முக கவசம் உன் அழகிய இதழ்களை மறைத்தாலும்
கூரான மூக்கை மறைத்தாலும்
உன் மீன் போன்ற விழிகளை அழகாக எடுத்துக்காட்டுகின்றது
முக கவசமின்றி நீ பேசும் போது
உன் மூக்கும் இதழும் என் மனதை திசைதிருப்பும்
முக கவசத்துடன் நீ பேசும் போது
கவனச்சிதறலின்றி கண்களை மட்டும் காண்கிறேன்
ஆஹா அதில் தான் எவ்வளவு உணர்வுகள்உன் மனதினை உன் கண்களில் படிக்கும் புதிய மாணவனானேன்