அத்தியாயம் 7: முயற்சி வீணாகவில்லை

“வாப்பா ராஜா வா வா….நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க? அப்பா அம்மா எப்படி இருக்காங்க?”

“எல்லாரும் நல்லா இருக்கோம் அங்கிள்”

“ஏன்ப்பா இந்த படம் எடுக்கறதெல்லாம் விட்டுட்டு நீங்க மூணு பேரும் உருப்படற வழியப் பார்க்கலாமில்ல!!! உங்க அப்பா அம்மாக்களும் நிம்மதியா சந்தோஷமா இருப்போம் இல்ல. அதை விட்டுட்டு ஏன்ப்பா சம்பாதிக்கற வயசுல இப்படி சினிமா எடுக்கறேன்னு உங்க லைஃபை நீங்களே வேஸ்ட் பண்ணிக்கறீங்க?”

“இல்ல அங்கிள் இது எங்களோட ஸ்கூல் டேஸ்லேந்து இருக்குற கனவு… இன்னுமொரு சிக்ஸ் மந்த்ஸ்ல எடுத்து முடிச்சு ஜெயிச்சுக் காட்டுவோம் அங்கிள். ப்ளீஸ்!! எங்க முன்றேற்றத்திற்க்காக இவ்வளவு வருஷம் காத்திருந்தீங்க…இன்னும் ஒரு ஆறே மாசம் காத்திருங்களேன். நிச்சயம் நாங்க ஜெயிச்சுக் காட்டுவோம்”

“ம்…ம்…ஆறு மாசம்ங்கறது கண்ண மூடி திறக்கறதுக்குள்ள பறந்திடும்…சரி சரி வெயிட் பண்ணறோம் வேறென்ன பண்ண!! சரி காஃபி குடிக்கறயாப்பா…லீலா… லீலா…. ராஜா தம்பி வந்திருக்குப் பாரு….காபி கொண்டு வா”

“அங்கிள் பரவாயில்லை…இப்போ தான் வீட்டுல குடிச்சிட்டு வந்திருக்கேன். ஆன்டிய டிஸ்டர்ப் பண்ண வேண்டாமே!”

என்று ராஜா ராமுவின் அப்பாவோடு பேசிக் கொண்டிருக்கையில் லீலாவதியின் கையைப் பிடித்து தன் அறைக்கு இழுத்துச் சென்றான் ராமு. அவன் பின்னாலேயே

“டேய் ராமு ஏன்டா என்னைய இப்படி இழுத்துக்கிட்டுப் போற? மெதுவாடா!! என்னதுக்கு இப்போ இவ்வளவு அவசரம்?? ராஜா தம்பியை வான்னு ஒரு வார்த்தைக் கூட என்ன சொல்ல விடாம எதுக்குடா இப்படி உங்க ரூமுக்கு இழுத்துகிட்டு வந்திருக்க?”

“ஹாய் அண்ணா!! இவ்வளவு நேரமா எங்க போயிருந்த?”

“ஹேய் ரம்யா!! நீயும் இங்க தான் இருக்கயா!! உனக்கு ட்யூஷன் இல்ல!”

“எங்க மேடம்க்கு உடம்பு சரியில்லை அதனால இன்னைக்கு லீவு விட்டுட்டாங்க”

“சூப்பர்…நல்லதா போச்சு!!”

“என்னடா சொல்லுற ராமு”

“அம்மா இந்தாங்க இந்த புத்தகத்தைத் திறந்துத் தாங்களேன் ப்ளீஸ்”

“இதைத்தான் வாழைப்பழ சோம்பேறின்னு சொல்லுவாங்க எங்க ஊர்ல. படிக்கறதுக்கு புக்கை வாங்கிட்டு அதை அம்மா தான் தொறந்துத் தரணுமா?”

“அய்யோ அம்மா !!! இந்த ஒரு தடவை மட்டும் ப்ளீஸ் மா”

“ம்….ம்…குடு குடு….இதுக்குத் தான் இவ்வளவு வேகமா என்னை இழுத்துக்கிட்டு வந்தியாக்கும்”

என்று தன் கையில் வாங்கிய புத்தகத்தை லீலாவதிப் பார்த்ததும்

“அடேய் !!! இது நீ இன்னைக்கு மத்தியானம் வாங்கிட்டு வந்த புஸ்தகம் தானே!!!”

