அத்தியாயம் 23: புது கூட்டணி!!

கோதகனும் அவன் மாமா கேசவனுமாக பேசிக்கொண்டப்படியே ஒரு திட்டம் தீட்டினர். கேசவன் கோதகனிடம்

“டே கோதகா அந்த சாமியார் சொன்னது சரியான்னு கண்டுப் பிடிக்க என்கிட்ட ஒரு யோசனை இருக்கு சொல்லவா!”

“சொல்லுங்க மாமா!”

“அன்னைக்கு நம்ம ஊர் மக்கள் எல்லாரையும் ஊர் தலைவர் வீட்டின் முன் வரச் சொல்லி அழைப்பு வந்தது இல்லையா!”

“ஆமாம் நாம எல்லாருமே அங்கே போணோம். அங்க கூடியவங்க எல்லாரையும் இரண்டு பிரிவா பிரிச்சாங்க!!!”

“ஆங் அது தான் இப்போ நமக்கு உதவ போவுது!”

“அது எப்படி !!! எனக்குப் புரியலையே!”

“அதாவது அன்னைக்கு அந்த ஐந்து பேர் வீட்டிலிருந்து தான் நம்மூரை விட்டு வெளியூருக்குச் சென்றவர்கள் இருந்தார்கள் இல்லையா!!”

“ஆமாம்!!! அதுக்கென்ன மாமா?”

“டேய் கோதகா!!! இப்போ நாம ரெண்டு பேருமா அந்த அஞ்சுப் பேர் வீட்டுக்கும் போறோம்!!!”

“போய்?”

“அவங்க வீட்டிலிருந்து ஊருக்குப் போணவங்க திரும்பி வந்திட்டாங்களானு கேட்போம்”

“கேட்டு?”

“கேட்டா பாதி விஷயம் தெளிவாகிடும்!!! அதுக்கு அப்புறம் என்ன பண்ணறதுன்னு அப்புறமா யோசிப்போம். இப்போ கிளம்பலாமா?”

“ஓ கிளம்பலாமே!”

இருவருமாக அந்த ஐந்து குடும்பத்தினர் வீடுகளுக்கும் சென்று விசாரித்தனர். அவர்களுக்கு கிடைத்தப் பதில் “எவரும் திரும்பவில்லை” என்பதாக இருந்தது. அதை அறிந்ததும் கோதகன் தன் மாமாவிடம்

“கேசவன் மாமா இப்போ என்ன பண்ணப்போறோம்? அந்த ஊர்களிலிருந்து எவருமே திரும்பி வரவில்லையாமே!!!! ஏன்? அவர்தளுக்கு என்ன நேர்ந்திருக்கும்? ஏன் ஊர் தலைவர் அவர்கள் குடும்பத்தினருக்கு தானியமும் பொன்னும் பொருளும் கொடுக்க வேண்டும்? ஒரு வேளை அந்த சாமியார் சொன்னது போல ஏதாவது நடந்திருக்குமா?”

“டேய்!!! டேய்!!! ஒரு நேரத்துல இவ்வளவு கேள்வி கேட்டா எப்படிடா? நானே ரொம்ப குழம்பிப் போயிருக்கேன்!!! இரு இரு கொஞ்சம் அந்த மரத்தடியில் உட்கார்ந்து யோசிப்போம் வா…….உட்காரு……அப்பாடி….சரி கோதகா உன்கிட்ட அந்த சாமியார் என்ன சொன்னார்?”

“அதைத் தான் நான் அப்பவே சொன்னேனே !!! அதுக்கப்பறம் ஊர் தலைவர் என்னை ஏதும் கேட்க விடாமல் வீட்டுக்கு அனுப்பிட்டாரே!!!”

“அடேய்!!!! ஏன்டா!!! நான் கேட்கறது நீ கஷியிலேந்து வரும்போது எல்லையில் பார்த்தேன்னு சொன்னயே அப்போ என்ன சொன்னார்ன்னு கேட்கறேன்!!”

“ஓ!!! அப்பவா? அன்னைக்கு உங்க ஊர் எல்லைக்குள்ள என்னால வரமுடியாம ஏதோ என்னைத் தடுத்தது. அப்போ அந்த சாமி தான் ஏதோ தண்ணீர் தெளித்து உள்ளே வரச்சொன்னார் நானும் வந்தேன். அது எப்படி நடந்தது நான் ஏன் முதலில் உள்ளே அனுபதிக்கப் படவில்லைன்னு கேட்டதுக்கு அவர் என்னைப்பார்த்து …..நீ எங்கிருந்து வந்தாயோ அங்கே தான் அதற்கு பதிலும் உள்ளதுன்னு சொல்லிட்டு மறைஞ்சுட்டார்”

“அப்படீன்னா !!! அவர் என்ன சொல்ல வரார்? நீ எங்கிருந்து வந்தாயோன்னா ??? நீ வந்தது கஷியிலேந்து!!! அதற்கு பதிலும் அங்கே தான் உள்ளதுன்னா?? அப்போ கஷிக்கு போனா விவரம் தெரிஞ்சுக்கலாம்ன்னு அர்த்தம் வருதே!!!”

