அத்தியாயம் 1: மூன்று நண்பர்கள்

“ஹாய் ராஜா என்ன நம்ம ப்ளான் படி எல்லாம் நல்லா நடக்குமா டா?”

“எல்லாம் நல்லபடியாவே நடக்கும் டா ராமு. எவ்ரிதிங் இஸ் ரெடி…. என்ன ஒரு நல்ல கதை மட்டும் கிடைச்சிட்டா ஷுட் ஆரம்பிச்சிடலாம்”

“ஹேய் ராஜா அன்ட் ராமு எப்படிடா இருக்கீங்க?”

“வாடா ராஜேஷ்…பார்த்தயா ராமு… என்னமோ பார்த்து பல வருஷம் ஆனா மாதிரி விசாரிக்கறத? நேத்து சாயந்தரம் வரை நம்ம கூட தானே  இருந்தான்!!”

“இல்ல மச்சான் பேச்சை இப்படி தான் பாஸிடிவ்வா ஆரம்பிக்கணும் டா”

“அச்சசோ ராஜா!!! ஆரம்பிச்சிட்டான் டா பாஸிடிவ் பத்மநாபன்”

“சரி சரி நம்ம ஷார்ட் பிலிம்க்கு கதை கிடைச்சாச்சா ஃப்ரெண்ட்ஸ்?”

“எங்க டா உன்னை மாதிரி தான் நாங்களும் தேடிக்கிட்டு தான் இருக்கோம். ஏன் உனக்கு ஏதாவது கிடைச்சிருக்கா?”

“டேய் ராமு இல்ல டா!!! கிடைச்சிருந்தா முதல்ல உங்க ரெண்டு பேர்கிட்ட தானே சொல்லிருப்பேன். எங்க டாடி தாடி தண்டபாணி டார்ச்சர் தாங்க முடியல டா. எனக்கு ஆறு மாசம் தான் டைம் குடுத்திருக்கார்…அதுக்குள்ள ஏதாவது ஒரு ஷார்ட் ஃப்ளிம் எடுத்தாகணும்… நாம ஃபேமஸ் ஆகணும் இல்லன்னு வச்சுக்கோ…
கையிலே பை, கழுத்திலே டை, வாயிலே பொய்ன்னு….ஒரு கால் சென்டர் வேலைக்கு சேர்ந்துடணும். அப்போ தான் டாடி கம்முன்னு இருப்பாரு..உனக்கு என்னடா ராஜா!!! நீ பேருக்கேத்தா மாதிரி ராஜா வா தான் வாழுற…உங்க அப்பா அம்மா உன்னை உன் இஷ்டப்படி உனக்கு பிடிச்சதைப் பண்ணுன்னு சொல்லிட்டாங்க… ஆனா எங்க வீட்டுல இவ்வளவு நாள் பொறுத்ததே பெரிசு பா…சீக்கிரம் சம்பாதிக்க ஆரம்பிக்கணும் எங்க அக்காவ கல்யாணம் கட்டிக் கொடுக்கணும்….இப்படி நிறைய இருக்கு….டேய் ராமு உங்க வீட்டுல எப்படி போவுது??? “

“எங்க வீட்டுலையும் பிரச்சினை தான் பா. எங்க அம்மாவும் தங்கச்சியும் சப்போர்ட் பண்ணுறாங்க …ஆனா… என் அப்பா தான் என்னை இதை எல்லாம் மூட்டை கட்டி வச்சுட்டு வேலைக்கு போற வழி பாருன்னு அடிக்கடி சொல்லிகிட்டே இருக்காரு…அவரைச் சொல்லியும் குத்தமில்ல என்னை இஞ்சினியரிங் படிக்க வச்சு… பாவம் ஒத்த ஆளா நாலு பேருக்கும் சம்பாதிச்சுப் போட்டுகிட்டிருக்கார். அவரோட சுமையை கொஞ்சம் நானும் பகிர்ந்துகிட்டா நல்லா இருக்குமேன்னு பார்க்கறார். அது தப்பில்லை …ஆனா…”

“கவலைப் படாதீங்கடா நான் பார்த்துக்கறேன். உங்க ரெண்டு பேர் வீட்டுலையும் ஆறு மாசம் டைம் குடுத்திருக்காங்க இல்ல அதுக்குள்ள நாம ஒரு ஷார்ட் பிலிம் எடுக்கறோம் வாழ்க்கையில ஜெயிச்சுக் காட்டறோம் ….என்ன சொல்லறீங்கடா?”

“எங்கடா ராஜா !!! கதை கிடைக்க மாட்டேங்குதே? சரி எங்க அம்மா ரேஷன் கடைக்கு போய் சர்க்கரை வாங்கிட்டு வரச்சொன்னாங்க நான் போய் வாங்கி கொடுத்துட்டு வரேன் டா”

“போச்சு!!! டேய் ராமு…எங்கேந்து வருவ அந்த கடையில போய் நீ க்யூல நிண்ணு சர்க்கரை வாங்கறதுக்கே சாயந்தரம் ஆகிடும் அப்புறம் எப்படி வருவ? அப்போ நாளைக்கு தான் பார்க்க முடியும்.”

