அத்தியாயம் 26: பதக்கமும்! விளக்கமும்!

கோதகனும் கேசவனுமாக கஷியிலிருந்து மாயாபுரியை நோக்கி நடக்கலானார்கள். வழி நெடுக்க அந்த நீர்த்துளி பதக்கத்தை எப்படி எடுப்பது என்ற சிந்தனையிலேயே நடந்தான் கோதகன். அதை செய்ய வேண்டாம் அதனால் வேறு ஏதாவது தீங்கு நேர்ந்திடும். அந்த தீங்கிற்கு கோதகன் காரமாக கூடாது என்று கோதகனிடம் சொல்லிக்கொண்டே வந்தான் கேசவன்.

நீர்த்துளி பதக்கத்தை எப்படி எடுப்பது
அதை எப்படி கஷிக்கு கொண்டு வருவது
தன் மக்களை எப்படி மீட்பது
என்று கோதகனும்

நீர்த்துளி பதக்கத்தை எப்படி எடுக்கவிடாமல் தடுப்பது
அது எப்படி களவு போகாமல் பாதுகாப்பது
மாயாபுரியை எப்படி இந்த மாயவலையிலிந்து மீட்பது
என்று கேசவனும்

யோசித்துக் கொண்டும் விவாதித்துக் கொண்டும் நடந்ததில் நாட்கள் போனதே தெரியாமல் மாயாபுரி எல்லையிலிருந்து சுமார் ஒரு பத்து மைல் முன்னதாகவே நின்றான் கேசவன். கோதகனையும் நிற்கச் சொன்னான்.

“இங்கே பாரு கோதகா. இவ்வளவு பிடிவாதம் உனக்கு கூடாது. உன்னை அந்த கடவுள் எப்படியோ சரியான நேரத்தில் மாயாபுரிக்கு அனுப்பி வைத்து அந்த அசுரர்களிடமிருந்து காப்பாற்றியுள்ளார். மாயாபுரியில் அடைக்கலம் புகுந்ததால் உயிர் தப்பியுள்ளாய். அப்படிப்பட்ட மாயாபுரிக்கே தீங்கு செய்ய உனக்கு எப்படி மனசு வந்தது. நான் சொல்வதை கேள். அந்த நீர்த்துளி பதக்கத்தை எடுத்து எங்கள் ஊர் மக்களின் சாபத்திற்கு உள்ளாகாதே”

“மாமா ஆனால் என் ஊர் மக்களையும் என் பெற்றோரையும் எப்படி நான் காப்பாற்றுவது?”

“அவர்கள் அந்த அசுரர்களால் அழிக்கப்பட்டுவிட்டனர். நீ நினைத்தாலும் அவர்களை காப்பாற்ற முடியாது.”

“இல்லையே அந்த சுக்கிராச்சாரியார் சுவாமிகள் நீர்த்துளி பதக்கதை கஷிக்கு கொண்டு வந்தால் என் ஊர் மக்களை காப்பாற்றிவிடலாமென்று சொன்னாரே! அது உங்கள் காதில் விழவில்லையா?”

“ஏன் விழாமல் நன்றாகவே விழுந்தது அதில் ஏதோ சூழ்ச்சி இருப்பது உனக்கு தான் புரியவில்லை. மீண்டும் ஆரம்பத்திலிருந்து நமக்குள் விவாதம் வேண்டாம். நீ அந்த பதக்கம் எடுப்பதை பற்றி மறந்திடு. இல்லை இல்லை இப்படி எல்லாம் சொன்னால் நீ கேட்க மாட்டாய்…உன் அக்காள் லட்சுமி மேல் சத்தியம் செய்….அந்த நீர்த்துளி பதக்கத்தை எடுக்கும் எண்ணத்தை கைவிடுகிறேன் என்று ம்…கோதகா என்ன யோசனை?”

இதற்கு மேல் கேசவனிடம் பேசி ஏதும் ஆக போவதில்லை என்பதை உணர்ந்த கோதகன் அந்த பேச்சுவார்த்தையை அப்போதைக்கு முடித்துக் கொள்ள வேண்டி தன் மாமாவிடம்

“சரி மாமா நான் எடுக்க மாட்டேன். ஆனால் அக்கா மீதெல்லாம் சத்தியம் செய்ய மாட்டேன்”

“சரி அப்போ என் மீது சத்தியம் செய்”

“மாமா நான் எவர் மீதும் சத்தியம் செய்ய மாட்டேன். என்னை நம்புங்கள் அந்த பதக்தத்தை எடுக்க மாட்டேன் என்றால் மாட்டேன் போதுமா”

“சரி வா இப்போது ஊருக்குள் செல்வோம்”

“மாமா எவருக்கும் தெரியாமல் சென்றோமில்லையா அப்போ எவருக்கும் தெரியாமல் தான் திருப்பி ஊருக்குள் செல்ல வேண்டும்.”

