என வாங்கித் திறந்தான் புத்தகம் திறந்துக் கொண்டது…அதன் பின் ராமு மெல்ல தன் காபியை அருந்திக் கொண்டே சொல்ல ராஜா தன் கப் காபியை குடித்துக்கொண்டே அந்த புத்தகத்தைத் திறந்தான்”இந்த வெயில்ல ஏன்டா போற? சாயந்தரமா ஒரு நாலு மணி போல போப்பா”
“பரவாயில்லை மா நான் போயிட்டு ஒரு ஆறு மணிக்குள்ள வந்திடறேன் சரியா. பை பை”
வேகவேகமாக நடந்து ஐந்து தெரு தள்ளியிருந்த ராஜா விட்டிற்கு சென்று வாசல் கதவைத் தட்டினான் ராமு. உள்ளிருந்து வருகிறேன் என்று ராஜாவின் குரல் கேட்டதும்…
“வா வா வேகமா வாடா ராஜா. ஒரு சூப்பர் நியூஸோட வந்திருக்கேன் சீக்கிரம் கதவைத் திற”
என்று கூக்கொண்டு நின்றிருந்தவன் முன்னிருந்த கதவு திறக்கப்பட்டது. திறந்தது ராஜா வீட்டில் வேலை செய்யும் பணிப் பெண் மங்களம். அவள் ராமுவைப் பார்த்ததும்
“ராமு தம்பி வாங்க வாங்க உள்ள வாங்க நான் போய் ராஜா தம்பியை அழைச்சுகிட்டு வரேன்”
ராமுவும் உள்ளே சென்று அங்கு போடப்பட்டிருந்த சோஃபாவில் அமர்ந்தான். மங்களம் போய் சொன்னதும் ராஜா மாடியிலிருந்து வேகமாக படிகளில் இறங்கிக் கொண்டே
“ஹேய் ராமு வாடா வா. என்ன சர்க்கரை வாங்கிக் குடுத்திட்டியா?. என்ன இந்த நேரத்துல வீட்டுக்கு வந்திருக்க. சரி வா என் ரூமுக்குப் போகலாம்”
ராமுவிடம் ராஜா பேசிக் கொண்டிருக்கும் போது மங்களம் படிகளில் இறங்கி கீழே வந்தாள். ராஜா அவளிடம்
“மங்களம் அக்கா இரண்டு காஃபி போட்டு என் ரூமுக்கு கொண்டு வறீங்களா?”
“சரி தம்பி நீங்க ரெண்டு பேரும் போங்க நான் போட்டுக் கொண்டு வந்து தரேன்”
என கூறி விட்டு அடுப்படிக்குள் சென்றாள் மங்களம். ராஜா ராமுவை மாடியிலிருந்த அவன் அறைக்கு அழைத்துச் சென்றான். அங்கே ராமு அவன் வாங்கிய புத்தகத்தை ராஜாவிடம் கொடுத்தான். அதைப் பார்த்ததும் ராஜா
“இது என்ன புக்குடா ராமு? உங்களோடு நான்!!!”
“இந்த புக்கை நான் ரேஷன் கடையிலிருந்து வீட்டுக்குப் போற வழியிலே ஒரு வயசானவர் புத்தகக் கடைன்னு பெட்ஷீட்ல புக்ஸைப் பரப்பிப் போட்டு வித்துக்கிட்டு இருந்தாரு அவர்கிட்ட இருந்து வாங்கினேன்”
“சரி அப்போ இன்னைக்கு தான் வாங்கியிருக்க!! அதுக்குள்ள நீ படிச்சிட்டயா ராமு?”
“இல்ல ராஜா மூணே மூணு பக்கம் தான் பார்த்தேன் அதுக்குள்ளயே…”
“ராஜா தம்பி உள்ள வரலாமா? காபி கொண்டு வந்திருக்கேன் தம்பி”
“வாங்க அக்கா. அப்படி அங்க டேபிள் மேல வச்சிடுங்க. தாங்க்ஸ் அக்கா.”
“சரி தம்பி நான் கீழே போறேன். வேற எதாவது வேணும்ன்னா ஒரு குரல் குடுங்க வந்திடறேன்”
என்று கூறிவிட்டு ராஜாவின் அறையின் கதவை சாத்திவிட்டுச் சென்றாள் மங்களம். ராஜா அந்த காபி ட்ரேவை ராமுவிடம் நீட்ட ராமு ஒரு கப் காஃபியை எடுத்துக் கொண்டான். மற்றொரு கப் காபியை தான் எடுத்துக் கொண்டு ட்ரேவை டேபிளில் வைத்து விட்டு அங்கிருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்துக் கொண்டு…
“ராமு நீ மூணு பக்கம் பார்த்த அப்புறம் என்ன ஆச்சு? கதை முடிஞ்சிடிச்சா?”
