பரமபதம் ஆட்டம் ஆரம்பம்

தேவர்களின் தலைவனான இந்திரன் தனது யானை மீதமர்ந்து பவணி வந்துக்கொண்டிருந்த வேளையில் துர்வாசர் இந்திரனைக் கண்டு  கௌரவிக்க வேண்டி சிறந்த மலர்களை நேர்த்தியாக கோர்த்து கட்டிய அழகிய மாலை ஒன்றை கொண்டுவந்து இந்திரனை வணங்கினார். அதற்கு இந்திரன் துர்வாசரை கண்டும் யானை மேலிருந்து இறங்காமல் யானையின் மீதிருந்துக் கொண்டே வணங்கி, கழுத்தை வளைத்து மாலையை வாங்காமல் கையை நீட்டினான். அப்போதும் துர்வாசர் ஏதும் கோபித்துக் கொள்ளாமல் இந்திரன் கையில் மாலையைக் கொடுத்தார்.

இந்திரன் தனக்கென துர்வாசர் கொடுத்த மாலையை தனது யானைக்கு போட்டான். அதைப் பார்த்ததுமே முனிவருக்கு கோபம் வந்தது ஆனால் அதை அடக்கிக்கொண்டு நின்றிருந்தவர் அடுத்து நடந்ததைப் பார்த்ததும் கொந்தளித்து விட்டார். இந்திரனின் யானை ஆயிற்றே!! அது அந்த மாலையை தனது தும்பிக்கையால் இழுத்து பிய்த்துப் போட்டதும் துர்வாசர் கடுங்கோபம் கொண்டு இந்திரனிடம்

“ஆணவத்தால் ஆடும் இந்திரனே இந்த கணம் முதல் தேவர்கள் ஆகிய உங்கள் அனைவருக்கும் உள்ள அனைத்து  அதிர்ஷ்ட்டங்களும், வலிமைகளும் மறைந்து போகட்டும்” என சாபம் கொடுத்து மறைந்தார். 

துர்வாசரின் சாபத்தால் அனைத்தையும் இழந்த தேவர்களின் கை தாழ்ந்ததும் அசுரர்களின் கை ஓங்கியது. அசுரர்களின் தலைவன் “மஹா பலி” தேவர்கள் மீது படையெடுத்து அவர்களை தோற்கடித்து அண்ட சராசரங்களையும் தன் வசப்படுத்தி அனைவரையும் பல இன்னல்களுக்கு ஆளாக்கினான். இவர்களின் அட்டகாசங்கள் தாங்காமல் மாஹாவிஷ்ணுவிடம் தஞ்சமடைந்தனர் தேவர்கள். அமிர்தம் உண்டால் தான் துர்வாசர் சாபத்திலிருந்து விமோசனம் கிடைக்கும் என்று திருமால் கூறினார். திருமால், ஈசன், பிரம்மா உதவியுடன் அமிர்தத்தை கடைந்தெடுக்க முடிவெடுத்தனர். ஆனால் பாற்கடலை கடைவதற்கு மறுபக்கம் கயிற்றை இழுக்க பலசாலிகள் வேண்டுமே என்ற கேள்வி எழ உடனே திருமாலின் அறிவுரைப் படி அசுரர்களிடம் உதவி கேட்டனர்  தேவர்கள். சும்மா உதவி செய்து விடுவார்களா அசுரர்கள்? அவர்கள் கடைந்தெடுக்கும் அமிர்தத்தில் பாதி தரவேண்டும் என நிபந்தனைப் போட்டு அதற்கு தேவர்கள் சம்மதித்தப்பின் உதவ முன்வந்தனர். திருமால் கூர்ம அவதாரம் எடுத்து கடலின் அடியில் அமர்ந்துக் கொண்டு, மந்தார மலையை மத்தாக்கி, சிவபெருமானின் கழுத்தை அலங்கரித்துக் கொண்டிருந்த வாசுகி நாகத்தை கயிறாகக் கொண்டு தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்ததில் அமிர்தம் வெளிவந்தது. அதை யார் முதலில் உட்கொள்ள வேண்டும் என்ற சண்டையும் எழுந்தது. அந்த சண்டையின் நடுவே கருடன் அந்த அமிர்த கலசத்தை எடுத்துக்கொண்டு பறக்க அதை மஹாவிஷ்ணு மீட்டுவந்து மோகினியாக மாறி அசுரர்களை ஏமாற்றி தேவர்களுக்கு கொடுத்து அவர்களை காப்பாற்றி அவர்கள் இழந்த அனைத்தையும் திரும்பப் பெறச் செய்தார் திருமால் என்பது தான் “அமிர்தம் கடைதல்”.

பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்த பின் தேவர்கள் என்ன ஆனார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அசுரர்கள் என்ன ஆனார்கள்? அதன் பின் என்ன நடந்திருக்கலாம் என்பதை  எனது கற்பனா சக்திக் கொண்டு இந்த புனைவை இயற்றியுள்ளேன். 

வாரம் இருமுறை திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் ஆடப்படும்

பரமபதம்  

துவங்கும் நாள் – ஜனவரி நான்காம் தேதி. 

தாங்கள் அனைவரும் படித்து தங்களின் கருத்துக்களை பதிவிடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

1 Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s