அம்மா என்பவள் தன்னலமற்றவள்
அம்மா என்பவள் அன்பானவள்
பிள்ளைகள் மீது அக்கறையுள்ளவள்
பாசத்தின் அட்சயப்பாத்திரமானவள்
பிள்ளையின் நலனை மட்டுமே சிந்திப்பவள்
தனக்குள் நம்மை பேணி காத்தவள்
அதற்காக என்றுமே எதையுமே எதிர்பாராதவள்
தாய்மை தூய்மையானது
இந்த நாள் மாத்திரமல்ல நம் வாழ்நாள் முழுவதும் வாழ்த்தி வணங்கி போற்றிடுவோம்
வாழ்க தாய்மை! வாழ்க தாய்மார்கள்!