என நக்கலடித்தான் ராஜா. அவனிடம்… தான் அந்த புத்தகத்தை படித்ததும் அதனால் அவர்கள் வீட்டில் நடந்தவற்றைப் பற்றியும் முழுவதுமாக கூறி முடித்தான் ராமு. அதைக் கேட்டதும் ராஜாவுக்கு ஆர்வம் அதிகரித்தது…
“ராமு ஏன் உன்னால அந்த புக்கைத் திறக்க முடியாமல் போச்சு?”
“அதுதான் சொன்னேனே கீழே போட்டதுக் கு அப்புறமா என்னால அதை திறக்க முடியலைடா!!”
“என்னடா ராமு நீ சொல்லறத கேட்டா நம்பறா மாதிரி இல்லையே டா”
“டேய் ராஜா…உன் கையில் அந்த புக் இப்போ இருக்கு. நீயே திறந்துப் பார் அப்போ நான் சொல்லறது உனக்கு புரியும்”
ராஜாவும் தன் நண்பன் சொல்வதைப் போல அந்த புத்தகம் திறக்காது என்ற நம்பிக்கையில் திறந்தான். புத்தகமும் திறந்துக் கொண்டது. அதைப் பார்த்த ராமு
“டேய் ராஜா நீ தொறந்தா தொறக்குது!!! அது எப்படி டா?”
“ராமு விளையாடாதே!!! பத்தகம் தானே டா!!! யார் திறந்தாலும் திறந்துக் கொள்ளத் தான் செய்யும்.”
“அப்படியா சரி இப்போ அதை மூடிட்டு என்கிட்டக் குடு”
“இந்தா வச்சுக்கோ”
ராமு புத்தகத்தை ராஜாவிடமிருந்து வாங்கியதும் திறக்க முயற்சித்தான் ஆனால் முடியவில்லை. அதைப் பார்த்த ராஜா
“ஏன்? ஏன்டா?!!! சரி என்கிட்ட குடு”
என வாங்கித் திறந்தான் புத்தகம் திறந்துக் கொண்டது…அதன் பின் ராமு மெல்ல தன் காபியை அருந்திக் கொண்டே சொல்ல ராஜா தன் கப் காபியை குடித்துக் கொண்டே அந்த
புத்தகத்தைத் திறந்தான்.
“சரி திறந்திட்ட தானே முதல் பக்கத்தில் முகவுரை இருக்கா?”
“ஆமாம் இருக்கு”
“அதைப் படிச்சிட்டியா? இப்போ அடுத்தப் பக்கத்தைத் திருப்பு…”
“அந்த பக்கம் காலியா இருக்கா?”
“இல்லை ராமு இதுல நிறைய காட்டுவாசிங்க இருக்குற குடில்களா இருக்கு டா. இந்த இடத்தை எங்கயோ பார்த்தா மாதிரியே ஒரு ஃபீல் வருது”
என ராஜா சொன்னதும் அதிர்ச்சியில் ராமு தன் காபியை ஒரே மடக்கில் குடித்துவிட்டு
“அப்படியா!!! நான் பார்க்கும் போது காலியா இருந்தது அப்புறம் கொஞ்ச நேரத்தில் தானாவே அந்த குடிசைகளை வரைஞ்சு காட்டிச்சு. சரி அடுத்த பக்கத்துக்குப் போ”
என்று கூறிக்கொண்டே அதுவரை ராஜா அருகில் அமர்ந்திருந்த ராமு ராஜாவிடமிருந்து பத்தடி தள்ளிப் போய் நின்றுக் கொண்டான். அதை கவனித்த ராஜா
“டேய் ராமு இப்போ நீ ஏன் இங்கேந்து எழுந்து போய் அங்க நிக்குற?”
“அதெல்லாம் நீ அடுத்தப் பக்கத்துக்கு போ உனக்கே புரியும்”
“என்னடா ரொம்ப தான் பண்ணுற. அப்படி என்ன அடுத்தப் பக்கத்துல இருக்கு?”
என்று கூறிக்கொண்டே அந்த புத்தகத்தின் அடுத்தப் பக்கத்தை திருப்பினான் ராஜா.
தொடரும்…….