“அதற்கு அவசியமே இல்லை கோதகா. கஷியில் நாம் கண்டதையும், கேட்டதையும் ஊர் தலைவரிடம் சொல்லி முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய சொல்ல வேண்டும். என்ன நம்மீது சற்று கோபம் கொள்வார் ஆனால் நாம் சொல்லப்போகும் விவரங்களை கேட்டால் அவரின் கோபம் சற்று தனிய ஏதுவாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கிறுக்கிறது”

“அது சரி அப்போ இத்தனை நாள் நாம் ஊரில் இல்லாததை சமாளித்த என் அக்காவையும் மாட்டிவிட போகிறீர்கள் இல்லையா?”

“ஓ!!! அப்படி ஒன்றிருப்பதை நான் மறந்துட்டேன். ஆனால் உண்மை தெரிந்தால் தலைவர் அவளையும் மன்னித்து விடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது கோதகா”

“மாமா நீங்கள் சொன்னதிற்கு நான் ஒப்புக் கொண்டேன் இல்லையா அதே போல இப்போது நான் சொல்வதற்கு நீங்கள் ஒப்புக்கொள்ள தான் வேண்டும். நாம் எப்படி எவருக்கும் தெரியாமல் கஷிக்கு சென்றோமோ அதே போல எவருககும் தெரியாமல் இப்போது மாயாபுரி சென்றாக வேண்டும். இதற்கு நீங்கள் சம்மதித்து தான் ஆகவேண்டும்”

“ம்….சரி கோதகா என் பேச்சை நீ கேட்டதால் உன் பேச்சை கேட்கவேண்டிய நிலையில் நான் உள்ளேன். அதனால் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதற்கு நாளை காலை ஆறு மணி வரைக்கும் காத்திருக்க வேண்டுமே”

கோதகன் கராராக கூறியதும் வேறு வழியின்றி ஒப்புக் கொண்டாலும் மனதிற்குள் ஊருக்குள் சென்றதும் தலைவரிடம் எவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சொல்லியாக வேண்டுமென்ற எண்ணத்தில் இருந்தான் கேசவன்.

“காலை வரை எல்லாம் காத்திருக்க வேண்டாம் மாமா. இங்கேயே அமர்வோம். நிச்சயம் இரவு நேர காவலர்கள் மாறுவார்கள் அப்போது எவர் கண்ணிலும் படாது ஊருக்குள் சென்றிடுவோம் சரியா. அதுவரை இங்கேயே இந்த புதரின் மறைவில் அமர்ந்திருப்போம்”

என்று கோதகன் சொன்னதும் மாமனும் மச்சானுமாக அந்த இடத்திலேயே அமர்ந்துக் கொண்டு காவலர்கள் மாறும் நேரத்துக்காக காத்திருந்தனர்.

இவர்கள் இங்கு ஊருக்குள் செல்ல காத்திருக்கும் வேளையில் அசுரர்கள் பதக்கத்தை ஊருக்குள் விட்டுச் சென்றதையும் அதன் மூலம் அவர்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தைப் பற்றியும் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தனர். அப்போது காற்கோடையனிடம் மதிநாகசுரன்

“ஆசானே நான் வேண்டுமென்றெல்லாம் பதக்கத்தை விட்டு வரவில்லை. அந்த பதக்கம் இப்படி ஒரு வாய்ப்பை நமக்கு அளிக்கும் என்று நான் எண்ணவில்லை. அது காணவில்லை என்றுணர்ந்ததும் கஷியில் தான் இருக்க வேண்டுமென்று எண்ணி சென்று பார்த்தேன் ஆனால் அங்கிருக்கவில்லை. சரி வேறெங்கோ தவறவிட்டிருப்பேன் என்று எண்ணி அதை அடியோடு மறந்திருந்தேன் இன்று அங்க நடந்த நிகழ்வு நமக்கு இங்கு தெரியும்வரை. இன்னமும் என் மேனி சிலிர்க்கிறது”