“ஆமாம் மா”

“இதை எடுத்துகிட்டு ராஜா வீட்டுக்குப் போனியே !!! அப்புறமா எதுக்கு என்னை தொறக்க சொல்லுற…..இதுல ஏதோ வில்லங்கம் இருக்கோ!!”

“அய்யோ!! அம்மா !!! ஷெர்லாக் ஹோம்ஸி!!! தயவுசெய்து முதல்ல இதை திறந்துத் தா தாயி. அப்புறமா வந்து உனக்கு எல்லா விவரமும் சொல்லறேன்”

“ம்…ம்…என்னடா இது இந்த புத்தகத்தைத் திறக்கவே முடியலை!! ஏதாவது கம்மு கிம்மு போட்டு ஒட்ட வச்சிட்டியா என்ன….அம்மாடி….ம்…ஹூம்…முடியலப்பா முடியலை இந்தா நீயே வச்சுக்கோ…நான் போய் வீட்டுக்கு வந்த புள்ளைய வான்னு ஒரு வார்த்தையாவது சொல்லிட்டு வரேன்”

“இல்ல மா இல்ல…நீ வரவே வேண்டாம். நானே ஹாலுக்கு வர்றேன். நீ ராஜாவோட பேசிகிட்டிரு. இதோ வந்துடறேன்”

“இந்த புஸ்தகம் வாங்கி கிட்டு வந்ததுலேந்து நீ ஆளே சரியில்லடா ராமு…ஏதாவது தப்பு தண்டா பண்ணின அப்புறம் உங்க அப்பா கிட்ட என்னால சமாளிக்க முடியாது சொல்லிப்புட்டேன்”

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது மா. நீ போயேன்”

என்று ராமு சொன்னதும் லீலாவதி ஹாலுக்குச் சென்று ராஜாவிடம் பேசிக்கொண்டிருந்தாள் அந்த நேரம் ராமு தன் தங்கையிடமும் அந்த புத்தகத்தைக் கொடுத்து சோதித்துப் பார்த்தான் ஆனால் அந்த புத்தகம் திறக்கவில்லை. இறுதியாக தன் அப்பாவை திறக்கச் செய்து பார்க்க முடிவெடுத்து, துணிச்சலை வரவழைத்துக் கொண்டு ஹாலுக்குச் சென்றான். அங்கே ராஜாவுடன் தன் அப்பாவும் அம்மாவும் பேசிக் கொண்டிருந்தனர். ராமு தன் அப்பா முன் தடுக்கி விழுவதுப் போல விழுந்து அந்த புக்கை அவர் மடியில் விழுமாறு செய்தான். புத்தகம் தன் மடியில் விழுந்ததும் அதை எடுத்துக் கொண்டே

“ஏன்டா உனக்கு ஒழுங்கா நடக்கவும் மறந்துப் போச்சா என்ன? இது என்ன புஸ்தகம்? உங்களோடு நான் ….அப்படீன்னு போட்டிருக்கு? இது என்ன புக்கு….அட இதை ஏன்டா திறக்க முடியல? ம்….ம்….. ம்…ஹூம் ஹூம்!! இதை என்ன கோந்துப் போட்டு ஒட்டிருக்கயா?”

“சாரிப்பா சாரிப்பா…ஏதோ தடுக்கிடுச்சு….அந்த புக்கைத் தாங்கப்பா…அது நம்ம ராஜா வீட்டிலிருந்து நம்ம அம்மா படிக்கறதுக்காக கொண்டு வந்தேன் ….ஆனா… ராஜா… எங்க அப்பா சொல்லுறா மாதிரி இந்த புக்கைத் திறக்கவே முடியலடா….ஏன்?”

