதுன்னு பார்ப்போம்”

“அந்த பக்கத்துல என்ன காத்துகிட்டிருக்கோ? அது எனக்கா?”

“ஏய் திறக்கறதுக்கு முன்னாடியே ரொம்ப பந்தா விடாதடா ராஜேஷ்….இந்தா இந்த புக்கைப் புடி. ம்…திறந்து அந்த பக்கத்துக்குப் போ”

“சரி! சரி! சரி! வந்துட்டேன். என்னை வச்சு கதவையும் சாத்திட்டீங்க. வேற வழி!! தா திறந்துப் பார்க்கறேன்….உங்களோடு நான்…டைட்டில் எல்லாம் நல்லா தான் இருக்கு.”

“சரி ராஜேஷ் புக்கைப் சுத்திப்பார்த்ததுப் போதும் சீக்கிரமா திறக்கப் பாரு. உன்னால முடியுதான்னு பார்ப்போம்…இல்லாட்டி இதைத் திறக்க வேற யாரையாவதுத் தான் தேடணும். ம்…ம்…”

“ஓகேப்பா திறக்கறேன். வெயிட். ம்…ஹம்… மாயமில்லே மந்திரமில்லே…ராஜேஷ் ஆகிய நான் “உங்களோட நான்” புக்கைத் திறக்கப் போகிறேன்….எல்லாரும் ஜோரா ஒரு தடவைக் கைத்தட்டுங்க”

“டேய் ராமு!! இவன் என்னடா வித்தக் காட்டவா போறான்?”

“ராஜேஷ் நாங்க ரெண்டு பேரும் நேத்தேலேந்து இந்த புக்கைத் திறக்க பாடாப்படறோம் டா. ப்ளீஸ் உன் விளையாட்டை எல்லாம் விட்டுட்டு கொஞ்சம் சீரியஸா இருடா.”

“ஏன்டா ஒரு புக்குக்காகவா ஒரு நாள் முழுவதுமா பாடுப்பட்டீங்க!!!! அப்படீன்னா இந்த புத்தகத்துக்கிட்ட மாட்டிக்கிட்டீங்கன்னு அர்த்தம் டா….அப்படிப் பார்த்தா ….நான் திறக்க முயற்சித்து இது திறந்திடுச்சுன்னா …. மாட்டிக்கப்போற அந்த மூணாவது ஆடு நான் தானா? தானே வந்து தலையைக் குடுத்துட்டேனா?”

“ராஜேஷ் ப்ளீஸ்”

“ஓகே!! ஓகே!!! டென்ஷன் ஆகாதீங்கப்பா. நான் புக்கைத் தொறக்கறேன்….நான் மாட்டிக்கிட்டாலும் பரவாயில்லை. நான் உங்க உயிர் நண்பேன்டா!!! நீங்க ரெண்டு பேரும் ரொம்ப டென்ஷன்ல இருக்கீங்க…கூல் கூல் பாய்ஸ்.”

“டேய் ராஜேஷ் பேச்சைக் கம்மிப்பண்ணிட்டு தயவுசெய்து அந்த புக்கைத் திறடா”

“ஓகே ராமு. திறந்துட்டேன் பாருங்கப்பா”

“அப்போ!! ராஜேஷாலையும் திறக்க முடியுது!!! ராமு நீ சொன்னது சரிதான்னு தோனுது. ஆனா ஏன்?”

“ஏன்டா….என்னால திறக்க முடியாதுனு முடிவுப் பண்யிருந்தீங்கன்னா அப்புறம் ஏன் என்னை வரச்சொன்னீங்க?”

“அப்படி இல்ல ராஜேஷ். மத்த யாராலையும் திறக்க முடியாத இந்த புத்தகத்தை நம்ம மூணு பேரால மட்டும் தான் திறக்க முடியுமோன்னு நான் ராஜாட்ட நேத்துச் சொன்னேன். அதைத் தான் அவன் சொல்லறான். சரி திறந்துட்டல இப்போ ஸ்ட்ரேயிட்டா ஆறாவதுப் பக்கத்துக்குப் போ”

“ஓ!! இதுதான் நீங்க சொன்ன முகவுரையா, இந்த குடிசைகள்…. ஓ!!! இது அந்த கறுப்பு நிற பட்டாம்பூச்சி….ஏய் இந்த கலர்ல பட்டாம்பூச்சியை இப்ப தான் மொதோ தடவையாப் பார்க்கறேன் டா….பாக்க கொஞ்சம் பயமா தான் இருக்கு….இது தான் அந்த குவாக் குழந்தையா!!!! அட இந்த பாம்பு தான் நம்ம ராஜாவை பயமுறுத்திய பாம்பா?

“டேய் ராஜேஷ் சீக்கிரமா ஆறாவதுப் பக்கத்துக்குப் போயேன்டா”

“அது தான் அஞ்சாவது பக்கத்துக்கு வந்துட்டேனே….இந்த புக்குல இதுவரை பார்த்த காடு, இந்த குடில்கள், இந்த மண் ரோடு எல்லாம் எங்கயோ பார்த்தா மாதிரியே இருக்கு. இங்கே நாம போனா மாதிரியே தோனுதே!! எக்ஸெப்ட் அந்த குவாக் குவாக் குழந்தை.”

“அதே ஃபீலிங் தான் எங்களுக்கும் வந்தது. சரி சரி சீக்கிரம்… சீக்கிரம்… அடுத்த பக்கத்துக்குப் போ”

“ம்….இருங்கப்பா…உஷ்……சரி நான் அடுத்தப் பக்கத்தைத் திருப்பப் போறேன்”

தொடரும்…..















Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s