கொரோனா வந்தது
கொத்து கொத்தாய் மனிதர்களை கொண்டு சென்றது
கொரோனா வந்தது
ஓய்வின்றி ஓடிய மனிதர்களை வீட்டுக்குள்ளே முடக்கியது
கொரோனா வந்தது
தீவுகளாய் வாழ்ந்த குடும்ப உறுப்பினர்களை ஒன்றுபடுத்தி நேரம் செலவிட செய்தது
கொரோனா வந்தது
சாதாரணமாக இருந்து வந்த தும்மல், இருமல், ஜுரம் இன்று அனைவரையும் அச்சுருறுத்துகிறது
கொரோனா வந்தது
மீம்ஸ் மற்றும் டரோல் கிரியேட்டர்ஸுக்கு நன்றாக தீனி போட்டது.
கொரோனா வந்தது
இதுவும் கடந்து போகும் என்று உள்ளம் கூறுகிறது.
சுத்தம், சுகாதாரம், ஒழுங்கான உணவு முறை, ஒழுக்கம், ஆரோக்கியம் இவைகளே நம் வாழ்வின் தாரக மந்திரமாக இருந்தால் எதையும் நேர்கொண்டு போராடி வெற்றி பெறலாம்.