“ஓ!! சபாஷ் மாமா!!! ஆனா உங்க ஊர் தலைவர் தான் என்னை இந்த ஊரை விட்டு வெளியே எங்கும் போகக்கூடாதுன்னு சொல்லிருக்காரே!!!”

“ஓ!!! ஆமாம் இல்ல!!”

“என்னை மட்டுமா இந்த ஊயிலிருக்கும் எவருமே வெளியூர்களுக்கு பிரயாணம் செய்யக் கூடாது என்றல்லவா உத்தரவு பரப்பித்துள்ளார்!”

“அட ஆமாம் கோதகா!!! இப்போ நாம எப்படி? என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கறது?”

“ஒரு வழி தான் இருக்கு மாமா!!”

“என்ன வழி அது கோதகா?”

“ஊர் தலைவருக்கும் தலைமைக் காவலருக்கும் தெரியாமல் நாம் சென்று பார்த்தால் தான் நம்மால் புரிந்துக் கொள்ளமுடியும்”

“என்னது?? அது சாத்தியமே இல்லை கோதகா!! அப்படியே அவர்களுக்குத் தெரியாமல் செல்லப் பார்த்தாலும் எல்லைக் காவலர்கள் நம்மை பிடித்து விடுவார்களே!!”

“என்ன தான் இதற்கு வழி?”

“இரு இரு யோசிப்போம்! யோசிப்போம்! நிச்சயம் ஏதாவது வழி பிறக்கும் அதுவரை நீ எல்லைக் காவலர்களின் நடவடிக்கைகளை கண்டு வா… எப்போது எத்தனை நிமிடங்கள் ஏதாவது ஒரு இடத்தில் ஆள் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை தெரிந்துக் கொண்டு வா. நான் ஊருக்குள் இருக்கும் காவலர்களையும் தலைமைக் காவலரையும் ஊர்த் தலைவரையும் கண்காணிக்கின்றேன். சரியா”

“சரிதான் மாமா. நான் அப்படியே செய்கிறேன். இப்போதிருந்தே துவங்குகிறேன்”

“சபாஷ் கோதகா! சபாஷ்! நீ அப்படிப் போ நான் இந்த வழியில் செல்கிறேன். விரைவில் சந்திப்போம்”

“ஆகட்டும் மாமா. பத்திரமாக இருங்கள்”

என இருவரும் பேசிக்கொண்டப்படியே கண்காணிப்பு வேலையில் இறங்கினர். அன்று மதியம் துவங்கி இரவு வரை தொடர்ந்தது அவர்களின் கண்காணிப்பு. கோதகனுக்கு வயிற்றுப் பசி எடுக்க ஆரம்பித்ததும் அவன் அதுவரைப் “பார்த்ததைப் பற்றி இன்று கூறுவோம். மேலும் நாளை வந்து தொடர்வோம்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு அக்கா லட்சுமி வீடு வந்து சேர்ந்தான். அவனைப் பார்த்த லட்சுமி அக்காள்

“டேய் கோதகா எங்க உன் மாமாவைக் காணமே!! ரெண்டு பேருமா தானே போனேங்கள். நீ மட்டும் வந்திருக்க அப்போ அவர் எங்கடா?”

“ஓ!! மாமா இன்னும் வரலையா. எனக்குப் பசிச்சிது நான் வந்தேட்டேன். மாமாவும் அனேகமா இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவார். அவருக்கும் பசிக்குமில்லையா!!”

“என்னடா சொல்லுற? ஒண்ணா வீட்டை விட்டு கிளம்பிப் போண நீங்கள் ஏன் தனித்தனியாக வரணும்?”

“அக்கா சாப்பாட்டைப் போட்டுட்டு உன் கேள்விகளை கேட்கறையா!!! மாமா வந்துடுவார்…..ஆங் இதோ வந்துட்டார். அவரும் பசில வந்திருப்பார்….முதல்ல எங்களுக்கு சாப்பாடுத் தா அப்புறமா நாங்க என்னென்ன நடந்ததுன்னு சொல்லரோம்”

“என்னடா கோதகா உன் அக்கா விஷயம் தெரிஞ்சுக்காம சாப்பாடு தரமாட்டேங்கறாளா?”