“மதிநாகசுரா, உன் மேனி சிலிர்க்க வேண்டிய அவசியமேதுமில்லை. அந்த பதக்கம் அப்பேற்பட்ட சக்தி வாய்ந்தது என்று உனக்கு தெரியாமல் இருப்பதில் எனக்கு எந்த வித ஆச்சர்யமும் இல்லை ஏனெனில் அதைப் பற்றி நான் உன்னிடம் இது வரை கூறியதில்லை. அந்த பதக்கத்தின் பெயர் சுக்கிரகுரு என்பதாகும். அதை அவ்வளவு நேர்த்தியாக வடிவமைத்து அதற்குள் அவ்வளவு சக்தியை வைத்து நமக்கு முன் வாழ்ந்த உன் பாட்டனாருக்கு நமது அசுரகுரு சுக்கிராச்சாரியார் வழங்கியது. அது பின் உன் தந்தை பலியிடம் வந்தது. எனது தலைவர் பலி போர் புரியும் தருவாயில் நான் உங்களை கூட்டிக்கொண்டு தப்பிக்க நினைக்கையில் தனது அடுத்த வாரிசுகளுக்கு உதவட்டுமென்று கழுத்திலிருந்து கழற்றி என்னை நோக்கி வீசி எறிந்தார். அதை நான் எடுத்துக் கொண்டு உங்கள் அனைவரையும் காப்பாற்றி நமது பாதாளபுரிக்கு பத்திரமாக சேர்ந்ததும் உன் கழுத்தில் போட்டு விட்டு உன்னை பத்திரமாக பார்த்துக் கொள்ளச் சொன்னேன். நீ தவறவிட்டதும் நமது நன்மைக்கே என்று எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் இப்போது அந்த நான்கு நீர்த்துளி பதக்கங்கள் ஒன்றாக இணையாதவாறு நமது குரு அந்த நரன் கோதகனை ஏவியுள்ளார். அவன் மட்டும் அதை செய்து விட்டால் வெற்றி நமதே.”

“அதை அவன் செய்வானா ஆசானே?”

“பொருத்திருந்து தான் தெரிந்துக் கொள்ள வேண்டும் மதிநாகசுரா. அந்த காரியத்தை எண்ணி ஒன்றை நீ மறக்கிறாய்.”

“எதை மறந்தேன் ஆசானே?”

“அந்த நீர்த்துளி பதக்கத்தை நரன்களிடமிருந்து தட்டிப் பறிப்பது என்ற யோசனையிலும் அதற்காக சாம்பீனிகளை மீண்டும் நரன்களாக மாற்ற வேண்டி நம் சிம்பா தவம் மேற்கொள்வதிலும் நமது சிந்தனையும் செயலும் போனதே அன்றி அந்த பதக்கத்தைப் பற்றி நானும் மறந்தே போனேன். ஆனால் நமது குரு நமக்கு நல்வழி காட்டியுள்ளார். அவர் என்றுமே நமது இனத்திற்கு நல்வழிகளையே காட்டியுள்ளார் ஆனால் அதை பலர் ஏற்று நடந்தாலும் சிலர் புறங்கணித்து அவர்தம் விதியை முடித்துக் கொண்டனர் என்ன செய்ய?”

“அப்படியா? எவர் அப்படி ஒரு செயலை செய்தது ஆசானே?”

“வேறு யாரு உன் பாட்டனாரின் தந்தை முதல் மஹாபலி, மற்றும் உன் தந்தை நான்காம் மஹாபலி. இவ்விருவரும் சுக்கிராச்சாரியார் சொல பேச்சு கேட்காததால் பல விபரீதங்களை சந்தித்தனர்.”

“அப்படியா? அவர்கள் ஏன் குருவின் பேச்சைக் கேளாதிருந்தனர்?”

“எல்லாம் அவர்கள் நேரம் தான்…என்ன செய்ய? சரி சிம்பாசுரன் தவத்தை முடித்துக் கொண்டு வரட்டும் அதற்குள் நீ சென்று அந்த பதக்கத்தை கஷியிலிருந்து எடுத்து வா அந்த கோதகனை கண்காணிக்க அது மிகவும் உதவும். ம்…சென்று எடுத்தே வா”

“ஆகட்டும் ஆசானே. இப்போதே கஷிக்கே சென்று சுக்கிரகுரு பதக்கத்துடன் வருகிறேன்.”

தொடரும்……
Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s