“ராஜேஷ்…. நான் எங்க வீட்டுக்குன்னு செய்றதே இந்த மாதிரி வேலைகள் தான் அதையாவது ஒழுங்கா செய்து கொடுக்கணும் இல்ல….சரி சரி பை ஃப்ரெண்ட்ஸ்…நாளைக்குள்ளயாவது கதைக்கிடைக்குதான்னு பார்ப்போம்.”

“பார்ப்போம் பார்ப்போம் நீ போய் இன்னைக்குள்ள சர்க்கரை கிடைக்குதான்னு பாருப்பா போ போ”

“டேய் ராஜேஷ் ஏன்டா அவன கலாய்கிற? அவன் கஷ்டம் அவனோடது…”

“அப்போ எனக்கெல்லாம் கஷ்டம் இல்லையா என்ன? அத விடு அது எங்க கூடவே பொறந்தது. சரி அந்த ஆர்டிஸ்ட் எல்லாம் ஓகே பண்ணினோமே அவங்க உன்கிட்ட நம்ம ஷுட் ப்ரோக்ரஸ் பத்தி ஒண்ணுமே கேட்கலையா? ஊருக்கு முன்னாடி அவங்க கிட்ட எல்லாம் சான்ஸ் தரோம்ன்னு தம்பட்டமும் அடிச்சிட்டோம்”

“அதை ஏன் கேட்குற டா? ரொம்ப அசிங்கமா ஆயிடுச்சு”

“அப்படியா என்ன ஆச்சு நீ எங்க கிட்ட சொல்லவே இல்ல!”

“என்னத்த சொல்ல ராஜேஷ்? நாம் பாட்டுக்கு சான்ஸ் தர்றோம்னு சொல்லி ஆட்களை எல்லாம் செலெக்ட் பண்ணிட்டு கதைக்காக அலைஞ்சுகிட்டிருக்கோம். அந்த கவலை அவர்களுக்கெல்லாம் எங்கேந்து தெரியப்போவுது. நம்ம மேல தான் தப்பு. முதல்ல கதையை ரெடி பண்ணிட்டு ஆட்களைத் தேரந்தெடுத்திருக்கணும்…நாம தலைகீழா பண்ணப்போய் எல்லாமே சொதப்பலாயிடுச்சு”

“அதுதான் என்ன ஆச்சுன்னு கேட்கிறேன். நீ என்னடான்னா நாம் பண்ணின தப்பை மட்டுமே சொல்லிட்டிருக்க?”

“இன்னைக்கு காலங்காத்தால எங்க வீட்டுக்கே வந்துட்டாங்க டா ராஜேஷ்”

“வந்து?”

“வந்து… என்ன ஆச்சு? எங்களுக்கு சான்ஸ் குடுப்பீங்களா மாட்டீங்களான்னு ஒரே ரகளை ஆயிடுச்சு”

” அப்புறம்?”

“அப்புறம் என்ன!! எங்க அப்பா அவங்களை வீட்டுக்குள்ள உட்கார வச்சு…நம்ம சிட்டுவேஷனை எக்ஸ்ப்ளேன் பண்ணினார்”

“அது தான் பண்ணிட்டாரு இல்ல அப்போ ப்ராப்ளம் சால்வ்டு தானே !!! இதுல என்ன அசிங்கப்பட இருக்கு டா? இதே எங்க வீட்டு வாசல்ல வந்திருந்தாங்கன்னு வச்சுக்கோ என் டாடியும் அவங்க கூட சேர்ந்துகிட்டு குய்யோ முய்யோன்னு கத்திருப்பாரு தெரியுமா?”

“முழுசா கேளு மச்சான்”

“சொல்லு”

“எங்க அப்பா சொன்னதைக் கேட்டதும் எல்லாருமா ஒண்ணா எழுந்து”

“எழுந்து!”

“அட ச்சே!!! கதையில்லாம எப்படி? எங்களை எல்லாம் எதுக்கு செலக்ட் பண்ணினாங்களாம்? அட போங்க சார்…உங்க புள்ளைய முதல்ல ஒரு நல்ல டாக்டர்கிட்ட காமிங்க…இன்னும் எதுக்கு இங்க நிக்கிறோம்…அட வாங்கையா…பணம் இருக்குறவங்களுக்கு விளையாட நாம தான் கிடைச்சோம் போல!!! தம்பி இனிமேட்டு எங்கயாவது நடிக்கறதுக்கு ஆளு எடுக்குற கோஷ்ட்டில உன்னையோ இல்ல உன் சிநேகிதன்களையோ பார்த்தோம் அவ்வளவு தான் சொல்லிப்புட்டேன்…கதையே இல்லாம படம் எடுக்குறானுங்களாம் படம்…வாங்கையா நம்மளாவது உறுப்படியா எதாவது செய்வோம்…அப்பனும் மவனும் கதை எழுதி அதுல அவங்களே நடிச்சுக்கட்டும் நாம போகலாம்…….அப்படீன்னு சொல்லி முகத்தில காரித்துப்பாத குறையா சொல்லிட்டு போயிட்டாங்கடா!! இது அசிங்கமில்லையா ராஜேஷ்”

தொடரும்…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s