“அட ஆமாம் மாமா!!! எவ்வளோ கேள்வி கேட்கறா!!! இன்னும் எனக்கு சாப்பாடு தந்தப் பாடில்லை”

“ஏய் லட்சுமி சீக்கிரம் சாப்பாடு போடு.”

லட்சுமிக்கு இவர்கள் இருவரும் அப்படி எங்கு சென்றிருப்பார்கள்? என்ன நடந்திருக்கும்? ஏன் தனித்தனியாக வந்துள்ளார்கள்? என்ற பலக் கேள்விகள் மனதில் உதித்தது. அவற்றிற்கு பதில் வேண்டுமென்று வேகவேகமாக இருவருக்கும் சாப்பாட்டைப் பரிமாறினாள். அவர்கள் சாப்பிட்டு எழுந்ததும் கேசவன் அங்கிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்துக் கொண்டு

“கோதகா வா இங்கே!!! நாம பேசறதுக்கு நிறைய இருக்கு”

“இதோ வந்துட்டேன் மாமா”

“ஏன் என்கிட்ட சொன்னா என்ன ஆகுமா? ஏதோ பரம ரகசியம் பேசறா மாதிரி ரெண்டு பேருமா அப்படி என்ன பேசப் போறேங்களாம்?”

“என்ன லட்சுமி உன்கிட்ட சொல்லாம செய்வோமா? போ நீ உன் அடுப்படி வேலைகளை எல்லாம் முடிச்சுட்டு வா அப்புறம் சொல்லறேன் சரியா”

“ம்…ம்…சரி சரி இதோ பத்தே நிமிஷத்துல வந்துடறேன்”

என்று கூறிவிட்டு அடுப்படிக்குள் சென்றாள் லட்சுமி. அவள் அங்கிருந்து சென்றதம் கேசவன் கோதகனிடம்

“கோதகா உங்க அக்கா கிட்ட இதெல்லாம் சொல்லிடாதே பா… அப்பறம் அவ நம்மளை போக விட மாட்டா. அப்புறம் நம்மால கண்டுபிடிக்கவே முடியாது… புரியறதா?”

“ஆனா அக்கா வந்ததும் கேட்பாளே!!”

“அதெல்லாம் நான் சமாளிச்சுக்கறேன்…சரி நீ போண வேலை என்னாச்சு. நான் ஒரு நேரத்தைக் குறிச்சு வச்சுருக்கேன்”

“நானும் பார்த்தவரைக்கும் காவலர்கள் வேலை மாறும்போது ஓர் இரு இடங்கள் காலியாகத் தான் இருக்கிறது.”

“சபாஷ் அப்போ நாளைக்கே கஷிக்கு சென்று வருவோமா?!”

“மாமா அக்காகிட்ட என்னத்தை சொல்லறது? அதுவுமில்லாம நீங்க வரவேண்டாம். நான் மட்டும் போயிட்டு என்ன ஏதுன்னு பார்த்துட்டும் வரேன்”

“ம் ….அது சரிப்பட்டு வராது. உனக்கு ஏதாவது ஆச்சுன்னா அப்பறம் உன் அக்காக்கு நான் எப்படி பதில் சொல்வேனாம்?”

“சரி மாமா அப்போ நாளைக்கு காலையிலே ஆறு மணிக்கு காவலர்கள் மாறுவார்கள் அப்போது போனால் சரியாக இருக்கும் என்ன சொல்கிறீர்கள்.?”

“ம்…சரி சரி உன் அக்கா வர்றா…..லட்சுமி வர்றா…நீ போ நான் பார்த்துக்கறேன்”

“சரி மாமா எனக்குத் தூக்கம் வர்றது. நான் போய் படுத்துக்கறேன். வரேன் க்கா!!!”

“என்ன? இவ்வளவு நேரம் மாமாவும் மச்சினன்னுமா ஏதோ பேசிக்கிட்டு இருந்தீங்க என்னைப் பார்த்ததும் ஏதோ நீங்க அவன்கிட்ட சொன்னீங்க அவனும் டக்ன்னு தூக்கம் வருதுன்னு கிளம்பிட்டான்!!! ஏதோ உங்க ரெண்டு பேருக்குள்ள நடக்குது.”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை லட்சுமி விடு விடு சரி நாமளும் தூங்கப் போலாமா?”

“என்ன விளையாடறேங்களா!!! வேலையை முடிச்சிட்டு வா சொல்லறேன்னு சொன்னேங்களே!!!!”

“அட வா லட்சுமி….சொல்லறேன் சொல்லறேன்!!! உன்கிட்ட சொல்லாம இருப்பேனா!!!”

தொடரும்…….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s