என்று ராமு சொன்னதும் லீலாவதி ராமுவைப் பார்த்துப் பார்வையாலேயே “என்ன நடக்குதுன்னு” கேட்டவளுக்கு “ஒண்ணுமில்லமா எல்லாம் நான் பார்த்துக்கறேன்னு” பார்வையாலேயே பதிலளித்தான் ராமு. நிலைமையைப் புரிந்துக் கொண்ட ராஜா

“ஆமாம் அங்கிள் அது என்னோட புஸ்தகம் தான்.  ஒருவேளை எங்க வீட்டுப் பூனை டேப்புள்ள இருந்த கம்மை புக்குலத் தட்டிவிட்டிருச்சுனு நினைக்கிறேன். சரி எனக்கு நேரமாகுது அங்கிள் நான் கிளம்பறேன். அப்பாவும் அம்மாவும் வேலை முடிச்சிட்டு வந்திருப்பாங்க. ராமு அந்த புக்கை எடுத்துகிட்டு வா நாம கிளம்பலாம்”

“அவன் எதுக்குப்பா…நேரமாயிடுச்சு…நீ கிளம்பு…அவன் நாளைக்கு உங்க வீட்டுக்கு வரட்டும்.”

“அப்பா நான் ராஜாவோட போயிட்டு கொஞ்ச நேரத்துல வந்துடறேனே!”

“ராமு நாளைக்கு காலையில போ நான் வேண்டாம்னு சொல்லலை….ஆனா இருட்டிடுச்சு இப்போ போக வேண்டாம்.”

“சரி ராஜா பை. நாளைக்கு காலையில உங்க வீட்டுக்கு வர்றேன்.”

“ஓகே ராமு, அங்கிள் அன்ட் ஆன்டி பை பை. குட் நைட்”

“பாரத்துப் பத்திரமா போயிட்டு வாப்பா ராஜா. குட் நைட்”

“ஷுவர் அங்கிள். தாங்க்ஸ்”

“அப்பா அவனை வழியனுப்பிட்டு வந்திடறேன்”

“ம்…ம்..”

“டேய் ராஜா இங்க எங்க வீட்டுல யாராலேயுமே அந்த புக்கைத் திறக்க முடியலைங்கறது உறுதியாயிடுச்சு. ஆனா ஒண்ணு டா ராஜா…நம்மளோட இந்த முயற்சி வீணாகவில்லை” 

“எப்படி சொல்லுற ராமு?”

“ஆமாம்! நாம இதை பெண்களால மட்டும் திறக்க முடியாததுன்னு நினைச்சிட்டிருந்தது தப்பாயிடுச்சு இல்ல இப்போ!!!! ஏன்னா எங்க அப்பாவாலேயும் திறக்க முடியலையே!!! இதுல அப்போ வேற ஏதோ இருக்குடா…… நாம வேற ஏதாவது தான் ட்ரைப் பண்ணணும். நான் நாளைக்கு காலையில உன் அப்பா அம்மா வேலைக்குப் போனதுக்கப்புறமா வீட்டுக்கு வந்துடறேன். அங்க வச்சு என்னப் பண்ணலாம்னு யோசிப்போம்”

“அட! ஆமாம்! இல்ல! அங்கிளாலேயும் திறக்க முடியலை இல்ல. ஓ!! அதையும் ட்ரைப் பண்ணத்தான் தடுக்கி விழுற சீன் போட்டியா? பலே கில்லாடிடா நீ”

“ஆமாம் பின்ன எங்க அம்மாகிட்டேயும் தங்கச்சிக்கிட்டேயும் கொடுத்துத் தொறக்க சொன்னா மாதிரி நேரா அவர்கிட்ட சொல்லியிருந்தேன் அவ்வளவுதான் கேள்வி கேட்டே கொன்னுருப்பாரு”

“ராமு!! ராமு!! வெளியில நின்னுட்டு என்ன பேச்சு? அதை வீட்டுக்குள்ளேயே பேசலாமில்ல”

“இல்லப்பா… ராஜா கிளம்பிட்டான்…இதோ வர்றேன்….பை டா ராஜா…இதுக்கு மேலேயும் நான் இங்க நின்னுகிட்டிருந்தா அப்புறம் அவரே இங்க வந்துடுவார். பை பை.”

“ஓகே ராமு காலையில ஒன்பது மணிக்கு சந்திப்போம். எனக்கு எப்படியும் அதுவரைக்கும் தூக்கம் வரப்போறதில்ல”

“எனக்கும் தான்டா….சரி ஒன்பது மணிக்குப் பாரப்போம். பை ராஜா

தொடரும்…….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s