ஊரடங்கு உத்தரவுக்கு நன்றி
நீ எங்களை மறந்திடுவாய்
ஆனால் எங்களால் அது முடியுமா?
உன்னை நாடு முழுவதும் பிறப்பித்த போது
பலரின் கேலி, கிண்டல், மீம்ஸ், விவாதங்களுக்கு உள்ளாக்கப்பட்டு பின்பு எங்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கேற்றாய்
உன்னால் உணர்ந்தோம் எங்கள் குடும்பத்தினரை
உன்னால் அறிந்துக்கொண்டோம் ஆடம்பரம் அவசியம் இல்லை என்று
உன்னால் தீயப்பழக்கம் உள்ளவர்கள் கூட ஒரு மாதம் தங்கள் பழக்கத்தை மறந்திருந்தனர்
உன்னால் தெரிந்தது அண்ணாச்சி கடைகளே நம்பகமானது என்று
உன்னால் உணர்ந்தோம் வீட்டு உணவின் அருமை
உன்னால் அறிந்தோம் நேரத்தின் முக்கியத்துவம்
உன்னால் தெரிந்துக்கொண்டோம் பலரின் வெளிவராத திறமைகளை
உன்னால் உணர்ந்தோம் திரைப்படம் மற்றும் திரைப்பட நடிகர்கள் வெரும் பொழுதுபோக்கிற்கே என்று
உன்னால் புரிந்துக்கொண்டோம் மருத்துவம், மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவல்துறையினர், அனைத்து அரசாங்க ஊழியர்களின் அருமை பெருமைகளை
உன்னால் தெரிந்துக்கொண்டோம் அவசியத்திற்கும், அநாவசியத்திற்குமான வித்தியாசம்
எங்களுக்கு இவ்வளவு உணர்த்திய உன்னை மறப்பது எளிதல்ல
உன்னை பிறப்பிக்க காரணமாக இருந்த எதுவானாலும் /எவரானாலும்… அவைகள் / அவர்கள் ஓடி ஒளிந்து கொள்ள நேரம் வந்துவிட்டது
ஏனெனில் நாங்கள் புத்துணர்ச்சியுடன், புதிய எண்ணங்களுடன், புதிய யுக்திகளுடன், மறந்துப்போன பழய பழக்கவழக்கங்களை புதுப்பித்து, புதிய வாழ்க்கை முறையை கையாண்டு புதுப்பொலிவுடன் மிளிர ஆயத்தம் ஆகிவிட்டோம்!!!!
